target large_stringlengths 3 224 | source large_stringlengths 4 201 |
|---|---|
அம்மா, நாம் நாளைக்கு சினிமா பார்க்கப் போகலாமா? | Mom, let's go for a movie tomorrow. |
நான் நாளைக்கு ஸ்கூலுக்குப் போக வேண்டாம். | I don't have to go to school. |
ஸ்கூல் லீவு. | It is a holiday. |
நாளைக்கு ஏப்ரல் 14, இல்லையா? | Oh, tomorrow is the 14th of April right? |
உன் அப்பாவுக்கும் நாளைக்கு லீவாகத்தான் இருக்கும். | Your dad will also have the day off from work. |
நாம் எல்லாரும் சேர்ந்து சினிமாவுக்குப் போகலாம். | We can make a movie plan! |
ரொம்ப நல்ல விஷயம்! | That's a good news! |
ஆனால், நாளைக்கு ஏன் லீவு? | Why is it a holiday though? |
ஸ்கூல், காலேஜ், ஆஃபீஸ் எல்லாவற்றுக்குமே நாளைக்கு லீவா? | Are all schools, colleges and offices closed tomorrow? |
நாளைக்கு அம்பேத்கார் ஜெயந்தி! | It is Ambedkar Jayanti tomorrow! |
டாக்டர். பி. ஆர். அம்பேத்காருடைய பிறந்தநாளை இந்த நாளில் ஒவ்வொரு வருஷமும் நாம் கொண்டாடுகிறோம். | This day is celebrated annually to mark the birth of Dr. B. R Ambedkar. |
நீ அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? | Have you heard of him? |
என்னுடைய ஹிஸ்டரி, சிவிக்ஸ் புத்தகத்தில் அவரைப் பார்த்திருக்கிறேன். | I think I have seen him in my History and Civics book. |
அவருக்கு நமது அரசியலமைப்புடன் தொடர்பு இருக்கிறதா? | Is he related to our Constitution? |
நிச்சயமாக, அவரை இந்திய அரசியலமைப்பின் தந்தைன்னு கூப்பிடுகிறோம். | Absolutely! He is known as the father of the Indian Constitution. |
அரசியலமைப்பை வடிவமைப்பதில் மிகப்பெரிய பங்கு வகித்த ஒரு சமூக உரிமைப் போராளி அவர். | He was a civil rights activist who played a major role in formulating the Constitution. |
இந்தியா பெருமைப்படுகிற வண்ணமயமான ஜனநாயகக் கட்டமைப்புக்கு வடிவம் கொடுப்பதில் முக்கியமான பங்கு வகித்தார். | He played a crucial part in shaping the vibrant democratic structure that India prides itself upon. |
எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது! | I remember now! |
அன்று எங்களுடைய சிவிக்ஸ் வகுப்பில் அவரைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். | We were discussing about him in our Civics class the other day. |
இந்திய அரசியலமைப்பு பற்றிய பாடத்தைப் படிக்கும்போது அவரைப் பற்றி இன்னும் விவரங்கள் சொல்வதாக எங்கள் ஆசிரியர் சொன்னார். | Ma'am said that she will tell us more about him when we do the chapter on the Indian Constitution |
சமூகத்தில் நிலவிய வகுப்புவாதப் பிரிவினையை நீக்குவதற்காக அவர் போராடினார், இல்லையா? | He fought to remove the class distinction that prevailed in the society, right? |
ஆமாம், அவரே ஒரு தலித்தாக இருந்ததால் தீண்டாமை என்னும் தீமையை எதிர்கொள்வது எவ்வளவு கஷ்டமானது என்று அவர் புரிந்துகொண்டார். | Yes. Being a Dalit himself, he realised how hard is it to deal with the evil of untouchability. |
இப்படியாக, தாழ்ந்த ஜாதியினருடைய உரிமைக்காக அவர் போராடினார். | Thus, he fought for the rights of the lower class. |
பாரபட்சத்திற்கு எதிராக அவர் போராட்டம் செய்து வெற்றியும் அடைந்தார். | He extensively campaigned against the discrimination and came out victorious. |
எவ்வளவு வலிமையான மனிதர்! | Wow, what a strong personality! |
அதனால்தான் இந்த நாளை இந்தத் துணைக் கண்டம் முழுவதிலும் சமத்துவ தினமாகக் கொண்டாடுகிறோம். | That is why the day is also commemorated as Equality Day all across the subcontinent. |
ஸ்கூலில் இந்தப் பாடத்தை நடத்தும்போது இவரைப் பற்றி தெரிந்துகொள்வது ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது. | I am sure you are going to love reading about this man when you study the chapter in school. |
ஆமாம் அம்மா, நானும் அதற்காகவே காத்திருக்கிறேன். | Yes mom, I can't wait for it. |
எனக்கு ரொம்பவே ஆவலாக இருக்கிறது. | I am really intrigued. |
சரி, இப்போது சொல், என்ன படம் பார்க்கப் போகலாம்? | Okay, now tell me what movie do you want to go for? |
புது மார்வல் படம் பார்க்கலாமா? | Do you want to watch the new Marvel movie? |
டாக்டர் ஸ்ட்ரேஞ் அண்ட் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னெஸ் படமா? | You mean Doctor Strange and the Multiverse of Madness? |
அதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். | I am dying to watch it. |
அதற்கு டிக்கெட் புக் செய்கிறீர்களா? | Can you book the tickets? |
சரி, அப்பாவிடம் பேசுறேன். | Let me talk to Dad. |
ஹாய், நீங்கள் வெப் டிசைனிங் கோர்ஸ் படிக்கிறீர்களா? | Hey, you are pursuing.a course in web designing, aren't you? |
என்னுடைய தோழி ஒருவரும் அதைப் படிக்க வேண்டுமென்று நினைக்கிறார், உங்களிடம் அதைப் பற்றி விசாரித்துச் சொல்கிறேன் என்று கூறியுள்ளேன். | One of my friends is thinking of doing the same so, I told her I'd get some information from you about it. |
ஆமாம், செகண்ட் இயரில் இருக்கிறேன். | Yeah, I am in my second year. |
நல்ல விஷயம்தான். அவர் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்? | That's great, so what does she want to know? |
எந்தெந்த காலேஜில் வெப் டிசைனிங்கில் டிப்ளமா கோர்ஸ் இருக்கிறது? | Which are the colleges that offer a diploma course in web designing? |
என்ன செய்ய வேண்டுமென்று அவருக்கும் சரியாகத் தெரியவில்லை, அதனால் இப்போதைக்கு இதை ட்ரை பண்ணிப் பார்க்க விரும்புகிறார். | She is not very sure of her choice, so she just wants to try it out at this point. |
ஓ, அப்படியா. | Ok, I get that. |
நிறைய காலேஜ்களில் இந்தக் கோர்ஸ் இருக்கிறது, புனேயில் இருக்கிற ஸ்கூல் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி; சென்னையில் ஸ்டெல்லா மாரிஸ், லயோலா காலேஜ், இப்படிப் பல காலேஜ்களில் இருக்கிறது. | It is available at a lot of colleges like the School of Fashion Technology, Pune; Stella Maris College, Chennai and Loyola College, Chennai among numerous others. |
நீங்கள் லயோலா காலேஜில் தானே படித்தீர்கள்? | You went to Loyola College, right? |
ஆமாம், நான் அங்குதான் படித்தேன். | Yeah, I studied there. |
நீங்கள் சொன்னது எல்லாமே ஃபேமஸ் காலேஜ் தான். | These colleges that you mentioned are pretty well known. |
இதில் எப்படிச் சேரவேண்டும் என்று சொல்லுங்கள். | What is the entrance process? |
ஆமாம், சில காலேஜ்களில் என்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்கும். | Yeah, some colleges conduct their own entrance exams. |
பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பு மதிப்பெண்களையும் பார்ப்பார்கள். | They look at the 10th and 12th standard grades as well. |
என்ஐடி என்ட்ரன்ஸ் எக்சாம் மாதிரி தேசிய அளவிலான தேர்வுகளும் இருக்கும். | There are national tests like the NID Entrance Exam, too. |
பப்ளிக் எக்ஸாமில் என் ஃபிரண்டு நல்ல மார்க் வாங்கியிருக்கிறார். மதிப்பெண் அடிப்படையிலான எந்தத் தேர்விலும் அவர் தேர்ச்சி பெற்றுவிடுவார். | My friend did really well for her boards, so she can ace any merit-based entrance. |
தன்னுடைய கிரியேட்டிவ் திறன்கள் மேல்தான் அவருக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. | She is not so confident in her creative skills. |
இந்தக் காலேஜ்களில் டிப்ளமா எத்தனை வருஷக் கோர்ஸ்? | How long is the diploma course in these universities? |
பொதுவாக ஒன்றில் இருந்து இரண்டு வருஷம் வரை இருக்கும். | It usually lasts between a year or two. |
நீங்கள் எந்தக் காலேஜில் டிப்ளமா சேருகிறீர்களோ அதைப் பொருத்துதான் இது இருக்கும். | It actually depends on the college you take admission at. |
வேலை வாய்ப்புகள் நன்றாக இருக்குமா? | Are the career options good? |
ஆமாம், இந்த ஃபீல்டில் வேலை வாய்ப்புகள் நன்றாகவே இருக்கிறது. | Yeah, the job prospects in this field are promising. |
அதுவும், உலகம் இப்போது டிஜிட்டல்மயமாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில். | This is especially considering the world becoming increasingly digital. |
ஹ்ம்ம், நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. | Hmm.. I see what you mean. |
இதற்கு முன்னால் இந்தக் கோர்ஸைப் படித்தவர்கள் வேறு யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? | Do you know anyone who has taken this course before? |
ஆமாம், என்னுடைய ஒரு நண்பரும் கூட ஐந்து வருஷங்களுக்கு முன்னால் வெப் டிசைனிங் கோர்ஸ் படித்தார். | Yeah, one of my friends did a diploma in web designing some five years back. |
அவர் இப்போது ஒரு வெற்றிகரமான வெப் டிசைனராக இருக்கிறார். | He is a successful web designer today. |
உங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லையென்றால், அவருடைய தொடர்பு விவரங்கள் கிடைக்குமா? | Can I have his contact information, if you don't mind? |
என் ஃபிரண்டு அவருடன் பேசி கோர்ஸ் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வார். | Its so that I can give it to my friend so she can talk to someone in detail about the course. |
கண்டிப்பாக, நான் தொடர்பு விவரங்களை வாட்சப்பில் அனுப்புகிறேன். | Of course, I shall send you the contact on WhatsApp. |
நான் ரொம்ப லேட்டாக வந்துவிட்டேனா? | Am I too late? |
பரேட் ஆரம்பமாகிவிட்டதா? | Did the parade start? |
எப்படி இவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை? | I don't know why I overslept. |
கவலைப்படாதே, நீங்க சரியான நேரத்துக்குதான் வந்திருக்கிறாய் | Don't worry, you are right on time. |
5 நிமிடம்தான் ஆகியுள்ளது | It has just been 5 minutes. |
வா, வந்து உட்காரு. | Come and have a seat. |
நான் எதையெல்லாம் மிஸ் பண்ணியிருக்கிறேன்? | What did I miss? |
பெரிதாக எதுவும் இல்லை! குடியரசுத் தலைவர் கொடி ஏற்றுவதையும் | Nothing much! Just the unfurling of the national flag by the President. |
குடியரசுத் தலைவருக்கான 21-துப்பாக்கி சல்யூட்டையும்தான் மிஸ் பண்ணிவிட்டாய். | And the booming 21-gun salute to the president. |
இப்போது, ராணுவம், கடற்படை, விமானப்படையுடைய பல ரெஜிமென்ட்களும் அவர்களின் பேண்டுகளும் ராஜ்பத் வழியாக ராஷ்ட்ரபதி பவனில் இருந்து அணிவகுப்பில் வந்துகொண்டு இருக்கிறார்கள். | At present, the different regiments of the Army, Navy, and Air Force, along with their bands are marching from the Rashtrapati Bhawan along the Rajpath. |
அவர்கள் எங்கே போவார்கள்? | Where are they heading to? |
முதலில் இண்டியா கேட்டுக்கு அப்புறம் கடைசியாக செங்கோட்டைக்குச் செல்வார்கள். | To the India Gate and finally to the Red fort. |
ஒவ்வொருவரும் கடந்து போகும்போதும் அவர்கள் குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்துவார்கள். | As each of them go by, they pay homage to the President. |
அவரும் பதிலுக்கு எப்படி எழுந்து நின்று அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறார் என்று பார். | And look how he in turn is standing up and encouraging them as they march forward. |
இதையெல்லாம் என்றாவது ஒரு நாள் நேரில் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். | I wish to see all of it in person someday. |
பல்வேறு மாநிலங்களுடைய நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்துவிட்டனவா? | What about the representation of different states? |
ராணுவத்தோட அணிவகுப்புக்கு அப்புறம் அது நடக்குமா? | Will it be after the army marches past? |
ஆமாம், எல்லா ரெஜிமென்ட்டுகளும் மார்ச் பண்ணி முடித்ததற்குப் பிறகு அதெல்லாம் வரும். | Yes, once all the regiments march away, they will arrive. |
ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடகக் காட்சி மூலம் காட்சிப்படுத்தப்படும். | Each state is represented by a tableaux. |
அந்தந்த மாநிலங்களுடைய வரலாறு, கலாசாரம், பாரம்பரியம், மேம்பாட்டுத் திட்டங்கள், சுற்றுச்சூழல் போன்ற விஷயங்களை இவை காட்சிப்படுத்தும். | They showcase the history, culture, heritage, dvelopment programmes and environment of their respective states. |
கூடவே அனிமேஷன்ஸும் ஒலிகளும் இருக்கும். | They carry some animations and sound along with them. |
இது ரொம்ப வண்ணமயமான காட்சியாக இருக்கும். | It is a very colorful display. |
ஆமாம், அதுதான் மொத்தப் பரேடிலேயே எனக்கு மிகவும் பிடித்த பகுதி. | Yeah, and my favourite part of the entire parade too. |
மேற்கு வங்கத்தின் நாடகக் காட்சியைச் சென்ற வருடம் எப்படி அலங்காரம் செய்திருந்தார்கள் என்று எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது. | I still remember how the tableaux of West Bengal was decorated last time. |
அதில் இருந்த நடனக் கலைஞர்கள் வாங்க தேசத்து கிராமிய நடனத்தை ஆடியதும் எனக்கு நினைவில் இருக்கிறது. | And also the dancers on it, exhibiting the folk dance form of rural bengal. |
இந்த வருஷம் என்னென்னல்லாம் இருக்கிறது என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். | I wonder what they have in store this year. |
பொறுத்திருந்து பார்ப்போம். | Let us wait and watch. |
இன்று 12 மணிக்கு உனக்கு படம் வரையும் போட்டி இருக்கிறது என்பதை மறந்துவிடாதே. | But do not forget, you have your sit and draw competition today at around 12 noon. |
அதற்குத் தயாராகி விட்டாயா? | Are you prepared for that? |
நான் ஏற்கனவே படம் வரைந்து பயிற்சி செய்துவிட்டேன். | I have practised my sketches already. |
குடியரசு தின அணிவகுப்புடைய ஒரு காட்சியைத்தான் நான் வரையப் போகிறேன். | I am drawing a glimpse of the Republic Day parade itself. |
எனக்கு பரிசு கிடைக்கும் என்று நம்புகிறேன். | I hope I can bag a prize. |
பரிசுகளைப் பற்றி கவலைப்படாதே. | Do not bother about the prizes. |
போட்டியில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள். | Just enjoy yourself out there. |
என்னுடைய வாழ்த்துகள். | I wish you all the best. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.