url stringlengths 70 142 | headline stringlengths 32 105 | subheadline stringlengths 32 409 | text stringlengths 942 16.7k |
|---|---|---|---|
https://www.vikatan.com/spiritual/temples/worlds-tallest-murugan-statue-to-be-opened-in-tamil-nadu | மலேசிய முருகனைவிட பிரமாண்டமாக தமிழகத்தில் தயாராகும் முருகன்..! | முருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மிக உயரமான சிலை என்கிற பெருமையை விரைவில் மலேசிய முருகன் கோயில் இழக்க இருக்கிறது. வெகுவிரைவில், அந்தப் புகழ் தமிழகத்துக்குச் சொந்தமாக இருக்கிறது. | தமிழ் நிலத்துக்கே உரிய வழிபாடு, முருகன் வழிபாடு. முருகனைப் பற்றி குறிப்பிடும்போதும் 'தமிழ்க் கடவுள்' என்றே சொல்கின்றனர். தமிழர்கள் உலகமெங்கும் பரவி வாழ்கிறார்கள். அவ்வாறு அவர்கள் குடியேறியிருக்கும் இடங்களிலெல்லாம் முருகனுக்கு கோயில்கள் கட்டி வழிபடுகின்றனர். பல்வேறு நாடுகளிலும் முருகக் கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும் ம... |
https://www.vikatan.com/literature/international-2nd-tamil-music-conference-in-malaysia | உலகத் தமிழிசை மாநாடு: 'இசையால் தன்னை உணர்ந்தான் புத்தன், இசையால் தன்னை அழித்தான் ஒளரங்கசீப்! | இவ்விழாவில், இந்தியா, ஃபிரான்ஸ், மலேசியா, மொரீசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தமிழ் இசைக்கு அருந்தொண்டாற்றி வரும் 9 பேராளர்களுக்கு தமிழ் இசை விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். | கடந்த 19.03.2023 அன்று, மலேசியா நாட்டின் பேரா மாநிலம் ஈப்போ நகரில் உள்ள ரிவர் பிரண்ட் நட்சத்திர விடுதி கூட்ட அரங்கில், ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றமும், ஈப்போ வெற்றித் தமிழர் இயக்கமும் இணைந்து நடத்திய, இரண்டாவது உலகத் தமிழிசை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக மலேசியா நாட்டின் மத்திய மனிதவள மேம்பா... |
https://www.vikatan.com/government-and-politics/politics/130455-vaiko-in-malaysia | மலேசியா சென்ற வைகோவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு! | மலேசியா சென்ற வைகோவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு! | மலேசிய பினாங்கு மாகாணத்தின் துணை முதலமைச்சரான இராமசாமியின் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பினாங்கு துணை முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் இராமசாமியும் வைகோவும் நீண்டகாலமாக நட்புடன் இருப்பவர்கள். ஈழத்தமிழ... |
https://www.vikatan.com/crime/157573-16-year-girl-died-after-instagram-polling | ``வாழ்வா... சாவா...?” - மலேசிய சிறுமியின் உயிரைப் பறித்த இன்ஸ்டாகிராம் போலிங்! #polling | ``வாழ்வா... சாவா...?” - மலேசிய சிறுமியின் உயிரைப் பறித்த இன்ஸ்டாகிராம் போலிங்! #polling | இன்ஸ்டாகிராமில் வாக்குப்பதிவு நடத்தியதில் மலேசிய சிறுமி ஒருவர் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்கள் மனிதர்கள் இணைந்து இருப்பதற்காகவும் தங்களின் மனதில் இருக்கும் விஷயங்களைப் பகிர்வதற்கும் ஒரு தளமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் அது வளர்ச்சி அடைய அடையைச் சிலர் ... |
https://www.vikatan.com/government-and-politics/151669-explanation-about-the-49-tamilians-who-were-rescued-from-the-malaysian-jail | மலேசியத் தமிழர்கள் மீட்பு விவகாரம்... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாதிக்கப்பட்டவர்கள்! | மலேசியா சிறையிலிருந்து மீண்டு வந்திருக்கும் 49 தமிழர்கள் கூறுகையில், ``சாப்பாட்டுக்காக ஒரு மணி நேரம் தரையில வரிசையா உட்கார்ந்திருக்கணும். திரும்பிப் பார்த்தா முதுகுல அடிப்பாங்க. 14 பேருக்குக் காலையில 5 லிட்டர், சாயந்தரம் 5 லிட்டர்னு தண்ணி குடுப்பாங்க. கக்கூஸ் போறதுக்கு, குளிக்கறதுக்கு, குடிக்கறதுக்குனு அத்தனைக்கும் அந்... | `கனிமொழி (நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்) முயற்சியால் மலேசியாவில் தவித்த 49 தமிழர்கள் மீட்பு - கிராம மக்கள் நன்றி’ என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதுதொடர்பாக, ஏற்கெனவே மூன்று செய்திகளையும் பதிவிட்டிருந்தோம். மலேசியாவைச் சேர்ந்த தமிழ்ச் சங்கம், எம்.எல்.ஏ. கருண... |
https://sports.vikatan.com/cricket/126675-womens-asia-cup-t20-india-beat-malaysia-by-142-runs | `27 ரன்களில் மலேசியாவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி!’ - 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி | `27 ரன்களில் மலேசியாவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி!’ - 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி | மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரின் முதல் போட்டியில் மலேசிய அணியை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி பெற்றது.
Photo Credit: Twitter/@ACCMedia1
இந்தியா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட அணிகள் மோதும் மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெறுகிறது. இந... |
https://www.vikatan.com/crime/hotel-labor-from-sivagangai-tortured-in-malaysia-hotel | ``சம்பளப்பாக்கி கேட்டதற்கு கட்டி வைத்து அடித்தார்கள்!” - அ.தி.மு.க பிரமுகரை குற்றம்சாட்டும் ஊழியர் | மலேசியாவுக்கு வேலை பார்க்கச் சென்ற தேவகோட்டையைச் சேர்ந்த ஊழியர் முகமது யூசுப், அவர் வேலை பார்த்த ஹோட்டல் நிர்வாகிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட காயங்களை பத்திரிகையாளர்களிடம் அவர் காண்பித்தார். | சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவர் வேலைக்காக கடந்த 2018-ம் ஆண்டு ஏஜென்ட் உதவியுடன் மலேசியாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு கார் கழுவும் வேலையை 7 மாதங்கள் செய்து வந்துள்ளார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் லெபாஅம்பாங் பகுதியில் உள்ள காரைக்குடி செட்டிநாடு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். இந்த... |
https://www.vikatan.com/government-and-politics/141013-mother-demanding-to-rescue-his-son-in-pattukottai | `ஆடியோவை கேட்க முடியவில்லை; என் மகனைக் காப்பாற்றுங்கள்' - கலெக்டர் அலுவலகத்தில் கதறிய தாய்! | `ஆடியோவை கேட்க முடியவில்லை; என் மகனைக் காப்பாற்றுங்கள்' - கலெக்டர் அலுவலகத்தில் கதறிய தாய்! | வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற தன் மகனை, அங்கு அடித்துத் துன்புறுத்துகிறார்கள். அவன் உடல் முழுக்க காயங்களாக இருக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள் என அழுதுகொண்டே அவன் பேசும் ஆடியோவை எங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறான். அதைக் கேட்டதிலிருந்து என் மனது தவிக்கிறது எப்படியாவது என் மகனை மீட்டுத் தர வேண்டும் என தாய் ஒருவர் அழுதுக... |
https://www.vikatan.com/health/diet/politics-behind-the-palm-oil-import-from-malaysia | பாமாயில் நல்லதா, கெட்டதா? ஆயில் அரசியலும் அதன் பின்னணியும் | பாமாயில் கலப்படத்தை அதன் நிறத்தை வைத்தே கணித்துவிடலாம். இதன் சிவப்பு நிறத்துக்குக் காரணம், இதில் இருக்கும் கரோட்டின். ஆனால், இதில் சில ரசாயனங்கள் சேர்த்து வெள்ளை நிற பாமாயிலாக மாற்றப்படுகிறது! | கடந்த ஜனவரி 8-ம் தேதி, உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, பாமாயில் மற்றும் பாமொலின் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி பத்தியில், "இலவசம்" என்பதிலிருந்து "கட்டுப்படுத்தப்பட்டது" என்று மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
அதாவது, இனி இந்தியா கச்சா பாமாயிலை மட்டு... |
https://www.vikatan.com/science/136839-malaysia-passenger-jet-on-google-maps-crashed-in-remote-cambodian-jungle | கூகுள் எர்த் வரைபடத்தில் காணாமல்போன மலேசிய விமானம்? | கூகுள் எர்த் வரைபடத்தில் காணாமல்போன மலேசிய விமானம்? | 2014 -ம் ஆண்டு மார்ச் மாதம் 8 தேதி, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங்கிற்குச் சென்ற போயிங் 777 வகை விமானம் காணாமல்போனது. விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமானத்துக்கு என்ன நிகழ்ந்தது என்பதுகுறித்து இப்போது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்துவருகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடைத்தன என்று... |
https://www.vikatan.com/trending/viral/malaysia-prime-minister-dance-video-goes-viral | குழந்தை நளினம்... குட்டிக் குட்டி ஸ்டெப்ஸ்... மகளோடு மலேசியப் பிரதமரின் 'க்யூட்' டான்ஸ்! #Viralvideo | சிம்பிள் ஸ்டெப்புகளால் அரங்கிலிருந்த அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார். தற்போது இணையவாசிகளின் 'க்யூட்' கமென்ட்களை அள்ளி வருகிறார். | தன் மகளின் அழைப்பை ஏற்று மலேசியப் பிரதமர் மகாதீர் ஆடிய அழகு நடனம்தான் தற்போது இணையமெங்கும் செம்ம வைரல்.
மலேசிய அரசின் ஏழாவது பிரதமராகப் பதவி வகிப்பவர், முஹமது மஹதீர். மலேசிய மக்களின் பிரியத்துக்குரிய பிரதமராக வலம் வருகிறார். தன் முதிய வயதிலும் தவறாமல் உடற்பயிற்சிகளையும் உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து உடல் ஆரோக்... |
https://www.vikatan.com/government-and-politics/what-happened-to-malaysia-flight-mh370-mystery | என்ன ஆனது மலேசிய விமானம் MH370? : மர்மங்களின் கதை | பகுதி 5 | அதிகாலை 12.42 மணிக்கு வானேறிய MH370 விமானம் கடைசியாக தொடர்புக்குள் இருந்தது 1.20 மணி வரை. ராடாரில் காணாமல் போன 1.21 மணிக்கு Transponder கருவி அணைக்கப்பட்டிருக்கிறது. | - ஆர்.எஸ்.ஜெ எல்லா நாட்களை போலவும் அந்த நாளிலும் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையம் பரபரப்பாக இருந்தத. சீனாவின் பெய்ஜிங்குக்கு காலை 6.30 மணிக்கு சென்று சேர வேண்டிய மலேசிய விமானம், 227 பயணிகளை ஏற்றிக் கொண்டு அதிகாலை 12.42 மணிக்கு புறப்பட்டது. விமானப்பாதையில் ஓடி MH370 என்ற அந்த விமானம் வானேறியது. பொழுது விடிந்து 6.... |
https://www.vikatan.com/environment/grow-plants-in-diwali-instead-of-bursting-crackers-says-penang-sangh | "தீபாவளிக்கு வெடிக்கு
பதிலாக செடி!" பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்! | பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் தூசி மற்றும் மாசு அதிகரிக்கின்றன. பட்டாசுகளில் உள்ள சல்பர், துத்தநாகம், தாமிரம், சோடியம் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் நிரம்பிய தூசி மற்றும் மாசு படிந்த காற்று பல பகுதிகளுக்குப் பரவுகின்றன... | தீபாவளி அன்று, தீபங்களின் ஒளி பிரகாசிக்கட்டும் பட்டாசுகளின் சத்தம் குறையட்டும் என்று மலேசியாவில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
''தீபாவளிப் பண்டிகை இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. எந்த நாட்டில் பட்டாசு வெடித்தா... |
https://www.vikatan.com/government-and-politics/tamil-people-returned-after-50-days-from-other-states-and-other-countries | பசி பட்டினி.. தூங்காத இரவுகள்.. 50 நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பிய தமிழர்கள் வேதனை! | “கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த தமிழர்கள் இன்று திருச்சி வந்தடைந்தனர். கடந்த 50 நாட்களாக நாங்கள் பட்ட வலிகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை” எனக் கலங்கினார்கள். | தமிழகத்தில் இருந்து வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக மலேசியா நாட்டில் தங்கி இருந்தவர்கள் கொரோனா விவகாரத்தால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்தியாவுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். ஏற்கனவே திருச்சியில் இருந்து இரண்டு சிறப்பு விமானம் மூலம், மலேசிய நாட்டைச் சேர்ந்... |
https://www.vikatan.com/government-and-politics/coronavirus-mutation-detected-in-malaysia | மலேசியா: `கொரோனா வைரஸின் புதிய திரிபு’ - 10 மடங்கு வேகமாகப் பரவுவதாக எச்சரிக்கை | மலேசியாவில் கொரோனா வைரஸின் திரிபு எனக் கருதப்படும் 'D624G' வகை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. | சீனாவின் வுகான் நகரிலிருந்து கடந்த ஜனவரி மாதம் முதல் பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று மொத்த உலக நாடுகளுக்கும் பரவி மனிதனின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்தக் கொரோனா வகைகளில் பல வைரஸ்கள் இருப்பதாகவும் அது தொடர்ந்து தன் தன்மையை மாற்றிக்கொள்வதால் அதனைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள முடியவில்ல... |
https://www.vikatan.com/literature/arts/148587-2-elderly-women-killed-in-freemeal-stampede-in-malaysia | மலேசியாவிலும் இலவசம்... கூட்ட நெரிசலில் சிக்கி இரு மூதாட்டிகள் பலி! | மலேசியாவிலும் இலவசம்... கூட்ட நெரிசலில் சிக்கி இரு மூதாட்டிகள் பலி! | மலேசியாவில் இலவச உணவுக் கூப்பனை வாங்கத் திரண்ட கூட்டத்தில் சிக்கி இரு மூதாட்டிகள் பலியாகினர்.
சீன புத்தாண்டு 5 மற்றும் 6m தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு கோலாலம்பூரில் அன்றைய தினத்தில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க இலவச உணவுக் கூப்பன்களை விநியோகிப்பதாகத் தனியார் நிறுவனம் அறிவித்திருந்தது. சுமார் 200 உணவுக்... |
https://www.vikatan.com/government-and-politics/130008-we-will-not-send-zakir-naik-to-india-malaysian-pm | ``ஜாகிர் நாயக்கை இந்தியா அனுப்ப முடியாது" - மலேசியப் பிரதமர்! | ``ஜாகிர் நாயக்கை இந்தியா அனுப்ப முடியாது" - மலேசியப் பிரதமர்! | தீவிரவாத நடவடிக்கைகளைத் தூண்டும் வகையில் பேசியதால் இந்தியாவில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து நாடு கடத்த முடியாது என்று மலேசிய பிரதமர் மஹாதிர் முகம்மது கூறியிருக்கிறார்.
தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு, வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சு போன்ற குற்றச்சாட்டுகள் கா... |
https://www.vikatan.com/government-and-politics/judiciary/married-woman-can-t-claim-she-was-cheated-by-a-man-by-breaching-promise-of-marriage | `விவாகரத்து பெறாத பெண், ஓர் ஆண் திருமண வாக்குறுதி தந்து ஏமாற்றியதாக கூற முடியாது’ - உயர்நீதிமன்றம் | `அப்பெண் தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெறவில்லை. ஏற்கெனவே செய்த திருமணம் சட்டப்படி இன்னும் நீடிக்கும்போது, புகாரளிக்கப்பட்ட நபரை அவர் தனக்கு திருமண வாக்குறுதி தந்து ஏமாற்றினார் என்றும், அப்பெண்ணின் குழந்தையை அவர் பராமரிக்க வேண்டும் என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. | திருமணமான பெண் ஒருவர், தன் கணவரை பிரிந்து குழந்தையுடன் வசித்துவந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி வாக்குறுதி அளித்த ஆண், தன்னை ஏமாற்றியதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணையில், ‘ஏற்கெனவே திருமணமாகி அந்த பந்தத்தில் இருந்து சட்டப்படி விவாகரத்து பெறாத பெண், இன்னோர் ஆண் த... |
https://www.vikatan.com/literature/146208-thiruvalluvar-statue-going-to-malaysia | மலேசிய மாநாட்டில் வைக்கப்படும் திருவள்ளுவர் சிலை - வழியனுப்பிவைத்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் | மலேசிய மாநாட்டில் வைக்கப்படும் திருவள்ளுவர் சிலை - வழியனுப்பிவைத்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் | மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ள உலகத் திருக்குறள் மாநாட்டில் வைப்பதற்காக ரூ. 2 லட்சம் மதிப்பில் இரண்டரை அடி உயரம், 920 கிலோ எடை கொண்ட கருங்கல்லால் ஆன திருவள்ளுவர் சிலையை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் மலர் தூவி மரியாதைசெய்ததோடு, மலேசியாவுக்கு வழியனுப்பிவைத்தார்.
மலேசியா தலைநகர... |
https://www.vikatan.com/humour-and-satire/current-affairs/diving-instructor-arrested-for-kissing-chinese-tourist-underwater | கடலுக்கு அடியில் சுற்றுலா பயணியை முத்தமிட்ட டைவிங் பயிற்சியாளர்; கைது செய்து விசாரிக்கும் போலீஸ்! | கோவிட் -19 தொற்றின் தாக்கத்தில் இருந்து சுற்றுலாத்துறை மீண்டு வருகிறது. இந்தச் சமயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் குறிப்பாக செம்போர்னா மாவட்டத்தின் சுற்றுலா பிம்பத்தைப் பெரிதும் பாதிக்கின்றன . | 24 வயது சீன பெண் சுற்றுலா பயணியை, மலேசிய டைவிங் பயிற்சியாளர் கடல் நீருக்கு அடியில் முத்தமிட்டு இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், 27 வயதான ஃப்ரீலான்ஸ் பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மலேசியாவின் செம்பொர்னா (Semporna) மாவட்டத்தில், வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்த இந்தச் சம்பவம் சமூக ... |
https://www.vikatan.com/environment/158529-last-male-sumatran-rhinoceros-of-malaysia-dies | மலேசியாவின் கடைசி ஆண் சுமத்ர காண்டாமிருகம் மரணம்! | மலேசியாவின் கடைசி ஆண் சுமத்ர காண்டாமிருகம் மரணம்! | மலேசியாவில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டுவந்த கடைசி ஆண் சுமத்ர காண்டாமிருகம் மடிந்ததாக அந்நாட்டு வனத்துறை அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். 'தம்' எனப் பெயரிப்பட்டிருந்த இந்த 30 வயது ஆண் 2008-ல் பிடிக்கப்பட்டு போர்னியோ தீவுகளில் இவ்வளவு நாள் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டது. இந்த சுமத்ர காண்டாமிருக இனம் மலேசியா வனங்களில் மொத்தம... |
https://www.vikatan.com/government-and-politics/election/155337-our-duty-is-to-vote-pudukkottai-youth-group-traveled-from-abroad-for-elections | ``லட்சம் செலவானாலும் ஓட்டு போட வந்துடுவோம்!" - வெளிநாட்டில் வேலைபார்க்கும் புதுக்கோட்டை இளைஞர்கள் | "`ஓட்டு போடுவது நமது ஜனநாயகக் கடமை, அதை நாம் செய்யாவிட்டால், அது நம் நாட்டிற்குச் செய்யும் துரோகம்' என்று அத்தா அடிக்கடி சொல்வார். `வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டுவிட்டால், அது நாம் இறந்துபோனதற்குச் சமம்' என்பார்." | தமிழகத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற இலக்கை முன்னிறுத்தித் தேர்தல் ஆணையம், பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. ஆனாலும், தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் குடும்ப வறுமை காரணமாக, வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பால... |
https://www.vikatan.com/technology/jack-dorseys-first-tweet-sold-out-for-29-million-usd | 20 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஜாக் டார்ஸேவின் முதல் ட்வீட்... கல்லாகட்டும் NFT வியாபாரம்! | NFT எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இவை தான் இணைய உலகின் தற்போதைய வைரல். டிஜிட்டலாக உருவாக்கப்படும் புகைப்படம், ஓவியம், GIF, குட்டி வீடியோ என எல்லாமே NFT-க்கள் தான். | கடந்த சில மாதங்களாக இணைய உலகில் திடீரென வரவேற்பைப் பெற்றிருப்பவை நான்-ஃபன்ஜிபிள் டோக்கன் (Non- Fungible Token). NFT எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இவைதான் இணைய உலகின் தற்போதைய வைரல். டிஜிட்டலாக உருவாக்கப்படும் புகைப்படம், ஓவியம், GIF, குட்டி வீடியோ என எல்லாமே NFT-க்கள் தான். பிரபலமான ஓவியர் டிஜிட்டலாக ஓர் ஓவியத்தை வரைகி... |
https://www.vikatan.com/government-and-politics/150136-49-tamilians-who-were-arrested-in-malaysia-were-rescued-with-the-help-of-kanimozhi | கனிமொழி முயற்சியால் மலேசியாவில் தவித்த 49 தமிழர்கள் மீட்பு - கிராம மக்கள் நன்றி | கனிமொழி முயற்சியால் மலேசியாவில் தவித்த 49 தமிழர்கள் மீட்பு - கிராம மக்கள் நன்றி | மலேசியாவில் தவித்த 49 தமிழர்களை மீட்க கனிமொழி எம்.பி மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, அவர்கள் அனைவரும் இந்தியத் தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்டு, நாளை சென்னை விமான நிலையத்துக்கு வர உள்ளனர்.
தி.மு.க-வின் மகளிரணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, கடந்த டிசம்பர் 2-ம் தேதி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ... |
https://www.vikatan.com/government-and-politics/mother-requested-the-government-to-bring-her-sons-dead-body-from-malaysia | ``என் மகனின் உடலைக் கொண்டுவர உதவுங்கள்!" மலேசியாவில் பலியான இன்ஜினீயரின் தாய் கோரிக்கை! | கடந்த 2019 -ம் ஆண்டு மலேசியா சென்றிருக்கிறார். இன்ஜினீயரிங் படித்த கேசவன் மலேசியாவில் கூலித்தொழில் செய்துவந்தார். | வேதாரண்யம் தாலுகா, கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவரின் இரண்டாவது மகன் கேசவன் (வயது 30). இவர் பொறியியல் பட்டதாரி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு சிங்கப்பூர் செல்வதற்காக மதுரை அருகேயுள்ள அருப்புக்கோட்டையில் வசிக்கும் நபரிடம் ரூ.4 லட்சம் கொடுத்து ஏமாந்தார். அதன் பிறகு கடனை அடைப்பதற... |
https://cinema.vikatan.com/hollywood/michelle-yeoh-as-1st-asian-woman-to-win-oscar-for-best-actress | 95 வருட வரலாற்றில் முதன்முறை; சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசியப் பெண் மிச்செல்! | மலேசியாவில் பிறந்த மிச்செல் யோஹ், 95 வருட ஆஸ்கர் வரலாற்றில் முதன்முறையாகச் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் ஆசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மொத்தம் 7 விருதுகளைப் பெற்றுள்ளது இந்தத் திரைப்படம். | அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள டால்பி திரையரங்கில், 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் `எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once)' திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார் மிச்செல் யோஹ் (Michelle Yeoh). 95 ... |
https://www.vikatan.com/government-and-politics/malaysias-response-to-indias-boycott-of-palm-oil-import | "நாங்கள் மிகச் சிறிய நாடு... இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும் திறன் இல்லை!" - மலேசிய பிரதமர் மகாதீர் | இந்தியா மீது நடவடிக்கை எடுக்கும் திறன் தங்கள் நாட்டுக்கு இல்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார். | "நாங்கள் மிகச்சிறிய நாடு, இந்தியா போன்ற பெரிய நாடு மீது நடவடிக்கை எடுக்கும் திறன் எங்களுக்கு இல்லை'' என்று மலேசிய பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக, 'இந்தியாவிலிருந்து இஸ்லாமிய மக்களைப் பிரிக்கும் செயல்' என்று மலேசிய பிரதமர் மகாதீர் கருத்து தெரிவித்திருந்தார்.... |
https://www.vikatan.com/government-and-politics/kulalampur-artist-shaq-koyo-expresses-feelings-of-guilt | மலேசியா: ஆயிரம் குற்ற உணர்வுகள் தாங்கிய நிலம்? - குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் பழங்குடி இளைஞர் | நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த என் வனம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. என் வனம் என் கண்முன்பே மாறிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். | கோலாலம்பூர்: `ஆயிரம் குற்ற உணர்வுகள் தாங்கிய நிலம்’ என்ற இந்தத் தலைப்பு எதைப் பற்றிப் பேசவருகிறது என்று வாசகர்களால் அனுமானிக்க முடிந்தால், மனிதாபிமானம் என்ற ஈரப்பசை அவர்களிடத்தில் இருக்கிறது என்று என் மனம் நம்புகிறது. மலேசியாவின் 18 ஆதிகுடிகளில் தெமுவான் இனக்குழுவைச் சேர்ந்த ஓவியரான ஷாக் கோயோக்கை சந்தித்துப் பேசியதிலிர... |
https://www.vikatan.com/agriculture/policy/if-you-hoard-rice-strict-action-do-you-know-which-country | `அரிசி பதுக்கினால் கடுமையான நடவடிக்கை!’ எந்த நாட்டில் தெரியுமா? | அரிசி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் இந்தியா போன்ற நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பிற நாடுகளை நம்பி இருக்கும் மலேசியா போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. | மலேசியாவின் அரிசி தேவையில் ஏறக்குறைய 38 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், அரிசி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் இந்தியா போன்ற நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பிற நாடுகளை நம்பி இருக்கும் மலேசியா போன்ற நாடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. எனவே, அங்கு அரிசி பற்றாக்குறை மற்றும் அரிசி விலை ... |
https://www.vikatan.com/government-and-politics/protest/malaysia-shoe-protest-for-myanmar-refugees | மலேசியா: மியான்மர் அகதிகளுக்காகக் காலணிகள் கொண்டு அறப்போராட்டம் - என்ன நடக்கிறது? | முகம் தெரியாத அகதிகளுக்காக 1,086 காலணிகளை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு ஜோடி காலணியும் ஒவ்வொரு அகதிகளுக்கானது என்ற அடிப்படையில் 1,086 காலணிகள்கொண்ட போராட்டம் அமைதியான முறையில் செய்யப்பட்டது. | மலேசியா: நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த 1,200 மியான்மர் அகதிகளில் 1,086 அகதிகளைத் திரும்ப மியான்மர் நாட்டுக்கே நாடு கடத்திய விவகாரத்தில், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றன, மனித உரிமை சார்ந்த சில தன்னார்வ அமைப்புகள்.
மியான்மர் உள்நாட்டு அரசியலின் உட்பூசல் காரணமாக அங்கு போராட்டம் வெடித்திருக்கும் வேளையில், மக்கள் ... |
https://www.vikatan.com/crime/man-gets-702-years-in-jail-234-lashes-for-raping-daughters-in-malaysia | 702 ஆண்டுகள் சிறை, 234 பிரம்படிகள்; மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - நீதிமன்றம் அதிரடி | மலேசியாவில் தன்னுடைய மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 702 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. | மலேசியாவில் தன்னுடைய மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 702 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திலுள்ள மூவார் குடியிருப்பில் வசித்து வந்த 58 வயது நபர், தன்னுடைய 15 மற்றும் 12 வயது மகள்களை, 2018 முதல் 2023 (ஜூலை) வரை சுமார் 30 முறை பாலியல் வன்கொடுமை செய்திரு... |
https://www.vikatan.com/government-and-politics/malaysian-woman-has-accidentally-send-her-first-month-salary-to-stranger | "தானமாக கொடுத்ததா நெனச்சுக்கோங்க"- முதல்மாத சம்பளத்தை பறிகொடுத்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சியளித்த நபர் | தன்னுடைய முதல்மாத சம்பளத்தை அம்மாவுக்கு அனுப்ப முயன்று, தவறுதலாக வேறு யாருக்கோ அனுப்பிவிட்ட இளம்பெண் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார். | மலேசியாவைச் சேர்ந்த ஃபஹதா பிஸ்தாரி (Fahada Bistari) என்ற இளம்பெண், தான் வாங்கிய முதல்மாத சம்பளத்தை, ஆசை ஆசையாய் தன்னுடைய அம்மாவுக்கு ஆன்லைனில் அனுப்பியிருக்கிறார்.
ஆனால், எதிர்பாரதமாக அந்தப் பணம் வேறு யாரோ ஒருவருக்கு சென்றுவிட்டது. பணத்தைப் பெற்றவரும் அதை திருப்பித்தராமல், ``தானமாகக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்!"... |
https://cinema.vikatan.com/kollywood/vishnu-vishals-fir-movie-banned-in-selected-countries | விஷ்ணு விஷாலின் `FIR' படத்திற்கு சில நாடுகளில் தடையா? பின்னணி என்ன? | இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்து, நடித்திருக்கிறார். இப்படம் 22 கோடிக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது என்கிறார்கள். | விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்.' படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் 'இப்படம் மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது' எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. விஷ்ணுவும், தனது ட்விட்டர் பக்கத்தில் 'மலேசிய, குவைத் ஆடியன்ஸ் மன்னிக்கவும்' என ட்வீட்டியிருக்கிறார். படத்தை புரோமோட் செய்யும் பொருட்டு ட்விட்டரில்... |
https://www.vikatan.com/government-and-politics/magnitude-earthquake-strikes-indonesia-island-philippines-malaysia | மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா-வில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! - பீதியில் மக்கள் | மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் அதிர்ந்ததால் மக்கள் வீட்டைவிட்டு பதற்றத்துடன் வெளியேறியதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. | இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கப் புவியியல் ஆய்வகம், "இந்தோனேசியா சுமத்ரா தீவின் மேற்கே 167 கி.மீ தொலைவில் இன்று அதிகாலை 4:06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 6.7 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சுமத்ரா மாகாணத்தின் தலைநகரான படாங்கிலிருந்த... |
https://www.vikatan.com/government-and-politics/150090-kanimozhi-take-action-to-release-49-people-who-trapped-in-malaysia | கனிமொழியின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி! - 49 தமிழர்களை மீட்ட சுஷ்மா ஸ்வராஜ் | கனிமொழியின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி! - 49 தமிழர்களை மீட்ட சுஷ்மா ஸ்வராஜ் | தி.மு.க-வின் மகளிரணிச் செயலாளரான கனிமொழி கடந்த வருடம் டிசம்பர் மாதம் நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது தலைவன் கோட்டையைச் சேர்ந்த பெண்கள் கனிமொழியைச் சந்தித்து கோரிக்கை ஒன்று முன் வைத்தனர்.
`மலேசியாவில் மின்சார டவர் அமைக்கும் பணிக்காக எங்கள் ஊரைச் சேர்ந்த 49 பேர் சென்ற... |
https://www.vikatan.com/government-and-politics/anwar-sworn-in-as-malaysias-pm-after-25-year-struggle-for-reform | 25 ஆண்டுகாலப் போராட்டம்... மலேசியாவின் பிரதமரான அன்வர் இப்ராஹிம் - சுவாரஸ்யப் பின்னணி! | தேர்தல் முடிவுகள் வெளியாகி எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் திடீர் திருப்பமாக அன்வர் இப்ராஹிம் பிரதமாகியிருக்கிறார். | மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகின. இருப்பினும் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அன்வர் இப்ராஹிம் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி, முகைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி, இடைக்கால பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் சார்ந... |
https://www.vikatan.com/health/new-covid-19-strain-d614g-detected-in-malaysia-named-sivaganga-strain | மலேசியாவில் வேகமெடுக்கும்
`சிவகங்கா தொற்று!’ - தமிழகத்தில் தாக்கம் இருக்குமா..? | மலேசியாவில் கொரோனா தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், `கொரோனா வைரஸின் திரிபு’ எனக் கருதப்படும்` D614G’ வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கொரோனாவைவிட பத்து மடங்கு வேகமாகப் பரவக்கூடியது. | மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் துரிதமாகச் செயல்பட்டுவரும் மலேசியா, சமீபத்தில்தான் `மலேசியாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது’ என்று அறிவித்திருந்தது. பொதுமக்கள் மெள்ள மெள்ளத் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருந்த நிலையில்தான், அங்கு ஒரு புதிய பிரச்னை புகையத் தொடங்கியுள்ளது.
சமீபத... |
https://cinema.vikatan.com/news-about-the-incidents-happened-in-leonis-malaysia-event | லியோனி: நிகழ்ச்சிக்குத் தாமதம்; ரசிகர்கள் வாக்குவாதம்; மலேசியாவில் நடந்தது என்ன? | அரங்கத்துக்கு வந்த லியோனி டீமுடன் மிச்சமிருந்த பார்வையாளர்கள்ல சிலர் கடுமையா வாக்குவாதம் செய்ததும் நடந்தது என்கிறார்கள். | பட்டிமன்றம் நடத்துவதற்காக மலேசியா சென்ற லியோனி தலைமையிலான டீம் அங்கு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கவில்லையென்றும், இதனால் நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்த பார்வையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடையே கடும் வாக்குவாதம் லியோனி முன்னிலையிலேயே நடந்ததென்றும், ஒருகட்டத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்க... |
https://www.vikatan.com/environment/disasters/earthquake-hits-in-karnataka-malaysia-and-afghanistan | ஆப்கனைத் தொடர்ந்து மலேசியா, கர்நாடகாவிலும் நிலநடுக்கம்! | இந்தியா, மலேசியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது.
| இந்தியா, மலேசியா, ஆப்கானிஸ்தான் போன்ற உலகின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுவருகிறது.கர்நாடகா:இந்தியாவில் கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது சுற்றி 50 கி.மீ தொலைவுக்கு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாலையில் ஏற்பட்ட நி... |
https://www.vikatan.com/government-and-politics/126597-tabung-harapan-malaysia-has-collected-over-rm186mil-just-two-days | 48 மணி நேரத்தில் 4.68 மில்லியன் டாலர் வசூல்... கடன் சுமையைக் குறைக்க மலேசியா அரசு பலே ஐடியா! | 48 மணி நேரத்தில் 4.68 மில்லியன் டாலர் வசூல்... கடன் சுமையைக் குறைக்க மலேசியா அரசு பலே ஐடியா! | புதிய அரசு, நல்ல விடியலுக்கான நம்பிக்கை, ஊழலை வேரறுத்த திருப்தி... என மலேசியாவின் சந்தோஷத் தருணங்களில் மற்றுமோர் இலக்கை நிர்ணயித்திருக்கிறார் புதிய நிதி அமைச்சர் லிம் குவான் எங். மே-9 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று பதவியேற்றிருக்கும் புதிய அரசு, மலேசியச் சீரமைப்புப் பணியில் வேகம் காட்டிவருகிறது.
ஒரு ச... |
https://www.vikatan.com/government-and-politics/coronavirus-malaysian-prime-minister-declares-targeted-lockdowns | கொரோனா அச்சுறுத்தல் - மலேசியாவில் ஆகஸ்ட் 1 வரை அவசரநிலை பிரகடனம்! | மலேசியா நாட்டின் மன்னர், 50 வருடங்களுக்குப் பிறகு நாடு தழுவிய அவசரகால நிலையை (State of Emergency) அறிவித்திருக்கிறார். இது ஆக்ஸ்ட் 1-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பதால், மலேசிய நாடாளுமன்றக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படும். | கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திவரும் இந்த வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறுகட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வரப்படுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்... |
https://www.vikatan.com/government-and-politics/157717-muhammad-idrees-passed-away | இயற்கையில் கலந்த முகமது இத்ரீஸ்! | இயற்கையில் கலந்த முகமது இத்ரீஸ்! | மலேசியா நாட்டில் உள்ள ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின்’ (Consumers Association of Penang) தலைவர் எம்.எஸ். முகமது இத்ரீஸ் (93) இன்று இயற்கையுடன் கலந்தார். மலேசியா நுகர்வோர் உரிமை, சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம்... குறித்த விழிப்புணர்வு பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வந்தார்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ப... |
https://www.vikatan.com/government-and-politics/my-skills-foundation-helping-children-in-malaysia | இருளிலிருந்து வெளிச்சத்துக்கு… மலேசியத் தமிழ் இளைஞர்களின் நம்பிக்கையான தோழமை | இவர்கள் | பகுதி 24 | ``மலேசியாவின் My Skills Foundation எனும் தொண்டு நிறுவனத்தின் பணிகள் சமூக சீர்த்திருத்தத்துக்கு வித்திடும் அரும்பணிகளாகும்.’’ | இனிமையான குழந்தைப் பருவமும், பெற்றோரின் அரவணைப்பும், அவர்கள் ஏற்படுத்தித்தரும் வாய்ப்புகளும் அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. மகிழ்ச்சியற்ற குழந்தைப் பருவமென்பது ஆகப்பெரும் துயரம். களிப்பும் கொண்டாட்டமும் சூழ்ந்து வாழவேண்டிய வயதில், வறுமையும் அவமானங்களும் துரத்த வாழ்கிற குழந்தைகள் எல்லாவற்றையும் கண்டு அச்சப்படுகிற... |
https://www.vikatan.com/trending/viral/boys-6-and-3-crash-parents-vehicle-while-driving-to-buy-a-toy-car | "அப்பா தூங்கிக்கிட்டு இருந்தார்" - பொம்மை கார் வாங்க உண்மையான காரை எடுத்துச் சென்ற 6 வயது சிறுவன்! | மலேசியாவைச் சேர்ந்த சிறுவன் பொம்மை கார் வாங்க உண்மையான காரை எடுத்துச் சென்று விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. | மலேசியாவின், லங்கா தீவில் ஒரு கார் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து, காரில் இருந்தவர்களை அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டிருக்கின்றனர். அப்போதுதான் அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்திருக்கிறது. அந்த காரை ஓட்டிவந்தது 6 வயது மதிக்கத்தக்க சிறுவன். அவனிடம் விசாரித்ததில், "எங்கள் வீடு அருகில்தா... |
https://www.vikatan.com/government-and-politics/malaysia-man-went-to-lodge-complaint-police-answer-confused-him | `நீங்கள்தான் இறந்துவிட்டீர்களே...' - புகார் அளிக்கச் சென்ற முதியவருக்கு போலீஸ் சொன்ன அதிர்ச்சி பதில் | ``தன்னுடைய நிலப்பத்திரத்தைத் தேடியபோது, அதைக் காணவில்லை. இதனால் அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.” | மலேசியாவைச் சேர்ந்த லோ சூ சூன் (Low Choo Choon) (72) இறுதி ஊர்வல வாகன ஓட்டுநராகப் பணியாற்றிவந்திருக்கிறார். இறுதிக் காலத்தில் தானும், தன் மனைவியும் உயிரிழந்தால் அடக்கம் செய்வதற்காகச் சிறிது நிலத்தையும் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக அந்த நிலத்தை விற்க லோ சூ சூன் முடிவுசெய்திருக்கிறார். அதற்கா... |
https://www.vikatan.com/literature/arts/why-naveens-peichi-novel-is-banned-in-malaysia | புலம்பெயர் தமிழர்களின் வாழ்வைப் பேசும் `பேய்ச்சி' நாவல்... மலேசியாவில் தடை செய்யப்பட்டது ஏன்? | தமிழக எழுத்தாளர்கள் பேய்ச்சி நாவலுக்கு எதிரான தடையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும் இந்தத் தடையைக் கண்டித்துள்ளது. | இந்தப் புரட்சிக்குரல், சாதியக் கட்டுமானம் இல்லாத இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கு எதிரானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அந்த நூல் அவர்களால் தடைசெய்யப்பட்டது. காரணம், அந்த நூலை மொழிபெயர்த்து, அதுகுறித்து அரசுக்கு அறிக்கை அளித்தவர்கள் அந்த நூலின் கருத்துகளை ஏற்காதவர்களாக இருந்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் அந்த நூல் தடை... |
https://www.vikatan.com/government-and-politics/130198-islamic-preacher-zakir-naik-meets-with-malasian-pm-mahathir-mohamad | இந்திய அரசால் தேடப்படும் மதபோதகர் ஜாகீர் நாயக், மலேசிய பிரதமருடன் சந்திப்பு! | இந்திய அரசால் தேடப்படும் மதபோதகர் ஜாகீர் நாயக், மலேசிய பிரதமருடன் சந்திப்பு! | இந்திய அரசால் தேடப்பட்டுவரும் மதபோதகர் ஜாகீர் நாயக், மலேசிய பிரதமர் மஹதீர் முகம்மதை சந்தித்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக் மீது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல் மற்றும் தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் அளித்தல் ஆகிய குற்றசாட்டுகள்... |
https://www.vikatan.com/government-and-politics/malaysia-human-resources-minister-saravanan-press-meet-at-ramanathapuram | ``தமிழர்களைப் பாதுகாக்க தனி செயலி; 15,000 புகார்கள்மீது நடவடிக்கை!" - மலேசியா மனிதவள அமைச்சர் தகவல் | மலேசியாவுக்கு வேலைக்கு வரும் தமிழர்களைப் பாதுகாக்க தனி செயலி உருவாக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டின் மனித வளத்துறை அமைச்சர் சரவணன் தெரிவித்தார். | மலேசியா நாட்டின் மனிதவள அமைச்சராக இருப்பவர் டத்தோ. ஸ்ரீ.எம்.சரவணன். இவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மலேசியாவில் சென்று பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் சார்பில் ராமநாதபுரத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மலேசிய அமைச்சருக்கு மாலை, பொன்னாடைகள் அணிவித்து மலேசியாவ... |
https://www.vikatan.com/lifestyle/travel/singapore-malaysia-australia-hongkong-travel-expeience | ஆஸ்திரேலியா, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் மலேஷியா| கிராமத்தானின் பயணம் - 24 | இறகுப் பந்தாட்டம் ஆடலாம் என்று ஆரம்பித்த பத்து நிமிடத்தில், ஓர் உத்வேகத்தில் எம்பி அடிக்க முயல, முட்டியில் ஏதோ ஒரு வித்தியாசமான சத்தம். எனக்கு ஒன்று நன்றாக உணரமுடிந்தது, இது ஏதோ பெரிய பிரச்னை என்று. | (இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள 'drop down' மூலம் பாகம் 1-23 படிக்காதவர்கள் படிக்கலாம்.)இந்த தொடர் எழுத ஆரம்பிக்கும்போது 5 - 6 வாரம் வரை தாக்கு பிடிக்கும் என்று நினைத்தேன். எதிர்பார்த்ததை விட 20 வாரத்திற்கு மேல் தாண்டி வந்தாகிவிட்டது. மறக்கவே முடியாத நான் பிறந்த வரக்கால்பட்டை பற்றி சொல்லிவிட்டேன். எனக்கு மிகவ... |
https://www.vikatan.com/environment/the-last-rhino-of-the-sumatran-rhinoceros-died-in-malaysia | `இந்த இனம் தப்பிப் பிழைப்பதே அரிதாக உள்ளது!'- மலேசியாவின் கடைசி சுமத்ரன் காண்டாமிருகமும் உயிரிழந்தது | மலேசியாவில் `சுமத்ரன்' வகை காண்டாமிருக இனத்தில் எஞ்சி இருந்த இமான் என்ற பெண் காண்டாமிருகம் நேற்று புற்றுநோயால் உயிரிழந்தது. | நமது நகம் மற்றும் முடிகளில் உள்ள அதே `கெரட்டின்' தான் காண்டாமிருகங்களின் கொம்புகளிலும் உள்ளது. ஆனால், மருத்துவப் பயன் என்ற மூடத்தனத்தால் உலகம் முழுக்க ஈவுஇரக்கமின்றி காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டு கள்ளச் சந்தைகளில் கொம்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
காண்டாமிருக இனங்களில் மிகச் சிறியதான சுமத்ரன் காண்டாமிருகங்... |
https://www.vikatan.com/crime/malaysia-women-booked-in-attempt-murder-case-at-theni | ஃபேஸ்புக் காதல்; திசைமாறிய திடீர் சந்திப்பு! - தேனி காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய மலேசியப் பெண் | இதுநாள் வரையில் அமுதேஸ்வரியை முகநூலில் மட்டுமே பார்த்து வந்த அசோக், நேரில் அவரைப் பார்த்ததும், `நீ குண்டாக இருக்கிறாய். அழகாக இல்லை' எனக் கூறியுள்ளார். | ஃபேஸ்புக் வழியாக மலேசியப் பெண்ணைக் காதலித்த தேனி இளைஞரைக் கொலை செய்ய வந்த கூலிப்படையினர் 9 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி நேரு என்பவரின் மகன் அசோக்குமார் (வயது 28). ஐ.டி துறையில் வேலைபார்த்து வருகிறார். இவர், முகநூல் வழியாக மலேசியாவைச் சேர்ந்த அமுதேஸ்வரி என்ற பெண்... |
https://www.vikatan.com/environment/158549-if-you-ship-to-malaysia-we-will-return-it-back-without-mercy | `3000 டன் பிளாஸ்டிக் குப்பை; இனியும் கருணையை எதிர்பார்க்காதீர்கள்!'- வளர்ந்த நாடுகளை எச்சரிக்கும் மலேசியா | `3000 டன் பிளாஸ்டிக் குப்பை; இனியும் கருணையை எதிர்பார்க்காதீர்கள்!'- வளர்ந்த நாடுகளை எச்சரிக்கும் மலேசியா | வளர்ந்த நாடுகளின் குப்பைத் தொட்டியா நாங்கள்... இந்தப் பக்கம் உங்கள் கண்டெய்னர்கள் வந்தால் கப்பலுடன் அவை திருப்பி அனுப்பப்படும் என மலேசியா அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகநாடுகளின் குப்பைகளை இறக்குமதி செய்து அதில் வர்த்தகத்தைப் பெருக்கி வந்த சீனா இனி நாங்கள் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்வது இல்லை என்று திடீ... |
https://www.vikatan.com/government-and-politics/we-need-to-be-frank-malaysia-pm-on-india-palm-oil-curbs | `தடைவிதித்தாலும், தவறு செய்தால் உரக்கச் சொல்லுவோம்’ - மலேசியா, இந்தியா இடையே மூளும் பனிப்போர் | இந்தியாவில் நடக்கும் விஷயங்கள் பற்றி மலேசியப் பிரதமர் மகாதீர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதால் அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது இந்திய அரசு. | மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வார்த்தை ரீதியிலான மனக் கசப்பு, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் எதிரொலித்துள்ளது. சமீபகாலமாக இந்தியாவில் நடந்த காஷ்மீர் விவகாரம், குடியுரிமைப் பிரச்னை போன்ற அனைத்து விவகாரங்களிலும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தன் கருத்தை தெரிவித்துவந்தார்.
முன்னதாக காஷ்மீர்... |
https://www.vikatan.com/health/137859-actor-munishkanths-fitness-secret | மனசையும் உடம்பையும் ஃபிட்டா வச்சுக்க குத்துவரிசை கத்துக்கிறேன்! - முனிஸ்காந்த் | மனசையும் உடம்பையும் ஃபிட்டா வச்சுக்க குத்துவரிசை கத்துக்கிறேன்! - முனிஸ்காந்த் | தமிழ் சினிமாவில் `ஈசா’ படத்தின் மூலம் அறிமுகமாயிருந்தாலும் `முண்டாசுப்பட்டி’ படம்தான் முனிஸ்காந்துக்கு வெளிச்சம் தந்தது. `ஜிகர்தண்டா’, `இன்று நேற்று நாளை’, `மாப்பிளை சிங்கம்’, `மாநகரம்’, `மரகதநாணயம்’, `வேலைக்காரன்’ என அதன்பின் அவரின் வெற்றிப்பயணம் தொடர்கிறது. தற்போது `சண்டக்கோழி 2’, `விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருக... |
https://www.vikatan.com/science/126844-mh370-flight-hunt-is-now-officially-ended | `1549 நாள்கள் தேடியாச்சு... இனிமே முடியாது!' - முடிவுக்கு வந்த MH370 தேடல் | '35,000 அடியில் பறந்து கொண்டிருக்கிறோம் என தொடர்ந்து இரண்டு முறை விமானத்தில் இருந்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு பதில் வர, அவர்கள் மறுமுனையில் விமானத்தை தொடர்புகொள்ள பதில் ஏதும் வரவில்லை. தரை கட்டுப்பாட்டில் இருந்த அதிகாரிகள் ``நீங்கள் தற்போது வியட்நாம் நாட்டின் எல்லைக்குள் நுழைந்திருப்பதால் உடனே ஹோ சி மின் நகரத்தை... | மார்ச் 8, 2014 சனிக்கிழமை அதிகாலை 12.40 மணிக்கு விமானம் ஒன்று கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பெய்ஜிங்குக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தது. முதன்மை பைலட் ஜஹாரி அஹ்மத் ஷாவும், துணை பைலட் ஃபாரிக் அப்துல் அமிதும் தயாராக இருந்தனர். வழக்கம் போல் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து அறிவிப்பு வர ``குட் மார்னிங் ATC (AIR TR... |
https://www.vikatan.com/government-and-politics/hindu-sangam-opposes-periyar-picture-in-tamil-subjecs-in-malaysia-schools | மலேசியா: `பாடப் புத்தகத்தில் பெரியார் படம் இருக்கக் கூடாது` - இந்து சங்கத்தின் எதிர்ப்பால் சர்ச்சை! | தைப்பொங்கல் இந்து மதத்தவர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையல்ல. முஸ்லிம் தமிழர்களும், கிறிஸ்தவத் தமிழர்களும் கொண்டாடும் உழவர் திருநாள். | மலேசிய இந்து சங்கம், அங்கிருக்கும் தமிழ்ப் பள்ளிகளில் திராவிடக் கொள்கையைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று, பத்திரிக்கைச் செய்தியை வெளியிட்டதைத் தொடர்ந்து அங்கு வாழும் தமிழர்களில் ஒரு பகுதியினரிடையே சர்ச்சை வெடித்திருக்கிறது.கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அது தொடர்பான அறிக்கையை மலேசிய இந்து சங்கம், அதிகாரபூர்வமாக ம... |
https://www.vikatan.com/spiritual/temples/ooty-lord-murugan-temple-a-place-where-you-can-worship-palani-and-malaysia-murugan | உதகையிலும் அருள்பாலிக்கும் பழநி மலை தண்டாயுதபாணியும் மலேசிய பத்துமலை முருகனும்... எங்கே தெரியுமா? | ஊட்டிக்கு சுற்றுலா வரும் வெளியூர் மக்களும் இம்முருகப்பெருமானின் அருமை பெருமைகளை அறிந்து இத்தலத்திற்கு வந்து ஆர்வமுடன் வழிபாடு செய்கின்றனர் என்கிறார்கள் உள்ளூர் வாசிகள். | ஊட்டியில் வாழ்ந்த முருக பக்தர்கள் இருவர் ஆண்டுதோறும் பழநி சென்று முருகப்பெருமானை மனமுருக தரிசனம் செய்து வருவது வழக்கம். வயது மூப்பின் காரணமாக ஓராண்டு செல்வது தடைபட்டுப் போனது. எனவே, முருகப்பெருமான் பக்தர்கள் கனவில் தோன்றி, ஊட்டி நகரில் உள்ள எல்க்ஹில் குன்றிலேயே உறைவதாகவும், இங்கேயே வழிபடுமாறும் அருள் பாலித்தார்.முருகப்... |
https://www.vikatan.com/government-and-politics/indonesias-ban-on-palm-oil-will-impact-on-india | Indonesia: எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை; இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது?! | எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா விதித்திருக்கும் தடை இந்தியாவில் உணவு பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமாக அமையும். | இந்தியாவில் ஏற்கெனவே எரிபொருள் விற்பனை விலை, கோடைகால வெயிலைவிட அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இப்போது அடுத்த அதிர்ச்சி இந்தோனேஷியாவின் அறிவிப்பால் வந்துள்ளது. அந்நாட்டில் அதிகரித்து வருகிற பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அனைத்து வகையான எண்ணெய் ஏற்றுமதிகளையும் தடை செய்திருக்கிறது இந்தோனேஷியா அரசு. இந்தோனேஷியா பாம் ஆயில் உற்பத்... |
https://www.vikatan.com/business/palm-oil-imports-from-malaysia-begins | மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி தொடங்கியதால் உள்நாட்டு உற்பத்திக்கு பாதிப்பா? | நல்லெண்ணெய், கடலெண்ணெய் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பாமாயில்தான் சாய்ஸ். எனவே, இறக்குமதியைக் கைவிட முடியாத சூழல். | இந்தியாவுக்கு மலேசியா, இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு பாமாயில் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. மேலும், கடந்த ஜனவரியில் குடியுரிமைச்சட்டம், காஷ்மீர் பிரச்னை தொடர்பாக மலேசிய அரசு தெரிவித்த கருத்த... |
https://www.vikatan.com/literature/arts/102894-mystery-stories-of-missing-flights | காணாமல் போன விமானங்கள்: விடை தெரியாத மர்மங்கள்! | 1948, ஜனவரி 30-ம் தேதி இரண்டாம் உலகப்போரில் வீர தீரச் செயல்கள் புரிந்த ஏர் மார்ஷல் ஆர்தர் கோணிங்கம் பயணம் செய்த ஸ்டார் டைகர் விமானம் 6 பணியாளர்கள் மற்றும் 25 பயணிகளுடன் பெர்முடா தீவில் இருந்து கிளம்பிய நேரத்தில் இருந்து இதுவரை தரை இறங்கவில்லை. | 'இருட்டில் தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடாதே' என்பார்கள். சர்வதேச நாடுகள் பலவும் இருட்டில் தொலைத்த விமானங்களை வெளிச்சம் இருக்கிறது என்கிற காரணத்தால் வேறு ஒரு இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற ரீதியில் 24 மணி நேரக் கண்காணிப்பிலேயே இருந்த விமானங்கள் பலவும் தொலைந்து போய் இன்ற... |
https://www.vikatan.com/government-and-politics/12-tamils-arrested-in-malaysia-over-alleged-links-to-ltte | விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம்... மலேசியாவில் 12 தமிழர்கள் கைது... தொடரும் உறவினர்கள் போராட்டம்! | மலேசியாவில், விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரூட்டும் வகையில் ஓர் இயக்கம் செயல்பட்டுவருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த இயக்கம் கிளைகளைக் கொண்டுள்ளது. | மலேசியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக, சோஸ்மா சட்டத்தின் கீழ் 12 தமிழர்கள் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில், காடேக் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினருமான சாமிநாதன், நெகிரி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகிய இருவரும் அடக்கம்.
இந்தக் கைதுகுறித்து, மலே... |
https://www.vikatan.com/government-and-politics/muhyiddin-yassin-takes-oath-as-malaysia-prime-minister | `கூட்டணியில் மோதல்; யாருக்கும் இல்லாமல் போன பதவி!’ - மலேசியாவின் பிரதமராக முஹைதீன் யாசின் நியமனம் | மலேசியாவில் ஆளும் கூட்டணிக் கட்சியில் விரிசல் ஏற்பட்டதால் பிரதமர் பதவியை எதிர்க்கட்சியைச் சேர்ந்த முஹைதீன் யாசினுக்கு வழங்கியுள்ளார் அந்நாட்டு மன்னர். | மலேசியாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மகாதீர் முகமது தலைமையிலான மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும் அன்வர் இம்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதிக் கட்சியும் பிற சிறிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி வைத்துத் தேர்தலை எதிர்கொண்டன. அந்தத் தேர்தலில் இரு கட்சியினரும் தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளனர். அதன்படி ... |
https://www.vikatan.com/government-and-politics/12-killed-in-landslide-near-malaysias-kuala-lumpur-more-than-20-missing | மலேசியா: நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டவர்கள் மாயம்... தொடரும் மீட்புப்பணி! | மலேசியாவில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. | மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியிலுள்ள சிலாங்கூர் மாநிலத்தில், அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சாலையோரத்தில் இருந்த பண்ணை வீடு உட்பட பல கட்டடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தேசியப் பேரிடர் மேலாண்மை முகமையின் சமூக ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, நிலச்சரிவில் சிக்கி 90-க்கு... |
https://www.vikatan.com/literature/arts/125344-malaysia-scrapping-gst-from-june | மலேசியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ஒழிப்பு! | மலேசியாவில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. | மலேசியாவில் புதிய பிரதமராக மகாதீர் பதவியேற்றுள்ளார். தேர்தல் பரப்புரையின்போது, தான் பதவிக்கு வந்தால் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்வதாக மகாதீர் வாக்குறுதி அளித்திருந்தார். ஜி.எஸ்.டி வரிக்குப் பதிலாக மீண்டும் விற்பனை மற்றும் சேவை வரியைக் கொண்டு வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
சமீபத்தில் தேர்தலில் தோல்வியடைந்த நஜீப் ரஸாக்கி... |
https://www.vikatan.com/government-and-politics/what-is-the-reason-behind-malaysia-environment-activists-protests | "10 ஆண்டுகளில் இருண்ட உலகத்தையே மனிதகுலம் சந்திக்கும்!"- மலேசியாவில் போராட்டம் | இயற்கை வளங்களை அழிக்கும் நடவடிக்கையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் இடது சாரி அமைப்புகளும் மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்புகளும் தங்களின் கண்டனத்தை அரசுக்குத் தெரிவித்து வருகின்றன. | மாறி வரும் பருவநிலை மாற்றத்தில், நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் தீவிர நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் அடுத்த 10 ஆண்டுகளில், நாம் தற்போது எதிர்கொள்ளும் வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் உள்ளிட்ட பேரழிவுகள் இன்னும் மோசமான நிலையை எட்டும் என எடுத்துரைக்கும் போராட்டம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
"தற்போதைய இயற... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.