source large_stringlengths 7 437 | target large_stringlengths 11 581 |
|---|---|
Pelosi made the comments in an interview Saturday at the Texas Tribune Festival in Austin, Texas. | பெலோசி அவர்கள், டெக்ஸாஸ், ஆஸ்டினில் நடைபெற்ற டெக்ஸாஸ் டிரைபியூன் பண்டிகையின் போது, சனிக்கிழமை கொடுத்த பேட்டி ஒன்றில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். |
"I couldn't help but think that if a woman had ever performed that way, they would say 'hysterical,'" Pelosi said about her reaction to Kavanaugh's testimony before the Senate Judiciary Committee on Thursday. | வியாழக்கிழமையன்று, செனேட் ஜுடிசியரி கமிட்டி முன்பாக கவானா சாட்சியம் அளித்ததற்குப் பதிலளிக்கும் விதமாக, "என்னால் அப்படிச் சொல்லாமல் இருக்க முடியவில்லை, ஆனால், ஒரு பெண் எப்போதாவது அப்படி நடந்திருந்தால், அவர்கள் 'பைத்தியவெறி' கொண்டவர் என்றே சொல்வார்கள் என்று நான் நினைக்கிறேன்", என்றார் பெலோசி அவர்கள். |
Kavanaugh emotionally denied allegations that he had sexually assaulted Dr. Christine Blasey Ford when they were both teenagers. | கவானாவும், டாக்டர் கிறிஸ்டீன் பிளாஸி ஃபோர்டு அவர்களும் பதின்வயதினராக இருக்கும் போது, அவரைத் தான் பாலியல் ரீதியாக தாக்கினதாகச் சொல்லும் குற்றச்சாட்டுக்களை அவர் உணர்ச்சிப்பூர்வமாக மறுத்தார். |
During his opening statement, Kavanaugh was very emotional, at times nearly shouting and choking up while discussing his family and his high school years. | அவரது துவக்க அறிக்கையின் போது, கவானா மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தார், சில நேரங்களில் கிட்டத்தட்ட கத்திக்கொண்டும், அவரது குடும்பத்தைக் குறித்தும், அவரது உயர்நிலைப்பள்ளியில் படித்த ஆண்டுகளைக் குறித்து விவாதிக்கும் போது தொண்டை அடைத்தும் காணப்பட்டார். |
He also explicitly condemned Democrats on the committee, calling the allegations against him a "grotesque and coordinated character assassination" organized by liberals angry that Hillary Clinton lost the 2016 presidential election. | அவர் வெளிப்படையாகவே அக்கமிட்டியில் இருந்த டெமாக்ரேட்டுக்களை கடிந்துகொண்டு, அவருக்குக் எதிராகச் சொல்லியுள்ள குற்றச்சாட்டுக்களை அவர், ஹிலாரி கிளின்டந் 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து கோபமடைந்த லிபெரல்கள் ஏற்பாடு செய்த, "ஒரு மிகக்கேவலமானதும், ஒருங்கிணைத்த பண்புப் படுகொலை" என்றும் சொன்னார். |
Pelosi said that she believed Kavanaugh's testimony proved that he could not serve on the Supreme Court, because it showed that he is biased against Democrats. | பெலோசி சொல்கையில், கவானாவின் சாட்சி, அவர் உச்ச நிதிமன்றத்தில் பணியாற்றத் தகுதியற்றவர் என்றே நிரூபித்திருக்கிறது என்றார், ஏனென்றால், அவரது சாட்சி டெமாக்ரேட்டுகளுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்பதாகவே காட்டுகிறது என்றார். |
"I think that he disqualifies himself with those statements and the manner in which he went after the Clintons and the Democrats," she said. | "அவரது அவ்வறிக்கைகளின் கொண்டும், கிளின்டன் குடும்பத்தின் பின்னும், டெமாக்ரேட்டுகளுக்குப் பின்னும் அவர் சென்ற விதத்தைக் கொண்டும், அவர் தன்னைத் தானே தகுதி இழக்கச் செய்திருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன்" என்றார் அவர். |
Pelosi demurred when asked if she would try to impeach Kavanaugh if he is confirmed, and if Democrats gain the majority in the House of Representatives. | கவானா குற்றம் செய்ததாக உறுதியானால், அதோடு உறுப்பினர்கள் அவையில் டெமாக்ரேட்டுக்களுக்கு பெரும்பான்மை கிடைத்தால், அவர் கவானாவை பதவிநீக்கம் செய்ய முயற்சிப்பாரா என்று பெலோசியிடம் கேட்ட போது, அவர் பதிலளிக்கத் தயங்கினார். |
"I will say this -- if he is not telling the truth to Congress or to the FBI, then he's not fit not only to be on the Supreme Court, but to be on the court he's on right now," Pelosi said. | "நான் இப்படித்தான் சொல்வேன் -- அவர் அவைக்கு அல்லது FBI -க்கு உண்மையைச் சொல்லவில்லை என்றால், அவர் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமல்ல, அவர் இப்போது நின்று கொண்டிருக்கும் நீதிமன்றத்திற்கே கூடத் தகுதியற்றவர்" என்றார் பெலோசி அவர்கள். |
Kavanaugh is currently a judge on the D.C. Circuit Court of Appeals. | கவானா அவர்கள் தற்போதைக்கு, D.C. மேல்முறையீட்டு சர்க்யூட் கோர்ட்டில் நீதிபதியாக இருக்கிறார். |
Pelosi added that as a Democrat she was concerned about potential Kavanaugh rulings against the Affordable Care Act or Roe v. Wade, as he is considered to be a conservative justice. | அவரை ஒரு பழைய கால நீதிபதி என்று நினைப்பதால், ஒரு டெமாக்ரேட் ஆக, அஃபோர்டபில் கேர் சட்டம் அல்லது ரோ வி. வேட்-. க்கு எதிராக கவானா தரக்கூடிய தீர்ப்புகளை நினைத்துக் கவலைப்படுவதாகவும் பெலோசி அவர்கள் சொன்னார்கள் |
In his confirmation hearings, Kavanaugh sidestepped questions on whether he would overturn certain Supreme Court decisions. | அவரை உறுதிப்படுத்துமாறு சொன்ன விசாரணையில், ஒருசில உச்ச நீதிமன்ற முடிவுகளை நீங்கள் மாற்றி விடுவீர்களா எனக் கேட்ட கேள்விக்கு, அவர் பதில் தராமல் நழுவிக்கொண்டார். |
"It's not time for a hysterical, biased person to go to the court and expect us to say, 'isn't that wonderful,'" Pelosi said. | "ஒரு பைத்திய வெறிகொண்ட, ஒருதலைப்பட்சமான ஒருவர், நீதிமன்றத்திற்குப் போவதற்கு இது சரியான நேரமல்ல, நாங்கள் சொல்வோம் 'அது அவ்வளவு நேர்த்தியானதல்ல' என்றார் பெலோசி அவர்கள். |
And Women Need to Wield It. | அனைத்துப் பெண்களுமே அதை எதிர்த்துப் போரிட வேண்டும். |
It is a righteous diatribe, months and years of fury spilling over, and she can't get it out without weeping. | இது ஒரு நியாயமான வார்த்தைப்போர், பல மாதங்களாக, ஆண்டுகளாக கோபம் கொப்பளித்துக் கொண்டிருக்கிறது, அதை அவர் அழாமல் வெளியே சொல்ல முடியாது. |
"We cry when we get angry," Ms. Steinem said to me 45 years later. | "நமக்குக் கோபம் வரும் போது, நாம் அழுகிறோம்," என்றார் மிஸ். ஸ்டெய்னெம் அவர்கள் என்னிடம் 45 ஆண்டுகளுக்குப் பிறகு. |
"I don't think that's uncommon, do you?" | "இது ஒன்றும் பொதுவாக நடக்காதது அல்ல, இல்லையா?" |
She continued, "I was greatly helped by a woman who was an executive someplace, who said she also cried when she got angry, but developed a technique which meant that when she got angry and started to cry, she'd say to the person she was talking to, "You may think I am sad because I am crying. | அவர் தொடர்ந்து சொல்கையில், ஏதோவொரு இடத்தில் அதிகாரியாக இருந்த ஒரு பெண் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தார், அவருக்குக் கோபம் வந்த போதும் கூட அவரும் அழத்தான் செய்தார், ஆனால் அவர் ஒரு யுக்தியை உருவாக்கிக் கொண்டார், அதாவது, அவருக்குக் கோபம் வந்து, அழ ஆரம்பிக்கும் போது, அவர் பேசிக்கொண்டிருக்கும் நபரிடம் சொல்வார், "நான் அழு... |
I am angry." | ஆனால், நான் கோபமாக இருக்கிறேன்" என்பார். |
And then she just kept going. | சொல்லிவிட்டு, அவர் போய்க்கொண்டே இருப்பார். |
And I thought that was brilliant." | அது அற்புதமானதோர் யோசனை என்றே நான் நினைப்பேன்." |
Tears are permitted as an outlet for wrath in part because they are fundamentally misunderstood. | ஓரளவிற்கு, கடுங்கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு விதமாக கண்ணீரை அனுமதிக்கிறோம், ஏனென்றால், அவற்றை அடிப்படையாகவே தவறாகப் புரிந்திருக்கிறார்கள். |
One of my sharpest memories from an early job, in a male-dominated office, where I once found myself weeping with inexpressible rage, was my being grabbed by the scruff of my neck by an older woman - a chilly manager of whom I'd always been slightly terrified - who dragged me into a stairwell. | என்னுடைய ஆரம்பகால வேலையில் இருந்து எனக்கு நன்கு நினைவிருக்கிற ஒரு காரியம், ஆண்கள் ஆதிக்கம் நிறைந்ததோர் அலுவலகத்தில், நான் வெளிப்படுத்த முடியாத கோபத்தில் அழுதுகொண்டிருப்பதாகக் காணப்பட்டேன், அப்போது, எப்போதுமே நான் பார்த்துப் பயப்படும் ஒரு கோபமான மேலாளரான - ஒரு வயதான பெண்மணி என்னுடைய கழுத்தப் பிடித்து - மாடிப்படிக்கு அழை... |
"Never let them see you crying," she told me. | "நீ அழுவதை ஒருபோதும் அவர்கள் பார்த்துவிடக் கூடாது," என்றார் என்னிடம். |
"They don't know you're furious. | "நீ கடுங்கோபமாக இருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரியாது. |
They think you're sad and will be pleased because they got to you." | நீ சோகமாக இருக்கிறாய் என்றே அவர்கள் நினைப்பார்கள், உன்னை அப்படி ஆக்கியதற்காக, அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்." |
Patricia Schroeder, then a Democratic congresswoman from Colorado, had worked with Gary Hart on his presidential runs. | பேட்ரிக்கா ஷ்ரோடெர், அப்போது கொலோரோடாவில் வந்த டெமாக்ரெட்டிக் காங்கிரஸ் பெண்ணாக இருந்தார், அவர் கேரி ஹார்ட் என்பவரோடு, அவரது ஜனாதிபதி தேர்தலுக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். |
In 1987, when Mr. Hart was caught in an extramarital affair aboard a boat called Monkey Business and bowed out of the race, Ms. Schroeder, deeply frustrated, figured there was no reason she shouldn't explore the idea of running for president herself. | 1987 ஆம் ஆண்டில், மங்கி பிசினஸ் என்று சொல்கிற ஒரு படகில் திரு. ஹார்ட் அவர்கள், திருமணத்திற்கு அப்பால் இன்னொரு பெண்ணோடு சல்லாபித்துக் கொண்டிருக்கையில் பிடிபட்டு, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தள்ளப்பட்ட போது, மிஸ் ஷ்ரோடர் அவர்கள் வெகுவாக வெறுப்படைந்து போனார், தானே ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்கான யோசனை எதையும் ஆர... |
"It was not a well-thought-out decision," she said to me with a laugh 30 years later. | "அது ஒன்றும் நன்கு சிந்தித்து எடுத்த முடிவல்ல" என்று சொன்னார் அவர், 30 ஆண்டுகள் கழித்து ஒரு சிரிப்போடு. |
"There were already seven other candidates in the race, and the last thing they needed was another one. | "அங்கு ஏற்கெனவே மற்ற ஏழு வேட்பாளர்களும் போட்டியில் இருந்தார்கள், கடையாக அவர்களுக்குத் தேவைப்பட்டது, இன்னொருத்தர். |
Somebody called it "Snow White and the Seven Dwarfs."" | யாரோ ஒருவர் அதை,."பனி போன்ற வெண்மையும், ஏழு குள்ளர்களும்" என்று சொன்னார்கள். |
Because it was late in the campaign, she was behind on fund-raising, and so she vowed that she wouldn't enter the race unless she raised $2 million. | ஏனென்றால் அது பிரச்சாரத்தின் இறுதிக் கட்டமாக இருந்தது, அவர் நிதி திரட்டுவதன் பின்னால் இருந்தார், அப்பொது அவர் சத்தியம் செய்தார், அவரால் $2 மில்லியன் திரட்ட முடியவில்லை என்றால், போட்டியில் நுழைவதில்லை என்று. |
It was a losing battle. | அது ஒரு தோற்கும் போட்டியாகத் தான் இருந்தது. |
She discovered that some of her supporters who gave $1,000 to men would give her only $250. | அப்போது தான் அவருக்குத் தெரிந்தது, ஆண்களுக்கு $1,000 கொடுக்கும் அவரது ஆதரவாளர்களில் சிலர், இவருக்கு $250 மட்டுமே கொடுப்பார்கள் என்று. |
"Do they think I get a discount?" she wondered. | "எனக்குத் தள்ளுபடி கிடைக்கிறதென்று அவர்கள் நினைக்கிறார்களா?" என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். |
When she made her speech announcing that she would not launch a formal campaign, she was so overcome by emotions - gratitude for the people who'd supported her, frustration with the system that made it so difficult to raise money and to target voters rather than delegates, and anger at the sexism - that she got choked ... | தான் முறைப்படியான பிரச்சாரத்தை ஆரம்பிக்கப்போவதில்லை எனச் சொல்லி தனது பேச்சை ஆரம்பித்த போது, அவர் அதிகமதிகமாக உணர்ச்சிவசப்பட்டார் - அவரை ஆதரிக்கப்போகும் மக்களுக்கான நன்றியால், பணத்தைத் திரட்டுவதை மிகவும் கடினமாக்கிய அமைப்பினால், பிரதிநிதிகளை விட வாக்காளர்களை குறிவைக்க வேண்டியிருப்பதால், பாலியல் மீதான கோபத்தால் - அவருக்க... |
"You would have thought I'd had a nervous breakdown," recalled Ms. Schroeder about how the press reacted to her. | பத்திரிக்கையாளர்கள் அவரிடம் எவ்விதம் நடந்து கொண்டார்கள் என்பதைக் குறித்துச் சொல்கையில், "எனக்கு நரம்புச் சிதவு ஏற்பட்டிருக்கும் என நீங்கள் நினைக்கலாம்," என்றார் மிஸ். ஷ்ரோடெர் அவர்கள். |
"You'd have thought Kleenex was my corporate sponsor. | "நீங்கள் நினைத்திருக்கலாம், கிளீனெக்ஸ் தான் எனது கார்பொரேட் ஸ்பான்சர் என்று. |
I remember thinking, what are they going to put on my tombstone? | அவர்கள் என்னுடைய கல்லரையில் என்ன எழுதி வைக்கப்போகிறார்கள் என்று நினைத்தது எனக்கு ஞாபகம் வருகிறது? |
"She cried"?"" | "இவள் அழுதாளா"?" என்று" |
How the US-China trade war may be good for Beijing | அமெரிக்க-சீன வர்த்தகப் போர், எவ்விதம் பீஜிங்கிற்கு நல்லதாக இருக்கலாம் |
The opening salvos of the trade war between the US and China were deafening, and while the battle is far from over, a rift between the countries may be beneficial to Beijing in the long term, experts say. | அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தகப் போரின் ஆரம்பகட்ட எதிர் தாக்குதல்கள் காதைக் கிழிப்பதாக இருந்தன, அதோடு அந்தப் போர் முடிவதாகத் தெரியவில்லை என்கிற அதே வேளையில், அவ்விரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டிருக்கிற பிளவு, நீண்ட கால அடிப்படையில் பீஜீங்கிற்கு பலன் தரக்கூடியதாக இருக்கலாம் என்றே நிபுணர்கள் சொல்கிறார்கள். |
Donald Trump, the US President, fired the first warning earlier this year by taxing key Chinese exports including solar panels, steel and aluminium. | அமெரிக்க ஜனாதிபதி, டொனால்டு டிரம்ப், சோலார் பேனல்கள், இரும்பு மற்றும் அலுமினியம் உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதிகளுக்கு வரி விதித்ததன் மூலம், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தனது முதல் எச்சரிக்கையை விடுத்தார். |
The most significant escalation rolled in this week with new tariffs affecting $200 billion (£150 billion) worth of items, effectively taxing half of all goods coming into the US from China. | புதிய குறிப்பிடத்தக்க சண்டையானது, $200 பில்லியன் (£150 பில்லியன்) மதிப்புள்ள உருப்படிகளைப் பாதிக்கிற புதிய வரி விதிப்புகளை இந்த வாரம் வெடித்தது, அது சீனாவில் இருந்து அமெரிக்காவிற்குள் வருகிற அனைத்து சரக்குகளிலும் பாதிக்கு வரி விதித்து விட்டார்கள். |
Beijing has retaliated each time in kind, most recently slapping tariffs of five to ten per cent on $60 billion of American goods. | ஒவ்வொரு முறையும் பீஜிங்கும், அதே வகையில் பதில் தாக்குதல் நடத்தியது, மிகச் சமீபத்தில் $60 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்கச் சரக்குகளுக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் வரி விதித்தது. |
China has pledged to match the US shot-for-shot, and the world's second largest economy is unlikely to blink anytime soon. | அமெரிக்காவிற்கு அடிக்கு-அடி கொடுக்க சீனா உறுதிபூண்டுள்ளது, இதோடு உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம், எந்த நேரத்திலும் கண் சிமிட்ட வாய்ப்பில்லை. |
Getting Washington to back down means caving into demands, but publicly bowing to the US would be far too embarrassing for Xi Jinping, China's president. | வாஷிங்டனைப் பின்னோக்கிச் செல்லச் செய்வதன் பொருள், கோரிக்கைகளுக்கு இணங்கச் செய்வது என்றே பொருளாகிறது, ஆனால், வெளிப்படையாக அமெரிக்காவை ஊதித்தள்ளுவது, சீனத் தலைவர் ஸீ ஜிங்பிங் அவர்களுக்கு, மிக மிக சங்கடமான விஷயமாக இருக்கும். |
Still, experts say if Beijing can play its cards right, US trade war pressures could positively support China over the long term by lowering the inter-dependence of the two economies. | இருந்தாலும், பீஜிங் தனது துருப்புச் சீட்டைச் சரியாகப் பயன்படுத்துமானால், அமெரிக்க வர்த்தகப் போர் நெருக்கடிகள், ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் தன்மையைக் குறைப்பதன் மூலமாக, நீண்ட கால அடிப்படையில் சீனாவிற்குச் சாதகமாகவே அமையும். |
"The fact that a quick political decision in either Washington or Beijing could create the conditions that start an economic tailspin in either country is actually a lot more dangerous than onlookers have acknowledged before," said Abigail Grace, a research associate who focuses on Asia at the Center for New American S... | "வாஷிங்டன் அல்லது பீஜிங் -இல் சட்டென்று எடுக்கும் அரசியல் முடிவு, இவ்விரு நாடுகள் எதிலும், ஒரு பொருளாதாரத் தலைகீழ் மாற்றத்தை துவக்கிவிடக் கூடும் என்ற யதார்த்தம் தான், பார்த்துக்கொண்டிருப்பவர்கள் இதற்கு முன் ஒப்புக் கொண்டிருப்பதை விட மிக அதிக பயங்கரமானதாக இருக்கிறது", என்றார் அபிகாயில் கிரேஸ், இவர் தி செண்டர் ஃபார் நியூ... |
Syria 'ready' for refugees to return, says Foreign Minister | அகதிகள் நாடு திரும்புவதற்கு சிரியா 'தயார்' ஆக உள்ளதாக அயலுறவுத்துறை அமைச்சர் சொல்கிறார் |
Syria says it's ready for the voluntary return of refugees and is appealing for help to rebuild the country devastated by a more than seven-year long war. | தன்னார்வத்தோடு நாடு திரும்புகிற அகதிகளுக்கு சிரியா நாடு தயாராக இருப்பதாகச் சொல்கிறது, அதோடு அது, ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போரினால் சீரழிந்த நாட்டை மறுபடியும் கட்டித்தர உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. |
Speaking to the United Nations General Assembly, Foreign minister Walid al-Moualem said conditions in the country are improving. | ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசுகையில், அயலுறவுத்துறை அமைச்சர் வாலித் அல்-மௌலாம் அவர்கள், நாட்டிலுள்ள நிலைமைகள் சீரடைந்து வருவதாகச் சொன்னார். |
"Today the situation on the ground is more stable and secure thanks to progress made in combating terrorism," he said. | "இன்றைக்கு, நடப்பு நிலைமை அதிக சீரானதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது, இதற்கு பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கே நன்றி சொல்லவேண்டும்", என்றார் அவர். |
The government continues to rehabilitate the areas destroyed by terrorists to restore normalcy. | இயல்புநிலைமையை திருப்பிக் கொண்டுவருவதற்கு, பயங்கரவாதிகள் அழித்த பகுதிகளை அரசாங்கம் தொடர்ந்து புணர்நிவாரணம் செய்து வருகிறது. |
All conditions are now present for the voluntary return of refugees to the country they had to leave because of terrorism and the unilateral economic measures that targeted their daily lives and their livelihoods. | அகதிகள் தன்னார்வத்தோடு நாடு திரும்புவதற்கான அனைத்து நிலைமைகளும் நிலவுகின்றன, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையும், அவர்களது வாழ்வாதாரங்களையும் நேரடியாகக் குறிவைத்துத் தாக்கிய, பயங்கரவாதத்தின் காரணமாகவும், ஒருதலைப்பட்சமான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாகவுமே அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. |
The UN estimates that more than 5.5 million Syrians have fled the country since the war began in 2011. | 2011 ஆம் ஆண்டில் போர் ஆரம்பித்ததில் இருந்து, 5.5 மில்லியன் சிரியர்களுக்கும் மேலானவர்கள் நாட்டை விட்டு ஓடிப்போய்விட்டார்கள் என்றே ஐக்கியநாடுகள் சபை கணக்கிட்டுள்ளது. |
Another six million people still living in the country are in need of humanitarian assistance. | இன்னொரு ஆறு மில்லியன் பேர், இன்னமும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஆறு மில்லியன் பேர்களுக்கு மனிதாபிமான உதவி தேவையாயிருக்கிறது. |
Al-Moualem said the Syrian regime would welcome help in rebuilding the devastated country. | அல்-மௌலம் சொல்கையில், போரினால் சீரழிந்த நாட்டை மறுகட்டுமானம் செய்வதில் உதவிபுரிவதை சிரிய அரசாங்கம் வரவேற்பதாகச் சொன்னார். |
But he stressed that it would not accept conditional assistance or help from countries that sponsored the insurgency. | ஆனாலும், அது நிபந்தனையோடு கூடிய உதவியை அல்லது தீவிரவாதத்தை ஆதரிக்கிற நாடுகளில் இருந்து கிடைக்கும் உதவியை ஏற்காது என்றும் வலியுறுத்திச் சொன்னார். |
Europe clinches Ryder Cup victory in Paris | பாரிஸில் ஐரோப்பா ரைடர் கோப்பை வெற்றியை எட்டிப் பிடித்தது |
Team Europe has won the 2018 Ryder Cup defeating Team USA by a final score of 16.5 to 10.5 at Le Golf National outside Paris, France. | பிரான்ஸ், பாரிஸின் வெளியே உள்ள லீ கோல்ஃப் நேஷனல் மைதானத்தில், 16.5 முதல் 10.5 என்ற இறுதி ஸ்கோர் மூலமாக, 2018 ஆம் ஆண்டு ரைடர் கோப்பையை, அமெரிக்க அணியைத் தோற்கடித்ததன் மூலம் ஐரோப்பா அணியினர் வென்றனர். |
The US has now lost six consecutive times on European soil and has not won a Ryder Cup in Europe since 1993. | 1993 ஆம் ஆண்டிலிருந்தே, அமெரிக்க அணியினர் அடுத்தடுத்து ஆறு தோல்விகளை ஐரோப்பிய மண்ணில் சந்தித்திருக்கிறார்கள், அதோடு ஒருமுறை கூட ரைடர் கோப்பையை வெல்லவில்லை. |
Europe regained the crown as the Danish captain Thomas Bjorn's team reached the 14.5 points they required to beat the United States. | அமெரிக்க அணியினரைத் தோற்கடிப்பதற்குத் தேவையான 14.5 புள்ளிகளை டேனிஷ் கேப்டன் தாமஸ் ஜோர்ன்ஸ் குழுவினர் அடைந்ததுமே, ஐரோப்பா அணியினர் கிரீடத்தைத் திரும்பவும் பெற்றுக் கொண்டநர். |
US star Phil Mickelson, who struggled most of the tournament, plunked his tee-shot into the water at the par-3 16th hole, conceding his match to Francesco Molinari. | அமெரிக்க நட்சத்திரம் ஃபில் மைக்கெல்லன், டோர்னமெண்ட் முழுவதிலும் தடுமாறிக் கொண்டிருந்த இவர், பார்-3, 16ஆவது துவாரத்தில், தனது டீ-ஷாட்டை தண்ணீருக்குள் மூழ்கடித்து, தனது ஆட்டத்தை ஃபிரான்செஸ்கோ மொலினாரிக்கு மறைத்துக் கொடுத்தார். |
The Italian golfer Molinari shined in all of his rounds, becoming 1-of-4 players to ever go 5-0-0 since the tournament's current format begun in 1979. | இத்தாலிய கோல்ஃபர், மோலினாரி, அவரது சுற்றுக்கள் அனைத்திலும் ஜொலித்து, 1979 ஆம் ஆண்டில் இந்த டோர்னமெண்டின் தற்போதைய முறைமை ஆரம்பித்ததில் இருந்தே, 5-0-0 செல்லும் 4 வீரர்களில் 1 நபர் ஆனார். |
American Jordan Spieth was blown out 5&4 by the lowest-ranked player on the European team, Thorbjorn Olesen of Denmark. | அமெரிக்க ஜோர்டான் ஸ்பீத், ஐரோப்பிய அணியில் மிகக்குறைந்த தரவரிசையுடைய விளையாட்டு வீரர், டென்மார்க்கின் தார்ப்ஜார்ன் ஓலேசென் ஆல் 5&4 -க்குத் தோற்கடிக்கப்பட்டார். |
The world's top-ranked player, Dustin Johnson, fell 2 and 1 to Ian Poulter of England who may have played in his final Ryder Cup. | உலகின் முதல் வரிசை விளையாட்டு வீரர், டஸ்டின் ஜான்சன், இங்கிலாந்தின் இயன் போல்டரிடம் 2 மற்றும் 1 கணக்கில் தோல்விய்டைந்தார், அவர் தனது இறுதி ரைடர் கோப்பைப் போட்டியில் விளையாடியிருக்கலாம். |
A veteran of eight Ryder Cups, Spaniard Sergio Garcia became the tournaments all-time winningest European with 25.5 career point. | எட்டு ரைடர் கோப்பைகளில் விளையாடிய முன்னாள் வீரர், ஸ்பேனியார்டு செர்ஜியோ கார்சியா தான் 25.5 ஆயுட்காலப் புள்ளிகளோடு டோர்னமெண்டின் எல்லாப் போட்டிகளிலும் வெற்றிபெற்ற ஐரோப்பியரானார். |
"I don't usually cry but today I can't help it. | "நான் வழக்கமாக அழுவதில்லை, ஆனால் இன்றைக்கு என்னால் அடக்க முடியவில்லை. |
It's been a rough year. | இது ஒரு கடினமான ஆண்டாக இருந்து வந்தது. |
So thankful for Thomas to pick me and believe in me. | என்னைத் தேர்ந்தெடுத்து, என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தாமஸுக்குத் தான் மிகவும் நன்றி சொல்ல வேண்டும். |
I am so happy, so happy to get the cup back. | எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது, கோப்பையைத் திரும்பவும் பெற்றது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. |
It's about the team., and I'm happy I was able to help," said an emotional Garcia following the European victory. | இது அணி குறித்தது., அதோடு அதற்கு என்னால் முடிந்தது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே," என்றார், உணர்ச்சிவசப்பட்ட கார்சியா, ஐரோப்பிய வெற்றியைத் தொடர்ந்து. |
He passes the torch to his fellow countryman John Ram who took down US golf legend Tiger Woods 2&1 in singles play on Sunday. | இவர் பந்தத்தை தனது சொந்த நாட்டுக்காரர் ஜான் ராம் இடம் கொடுத்தார், அவர் அமெரிக்க கோல்ஃப் லெஜெண்ட் டைகர் உட்ஸ்-ஐ, ஞாயிற்றுக்கிழமை ஒற்றையர் ஆட்டத்தில் 2&1 புள்ளிகளில் தோற்கடித்தார். |
"The incredible pride I feel, to beat Tiger Woods, I grew up watching that guy," said 23-year-old Rahm. | "டைகர் உட்ஸ்-ஐத் தோற்கடித்தது, எனக்கு நம்ப முடியாத அளவிற்கு பெருமையாக இருக்கிறது, அவர் விளையாடுவதைப் பார்த்தே நான் வளர்ந்தேன்", என்றார் 23 வயதுடைய ராம். |
Woods lost all four of his matches in France and now has a record of 13-21-3 career Ryder Cup record. | உட்ஸ், பிரான்ஸில் நடைபெற்ற தனது ஆட்டங்கள் நான்கிலும் தோல்வியடைந்து, இப்போது 13-21-3 என்ற ரைடர் கோப்பை சாதனையை வைத்துள்ளார். |
A strange statistic by one of the greatest players of all-time, having won 14 major titles second to only Jack Nicklaus. | எல்லா நேரங்களின் மிகப்பெரிய விளையாட்டு வீரர்களில் ஒருவர் வைத்திருக்கிற வித்தியாசமான புள்ளி விவரம், ஜேக் நிக்ளாஸுக்கு மட்டுமே அடுத்த இடத்தில் இருந்து, 14 பெரிய பட்டங்களை வென்றிருக்கிறார். |
Team USA struggled all weekend to find the fairways with the exception of Patrick Reed, Justin Thomas and Tony Finau, who played high-calibre golf throughout the entire tournament. | அமெரிக்க அணியினர், பேட்ரிக் ரீட், ஜஸ்டின் தாமஸ் மற்றும் டோனி ஃபைனா ஆகியோரைத் தவிர்த்து, அனைத்து வார இறுதி நாட்களிலும் ஃபேர்வேய்ஸ் காண்பதற்குத் தடுமாறினர், இவர்கள் மூவரும் ஒட்டுமொத்த டோர்னமெண்ட் முழுவதிலும் உயர்-நிலை கோல்ஃப் விளையாட்டை ஆடினர். |
US captain Jim Furyk spoke after a disappointing performance for his squad, "I'm proud of these guys, they fought. | அமெரிக்கக் கேப்டன் ஜிம் ஃபரிக், தனது அணியினரின் வேதனையான செயல்பாட்டிற்குப் பிறகு பேசுகையில், "இவர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன், முடிந்தளவிற்குப் போராடினார்கள்" என்றார். |
There was time this morning when we put some heat on Europe. | இன்றைத்தினம் காலையில், ஐரோப்பாவில் கொஞ்சம் சூட்டைக் கிளப்புவதற்கு நேரம் இருந்தது. |
We scrapped. | நாங்கள் வீணாக்கிவிட்டோம். |
Hats off to Thomas. | தாமஸுக்கு வாழ்த்துக்கள். |
He is a great captain. | அவர் ஒரு அற்புதமான கேப்டன். |
All 12 of his players played very well. | அவரது வீரர்கள் 12 பேருமே மிக நன்றாக விளையாடினார்கள். |
We'll regroup, I'll work with the PGA of America and our Ryder Cup Committee and we'll move forward. | நாங்கள் மறுபடியும் ஒன்றிணைவோம், நான் அமெரிக்காவின் PGA உடனும், எங்களது ரைடர் கோப்பைக் கமிட்டியுடனும் சேர்ந்து உழைப்பேன், நாங்கள் முன்னோக்கிச் செல்வோம் என்றார். |
I love these 12 guys and I'm proud to serve as captain. | எனக்கு இந்த 12 பேர்களையும் பிடிக்கும், நான் இவர்களது கேப்டனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். |
You have to tip your cap. | நம்மவர்களைத் தட்டிக்கொடுக்க வேண்டும். |
We got outplayed." | எங்களை விட நன்றாக விளையாடினார்கள்." |
Red Tide Update: Concentrations decrease in Pinellas, Manatee and Sarasota | சிவப்பலை குறித்த புதிய தகவல்: பினெல்லாஸ், மனாட்டி மற்றும் சரசோட்டா பகுதிகளில் இதன் செரிவுகள் குறைந்திருக்கிறது. |
The newest report from the Florida Fish and Wildlife Commission shows a general decrease in Red Tide concentrations for parts of the Tampa Bay area. | தம்பா வளைகுடா பகுதியின் ஒருசில பகுதிகளில் சிவப்பலை செரிவுகள் பொதுவாக குறைந்துள்ளது என்பதையே ஃப்ளோரிடா ஃபிஷ் அண்டு வைல்டுலைஃப் கமிஷனில் இருந்து வரும் மிகப்புதிய அறிக்கை காண்பிக்கிறது. |
According to the FWC, patchier bloom conditions are being reported in areas of Pinellas, Manatee, Sarasota, Charlotte and Collier counties - which suggests decreasing concentrations. | FWC சொல்வதன்படி, பினெல்லாஸ், மனாட்டி, சரசோட்டா, சார்லோட்டே மற்றும் கோல்லியர் கவுண்டிகள் பகுதிகளில் திட்டுதிட்டாக மலரும் நிலைமைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது - இவை செரிவுகள் குறைவதையே குறிக்கின்றன. |
A bloom the Red Tide extends approximately 130 miles of coastline from northern Pinellas to southern Lee counties. | சிவப்பலை பூப்பது கடற்கரை நெடுகிலும், வடக்கு பினெல்லாஸில் இருந்து, தெற்கு லீ கவுண்டிகள் வரைக்கும், கிட்டத்தட்ட 130 மைல்கள் தூரத்திற்குப் பரவுகிறது. |
Patches can be found about 10 miles offshore of Hillsborough County, but at fewer sites relative to last week. | திட்டுக்களை ஹில்ஸ்பாரோ கரையில் இருந்து சுமார் 10 மைல் தொலைவிற்குக் காண முடியும், ஆனால் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் ஒருசில இடங்களிலேயே காணப்படுகிறது. |
Red Tide has also been observed in Pasco County. | பாஸ்கோ கவுண்டியிலும், சிவப்பலைகள் காணப்பட்டன. |
Medium concentrations in or offshore of Pinellas County have been reported in the past week, low to high concentrations offshore of Hillsborough County, background to high concentrations in Manatee County, background to high concentrations in or offshore of Sarasota County, background to medium concentrations in Charlo... | பினெல்லாஸ் கவுண்டியில் அல்லது கடற்கரைப் பகுதிக்கு அப்பால் மிதமான செரிவுகள் இருப்பதாகக் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது, ஹில்ஸ்பாரோகவுண்டி கரைக்கு அப்பால் குறைந்தது முதல் அதிக அடர்வுகளும், மனாட்டி கவுண்டியில் பின்னணிய அளவு முதல் அதிக அளவு வரையும், சரசோட்டா கவுண்டியிலும், கறைக்கு அப்பாற்பட்ட பகுதிலும் பின்னணிய அளவு முதல் உய... |
Respiratory irritation continues to be reported in Pinellas, Manatee, Sarasota, Lee, and Collier counties. | பினெல்லாஸ், மனாட்டி, சரசோட்டா, லீ, மற்றும் கோல்லியர் கவுண்டிகளில் தொடர்ந்து சுவாசமண்டல உறுத்தல்கள் இருப்பதாக அறிவிக்கப்படுகிறது. |
Respiratory irritation was not reported in Northwest Florida over the past week. | கடந்த வாரத்தில் வட மேற்கு ஃப்ளோரிடாவில் சுவாச மண்டல உறுத்தல் இருப்பதாக அறிவிக்கப்படவில்லை. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.