Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
texts
stringlengths
41
15.3k
labels
stringclasses
3 values
ஏற்றுமதியை நம்பியுள்ள நாடுகளுக்குத்தான் இதனால் பாதிப்பு. உள்நாட்டிலேயே தேவை அதிகமாக உள்ள இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட வளரும் பொருளாதார நாட்டில் பிரச்சினை ஏற்படாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
business
* "ரயிலில் தொங்கிக் கொண்டே சண்டையிடுவது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறார் தனுஷ். அதனைப் பார்க்கும் போது பயமாக இருக்கும். அவர் மட்டுமன்றி சண்டை பயிற்சியாளர்கள் அனைவருமே நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார் சண்டைப்பயிற்ச்சி இயக்குநர் ஸ்டண்ட் சிவா.
tamil-cinema
செளந்தர்ய லஹரி, லலிதா சகஸ்ரநாமம், சூக்தம், பூ சூக்தம், நீளா சூக்தம், இந்திரன் கூறிய மகாலஷ்மி அஷ்டகம், ஆதிசங்கரர் அருளிய மகாலஷ்மி ஸ்தோத்திரம் ஆகியவற்றில் இயன்றதை இல்லத்தாரே சொல்லலாம். மேலும் இதனைச் சொல்ல வல்லாரைக் கொண்டு இல்லத்தில் பாராயணம் செய்யலாம்.
spirituality
‘கடவுளே... என் சிவனே... எனக்கு நல்ல குருவை அடையாளம் காட்டு’ என வேண்டினான். அங்கே... அண்டமாய், பேரண்டமாய், வெளியாய், வெட்டவெளியாய், ஏகாந்த வெளியாய் அந்தச் சிறுவனுக்குக் காட்சி தந்தார் சிவபெருமான்.
spirituality
'அப்பா' படம் வசனங்களாலேயே நகர்கிறது. காட்சிப்படுத்துதல் இல்லை என்றும் சிலரால் சொல்லப்பட்டது. ஆனால், சிறுவர்களின் உலகை பக்கத்தில் இருந்து பார்த்து அறிவுரை சொல்வதைப் போல சமுத்திரக்கனி பதிவு செய்த விதம் அக்கறை மிக்கது என்று பெரும்பாலானவர்கள் கூறியதும் கவனிக்கத்தக்கது.
tamil-cinema
ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். போராடுகிற எல்லோரும் அனிதாவை தங்கையாகப் பார்க்கிறார்கள். ரஞ்சித் தலித்தாகப் பார்க்கிறார். இது அவர் சிந்தனைக்கும், பேச்சுக்கும் ஆபத்தானது.
tamil-cinema
சிவந்த பொன் மேனியாய் தகிக்கும் தன்னைவிட கரிய திருமேனி கொண்ட பூதேவியிடம் பெருமாள் அதிகம் காதல் கொண்டிருப்பதைக் கண்ணுற்ற திருமகள், தன்மீதும் பெருமாளின் பார்வையை திருப்ப வைக்க உபாயம் தேடினாள். அதற்காக துர்வாச முனிவரை சந்தித்து, பூமகளின் கரிய மேனியைத் தகிக்கும் தங்கத் திருமேனியாக்கும்படி கோரினாள்.
spirituality
மார்கழியில் பாடுவோம் திருப்பள்ளியெழுச்சி!
spirituality
இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், குடும்பத்தில் கஷ்டங்கள் குறையும், செல்வ வளம் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்கிறது கந்த புராண சுலோகம்.
spirituality
மூன்று மாதத்தில் ரூ.39,000 கோடி கடனை திருப்பி செலுத்த திட்டமிட்டிருப்பதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்தார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தகவலைக் கூறினார். ஆர்.காம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
business
வரும் பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக நிலவி வரும் எதிர்பார்ப்புகள் குறித்து, அனைத்து இந்திய வரி செலுத்துவோர் சங்க தலைவரும், கணக்கு தணிக்கையாளருமான வி.முரளி கூறியதாவது:
business
தற்போதைக்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் மட்டுமே மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு உறுதிசெய்யப்பட்டு உள்ளார்கள்.
tamil-cinema
''விவேகம்' முழுவதும் கைதட்டிக் கொண்டாடக்கூடிய, ஒரு உண்மையான சர்வதேச உளவுப் படம். திரையில் அஜித் சார் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் பலத்த இடியைப் போல் மிக வலுவாக இருக்கும். அவரது அசுர உழைப்பைக் கண்டு வியந்தேன். அவ்வளவு சிறப்பாக அவர் செய்துள்ளார்.
tamil-cinema
பன்முக பயன்பாட்டு வாகன பிரிவில் தனி முத்திரையை பதித்த வாகனம் இனோவோ. ஆனால் இனி இனோவா நம் கைகளுக்கு கிடைக்கப்போவதில்லை. பயப் பட வேண்டாம் இனோவாக்கு பதிலாக புதிய இனோவா கிரிஸ்டாவை கொண்டு வந்துள்ளது டொயோட்டா நிறுவனம்.
business
தாய் சொல்லைத் தட்டாத சாமுண்டராயரின் மனதில் பெருமிதமும் இதுபோன்ற சிலையை எவராலும் எழுப்ப முடியாது என்று சற்று ஆணவமும் குடிகொண்டிருந்தன.
spirituality
'சிவாஜி' படத்தில் இடம்பெற்றுள்ள கறுப்பு பணம் வசனங்கள் மற்றும் இறுதி பெயர் ஓட்டத்தில் வரும் காட்சிகள் உருவானது எப்படி என்று உதவி இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.
tamil-cinema
பரணி காலில் விழுந்து மன்னிப்புக் கோரியது நானே: ஜூலி ஒப்புதல்
tamil-cinema
முதலில் திட்டினார். பின்னர் பணம் கேட்டார். அவர்கள் மறுத்தபின் வழிமறித்தார்.காவல் நிலையத்திற்கு வண்டியை எடுத்துச் செல்வோம் எனச் சொல்லிப் பார்த்தார். அவர்களோ மாறாக `நீங்கள் தான் எங்களுக்கு வழிவிடவில்லை, 10,000 ரூபாய் எடுத்து வையுங்கள் ' என ஆரம்பித்து விட்டனர் !
business
அஷ்டபதியை இரண்டு விதமாக அணுகலாம். ஒன்று, ஜீவாத்மா பரமாத்மாவை கண்டடைதல். இன்னொரு விதம், ராதை எனும் பக்தை, தன் உடலாலும் மனதாலும் பக்தியாலும் இறைவனை அடையும் முயற்சியை வெளிப்படுத்தும் காவியமாக விளங்குகிறது. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்னும் கருத்துக்கு சிருங்காரம் எனும் கிளைப் பாதையை உண்டாக்குகிறது.
spirituality
இயக்குநர் ரஞ்சித் பேச்சை ஆமோதித்துப் பேசிய இயக்குநர் ராம், "சாதியால் நாம் பிரிந்திருக்கிறோம் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.
tamil-cinema
மீண்டும் செல்வராகவன் படத்தில் நடிப்பீர்களா?
tamil-cinema
'டிக்:டிக்:டிக்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு.தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ஜூலை 17-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
tamil-cinema
கும்பகோணத்தில் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது 12 கருட சேவை தரிசனம்.
spirituality
சிதம்பரம் என்ற பெயரே வழக்கில் இருந்தாலும் புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதர் பூசை செய்த காலத்தில் புலியூர் என்றே அழைக்கப்பட்டது. இதுவே பூலோகக் கைலாயம்.
spirituality
இதுவரை நான் நடித்த படங் களில் பேயெல் லாம் இருக் காது. இதில் கொஞ்சம் இருக்கிறது. பேயை வைத்துக் காமெடி செய்துள்ளோம். இப்படத்தில் எனக்கு வில்லன் மாதிரியான காமெடி கதாபாத்திரத்தில் சூரி கலக்கியிருக்கிறார்.
tamil-cinema
கவிஞர் மாலிக் முகமது ஜயாஸி என்பவர் எழுதிய காவியக் கவிதையான பத்மாவதியை மையமாகக் கொண்டு 'பத்மாவத்' படம் கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் அலாவுதீன் கில்ஜிக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.
tamil-cinema
எளிமையான இந்த வழியைப் பின்பற்றாமல் இருந்தால், வழி தவறினால், உண்மையில் நம்மை இந்த வையகம் சுமப்பது வம்புதான்! என்று உறுதிபடத் தெரிவிக்கிறார் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலின் கிட்டு பட்டர்.
spirituality
எம்எல்சிஆர் அடிப்படையிலான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும் நிலையில் ஒராண்டிற்கான எம்எல்சிஆர் விகிதம் 7.95 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
business
பசு, கன்று சூழ, ராதையுடன் உள்ள கிருஷ்ண விக்கிரகத்துக்கு மலர் மாலை சூட்ட வேண்டும். பின்னர் தெருக்கடையில் விற்கும் வன்னிக் கிளையை வாங்கி வந்து கிருஷ்ண விக்கிரகத்துக்குப் பின்னால் வைக்க வேண்டும். இது வன்னி மரத்தடியில் கிருஷ்ணன் இருப்பது போன்ற பாவனை.
spirituality
இந்திய சிறைகள் மோசமாக உள்ளன: விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் வாதம்
business
இறைநம்பிக்கையாளர்கள் கண்ணியம் மிக்கத் தோற்றத்திலிருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நபிகளார், இதற்காக தம் தோழர்களுக்குத் தூய்மைப் பயிற்சியும் அளிக்கிறார். தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் வீட்டிலும் வெளியிலும் இறையடியார்கள் தங்கள் தோற்றத்தில் கவனம் செலுத்திட வேண்டும் என்பது முக்கியமானது.
spirituality
தற்போது உள்ள முறையில் வரி விதிப்பு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது வரி விதிப்பு முறையை மேலும் பலவீனப்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
business
'விவேகம்' விமர்சன சர்ச்சை குறித்த பாடகர் ஸ்ரீனிவாஸின் ஃபேஸ்புக் பதிவால் மீண்டும் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
tamil-cinema
இந்த விமானங்கள் உள்நாட்டு விமான போக்குவரத்துக்காக பயன்படுத்த இருப்பதாகவும் வருகிற அக்டோபர் 3-ம் தேதி முதல் இந்த விமான சேவை தொடங்கும் என்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித் துள்ளது.
business
ஒரு நாள் மாலை நேரத் தொழுகைக்குப் பிறகு நபிகளார் தமது தோழர்களுக்கு நல்லுரை வழங்க ஆரம்பித்தார்.
spirituality
இதில், இரண்டாவது பகுதியை மட்டும் பார்த்தால் ஆபாசமான விமர்சனமோ என்று தோன்றும். ஆனால், முழுமையாக வாசித்தால் அந்த ஒப்பீடு புரியும். பெரும்பாலான ஆண்கள் ஆண்ட்ரியாவைப் பார்க்கும்போது எப்படி யோசிப்பார்களோ அந்த புள்ளியில்தான் அந்த விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
tamil-cinema
07.03.2018 முதல் 03.07.2018 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்ர கதியில் செல்வதால் பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள்.
spirituality
பறவைகளைக் கூண்டில் அடைத்த மனிதன் திரும்பி வந்தான்.
spirituality
'2.0' வெளியீட்டு தேதி மாற்றத்தால் தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் 'Bharat Ane Nenu' மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் 'Naa Peru Surya' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இவ்விரண்டு படங்களின் தயாரிப்பாளர்களுமே கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.
tamil-cinema
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக நிதிப்பற்றாக்குறைக்கு நிர்ணயம் செய்த இலக்கை தளர்த்தலாமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தனிப்பட்ட முறையில் வேண்டாம் என்பதே என் கருத்து என்று கூறினார்.
business
இதன் அறிமுக விழாவோடு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு. இவ்விழாவில் சாய்குமார் கலந்து கொண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். மேலும், ஆதி மற்றும் ஓவியாவோடு நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
tamil-cinema
உங்களது தற்போதைய நிலையில், புது முயற்சிகள் அவசியம் என்று நினைக்கிறீர்களா?
tamil-cinema
இரண்டு வாசல், இரண்டு துவஜஸ்தம்பம், இரண்டு கருட சன்னிதி ஆகிய தனிச் சிறப்பு கொண்ட திருக்கோயில் இது.
spirituality
ஸ்லம்டாக் படம் நினைவுள்ளதா? அது ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. படத்தில் நடக்குமாறு நிஜத்தில் அமிதாப்பச்சன் அவரது போட்டியாளர்களை அப்படி நடத்துவார் என யாரும் நினைக்கவில்லை. ஆனால் இவரைப் போன்ற முட்டாள்கள், இயக்குநரின் கற்பனைதான் நிஜத்திலும் நடக்கிறது என நம்புகிறார்கள்.
tamil-cinema
நபிகளார் வீட்டுக்குள் சென்றார். அதன்பிறகு வெளியே வந்தார். இதற்குள் தொழுகை நேரம் வந்துவிடவே தோழர் பிலாலை அழைத்து, தொழுகைக்கான அழைப்பு விடுக்கும்படி பணித்தார். தொழுகை முடிவில் நபிகளார் சிற்றுரையாற்றினார். அந்த உரையில் திருக்குா் ஆனின் சில முக்கிய வசனங்களை ஓதிக் காட்டினார்.
spirituality
கிருஷ்ணரின் இந்த விஸ்வரூபக் காட்சியை சுக முனிவர் அர்ஜூனனின் பேரனான பரீட்சித்து மகாராஜாவிடம் விளக்கினார். மகாராஜாவும் தனது மகன் ஜனமேஜயனுக்கு இந்த அற்புதக் காட்சியை விளக்குமாறு கேட்டுக்கொண்டார்.
spirituality
“இறைவனின் தூதரே, என்னிடம் ஏராளமான தீய பழக்கங்கள் உள்ளன. ஒரே ஒரு பழக்கத்தை மட்டும் விட்டுவிடத் தயாராக இருக்கின்றேன். எதை விடச் சொல்கிறீர்கள்?”
spirituality
கோகுல் இயக்கத்தில் உருவாகும் 'ஜுங்கா' படத்தில் விஜய் சேதுபதி, சாயிஷா சைகல், யோகி பாபு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சித்தார்த் விபின் இசையமைக்கவுள்ளார். 'ஜுங்கா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது
tamil-cinema
செம பன்ச். நல்ல காமெடி. இதில் பாதியையாவது படத்திலயும் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும். வாழ்த்துகள் என்று ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்தார்.
tamil-cinema
இந்நிலையில், ஜூன் மாதம் பல்வேறு பெரிய படங்கள் வெளியாகவுள்ளன. இதனால் விநியோகஸ்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 29-ம் தேதிக்கு மாற்றியுள்ளார்கள். மேலும், படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.
tamil-cinema
ங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை ஒரு விளம்பரப் படம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில், ஆசிரியையாக நடித்திருக்கிறார் ‘பிக் பாஸ்’ புகழ் சுஜா வருணி.
tamil-cinema
தமன்னா இப்படத்தில் பிரமாதமாக நடித்திருக்கிறார். 40 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். எந்தவிதமான ஈகோவும் இல்லாமல் பாராட்டுகிறார். எப்போதுமே ஒரு படத்தின் கதையில் எப்போதுமே நான் என்னை ஒப்படைத்துவிடுவேன். அது எப்போதுமே நம்மை அழகாக கொண்டு போகும். அப்படி என்னை அழகாக கொண்டுப் போன மற்றொரு படம் 'தர்மதுரை'.
tamil-cinema
ஆண்களுக்கு மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன்,
spirituality
வியாபார ரகசியங்களை இனி கசியவிட மாட்டீர்கள். வேலையாட்கள் இனி விசுவாசமாக நடந்துகொள்வார்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். வங்கியில் வாங்கியிருந்த கடனை ஒருவழியாக கட்டி முடிப்பீர்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயம் அடைவீர்கள்.
spirituality
“வணக்கத்துக்குரியவன் ஒரே இறைவனைத் தவிர வேறு கடவுளர் இல்லை! முஹம்மது நபிகளார் இறைவனின் தூதர்!” என்ற ‘கலிமா’ எனப்படும் சொற்றொடரைப் பிரகடனப்படுத்தி, தொழுகை, நோன்பு, ஜகாத் மற்றும் ஹஜ் எனப்படும் ஐந்து கடமைகள் மூலமாக அதைச் செயல்படுத்துபவர்கள் முஸ்லிம்கள் எனப்படுகிறார்கள்.
spirituality
விற்பனை மற்றும் வாங்கிய பொருட்களின் விவரங்களை தானாக ஆராய்ந்து ஜிஎஸ்டிஆர்-3பியின் கீழ் வரித்தாக்கல் செய்வதற்கு வருகிற டிசம்பர் வரை கால அவகாசம் வழங்குவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்திருந்தது.
business
மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம்.
spirituality
இதற்கிடையே ஏர்செல் நிறுவனத்தில் பணியாற்றும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் அந்த நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
business
டென்வர் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டப்படிப்பும் எம்பிஏ பட்டமும் பெற்றவர்.
business
குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 08.12.2017 முதல் 13.02.2018 மற்றும் 04.07.2018 முதல் 02.10.2018 வரை பயணிப்பதால் கவுரவக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். சிறுசிறு அவமானங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் வரக்கூடும். தாயாருடன் மனத்தாங்கல் வரும்.
spirituality
இந்த புதிய தொழில்நுட்ப ஏடிஎம்-ஐ மற்ற வங்கிகளுக்கு கொடுப் பது பற்றியும் என்சிஆர் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. தற்போது சில பன்னாட்டு வங்கிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது, இன்னும் ஓரிரு மாதங்களில் பன்னாட்டு வங்கியுடன் ஒப்பந்தம் போடப்படும் என்று என்சிஆர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
business
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் மேற்கொண்ட மாற்றம் பலரையும் கவர்ந்துள்ளது.
business
* முதலில் பேசிய தயாரிப்பாளர் தியாகராஜன் "பல படங்களில் நடித்திருந்தாலும், 'தொடரி' படத்தை தனது முதல் படம் போன்று நினைத்து தனுஷ் உழைத்திருக்கிறார். இப்படத்தின் ரயில் சண்டைக்காட்சிகளுக்காக டூப் போடாமல் நடித்திருக்கிறார்" என்று குறிப்பிட்டார்.
tamil-cinema
குறிப்பாக வெளிநாடுகளில் எப்படி தொழில் தொடங்குவது ? ஆந்திராவில் தொழில் தொடங்க உள்ள சாதக, பாதக நிலைகள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் சாதிப்பது எப்படி ? போன்ற பல அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளது.
business
எம்.எல்.ஏக்கள் தங்கள் விருப்பத்தின்பேரில் தான் அங்கு 2 நாட்களாக தங்கியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் வேலை செய்யாமல் ஏன் அங்கு ஏன் இருக்கிறார்கள் என மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.
tamil-cinema
மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சிப் பாடலை, பரமேஸ்வரனைத் தொழுது பாடுங்கள். பாடித் தொழுது ஆத்மார்த்தமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா சத்விஷயங்களும் உங்களை வந்தடையும் என்பது உறுதி!
spirituality
இந்த விவகாரம் நடிகர் சங்கச் செயலாளர் விஷால், டி.ராஜேந்தருக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். மேலும், இதில் தமிழ் திரையுலகினர் பலரும் தன்ஷிகாவுக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துகளை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள். அவற்றில் சில
tamil-cinema
மிழில் ‘யானைமேல் குதிரை சவாரி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கன்னட நடிகை அர்ச்சனா சிங். தற்போது ‘மவுனிகா’ என்ற பேய் படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்..
tamil-cinema
இதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் 'சாமி 2' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விக்ரம். ஆறுச்சாமி கதாபாத்திரத்துக்காக முழுமையாக மாறியுள்ள விக்ரமின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
tamil-cinema
ஸ்ரீசரவணனின் கேமராவும், இமானின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. ஆஹா ஆஹா பாடலும், அம்முக்குட்டி பாடலும் ரசனை அத்தியாயங்கள்.
tamil-cinema
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் உத்தராயன புண்ய காலம் தொடக்க மாதம் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த தை மாதமே பிரதோஷ நாளில் தொடங்கியது அல்லது தை மாதப் பிறப்பில் பிரதோஷமும் சேர்ந்து வந்தது என்று பெருமையுடன் விவரிக்கிறார் பாலாஜி வாத்தியார்.
spirituality
குறிப்பாக இந்தியாவில் எஸ்யுவி-க்களின் சந்தை விரிவடைந்து வருகிறது. இத்தகைய சந்தர்ப்பத்தில் தங்களது சொகுசு வாகன அறிமுகம் விற்பனையை அதிகரிக்க உதவும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது.
business
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தொடங்கப்பட்ட 'நாச்சியார்' படமும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
tamil-cinema
பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று அருகிலிருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சென்று முருகனை ஒன்பது முறை வலம் வரவும்.
spirituality
என்றாலும் சில நல்ல பாடல்களை இசையமைத்திருந்தும் அதற்கான திரைப்படங்கள் தோல்வியுறும்போது அப்பாடல்கள் மக்களிடம் செல்லமுடியாமல் போவதுகுறித்து அவருக்கு வருத்தம் இருந்தது. அதனாலேயே அவருக்கு வந்த பல வாய்ப்புகளையும் மறுத்துவந்தார்.
tamil-cinema
அனைத்து வங்கிகளும் இந்த நடைமுறையை புரிந்து கொண்டுள்ளன. மேலும் அதற்கான வேலைகளையும் தொடங்கியுள்ளன. பல வங்கிகள் ஆதார் பதிவு இயந்திரங்களைக் கொள்முதல் செய்வதற்கான வேலைகளை தொடங்கியுள்ளன. இது ஆரோக்கியான போக்கு என்று அஜய் பூஷன் பாண்டே தெரிவித்தார்.
business
வெறுமனே யாரும் சுவனத்தில் நுழையும் வாய்ப்பில்லை. அதற்கு இறைவனின் கருணை என்னும் அனுமதி தேவை. அதைப் பெறுவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள திருக்குா்ஆனில், இறைவன் ஒரு பட்டியலே தருகிறான். அதைப் பின்பற்றி நடக்க வலியுறுத்துகிறான்.
spirituality
பானாசோனிக் நிறுவனம் பேட் டரியை தயாரித்து அளிக்கிறது. உள் நாட்டிலேயே பேட்டரி தயாரிக்கும் நிலை வரும்போது ஹைபிரிட் கார்களின் விலை குறையும். இருப்பினும் இந்தியாவில் ஹைபிரிட் மாடல் கார்களை அதிகம் விற்க கவனம் செலுத்தப் போவதாக ஜெய்சங்கர் கூறினார்.
business
கடந்த மூன்று ஆண்டுகளில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் சொத்து மதிப்பு இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு ரூ.10.10 லட்சம் கோடியாக இருந்தது. தற் போது ரூ.20.60 லட்சம் கோடி யாக இருக்கிறது.
business
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, 30, மே 1 (பிற்பகல்).
spirituality
தயாரிப்பாளர் சங்கப் பணத்தை கையாடல் செய்யவில்லை என நிரூபிக்கத் தயாரா என்று விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
tamil-cinema
சென்னையில் 'சாமி 2' படப்பிடிப்பு தொடக்கம்
tamil-cinema
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒவ்வொரு ஊருக்கும் சென்று திரும்புகிறேன். நிறைய மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. இதைப் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.
tamil-cinema
கடந்த ஓராண்டில் இந்நிறுவனம் 5.25 லட்சம் டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் 4.8 லட்சம் டிராக்டர்களே விற்பனையாகியுள்ளது. இந்த ஆண்டு 12 சதவீதம் முதல் 15 சதவீத அளவுக்கு இத்துறை வளர்ச்சி இருக்கும் என்று டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
business
ஏற்கெனவே சீனாவில் இத்தகைய சோதனை முயற்சிகளை நிசான் எடுத்துள்ளது. சீன சந்தை யில் தனது கூட்டாளியான பிரான் ஸின் ரெனால்ட் நிறுவனத்துடன் கைகோர்த்து களமிறங்கியுள்ளது. சீனாவில் குறைந்த விலையிலான பேட்டரிகளைத் தயாரிப்பதற்கான ஆய்வுகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
business
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பெரிய துறையாகத் திகழ்வது ஜவளித் துறை. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3.75 கோடி பேல் பஞ்சு தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி பேல் பஞ்சு தேவைப்படுகிறது.
business
அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் நானா? - நிவின் பாலி மறுப்பு
tamil-cinema
சுந்தர்நாராயண பட்டர் (எ) அம்பி பட்டர்,அர்ச்சக ஸ்தானீகர், அழகர்கோவில்
spirituality
இத்தகையோரை பாதுகாக்கவே இத்தகைய ஸ்கூட்டர் வடிவமைக்கப் பட்டுள்ளது.
business
40 வயது கடந்த நாயகிகளை வைத்து படம் எடுக்கிறீர்களே?
tamil-cinema
அதனால் புன்னகை வாழ்வை வளமாக்கும் என்பது திண்ணம். புன்னகை செய்யத் தேவை என்ன காசா? பணமா?
spirituality
இந்த கோரிக்கைகளில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது முக்கியமானதாகும். மேலும் தொழிலாளர்களுக்கான மாதாந்திர ஊதியம் குறைந்தபட்சம் ரூ.18,000 -ஆக நிர்ணயிக்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதிய தொகை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அளித்துள்ளனர்.
business
கமல்ஹாசனை அரசுக்கு எதிரானவராக  நினைக்கக் கூடாது என்று நடிகர், இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.
tamil-cinema
திரையரங்குகளில் 'விவேகம்' படத்துக்கு அதிக விலைக்கு டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
tamil-cinema
அந்த இடம் ஏகாந்தமாக இருந்தது. மனம் லேசாவது போல் இருந்தது. அங்கிருந்த ஆஸ்ரமத்தையும் முனிவர்களையும் பார்த்தவர், அவர்களுக்கு அருகே சென்றார். அவர்களை விழுந்து நமஸ்கரித்தார்.
spirituality
உலகின் முன்னனி நிறுவனமான அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் அமேசான் டாட் காம் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரி. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
business
செல்போன் இணைப்பு சேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏர்செல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏர்செல் இணைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கத் தொடங்கின.
business
'ஐமேக்ஸ்' திரையரங்குகளில் 'பாகுபலி 2' வெளியாகவுள்ளதால் இயக்குநர் ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
tamil-cinema
* அனைத்து மூத்த குடிமக்களும், ரூ.50,000 வரை மருத்துவ இன்சூரன்ஸ்களுக்கு கழிவு பெறலாம்
business
அரை மணி நேரத்தில் படமாக் கப்பட்ட காட்சி அது. நீளமான வசனம், கட் பண்ணி எடுக்க வேண்டாம், ஒரே டேக்காகப் போய்விடலாம் என்றேன். ஒரே டேக்கில் ஓ.கே செய்துவிட்டேன். அக்காட்சியில் இடையில் அழுதது கூடக் கிளசரின் போடாமல் அழுதது தான்.
tamil-cinema
End of preview. Expand in Data Studio
YAML Metadata Warning: empty or missing yaml metadata in repo card (https://huggingface.co/docs/hub/datasets-cards)
Downloads last month
26