text
stringlengths
0
4.01k
தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பதிராஜவெல என்னும் பிரதேசத்தில் நில மட்டத்திலிருந்து 45 அடி ஆழத்தில் காணப்படும் இரணைமடுப் படிவுக்குரிய சரளைகற்படிவில் கற்காலத்திற்குரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விஞ்ஞானப் பகுப்பாய்வு மூலம் காலத்தைக் கணிப்பிடும்போது அது 125 000 ஆண்டுகள் பழைமையானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பூந்தல வெல்லே கங்கொட எனும் பிரதேசத்தில் நில மட்டத்திலிருந்து 24 அடி ஆழத்தில் புதைந்திருந்த கல்லாயுதங்களுடன் கூடிய சரளைக் கற்படிவு 80 000 வருடங்களுக்கு முற்பட்டதாகும். அண்ணளவாக 125000 ஆண்டு களுக்கு முன்பிலிருந்து கி.மு. 1800 வரையில் இக்கற்காலம் தொடர்ந்து நிலவியுள்ளது.
2.1.3 குடியிருப்புகளின் அடிப்படை இயல்புகள்
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்டகாலக் குடியிருப்புகள் நாட்டில் காணப்பட்ட ஒன்றுக்கொன்று வேறுபட்ட சூழலுக்கு அமையப் பரவலடைந்தன. உணவைப் பெறக்கூடிய இயற்கை வளங்கள் ஏராளமாகக் கிடைக்கும் பிரதேசங்களில் வாழ்வதையே மக்கள் பெரும்பாலும் விரும்பினர்.
தாழ்நில மழைக் காடுகள், வில்லுப் புல்நிலம், உலர் வலயக்காடுகள், கரையோரங்களின் களப்புகள், மலைநாட்டின் புல் நிலங்கள் ஆகிய இடங்களில் ஆர்வம் காட்டினர். வெப்பமான காலநிலை நிலவும் காலங்களில் வெட்ட வெளியிலும் மழைக் காலங்களில் இயற்கையான கற்குகைகளிலும் அவர்கள் வாழ்ந்துள்ளனர். தற்போது அடையாளங்காணப்பட்டுள்ள அவ்வாறான வரலாற்றுக்கு முற...
மினிஹூரால்கந்த, புத்தல, பத்திராஜ வெல (கரையோர வெட்ட வெளிகள்)
பாகியன்கல, பட்டதொம்பலென, கித்துல்கல பெலிலென (தாழ்நில ஈரவலயக் குகைகள்)
சீகிரிய பொத்தான, அலிகல (தாழ்நில உலர்வலயக் குகைகள்)
பெல்லன்பதி பெலஸ்ஸ (ஈரவலய வெட்ட வெளிப் பாசறைகள்)
பண்டாரவளை, ஹோட்டன் சமவெளி (மலையகப் பிரதேச வெட்டவெளி வேட்டை வாழ்விடம்)
2.1.4. வாழ்க்கை முறை
இந்த யுகத்தில் வாழ்ந்த மனிதன் வேட்டையாடியும் பல்வேறு இடங்களில் திரிந்து உணவு சேகரித்தும் தனது வாழ்க்கையை மேற்கொண்டுள்ளான். வருடத்தில் அதிக காலம் அந்த மக்கள் சமூகம் நாடோடி வாழ்க்கையையே மேற்கொண்டுள்ளது. மழை வீழ்ச்சி அதிகரித்த காலப்பகுதியில் அவர்கள் இயற்கையாக கற்குகைகளில் வசித்துள்ளனர். அவர்கள் சிறு குழுக்களாக ஒழுங்கமைந்த...
பண்டாரவளை சேர்ச் ஹில் எனும் கற்காலத்திற்குரிய இடத்தில் 150 சதுரக் கிலோமீற்றர் பரப்பளவில் சுமார் 25 நபர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகின்றது. பெல்லன்பதி பெலஸ்ஸ எனும் இடத்தில் 120 சதுர மீற்றர் பரப்பில் கற்கால மனிதன் வாழ்ந்துள்ளனுடன் அங்கு முப்பது மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2.1.5. உணவுப் பழக்கம்
இலங்கையின் கற்கால மனிதன் உட்கொண்ட உணவின் தன்மை பற்றி அதிகளவிலான ஆதாரங்கள் தாழ்நில உலர் வலயத்திலும் ஈர வலயத்திலும் காணப்படும் கற்குகைகளிலிருந்தே கிடைத்துள்ளன.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்களின்படி உணவுக்காக வேட்டையாடப்பட்ட விலங்குகளின் மாடு, காட்டெருமை, கறடி, காட்டுப் பன்றி, மான், மரை, சிறுமான், முள்ளம் பன்றி, முயல், மர அணில், கீரி, குரங்கு, காட்டுக் கோழி, மலைப் பாம்பு, உடும்பு என்பன உள்ளடங்கும். நன்னீர் மீனினங்களும் உணவாகக் கொள்ளப்பட்டுள்ளன. தாழ்நில ஈரவலய நீர்ப் பரப்புக...
தாவர உணவுகளுள் காட்டு வாழை, காட்டுப் பலா (ஆசனிப்பலா) என்பன பிரதான இடத்தைப் பெற்றன. கித்துல்கல பெலிலென குகையில் 12500 வருடங்களுக்கு முன்னர் காட்டுப் பலாவின் விதைகளை தீயில் சுட்டு சாப்பிட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவை தவிரக் கோடி வகைகளைச் சேர்ந்த வள்ளிக் கிழங்கு வகைகள், கித்துல் விதை, காட்டுப் பாக்கு என்பனவும் உணவ...
உணவுப் பண்டங்கள் தீயில் சுடப்பட்ட பின்னரே சாப்பிடுவதற்குப் பயன்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் ஆய்வுக்குட்படுத்திய பல இடங்களிலும் கிடைக்கப்பெற்றுள்ளன.
நத்தைகளை உணவாகக் கொள்ள வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்கள் அதிகம் விரும்பினர். சிறப்பாகத் தாழ்நில ஈரவலயத்தில் வாழும் நத்தைகளையும் களப்புகளில் வாழும் சிப்பிகளையும் அவர்கள் உணவாகக் கொண்டுள்ளனர்.
2.1.6. தொழினுட்பம்
இக்காலகட்டத்தின் தொழினுட்ப அறிவைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரே ஆதாரமாக அமைவது கல்லாயுதங்களாகும். ஆயினும் இரத்தினபுரி இரணைமடு படிவுக்குரிய சரளைகளிலும் கிடைக்கப்பெற்ற கல்லாயுதங்களைக் கொண்டு கற்காலத்தின் முழுமையான தொழில் நுட்ப அறிவைப்பற்றி அறிவது சிரமானது.
இலங்கையின் கற்காலத் தொழினுட்பம் பற்றிய விபரமான அறிவினைப் பெற்றுக்கொள்ள உதவுவது கேத்திரகணிதப் பொறிமுறை உருவத்தி லான நுணுக்கமான கல்லாயுதங்கள் என்று தொல்பொருளாளர்கள் குறிப்பிடும் சிறு கல்லாயுதங்களாகும். இவ்வாறு பெயர் குறிப்பிடுவதற்கான காரணம் அவற்றை உருவாக்கிய மனிதர்கள் அவற்றை அவ்வாறான உருவத்தில் கற்பாறைகளைக் கொண்டு உருவாக...
அதிகளவிலான கல்லாயுதங்கள் கேத்திரகணித உரு வமைப்பில் இல்லாமல் நுணுக்கமாகத் தயாரிக்கப் பட்டுள்ளன. இவை வேட்டையாடுதல் முதற்கொண்டு வெட்டுதல், உராய்தல், தட்டையாக்குதல், தோண்டுதல் என்பவற்றிற்கு ஏற்றாற்போல செய்யப்பட்டது. இவை தவிர சருங்கல் மூலம் தட்டையான சத்தியல், அம்மி போன்றவையும் அக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
2.1.7. மனிதரின் உடலமைப்பு
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள எலும்புக் கூடுகளிலிருந்து இலங்கையில் கற்காலத்தைச் சேர்ந்த மக்களின் உடலமைப்பு எவ்வாறு இருந்தது என்பதனை அறிக்கூடியதாக உள்ளது. சாதாரண வளர்ச்சியடைந்த ஆண் ஒருவரின் உயரம் 174 சென்ரிமீற்றராகும். வளர்ந்த பெண்ணொருவரின் ஆகக்கூடிய உயரம் 166 சென்ரிமீற்றராகும். அவர்கள் அனைவரதும் பற்கள் பெரியனவாக இருந்த...
மானிடவியல் விஞ்ஞானிகளின் கருத்துப்படி வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் ஆகக்கூடிய ஆயுட்காலம் 35 – 40 வயதாகும்.
2.1.8. சடங்கு, சம்பிரதாய முறை
கற்காலத்தில் நிலவிய சடங்கு சம்பிராயங்கள் பற்றி ஓரளவிற்கேனும் அறிந்துகொள்ளமுடிவது அக்காலகட்ட மரணச் சடங்கு முறையிலிருந்தாகும். மிகவும் முயற்சிசெய்து இவ்வாறான நடவடிக்கையில் கற்கால மனிதன் ஈடுபட்டுள்ளமைக்குத் தெளிவான சான்று பதுளைக்கு அண்மையில் உள்ள எல்லங்குகை கல்லாயுதங்கள் கிடைத்துள்ளன.
மரணித்தவரின் சடலத்தை அது உக்கிப்போகும் வரை பாதுகாப்பாகப் புதைத்து வைத்திருந்து பின்னர் சடலத்தின் எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் அதுபாதுகாப்பான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது. இலங்கையில் கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கும் இன்றைய வேடர்களுக்கும் இடையில் கலாசார ரீதியாகவ...
2.2. முன் வரலாற்றுக் கால குடியேற்றங்கள்
வரலாற்றுக்கு முற்பட்ட கால முடிவிற்கும் வரலாற்றுக் காலத்தின் ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட காலமே முன் வரலாற்றுக் காலம் எனப்படுகின்றது. தொழினுட்ப அடிப்படையில் இது மாறுநிலைக் காலமாகும். சில காரணங்களின் அடிப்படையில் இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலமும் முன் வரலாற்றுக் காலமும் பல்வேறு விடயங்களால் வேறுபடுகின்றன. சுடப்பட்ட மட...
இரும்பின் பாவனை ஆரம்பிக்கப்பட்டமையால் இக்காலம் முன்வரலாற்று இரும்பு யுகம் என்றும் ஆரம்ப இரும்பு யுகம் என்றும் அழைக்கப்படுகின்றது.
2.2.1. முன் வரலாற்றுக் காலத்தின் தோற்றம்
இலங்கையின் முன் வரலாற்றுக் காலத்தின் தொடக்கத்திற்கும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் முடிவிற்கும் இடையிலான மாறுநிலைக் காலம் பற்றி நாம் அறிந்துள்ள விடயங்கள் போதியனவாக இல்லை. வரலாற்றுக்கு முற்பட்ட காலக் கல்லாயுத தொழினுட்பம், வேட்டையாடல் உணவு உட்கொள்வதிலிருந்து விடுபட்டு நிலையான வீடுகளை அமைத்துக்கொள்ள, உலோகப் பயன்பாட்டிற...
"ஹொலோசின்யுகம்" எனப்படும் அண்மைக்கால புவியியல் காலத்தின் மத்திய பகுதியில் கி.மு. 7000 – 4500 இடைப்பட்ட காலப்பகுதியில் தென் ஆசிய வலயம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் பாரிய மாற்றங்கண்டதாக தொல்பொருளியலாளர்களும் காலநிலை அறிஞர்களாலும் கண்டறியப்பட்டுள்ளன. பனிக்கட்டிகாலம் முடிவடைந்துலகம் வெப்பமடைந்ததால் விவசாயத்திற்கு ஏற்ற சூழ...
இலங்கையின் முன் வரலாற்றுக் காலம் பற்றிய தகவல்கள் கி.மு. 2400 ஆம் ஆண்டு வரை பழைமையானவை. இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தொல்பொருள் ஆய்வுகளின்படி இக்காலம் பற்றிய சான்றுகள் சப்ரகமுவ மாகாணத்தின் வட திழக்குப் பகுதியிலும் ஊவா மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியிலும் கிடைக்கப்பெற்றுள்ளன.
முற்காலத்தில் இந்நாட்டில் இறந்தவர்களுக்கெனி அமைக்கப்பட்ட மெகாலிதிக் மயானம் (Megalithie burials) இலங்கையின் முன்வரலாற்றுக் கால பண்பாட்டைக்கற்பதற்கான பிரதான ஆதாரமாகும். இவ்வாறான மயானங்கள் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்மயானங்களில் ஒரு வகையான கற்துண்டங்களை ஒன்று சேர்த்து செவ்வக வடிவில் அமைக்க...
இந்த முறை தவிர, மெகாதிலிக் மரபைச் சேர்ந்த வேறு மயான முறைகள் தொடர்பான சான்றுகள் பலவும் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த முறையில் அஸ்திபுடன்கூடிய சிறிய பாத்திரங்கள் பெரிய பாத்திரங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஊவா மாகாணத்தில் ஹல்துமுல்ல, பெரகல எனும் பிரதேசங்களில் முன் வரலாற்றுக் காலத்துக்குரிய இரண்டு மயானங்களில் அகழ்வு...
2.2.2. குடியிருப்புகளின் தன்மை
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வேட்டையாடி வாழ்ந்த முறையிலிருந்து விடுபட்டு நிலையான வீடுகளை அமைத்துக் குடியிருப்புகளை நிலைமை வாழ்விடம் (Sendentism) எனப்படும் இந்த இயல்பின் தெளிவான சான்றாக விளங்குவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அக்காலத்திற்குரிய வீடுகளின் எச்சங்களாகும். 2009 ஆம் ஆண்டு அவ்வாறான வீடொன்று இரத்தினபுரி மா...
2.2.3. வாழ்க்கை முறை
இலங்கையின் ஆரம்ப வரலாற்றுக் காலத்திற்குரிய வாழ்க்கை முறை எவ்வாறானது என்பதை அறிந்து கொள்வதற்கு போதிய சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரையிலான அகழ்வுகளில் கண்டறியப்பட்டவை மயானங்களாக இருப்பதால் சான்றுகள் மிகக் குறைவாகும்.
அது பற்றி அறிந்து கொள்வதற்கு ஓரளவிற்கேனும் உடரஞ்சாமடம் இடத்தில் கிடைக்கப் பெற்ற குடியிருப்பொன்றின் அகழ்வுத் தகவல்களாகும். அங்கு கிடைத்த தொல்பொருள் 3000 வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்ததொரு வீடாகும். அவ்வீட்டினுள்ளிருந்து உடைந்த மட்பாண்டத் துண்டுகள் பலவும் கிடைத்துள்ளன.
வெள்ளை நிறப் பின்னணியில் சிவப்பு நிறக் கோட்டுகள் மூலம் அப்பாத்திரத்தின் வெளிப்புறமும் கீழ்ப்புறமும் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகின்றது. சமையலறை உபகரணங்கள் சிலவும் கிடைத்துள்ளன. அவற்றுள் அதிகமானவை கல்லாயுதங்களும் இரும்பாயுதங்களும் ஆகும். மான், மாடு, காட்டுப்பன்றி, மர அணில் என்பவற்றின் எலும்புகள் கிடைத்துள்ளன.
வீட்டினுள் இருந்து கிடைக்கப்பெற்ற ஏனைய பொருள்களுள் சில களிமண் மணிகளும் பெண்கள் கண்மையிடப் பயன்படுத்திய உலோகத்திலான குச்சி ஒன்றும் உடம்பில் வர்ணம் பூசுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்திலான இரண்டு பூசு கற்களும் அவற்றை உராய்வதற்காகப் பயன்படுத்த அரைக்கும் கற்கள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்கா...
2.2.4. தொழினுட்பம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்த கல்லாயுத தொழினுட்பத்திலிருந்து மெதுவாக விடுபட்டு, உலோக மற்றும் மட்பாண்டங்கள் செய்யும் தொழினுட்பத்திற்கு மாற்றமடைந்தமை ஆரம்பமானது முன்வரலாற்றுக்காலம் எனப்படும் காலத்திலாகும். உலோகமாக இரும்பு பயன்படுத்தியமை ஆரம்பித்த காலத்திலாகும். நிலத்தைப் பண்படுத்தல், நிலத்தை உழுதல் போன்ற வேலைகளை...
உடரஞ்சாமடம் என்ற இடத்தில் பழைய வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட நிறந்தீட்டப்பட்ட மட்பாண்டம் அக்காலத்தில் மட்பாண்ட தொழிலில் அடைந்திருந்த உயர்நிலையைக் காட்டுகிறது.
2.3. ஆரம்ப வரலாற்றுக் கால குடியிருப்புகள்.
இலங்கையின் ஆரம்ப வரலாற்றுக் காலத்திற்குரிய குடியிருப்புகள் பற்றிய விபரங்கள் வரலாறு மூலாதாரங்களில் பதிவாகியுள்ளன. அவ்வாறான குடியிருப்புகள் அமைந்திருந்த இடங்களைச் சரியாக இனங்காண அத்தகவல்கள் போதியனவாக இல்லை. ஆயினும், அந்தக் குடியிருப்புகளின் மாதிரி எவ்வாறானது என்பதை அறிந்து கொள்வதற்கு அத்தகவல்கள் உதவுகின்றன. ஆரம்ப வரலாற்ற...
இக்காலப் பகுதியில் இலங்கையின் குடியிருப் புகள் பரம்பியிருந்த பிரதேசங்களைச் சரியாகக் காட்டும் சுட்டியாக அமைவது சிறியளவிலான கிராமக் குளங்களின் பரம்பலாகும். சிறிய குளங்களை ஆய்வு செய்வதன் மூலம் அவ்வாறான கிராமச் சிறு குளங்கள் ஆயிரக்கணக்கில் இலங்கை முழுதும் பரம்பிக் காணப்படுகின்றன. ஆரம்ப வரலாற்றுக் காலம் என்பது கி.மு. 450 – ...
கால குடியிருப்புகளில் பெரும்பாலானவை குளமொன்றை மையமாகக் கொண்டு அதன் அருகாமையிலே அமைந்திருந்தன. குளக்கட்டின் ஓர் அந்தத்திலே குளத்துக்கு அண்மையில் அக்கிராமங்கள் அமைந்திருந்ததாக தொல்பொருள் களப்பயணங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
2.3.1. குடியிருப்புகளின் பரம்பலில் செல்வாக்குச் செலுத்திய பிரதான காரணிகள்