text
stringlengths 7
7.53k
| id
int64 0
946
|
|---|---|
மூவேந்தர் (Three Crowned Kings) என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்சி செய்தனர்.
| 0
|
மூவேந்தர் பெயர்க் குறிப்பு
மூவேந்தரை "முடியுடை மூவேந்தர்" எனச் சிறப்பித்துக் கூறுதல் மரபு. முதற்காலத்தில் முடி அணியும் உரிமை இவர்களுக்கு மட்டுமே இருந்ததாலேயே இவர்கள் வேந்தர் எனப்பட்டனர். வேந்தன் என்பது வேய்ந்தோன் என்பதன் மரூஉ ஆகும்.
| 1
|
சேரர்
பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரர்களின் ஆட்சி பொ.ஊ.மு. 300-200 முதல் பொ.ஊ. 15ஆம் நூற்றாண்டு வரை நிலைத்தது. சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். கரூர் நாகம்பள்ளி சிரீ மகாபலேச்சுவர் ஆலயத்தில் காணப்பெறும் கல்வெட்டுகள் யாவும் வஞ்சிவேள், இஞ்சிவேள் போன்ற பட்டங்களுடைய வெள்ளாள அந்துவன் என குறிக்கப்பெறுகின்றன. அந்துவன் எனும் குலப்பெயர் சேரர்களிடத்தும் காணப்பட்டது. மேலும் இந்த ஆலயம் சேரர் காலத்தில் தோன்றியமையும் இக்கோவில் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களில் இக்குலத்தாரே மிகுந்து காணப்படுவதாலும் இந்த வெள்ளாளர்கள் அந்துவனே சேரர்கள் வம்சத்தினரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.கொள்ளம், கொடுங்கள்ளூர் மற்றும் திரிசூர் போன்ற இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரோமானிய, கிரேக்க, அரேபிய நாணயங்கள் மூலம் சேரர்கள் மற்ற நாடுகளுடன் வைத்திருந்த வணிகம் பற்றி அறிகிறோம்.
| 2
|
சோழர்
சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. சோழர்கள், சூரிய வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும், ஆத்தி பூ மாலை அணிந்தவர்கள் எனவும், புலி கொடியினை உடையவர்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது. பொ.ஊ. பத்தாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில், சோழர் வலிமை மிகவும் உயர் நிலையில் இருந்தது. அக்காலத்தில் அந்நாட்டையாண்ட மன்னர்களில், கரிகால் சோழன், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். சோழ மன்னர்களில் தலைசிறந்தவராக போற்றப்படும் கரிகால சோழன், காவிரி ஆற்று நீர்ப் பெருக்கு திறம்பட பயன்படுத்தி பாசன வசதிகளை பெருக்கி பெரும் நிலப்பரப்பில் விவசாயம் தழைக்க வகை செய்த பெருமைக்குரியவர் ஆவார். காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்த வணிகத்தை சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் உச்சத்தை எட்டிய பாசன நீர் மேலாண்மைக்கு கரிகாலச்சோழன் ஆட்சியில்தான் வித்திடப்பட்டது. பாண்டியரையும் சேரரையும் ஏனைய குறுநில மன்னர்களையும் எதிர்த்து கரிகாலன் போரிட்டார். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. சோழர்கள் சதுர வடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனித சின்னங்களும் காணப்படுகின்றன. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் சாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது.
| 3
|
பாண்டியர்
பாண்டியர்கள் குறித்து அசோகரது கல்வெட்டுக்களில் குறிப்புகள் உள்ளன. பாண்டியர்கள்திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களை போற்றுகின்றன. மாங்குளத்தில் கண்டறியப்பட்ட தமிழ்-பிராமி கல்வெட்டுகள் பாண்டியன் நெடுஞ்செழியனை குறிப்பிடுகின்றது. நெடியோன், முடத்திருமாறன், பழைய யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி ஆகியோர் குறிப்பிடத்தக்க பாண்டிய மன்னர்கள். பாண்டியர்கள் சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் எனவும், வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
| 4
|
ஆட்சி நிலப் பரப்பு
தமிழ் அரசர்கள் வேற்றுமொழி பேசும் நிலப் பகுதியையும் ஆண்டுவந்தனர். நாட்டிலிருந்து பொருள் ஈட்டச் சென்றவர்கள் அவர்களின் மலைநாட்டையும் கடந்து சென்றனர். அங்கு வழிப்போக்கர்களைக் கொன்று கொள்ளை அடிக்கும் மக்களும் வாழ்ந்துவந்தனர்.
| 5
|
சங்க காலக் குறுநில மன்னர்கள்
நன்னன் என்னும் பெயர் கொண்ட அரசர்கள் பலர் பல்வேறு இடங்களில் இருந்துகொண்டு அரசாண்ட செய்திகளைச் சங்கப் பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன. அவர்களின் காவல்மரம் வெவ்வேறாக இருப்பதால் அவர்களை ஒருவராகக் கொள்ள முடியவில்லை. இப்படிப் பிற குறுநில மன்னர்களின் வரலாற்றிலும் சிற்சில குழப்பங்கள் உள்ளன. இந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு காணவேண்டுமானால் சங்கப் பாடல்கள் முழுவதையும் திரட்டிப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்துக் கண்டதுதான் இங்குத் தரப்பட்டுள்ள பட்டியல்.
| 6
|
சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து' என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின், சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர். சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறிஸ்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத் தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினார். 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழரும், அவரது மகனான முதலாம் இராசேந்திர சோழரும், தற்போதய இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
பொ.ஊ. 10-12 ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் சாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றிக் கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தார். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், சிரீவிசயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. பண்டைய கால அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றிக் கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி.
| 7
|
தோற்றமும் வரலாறும்
சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குடிகள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ இயலவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறிஸ்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பவை ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.
| 8
|
முற்காலச் சோழர்கள்
இன்றைய தஞ்சை, [[திருச்சி][ உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களை தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இவனை பரணர், கழாத்தலையார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்.
| 9
|
முதலாம் கரிகாலன்
கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகால சோழனுக்கு, திருமாவளவன் மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே, தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.
கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து, காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர். கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக் கொன்று தப்பித்தான், பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.
கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.
| 10
|
பிற சோழ மன்னர்கள்
இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி,
போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
| 11
|
இடைக்காலச் சோழர்கள்
களப்பிரர் வருகை
பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் தமிழ்நாட்டுக்கு வடக்கிலிருந்த கன்னட நாட்டிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். பொ.ஊ. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும், களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது.
நாட்டில் தெளிவற்ற பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.
இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கிராந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். பொ.ஊ. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகரர் இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.
| 12
|
பழையாறை சோழர்கள்
தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் குறிப்பாக உறையூர், பழையாறை நகரங்களிலிருந்து சோழ நாட்டின் சிலபகுதிகளை மட்டும் ஏறத்தாழ இருநூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் ஆண்டு வந்தனர். இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாகக் கூறும்போது, காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்றுச் செய்திகளைத் தரவில்லை.
| 13
|
இசை வெங்கிள்ளி பொ.ஊ. 300–330
கைவண்கிள்ளி பொ.ஊ. 330–350
பொலம்பூண்கிள்ளி பொ.ஊ. 350–375
கடுமான்கிள்ளி பொ.ஊ. 375–400
இரண்டாம் கோச்சோழன் செங்கணான் பொ.ஊ. 400–440
நல்லடி சோழன் பொ.ஊ. 440–475
பெயர் தெரியவில்லை பொ.ஊ. 476–499
மூன்றாம் கோச்சோழன் செங்கணான் பொ.ஊ. 499–524
புகழ்சோழன் பொ.ஊ. 524–530
மூன்றாம் கரிகாலன் பொ.ஊ. 530–550
| 14
|
அரசநாட்டுச் சோழர்கள்
களப்பிரர் மற்றும் முத்தரையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், மூன்றாம் கரிகாலன் களப்பிரர், முத்தரையர் ஆகியோரை விரட்டியதோடு, பல்லவ மன்னனான திரிலோசன பல்லவனை வெற்றி கொண்டு தொண்டை நாட்டை கைப்பற்றினான். ஆனால், கரிகாலனின் மறைவிற்குப் பின் பொ.ஊ. 550 இல் பல்லவ மன்னன் சிம்மவிட்டுணு சோழர்களை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். இக்காலத்தில் சோழர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி பல்லவருக்கு அடங்கிய வட தமிழக தென் ஆந்திரநாட்டு எல்லைப் புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அதன்படி மூன்றாம் கரிகாலனின் புதல்வனான நந்திவர்மச் சோழன் வேங்கடமலைக்கு வடக்கே கடப்பை, சந்திரகிரி, அனந்தபுரம், கோலார் பகுதிகளையும், வேங்கடத்திற்கு தெற்கே காளத்தி, நெல்லூர், திருப்பதி, சிற்றூர், புங்கனூர் பகுதிகளையும் ஆளத் தொடங்கினன். நந்திவரும சோழனுக்குப் பின் அவனின் புதல்வனான சிம்மவிட்டுணு சோழன் பல்லவரை எதிர்த்துப் போரிட்டு மாண்டான். அவனையடுத்து, அவனது தம்பியரான சுந்தரானந்த சோழன் மற்றும் தனஞ்செய சோழன் ஆகியோர் பல்லவருக்கு அடங்கி ஆளத் தலைப்பட்டனர். இவர்கள் பல்லவர்கள், சாளுக்கியர், மேலைக் கங்கர்கள், கீழைக் கங்கர்களோடு மணவுறவும் பூண்டனர். இவர்கள் அரசநாட்டுச் சோழர்கள் (ரேனாட்டுச் சோழர்கள்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர். அப்பகுதிகளில் காடுகளை அழித்து நெல்லூர், சிற்றூர், புங்கனூர், திருப்பதி போன்ற புதிய ஊர்களை உருவாக்கினர்.
பொ.ஊ. 550 இல் கருநாடகத்தை ஆண்ட கங்க அரசர்களில் ஒருவனான துர்விந்தன் என்ற சிறந்த மன்னனின் மனைவியார் ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம சத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
| 15
|
நந்திவரும சோழன் பொ.ஊ. 550–575
தனஞ்செய சோழன் பொ.ஊ. 575–609
மகேந்திரவருமச் சோழன் பொ.ஊ. 609–630
புண்ணியகுமார சோழன் பொ.ஊ. 630–655
விக்கிரமாதித்த சோழன் பொ.ஊ. 650–680
சக்திகுமார சோழன் பொ.ஊ. 680–705
விக்கிரமாதித்த சோழன் II பொ.ஊ. 705–730
சத்தியாதித்தச் சோழன் பொ.ஊ. 730–755
விசயாதித்த சோழன் பொ.ஊ. 755–790
சிரீகாந்த சிரீமனோகர சோழன் பொ.ஊ. 790–848
புண்ணியகுமார சோழனின் ஆட்சிக் காலத்தில் வருகை தந்த'யுவான் சுவாங்' என்ற சீனப் பயணி இவர்கள் நாட்டை' சூளியே' என்றும் அவர்கள் தம்மைச் சோழன் கரிகாலன் பரம்பரையினரைச் சேர்ந்ததாகக் கூறிக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார். இச்சோழப் பேரரசர்களின் சோழநாட்டு எல்லை, தான்ய கடகத்திற்கு தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அது 480 கல் சுற்றளவு கொண்டதாகவும் தலைநகரம் 2 கல் சுற்றளவு கொண்டதாகவும் அச்சீனப்பயணி தன் பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். பல்லவருக்கு கீழடங்கி ஆண்ட சிற்றரசனான விசயாலய சோழன் என்பவன் பாண்டிய மேலாதிக்கத்திலிருந்து ஆட்சி செய்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான். சிரீகாந்த சிரீமனோகர சோழனின் வழித்தோன்றல் விசயாலய சோழன் என சுந்தர சோழன் வெளியிட்ட அன்பில் பட்டயம் தெரிவிக்கின்றது.
| 16
|
பிற்காலச் சோழர்கள்
பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிய வெங்கையா, உல்ச், கிருட்டிணசாத்திரி ஆகியோர் தொகுத்த கல்வெட்டுகளும் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகளும் வழி செய்கின்றன. அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தைச் செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெடன் செப்பேடுகள் ஆகியவை அவற்றுள் சில. இவை தவிர இலக்கிய, இலக்கணங்களும் கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகள், திவ்யசூரிசரிதம், வீர சோழியம், தண்டியலங்காரம் போன்ற நூல்களும் இக்காலத்தை அறிய உதவும் சன்றுகளாக உள்ளன.
| 17
|
விசயாலய சோழன் (பொ.ஊ. 850-871)
பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது. பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், பொ.ஊ. 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான். அது முதல் பொ.ஊ. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் பொ.ஊ. 871 இல் இறந்தான்.
| 18
|
முதலாம் ஆதித்த சோழன் (பொ.ஊ. 871-907)
விசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். பொ.ஊ. 880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் பல்லவன் அபராசிதனுக்கும் இடையே திருப்புறம்பியம் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், [[மேலைக் கங்கர்|கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர். நிருபத்துங்க பல்லவனுக்கு பாண்டியன் வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றிபெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். திருப்புறம்பியப் போர் சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற பாண்டியர்கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான். அபராசிதனும் சோழர்களுக்குச் சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும் முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.
| 19
|
முதலாம் பராந்தக சோழன் (பொ.ஊ. 907-955)
பொ.ஊ. 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே காளத்தி முதல் தெற்கே காவிரி வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான்.உலக வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான். இவன் காலத்தில் குடவோலை முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.
| 20
|
கண்டராதித்த சோழன் (பொ.ஊ. 955-962)
பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இராசாதித்தர் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரகூடர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது மகன் கண்டராதித்தன் பொ.ஊ. 950-இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும் குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்றும் பல உள்ளன. இவன் காலத்தில் தொண்டை மண்டலம் முழுவதும் இராட்டிரகூடர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது.
| 21
|
அரிஞ்சய சோழன் (பொ.ஊ. 962-963)
கண்டராதித்தனை அடுத்து அவன் தம்பி அரிஞ்சயன் சோழ அரசனானான். முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனான இராசாதித்தன் திருக்கோவிலூரில் இராட்டிரகூட மன்னனை எதிர்க்கப் படையுடன் தங்கியிருந்த போது அவனுக்குத் துணைபுரிய இவனும் தங்கியிருந்த சிறப்புடையவன். இராட்டிர கூடன் கைப்பற்றிய தொண்டை நாட்டைத் தான் மீட்க முயற்சிகள் செய்தான். இடையில் சிறிது காலமே ஆட்சி புரிந்த அரிஞ்சய சோழனும் குறுகிய காலத்தில் போரில் மடிந்தான்.
| 22
|
சுந்தர சோழன் (பொ.ஊ. 957-973)
சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்தது தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதுடன், பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். எனினும், பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் பகைவர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக, இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.
அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரமாதிராசன் என்பவன் இவனுக்கு அமைச்சராய் இருந்தவன். கருணாகர மங்கலம் என்ற ஊரினை இறையிலியாக அவனுக்கு அளித்த செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள் ஆகும்.
| 23
|
உத்தம சோழன் (பொ.ஊ. 970-985)
பொ.ஊ. 973 இல் சுந்தரசோழன் இறந்த பின்பு, அவன் மகன் இராசராசன் மன்னனாகவில்லை. கண்டராதித்தனின் மகனும் இராசஇராசனின் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னதாகவே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவன் காலத்தில் நாடு அமைதியுடன் இருந்தது. உத்தம சோழனின் செப்பேட்டிலிருந்து அக்காலத்தில் வரிவடிவில் இருந்த தமிழ் எழுத்துக்களின் தன்மையை அறியலாம். புலியுருவம் பொறித்து உத்தமசோழன் என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய நாணயம் இவன் காலத்து வரலாற்றுச் சான்றாகும்.
| 24
|
இராசராச சோழன் (பொ.ஊ. 985-1014)
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராசராச சோழன் மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன.
| 25
|
காந்தளூர்ச் சாலை
இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. சேரர், பாண்டியர், சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து உதகை, விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான்.
| 26
|
கங்கபாடி, நுளம்பாடி
சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் (மைசூரின் தென்பகுதியும் சேலம் மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கர்கள் இந்நாட்டை ஆண்டனர். மைசூர் நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் பல்லவர்களின் வம்சத்தவராகிய நுளம்பர்களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான். இப்போர்களில் தலைமை ஏற்று நடத்தியவன் இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் ஆவான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். துளுவர், கொங்கணர், தெலுங்கர், இராட்டிரகூடர் ஆகியோரை வென்று வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
| 27
|
ஈழத்துப் போர்
இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது.
இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளி. ராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களைத் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நிவந்தமாக அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள முந்நீர்ப் பழந்தீவு எனப்படும் இலட்சத்தீவுகள் மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.
| 28
|
முதலாம் இராசேந்திர சோழன் (பொ.ஊ. 1012-1044)
இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.
சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.
| 29
|
வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் பெரும் பகுதி போர்கள் நிறைந்திருந்தது.
வடநாட்டை வென்று பெற்ற கங்கை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாகக் கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு தஞ்சைப் பெருவுடையார் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கம்' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான்.
| 30
|
பின்வந்த சோழ மன்னர்கள்
முதலாம் இராசாதிராசன்
இராசேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.
| 31
|
இரண்டாம் இராசேந்திரன்
இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இரசேந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள் தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் செல் நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.
| 32
|
பிற மன்னர்கள்
இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால், தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில் சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
| 33
|
சாளுக்கிய சோழர்கள்
முதலாம் குலோத்துங்கன் பொ.ஊ. 1070-1120
இராசராசசோழனின் தமக்கையான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் கடாரத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் முதலாம் குலோத்துங்க சோழன்.
முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விசயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது.
குலோத்துங்கன் இயன்ற வரை பயனற்ற போரை ஒதுக்கினான். இராசராச சோழன் கைப்பற்றிய நாடுகள் அந்நாட்டு மன்னர்களின் முயற்சியாலும் குலோத்துங்கனின் அமைதிக் கொள்கையாலும் சோழர் கையை விட்டு நழுவின. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன.
| 34
|
வெளிநாட்டுத் தொடர்புகள்
முதலாம் இராசராசன் மற்றும் முதலாம் இராசேந்திரன் காலங்களிலேயே சீன நாட்டுடன் சோழ நாட்டிற்குத் தொடர்பு இருந்து வந்தது. குலோத்துங்கனும் தன் ஆட்சிக் காலத்தில் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72 பேர்களடங்கிய ஒரு தூதுக் குழுவைச் சீனத்திற்கு அனுப்பிவைத்தான் மேலும் கடாரம், சுமத்திரா போன்ற தீவுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தான்.
| 35
|
ஆட்சிப் பணிகள்
குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது வரியை நீக்கினான். எனவே சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்பட்டான். இராசராசனின் ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு முழுவதையும் அளக்கும் பணி தொடங்கி இரு ஆண்டுகளில் முடிவுற்றது. நிலமளந்த செயல் இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பான செயலாகும். இவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும் வைணவ, சமண, பௌத்த சமயங்களையும் ஆதரித்ததாகக் கல்வெட்டு கூறுகின்றது. குலோத்துங்கனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் செயங்கொண்டார். இவர் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப் பரணி இயற்றினார்.
| 36
|
சோழப் பேரரசின் வீழ்ச்சி
முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன.
1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் பொ.ஊ. 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.
| 37
|
சோழ அரசர்களின் பட்டியல்
பிற சோழர்கள்
குளக்கோட்ட சோழன் (17 ஆம் நூற்றாண்டு)
எல்லாள சோழன் (பொ.ஊ.மு. 205 - பொ.ஊ.மு. 161)
வீரசேகர சோழன் (பொ.ஊ. 1511–1561)
| 38
|
சோழ நாடு
தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.
உறையூர் பொ.ஊ. 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இந்நகரங்களில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இவை வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விசயாலய சோழன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்குப் பின் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் நகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராசேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.
கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராசராசனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராசராசனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராசராசனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராசேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாகக் கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.
முத்தொள்ளாயிரத்தில் வரும் ஒரு பாடல் சோழரின் ஆட்சிப் பரப்பைக் கூறுகிறது.
| 39
|
"கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்
தத்து நீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா
பிற்றையும் ஈழம் மிதியா வருமே எம்
கோழியர் கோக்கிள்ளிக் களிறு"
| 40
|
சோழர் ஆட்சி
சோழர் ஆட்சியில் ஆட்சிமுறை, கட்டிடக் கலை, இலக்கியம், இசை, சிற்பம். நாடகம், ஊராட்சி ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடிக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்றவற்றில் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் இருப்பது போலச் சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின் நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது.
| 41
|
ஆட்சிப் பிரிவுகள்
சோழ அரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது.கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
| 42
|
படைகள்
கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது, இந்த படைபிரிவு செங்குந்தம் பிடிக்கும் கைக்கோளர் வகுப்பினரால் நிரப்பப்பட்டது. இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது.
| 43
|
- பாவாணர்
| 44
|
சமூகநிலை
சோழரும் சாதியமும்
சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும், பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். சாளரம் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.
பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாகச் செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.
| 45
|
பெண்டிர்
சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாகச் சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.
| 46
|
உடன்கட்டை ஏறுதல்
கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராசராச பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்தச் சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
| 47
|
ஆடல் வல்லார்
சோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன.ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். இவ்ர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்குத் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குக் கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.
சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி (அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, பொ.ஊ. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.
| 48
|
அடிமைகள்
சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு" என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.
ரொமிலா தபார் (Romila Thapar) என்று வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது பிறராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
| 49
|
சோழரின் வணிகம்
சோழர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கினர். சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, பொ.ஊ. 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றது.
| 50
|
சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள்
சோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தைத் தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது.
பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டுத் தாக்கங்களைப் பல நாடுகளிலும் உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே.
| 51
|
கலைகள்
சோழர்காலத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. சோழர்களின் நகரம், உள்ளாலை, புறம்பாடி என்ற இரு பிரிவாக இருந்தது. நகரங்கள் மிகப்பெரியவை. பல மாடிவீடுகள் கொண்டவை. இன்ன இடத்தில் இன்ன வகையான வீடுகள் தான் கட்டலாம் என்றும், இன்னவர்கள் இத்தனை மாடிகளுடன்தான் வீடுகள் கட்ட வேண்டும் என்றும் விதிகள் இருந்தன. பல அங்காடிகள் இருந்தன. இவர்களின் கட்டடக்கலை உன்னதத்தை விளக்குவன சோழர் அமைத்த கோவில்களே ஆகும். சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விசயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராசராசனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரியவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதால், இராசராசன் காலத்திலும் அவன் மகனான இராசேந்திர சோழன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. பொ.ஊ. 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.
| 52
|
சோழர் காலம், கல்லாலும் வெண்கலத்தாலும் ஆக்கப்பட்டச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விட்டுணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.
| 53
|
கல்வி
சோழர் காலத்தில் கல்வி சமசுகிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள். இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது.
| 54
|
மொழி
சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது".
| 55
|
இலக்கியம்
சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. இராசராச சோழன் காலத்தில் தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. சமண, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன. ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.
மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். செயங்கொண்டாரரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். இரண்டாம் குலோத்துங்க சோழன் பெற்ற கலிங்கத்து வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழ உலா என்னும் நூலையும் தக்கயாகப் பரணி, மூவருலா என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சேக்கிழாரின் பெரிய புராணமும் இக்காலத்ததே. சோழ்ர் காலத்தில்தான் திருப்பாவை, திருவெம்பாவை போன்றவை சோழ நாடெங்கும் ஓதப்பட்டன. சோழர் காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சத்தை எட்டியது.
சைவ சித்தாந்த நூல்களும் இக்காலத்தே மலர்ந்தன. மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். வாகீச முனிவரின் ஞானாமிர்தம், திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் எழுதிய திருவுந்தியார், அருள்நந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞான சித்தியார், உமாபதிசிவாச்சாரியாரின் எட்டு நூல்கள் என சைவ சித்தாந்த அறிவு சோழர் காலத்தில் உருவாகி முறையான வடிவம் பெற்றது.
| 56
|
சமயம்
சோழர் இந்து சமயத்தை, சிறப்பாகச் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். எனினும் பிற மதங்களையும் ஆதரித்தனர். சைவம், வைணவம் என்ற இரு மதங்களும் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. ஏராளமான சைவ, வைணவ மடங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு சாற்று முறை செய்ய வரியில்லா நிலங்கள், பணியாளர்கள் எனப்பெரும் பொருள் செலவிடப்பட்டது. இம்மடங்களில் உணவிடுதல், வழிப்போக்கருக்கு உப்பு, விளக்கெண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது ஆகியன் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் சிந்தனை பக்திநெறியில் செல்ல இவை வழிவகுத்தன. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைணவர் பால், சிறப்பாக இராமானுசர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராசேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.
| 57
|
சேரர் (Chera dynasty) எனப்படுவோர் பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரைச் சேர்ந்தவர்கள் ஆவர். சேரர்களின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலைநகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அந்நாடு அக்காலத் தமிழகத்தின் மேற்குக்கரைப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. பெரும்பாலும் இன்றைய தமிழ்நாட்டின் கொங்கு நாட்டுப்பகுதியே அக்காலச் சேர நாடு எனலாம். பல சங்கத் தமிழ் நூல்களும்கூடச் சேர நாட்டில் உருவாயின. மேலும் வேணாடு, குட்டநாடு, தென்பாண்டி நாடு ஆகிய கொடுந்தமிழ் மண்டிலங்களையும் (இன்றைய கேரளா) சேரன் ஆண்டான். தலைநகர் கரூர் வஞ்சி. இது ஆண்பொருணை (அமராவதி) ஆற்றின் கரையிலுள்ளதாகச் சங்க இலக்கியங்கள் கூறம். மேலும் காஞ்சி எனும் நொய்யலாறு இங்கே ஓடுகிறது.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன. சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.
| 58
|
எல்லைகள்
சங்க காலச் சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமசுகிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.
கேரளதேசம் சோழதேசத்திற்கு மேற்கிலும், அரபிக்கடலும் தென்கடலும் கூடுமிடத்திலுள்ள கன்னியாகுமரி முதல் வடபாகமாக நீண்டு, கருநாடகதேசத்திற்கு தெற்கிலும் ஓர் அகன்று பரவி இருந்த தேசம்.
| 59
|
இருப்பிடம்
இந்த கேரளதேசத்தில் பூமி கிழக்கே உயரமாகவும், மேற்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். வடகேரளம், தென்கேரளம் என இரு பிரிவாகவும், தென்கேரளத்திற்கு அனந்தபுரம் என்றும், வடகேரளத்திற்கு கொச்சி என்றும் பெயர் வழங்கிவருகிறது.
| 60
|
மன்னர்கள்
சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
| 61
|
சங்ககாலச் சேரர்கள்
சங்ககால நூல்கள் பலவற்றில் சேர வேந்தர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. குறிப்பாக, சங்ககால நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து, பத்து சேர வேந்தர்களைப் பற்றிப் பாடப்பட்ட பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர வேந்தன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.
| 62
|
பிற்காலச் சேரர்கள்
சேரமான் மாக்கோதையார் (பொ.ஊ. 598-629)
| 63
|
சேரமான் பெருமாள் நாயனார் (பொ.ஊ. 724-756)
சேரமான் ஐயனாரிதனார் (பொ.ஊ. 756-800)
குலசேகார வர்மன் (பொ.ஊ. 800-820)
இராசசேகர வர்மன் (பொ.ஊ. 820-844)
சாந்தனு ரவி வர்மன் (பொ.ஊ. 844-885)
இராம வர்மா குலசேகர (பொ.ஊ. 885-917)
கோதை ரவி வர்மா (பொ.ஊ. 917-944)
இந்து கோதை வர்மா (பொ.ஊ. 944-962)
பாசுகரா ரவி வர்மன் I (பொ.ஊ. 962-1019)
பாசுகரா ரவி வர்மன் II (பொ.ஊ. 1019-1021)
வீர கேரளா (பொ.ஊ. 1021-1028)
இராசசிம்மா (பொ.ஊ. 1028-1043)
பாசுகரா ரவி வர்மன் III (பொ.ஊ. 1043-1082)
ரவி ராம வர்மா (பொ.ஊ. 1082-1090)
ராம வர்மா குலசேகர (பொ.ஊ. 1090-1102)
| 64
|
படைபலம்
- பாவாணர்
| 65
|
நகரங்கள்
கரூர் மற்றும் வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரங்கள் சேர நாட்டின் தலை நகர்களாக விளங்கியன. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புகள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும். தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).
| 66
|
8 நாடு (மகா சாமந்தம்) பிரிவுகள்
சேர மன்னர்களில் சேரமான் பெருமாள்கள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 8 (சாமந்தம் = கப்பம் செலுத்தும் நாடு) பிரிவுகளாக பிரித்து 8 மகா சாமந்த மன்னர்கள் ஆண்டுவந்தனர். அவர்கள் மகா சாமந்தர்கள் என அறியப்பட்டனர். அவை:
| 67
|
12 (சுதந்திர நாடு) பிரிவுகள்
சேர மன்னர்களில் இறுதி மன்னன் மாகோதையார் என்ற சேரமான் பெருமாள் திருவஞ்சைக் களத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட காலத்தில் சேர நாட்டை 12 (சுவரூபம் + விடுதலை நாடுகள்) பிரிவுகளாக பிரித்து 12 மன்னர்களிடம் (குருநில மன்னர்கள்) பிரித்து வழங்கப்பட்டது. அவை:
| 68
|
மலை, காடு, விலங்குகள்
இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள பூமியில் சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் கிழக்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருசகிரி, வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும் இவற்றில் அகில், சந்தனமரங்களும், மந்தம், மிருகம் என்ற யானைகளும் இருக்கும்.
| 69
|
நதிகள்
இந்த பாண்டியதேசத்தில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் முரளா, கேரளதேசத்தை செழிக்க வைக்கின்றது.
| 70
|
வேளாண்மை
இந்த கேரளதேசத்தில் நெல், வாழை, கரும்பு, ஏலம், கிராம்பு, போன்ற பயிர்களும், பயறு வகைகளும் விளைகின்றன.
| 71
|
பாண்டியர்கள் என்பவர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலத்து வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் தற்போதைய தமிழ்நாடு மாநிலத்தின் தென்பகுதிகளையும் கேரள மாநிலத்தின் தென்பகுதிகளையும் ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு.
| 72
|
சொல்லிலக்கணம்
பண்டு = பண்டைய = பாண்டிய = பாண்டியர் என்று திரிந்திருக்கலாம் என்பது பாவாணர் கூற்று.பாண்டியர் என்னும் சொல் பண்டையர் என்னும் சொற்றிரிபே என்றும் மொழி நூல் வல்லுநரும் மொழிவர். பண்டைய நாடு' என்பதே பாண்டிய நாடு' என மருவியதாக கூறுவர்.
| 73
|
இடம்
பாண்டியநாடு சோழ நாட்டிற்கு தெற்கிலும், சேர நாட்டிற்கு கிழக்கிலும் இருந்த நாடாகும். இந்த பாண்டிய தேசத்தில் பூமி மேற்கே உயரமாகவும், கிழக்கே சரிந்தும் தென்வடலாய் நீண்டும் கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், ஆகக் காணப்படும். இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் பொதியம் மலையே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், இத்தேசத்தின் நடுவிலுள்ள சமதளமான பூமியில் சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த தேசத்தின் தெற்கில் மலையம், தர்துரம், என்னும் பெரிய மலைகளும், வருடகிரி, வராககிரி, போன்ற சிறு மலைகளும் இருக்கும். இந்த கருநாடக தேசத்தில் யதுகிரி, செகயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதி பாண்டிய தேசத்தை செழிக்க வைக்கின்றது. தெற்கில் பொதியம் மலையில் உற்பத்தியாகும் வைகை நதி சிறப்பு வாய்ந்தது இந்த பாண்டிய தேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்ற பயிர்களும், பருத்தி, பயறுவகைகளும் விளைகின்றன. காவிரிநதிக் கரையில் பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட தஞ்சை, இராமேசுவரம் சிறப்பு வாய்ந்தவை.
தனிப்பாடல்களின் திரட்டு நூலான பெருந்தொகையில் பாண்டிய நாட்டின் எல்லைகள் பற்றிய பாடல் ஒன்று உள்ளது.
| 74
|
வெள்ளாறு அதுவடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி
--பெருந்தொகை
| 75
|
இந்தப் பாடலை 12ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அவைக்களப் புலவராய் இருந்த கம்பர் பாடியது என்று பாவாணர் சொல்லுகிறார். இப்பாடல் படி, வடக்கில் வெள்ளாறும் மேற்கில் பெருவழியும் தெற்கில் கன்னியாகுமரியும் கிழக்கில் வங்காள விரிகுடா கடலும் எல்லைகளாக இருந்துள்ளன.
| 76
|
பாண்டியர் பெயர்கள்
பாண்டியர் தங்கள் பெயரில் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், வர்மன், செழியன், முது குடுமி என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர். இவர்களின் குலப்பெயர் பரவலாகப் பாண்டியர் என அறியப்படினும் இவர்கள் சந்திர குலம், தென்னர் குலம், கவுரியர் குலம், பஞ்சவர் குலம் என்றும் பாடல்களில் போற்றப்படுகின்றனர்.
| 77
|
தொன்மங்களில் பாண்டியர்கள்
குமரிக் கண்டத்தில் தோன்றிய மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. இந்தியப்பெருங்கடலில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது. இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது. இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது. இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
| 78
|
இராமாயணத்தில்
பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் முத்து, பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்றும் இராமாயணத்தில் உள்ளது.
| 79
|
புராணங்களில்
பல இந்து மதப் புராணங்களும், தமிழ் இலக்கியக்களும் நாட்டுப்புறக் கதைகளும் பல பாண்டிய மன்னர்கள் இருந்ததாகவும் அவர்கள் வரிசையாகப் பதவியேற்றதாகவும் குறிப்பிடுகின்றன. இது தவிர்த்து திருவிளையாடல் புராணங்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்களும், நற்குடி வேளாளர் வரலாற்றில் 201 பாண்டிய மன்னர்களும், இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரையில் 197 பாண்டியர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
இப்புராணங்கள் படி மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி, இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்.மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள். அதன் வழிவந்த வழிமுறையினரே மௌரியர்கள் என்று கருதப்படுகிறது. அந்த வழியில் சித்திராங்கதன் வந்தான் என்பதும் அவன் மகளே சித்திராங்கதை என்பதும் குறிப்பிடத்தக்கது.
| 80
|
வரலாற்றுச் சான்றுகள்
பிற நாட்டவர் பதிவுகள்
சுமார் பொ.ஊ.மு. 300 - மெகசிதெனசு இந்தியா வருகை. பண்டையா என்னும் அரசு பாண்டியர் நாட்டை ஆண்டதாக குறிப்பு. மேலும் அவனது நாட்டுக் குறிப்பில் பாண்டிய நாடு பற்றி தகவல்கள் பல உள்ளன. எரெக்ளீசு (Heracles) என்ற மன்னனுக்கு 'பண்டேயா' என்ற பெண் பிறந்தாள்.அவளுக்கு கடல்சார்ந்த தென்னாட்டைக் கொடுத்தான். அதில் 350 ஊர்கள் இருந்தன. நாள்தோறும் அரசிக்கு ஓர் ஊர் மக்கள் திறை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்" என்ற செய்தி யவன நாட்டுத் தூதுவனின் குறிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் பொ.ஊ.மு. 60 – நிகோலசு தமாசுகசும் சுட்ரேபோவும் மதுரையை ஆண்ட பாண்டியர் மன்னன் ஒருவன் அகசுடசு மன்னனுக்கு தூதனுப்பியதாக குறித்தனர்.
சுமார் பொ.ஊ. 1 – 140 - பிளைனி மற்றும் தாலமி மதுரையை பாண்டிய மன்னன் ஆண்டதாக குறித்தனர்.
சுமார் பொ.ஊ. 1 – 200 - முதல் இரண்டு நூற்றாண்டுகளில் தமிழர் யவனர்களோடு சிறந்த வணிகவுறவு வைத்திருந்தனர்.செங்கடல் செலவு என்னும் கிரேக்க வணிக நூலேட்டில் மூவேந்தர் துறைமுகங்களான நறவு, தொண்டி, முசிறி, நீலகண்ட நகரம், கொற்கை, அழகன்குளம், காலப்பட்டினம், பாண்டிச்சேரி, எயிற்பட்டினம் போன்றவை சிறந்த துறைமுகங்களாக இருந்ததாக பெரிப்ளுசு கூறுகிறார்.
சுமார் பொ.ஊ. 250 - சீன நாட்டு வரலாற்றியல் அறிஞர் யூ உவான் பாண்டியர் அரசாங்கத்தை பாண்யுவி எனக் குறித்தார். பாண்டிய மக்கள் சீனர்களைப் போலவே சிறிய உயரம் படைத்திருந்தனர் எனக் கூறியுள்ளார்.
சுமார் பொ.ஊ. 1268-1310 – குலசேகர பாண்டியனின் ஆட்சியில் மதுரை உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நகரமாக இருந்ததாக மார்க்கோ போலோ குறிப்பு. பாண்டியர்களுக்கும் ஏமன் நாட்டவர்க்கும் 1289ஆம் ஆண்டில் சிறந்த குதிரை வணிகம் நடந்ததாக இபின் பட்டுடா குறிப்பு.
| 81
|
அசோகனின் கல்வெட்டுக்களில்
மகத நாட்டு அரசர்கள் மௌரியர்கள். மௌரிய அரசன் பேரரசர் அசோகர் கல்வெட்டுக்களில் பாண்டிய நாடு பாண்டியர் பற்றிய செய்திகள் உள்ளன.
| 82
|
மகாவம்சத்தில்
இலங்கையை ஆண்ட விசயன் தனியாட்சி புரிந்தவன் இவன் பாண்டிய மன்னன் ஒருவனின் மகளை மணந்தான். அப்பாண்டிய மன்னனுக்கு ஆண்டுதோறும் பல பரிசுகளை அனுப்பினான் என்று மகாவம்சம் கூறுகின்றது.
| 83
|
சங்க காலப் பதிவுகள்
பாண்டியர்கள் சந்திர குலத்தைச் சார்ந்தவர்கள் எனவும். வேப்பம் பூ மாலை அணிந்தவர்கள் எனவும் மீன்கொடியினை உடையவர்கள் எனவும் சங்க கால நூற்குறிப்புகள், கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் மெய்க்கீர்த்திகளும் வரலாற்று மூலங்களாக உள்ளன.
| 84
|
பாண்டிய நாட்டில் பிற நாட்டவர் ஆட்சி
களப்பிரர் ஆட்சி
வடநாட்டில் பல்லவர்களால் அடித்துவிரட்டப்பட்ட களப்பிரர் பொ.ஊ. 300-600 கன்னட நாடு வழியாக கொங்கு நாட்டிலும், சேர, சோழ, பாண்டி நாட்டிலும் புகுந்து பாண்டியர்களை அடக்கி ஆண்டனர். களப்பிரர்களைத் தொடர்ந்து வந்த பல்லவர் ஆட்சிக்காலமான பொ.ஊ. 350 – 550 வரையிலும் பாண்டியப் பேரரசு பெரும் வீழ்ச்சியிலிருந்ததாகக் கருதப்படுகின்றது.ஆனாலும் கடுங்கோன் ஆட்சிக் காலத்தில் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.பல்லவர்களின் தாக்கமும் களப்பிரர்களை வீழ்த்தியது. இதன்பின்னர் இடைக்காலப் பாண்டியர் ஆட்சி எழுச்சி பெற்றது.
| 85
|
சோழராட்சி
பாண்டிய நாட்டின் பெரும்பகுதிகள் பொ.ஊ. 1020 முதல் 1070 வரை சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இராசராசன் மகனான இராசேந்திர சோழனின் மூன்று மகன்களான சுந்தரசோழ பாண்டியன், விக்கிரமசோழ பாண்டியன், பராக்கிரம பாண்டியன் மூவரும் சோழ பாண்டியர் எனப் பட்டம்பெற்று பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சோழ மன்னர்களாவர். பாண்டிய நாட்டிற்கு இராசராச மண்டலம் எனப்பெயரிட்டு தங்கள் ஆட்சிக்கு முரண்பட்ட பாண்டியர்களை திறை செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்தனர்.
| 86
|
சுல்தானியர் ஆட்சி
கில்சி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியனால் தன் தம்பியான இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல உதவியினை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனை அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சயாவுடீன் பார்னி , அமீர்குசுரு, வாசப் போன்றவர்களின் கூற்றுகள் படி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் அமைந்திருந்த கோயில்களை இடித்து அங்கிருந்த பொன், பொருள்களைக் கொள்ளையிட்டு சிற்பங்கள் பலவற்றையும் சிதைப்பதற்குக் காரணமானான். மேலும் கொள்ளையிட்ட பொருள்களை தில்லிக்குக் கொண்டு சென்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் மற்றும் இரண்டாம் வீரபாண்டியன் போன்றோரிடமிருந்து மாலிக்காபூர் 612 யானைகள், 20,000 குதிரைகள், 96,000 மணங்கு பொன், முத்து மற்றும் அணிகலன்கள் அடங்கிய பெட்டிகளினை எடுத்துச் சென்றான் என பார்னி என்பவன் குறித்துள்ளான். 1320களில் மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றி 1378ஆம் ஆண்டு வரை ஆண்டான். அவன் வழி வந்தவர்கள் நாயக்கர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள். 1330 ஆம் ஆண்டளவில் பாண்டிய நாட்டில் முகமதியர் ஆட்சி நுழைந்தது. தில்லி துக்ளக்கின் அதிகாரியாகத் திகழ்ந்த 'செலாலுதீன் அசன்சா' மதுரையினைக் கைப்பற்றி ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் அல்லாவுடீன் உடான்றி, குட்புதீன், நாசிருடீன், அடில்சா, பஃருடீன் முபாரக் சா, அல்லாவுதீன் சிக்கந்தர்சா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இபின்படூடா என்பவரின் குறிப்பின் படி இம்மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உள்நாட்டுக் குழப்பங்கள், கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு, விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் துன்புற்றனர் என அவர் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முகமதியர் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்:-
| 87
|
இம்மன்னர்களது கல்வெட்டுகள் பாண்டிய நாடெங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் போசள மன்னனான மூன்றாம் வீரவல்லாள தேவனும் போர்க்களத்தில் இறந்தான் இச்செய்தியை விசயநகர அரசனொருவன் அறிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| 88
|
ராயர்களின் ஆட்சி
பாண்டியர் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த சமயம் வாணாதிராயர்கள் பலர் இருந்தனர். புதுக்கோட்டை கோனாடு இருந்த பொழுது பிள்ளை குலசேகர வாணாதிராயன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான். இராமநாதபுரத்தில் கேரள சிங்கவள நாடு இருந்தது அங்கு வாணாதிராயன் என்பவன் ஆட்சி செய்தான். இவர்களின் பின்னர் பாண்டியர் ஆட்சி வீழ்ச்சியடையத் தொடங்கியது.
சிரீவல்லிபுத்தூரில் 1453 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டில் "மகாபலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் மதுராபுரி நாயகன், பாண்டிய குலாந்தகன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொ.ஊ. 1483 ஆம் ஆண்டளவில் வரையப்பட்ட கல்வெட்டொன்றின்படி மாவலிவாணாதிராயர் பாண்டியருக்குத் திறை செலுத்தினர் எனக்குறிப்பிடும். பாண்டியர் வலிமை குன்றிய வேளை ராயர்கள் மதுரையினை ஆட்சி செய்துள்ளனர். புதுக்கோட்டை குடுமியான் மலைக் கல்வெட்டில் பாண்டியர் ராயரிடம் போரில் தோற்றமை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயர்களின் ஆட்சி 17 ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்தது பாண்டியர்களின் ஆட்சி இக்காலத்தில் இல்லாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
| 89
|
விசய நகரப் பேரரசாட்சி
பொ.ஊ. 1310 முதல் 1748 ஆம் ஆண்டு வரை தமிழகத்தினை விசயநகரப் பேரரசு ஆண்டது. நாயக்க மன்னர்கள் அரசியல் அதிகாரிகளாக ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள் ஆட்சிக் காலங்களில் தமிழகத்தில் கோயில்கள், மண்டபங்கள், சிற்பக் கூடங்கள், உலகப் புகழ்பெற்ற சிற்பங்கள் போன்றனவை சிறப்பம்சமாக விளங்கின.சேர, சோழ, பாண்டியர் போன்ற பேரரசுகள் விசய நகரப் பேரரசு காலத்தில் வீழ்ச்சியுற்றிருந்தன. பல பாண்டிய மன்னர்கள் குறுநில மன்னர்களாக இருந்து விசய நகரப் பேரரசிடம் திறை செலுத்தியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பாண்டிய மன்னர்கள்.
பராக்கிரம பாண்டியன் எனற பெயரில் நாயக்கர் காலத்தில் மூன்று மன்னர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| 90
|
பொ.ஊ. 1387 ஆம் ஆண்டளவில் பராக்கிரம பாண்டியன் திருக்குற்றாலத்தில் திருப்பணி புரிந்தான்.
பொ.ஊ. 1384–1415 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் பராக்கிரம பாண்டியன் என்ற பெயருடைய ஒன்னொருவன்.
பொ.ஊ. 1401–1434 வரை பராக்கிரம பாண்டியன் ஒருவன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.
சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்ற பெயர்கொண்ட ஒருவன் பொ.ஊ. 1396 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றான் என கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டு குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
திருப்புத்தூரி, குற்றாலம் ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுக் குறிப்புகளின் படி பொ.ஊ. 1401 முதல் 1422 வரை சடையவர்மன் விக்கிரம பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் பாண்டிய நாட்டினை ஆண்ட உதிரி அரசர்களாவர். இவர்கள் ஆட்சிக் காலத்து தலைநகரங்கள் மற்றும் இவர்கள் பணிகள் செய்த போர்கள் போன்றவற்றின் தகவல்கள் கிடைக்காததும் குறிப்பிடத்தக்கது.
| 91
|
பாண்டிய நாட்டுக் குறுநில மன்னர்கள்
மானாபரணன், வீரகேரள பாண்டியன், சுந்தர பாண்டியன், விக்கிரம பாண்டியன், வீரபாண்டியன் ஆகிய ஐந்து மன்னர்களும் பாண்டிய நாட்டில் சோழராட்சி இருந்த சமயம் சோழ மன்னன் இராசாதிராசனால் அடக்கி வைக்கப்பட்டனர். மானாபரணன் மற்றும் வீரகேரளன் ஆகியோர் இராசராசனிடம் போரிட்டுத் தோற்று இறந்தனர். சுந்தர பாண்டியன் போரில் தோற்று முல்லையூரில் ஒளிந்துகொண்டான். விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிற்குத் தப்பி ஓடினான். வீரபாண்டியன் பொ.ஊ. 1048 ஆம் ஆண்டளவில் கொல்லப்பட்டான். கோலார் மிண்டிக்கல் கல்வெட்டு மற்றும் இராசாதிராசன் திருக்களச் செப்பேடு போன்றனவற்றில் இத்தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| 92
|
பாண்டியர் ஆட்சி இயல்
நாட்டியல்
தமிழகத்தின் தென்பகுதியில் பாண்டிய நாடு அமைந்திருந்தது. மேற்கே சேர நாடும், மலை நாடும்; கிழக்கே கடல், வடக்கே சோழ நாடும், கொங்கு நாடும்; தெற்கே கடலும் குமரிமுனை இதன் எல்லையாகவும் இருந்தன. இன்றைய மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை வெள்ளாற்றுக்குத் தெற்குப் பகுதியில் அமையப்பெற்றிருந்தது எனலாம். சங்க காலத்தில் ஊர், கூற்றம், மண்டலம், நாடு என்ற பிரிவில் அமைந்திருந்தன.
| 93
|
என்ற புறப் பாடல்கள் ஊரும், நாடும் எனக் கூறும்.
இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்ற தொடர்மொழி அமைப்புச் சான்றாக விளங்குகின்றது.
ஊர்கள், கூற்றங்கள், வளநாடுகள், மண்டலம் என்ற அமைப்பில் பிரிக்கப்பட்டிருந்தது.
பாண்டியர் காலத்து நாடுகளும் கூற்றங்களும்
ஊர்கள் கூற்றம், நாடுகளில் அமைந்தன.
| 94
|
பாண்டியநாடு பிரிவுகள்
அளநாடு தேனி சின்னமனூர் கம்பம் வட்டாரம்
பொங்கலூர்கா நாடு, வைகாவூர் நாடு பழனி வட்டம்,
அண்டநாடு ஒட்டன்சத்திரம் வட்டம்,
ஆற்றூர்நாடு, அதம்ப நாடு திண்டுக்கல் வட்டம்,
வடகல்லகநாடு, தென்கல்லகநாடு, பாகனூர்கூற்றம் ஆகியவை நிலக்கோட்டை வட்டம்
பூம்பாறை நாடு கொடைக்கானல் வட்டம்,
நெடுங்களநாடு வத்தலக்குண்டு வட்டம்,
துவராபதிநாடு, புறமலை நாடு நத்தம் வட்டம்,
கானாடு, திருமயம் வட்டாரம்
கோனாடு புதுகோட்டை வட்டாரம்
மிழலை நாடு ஆவுடையார்கோவில் வட்டாரம்
பள்ளிநாடு வேடசந்தூர் வட்டம் ஆகிய பகுதிகளை குறிக்கிறது.
| 95
|
(நாடும் கூற்றமும் அடங்கியது வளநாடு)
பாண்டியர்களின் இயற்பெயரும், சிறப்புப் பெயரும் வளநாடு பெயராக அமைந்தன.
| 96
|
குடும்பவியல்
அரசன், அரசி, இளவரசன், பட்டத்தரசி என்ற முறையில் குடும்பம் அமைந்தது. பாண்டிய அரசன், வேந்தன் எனப்பட்டான். பட்டத்தரசி, பாண்டிமாதேவி எனப்பட்டாள். சில பாண்டிய அரசர்கள், பட்டத்தரசியை அன்றி பிற பெண்களையும் மணந்திருந்தனர். புராணங்களின் படி பெண்களும் முடிசூடி ஆட்சி நடத்தியதோடு போரும் செய்திருக்கின்றனர். அரசனின் மூத்த மகனே இளவரசு பட்டம் பெற இயலும். இதனால், மாற்றாந்தாய் மக்களுடன் பகைமை வருதலும் உண்டு. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் மகன்கள் வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் ஆகிய பாண்டிய வேந்தர்களின் வரலாறுகள் இதற்குச் சான்றாகும்.
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தன் ஊழ்வினையால், கண்ணகி நீதி கேட்டதால் இறந்தான். அந்நேரம், இளவரசனாக கொற்கையில் இருந்த வெற்றுவேற்செழியன், மதுரைக்கு வந்து முடிசூடினான். ஐந்து பேர் ஒரே காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட நிலையும் இருந்தது. ஆட்சியின் காரணமாக அண்ணன் தம்பி, தந்தை மகன் கருத்து வேறுபாடுகள் வந்தபோது, ஆட்சிக்காக தந்தையை மகன் கொன்ற ஒரு நிகழ்வு பிற்காலப் பாண்டியரின் வரலாற்றில் இருந்தது.
| 97
|
அரசியல் ஆட்சி இயல்
பாண்டியரின் ஆட்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள் அமைச்சர்கள். அடுத்த நிலையில் அரசியல் அதிகாரிகள், படைத் தலைவர்கள் இருந்தனர். அரையர், நாடுவகை செய்வோர். வரியிலார், புரவுவரித் திணைக்களத்தார், திருமுகம் எழுதுவோர் ஆகியவர்களும் அரசனுக்கு ஆட்சியில் துணை செய்தவர்கள் ஆவார்கள்.
1-அரையர் உள்நாட்டுப் பணி புரியும் நாட்டதிகாரிகள் ஆவார்கள். இவர்கள், நாட்டைச் சுற்றி வந்து, குடிமக்கள் குறை கேட்டு நீதி வழங்குவர்.
2-நாடுவகை செய்வோர் ஊரில் உள்ள நிலங்களில் அளந்து பணி செய்வர்.
3- வரியிலார் அனைத்து வகையிலும் ஊர் மக்கள் அரசுக்கு வரி செலுத்துவதை கணக்கு வைப்பார்கள்.
4-புரவு வரித்திணைக் களத்தார் வட்டாட்சியர்போல் செயல்படுபவர்கள்.
பாண்டிய வேந்தர்கள் அரசியல் அதிகாரிகளின் பணியைப் பாராட்டி பட்டங்களினையும் அளித்தனர்.
அவை வருமாறு:-
| 98
|
காவிரி, ஏனாதி பட்டம் பெற்றவர்களுக்கு பொற்பூ, மோதிரம், இறையிலி நிலம் அளித்துக் கௌரவிப்பது பாண்டியர்களின் வழக்கமாகும்.
| 99
|
End of preview. Expand
in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 11