Search is not available for this dataset
செல்வம் நிலையாமை
[செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது]
பாடல்:
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று.
குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று.
கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று.
விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths 16 7.39k |
|---|
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
செல்வம் நிலையாமை
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
குறிப்புரை: துகள்தீர் பெரு செல்வம் - குற்றமற்ற சிறந்த செல்வம், தோன்றியக்கால் - உண்டானால், தொட்டு - அது தொடங்கி, பகடு நடந்த கூழ் - ஏர் நடந்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
செல்வம் நிலையாமை
யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.
குறிப்புரை: யானை எருத்தம் பொலிய - யானையின் கழுத்து விளங்கும்படி, குடை நிழல் கீழ் - குடை நிழலில சேனைத் தலைவராய் - பல சேனைகட்குத் தலைவராக, சென்ற... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
செல்வம் நிலையாமை
நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
குறிப்புரை: வாழ்நாள் - உடம்போடு கூடிவாழுமாறு ஏற்பட்ட நாட்கள், சென்றன சென்றன - செல்கின்றன செல்கின்றன; கூற்று - நமன், செறுத்து உடன் வந்தது வந்தது - சினந்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
செல்வம் நிலையாமை
என்னாலும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
தொடுத்தாறு செல்லும் சுரம்.
குறிப்புரை: என் ஆனும் ஒன்று - யாதாயினும் ஒரு பொருளை, தம் கை உற பெற்றக்கால் - தமது கையில் கிடைக்கும்படி பெறுவராயின், பின் ஆவது என்று ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
செல்வம் நிலையாமை
இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.
குறிப்புரை: இழைத்த நாள் எல்லை இகவா - உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள நாள்கள் தம் அளவைக் கடவா ; பிழைத்து ஒரீஇ - அந்த அளவில் த... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
செல்வம் நிலையாமை
தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ; ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் ; யாரும்
பிறந்தும் பிறவாதா ரில்.
குறிப்புரை: கூற்றம் - யமன், தோற்றம் சால்ஞாயிறு, காலையில் தோன்றுதல் பொருந்திய பகலவனை, நாழி ஆக - நாழி என்னும் அளவுகருவியாகக்கொண்டு, நும் நாள் ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
செல்வம் நிலையாமை
செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.
குறிப்புரை: செல்வர் யாம் என்று - நாம் செல்வமுடையோம் என்று களித்து, தாம் செல் உழி எண்ணாத - தாம் இனிச் செல்லவிருக்கும் மறுமையுலகத்த... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
செல்வம் நிலையாமை
உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திரும்பானேல், அ ஆ
இழந்தானஎன் றெண்ணப் படும்.
குறிப்புரை: உண்ணான் - இன்றியமையாத உணவுகளை உண்ணாமலும், ஒளி நிறான் - மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், ஓங்கு புகழ் செய்யான் - பெருகுகின்ற... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
செல்வம் நிலையாமை
உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட !
உய்த்தீட்டும் தேனீக் கரி.
குறிப்புரை: வான் தோய் - வானத்தைப் பொருந்துகின்ற, மலைநாட - மலைநாட்டுத் தலைவனே ! உடாதும் - நல்ல ஆடைகள் உடுக்காமலும், உண்ணாதும் - உணவு... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
இளமை நிலையாமை
நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.
குறிப்புரை: நல் அறிவாளர் - பழுதற்ற அறிவினையுடையோர், நரை வரும் என்று எண்ணி - மூப்பு வருமென்று கருதி, குழவியிடத்தே துறந்தார் - இளமையிலேயே பற்றுள்ளத்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
இளமை நிலையாமை
நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன ;- உட்காணாய் ;
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.
குறிப்புரை: நட்பு நார் அற்றன - நேயமும் கயிறு அறுந்தன ; நல்லாரும் அஃகினார் - சான்றோரும் அணுக்கங் குறைந்தனர், அன்பு தளையும் அவிழ்ந்தன - பொது மக்கள... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
இளமை நிலையாமை
சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து
காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே
ஏம நெறிபடரு மாறு.
குறிப்புரை: சொல் தளர்ந்து - பேச்சின் வலி குறைந்து, கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் - கையிற் கோல் ஊன்றித் தள்ளாடிய நடையை உடையவராய், பல் ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
இளமை நிலையாமை
தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா
மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல்
அம்மனைக்கோல் ஆகிய ஞான்று.
குறிப்புரை: தாழா - முதுகு தாழ்ந்து , தளரா - உடம்பின் கட்டுத் தளர்ந்து, தலை நடுங்கா - தலை நடுங்கி, தண்டு ஊன்றா - கையில் தடி ஊன்றி, வீ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
இளமை நிலையாமை
எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத்
தனக்குத்தாய் நாடியே சென்றாள் ;- தனக்குத்தாய்
ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண்
டேகும் அளித்திவ் வுலகு.
குறிப்புரை: எனக்குத் தாய் ஆகியாள் - எனக்குத் தாயாயிருந்தவள், என்னை ஈங்கு இட்டு - என்னை இவ்வுலகத்தில் விட்டுவிட்டு, தனக்குத் தாய் ந... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
இளமை நிலையாமை
வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
அறிவுடை யாளர்கண் இல்.
குறிப்புரை: வெறி அயர் வெம் களத்து - வெறியாடு தலைச் செய்கின்ற கொடிய பலிக்களத்தில், வேல்மகன் பாணி - வெறியாடுவோனுடைய கைகளிற் கட்டியுள்ள, முறி ஆர் நறு கண்ணி... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
இளமை நிலையாமை
பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்
வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
கோல்கண்ண ளாகும் குனிந்து.
குறிப்புரை: இளமை - இளமைப் பருவம், பனி படு சோலை பயன் மரம் எல்லாம் - குளிர்ச்சி பொருந்திய சோலையிலுள்ள பயன் தரும் மரங்களெல்லாவற்றினின்றும... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
இளமை நிலையாமை
பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால்
உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
எண்ணார் அறிவுடை யார்.
குறிப்புரை: பருவம் எனைத்து உள - வயது எவ்வளவு ஆகியிருக்கின்றன. பல்லின்பால் ஏனை - பல்லின் தன்மை எப்படியிருக்கின்றன, இரு சிகையும் உண்டீரோ - இரண்டு... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
இளமை நிலையாமை
மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்;
முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு.
குறிப்புரை: மற்று அறிவாம் நல்வினை - நற்செயல்களைப் பின்னால் தெரிந்து செய்து கொள்ளலாம், யாம் இளையம் - இப்போது யாம் இளமைப் பருவமுடையேம், எ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
இளமை நிலையாமை
ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப்
பிள்ளையைத் தாய் அலறக் கோடலான் மற்றதன்
கள்ளம் கடைப்பிடித்தல் நன்று.
குறிப்புரை: ஆள் பார்த்து - தான் உயிர் பிரித்துக் கொண்டு போகும் ஆளைக் கருதி, உழலும் - அதே வேலையாகத் திரிகின்ற, அரு... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
யாக்கை நிலையாமை
மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.
குறிப்புரை: மலைமிசை தோன்றும் மதியம்போல் - மலையின் உச்சியில் தோன்றுகின்ற முழு நிலாவைப்போல, யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - யானைய... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
யாக்கை நிலையாமை
வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின் ; யாரும்
நிலவார் நிலமிசை மேல்.
குறிப்புரை: வாழ்நாட்கு - ஆயுள்நாட்களுக்கு, அலகா - அளவு காணும்படி, வயங்கு ஒளி மண்டிலம் - விளக்குகின்ற கதிரவன் என்னும் ஒளிவட்டம், வீழ்நாள் படாது எழுதலா... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
யாக்கை நிலையாமை
மன்றம் கறங்க மணப்பாறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை
ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.
குறிப்புரை: மன்றம் கறங்க - பேரவை முழுதும் ஒலிக்கும்படி, மணப்பறையாயின - திருமண மேளமாய் முழங்கியவை, அன்று அவர்க்கு ஆங்கே - திருமண நாளன்று திரும... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
யாக்கை நிலையாமை
சென்றே எறிப ஒருகால் ; சிறுவரை
நின்றே எறிப பறையினை - நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து.
குறிப்புரை: சென்று - இறந்தவர் வீட்டுக்குப் போய், எறிப ஒரு கால் - பறையடிப்போர் ஒருமுறை பறைகொட்டுவர், சிறுவரை நின்று - சிறிது பொழுது நிறுத்தி,... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
யாக்கை நிலையாமை
கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங் கொண்டீன்
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை.
குறிப்புரை: கணம் கொண்டு - கூட்டம் கொண்டு, சுற்றத்தார் - உறவினர், கல் என்று அலற - கல்லென்று அலறி அழ, பிணம் கொண்டு - பி... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
யாக்கை நிலையாமை
நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.
குறிப்புரை: தோல் பையுள் நின்று - தோலாலான பையாகிய உடம்பினுள் இருந்து, தொழில் அறச்செய்து ஊட்டும் - தொழில்களை முடியச் ச... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
யாக்கை நிலையாமை
படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.
குறிப்புரை: படு மழை மொக்குளின் - மழை நீரில் தோன்றுகின்ற குமிழியைப்போல, பல்காலும் தோன்றிக் கெடும் இது ஓர் யாக்கை - பல தட... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
யாக்கை நிலையாமை
யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.
குறிப்புரை: யாக்கையை - உடம்பை, யாப்பு உடைத்தாப் பெற்றவர் - உறுதியுடையதாகப் பெற்றவர், தாம் பெற்ற யாக்கையால் - தாம் அங்ஙனம் முன் நல்வினையினால... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
யாக்கை நிலையாமை
புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.
குறிப்புரை: புல் நுனிமேல் நீர்போல் - புல் நுனியில் நிற்கும் நீர்த்துளி போன்றது, நிலையாமை - யாக்கை நிலையாமை யென்பது ; என்று எண்ணி -... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
யாக்கை நிலையாமை
கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.
குறிப்புரை: வாளாது சேக்கை மரன் ஒழிய - சும்மா கூடு மரத்தில் கிடக்க, சேண் நீங்கு புள்போல - அதிலிருந்து தொலைவிலே பறந்து போய்விடும் பறவைகள் போல - ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
அறன் வலியுறுத்தல்
அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப்
புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி
மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத்
தவத்தால் தவஞ்செய்யா தார்.
குறிப்புரை: மேலைத் தவத்தால் - முன் பிறப்பில் செய்த தவத்தின் பயனான செல்வ நிலைமையால், தவம் செய்யாதார் - மறுபிறப்பிற்கு வேண்டுந் தவத்தைச் செய... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
அறன் வலியுறுத்தல்
ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறமறந்து
போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே - ஓவாது
தின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள்
சென்றன செய் துரை.
குறிப்புரை: ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து - அறத்தை மறந்து பொருளை விரும்பி முயன்று நாம் மேலும்மேலும் பெருஞ் செல்வராவோம் ; போவாம் நாம் - ந... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
அறன் வலியுறுத்தல்
வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா
மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்தனைத்
தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்
தெல்லை இகந்தொருவு வார்.
குறிப்புரை: பேதை - அறிவில்லாதவன், வினைப்பயன் வந்தக்கால் - முன் தீவினையின் பயனாக இடர்கள் இப்போது வந்து தாக்கினால், வெய்ய உயிரா - உடனே கடுமையாகப... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
அறன் வலியுறுத்தல்
அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க ; - கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு.
குறிப்புரை: அரும்பெறல் யாக்கையை -அடைதற்கரிய உடம்பை, பெற்ற பயத்தால் - அடைந்த ஆக்கங்கொண்டு, பெரும்பயனும் - பெரும்பயன் என்னப்படும் புண்ணி... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
அறன் வலியுறுத்தல்
கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் ;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்.
குறிப்புரை: சிறு காலை - மிக்க காலைநேரத்தில், கரும்பு ஆட்டி - கரும்பை ஆலையில் ஆட்டி, கட்டி கொண்டார் - சருக்கரைக் கட்டியைச் செய்துகொ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
அறன் வலியுறுத்தல்
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது
பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால்
மருவுமின் மாண்டார் அறம்.
குறிப்புரை: இன்றுகொல் அன்றுகொல் என்று கொல் என்னாது பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி - இன்றோ அன்றோ என்றோ என்று இகழ்ந்திராமல் பின்னாலேயே இருக... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
அறன் வலியுறுத்தல்
மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால்
எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க
உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க்
கிடந்துண்ணப் பண்ணப் படும்.
குறிப்புரை: மக்களால் ஆய பெரும்பயனும் - மக்கட் பிறவியினால் செய்யதக்க பெரும்பயனான நற்செயல்களும், ஆயுங்கால் - எண்ணிப் பார்க்கும்போது, எத்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
அறன் வலியுறுத்தல்
உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனும்
தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.
குறிப்புரை: உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து - சிறிய அளவினதான ஓர் ஆலம் விதை, ஈண்டி - தழைத்து, இறப்ப நிழல் பயந்தாங்கு - மிகவும் நிழல... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
அறன் வலியுறுத்தல்
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
குறிப்புரை: வைகலும் - நாடேறும், வைகல் வரக்கண்டும் - நாட்காலம் தோன்றிவரக் கண்டும், அஃது உணரார் - அறத்தைக் கருதாதவராய், வைகலும் - என்றும், வைகல... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
அறன் வலியுறுத்தல்
மான அருங்கலம் நீக்கி இரவென்னும்
ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்
ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு
நீட்டித்து நிற்கும் எனின்.
குறிப்புரை: ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் - இழி தொழில்களால் உண்பித்த இடத்தேனும், உறுதி சேர்ந்து இவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின் - உறுதி... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தூய்தன்மை
மாக்கேழ் மடநல்லாய் என்றரற்று சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.
குறிப்புரை: மா கேழ் மட நல்லாய் என்று அரற்றும் சான்றவர் - மாந்தளிர் போன்ற இளநங்கையே என்று மாதரை நோக்கிப் பலகாலுங் கூறி உருகும் பெரியோர்க... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தூய்தன்மை
தோல்போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித் துடம்பானால் - மீப்போர்வை
பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்.
குறிப்புரை: தோல் போர்வை மேலும் தொளை பல வாய் - தோலாலான போர்வையின் மேலும் தொளைகள் பலவாகி, பொய் மறைக்கும் மீ போர்வை மாட்சித்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தூய்தன்மை
தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடி
பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும்
உண்டு வினையுள் உறைக்கும் எனப்பெரியோர்
கண்டுகை விட்ட மயல்.
குறிப்புரை: தக்கோலம் தின்று - தக்கோலம் முதலிய மணப்பொருள்களை வாயில் மென்று, தலை நிறையப் பூ சூடி - தலை நிரம்ப மணமலர் சூடி, பொய் கோலம் செய்ய - செயற்கை ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தூய்தன்மை
தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று
கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன
கண்ணீர்மை கண்டொழுகு வேன்.
குறிப்புரை: தெள் நீர் குவளை - தெளிவான நீரில் உள்ள குவளைமலர், பொரு கயல் - புரள்கின்ற கயல்மீன், வேல் - வேற்படை, என்று - என்று சொல்லி, கண்இல் புன்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தூய்தன்மை
முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும்
கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ
எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க
பல்லென்பு கண்டொழுகு வேன்.
குறிப்புரை: முறுவல் முல்லை முகை முத்து என்று - மாதர் பற்கள் முல்லையரும்புகள் முத்துக்கள் என்று, இவை பிதற்றும் - இப் புனைவுகளை அறிவின்றிச்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தூய்தன்மை
குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.
குறிப்புரை: குடரும் கொழுவும் குருதியும் என்பும் தொடரும் நரம்பொடு தோலும் இடையிடையே வைத்த தடியும் வழும்பும் ஆம் இவற்றுள் - குடலும் கொழுமையும் ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தூய்தன்மை
ஊறி உவர்த்தக்க ஒன்பதுவாய்ப்புலனும்
கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை
பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த
கருந்தோலால் கண்விளக்கப் பட்டு.
குறிப்புரை: ஊறி உவர்த்தக்க - அழுக்குகள் ஊறி அருவருக்குத் தக்க, ஒன்பது வாய்ப்புலனும் - ஒன்பது சந்திடங்களும், கோதிக் குழம்பு அலைக்கும் க... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தூய்தன்மை
பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்
முடைச்சாகா டச்சிற் றுழி.
குறிப்புரை: பண்டம் அறியார் - உடம்பாகிய பண்டத்தின் இயல்பை அறியாதவராய், படுசாந்தும் கோதையும் கொண்டு - அவ்வுடம்பின்மேல் அணியப்படும் சந்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தூய்தன்மை
கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக்
குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப்
போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று
சாற்றுங்கொல் சாலச் சிரித்து.
குறிப்புரை: கழிந்தார் இடுதலை - இறந்துபோன வரது எரிக்கப்பட்ட தலை ஓடு, கண்டார் நெஞ்சு உட்கக் குழிந்து ஆழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - பார... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
தூய்தன்மை
உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர்.
குறிப்புரை: உயிர் போயார் வெண்தலை - உயிர் போனவரது தசை நீங்கிய வெண்ணிறமான எலும்புத் தலை, உட்கச் சிரித்து - கண்டார் அஞ்சும்படி நகை... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
துறவுவிளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
குறிப்புரை: விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு - ஓரிடத்தில் விளக்கொளி வர அங்கே இருந்த இருட்டு நீங்கினாற்போல, ஒருவன் தவத்தின் முன் ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
துறவு
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும்
பித்தரின் பேதையார் இல்.
குறிப்புரை: நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - நிலையாமையியல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
துறவு
இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம் உய்யக் கொண்டு.
குறிப்புரை: இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம் செல்வம் வலி என்று இவையெல்லாம் - இல்வாழ்வு, இளமை, எழுச்சி, அழகு, உயர்சொல், பொருள், வலிமை என்று இப்பேற... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
துறவு
துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா
றடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.
குறிப்புரை: ஏழையார் - அறிவிலார், துன்பம் பல நாள் உழந்தும் - பல நாட்கள் துன்பத்தால் வருந்தியும், ஒரு நாளை இன்பமே - சிறிதுபோழ்து நுகரும் ஒரு நாளைய இன்பத்தையே, ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
துறவு
கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே
பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி
என்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ
நன்னெறி சேர நமக்கு.
குறிப்புரை: கொன்னே கழிந்தன்று இளமையும் - இளமைப் பருவமும் வீணே கழிந்தது, இன்னே பிணியொடு மூப்பும் வரும் - உடனே நோயோடு கிழத்தன... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
துறவு
மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும்
பூண்டான் கழித்தற் கருமையால் - பூண்ட
மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
கடியென்றார் கற்றறிந் தார்.
குறிப்புரை: மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல் எனினும் - திருமணம் ஆனபின் மனைவிக்கு மாட்சிமைப்பட்ட குணத்தோடு குழந்தைப்பேறும் இல்லை யென்றாலும், பூண்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
துறவு
ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
காக்கும் திருவத் தவர்.
குறிப்புரை: ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய - முயன்று தாம் மேற்கொண்ட நோன்புகள் உள்ளத்தில் தளர்வடையும்படி, தாக்க அருந் துன்பங்கள் தாம் தலைவந்த... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
துறவு
தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.
குறிப்புரை: தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி - காரணமின்றித் தம்மைப் பிறர் இகழ்ந்தமையைத் தாம் பொறுத்துக் கொள்வதல்லாமல், எம்மை இகழ்ந்த வினைப் பயத... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
துறவு
மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும
குறிப்புரை: மெய் வாய் கண் மூக்கு செவி எனப் பேர் பெற்ற - , ஐ வாய வேட்கை அவாவினை - ஐந்து வழிகளாகச் செல்லுதலையுடைய பற்றுள்ளத்தால் உண்டாகும் அவாவை , கலங்காம... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
துறவு
துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
பசைதல் பரியாதாம் மேல்.
குறிப்புரை: துன்பமே மீதூரக் கண்டும் - வாழ்க்கையில் துன்பமே மேலும் மேலும் மிகுந்து வருதல் உணர்ந்தும் ; துறவு உள்ளார் - பற்றில்லாமலிருத்தலை நினையாராய், இன்பமே... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
சினமின்மை
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.
குறிப்புரை: மதித்து இறப்பாரும் இறக்க - தம்மைப் பொருள் செய்து நடப்பாரும் நடக்கட்டும் ; மதியா மிதித்து இறப்பாரும் இறக்க - அங்ஙனம் மதியாமல் கீழ்ப்படுத்தி நடப... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
சினமின்மை
தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.
குறிப்புரை: மண்டி அடிபெயராது ஆற்ற இளிவந்த போழ்தின் - அடர்ந்து அடிதவறாமல் அடுக்கி மிக்க இழிவு நேர்ந்த காலங்களில், முடிகிற்கும் உள்ளத்தவர் - தாம் மேற... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
சினமின்மை
காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
ஓவாத தன்னைச் சுடுதலால் - ஓவாதே
ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து.
குறிப்புரை: காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் - அடக்காமல் சினத்தினால் ஒருவன் தன் வாய்விட்டுச் சொல்லியே சினச்சொல், ஓவாது தனன... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
சினமின்மை
நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால்
வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்தனை
உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.
குறிப்புரை: நேர்த்து நிகரல்லார் - சமானமில்லாதவர்கள் தம்மைச் சமானாமாகக் கருதிக்கொண்டு, நீரல்ல சொல்லியக்கால் - தகைமையல்லாத சொற்களைச... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
சினமின்மை
இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம்
ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை.
குறிப்புரை: இளையான் அடக்கம் அடக்கம் - இளமைப் பருவமுடையவனது புலனடக்கமே அடக்கமெனப்படும், கிளைபொருளில்லான் கொடையே கொடைப்பயன் - கிளைக்கும் பொருளில்லாதவனது ஈகையே... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
சினமின்மை
கல்லெறிந் தன்ன கயர்வாய் இன்னாச்சொல்
எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை
இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
குடிமையான் வாதிக்கப் பட்டு.
குறிப்புரை: ஒல்லை இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் - மந்திரித்து இட்ட திருநீற்றால் உடனே படம் சுருங்கிச் சினம் ஒடுங்கிய நல்ல பாம்பைப்போல, ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
சினமின்மை
மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை
ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை
நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப்
பேர்த்தின்னா செய்யாமை நன்று.
குறிப்புரை: மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு - தமக்குப் பகைவராயிருநது அப் பகைமையைப் பாராட்டுகின்றவர் பொருட்டு, ஏலாமை ஆற்ற... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
சினமின்மை
நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை
நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
சீர்கொண்ட சான்றோர் சினம்.
குறிப்புரை: நெடுங் காலம் ஓடினும் - நீண்ட காலம் சென்றாலும், நீசர் வெகுளி - கீழ்மக்கள் கோபம், கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - தணியுங்காலம் இல்லாமலே ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
சினமின்மை
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
குறிப்புரை: உபகாரம் செய்ததனை ஓராது - தாம் முன்பு உதவி செய்ததை நினையாமல், தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
சினமின்மை
கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.
குறிப்புரை: கூர்த்து நாய்கௌவிக் கொளக் கண்டும் - சினம் மிகுந்து நாய் தமதுடம்பை வாயினால் கடித்துத் தசையைப் பிடுங்குதலைப் பா... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பொறையுடைமை
கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோ டியாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.
குறிப்புரை: கோதை அருவிக் குளிர்வரை நல் நாட - மாலைபோல ஒழுகுகின்ற அருவிகளையுடைய குளிர்ச்சி பொருந்திய நல்ல மலைகளையுடைய நாடனே, பேதையோடு யாதும் உரையற்க - அறிவில்லாத... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பொறையுடைமை
நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தாரித் திருத்தல் தகுதிமற் -றோரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.
குறிப்புரை: நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக் கால் - தமக்குச் சமானமல்லாதவர் குணமல்லாதனவான சொற்களைச் சொன்னால், அது தாரித்து இருத்தல் தகுதி - சான்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பொறையுடைமை
காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும்
ஏதிலார் இன்சொலின் தீதாமோ - போதெலாம்
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப !
ஆவ தறிவார்ப் பெறின்.
குறிப்புரை: போது எலாம் மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண்சோப்ப - பேரரும்புகளிலெல்லாம் விருப்பத்தையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும் வளம் நிறைந்த ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பொறையுடைமை
அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி
உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.
குறிப்புரை: அறிவது அறிந்து - நூல் வழக்கிலும் உலக வழக்கிலுந் தெரிந்து கொள்ளவேண்டுவன தெரிந்து கொண்டு, அடங்கி - அடக்கமுடையவராய், அஞ்சுவது அஞ்சி - அஞ்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பொறையுடைமை
வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால்
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்
ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின்
தூற்றாதே தூர விடல்.
குறிப்புரை: வேற்றுமையின்றிக் கலந்து இருவர் நட்டக்கால் - வேறுபாடில்லாமல் மனங் கலந்து இரண்டு பேர் நேசித்தால், தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் - ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பொறையுடைமை
இன்னா செயினும் இனிய ஒழிகென்று
தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக்
கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட
விலங்கிற்கும் விள்ளல் அரிது.
குறிப்புரை: இன்னா செயினும் - நண்பர் தனக்கு இன்னல் தருவன செய்தாலும், இனிய ஒழிக என்று - அவை இனியவாய் வந்து கழிக என்று பொறுமையாய் நடந்து கொண்டு, தன்னையே தான... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பொறையுடைமை
பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த
அரிய பொறுப்பஎன் றன்றோ - அரியரோ
ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட
நல்லசெய் வார்க்குத் தமர்.
குறிப்புரை: பெரியார் பெருநட்புக் கோடல் - சான்றோர்களது மேன்மையாகிய நேயத்தை யாரும் விரும்பித் தேடிக் கொள்ளுதல், தாம் செய்த அரிய பொறுப்ப என்றன்றோர் தாம் செய்து... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பொறையுடைமை
வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க - அற்றம்
மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத்
துறக்குந் துணிவிலா தார்.
குறிப்புரை: வற்றி ஆற்றப் பசிப்பினும் - உடம்பிற் செந்நீர் சுண்டும்படி மிகப் பசித்தாலும், பண்பு இலார்க்கு - பிறர் நிலையறிந்து ஒழுகும் தன்மையில்லா... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பொறையுடைமை
இன்பம் பயந்தாங் கிழிவு தலவைரினும்
இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம்
ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட !
பழியாகா ஆறே தலை.
குறிப்புரை: இன்பம் பயந்த ஆங்கு - இன்பம் உண்டான இடத்தில், இழிவு தலைவரினும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்கு - தாழ்வுகள் நேர்ந்தாலும் இன்பத்தையே எண்ணி அதன்கண் நில... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பொறையுடைமை
தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின்
ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த
வையக மெல்லாம் பெறினும் உரையற்க
பொய்யோ டிடைமிடைந்த சொல்.
குறிப்புரை: தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க - ஒருவன் தான் கெடுவதாயிருந்தாலும் அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோர் க... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பிறர்மனை நயவாமை
அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால்
நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால் -நிச்சலும்
கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம்
நம்பற்க நாணுடை யார்.
குறிப்புரை: அச்சம் பெரிதால் - உண்டாகும் அச்சம் பெரிதாதலாலும், அதற்கு இன்பம் சிற்றளவால் - அப்பேரளவான அச்சத்துக்கு ஈடாக அடையும் இன்ப... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பிறர்மனை நயவாமை
அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும்
பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்தாரம்
நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று
அச்சத்தோ டிந்நாற் பொருள்.
குறிப்புரை: அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் - புண்ணியம் புகழ் தக்கார் நேயம் ஆண்மை என இந் நான்கும் ; பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பிறர்மனை நயவாமை
புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம்
துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமற் காப்பச்சம்
எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ
உட்கான் பிறன்இல் புகல்.
குறிப்புரை: புக்கவிடத்து அச்சம் - புகும்போது அச்சம் ; போதரும்போது அச்சம் - திரும்பிவரும்போது அச்சம் ; துய்க்குமிடத்து அச்சம் - நுகரும்போது ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பிறர்மனை நயவாமை
காணின் குடிப்பழியாம் ; கையுறின் கால்குறையும்;
ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத்
துன்பம் பயக்குமால்; துச்சாரி; நீகண்ட
இன்பம் எனக்கெனைத்தால் கூறு.
குறிப்புரை: காணின் குடிப்பழியாம் - பிறர் கண்டு விட்டால் குடிப்பழிப்பாம்; கையுறின் கால் குறையும் - கையில் அகப்பட்டுக் கொ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பிறர்மனை நயவாமை
சம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க்
கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை
வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே, இம்மை
அலியாகி ஆடிஉண் பார்.
குறிப்புரை: செம்மை ஒன்று இன்றி - நடுவுநிலைமை என்னும் குணம் சிறிதுமில்லாமல், சிறியார் இனத்தராய் - கீழ்மக்கள் கூட்டத்தோடு கூடியவராய், கொம்மை வர... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பிறர்மனை நயவாமை
பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக்
கல்யாணஞ் செய்து கடிப்புக்க - மெல்லியற்
காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன்
ஏதின் மனையாளை நோக்கு.
குறிப்புரை: நாள் கேட்டு - நல்ல நாள் கேட்டறிந்து பல்லார் அறியப் பறை அறைந்து - அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டி, கல்யாணம் செய்து கட... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பிறர்மனை நயவாமை
அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ
வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும்
நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு ; பாம்பின்
தலைநக்கி யன்ன துடைத்து.
குறிப்புரை: அம்பல் அயல் எடுப்ப - அயலார் பழித்தல் செய்ய, அஞ்சித் தமர் பரீஇ - அதனால் தன்னைத் தடுப்பரென்று அஞ்சித் தம் உறவினரினின்றும் நீ... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பிறர்மனை நயவாமை
பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா ;
உரவோர்கண் காமநோய் ஓ ! ஓ ! கொடிதே ;
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்
உரையாதுஉள் ஆறி விடும்.
குறிப்புரை: பரவா - அறிஞர்களிடத்திற் காமநினைவுகள் பரவமாட்டா ; வெளிப்படா - ஒரோவொருகாற் பரவினாலும் அவை வெளிப்படமாட்டா ; பல்லோர்கண் தங்கா - அப்படி வெள... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பிறர்மனை நயவாமை
அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும்.
குறிப்புரை: அம்பும் அழலும் அவிர் கதிர் ஞாயிறும் - வில்லம்பும், தீயும், ஒளிர்கின்ற கதிர்களையுடைய சூரியனும், வெம்பிச் சுடினும் புறம் சுடும் -... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பிறர்மனை நயவாமை
ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு
நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள்
குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி
ஒளிப்பினும் காமம் சுடும்.
குறிப்புரை: ஊருள் எழுந்த உரு கெழு செந்தீக்கு ஊர்நடுவில் பற்றிக்கொண்ட ஓங்கிய அச்சம் மிக்க செந்தழலுக்கு, நீருள் குளித்தும் உயலாகும் - அருகிலிருக்க... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
ஈகை
இல்லா விடத்தும் இயைந்த அளவினால்
உள்ள விடம்போற் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்கஅடையாவாம் ஆண்டைக் கதவு.
குறிப்புரை: இல்லாவிடத்தும் - பொருளில்லாத காலத்திலும், இயைந்த அளவினால் - கூடிய அளவினால், உள்ள இடம்போல் பெரிது உவந்து - பொருளுள்ள காலத்தைப் போல மிகவும் மகிழ்ந்து, ம... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
ஈகை
முன்னரே சாநாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள: - கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதுங்
கரவுன்மின் கைத்துண்டாம் போழ்து.
குறிப்புரை: முன்னரே சாம் நாள் முனிதக்க மூப்பு உள - வெறுத்தற்குரிய கிழப்பருவமும் இறக்கும் நாளும் எதிரிலேயே உள்ளன. பின்னரும் - அவையல்லாமலும், பீட... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
ஈகை
நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்;
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்.
குறிப்புரை: செல்வம் - பொருள், கொடுத்துத் தாம் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் - பிறர்க்குக் கொடுத்துத் தானும் நன்றாக நு... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
ஈகை
இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர்.
குறிப்புரை: இம்மியரிசித் துணையானும் - ‘இம்மியரிசி எனப்படும் ஒருவகைச் சிறிய அரிசியின் அளவாவது, வைகலும் நும்மின் இயைவ கொடுத்துண்மின் - நாடோறும் உமக்குக் கூடியன பி... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
ஈகை
மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்.
குறிப்புரை: மறுமையும் இம்மையும் நோக்கி - மறுமை இம்மை நிலைகளைக் கருதி, ஒருவற்கு உறுமாறு இயைவ கொடுத்தல் - கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும்; வறு... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
ஈகை
நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.
குறிப்புரை: பலர் நச்ச வாழ்வார் - பலரும் தம்மை விரும்பி அணுகும்படி வள்ளன்மையுடன் வாழ்பவர்கள், நடுவூருள் வேதிகை சுற்று கோட் புக்க படுபனை அன்னர் - ஊர் ந... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
ஈகை
பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப !
என்னை உலகுய்யு மாறு.
குறிப்புரை: கயல் புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப - கயல் மீனின் புலால் நாற்றத்தைப் புன்னை தனது மலர் மணத்தால் நீக்குகின்ற அலைமோதுங் கடலின் குளிர்ந்... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
ஈகை
ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா
தற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் - ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து.
குறிப்புரை: மலி கடல் தண் சேர்ப்ப - வளம் நிறைந்த கடலின் குளிர்ந்த கரையை யுடையவனே, ஆற்றின் - ஒருவர்க்கு ஒன்று உதவுவதானால், ஏற்ற கை மாற்றாமை என்னானும... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
ஈகை
இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும்
அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க - முறைப்புதவின்
ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.
குறிப்புரை: இறப்பச் சிறிது என்னாது - நம்மிடமிருப்பது மிகவுஞ் சிறியது என்று கருதாமலும், இல் என்னாது- இல்லை என்று மறுத்துவிடாமலும், என்றும் - எப்போதும், அறப... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
ஈகை
கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படுஞ் சொல்.
குறிப்புரை: கடிப்பு இடு கண் முரசம் காதத்தோர் கேட்பர் - குறுங்கோலால் ஒலிக்கப்படும். கண்போன்ற இடத்தையுடைய முரசினது ஒலியைக் காத எல்லைவரையிலுள்ளோர் க... |
செல்வம் நிலையாமை
அறத்துப்பால்
பழவினை
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.
குறிப்புரை: பல் ஆவுள் உய்த்துவிடினும் - பல ஆக்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ; குழக் கன்று - இளைய ஆன்கன்று, வல்லதாம் தாய் நாடிக் கோடலை - தன் தாய... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.