diff --git "a/pmuni0545_01.txt" "b/pmuni0545_01.txt" new file mode 100644--- /dev/null +++ "b/pmuni0545_01.txt" @@ -0,0 +1,9324 @@ + + + + + + + + + + + + + + + + +rAmayaNam of kampar -canto 6 (yutta kantam), part 1 (in tamil script, unicode format) + + + + + + + + + + + + + + + + +கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய + +இராமாயணம் - யுத்த காண்டம் + + முதல் பகுதி /படலங்கள் 1- 9 + + +rAmAyaNam of kampar + + canto 6 (yutta kAnTam), part 1 + + (paTalams 1-9, verses 6186-6986) + +In tamil script, unicode/utf-8 format + + + + + + + + +Acknowledgements: + +Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for + +providing us with a romanized transliterated version of this work and for permissions + +to publish the equivalent Tamil script version in Unicode encoding + +We also thank Mr. S. Govindarajan for proof-reading the Tamil script version + +Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. + + + +© Project Madurai, 1998-2016. + +Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation + +of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. + +Details of Project Madurai are available at the website: + + +http://www.projectmadurai.org/ +You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. + + + + + + + +கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய + +இராமாயணம் - யுத்த காண்டம் (பகுதி 1) /படலங்கள் 1-9 + + + + +6.0 கடவுள் வாழ்த்து (6186) + + +6.1 கடல் காண் படலம் (6187 - 6197) + + +6.2 இராவணன் மந்திரப் படலம் (6198 - 6315) + + +6.3 இரணியன் வதைப் படலம் (6316 - 6491) + + +6.4 வீடணன் அடைக்கலப் படலம் (6492 - 6643) + + +6.5 இலங்கை வேள்விப் படலம் (6644 - 6717) + + +6.6 வருணனை வழி வேண்டு படலம் (6718 - 6802) + + +6.7 சேது பந்தனப் படலம் 6803-6873) + + +6.8 ஒற்றுக் கேள்விப் படலம் (6874-6938) + + +6.9 இலங்கை காண் படலம் (6939-6986) + + + + + + + + +கடவுள் வாழ்த்து (6186) + + + +6186. ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம், பல என்று உரைக்கின் பல ஏ ஆம், + +அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆம் ஏ ஆம், + +இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கில் உளதேயாம், + +நன்றே நம்பி குடிவாழ்க்கை! நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா! + +------------ + + + +6.1 கடல் காண் படலம் (6187- 6197) + + + +வானரம் படை தென்கடற்கரையிற் சென்று தங்குதல் + + + +6187. ஊழி திரியும் காலத்தும் உலையாநிலைய உயர்கிரியும் + +வாழி வற்றா மறிகடலும் மண்ணும் வடபால் வான் தோய + +பாழித் தறெ்கு உள்ளன கிரியும் நிலனும் தாழப் பரந்து எழுந்த + +ஏழு பத்தின் பெருவெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால்.         6.1.1 + + + +இராமன் கடலைக் காணுதல் + + + +6188. பொங்கிப் பரந்த பெருஞ்சேனை புறத்தும் அகத்தும் புடைசுற்றச் + +சங்கின் பொலிந்த கையாளைப் பிரிந்த பின்பு தமக்கு இனமாம் + +கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வு உற்று, இதழ் குவிக்கும் + +கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண்ணுற்றான்.         6.1.2 + + + +அலைப்பரப்பின் தோற்றம் + + + +6189. சேய காலம் பிரிந்து அகலத் திரிந்தான், மீண்டும் சேக்கையின் பால் + +மாயன் வந்தான், இனி வளர்வான் என்று கருதி, வரும் தென்றல், + +தூய மலர்போல் நுரைத் தொகையும் முத்தும் சிந்திப் புடை சுருட்டிப் + +பாயல் உதறிப் படுப்பதே ஒத்த திரையின் பரப்பு; அம்மா!         6.1.3 + + + +தென்றலால் இராமன் வருந்தல் (6190-6191) + + + +6190. வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த + +பழிக்கும், காமன் பூங்கணைக்கும் பற்றாநின்றான் பொன் தோளைச் + +சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில் துள்ளும் பொறியின் சுடும் அன்னே! + +கொழிக்கும் கடலின் நெடும் திரைவாய்த் தென்றல் தூற்றும் குறுந்து திவலை.         6.1.4 + + + +6191. நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய், நிலைதளர்வான் + +தன்னைக் கண்டும் இரங்காது தனியே கதறும் தடம் கடல்வாய்ப் + +பின்னல் திரைமேல் தவழ்கின்ற பிள்ளைத் தென்றல், கள் உயிர்க்கும் + +புன்னைக் குறும் பூ நறுஞ்சுண்ணம் பூசாது ஒருகால் போகாதே.         6.1.5 + + + +பவளம் தோன்றுதல் + + + +6192. சிலை மேல் கொண்ட திரு நெடும் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப + +நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன் தன்முன் படி ஏழும் + +தலை மேல் கொண்ட கற்பினாள், மணிவாய் என்னத் தனிதோன்றிக் + +கொலைமேற் கொண்டு, ஆர் உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ கொடிப் பவளம்.         6.1.6 + + + +முத்து வெளிப்படல் + + + +6193. தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல, + +வீரம் வில்லி, நெடுமானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு, + +'ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு'ஏழை + +மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ?         6.1.7 + + + +கடலின் தோற்றம் (6194-6196) + + + +6194. இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன் + +தந்த பாவை தவப்பாவை தனிமை தகவோ? எனத் தளர்ந்து + +சிந்துகின்ற நறும் தரளக் கண்ணீர் ததும்பத் திரைத்து எழுந்து + +வந்து வள்ளல் மலர்த் தாளில் வீழ்வது ஏய்க்கும், மறி கடலே.         6.1.8 + + + +6195. பள்ளி அரவில் பேர் உலகம் பசுங்கல் ஆகப் பனிக் கற்றை + +துள்ளி நறு மென் புனல்தெளிப்பத் தூ நீர்க் குழவி முறை சுழற்றி, + +வெள்ளி வண்ண நுரைக் கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு + +அள்ளி அப்பத் திரைக் கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி.         6.1.9 + + + +6196. கொங்கைக் குயிலைத் துயர் நீக்கி, இமையோர்க்கு உற்ற குறை முற்ற, + +வெம் கைசிலையன் தூணியினன் விடாத முனிவின் மேல் செல்லும் + +கங்கைத் திருநாடு உடையானைக் கண்டு நெஞ்சம் களி கூர + +அம் கைத் திரைகள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தத��� அணி ஆழி.         6.1.10 + + + +இராமன் மேல்விளைவு எண்ணிக் கடற்கரையில் தங்குதல் + + + +6197. இன்னது ஆய கருங்கடலை எய்தி அதனுக்கு எழுமடங்கு + +தன்னது ஆய நெடுமானம் துயரம் காதல் இவை தழைப்ப + +என்னது ஆகும் மேல்விளைவு? என்று இருந்தான் இராமன்; இகல் இலங்கைப் + +பின்னது ஆய காரியமும் நிகழ்ந்த பொருளும் பேசுவாம்.         6.1.11 + +---------------- + + + +6.2 இராவணன் மந்திரப் படலம் (6198 - 6315) + + + +அனுமனால் எரியுண்ட இலங்கை மயனால் புதுப்பிக்கப்படுதல் + + + +6198.பூவரும் அயனொடு புகுந்து'பொன்னகர் + +மூவகை உலகினும் அழகு முற்றுற + +ஏவு'என இயற்றினன் கணத்தின் என்பரால் + +தேவரும் மருள்கொளத் தயெ்வத் தச்சனே.         6.2.1 + + + +இலங்கையின் அமைதி நோக்கிய இராவணன் சினம் நீங்குதல் + + + +6199.பொன்னினும் மணியினும் அமைந்த பொற்பு உடை + +நல் நகர் நோக்கினான் நாக நோக்கினான் + +'முன்னையின் அழகு உடைத்து'என்று மொய்கழல் + +மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான்.         6.2.2 + + + +இலங்கையின் எழில் மிகுதிக்குக் காரணம் + + + +6200. முழுப் பெருந்தனி முதல் உலகின் முந்தையோன் + +எழில் குறிகாட்டி நின்று இயற்றி ஈந்தனன் + +பழிப்பரும் உலகங்கள் எவையும் பல முறை + +அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிது உண்டாகுமோ.         6.2.3 + + + +இராவணன் பிரமனைப் பூசித்தனுப்புதல் + + + +6201. திருநகர் யாவையும் திருந்த நோக்கிய + +பொரு கழல் இராவணன் அயற்குப் பூசனை + +வரன்முறை இயற்றி'நீ வழிக் கொள்வாய்'என்றான்; + +அரியன தச்சற்கும் உதவி ஆணையான்.         6.2.4 + + + +இராவணன் ஆலோசனை மண்டபத்தில் சிங்காதனத்தில் வீற்றிருத்தல் + + + +6202. அவ்வழி ஆயிரம் ஆயிரம் அவிர் + +செவ்வழிச் செம்மணித் தூண்கள் சேர்த்திய + +எவ்வம் இல் மண்டபத்து அரிகள் எந்திய + +வெவ்வழி ஆசனத்து இனிது மேவினான்.         6.2.5 + + + +இராவணன் அமைச்சர் முதலியோர் சூழ விளங்குதல் + + + +6203. வரம்பு அறு சுற்றமும் மந்திரத் தொழில் + +நிரம்பிய முதியரும் சேனை நீள் கடல் + +தரம்பெறு தலைவரும் தழுவத் தோன்றினான் + +அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான்.         6.2.6 + + + +இராவணன் ஆலோசனை மண்டபத்திலிருந்து முனிவர் முதலியோரைப் போக்குதல் + + + +6204. 'முனைவரும் தேவரும் மற்றும் உற்றுேளார் + +எனைவரும் தவிர்க'என ஏய ஆணையான் + +புனைகுழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான்; + +நினைவு உறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான்.         6.2.7 + + + +இராவணன் அமைச்சரோடு தங்குதல் + + + +6205. 'பண்டிதர் பழையவர் கிழவர் பண��பினர் + +தண்டலில் மந்திரத் தலைவர் சார்க எனக் + +கொண்டு உடன் இருந்தனன்; கொற்ற ஆணையான் + +வண்டொடு காலையும் வரவு மாற்றினான்.         6.2.8 + + + +சுற்றத்தாருள் மக்களும் தம்பியரும் அல்லாதாரை மண்டபத்தினின்று போக்குதல் + + + +6206. ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண் தொழிற்கு + +ஏன்றவர் நண்பினர் எனினும் யாரையும் + +வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர் + +போன்றவர் அல்லரைப் புறத்துப் போக்கினான்.         6.2.9 + + + +மந்திரம் நிகழும் மண்டபத்தின் காவல் மிகுதி + + + +6207. திசை தொறும் நிறுவினன் உலகு சேரினும் + +பிசைதொழில் மறவரை; பிறிது என் பேசுவ? + +விசை உறு பறவையும் விலங்கும் வேற்றவும் + +அசை தொழில் அஞ்சின; சித்திரத்தினே.         6.2.10 + + + +இராவணன் மந்திரக்கிழவரை நோக்கி வருந்தியுரைத்தல் (6208-6211) + + + +6208. 'தாழ்ச்சி இங்கு இதனின்மேல் தருவது என்? இனி + +மாட்சி ஓர் குரங்கினால் அழிதல் மாலைத்தே? + +ஆட்சியும் அமைவும் என் அரசும் நன்று'எனாச் + +சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்.         6.2.11 + + + +6209. சுட்டது குரங்கு; எரி சூறை ஆடிடக் + +கெட்டது கொடிநகர்; கிளையும் நண்பரும் + +பட்டனர்; பரிபவம் பரந்தது எங்கணும்; + +இட்டது இவ் அரியணை இருந்தது என் உடல்.         6.2.12 + + + +6210. ஊறுகின்றன கிணறு உதிரம்; ஒள் நகர் + +ஆறுகின்றில தழல்; அகிலும் நாவியும் + +கூறும் மங்கையர் நறுங் கூந்தலின் சுறு + +நாறுகின்றது; நுகர்ந்து இருந்தம் நாம் எலாம்.         6.2.13 + + + +6211. மற்று இலது ஆயினும்'மலைந்த வானரம் + +இற்று இலது ஆகியது'என்னும் வார்த்தையும் + +பெற்றிலம்; பிறந்திலம் என்னும் பேறு அலால் + +முற்றுவது என் இனிப் பழியின் மூழ்கினோம்.         6.2.14 + + + +படைத்தலைவன் கூறுதல் (6212-6218) + + + +6212. என்று அவன் இயம்பலும் எழுந்து இறைஞ்சினான்; + +கன்றிய கருங்கழல் சேனை காவலன் + +'ஒன்று உளது உணர்த்துவது ஒருங்கு கேள்'எனா + +நின்றனன் நிகழ்த்தினன் புணர்ப்பு இல் நெஞ்சினான்.         6.2.15 + + + +6213. வஞ்சனை மனிதரை இயற்றி வாள் நுதல் + +பஞ்சின் நல் மெல் அடி மயிலைப் பற்றுதல் + +அஞ்சினர் தொழில் என அறிவித்தேன் அது + +தஞ்சு என உணர்ந்திலை; உணரும் தன்மையோய்.         6.2.16 + + + +6214. கரன்முதல் வீரரைக் கொன்ற கள்வரை + +விரிகுழல் உங்கை மூக்கு அரிந்த வீரரைப் + +பரிபவம் செய்ஞ்ஞரைப் படுக்கலாது நீ அரசியல் அழிந்தது என்று அயர்திபோலுமால்.         6.2.17 + + + +6215. தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரைக் + +கண்டவர் பொ���ுப்பரோ? உலகம் காவலர் + +வண்டு அமர் அலங்கலாய்! வணங்கி வாழ்வரோ? + +விண்டவர் உறுவலி அடக்கும் வெம்மையோர்.         6.2.18 + + + +6216. செற்றனர் எதிர் எழும் தேவர் தானவர் + +கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற + +முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது + +வெற்றியோ? பொறைகொலோ? விளம்ப வேண்டுமால்.         6.2.19 + + + +6217. விலங்கினர் உயிர்கெட விலங்கி மீள்கிலாது + +இலங்கையின் இனிது இருந்து இன்பம் துய்த்துமேல் + +குலம் கெழு காவல! குரங்கில் தங்குமோ? + +உலங்கும் நம்மேல் வரவு ஒழிக்கல் பாலதோ?         6.2.20 + + + +6218. போயின குரங்கினைத் தொடர்ந்துபோய் அவண் + +ஏயினர் உயிர்குடித்து எவ்வம் தீர்கிலம்; + +வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல் + +ஓயும் நம் வலி என உணரக் கூறினான்.         6.2.21 + + + +மகோதரன் கூறுதல் (6219-6224) + + + +6219. மற்று அவன் பின் உற மகோதரப் பெயர்க் + +கல்தடம் தோளினன் எரியும் கண்ணினான் + +முற்று உற நோக்கினன் முடிவும் அன்னதால் + +கொற்றவ கேள் என இனைய கூறினான்.         6.2.22 + + + +6220. தேவரும் அடங்கினர் இயக்கர் சிந்தினர் + +தாஅரும் தானவர் தருக்குத் தாழ்ந்தனர் + +யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் மேன்மையர் + +மூவரும் ஒதுங்கினர் உனக்கு மொய்ம்பினோய்.         6.2.23 + + + +6221. ஏற்றம் என் பிறிது இனி? எவர்க்கும் இன்னுயிர் + +மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை + +கூற்றுவான் தன் உயிர் கொள்ளும் கூற்று எனத் + +தோற்று நின் ஏவல் தன் தலையில் சூடுமால்.         6.2.24 + + + +6222. வெள்ளி அம் கிரியினை விடையின் பாகனோடு + +அள்ளி விண் தொட எடுத்து ஆர்த்த ஆற்றலாய்! + +சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள்வலிக்கு + +எள்ளுதி போலும் நின் புயத்தை எம்மொடும்.         6.2.25 + + + +6223. மண்ணினும் வானினும் மற்றும் முற்றும் நின் + +கண்ணினின் நீங்கினர் யாவர்? கண்டவர் + +நண்ணரும் வலத்தினர் யாவர்? நாயக! + +எண் இலர் இறந்தவர் எண்ணல் ஆவதோ?         6.2.26 + + + +6224. இடுக்கு இவண் இயம்புவது இல்லை; ஈண்டு எனை + +விடுக்குவை ஆம் எனில் குரங்கை வேர் அறுத்து + +ஒடுக்கரு மனிதரை உயிர் உண்டு உன் பகை + +முடிக்குவென் யான்'என முடியக் கூறினான்.         6.2.27 + + + +வச்சிரதந்தன் கூறுதல் (6225-6227) + + + +6225. இச் சிரத்தவன் உரைத்து இறுக்கும் எல்வையின் + +வச்சிரத்து எயிற்றவன் வல்லை கூறினான் + +அச் சிரத்தைக்கு ஒரு பொருள் இன்று ஆயினும் + +பச்சிரத்தம் பொழி பருதிக் கண்ணினான்.         6.2.28 + + + +6226. 'போய் இனி மனிசரைக் குரங்கைப் பூமியில் + +தேயுமின் கைகளால் தின்மின்'என்று எமை + +ஏயினை இருக்குவது அன்றி என் இனி + +ஆயும் இது? எம் வயின் அயிர்ப்பு உண்டாம் கொலோ?         6.2.29 + + + +6227. எவ்உலகத்தும் நின் ஏவல் கேட்கிலாத் + +தெவ்வினை அறுத்து உனக்கு அடிமை செய்த யான் + +தவ்வின பணி உளதாகத்தான் கொலோ + +இவ்வினை என்வயின் ஈகலாது என்றான்.         6.2.30 + + + +துன்முகன் சொல்லுதல் (6228-6234) + + + +6228. 'நில் நில்'என்று அவன் தனை விலக்கி'நீ இவை + +என்முனும் எளியர்போல் இறுத்தியோ?'எனா + +மன்முகம் நோக்கினன் வணங்கி வன்மையால் + +துன்முகன் என்பவன் இனைய சொல்லினான்.         6.2.31 + + + +6229. திக்கயம் வலி இல; தேவர் மெல்லியர்; + +முக்கணான் கயிலையும் முரண் இன்றாயது; + +மக்களும் குரங்குமே வலியவாம் எனின் + +அக்கட! இராவணற்கு அமைந்த ஆற்றலே.         6.2.32 + + + +6230. பொலிவது பொது உற எண்ணும் புன்தொழில் + +மெலியவர் கடன்; நமக்கு இறுதி வேண்டுவார் + +வலியினர் எனின் அவர்க்கு ஒதுங்கி வாழ்துமோ + +ஒலிகழல் ஒருவ! நம் உயிருக்கு அன்பினால்.         6.2.33 + + + +6231. கண்ணிய மந்திரக் கருமம் காவல! + +மண்ணியல் மனிசரும் குரங்கும் மற்றும்; நாம் + +உண்ணிய அமைந்தன உணவுக்கு உட்குமேல் + +திண்ணிய அரக்கரில் தீரர் யாவரே.         6.2.34 + + + +6232. எரி உற மடுப்பதும் எதிர்ந்துேளார் படப் + +பொரு தொழில் யாவையும் புரிந்து போவதும் + +வருவதும் குரங்கு; நம் வாழ்க்கை ஊர் கடந்து + +அரிதுகொல் இராக்கதர்க்கு ஆழி நீந்துதல்?         6.2.35 + + + +6233. வந்து நம் இருக்கையும் அரணும் வன்மையும் + +வெம் தொழில் தானையின் விரிவும் வீரமும் + +சிந்தையின் உணர்பவர் யாவரே சிலர் + +உய்ந்து தம் உயிர் கொடு இவ் உலகத்துள் உளார்.         6.2.36 + + + +6234. ஒல்வது நினையினும் உறுதி ஓரினும் + +வெல்வது விரும்பினும் வினையம் வேண்டினும் + +செல்வது அங்கு; அவர் உழை சென்று தீர்ந்து அறக் + +கொல்வது கருமம் என்று உணரக் கூறினான்.         6.2.37 + + + +மகா பார்சுவன் கூறுதல் (6235-6238) + + + +6235. காவலன் கண் எதிர் அவனைக் கை கவித்து + +'யாவது உண்டு; இனி நமக்கு? என்னச் சொல்லினான் + +'கோவமும் வன்மையும் குரங்குக்கே'எனா + +மா பெரும் பக்கன் என்று ஒருவன் வன்மையான்.         6.2.38 + + + +6236. முந்தினர் முரண் இலர் சிலவர் மொய் அமர் + +நந்தினர் தம்மொடு நனி நடந்ததோ? + +வந்து ஒரு குரங்கு இடு தீயின் வன்மையால் + +வெந்ததோ? இலங்கையோடு அரக்கர் வெம்மையும்.         6.2.39 + + + +6237. மானிடர் ஏவுவார் குரங்கு வந்து இவ் ஊர் + +தான் எரிமடுப்பது நிருதர் தானையே + +ஆனவர் அது குறித்து அழுங்குவார் + +மேல் நிகழ்தக்கன விளம்ப வேண்டுமோ?         6.2.40 + + + +6238. நின்று நின்று இவை சில விளம்ப நேர்கிலன் + +'நன்று இனி நரரொடு குரங்கை நாம் அறக் + +கொன்று தின்று அல்லது ஓர் எண்ணம் கூடுமோ? + +என்றனன்; இகல் குறித்து எரியும் கண்ணினான்.         6.2.41 + + + +பிசாசன் பேசுதல் + + + +6239. 'திசாதிசை போதும் நாம்; அரசன் செய்வினை + +உசாவினன் உட்கினன்; ஒழிதும் வாழ்வு'என்றான்; + +பிசாசன் என்று ஒரு பெயர் பெற்ற பெய்கழல் + +நிசாசரன் உருப் புணர் நெருப்பின் நீர்மையான்.         6.2.42 + + + +சூரியசத்துரு சொல்லுதல் + +6240. 'ஆரியன் தன்மை ஈது ஆயின் ஆய்வு உறு + +காரியம் ஈது எனின் கண்ட ஆற்றினால் + +சீரியர் மனிதரே; சிறியம் யாம்'எனச் + +சூரியன் பகைஞன் என்று ஒருவன் சொல்லினான்.         6.2.43 + + + +வேள்வியின் பகைவன் விளம்புதல் + + + +6241. 'ஆள் வினை நிலைமையும் அரக்கர் ஆற்றலும் + +தாழ்வினை இதனின் மேல் பகரத் தக்கதோ + +சூழ்வினை மனிதரால் தோன்றிற்று ஆம்'என + +வேள்வியின் பகைஞனும் உரைத்து வெள்கினான்.         6.2.44 + + + +புகைநிறக் கண்ணன் புகலுதல் + + + +6242. 'தொகை நிறக் குரங்கு உடை மனிதர்ச் சொல்லி என்? + +சிகைநிறச் சூலிதன் திறத்துச் செல்லினும் + +தகை நிறத்து எண்ணலன்; சமைதல் நன்று'எனாப் + +புகைநிறக் கண்ணனும் புகன்று பொங்கினான்         6.2.45 + + + +மற்றையோர் கூறுதல் + + + +6243. மற்று அவன்பின் உற மற்றையோர்களும் + +'இற்று இதுவே நலம்; எண்ண மற்று இல்'என்று + +உற்றன உற்றன உரைப்ப தாயினார் + +புற்று உறை அரவு எனப் புழுங்கும் நெஞ்சினார்.         6.2.46 + + + +கும்பகருணன் கூறுதல் (6244-6253) + + + +6244. வெம்பு இகல் அரக்கரை விலக்கி'வினை தேரா + +நம்பியர் இருக்க'என நாயகனை முன்னா + +'எம்பி எனகிற்கில் உரை செய்வல் இதம்'என்னாக் + +கும்பகருணப் பெயரினான் இவை குறித்தான்.         6.2.47 + + + +6245. நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன் நின்றாய் + +ஆயிரம் மறை பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்; + +தீவினை நயப்பு உறுதல் செய்தனை; தெரிந்தால் + +ஏ! இனம் உறத்தகைய இ துணையவேயோ.         6.2.48 + + + +6246. ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்; + +கோ இயல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன் + +தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ? + +பாவியர் உறும்பழி இதின் பழியும் உண்டோ.         6.2.49 + + + +6247. நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால் + +உன் உயிர் எனத் தகைய தேவியர்கள் உன்மேல் + +இன் நகை தரத்தர ஒருத்தன் மன��� உற்றாள் + +பொன் அடி தொழத் தொழ மறுத்தல் புகழ்போலாம்.         6.2.50 + + + +6248. என்று ஒருவன் இல் உறை தவத்தியை இரங்காய் + +வன் தொழிலினாய் முறை துறந்து சிறை வைத்தாய் + +அன்று ஒழிவது ஆயின அரக்கர் புகழ்; ஐயா! + +புன்தொழிலின் நாம் இசை பொறுத்தல் புலமைத்தோ!         6.2.51 + + + +6249. ஆசு இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம் + +மாசு இல் புகழ் காதல் உறுவேம்; வளமை கூரப் + +பேசுவது வீரம் இடை பேணுவது காமம்; + +கூசுவது மானிடரை; நன்று நம கொற்றம்.         6.2.52 + + + +6250. சிட்டர் செயல் செய்திலை; குலச்சிறுமை செய்தாய்; + +மட்டு அவிழ் மலர்க் குழலினாளை இனி மன்னா! + +விட்டிடுது மேல் எளிய மாதும்; அவர் வெல்லப் + +பட்டிடுது மேல் அதுவும் நன்று; பழி அன்றால்.         6.2.53 + + + +6251. 'மரன் படர் வனத்து ஒருவனே சிலை வலத்தால் + +கரன் படை படுத்து அவனை வென்று களைகட்டான்; + +நிரம்பிடுவது அன்று அதுவும் நின்றது இனி நம்பால் + +உரம் படுவதே; இதனின்மேல் உறுதி உண்டோ?'         6.2.54 + + + +6252. வென்றிடுவர் மானிடவரேனும் அவர் தம்மேல் + +நின்று இடைவிடாது நெறிசென்று உற நெருக்கித் + +தின்றிடுதல் செய்கிலம் எனின் செறுநரோடும் + +ஒன்றிடுவர் தேவர்; உலகு ஏழும் உடன் ஒன்றாம்.         6.2.55 + + + +6253. 'ஊறு படை ஊறுவதன் முன்னம் ஒரு நாளே + +ஏறு கடல் ஏறி நரர் வானரரை எல்லாம் + +வேறு பெயராதவகை வேரோடும் அடங்க + +நூறுவதுவே கருமம்'என்பது நுவன்றான்.         6.2.56 + + + +இராவணன் கும்பகருணன் கூறியதற்கு இசைந்து கூறுதல் + + + +6254. நன்று உரை செய்தாய்! குமர! நான் அது நினைந்தேன்; + +ஒன்றும் இனி ஆய்தல் பழுது; ஒன்னலரை எல்லாம் + +கொன்று பெயர்வோம்; நம கொடிப் படையை எல்லாம் + +'இன்று எழுக என்க'என இராவணன் இசைத்தான்.         6.2.57 + + + +இந்திரசித்து இராவணனைத் தடுத்து யானே சென்று + + பகைவென்று வருவேன் எனல் (6255-6261) + + + +6255. என்று அவன் இயம்பியிடும் எல்லையினில்'வல்லே + +சென்று படையோடு சிறு மானிடர் சினப்போர் + +வென்று பெயர்வாய் அரச! நீ கொல்? என வீரம் + +நன்று பெரிது'என்று மகன் நக்கு இவை நவின்றான்.         6.2.58 + + + +6256. ஈசன் அருள் செய்தனவும் ஏடு அவிழ் மலர்ப் பேர் + +ஆசனம் உவந்தவன் அளித்தனவும் ஆய + +பாசம் முதல் வெம்படை சுமந்து பலர் நின்றார்; + +ஏச உழல்வேன் ஒருவன் யானும் உளென் அன்றோ.         6.2.59 + + + +6257. 'முற்றும் முதலாய் உலகம் மூன்றும் எதிர் தோன்றிச் + +செற்ற முதலோரோடு செறுத்தது ஓர் திறத்தும் + +வெற்றி உனது ஆக விளையாது ஒழியின் என்னைப் + +பெற்றுமிலை; யான் நெறி பிறந்தும் இலென்'என்றான்.         6.2.60 + + + +6258. குரங்கு பட மேதினி குறைத்தலை படப் போர் + +அரங்கு பட மானிடர் அலந்தலை படப் பேர் + +இரங்கு படர் சீதை பட இன்று இருவர் நின்றார் + +சிரம் குவடு எனக் கொணர்தல் காணுதி சினத்தோய்!         6.2.61 + + + +6259. சொல் இடை கழிக்கில சுருங்கிய குரங்கு என் + +கல் இடை கிழிக்கும் உருமின் கடுமை காணும் + +வில் இடை கிழித்த மிடல்வாளி வெருவித் தம் + +பல் இடை கிழித்து இரிவ கண்டு பயன் உய்ப்பாய்.         6.2.62 + + + +6260. யானை இலர் தேர் புரவி யாதும் இலர்; ஏவும் + +தானை இலர் நின்ற தவம் ஒன்றும் இலர் தாம் ஓர் + +கூனல் முதுகின் சிறு குரங்கு கொடு வெல்வார்; + +ஆனவரும் மானிடர் நம் ஆண்மை இனிது அன்றோ!         6.2.63 + + + +6261. நீரும் நிலனும் நெடிய காலும் நிமிர் வானும் + +பேர் உலகு யாவும் ஒரு நாள் புடைபெயர்த்தே + +யாரும் ஒழியாமல் நரர் வானரர்கள் என்பார் + +வேரும் ஒழியாதவகை கொன்று அலது மீளேன்.         6.2.64 + + + +இந்திரசித்து கூறியது கேட்டு வீடணன் சினந்து விளம்புதல் (6262-6268) + + + +6262. என்று அடி இறைஞ்சினன் எழுந்து'விடை ஈமோ + +வன் தொழிலினாய்'! எனலும் வாள் எயிறு வாயில் + +தின்றனன் முனிந்து நனி தீவினையை எல்லாம் + +வென்றவரின் நன்று உணரும் வீடணன் விளம்பும்.         6.2.65 + + + +6263. நூலினால் நுணங்கிய அறிவு நோக்கினர் + +போலுமால் உறு பொருள் புகலும் பூட்சியோர் + +காலம் மேல் விளைபொருள் உணரும் கற்பு இலாப் + +பாலன் நீ இனையன பகரற் பாலையோ.         6.2.66 + + + +6264. கருத்து இலான் கண் இலான் ஒருவன் கைக்கொடு + +திருத்துவான் சித்திரம் அனைய செப்புவாய் + +விருத்த மேதகையவர் வினைய மந்திரத்து + +இருத்தியோ? இளமையால் முறைமை எண்ணலாய்.         6.2.67 + + + +6265. தூயவர் முறைமையே தொடங்கும் தொன்மையோர் + +ஆயவர் நிற்க; மற்று அவுணர் ஆதியாம் + +தீயவர் அறத்தினால் தேவர் ஆயது + +மாயமோ? வஞ்சமோ? வன்மையே கொலோ?         6.2.68 + + + +6266. அறம் துறந்து அமரரை வென்ற ஆண் தொழில் + +திறம் தெரிந்திடின் அது தானும் செய்தவம் + +நிறம் திறம்பாவகை இயற்றும் நீர்மையால் + +மறம் துறந்தவர் தரும் வரத்தின் வன்மையால்.         6.2.69 + + + +6267. மூவரை வென்று மூன்று உலகும் முற்றுறக் + +காவலின் நின்று தம் களிப்புக் கைம் மிக + +வீவது முடிவு என வீந்தது அல்லது + +தேவரை வென்றவர் யாவர்? தீமையோர்!         6.2.70 + + + +6268. வினைகளை வென்று மேல் வீடு கண்டவர் + +எனைவர் என்று இயம்புகேன் எவ்வம் தீர்க்கையால் + +முனைவரும் அமரரும் முன்னும் பின்னரும் + +அனையவர் திறத்துளர் யாவர்? ஆற்றினார்.         6.2.71 + + + +வீடணன் இராவணனை நோக்கிக் கூறுதல் (6269-6296) + + + +6269. 'பிள்ளைமை விளம்பினை பேதை நீ'என + +ஒள்ளிய புதல்வனை உரப்பி'என் உரை + +எள்ளலை ஆம் எனின் இயம்பல் ஆற்றுவென் + +தெள்ளிய பொருள்;'என அரசற் செப்பினான்.         6.2.72 + + + +6270. எந்தை நீ யாவும் நீ எம் முன் நீ தவம் + +வந்தனைத் தயெ்வம் நீ மற்றும் முற்றும் நீ + +இந்திரப் பெரும்பதம் இழக்கின்றாய் என + +நொந்தனென் ஆதலின் நுவல்வது ஆயினேன்.         6.2.73 + + + +6271. கற்று உறும் மாட்சி என்கண் இன்று ஆயினும் + +உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும் + +சொற்றுறு சூழ்ச்சியின் துணிவு சோரினும் + +முற்றுறக் கேட்டபின் முனிதி மொய்ம்பினோய்!         6.2.74 + + + +6272. கோநகர் முழுவதும் நினது கொற்றமும் + +சானகி எனும் பெயர் உலகின் தம்மனை + +யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர் + +வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ? 75 + + + +6273. எண் பொருட்டு ஒன்றி நின்று, எவரும் எண்ணினால் + +'விண் பொருட்டு ஒன்றிய உயர்வும் மீட்சியும் + +பெண் பொருட்டு'அன்றியும், பிறிது உண்டாம் எனின் + +மண் பொருட்டு, அன்றியும் வரவும் வல்லவோ?         6.2.76 + + + +6274. மீன் உடை நெடுங்கடல் இலங்கை வேந்தன் முன் + +தான் உடை நெடுந்தவம் தளர்ந்து சாய்வது, ஓர் + +மானுட மடந்தையால் என்னும் வாய்மொழி + +தேன் உடை அலங்கலாய்! இன்று தீர்ந்ததோ         6.2.77 + + + +6275. ஏறிய நெடுந்தவம் இழைத்த எல்லை நாள் + +ஆறிய பெருங்குணத்து அறிவன் ஆணையால் + +கூறிய மனிதர்பால் கொற்றம் கொள்ளலை; + +வேறு இனி அவர் வயின் வென்றி ஆவதோ?         6.2.78 + + + +6276. ஏயது பிறிது உணர்ந்து இயம்ப வேண்டுமோ? + +நீ ஒரு தனி உலகு ஏழும் நீந்துவாய் + +ஆயிரம் தோளவற்கு ஆற்றல் தோற்றனை + +மேயினை ஆம் எனின் விளம்ப வேண்டுமோ?         6.2.79 + + + +6277. 'மேல் உயர் கயிலையை எடுத்த மேலை நாள் + +நாலு தோள் நந்திதான் நவின்ற சாபத்தால் + +கூல வான் குரங்கினால் குறுகும் கோளது வாலிபால் கண்டனம்; வரம்பு இல் ஆற்றலாய்'         6.2.80 + + + +6278. தீ இடைக் குளித்த அத் தயெ்வக் கற்பினாள் + +வாய் இடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ? + +'நோய் உனக்கு யான்'என நுவன்றுளாள் அவள் + +ஆயவள் சீதை பண்டு அமுதில் தோன்றினாள்.         6.2.81 + + + +6279. சம்பரப் பெயர் உடைத் தானவர்க்கு இறைவனைத் தனு வலத்தால் + +அம்பரத்து உம்பர் புக்கு அமரிடைத் தலை துமித்து அமரர் உய்ய + +உம���பருக்கு இறைவனுக்கு அரசு அளித்து உதவினான் ஒருவன் நேமி + +இம்பரில் பணி செயத் தயரதப் பெயரினான் இசை வளர்த்தான்.         6.2.82 + + + +6280. மிடல் படைத்து ஒருவனாய் அமரர் கோன் விடையதாய் வெரிநின் மேலாய் + +உடல் படைத்து, அவுணர் ஆயினர் எலாம் மடிய வாள் உருவினானும் + +அடல் படைத்து அவனியைப் பெருவளம் தருக என்று அருளினானும் + +கடல் படைத்தவர் நெடுங் கங்கை தந்தவன் வழிக் கடவுள் மன்னன்.         6.2.83 + + + +6281. பொய் உரைத்து உலகினில் சினவினார் குலம் அறப் பொருது தன்வேல் + +நெய் உரைத்து உறையில் இட்டு அறம் வளர்த்து ஒருவனாய் நெறியில் நின்றான் + +மை உரைத்து உலவு கண் மனைவிபால் வரம் அளித்தவை மறாதே + +மெய் உரைத்து உயிர் கொடுத்து அமரரும் பெறுகிலா வீடு பெற்றான்.         6.2.84 + + + +6282. அனையவன் சிறுவர் எம்பெரும! உன் பகைஞர், அன்னவரை அம்மா! + +இனையர் என்று உணர்தியேல், இருவரும் ஒருவரும் எதிர் இலாதார்; + +முனைவரும் அமரரும் முழுதுணர்ந் தவர்களும் முற்றும் மற்றும் + +நினைவருந் தகையர்; நம் வினையினால் மனிதராய் எளிதின் நின்றார்.         6.2.85 + + + +6283. கோசிகப் பெயர் உடைக் குல முனித் தலைவன் அக் குளிர் மலர்ப் பேர் + +ஆசனத் தவனொடு எவ் உலகமும் தருவன் என்று அமையலுற்றான் + +ஈசனில் பெறு படைக்கலம் இமைப் பளவின் எவ் உலகும் யாவும் + +நாசம் உற்றிட நடப்பன கொடுத்தவை பிடித்துடையர் நம்பா!         6.2.86 + + + +6284. எறுழ்வலிப் பொருவில் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து, + +உறுதிறல் கலுழன்மீது ஒருவன் நின்று அமர் செய்தான் உடைய வில்லும், + +தறெு சினத்தவர்கள் முப்புரம் நெருப்பு , உருத்து எய்த அம்பும் + +குறுமுனிப் பெயரினான் நிறைதவர்க்கு இறை தரக் கொண்டு நின்றான்.         6.2.87 + + + +6285. நாவினால் உலகை நக்கிடுவ; திக்கு அளவிடற்கு உரிய; நாளும் + +மேவு தீவிடம் உயிர்ப்பன; வெயில் பொழி எயிற்றன; அவ் வீரர் + +ஆவமாம் அரிய புற்று உறைவ; முற்று அறிவருக்கு அழிவு செய்யும் + +பாவ காரியர் உயிர்ப் பதம் அலாது இரை பெறா; பகழி நாகம்.         6.2.88 + + + +6286. பேருமோ ஒருவரால் அவர்களால் அல்லது; இவ் பெரியவேனும் + +நாரும் மூரியும் அறா; நம்முடைச் சிலைகள் போல் நலிவவாமோ? + +தாருவோ? வேணுவோ? தாணுவாய் உலகினைத் தழுவி நிற்கும் + +மேருவோ மால்வரைக் குலமெலாம் அல்லவோ? வில்லு மன்னோ.         6.2.89 + + + +6287. உரம் ஒருங்கியது நீர்கடையும் வாலியது மார்பு; உலகை மூடும் + +மரம் ஒருங்கிய, கர ஆதியர் விராதனது மால் வரைகள் மானும் + +சிரம் ஒருங்கின; இனிச் செரு ஒருங் குளது எனில் தெவ்வர் என்பார் + +பரம் ஒருங்குவது அலால் பிறிது ஒருங்காதது ஓர் பகையும் உண்டோ?         6.2.90 + + + +6288. சொல் வரம் பெரிய மா முனிவர் என்பவர்கள், தம் துணை இலாதார் + +ஒல்வரம் பெரிய தோள் இருவரே அமரரோடு உலகம் யாவும் + +வெல்வர் என்பது தெரிந்து எண்ணினார்; நிருதர் வேர் முதலும் வீயக் + +கொல்வர் என்று உணர்தலால், அவரை வந்து அணைவது ஓர் இசைவு கொண்டார்.         6.2.91 + + + +6289. துஞ்சுகின்றிலர்களால் இரவும் நன்பகலும், நிற் சொல்ல ஒல்கி + +நெஞ்சு நின்று அயரும் இந் நிருதர்; + + 'பேர் சனகியாம் நெடியது ஆய + +நஞ்சு தின்றவர்கள் தாம் நண்ணுவார் நரகம்'என்று, எண்ணி, நம்மை + +அஞ்சுகின்றிலர்கள், நின் அருள் அலால் சரண் இலா அமரர்; ஐயா!         6.2.92 + + + +6290. புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறுமை கூர + +நகல் மதிக்கில, மறுப்பொலிய வாள் ஒளி இழந்து உதயம் நண்ணும் + +பகல் மதிக்கு உவமை ஆயின எலாம் இரவு கால் பருவ நாளின் + +அகல் மதிக்கு உவமையாயின தபோதனர் உளார் வதனம் அம்மா!         6.2.93 + + + +6291. சிந்து முந்து உலகினுக்கு இறுதி புக்கு உரு ஒளித்து உழல்தல் செய்வார் + +இந்துவின் திருமுகத்து இறைவி நம் உறையுளாள் என்றலோடும் + +அந்தகன் முதலினோர் அமரரும் முனிவரும் பிறரும் அஞ்சார் + +வந்துதம் உலகமும் வானமும் கண்டு உவந்து அகல்வர் மன்னோ.         6.2.94 + + + +6292. சொலத் தகாத் துன் நிமித்தங்கள் எங்கணும் வரத்தொடர்வ; ஒன்னார் + +வெலத்தகா அமரரும் அவுணரும் செருவில் விட்டன விடாத + +குலத்தகால் வய நெடும் குதிரையும் அதிர்குரல் குன்றும் இன்றும் + +வலத்த கால் முந்துறத் தந்து, நம் மனை இடைப் புகுதும் மன்னோ!         6.2.95 + + + +6293. வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார் நிருதர்; வைகும் + +பேயினும் பெரிது பேய் நரிகளும் புரிதரும்; பிறவும் எண்ணின் + +கோயிலும் நகரமும் மடநலார் குழலும் நம் குஞ்சியோடும் + +தீயின் வெந்திடும்; அலால், ஒரு நிமித்தம் பெறும் திறனும் உண்டோ?         6.2.96 + + + +6294. சிந்த மா நாகரைச் செரு முருக்கிய கரன், திரிசிரத்தோன், + +முந்தமான் ஆயினான், வாலியே முதலினோர் முடிவு கண்டால், + +அந்த மான் இடவனோடு ஆழிமா வலவனும் பிறரும், ஐயா! + +இந்த மானிடவராம் இருவரோடு எண்ணலாம் ஒருவர் யாரே?         6.2.97 + + + +6295. இன்னம் ஒன்று உரைசெய்வான்,'இனிதுகேள், எம்பிரான்! இருவர் ���ய + +அன்னவர் தம்மொடும் வானரத் தலைவராய் அணுகி நின்றார், + +மன்னும் நம் பகைஞராம் வான் உேளார்; அவரோடும் மாறுகோடல் + +கன்னம் அன்று;'இது நமக்கு உறுதி'என்று உணர்தலும் கருமம் அன்றால். 98 + + + +6296. இசையும் செல்வமும் உயர் குலத்து இயற்கையும் எஞ்ச + +வசையும் கீழ்மையும் மீக்கொளக் கிளையொடும் மடியாது + +அசைவில் கற்பின் அவ் அணங்கை விட்டு அருளுதி இதன்மேல் + +விசையம் இல் எனச் சொல்லினன் அறிஞரின் மிக்கான்.         6.2.99 + + + +இராவணன் வீடணனைப் பரிகசித்துரைத்தல் (6297-6306) + + + +6297. கேட்ட ஆண்தகை, கரத்தொடு கரதலம் கிடைப்பப் + +பூட்டி, வாய்தொறும் பிறை குலம் வெண்ணிலாப் பொழிய, + +வாள் தடம் தவழ் ஆரமும் வயங்கு ஒளி மார்பும் + +தோள் தடங்களும் குலுங்க நக்கு, இவை இவை சொன்னான்.         6.2.100 + + + +6298. இச்சை அல்லன உறுதிகள் இசைக்குவென் என்றாய்! + +பிச்சர் சொல்லுவ சொல்லினை; என் பெரு விறலைக் + +கொச்சை மானிடர் வெல்குவர் என்றனை; குறித்தது + +அச்சமோ? அவர்க்கு அன்பினோ? யாவதோ? ஐயா!         6.2.101 + + + +6299. "'ஈங்கு மானிடப் பசுக்களுக்கு இலை வரம்" என்றாய் + +தீங்கு சொலினை; திசைகளை உலகொடும் செருக்கால் + +தாங்கும் ஆனையைத் தள்ளி, அத்தழல் நிறத்தவனை + +ஓங்கல் தன்னொடும் எடுக்கவும் வரம் கொண்டது உண்டோ?'         6.2.102 + + + +6300. மனக்கொடு அன்றியும் வறியன வழங்கினை; வானோர் + +சினக் கொடும் படை செருக்களத்து என்னை என் செய்த? + +எனக்கு நிற்க; மற்று என்னொடு இங்கு ஒருவயிற்று உதித்த + +உனக்கு மானிடர் வலியராம் தகைமையும் உளதோ?         6.2.103 + + + +6301. சொல்லும் மாற்றங்கள் தெரிந்திலை; பன் முறை தோற்றும் + +வெல்லும் ஆற்றலும், ஒருமுறை பொறுத்தனன்; விண்ணைக் + +கல்லும் ஆற்றல் என் கிளையையும் என்னையும் களத்தில் + +கொல்லும் மாற்றலர் உளர் எனக் கோடலும் கோேளா?         6.2.104 + + + +6302. தேவரின் பெற்ற வரத்தினது என் பெருஞ் செருக்கேல் + +மூவரில் பெற்றம் உடையவன் தன்னொடு முழுதும் + +காவலின் பெற்ற திகிரியோன் தன்னையும் கடந்தது + +ஏவரில் பெற்ற வரத்தினால்? இயம்புதி இளையோய்!         6.2.105 + + + +6303. நந்தி சாபத்தின் நமை அடும் குரங்கு எனின், நம்பால் + +வந்த சாபங்கள் எனைப்பல; அவை செய்த வலி என்? + +இந்தியாதிகள் அவித்தவர் தேவர் நம் இறுதி + +சிந்தியாதவர் யார்? அவை நம்மை என் செய்த?         6.2.106 + + + +6304. அரங்கில் ஆடுவாற்கு அன்பு பூண்டு உடை வரம் அறியேன், + +இரங்கி யான் நிற்ப, என்வலி அவன்வயின் எய்த, + +வரம் கொள் வாலிபால் தோற்றனென்; மற்றும் வேறு உள்ள + +குரங்கெலாம் எனை வெல்லும் என்று எங்ஙனம் கோடி?         6.2.107 + + + +6305. நீல கண்டனும் நேமியும் நேர்நின்று நேரின், + +ஏவலும் அன்னவர் உடைவலி அவன்வயின் எய்தும்; + +சாலும் நல்வரம் நினைந்து, அவன் எதிர்செலல் தவிர்ந்து, + +வாலி தன்னை அம் மனிதனும் மறைந்துநின்று எய்தான்.         6.2.108 + + + +6306. ஊன வில் இறுத்து, ஓட்டை மாமரத்துள் அம்பு ஓட்டிக் + +கூனி சூழ்ச்சியால் அரசு இழந்து உயர் வனம் குறுகி, + +யான் இழைத்திட இல் இழந்து இன் உயிர் சுமக்கும் + +மானிடன் வலி நீ அலாது ஆர் உளர்? மதித்தார்.         6.2.109 + + + +வீடணன் மீட்டும் உறுதியுரைத்தல் (6307-6308) + + + +6307. என்று தன் உரை இழித்து,'நீ உணர்விலி'என்னா + +'நன்று, போதும் நாம்; எழுக'எனும் அரக்கனை நணுகா, + +'ஒன்று கேள் இனம் உறுதி'என்று அன்பினன் ஒழியான் + +துன்று தாரவன், பின்னரும் இனையன சொன்னான்.         6.2.110 + + + +6308. தன்னின் முன்னிய பொருள் இலா ஒருதனித் தலைவன் + +அன்ன மானிடன் ஆகிவந்து, அவதரித்து அமைந்தான் + +சொன்ன நம்பொருட்டு உம்பர்தம் சூழ்ச்சியின் துணிவால் + +இன்னம் ஏகுதிபோலும் என்று அடி தொழுது இரந்தான்.         6.2.111 + + + +இராவணன் மீட்டும், வீடணன் கூறியதை மறுத்துரைத்தல் (6309-6314) + + + +6309. அச் சொல் கேட்டு அவன், ஆழியான் என்றனை ஆயின் + +கொச்சைத் துன்மதி எத்தனை போர் இடைக் குறைந்தான் + +இச்சைக்கு ஏற்றன யான் செய்த இத்தனை காலம் + +முச்சு அற்றான் கொல் அம் முழு முதலோன் என முனிந்தான்.         6.2.112 + + + +6310. இந்திரன் தனை இருஞ்சிறை இட்டநாள், இமையோர் + +தந்தி கோடு இறத் தகர்த்த நாள், தன்னை யான் முன்னம் + +வந்த போர்தொறும் துரந்த நாள், வானவர் உலகைச் + +சிந்த வென்ற நாள் சிறியன்கொல்? நீ சொன்ன தேவன்.         6.2.113 + + + +6311. சிவனும் நான்முகத்து ஒருவனும் திருநெடு மாலாம் + +அவனும் மற்று உள அமரரும் உடன் உறைந்து அடங்கப் + +புவனம் மூன்றும் நான் ஆண்டு உளது ஆண்ட அப் பொருவில் + +உவன் இலாமையிலோ? வலி ஒதுங்கியோ? உரையாய்.         6.2.114 + + + +6312. ஆயிரம் பெருந்தோள்களும், அத்துணைத் தலையும், + +மாயிரும் புவி உள்ளடி அடக்குறும் வடிவும், + +தீய; சாலவும் சிறிது; என நினைந்து, நாம் தின்னும் + +ஓயும் மானிட உருவு கொண்டனன் கொலாம்! ஒருவன்.         6.2.115 + + + +6313. பித்தன் ஆகிய ஈசனும் மாலும் என் பெயர் கேட்டு + +எய்த்த சிந்தையர்; ஏகுழி ஏகுழி எல்லாம் + +கைத்த ஏற்றினும் கடவிய புள்ளினும் முதுகில் + +தைத்த ���ாளிகள் நின்று உள; குன்றின் வீழ் தடித்து இன். 116 + + + +6314. 'வெம் சினம் தரு போரில் என்னுடன் எழ வேண்டா; + +இஞ்சி மா நகர் இடம் உடைத்து, ஈண்டு இனிது இருத்தி; + +அஞ்சல்! அஞ்சல்!'என்று அயல் இருந்தவர் முகம் நோக்கி + +நஞ்சின் வெய்யவன், கை எறிந்து, உரும் என நக்கான்.         6.2.117 + + + +வீடணன் மீட்டும் கூறுதல் + +6315. பின்னும் வீடணன், ஐய! நின் தரம் அலாப் பெரியோர் + +முன்னை நாள், இவன் முனிந்திடக் கிளையொடு முடிந்தார் + +இன்னம் உண்டு, நான் இயம்புவது, இரணியன் என்பான் + +தன்னை உள்ளவா கேட்டி என்று உரைசெயச் சமைந்தான்.         6.2.118 + +------------------------ + + + +6.3 இரணியன் வதைப் படலம் ( 6316 - 6491) + + + +இரணியனது இயல்பும் ஆற்றலும் (6316-6333) + + + +6316. வேதம் கண்ணிய பொருள் எலாம் விரிஞ்சனே ஈந்தான்; + +போதம் கண்ணிய வரம் அவன் தரக் கொண்டு போந்தான்; + +காதும் கண்ணுதல், மால், அயன், கடைமுறை காணாப் + +பூதம் கண்ணிய வலி எலாம் ஒருதனி பொறுத்தான்.         6.3.1 + + + +6317. 'எற்றை நாளினும் உளன் எனும் இறைவனும், அயனும், + +கற்றை அம் சடைக் கடவுளும் காத்து, அளித்து, அழிக்கும் + +ஒற்றை அண்டத்தின் அளவனோ? அதன்புறத்து உலவா + +மற்றை அண்டத்தும் தன் பெயரே சொல வாழ்ந்தான்.         6.3.2 + + + +6318. 'பாழி வன் தடம் திசை சுமந்து ஓங்கிய பணைக்கைப் + +பூழி வன்கரி இரண்டு இருகை கொடு பொருத்தும்; + +ஆழம் காணுதற்கு அரியவாய், அகன்ற பேர் ஆழி + +ஏழும் தன் இருதாள் அளவு எனக் கடந்து ஏறும்.         6.3.3 + + + +6319. 'வண்டல் தணெ்திரை ஆற்றுநீர் சில என்று மருவான்; + +கொண்டல் கொண்டநீர் குளிர்ப்பு இல என்று அவை குடையான்; + +பண்டைத் தணெ்திரைப் பரவை நீர் உவர் என்று படியான்; + +அண்டத்தைப் பொதுத்து அப்புறத்து அப்புனல் ஆடும்.         6.3.4 + + + +6320. சாரும் மானத்தில், சந்திரன் தனிப்பதம் சரிக்கும்; + +தேரின் மேவி நின்று இரவிதன் பெரும்பதம் செலுத்தும்; + +பேரின் எண்திசைக் காவலர் கருமமும் பிடிக்கும்; + +மேரு மால்வரை உச்சிமேல் அரசு வீற்றிருக்கும்.         6.3.5 + + + +6321. 'நிலனும், நீரும், வெங் கனலொடு காலும் ஆய், நிமிர்ந்த + +தலனுள், நீடிய அவற்றின் அத் தலைவரை மாற்றி, + +உலவும் காற்றொடு கடவுளர் பிறரும் ஆய், உலகின் + +வலியும் செய்கையும் வருணன்தன் கருமமும் ஆற்றும்.         6.3.6 + + + +6322. 'தாமரைக் கண்ணன் தழல் கண்ணன் பேர் அவை தவிர, + +நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில, + +தூம வெங் கனல் அந்தணர் முதலினர் சொரிந்த + +ஓம வேள்வியுள் இமையவர் பேறு எலாம் உண்ணும்.         6.3.7 + + + +6323. 'காவல், காட்டுதல், துடைத்தல், என்று இத்தொழில் கடவ + +மூவரும் அவை முடிக்கிலர், பிடிக்கிலர் முறைமை; + +ஏவர் மற்றவர்? யோக்கியர் உறுபதம் இழந்தார்; + +தேவரும் அவன் தாள் அலால் அருச்சனை செய்யார்.         6.3.8 + + + +6324. 'மரபின், மாபெரும் புறக்கடல் மஞ்சனம் மருவி, + +அரவின் நாட்டிடை மகளிரோடு இன் அமுது அருந்தி, + +பரவும் இந்திரன் பதியிடைப் பகல்பொழுது அகற்றி + +இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்.         6.3.9 + + + +6325. 'பண்டு வானவர் தானவர் யாவரும் பற்றித், + +தணெ் திரைக் கடல் கடைதர, வலியது தேடிக் + +கொண்ட மத்தினைக் கொற்றத் தன் குவவுத் தோட்கு அமைந்த + +தண்டு எனக் கொளல் உற்று,'அது நொய்து'எனத் தவிர்ந்தான்.         6.3.10 + + + +6326. 'மண்டலம் தரு கதிரவன் வந்து போய் மறையும் + +எண் தலம் தொடற்கு அரியன தடவரை இரண்டும், + +கண் தலம் பசும் பொன்னவன் முன்னவன் காதில் + +குண்டலங்கள்; மற்று என், இனிப் பெருவிறல் கூறல்?         6.3.11 + + + +6327. 'மருக்கொள் தாமரை நான்முகன் முதலிய வானோர் + +குருக்கேளாடு கற்று, ஓதுவது, அவன் பெருங் கொற்றம்; + +சுருக்கு இல் நான்மறை தொன்றுதொட்டு உரைதொறும் தோன்றாது + +இருக்கும் தயெ்வமும்'இரணியனே! நம!'என்னும்.         6.3.12 + + + +6328. 'மயரும், மன் நெடுஞ் சேவடி மண் இடை வைப்பின்; + +அயரும், வாள் எயிற்று ஆயிரம் பணம் தலை அநந்தன்; + +உயருமேல், அண்ட முகடு தன்முடி உற உயரும்; + +பெயருமேல், நெடும் பூதங்கள் ஐந்தொடும் பெயரும்.         6.3.13 + + + +6329. 'பெண்ணின், பேர் எழில் ஆணினின், அலியினின், பிறிதின், + +உள் நிற்கும் உயிர் உள்ளதின், இல்லதின், உலவான்; + +கண்ணின் காண்பன, கருதுவ, யாவினும் கழியான்; + +மண்ணின் சாகிலன், வானினும் சாகிலன்; வரத்தால்.         6.3.14 + + + +6330. 'தேவர் ஆயினர் ஏவரும் திரிதரும் இயக்கர் + +யாவர் ஆயினும் எண்ணவும் துதிக்கவும் இயன்ற + +கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல + +ஆவி தீர்கிலன்; ஆற்றலும் தீர்கிலன் அனையான்.         6.3.15 + + + +6331. 'நீரின் சாகிலன்; நெருப்பினும் சாகிலன்; நிமிர்ந்த + +மாருதத்தினும், மண்ணின் மற்று எவற்றினும், மாளான்; + +ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்பச் + +சாரும் சாபமும், அன்னவன் தனைச் சென்று சாரா.         6.3.16 + + + +6332. 'உள்ளில் சாகிலன்; புறத்தினும் உலக்கிலன்; உலவாக் + +கொள்ளைத் தயெ்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா; + +நள்ளில் சாகிலன்; பகலிடைச் சாகிலன்; நமனார் + +கொள்ளச��� சாகிலன்; ஆர் இனி அவன் உயிர் கொள்வார்?         6.3.17 + + + +6333. 'பூதம் ஐந்தொடும் பொருந்திய உணர்வினில் புணரா + +வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான்; + +தாதை தன்னைத்தான் தனிக்கொலை சூழினும் சாகான்; + +ஈது அவன் நிலை; எவ் உலகங்கட்கும் இறைவன்.         6.3.18 + + + +இரணியன் மகன் பிரகலாதன் தன்மை + + + +6334. 'ஆயவன் தனக்கு அருமகன், அறிஞரின் அறிஞர்ன், + +தூயர் என்பவர் யாரினும் மறையினும் தூயன், + +நாயகன் தனி ஞானி, நல் அறத்துக்கு நாதன், + +தாயினி மன்னுயிர்க்கு அன்பினன், உளன் ஒரு தக்கோன்.         6.3.19 + + + +இரணியன் தன் மகனை வேதம் ஓதுமாறு பணித்தல் + +6335. 'வாழியான் அவன்தனைக் கண்டு மனம் மகிழ்ந்து உருகி, + +"ஆழி ஐய! நீ அறிதியால் மறை" என அறைந்தான் + +ஊழியும் கடந்து உயர்கின்ற ஆயுளான், உலகம் + +ஏழும் ஏழும் வந்து அடிதொழ, அரசு வீற்றிருந்தான்.         6.3.20 + + + +இரணியனது ஏவலால் அந்தணன் ஒருவன் பிரகலாதனுக்கு வேதம் ஓதுவிக்கத் தொடங்குதல் + + + +6336. 'என்று, ஓர் அந்தணன் எல்லையில், அறிஞனை ஏவி, + +"நன்று நீ இவற்கு உதவுதி மறை" என நவின்றான். + +சென்று மற்று அவன் தன்னொடும் ஒரு சிறை சேர்ந்தான்; + +அன்று நான்மறை முதலிய ஓதுவான் அமைந்தான்.         6.3.21 + + + +ஆசிரியன்'இரணியாயநம'என்று கூறுமாறு பணிக்கப் பிரகலாதன்'ஓம் நமோநாராயணாய'என்று கூறுதல் + + + +6337. 'ஓதம் புக்கு, அவன்,"உந்தை பேர் உரை" எனலோடும், + +போதத் தன் செவித்தொளை இரு கைகளால பொத்தி, + +"மூதக்கோய்! இது நல்தவம் அன்று" என மொழியா, + +வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான்.         6.3.22 + + + +பிரகலாதனது திருமால் பத்தியைக் கண்டு ஆசிரியன் அஞ்சி நடுங்கி அவனைக் கடிந்துரைத்தல் (6338-6339) + + + +6338. "ஓம் நமோ நாராயணாய!" என்று உரைத்து, உளம் உருகி, + +தான் அமைந்து, இரு தடக்கையும் தலையின்மேல் தாங்கி, + +பூ நிறக் கண்கள் புனல் உக, மயிர் புறம் பொடிப்ப, + +ஞான நாயகன் இருந்தனன்; அந்தணன் நடுங்கி.         6.3.23 + + + +6339. "கெடுத்து ஒழிந்தனை, என்னையும் உன்னையும்; கெடுவாய்! + +படுத்து ஒழிந்தனை; பாவி! எத்தேவரும் பகர்தற்கு + +அடுத்தது அன்றியே அயல் ஒன்று பகர, நின் அறிவின் + +எடுத்தது என் இது? என் செய்த வண்ணம் நீ?''என்றான்.         6.3.24 + + + +பிரகலாதன் குருவுக்கு ஏற்ற மறுமொழி கூறுதல் + + + +6340. "'என்னை உய்வித்தேன்; எந்தையை உய்வித்தேன்; நினைய + +உன்னை உய்வித்து, இவ் உலகையும் உய்விப்பான் அமைந்து, + +முன்னை வேதத்தின் முதல் பெயர் மொழிவது மொழிந்தேன்; + +என்னை குற்றம் நான் இயம்பியது? இயம்புதி''என்றான்.         6.3.25 + + + +அந்தணனாகிய குரு பிரகலாதனுக்கு அறிவுரை கூறுதல் + + + +6341. "'முந்தை வானவர் யாவர்க்கும், முதல்வர்க்கும் முதலோன் + +உந்தை; மற்று அவன் திருப்பெயர், உரைசெயற்கு உரிய; + +அந்தணாளன் யான்; என்னினும் அறிதியோ? ஐயா! + +இந்த! இப்பெயர் உரைத்து, எனைக் கெடுத்திடல்''என்றான்.         6.3.26 + + + +பிரகலாதன் குருவின் சொல்லை மறுத்து, வேதப் பொருளாய் விளங்கும் திருமாலின் பெருமையை விரித்துரைத்தல் (6342-6348) + + + +6342. "வேத பாரகன் அவ் உரை விளம்பலும், விமலன், + +"ஆதி நாயகன் பெயர் அன்றி, யான் பிறிது அறியேன்; + +ஓத வேண்டுவது இல்லை; என் உணர்வினுக்கு ஒன்றும் + +போதியாததும் இல்லை''என்று, இவை இவை புகலும்.         6.3.27 + + + +6343. "'தொல்லை நான்மறை வரன்முறை துணிபொருட்கு எல்லாம் + +எல்லை கண்டவன் அகம் புகுந்து, இடம் கொண்டது என் உள்; + +இல்லை, வேறு இனிப் பெரும் பதம்; யான் அறியாத, + +வல்லையேல், இனி, ஓதுவி, நீதியின் வழாத.         6.3.28 + + + +6344. "'ஆரைச் சொல்லுவது அந்தணர் அருமறை? அறிந்தோர் + +ஓரச் சொல்லுவது எப்பொருள், உபநிட தங்கள், + +தீரச் சொல்பொருள்; தேவரும் முனிவரும் செப்பும் + +பேரைச் சொல்லுவது அல்லது பிறிதும் ஒன்று உளதோ?         6.3.29 + + + +6345. "'வேதத்தானும், நல் வேள்வியினானும், மெய் உணர்ந்த + +போதத்தானும், அப்புறத்துள எப் பொருளானும், + +சாதிப்பார் பெறும் பெரும்பதம் தலைக்கொண்டு சமைந்தேன்; + +ஓதிக் கேட்பது பரம்பொருள்; இன்னம் ஒன்று உளதோ?         6.3.30 + + + +6346. "'காடு பற்றியும், கனவரை பற்றியும், கலைத் தோல் + +மூடி முற்றியும், முண்டித்தும், நீட்டியும், முறையால் + +வீடு பெற்றவர்,'பெற்றதின் விழுமிது'என்று உரைக்கும் + +மாடு பெற்றனென், மற்று, இனிஎன் பெற வருந்தி?         6.3.31 + + + +6347. "'செவிகளால் பல கேட்கிலர் ஆயினும், தேவர்க்கு + +அவிகொள் நான்மறை அகப்பொருள் புறப்பொருள் அறிவார்; + +கவிகள் ஆகுவார்; காண்குவார், மெய்ப்பொருள்; காலால் + +புவிகொள் நாயகற்கு அடியவர்க்கு அடிமையின் புக்கார்.         6.3.32 + + + +6348. "'எனக்கும் நான்முகத்து ஒருவற்கும், யாரினும் உயர்ந்த + +தனக்கும் தன்நிலை அறிவு அரும் ஒரு தனித் தலைவன், + +மனக்கு வந்தனன்; வந்தன யாவையும்; மறையோய்! + +உனக்கும் இன்னதின் நல்லது ஒன்று இல்''என உரைத்தான்.         6.3.33 + + + +குரு இரணியனை அடைந்து நிகழ்ந்த செய்தியைக் கூறுதல் (6349-6350) + + + +6349. 'மாற்றம் யாது ஒ��்றும் உரைத்திலன், மறையவன்; மறுகி, + +"ஏற்றம் என்? எனக்கு இறுதி வந்து எய்தியது" என்னா, + +ஊற்றம் இல்லவன் ஓடினன், கனகனை உற்றான்; + +தோற்ற வந்ததோர் கனவு கண்டான் எனச் சொன்னான்;         6.3.34 + + + +6350. "'எந்தை! கேள் : எனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் இயம்பச் + +சிந்தையால் இறை நினைதற்கும் அடாதன செப்பி, + +'முந்தையே உணர்ந்தேன் பொருள் முற்றும்'என்று உரைத்து, உன் + +மைந்தன் ஓதிலன் வேதம்''என்று உரைத்தனன், வணங்கி.         6.3.35 + + + +இரணியன் குருவை நோக்கித் தன் மகன் கூறிய சொல்லைக் கூறுமாறு பணித்தல் + + + +6351. 'அன்ன கேட்டவன்,"அந்தண! அந்தணர்க்கு அடாத, + +முன்னர் யாவரும் மொழிதரும் முறைமையின் படாத, + +தன்னது உள்ளுறும் உணர்ச்சியால் புதுவது தந்தது, + +என்ன சொல்? அவன் இயம்பியது இயம்புதி''என்றான்.         6.3.36 + + + +குரு'அச் சொல்லைக் கூறின் நான் நரகம் எய்துவேன்'எனக் கூறுதல் + + + +6352. "அரசன் அன்னவை உரைசெய, மறையவன் அஞ்சி, + +சிரதலம் கரம் சேர்த்திடா," செவித்தொளை சேர்ந்த + +உரகம் அன்ன சொல் யான் உனக்கு உரைசெயின், உரவோய்! + +நரகம் எய்துவென்; நாவும் வெந்து உகும்''என நவின்றான்.         6.3.37 + + + +இரணியனது ஏவலால் அழைக்கப்பட்டு வந்த பிரகலாதன் தன் தந்தையை வணங்குதல் + + + +6353. "'கொணர்க என் மைந்தனை வல் விரைந்து" என்றனன், கொடியோன், + +உணர்வு இல் நெஞ்சினன்; ஏவலர் கடிதினின் ஓடி, + +கணனின் எய்தினர்,"பணி" என, தாதையைக் கண்டான்; + +துணை இலான்தனைத் துணை என உடையவன் தொழுதான்.         6.3.38 + + + +இரணியன் தன்னை வணங்கிய மைந்தனை மார்போடணைத்து அருகிருத்தி'நீ குருவின்முன் சொல்லிய சொல்லினைக் கூறுக'எனப் பணித்தல் + + + +6354. 'தொழுத மைந்தனை, சுடர்மணி மார்பிடைச் சுண்ணம் + +எழுத, அன்பினோடு இறுகுறத் தழுவி, மாடு இருத்தி, + +முழுதும் நோக்கி,"நீ, வேதியன் கேட்கிலன் முனிய, + +பழுது சொல்லியது என்? அது பகருதி''என்றான்.         6.3.39 + + + +பிரகலாதன் தான் சொல்லிய திருப்பெயரின் சிறப்பினைக் கூறுதல் + + + +6355. "'சுருதி ஆதியில் தொடங்கு உறும் எல்லையில் சொன்ன + +ஒருவன், யாவர்க்கும் நாயகன், திருப்பெயர், உணரக் + +கருதக் கேட்டிடக் கட்டுரைத்து இடர்க் கடல் கடக்க + +உரிய மற்று இதின் நல்லது ஒன்று இல்''என உரைத்தான்.         6.3.40 + + + +இரணியன், அப்பெயரைக் குறித்துக் கூறுக எனப் பணித்தல் + + + +6356. 'தேவர் செய்கையன் அங்ஙனம் உரைசெய தீயோன் + +"தா இல் வேதியன் தக்கதே உரைசெயத் தக்கான்; + +ஆவது ஆகுக; அன்று எனி��் அறிகுவம்" என்றே + +"யாவது அவ் உரை? இயம்புதி இயம்புதி" என்றான்.         6.3.41 + + + +பிரகலாதன் திரு எட்டெழுத்தின் பெருமையை விரித்துரைத்தல் (6357-6361) + +6357. "'காமம் யாவையும் தருவதும் அப்பதம் கடந்தால் + +சேம வீடு உறச் செய்வதும் செந்தழல் முகந்த + +ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன் + +நாமம்; அன்னது கேள்; நமோ நாராயணாய.         6.3.42 + + + +6358. "'மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும் + +எண்ணில் பூதங்கள், நிற்பன திரிவன, இவற்றின் + +உள் நிறைந்துள, கரணத்தின் ஊங்கு உள உணர்வும், + +எண்ணுகின்றது, இவ் எட்டு எழுத்தே; பிறிது இல்லை.         6.3.43 + + + +6359. "'முக்கண் தேவனும் நான்முகத்து ஒருவனும் முதலா + +மக்கள் காறும் இம் மந்திரம் மறந்தவர் மறந்தார்; + +புக்குக் காட்டுவது அரிது இது; பொதுவுறக் காண்பார் + +ஒக்க நோக்கினர் அல்லவர் இதன் நிலை உணரார்.         6.3.44 + + + +6360. "'தோற்றம் என்னும் அத் தொல்வினைத் தொடு கடல் சுழிநின்று + +ஏற்று நன்கலன், அருங்கலன், யாவர்க்கும் இனிய + +மாற்ற மங்கலம், மாதவர் வேதத்தின் வரம்பின் + +தேற்ற மெய்ப்பொருள், தெரிந்த மற்று இதின் இல்லை, சிறந்த.         6.3.45 + + + +6361. "'உன் உயிர்க்கும் என் உயிர்க்கும் இவ் உலகத்தின் உள்ள + +மன்னுயிர்க்கும் ஈது உறுதி என்று உணர்வுற மதித்துச் + +சொன்னது இப்பெயர்''என்றனன், அறிஞரின் தூயோன்; + +மின் உயிர்க்கும் வேல் இரணியன் தழல் எழ விழித்தான்.         6.3.46 + + + +இரணியன் பிரகலாதனை வெகுண்டுரைத்தல் (6362-6371) + + + +6362. "'அற்றை நாள்முதல், யான் உள நாள்வரை, அப்பேர் + +சொற்ற வாயையும் கருதிய மனத்தையும் சுடும், என் + +ஒற்றை ஆணை; மற்று, யார் உனக்கு இப்பெயர் உரைத்தார்? + +கற்றது ஆரொடு? சொல்லுதி விரைந்து''எனக் கனன்றான்.         6.3.47 + + + +6363. "'முனைவர் வானவர் முதலினர், மூன்று உலகத்தும் + +எனைவர் உள்ளவர், யாவரும், என் இரு கழலே + +நினைவது; ஓதுவது என்பெயர்; நினக்கு இது நேர + +அனையர் அஞ்சுவர்; மைந்த! நீ யாரிடை அறிந்தாய்?         6.3.48 + + + +6364. "'மறம்கொள் வெஞ்செரு மலைகுவான் பல்முறை வந்தான், + +கறங்குவெஞ் சிறைக் கலுழன்தன் கடுமையின், கரந்தான்; + +பிறங்கு தணெ்திரைப் பெருங்கடல் புக்கு, இ(ன்)னம் பெயராது, + +உறங்குவான் பெயர் உறுதி என்று ஆர் உனக்கு உரைத்தார்?         6.3.49 + + + +6365. "'பரவை நுண் மணல் எண்ணினும் எண்ண அரும் பரப்பின் + +குரவர் நம்குலத்து உள்ளவர் அவன் கொ(ல்)லக் குறைந்தார்; + +அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால், அதற்கு + +விரவும் நன்மை என்? துன்மதி! விளம்பு''என வெகுண்டான்.         6.3.50 + + + +6366. "வயிற்றினுள் உலகு ஏழினோடு ஏழையும் வைக்கும் + +அயிர்ப்பு இல் ஆற்றல் என் அனுசனை ஏனம் ஒன்று ஆகி + +எயிற்றினால் எறிந்து இன் உயிர் உண்டவன் நாமம் + +பயிற்றவோ நினைப் பயந்தது நான்?''எனப் பகர்ந்தான்.         6.3.51 + + + +6367. "'ஒருவன், யாவர்க்கும் எவற்றிற்கும் உலகிற்கும் முதல்வன், + +தருதல், காத்து, அவை தவிர்த்தல் என்று இவை செயத் தக்கோன், + +கருமத்தால் அன்றிக் காரணத்தால் உள்ள காட்சி + +திருவிலீ! மற்று இது எம்மறைப் பொருள் எனத் தெரிந்தாய்?         6.3.52 + + + +6368. "'ஆதி அந்தங்கள் இதனின் மற்று இல்லை, பேர் உலகில்; + +வேதம் எங்ஙனம், அங்ஙனம் அவை சொன்ன விதியால், + +கோது இல் நல்வினை செய்தவர் உயர்குவர்; குறித்துத் + +தீது செய்தவர் தாழ்குவர்; இது மெய்ம்மை, தெரியின்.         6.3.53 + + + +6369. "'செய்த மாதவம் உடைமையின் அரி அயன் சிவன் என்று + +எய்தினர் பதம் இழந்தனர் யான் தவம் இயற்றிப் + +பொய் இல் நாயகம் பூண்டபின், இனி அது புரிதல் + +நொய்யது ஆகும் என்று, ஆரும் என் காவலின் நோலார்.         6.3.54 + + + +6370. "'வேள்வி ஆதிய புண்ணியம் தவத்தொடும் விலக்கி, + +கேள்வி யாவையும் தவிர்த்தனென், 'இவை கிளர்பகையைத் + +தாழ்வியாதன செய்யும்'என்று; அனையவர் தம்பால் + +வாழ்வு யாது? அயல் எவ் வழிப் புறங்கொண்டு வாழ்வார்?         6.3.55 + + + +6371. "'பேதைப் பிள்ளை நீ; பிழைத்தது பொறுத்தனென்; பெயர்த்தும், + +ஏது இல் வார்த்தைகள் இனையன விளம்பலை; முனிவன் + +யாது சொல்லினன், அவை அவை இதம் என எண்ணி, + +ஓது; போதி''என்று உரைத்தனன் உலகு எலாம் உயர்ந்தோன்.         6.3.56 + + + +பிரகலாதன், தன் தந்தையாகிய இரணியனுக்குத் திருமாலாகிய பரம்பொருளின் + +இயல்பினை அறிவுறுத்தல் (6372-6393) + + + +6372. "'உரை உளது உணர்த்துவது; உணர்ந்து கோடியேல்; + +விரை உள அலங்கலாய்! வேத வேள்வியின் + +கரை உளது; யாவரும் கற்கும் கல்வியின் + +பிரை உளது" என்பது மைந்தன் பேசினான்.         6.3.57 + + + +6373. "'வித்து இன்றி விளைவது ஒன்று இல்லை; வேந்த! நின் + +பித்து இன்றி உணர்தியேல், அளவைப் பெய்குவன்; + +'உய்த்து ஒன்றும் ஒழிவு இன்றி உணர்தல் பாற்று! எனா, + +கைத்து ஒன்று நெல்லி அம் கனியின் காண்டியால்.         6.3.58 + + + +6374. "'தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை + +தன்னுளே நின்று தான் அவற்றுள் தங்குவான் + +பின் இலன் முன் இலன் ஒருவன்; பேர்கிலன்; + +தொல் நிலை ஒருவரால் துணியற் பாலதோ?         6.3.59 + + + +6375. "'சித்து என அருமறைச் சிரத்தின் தேறிய + +தத்துவம் அவன்; அது தம்மைத் தாம் உணர் + +வித்தகர் அறிகுவர்; வேறு வேறு உணர் + +பித்தரும் உளர் சிலர்; வீடு பெற்றிலார்.         6.3.60 + + + +6376. "'அளவையான் அளப்ப அரிது; அறிவின் அப்புறத்து + +உளவை ஆய் உபநிடதங்கள் ஓதுவ; + +கிளவியால் பொருள்களால் கிளக்குறாதவன் + +களவை யார் அறிகுவார்? மெய்ம்மை கண்டிலார்.         6.3.61 + + + +6377. "'மூவகை உலகும் ஆய் குணங்கள் மூன்றும் ஆய் + +யாவையும் எவரும் ஆய் எண் இல் வேறுபட்டு + +ஓவல் இல் ஒரு நிலை ஒருவன் செய்வினை + +தேவரும் முனிவரும் உணரத் தேயுமோ?         6.3.62 + + + +6378. 'சாங்கியம் யோகம் என்று இரண்டு தன்மைய + +வீங்கிய பொருள் எலாம் வேறு காண்பன; + +ஆங்கு அவை உணர்ந்தவர்க்கு அன்றி அன்னவன் + +ஓங்கிய மேல் நிலை உணரற் பாலதோ?         6.3.63 + + + +6379. "'கருமமும் கருமத்தின் பயனும் அப்பயன் + +தரு முதல் தலைவனும் தானும் ஆனவன்; + +அருமையும் பெருமையும் அறிவரேல் அவர் + +இருமை என்று உரைசெயும் கடல்நின்று ஏறுவார்.         6.3.64 + + + +6380. "'மந்திரம் மாதவம் என்னும் மாலைய + +தந்துறு பயன் இவை முறையின் சாற்றிய + +நந்தல் இல் தயெ்வம் ஆய் நல்கும்; நான்மறை + +அந்தம் இல் வேள்விமாட்டு அவிசும் ஆம்         6.3.65 + + + +6381. "'முற்பயப் பயன் தரும் முன்னி நின்று அவர் + +பிற்பயப் பயன் தரும் பின்பு போய் அவன்; + +தன் பயன் தான் தரும் தருமம் இல்லை; அஃது + +அற்புத மாயையால் அறிகிலார் பிறர்.         6.3.66 + + + +6382. "'ஒரு வினை ஒரு பயன் அன்றி உய்க்குமோ? + +இரு வினை என்பவை இயற்றி இட்டவை; + +கருதின கருதின காட்டுகின்றது + +தரு பரன் அருள்; இனிச் சான்று வேண்டுமோ?         6.3.67 + + + +6383. "'ஒர் ஆவுதி கடைமுறை வேள்வி ஓம்புவோர் + +அரா அணை அமலனுக்கு அளிப்பிரேல் அது + +சராசரம் அனைத்தினும் சாரும் என்பது + +பராவ அரும் மறைப் பொருள்; பயனும் அன்னதால்.         6.3.68 + + + +6384. "'பகுதியின் உள் பயன் பயந்தது; அன்னதின் + +விகுதியின் மிகுதிகள் எவையும் மேலவர் + +வகுதியின் வசத்தன; வரவு போக்கு அது + +புகுதி இல்லாதவர் புலத்திற்று ஆகுமோ?         6.3.69 + + + +6385. "'எழுத்து இயல் நாளத்தின் எண் இலா வகை + +முழுத் தனி நான்முகன் முதல முற்று உயிர் + +வழுத்து அரும் பொகுட்டது ஓர் புரையின் வைகுமால் + +விழுத் தனிப் பல் இதழ் விரை உலாம் முகிழ்.         6.3.70 + + + +6386. "'கண்ணினும் கரந்து உளன்; கண்டு காட்டுவான்; + +உள் நிறைந்திடும் உணர்வு ஆகி உண்மையான்; + +மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் + +எண்ணினும் நெடியவன்; ஒருவன்; எண் இலான்         6.3.71 + + + +6387. "'சிந்தையின் செய்கையின் சொல்லின் சேர்ந்துளன்; + +இந்தியம் தொறும் உளன்; உற்றது எண்ணினால் + +முந்தை ஓர் எழுத்து என வந்து மும்முறைச் + +சந்தியும் பதமும் ஆய்த் தழைத்த தன்மையான்.         6.3.72 + + + +6388. "'காமமும் வெகுளியும் முதல கண்ணிய + +தீமையும் வன்மையும் தீர்க்கும் செய்கையான் + +நாமமும் அவன் பிற நலிகொடா நெடுஞ் + +சேமமும் பிறர்களாற் செப்பற் பாலவோ?         6.3.73 + + + +6389. "'காலமும் கருவியும் இடனும் ஆய் கடைப் + +பால் அமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய் + +சீலமும் அவைதரும் திருவும் ஆய் உளன் + +ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்.         6.3.74 + + + +6390. "'உள்ளுற உணர்வு இனிது உணர்ந்த ஓசை ஓர் + +தெள்விளி யாழிடைத் தெரியும் செய்கையின் + +உள் உளன்; புறத்து உளன்; ஒன்றும் நண்ணலான்; + +தள்(ள) அரு மறைகளும் மருளும் தன்மையான்.         6.3.75 + + + +6391. "'ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர் + +ஆம் அவன், அறிவினுக்கு அறிவும் ஆயினான் + +தாம மூவுலகமும் தழுவிச் சார்தலால், + +தூமமும் கனலும்போல் தொடர்ந்த தோற்றத்தான்.         6.3.76 + + + +6392. "'காலையின் நறுமலர் ஒன்றக் கட்டிய + +மாலையின் மலர்புரை சமய வாதியர் + +சூலையின் திருக்கு அலால் சொல்லுவோர்க்கு எலாம் + +வேலையும் திரையும் போல் வேறுபாடு இலான்.         6.3.77 + + + +6393. "'இன்னது ஓர் தன்மையன் இகழ்வுற்று எய்திய + +நல் நெடுஞ் செல்வமும் நாளும் நாம் அற + +மன்னுயிர் இழத்தி என்று அஞ்சி வாழ்த்தினேன் + +சொன்னவன் நாமம்" என்று உணரச் சொல்லினான்.         6.3.78 + + + +இரணியன் எல்லையற்ற வெகுளியுடையனாய்த் தன் புதல்வனைக் கொல்லுமாறு வீரர்களை ஏவுதலும் அவர்கள் பிரகலாதனைப் பற்றுதலும் (6394-6395) + + + +6394. 'எதிரில் நின்று, அவன், இவை உரைத்திடுதலும், எவ் உலகமும் அஞ்ச, + +முதிரும் வெம் கதம் மொழிகொடு மூண்டது, முது கடல் கடு ஏய்ப்ப; + +கதிரும் வானமும் சுழன்றன; நெடுநிலம் கம்பித்த; கனகன் கண் + +உதிரம் கான்றன; தோன்றின புகைக் கொடி; உமிழ்ந்தன கொடுந் தீயே.         6.3.79 + + + +6395. "'வேறும் என்னொடு தரும்பகை பிறிது இனி வேண்டல் என்? வினையத்தால் + +ஊறி, என்னுளே உதித்தது; குறிப்பு இனி உணர்குவது உளது அன்றால்; + +ஈறு இல் என்பெரும் பகைஞனுக்கு அன்புசால் அடியென் யான் என்கின்றான்; + +கோறிர்''என்றனன்; என்றலும் பற்றினர், கூற்றினும் கொலை வல்லார்.         6.3.80 + + + +இரணியனது ஆணையினை மேற்���ொண்ட அசுர வீரர்கள் பிரகலாதனைப் பல வழிகளில் கொல்ல முயலுதலும், பிரகலாதன் இறைவன் நாமத்தை இடைவிடாது எண்ணுதலால் அவ் விடையூறுகளிலிருந்து தப்பி உய்தலும் (6396-6431) + + + +6396. 'குன்று போல் மணிவாயிலின் பெரும் புறத்து உய்த்தனர், மழுக்கூர்வாள், + +ஒன்று போல்வன ஆயிரம் மீது எடுத்து ஓச்சினர்,"உயிரோடும் + +தின்று தீர்குதும்''என்குநர், உரும் எனத் தழெிக்குநர், சின வேழக் + +கன்று புல்லிய கோள் அரிக் குழு எனக் கனல்கின்ற தறுகண்ணார்.         6.3.81 + + + +6397. 'தாயின் மன்னுயிர்க்கு அன்பினன் தன்னை, அத் தவம் எனும் தகவு இல்லோர் + +"ஏ" என் மாத்திரத்து எய்தன எறிந்தன எறிதொறும் எறிதோறும் + +தூயவன்தனைத் துணை என உடைய அவ் ஒருவனைத் துன்னாதார் + +வாயின் வைதன ஒத்தன அத்துணை மழுவொடு கொலை வாளும்.         6.3.82 + + + +6398. 'எறிந்த, எய்தன, எற்றின, குற்றின, ஈர்ந்தன, படையாவும் + +முறிந்த, நுண்பொடி ஆயின, முடிந்தன; முனிவு இலான் முழுமேனி + +சொறிந்த தன்மையும் செய்தில ஆயின; தூயவன் துணிவு ஒன்றா + +அறிந்த நாயகன் சேவடி மறந்திலன்; அயர்த்திலன், அவன் நாமம்.         6.3.83 + + + +6399. "'உள்ள வான்பெரும் படைக்கலம் யாவையும் உக்கன - உரவோய் நின் + +பிள்ளை மேனிக்கு ஓர் ஆனி வந்திலது; இனிச் செயல் என்கொல் பிறிது?''என்ன, + +"கள்ள உள்ளத்தன் கட்டினன் கருவிகள்; கதுமெனக் கனல் பொத்தித் + +தள்ளுமின்''என உரைத்தனன்; வயவரும், அத்தொழில் தலை நின்றார்.         6.3.84 + + + +6400. 'குழியில் இந்தனம் அடுக்கினர், குன்று என; குடம் தொறும் கொணர்ந்து எண்ணெய் + +இழுது நெய் சொரிந்திட்டனர்; நெருப்பு எழுந்திட்டது, விசும்பு எட்ட, + +அழுது நின்றவர் அயர்வுற, ஐயனைப் பெய்தனர்;'அரி'என்று + +தொழுது நின்றனன், நாயகன் தாள் இணை; குளிர்ந்தது சுடுதீயே.'         6.3.85 + + + +6401. 'கால வெங்கனல் கதுவிய காலையில் - கற்புடையவள் சொற்ற + +சீல நல் உரைச் சீதம் மிக்கு அடுத்தலின், கிழியொடு நெய் தீற்றி, + +ஆலம் அன்ன நம் அரக்கர்கள் வயங்கு எரி மடுத்தலின் அனுமன்தன் + +கூலம் ஆம் என, என்பு உறக் குளிர்ந்தது, அக் குருமணித் திருமேனி.'         6.3.86 + + + +6402. "'சுட்டது இல்லை நின் தோன்றலை, சுடர்க் கனல் சுழிபடர் அழுவத்துள் + +இட்ட போதினும்; என் இனிச் செயத்தக்கது?''என்றனர், இகல் வெய்யோர்; + +"கட்டி, தீயையும் கடுஞ்சிறை இடுமின்; அக் கள்வனைக் கவர்ந்து உண்ண + +எட்டுப் பாம்பையும் விடுமின்கள்'' என்றனன், எரி எழு தறுகண்ணான்.'         6.3.87 + + + +6403. அனந���தனே முதலாகிய நாகங்கள், "அருள் என் கொல்" என, அன்னான் + +நினைந்த மாத்திரத்து எய்தின, நொய்தினின்; நெருப்பு உகு பகு வாயால், + +வனைந்ததாம் அன்ன மேனியினான் தன்மேல், வாள் எயிறு உற ஊன்றிச் + +சினம் தலைக் கொளக் கடித்தன; துடித்திலன், திருப்பெயர் மறவாதான்.         6.3.88 + + + +6404. 'பக்கம் நின்று அவை பயத்தினின் புயல் கறை பசும்புனல் பகுவாயின் + +கக்க, வெஞ்சினக் கலுழனும் நடுக்குற, கவ்விய காலத்து, + +செக்கர் மேகத்துச் சிறு பிறை நுழைந்து அ(ன்)ன செய்கைய, வலி சிந்தி + +உக்க, பற்குலம்; ஒழுகின எயிற்று இரும் புரைதொறும் அமிழ்து ஊறி.         6.3.89 + + + +6405. "'சூழப் பற்றின சுற்றும் எயிற்றின் + +போழக் கிற்றில" என்று புகன்றார்; + +"வாழித் திக்கின் மயக்கின் மதம் தாழ் + +வேழத்துக்கு இடுமின்" என விட்டான்.         6.3.90 + + + +6406. 'பசையில் தங்கல் இல் சிந்தையர் பல்லோர் + +திசையில் சென்றனர்;'செப்பினன்'என்னும் + +இசையின் தந்தனன் இந்திரன் என்பான் + +விசையின் திண்பணை வெஞ்சின வேழம்.         6.3.91 + + + +6407. 'கையில் கால்களில் மார்பு கழுத்தில் + +தயெ்வப் பாசம் உறப் பிணி செய்தார்; + +மையல் காய் கரி முன் உற வைத்தார்; + +பொய் அற்றானும் இது ஒன்று புகன்றான்.         6.3.92 + + + +6408. "'எந்தாய்! பண்டு ஒர் இடங்கர் விழுங்க + +முந்தாய் நின்ற முதற் பொருளே!" என்று + +உம் தாய் தந்தை இனத்தவன் ஓத + +வந்தான் என்றன் மனத்தினன் என்றான்.         6.3.93 + + + +6409. 'என்னா முன்னம் இருங் களிறும் தன் + +பொன் ஆர் ஓடை பொருந்த நிலத்தின் + +அன்னானைத் தொழுது அஞ்சி அகன்றது; + +ஒன்னார் அத்திறம் எய்தி உரைத்தார்.         6.3.94 + + + +6410. "'வல் வீரைத் துயில்வானை மதித்து என் + +நல் வீரத்தை அழித்தது; நண்ணுற்று + +ஒல்வீர்! ஒற்றை உரக் கரி தன்னைக் + +கொல்வீர்" என்றனன் நெஞ்சு கொதிப்பான்.         6.3.95 + + + +6411. 'தன்னைக் கொல்லுநர் சாருதலோடும் + +பொன்னைக் கொல்லும் ஒளிப் புகழ் பொய்யா + +மன்னைக் கொல்லிய வந்தது; வாரா + +மின்னைக் கொல்லும் வெயில் தின் எயிற்றால்.         6.3.96 + + + +6412. 'வீரத் திண்திறல் மார்பினில் வெள் கோடு + +ஆரக் குத்தி அழுத்தியது ஆக + +வாரத் தண் குலை வாழை மடல் சூழ் + +ஈரத் தண்டு என இற்றன எல்லாம்.         6.3.97 + + + +6413. 'வெண் கோடு இற்றன மேவலர் செய்யும் + +கண்கோடல் பொறியின் கடிது ஏகி + +'எண் கோடற்கு அரிது'என்ன வெகுண்டான் + +திண் கோடைக் கதிரின் தறெு கண்ணான்.         6.3.98 + + + +6414. "'தள்ளத் தக்கு இல் பெருஞ் சயிலத்தோடு + +எள்ளக் கட்டி எடுத்து விசித்து + +கள்ளத்து இங்கு இவனைக் கரை காணா + +வெள்ளத்து உய்த்திடுவீர்" என விட்டான்.         6.3.99 + + + +6415. "'ஒட்டிக் கொல்ல உணர்ந்து வெகுண்டான்; + +விட்டிட்டான் அலன்" என்று விரைந்தார் + +கட்டிக் கல்லொடு கால் விசையின்போய் + +இட்டிட்டார் கடலின் நடு எந்தாய்!’         6.3.100 + +         6.3. + +6416. 'நடு ஒக்கும் தனி நாயகன் நாமம் + +விடுகிற்கின்றிலன் ஆதலின் வேலை + +மடு ஒத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய் + +குடுவைத் தன்மையது ஆயது குன்றம்.         6.3.101 + + + +6417. 'மோதுற்று ஆர் திரை வேலையில் மூழ்கான் + +மீதுற்று ஆர் சிலைமீது கிடந்தான் + +ஆதிப் பண்ணவன் ஆயிர நாமம் + +ஓதுற்றான் மறை எல்லை உணர்ந்தான்’         6.3.102 + + + +6418. 'தலையில் கொண்ட தடக் கையினான் தன் + +நிலையின் தீர்வு இல் மனத்தின் நினைந்தான்; + +சிலையில் தண்புனலில் சினை ஆலின் + +இலையில் பிள்ளை எனப் பொலிகின்றான்.         6.3.103 + + + +6419. "'அடியார் அடியேன் எனும் ஆர்வம் அலால் + +ஒடியா வலி யான் உடையேன் உளெனோ? + +கொடியாய்! குறியாய்! குணம் ஏதும் இலாய்!" + +நெடியாய்! அடியேன் நிலை நேர்குதியோ?         6.3.104 + + + +6420. "'கள்ளம் திரிவாரவர் கைதவன் நீ; + +உள்ளம் தெரியாத உனக்கு உளவோ?" + +துள்ளும் பொறியின் நிலை சோதனைதான் + +வெள்ளம் தரும் இன் அமுதே! விதியோ?’         6.3.105 + + + +6421. "'வரு நான்முகனே முதல் வானவர்தாம் + +திரு நான்மறையின் நெறியே திரிவார் + +பெரு நாள் தெரிகின்றிலர்; பேதைமையேன் + +ஒரு நாள் உனை எங்ஙனம் உள்ளுவெனோ?         6.3.106 + + + +6422. "'செய்யாதனவோ இலை தீவினைதான் + +பொய்யாதன வந்து புணர்ந்திடுமால்; + +மெய்யே உயிர் தீர்வது ஒர் மேல்வினை நீ + +ஐயா! ஒரு நாளும் அயர்த்தனையோ?         6.3.107 + + + +6423. "'ஆயப்பெறும் நல்நெறி தம் அறிவு என்று + +ஏயப்பெறும் ஈசர்கள் எண்ணிலரால்; + +நீ அப்புறம் நிற்க நினைக்கிலர்; நின் + +மாயப் பொறி புக்கு மயங்குவரால்.         6.3.108 + + + +6424. "'தாமே தனி நாயகராய்'எவையும் + +போமே பொருள்'என்ற புராதனர் தாம் + +'யாமே பரம்'என்றனர்; என்ற அவர்க்கு + +ஆமே? பிறர் நின் அலது ஆர் உளரே?         6.3.109 + + + +6425. "'ஆதிப் பரம் ஆம் எனில் அன்று எனல் ஆய் + +ஓது அப்பொருள் நூல்கள் உலப்பு இலவால்; + +பேதிப்பன; நீ அவை பேர்கிலையால்; + +வேதப் பொருளே! விளையாடுதியோ?         6.3.110 + + + +6426 "'அம்போருகனார் அரனார் அறியார்; + +எம்போலியர் எண்ணிடின் என் பலவா? + +கொம்போடு அடை பூ கனி காய் எனினும் + +வம்போ'மரம் ஒன்று'எனும் வாசகமே?         6.3.111 + + + +6427. "'நின்னின் பிறிதா��் நிலையின் திரியா + +தன்னின் பிறிது ஆயினதாம் எனினும் + +உன்னின் பிறிது ஆயினவோ உலகம்? + +பொன்னின் பிறிது ஆகில பொற்கலனே.         6.3.112 + + + +6428. "'தாய் தந்தை எனும் தகை வந்தனைதான் + +நீ தந்தனை; நீ உறு நெஞ்சினன் நான்; + +நோய் தந்தவனே நுவல் தீர்வும்" எனா + +வாய் தந்தன சொல்லி வணங்கினனால்.         6.3.113 + + + +6429. 'அத்தன்மை அறிந்த அருந் திறலோன் + +"உய்த்து உய்ம்மின் என்முன்" என உய்த்தனரால்; + +"பித்துண்டது பேர்வுறுமா பெறுதும்; + +கைத்தும் கடு நஞ்சின்" எனக் கனலா         6.3.114 + + + +6430. 'இட்டார் கடு வல்விடம்; எண்ணுடையான் + +தொட்டான் நுகரா ஒரு சோர்வு இலனால்; + +கட்டு ஆர் கடு மத்திகை கண் கொடியோன் + +விட்டான்; அவன்மேல் அவர் வீசினரால்.         6.3.115 + + + +6431. 'வெய்யார் முடிவு இல்லவர் வீசியபோது + +"உய்யான்" எனும் வேலையின்"உள் உறைவோன் + +கை ஆயிரம் அல்ல; கணக்கு இல" என்று + +எய்யா உலகு யாவையும் எண்ணினனால்.         6.3.116 + + + +பிரகலாதனைப் பலவகையாகக் கொல்ல முயன்றும் அவன் இறவாமையை அறிந்த இரணியன்'யானே இவனுயிரை உண்பேன்'என அவனை நெருங்குதல் + + + +6432. "'ஊனோடு உயிர் வேறுபடா உபயம் + +தானே உடையன் தனி மாயையினால்; + +யானே உயிர் உண்பல்" எனக் கனலா + +வான் ஏழும் நடுங்கிட வந்தனனால்.         6.3.117 + + + +பிரகலாதனுக்கும் இரணியனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் (6433-6441) + + + +6433. 'வந்தானை வணங்கி"என் மன்னுயிர்தான் + +எந்தாய்! கொள எண்ணினையேல் இதுதான் + +உந்தா; அரிது அன்று; உலகு யாவும் உடன் + +தந்தார் கொள நின்றதுதான்" எனலும்.         6.3.118 + + + +6434. "'ஏவரே உலகம் தந்தார்? என் பெயர் ஏத்தி வாழும் + +மூவரே? அல்லர் ஆகின் முனிவரே? முழுதும் தோற்ற + +தேவரே? பிறரே? யாரே? செப்புதி தெரிய''என்றான், + +கோவம் மூண்டு எழுந்தும் கொல்லான், காட்டுமேல் காட்சி கொள்வான்.         6.3.119 + + + +6435. "'உலகு தந்தானும், பல்வேறு உயிர்கள் தந்தானும், உள் உற்று, + +உலைவு இலா உயிர்கள் தோறும் அங்கு அங்கே உறைகின்றானும், + +மலரினில் வெறியும் எள்ளில் எண்ணெயும் மான, எங்கும் + +அலகு இல் பல் பொருளும் பற்றி முற்றிய அரிகாண் அத்தா         6.3.120 + + + +6436. 'என்கணால் நோக்கிக் காணாய், எங்கணும் உளன்காண், எந்தை! + +உன்கண் நான் அன்பிற் சொன்னால் உறுதி என்று ஒன்றும் கொள்ளாய்; + +நின் கணால் நோக்கிக் காண்டற்கு எளியனோ? நினக்குப் பின்னோன் + +பொன் கணான் ஆவி உண்ட புண்டரீகக் கண் அம்மான்.         6.3.121 + + + +6437. "'மூன்று அவன் குணங்கள்; செய்கை மூன்று; அவன் உர���வம் மூன்று; + +மூன்று கண், சுடர்கொள் சோதி மூன்று; அவன் உலகம் மூன்று; + +தோன்றலும் இடையும் ஈறும் தொடங்கிய பொருள்கட்கு எல்லாம் + +சான்று அவன்; இதுவே வேத முடிவு : இது சரதம்''என்றான்.         6.3.122 + + + +6438. என்றலும் அவுணர் வேந்தன் எயிற்று அரும்பு இலங்க நக்கான், + +"ஒன்றல் இல் பொருள்கள் எல்லாம் ஒருவன் புக்கு உறைவன்'என்றாய்; + +நன்று, அது கண்டு பின்னர் நல்லவா புரிது; தூணின் + +நின்றுளன் என்னின், கள்வன், நிரப்புதி நிலைமை''என்றான்.         6.3.123 + + + +6439. "'சாணினும் உளன்; ஓர் தன்மை அணுவினைச் சதகூறு இட்ட + +கோணினும் உளன்; மாமேருக் குன்றினும் உளன்; இந் நின்ற + +தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன்; இத்தன்மை + +காணுதி விரைவின்'என்றான்; 'நன்று'எனக் கனகன் சொன்னான் :         6.3.124 + + + +6440. "'உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை, + +கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டாய் ஆகில், + +கும்பத்திண் கரியைக் கோள்மாக் கொன்றென, நின்னைக் கொன்று உன் + +செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்''என்றான்.         6.3.125 + + + +6441. "'என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்று அன்று; யான் முன் + +சொன்னவன் தொட்ட தொட்ட இடந்தொறும் தோன்றான் ஆயின், + +என் உயிர் யானே மாய்ப்பல்; பின்னும் வாழ்வு உகப்பல் என்னின், + +அன்னவற்கு அடியேன் அல்லேன்'' என்றனன் அறிவின் மிக்கான்.         6.3.126 + + + +இரணியன், அங்குள்ள தூண்களில் ஒன்றினைத் தன் கையினால் அறைந்து தாக்க அத்தூணின்கண்ணே நரசிங்கம் தோன்றிச் சிரித்தல் + + + +6442. 'நசை திறந்து இலங்கப் பொங்கி, "நன்று, நன்று" என்ன நக்கு, + +விசை திறந்து உருமு வீழ்ந்தது என்ன ஓர் தூணின், வென்றி + +இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான்; எற்றலோடும், + +திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது, அச் செங்கண் சீயம்.         6.3.127 + + + +சிங்கத்தின் சிரிப்பொலி கேட்டுப் பிரகலாதன் மகிழ்தல் + + + +6443. "'நாடி நான் தருவென்" என்ற நல் அறிவாளன், நாளும் + +தேடி நான்முகனும் காணாச் சேயவன் சிரித்தலோடும், + +ஆடினான்; அழுதான்; பாடி அரற்றினான்; சிரத்தில் செங்கை + +சூடினான்; தொழுதான்; ஓடி உலகெலாம் துகைத்தான், துள்ளி.         6.3.128 + + + +தூணினுள் நின்று சிரித்த இறைவனைப் போருக்குப் புறப்படுக என இரணியன் அறைகூவி அழைத்தல் + + + +6444. "'ஆர் அடா சிரித்தாய்? சொன்ன அரிகொலோ? அஞ்சிப் புக்க + +நீர், அடா, போதாது என்று, நெடுந்தறி நேடினாயோ? + +போர் அட��� பொருதி ஆயின், புறப்படு! புறப்படு!''என்றான் + +பேர் அடா நின்ற தாேளாடு உலகு எலாம் பெயரப் பேர்வான்.         6.3.129 + + + +நரசிங்கப்பிரான் தூணைப் பிளந்து வெளிப்பட்டுப் பேருருவம் கொள்ளுதல் + + + +6445. 'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை + +வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும் + +அளந்தது; அப்புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்? + +கிளர்ந்தது; ககனமுட்டை கிழிந்தது கீழும் மேலும்.         6.3.130 + + + +நரசிங்கமூர்த்தியின் பேருருவத் தோற்றம் (6446-6451) + +6446. 'மன்றல் அம் துளபம் மாலை மானிட மடங்கல், வானில் + +சென்றது தெரிதல் தேற்றாம்; சேவடி படியில் தீண்ட + +நின்றது ஓர் பொழுதின், அண்ட நெடு முகட்டு இருந்த முன்னோன் + +அன்று அவன் உந்தி வந்தானாம் எனத் தோன்றினானால்         6.3.131 + + + +6447. "'எத்துணை போதும் கை?" என்று இயம்பினால் எண்ணற்கு ஏற்ற + +வித்தகர் உளரோ? அந்தத் தானவர் விரிந்த சேனை + +பத்து நூறு அமைந்த கோடி வெள்ளத்தால் பகுதி செய்த + +அத்தனை கடலும் மாளத் தனித்தனி அள்ளிக் கொண்ட.         6.3.132 + + + +6448. 'ஆயிரம் கோடி வெள்ளத்து அயில் எயிற்று அவுணர்க்கு அங்கு அங்கு + +ஏயின ஒருவர்க்கு ஓர் ஓர் திருமுகம், இரட்டி பொன் தோள், + +தீ எனக் கனலும் செங்கண் சிரம் தொறும் மூன்று, தயெ்வ + +வாய் எனில், கடல்கள் ஏழும், மலைகளும், மற்றும், முற்றும்.         6.3.133 + + + +6449. 'முடங்கு வார் உளை, அ(வ்) அண்டம் முழுவதும் முடிவின் உண்ணும் + +கடம் கொள் வெம் காலச் செந்தீ அதனை வந்து அழிக்கும்; கால + +மடங்கலின் உயிர்ப்பு, மற்று அக்காற்றினை மாற்றும்; ஆனால், + +அடங்கலும் பகுவாய் யாக்கை அப்புறத்து அகத்தது அம்மா!         6.3.134 + + + +6450. 'குயிற்றிய அண்டம் குஞ்சை இட்டிலா முட்டை முட்டப் + +பயிற்றிய பருவம் ஒத்த காலத்துள் அமுது பல்கும் + +எயிற்று வன் பகு வாயுள் புக்கு இருக்குந இருக்கை எய்தி; + +வயிற்றின் வந்து அந்நாள் இந்நாள் வாழும் மன்னுயிர்கள் மன்னோ.         6.3.135 + + + +6451. 'நன்மையின் தொடர்ந்தார்க்கு உண்டோ, கேடு? நான்முகத்தோன் ஆதி + +தொன்மையின் தொடர்ந்த வாய்மை அறம் அத்து ஒடும் தொடர்ந்திலோரை + +அன்வயித்து, ஓரும் தீய அவுணர் அல்லாரை அந்நாள் + +தன் வயிறு அகத்து வைத்துத் தந்தது, அச் சீயம், தாயின்.         6.3.136 + + + +நரசிங்கமூர்த்தி அசுரர்களை அழித்தல் (6452-6458) + + + +6452. 'பேர் உடை அவுணர் தம்மைப் பிறை எயிற்று அடக்கும்; பேரா, + +பார் இடைத் தேய்க்கும்; மீளப் பகிரண்டத்து அடிக்கும்; பற்றி, + +மேருவில் புடைக்கும்; மாள விரல்களின் பிசையும்; வேலை + +நீர் இடை குமிழி ஊட்டும்; நெருப்பு இடைச் சுரிக்க நீட்டும்;         6.3.137 + + + +6453. 'வகிர்படத் துணிக்கும்; பற்றி வாய்களைப் பிளக்கும்; வன்தோல் + +சுகிர்படுத்து உரிக்கும்; செந்தீக் கண்களைச் சூலும்; சுற்றிப் + +பகிர்படக் குடரைக் கொய்யும்; பசை அறப் பிசையும்; பல்கால் + +உகிர்புரைப் புக்கோர் தம்மை உகிர்களால் உறக்கும், ஊன்றி;         6.3.138 + + + +6454. "யானையும், தேரும், மாவும், யாவையும், உயிர் இராமை, + +ஊனொடும் தின்னும்; பின்னை, ஒலிதிரைப் பரவை ஏழும் + +மீனொடும் குடிக்கும்; மேகத்து உருமொடும் விழுங்கும் விண்ணில்; + +"தான் ஒடுங்காது" என்று, அஞ்சித் தருமமும் சலித்தது அம்மா!         6.3.139 + + + +6455. 'ஆழி மால் வரையோடு எற்றும், சிலவரை; அண்ட கோளச் + +சூழ் இருஞ் சுவரில் தேய்க்கும், சிலவரை; துளக்கு இல் குன்றம் + +ஏழினோடு எற்றிக் கொல்லும், சிலவரை; எட்டுத் திக்கும் + +தாழ் இருட் பிழம்பின் தேய்க்கும், சிலவரைத் தடக்கை தாக்கி.         6.3.140 + + + +6456. 'மலைகளின் புரண்டு வீழ, வள் உகிர் நுதியால், வாங்கி, + +தலைகளைக் கிள்ளும்; அள்ளித் தழல் எழப் பிசையும்; தக்க + +கொலைகளின் கொல்லும்; வாங்கி உயிர்களைக் குடிக்கும்; வன + +நிலைகளில் பரக்க, வேலை நீர்களை நிரம்பத் தூர்க்கும்;         6.3.141 + + + +6457. 'முப்புறத்து உலகத் துள்ளும் ஒழிவு அற முற்றும் பற்றி, + +தப்பு உறல் இன்றிக் கொன்று, தையலார் கருவும் தள்ளி, + +இப்புறத்து அண்டத்து யாரும் அவுணர் இல்லாமை எற்றி, + +அப்புறத்து அண்டம் தோறும் தடவின, சிலகை அம்மா!         6.3.142 + + + +6458. 'கனகனும், அவனில் வந்த வானவர் களைகண் ஆன + +அனகனும் ஒழிய, பல்வேறு அவுணர் ஆனவரை எல்லாம் + +நினைவதன் முன்னம் கொன்று நின்றது அந்நெடுங்கண் சீயம் + +வனைகழலவனும், மற்று அ(ம்) மடங்கலின் வரவு நோக்கி,         6.3.143 + + + +சினமிக்க இரணியன், வாளும் கேடகமும் ஏந்தி நரசிங்கத்துடன் போர் செய்யப் புறப்படுதல் + + + +6459. 'வயிர வாள் உறையின் வாங்கி, வானகம் மறைக்கும் வட்டச் + +செயிர் அறு கிடுகும் பற்றி, வானவர் உள்ளம் தீய, + +அயிர் படர் வேலை ஏழும் மலைகளும் அஞ்ச, ஆர்த்து, அங்கு + +உயிருடை மேரு என்ன வாய் மடித்து, உருத்து நின்றான்.         6.3.144 + + + +அது கண்ட பிரகலாதன், நரசிங்கப்பிரானைப் பணிந்து உய்தி பெறுமாறு இரணியனுக்கு அறிவுறுத்தல் + + + +6460. 'நின்றவன் தன்னை நோக்கி, "நிலை இது கண்டு, நீயும் + +ஒன்றும் உன் உள்ளத்து யாதும் உணர்ந்திலை போலும் அன்றே; + +வன்தொழில் ஆழி வேந்தை வணங்குதி; வணங்கவே, உன் + +புன்தொழில் பொறுக்கும்''என்றான் உலகு எலாம் புகழ நின்றான்.         6.3.145 + + + +அதற்கு உடம்படாமல் இரணியன் பிரகலாதனைச் சினந்து சூளுரைத்து நகுதல் + + + +6461. "'கேள், இது; நீயும் காண, கிளர்ந்த கோள் அரியின் கேழ் இல் + +தோெளாடு தாளும் நீக்கி, நின்னையும் துணித்து, பின், என் + +வாளினைத் தொழுவது அல்லால், வணங்குதல் மகளிர் ஊடல் + +நாளினும் உளதோ?''என்னா அண்டங்கள் நடுங்க நக்கான்.         6.3.146 + + + +நரசிங்கப்பிரான் இரணியனது மார்பைப் பிளந்து அவனது உயிரைப் போக்குதல் (6462-6468) + + + +6462. 'நகை செயா, வாயும் கண்ணும் வாெளாடு நடந்த தாளும் + +புகைசெயா, நெடுந் தீப் பொங்க உருத்து எதிர்பொருந்தப் புக்கான்; + +தொகை செயற்கு அரிய தோளால் தாள்களால் சுற்றிச் சூழ்ந்தான்; + +மிகை செய்வார் வினைகட்கு எல்லாம் மேற்செயும் வினையம் வல்லான்.         6.3.147 + + + +6463. 'இருவரும் பொருந்தப் பற்றி, எவ் உலகுக்கும் மேலாய், + +'ஒருவரும் காணா வண்ணம் உயர்ந்ததற்கு உவமை கூறின், + +வெரு வரு தோற்றத்து, அஞ்சா, வெஞ்சின, அவுணன், மேரு + +அருவரை ஒத்தான்; அண்ணல், அல்லவை எல்லாம் ஒத்தான்.         6.3.148 + + + +6464. 'ஆர்ப்பு ஒலி முழக்கின் வெவ் வாய் வள் உகிர்ப் பாரம் ஆன்ற + +ஏற்று அருங் கரத்தின், பல்வேறு எறிதிரைப் பரப்பின் உற்ற, + +பாற்கடல், பரந்து பொங்கிப் பங்கயத்து ஒருவன் நாட்டின் + +மேல் சென்றது ஒத்தான் மாயன்; கனகனும் மேரு ஒத்தான்.         6.3.149 + + + +6465. 'வாெளாடு தோளும், கையும், மகுடமும், மலரோன் வைத்த + +நீள் இருங் ககன முட்டை நெடுஞ்சுவர் தேய்ப்ப, நேமி + +கோெளாடும் திரிவது என்னக் குலமணிக் கொடும் பூண் மின்ன, + +தாள் இணை இரண்டும் பற்றிச் சுழற்றினன்; தடக்கை ஒன்றால்.         6.3.150 + + + +6466. 'சுழற்றிய காலை, காதில் தூங்கு குண்டலங்கள் நீங்கி, + +கிழக்கொடு மேற்கின் ஓடி விழுந்தன கிடந்த, இன்றும் + +அழல்தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தம் ஆன; + +நிழல் தரும், காலை மாலை, நெடு மணிச் சுடரின் நீத்தம்.         6.3.151 + + + +6467. "'போன்றன இனைய தன்மை; பொருவியது இனையது" என்று + +தான் தனி ஒருவன், தன்னை உரைசெயும் தரத்தினானோ? + +வான்தரு வள்ளல் வெள்ளை வள் உகிர் வயிர மார்பின் + +ஊன்றலும், உதிர வெள்ளம் பரந்துளது, உலகம் எங்கும்.         6.3.152 + + + +6468. 'ஆயவன் தன்னை, மாயன் அந்தியின், அவன் பொன் கோய���ல் + +வாயிலில், மணிக் கவான்மேல், வயிர வாள் உகிரின், வானின் + +மீ எழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு + +தீ எழப் பிளந்து நீக்கி, தேவர்கள் இடுக்கண் தீர்த்தான்.'         6.3.153 + + + +முன்பு இரணியனுக்கு அஞ்சியோடி ஒளிந்திருந்த தேவர்கள் அவன் இறந்த நிலையில் அங்கு வந்து குழுமி நரசிங்கத்தின் தோற்றத்தைக் கண்டு அஞ்சி நிற்றல்(6469-6470) + + + +6469. 'முக்கணான் எண்கணானும், முளரி ஆயிரக் கணானும், + +திக்கண் ஆம் தேவரோடு முனிவரும், பிறரும், தேடிப் + +புக்க நாடு அறிகுறாமல் திரிகின்றார், புகுந்து மொய்த்தார்; + +"எக்கணால் காண்டும் எந்தை உருவம்" என்று இரங்கி நின்றார்.'         6.3.154 + + + +6470. 'நோக்கினார் நோக்கினார் முன், நோக்குறு முகமும் கையும் + +ஆக்கையும் தாளும் ஆகி, எங்கணும் தானே ஆகி, + +வாக்கினால் மனத்தினால் மற்று அறிவினால் அளக்க வாரா, + +மேக்கு உயர் சீயம் தன்னைக் கண்டனர் வெருவு கின்றார்.'         6.3.155 + + + +பிரமதேவன் நரசிங்கப்பிரானைத் துதித்தல் (6471-6475) + + + +6471. 'பல்லொடு பல்லுக்கு எல்லை ஆயிரக் காதப் பத்தி, + +சொல்லிய வதனம் கோடி கோடி மேல் விளங்கித் தோன்ற, + +எல்லை இல் உருவிற்று ஆகி இருந்ததை எதிர நோக்கி, + +அல்லி அம் கமலத்து அண்ணல் அவன் புகழ் விரிப்பதானான்.'         6.3.156 + + + +6472. "'தன்னைப் படைத்ததுவும் தானே எனும் தன்மை + +பின்னைப் படைத்ததுவே காட்டும்; பெரும் பெருமை + +உன்னைப் படைத்தாய் நீ என்றால், உயிர் படைப்பான் + +என்னைப் படைத்தாய் நீ எனும் இதுவும் ஏத்து ஆமோ?         6.3.157 + + + +6473. "'பல் ஆயிரங்கோடி அண்டம், பனிக் கடலுள் + +நில்லாத மொக்குள் எனத் தோன்றுமால், நின்னுழையே; + +எல்லா உருவமும் நீ என்றக்கால், இவ் உருவம் + +வல்லே குறித்தால், வரம்பு இன்மை வாராதோ?         6.3.158 + + + +6474. "'பேரை ஒரு பொருட்கே பல் வகையால் பேர்த்து எண்ணும் + +தாரை நிலையை; தமியை; பிறர் இல்லை; + +யாரைப் படைக்கின்றது? யாரை அளிக்கின்றது? + +ஆரைத் துடைக்கின்றது? ஐயா! அறியேமால்.         6.3.159 + + + +6475. "'நின்னுளே என்னை நிருமித்தாய்; நின் அருளால், + +என்னுளே, எப்பொருளும் யாவரையும் யான் ஈன்றேன்; + +பின் இலேன்; முன் இலேன்; எந்தை பெருமானே! + +பொன்னுளே தோன்றியது ஓர் பொன் கலனே போல்கின்றேன்.         6.3.160 + + + +நரசிங்கப்பிரான் சீற்றம் தணிந்து தேவர்கட்கு அபயம் அளித்தல் (6476-6477) + + + +6476. 'என்று ஆங்கு இயம்பி இமையாத எண் கணனும் + +வன்தாள் மழுவோனும் யாரும் வணங்கினார்; + +நின்றார் இருமருங்கும்; ���ேமிப் பெருமானும் + +ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான்.         6.3.161 + + + +திருமகளாகிய பெரிய பிராட்டியை நரசிங்கப்பிரான் அருகில் செல்லுமாறு தேவர்கள் வேண்டியனுப்ப, அப் பிராட்டியைச் சிங்கப்பிரான் அருெளாடு நோக்குதல் (6478-6479) + + + +6477. "எஞ்சும், உலகு அனைத்தும் இப்பொழுதே" என்று என்று, + +நெஞ்சு நடுங்கும் நெடுந் தேவரை நோக்கி, + +"அஞ்சன்மின்" என்னா, அருள் சுரந்த நோக்கினான், + +கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான்.         6.3.162 + + + +6478. 'பூவில் திருவை, அழகின் புனைகலத்தை, + +யாவர்க்கும் செல்வத்தை, வீடு ஈனும் இன்பத்தை, + +ஆவித் துணையை, அமுதின் பிறந்தாளை, + +தேவர்க்கும் தம் மோயை, ஏவினார், பாற் செல்ல.         6.3.163 + + + +6479. 'செந் தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும் + +நந்தா விளக்கை, நறுந்தாள் இளங் கொழுந்தை, + +முந்தா உலகும் உயிரும் முறை முறையே + +தந்தாளை நோக்கினான், தன் ஒப்பு ஒன்று இல்லாதான்.         6.3.164 + + + +நரசிங்கப்பிரான் தன்பால் அன்புடைய பிரகலாதனை நோக்கி அருள் செய்தல் (6480-6483) + + + +6480. 'தீது இலா ஆக உலகு ஈன்ற தயெ்வத்தைக் + +காதலால் நோக்கினான்; கண்ட முனிக் கணங்கள் + +ஓதினார் சீர்த்தி; உயர்ந்த பரஞ்சுடரும் + +நோதல் ஆங்கு இல்லாத அன்பனையே நோக்கினான்.         6.3.165 + + + +6481. "'உந்தையை உன்முன்னே கொன்று, உடலைப் பிளந்து அளைய, + +சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்! + +அந்தம் இலா அன்பு என்மேல் வைத்தாய்! அளியத்தாய்! + +எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது?''என்றான்         6.3.166 + + + +6482. "'அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட + +செயிரின் ஒரு பொழுதின் உந்தையை யான் சீறி, + +உயிர் நேடுவேன் போல், உடல் அளையக், கண்டும் + +செயிர் சேரா உள்ளத்தாய்க்கு, என் இனியான் செய்கேனே?         6.3.167 + + + +6483. "'கொல்லேன், இனி உன் குலத்தோரை, குற்றங்கள் + +எல்லை இலாதன செய்தாரே என்றாலும்; + +நல்லேன், உனக்கு; என்னை நாணாமல் நான் செய்வது + +ஒல்லை உளதேல், இயம்புதியால்''என்று உரைத்தான்.         6.3.168 + + + +பிரகலாதன் அன்பே பெரும்பேறென வேண்டுதல் + + + +6484. "'முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை; + +பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுவேனேல் + +என்பு பெறாத இழிபிறவி எய்திடினும் + +அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்" என்றான்.         6.3.169 + + + +நரசிங்கப்பிரான் அருள்புரிதல் (6485-6488) + + + +6485. 'அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய் + +"என் ஆனை வல்லன்" என மகிழ்ந்த பேர் ஈசன் + +"முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும் + +உன் நாள் உலவாய் நீ என்போல் உளை" என்றான்.         6.3.170 + + + +6486. "'மின்னைத் தொழு வளைத்தது அன்ன மிளிர் ஒளியாய்! + +முன்னைத் தொழும்புக்கே ஆம் அன்றோ மூ உலகும்? + +என்னைத் தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி + +உன்னைத் தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம்.         6.3.171 + + + +6487. "'ஏனவர்க்கு வேண்டின், எளிது ஒன்றோ? எற்கு அன்பர் + +ஆனவர்கள் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார்; + +தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ? + +வானவர்க்கும் நீயே இறை - தொல்மறை வல்லோய்!         6.3.172 + + + +6488. "'நல் அறமும், மெய்ம்மையும், நான்மறையும், நல் அருளும், + +எல்லை இலா ஞானமும், ஈறு இலா எப்பொருளும், + +தொல்லை சால் எண்குணனும், நின் சொல் தொழில் செய்க; + +நல்ல உரு ஒளியாய், நாளும் வளர்க நீ.         6.3.173 + + + +நரசிங்கப்பிரான் தேவர்களை நோக்கிப் பிரகலாதனுக்கு முடிசூட்டுவதற்கு ஆவன செய்யுமாறு பணித்தல் + +6489. 'என்று வரம் அருளி எவ் உலகும் கை கூப்ப + +முன்றில் முரசம் முழங்க முடி சூட்ட + +"நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு + +ஒன்று பெருமை உரிமை புரிக" என்றான்.         6.3.174 + + + +பிரகலாதன் முடிசூட்டப் பெறுதல் + + + +6490. 'தே மன் உரிமை புரிய திசை முகத்தோன் + +ஓமம் இயற்ற உடையான் முடி சூட்ட + +கோ மன்னவன் ஆகி மூ உலகும் கைக் கொண்டான்; + +நாம மறை ஓதாது ஓதி நனி உணர்ந்தான்.         6.3.175 + + + +வீடணன் இராவணனை நோக்கிக் கூறிய முடிப்புரை + + + +6491. "'ஈது ஆகும், முன் நிகழ்ந்தது; எம் பெருமான்! என் மாற்றம் + +யாதானும் ஆக நினையாது, இகழ்தியேல், + +தீது ஆய் விளைதல் நனி திண்ணம்''எனச் செப்பினான், + +மேதாவிகட்கு எல்லாம் மேலாய மேன்மையான்.         6.3.176 + +------------------ + + + +6.4 வீடணன் அடைக்கலப் படலம் (6492- 6643) + + + +இராவணன் வீடணன் சொல்லைக் கேட்டுச் சினந்து கூறுதல் (6492-6500) + + + +6492. கேட்டனன் இருந்தும் அக் கேள்வி தேவியின் + +கோட்டிய சிந்தையான் உறுதி கொண்டிலன் + +மூட்டிய தீ என முடுகிப் பொங்கினான் + +ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண்கணான்.         6.4.1 + + + +6493. "'இரணியன் என்பவன் எம்மனோரினும் + +முரணியன்; அவன்தனை முருக்கி முற்றினான், + +அரணியன்''என்று, அவற்கு அன்பு பூண்டனை + +மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய்'         6.4.2 + + + +6494. 'ஆயவன் வளர்த்த தன் தாதை ஆகத்தை + +மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும் + +ஏயும் நம் பகைவனுக்கு இனிய நண்பு செய் + +நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ         6.4.3 + + + +6495. பாழிசால் இரணியன் புதல்வன் பண்பு எனச் + +சூழ் வினை முற்றி யான் அவர்க்குத் தோற்ற பின் + +ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்திப் பின் + +வாழவோ கருத்து? அது வர வற்று ஆகுமோ?         6.4.4 + + + +6496. 'முன்புற அனையர்பால் நண்பு முற்றினை; + +வன்பகை மனிதரின் வைத்த அன்பினை; + +என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி; + +உன்புகல் அவர்; பிறிது உரைக்க வேண்டுமோ?         6.4.5 + + + +6497. நண்ணினை மனிதரை; நண்பு பூண்டனை; + +எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு + +உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை; + +திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ?         6.4.6 + + + +6498. அன்று வானரம் வந்து நம் சோலையை அழிப்பக் + +"கொன்று தின்றிடுமின்!" எனத் தூதரைக் கோறல் + +வென்றி அன்று என விலக்கினை; மேல்விளைவு எண்ணி; + +துன்று தாரவன் துணை எனக் கோடலே துணிந்தாய்.         6.4.7 + + + +6499. 'அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை; + +தஞ்சு என மனிதர்பால் வைத்த சார்பினை; + +வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாற்றினை; + +நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ?         6.4.8 + + + +6500. 'பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை; + +ஒழி சில புகலுதல் : ஒல்லை நீங்குதி; + +விழி எதிர் நிற்றியேல் விளிதி" என்றனன் + +அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.         6.4.9 + + + +வீடணன் விண்ணில் எழுந்து நின்று நீதி பல கூறுதல் (6501-6503) + + + +6501. என்றலும் இளவலும் எழுந்து வான் இடைச் + +சென்றனன் துணைவரும் தானும் சிந்தியா + +நின்றனன்; பின்னரும் நீதி சான்றன + +ஒன்று அல பல பல உறுதி ஓதினான்.         6.4.10 + + + +6502. 'வாழியாய்! கேட்டியால்; வாழ்வு கைம் மிக + +ஊழி காண்குறும் நினது உயிரை ஓர்கிலாய் + +கீழ்மையோர் சொற் கொடு கெடுதல் நேர்தியோ? + +வாழ்மைதான் அறம் பிழைத்தவர்க்கு வாய்க்குமோ?         6.4.11 + + + +6503. 'புத்திரர் குருக்கள் நின் பொருவு இல் கேண்மையர் + +மித்திரர் அடைந்துேளார் மெலியர் வன்மையோர் + +இத்தனை பேரையும் இராமன் வெஞ் சரம் + +சித்திர வதை செயக் கண்டு தீர்தியோ?         6.4.12 + + + +வீடணன் இலங்கையை விடுத்துச் செல்லுதல் (6504-6506) + + + +6504. 'எத்துணை வகையினும் உறுதி எய்தின + +ஒத்தன உணர்த்தினேன்; உணர கிற்றிலை; + +அத்த! என் பிழை பொறுத்து அருளுவாய் எனா + +உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்.         6.4.13 + + + +6505. அனலனும் அனிலனும் அரன் சம்பாதியும் + +வினையவர் நால்வரும் விரைவின் வந்தனர்; + +கனைகழல் காலினர் கருமச் சூழ்ச்சியர் + +இனைவரும் வீடணனோடும் ஏயினார்.         6.4.14 + + + +6506. அரக்கனும் ஆங்கண் ஓர் அமைச்சர் நால்வரும், + +'குரக்கு இனத்தவரொடும் மனிதர், கொள்ளை நீர்க் + +கரைக்கண் வந்து இறுத்தனர்' என்ற காலையில், + +'பொருக்கென எழுதும்'என்று எண்ணிப் போயினார்.         6.4.15 + + + +வீடணன் வானரத் தானையைக் காண்டல் (6507-6508) + + + +6507. அளக்கரைக் கடந்து மேல் அறிந்த நம்பியும் + +விளக்கு ஒளி பரத்தலின் பாலின் வெண்கடல் + +வளத் தடந் தாமரை மலர்ந்தது ஆம் எனக் + +களப் பெருந் தானையைக் கண்ணில் நோக்கினான்.         6.4.16 + + + +6508. 'ஊன் உடை உடம்பின உயிர்கள் யாவையும் + +ஏனைய ஒருதலை நிறுத்தி எண்ணினால் + +வானரம் பெரிது'என மறு இல் சிந்தையான் + +தூநிறச் சுடுபடைத் துணைவர்ச் சொல்லினான்.         6.4.17 + + + +இனிச் செய்வது யாதனெ வீடணன் அமைச்சரை வினவுதல் + + + +6509. 'அறம் தலை நின்றவர்க்கு அன்பு பூண்டனன்; + +மறந்தும் நன்புகழ் அலால் வாழ்வு வேண்டலன்; + +பிறந்த என் உறுதி நீ பிடித்தியால்'எனத் + +துறந்தனன்; இனிச் செயல் சொல்லுவீர் என்றான்.         6.4.18 + + + +இராமனைக் காணுமாறு அமைச்சர்கள் கூறல் + +6510. 'மாட்சியின் அமைந்தது வேறு மற்று இலை; + +தாட்சி இல் பொருள்தரும் தரும மூர்த்தியைக் + +காட்சியே இனிக் கடன்'என்று கல்வி சால் + +சூட்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார்.         6.4.19 + + + +வீடணன் அமைச்சர் சொல்லை உடன்பட்டு மகிழ்தல் (6511-6515) + + + +6511. 'நல்லது சொல்லினீர்; நாமும் வேறு இனி + +அல்லது செய்துமேல் அரக்கர் ஆதுமால்; + +எல்லை இல் பெருங் குணத்து இராமன் தாள் இணை + +புல்லுதும்; புல்லி இப்பிறவி போக்குதும்.         6.4.20 + + + +6512. 'முன்புறக் கண்டிலேன்; கேள்வி முன்பு இலேன்; + +அன்பு உறக் காரணம் அறிய கிற்றிலேன்; + +என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல் அவன் + +புன்புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.         6.4.21 + + + +6513. ஆதி அம் பரமனுக்கு அன்பும் நல் அற + +நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும் + +வேதியர் அருளும் நான் விரும்பிப் பெற்றனென் + +போதுறு கிழவனைத் தவம் முன் பூண்ட நாள்.         6.4.22 + + + +6514. 'ஆயது பயப்பது ஓர் அமைதி ஆயது; + +தூயது நினைந்தது; தொல்லை யாவர்க்கும் + +நாயகன் மலர்க்கழல் நணுகி நம்மனத்து + +ஏயது முடித்தும்'என்று இனிது மேயினான்.         6.4.23 + + + +6515. 'இருளுற எய்துவது இயல்பு அன்றாம்'என + +பொருள் உற உணர்ந்த அப் புலன்கொள் புந்தியார் + +மருள் உறு சூழலின் மறைந்து வைகினார்; + +உருளுறு தேரவன் உதயம் எய்தினான்.         6.4.24 + + + +இராமன் கடற்கரைக்கு வருதல் + + + +6516. அப்புறத்து இராமன் அவ் அலங்கு வேலையைக் + +குப்புறக் கருதுவான் குவளை நோக்கி தன் + +துப்பு உறச் சிவந்தவாய் நினைந்து சோர்குவான் + +இப்புறத்து இருங்கரை மருங்கின் எய்தினான்.         6.4.25 + + + +இராமன் அங்குக் கானல் முதலியவற்றை நோக்குதல் (6517-6519) + + + +6517. கானலும் கழிகளும் மணலும் கண்டலும் + +பானலும் குவளையும் பரந்த புன்னையும் + +மேல்நிறை அன்னமும் பெடையும் வேட்கைகூர் + +பூ நிறை சோலையும் புரிந்து நோக்கினான்.         6.4.26 + + + +6518. தரளமும் பவளமும் தரங்கம் ஈட்டிய + +திரள் மணிக் குப்பையும் கனக தீரமும் + +மருளும் மென் பொதும்பரும் மணலின் குன்றமும் + +புரள் நெடுந் திரைகளும் புரிந்து நோக்கினான்.         6.4.27 + + + +6519. மின் நகு மணிவிரல் தேய வீழ்கண் நீர் + +துன்னரும் பெரும் சுழி அழிப்பச் சோர்வினோடு + +இன் நகை நுளைச்சியர் இழைக்கும் ஆழி சால் + +புன்னையம் பொதும்பரும் புக்கு நோக்கினான்.         6.4.28 + + + +இராமன் கடற்கரைக் காட்சிகளால் கவலை மிகுதல் (6520-6524) + + + +6520. கூதிர் நுண் குறும்பனித் திவலைக் கோவை கால் + +மோதி வெண் திரைபொரு முடவெண் தாழைமேல் + +பாதி அம் சிறையிடைப் பெடையைப் பாடு அணைத்து + +ஓதிமம் துயில்வ கண்டு உயிர்ப்பு வீங்கினான்.         6.4.29 + + + +6521. அருந்துதற்கு இனிய மீன் கொணர அன்பினால் + +பெருந்தடங் கொம்பிடைப் பிரிந்த சேவலை + +வரும் திசை நோக்கி ஓர் மழலை வெண் குருகு + +இருந்தது கண்டு நின்று இரக்கம் எய்தினான்.         6.4.30 + + + +6522. ஒருதனிப் பேடைமேல் உள்ளம் ஓடலால் + +பெருவலி வயக்குருகு இரண்டும் பேர்கில + +திருகு வெஞ்சினத்தன தறெுகண் தீயன + +பொருவன கண்டு தன் புருவம் கோட்டினான்.         6.4.31 + + + +6523. உள்நிறை ஊடலில் தோற்ற ஓதிமம் + +கண்ணுறு கலவியில் வெல்லக் கண்டவன் + +தண்நிறப் பவளவாய் இதழை தன் பொதி + +வெண்நிற முத்தினால் அதுக்கி விம்மினான்.         6.4.32 + + + +6524. இத்திறம் ஏய்திய காலை எய்துறும் + +வித்தகர் சொற்களால் மெலிவு நீங்கினான் + +ஒத்தனன் இராமனும் உணர்வு தோன்றிய + +பித்தரின் ஒருவகை பெயர்ந்து போயினான்.         6.4.33 + + + +வீடணன் வருதல்         6.4. + + + +6525. உறைவிடம் எய்தினான் ஒருங்கு கேள்வியின் + +துறை அறி துணைவரோடு இருந்த சூழலின் + +முறைபடு தானையின் மருங்கு முற்றினான் + +அறைகழல் வீடணன் அயிர்ப்பு இல் சிந்தையான்.         6.4.34 + + + +வானரர் வீடணனை எதிர்த்தல் (6526-6530) + + + +6526. முற்றிய குருசிலை'முழங்கு தானையின் + +உற்றனர் நிருதர் வந்து'என்ன ஒன்றினார் + +'எற்றுதிர்; பற்றுதிர்; எறிதிர்'என்று இடை + +சுற்றினர் உரும் எனத் தழெிக்கும் சொல்லினார்.         6.4.35 + + + +6527. தந்தது தருமமே கொணர்ந்து தான்; இவன் + +வெந்தொழில் தீவினை பயந்த மேன்மையான் + +வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும்; நம் + +சிந்தனை முடிந்தன என்னும் சிந்தையார்.         6.4.36 + + + +6528. "'இருபது கரம்; தலை ஈரைந்து" என்பர்; இத் + +திரு இலிக்கு; அன்னவை சிதைந்தவோ? என்பார் + +பொரு தொழில் எம்மொடும் பொருதி போர்! என்பார் + +ஒருவரின் ஒருவர் முன் உறுக்கி ஊன்றுவார்.         6.4.37 + + + +6529. 'பற்றினம் சிறையிடை வைத்துப் பாருடைக் + +கொற்றவர்க்கு உணர்த்துதும்'என்று கூறுவார்; + +'எற்றுவது அன்றியே இவனைக் கண்டு இறை + +நிற்றல் என் பிறிது?'என நெருக்கி நேர்குவார்.         6.4.38 + + + +6530. 'இமைப்பதன் முன் விசும்பு எழுந்து போயபின் + +அமைப்பது என் பிறிது? இவர் அரக்கர் அல்லரோ? + +சமைப்பது கொலை அலால் தக்கது யாவதோ? + +குமைப்பது நலன்'என முடுகிக் கூறுவார்.         6.4.39 + + + +அனுமன் ஆணையின்படி மயிந்தனும் துமிந்தனும் வருதல் (6531-6532) + + + +6531. இயைந்தன இயைந்தன இனைய கூறலும் + +மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார் + +அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால் + +நயம் தெரி காவலர் இருவர் நண்ணினார்.         6.4.40 + + + +6532. விலக்கினர் படைஞரை; வேதம் நீதி நூல் + +இலக்கணம் நோக்கிய இயல்பர் எய்தினர் + +'சலம் குறி இலர்'என அருகு சார்ந்தனர் + +புலக்குறி அறநெறி பொருந்த நோக்கினார்.         6.4.41 + + + +வீடணன் முதலியோரை யார் என வினவுதல் + + + +6533. யார்? இவண் எய்திய கருமம் யாவது? + +போர் அது புரிதிரோ? புறத்து ஓர் எண்ணமோ? + +சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம் + +சோர்விலீர் மெய்ம் முறை சொல்லுவீர் என்றான்.         6.4.42 + + + +வீடணன் துணைவனான அனலன் விடை (6534-6538) + + + +6534. 'பகலவன் வழிமுதல் பாரின் நாயகன் + +புகல் அவன் கழல் அடைந்து உய்யப் போந்தனன் + +தகவு உறு சிந்தையன் தரும நீதியன் + +மகன் மகன் மைந்தன் நான்முகற்கு வாய்மையான்.         6.4.43 + + + +6535. 'அறநிலை வழாமையும் ஆதி மூர்த்திபால் + +நிறைவரு நேயமும் நின்ற வாய்மையும் + +மறையவர்க்கு அன்பும் என்று இனைய மாமலர் + +இறையவன் தர நெடுந் தவத்தின் எய்தினான்.         6.4.44 + + + +6536. "சுடு தியைத் துகில் இடை பொதிந்த துன்மதி! + +இடுதியே சிறையிடை இறைவன் தேவியை; + +விடுதியேல் உய்குதி; விடாது வேட்டியேல் + +படுதி" என்று உறுதிகள் பலவும் பன்னினான்.         6.4.45 + + + +6537. 'மறம் தரு சிந்தையன் மதியின் நீங்கினான் + +"பிறந்தனை பின்பு; அதின் பிழைத்தி; பேர்குதி; + +இறந்தனை நிற்றியேல்" என்ன இன்னவன் + +துறந்தனன்'என விரித்து அனலன் சொல்லினான்.         6.4.46 + + + +6538. மயிந்தனும் அவ் உரை மனத்து வைத்து'நீ + +இயைந்தது நாயகற்கு இயம்புவேன்'எனா + +பெயர்ந்தனன்'தம்பியும் பெயர்வு இல் சேனையும் + +அயர்ந்திலிர் காமின்!'என்று அமைவது ஆக்கியே.         6.4.47 + + + +மயிந்தன் இராமன் அடி வணங்குதல் + + + +6539. தருமமும் ஞானமும் தவமும் வேலியாய் + +மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாய்க் + +கருணை அம் கோயிலுள் இருந்த கண்ணனை + +அருள் நெறி எய்திச் சென்று அடி வணங்கினான்.         6.4.48 + + + +மயிந்தன் இராமனுக்குக் கண்டதும் கேட்டதும் கழறல் (6540-6546) + + + +6540. 'உண்டு உரை உணர்த்துவது ஊழியாய்!'எனப் + +புண்டரீகத் தடம் புரையும் புங்கவன் + +மண்டலச் சடைமுடி துளக்க'வாய்மையால் + +கண்டதும் கேட்டதும் கழறல் மேயினான்.         6.4.49 + + + +6541. 'விளைவினை அறிந்திலம்; வீடணப் பெயர் + +நளிமலை யாக்கையன் நால்வரோடு உடன் + +களவு இயல் வஞ்சனை இலங்கை காவலற்கு + +இளவல் நம் சேனையின் நடுவண் எய்தினான்.         6.4.50 + + + +6542. "'கொல்லுமின், பற்றுமின்" என்னும் கொள்கையால் + +பல்பெருந் தானை சென்று அடர்க்கப் பார்த்து, யாம் + +"நில்லுமின்" என்று, + + "நீர் யாவிர்? நும் நிலை + +சொல்லுமின்''என்ன ஓர் துணைவன் சொல்லினான்.         6.4.51 + + + +6543. "'முரண்புகு தீவினை முடித்த முன்னவன் + +கரண்புகு சூழலே சூழக் காண்பது ஓர் + +அரண் பிறிது இல் என அருளின் வேலையைச் + +சரண் புகுந்தனன்" என முன்னம் சாற்றினான்.         6.4.52 + + + +6544. "'ஆயவன் தருமமும் ஆதி மூர்த்தி பால் + +மேயது ஓர் சிந்தையும் மெய்யும் வேதியர் + +நாயகன் தர நெடுந் தவத்து நண்ணினான் + +தூயவன்" என்பது ஓர் பொருளும் சொல்லினான்.         6.4.53 + + + +6545. "'கற்புடைத் தேவியை விடாது காத்தியேல் + +எற்புடைக் குன்றம் ஆம் இலங்கை; ஏழை! நின் + +பொற்பு உடை முடித்தலை புரளும் என்று ஒரு + +நற் பொருள் உணர்த்தினன்" என்றும் நாட்டினான்.         6.4.54 + + + +6546. "'ஏம் தொழில் இராவணன் இனிய சொன்ன நீ + +சாம் தொழிற்கு உரியை; என் சார்பு நிற்றியேல்; + +ஆம் தினைப் பொழுதினில் அகல்தியால் எனப் + +போந்தனன்" என்றனன் புகுந்தது ஈது'என்றான்.         6.4.55 + + + +வீடணனுக்கு அடைக்கலம் கொடுப்பது பற்றி இராமன் நண்பரின் கருத்தறிதல் + + + +6547. அப்பொழுது இராமனும் அருகில் நண்பரை + +'இப் பொருள் கேட்ட நீ இயம்புவீர் இவன் + +கைப் புகற் பாலனோ? கழியற் பாலனோ? + +ஒப்புற நோக்கி நும் உணர்வினால் என்றான்.         6.4.56 + + + +கவிக்கூற்று + + + +6548. தடமலர்க் கண்ணனைத் தடக்கை கூப்பி நின்று + +'இடன் இது; காலம் ஈது'என்ன எண்ணுவான் + +கடன் அறி காவலன் கழறினான் அரோ + +சுடர்நெடு மணிமுடிச் சுக்கிரீவனே.         6.4.57 + + + +சுக்கிரீவன் கூறுகின்றான் (6549-6556) + + + +6549. நனி முதல் வேதங்கள் நாலும் நாம நூல் + +மனு முதல் யாவையும் வரம்பு கண்ட நீ + +இனையன கேட்கவோ எம் அனோர்களை + +வினவிய காரணம்? விதிக்கும் மேல் உளாய்!         6.4.58 + + + +6550. ஆயினும், விளம்புவென், அருளின் ஆழியாய்! + +ஏயினது ஆதலின், + + 'அறிவிற்கு ஏற்றன, + +தூய'என்று எண்ணினும், + + 'துணிவு அன்று'என்னினும் + +மேயது கேட்டியால்! விளைவு நோக்குவாய்.         6.4.59 + + + +6551. "வெம் முனை விளைதலின் அன்று; வேறு ஒரு + +சும்மையான் உயிர் கொளத் துணிதலால் அன்று; + +தம் முனைத் துறந்தது தரும நீதியோ? + +செம்மை இல் அரக்கரில் யாவர் சீரியோர்.         6.4.60 + + + +6552. தகை உறு தம்முனைத் தாயைத் தந்தையை + +மிகை உறு குரவரை உலகின் வேந்தனை + +பகை உற வருதலும் துறந்த பண்பு இது + +நகை உறல் அன்றியும் நயக்கற் பாலதோ?         6.4.61 + + + +6553. வேண்டுழி இனியன விளம்பி வெம்முனை + +பூண்டுழி அஞ்சி வெஞ் செருவில் புக்கு உடன் + +மாண்டு ஒழிவு இன்றி நம் மருங்கு வந்தவன் + +ஆண் தொழில் உலகினுக்கு ஆணி ஆம் அன்றே?         6.4.62 + + + +6554. 'மிகைப் புலம் தருமமே வேட்ட போது அவர் + +தகைப் புலம் துறந்து போய்ச் சார்தல் அன்றியே + +நகைப் புலம் பொது அற நடந்து நாயக! + +பகைப் புலம் சார்தலோ? பழியின் நீங்குமோ?         6.4.63 + + + +6555. 'வார்க்குறு வனைகழல் தம்முன் வாழ்ந்த நாள் + +சீர்க்கு உறவு ஆய் இடைச் செறுநர் சீறிய + +போர்க்கு உறவு அன்றியே போந்த போது இவன் + +ஆர்க்கு உறவு ஆகுவன்? அருளின் ஆழியாய்!         6.4.64 + + + +6556. 'ஒட்டிய கனக மான் உருவம் ஆகிய + +சிட்டனும் மருமகன் இழைத்த தீவினை + +கிட்டிய போதினில் தவமும் கேள்வியும் + +விட்டது கண்டும் நாம் விடாது வேட்டுமோ?         6.4.65 + + + +6557. கூற்றுவன் தன்னொடு இவ் உலகம் கூடி வந்து + +ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளம்; + +மாற்றவன் தம்பி நம்மருங்கு வந்திவண் + +தோற்றுமோ அன்னவன் துணைவன் ஆகுமோ?         6.4.66 + + + +6558. "அரக்கரை ஆசு அறக் கொன்று நல் அறம் + +புரக்க வந்தனம்" எனும் பெருமை பூண்ட நாம் + +இரக்கம் இல் அவரையே துணைக் கொண்டோம் எனின் + +சுருக்கம் உண்டு அவர் வலிக்கு என்று தோன்றுமால்.         6.4.67 + + + +6559. விண்டுழி ஒரு நிலை நிற்பர்; மெய்ம் முகம் + +கண்டுழி ஒரு நிலை நிற்பர்; கைப் பொருள் + +கொண்டுழி ஒரு நிலை நிற்பர்; கூழுடன் + +உண்டுழி ஒரு நிலை நிற்பர் உற்றவர்.         6.4.68 + + + +6560. 'வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால் + +'தஞ்சு'என நம் வயின் சார்ந்து உளான் அலன்; + +நஞ்சினிற் கொடியனை நயந்து கோடியோ? + +அஞ்சன வண்ண!'என்று அறியக் கூறினான்.         6.4.69 + + + +கவிக்கூற்று + + + +6561. அன்னவன் பின்னுற, அலகு இல் கேள்வியால் + +தன் நிகர் பிறிது இலாத் தகைய சாம்பனை, + +'என்னை உன் கருத்து?'என இறை வினாயினான்; + +சொல் முறை நெறி தெரிந்து அவனும் சொல்லுவான்.         6.4.70 + + + +சாம்பவன் கூறுகின்றான் (6562-6566) + + + +6562. 'அறிஞரே ஆயினும் அரிய தெவ்வரைச் + +செறிஞரே ஆவரேல் கெடுதல் திண்ணமால்; + +நெறிதனை நோக்கினும் நிருதர் நிற்பது ஓர் + +குறி தனி உளது என உலகம் கொள்ளுமோ?         6.4.71 + + + +6563. வெற்றியும் தருகுவர்; வினையம் வேண்டுவர் + +முற்றுவர்; உறு குறை முடிப்பர் முன்பினால்; + +உற்றுறு நெடும்பகை உடையர்; அல்லதூஉம் + +சிற்றினத் தவரோடும் செறிதல் சீரிதோ?         6.4.72 + + + +6564. 'வேதமும் வேள்வியும் மயக்கி வேதியர்க்கு + +ஏதமும் இமையவர்க்கு இடரும் ஈட்டிய + +பாதகர் நம் வயின் படர்வர் ஆம் எனின் + +தீது இலராய் நமக்கு அன்பு செய்வரோ?         6.4.73 + + + +6565. "கைப் புகுந்து உறு சரண் அருளிக் காத்துமேல் + +பொய்க் கொடு வஞ்சனை புணர்த்த போதினும் + +மெய்க் கொள விளியினும்'விடுதும்" என்னினும் + +திக்கு உறும் நெடும்பழி; அறமும் சீறுமால்.         6.4.74 + + + +6566. 'மேல் நனி விளைவது விளம்பல் வேண்டுமோ? + +கானகத்து இறைவியோடு உறையும் காலையில் + +மான் என வந்தவன் வரவை மானும் இவ் + +ஏனையன் வரவும்'என்று இனைய கூறினான்.         6.4.75 + + + +இராமன் வினவ நீலன் தன் கருத்தைக் கூறத் தொடங்கல் + +6567. பால்வரு பனுவலின் துணிவு பற்றிய + +சால் பெருங் கேள்வியின் தானை நாயகன் + +நீலனை'நின் கருத்து இயம்பு நீ'என + +மேலவன் விளம்பலும் விளம்பல் மேயினான்.         6.4.76 + + + +நீலன் சொல்லுகின்றான் (6568-6573) + + + +6568. 'பகைவரைத் துணை எனப் பற்றற்பால ஆம் + +வகை உள; அன்னவை வரம்பு இல் கேள்வியாய்! + +தொகையுறக் கூறுவென்;'குரங்கின் சொல்'என + +நகையுறல் இன்றியே நயந்து கேட்டியால்.         6.4.77 + + + +6569. 'தம் குலக் கிளைஞரைத் தருக்கும் போரிடைப் + +பொங்கினர் கொன்றவர்க்கு எளியர் போந்தவர் + +மங்கையர் திறத்தினில் வயிர்த்த சிந்தையர் + +சிங்கல் இல் பெரும் பொருள�� இழந்து சீறினோர்.         6.4.78 + + + +6570. 'பேர் அபிமானங்கள் உற்ற பெற்றியோர் + +போரிடைப் புறங் கொடுத்து அஞ்சிப் போந்தவர் + +நேர்வரு தாயத்து நிரம்பினோர் பிறர் + +சீரிய கிளைஞரை மடியச் செற்றுேளார்         6.4.79 + + + +6571. அடுத்தநாட்டு அரசியல் உடைய ஆணையால் + +படுத்தவர் நட்டவர், பகைஞரோடு ஒரு + +மடக்கொடி திறத்திடை வைத்த சிந்தையர், + +உடன்கொளத் தகையர், நம் உழை வந்து ஒன்றினால்.         6.4.80 + + + +6572. தாம் உற எளிவரும் தகைமையார் அலர் + +நாம் உற வல்லவர் நம்மை நண்ணினால் + +தோம் உற நீங்குதல் துணிவர் ஆதலின் + +யாம் இவன் வரவு இவற்று என் என்று உன்னுவாம்?         6.4.81 + + + +6573. காலமே நோக்கினும் கற்ற நூல்களின் + +மூலமே நோக்கினும் முனிந்து போந்தவன் + +சீலமே நோக்கி யாம் தெரிந்து தேறுதற்கு + +ஏலுமே? என்று எடுத்து இனைய கூறினான்.         6.4.82 + + + +மற்றை மந்திரக் கிழவரும் அவ்வாறே கூறுகின்றனர் + +6574. மற்றுள மந்திரக் கிழவர் வாய்மையால் + +குற்றம் இல் கேள்வியர் அன்பு கூர்ந்தவர் + +'பற்றுதல் பழுது'எனப் பழுது உறா ஒரு + +பெற்றியின் உணர்வினார் முடியப் பேசினார்.         6.4.83 + + + +இராமன் அனுமனை வினவுதல் + + + +6575. 'உறுபொருள் யாவரும் ஒன்றக் கூறினார்; + +செறிபெருங் கேள்வியாய்! கருத்து என் செப்பு'என + +நெறிதெரி மாருதி என்னும் நேரிலா + +அறிவனை நோக்கினான் அறிவின் மேலுளான்.         6.4.84 + + + +அனுமன் கூறுகின்றான் (6576-6594) + + + +6576. 'இணங்கினர் அறிவிலர் எனினும் எண்ணுங்கால் + +கணங்கொளல் நும்மனோர் கடன்மை காண்'எனா + +வணங்கிய சென்னியன் மறைத்த வாயினன் + +நுணங்கிய கேள்வியன் நுவல்வ தாயினான்.         6.4.85 + + + +6577. 'எத்தனை உளர் தெரிந்து எண்ண'ஏய்ந்தவர் + +அத்தனைவரும் ஒருபொருளை"அன்று" என + +உத்தமர் அது தெரிந்து உணர ஓதினார்; + +வித்தக! இனிச் சில விளம்ப வேண்டுமோ?         6.4.86 + + + +6578. 'தூயவர் துணிதிறன் நன்று தூயதே; + +ஆயினும் ஒரு பொருள் உரைப்பன் ஆழியாய்! + +"தீயன்" என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்; + +மேயின சில பொருள் விளம்ப வேண்டுமால்.         6.4.87 + + + +6579. 'வண்டு உளர் அலங்கலாய்! வஞ்சர் வாள்முகம் + +கண்டதோர் பொழுதினில் தெரியும்; கைதவம் + +உண்டு எனின் அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ? + +விண்டவர் நம்புகல் விரும்பி வீழ்வரோ?         6.4.88 + + + +6580. 'உள்ளத்தின் உள்ளதை உரையின் முந்துற + +மெள்ளத் தம் முகங்களே விளம்பும்; ஆதலால் + +கள்ளத்தின் விளைவு எலாம் கருத்து இலா இருள் + +பள்ளத்தின் அன்றியே வெள��யில் பல்குமோ?         6.4.89 + + + +6581. 'வாலி விண்பெற அரசு இளையவன் பெறக் + +கோலிய வரிசிலை வலியும் கொற்றமும் + +சீலமும் உணர்ந்து நின் சேர்ந்து தெள்ளிதின் + +மேல் அரசு எய்துவான் விரும்பி மேயினான்.         6.4.90 + + + +6582. 'செறிகழல் அரக்கர்தம் அரசு சீரியோர் + +நெறி அலது; அகலின் நிலைக்கலாமையும் + +எறி கடல் உலகு எலாம் இளவற்கு ஈந்தது ஓர் + +பிறிவு அருங் கருணையும் மெய்யும் பேணினான்.         6.4.91 + + + +6583. 'காலம் அன்று இவன் வரும் காலம்'என்பரேல் + +வாலிது அன்று; உறுபகை வலியது ஏறியது; + +ஏலும் இங்கு இவர்க்கு இனி இறுதி; என்றலால் + +மூலம் என் துணைவரைப் பிரிவு முற்றினான்.         6.4.92 + + + +6584. 'தீத்தொழில் அரக்கர் தம் மாயச் செய்வினை + +வாய்த்துளர் அன்னவை உணரும் மாண்பினால் + +காய்த்தவர் அவர்களே கையுற்றார்; நமக்கு + +ஏற்றது ஓர் உறுதியும் எளிதின் எய்துமால்.         6.4.93 + + + +6585. "'தெளிவு உறல் அரிது இவர் மனத்தின் தீமை; நாம் + +விளிவது செய்குவர்" என்ன வேண்டுதல் + +ஒளி உற உயர்ந்தவர் ஒப்ப எண்ணலார் + +எளியவர் திறத்து இவை எண்ணல் ஏயுமோ?         6.4.94 + + + +6586. "'கொல்லுமின் இவனை" என்று அரக்கன் கூறிய + +எல்லையில்"தூதரை எறிதல் என்பது + +புல்லிது; பழியொடும் புணரும்; போர்த்தொழில் + +வெல்லலம் பின்னர்" என்று இடை விலக்கினான்.         6.4.95 + + + +6587. "மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய + +ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும் + +தூதரைக் கோறலும் தூய்து அன்றாம்" என + +ஏதுவில் சிறந்தன எடுத்துக் காட்டினான்.         6.4.96 + + + +6588. 'எல்லியில் யான் இவன் இரண மாளிகை + +செல்லிய போதினும் திரிந்த போதினும் + +நல்லன நிமித்தங்கள் நனி நிகழ்ந்தன; + +அல்லதும் உண்டு நான் அறிந்தது ஆழியாய்.         6.4.97 + + + +6589. 'நிந்தனை நறவமும் நெறி இல் ஊன்களும் + +தந்தன கண்டிலென்; தரும தானமும் + +வந்தனை நீதியும் பிறவும் மாண்பு அமைந்து + +அந்தணர் மனை எனப் பொலிந்தது ஆம் அரோ.         6.4.98 + + + +6590. 'அன்னவன் தனிமகள்"அலரின்மேல் அயன் + +சொன்னது ஓர் சாபம் உண்டு;"உன்னைத் துன்மதி + +நல் நுதல்! தீண்டுமேல் நணுகும் கூற்று" என + +என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள்.         6.4.99 + + + +6591. "பெற்று உடைய பெருவரமும், பிறந்துடைய வஞ்சனையும், பிறவும் உன்கை + +வில் தொடையின் விடுகணையால் வெந்து ஒழியும்'' எனக்கருதி விரைவில் வந்தான்; + +உற்றுடைய பெருவரமும் உகந்துடைய தண் அளி உம் உணர்வும் நோக்கின், + +மற்று உடையர்தாம் உளரோ, வாள் அரக்கன் அன்��ியே தவத்தின் மிக்கார்.         6.4.100 + + + +6592 'தேவர்க்கும், தானவர்க்கும், திசைமுகனே முதலாய தேவ தேவர் + +மூவர்க்கும், முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றோம்; + +ஆவத்தின் வந்து"அபயம்" என்றானை அயிர்த்து அகல விடுதும் என்றால் + +கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வாதோ? கொற்ற வேந்தே!         6.4.101 + + + +6593. "'பகை புலத்தோர் துணை அல்லர்" என்று இவனைப் பற்றேமேல் அறிஞர் பார்க்கின் + +நகைப்புலத்தது ஆம் அன்றே; நல் தாயம் உளது ஆய பற்றால் மிக்க + +தகைப்புலத்தோர் தந்தையர்கள் தம்பியர்கள் தமையர் இவர் தாமே அன்றே, + +மிகைப்புலத்து விளைகின்றது ஒருபொருளைக் காதலிக்கின் விளிஞர் ஆவர்?         6.4.102 + + + +6594. 'ஆதலால், இவன் வரவு நல்வரவே'என உணர்ந்தேன், அடியனேன்; உன் + +வேத நூல் எனத்தகைய திருவுளத்தின் குறிப்பு அறியேன் என்றுவிட்டான்; + +காதல் நான்முகனாலும் கணிப்பரிய கலை அனைத்தும் கதிரோன் முன் சென்று + +ஓதினான், ஓத நீர் கடந்து பகை தடிந்து உலகை உய்யக் கொண்டான்.         6.4.103 + + + +அனுமன் வார்த்தை கேட்டு மகிழ்ந்து இராமன் கூறுவது (6595-6609) + + + +6595. மாருதி வினைய வார்த்தை செவிமடுத்து அமிழ்தின் மாந்திப் + +'பேர் அறிவாள! நன்று! நன்று!!' எனப் பிறரை நோக்கிச் + +'சீரிது; மேல் இம் மாற்றம் தெளிவுறத் தேர்மின்'என்ன + +ஆரியன் உரைப்பது ஆனான்; அனைவரும் அதனைக் கேட்டார்.         6.4.104 + + + +வீடணனை விடலாகாமைக்கு இராமன் காட்டும் விளக்கம் (6596-6609) + + + +6596. கருத்து உற நோக்கிப் போந்த காலமும் நன்று; காதல் + +அருத்தியும் அரசின் மேற்றே; அறிவினுக்கு அவதி இல்லை; + +"பெருத்து உயர் தவத்தினானும் பிழைத்திலன்" என்னும் பெற்றி + +திருத்தியது ஆகும் அன்றே, நம்வயின் சேர்ந்த செய்கை.         6.4.105 + + + +6597. 'மற்று இனி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் சொன்ன + +பெற்றியே பெற்றி; அன்னது அன்று எனின், பிறிது ஒன்றானும், + +வெற்றியே பெறுக, தோற்க, வீக, வீயாது வாழ்க, + +பற்றுதல் அன்றி உண்டோ, புகல் எமைப் பகர்கின்றானை.         6.4.106 + + + +6598. 'இன்று வந்தான் என்று உண்டோ? எந்தையை யாயை முன்னைக் + +கொன்று வந்தான் என்று உண்டோ? புகலது கூறுகின்றான்; + +தொன்று வந்து அன்பு பேணும் துணைவனும் அவனே; பின்னைப் + +பின்றும் என்றாலும், நம்பால் புகழ் அன்றிப் பிறிது உண்டாமோ?         6.4.107 + + + +6599. 'பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி + +மறந்த நாள் உண்டோ? என்னைச் சரண் என்று வாழ்கின்றானைத் + +துறந்த நாட்கு இன்று வந்து துன்னினான் சூழ்ச்சி யாலே + +இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான்.         6.4.108 + + + +6600. 'இடைந்தவர்க்கு"அபயம் யாம்" என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை + +கடைந்தவர்க்கு, ஆகி ஆலம் உண்டவற் கண்டிலீரோ? + +உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று ஈயான் ஆயின், + +அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்?         6.4.109 + + + +6601. பேடையைப் பிடித்துத், தன்னைப் பிடிக்கவந்து அடைந்த பேதை + +வேடனுக்கு உதவி செய்து விறகு இடை வெந்தீ மூட்டிப் + +பாடுறு பசியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள் + +வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ?         6.4.110 + + + +6602. 'போதகம் ஒன்று, கன்றி இடங்கர் மாப் பொருத போரின், + +"ஆதி அம் பரமே! யான் உன் அபயம்!" என்று அழைத்த அந்நாள், + +வேதமும் முடிவு காணா மெய்ப் பொருள் வெளிவந்து எய்தி, + +மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ, மறப்பு இலாதார்?         6.4.111 + + + +6603'மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும் மாயன், + +தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் தானே + +என்னினும், அடைந்தோர் தம்மை ஏம் உற இனிதின் ஓம்பி, + +பின்னும் வீடு அளிக்கும் என்றால், பிறிது ஒரு சான்றும் உண்டோ?         6.4.112 + + + +6604. 'நஞ்சினை மிடற்று வைத்த நகை மழு ஆளன்,"நாளும் + +தஞ்சு''என, முன்னம், தானே தாதைபால் கொடுத்துச்,''சாதல் + +அஞ்சினேன்; அபயம்!''என்ற அந்தணற்கு ஆகி, அந்நாள், + +வெஞ்சினக் கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ?         6.4.113 + + + +6605. "'சரண் எனக்கு யார்கொல்?" என்று சானகி அழுது சாம்ப, + +"அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!" என்று அருளின் எய்தி, + +முரணுடைக் கொடியோன் கொல்ல, மொய் அமர் முடித்து, தயெ்வ + +மரணம் என் தாதை பெற்றது என் வயின் வழக்கு அன்று ஆமோ?         6.4.114 + + + +6606. உய்ய,'நிற்கு அபயம்'என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக் + +கையனும், ஒருவன் செய்த உதவியில் கருத்து இலானும், + +மை உறு நெறியின் நோக்கி மாமறை வழக்கில் நின்ற + +மெய்யினைப் பொய் என்றானும், மீள்கிலா நரகின் வீழ்வார்.         6.4.115 + + + +6607. 'சீதையைக் குறித்த தேயோ, + + "தேவரைத் தீமை செய்த + +பேதையைக் கொல்வென்''என்று பேணிய விரதப் பெற்றி + +வேதியர்,"அபயம்" என்றார்க்கு, அன்று, நான் விரித்துச் சொன்ன + +காதையைக் குறித்து நின்ற அவ் உரை கடக்கல் ஆமோ?         6.4. 116 + + + +6608. 'காரியம் ஆக! அன்றே ஆகுக! கருணையோ��்க்குச் + +சீரிய தன்மை நோக்கின், இதனின்மேல் சிறந்தது உண்டோ? + +பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்குப் பொன்றா + +ஆர் உயிர் கொடுத்துக் காத்தார், எண் இலா அரசர் அம்மா?         6.4.117 + + + +6609. 'ஆதலான்,"அபயம்" என்ற போதத்தே அபய தானம் + +ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர் என்பால் வைத்த + +காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த! + +கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி'என்றான்.         6.4.118 + + + +சுக்கிரீவன் வீடணனை அழைத்து வரச் செல்லுதல் + + + +6610. ஐயுறவு எல்லாம் தீரும் அளவையாய் அமைந்தது அன்றே; + +தயெ்வ நாயகனது உள்ளம் தேறிய அடைவே; தேறி, + +கை புகற்கு அமைவது ஆனான் + + 'கடிதினின் கொணர்வல்'என்னா, + +மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்பால் விரைவில் சென்றான்.         6.4.119 + + + +சுக்கிரீவன் வரவை அறிந்து வீடணன் எதிர்வரல் + + + +6611. வருகின்ற கவியின் வேந்தை மயிந்தனுக்கு இளவல் காட்டித் + +"தருக என்றான் அண்ணல் நின்னை; எதிர் கொளற்கு அருக்கன் தந்த + +இருகுன்றம் அனைய தோளான் எய்தினன்''என்னலோடும், + +திரிகின்ற உள்ளத் தானும், அகம் மலர்ந்து அவன்முன் சென்றான்.         6.4.120 + + + +சுக்கிரீவனும் வீடணனும் தழுவிக் கொள்ளுதல் + + + +6612. சொல்லருங் காலம் எல்லாம் பழகினும், தூயர் அல்லார் + +புல்லலர் உள்ளம்; தூயர் பொருந்துவர், எதிர்ந்த ஞான்றே; + +ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற, இருவரும், ஒருநாள் உற்ற + +எல்லியும் பகலும் போலத், தழுவினர், எழுவின் தோளார்.         6.4.121 + + + +இராமன் அடைக்கலம் அருளியதைச் சுக்கிரீவன் வீடணனுக்குத் தெரிவித்தல் + + + +6613. தழுவினர் நின்ற காலை, + + 'தாமரைக் கண்ணன் தங்கள் + +முழு முதல் குலத்திற்கு ஏற்ற முறைமையால் உவகை மூள + +வழுவல் இல் அபயம் உன்பால் வழங்கினன் அவன் பொற் பாதம் + +தொழுதியால், விரைவின்'என்று கதிரவன் சிறுவன் சொன்னான்.         6.4.122 + + + +சுக்கிரீவன் சொல்லைக் கேட்ட வீடணனின் விழுமிய மகிழ்ச்சி (6614-6618) + + + +6614. சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி புகாமுன், + +கங்குலின் நிறத்தினான் தன் கண், மழைத் தாரை கான்ற; + +அங்கமும் மனம் அது என்னக் குளிர்ந்தது; அவ் அகத்தை மிக்குப் + +பொங்கிய உவகை என்னப் பொடித்தன உரோமப் புள்ளி.         6.4.123 + + + +6615. "பஞ்சு" எனச் சிவக்கும் மென் கால் தேவியைப் பிரித்த பாவி + +வஞ்சனுக்கு இளைய என்னை, + + "வருக!" என்று அருள் செய்தானோ? + +தஞ்சு எனக் கருதினானோ? தாழ்சடைக் கடவுள் உண்ட + +நஞ்சு எனச் சிறந்தேன் ��ன்றோ, நாயகன் அருளின் நாயேன்?         6.4.124 + + + +6616. 'மருளுறு மனத்தினான் என் வாய்மொழி மறுத்தான்; வானம் அத்து + +உருளுறு தேரினானும், இலங்கை மீது ஓடும் அன்றே? + +தரெுளுறு சிந்தை வந்த தேற்றம் ஈது ஆகின், செய்யும் + +அருள் இது வாயின் கெட்டேன்! பிழைப்பரோ அரக்கர் ஆனோர்?         6.4.125 + + + +6617. தீர்வு அரும் இன்னல் தம்மைச் செய்யினும் செய்ய சிந்தைப் + +பேர் அருளாளர் தத்தம் செய்கையிற் பிழைப்பது உண்டோ? + +கார் வரை நிறுவித், தன்னைக் கனல் எழக் கலக்கக் கண்டும் + +ஆர்கலி அமரர் உய்ய அமிழ்து பண்டு அளித்தது அன்றே?         6.4.126 + + + +6618. துறவியின் உறவு பூண்ட தூயவர் துணைவன் என்னை + +உறவு உவந்து அருளி, மீளா அடைக்கலம் உதவினானேல், + +அறவினை இறையும் இல்லா, அறிவு இலா, அரக்கன் என்னும் + +பிறவியின் பெயர்ந்தேன்; பின்னும் நரகினில் பிழைப்ப தானேன்.         6.4.127 + + + +இராமன்பால் விரைவில் செல்லுமாறு சுக்கிரீவன் சொல்லுதல் + + + +6619. திருத்திய உணர்வு மிக்க செங்கதிர்ச் செல்வன் செம்மல், + +'ஒருத்தரை நலனும் தீங்கும் தேரினும், உயிரின் ஓம்பும் + +கருத்தினன் அன்றே, தன்னைக் கழல் அடைந்தோரை; காணும் + +அருத்தியன், அமலன்; தாழாது ஏகுதி அறிஞ! என்றான்.         6.4.128 + + + +வீடணனும் சுக்கிரீவனும் இராமனை அடைதல் + +6620. மொய்தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகிச் செல்ல, + +மை தவழ் கிரியும் மேருக் குன்றமும் வருவது என்ன, + +செய்தவம் பயந்த வீரர் திரள் மரம் ஏழும் தீய + +எய்தவன் இருந்த சூழல், இருவரும் எய்தச் சென்றார்.         6.4.129 + + + +வீடணன் இராமனைக் காணுதல் (6621-6629) + +6621. மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு காப்ப + +நாற் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன் நாமப் + +பாற்கடல் சுற்ற வில் கை வடவரை பாங்கு நிற்பக் + +கார்க் கடல் கமலம் பூத்தது எனப் பொலிவானைக் கண்டான்.         6.4.130 + + + +6622. அள்ளி மீது உலகை வீசும் அரிக் குலச் சேனை நாப்பண், + +தெள்ளுதண் திரையிற்று ஆகிப் பிறிது ஒரு திறனும் சாரா + +வெள்ளி வெண் கடலில் மேல் நாள் விண்ணவர் தொழுது வேண்டப் + +பள்ளி தீர்ந்து இருந்தான் என்னப் பொலிதரு பண்பினானை;         6.4.131 + + + +6623. கோணுதற்கு அமைந்த கோலப் புருவம் போல் திரையுங் கூடப், + +பூணுதற்கு இனிய முத்தின் பொலி மணல் பரந்த வைப்பின் + +காணுதற்கு அரிய நீள வெண்மையில் கருமை காட்டி, + +வாள் நுதல் சீதை கண்ணின் மணி என வயங்கு வானை.         6.4.132 + + + +6624. படர்மழை சுமந்த காலைப் பருவ வான், அமரர் கோமான் + +அடர்சிலை துறந்தது என்ன ஆரம்தீர் மார்பினானைக் + +கடல் கடை மத்துத் தாம்பு கழற்றியது என்னக், காசின் + +சுடர் ஒளி வலயம் தீர்ந்த சுந்தரத் தோளினானை;         6.4.133 + + + +6625. கற்றை வெண் நிலவு நீக்கிக் கருணை ஆம் அமிழ்தம் காலும் + +முற்றுறு கலையிற்று ஆய முழு மதி முகத்தினானை; + +பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெறத், தான் பெற்ற + +சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியானை;         6.4.134 + + + +6626.வீரனை நோக்கி அங்கம் மென் மயிர் சிலிர்ப்பக் கண்ணீர் + +வார, நெஞ்சு உருகி,"செங்கண் அஞ்சன மலை! அன்று ஆகின் + +கார்முகில் கமலம் பூத்தது ஆம்; இவன் கண்ணன் கொல் ஆம்; + +ஆர் அருள் சுரக்கும் நீதி அறம் நிறம் கரிதோ?''என்றான்.         6.4.135 + + + +6627.மின்மினி ஒளியின் மாயும் பிறவியை வேரின் வாங்கச், + +செம்மணி மகுடம் நீக்கித், திருவடி புனைந்த செல்வன் + +தன் முனார், கமலத்து அண்ணல் தாதையார், சரணம் தாழ, + +என்முனார் எனக்குச் செய்த உதவி என்று ஏம்பல் உற்றான்.         6.4.136 + + + +6628.'பெருந்தவம் இயற்றினோர்க்கும் பேர்வு அரும் பிறவி நோய்க்கு + +மருந்து என நின்றான் தானே வடிக்கணை தொடுத்துக் கொல்வான் + +இருந்தனன்; என்ற போது என் இயம்புவது? எல்லை தீர்ந்த + +அருந்தவம் உடையர் அம்மா அரக்கர்!' என்று அகத்துள் கொண்டான்.         6.4.137 + + + +6629.கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர்மணி முடியன், கல்லும் + +மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை வள்ளல் + +இரங்கினன் நோக்குந் தோறும், இருநிலத்து இறைஞ்சு கின்றான்; + +வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான்         6.4.138 + + + +இராமன் வீடணனுக்கு இருக்கை அளித்தல் + + + +6630.'அழிந்தது பிறவி'என்னும் அகத்து இயல் முகத்தில் காட்ட, + +வழிந்த கண்ணீரின் மண்ணின் மார்பு உற வணங்கினானைப் + +பொழிந்தது ஓர் கருணை தன்னால், புல்லினன் என்ன நோக்கி + +எழுந்து, இனிது இருத்தி'என்னா, மலர்க் கையால் இருக்கை ஈந்தான்.         6.4.139 + + + +இராமன் வீடணனுக்கு இலங்கையரசுரிமை யீதல் + +6631.ஆழியான் அவனை நோக்கி, அருள் சுரந்து உவகை கூர, + +"ஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந்நாள் + +வாழும்நாள் அன்று காறும், வளை எயிற்று அரக்கர் வைகும் + +தாழ்கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன்'என்றான்.         6.4.140 + + + +6632.தீர்த்தனது அருளை நோக்கிச் செய்ததோ? சிறப்புப் பெற்றான் + +கூர்த்த நல் அறத்தை நோக்கிக் குறித்ததோ? யாது கொல்லோ? + +வார்த்தை அ���து உரைத்தலோடும் தனித்தனி"வாழ்ந்தோம்" என்னா + +ஆர்த்தன உலகில் உள்ள சர அசரம் அனைத்தும் அம்மா         6.4.141 + + + +வீடணனுக்கு முடிசூட்டுமாறு இலக்குவனை யேவுதல் + + + +6633.'உஞ்சனன் அடியனேன்'என்று ஊழ்முறை வணங்கி நின்ற + +அஞ்சன மேனி யானை அழகனும் அருளின் நோக்கித் + +'தஞ்ச நல் துணைவனான தவறு இலாப் புகழான் தன்னைத் + +துஞ்சல் இல் நயனத்து ஐய! சூட்டுதி மகுடம்'என்றான்         6.4.142 + + + +வீடணன் இராமனுடைய பாதுகையாகிய மகுடமே சூட்ட வேண்டுதல் + + + +6634.விளைவினை அறியும் வென்றி வீடணன், என்றும் வீயா + +அளவு அறு பெருமைச் செல்வம் அளித்தனை ஆயின் ஐய! + +களவு இயல் அரக்கன் பின்னே தோன்றிய கடன்மை தீர + +இளையவற் கவித்த மோலி என்னையும் கவித்தி'என்றான்.         6.4.143 + + + +இராமன் வீடணனைத் தம்பியாக ஏற்றுக் கொள்ளுதல் + +6635.'குகனொடும் ஐவர் ஆனேம் முன்பு; பின், குன்று சூழ்வான் + +மகனொடும், அறுவர் ஆனேம்; எம் உழை அன்பின் வந்த + +அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம்; + +புகலருங் கானம் தந்து, புதல்வரால் பொலிந்தான் நுந்தை.         6.4.144 + + + +வீடணன் இராமனுடைய திருவடி நிலைகளைச் சூட்டிக் கொள்ளுதல் + + + +6636.'நடு இனிப் பகர்வது என்னே? நாயக! நாயினேனை + +'உடன் உதித்தவர்கேளாடும் ஒருவன்'என்று உரையா நின்றாய், + +அடிமையில் சிறந்தேன்'என்னா அயிர்ப்பொடும் அச்சம் நீங்கித் + +தொடுகழல் செம்பொன் மோலி சென்னியில் சூட்டிக் கொண்டான்.         6.4.145 + + + +6637.திருவடி முடியில் சூடிச், செங்கதிர் உச்சி சேர்ந்த + +அரு வரை என்ன நின்ற அரக்கர்தம் அரசை நோக்கி, + +இருவரும் உவகை கூர்ந்தார்; யாவரும் இன்பம் உற்றார்; + +பொரு அரும் அமரர் வாழ்த்திப், பூமழை பொழிவது ஆனார்.         6.4.146 + + + +6638.ஆர்த்தன, பரவை ஏழும்; அவனியும், அமரர் நாடும், + +வார்த் தொழில் புணரும் தயெ்வ மங்கல முரசும் சங்கும்; + +தூர்த்தன கனக மாரி; சொரிந்தன, நறுமென் சுண்ணம்; + +போர்த்தது, வானத்து, அன்று, அங்கு, எழுந்தது துழனிப் பொம்மல்.         6.4.147 + + + +பிரமனும் அறமும் இடர் நீங்கி மகிழ்தல் + + + +6639.'மொழிந்த சொல் அமிழ்தம் அன்னாள் திறத்தினின் முறைமை நீங்கி + +இழிந்த என் மரபும் இன்றே உயர்ந்தது என்று இடரில் தீர்ந்தான், + +செழுந் தனி மலரோன்; பின்னை, 'இராவணன் தீமைச் செல்வம் + +அழிந்தது'என்று அறனும், தன்வாய் ஆவலம் கொட்டிற்று அன்றே.         6.4.148 + + + +வீடணனோடு பாசறையை வலம் வருமாறு இராமன் இலக்குவற்குப் பணித்தல் + + + +6640.இன்னத�� ஓர் செவ்வித்து ஆக இராமனும், இலங்கை வேந்தன் + +தன் நெடும் செல்வம் தானே பெற்றமை பலரும் காணப், + +பல் நெடும் தானை சூழப் பகலவன் சேயும் நீயும் + +மன் நெடுங் குமர! பாடி வீட்டினை வலஞ் செய்க என்றான்.         6.4.149 + + + +வீடணனைப் பாடி வீடாகிய நகர்வலம் செய்வித்தல் + + + +6641.அந்தம் இல் குணத்தினானை அடியிணை முடியினோடும் + +சந்தன விமானம் ஏற்றி, வானரத் தலைவர் தாங்க, + +'இந்திரற்கு அரிய செல்வம் எய்தினான் இவன்'என்று ஏத்தி + +மந்தரத் தடந்தோள் வீரர் வலஞ் செய்தார் தானை வைப்பை.         6.4.150 + + + +கவிக்கூற்று + + + +6642.தேடுவார் தேட நின்ற சேவடி, தானும் தேடி + +நாடுவான், அன்று கண்ட நான்முகன் கழீஇய நல் நீர் + +ஆடுவார் பாவம் அஞ்சும் நீங்கி, மேல் அமரர் ஆவார்; + +சூடுவார் எய்தும் தன்மை சொல்லுவார் யாவர்? கண்டீர்.         6.4.151 + + + +பெரியோர் வியப்பு + + + +6643.இற்றை நாள் அளவும், பாரில் இருடிகள், இமையோர், ஞானம் + +முற்றினார், அன்பு பூண்டார், வேள்விகள் முடித்து நின்றார், + +மற்றும் மாதவரும், எல்லாம், 'வாள் எயிற்று இலங்கை வேந்தன் + +பெற்றது ஆர் பெற்றார்!'என்று வியந்தனர், பெரியோர் எல்லாம்.         6.4.152 + +------------------ + + + +6.5 இலங்கை வேள்விப் படலம் (6644- ) + + + +வீடணனுக்கு இராமன் இடமளித்தல் + + + +6644. வந்து அடி வணங்கிய நிருதர் மன்னவற்கு + +அந்தம் இலாதது ஓர் உறையுள் அவ் வழித் + +தந்தனன் விடுத்த பின் இரவி'தன்கதிர் + +சிந்தின வெய்ய'என்று எண்ணித் தீர்ந்தனன்.         6.5.1 + + + +இராமன் அந்திவந்தனை முடிக்க இரவு வருதல் + + + +6645. சந்தி வந்தனைத் தொழில் முடித்துத் தன் நெடும் + +புந்தி நொந்து இராமனும் உயிர்ப்பப் பூங்கணை + +சிந்தி வந்து இறுத்தனன் மதனன்; தீ நிறத்து + +அந்தி வந்து இறுத்தது; கறுத்தது அண்டமே.         6.5.2 + + + +விண்மீன்கள் விளங்குதல் + + + +6646. மாத் தடந் திசைதொறும் மறைந்த வல் இருள் + +கோத்தது கரும் கடல் கொள்ளை கொண்டு என; + +நீத்த நீர்ப் பொய்கையில் நிறைந்த நாள்மலர் + +பூத்த போல் மீன்களால் பொலிந்தது அண்டமே.         6.5.3 + + + +மல்லிகை மலர்தல் + + + +6647. சில் இயல் கோதையை நினைந்து தேம்பிய + +வில்லியைத் திரு மனம் வெதுப்பும் வெம்மையால் + +எல்லியைக் காண்டலும் மலர்ந்த ஈட்டினால் + +மல்லிகைக் கானமும் வானம் ஒத்ததே.         6.5.4 + + + +சந்திரன் எழுதல் + + + +6648. ஒன்றும் உட் கறுப்பினோடு ஒளியின் வாள் உரீஇத் + +'தனிதனி முகத்தினால் என்னைத் தாழ்த்து அற + +வென்றவன் துணைவனை இன்று வெல்குவேன��' + +என்றது போல வந்து எழுந்தது இந்துவே.         6.5.5 + + + +நிலவு வீசுதல் + + + +6649. 'கண்ணினை அப்புறம் கரந்து போகினும் + +பெண் இறை உண்டு எனின் பிடிப்பல் ஈண்டு'என + +உள் நிறை நெடுங் கடல் உலகம் எங்கணும் + +வெண் நிற நிலவு எனும் வலையை வீசினான்.         6.5.6 + + + +கடல் ஒலித்தல் + + + +6650. புடைக்க வன் திரை எடுத்து ஆர்க்கும் போர்க் கடல் + +உடைக்கருந் தனிநிறம் ஒளித்துக் கொண்டவன் + +அடைக்க வந்தான் எனை அரியின் தானையால் + +கிடைக்க வந்தான்'எனக் கிளர்ந்தது ஒத்ததே.         6.5.7 + + + +நிலவொளி பாய்தல் + + + +6651. மேல் உகத் தொகுதியால் முதிர்ந்த மெய் எலாம் + +தோல் உகுத்தால் என அரவத் தொல்கடல் + +வாலுகத்தால் இடைப் பரந்த வைப்பு எலாம் + +பால் உகுத்தால் என நிலவு பாய்ந்ததால்.         6.5.8 + + + +தென்றலால் இராமன் வருந்தல் + + + +6652. மன்றல் வாய் மல்லிகை எயிறு வண்டு இனம் + +கன்றிய நிறத்தது நறவின் கண்ணது + +குன்றின் வாய் முழையின் நின்று உலாய கொட்பது + +தென்றல் என்று ஒரு புலி உயிர்த்துச் சென்றதால்.         6.5.9 + + + +மன்மதன் அம்புகளாலும் நிலவின் கதிர்களாலும் இராமன் வருந்துதல் + + + +6653. கரத்தொடும் பாழிமாக் கடல் கடைந்துளான் + +உரத்தொடும் கரனொடும் உருவ ஓங்கிய + +மரத்தொடும் தொளைத்தவன் மார்பில் மன்மதன் + +சரத்தொடும் பாய்ந்தன நிலவின் தாரைவாள்.         6.5.10 + + + +இராமன் உடல் முதலியவற்றை நோக்குதல் + + + +6654. உடலினை நோக்கும்; இன் உயிரை நோக்கும்; உள் + +இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்; + +கடலினை நோக்கும்; அக்கள்வன் வைகுறும் + +திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்குமால்.         6.5.11 + + + +இராமன் சீதையின் நினைவால் சிந்தை கலங்கல் + + + +6655. பணி பழுத்து அமைந்த பூண் அல்குல் பண்பினால் + +பிணி பழுத்து அமைந்தது ஓர் பித்தின் உள்ளத்தான் + +அணி பழுத்து அமைந்த முத்து அரும்பு செம்மணி + +மணி பழுத்து அமைந்த வாய் மறக்க வல்லனோ?         6.5.12 + + + +சுக்கிரீவன் இராமனை நோக்கி வீடணனோடு மேல் நிகழ்வதை எண்ணுக எனல் + + + +6656. ஆயது ஓர் அளவையின் அருக்கன் மைந்தன்'நீ + +தேய்வது என்? காரியம் நிரப்பும் சிந்தையை; + +மேயவன் தன்னொடும் எண்ணி மேல் இனித் + +தூயது நினைக்கிலை'என்னச் சொல்லினான்.         6.5.13 + + + +6657. அவ்வழி உணர்வு வந்து அயர்வு நீங்கினன் + +'செவ்வழி அறிஞனைக் கொணர்தி சென்று'என + +'இவ்வழி வருதி'என்று இயம்ப எய்தினான். + +வெவ்வழி விலங்கி நல் நெறியை மேவினான்.         6.5.14 + + + +6658. மருக் கிளர் த��மரை வாச நாள் மலர் + +நெருக்கிடு தடம் என இருந்த நீதியான் + +திரு கிளர் தாமரை பணிந்த செம்மலை + +'இருக்க ஈண்டு எழுந்து'என இருந்த காலையில்.         6.5.15 + + + +6659.'ஆர்கலி இலங்கையின் அரணும் அவ் வழி + +வார்கெழு கனைகழல் அரக்கன் வன்மையும் + +தார்கெழு தானையின் அளவும் தன்மையும் + +நீர்கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய்'என்றான்.         6.5.16 + + + +வீடணன் இராமனது வினாவிற்கு விடைகூறத் தொடங்குதல் + + + +6660. எழுதலும்'இருத்தி'என்று இராமன் ஏயினான் + +முழுது உணர் புலவனை; முளரிக் கண்ணினான் + +பழுது அற வினவிய பொருளைப் பண்பினால் + +தொழுது உயர் கையினான் தெரியச் சொல்லினான்.         6.5.17 + + + +இலங்கையின் பிறப்பு + + + +6661. 'நிலையுடை வடவரை குலைய நேர்ந்து அதன் + +தலை என விளங்கிய தமனியப் பெரு + +மலையினை மும்முடி வாங்கி ஓங்கு நீர் + +அலைகடல் இட்டனன் அனுமன் தாதையே.         6.5.18 + + + +இலங்கை சூழ் மதிலின் சிறப்பு + + + +6662. 'ஏழு நூறு யோசனை அகலம் இட்ட கீழ் + +ஆழம் நூறு யோசனை ஆழிமால் வரை + +வாழியாய்! உலகினை வளைந்த வண்ணமே + +சூழும் மா மதில்; அது சுடர்க்கும் மேலதால்.         6.5.19 + + + +மதிற்பொறி முதலியன + + + +6663. 'மருங்குடை வினையமும் பொறியின் மாட்சியும் + +இருங்கடி அரணமும் பிறவும் எண்ணினால் + +சுருங்கிடும்; என்பல சொல்லில்? சுற்றிய + +கரும் கடல் அகழ் அது; நீரும் காண்டிரால்.         6.5.20 + + + +இலங்கையின் வடக்கு வாயில் காப்போர் + + + +6664. 'வடதிசை வயங்கு ஒளி வாயில் வைகுவோர் + +இடை இலர் எண் இரு கோடி என்பரால்; + +கடை யுக முடிவினில் காலன் என்பது என்? + +விடைவரு பாகனைப் பொருவும் வெம்மையார்.         6.5.21 + + + +மேற்றிசை வாயில் வீரர் + + + +6665. 'மேல் திசை வாயிலின் வைகும் வெய்யவர்க்கு + +ஏற்றமும் உள அவர்க்கு இரண்டு கோடி மேல்; + +கூற்றையும் கண் பொறி குறுகக் காண்பரேல் + +ஊற்றுறு குருதியோடு உயிரும் உண்பரால்.         6.5.22 + + + +தென் திசை வாயில் வீரர + + + +6666. 'தென் திசை வாயிலின் வைகும் தீயவர் + +என்றவர் எண் இரு கோடி என்பரால்; + +குன்று உறழ் நெடியவர் கொடுமை கூறி என்? + +வன் திறல் யமனையும் அரசு மாற்றுவார்.         6.5.23 + + + +கிழக்கு வாயில் வீரர் + + + +6667. 'கீழ்த்திசை வாயிலின் வைகும் கீழவர் + +ஈட்டமும் எண் இரு கோடி என்பரால்; + +கோட்டு இருந் திசை நிலைக் கும்பக் குன்றையும் + +தாள் துணை பிடித்து அகன் தரையின் எற்றுவார்'.         6.5.24 + + + +விண்ணினும் மண்ணினும் காவல்செய் வீரர் + + + +6668. 'விண் இடை விழித்தனர் நிற்கும் வெய்யவர் + +எண் இரு கோடியின் இரட்டி என்பரால்; + +மண்ணிடை வானவர் வருவர் என்றவர் + +கண் இலர் கரை இலர் கரந்து போயினார்.         6.5.25 + + + +மதிலின் புறத்தும் அகத்தும் காப்போர் + + + +6669. 'பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும் + +உறங்கலர் உண் பதம் உலவை ஆதலால் + +கறங்கு எனத் திரிபவர் கணக்கு வேண்டுமேல் + +அறைந்துளது ஐ இரு நூறு கோடியால்.         6.5.26 + + + +நகர் காவல் + + + +6670. 'இப்படி மதில் ஒரு மூன்று; வேறு இனி + +ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ? + +மெய்ப் பெருந் திரு நகர் காக்கும் வெய்யவர் + +முப்பது கோடியின் மும்மை முற்றினார்.         6.5.27 + + + +இராவணனால் சிறப்புப் பெற்ற வீரர்கள் + + + +6671. 'சிறப்பு அவன் செய்திடச் செல்வம் எய்தினார் + +அறப் பெரும் பகைஞர்கள் அளவு இல் ஆற்றலர் + +உறப் பெரும் பகை வரின் உதவும் உண்மையர் + +இறப்பு இலர் எண் இரு நூறு கோடியே!'.         6.5.28 + + + +கோயில் வாயில் காப்போர் + + + +6672. "'விடம் அல விழி" எனும் வெகுளிக் கண்ணினர் + +"கடன் அல இமைத்தலும்" என்னும் காவலர் + +வடவரை புரைவன கோயில் வாயிலின் + +இடம் வலம் வருபவர் எண் எண் கோடியால்.         6.5.29 + + + +அரண்மனை முன்றிலில் உள்ள வீரர் + + + +6673. 'அன்றியும் அவன் அகன் கோயில் ஆய் மணி + +முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின் + +ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார் + +குன்றினும் வலியவர் கோடி கோடியால்.         6.5.30 + + + +தேர் முதலிய நால்வகைப் படைகளின் அளவு + + + +6674. 'தேர் பதினாயிரம் பதுமம்; செம் முகக் + +கார் வரை அவற்றினுக்கு இரட்டி; கால் வயத்து + +ஊர் பரி அவற்றினுக்கு இரட்டி; ஒட்டகம் + +தார் வரும் புரவியின் இரட்டி சாலுமே.         6.5.31 + + + +6675. 'பேயினன் என் பல பிதற்றிப் பேர்த்து? அவன் + +மா இரு ஞாலத்து வைத்த மாப்படை + +தேயினும் நாள் எலாம் தேய்க்க வேண்டுவது + +ஆயிர வெள்ளம் என்று அறிந்தது ஆழியாய்!         6.5.32 + + + +இராவணன் துணைவரின் பெருமை கூறத் தொடங்குதல் + +6676. 'இலங்கையின் அரண் இது படையின் எண் இது; + +வலங்கையின் வாள் சிவன் கொடுக்க வாங்கிய + +அலங்கல் அம் தோளவன் துணைவர் அந்தம் இல் + +வலங்களும் வரங்களும் தவத்தின் வாய்த்தவர்.         6.5.33 + + + +கும்பன் பெருமை + +6677. தும்பி ஈட்டமும், இரதமும், புரவியும், தொடர்ந்த + +அம் பொன் மாப்படை ஐ இரு கோடி கொண்டு அமைந்தான். + +செம் பொன் நாட்டு உள சித்தரைச் சிறையிடை வைத்தான் + +கும்பன் என்று உளன், ஊழி வெம் கதிரினும் கொடியான்.'         6.5.34 + + + +அகம்பன் பெருமை + +6678. 'உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம் உடையான், + +சுகம் பல் போர் அலால் வேறு இலன், பொரு படைத் தொகையான், + +நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம் அனையான், + +அகம்பன் என்று உளன், அலை கடல் பருகவும் அமைவான்.'         6.5.35 + + + +நிகும்பன் பெருமை + +6679. 'பொருப்பை மீதிடும் புரவியும், பூட்கையும், தேரும், + +உருப்ப வில் படை ஒன்பது கோடியும் உடையான், + +செருப் பெய் வானிடைச் சினக் கடாய் கடாய் வந்து செறுத்த + +நெருப்பை வென்றவன், நிகும்பன் என்று உளன், ஒரு நெடியோன்.'         6.5.36 + + + +         6.5. + +மகோதரன் பெருமை + +6680. 'பேயை யாளியை யானையைக் கழுதையைப் பிணித்த + +ஆய தேர்ப் படை ஐ இரு கோடி கொண்டு அமைந்தான் + +தாயை ஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா + +மாயையான் உளன், மகோதரன் என்று ஒரு மறவோன்.'         6.5.37 + + + +வேள்விப் பகைஞன் பெருமை + +6681. 'குன்றில் வாழ்பவர் கோடி நால் ஐந்தினுக்கு இறைவன் + +"இன்று உளார் பின்னை நாளை இலார்" என எயிற்றால் + +தின்றுளான், பண்டு தேவரைப் பல் முறை செருவின் + +வென்றுளான், உளன், வேள்வியின் பகைஞன், ஓர் வெய்யோன்.'         6.5.38 + + + +சூரியன் பகைஞன் பெருமை + +6682. "'மண் உளாரையும் வானின் உள்ளாரையும் வகுத்தால், + +உண்ணும் நாள் ஒரு நாளினில்'' ஒளிர் படைத் தானை + +எண்ணின் நால் இரு கோடியன், எரி அஞ்ச விழிக்கும் + +கண்ணினான் உளன், சூரியன் பகை என்று ஓர் கழலான்.'         6.5.39 + + + +பெரும்பக்கன் பெருமை + +6683. 'தேவரும், தக்க முனிவரும், திசை முகன் முதலா + +மூவரும் பக்கம் நோக்கியே மொழிதர, முனிவான், + +தாவரும் பக்கம் எண் இரு கோடியின் தலைவன், + +மா பெரும் பக்கன் என்று உளன், குன்றினும் வலியான்.'         6.5.40 + + + +வச்சிரதந்தன் பெருமை + +6684. உச்சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன், + +நச்சிரப்படை நால் இரு கோடிக்கு நாதன், + +முச்சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு அரும் மொய்ம்பன், + +வச்சிரத்து எயிற்றவன், உளன், கூற்றுவன் மாற்றான்.         6.5.41 + + + +பிசாசன் பெருமை + +6685. அசஞ்சலப் படை ஐ இரு கோடியன், அமரின் + +வசம் செயாதவன், தான் அன்றிப் பிறர் இலா வலியான், + +இசைந்த வெஞ் சமத்து இயக்கரை வேரோடும் முன் நாள் + +பிசைந்து மோந்தவன், பிசாசன் என்று உளன், ஒரு பித்தன்.         6.5.42 + + + +6686. 'சில்லி மாப் பெரும் தேரோடும், கரி, பரி, சிறந்த + +வில்லின் மாப்படை ஏழ் இரு கோடிக்கு வேந்தன், + +கல்லி மாப்படி கலக்குவன், கனல் எனக் காந்திச் + +சொல்லும் மாற்றத்தன் துன்முகன் என்று அறம் துறந்தோன்.'         6.5.43 + + + +விரூபாக்கன் பெருமை + +6687. கை நாட்டன்ன எறிகடல் தீவிடை உறையும் + +அலங்கல் வேல் படை ஐ இரு கோடிக்கும் அரசன், + +வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ் மறைத்தான், + +விலங்கு நாட்டத்தன் என்று உளன் வெயில் உக விழிப்பான்.         6.5.44 + + + +6688. நாமம் நாட்டிய சவம் எலாம் நாள்தொறும் ஒருவர் + +ஈம நாடு இடை இடாமல்தன் எயிற்று இடை இடுவான், + +தாமம் நாட்டிய கொடிப் படைப் பதுமத்தின் தலைவன், + +தூம நாட்டத்தன் என்று உளன் தேவரைத் துரந்தான்.         6.5.45 + + + +போர்மத்தன், வயமத்தன் பெருமை + +6689. 'போரில் மத்தனும், பொருவய மத்தனும், புலவர் + +நீரில் மத்து எனும் பெருமையர்; நெடுங் கடற் படையார்; + +ஆரும் அத்தனை வலி உடையார் இலை; அவரால் + +பேரும், அத்தனை எத்தனை உலகமும்; பெரியோய்!         6.5.46 + + + +பிரகத்தன் பெருமை (6690-6691) + +6690. இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் + +அன்னவன் பெருந் துணைவராய், அமர்த் தொழிற்கு அமைந்தார்? + +சொன்ன சொன்னவர் படைத்துணை இரட்டியின் தொகையான் + +பின்னை எண்ணுவான் பிரகத்தன் என்று ஒரு பித்தன்.         6.5.47 + + + +கும்பகன்னன் பெருமை + +6691. சேனை காவலன்; இந்திரன் சிந்துரச் சென்னி + +யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு அகல, + +ஏனை வானவர் இருக்கை விட்டு இரியல் உற்று அலையச் + +சோனை மாரியின் சுடு கணை பலமுறை துரந்தான்.         6.5.48 + + + +கும்பகன்னன் பெருமை + +6692. தம்பி; முற் பகல் சந்திரர் நால்வரில் தயங்கும் + +கும்ப மால் கரிக் கோடு இரு கைகளால் வாங்கிச் + +செம்பொன் மால் வரை மதம் பட்டதாம் எனத் திரிந்தான், + +கும்ப கன்னன் என்று உளன் பண்டு தேவரைக் குமைத்தான்.         6.5.49 + + + +இந்திரசித்தின் பெருமை + +6693. 'கோள் இரண்டையும் கொடுஞ்சிறை வைத்த அக் குமரன் + +மூளும் வெம் சினம் அத்து இந்திர சித்து என மொழிவான்; + +ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் பின்னைத், + +தாளினும் உள, தோளினும் உள, இனம் தழும்பு.'         6.5.50 + + + +அதிகாயன் பெருமை + +6694. தன்னையும் தறெும் தருமம் என்று இறை மனம் தாழான், + +முன்னவன் தரப் பெற்றது ஓர் முழு வலிச் சிலையான், + +அன்னவன் தனக்கு இளையவன், அப் பெயர் ஒழித்தான், + +பின் ஓர் இந்திரன் இலாமையின்; பேர் அதிகாயன்.         6.5.51 + + + +தேவாந்தகன், நராந்தகன், திரிசிரன் என்பார் பெருமை + +6695. தேவராந்தகன் நராந்தகன், திரிசிரா, என்னும் + +மூவர் ஆம்"தகை முதல்வராம் தலைவரும் முனையில் + +போவராம்; தகை அழிவராம்'' எனத் தனிப் பொருவார் + +ஆவராம் தகை இராவணற்கு அரும் பெறல் புதல்வர்.         6.5.52 + + + +இராவணன் பெருமை (6696-6700) + +6696. இனைய தன்மையர் வலி இதாம் இராவணன் என்னும் + +அனையவன் திறம் யான் அறி அளவு எலாம் அறைவென்; + +தனையன், நான் முகன் தகை மகன் சிறுவற்குத் தவத்தால், + +முனைவர் கோன் வரம், முக்கணான் வரத்தொடும் உயர்ந்தான்.         6.5.53 + + + +வெள்ளிமலையை அள்ளி எடுத்தது + +6697. எள் இல் ஐம் பெரும் பூதமும் யாவையும் உடைய + +புள்ளி மான் உரி ஆடையன் உமையொடும் பொருந்தும் + +வெள்ளி அம் பெருங் கிரியினை வேரோடும் வாங்கி + +அள்ளி விண் தொட எடுத்தனன் உலகெலாம் அனுங்க.         6.5.54 + + + +திசையானை மருப்பு ஒசித்த திறம் + +6698. 'ஆன்ற எண் திசை உலகு எலாம் சுமக்கின்ற யானை, + +ஊன்று கோடு இறத் திரள் புயத்து அழுத்திய உரவோன், + +தோன்றும் என்னவே துணுக்கம் உற்று இரிவர், அத்தொகுதி + +மூன்று கோடியின் மேல் ஒரு முப்பத்து மூவர்.'         6.5.55 + + + +காலகேயரை வென்றமை + +6699. குலங்கேளாடு தம் குல மணி முடியொடும் குறைய, + +அலங்கல் வாள்கொடு காலகேயரைக் கொன்ற அதன்பின், + +'இலங்கை வேந்தன்" என்று உரைத்தலும், இடி உண்ட அரவின் + +கலங்குமால் இனம் தானவர் தேவியர் கருப்பம்.'         6.5.56 + + + +வடதிசையில் குபேரனை வென்றமை + +6700. 'குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை குபேரன், + +திரண்ட மாடும், தன் திருவொடு நிதியமும், இழந்து,' + +புரண்டு மான்திரள் புலி கண்டது ஆம் எனப், போனான் + +இரண்டு மானமும், இலங்கை மா நகரமும் இழந்து.'         6.5.57 + + + +தென்திசையில் அந்தகனை வென்றது + +6701. "'புண்ணும் செய்தது முதுகு" எனப் புறம் கொடுத்து ஓடி, + +"உண்ணும் செய்கை அத் தசமுகக் கூற்றம் தன் உயிர்மேல் + +நண்ணும் செய்கையது''எனக் கொடு, நாள் தொறும், தன் நாள் + +எண்ணும் செய்கையன், அந்தகன், தன் பதம் இழந்தான்.'         6.5.58 + + + +மேற்றிசையில் வருணனை வென்றமை + +6702. 'இருள் நன்கு ஆசு அற, எழு கதிரவன் நிற்க; என்றும் + +அருணன் கண்களும் கண்டிலா இலங்கை, மண்டு அமரில் + +பருணன் தன் பெரும் பாசமும் பறிப்பு உண்டு, பயத்தால் + +வருணன் உய்ந்தனன், மகர நீர் வெள்ளத்து மறைந்து.'         6.5.59 + + + +இராவணன் தோள் வலிமை + +6703. 'என்று, உலப்புறச் சொல்லுகேன், இராவணன் என்னும் + +குன்று உலப்பினும் உலப்பு இலாத் தோளினான் கொற்றம்' + +இன்று உலப்பினும், நாளையே உலப்பினும், சிலநாள் + +சென்று உலப்பினும், நினக்கு அன்றிப், பிறர்க்கு என்றும் தீ��ான்.         6.5.60 + + + +அனுமன் இலங்கையில் செய்த வெற்றிச் செயல்கள் + +6704. 'ஈடு பட்டவர் எண்ணிலர் தோரணத்து எழுவால்; + +பாடு பட்டவர் பகுகடல் மணலினும் பலரால்; + +சூடு பட்டது தொல்நகர்; அடுபுலி துரந்த + +ஆடு பட்டது பட்டனர் அனுமனால் அரக்கர்.         6.5.61 + + + +கிங்கரரை வதைத்தது + +6705. 'எம் குலத்தவர் எண்பதினாயிரர் இறைவ + +கிங்கரப் பெயர் கிரியன தோற்றத்தர் கிளர்ந்தார் + +வெங் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கிச் + +சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார்.         6.5.62 + + + +சம்புமாலியை வதைத்தது + +6706. வெம்பும் மாக் கடல் சேனை கொண்டு எதிர்பொர வெகுண்டான், + +அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி + +உம்பர் வானகத்து ஒரு தனி நமனைச் சென்று உற்றான், + +சம்பு மாலியும், வில்லினால் சுருக்குண்டு தலைவ!         6.5.63 + + + +பஞ்ச சேனாதிபதிகளை வதைத்தது + +6707. 'சேனைக் காவலர் ஒர் ஐவர் உளர், பண்டு தேவர் + +வானைக் காவலும் மானமும் மாற்றிய மறவர், + +தானைக் கார்வருங் கடலொடும், தமரோடும், தாமும், + +யானைக் கால்பட்ட செல் என, ஒல்லையின் அவிந்தார்.         6.5.64 + + + +அனுமன் அரக்கனை அழித்தது + +6708. காய்த்த அக்கணத்து அரக்கர்தம் உடல் உகு கறைத் தோல், + +நீத்த எக்கரின், நிறைந்துள; கருங்கடல் நெருப்பின் + +வாய்த்த அக்கனை, வரிசிலை மலையொடும் வாங்கி, + +தேய்த்த அக் குழம்பு உலர்ந்தில, இலங்கையின் தரெுவில்.         6.5.65 + + + +அனுமனது வீரப் பெருமை + +6709. சொன்ன மாமதில் இலங்கையின் பரப்பினில் துகைத்துச் + +சின்னம் ஆனவர் கணக்கினை யாவரே தெரிப்பார்? + +இன்னம் ஆர் உளர், வீரர் மற்று? இவன் சுட எரிந்த + +அன்ன மா நகர் அவிந்தது அக் குருதியால் அன்று.         6.5.66 + + + +திரிகூட மலையும் வெந்தமை + +6710. 'விலங்கல் வெந்தவா வேறு இனி விளம்புவது எவனோ? + +அலங்கல் மாலையும் சாந்தமும் அன்றுதான் அணிந்த + +கலன்கேளாடும், அச் சாத்திய துகிலொடும், கதிர்வாள் + +இலங்கை வேந்தனும் ஏழு நாள் விசும்பிடை இருந்தான்!         6.5.67 + + + +எரிந்த இலங்கை பண்டுபோல் ஆதல் + +6711.'நொதுமல் திண்திறல் அரக்கனது இலங்கையை நுவன்றேன்; + +அது மற்று அவ்வழி அரணமும் பெருமையும் அறைந்தேன்; + +இது மற்று அவ்வழி எய்தியது; இராவணன் ஏவப் + +பதுமத்து அண்ணலே பண்டுபோல் அந் நகர் படைத்தான்.         6.5.68 + + + +வீடணன் வந்ததற்கும் காரணமாவது அனுமன் வீரமே + +6712.'காந்தும் வாளியின் கரன் முதல் வீரரும், கவியின் + +வேந்தும், என்று இவர் விளிந்தவா கேட்டு அன்று; அவ் விலங்கை + +தீந்தவா கண்டும், அரக்கரைச் செருவிடை முருக்கிப் + +போந்தவா கண்டும் நான் இங்குப் புகுந்தது புகழோய்!'         6.5.69 + + + +அனுமன் செயல் கேட்டு இராமன் மகிழ்தல் + +6713.கேள் கொள் மேலையான் கிளத்திய பொருள் எலாம் கேட்டான், + +வாள் கொள் நோக்கியைப், பாக்கியம் பழுத்தன மயிலை, + +நாள்கள் சாலவும் நீங்கலின், நலம் கெட மெலிந்த + +தோள்கள் வீங்கித், தன் தூதனைப் பார்த்து, இவை சொன்னான்.         6.5.70 + + + +அனுமனை இராமன் பாராட்டுதல் (6714-6716) + +6714. 'கூட்டினார் படை பாகத்தின் மேற்படக் கொன்றாய்; + +ஊட்டினாய் எரி, ஊர் முற்றும்; இனி அங்கு ஒன்று உண்டோ? + +கேட்ட ஆற்றினால், கிளி மொழிச் சீதையைக் கிடைத்தும் + +மீட்டு இலாதது என் வில் தொழில் காட்டவோ? வீர!         6.5.71 + + + +6715. 'நின் செய் தோள் வலி நிரம்பிய இலங்கையை நேர்ந்தோம்; + +பின் செய்தோம் சில; அவை இனிப் பீடு ஒன்று பெறுமே? + +பொன் செய் தோளினாய்! போர்ப் பெரும் படையொடும் புக்கோம்; + +என் செய்தோம் என்று பெரும் புகழ் எய்துவான் இருந்தோம்?         6.5.72 + + + +6716. 'என்னது ஆக்கிய வலியொடு அவ் இராவணன் வலியும் + +உன்னது ஆக்கினை; பாக்கியம் உருக் கொண்டது ஒப்பாய்! + +முன்னது ஆக்கிய மூவுலகு ஆக்கிய முதலோன் + +பின் அது ஆக்கிய பதம் நினக்கு ஆக்கினென்; பெற்றாய்.'         6.5.73 + + + +தன்புகழ் கேட்ட அனுமன் நாணமும் + +வானரப்படையின் வியப்பும் + +6717. என்று கூறலும், எழுந்து இரு நிலன் உற இறைஞ்சி, + +ஒன்றும் பேசலன் நாணினால், வணங்கினன் உரவோன்; + +நின்ற வானரத் தலைவரும், அரசும், அந் நெடியோன்; + +வென்றி கேட்டலும், வீடு பெற்றார் என வியந்தார்.         6.5.74 + +-------------------- + + + +6.6 வருணனை வழி வேண்டு படலம் ( 6718 - ) + + + +இராமன் கடலைக் கடக்கும் உபாயத்தைச் சிந்திக்குமாறு வீடணனுக்குக் கூறுதல் + + + +6718. 'தொடக்கும் என்னின் இவ் உலகு ஒரு மூன்றையும் தோளால் + +அடக்கும் வண்ணமும் அழித்தலும் ஒரு பொருள் அன்றால்; + +கிடக்கும் வண்ண வெங் கடலினைக் கிளர் பெருஞ் சேனை + +கடக்கும் வண்ணமும் எண்ணுதி எண்ணு நூல் கற்றாய்!'         6.6.1 + + + +வீடணன் கடலை இரந்து வழிவேண்டுமாறு இராமனுக்குக் கூறுதல் + + + +6719. 'கரந்து நின்ற நின் தன்மையை, அது செலக் கருதும்; + +பரந்தது உன் திருக் குல முதல் தலைவரால்; பரிவாய் + +வரம் தரும், இந்த மாக் கடல்; படை செல, வழி வேறு + +இரந்து வேண்டுதி எறிதிரைப் பரவையை'என்றான்.         6.6.2 + + + +வீடணன் மொழியை இராமன் ஏற்றுக் கொள்ளுதல் + +6720. 'நன்று இலங்கையர் நாயகன் மொழி'என நயந்தான், + +ஒன்று தன் பெருந் துணைவரும் புடை செல, உரவோன், + +சென்று வேலையைச் சேர்தலும், விசும்பு இடை, சிவந்த + +குன்றின் மேல் நின்று குதித்தன பகலவன் குதிரை.         6.6.3 + + + +இருள் புலர்தல் + + + +6721. கொழுங் கதிர்ப் பகைக் கோள் இருள் நீங்கிய கொள்கை, + +செழுஞ் சுடர்ப் பனிக் கலை எலாம் நிரம்பிய திங்கள் + +புழுங்கு வெஞ் சினத்து அஞ்சனப் பொறிவரி அரவம் + +விழுங்கி நீங்கியது ஒத்தது, வேலை சூழ் ஞாலம்.         6.6.4 + + + +இராமன் வருண மந்திரத்தை எண்ணுதல் + + + +6722. 'தருண மங்கையை மீட்பது ஓர் நெறி தருக!'என்னும் + +பொருள் நயந்து, நல் நூல் நெறி அடுக்கிய புல்லில், + +கருணை அம் கடல் கிடந்தனன், கருங்கடல் நோக்கி; + +வருண மந்திரம் எண்ணினன், விதிமுறை வணங்கி.         6.6.5 + + + +ஏழுநாள் எண்ணியும் வருணன் வாராமை + + + +6723. பூழி சென்று தன் திரு உருப் பொருந்தவும், புரைதீர் + +வாழி வெங்கதிர் மணிமுகம் வருடவும், வளர்ந்தான்; + +ஊழி சென்றன ஒப்பு என, ஒரு பகல்; அவை ஓர் + +ஏழு சென்றன; வந்திலன், எறி கடற்கு இறைவன்.         6.6.6 + + + +இராமன் சினங்கொளல் + + + +6724. 'ஊற்றம் மீக் கொண்ட வேலையான், + + 'உண்டு'"இலை" என்னும் + +மாற்றம் ஈக்கவும் பெற்றிலம், யாம்'எனும் மனத்தால், + +ஏற்றம் மீக் கொண்ட புனலிடை எரி முளைத் தென்னச் + +சீற்றம் மீக் கொண்டு சிவந்தன, தாமரைச் செங்கண்.         6.6.7 + + + +இராமன் சினத்தால் புருவம் வளைதல் + + + +6725. 'மாண்ட இல் இழந்து அயரும் நான், வழி, தனை வணங்கி, + +வேண்ட,"இல்லை" என்று ஒளித்தது ஆம்' என மனம் வெதும்ப, + +நீண்ட வில் உடை நெடுங் கனல் உயிர்ப்பொடு நெடுநாண் + +பூண்ட வில் எனக் குனித்தன, கொழுங்கடைப் புருவம்.         6.6.8 + + + +இராமனது சினச் சிரிப்பு + + + +6726."ஒன்றும் வேண்டலர் ஆயினும், ஒருவர் பால் ஒருவர், + +சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையில் தீரார்; + +இன்று வேண்டியது எறிகடல் நெறிதனை மறுத்தான்; + +நன்று! நன்று!'என நகையொடும் புகை உக நக்கான்.         6.6.9 + + + +இராமன் சின மொழி (6727-6731) + + + +6727."'பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத் + +தாரம் நீங்கிய தன்மையன், ஆதலின், தகைசால் + +வீரம் நீங்கிய மனிதன்''என்று இகழ்ச்சி மேல் விளைய, + +ஈரம் நீங்கியது, எறிகடல் ஆம்' என இசைத்தான்.         6.6.10 + + + +6728. புரந்து கோடலும், புகழொடு கோடலும் பொருது, + +துரந்து கோடலும் என்று இவை தொன்மையின் தொடர்ந்த; + +இரந்து கோடலின் இயற்கையும் தருமமும் எஞ்சக் + +கரந்த�� கோடலே நன்று; இனி நின்றது என் கழறி?         6.6.11 + + + +6729."'கான் இடைப் புகுந்து, இருங் கனி காயொடு நுகர்ந்த + +ஊன் உடைப் பொறை உடம்பினன்'' என்று கொண்டு உணர்ந்த + +மீனுடைக் கடல் பெருமையும், வில்லொடு நின்ற + +மானுடச் சிறு தன்மையும், காண்பரால், வானோர்.         6.6.12 + + + +6730. 'ஏதம் அஞ்சி, நான் இரந்ததே, + + "எளிது" என இகழ்ந்த + +ஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆகப் + +பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர் கொண்டு பொரும, + +பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர், என் படைஞர்.         6.6.13 + + + +6731. 'மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும், + +வெறுமை கண்ட பின், யாவரும் யார் என, விரும்பார்; + +குறுமை கண்டவர் கொழுங்கனல் என்னினுங் கூசார்; + +சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார்.         6.6.14 + + + +6732. திருதி என்பது ஒன்று அழிதர, ஊழியில் சினவும் + +பருதி மண்டிலம் எனப் பொலி முகத்தினன் பலகால் + +'தருதி வில்'எனும் அளவையில், தம்பியும் வெம்பிக் + +குருதி வெங்கனல் உமிழ்கின்ற கண்ணினன் கொடுத்தான்.         6.6.15 + + + +6733. வாங்கி வெஞ்சிலை வாளி பெய் புட்டிலும் மலைபோல் + +வீங்கு தோள் அயல் வீக்கினன் கோதையின் விரலால் + +தாங்கி நாணினைத் தாக்கினன் தாக்கிய தமரம் + +ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்துளது ஊடல்.         6.6.16 + + + +இராமனம்பு விடுதல் (6734-6735) + + + +6734. மாரியின் பெருந் துளியினும் வரம்பு இல வடித்த + +சீரிது என்றவை எவற்றினும் சீரிய தெரிந்து + +பார் இயங்கு இரும்புனல் எலாம் முடிவினில் பருகும் + +சூரியன் கதிர் அனையன சுடுசரம் துரந்தான்.         6.6.17 + + + +6735. பெரிய மால்வரை ஏழினும் பெருவலி பெற்ற + +வரி கொள் வெஞ் சிலை வளர் பிறையாம் என வாங்கித், + +திரிவ நிற்பன யாவையும் முடிவினில் தீக்கும் + +எரியின் மும்மடி கொடியன சுடு சரம் எய்தான்.         6.6.18 + + + +இராமன் அம்பால் கடல் பட்டபாடு (6736-6772) + + + +6736. மீனும் நாகமும் விண்தொடு மலைகளும் விறகா + +ஏனை நிற்பன யாவையும் மேல் எரி எய்த, + +பேன நீர் நெடு நெய் என, பெய்கணை நெருப்பாக் + +கூனை அங்கியின் குண்டம் ஒத்தது, கடற் குட்டம்.         6.6.19 + + + + + +6737. பாழி வல் நெடுங் கொடுஞ்சிலை வழங்கிய பகழி, + +ஏழு வேலையும் எரியொடு புகை மடுத்து ஏகி, + +ஊழி வெங் கனல் கொழுந் துகள் உருத்து எழுந்து ஓடி, + +ஆழி மால்வரைக்கு அப்புறத்து இருளையும் அவித்த.         6.6.20 + + + +6738. மரும தாரையின் எரி உண்ட மகரங்கள் மயங்கிச் + +செரும, வான் இடை கற்பக மரங்களும் தீ��, + +நிருமியா விட்ட நெடுங் கணை பாய்தலின், நெருப்போடு + +உருமு வீழ்ந்தனெச், சென்றன, கடல்துளி உம்பர்.         6.6.21 + + + +6739. கூடும் வெம்பொறிக் கொடுங்கனல் தொடர்ந்தன கொளுத்த, + +ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன; உம்பர் + +ஆடும் மங்கையர் கருங் குழல் விளர்த்தன அளக்கர்க் + +கோடு நீத்து எழு கொழும்புகைப் பிழம்பு மீக் கொள்ள.         6.6.22 + + + +6740. நிமிர்ந்த செஞ்சரம் நிறம்தொறும் படுதலும், நெய்த்தோர் + +உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல; உருவத் + +துமிந்த துண்டமும் பலபடத் துரந்தன, தொடர்ந்து + +திமிங்கிலங்களும் திமிங்கில கிலங்களும் சிதறி.         6.6.23 + + + +6741. நீறு மீச்செல நெருப்பு எழப் பொருப்பு எலாம் எரிய, + +நூறும் ஆயிர கோடியும் கடுங் கணை நுழைய, + +ஆறு கீழ்ப்பட அளறுபட்டு அழுந்திய அளக்கர்ச் + +சேறு தீய்ந்தன; காந்தின சேடன் தன் சிரங்கள்.         6.6.24 + + + +6742. மொய்த்த மீன்குலம் முதல் அற முருங்கின, மொழியின் + +பொய்த்த சான்றவன் குலம் என, பொருகணை எரிய; + +உய்த்த கூம்புடை நெடுங் கலம் ஓடுவ கடுப்ப, + +தய்த்த அம்பொடும் திரிந்தன தால மீன் சாலம்.         6.6.25 + + + +6743. சிந்தி ஓடிய குருதி வெங் கனலொடு செறிய, + +அந்தி வானகம் கடுத்தது, அவ் அளப்பரும் அளக்கர்; + +பந்தி பந்திகளாய் நெடுங் கடுங்கணை படர, + +வெந்து தீந்தன, கரிந்தன, பொரிந்தன சிலமீன்.         6.6.26 + + + +6744. வைய நாயகன் வடிக்கணை குடித்திட வற்றி + +ஐய நீர் உடைத்தாய் மருங்கு அருங்கனல் மண்ட + +கைகலந்து எரி கரும் கடல் கார் அகல் கடுப்ப + +வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன சிலமீன்.         6.6.27 + + + +6745. குணிப்பருங் கொடும் பகழிகள் குருதிவாய் மடுப்பக் + +கணிப்பரும் புனல் கடையுறக் குடித்தலின் காந்தும் + +மணிப் பருந்தடங் குப்பைகள் மறிகடல் வெந்து + +தணிப்பருந் தழல் சொரிந்தன போன்றன தயங்கி.         6.6.28 + + + +6746. எங்கும் வெள்ளிடைப் படுத்தலின், இழுதுடை இனமீன் + +சங்கமும், கறி கிழங்கு என, இடை இடைத் தழுவி, + +அங்கம் வெந்து பேர் அளறு இடை அடுக்கிய கிடந்த; + +பொங்கு நல் நெடும் புனல் அறப் பொரிந்தன போன்ற.         6.6.29 + + + +6747. அதிரும் வெங்கணை ஒன்றை ஒன்று அடர்ந்து எரி உய்ப்ப, + +வெதிரின் நல் நெடுங் கான் என வெந்தன, மீனம்; + +பொதுவின் மன்னுயிர்க் குலங்களும் துணிந்தன பொழிந்த + +உதிரமும் கடல் திரைகளும் பொருவன, ஒருபால்.         6.6.30 + + + +6748. அண்ணல் வெங் கணை அறுத்திட, தெறித்து எழுந்து அளக்கர்ப் + +பண்ணை வெம்புனல் ���டப் பட, நெருப்பொடும் பற்றி, + +மண்ணில் வேர் உறப் பற்றிய நெடுமரம், மற்றும், + +எண்ணெய் தோய்ந்து என எரிந்தன, கிரிக் குலம் எல்லாம்.         6.6.31 + + + +6749. தயெ்வ நாயகன் தெரிகணை, + + 'திசைமுகத்து ஒருவன் + +வைவு இது ஆம் என, பிழைப்பு இல மனத்தினும் கடுக, + +வெய்ய அந்நெருப்பு இடை இடை பொறிந்து எழ வெறிநீர்ப் + +பொய்கை தாமரை பூத்து எனப் பொலிந்தது புணரி.         6.6.32 + + + +6750. செப்பின் மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல் + +தப்புமே? அது கண்டனம் உவரியில்;'தணியா + +உப்பு வேலை'என்று உலகு உறு பெரும்பழி நீங்கி, + +அப்பு வேலையாய் நிறைந்தது; குறைந்ததோ, அளக்கர்?         6.6.33 + + + +6751. தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்கலும் தானே + +வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு வலியோ? + +பாரை உண்பது படர்புனல்; அப்பெரும் பரவை + +நீரை உண்பது நெருப்பு எனும் அப்பொருள் நிறுத்தான்!         6.6.34 + + + +6752. மங்கலம் பொருந்திய தவத்து மாதவர் + +கங்குலும் பகலும் அக்கடலுள் வைகுவார் + +அங்கம் வெந்திலர் அவன் அடிகள் எண்ணலால்; + +பொங்கு வெங்கனல் எனும் புனலில் போயினார்.         6.6.35 + + + +6753. தென்திசை குடதிசை முதல திக்கு எலாம் + +துன்றிய பெரும்புகைப் படலம் சுற்றலால் + +கன்றிய நிறத்தன கதிரவன் பரி + +நின்றன; சென்றில; நெறியின் நீங்கின.         6.6.36 + + + +சக்கரவாகம் + + + +6754. பிறிந்தவர்க்கு உறுதுயர் உணரும் பெற்றியால் + +அறிந்திருந்து அறிகிலர் அனையர் ஆம் எனச் + +செறிந்த தம் பெடைகளைத் தேடித் தீக் கொள + +மறிந்தன கரிந்தன வாளப் புள் எலாம்.         6.6.37 + + + +தேவர்கள் + + + +6755. கமை அறு கருங் கடல் கனலி கைபரந்து + +அமை வனம் ஒத்த போது அறைய வேண்டுமோ? + +சுமை உறு பெரும்புகைப் படலம் சுற்றலால் + +இமையவர் இமைத்தனர் வியர்ப்பும் எய்தினார்.         6.6.38 + + + +6756. பூச் செலாதவள் நடை போல்கிலாமையால் + +ஏச்சு எலாம் எய்திய எகினம் யாவையும்; + +தீ செலா நெறி பிறிது இன்மையால் திசை + +மீச்செலா; புனலவன் புகழின் வீந்தவால்.         6.6.39 + + + +கடற்பறவைகளும் மேகமும் + + + +6757. பம்புறும் நெடுங்கடல் பறவை யாவையும் + +உம்பரின் செல்லல் உற்று உருகி வீழ்ந்தன; + +அம்பரம் அம்பரத்து ஏகல் ஆற்றல + +இம்பரில் உதிர்ந்தன எரியும் மெய்யன.         6.6.40 + + + +இறவாத பறவைகளின் மயக்கம் + + + +6758. பட்டன படப்பட படாத புட்குலம் + +சுட்டு வந்து எரிக் கனல் படலம் சுற்றலால் + +இட்டுழி அறிகில இரியல் போவன + +முட்டை என்று எடுத்தன வெளுத்த முத்து எலாம்.         6.6.41 + + + +நீர���க்குரங்குகளின் செயல் + + + +6759. 'வள்ளலைப் பாவியேம்"மனிசன்" என்று கொண்டு + +எள்ளல் உற்று உறைந்தனம்; எண் இலாம்'என + +வெள்ளி வெண் பற்களைக் கிழித்து விண் உறத் + +துள்ளலுற்று இரிந்தன குரங்கு சூழ்ந்தில.         6.6.42 + + + +கடலிலுள்ள அவுணர் நிலை + + + +6760. தாம் நெடுந் தீமைகள் உடைய தன்மையார் + +மாநெடுங் கடல் இடை மறைந்து வைகுவார் + +தூநெடுங் குருதி வேல் அவுணர் துஞ்சினார்; + +மீ நெடுங் கிரி என மிதந்து வீங்கினார்.         6.6.43 + + + +விமானம் முதலியவற்றின் நிலை + + + +6761. தசும்பு இடை விரிந்தன என்னும் தாரைய + +பசும் பொனின் மானங்கள் உருகிப் பாய்ந்தன; + +அசும்பு அற வறந்தன வான ஆறு எலாம்; + +விசும்பிடை விளங்கிய மீனும் வெந்தவே.         6.6.44 + + + +6762. செறிவுறு செம்மைய தீயை ஓம்புவ + +நெறியுறு செலவின தவத்தின் நீண்டன. + +உறுசினம் உறப் பல உருவு கொண்டன + +குறு முனி எனக் கடல் குடித்த கூர்ங்கணை.         6.6.45 + + + +6763. மோதல் அம் கனைகடல் முருக்கும் தீயினால் + +பூதலம் காவொடும் எரிந்து பொன்மதில் + +வேதலும் இலங்கையும் மீளப் போயின + +தூதன் வந்தான் எனத் துணுக்கம் கொண்டதால்.         6.6.46 + + + +6764. அருக்கனில் ஒளிவிடும் ஆடகக் கிரி + +உருக்கு என உருகின உதிரம் தோய்ந்தன + +முருக்கு எனச் சிவந்தன; முரிய வெந்தன + +கரிக் குவை நிகர்த்தன பவளக் காடு எலாம்.         6.6.47 + + + +6765. பேருஉடைக் கிரி எனப் பெருத்த மீன்களும் + +ஓர் இடத்து உயிர் தரித்து ஒதுங்க கிற்றில + +நீரிடைப் புகும் அதின் நெருப்பு நன்று எனாப் + +பாரிடைக் குதித்தன பதைக்கும் மெய்யன.         6.6.48 + + + +6766. சுருள்கடல் திரைகளைத் தொலைய உண்டு அனல் + +பருகிடப் புனலில பகழி பார் இடம் + +மருள் கொளப் படர்வன நாகர் வைப்பு எலாம் + +இருள் கெடச் சென்றன இரவி போல்வன.         6.6.49 + + + +6767. கரும்புறக் கடல்கேளாடு உலகம் காய்ச்சிய + +இரும்பு உறச் செல்வன இழிவ கீழ் உற + +அரும் புறத்து அண்டமும் உருவி அப்புறம் + +பெரும்புறக் கடலையும் தொடர்ந்து பின்செல்வ.         6.6.50 + + + +மணிகளும் பாம்புகளும் + + + +6768. திடல் திறந்து உகும் மணித் திரள்கள் சேண்நிலம் + +உடல் திறந்து உதிரம் வந்து உகுவ போன்றன + +கடல் திறந்து எங்கணும் வற்ற அக்கடல் + +குடல் திறந்தன எனக் கிடந்த கோள் அரா.         6.6.51 + + + +மணியும் சங்கும் + + + +6769. ஆழியின் புனல் அற மணிகள் அட்டிய + +பேழையின் பொலிந்தன பரவை; பேர்வு அறப் + +பூழையின் பொருகணை உருவப் புக்கன + +மூழையின் பொலிந்தன முரலும் வெள்வளை. ��       6.6.52 + + + +குன்றும் முத்தும் + + + +6770. நின்று நூறாயிரம் பகழி நீட்டலால் + +குன்று நூறாயிரம் கோடி ஆயின; + +சென்று தேய்வு உறுவரோ புலவர் சீறினால்? + +ஒன்று நூறு ஆயின உவரி முத்து எலாம்         6.6.53 + + + +உயிர்களும் நெருப்பும் + + + +6771. சூடு பெற்று ஐயனே தொலைக்கும் மன்னுயிர் + +வீடு பெற்றன; இடை மிடைந்த வேணுவின் + +காடுபற்றிய பெருங் கனலின் கைபரந்து + +ஓடி உற்றது நெருப்பு உவரி நீர் எலாம்.         6.6.54 + + + +கணை சுற்றும் கவ்விய கடல் + + + +6772. காலவான் கடுங் கணை சுற்றும் கவ்வலால் + +நீல வான் துகிலினை நீக்கிப் பூ நிறக் + +கோலவான் தனி நெடுங் கூறை சுற்றினாள் + +போல மாநில மகள் பொலிந்து தோன்றினாள்.         6.6.55 + + + +வடவைக் கனல் + + + +6773. கற்றவர் கற்றவர் உணர்வு காண்கிலாக் + +கொற்றவன் படைக்கலம் குடித்த வேலை விட்டு + +உற்று உயிர் படைத்து எழுந்து ஓடல் உற்றதால் + +மற்றொரு கடல்புக வடவைத் தீயரோ.         6.6.56 + + + +அனற் கொழுந்து + + + +6774. வாழியர் உலகினை வளைத்து வான் உறச் + +சூழ் இரும் பெருஞ் சுடர்ப் பிழம்பு தோன்றலால் + +ஊழியின் உலகு எலாம் உண்ண ஓங்கிய + +ஆழியின் பொலிந்தது அவ் ஆழி அன்ன நாள்.         6.6.57 + + + +6775. ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார் + +ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ? + +மேல் நிமிர்ந்து எழுகனல் வெதுப்ப மீதுபோய் + +வானவர் மலர் அயன் உலகின் வைகினார்.         6.6.58 + + + +இராமன் சதுமுகன் கணையைத் தொடுத்தல் + + + +6776. 'இடுக்கு இனி எண்ணுவது என்னை? ஈண்டு இனி + +முடுக்குவென் வருணனை'என்ன மூண்டு எதிர் + +தடுக்க அரும் வெகுளியன் சதுமுகன் படை + +தொடுத்தனன்; அமரரும் துணுக்கம் எய்தினார்.         6.6.59 + + + +பிரமன் கணை தொடுத்தமையால் தோன்றிய விளைவுகள் + + + +6777. மழைக் குலம் கதறின; வருணன் வாய் உலர்ந்து + +அழைத்தனன்; உலகமும் அடைத்த ஆறு எலாம்; + +இழைத்தன நெடுந்திசை யாதும்; யார் இனிப் + +பிழைப்பவர்? என்பது ஓர் பெரும் பயத்தினால்.         6.6.60 + + + +பெரும் புறக்கடல் முதலியன கொதித்தல் + + + +6778. அண்ட மூலத்துக்கு அப்பால் ஆழியும் கொதித்தது; ஏழு + +தணெ் திரைக் கடலின் செய்கை செப்பி என்? தேவன் சென்னிப் + +பண்டைநாள் இருந்த கங்கை நங்கையும் பதைத்தாள்; பார்ப்பான் + +குண்டிகை இருந்த நீரும் குளுகுளு கொதித்தது அன்றே.         6.6.61 + + + +வருணன் வாராமை கண்டு அறிஞர் அலக்கணுறுதல் + + + +6779. இரக்கம் வந்து எதிர்ந்த காலத்து உலகு எலாம் ஈன்று மீளக் + +கரக்கும் நாயகனைத் தானும் உணர்ந்து இவன் சீற்றம��� கண்டும் + +வரக் கருதாது தாழ்த்த வருணனின் மாறு கொண்ட + +அரக்கரே நல்லர் என்னா அறிஞரும் அலக்கண் உற்றார்.         6.6.62 + + + +வருணனைப் பிற பூதங்கள் வைதல் + + + +6780. 'உற்று ஒரு தனியே, தானே, தன்கணே, உலகம் எல்லாம் + +பெற்றவன் முனியப் புக்கால் நடு இனிப் பிழைப்பது எங்ஙன்? + +குற்றம் ஒன்று இலாதோர்மேலும் கோள் வரக் குறுகும்'என்னா, + +மற்றைய பூதம் எல்லாம், வருணனை வைத மாதோ.         6.6.63 + + + +வருணன் தொழுத கையொடு தோன்றுதல் + + + +6781. எழுசுடர்ப் படலையோடும் இரும்புகை நிரம்பி எங்கும் + +வழி தெரிவு அறிகிலாத நோக்கினன் வருணன் என்பான், + +அழுது அழி கண்ணன், அன்பால் உருகிய நெஞ்சன், அஞ்சித் + +தொழுது எழு கையன், நொய்தின் தோன்றினன், வழுத்தும் சொல்லான்.         6.6.64 + + + +வருணன் பணிவுரை பகர்ந்து செல்லுதல் (6782-6783) + + + +6782. 'நீ எனை நினைந்த தன்மை, நெடுங் கடல் முடிவில் நின்றேன் + +ஆயினேன் அறிந்திலேன்'என்று அண்ணலுக்கு அயிர்ப்பு நீங்க, + +காய் எரிப் படலை சூழ்ந்த கருங்கடல் தரங்கத் தூடே, + +தீ இடை நடப்பான் போலச் செறிபுனற்கு இறைவன் சென்றான்.         6.6.65 + + + +6783. வந்தனன் என்ப மன்னோ மறி கடற்கு இறைவன்; வாயில் + +சிந்திய மொழியன், தீந்த சென்னியன், திகைத்த நெஞ்சன், + +வெந்து அழிந்து உருகும் மெய்யன், விழுப் புகைப் படலம் விம்ம, + +அந்தரின் அலமந்து, அஞ்சி, துயர் உழந்து, அலக்கண் உற்றான்.         6.6.66 + + + +வருணன் இராமனிடம் அடைக்கலம் புகுதல் + + + +6784. 'நவை அறும் உலகிற்கு எல்லாம் நாயக! நீயே சீறின், + +கவயம் நின் சரணம் அல்லால், பிறிது ஒன்று கண்டது உண்டோ? + +இவை உனக்கு அரியவோதான்; எனக்கு என வலி வேறு உண்டோ? + +அவயம், நின் அவயம்!'என்னா, அடுத்து அடுத்து அரற்றுகின்றான்.         6.6.67 + + + +வருணன் இராமனைத் துதித்தல் (6785-6791) + + + +6785. 'ஆழி நீ; அனுலும் நீயே; அல்லவை எல்லாம் நீயே; + +ஊழி நீ; உலகும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே; + +வாழியாய்! அடியேன் நின்னை மறப்பெனோ? வயங்கு செந்தீச் + +சூழ் உற உலைந்து போனேன்; காத்தருள் சுருதி மூர்த்தி.         6.6.68 + + + +6786. 'காட்டுவாய் உலகம்; காட்டிக் காத்து, அவை கடையில் செந்தீ + +ஊட்டுவாய்; உண்பாய், நீயே; உனக்கும் ஒண்ணாதது உண்டோ? + +தீட்டு வான் பகழி ஒன்றால் உலகங்கள் எவையும் தீய + +வீட்டுவாய் நினையின்; நாயேற்கு இத்தனை வேண்டுமோ தான்?         6.6.69 + + + +6787. சண்ட வான் கிரண வாளால் தயங்கு இருள் காடு சாய்க்கும் + +மண்டலத்து உறையும் சோதி வள்ளலே! மறையின் வாழ்வே! + +ப��்டை நான்முகனே ஆதி சராசரத்து உள்ளப் பள்ளப் + +புண்டரீகத்து வைகும் புராதன! போற்றி, போற்றி!         6.6.70 + + + +6788."கள்ளமாய் உலகங் கொள்ளும் கருணையாய்! மறையில் கூறும் + +எள்ளல் ஆகாத மூலத்து யாதுக்கும் முதலாய் உள்ள + +வள்ளலே! காத்தி''என்ற மாகரி வருத்தம் தீரப் + +புள்ளின்மேல் வந்து தோன்றும் புராதனா! போற்றி, போற்றி!         6.6.71 + + + +6789. 'அன்னை நீ; அத்தன் நீயே; அல்லவை எல்லாம் நீயே; + +பின்னும் நீ; முன்னும் நீயே; பேறும் நீ; இழவும் நீயே; + +என்னை,'நீ இகழ்ந்தது'என்றது எங்ஙனே? ஈசன் ஆய + +உன்னை நீ உணராய்! நாயேன் எங்ஙனம் உணர்வேன், உன்னை?'         6.6.72 + + + +6790. பாய் இருள் சீக்கும் தயெ்வப் பரிதியைப் பழிக்கும் மாலை + +மா இருங் கரத்தால், மண்மேல் அடியுறையாக வைத்து, + +"தீயன சிறியோர் செய்தால், பொறுத்தலே பெரியோர் செய்கை + +ஆயிர நாமத்து ஐயா! சரணம்''என்று அடியில் வீழ்ந்தான்.         6.6.73 + + + +6791. பருப்பதம் வேவது என்னப் படர் ஒளி படரா நின்ற + +உருப்பெறக் காட்டி நின்று, 'யான் உனக்கு அபயம்'என்ன, + +அருப்பு உறப் பிறந்த கோபம் ஆறினான், ஆறா ஆற்றல் + +நெருப்பு உறப் பொங்கும் வெம்பால் நீர் உற்றது அனைய நீரான்.         6.6.74 + + + +இராமன் அபயம் அளித்து வருணன் வாராமைக்குக் காரணம் வினவுதல் + + + +6792. 'ஆறினாம்; அஞ்சல்; உன்பால் அளித்தனம் அபயம்; அன்பால் + +ஈறு இலா வணக்கம் செய்து, யாம் இரந்திட, எய்தாதே, + +சீறுமா கண்டு வந்த திறத்தினைத் தெரிவதாகக் + +கூறு நீ, அறிஞ'என்றான்; வருணனும், தொழுது கூறும்.         6.6.75 + + + +வருணன் வாராமைக்குக் காரணம் கூறுதல் + + + +6793. 'பார்த்தனில் பொறையின் மிக்க பத்தினிக்கு உற்ற பண்பு + +வார்த்தையின் அறிந்தது அல்லால், தேவர்பால் வந்திலேன், நான்; + +தீர்த்த! நின் ஆணை, ஏழாம் செறிதிரைக் கடலில் மீனின், + +போர்த் தொழில் விலக்கப் போனேன் அறிந்திலேன், புகுந்தேன்'என்றான         6.6.76 + + + +இராமன் தன் அம்பிற்கு இலக்குயாதனெ வருணன் கூறுதல் (6794-6795) + + + +6794. என்றலும், இரங்கி, ஐயன், 'இத்திறம் நிற்க இந்தப் + +பொன்றல் இல் பகழிக்கு அப்பால் இலக்கம் என்? புகறி'என்ன + +வன்திறல் வருணன் யானும் உலகமும் வாழ்ந்தோம்'என்னக் + +குன்று என உயர்ந்த தோளாய்! கூறுவல் என்று கூறும்.         6.6.77 + + + +வருணன் இலக்கு இது எனல் + + + +6795. 'மன்னவ! மருகாந்தாரம் என்பது ஓர் தீவின் வாழ்வார், + +அன்னவர் சத கோடிக்கும் மேல் உளர், அவுணர் ஆயோர், + +தின்னவே உலகம் எல்லாம் தீந்தன; எனக்கும் தீயார்; + +மின் உமிழ் கணையை வெய்யோர் மேல் செல விடுதி'என்றான்.         6.6.78 + + + +இராமபாணம் அவுணரை அழித்து மீளல் + + + +6796. நேடி நூல் தெரிந்துேளார் தம் உணர்விற்கும், நிமிர நின்றான், + +'கோடி நூறு ஆய தீய அவுணரைக் குலங்கேளாடும் + +ஓடி நூறு'என்று விட்டான்; ஓர் இமை ஒடுங்கா முன்னம் + +பாடி நூறு ஆக நூறி மீண்டது அப் பகழித் தயெ்வம்.         6.6.79 + + + +தீங்கினைச் செய்தவரே தீங்குற்றார் + + + +6797. ஆய்வினை உடையர் ஆகி, அறம் பிழையாதார்க்கு எல்லாம் + +ஏய்வன நலனே அன்றி, இறுதி வந்து அடைவது உண்டோ? + +மாய்வினை இயற்றி, முற்றும் வருணன்மேல் வந்த சீற்றம், + +தீவினை உடையார்மாட்டே தீங்கினைச் செய்தது அன்றே.         6.6.80 + + + +தருமமே வலியது + + + +6798. பாபமே இயற்றினாரைப், பல் நெடுங் காதம் ஓடித், + +தூபமே பெருகும் வண்ணம், எரி எழச் சுட்டது அன்றே, + +தீபமே அனைய ஞானத் திருமறை முனிவர் செப்பும் + +சாபமே ஒத்தது அம்பு தருமமே வலியது அம்மா!         6.6.81 + + + +இராமன் வருணனை வழி வேண்டுதல் + + + +6799."மொழி'உனக்கு அபயம்'என்றாய்; ஆதலால், முனிவு தீர்ந்தேன்; + +பழி எனக்கு ஆக என்று பாதகர் பரவை என்னும் + +குழியினைக் கருதிச் செய்த குமண்டையைக் குறைத்து நீங்க + +வழியினைத் தருதி''என்றான் வருணனை நோக்கி வள்ளல்.         6.6.82 + + + +வருணன் காலம் நீடிக்கும் எனல் + + + +6800. ஆழமும் அகலம் தானும் அளப்பு அரிது எனக்கும் ஐய! + +ஏழ் என அடுக்கி நின்ற உலகுக்கும் எல்லை இல்லை; + +வாழியாய்! வற்றி நீங்கில், வரம்பு அறுகாலம் எல்லாம் + +தாழும்; நின் சேனை உள்ளம் தளர்வுறும் தவத்தின் மிக்கோய்.         6.6.83 + + + +சேது கட்டிச் செல்லுக எனல் + + + +6801. 'கல் என வலித்து நிற்பின், கணக்கு இலா உயிர்கள் எல்லாம் + +ஒல்லையின் உலந்து வீயும்; இட்டது ஒன்று ஒழுகாவண்ணம் + +எல்லையில் காலம் எல்லாம் ஏந்துவென், எளிதின்; எந்தாய்! + +செல்லுதி,"சேது" என்று ஒன்று இயற்றி, என் சிரத்தின் என்றான்.'         6.6.84 + + + +சேது கட்டுமாறு சேனைக்குப் பணித்தல் + + + +6802. 'நன்று, இது புரிதும் அன்றே; நளிகடல் பெருமை நம்மால் + +இன்று இது தீரும் என்னின், எளிவரும் பூதம் எல்லாம்; + +குன்று கொண்டு அடுக்கி, சேது குயிற்றுதிர்'என்று கூறிச் + +சென்றனன் இருக்கை நோக்கி; வருணனும் அருளின் சென்றான         6.6.85 + +--------------------- + +6.8. சேது பந்தனப் படலம் ( 6803 - ) + + + +சுக்கிரீவன் அறிஞரோடு எண்ணி நளனை அழைத்தல் + + + +6803. 'அளவு அரும் அறிஞரோடு அரக்கர் கோமகற்கு + +இளவலும் இனிது உடன் இருக்க எண��ணினான் + +விளைவன விதிமுறை முடிக்க வேண்டுவான் + +'நளன் வருக!'என்றனன் கவிக்கு நாயகன்.         6.7.1 + + + +சேது கட்ட நளன் உடன்படுதல் + + + +6804. வந்தனன் வானரத் தச்சன்; மன்ன! நின் + +சிந்தனை என்? என செறிதிரைக் கடல் + +பந்தனை செய்குதல் பணி நமக்கு'என + +நிந்தனை இலாதவன் செய்ய நேர்ந்தனன்.         6.7.2 + + + +நளன் சேது கட்டற்குரியன கொணர்க எனல் + + + +6805. காரியம் கடலினை அடைத்துக் கட்டலே; + +சூரியன் காதல! சொல்லி என் பல; + +மேருவும் அணுவும் ஓர் வேறு உறாவகை + +ஏர் உற இயற்றுவென்; கொணர்தி; என்றனன்         6.7.3 + + + +அணை கட்ட வருமாறு வானரர்களைச் சாம்பன் அழைத்தல் + + + +6806. 'இளவலும் இறைவனும் இலங்கை வேந்தனும் + +அளவு அறு நம் குலத்து அரசும் அல்லவர் + +வளைதரும் கருங்கடல் அடைக்க வம்'எனத் + +தளம் மலி சேனையைச் சாம்பன் சாற்றினான்.         6.7.4 + + + +வானரங்கள் மலைகளைக் கொணர்தல் (6807-6809) + + + +6807. கரு வரை காதங்கள் கணக்கு இலாதன + +இரு கையில் தோள்களில் சென்னி ஏந்தின + +ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள் + +வருவன ஆம் என வந்த வானரம்.         6.7.5 + + + +6808. பேர்த்தன மலை சில; பேர்க்கப் பேர்க்க நின்று + +ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின; + +தூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று + +ஆர்த்தன; சில சில ஆடிப் பாடின.         6.7.6 + + + +6809. கால் இடை ஒரு மலை உருட்டி கைகளின் + +மேலிடை இரு மலை ஏந்தி விண் தொடும் + +சூல் உடை மழைமுகில் சூழ்ந்து சுற்றிய + +வால் இடை ஒருமலை ஈர்த்து வந்தவால்;         6.7.7 + + + +நளன் மலைகளை வாங்கியடுக்குதல் (6810-6811) + + + +6810. முடுக்கினன்'தருக'என மூன்று கோடியர் + +எடுக்கினும் அம்மலை ஒருகை ஏந்தியிட்டு + +அடுக்கினன்; தன் வலி காட்டி ஆழியை + +நடுக்கினன் நளன் எனும் நவையில் நீங்கினான்.         6.7.8 + + + +6811. மஞ்சினில் திகழ்தரு மலையை மாக் குரங்கு + +எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே நளன் + +விஞ்சையில் தாங்கினன் சடையன் வெண்ணெயில் + +'தஞ்சம்!'என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல்.         6.7.9 + + + +அணை கட்டும்போது நிகழ்ந்தவை (6812-6847) + + + +6812. சயக் கவிப் பெரும்படைத் தலைவர் தாள்களால் + +முயல் கறை மதி தவழ் மூரிக் குன்றுகள் + +அயக்கலின் முகில் குலம் அலறி ஓடின + +இயக்கரும் மகளிரும் இரியல் போயினார்.         6.7.10 + + + +6813. வேர் உடை நெடுங்கிரி தலைவர் வீசின + +ஓர் இடத்து ஒன்றின்மேல் ஒன்று சென்று உக + +நீர் இடை நிமிர்பொறி பிறக்க நீண்ட ஈது + +ஆர் உடை நெருப்பு?'என வருணன் அஞ்சினான்.         6.7.11 + + + +6814. ஆனிறக் கண்ணன் என்று ஒருவன் அங்கையால் + +கான்நிற மலை கொணர்ந்து எறியக் கார்க்கடல் + +தூநிற முத்தினம் துவலையோடும் போய் + +வான்நிறை மீனொடு மாறு கொண்டவே         6.7.12 + + + +6815. சிந்துரத் தட வரை எறிய சேணிடை + +முந்துறத் தெறித்து எழு முத்தம் தொத்தலால் + +அந்தரத்து எழு முகில் ஆடையா அகன் + +பந்தர் ஒத்தது நெடும் பரிதி வானமே.         6.7.13 + + + +6816. வேணுவின் நெடுவரை வீச மீமிசைச் + +சேண் உறு திவலையால் நனைந்த செந்துகில் + +பூண் உறும் அல்குலில் பொருந்திப் போதலால் + +நாணினர் வான நாட்டு உறையும் நங்கைமார்.         6.7.14 + + + +6817. தேன் இவர் தடவரை திரைக் கருங் கடல் + +தான் நிமிர்தர இடை குவியத் தள்ளும் நீர் + +மேல் நிமிர் திவலை மீச்சென்று மீடலால் + +வானவர் நாட்டினும் மழை பொழிந்ததால்.         6.7.15 + + + +6818. மை உறு மலைகேளாடு மறிகடல் வந்து வீழ்ந்த + +வெய்யவாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப, மேல் நாள் + +பொய்கையின் இடங்கர் கவ்வ, + + 'புராதனா போற்றி'என்று + +கை எடுத்து அழைத்த யானை போன்றன களிநல் யானை.         6.7.16 + + + +6819. அசும்பு பாய் தேனும், பூவும், ஆரமும் அகிலும், மற்றும், + +விசும்பு எலாம் உலவும் தயெ்வ வேரியின் மிடைந்து விம்மத், + +தசும்பு எலாம் வாசம் ஊட்டிச் சார்த்திய தண்ணீர் என்னப், + +பசும்புலால் நாறும் வேலை பரிமளம் கமழ்ந்தது அன்றே.         6.7.17 + + + +6820. தேம் முதல் கனியும் காயும், தேனினோடு ஊனும், தயெ்வப் + +பூ முதலாய எல்லாம், மீன் கொளப் பொலிந்தது அன்றே, + +மா முதல் தருவோடு ஓங்கும் வான் உயர் மானக் குன்றம் + +தாம் முதலோடுங் கெட்டால் ஒழிவரோ, வண்மை தக்கோர்?         6.7.18 + + + +6821. மண்ணுறச் சேற்றுள் புக்குச் சுரிகின்ற மாலைக் குன்றம் + +கள் நிறை போதும் காயும் கனிகளும் பிறவும் கவ்வ + +எண் உறு மீன்கள் எல்லாம், வறியவர் என்னச் செல்ல, + +உள் நிறை செல்வம் நல்காது ஒளிக்கின்ற உலோபர் ஒத்த.         6.7.19 + + + +6822. கறங்கு எனத் திரியும் வேகக் கவிக் குலம் கதுவ வாங்கிப் + +பிறங்கு இருங் கடலில் பெய்த போழ்தத்தும் பெரிய பாந்தள், + +மறங்கிளர் மான யானை வயிற்றின ஆக, வாய் சோர்ந்து + +உறங்கின கேடு உற்றாலும் உணர்வரோ உணர்வு இலாதார்?         6.7.20 + + + +6823. இழை எனத் தகைய மின்னின் எயிற்றின, முழக்கம் எய்த, + +புழை உடைத் தடக்கை ஒன்றோடு ஒன்று இடை பொருந்தச் சுற்றி + +கழை உடைக் குன்றின் முன்றில், உருமொடு கலந்த கால + +மழை எனப் பொருத வேலை மகரமும் மத்த மாவும்.         6.7.21 + + + +6824. பொன்றின, சிறிய ஆய புண்ணியம் புரிந்தோர் போல, + +குன்றுகள் குரக்கு வீரர் குவித்தனர், நெருப்புக் கோப்ப + +ஒன்றின் மேல் ஒன்று வீழ, உகைத்து எழுந்து, உம்பர் நாட்டுச் + +சென்று, மேல் நிலை பெறாது, திரிந்தன சிகரச் சில்லி.         6.7.22 + + + +6825. கூர் உடை எயிற்றுக் கோள் மாச் சுறவு இனம் எறிந்து கொல்ல, + +போருடை அரியும், வெய்ய புலிகளும், யாளிப் போத்தும், + +நீர் இடைத் தோற்ற அன்றே? தம் நிலை நீங்கிற்று என்றால் + +ஆர் இடைத் தோலார் மேலோர், அறிவிடை நோக்கின் அம்மா?         6.7.23 + + + +6826. ஒள்ளிய உணர்வு கூட உதவலர் எனினும் ஒன்றோ, + +வள்ளியர் ஆயோர் செல்வம் மன்னுயிர்க்கு உதவும் அன்றே? + +துள்ளின, குதித்த, வானத்து உயர்வரைக் குவட்டில் தூங்கும் + +கள்ளினை நிறைய மாந்தி, கவி எனக் களித்த மீன்கள்.         6.7.24 + + + +6827. மூசு எரி பிறக்க, மீக் கொண்டு, இறக்கிய முடுக்கம் தன்னால், + +கோய் சொரி நறவம் என்னத் தண்புனல் உகுக்கும் குன்றின் + +வேய் சொரி முத்துக்கு, அம்மா விருந்து செய்திருந்த விண்ட + +வாய் சொரி இப்பியோடும் வலம்புரி உமிழ்ந்த முத்தம்.         6.7.25 + + + +6828. விண் தலம் தொடு மால்வரை வேரோடும் + +கொண்டு அலங்கு ஒளி வீரர் குவித்தலால் + +திண் தலம் கடல் ஆனது; நீர் செல + +மண் தலம் கடல் ஆகி மலைந்ததே.         6.7.26 + + + +6829. அய்யன் வேண்டின் அது இது ஆம் அன்றே + +வெய்ய சீயமும் யாளியும் வேங்கையும் + +மொய்கொள் குன்று முதலின மொய்த்தலால் + +நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்ததால்.         6.7.27 + + + +6830. 'யான் உணாதன ஈங்கு இவை'என்னவே + +தீன் உணாதன; என் இது செய்யுமே? + +மான் உணாத திரைக்கடல் வாழ்தரு + +மீன் உணாதன இல்லை விலங்கு அரோ.         6.7.28 + + + +6831. வவ்வில் அங்கு வளர்த்தவர் மாட்டு அருள் + +செவ் விலங்கல் இல் சிந்தையர் தீர்வரோ + +'இவ் விலங்கல் விடேம்'இனி என்ப போல் + +எவ் விலங்கும் வந்து எய்தின வேலையே.         6.7.29 + + + +6832. கனி தரும் நெடுங்காய் தரும் நாள்தொறும் + +இனிது அருந்தவம் நொய்தின் இயற்றலால் + +பனி தரும் கிரி தம் மனம் பற்று உறும் + +முனிவரும் முனியார் முடிவு உன்னுவார்.         6.7.30 + + + +6833. புலையின் வாழ்க்கை அரக்கர் பொருப்பு உளார் + +தலையின் மேல் வைத்த கையினர் சாற்றுவார் + +'மலை இலேம்; மற்று மாறு இனி வாழ்வது ஓர் + +நிலை இலேம்'என்று இலங்கை நெருங்கினார்.         6.7.31 + + + +6834. முழுக்க நீரில் புகா முழுகிச் செலா + +குழுக்கேளாடு அணை கோள் அரி யாளிகள் + +இழுக்கு இல் பேர் அணையின் இரு பக்கமும் + +ஒழுக்கின் மால��� வகுத்தன ஒத்தவால்.         6.7.32 + + + +6835. பளிக்கு மால் வரை முந்து படுத்தன + +ஒளிக்கும் ஆழி கிடந்து என ஓர்கிலர் + +'வெளிக்கு மால் வரை வேண்டும்'எனக் கொணர்ந்து + +அளிக்கும் வானர வீரர் அநேகரால்.         6.7.33 + + + +6836. பாரினாள் முதுகும் நெடும் பாழ்பட + +மூரி வானரம் வாங்கிய மொய்ம் மலை + +வேரின் ஆம் என வெம் முழையின் உழை + +சோரும் நாகம் நிலன் உறத் தூங்குமால்.         6.7.34 + + + +6837. அருணச் செம்மணிக் குன்று அயலே சில + +இருள் நற் குன்றம் அடுக்கின ஏய்ந்தன + +கருணைக் கொண்டல்'வறியன் கழுத்து'என + +வருணற்கு ஈந்த வருண சரத்தையே.         6.7.35 + + + +6838. ஏய்ந்த தம் உடம்பு இட்ட உயிர்க்கு இடம் + +ஆய்ந்து கொள்ளும் அறிஞரின் ஆழ்கடல் + +பாய்ந்த பண்டு உறையும் மலைப் பாந்தள்கள். + +போந்த மா மலையின் முழை புக்கவே.         6.7.36 + + + +6839. சேதுவின் பெருமைக்கு இணை செப்ப ஓர் + +ஏது வேண்டும் என்று எண்ணுவது என்கொலோ + +தூதன் இட்ட மலையின் துவலையால் + +மீது விட்டு உலகு உற்றன மீன்களும்.         6.7.37 + + + +6840. நீலன் இட்ட நெடுவரை நீள் நில + +மூலம் முட்டலின் மொய்புனல் கைம்மிக + +கூலம் இட்டிய ஆர்கலி கோத்ததால் + +ஓலமிட்டு எழுந்து ஓடி உலகு எலாம்         6.7.38 + + + +6841. மயிந்தன் இட்ட நெடுவரை வான் உற + +உயர்ந்து முட்டி விழ எழுந்து ஓத நீர் + +தியந்தம் முட்ட திசைநிலை யானையும் + +பெயர்ந்து விட்டவை யாவும் பிளிறுவ         6.7.39 + + + +6842. இலக்கு வன் சரம் ஆயினும் ஏன்று எதிர் + +விலக்கினும் விலங்காத விலங்கலால் + +அலக்கண் எய்த அமுது எழ ஆழியைக் + +கலக்கினான் மகன் மீளக் கலக்கினான்.         6.7.40 + + + +6843. மருத்தின் மைந்தன் மணி நெடுந் தோள் எனப் + +பெருத்த குன்றம் கரடிப் பெரும் படை + +விருத்தன் இட்ட விசையினின் வீசிய + +திருத்தம் வானவர் சென்னியில் சென்றதால்.         6.7.41 + + + +6844. குமுதன் இட்ட குல வரை கூத்தரின் + +திமிதம் இட்டுத் திரியும் திரைக் கடல் + +துமி தம் ஊர்புக வானவர் துள்ளினார் + +அமுதம் இன்னும் எழும் எனும் ஆசையால்.         6.7.42 + + + +6845. கன சினத்து உருமின் கடுங் கார் வரை + +பனசன் இட்டன யாவும் பரிக்கிலன் + +மன சினத்தன் அனந்தனும் வாழ்வு இகந்து + +அன் அசனத் தொழில் மேற்கொள்வது ஆயினான்.         6.7.43 + + + +6846. எண் இல் எண்கு இனம் இட்ட கிரிக் குலம் + +உண்ண உண்ணச் சென்று, ஒன்றினொடு ஒன்று உற, + +சுண்ண நுண்பொடி ஆகித் தொலைந்தன, + +புண்ணியம் பொருந்தாத முயற்சி போல்.         6.7.44 + + + +6847. ஆர ஆயிர யோசனை ஆழமும் + +தீர நீண்டு பரந்த திமிங்கிலம் + +பார மால் வரை ஏறப் பதைத்து உடல் + +பேரவே குன்றும் வேலையும் பேர்ந்தவால்.         6.7.45 + + + +நளன் சேதுவை அமைத்த வகை (6848-6849) + + + +6848. குலை கொளக் குறி நோக்கிய கொள்கையான் + +சிலைகள் ஒக்க முறித்துச் செறித்து நேர் + +மலைகள் ஒக்க அடுக்கி மணல் படத் + +தலைகள் ஒக்கத் தடவும் தடக் கையால்.         6.7.46 + + + +6849. தழுவி ஆயிர கோடியர் தாங்கிய + +குழுவி வானரர் தந்த கிரிக் குலம் + +எழுவின் நீள் கரத்து ஏற்றிட இற்று இடை + +வழுவி வீழ்வன கால்களின் வாங்குவான்.         6.7.47 + + + +மலை சுமந்துவரும் வானரங்கள் (6850-6853) + + + +6850. மலை சுமந்து வருவன வானரம் + +நிலையில் நின்றன செல்ல நிலம் பெறா + +அலை நெடுங் கடல் அன்றியும் ஆண்டுத் தம் + +தலையின் மேலும் ஓர் சேதுவும் தந்த போல்.         6.7.48 + + + +6851. பருத்த மால் வரை ஏந்திய பல்படை + +நிரைத்தலின் சில செல்ல நிலம் பெறா + +கரத்தின் ஏந்திய கார்வரை கண் அகன் + +சிரத்தின் மேற்கொடு நீந்தின சென்றவால்.49 + + + +6852. ஆய்ந்து நீளம் அரிது சுமந்தன + +ஓய்ந்த கால பசியின் உலர்ந்தன + +ஏந்து மால் வரை வைத்து அவற்று ஈண்டு தேன் + +மாந்தி மாந்தி மறந்து துயின்றவால்.         6.7.50 + + + +6853. போதல் செய்குநரும் புகுவார்களும் + +மாதிரம் தொறும் வானர வீரர்கள் + +'சேது எத்துணை சென்றது?'என்பார் சிலர்; + +'பாதி சென்றது'எனப் பகர்வார் சிலர்.         6.7.51 + + + +மலைகளும் மரங்களும் கடலில் ஆழ்த்தப்படுவதால் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் (6854-6866) + + + +6854. குறைவு இல் குங்குமமும் குகைத் தேன்களும் + +நிறை மலர்க் குலமும் நிறைந்து எங்கணும் + +துறைதொறும் கிரி தூக்கின தோய்தலால் + +நறை நெடுங் கடல் ஒத்தது நாம நீர்.         6.7.52 + + + +6855. நெடும் பல் மால் வரை தூர்த்து நெருக்கவும் + +துடும்பல் வேலை துளங்கியது இல்லையால் + +இடும்பை எத்துணையும் மடுத்து எய்தவும் + +குடும்பம் தாங்கும் குடிப் பிறந்தாரினே.         6.7.53 + + + +6856. கொழுந்து உடைப் பவளக் கொடியின் குலம் + +அழுந்த உய்த்த அடுக்கல் தகர்ந்து அயல் + +விழுந்த பல மணி இன் ஒளி மீமிசை + +எழுந்த எங்கணும் இந்திர வில்லினே.         6.7.54 + + + +6857.பழுமரம் பறிக்க பறவைக் குலம் + +தழுவி நின்று ஒருவன் தனித் தாங்குவான் + +விழுதலும் புகல் வேற்று இடம் இன்மையால் + +அழுது அரற்றும் கிளை என ஆனவால்.         6.7.55 + + + +6858.'தர வலோம் மலர்'என்று உயிர் தாங்கிய + +மரம் எலாம் கடல் வீழ்தலும் வண்டு எலாம் + +கரவு இலாளர் விழ களைகண் இலா + +இரவலாளரின் எங்கும் இரிந்தவால���.         6.7.56 + + + +6859.தொக்கு அடங்கல ஓடும் துவலைகள் + +மிக்கு அடங்கலும் போவன மீன் குலம் + +அக் கருங் கடல் தூர அயல் கடல் + +புக்கு அடங்கிடப் போவன போன்றவே.         6.7.57 + + + +6860.மூசு வண்டு இனம் மும்மத மாவின் பின் + +ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடின + +ஓசை ஒண் கடல் குன்றொடு அவை புக + +வேசை மங்கையராம் என மீண்டவே.         6.7.58 + + + +6861.நிலம் அரங்கிய வேரோடு நேர் பறித்து + +அலமரும் துயர் எய்திய ஆயினும் + +வல மரங்களை விட்டில மாசு இலாக் + +குல மடந்தையர் என்ன கொடிகளே.         6.7.59 + + + +6862.துப்பு உறக் கடல் தூய துவலையால் + +அப்புறக் கடலும் சுவை அற்றன; + +எப்புறத்து உரும் ஏறும் குளிர்ந்தன; + +உப்பு உறைத்தன மேகம் உகுத்த நீர்.         6.7.60 + + + +6863 முதிர் நெடுங்கிரி வீழ முழங்குநீர் + +எதிர் எழுந்து நிரந்தரம் எய்தலால் + +மதியவன் கதிரின் குளிர் வாய்ந்தன + +கதிரவன் கனல் வெங்கதிர்க் கற்றையே.         6.7.61 + + + +6864. நன்கு ஒடித்து நறுங் கிரி சிந்திய + +பொன் கொடித் துவலைப் பொதிந்து ஓடுவ + +வன் கொடிப் பவளங்கள் வயங்கலால் + +மின் பொடித்தது போன்றன விண் எலாம்.         6.7.62 + + + +6865. ஓடும் ஓட்டரின் ஒன்றின் முன் ஒன்று போய் + +காடும் நாடும் மரங்களும் கற்களும் + +நாடும் நாட்டும் நளிர்கடல் நாட்டில் ஓர் + +பூடும் ஆடுதல் இல்லை இப் பூமியில்.         6.7.63 + + + +6866. வரைப் பரப்பும் வனப் பரப்பும் உவர்த் + +தரைப் பரப்புவது என்ன தனித்தனி + +உரைப் பரப்பும் உறுகிரி ஒண்கவி + +கரைப் பரப்பு கடற் பரப்பு ஆனதால்.         6.7.64 + + + +அணை கட்டி முடித்தமையால் வானரர் பேராரவாரஞ் செய்தல் + + + +6867. உற்றதால் அணை ஓங்கல் இலங்கையை + +முற்ற மூன்று பகல் இடை; முற்றவும் + +பெற்ற ஆர்ப்பு விசும்பு பிளந்ததால்; + +மற்று இவ் வானம் பிறிது ஒரு வான் கொலோ? 65 + + + +சேதுவின் தோற்றம் + + + +6868. நாடுகின்றது என் வேறு ஒன்று? நாயகன் + +தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான் + +'ஓடும் என் முதுகிட்டு'என ஓங்கிய + +சேடன் என்னப் பொலிந்தது சேதுவே.         6.7.66 + + + +6869. மெய்யின் ஈட்டத்து இலங்கை ஆம் மென்மகள் + +பொய்யன் ஈட்டிய தீமை பொறுக்கலாள் + +ஐயன் ஈட்டிய சேனை கண்டு அன்பினால் + +கையை நீட்டிய தன்மையும் காட்டுமால்.         6.7.67 + + + +6870. கான யாறு பரந்த கருங்கடல் + +ஞான நாயகன் சேனை நடத்தலால் + +'ஏனை யாறு இனி யான் அலது ஆர்?'எனா + +வான யாறு இம்பர் வந்தது மானுமால்.         6.7.68 + + + +6871. கல் கிடந்து ஒளிர் காசு இனம் காந்தலால் + +மற்கடங்கள் வகுத்த வயங்கு அ��ை + +எல் கடந்த இருள் இடை இந்திரன் + +வில் கிடந்ததும் என்ன விளங்குமால்.         6.7.69 + + + +சேது கட்டி முடிந்தபின், சுக்கிரீவன், வீடணன் முதலியோர் இராமனிடம் சென்று தெரிவித்தல் + + + +6872. ஆன பேர் அணை அன்பின் அமைத்தனர்; + +கான வாழ்க்கைக் கவிக்குல நாதனும் + +மான வேலை இலங்கையர் மன்னனும் + +ஏனையோரும் இராமனை எய்தினார்.         6.7.70 + + + +6873. எய்தி'யோசனை ஈண்டு ஒரு நூறு உற + +ஐ இரண்டின் அகலம் அமைந்திடச் + +செய்ததால் அணை'என்பது செப்பினார் + +வைய நாதன் சரணம் வணங்கியே.         6.7.71 + + + +6.8 ஒற்றுக் கேள்விப் படலம் (6874-6938) + + + +இராமன், அணைகட்டி முடிந்தமை கூறிய சுக்கிரீவன் முதலியவரைத் தழுவி அணை காண விரைதல் + + + +6874. ஆண்தகையும், அன்பினொடு தான் இடை எழுந்தே + +நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி + +ஈண்ட எழுக என்றனன்; இழைத்த படியெல்லாம் + +காண்டல் அதன் மேல் நெடிய காதல் முதிர்கின்றான்.         6.8.1 + + + +இராமன் அணையை அடைதல் + + + +6875. பண்டை உறையுட்கு எதிர் படைக் கடலின் வைகும் + +கொண்டல், என வந்து, அவ் அணையைக் குறுகி நின்றான் + +அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளைக் + +கண்டனன் எனப் பெரிய காதல் முதிர்கின்றான்.         6.8. 2 + + + + இராமன் அணையினமைதி கண்டு வியந்து உவந்து பாராட்டுதல் (6876-6877) + + + +6876. நின்று, பெரிது உன்னி, இந் நெடுங்கடல் நிரம்பக் + +குன்றுகொடு அடைத்து, அணை குயிற்றியது ஒர் கொள்கை, + +அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான் + +என்ற பொழுதின்கணும் இது என்று இயலும்? என்றான்.         6.8.3 + + + + 6877. ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான்; + +ஆழம் செய்யும் அளவோ! இனி அது ஒன்றோ? + +ஆழியின் இலங்கை நெடிது அத்திசையின் ஆமேல் + +ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் ‘என்றான்.         6.8.4 + + + + இராமன் வானரப் படையுடன் அணைமீது செல்லுதல் + + + +6878. நெற்றியில் அரக்கர் பதி செல்ல நிறை நல் நூல் + +கற்று உணரும் மாருதி கடைக்குழை வரத் தன் + +வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல வீரப் + +பொன் திரள்புயக் கருநிறக் களிறு போனான்.         6.8.5 + + + + அணைமீது சென்ற வானரப் படையின் தோற்றம் (6879-6880) + + + +6879. இருங்கவி கொள் சேனை மணி ஆரம் இடறித் தன் + +மருங்கு வளர் தணெ் திரை வயங்கு பொழில் மான + +ஒருங்கு நனி போயினது; உயர்ந்த கரை ஊடே + +கருங்கடல் புகப் பெருகு காவிரி கடுப்ப.         6.8.6 + + + + 6880. ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள + +கோது இல அருந்துவன கொள்ளையின் முகந்து உற்று + +யாதும் ஒழியாவகை சுமந்து கடல் எய்தப் + +போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆகும்.         6.8.7 + + + + அணைமீது வானரப் படை செல்லுங்கால் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகள் (6881-6882) + + + +6881. ஆயது நெருங்க அடியிட்டு அயல் இடாமல் + +தேயும் நெறி மாடு திரை ஊடு விசை செல்லப் + +போய சில பொங்குதொறு பொங்குதொறு பூசல் + +பாய்புரவி விண் படர்வபோல் இனிது பாய்வ.         6.8.8 + + + + 6882. மெய் இடை நெருங்க வெளி அற்று அயலில் வீழும் + +பொய்யிடம் இலாத புனலில் புகல் இலாத + +உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார் + +கை இடை கொடுப்ப வழிசென்ற கரை இல்லை.         6.8.9 + + + + வானரர் குடைபிடித்தும் சாமரை வீசியும் இராமனை உபசரித்து வருதல் (6883-6884) + + + +6883. இழைத்து அனைய வெம்கதிரின் வெம்சுடர் இராமன் + +மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல் + +தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த + +வழைத் தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர்.         6.8.10 + + + + 6884. ஓம நெறிவாணர் மறை வாய்மை ஒருதானே + +ஆம் அரசன் மைந்தர் திருமேனி அலசாமே + +பூ மரன் இறுத்தவை பொருத்துவ பொருத்திச் + +சாமரையின் வீசினர் படைத் தலைவர் தாமே.         6.8.11 + + + + இராமன் கடல் கடந்து கரையடைதல் + + + +6885. அருங் கடகம் அம்கையில் அகற்றி அயர்வோடும் + +மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மனம் உன்னா + +ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து + +இருங்கடல் கடந்து கரை ஏறினன் இராமன்.         6.8.12 + + + + இராமன் சுவேலமலையில் தங்குதல் + + + +6886. பெருந்தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால் + +மருந்து அனைய தம்பியோடும் வன் துணைவரோடும் + +அருந்ததியும் வந்தனை செய் அம்சொல் இளவஞ்சி + +இருந்த நகரின் புறன் ஓர் குன்று இடை இறுத்தான்.         6.8.13 + + + + இராமன் நீலனிடம் படைவீடு அமைக்கும்படி பணித்தல் + + + +6887. நீலனை இனிது நோக்கி, நேமியோன், ‘விரைய ‘நீ நம் + +பால்வரு சேனைக்கு எல்லாம் இழைத்தியால் பாடி ‘என்னக் + +கால்வரை வணங்கிப் போனான், கல்லினால் கடலைக் கட்டி, + +நூல்வரை வழி செய்தானுக்கு அந் நிலை நொய்திற் சொன்னான்.         6.8.14 + + + + நளன் படைவீடமைத்தல் + + + +6888. பொன்னினும் மணியினாலும் நான்முகன் புனைந்த பொற்பின் + +நல் நலம் அமைய வாங்கி, நால்வகைச் சதுரம் நாட்டி, + +இன்னர் என்னாத வண்ணம் இறைவற்கும் பிறர்க்கும் எல்லாம் + +நல்நகர் நொய்தின் செய்தான்; தாதையும் நாணுக் கொண்டான்.         6.8.15 + + + + நளன் இராமனுக்கு இருக்கையமைத்தல் + + + +6889. வில்லினாற்கு இருக்கை செய்யும் விருப்பினால், பொருப்பின் வீங்கும் + +கல்லினால் கல்லை ஒக்கக் கடாவினான், கழைகளான + +நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான், தருப்பை என்னும் + +புல்லினால் தொடுத்து, வாசப் பூவினால் வேய்ந்து போனான்.         6.8.16 + + + + யாவரும் அவரவர்க்கு அமைத்த இருக்கையை அடைதல் + + + +6890. வாயினும் மனத்தினானும் வாழ்த்தி, மன்னுயிர்கட்கு எல்லாம் + +தாயினும் அன்பினோனைத் தாள் உற வணங்கித் தத்தம் + +ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும் + +போயினர்; பன்னசாலை இராமனும் இனிது புக்கான்.         6.8.17 + + + + சூரியன் அத்தமித்தல் + + + +6891. பப்பு நீர் ஆய வீரர் பருவரை கடலில் பாய்ச்சத் + +துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு + +உப்பு நீர் அகத்துத் தோய்ந்த ஒளிநிறம் விளங்க, அப்பால் + +அப்பு நீர் ஆடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான்.         6.8.18 + + + + சந்திரன் தோன்றுதல் + + + +6892. மால் உறு குடக வானின், வயங்கிய வந்து தோன்றும் + +பால் உறு பசு வெண் திங்கள், பங்கய நயனத்து அண்ணல் + +மேல் உறு பகழி தூர்க்க வெகுண்டனன், விரைவின் வாங்கிக் + +கால் உற வளைத்த காமன் வில் எனக் காட்டிற்று அன்றே.         6.8.19 + + + + தென்றல் சந்திரன் முதலியவை கொதித்தல் + + + +6893. நூற்று இதழ்க் கமலம் தந்த நுண் நறுஞ் சுண்ணம் உண்ணத் + +தீற்றி, மென் பனிநீர் தோய்ந்த சீதளத் தென்றல் என்னும் + +காற்றினும் மாலையான கனலினும் காமன் வாளிக் + +கூற்றினும் வெம்மை காட்டிக் கொதித்தது அக் குளிர் வெண் திங்கள்.         6.8.20 + + + + இராமன் தோள்மீது நிலாத் தவழும் தோற்றம் + +6894. செயிர்ப்பினும் அழகு செய்யும் திருமுகத்து அணங்கைத் தீர்த்து + +துயில் சுவை மறந்தான் தோளில் தூநிலாத் தவழும் தோற்றம், + +மயில் குலம் பிரிந்த மான மரகத மலை மேல் வன்னி + +உயிர்ப்பு உடை வெள்ளைப் பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற.         6.8.21 + + + + இராமன் விரகதாபத்தால் வருந்துதல் + +6895. மன் நெடு நகரம் மாடே வரவர, வயிரச் செங்கைப் + +பொன் நெடுந் திரள் தோள் ஐயன், மெய் உறப் புழுங்கி நைந்தான்; + +பல் நெடுங் காதத்தேயும் சுட வல்ல பவளச் செவ்வாய் + +அந் நெடுங் கருங்கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ?         6.8.22 + + + + குரங்குருவொடு வானரப்படையுள் மறைந்து திரிந்த இராவணன் ஒற்றரை வீடணன் காணுதல் (6896-6898) + +6896. இற்று இது காலம் ஆக, இலங்கையர் வேந்தன் ஏவ, + +ஒற்றர் வந்து, அளவு நோக்கிக் குரங்கு என உழல்கின்றாரைப் + +பற்றினன் என்ப மன்னோ! பண்டு தான் பலநாள் செய்த + +நல்தவப் பயன்கள் துய்ப்ப முந்து உற போந்த நம்பி.         6.8.23 + + + + 6897. பேர்வு உறு கவியின் சேனைப் பெருங் கடல் வெள்ளம் தன்னுள் + +ஓர்வு உறும் மனத்தன் ஆகி, ஒற்றரை உணர்ந்து கொண்டான்; + +சேர்வுறு பாலின் வேலைச் சிறுதுளி தறெித்த வேனும் + +நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான்.         6.8.24 + + + + 6898. பெருமையும் சிறுமைதானும் முற்றுறு பெற்றி ஆற்ற + +அருமையின் அகன்று, நீண்ட விஞ்சையுள் அடங்கித் தாமும் + +உருவமும் தரெியா வண்ணம், ஒளித்தனர், உறையும் மாயத்து + +இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான்.         6.8.25 + + + + ஓற்றரை வீடணன் காட்ட இராமன் காணுதல் + +6899. கூட்டிய விரல் திண்கையால் குரங்குகள் இரங்கக் குத்தி, + +மீட்டு ஒரு வினை செய்யாமல், மாணையின் கொடியால் வீக்கிப் + +பூட்டிய கையர் வாயால் குருதியே பொழிகின்றாரைக் + +காட்டினன் கள்வர் என்னாக் கருணையங் கடலும் கண்டான்.         6.8.26 + + + + இராமன் குரங்குருவினின்ற ஒற்றரை நலியாது விடுக எனல் + +6900. பாம்பு இழைப் பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான், ‘பல்லோர் + +நோம் பிழை செய்த கொல்லோ குரங்கு? என, இரங்கி நோக்கித் + +தாம் பிழை செய்தாரேனும், தஞ்சம் என்று அடைந்தார் தம்மை + +நாம் பிழை செய்யல் ஆமோ? நலியலிர் விடுதிர் ‘என்றான்.         6.8.27 + + + + வீடணன், இவர் இராவணன் ஒற்றராகிய சுகசாரணர் என்று இராமனிடம் கூறுதல் + +6901. அகன் உறப் பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன், + +‘நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர்; + +தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர்; + +சுகன் இவன்; அவனும் சாரன் ‘ என்பது தரெியச் சொன்னான்.         6.8. 28 + + + + ஒற்றர் நாங்கள் குரங்குகளே; வீடணன் எங்களைக் கொல்ல வந்த வஞ்சகன் என்று இராமனிடம் கூறுதல் + +6902. கல்விக்கண் மிக்கோன் சொல்லக் கரு மன நிருதக் கள்வர், + +“வல் வில் கை வீர! மற்று இவ் வானரர் வலியை நோக்கி, + +‘வெல்விக்கை அரிது ‘என்று எண்ணி, வினையத்தால் எம்மை எல்லாம் + +கொல்விக்க வந்தான்; மெய்ம்மை; குரங்கு நாம்; கொல்க ‘‘ என்றார்.         6.8.29 + + + + வீடணன் மந்திரத்தால் ஒற்றர் அரக்கருருவொடு நிற்றல் + +6903. ‘கள்ளரே காண்டி ‘என்னா மந்திரம் கருத்தில் கொண்டான்; + +தெள்ளிய தரெிக்கும் தவெ்வர், தீர்வினை சேர்தலோடும் + +துள்ளியின் இரதம் தோய்ந்து, தொல் நிறம் கரந்து வேறாய் + +வெள்ளி போல் இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார்.         6.8.       �� 6.8.30 + + + + இராமன், எது கருதி வந்தீர் என ஒற்றரை வினவுதல் + +6904. மின் குலாம் எயிற்றர் ஆகி, வெருவந்து வெற்பின் நின்ற + +வன்கணார் தம்மை நோக்கி, மணி நகை முறுவல் தோன்றப் + +புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன், ‘போந்த தன்மை + +என்கொலாம்? தரெிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் ‘என்றான்.         6.8.31 + + + + ஒற்றர் வேய் தரெிந்துரைக்க வந்தோம் எனல் + +6905. தாய் தரெிந்து உலகு காத்த தவத்தியைத் தன்னைக் கொல்லும் + +நோய் தரெிந்து உணரான் தேடிக் கொண்டவன் நுவல, ஆற்றின் + +வாய் தரெிந்து, உணராவண்ணம் கழறுவார், வணங்கி, ‘மாய + +வேய் தரெிந்து க்க வந்தோம் வினையினால் வீர ‘என்றார்.         6.8.32 + + + + இராமன் ஒற்றரிடம் கூறுதல் (6906-6910) + +6906. ‘எல்லை இல் இலங்கைச் செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை + +சொல்லுதிர்; மகர வேலை, கவிக்குல வீரர் தூர்த்துக் + +கல்லினில் கடந்த வாறும் கழறுதிர்; “காலம் தாழ்த்த + +வில்லினர், வந்தார் ‘‘ என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர். ‘         6.8.33 + + + + 6907. ‘கொத்து உறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கைக் குன்றம், + +தத்து உறு தடநீர் வேலை தனில், ஒரு சிறையிற்று ஆதல், + +ஒத்து உற உணர்ந்திலாமை, உயிரோடும் உறவினோடும் + +இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால். ‘         6.8.34 + + + + 6908. ‘சண்டம் கொள் வேகமாகத் தனி விடை, உவணம், தாங்கும் + +துண்டம் கொள் பிறையான், மௌலித் துளவினானோடும் தொல்லை + +அண்டம் கொள் தேவர், வந்து, காப்பினும், அறம் இலானைக் + +கண்டங்கள் பலவும், காண்பன் என்பதும் கழறுவீரால். ‘         6.8.35 + + + + 6909. தீட்டிய மழுவாள் வீரன், தாதையைச் செற்றோன் சுற்றம் + +மாட்டிய வண்ணமே, தன் வருக்கமும், மற்றும் முற்றும், + +வீட்டி, என் தாதைக்காக, மெய்ப்பலி, விசும்பு உ(ள்)ேளாரை + +ஊட்டுவென் உயிர்கொண்டு ‘என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால்.         6.8.36 + + + + 6910. தாழ்வு இலாத் தவத்து ஓர் தையல், தனி ஒரு சிறையில் தங்கச் + +சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்த தன்னைத் தன் சுற்றத்தோடும், + +வாழ்வு எலாம் தம்பி, கொள்ள, வயங்கு எரி நரகம் என்னும் + +வீழ்வு இலாச் சிறையின், வைப்பென்; என்பதும் விளம்புவீரால்.         6.8.37 + + + +இராமன் கட்டளையால் ஒற்றர் திரும்பிச் செல்லுதல் + + + +6911. ‘நோக்கினிர் தானையெங்கும் நுழைந்தனிர்; இனி வேறு ஒன்றும் + +ஆக்குவது இல்லையாயின், அஞ்சல் என்ற அஃது உண்டு ‘; என்றே + +‘வாக்கினின் மனத்தின் கையின் மற்று இனி நலியா வண்ணம், + +ப���க்குமின் விரைவின் ‘என்றான்; ‘உய்ந்தனம் ‘என்று போனார்.         6.8.38 + + + +இராவணன் மந்திராலோசனை செய்தல் (6912-6914) + + + +6912. அரவ மாக் கடல் அஞ்சிய அச்சமும் + +உரவு நல் அணை ஓட்டிய ஊற்றமும் + +வரவும் நோக்கி இலங்கையர் மன்னவன் + +இரவின் எண்ணிட வேறு இருந்தான் அரோ.         6.8.39 + + + +6913. வார் குலாம் முலை மாதரும் மைந்தரும் + +ஆரும் நீங்க அறிஞரோடு ஏகினான் + +‘சேர்க ‘என்னின் அல்லால் இளந்தென்றலும் + +சார்கிலா நெடு மந்திர சாலையே.         6.8.40 + + + +6914. உணர்வு இல் நெஞ்சினர் ஊமர் ப்பொருள் + +புணரும் கேள்வியர் அல்லர் பொறி இலர் + +கொணரும் கூனர் குறளர் கொழுஞ்சுடர் + +துணரும் நல்விளக்கு ஏந்தினர் சுற்றினார்.         6.8.41 + + + +இராவணன் வினவுதல் + + + +6915. ‘நணியர் வந்து மனிதர்; நமக்கு இனித் + +துணியும் காரியம் யாது? ‘எனச் சொல்லினான்; + +பணியும் தானவர் ஆதியர் பல் முடி + +மணியினால் விளங்கும் மணித் தாளினான்.         6.8.42 + + + +மாலியவான் கூறுதல் (6916-6920) + + + +6916. கால வெம் கனல் போலும் கணைகளால் + +வேலை வெந்து நடுங்கி வெயில் புரை + +மாலை கொண்டு வணங்கியவாறு எலாம் + +சூலம் என்ன என் நெஞ்சைத் தொளைக்குமால்.         6.8.43 + + + +6917. ‘கிழிபடக் கடல் கீண்டது; மாண்டது + +மொழி படைத்த வலி ‘; என மூண்டது ஓர் + +பழி படைத்த பெரும் பயத்து அன்னவன் + +வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால்.         6.8.44 + + + +6918. படைத்த மால் வரை யாவும் பறித்து வேர் + +துடைத்த வானர வீரர் தம் தோள்களைப் + +புடைத்தவாறும் புணரியைப் போக்கு அற + +அடைத்தவாறும் என் உள்ளத்து அடைத்தவால்.         6.8.45 + + + +6919. காந்து வெம் சின வீரர் கணக்கு இலார் + +தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத் தர + +வேந்த! வெற்பை ஒருவன் விரல்களால் + +ஏந்தி இட்டது என் உள்ளத்தில் இட்டதால்.         6.8.46 + + + +6920. சுட்டவா கண்டும் தொல் நகர் வேலையைத் + +தட்டவா கண்டும் தா அற்ற தவெ்வரைக் + +கட்டவா கண்டும் கண் எதிரே வந்து + +விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ?         6.8.47 + + + +இராவணன் மாலியவானைச் சினந்து கூறுதல் + + + +6921. என்று தாயைப் பயந்தோன் இயம்பலும் + +தின்று வாயை விழிவழித் தீ உக + +‘நன்று நன்று நம் மந்திரம் நன்று ‘எனா + +‘என்றும் வாழ்தி இளவலொடு ஏகு ‘என்றான்.         6.8.48 + + + +மாலியவான் மௌனமுறச் சேனைத் தலைவன் கூறுதல் (6922-6925) + + + +6922. ஈனமேகொல் இதம்? என எண்ணுறா + +மோனம் ஆகி இருந்தனன் முற்றினான்; + +ஆன காலை அடியின் இறைஞ்சிய + +சேனை நாதன் இனையன செப்பினான்.         6.8.49 + + + +6923. கண் வயம்தர வேலை கடந்த அத் + +திண்மை ஒன்றும் அலால் திசை காவலர் + +எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அவ் + +உண்மை ஒன்றும் உணர்ந்திலை போலுமால்.         6.8.50 + + + +6924. கூசி வானரர் குன்று கொடுங்கடல் + +வீசினார் எனும் வீரம் விளம்புவாய் + +ஊசி வேரோடும் ஓங்கலை ஓங்கிய + +ஈசனோடும் எடுத்ததும் இல்லையோ.         6.8.51 + + + +6925. அதுகொடு என் சில; ஆர் அமர் மேல் இனி + +மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை + +பதி புகுந்தனர் தம்மைப் படுப்பது ஓர் + +விதி கொடு உந்த விளைந்ததுதான் என்றான்.         6.8.52 + + + +வாயில் காவலன் இராவணனிடம் ஒற்றர் வரவு தரெிவித்தல் + + + +6926. முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய + +வெற்று அனல் பொழி கண்ணினன் வேத்திரம் + +பற்றும் அம் கையினன் படிகாரன் நின்று + +‘ஒற்றர் வந்தனர் ‘என்ன உணர்த்தினான்.         6.8.53 + + + +இராவணன் கட்டளையால் ஒற்றர் இராவணனை யடைதல் + + + +6927. வாயில் காவலன் கூற வயங்கு எரி + +மேய வெங்கண் விறல் கொள் இராக்கதர் + +நாயகன் ‘புகுத்து இங்கு ‘என ‘நன்று ‘எனப் + +போய் அவன் புகுத்தப் புகுந்தார் அரோ.         6.8.54 + + + +ஒற்றர் இராவணனை வணங்குதல் + + + +6928. மனைக்கண் வந்து அவன் பாதம் வணங்கினார் + +பனைக்கை வன்குரங்கின் படர் சேனையை + +நினைக்குந்தோறும் திடுக்கிடும் நெஞ்சினார் + +கனைக்குந்தோறும் உதிரங்கள் கக்குவார்.         6.8.55 + + + +இராவணன் ஒற்றர்பால் வானரப்படையளவு முதலியவற்றை வினவுதல் + + + +6929. ‘வெள்ள வாரி விரிவொடு அவ் வீடணத் + +தள்ளவாரி நிலைமையும் தாபதர் + +உள்ளவாறும் மின் ‘என்றான்; உயிர் + +கொள்ள வாய் வெருவும் கொடுங் கூற்று அனான்.         6.8.56 + + + +ஒற்றர் கூறுதல் (6930-6938) + + + +6930. அடியம் அந்நெடுஞ் சேனையை ஆசையால் + +முடிய நோக்கலுற்றோம்; முதுவேலையின் + +படியை நோக்கி அவ் வானம் படர்குறும் + +கடிய வேகக் கலுழனில் கண்டிலம்.         6.8.57 + + + +6931. நுவல யாம் வரவேண்டிய நோக்கதோ + +கவலை வேலை எனும் கரை காண்கிலாது + +அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும் + +துவலையே வந்து சொல்லியது இல்லையோ?         6.8.58 + + + +6932. ‘எல்லை நோக்கவும் எய்தில தாம் ‘எனும் + +சொல்லை நோக்கிய மானிடன் தோள் எனும் + +கல்லை நோக்கிக் கணைகளை நோக்கித் தன் + +வில்லை நோக்கலும் வெந்தது வேலையே.         6.8.59 + + + +6933. தார் உலாம் மணி மார்ப! நின் தம்பியே + +தேர் உலாவு கதிரும் திரிந்து தன் + +பேர் உலாவும் அளவினும் பெற்றனன் + +நீர் உலாவும் இலங்கை நெடுந்திரு         6.8.60 + + + +6934. சேது பந்தனம் செய்���னன் என்றது இப் + +போது வந்த புது வலியோ? ஒரு + +தூது வந்தவன் தோள் வலி சொல்லிய + +ஏது அந்தம் இலாத இருக்கவே.         6.8.61 + + + +6935. மருந்து தேவர் அருந்திய மாலைவாய் + +இருந்த தானவர் தம்மை இரவி முன் + +பெருந்திண் மாயற்கு உணர்த்திய பெற்றியில் + +தரெிந்து காட்டினன் நும்பி சினத்தினால்.         6.8.62 + + + +6936. பற்றி வானர வீரர் பனைக் கையால் + +எற்றி எங்களையே நெடுந் தோள் உறச் + +சுற்றி ஈர்த்து அலைத்துச் சுடர்போல் ஒளிர் + +வெற்றி வீரற்குக் காட்டி விளம்பினான்.         6.8.63 + + + +6937. “‘சரங்கள் இங்கு இவற்றால் பண்டு தான் உடை + +வரங்கள் சிந்துவென் ‘என்றனன்; மற்று எமைக் + +குரங்கு அலாமை தரெிந்தும் அக் கொற்றவன் + +இரங்க உய்ந்தனம்; ஈது எங்கள் ஒற்று “ என்றார்.         6.8.64 + + + +6938. மற்றும் யாவையும் வாய்மைய வானவன் + +சொற்ற யாவையும் சோர்வு இன்றிச் சொல்லினார் + +‘குற்றம் யாவையும் கோெளாடு நீங்குக; + +இற்றை நாள் முதல் ஆயு உண்டாக ‘என்றார்         6.8.65 + +------------------ + + + +6.9 இலங்கை காண் படலம் (6939 - 6986 ) + + + +இராவணன் வினவச் சேனை காப்பாளன் சொல்லத் தொடங்குதல் + + + +6939. வைதனெக் கொல்லும் வில் கை மானிடர், மகர நீரை + +நொய்தினின் அடைத்து, மானத் தானையான் நுவன்ற நம் ஊர் + +எய்தினர் என்ற போதின், வேறு இனி எண்ண வேண்டும் + +செய்திறன் உண்டோ? என்ன, சேனை காப்பாளன் செப்பும்.         6.9.1 + + + +சேனை காவலன் மறுமொழி (6940-6943) + + + +6940. ‘விட்டனை மாதை என்ற போதினும், “வெருவி, வேந்தன் + +பட்டது ‘‘ என்று இகழ்வர் விண்ணோர்; பற்றி இப்பகையைத் தீர, + +ஒட்டல் ஆம் போரில் ஒன்னார் ஒட்டினும், உம்பி ஒட்டான்; + +கிட்டிய போது, செய்வது என்? இனிக் கிளத்தல் வேண்டும்.         6.9.2 + + + +6941. ஆண்டு சென்று அரிகேளாடு மனிசரை அமரில் கொன்று + +மீண்டு நம் இருக்கை சேர்தும் என்பது மேல் கொண்டோமேல், + +ஈண்டு வந்து இறுத்தார் என்னும் ஈது அலாது உறுதி உண்டோ? + +வேண்டியது எய்தப் பெற்றால் வெற்றியின் விழுமிது அன்றோ!         6.9.3 + + + +6942. ஆயிரம் வெள்ளம் ஆன அரக்கர்தம் தானை ஐய! + +தேயினும் ஊழி நூறு வேண்டுமால்; சிறுமை என்னோ? + +நாயினம் சீயம் கண்டதாம் என நடப்பது அல்லால் + +நீ உருத்து எழுந்த போது, குரங்கு எதிர் நிற்பது உண்டோ?         6.9.4 + + + +6943. வந்தவர், தானையோடு மறிந்து மாக் கடலில் வீழ்ந்து + +சிந்தினர் இரிந்து போகச் சேனையும் யானும் சென்று, + +வெம் தொழில் புரியும் ஆறு காணுதி; விடை ஈக என்னா, + +இந்திரன் முதுகு கண்ட இராவணற்க��� ஏய்ந்த சொன்னான்.         6.9.5 + + + +மாலியவான் அறிவுரை (6944-6954) + + + +6944. மதி நெறி அறிவு சான்ற மாலியவான், “ நல் வாய்மை + +பொது நெறி நிலையது ஆகப் புணர்த்துதல் புலமை ‘என்னா, + +‘விதி நெறி நிலையது ஆக விளம்புகின்றோரும், மீண்டு + +செது நெறி நிலையினாரே ‘ என்பது தரெியச் சொல்லும்.         6.9.6 + + + +6945. “‘பூசற்கு முயன்று நம்பால், பொரு திரைப் புணரி வேலித் + +தேசத்துக்கு இறைவன் ஆன தசெரதன் சிறுவனாகி, + +மாசு அற்ற சோதி வெள்ளத்து உச்சியின் வரம்பில் தோன்றும் + +ஈசற்கும் ஈசன் வந்தான் ‘‘ என்பதோர் வார்த்தை இட்டார்.         6.9.7 + + + +6946. அன்னவற்கு இளவல் தன்னை, “அருமறை, ‘பரம் ‘என்று ஓதும் + +நல்நிலை நின்று, தீர்ந்து, நவை இலா உயிர்கள் தோறும் + +தொல்நிலை பிரிந்தான் என்னப் பலவகை நின்ற தூயோன் + +இன் அணை ‘‘ என்ன யாரும் இயம்புவர்; ஏது யாதோ?         6.9.8 + + + +6947. “‘அவ்வவர்க்கு அமைந்த வில்லும், குலவரை அவற்றின் ஆன்ற + +வெவ் வலி வேறு வாங்கி, விரிஞ்சனே விதித்த, மேல் நாள்; + +செவ் வழி நாணும், சேடன்; தரெிகணை ஆகச் செய்த + +கவ்வு அயில், கால நேமிக் கணக்கையும் கடந்தது ‘‘ என்பார்.         6.9.9 + + + +6948. “‘வாலி மா மகன் வந்தானை, “வானவர்க்கு இறைவன் “ என்றார்; + +நீலனை, ‘உலகம் உண்ணும் நெருப்பினுக்கு அரசன் “ என்றார்; + +காலனே ஒக்கும் தூதன் “காற்று எனும் கடவுள் “ என்றார்; + +மேலும் ஒன்று த்தார் : “அன்னான் விரிஞ்சன் ஆம் இனிமேல்“ என்றார்.         6.9.10 + + + +6949. “‘அப்பதம் அவனுக்கு ஈந்தான், அரக்கர் வேர் அறுப்பதாக + +இப்பதி எய்தினான் அவ் இராமன் ‘‘ என்று எவரும் சொன்னார்; + +ஒப்பினால் க்கின்றாரோ? உண்மையே உணர்த்தினாரோ? + +செப்பி என்? “குரங்காய் வந்தார் தனித்தனி தேவர் ‘என்றார்.         6.9.11 + + + +6950. ‘ஆயது தரெிந்தோர், தங்கள் அச்சமோ? அறிவோ? ‘யார்க்கும் + +சேயவள், ‘எளியள் ‘என்னா, சிந்தையின் இகழல் அம்மா! + +“தூயவள் அமிழ்தினோடும் தோன்றினாள், என்றும் தோன்றாத் + +தாய் அவள், உலகுக்கு எல்லாம் ‘‘ என்பதும், சாற்றுகின்றார்.         6.9.12 + + + +6951. “‘கானிடை வந்ததேயும் வானவர் கடாவவேயாம்; + +மீன் உடை அகழி வேலை விலங்கல் மேல் இலங்கை வேந்தன் + +தானுடை வரத்தை எண்ணி, தருமத்தின் தலைவர் தாமே + +மானுட வடிவம் கொண்டார் ‘‘ என்பது ஓர் வார்த்தை இட்டார்.         6.9.13 + + + +6952. “ஆயிரம் உற்பாதங்கள் ஈங்கு உள அடுத்த “ என்றார்; + +“தாயினும் உயிர்க்கு நல்லாள் இருந்துழி அறிய, தக்கோன் + +ஏயின தூதன் எற்��, பற்று விட்டு, இலங்கைத் தயெ்வம் + +போயினது ‘‘ என்றும் சொன்னார்; ‘‘புகுந்தது போரும் ‘‘ என்றார்.         6.9.14 + + + +6953. “‘அம்பினுக்கு இலக்கம் ஆவார் அரசொடும் அரக்கர் ‘என்ன, + +நம் பரத்து அடங்கும் மெய்யன், நாவினில் பொய் இலாதான், + +உம்பர் மந்திரிக்கும் மேலா ஒரு முழம் உயர்ந்த ஞானத் + +தம்பியே சாற்றிப் போனான் ‘‘ என்பதும் சமையச் சொன்னார்.         6.9.15 + + + +6954. ‘ஈது எலாம் உணர்ந்தேன் ஆயும், என்குலம் இறுதி உற்றது + +ஆதியின் இவனால் என்றும், உன்தன் மேல் அன்பினாலும், + +வேதனை நெஞ்சின் எய்த, வெம்பி, யான் விளைவ சொன்னேன், + +சீதையை விடுதி ஆயின், தீரும் இத்தீமை ‘என்றான்.         6.9.16 + + + +மாலியவான் மொழிகளை இராவணன் இகழ்ந்துரைத்தல் (6955-6960) + + + +6955. ‘மற்று எலாம் நிற்க, வந்த மனிதர் வானரங்கள், வானில் + +இற்றை நாள் அளவும் நின்ற இமையவர் என்னும் தன்மை + +சொற்றவாறு அன்றியேயும், “தோற்றி நீ “ என்றும் சொன்னாய் + +கற்றவா நன்று போ ‘என்று, இனையன கழறல் உற்றான்.         6.9.17 + + + +6956. ‘பேதை மானிடவரோடு குரங்கு அல, பிறவே ஆக, + +பூதல வரைப்பின் நாகர் புரத்தின் அப்புறத்தது ஆக, + +காது வெஞ்செரு வேட்டு, என்னைக் காந்தினர் கலந்த போதும், + +சீதைதன் திறத்தின் ஆயின், அமர்த் தொழில் திறம்புவேனோ?         6.9.18 + + + +6957. ‘ஒன்று அல, பகழி, என் கைக்கு உரியன; உலகம் எல்லாம் + +வென்றன; ஒருவன் செய்த வினையினும் வலிய; “வெம்போர் + +முன்தருக ‘என்ற தேவர் முதுகு புக்கு அமரில் முன்னம் + +சென்றன; இன்று வந்த குரங்கின்மேல் செல்கலாவோ?         6.9.19 + + + +6958. ‘சூலம் ஏய் தடக் கை அண்ணல் தானும், ஓர் குரங்காய்த் தோன்றி + +ஏலுமேல், இடைவது அல்லால் என்செய வல்லன் என்னை? + +வேலை நீர் கடைந்த மேல் நாள் உலகு எலாம் வெருவ வந்த + +ஆலமோ விழுங்க, என் கை அயில் முகப் பகழி? அம்மா!         6.9.20 + + + +6959. ‘அறிகிலை போலும், ஐய! அமர் எனக்கு அஞ்சிப் போன + +எறி சுடர் நேமியான் வந்து ஏற்கிலும், என் கை வாளி, + +பொறி பட, சுடர்கள் தீயப் போவன; போக்கு இலாத + +மறி கடல் கடைய, வந்த மணிகொலாம், மார்பில் பூண?         6.9.21 + + + +6960. ‘கொற்ற வாள் இமையோர் கோமான் குரங்கினது உருவம் கொண்டால், + +அற்றை நாள், அவன்தான் விட்ட அயில் படை அறுத்து மாற்ற, + +இற்ற வான் சிறைய ஆகி விழுந்து, மேல் எழுந்து வீங்காப் + +பொற்றை மால் வரைகேளா, என் புயநெடும் பொருப்பும்? என்றான்.         6.9.22 + + + +இருள் நீங்குதல் + + + +6961. உள்ளமே தூது செல்ல உயிர் அனார் உறையுள��� நாடும் + +கள்ளம் ஆர் மகளிர் சோர, நேமிப் புள் கவற்சி நீங்க, + +கொள்ளை பூண்டு அமரர் வைகும் குன்றையும் கொடிற்றில் கொண்ட + +வெள்ள நீர் வடிந்தது என்ன, வீங்கு இருள் விடிந்தது அன்றே.         6.9.23 + + + +கதிரவன் தோன்றுதல் + + + +6962. இன்னது ஓர் தன்மைத்து ஆம் என்று எட்டியும் பார்க்க அஞ்சி, + +பொன்மதில் புறத்து நாளும் போகின்றான், ‘போர் மேற்கொண்டு + +மன்னவர்க்கு அரசன் வந்தான்; வலியமால் ‘என்று, தானும் + +தொல் நகர் காண்பான் போல, கதிரவன் தோற்றம் செய்தான்.         6.9.24 + + + +இராமன் தன் பரிவாரங்களுடன் சுவேலமலைமேல் ஏறுதல் + + + +6963. ‘அருந்ததி அனைய நங்கை அவ் வழி இருந்தாள் ‘என்று + +பொருந்திய காதல் தூண்ட, பொன் நகர் காண்பான் போல, + +பெருந் துணை வீரர் சுற்ற, தம்பியும் பின்பு செல்ல, + +இருந்த மா மலையின் உச்சி ஏறினன் இராமன், இப்பால்.         6.9.25 + + + +மலைமேல் ஏறிய இராமனது தோற்றப் பொலிவு (6964-6967) + + + +6964. செரு மலி வீரர் எல்லாம் சேர்ந்தனர் மருங்கு செல்ல, + +இரு திறல் வேந்தர் தாங்கும் இணை நெடுங் கமலக் கையான், + +பொரு வலி வய வெஞ்சீயம் யாவையும் புலியும் சுற்ற, + +அரு வரை இவர்வது ஆங்கு ஓர் அரி அரசு அனையன் ஆனான்.         6.9.26 + + + +6965. கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும் கனைகடல் உலகம் எல்லாம் + +புதைவு செய் இருளின் பொங்கும் அரக்கர்தம் புரமும், பொற்பும், + +சிதைவு செய் குறியைக் காட்டி வடதிசைச் சிகரக் குன்றின், + +உதயம் அது ஒழியத் தோன்றும், ஒரு கரு ஞாயிறு ஒத்தான்.         6.9.27 + + + +6966. துமிலத் திண் செருவின் வாளிப் பெரு மழை சொரியத் தோன்றும் + +விமலத் திண் சிலையன், ஆண்டு ஓர் வெற்பினை மேய வீரன், + +அமலத் திண் கரமும் காலும் வதனமும் கண்ணும் ஆன, + +கமலத் திண் காடு பூத்த காள மா மேகம் ஒத்தான்.         6.9.28 + + + +6967. மல் குவடு அனைய திண் தோள் மானவன், மானம் இல்லாக் + +கல் குவடு அடுக்கி வாரிக் கடலினைக் கடந்த காட்சி + +நல் குவடு அனைய வீரர் ஈட்டத்தின் நடுவண் நின்றான், + +பொன் குவட்டு இடையே தோன்றும் மரகதக் குன்றம் போன்றான்.         6.9.29 + + + +மலைமேல் நின்று இலங்கை நகரத்தினைக்கண்ட இராமன் அதன் எழில்மிக்க பலவகைக் காட்சிகளையும் இலக்குவனுக்கு எடுத்துரைத்தல் + + + +6968. அணை நெடுங் கடலில் தோன்ற, ஆறிய சீற்றத்து ஐயன், + +பிணை நெடுங் கண்ணி என்னும் இன்னுயிர் பிரிந்த பின்னை, + +துணை பிரிந்து அயரும் அன்றில் சேவலின் துளங்குகின்றான், + +இணை நெடுங் கமலக் கண்ணால் இலங்கையை எய்தக் கண்டான்.         6.9.30 + + + +இராமன் இலங்கையின் எழில்கண்டு இலக்குவனுக்குக் காட்டுதல் (6969-6985) + + + +6969. ‘நம் திரு நகரே ஆதி வேறு உள நகர்கட்கு எல்லாம் + +வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த காலை, + +இந்திரன் இருக்கை என்பர்; இலங்கையை எடுத்துக் காட்டார்; + +அந்தரம் உணர்தல் தேற்றார், அருங் கவிப் புலவர் அம்மா!         6.9.31 + + + +6970. பழுது அற விளங்கும் செம்பொன் தலத்திடைப் பரிதி நாண + +முழுது எரி மணியின் செய்து முடிந்தன, முனைவராலும் + +எழுத அருந் தகைய ஆய மாளிகை, இயையச் செய்த + +தொழில் தரெிகிலவால், தங்கண் சுடர்மணிக் கற்றை சுற்ற.         6.9.32 + + + +6971. விரிகின்ற கதிர ஆகி, மிளிர்கின்ற மணிகள் வீச, + +சொரிகின்ற சுடரின் சும்மை விசும்புறத் தொடரும் தோற்றம், + +அரி வென்ற வெற்றி ஆற்றல் மாருதி மடுத்த தீயால் + +எரிகின்றது ஆயே காண், இக் கொடி நகர் இருந்தது இன்னும்.         6.9.33 + + + +6972. ‘மாசு அடப் பரந்த மான மரகதத் தலத்து வைத்த + +காசு இடைச் சமைந்த மாடம், கதிர்த் தழைக் கற்றை சுற்ற + +ஆசு அறக் குயின்ற வெள்ளி அகல்மனை அன்னம் ஆக, + +பாசடைப் பொய்கை பூத்த பங்கயம் நிகர்ப்ப பாராய்!         6.9.34 + + + +6973. தீச் சிகை சிவணுஞ் சோதிச் செம்மணி செறியச் செய்த + +தூச் சுடர் மாடம் ஈண்டித் துறுதலால், கருமை தோன்றா + +மீச் செலும் மேகம் எல்லாம், விரிசுடர் இலங்கை வேவ, + +காய்ச்சிய இரும்பு மானச் சேந்து ஒளி கஞல்வ, காணாய்.         6.9.35 + + + +6974. வில் படி திரள் தோள் வீர! நோக்குதி வெங் கண் யானை + +அல் படி நிறத்த வேனும், ஆடகத் தலத்தை ஆழ, + +கல் படி வயிரத் திண் கால் நகங்களின் கல்லி, கையால் + +பொன் பொடி மெய்யின் வீசி, பொன் மலை என்னப் போவ.         6.9.36 + + + +6975. ‘பூசல் வில் குமர! நோக்காய் புகர் அற விளங்கும் பொற்பின் + +காசுடைக் கதிரின் கற்றைக் கால்களால் கதுவு கின்ற + +வீசு பொன் கொடிகள் எல்லாம், விசும்பினின் விரிந்த மேக + +மாசு அறத் துடைத்து, அவ் வானம் விளக்குவ போல்வ மாதோ!         6.9.37 + + + +6976. நூல் படத் தொடர்ந்த பைம் பொன் சித்திரம் நுனித்த பத்திக் + +கோல் படு மனைகள் ஆய குலமணி எவையும் கூட்டி, + +சால் படுத்து அரக்கன் மாடத் தனி மணி நடுவண் சார்த்தி, + +மால் கடற்கு இறைவன் பூண்ட மாலை போன்று உளது இம் மூதூர்.         6.9.38 + + + +6977. நல் நெறி அறிஞ! நோக்காய் நளி நெடுந் தரெுவின் நாப்பண் + +பல் மணி மாடப் பத்தி நிழல் படப் படர்வ, பண்பால் + +தம் நிறம் தரெிகிலாத, ஒரு நிறம் சார்கிலாத, + +இன்னது ஓர் குலத்த என்று புலப்படா, புரவி எல்லாம்.         6.9.39 + + + +6978. ‘வீர! நீ பாராய் மெல்லென் பளிங்கினால் விளங்குகின்ற; + +மாரனும் மருளச் செய்த மாளிகை, மற்றோர் சோதி + +சேர்தலும் தரெிவ; அன்றேல், தரெிகில; தரெிந்த காட்சி + +நீரினால் இயன்ற என்ன நிழல் எழுகின்ற நீர.         6.9.40 + + + +6979. ‘கோல்நிறக் குனிவில் செங்கைக் குமரனே! குளிர் வெண் திங்கள் + +கால் நிறக் கதிரின் கற்றை தறெ்றிய அனைய காட்சி + +வால் நிறத் தரளப் பந்தர், மரகதம் நடுவண் வைத்த, + +பால் நிறப் பரவை வைகும் பரமனை நிகர்ப்ப, பாராய்.         6.9.41 + + + +6980. ‘கோள் அவாவு அரி ஏறு அன்ன குரிசிலே! கொள்ள நோக்காய் + +நாள் அவாம் மின்தோய் மாடத்து உம்பர், ஓர் நாகர் பாவை, + +காள வார் உறையின் வாங்கும் கண்ணடி, விசும்பில் கவ்வி + +வாள் அரா விழுங்கிக் காலும் மதியினை நிகர்த்த வண்ணம்.         6.9.42 + + + +6981. ‘கொற்ற வான் சிலைக் கை வீர! கொடி மிடை மாடக் குன்றை + +உற்ற வான் கழுத்தவான ஒட்டகம், அவற்றது உம்பர்ச் + +செற்றிய மணிகள் ஈன்ற சுடரினைச் செக்காரத்தின் + +கற்றை அம் தளிர்கள் என்னக் கவ்விய நிமிர்வ, காணாய்!         6.9.43 + + + +6982. ‘வாகை வெஞ் சிலைக்கை வீர! மலர்க்குழல் புலர்த்த, மாலைத் + +தோகையர் இட்ட தூமத்து அகில் புகை முழுதும் சுற்ற, + +வேக வெங் களிற்றின் வன் தோல் மெய்யுறப் போர்த்த தையல் + +பாகனின் பொலிந்து தோன்றும் பவள மாளிகையைப் பாராய்!         6.9.44 + + + +6983. ‘காவலன் பயந்த வீரக் கார்முகக் களிறே! கற்ற + +தேவர்தம் தச்சன் நீலக் காசினால் திருந்தச் செய்த, + +ஈவது தரெியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த + +பாவ பண்டாரம் அன்ன செய் குன்றம் பலவும் பாராய்!         6.9.45 + + + +6984. ‘பிணை மதர்த்து அனைய நோக்கம் பாழ்பட, பிடியுண்டு, அன்பின் + +துணைவரைப் பிரிந்து போந்து, மருங்கு எனத் துவளும் உள்ளப் + +பணம் அயிர்ப்பு எய்தும் அல்குல் பாவையர், பருவம் நோக்கும் + +கண மயில் குழுவின், நம்மைக் காண்கின்றார் தம்மைக் காணாய்!         6.9.46 + + + +6985. ‘நாழ் மலர்த் தரெியல் வீர! நம் படை காண, வானத்து + +யாழ் மொழித் தரெிவை மாரும் மைந்தரும் ஏறுகின்றார், + +‘வாழ்வு இனிச் சமைந்தது அன்றே ‘ என்று மா நகரை எல்லாம் + +பாழ் படுத்து இரியல் போவார் ஒக்கின்ற பரிசு பாராய்!         6.9.47 + + + +வானர சேனையைக் காண எண்ணி, இராவணன் கோபுரத்தின் மேல்நிலையை அடைத்தல் + + + +6986. இன்னவாறு இலங்கை தன்னை இளையவற்கு இராமன் காட்டி, + +சொன்னவா சொல்லா வண்ணம் அதிசயம் தோன்றும் காலை, + +அன்ன மா நகரின் வேந்தன், அரிக் குலப் பெருமை காண்பான், + +சென்னி வான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர்ச் சேர்ந்தான்.         6.9.48 + +-------------------- + + + + + + + +This file was last updated on10 September 2016. + +Feel free to send corrections to the webmaster. + + + + +