topic stringlengths 11 79 | poems listlengths 1 8 |
|---|---|
இயற்கை வளம் | [
{
"explanation": [],
"poem": [
"ஓங்கு திரை வியன் பரப்பின்ஒலி முந்நீர் வரம் பாகத்தேன் தூங்கும் உயர் சிமையமலை நாறிய வியன் ஞாலத்துவல மாதிரத்தான் வளி கொட்ப",
"விய னாண்மீ னெறி யொழுகப்பகற் செய்யும் செஞ் ஞாயிறும்இரவுச் செய்யும் வெண் திங்களும்மை தீர்ந்து கிளர்ந்து விளங்கமழைதொழில் உதவ மாதிரங் கொழுக்க... |
செயற்கைச் செழிப்பு நிலை | [
{
"explanation": [
"பொங்கி அலைவீசும் பரப்பினைக் கொண்டது கடல்.",
"அதனை எல்லையாகக் கொண்ட ஞாலத்தில் தேன்கூடுகள் தொங்கும் உயர்ந்த முகடுகளைக் கொண்ட மலைகள் தோன்றியுள்ளன.",
"வானப் பெருவெளியில் காற்று வலிமையுடன் சுழன்று கொண்டுள்ளது.",
"எல்லாவற்றையும் விடப் பெரிதாக அகன்றுள்ள விண்மீன்கள் தத்தம் வழ... |
அகத்தியரின் வழிவந்த சான்றோன் | [
{
"explanation": [
"பாண்டியன் நெடுஞ்செழியன் குற்றால மலைப் போரில் வென்று அதனைத் தனதாக்கிக் கொண்டான். அங்கு நடைபெற்ற போர் இப்பகுதியில் பேசப்படுகிறது",
"வரைதாழ் அருவி என்பது குற்றாலம். அங்கு இக்காலத்தில் உள்ள இரத்தின சபையில் தென்திசை நோக்கிக் கூத்தாடுபவர் தென்திசைக் கடவுள் தட்சிணாமூர்த்தி. தென்திசைக் க... |
வடிம்பலம்ப நின்ற பாண்டியனின் வழித்தோன்றல்நால் வகைப் படைகளின் வலிமை | [
{
"explanation": [],
"poem": [
"விழுச் சூழிய விளங்கோ டையகடுஞ் சினத்த கமழ்கடா அத்துஅளறு பட்ட நறுஞ் சென்னிய",
"வரை மருளும் உயர் தோன்றலவினை நவின்ற பேர் யானைசினஞ் சிறந்து களனு ழக்கவும்மா வெடுத்த மலிகுரூஉத் துகள்அகல் வானத்து வெயில் கரப்பவும",
"வாம் பரிய கடுந்திண் டேர்காற் றென்னக் கடிது கொட்ப... |
நெடியோனின் போர்த் திறமை | [
{
"explanation": [
"யானைப்படை",
"போர் யானையின் முன்தலைக் கொண்டையில் முகப்படாம் என்னும் சுழி தொங்கியது.",
"சினம் மிகுதியால் ஒழுகும் மதம் கமழ்ந்து கொண்டிருந்தது.",
"பகைவர்களோடு மோதி அதன் தலை குருதியால் சேறுபட்டிருந்தது.",
"யானை மலைபோல் உயர்ந்த தோற்றத்தைக் கொண்டிருந்தது.",
"போர்... |
மன்னர் மன்னனாக விளங்கிய பெருமை | [
{
"explanation": [
"இடியானது பச்சை மரங்களை எரித்துத் தின்று பட்ட மரங்களாக்கும்.",
"பாறையாக உள்ள மலைகளையும் உதிரச் செய்யும்.",
"அதுபோல நெடுஞ்செழியன் பகைவர் பலரது கோட்டைகளைத் தகர்த்தான்.",
"பகைவரின் கோட்டை கடத்தற்கரிய காவற்காடுகளுக்கு இடையே இருந்தது.",
"ஆழமான அகழிகள் மிக உயரத்தில் வீ... |
கடல்வளம் மிகுந்த சாலியூரைக் கொண்ட வெற்றி | [
{
"explanation": [
"நெல்லின் ஊர் என்பது சாலியூர்.",
"நெடுஞ்செழியன் இவ்வூரை வென்று தனதாக்கிக் கொண்டான்.",
"விலங்குஎன்றால் வளைவு.",
"சாலியூரில் கடல் வளைந்திருந்தது.",
"காற்றால் செலுத்தப்படும் பெரும்பெரும் நாவாய்க் கப்பல்கள் இங்குப் பொன்னை இறக்கின. பொருள்களை ஏற்றின. அப்போதெல்லாம் முரச... |
குரவை ஒலியும் பிற ஓசைகளும் மலிந்த ஊர | [
{
"explanation": [],
"poem": [
"நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்பாடு சிலம்பு மிசை யேற்றத",
"தோடு வழங்கும் அக லாம்பியிற்கய னகைய வய னிறைக்குமென் றொடை வன் கிழாஅர்அதரி கொள்பவர் பகடுபூண் தெண்மணிஇரும்புள் ஒப்பும் இசையே என்றும்",
"மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானற்பரதவர் மகளிர் குரவையொ டொலிப்ப"... |
பொருநர்க்கு யானை முதலிய பரிசுகளைப் பாண்டியன் கொடுத்தல் | [
{
"explanation": [
"சேரநாட்டின் பகுதியான குட்டநாட்டில் ஆங்காங்கே பல மன்னர்கள் ஆண்டு வந்தனர். இவர்களைக் குட்டுவர் என்றனர். இப்படிப்பட்ட குட்டுவர் பலரை நெடுஞ்செழியன் வென்றான்.",
"கிழார் எனப்படுவோர் நன்செய்நில உழவர். தொழுவர் என்போர் நிலப் பணியாளர். தொழுவர் ஆற்று நீரை மேட்டு நிலங்களுக்கு ஏற்றத்தால் தெவ்... |
முதுவெள்ளிலை என்னும் ஊரின் சிறப்பு | [
{
"explanation": [
"மலையே காய்ந்து போகும்படி கடுமையான கோடை வந்தாலும் கரு மேகங்கள் மழை பொழியாவிட்டாலும் நாள்தோறும் காலையில் தோன்றும் கதிரவன் வடபாலோ தென்பாலோ பாகைஇடம் சாய்ந்து எழுந்தாலும் வைகை யாற்றில் வெள்ளம் வருவது மாறாததால் விளைச்சல் பெருகி நெல் அறுப்போர் பாடும் பாடலோசை",
"நீர்ப்பறவைகளின் பாடல் ஓசை... |
முதுவெள்ளிலையார் ஏவல் கேட்ப, தலையாலங்கானத்தில் பகைவர்களை வென்றமை | [
{
"explanation": [
"சிறுகுடியில் வாழ்ந்த பெருந்தொழுவர் அறிவு வழங்குதல் ஆக்கம் பெற உதவுதல் என்னும் இருவேறு பாங்குகளால் புகழ் பெற்றிருந்தனர். பலரும் விரும்பிப் பேணும் பெருஞ்செல்வம் பெற்றவர்களாகவும் விளங்கினர்.",
"குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் நால்வகை நிலங்களிலும் வாழ்ந்த இவர்கள் வழிவழியாகப் ப... |
கொற்கைக்குத் தலைவன் | [
{
"explanation": [
"வேந்தே! நீ உன்னோடு நட்பு கொண்ட அரசர்களின் குடியை உயர்வடையச் செய்வாய்.",
"உன்னோடு பகை கொண்ட அரசர்களைப் பெயர்த்தெரிவாய்.",
"கொற்கை பேருலகத்தில் பெயர்பெற்று மேலோங்கி நிற்கிறது.",
"அதற்குக் காரணம் சீரும் சிறப்பும் மிக்க முத்து விளையும் சங்குகள் அங்கு விளைவதுதான்.",
... |
செழியன் பரதவரை வென்றமை | [
{
"explanation": [
"தென்பரதவர் போர்த்திறம் மிக்கவர்.",
"பகைவர் அஞ்சும்படி அவர் நாட்டுக்கே சென்று போரிட்டு அவர்களைத் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றவர்.",
"அவர்கள் பகைவரின் கொழுப்பைக் குத்திய அம்போடு கூடிய வில்லைத் தம் கூவைக் குடிசையில் சார்த்தியிருப்பர். ஊரில் ஒன்று கூடித் தம் பெருமையைப் பேசி ... |
பகைவரது நாட்டைக் கைக்கொண்ட வெற்றி | [
{
"explanation": [
"நெடுஞ்செழியன் கிடைத்தற்கரிய பொருளையெல்லாம் எளிதாகப் பெற்றவன்.",
"அவற்றையும் தனக்கு உரியனவற்றையும் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் பிறருக்கு அள்ளிக் கொடுத்தவன்",
"இந்த மகிழ்வோடு வாழலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்காமல் போருக்கு எழுந்தவன்.",
"பனிவார் சிமையம் என்பது இமயமலை. ... |
பகைவர் தேசம் பாழ்பட்ட நிலை | [
{
"explanation": [
"நெடுஞ்செழிய! உன் பகைவர் நாடு பாழாயிற்று.",
"எப்படியெல்லாம் பாழாயிற்று என்று இங்குக் கூறப்படுகிறது.",
"செழியன் வலிமை மிக்க பகைவர் நாட்டுக்குள் புகுந்தான். அவர்களது காவற் காடுகளையும் வயல்களையும் எரித்தான். அதனால் அவர்களின் நாட்டுக்கு நாடு என்னும் பேர் இல்லாமல் போய்க் காடு என்... |
பகைவரை அடக்கி, அவரை அறநெறியில் நிறுத்துதல் | [
{
"explanation": [
"செழியன் முதுபொழிலை முற்றுகையிட்டான்.",
"அம் முற்றுகையின் போது எப்படித் தாக்கினான் என்பது இங்குக் கூறப்படுகிறது",
"முரசை முழக்கினான். யானைப்படையைப் பரவலாக நிறுத்தினான்.",
"கடல் போன்ற காலாள் படையுடன் சென்று தாக்கினான்.",
"முருகனைப் போல் மோதினான்.",
"போர் முழ... |
செழியனை வாழ்த்தி, அவனுக்கு நிலையாமையை அறிவுறுத்தத் தொடங்குதல் | [
{
"explanation": [
"வானுலகத்தை அமிழ்தத்தோடு சேர்த்துக் கொடுத்தாலும் தான் கொடுத்த வாக்கிலிருந்து தவற மாட்டான்.",
"பகைவர்க்கு அஞ்சிப் பணியாதவன்",
"முழங்கும் கடல் ஏணிக்கு மேல் உலகம் மலர்ந்து பூத்திருக்கிறது.உயர்ந்த மேல் உலகத்தின் வானோர் மண்ணுலகத்தையே படையாகத் திரட்டிக்கொண்டு எதிர்த்து வந்தாலும் ச... |
உலகைச் சிறப்புற ஆண்டு மறைந்தோர் பலர் எனல் | [
{
"explanation": [
"வெறுக்கை என்பது போதும் போதும் என்று வெறுக்கத் தக்க அளவில் பெருகியுள்ள செல்வம்.",
"ஆனா அமையாத.",
"யாணர் புதுப்புது வருவாய்.",
"குறையவே குறையாத செல்வம். புதுப்புது வருவாய்.",
"தின்றழிக்க முடியாத புலால் உணவு.",
"அள்ள அள்ளக் குறையாத பெருஞ்சோறு.",
"உண்டு ... |
மருத நில வளப்பம்வலைஞர் இயல்பு | [
{
"explanation": [
"புகழோடு பெருவாழ்வு வாழ்ந்த அரசர்கள் பலர் மாண்டொழிந்தனர்.",
"அதனால் நீ உன்னை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.",
"மேகங்கள் கிழக்கிலுள்ள கடலில் நீரை முகந்துகொண்டு சென்று மேற்கிலுள்ள கடலை முற்றுகையிட்டன.",
"அதனால் குளிர்ந்து கொட்டும் இடம் தெரியாததால் தாழ்ந்த நிலப் பரப்பிலும்... |
மருத நிலத்தில் எழும் பற்பல ஓசைகள் | [
{
"explanation": [
"தாமரைப் பூக்களில் காடைக்குருவி தன் சேவலோடு உறங்கியது.",
"அங்குப் படர்ந்திருந்த வள்ளைக் கொடிகளை ஒதுக்கிவிட்டு வலை போட்டதில் கிட்டிய பெரிய பெரிய மீன்களை வலைமீனவர் விலை சொல்லிக் கூவினர்.",
"நூழில் என்பது கரும்பாலை.",
"வயலில் விளைந்த கரும்பை நூழில் எந்திரம் நெரிக்கும் ஓசை... |
முல்லை நிலக் காட்சிகள் | [
{
"explanation": [
"தினைக்கதிர்கள் கொய்யும் நிலையைப் பெற்றிருந்தன.",
"கௌவை என்னும் கேழ்வரகு அறுவடை நிலையில் கருத்திருந்தது.",
"வரகு அறுவடை நிலையில் விளைந்து காய்ந்திருந்தது.",
"தோண்டிய குழிகளில் மணிகள் ஒளி கிளர்ந்தன.",
"காட்டு வழியெல்லாம் பொன் கொழித்தது.",
"சிறிய தலையுடன் பேர... |
குறிஞ்சி நிலத்தின் இயற்கை வளம் | [
{
"explanation": [
"குறிஞ்சி நிலத்துப் பயிர் நல்ல வயிரம் பாய்ந்த மரங்களை வெட்டி வீழ்த்தி அவற்றைச் சுட்டெரித்த நிலத்தில் பயிர் செய்தனர்.",
"குச்சியால் குழி போட்டு அதில் ஊன்றிய தோரையின் துவரை குறுங்கதிர் விளைந்திருந்தது.",
"ஐயவி என்னும் வெண்சிறுகடுகுப் பயிர் நீண்டு விளைந்திருந்தது.",
"ஐவன ... |
பாலை நில இயல்பு | [
{
"explanation": [
"யானை பச்சை மூங்கிலை உண்டு வாழ்ந்துவந்தது.",
"அந்தப் பெரிய பச்சை மூங்கில் தூறு தீப்பற்றி எரிந்துவிட்டது.",
"அதனால் யானை மேய்ச்சலுக்காக வேறு நிலத்தைத் தேடிச் சென்று விட்டது.",
"இசைவாணர்கள் இசைக்கருவிகளை முழக்குவது போல கானவர் மூங்கிலைப் பிளந்து செய்த தம் தட்டை என்னும் கர... |
நெய்தல் நில இயல்பு | [
{
"explanation": [
"முழங்கும் கடலலை தரைக்குக் கொண்டுவந்து சேர்த்ததால் ஒளிரும் முத்துக்கள்",
"சங்குகளை அரத்தால் அறுத்துச் செய்த வளையல்கள்",
"பரதர் மக்கள் கடலில் குளித்துக் கொண்டுவந்த முத்து",
"பவளம் போன்ற பல்வேறு பொருள்கள்",
"உப்பங்கழி வயலில் விளைந்த வெள்ளுப்பு.",
"பரந்து விரி... |
மதுரை மாநகரின் அமைப்பும் காட்சிகளும்பாண்டி நாட்டிற்கு நடுவண் அமைந்து விளங்குதல் | [
{
"explanation": [
"பாண்டிய நாடு இவ்வாறு ஐந்து நிலப் பகுதிகளின் அமைதியும் ஒருங்கிணைந்த நாடாக அழகுடன் விளங்கியது.",
"பெருந்தெருக்களில் முழவின் ஓசை.",
"குறுந்தெருக்களில் விழாக்கோலம்",
"ஆங்காங்கே பலப்பல குழூஉக்கள் குரவையும் துணங்கையும் என்று தழூஉப் பிணைந்து விளையாடித் திளைக்கும் காட்சி.",
... |
பெரும்பாணர் வாழும் இருக்கை | [
{
"explanation": [
"உயர்ந்த மலையுச்சிகளிலும் மரவுச்சிகளிலும் கலை என்னும் ஆண்குரங்கு தாவும்.",
"அதனால் பூக்கள் உதிரும்.",
"அதைப் பார்த்து அங்கே இருக்கும் மயில் அகவும்.",
"மயிலோசையின் தாளத்திற்கேற்ப மந்தி என்னும் பெண்குரங்கு ஆடும்.",
"இந்த நிகழ்வுகளை அங்கிருக்கும் மற்ற விலங்கினம் விர... |
அகழியும் மதிலும் பெற்று, மாடங்கள் ஓங்கி நிற்றல் | [
{
"explanation": [
"அழும்பில் வேள்",
"அழும்பில் வேள் என்பவனுக்குப் பாண்டிய நாட்டின் வளத்தைக் கண்டு சும்மா இருக்க முடியவில்லை.",
"அவன் முன்பே பெருஞ்செல்வம் படைத்தவன்.",
"என்றாலும் பாண்டிய நாட்டை அடையப் பாண்டியனைத் தாக்கினான்.",
"போரில் அழும்பில் வேள் தன் நாட்டை இழந்தான்.",
"பா... |
பல் வகைக் கொடிகள் | [
{
"explanation": [
"மதுரைத் தெருக்களில் மகிழ்ச்சியுடன் பாடி ஆடினர்.",
"அவர்களின் களிப்பு ஆரவாரம் கடலில் காற்றுஅடிக்கும்போது அலை எழுப்பும் ஆரவாரம் போல் இருந்தது.",
"முரசு முழக்கும் ஓசை",
"குளம் வெட்டியது போல் வாயகன்ற இசைக்கருவிகளைத் தட்டுவதால் ஒலிக்கும் இசை",
"இவற்றைக் கேட்டு மகிழ்ந... |
நால் வகைப் படைகளின் இயக்கம் | [
{
"explanation": [
"கடலில் ஆடும் நாவாய் போலக் கட்டுத் தறியில் ஆடும் களிறுகள்.",
"பருத்த மீன்கள் வந்துபோகும் கடல்.",
"சங்குகள் மேயும் கடல்.",
"கப்பலில் பாய்மரம் கட்டிய கயிறு அறுந்து இதை என்னும் பாய் காற்றில் பறக்கும் போது நாவாய் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கடலிலுள்ள கல்லில் மோதிச் ச... |
நாளங்காடியில் பூ முதலிய பொருள்களை விற்றல் | [
{
"explanation": [
"புழல்வல்சி என்பது குழாய்ப் புட்டு.",
"வீரக்கழல் அணிந்த போர் மறவர்களுக்குப் புழல் வல்சி உணவு வழங்கப்பட்டது.",
"நினைவு கூர்க பிட்டுக்கு மண் சுமந்த கதை",
"களமர் என்னும் சொல் உழவரைக் குறிக்கும்.",
"கள்ளார் களமர் என்பது கள்ளுண்டு போர்க்கள உழவு செய்யும் வீரர்களைக் குற... |
முது மகளிர் நுகர்பொருள்களை ஏந்தித் திரிதல் | [
{
"explanation": [
"தொன்முது பெண்டிர் மயிலியலோர் மடமொழியோர் என்னும் பல்திற மகளிர் கல்லா மாந்தரொடு உறவாடும்போது கையால் தட்டிக்கொடுக்கும் வகையில் தாக்கி உறவாடி மகிழ்ந்தனர்.",
"தொன்முது பெண்டிர் தன் நரைமுடியில் கடலில் நுரையலையில் மிதந்துவரும் சங்கு போல் கொண்டை போட்டிருந்தனர்.",
"மயிலியலோர் எப்படி... |
திருவிழாக் காட்சிகள்ஏழாம் நாளில் தீர்த்த நீரில் ஆடுதல் | [
{
"explanation": [
"பூ விற்போரும் பண்ணியம் விற்போரும் வீடு வீடாகச் சென்று விற்பதும் உண்டு.",
"மழைமேகங்கள் மொண்டு செல்வதால் கடல் குறைவது இல்லை.",
"ஆற்று வெள்ளம் வந்து சேர்வதால் அளவு கூடுவதும் இல்லை.",
"அதுபோலக் கூடல் நகரத்துச் செல்வம் பிறர் கொண்டுசெல்வதால் குறைவதும் இல்லை.",
"பிறர் ... |
செல்வர்கள் செல்லும் நிலை | [
{
"explanation": [
"குதிரையில் திரியும் காவலரும் கால்நடையில் திரியும் காவலரும் கடைத்தெரு முழுவதும் காவல் புரிவர்.",
"அவர்கள் செக்கர் வானம் போல் சிவந்த உடை அணிந்திருப்பர்.",
"அந்தச் செந்நிறத்தில் பட்டுக் கதிரவன் ஒளியே மங்கிப் போகும்.",
"அந்த ஆடையுடன் சேர்த்து வாளும் கட்டியிருப்பர்.",
... |
நிலா முற்றங்களிலிருந்து சேவிக்கும் மகளிர் | [
{
"explanation": [
"மாடவெளியில் மகளிர் உலாவுவர்.",
"வானம் போல் வழங்கும் வளம் படைத்த செல்வர் குடும்பத்தைச் சேர்ந்த மகளிர் அரசன் அரியணையில் இருந்துகொண்டு கொடை வழங்கும் நாள்மகிழ் இருக்கை காண்பதற்காகத் தெருவில் ஓடுவர்.",
"அப்போது அவர்கள் அணிந்திருந்த சிலம்பின் பரல் ஒலிக்கும்.",
"பொன்னணிகள் ஒ... |
கோயில்களில் அந்தி விழா | [
{
"explanation": [],
"poem": [
"நீரு நிலனுந் தீயும் வளியும்மாக விசும்போ டைந்துட னியற்றியமழுவா ணெடியோன் றலைவ னாக",
"மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர்வாடாப் பூவின் இமையா நாட்டத்துநாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்குமாற்றரு மரபி னுயர்பலி கொடுமார்அந்தி விழவிற் றூரியங் கறங்கத்"
]
}
] |
பௌத்தப் பள்ளி | [
{
"explanation": [
"பூவும் புகையும் ஏந்திக்",
"கொட்டு முழக்குடன் சென்று",
"பேரிளம் பெண்டிர்",
"மதுரைச் சிவபெருமானை வழிபடுவர்",
"மழுவை வாளாக ஏந்திக்கொண்டிருப்பவன் சிவச்செல்வன் நெடியோன்.",
"அவன் நீர் நிலம் தீ காற்று ஆகாயம் என்னும் ஐந்தையும் படைத்தவன்.",
"அவனைத் தலைவனாகக் ... |
அந்தணர் பள்ளி | [
{
"explanation": [
"அந்தணர் பள்ளியில் வாழ்வோர் பெரியோர்.",
"அந்தப் பெரியோர் சிறந்த வேதம் விளங்கும்படிப் பாடுவர்.",
"மேலான சீருடன் வாழ்பவர்கள்.",
"ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள்.",
"நிலத்தை விரும்பி வையத்தில் வாழ்பவர்கள்.",
"இந்த உலகத்தில் இருந்துகொண்டே உயர்நிலை உலகத்தை அடைபவ... |
அமணப் பள்ளி | [
{
"explanation": [
"அகன்ற அறிவும் அதனைக் காட்டிக்கொள்ளாத அடக்கமும் கொண்டு வாழ்பவர் ஆன்றடங்கு அறிஞர்.",
"அவர்கள் செறிவும் உடையவர்கள்.",
"அடக்கம் என்பது பகட்டு இல்லாமை.",
"செறிவு அறிவில் செறிவு.",
"ஆன்ற அறிவு என்பது பல்துறையிலும் பரந்திருக்கும் அறிவு.",
"அவர்களின் கொள்கை சால்பி... |
அறம் கூறு அவையம் | [
{
"explanation": [
"அரியணைகள் குன்றுகள் போல் அறங்கூறவையத்தில் ஆங்காங்கே பலருக்கும் இடப்பட்டிருந்தன.",
"அந்தச் சேக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் அச்சமோ அவலமோ ஆர்வமோ கொள்ளாதவர்களாகவும் சினமோ உவகையோ சேராதவர்களாகவும் தராசுக் கோல்போல் செம்மை திறம்பாத சிறந்த கொள்கையாளராகவும் விளங்கினர்."
],
"poem": ... |
காவிதி மாக்கள் | [
{
"explanation": [
"காவிதி என்னும் விருது சிறந்த உழவருக்கு வழங்கப்பட்டது என்பது ஆன்றோர் முடிபு.",
"அரசனின் நாளவையில் இவர்களுக்குச் சிறப்பிடம் தரப்பட்டிருந்ததை இப் பாடற்பகுதி உணர்த்துகின்றது.",
"அறங்கூறுவதில் காவிதிகளின் கருத்தும் கேட்டறியப்பட்டது.",
"மாவிசும்பு வழங்கும் பெரியோர் வேள்வி ச... |
பண்டங்கள் விற்கும் வணிகர் | [
{
"explanation": [],
"poem": [
"அறநெறி பிழையா தாற்றி னொழுகி",
"குறும்பல் குழுவிற் குன்றுகண் டன்னபருந்திருந் துகக்கும் பன்மா ணல்லிற்பல்வேறு பண்டமொ டூண்மலிந்து கவினிமலையவு நிலத்தவு நீரவும் பிறவும்பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு",
"சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்"
]
}
] |
நாற் பெருங் குழு | [
{
"explanation": [
"வணிக மாடங்கள்",
"பயிர் செய்தும் கைசெய்தும் பண்ணப்பட்ட பண்டங்களைப் பண்ணியம் என்றனர்.",
"இக்காலத்தில் இதனை மளிகை என்று வழங்குகிறோம்",
"பயிர்செய்து பெற்ற பொருள்களைப் பண்டம் என்றும் கைவினைப் பொருள்களைப் பண்ணியம் என்றும் இப் பாடற்பகுதி தெளிவுபடுத்துகிறது.",
"பண்டம் உ... |
பல்வேறு தொழிலாளர்களின் கூட்டம் | [
{
"explanation": [
"நால்வேறு தெரு என்று இங்குக் கூறப்படுவது முன்பு கூறிய நாற்பெருங்குழு மேன்மக்கள் வாழ்ந்த நான்கு தெருக்கள்.",
"இக்காலத்திலும் மதுரையின் அமைப்பு நாற்றிசைப் பெயர்கொண்ட தெருக்களைக் கொண்டு விளங்குவது ஒப்பிட்டு எண்ணத் தக்கது.",
"இந்த நால்வேறு தெருக்களிலும் நடந்து கொண்டே விற்போரும் ... |
பலரும் கூடி நிற்றலால் உண்டாகும் ஆரவாரம் | [
{
"explanation": [],
"poem": [
"கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்துந்தண்கட னாடன் ஒண்பூங் கோதைபெருநா ளிருக்கை விழுமியோர் குழீஇ",
"விழைவுகொள் கம்பலை கடுப்பப்"
]
}
] |
உணவு வகைகள் | [
{
"explanation": [
"சேறு பழ மசியல்",
"நாற்றம் பத்தி சந்தனம் ஏலம் போன்ற மணப்பொருள்கள்",
"பலாப்பழச் சுளை",
"பல்வேறு உருவம் கொண்ட இனிப்பு மாம்பழங்கள்",
"பலதிறப்பட்ட காய்கள் பழங்கள்",
"வெற்றிலை பாக்கு",
"சமைத்த உணவு வகைகள்",
"சமைத்த கிழங்கு வகைகள்",
"இனிப்புப் ப... |
அந்திக் கடையில் எழும் ஓசை மிகுதி | [
{
"explanation": [
"கடலலையானது கழிமுகத்தில் பாய்ந்து தழுவிவிட்டுத் திரும்பும்போது ஒதுக்கிய இரைகளைத் தின்ற பறவைகள் மாலைநேரம் வந்ததும் இருப்பிடத்துக்குத் திரும்பும்போது தம் இனத்தைச் சேர்ந்த மற்ற பறவைகள் ஒன்று திரள்வதற்காக ஒலி எழுப்புவது போல மாலைநேரக் கடைகளில் ஆரவாரம் மிகுந்தது.",
"பானாள் பால் நாள் பாத... |
இரவுக் கால நிலை | [
{
"explanation": [
"உருப்பு ஒளி கடும் வெயில்.",
"ஞாயிறு ஒளியும் வெயிலுமாகிய தன் சினம் தணிந்து தன் நன்பகல் பொழுதை மேலைத்திசை முதலில் சேர்த்தது.",
"அப்போது கீழைத்திசை முதலில் நாள் முதிர்ந்த மதியம் தோன்றித் தன் நிலவொளியை விரித்துப் பகல்செய்து கொண்டிருந்தது.",
"இதனை விரும்பியவர்கள் அதன் பயனை... |
பரத்தையரது வாழ்க்கை | [
{
"explanation": [
"மாய மகளிர்",
"இந்த அணங்குகள்தான் மேலே சொன்னவாறு தன் அழகைப் பார்த்துத் தானே மயங்கி மாலைக்காலம் வந்ததும் ஒப்பனை செய்துகொண்டவர்கள்.",
"அவர்கள் தெருவில் உலாத்திக்கொண்டு வருவார்கள்.",
"யாழ் மீட்டிக் கொண்டு வருவார்கள்.",
"ஏழிசைப்பண் பாடிக்கொண்டு வருவார்கள்.",
"அ... |
ஓணநாள் விழாவில் மறவர் மகிழ்ந்து திரிதல் | [
{
"explanation": [
"திருவோணத் திருநாளில் யானை அணிவகுப்புத் திருவிழா நடைபெறும்.",
"அதனைக் காணவரும் மக்கள் கூட்டம் விரைந்து வரும் யானையைப் பார்த்து அஞ்சி ஓடும்.",
"அப்போது அவர்கள் தம் மார்பில் அணிந்துள்ள காழகம் என்னும் அணிகலன் க.ன்று விழுவதையும் பொருட்படுத்தாமல் ஓடுவர்.",
"அவை நிலத்தில் கி... |
புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல் | [
{
"explanation": [
"மக்களைப் பெற்று கணவனோடு வாழும் இல்லத்தரசியர் பருத்துயர்ந்த இளைய மார்பகங்களில் பால் ஊறக் குளநீர் ஆடச் சென்றனர்.",
"குழந்தை பெற்ற ஈரக்காலம் முடிந்தபின் சென்றனர்.",
"சுற்றத்தாரோடு சென்றனர்.",
""
],
"poem": [
"கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து",
"பணைத்தேந... |
சூல்மகளிர் தேவராட்டியுடன் நின்று தெய்வத்திற்கு மடை கொடுத்தல் | [
{
"explanation": [
"சாலினி என்போர் குருகேறி ஆடும் பெண்.",
"ஒருபக்கம் சாலினி நிறைமாதப் பெண்களைப் பேணித் தம் பருத்த தோள்களை உயர்த்திக் கைகூப்பித் தொழுதாள்.",
"அவள் தொழும்போது யாழ் மீட்டப்பட்டது முழவு முழங்கிற்று.",
"உடுக்கு அடிக்கப்பட்டது.",
"ஆகுளி இரட்டல் ஒலி முழங்கிற்று.",
"வ... |
வேலன் வழிபாடும், குரவைக் கூத்தும் | [
{
"explanation": [
"மற்றொரு பக்கம் வேலன் முருகேறி ஆடும் குரவை ஆட்டம் நிகழ்ந்தது.",
"வேலன் குறிஞ்சிப்பூ சூடியிருந்தான்.",
"கடம்பு சூடிய கடவுள் முருகனை வழிபாடு செய்துகொண்டு குரவை ஆடினான்.",
"மகளிரும் மைந்தரும் தோளோடு தோள் தழுவிக்கொண்டு ஆடுவது தழூஉ ஆட்டம்.",
"இவர்கள் தழூஉ ஆடும்போது வி... |
இரவின் முதற் சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல் | [
{
"explanation": [
"சாலினி ஆட்டம் குரவை எனப்படும்.",
"வேலன் ஆட்டம் தழூஉ எனப்படும்.",
"இந்த இருபாலார் ஆட்டத்தையும் வெறி என்பர்.",
"வெறியாட்டத்தின்போது இடையிடையே பேசுவார்கள் பாடுவார்கள் ஆடுவார்கள்.",
"எனவே இதனை வெறிக்கூத்து என்றும் வழங்குவர்."
],
"poem": [
"உரையும் பாட்... |
இரண்டாம் சாமத்தில் நகரின் நிலை | [
{
"explanation": [
"சங்குகளின் முழக்கம் அடங்கிப் போயிற்று.",
"மகளிர் இல்லக் கதவுகளை அடைத்தனர்.",
"காழ் எனப்படும் தாழ்ப்பாள் போட்டனர்.",
"கதவை மூடும்போதும் தாழ்ப்பாள் போடும்போதும் இசைத்தொடை எழுந்து நவின்றது.",
"மகளிர் பள்ளி கொண்டனர்.",
"அவர்கள் மடமையும் தூக்க மதமதப்பும் கொண்ட ... |
மூன்றாம் சாம நிகழ்ச்சிகள் | [
{
"explanation": [
"கடலில் அலை ஓயாது.",
"பனியால் மூடப்பட்டிருக்கும் கடலில் அலை இருக்குமா?",
"பனிக்கடல் போல மக்கள் படுத்து இனிமையாக உறங்கினர்.",
"கங்குல் யாமங்கள் கொண்டது.",
"அதில் கழிந்து விட்ட படியாலே இரவுக்காலத்தில் அது பாதிநாள் பானாள் ஆயிற்று.",
"இந்த நேரத்தில் பேய் அணங்கு... |
விடியல்காலத்தில் மதுரை மாநகர் | [
{
"explanation": [
"அந்தணர் வேதம் பாடினர்.",
"யாழோர் மருதம் பாடினர்.",
"காழோர் யானைகளுக்கு கவளம் ஊட்டினர்.",
"தேர்க் குதிரைகளுக்குப் புல்லுணவு போட்டனர்.",
"பண்ணியம் விற்போர் கடையை மெழுகினர்.",
"கள்ளை விலை கூறி விற்றனர்.",
"காதலர் கட்டியணைத்தபடி தூங்கிக் கொண்டிருந்தனர்."... |
🏙️ மதுரைகாஞ்சி (Madurai Kāñci) Dataset
மதுரைகாஞ்சி (Madurai Kāñci) is one of the Pathupattu (பத்துப்பாட்டு / Ten Idylls) in Sangam Literature, traditionally attributed to Mākanar (மகனார்).
The poem vividly describes the prosperity of Madurai, the capital city of the Chola kingdom, detailing its natural resources, agriculture, river systems, urban life, and social organization. It is one of the richest sources for akam (interior/landscape) and puram (external/urban) descriptions in Sangam poetry.
This dataset provides a structured digital representation of Madurai Kāñci, segmented into topics, poems, and explanations, making it useful for Tamil NLP, literary analysis, and cultural heritage research.
📂 Dataset Structure
topic (string) → Thematic section heading
poems (list) → Contains poem segments with explanation
poem (list of strings) → Original Tamil poem lines
explanation (list of strings) → பொருளுரை (commentary / explanation in Tamil)
Example
[
{
"topic": "இயற்கை வளம்",
"poems": [
{
"poem": [
"ஓங்கு திரை வியன் பரப்பின் ஒலி",
"முன்நீர் வரம்பாகத் தேன்தூங்கும் உயர் சிமையமலை",
"நாறிய வியன் ஞாலத்து உலமா திரத்தான் வளி கொட்ப"
],
"explanation": [
"பொங்கி அலைவீசும் பரப்பைக் கொண்டது கடல்.",
"அதனை எல்லையாகக் கொண்ட ஞாலத்தில் தேன்கூடுகள் தொங்கும் உயர்ந்த சிகரமுடைய மலைகள் தோன்றுகின்றன.",
"வானத்தில் காற்று வலிமையுடன் சுழல்கிறது."
]
}
]
},
{
"topic": "செயற்கைச் செழிப்பு நிலை",
"poems": [
{
"poem": [
"நோய் இகந்து நோக்கு விளங்க"
],
"explanation": [
"இவ்வாறு இயற்கை உதவுவதால் மக்களிடம் துன்பம் இல்லை.",
"நோய்கள் அகன்று, வாழ்க்கை நோக்கு தெளிவாக உள்ளது.",
"எல்லோருக்கும் வளமும் நலனும் உறுதியாக நிறைந்துள்ளது."
]
}
]
}
]
📊 Dataset Statistics
Total Topics: ~10+ thematic divisions
Total Lines: ~782 (single long poem split into sections)
Language: Tamil (ta)
Format: JSON / JSONL
Size: ~700 KB
💡 Use Cases
Tamil Natural Language Processing (NLP)
Poem-to-Explanation alignment
Verse segmentation & literary analysis
Urban, agricultural, and cultural entity extraction
Summarization & Translation (Tamil ↔ English)
Digital preservation of Sangam classical literature
Educational tools for learning Tamil literary and cultural history
🔑 Licensing
License: Open Data – for research and educational purposes
Attribution: Required when using this dataset in publications, projects, or applications
#மதுரைகாஞ்சி #பத்துப்பாட்டு #சங்கஇலக்கியம் #தமிழ் #MaduraiKanci #SangamLiterature #TamilPoetry #ClassicalLiterature #AncientTamil #TamilNLP #DigitalHeritage #TamilCulture #TamilClassics #PoetryDataset #TamilAI #OpenSource
- Downloads last month
- 5