| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_40", | |
| "heading": "வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும்", | |
| "sub_heading": "6.2. சட்டமும் பாரம்பரியங்களும்", | |
| "text": "மிருகங்களை எவரும் கொல்லக்கூடாதென முதன் முதல் சட்டம் இயற்றியவன் ஆமண்டகாமினி அபய மன்னனாவான். (கி.பி.19 29) அது படுகொலை சட்டம் எனப்பட்டது. எருமை, பசு, ஆடு என்பவற்றைக் கொல்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நான்காம் மகிந்த மன்னனால் (கி.பி. 956 - 972) நிறுவப்பட்ட மிகிந்தலை சுவர்க் கல்வெட்டில் காணப்படுகிறது. நீர் நிலைகளில் வாழும் பறவைகளைக் கொல்லக் கூடாதென நிசங்கமல்ல மன்னனால் (கி.பி.1187 - 1196) சட்டம் விதிக்கப்பட்டது.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 40, | |
| "source_file": "Grade_10_History_Chapter_06", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-26T18:57:36.982783", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 418, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-27T14:45:04.386983" | |
| } |