Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
id
int64
1
400
பாடியவர்
stringlengths
0
32
பாடப்பட்டோன்
stringlengths
0
52
திணை
stringclasses
28 values
துறை
stringlengths
0
59
சிறப்பு
stringclasses
36 values
poem
stringlengths
0
1.3k
title
stringlengths
15
51
explanation
stringlengths
31
4.28k
1
பெருந்தேவனார்.
இறைவன்
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை; ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப; கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை 5 மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்; பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்...
புறநானூறு - 1. இறைவனின் திருவுள்ளம்!
தலையில் கொன்றைப் பூ சூடியவன். மார்பில் கொன்றை - மாலை அணிந்தவன். ஊர்தி வெண்ணிறக் காளைமாடு. கொடியும் காளைமாடு என்று கூறுகின்றனர். தொண்டையில் நஞ்சுக் கறை. அந்தக் கறை அந்தணர் மறையில் போற்றப்படுகிறது. ஒருபாதி (இடப்புறம்) பெண் - உருவம். அதனைத் தனக்குள் மறைத்துக்கொள்வதும் உண்டு. நெற்றியில் பிறை. அந்தப் பிறையை 18 வகையான தேவ கண...
2
முரஞ்சியூர் முடிநாகராயர்.
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
பாடாண்.
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
மண் திணிந்த நிலனும், நிலம் ஏந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும், தீ முரணிய நீரும், என்றாங்கு 5 ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் வலியும், தெறலும், அணியும், உடையோய்! நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் 10 யாணர் வைப்...
புறநானூறு - 2. போரும் சோறும்!
நிலம் போல் பொறுமை, வானம் போல் சூழ்திறன், காற்றைப் போல் வலிமை, தீயைப் போல் எரிக்கும் - திறன், நீரைப் போல் அளிக்கும் கொடைத்திறன் ஆகியவற்றை உடையவன் நீ. உன் கடலிலே தோன்றிய ஞாயிறு உன் கடலிலேயே மறையும் நிலப்பரப்பை உடையவன் நீ. இப்படிப்பட்ட வானவரம்பன் நீதானா? தும்பைப் பூ சூடி ஐவரை எதிர்த்த நூற்றுவர் மாண்ட போர்க்களத்தில் இருபால...
3
இரும்பிடர்த் தலையார்.
பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
பாடாண்.
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற, ஏம முரசம் இழுமென முழங்க, நேமி யுய்த்த நேஎ நெஞ்சின், தவிரா ஈகைக், கவுரியர் மருக! 5 செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ! பொன் னோடைப் புகர் அணிநுதல் துன்னருந் திறல் கமழ்கடா அத்து எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக் கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில். 10 பெருங்கை...
புறநானூறு - 3.வன்மையும் வண்மையும்!
நீ கவுரியர் மரபில் வந்தவன். அவர்கள் முழுமதி போல் உருவம் கொண்ட வெண்கொற்றக் குடையால் ஆளும் மண்ணிலுள்ள அனைத்துக்கும் நிழல் தந்தவர்கள். முரசு முழக்கத்துடன் ஆட்சிச் சக்கரத்தை உருட்டியவர்கள். நெஞ்சில் நேயம் கொண்டு இல்லை என்று சொல்லாமல் கொடை வழங்கியவர்கள். நீ கற்புக்கரசியின் கணவன். உன்னைக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என...
4
பரணர்.
சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி.
வஞ்சி.
கொற்ற வள்ளை.
சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்.
வாள்,வலந்தர, மறுப் பட்டன செவ் வானத்து வனப்புப் போன்றன! தாள், களங்கொளக், கழல் பறைந்தன கொல் ஏற்றின் மருப்புப் போன்றன; தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ, 5 நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; மாவே, எறிபதத்தான் இடங் காட்டக், கறுழ் பொருத செவ் வாயான், எருத்து வவ்விய புலி போன்றன; களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய், 10 நுதி மழுங்...
புறநானூறு - 4. தாயற்ற குழந்தை!
வெற்றிகண்ட உன்வாள் செவ்வானம் போலக் கறைபட்டுக்கிடக்கிறது. களம்கொண்ட உன் தாளிலுள்ள வீரக்கழல் கொல்லும் களிற்றின் தந்தம் போன்றன. மார்புக் கவசமாகிய தோல் அம்பால் துளைக்கப்பட்டு நிலையில்லாமல் மின்னும் விண்மீன் கொண்ட வானம் போன்றது. குதிரையின் வாய் கடிவாளம் சுண்டியதால் காளைமாட்டைக் கடித்த புலியின் வாயைப் போன்றன. யானையின் கொம்பு...
5
நரிவெரூஉத் தலையார்.
சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.
பாடாண்.
வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம்.
பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி.
எருமை அன்ன கருங்கல் இடை தோறு, ஆனிற் பரக்கும் யானைய, முன்பின், கானக நாடனை!நீயோ, பெரும! நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்; அருளும் அன்பும் நீக்கி நீங்கா 5 நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல், குழவி கொள் பவரின், ஓம்புமதி! அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.
புறநானூறு - 5. அருளும் அருமையும்!
எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே! நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக! அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு...
6
காரிகிழார்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
பாடாண்.
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
பாண்டியனின் மறமாண்பு.
வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும், குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும், குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும், கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின் 5 நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது ஆனிலை உலகத் தானும், ஆனாது, உருவும் புகழும் ஆகி, விரிசீர்த் தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம் பற்ற...
புறநானூறு - 6. தண்ணிலவும் வெங்கதிரும்!
உன் உருவமும், புகழும் பரவ வேண்டும். வடக்கில் இமயமலைக்கு அப்பாலும், தெற்கில் குமரிமுனைக்குத் தென்பாலும், கிழக்கில் தோண்டப்பட்ட கடலுக்கு அப்பாலும், மேற்கில் பழமையான கடலுக்கு அப்பாலும், மூன்றாக அடுக்கப்பட்டுள்ள உலகங்களில் கீழே உள்ள உலகம், மேலே உள்ள உலகம் ஆகியவற்றிற்கு அப்பாலும் பரவ வேண்டும். உன் செங்கோல் ஒருபுறமும் சாயாமல...
7
கருங்குழல் ஆதனார்.
சோழன் கரிகாற் பெருவளத்தான்.
வஞ்சி.
கொற்ற
களிறு கடைஇய தாள், கழல் உரீஇய திருந்துஅடிக், கணை பொருது கவிவண் கையால், கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து மா மறுத்த மலர் மார்பின், 5 தோல் பெயரிய எறுழ் முன்பின், எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர் ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ! 10 தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து மீன...
புறநானூறு - 7. வளநாடும் வற்றிவிடும்!
களிற்றுப்படை, காலாள்படை ஆகியவற்றின் காலால் மிதித்தும், கை வளத்தால் அம்பு தொடுத்தும் பகைநாட்டை அழித்தாய். விரும்பி வந்த திருமகளை ஏற்க மறுத்த மலர்ந்த மார்பில் தோல் என்னும் கவசத்தை அணிந்திருக்கும் வலிமை மிக்க மார்பினை உடையவன் நீ. இரவு பகல் என்று பார்க்காமல் பகைநாட்டைச் சுட்டு அது எரியும் விளக்கில் அவர் நாட்டு மக்கள் அழுகு...
8
கபிலர்.
சேரமான் கடுங்கோ வாழியாதன் : சேரமான் செல்வக்
பாடாண்.
இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப், போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது , இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக், கடந்து அடு தானைச் சேரலாதனை 5 யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்! பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி; மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி; அகல்இரு விசும்பி னானும் பகல்விளங் குதியால் பல...
புறநானூறு - 8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!
விரைந்து செல்லும் கதிரவனே! உலகத்தைக் காக்கும் மன்னர்கள் தனக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற இன்பத்தை விரும்பி, இவ்வுலகம் யாவர்க்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன்னுடைய நாடு சிறியது என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, ஊக்கமுடைய உள்ளத்துடன் குறையாத ஈகையுடனும் பகைவரை வெல்லும் படையையுடைய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு நீ...
9
நெட்டிமையார்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
பாடாண்.
இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின்
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என 5 அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங் கோச் செந்நீர்ப் பசும்பொன் ...
புறநானூறு - 9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!
போர் அறம் - பசு, பசுப் போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது - என்று அறவழி கூறியபின் போரிடும் பாங்குடையவன் இந்த அரசன். கொல்களிற்றின் மேல் கொடி தோன...
10
சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.
பாடாண்.
இயன்மொழி.
வழிபடு வோரை வல்லறி தீயே! பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே; நீமெய் கண்ட தீமை காணின், ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி; வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், 5 தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே; அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப! 1...
புறநானூறு - 10. குற்றமும் தண்டனையும்!
நெய்தலங்கானல் நெடியோய்! உன்னை வாழ்த்தி வேண்டுகிறேன். வழிபடுவோர் உன்னை எதற்காக வழிபடுகின்றனர் என்பதை உடனே தெரிந்துகொள். பிறன்மீது பழி கூறுபவர்களின் சொல்லை நம்பாதே. நீ ஒருவனிடம் உண்மையாகவே தீமையைக் கண்டால் ஒத்திட்டு ஆராய்ந்து தக்க தண்டனை வழங்கு. அவர் தன் தவற்றை உணர்ந்து உன் காலடியில் வணங்கி நின்றால் பண்டைய தண்டனையைக் குற...
11
பேய்மகள் இளவெயினியார்.
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
பாடாண்.
பரிசில் கடாநிலை.
அரி மயிர்த் திரள் முன்கை வால் இழை, மட மங்கையர் வரி மணற் புனை பாவைக்குக் குலவுச் சினைப் பூக் கொய்து தண் பொருநைப் புனல் பாயும் 5 விண் பொருபுகழ், விறல்வஞ்சிப் பாடல் சான்ற விறல்வேந் தனும்மே வெப் புடைய அரண் கடந்து, துப்புறுவர் புறம்பெற் றிசினே: புறம் பொற்ற வய வேந்தன் 10 மறம் பாடிய பாடினி யும்மே, ஏர் உடைய விழுக் கழஞ்சின், சீ...
புறநானூறு - 11. பெற்றனர்! பெற்றிலேன்!
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடலால் புகழ் பெற்ற வஞ்சி நகர வேந்தன். இந்த வஞ்சி தண்பொருநை ஆறு பாயும் நகரம். வானளாவிய புகழும் வெற்றியும் உடைய நகரம். இந்தப் பொருநை ஆற்று மணலில் பாவை செய்து பூப் பறித்துவந்து சூட்டி மகளிர் விளையாடுவர். இவர்கள் மென்மையான மயிர் கொண்ட தம் திரண்ட கைகளையும், வெண்ணிற இழையணியும் கொண்டவர்கள். பாவைக்குப...
12
நெட்டிமையார்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
பாடாண்.
இயன்மொழி.
பாணர் தாமரை மலையவும், புலவர் பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும், அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி! இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு, இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே? 5
புறநானூறு - 12. அறம் இதுதானோ?
முதுகுடுமிப் பெருவழுதியே! பாணர்க்குப் பொன்னால் செய்த தாமரை மாலை சூட்டியும், புலவர்க்கு அலங்கரிக்கப்பட்ட தேருடன் நெற்றியில் பொற்பட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட யானையையும் அளித்து, உன்னிடம் பரிசு பெறுவோர்க்கு நீ நல்லவை செய்து, மறுபுறம் உன் பகைவர்களுக்கு துன்பம் நேரும்படி அவர்களுடைய நாட்டை வெற்றி கொள்வது அறமான செயல்தானா? குறி...
13
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
பாடாண்.
வாழ்த்தியல்
இவன் யார்? என்குவை ஆயின், இவனே, புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய, எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின், மறலி அன்ன களிற்றுமிசை யோனே; களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், 5 பன்மீன் நாப்பண் திங்கள் போலவும், சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப, மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே; நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! பழன மஞ்ஞை உகுத்த ...
புறநானூறு - 13. நோயின்றிச் செல்க!
இவன் யார் என்று கேட்பாயானால், சொல்கிறேன் கேள். அழகிய நெஞ்சில் புலிநிறம் பட்ட கவசம் அணிந்தவன். அந்த நிறம் பிறர் எய்த அம்புகளால் உருவானது. எமன் போன்ற களிற்றின்மேல் உள்ளான். அது கடலில் மிதக்கும் நாவாய்க் கப்பல் போல் வருகிறது. அதனைச் சூழ்ந்து சுறாமீன் கூட்டம் போல் வாள்வீரர்கள் மொய்த்துக்கொண்டு வருகின்றனர். அந்தக் களிற்றுக்...
14
கபிலர்.
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
பாடாண்.
இயன்மொழி
கடுங்கண்ண கொல் களிற்றால் காப் புடைய எழு முருக்கிப், பொன் இயல் புனை தோட்டியான் முன்பு துரந்து, சமந் தாங்கவும்; பார்உடைத்த குண்டு அகழி 5 நீர் அழுவம் நிவப்புக் குறித்து, நிமிர் பரிய மா தாங்கவும்; ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்; பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்! 10 வலிய ஆகும் நின் ...
புறநானூறு - 14. மென்மையும்! வன்மையும்!
கோட்டைக்கதவுத் தடைமரத்தை முரிக்கக் கொல்களிற்றைப் பொன்பூண் போட்ட அங்குசத்தால் வலிமையுடன் குத்திப் போரிட்டுத் தாக்கவும், நிலத்தைப் பிளந்து உருவாக்கிய அகழி நீரை நிவந்து தாண்டும்படிப் போர்க்குதிரைகளை இழுத்துப் பிடிக்கவும், தேர்மீது இருந்துகொண்டு வில்லின் நாணை வலிமையாக இழுத்து எதிராளி வடுக் கொள அம்பு எய்யவும், பரிசிலர்களுக்...
15
கபிலர்.
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
பாடாண்.
இயன்மொழி
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப், பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்; புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல், வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத் 5 தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்; துளங்கு இயலாற், பணை எருத்தின், பா வடியாற்,செறல் நோக்கின், ஒளிறு மருப்பின் களிறு அவர காப் புடைய க...
புறநானூறு - 15. எதனிற் சிறந்தாய்?
நீ சினம் மிக்கவன். அதனால் பகைவர் நாட்டில் தேர் நடத்தினாய். அந்தத் தேர்க்கால் பள்ளத்தில் கழுதை - ஏர் பூட்டி உழுதாய். அவரது கோட்டைகளை அழித்தாய். பறவைகள் மேயும் விளைவயல்கள் உன் குதிரைக் குளம்புகளால் மிதிபடத் தேரோட்டினாய். நடை பயில்வதும், பருத்த முதுகுக் கொட்டேறியும், பரந்த காலடியும், அழிக்கும் பார்வையும், ஒளி வீசும் கொம்ப...
16
பாண்டரங் கண்ணனார்.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
வஞ்சி.
வினை மாட்சிய விரை புரவியொடு, மழை யுருவின தோல் பரப்பி, முனை முருங்கத் தலைச்சென்று, அவர் விளை வயல் கவர்பு ஊட்டி மனை மரம் விறகு ஆகக் 5 கடி துறைநீர்க் களிறு படீஇ எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப், புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத், துணை வேண்டாச் செரு வென்றிப், 10 புலவு வாள் புலர் சாந்தி...
புறநானூறு - 16. செவ்வானும் சுடுநெருப்பும்!
செயல்திறம் மிக்க குதிரைப்படை, மழைமேகம் போன்ற காலால் - படை ஆகியவை முரியும்படி போரிட்டான். அவர்களது விளைவயல்களில் தம் குதிரைகளை மேயவிட்டான். அவர்களது வீட்டு - மரங்களை எரிக்கும் விறகாக்கிக்கொண்டான். காவல் மிக்க அவர்களது நீர்த் துறைகளில் களிறுகளைக் குளிக்கும்படிச் செய்தான். பட்டப்பகலில் அவன் ஊரை எரிக்கும் தீ மாலையில் சூரிய...
17
சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
அரசவாகை; இயன்மொழியும் ஆம்.
தென் குமரி, வட பெருங்கல், குண குட கடலா வெல்லை, குன்று, மலை, காடு, நாடு ஒன்று பட்டு வழி மொழியக், கொடிது கடிந்து, கோல் திருத்திப், 5 படுவது உண்டு, பகல் ஆற்றி, இனிது உருண்ட சுடர் நேமி முழுது ஆண்டோர் வழி காவல! குலை இறைஞ்சிய கோள் தாழை அகல் வயல், மலை வேலி, 10 நிலவு மணல் வியன் கானல், தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின், தண் தொண்டிய...
புறநானூறு - 17. யானையும் வேந்தனும்!
பொருளுரை: not found in the page
18
பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: பொதுவியல்.
பொதுவியல்.
முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்து பட்ட வியன் ஞாலம் தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ: ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்! ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய 5 பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே! நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் பூக் கதூஉம் இன வாளை, நுண் ஆரல், பரு வரால், குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி; 10 வான் உட்கும் வடிநீண் மதில்; மல...
புறநானூறு - 18. நீரும் நிலனும்!
பொருளுரை: not found in the page
19
குடபுலவியனார்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
வாகை.
அரசவாகை.
இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத் தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து, மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும். நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய! இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய 5 பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி, முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக் குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல, அம்புசென்று இறுத்த அறும்புண...
புறநானூறு - 19. எழுவரை வென்ற ஒருவன்!
பொருளுரை: not found in the page
20
குறுங்கோழியூர்கிழார்.
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை;
வாகை.
அரச வாகை.
இரு முந்நீர்க் குட்டமும், வியன் ஞாலத்து அகலமும், வளி வழங்கு திசையும், வறிது நிலைஇய காயமும், என்றாங்கு அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை; 5 அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்; சோறு படுக்கும் தீயோடு செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே; திருவில் அல்லது கொலைவில் அறியார்; 10 நாஞ்சில் அல...
புறநானூறு - 20. மண்ணும் உண்பர்!
கடலின் ஆழத்தையும், உலகின் பரப்பையும், காற்று வாழும் திசையையும், ஏதுமில்லாத ஆகாயத்தையும் என்று எல்லாவற்றையும் அளந்து அறிந்தாலும் உன்னை அளக்க முடியாது. உன் ஆட்சிக்குடை நிழலில் வாழ்பவர்கள் உன் அறிவு, இரக்கம், உதவும் எண்ணம் (கண்ணோட்டம்) ஆகியவற்றை அறிவர். அவர்களுக்குச் சோறாக்கும் தீ, வெயில் ஆகியவற்றின் சூடு அல்லது வேறு சூடு...
21
ஐயூர் மூலங்கிழார்.
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.
வாகை.
அரசவாகை.
புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்! நிலவரை இறந்த குண்டுகண் அகழி, வான்தோய் வன்ன புரிசை, விசும்பின் மீன்பூத் தன்ன உருவ ஞாயில், கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை, 5 அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில், கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன, வேங்கை மார்பின் இரங்க வைகலும் ஆடுகொளக் குழைந்த தும...
புறநானூறு - 21. புகழ்சால் தோன்றல்!
மண்ணின் ஆழம் வரையில் தோண்டிய அகழி, வான் அளாவும் மதில், மீன் பூத்தது போல் தோன்றும் ஞாயில் (மதில் - ஆள் - இருக்கைகள்), சூரிய ஒளி புகாவண்ணம் இருண்டிருக்கும் காவல் - காடுகள், கடத்தற்கு அரிய காவலர்களைக் கொண்ட கூடாரங்கள் (குறும்பு) - ஆகியவற்றைக் பொண்ட கானப்பேர் நகரக் கோட்டையை - காய்ச்சிய இரும்பு உண்டது போல மீட்டுக்கொள்ள முடி...
22
குறுங்கோழியூர் கிழார்.
சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
வாகை.
அரசவாகை.
தூங்கு கையான் ஓங்கு நடைய, உறழ் மணியான் உயர் மருப்பின, பிறை நுதலான் செறல் நோக்கின, பா வடியால் பணை எருத்தின, தேன் சிதைந்த வரை போல, 5 மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து, அயறு சோரூம் இருஞ் சென்னிய, மைந்து மலிந்த மழ களிறு கந்து சேர்பு நிலைஇ வழங்கப்: பாஅல் நின்று கதிர் சோரும் 10 வான உறையும் மதி போலும் மாலை வெண் குடை நீழலான், வாள...
புறநானூறு - 22. ஈகையும் நாவும்!
களிறு தொங்கும் கை, பெருமித நடை, ஒலிக்கும் மணி, மேலே வளைந்து உயர்ந்திருக்கும் கொம்பு, பிறை போன்ற நெற்றி, சினம் கொண்ட பார்வை, விரிந்த காலடி, பருத்த கழுத்து, தேன் சிந்தும் மலை போல வண்டு மொய்க்க ஒழுகும் மதநீர், இரும்பைப் போன்ற தலை, வலிமை - ஆகியவற்றைக் கொண்ட உன் வாலிபக் களிறு அதன் நிலைகளத்தில் கட்டிக் கிடக்கிறது. பால் ஒழுகு...
23
கல்லாடனார்.
பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்.
வாகை.
அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.
வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக், களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும்! கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர் 5 கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் கொள்பதம் ஒழிய வீசிய புலனும்; வடிநவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர் ...
புறநானூறு - 23. நண்ணார் நாணுவர்!
நெடுஞ்செழியன் தலையாலங்கானப் போரில் வென்று அழித்த பகைவர் நாட்டின் அழிவைப் பற்றிக் கல்லாடனார் கூறும் பாடல் இது. கொட்டகையில் (வெளிறு இல்லில்) கட்டப்பட்டிருப்பதை வெறுத்த யானை கலக்கிய நீர்த்துறை. நெடுஞ்செழியனின் படை கடம்பு சூடிப் போரிட்ட முருகனின் கூளியர் படை போல பகைநாட்டில் வேண்டிய அளவு உண்டது போக வீசி எறிந்திருக்கும் நிலம...
24
மாங்குடி கிழவர்:மாங்குடி
பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற
பொதுவியல்.
பொருண்மொழிக் காஞ்சி.
நெல் அரியும் இருந் தொழுவர் செஞ் ஞாயிற்று வெயில் முனையின், தென் கடல்திரை மிசைப்பா யுந்து; திண் திமில் வன் பரதவர் வெப் புடைய மட் டுண்டு, 5 தண் குரவைச் சீர்தூங் குந்து; தூவற் கலித்த தேம்பாய் புன்னை மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர் எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து; வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் 10 முண்டகக் கோதை ஒண்டொடி ம...
புறநானூறு - 24. வல்லுனர் வாழ்ந்தோர்!
நல்லூர் மிழலைக் கழனி (நன்செய் வயல்) வேளாளர் தொன்றுமுதிர் வேளிர். இவர்களின் நெல் அறுக்கும் தொழுவர் (தொழிலாளர்) வெயில் கடுமையாக இருந்தால் கடலலையில் பாய்ந்து தணித்துக்கொள்வர். திமிலில் சென்று கடலில் மீன் பிடித்துத் திரும்பிய பரதவர் சூடான மட்டுக் கள் உண்டு குரவை ஆடிக்கொண்டு பாடுவர். அவ்வூர் மைந்தர் (வாலிபர்) தூவலில் பூக்கு...
25
கல்லாடனார்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
வாகை.
அரசவாகை.
மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது, உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு, நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு, உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை 5 அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப், பிணியுறு முரசம் கொண்ட காலை, நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழ...
புறநானூறு - 25. கூந்தலும் வேலும்!
கல்லாடனார் நெருஞ்செழியனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். (தலையாலங்கானப்) போர்க்களத்தில் திங்களும் ஞாயிறும் மறைவது போல (சோழன், சேரன் ஆகிய) இருபெரு முரசுகளைக் கைப்பற்றும்போது அவர்களது மனைவிமார் கைமைக் கோலத்தில் மார்பில் அடித்துக்கொள்ளா வண்ணமும், கூந்தல் களையா வண்ணமும் பார்த்துக்கொள்க. (அவர்களைக் கொல்ல வேண்டாம் என்பது கருத்த...
26
மாங்குடி கிழவர்; மாங்குடி
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
வாகை.
அரச வாகை.
நளி கடல் இருங் குட்டத்து வளி புடைத்த கலம் போலக், களிறு சென்று களன் அகற்றவும், களன் அகற்றிய வியல் ஆங்கண் ஒளிறு இலைய எகு ஏந்தி, 5 அரைசு பட அமர் உழக்கி, உரை செல முரசு வெளவி, முடித் தலை அடுப் பாகப், புனல் குருதி உலைக் கொளீஇத், தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின், 10 அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய! ஆன்ற கேள்வி, அடங்கிய கொ...
புறநானூறு - 26. நோற்றார் நின் பகைவர்!
புள்ளிருக்கு வேளூர் சிவனே! உன் கண்ணிலே தீ, கையிலே தீ, சிரிப்பிலே நீ, உடம்பெல்லாம் தீ. இப்படி இருக்கும் உன்னை இந்தப் பெண் உமையம்மை உன்னோடு எப்படி அம்மையப்பர் நிலையில் சேர்ந்திருக்கிறார். முந்தைய பாடல்
27
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
பொதுவியல்.
முதுமொழிக் காஞ்சி.
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன, வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து, வீற்றிருந் தோரை எண்ணுங் காலை, உரையும் பாட்டும் உடையோர் சிலரே; 5 மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே: புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ப, தம் செய்வினை முடித்து எனக் கேட்பல்; எந்தை! சேட்செ...
புறநானூறு - 27. புலவர் பாடும் புகழ்!
தாமரை சேற்றில் பிறக்கிறது. அது நூற்றுக்கணக்கான இதழ்களுடன் பொலிவாகத் தோன்றுகிறது. யார் பிறப்பிலும் வேற்றுமை இல்லை. சிலர் தாமரைப் பூப் போல விளங்குகின்றனர். பாராட்டும் புகழும் பெறுகின்றனர். சிலர் அதன் இலை போலக் கிடக்கின்றனர். செய்யும் செயலால் புலவர் பாடும் புகழுடையோர் வானத்தில் யாரும் ஓட்டாத வான ஊர்தியில் செல்வர் என்று சொ...
28
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
பொதுவியல்.
முதுமொழிக் காஞ்சி.
எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம்
எனும் உறுதிப் பொருள்கள் பற்றிய குறிப்பு. சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும், கூனும், குறளும், ஊமும், செவிடும் மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம் 5 பேதைமை அல்லது ஊதியம் இல், என முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும், அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது:- வட்ட வரிய செம்பொறிச் சேவல் ஏனல் க...
புறநானூறு - 28. போற்றாமையும் ஆற்றாமையும்!
மனவளம் குன்றிய சிதடு, உறுப்புக் குறையுள்ள உடல், கூன் (முதுகு வளைவு), குள்ளம், ஊமை, செவிடு, விலங்குத் தன்மை, பித்து ஆகிய எட்டும் அச்சம் தரும் பிறவிகள். இவற்றுடன் வாழ்வது நலமில்லா வாழ்க்கை என்று அறிந்துணர்ந்த முன்னோர் கூறியுள்ளனர். அதனைப் பற்றி இன்னும் சொல்கிறேன் கேள். தினைப்புனம் காப்போர் (யானை வருவதை) அறியும் வகையில் ப...
29
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
பொதுவியல்.
முதுமொழிக் காஞ்சி. சிறப்பு : சிறந்த அறநெறிகள்.
சிறந்த அறநெறிகள்.
அழல் புரிந்த அடர் தாமரை ஐது அடர்ந்ற நூற் பெய்து, புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப், பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை! 5 பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்க முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக், கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅ...
புறநானூறு - 29. நண்பின் பண்பினன் ஆகுக!
உன் நாளவை நீ அளித்த பொன்னாலான தாமரையை விரிந்த மயிர் கொண்ட தலையில் சூடிக்கொண்டுள்ள பாணர் முற்றுகையில் திளைக்கட்டும். அதன் பின் உன் சந்தனம் பூசிய மார்பு மகளிரின் தோள் முற்றுகையில் திளைக்கட்டும். இப்படி உன் சுற்றம் முரசு முழக்கத்துடன் விளங்கட்டும். எப்போதும் கொடியவர்களை அழிப்பதும் நல்லவர்களுக்கு உதவுவதுமாக இருப்பாயாக. நல்...
30
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
சோழன் நலங்கிள்ளி.
பாடாண்.
இயன்மொழி.
தலைவனின் இயல்பு கூறுதல்.
செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும், வளி திரிதரு திசையும், வறிது நிலைஇய காயமும், என்றிவை 5 சென்றளந்து அறிந்தார் போல, என்றும் இனைத்து என்போரும் உளரே அனைத்தும் அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக், களிறுகவுள் அடுத்த எறிகல் போல ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட 10 யாங்ஙனம் பாடுவர், புல...
புறநானூறு - 30. எங்ஙனம் பாடுவர்?
ஞாயிறு செல்லும் பாதையையும், அந்த ஞாயிறு தாங்கிக் கொண்டிருக்கும் சுமைகளையும், அந்தச் சுமைக்குள் சூழ்ந்திருக்கும் உருண்டை மண்டலங்களையும், காற்று திரியும் திசையையும், ஒன்றுமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் ஆகாயத்தையும் தாமே நேரில் சென்று அளந்து அறிந்தவர் போல இனைத்து என்று அளவு கூறுவாரும் உளர். அவர்களாலும் அளவிட்டுக் கூறமுட...
31
கோவூர்கிழார்.
சோழன் நலங்கிள்ளி.
வாகை.
அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய
துஞ்சாக் கண்ணர் ஆயினமை. சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க, 5 நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப் பாசறை யல்லது நீயொல் லாயே; நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே; போர் எனில் புகலும் புனைகழல் ம...
புறநானூறு - 31. வடநாட்டார் தூங்கார்!
அறத்தைப் பின்தொடர்ந்து பொருளும் இன்பமும் வருவது போல, உன் குடையைப் பின்தொடர்ந்து சேரர், பாண்டியர் குடைகள் வருகின்றன. இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது. நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டாய். பாசறையில் உள்ளாய். கூர் மழுங்கிய கொம்புகளுடன் போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது. போரை விரும்பும் உன் வீரக்கழல் மறவர...
32
கோவூர்கிழார்.
சோழன் நலங்கிள்ளி.
பாடாண்.
இயன்மொழி.
சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு.
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ? வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள், ஒண்ணுதல், விறலியர் பூவிலை பெறுக! என, மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் 5 பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதி வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமண் குரூஉத்திரள் போல, அவன் கொண்ட குட...
புறநானூறு - 32. பூவிலையும் மாடமதுரையும்!
நலங்கிள்ளி தன் குடும்பத்தார் சமைப்பதற்காக வஞ்சி நகரத்தையே தருவான். அவனைப் பாடும் விறலியர் தலையில் பூ வைத்துக்கொள்ள விலைப் பொருளாக மதுரை நகரத்தையே தருவான். எல்லோரும் வாருங்கள். அவனைப் பாடிப் பெற்றுக்கொள்ளலாம். அவனைப் பாட நமக்கு உரிமை உண்டு. குயவர் சிறுவர் விளையாடுகையில் தந்தையைப் போலப் பானை செய்யும் சக்கரத்தில் வைத்த ஈர...
33
கோவூர்கிழார்.
சோழன் நலங்கிள்ளி.
வாகை.
அரசவாகை.
பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில்
கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன் மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய, ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர் குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் 5 முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும், ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்; பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; ...
புறநானூறு - 33. புதுப்பூம் பள்ளி!
இவ்வூர் மக்கள் உழவர். இவர்களின் பெருங்குடி மகள் நெல்லைப் பண்டமாற்றாகத் தருவாளாம். வேட்டுவன் நாய்த்துணையுடன் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் தசையைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வானாம். ஆயர் குடிமகள் மொந்தையில் கொண்டுவந்த தயிரைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வாளாம். இந்த ஊரில் ஏழெயில் கதவம் என்னும் கோட்டை இ...
34
ஆலத்தூர் கிழார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடாண்.
இயன்மொழி.
'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய
ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும், மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும், குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும், வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என, நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன் 5 செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடின்றே ஆயிழை கணவ! காலை அந்தியும், மாலை அந்தியும், புறவுக் கருவன்ன புன்புல வரகின் பாற்பெய் புன்கம் தேனொடு...
புறநானூறு - 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!
பசுவின் முலையை அறுத்தல் (உழவுக்குப் பயன்படுத்தல்) தாலி அணிந்த பெண்ணின் கருவைச் சிதைத்தல் பார்ப்பானை அடித்தல் இவை பாவச் செயல்கள். இந்தப் பாவங்களைக் கழுவாய் செய்து போக்கிக்கொள்ளலாம். ஆனால் உலகமே கைவிட்டுப் போவதாயினும் நன்றி மறந்தவனுக்கு அப் பாவத்திலிருந்து தப்புவதற்கு வேறு வழியே இல்லை என்று அறநூல் பாடுகிறது எந்நன்றி கொன்...
35
வெள்ளைக்குடி நாகனார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
பாடாண்.
செவியறிவுறூஉ
அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள்.
நளிஇரு முந்நீர் ஏணி யாக, வளிஇடை வழங்கா வானம் சூடிய மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர், முரசு முழங்கு தானை மூவர் உள்ளும், அரசுஎனப் படுவது நினதே, பெரும! 5 அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும், அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத், தோடு கொள் வேலின் தோற்றம் போல, ஆடுகண் கரும்பின் வெண்...
புறநானூறு - 35. உழுபடையும் பொருபடையும்!
உன்னிடம் முறை வேண்டும்போது எளிமையாகக் காட்சி தந்து சரியான தீர்ப்பைப் பெற்றால் மழை விரும்பும்போது மழையைப் பெற்றது போன்று மக்கள் மகிழ்வர். உன் குடை உனக்கு வெயிலை மறைக்க அன்று. குடிமக்களின் துயரைப் போக்கி அவர்களுக்கு நிழல் தருவதற்காகவே. உன் கொற்றம் உழவரின் உழவுப் படையால் விளைந்தது. மழை பொய்த்தாலும் வருவாய் குறைந்தாலும் இய...
36
ஆலத்தூர் கிழார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
வஞ்சி.
துணை வஞ்சி.
அடுநை யாயினும், விடுநை யாயினும், நீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல், செயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும் தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக், 5 கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து, வீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும் கடிமரம் தடியும் ஓசை தன்ஊர் ந...
புறநானூறு - 36. நீயே அறிந்து செய்க!
அரசன் கிள்ளிவளவன் கருவூரை முற்றுகை இட்டிருந்தான். கருவூர் அரசன் தன் கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான். எதிர்க்காதவன் ஊரை முற்றுகை இட்டுக்கொண்டே இருத்தல் நாணத்தக்க செயல் என்று கூறுகிறார் புலவர். போரிட்டு அழித்தாலும், போரைக் கைவிட்டுத் திரும்பினாலும் நீ உன் உயர்ந்த நிலையை எண்ணிப்பார். மகளிர் கழங்கைத் தெற...
37
மாறோக்கத்து நப்பசலையார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
வாகை; உழிஞை எனவும் பாடம்.
அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம்.
நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த, வேக வெந்திறல், நாகம் புக்கென, விசும்புதீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப் பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப், புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள் வேல் 5 சினங்கெழு தானைச், செம்பியன் மருக! கராஅம் கலித்த குண்டுகண் அகழி, இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி, யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்...
புறநானூறு - 37. புறவும் போரும்!
பறவையின் துன்பம் தீர்த்த செம்பியனின் (சிபிச் சக்கரவர்த்தி) வழித்தோன்றலே! வேந்தன் தன் யானையொடு உள்ளே இருப்பதால் செம்பு போன்ற கோட்டையைச் சிதைத்தல் நல்லதன்று என உணர்ந்திருந்தும் போரிட்டுச் சிதைக்கும் வல்லமை பெற்றவன் நீ. நச்சுப் பற்களை உடைய ஐந்தலை நாகம் புகுந்தது போலவும். மின்னலுடன் கூடிய இடி மலையைப் பிளந்தது போலவும், தாக்...
38
ஆவூர் மூலங் கிழார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
பாடாண்.
இயன்மொழி,
வரை புரையும் மழகளிற்றின் மிசை, வான் துடைக்கும் வகைய போல விரவு உருவின கொடி நுடங்கும் வியன் தானை விறல் வேந்தே! நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ, 5 நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச், செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண் திங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின், நின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த, ...
புறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!
மலை போன்ற வாலிபக் களிற்றின் மேல் வானத்தைத் துடைப்பது போன்ற கொடியுடன் கூடிய யானைப்படையை உடையவன் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இப்படிப்பட்ட வெற்றி வேந்தனே! நீ மாறுபட்டு நோக்கும் இடம் தீப்பற்றி எரியும். விரும்பி நோக்கும் இடம் பொன் பூக்கும். அதனால் நீ ஞாயிற்றில் நிலவையும், நிலாவில் வெயிலையும் விளைவி...
39
மாறோக்கத்து நப்பசலையார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
பாடாண்.
இயன்மொழி,
வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது.
புறவின் அல்லல் சொல்லிய, கறையடி யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக் கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக! ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல் ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல் 5 தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று, மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து, அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால் முறை...
புறநானூறு - 39. புகழினும் சிறந்த சிறப்பு!
புறாவின் உயிரைக் காப்பாற்றத் தன்னையே தந்தக்கோல் தராசுக்கோல் தட்டில் நிறுத்துக் (கழுகுக்குக்) கொடுத்த உன் முன்னோன் சிபியின் வழிவந்தவன் நீ ஆகையால் ஈதல் உன் புகழ் அன்று. நீ தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் வழிவந்தவன் ஆதலால் பகைவரை அழித்தல் உன் புகழ் அன்று. உறையூர் அரசவையில் தொன்றுதொட்டு அறநெறி நிலைத்திருப்பதால் மக்க...
40
ஆவூர் மூலங்கிழார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
பாடாண்.
செவியறிவுறூஉ.
நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில் ஓம்பாது கடந்தட்டு, அவர் முடி புனைந்த பசும் பொன்னின் அடி பொலியக் கழல் தைஇய வல் லாளனை, வய வேந்தே! 5 யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப், புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும! ஒருபிடி படியுஞ் சீறிடம் 10 எழுகளிறு புரக்கும் நாடு...
புறநானூறு - 40. ஒரு பிடியும் எழு களிரும்!
வெற்றி வேந்தே! நீயோ பிறர் கோட்டைகளை வென்று அதன் புனைந்திருக்கும் அரசுமுடியால் உன் காலுக்கு வீரக்கழல் செய்துகொண்டவன். நானோ உன்னை இகழ்வோர் கொற்றம்(கொட்டம்) அடங்கப் பாடுபவன். நீ இன்று போல் என்றும் காட்சிதர வேண்டும். என்றென்றும் எளிதில் காட்சி தந்து இன்சொல் வழங்கவேண்டும். ஒரு யானை படுக்கும் நிலப்பரப்பில் ஏழு யானைகளுக்கு உண...
41
கோவூர் கிழார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
வஞ்சி.
கொற்ற வள்ளை.
காலனும் காலம் பார்க்கும்; பாராது வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய, வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே! திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும், பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும், 5 வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும், அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும், எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும், களிறுமேல் கொள்ளவும்...
புறநானூறு - 41. காலனுக்கு மேலோன்!
தீக் கனா எட்டுத் திசைகளிலும் எரிமீன் விழுதல் பச்சை மரம் பற்றி எறிதல் சூரியன் விழுங்கல் அச்சம் தரும் பறவைகள் ஒலித்தல் பல் நிலத்தில் விழுதல் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் யானை அடங்காமை மேலாடை கீழே விழுதல் அரியணை கவிழ்தல் இப்படியெல்லாம் கனவு காணும்படி நனவிலேயே போரிடும் வல்லமை உடையவன் நீ. இப்படி நீ வருவதைப் பார்த்த ...
42
இடைக்காடனார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
வாகை.
அரச வாகை.
சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச்
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின், 5 புரைதீர்ந் தன்று; அது புதுவதோ அன்றே; தண்புனற் பூசல் அல்லது, நொந்து, களைக, வாழி, வளவ! என்று, நின் முனைதரு பூசல் கனவினும் அறியாது, புலிபுறங் க...
புறநானூறு - 42. ஈகையும் வாகையும்!
உன் யானையோ மலை போல் உள்ளது. உன் படையோ கடல் போல் முழங்குகிறது. உன் வேலோ மின்னிக்கொண்டே இருக்கிறது. இதனால் உலகின் அரசர்களெல்லாம் நடுங்குகின்றனர். இது குற்றமற்ற செயல் அன்று. இது உனக்குப் புதியதும் அன்று. உன் நாட்டில் ஆற்றுநீர் மோதல் அன்றிப் பிற மோதல் இல்லாமல் களைந்தெறிவாயாக. போர்ப் பூசல் கனவிலும் இல்லாமல் புலி தன் குட்டிய...
43
தாமப்பல் கண்ணனார்,
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
வாகை.
அரசவாகை.
எறிந்தானைச் , 'சோழன் மகன் அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது. நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத், தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக், கால்உண வாகச், சுடரொடு கொட்கும் 5 அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மர...
புறநானூறு - 43. பிறப்பும் சிறப்பும்!
அவிர்சடை முனிவர்கள் நிலமக்களின் துன்பம் நீங்கவேண்டும் என்பதற்காகத் தவம் செய்வார்கள். வெயிலிலும் காற்றை மட்டுமே உணவாக உண்டுகொண்டு தவம் செய்வார்கள். இந்த முனிவர்களும் மருளும்படி புள்ளினங்களும் வாழும்படி சிபி மன்னன் ஆட்சி புரிந்தான். கொடிய சிறகும், கூரிய நகங்களும் கொண்ட பருந்தின் பிடியிலிருந்து தப்பித் தன்னிடம் வந்த புறாவ...
44
கோவூர் கிழார்.
சோழன் நெடுங்கிள்ளி.
வாகை.
அரச வாகை.
இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா, நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ, திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி, நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து, அலமரல் யானை உருமென முழங்கவும், 5 பாலில் குழவி அலறவும், மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில் வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும், இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல...
புறநானூறு - 44. அறமும் மறமும்!
நெடுங்கிள்ளியின் யானை நீராடவில்லை. நெல்லஞ்சோறும் நெய்யும் கலந்து உண்ணும் அது உணவுக் கவளம் பெறவில்லை. அது கட்டப்படிருக்கும் வெளில் என்னும் கூடாரம் வருந்தும்படி மோதிக்கொண்டு நிலத்தில் விழுந்து பெருமூச்சு விட்டுக்கொண்டு புரண்டு வருந்துகிறது; முழங்குகிறது. குழந்தைகள் பால் இல்லாமல் அலறுகின்றன. மகளிர் பூ இல்லாமல் வெறுந்தலையை...
45
கோவூர் கிழார்.
வஞ்சி.
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்; கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்! நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; 5 இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர் நும்மோர் அன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய...
புறநானூறு - 45. தோற்பது நும் குடியே!
பெரிய பனை மரத்தினது வெண்மை நிறம் கொண்ட குருத்து இலை மாலை அணிந்தவன் இல்லை (சேர மன்னனைப் போல்). கரிய கிளைகளையுடைய வேம்பின் மாலை அணிந்தவன் இல்லை (பாண்டிய மன்னனைப் போல்). உன்னுடைய மாலையும் ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது. உன்னுடன் போரிடுபவன் மாலையும் ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது. இப்பகையினால் உண்டாகு...
End of preview. Expand in Data Studio

புறநானூறு (Purananuru)

📝 Dataset Description

புறநானூறு (Purananuru) is one of the eight classical anthologies (Ettuthokai) in Sangam Literature, containing 400 poems. Each poem is written by a different poet and is dedicated to various kings, chieftains, or deities.

This dataset provides a structured digital format of Purananuru, including:

Poem ID

Title

Original Tamil Poem text

Explanation (பொருளுரை)

The dataset bridges ancient Tamil literature with modern NLP research.

📂 Dataset Structure

Fields

id (int) → Unique ID of the poem

title (string) → Title of the poem

poem (string) → Original Tamil poem text

explanation (string) → Tamil explanation / commentary of the poem

Example { "id": 1, "title": "புறநானூறு - 1. இறைவனின் திருவுள்ளம்!", "poem": "கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்\nவண்ண மார்பின் தாருங் கொன்றை; ...", "explanation": "தலையில் கொன்றைப் பூ சூடியவன். மார்பில் கொன்றை மாலை அணிந்தவன்... அவன் தவம் செய்துகொண்டிருக்கிறான்." }

📊 Dataset Statistics

Total Poems: ~400

Language: Tamil (ta)

Format: JSON

Size: ~1.5 MB

💡 Use Cases

This dataset can be used for:

Tamil Natural Language Processing (NLP)

Poem-to-Explanation alignment

Summarization and translation tasks (Tamil ↔ English)

Cultural and historical research

Educational applications (Digital Sangam literature resources)

🔑 Licensing

License: Open Data for research and educational purposes.

Attribution is required when using this dataset in publications or applications.

#புறநானூறு #சங்கஇலக்கியம் #தமிழ் #Tamil #Purananuru #SangamLiterature #TamilPoetry #ClassicalLiterature #AncientTamil #TamilNLP #DigitalHeritage #TamilCulture #TamilClassics #PoetryDataset #TamilAI #OpenSource

Downloads last month
21