target large_stringlengths 3 224 | source large_stringlengths 4 201 |
|---|---|
ரொம்ப நன்றிப்பா. | Thank you so much, Dad. |
போட்டியினால் நான் பார்க்காமல் தவற விடுகிற பகுதியை நீங்கள் எனக்காகப் பாருங்கள். | But make sure you watch the part of the parade I will be missing due to the competition. |
நான் தூங்குவதற்கு முன்னால் அதைப் பற்றி உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். | I will hear about it at bedtime. |
ஹலோ, இது சமாதான் ஹெல்ப்லைனா? | Hello, is this Samadhan helpline? |
ஆமாங்க, உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? | Yes, how can I help you? |
என் பெயர் ஹரீஷ். நான் ஸ்வாமி விவேகானந்தா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூட்டில் இருந்து கால் பண்ணுகிறேன். | I'm Harish, and I'm calling on behalf of Swami Vivekanand Educational Institute. |
வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு திட்டத்தைப் பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். | I'd like to learn more about the Merit-cum-Means Scholarship Programme. |
இந்தத் திட்டத்தைப் பற்றி எங்களுடைய மாணவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். | So that I can inform our students about this programme. |
சரிங்க, பிற்படுத்தப்பட்ட, தகுதியுள்ள சிறுபான்மையின மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் முதல் குறிக்கோள். | Alright! The Scheme's principal goal is to provide financial help to underprivileged and deserving students from minority populations. |
இந்த ஸ்காலர்ஷிப்பின் மூலம் அவர்கள் தொழில்துறை மற்றும் தொழில்நுட்பக் கல்வியைப் படிக்கலாம். | And with this scholarship, they will be able to pursue professional and technical education. |
இந்தத் திட்டத்தை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் தொடங்கியிருக்கிறது. | This scheme is initiated by the Ministry of Minority Affairs. |
ஆமாம் சார். | Yes, sir. |
இந்த ஸ்காலர்ஷிப் இந்தியாவில் படிப்பதற்குத்தான் இல்லையா, சார்? | Is it correct that the scholarship is for studies in India, sir? |
ஆமாம், இந்தியாவில் இருக்கிற அரசு அல்லது தனியார் பல்கலைக்கழகத்தில் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. | Yes. The scholarship will only be given to students studying in a government or private university in India. |
இந்த ஸ்காலர்ஷிப் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கிற மாணவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறதா? | Is this scholarship only for undergraduate students? |
இல்லை, தொழில்நுட்ப, தொழில்முறை பாடங்களைப் படிக்கிற இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இது கிடைக்கிறது. | No, it will cover technical and professional courses at undergraduate and post graduate level. |
இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்க என்ன நிபந்தனைகள் இருக்கின்றன? | What are the criteria for applying for this scholarship? |
முந்தைய இறுதித் தேர்வில் குறைந்தது 50% அல்லது அதற்குச் சமமான மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் இந்த ஸ்காலர்ஷிப்பிற்குத் தகுதி பெறுவார்கள். | Students who received at least 50% or an equivalent grade in their previous final examination will be eligible for a scholarship. |
அத்துடன் அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடைய மொத்த வருடாந்திர வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தாலும் ஸ்காலர்ஷிப் கிடைக்கும். | Also, if their parents' or guardians' annual income from all sources does not exceed Rs. 2.50 lakh. |
எத்தனை மாணவர்களுக்கு இந்த எம்சிஎம் கிடைக்கும்? | Sir, how many students will be awarded with the MCM? |
ஸ்காலர்ஷிப் புதுப்பித்தல்களுடன், 60,000 புது ஸ்காலர்ஷிப்கள் வரை வழங்குகிற நோக்கம் இருக்கிறது. | A total of 60,000 scholarships are targeted to be distributed as Fresh Scholarships, besides renewal scholarships. |
இது உண்மையிலேயே பெரிய எண்ணிக்கைதான், தேவை இருக்கிற மாணவர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். | That's a large number, and it will be beneficial to students who are in need. |
இந்த ஸ்காலர்ஷிப் மற்ற மாணவர்களுக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும். | These scholarships are also a source of motivation for other students. |
ஆமாங்க, நீங்கள் சொல்வது சரிதான். | Yes, you are right. |
இதில் ஒரு ஒதுக்கீடு இருக்கிறது, 30% ஸ்காலர்ஷிப் ஒவ்வொரு மாநிலத்தில்/யூனியன் பிரதேசத்தில் இருக்கிற சிறுபான்மையினப் பெண் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. | There is one reservation policy, that is 30% scholarship is earmarked for girls students of each minority community in a State/UT. |
அருமை. | Oh, that's excellent. |
இந்த ஸ்காலர்ஷிப் எவ்வளவு காலத்திற்குக் கொடுக்கப்படுகிறது? | How long will this scholarship last? |
இந்த ஸ்காலர்ஷிப் முழு ஆண்டுக்கும்/கோர்ஸுடைய முழு காலத்திற்கும் கொடுக்கப்படுகிறது. | Scholarship will be provided for the entire academic year/course. |
அப்புறம் ஒரு கல்வி ஆண்டுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக ஹாஸ்டல் மாணவர்களுக்கு 10,000 ரூபாயும், வெளி மாணவர்களுக்கு 5,000 ரூபாயும் நிலையாக வழங்கப்படுகிறது. | And the maintenance allowance will be given as fixed lump sum amount for an academic year of Rs. 10,000/- for hostellers and Rs. 5,000/- for day scholars. |
நல்லது, ஸ்காலர்ஷிப்பிற்கு எப்படி விண்ணப்பிப்பது? | Great! How to apply for the scholarship? |
இந்தத் திட்டம் தேசிய உதவித்தொகைத் திட்டம் மூலமாகச் செயல்படுத்தப்படுகிறது. | The scheme is implemented through the National Scholarship Portal (NSP). |
எல்லா மாணவர்களும் www.scholarships.gov.in இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். | It is mandatory for all students to apply online on the website i.e. www.scholarships.gov.in. |
இது அவங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். | It will be useful for them. |
தேசிய உதவித்தொகை இணையதளம் மூலமாக கூடுதல் விவரங்களை நீங்கள் டவுன்லோடு பண்ணிக்கலாம். | You can download more details from the National Scholarship Portal. |
நிச்சயமாக சார், ரொம்ப நன்றி. | Sure, sir. Thank you so much! |
நல்லதுங்க. | You are welcome. |
வணக்கம், எனக்கு அடுத்த மாதம் கல்யாணம். | Hello, I am getting married in the coming month. |
அதற்குத் தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளைப் பற்றி உங்களால் சொல்ல முடியுமா? | Could you please guide me on the legal procedure? |
என் கல்யாணம் சட்டபூர்வமாகச் செல்லுபடியாக நான் என்ன செய்ய வேண்டும்? | How can I make my marriage a valid legal entity? |
ஒரு கல்யாணம் சட்டபூர்வமாகச் செல்லுபடியாக வேண்டுமென்றால் அது ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்க வேண்டும். | A marriage must be registered for it to be acknowledged legally. |
மாப்பிள்ளை பெண் கையில் மேரேஜ் சர்ட்டிஃபிகேட் கிடைக்கும்போது ரிஜிஸ்ட்ரேஷன் ப்ராசஸ் முடியும். | The process of registration of a marriage ends with the bride and the groom obtaining a marriage certificate. |
மேரேஜ் சர்ட்டிஃபிகேட்டை வாங்க நான் என்ன செய்ய வேண்டும்? | How can I obtain a marriage certificate? |
உங்கள் கல்யாணத்தைப் ரிஜிஸ்தர் செய்யச் சொல்லி நீங்கள் ஒரு அஃபிடவிட்டை சப்மிட் பண்ண வேண்டும். | You are required to submit an affidavit requesting the registration of your marriage. |
தம்பதியாக அவர்களுக்குக் கல்யாணம் நடந்திருக்கிறது என்று ஜாயிண்ட் அஃபிடவிட்டை சப்மிட் பண்ணலாம், இல்லையென்றால் தனித்தனியாகவும் அஃபிடவிட்டை சப்மிட் பண்ணலாம். | A couple can submit a joint affidavit for their marriage, or they can choose to submit an individual affidavit. |
இது இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? | Is there any difference between the two? |
பெரிதாக இல்லை, ஆனால் சில மாநிலங்களில் ஜாயிண்ட் அஃபிடவிட்டை சப்மிட் பண்ணுவது கட்டாயமாக இருக்கிறது. | Not significantly as much, but some states mandate a joint affidavit submission. |
சரி, கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்வதற்கான ஜாயிண்ட் அஃபிடவிட்டை சப்மிட் பண்ண என்ன செய்ய வேண்டும்? | Okay, what are the steps in filing a joint affidavit for registration of marriage? |
இந்தியாவில் கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண இரண்டு சட்டங்கள் இருக்கின்றன, 1954 சிறப்பு திருமணச் சட்டம், 1955 இந்து திருமணச் சட்டம். | Marriages can be registered under two acts in India, the Special Marriage Act of 1954 and the Hindu Marriage Act of 1955. |
ஒருவரது நம்பிக்கை, மதம் எதுவாக இருந்தாலும் முதலில் சொன்ன சட்டத்தின்கீழ் கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்துகொள்ளலாம், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் இதில்தான் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். | The former is applicable to everyone regardless of their faith or religion, and it includes Indian nationals living in foreign countries. |
கலப்புத் திருமணங்களும் இந்தச் சட்டத்தின் கீழ்தான் ரிஜிஸ்டர் செய்யப்பட வேண்டும். | Interfaith marriages are to be registered under that act too. |
இரண்டாவதாகச் சொன்ன சட்டத்தின்கீழ், இந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ரிஜிஸ்டர் செய்துகொள்ளலாம், சமணம், புத்தம், சீக்கியத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இதுதான் பொருந்தும். | The latter is an act for two Hindus, extending to Jains, Buddhists and Sikhs. |
சிறப்புத் திருமணச் சட்டத்தின்கீழ், ஜாயிண்ட் அஃபிடவிட்டை சப்மிட் பண்ண என்ன செய்ய வேண்டும்? | What steps are to be followed to submit a joint affidavit under the Special Marriage Act? |
முதலில், உங்கள் மாவட்டத்தின் திருமணப் பதிவாளரிடம் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என்று ஒரு நோட்டீசை சப்மிட் பண்ண வேண்டும். | First, a notice of intended marriage has to be filed to the Marriage Registrar of your district. |
கல்யாணம் செய்துகொள்ளப் போகும் இரண்டு பேரில் ஒருவராவது, குறைந்தது முப்பது நாட்கள் வாழ்ந்துள்ள ஒரு இடத்தில் இருந்துதான் அதைச் செய்ய முடியும். | It can only be filed from a place where either parties have resided for a minimum of thirty days. |
இந்த நோட்டீஸ் ரிஜிஸ்டர் ஆஃபீஸின் நோட்டீஸ் போர்டில் ஒட்டப்படும், இந்தக் கல்யாணத்துக்கு ஆட்சேபணை தெரிவிப்பவர்கள் இருந்தால் அவர்கள் முன்வந்து சொல்லலாம். | This notice is then displayed on the notice board at the Registrar's office allowing any person who objects to the alliance to come forward. |
30 நாட்களுக்குள் யாருக்கும் ஆட்சேபணை இல்லை என்றால் கல்யாணம் உறுதிசெய்யப்படுமா? | If no one objects to the alliance within 30 days, is the marriage solemnised? |
ஆமாம், பெண்ணும் மாப்பிள்ளையும் ஆஃபீஸுக்கு அழைக்கப்படுவார்கள். இரண்டு பேர் சார்பிலும் தலா 3 சாட்சிகளின் முன்னிலையில் கல்யாணம் உறுதிசெய்யப்படும். | Yes, the bride and the groom are called to the office to solemnise their marriage in the presence of 3 witnesses from either side. |
இந்த ஆறு சாட்சிகளும் தனித்தனியாகக் கையெழுத்து போட வேண்டும். | Each of these six witnesses have to sign in the register. |
இந்து திருமண சட்டத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? | How is the process different for the Hindu Marriage Act? |
ஒரு ஃபில் செய்யப்பட்ட ஃபார்ம், அவர்கள் திருமணத்தில் எடுத்த இரண்டு ஃபோட்டோஸ், திருமண அழைப்பிதழையும் சப்மிட் பண்ண வேண்டும். | The couple has to fill an application form and submit it along with two photographs of their wedding ceremony and an invitation card for the same. |
இரண்டு பேரும் அவர்களது அடையாளம், வயது, முகவரிக்கான ப்ரூஃபை சப்மிட் பண்ண வேண்டும். | Both parties must submit proofs of their identity, age and address. |
கல்யாணம் செய்துகொள்ளும் சமயத்தில் முந்தைய வாழ்க்கைத் துணைவர் யாரும் உயிருடன் இல்லை என்று அவர்கள் தனித்தனி அஃபிடவிட்டில் அறிவித்து அதை முன்கூட்டியே நோட்டரைஸ் செய்து சப்மிட் பண்ண வேண்டும். | Separate affidavits declaring that they do not have any living spouses at the time of the marriage must be notarised beforehand and submitted. |
கல்யாணத்தை இத்தனை நாட்களுக்குள் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்று ஏதாவது இருக்கிறதா? | Is there any time duration within which one must have their marriage registered? |
கல்யாணத்தைப் பதிவுசெய்யும்போது சாட்சியாக யார் இருக்கலாம்? | Who can be a witness to the registration of the marriage? |
இந்து திருமணச் சட்டப்படி கல்யாணம் ஆன ஒரு மாதத்துக்குள் நீங்கள் அதை ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். | Under the Hindu Marriage Act, you need to register your marriage within one month of the wedding ceremony. |
பெண், மாப்பிள்ளை இரண்டு பேரும் 3 சாட்சிகள் முன்னிலையில் ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். | Both the bride and the groom sign the registers in the presence of three witnesses. |
ரிஜிஸ்டர் செய்யும்போது இரண்டு தரப்பில் இருந்தும் அம்மா அப்பா இல்லையென்றால் கார்டியன்ஸ் இருக்க வேண்டும். | Parents or guardians of each party should be present during the registration. |
அஃபிடவிட்டுக்கு என்ன டாகுமெண்ட்ஸ் தேவை? | Which documents will be required for the affidavit? |
அப்ளிகேஷன் ஃபார்ம், ஐடி ப்ரூஃப், அட்ரஸ் ப்ரூஃப், பிறந்த தேதிக்கான ப்ரூஃப், பெண், மாப்பிள்ளையின் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோஸ் கண்டிப்பாகத் தேவைப்படும். | The application form, ID proof, proof of address, proof of birth date, two passport photos of the bride and the groom are compulsorily needed. |
ஏற்கனவே விவாகரத்தானவராகவோ கணவன்/மனைவியை இழந்தவராகவோ இருந்தால் விவாகரத்து ஆணையோ இறப்புச் சான்றிதழோ தேவை. | In case of a divorcee or a widow/widower, the divorce decree or the death certificate of the previous spouse is required. |
ஹலோ, நான் முதல் முறையாக ஈ-விசாவுக்கு அப்ளை பண்ணுகிறேன். | Hello, this is my first time applying for an e-visa. |
அப்ளை பண்ணுவதற்கு என்னென்ன டாகுமெண்ட்ஸ் தேவைப்படும் என்று உங்களால் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். | I was hoping you could tell me what documents I need to apply. |
கண்டிப்பாக, அழைத்ததற்கு நன்றி. | Of course, I am glad you called me. |
உங்களுக்கு எந்த நாட்டுக்கான விசா வேண்டும்? | May I ask which country you need a visa for? |
எனக்கு இந்தியா போக டூரிஸ்ட் விசா வேண்டும். | I need a tourist visa for India. |
நான் ஒரு வாரத்துக்கு அங்கே இருப்பேன். | I'll be visiting for a week. |
சரி, உங்களுக்குத் தேவையான முக்கியமான டாகுமெண்ட் பாஸ்போர்ட்தான். | Ok, the most important document you need is a passport. |
நீங்கள் இந்தியாவுக்குப் போகப்போகிற அந்தத் தேதியில் உங்கள் பாஸ்போர்ட் குறைந்தது 6 மாதக் காலமாவது செல்லுபடியாகக் கூடியதாக இருக்க வேண்டும். | You need to ensure that the passport is valid for at least six months on the expected date of arrival in India. |
இதனாலேயே நிறைய விண்ணப்பங்கள் ரிஜக்ட் செய்யப்படுகின்றன. | We get a lot of cases that are rejected just for this reason. |
சரி, நான் ஏற்கனவே என் பாஸ்போர்ட்டைப் பார்த்துவிட்டேன், நீங்கள் சொல்வதுடன் அது ஒத்துப் போகிறது. | Yes, I already checked my passport validity, and it complies with what you just said. |
வேறு ஏதேனும் தேவைப்படுமா? | Is there anything else I need? |
அப்படியா, நல்லது. | Ok, that's good then. |
அடுத்தது உங்களிடம் சரியான ஈமெயில் ஐடி இருக்க வேண்டும். | The next thing you need is a valid email ID. |
இந்த விஷயத்தில் நீங்கள் ரொம்பக் கவனமாக இருக்க வேண்டும், இந்திய விசாவுக்கான புராசஸ் முடிந்து அப்ரூவ் ஆனதும் நீங்கள் கொடுத்திருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அது நேரடியாக அனுப்பப்படும். | Please be careful about this too, as when an Indian visa has been processed and approved, it will be sent directly to the email address given on the application. |
எனது பர்சனல் ஐடி இல்லாமல் ஆஃபீஸ் ஐடியைப் பயன்படுத்தினால் பரவாயில்லையா? | Is it okay if I use an official ID and not a personal one? |
பர்சனல் ஐடிக்கு வரும் ஈமெயில்களை நான் அடிக்கடி பார்ப்பதில்லை. | I don't check the mails on my personal ID very often. |
பிரச்சனை இல்லை. | That does not matter. |
அந்த ஈமெயில் ஐடி பயன்பாட்டில் இருக்க வேண்டும், அவ்வளவுதான். | The e-mail address needs to be active, that's all. |
இது எல்லாம் மட்டும் இருந்தால் போதுமா? | Are these the only things that I require? |
இந்தியா போவதற்கான அனுமதி வாங்க நீங்கள் ஈ-விசா இந்தியாவுக்காகவும் ஆதாரங்களைத் தரவேண்டியிருக்கும். | There are also e-visa India evidence requirements that are needed to obtain the authorization to travel to India. |
அப்ளை செய்பவர்கள் செல்லுபடியாகக்கூடிய அவர்களது பாஸ்போர்ட்டின் முதல் பக்கம் அல்லது பயோகிராஃபி பக்கத்தை ஸ்கேன் செய்து கலர் காப்பியை சப்மிட் பண்ண வேண்டும். | Applicants are required to submit a scanned color copy of the first page or the biographical page of their valid passport. |
அப்ளை செய்யும் ஒவ்வொருவரும் சமீபத்திய கலர் பாஸ்போர்ட் ஃபோட்டோவை சப்மிட் செய்ய வேண்டும். | Each applicant must also submit a recent passport-style, color photo |
இவ்வளவு விவரங்களைச் சொல்றீங்களே. | That is quite a lot of specifications. |
நான் இதையெல்லாம் எழுதி வைத்துக் கொள்கிறேன். | I'll note it down so I don't forget. |
நல்ல யோசனை. | That's a good idea. |
உங்களுக்கு ஒரு டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டும் தேவைப்படும். | You also need a debit or credit card. |
என்னிடம் இருக்கிறது. | Ok, I have one in my possession. |
வேறு சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் நான் திரும்பவும் கால் பண்ணலாமா? | Is it okay if I call again in case I have other doubts? |
கண்டிப்பாக, எந்தச் சந்தேகமாக இருந்தாலும் தயக்கமில்லாமல் நீங்கள் கால் பண்ணலாம். | Of course, feel free to contact us in case of any queries. |
இந்த வருஷம் நான் ஒரு ஃபாரீன் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். | I have to take a Foreign language from this year. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.