diff --git "a/pmuni0541_02.txt" "b/pmuni0541_02.txt" new file mode 100644--- /dev/null +++ "b/pmuni0541_02.txt" @@ -0,0 +1,8136 @@ + + + + + + + + + + + + + + + + +irAmayaNam of kampar -canto 5, part 2 (in tamil script, unicode format) + + + + + + + + + + + + + + + + +கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய + +இராமாயணம் - காண்டம் 5 + +சுந்தர காண்டம் (இரண்டாம் பகுதி) /படலங்கள் 7-15 + + +irAmAyaNam of kampar + + canto 5 (cuntara kAnTam), part 2 + + (paTalams 7-15, verses 5537 - 6185) + +In tamil script, unicode/utf-8 format + + + + + + + + +Acknowledgements: + +Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for + +providing us with a romanized transliterated version of this work and for permissions + +to publish the equivalent Tamil script version in Unicode encoding + +We also thank Mr. S. Govindarajan for proof-reading the Tamil script version + +Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. + + + +© Project Madurai, 1998-2016. + +Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation + +of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. + +Details of Project Madurai are available at the website: + + +http://www.projectmadurai.org/ +You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. + + + + + + + +கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய + +இராமாயணம் - சுந்தர காண்டம் (இரண்டாம் பகுதி) /படலங்கள் 7-15 + + + + +5.7 பொழில் இறுத்த படலம் 5537 - 5596 + + + +5.8 கிங்கரர் வதைப் படலம் 5597 - 5657 + + +5.9 சம்புமாலி வதைப் படலம் 5658 - 5708 + + +5.10 பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் 5709 - 5775 + + +5.11 அக்ககுமாரன் வதைப் படலம் 5776 - 5825 + + +5.12 பாசப் படலம் 5826 - 5888 + + +5.13 பிணி வீட்டு படலம் 5889 - 6028 + + +5.14 இலங்கை எரியூட்டு படலம் 6029 - 6092 + + +5.15 திருவடி தொழுத படலம் 6093 - 6185 + + + + + + + + + + +5.7 பொழில் இறுத்த படலம் 5537 - 5596 + + +பிராட்டியிடம் விடை பெற்றபின் அநுமன் நினைவு பற்றிய கவிக்கூற்று + + + +நெறிக்கொடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான் + +பொறிக் குலம் மலர்ப் பொழில் இடைக் கடிது போவான் + +'சிறுத்தொழில் முடித்து அகல்தல் தீது’ எனல் தெரிந்தான்; + +மறித்தும் ஒர் செயற்கு உரிய காரியம் மதித்தான்.         5.7.1 + + + +அநுமன் தனக்குள் எண்ணுதல் (5538-5543) + + + +ஈனம் உறு பற்றலரை எற்றி எயின் மூதூர் + +மீன நிலயத்தின் உற வீசி விழி மானை + +மானவன் மலர்க் கழலின் வைத்தும் இலென்; என்றால் + +ஆனபொழுது எப்பரிசின் நான் அடியன் ஆவேன்.         5.7.2 + + + +வஞ்சனை அரக்கனை நெருக்கி, நெடு வாலால் + +அஞ்சின் உடன் அஞ்சுதலை தோள் உற அசைத்தே, + +வெம் சிறையில் வைத்தும் இலென் வென்றும் இலென்; என்றால் + +தஞ்சம் ஒருவர்க்கு ஒருவர் என்றல், தகவு ஆமே.         5.7.3 + + + +கண்ட நிருதக்கடல் கலக்கினென் வலத்தில் + +திண்திறல் அரக்கனும் இருக்க ஒர் திறத்தில் + +மண்ட உதரத்தவள் மலர்க்குழல் பிடித்துக் + +கொண்டு சிறைவைத்திடுதலில் குறையும் உண்டோ?         5.7.4 + + + +மீட்டும் இனி எண்ணும் வினை வேறும் உளதன்றால்; + +ஓட்டி இவ் அரக்கரை உலைத்து உரிமை எல்லாம் + +காட்டும் அதுவே கருமம்; அன்னவர் கட���ம்போர் + +மூட்டும் வகை யாவதுகொல்? என்று முயல்கின்றான்.         5.7.5 + + + +இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால் + +அப் பெரிய பூசல் செவி சார்தலும் அரக்கர் + +வெப்பு உறு சினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால் + +துப்பு அற முருக்கி உயிர் உண்பல்; இது சூதால்.        5.7.6 + + + +வந்தவர்கள் வந்தவர்கள் மீள்கிலர் மடிந்தால் + +வெம் திறல் அரக்கனும் வெலற்கு அரும் வலத்தான் + +முந்தும்; எனின் அன்னவன் முடித்தலை முசித்து என் + +சிந்தை உறு வெம் துயர் தவிர்த்து இனிது செல்வேன்.         5.7.7 + + + +அநுமன் அசோகவனத்தை அழித்தல + + + +என்று நினையா இரவி சந்திரன் இயங்கும் + +குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்; + +அன்று உலகு எயிற்று இடைகொள் ஏனம் எனல் ஆனான்; + +துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான்.         5.7.8 + +         + +அசோகவன அழிவுபாடுகளின் வருணனை (5545-5576) + + + +முடிந்தன; பிளந்தன; முரிந்தன; நெரிந்த; + +மடிந்தன; பொடிந்தன; மறிந்தன; முறிந்த; + +இடிந்தன; தகர்ந்தன; எரிந்தன; கரிந்த; + +ஒடிந்தன; ஒசிந்தன; உதிர்ந்தன; பிதிர்ந்த.         5.7.9 + + + +வேரொடு மறிந்த சில; வெந்த சில; விண்ணில் + +காரொடு செறிந்த சில; காலினொடு வேலைத் + +தூரொடு பறிந்த சில; தும்பியொடு வானோர் + +ஊரொடு மலைந்த சில; உக்கசில; நெக்க.         5.7.10 + + + +சோனை முதல் மற்றவை சுழற்றிய திசைப் பேர் + +ஆனை நுகரக் குளகும் ஆன; அடி பற்றா + +மேல் நிமிர விட்டன விசும்பின்வழி மீப் போய் + +வானவர்கள் நந்தன வனத்தையும் மடித்த.        5.7.11 + + + +அலைந்தன கடல் திரை; அரக்கர் அகல் மாடம் + +குலைந்து உக இடிந்தன; குலக் கிரிகேளாடு + +மலைந்து பொடி உற்றன; மயங்கி நெடு வானத்து + +உலைந்து விழும் மீனினொடு வெண்மலர் உதிர்ந்த.        5.7.12 + + + +முடக்கும் நெடு வேரொடு முகந்து உலகம் முற்றும் + +கடக்கும்வகை வீசின களித்த திசையானை + +மடப் பிடியினுக்கு உதவ மையில் நிமிர் கைவைத்து + +இடுக்கியன ஒத்தன; எயிற்றின் இடை ஞால்வ.        5.7.13 + + + +விஞ்சை உலகத்தினும் இயக்கர்மலை மேலும் + +துஞ்சுதல் இல் வானவர் துறக்க நகரத்தும் + +பஞ்சி அடி வஞ்சியர்கள் மொய்த்தனர் பறித்தார்; + +நஞ்சம் அனையான் உடைய சோலையின் நறும்பூ.        5.7.14 + + + +பொன் திணி மணிப் பரு மரன் திசைகள் போவ + +மின் திரிவ ஒத்தன; வெயில் கதிரும் ஒத்த; + +ஒன்றினொடும் ஒன்று இடை புடைத்து உதிர ஊழில் + +தன் திரள் ஒழுக்கி விழு தாரகையும் ஒத்த.        5.7.15 + + + +புள்ளினொடு வண்டும் ஞிமிறும் களிக��ள் பூவும் + +கள்ளும் முகையும் தளிர்கேளாடு இனிய காயும் + +வெள்ள நெடு வேலை இடை மீன் இனம் விழுங்கித் + +துள்ளின; மரன்பட நெரிந்தன துடித்த.        5.7.16 + + + +தூவிய மலர்த்தொகை சுமந்து திசைதோறும் + +பூவின் மணம் நாறுவ புலால் கமழ்கிலாத + +தேவியர்கேளாடும் உயர் தேவர் இனிது ஆடும் + +ஆவி எனல் ஆய; திரை ஆர்கலிகள் அம்மா!        5.7.17 + + + +இடந்த மணி வேதியும் இறுத்த கடி காவும் + +தொடர்ந்தன துரந்தன படிந்து நெறி தூரக் + +கடந்து செலவு என்பது கடந்தது; இரு காலால் + +நடந்து செலல் ஆகும் எனல் ஆகியது; நல்நீர்.         5.7.18 + + + +வேனில் விளையாடு சுடரோனின் ஒளி விம்மும் + +வானின் இடை வீசிய அரும் பணை மரத்தால்; + +தானவர்கள் மாளிகை தகர்ந்து பொடி ஆய; + +வான இடியால் ஒடியும் மால்வரைகள் மான.         5.7.19 + + + +எண்ணில் தரு கோடிகள் எறிந்தன செறிந்தே + +தண்ண மழைபோல் இடை தழைந்தது சலத்தால் + +அண்ணல் அனுமான்'அடல் இராவணனது அந்நாள் + +விண்ணும் ஒரு சோலை உளதாம்'என விதித்தான்.         5.7.20 + +         + +தேன் உறை துளிப்ப நிறை புள் பல சிலம்பப் + +பூ நிறை மணி தரு விசும்பின்மிசை போவ + +மீன்முறை நெருக்க ஒளி வாெளாடு வில் வீச + +வான் இடை நடாய நெடுமானம் எனல் ஆன.         5.7.21 + + + +சாகம் நெடு மாப் பணை தழைத்தன தனிப் + +நாகம் அனையான் எறிய மேல் நிமிர்வ நாளும் + +மாகம் நெடு வான் இழிந்து புனல் வாரும் + +மேகம் எனல் ஆய; நெடு மா கடலின் வீழ்வ.         5.7.22 + + + +ஊனம் உற்றிட மண்ணின் உதித்தவர் + +ஞானம் முற்றுபு நண்ணினர் வீடு எனத் + +தான கற்பகத் தண்டலை விண்தலம் + +போன புக்கன முன் உறை பொன் நகர்.         5.7.23 + + + +மணிகொள் குட்டிமம் மட்டித்து மண்டபம் + +துணிபடுத்து அயல் வாவிகள் தூர்த்து ஒளிர் + +திணி சுவர்த்தலம் சிந்திச் செயற்கு அரும் + +பணி படுத்து உயர் குன்றம் படுத்து அரோ.         5.7.24 + + + +வேங்கை செற்று மராமரம் வேர் பறித்து + +ஓங்கு கற்பகம் பூவொடு ஒடித்து உராய்ப் + +பாங்கர் சண்பகப் பத்தி பறித்து அயல் + +மாங்கனிப் பணை மட்டித்து மாற்றியே.         5.7.25 + + + +சந்தனங்கள் தகர்ந்தன; தாள்பட + +இந்தனங்களின் வெந்து எரி சிந்திட + +முந்து அனங்க வசந்தன் முகம் கெட + +நந்தனங்கள் கலங்கி நடுங்கவே.         5.7.26 + + + +காமரம் கனி வண்டு கலங்கிட + +மாமரங்கள் மடிந்தன மண்ணொடு; + +தாம் அரங்க அரங்கு தகர்ந்து உகப் + +பூ மரங்கள் எரிந்து பொரிந்தவே.         5.7.27 + + + +குழையும் கொம்பும் கொடியும் குயில் கு���ம் + +விழையும் தண் தளிர்ச் சூழலும் மென்மலர்ப் + +புழையும் வாசப் பொதும்பும் பொலன்கொள் தேன் + +மழையும் வண்டும் மயிலும் மடிந்தவே.         5.7.28 + + + +பவள மாக்கொடி வீசின பல் மழை + +துவளும் மின் எனச் சுற்றிடச் சூழ்வரை + +திவளும் பொன்பணை மாமரம் சேர்ந்தன + +கவள யானையின் ஓடையில் காந்தவே.         5.7.29 + + + +பறவை ஆர்த்து எழும் ஓசையும் பல் மரம் + +இற எடுத்த இடிக்குரல் ஓசையும் + +அறவன் ஆர்த்து எழும் ஓசையும் அண்டத்தின் + +புற நிலத்தையும் கை மிகப் போயதே.         5.7.30 + + + +பாடலம் படர் கோங்கொடும் பன் இசைப் + +பாடல் அம் பனி வண்டொடும் பல் திரை + +பாடு அலம்பு உயர் வேலையில் பாய்ந்தன; + +பாடு அலம்படப் புள் இனம் பார்ப்பொடே.         5.7.31 + + + +வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம் + +வண்டல் அம் புனல் ஆற்றின் மடிந்தன; + +விண்டு அலம்பு கம் நீங்கிய வெண்புனல் + +விண்டு அலம்புக நீள்மரம் வீழ்ந்தவே.         5.7.32 + + + +தாமரைத் தடம் பொய்கை செஞ் சந்தனம் + +தாம் அரைத்தன ஒத்தது; உகைத்தலின் + +காமரக் களி வண்டொடும் கள்ெளாடும் + +கா மரக்கடல் பூக்கடல் கண்டவே.         5.7.33 + + + +சிந்துவாரம் திசைதொறும் சென்றன + +சிந்து வார் அம் புரை திரை சேர்ந்தன; + +தம் துவாரம் புதவொடு தாள் அறத் + +தந்து வாரம் துகள்படச் சாய்ந்தவே.         5.7.34 + + + +நந்தவானத்து நாள் மலர் நாறின + +நந்த வானத்து நாள் மலர் நாறின; + +சிந்து அ வானம் திரிந்து உகச் செம்மணி + +சிந்த வால் நந்து இரிந்த திரைக் கடல்.         5.7.35 + + + +புல்லும் பொன் பணைப் பல் மணிப் பூமரம் + +கொல்லும் இப்பொழுதே எனும் கொள்கையால் + +எல்லி இட்டு விளக்கிய இந்திரன் + +வில்லும் ஒத்தன : விண் உற வீசின.         5.7.36 + + + +ஆனைத் தானமும் ஆடல் அரங்கமும் + +பானத் தானமும் பாய் பரிப் பந்தியும் + +ஏனைத் தார் அணி தேரொடும் இற்றன; + +கானத்து ஆர் தரு அண்ணல் கடாவவே.         5.7.37 + + + +மயக்கு இல் பொன் குல வல்லிகள் வாரிநேர் + +இயக்கு உறத் திசைதோறும் எறிந்தன + +வெயில் கதிர்க் கற்றை அற்று உற வீழ்ந்தன + +புயல் கடல்தலை புக்கன போல்வன.         5.7.38 + + + +பெரிய மாமரமும் பெருங்குன்றமும் + +விரிய வீசலின் மின் நெடும் பொன் மதில் + +நெரிய மாடம் நெருப்பு எழ நீறு எழ + +இரியல் போனது இலங்கையும் எங்கணும்.         5.7.39 + + + +சந்திராத்தமன வருணனை + + + +"தொண்டை அம் கனிவாய்ச் சீதை + +         துயக்கினால் என்னைச் சுட்டாய்! + +விண்ட வானவர் கண் முன்னே + +         விரிபொழில் இறுத்து வீசக் + +கண்டனை நின்றாய்!" என்று + +         காணுமேல் அரக்கன் காய்தல் + +உண்டு என வெருவினான்போல் + +         ஒளித்தனன்; உடுவின் கோமான்.         5.7.40 + + + +அநுமன் வீசிய (மணி) மரங்களால் வைகறை இருள் விலகல் + + + +காசு அறு மணியும் பொன்னும் + +         காந்தமும் கஞல்வது ஆய + +மாசு அறு மரங்கள் ஆகக் + +         குயிற்றிய மதனச் சோலை, + +ஆசைகள் தோறும் ஐயன் + +         கைகளால் அள்ளி அள்ளி + +வீசிய, விளக்கலாலே + +         விளங்கின உலகம் எல்லாம்.         5.7.41 + + + +விலங்கு பறவைகளின் நிலை (5578-5579) + + + +கதறின வெருவி, உள்ளம் + +         கலங்கின, விலங்கு; கண்கள் + +குதறின பறவை, வேலை + +         குளித்தன, குளித்திலாத + +பதறின; பதைத்த; வானில் + +         பறந்தன; பறந்து பார்வீழ்ந்து + +உதறின சிறையை; மீள + +         ஒடுக்கின உலந்து போன.         5.7.42 + + + +தோட்டொடும் துதைந்த தெய்வ + +         மரம் தொறும் தொடுத்த புள், தம் + +கூட்டொடும் துறக்கம் புக்க; + +         குன்று எனக் குவவுத் திண் தோள் + +சேட்டு அகன் பரிதி மார்பன் + +         சீறியும் தீண்டல் தன்னால், + +மீட்டு அவன் கருணைசெய்தால் + +         பெறும் பதம் விளம்பல் ஆமோ.         5.7.43 + + + +பிராட்டி தங்கியிருந்த மரமொன்றுமே அழியாதிருத்தல் + + + +பொய்ம் முறை அரக்கர் காக்கும் புள் உறை புது மென் சோலை + +விம்முறும் உள்ளத்து அன்னம் இருக்கும் அவ் விருக்கம் ஒன்றும், + +மும்முறை உலகம் எல்லாம் முற்றுற முடிவது ஆன + +அம்முறை ஐயன் வைகும் ஆல் என நின்றது. அம்மா!         5.7.44 + + + +சூரியோதய வருணனை + + + +உறு சுடர்ச் சூடைக்காசுக்கு அரசினை உயிர் ஒப்பானுக்கு + +அறிகுறி ஆக விட்டாள், ஆதலான் வறியள் அந்தோ! + +செறி குழல் சீதைக்கு என்று ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி + +எறி கடல் ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான்.         5.7.45 + +அசோகவனத்தை அழித்து நின்ற அனுமனது தோற்றம் + + + +.தாழ் இரும் பொழில்கள் எல்லாம் துடைத்து ஒரு தமியன் நின்றான், + +ஏழினொடு ஏழு நாடும் அளந்தவன் எனலும் ஆனான்; + +ஆழியின் நடுவண் நின்ற அரும் வரைக்கு அரசும் ஒத்தான்; + +ஊழியின் இறுதிக் காலத்து உருத்திர மூர்த்தி ஒத்தான்.         5.7.46 + + + +அநுமனைக் கண்டு அஞ்சிய அரக்கியர் பிராட்டியை வினவுதல் + + + +இன்னன நிகழும் வேலை, அரக்கியர் எழுந்து பொங்கிப், + +பொன்மலை என்ன நின்ற புனிதனைப் புகன்று நோக்கி, + +'அன்னை! ஈது என்ன மேனி? யார்கொல்?'என்று அச்சம் உற்றார்; + +நன்னுதல் தன்னை ந���க்கி, 'அறிதியோ?'நங்கை! என்றார். 5.7.47 + + + +பிராட்டியின் மறுமொழி + + + +'தீயவர் தீய செய்தல் தீயவர் தெரியின் அல்லால் + +தூயவர் தெரிதல் உண்டோ? நும் உடைச் சூழல் எல்லாம் + +ஆய மான் எய்த, அம்மான் இளையவன், "அரக்கர் செய்த + +மாயம்" என்று உரைக்கவேயும், மெய் என மையல்கொண்டேன்.       5.7.48 + + + +அநுமன் சயித்தியம் ஒன்றைக் கண்டு பறித்தெறியத் தொடங்குதல் + + + +என்றனள், அரக்கிமார்கள் வயிறு அலைத்து இரியல் போகிக் + +குன்றமும் உலகும் வானும் கடல்களும் குலைய ஓட, + +நின்றது ஓர் சயித்தம் கண்டான், 'நீக்குவல் இதனை'என்னாத் + +தன் தடக்கைகள் நீட்டிப் பற்றினன் : தாதை ஒப்பான்.       5.7.49 + + + +சயித்தத்தின் பெருமை (5586-5588) + + + +கண்கொள அரிது, மீது கார் கொள அரிது, திண் கால் + +எண்கொள அரிது, இராவும் இருள்கொள அரிது, மாக + +விண்கொள நிவந்த மேரு வெள்குற வெதும்பி உள்ளம் + +புண்கொள உய்ர்ந்தது, இப்பார் பொறைகொள அரிது போலாம்.       5.7.50 + + + +பொங்கு ஒளி நெடு நாள் ஈட்டிப் புதிய பால் பொழிவது ஒக்கும் + +திங்களை நக்குகின்ற இருள் எலாம் வாரித் தின்ன + +அங்கை பத்து இரட்டியான் தன் ஆணையால் அழகு மானப் + +பங்கயத்து ஒருவன் தானே பசும் பொனால் படைத்தது அம்மா.       5.7.51 + + + +தூண் எலாம் சுடரும் காசு, சுற்று எலாம் முத்தம் சொன்னம் + +பேணல் ஆம் மணியின் பித்தி பிடர் எலாம் ஒளிகள் விம்மச் + +சேண் எலாம் விரியும் கற்றைச் சேயொளிச் செல்வற்கு ஏயும் + +பூணலாம் எம்மனோரால் புகழலாம் புதுமைத்து அன்றே.       5.7.52 + + + +அநுமன் சயித்தத்தைப் பெயர்த்து இலங்கைமேல் எறிதல் (5589-5590) + + + +'வெள்ளி அம் கிரியைப் பண்டு அவ் வெம் தொழில் அரக்கன் வேரோடு + +அள்ளினன்'என்னக் கேட்டான்; அத்தொழிற்கு இழிவு தோன்றப் + +புள்ளி மா மேரு என்னும் பொன் மலை எடுப்பான் போல, + +வள் உகிர்த் தடக்கை தன்னால் மண் நின்றும் வாங்கி, அண்ணல்.       5.7.53 + + + +விட்டனன் இலங்கை தன்மேல்; விண்ணுற விரிந்த மாடம் + +பட்டன பொடிகள் ஆன; பகுத்தன பாங்கு நின்ற; + +சுட்டன பொறிகள் வீழத், துளங்கினர் அரக்கர் தாமும்; + +கெட்டனர் வீரர் அம்மா! பிழைப்பரோ கேடு சூழ்ந்தார்.       5.7.54 + + + +அசோகவனம் அழிந்த செய்தியைக் காவலர் இராவணனிடம் தெரிவித்தல் (5591-5593) + + + +நீர் இடு துகிலர், அச்சம் நெருப்பிடும் நெஞ்சர், நெக்குப் + +பீரிடும் உருவர், தறெ்றிப் பிணங்கிடு தாளர், பேழ்வாய் + +ஊர் இடு பூசல் ஆர, உளைத்தனர் ஓடி உற்றார்; + +பார் இடு பழுவச் சோலை பாரிக்கும் பருவத் தேவர்.       5.7.55 + + + +அரிபடு சீற்றத்தான் தன் அருகு சென்று அடியின் வீழ்ந்தார், + +'கரிபடு திசையின் நீண்ட காவலா! காவல் ஆற்றோம்; + +கிரிபடு குவவுத் திண்தோள் குரங்கு இடை கிழித்து வீச + +எரிபடு துகிலின் நொய்தின் இற்றது கடி கா'என்றார்.       5.7.56 + + + + 'சொல்லிட எளியது அன்றால் சோலையைக் காலில் கையில் + +புல்லொடு துகளும் இன்றிப் பொடிபட நூறிப், பொன்னால் + +வில்லிடு வேரம் தன்னை வேரொடும் வாங்கி வீசச் + +சில்லிடம் ஒழியத் தெய்வ இலங்கையும் சிதைந்தது'என்றார்.       5.7.57 + + + +காவலர் கூறக்கேட்ட இராவணன் இகழ்ந்து நகுதல் + + + +ஆடகத் தருவின் சோலை பொடிபடுத்து, அரக்கர் காக்கும் + +தேடு அரும் வேரம் வாங்கி, இலங்கையும் சிதைத்தது அம்மா! + +கோடரம் ஒன்றே, நன்று இது இராக்கதர் கொற்றம் சொற்றல் + +மூடரும் மொழியார்; என்ன மன்னனும் முறுவல் செய்தான்.       5.7.58 + + + +காவலர் அநுமன் திறத்தைப் பின்னும் வியந்து கூறுதல் + + + +தேவர்கள், பின்னும்'மன்ன! அதன் உருச் சுமக்கும் திண்மைப் + +பூவலயத்தை அன்றோ புகழ்வது! புலவர் போற்றும் + +மூவரின் ஒருவன் என்று புகல்கினும் முடிவு இலாத + +ஏவம்; அக்குரங்கை ஐய! காணுதி இன்னே'என்றார்.       5.7.59 + + + +அநுமனது போரார்ப்பு + + + +மண்டலம் கிழிந்த வாயில் மறிகடல் மோழை மண்ட, + +எண்திசை சுமந்த மாவும் தேவரும் இரியல் போக, + +தொண்டை வாய் அரக்கிமார்கள் சூல் வயிறு உடைந்து சோர, + +அண்டமும் பிளந்து விண்டதாம் என அனுமன் ஆர்த்தான       5.7.60 + +------------- + + + +5.8 கிங்கரர் வதைப் படலம் 5597 - 5657 + + + +அநுமன் ஆரவாரம் இராவணன் செவியில் விழுதல் + + + +அருவரை முழையில் முட்டும் அசனியின் இடிப்பும், ஆழி + +வெருவரு முழக்கும், ஈசன் வில்லிறும் ஒலியும் என்னக், + +குருமணி மகுட கோடி முடித்தலை குலுங்கும் வண்ணம், + +இருபது செவியினூடும் நுழைந்தது அவ் எழுந்த ஓசை.       5.8.1 + + + +அநுமனைப் பிடிக்குமாறு இராவணன் கிங்கரரை ஏவுதல் + + + +புல்லிய முறுவல் தோன்றப் பொறாமையும் சிறிது பொங்க, + +எல்லை இல் ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி, + +"வல்லையின் அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றிக், + +கொல்லலிர், குரங்கை நொய்தில் பற்றுதிர், கொணர்திர்!" என்றான்.       5.8.2 + + + +கிங்கரர்கள் புறப்படுதல் + + + +சூலம், வாள், முசலம், கூர்வேல், தோமரம், தண்டு, பிண்டி + +பாலமே, முதலாயுள்ள படைக்கலம் பரித்த கையர்; + +ஆலமே அனைய மெய்யர்; அகலிடம் அழிவு செய்யும் + +காலம் மேல் எழுந்த மூரிக் கடல் எனக், கடிது செல்வார்.       5.8.3 + + + +கிங்கரர் வருணனை (5600-5614) + + + +'நானிலம் அதனின் உண்டு போர்'என நவிலின், அச்சொல் + +தேனினும் களிப்புச் செய்யும் சிந்தையர்த் தெரித்தும் என்னின், + +கானினும் பெரியர் : ஓசை கடலினும் பெரியர் : கீர்த்தி + +வானினும் பெரியர் : மேனி மலையினும் பெரியர் மாதோ!       5.8.4 + + + +திருகு உறும் சினத்துத், தேவர் தானவர் என்னும் தெவ்வர் + +இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் : வசை என்று எண்ணிப், + +பொரு குறும்பு என்று, வென்று புணர்வது பூ உண் வாழ்க்கை + +ஒருகுறும் குரங்கு என்று எண்ணி, நெடிது நாண் உழக்கும் நெஞ்சர்.      5.8.5 + + + +கட்டிய வாளர்; இட்ட கவசத்தர்; கழலர்; திக்கைத் + +தட்டிய தோளர்; மேகம் தடவிய கையர்; வானை + +எட்டிய முடியர்; தாளால் இடறிய பொருப்பர்; ஈட்டிக் + +கொட்டிய பேரி என்ன, மழை எனக், குமுறும் சொல்லார்.       5.8.6 + + + +வானவர் எறிந்த தெய்வ அடுபடை வடுக்கள், மற்றைத் + +தானவர் துரந்த ஏதித் தழும்பொடு தயங்கும் தோளர்; + +யானையும் பிடியும் வாரி இடும் கயவாயர்; ஈன்ற + +கூனல் வெண்பிறையில் தோன்றும் எயிற்றினர்; கொதிக்கும்கண்ணர்.       5.8.7 + + + +சக்கரம், உலக்கை, தண்டு, தாரை, வாள், பரிகம், சங்கு, + +முற்கரம், முசுண்டி, பிண்டிபாலம், வேல், சூலம், முள் கோல், + +பொன்கரம் குலிசம், பாசம், புகர்மழு, எழு பொன்குந்தம், + +வில், கரும் கணை, விட்டேறு, கழுக்கடை எழுக்கள் மின்ன.       5.8.8 + + + +பொன் நின்று கஞலும் தெய்வப் பூணினர்; பொருப்புத் தோளர்; + +மின்நின்ற படையும், கண்ணும், வெயில் விரிக்கின்ற மெய்யர்; + +'என்? என்றார்க்கு,'என்? என்?' என்றார்; எய்தியது அறிந்திலாதார், + +முன் நின்றார் முதுகு தீயப் பின் நின்றார் முடுகுகின்றார்.       5.8.9 + + + +வெய்து உறு படையின் மின்னர், வில்லினர், வீசு காலர், + +மை உறு விசும்பில் தோன்றும் மேனியர், மடிக்கும் வாயர், + +கைபரந்து உலகு பொங்கிக் கடையுகம் முடியும் காலைப் + +பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார்.       5.8.10 + + + +'பனி உறு சோலை சிந்தி, வேரமும் பறித்தது, அம்மா! + +தனி ஒரு குரங்கு போலாம்! நன்று நம் தருக்கு!'என்கின்றார், + +'இனி ஒரு பழி மற்று உண்டோ இதனின்?'என்று இரைத்துப் பொங்கி, + +முனிவு ���று மனத்தில் தாவி, முந்துற முடுகுகின்றார்.       5.8.11 + + + +எற்றுறு முரசும், வில் நாண் ஏற விட்டு எடுத்த ஆர்ப்பும், + +சுற்றுறு கழலும், சங்கும், தழெிதழெித்து உரப்பும் சொல்லும், + +உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி ஒலித்து எழுந்து, ஊழிப் பேர்வில் + +நல் திரைக் கடல்கேளாடு மழைகளை, நா அடக்க.       5.8.12 + + + +தெரு இடம் இல் என்று எண்ணி வானிடைச் செல்கின்றாரும், + +புருவமும் சிலையும் கோட்டிப் புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும், + +ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும், + +விரிவு இலது இலங்கை'என்று வழி பெறார் விளிக்கின்றாரும்.       5.8.13 + + + +வாள் உறை விதிர்க்கின்றாரும், வாயினை மடிக்கின்றாரும், + +தோள் உறத் தட்டிக் கல்லைத் துகள் படத் துகைக்கின்றாரும், + +தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும், + +கோள் வளை எயிறு தின்று தீ எனக் கொதிக்கின்றாரும்.       5.8.14 + + + +அனைவரும் மலை என நின்றார், அளவு அறு படைகள் பயின்றார், + +அனைவரும் அமரின் உயர்ந்தார், அகல் இடம் நெளிய நடந்தார், + +அனைவரும் வரனின் அமைந்தார், அசனியின் அணிகள் அணிந்தார், + +அனைவரும் அமரரை வென்றார், அசுரரை உயிரை அயின்றார்.       5.8.15 + + + +குறுகின கவசரும் மின்போல் குரை கழல் உரகரும், வன்போர் + +முறுகின பொழுதின், உடைந்தார் முதுகு இட, முறுவல் பயின்றார்; + +இறுகின நிதிகிழவன் பேர் இசை கெட அளகை எறிந்தார்; + +தெறுகுநர் இன்மையின் வல்தோள் தினவு உற உலகு திரிந்தார்.       5.8.16 + + + + 'வரைகளை இடறுமின்!'என்றால், 'மறிகடல் பருகுமின்!'என்றால், + +'இரவியை விழவிடும்!'என்றால், 'எழுமழை பிழியுமின்!'என்றால், + +'அரவினது அரசனை, ஒன்றோ, தரையினொடு அரையுமின்!'என்றால், + +'தரையினை எடும், எடும்!'என்றால், ஒருவர் அது அமைதல் சமைந்தார்.       5.8.17 + + + +தூளியின் நிமிர் படலம் போய் இமையவர் விழி துற, வெம் போர் + +மீளியின் இனம் என, வல் தாள் விரை புலி நிரை என, விண் தோய் + +ஆளியின் அணி என, அன்றேல், அலை கடல் விடம் என, அஞ்சா, + +வாளியின் விசை கொடு, திண் கார் வரை வருவன என, வந்தார்.       5.8.18 + +கிங்கரர் பொழிலை வளைந்துகொள்ளுதல் + + + +பொறி தர விழி, உயிர் ஒன்றோ? புகை உக, அயில் ஒளி, மின் போல், + +செறிதர, உரும் அதிர்கின்றார், திசைதொறும் விசைகொடு சென்றார், + +எறிதரு கடையுக வன்கால் இடறிட, உடுவின் இனம்போய் + +மறிதர, மழை அகல் விண்போல் வடிவு அழி பொழிலை, வளைந்தார்.       5.8.19 + +அநுமன் கிங்கரரைக் காணுதல் + + + +வயிர் ஒலி, வளை ஒலி, வன் கார் மழை ஒலி, முரசு ஒலி, மண்பால் + +உயிர் உலைவு உற நிமிரும் போர் உறும் ஒலி, செவியின் உணர்ந்தான்; + +வெயில் விரி கதிரவனும் போய் வெருவிட, வெளியிடை விண்தோய் + +கயிலையின் மலை என நின்றான், அனையவர் வருதொழில் கண்டான்.       5.8.20 + +அநுமன் தன் எண்ணம் பலித்ததற்கு மகிழ்தல் + + + +இத இயல் இது என முந்தே இயைவு உற இனிது தெரிந்தான்; + +பத இயல் அறிவு பயந்தால், அதின் நல பயன் உளது உண்டோ? + +சிதவு இயல் கடி பொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர் + +உதவு இயல் இனிதின் உவந்தான், எவரினும் அதிகம் உயர்ந்தான்.       5.8.21 + +கிங்கரர்கள் அநுமன்மேல் படைவீசுதல் (5618-5619) + + + +'இவன்! இவன்! இவன்!'என நின்றார், 'இது!'என முதலி எதிர்ந்தார், + +பவனனின் முடுகி நடந்தார், பகல் இரவு உற மிடைகின்றார், + +புவனியும், மலையும், விசும்பும், பொரு அரு நகரும் உடன் போர்த் + +துவனியில் அதிர, விடம் போல் சுடர்விடு படைகள் துரந்தார்.       5.8.22 + + + +மழைகளும், மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார், + +முழைகளின் இதழ்கள் திறந்தார், முதிர் புகை கதுவ முனிந்தார், + +பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார், + +கழை தொடர் வனம் எரி உண்டால் என, எறி படைஞர் கலந்தார்.       5.8.23 + +அநுமன் ஒருமரத்தைக் கையிற்கொண்டு நிமிர்தல் + + + +அறவனும் அதனை அறிந்தான், அருகினில் அழகின் அமைந்தார் + +இற இனின் உதவு நெடும் தார் உயர் மரம் ஒருகை இயைந்தான், + +உற வரு துணை என, ஒன்றோ, உதவிய அதனை உவந்தான், + +நிறை கடல் கடையும் நெடும் தாள் மலை என, நடுவண் நிமிர்ந்தான்.       5.8. 24 + +அரக்கர் சிதைந்து அழிதல் (5621-5631) + + + +பருவரை புரைவன வன் தோள் பனி மலை அருவி நெடும் கால் + +சொரிவன பல என, மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார், + +ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் உயர் தலை உடைய உருண்டார்; + +அரு வரை நெரிய விழும் பேர் அசனியும் அசைய அறைந்தான்.       5.8.25 + + + +பறை புரை விழிகள் பறிந்தார், படியிடை நெடிது படிந்தார், + +பிறை புரை எயிறும் இழந்தார், பிடரொடு தலைகள் பிளந்தார், + +குறை உயிர் சிதற நெரிந்தார், குடரொடு குருதி குழைந்தார், + +முறை முறை படைகள் எறிந்தார், முடை உடல் மறிய முறிந்தார்.       5.8.26 + + + +புடையொடு விடு கனலின் காய் பொறி இடை மயிர்கள் புகைந்தார், + +தொடையொடு முதுகு துணிந்தார், சுழிபடு குருதி சொரிந்தார், + +படை இடை ஒடிய, நெடும் தோள் பறிதர, வயிறு திறந்தார், + +இடையிடை, மலையின், விழுந்தார், இகல் பொர முடுகி எழுந்தார்.       5.8.27 + + + +புதைபட இருளின் மிடைந்தார், பொடியிடை நெடிது புரண்டார், + +விதைபடும் உயிரர் விழுந்தார், விளியொடு விழியும் இழந்தார், + +கதையொடு முதிர மலைந்தார், கணைபொழி சிலையர் கலந்தார், + +உதைபட உரனும் நெரிந்தார், உதறொடு குருதி உமிழ்ந்தார்.       5.8.28 + + + +அயல் அயல் மலையொடு அறைந்தான், அடு பகை அளகை அடைந்தார், + +வியல் இடம் மறைய விரிந்தார், மிசை உலகு அடைய மிடைந்தார், + +புயல் தொடு கடலின் விழுந்தார், புடை புடை சிதைவொடு சென்றார், + +உயர்வு உற விசையின் எறிந்தான், உடலொடும் உலகு துறந்தார்.       5.8.29 + + + +தெறித்த வன்தலை, தெறித்தன செறி சுடர்க் கவசம், + +தெறித்த பைங்கழல், தெறித்தன சிலம்பொடு பொலம் தார், + +தெறித்த பல் மணி, தெறித்தன பெரும் பொறித் திறங்கள், + +தெறித்த குண்டலம், தெறித்தன கண்மணி சிதறி.       5.8.30 + + + +வாள்கள் இற்றன இற்றன வரிசிலை வயிரத் + +தோள்கள் இற்றன இற்றன சுடர் மழுச் சூலம் + +நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம் + +தாள்கள் இற்றன இற்றன படையுடைத் தடக்கை.       5.8.31 + + + +தெறித்த வன்தலை, தெறித்தன செறி சுடர்க் கவசம், + +தெறித்த பைங்கழல், தெறித்தன சிலம்பொடு பொலம் தார், + +தெறித்த பல் மணி, தெறித்தன பெரும் பொறித் திறங்கள், + +தெறித்த குண்டலம், தெறித்தன கண்மணி சிதறி.       5.8.32 + + + +உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வு உற்று + +உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று + +உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள் + +உக்க கப்பணம் உக்கன உயர்மணி மகுடம்.       5.8.33 + + + +தாள்களால் பலர் தடக்கைகளால் பலர் தாக்கும் + +தோள்களால் பலர் சுடர் விழியால் பலர் தொடரும் + +கோள்களால் பலர் குத்துகளால் பலர் தத்தம் + +வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார்.       5.8.34 + + + +ஈர்க்கப்பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார் + +பேர்க்கப்பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார் + +ஆர்க்கப்பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார் + +பார்க்கப்பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.       5.8.35 + + + +அநுமன் செய்த போர்முறை (5632-5634) + + + +ஓடிக் கொன்றனன் சிலவரை உடல் உடல் தோறும் + +கூடிக் கொன்றனன் சிலவரைக் கொடி நெடு மரத்தால் + +சாடிக் கொன்றனன் சில��ரைப் பிணம் தொறும் தடவித் + +தேடிக் கொன்றனன் சிலவரைக் கறங்கு எனத் திரிவான்.       5.8.36 + + + +முட்டினார் பட முட்டினான் முறை முறை முடுகிக் + +கிட்டினார் படக் கிட்டினான் கிரி என நெருங்கிக் + +கட்டினார் படக் கட்டினான் கைகளால் மெய்யில் + +தட்டினார் படத் தட்டினான் மலை எனத் தகுவான்.       5.8.37 + + + +உறக்கினும் கொல்லும், உணரினும் கொல்லும், மால் விசும்பில் + +பறக்கினும் கொல்லும், படரினும் கொல்லும், மின் படைக்கை + +நிறக் கரும் கழல் அரக்கர் கண் நெறிதொறும் பொறிகள் + +பிறக்க நின்று, எறி படைகளைத் தடக்கையால் பியையும்.       5.8.38 + + + +அநுமன் செய்த போரினால் சுற்றிலும் நேர்ந்த நிகழ்ச்சிகள் (5635-5641) + + + +சேறும் வண்டலும் மூளையும் நிணமுமாய்த் திணிய, + +நீறு சேர் நெடும்தெரு எலாம் நீத்தமாய் நிரம்ப, + +ஆறு போல் வரும் குருதி, அவ் அநுமனால் அலைப்பு உண்டு + +ஈறு இல் வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது; அவ் இலங்கை.       5.8.39 + + + +கருது காலினும் கையினும் வாலினும் கட்டிச் + +சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான் + +நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார் + +குருதி சாறு எனப் பாய்வது குரைகடல் கூனில்       5.8.40 + + + +எடுத்து அரக்கரை எறிதொறும் அவர் உடல் எற்றக் + +கொடித் திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த + +தடக்கை யானைகள் மறிந்தன கோபுரம் தகர்ந்த + +பிடிக் குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய.       5.8.41 + + + +தம்தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார்; + +தம்தம் மாதரைத் தம் கழலால் சிலர் சமைத்தார்; + +தம்தம் மாக்களைத் தம்படையால் சிலர் தடிந்தார் + +எற்றி மாருதி தடக்கைகளான் விசைத்து எறிய.       5.8.42 + + + +ஆடல் மாக் களிறு அனையவன், அரக்கியர்க்கு அருளி + +வீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான், + +கூடினார்க்கு அவர் உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான், + +ஊடினார்க்கு அவர் மனைதொறும் சிலவரை உய்த்தான்.       5.8. 43 + + + +தரு எலாம் உடல், தறெ்றி எலாம் உடல், சதுக்கத்து + +உரு எலாம் உடல், உவரி எலாம் உடல், உள் ஊர்க் + +கரு எலாம் உடல், காயம் எலாம் உடல், அரக்கர் + +தெரு எலாம் உடல், தேயம் எலாம் உடல் சிதறி.       5.8.44 + + + +ஊன் எலாம் உயிர் கவர் உறும் காலன் ஓய்ந்து உலந்தான் + +தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான் + +மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல் + +வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி.       5.8.45 + + + +அரக்கர் நடுவில் அநுமன் விளங்கிய காட்சி (5642-5645) + + + +ஆக இச் செரு விளைவுறும் அமைதியின் அரக்கர் + +மோகம் உற்றனர் ஆம் என முறை முறை முனிந்தார் + +மாகம் முற்றவும் மாதிரம் முற்றவும் வளைந்தார் + +மேகம் ஒத்தனர்; மாருதி வெய்யவன் ஒத்தான்.       5.8.46 + + + +அடல் அரக்கரும், ஆர்த்தலின், அலைத்தலின், அயரப் + +புடை பெருத்து உயர் பெருமையின், கருமையின், பொலிவின், + +மிடல் அயில் படை மீன் என விலங்கலின், கலங்கும் + +கடல் நிகர்த்தனர், மாருதி மந்தரம் கடுத்தான்.       5.8.47 + + + +கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ + +நிரை மணித் தலை நெரிந்து உகச் சாய்ந்து உயிர் நீப்பார் + +சுரர் நடுக்குற அழுதுகொண்டு எழுந்த நாள் தொடரும் + +உரகர் ஒத்தனர் அநுமனும் கலுழனே ஒத்தான்.       5.8.48 + + + +மானம் உற்ற தம் பகையினால் முனிவு உற்று வளைந்த + +மீன் உடைக் கடல் இடையினும் உலகு எலாம் மிடைந்த + +ஊன் அறக் கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர் + +ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அநுமன்.       5.8.49 + + + +அநுமனின் விழுப்புண் + + + +எய்த எற்றின எறிந்தன ஈர்த்தன இகலிப் + +பொய்த குத்தின பொதுத்தன தொளைத்தன போழ்ந்த + +கொய்த சுற்றின பற்றின குடைந்தன பொலிந்த + +அய்யன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு அரிதால்.       5.8.50 + + + +தேவர்கள் அநுமனைப் புகழ்தல் + + + +கார்க் கரும் தடம் கடல்களும் மழை முகில் கணனும் + +வேர்க்க, வெம் செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர் + +போர்க் குழாம் படி பூசலின், ஐயனைப் புகழ்வுற்று + +ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில்.       5.8.51 + + + +அநுமன் மேல் பூச்சொரிதல் + + + +மேவும் வெம் சினத்து அரக்கர்கள் முறை முறை விசையால் + +ஏவும் பல் படை எத்தனை கோடிகள் எனினும் + +தூவும்; தேவரும் மகளிரும் முனிவரும் சொரிந்த + +பூவும், புண்களும், தெரிந்தில மாருதி புயத்தில்.       5.8.52 + + + +அநுமனின் தளராத நிலை + + + +பெயர்க்கும் சாரிகை கறங்கு எனத் திசைதொறும் பெயர்வின், + +உயர்க்கும் விண்மிசை ஓங்கலின், மண்ணின் வந்து உறலின், + +அயர்த்து வீழ்ந்தனர் அழிந்தனர் அரக்கராய் உள்ளார்; + +வெயர்த்திலன் மிசை, உயிர்த்திலன் நல் அற வீரன்.       5.8.53 + + + +கிங்கரர் அனைவரும் மடிதல் + + + +எஞ்சல் இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவ + +நஞ்சம் உண்டவர் ஆம் என அநுமன் மேல் நடந்தார் + +துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று + +அஞ்சினார் இல்லை; அரக்கரில் வீரர் மற்று யாரே.       5.8.54 + + + +பொழிற்காவலர் இராவணனிடம் ஓடுதல் (5651-5652) + + + +வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார்; + +நந்த வானத்து நாயகர் ஓடினர் நடுங்கிப் + +பிந்து காலினர் கையினர் பெரும்பயம் பிடரின் + +உந்த ஆயிரம் பிணக்குவை மேல் விழுந்து உளைவார்.       5.8.55 + + + +விரைவின் உற்றனர் விம்மல் உற்று யாதொன்றும் விளம்பார் + +கரதலத்தினால் பட்டதும் கட்டு உரைக்கின்றார் : + +தரையின் நிற்கிலர் திசைதொறும் நோக்கினர் சலிப்பார்; + +அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான்.       5.8.56 + + + +காவலாளிகளை இராவணன் வினாவுதல் + + + +"இறந்து நீங்கினரோ? இன்று என் ஆணையை இகழ்ந்து, + +துறந்து நீங்கினரோ? அன்றி, வெம் சமர் தொலைந்தார், + +மறந்து நீங்கினரோ? என்கொல் வந்தது?" என்று உரைத்தான், + +நிறம் செருக்குற, வாய்தொறும் நெருப்பு உமிழ்கின்றான்.       5.8.57 + + + +கிங்கரர் பட்டமை கூறல் + + + +"சலம் தலைக் கொண்டனர் ஆய தன்மையார் + +அலந்திலர் செரு களம் அத்து அஞ்சினார் அலர் : + +புலம் தெரி பொய்க் கரி புகலும் புன்கணார் + +குலங்களின் அவிந்தனர் குரங்கினால்!"என்றார்.       5.8.58 + + + +இராவணன் நாணுதல் + + + +ஏவலின் எய்தினர் இருந்த எண்திசைத் + +தேவரை நோக்கினான் நாணும் சிந்தையான்; + +"யாவது? என்று அறிந்திலிர் போலுமால்!"என்றான் + +மூவகை உலகையும் விழுங்க மூள்கின்றான்.       5.8.59 + + + +இராவணன் மீட்டும் வினாவுதல் + + + +மீட்டு அவர் உரைத்திலர் பயத்தின் விம்முவார்; + +தோட்டு அலர் இன மலர்த் தொங்கல் மோலியான் + +"வீட்டியது அரக்கரை என்னும் வெவ்வுரை + +கேட்டதோ? கண்டதோ? கிளத்துவீர்!"என்றான்.       5.8.60 + + + +அரக்கர் அழிந்ததை அறிவித்தல் + + + +"கண்டனம் ஒரு புடை நின்று கண்களால் + +தணெ் திரைக் கடல் என வளைந்த சேனையை + +மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர் + +உண்டது; அக் குரங்கு இனம் ஒழிவது அன்று!"என்றார்.       5.8.61 + +---------------- + + + +5.9 சம்புமாலி வதைப் படலம் 5658 - 5708 + + + +அனுமனைப் பிணித்துக் கொணருமாறு இராவணன் சம்புமாலியை ஏவுதல் + + + +கூம்பின கையன் நின்ற குன்று எனக் குவவுத் திண் தோள் + +பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனைப் பாரா, + +'வாம் பரித் தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றித் + +தாம்பினில் பற்றித் தந்து என் மனச் சினம் தணித்தி'என்றான்.       5.9.1 + +சம்புமாலி மகிழ்ந்து போருக்குப் புறப்படல் + + + +ஆயவன் வணங்கி, "ஐய! அளப்பரும் அரக்கர் முன்னர், + +'நீ இது முடித்தி'என்று நேர்ந்தனை நினைவின் எண்ணி + +ஏயினை! என்னப் பெற்றால், என்னின் யார் உயர்ந்தார்?" என்னாப் + +போயினன்; இலங்கை வேந்தன் போர்ச் சினம் போவது ஒப்பான்.       5.9.2 + +சம்புமாலியுடன் சென்ற சேனைகள் + + + +தன்னுடைத் தானையோடும், தயமுகன்'தருக'என்று ஏய + +மன் உடைச் சேனையோடும், தாதை வந்து ஈந்த வாளின் + +மின் உடைப் பரவையோடும், வேறு உேளார் சிறப்பின் விட்ட + +பின் உடை அனிகத்தோடும், பெயர்ந்தனன், பெரும்போர் பெற்றான்.       5.9.3 + +யானையும் தேரும் + + + +உரும் ஒத்த முழக்கின் செங்கண் வெள் எயிற்று ஓடை நெற்றிப் + +பருமித்த கிரியில் தோன்றும் வேழமும், பதுமத்து அண்ணல் + +நிருமித்த எழிலி முற்றிற்று என்னல் ஆம் நிலைய நேமிச் + +சொரி முத்த மாலை சூழும் துகில் கொடித் தடம் தேர் சுற்ற.       5.9.4 + +குதிரையும் காலாளும் + + + +காற்றினை மருங்கில் கட்டிக் கால்வகுத்து உயிரும் கூட்டிக் + +கூற்றினை ஏற்றி அன்ன குலப்பரி குழுவக், குன்றின் + +தூற்றினின் எழுப்பி ஆண்டுத் தொகுத்து எனச் சுழல் பைங்கண்ண + +வேற்று இனப் புலியேறு என்ன, வியந்து எழும் பதாதி ஈட்டம்.       5.9.5 + +பலவகைப் படைக்கலமும் விளங்குதல் + + + +தோமரம், உலக்கை, கூர்வாள், சுடர்மழு, குலிசம், தோட்டி + +தாம் அரம் தின்ற கூர்வேல், தழல் ஒளிவட்டம், சாபம், + +காமர் தண்டு, எழுக்கள், காந்தும் கப்பணம், காலபாசம், + +மாமர வலயம், வெம் கோல் முதலிய வயங்க மாதோ.       5.9.6 + +பதாகைகள் செறிதல் + + + +எத்திய அயில், வேல், குந்தம், எழுமுதல் இனைய ஏந்திக் + +குத்திய திளைப்ப, மீதில் குழுவின மழை மாக் கொண்டல் + +பொத்து உகு பொருவு இல் நல் நீர் சொரிவன போவ போலச் + +சித்திரப் பதாகை ஈட்டம் திசை தொறும் செறிவ செல்ல.       5.9.7 + +பலவகை ஒலியெழல் + + + +பல் இயம் துவைப்ப, நல் மாப் பணிலங்கள் முரலப், பொன் தேர்ச் + +சில்லிகள் இடிப்ப, வாசி சிரித்திடச் செறி பொன் தாரும், + +வில்லும் நின்று இசைப்ப, யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப, விண் தோய் + +ஒல் ஒலி வானில் தேவர் உரை தெரிவு ஒழிக்கும் மன்னோ.       5.9.8 + +தூளி பரவுதல் + + + +மின் நகு கிரிகள் யாவும் மேருவின் விளங்கித் தோன்ற + +தொல் நகர் பிறவும் எல்லாம் பொலிந்தன துறக்கம் என்ன; + +அன்னவன் சேனை செல்ல ஆர்கலி இலங்கை ஆய + +பொன் நகர் தகர்ந்து, பொங்��ி, ஆர்த்து, எழு, தூளி போர்ப்ப.       5.9.9 + +சம்புமாலியொடு சென்ற சேனையின் அளவு + + + +ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடம் தேர், அத்தேர்க்கு + +ஏயின இரட்டி யானை, யானையின் இரட்டி பாய்மா, + +போயின பதாதி சொன்ன புரவியின் இரட்டி போல் ஆம், + +தீயவன் தடம் தேர் சுற்றித் தறெ்று எனச் சென்ற சேனை.       5.9.10 + + + +தேர் வீரர் + + + +வில் மறைக் கிழவர், நானா விஞ்சையர், வரத்தின் மிக்கார், + +வல் மறக் கண்ணர், ஆற்றல் வரம்பு இலா வயிரத் தோளார், + +தொல் மறக் குலத்தர், தூணி தூக்கிய புறத்தர், மார்பின் + +கல் மறைத்து ஒளிரும் செம்பொன் கவசத்தர், கடும் தேர் ஆட்கள்.       5.9.11 + + + +யானை வீரர் + + + +பொரு திசை யானை ஊரும் புனிதனைப் பொருவும் பொற்பர், + +சுரி படைத் தொழிலும் மற்றை அங்குசத் தொழிலும் தொக்கார் + +நிருதியில் பிறந்த வீரர், நெருப்பு இடைப் பரப்பும் கண்ணர், + +பரிதியில் பொலியும் மெய்யர், படு மதக் களிற்றின் பாகர்.       5.9.12 + + + +குதிரை வீரர் + + + +ஏர் கெழு திசையும், சாரி பதினெட்டும், இயல்பின் எண்ணிப் + +போர் கெழு படையும் கற்ற வித்தகப் புலவர்; போரில் + +தேர் கெழு மறவர், யானைச் சேவகர், சிரத்தில் செல்லும் + +தார் கெழு புரவி என்னும் தம் மனம் தாவப் போனார்.       5.9.13 + + + +சம்புமாலி நால்வகைத்தானையொடும் போர்க்குச் செல்லுதல் + + + +அந் நெடும் தானை சுற்ற, அமரரை அச்சம் சுற்ற, + +பொன் நெடும் தேரில் போனான்; பொருப்பு இடை நெருப்பில் பொங்கி, + +தன் நெடும் கண்கள் காந்த, தாழ்பெரும் கவசம் மார்பில் + +மின் இட, வெயிலும் வீச, வில் இடும் எயிற்று வீரன்.       5.9.14 + + + +அரக்கர் வரவு நோக்கி நின்ற அனுமன் தோற்றம் (5672-5673) + + + +நந்தன வனத்துள் நின்ற, நாயகன் தூதன் தானும், + +"வந்திலர் அரக்கர்,"என்னும் மனத்தினன், வழியை நோக்கி, + +சந்திரன் முதல வான மீன் எலாம் தழுவ நின்ற, + +இந்திர தனுவின் தோன்றும் தோரணம் இவர்ந்து நின்றான்.       5.9.15 + + + +கேழ் இரும் மணியும், பொன்னும், விசும்பு இருள் கிழித்து வீங்க, + +ஊழ் இரும் கதிர்கேளாடும் தோரணத்து உம்பர் மேலான், + +சூழ் இரும் கதிர்கள் எல்லாம் தோற்றிடச் சுடரும் சோதி, + +ஆழியின் நடுவண் தோன்றும் அருக்கனே அனையன் ஆனான்.       5.9.16 + + + +அனுமன் ஆர்த்தல் + + + +செல்லொடு மேகம் சிந்தத், திரைக்கடல் சிலைப்புத் தீர, + +கல் அளை கிடந்த நாகம் உயிரொடு விடமும் கால, + +கொல் இயல் அரக்கர் நெஞ்சில் குடிபுக அச்��ம், வீரன் + +வில் என இடிக்க, விண்ணோர் நடுக்கு உற வீரன் ஆர்த்தான்.       5.9.17 + + + +அனுமன் தோள்கொட்டுதல் + + + +நின்றன திசைக்கண் வேழம், நெடும் களிச் செருக்கு நீங்க, + +தென் திசை நமனும் உள்ளம் துணுக்கு என, சிந்தி வானில் + +பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர, பூவும் + +குன்றமும் பிளக்க, வேலை துளக்கு உற, கொட்டினான் தோள்.       5.9.18 + + + +அரக்கரும் ஆர்த்து அனுமனை அணுகமுடியாது நிற்றல் + + + +அவ்வழி அரக்கர் எல்லாம் அலை நெடும் கடலின் ஆர்த்தார், + +செவ்வழிச் சேறல் ஆற்றார், பிணப் பெரும் குன்றம் தறெ்றி + +வெவ்வழிக் குருதி வெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க + +"எவ்வழிச் சேறும்,"என்றார் தமர் உடம்பு இடறி வீழ்வார்.       5.9.19 + + + +அணிவகுத்து எதிர்ந்த சம்புமாலியைக் கண்டு அனுமன் மகிழ்தல் + + + +ஆண்டு நின்று அரக்கன் வெவ்வேறு அணி வகுத்து, அனிகம் தன்னை + +மூண்டு இரு புடையும் முன்னும் முறை முறை முடுக ஏவித் + +தூண்டினன், தானும் திண் தேர்; தோரணத்து இருந்த தோன்றல் + +வேண்டியது எதிர்ந்தான் என்ன வீங்கினன் விசயத் திண் தோள்.       5.9.20 + + + +அனுமனும் போர்க்கு அமைந்து நிற்றல் + + + +ஐயனும் அமைந்து நின்றான், ஆழியான் அளவின் நாமம் + +நெய் சுடர் விளக்கில் தோன்றும் நெற்றியே நெற்றி ஆக, + +மொய் மயிர்ச் சேனை பொங்க, முரண் அயில் உகிர் வாள் மொய்த்த + +கைகளே கைகள் ஆக, கடைக்குழை திருவால் ஆக.       5.9.21 + + + +அரக்கர் அனுமன்மேல் படைவழங்கல் + + + +வயிர்கள் வால் வளைகள் விம்ம, வரி சிலை சிலைப்ப, மாயப் + +பயிர்கள் ஆர்ப்பு எடுப்ப, மூரிப் பல் இயம் குமுற, பற்றிச் + +செயிர்கொள் வாள் அரக்கர், சீற்றம் செருக்கினர், படைகள் சிந்தி, + +வெயில்கள் போல் ஒளிகள் வீச, வீரன் மேல் கடிதுவிட்டார்.       5.9.22 + + + +அனுமன் போர்த்திறம் (5680-5697) + + + +கருங்கடல் அரக்கர்தம் படைக்கலம், கரத்தால் + +பெருங்கடல் உறப், புடைத்து, இறுத்து உகப் பிசைந்தான்; + +விரிந்தன பொறிக் குலம்; நெருப்பு என வெகுண்டு ஆண்டு + +இருந்தவன், கிடந்தது ஒர் எழு தெரிந்து எடுத்தான்.       5.9.23 + + + +இருந்தனன் எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் + +திரிந்தனன் புரிந்தனன் என நனி தெரியார்; + +விரிந்தவர் குவிந்தவர் விலங்கினர் கலந்தார் + +பொருந்தினர் நெருங்கினர் களம் படப் புடைத்தான்.       5.9.24 + + + +எறிந்தன எய்தன இடி உருமு என மேல் + +செறிந்தன படைக்கலம் இடைக்கையின் சிதைத��தான் + +முறிந்தன தெறும் கரி முடிந்தன தடம் தேர் + +மறிந்தன பரி நிரை வலக்கையின் மலைந்தான்.       5.9.25 + + + +அனுமனால் யானைப்படை அழிதல் + + + +இழந்தன நெடும் கொடி இழந்தன இரும் கோடு + +இழந்தன நெடும் கரம் இழந்தன வியன் தாள் + +இழந்தன முழங்கு ஒலி இழந்தன மதம் பாடு + +இழந்தன பெரும் கதம் இரும் கவுள் யானை.       5.9.26 + + + +தேர்ப்படை அழிதல் + + + +நெரிந்தன தடம் சுவர் நெரிந்தன பெரும் பார் + +நெரிந்தன நுகம் புடை நெரிந்தன அதன் கால் + +நெரிந்தன கொடிஞ்சிகள் நெரிந்தன வியன்தார் + +நெரிந்தன கடும்பரி நெரிந்தன நெடும் தேர்.       5.9.27 + + + +குதிரைப்படை அழிதல் + + + +ஒடிந்தன உருண்டன உலந்தன புலந்த; + +இடிந்தன எரிந்தன நெரிந்தன எழுந்த; + +மடிந்தன மறிந்தன முறிந்தன மலைபோல் + +படிந்தன முடிந்தன கிடந்தன பரிமா.       5.9.28 + + + +காலாட்படை அழிதல் + + + +வெருண்டனர் வியந்தனர் விழுந்தனர் எழுந்தார் + +மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார்; + +உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் பிழைத்தார் + +சுருண்டனர் புரண்டனர் தொலைந்தனர் மலைந்தார்.       5.9.29 + + + +கரிகொடு கரிகளைக் களம் படப் புடைத்தான் + +பரிகொடு பரிகளைத் தலத்து இடைப் படுத்தான் + +வரி சிலை வயவரை வயவரின் மடித்தான் + +நிரைமணித் தேர்களைத் தேர்களின் நெரித்தான்.       5.9.30 + + + +மூளையும் உதிரமும் முழங்கு இரும் குழம்பாய் + +மீள் இரும் குழைபடக் கரி விழுந்து அழுந்த + +தாெளாடும் தலை உக தடம் நெடும் கிரிபோல் + +தோெளாடும் நிருதரை வாெளாடும் துகைத்தான்.       5.9.31 + + + +மல்லொடு மலை மலைத் தோளரை வளைவாய்ப் + +பல்லொடும் நெடும் கரப் பகட்டொடும் பரும் தாள் + +வில்லொடும் அயிலொடும் விறலொடும் விளிக்கும் + +சொல்லொடும் உயிரொடும் நிலத்தொடும் துகைத்தான்.       5.9.32 + + + +புகை நெடும் பொறி புகும் திசைதொறும் பொலம் தார்ச் + +சிகை நெடும் சுடர் விடும் தேர் தொறும் சென்றான்; + +தகை நெடும் கரிதொறும் பரிதொறும் சரித்தான்; + +நகை நெடும் படைதொறும் தலைதொறும் நடந்தான்.       5.9.33 + + + +வென்றி வெம் புரவியின் வெரிநினும் விரவார் + +மன்றல் அம் தார் அணி மார்பினும் மணித் தேர் + +ஒன்றின் நின்று ஒன்றினும் உயர் மத மழை தாழ் + +குன்றினும் கடை உகத்து உரும் எனக் குதித்தான்.       5.9.34 + + + +பிரிவு அரும் ஒரு பெரும் கோல் என பெயரா + +இரு வினை துடைத்தவர் அறிவு என எவர்க்கும் + +வரு முலை விலைக்கு என மதித்தனர் வழ���்கும் + +தெரிவையர் மனம் என கறங்கு என திரிந்தான்.       5.9.35 + + + +"அண்ணல் அவ் அரியினுக்கு அடியவர் அவன்சீர் + +நண்ணுவர்"எனும் பொருள் நவை அறத் தெரிப்பான் + +மண்ணினும் விசும்பினும் மருங்கினும் மலைந்தார் + +கண்ணினும் மனத்தினும் தனித்தனி கலந்தான்.       5.9.36 + + + +கொடித் தடம் தேரொடும் குரகதக் குழுவை + +அடித்து ஒரு தடக் கையின் நிலத்திடை அரைத்தான்; + +இடித்து நின்று அதிர் கதத்து எயிற்று வன் பொருப்பைப் + +பிடித்து ஒரு தடக் கையின் உயிர் உகப் பிழிந்தான்.       5.9.37 + + + +கறுத்து எழு நிறத்தினர் எயிற்றினர் கயிற்றார் + +செறுத்து எரி விழிப்பவர் சிகைக் கழு வலத்தார் + +மறுத்து எழு மறலிகள் இவர் என அதிர்ந்தார்; + +ஒறுத்து உருத்திரன் என தனித்தனி உதைத்தான்.       5.9.38 + + + +சக்கரம் தோமரம் உலக்கை தண்டு அயில் வாள் + +மிக்கன தேர் பரி குடை கொடி விரவி + +உக்கன குருதி அம் பெரும் திரை உருட்டி + +புக்கன கடல் இடை நெடும் கரம் பூட்கை.       5.9.39 + + + +எட்டின விசும்பினை எழு பட எழுந்த + +முட்டின மலைகளை முயங்கின திசையை + +ஒட்டின ஒன்றை ஒன்று ஊடு அடித்து உதைந்து + +தட்டு முட்டு ஆடின தலையொடு தலைகள்.       5.9.40 + + + +சம்புமாலி தனிப்பட்டுச் சீற்றங்கொள்ளுதல் + + + +கானே காவல் வேழக் கணங்கள், கதம் வாள் அரி கொன்ற + +வானே எய்தத் தனியே நின்ற, மதம் மால் வரை ஒப்பான், + +தேனே புரை கண், கனலே சொரிய, சீற்றம் செருக்கினான்; + +தானே ஆனான் சம்புமாலி, காலன் தன்மையான்.       5.9.41 + + + +சம்புமாலி போர்க்கு விரைதல் + + + +காற்றின் கடிய கலினம் புரவி நிருதர் களத்து உக்கார்; + +ஆற்றுக் குருதி நிணத்தோடு அடுத்த அள்ளல் பெரும் கொள்ளைச் + +சேற்றில் செல்லா தேரின் ஆழி, ஆழும்; நிலை தேரா + +வீற்றுச் செல்லும் வெளியோ இல்லை, அளியன் விரைகின்றான்       5.9.42 + + + +அனுமன், தனிநின்ற சம்புமாலியிடம் இரங்கிக் கூறுதல் + + + +"ஏதி ஒன்றால், தேரும் அஃதால், எளியோர் உயிர் கோடல் + +நீதி அன்றால், உடன்வந்தாரைக் காக்கும் நிலை இல்லாய்! + +சாதி, அன்றேல் பிறிது என் செய்தி? அவர் பின் தனி நின்றாய்! + +போதி,"என்றான்; பூத்த மரம் போல் புண்ணால் பொலிகின்றான்       5.9.43 + + + +சம்புமாலி சினந்து அனுமன்மீது அம்பு தொடுத்தல் + + + +"நன்று, நன்று உன்கருணை,"என்னா, நெருப்பு நக நக்கான், + +"பொன்று வாரின் ஒருவன் என்றாய் போலும் எனை"என்னா, + +வன்திண் சிலையின் வயிரக் காலா��் வடித் திண் சுடர்வாளி + +ஒன்று பத்து நூறு நூறாயிரமும் உதைப்பித்தான்.       5.9.44 + + + +சம்புமாலியின் அம்புகளை அனுமன் விலக்குதல் + + + +"செய்தி செய்தி! சிலை கைக் கொண்டால் வெறும் கை திரிவோரை + +நொய்தின் வெல்வது அரிதோ?" என்னா, முறுவல் உக நக்கான்; + +அய்யன், அங்கும் இங்கும் காலால் அழியும் மழை என்ன + +எய்த எய்த பகழி எல்லாம் எழுவால் அகல்வித்தான்       5.9.45 + + + +அனுமன்கை எழுவைச் சம்புமாலி அறுத்து வீழ்த்துதல் + + + +முற்ற முனிந்தான் நிருதன், முனியா, முன்னும் பின்னும் சென்று + +உற்ற பகழி உறாது முறியா உதிர்கின்றதை உன்னா, + +சுற்றும் நெடுந்தேர் ஓட்டித் தொடர்ந்தான், தொடரும் துறை காணான், + +வெற்றி எழுவை மழுவாய் அம்பால் அறுத்து வீழ்த்தினான்       5.9.46 + + + +சம்புமாலியை அனுமன் கொல்லுதல் + + + +சலித்தான் ஐயன், கையால் எய்யும் சரத்தை உகச் சாடி, + +ஒலித்தார் அமரர் கண்டார் ஆர்ப்ப, தேரின் உள் புக்கு, + +கலித்தான் சிலையைக் கையால் வாங்கிக் கழுத்தினிடை இட்டு + +வலித்தான்; பகுவாய் மடித்து மலைபோல் தலை மண்ணிடை வீழ       5.9.47 + + + +பருவத்தேவர் சம்புமாலி இறந்தமை சொல்லச் செல்லுதல் + + + +குதித்து, தேரும், கோல் கொள் ஆளும், பரியும் குழம்பு ஆக + +மிதித்து, பெயர்த்தும் நெடும் தோரணத்தை வீரன் மேற்கொண்டான்; + +கதி துப்பு அழிந்து கழிந்தார் பெருமை கண்டு களத்து அஞ்சி, + +உதித்துப் புலர்ந்த தோல் போல் உருவத்து அமரர் ஓடினார்.       5.9.48 + + + +அனுமனால் இலங்கையில் அறமும் தளிர்த்தமை + + + +பரிந்து புலம்பும் மகளிர் காண, கணவர் பிணம் பற்றி + +விரிந்த குருதிப் பேராறு ஈர்த்து மனைகள் தொறும் வீச, + +இரிந்தது இலங்கை; எழுந்தது அழுகை; "இன்று, இங்கு இவனாலே, + +சரிந்தது அரக்கர் வலி" என்று எண்ணி அறமும் தளிர்த்ததால்.       5.9.49 + + + +பருவத்தேவர் இராவணனிடம் சம்புமாலி இறந்த செய்தி சொல்லுதல் + + + +புக்கார் அமரர் பொலம் தார் அரக்கன் பொரு இல் பெரும் கோயில், + +விக்கா நின்றார், விளம்பல் ஆற்றார், வெருவி விம்முவார், + +நக்கான் அரக்கன்,'நடுங்கல்'என்றான்; 'ஐய! நமர் எல்லாம், + +உக்கார், சம்புமாலி உலந்தான், ஒன்றே குரங்கு'என்றார்       5.9.50 + + + +இராவணன் சினந்து அனுமனைப் பிடிக்க எழக்கண்ட பஞ்சசேனாபதிகள் கூறுதல் + + + +என்னும் அளவின் எரிந்து வீங்கி எழுந்த வெகுளியான், + +உன்ன உன்ன உதிரக் குமிழி விழி ஊடு உமிழ்கின்றான், + +"சொன்ன குரங்கை, யானே பிடிப்பன் கடிது தொடர்ந்து", என்றான். + +அன்னது அன்னது உணர்ந்த சேனைத் தலைவர் ஐவர் அறிவித்தார்       5.9.51 + +------------------- + + + +5.10 பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம் 5709 - 5775 + + + +படைத்தலைவர் ஐவர் இராவணனிடம் கூறல் (5709-5712) + + + +சிலந்தி உண்பது ஓர் குரங்கின்மேல் சேறியேல், திறலோய்! + +கலந்த போரில் நின் கண் புலம் கடும் கனல் கதுவ, + +உலந்த, மால்வரை அருவியாறு ஒழுக்கு அற்ற ஒழுக்க, + +புலர்ந்த மாமதம் பூக்கும் அன்றே! திசைப் பூட்கை       5.10.1 + + + +இலங்கு வெம் சினத்து அம் சிறை எறுழ் வலிக் கலுழன் + +உலங்கின் மேல் எழுந்தன்ன, நீ, குரங்கின்மேல் உருக்கின், + +அலங்கல் மாலை நின் புயம் நினைந்து, அல்லும் நன் பகலும் + +குலுங்கும் வன் துயர் நீங்குமால், வெள்ளி அம் குன்றம்.       5.10.2 + + + +உறுவது என்கொலோ? உரன் அழிவு என்பது ஒன்று உடையார் + +பெறுவது யாது ஒன்றும் காண்கிலர், கேட்கிலர், பெயர்ந்தார், + +சிறுமை ஈது ஒப்பது யாது? நீ குரங்கின்மேல் செல்லின், + +முறுவல் பூக்கும் அன்றே! நின்ற மூவர்க்கும் முகங்கள்.       5.10.3 + + + + அன்றியும் உனக்கு ஆள் இன்மை தோன்றுமால்'அரச! + +வென்றி இல்லவர் மெல்லியோர் தமைச் செல விட்டாய் + +நன்று நீ இன்று காண்டியேல் எமைச் செல நயத்தி + +என்று கைதொழுது இறைஞ்சினர்; அரக்கனும் இசைந்தான்.       5.10.4 + + + +படைத்தலைவர் கட்டளை + + + +உலகம் மூன்றிற்கும் முதன்மை பெற்றோர் என உயர்ந்தார் + +திலகம் மண் உற வணங்கினர்; கோயிலில் தீர்ந்தார்; + +அலகில் தேர் பரி கரியொடு ஆள் மிடைந்த போர் அரக்கர் + +'தொலைவு இலாதது கதும் என வருக'எனச் சொன்னார்.       5.10.5 + + + +படை திரளுதல் + + + +ஆனை மேல் முரசு அறைந்தனர் வள்ளுவர் அழைத்தார் + +பேன வேலையில் புடை பரந்தது பெரும் சேனை; + +சோனை மா மழை முகில் எனப் போர்ப் பணை துவைத்த; + +மீன வான் இடு வில் எனப் படைக் கலம் மிடைந்த.      5.10.6 + + + +வெண்கொடிகளின் தோற்றம் + + + +தானை மா கொடி மழை பொதுத்து உயர் நெடும் தாள + +மான மாற்று அரு மாருதி முனிய நாள் உலந்து + +போன மாற்றலர் புகழ் எனக் கால் பொரப் புரண்ட; + +வான யாற்று வெண் திரை என வரம்பு இல பரந்த.       5.10.7 + + + +படைகளின் போர்க்கோலம் + + + + விரவு பொன் கழல் விசித்தனர்; வெரிந் உற்று விளங்கச் + +சரம் ஒடுக்கின புட்டிலும் சாத்தினர்; சமையக் + +கருவி புக்கனர் அரக்கர்; மா பல்லணம் கலினப் + +புரவி இட்ட; தேர் பூட்டின; பருமித்த பூட்கை.       5.10.8 + + + +படைகளால் நிகழ்ந்தவை + + + +ஆறு செய்தன ஆனையின் மதங்கள்; அவ் ஆற்றைச் + +சேறு செய்தன தேர்களின் சில்லி; அச் சேற்றை + +நீறு செய்தன புரவியின் குரம்; மற்றை நீற்றை + +ஈறு செய்தன அப் பரிக் கலின மா விலாழி.       5.10.9 + + + +படைகளின் பேரொலி + + + +வழங்கு தேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும், + +முழங்கு வெம் களிற்று அதிர்ச்சியும், மொய் கழல் ஒலியும், + +தழங்கு பல் இயத்து அமலையும், கடை யுகத்து ஆழி + +முழங்கும் ஓதையின் மும்மடங்கு எழுந்தது முடுகி.       5.10.10 + + + +படைகளின் அளவு + + + +ஆழித் தேர்த் தொகை ஐம்பதினாயிரம்; அஃதே + +சூழிப் பூட்கைக்குத் தொகை; அவற்று இரட்டியின் தொகைய + +ஊழிக் காற்று அன்ன புரவி; மற்று அவற்றினுக்கு இரட்டி + +பாழித் தோள் நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி       5.10.11 + + + +படைகளின் நெருக்கம் + +கூய்த் தரும் தொறும், தரும் தொறும், தானை வெம் குழுவின் + +நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க, + +காய்த்து அமைந்த வெம் கதிர்ப் படை ஒன்று ஒன்று கதுவித் + +தேய்த்து எழுந்தன; பொறிக் குலம் மழைக் குலம் தீய.       5.10.12 + + + +யானைப் படை + + + +பண் மணிக் குலம் யானையின் புடைதொறும் பரந்த + +ஒண் மணிக் குலம் மழை இடை உரும் என ஒலிப்ப; + +கண் மணிக் குலம் கனல் எனக் காந்துவ; கதுப்பின் + +தண் மணிக் குலம் மழை எழு கதிர் எனத் தழைப்ப.       5.10.13 + + + +அரக்க வீரருக்கு இரங்கிச் சுற்றத்தார் தடுத்தல் + + + +தொக்க தம்புடை சுரிகுழல் மடந்தையர் தொடிக்கை + +மக்கள் தாயர் மற்று யாவரும் தடுத்தனர் மறுகி; + +'ஒக்க ஏகுதும் குரங்கினுக்கு உயிர் தர; ஒருவர் + +புக்கு மீண்டிலர்'என்று அழுது இரங்கினர் புலம்பி.       5.10.14 + + + +ஐவரும் படையொடு செல்லல் + + + +கை பரந்து எழு சேனை அம் கடல் இடைக் கலந்தார்; + +செய்கை தாம் வரும் தேர் இடைக் கதிர் எனச் செல்வார்; + +மெய்கலந்த மா நிகர்வரும் உவமையை வென்றார்; + +ஐவரும் பெரும் பூதம் ஓர் ஐந்தும் ஒத்து அமைந்தார்.       5.10.15 + + + +ஐவரின் வீரம் (5724-5732) + + + +முந்து இயம் பல கறங்கிட, முறை முறை பொறிகள் + +சிந்தி, அம்பு உறு கொடும் சிலை உருமு எனத் தெறிப்பார்; + +வந்து இயம்பு உறு முனிவர்க்கும் அமரர்க்கும் வலி ஆர், + +இந்தியம் பகை ஆயவை ஐந்தும் ஒத்து இயைந்தார்.       5.10.16 + + + +வாசவன் வயக் குலிசமும் வருணன் வன் கயிறும், + +ஏசில் தென் திசைக் கிழவன் தன் எரி முனை எழுவும், + +ஈ��ன் வன் தனிச் சூலமும் என்று இவை ஒன்றும் + +ஊசி போழ்வது ஓர் வடுச் செயா நெடும் புயம் உடையார்       5.10.17 + + + + சூர் தடிந்தவன் மயில் இடைப் பறித்த வன் தோகை + +பார் பயந்தவன் அன்னத்தின் இறகிடைப் பறித்த + +மூரி வெம் சிறகு இடை இட்டுத் தொடுத்தன முறுக்கி + +வீர சூடிகை நெற்றியின் அயல் இட்டு விசித்தார்.       5.10.18 + + + +பொன் திணிந்த தோள் இராவணன் மார்பொடும் பொருத + +அன்று இழந்த கோடு அரிந்து இடும் அழகு உறு குழையர்; + +நின்ற வன் திசை நெடும் களி யானையின் நெற்றி + +மின் திணிந்த அன ஓடையின் வீர பட்டத்தர்.       5.10.19 + + + +நிதி நெடும் கிழவனை நெருக்கி நீள் நகர்ப் + +பதியொடும் பெரும் திருப் பறித்த பண்டைநாள் + +விதி என அன்னவன் வெந் இட்டு ஓடவே + +பொதியொடும் வாரிய பொலன் கொள் பூணினார்.       5.10.20 + + + + இந்திரன் இசை இழந்து ஏகுவான் இகல் + +தந்திமுன் கடவினன் முடுக தாம் அதன் + +மந்தர வால் அடி பிடித்து'வல்லையேல் + +உந்துதி இனி'என வலிந்த ஊற்றத்தார்.       5.10.21 + + + + 'பால்நிறுத்து அந்தணன் பணியன் ஆகி நின் + +கோல் நினைத்திலன்'என உலகம் கூறலும் + +நீல் நிறத்து இராவணன் முனிவு நீக்குவான் + +காலனைக் காலினில் கையில் கட்டினார்.       5.10.22 + + + +மலைகளை நகும் தட மார்பர் மால் கடல் + +அலைகளை நகும் நெடும் தோளர் அந்தகன் + +கொலைகளை நகும் நெடும் கொலையர் கொல்லன் ஊது + +உலைகளை நகும் அனல் உமிழும் கண்ணினார்.       5.10.23 + + + +தோல் கிளர் திசை தொறும் உலகைச் சுற்றிய + +சால் கிளர் முழங்கு எரி தழங்கி ஏறினும் + +கால் கிளர்ந்து ஓங்கினும் காலம் கையுற + +மால் கடல் கிளரினும் சரிக்கும் வன்மையார்.       5.10.24 + + + +அணிவகுத்து நிற்கும் ஐவரை அனுமன் பார்த்தல் + + + +இவ் வகை அனைவரும் எழுந்த தானையர் + +மொய் கிளர் தோரணம் அதனை முற்றினார்; + +கையொடு கையுற அணியும் கட்டினார் + +ஐயனும் அவர் நிலை அறிய நோக்கினான்.       5.10.25 + + + +வானவர் மனநிலை + + + +அரக்கரது ஆற்றலும் அளவு இல் சேனையின் + +தருக்கும் அம் மாருதி தனிமைத் தன்மையும் + +பொருக்கு என நோக்கிய புரந்தரர் ஆதியர் + +இரக்கமும் அவலமும் துளக்கும் எய்தினார்.       5.10.26 + + + +அரக்கர் படையை அனுமன் நோக்குதல் + + + +'இற்றனர் அரக்கர் இப் பகல் உளே'எனாக் + +கற்று உணர் மாருதி களிக்கும் சிந்தையான் + +முற்று உறச் சுலாவிய முடிவு இல் தானையைச் + +சுற்று உற நோக்கி தன் தோளை நோக்கினான்.       5.10.27 + + + +அரக்கர் அனுமனைப��பற்றிக் கருதல் + + + +'புன்தலைக் குரங்கு இது போலுமால் அமர் + +வென்றது; விண்ணவர் புகழை வேரொடும் + +தின்ற வல் அரக்கரைத் திருகித் தின்றதால் + +என்றனர் அயிர்த்தனர் நிருதர் எண் இலார்.       5.10.28 + + + +அனுமன் பேருருவம் கொள்ளல் + + + +ஆயிடை அனுமனும் அமரர்கோன் நகர் + +வாயில் நின்று அவ் வழிக் கொணர்ந்து வைத்த மாச் + +சேயொளி தோரணத்து உம்பர்ச் சேண் நெடு + +மீ உயர் விசும்பையும் கடக்க வீங்கினான்.       5.10.29 + + + +அரக்கர் சினந்து படைவழங்கல் + + + +வீங்கிய வீரனை வியந்து நோக்கிய + +தீங்கு இயல் அரக்கரும் திருகினார் சினம் + +வாங்கிய சிலையினர் வழங்கினார் படை; + +ஏங்கிய சங்கு இனம்; இடித்த பேரியே.       5.10.30 + + + +அரக்கர் எறிந்த படைக்கலங்களை அனுமன் பொருட்படுத்தாமை + + + +எறிந்தனர் எய்தனர் எண் இறந்தன + +பொறிந்து எழு படைக்கலம் அரக்கர்; பொங்கினார்; + +செறிந்தன மயிர்ப் புறம்;'தினவு தீர்வுறச் + +சொறிந்தனர்'என இருந்து ஐயன் தூங்கினான்.       5.10.31 + + + +அனுமன் இருப்புத்தூணை எடுத்தல் + + + +உற்று உடன்று அரக்கரும் உருத்து உடற்றினர்; + +செற்று உற நெருக்கினர்; செருக்கும் சிந்தையர்; + +'மற்றையர் வரும் பரிசு இவரை வல் விரைந்து + +எற்றுவன்'என எழு அனுமன் ஏந்தினான்.       5.10.32 + + + +அனுமன் செய்த போர் (5741-5746) + + + +ஊக்கிய படைகளும் உருத்த வீரரும் + +தாக்கிய பரிகளும் தடுத்த தேர்களும் + +மேக்கு உயர் கொடி உடை மேக மாலை போல் + +நூக்கிய கரிகளும் புரள நூக்கினான்.       5.10.33 + + + +வார் மதம் கரிகளின் கோடு வாங்கி மா + +தேர் படப் புடைக்கும்; அத் தேரின் சில்லியால் + +வீரரை உருட்டும்; அவ் வீரர் வாளினால் + +தார் உடைப் புரவியைத் துணியத் தாக்குமால்.       5.10.34 + + + +இரண்டு தேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி வேறு + +இரண்டு மால் யானை பட்டு உருள எற்றுமால்; + +இரண்டு மால் யானை கை இரண்டின் ஏந்தி வேறு + +இரண்டு பாலினும் வரும் பரியை எற்றுமால்.       5.10.35 + + + +மா இரு நெடு வரை வாங்கி மண்ணில் இட்டு + +ஆயிரம் தேர் பட அரைக்குமால்; அழித்து + +ஆயிரம் களிற்றை ஓர் மரத்தினால் அடித்து + +ஏ எனும் மாத்திரத்து எற்றி முற்றுமால்.       5.10.36 + + + +உதைக்கும் வெம் கரிகளை; உழக்கும் தேர்களை; + +மிதிக்கும் வன் புரவியை; தேய்க்கும் வீரரை; + +வதிக்கும் வல் எழுவினால் அரைக்கும் மண் இடை; + +குதிக்கும் வன் தலை இடை; கடிக்கும் குத்துமால்.       5.10.37 + + + + + +விசையின் மான் தேர்களும் களிறும் விட்டு அகன் + +திசையும் ஆகாயமும் செறியச் சிந்துமால்; + +குசை கொள் பாய் பரியொடும் கொற்ற வேலொடும் + +பிசையுமால் அரக்கரைப் பெரும் கரங்களால்.       5.10.38 + + + +அநுமன் கடலில் வீழ்த்திய படைகள் (5747-5750) + + + +தீ உறு பொறி உடைச் செம் கண் வெம் கை மா + +மீ உறத் தடக் கையால் வீரன் வீசுதோறு + +ஆய் பெரும் கொடியன கடலின் ஆழ்வன + +பாய் உடை நெடும் கலம் படுவ போன்றவே.       5.10.39 + + + +தாரொடும் உருெளாடும் தடக் கையால் தனி + +வீரன் விட்டு எறிந்தன கடலின் வீழ்வன + +வாரியின் எழுசுடர்க் கடவுள் வானவன் + +தேரினை நிகர்த்தன புரவித் தேர்களே.       5.10.40 + + + +வீ உற விண் இடை முட்டி வீழ்வன + +ஆய் பெரும் திரைக் கடல் அழுவத்து ஆழ்வன + +ஓய்வு இல புரவி வாய் உதிரம் கால்வன + +வாய் இடை எரி உடை வடவை போன்றவே.       5.10.41 + + + +வரிந்து உற வல்லிதில் சுற்றி வாலினால் + +விரிந்து உற வீசலின் கடலின் வீழ்ந்தவர் + +திரிந்தனர்; செறி கயிற்று அரவினால் திரி + +அரும் திறல் மந்தரம் அனையர் ஆயினார்.       5.10.42 + + + +போரில் இரத்தப் பெருக்கு + + + +வீரன் வன்தடக் கையால் எடுத்து வீசிய + +வார் மத கரியினில் தேரின் வாசியின் + +மூரி வெம் கடல் புகக் கடிதின் முந்தின; + +ஊரின் வெம் குருதி ஆறு ஈர்ப்ப ஓடின.       5.10.43 + + + +பிணக் குவியல் + + + +பிறைக் கடை எயிற்றின பிலத்தின் வாயின + +கறைப் புனல் பொறிகேளாடு உமிழும் கண்ணன + +உறுப்பு உறு படையின உதிர்ந்த யாக்கைகள் + +மறைத்தன மகரம் தோரணத்தை வான் உற.       5.10.44 + + + +கவிக் கூற்று + + + +குன்று உள மரம் உள குலம் கொள் பேர் எழு + +ஒன்று அல பல உள உயிர் உண்பான் உள; + +அன்றினர் பலர் உளர்; ஐயன் கை உள; + +பொன்றுவது அல்லது புறத்துப் போவரோ.       5.10.45 + + + +அனுமன் அரக்கர் படையை ஒழித்தல் + + + +முழுமுதல் கண்ணுதல் முருகன் தாதை கை + +மழு எனப் பொலிந்து ஒளிர் வயிர வான் தனி + +எழுவினில் பொலம் கழல் அரக்கர் ஈண்டிய + +குழுவினைக் கரி எனக் கொன்று நீக்கினான்.       5.10.46 + + + +அனுமனைப் படைத் தலைவர் அணுகல் + + + +உலந்தது தானை; உவந்தனர் உம்பர்; + +அலந்தலை உற்றது அவ் ஆழி இலங்கை; + +கலந்தது அழும் குரலின் கடல் ஓதை; + +வலம் தரு தோளவர் ஐவரும் வந்தார்;       5.10.47 + + + +ஐவரும் பல்லாயிரம் அம்புகளை விடுதல் + + + +ஈர்த்து எழு செம் புனல் எக்கர் இழுக்க + +தேர்த் துணை ஆழி அழுந்தினர் சென்றார்; + +ஆர்த்தனர்; ஆயிரம் ஆயிரம் அம்பால் + +தூர்த்தனர்; அஞ்சனை தோன்றலும் நின்றான்.       5.10.48 + + + +அநுமன் தேர்ப்பொறியைச் சிதைத்தல் + + + +எய்த கடும்கணை யாவையும் எய்தா + +நொய்து அகலும்படி கைகளின் நூறா + +பொய் தகடு ஒன்று பொருந்தி நெடும் தேர் + +செய்த கடும் பொறி ஒன்று சிதைத்தான்.       5.10.49 + + + +அநுமன் ஐவருள் ஒருவனைப் பொருது அழித்தல் (5758-5759) + + + +உற்று உறு தேர் சிதையாமுன் உயர்ந்தான் + +முற்றின வீரனை வானின் முனிந்தான் + +பொன் திரள் நீள் எழு ஒன்று பொறுத்தான் + +எற்றினன்; அஃது அவன் வில்லினில் ஏற்றான்.       5.10.50 + + + +முறிந்தது மூரி வில்; அம் முறியே கொண்டு + +எறிந்த அரக்கன் ஓர் வெற்பை எடுத்தான்; + +அறிந்த மனத்தவன் அவ் எழுவே கொண்டு + +எறிந்த அரக்கனை இன் உயிர் உண்டான்.       5.10.51 + + + +மற்றை நால்வரும் அநுமனும் பொருதல் (5760-5761) + + + +ஒழிந்தவர் நால்வரும் ஊழி உருத்த + +கொழுந்து உறு தீ என வெய்த்துறு கொட்பர் + +பொழிந்தனர் வாளி; புகைந்தன கண்கள்; + +விழுந்தன சோரி அவ் வீரன் மணித் தோள்.       5.10.52 + + + +ஆயிடை வீரனும் உள்ளம் அழன்றான்; + +மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான்; + +மீ எரி உய்ப்பது ஒர் கல் செல விட்டான்; + +தீயவர் அச் சிலையைப் பொடி செய்தார்       5.10.53 + + + +நால்வருள் ஒருவனை அநுமன் அழித்தல் (5762-5764) + + + +தொடுத்த தொடுத்த சரங்கள் துரந்த; + +அடுத்து அகன் மார்பில் அழுந்தி அகன்ற; + +மிடல் தொழிலான் விடு தேரொடு நொய்தின் + +எடுத்து ஒருவன்தனை விண்ணின் எறிந்தான்.       5.10.54 + + + +ஏய்ந்து எழு தேர் இமிழ் விண்ணினை எல்லாம் + +நீந்தியது; ஓடி நிமிர்ந்தது; வேகம் + +ஓய்ந்தது; வீழ்வதன் முன் உயர் பாரில் + +பாய்ந்தவன் மேல் உடன் மாருதி பாய்ந்தான்.       5.10.55 + + + +மதத்த களிற்றினில் வாள் அரி ஏறு + +கதத்தது பாய்வது போல் கதிகொண்டு + +குதித்து அவன் மால்வரை மேனி குழம்ப + +மிதித்தனன் வெம் சின வீரருள் வீரன்.       5.10.56 + + + +அநுமன் பின்னும் இருவரை அழித்தல் (5765-5770) + + + +மூண்ட சினத்தவர் மூவர் முனிந்தார் + +தூண்டிய தேரர் சரங்கள் துரந்தார் + +வேண்டின வெம் சமம் வேறு விளைப்பார் + +'ஈண்டு இனி ஏகுதிர்'என்று எதிர் சென்றார்.       5.10.57 + + + +திரண்டு உயர் தோள் இணை அஞ்சனை சிங்கம் + +மருண்டு விசும்பு உறைவோர்களும் அஞ்ச + +முரண்தரு தேர் அவை ஆண்டு ஒரு மூன்றின் + +இரண்டை இரண்டு கையும் கொடு எழுந்தான்.       5.10.58 + + + +தூங்கின பாய் பரி; சூதர் உலைந்தார் + +வீங்கின தோளவர் விண்ணில் விசைத்தார்; + +ஆங்கு அது கண்டு அவர் போய் அகலாமுன் + +ஓங்கிய மாருதி ஒல்லையில் உற்றான்.       5.10.59 + + + +கால் நிமிர் வெம் சிலை கையின் இறுத்தான்; + +ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான்; + +ஏனை ஓர் வெம் படை இல்லவர் எஞ்சார் + +வான் இடை நின்று உயர் மல்லின் மலைந்தார்.       5.10.60 + + + +வெள்ளை எயிற்றர் கறுத்து உயா மெய்யர் + +பிள்ள விரித்த பிலப் பெரு வாயர் + +கொள்ள உருத் துடர் கோள் அரவு ஒத்தார்; + +ஒள் இகல் வீரன் அருக்கனை ஒத்தான்.       5.10.61 + + + +தாம்பு என வாலின் வரிந்து உயர் தாேளாடு + +ஏம்பல் இலார் இரு தோள்கள் இறுத்தான்; + +பாம்பு என நீங்கினர் பட்டனர் வீழ்வார்; + +ஆம்பல் நெடும்பகை போல் அவன் நின்றான்.       5.10.62 + + + +எஞ்சிய ஒருவனையும் அனுமன் ஒழித்தல் + + + +நின்றனன் ஏனையன்; நின்றது கண்டான்; + +குன்று இடை வாவு உறு கோளரி போல + +மின் திரி வன் தலை மீது குதித்தான்; + +பொன்றி அவன் புவி தேரொடு புக்கான்.       5.10.63 + + + +கவிக் கூற்று + + + +வஞ்சமும் களவும் வெஃகி, வழி அலா வழிமேல் ஓடி, + +நஞ்சினும் கொடியர் ஆகி, நவை செயற்கு உரிய நீரார் + +வெம் சின அரக்கர் ஐவர், ஒருவனே வெல்லப்பட்ட + +அஞ்சு எனும் புலன்கள் ஒத்தார்; அவனும் நல் அறிவு போன்றான்.      5.10.64 + + + +அரக்கர் அழிவை யாவருங் காணல் + + + +நெய் தலை உற்ற வேல் கை நிருதர் அச் செருவில் நேர்ந்தார் + +உய்தலை உற்று மீண்டார், ஒருவரும் இல்லை; உள்ளார், + +கை தலைப் பூசல் பொங்கக் கடுகினர்; காலன் உட்கும் +      +ஐவரும் உலந்த தன்மை, அனைவரும் அமையக் கண்டார். 5.10.65 + + + +ஐவரும் அழிந்ததை இராவணனிடம் சொல்லல் (5774-5775) + + +'இறுக்குறும் இன்று நம்மைக் குரங்கு'என, இரங்கி, ஏங்கி, + +மறுக்கு உறுகின்ற நெஞ்சின் மாதரை, வைது நோக்கி, + +உறுக்குறும் சொல்லான், ஊழித் தீ என உலகம் ஏழும் + +சுறு கொள நோக்குவான் தன், செவித் தொளை தீயச் சொன்னார்.       5.10.66 + + + +தானையும் உலந்தது; ஐவர் தலைவரும் சமைந்தார்; தாக்கப் + +போனபின் மீள்வேம் யாமே; அதுவும், போர் புரிகிலாமை; + +வானையும் வென்று உளாரை வல்லையின் மடிய நூறி, + +ஏனையர் இன்மை, சோம்பி இருந்தது அக் குரங்கும் என்றார்       5.10.67 + + ------------------ + + + +5.11 அக்ககுமாரன் வதைப் படலம் 5776 - 5825 + + + +அட்சகுமாரன் குரங்கைப் பற்றித்தரத் தன்னை அனுப்ப வேண்டல் (5776-5778) + + + +கேட்டலும், வெகுளி வெம் தீ கிளர்ந்து எழ, விலங்கல் மார்பில் + +தோடு அலர் தெரியல் மாலை வண்டொடும் சுறு கொண்டு ஏற, + +ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத்தான், ஒருப்பட்டானைத் + +தாள் துணை தொழுது, மைந்தன், தடுத்து இடை தருதி என்றான்.     �� 5.11.1 + + + +முக்கணான் ஊர்தி அன்றேல், மூவுலகு அடியில் தாயோன் + +ஒக்க ஊர் பறவை அன்றேல், அவன் துயில் உரகம் அன்றேல், + +திக்கயம் அல்ல, ஆகில், குரங்கின் மேல் சேறி போலாம்! + +இக் கடன் அடியேற்கு ஈதி; இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய       5.11.2 + + + +'அண்டர் கோன் தன்னைப் பற்றித் தருக'எனா, அடியேன் நிற்க, + +கொண்டனை எம்முன் தன்னைப் பணி, என நெஞ்சம் கோடி + +உண்டது; தீரும் அன்றே! உரன் இலாக் குரங்கு ஒன்று ஏனும், + +எண் திசை வென்ற நீயே, ஏவுதி என்னை என்றான்.       5.11.3 + + + +அட்சகுமாரன் உறுதிகூறல் (5779-5780) + + + +கொய் தளிர் கோதும் வாழ்க்கைக் கோடரத்து உருவு கொண்டு, + +கைதவம் கண்ணி, ஈண்டு ஓர் சிறு பழி இழைக்கும் கற்பான், + +எய்தினன், இமையா முக்கண் ஈசனே என்றபோதும், + +நொய்தினில் வென்று, பற்றித் தருகுவென் நொடியின் உன்பால்       5.11.4 + + + +துண்டத் தூண் அதனில் தோன்றும் கோள் அரி, சுடர் வெண் கோட்டு + +மண் தொத்த நிமிர்ந்த பன்றி, ஆயினும், மலைதல் ஆற்றாது; + +அண்டத்தைக் கடந்து போகி, அப்புறத்து அகலில், என்பால் + +தண்டத்தை இடுதி அன்றே; நின்வயின் தந்திலேனேல்.       5.11.5 + + + +அட்சகுமாரன் விடைபெற்றுப் பெரும்படையுடன் செல்லல் (5781-5791) + + + +என இவை இயம்பி, "ஈதி விடை" என, இறைஞ்சி நின்ற + +வனைகழல் வயிரத் திண் தோள் மைந்தனை, மகிழ்ந்து நோக்கித் + +"துனைபரித் தேர் மேல் ஏறிச் சேறி"என்று, இனைய சொன்னான்; + +புனை மணித் தாரினானும் போர் அணி அணிந்து போனான்.      5.11.6 + + + +ஏறினன் என்ப, மன்னோ, இந்திரன் இகலில் இட்ட, + +நூறொடு நூறு பூண்ட, நொறில் வயப் புரவி நோன் தேர்; + +கூறினர் அரக்கர் ஆசி; குமுறின முரசக் கொண்மூ; + +ஊறின உரவுத் தானை ஊழி பேர் கடலை ஒப்ப.       5.11.7 + + + +பொரு கடல் மகரம் எண்ணில் எண்ணலாம் பூட்கை; பொங்கித் + +திரிவன மீன்கள் எண்ணில் எண்ணலாம் செம் பொன் திண் தேர்; + +உரு உறு மணலை எண்ணில் எண்ணலாம் உரவுத் தானை; + +வரு திரை மரபில் எண்ணில் எண்ணலாம் வாவும் வாசி.       5.11.8 + + + +ஆறு இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர்; ஆவி + +வேறு இலாத் தோழர், வென்றி அரக்கர்தம் வேந்தர் மைந்தர், + +ஏறிய தேரர் சூழ்ந்தார், இறுதியின் யாவும் உண்பான் + +சீறிய காலத்தீயின் செறி சுடர்ச் சிகைகள் அன்னார்.       5.11.9 + + + +மந்திரக் கிழவர் மைந்தர், மதி நெறி அமைச்சர் மக்கள், + +தந்திரத் தலைவர் ஈன்ற தனயர்கள் பிறரும், தாதைக்கு + +அந்தரத்து அரம்பை மாரில் தோன்���ினர் ஆதி ஆனோர், + +எந்திரத் தேரர், சூழ்ந்தார் ஈர் இரண்டு இலக்கம் வீரர்.       5.11.10 + + + +தோமரம், உலக்கை, சூலம், சுடர், மழு, குலிசம், தோட்டி, + +ஏ மரு வரிவில், வேல், கோல், ஈட்டி, வாள், எழு, விட்டேறு, + +மா மரம், வீசு பாசம், வயிர், வளை, வயிரத் தண்டு, + +காமரு கணையம், குந்தம், கப்பணம், காலநேமி.       5.11.11 + + + +என்று இவை முதல ஆய எழில் திகழ் படைகள் ஈண்டி, + +மின் திரண்ட அனைய ஆகி வெயிலொடு நிலவு வீச, + +துன்று இரும் தூளி பொங்கித் துறுதலால் இறுதி செல்லாப் + +பொன் திணி உலகம் ஆன பூதலம் ஆன மாதோ.       5.11.12 + + + +அட்சகுமாரன் படையின் தீய நிமித்தங்களும் ஆரவாரமும் (5788-5791) + + + +காகமும், கழுகும், பேயும், காலனும், கணக்கு இல் காலம் + +சேகு உற வினையின் செய்த தீமையும், தொடர்ந்து செல்ல; + +பாகு உள கிளவி செவ்வாய் படைவிழி பணைத்த வேய்த் தோள் + +தோகையர் மனமும் தொக்க தும்பியும் தொடர்ந்து சுற்ற.       5.11.13 + + + +உழைக் குலம் நோக்கினார்கள் உலந்தவர்க்கு உரிய மாதர் + +அழைத்து அழு குரலின் வேலை அமலையின், அரவச் சேனை + +தழைத்து எழும் ஒலியின் ஓசை பல்லியம் துவைக்கத் தாவி + +மழைக் குரல் இடியில் சொன்ன மாற்றங்கள் உரைப்ப மன்னோ.       5.11.14 + + + +வெயில் கர மணிகள் வீசும் விரி கதிர் விழுங்க, வெய்ய + +அயில் கர மணிகளாலும் அவிர் ஒளி பருக, அஃதும் + +எயிற்று இளம் பிறைகள் ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க, யாணர் + +உயிர்க் குலவு இரவும் அன்று, பகல் அன்று, என்று உணர்வு தோன்ற.       5.11.15 + + + +ஓங்கு இரும் தடம் தேர் பூண்ட உளை வயப் புரவி ஒல்கித் + +தூங்கின வீழ, தோளும் கண்களும் இடத்துத் துள்ள, + +வீங்கின மேகம் எங்கும் குருதி நீர்த் துளிகள் வீழ்ப்ப + +ஏங்கின காகம் ஆர்ப்ப, இருளில் விண் இடிப்ப மாதோ.       5.11.16 + + + +அனுமன் அட்சகுமாரனைக் காணலும் ஐயுறலும் (5792-5795) + + + +வெள்ள வெம் சேனை சூழ, விண் உேளார் வெருவி விம்ம, + +உள்ளம் நொந்து அனுங்கி, வெய்ய கூற்றமும் உறுவது உன்ன, + +துள்ளின சுழல் கண் பல் பேய் தோள் புடைத்து ஆர்ப்ப, தோன்றும் + +கள் அவிழ் மாலையானைக் காற்றின் சேய் வரவு கண்டான்.      5.11.17 + + + +"இந்திரசித்தோ? மற்று அவ் இராவணனேயோ?"என்னாச் + +சிந்தையின் உவகை தோன்ற, முனிவு உற்ற குரக்குச் சீயம், + +"வந்தனன்; முடிந்தது அன்றோ? மனக் கருத்து"என்ன வாழ்த்தி, + +சுந்தரத் தோளை நோக்கி, இராமனைத் தொழுது சொன்னான்.      5.11.18 + + + +"எண்ணிய இருவர் தம்முள் ஒருவனால், யானும் நோற்ற + +புண���ணியம் உளதாய், எம் கோன் தவத்தொடும் பொருந்தினானேல், + +நண்ணினன் நானும் நின்றேன்; காலனும் நணுகி நின்றான்; + +கண்ணிய கருமம் இன்றே முடிக்குவென் கடிதின்" என்றான்.       5.11.19 + + + +"பழி இலது உரு என்றாலும், பல தலை அரக்கன் அல்லன்; + +விழி இடை இமைக்கும் மேல்நாள் வேந்தை வென்றானும் அல்லன்; + +மொழியின் மற்றவர்க்கு மேலான்; முரண் தொழில் முருகன் அல்லன்; + +அழிவில் ஒண் குமரன் யாரோ? அஞ்சனக் குன்றம் அன்னான்.       5.11.20 + + + +அனுமனை அட்சகுமாரன் எள்ளி நகைத்தல் + + + +என்றவன் உவந்து, விண் தோய், +       இந்திர சாபம் என்ன + +நின்ற, தோரணத்தின் உம்பர் +       இருந்த போர் நீதியானை, + +வன் தொழில் அரக்கன் நோக்கி, +       வாள் எயிறு இலங்க நக்கான்; + +'கொன்றது இக்குரங்கு போலாம்! +       அரக்கர் தம் குழாத்தை'என்றான்.       5.11.21 + + + +தேர்ப்பாகன் ஏளனமாக எண்ணக் கூடாதனெல் + + + +அன்னதாம் அச்சொல் கேட்ட +       சாரதி, "ஐய! கேண்மோ! + +இன்னதாம் என்னலாமோ +       உலகியல்? இகழல்! அம்மா! + +மன்னனோடு எதிர்ந்த வாலி +       குரங்கு என்றால், மற்றும் உண்டோ? + +சொன்னது துணிவில் கொண்டு +       சேறி" என்று உணரச் சொன்னான்.       5.11.22 + + + +அட்சகுமாரன் வஞ்சினம் கூறல் + + + +விடம் திரண்டு அனைய மெய்யான், +       அவ் உரை விளம்பக் கேளா, + +"இடம் புகுந்து, இனைய செய்த +       இதனொடு, சீற்றம் எஞ்சேன், + +தொடர்ந்து சென்று, உலகம் மூன்றும் +       துருவினென், ஒழிவு உறாமல் + +கடந்து, பின் குரங்கு என்று ஓதும் +       கருவையும் களைவென்" என்றான்.       5.11.23 + + + +அனுமனும் அரக்கர் படையும் பொருதல் (5799-5805) + + + +ஆர்த்து எழுந்து, அரக்கர் சேனை, + +       அஞ்சனைக்கு உரிய குன்றைப் + +போர்த்தது; பொழிந்தது, அம்மா! + +       பொழிபடப் பருவ மாரி; + +வேர்த்தனர் திசை காப்பாளர்; + +       சலித்தது விண்ணும் மண்ணும்; + +தார்த் தனி வீரன், தானும் + +       தனிமையும், அவர் மேல் சார்ந்தான்.       5.11.24 + + + +எறிந்தனர், நிருதர் வெய்தின் +       எய்தின படைகள் எல்லாம், + +முறிந்தன வீரன் மேனி +       முட்டின, முகர யானை + +மறிந்தன, மடிந்த தேரும் +       மான மாக் குழுவும், மற்றும் + +நெறிந்தன வரம்பில் யாக்கை, +       இலங்கை தன் நிலையில் பேர.       5.11.25 + + + +காய் எரி, முளி புல் கானில் +       கலந்து எனக் காற்றின் செம்மல் + +ஏ எனும் அளவில் கொல்லும் < +       நிருதர்க்கு, ஓர் எல்லை இல்லை, + +போயவர், உயிரும் போகித் +       தென���புலம் படர்தல், பொய்யாது, + +ஆயிர கோடி தூதர் +       உளர்கொலோ! நமனுக்கு அம்மா.       5.11.26 + + + +வர உற்றார் வாரா நின்றார் + +       வந்தவர் வரம்பில் வெம் போர் + +பொர உற்ற பொழுது வீரன் + +       மும்மடங்கு ஆற்றல் பொங்க + +விரவிப் போய்க் கதிரோன் ஊழி + +       இறுதிமேல் என்னல் ஆனான் + +உரவுத்தோள் அரக்கர் எல்லாம் + +       என்பு இலா உயிர்கள் ஒத்தார்.       5.11.27 + + + +பிள்ளப்பட்டன, நுதல் ஓடைக் கரி, + +       பிறழ் பொன் தேர், பரி, பிழையாமல், + +அள்ளல் பட்டு அழி குருதிப் பொருபுனல் + +       ஆறாகப் படி சேறு ஆக, + +"வள்ளப்பட்டன மகரக் கடல் என + +       மதில் சுற்றிய பதி "மறலிக்கு ஓர் + +கொள்ளைப்பட்டன உயிர்" என்னும்படி, + +       கொன்றான் ஐம்புலன் வென்றாறேன.       5.11.28 + + + +'தேரே பட்டன'என்றார் சிலர்; சிலர், + +       'தெறு கண் செம்முக வயிரத் தோள் + +பேரே பட்டன'என்றார்; சிலர் சிலர், + +       'பரியே பட்டன சில'என்றார்; + +'காரேபட்டு அலை நுதல் ஓடைக் + +       கடகரியே பட்டன கடிது'என்றார்; + +நேரே பட்டவர் பட, மாடே + +       தனி, நில்லா உயிரொடு நின்றாரே.       5.11.29 + + + +ஆழிப் பொருபடை நிருதப் பெரு வலி + +       அடலோர், ஆய்மகள் அடு பேழ்வாய்த் + +தாழிப் படு தயிர் ஒத்தார்; மாருதி + +       தனிமத்து என்பது ஒர் தகையானான்; + +ஏழ் இப் புவனமும் மிடை வாழ் உயிர்களும், + +       எறி வேல் இளையவர் இனமாக, + +ஊழிப் பெயர்வது ஒர் புனல் ஒத்தார்; அனல் + +       ஒத்தான், மாருதம் ஒத்தானே.       5.11.30 + + + +அனுமனும் அட்சகுமாரனும் பொருதல் (5806-5812) + + + +கொன்றான் உடன் வரு குழுவை; சிலர் பலர் + +       குறைகின்றார் உடல் குலைகின்றார்; + +பின்றா நின்றனர்; உதிரப் பெருநதி + +      பெருகா நின்றன அருகு ஆரும் + +நின்றார் நின்றிலர்; தனி நின்றான், ஒரு + +       நேமித் தேரொடும் அவன் நேரே + +சென்றான்; வன் திறல் அயில் வாய் அம்புகள் + +       தெரிகின்றான் விழி எரிகின்றான்.       5.11.31 + + + +உற்றான் இந்திரசித்துக்கு இளையவன்; + +       ஒரு நாளே பலர் உயிர் உண்ணக் + +கற்றானும் முகம் எதிர் வைத்தான்; அது + +       கண்டார் விண்ணவர்; கசிவு உற்றார்; + +"எற்றே மாருதி நிலை"என்றார்; இனி + +       "இமையா விழியினை இவை ஒன்றோ + +பெற்றாம், நல்லது பெற்றாம்" என்றனர்; + +      பிறியாது எதிர் எதிர் செறிகின்றார்.       5.11.32 + + + +எய்தான் வாளிகள் எரி வாய் உமிழ்வன + +      ஈரேழ்; எதிர் அவை பார் சேரப் + +பொய்தான் மணி எழு ஒன்றால்; அன்று, அது, + +  ��   பொடியாய் உதிர்வு உற வடி வாளி + +வெய்து ஆயின பல விட்டான்; வீரனும் + +       வேறு ஓர் படை இலன் மாறா வெம் + +கை தானே பொரு படை ஆகத் தொடர் + +      கால் ஆர் தேர் அதன் மேல் ஆனான்.       5.11.33 + + + +தேரில் சென்று, எதிர் கோல் கொள்வான் உயிர் + +      தின்றான்; அப் பொரு செறி திண் தேர் + +பாரில் சென்றது; பரிபட்டன, அவன் + +       வரிவில் சிந்திய பகழிக் கோல், + +மார்பில் சென்றன சில; பொன் தோள் இடை + +       மறைவு உற்றன சில; அறவோனும், + +நேரில் சென்று, அவன் வயிரக் குனிசிலை + +       பற்றிக் கொண்டு, எதிர் உற நின்றான்.       5.11.34 + + + +ஒரு கையால் அவன் வயிரச் சிலைதனை + +       உற்றுப் பற்றலும், உரவோனும் + +இரு கையால், அவன் வலியா முன்னம் அது + +       இற்று ஓடியது; இவர் பொன் தோளான் + +சுரிகையால் எதிர் உருவிக் குத்தலும், + +       அதனைச் சொல் கொடு வரு தூதன், + +பொரு கையால் இடை பிதிர்வித்தான் முறி + +       பொறி ஓடும்படி பறியாவே.       5.11.35 + + + +வாளாலே பொரல் உற்றான்; இற்று அது + +       மண் சேராதமுன், வயிரத் திண் + +தோளாலே பொர முடுகிப் புக்கு, இடை + +       தழுவிக் கொண்டலும், உடல் முற்றும் + +நீள் ஆர் அயில் என மயிர் தைத்தன; மணி + +       நெடு வால் அவன் உடல் நிமிர்வு உற்று + +மீளாவகை புடை சுற்றிக்கொண்டது; + +       பற்றிக்கொண்டனன் மேல் ஆனான்.       5.11.36 + + + +பற்றிக் கொண்டு, அவன் வடிவாள் என + +       ஒளிர் பல் இற்று உக, நிமிர் படர் கையால் + +எற்றி, கொண்டலின் இடை நின்று உமிழ் சுடர் + +       இன மின் இனம் விழுவன என்ன + +முற்றி, குண்டலம் முதலாம் அணி உக, + +       முழை நால் அரவு இவர் குடர் நாலக் + +கொற்றத் திண் சுவல் வயிரக் கை கொடு + +       குத்திப், புடை ஒரு குதி கொண்டான்.       5.11.37 + + + +அநுமன் அட்சகுமாரனை அழித்தல் + + + +நீத்தாய் ஓடின உதிரப் பொரு நதி + +      நீராகச் சிலை பார் ஆகப் + +போய்த் தாழ் தெறி தசை அரி சிந்தினபடி + +       பொங்கப் போம் உயிர் போகாமல், + +மீத்தா நிமிர் சுடர் வயிரக் கை கொடு + +       பிடியா, விண்ணொடு மண் காணத் + +தேய்த்தான்; ஊழியொடு உலகு ஏழ் தேயினும் + +       ஒரு தன் புகழ் இறை தேயாதான்.       5.11.38 + + + +எஞ்சிய படை சிதறி மறைந்து ஓடல் (5814-5816) + + + +புண் தாழ் குருதியின் வெள்ளத்து உயிர்கொடு + +       புக்கார் சிலர்; சிலர், பொரு பேயின் + +பண்டாரத்து இடை இட்டார் தம் உடல்; + +       பட்டாரில் சிலர் பயம் உந்தத் + +திண்டாடித் திசை அறியா மறுகினர்; + +       செத்தார் சிலர்; சிலர், செலவு அற்றார்; + +கண்டார் கண்டது ஒர் திசையே விசை கொடு + +       கால்விட்டார்; படை கைவிட்டார்.       5.11.39 + + + +மீனாய் வேலையில் உற்றார் சிலர்; சிலர் + +      பசு ஆய் வழிவழி மேய்வு உற்றார்; + +ஊனார் பறவையின் வடிவு ஆனார் சிலர்; + +      சிலர் நான்மறையவர் உரு ஆனார்; + +மானார் கண் இள மடவார் ஆயினர் + +       முன்னே தம் குழல் வகிர்வு உற்றார் + +ஆனார் சிலர்; சிலர், ஐயா நின் சரண் + +       என்றார்; நின்றவர் அரி என்றார்.       5.11.40 + + + +தம் தாரமும் உறுகிளையும் தமை எதிர் + +       தழுவுந்தொறும்,'நும தமர் அல்லோம்; + +வந்தோம் வானவர்'என்று, ஏகினர் சிலர்; + +       சிலர், மானுயர் என வாய் விட்டார்; + +மந்தாரம் கிளர் பொழில்வாய் வண்டுகள் + +       ஆனார் சிலர்; சிலர் மருள்கொண்டார்; + +இந்து ஆர் எயிறுகள் அறுவித்தார் சிலர், + +       எரிபோல் குஞ்சியை இருள்வித்தார்.       5.11.41 + + + +அரக்கியர் அழுதரற்றல் + + + +குண்டலக் குழைமுகக் குங்குமக் கொங்கையார் + +வண்டு அலைத்து எழு குழல் கற்றை கால் வருட ஆய் + +விண்டு அலத்தக விரைக் குமுத வாய் விரிதலால் + +அண்டம் உற்று உளது; அவ் ஊர் அழுத பேர் அமலையே.       5.11.42 + + + +அரக்கியர் துன்ப நிகழ்ச்சி (5818-5822) + + + +கதிர் எழுந்து அனைய செம் திருமுகக் கணவன்மார் + +எதிர் எழுந்து அடி விழுந்து அழுதுசோர் இள நலார் + +அதிநலம் கோதைசேர் ஓதியோடு அன்று அவ் ஊர் + +உதிரமும் தெரிகிலாது இடை பரந்து ஒழுகியே.       5.11.43 + + + +தாவு இல் வெம் செரு நிலத்து அடி, உலந்தவர் தம் மேல், + +ஓவியம் புரை நலார் விழுதொறும், சிலர் உயிர்த்து + +ஏவுகண்களும் இமைத்தனர்கள் ஆம்; இது எலாம், + +ஆவி ஒன்று, உரு இரண்டு, ஆதலாலே கொல் ஆம்?       5.11.44 + + + +ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல்; உதவியால் + +வீடினார்; வீடினார் மிடை உடல் குவைகள் வாய் + +நாடினார் மடம் நலார்; நவை இலா நண்பரைக் + +கூடினார்; ஊடினார் உம்பர்வாழ் கொம்பு அனார்.       5.11.45 + + + +தீட்டு வாள் அனைய கண் தெரிவை ஓர் திரு அனாள் + +ஆட்டி நின்று அயர்வது ஓர் அறுதலைக் குறையினைக் + +கூட்டி "நின் ஆர் உயிர்த் துணைவன் எம் கோனை நீ + +காட்டுவாய் ஆதி"என்று அழுது கை கூப்பினாள்.       5.11.46 + + + +ஏந்தினாள் தலையை ஓர் எழுது அரும் கொம்பு அனாள்; + +காந்தன் நின்று ஆடுவான் உயர் கவந்தத்தினை + +"வேந்து நீ அலசினாய் விடுதியால் நடம்"எனாப் + +பூந் தளிர்க் கையினால் மெய் உறப் புல்லினாள்.       5.11.47 + + + +அரக்கியர் துன்புறலும் விண்ணவர் இராவணனிடம் உரைத்தலும் + + + +நாடினார்; நாடியே நனை வரும் கொம்பு அனார் + +வாடினார்; கணவர் தம் மார்பு உறத் தழுவியே + +வீடினார்; அவ்வயின் வெருவி விண்ணவர்கள் தாம் + +ஓடினார் அரசன்மாட்டு அணுகி நின்று உரை செய்வார்.       5.11.48 + + + +மந்தோதரி புலம்பல் + + + +கயல் மகிழ் கண்மலர் கலுழி கான்றிடப் + +புயல் மகிழ் புரிகுழல் பொடி அளாவுற + +அயன் மகன் மகன் மகன் அடியில் வீழ்ந்தனள் + +மயன் மகள்; வயிறு அலைத்து அழுது மாழ்கினாள்       5.11.49 + + + +அனைவரும் அழுதல் + + + +தாவு அரும் திரு நகர்த் தையலார் முதல் + +ஏவரும் இடைவிழுந்து இரங்கி ஏங்கினார்; + +காவலன் கால்மிசை விழுந்து காவல் மாத் + +தேவரும் அழுதனர் களிக்கும் சிந்தையார்.       5.11.50 + + -------------------- + + + +5.12 பாசப் படலம் 5826 - 5888 + + + +இந்திரசித்தின் வெகுளி + + + +அவ் வழி அவ் உரை கேட்ட ஆண்தகை + +வெவ் வழி எரி புக வெகுளி வீங்கினான் + +எவ்வழி உலகமும் குலைய இந்திரத் + +தெவ் அழிதர உயர் விசயச் சீர்த்தியான்.       5.12.1 + + + +இந்திரசித்து போர்க்கு எழல் + + + +அரம் சுடர் வேல் தனது இளவல் அற்ற சொல் + +உரம் சுட எரி உயிர்த்து ஒருவன் ஓங்கினான்; + +புரம் சுட வரிசிலைப் பொருப்பு வாங்கிய + +பரம் சுடர் ஒருவனைப் பொருவும் பான்மையான்.       5.12.2 + + + +இந்திரசித்து தேர் ஏறுதல் + + + +ஏறினன் விசும்பினுக்கு எல்லை காட்டுவான் + +ஆறு இருநூறு பேய் பூண்ட ஆழித் தேர்; + +கூறின கூறின சொற்கள் கோத்தலால் + +பீறின நெடும் திசை பிளந்தது அண்டமே.       5.12.3 + + + +படையின் ஆரவாரம் + + + +ஆர்த்தன, கழலும் தாரும் பேரியும் அசனி அஞ்ச; + +வேர்த்து உயிர் குலைய மேனி வெதும்பினன் அமரர் வேந்தன்; + +"சீர்த்தது போரும்"என்னாத் தேவர்க்கும் தேவர் ஆய + +மூர்த்திகள் தாமும் தத்தம் யோகத்தின் முயற்சி விட்டார்.       5.12.4 + + + +இந்திரசித்தின் துன்பமும் வீரமும் + + + +தம்பியை நினையும் தோறும் தாரைநீர் ததும்பும் கண்ணான், + +அம்பு இயல் சிலையை நோக்கி வாய் மடித்து உருத்து நக்கான்; + +"கொம்பு இயல் மாய வாழ்க்கைக் குரங்கினால், குறுகா வாழ்க்கை + +எம்பியோ தேய்ந்தான்? எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது" என்றான்.       5.12.5 + + + +வேற்படை யானைப்படை முதலியவற்றின் மிகுதி + + + +வேல் திரண்டனவும், வில்லும் மிடைந்தவும், வெற்பு என்றாலும் + +கூறு இரண்டு ஆக்கும் வாள் கைக் குழுவையும், குணிக்கல் ஆற்றேம்; + +சேறு இரண்டு அருக��� செய்யும் செறிமதச் சிறு கண் யானை + +ஆறு இரண்டு அஞ்சு நூற்றின் இரட்டி; தேர்த் தொகையும் அஃதே.       5.12.6 + +இந்திரசித்து இராவணன் கோயில் புகல் + + + +ஆய மாத் தானை தான் வந்து அண்மியது; அண்ம, ஆண்மைத் + +தீய வாள் நிருதர் வேந்தர் சேர்ந்தவர் சேரத் தேரில் + +ஏ எனும் அளவின் வந்தான்; இராவணன் இருந்த யாணர் + +வாயில் தோய் கோயில் புக்கான், அருவி சோர் வயிரக் கண்ணான்.       5.12.7 + +இந்திரசித்து இராவணனிடம் பேசல் (5833-5836) + + + +தாள் இணை வீழ்ந்தான்; தம்பிக்கு இரங்கினான்; தறுகணானும் + +தோள் இணை பற்றி ஏந்தித் தழுவினான்; அழுது சோர்ந்தான்; + +வாள் இணை நெடும் கண் மாதர் வயிறு அலைத்து அலறி மாழ்க, + +மீளி போல் மொய்ம்பினானும் விலக்கினன்; விளம்பல் உற்றான்.       5.12.8 + + + +"ஒன்று நீ உறுதி ஓராய், உற்று இருந்து உளையகிற்றி; + +வன்திறல் குரங்கின் ஆற்றல் மரபுளி உணர்ந்து மன்னோ, + +'சென்று நீர் பொருதிர்'என்று, திறம் திறம் செலுத்தித் தீயக் + +கொன்றனை நீயே அன்றோ? அரக்கர் தம் குழுவை" என்றான்.       5.12.9 + + + +கிங்கரர், சம்புமாலி, கேடு இலா ஐவர், என்று இப் + +பைங்கழல் அரக்கரோடும் உடன் சென்ற ப குதிச் சேனை, + +இங்கு ஒரு பேரும் மீண்டார் இல்லையேல், குரங்கு அது, எந்தாய்! + +சங்கரன், அயன், மால், என்பார் தாம் எனும் தரத்தது ஆமோ.       5.12.10 + + + +திக்கய வலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற + +முக்கணன் கயிலையோடும் உலகு ஒரு மூன்றும் வென்றாய்; + +அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காண்டி; + +புக்கு இனி வென்றும் என்றால், புலம்பு அன்றிப் புலமைத்து ஆமோ.       5.12.11 + +இராவணனிடம் உறுதிகூறிப் புறப்படல் + + + +ஆயினும், "ஐய, நொய்தின் ஆண்டு எழில் குரங்கை, நானே + +ஏ எனும் அளவில் பற்றித் தருகுவென்; இடர் ஒன்று ஒன்றும், + +நீ, இனி உழக்கற்பாலை அல்லை; நீடு இருத்தி;"என்று, + +போயினன்; இலங்கை வேந்தன் போர்ச் சினம் போவது ஒப்பான்.       5.12.12 + +படையின் பரப்பு + + + +உடைந்த வல் இருள், நோற்றுப் பல் உருக்கொடு, அக் கதிர்க் குழாங்கள் + +மிடைந்தன, மிலைச்சி ஆங்கு, மெய் அணி பலவும் மின்னக் + +குடைந்து வெம் பகைவர் ஊன் தோய் கொற்றப் போர் வாள் வில் வீச, + +அடைந்த கார் அரக்கர் தானை, அகலிடம் இடம் இன்று, என்ன.       5.12.13 + +இந்திரசித்து மலைபோல் படைநடுவில் நிற்றல் + + + +ஆழி அம் தேரும், மாவும், அரக்கரும், உருக்கும் செம் கண் + +சூழி வெம் கோல மாவும், துவன்றிய ��ிருதர் சேனை, + +ஊழி வெம் கடலில் சுற்ற, ஒரு தனி நடுவண் நின்ற + +பாழி மா மேரு ஒத்தான்; வீரத்தின் பன்மை தீர்த்தான்.       5.12.14 + + + +அனுமனால் நேர்ந்த அழிவைக் கருதல் (5840-5842) + + + +சென்றனன் என்ப, மன்னோ திசைகேளாடு உலகம் எல்லாம் + +வென்றவன் இவன் என்றாலும், வீரத்தே நின்ற வீரன், + +அன்று அது கண்ட வாழி அனுமனை, அமரின் ஆற்றல் + +நன்று என உவகை கொண்டான்; யாவரும் நடுக்கம் உற்றார்.       5.12.15 + +இலை குலாம் பூணினானும், "இரும் பிணக் குருதி ஈரத்து, + +அலகு இல் வெம் படைகள் தறெ்றி, அளவு இடற்கு அரிய ஆகி, + +மலைகளும், கடலும், யாறும், கானமும், பெற்று, மற்று ஓர் + +உலகமே ஒத்தது, அம்மா! போர்ப் பெரும் களம்,"என்று உன்னா.       5.12.16 + +வெப்பு அடைகில்லா நெஞ்சில், சிறியது ஓர் விம்மல் கொண்டான்; + +"அப்பு அடை வேலை அன்ன பெருமையார், ஆற்றலோடும் + +ஒப்பு அடைகில்லார், எல்லாம் உலந்தனர்; குரங்கும் ஒன்றே; + +எப் படை கொண்டு வெல்வது? இராமன் வந்து எதிர்க்கில்;"என்றான்.       5.12.17 + +இந்திரசித்து இறந்த வீரருக்கு இரங்கல் + + + +கண்ணனார், உயிரே ஒப்பார் கைப் படைக்கலத்தில் காப்பார், + +எண்ணலாம் தகைமை அல்லர் இறந்து இடைக் கிடந்தார் தம்மை + +மண்ணுளே நோக்கி நின்று, வாய்மடித்து, உயிர்த்தான்; மாயாப் + +புண் உளே கோல் இட்டு அன்ன, மானத்தால் புழுங்குகின்றான்.       5.12.18 + +இந்திரசித்து தம்வீரம் குறைந்ததனெ வருந்தல் + + + +கான் இடை அத்தைக்கு உற்ற குற்றமும், கரனார் பாடும், + +யான் உடை எம்பி வீந்த இடுக்கணும் பிறவும் எல்லாம் + +மானிடர் இருவராலும் வானரம் ஒன்றினாலும் + +ஆனிடத்து உள, என் வீரம் அழகிற்றே அம்ம என்றான்.       5.12.19 + + + +இந்திரசித்து பிணக்குவியலில் தம்பியின் சிதைவைக் கண்டு வருந்தல் (5845-5847) + + + +நீப்பு உண்ட உயிர ஆகி, நெருப்பு உண்ட நிறத்தில் தோன்றி, + +ஈர்ப்பு உண்டற்கு அரிய ஆய பிணக் குவடு, இடறச் செல்வான்; + +தேய்ப்பு உண்ட தம்பி யாக்கை, சிவப்பு உண்ட கண்கள், தீயில் + +காய்ப்பு உண்ட செம்பில் தோன்றக் கறுப்பு உண்ட மனத்தன் கண்டான்.       5.12.20 + + + +தாருகன் குருதி அன்ன குருதியில் தனி மாச் சீயக் + +கூர் உகிர் அளைந்த கொற்றக் கனகன் மெய்க் குழம்பில் தோன்றத் + +தேர் உகக் கையில் வீரச் சிலை உக, வயிரச் செங்கண் + +நீர் உகக் குருதி சிந்த, நெருப்பு உக உயிர்த்து நின்றான்.       5.12.21 + + + +வெவ் இலை அயில்வேல் உந்தை வெம்மையைக் கருதி, வீர! + +வவ்��ுதல் கூற்றும் ஆற்றான்; மாறுமாறு உலகின் வாழ்வார், + +அவ் உலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க; ஐயா, + +எவ் உலகத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய்.       5.12.22 + +துயரமும் வீரமும் + + + +ஆற்றலன் ஆகி, அன்பால் அறிவு அழிந்து, அயரும் வேலை, + +சீற்றம் என்று ஒன்று தானே மேல் நிமிர் செலவிற்று ஆகித் + +தோற்றிய துன்ப நோயை உள்ளூறத் துரந்தது; அம்மா! + +ஏற்றம் சால் ஆணிக்கு ஆணி எதிர் செலக் கடாயது என்ன.       5.12.23 + +இந்திரசித்தைப் பார்த்த அநுமனின் எண்ணம் (5849-5852) + + + +ஈண்டு இது நிகழ்வுழி இரவி தேர் எனத் + +தூண்டுறு தேரின் மேல் தோன்றும் தோன்றலை + +மூண்டு முப்புரம் சுட முடுகும் ஈசனில் + +ஆண்டகை வனைகழல் அனுமன் நோக்கினான்.       5.12.24 + + + +வென்றேன் இதன்முன் சில வீரரை என்னும் மெய்ம்மை + +அன்றோ, முடுகிக் கடிது எய்த அழைத்தது; அம்மா! + +ஒன்றோ இனி வெல்லுதல்; தோற்றல் அடுப்பது உள்ளி, + +இன்றே அமையும் இவன்; இந்திரசித்தும் என்பான்.       5.12.25 + + + +கட்டேறு நறும் கமழ் கண்ணி இக் காளை, என் கைப் + +பட்டால், அதுவே அவ் இராவணன் பாடும் ஆகும்; + +'கெட்டேம்'என எண்ணி, இக் கேடு அரும் கற்பினாளை + +விட்டு, ஏகும்; அது அன்றி, அரக்கரும் வெம்மை தீர்வார்.       5.12.26 + +ஓன்றோ? இதனால் வரும் ஊதியம்; ஒண்மையானைக் + +கொன்றேன் எனில், இந்திரனும் துயர்கோளும் நீங்கும்; + +இன்றே கடிகெட்டது அரக்கர் இலங்கை மூதூர்; + +வென்றேன் அவ் இராவணன் தன்னையும் வேரொடு; என்றான்.       5.12.27 + +அநுமன் அரக்கர் படையுடன் பொருதல் (5853-5858.) + + + +அக்காலை, அரக்கரும், ஆனையும், தேரும், மாவும், + +முக்கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றிப் + +புக்கானின் முன் புக்கு, உயர் பூசல் பெருக்கும் வேலை, + +மிக்கானும், வெகுண்டு ஒர் மராமரம் கொண்டு புக்கான்.       5.12.28 + + + +உதையுண்டன யானை; உருண்டன யானை; ஒன்றோ, + +மிதியுண்டன யானை; விழுந்தன யானை; மேல் மேல் + +புதையுண்டன யானை; புரண்டன யானை; போரால் + +வதையுண்டன யானை; மறிந்தன யானை மண்மேல்.       5.12.29 + + + +முடிந்த தேர்க்குலம்; முறிந்தன தேர்க்குலம், முரண் இற்று + +இடிந்த தேர்க்குலம்; இற்றன தேர்க்குலம்; அச்சு இற்று + +ஒடிந்த தேர்க்குலம்; உக்கன தேர்க்குலம்; நெக்குப் + +படிந்த தேர்க்குலம்; பறிந்தன தேர்க்குலம் படியில்.       5.12.30 + + + +சிரன் நெரிந்தவும், கண்மணி சிதைந்தவும், செறிதாள் + +தரன் நெரிந்தவும், முதுகு இ��ச் சாய்ந்தவும், தார்பூண் + +உரன் நெரிந்தவும், உதிரங்கள் உமிழ்ந்தவும், ஒண்பொன் + +குரன் நெரிந்தவும், கொடுங் கழுத்து ஒடிந்தவும் குதிரை.       5.12.31 + + + +பிடியுண்டார்களும், பிளத்தல் உண்டார்களும், பெரும் தோள் + +ஒடியுண்டார்களும், தலை உடைந்தார்களும், உருவக் + +கடியுண்டார்களும், கழுத்து இழந்தார்களும், மரத்தால் + +அடியுண்டார்களும், அச்சம் உண்டார்களும் அரக்கர்.       5.12.32 + + + +வட்ட வெம் சிலை ஓட்டிய வாளியும் வயவர் + +விட்ட வெம் திறல் படைகளும் வீரன் மேல் வீழ்ந்த + +சுட்ட மெல் இரும்பு அடைகலைச் சுடுகிலாதன போல் + +பட்ட பட்டன திசைதொறும் பொடி ஒடும் பரந்த.       5.12.33 + + + +இந்திரசித்தும் அநுமனும் பலவகையாகப் பொருதல் (5859-5878) + + + +சிகை எழும் சுடர் வாளிகள் இந்திரசித்து + +மிகை எழும் சினத்து அனுமன் மேல் விட்டன வெந்து + +புகை எழுந்தன எரிந்தன கரிந்தன போக + +நகை எழுந்தன; அழிந்தன வான் உேளார் நாட்டம்.       5.12.34 + + + +தேரும், யானையும், புரவியும், அரக்கரும், சிந்திப் + +பாரில் வீழ்தலும், தான் ஒரு தனி நின்ற பணைத்தோள் + +வீரர் வீரனும், முறுவலும், வெகுளியும், வீங்க, + +'வாரும், வாரும்'என்று, அழைக்கின்ற அனுமன்மேல் வந்தான்.       5.12.35 + + + +புரந்தரன் தலை பொதிர் எறிந்திடப் புயல் வானில் + +பரந்த பல் உரும் ஏறு இனம் வெறித்து உயிர் பதைப்ப, + +நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் + +சிரம் துளங்கிட, அரக்கன் வெம் சிலையை நாண் எறிந்தான்.       5.12.36 + + + +ஆண்ட நாயகன் தூதனும், அயனுடை அண்டம் + +கீண்டது ஆம் என, கிரி உக, நெடுநிலம் கிழிய, + +நீண்ட மாதிரம் வெடிபட, அவன் நெடும் சிலையில் + +பூண்ட நாண் இற, தன் நெடும் தோள் புடைத்து ஆர்த்தான்.       5.12.37 + + + +'நல்லை நல்லை! இஞ் ஞாலத்து, நின் ஒக்கும் நல்லார் + +இல்லை இல்லையால், எறுழ் வலிக்கு, யாரொடும் இகல + +வல்லை வல்லை; இன்று ஆகும் நீ படைத்துடை வாழ் நாட்கு + +எல்லை எல்லை'என்று, இந்திரசித்துவும் இசைத்தான்.       5.12.38 + + + +நாளுக்கு எல்லையும் நிருதராய் உலகத்தை நலியும், + +கோளுக்கு எல்லையும், கொடும் தொழிற்கு எல்லையும், கொடியீர்! + +வாளுக்கு எல்லையும் வந்தன; வகைகொண்டு வந்தேன் + +தோளுக்கு, எல்லை ஒன்று இல்லை; என்று அனுமனும் சொன்னான்.       5.12.39 + + + +"இச் சிரத்தையைத் தொலைப்பென்"என்று இந்திரன் பகைஞன், + +பச்சிரத்தம் வந்து ஒழுகிட, வானவர் பதைப்ப, + +வ��்சிரத்திலும் வலியன வயிர வான் கணைகள், + +அச் சிரத்திலும், மார்பிலும், செறித்தலும், அனுமன்,       5.12.40 + + + +குறிது வான் என்று குறைந்திலன், நெடும் சினம் கொண்டான், + +மறியும் வெண் திரை மா கடல் உலகு எலாம் வழங்கிச் + +சிறிய தாய் சொன்ன திரு மொழி சென்னியில் சூடி, + +நெறியில் நின்ற தன் நாயகன் புகழ் என நிமிர்ந்தான்.       5.12.41 + + + +பாகம் அல்லது கண்டிலன்; அனுமனைப் பார்த்தான்; + +மாக வன்திசை பத்தொடும் வரம்பு இலா உலகிற்கு + +ஏகநாதனை எறுழ் வலித் தோள் பிணித்து ஈர்த்த + +மேகநாதனும், மயங்கினன் ஆம் என வியந்தான்.       5.12.42 + + + +நீண்ட வீரனும், நெடும் தடம் கைகளை நீட்டி, + +ஈண்டு வெம் சரம் எய்தன, எய்திடா வண்ணம், + +மீண்டு போய் விழ வீசி, அங்கு, அவன் மிடல் தடம் தேர் + +பூண்ட பேயொடு, சாரதி தரைப்படப் புடைத்தான்.       5.12.43 + + + +ஊழிக் காற்று என ஒரு பரித் தேர் அவண் உதவப் + +பாழித் தோளவன் அத் தடம் தேர் மிசைப் பாய்ந்தான் + +ஆழிப் பல்படை அனையன அளப்ப அரும் சரத்தால் + +வாழிப் போர்வலி மாருதி மேனியை மறைந்தான்.       5.12.44 + + + +உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறாக் + +கொற்ற மாருதி மற்று அவன் தேர்மிசைக் குதித்தான்; + +பற்றி வன்கையால் பறித்து எறிந்து உலகு எலாம் பலகால் + +முற்றி வென்ற ஓர் மூரி வெம் சிலையினை முறித்தான்.       5.12.45 + + + +முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னம், + +மறிந்துபோர் இடை வழிக் கொள்வான், வயிர வாள் படையால் + +செறிந்த வான் பெரும் சிறை அற மலைகளைச் செயிரா + +எறிந்த இந்திரன் இட்ட, வான் சிலையினை எடுத்தான்.       5.12.46 + + + +நூறுநூறு போர் வாளி, ஓர் தொடை கொண்டு, நொய்தின், + +மாறு வெம் சினத்து இராவணன் மகன், சிலை வளைத்தான்; + +ஊறு, தன் நெடு மேனியில் பல பட, ஒல்கி, + +ஏறு சேவகன் தூதனும், சிறிது போது இருந்தான்.       5.12.47 + + + +ஆர்த்த வானவர், ஆகுலம் கண்டு, அறிவு அழிந்தார்; + +பார்த்த மாருதி, தாரு ஒன்று, அம் கையில் பற்றாத் + +தூர்த்த வாளிகள் துணிபட, முறைமுறை சுற்றிப் + +போர்த்த பொன் நெடு மணி முடித் தலையிடைப் புடைத்தான்       5.12.48 + + + +பாரம் மாமரம், முடி உடைத் தலையிடைப் படலும், + +தாரையின் நெடும் கற்றைகள், சுற்றின தயங்க; + +ஆர மால் வரை அருவியில், வழி கொழும் குருதி + +சோர, நின்று, உடன் துளங்கினன் அமரரைத் தொலைத்தான்.       5.12.49 + + + +நின்று, போதம் வந்து உறுதலும், நிறை பி���ை எயிற்றைத் + +தின்று, தேவரும் அவுணரும் முனிவரும் திகைப்பக் + +குன்று போல் நெடு மாருதி ஆகமும் குலுங்க, + +ஒன்று போல், அவன், ஆயிரம் பகழி கோத்து எய்தான்.       5.12.50 + + + +உய்த்த வெம் சரம், உரத்திலும் கரத்தினும், ஒளிப்பக் + +கைத்த சிந்தையன், மாருதி, அதிகமும் கனன்றான், + +வித்தகச் சிலை விடு கணை விசையினும் கடுகி, + +அத் தடம் பெரும் தேரொடும் எடுத்து, எறிந்து, ஆர்த்தான்.       5.12.51 + + + +கண்ணின் மீச் சென்ற இமை இடை கலப்பதன் முன்னம், + +எண்ணின் மீச் சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன், + +புண்ணின் மீச் சென்ற பொழி புலால் பசும்புனல் பொறிப்ப, + +விண்ணின் மீச் சென்ற தேரொடும் பார்மிசை விழுந்தான்.       5.12.52 + + + +விழுந்து, பார் அடையா முன்னம், மின் அன மெய்யான் + +எழுந்து, மால் விசும்பு எய்தினன்; இடை, அவன் படையில், + +செழும் தண் மா மணித் தேர் குலம் யாவையும் சிதைய, + +உழுந்து பேர்வதன் முன், நெடு மாருதி உதைத்தான்.       5.12.53 + +இந்திரசித்து அயன்படை விடுதல் (5879-5883) + + + +ஏறு தேர் இலன், எதிர் நிற்கும் உரன் இலன், எரியில் + +சீறு வெம் சினம் திருகினன், அந்தரம் திரிவான், + +வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையான், விரிஞ்சன் + +மாறு இலாப் பெரும் படைக்கலம் தொடுப்பதா, மதித்தான்.       5.12.54 + +பூவும், பூநிற அயினியும், தீபமும், புகையும், + +தாவு இல் பாவனையால் கொடுத்து, அருச்சனை சமைத்தான், + +தேவும், யாவையும், உலகமும், திருத்திய தெய்வக் + +கோவில்; நான்முகன் படைக்கலம் தடக்கையில் கொண்டான்.       5.12.55 + + + +கொண்டு கொற்ற வெம் சிலை நெடுநாணொடு கூட்டிச் + +சண்ட வேகத்த மாருதி தோெளாடு சாத்தி + +மண் துளங்கிட மாதிரம் துளங்கிட மதிதோய் + +விண் துளங்கிட மேருவும் துளங்கிட விட்டான்       5.12.56 + + + +தணிப்பு அரும் பெரும் படைக்கலம், தழல் உமிழ் தறுகண் + +பணிக் குலங்களுக்கு அரசனது உருவினைப் பற்றித் + +துணிக்க உற்று உயர் கலுழனும் துணுக்கு உற சுற்றிப் + +பிணித்தது; அப்பெரு மாருதி தோள்களைப் பிறங்க.       5.12.57 + + + +5883.திண் என் யாக்கையைத் திசைமுகன் படை சென்று திருக, + +அண்ணல் மாருதி, அன்று தன்பின் சென்ற அறத்தின் + +கண்ணின் நீரொடும், கனம் தோரணத்தொடும், கடைநாள் + +தண் என் மாமதி கோெளாடும் சாய்ந்து எனச் சாய்ந்தான்.       5.12.58 + + + +அநுமன் அயன்படையில் கட்டுப்படல் + + + +சாய்ந்த மாருதி, சதுமுகன்படை எனும் தன்மை + +ஆய்ந்து, மற்று இதன் ஆணையை அவமதித்து அகல்கை + +ஏய்ந்தது அன்று என எண்ணினன், கண்முகிழ்த்து இருந்தான்; + +'ஓய்ந்தது ஆம் இவன் வலி'என, அரக்கன் வந்து உற்றான்.       5.12.59 + + + +அரக்கர் அநுமனைச் சூழல் (5885-5886) + + + +உற்ற காலையில், உயிர் கொண்டு திசைதொறும் ஒதுங்கி + +அற்றம் நோக்கினர் நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர், + +சுற்றும் வந்து உடல் சுற்றிய தொளை எயிற்று அரவைப் + +பற்றி ஈர்த்தனர், ஆர்த்தனர், தழெித்தனர், பலரால்.       5.12.60 + + + +"குரக்கு நல்வலம் குறைந்தது"என்று, ஆவலம் கொட்டி + +இரைக்கும் மா நகர், எறிகடல் ஒத்தது; எம் மருங்கும் + +திரைக்கும் மாசுணம், வாசுகி ஒத்தது; தேவர்; + +அரக்கர் ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன் அனுமன்.       5.12.61 + + + +அயன்படையில் கட்டுண்ட அநுமன் தோற்றம் + + + +கறுத்த மாசுணம், கனக மா மேனியைப் பற்ற, + +அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன், + +மறத்து மாருதம் பொருத நாள், வாசுகி என்பான் + +புறத்துச் சுற்றிய மேரு மா மலையையும் போன்றான்.       5.12.62 + + + +இலங்கையர் மகிழ்ச்சி + + + +வந்து இரைத்தனர், மைந்தரும் மகளிரும் மழைபோல் + +அந்தரத்தினும் விசும்பினும் திசைதொறும் ஆர்ப்பார்; + +முந்தி உற்ற பேர் உவகைக்கு ஓர் கரை இலை; மொழியின், + +இந்திரன் பிணிப்பு உண்ட நாள் ஒத்தது அவ் இலங்கை.       5.12.63 + +---------------- + + + +5.13 பிணி வீட்டு படலம் 5889 - 6028 + + + +பிணிக்கப்பட்ட அனுமனைக்கண்ட அரக்கர்களின் நிலைமை (5889-5893) + + + +"எய்யுமின் ஈருமின் எறிமின் போழுமின் + +கொய்யுமின் குடரினைக் கூறுகூறுகள் + +செய்யுமின் மண் இடைத் தேய்மின் தின்னுமின் + +உய்யுமேல் இல்லை நம் உயிர்"என்று ஓடுவார்.       5.13.1 + + + +மைத் தடம் கண்ணியர் மைந்தர் யாவரும் + +பைத் தலை அரவு எனக் கனன்று'பைதலை + +இத்தனை பொழுது கொண்டு இருப்பதோ?'எனா + +மொய்த்தனர் கொலை செய முயல்கின்றார் சிலர்.       5.13.2 + + + +'நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ? + +வச்சிர உடல் மறி கடலின்வாய் மடுத்து + +உச்சியின் அழுத்துமின் உருத்து; அது அன்று எனின் + +கிச்சு இடை இடும்'எனக் கிளக்கின்றார் சிலர்.       5.13.3 + + + +'எந்தையை எம்பியை எம் முன்னோர்களைத் + +தந்தனை போக'எனத் தடுக்கின்றார் பலர்; + +'அந்தரத்து அமரர்தம் ஆணையால் இவன் + +வந்தது'என்று உயிர்கொள மறுகினார் பலர்.       5.13.4 + + + +'ஓங்கல் அம் பெருவலி உயிரின் அன்பரை + +நீங்கலம் இன்றொடு நீங்கினாம்; இனி + +ஏங்கலம் இவன் சிரம் இருத்தலால் திரு + +வாங்கலம்'என்று அழும் மாதரார் பலர்.       5.13.5 + + + +அரக்கர்களின் ஆரவாரம் + + + +கொண்டனர் எதிர்செலும் கொற்ற மாநகர் + +அண்டம் உற்றது நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு அது; + +கண்டம் உற்றுள அரும் கணவர்க்கு ஏங்கிய + +குண்டல முகத்தியர்க்கு உவகை கூரவே.       5.13.6 + + + +அனுமன் இலங்கையின் அழிவுபாடுகளைக் கண்டுகொண்டே செல்லுதல் + + + +வடி உடைக் கனல் படை வயவர் மால்கரி + +கொடி உடைத் தேர் பரி கொண்டு வீசலின் + +இடிபடச் சிதைந்த மால் வரையின் இல் எலாம் + +பொடிபடக் கிடந்தன கண்டு போயினான்.       5.13.7 + + + +அனுமனைக்கண்ட அரக்கர்கள் நிலை (5896-5899.) + + + +முயிறு அலைத்து எழும் முது மரத்தின் மொய்ம்பு தோள் + +கயிறு அலைப்பு உண்டது கண்டு காண்கிலாது + +எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர் + +வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர்.       5.13.8 + + + +ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் பலர் + +போர்ப் புறச்செயலினைப் புகல்கின்றார் பலர் + +பார்ப்புறப் பார்ப்புறப் பயத்தினால் பதைத்து + +ஊர்ப்புறத்து இரியல் உற்று ஓடுவார் பலர்.       5.13.9 + + + +'காந்து உறு கதழ் எயிற்று அரவின் கட்டு ஒரு + +பூந்துணர் சேர்த்து என பொலியும் வாள் முகம்; + +தேர்ந்து உறு பொருள்பெற எண்ணிச் செய்யுமின் + +வேந்து உறல் பழுது'என விளம்புவார் சிலர்.       5.13.10 + + + +'ஒளி வரும் நாகத்துக்கு ஒல்கி அன்று தன் + +எளிவரவு இன்று இதன் எண்ணம் வேறு'எனாக் + +'களிவரு சிந்தையால் காண்டி! நங்களைச் + +சுளிகிலை ஆம்'எனத் தொழுகின்றார் சிலர்.       5.13.11 + + + +நாகபாசத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் கிங்கரர்களின் வலிமையும் தொகையும் + + + +பைங்கழல் அனுமனைப் பிணித்த பாந்தளைக் + +கிங்கரர் ஒருபுடை கிளர்ந்து பற்றினார்; + +ஐம்பதினாயிரர் அளவு இல் ஆற்றலர் + +மொய்ம்பினின் எறுழ்வலிக் கருளன் மும்மையார்.       5.13.12 + +அரக்கர்கள் கூற்று + + + +'திண் திறல் அரக்கர்தம் செருக்கு சிந்துவான் + +தண்டல் இல் தன் உருக் கரந்த தன்மையான் + +மண்டு அமர் தொடங்கினன் வானரத்து உருக் + +கொண்டனன் அந்தகன் கொல்'என்றார் பலர்.       5.13.13 + +அரக்கரும் அரக்கியரும் நெருங்கிநின்று காணுதல் + + + +அரமியம் தலம் தொறும் அம்பொன் மாளிகைத் + +தரம் உறு நிலைதொறும் சாளரம் தொறும் + +முரசு எறி கடைதொறும் இரைத்து மொய்த்தனர்; + +நிரைவளை மகளிரும் நிருத மைந்தரும்.       5.13.14 + + + +அனுமனைக் கண்டு அரக்கர் சிலர் எண்ணியது + + + +'கயிலையின் ���ரு தனிக் கணிச்சி வானவன் + +மயில் இயல் சீதைதன் கற்பின் மாட்சியான் + +எயில் உடைத் திருநகர் சிதைப்ப எய்தினன் + +அயில் எயிற்று ஒரு குரங்காய்;' என்பார் சிலர்.       5.13.15 + +தேவமாதர் பலர் அக்காட்சியைக் காண வந்து கூடுதல் + + + +அரம்பையர் விஞ்சைநாட்டு அளக வல்லியர் + +நரம்பினும் இனிய சொல் நாக நாடியர் + +கரும்பு இயல் சித்தியர் இயக்கர் கன்னியர் + +வரம்பு அறு சும்மையர் தலைமயங்கினார்.       5.13.16 + + + +அரக்கர் பலர் கருத்து + + + +'நீர் இடைக் கண் துயில் நெடிய நேமியும் + +தார் உடைத் தனி மலர் உலகின் தாதையும் + +ஓர் உடல் கொண்டு தம் உருவம் மாற்றினர் + +பார் இடைப் புகுந்தனர் பகைத்து;' என்பார் பலர்.       5.13.17 + + + +அரக்கரல்லா ஏனையோர் கண்கலங்குதல் + + + +அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர் + +கரக்கிலர் நெடு மழைக் கண்ணின் நீர் அது + +விரைக் குழல் சீதைதன் மெலிவு நோக்கியோ? + +இரக்கமோ? அறத்தினது எண்மையே கொலோ?       5.13.18 + + + +அனுமன் கருத்து (5907-5912) + + + +ஆண் தொழில் அனுமனும் அவரொடு ஏகினான் + +மீண்டிலன் வேறலும் விரும்பல் உற்றிலன் + +'ஈண்டு இதுவே தொடர்ந்து இலங்கை வேந்தனைக் + +காண்டலே நலன்'எனக் கருத்தின் எண்ணினான்.       5.13.19 + + + +எந்தையது அருளினும் இராமன் சேவடி + +சிந்தை செய் நலத்தினும் சீதை வானவர் + +தந்து உள வரத்தினும் தறுகண் பாசமும் + +சிந்துவென் அயர்வு உறு சிந்தை சீரிதால்.       5.13.20 + + + +வளை எயிற்று அரக்கனை உற்று மந்திரத்து + +அளவு உறு முதியரும் அறிய ஆணையால் + +விளைவினை விளம்பினால் மிதிலை நாடியை + +இளகினன் என்வயின் ஈதல் ஏயுமால்.       5.13.21 + + + +அல்லதூஉம் அவனுடைத் துணைவர் ஆயினார்க்கு + +எல்லையும் தெரிவு உறும்; எண்ணும் தேறல் ஆம்; + +வல்லவன் நிலைமையும் மனமும் தேறல் ஆம்; + +சொல் உக முகம் எனும் தூது சொல்லவே.       5.13.22 + + + +வாலி தன் இறுதியும் மரத்துக்கு உற்றதும் + +கூல வெம் சேனையின் குணிப்பு இலாமையும் + +மேலவன் காதலன் வலியும் மெய்ம்மையால் + +நீல் நிறத்து இராவணன் நெஞ்சில் நிற்குமால்       5.13.23 + + + +'ஆதலான் அரக்கனை எய்தி ஆற்றலும் + +நீதியும் மனம் கொள நிறுவி நின்றவும் + +பாதியின் மேல் செல நூறி பைப் பையப் + +போதலே கருமம்'என்று அனுமன் போயினான்.       5.13.24 + + + +இந்திரசித்து அனுமனை இராவணன் மாளிகைக்குக் கொண்டு செல்லுதல் + + + +கடவுளர்க்கு அரசனைக் கடந்த தோன்றலும் + +புடைவரும் பெரும் படைப் புணரி போர்த்து எழ + +விடை பி��ிப்பு உண்டது போலும் வீரனைக் + +குடைகெழு மன்னன் இல் கொண்டு போயினான்.       5.13.25 + +அச்செய்தியைத் தூதுவர் சென்று இராவணன்பால் கூறுதல் + + + +தூதுவர் ஓடினர் தொழுது தொல்லைநாள் + +மாதிரம் கடந்தவற் குறுகி "மன்ன! நின் + +காதலன் மரை மலர் கடவுள் வாளியால் + +ஏதில் வானரம் பிணிப்பு உண்டது ஆம்"என்றார்.       5.13.26 + +நற்செய்தி கூறிய தூதுவர்க்கு இராவணன் பரிசளித்தல் + + + +கேட்டலும் கிளர்சுடர் கெட்ட வான் என + +ஈட்டு இருள் விழுங்கிய மார்பின் யானையின் + +கோட்டு எதிர் பொருத பேர் ஆரம் கொண்டு எதிர் + +நீட்டினன் உவகையின் நிமிர்ந்த நெஞ்சினான்.       5.13.27 + +அனுமனைக் கொல்லாமல் கொணரும்படி இராவணன் பணித்தல் + + + +'எல்லை இல் உவகையால் இவர்ந்த தோளினன் + +புல் உற மலர்ந்த கண் குமுதப் பூவினன் + +ஒல்லையின் ஓடி நீர் உரைத்து "என் ஆணையால் + +கொல்லலை தருக"எனக் கூறுவீர்'என்றான்.       5.13.28 + + + +தூதுவர் இராவணன் ஆணையை இந்திரசித்துக்குக் கூறுதலும் சீதாதேவியின் நிலைமையும் + + + +அவ் உரை தூதரும் ஆணையால் வரும் + +தெவ் உரை நீக்கினான் அறியச் செப்பினார்; + +இவ் உரை நிகழ் உழி இருந்த சீதையாம் + +வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம்.       5.13.29 + + + +அனுமன் பிணிப்புண்ட செய்தியைத் திரிசடை சீதைக்குக் கூறுதல் + + + +"இறுத்தனன் கடிபொழில் எண்ணிலோர் பட + +ஒறுத்தனன்"என்று கொண்டு உவக்கின்றாள் உயிர் + +வெறுத்தனள் சோர்வு உற வீரற்கு உற்றதைக் + +கறுத்தல் இல் சிந்தையாள் கவன்று கூறினாள்.       5.13.30 + + + +அதுகேட்டு வருந்திய சீதை அனுமனைக் குறித்துப் பலகூறிப் புலம்புதல் (5919-5923) + + + +ஓவியம் புகை உண்டது போல் ஒளிர் + +பூவின் மெல் இயல் மேனி பொடி உறப் + +பாவி வேடன் கைப் பார்ப்பு உறப் பேது உறும் + +தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள்.       5.13.31 + + + +உற்று உண்டாய விசும்பை உருவினாய் + +முற்று உண்டாய் கலை யாவையும் முற்றுறக் + +கற்று உண்டாய் ஒரு கள்ள அரக்கனால் + +பற்று உண்டாய் இதுவோ அறம் பான்மையே.       5.13.32 + + + +கடர் கடந்து புகுந்தனை; கண்டகர் + +உடர் கடந்தும் நின் ஊழி கடந்திலை + +அடர் கடந்த திரள் புயத்து ஐய! நீ + +இடர்கள் தந்தனை; வந்து இடர் மேலுமே.       5.13.33 + + + +ஆழி காட்டி என் ஆர் உயிர் காட்டினாய்க்கு + +ஊழி காட்டுவென் என்று உரைத்தேன் அது + +வாழி காட்டும் என்று உண்டு உன் வரைப்புயப் + +பாழி காட்டி அரும் பழி காட்டினாய்.       5.13.34 + + + +கண்டு போயினை'நீள்நெறி காட்டிட + +மண்டு போரின் அரக்கனை மாய்த்து எனைக் + +கொண்டு மன்னவன் போம்'எனும் கொள்கையைத் + +தண்டினாய் எனக்கு ஆர் உயிர் தந்த நீ.       5.13.35 + + + +சீதை தளர்ந்து மூர்ச்சித்தல் + + + +ஏய பன்னினள் இன்னன; தன் உயிர் + +தேயக் கன்று பிடி உறத் தீங்கு உறு + +தாயைப் போலத் தளர்ந்து மயர்ந்தனள்; + +தீயைச் சுட்டது ஒர் கற்பு எனும் தீயினாள்.       5.13.36 + + + +இந்திரசித்து அனுமனை இராவணன் அரண்மனையுள் கொண்டு சேர்தல் + + + +பெரும் தகைப் பெரியோனைப் பிணித்த போர் + +முருந்தன் மற்றை உலகு ஒரு மூன்றையும் + +அரும் தவப் பயனால் அரசு ஆள்கின்றான் + +இருந்த அப் பெருங் கோயில் சென்று எய்தினான்.       5.13.37 + + + +இராவணன் அரசுவீற்றிருக்கும் சிறப்பு (5926-5942) + + + +தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்து என்ன, + +அலங்கல் வெண்குடைத் தண் நிழல் அவிர் ஒளி பரப்ப, + +வலம் கொள் தோளினான், மண்ணின்று வானுற எடுத்த, + +பொலம் கொள் மாமணி வெள்ளி அம் குன்று எனப் பொலிய.       5.13.38 + + + +புள் உயர்த்தவன் திகிரியும், புரந்தரன் அயிலும், + +தள்ளின் முக்கணான் கணிச்சியும், தாக்கிய தழும்பும், + +கள் உயிர்க்கும் மென் குழலியர் முகிழ் விரல் கதிர்வாள், + +வள் உகிர்ப் பெருங் குறிகளும் புயங்களின் வயங்க.       5.13.39 + + + +துன்று செம்மயிர்ச் சுடர்நெடும் கற்றைகள் சுற்றி, + +நின்று திக்கு உற, நிரல்படக் கதிர்க் குழாம் நிமிர, + +ஒன்று சீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்பத் + +தென் திசைக்கும் ஓர் வட அனல் திருத்தியது என்ன.       5.13.40 + + + +மரகதக் கொழும் கதிரொடு மாணிக்க நெடுவாள், + +நரக தேயத்துள் நடுக்கு உறா இருளையும் நக்கச் + +சிரம் அனைத்தையும், திசைதொறும் திசைதொறும் செலுத்தி, + +உரகர்கோன், இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப.       5.13.41 + + + +குவித்த பல மணி குப்பைகள், கலையொடும் கொழிப்பச் + +சுவிச் சுடர்க் கலன் அணிந்த பொன் தோெளாடு தயங்கப் + +புவித் தடம் படர் மேருவைப் பொன்முடி என்னக் + +கவித்து மால் இரும் கரும் கடல் இருந்தது கடுப்ப.       5.13.42 + + + +சிந்துராகத்தின் செறி துகில் கச்சொடு செறியப் + +பந்தி வெண் முத்தின் அணிகலன் முழு நிலாப் பரப்ப + +இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம் பூண்டு + +அந்தி வான் உடுத்து அல்லு வீற்றிருந்தது ஆம் என்ன.       5.13.43 + + + +வண்மைக்கும் திரு மறைகட்கும் வானினும் பெரிய, + +த��ண்மைக்கும் தனி உறையுள் ஆம் முழுமுகம் திசையில், + +கண்வைக்கும் தொறும் களிற்றொடு மாதிரம் காக்கும், + +எண்மர்க்கும் மற்றை இருவர்க்கும் பெரும்பயம் இயற்ற.       5.13.44 + + + +ஏக நாயகன் தேவியை எதிர்ந்ததன் பின்னை + +நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும் + +மாகம் மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில் + +தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற.       5.13.45 + + + +வானரங்களும் வானவர் இருவரும் மனிதர் + +ஆன புன் தொழிலோர் என இகழ்கின்ற அவரும் + +ஏனை நின்றவர் இருடியர் சிலர் ஒழிந்து யாரும் + +தூ நவின்ற வேல் அரக்கர்தம் குழுவொடு சுற்ற.       5.13.46 + + + +நரம்பு கண் அகத்து உள் உறை நறை நிறப் பாண்டில், + +நிரம்பு சில்லரிப் பாணியும் குறடும் நின்று இசைப்ப, + +அரம்பை மங்கையர் அமிழ்து உகுத்தால் அன்ன பாடல், + +வரம்பு இல் இன்னிசை செவிதொறும் செவிதொறும் வழங்க.       5.13.47 + + + +கூடு பாணியின் இசையொடும் முழவொடும் கூடத் + +தோடு சீறு அடி விழி மனம் கையொடும் தொடரும் + +ஆடல் நோக்குறின் அரும் தவ முனிவர்க்கும் அமைந்த + +வீடு மீட்குறும் மேனகை மேல்நகை விளங்க.       5.13.48 + + + +ஊடினார் முகத்து உறும் நறை ஒரு முகம் உண்ணக் + +கூடினார் முகக் களிநறை ஒரு முகம் குடிப்பப் + +பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக + +ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த.       5.13.49 + + + +தேவரோடு இருந்து அரசியல் ஒருமுகம் செலுத்த + +மூவரோடு மா மந்திரம் ஒருமுகம் முயலப் + +பாவகாரிதன் பாவகம் ஒருமுகம் பயிலப் + +பூவை சானகி உரு ஒடு உம் ஒருமுகம் பொருந்த.       5.13.50 + + + +'காந்தள் மெல் விரல் சனகி தன் கற்பு எனும் கடலை + +நீந்தி ஏறுவது எங்ஙன்?'என்று ஒருமுகம் நினையச் + +சாந்து அளாவிய வனமுலை மகளிர் தற் சூழ்ந்தார் + +ஏந்தும் ஆடியின் ஒருமுகம் எழிலினை நோக்க.       5.13.51 + + + +பொதும்பர் வைகு தேன் புக்கு அருந்துதற்கு அகம் புலரும் + +மதம்பெய் வண்டு எனச் சனகி மேல் மனம் செல மறுகி, + +வெதும்புவார், அகம் வெந்து அழிவார், நகில் விழிநீர் + +ததும்புவார் விழித் தாரைவேல் தோள் தொறும் தாக்க.       5.13.52 + + + +மாறு அளாவிய மகரந்த நறை உண்டு மகளிர் + +வீறு அளாவிய முகிழ் முலை மெழுகிய சாந்தின் + +சேறு அளாவிய சிறு நறும் சீகரத் தென்றல் + +ஊறு அளாவிய கடு என உடல் இடை நுழைய.       5.13.53 + + + +திங்கள் வாள்நுதல் மடந்தையர் சேயரி கிடந்த + +அம் கயல் தடம் தாமரைக்கு அலரிய���ன் ஆகி + +வெம் கண் வானவர் தானவர் என்று இவர் விரியாப் + +பொங்கு கைகளாம் தாமரைக்கு இந்துவே போன்று.       5.13.54 + + + +இராவணனைக் கண்டதும் அனுமன் சினங்கொள்ளுதல் + + + +இருந்த எண்திசைக் கிழவனை மாருதி எதிர்ந்தான்; + +கரும் திண் நாகத்தை நோக்கிய கலுழனில் கனன்றான்; + +திருந்து தோள் இடை வீக்கிய 'பாசத்தைச் சிந்தி, + +உருந்தும் நஞ்சு போல் பவன்வயின் பாய்வென்'என்று உருத்தான்.       5.13.55 + + + +இராவணனைக் கொல்வதற்கு அனுமன் புரிந்த ஆலோசனை (5944-5947) + + + +"உறங்குகின்ற போது உயிர் உண்டல் குற்றம்'என்று ஒழிந்தேன், + +பிறங்கு பொன் மணி ஆசனத்து இருக்கவும் பெற்றேன், + +திறங்கள் என் பல சிந்திப்பது? இவன் தலை சிதறி, + +அறம் கொள் கொம்பினை மீட்டு, உடன் அகல்வென்" என்று அமைந்தான்.       5.13.56 + + + +'தேவர் தானவர் முதலினர் சேவகன் தேவி + +காவல் கண்டு இவண் இருந்தவர் கண் புலன் கதுவப் + +பாவகாரிதன் முடி தலை பறித்திலென் என்றால் + +ஏவதாம் இனிமேல் செயும் ஆள்வினை?'என்றான்.       5.13.57 + + + +'மாடு இருந்த மற்று இவன் புணர் மங்கையர் மயங்கி + +ஊடு இரிந்திட முடித்தலை திசைதொறும் உருட்டி + +ஆடல் கொண்டு நின்று ஆர்க்கின்றது; அது கொடிது அம்மா! + +தேடி வந்தது ஓர் குரங்கு;' எனும் வாசகம் சிறிதோ?       5.13.58 + + + +நீண்ட வாள் எயிற்று அரக்கனைக் கண்களின் நேரே + +காண்டல் வேண்டி இவ் உயிர் சுமந்து, எதிர் சில கழறி, + +மீண்ட போது உண்டு வசைப் பொருள்; வென்றிலேன் எனினும் + +மாண்ட போதினும் புகழ் அன்றி மற்றும் ஒன்று உண்டோ?       5.13.59 + + + +அனுமன் தன் எண்ணம் தகுதியன்றென நினைந்து மேலும் சிந்தித்தல் (5948-5952) + + + +என்று தோளிடை இறுக்கிய பாசம் இற்று ஏகக் + +குன்றின்மேல் எழு கோள் அரியேறு எனக் குதியில் + +சென்று கூடுவன் என்பது சிந்தனை செய்யா + +நின்று, காரியம் அன்று என நீதியின் நினைந்தான்.       5.13.60 + + + +கொல்லம் ஆம் வரத்தனும் அல்லன் கொற்றமும் + +வெல்லல் ஆம் தரத்தனும் அல்லன் மேலை நாள் + +அல் எலாம் திரண்டு அன நிறத்தன் ஆற்றலை + +வெல்லல் ஆம் இராமனால்; பிறரும் வெல்வரோ?       5.13.61 + + + +என்னையும் வெலற்கு அரிது இவனுக்கு; ஈண்டு இவன் + +தன்னையும் வெலற்கு அரிது எனக்கு; தாக்கினால் + +அன்னவே காலங்கள் கழியும் ஆதலால் + +துன் அரும் செருத் தொழில் தொடங்கல் தூயதோ? + +       5.13.62 + + + +'ஏழு பேர் உலகங்கள் யாவும் இன்பு உறப் + +பாழி வன் புயங்கேளாடு அரக்கன் பல் தலை + +பூழியில் புரட்டல் என் பூணிப்பாம்'என + +ஊழியான் விளம்பிய உரையும் ஒன்று உண்டால்.       5.13.63 + + + +'இங்கு ஒரு திங்களே இருப்பல் யான்'என + +அம் கண் நாயகன் தனது ஆணை கூறிய + +மங்கையும் இன் உயிர் துறத்தல் வாய்மையால்; + +பொங்கு வெம் செருவிடைப் பொழுது போக்கினால்.       5.13.64 + + + +இவ்வாறு ஆலோசித்து அடங்கி இராவணனருகிற் சார்தல் + + + +ஆதலான் அமர்த்தொழில் அழகிற்று அன்று; அரும் + +தூதனாம் தன்மையே தூய்து; என்று உன்னினான் + +வேத நாயகன் தனி துணைவன் வென்றிசால் + +ஏதில் வாள் அரக்கனது இருக்கை எய்தினான்.      5.13.65 + + + +இந்திரசித்து அனுமானை இராவணற்குக் காட்டுதல் + + + +தீட்டிய வாள் எனத் தெறு கண் தேவியர் + +ஈட்டிய குழு இடை இருந்த வேந்தற்குக் + +காட்டினன் அனுமனைக் கடலின் ஆர் அமுது + +ஊட்டிய உம்பரை உலைய ஓட்டினான்.       5.13.66 + + + +இந்திரசித்து அனுமனைப் பற்றி இராவணனிடம் கூறுதல் + + + +புவனம் எத்தனை? அவை அனைத்தும் போர் கடந் + +தவனை'உற்று அரி உரு ஆன ஆண்தகை + +சிவன் எனச் செங்கணான் என்னச் செய்தவன் + +இவன்'எனக் கூறி நின்று இருகை கூப்பினான்.       5.13.67 + + + +இராவணன் அனுமனை வெகுண்டு நோக்குதல் + + + +நோக்கிய கண்களால் நொறில் கனல் பொறி + +தூக்கிய அனுமன் மெய் மயிர் சுறுக்கொளத் + +தாக்கிய உயிர்ப்பொடும் தவழ்ந்த வெம்புகை + +வீக்கின அவ் உடல் விசித்த பாம்பினே.       5.13.68 + + + +அனுமனை வினாவுதல் (5957-5961.) + + + +அன்ன ஓர் வெகுளியன் அமரர் ஆதியர் + +துன்னிய துன்னலர் துணுக்கம் சுற்றுற + +'என் இவண் வரவு? நீ யாரை?'என்று அவன் + +தன்மையை வினாயினான். கூற்றின் தன்மையான்.       5.13.69 + + + +நேமியோ? குலிசியோ? நெடும் கணிச்சியோ? + +தாமரைக் கிழவனோ? தறுகண் பல் தலைப் + +பூமி தாங்கு ஒருவனோ? பொருது முற்றுவான் + +நாமமும் உருவமும் கரந்து நண்ணினாய்!       5.13.70 + + + +நின்று இசைத்து உயிர் கவர் நீலக் காலனோ? + +குன்று இசைத்து அயில் உற எறிந்த கொற்றனோ? + +தென்திசைக் கிழவனோ? திசை நின்று ஆட்சியர் + +என்று இசைக்கின்றவர் யாருள் யாவன்? நீ.       5.13.71 + + + +அந்தணர் வேள்வியின் ஆக்கி ஆணையின் + +வந்து உற விடுத்தது ஓர் வய வெம் பூதமோ? + +முந்து ஒரு மலர் உேளான்'இலங்கை முற்று உற + +சிந்து'எனத் திருத்திய தறுகண் தெய்வமோ?       5.13.72 + + + +'யாரை நீ? என்னை இங்கு எய்து காரணம்? + +ஆர் உனை விடுத்தவர்? அறிய ஆணையால் + +சோர்வு இலை சொல்லுதி!'என்னச் சொல்லினான். + +வேரொடும் அமரர்தம் புகழ் விழுங்கினான்.       5.13.73 + + + +அனுமன் விடை கூறல் (5962-5970) + + + +சொல்லிய அனைவர��ம் அல்லென்; சொன்ன அப் + +புல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன்; + +அல்லி அம் கமலமே அனைய செங்கண் ஓர் + +வில்லிதன் தூதன் யான்; இலங்கை மேயினேன்.       5.13.74 + + + +'அனையவன் யார்?'என அறிதி ஆதியேல் + +முனைவரும் அமரரும் மூவர் தேவரும் + +எனையவர் எனையவர் யாவர் யாவையும் + +நினைவு அரும் அருவினை முடிக்க நின்றுேளான்.       5.13.75 + + + +ஈட்டிய வலியும் மேல் நாள் இயற்றிய தவமும் யாணர்க் + +கூட்டிய படையும் தேவர் கொடுத்த நல் வரமும் கொட்பும் + +தீட்டிய அறிவும் எய்தத் திருத்திய பிறவும் எல்லாம் + +நீட்டிய பகழி ஒன்றால் முதலொடும் நீக்க நின்றான்.       5.13.76 + + + +தேவரும் பிறரும் அல்லன்; திசை களிறு அல்லன்; திக்கில் + +காவலர் அல்லன்; ஈசன் கயிலை அம் கிரியும் அல்லன்; + +மூவரும் அல்லன்; மற்றை முனிவரும் அல்லன்; எல்லைப் + +பூ வலயத்தை ஆண்ட புரவலன் புதல்வன் போல் ஆம்.       5.13.77 + + + +போதமும் பொருந்து கேள்விப் புரை அறு பயனும் பொய் தீர் + +மாதவம் சார்ந்த தீரா வரங்களும் மற்றும் முற்றும் + +யாது அவன் நினைந்தான் அன்ன பயத்தன ஏது வேண்டின் + +வேதமும் அறனும் சொல்லும் மெய் அற மூர்த்தி வில்லோன்.       5.13.78 + + + +காரணம் கேட்டி ஆயில், கடை இலா மறையின் கண்ணும் + +ஆரணம் காட்ட மாட்டா அறிவினுக்கு அறிவும் அன்னோன்; + +போர் அணங்கு இடங்கர் கவ்வப் பொதுநின்று'முதலே'என்ற + +வாரணம் காக்க வந்தான் அமரரைக் காக்க வந்தான்.       5.13.79 + + + +மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத்து ஆய + +காலமும் கடந்து நின்ற காரணன், கைவில் ஏந்திச் + +சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை + +ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு, அயோத்தி வந்தான்.       5.13.80 + + + +அறம் தலை நிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் + +திறம் தெரிந்து உலகம் பூணச் செம் நெறி செலுத்தித் தீயோர் + +இறந்து உக நாறித் தக்கோர் இடர் துடைத்து ஏக, ஈண்டுப் + +பிறந்தனன், தன் பொன் பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான்.       5.13.81 + + + +'அன்னவற்கு அடிமை செய்வேன், நாமமும் அனுமன் என்பேன், + +நல்நுதல் தன்னைத் தேடி நால் பெரும் திசையும் போந்த + +மன்னரில், தென்பால் வந்த தானைக்கு மன்னன், வாலி + +தன் மகன், அவன்தன் தூதன், வந்தனென் தனியேன்'என்றான்.       5.13.82 + + + +இராவணன் வாலியின் நலங்களைப் பற்றி வினவக் கேட்டு அனுமன் நகுதல் + + + +என்றலும் இலங்கை வேந்தன், எயிறு இனம் ���ழிலி நாப்பண் + +மின் திரிந்தென்ன நக்கு, 'வாலி சேய் விடுத்த தூத! + +வன் திறல் ஆய வாலி வலியன் கொல்! அரசின் வாழ்க்கை + +நன்றுகொல்!'என்னலோடும் நாயகன் தூதன் நக்கான்.       5.13.83 + +வாலி இறந்த செய்தியை அனுமன் கூறுதல் + + + +'அஞ்சலை, அரக்க! பார்விட்டு, அந்தரம் அடைந்தான் அன்றே + +வெஞ்சின வாலி, மீளான்; வாலும் போய் விளிந்தது; அன்றே, + +அஞ்சன மேனியான் தன் அடுகணை ஒன்றால் மாழ்கித் + +துஞ்சினன், எங்கள் வேந்தன் சூரியன் தோன்றல்'என்றான்.       5.13.84 + +இராவணன் மற்றும் சில வினாவுதல் + + + +'என் உடை ஈட்டினால் அவ் வாலியை எறுழ் வாய் அம்பால் + +இன் உயிர் உண்டது? இப்போது யாண்டையான் இராமன் என்பான்? + +அன்னவன் தேவி தன்னை அங்கதன் நாடல் உற்ற + +தன்மையை உரைசெய்க'என்னச் சமீரணன் தனயன் சொல்வான்.       5.13.85 + +அனுமன் விடை பகர்தல் (5974-5975) + + + +'தேவியை நாடி வந்த செங்கணாற்கு எங்கள் கோமான் + +ஆவி ஒன்றாக நட்டான்; 'அருந்துயர் துடைத்தி'என்ன, + +ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன்'உருமையோடும் + +கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான்'.       5.13.86 + + + +'ஆயவன் தன்னொடு ஆண்டுத் திங்கள் ஓர் நான்கும் வைகி + +மேய வெம் சேனை சூழ, வீற்று இனிது இருந்த வீரன், + +போய் இனி நாடும் என்னப் போந்தனம், புகுந்தது ஈது'என்று + +ஏயவன் தூதன் சொன்னான், இராவணன் இதனைச் சொன்னான்.       5.13.87 + + + +இராவணன் இகழ்ந்துரைத்தல் (5976-5977) + + + +'உம் குலத் தலைவன் தன்னோடு ஒப்பு இலா உயர்ச்சியானை + +வெம் கொலை அம்பில் கொன்றாற்கு ஆள் தொழில் மேல் கொண்டீரேல், + +எங்கு உலப்பு உறும் நும் சீர்த்தி? நும்மொடும் இயைந்தது என்றால் + +மங்குலில் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து. மாதோ'.       5.13.88 + + + +'தம் முனைக் கொல்வித்து, அன்னாற் கொன்றவற்கு அன்பு சான்ற + +உம் இனத் தலைவன் ஏவ, யாது எமக்கு உணர்த்தல் உற்றது? + +எம் முனைத் தூது வந்தாய் இகல்புரி தன்மை என்னை? + +நொம் எனக் கொல்லாம்! நெஞ்சம் அஞ்சலை, நுவல்தி'என்றான்.       5.13.89 + + + +அனுமன் ஆராய்ந்து சில கூறத் தொடங்குதல் + + + +துணர்த்த தாரவன் சொல்லிய சொற்களைப் + +புணர்த்து நோக்கிப்'பொது நின்ற நீதியை + +உணர்த்தினால் அது உறும்'என உன்ன அரும் + +குணத்தினான் உம் இனையன கூறினான்.       5.13.90 + + + +அனுமன் கூறிய அறிவுரைகள் (5979-5994) + + + +தூது வந்தது; சூரியன் கான்முளை + +ஏது ஒன்றிய நீதி இயைந்தன + +சாது என்று உணர்கிற்றியேல் தக்���ன + +கோது இறந்தன நின் வயின் கூறுவாம்.       5.13.91 + + + +வறிது வீழ்த்தனை வாழ்க்கையை; மன் அறம் + +சிறிதும் நோக்கலை; தீமை திருத்தினாய்; + +இறுதி உற்றுளது; ஆயினும் இன்னும் ஓர் + +உறுதி கேட்டி; உயிர் நெடிது ஓம்புவாய்!       5.13.92 + + + +'போய் இற்றீர்; நும் புலன் வென்று போற்றிய + +வாயில் தீர்வு அரிது ஆகிய மா தவம் + +காயில் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் + +தீயில் தூயவளைத் துயர் செய்ததால்.       5.13.93 + + + +'இன்று வீந்தது; நாளைச் சிறிது இறை + +நின்று வீந்தது; அல்லால் இறை நிற்குமோ? + +ஒன்று வீந்தது நல் உணர் உம்பரை + +வென்று வீங்கிய வீக்கம் மிகுத்ததால்.       5.13.94 + + + +"தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது"எனும் + +வாய்மை நீக்கினை; மா தவத்தால் வந்த + +தூய்மை தூயவள் தன்வயின் தோன்றிய + +நோய்மையால் துடைக்கின்றனை; நோக்கலாய்.       5.13.95 + + + +'திறம் திறம்பிய காமச் செருக்கினால் + +மறந்து தத்தம் மதியின் மயங்கினார் + +இறந்து இறந்து இழிந்து ஏறுவதே அலால் + +அறம் திறம்பினர் ஆர் உளர் ஆயினார்?       5.13.96 + + + +'நாமத்து ஆழ்கடல் ஞாலம் புரந்தவர் + +ஈமத்தால் மறைந்தார் இளமாதர் பால் + +காமத்தால் இறந்தார் களிவண்டு உறை + +தாமத் தாரினர் எண்ணினும் சால்வரோ?       5.13.97 + + + +'பொருளும் காமமும் என்று இவை போக்கி வேறு + +இருள் உண்டாம் என எண்ணலர்; ஈதலும் + +அருளும் காதலில் தீர்தலும் அல்லது ஓர் + +தெருள் உண்டாம் என எண்ணலர் சீரியோர்.       5.13.98 + + + +'இச்சைத் தன்மையினில் பிறர் இல்லினை + +நச்சி நாளும் நகை உற நாண் இலன் + +பச்சை மேனி புலர்ந்து பழி படூஉம் + +கொச்சை ஆண்மையும் சீர்மையில் கூடுமோ?       5.13.99 + + + +'ஓத நீர் உலகு ஆண்டவர் உன்துணைப் + +போத நீதியர் ஆர் உளர்? போயினார் + +வேத நீதி விதிவழி மேல்வரும் + +காதல் நீ அறத்து எல்லை கடத்தியோ?       5.13.100 + + + +வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால் + +மறுப்பு உண்டாய பின் வாழ்கின்ற வாழ்வினின் + +உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை + +அறுப்பு உண்டால் அது அழகு எனல் ஆகுமே.       5.13.101 + + + +பாரை ஞூறுவ பல் பல பொன் புயம் + +ஈர் ஐஞ்ஞூறு தலை உள; என்னினும் + +ஊர் ஐஞ்ஞூறும் கடும் கனல் உள் பொதி + +சீரை ஞூறு அவை சேமம் செலுத்துமோ.       5.13.102 + + + +'புரம் பிழைப்பு அரும் தீ புகப் பொங்கியோன் + +நரம்பு இழைத்தன பாடலின் நல்கிய + +வரம் பிழைக்கும்; மறை பிழையாதவன் + +சரம் பிழைக்கும்'என்று எண்ணுதல் சாலுமோ?       5.13.103 + + + +ஈறு இல் நாண் உக எ���்சல் இல் நல் திரு + +நூறி நொய்தினை ஆகி நுழைதியோ? + +வேறும் இந் நகை ஆய வினைத் தொழில் + +தேறினார் பலர் காமிக்கும் செவ்வியோய்!       5.13.104 + + + +பிறந்து உளார் பிறவாத பெரும் பதம் + +சிறந்து உளார் மற்றும் தேவர்க்கும் தேவர் ஆய் + +இறந்து உளார் பிறர் யாரும் இராமனை + +மறந்து உளார் உளர் ஆகிலர்; வாய்மையால்.       5.13.105 + + + +"ஆதலால் தன் அரும் பெறல் செல்வமும் + +ஓது பல் கிளையும் உயிரும் பெறச் + +சீதையைத் தருக"என்று எனச் செப்பினான்; + +சோதியான் மகன் நிற்கு எனச் சொல்லினான்.       5.13.106 + + + +இராவணன் நகுதல் + + + +என்றலும்'இவை சொல்லியது எற்கு ஒரு + +குன்றில் வாழும் குரங்கு கொல் ஆம்; இது + +நன்று நன்று'என மாநகை செய்தனன்; + +வென்றி என்று ஒன்றுதான் அன்றி வேறு இலான்.       5.13.107 + +இராவணன் அனுமனை வினவுதல் + + + +'குரக்கு வார்த்தையும் மானிடர் கொற்றமும் + +இருக்க; நிற்க; நீ என்கொல்; அடா! இரும் + +புரத்தினுள் தரும் தூது புகுந்த பின் + +அரக்கரைக் கொன்றது? அஃது உரையாய்'என்றான்.       5.13.108 + +அனுமன் விடை + + + +'காட்டுவார் இன்மையால் கடி காவினை + +வாட்டினேன்; என்னைக் கொல்ல வந்தார்களை + +வீட்டினேன்; பின்னும் மென்மையினால் உன்தன் + +மாட்டு வந்தது காணும் மதியினால்.       5.13.109 + + + +வீடணன் தூதனாய் வந்த அனுமனைக் கொல்லல் ஆகாது எனல் (5998-6004) + + + +என்னும் மாத்திரத்து ஈண்டு எரி நீண்டு உக + +மின்னும் வாள் எயிற்றன் சினம் வீங்கினான்; + +கொன்மின் என்றனன்; கொல்லியர் சேர்தலும் + +நின்மின் என்றனன்; வீடணன் நீதியான்.       5.13.110 + + + +ஆண்டு எழுந்து நின்று அண்ணல் அரக்கனை + +நீண்ட கையன் வணங்கினன்;'நீதியாய் + +மூண்ட கோபம் முறையது அன்று ஆம்'என + +வேண்டும் மெய் உரை பைய விளம்பினான்.       5.13.111 + + + +அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல் + +தந்தவன் அன்புக்கு ஆன்ற தவம் நெறி உணர்ந்து, தக்கோய்! + +இந்திரன் கருமம் ஆற்றும் இறைவன் நீ, இயம்பு'தூது + +வந்தனென்'என்ற பின்னும் கோறியே? மறைகள் வல்லோய்       5.13.112 + + + +பூதலப் பரப்பின், அண்டப் பொகுட்டினுள், புறத்துள், பொய்தீர் + +வேதம் உற்று இயங்கு வைப்பின், வேறு வேறு இடத்து வேந்தர், + +மாதரைக் கொலை செய்தார்கள் உளர் என வரினும், வந்த + +தூதரைக் கொன்றுளார்கள் யாவரே? தொல்லை நல்லோர்.       5.13.113 + + + +பகைப்புலன் அணுகி, உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து, பற்றார் + +மிகைப்புலன் அடக்கி, மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட + +தகைப்��ுலம் கருமத்தோரைக் கோறலின், தக்கார் யார்க்கும் + +நகைப்புலன் பிறிது உண்டாமோ? நம் குலம் நவை உண்டாமே?       5.13.114 + + + +முத்தலை எஃகன் மற்றை முராந்தகன் முனிவன் முன்னா + +அத்தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்று ஆமால்; + +மெய்த்தலை உலகம் காக்கும் வேந்த! நீ, வேற்றோர் ஏவ + +இத்தலை எய்தினானைக் கொல்லுதல், இழுக்கம்; இன்னும்.       5.13.115 + + + +'இளையவள் தன்னைக் கொல்லாது, இரு செவி மூக்கொடு ஈர்ந்து, + +'விளைவு உரை'என்று விட்டார் வீரராய் மெய்ம்மை ஓர்வார், + +களைதியேல் ஆவி, நம்பால் இவன் வந்து கண்ணில் கண்ட + +அளவு உரையாமல் செய்தி ஆதி;' என்று அமையச் சொன்னான்.       5.13.116 + + + +இராவணன் அனுமன் வாலில் தீக்கொளுவப் பணித்தல் + + + +"நல்லது உரைத்தாய்; நம்பி! இவன் நவை செய்தானே ஆனாலும், + +கொல்லல் பழுதே; போய் இடை நீ கூறிக் கொணர்தி கடிது" என்னாத் + +"தொல்லை வாலை மூலம் அறச் சுட்டு நகரைச் சூழ்போக்கி, + +எல்லை கடக்க விடுமின்கள்" என்றான்; நின்றார் இரைத்து எழுந்தார்.       5.13.117 + + + + காலத்து,'அயன் படையோடு இருப்ப ஆகாது அனல் இடுதல்; + +தூய பாசம் எனப் பலவும் கொணர்ந்து பிணிமின் தோள்'என்னா + +மேய தெய்வப் படைக்கலத்தை விட்டான், அமரர் போர் வென்றான்; + +ஏ எனாமுன் இடை புக்குத் தொடைவன் கயிற்றால் பிணித்து ஈர்த்தார்.       5.13.118 + + + +அரக்கர்கள் கண்ட கயிறுகளையெல்லாம் கொண்டு வருதல் + + + +நாட்டின் நகரின் நடு உள்ள கயிறு நவிலும் தகைமையவே! + +வீட்டின் ஊசல் நெடும் பாசம் அற்ற; தேரும் விசி துறந்த; + +மாட்டும் புரவி ஆயம் எலாம் மருவி வாங்கும் தொடை அழிந்த; + +பூட்டும் வல்லி மூட்டோடும் புரசை இழந்த போர் யானை.       5.13.119 + + + +பல்வேறு பாசங்களால் அனுமனைக் கட்டுதல் + + + +மண்ணில் கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற, + +எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த, தமக்கு இயைந்த + +பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறே இடை பிழைத்த; + +கண்ணில் கண்ட வன் பாசம் எல்லாம் இட்டுக் கட்டினார்.       5.13.120 + + + +அனுமன் மகிழ்தல் + + + +"கடவுள் படையைக் கடந்து, அறத்தின் ஆணை கடந்தேன் ஆகாமே, + +விடுவித்து அளித்தார் தெவ்வரே; வென்றேன் அன்றோ இவர் வென்றி; + +சுடுவிக்கின்றது,'இவ் வூரைச் சுடுக' என்று உரைத்த துணிவு"என்று + +நடு உற்று அமைய உற நோக்கி, முற்றும் உவந்தான் நவை அற்றான்.       5.13.121 + + + +அனுமன் அடங்கிச் செல்லுதல் + + + +நொய்ய பாசம் புரம் பிணிப்ப, நோ���்மை இலன்போல் உடல் நுணங்கி, + +வெய்ய அரக்கர் புறத்து அலைப்ப, வீடும் உணர்ந்தே, விரைவு இல்லா + +ஐயன், விஞ்சைதனை அறிந்தும், அறியாதான் போல், அவிஞ்சை எனும் + +பொய்யை மெய் போல் நடிக்கின்ற யோகி போன்றான்; போகின்றான்.       5.13.122 + + + +அரக்கர் அனுமன் வாலில் தீக்கொளுவுதல் + + + +வேந்தன் கோயில் வாயிலொடு விரைவில் கடந்து, வெள்ளிடையின் + +போந்து, புறம் நின்று இரைக்கின்ற பொறைதீர் மறவர் புறம் சுற்ற, + +ஏந்து நெடுவால் கிழி சுற்றி, முற்றும் தோய்த்தார் இழுது எண்ணெய்; + +காந்து கடும் தீக் கொளுத்தினார், ஆர்த்தார்; அண்டம் கடிகலங்க.       5.13.123 + + + +அனுமனைக் காண அரக்கர் திரளுதல் + + + +ஒக்க ஒக்க உடன் விசித்த உலப்பு இலாத உர பாசம், + +பக்கம் பக்கம் இரு கூறு ஆய் நூறு ஆயிரவர் பற்றினார்; + +புக்க படைஞர், புடை காப்போர், புணரிக் கணக்கர்; புறம் செல்வோர் + +திக்கின் அளவால்; அயல் நின்று காண்போர்க்கு எல்லை தெரிவு அரிதால       5.13.124 + + + +அனுமனுக்கு உற்றதைக் காண வருமாறு அரக்கர் அனைவரையும் அழைத்தல் + + + +'அந்த நகரும் கடி காவும் அழிவித்து, அக்கன் முதலாயோர் + +சிந்த நூறிச், சீதையொடும் பேசி, மனிதர் திறம் செப்ப, + +வந்த குரங்கிற்கு உற்றதனை, வம்மின் காண வம்'என்று + +தம் தம் தெருவும் வாயில்தொறும் யாரும் அறியச் சாற்றினார்.       5.13.125 + + + +அனுமனுக்கு உற்றது கேட்ட பிராட்டி வருந்தல் + + + +ஆர்த்தார், அண்டத்து அப்புறத்தும் + +       அறிவிப்பார் போல்; அங்கோடு இங்கு + +ஈர்த்தார், முரசம் எற்றினார், + +       இடித்தார், தழெித்தார், எம் மருங்கும் + +பார்த்தார், ஓடிச் சானகிக்கும் + +       பகர்ந்தார்; அவளும் உயிர் பதைத்தாள், + +வேர்த்தாள், உலந்தாள், விம்மினாள், + +       விழுந்தாள், அழுதாள், வெய்து உயிர்த்தாள்       5.13.126 + + + +பிராட்டி அங்கியங் கடவுளை வேண்டல் + + + +'தாயே அனைய கருணையான் துணையை, யாதும் தகவு இல்லா + +நாயே அனைய வல் அரக்கர் நலியக் கண்டால், நல்காயோ? + +நீயே உலகுக்கு ஒரு சான்று; நிற்கே தெரியும், கற்பினால் + +தூயேன் என்னில் தொழுகின்றேன், எரியே அவனைச் சுடல்'என்றாள       5.13.127 + + + +அனல் குளிர்தல் (6016-6018) + + + +வெளுத்த மெல் நகையவள் விளம்பும் ஏல்வையின் + +ஒளித்த வெம் கனலவன் உள்ளம் உட்கினான்; + +தளிர்த்தன; மயிர்ப் புறம் சிலிர்ப்பத் தண்மையால் + +குளிர்த்தது; அக் குரிசில் வால் என்பு கூரவே.       5.13.128 + + + +மற்று இனிப் பல என்? வேலை வட அனல், புவி அளாய + +கற்றை வெம் கனலி, மற்றைக் காயம் தீ, முனிவர் காக்கும் + +முற்றுறு மும்மைச் செந்தீ, முப்புரம் முருங்கச் சுட்ட + +கொற்றவன் நெறறிக் கண்ணின் வன்னியும், குளிர்ந்த அன்றே. 129 + + + +அண்டமும் கடந்தான் அம் கை அனலியும் குளிர்ந்தது; அங்கிக் + +குண்டமும் குளிர்ந்த; மேகத்து உரும் எலாம் குளிர்ந்த; கொற்றச் + +சண்ட வெம் கதிர ஆகித் தழங்கு இருள் விழுங்கும் தாவு இல் + +மண்டலம் குளிர்ந்த; மீளா நரகமும் குளிர்ந்த மாதோ.       5.13.130 + + + +அனல் குளிர்ந்தமையால் அனுமன் மகிழ்தல் + + + +வெற்பினால் இயன்றது அன்ன மேனியை விழுங்கி, வெம் தீ + +நிற்பினும், சுடாது நின்ற நீர்மையை, நினைவின் நோக்கி, + +அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும்,'சனகன் பாவை + +கற்பினால் இயன்றது'என்பான், பெரியது ஓர் களிப்பன் ஆனான்.       5.13.131 + + + +அனுமன் இலங்கைநகர் முழுதும் காணுதல் + + + +அற்றை அவ் இரவில், தான் தன் அறிவினால் முழுதும் உன்னப் + +பெற்றிலன் எனினும், ஆண்டு ஒன்று உள்ளது பிழை உறாமே, + +மற்று உறு பொறி முன் செல்ல, மறைந்து செல் அறிவு மானக் + +கற்றிலா அரக்கர் தாமே காட்டலின், தெரியக் கண்டான்       5.13.132 + + + +அனுமன் மேலெழ அரக்கர் தோளற்று வீழ்தல் + + + +முழுவதும் தெரிய நோக்கி முற்றும் ஊர் முடிவில் சென்றான், + +'வழுவுறு காலம்'ஈது என்று எண்ணினன், வலிதின் பற்றித் + +தழுவினர் இரண்டு நூறாயிரம் புயத் தடக்கை, தாம்போடு + +எழு என நால, விண்மேல் எழுந்தனன்; விழுந்த எல்லாம்.       5.13.133 + + + +அனுமனுடைய தோற்றம் + + + +இற்ற வாள் அரக்கர் நூறாயிரவரும், இழந்த தோளார், + +முற்றினார் உலந்தார்; ஐயன், மொய்ம்பினோடு உடலை மூழ்கச் + +சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான், அரவின் சுற்றம் + +பற்றிய கலுழன் என்னப் பொலிந்தனன்; விசும்பின் பாலான்       5.13.134 + + + +அனுமன் தன்வாலை இலங்கைமீது செலுத்தல் + + + +'துன்னலர் புரத்தை முற்றும் சுடுதொழில் தொல்லையோனும், + +பன்னின பொருளும், நாணப் பாதகர் இருக்கை பற்ற, + +மன்னனை வாழ்த்திப் பின்னை வயங்கு எரி மடுப்பென்'என்னாப் + +பொன் நகர் மீதே தன்போர் வாலினைப் போக விட்டான்       5.13.135 + + + +வாலின் வருணனை (6024-6025) + + + +தன் இறைக்கு உறுகண் வெய்யோர் தாம் இயற்றலும் கேட்டு,'இன்னே + +அன்னவர்க்கு இறுதி ஆக, அணி நகர் அழிப்பல்;' என்னாச் + +செந்நிறச் சிகைய வெம் போர் மழு, பின்னர்ச் சேறல் ஒக்கும்; + +அல் நிறத்து அண்ணல் தூதன் அனல்கெழு கொ���்ற நீள் வால்       5.13.136 + + + +அப்பு உறழ் வேலை காறும் அலங்கு பேர் இலங்கை தன்னை, + +எப் புறத்தளவும் தீய ஒரு கணத்து எரித்த கோட்பால், + +துப்பு உறழ் மேனி அண்ணல், மேருவில் குழையத் தோளால் + +முப்புரத்து எய்த கோலே ஒத்தது; அம் மூரிப் போர் வால்       5.13.137 + + + +அனுமன் தன் வாலில் பற்றிய தீயை இலங்கை முழுதும் பரவும்படி உய்த்தல் + + + +உகக்கடை, உலகம் யாவும் உணங்குற, ஒரு தன் நாட்டம் + +சிகைக் கொழுங் கனலை வீசும் செயல் முனம் பயில்வான் போல, + +மிகைத்து எழு தீயர் ஆயோர் விரிநகர் வீயப், போர் வால், + +தகைத்தல் இல் நோன்மை சாலும் தனி வீரன், சேணில் உய்த்தான்       5.13.138 + + + +அனுமன் தன் வாலில் பற்றிய தீயுடன் இலங்கை நகர மாளிகைதோறும் தாவிச் செல்லுதல் + + + +வெள்ளியின் பொன்னின் நானா விளங்குபல் மணியின் விஞ்சை + +தெள்ளிய கடவுள் தச்சன், கை முயன்று அரிதின் செய்த, + +தள் அறு மனைகள் தோறும், முறை முறை தாவிச் சென்றான்; + +ஒள் எரியோடும் குன்றத்து ஊழிவீழ் உருமொடு ஒப்பான்       5.13.139 + + + +இலங்கை நகரை எரி உண்டமை + + + +நீல் நிற நிருதர், யாண்டும் நெய் பொழி வேள்வி நீக்க, + +பால் வரு பசியன், அன்பான் மாருதி வாலைப் பற்றி, + +ஆலம் உண்டவன், அன்று ஊட்ட, உலகு எலாம் அழிவின் உண்ணும், + +காலமே என்ன, மன்னோ கனலியும் கடிதின் உண்டான்.       5.13.140 + + -------------- + + + +5.14 இலங்கை எரியூட்டு படலம் 6029 - 6092 + + + +மாளிகைகளில் தீப்பற்றல் + + + +கொடியைப் பற்றி விதானம் கொளுவி தான் + +நெடிய தூணைத் தழுவி நெடும் சுவர் + +முடியச் சுற்றி முழுதும் முருக்கிற்றால்; + +கடி கொள் மா நகர் தோறும் கடும் கனல்.       5.14.1 + + + +நகரமக்கள் அங்குமிங்கும் ஓடிக் கூக்குரலிடல் + + + +வாசல் இட்ட எரி மண மாளிகை + +மூச முட்டி முழுதும் முருக்கிற்றால் + +ஊசல் இட்டு என ஓடி உளைந்து உலைப் + +பூசல் இட்டது இரியல் புறம் எலாம்.       5.14.2 + + + +மணிமாளிகைகளில் மாதர் மயங்கி அலமரல் + + + +மணியின் ஆய வயங்கு ஒளி மாளிகை + +பிணியில் செம் சுடர்க் கற்றை பெருக்கலால் + +திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் + +அணி வளைக் கை நல்லார் அலமந்து உளார்.       5.14.3 + + + +புகையில் அகப்பட்ட மகளிர் + + + +வான் அகத்தை நெடும் புகை மாய்த்தலால் + +போன திக்கு அறியாது புலம்பினார்; + +தேன் அகத்து மலர் சிலர் சிந்திய + +கான் அகத்து மயில் அன்ன காட்சியார்.       5.14.4 + + + +தலையில் தீப்பற்றியதும் பற்றாததும் தெரியாமை + + + +கூய்க் கொழும் ���ுனல் குஞ்சியில் கூந்தலில் + +மீச் சொரிந்தனர்; மாதரும் வீரரும் + +ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும் + +தீக் கொளுத்தினவும் தெரியாமையால்.       5.14.5 + + + +ஒரு தத்துவக் கருத்து + + + +இல்லில் தங்கு வயங்கு எரி யாவையும் + +சொல்லின் தீர்ந்தன போல்வன தொல் உரு + +புல்லிக் கொண்டன; மாயைப் புணர்ப்பு அறக் + +கல்வித் தம் இயல்பு எய்தும் கருத்தர் போல்.       5.14.6 + + + +புகை மேலோங்கி எழுதல் + + + +ஆயது அங்கு ஒர் குறள் உரு ஆய் அடித் + +தாய் அளந்து உலகங்கள் தரக் கொள்வான் + +மீ எழுந்த கரியவன் மேனியில் + +போய் எழுந்து பரந்தது; வெம் புகை.       5.14.7 + + + +எரியினால் யானைகள் நிறம் மாறுதல் + + + +நீலம் நின்ற நிறத்தன கீழ்நிலை + +மாலின் வெம் சின யானையை மானுவ; + +மேல் விழுந்து எரி முற்றும் விழுங்கலால் + +தோல் உரிந்து கழன்றன; தோல் எலாம்.       5.14.8 + + + +எருமைக்கு மாதர் ஒதுங்கல் + + + +மீது இமம் கலந்தால் அன்ன வெம் புகை + +சோதி மங்கலத் தீயொடு சுற்றலால் + +மேதி மங்குலின் வீழ் புனல் வீழ் மட + +ஓதிமங்களின் மாதர் ஒதுங்கினார்.       5.14.9 + + + +அனற்பொறிகளால் கடல்மீன் மடிதல் + + + +பொடித்து எழுந்து பெரும் பொறி போவன + +இடிக் குலங்களின் வீழ்தலில் எங்கணும் + +வெடித்த; வேலை வெதும்பிட மீன்குலம் + +துடித்து வெந்து புலர்ந்து உயிர் சோர்ந்தவால்.       5.14.10 + + + +பொன்மாளிகை உருகித் திரளல் + + + +பருகு தீ மடுத்து உள் உறப் பற்றலால் + +அருகு நீடிய ஆடகத் தாரைகள் + +உருகி வேலையின் ஊடு புக்கு உற்றன + +திருகில் பொன் நெடும் தண்டில் திரண்டவால்.       5.14.11 + + + +தரையும் வெந்தது + + + +உரையின் முந்து உலகு உண்ணும் எரி அதால் + +வரை நிவந்து அன்ன பன் மணி மாளிகை + +நிரையும் நீள் நெடும் சோலையும் நிற்குமோ? + +தரையும் வெந்தது; பொன் எனும் தன்மையால்.       5.14.12 + + + +புகை வானுலகத்தும் பரவல் + + + +கல்லினும் வலிது ஆம் புகைக் கற்றையால் + +எல்லி பெற்றது; இமையவர் நாடு இயல் + +வல்லி கோலி நிவந்தன; மா மணிச் + +சில்லி ஓடும் திரண்டன தேர் எலாம்.       5.14.13 + + + +கனலும் கள் குடித்தது + + + +பேயம் மன்றினில் நின்று பிறங்கு எரி + +மாயர் உண்ட நறவு மடுத்ததால்; + +தூயர் என்றவர் வைகு இடம் துன்னினால் + +தீயர்; அன்றியும் தீமையும் செய்வரால்.       5.14.14 + + + +கடலும் மேகமும் வெப்பமுறுதல் + + + +தழுவு இலங்கை தழங்கு எரி தாய்ச் செல + +வழு இல் வேலை உலையின் மறுகின; + +எழும் எழும் சுடர்க் கற்றை சென்று எய்தலால் + +குழுவு தண்புனல் ���ேகம் கொதித்தவே.       5.14.15 + + + +பேய்த்தேரைப் புனல் என மயங்கல் + + + +ஊனில் ஓடும் எரியொடு உயங்குவார் + +கானில் ஓடும் நெடும் புனல் காண் எனா + +வானில் ஓடும் மகளிர் மயங்கினார் + +வேனில் ஓடு அரும் தேர் இடை வீழ்ந்தனர்.       5.14.16 + + + +வண்டு தீச்சுடரைத் தாமரை என மயங்கல் + + + +தேன் அவாம் பொழில் தீப் படச் சிந்திய + +சோனை மா மலர்த் தும்பி தொடர்ந்து அயல் + +போன தீச் சுடர் புண்டரிகத் தடம் + +கானம் ஆம் என வீழ்ந்து கரிந்தவே.       5.14.17 + + + +நற்கடன் பூண்ட நங்கையர் மடிதல் + + + +"நல் கடம் இது நம் உயிர் நாயகன் + +மற்கடம் தறெ மாண்டனன்; வாழ்வு இலம்; + +இல் கடந்து இனி ஏகலம் யாம்"எனா + +வில் கடந்த நுதல் சிலர் வீடினார்.       5.14.18 + + + +கா வேரொடும் கரிதல் + + + +பூ கரிந்து முறி பொறி ஆய் அடை + +நா கரிந்து சினை நறும் சாம்பர் ஆய் + +மீ கரிந்து நெடும் பணை வேர் உறக் + +கா கரிந்து கரும் கரி ஆனவே.       5.14.19 + + + +விண்ணவர் ஊர்கள் உருகி ஒழுகல் + + + +கார் முழுக்க எழும் கனல் கற்றை போய் + +ஊர் முழுக்க வெதுப்ப உருக்கின; + +தூர் ஒழுக்கம் அறாமையின் துன்னு பொன் + +வேர் விழுப்பது போன்றன விண் எலாம்.       5.14.20 + + + +அரக்கரும் அமுதுண்டு ஆவி பெறல் (6049-6050) + + + +நெருக்கி மீ மிசை ஓங்கும் நெருப்பு அழல் + +செருக்கும் வெண் கதிர்த் திங்களைச் சேண் உற + +உருக்க மெய்யின் அமுதம் உகுத்தலால் + +அரக்கரும் சிலர் ஆவி பெற்றார் அரோ.       5.14.21 + + + +பருதி பற்றி நிமிர்ந்து எழு பைங் கனல் + +கருகி முற்றும் எரிந்து எழு கார் மழை + +அருகு சுற்றும் இருந்தையது ஆய் அதின் + +உருகு பொன்திரள் ஒத்தனன் ஒள் கதிர்.       5.14.22 + + + +குதிரைகள் எரிபடல் + + + +தளை கொளுத்திய தாவு எரி தாமணி + +முளை கொளுத்தி முகத்து இடை மொய்த்தபேர் + +உளை கொளுத்த உலந்து உலைவு உற்றன; + +வளை குளப்பின் மணி நிறம் வாசியே.       5.14.23 + + + +வான் ஏற முயன்ற அரக்கர் எரியில் விழல் + + + +எழுந்து பொன் தலத்து ஏறலின் நீள் புகைக் + +கொழுந்து சுற்ற உயிர்ப்பு இலர்; கோளும் உற்று + +அழுந்துபட்டு உளர் ஒத்து அயர்ந்து ஆர் அழல் + +விழுந்து முற்றினர்; கூற்றை விழுங்குவார்.       5.14.24 + + + +அரக்கியர் கூந்தலில் தீப்பற்றல் + + + +கோசிகத் துகில் உற்ற கொழும் கனல் + +தூசு இன் உத்தரிகத்தொடு சுற்று உறா + +வாச மைக் குழல் பற்ற மயங்கினார் + +பாசிழைப் பரவைப் படர் அல்குலார்.       5.14.25 + + + +ஆடையில் தீப்பற்றிய அரக்கர் கடலில் மண்டுதல் + + + +நிலவு இலங்கிய துகிலினை நெருப்���ு உண நிருதர் + +இலவினும் சில முத்து உள எனும் நகை இளையார் + +புலவியின் கரை கண்டவர் அமிர்து உணப் புணரும் + +கலவியின் கரை கண்டிலர் மண்டினர் கடல் மேல்.       5.14.26 + + + +கிளி பதைப்பக் கண்டு மகளிர் வருந்தல் + + + +பஞ்சரத்தொடு, பசும் நிறக் கிளி வெந்து பதைப்ப, + +அஞ்சனக் கணில் அருவி நீர் முலைமுன்றில் அலைப்பக் + +குஞ்சரத்து அன கொழுநரைத் தழுவு உறும் கொதிப்பால், + +மஞ்சு உறப் புகும் மின் எனப் புகை இடை மறைந்தார்       5.14.27 + + + +புகைப்படலத்துள் மறைந்த மகளிர் + + + +வரையினைப் புரை மாடங்கள் எரி புக, மகளிர், + +புரை இல் பொன் கலன் வில் இட, விசும்பு இடைப் போவார், + +கரை இல் நுண் புகைப் படலையில் கரந்தனர்; கலிங்கத் + +திரையின் உள் பொதி சித்திரப் பாவையின் செயலார்       5.14.28 + + + +மணம் பரப்பி மலர்ப்பொழில் எரிதல் + + + +அகரும் நல் நறும் சாந்தமும் முதலின அனேகம் + +புகர் இல் நல் மரத்து உறு வெறி உலகு எலாம் போர்ப்பப், + +பகரும் ஊழியில், கால வெம் கடும் கனல் பருகும் + +மகர வேலையின், வெந்தன நந்தன வனங்கள்.       5.14.29 + + + +கற்பகக் காவும் கனலும் இடைதெரியாமை + + + +மினைப் பரந்து எழு கொழும் சுடர், உலகு எலாம் விழுங்க, + +நினைப்பு அரும் பெரும் திசை உற விரிகின்ற நிலையால், + +சினைப் பரந்து, எரி சேர்ந்து இலா நின்றவும், சில, வெம் + +கனல் பரந்தவும், தெரிகில; கற்பகக் கானம்       5.14.30 + + + +புகை கடலை விழுங்கல் + + + +மூளும் வெம் புகை விழுங்கலின், சுற்று உறு முழு நீர் + +மாளும் வண்ணம், மா மலை நெடும் தலை தொறும் மயங்கிப் + +பூளை வீய்ந்து அன்ன போவன, புணரியில் புனல் மீன் + +மீள, யாவையும் தெரிந்து இல முகில்கணம் விசைப்ப       5.14.31 + + + +திசையனைத்தும் புகை சூழல் + + + +மிக்க வெம் புகை விழுங்கலின், வெள்ளி அம் கிரியும் + +ஒக்க வெற்பினோடு அன்னமும் காக்கையின் உருவ; + +பக்க வேலையின் படியது பாற்கடல், முடிவில் + +திக்கயங்களும், கயங்களும், வேற்றுமை தெரியா.       5.14.32 + + + +அரக்கரும் அரக்கியரும் கடலில் மூழ்கல் + + + +கரிந்து சிந்திடக் கடும் கனல் தொடர்ந்து, உடல் கதுவ + +உரிந்த மெய்யினர், ஓடினர், நீர் இடை ஒளிப்பார், + +விரிந்த கூந்தலும், குஞ்சியும் மிடைதலில், தாமும், + +எரிந்து வேகின்ற ஒத்தன, எறிதிரைப் பரவை.       5.14.33 + + + +மகவொடு போந்த அரக்கியர் அவலநிலை + + + +மருங்கின் மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி மகவை + +அரும் கையால் பற்றி, மற்று ஒரு மகவு பின் அரற்ற, + +நெருங்கி, நீரொடு, நெறிகுழல் சுறுக் கொள நீங்கிக் + +கரும் கடல் தலை வீழ்ந்தனர் அரக்கியர் கதறி.       5.14.34 + + + +படைக்கலம் உருகி ஒன்றாதலில் ஒரு உண்மை + + + +வில்லும், வேலும், வெம் குந்தமும் முதலின விறகாய், + +எல் உடைச் சுடர் எனப் புகர் எஃகு எலாம் உருகத் + +தொல்லை நல் நிலை, தொடர்ந்து பேர் உணர்வு அன்ன தொழிலச் + +சில்லி உண்டையில் திரண்டு அன படைக்கலச் சாலை.       5.14.35 + + + +தீப்பற்ற யானைகள் ஓடல் + + + +செய் தொடர்க் கன வல்லியும், புரோசையும், சிந்தி, + +நொய்தின் இட்ட வன் தறி பறித்து, உடல் எரி நுழைய, + +மொய் தடச் செவி நிறுத்தி, வால் முதுகினை முருக்கிக் + +கை எடுத்து அழைத்து ஓடின ஓடை வெம் களி மா.       5.14.36 + + + +பறவைகளை மீன்கூட்டம் விழுங்கல் + + + +வெருளும் வெம் புகைப் படலையின் மேல் செல வெருவி, + +இருளும் வெம் கடல் விழுந்தன, எழுந்தில பறவை; + +மருளில் மீன் கணம் விழுங்கிட உலந்தன; மனத்து ஓர் + +அருள் இல் வஞ்சரைத் தஞ்சம் என்று அடைந்தனர் அனைய.       5.14.37 + + + +இராவணன் மாளிகையில் தீப்புகல் + + + +நீரை வற்றிடப் பருகி மா நெடு நிலம் தடவித் + +தாருவைச் சுட்டு மலைகளைத் தணல் செய்து தனிமா + +மேருவைப் பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல் + +ஊரை முற்றுவித்து இராவணன் மனை புக்கது; உயர் தீ.       5.14.38 + + + +வானவர் மகளிர் நிலைகுலைந்தோடல் + + + +வான மாதரூம் மற்று உள மகளிரும் மறுகிப் + +போன போன திக்கு அறிவரும் இரியலர் போனார்; + +ஏனை நின்றவர் எங்கணும் இரிந்தனர்; இலங்கைக் + +கோன் அவ் வானவர் பதி கொண்ட நாள் எனக் குலைவார்.       5.14.39 + + + +மகளிர் குழலும் நறுமணம் பெறல் + + + +நாவியும் நறும் கலவையும் கற்பகம் நக்க + +பூவும் ஆரமும் அகிலும் என்று இனையன புகையத் + +தேவு தேன் மழை செறி பெரும் குலம் எனத் திசையின் + +பாவைமார் நறும் குழல்களும் பரிமளம் கமழ்ந்த.       5.14.40 + + + +இராவணன் எழுநிலை மாடம் எரிதல் + + + +சூழும் வெம் சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா + +ஆழி வெம் சினத்து ஆண் தொழில் இராவணன் மனையில், + +ஊழி வெம் கனல் உண்டிட, உலகம் என்று உயர்ந்த + +ஏழும் வெந்தன ஒத்தன, நெடும் நிலை ஏழும்.       5.14.41 + + + +இராவணன் மாளிகை உருகி மேருப் போலத் தோன்றல் + + + +பொன் திருத்தியது ஆதலால் இராவணன் புரை தீர் + +குன்றம் ஒத்து உயர் தடம் நெடு மா நிலைக் கோயில் + +நின்று துற்று எரி பருகிட நெரிவு உற உருகித் + +தென் திசைக்கும் ஓர் மேரு உண்டு ஆம் எனத் தெரிந்த.       5.14.42 + + + +இராவணன் முதலியோர் வெளியேறுதல் + + + +அனைய காலையில் அரக்கனும், அரிவையர் குழுவும், + +புனை மணிப் பொலி புட்பக விமானத்துப் போனார்; + +நினையும் மாத்திரை யாவரும்; நீங்கினர்; நீங்கா + +வினை இலாமையில் வெந்தது, அவ் விலங்கல் மேல் இலங்கை.       5.14.43 + + + +இராவணன் நகர் எரிந்த காரணம் வினவுதல் + + + +ஆழித் தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி + +'ஏழுக்கு ஏழென அடுக்கிய உலகங்கள் எரியும் + +ஊழிக் காலம் வந்து உற்றதோ? பிறிது வேறு உண்டோ? + +பாழித் தீ சுட வெந்தது என்? நகர்' எனப் பகர்ந்தான்.       5.14.44 + + + +நிகழ்ந்தது கூற இராவணன் சினத்தல் + + + +கரங்கள் கூப்பினர், தங்களைத் திருவொடும் காணார், + +இரங்குகின்ற வல் அரக்கர் ஈது இயம்பினர் :'இறையோய்! + +தரங்க வேலையின் நெடிய தன் வால் இட்ட தழலால், + +குரங்கு சுட்டது'என்று உரைத்தலும், இராவணன் கொதித்தான்.       5.14.45 + + + +இராவணன் சினந்து நகைத்தல் + + + +இன்று புன் தொழில் குரங்கு தன் வலியினால் இலங்கை + +நின்று வெந்து மா நீறு எழுகின்றது; நெருப்புத் + +தின்று தேக்கிடுகின்றது; தேவர்கள் சிரிப்பார்; + +நன்று நன்று போர் இராவணன் வலி'என நக்கான்.       5.14.46 + + + +எரியைப் பற்றிவரக் கட்டளையிடல் + + + +'உண்ட நெருப்பைக் + +கண்டு எதிர் பற்றிக் + +கொண்டு அணைக'என்றான் + +அண்டரை வென்றான்.       5.14.47 + + + +அனுமனைப் பற்றிவரக் கட்டளையிடல் + + + +'உற்று அகலா முன் + +செற்ற குரங்கைப் + +பற்றுமின்'என்றான் + +முற்றும் உணர்ந்தான்.       5.14.48 + + + +வீரர் விரைந்து செல்லல் + + + +சார் அயல் நின்றார் + +வீரர் விரைந்தார்; + +'நேருதும்'என்றார் + +தேரினர் சென்றார்.       5.14.49 + + + +பல வீரர்கள் செல்லல் + + + +எல்லை இகந்தார் + +வில்லர் வெகுண்டார் + +பல் அதிகாரத் + +தொல்லர் பெயர்ந்தார்.       5.14.50 + + + +வீரர்கள் எழுவர் போர்க்கு எழல் + + + +நீர்கெழு வேலை நிமிர்ந்தார் + +தார்கெழு தானை சமைந்தார் + +போர்கெழு மாலை புனைந்தார் + +ஓர் எழு வீரர் உயர்ந்தார்.       5.14.51 + + + +வீரர் அனுமனைக் காணல் + + + +விண்ணினை மேலை விளம்பார்; + +மண்ணினை ஓடி வளைந்தார்; + +அண்ணலை ஓடி அணைந்தார்; + +கண்ணினில் வேறு அயல் கண்டார்.       5.14.52 + + + +அரக்கர் அனுமனைச் சூழ்தல் + + + +'பற்றுதிர் பற்றுதிர்'என்பார்; + +'எற்றுதிர் எற்றுதிர்'என்பார்; + +'சுற்றுதிர் சுற்றுதிர்'என்பார்; + +முற்றினர் முற்றும் முனிந்தார்.       5.14.53 + + + +அனுமனும் அரக்கரும் பொருதல் (6082-6088) + + + +ஏல் கொடு வஞ்சர் எதிர்ந்தார்; + +கால் கொடு கை கொடு கார்போல் + +வேல் கொடு கோலினர்; வெம்தீ + +வால் கொடு தானும் வளைந்தான்.       5.14.54 + + + +பாதவம் ஒன்று பகுத்தான்; + +மாதிரம் வாலின் வளைந்தான்; + +மோதினன்; மோத முனிந்தார் + +ஏதியும் நாளும் இழந்தார்.       5.14.55 + + + +நூறிட மாருதி நொந்தார் + +ஊறிட ஊன் இடு புண் நீர் + +சேறு இட ஊரிடு செம்தீ + +ஆறிட ஓடினது; ஆறாய்.       5.14.56 + + + +தோற்றினர் துஞ்சினர் அல்லால் + +ஏற்று இகல் வீரர் எதிர்ந்தார்; + +காற்றின் மகன் கலை கற்றான் + +கூற்றினும் மும்மடி கொன்றான்.       5.14.57 + + + +மஞ்சு உறழ் மேனியர் வன் தோள் + +மொய்ம்பினர் வீரர் முடிந்தார் + +ஐம்பதினாயிரர் அல்லார் + +பைம் புனல் வேலை படர்ந்தார்.       5.14.58 + + + +தோய்த்தனன் வால் அது தோயக் + +காய்த்திய வேலை கலந்தார் + +போய்த்திலர் பொன்றினர் போனார் + +ஏய்த்து என மைந்தர் எதிர்ந்தார்.       5.14.59 + + + +சுற்றின தேரினர் தோலா + +வில் தொழில் வீரம் விளைத்தார் + +எற்றினன் மாருதி எற்ற + +உற்று எழு வீரர் உலைந்தார்.       5.14.60 + + + +பிராட்டி தங்கும் சோலையில் தீ பரவாமை + + + +விட்டு உயர் விஞ்சையர்'வெம் தீ + +வட்ட முலைத் திரு வைகும் + +புள் திரள் சோலை புறத்தும் + +சுட்டிலது'என்பது சொன்னார்.       5.14.61 + + + +பிராட்டியை அனுமன் வணங்கி மகிழ்தல் + + + +வந்து அவர் சொல்ல மகிழ்ந்தான் + +வெம் திறல் வீரன் வியந்தான் + +உய்ந்தனென் என்ன உவந்தான் + +பைந்தொடி தாள்கள் பணிந்தான்.       5.14.62 + + + +பிராட்டி மகிழ அனுமன் மீளல + + + +பார்த்தனள் சானகி பாரா + +வேர்த்து எரி மேனி குளிர்ந்தாள்; + +'வார்த்தை என்?''வந்தனை'என்னாப் + +போர்த் தொழில் மாருதி போனான்.       5.14.63 + + + +அனுமன் செல்ல அழல் மறைதல் + + + +'தெள்ளிய மாருதி சென்றான் + +கள்ள அரக்கர்கள் கண்டால் + +எள்ளலர் பற்றுவர்'என்னா + +ஒள் எரியோனும் ஒளித்தான்.       5.14.64 + + --------------- + + + +5.15 திருவடி தொழுத படலம் 6093 - 6185 + + + +அனுமன் (அரிஷ்டமென்னும்) குன்றினின்று வான் வழி மீளுதல் + + + +'நீங்குவென் விரைவின்'என்னும் நினைவினன் மருங்கு நின்றது + +ஆங்கு ஒரு குடுமிக் குன்றை அருக்கனில் அணைந்த ஐயன், + +வீங்கினன் உலகை எல்லாம்; விழுங்கினன் என்ன, வீரன் + +பூங் கழல் தொழுது வாழ்த்தி விசும்பு இடைக் கடிது போனான்.       5.15.1 + + + +வழியிடை மைந்நாகமலையிடம் உற்றதுணர்த்திய அனுமன் மகேந்திர வரையில் குதித்த��் + + + +மைநாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்திக் + +கை நாகம் அனையோன், உற்றது உணர்த்தினன்; கணத்தின் காலைப் + +பை நாகம் நிகர்க்கும் வீரர் தன் நெடும் வரவு பார்க்கும் + +கொய் நாகம் நறும் தேன் சிந்தும் குன்றிடைக் குதியும் கொண்டான்.       5.15.2 + + + +வானரவீரர் அனுமன் வரக்கண்டு மகிழ்தல் + + + +போய் வரும் கருமம் முற்றிற்று என்பது ஓர் பொம்மல் பொங்க, + +வாய் வெரீஇ நின்ற வென்றி வானர வீரர், மன்னோ + +பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தனர்; பறவைப் பார்ப்பு + +தாய் வரக் கண்டது அன்ன உவகையின், தளிர்த்தார் அம்மா.       5.15.3 + + + +அனுமன் வரவால் வானரவீரர்பால் நிகழ்ந்த செயல்கள் + + + +அழுதனர் சிலவர், முன் நின்று ஆர்த்தனர் சிலவர், அண்மித் + +தொழுதனர் சிலவர், ஆடித் துள்ளினர் சிலவர், அள்ளி + +முழுது உற விழுங்குவார் போல் மொய்த்தனர் சிலவர், முற்றும் + +தழுவினர் சிலவர், கொண்டு சுமந்தனர் சிலவர், தாங்கி.       5.15.4 + + + +வானரர் அனுமனை உபசரித்தல் + + + +தேனொடு கிழங்கும் காயும் நறியன, அரிதின் தேடி + +மேல்முறை வைத்தோம்; அண்ணல்! நுகர்ந்தனை, மெலிவு தீர்தி; + +மான வாள் முகமே எங்கட்கு உரைத்தது, மாற்றம்; என்று, + +தான் நுகர் சாகம் எல்லாம் முறைமுறை சிலவர் தந்தார்.       5.15.5 + + + +அனுமனுடலில் உள்ள புண்களைக்கண்டு வானரர் வருந்துதல் + + + +தாள்களில் மார்பில் தோளில் தலைகளில் தடக்கை தம்மில் + +வாள்களில் வேலில் வாளி மழைகளின் வகிர்ந்த புண்கள், + +நாள்கள்மேல் உலகில் சென்ற எண்ணன, நம்பி தன்னை + +ஊழ் கொள நோக்கி நோக்கி, உயிர் உக உளைந்து உயிர்த்தார்.       5.15.6 + + + +அனுமன் அங்கதன் முதலியோரை வணங்கி அவரிடம் பிராட்டி கூறிய ஆசியையும் தெரிவித்தல் + + + +வாலி காதலனை முந்தி வணங்கினன்; எண்கின் மன்னைக் + +கால் உற வணங்கிப் பின்னைக் கடன்முறை கடவோர்க்கு எல்லாம் + +ஏலுற இயற்றி, ஆங்கண் இருந்தவன், எதிர்ந்தோர்க்கு எல்லாம், + +ஞால நாயகன் தன் தேவி, சொல்லினள் நன்மை என்றான்.       5.15.7 + + + +சென்றது முதல் திரும்பியது வரை நிகழ்ந்தவற்றைச் சொல்லும்படி அனுமனிடம் வானரவீரர் வேண்டல் + + + +என்றலும் கரங்கள் கூப்பி எழுந்தனர்; இறைஞ்சித் தாழ்ந்து + +நின்றனர், உவகை பொங்க விம்மலர் நிமிர்ந்த நெஞ்சர், + +'சென்றது முதலா வந்தது இறுதியாச் செப்பல் பாலை + +வன் திறல் உரவோய்!'என்னச் சொல்லுவான் மருத்து மைந்தன்.       5.15.8 + + + +அனுமன், பிராட���டியின் தவமும் அவள்பக்கல் அடையாளம் + +பெற்றமையும் கூறித் தன் வென்றி கூறாது விடுத்தல் + + + +ஆண் தகை தேவி உள்ளத்து அரும் தவம் அமையச் சொல்லிப் + +பூண்ட பேர் அடையாளம் கை கொண்டதும் புகன்று, போரில் + +நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச் சிந்தி + +மீண்டதும், விளம்பான்; தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி.       5.15.9 + + + +அனுமன் கூறாதவற்றையும் குறிப்பால் உணர்ந்த வானர வீரர் மேற்செய்ய வேண்டியதை அனுமனிடம் வினவுதல் + + + +பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை + +உரை செய, ஊர் தீ இட்டது ஓங்கு இரும் புகையே ஓத, + +கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்ட, + +தெரிதர உணர்ந்தார்; பின்னர் என் இனிச் செய்தும் என்றார்.       5.15.10 + + + +அனுமன் விடையும் வானரர் புறப்படுதலும் + + + +யாவதும் இனி வேறு எண்ண வேண்டுவது, இறையும் இல்லை; + +சேவகன் தேவி தன்னைக் கண்டது விரைவின் செப்பி, + +ஆவது அவ் அண்ணல் உள்ளத்து அரும் துயர் ஆற்றலே ஆம்; + +போவது புலமை என்னாப் பொருக்கென எழுந்து போனார்.       5.15.11 + + + +வானரவீரர் மதுவனம் அடைதல் + + + +போயினர், களிப்பினோடும் புங்கவன் சிலையின் நின்றும் + +ஏயின பகழி என்ன, எழுந்து விண் படர்ந்து தாவிக் + +காய் கதிர்க் கடவுள் வானத்து உச்சி சென்று இறுக்கும் காலத்து + +ஆயின வீரரும், போய் மதுவனம் அதில் இறுத்தார்.       5.15.12 + + + +வானரர் உணவுவேண்ட அனுமன் முதலியோர் அங்கதனை அடைதல் + + + +'ஏத நாள் இறந்த சால, என்பது ஓர் வருத்தம் நெஞ்சம் அத்து, + +ஆதலால், உணவு தேய்ந்து வருந்தினம், அளியம் எம்மைச் + +சாதல் தீர்த்து அளித்த வீர! தந்தருள், உணவும்'என்னப் + +'போதும் நாம் வாலி சேய்பால்' என்று உடன் எழுந்து போனார்.       5.15.13 + + + +வானரத்தலைவர், அங்கதன்பால் வானரப்படைக்கு மதுவளிக்குமாறு வேண்டல் + + + +அங்கதன் தன்னை அண்மி, மனும் இருகை கூப்பிக் + +'கொங்கு தங்கு அலங்கல் மார்ப! ன்னுடைக் குரக்குச் சேனை, + +வெம் கதம் ஒழிந்து சால ந்தின, வேடை ஓடி, + +இங்கு இதற்கு அளித்தல் வேண்டும் ால் உமிழ் பிரசம்'என்றான்.       5.15.14 + + + +அங்கதன் இசைந்தமையால் வானரர் மதுவுண்டு மகிழ்தல் (6107-6108) + + + +என அவனும் நேர்ந்தான்; நரலையும் நடுங்க ஆர்த்துச் + +சென்று, உறு பிரசம் தூங்கும் செழு வனம் அதனின் ஊடே + +ஒன்றின் முன் ஒன்று பாயும், ஒடிக்கும் மென் பிரசம் எல்லாம் + +தின்று தின்று உவகை கூரும், தேன் நுகர் அளியின் மொய்த்��ே.       5.15.15 + + + +ஒருவர் வாய்க்கொள்ளும் தேனை ஒருவர் உண்டு எளிதில் போவார்; + +ஒருவர் கைக் கொள்ளும் தேனை ஒருவர் கொண்டு ஓடிப் போவார்; + +ஒருவரோடு ஒருவர் ஒன்றத் தழுவுவர், விழுவர், ஓடி + +ஒருவர் மேல் ஒருவர் ஏறி, 'ஓகை'என்று உவகைகூர்வார்.       5.15.16 + + + +மதுவனம் காவலர் வானரவீரரை அச்சுறுத்தி வெருட்ட முயலுதல் + + + +இன்னன நிகழும் காலை, எரிவிழித்து, எழுந்து சீறி, + +அந் நெடும் சோலை காக்கும் வானரர், அவரை, நோக்கி, + +'மன் நெடும் கதிரோன் மைந்தன் ஆணையை மறுத்து, நீவிர் + +என் நினைந்து என்ன செய்தீர்? நும் உயிர்க்கு இறுதி'என்ன.       5.15.17 + + + +காவலர் மதுவனம் அழிந்தமை ததிமுகற்கியம்புதல் (6110-6111) + + + +'முனியுமால் எம்மை எம் கோன்' என்று அவர், மொழிந்து போந்து, + +'கனியும் மா மது வனத்தைக் கட்டு அழித்திட்டது; இன்று + +நனி தரு கவியின் தானை, நண்ணலார் செய்கை நாண; + +இனி எமால் செயல் இன்று;' என்னத் ததிமுகற்கு இயம்பினாரே       5.15.18 + + + +கேட்டவன்'யாவரே அம் மதுவனம் கேடு சூழ்ந்தார்? + +காட்டிர்'என்று எழுந்தான்; அன்னார், 'வாலிசேய் முதல கற்றோர் + +ஈட்டம் வந்து இறுத்தது ஆக, அங்கதன் ஏவல் தன்னால், + +மாட்டின கவியின் தானை; மதுவளர் உலவை ஈட்டம்.'       5.15.19 + + + +காவலர் சொற்கேட்ட ததிமுகன் மதுவனத்துள் புக வானரர் அங்கதனிடம் சரண்புகுதல் (6112-6113) + + + +'உரம் கிளர் மதுகையான் தன் ஆணையால், உறுதி கொண்டே, + +குரங்கினம் தம்மையெல்லாம் விலக்கினம்; கொடுமை கூறிக் + +கரங்களால் எற்ற நொந்தேம்; காவலோய்! என்னலோடும் + +தரம் கிளர் தாதை பட்டது அறிந்திலன் தனயன் போலும்.'       5.15.20 + + + +என உரைத்து, அனலின் பொங்கி, எழுந்து இரைத்து, இரண்டு கோடி + +கனை கழல் கவியின் சேனை, கல் எனக் கலந்து புல்ல, + +புனை மதுச்சோலை புக்கான், மதுநுகர் புனிதச் சேனை, + +அனகனை வாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த.       5.15.21 + + + +ததிமுகன் அங்கதன்பாற் சினந்து கூறுதல் + + + +இந்திரன் வாலிக்கு ஈந்த இன்சுவை மதுவின் கானம், + +அந்தரத்தவர்க்கும் நோக்கற்கு அரிய என் ஆணை தன்னைச் + +சிந்தினை; கதிரோன் மைந்தன் திறலினை அறிதி அன்றே? + +மந்தரம் அனைய தோளாய்! இற்றது உன் வாழ்க்கை இன்றே.       5.15.22 + + + +ததிமுகனும் அங்கதனும் பொருதல் + + + +'மதுவனம் தன்னை இன்னே மாட்டுவித்தனை நீ'என்னாக் + +கதும் என வாலி சேய் மேல் எறிந்தனன் கரும் கல் பாறை + +அதுதனைப் புறங்கையாலே அகற்றி அங்கதனும் சீறித் + +த��ிமுகன் தன்னைப் பற்றிக் குத்தினன் தடக்கை தன்னால்.       5.15.23 + + + +அங்கதன் ததிமுகனைத் தாக்கித் துரத்தி, அவனுடன் வந்தாரையும் தண்டிக்கும்படி, தன்னுடன் வந்தார்க்குச் சொல்லுதல் + + + +வாய் வழி குருதி சோர மணிக் கையால் மலங்க மோதிப் + +'போய் மொழி கதிரோன் மைந்தற்கு' என்று அவன் தன்னைப் போக்கித் + +தீ எழும் வெகுளி பொங்க மற்று அவன் சேனை தன்னைக் + +காய் கனல் பொழியும் கையால் குத்துதிர் கட்டி என்றான்.       5.15.24 + + + +அங்கதன் படைவீரர் ததிமுகன் படைவீரரை வருத்த அங்கதன் அவரையும் வெருட்டுதல் + + + +பிடித்தனர்; கொடிகள் தன்னால் பிணித்தன; பின்னும் முன்னும் + +இடித்தனர், அசனி அஞ்ச எறுழ்வலிக் கரங்கள் ஓச்சி; + +துடித்தனர் உடல்கள் சோர்ந்தார், 'சொல்லும் போய் நீரும்'என்னப் + +படித்தனன் வாலி மைந்தன். பயத்துடன் அவரும் போனார்.       5.15.25 + + + +வானரவீரர் மதுவனத்தில் வருத்தம் தீர்ந்திருத்தல் + + + +அலை புனல் குடையுமா போல் மதுக் குடைந்து ஆடி, தம் தம் + +தலைவர்கட்கு இனிய தேனும் கனிகளும் பிறவும் தந்தே, + +உலைவு உறு வருத்தம் தீர்ந்திட்டு, உபவனத்து இருந்தார்; இப்பால் + +சிலை வளைத்து உலவும் தேரோன் தெறும் வெயில் தணிவு பார்த்தே.       5.15.26 + + + +கவிக்கூற்று நாடச்சென்றவர் மீண்டது நவின்றோம் நாடவிட்டவர் செய்தி நவில்வோம் எனல் + + + +முத்தலை எஃகினாற்கும் முடிப்ப அரும் கருமம் முற்றி, + +வித்தகத் தூதன் மீண்டது இறுதியா விளைந்த தன்மை, + +அத்தலை அறிந்தது எல்லாம் அறைந்தனம்; ஆழியான் மாட்டு + +இத்தலை நிகழ்ந்தது எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டாம்.       5.15.27 + + + +சுக்கிரீவன் பிராட்டியை நாடிவருமாறு வானரரை ஏவிவிட்டு இராமபிரானைத் தேற்றிக்கொண்டிருத்தல் + + + +'சேற்று இள மரை மலர்த் திருவைத் தேர்க'எனக் + +காற்றின் மா மகன் முதல் கவியின் சேனையை + +நால் திசை மருங்கினும் ஏவி நாயகன் + +தேற்றினன் இருந்தனன்; கவியின் செம்மலே.       5.15.28 + + + +சுக்கிரீவன் தேற்ற இராமபிரான் தேறுதல் + + + +கார்வரை இருந்துள கதிரின் காதலன் + +சீரிய சொற்களால் தெருட்ட செம் கணான் + +ஆருயிர் ஆயிரம் உடையன்; ஆம் என + +சோர்தொறும் உயிர்த்து உயிர்த்து உணரத் தோன்றுவான்.       5.15.29 + +அனுமன்பால் வைத்த நம்பிக்கையால் இராமபிரான் உயிர்தாங்கி யிருத்தல் + + + +தண்டல் இல் நெடும் திசை மூன்றும் தாயினர் + +'கண்டிலர் மடந்தையை'என்னும் கட்டுரை + +'உண்டு உயிர் அகத்து'என ஒறுக்கவும் உளன்; + +திண் திறல் அனுமனை நினையும் சிந்தையான்.       5.15.30 + + + +துயருற்ற இராமபிரான் சுக்கிரீவனொடு சொல்லுதல் (6123-6127) + + + +ஆரியன் அருந்துயர்க் கடலுள் ஆழ்பவன் + +'சீரியது அன்று நம் செய்கை; தீர்வு அரும் + +மூரி வெம் பழியொடு முடிந்தது ஆம்'எனச் + +சூரியன் புதல்வனை நோக்கிச் சொல்லினான்.       5.15.31 + + + +'குறித்த நாள் இறந்தன குன்றத் தென் திசை + +வெறிக் கருங் குழலியை நாடல் மேயினார் + +மறித்து இவண் வந்திலர்; மாண்டுளார் கொலோ? + +பிறித்து அவர்க்கு உற்றுளது என்னை? பெற்றியோய்!       5.15.32 + + + +'மாண்டனள் அவள்;'இவள் மாண்ட வார்த்தையை + +மீண்டு அவர்க்கு உரைத்தலின் விளிதல் நன்று'; எனாப் + +பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார் கொல்லோ? + +தேண்டினர் இன்னமும் திரிகின்றார் கொல்லோ?'.       5.15.33 + + + +'கண்டனர் அரக்கரைக் கறுவு கைம் மிக + +மண்டு அமர் தொடங்கினார் வஞ்சர் மாயையால் + +விண் தலம் அதனில் மேவினர்கொல்? வேறு இலாத் + +தண்டல் இல் நெடுஞ்சிறைத் தளைப்பட்டார் கொலோ.'       5.15.34 + + + +"கூறின நாள் அவர் இருக்கை கூடலம் + +ஏறல் அஞ்சுதும்;' என'இன்ப துன்பங்கள் + +ஆறினர் அருந்தவம் அயர்கின்றார் கொல்லோ? + +வேறு அவர்க்கு உற்றது என்? விளம்புவாய்"என்றான்.       5.15.35 + +சுக்கிரீவன்பால் ததிமுகன் வருதல் + + + +என்று உரைத்து இடர் உழந்து இருக்கும் ஏல்வையில் + +வன் திறல் ததிமுகன் வானரை ஈசன் முன் + +தன் தலைப் பொழிதரு குருதி தன்னொடும் + +குன்று எனப் பணிந்தனன்; இருகை கூப்பியே.       5.15.36 + + + +ததிமுகன் மதுவனம் அழிந்தமை கூறச் சுக்கிரீவன் அழித்தவர் ஆர்? எனல் + + + +எழுந்து நின்று'ஐய! கேள் இன்று நாளையோடு + +அழிந்தது மதுவனம் அடைய'என்றலும் + +வழிந்திடு குருதியின் வதனம் நோக்கியே + +'மொழிந்திடு அங்கு யார் அது முடித்து உேளார்?'என.       5.15.37 + + + +ததிமுகன் மதுவனமழித்தாரைக் கூறித் தான் தகைந்தவாறும் தாக்குண்டவாறும் அறிவித்தல் (6130-6132) + + + +'நீலனும் குமுதனும் நெடிய குன்றமே + +போல் உயர் சாம்பனும் புணரி போர்த்து என + +மேல் எழு சேனையும் விரைவின் வந்து உறாச் + +சால்பு உடை மதுவனம் தனை அழிப்பவே.       5.15.38 + + + +'தகைந்த அச் சேனையைத் தள்ளி நின்னையும் + +இகழ்ந் துரைத்து இயைந்தனன் வாலி சேய்; மனக்கு + +உகந்தன புகன்ற அவ் உரை பொறாமையே + +புகைந்து ஒரு பாறையின் புணர்ப்பு நீக்கியே.       5.15.39 + + + +'இமைத்தல்முன் "வாலிசே���் எழில்கொள் யாக்கையைச் + +சமைத்தி" என்று எறிதரப் புறம் கையால் தகைந்து, + +அமைத் தரு கனல் என அழன்று, என் பற்றியே + +குமைத்து, உயிர் பதைப்ப "நீ கூறு போய்"என்றான்.'       5.15.40 + + + +ததிமுகன் சொல்லிய செய்தி உவகைதருவதென்று சுக்கிரீவன் இராமபிரானிடம் சொல்லுதல் (6133-6134) + + + +ஏம்பலோடு எழுந்து நின்று இரவி கான்முளை + +பாம்பு அணை அமலனை வணங்கி'பைந் தொடி + +மேம்படு கற்பினள் என்னும் மெய்ம்மையைத் + +தாம் புகன்றிட்டது இச்சலம்'; என்று ஓதினான்.       5.15.41 + + + +'பண் தரு கிளவியாள் தன்னைப் பாங்கு உறக் + +கண்டனர்; அன்னது ஓர் களிப்பினால் அவர் + +வண்டு உறை மதுவனம் அழித்து மாந்தியது + +அண்ட நாயக! இனி அவலம் தீர்க'என.       5.15.42 + + + +இராமபிரான் வந்தவர் யாது சொல்வரோ என்று வருந்தியிருத்தல் + + + +'வந்தனர் தென் திசை வாவினார்'எனப் + +புந்தி நொந்து "என்னை கொல் புகலல் பாலர்?"என்று + +எந்தையும் இருந்தனன்; இரவி கான்முளை + +நொந்த அத் ததிமுகன் தன்னை நோக்கியே.       5.15.43 + + + +மதுவனத்தில் தங்கியவர் யார்யார்? என்ற சுக்கிரீவனுக்குத் ததிமுகன் கூறுதல் + + + +'யார் அவண் இறுத்தவர்? இயம்புவாய்'என + +'மாருதி வாலி சேய் மயிந்தன் சாம்பவன் + +சோர்வு அறு பதினெழுவோர்கள் துன்னினார்; + +ஆர்கலி நாண வந்து ஆர்க்கும் சேனையார்.       5.15.44 + + + +சுக்கிரீவன் ததிமுகனுக்கு உறுதி கூறுதல் (6137-6139) + + + +என்று அவன் உரைத்தபோது இரவி காதலன் + +வன் திறல் ததிமுகன் வதனம் நோக்கியே + +'ஒன்று உனக்கு உணர்த்துவது உளது வாலி சேய் + +புன் தொழில் செய்கை சேர் புணர்ப்பன் அல்லனால்.       5.15.45 + + + +'கொற்றவன் பணி தலைக் கொண்டு தணெ் திரை + +சுற்றிய திசை எலாம் துருவித் தோகையைப் + +பற்றிய பகைஞரைக் கடிந்து பாங்கர் வந்து + +உற்றனர்; அவரை யாம் உரைப்பது என்னையோ?.'       5.15.46 + + + +'அன்றியும் வாலி சேய் அரசு அது; ஆதலின் + +பின்றுதல் தீது அரோ; பிணங்கும் சிந்தையாய்! + +ஒன்றும் நீ உணரலை உறுதி வேண்டுமேல் + +சென்று அவன்தனைச் சரண் சேர்தி ஈண்டு'என.       5.15.47 + + + +ததிமுகன் மதுவனத்துக்கு மீளுதல் + + + +வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் + +உணங்கிய சிந்தையன் ஒடுங்கும் மேனியன் + +கணங்கேளாடு ஏகி அக் கானம் நண்ணினான் + +மணம் கிளர் தாரினான் மறித்தும் வந்து அரோ.       5.15.48 + + + +ததிமுகனைக்கண்ட அங்கதன் சினத்தலும் ததிமுகன் வணங்குதலும் + + + +கண்டனன் வாலி சேய் கறுவு கைம் மிக + +'விண்டவன் நம் எதிர் மீண்டுளான் எனின் + +உண்டிடுகுதும் உயிர்'என்ன உன்னினான்; + +'தொண்டு'எனத் ததிமுகன் தொழுது தோன்றினான்.       5.15.49 + +அங்கதனும் ததிமுகனும் சினந்தணிந்து அளவளாவுதல் + + + +'போழ்ந்து அன யான் செய்த குறை பொறுக்க'எனா + +வீழ்ந்தனன் அடி மிசை; வீழ வாலி சேய் + +தாழ்ந்து கை பற்றி மெய் தழீஇ கொண்டு'உம்மையான் + +சூழ்ந்ததும் பொறுக்க'எனா முதன்மை சொல்லினான்.       5.15.50 + + + +வானரர் முன்னே அனுமனை இராமனிடம் அனுப்புதல் + + + +'யாம் முதல் குறித்த நாள் இறத்தல் எண்ணியே + +ஏம் உற துயர் துடைத்து அளித்த ஏற்றம் போல் + +தாமரைக் கண்ணவன் துயரம் தள்ள நீர் + +போம்'எனத் தொழுது முன் அனுமன் போயினான்.       5.15.51 + + + +ஏனை வானரர் சுக்கிரீவனிடம் சேர்தல் + + + +'வன் திறல் குரிசிலும் முனிவு மாறினான் + +வென்றி கொள் கதிரும் தன் வெம்மை ஆறினான் + +என்று கொண்டு யாவரும்'எழுந்து போதலே + +நன்று'என ஏகினார்; நவைக்கண் நீங்கினார்.       5.15.52 + + + +இராமபிரான் சுக்கிரீவனை வினவுதல் + + + +இப் புறத்து இராமனும் இரவி சேயினை + +ஒப்பு உற நோக்கி'வந்து உற்ற தானையர் + +தப்பு அறக் கண்டனம் என்பரோ? தகாது + +அப்புறத்து என்பரோ? அறைதியால்' என்றான்.       5.15.53 + + + +அனுமன்வர இராமபிரான் அவனை நோக்குதல் + + + +என்புழி அனுமனும் இரவி என்பவன் + +தென் புலத்து உளன் எனத் தெரிவது ஆயினான்; + +பொன் பொழி தடக்கை அப் பொரு இல் வீரனும் + +அன்பு உறு சிந்தையன்; அமைய நோக்கினான்.       5.15.54 + + + +அனுமன் பிராட்டியின் தூயநிலையைக் குறிப்பால் உணர்த்துதல் + + + +எய்தினன் அனுமனும்; எய்தி ஏந்தல் தன் + +மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய + +தையலை நோக்கிய தலையன் கையினன் + +வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்.       5.15.55 + + + +அனுமன் செயலால் பிராட்டியின் தூயநிலை முதலியவற்றை இராமபிரான் அறிதல் + + + +திண் திறலவன் செயல் தெரிய நோக்கினான்; + +வண்டு இயல் ஓதியும் வலியள்; மற்று இவன் + +கண்டதும் உண்டு; அவள் கற்பும் நன்று; எனக் + +கொண்டனன் குறிப்பினால் உணரும் கொள்கையான்.       5.15.56 + + + +அனுமன் செயலால் இராமபிரான் உற்ற உவகை நிலை + + + +ஆங்கு அவன் செய்கையை அளவை ஆம் எனா + +ஓங்கிய உணர்வினால் விளைந்தது உன்னினான்; + +வீங்கின தோள்; புனல் மலர்க்கண் விம்மின; + +நீங்கினது அருந்துயர்; காதல் நீண்டதே.       5.15.57 + + + +அனுமன் தான் பிராட்டியைக் கண்டமை இராமபிரானிடம் கூறுதல் + + + +'கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் + +தெள் திரை அல�� கடல் இலங்கைத் தென் நகர் + +அண்ட நாயக! இனித் தவிர்தி ஐயமும் + +பண்டு உள துயரும்'என்று அனுமன் பன்னுவான்.       5.15.58 + + + +அனுமன் பிராட்டி பெருந்தகவினைத் தான் கண்டவாறு விரித்துரைத்தல் (6151-6171) + + + +"உன் பெருந்தேவி என்னும் உரிமைக்கும், உன்னைப் பெற்ற + +மன் பெரு மருகி என்னும் வாய்மைக்கும், மிதிலை மன்னன் + +தன் பெருந் தனயை என்னும் தகைமைக்கும், தலைமை சான்றாள்; + +என் பெரும் தெய்வம்; ஐயா! இன்னமும் கேட்டி? என்பான்.       5.15.59 + + + +பொன் அலது இல்லை பொன்னை ஒப்பு, எனப் பொறையில் நின்றாள் + +தன்னலது இல்லை, தன்னை ஒப்பு, எனத் தனக்கு வந்த + +நின்னலது இல்லை நின்னை ஒப்பு, என நினக்கு நேர்ந்தாள்; + +என்னலது இல்லை என்னை ஒப்பு என எனக்கும் ஈந்தாள்.       5.15.60 + + + +உன் குலம் உன்னது ஆக்கி, உயர் புகழ்க்கு ஒருத்தி ஆய + +தன் குலம் தன்னது ஆக்கி, தன்னை இத் தனிமை செய்தான் + +வன் குலம் கூற்றுக்கு ஈந்து, வானவர் குலத்தை வாழ்வித்து, + +என் குலம் எனக்குத் தந்தாள்; என் இனிச் செய்வது எம்மோய்!       5.15.61 + + + +வில் பெரும் தடம் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில், + +நல் பெரும் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்; + +இல் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும், + +கற்பு எனும் பெயரது ஒன்றும் களி நடம் புரியக் கண்டேன்.       5.15.62 + + + +கண்ணினும் உளை நீ; தையல் கருத்தினும் உளை நீ; வாயின் + +எண்ணினும் உளை நீ; கொங்கை இணைக்குவை தன்னின் ஓவாது + +அண்ணல் வெம் காமன் எய்த அலர் அம்பு தொளைத்த ஆறாப் + +புண்ணிலும் உளை நீ; நின்னைப் பிரிந்தமை பொருந்திற்று ஆமோ!       5.15.63 + + + +வேலையுள் இலங்கை என்னும் விரி நகர் ஒரு சார், விண் தோய் + +காலையும் மாலை தானும் இல்லது, ஓர் கனகக் கற்பச் + +சோலை அங்கு அதனில், உம்பி புல்லினால் தொடுத்த தூய + +சாலையின் இருந்தாள்; ஐய! தவம் செய்த தவம் ஆம் தையல்.       5.15.64 + + + +மண்ணொடும் கொண்டுபோனான், வான் உயர் கற்பினாள் தன் + +புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான்; உலகம் பூத்த + +கண் அகன் கமலத்து அண்ணல், 'கருத்து இலாள் தொடுதல் கண்ணின், + +எண் அரும் கூறு ஆய் மாய்தி' என்றது ஓர் மொழி உண்டு என்பார்.       5.15.65 + + + +தீண்டிலன் என்னும் வாய்மை, திசைமுகன் செய்த முட்டை + +கீண்டு இலது, அனந்தன் உச்சி கிழிந்து இலது, எழுந்து வேலை + +மீண்டில, சுடர்கள் யாவும் விழுந்தில, வேதம் செய்கை + +மாண்டிலது, என்னும் தன்மை வாய்மையான் உணர்தி, மன��னோ!       5.15.66 + + + +சோகத்தாள் ஆய நங்கை கற்பினால், தொழுதற்கு ஒத்த + +மாகத்தார் தேவிமாரும், வான் சிறப்பு உற்றார்; மற்றைப் + +பாகத்தாள் இப்போது ஈசன் மகுடத்தாள்; பதுமத் தாளும் + +ஆகத்தாள் அல்லள், மாயன் ஆயிரம் மௌலி மேலாள்.       5.15.67 + + + +இலங்கையை முழுதும் நாடி, இராவணன் இருக்கை எய்திப் + +பொலம் குழையவரை எல்லாம் பொது உற நோக்கிப் போந்தேன், + +அலங்கு தண் சோலை புக்கேன்; அவ் வழி அணங்கு அன்னாளைக் + +கலங்கு வெண் திரையிற்று ஆய கண்ணின் நீர்க் கடலில் கண்டேன்.       5.15.68 + + + +அரக்கியர் அளவு அற்றார்கள், அலகையின் குழுவும் அஞ்ச + +நெருக்கினர் காப்ப, நின்பால் நேயமே அச்சம் நீக்க, + +இரக்கம் என்று ஒன்று தானே ஏந்து இழை வடிவம் எய்தித் + +தருக்கு உயர் சிறை உற்று அன்ன தகையள்; அத் தமியள் அம்மா!       5.15.69 + + + +மாண்பு இறந்து அமைந்த கற்பின் வாள் நுதல், நின்பால் வைத்த + +சேண் பிறந்து அமைந்த காதல் கண்களில் தவெிட்டி, தீராக் + +காண் பிறந்தமையால், நீயே கண் அகன் ஞாலம் தன்னுள் + +ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனை யாதி; அன்றே.       5.15.70 + + + +அயிர்ப்பு இலர் காண்பார், முன்னும் அறிந்திலர் எனினும், ஐய! + +எயில் புனை இலங்கை மூதூர் இந்திரன் யாக்கைக்கு ஏற்ற + +மயில் புரை இயலினாரும், மைந்தரும், நாளும் ஆங்கே + +உயிர்ப்பொடும் உயிரினோடும் ஊசல் நின்று ஆடுவாரும்.       5.15.71 + + + +தையலை வணங்கற்கு ஒத்த இடைபெறும் தன்மை நோக்கி, + +ஐய! நான் இருந்த காலை, அலங்கல் வேல் இலங்கை வேந்தன், + +எய்தினன், இரந்து கூறி, இறைஞ்சினன்; இருந்து நங்கை + +வெய்து உரை சொல்லச் சீறிக் கோறல் மேல்கொண்டு விட்டான்.       5.15.72 + + + +ஆயிடை, அணங்கின் கற்பும், ஐய! நின் அருளும், செய்ய + +தூய நல் அறனும், என்று இங்கு இனையன, தொடர்ந்து காப்பப் + +போயினன், அரக்கிமாரைச் சொல்லுமின் பொதுவின் என்றாங்கு + +ஏயினன், அவர் எலாம் என் மந்திரத்து உறங்கி இற்றார்.       5.15.73 + + + +அன்னது ஓர் பொழுதில், நங்கை, ஆருயிர் துறப்பதாக + +உன்னினள், கொடி ஒன்று ஏந்திக் கொம்பொடும் உறைப்பச் சுற்றி, + +தன்மணிக் கழுத்தில் சார்த்தும் அளவையில், தடுத்து நாயேன், + +பொன் அடி வணங்கி நின்று, நின்பெயர் புகன்ற போழ்தில்.       5.15.74 + + + +"வஞ்சனை அரக்கர் செய்கை இது"என, மனம் கொண்டேயும், + +'அஞ்சன வண்ணத்தான் தன் பெயர் உரைத்து, அளியை என்பால், + +துஞ்சு உறு பொழுதில் தந்தாய், துறக்கல்'��ன்று உவந்து சொன்னாள் + +மஞ்சு என, வண்ணக் கொங்கை வழிகின்ற மழைக் கண் நீராள்.       5.15.75 + + + +ஆழிபெற்ற பிராட்டிநிலை (6168-6171) + + + +அறிவு உறத் தெரியச் சொன்ன பேர் அடையாளம் யாவும் + +செறிவு உற நோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை + +முறிவு அற எண்ணி, வண்ண மோதிரம் காட்டக் கண்டாள்; + +இறுதியில் உயிர் தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது; எந்தாய்!       5.15.76 + + + +ஒரு கணத்து இரண்டு கண்டேன்; ஒளி மணி ஆழி, ஆன்ற + +திரு முலைத் தடத்து வைத்தாள்; வைத்தலும், செல்வ! நின்பால் + +விரகம் என்பதனின் வந்த வெம் கொழும் தீயினால், வெந்து + +உருகியது; உடனே ஆறி வலித்தது; குளிர்ப்பு உள் ஊற.       5.15.77 + + + +வாங்கிய ஆழி தன்னை, 'வஞ்சர் ஊர் வந்ததாம்'என்று, + +ஆங்கு உயர் மழைக் கண் நீரால், ஆயிரம் கலசம் ஆட்டி, + +ஏங்கினள், இருந்தது அல்லால், இயம்பலள்; எய்த்த மேனி + +வீங்கினள்; வியந்தது அல்லால், இமைத்திலள்; உயிர்ப்பு விண்டாள்.       5.15.78 + + + +அன்னவர்க்கு, அடியனேன், நிற் பிரிந்தபின் அடுத்த எல்லாம், + +சொல்முறை அறியச் சொல்லி, 'தோகை! நீ இருந்த சூழல் + +இன்னது என்று அறிகிலாமே, இத்தனை தாழ்த்தது'என்றேன்; + +மன்ன, நின் வருத்தப் பாடும் உணர்த்தினேன்; உயிர்ப்பு வந்தாள்.       5.15.79 + +அனுமன் இராமபிரான்பக்கல் பிராட்டியின் சூளுறவினைக் கூறுதல் + + + +இங்கு உள தன்மை எல்லாம் இயைபு உளி இயையக் கேட்டாள்; + +அங்கு உள தன்மை எல்லாம் அடியனுக்கு அறியச் சொன்னாள்; + +'திங்கள் ஒன்று இருப்பென், இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை; + +மங்குவென் உயிரொடு'என்று, உன் மலர் அடி சென்னி வைத்தாள்.       5.15.80 + +அனுமன் இராமபிரானிடம் சூடாமணி வழங்குதல் + + + +வைத்தபின், துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி, + +கைத் தலத்து இனிதின் ஈந்தாள்; 'தாமரைக் கண்கள் ஆர + +வித்தக! காண்டி'என்று, கொடுத்தனன்; வேத நல் நூல், + +உய்த்து உள காலம் எல்லாம், புகழொடும் ஒக்க நிற்பான்.       5.15.81 + + + +சூடாமணியைப் பெற்ற இராமனது நிலை (6174-6175) + + + +பை பயப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி, + +மெய் உற வெதும்பி, உள்ளம் மெலிவு உறு நிலையை விட்டான்; + +ஐயனுக்கு, அங்கி முன்னர் அம் கையால் பற்றும் நங்கை + +கை எனல் ஆயிற்று அன்றே; கை புக்க மணியின் காட்சி.       5.15.82 + + + +பொடித்தன உரோமம், போந்து பொழிந்தன கண்ணீர், பொங்கித் + +துடித்தன மார்பும் தோளும், தோன்றின வியர்வின் துள்ளி, + +மடித்தது மணிவாய், ஆவி, வருவது போவது ஆகித் + +தடித்தது மேனி, என்னே யார் உளர், தன்மை தேர்வார்.       5.15.83 + + + +அங்கதன் முதலியோர் வந்து சேர்தல் + + + +ஆயிடைக் கவிகேளாடும் அங்கதன் முதலின் ஆயோர் + +மேயினர், வணங்கிப் புக்கார், வீரனைக், கவியின் வேந்தை; + +போயின கருமம் முற்றிப் புகுந்தது ஓர் பொம்மல் தன்னால், + +சேய் இரு மதியம் என்னத் திகழ்தரு முகத்தர் ஆனார்.       5.15.84 + + + +மேற் செய்யத்தகுவன குறித்து இராமபிரான் விரைவு கொள்ளுதல் + + + +ஆண்டையின் அருக்கன் மைந்தன், ஐய! கேள், அரிவை நம்பால் + +காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும், காலம் தாழ + +ஈண்டு இனும் இருத்தி போலாம் என்றனன்; என்றலோடும் + +தூண் திரண்டு அனைய தோளான், பொருக்கென எழுந்து சொன்னான்.       5.15.85 + +சுக்கிரீவன் கட்டளைப்படி வானர சேனை புறப்படுதல் + + + +எழுக எம் படைகள் என்றான்; ஏ எனும் அளவின், எங்கும் + +முழு முரசு எற்றி, கொற்ற வள்ளுவன் முடுக்க, முந்திப் + +பொழி திரை அன்ன வேலை புடை பரந்து என்னப் பொங்கி + +வழுவல் இல் வெள்ளத் தானை தென் திசை வளர்ந்தது அன்றே.       5.15.86 + + + +வழி வகுத்துச் செல்லுமாறு இராமன் நீலனைப் பணித்தல் + + + +நீலனை நெடிது நோக்கி நேமியோன் பணிப்பான், நம் தம் + +பால் வரும் சேனை தன்னைப் பகைஞர் வந்து அடரா வண்ணம், + +சால்பு உற முன்னர்ச் சென்று சரி நெறி துருவிப் போதி; + +மால் தரு களிறு போலும் படைஞர் பின் மருங்கு சூழ.       5.15.87 + + + +அனுமன் தோள்மேல் இராமபிரான் ஏறியமர்தல் + + + +என்று உரைத்து எழுந்த வேலை, மாருதி இருகை கூப்பிப் + +'புன் தொழில் குரங்கு எனாது என் தோளிடைப் புகுதி'என்னாத் + +தன் தலை படியில் தாழ்ந்தான்; அண்ணலும் சரணம் வைத்தான்; + +வன் திறல் வாலி சேயும் இளவலை வணங்கிச் சொன்னான்.       5.15.88 + + + +அங்கதன் தோளில் இலக்குவன் ஏறச் சேனை புறப்படுதல் + + + +'நீ இனி என்றன் தோள் மேல் ஏறுதி நிமல'என்ன + +வாய் புதைத்து இறைஞ்சி நின்ற வாலி காதலனை நோக்கி, + +நாயகற்கு இளைய கோவும் நன்று'என அவன் தன் தோள்மேல் + +பாய்தலும், தகைப்பு இல் தானை, படர்நெறி படர்ந்தது அன்றே.       5.15.89 + + + +வானோர் மலர்மழை பொழிதல் + + + +6182. கருடனில் விடையில் தோன்றும் இருவரும் கடுப்பக் காலின் + +அருள்தரு குமரன் தோள் மேல், அங்கதன் அலங்கல் தோள் மேல், + +பொருள் தரும் வீரர் போக, பொங்கு ஒளி விசும்பில் தங்கும் + +தெருள் தரும் புலவர், வாழ்த்திச் ���ிந்தினர் தெய்வப் பொன் பூ.       5.15.90 + +மலைவழியே வானரசேனை செல்லுதல் + + + +வையகம் அதனில் மாக்கள் மயங்குவர்; வய வெம் சேனை + +எய்திடின், என்பது உன்னி, இராகவன் இனிதின் ஏவ, + +பெய் கனி கிழங்கு தேன் என்று இனையன பெறுதற்கு ஒத்த + +செய்ய மால் வரையே ஆறாச் சென்றன; தகைப்பு இல் சேனை.       5.15.91 + + + +அனுமன் இலங்கையில் கண்ட சிறப்புக்களைச் சொல்லக் கேட்டு வானரசேனை எளிதல் வழிகடத்தல் + + + +வீரரும் விரைவில் போனார்; விலங்கல் மேல் இலங்கை வெய்யோர் + +சோர்வு இலாக் காவற்பாடும், பெருமையும், அரணும், கொற்றக் + +கார் நிறத்து அரக்கர் என்போர் முதலிய கணிப்பு இலாத + +வார் கழல் அனுமன் சொல்ல, வழி நெடிது எளிதில் போனார்.       5.15.92 + + + +அனைவரும் தென்றிசைக் கடலைக் காணுதல் + + + +அந் நெறி நெடிது செல்ல, அரிக் குலத்து அரசனோடும் + +நல் நெறிக் குமரர் போக, நயந்து உடன் புணர்ந்த சேனை, + +இன்னெடும் பழுவக் குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர்ப் + +பன்னிரு பகலில் சென்று தென் திசைப் பரவை கண்டார்.       5.15.93 + + + + ----------------- + + + + + + + +This file was last updated on 30 June 2016. + +Feel free to send corrections to the Webmaster. + + + + +