Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
thinai
stringclasses
5 values
poems
listlengths
10
10
1. குறிஞ்சி
[ { "explanation": "புகழ்மிகுந்த சந்தனங்களை வெட்டிப் புல்லும்படி எரியூட்டியமையானே புகையினைக் கொடுக்கப் பெற்ற அண்டர் துகள் பொழிகின்ற வானளவு முயர்ந்த வெற்பனே! இரவின்கண் வரல்வேண்டா, நீ வருகின்ற வழி யானை வருகின்ற சுரங்களாதலான்.", "number": 1, "poem": "புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்\nபுகைகொடுக்கப் பெற்ற புலவோர் - துகள்பொழியும்\nவானுயர் வெற்ப! இரவின் வரல்வேண்டா\nயானை யுடைய கரம்." }, { "explanation": "திரட்சியையுடைய மொட்டுக்களைக் கையென்று கருதும்படி காந்தள் அழகுபெற அரும்ப, அதன் மணத்தையுடைய முகைகளென்று கருதி மந்திகள் கொண்டாடுகின்ற மிகுதியையுடைய மலை நாடனே! நீ இங்கு வருதலரிதாங்கொல்லோ; புனங்களும் தினையரியப்பட்டுக் காவலொழிந்தன.", "number": 2, "poem": "கணமுகை கையெனக் காந்தள் கவின\nமணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்\nவிறன்மாலை நாட! வரிஅரிதாங் கொல்லோ\nபுனமும் அடங்கின காப்பு." }, { "explanation": "மலையினது பக்கமலைமேற் காந்தள் புதிதாக அழகுபெறுதலால், அவற்றின் முகைகளைப் பாம்பென்று கருதிச் சென்று உருமு இடித்தலான், அவற்றைப் பிறர் கண்டிரங்குகின்ற பூங்குன்ற நாடன் புணர்ந்த அந்நாள் போலாவாய், இக்காலத்து நெகிழ்ந்து கழன்ற வெள் வளைகள்.", "number": 3, "poem": "ஓங்கல் இறுவரைமேல் காந்தள் கடிகவினப்\nபாம்பென ஓடி உரும்இடிப்பக் கண்டிரங்கும்\nபூங்குன்ற நாடன் புணர்ந்தஅந் நாள்போலா\nஈங்கு நெகிழ்ந்த வளை." }, { "explanation": "ஏனலிடத்திட்ட குளிர்ந்த மணிகளைக் கொண்டு இரவின்கட் குறவர்மக்கள் தங்குளிர் நீங்கக் காயும் வானின் கண்ணே யுயர்ந்த வெற்பன் ஈங்கு வருவான் கொல்லோ? என்னுடைய தோழி மேனியிற் பசப்புக்கெட..", "number": 4, "poem": "ஏனல் இடத்திட்ட ஈர்மணிகொண்(டு) எல்லிடைக்\nகானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்\nவானுயர் வெற்பன் வருவான்கொல் என்தோழி\nமேனி பசப்புக் கெட." }, { "explanation": "விரை கமழாநின்ற சாரலின்கண் விளைபுனங் காப்பர்கள், இம்மலையின்கண் வரவேண்டா ஐயனே! கடுங்சொல்லினர், வில்லினர், வேலர், விரைந்து செல்லுமம்பினர் மலையின்கண் வாழ்வாராகிய வெமர்.", "number": 5, "poem": "விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்\nவரையிடை வாரல்மின் ஐய! உரைகடியர்\nவில்லினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்\nகல்லிடை வாழ்நர் எமர்." }, { "explanation": "யானைகள் உழன்று திரியும் அழகுமிக்க நீள்வரைக் கானகத்து வாழும் வாழ்க்கையினையுடைய குறவர் மகளிரேம் யாங்கள்; எனலின்கண் நீரே வருதல் என்ன பயனுளது? ஐய! நும்மைக் காணினும் நீர் வந்தீரென்று கேட்பினும் நும்மை வெகுள்வர் எமர்.", "number": 6, "poem": "யானை உழலும் மணிகிளர் நீள்வரைக்\nகானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்\n|ஏனலுள் ஐய! வரவுமற்(று) என்னைகொல்\nகாணினும் காய்வர் எமர்." }, { "explanation": "யாழுங் குழலு முழவுந் தம்முள் பொருந்தியொலித்தாற்போல வீழாநின்ற அருவியையுடைய மிக்க மலைநாடனே! மதர்ப்பிணையுடைய மான் போன்ற நோக்கினையுடையாளும் ஆற்றமாட்டாள்; நீர் இரவின்கண் வருதிராயின், ஊரும் பிறரும் அறியும் அலரைத்தரும்.", "number": 7, "poem": "யாழும் குழலும் முழவும் இயைந்தன\nவீழும் அருவி விறன்மலை நன்னாட!\nமாழைமான் நோக்கியும் ஆற்றாள் இரவரின்\nஊரறி கெளவை தரும்." }, { "explanation": "வேங்கை மலர்தலான் வெறிகமழா நின்ற தண்சிலம்பின் கண்ணே வளைந்த மூங்கில் போன்ற மெல்லிய தோளையுடைய குறவர் மகளிரேம் யாங்கள்; குருதி பாய்ந்தொழிக, இவ்விடத்தின்கண் போந்ததில்லை, ஐயனே! களிறு.", "number": 8, "poem": "வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின்\nவாங்கமை மென்தோள் குறவர் மகளிரேம்\nசோர்ந்து குருதி ஒழுகமற்(று) இப்புறம்\nபோந்த(து)இல் ஐய! களிறு." }, { "explanation": "நோயான் வந்த நிறத்தீர்ந்து, பெரும் பணைத்தோள் பெருப்ப அழகிய மலைநாடன் வருவான் கொல்லோ? தோழி! கணியைப்போல நாட்சொல்லும் நிறை வேங்கை மலர்ந்து வண்டுகள் ஒலியாநின்ற நீலமணி போன்ற நிறத்தினையுடைய மாலைப்பொழுதின்கண.", "number": 9, "poem": "பிணிநிறம் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க\nமணிமலை நாடன் வருவான்கொல் தோழ!\nகணிநிறை வேங்கை மலர்ந்துவண்டு ஆர்க்கும்\nஅணிநிற மாலைப் பொழுது." }, { "explanation": "பலாப்பழத்தினைப் பெற்ற பசுங்கண்ணினையுடைய குரங்கினுட் கடுவன், “ஏடி!” என்று தனக்கிணையாகிய மந்தியை யழைக்கும் பெற்றிய கற்கள் சூழ்ந்த வெற்பன் நம்மை யூடுங்கொல்லோ? தோழி! நங்காதலரோடு புணர்ந்த புணர்ச்சியையறிந்து புனத்துச் செல்லும் செலவினையுந் தவிர்த்தாள் அன்னையாதலால்.", "number": 10, "poem": "பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்\nஎலஎன்(று) இணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்\nபுலவுங் கொல் தோழி! புணர்வறிந்(து) அன்னை\nசெலவுங் கடிந்தாள் புனத்து." } ]
2, பாலை
[ { "explanation": "செங்கழுநீர் மலர்போன்ற கண்ணினையுடையாய்! அவர் பிரிந்ததால் நிகழும் அலர் நிற்க, பொருண்மேல் நீர்மையையுடையராய் நங்காதலர் முன் சொல்லிய சொல்லைப் பொய்த்து நம்மை நீங்குவார் போனார்; அங்குள்ளார் அழியும் நீர்மையவாகிப் பசையறு தனக்குத் தோன்றிப்போம்வழியின்கண் நீரறுத்த சுரங்களின்கண்ணே.", "number": 1, "poem": "கழுநீர் மலர்க்கண்ணாய்! கெளவையோ நிற்கப்\nபொருள்நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார்\nஅழிநீர் வாகி அரித்தெழுந்து தோன்றி\nவழிநீர் அறுத்த சுரம்." }, { "explanation": "முரிபரந்த பருக்கையினையுடையவாய் வலியழிந்து தோன்றி, எரிபரந்த கானத்தின்கண் இயற்றும் பொருட் பொருட்டுச் செல்வீர்! அரிபரந்த உண் கண்ணாள் ஆற்றாளென்னுந் திறத்தை நும்மைப்போல, பிறரறிகிற்பார் யார் ஆராயுமிடத்து?", "number": 2, "poem": "முரிபரல வாகி முரணழிந்து தோன்றி\nஎரிபரந்த கானம் இயைபொருட்குப் போவீர் !\nஅரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்\nதெரிவார்யார் தேரும் இடத்து." }, { "explanation": "ஓங்கிய குருந்தோடே கூட அரும்புகளையீன்று பாங்கராகிய மராஅமரமும் விளங்கி மலர்ந்தன; புணர்ந்து விரவிக் கலந்து சென்ற நங்காதலர் வலந்த சொல்லெல்லாம் பழுதாக்கின, குயில்கள் : பொலந்தொடீ!", "number": 3, "poem": "ஓங்கு குருந்தோ(டு) அரும்பீன்று பாங்கர்\nமராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க்\nகலந்தனர் சென்றார் வலந்தசொல் எல்லாம்\nபொலந்தொடீஇ பொய்த்த குயில்." }, { "explanation": "புன்குகள் பொரிபோல மலரப் பூந்தண் பொழில்களெல்லாஞ் செங்கட் குயில்கள் கூவுகின்ற போழ்துகண்டும், முன்பு பொருணசையையுடைய ஊக்கந்துரப்ப நம்மை நீங்கினர் வருநசையைப் பாராநின்றது என் நெஞ்சு.", "number": 4, "poem": "புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்\nசெங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்\nபொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்\nவருநசை பார்க்கும்என் நெஞ்சு." }, { "explanation": "சிறிய புல்லிய புறவினொடு சிறிய புல்லூறு வெகுளும் வழியரிய நீள்சுரத்தின்கட்டங்குவர் கொல்லோ? தோழி! தளிரினது அழகு போன்றிருந்த என்மேனி பசப்ப, நம்மேலுள்ள அருளினை ஒழிந்து நிறைந்த பொருளினை வேட்ட வேட்கையை யுடையவர.", "number": 5, "poem": "சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும்\nநெறியரு நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி !\nமுறிஎழில் மேனி பசப்ப அருள்ஒழிந்(து)\nஆர்பொருள் வேட்கை அவர்." }, { "explanation": "கருங்காலினையுடைய மராமரங்கள் நுணாவொடு மலர, இருஞ்சிறை வண்டினங்கள் பாலையென்னும் பண்ணினை முரல, அரும்பிய முள்ளெயிற்றினையும், அழகிய சொல்லினையுமுடைய மடவாய்! நாம் செல்லும் வழியை விரும்புவாய்.", "number": 6, "poem": "கருங்கால் மராஅம் நுணாவோ(டு) அலர\nஇருஞ்சிறை வண்டினம் பாலை முரல\nஅரும்பிய முள்ளெயிற்(று) அஞ்சொல் மடவாய்\nவிரும்புநாம் செல்லும் இடம்." }, { "explanation": "கல்லையுடைய வழிமருங்கிலுள்ள குறும்புகளின் வாயிறோறும் அச்சத்தைச் செய்யந் துடிகள் நின்று இயம்பும் வில்லுழுது வாழ்வார் குறும்பின்கண்ணுஞ் செல்வர் கொல்லோ? இலங்கும் வளை மென்றோள் மெலியும்படி பொருட்காதலால் நம்மை நல்காது நீங்கிய நமர்.", "number": 7, "poem": "கல்லதர் வாயில் கருந்துடி கள்பம்பும்\nவில்லுழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல்\nஎல்வனை மென்தோள் நெகிழப் பொருள்நசைஇ\nநல்கா துறந்த நமர்." }, { "explanation": "வெயில் சுடுதலாற் கண்பிளந்து முத்தங்களைச் சொரியாநின்ற வேய்பிணங்குஞ் சோலையையுடைய அகன்ற கானத்துஞ் செல்லக் கருதினார்க் குடன்படுவன போன்றிருந்தனவில்லை; என்னிலங்கு வளையோ கொன்னே நிலத்தின்கட் சிந்துவன போன்றன.", "number": 8, "poem": "கதிர்சுடக் கண்ணுடைந்து முத்தம் சொரியும்\nவெதிர்பிணங்கும் சோலை வியன்கானம் செல்வார்க்(கு)\nஎதிர்வன போல்இலவே எவ்வளையோ கொன்னே\nஉதிர்வன போல உள." }, { "explanation": "கலையொடு மான்கள் துன்புற் றிரங்காநிற்கும் மலைவழிகளையுடைய கடறுகளின் இப்பெற்றிப் பட்டுள்ள நிலையஞ்சிச் சுரத்தின்கட் டங்குவர் கொல்லோ? தோழி! முலையோடு சோர்கின்றன போன்ற வண்ணங்கள்; அந்தோ! வளையுடனே தளர்ந்து சோர்கின்ற என்றோள்கள்.", "number": 9, "poem": "கலையொடு மான்இரங்கும் கல்லதர் அத்தம்\nநிலைஅஞ்சி நீள்சுரத்(து) அல்குவர்கொல் தோழி!\nமுலையொடு சோர்கின்ற பொன்வண்ணம் அன்னோ\nவளையொடு சோரும்என் தோள்." }, { "explanation": "நாணேற்றிய வில்வினையுடைய வேடர் வாழும் கடுஞ்சுரத்தின்கட் பாற்றினஞ் சேரப்படுகின்ற நிழலைக் கண்டஞ்சி, என்மகள் கூற்றன்ன வல்வில்லையுடைய விடலையுடனே சென்றாற்ற வல்லள்கொல்லோ மெல்லிதாக நடந்து.", "number": 10, "poem": "ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ்சுரம்\nபாற்றினம் சேரப் படுநிழல் கண்டஞ்சிக்\nகூற்றின வல்வில் விடலையோ(டு) என்மகள்\nஆற்றுங்கொல் ஐய நடந்து." } ]
3. முல்லை
[ { "explanation": "அஞ்சனம் போலக் காயாக்கள் மலர, குருகிலைகள் ஒண்டொடியுடைய நல்லார் முறுவல்போல அழகு கொள்ள, குளிர்ந்த கோடல்கள் துடுப்புப்போலப் பூங்குலையை யீனாநிற்ப, நங்காதலர் வந்தார்; நின்னுடைய தோள்கள் விளங்குவனவாக.", "number": 1, "poem": "அஞ்சனக் காயா மலரக் குருகிலை\nஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்\nதண்கழற் கோடல் துடுப்(பு)ஈனக் காதலர்\nவந்தார் திகழ்நின் தோள்." }, { "explanation": "நின்னுடைய மெல்லிய முலைமேலேறிய பசலை நிறம் என்னாங் கொல்லோ? நன்னுதலையுடைய மாதராய்! நமர் ஈதோ வருவர்: பற்போன்றிருந்த நிறத்தையுடைய முல்லைகள் தாம் முகையரும்பப் பருவத்தைச் செய்து கண்டார்க்கினிய நிறத்தைக் கொண்டது இக்கார்.", "number": 2, "poem": "மென்முலைமேல் ஊர்ந்த பசலைமற்(று) என்னாங்கொல்\nநன்னுதல் மாதராய்! ஈதோ நமர்வருவர்\nபல்நிற முல்லை அரும்பப் பருவஞ்செய்(து)\nஇன்னிறம் கொண்ட(து)இக் கார்." }, { "explanation": "நம்மைப் பிரிந்து போயினார் வருவர்; செறிதொடீஇ! இக்காலம் கார் காலமாயிருந்தது; வெஞ்சின வேந்தர் முரசுபோ விடித்து முழங்கித் தண்கடல் வெள்ளத்தைப் பருகி மேன்மேற் சிறந்து இன்றையின் நாளை மிகுங்காண்.", "number": 3, "poem": "சென்றார் வருவர் செறிதொடீஇ! காரிதோ\nவெஞ்சின வேந்தர் முரசின் இடித்துரறித்\nதண்கடல் நீத்தம் பருகித் தலைசிறந்து\nஇன்றையில் நாளை மிகும்." }, { "explanation": "செஞ்சுணங்கினையுடைய மெல்லிய முலையாய்! நின்னைச் சேர்ந்த பசலை நீங்குவதாக; சூளுறவாகிய சொற்களைச் சொல்லி நம்மை வற்புறுத்தினார் தாம் வருதற்குச் சொல்லிய குறியால். வெஞ்சினத்தாற் பொங்கியது போல இடித்து முழங்கிக் கறுத்த முகில்கள் தண்பெயலைப் புறவின்கண்ணே யுகுத்தனவாதலால், காரிது.", "number": 4, "poem": "செஞ்சுணங்கின் மென்முலையாய்! சேர்பசலை தீர்இதோ\nவஞ்சினம் சொல்லி வலித்தார் வருகுறியால்\nவெஞ்சினம் பொங்கி இடித்(து)உரறிக் கார்வானம்\nதண்பெயல் கான்ற புறவு." }, { "explanation": "கருவியன்ற கரியமழை காற்றோடு கலந்துயர்தலால், முன் வெம்மையால் உருகும் மடமான்கள் தம் பிணையோடு உகளாநின்றன; நிறத்தையுடைய முலையாய்! நங்காதலர் இப்பொழுதே வருவார்; இக்காலம் நம்மைத் தோற்றுவியாநின்றது.", "number": 5, "poem": "கருவியல் கார்மழை கால்கலந்(து) ஏத்த\nஉருகு மடமான் பிணையோ(டு) உகளும்\nஉருவ முலையாய்! நம் காதலர் இன்னே\nவருவர் வலிக்கும் போது." }, { "explanation": "பெருங்கடலைப் பருகிய அழகுகொண்ட முகில், கருங்கொடி முல்லைகள் அழகுபெறும்படி முழங்கிப் பெரும் பெயல் தாழாநிற்க, பெயர்ந்து வருவேமென்று காதலர் குறிசெய்தாராகலால், நமக்குப் பொருந்த அவருரைத்த கால மிது.", "number": 6, "poem": "இருங்கடல் மாந்திய ஏர்கொள் எழிலி\nசுருங்கொடி முல்லை கவின முழங்கிப்\nபெரும்பெயல் தாழப் பெயர்குறி செய்தார்\nபொருந்த நமக்குரைத்த போழ்து." }, { "explanation": "ஆயர்கள் இனத்தை ஊரின்கண்ணே பெயர்வித்து ஆம்பற்குழலை மருவ, ஒலிக்குங் கடலுள் நீரை முகந்து பரக்க முழங்குதலான், மாயிரு ஞாலமெல்லாம் இருள்மிக்கு மயங்கும் மாலைப்பொழுது நம்மைப் பிரிந்து சேயராயினார் வருவதற்குச் சொல்லிய குறி.", "number": 7, "poem": "ஆயர் இனம்பெயர்த்(து) ஆம்பல் அடைதாய்\nபாய முழங்கிப் படுகடலுள் நீர்முகந்து\nமாயிரு ஞாலம் இருள்கூர் மருண்மாலை\nசெயவர் செய்த குறி." }, { "explanation": "அலைகடலைப் பருகி அதிராநின்ற குரலினையுடைய உருமேற்றோடு முதிர்ந்த மணிநாகங்கள் வருந்தும் வகை முழங்கி, வெயில்மறைந்த மாலைப் பொழுது மிக்க பெயல் தாழ்தலான், இவள் முலைமேற் சுணங்குகள் பிதிர்ந்தாற்போல இனிப்பாக்கும்.", "number": 8, "poem": "அதிர்குரல் ஏறோ(டு) அலைகடல் மாந்தி\nமுதிர்மணி நாகம் அனுங்க முழங்கிக்\nகதிர்மறை மாலை கனைபெயல் தாழப்\nபிதிரும் முலைமேல் கணங்கு." }, { "explanation": "காந்தளின் மிக்க அரும்புகள் கோளராவிற்கு மாறாகக் கருதிக் காடெல்லாங் கார்ப்பருவத்தைச் செய்து முல்லையரும்புகளை யீன, வழிகளெல்லாம் நுண்ணிய அறல் மணல் மேலொழுகுதலால், அணியிழையை யுடையாய்! புறவினைக் காண்பாம் போதராய்.", "number": 9, "poem": "கோடல்அம் கூர்முகை கோளரா நேர்கருதக்\nகாடெலாம் கார்செய்து முல்லை அரும்(பு)ஈன\nஆறெலாம் நுண்ணறல் வார் அணியிழாய்!\nபோதராய் காண்பாம் புறவு." }, { "explanation": "மலையருவிகள் வந்து முழங்க, குருகிலைகள் பூப்ப, தெரிந்த ஆனினங்கள் இனிய பாலைப்பொழிய, வரிவளைத் தோளினையுடையாய்! நமர் வருவார் கொல்லோ? பெரியவாயுள்ள அழகுகளை மலர்ந்தது இக்கார் ஆதலான்.", "number": 10, "poem": "அருளி அதிரக் குருகிலை பூப்பத்\nதெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற\nவரிவனைத் தோளி! வருவார் நமர்கொல்\nபெரிய மலர்ந்த(து)இக் கார்." } ]
4. மருதம்
[ { "explanation": "பழனத்தின்கட் படிந்த படுகோட்டினையுடைய எருமை கழனியின்கட் டொழில் செய்வார்க்கு எறிந்த பறையொலியைக் கேட்டு வெருவி, அறிவழிந்தோடும் ஒலிபுனலையுடைய வூரன் என்றோட் குரிமை யுடையன் என்னும் இத்துணையே யமையும்; அவன் எனக்கு நல்குதல் வேண்டுவதில்லை.", "number": 1, "poem": "பழனம் படிந்த படுகோட்(டு) எருமை\nகழனி வினைஞர்க்(கு) எதிர்ந்த பறைகேட்(டு)\nஉரனிழிந்(து) ஓடும் ஒலிபுனல் ஊரன்\nகிழமை யுடையன்என் தோட்டு." }, { "explanation": "திரண்ட காலையுடைய மருதுகள் உகுத்த நறுந் தாதுகள் ஒத்த தாளினையுடைய நீலங்களின் இதழ் மேலே சொரியும் பெருந்தாட் கதிரையுடைய செந்நெற் பரந்த வயலூரன் பரத்தையர்க் கின்பத்தை இணைத்தலே யன்றி, எமக்குமோர் பசலை நோயினை யிணைத்தான்.", "number": 2, "poem": "கணைக்கால் நெடுமருது கான்ற நறுந்தா(து)\nஇணைக்கால் நீலத்(து) இதழ்மேல் சொரியும்\nபணைத்தாள் கதிர்ச்செந்நெல் பாய்வயல் ஊரன்\nஇணைத்தான் எமக்குமோர் நோய்." }, { "explanation": "கீழாயினார் நட்பே போலக், காஞ்சிமரங்களையுடைய நல்லூரனே! என்றோழியுடைய இளநலமெல்லாம் முன்பு நுகர்ந்தாய்; பின்னை அக் கதிர்முலை யாகத்துக் கண்ணனையார் சேரிக்கட்சென்று மற்றவர் இளமை எதிர் நலத்தை எதிரேற்று நின்றாய்.", "number": 3, "poem": "கடையாயார் நட்பேபோல் காஞ்சிநல் ஊர!\nஉடைய இளநலம் உண்டாய் - கடைய\nகதிர்முலை ஆகத்துக் கண்ணன்னார் சேரி\nஎதிர்நலம் ஏற்றுநின் றாய்." }, { "explanation": "செந்நெல் விளைகின்ற வயலினையுடைய ஊரன் முன்பு சில நாள் தன்னலத்தை யா னல்லாதார்க் கீயான்; இப்பொழுது பாரித்த அல்குற் பணைத்தோளையுடைய பரத்தையர் சேரியின்கண் மற்றவர் தலைமகற்கே நல்கும் வாரிக்குப் புக்கு நின்று ஆராய்வாயாக: ஆகையால், பாண! இங்குநின்றும் ஏழுவாயாக.", "number": 4, "poem": "செந்நெல் விளைவய லூரன் சிலபகல்\nதன்னலம் என்அலார்க்(கு) ஈயான் எழுபாண!\nபாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்\nவாரிக்குப் புக்குநின் றாய்." }, { "explanation": "வேனிற்காலத் தெதிர்ந்த மலர்களை ஏற்றுக் கொண்டூதும் கூனிவண்டு போலுங் குளிர்வயல் நல்லூரன்; ஆகலான், மாட்சிமைப்பட்ட இழையையுடைய நல்லாரின் நலத்தை நுகர்ந்து மற்றவர் உடம்பினை ஒழிய விடும்.", "number": 5, "poem": "வேனிற் பருவத்(து) எதிர்மலரேல் தூதும்\nகூனிவண்(டு) அன்ன குளிர்வயல் நல்லூரன்\nமாணிழை நல்லார் இளநலம் உண்டவர்\nமேனி ஒழிய விடும்." }, { "explanation": "செந்தாமரைகள் மலராநின்ற செய்யப்பட்ட வயல்களையுடைய நல்லூர! நீ செய்த பிழைகட்கு நொந்தால் நின்னைச் செய்யப்படுவ தென்னுள்ளதாம்? என்றோழி நலத்தைத் தந்தாயு நீயே; தரவந்த நன்னலத்தைக் கொண்டாயும் நீயேயாயினால்", "number": 6, "poem": "செந்தா மரைலருஞ் செய்வயல் நல்லூர!\nநொந்தான்மற்(று) உன்னைச் செயப்படுவ(து) என்னுண்டாம்\nதந்தாயும் நீயே தரவந்த நன்னலம்\nகொண்டாயும் நீஆயக் கால்." }, { "explanation": "பல பொழுதும் வந்து பயின்று சொல்லற்க; பாணனே! கேட்பாயாக; நெற் செறிந்த வளவயலூரன் எம்மைப் புணர்ந்த முன்னாளின்கண்ணும் எல்வளையம் மென்றோளேம்; எங்கையர் தம்மைப்போல நல்ல மடந்தையருள் வைத்து அவனாலெண்ணப்பட்டிலேம்.", "number": 7, "poem": "பல்காலும் வந்து பயின்றுரையல் பாண! கேள்\nநெல்சேர் வயவல லூரன் புணர்ந்தநாள்\nஎல்வளைய மென்தோளேம் எங்கையர் தம்போல\nநல்லஅருள் நாட்டம்இ லேம்." }, { "explanation": "நல்ல வயலூரனுடைய நன்மை யெல்லாம் நாங்களே அறிந்து உரைக்க வல்லேம்; பாணனே! நீ சொல்லாற் பயின்றுரைக்க வேண்டா; இனி ஒழிவாயாக; நிறமிக்க நன் முல்லைமாலை சேர்ந்த இருங்கூந்தலையுடைய பரத்தையே சொல்லா நின்றாள்; தன் மாட்டவர் காதலித்த வண்ணத்தையும், எம்மாட்டுள்ள அவரது இகழ்ச்சியையும்.", "number": 8, "poem": "நல்வயல் ஊரன் நலமுரைத்தும் நீபாண!\nசொல்லிற் பயின்றுரைக்க வேண்டா - ஒழிதிநீ\nஎல்லுநன் முல்லைத்தார் சேர்ந்த இருங்கூந்தல்\nசொல்லுமவர் வண்ணம் சோர்வு." }, { "explanation": "பெருங்கயத்த இடத்தின்கட் செறிந்த நீலங்களைப் பெரும்புறத்தினையுடைய வாளைப்பெடைகள் கதுவுகின்ற ஊரன் எம்மை விரும்பின நாட்போலான்; எம்முடைய வியனலத்தை முன்னே யுண்டான்; ஆதலான் இப்பொழுது கரும்பின் கோதுபோலவாயினேம்.", "number": 9, "poem": "கருங்கயத்(து) ஆங்கண கழுமிய நீலம்\nபெரும்புற வாளைப் பெடைகதூஉம் ஊரன்\nவிரும்புநாள் போலான் வயின்நலம் உண்டான்\nகரும்பின்கோ(து) ஆயினேம் யாம்." }, { "explanation": "ஆம்பலாற் செய்யப்பட்ட அணித் தழையும் ஆரமும் அல்குலின்கண்ணும், முலையின்கண்ணும் அசைந்து வருகின்ற தீம்புனலூரன் மகள் இவள் இவ்வூரின்கண் ஆய்ந்த நறுமலர் நீலம் பெண்பால் கட்டிச் சூடும் பூமாலை செறிந்த மலர்த் தாமரை மாலை அவள் ஐயன்மார்க்குச் சூடும் பூவாதலால், நீயும் தாமரை மாலையைச் சூடி வருவாயாக.", "number": 10, "poem": "ஆம்பல் அணித்தழை ஆரம் துயல்வரும்\nதீம்புனல் ஊரன் மகளிவள் ஆய்ந்தநறும்\nதேமலர் நீலம் பிணையல் செறிமலர்த்\nதாமரை தன்ஐயர் பூ." } ]
5. நெய்தல்
[ { "explanation": "நெய்தற்படப்பை நிறைகழித் தண் சேர்ப்பன் தாழை சூழ்ந்த கானலின்கண் நம்மைக்கண்ட முதனாள் போலானான்; அவனாற் செய்யப்பட்ட குறிகளும் பிழைத்தன; ஆயிழையாய்! அமைந்த நட்புச் செறிந்தன்றாகாதே யிருப்பது.", "number": 1, "poem": "நெய்தல் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்\nகைதைசூழ் கானலுள் கண்டநாள் போலானான்\nசெய்த குறியும்பொய் யாயின ஆயிழையாய்!\nஐயகொல் ஆன்றார் தொடர்பு." }, { "explanation": "முத்தம்போல வரும்பாநின்ற முடத்தாண் முதுபுன்னையின்கண் வந்து தத்தாநின்ற திரைகள் துளங்காநின்ற தண்ணங் கடற் சேர்ப்பனே! எழுதிய சித்திரப்பூங்கொடி யன்னாட்கு நின்னருளினாலே நல்காய்; வித்தகப் பைம்பூணையுடைய நின் மார்பினை.", "number": 2, "poem": "முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னை\nதத்தும் திரைதயங்கும் தண்ணங் கடற்சேர்ப்ப!\nசித்திரப் பூங்கொடி அன்னாட்(கு) அருள்ஈயாய்\nவித்தகப் பைம்பூணின் மார்பு." }, { "explanation": "எறிசுறாவையுடைய நீள்கடலின்கண்ணுள்ள வோதம் வந்துலாவ வரிவரியாயிருந்துள்ள மேனியையுடைய இறாக்கள் சுழன்று திரிதருஞ் சேர்ப்பன் நின்னறிவின்கண் நீங்காதிருந்த இன்சொல் அணியிழையை யுடையாய்! நின்மனையின் புறத்து அச்சேர்ப்பன் செய்த குறிகள் பலகாலு முளவாகா நின்றன.", "number": 3, "poem": "எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவ\nநெறியிறாக் கொட்கும் நிமிர்கழிச் சேர்ப்பன்\nஅறிவுஅறா இன்சொல் அணியிழையாய்! நின்னில்\nசெறிவுஅறா செய்த குறி." }, { "explanation": "இனமீன்களையுடைய இருங்கழியின்கண்ணே வந்து ஓதங்களுலாவ நீலமணிபோன்ற நீர்பரக்குந் துறைவனே! தகுவதொன்றோ குணத்தன்மை குன்றாக் கொடியன்னாள் திறத்து நினையு நீர்மையின்றி யொழிதல் நினக்கு ?", "number": 4, "poem": "இளமீன் இருங்கழி ஓதம் உலாவ\nமணிநீர் பரக்கும் துறைவ! தகுமோ\nகுணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம்\nநினைநீர்மை இல்லா ஒழிவு." }, { "explanation": "கடல் கொழித்துச் சிந்திய கதிர்மணி முத்தத்தைப் படம்போன்ற அழகிய அல்குற் பரதர் மகளிர் மாலையாகச் சேர்த்து விளையாடும் துறைவனே! என் தோழி மறுகாநிற்கும் தன்னுறு நோயை எனக் குரைத்து.", "number": 5, "poem": "கடல்கொழித்(து) ஈட்ட கதிர்மணி முத்தம்\nபடமணி அல்குல் பரதர் மகளிர்\nதொடலைசேர்த்(து) ஆடும் துறைவ! என்தோழி!\nஉடலுள் உறுநோய் உரைத்து." }, { "explanation": "நறுவிரை யுளதாகிய கானலையுடைய அகன்ற கரையின்கட் குருகினம் ஆராநின்ற கொடுங்கழிச் சேர்ப்பனே! பயின்று வருதலைச் செய்யவேண்டும்; என்றோழி மாமை நிறம் அழியாநின்ற உள்ளத்தின்கண் நோயொழிய.", "number": 6, "poem": "முருகியல் கானல் அகன்கரை யாங்கண்\nகுருதினம் ஆர்க்கும் கொடுங்கழிச் சேர்ப்ப\nமருவி வரலுற வேண்டும்என் தோழி\nஉருவழி உன்நோய் கெட." }, { "explanation": "அணிந்த பூக்களையுடைய கழிக்கானலின்கண் கண்ட அற்றைநாட் போலான்; மணியெழின் மேனியின்கண் மிக்க பசப்பேறும் வகை துணிகடற் சேர்ப்பன் எம்மை மிகவே துறந்தான் கொல்லோ! என் மென்தோள் வளைகள் நீங்கா நின்றன", "number": 7, "poem": "அணிபூங் கழிக்கானல் அற்றைநாள் போலான\nமணியெழில் மேனி மலர்பசப்(பு) ஊரத்\nதுணிகடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி!\nதணியும்எள் மென்தோள் வளை." }, { "explanation": "ஒலிக்கு மணியையுடைய நெடுந்தேர் கண்டார் கண்ணினொளியை யறுப்ப, உயர்ந்த மணன்மேல் அலவன் பரப்ப, வெம்மை மிக்க கடிய வெயில் கடிதாக நீங்க, செக்கர் நிறமாக நிறமிக்க மாலைப்பொழுதின்கண் நங் காதலன் வரும்.", "number": 8, "poem": "கறங்கு மணிநெடுந்தேர் கண்வாள் அறுப்பப்\nபிறங்கு மணல்மேல் அலவன் பரப்ப\nவறங்கூர் கடுங்கதிர் வல்விரைந்து நீங்க\nநிறங்கூரும் மாலை வரும்." }, { "explanation": "மயிலோ? மடவாளோ? மாநீர்த் திரையின்கண் பயின் றுறைவதோர் தெய்வங் கொல்லோ? கேளீரே! குயில்கள் கூவாநின்ற கன்னியிளஞாழற் பூம்பொழிலின்கண் அவரை நோக்கிய என் கண்ணினு மிக வருந்தாநின்ற தென் னெஞ்சு.", "number": 9, "poem": "மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்\nபயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும்\nகன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய\nகண்ணின் வருந்தும்என் நெஞ்சு." }, { "explanation": "பவளத்தினையும் முத்தினையும் பளிங்கினையும் கலந்து, பிறர் புகழக் கொண்டுவந்து, மனைசூழ்ந்த படப்பையையணைந்த முற்றத்தின்கண் வந்து வழங்குகின்ற திரையையுடைய சேர்ப்பன் விரைந்து வருவான் கொல்லோ? தோழி! முன்பு போலப் பொலிவழிந்திரா நின்ற அழகமைந்த மார்பும் பொலிவுடைத்தாய் இருந்ததாதலான், எம்பெருமான் விரைந்து வருமென்று முற்கொண்டு நமக்கு அறிவிக்கின்றது போலும்.", "number": 10, "poem": "பவளமும் முத்தும் பளிங்கும் விரைஇப்\nபுகழக் கொணர்ந்து புற(வு) அடுக்கும் முன்றில்\nதவழ்திரைச் சேர்ப்பன் வருவான்கொல் தோழி\nதிகழும் திருஅமர் மார்பு." } ]

📚 Dataset Card: திணைமொழி ஐம்பது (Thinaimozhi Iympadhu)

Dataset Summary

திணைமொழி ஐம்பது (Thinaimozhi Iympadhu) is a classical Tamil literary work that belongs to the Pathinen Keezhkanakku corpus. The text contains ten poems for each of the five Thinais, but differs from ஐந்திணை ஐம்பது by focusing more on the linguistic and expressive nature (மொழி) of each Thinai.

The five Thinais represented are:

  • குறிஞ்சி (Kurinji)
  • பாலை (Paalai)
  • முல்லை (Mullai)
  • மருதம் (Marutham)
  • நெய்தல் (Neithal)

Thus, the total number of poems is 50, giving rise to the name Thinaimozhi Iympadhu.

  • Title: திணைமொழி ஐம்பது
  • Text Type: Thinai-based Poetic Expressions
  • Language: Tamil (ta)
  • Author: கண்ணஞ் சேந்தனார்
  • Period: Post-Sangam Era
  • Category: Pathinen Keezhkanakku

Dataset Description

This dataset provides a structured digital version of Thinaimozhi Iympadhu, where each poem reflects the emotional, cultural, and environmental essence of its respective Thinai through refined poetic language. The verses showcase the relationship between landscape and human emotions, highlighting the elegance of Thinai-based linguistic expression.

The dataset supports:

  • Thinai-based language modeling
  • Landscape and emotion classification
  • Stylistic analysis of classical Tamil
  • Digital preservation of Thinai literature

Data Structure

Each record in the dataset follows this schema:

{
  "thinai": "குறிஞ்சி",
  "poems": [
    {
      "number": 1,
      "poem": "புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்...",
      "explanation": "புகழ்மிகுந்த சந்தனங்களை வெட்டிப்..."
    }
  ]
}

Fields Description

Field Type Description
thinai string Name of the landscape category
poems array List of poems under the Thinai
number integer Poem number
poem string Original Tamil verse
explanation string Commentary / interpretation

Dataset Statistics

  • Total Poems: 50
  • Total Thinais: 5
  • Poems per Thinai: 10
  • Format(s): JSON, JSONL
  • Encoding: UTF-8
  • Size: ~100 KB

Intended Use

✅ Thinai-based NLP Modeling ✅ Landscape-aware Language Understanding ✅ Classical Tamil Literary Analysis ✅ Cultural Heritage Preservation ✅ Educational Applications on Thinai System


Limitations

  • Highly metaphorical language may challenge NLP models
  • No grammatical or metrical annotation provided
  • Interpretations may vary by scholarly source

Languages

  • Tamil (ta)

Licensing

  • Poems: Public Domain (Classical Tamil Literature)

Acknowledgements

  • Scholars of Thinai Literature
  • Tamil Digital Heritage Initiatives
  • Open Source Tamil Research Contributors

Tags

  • திணைமொழிஐம்பது
  • ThinaimozhiIympadhu
  • ThinaiSystem
  • TamilPoetry
  • ClassicalTamil
  • TamilNLP
  • PathinenKeezhkanakku
  • DigitalHeritage

📌 This dataset preserves the poetic and linguistic richness of the Thinai system, enabling advanced AI and literary research on classical Tamil expression.

Downloads last month
18