id
int64
1
400
பாடியவர்
stringlengths
0
32
பாடப்பட்டோன்
stringlengths
0
52
திணை
stringclasses
28 values
துறை
stringlengths
0
59
சிறப்பு
stringclasses
36 values
poem
stringlengths
0
1.3k
title
stringlengths
15
51
explanation
stringlengths
31
4.28k
1
பெருந்தேவனார்.
இறைவன்
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை; ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப; கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை 5 மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்; பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்...
புறநானூறு - 1. இறைவனின் திருவுள்ளம்!
தலையில் கொன்றைப் பூ சூடியவன். மார்பில் கொன்றை - மாலை அணிந்தவன். ஊர்தி வெண்ணிறக் காளைமாடு. கொடியும் காளைமாடு என்று கூறுகின்றனர். தொண்டையில் நஞ்சுக் கறை. அந்தக் கறை அந்தணர் மறையில் போற்றப்படுகிறது. ஒருபாதி (இடப்புறம்) பெண் - உருவம். அதனைத் தனக்குள் மறைத்துக்கொள்வதும் உண்டு. நெற்றியில் பிறை. அந்தப் பிறையை 18 வகையான தேவ கண...
2
முரஞ்சியூர் முடிநாகராயர்.
சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
பாடாண்.
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
மண் திணிந்த நிலனும், நிலம் ஏந்திய விசும்பும், விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும், தீ முரணிய நீரும், என்றாங்கு 5 ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும் வலியும், தெறலும், அணியும், உடையோய்! நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் 10 யாணர் வைப்...
புறநானூறு - 2. போரும் சோறும்!
நிலம் போல் பொறுமை, வானம் போல் சூழ்திறன், காற்றைப் போல் வலிமை, தீயைப் போல் எரிக்கும் - திறன், நீரைப் போல் அளிக்கும் கொடைத்திறன் ஆகியவற்றை உடையவன் நீ. உன் கடலிலே தோன்றிய ஞாயிறு உன் கடலிலேயே மறையும் நிலப்பரப்பை உடையவன் நீ. இப்படிப்பட்ட வானவரம்பன் நீதானா? தும்பைப் பூ சூடி ஐவரை எதிர்த்த நூற்றுவர் மாண்ட போர்க்களத்தில் இருபால...
3
இரும்பிடர்த் தலையார்.
பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
பாடாண்.
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.
உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற, ஏம முரசம் இழுமென முழங்க, நேமி யுய்த்த நேஎ நெஞ்சின், தவிரா ஈகைக், கவுரியர் மருக! 5 செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ! பொன் னோடைப் புகர் அணிநுதல் துன்னருந் திறல் கமழ்கடா அத்து எயிரு படையாக, எயிற்கதவு இடாஅக் கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில். 10 பெருங்கை...
புறநானூறு - 3.வன்மையும் வண்மையும்!
நீ கவுரியர் மரபில் வந்தவன். அவர்கள் முழுமதி போல் உருவம் கொண்ட வெண்கொற்றக் குடையால் ஆளும் மண்ணிலுள்ள அனைத்துக்கும் நிழல் தந்தவர்கள். முரசு முழக்கத்துடன் ஆட்சிச் சக்கரத்தை உருட்டியவர்கள். நெஞ்சில் நேயம் கொண்டு இல்லை என்று சொல்லாமல் கொடை வழங்கியவர்கள். நீ கற்புக்கரசியின் கணவன். உன்னைக் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி என...
4
பரணர்.
சோழன் உருவப் பறேர் இளஞ்சேட் சென்னி.
வஞ்சி.
கொற்ற வள்ளை.
சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும்.
வாள்,வலந்தர, மறுப் பட்டன செவ் வானத்து வனப்புப் போன்றன! தாள், களங்கொளக், கழல் பறைந்தன கொல் ஏற்றின் மருப்புப் போன்றன; தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ, 5 நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; மாவே, எறிபதத்தான் இடங் காட்டக், கறுழ் பொருத செவ் வாயான், எருத்து வவ்விய புலி போன்றன; களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய், 10 நுதி மழுங்...
புறநானூறு - 4. தாயற்ற குழந்தை!
வெற்றிகண்ட உன்வாள் செவ்வானம் போலக் கறைபட்டுக்கிடக்கிறது. களம்கொண்ட உன் தாளிலுள்ள வீரக்கழல் கொல்லும் களிற்றின் தந்தம் போன்றன. மார்புக் கவசமாகிய தோல் அம்பால் துளைக்கப்பட்டு நிலையில்லாமல் மின்னும் விண்மீன் கொண்ட வானம் போன்றது. குதிரையின் வாய் கடிவாளம் சுண்டியதால் காளைமாட்டைக் கடித்த புலியின் வாயைப் போன்றன. யானையின் கொம்பு...
5
நரிவெரூஉத் தலையார்.
சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல்.
பாடாண்.
வெவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியும் ஆம்.
பார்வையானே நோய் போக்கும் கண்ணின் சக்தி பற்றிய செய்தி.
எருமை அன்ன கருங்கல் இடை தோறு, ஆனிற் பரக்கும் யானைய, முன்பின், கானக நாடனை!நீயோ, பெரும! நீயோர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்; அருளும் அன்பும் நீக்கி நீங்கா 5 நிரயங் கொள்பவரொடு ஒன்றாது, காவல், குழவி கொள் பவரின், ஓம்புமதி! அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே.
புறநானூறு - 5. அருளும் அருமையும்!
எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே! நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக! அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு...
6
காரிகிழார்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
பாடாண்.
செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
பாண்டியனின் மறமாண்பு.
வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும், தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும், குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும், குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும், கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின் 5 நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது ஆனிலை உலகத் தானும், ஆனாது, உருவும் புகழும் ஆகி, விரிசீர்த் தெரிகோல் ஞமன்ன் போல, ஒரு திறம் பற்ற...
புறநானூறு - 6. தண்ணிலவும் வெங்கதிரும்!
உன் உருவமும், புகழும் பரவ வேண்டும். வடக்கில் இமயமலைக்கு அப்பாலும், தெற்கில் குமரிமுனைக்குத் தென்பாலும், கிழக்கில் தோண்டப்பட்ட கடலுக்கு அப்பாலும், மேற்கில் பழமையான கடலுக்கு அப்பாலும், மூன்றாக அடுக்கப்பட்டுள்ள உலகங்களில் கீழே உள்ள உலகம், மேலே உள்ள உலகம் ஆகியவற்றிற்கு அப்பாலும் பரவ வேண்டும். உன் செங்கோல் ஒருபுறமும் சாயாமல...
7
கருங்குழல் ஆதனார்.
சோழன் கரிகாற் பெருவளத்தான்.
வஞ்சி.
கொற்ற
களிறு கடைஇய தாள், கழல் உரீஇய திருந்துஅடிக், கணை பொருது கவிவண் கையால், கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து மா மறுத்த மலர் மார்பின், 5 தோல் பெயரிய எறுழ் முன்பின், எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர் ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ! 10 தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து மீன...
புறநானூறு - 7. வளநாடும் வற்றிவிடும்!
களிற்றுப்படை, காலாள்படை ஆகியவற்றின் காலால் மிதித்தும், கை வளத்தால் அம்பு தொடுத்தும் பகைநாட்டை அழித்தாய். விரும்பி வந்த திருமகளை ஏற்க மறுத்த மலர்ந்த மார்பில் தோல் என்னும் கவசத்தை அணிந்திருக்கும் வலிமை மிக்க மார்பினை உடையவன் நீ. இரவு பகல் என்று பார்க்காமல் பகைநாட்டைச் சுட்டு அது எரியும் விளக்கில் அவர் நாட்டு மக்கள் அழுகு...
8
கபிலர்.
சேரமான் கடுங்கோ வாழியாதன் : சேரமான் செல்வக்
பாடாண்.
இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப், போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது , இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக், கடந்து அடு தானைச் சேரலாதனை 5 யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்! பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி; மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி; அகல்இரு விசும்பி னானும் பகல்விளங் குதியால் பல...
புறநானூறு - 8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!
விரைந்து செல்லும் கதிரவனே! உலகத்தைக் காக்கும் மன்னர்கள் தனக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்ற இன்பத்தை விரும்பி, இவ்வுலகம் யாவர்க்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன்னுடைய நாடு சிறியது என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு, ஊக்கமுடைய உள்ளத்துடன் குறையாத ஈகையுடனும் பகைவரை வெல்லும் படையையுடைய சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு நீ...
9
நெட்டிமையார்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
பாடாண்.
இயன்மொழி. குறிப்பு : இதனுடன் காரிகிழாரின்
ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என 5 அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங் கோச் செந்நீர்ப் பசும்பொன் ...
புறநானூறு - 9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!
போர் அறம் - பசு, பசுப் போன்ற இயல்புடைய பார்ப்பனர், பெண்டிர், மரபுநோய் உள்ளவர், இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள். இங்கே என் அம்பு பாயும் போர் நிகழவிருக்கிறது - என்று அறவழி கூறியபின் போரிடும் பாங்குடையவன் இந்த அரசன். கொல்களிற்றின் மேல் கொடி தோன...
10
சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.
பாடாண்.
இயன்மொழி.
வழிபடு வோரை வல்லறி தீயே! பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே; நீமெய் கண்ட தீமை காணின், ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி; வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், 5 தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே; அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப! 1...
புறநானூறு - 10. குற்றமும் தண்டனையும்!
நெய்தலங்கானல் நெடியோய்! உன்னை வாழ்த்தி வேண்டுகிறேன். வழிபடுவோர் உன்னை எதற்காக வழிபடுகின்றனர் என்பதை உடனே தெரிந்துகொள். பிறன்மீது பழி கூறுபவர்களின் சொல்லை நம்பாதே. நீ ஒருவனிடம் உண்மையாகவே தீமையைக் கண்டால் ஒத்திட்டு ஆராய்ந்து தக்க தண்டனை வழங்கு. அவர் தன் தவற்றை உணர்ந்து உன் காலடியில் வணங்கி நின்றால் பண்டைய தண்டனையைக் குற...
11
பேய்மகள் இளவெயினியார்.
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
பாடாண்.
பரிசில் கடாநிலை.
அரி மயிர்த் திரள் முன்கை வால் இழை, மட மங்கையர் வரி மணற் புனை பாவைக்குக் குலவுச் சினைப் பூக் கொய்து தண் பொருநைப் புனல் பாயும் 5 விண் பொருபுகழ், விறல்வஞ்சிப் பாடல் சான்ற விறல்வேந் தனும்மே வெப் புடைய அரண் கடந்து, துப்புறுவர் புறம்பெற் றிசினே: புறம் பொற்ற வய வேந்தன் 10 மறம் பாடிய பாடினி யும்மே, ஏர் உடைய விழுக் கழஞ்சின், சீ...
புறநானூறு - 11. பெற்றனர்! பெற்றிலேன்!
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடலால் புகழ் பெற்ற வஞ்சி நகர வேந்தன். இந்த வஞ்சி தண்பொருநை ஆறு பாயும் நகரம். வானளாவிய புகழும் வெற்றியும் உடைய நகரம். இந்தப் பொருநை ஆற்று மணலில் பாவை செய்து பூப் பறித்துவந்து சூட்டி மகளிர் விளையாடுவர். இவர்கள் மென்மையான மயிர் கொண்ட தம் திரண்ட கைகளையும், வெண்ணிற இழையணியும் கொண்டவர்கள். பாவைக்குப...
12
நெட்டிமையார்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
பாடாண்.
இயன்மொழி.
பாணர் தாமரை மலையவும், புலவர் பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும், அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி! இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு, இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே? 5
புறநானூறு - 12. அறம் இதுதானோ?
முதுகுடுமிப் பெருவழுதியே! பாணர்க்குப் பொன்னால் செய்த தாமரை மாலை சூட்டியும், புலவர்க்கு அலங்கரிக்கப்பட்ட தேருடன் நெற்றியில் பொற்பட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட யானையையும் அளித்து, உன்னிடம் பரிசு பெறுவோர்க்கு நீ நல்லவை செய்து, மறுபுறம் உன் பகைவர்களுக்கு துன்பம் நேரும்படி அவர்களுடைய நாட்டை வெற்றி கொள்வது அறமான செயல்தானா? குறி...
13
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
பாடாண்.
வாழ்த்தியல்
இவன் யார்? என்குவை ஆயின், இவனே, புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய, எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின், மறலி அன்ன களிற்றுமிசை யோனே; களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும், 5 பன்மீன் நாப்பண் திங்கள் போலவும், சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப, மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே; நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம! பழன மஞ்ஞை உகுத்த ...
புறநானூறு - 13. நோயின்றிச் செல்க!
இவன் யார் என்று கேட்பாயானால், சொல்கிறேன் கேள். அழகிய நெஞ்சில் புலிநிறம் பட்ட கவசம் அணிந்தவன். அந்த நிறம் பிறர் எய்த அம்புகளால் உருவானது. எமன் போன்ற களிற்றின்மேல் உள்ளான். அது கடலில் மிதக்கும் நாவாய்க் கப்பல் போல் வருகிறது. அதனைச் சூழ்ந்து சுறாமீன் கூட்டம் போல் வாள்வீரர்கள் மொய்த்துக்கொண்டு வருகின்றனர். அந்தக் களிற்றுக்...
14
கபிலர்.
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
பாடாண்.
இயன்மொழி
கடுங்கண்ண கொல் களிற்றால் காப் புடைய எழு முருக்கிப், பொன் இயல் புனை தோட்டியான் முன்பு துரந்து, சமந் தாங்கவும்; பார்உடைத்த குண்டு அகழி 5 நீர் அழுவம் நிவப்புக் குறித்து, நிமிர் பரிய மா தாங்கவும்; ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச் சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்; பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும்; குரிசில்! 10 வலிய ஆகும் நின் ...
புறநானூறு - 14. மென்மையும்! வன்மையும்!
கோட்டைக்கதவுத் தடைமரத்தை முரிக்கக் கொல்களிற்றைப் பொன்பூண் போட்ட அங்குசத்தால் வலிமையுடன் குத்திப் போரிட்டுத் தாக்கவும், நிலத்தைப் பிளந்து உருவாக்கிய அகழி நீரை நிவந்து தாண்டும்படிப் போர்க்குதிரைகளை இழுத்துப் பிடிக்கவும், தேர்மீது இருந்துகொண்டு வில்லின் நாணை வலிமையாக இழுத்து எதிராளி வடுக் கொள அம்பு எய்யவும், பரிசிலர்களுக்...
15
கபிலர்.
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்.
பாடாண்.
இயன்மொழி
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், வெள்வாய்க் கழுதைப் புல்லினப் பூட்டிப், பாழ்செய் தனை, அவர் நனந்தலை நல்லெயில்; புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல், வெள்ளுளைக் கலிமான் கவிகுளம்பு உகளத் 5 தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்துத்; துளங்கு இயலாற், பணை எருத்தின், பா வடியாற்,செறல் நோக்கின், ஒளிறு மருப்பின் களிறு அவர காப் புடைய க...
புறநானூறு - 15. எதனிற் சிறந்தாய்?
நீ சினம் மிக்கவன். அதனால் பகைவர் நாட்டில் தேர் நடத்தினாய். அந்தத் தேர்க்கால் பள்ளத்தில் கழுதை - ஏர் பூட்டி உழுதாய். அவரது கோட்டைகளை அழித்தாய். பறவைகள் மேயும் விளைவயல்கள் உன் குதிரைக் குளம்புகளால் மிதிபடத் தேரோட்டினாய். நடை பயில்வதும், பருத்த முதுகுக் கொட்டேறியும், பரந்த காலடியும், அழிக்கும் பார்வையும், ஒளி வீசும் கொம்ப...
16
பாண்டரங் கண்ணனார்.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி.
வஞ்சி.
வினை மாட்சிய விரை புரவியொடு, மழை யுருவின தோல் பரப்பி, முனை முருங்கத் தலைச்சென்று, அவர் விளை வயல் கவர்பு ஊட்டி மனை மரம் விறகு ஆகக் 5 கடி துறைநீர்க் களிறு படீஇ எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப், புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத், துணை வேண்டாச் செரு வென்றிப், 10 புலவு வாள் புலர் சாந்தி...
புறநானூறு - 16. செவ்வானும் சுடுநெருப்பும்!
செயல்திறம் மிக்க குதிரைப்படை, மழைமேகம் போன்ற காலால் - படை ஆகியவை முரியும்படி போரிட்டான். அவர்களது விளைவயல்களில் தம் குதிரைகளை மேயவிட்டான். அவர்களது வீட்டு - மரங்களை எரிக்கும் விறகாக்கிக்கொண்டான். காவல் மிக்க அவர்களது நீர்த் துறைகளில் களிறுகளைக் குளிக்கும்படிச் செய்தான். பட்டப்பகலில் அவன் ஊரை எரிக்கும் தீ மாலையில் சூரிய...
17
சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
அரசவாகை; இயன்மொழியும் ஆம்.
தென் குமரி, வட பெருங்கல், குண குட கடலா வெல்லை, குன்று, மலை, காடு, நாடு ஒன்று பட்டு வழி மொழியக், கொடிது கடிந்து, கோல் திருத்திப், 5 படுவது உண்டு, பகல் ஆற்றி, இனிது உருண்ட சுடர் நேமி முழுது ஆண்டோர் வழி காவல! குலை இறைஞ்சிய கோள் தாழை அகல் வயல், மலை வேலி, 10 நிலவு மணல் வியன் கானல், தெண் கழிமிசைச் சுடர்ப் பூவின், தண் தொண்டிய...
புறநானூறு - 17. யானையும் வேந்தனும்!
பொருளுரை: not found in the page
18
பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: பொதுவியல்.
பொதுவியல்.
முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்து பட்ட வியன் ஞாலம் தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ: ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்! ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய 5 பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே! நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் பூக் கதூஉம் இன வாளை, நுண் ஆரல், பரு வரால், குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி; 10 வான் உட்கும் வடிநீண் மதில்; மல...
புறநானூறு - 18. நீரும் நிலனும்!
பொருளுரை: not found in the page
19
குடபுலவியனார்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
வாகை.
அரசவாகை.
இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத் தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து, மன்உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும். நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய! இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய 5 பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி, முயங்கினேன் அல்லனோ யானே! மயங்கிக் குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல, அம்புசென்று இறுத்த அறும்புண...
புறநானூறு - 19. எழுவரை வென்ற ஒருவன்!
பொருளுரை: not found in the page
20
குறுங்கோழியூர்கிழார்.
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை;
வாகை.
அரச வாகை.
இரு முந்நீர்க் குட்டமும், வியன் ஞாலத்து அகலமும், வளி வழங்கு திசையும், வறிது நிலைஇய காயமும், என்றாங்கு அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை; 5 அறிவும், ஈரமும், பெருங்க ணோட்டமும்; சோறு படுக்கும் தீயோடு செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே; திருவில் அல்லது கொலைவில் அறியார்; 10 நாஞ்சில் அல...
புறநானூறு - 20. மண்ணும் உண்பர்!
கடலின் ஆழத்தையும், உலகின் பரப்பையும், காற்று வாழும் திசையையும், ஏதுமில்லாத ஆகாயத்தையும் என்று எல்லாவற்றையும் அளந்து அறிந்தாலும் உன்னை அளக்க முடியாது. உன் ஆட்சிக்குடை நிழலில் வாழ்பவர்கள் உன் அறிவு, இரக்கம், உதவும் எண்ணம் (கண்ணோட்டம்) ஆகியவற்றை அறிவர். அவர்களுக்குச் சோறாக்கும் தீ, வெயில் ஆகியவற்றின் சூடு அல்லது வேறு சூடு...
21
ஐயூர் மூலங்கிழார்.
கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.
வாகை.
அரசவாகை.
புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்! நிலவரை இறந்த குண்டுகண் அகழி, வான்தோய் வன்ன புரிசை, விசும்பின் மீன்பூத் தன்ன உருவ ஞாயில், கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை, 5 அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில், கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன, வேங்கை மார்பின் இரங்க வைகலும் ஆடுகொளக் குழைந்த தும...
புறநானூறு - 21. புகழ்சால் தோன்றல்!
மண்ணின் ஆழம் வரையில் தோண்டிய அகழி, வான் அளாவும் மதில், மீன் பூத்தது போல் தோன்றும் ஞாயில் (மதில் - ஆள் - இருக்கைகள்), சூரிய ஒளி புகாவண்ணம் இருண்டிருக்கும் காவல் - காடுகள், கடத்தற்கு அரிய காவலர்களைக் கொண்ட கூடாரங்கள் (குறும்பு) - ஆகியவற்றைக் பொண்ட கானப்பேர் நகரக் கோட்டையை - காய்ச்சிய இரும்பு உண்டது போல மீட்டுக்கொள்ள முடி...
22
குறுங்கோழியூர் கிழார்.
சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.
வாகை.
அரசவாகை.
தூங்கு கையான் ஓங்கு நடைய, உறழ் மணியான் உயர் மருப்பின, பிறை நுதலான் செறல் நோக்கின, பா வடியால் பணை எருத்தின, தேன் சிதைந்த வரை போல, 5 மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து, அயறு சோரூம் இருஞ் சென்னிய, மைந்து மலிந்த மழ களிறு கந்து சேர்பு நிலைஇ வழங்கப்: பாஅல் நின்று கதிர் சோரும் 10 வான உறையும் மதி போலும் மாலை வெண் குடை நீழலான், வாள...
புறநானூறு - 22. ஈகையும் நாவும்!
களிறு தொங்கும் கை, பெருமித நடை, ஒலிக்கும் மணி, மேலே வளைந்து உயர்ந்திருக்கும் கொம்பு, பிறை போன்ற நெற்றி, சினம் கொண்ட பார்வை, விரிந்த காலடி, பருத்த கழுத்து, தேன் சிந்தும் மலை போல வண்டு மொய்க்க ஒழுகும் மதநீர், இரும்பைப் போன்ற தலை, வலிமை - ஆகியவற்றைக் கொண்ட உன் வாலிபக் களிறு அதன் நிலைகளத்தில் கட்டிக் கிடக்கிறது. பால் ஒழுகு...
23
கல்லாடனார்.
பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்.
வாகை.
அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.
வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக், களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும்! கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர் 5 கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் கொள்பதம் ஒழிய வீசிய புலனும்; வடிநவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர் ...
புறநானூறு - 23. நண்ணார் நாணுவர்!
நெடுஞ்செழியன் தலையாலங்கானப் போரில் வென்று அழித்த பகைவர் நாட்டின் அழிவைப் பற்றிக் கல்லாடனார் கூறும் பாடல் இது. கொட்டகையில் (வெளிறு இல்லில்) கட்டப்பட்டிருப்பதை வெறுத்த யானை கலக்கிய நீர்த்துறை. நெடுஞ்செழியனின் படை கடம்பு சூடிப் போரிட்ட முருகனின் கூளியர் படை போல பகைநாட்டில் வேண்டிய அளவு உண்டது போக வீசி எறிந்திருக்கும் நிலம...
24
மாங்குடி கிழவர்:மாங்குடி
பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற
பொதுவியல்.
பொருண்மொழிக் காஞ்சி.
நெல் அரியும் இருந் தொழுவர் செஞ் ஞாயிற்று வெயில் முனையின், தென் கடல்திரை மிசைப்பா யுந்து; திண் திமில் வன் பரதவர் வெப் புடைய மட் டுண்டு, 5 தண் குரவைச் சீர்தூங் குந்து; தூவற் கலித்த தேம்பாய் புன்னை மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர் எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து; வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் 10 முண்டகக் கோதை ஒண்டொடி ம...
புறநானூறு - 24. வல்லுனர் வாழ்ந்தோர்!
நல்லூர் மிழலைக் கழனி (நன்செய் வயல்) வேளாளர் தொன்றுமுதிர் வேளிர். இவர்களின் நெல் அறுக்கும் தொழுவர் (தொழிலாளர்) வெயில் கடுமையாக இருந்தால் கடலலையில் பாய்ந்து தணித்துக்கொள்வர். திமிலில் சென்று கடலில் மீன் பிடித்துத் திரும்பிய பரதவர் சூடான மட்டுக் கள் உண்டு குரவை ஆடிக்கொண்டு பாடுவர். அவ்வூர் மைந்தர் (வாலிபர்) தூவலில் பூக்கு...
25
கல்லாடனார்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
வாகை.
அரசவாகை.
மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது, உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு, நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு, உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை 5 அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப், பிணியுறு முரசம் கொண்ட காலை, நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்றோ, நின்வேல்; செழ...
புறநானூறு - 25. கூந்தலும் வேலும்!
கல்லாடனார் நெருஞ்செழியனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். (தலையாலங்கானப்) போர்க்களத்தில் திங்களும் ஞாயிறும் மறைவது போல (சோழன், சேரன் ஆகிய) இருபெரு முரசுகளைக் கைப்பற்றும்போது அவர்களது மனைவிமார் கைமைக் கோலத்தில் மார்பில் அடித்துக்கொள்ளா வண்ணமும், கூந்தல் களையா வண்ணமும் பார்த்துக்கொள்க. (அவர்களைக் கொல்ல வேண்டாம் என்பது கருத்த...
26
மாங்குடி கிழவர்; மாங்குடி
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
வாகை.
அரச வாகை.
நளி கடல் இருங் குட்டத்து வளி புடைத்த கலம் போலக், களிறு சென்று களன் அகற்றவும், களன் அகற்றிய வியல் ஆங்கண் ஒளிறு இலைய எகு ஏந்தி, 5 அரைசு பட அமர் உழக்கி, உரை செல முரசு வெளவி, முடித் தலை அடுப் பாகப், புனல் குருதி உலைக் கொளீஇத், தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின், 10 அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய! ஆன்ற கேள்வி, அடங்கிய கொ...
புறநானூறு - 26. நோற்றார் நின் பகைவர்!
புள்ளிருக்கு வேளூர் சிவனே! உன் கண்ணிலே தீ, கையிலே தீ, சிரிப்பிலே நீ, உடம்பெல்லாம் தீ. இப்படி இருக்கும் உன்னை இந்தப் பெண் உமையம்மை உன்னோடு எப்படி அம்மையப்பர் நிலையில் சேர்ந்திருக்கிறார். முந்தைய பாடல்
27
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
பொதுவியல்.
முதுமொழிக் காஞ்சி.
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன, வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து, வீற்றிருந் தோரை எண்ணுங் காலை, உரையும் பாட்டும் உடையோர் சிலரே; 5 மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே: புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ப, தம் செய்வினை முடித்து எனக் கேட்பல்; எந்தை! சேட்செ...
புறநானூறு - 27. புலவர் பாடும் புகழ்!
தாமரை சேற்றில் பிறக்கிறது. அது நூற்றுக்கணக்கான இதழ்களுடன் பொலிவாகத் தோன்றுகிறது. யார் பிறப்பிலும் வேற்றுமை இல்லை. சிலர் தாமரைப் பூப் போல விளங்குகின்றனர். பாராட்டும் புகழும் பெறுகின்றனர். சிலர் அதன் இலை போலக் கிடக்கின்றனர். செய்யும் செயலால் புலவர் பாடும் புகழுடையோர் வானத்தில் யாரும் ஓட்டாத வான ஊர்தியில் செல்வர் என்று சொ...
28
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
பொதுவியல்.
முதுமொழிக் காஞ்சி.
எண்பேர் எச்சங்கள் பற்றிய விளக்கம். அறம் பொருள் இன்பம்
எனும் உறுதிப் பொருள்கள் பற்றிய குறிப்பு. சிறப்பில் சிதடும், உறுப்பில் பிண்டமும், கூனும், குறளும், ஊமும், செவிடும் மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம் 5 பேதைமை அல்லது ஊதியம் இல், என முன்னும் அறிந்தோர் கூறினர்; இன்னும், அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது:- வட்ட வரிய செம்பொறிச் சேவல் ஏனல் க...
புறநானூறு - 28. போற்றாமையும் ஆற்றாமையும்!
மனவளம் குன்றிய சிதடு, உறுப்புக் குறையுள்ள உடல், கூன் (முதுகு வளைவு), குள்ளம், ஊமை, செவிடு, விலங்குத் தன்மை, பித்து ஆகிய எட்டும் அச்சம் தரும் பிறவிகள். இவற்றுடன் வாழ்வது நலமில்லா வாழ்க்கை என்று அறிந்துணர்ந்த முன்னோர் கூறியுள்ளனர். அதனைப் பற்றி இன்னும் சொல்கிறேன் கேள். தினைப்புனம் காப்போர் (யானை வருவதை) அறியும் வகையில் ப...
29
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
பொதுவியல்.
முதுமொழிக் காஞ்சி. சிறப்பு : சிறந்த அறநெறிகள்.
சிறந்த அறநெறிகள்.
அழல் புரிந்த அடர் தாமரை ஐது அடர்ந்ற நூற் பெய்து, புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப், பாண் முற்றுக, நின் நாள்மகிழ் இருக்கை! 5 பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் தோள் முற்றுக, நின் சாந்துபுலர் அகலம்! ஆங்க முனிவில் முற்றத்து, இனிது முரசு இயம்பக், கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்குஅ...
புறநானூறு - 29. நண்பின் பண்பினன் ஆகுக!
உன் நாளவை நீ அளித்த பொன்னாலான தாமரையை விரிந்த மயிர் கொண்ட தலையில் சூடிக்கொண்டுள்ள பாணர் முற்றுகையில் திளைக்கட்டும். அதன் பின் உன் சந்தனம் பூசிய மார்பு மகளிரின் தோள் முற்றுகையில் திளைக்கட்டும். இப்படி உன் சுற்றம் முரசு முழக்கத்துடன் விளங்கட்டும். எப்போதும் கொடியவர்களை அழிப்பதும் நல்லவர்களுக்கு உதவுவதுமாக இருப்பாயாக. நல்...
30
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
சோழன் நலங்கிள்ளி.
பாடாண்.
இயன்மொழி.
தலைவனின் இயல்பு கூறுதல்.
செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும், வளி திரிதரு திசையும், வறிது நிலைஇய காயமும், என்றிவை 5 சென்றளந்து அறிந்தார் போல, என்றும் இனைத்து என்போரும் உளரே அனைத்தும் அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக், களிறுகவுள் அடுத்த எறிகல் போல ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட 10 யாங்ஙனம் பாடுவர், புல...
புறநானூறு - 30. எங்ஙனம் பாடுவர்?
ஞாயிறு செல்லும் பாதையையும், அந்த ஞாயிறு தாங்கிக் கொண்டிருக்கும் சுமைகளையும், அந்தச் சுமைக்குள் சூழ்ந்திருக்கும் உருண்டை மண்டலங்களையும், காற்று திரியும் திசையையும், ஒன்றுமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் ஆகாயத்தையும் தாமே நேரில் சென்று அளந்து அறிந்தவர் போல இனைத்து என்று அளவு கூறுவாரும் உளர். அவர்களாலும் அளவிட்டுக் கூறமுட...
31
கோவூர்கிழார்.
சோழன் நலங்கிள்ளி.
வாகை.
அரசவாகை: மழபுல வஞ்சியும் ஆம்.
வடபுலத்து அரசர்கள் இச்சோழனது மறமாண்பைக் கேட்டு அஞ்சிய
துஞ்சாக் கண்ணர் ஆயினமை. சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க, 5 நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப் பாசறை யல்லது நீயொல் லாயே; நிதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே; போர் எனில் புகலும் புனைகழல் ம...
புறநானூறு - 31. வடநாட்டார் தூங்கார்!
அறத்தைப் பின்தொடர்ந்து பொருளும் இன்பமும் வருவது போல, உன் குடையைப் பின்தொடர்ந்து சேரர், பாண்டியர் குடைகள் வருகின்றன. இதனால் தமிழகமே ஒன்றுபட்டுள்ளது. நீ புகழ் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டாய். பாசறையில் உள்ளாய். கூர் மழுங்கிய கொம்புகளுடன் போருக்குத் துடிக்கும் உன் களிறு அடங்க மறுக்கிறது. போரை விரும்பும் உன் வீரக்கழல் மறவர...
32
கோவூர்கிழார்.
சோழன் நலங்கிள்ளி.
பாடாண்.
இயன்மொழி.
சோழனது நினைத்தது முடிக்கும் உறுதிப்பாடு.
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ? வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள், ஒண்ணுதல், விறலியர் பூவிலை பெறுக! என, மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் 5 பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! தொன்னிலக் கிழமை சுட்டின், நன்மதி வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த பசுமண் குரூஉத்திரள் போல, அவன் கொண்ட குட...
புறநானூறு - 32. பூவிலையும் மாடமதுரையும்!
நலங்கிள்ளி தன் குடும்பத்தார் சமைப்பதற்காக வஞ்சி நகரத்தையே தருவான். அவனைப் பாடும் விறலியர் தலையில் பூ வைத்துக்கொள்ள விலைப் பொருளாக மதுரை நகரத்தையே தருவான். எல்லோரும் வாருங்கள். அவனைப் பாடிப் பெற்றுக்கொள்ளலாம். அவனைப் பாட நமக்கு உரிமை உண்டு. குயவர் சிறுவர் விளையாடுகையில் தந்தையைப் போலப் பானை செய்யும் சக்கரத்தில் வைத்த ஈர...
33
கோவூர்கிழார்.
சோழன் நலங்கிள்ளி.
வாகை.
அரசவாகை.
பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில்
கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன் மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய, ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர் குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் 5 முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும், ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு நின்; பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; ...
புறநானூறு - 33. புதுப்பூம் பள்ளி!
இவ்வூர் மக்கள் உழவர். இவர்களின் பெருங்குடி மகள் நெல்லைப் பண்டமாற்றாகத் தருவாளாம். வேட்டுவன் நாய்த்துணையுடன் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் தசையைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வானாம். ஆயர் குடிமகள் மொந்தையில் கொண்டுவந்த தயிரைக் கொடுத்துவிட்டு நெல்லைப் பெற்றுச் செல்வாளாம். இந்த ஊரில் ஏழெயில் கதவம் என்னும் கோட்டை இ...
34
ஆலத்தூர் கிழார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடாண்.
இயன்மொழி.
'செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என்னும் அறநெறி பற்றிய
ஆன்மலை அறுத்த அறனி லோர்க்கும், மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும், குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும், வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என, நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன் 5 செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடின்றே ஆயிழை கணவ! காலை அந்தியும், மாலை அந்தியும், புறவுக் கருவன்ன புன்புல வரகின் பாற்பெய் புன்கம் தேனொடு...
புறநானூறு - 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!
பசுவின் முலையை அறுத்தல் (உழவுக்குப் பயன்படுத்தல்) தாலி அணிந்த பெண்ணின் கருவைச் சிதைத்தல் பார்ப்பானை அடித்தல் இவை பாவச் செயல்கள். இந்தப் பாவங்களைக் கழுவாய் செய்து போக்கிக்கொள்ளலாம். ஆனால் உலகமே கைவிட்டுப் போவதாயினும் நன்றி மறந்தவனுக்கு அப் பாவத்திலிருந்து தப்புவதற்கு வேறு வழியே இல்லை என்று அறநூல் பாடுகிறது எந்நன்றி கொன்...
35
வெள்ளைக்குடி நாகனார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
பாடாண்.
செவியறிவுறூஉ
அரச நெறியின் செவ்வி பற்றிய செய்திகள்.
நளிஇரு முந்நீர் ஏணி யாக, வளிஇடை வழங்கா வானம் சூடிய மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர், முரசு முழங்கு தானை மூவர் உள்ளும், அரசுஎனப் படுவது நினதே, பெரும! 5 அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும், அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத், தோடு கொள் வேலின் தோற்றம் போல, ஆடுகண் கரும்பின் வெண்...
புறநானூறு - 35. உழுபடையும் பொருபடையும்!
உன்னிடம் முறை வேண்டும்போது எளிமையாகக் காட்சி தந்து சரியான தீர்ப்பைப் பெற்றால் மழை விரும்பும்போது மழையைப் பெற்றது போன்று மக்கள் மகிழ்வர். உன் குடை உனக்கு வெயிலை மறைக்க அன்று. குடிமக்களின் துயரைப் போக்கி அவர்களுக்கு நிழல் தருவதற்காகவே. உன் கொற்றம் உழவரின் உழவுப் படையால் விளைந்தது. மழை பொய்த்தாலும் வருவாய் குறைந்தாலும் இய...
36
ஆலத்தூர் கிழார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
வஞ்சி.
துணை வஞ்சி.
அடுநை யாயினும், விடுநை யாயினும், நீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல், செயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும் தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக், 5 கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து, வீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும் கடிமரம் தடியும் ஓசை தன்ஊர் ந...
புறநானூறு - 36. நீயே அறிந்து செய்க!
அரசன் கிள்ளிவளவன் கருவூரை முற்றுகை இட்டிருந்தான். கருவூர் அரசன் தன் கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான். எதிர்க்காதவன் ஊரை முற்றுகை இட்டுக்கொண்டே இருத்தல் நாணத்தக்க செயல் என்று கூறுகிறார் புலவர். போரிட்டு அழித்தாலும், போரைக் கைவிட்டுத் திரும்பினாலும் நீ உன் உயர்ந்த நிலையை எண்ணிப்பார். மகளிர் கழங்கைத் தெற...
37
மாறோக்கத்து நப்பசலையார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
வாகை; உழிஞை எனவும் பாடம்.
அரச வாகை குற்றுழிஞை எனவும், முதல் வஞ்சி எனவும் பாடம்.
நஞ்சுடை வால் எயிற்று, ஐந்தலை சுமந்த, வேக வெந்திறல், நாகம் புக்கென, விசும்புதீப் பிறப்பத் திருகிப், பசுங்கொடிப் பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப், புள்ளுறு புன்கண் தீர்த்த, வெள் வேல் 5 சினங்கெழு தானைச், செம்பியன் மருக! கராஅம் கலித்த குண்டுகண் அகழி, இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி, யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்...
புறநானூறு - 37. புறவும் போரும்!
பறவையின் துன்பம் தீர்த்த செம்பியனின் (சிபிச் சக்கரவர்த்தி) வழித்தோன்றலே! வேந்தன் தன் யானையொடு உள்ளே இருப்பதால் செம்பு போன்ற கோட்டையைச் சிதைத்தல் நல்லதன்று என உணர்ந்திருந்தும் போரிட்டுச் சிதைக்கும் வல்லமை பெற்றவன் நீ. நச்சுப் பற்களை உடைய ஐந்தலை நாகம் புகுந்தது போலவும். மின்னலுடன் கூடிய இடி மலையைப் பிளந்தது போலவும், தாக்...
38
ஆவூர் மூலங் கிழார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
பாடாண்.
இயன்மொழி,
வரை புரையும் மழகளிற்றின் மிசை, வான் துடைக்கும் வகைய போல விரவு உருவின கொடி நுடங்கும் வியன் தானை விறல் வேந்தே! நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ, 5 நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச், செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண் திங்களுள் வெயில் வேண்டினும், வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின், நின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த, ...
புறநானூறு - 38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!
மலை போன்ற வாலிபக் களிற்றின் மேல் வானத்தைத் துடைப்பது போன்ற கொடியுடன் கூடிய யானைப்படையை உடையவன் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். இப்படிப்பட்ட வெற்றி வேந்தனே! நீ மாறுபட்டு நோக்கும் இடம் தீப்பற்றி எரியும். விரும்பி நோக்கும் இடம் பொன் பூக்கும். அதனால் நீ ஞாயிற்றில் நிலவையும், நிலாவில் வெயிலையும் விளைவி...
39
மாறோக்கத்து நப்பசலையார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
பாடாண்.
இயன்மொழி,
வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது.
புறவின் அல்லல் சொல்லிய, கறையடி யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக் கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக! ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல் ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல் 5 தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல்நின் புகழும் அன்றே; கெடுவின்று, மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து, அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால் முறை...
புறநானூறு - 39. புகழினும் சிறந்த சிறப்பு!
புறாவின் உயிரைக் காப்பாற்றத் தன்னையே தந்தக்கோல் தராசுக்கோல் தட்டில் நிறுத்துக் (கழுகுக்குக்) கொடுத்த உன் முன்னோன் சிபியின் வழிவந்தவன் நீ ஆகையால் ஈதல் உன் புகழ் அன்று. நீ தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் வழிவந்தவன் ஆதலால் பகைவரை அழித்தல் உன் புகழ் அன்று. உறையூர் அரசவையில் தொன்றுதொட்டு அறநெறி நிலைத்திருப்பதால் மக்க...
40
ஆவூர் மூலங்கிழார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
பாடாண்.
செவியறிவுறூஉ.
நீயே, பிறர் ஓம்புறு மறமன் னெயில் ஓம்பாது கடந்தட்டு, அவர் முடி புனைந்த பசும் பொன்னின் அடி பொலியக் கழல் தைஇய வல் லாளனை, வய வேந்தே! 5 யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப், புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, இன்றுகண் டாங்குக் காண்குவம், என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி; பெரும! ஒருபிடி படியுஞ் சீறிடம் 10 எழுகளிறு புரக்கும் நாடு...
புறநானூறு - 40. ஒரு பிடியும் எழு களிரும்!
வெற்றி வேந்தே! நீயோ பிறர் கோட்டைகளை வென்று அதன் புனைந்திருக்கும் அரசுமுடியால் உன் காலுக்கு வீரக்கழல் செய்துகொண்டவன். நானோ உன்னை இகழ்வோர் கொற்றம்(கொட்டம்) அடங்கப் பாடுபவன். நீ இன்று போல் என்றும் காட்சிதர வேண்டும். என்றென்றும் எளிதில் காட்சி தந்து இன்சொல் வழங்கவேண்டும். ஒரு யானை படுக்கும் நிலப்பரப்பில் ஏழு யானைகளுக்கு உண...
41
கோவூர் கிழார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.
வஞ்சி.
கொற்ற வள்ளை.
காலனும் காலம் பார்க்கும்; பாராது வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய, வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே! திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும், பெருமரத்து, இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும், 5 வெங்கதிர்க் கனலி துற்றவும், பிறவும், அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும், எயிறுநிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும், களிறுமேல் கொள்ளவும்...
புறநானூறு - 41. காலனுக்கு மேலோன்!
தீக் கனா எட்டுத் திசைகளிலும் எரிமீன் விழுதல் பச்சை மரம் பற்றி எறிதல் சூரியன் விழுங்கல் அச்சம் தரும் பறவைகள் ஒலித்தல் பல் நிலத்தில் விழுதல் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் யானை அடங்காமை மேலாடை கீழே விழுதல் அரியணை கவிழ்தல் இப்படியெல்லாம் கனவு காணும்படி நனவிலேயே போரிடும் வல்லமை உடையவன் நீ. இப்படி நீ வருவதைப் பார்த்த ...
42
இடைக்காடனார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
வாகை.
அரச வாகை.
சோழனின் மறமேம் பாடும், கொடை மேம்பாடும், வலிமைச்
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் தானையும் கடலென முழங்கும்; கூர்நுனை வேலும் மின்னின் விளங்கும் ; உலகத்து அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின், 5 புரைதீர்ந் தன்று; அது புதுவதோ அன்றே; தண்புனற் பூசல் அல்லது, நொந்து, களைக, வாழி, வளவ! என்று, நின் முனைதரு பூசல் கனவினும் அறியாது, புலிபுறங் க...
புறநானூறு - 42. ஈகையும் வாகையும்!
உன் யானையோ மலை போல் உள்ளது. உன் படையோ கடல் போல் முழங்குகிறது. உன் வேலோ மின்னிக்கொண்டே இருக்கிறது. இதனால் உலகின் அரசர்களெல்லாம் நடுங்குகின்றனர். இது குற்றமற்ற செயல் அன்று. இது உனக்குப் புதியதும் அன்று. உன் நாட்டில் ஆற்றுநீர் மோதல் அன்றிப் பிற மோதல் இல்லாமல் களைந்தெறிவாயாக. போர்ப் பூசல் கனவிலும் இல்லாமல் புலி தன் குட்டிய...
43
தாமப்பல் கண்ணனார்,
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
வாகை.
அரசவாகை.
எறிந்தானைச் , 'சோழன் மகன் அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது. நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத், தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக், கால்உண வாகச், சுடரொடு கொட்கும் 5 அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக் கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத், தன்னகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி யஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மர...
புறநானூறு - 43. பிறப்பும் சிறப்பும்!
அவிர்சடை முனிவர்கள் நிலமக்களின் துன்பம் நீங்கவேண்டும் என்பதற்காகத் தவம் செய்வார்கள். வெயிலிலும் காற்றை மட்டுமே உணவாக உண்டுகொண்டு தவம் செய்வார்கள். இந்த முனிவர்களும் மருளும்படி புள்ளினங்களும் வாழும்படி சிபி மன்னன் ஆட்சி புரிந்தான். கொடிய சிறகும், கூரிய நகங்களும் கொண்ட பருந்தின் பிடியிலிருந்து தப்பித் தன்னிடம் வந்த புறாவ...
44
கோவூர் கிழார்.
சோழன் நெடுங்கிள்ளி.
வாகை.
அரச வாகை.
இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா, நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ, திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி, நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து, அலமரல் யானை உருமென முழங்கவும், 5 பாலில் குழவி அலறவும், மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில் வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும், இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல...
புறநானூறு - 44. அறமும் மறமும்!
நெடுங்கிள்ளியின் யானை நீராடவில்லை. நெல்லஞ்சோறும் நெய்யும் கலந்து உண்ணும் அது உணவுக் கவளம் பெறவில்லை. அது கட்டப்படிருக்கும் வெளில் என்னும் கூடாரம் வருந்தும்படி மோதிக்கொண்டு நிலத்தில் விழுந்து பெருமூச்சு விட்டுக்கொண்டு புரண்டு வருந்துகிறது; முழங்குகிறது. குழந்தைகள் பால் இல்லாமல் அலறுகின்றன. மகளிர் பூ இல்லாமல் வெறுந்தலையை...
45
கோவூர் கிழார்.
வஞ்சி.
இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்; கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்! நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; 5 இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித்தேர் நும்மோர் அன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய...
புறநானூறு - 45. தோற்பது நும் குடியே!
பெரிய பனை மரத்தினது வெண்மை நிறம் கொண்ட குருத்து இலை மாலை அணிந்தவன் இல்லை (சேர மன்னனைப் போல்). கரிய கிளைகளையுடைய வேம்பின் மாலை அணிந்தவன் இல்லை (பாண்டிய மன்னனைப் போல்). உன்னுடைய மாலையும் ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது. உன்னுடன் போரிடுபவன் மாலையும் ஆத்தி மலர்களால் நெருக்கமாகக் கட்டப்பட்டது. இப்பகையினால் உண்டாகு...
46
கோவூர் கிழார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
வஞ்சி.
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை; இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித், தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்! களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த 5 புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி, விருந்திற் புன்கண்நோ வுடையர்; கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!
புறநானூறு - 46. அருளும் பகையும்!
நீ தான் புறாவின் துன்பம் மட்டுமல்லாமல் மற்ற துன்பங்கள் பலவற்றையும் நீக்கிய சோழ மரபின் வழித்தோன்றல். இச்சிறுவர்களின் மூதாதையர், கற்றவர்களது வறுமையைக் கண்டு அஞ்சி, தமது உணவைப் பங்கிட்டு உண்டு, அவர்களுக்குக் குளிர்ந்த நிழலாக விளங்கி வாழ்ந்தவர்கள். ஆனால் இங்கே, கொல்ல வரும் யானையைக் கண்டு அழுது, பின்பு அழுகையை மறந்து, பொலிவ...
47
கோவூர் கிழார்.
காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி.
வஞ்சி.
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, நெடிய என்னாது சுரம்பல கடந்து, வடியா நாவின் வல்லாங்குப் பாடிப், பெற்றது மகழ்ந்தும், சுற்றம் அருத்தி, ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, 5 வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே; திறம்பட நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, ஆங்குஇனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ் மண...
புறநானூறு - 47. புலவரைக் காத்த புலவர்!
வள்ளன்மையுடையவர்களை எண்ணி, பழமரத்தை நோக்கிச் செல்லும் பறவைகளைப் போலப் போய், வழி நீண்டது என்று எண்ணாது, அரிய வழிகள் பலவற்றைக் கடந்து, தங்களுடைய திருந்தாத நாவினால் தம் திறமையின்படி பாடி, பெற்ற பரிசால் மகிழ்ந்து, சுற்றத்தார்க்கு உண்ணக் கொடுத்து, தானும் இருப்பதைப் பாதுகாக்காது உண்டு, மகிழ்ச்சியுடன் பிறருக்கு வழங்கி, தம்மை ...
48
பொய்கையார்.
சேரமான் கோக்கோதை மார்பன்.
பாடாண்.
புலவராற்றுப் படை.
கோதை மார்பிற் கோதை யானும், கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும், மாக்கழி மலர்ந்த நெய்த லானும், கள்நா றும்மே, கானல்அம் தொண்டி; அதுஎம் ஊரே; அவன்எம் இறைவன்; 5 எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல! அமர்மேம் படூஉங் காலை, நின் புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே.
புறநானூறு - 48. 'கண்டனம்' என நினை!
கடற்கானலில் உள்ள தொண்டி நகரம் மணம் கமழும் நல்லூர். அரசன் தோதையின் மார்பில் இருக்கும் கோதைமாலையின் மணம், அவனைத் தழுவுவோர் அணிந்துள்ள மலர்மாலையின் மணம், கழியில் பூத்திருக்கும் நெய்தல் பூவின் மணம் ஆகியவற்றால் தொண்டி தேன் - மணம் கமழும் ஊர். அது என் ஊர். அந்தக் கோதை என் அரசன். முதுவாய் இரவல (புலவனே)! அவனிடம் நீ சென்று அவனைக...
49
பொய்கையார்.
சேரமான் கோக்கோதை மார்பன்.
பாடாண்.
புலவராற்றுப் படை.
நாடன் என்கோ? ஊரன் என்கோ? பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ? யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை? புனவர் தட்டை புடைப்பின், அயலது இறங்குகதிர் அலமரு கழனியும், 5 பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!
புறநானூறு - 49. எங்ஙனம் மொழிவேன்?
அவனை நாடன் என்று சொல்வேனா. ஊரன் என்று சொல்வேனா பனிக்கடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் சேர்ப்பன் என்று சொல்வேனா வாளேந்திய நிலையிலேயே தோற்றம் தரும் கோதையை எப்படிச் சொல்வேன்? தினைப்புனம் காப்பவர் தட்டையைப் புடைக்கும்போது பறவைகள் எழுந்து பறப்பது போல அவன் செல்லும் வயல் - பகுதியிலும், கடல்நிலப் - பகுதியிலும் பறவைகள் எழுந்து பறக...
50
மோசிகீரனார்.
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
பாடாண்.
இயன் மொழி.
மாசற விசித்த வார்புஉறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார், பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக், குருதி வேட்கை உருகெழு முரசம் 5 மண்ணி வாரா அளவை, எண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை அறியாது ஏறிய என்னைத் தெறுவர, இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை அதூஉம் சாலும், நற் றமிழ்முழுது அ...
புறநானூறு - 50. கவரி வீசிய காவலன்!
முகத்தின் தோல் சுருக்கம் இல்லாமல் தோல்வாரால் கட்டப்பட்டது. மருங்குல் என்னும் அதன் அடிப்பகுதியை மயில்தோகை அழகுபடுத்தியது. (போர்முரசு என்பதைக் காட்டும் அடையாளமாக) பொன்னாலான உழிஞைப்பூவும் அதனை அழகுபடுத்தியது. குருதியில் குளிப்பதற்காக அது வெளியே சென்றிருந்தது. முரசுக்கட்டில் முரசு திரும்புமுன் முரசுக்கட்டில் வெறுமனே இருந்த...
51
ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார்
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
வாகை.
நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின், மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை; வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி, தண் தமிழ் பொது எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, 5 கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே; அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே; நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த ...
புறநானூறு - 51. ஈசலும் எதிர்ந்தோரும் !
மிகுந்து வரும் வெள்ளத்துக்குத் தடுக்க இயலாது. மிகுந்து வரும் தீயைத் தடுக்கக் குடை பிடிக்க முடியாது. மிகுது வரும் காற்றை எதிர்த்து நிற்கும் வலிமை யாருக்கும் இல்லை. வெயிலின் பெருவெளிச்சத்தையும் தடுக்க இயலாது. அதுபோல, வழுதியை எதிர்த்து நிற்க யாரும் இல்லை. தமிழ்நாடு எல்லா அரசர்களுக்கும் பொது என்பதை இவன் பொறுத்துக்கொள்ள மாட...
52
மருதன் இளநாகனார்; மருதிள
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன்
வாகை.
அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனைஇ, முணங்கு நிமிர் வயமான் முழுவலி ஒருத்தல், ஊன்நசை உள்ளம் துரப்ப, இசை குறித்துத் தான் வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு, வடபுல மன்னர் வாட, அடல் குறித்து, 5 இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி! இதுநீ கண்ணியது ஆயின், இரு நிலத்து யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும் மீன்சுடு புகையின் புலவுநாறு நெ...
புறநானூறு - 52. ஊன் விரும்பிய புலி !
வழுதி! நீ தேரில் இருக்கிறாயே! சிங்கம் வருத்தும் தன் மலைக்குகையில் இருத்தலை வெறுத்து தசை இரை பெறும் ஊக்கத்தால் தான் விரும்பும் திசையில் செல்வது போல வடநாட்டு மன்னர் வாட அழிக்கக் கருதி நீபோரிட நீ புறப்படக் கருதினால் எதிர் நின்று வருந்தப்போகும் மன்னர் யாரோ தெரியவில்லையே! வயலின் ஓரமாக மருதமரத்தில் ஏறியுள்ள கொடி உண்போர் வயலி...
53
பொருந்தில் இளங்கீரனார்.
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
வாகை.
அரசவாகை.
முதிர்வார் இப்பி முத்த வார் மணல், கதிர்விடு மணியின் கண்பொரு மாடத்து, இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற களங்கொள் யானைக், கடுமான், பொறைய! 5 விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை கைம்முற் றலநின் புகழே, என்றும்; ஒளியோர் பிறந்தஇம் மலர்தலை உலகத்து வாழேம்...
புறநானூறு - 53. செந்நாவும் சேரன் புகழும்!
மகளிர் தெற்றி விளையாடும் மணிமாடங்களைக் கொண்ட ஊர் விளங்கில். அதன் சிறப்பினை சேர அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தன் யானைப் படையுடன் சென்று போரிட்டு அழித்தான். இதனைப் பாடுவதற்குக் கபிலர் இல்லையே என்று கவலைப்பட்டான். புலவர் பொருந்தில் இளங்கீரனார் இதோ நான் இருக்கிறேன். உன் சிறப்புக்கு ஏற்ப நான் பாடுவேன். ஆனால் ஒன்று. உன் புக...
54
கோனாட்டு எறிச்சலூர் மாடலன்
சேரமான் குட்டுவன் கோதை.
வாகை.
அரசவாகை.
எங்கோன் இருந்த கம்பலை முதூர், உடையோர் போல இடையின்று குறுகிச், செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல் எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே; இரவலர்க்கு எண்மை யல்லது; புரவு எதிர்ந்து 5 வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு ஆனாது ஈயும் கவிகை வண்மைக் கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப், பாசிலைத் தொடுத்த உவலை...
புறநானூறு - 54. எளிதும் கடிதும்!
வெண்ணெய் திருடி உண்ட கண்ணன் மேல் களவு ஏது? கண்ணன் பாம்பின் மீது ஏறிப் பாற்கடல் அலையில் துயின்றான். அரன் வேணியான். பெண்ணைத் தலையில் சுமந்தான். முந்தைய பாடல்
55
மதுரை மருதன் இளநாகனார்.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
பாடாண்.
செவியறிவுறூஉ.
ஓங்கு மலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ, ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் பிறை நுதல் விளங்கும் ஒருகண் போல, 5 வேந்து மேம்பட்ட பூந்தார் மாற! கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும், நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ் சுடைய புகல் மறவரும், என 10 நான்குட...
புறநானூறு - 55. மூன்று அறங்கள்!
சிவபொருமானின் முக்கண்ணில் நெற்றிக்கண் போல ஏனைய இருபெரு வேந்தரின் மேம்பட்டு விளங்கும் மாறனே! யானை, குதிரை, தேர், மறவர் என நாற்படையுடன் சிறந்து விளங்கினாலும் அரசின் வெற்றி அறநெறியில் உள்ளது. எனவே நம்முடையவர் என்று அவரது குணத்தை ஏற்றுக்கொள்ளாமலும், பிறர் என்று அவரது குணத்தைக் கொன்று போடாமலும் ஞாயிறு போல் ஆண்மைத்திறமும், த...
56
மதுரைக் கணக்காயனார் மகனார்
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
பாடாண்.
பூவை நிலை.
ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை, மாற்றருங் கணிச்சி, மணி மிடற் றோனும், கடல் வளர் புரிவளை புரையும் மேனி, அடல் வெந் நாஞ்சில், பனைக்கொடி யோனும்; மண் ணுறு திருமணி புரையும் மேனி, 5 விண்ணுயர் புல்கொடி, விறல்வெய் யொனும், மணி மயில் உயரிய மாறா வென்றிப், பிணிமுக ஊர்தி, ஒண்செய் யோனும்_என ஞாலம் காக்கும் கால முன்பின், தோலா நல்இசை...
புறநானூறு - 56. கடவுளரும் காவலனும்!
காளை மாட்டினை வெற்றியாக உயர்த்திய அழல் போல் ஒளியுடைய சடையினையும் விலக்குதற்கு அரிய மழுவை உடைய நீலமணிபோலும் கழுத்தை உடைய சிவனும், கடலில் வளரும் புரியுடைய சங்கினை ஒத்த மேனியையுடைய கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக் கொடியையுமுடைய பலராமனும், கழுவிய அழகிய நீலமணிபோலும் மேனியையும் வான் அளவிற்கு ஓங்கிய கருடக்கொடியையுடைய வெற்...
57
காவிரிப்பூம் பட்டினத்துக்
வஞ்சி.
துணை வஞ்சி.
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின், நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு 5 இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க: நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க; மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல் ஒன்னார்ச் செகுப்பி...
புறநானூறு - 57. காவன்மரமும் கட்டுத்தறியும்!
வல்லவரோ, அல்லாதவரோ யாராய் இருந்தாலும் புகழ்ந்தவருக்கெல்லாம் மாயவன் வேண்டியனவற்றையெல்லாம் வழங்குவான். அவனைப் போல வழங்கும் மாறனே! உனக்கு ஒன்று கூறுவேன், நீ பிறரது நாட்டைக் கைப்பற்றும் காலத்தில் அந்நாட்டு விளைச்சல் நிலங்களை உன் போர்மறவர்கள் கைப்பற்றினாலும் கைப்பற்றட்டும். ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினாலும் கொளுத்தட்டும். வேல...
58
காவிரிப்பூம் பட்டினத்துக்
பாடாண்.
உடனிலை.
நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத், தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது. நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ, 5 இளையது ஆயினும் கிளைஅரா எறியும், அருநரை உருமின், பெருநரைப் பொறாஅச் செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே, அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே, நெ...
புறநானூறு - 58. புலியும் கயலும்!
இவன், பஞ்சவர் எனப்படும் பாண்டிய அரசர்களில் ஏறு போன்றவன். அடி இற்றுப்போன ஆலமரத்தை அதன் விழுதுகள் தாங்குவது போல முன்னோர் மாய்ந்த பின் பாண்டிய நாட்டுக் குடிமக்களின் அச்சம் போக்கி, அறநெறி பிறழாமல் ஆட்சி நடத்துபவன். உருவில் சிறியதாயினும் நல்ல பாம்பைக் கண்டு மக்கள் ஒதுங்குவது போலப் பகைவர் ஒதுங்கும்படியும், இடியைக் கேட்டு நடு...
59
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.
பாடாண்.
பூவைநிலை.
ஆரம் தாழ்ந்த அணிகிளிர் மார்பின், தாள்தோய் தடக்கைத், தகைமாண் வழுதி! வல்லை மன்ற, நீநயந் தளித்தல்! தேற்றாய், பெரும! பொய்யே; என்றும் காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும் 5 ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத்; திங்கள் அனையை, எம்ம னோர்க்கே.
புறநானூறு - 59. பாவலரும் பகைவரும்!
நன்மாறன் சித்திரமாடம் என்னுமிடத்தில் துஞ்சியவன், புலவர் அவனை வாழ்த்துகிறார், மார்பில் முத்தாரம் அணிந்தவன், அவன் கை அவனது முழந்தாள் வரை நீண்டிருக்கும், தகைமைப் பண்பு மிக்கவன், விருப்பத்துடன் கொடை வழங்குபவன், தெளிவில்லாமல் யாராயிருந்தாலும் வழங்குபவன், யாருக்கும் வழங்காமல் இருந்ததில்லை (பொய் தேற்றாதவன்), அவனது பகைவர்க்குச...
60
உறையூர் மருத்துவன்
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன்.
பாடாண்.
குடை மங்கலம்.
முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச், செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் உச்சி நின்ற உவவுமதி கண்டு, கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த, சில் வளை விறலியும், யானும், வல்விரைந்து, 5 தொழுதனம் அல்லமோ, பலவே! கானல் கழிஉப்பு முகந்து கல்நாடு மடுக்கும் ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் உரனுடை நோன்பகட்டு அன்ன எங்கோன், வலன் இரங்கு முரசின...
புறநானூறு - 60. மதியும் குடையும்!
இரவில் கடலில் செல்லும் திமில் விளக்குகள் போல் வானத்தில் மீன்கள் தோன்றும். (புலவர் பாணர்) வர் மனைவி விறலி காட்டுமயில் போன்றவள். கடல் உப்பு ஏற்றிய வண்டியைக் காட்டுமலையில் இழுத்துச் செல்லும் வலிமை மிக்க காளைமாடு போன்றவன் வளவன். முந்தைய பாடல்
61
கோனாட்டு எறிச்சிலுர் மாடலன்
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய
கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர் சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், மலங்கு மிளிர், செறுவின் தளம்புதடிந் திட்ட பழன வாளைப் பரூஉக்கண் துணியல் புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக, 5 விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும் வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர் தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர் குற...
புறநானூறு - 61. மலைந்தோரும் பணிந்தோரும்!
கொண்டையில் கூழைச்சிண்டு போட்டு தழைபோடு கூடிய பூவைச் செருகியிருக்கும் உழத்தியர் களை பறிக்கும்போது நெய்தல் பூவையும், ஆம்பல் பூவையும் களைந்து எறிவர். அந்த வயலில் மேயும் மலங்குமீனையும் வாளைமீனையும் பிடித்துத் துண்டுதுண்டுகளாக நறுக்கிச் சமைத்து, புதுநெல் அரிசிப் பொங்கலோடு சேர்த்து உண்ட வயல் தொழிலாளர்கள் நெல்லுக் கட்டுகளைத் ...
62
கழாத் தலையார்.
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்பறடக்
தும்பை.
தொகை நிலை.
வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது? பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக், குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி, நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர் எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப், 5 பருந்து அருந்துற்ற தானையொடு செருமுனிந்து, அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாம்மாய்ந் தனரே; குடைதுளங் கினவே; உரைசால் சிறப்பின் முரசு ஒழிந...
புறநானூறு - 62. போரும் சீரும்!
படைவீரர்கள் மாண்ட பின்னர் அரசன் சோழனும் சேரனும் மோதிக்கொண்டனர். இதற்கு அறப்போர் போர் என்று பெயர். இந்தப் போரில் இருவரும் போர்களத்திலேயே மாண்டனர். இரு பெரு வேந்தரின் குடைகளும் முரசுகளும் போர்களத்தில் சாய்ந்து கிடந்தன. பேய்மகளிர் குருதியை வாரித் தலையில் பூசிக்கொண்டனர். புண் பட்டுச் சாவோரைத் தூங்க வைப்பதற்காக அனந்தல் பறை ...
63
பரணர்.
சோழன் வேற்பறடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான்
தும்பை.
தொகை நிலை.
எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி, விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே; விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம் மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே; தேர்தர வந்த சான்றோர் எல்லாம், 5 தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே; விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம், பொறுக்குநர் இன்மையின், இருந்துவிளிந் தனவே; சாந்தமை மார்பின் நெடுவேல் ப...
புறநானூறு - 63. என்னாவது கொல்?
எத்தனை யானைகள்! அத்தனை யானைகள்மேலும் பாய்ந்திருக்கும் அம்புகள். அதனால் அவை போரிடாமல் கிடந்தன. குதிரைகளும் வீரர்களோடு மாண்டன. தேரில் வந்த மறவர்களும் அவர்கள் அணிந்திருந்த தோல் என்னும் மார்புக் கவசம் மூடிய நிலையில் மாண்டு கிடந்தனர். முரசுகள் முழக்குவார் அற்றுக் கிடந்தன. வேந்தர்களும் சந்தனமணிந்த மார்போடு களத்தில் மாண்டு கி...
64
நெடும்பல்லியத்தனார்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
பாடாண்.
விறலியாற்றுப்படை.
அருமிளை இருக்கை யதுவே-மனைவியும், வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது, படைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை, யாணர் நல்லவை பாணரொடு, ஓராங்கு 5 வருவிருந்து அயரும் விருப்பினள் ; கிழவனும் அருஞ்சமம் ததையத் தாக்கிப், பெருஞ்சமத்து அண்ணல் யானை அணிந்த பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே. நல்யாழ்,ஆகுளி...
புறநானூறு - 64. புற்கை நீத்து வரலாம்!
விறலி! புல் - உணவு உண்டு வாழும் நம் வறுமையைப் போக்கிக்கொள்ள அரசன் குடுமிக் கோமானைக் கண்டுவர நாம் செல்லலாமா? யாழ், ஆகுளி, பதலை ஆகிய இசைக் கருவிகளைச் சுருக்குப் பையில் போட்டுக்கொண்டு செல்லலாமா? தன் யானைப் படையால் பருந்துகளுக்கு விருந்தளித்துக் கொண்டு அவன் போர்க்களத்தில் இருக்கும்போதும் செல்லலாம். முந்தைய பாடல்
65
கழாஅத் தலையார்.
சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற்
பொதுவியல்.
கையறுநிலை.
புறப்புண்பட்டோர் நாணி வடக்கிருந்து உயிர்விடும் மரபு.
மண்முழா மறப்பப், பண் யாழ் மறப்ப இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச், சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப, உழவர் ஓதை மறப்ப, விழவும் அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, 5 உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து, இருசுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் புன்கண் மாலை மலைமறைந் தாங்குத், தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புறப்புண் நாணி, மறத...
புறநானூறு - 65. நாணமும் பாசமும்!
எங்கும் துயரம், எதிலும் துயரம், முழவு முழக்கம் மறந்தது, யாழ் பண் மறந்தது, சமைக்கும் உண்கலம் நெய் மறந்து கவிழ்ந்து கிடந்தது, சுற்றத்தார் வண்டு மொய்க்கும் தேறல் உண்பதை மறந்தனர், உழவர் பாட மறந்தனர், ஊர்த் தெரு விழாக் கொண்டாட்டம் மறந்தது. நிறைமதி நாளில் ஒரு சுடர் (ஞாயிறு) மறைய ஒரு சுடர் (திங்கள்) தோன்றுவது போல, சேரன், சோழன...
66
வெண்ணிக் குயத்தியார்:
சோழன் கரிகாற் பெருவளத்தான்.
வாகை.
அரச வாகை.
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களி இயல் யானைக் கரிகால் வளவ! சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே 5 கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை, மிகப் புகழ் உலகம் எய்திப், புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!
புறநானூறு - 66. நல்லவனோ அவன்!
களிப்புநடை போடும் யானைமேல் தோன்றும் கரிகால் வளவ! கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளரின் வழிவந்தவன் நீ. நீ போரில் வென்றாய். அதனால் நீ நல்லன். எனினும் வெண்ணிப் பறந்தலைப் (போர்க்களத்தில்) போரில் உன் வலிமை மிக்க தாக்குதலால் புறப்புண் பட்டு அதற்காக நாணி அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த மன்னன...
67
பிசிராந்தையார்.
கோப்பெருஞ் சோழன்,
பாடாண்.
இயன்மொழி.
அன்னச் சேவல் ! அன்னச் சேவல் ! ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல் நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக், கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் மையல் மாலை யாம் கையறுபு இனையக், 5 குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி, வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது சோழ நன்னாட்டுப் படினே, கோழி உயர் நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ, வாயில் விடாது கோயில் பு...
புறநானூறு - 67. அன்னச் சேவலே!
புலவர் மன்னன் தோழனிடம் அன்னச்சேவலைத் தூது விடுகிறர். அன்னச் சேவலே! போரில் வெற்றி கொண்ட அரசன் தன் நாட்டைக் காப்பது போல உலகுக்கு ஒளி தர முழுநிலா தோன்றும் மாலை நேரத்தில் நான் துணை இல்லாமல் வருந்துகிறேன். நீ குமரித்துறை அயிரை மீனை அருந்திய பின்னர் வடமலையை (திருப்பதி) நோக்கிச் செல்வாய் ஆயின் இடையில் கோழி (உறையூர்) நகர் மாடத...
68
கோவூர் கிழார். பாடப்பட்டோன்;
பாடாண்.
பாணாற்றுப்படை.
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின் கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது, சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து, ஈங்குஎவன் செய்தியோ? பாண ! பூண்சுமந்து, அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து 5 மென்மையின் மகளிர்க்கு வணங்கி,வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை, புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச் சுரந்த ...
புறநானூறு - 68. மறவரும் மறக்களிரும்!
பாணன் தோற்றம் - தோல் உரித்த உடும்பு கிடப்பது போல எலும்பு தோன்றும் உடலுடன் பசியுடன் காணப்பட்டான். கேள்வி என்பது யாழ். அதனை அவன் மீட்டியபோது சிலர் மட்டுமே கேட்டனர். அரசன் இருப்பு - செம்புள்ளிகள் இட்டு, அணிகலன் பூண்ட அழகிய மார்பினைக் கொண்டவன். மகளிரின் மென்மைக்கு வணங்குவான். ஆண்களை அடக்கும் பெருமை கொண்டவன் அந்த நெடுந்தகை....
69
ஆலந்தூர் கிழார்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடாண்.
பாணாற்றுப்படை.
கையது, கடன் நிறை யாழே; மெய்யது, புரவலர் இன்மையின் பசியே; அரையது வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர் ஓம்பி உடுத்த உயவற் பாண! பூட்கை இல்லோன் யாக்கை போலப் 5 பெரும்புல் என்ற இரும் பேர் ஒக்கலை; வையகம் முழுவதுடன் வளைப், பையென என்னை வினவுதி ஆயின், மன்னர் அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக், குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப். 10...
புறநானூறு - 69. காலமும் வேண்டாம்!
பாணன் - கையில் கடப்பாடுடைய யாழ், பாதுகாப்போர் இல்லாமையால் உடலில் பசி, இடுப்பில் கிழிசலைத் தைத்த ஆடை, இவற்றை மறைக்கக் கூச்சத்தோடு நடக்கும் நடை, குறிக்கோள் இல்லாதவன் உடம்பு போல் ஏங்கித் தவிக்கும் உறவினர் - ஆகியவற்றை உடையவன். உலகமெல்லாம் சுற்றி அலைந்த பின் என்னை வினவினால், சொல்கிறேன் கேள். மன்னர் பாசறையில் இருந்தபோது யானை...
70
கோவூர் கிழார்: (கோவூர்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
பாடாண்.
பாணாற்றுப்படை.
தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண! கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி; வினவல் ஆனா முதுவாய் இரவல! 5 தைத் திங்கள் தண்கயம் போலக், கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர், அடுதீ அல்லது சுடுதீ அறியாது; இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன், கிள்ளி வளவன் நல்லிசை யுள்...
புறநானூறு - 70. குளிர்நீரும் குறையாத சோறும்
பாணன் - தேன் போல் இசை ஒழுகும்படி சீறியாழ் மீட்டுபவன். குளத்து ஆமையைக் கயிற்றில் கோத்துக் கட்டியது போன்ற கிணையில் இசை முழக்குபவன். “இனிய காண்க! இவண் தணிக” (இனிமை பொங்கட்டும்! அமைதி நிலவட்டும்) என்று பாடிக்கொண்டு முழக்குபவன். கிள்ளிவளவன் நாடு - குளத்து நீர் தை மாதத்தில் மொள்ள மொள்ளக் குறையாதது போல் செல்வம் நிறைந்த நாடு. ...
71
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
காஞ்சி
வஞ்சினக் காஞ்சி
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து, அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து என்னொடு பொருந்தும் என்ப ; அவரை ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப்புறம் காணேன் ஆயின் - சிறந்த 5 பேரமர் உண்கண் இவளினும் பிரிக: அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத், திறன்இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ் வையை சூழ்ந்த வலங்...
புறநானூறு - 71. இவளையும் பிரிவேன்!
அப்படிச் செய்யாவிட்டால், விரும்பிப் பார்க்கும் இவளை (என் மனைவியை)ப் பிரிவேன் ஆகுக. என் அவைக்களம் அறநிலை திரியாதது. அதில் திறமில்லாத ஒருவனை நடுவராக அமர்த்தி வலிமை இல்லாத ஆட்சி புரிபவன் ஆவேன் ஆகுக. மையல் அரசன் மாவன் - 1, கோட்டைக் காவலன் ஆந்தை - 2, உரையாற்றல் மிக்க புலவன் அந்துவன் சாத்தன் - 3, ஆதன் அழிசி - 4, வெஞ்சின வீரன...
72
பாண்டியன் தலையாலங்கானத்துச்
காஞ்சி
வஞ்சினக் காஞ்சி
நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்; இளையன் இவன் என உளையக் கூறிப் படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையும், தேரும், மாவும், படைஅமை மறவரும், உடையும் யாம் என்று 5 உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய என் நிழ...
புறநானூறு - 72. இனியோனின் வஞ்சினம்!
என் குடிமக்கள் நல்லாட்சி நிழல் காணாமல் ‘என் இறைவன் (அரசன்) கொடியன்’ எனப் பழி தூற்றும் நிலையினேன் ஆவேன் ஆகுக. மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர் - அவை என்னைப் பாடாமல் போகட்டும். பாதுகாப்போர் துன்புறும்போது என்னிடம் வந்து இரப்போருக்கு ஈயப் பொருள் இல்லாமல் நான் வறுமையில் வாடுவேன் ஆகுக. முந்தைய பாடல்
73
சோழன் நலங்கிள்ளி;
காஞ்சி
வஞ்சினக் காஞ்சி
மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி, ஈயென இரக்குவர் ஆயின், சீருடை முரசுகெழு தாயத்து அரசோ தஞ்சம்; இன்னுயிர்ஆயினும்கொடுக்குவென், இந்நிலத்து ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என் 5 உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் துஞ்சு புலி இடறிய சிதடன் போல, உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக் கழைதின் யானைக் கால் அகப் பட்ட வன்றிணி நீண்முளை ...
புறநானூறு - 73. உயிரும் தருகுவன்!
சோழன் நலங்கிள்ளி சொல்கிறான். என் நாட்டை விரும்புபவர் மெதுவாக என்னிடம் வந்து, என் கால்களைப் பிடித்து, உன் நாட்டைக் கொடு என்று பிச்சையாகக் கேட்டால் முரசு முழங்கும் என் ஆட்சியையும், வேண்டுமானால் என் உயிரையும் அவருக்கு உரிமை ஆக்குவேன். இந்த நிலத்தில் என் ஆற்றலைப் போற்றாமல், என் உள்ள உரத்தை எள்ளி நகையாடிய மடவோன் தூங்கும் பு...
74
பொதுவியல்
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், ஆள் அன்று என்று வாளின் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம், மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத், 5 தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
புறநானூறு - 74. வேந்தனின் உள்ளம்!
குழந்தை பிறந்து இறந்தாலும், உறுப்பில்லாத சதைப் பிண்டமாகப் பிறந்தாலும், அதையும் ஒரு ஆளாகக் கருதி, வாளால் வெட்டிக் காயம் செய்து புதைப்பார்கள். அந்தக் குடியில் பிறந்த நான் பகைவரின் வாள் பட்டு இறக்காமல், சங்கிலியால் கட்டப்பட்ட நாயைப் போல் துன்பத்தில் ஆழ்த்திய நட்பு இல்லாத பகைவரின் உதவியால் கிடைக்கும் தண்ணீரை, ஒதுக்கும் மன ...
75
பொதுவியல்
பொருண்மொழிக் காஞ்சி
மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப், பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! 5 மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல, நன்றும் நொய்தா...
புறநானூறு - 75. அரச பாரம்!
தன் குடியில் உள்ள மூத்தவர்களைக் கூற்றுவன் கொண்டு சென்றதால் (அவர்கள் இறந்ததால்), விதி கொடுக்கத் தன்னிடம் முறைப்படி வந்த, பழைய வெற்றிகளால் உண்டான தன் குடியின் அரச உரிமையை அடைந்து ‘இப்பெரும் சிறப்பை நான் பெற்றேன்’ என்று எண்ணி குடிமக்களிடம் மிகுதியாக வரி கேட்கும் ஆண்மை மிகுதியாக இல்லாத சிறியோனாக ஒருவன் இருந்தால், அது சிறப்...
76
இடைக்குன்றூர் கிழார்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
வாகை.
அரச வாகை.
ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும், புதுவது அன்று; இவ் உலகத்து இயற்கை; இன்றின் ஊங்கோ கேளலம்; திரளரை மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து, 5 செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி, ஒலியல் மாலையொடு, பொலியச் சூடிப், பாடின் தெண்கிணை கறங்கக், காண்தக, நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன் பீடும் செம்மலும் ...
புறநானூறு - 76. அதுதான் புதுமை!
தலையாலங்கானப் போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் ஏழு அரசர்களை எதிர்த்துப் போரிட்டதைக் கண்ட புலவர் இவ்வாறு பாடுகிறார். ஒருவனை ஒருவன் தாக்கிப் போரிடுவதும், அப்போது ஒருவனோ அல்லது இருவருமோ மாண்டுபோவதும் இயல்புதான். ஆனால் ஒருவன் ஏழு பேரைத் தாக்கி அழித்தல் புதுமையானது. அதனை இன்று கண்டோம். இதற்கு முன்பு கண்டதில்லை. பசும்பூண் செழி...
77
இடைக்குன்றூர் கிழார்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்
வாகை.
அரசவாகை.
கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக், குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி, நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் 5 யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப...
புறநானூறு - 77. யார்? அவன் வாழ்க!
இளமையில் காலில் அணியும் கிண்கிணியை நீக்கிவிட்டு வீரக்கழல் அணிந்திருக்கிறான். முடி நீக்கி மொட்டை அடித்த தலையில் குடிக்குரிய வேம்பையும், போருக்கு உரிய உழிஞையையும் அணிந்திருக்கிறான். கையில் குழந்தை அணியும் குறுவளையலை நீக்கிவிட்டு வில்லைப் பிடித்துள்ளான். தேரின் மேல் பொலிவுடன் நிற்கிறான். இவன் யார்? அவன் தலையில் புணைந்துள்...
78
இடைக்குன்றூர் கிழார்.
வாகை.
அரசவாகை.
வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள், அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து, அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன மலைப்பரும் அகலம் மதியார், சிலைத்தெழுந்து, விழுமியம், பெரியம், யாமே; நம்மிற் 5 பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது என, எள்ளி வந்த வம்ப மள்ளர் புல்லென் கண்ணர்; புறத்திற் பெயர, ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான்;...
புறநானூறு - 78. அவர் ஊர் சென்று அழித்தவன்!
என் தலைவன் வலிமை தாளினை (காலடி) உடையவன். அந்த அடி மன்னர் வணங்கி அணிவித்த மாலைகளால் பொலிவு பெற்றது. பகைவர் நடுங்கும் பாங்கினைக் கொண்டது. குகையில் இருக்கும் புலி முணங்கு நிமிர்ந்து (சோம்பல் முரித்துக்கொண்டு) இரைக்குப் புறப்பட்டது போலப் போருக்குப் புறப்பட்டுள்ளான். பிறர் எதிர்த்துப் போரிட முடியாத அவனது நெஞ்சுரத்தை மதிக்கா...
79
இடைக்குன்றூர் கிழார்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
வாகை.
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி, மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து, தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி, வெம்போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த வம்ப மள்ளரோ பலரே; 5 எஞ்சுவர் கொல்லோ, பகல்தவச் சிறிதே?
புறநானூறு - 79. பகலோ சிறிது!
மதுரை மூதூர் குளத்தில் நீராடிய பின்னர், (தன் குடிக்கு உரிய அடையாளப் பூவாகிய) வேப்பம்பூக் குழையைத் தலையில் சூடிக்கொண்டு, கிணைப்பறை பின்தொடர்து முழங்கிக்கொண்டு வர, செழியன் போர்க்களத்துக்கு வந்திருக்கிறான். வம்புக்கு எதிர்த்து நிற்கும் போர்மறவர்ளோ பலர். போரிடும் பகல் காலமோ சிறியது. இன்றைய போரில் சிலர் செழியனால் கொல்லப்படா...
80
சாத்தந்தையார்.
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
தும்பை.
எருமை மறம்.
இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், மைந்துடைமல்லன் மதவலி முருக்கி, ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால் வருதார் தாங்கிப் பின்னெதுங் கின்றே; நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப் 5 போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம- பசித்துப் பணைமுயலும் யானை போல, இருதலை ஒசிய எற்றிக், களம்புகும் மல்லன் கடந்துஅடு நிலையே.
புறநானூறு - 80. காணாய் இதனை!
மல்லன் உடல் மதமதப்பு (திமிர்) மிக்கவன். இவனும் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியும் மோதிக்கொண்டனர். மற்போர் நிகழ்ந்தது. போரிடும்போது கிள்ளியின் ஒருகால் மார்போடு மோதி மண்டியிட்டிருந்தது. மற்றொரு கால் பின்னிருந்து தாக்கும் படையை உதைத்து முறியடித்துக் கொண்டிருந்தது. பசியால் தென்னை மட்டை இரண்டு பக்கமும் வளையும்படி முறித்து இழுக்...
81
சாத்தந்தையார்
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி
வாகை
அரசவாகை
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே கார்ப்பெயல் உருமின் முழங்கல் ஆனாவே; யார்கொல் அளியர் தாமே ஆர்; நார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் கவிகை மள்ளன் கைப்பட் டோரே? 5
புறநானூறு - 81. யார்கொல் அளியர்?
கிள்ளி ஆத்திப்பூ மாலை அணிந்திருக்கிறான். வில்லை வளைத்துக்கொண்டு கவிந்த கையுடன் காணப்படுகிறான். அவனது படை ஆர்த்து எழுவது கடலைக் கட்டிலும் பெரிதாக உள்ளது. அவன் களிற்றின் முழக்கம் இடியோசையைக் காட்டிலும் பெரிதாகித் தாங்க முடியவில்லை. இந்த நிலையில் அவன் கைக்குள் அகப்பட்டவர், இரக்கம் கொள்ளத்தக்கவர் யாராக இருக்கக்கூடும்? முந்...
82
சாத்தந்தையார்.
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
வாகை.
அரசவாகை.
சாறுதலைக் கொண்டெனப், பெண்ணீற்றுற்றெனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக், கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ; ஊர்கொள வந்த பொருநனொடு, 5 ஆர்புனை தெரியல் நெடுந்தகை போரே!
புறநானூறு - 82. ஊசி வேகமும் போர் வேகமும்!
ஊரைக் கைப்பற்ற வந்த போராளியோடு ஆத்திமாலை சூடிக்கொண்டு கிள்ளி போரிட்டான். அப்போது அவன் கை விரைந்து செயல்பட்டது. ஊரில் திருவிழா. மனைவி மகனைப் பெற்றுக்கொண்டிருக்கிறாள். மழை பொழிந்துகொண்டிருக்கிறது. பொழுது இறங்கி இருண்டுகொண்டிருக்கிறது. இந்தப் பரபரப்பான சூழலில் மனைவிக்காகக் கட்டில் பின்னுபவன் கை விரைந்து செயல்படுவது போல, க...
83
பெருங்கோழி நாய்கண் மகள்
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
கைக்கிளை.
பழிச்சுதல்.
அடிபுனை தொடுகழல், மையணல் காளைக்குஎன் தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே; அடுதோள் முயங்கல் அவைநா ணுவலே; என்போற் பெருவிதுப் புறுக; என்றும் ஒருபால் படாஅது ஆகி 5 இருபாற் பட்ட இம் மையல் ஊரே!
புறநானூறு - 83. இருபாற்பட்ட ஊர்!
வீரக்கழல் அணிந்த கால்களையும் கருமை நிறத் தாடியையுமுடைய இளைஞன் மேல் நான் கொண்ட காதலால், என் வளையல்கள் என் கையிலிருந்து கழலுகின்றன. என்னுடைய காதல் என் தாய்க்குத் தெரிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். என் தலைவனின் வலிய தோள்களைத் தழுவ விரும்புகின்றேன். ஆனால் அவையில் பலரும் இருப்பதால் எனக்கு நாணமாக உள்ளது. என்னைப் போன்று ...
84
பெருங்கோழி நாய்கன் மகள்
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
கைக்கிளை.
பழிச்சுதல்.
என், புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே; யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே, கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண், ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு 5 உமணர் வெரூஉம் துறையன் னன்னே!
புறநானூறு - 84. புற்கையும் பெருந்தோளும்!
என்னுடைய தலைவன் கஞ்சியை உண்டாலும், பெரிய தோளினையுடையவன். நானே, அவன் இருக்கும் இடத்தின் சுவரின் புறப்பகுதியில் இருந்தும், பொன்னைப்போன்ற பசலை உடையவளாக உள்ளேன். போரை ஏற்று, என் தலைவன் போர்க்களத்தில் புகுந்தால், பெரும் ஆரவாரத்தையுடைய விழாக்கள் கொண்ட ஊரிடத்தில், செருக்குற்ற (தங்கள் மறம் பேசி மகிழ்ந்த) வீரர்களுக்கு, அவன் உப்...
85
பெருங்கோழி நாய்கன் மகள்
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
கைக்கிளை
பழிச்சுதல்.
என்னைக்கு ஊர் இது அன்மை யானும், என்னைக்கு நாடு இது அன்மை யானும், ஆடுஆடு என்ப, ஒருசா ரோரே; ஆடன்று என்ப, ஒருசா ரோரே; நல்ல,பல்லோர் இருநன் மொழியே; 5 அஞ்சிலம்பு ஒலிப்ப ஓடி, எம்இல், முழா அரைப் போந்தை பொருந்தி நின்று, யான்கண் டனன் அவன் ஆடா குதலே.
புறநானூறு - 85. யான் கண்டனன்!
என்னுடைய தலைவனுக்கு இது ஊர் இல்லையாயினும், என் தலைவனுக்கு இது நாடு இல்லையாயினும், அவன் வெற்றியடைவான் எனக் கூறுவார்கள் ஒரு சிலர். அவன் வெற்றியடைய மாட்டான் என்பார்கள் ஒரு சிலர். பலர் கூறும் சொற்களும் நல்லவையே ஆகும். அழகிய சிலம்புகள் ஒலிக்க, நான் ஓடி, எங்கள் மனையின்கண் உள்ள, முழவைப்போன்ற அடியையுடைய பனை மரத்தில் பொருந்தி ந...
86
காவற் பெண்டு காதற்பெண்டு
வாகை
ஏறாண் முல்லை
சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும் புலி சேர்ந்து போகிய கல்அளை போல, ஈன்ற வயிறோ இதுவே; தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே! 5
புறநானூறு - 86. கல்லளை போல வயிறு!
என் சிறிய இல்லத்தில் உள்ள நல்ல தூணைப் பற்றிக் கொண்டு “உன் மகன் எங்கு உள்ளான்?” என்று நீ கேட்கிறாய். என் மகன் எங்கு இருக்கிறான் என்பது எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற என் வயிறு புலி இருந்து விட்டுப் போன கல் குகையைப் போன்றது. அத்தகைய வீரம் பொருந்திய அவன் போர்க்களத்தில் தோன்றுவான். அங்கு அவனைக் காணலாம்! சொற்பொருள்: சிற்றி...
87
அவ்வையார்.
அதியமான் நெடுமானஞ்சி.
களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து, எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல் எண் தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்அன் னோனே.
புறநானூறு - 87. எம்முளும் உளன்!
பகைவர்களே! போர்க்களத்தில் புகுவதைத் தவிருங்கள். எதிர்த்துப் போரிடும் வீரன் ஒருவன் எங்களிடத்தும் இருக்கின்றான். ஒரே நாளில் எட்டு வலிமையான தேர்களைச் செய்யும் திறனுடைய தச்சன் ஒருவன், ஒரு மாதம் கருத்துடன் உழைத்துச் செய்த தேர்ச்சக்கரம் போன்றவன் அவன். சொற்பொருள்: களம் - போர்க்களம், புகல் - புகுதல், ஓம்புமின் - பாதுகாத்துக் க...
88
அவ்வையார்.
அதியமான் நெடுமானஞ்சி.
யாவிர் அயினும், கூழை தார்கொண்டு யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்; ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன், கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின் விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே. 5
புறநானூறு - 88. எவருஞ் சொல்லாதீர்!
நீவிர் யாராக இருந்தால் என்ன? உங்களைப் பின் தொடர்ந்து வரும் கூழைப்படையை வைத்துக்கொண்டு போரிட்டு வெல்வோம் என்று முனைவதை விட்டுவிடுங்கள். என் தலைவன், ஒளிரும் உயர்ந்த வேல்மழவர் (மறவர்) பின்னணி கொண்ட பெருமகன். முழவு போன்ற மார்பினைக் கொண்டவன். முழவு - விழாக்காலத்தில் நன்முழக்கத்துக்குப் பயன்படும் முழவு. மார்பு - ஒளி வீசும் அ...
89
அவ்வையார்.
அதியமான் நெடுமான் அஞ்சி.
தும்பை.
தானை மறம்.
இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல், மடவரல், உண்கண், வாள்நதல், விறலி! பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என, வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! எறிகோல் அஞ்சா அரவின் அன்ன 5 சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளி பொரு தெண்கண் கேட்பின், அது போர்! என்னும் என்னையும் உளனே!
புறநானூறு - 89. என்னையும் உளனே!
அதியமான் நாட்டின் மீது படையெடுக்க எண்ணிய அரசன் வினாவுதலுக்குப் புலவர் ஔவையார் விடை தருகிறார். அணிகலன்களால் அழகு செய்யப்பட்டுப் பருமனாக விளங்கும் அல்குலை (பின் இடுப்பை) உடைய பெண்ணே! மை தீட்டப்பட்ட கண்ணையும், ஒளிரும் நுதல்முகத்தையும் உடைய விறலியே! ‘உன் நாட்டில் என்னை எதிர்த்துப் போரிடத் தக்க போராளிகளும் உள்ளனரோ?' என்று வ...
90
அவ்வையார்.
அதியமான் நெடுமான் அஞ்சி.
தும்பை.
தானை மறம்.
உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடைமல்கு குளவியொடு கமழும் சாரல் மறப்புலி உடலின், மான்கணம் உளவோ? மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? 5 அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, விரிமணல் ஞெமரக், கல்பக, நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? எழுமரம் கடுக்கும் த...
புறநானூறு - 90. புலியும் மானினமும்!
உடைந்த வளையல் போல மலர்ந்திருக்கும் காந்தள் மலரும், இலை மலிந்த குளவி மலரும் மணம் கமழும் மலைச்சாரலில், புலி சீறின் மான் கூட்டம் நிற்குமா? மயக்கம் தரும் வானத்துத் திசைகளில், ஞாயிறு காய்ந்தால் இருளும் உண்டோ? வரிமணல் கிழியும்படியும், தடுக்கும் கல் நொறுங்கும்படியும், அச்சு தாங்கும் அளவுக்குப் பண்டப் பாரம் ஏற்றிய வண்டியை இழுத...
91
அவ்வையார்.
அதியமான் நெடுமான் அஞ்சி.
தும்பை.
வாழ்த்தியல்.
வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் களம்படக் கடந்த கழல்தொடி தடக்கை, ஆர்கலி நறவின், அதியர் கோமான் போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி! பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி 5 நீல மணிமிடற்று ஒருவன் போல மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது, ஆதல் நின்னகத்து அடக்கிச், 10 சா...
புறநானூறு - 91. எமக்கு ஈத்தனையே!
வெற்றி மிகுந்த குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போரில் தோற்கும்படி வென்ற, கழல விடப்பட்ட வீர வளையல்களை அணிந்த பெரிய கைகளையும், ஆரவாரத்தைச் செய்யும் கள்ளையுமுடைய அதியர் தலைவனே! போரில் பகைவரைக் கொல்லும் மறச் செல்வத்தை உடையவனும், பொன்னால் செய்யப்பட்ட மாலையையும் அணிந்தவனுமான நெடுமான் அஞ்சியே! பால் போன்ற பிறை நிலா நெற்ற...
92
அவ்வையார்.
அதியமான் நெடுமான் அஞ்சி.
தும்பை.
இயன் மொழி.
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை; என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார் கடி மதில் அரண்பல கடந்து 5 நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.
புறநானூறு - 92. மழலையும் பெருமையும்!
குழந்தைகளின் மழலைமொழி யாழ் இசையோடு பொருந்தாது. காலத்தோடும் பொருந்தாது. பொருளை அறிவதற்கும் இயலாது. அவ்வாறு இருப்பினும், தந்தையர்க்கு அம்மழலைச் சொற்கள் குழந்தைகள் மீது அன்பை வரவழைக்கின்றன. காவல் மிகுந்த மதில்களைக் கொண்ட கோட்டைகள் பலவற்றை வென்ற அதியமான் நெடுமான் அஞ்சியே! என் சொற்களும் குழந்தையின் மழலைச் சொற்களைப் போன்றவை,...
93
அவ்வையார்.
அதியமான் நெடுமான் அஞ்சி.
வாகை.
அரச வாகை.
திண் பிணி முரசம் இழுமென முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவது? வந்தோர் தார்தாங் குதலும் ஆற்றார், வெடிபட்டு, ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர் நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக், 5 காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி, மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீழ் கழல் மறவர...
புறநானூறு - 93. பெருந்தகை புண்பட்டாய்!
உன்னை எதிர்த்துப் போரிட்டு மாண்ட மன்னர், தப்பி ஓடிப்போனவர் பிழைத்திருந்து நோய்வாய்ப் பட்டு இறந்து ‘மறநெறி துணையாகப் போரில் மாண்டவர் சென்ற இடம் செல்க’ என்று அவரது உடலை வாளால் பிளந்து, நான்மறைப் பார்ப்பார் இட்ட பசும்புல்லில் வைத்து அடக்கம் செய்வதிலிருந்து தப்பித்துக்கொண்டனர். நீ பெருந்தகை. விழுப்புண் பட்டு மீண்டிருக்கிறா...
94
அவ்வையார்.
அதியமான் நெடுமான் அஞ்சி.
வாகை.
அரச வாகை.
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின், நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன் துன்னருங் கடாஅம் போல இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே. 5
புறநானூறு - 94. சிறுபிள்ளை பெருங்களிறு!
பெருமானே! தன்னுடைய வெண்மையான தந்தங்களை, ஊரில் உள்ள சிறுவர்கள் கழுவுவதால், நீர்த்துறையில் அமர்ந்திருக்கும் பெரிய யானை இனிமையாக இருப்பது போல நீ எங்களுக்கு இனிமையானவன். ஆனால் அதன் நெருங்க முடியாத மதம்பட்ட நிலைமை எவ்வாறு துன்பம் தருமோ, அது போல, பெருமானே, நீ உன் பகைவர்களுக்கு துன்பத்தை அளிப்பாய். குறிப்பு: கடாஅம் - ஆகுபெயரா...
95
அவ்வையார்.
அதியமான் நெடுமான் அஞ்சி.
பாடாண்.
வாண் மங்கலம்,
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து, கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே, பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து, கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும் 5 உண் டாயின் பதம் கொடுத்து, இல் லாயின் உடன் உண்ணும், இல்லோர் ஒக்கல் தலைவன், அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.
புறநானூறு - 95. புதியதும் உடைந்ததும்!
இங்கே இருக்கும் போர்க்கருவிகள் அனைத்தும் மயில் இறகு அணியப்பட்டு, பூமாலை சூடப்பட்டுத் திரண்ட வலிமையான காம்புகள் அழகுற செய்யப்பட்டு, நெய் பூசப்பட்டுக் காவலுடைய பெரிய அரண்மனையில் உள்ளன. அங்கே அதியமான் அரண்மனையில் இருப்பவையோ, பகைவரைக் குத்தியதால் வேலின் பக்கமும் நுனியும் சிதைந்து, எப்பொழுதும் கொல்லனின் பணியிடமாகிய சிறிய பட...
96
அவ்வையார்.
அதியமான் மகன் பொகுட்டெழினி.
பாடாண்.
இயன் மொழி.
அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின், திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே, பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, 5 விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது, மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் கைமான் கொள்ளு மோ? என உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.
புறநானூறு - 96. அவன் செல்லும் ஊர்!
என் தலைவனின் (அதியமான் நெடுமான் அஞ்சியின்) இளையோன் (மகன்) (மண் கொள்ளும் போருக்கு அடையானமான) தும்பைப் பூவைச் சூடியவுடன் இரண்டு வகையான பகை உண்டாகிவிட்டது. ஒன்று, அவனைப் பார்த்த பெண்களின் கண்கள் பசப்போடு தாக்குவது. மற்றொன்று, விழா இல்லை என்றாலும் அவன் தன் உறவுக்கூட்டத்துடன் வந்து தம் ஊர்த்துறையில் தங்கி ஆட்டுக்கறி உணவு உண...
97
அவ்வையார்.
அதியமான் நெடுமான் அஞ்சி.
பாடாண்.
இயன் மொழி.
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், ஊனுற மூழ்கி, உருவிழந் தனவே; வேலே, குறும்படைந்த அரண் கடந்தவர் நறுங் கள்ளின் நாடு நைத்தலின், 5 சுரை தழீஇய இருங் காழொடு மடை கலங்கி நிலைதிரிந் தனவே; களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், பரூஉப் பிணிய தொடிகழிந...
புறநானூறு - 97. மூதூர்க்கு உரிமை!
வாள் - போருக்காகத் தீட்டப்பட்ட வாள் மதிலைக் காத்த மறவர்களை அழித்ததால் கறிக்கறை படிந்து உரு அழகினை இழந்துவிட்டன. வேல் - சிற்றூர் அரண்களைக் கடந்து செல்கையில் அவ்வூர் மக்களை நைத்ததால் அதன் கூரான வயிர முனை மழுங்கி நிலைதிரிந்து போயின. களிறு - பகைவர் கோட்டைக் கதவின் தாழ்ப்பாள்மரமான எழுமரம் உடையும்படியும், பகைவர் களிறுகளின் க...
98
அவ்வையார்.
அதியமான் நெடுமான் அஞ்சி.
வாகை.
அரச வாகை. திணை: வஞ்சியும், துறை;
முனைத் தெவ்வர் முரண் அவியப் பொர்க் குறுகிய நுதி மருப்பின் நின் இனக் களிறு செலக் கண்டவர் மதிற் கதவம் எழுச் செல்லவும், பிணன் அழுங்கக் களன் உழக்கிச் 5 செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் இன நன்மாச் செயக் கண்டவர் கவை முள்ளின் புழை யடைப்பவும், மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பில் நின்வேல் கண்டவர் 10 தோள் கழியொடு பிடி செற...
புறநானூறு - 98. வளநாடு கெடுவதோ!
உன் போர்யானை செல்வதைப் பார்த்தவர்கள் தம் மதில் கதவை ‘எழு’ என்னும் தாழ்ப்பாள் போட்டுவிட்டு உள்ளே ஒடுங்கிக்கொண்டனர். உன் குதிரை போர்க்களத்தில் பிணத்தின்மேல் குளம்பைப் பாய்ச்சிச் செல்லக் கண்டவர் கவைமுள் வேலி போட்டு வீட்டு வாயிலை அடைத்துக்கொண்டனர். தோல்கவசம் இடாத உன் வேலைக் கண்டவர் தம் உடலில் தோல்கவசம் அணிந்துகொண்டனர். உன்...
99
அரும்பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், நீர்அக இருக்கை ஆழி சூட்டிய தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல, ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல், பூவார் காவின், புனிற்றுப் புலால் நெடுவேல், 5 எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயம் வழுவின்று எய்தியும் அமையாய், செருவேட்டு, இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச் சென்று, அமர் கடந்து, நின் ஆற்ற...
புறநானூறு - 99.அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்,
உன் முன்னோர் அமரர் தேவர்களை வழிபட்டனர். அவர்களுக்கு வேள்வியில் உணவு அளித்தனர். கரும்புப் பயிரை இந்த நிலத்துக்குக் கொண்டுவந்தனர். நீர் சூழ்ந்த நில உலகில் ஆட்சிச் சக்கரத்தை உருட்டினர். நீ அவர்களைப் போல அரசுத் தாயத்தைப் பெற்றிருக்கிறாய். உன் காலிலுள்ள வீரக் கழலைக் கொடைக் கழலாக மாற்றிக்கொண்டிருக்கிறாய். உன் வேலில் பனம்பூ ச...
100
அவ்வையார். பாடப்பட்டோன்:
அதியமான் நெடுமான் அஞ்சி.
வாகை.
அரச வாகை.
கையது வேலே; காலன புழல்; மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;னக வெட்சி மாமலர், வேங்கையொடு விரைஇச், சுரி இரும் பித்தை பொலியச் சூடி, வரி வயம் பொருத வயக்களிறு போல, 5 இன்னும் மாறாது சினனே; அன்னோ! உய்ந்தனர் அல்லர், இவண் உடற்றி யோரே; செறுவர் நோக்கிய கண், தன் சிறுவனை நோக்கியுஞ், சிவப்பு ஆனாவே.
புறநானூறு - 100. சினமும் சேயும்!
பிறந்திருக்கும் மகனைப் போர்க்கோலத்துடன் வந்து பார்க்கிறான் அரசன் அஞ்சி. கையிலே வேல். காலிலே வீரக்கழல். உடலிலே வியர்வை. கழுத்திலே பகைவர் வெட்டிய புண். பித்தை என்னும் உச்சிச்சிண்டு போட்ட தலையிலே ஊசியால் கோத்து வளைத்துக் கட்டிய பனம்பூக் கண்ணி. இந்தப் பூவோடு வெட்சிப் பூவும், வேங்கைப் பூவும் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்தது...