| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_09", | |
| "heading": "வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்", | |
| "sub_heading": "இலக்கிய மூலாதாரங்கள்", | |
| "text": "இலங்கை வரலாற்றை அறியக்கூடிய இலக்கிய மூலாதாரங்களை உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள், வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள் என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே இலங்கையர் காலத்துக்குக் காலம் எழுதிய கவிதைகளும் உரைநடைகளும் உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களாகக் கருதப்படுகின்றன.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 9, | |
| "source_file": "Grade_10_History_Chapter_01", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-27T19:07:48.468900", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 302, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T10:09:49.135587" | |
| } |