| { | |
| "chunk_id": "ta_edu_Grade10His_35", | |
| "heading": "கண்டி இராச்சியம்", | |
| "sub_heading": "II ஆம் விமலதர்மசூரிய மன்னன் (கி.பி.1687-1707)", | |
| "text": "II ஆம் இராஜசிங்கனின் மரணத்தின் பின்னர் அவனது மகனான II ஆம் விமலதர்மசூரியன் மன்னனானான். இவன் தந்தையைப்போல ஆற்றல் வாய்ந்தவனாக இருக்கவில்லை. இதனால் கண்டி இராச்சியப்பிரதானிகள் இக்காலத்தில் தமது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொண்டனர். இவன் மன்னனான பின்னர் ஒல்லாந்தருடன் சமாதானமாக நடந்துகொண்டான்.", | |
| "language": "ta", | |
| "category": "education", | |
| "source": "gov_textbook", | |
| "chunk_index": 35, | |
| "source_file": "Grade_10_History_Chapter_08", | |
| "overlap_reference": "", | |
| "created_at": "2026-02-27T20:04:07.413208", | |
| "created_by": "chunker", | |
| "text_length": 286, | |
| "status": "approved", | |
| "approved_at": "2026-02-28T17:27:22.140170" | |
| } |