id int64 0 399 | title stringlengths 18 24 | poem stringlengths 402 1.05k | note stringlengths 18 224 | poet stringlengths 0 66 |
|---|---|---|---|---|
0 | அகநானூறு - பாயிரம் | நின்ற நீதி, வென்ற நேமி,
பழுதில் கொள்கை, வழுதிய ரவைக்கண்,
அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து
வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ,
அருந்தமிழ் மூன்றுந் தெரிந்த காலை,
ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்,
நெடிய வாகி யடிநிமிர்ந் தொழுகிய
இன்பப் பகுதி யின்பொருட் பாடல்,
நானூ றெடுத்து நூல்னவில் புலவர்,
களித்த மும்மதக் களிற்றியா னை... | இத் தொகைக்குக் கருத்து அகவலால் பாடினான்
இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன். | |
1 | அகநானூறு - 1. பாலை | 'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற் போர் நெடு வேள் ஆவி,
அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,
சிறு காரோடன் பயினொடு சேர்த்திய
கல் போல் பிரியலம்' என்ற சொல்தாம்
மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த
வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப்
பொலங்கல வெறுக்கை தருமார் நிலம் பக,
அழல் போல் வெங்கதிர் பைத... | பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச்
சொல்லியது | மாமூலனார் |
2 | அகநானூறு - 2. குறிஞ்சி | கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை
ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த
சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு
பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்
அறியாது உண்ட கடுவன் அயலது
கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்
குறியா இன்பம், எளிதின், நின் மலைப்
பல் வேறு விலங்கும், எய்தும் நாட!
குறித்த இன்பம் நினக... | பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீஇத் தோழி
வரைவு கடாயது. | கபிலர் |
3 | அகநானூறு - 3. பாலை | இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக... | முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள்
வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம்
நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும்
பொருள் வலிக்கப்பட்ட நெ | |
4 | அகநானூறு - 4. முல்லை | முல்லை வைந் நுனை தோன்ற, இல்லமொடு
பைங் காற் கொன்றை மென் பிணி அவிழ,
இரும்பு திரித்தன்ன மா இரு மருப்பின்,
பரல் அவல் அடைய, இரலை, தெறிப்ப,
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப,
கருவி வானம் கதழ் உறை சிதறி,
கார் செய்தன்றே, கவின் பெறு கானம்.
குரங்கு உளைப் பொலிந்த கொய்சுவற் புரவி,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்கு வள்பு அரிய,
பூத்த பொங்கர... | தோழி தலைமகளைப் பருவங் காட்டி
வற்புறுத்தியது. | குறுங்குடி மருதனார் |
5 | அகநானூறு - 5. பாலை | அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள்
விளிநிலை கொளாள் தமியளன் மென்மெல
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள்
கண்ணிய துணரா வளவை யண்ணுதல்
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த வோமை முதையலங் காட்டுப்
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப
வுதிர்வன பட... | பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. | |
6 | அகநானூறு - 6. மருதம் | அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,
ஏந்து எழில் ஆகத்துப் ... | பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக்
கிழத்தி கூறியது. | பரணர் |
7 | அகநானூறு - 7. பாலை | 'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;
தலை முடிசான்ற; தண் தழை உடையை;
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய;
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை;
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்!
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை
ஏறுடை ... | மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப்
பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. | கயமனார். |
8 | அகநானூறு - 8. குறிஞ்சி | ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்,
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,
படு கடுங் களிற்றின் வர... | தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச்
சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. | பெருங்குன்றூர் கிழார். |
9 | அகநானூறு - 9. பாலை | கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின்,
வில்லோர் தூணி வீங்கப் பெய்த
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை,
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு,
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய்
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு,
ஆலி வானின் காலொடு பாறி,
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின்,
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்
அத்தம் நண்ண... | வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன்
கேட்பச் சொல்லியது. | கல்லாடனார் |
10 | அகநானூறு - 10.நெய்தல் | வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
நெய்தல் உண்கண் பைதல கலுழ,
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
பழந் த... | இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று
நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. | அம்மூவனார் |
11 | அகநானூறு - 11. பாலை | வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி,
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப்
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்க... | தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து,
ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்'என்பது படச்
சொல்லியது. | அவ்வையார் |
12 | அகநானூறு - 12. குறிஞ்சி | யாயே, கண்ணினும் கடுங் காதலளே;
எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப,
எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்;
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்,
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை,
விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார்,
குறவர் ஊன்றி... | பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால்
செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து,
வரைவு கடாயது. | கபிலர் |
13 | அகநானூறு - 13. பாலை | தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
வள் வாய் அம்பின், கோடைப் ... | பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி
செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம். | பெருந்தலைச் சாத்தனார் |
14 | அகநானூறு - 14. முல்லை | 'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ,
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர,
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
வீங்கு மாண் செருத்... | பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச்
சொல்லியது. | ஒக்கூர் மாசாத்தனார் |
15 | அகநானூறு - 15 . பாலை | எம் வெங் காமம் இயைவது ஆயின்,
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
தோழிமாரும் யானும் புலம்ப,
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்
ப... | மகட்போக்கிய தாய்சொல்லியது. | மாமூலனார் |
16 | அகநானூறு - 16. மருதம் | நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,... | பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன்,
'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. | சாகலாசனார் |
17 | அகநானூறு - 17. பாலை | வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்,
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ,
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
முயங்கினள் வதியும்மன்னே! இனியே,
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
சிறு முதுக்குறைவி சில... | மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. | கயமனார் |
18 | அகநானூறு - 18. குறிஞ்சி | நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
மராஅ யானை மதம் தப ஒற்றி,
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப!
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள்,
வாழ்குவள்அல்லள்... | தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. | கபிலர் |
19 | அகநானூறு - 19. பாலை | அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி
வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை,
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம்,
எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று,
ஒழியச் சூழ்ந்தனைஆயின், தவிராது,
செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்ல... | நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப்
பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. | பொருந்தில்
இளங்கீரனார் |
20 | அகநானூறு - 20. நெய்தல் | பெருநீர் அழுவத்து எந்தை தந்த
கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி,
எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ,
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித்
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி,
கொண்டல் இடு மணல் குரவை முனையின்
வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப்
பல் பூங் கானல் அல்கினம... | பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது. | உலோச்சனார் |
21 | அகநானூறு - 21. பாலை | 'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புர... | பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன்
இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. | காவன்முல்லைப் பூதனார் |
22 | அகநானூறு - 22. குறிஞ்சி | அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
இது என அறியா மறுவரற் பொழுதில்,
படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
... | வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து,
தலைமகள் ஆற்றாளாக,தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது;தலைமகன்
இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். | வெற |
23 | அகநானூறு - 23. பாலை | மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல்,
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,
காடே கம்மென்றன்றே; அவல,
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ,
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே;
அனையகொல் வாழி, தோழி... | தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச்
சொல்லியது. | ஒரோடோகத்துக் கந்தரத்தனார் |
24 | அகநானூறு - 24. முல்லை | வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை,
சிதரல் அம் துவலை தூவலின், மலரும்
தைஇ நின்ற தண் பெயல் கடைநாள்,
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,
விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி,
மங்குல் மா மழை, தென் புலம் படரும்
பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி,
தம் ஊரோளே, நன... | தலைமகன் பருவங் கண்டு சொல்லியது.
வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். | ஆவூர் மூலங் கிழார் |
25 | அகநானூறு - 26. மருதம் | முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர்
பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்
அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப்
புலத்தல் கூடுமோ தோழி! அல்கல்
பெருங் கதவு பொருத யானை மருப்பின்
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம்... | தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால்
தான் வாயில் பெறாது,ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன்
நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. | பாண்டியன்
கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி |
26 | அகநானூறு - 27. பாலை | "கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம் அழ,
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார்,
செல்ப" என்ப' என்போய்! நல்ல
மடவைமன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
நகைப் பொலிந... | செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத்
தோழி சொல்லியது. | மதுரைக்கணக்காயனார் |
27 | அகநானூறு - 27. பாலை | "கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
கானம் கடிய என்னார், நாம் அழ,
நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார்,
செல்ப" என்ப' என்போய்! நல்ல
மடவைமன்ற நீயே; வடவயின்
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
நகைப் பொலிந... | செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத்
தோழி சொல்லியது. | மதுரைக்கணக்காயனார் |
28 | அகநானூறு - 28. குறிஞ்சி | மெய்யின் தீரா மேவரு காமமொடு
எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி!
கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே
அருவி ஆன்ற பைங் கால் தோறும்
இருவி தோன்றின பலவே. நீயே,
முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,
பரியல் நாயொடு பல் மலைப் படரும்
வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்
பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,
கிள்ளைத் தௌ விளி இடைஇ... | தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச்
சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. | பாண்டியன் அறிவுடைநம்பி |
29 | அகநானூறு - 29. பாலை | "தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள்,
கிடந்து உயிர் மறுகுவதுஆயினும், இடம் படின்
வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வு இல் உள்ளம் தலைதலைச் சிறப்ப,
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று
இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின்
மாவின் நறு வடி போல, காண்தொறும்
மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்... | வினை முற்றி மீண்ட தலைமகன், 'எம்மையும்
நினைத்தறிதிரோ?' என்ற தலைமகட்குச் சொல்லியது. | வெள்ளாடியனார் |
30 | அகநானூறு - 30. நெய்தல் | நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
பெருங் களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
பாடு பல அமைத்து, கொ... | பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி
சொல்லியது. | முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் |
31 | அகநானூறு - 31. பாலை | நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,
'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என,
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு,
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
கணவிர மாலை இடூஉக் க... | 'பிரிவிடை ஆற்றாளாயினாள்' என்று பிறர்
சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. | மாமூலனார் |
32 | அகநானூறு - 32. குறிஞ்சி | நெருநல் எல்லை ஏனல் தோன்றி,
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண்
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,
'சூரரமகளிரின் நின்ற நீ மற்று
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்ப... | பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி
தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம். | நல்வெள்ளியார் |
33 | அகநானூறு - 33. பாலை | வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி,
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய,
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை,
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல்
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும்
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம்
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள்
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண்
தௌயா ந... | தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. | மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் |
34 | அகநானூறு - 34. முல்லை | சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல்
கண்ணியின் மலரும் தண் நறும் புறவில்,
தொடுதோற் கானவன் கவை பொறுத்தன்ன
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை
செறி இலைப் பதவின் செங் கோல் மென் குரல்
மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தி,
தௌ அறல் தழீஇய வார் மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற,
... | வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச்
சொல்லியது. | மதுரை மருதன் இளநாகனார் |
35 | அகநானூறு - 35 . பாலை | ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,
வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப
தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை,
நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர்
முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த
வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்
வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,
நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக... | மகட்போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப்
பராஅயது. | குடவாயிற் கீரத்தனார் |
36 | அகநானூறு - 36. மருதம் | பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
வரு புனல் வையை வார் மணல் அகன... | தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த
தலைமகனொடு புலந்து சொல்லியது. | மதுரை நக்கீரர் |
37 | அகநானூறு - 37. பாலை | மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி,
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலி... | தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து
சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம். | விற்றூற்று மூதெயினனார் |
38 | அகநானூறு - 38. குறிஞ்சி | விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன்.
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ் கயிற்று
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
... | தோழி தலைமகன் குறை கூறியது; பகலே
சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்;தோழி
குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம். | வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் |
39 | அகநானூறு - 39. பாலை | 'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து,
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின்
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
காடு கவர் பெருந... | பொருள் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு
சொல்லியது. | மதுரைச் செங்கண்ணனார் |
40 | அகநானூறு - 40. நெய்தல் | கானல், மாலைக் கழிப் பூக் கூம்ப,
நீல் நிறப் பெருங் கடல் பாடு எழுந்து ஒலிப்ப,
மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
குவை இரும் புன்னைக் குடம்பை சேர,
அசை வண்டு ஆர்க்கும் அல்குறுகாலை,
தாழை தளரத் தூக்கி, மாலை
அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க்
காமர் நெஞ்சம் கையறுபு இனைய,
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்
அறாஅலியரோ அவருடைக் கேண்ம... | தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி, கிழத்தி
தோழிக்குச் சொல்லியது. | குன்றியனார் |
41 | அகநானூறு - 41. பாலை | வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
ஓதைத் தௌ விளி புலம்தொறும் பரப்ப,
கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
நாம் பிரி ... | தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்து,
கிழத்தியை நினைந்து சொல்லியது. | குன்றியனார் |
42 | அகநானூறு - 42. குறிஞ்சி | மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்,
தளிர் ஏர் மேனி, மாஅயோயே!
நாடு வறம் கூர, நாஞ்சில் துஞ்ச,
கோடை நீடிய பைது அறு காலை,
குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
சென்று சேக்கல்லாப் புள்ள, உள் இல்
என்றூழ் வியன்குளம் நிறைய வீசி,
பெரும் பெயல் பொழிந்த ஏம வை... | தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச்
சொல்லியது. | கபிலர் |
43 | அகநானூறு - 43. பாலை | கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
கொய் அகை முல்லை காலொடு மயங... | தலைமகன் பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குச் சொல்லியது. | மதுரையாசிரியர் நல்லந்துவனார் |
44 | அகநானூறு - 44. முல்லை | வந்து வினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே;
முரண் செறிந்திருந்த தானை இரண்டும்
ஒன்று என அறைந்தன பணையே; நின் தேர்
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது,
ஊர்க, பாக! ஒரு வினை, கழிய
நன்னன், ஏற்றை, நறும் பூண் அத்தி,
துன் அருங் கடுந் திறற் கங்கன், கட்டி,
பொன் அணி வல்வில் புன்றுறை, என்று ஆங்கு
அன்று அ... | வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. | குடவாயிற் கீரத்தனார் |
45 | அகநானூறு - 45 . பாலை | வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
காடு இறந்தனரே, காதலர். மாமை,
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழுமுதல்... | வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. | வெள்ளிவீதியார் |
46 | அகநானூறு - 46. மருதம் | சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
வதுவை அயர்ந... | வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி
வாயில் மறுத்தது. | அள்ளூர் நன் முல்லையார் |
47 | அகநானூறு - 47. பாலை | அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன் இயைந்து,
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
அகன் சுடர் கல்... | தலைமகன் இடைச் சுரத்து அழிந்த
நெஞ்சிற்குச் சொல்லியது. | ஆலம்பேரி சாத்தனார் |
48 | அகநானூறு - 48. குறிஞ்சி | 'அன்னாய்! வாழி! வேண்டு, அன்னை! நின் மகள்,
'பாலும் உண்ணாள், பழங்கண் கொண்டு,
நனி பசந்தனள்' என வினவுதி. அதன் திறம்
யானும் தெற்றென உணரேன். மேல் நாள்,
மலி பூஞ் சாரல், என் தோழிமாரோடு
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி,
'புலி புலி!' என்னும் பூசல் தோன்ற
ஒண் செங்கழுநீர்க் கண் போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ் செய் மாலையன்,
பக்கம் சே... | செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு
நின்றது. | தங்கால் முடக் கொற்றனார் |
49 | அகநானூறு - 49. பாலை | 'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி,
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல் கால் முயங்கினள்மன்னே! அன்ன... | உடன்போயின தலைமகளை நினைந்து,
செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது. | வண்ணப்புறக் கந்தரத்தனார் |
50 | அகநானூறு - 50. நெய்தல் | கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்;
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்;
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப,
பகலும் நம்வயின் அகலானாகிப்
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது,
மல்லல் மூதூர் மறையினை சென்று,
சொல்ல... | தோழி பாணனுக்குச் சொல்லியது. | கருவூர்ப்
பூதஞ்சாத்தனார் |
51 | அகநானூறு - 51. பாலை | ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக்
கதிர் தெற,
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின... | பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. | பெருந்தேவனார் |
52 | அகநானூறு - 52. குறிஞ்சி | 'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்,
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்,
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின்
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம்
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச்
சிலையுடை இடத்தர் போதரும் நாடன்
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக... | தலைமகள் வேறுபட்டமை அறிந்த
செவிலித்தாய்க்கு, தோழி,'அறத்தொடு நிற்றும்' என, தலைமகள் சொல்லியது. | நொச்சிநியமங்
கிழார் |
53 | அகநானூறு - 53. பாலை | அறியாய், வாழி தோழி! இருள் அற
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின... | வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள்
சொல்லியது. | சீத்தலைச் சாத்தனார் |
54 | அகநானூறு - 54. முல்லை | விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற்
காரும் ஆர்கலி தலையின்று. தேரும்
ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
வள் வாய் ஆழி உள் உறுபு உருள,
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி,
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோற் கைக் க... | வினை முடித்து மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. | மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் |
55 | அகநானூறு - 55 . பாலை | காய்ந்து செலற் கனலி கல் பகத் தெறுதலின்,
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை,
உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின்,
விளி முறை அறியா வேய் கரி கானம்,
வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள்
கழிந்ததற்கு அழிந்தன்றோஇலெனே! ஒழிந்து யாம்
ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து, அசைஇ,
வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன், கனவ ஒண் பட... | புணர்ந்துடன் போன தலைமகட்கு இரங்கிய தாய்
தெருட்டும் அயலிலாட்டியார்க்கு உரைத்தது. | மாமூலனார் |
56 | அகநானூறு - 56. மருதம் | நகை ஆகின்றே தோழி! நெருநல்
மணி கண்டன்ன துணி கயம் துளங்க,
இரும்பு இயன்றன்ன கருங் கோட்டு எருமை,
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
கூம்பு விடு பல் மலர் மாந்தி, கரைய
காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப,
மெல்கிடு கவுள அல்குநிலை புகுதரும்
தண் துறை ஊரன் திண் தார் அகலம்
வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய,
பரிவொடு வரூஉம் பாணன் தெ... | பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன்
மனைக்கு வந்தானாக,தோழிக்குத் தலைமகள் சொல்லியது. | மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் |
57 | அகநானூறு - 57. பாலை | சிறு பைந் தூவிச் செங் காற் பேடை
நெடு நீர் வானத்து, வாவுப் பறை நீந்தி,
வெயில் அவிர் உருப்பொடு வந்து, கனி பெறாஅது,
பெறு நாள் யாணர் உள்ளி, பையாந்து,
புகல் ஏக்கற்ற புல்லென் உலவைக்
குறுங் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ்
இரும் பிணர்த் துறுகல் தீண்டி, வளி பொர,
பெருங் கை யானை நிவப்பின் தூங்கும்
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை,... | பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை
நினைந்து சொல்லியது. | நக்கீரர் |
58 | அகநானூறு - 58. குறிஞ்சி | இன் இசை உருமொடு கனை துளி தலைஇ,
மன் உயிர் மடிந்த பானாட் கங்குல்,
காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,
வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத்
தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை,
கூதிர், இல் செறியும் குன்ற நாட!
வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ்
விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற,
நின் மார்பு அடைதலின் இனிது ஆகி... | சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள்
சொல்லியது. | மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் |
59 | அகநானூறு - 59. பாலை | தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்
பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்
வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,
அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்
மரம் செல மிதித்த மாஅல் போல,
புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை,
நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்
படி ஞிமிறு கடியும் களிறே தோழி!
சூர் மருங்கு அற... | தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட
கிழத்திக்குத் தோழி சொல்லியது. | மதுரை மருதன் இளநாகன் |
60 | அகநானூறு - 60. நெய்தல் | பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து,
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி அன்ன எம்
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய;
'ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை,
கோத... | தலைமகற்குத் தோழி செறிப்பு அறிவுறீஇ,
வரைவு கடாயது. | குடவாயிற் கீரத்தனார் |
61 | அகநானூறு - 61. பாலை | 'நோற்றோர்மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத்
தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர்
நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து
ஆழல் வாழி, தோழி! தாழாது,
உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்
வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண் கோடு கொண்ட... | தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட
தலைமகட்குத் தோழி சொல்லியது. | மாமூலனார் |
62 | அகநானூறு - 62. குறிஞ்சி | அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்,
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள்,
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப,
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,
கடும் புனல் மலிந்த காவிரிப் ... | அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. | பரணர் |
63 | அகநானூறு - 63. பாலை | கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி,
திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு
பெரு மலை இறந்தது நோவேன்; நோவல்
கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,
முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி
பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப,
கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,
அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,
கன்ற... | தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன்
மகளுக்குச் சொல்லியது. | கருவூர்க் கண்ணம்புல்லனார் |
64 | அகநானூறு - 64. முல்லை | களையும் இடனால் பாக! உளை அணி
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய,
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி,
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக,
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின்,
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர,
பாம்பு உறை பு... | வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. | ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார் |
65 | அகநானூறு - 65 . பாலை | உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;
நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற்
பாடிச் சென்ற பரிசிலர் போல
உவ இனி வாழி, தோழி! அவரே,
பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி,
... | வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன்
உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. | மாமூலனார் |
66 | அகநானூறு - 66. மருதம் | 'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி!
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்
இயன்ற அணியன், இத் தெரு இறப்போன்
மாண் தொழில் மா மணி கறங... | பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப்
புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. | செல்லூர்க் கோசிகன் கண்ணனார் |
67 | அகநானூறு - 67. பாலை | யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்,
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை,
அரம் போழ் நுதிய வாளி அம்பின்,
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார்,
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு ந... | பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. | நோய்பாடியார் |
68 | அகநானூறு - 68. குறிஞ்சி | 'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;
பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள்,
அன்னையும் கனை துயில் மடிந்தனள்... | தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி
தலைமகட்குச் சொல்லியது. | ஊட்டியார் |
69 | அகநானூறு - 69. பாலை | ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
கான மட மரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோர... | 'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான்,
தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது. | உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் |
70 | அகநானூறு - 70. நெய்தல் | கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே
அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
பலரும் ஆங்கு அறிந்தனர்மன்னே; இனியே
வதுவை கூடிய பின்றை, புதுவது
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல... | தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச்
சொல்லியது. | மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் |
71 | அகநானூறு - 71. பாலை | நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர்
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
மை இல் மான் இனம் மருள, பையென
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப,
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த புலம்ப... | பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய
தலைமகட்குத் தோழி சொல்லியது | அந்தியிளங்கீரனார் |
72 | அகநானூறு - 72. குறிஞ்சி | இருள் கிழிப்பது போல் மின்னி, வானம்
துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள்,
மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம்
பொன் எறி பிதிரின் சுடர வாங்கி,
குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை
இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண்,
ஆறே அரு மரபினவே; யாறே
சுட்டுநர்ப் பனிக்கும் சூருடை முதலைய;
கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க,
'அஞ்சுவம் தமிய... | தலைமகன் இரவுக் குறிக்கண்
சிறைப்புறத்தானாக, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம். | எருமை வெளியனார் மகனார் கடலனார் |
73 | அகநானூறு - 73. பாலை | பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ;
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு
ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க,
வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய்,
நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர
'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என,
என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி
இருவேம் நம் பட... | தலைமகன் பொருள்வயிற் பிரிகின்றான்
குறித்த பருவ வரவு கண்டு அழிந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. | எருமை வெளியனார் |
74 | அகநானூறு - 74. முல்லை | வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து,
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த,
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப,
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய்,
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்,
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
மர... | தலைமகன் பிரிவின்கண் அழிந்த கிழத்தி
வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. | மதுரைக் கவுணியன் பூதத்தனார் |
75 | அகநானூறு - 75 . பாலை | "அருள் அன்று ஆக, ஆள்வினை, ஆடவர்
பொருள்" என வலித்த பொருள் அல் காட்சியின்
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது,
எரி சினம் தவழ்ந்த இருங் கடற்று அடைமுதல்
கரி குதிர் மரத்த கான வாழ்க்கை,
அடு புலி முன்பின், தொடு கழல் மறவர்
தொன்று இயல் சிறுகுடி மன்று நிழற் படுக்கும்
அண்ணல் நெடு வரை, ஆம் அறப் புலர்ந்த
கல் நெறிப் படர்குவர்ஆயின் ... | 'பொருள்வயிற் பிரிவர்' என வேறுபட்ட தலைமகட்கு,
'பிரியார்'எனத் தோழி சொல்லியது. | மதுரைப்போத்தனார் |
76 | அகநானூறு - 76. மருதம் | மண் கனை முழவொடு மகிழ் மிகத்
தூங்க,
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை
அவை புகு பொருநர் பறையின், ஆனாது,
கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில்,
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன்,
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல்,
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என... | 'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று
கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. | பரணர் |
77 | அகநானூறு - 77. பாலை | 'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,
துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற
இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும்
குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,
கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்,
உயிர் திறம் பெயர, நல் ... | தலைமகன் பிரியக் கருதிய நெஞ்சிற்குச்
சொல்லிச் செலவழுங்குவித்தது. | மருதன் இள நாகனார் |
78 | அகநானூறு - 78. குறிஞ்சி | 'நனந்தலைக் கானத்து ஆளி அஞ்சி,
இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின்,
வரி ஞிமிறு ஆர்க்கும், வாய் புகு, கடாத்து,
பொறி நுதற் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல்
இரும் பிணர்த் தடக் கையின், ஏமுறத் தழுவ,
கடுஞ்சூல் மடப் பிடி நடுங்கும் சாரல்,
தேம் பிழி நறவின் குறவர் முன்றில்,
முந்தூழ் ஆய் மலர் உதிர, காந்தள்
நீடு இதழ் நெடுந் துடுப்பு... | களவுக் காலத்துப் பிரிந்து வந்த
தலைமகற்குத் தோழி சொல்லியது. | மதுரை நக்கீரனார் |
79 | அகநானூறு - 79. பாலை | தோட் பதன் அமைத்த கருங் கை ஆடவர்
கனை பொறி பிறப்ப நூறி, வினைப் படர்ந்து,
கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில்,
பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய
வன் புலம் துமியப் போகி, கொங்கர்
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும்
சேதா எடுத்த செந் நிலக் குரூஉத் துகள்
அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
நனந்தலை அழுவம், நம்மொடு துணைப்... | பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச்
சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. | குடவாயிற் கீரத்தனார் |
80 | அகநானூறு - 80. நெய்தல் | கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப!
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்.
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
இன மணிப்... | இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி
சொல்லியது. | மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார் |
81 | அகநானூறு - 81. பாலை | நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்
ஓங்குசினை இருப்பைத் தீம் பழம் முனையின்,
புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடுங் கோடு,
இரும்பு ஊது குருகின், இடந்து, இரை தேரும்
மண் பக வறந்த ஆங்கண், கண் பொரக்
கதிர் தெற, கவிழ்ந்த உலறுதலை நோன் சினை
நெறி அயல் மராஅம் ஏறி, புலம்பு கொள
எறி பருந்து உயவும் என்... | பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி தலைமகள்
குறிப்பறிந்து வந்து சொல்லியது. | ஆலம்பேரி சாத்தனார் |
82 | அகநானூறு - 82. குறிஞ்சி | ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
நனவுப் புகு வ... | தோழிக்குத் தலைவி அறத்தொடு நின்றது. | கபிலர் |
83 | அகநானூறு - 83. பாலை | வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
கறை அடி மடப் பிடி கானத்து அலற,
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து,
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து,
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்,
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும்
கல்லா இ... | தலைமகன் இடைச் சுரத்துத் தன்
நெஞ்சிற்குச் சொல்லியது. | கல்லாடனார் |
84 | அகநானூறு - 84. முல்லை | மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
சீறூரோளே, ... | தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது. | மதுரை எழுத்தாளன் |
85 | அகநானூறு - 85 . பாலை | 'நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
அறவர்அல்லர் அவர்' எனப் பல புலந்து,
ஆழல் வாழி, தோழி! 'சாரல்,
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
நல் ந... | தலைமகன் பிரிய, வேறுபட்ட தலைமகளைத் தோழி
வற்புறுத்தியது. | காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் |
86 | அகநானூறு - 86. மருதம் | உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை
பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்
தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன... | வாயில் மறுத்த தோழிக்குத் தலைமகன்
சொல்லியது. தலைமகளைக் கூடி இன்புற்றிருந்த தலைமகன் பண்டு நிகழ்ந்தது சொற்று
இன்புற்றிருந்ததூஉமாம், | நல்லாவூர் கிழார் |
87 | அகநானூறு - 87. பாலை | தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி,
குடுமி நெற்றி நெடு மரச் சேவல்
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி,
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென,
குன்று சேர் ... | வினை முற்றி மீளும் தலைமகன் இடைச்
சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. | மதுரைப் பேராலவாயார் |
88 | அகநானூறு - 88. குறிஞ்சி | முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்
சென்றனன்கொல்லோ தானே குன்றத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை... | இரவுக்குறி வந்த தலைமகன்
சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. | ஈழத்துப் பூதன் தேவனார் |
89 | அகநானூறு - 89. பாலை | தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,
உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,
புல் சாய் விடரகம் புலம்ப, வரைய
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,
சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து
ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்
கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,
களரி பரந்த கல் நெடு மருங்கின்,
விளர் ஊன் தின்ற... | மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. | மதுரைக்காஞ்சிப் புலவர் |
90 | அகநானூறு - 90. நெய்தல் | மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
தளை அவிழ் தாழைக் கானல் அம் பெருந் துறை,
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ,
இல்வயிற் செறித்தமை அறியாய்; பல் நாள்
வரு முலை வருத்தா, அம் பகட்டு மார்பின்,
தெருமரல் உள்ளமொடு வருந்தும், நின்வயின்,
'நீங்குக' என்று, யான் யாங்ஙனம் மொழிகோ?
அருந் திறற் கடவுட் செல்ல... | பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும்
தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு நின்று, இற்செறிப்பு அறிவுறீஇயது. | மதுரை மருதன்
இளநாகனார் |
91 | அகநானூறு - 91. பாலை | விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
பாசி தின்ற பைங் கண் யானை
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
இ... | பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி
வற்புறுத்தியது. | மாமூலனார் |
92 | அகநானூறு - 92. குறிஞ்சி | நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி,
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச்
செங் கண் இரும் புலி குழுமும் சாரல்
வாரல் வாழியர், ஐய! நேர் இறை
நெடு மென் பணைத் தோன் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே; நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்,
தண் பல் அருவித் தாழ்... | இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று
நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி வரைவு கடாயது. | மதுரைப்
பாலாசிரியர் நற்றாமனார் |
93 | அகநானூறு - 93. பாலை | கேள் கேடு ஊன்றவும், கிளைஞர் ஆரவும்,
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்,
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து;
ஆரங் கண்ணி அடுபோர்ச் சோழர்
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன
பெறல் அரு நன் கலம் எய்தி, நாடும்
செயல் அருஞ் செய்வினை முற்றினம் ஆயின்;
அரண் பல கடந்த, முரண் கொள் தானை,
வாடா வேம்பின், வழுதி கூடல்
நாள் அங்காடி நாறு... | வினை முற்றி மீளலுறும் தலைமகன் இடைச்
சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. | கணக்காயனார் மகனார் நக்கீரனார் |
94 | அகநானூறு - 94. முல்லை | தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய,
வான் எனப் பூத்த பானாட் கங்குல்,
மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன்
தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ,
வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன்,
ஐது படு கொள்ளி அங்கை காய,
குறு நரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கட் பன்றிப் பெரு நிரை கடிய,
முதைப் புன... | வினை முற்றி மீளும் தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது; தலைமகன் பாங்கற்குச் சொற்றதூஉம் ஆம். | நன்பலூர்ச் சிறு
மேதாவியார் |
95 | அகநானூறு - 95 . பாலை | பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்;
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்;
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின்
எவனோ? வாழி, தோழி! பொரிகால்
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ,
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க,
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும்
சுரம் பல கடந்... | போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத்
சொல்லியது. | ஒரோடோகத்துக் கந்தரத்தனார் |
Akananuru (அகநானூறு)
Summary
Akananuru (அகநானூறு) is one of the classical Tamil Sangam literature anthologies consisting of 400 poems. It belongs to the Ettuthokai (Eight Anthologies) corpus and focuses on the inner (அகம்) themes of life such as love, emotions, and human experiences. This dataset provides each poem along with metadata such as title, note (explanation/context), and poet information. It is useful for NLP research, classical text analysis, poetry generation, cultural studies, and digital humanities.
Supported Tasks and Benchmarks
Text Classification: Categorize poems by theme (பாலை, குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம்).
Text Generation: Train models to generate Tamil classical-style poetry.
Translation: Build parallel corpora for Tamil-English translation tasks.
Information Retrieval: Extract poet-specific works or poems by contextual notes.
Linguistic Analysis: Study Sangam-era grammar, vocabulary, and meter.
Languages
Primary Language: Tamil (ta)
Dataset Structure
Data Fields
Each entry in the dataset contains the following fields:
id: Unique identifier for the poem (integer)
title: Title of the poem (string)
poem: Full Tamil poem text (string)
note: Commentary or context note about the poem (string)
poet: Name of the poet (string, may be empty if unknown)
Example { "id": 1, "title": "அகநானூறு - 1. பாலை", "poem": "'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல்,\nஉருவக் குதிரை மழவர் ஓட்டிய\nமுருகன் நற் போர் நெடு வேள் ஆவி,...", "note": "பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது", "poet": "மாமூலனார்" }
Source Data
Original Source
The poems were sourced from TamilSurangam and other public Tamil literary repositories that host Sangam texts.
License
The dataset is distributed under the MIT License.
Dataset Creation
Motivation
The dataset was created to make Sangam literature accessible for computational linguistics, NLP research, and digital preservation of Tamil classics.
Who can use it?
Researchers: For Tamil NLP and historical text studies.
Educators & Students: For learning Tamil Sangam poetry.
Developers: To build cultural and literary AI applications.
Citation
If you use this dataset, please cite it as:
@dataset{TamilThagaval/Akananuru, title = {Akananuru (அகநானூறு) Dataset}, author = {TamilThagaval Community}, year = {2025}, publisher = {Hugging Face}, license = {MIT} }
How to Load
You can load the dataset directly from Hugging Face:
from datasets import load_dataset
dataset = load_dataset("TamilThagaval/Akananuru")
print(dataset["train"][0])
Tags
#tamil #nlp #poetry #sangam #classical-literature #digital-humanities #tamilnlp #literature #dataset #open-source #ancient-texts #language-models #culture #Akananuru #Ettuthokai
- Downloads last month
- 11