id stringlengths 23 23 | text stringlengths 13 771 | audio audioduration (s) 1.02 57.9 |
|---|---|---|
train_tamilfemale_03062 | அவளுக்கு சாப விமோசனம் கொடுத்தபடி, உன் நினைவாக, யாரும் தொடாத எருக்கம்பூ மாலையையும், நான் சதுர்த்தி அன்று அணிந்து கொள்வேன். | |
train_tamilfemale_01117 | அதை எப்படி அறிந்தீர், நேற்று இரவு கந்தன்மாறனின், பாலிய நண்பன் ஒருவனும், கடம்பூர் மாளிகைக்கு வந்திருந்தான். | |
train_tamilfemale_00655 | அச்சிறுவனுக்கோ, இந்த நான்கையும் வீழ்த்த ஆசை. | |
train_tamilfemale_02338 | ஆப்பிள்கள் ரோஜாப் பூ குடும்பத்தைச் சேர்ந்த பழம் என்றால் நம்ப முடிகிறதா அதுதான் உண்மை. | |
train_tamilfemale_01652 | திடீரென்ற வெளிச்சத்தில் பெரும் நிழல்கள், நாற்புற சுவர்களிலும் தோன்றி, அசைந்தன. | |
train_tamilfemale_01959 | அதிக சிரமத்தின் பேரில், யூக்ளிட்டின் பதிமூன்றாவது பாடத்திற்கு வந்த பிறகு, அந்தப் பாடம், மிக எளிதானது, என்று திடீரென்று எனக்கு தோன்றியது. | |
train_tamilfemale_01580 | பொய் குற்றச்சாட்டுகளை கூறியதோடு பல ஆண்டுகளாக லஞ்சம் வாங்கி வந்ததற்காகவும் மன்னன் அவனது சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்ததோடு சிறையில் தள்ளினான். | |
train_tamilfemale_01421 | அதில் பிழைகள் இருந்தால் திருத்தி தேவைப்படும் ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்து எங்களுக்கு அனுப்பவும் அதிக மாற்றங்களை தவிர்க்கவும். | |
train_tamilfemale_02449 | இதேப்போல் எல்லா உருண்டைகளையும், செய்து கொண்டு, நான்ஸ்டிக் சட்டியை அடுப்பில் காயவைத்து, அதில் ஒரு மேசைக்கரண்டி வெண்ணெயையும், இரண்டு மேசைக்கரண்டி எண்ணெயையும் கலந்து, சிறிது ஊற்றி, நண்டு கேக்குகளை, சட்டியின் அளவிற்க்கு ஏற்றவாறு போட்டு, சிவக்க சுட்டெடுக்கவும். | |
train_tamilfemale_00136 | அகத்தியனாரின் வழி வந்தவர்கள், தொல்காப்பியம், முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள். | |
train_tamilfemale_02257 | இப்படியே ப்ரவுசர்கள் அப்ளிகேஷன் புரோகிராம்களின் ஃபைல்கள் என அதிகளவில் திறந்தால் டாஸ்க்பாரில் இடம் இல்லாத அளவிற்கு பட்டன்களாக இருக்கும். | |
train_tamilfemale_02916 | மழையில், வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. | |
train_tamilfemale_02401 | அவளது தாயார், பல விதமாக சொல்லி, அவள் மனதை மாற்ற முயன்றாள், அதனால் நாட்டிற்கே ஆபத்து வரும், என்று விளக்கினான். | |
train_tamilfemale_02140 | அவர் நாகலோகத்திலிருந்து, பூவுலகிற்கு வந்த போது, ஒரு ஒற்றையடி பாதை, ஓரமாக இருந்த, எறும்புப் புற்றை சுற்றி படுத்துக் கொண்டு, என்னை கருடனோ, பாம்பாட்டியோ, பிடிக்கக் கூடாதா, என நினைத்தார். | |
train_tamilfemale_01355 | ஆனால் என் தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக கத்தியவாரிலுள்ள சுதேச சமஸ்தானங்கள் பலவற்றில் முதன் மந்திரியாக இருந்திருக்கின்றனர். | |
train_tamilfemale_01491 | அவுரங்கசீப் மறைவுக்குப் பிறகு, வந்த பேரரசர் ஃபரூக்சியர் என்பவர், மிர் கம்ருதீனுக்கு, நிஜாம் உல்முல்க் ஃபெரோஸ் ஜங் என்னும் பட்டத்தை அளித்துத் தக்காணப், பீடபூமியின் வைசிராய் ஆக்கினார். | |
train_tamilfemale_00642 | எனவே, இளவரசர்களை, அவரிடமே கல்வி கற்க வேண்டும் என்று, எல்லா அறிஞர்களும், ஒன்றாக முடிவு செய்தனர். | |
train_tamilfemale_01485 | சிறு வயது மேலே தன்னை நன்றாக வளர்த்த தாய் தாய் தந்தை மற்றும் உறவினர் அனைவரையும் உதாசீனப் படுத்தியதை நினைத்து மிகவும் வருந்தினான். | |
train_tamilfemale_01013 | புரட்சியில் தமக்கு சாதகமாக இருந்து வந்த, க்ரான்ஸ்டாட் வீரர்களைக் கூட அடக்கி, அடி பணிய வைத்தவர் த்ரோத்ஸ்கி. | |
train_tamilfemale_02380 | அந்த சிறுமிகளிடமிருந்து, ஏதோ துர்நாற்றம் வீசியது. | |
train_tamilfemale_02920 | டோக்கியோ நகரத்தில், கார்களை விட, சைக்கிள்கள், அதிவேகமாக பயணிக்கின்றன. | |
train_tamilfemale_01897 | நான் முன்பே கூறியிருப்பதைப்போல், இவற்றிற்கான ஏற்பாடுகளை எல்லாம், செய்து முடிப்பதற்கு, மாதங்கள் பல ஆயின. | |
train_tamilfemale_02314 | நானும் ஒரு காலத்தில் டீனேஜில் இருந்தவன்தான். | |
train_tamilfemale_01512 | மகளின் சிறுகுழந்தைப் பருவத்தில், எங்கள் நிறுவனங்களின் ஃப்ளெக்ஸ்டைம் ஃப்ளெக்ஸ்லொக்கேஷன் சலுகைகளைப் பயன்படுத்தி, நாங்களே அவளைக் கவனித்துக் கொண்டோம். | |
train_tamilfemale_00177 | ஏற்கனவே, அவருடைய சிரஸின் பேரில், தூக்க முடியாத கனமுடைய, சோழ சாம்ராஜ்ய மணிமகுடம், உட்கார்ந்து அழுத்திக்கொண்டிருக்கிறது. | |
train_tamilfemale_01783 | மௌண்ட்பேட்டனின் பிரதம உதவியாளர் இஸ்மேயும், இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஹை கமிஷ்னர் ஷோன்ம், லண்டனுக்கு அனுப்பிய அறிக்கையில், பாகிஸ்தான் இந்த படையெடுப்பில், குற்றவாளி என்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதில், பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது என்று, தெரிவித்தனர். | |
train_tamilfemale_01035 | அதனால்தான், வானதிக்கு என்ன வந்துவிட்டது என்று கேட்க, சோதிடரிடம் அழைத்துப் போயிருக்கிறார், ஏதாவது பேய் பிசாசுகளின் சேஷ்டையாயிருக்கலாம் அல்லவா. | |
train_tamilfemale_02516 | அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், குடியரசில் உள்ள அனைத்து, அதாவது, நாளாயிரத்தி ஐநூறு பேருந்து நிறுத்தங்களில், இந்தப் புதிய சமிக்ஞை தூண்கள் பொருத்தப்படும். | |
train_tamilfemale_00911 | ஆம், நானும், அந்த ஆலயத்துக்கு வந்து, பெருமாளைச் சேவிப்பதற்கு விரும்புகிறேன். | |
train_tamilfemale_03238 | நாம எல்லாம் கூத்து நடத்துற சாதியுல பொறந்திருக்கக்கூடாதுடா, நிறைய மனுஷங்க இருக்குற சாதியுல பொறந்திருக்கணும், நமக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா கேக்கிறதுக்கு நாலு ஜனங்க முன்ன வந்து நிப்பாங்க, போன வாரம் என் பொஞ்சாதி கூலி வேலைக்கு போயிட்டு திரும்பி வர்றப்போ, பசியோட இருந்ததால, முத்துச்சாமி தோட்டத்துலயிருந்து, ரெண்டு வெள்ளரி பிஞ... | |
train_tamilfemale_00192 | அந்த எருமைக் கடாவின் பேரில் ஏறிக்கொண்டு, தான் யமன், இப்போது ஜாம் ஜாம் என்று என்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறான். | |
train_tamilfemale_01800 | அரசனும் அவை என் தேர்க் குதிரைகளின் கடிவாளங்களைத் கடித்து அந்தத் தோலைத் தின்று விட்டன விலை உயர்ந்த கடிவாளங்கள் நாசமாகி விட்டன இதுதான் நாய்களின் குற்றம் என்றான். | |
train_tamilfemale_01707 | அதனால் வேறு வழியின்றி கர்ணன் இந்திரனுடைய ஆயுதத்தை கடோத்கஜன் மீது ஏவ கடோத்கஜன் உயிர் நீத்தான். | |
train_tamilfemale_02897 | தன் முயற்சியில், சற்றும் மனம் தளராத விக்ரமன், மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். | |
train_tamilfemale_00798 | திருவதிகை ஸ்தலத்தில், அவருட கொடையினால், கட்டப் பற்ற சிவாலயத்துக்கு, குணபரேச்வரம் என்ற பெயர் வழங்கிற்று. | |
train_tamilfemale_02661 | வெனிசுலா, அர்ஜென்டினா, பொலிவியா, மற்றும் மெக்ஸிகோ நாடுகளில், புத்தாண்டு பிறக்கும் போது, நள்ளிரவில், தங்கள் வீடுகளைச் சுற்றி, பெட்டிகளை, சுமந்து செல்கின்றனர். | |
train_tamilfemale_03006 | உடனே, ஒரு திரை தோன்றி, உங்கள் முந்தைய டேட்டாவை மீட்டெடுக்க வேண்டுமா, அல்லது புதிய ரீஸ்டோர் பாய்ன்ட், திறக்க வேண்டுமா, எனக் கேட்கும். | |
train_tamilfemale_02194 | இச்சமயத்தில் சார்த்தூலன் என்ற இராவணனின் ஒற்றன் வானர சேனைகளிருக்குமிடத்திற்குப் போய் அங்கு நடப்பதையெல்லாம் பார்த்து விட்டு இராவணனிடம் சென்றான். | |
train_tamilfemale_01534 | தமிழ் நூல்களில் வானூர்தி பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிப்பறந்தான் இராவணன் சீதையைத் தூக்கிப் பறந்தான் கண்ணகியை கோவலன் வானூர்தியில் அழைத்துச் சென்றான். | |
train_tamilfemale_02455 | இந்தியாஸ் எக்ஸ் அன்டச்சபிள்ஸ், எழுதிய தாமஸ் ஐசக், ஸ்பியர்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ், எ டிபன்ஸ் ஆஃப் புளுரலிசம் அன்ட் ஈக்வாலிடி, எழுதிய மைக்கேல் வால்டர் ஆகியோரும் இதை உறுதி செய்கிறார்கள். | |
train_tamilfemale_01584 | அவர் காசிக்கு போன சில நாள்களுக்கு பின் சோமதத்தரின் தந்தையின் உழவு மாடுகளில் ஒன்று இறந்து விட்டது. | |
train_tamilfemale_01687 | உங்கள் கனவின் உட்பொருள் உங்களால் தண்டிக்கப்பட்ட ஒருவன் உங்களை பழி தீர்க்க திட்டம் வகுத்துள்ளான் நீங்கள் அவனை உடனடியாக கண்டு பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். | |
train_tamilfemale_02358 | ஏற்கெனவே, உப்புக் கலந்த காற்றை உணர்ந்தேன், அதற்குள் கடலுக்கு அவசரமா, அதோ, பயங்கர ஒலியுடன், பெரும் சீற்றத்துடன், தண்ணீர் வெள்ளம் புகுந்தது. | |
train_tamilfemale_00032 | காசிப் பட்டின் மென்மையும், கள்ளின் போதையும் காட்டுத் தேனின் இனிப்பும், கார்காலத்து மின்னலின் ஜொலிப்பும், ஒரு பெண் குரலில் கலந்திருக்க முடியுமா. | |
train_tamilfemale_02825 | ஏதோ, இந்த மட்டும், வரம் தந்தாரே என்று, காமேஷ், திருப்தி அடைந்தான். | |
train_tamilfemale_01313 | விண்மீன் நிறைந்த வான், மண்மீதில் உழைப்பாரெல்லாம், வறியராம் உரிமை கேட்டால், புண்மீதில், அம்பு பாய்ச்சும் புலையர், செல்வராம் இதைத் தன் கண்மீதில், பகலிலெல்லாம் கண்டு, கண்டந்திக்குப்பின் விண்மீனாய்க், கொப்பளித்த விரிவானம் பாராய், தம்பி நிலாச்சேவல், விண்மீன் குஞ்சுகள், இருட்டுப்பூனை, பாற்புகை முகிலைச் சீய்த்துப் பளிச்சென்று... | |
train_tamilfemale_01150 | கதவத்தெறந்து, யாருன்னு பாருய்யா ரசம் அடுப்புல கெடக்கு, கொதிச்சுப்போய்ட்டா ரசம் வாய்க்கி வெளங்காது என்ற அம்மாவின் குரலையடுத்து, பாலு கதவைக் கஷ்டப்பட்டுத் திறந்தான் அப்போது பாலுவுக்கு ஒரு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கும். | |
train_tamilfemale_01784 | எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று முழக்கமிட்ட போர்முரசே உன் அமுதூட்டிய உன் ஆதித்தாயின் வயிற்றில் பிறந்த காரணத்தாலேயே அகதியானேன். | |
train_tamilfemale_01244 | பங்களாதேஸ், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, லாஓஸ், மலேசியா, பர்மா, நேபாளம், தாய்லாந்து, வியட்னாம், யானைகள் வாழும் காடுகளின் மொத்த அளவு, நூறு மில்லியன் சதுர கிலோமீட்டர். | |
train_tamilfemale_02266 | நமது ராஜ்யத்தில் இவ்வாறு தீயசக்திகள் உருவாவதைப் பொறுக்க முடியாமல் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து அவர்களைத் தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற பயிற்சியாளனை அம்பெய்திக் கொன்று விட்டேன். | |
train_tamilfemale_01860 | அடுத்த அத்தியாயத்திலிருந்து, என் கதையை தொடங்குவேன். | |
train_tamilfemale_00673 | ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால், நமது செந்தமிழ் நாட்டில், இவ்வளவு அற்புதமான சிற்பங்களைச் செய்த, மகா சிற்பிகள் இருந்தார்கள், அவர்களை ஆதரித்துப் போஷித்து, உற்சாகப்படுத்தி, அவர்களுடைய கலைத் திறனைப் பிரகாசிக்கச் செய்த, மன்னர்களும் இருந்தார்கள். | |
train_tamilfemale_02145 | இதற்கு நாம் மேலே குறிப்பிட்ட நிறுவனங்கள், ஒரு உதாரணம் என்றால், மற்றொரு உதாரணம், வால்மார்ட், பிக் பசார், ரிலையன்ஸ் பிரெஷ், மோர் ப்ளஸ், மோர் ஆகிய வணிக வளாகங்கள் ஆகும். | |
train_tamilfemale_02299 | அரண்மனை முன், ஒரு பெரிய குழியும், பல சிறிய குழிகள் இருப்பது போலவும், பெரிய குழியில் மட்டும், வழியவழியத் தண்ணீரை மக்கள் விடுவதையும். | |
train_tamilfemale_02282 | சிவபிரான் மாப்பிள்ளைக் கோலத்தில் வர பார்வதி பல வித ஆபரணங்களை அணிந்து அழகு தேவதையாக வந்தாள். | |
train_tamilfemale_01403 | ஆயிரத்தி ஏநூற்றி முப்பத்தி ஆறில் நாயகர்கள் வீழ்ச்சியுற ஆயிரத்தி எட்நூத்தி ஒன்னில் ஆங்கிலேயரிடம் சென்றது. | |
train_tamilfemale_02287 | இறப்பதற்கு முன், மன்னரிடம் அவள், நமது இரு குழந்தைகள், ஜித்து, வீர் ஆகியோரின் நலத்தை, மனத்தில் கொண்டு, நீங்கள் நான் இறந்தபின், மறுமணம் செய்து கொள்ளாமல் இருங்கள், என்று கூறினாள். | |
train_tamilfemale_02718 | நாம் நட்புறவுடன் இருப்போம், அப்படீங்கறதைத், தெரிவிக்கறதுக்காக, கை கொடுத்துக்குவாங்களாம். | |
train_tamilfemale_02329 | இதில் அதிகம் பயன்படுத்தப்படுவது. | |
train_tamilfemale_03172 | பிள்ளையாருக்குப் பிடித்தமானது கொழுக்கட்டை எனப்படும் மோதகம். | |
train_tamilfemale_02606 | விருந்து சாப்பிட்டு முடித்த பிறகு, சாந்தா, உல்லாசமாக மாமரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஊஞ்சலில், நீண்ட நேரம் ஆடினாள். | |
train_tamilfemale_01474 | ஸ்பீல்பெர்க்கிர்க்கும், போப்பிற்க்கும் இடையிலுள்ள லிஸ்டை அவளது எண்ணங்கள் விழுங்கியிருந்தன. | |
train_tamilfemale_01125 | ஒருவேளை, தற்போது இலங்கையில் இருக்கும், போலி இளவரசனுடைய ஒற்றனாக இருக்கலாம். | |
train_tamilfemale_01049 | இதாலோ, கால்வினோ, போர்ஹெ, ஸ்டாபன் ஹாக்கிங்ஸ், ஸ்டாபன் ஹாக்கிங்ஸ், ஜாக் லண்டன், மார்க்யூஸ், கார்ஃப்கா, ஹெர்மன் ஹெஸெ என உலக இயக்கியப்பரப்பில் முக்கியமானவர்களாக விளங்குகிற பலருடைய படைப்புகள், முன்வைக்கப்படுகின்றன. | |
train_tamilfemale_00294 | வயிற்றிலுள்ள குடல் மேலே, மார்பு வரை, விம்மி வந்து அடைத்தது. | |
train_tamilfemale_01145 | அந்த நகரத்தைக் கண்ட நம்பி ஆரூரர், காண்பினிய மணிமாடம் நிறைந்த நெடு வீதிக்கடல், நாகைக் காரோணம் மேவியிருந்தீரே என்று வர்ணித்தார். | |
train_tamilfemale_02244 | ஜஸ்வந்த் சிங், ஆண்டு வந்த மார்வார் ராஜ்யம், ராஜஸ்தானில், தார் பாலைவனத்திற்கு அருகிலிருந்தது. | |
train_tamilfemale_01562 | வழக்கம் போல் கையில் அமிர்த கிண்ணத்துடன் வந்தார், இளவரசன் அருகில் வந்ததும், பிக்ஷு அவனை உற்றுப் பார்த்தார், இளவரசன் கையை நீட்டி கிண்ணத்தை வாங்கி, அதில் இருப்பது, என்னவென்று பார்த்தான். | |
train_tamilfemale_02407 | அங்கு கலி புருஷன் வர மாட்டான் என்றார், அந்தச் சக்கரத்தின் இருசு, இந்த இடத்தில் தான் உடைந்தது. | |
train_tamilfemale_01146 | கடல் நாகை காரோணத்தில், மேவியிருந்த காயாரோகணப் பெருமானிடம், ஸ்ரீ சுந்தர மூர்த்தி நாயனார், என்னென்ன பொருள்கள் வேண்டுமென்று கேட்டார் தெரியுமா, மற்ற ஊர்களிலே போலப் பொன்னும், மணியும், ஆடை ஆபரணங்களும் கேட்டதோடு, நாகைப்பட்டினத்திலே, ஓர் உயர்ந்த சாதிக் குதிரையும், கேட்டுப் பெற்றுக் கொண்டார். | |
train_tamilfemale_01171 | வருஷங்களுக்கும் மேலா, பத்தாம் வகுப்புலயும், பாஸ் ரிசல்ட் காண்பிச்சுட்டு, வர்றோம் அதோட, ஸ்டேட் ரேங்க் வாங்குற ஸ்கூல்ல, ஃபெயிலியர் வந்தா, பேர் கெட்டுடாதா. | |
train_tamilfemale_00597 | இவர்களில், மூன்று சதவீதம்பேர், அகில இந்திய, நுழைவுத் தேர்வில், பங்குகொண்டு, இடம் கிடைத்து சேர்ந்திருக்கலாம். | |
train_tamilfemale_01619 | பூங்குழலி, கோபத்துடன் ஓடுவதை நிறுத்தி, திரும்பி நின்ற அதே சமயத்தில், இருள் சூழ்ந்த அக்காட்டகத்தே, ஓர் இனிய கீதம் எழுந்தது. | |
train_tamilfemale_01085 | போய்ட்டு வாங்க, உங்க திங்க்ஸெ, நான் பத்திரமா பார்த்துக்கறேன், என்று புரிந்துகொண்ட பார்வையோடு சொல்லி, எதிர்ஸீட்டில் அமர்ந்தாள் பேப்பர் விரித்து, கார்ட்டூன், பார்க்கலானாள். | |
train_tamilfemale_02000 | அதில் ஒரு குழந்தை, கீழே குனிந்து, அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது, இப்போ, வலி போயிடிச்சா, அதை பார்த்த மற்ற குழந்தைகளும், அவளை முத்தமிட்டனர். | |
train_tamilfemale_01325 | ஒரே கல்ப்பில் ஆரஞ்ச் ஜூஸ் அடித்து விட்டு எழுப்பும் கேள்விகள், சைட்டிஷ்ஷின் பிண்ணனி, போன்றவற்றைப் புரிந்து கொள்ளாமல், ஆர்லிக்ஸ் பையனைப் போல், ஒரே வாக்கியத்தில் அப்படியே சாப்பிடுவேன் என்று உளறுவதாலோ, பாபுவின் அறுசுவை டாட் காம் குறித்த புகழ் பெற்ற உப்மாவை குறிப்பிடுவதலோ, தெளிவான புரிதல் கிடைத்துவிடாது. | |
train_tamilfemale_03203 | ஒருநாள் சுகுமாரன், தன் நண்பனை, தன் பிறந்த தினத்தையொட்டி, வீட்டிற்கு சாப்பிட அழைத்தான். | |
train_tamilfemale_02484 | அதற்கு விக்கிரமன் மன்னர் ஆட்சிப் பொறுப்பை விட்டு விலகும்போது மூத்த மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது தொன்றுதொட்டு இருந்து வரும் ராஜபரம்பரை வழக்கம் ஆகவே அதற்குப் புறம்பாக நடக்க விக்கிரமசேனன் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. | |
train_tamilfemale_03153 | சூரியனின் பொன்னிரக் கிரணங்கள், சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீயாய் தகித்தது. | |
train_tamilfemale_01618 | பூங்குழலி, ஓடி ஓடி சலித்து போனாள். | |
train_tamilfemale_01463 | உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா மரியாதையாக வெளியே போ இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார். | |
train_tamilfemale_00213 | வடதிசையில், நம் பகைவர்கள், இன்னும் பலசாலிகளாக இருக்கிறார்களே, பார்த்திபேந்திரனும், மலையமானும், அங்கிருந்து பார்த்துக் கொள்வார்கள். | |
train_tamilfemale_01782 | தமிழிசை பாடகரான, ராஜாமுகம்மது, அடிப்படையில், ஸ்பெஷல்நாடக ராஜபார்ட் நடிகர், நூற்றுக்கும் மேலான பாடல்களை, ஒரே இரவில் பாடக்கூடியவர். | |
train_tamilfemale_01481 | கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. | |
train_tamilfemale_01694 | டில்லி, மற்றும் டில்லியை அடுத்த, குரிகாவ் நோய்டா பகுதி ஒருபுறம், மும்பை, புனே, குஜராத், என ஒரு பெரும் பகுதி மறுபுறம், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கேரளம், எனத் தென்னாட்டில், சில பகுதிகள், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், வடக்கு ஆந்திரம், என ஒரு பெரும் பகுதி, இப்படியான தோற்றத்தைக் காணலாம். | |
train_tamilfemale_01563 | வீணாக தீயுக்கும் மண்ணிற்க்கும் இரையாகும் விழிகளை தானம் செய்வோம் பார்வையற்று விழிகளுக்காக காத்து இருப்போர் நம் நாட்டில் பல்லாயிரம் பேர். | |
train_tamilfemale_01413 | ஏற்கெனவே முன்பு எமது சென்னை நெட்வொர்க் டாட் காம். | |
train_tamilfemale_00622 | ஏனிப்படி பேயறஞ்சாப்ல இருக்கீங்க என்று கேட்டாள் ராசாத்தி. | |
train_tamilfemale_02193 | உடனே சுக்ரீவன் இராமரும் இலட்சுமணனும் இருக்கும் இடத்திற்குப் போய் விபீஷணன் கூறியதைச்சொல்லி சமுத்திர ராஜனை ஆராதிக்கும் படி வேண்டினர். | |
train_tamilfemale_02410 | அப்போது, அவர் மனதில் தனக்கும், ஒரு மகன் இருந்தால், வாஞ்சையுடன் அவனை வளர்க்கலாமே, என்று அவர் மனதில் பட்டது. | |
train_tamilfemale_02077 | ஆனால் சிவநேசனின் மனப்போக்கில் திடீர் மாறுதல் ஏற்பட்டது. | |
train_tamilfemale_01797 | அப்போது வேலையாட்கள் மகாதுஷ்டனான அந்த இளவரசனை ஒழிக்கத் தீர்மானித்து அவனை அங்கேயே விட்டு விட்டு கரைக்குத் திரும்பி விட்டார்கள். | |
train_tamilfemale_01584 | டெல்லி, ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர், உதய்ப்பூர், ஆக்ரா என்று பல அரண்மனைகள், கோட்டை கொத்தளங்களைச் சுற்றிப் பார்க்கலாம். | |
train_tamilfemale_03089 | முதல் டிராக்டர், ஆயிரத்தி தொள்ளாயிரம், ஹால்ட் என்பவரால், செய்யப்பட்டது. | |
train_tamilfemale_01947 | பனிப்பாறையின் மேடுபள்ளங்களுக்கேற்ப, ஸ்கீ விளையாடுபவர், வளைந்து, நெளிந்து, சறுக்கிச் செல்வதுபோல், பேரண்ட் வெளியின் வெற்றிடத்தின் குண்டு குழிகளுக்கேற்ப, கோள்கள் நகர்கின்றன, இதையே நாம், நிறையீர்ப்பு ஆற்றல் என்று நாம் கருதுகிறோம், என்று ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் பொது சார்பியல் கொள்கையில், விளக்குகிறார். | |
train_tamilfemale_03129 | இறுதியாக, கழுத்தில் வெல்வெட் துணியால் கழுத்தணி, டை போல சுற்றி, அதையும் தைத்து விடுங்கள். | |
train_tamilfemale_02768 | ராஜபோக வாழ்க்கை வாழ்ந்த நிக்கோலஸ், குடும்பத்திர்க்கு, கறுப்பு ரொட்டி, தேனீர் மட்டுமே வழங்கப்பட்டது. | |
train_tamilfemale_01812 | போதிசத்வரும் பார்த்தீர்களா நாம் வந்து நாம் வந்த இவ்வளவு தூரத்தில் மழை பெய்யவே இல்லை ஈரக் காற்றும் வீசவில்லை ஆகாயத்தில் ஒரு மேகம் கூட தெண்படவில்லை. | |
train_tamilfemale_02287 | முகலாய மன்னரான பாபர் இந்தியாவிற்குள் புகுந்து பானிபெட் யுத்தத்தில் இப்ராகிம் லோதியைத் தோற்கடித்து தில்லி சிம்மாசனத்தைக் கைப்பற்றினார். | |
train_tamilfemale_02140 | குழந்தைகளுக்கு காதுகளில் ஏற்படும் சில பிரச்னைகளுக்கு ஆல்கஹால் சர்க்கரை நல்ல மருந்தாக பயன்படுகிறது. |
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 12