id stringlengths 12 25 | category stringclasses 2
values | work stringclasses 19
values | work_tamil stringclasses 19
values | poem_number int64 1 500 ⌀ | title_tamil stringlengths 9 249 | title_english stringlengths 9 213 ⌀ | poet stringlengths 5 76 ⌀ | thinai stringclasses 42
values | thurai stringclasses 99
values | situation stringclasses 440
values | sung_to stringclasses 143
values | group stringclasses 61
values | composer stringclasses 11
values | melody stringclasses 6
values | tamil_text stringlengths 72 28.8k | english_translation stringlengths 101 41.6k | notes stringlengths 48 32.3k ⌀ | meanings stringlengths 204 81.3k ⌀ | tamil_urai stringlengths 131 44.6k ⌀ | source_url stringclasses 28
values |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
natrinai_0001 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 1 | நற்றிணை 1, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது | Natrinai 1, Kapilar, Kurinji Thinai – What the heroine said to her friend | Kapilar | Kurinji Thinai | null | What the heroine said to her friend | null | null | null | null | நின்ற சொல்லர், நீடு தோன்று இனியர்,
என்றும் என் தோள் பிரிபு அறியலரே,
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போலப்
புரைய மன்ற, புரையோர் கேண்மை, 5
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்து அருளி,
நறுநுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே. | Truthful in speech and eternal in sweet
friendship, he does not know parting
from my arms.
My friendship with my esteemed man
is great like sweet honey made in the tall
sandal trees by bees that collect cool pollen
from lotus flowers.
Just as the world cannot live without
water, I cannot exist without him.
He loves me... | Notes: பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘அவனறிவு ஆற்ற அறியுமாகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவில் ஏற்றற்கண் நிகழும் தலைவி கூற்றுக்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – தாமரைத்தாது தலைவன் உள்ளத்திற்கும் சந்தனத்தாது தலைவியின் உள்ளத்திற்கும் உவமையா... | Meanings: நின்ற சொல்லர்- he is truthful in words, நீடு – always, for long, தோன்று இனியர் – he appears to be sweet-natured, என்றும் – forever, always, என் தோள் – my arms, பிரிபு – separation (தொழிற்பெயர்), அறியலரே – he does not know (ஏ – அசைநிலை, an expletive), தாமரைத் தண் தாது – cool lotus pollen, ஊதி – buzzing, மீமிசை... | அவர் சொல்லிய சொல்லிலிருந்து மாறுபடாதவர். இனிமையாகப் பழகும் தன்மையுடையர். என் தோள்களை என்றும் பிரிதலை அறியாதவர். (வண்டு) தாமரைப்பூவின் குளிர்ச்சியான தாதினைத் துளைத்து எடுத்து, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு போய்ச் சேர்த்து வைத்த இனிய தேனைப் போல உறுதியாக உயர்வினை உடையது உயர்ந்தோராகிய தலைவரின் நட்பு. நீ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0002 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 2 | நற்றிணை 2, பெரும்பதுமனார், பாலைத் திணை – கண்டோர் சொன்னது | Natrinai 2, Perumpathumanār, Pālai Thinai – What those who saw the couple said | Perumpathumanār | Pālai Thinai | null | What those who saw the couple said | null | null | null | null | அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவையங்காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம்மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந்தலைக் குருளை, மாலை, 5
மரல் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று
எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும... | More cruel than the heavy rains with winds
and thunder that cause rocks to roll down in the tall
mountains, is the heart of the young man who leaves
at night and allows the delicate young woman with
sharp teeth to walk ahead of him on the wasteland
paths, where, in the evenings, strong tiger cubs with
big heads, hiding... | Notes: தலைவனையும் தலைவியையும் பாலை நிலத்தில் கண்டவர்கள் சொன்னது. இறைச்சிப் பொருள் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குடிப்பிறப்புடையாளை மயக்கி அவள் சுற்றத்தினின்றும் பெயர்த்து அழைத்தேகுகின்றான் என்னும் இறைச்சிப் பொருள் தோன்றக் காலொடு பட்ட மாரி மால் வரை மிளிர்க்கும் உரும் என்றார் என்க. ஒளவை துரைசாமி உரை – ‘பொழுதும் ஆறும் உட... | Meanings: அழுந்துபட வீழ்ந்த – rooted deeply, பெருந்தண் குன்றத்து – in the tall cool mountains, ஒலி வல் ஈந்தின் – with flourishing date palm trees, உலவை அம் காட்டு – in the forest with wind, (அம் சாரியையுமாம்), ஆறு செல் மாக்கள் – those who go on the wasteland path, சென்னி எறிந்த – attacking their heads, செம்மறுத் தலைய –... | ஆழ்ந்துபட்டு இருந்த பெரிய குளிர்ச்சியான மலையின் தழைத்த மிகுந்த வலிமையுடைய ஈத்த மரங்களையுடைய காற்று சுழன்று வீசும் காட்டில், வழியில் செல்லும் மக்களின் தலையில் மோதியதால் குருதி படிந்த மாறுபட்ட தலையையும், குருதி பூசிய வாயையும், பெரிய தலையையும் உடைய புலிக்குட்டிகள் மாலை நேரத்தில் தாம் பதுங்கியிருக்கும் மரல் செடிகளை நிமிர்ந... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0003 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 3 | நற்றிணை 3, இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது | Natrinai 3, Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart | Ilankeeranār | Pālai Thinai | null | What the hero said to his heart | null | null | null | null | ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்,
வில் ஏர் உழவர் வெம்முனைச் சீறூர்ச் 5
சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ யானே, உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே? | In the dark evening hour which saps strength,
did I not think of the young woman who is sweet
like deeds wished and done, who lights splendid
lamps in our house with sorrow,
when I was in the wasteland with harsh villages,
where bows are livelihood to bandits,
and untutored children draw squares the shape
of touchstone... | Notes: முன்னொரு காலத்தில் பொருள்வயின் பிரிந்த கணவன் பின்னும் பொருள்தேடும்படி கருதிய தன் நெஞ்சிடம் சொன்னது. ஒளவை துரைசாமி உரை – ‘உள்ளிய வினைமுடித்தன்ன இனியோள்’ என வருவதை ‘ஆங்கவை ஒருபாலாக’ (தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல் 12) என்ற நூட்பாவில் கூறப்படும் இன்புறல் என்னும் மெய்ப்பாட்டுக்கும், முன்பு நிகழ்ந்ததனைக் கூறிப் போகாத... | Meanings: ஈன் பருந்து – a female kite that has hatched her eggs, a female kite with young chicks, a female kite that has laid eggs, உயவும் – it grieves, வான் பொரு – hitting the sky, touching the sky, நெடுஞ்சினை – tall branches, பொரி – rough, cracked, parched, அரை – tree trunk, வேம்பின் புள்ளி நீழல் – neem tree’s dotted... | குஞ்சுகளைப் பெற்ற பருந்து வருந்தி வாழும் வானைத் தொடும் உயர்ந்த கிளைகளையும் பொரிந்த அடியையும் உடைய வேப்ப மரத்தின் புள்ளி போன்ற நிழலில், பொன்னை உரைத்துப் பார்க்கும் கல்லைப் போன்ற அரங்கை வட்டியால் கீறி, நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு, தொழில் எதுவும் கற்காத சிறுவர்கள் பாண்டில் விளையாடும், வில்லால் வழியில் செல்லுபவர்களைத் துன... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0004 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 4 | நற்றிணை 4, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 4, Ammovanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby | Ammovanār | Neythal Thinai | null | What the heroine’s friend said to her, as the hero listened nearby | null | null | null | null | கானலஞ்சிறுகுடிக் கடல் மேம் பரதவர்
நீல் நிறப் புன்னைக் கொழு நிழல் அசைஇத்,
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,
‘அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை 5
அரிய ஆகும் நமக்கு’ எனக் கூறின்,
கொண்டும் செல்வர் கொல் தோழி, உமணர்
வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சக... | If we tell the lord of the shores,
……….where fishermen from a village
……….near the seashore rest under the thick
……….shade of blue punnai trees drying their
……….knotted nets with beautiful gaps,
……….and waiting for the right time to go to sea,
that our life here will become difficult
if mother knows about your love aff... | Notes: அலர் ஏற்பட்டதைக் கூறி வரைவு கடாயது. அம் கண் அரில் வலை (4) – ஒளவை துரைசாமி உரை – அழகிய கண்களோடு கூடித் தம்மிற் பின்னிச் சிக்குண்டு கிடக்கும் வலை, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – முறுக்குண்டு கிடந்த வலை. உறைவின் ஊர்க்கு (12) – ஒளவை துரைசாமி உரை – உறைவு இன் ஊர்க்கு, உறைதற்கு இனிதாகிய ஊர்க்கு, பொ. வே. சோமசுந்தர... | Meanings: கானல் அம் சிறுகுடி – small village on the seashore (அம் – சாரியை), beautiful village on the seashore, கடல் மேம் பரதவர் – fishermen who desire and go to the sea (மேம் பரதவர் – விரும்பும் பரதவர், ஈற்று மிசை உகரம் மெய்யொடும் கெட்டு மேம் பரதவர் என வந்தது), நீல் நிற – blue colored (நீல் – கடைக்குறை, poetical licen... | கடற்கரைச் சோலையில் உள்ள சிறுகுடியிலிருந்து கடல் மேல் செல்லும் பரதவர் நீல நிறமுடைய புன்னையின் அடர்ந்த நிழலில் தங்கி, குளிர்ச்சியுடைய கடல் பரப்பில் செல்வதற்கு உரிய நேரம் பார்த்து, முறுக்குண்டு கிடந்த வலையை உலர்த்தும் நெய்தல் நிலத் தலைவனுடன் ஏற்பட்ட உறவினால் நமக்கு உண்டான பழிச் சொல்லை அன்னை அறிந்தால், இங்கு வாழ்வது நமக்கு... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0005 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 5 | நற்றிணை 5, பெருங்குன்றூர் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 5, Perunkundrūr Kizhār, Kurinji Thinai – What the heroine’s friend said to her | Perunkundrūr Kizhār | Kurinji Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | நிலம் நீர் ஆரக், குன்றம் குழைப்ப,
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர் கால்யாப்பக்,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப்
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி 5
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்
அரிதே, காதலர்ப் பிரிதல் இன்று செல்
இகுளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதே. | The cold season with wind and rain sprinkles
has confused your crying eyes that have sent
a message, making your lover’s departure
difficult in this early dew season when cold
winds bring back friends who are leaving today,
when clouds that poured heavily rise up in the
south and roar, the earth gets filled with water,... | Notes: வினைவயின் (பொருளீட்டும் பணியின் பொருட்டு) செல்லும் தலைவனின் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது. குழைப்ப (1) – ஒளவை துரைசாமி உரை – குழை இளந்தளிர், குழைப்ப என்றது பெயரடியாகப் பிறந்த வினை. கால்யாப்ப (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நெருங்கி வளர. இறைச்சிப் பொருள் – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறவ... | Meanings: நிலம் நீர் ஆர – the land filled with water, குன்றம் குழைப்ப – the mountains flourish, அகல்வாய்ப் பைஞ்சுனை – wide-mouthed fresh springs, பயிர் கால் யாப்ப – the plants have grown densely, the plant stems are entangled, குறவர் கொன்ற குறைக் கொடி – the vines that mountain dwellers have reduced/chopped, நறைப் பவர் ... | நிலம் நீரால் நிரம்பப்பெற்று, மலையில் உள்ள மரம் செடி தழைப்ப, அகன்ற வாயையுடைய சுனையில் நீர் நிறைந்ததால் அங்குள்ள பயிர் நெருங்கி வளர, மலையில் வாழ்பவர்களால் வெட்டப்பட்ட நறைக்கொடி, நறுமணமுடைய வைரம் பாய்ந்த சந்தன மரத்தைச் சுற்றிப் படர, பெருமழையைப் பொழிந்த தொழிலையுடைய முகில்கள் தென்திசையின்கண் எழுந்து ஒலிக்கும் முன்பனிக் காலத... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0006 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 6 | நற்றிணை 6, பரணர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படி | Natrinai 6, Paranar, Kurinji Thinai – What the hero said to his heart, as the heroine’s friend listened nearby | Paranar | Kurinji Thinai | null | What the hero said to his heart, as the heroine’s friend listened nearby | null | null | null | null | நீர் வளர் ஆம்பல் தூம்புடைத் திரள் கால்
நார் உரித்தன்ன மதனின் மாமைக்,
குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,
திதலை அல்குல், பெருந்தோள் குறுமகட்கு,
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே, 5
‘இவர் யார்?’ என்குவள் அல்லள், முனாஅது
அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி
எறி மட மாற்கு வல்சி ஆகும்
வல் வில் ஓரி கானம் நாறி,
இரும் பல் ஒலிவரும... | Her dark beauty is like the fiber-removed
stems of thick, white waterlilies and her
moist eyes are like blue waterlilies that rise
up. The loins of this beauty have yellow
beauty spots.
If there is a messenger to talk to this pretty
young woman with thick arms,
she without malice will not ask, “who is he?”
The young ... | Notes: இரவுக்குறி வேண்டிச் சென்ற தலைவன், தலைவியிடம் சென்று கூறுவாரை நான் பெறவில்லையே என்று வருந்திக் கூறியது. நற்றிணை 6 – அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி, நற்றிணை 24 – விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு, நற்றிணை 372 – பெண்ணைத் தேனுடை அழி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இருஞ்சேற்று ஆழப் ... | Meanings: நீர் வளர் ஆம்பல் – white waterlily flowers growing in the water, தூம்புடை திரள் கால் – thick stems with hollow cores, நார் உரித்தன்ன – like the fibers removed, மதனின் – with beauty, மாமை – dark color, குவளை அன்ன – like blue waterlilies, ஏந்து எழில் – with beauty, very beautiful, lifted and beautiful, மழைக் கண... | நீரில் வளரும் ஆம்பலின் துளையுடைய, நார் உரித்த தண்டு போல் அழகையுடையவள் என் காதலி. உயர்ந்து மலரும் குவளை மலர்களை ஒத்தது அவளுடைய நீர் நிறைந்த கண்கள். தேமல் உடையது அவளுடைய அடி வயிறு. பெரிய தோளையுடைய இளம் பெண்ணான அவளிடம் யாராவது தூதாகச் சென்றால், அவரை நோக்கி, இவர் யார் என்று கேட்க மாட்டாள். நாம் வந்திருக்கின்றோம் என்று பெரி... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0007 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 7 | நற்றிணை 7, நல்வெள்ளியார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 7, Nalvelliyār, Pālai Thinai – What the heroine’s friend said to her | Nalvelliyār | Pālai Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | சூருடை நனந்தலைச் சுனை நீர் மல்கப்,
பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்பக்,
கல் அலைத்து இழிதரும் கடுவரல் கான்யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்பத்,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் 5
இன்னே பெய்ய மின்னுமால் தோழி,
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ்சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங்காட்டே. | The springs in the vast land with gods
are brimming with water,
roaring waterfalls cascade down tall
mountains, and rapid, deep forest
streams with rolling stones, where bamboo
poles disappear attack the forests with
uproar.
The sky is pouring rain, loud thunder
roars with lightning strikes, oh friend,
and an elephant ... | Notes: அறத்தொடு நின்ற பின்பு திருமணம் செய்து கொள்ளாமல் தலைவன் பொருள்தேடி நெடுந்தூரம் பிரிந்து போனான். அந்நிலை ஆற்றாத தலைவிக்குத் தோழி கூறியது. ஒளவை துரைசாமி உரை – இவர் மதுரை நெல்வெள்ளியார் என்று கோடற்கும் இடமுண்டு. சூருடை (1) – ஒளவை துரைசாமி உரை – தெய்வம் உறையும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சத்தை உடைய. மூங... | Meanings: சூருடை நனந்தலை – wide space with gods, fierce wide space, சுனை நீர் மல்க – spring waters are full, பெருவரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப – waterfalls roar in the huge mountain ranges, கல் அலைத்து இழிதரும் – rolling rocks and flowing down, கடுவரல் கான் யாற்று – in the rapidly flowing forest stream, கழை மாய் நீத்தம் ... | தோழி! வெள்ளை அரிசியின் நெல்லை (ஐவன அரிசியின் நெல்லை) உண்ட நெற்றியில் வரியுடைய யானை, குளிர்ச்சியுடைய நறுமண மலைச்சரிவில் உறங்கும் சிறிய இலைகளையுடைய சந்தன மரங்கள் வாடிய பெரிய காட்டில், அச்சத்தை உடைய (கடவுள்கள் உறையும்) அகன்ற அகன்ற இடத்தில் உள்ள சுனைகளில் நீர் நிறையவும், பெரிய மூங்கில்களையுடைய மலைச்சரிவில் அருவிகள் ஆரவாரிக... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0008 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 8 | நற்றிணை 8, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது | Natrinai 8, Poet is Unknown, Kurinji Thinai – What the hero said | Unknown | null | null | null | null | null | null | null | அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,
பல்பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,
திரு மணி புரையும் மேனி மடவோள்
யார் மகள் கொல்? இவள் தந்தை வாழியர்!
துயரம் உறீஇயினள் எம்மே; அகல்வயல் 5
அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்
தண் சேறு தாஅய் மதனுடை நோன் தாள்
கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்
திண் தேர்ப் பொறையன் தொண்டி
தன் திறம் பெறுக... | Whose daughter is she, the delicate young woman
with a sapphire-like body, sorrow in her pretty,
moist eyes with red lines, wearing a skirt with
many flowers and leaves on her loins? May her
father live long! She has caused me great suffering!
May the mother who gave birth to her receive
equal worth of Thondi city of ... | Notes: இயற்கைப் புணர்ச்சியின் இறுதிக்கண் தலைவியை அவள் தோழியருடன் கண்ட தலைவன் இவள் எனக்கு எய்தற்கு அரியாளாம் என ஆற்றானாகி, அவள் பெற்றோரை வாழ்த்தியது. புலவரின் பெயர் – ஒளவை துரைசாமி உரை – இச்சான்றோர் பெயர் அச்சுப்படிகளில் காணப்படவில்லை. ஆயினும் புதுப்பட்டி ஏட்டிலும் தேவர் ஏட்டிலும் கண்ணகனார் என்ற குறிப்பு ஒன்று துரைக்கூற... | Meanings: அல்கு படர் உழந்த – attained great sorrow, அரி மதர் மழைக்கண் – proud moist eyes with red lines, luscious moist eyes with red lines, பல்பூம் பகைத் தழை – many different kinds of flowers and leaves, நுடங்கும் – swaying, அல்குல் – loins, திரு மணி புரையும் மேனி – beautiful sapphire-like body, மடவோள் யார் மகள் கொல் ... | மிகுந்த துன்பத்தில் உழந்த செவ்வரி படர்ந்த மதர்த்த கண்களையும் பலவகை மலர்களுடன் மாறுபடத் தொடுக்கப்பட்ட தழையுடன் அசையும் அல்குலையும், அழகிய நீலமணியை ஒத்த மேனியையும் உடைய இந்த இளம்பெண் யார் மகள்? இவளுடைய தந்தை நீடு வாழ்வாராக! அசையாத நெஞ்சையுடைய எமக்கே இவள் துயரம் செய்தாள். அகன்ற வயல்களில் உழவர்களால் அரியப்பட்டும் நெற்கதிரை... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0009 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 9 | நற்றிணை 9, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது | Natrinai 9, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the hero said to the heroine | Chēramān Pālai Pādiya Perunkadunkō | Pālai Thinai | null | What the hero said to the heroine | null | null | null | null | அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,
அலமரல் வருத்தம் தீர, யாழ நின்
நல மென் பணைத்தோள் எய்தினம் ஆகலின்,
பொரிப் பூம் புன்கின் எழில் தகை ஒண் முறி 5
சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,
நிழல் காண்தோறும் நெடிய வைகி,
மணல் காண்தோறும் வண்டல் தைஇ,
வருந்தாது ஏகுமதி வால் எயிற்றோயே,
மா நனை கொழுதி மகிழ் க... | On our path cuckoos will prick mango buds
and sing happily in the fragrant, cool groves of the
forest. Faultless, curious travelers will think you
are a goddess. My distressing sorrow will end if
I embrace your fine arms that resemble bamboo.
There are a few towns on our way. Whenever
there is heavy shade, we can rest... | Notes: உடன்போக்கில் தலைவியை அழைத்துச் செல்லும் தலைவன் கூறியது. ஒளவை துரைசாமி உரை – உடன்போக்கில் தலைவன் இடைச்சுரத்திற் கூறுதற்கு இதனைக் காட்டுவர் இளம்பூரணர். ‘ஒன்றாத் தமரினும்’ (தொல்காப்பியம், பொருள் 41) எனத் தொடங்கும் நூற்பா உரையில் ‘அப்பாற்பட்ட ஒரு திறத்தானும்’ என்றதனானே தலைவியிடத்துத் தலைவன் கூறின பலவுங் கொள்க, என்று... | Meanings: அழிவு இலர் முயலும் – those who do faultless things, ஆர்வ மாக்கள் – anxious people, வழிபடு தெய்வம் – goddess who is worshipped, கண் கண்டாஅங்கு – like they saw with their eyes (கண்டாஅங்கு – அளபெடை), அலமரல் வருத்தம் – distressing sorrow, தீர – to end, யாழ – அசை, an expletive, நின் – your, நல மென் – fine delicate... | வெள்ளைப் பற்களை உடையவளே ! மா மரத்தின் அரும்புகளைக் கொத்தி மகிழ்ந்து குயில்கள் பாடும் நறுமணம் உடைய குளிர்ந்த சோலைகளை உடையது காடு. நாம் செல்லும் வழியில் சிறிய பல ஊர்கள் உள்ளன. அழிவு இல்லாத செயல்களைச் செய்யும் ஊக்கமுடைய மக்கள், தாம் வணங்கும் கடவுளைத் தங்கள் கண்முன் கண்டாற்போல், எம் சுழற்சியுடைய துன்பம் நீங்கும்படி, உன்னுட... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0010 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 10 | நற்றிணை 10, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 10, Poet Unknown, Pālai Thinai – What the heroine’s friend said to the hero | Unknown | null | null | null | null | null | null | null | அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங்கூந்தல் நரையொடு முடிப்பினும்,
நீத்தல் ஓம்புமதி, பூக்கேழ் ஊர!
இன் கடுங்கள்ளின் இழை அணி நெடுந்தேர்க் 5
கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்
வெண்கோட்டு யானைப் போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்தன்ன, நின்
பிழையா நல் மொழி தேறிய இவட்கே. | O lord of the town laden with flowers!
Even if her lifted, beautiful breasts sag
and even if her sapphire-colored hair
draping on the back of her golden body
turns white, please do not abandon her!
She understands clearly your faultless
words that are like the unfailing spear
of Palaiyan of Pō ōr who owns elephants
wi... | Notes: தலைவி விரும்பியவாறு தோழி இருவரையும் ஒருப்படுத்தி, தலைவியை தலைவன்பால் சேர்த்து, ‘இவளை நன்றாக பாதுகாப்பாயாக’ என்று தலைவனிடம் கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘இறப்பே நிகழ்வே எதிரதென்னும்’ (தொல்காப்பியம், பொருள் 503) என்று தொடங்கும் நூற்பா உரையின்கண் இப்பாட்டைக் காட்டி, ‘நிகழ்காலம் இளமைப்பருவம் என்பது தோன்ற வந்தது; இதன... | Meanings: அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் – even if her lifted beautiful breasts sag, பொன் நேர் மேனி – gold like body, மணியின் தாழ்ந்த – sapphire-like and hanging, நல் நெடுங்கூந்தல் – fine long hair, நரையொடு முடிப்பினும் – even if the braids become white, நீத்தல் ஓம்புமதி – please do not abandon her (மதி – முன்னிலை அ... | மலர்கள் நிறைந்த பொழில்களை உடைய ஊரனே! இனிய கடுப்புடைய கள்ளையும் அணி செய்யப்பட்ட நெடிய தேர்களையுடைய வெற்றியுடைய சோழ மன்னர்கள் கொங்கு நாட்டவரை ஒடுக்கும் பொருட்டு, வெண்மையான கோடுகளைக் கொண்ட களிற்று யானைகளையுடைய போஒர் என்ற ஊர்க்கு உரிய தலைவனான தளபதி பழையன் என்பவன் எறிந்த வேல் தவறாமல் வெற்றி அளித்தாற்போல், உன்னுடைய பிழையில்ல... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0011 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 11 | நற்றிணை 11, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 11, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend says to her, as the hero listened nearby | Ulōchanār | Neythal Thinai | null | What the heroine’s friend says to her, as the hero listened nearby | null | null | null | null | பெய்யாது வைகிய கோதை போல
மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல்,
ஒழிக மாள நின் நெஞ்சத்தானே, 5
புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர,
நிலவு விரிந்தன்றால் கானலானே. | Your body is distressed
like an unworn wilted garland,
since you missed
the tryst that he suggested.
You are hurt by slanderers
who talk ill of you and you
sulk, thinking that your lover
will not come. Destroy such
thoughts that are in your heart!
When the moonlight spreads
on the seashore grove,
he will come in his c... | Notes: காவல் மிகுதியால் தலைவனைக் கூடப் பெறாமையால் ஆற்றாது வருந்திய தலைவிக்குக் கூறுவாளாய், சிறைப்புறத்திருந்த தலைவன் வரைவொடு வருமாறு தோழி சொல்லியது. ஒளவை துரைசாமி உரை – இஃது அலர் அறிவுறுத்து வரைவு கடாவும் ஒரு நெறி. பூ மணல் (6) – ஒளவை துரைசாமி உரை – பூக்கள் விழுந்து கிடைக்கும் மணல், வெண்மை நிறமும் மென்மைப் பண்பும் உடைமை... | Meanings: பெய்யாது – not worn, வைகிய – lying around, கோதை போல – like a garland, மெய் – body, சாயினை – you are distressed, அவர் செய் குறி – the tryst that he had indicated, பிழைப்ப – missed, உள்ளி – thinking, நொதுமலர் – strangers, நேர்பு உரை – the gossip that has risen, தெள்ளிதின் – clearly, வாரார் என்னும் – that he wil... | அவருடையக் குறியைத் தப்பியதால் (குறிப்பிட்டபடி அவரைச் சந்திக்க முடியாமல் போனதால்), உன்னுடைய உடல் அணியாது தங்கிப் போன மலர் மாலையைப்போல் தளர்ந்து விட்டது. பழிச்சொற்கள் கூறுபவர்களை நினைத்து நீ வருந்துகின்றாய். உறுதியாக அவர் வர மாட்டார் என்று நீ நினைத்து ஊடல் கொண்டாய். உன் நெஞ்சில் எழும் இந்த எண்ணங்களை ஒழித்து விடு. அலைகள் ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0012 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 12 | நற்றிணை 12, கயமனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 12, Kayamanār, Pālai Thinai – What her heroine’s friend said to the hero | Kayamanār | Pālai Thinai | null | What her heroine’s friend said to the hero | null | null | null | null | விளம்பழம் கமழும் கமஞ்சூல் குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் 5
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்
‘இவை காண்தோறும் நோவர் மாதோ,
அளியரோ அளியர் என் ஆயத்தோர்’ என
நும்மொடு வரவு தான் அயரவும்,
தன் வரைத்து அன்றியும் க... | Wood apple fragrances in pots that
are filled with curds, their noisy
churning rods tied to posts and reduced
by circling ropes, are the first sounds of
dawn when darkness leaves.
She hides her body well and removes
from her feet beautiful jingling anklets,
and along with her ball, so splendidly
decorated with lines, ... | Notes: தலைவனோடு தலைவி செல்லத் தோழி உடம்படுத்தினாள். பின்பு தலைவியிடம் அவ்வுடன்போக்கு இப்போது வேண்டாம் என்று நிறுத்தினாள். தலைவனிடம் சென்று, ‘தலைவி உன்னுடன் வர உடன்பட்டாள். ஆனால் தோழியர் நோகுவர் என வருந்தினாள்’ என்று அச்செலவைத் தவிர்த்தாள். திருமணத்திற்கு முயல்க என அறிவுத்துகின்றாள். ஒளவை துரைசாமி உரை – ‘தலைவரு விழும நி... | Meanings: விளம்பழம் கமழும் – wood apple fragrance spreads, Limonia acidissima, கமஞ்சூல் குழிசி – pots that are full (கம என்னும் உரிச்சொல் நிறைவுப் பொருளில் வந்தது), பாசம் தின்ற – ropes have been scarred, ropes have been reduced, தேய் கால் மத்தம் – churning rod bases have been reduced, நெய் தெரி இயக்கம் – churning to ma... | பெரிய தயிர்ப்பானையில் உள்ள நாற்றத்தைப் போக்க விளாம்பழத்தை இட்டு வைத்துள்ளனர். அதன் மணம் கமழ்கின்றது. தயிர்ப்பானையைத் தயிர் கடையும் கயிறு ஆடித் தேய்த்ததால், மத்தின் தண்டு தேய்ந்திருக்கின்றது. வெண்ணை எடுக்கக் கடைவதால் அதன் ஓசை அதிகாலையில் தூணின் அடியிலிருந்து முழங்கும். அப்பொழுது அவள் தன் உடம்பை மறைத்து, காலில் உள்ள சிலம... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0013 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 13 | நற்றிணை 13, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 13, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her | Kapilar | Kurinji Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய
அழாஅதீமோ, நொதுமலர் தலையே!
ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த
பகழி அன்ன சேயரி மழைக் கண்
நல்ல பெருந்தோளோயே! கொல்லன் 5
எறி பொன் பிதிரின் சிறுபல காய
வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி
மயில் அறிபு அறியா மன்னோ,
பயில் குரல் கவரும் பைம்புறக் கிளியே. | Oh friend with beautiful, thick arms
and moist eyes with red lines that
look like arrows plucked from bodies
of animals killed by the guards! You
are not getting up and chasing birds!
Do not cry ruining your beauty,
in this place of strangers,
where vēngai trees with many seeds
drop small flowers looking like gold
spa... | Notes: இயற்கைப் புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் உடல் வேறுபாடு கண்ட தோழி, இந்த வேறுபாடு எதனால் ஆயிற்று என்று கேட்டதற்கு தலைவி மறைத்துக் கூறியதால், அவளது களவொழுக்கத்தைத் தான் அறிந்ததைத் தோழி சொல்லியது. பறித்த பகழி அன்ன – நற்றிணை 13 – மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சேயரி மழைக் கண், நற்றிணை 75 – கொடு வில் கானவன் கோட... | Meanings: எழாஅ ஆகலின் – as you did not rise up (எழாஅ – அளபெடை), எழில் நலம் தொலைய அழாஅதீமோ – do not cry losing your beauty (அளபெடை, அழாதி என்ற முன்னிலை வினை ஈறு நீண்டது, மோ – முன்னிலையசை, an expletive of the second person), நொதுமலர் தலையே – in the place of strangers (ஏ – அசைநிலை, an expletive), ஏனல் காவலர் மா வீழ்த்துப்... | தினைக் காவலர் விலங்குகளைக் கொன்று பறித்த அம்பைப் போன்ற செவ்வரிகள் கொண்ட ஈர கண்களையும் நல்ல பெரிய தோளையுமுடையவளே! கொல்லனின் உலைக்களத்தில் அடிக்கும் இரும்பின் பொறி சிதறுவது போலச் சிறிய பலகாய்களையுடைய வேங்கை மரத்தின் மலர்கள் உதிர்கின்ற உயர்ந்த மலையின் கூட்டில் இருக்கும் மயில்கள் அறியாது என்று கருதி, நெருங்கிய தினைக் கொத்த... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0014 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 14 | நற்றிணை 14, மாமூலனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது | Natrinai 14, Māmoolanār, Pālai Thinai – What the heroine said to her friend | Māmoolanār | Pālai Thinai | null | What the heroine said to her friend | null | null | null | null | தொல்கவின் தொலைய, தோள் நலம் சாஅய,
நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர்,
நட்டனர் வாழி தோழி, குட்டுவன்
அகப்பா அழிய நூறி செம்பியன்
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது 5
அலர் எழச் சென்றனர் ஆயினும், மலர் கவிழ்ந்து
மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல்
இனம் சால் வயக் களிறு பாந்தள் பட்டென,
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்
நெடு... | Making me lose my original beauty
and letting my arms lose their beauty,
he left me not showering his graces.
However, he is kind, and loves me.
May he live long, oh friend!
My lover went to the mountains,
where bent kānthal flowers
are open with huge petals,
a strong male elephant belonging
to a herd has been caught ... | Notes: தலைவனின் இயல்புகளைப் பழித்த தோழியிடம் அவனுடைய நல்ல இயல்புகளைத் தலைவி உரைத்தது. குட்டுவன் (3) – ஒளவை துரைசாமி உரை – பல்யானைச் செல்கெழு குட்டுவனாகிய சேரமான். இறைச்சிப் பொருள் – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – களிறு பாந்தளின்வாய்ப் பட்டதாகப் பிடி பிளிறும் பூசல் சென்று விடரகத்து ஒலிக்குமென்றது, தலைவன் பிரிவால் ... | Meanings: தொல் கவின் தொலைய – previous beauty to be lost (தொலைய – வினையெச்சம்), தோள் நலம் சாஅய – beauty of arms to be lost (சாஅய – வினையெச்சம், அளபெடை), நல்கார் – one who does not give his graces (முற்றெச்சம்), நீத்தனர் ஆயினும் – even if he has left, நல்குவர் – he will give, he will shower his graces, நட்டனர் – he is ki... | தோழி! பூக்கள் கட்டு அவிழ்ந்து பெரிய இதழ்கள் மலர்ந்த காந்தள் மலர்களையுடைய மலைச்சரிவில், இனத்துடன் இருந்த வலிய களிற்று யானை ஒன்று மலைப்பாம்பின் வாயில் பட்டதால், கண் உறங்கமுடியாத துக்கத்தால் அஞ்சிக் கதறி அதன் பிடி யானை புலம்ப, நெடிய மலைப்பிளவில் அதன் குரல் எதிரொலிக்கும், விரைந்து செல்லும் குதிரைகளையுடைய புல்லி என்ற குறுநி... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0015 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 15 | நற்றிணை 15, பாண்டிய மன்னன் அறிவுடை நம்பி, நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 15, Pāndiyan King Arivudainampi, Neythal Thinai – What the heroine’s friend said to the hero | Pāndiyan King Arivudainampi | Neythal Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்
நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!
பூவின் அன்ன நலம் புதிது உண்டு
நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே, 5
நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி
மாசு இல் கற்பின் மடவோள் குழவி
பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு,
சேணும் எம்மொடு வந்த
நாணும் விட்டேம், அலர்க இவ் ஊரே. 10 | Oh Lord of the shores where roaring
waves pile sand on the shores and
northerly winds blow, creating dunes
that look like swaying, fine fabric!
You took her flower-like virtue and
she is not the same as when you
united with her first, this faultless
young woman who let go of her
modesty which was with her forever,
lik... | Notes: வரைவு நீட்டித்தவழித் தோழி தலைவனிடம் சொல்லி வரைவு கடாயது. நுணங்கு (2) – H. வேங்கடராமன் உரை – வருத்திய, ஒளவை துரைசாமி உரை – நுண்ணிய. துணியைப் போன்ற மணல் – அகநானூறு 11 – வம்பு விரித்தன்ன பொங்கு மணல், நற்றிணை 15 – தோழியிடம் முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நுணங்கு துகில் நுடக்கம் போல கணம் கொள, கலித்தொகை 124 – நீல நீர... | Meanings: முழங்கு திரை – roaring waves, கொழீஇய – brought and heaped (அளபெடை), மூரி எக்கர் – tall dunes, sand bars with fine sand, நுணங்கு – fine, துகில் நுடக்கம் போல – like the movement of a waved cloth, like a cloth flag movement, கணம் கொள – to pile up, ஊதை தூற்றும் – the cold northerly wind scatters, உரவு நீர்ச் சேர்... | முழங்கும் அலைகள் கொண்டு வந்து குவித்த பெரிய மணல் மேட்டைப் போல் துகிலின் (துணியின்) அசைவைபோல மிகுதிப்பட ஊதைக் காற்று வீசும் வலிமையான கடற்கரையின் தலைவனே! மலரைப்போன்ற இவளது நலத்தைப் புதிதாக நீ நுகர்ந்தும் நீ அதன் அருமையை உணரவில்லை. ஆகையால் யாம் உனக்கு உடன்படுதல் உடைய எம் உள்ளத்தில் வருத்தமுற அதனை ஏற்று, மாசற்ற இளைய பெண் ஒ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0016 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 16 | நற்றிணை 16, சிறைக்குடி ஆந்தையார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது | Natrinai 16, Siraikkudi Ānthaiyār, Pālai Thinai – What the hero said to his heart | Siraikkudi Ānthaiyār | Pālai Thinai | null | What the hero said to his heart | null | null | null | null | புணரின் புணராது பொருளே, பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே, ஆயிடைச்
செல்லினும், செல்லாய் ஆயினும், நல்லதற்கு
உரியை வாழி என் நெஞ்சே! பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண் 5
ஓடு மீன் வழியின் கெடுவ; யானே
விழுநீர் வியல் அகம் தூணி ஆக
எழு மாண் அளக்கும் விழுநிதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
அமர்ந்து, இனிது நோ... | If I stay with her, I will not be able to
attain wealth. If I want to earn wealth,
I will not be able to unite with her,
You know what is the right thing to do,
oh my heart!
Wealth will be lost like the path of fish
in the middle of a pond with fresh flowers.
Even if I get great wealth seven times the
measure of this... | Notes: தலைவியை விட்டுப் பிரிந்து சென்று பொருள் ஈட்ட விரும்பிய தன் நெஞ்சிடம் தலைவன் சொன்னது. நற்றிணை 46 – எய் கணை நிழலின் கழியும். ஒளவை துரைசாமி உரை – நீர்ப்பூ தேன் ஒழிந்தவிடத்து மணம் இழந்து அழுகிக் கெடுவல்லது, நிலப்பூப் போல வாடுவதின்மையின், வாடாப் பூவின் பொய்கையை என்று சிறப்பித்தார். விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும்... | Meanings: புணரின் புணராது பொருளே – if I stay with her I will not attain wealth (ஏ – அசைநிலை, an expletive), பொருள்வயின் பிரியின் புணராது புணர்வே – If I want wealth and separate I cannot unite with her, ஆயிடைச் செல்லினும் செல்லாய் ஆயினும் – whether you go to the wasteland or do not go, நல்லதற்கு உரியை – it is good for y... | நாம் தலைவியுடன் இருந்தால் பொருளை அடைய முடியாது. பொருளுக்காக நாம் பிரிந்தால் தலைவியுடன் இணைய முடியாது. அதனால் சென்றாலும் செல்லா விட்டாலும், நல்லது செய்வதற்கு உரியை நீ, என் நெஞ்சே. நீடு வாழ்வாயாக நீ! பொருளானது, வாடாத மலர்களையுடைய பொய்கையின் நடுவில் ஓடும் மீன் செல்லும் வழி கெடுவது போன்றது. நானே, பெரிய கடல் சூழ்ந்த இந்த உல... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0017 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 17 | நற்றிணை 17, நொச்சி நியமங்கிழார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 17, Nochi Niyamankizhār, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby | Nochi Niyamankizhār | Kurinji Thinai | null | What the heroine said to her friend, as the hero listened nearby | null | null | null | null | நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங்கானத்து அல்கு அணி நோக்கித்,
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை, 5
‘எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு’ என
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து
உரைத்தல் உய்ந்தனனே... | Early morning rains that fell on his
fine, lofty mountains rushed down like
the dark ocean waves.
The waterfalls in the huge, wide forest
is where we used to meet
and it hurts me to see that beautiful spot.
I was unable to block my pain and stop
crying. Tears filled up and flowed down
from my beautiful, lifted, moist ... | Notes: வரையாது பகற்குறிக்கண் வந்தொழுகும் தலைவன் ஒரு பொழுது வாராதிருத்தலால் வருத்தமுற்ற தலைவி, பின் ஒரு நாள் அவன் அருகில் இருப்பதை அறிந்து, அவன் விரைவில் வரைந்துகொள்ள வேண்டித் தோழியிடம் கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தனற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பா உரையில், இப்பாட்டைக் காட்டி, ‘யான் அவனை எதிர்ப... | Meanings: நாள் மழை தலைஇய – early morning rains fell (தலைஇய – அளபெடை), நல் நெடுங்குன்றத்து – on the fine tall mountains, மால் கடல் திரையின் – like the dark ocean waves (திரையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), இழிதரும் அருவி – waterfalls that cascade down, அகல் இருங்கானத்து – in the wide big forest, அல்கு – nearby, அணி – ... | தோழி! விடியற்காலையில் மழை பெய்த நல்ல உயர்ந்த மலையிலிருந்து பெரிய கடலின் அலையைப்போன்று வீழும் அருவிகள் உடைய அகன்ற பெரிய காட்டில் தங்கி அழகை நோக்கி, அது அவரை எதிர்ப்பட்ட இடமாததால் நான் தடுக்கவும் தடைப்பட்டு நில்லாது, என் அழகு பொருந்திய கண்கள் கண்ணீருடன் கலங்கின. அதனைக் கண்ட அன்னை, “ஏன் அழுகின்றாய்? உன்னுடைய விளங்குகின்ற ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0018 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 18 | நற்றிணை 18, பொய்கையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 18, Poykaiyār, Pālai Thinai – What the heroine’s friend said to her | Poykaiyār | Pālai Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர், வாழி தோழி, மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்
கானல் அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
தெறல் அருந்தானைப் பொறையன் பாசறை 5
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண்படுப்ப
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே... | May you live long! He will come,
my friend, and remove the many
sorrows spread in your heart.
He has gone through mountain paths,
where a shimmering waterfall looks
like a large single tusk of an elephant
not in rut any longer and with no rage,
in the battle camp of Poraiyan, lord of
Thondi, with victorious spears and... | Notes: தலைவன் பிரிந்து வேற்று நாட்டுச் சென்றபொழுது வருந்திய தலைவியிடம் தோழி கூறியது. இதனுட் பொதிந்த கதை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பொறையனது பாசறைக்கண்ணே ஒற்றை மருப்பையுடைய களிறொன்று மதங்கொண்டு வீரர் துயிலாதவாறு வருத்தி அப்பால் மதம் அடங்கிற்று என்பதாம். மறவர் இனிது கண்படுப்பக் கதன் அடங்கிய யானை என்க. அகநானூற... | Meanings: பருவரல் நெஞ்சமொடு – with a sad heart, பல் படர் அகல வருவர் – he will come to remove my many sorrows, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, மூவன் முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் – with a door on which he embedded the very strong and sharp teeth of Moovan, கானல் அம் தொண்டிப் பொரு... | தோழி! நீ நீடு வாழ்வாயாக! மூவன் என்பவனின் முழு வலிமையை அழித்து அவனுடைய முள்ளைப்போன்ற பற்களைப் பிடுங்கிப் பதிக்கப்பட்ட கதவையுடைய கடற்கரைச் சோலையையுடைய தொண்டி நகரின் தலைவனான வெல்லும் வேற்படையையும் வெல்வதற்கு அரிய தானையையும் உடைய சேரன் கணைக்கால் இரும்பொறையின் பாசறையில், மத யானை இருப்பதால் நெஞ்சம் நடுங்குதலால் அஞ்சி உறங்காத... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0019 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 19 | நற்றிணை 19, நக்கண்ணையார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 19, Nakkannaiyār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero | Nakkannaiyār | Neythal Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | இறவுப் புறத்து அன்ன பிணர்படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை,
பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு,
நன்மான் உழையின் வேறுபடத் தோன்றி,
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப! 5
இன மணி நெடுந்தேர் பாகன் இயக்கச்
செலீஇய சேறி ஆயின், இவளே
வருவை ஆகிய சில் நாள்
வாழாள், ஆதல் நற்கு அறிந்தனை சென்மே. | Oh lord of the shores with powerful waves,
where scaly trunks of thāzhai trees look like
backs of curved shrimp, their thorny leaves
like swords of sharks, their mature buds like
tusks of huge elephants, their appearance
varying like does slanting their heads,
their scents like that of festival grounds!
Should you lea... | Notes: தலைவியைப் புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது. ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்‘ (தொல்காப்பியம், களவியல் 24) என்று தொடங்கும் நூற்பாவிற் கூறிய ‘வேண்டாப் பிரிவினும்’ என்புழி நிகழும் தோழி கூற்றுக்கு இப்பாட்டைக் காட்டி ‘இது தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர். ஒளவை துரைசாமி... | Meanings: இறவுப் புறத்து அன்ன – like the back side of shrimp (இறவு – இறா என்பதன் ஆகாரம் குறுகி உகரம் ஏற்றது, புறத்து – புறம், அத்து சாரியை), பிணர்படு – with scales, with rough surface, தடவு முதல் – thick trunks, curved trunks, சுறவுக் கோட்டன்ன – like the shark’s sword/horn, like the swordfish sword (சுறவு – சுறா என்பதன... | இறால் மீனின் மேற்புறத்தைப் போன்ற சருக்கரை உடைய பெரிய அடிப்பகுதியையும் சுறா மீனின் கொம்பு போன்ற முட்கள் கொண்ட இலைகளையுமுடைய தாழையானது, பெரிய ஆண் யானையின் கொம்பு (தந்தம்) போன்ற அரும்புகள் முதிர்ந்திருக்க, நல்ல பெண்மான் தலைசாய்த்து நிற்றலைப் போல் போன்று வேறாகத் தோன்றி, திருவிழாவைப்போன்று நறுமணம் வீசும், வலிய நீரையுடைய கடல... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0020 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 20 | நற்றிணை 20, ஓரம்போகியார், மருதத் திணை – தலைவி தலைவனிடம் சொன்னது, அல்லது தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 20, Ōrampōkiyār, Marutham Thinai – What the heroine said to the hero, or what the heroine’s friend said to the heroine | Ōrampōkiyār | Marutham Thinai | null | What the heroine said to the hero, or what the heroine’s friend said to the heroine | null | null | null | null | ஐய! குறுமகள் கண்டிகும்; வைகி
மகிழ்நன் மார்பில் துஞ்சி, அவிழ் இணர்த்
தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல்
துளங்கு இயல் அசைவர, கலிங்கம் துயல் வரச்
செறி தொடி தெளிர்ப்ப வீசி, மறுகில் 5
பூப் போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச்
சென்றனள், வாழிய மடந்தை! நுண் பல்
சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள்,
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழைப்,
பழ... | Lord! I saw the young woman as she went
by, the one who slept on your chest.
She walked on our street, her eyes lined
with collyrium, her hair swaying with the
fragrances of new clusters of kadampam
flowers with honey, her clothes moving,
her hands swinging, and her stacked
bangles jingling.
May she live long! She ha... | Notes: பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் ‘யாரையும் அறியேன்’ என்றாற்குத் தலைவி கூறியது. வாயிலாகப் புக்க தோழி தலைவிக்குச் சொல்லியதுமாம். ஐய (1) – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஐய என்பது மெல்லிய எனவும் பொருள்பட அமையுமெனில், அது வாயிலாக புக்க தோழி தலைவிக்குக் கூறியதாகும். தோழியின் கூற்றாக இதைக் கொண்டால், ‘ஐய குறுமகள்’ என்பதை ... | Meanings: ஐய – oh sir, oh lord, delicate, குறுமகள் கண்டிகும் – I saw the young lady (கண்டிகும் தன்மை வினைமுற்று திரிசொல், இகும் தன்மை அசைநிலை, an expletive of the first person), வைகி – staying, மகிழ்நன் – the lord of the marutham thinai, மார்பில் துஞ்சி – slept on your chest, அவிழ் இணர் – opening clusters, தேம் பாய் மர... | ஐயா! நின் காதலியான இளமகளை யாம் கண்டேம். நின்னிடத்துத் தங்கி நின் மார்பில் உறங்கிய அவள், தேன் வண்டுகள் பாயும் கடம்ப மரத்தின் விரிந்த பூங்கொத்துக்களின் மணம் வீசும் கூந்தல் சிறுபுறத்தில் வீழ்ந்து அசைய, அவளது ஆடை தளர்ந்து அசைய, நெருங்கிய வளையல்கள் ஒலிக்க, தெருவில் மலர்களை ஒத்த மையிட்ட கண்கள் சுழலும்படி பார்த்துச் சென்றாள்.... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0021 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 21 | நற்றிணை 21, மருதன் இளநாகனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது | Natrinai, 21, Maruthan Ilanākanār, Mullai Thinai – What the hero said to his charioteer | Maruthan Ilanākanār | Mullai Thinai | null | What the hero said to his charioteer | null | null | null | null | விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர்
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,
வேண்டு அமர் நடையர் மென்மெல வருக
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு
ஏமதி வலவ தேரே! உதுக்காண்! 5
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன,
அரிக்குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக்
காமரு தகைய கான வாரணம்
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில்
புலரா ஈர் ம... | The young warriors who walked very fast
for a long distance have slowed down since
they are tired. Untying their tight waist
wraps, may they rest and walk slowly.
Ride fast, oh charioteer, using your unused,
sharp goad on the horses so that we can
reach soon! Look there!
In the vast woodland where rains have
stopped ... | Notes: வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனிடம் கூறியது. அரிக்குரல் (7) – ஒளவை துரைசாமி உரை – அரித்தெழும் ஒலி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கடைகின்ற குரல், ச. வே. சுப்பிரமணியன் – தேரையின் குரல். காமரு தகைய (8) – ஒளவை துரைசாமி உரை – விரும்பத்தக்க அழகுப் பொருந்திய, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விருப்பம் த... | Meanings: விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர் – the young warriors who are tired since they walked very fast for a long distance (செலல் – இடைக்குறை), அரைச் செறி கச்சை – cloth tied tight around their waists, யாப்பு அழித்து – untied, அசைஇ – resting (அசைஇ – அளபெடை), வேண்டு அமர் நடையர் மென்மெல வருக – may they walk litt... | விரைந்து செல்வதனால் வருந்திய மிக்க நடையுடைய ஏவலர்கள் இடையில் கட்டிய கச்சையின் கட்டை அவிழ்த்துவிட்டு இளைப்பாறி, விரும்பியவாறு நடந்து வருபவர்கள் மெல்ல வருவார்களாக! இதுவரை பயன்படுத்தாத கூரிய தாற்றுக்கோல் முள்ளால் குதிரையைத் தொட்டுத் தூண்டித் தேரை நீ செலுத்துவாயாகப் பாகனே! அதோ பார்! உருக்கப்பட்ட நறுமண நெய்யைப் பாலில் தெளித... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0022 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 22 | நற்றிணை 22, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 22, Poet is Unknown, Kurinji Thinai – What the heroine’s friend said to her | Unknown | null | null | null | null | null | null | null | கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை
முந்து விளை பெருங்குரல் கொண்ட மந்தி
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு தன்
திரை அணல் கொடுங்கவுள் நிறைய முக்கி, 5
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன்
வந்தனன், வாழி தோழி, உலகம்
கயம் கண் அற்ற பைது அறு காலைப்,
பீளொடு திரங்கிய நெல்லி... | He has come back, the man from
the country, in whose mountain,
in a millet field guarded by a woman,
a female monkey with a wrinkled chin,
along with her mate that does not
know anything other than leaping,
steals huge clusters of millet spikes
that matured first, crushes them with
her palms, collects the grains and st... | Notes: வரைந்துகொள்ள வேண்டித் தலைவன் வரக்கண்ட தோழி மகிழ்ந்து கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின் ‘ஆங்கதன் தன்மையின் வன்புறை’ என்ற பகுதிக்கு இதனைக்காட்டி, ‘இதனுள் தினைவினை காலம் வதுவைக் காலமாயினும் வம்பமாரி இடையிடுதலன்றி யான் கூறிய வரைவு பொய்த்தனரேனும் இன்று மெய்... | Meanings: கொடிச்சி காக்கும் அடுக்கல் பைந்தினை – the fresh millet that the mountain dwelling woman protects in the mountain ranges, முந்து – first, விளை பெருங்குரல் – mature huge spears, கொண்ட மந்தி – a female monkey that took it, கல்லாக் கடுவனொடு – along with its male monkey that does not know anything other than leapi... | தோழி! நீ நீடு வாழ்வாயாக! குறமகள் (மலையில் வாழும் பெண்) காவல் காக்கும் மலைப்பக்கத்தில் விளைந்த பசுமையான தினைப்பயிரில் முற்பட விளைந்த பெரும் கதிர்க்கொத்துக்களைக் கொய்த பெண் குரங்கு ஒன்று, பாய்ந்து செல்லும் தொழிலைத் தவிர வேறு எதுவும் கற்காத தன் ஆண் குரங்குடன் நல்ல மலையின் மீது ஏறி, உள்ளங்கை நிறைய அக்கதிர்களைக் கசக்கிக் கொ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0023 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 23 | நற்றிணை 23, கணக்காயனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 23, Kanakkāyanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero | Kanakkāyanār | Kurinji Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே;
வடிக் கொள் கூழை ஆயமோடு ஆடலின்
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள
அன்னை காக்கும் தொல் நலம் சிதையக்,
காண்தொறும் கலுழ்தல் அன்றியும், ஈண்டு நீர் 5
முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறைச்
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல்
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே. | The young woman with hair
combed and tied, conceals her
bangles not revealing her tired arms.
She gives the impression that playing
with her friends had caused her pain.
Her prior beauty, that her mother
protected so well, has been ruined,
and she cries whenever she sees it.
Her ruined eyes, resembling beautiful
water... | Notes: களவொழுக்கத்தை நீட்டித்து வரையாது ஒழுகும் தலைவனிடம் தோழி வரைவு கடாயது. வடிக் கொள் கூழை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வாரி முடித்த கூந்தல், ஒளவை துரைசாமி உரை – வடு வகிர்ந்து வாரி முடிக்கப்படும் கூந்தல். செப்பு ஊர் நெய்தல் (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அழகு அமைந்த நெய்தல், செப்பு – செப்பம்... | Meanings: தொடி – bangles, பழி – blame, மறைத்தலின் – since she hid them, தோள் உய்ந்தனவே – her arms did not reveal their thinness (ஏ – அசைநிலை, an expletive), வடிக் கொள் கூழை – hair combed and tied/braided, combed short hair, ஆயமோடு ஆடலின் இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே – her body looked like it was tired due to playing w... | வாரி முடித்த கூந்தலையுடைய இவள் தன்னுடைய வளையல்களைக் கழலாதவாறு செறித்து (இறுக்கமாக) மறைத்ததால், இவளுடைய தோள்களின் மெலிவு பிறர்க்குத் தோன்றாது ஆயின. தன் தோழியருடன் விளையாடுவதால் இவள் உடலில் களைப்புத் தோன்றியது. பாதுகாக்கும்பொருட்டு இவளது அன்னையானவள் காக்கும் பண்டைய அழகு பாழ்பட, அதனைப் பார்க்கும்பொழுதெல்லாம் இவள் அழுதாள்.... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0024 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 24 | நற்றிணை 24, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது | Natrinai 24, Poet is Unknown, Pālai Thinai – What the heroine said to her friend | Unknown | null | null | null | null | null | null | null | பார் பக வீழ்ந்த வேருடை விழுக் கோட்டு
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின்
ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு,
கம்பலத்து அன்ன பைம் பயிர்த் தாஅம்
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் 5
‘சேறும் நாம்’ எனச் சொல்ல சேயிழை,
‘நன்று’ எனப் புரிந்தோய், நன்று செய்தனையே;
செயல்படு மனத்தர் செய் பொருட்கு
அகல்வர் ஆடவர், அது அதன் ப... | Oh friend wearing fine jewels!
You did the right thing when you agreed
with him, when he told you that he was
going to another country to earn wealth,
passing through wasteland paths,
where roots of wood apple trees split the
earth as they go down, their branches big,
their rough trunks appearing like the scales
of mon... | Notes: தலைவனின் பொருட் பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது. ஒளவை துரைசாமி உரையில் புலவரின் பெயர்குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார் என்று உள்ளது. ஒளவை துரைசாமி உரை – ‘அவனறிவு ஆற்ற அறியுமாகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவிலுள்ள ‘கொடுமை ஒழுக்கம் தோழிக்கு உரியவை, வடு அறு சிறப்பின் கற்பின் திரியா... | Meanings: பார் பக – splitting the ground, வீழ்ந்த – went down, வேருடை – with roots, விழுக் கோட்டு – with big branches, உடும்பு அடைந்தன்ன – like the scales of monitor lizards that are next to each other, நெடும் – tall, பொரி விளவின் – of wood apple trees with rough cracked trunks, Limonia acidissima, ஆட்டு ஒழி பந்தின் – ... | செவ்விய அணிகலன்களை அணிந்தவளே! நிலம் பிளவுபடுமாறு கீழே இறங்கிய வேர்களையும் பெரிய கிளைகளையும் உடும்பு பொருந்தியிருப்பதை ஒத்த பொரிந்த செதில்களையுடைய மேற்பட்டையையும் உடைய உயர்ந்த விளவு மரத்தின் கிளைகளில் காம்பு உடைந்து உதிர்ந்த பழங்கள், விளையாடுதல் முடிந்த பந்தினைப்போலப் பரவி, காண்பதற்குக் கம்பளத்தை விரித்தாற்போன்று இருக்க... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0025 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 25 | நற்றிணை25, பேரி சாத்தனார், குறிஞ்சித் திணை -தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 25, Pēri Sāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her | Pēri Sāthanār | Kurinji Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன
செவ்வரி இதழ சேண் நாறு பிடவின்
நறுந்தாது ஆடிய தும்பி பசுங்கேழ்ப்
பொன் உரை கல்லின் நல் நிறம் பெறூஉம்
வளமலை நாடன் நெருநல் நம்மொடு 5
கிளை மலி சிறுதினைக் கிளி கடிந்து அசைஇச்,
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன், பெயர்ந்தது
அல்லல் அன்று அது காதல் அம் தோழி,
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா
வண்... | The lord of the mountains,
………where pidavam flowers
………look like beautiful conch with
………vermilion painted on their backs,
………their petals with red lines,
………their scents spreading far,
………their pollen eaten by bees that
………have lovely colors like the fine
………hues of touchstones on which
………gold is rubbed,
joined us in... | Notes: தலைவியைத் தோழி குறை நயப்பக் கூறியது. தலைவனை தன்னுள்ளம் விரும்பினதுப் போலத் தலைவி அதனை ஆராய்ந்து ‘தன்னை விரும்பினன்’ எனக் கொள்ளும் வண்ணம் தோழி கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவில் வரும் ‘மறைந்தவள் அருக தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ பின்னிலை நிகழும் ... | Meanings: அவ்வளை – beautiful conch, வெரிநின் – on the backs, அரக்கு ஈர்த்தன்ன – like painted with vermilion that is red, செவ்வரி இதழ – with red-lined petals, சேண் நாறு – fragrance from a distance, பிடவின் – of pidavam flowers, Randia malabarica, wild jasmine, நறுந்தாது ஆடிய தும்பி – bees that swarmed the fragrant polle... | அன்புமிக்க தோழியே! அழகிய சங்கின் (வளையின், கோடின்) முதுகில் செவ்வரக்கினால் வரிகளைத் தீட்டினாற்போல் சிவந்த வரியுடைய இதழ்களையுடைய தொலைவில் நறுமணம் வீசும் பிடவம்பூவின் நறுமணமுடைய தாதில் படிந்து உண்ட தும்பி, பசுமையான நிறமுள்ள பொன்னை உரசும் கல்லைப்போன்று நல்ல நிறம் பெறும், வளப்பத்தையுடைய மலைநாட்டின் தலைவன், நேற்று நம்முடன் ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0026 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 26 | நற்றிணை 26, சாத்தந்தையார், பாலைத்திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 26, Sāthanthaiyār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero | Sāthanthaiyār | Pālai Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | நோகோ யானே, நெகிழ்ந்தன வளையே,
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங்கூட்டுப்
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழியச்,
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங்காய் 5
முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு
கெடுதுணை ஆகிய தவறோ, வை எயிற்றுப்
பொன் பொதிந்தன்ன சுணங்கின்
இருஞ்சூழ் ஓதிப் பெருந்தோளாட்கே? | My friend is sad! I am hurting!
Her bangles have slipped down.
Are you leaving since she made the
mistake of going with you in the past
as your partner, the sharp-toothed
young woman with golden pallor
spots, thick dark hair and wide arms,
……….to the wasteland, where,
……….attacked by the sun’s rays, huge
……….fruits of... | Notes: தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி, தோழி செலவு அழுங்குவித்தது. ஒளவை துரைசாமி உரை – ‘களவின்கண் இவளுடைய தமர் வரைவு மறுத்த போது நீ உடன்போக்கினைத் துணிந்தாய். நின்பாற் கொண்ட பெருங்காதலால் நினக்கு துணையாய் என் தோழி வந்தாளன்றோ?’ என்று பண்டு நிகழ்ந்த காதல் செயலை நினைப்பித்து செலவு அழுங்குவித்தாள் தோழி. பிண்ட நெல்ல... | Meanings: நோகோ – I am hurting (நோகு – செய்கென்னும் தன்மை வினை, ஓ – அசைநிலை, an expletive, இரக்கக் குறிப்பு, implying pity), யானே – me (ஏ – அசைநிலை, an expletive), நெகிழ்ந்தன வளையே – her bangles have loosened, her bangles have slipped down, செவ்வி சேர்ந்த – firmly set, firmly mounted, புள்ளி – dots, வெள் அரை – white bas... | புள்ளிகள் பொருந்திய வெள்ளை அடிப்பகுதியை உடைய மலைபோன்ற அடுக்கிய நிலை அமைந்த பெரிய நெற்கூட்டில் நிறைய நெல் உள்ள தாயின் வீட்டை நீங்கி, கதிரவன் முழுவதும் வெயிலை வீசுவதால் செழுமையான காய்கள் உலர்ந்த முடமுடைய பலா மரங்களையுடைய பாலை நிலத்திற்கு நீவிர் தனியாகச் சென்று வருந்தாதபடி நும்முடன் துணையாகச் சென்ற தவற்றினாலோ, கூர்மையான ப... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0027 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 27 | நற்றிணை 27, குடவாயிற் கீரத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 27, Kudavāyil Keerathanār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby | Kudavāyil Keerathanār | Neythal Thinai | null | What the heroine’s friend said to her, as the hero listened nearby | null | null | null | null | நீயும் யானும், நெருநல் பூவின்
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி,
ஒழி திரை வரித்த வெண்மணல் அடைகரைக்
கழி சூழ் கானல் ஆடியது அன்றிக்,
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை, உண்டு எனின் 5
பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே, நன்றும்
எவன் குறித்தனள் கொல் அன்னை, கயந்தோறு
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப சுறவம்
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீ... | Yesterday you and I played in the
seaside grove surrounded by
backwaters, on the sand bars brought
to the shores by the dashing waves,
chasing bees that swarmed on the fine
pollen of flowers, dropping them.
Other than playing, we did not do
anything in secrecy. If we had done
something, it would have spread greatly
an... | Notes: பகற்குறி வந்து ஒழுகும் தலைவன் வந்து ஒரு புறமாக இருந்ததை அறிந்த தோழி, களவு ஒழுக்கம் நீட்டியாமல் வரைந்து கொள்ள வேண்டித் தம்மை அன்னை இற்செறித்ததாகக் கருத்துமாறு, தலைவியிடம் கூறுவது போல உரைத்தது. உறைக்கும் வண்டினம் (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பாய்ந்து விழுகின்ற வண்டினம், H.வேங்கடராமன் உரை – திளைக்கும்... | Meanings: நீயும் யானும் நெருநல் – yesterday you and I, பூவின் நுண் தாது – fine pollen of flowers, உறைக்கும் – dropping (உறைக்கும் – உதிர்க்கும்), வண்டினம் ஓப்பி – chased bees, ஒழி திரை வரித்த வெண்மணல் – white sand that the dashing waves brought and heaped, made beautiful by the dashing waves, அடைகரை – sand filled shore... | நீயும் நானும் நேற்று மலரின் நுண்ணிய தாதில் பாய்ந்து விழும் வண்டுகள் அதை உதிர்ப்பது கண்டு அவற்றை விரட்டி, கரையை உடைக்கும் அலைகளால் அழகுறுத்தப்பட்ட வெண்மணல் நிறைந்த கரையில், உப்பங்கழி சூழ்ந்த சோலையில் விளையாடியது அன்றி, நாம் மறைத்து எதையும் செய்யவில்லை. அவ்வாறு செய்தது எதுவும் இருந்திருந்தால், அது பெரிதும் பரவி, அதனைப் ப... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0028 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 28 | நற்றிணை 28, முதுகூற்றனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 28, Muthukootranār, Pālai Thinai – What the heroine’s friend said to the heroine | Muthukootranār | Pālai Thinai | null | What the heroine’s friend said to the heroine | null | null | null | null | என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும்,
தன் கைக் கொண்டு என் நன்னுதல் நீவியும்,
அன்னை போல இனிய கூறியும்,
கள்வர் போலக் கொடியன் மாதோ,
மணி என இழிதரும் அருவி பொன் என 5
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து
ஆடு கழை நிவந்த பைங்கண் மூங்கில்
ஓடு மழை கிழிக்கும் சென்னிக்
கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே. | He used to take my hands
and press them to his eyes,
take his hands and stroke my
fine forehead, and spoke
sweetly to me like a mother.
He is cruel like a thief,
the lord of the lofty mountains,
where sapphire colored
waterfalls flow down,
golden vēngai flowers blanket
the soaring mountain ranges,
and tall bamboos wit... | Notes: பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது. குறை நயப்புமாம். ஔவை துரைசாமி உரை – ‘அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்’ (தொல்காப்பியம், கற்பியல் 6) என்ற நூற்பாவில் வரும், ‘கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்’ என்பதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர். பின்னத்தூர் அ... | Meanings: என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும் – he takes my hand and presses them to his eyes, தன் கைக் கொண்டு என் நன்னுதல் நீவியும் – takes his own hands and strokes my fine forehead, அன்னை போல இனிய கூறியும் – speaks sweet words like a mother, கள்வர் போலக் கொடியன் – he is a cruel man like a thief, மாதோ – மாது + ஓ – அசைந... | நீலமணி நிறத்தில் வீழும் அருவியையுடைய, பொன்னிற வேங்கை மலர்கள் உதிர்ந்த உயர்ந்த மலைப்பக்கத்தில், அசைகின்ற உயர்ந்த பசிய கணுக்களையுடைய மூங்கில் ஓடும் முகில்களைக் கிழிக்கின்ற உச்சிகளையும் கோடுகளையும் (சிகரங்களையும்) உடைய பெரிய மலையின் தலைவன், முன்பு என் கைகளைப் பற்றித் தன் கண்களில் ஒற்றிக்கொண்டும், என்னுடைய நல்ல நெற்றியைத் ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0029 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 29 | நற்றிணை 29, பூதனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது | Natrinai 29, Poothanār, Pālai Thinai – What the heroine’s mother said after her daughter eloped | Poothanār | Pālai Thinai | null | What the heroine’s mother said after her daughter eloped | null | null | null | null | நின்ற வேனில் உலந்த காந்தள்
அழல் அவிர் நீள் இடை நிழலிடம் பெறாஅது,
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென,
மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறுநெறி 5
யாங்கு வல்லுநள் கொல் தானே? யான் ‘தன்
வனைந்து ஏந்து இள முலை நோவ கொல்?’ என
நினைந்து கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன்
பேர் அமர் மழைக் கண் ஈ... | Thinking that her young lifted
breasts with thoyyil paintings
might hurt, I relaxed my hands
when I hugged her. Even that hurt
her, and her huge, calm, moist eyes
were filled with tears, and she
cried and sighed hot breaths, that
delicate, naive, noble young woman
with dark, oiled tresses.
How can she handle going thr... | Notes: மகட் போக்கிய நற்றாய் சொன்னது. ஒளவை துரைசாமி உரை – மான்ற என்றது மால் என்னும் சொல்லடியாகப் பிறந்த தெரிநிலைப் பெயரெச்சம். இறைச்சி (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பிணவின் பசியைப் போக்க புலி உணவுதேடி நெறியில் பார்க்கும் என்றது, தலைவியின் அயர்ச்சியைப் போக்க வேண்டித் தலைமகன் மாலைப் பொழுதிலே தங்குமிடம் தேடி ஆ... | Meanings: நின்ற வேனில் – long summer, உலந்த காந்தள் – faded glory lilies, dried glory lilies, Malabar Glory lily, Gloriosa superba (உலந்த – வாடிய, உலர்ந்த), அழல் அவிர் நீள் இடை – on the blazing long paths, நிழலிடம் பெறாஅது – without getting any shade (பெறாஅது – அளபெடை), ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென – since t... | வேனில் பருவம் நிலைப்பெற்றதால் வாடிய காந்தள் மலர்கள் உடைய நெருப்பென விளங்கும் நீண்ட இடத்தில் நிழலைப் பெறாமல், குட்டிகளை ஈன்று காட்டில் மடிந்து இருக்கும் தன் பெண்புலி மிகவும் பசியுடையது என்று, மயக்கமுடைய மாலைவேளையில், வழியில் செல்பவர்களைக் கொல்லும் பொருட்டு ஆண்புலி அவ்வழியைப் பார்த்திருக்கும், புல்லிய சிறிய வழியில் நடந்த... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0030 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 30 | நற்றிணை 30, கொற்றனார், மருதத் திணை- தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 30, Kottranār, Marutham Thinai – What the heroine’s friend said to the hero | Kottranār | Marutham Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | கண்டனென் மகிழ்ந! கண்டு எவன் செய்கோ?
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென இமிரும்
ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி நின்
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர், 5
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி
கால் ஏமுற்ற பைதரு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல,
வாங்க வாங்க நின்று ஊங்கு அஞர் ... | Lord, I saw you!
But what can I do about what I saw?
When you appeared on the street,
music from the noble small lute of
a bard sounded like the bees that drank
new honey and women wearing elegant
jewels were waiting for you.
Those who had hugged your chest
in the past wanted you back again. They
shed hot tears in dis... | Notes: பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் யாரையும் அறியேன் என்றாற்குத் தோழி சொல்லியது. கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தலைவியும் இந்நிலை அறிந்தவளே என்பதைக் ‘களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா நாணி நின்றோள்’ (அகநானூறு 16) பரத்தையின் நிலையால் அறியப்படும். யாணர் வண்டின் (3) – ஒளவை துரைசாமி உரை – புதுத்தேன் உண்ட வண்டு போல ... | Meanings: கண்டனென் மகிழ்ந – oh lord! I saw you, கண்டு எவன் செய்கு – what was the use of seeing (செய்கு தன்மை ஒருமை வினைமுற்று, first person singular verb ending), ஓ – அசைநிலை, an expletive, பாணன் கையது பண்புடைச் சீறியாழ் – noble small lute held by a bard, யாணர் வண்டின் இம்மென இமிரும் – it creates sounds like the hummin... | தலைவனே! பாணர்களின் கைகளில் உள்ள பண்புடைய சிறிய யாழ் புதுத்தேன் உண்ட வண்டுகளைப் போல ஓசை எழுப்புகின்ற, நீ வரும் தெருவில், உன் வரவை எதிர்பார்த்து உன்னுடைய மார்பை முன்பு பற்றிக்கொண்ட மாட்சிமையுடைய அணிகலன்களை அணிந்த பரத்தையர் பலரும், கவலையும் கலக்கமும் அடைந்து வெப்பமுடன் வடிகின்ற கண்ணீருடன், புயல்காற்று சுழன்று அடித்ததால் த... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0031 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 31 | நற்றிணை 31, நக்கீரனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 31, Nakkeeranār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby | Nakkeeranār | Neythal Thinai | null | What the heroine said to her friend, as the hero listened nearby | null | null | null | null | மா இரும் பரப்பு அகம் துணிய நோக்கிச்
சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை
பாய் இரும் பனிக் கழி துழைஇ, பைங்கால்
தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉ சுரக்கும்
சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே; 5
பெரும் புலம்பு உற்ற நெஞ்சமொடு பல நினைந்து,
யானும் இனையேன் ஆயின், ஆனாது
வேறு பல் நாட்டில் கால் தர வந்த
பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல்
நெடுஞ்சி... | Before I united with the lord
of the shores with powerful waves,
……….where the sand is like white moon,
……….punnai trees grow with tall branches,
……….many kinds of goods are brought by
……….the wind in ships from various
……….countries, and a white heron
……….pregnant with eggs moves away in
……….fear of the roaring ocean ... | Notes: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் மீண்டும் சிறைப்புறமாக வருதலை அறிந்த தோழி அவன் விரைவில் வரைந்து கொள்ளும் வகையில் தலைவியிடம் ‘அவர் இப்போதே வருவார். நீ வருந்தாதே’ எனக் கூறியபொழுது தலைவி இவ்வாறு தோழியிடம் உரைத்தாள். நிலவு மணல்: அகநானூறு 20 – நிலவு மணல், அகநானூறு 200 – நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில், நற்றிணை 31 – ந... | Meanings: மா இரும் பரப்பு – the wide dark expanse, அகம் துணிய நோக்கி – searching inside it clearly, சேயிறா எறிந்த சிறுவெண்காக்கை – a small white gull that caught red shrimp, Indian black-headed sea gull, Larus ichthyactus (சேயிறா – பண்புத்தொகை – a compound word in which the first member stands in adjectival relation to... | பெரிய கரிய கழியில் துணிவுடன் அதனைப் பார்த்துச் சிவப்பு இறால்மீனை பிடிப்பதற்குப் பாய்ந்த சிறுவெண்காக்கை, பரந்த பெரிய குளிர்ந்த உப்பங்கழியில் தான் துழாவி எடுத்ததைப் பசுமையான கால்களை உடைய தன் விருப்பமுடைய பெடையை அழைத்துத் தான் எடுத்ததை அதற்குக் கொடுக்கும், சிறிய மலர்களையுடைய ஞாழல் மரங்கள் உடைய துறையானது காண்பதற்கு இனிமையா... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0032 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 32 | நற்றிணை 32, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 32, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her | Kapilar | Kurinji Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்,
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி,
அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பது ஓர் வாய்ச் சொல் தேறாய்,
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி 5
அறிவு அறிந்து அளவல் வேண்டும்; மறுத்தரற்கு
அரிய, வாழி தோழி, பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே. | The lord of the beautiful mountains
……….whose slopes are like Thirumāl and
……….white waterfalls are like Balarāman,
is distressed because of his love for you.
You do not understand his suffering.
You should consider accepting him.
You should talk it over with your friends.
He is hard to refuse, oh friend.
May you live... | Notes: தலைவிக்குக் குறை நயப்பக் கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) எனத் தொடங்கும் நூற்பாவில் வரும், ‘ மறைந்தவள் அருக தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும்’ என்னும் பகுதிக்கு இதனை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர்; நச்சினார்க்கினியரும் இப்பக... | Meanings: மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன் – the lofty mountain slopes are like Thirumal (கவாஅன் – அளபெடை), வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி – waterfalls are white like Balarāman, அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் வருந்தினன் – the lord of the beautiful mountains desires you and is always distressed, என்பது ஓர் வாய்ச் சொல்... | தோழி! நீடு வாழ்வாயாக! திருமாலைப்போல் உள்ள பெரிய மலைப்பக்கத்தில் பலராமனைப்போல் வெள்ளை நிற அருவிகளையுடைய அழகியமலையின் தலைவன், நம்மை விரும்பி நாளும் வருந்தினான் என்று கூறப்படுகின்றது. நீ தெளிவு அடையவில்லை. அதனை நீயும் கண்டு நின்மேல் அன்புடைய தோழியருடனும் ஆராய்ந்து அளவளாவுதல் (பொருந்துதல்) வேண்டும். இது மறுப்பதற்கு அரிது. ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0033 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 33 | நற்றிணை 33, இளவேட்டனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 33, Ilavettanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero | Ilavettanār | Pālai Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | ‘படுசுடர் அடைந்த பகுவாய் நெடு வரை,
முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்துக்,
கல்லுடை படுவில் கலுழி தந்து,
நிறை பெயல் அறியாக் குறை ஊண் அல்லில், 5
துவர் செய் ஆடை செந்தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை,
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல்
வல்லுவம் கொல்லோ, மெல்லியல் நாம்?’... | My friend looks at my face and utters,
“Oh delicate friend! Do I have the strength
to deny him his desired trip to the wasteland,
where,
in a small village with gravel near the split,
tall mountains where the sun sets swiftly,
in a dull public place where those who are
lonely eat together, turbid water is brought
from ... | Notes: பிரிவு உணர்த்தப்பட்ட தலைவியினது குறிப்பு உணர்ந்த தோழி தலைவனிடம் சொல்லியது. பகுவாய் நெடு வரை (1) – ஒளவை துரைசாமி உரை – அகன்ற பிளப்பையுடைய நெடிய மலை. புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து (3) – H.வேங்கடராமன் உரை – கள்வர் பிறர்க்கு அச்சம் தோன்ற ஒருங்கிருந்து உண்ணும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அச்சம் மிக... | Meanings: படுசுடர் அடைந்த – the folding sun has reached, பகுவாய் – split, with cracks, நெடு வரை – tall mountains, முரம்பு சேர் சிறுகுடி – small village with gravel, பரந்த மாலை – spreading evening time (after sunset), புலம்பு – alone, sad, கூட்டுண்ணும் – they eat together, புல்லென் மன்றத்து – in the dull common grounds,... | தலைவா! தலைவி என்னிடம், “மெல்லியோளே! மறைகின்ற கதிரவன் சேர்ந்த அகன்ற பிளப்பையுடைய உயர்ந்த மலைப்பக்கத்தில் உள்ள முரம்பு நிலத்தில் (வலிய நிலத்தில்) அமைந்த சிறுகுடியில், தனித்தோர் (அல்லது அச்சம் கொண்டவர்கள்) சேர்ந்து உண்ணும் பொலிவிழந்த மன்றத்தில் கற்களுடைய குழியில் உள்ள கலங்கல் நீரைக் கொண்டு வந்து கொடுக்கும், நிறைய மழையை அற... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0034 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 34 | நற்றிணை 34, பிரமசாரி, குறிஞ்சித் திணை – தோழி முருகனிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 34, Piramasāri, Kurinji Thinai – What the heroine’s friend said to Murukan, as the hero listened nearby | Piramasāri | Kurinji Thinai | null | What the heroine’s friend said to Murukan, as the hero listened nearby | null | null | null | null | கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டிப்,
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன், 5
மார்புதர வந்த படர் மலி அரு நோய்,
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து
கார் நறுங்கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்,
கடவுள் ஆயினும் ஆக 10
மடவை ... | May you live long, oh Murukan! You came
to the veriyāttam ritual and accepted the
offerings given by the diviner with lifted head,
who wore a rainy season’s fragrant kadampam
flower garland, even though you knew that
her distress was not caused by your anger.
You may be a god, but you are ignorant, and
you don’t know ... | Notes: தோழி முருகனுக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது. களவு நீட்டித்து ஒழுகும் தலைவனிடம் வரைவு கடாயதுமாம். ஒளவை துரைசாமி உரை – ‘அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி அறத்து இயல் மரபு இலள் தோழி என்ப’ (தொல்காப்பியம்,பொருளியல் 11) என்பதற்கு இப்பாட்டைக் குறித்து ‘இது வெறியாட்டு எடுத்தவழி அறத்தொடு நின்றது” என்றும், இது முருகற்குக் ... | Meanings: கடவுள் – gods, கற்சுனை – mountain springs, mountain ponds, அடை – leaves, இறந்து – pushing aside, avoiding, அவிழ்ந்த – blossomed, பறியாக் குவளை மலரொடு – with blue waterlilies that are not plucked by others since they are just for the gods, காந்தள் குருதி ஒண் பூ – bright glory lily flowers that are of blood col... | முருகனே! நீடு வாழ்வாயாக! கண்டிப்பாக நீ அறியாமையுடையவன்! கடவுள் தன்மை பொருந்திய மலையில் உள்ள சுனையில் உள்ள இலைகளை விலக்கி விட்டு, பிறர் பறிக்காத, மலர்ந்த குவளை மலர்களுடன் குருதி நிறமுள்ள ஒளியுடைய காந்தள் மலர்களை நல்ல வடிவத்துடன் கட்டி, பெரிய மலையின் பக்கங்கள் விளங்க சூர் மகள் அருவியின் இனிய ஒலியை இசைக்கருவிகளாகக் கொண்டு... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0035 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 35 | நற்றிணை 35, அம்மூவனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 35, Ammoovanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero | Ammoovanār | Neythal Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரைப்
புன்கால் நாவல் பொதிப் புற இருங்கனி
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்துப்
பல்கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் 5
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மரந்தை அன்ன இவள் நலம்,
பண்டும் இற்றே; கண்டிசின் தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும் சிறிய
ஞெகிழ்ந்த க... | Her beauty is like in the past,
like Maranthai city with ports,
where
on a stretched sandy shore
with rolling, crashing waves,
a fleshy, black nāval fruit with
delicate stem drops from a tree;
a bee swarms on it thinking
it is another bee;
a crab with many legs attacks
it knowing it is a fruit, and the
bee buzzes in di... | Notes: வரைந்தபின் மணமனை புக்கத் தோழி தலைவனிடம் ‘பிரிவு காலத்தில் நீ தலைவியை நன்கு ஆற்றுவித்தாய்’ என்ற தலைவனிடம் தோழி கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்ற நூற்பாவில் வரும் ‘சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டை எடுத்தோதிக் காட்டுவர் இள... | Meanings: பொங்கு திரை – overflowing full waves, பொருத – dashing, வார் மணல் அடைகரை – long shore with sand, புன் கால் நாவல் – nāval fruit with thin stem, Syzygium cumini, பொதிப் புற இருங்கனி – a black fruit with fleshy sides, கிளை செத்து மொய்த்த தும்பி – a bee thought that it was another bee and swarmed on it, பழம் செத்த... | பொங்கி எழும் அலைகளால் ஒதுக்கப்பட்ட நீண்ட மணல் பரவி அடர்ந்த கரையில் உதிர்ந்து கிடந்த மெல்லிய காம்பையுடைய நாவல் மரத்தின் கனியைத் தம் வண்டு இனம் என்று எண்ணி ஒரு வண்டு மொய்க்கவும், அதனைப் பழம் என்றே அறிந்த பல கால்களையுடைய நண்டு ஒன்று அப்பழத்தைக் கைக்கொண்டதால் வருந்தி யாழின் ஓசையைப் போல் மிக்கு ஒலிக்கும் வண்டின் பூசலினால், ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0036 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 36 | நற்றிணை 36, சீத்தலைச் சாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 36, Seethalai Sāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby | Seethalai Sāthanār | Kurinji Thinai | null | What the heroine’s friend said, as the hero listened nearby | null | null | null | null | குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கித்,
தாழ் நீர் நனந்தலை பெருங்களிறு அடூஉம்
கல்லக வெற்பன் சொல்லின் தேறி,
யாம் எம் நலன் இழந்தனமே; யாமத்து 5
அலர்வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப்
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து,
ஆனா கௌவைத்து ஆகத்
தான் என் இழந்தது, இவ்வழுங்கல் ஊரே? | You lost your virtue, trusting the man from
the mountains where a huge tiger with short
front legs killed a large male elephant in the
wide forest with deep waters, and his dark mate
with a beautiful forehead struggled in agony.
Women who gossip have uttered evil words,
there is non-stop slander, and you are unable
to... | Notes: தலைவன் இரவுக்குறி வந்து ஓரிடத்தில் நிற்பதை அறிந்த தோழி, அவன் விரைவில் வரைந்து கொள்ளுதல் வேண்டி, தலைவியிடம் உரைத்தது. ஒளவை துரைசாமி உரை – ‘ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கு எல்லாம் ஏற்றைக் கிளவி உரித்து என மொழிப’ (தொல்காப்பியம், மரபியல் 50) என்பதற்குக் ‘குறுங்கை இரும்புலிக் கோள் வல் ஏற்றை’ என்ற இப்பாட்டின் முதலடியைக் க... | Meanings: குறுங்கை இரும்புலி – big tiger with short front legs, கோள் வல் ஏற்றை – a murderous strong male, பூ நுதல் – beautiful forehead, இரும் பிடி – dark female elephant, புலம்ப – to be distressed, தாக்கி – attacked, தாழ் நீர் – shallow waters, deep waters, without water, நனந்தலை – vast space, பெருங்களிறு அடூஉம் – kil... | குறுகிய முன்னங்கால்களை உடைய பெரிய கொல்லுதற்கு வல்ல ஆண் புலி, பொலிவுடைய நெற்றியையுடைய பெண் யானை புலம்பும்படி அதனைத் தாக்கி நீர் இல்லாத அகன்ற இடத்தில் பெரிய ஆண்யானையைக் கொல்லும் மலையின் தலைவனின் சொற்களை உண்மை என எண்ணி, நாம் நம் நலத்தை இழந்துவிட்டோம். இரவிலும் துயிலாது ஆயினோம். பழிகூறும் பெண்களின் அம்பலுடன் சேர்ந்து, இந்த... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0037 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 37 | நற்றிணை 37, பேரி சாத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 37, Pēri Sāthanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero | Pēri Sāthanār | Pālai Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | பிணங்கு அரில் வாடிய பழவிறல் நனந்தலை
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெள் மணி
பைபய இசைக்கும் அத்தம், வை எயிற்று
இவளொடும் செலினோ நன்றே; குவளை
நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழக் 5
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி
அன்பு இலிர் அகறிர் ஆயின், என் பரம்
ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து
அணங்குடை அருந்தலை உடலி, வலன் ஏர்பு
ஆர்கலி நல் ஏறு திரிதர... | It will be good if you
go with her to the ancient,
blighted, vast forest where
tangled bushes are parched,
cattle herds graze on dry grass
and, a clear bell from a cow
tinkles very gently.
If you leave the sharp-toothed
girl without any kindness, her
eyes looking like dark waterlilies
surrounded by water, will
shed te... | Notes: வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தோழி தலைவனிடம் கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின் ‘ஓம்படைக் கிளவிப் பாங்கின்கண்ணும்’ என்ற பகுதியில் இப்பாட்டினை எடுத்தோதிக்காட்டி, ‘இது வரைவிடைப் பிரிகின்றான் ஆற்றுவித்து கொண்டிரு என்றதற்குத் தோழி கூறியது என்பர் நச்சினார்க்க... | Meanings: பிணங்கு அரில் – tangled bushes, வாடிய – dried, பழவிறல் – old fertility, robustness, நனந்தலை – wide space, உணங்கு ஊண் – grazing on dry bushes, ஆயத்து – of herds, ஓர் ஆன் தெள் மணி பைபய இசைக்கும் – clear bells ring very slowly from a single cow (பைபய – பையப்பைய பைபய என மருவியது), அத்தம் – wasteland, வை எயிற்று இ... | ஒன்றோடொன்று பின்னிக்கிடக்கும் வாடிய தூறுகளையும் பழமையான நல்ல தோற்றத்தையும் உடைய அகன்ற இடத்தி ல் உலர்ந்த புல்லினை உணவாகக் கொள்ளும் ஆனிரையின் ஒற்றை ஆவினுடைய தெளிந்த மணியோசை மெல்ல ஒலிக்கும் வழியில், கூரிய பற்களையுடைய இவளை உடன்கொண்டு செல்வீராயின் நல்லது. குவளையின் நீர் நிறைந்த கரிய மலர் போன்ற இவள் கண்கள் கலங்கி, கலைமானை இழ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0038 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 38 | நற்றிணை 38, உலோச்சனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது | Natrinai 38, Ulōchanār, Neythal Thinai – What the heroine said to her friend | Ulōchanār | Neythal Thinai | null | What the heroine said to her friend | null | null | null | null | வேட்டம் பொய்யாது வலை வளம் சிறப்ப,
பாட்டம் பொய்யாது பரதவர் பகர,
இரும் பனந்தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர்கலி யாணர்த்து ஆயினும், தேர் கெழு
மெல்லம்புலம்பன் பிரியின், புல்லெனப் 5
புலம்பு ஆகின்றே தோழி! கலங்கு நீர்க்
கழி சூழ் படப்பை காண்டவாயில்
ஒலி கா ஓலை முள் மிடை வேலி
பெண்ணை இவரும் ஆங்கண்,
வெண்மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே. 1... | With unfailing prosperity in their nets
and unfailing rains from the skies,
our flourishing fishermen sell the fish
from the ocean, drink sweet toddy from
palmyra trees, and enjoy their lives.
Such is the happiness in our noisy
Kāndavāyil town with groves, surrounded
by muddied brackish water. It becomes dull
if the l... | Notes: தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியிடம், ‘நீ வருந்துவது புறத்தார்க்குப் புலனாயின் அலராகும்’ என்று தோழி கூற, ‘நம்மூர் இனிமையானதாயினும் தலைவன் பிரிந்ததால் நான் வருந்துகின்றேன்’ என்று தலைவி கூறுகின்றாள். வரலாறு: காண்டவாயில். யாணர் – புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி (தொல்காப்பியம்,... | Meanings: வேட்டம் – fishing, பொய்யாது – not failing, வலை வளம் சிறப்ப – abundance in the nets, பாட்டம் – rain, clouds, பொய்யாது – not failing, பரதவர் – fishermen, பகர – they sell, இரும் – dark, பனந்தீம் பிழி – sweet palmyra liquor, toddy, உண்போர் மகிழும் – those who drink are happy, ஆர்கலி – loud sounds, யாணர்த்து – wit... | தோழி! கடலில் மீன் வேட்டம் பொய்ப்படாது வலைகளில் மீன் நிறைந்துச் சிறக்க, மழையும் தவறாமல் பெய்ய, மீனவர்கள் மீனை விற்க, மக்கள் கரிய பனைமரத்தின் கள்ளை உண்டு மகிழும் ஆரவாரத்தையுடைய வளமையான இடமாயினும், தேரையுடைய நெய்தல் நிலத்தின் தலைவன் பிரிந்தால் பொலிவின்றி வருத்தத்தைத் தருகின்றது, கலங்கிய நீரைக் கொண்ட உப்பங்கழி சூழ்ந்த தோட்... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0039 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 39 | நற்றிணை 39, மருதன் இளநாகனார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது | Natrinai 39, Maruthan Ilanākanār, Kurinji Thinai – What the hero said to the heroine | Maruthan Ilanākanār | Kurinji Thinai | null | What the hero said to the heroine | null | null | null | null | சொல்லின் சொல் எதிர் கொள்ளாய், யாழ நின்
திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக்
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?
கொடுங்கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் 5
தலை மருப்பு ஏய்ப்ப, கடைமணி சிவந்த நின்
கண்ணே கதவ அல்ல; நண்ணார்
அரண்தலை மதிலர் ஆகவும், முரசு கொண்டு,
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன்... | You don’t respond to my words when I
look at your beautiful face and plead;
you bend you head in shyness very quickly.
If love becomes excessive, is it possible to
tolerate it?
Even though you hide them, they cause me
distress, your eyes, the ends of which are red
like the tips of flesh-stinking tusks of an
elephant t... | Notes: இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் இடந்தலைப்பாடு உற்றுச் சென்று முந்துறக் கண்ட தலைவன் தலைவியிடம் கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘முன்னிலையாக்கல் சொல்வழிப் படுத்தல்’ (தொல்காப்பியம், களவியல் 10) என்ற நூற்பாவில் ‘தன்னிலை உரைத்தல்’ என்றதற்கு இப்பாட்டினை எடுத்துரைத்து இதனுள் வரும் ‘காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ……கடைமணி ச... | Meanings: சொல்லின் – if I say, சொல் எதிர் கொள்ளாய் – you do not respond to my words, யாழ – அசைநிலை an expletive, நின் – your, திரு முகம் – beautiful face, இறைஞ்சி – bending, நாணுதி கதுமென – you get shy fast (கதுமென – விரைவுக்குறிப்பு), காமம் கைம்மிகின் – if love exceeds, தாங்குதல் எளிதோ – is it easy to tolerate it, கொட... | யான் கூறும் சொற்களுக்கு நீ எதிர்சொல் சொல்லுகின்றாய் இல்லை. உன் அழகிய முகத்தைக் கவிழ்த்துக்கொண்டு, விரைவாக நாணம் அடைகின்றாய். காதல் கைகடந்துச் சென்றால் அதைத் தாங்குதல் எளிதோ? வளைந்த வரிகளையுடைய பெரிய முதுகு நடுங்குமாறு புலியைக் கொன்றதால் புலவு நாற்றம் உடைய யானையின் தலையில் உள்ள குருதிப்படிந்த கொம்புகளைப்போல (தந்தங்களைப்... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0040 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 40 | நற்றிணை 40, கோண்மா நெடுங்கோட்டனார், மருதத் திணை – பரத்தை சொன்னது | Natrinai 40, Kōnmā Nedunkōttanār, Marutham Thinai – What the concubine said | Kōnmā Nedunkōttanār | Marutham Thinai | null | What the concubine said | null | null | null | null | நெடுநா ஒள் மணி கடி மனை இரட்ட,
குரை இலைப் போகிய விரவு மணல் பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டென ஒரு சார்த்
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப,
வெறி உற விரிந்த அறுவை மெல் அணைப் 5
புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த,
நள்ளென் கங்க... | Bright bells with long clappers ring
in a protected house,
where a pavilion with spread sand
and rustling frond thatch is set up.
On one side, women adorned with
perfect jewels stand waiting for a good
omen like bards who offer protection.
The fragrance of newborn is there.
The baby sleeps with his foster mother
in a ... | Notes: தலைவியின் தோழியர் கேட்கும்படி பரத்தை சொன்னது. ‘பெறற்கு அரும் பெரும் பொருள்’ (தொல்காப்பியம், கற்பியல் 9) என்ற நூற்பாவில் வரும் ‘சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்’ என்பதற்கு இப்பாட்டை எடுத்தோதிக் காட்டுவர் இளம்பூரணர். ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்ற நூற்பாவில் வரும், ‘செய்பெருஞ... | Meanings: நெடுநா ஒள் மணி – long-tongued bright bells, கடி மனை இரட்ட – ringing in the protected house, குரை இலைப் போகிய – with rustling leaves/fronds, விரவு மணல் – spread sand, பந்தர் – pavilion (பந்தர் – பந்தல் என்பதன் போலி), பெரும்பாண் – many bards, a leader of bards, காவல் பூண்டென – like the protection afforded, ஒரு ... | நெடிய நாக்கையுடைய ஒளியுடைய மணி காவலுடைய மனையில் ஒலிக்க, ஒலிக்கின்ற ஓலைகளால் வேயப்பட்ட புதுமணல் பரப்பிய பந்தலில், பெரும்பாணர் முன்பு தலைவனைச் சூழ்ந்து காவல் காத்தாற்போல் ஒரு புறம் திருத்தமான அணிகலன்களை அணிந்த பெண்கள் நல்ல நிமித்தமாக இருக்க, நறுமணம் அமையுமாறு விரிக்கப்பட்ட துணியிலான மெல்லிய மெத்தையின் மீது ஈன்ற மணம் உடைய... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0041 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 41 | நற்றிணை 41, இளந்தேவனார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 41, Ilanthēvanār, Pālai Thinai – What the heroine’s friend said to her | Ilanthēvanār | Pālai Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | பைங்கண் யானை பரூஉ தாள் உதைத்த
வெண்புறக் களரி விடு நீறு ஆடிச்
சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப்
பாஅர் மலி சிறு கூவலின் தணியும்
நெடுஞ்சேண் சென்று வருந்துவர் மாதோ, 5
எல்லி வந்த நல் இசை விருந்திற்குக்
கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட
விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றிச்
சிறு நுண் பல் வியர் பொறித்த
குறு நடைக் கூட்டம் வேண்... | Oh young woman with bright jewels!
When distinguished guests came home
for dinner at night, you cooked fatty
meat with ghee, fragrant smoke touched
your forehead, and small beads of sweat
formed, making you tired.
He who desired to unite with you of small
steps, has gone far away in sorrow to the
saline wasteland wher... | Notes: பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாகிய தலைவியைத் தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது. பாரம் = பருத்தி. இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுரன் முதல் வருந்திய வருத்தம் கூவலில் தணியும் என்றதன்கண் இக்காலத்தே நம் பெருமான் பிரிவினால் நீ எய்தும் துன்பம் அவன் ஈட்டி வரும் பொருளாலே நீ இல்லிலிருந்து இயற்றும் அறத்தினாலே சிறந்த ... | Meanings: பைங்கண் யானை – green-eyed elephant, பரூஉ தாள் உதைத்த – kicked with fat legs (பரூஉ – அளபெடை), வெண்புறக் களரி – white-surfaced wasteland, saline land, விடு நீறு ஆடி – released dust surrounding him, சுரன் முதல் வருந்திய வருத்தம் – the sorrow caused in the wasteland (சுரன் – சுரம் என்பதன் போலி), பைபய – little by ... | சிறந்த அணிகலன்களை அணிந்த தலைவியே! இரவில் வந்த நல்ல புகழையுடைய விருந்தினர்களுக்கு, நெய் பெய்து கொழுவிய தசையைச் சமைத்ததனால் அழகிய புகை படிந்த நெற்றியில் சிறிய நுண்ணியப் பல வியர்வைத் துளிகளைக் கொன்ற நெற்றியையும் குறுகிய நடையையுமுடைய உன்னுடன் இணைவதற்கு விரும்பும் நம் தலைவர், பசிய கண்களையுடைய யானையானது பருத்த கால்களால் உதைத... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0042 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 42 | நற்றிணை 42, கீரத்தனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது | Natrinai 42, Keerathanār, Mullai Thinai – What the hero said to the charioteer, on his way home | Keerathanār | Mullai Thinai | null | What the hero said to the charioteer, on his way home | null | null | null | null | மறத்தற்கு அரிதால் பாக! பல் நாள்
வறத்தொடு பொருந்திய உலகு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை
மணி ஒலி கேளாள் வாணுதல்; அதனால் 5
‘ஏகுமின்’ என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநர் ஆக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அற கழீஇச்,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின், மெய் வ... | It is hard to forget, oh charioteer!
Last time when I returned home, old
rain fell,
helping those on earth to do their work.
New water had filled the pits,
many different croaking sounds were heard
and she did not hear the sounds of my chariot
bells, the bright-browed woman.
And so I sent word through the servants.
Sh... | Notes: வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. ஒளவை துரைசாமி உரை – ‘கரணத்தின் அமைந்து முடிந்த காலை’ (தொல்காப்பியம், கற்பியல் 5) என்ற நூற்பாவில் வரும் ‘பேர் இசை ஊர்திப் பாகர் பாங்கினும்’ என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர். இப்பகுதிக்கு இதனையே காட்டிய நச்சினார்க்கினியர், ‘இது தானுற்ற இன்பத்தினைப் ப... | Meanings: மறத்தற்கு அரிது ஆல் – it is hard to forget (ஆல் – அசைநிலை, an expletive), பாக – oh charioteer, பல் நாள் – many days, வறத்தொடு பொருந்திய – with sorrow due to dryness, உலகு தொழில் கொளீஇய – for those in the world do their business (கொளீஇய – அளபெடை), பழ மழை பொழிந்த – old rain fell, புது நீர் அவல – in the pits wit... | பாகனே! பல நாட்கள் மழை பெய்யாது வறண்ட உலகத்தில் உள்ள மக்கள் தங்கள் தொழில்களைப் புரியுமாறு தொன்மையான மழை பொழிந்ததால், புதிய நீர் நிறைந்த பள்ளங்களில் நாவினால் ஒலிக்கும் பல கிளைகளையுடைய தவளைகள் ஒலித்ததால், ஒளிபொருந்திய நெற்றியையுடைய நம் தலைவி நாவுடைய மணியின் ஒலியைக் கேட்கவில்லை. அதனால், “நீங்கள் முன்னே சென்று அறிவியுங்கள்”... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0043 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 43 | நற்றிணை 43, எயினந்தையார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 43, Eyinanthaiyār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero | Eyinanthaiyār | Pālai Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ்சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் 5
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய்ம்மலி உவகை ஆகின்று; இவட்கே
‘அஞ்சல்’ என்ற இறை கைவிட்டெனப்
பைங்கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்,
க... | To you,
it is pleasurable, going to a distant country,
passing harsh wastelands in summer when
the bright sun blazes like spread cloth,
where famished wild dogs kill sad marai deer,
sate themselves, and leave some leftover,
which will become food to those who travel.
To her,
it is distress on hearing that you are leav... | Notes: பிரிவு உணர்த்தப்பட்டு தோழி, தலைவனைச் செலவு அழுங்குவித்தது. அகநானூறு 373 – முரவுவாய் ஞாயில் ஓர் எயில் மன்னன் போல, புறநானூறு 338 – ஓர் எயில் மன்னன். நற்றிணை 99 – துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின். இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – செந்நாய் தின்ற மரையாவின் தசை நெறியிற் செல்வோர்க்கு உணவாகும் என்ற... | Meanings: துகில் விரித்தன்ன – like cloth that is spread, வெயில் அவிர் உருப்பின் என்றூழ் – the bright sun with heat in summer, நீடிய குன்றத்துக் கவாஅன் – slopes near the tall mountains (கவாஅன் – அளபெடை), ஓய்ப்பசி செந்நாய் – a very hungry wild dog, Wild dog – Cuon alpinus dukhunensis, உயங்கு மரை தொலைச்சி – killing sad ma... | வெண்ணிற ஆடையை விரித்தாற்போன்ற வெயிலின் ஒளியையும் வெப்பத்தையும் தந்த கதிரவன் நீடிய மலைப்பகுதியில், மிகுந்த பசியையுடைய செந்நாய் ஒன்று, தளர்ந்த மான் ஒன்றைக் கொன்று, அதன் தசையை உண்ட பின்னர் உள்ள மிச்சில், தொலைவிலுள்ள வேறு நாட்டின் கடிய வழியில் செல்பவர்களுக்கு உணவு ஆகும், வெம்மையுடைய அரிய வழியில் செல்லுதல் நுமக்கு உடம்பு தி... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0044 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 44 | நற்றிணை 44, பெருங்கௌசிகனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது | Natrinai 44, Perunkousikanār, Kurinji Thinai – What the hero said to his heart | Perunkousikanār | Kurinji Thinai | null | What the hero said to his heart | null | null | null | null | பொரு இல் ஆயமோடு அருவி ஆடி,
நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்
குறியா நோக்கமொடு முறுவல் நல்கி,
மனை வயின் பெயர்ந்த காலை, நினைஇய
நினக்கோ அறியுநள் நெஞ்சே, புனத்த 5
நீடு இலை விளை தினை கொடுங்கால் நிமிரக்
கொழுங்குரல் கோடல் கண்ணி, செழும் பல,
பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில்,
குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் ச... | My heart! She is fit for you to know,
the young woman who played happily with
her beloved friends in the waterfalls until her
huge, calm, moist eyes turned red, who looked
at me intently and smiled near her house,
the beloved daughter of a mountain dweller
from a fine mountain,
where mature clusters of millet spears g... | Notes: தலைவி இற்செறிக்கப்பட்ட பின்பு குறியிடத்திற்கு வந்த தலைவன் உரைத்தது. உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குறவர் மின்மினியை விளக்காகக் கொண்டு மழை இயக்கத்தை நோக்கியிருத்தல் போல நீயும் தோழி கூற்றால் தலைவியின் இயக்கத்தைக் காண முயலுகின்றனை போலும் என்றதாம். இறைச்சி – பொ. வே. சோமசுந்தரனார் உரை – குறவர் முன்றி... | Meanings: பொரு இல் – without equal, ஆயமோடு – with friends, அருவி ஆடி – played in the waterfalls, நீர் அலைச் சிவந்த – reddened because of the water hitting the eyes, பேர் அமர் மழைக் கண் – big calm moist eyes, குறியா நோக்கமொடு – looked intently, looked with an un-indicating glance, முறுவல் நல்கி – gave her smiles, மனை வய... | நெஞ்சே! கொல்லையில் நீண்ட இலையுடைய விளைந்த தினைப் பயிரின் வளைந்த அடிப்பகுதி நிமிருமாறு கொழுத்த கதிர்களைக் கொய்யக் கருதிக் கூட்டமுடைய பற்பல உறவினர்கள் ஆக உள்ள மலை மக்கள், தங்கி அயர்வு நீக்கும் முற்றத்தில் குடம் போல் இருக்கும் காய்களையுடைய ஆசினிப்பலா இருக்கும் தோப்பில் நெடிது உயர்ந்த மரங்களின் கிளைகளில் தங்கி ஒளிரும் மின்... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0045 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 45 | நற்றிணை 45, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 45, Poet is Unknown, Neythal Thinai – What the heroine’s friend said to the hero | Unknown | null | null | null | null | null | null | null | இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீல் நிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே; 5
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும், செல! நின்றீமோ!
பெருநீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு பு... | She is from a beautiful village
near the seashore grove,
the daughter of fishermen
who enter the big blue ocean,
stir it, and haul fish.
You are from an ancient town
with shops, where tall flags sway,
the beloved son of a wealthy man
owning fast chariots.
We chase the flocks of birds that
come desiring the fatty, sha... | Notes: குறை வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது. ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின் ‘பெருமையிற் பெயர்ப்பினும்’ என்ற பகுதிக்கு இப்பாட்டினை ஓதிக் காட்டுவர் இளம்பூரணர். நச்சினார்க்கினியரும் அதற்கே இதனைக் காட்டினர். ‘ஏனோர் பாங்கினும்’ (தொல்காப்பியம், புறத்திணையியல் 23) என்ற... | Meanings: இவளே – this young woman, my friend, கானல் – seashore grove, நண்ணிய – nearby, காமர் – beautiful, desirable, சிறுகுடி – village, small settlement, நீல் நிறப் பெருங்கடல் – blue colored big ocean (நீல் – கடைக்குறை, poetical license which consists in the shortening of a word by elision of one or more letters in th... | என் தோழியோ கடற்கரைச் சோலையின் அருகில் உள்ள அழகிய சிற்றூரில் உள்ள, கடலில் சென்று மீனைப் பிடிக்கும் பரதவரின் மகள். நீயோ பெரிய கொடிகள் பறக்கும் கடை வீதிகள் உள்ள பழமையான ஊரில் விரைந்து செல்லும் தேரையுடைய செல்வந்தரின் அன்பு மகன். கொழுத்த சுறா மீனை அறுத்துக் காய வைத்து பறவைகளை விரட்டும் எங்களுக்கு உன்னால் என்ன பயன்? இங்கு மீ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0046 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 46 | நற்றிணை 46, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 46, Unknown Poet, Pālai Thinai – What the heroine’s friend said to the hero | Unknown | Pālai Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | வைகல்தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்துக்,
காணீர் என்றலோ அரிதே; அது நனி
பேணீர் ஆகுவிர் ஐய! என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர் 5
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி
பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர,
வெவ்வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து,
எவ்வம் மிகூஉம் அருஞ்சுரம் இறந்து,
நன்வாய் அல்ல... | Lord! in this world, pleasure and youth
will be lost every day like the shadows
of arrows that are shot.
It will be rare if you cannot see that.
please realize that and care for her!
It will distress my friend wearing jewels
on her chest, if you go desiring to earn
impermanent wealth which is of no use
for a good life... | Notes: பிரிவு உணர்த்திய தலைவனிடம் தோழி சொன்னது. நற்றிணை 16 – பொருளே வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடு மீன் வழியின் கெடுவ. அறை அறையா (7) – ஒளவை துரைசாமி உரை – பாறையின் மேல் அறைந்து, H.வேங்கடராமன் உரை – பாறையில் விழும்படி. அறையா – அறைந்து என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினு... | Meanings: வைகல்தோறும் – every day, இன்பமும் இளமையும் – pleasure and youth, எய் கணை நிழலின் – like the shadow of an arrow that is shot (நிழலின் – இன் உருபு ஒப்புப் பொருளது), கழியும் – they will be lost, இவ் உலகத்து – in this world, காணீர் என்றலோ – if you cannot see (ஓ – அசைநிலை, an expletive), அரிதே – it is rare (ஏ – அச... | ஐயா! என் தோழியின் அணிகலன் அணிந்த மார்பகம் தனிமையால் வருந்துமாறு, பாணர்கள் தங்கள் பறையை அடிக்கும் குறுந்தடிகளோ என ஐயம் கொள்ளும்படியான ஓசையுடன் கொன்றை மரத்தின் இனிய கனிகள் பாறையில் விழும்படி மரக் கிளைகள் அசைய, வெப்பம் மிகுந்த காற்று வீசும் மூங்கில்கள் நிறைந்த இடத்திற்குத் துன்பம் மிக்குள்ள பாலை நிலத்தைக் கடந்து, நன்மை அம... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0047 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 47 | நற்றிணை 47, நல்வெள்ளியார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 47, Nalvelliyār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby | Nalvelliyār | Kurinji Thinai | null | What the heroine’s friend said to her, as the hero listened nearby | null | null | null | null | பெருங்களிறு உழுவை அட்டென, இரும் பிடி
உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தல் பாசடை புரையும் அம் செவிப்
பைதல் அம் குழவி தழீஇ, ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் 5
கானக நாடற்கு, ‘இது என’ யான் அது
கூறின் எவனோ தோழி, வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி,
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை... | What is wrong my friend, if I
tell him, the lord of the forests,
……….where a female elephant
……….hugs quickly her beautiful,
……….sad calf with ears like green
……….leaves of waterlilies, and
……….suffers in distress like those
……….with unhealable sores, since
……….a tiger killed her large mate,
that mother used kazhangu b... | Notes: பிரிந்து நீட்டித்துச் சென்ற தலைவன் சிறைப்புறத்தானாக இருப்பதை அறிந்த தோழி, தலைவிக்குக் கூறுவாளாய் அவனிடம் கூறியது. உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – களிற்றைப் புலி கொன்றதனால் பிடியானை கன்றோடு வருந்தி நிற்கும் என்றது, நம் பெருந்தகைமையை அலர் கெடுத்தற்கு வருந்தி நான் உன்னுடன் சேர்ந்து வருந்துவேன் என்பதாம், ஒளவை... | Meanings: பெருங்களிறு உழுவை அட்டென – since the huge male elephant was killed by a tiger, இரும் பிடி உயங்கு பிணி வருத்தமொடு – the female elephant with great sorrow, இயங்கல் செல்லாது – unable to leave, unable to function, நெய்தல் – waterlilies, பாசடை – green leaves, புரையும் – like, அம் செவி – beautiful ears, பைதல் அம் க... | தோழி! தலைவனைப் பிரிந்த உன் நிலையை வேறு என்று எண்ணி முருகனால் ஏற்பட்டது எனக் கழங்கின் மாறுபாட்டைக் காட்டி, வெறியாட்டம் நிகழ்த்தினால் உன் நிலை மாறும் என உணர்ந்த உள்ளத்துடன், ஆட்டுக்குட்டியை அறுத்து அன்னை நிகழ்த்தும் வெறியாட்டத்தினால் முருகவேள் உன் பொன்னை ஒத்த பசலையைப் போக்குவதற்கு உதவாமையினால், பெரிய களிற்று யானையைப் புல... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0048 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 48 | நற்றிணை 48, சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 48, Chēramān Pālai Pādiya Perunkadunkō, Pālai Thinai – What the heroine’s friend said to the hero | Chēramān Pālai Pādiya Perunkadunkō | Pālai Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | அன்றை அனைய ஆகி, இன்றும் எம்
கண் உள போலச் சுழலும் மாதோ,
புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி,
புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடைக் 5
கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர்
வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது,
அமர் இடை உறுதர நீக்கி, நீர்
எமர் இடை உறுதர ஒளித்த காடே. | What happened on that day
revolves in our eyes even today!
In the forest path with flower
fragrances,
……….where umbrella-shaped kongam
………. flowers with delicate petals and
………. dull sepals blossomed and made
………. the woods beautiful,
……….appearing like the dawn stars,
you chased away without fear, bandits
wearing thi... | Notes: கற்பு வாழ்வில் பிரிவு உணர்த்திய தலைவனிடம், தோழி களவில் நடந்ததை நினைவூட்டியது. நற்றிணை 362 – அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென் நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே. ஒளவை துரைசாமி உரை (நற்றிணை 318) – உடன்போக்கின்கண் தோழியும் உடன்சேறல் இல்லையாயினும், தலைவிக்கும் தோழிக்கும் உள்ள ஒருமையுளப்பாடு கருதி ‘நாம்’ என்றார். இவ்வாறு ... | Meanings: அன்றை அனைய ஆகி – what happened on that day, இன்றும் – even today, எம் கண் உள போலச் சுழலும் – revolves like it is inside our eyes, மாதோ – மாது, ஓ – அசைநிலைகள், expletives, புல் இதழ் – thin sepals, dull colored sepals, கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ – kongam flowers appear like umbrellas, Cochlospermum gossypiu... | அன்று நடந்தது இன்றும் எம் கண்களில் சுழல்கின்றது. சிறிய மெல்லிய இதழ்களையுடைய குடையைப் போன்ற கோங்க மலர்கள், அதிகாலையின் விண்மீன்கள் என்று நினைக்குமாறு தோன்றிக் காட்டை அலங்கரித்தன. மலர்களின் நறுமணத்தை உடைய காட்டில், திரண்ட வளையல்களைக் கையில் அணிந்த மறவர்கள் கூர்மையான அம்புடன் ஆரவாரத்துடன் வந்த பொழுது, நீ அஞ்சாது, அவர்களுட... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0049 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 49 | நற்றிணை 49, நெய்தல் தத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 49, Neythal Thathanār, Neythal Thinai – What the heroine’s friend said to her | Neythal Thathanār | Neythal Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | படுதிரை கொழீஇய பால் நிற எக்கர்த்
தொடியோர் மடிந்தெனத் துறை புலம்பின்றே;
முடி வலை முகந்த முடங்கு இறா பரவைப்
படுபுள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே;
கோட்டு மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து 5
எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் எனச்
சென்று நாம் அறியின் எவனோ தோழி!
மன்றப் புன்னை மாச் சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும்
தெண் கடல் சேர்... | The seashore has become lonely
since young women adorned with
bangles have stopped playing
on the milky sand brought
and heaped by dashing waves.
A day of chasing birds that came
for the curved shrimp caught in
knotted nets, has ended.
Our relatives have returned
happily to rest, after catching
sharks with horns.
Sin... | Notes: தலைவி தலைவனைக் கூடுதற்கு இரவுக்குறி விரும்பும்படி தோழி கூறியது. தலைவன் சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததுமாம். ஒளவை துரைசாமி உரை – ‘வரைவிடை வைத்த காலத்து வருந்தினும்’ (தொல்காப்பியம், களவியல் 22) என்ற நூற்பாவின் ‘வரையா நாளிடை வந்தோன் முட்டினும்’ என்னும் பகுதிக்கு இப்பாட்டினை எடுத்தோதி. ‘இதன்கண் என்றான் என ஒருசொ... | Meanings: படுதிரை கொழீஇய – the loud waves brought and heaped, the abundant waves brought and heaped (கொழீஇய – அளபெடை), பால் நிற எக்கர் – milk colored sand, தொடியோர் மடிந்தென – since young women wearing bangles are not there, since young women wearing bangles are sleeping, துறை புலம்பின்றே – the seashore port has become... | தோழி! ஒலிக்கின்ற அலைகள் குவித்த பால் நிறத்தையுடை வெள்ளை மணல் மேட்டில் விளையாடும் வளையல்களை அணிந்த இளமகளிர், மனைகளில் உறங்கிவிட்டதால் கடற்கரை தனிமையுற்றது. முடிச்சுக்கள் உடைய வலைகளினால் பிடித்துக் கொண்டுவரப்பட்ட வளைந்த இறால்மீன் உணங்கலை (காய வைத்ததை) கவர வரும் பறவைகளை விரட்டுவதால் பகற்பொழுது கழிந்தது. கொம்பினையுடைய சுறா... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0050 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 50 | நற்றிணை 50, மருதம் பாடிய இளங்கடுங்கோ, மருதத் திணை – தோழி பாணற்கு வாயில் மறுத்துத் தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படி | Natrinai 50, Marutham Pādiya Ilankadunkō, Marutham Thinai – What the heroine’s friend said to her, as she refused entry to the messenger bard, as the hero listened nearby | Marutham Pādiya Ilankadunkō | Marutham Thinai | null | What the heroine’s friend said to her, as she refused entry to the messenger bard, as the hero listened nearby | null | null | null | null | அறியாமையின், அன்னை, அஞ்சிக்,
குழையன் கோதையன் குறும் பைந்தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின், 5
‘கேட்போர் உளர் கொல், இல்லை கொல்? போற்று’ என
‘யாணது பசலை’ என்றனன்; அதன் எதிர்,
‘நாண் இலை எலுவ’ என்று வந்திசினே,
செறுநரும் விழையும் செம்மலோன் என
நறுநுதல... | My dear friend with a fragrant
forehead!
He was going to the thunangai
festival to dance, wearing a flower
garland, earrings and small new
bracelets. We were going there to
catch him dancing with other
women, with ignorance and in fear
of you. At the curved place which is
at the end of a long and high street,
he appea... | Notes: தோழி பாணற்கு வாயில் மறுத்தது. கூற்று விளக்கம் – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – தலைமகன் பரத்தையிற் பிரிந்தான். பின்பு சிறைப்புறமாக வந்து நின்று வாயில் வேண்டிய பாணனைத் தலைவியிடத்து விடுத்தான். தோழி அத் தலைமகன் கேட்கத் தலைவியை நோக்கித் “தலைவன் பரத்தையரோடு துணங்கை ஆடும்போது கையும் களவுமாய்ப் பிடிக்கச் சென்றோம். அவனோ வ... | Meanings: அறியாமையின் – due to ignorance, due to not knowing what to do, அன்னை – oh mother (friend), அஞ்சி – fearing, குழையன் – the man wearing earrings, கோதையன் – the man wearing a flower garland, குறும் பைந்தொடியன் – the man wearing small new bracelets, விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல – we were going to catch him (w... | அன்னையே! நறுமண நெற்றியை உடைய தலைவியே! என் அறியாமையினால் நின்னை அஞ்சி, காதில் குண்டலத்தை அணிந்தவனும் கழுத்தில் மாலையை அணிந்தவனும் பசிய வளையல்களைக் கையில் அணிந்தவனுமான நம் தலைவன் விழாக்களத்தில் துணங்கை ஆடுதலை யாம் கையும் களவுமாய்ப் பிடிப்பதற்குச் செல்ல, நீண்ட உயர்ந்த தெரு முனையில் வேறொரு வழியில் புகுந்து அயலானாகிய அவன் வ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0051 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 51 | நற்றிணை 51, பேராலவாயர், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 51, Perālavāyar, Kurinji Thinai – What the heroine said to her friend, as the hero listened nearby | Perālavāyar | Kurinji Thinai | null | What the heroine said to her friend, as the hero listened nearby | null | null | null | null | யாங்குச் செய்வாம் கொல் தோழி, ஓங்கு கழைக்
காம்புடை விடர் அகம் சிலம்ப பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்
கடுங்குரல் ஏறொடு கனை துளி தலைஇப்
பெயல் ஆனாதே வானம் பெயலொடு 5
மின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தெனப்
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே,
பெருந்தண் குளவி குழைத்த பா அடி
இருஞ்சேறு ஆடிய நுதல கொல் களிறு
பேதை ஆசினி... | What can we do, oh friend,
for the man from the lofty mountains,
where tall bamboos grow, rapid and loud
thunder roars and reverberates in caves as
fearing snakes run between boulders for
cover and roll in fear, rain pours heavily
from the sky along with lightning strikes,
and the vēlan appears with his spear
as bright... | Notes: தாய் வெறியாட்டு நிகழ்த்தக் கருதினாள். சிறைப்புறமாக இருக்கும் தலைவனுக்கு உணர்த்தக் கருதிய தலைவி தோழியிடம் வருந்திக் கூறியது. பின்னு விடு முச்சி (7) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பின்னி விடுத்தற்குரிய கொண்டையில், ஒளவை துரைசாமி உரை – பின்னப்படுகின்ற கூந்தலில். வீ தா வேங்கைய (11) – பின்னத்தூர் அ. நாராயணசாமி... | Meanings: யாங்குச் செய்வாம் கொல் தோழி – what can do oh friend, what is it that we won’t do oh friend, (கொல் – அசைநிலை), ஓங்கு கழை – tall bamboo stalks, காம்புடை – bamboo filled, விடர் அகம் – mountain clefts, சிலம்ப – to sound, பாம்பு – snakes, உடன்று – in rage, ஓங்கு வரை – tall mountains, மிளிர ஆட்டி , மிளிர வாட்டி – c... | தோழி! உயர்ந்த தண்டினையுடைய மூங்கில்களைக் கொண்ட மழைப் பிளவுகளில் எல்லாம் ஒலித்துப் பாம்புகள் வருந்தி உயர்ந்த மலையில் புரளுமாறு துன்புறுத்தி விரைந்த செலவையுடைய கடிய முழக்கமுடைய இடியுடன் முகில்கள் மிக்க துளிகளைப் பெய்யத் தொடங்கி, அப்பெய்தலும் நிற்கவில்லை. மழையுடன் கூடிய மின்னலை நேராக நிறுத்தினாற்போன்ற ஒளிரும் வேலைக் கையில... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0052 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 52 | நற்றிணை 52, பாலத்தனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது | Natrinai 52, Pālathanar, Pālai Thinai – What the hero said to his heart | Pālathanar | Pālai Thinai | null | What the hero said to his heart | null | null | null | null | மாக் கொடி அதிரல் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி,
வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம்; 5
நீயே, ஆள் வினை சிறப்ப எண்ணி, நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே;
அன்பு இலை, வாழி என் நெஞ்சே! வெம்போர்
மழவர் பெருமகன் மா வள் ஓரி
கை ... | May you live long, oh heart! You desire
to earn wealth, without any consideration!
You don’t understand the life of separation
from my pretty woman with fragrant hair
adorned with athiral flowers from dark vines,
tied together with pāthiri flowers with new,
pure petals. You have no kindness.
I will not leave the swee... | Notes: பொருள்வயின் பிரியும் தலைவன், உள்ளம் கலங்கித் தன் நெஞ்சிடம் உரைத்தது. ஒளவை துரைசாமி உரை – நீ என்பால் அன்புடை அல்லை என்பான், அன்பிலை என்றும், நெருங்கிக் கூறலின் வாழி என்றும் கூறினான். பாதிரித் தூத் தகட்டு எதிர்மலர் (1-2) – ஒளவை துரைசாமி உரை – பாதிரியினது தூய இதழுடைய புதுமலர், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – த... | Meanings: மாக் கொடி – dark vines, அதிரல் பூவொடு – along with wild jasmine flowers, பாதிரி – trumpet flowers, Stereospermum chelonoides,தூத் தகட்டு – with pure outer petals, எதிர்மலர் – fresh flowers, similar flowers (எதிர்மலர் – புதிய மலர்கள், ஒத்த மலர்கள்), வேய்ந்த – tied together, கூந்தல் – her hair, மணம் கமழ் – spre... | என் நெஞ்சே! கரிய கொடியையுடைய காட்டு மல்லிகை பூவுடன் தூய பொற்தகட்டைப் போல் இருக்கும் பாதிரி பூக்கள் மலர்களை எதிரே வைத்து வேய்ந்த மலர் மாலையைச் சூடிய கூந்தலின் மணம் கமழும் நறுமணத்தைப் பெற்று, யாம் இவளுடைய தேமல் பொருந்திய மார்பினை அடைந்து கொண்டு மிக்க சுவையுடைய அந்த அணைப்பிலிருந்து நீங்குதலைச் செய்யேம். நீ பொருள் ஈட்டும் ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0053 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 53 | நற்றிணை 53, நல்வேட்டனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 53, Nalvēttanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby | Nalvēttanār | Kurinji Thinai | null | What the heroine’s friend said to her, as the hero listened nearby | null | null | null | null | யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது
அறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?
எவன் கொல் தோழி அன்னை கண்ணியது?
‘வான் உற நிவந்த பெருமலைக் கவாஅன்
ஆர்கலி வானம் தலைஇ நடுநாள் 5
கனை பெயல் பொழிந்தென கானக் கல் யாற்று
முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும்
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்,
தண்ணென உண்டு கண்ணின் நோக்கி
முனியாது ஆடப்... | I was afraid and hid it.
Did mother know about it?
Is she gracious because of it?
What was she thinking, oh friend?
She said to me, “In the middle
of night, heavy rains with roaring
thunder fell on the mountains that
rise up to the sky and flood waters
flowed in the forest stream with rocks,
carrying dried leaves and ... | Notes: வரைவு நீட்டிப்பத் தோழி சிறைப்புறமாகச் சொல்லியது. ஒளவை துரைசாமி உரை – பழந்தமிழர் வாழ்வில் புதுப்புனலாடல் சிறந்த நிகழ்ச்சியாகும். அக்காலை மன்னரென்றும் மக்களென்றும் வேறுபாடின்றி எல்லோரும் புனலாடல் மேவுவர். | Meanings: யான் அஃது அஞ்சினென் – I was afraid of that, கரப்பவும் – hid it, தான் அஃது அறிந்தனள் கொல்லோ – did she know about it (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), அருளினள் கொல்லோ – was she gracious because of it (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), எவன் – what is the reason, கொல் – அசைநிலை, an ... | தோழி! அன்னை அறிந்துவிடுவாள் என அஞ்சி, நான் நீ தலைவனின் பிரிவால் இளைத்தனை என்பதை மறைத்தபோதும், அதை அவள் அறிந்துக் கொண்டாளோ? இல்லை அன்பு மிகுதியால் உரைத்தாளோ? அன்னை எண்ணியது என்னவோ? அவள் என்னை நோக்கி, “வானளவு உயர்ந்த மலைப்பக்கத்தில் இடியோசை உடைய முகில்கள் மழை பெய்யத்தொடங்கிய நள்ளிரவில் மிக்க மழையைப் பொழிந்ததால், கற்கள் உ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0054 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 54 | நற்றிணை 54, சேந்தங்கண்ணனார், நெய்தல் திணை – தலைவி குருகிடம் சொன்னது | Natrinai 54, Chēnthankannanār, Neythal Thinai – What the heroine said to a heron | Chēnthankannanār | Neythal Thinai | null | What the heroine said to a heron | null | null | null | null | வளை நீர் மேய்ந்து, கிளைமுதல் செலீஇ,
வாப் பறை விரும்பினை ஆயினும், தூச் சிறை
இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து,
கருங்கால் வெண்குருகு, எனவ கேண்மதி,
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை, 5
அது நீ அறியின் அன்புமார் உடையை,
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது, என் குறை
இற்றாங்கு உணர உரைமதி, தழையோர்
கொய் குழை அரும்பிய குமரி ... | Oh white heron with pure feathers
and black legs! You love to dive into
the ocean with your flock and eat
abundant fish!
But please listen to me! This evening
time brings me great sorrow!
If you understand the reason for
my pain, and since you are very kind
to me, please let him know clearly of
my distress without tre... | Notes: இருவகைக் குறியானும் வந்தொழுகும் தலைவன் இடையீடுப் பட்டு வாராது ஒழியக்கண்ட தலைவி, வரைதல் வேட்கையளாய், குருகிடம் இரந்து கூறியது. உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – ஞாழலின் கரிய புறத்தினைத் தெண் திரை தடவும் என்றது, ‘தலைவன் தன்னைத் தழுவி முதுகைத் தடவுதல் வேண்டும்’ என்ற தலைவியின் வேட்கையை உணர்த்தியது. Natrinai 54,... | Meanings: வளை நீர் – water surrounding the earth, the oceans (அன்மொழித்தொகை), மேய்ந்து – eating, கிளைமுதல் – with your flock, செலீஇ – going (அளபெடை), வாப் பறை – leaping and flying, விரும்பினை ஆயினும் – even though you desire, தூச் சிறை – pure feathers, இரும் புலா அருந்தும் – eating large amounts of flesh, நின் கிளையொடு... | கரிய கால்களை உடைய வெண்ணிற குருகே! கடலில் உண்டுவிட்டு, உன் சுற்றத்துடன் சென்று, தாவிப் பறந்து வருதலை நீ விரும்பினாய் ஆயினும், தூய சிறகுகளையுடைய, மிக்கப் புலவை உண்ணும் உன் சுற்றத்துடன் சிறிது நேரம் தங்கிஇருந்து, நான் கூறுவதைக் கேட்பாயாக! எனக்குப் பெரும் வருத்தத்தைத் தருகின்றது இந்தப் புல்லிய மாலை நேரம். அதை நீ அறிந்தால்,... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0055 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 55 | நற்றிணை 55, பெருவழுதி, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 55, Peruvaluthi, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero | Peruvaluthi | Kurinji Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | ஓங்கு மலை நாட! ஒழிக நின் வாய்மை!
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து, இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல, தோள் சேர்பு
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின், 5
கண் கோள் ஆக நோக்கி, ‘பண்டும்
இனையையோ?’ என வினவினள் யாயே,
அதன் எதிர் சொல்லாளாகி, அல்லாந்து
என் முகம் நோக்கியோளே ‘அன்னாய்,
யாங்கு உணர்ந்து உய்குவள்... | Oh man from the lofty mountains!
May your truths be ruined!
You came at night not caring
about great dangers on the small
stony paths with bamboo,
and embraced her chest with bright
spots, after which six-legged bees
swarmed her shoulders endlessly.
Mother looked at her with her
killer eyes and asked,
“Is this how it ... | Notes: மணம் புரியும் பொருட்டுப் பொருள் தேடிச் சென்று மீண்டு வந்த தலைவனிடம் தோழி உரைத்தது. விரைவில் வரைந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகின்றாள். ஒளவை துரைசாமி உரை – களவு அலர் ஆயினும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவில் வரும் ‘தோழியை வினவலும்’ என்றதற்கு இப்பாட்டினை எடுத்தோதிக் காட்டி ‘இது செவிலி வினாயினமையைத் தோழ... | Meanings: ஓங்கு மலை நாட – oh man from the lofty mountains, ஒழிக நின் வாய்மை – may your truths be ruined, காம்பு தலைமணந்த – filled with bamboo, with entangled bamboo, கல் அதர்ச் சிறு நெறி – small path with rocks, narrow path with rocks, உறு பகை பேணாது – not caring about the great dangers (உறு – மிக்க), இரவின் வந்து – yo... | உயர்ந்த மலைகளையுடைய நாட்டின் தலைவனே! உன்னுடைய வாய்மை ஒழிவதாக! மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி இருக்கும் கற்கள் நிறைந்த சிறு வழியில் ஏற்படும் மிக்க துன்பத்தைப் பொருட்படுத்தாமல் நீ இரவில் வந்து, இவளின் தேமல் படர்ந்த மார்பைத் தழுவித் தோளுடன் தோள் சேர்த்து மகிழ்ந்ததால் உண்டான புதுமணத்தைக் கருதி, ஆறு கால்களையுடைய வண்டுகள... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0056 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 56 | நற்றிணை 56, பெருவழுதி, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 56, Peruvaluthi, Pālai Thinai – What the heroine said to her friend | Peruvaluthi | Pālai Thinai | null | What the heroine said to her friend | null | null | null | null | குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ
வண்டுதரு நாற்றம் வளி கலந்து ஈயக்,
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,
எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்
சென்ற நெஞ்சம் செய் வினைக்கு அசாவா, 5
ஒருங்குவரல் நசையொடு வருந்தும் கொல்லோ?
அருளான் ஆதலின், அழிந்து இவண் வந்து,
தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி,
‘ஏதிலாட்டி இவள்’ எனப்
போயின்... | Scents from tiny buds and fragrant flowers
of short-trunked kuravam trees, raised by
bees that swarm them, mix with the fragrant
breezes at this time, giving great joy to the
eyes.
But my sad heart went away to him, the man
who caused the bright bangles on my arms to
slip down.
Is my sad heart, that desired to be wit... | Notes: வரைபொருள் ஈட்டத் தலைவன் சென்ற பொழுது, ஆற்றுப்படுத்திய தோழியிடம் தலைவி உரைத்தது. ஒளவை துரைசாமி உரை – ‘நோயும் இன்பமும்’ (தொல்காப்பியம், பொருளியல் 1) என்ற நூற்பாவின்கண் இப்பாட்டினை ஓதிக்காட்டி, ‘இஃது உணர்வுடையது போல் இளிவரல் பற்றி வந்த தலைமகள் கூற்று’ என்பர் இளம்பூரணர். இனி, ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவி... | Meanings: குறு நிலைக் குரவின் – of short trunked kuravam trees, Bottle Flower Tree, Webera Corymbosa, சிறு நனை – small buds, நறு வீ – fragrant flowers, வண்டுதரு – brought by bees, bringing bees, நாற்றம் வளி கலந்து – fragrance mixed with breezes, ஈய – yielding, கண் களி பெறூஉம் – eyes attain happiness (பெறூஉம் – அளபெடை),... | குறிய உயரத்தை உடைய குரவ மரத்தின் சிறிய அரும்புகள் முதிர்ந்த நறுமண மலர்களை வண்டுகள் கிளர்வதால் எழும் மணத்தைக் காற்று கலந்து வீசுவதால், கண்கள் அவற்றைக் கண்டு மகிழ்ச்சியடையும் அப்பொழுதில், என் ஒளியுடைய வளையல்களை நெகிழச் செய்த தலைவரை எண்ணித் துன்பமுற்று அவரிடம் சென்ற என் நெஞ்சு, அவருடைய செயலுக்குத் துணையாக அவ்விடம் இருந்து... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0057 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 57 | நற்றிணை 57, பொதும்பில் கிழார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 57, Pothumpil Kizhār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero | Pothumpil Kizhār | Kurinji Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத்,
துஞ்சு பதம் பெற்ற துய்த்தலை மந்தி
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி,
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம்பால் 5
கல்லா வன்பறழ்க் கைந்நிறை பிழியும்
மாமலை நாட! மருட்கை உடைத்தே,
செங்கோல் கொடுங்குரல் சிறு தினை வியன் புனம்
கொய் பதம் குறுகும் காலை, எம்
மை ஈர் ஓ... | Oh Lord of the country with huge
mountains,
where lions and other wild animals
roam in herds, a wild cow with large
horns and her calf live under a vēngai
tree, and on seeing them asleep,
a monkey with fuzzy hair on her head
signs her troop to be quiet, and presses
the cow’s swollen udder for sweet milk,
which her baby... | Notes: பகற்குறியில் வந்தொழுகும் தலைவனிடம், தோழி ‘தினை கொய்யும் காலம் நெருங்கியதால் இனி தலைவியைக் காண இயலாது’ எனக் கூறித் திருமணம் புரியத் தூண்டியது. உள்ளுறை (1) – ஒளவை துரைசாமி உரை – ஆமான் உறங்கும் செவ்வி கண்டு தன் சுற்றத்தைக் கைகவியா அடக்கித் தன் பறழ்க்கு மந்தி வீங்கு சுரை வாங்கித் தீம்பால் பிழிதல் போல, இவளைக் கொண்டுத... | Meanings: தடங்கோட்டு – with curved horns, with large horns, ஆமான் – a wild cow, a female bison, மடங்கல் – lions, மா நிரை – large herds of animals, குன்ற – of the mountain, வேங்கை – under the kino Tree, Pterocarpus marsupium, கன்றொடு வதிந்தென – she lives with her calf, துஞ்சு பதம் பெற்ற – they are sleeping, துய்த்தலை மந... | வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு ஒன்று, சிங்கம் முதலாய விலங்குகளின் பெருங்கூட்டம் உள்ள மலையில் உள்ள வேங்கை மரத்தின் அடியில் தன் கன்றுடன் தங்கியிருந்ததாக, அவை துயில்வதைக் கண்ட பஞ்சுபோல் தலையுடைய பெண் குரங்கு ஒன்று ஆரவாரமுடைய தன் சுற்றத்தை ஒலிக்காதவாறு கையைக் கவித்து அடக்கி, பசுவை நெருங்கி, அப்பசுவின் பால் நிறைந்த மடியை... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0058 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 58 | நற்றிணை 58, முதுகூற்றனார், நெய்தல் திணை – தோழி சொன்னது | Natrinai 58, Muthukootranār, Neythal Thinai – What the heroine’s friend said | Muthukootranār | Neythal Thinai | null | What the heroine’s friend said | null | null | null | null | பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ,
வீரை வேண்மான் வெளியன் தித்தன் 5
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப நுண் பனி அரும்பக்,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை
நீடுநீர்ப் பனித் துறை... | May the horses hitched to the chariot
of the lord of the cold shores with tall
waves, suffer beating,
like the sparrows painted on the eyes
of sweet-toned drums hanging on the
shoulders of very wealthy children
wearing gold jewels,
that are hit with drumsticks!
They caused us to return with sad
hearts and exhausted bo... | Notes: பகற்குறி வந்து நீங்கும் தலைவன் போக்கு நோக்கி, தோழி மாவின் மேல் வைத்துச் சொல்லி வரைவு கடாயது. வரலாறு: வீரை, வேண்மான் வெளியன் தித்தன். ஒளவை துரைசாமி உரை – நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் ‘அன்பு தலையடுத்த வன்புறை’ என்றதனால், இப்பாட்டைக் காட்டி, ‘இது பகற்குறி வந்து போகின்ற தலைவன் ப... | Meanings: பெருமுது செல்வர் – very rich people, பொன்னுடைப் புதல்வர் – gold jewels wearing sons, சிறு தோள் கோத்த – hung on their small shoulders, செவ்வரி – lovely sounds, பறையின் – of the drums, கண் அகத்து – on their eyes, எழுதிய – drawn, painted, குரீஇப் போல – like the sparrows (குரீஇ – அளபெடை), கோல் கொண்டு – with drum ... | வீரை நகரில் ஆண்ட வேளிர் மன்னன் வெளியன் தித்தனுடைய முரசுடன் வெண்சங்கு ஒலிக்க மாலையில் ஏற்றப்பட்ட விளக்குகளுடன், நுட்பமான பனித்துளிகள் அரும்ப மகளிர் செயலறும்படி வந்த பொழுது உடல் தளர்ந்து துன்ப நெஞ்சினோம் ஆக யாம் ஆகும்படி செல்லுகின்ற, ஓங்கிய அலைகளையுடைய நீண்ட நீர் வடிவாய் உள்ள குளிர்ந்த துறையையுடைய தலைவனின் ஓடும் தேரின் ந... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0059 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 59 | நற்றிணை 59, கபிலர், முல்லைத் திணை – தலைவன் தேர்ப் பாகனிடம் சொன்னது | Natrinai 59, Kapilar, Mullai Thinai – What the hero said to the charioteer | Kapilar | Mullai Thinai | null | What the hero said to the charioteer | null | null | null | null | உடும்பு கொரீஇ, வரி நுணல் அகழ்ந்து,
நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல
பல் வேறு பண்டத் தொடை மறந்து, இல்லத்து,
இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் 5
வன்புலக் காட்டு நாட்டதுவே; அன்பு கலந்து
நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
உள்ளினள் உறைவோள் ஊரே; முல்லை
நுண் முகை அவிழ்ந்த புறவின்
... | The town where she lives is in the
harsh forest, where delicate mullai
buds open as flowers, a hunter kills
monitor lizards, removes termites
from tall mounds, digs up frogs with
stripes, hunts hares during the
day, carries them on his shoulders,
drops everything at home, and
forgets it all and settles for sweet
liquor... | Notes: வினை முற்றி மீளும் தலைவன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது. ஒளவை துரைசாமி உரை – ‘மாயோன் மேய’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 4) என்ற நூற்பா உரையில், ‘நால்வகை ஒழுக்கத்திற்கும் நால்வகை நிலனும் உரியவாயினவாறு காண்க’ என்பார், இப்பாட்டின்கண் முல்லை ஒழுக்கத்துக்கு முல்லை நிலன் உரியதாதற்கு ‘வன்புலக் காட்டு நாட்டதுவே’ என்ற இப்ப... | Meanings: உடும்பு கொரீஇ – stabbing monitor lizards (கொரீஇ – அளபெடை), வரி நுணல் அகழ்ந்து – digging up frogs with stripes, நெடுங்கோட்டுப் புற்றத்து – of tall termite mounds, ஈயல் – termites, கெண்டி – digging up, எல்லு – day, முயல் – hares, எறிந்த – hunt, வேட்டுவன் – a hunter, சுவல – carried on his shoulders, பல் வேறு பண்... | உடும்பினை ஈட்டியால் குத்தி எடுத்து, மண்ணில் உள்ள வரிகளை உடைய தவளையை மண்வெட்டியால் தோண்டி எடுத்து, நெடிய உச்சிகளையுடைய புற்றில் உள்ள ஈயலைத் திரட்டிக்கொண்டு, பகற்பொழுதில் முயலை வேட்டையாடிய வேட்டுவன், அவற்றைத் தோளில் சுமந்து பல்வேறு பண்டங்களையும் கட்டிய மூடையுடனே யாவற்றையும் இல்லத்தில் போட்டுவிட்டு மறந்து, மிக்கப் பருகிய ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0060 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 60 | நற்றிணை 60, தூங்கலோரியார், மருதத் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 60, Thoongalōriyār, Marutham Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby | Thoongalōriyār | Marutham Thinai | null | What the heroine’s friend said, as the hero listened nearby | null | null | null | null | மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்
பெருநெல் பல் கூட்டு எருமை உழவ!
கண்படை பெறாஅது தண் புலர் விடியல்,
கருங்கண் வராஅல் பெருந்தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ்சோறு 5
கவர்படு கையை கழும மாந்தி,
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த, நின்
நடுநரொடு சேறி ஆயின், அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி; எம் இல்
மா இருங்கூந்தல் மட... | Oh farmer who has many buffaloes
and many grain silos as tall as
mountains!
You wake up at the crack of dawn
without much sleep, and eat with
your desiring hands large cooked
pieces of black-eyed varāl fish
with big balls of fine rice.
When you go with others to plant
paddy grass in the water-filled field,
please pro... | Notes: தலைவி இற்செறிக்கபட்டாள் என்பதனை தலைவனுக்கு உணர்த்துகின்றாள் தோழி. வரைவு கடாயது. ஒளவை துரைசாமி உரை – களவின்கண் சிறைப்புறத்தானாகிய தலைமகற்குத் தலைவி இற்செறிப்புண்டு மேனி மெலிந்திருக்கும் திறத்தைச் சொல்லி, வரைவு கடாவும் கருத்தினளாகலின், தோழி, மறுநாட் காலையில் நாற்று நடுவதற்கு நடுநரை நாடிச் செல்லும் உழவனை நோக்கிக் க... | Meanings: மலை கண்டன்ன – like seeing mountains, நிலை புணர் – put together, நிவப்பின் – with height, tall, பெருநெல் பல் கூட்டு – with many big grain silos, எருமை உழவ – oh farmer/plowman owning buffaloes, கண்படை பெறாஅது – not getting sleep, unable to sleep (பெறாஅது – அளபெடை), தண் – cold, புலர் – dawn, விடியல் – early morn... | மலையைப் போன்ற நிலைப் பொருந்திய உயர்ந்த பல நெற்குதிர்களையும் எருமைகளையும் உடைய உழவனே! நீ உறங்காமல், அதிகாலையில் எழுந்து பெரிய துண்டங்களாக வெட்டிய கரிய கண்களை உடைய வரால் மீன் குழம்பை நிறைய சோற்றுடன் பெரிய திரளாக விரும்பி கையினால் உண்டு விட்டு, பின் நீர் உள்ள சேற்றில் உன் நடுபவர்களுடன் நாற்றினை நடுவதற்குச் செல்வாய். அப்பொ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0061 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 61 | நற்றிணை 61, சிறுமோலிகனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது அல்லது தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாகிய தலைவன் கேட்கும்படி | Natrinai 61, Sirumōlikanār, Kurinji Thinai – What the heroine said to her friend, or what the heroine’s friend said to her, as the hero listened nearby | Sirumōlikanār | Kurinji Thinai | null | What the heroine said to her friend, or what the heroine’s friend said to her, as the hero listened nearby | null | null | null | null | கேளாய் எல்ல தோழி! அல்கல்
வேண் அவா நலிய வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினெனாக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
‘துஞ்சாயோ என் குறுமகள்?’ என்றலின், 5
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
‘படுமழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல்
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ?’ என்றிசின் யானே.... | Listen, my friend!
Last night I was distressed with
desire for my lover and was in deep
pain like a doe pierced by an arrow.
I sighed deeply, and mother asked me,
“Are you not sleeping, my daughter?”
as though she knew my great sorrow.
Words didn’t come out of my mouth,
but quietly I said to my heart,
“How could I cl... | Notes: தலைவன் வரவு உணர்ந்து உரைத்தது. தாயறிவு அறிவுறுத்தி வரைவு கடாவுவது. களவின்கண் அன்னையென வருபவள் செவிலி. ‘ஆய் பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின் தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்’ (தொல்காப்பியம், களவு 34). பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச்செய்யுளைத் தலைவி கூற்றாகவே கொண்டு ஆசிரியர் நச்சினார்க்கினியர், ‘மனைப்பட்டுக் கலங்கிக... | Meanings: கேளாய் எல்ல தோழி – listen my friend (எல்ல – இருபாற் பொதுச் சொல்), அல்கல் – yesterday night, வேண் அவா – with increasing desire, நலிய – with distress, வெய்ய உயிரா – வெய்ய உயிர்த்து, sighed hot breaths, ஏ – arrow, மான் பிணையின் – like a female deer (பிணையின் – இன் உருபு ஒப்புப் பொருளது), வருந்தினெனாக – when I wa... | தோழி! இதனைக் கேள்! நேற்று இரவு அவன் மீதுக் கொண்ட அதிக விருப்பத்தால் வருந்தி, பெருமூச்சு விட்டு, அம்புப்பட்ட பெண் மான் போல் துடித்தேன். என் மிகுந்த துன்பத்தை அறிந்தவள் போல் அன்னை ‘இள மகளே, தூங்காமல் இருக்கின்றாயா?’ என்று கேட்டாள். என்னிடமிருந்து சொற்கள் வெளி வரவில்லை. ஆனால் என் நெஞ்சுக்குள் சொல்லிக் கொண்டேன், ‘மிக்க மழை... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0062 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 62 | நற்றிணை 62, இளங்கீரனார், பாலைத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது | Natrinai 62, Ilankeeranār, Pālai Thinai – What the hero said to his heart | Ilankeeranār | Pālai Thinai | null | What the hero said to his heart | null | null | null | null | வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
உள்ளினென் அல்லெனோ யானே, ‘முள் எயிற்று 5
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு ஓர் மதி நாட் திங்கள்,
உரறு குரல் வெவ்வளி எடுப்ப நிழல் தப
உலவை ஆகிய மரத்த
கல் பிற... | As I stood there and looked at the
moon crawling above the mountains,
in this bamboo-filled forest where
bamboos with knotted roots create
sighing sounds of sad elephants tied
to posts, when wind blows through
them in this long summer,
did I not think about my lovely day
moon with sharp teeth and a pottu on
her pretty... | Notes: முன்னொரு காலத்துப் பொருள்வயின் பிரிந்து மீண்ட தலைவன், பின்னும் பொருள் வேண்டிய நெஞ்சிடம் சொல்லிச் செலவு அழுங்குவித்தது. ஒளவை துரைசாமி உரை – ‘நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும்’ (தொல்காப்பியம், அகத்திணையியல் 46) என்ற நூற்பா உரையின்கண், இப்பாட்டினை எடுத்தோதி, ‘தலைவிகண் நிகழ்ந்தனவும் அவள் தன்மையும் பின்னர்த் தலைவன... | Meanings: வேர் பிணி வெதிரத்து – in the bamboo with intertwined roots, கால் பொரு – winds blowing, நரல் இசை – music sound, கந்து பிணி – tied to a post, யானை அயர் உயிர்த்தன்ன – like the sad sighs of elephants, என்றூழ் நீடிய – long summer, வேய் பயில் அழுவத்து – in the forest filled with bamboos, குன்று ஊர் – crawling over ... | வேர்கள் ஒன்றோடு ஒன்று நிலத்தில் பிணித்திருக்கும் மூங்கிலில் காற்று மோதுததால் ஒலிக்கின்ற ஒலியானது தூணில் கட்டப்பட்ட யானை வருந்தி பெருமூச்சு விட்டாற்போல் இருக்கும், கோடை நீண்ட, மூங்கில்கள் நிறைந்த பாலைநில வழியில், மலையிடம் ஊர்ந்து செல்லும் நிலவை நோக்கி, அங்கு நின்று நினைந்து எண்ணினேன் இல்லையா நான், கூர்மையான பற்களையும் ப... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0063 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 63 | நற்றிணை 63, உலோச்சனார், நெய்தல் திணை – தோழி சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 63, Ulōchanār, Neythal Thinai – What the heroine’s friend said, as the hero listened nearby | Ulōchanār | Neythal Thinai | null | What the heroine’s friend said, as the hero listened nearby | null | null | null | null | உரவுக் கடல் உழந்த பெருவலைப் பரதவர்
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்,
கல்லென் சேரிப் புலவற் புன்னை
விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும்
அழுங்கல் ஊரோ அறன் இன்று; அதனால் 5
அறன் இல் அன்னை அருங்கடிப்படுப்ப
பசலை ஆகி விளிவது கொல்லோ,
புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல்
கழிச் சுரம் நிவக்கும் இருஞ்சிறை இவுளி
திரைதரு புணரி... | This town,
……….where fishermen with huge nets
……….struggle in the powerful ocean
……….and haul abundant fish that they
……….dry on fresh sand,
……….the uproarious streets reek of
……….flesh, and punnai trees put out
……….clusters of bright flowers that
……….spread fragrances of festivals,
has no sense of justice.
Her unfair... | Notes: அலர் அச்சத்தால் தலைவி அன்னையால் இற்செறிக்கப்பட்டாள் என்பதை தோழி உணர்த்தியது. திரைதரு புணரியின் கழூஉம் (10) – ஒளவை துரைசாமி உரை – கடலலையால் கழியிடை வந்து கலக்கும் நீரால் கழுவிக் கொள்ளும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – அலை எழுந்து வரும் கடல் நீராலே கழுவப்படுகின்ற. உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உர... | Meanings: உரவுக் கடல் உழந்த பெருவலைப் பரதவர் – fishermen with big nets who struggled in the powerful ocean, மிகு மீன் உணக்கிய புது மணல் – dried the abundant fish on the fresh sand, ஆங்கண் – there, கல்லென் – loud sounds, சேரி – streets, settlements, புலவல் – flesh stinking, புன்னை – laurel tree, நாகம் – Laurel Tree, Mas... | வலிமையுடைய கடலில் மீன் வேட்டம் புரிந்த பெரிய வலைகளையுடைய மீனவர்கள், மிகுந்த மீன்களைக் காயப்போட்ட புதிய மணலை உடைய ஆரவாரமுடைய குடியிருப்பில், அங்குள்ள மீன் நாற்றம் நீங்குமாறு புன்னைமரங்களின் ஒளிரும் மணமுடைய மலர்க்கொத்துக்கள், திருவிழாவைப் போன்ற மணத்தைப் பரப்பும், அறம் இல்லாத அலர் கூறும் ஆரவாரமுடைய ஊர் இது. அதனால், பறவைகள... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0064 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 64 | நற்றிணை 64, உலோச்சனார், குறிஞ்சித் திணை – தலைவி தோழியிடம் சொன்னது | Natrinai 64, Ulōchanār, Kurinji thinai – What the heroine said to her friend | Ulōchanār | Kurinji thinai | null | What the heroine said to her friend | null | null | null | null | என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக!
அன்னவாக இனையல் தோழி! யாம்
இன்னமாக நத்துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் 5
வறனுற்று ஆர முருக்கி, பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்
அறிவும் உள்ளமும் அவர்வயின் சென்றென,
வறிதால் இகுளை என் யாக்கை; இனி அவர்
வரினும் நோய் மருந்து அல... | However special he may be,
let thoughts of him end!
Don’t feel sad, my friend!
Why do we need the friendship
of the man who abandoned us?
The mountain dwellers who wear
hemp fiber clothes have peeled the
barks of sandal trees in ignorance,
wilting and ruining them.
Their oozing sap is like my
intelligence and heart th... | Notes: பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி உரைத்தது. ஒளவை துரைசாமி உரை – ‘மறைத்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்னும் நூற்பாவில் வரும் ‘வழிபாடு மறுத்தல்’ என்பதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். வறிது – வறிது சிறிது ஆகும் (தொல்காப்பியம், உரியியல் 40). காமம் – கமம் என்னும் ... | Meanings: என்னர் ஆயினும் – however he is, இனி நினைவு ஒழிக – let thoughts (of him) end, அன்னவாக – for that, இனையல் – don’t feel sad, தோழி – friend, யாம் – our, இன்னம் ஆக – even when we are in this situation, நத்துறந்தோர் – he who gave sorrow and parted from us (நம் துறந்தோர் நத்துறந்தோர் என விகாரமாயிற்று), நட்பு – frien... | தோழி! நம் தலைவர் எவ்வளவு சிறப்பு உடையவராக இருந்தாலும் அவரை நினைப்பதை கைவிடுவாயாக. அவ்வாறே இருக்கட்டும். நீ வருந்தாதே. நாம் இவ்வாறு துன்பம் அடையுமாறு நம்மைவிட்டுப் பிரிந்தவரின் நட்பினால் நமக்கு என்ன பயன்? மரல் செடியின் மடலிலிருந்து எடுத்த நாரால் செய்த ஆடையை அணிந்த மலையில் வாழும் குறவர்கள் அறியாமையினால் மரத்தின் மேற்பட்ட... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0065 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 65 | நற்றிணை 65, கபிலர், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 65, Kapilar, Kurinji Thinai – What the heroine’s friend said to her | Kapilar | Kurinji Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | அமுதம் உண்க நம் அயல் இலாட்டி!
கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான்யாற்றுக்
கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ,
ஒளிறு வெள்ளருவி ஒண் துறை மடுத்து,
புலியொடு பொருத புண் கூர் யானை 5
நற்கோடு நயந்த அன்பு இல் கானவர்
வில் சுழிப்பட்ட நாமப் பூசல்
உருமிடைக் கடி இடி கரையும்
பெருமலை நாடனை ‘வரூஉம்’ என்றோளே. | May she drink nectar, our neighbor lady,
her words as sweet as Kidangil town!
She said that he will come,
the man from the lofty mountains,
where on the banks of a forest stream
where moss is tossed around by the waves
and bright white water cascades down,
an elephant is wounded, fighting with a tiger
that stalked it,... | Notes: தலைவன் குறித்த பருவத்து வாராமையால் வருந்திய தலைவியிடம் தோழி சொன்னது. குறுந்தொகை 201 – அமுதம் உண்க நம் அயல் இலாட்டி. உள்ளுறை – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – புலி பொருதலாலே புண் மிக்க யானை காமநோய் பொருதலால் வருத்தமுற்ற தலைவியையும், வேடர் யானையின் மருப்புப் போக அம்பு விடுவது ஏதிலாட்டியர் தலைவியின் உயிருக்கே ... | Meanings: அமுதம் உண்க – may she eat nectar, நம் அயல் இல் ஆட்டி – our neighbor lady (ஆட்டி – பெண்), கிடங்கில் அன்ன – like Kidangil town, இட்டுக் கரை – shore created by placed (by the waves) sand, கான் யாற்று – in the forest stream, கலங்கும் – mixed up, பாசி நீர் அலைக் கலாவ – the moss gets moved around by the waves, ஒளிற... | சாவா மருந்தாகிய அமிழ்தத்தை உண்பாளாக நம் பக்கத்து வீட்டுப்பெண்! கிடங்கில் என்னும் ஊர் போன்றது, நல்ல நிமித்தம் கூறிய அவளுடைய இனிமையான சொற்கள். சிறிய கரையையுடைய காட்டாற்றில் கலங்கும் பாசியை நீர் அங்கும் இங்கும் அலைத்தலால் அது கலப்ப, ஒளியுடைய வெள்ளை அருவியின் ஒளிரும் துறையின்கண் புலியுடன் பாய்ந்துப் போரிட்டதால் புண்கள் மிக... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0066 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 66 | நற்றிணை 66, இனிசந்தநாகனார், பாலைத் திணை – தலைவியின் தாய் சொன்னது | Natrinai 66, Inisantha Nākanār, Pālai Thinai – What the heroine’s mother said after her daughter eloped | Inisantha Nākanār | Pālai Thinai | null | What the heroine’s mother said after her daughter eloped | null | null | null | null | மிளகு பெய்தனைய சுவைய புன் காய்
உலறுதலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட
புலம்பு கொள் நெடுஞ்சினை ஏறி, நினைந்து, தன்
பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகிப்,
புன் புறா உயவும் வெந்துகள் இயவின், 5
நயந்த காதலற் புணர்ந்தனள் ஆயினும்,
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன கொல்லோ,
கோதை மயங்கினும் குறுந்தொடி நெகிழினும்,
காழ் பெயல் அல்குல் காசு ம... | My lovely daughter left to be with her lover,
on a hot, dusty path, where a pigeon chases
away bees and eats small, ukā berries that
taste like pepper, feels confused and afraid,
sits on a tall tree branch and shakes its bright,
spotted neck in pain, regretting what it did.
Even though she’s with him,
her waist orname... | Notes: உடன்போக்கில் தலைவனும் தலைவியும் போன பின் தலைவியின் தாய் (நற்றாய்) சொன்னது. சிதர் சிதர்ந்து (2) – ஒளவை துரைசாமி உரை – மொய்த்த வண்டுகளை விலக்கி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் – வண்டுகள் நெருங்காதபடி போக்கி. வெறிபட (4) – ஒளவை துரைசாமி உரை – மணம் உண்டாக, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வெறுப்பினால். மாயக் குறு... | Meanings: மிளகு பெய்தனைய – appearing like placed pepper, சுவைய – with taste, புன் காய் – dry berries, small fruits, உலறு தலை உகாஅய் – ukā trees with dried tops, Toothbrush Tree, Salvadora persica (உகாஅய் – அளபெடை), சிதர் – honeybees, சிதர்ந்து – chased away, உண்ட – ate, புலம்பு கொள் – with sorrow, நெடுஞ்சினை – tall bra... | மிளகைப் பெய்தாற்போன்ற சுவையை உடைய புல்லிய காயை, வண்டுகளை விரட்டிவிட்டு உண்டதால் வருந்தும், உயர்ந்த மரக்கிளையில் ஏறி தான் தின்ற தவற்றை எண்ணி தன் புள்ளிகள் பொருந்திய கழுத்தைச் சிலிர்த்து மயக்கமுற்று வருந்தும் மெல்லிய புறா இருக்கும் வெப்பமுடைய புழுதியுடைய வழியில் தான் விரும்பிய காதலனுடன் கூடிச் சென்றாள் ஆயினும், வழியின் த... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0067 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 67 | நற்றிணை 67, பேரிசாத்தனார், நெய்தல் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 67, Pērisāthanār, Neythal Thinai – What the heroine’s friend said to the hero | Pērisāthanār | Neythal Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | சேய் விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால் வரை மறைய துறை புலம்பின்றே;
இறவு அருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
வெண்கோட்டு அருஞ்சிறைத் தாஅய், கரைய
கருங்கோட்டுப் புன்னை இறை கொண்டனவே; 5
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித்
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை,
எல் இமிழ் பனிக் கடல் மல்கு சுடர்க் கொளீஇ
எமரும் வேட்டம்... | The sun, which climbed up to the distant
sky, hid behind the lofty mountains.
The seashore is lonely. White herons
with black legs ate shrimp, spread
their strong wings, flew over salt mounds,
and are resting on the black branches
of punnai trees.
The backwater level has risen to hide
the thick-stemmed, dark, blue wat... | Notes: பகற்குறி வந்து நீங்கும் தலைவனைத் தோழி வரைவு கடாயது. ஒளவை துரைசாமி உரை – நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் வரும் ‘புணர்ச்சி வேண்டினும்’ என்ற பகுதிக்கண் இப்பாட்டினை எடுத்தோதி ‘இஃது இரவுக்குறி வேண்டிய தலைமகற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது என்பர் நச்சினார்க்கினியர். இறா இறவு என வந்தது... | Meanings: சேய் – distant, விசும்பு இவர்ந்த – climbed to the sky, செழுங்கதிர் மண்டிலம் – the sun with full rays, the sun with bright rays, மால் வரை மறைய – it hid behind the tall mountains, துறை புலம்பின்றே – the port was lonely (ஏ – அசைநிலை, an expletive), இறவு அருந்தி எழுந்த – ate shrimp and rose up (இறவு – இறா இற என்ற... | தொலைவில் உள்ள வானில் உயர்ந்து செல்லும் செழுமையான கதிர்களையுடைய கதிரவன் பெரிய மலையில் மறைய, துறை தனிமை உடையதாயிற்று. இறால் மீன்களை உண்டுவிட்டு எழுந்த வெள்ளை நாரைகள் வெள்ளை மணல் குவியலில் அரிய சிறகுகளை வீசி பரவி, கரையில் உள்ள கரிய கிளைகளை உடைய புன்னை மரத்தில் தங்கின. பெரிய தண்டினையுடைய கரிய நெய்தல் மலர்கள் மறையும்படி நீர... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0068 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 68 | நற்றிணை 68, பிரான் சாத்தனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 68, Pirān Sāthanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby | Pirān Sāthanār | Kurinji Thinai | null | What the heroine’s friend said to her, as the hero listened nearby | null | null | null | null | ‘விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது,
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல்
அறனும் அன்றே, ஆக்கமும் தேய்ம்’ எனக்
குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கிவரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் 5
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே,
‘செல்க’ என விடுநள் மன் கொல்லோ? எல் உமிழ்ந்து
உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள்,
கொடி நுடங்கு இலங்கின மின்... | In his lofty mountain peaks
in the pitch darkness of midnight,
thunder roared, light spread as
lightning streaks appeared like moving
vines, and clouds came down as rain.
Unable to play ōrai games with
friends, we are confined to our
homes.
If someone can bow and tell with
strength to mother that restraining
young gir... | Notes: தலைவிக்கு உரைப்பாளாய், தலைவி இற்செறிக்கப்பட்டாள் எனத் தோழி அறிவுறுத்தியது. வரைவு கடாயது. ஒளவை துரைசாமி உரை – நாற்றமும் தோற்றமும் (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் வரும் ‘அன்பு தலையடுத்த வன்புறை’ என்றதற்கு இப்பாட்டினை எடுத்தோதி, ‘இது வரைவு நீட ஆற்றாத தலைவி வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையும் இயையு... | Meanings: விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது – without playing ōrai games with friends, இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல் – if young people are stuck in the home, அறனும் அன்றே – it is not fair, ஆக்கமும் தேய்ம் என – that they will lose their strengths (தேய்ம் – தேயும் என்பது ஈற்றுமிசை யுகரம் மெய்யொழித்துக் கெட்டது), குறு நுர... | ஒளியைப் பரப்பி வலிய இடி முழங்குகின்ற இருளுடைய நடு இரவில் கொடி அசைந்தாற்போல் அசைந்து ஒளியுடன் மின்னும் மின்னலுடன் அசைகின்ற முகில்கள் மழையைப் பொழிகின்றன தலைவனின் உச்சி உயர்ந்த மலையில். விளையாடும் தோழியருடன் ஓரை விளையாட்டு விளையாடாதபடி இளைய மகளிரை இல்லத்தில் அடைத்து வைத்தல் அறமுடைய செயல் இல்லை. அதனால் அவர்களுடைய இளமையின் ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0069 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 69 | நற்றிணை 69, சேகம்பூதனார், முல்லைத் திணை – தலைவி தனக்குள் சொன்னது | Natrinai 69, Sēkampoothanār, Mullai Thinai – What the heroine said to herself | Sēkampoothanār | Mullai Thinai | null | What the heroine said to herself | null | null | null | null | பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றிச்,
சேய் உயர் பெருவரைச் சென்று அவண் மறையப்,
பறவை பார்ப்பு வயின் அடைய, புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ,
முல்லை முகை வாய் திறப்ப பல் வயின் 5
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ,
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி,
கொடுங்கோல் கோவலர் குழலோடு ஒன்றி,
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
... | The sun with many rays ended
the day, climbing up the very high
mountains and hiding behind them.
Birds went to their young ones
in their nests,
big-necked stags embraced their
delicate does in the woodlands,
jasmine buds spread their petals,
glory lily flowers appearing like
lamps blossomed in many places,
and perfec... | Notes: தலைவன் குறித்த பருவத்தில் வாராமையால் வருந்திய தலைவி சொன்னது. கொடுங்கோல் – பொ. வே. சோமசுந்தரனார் உரை, நெடுநல்வாடை 3 – ஆ முதலியவற்றை அலைந்து அச்சுறுத்தும் கோலாகலான் கொடுங்கோல். இனி வளைந்த கோல் எனினுமாம். | Meanings: பல் கதிர் மண்டிலம் – the sun with many rays, பகல் செய்து ஆற்றி – gave light during the day and then ended it (ஆற்றி – முடித்து), சேய் உயர் பெருவரைச் சென்று – went up very high to the lofty mountains (சேய் உயர் – ஒருபொருட் பன்மொழி), அவண் மறைய – hiding there, பறவை பார்ப்புவயின் அடைய – birds went to their young,... | பல கதிர்களையுடைய கதிரவன் பகலில் ஒளி தந்து, தன் பணியை முடித்து, மிக உயர்ந்த பெரிய மலையை அடைந்து அங்கு மறைய, பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் கூட்டில் அடைய, காட்டில் கரிய கழுத்தையுடைய கலைமான்கள் தங்கள் இளமையுடைய பெண்மான்களைத் தழுவ, முல்லை அரும்புகள் மலர, பல இடங்களில் காந்தள் மலர்கள் தோன்றி புதர்களில் ஒளியுடன் திகழ, செருக்குடை... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0070 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 70 | நற்றிணை 70, வெள்ளிவீதியார், மருதத் திணை – தலைவி குருகிடம் சொன்னது | Natrinai 70, Velliveethiyār, Marutham Thinai – What the heroine said to a heron | Velliveethiyār | Marutham Thinai | null | What the heroine said to a heron | null | null | null | null | சிறு வெள்ளாங்குருகே! சிறு வெள்ளாங்குருகே!
துறை போகு அறுவைத் தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே!
எம் ஊர் வந்து எம் உண் துறைத் துழைஇ,
சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி; 5
அனைய அன்பினையோ, பெருமறவியையோ,
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்
கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே? | Oh small white heron! Oh small
white heron with bright, white
feathers like shore-washed clothes!
Come to our town, search
our shores for pregnant keliru fish,
and eat them until you are sated.
After that, go to his fine town with
fields and a river with sweet water
that flows and spreads in our town,
and tell my bel... | Notes: தலைவி வரைதல் வேட்கை கொண்டு குருகிடம் உரைத்தது. ஒளவை துரைசாமி உரை – மறைந்தவற் காண்டல் (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூட்பாவுரையின்கண் இப்பாட்டினைக் காட்டி, இது காப்புச் சிறை மிக்க கையறு கிளவி என்பர் நச்சினார்க்கினியர். பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்குங் கழனி என்றது அவர் ஊரிலு... | Meanings: சிறு வெள்ளாங்குருகே – Oh small white heron/egret, சிறு வெள்ளாங்குருகே – Oh small white heron/egret, துறை போகு – taken to the water shores, அறுவை – clothing, garments, தூ மடி – washed clothing, pure garments, அன்ன – like, நிறம் – color, கிளர் – bright, தூவி – feathers, wings, சிறு வெள்ளாங்குருகே – oh small whi... | சிறிய வெள்ளை நிறக் குருகே! சிறிய வெள்ளை நிறக் குருகே! துவைக்கும் துறையில் துவைத்த தூய்மையான வெள்ளை ஆடைகளின் நிறத்தையுடைய சிறகுகளையுடைய சிறிய வெள்ளைக் குருகே! எங்கள் ஊருக்கு வந்து குடிக்கும் நீர் துறைகளில் தேடி, சினைக் கெளிற்று மீன்களை நிறைய உண்டு விட்டு, அவருடைய ஊருக்குச் சென்று மறக்காமல் அன்புடன் ‘அவள் வருந்துகின்றாள்... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0071 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 71 | நற்றிணை 71, வண்ணப்புறக் கந்தரத்தனார், பாலைத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 71, Vannappura Kantharathanār, Pālai Thinai – What the heroine’s friend said to the hero | Vannappura Kantharathanār | Pālai Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | மன்னாப் பொருள் பிணி முன்னி, ‘இன்னதை
வளை அணி முன் கை நின் இகுளைக்கு உணர்த்து’ எனப்
பல் மாண் இரத்திர் ஆயின், ‘சென்ம்’ என
விடுநள் ஆதலும் உரியள்; விடினே,
கண்ணும் நுதலும் நீவி, முன் நின்று, 5
பிரிதல் வல்லிரோ ஐய, செல்வர்
வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ணப் புறவின் செங்கால் சேவல்
வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல்
நும் ... | With the desire to earn wealth
that does not last forever,
you pleaded with me with many
fine words to tell my friend with
bangles on her forearms, that you
are leaving.
Even if she says ‘go’, are you
capable of standing in front of her,
oh lord, stroking her eyes and brow
and telling her that you are leaving,
making... | Notes: தலைவனைத் தோழி செலவு அழுங்குவித்தது. சென்ம் (3) – ஒளவை துரைசாமி உரை – சென்மென செல்லும் என்னும் ஏவல் கண்ணிய முன்னிலை வினை. ஈற்றுமிசை உகரம் மெய்யொடும் கெட்டது. | Meanings: மன்னாப் பொருள் – wealth that does not last forever, பிணி – attachment, முன்னி – desiring that, இன்னதை – this matter that you are leaving to earn wealth, வளை அணி முன் கை நின் இகுளைக்கு உணர்த்து – tell your friend who wears bangles on her forearms, எனப் பல் மாண் இரத்திர் ஆயின் – since you asked me with fine wor... | நிலையில்லாத பொருள் மேல் உள்ள பற்றினால் நீவிர் பிரிய இருக்கும் இந்நிலைமையை “வளையல்களை முன்கையில் அணிந்த உன் தோழிக்கு உணர்த்துவாயாக” எனப் பலமுறை மாட்சிமையுடன் என்னிடம் வேண்டினீர். ஆதலால், “நீவிர் செல்வீராக” என அவள் நும்மைச் செல்ல விடுவாளாயினும் விடுவாள். அவ்வாறு அவள் நும்மை செல்ல விட்டாலும் அவளுடைய கண்களையும் நெற்றியையும... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0072 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 72 | நற்றிணை 72, இளம்போதியார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 72, Ilampōthiyār, Neythal Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby | Ilampōthiyār | Neythal Thinai | null | What the heroine’s friend said to her, as the hero listened nearby | null | null | null | null | ‘பேணுப பேணார் பெரியோர்’ என்பது
நாணு தக்கன்று அது காணுங்காலை;
உயிர் ஓரன்ன செயிர் தீர் நட்பின்
நினக்கு யான் மறைத்தல் யாவது? மிகப் பெரிது
அழிதக்கன்றால் தானே, கொண்கன், 5
‘யான் யாய் அஞ்சுவல்’ எனினும், தான் எற்
பிரிதல் சூழான் மன்னே; இனியே
கானல் ஆயம் அறியினும், ‘ஆனாது
அலர் வந்தன்று கொல்’ என்னும்; அதனால்
‘புலர்வது கொல் அவன் நட... | Respected ones do not protect
what they cherish. It is
embarrassing when you see that.
If I conceal from you, it would be a
very big mistake, since our friendship
is faultless and we are as one life.
How could I hide it from you?
In the past
when you said that you were afraid
of mother, and that he needs to leave,
t... | Notes: தோழி சிறைப்புறமாகத் தலைவிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது. வரைவு கடாயது. புலவரின் பெயர் – ஒளவை துரைசாமி உரை – இவர் பெயர் அச்சுப்பிரதியிலும் தமிழ்ச்சங்க ஏட்டிலும் இளம்போதியார் என்று காணப்படுகின்றது. ஏனை ஏடுகளில் இளம்பூதி என்பதே உளது. மேலும், பூதி என்னும் பெயர் சங்க காலத்திலும் அதனையடுத்துப் போந்த கல்வெட்டுக்கள் காலத்... | Meanings: பேணுப – what they cherish, பேணார் – they do not protect, they do not take care, பெரியோர் – the respected people, the wise people, என்பது நாணு தக்கன்று அது காணுங்காலை – it is embarrassing when analyzing it, உயிர் ஓரன்ன – like one life, செயிர் தீர் நட்பின் – with faultless friendship, நினக்கு யான் மறைத்தல் – me... | பேண வேண்டியவற்றைப் பேண மாட்டார்கள் பெரியவர்கள் என்பது நாணுவதற்குத் தக்கது. அதனை ஆராயும்பொழுது, உயிரை ஒத்த குற்றமில்லாத நட்பினை உடைய நின்பால் நான் எவ்வாறு அதை மறைப்பது? அது மிகப் பெரிய வருத்தத்திற்கு உரியதாகும். முன்பு, ” தாய்க்கு நான் அஞ்சுகிறேன். அதனால் அகன்று அகன்று செல்வாயாக” என்று நான் கூறியபோதும், நம்மை விட்டுப் ப... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0073 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 73 | நற்றிணை 73, மூலங்கீரனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது | Natrinai 73, Moolankeeranār, Pālai Thinai – What the heroine said to her friend | Moolankeeranār | Pālai Thinai | null | What the heroine said to her friend | null | null | null | null | வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல்வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய,
மன்றம் போழும் புன்கண் மாலை,
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச் 5
செல்ப என்ப தாமே, செவ்வரி
மயிர் நிரைத்தன்ன வார் கோல் வாங்கு கதிர்ச்
செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக் கெழு படப்பைச் சாய்க்காடு அன்ன என்
நுதல் கவின் அழிக்கும... | Even when I was with him
I used to fear the painful evenings
when a ghoul with a strong mouth
and ugly fingers that look like
the mature clusters of flowers
of summer’s murukkam trees,
ate the flower offerings left
for the gods in our flourishing
ancient town, and rose up high,
tearing the town’s common
ground.
They s... | Notes: செலவு குறிப்பறிந்து வேறுபட்ட தலைவி சொல்லியது. வேனில் முருக்கின் விளை துணர் அன்ன (1) – ஒளவை துரைசாமி உரை – வேனிற் காலத்தில் மலரும் முருக்கமரத்தின்கண் தோன்றும் பூங்கொத்துப் போன்ற, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – வேனிற் காலத்துச் செம்முருக்கின் பூங்கொத்தில் காய்த்துப் பழுத்து முற்றிய நெற்றுப் போன்ற. செவ்வரி மய... | Meanings: வேனில் முருக்கின் – of summer’s coral trees, Erythrina variegate, விளை துணர் அன்ன – like the clusters of mature flowers, மாணா விரல – with fingers that are not good looking, with fingers that are ugly, வல்வாய்ப் பேஎய் – ghoul with strong mouth, an evil spirit with a strong mouth (பேஎய் – அளபெடை), மல்லல் மூதூர்... | வேனில் காலத்தில் மலரும் முருக்க மரத்தின் முதிர்ந்த உலர்ந்த மலர் கொத்துக்கள் போன்ற மாண்பில்லாத விரல்களையும் வலிய வாயினையும் உடைய பேயானது பழமையான ஊரின்கண் கடவுளுக்குப் படைக்கப்படும் மலர்களுடன் சேர்ந்த பலி உணவை உண்ணும்பொருட்டு, ஊர் மன்றத்தைப் பிளந்து வரும் துன்பம் தரும் மாலை நேரத்தில், தலைவருடன் இருக்கும்பொழுதும் அஞ்சும் ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0074 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 74 | நற்றிணை 74, உலோச்சனார், நெய்தல் திணை – தலைவி பாணனிடம் சொன்னது | Natrinai 74, Ulōchanār, Neythal Thinai – What the heroine said to the messenger bard | Ulōchanār | Neythal Thinai | null | What the heroine said to the messenger bard | null | null | null | null | வடிக் கதிர் திரித்த வல் ஞாண் பெருவலை
இடிக் குரல் புணரிப் பௌவத்து இடுமார்,
நிறையப் பெய்த அம்பி, காழோர்
சிறை அருங் களிற்றின், பரதவர் ஒய்யும்
சிறு வீ ஞாழல் பெருங்கடல் சேர்ப்பனை, 5
‘ஏதிலாளனும்’ என்ப; போது அவிழ்
புது மணல் கானல் புன்னை நுண் தாது,
கொண்டல் அசை வளி தூக்குதொறும், குருகின்
வெண்புறம் மொசிய வார்க்கும், தெண் கடல்
கண... | They say that the lord of the vast
ocean’s shores,
……….where gnāzhal trees with small
……….flowers grow, and fishermen
……….load their boats fully with large
……….nets made from strong, twisted
……….ropes using fine spindles, go into
……….the ocean with thundering waves
……….like elephant-keepers who control
……….their diffic... | Notes: நெய்தத்துள் மருதம். தலைவன் பாணனைத் தலைவியின் ஊடலைத் தீர்க்க அனுப்புகிறான். தலைவன் உறவுகொண்ட பரத்தையைப் பற்றி இவ்வூர் அறிந்தது எனக் கூறி வாயில் மறுத்தது. இறைச்சி – கீழ்க்காற்று மோதுதலாலே புன்னை நுண் தாது குருகின் மேல் உதிர்ந்து அதனை மறைக்குமென்றது, தலைவன் பிரிதலினாகிய காம நோயாலே பசலை தோன்றி என் மெய்ம் முழுது மூடி... | Meanings: வடிக் கதிர் – perfect spindles, திரித்த – twisted, வல் ஞாண் பெருவலை – big nets made with strong twisted ropes, இடிக் குரல் புணரி – thunder-like loud waves, பௌவத்து இடுமார் நிறையப் பெய்த அம்பி – with boats filled in order to throw their nets in the ocean (இடுமார் – ஒளவை துரைசாமி உரை – எறியும்பொருட்டு, மார் ஈற்... | திருத்தமாகச் செய்யப்பட்ட கதிரால் திரித்த வலிமையான கயிற்றினால் பின்னப்பட்ட பெரிய வலையை, இடிபோல் முழங்கும் அலைகளையுடைய கடலில் வீசி எறியும்பொருட்டு, நிறையும்படி அவ்வலை ஏற்றப்பட்ட படகினை, கோல் வைத்திருக்கும் யானைப்பாகர்கள் பிணித்துச் செலுத்தும் களிற்று யானைகளைப் போல் மீனவர்கள் செலுத்தும், சிறிய மலர்களைக் கொண்ட ஞாழல் மரங்கள... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0075 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 75 | நற்றிணை 75, மாமூலனார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது | Natrinai 75, Māmoolanār, Kurinji Thinai – What the hero said to the heroine’s friend | Māmoolanār | Kurinji Thinai | null | What the hero said to the heroine’s friend | null | null | null | null | நயன் இன்மையின், பயன் இது என்னாது,
பூம்பொறிப் பொலிந்த அழல் உமிழ் அகன் பைப்
பாம்பு உயிர் அணங்கியாங்கும் ஈங்கு இது
தகாஅது, வாழியோ குறுமகள்! நகாஅது
உரைமதி, உடையும் என் உள்ளம், சாரல் 5
கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
பச்சூன் பெய்த பகழி போல
சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்
உறாஅ நோக்கம் உற்ற என்
பைதல் நெஞ்சம் உய்யுமாறே. 10 | Your laughing is without justice
and consideration of consequences.
It resembles the flame-like venom
that is spit by terrorizing, wide-hooded
snakes with pretty spots.
My heart breaks!
May you live long, oh young woman!
Tell me without laughing, the way to
save my hurting heart that has been
neglected by the glances ... | Notes: தலைவி கிடைத்தற்கு அறியளாம் என அவளைச் சேட்படுத்திக் கூறியத் தோழியிடம் கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என்ற நூற்பாவின்கண் ‘அன்புற்று நகினும்’ என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர். ‘இஃது அன்புற்று நக்குழித் தலைவன் கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர். கோட்டுமா ... | Meanings: நயன் இன்மையின் – without justice, பயன் இது என்னாது – without considering the benefit, பூம்பொறிப் பொலிந்த – bright with beautiful spots, அழல் உமிழ் – injects/spits flame-like venom, அகன் பை பாம்பு உயிர் அணங்கியாங்கும் – like a snake with wide hood that terrorizes (அணங்கியாங்கும் – உம்மை ஆக்கப்பொருட்டு), ஈங்கு ... | இளையமகளே! நீ நீடு வாழ்வாயாக! இரக்கம் இல்லாமல், இது தான் பயன் என்றும் கருதாமல், அழகிய பொறிகளையும் நஞ்சாகிய தீயைக் கக்கும் அகன்ற படத்தையுமுடைய பாம்பு உயிர்களை வருத்தினாற்போல் என்னைத் துன்புறுத்தும் உன் சொற்கள் பொருத்தமானவை இல்லை. மலைச்சரிவில் வளைந்த (கொடிய) வில்லையுடைய வேட்டுவன் கொம்புகளையுடைய பன்றியைக் கொன்று அதன் பசிய ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0076 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 76 | நற்றிணை 76, அம்மூவனார், பாலைத் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது | Natrinai 76, Ammoovanār, Pālai Thinai – What the hero said to the heroine | Ammoovanār | Pālai Thinai | null | What the hero said to the heroine | null | null | null | null | வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,
வருந்தாது ஏகுமதி, வால் இழைக் குறுமகள்! 5
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ,
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே. | Oh young woman wearing pure jewels!
You come from a town where gossip
is loud, and punnai flowers drip honey.
Your feet, used to walking on the
long stretches of sand in the groves
which stink of flesh, have become red
now, walking on this rocky path.
Let us rest and get rid of fatigue in
the shade of a banyan tree i... | Notes: உடன்போக்கின் பொழுது தலைவன் தலைவியிடம் உரைத்தது. வீ மலர் (17) – வினைத்தொகை, இருபெயரொட்டுமாம். மதி – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம். சொல்லதிகாரம். இடையியல் 26). வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – (தொல்காப்பியம், உரியியல் 21). வீ மலர்... | Meanings: வருமழை கரந்த – the arriving rain has stopped, வால் நிற விசும்பின் – in the bright colored sky, நுண் துளி – fine rain drops, மாறிய – changed, உலவை அம் காட்டு ஆல நீழல் அசைவு நீக்கி – removing fatigue in the shade of the banyan tree of the beautiful forest with wind (நீழல் – நிழல் என்பதன் நீட்டல் விகாரம், அம் – ... | தூய அணிகலன்களை அணிந்த இளைய பெண்ணே! மெல்லிய பெரிய பழிச் சொற்களைக் கூறுகின்ற உன் ஊரில் உள்ள புன்னை மரங்களின் காம்பு ஒடிந்த மலர்கள் கீழே உதிர்ந்ததால் அவற்றின் தேன் மணம் வீசுகின்ற புலால் நாற்றமுடைய கடற்கரைச் சோலையில் மணலில் நடந்த நீ, இப்பொழுது கற்களில் நடப்பதால் சிவந்த உன்னுடைய மென்மையான அடிகள் வருந்தாது இருக்கும் பொருட்டு... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0077 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 77 | நற்றிணை 77, கபிலர், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது | Natrinai 77, Kapilar, Kurinji Thinai – What the hero said to his heart | Kapilar | Kurinji Thinai | null | What the hero said to his heart | null | null | null | null | மலையன் மா ஊர்ந்து போகி, புலையன்
பெருந்துடி கறங்கப் பிற புலம் புக்கு அவர்
அருங்குறும்பு எருக்கி அயா உயிர்த்தாஅங்கு
உய்த்தன்று மன்னே, நெஞ்சே! செவ் வேர்ச்
சினைதொறும் தூங்கும் பயங்கெழு பலவின் 5
சுளையுடை முன்றில், மனையோள் கங்குல்
ஒலி வெள்ளருவி ஒலியின் துஞ்சும்
ஊரலஞ்சேரிச் சீறூர், வல்லோன்
வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை
அக... | The bright-browed young woman with
pale spots on her loins is sleeping at night
in her house with jackfruit trees in the
front yard, their roots red, and fruits
on each branch, listening to the sounds
of white waterfalls, her forearms
stacked with round, bright bangles,
carved with saws by skilled craftsmen
in a villag... | Notes: தோழியை மதியுடம்படுக்கச் சென்ற தலைவன், அவளிடம் உரையாடுங்கால் ‘இத் தலைவன் குறையுடையவன்’ எனக் கருதிய தோழி அவனை ஆராய்ந்தாள். அதைப் பொறுத்துக் கொள்ளுமாறு, தலைவன் தன் நெஞ்சை வேண்டியது. அகநானூறு 24 – வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த வளை. வரலாறு: மலையன். கடையெழு வள்ளல்கள் – ஆய், பாரி, காரி, ஓரி, அதிகன், பேகன், நள்ளி.... | Meanings: மலையன் மா ஊர்ந்து போகி – Malaiyan riding on his horse, புலையன் பெருந்துடி கறங்க – drummer hits a large thudi drum, பிற புலம் புக்கு – entered another country, அவர் அருங்குறும்பு எருக்கி – ruined their protected fort, அயா உயிர்த்தாஅங்கு – like how he then sighed since he was tired (உயிர்த்தாஅங்கு – அளபெடை), உய... | என் நெஞ்சே! சிவந்த வேர்களில் உள்ள கிளைகள்தோறும் தொங்கும் பயன்பொருந்திய பழங்கள் நிறைந்த வேர்ப்பலாவின் சுளைகள் உடைய முன் முற்றத்தை உடைய மனைக்கு உரிய நம் தலைவி, இரவில் ஓசையுடைய வெள்ளை அருவியின் ஒலியைக் கேட்டு உறங்கும் ஊரானது, பெரிய ஊர் அல்லாத அழகிய தெருக்களையுடைய சிறிய ஊர். கைத்தொழிலில் திறமையுடைய ஒருவன் கூர்மையான அரத்தால... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0078 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 78 | நற்றிணை 78, கீரங்கீரனார், நெய்தல் திணை, தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 78, Keerankeeranār, Neythal Thinai – What the heroine’s friend said to her | Keerankeeranār | Neythal Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | கோட் சுறா வழங்கும் வாள் கேழ் இருங்கழி
மணி ஏர் நெய்தல் மா மலர் நிறைய,
பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம்,
வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல்,
படர் வந்து நலியும் சுடர் செல் மாலை, 5
நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம்,
கேட்டிசின், வாழி தோழி! தெண்கழி
வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்,
புள்ளு நிமிர்ந்தன்ன பொலம் படைக் கலி மா
வலவன் கோல்... | May you live long my friend!
In the bright, vast backwaters
where killer sharks frequent,
punnai tree flowers shower their
fine golden pollen abundantly on
gem-colored, dark blue waterlilies.
In the grove, where fragrant
thāzhai trees spread their flowery
scents as the sun’s rays fade away
in this evening hour, we
ar... | Notes: தலைவன் திருமணம் புரிந்து கொள்ள வருவதை அறிந்த தோழி தலைவியிடம் உரைத்தது. இறைச்சி (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – இருங்கழியின் நெய்தல் மலர் நிறைய நுண்ணிய தாதைப் புன்னை பரப்பாநிற்குமென்றது, சேரியிடத்து நமர் கையேற்ப நிரம்பிய பொற்குவியலைச் சேர்ப்பன் நம்மை வரைதற்பொருட்டுக் கொடாநிற்கும் என்றதாம். இறைச்சி (2) ... | Meanings: கோட் சுறா வழங்கும் – where killer sharks move around, வாள் கேழ் இருங்கழி – bright colored vast backwaters, bright colored dark backwaters, மணி ஏர் நெய்தல் – blue waterlilies that are like sapphire (ஏர் – உவம உருபு, a comparison word), மாமலர் – dark flowers, large flowers, நிறைய பொன் நேர் நுண் தாது – lots of g... | தோழி! நீ வாழ்வாயாக! தெளிந்த நீரையுடைய உப்பங்கழியில் கூரிய வாயையுடைய தேர்க்கால்களின் (உருள்களின், சக்கரங்களின்) உட்பகுதி ஆழ்ந்து மணலில் அமுங்கினாலும் பறவை பறந்தாற்போல் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த செறுக்குடைய குதிரைகள் பாகனின் முட்கோல் அறியாதவையாக உள்ள வலிய கடல்நீர் சேர்ப்பனின் தேர் மணியின் ஓசையை நீ கேட்பாயாக!... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0079 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 79 | நற்றிணை 79, கண்ணகனார், பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது | Natrinai 79, Kannakanār, Pālai Thinai – What the heroine said to her friend | Kannakanār | Pālai Thinai | null | What the heroine said to her friend | null | null | null | null | ‘சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ,
கூரை நல் மனைக் குறுந்தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம்
ஏர்தரல் உற்ற இயக்கு அருங்கவலைப்
பிரிந்தோர் வந்து நப்புணரப் புணர்ந்தோர் 5
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?’
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று,
அம்ம வாழி தோழி!
யாதனின் தவிர்க்குவம... | May you live long, oh friend!
He wants to go on the harsh,
forked paths, where round
eengai flowers rich in honey
drop on rocks below,
appearing like kazhangu beans
which women wearing small
bangles use, to play on the sand in
the yards of fine houses with roofs.
I should ask him with love, “Is there
anything harsher ... | Notes: தலைவனின் பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைவி தோழிக்குச் சொல்லியது. மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம் (3) – ஒளவை துரைசாமி உரை – மணலைப் பெய்து கழங்காடுதற்கு இட்ட கற்பாறை மேல் உதிரும், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கற்பாறையின் மேல் உதிர்ந்து பரவி மணற்பரப்பில் விளையாடுவதற்கு இட்ட கழங்... | Meanings: சிறை – this side, nearby, நாள் ஈங்கை – day’s fresh eengai, Mimosa Pudica, Touch-me-not, உறை – honey drops, நனி – abundant, திரள் – rounded, வீ – flowers, கூரை நல் மனை – fine houses with roofs, குறுந்தொடி மகளிர் – women with small bangles, மணல் ஆடு கழங்கின் – like molucca seeds used on the sand, caesalpinia cr... | தோழி! நீ வாழ்வாயாக! நான் கூறுவதைக் கேட்பாயாக! மூடியுள்ள தேன் துளிகள் திரண்டிருக்கும் ஈங்கையின் புதிய மலர்கள், கூரைகளையுடைய நல்ல இல்லங்களில் வாழும் மகளிர் மணலில் விளையாடுவதற்கு இட்ட கழங்குபோல் பாறைகளின் மீது விழுந்து பரவியிருக்கும் அழகு பொருந்திய, செல்வதற்கு அரிய பிரிவுகளைக் கொண்ட வழியில் செல்லும்பொருட்டு நம்மைப் பிரிந்... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0080 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 80 | நற்றிணை 80, பூதன்தேவனார், மருதத் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக | Natrinai 80, Poothan Thēvanār, Marutham Thinai – What the hero said to his heart, as the heroine’s friend listened | Poothan Thēvanār | Marutham Thinai | null | What the hero said to his heart, as the heroine’s friend listened | null | null | null | null | ‘மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பால் பயங்கொண்மார், கன்று விட்டு,
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
தழையும் தாரும் தந்தனன் இவன்’ என, 5
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந்தோள் குறுமகள் அல்லது,
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே. | There is no other medicine for this
affliction that distresses me, except
the young woman with thick arms,
who bathes in a cold pond in the month
of Thai, restrained by proper shyness,
with her friends wearing jewels,
uttering, “He comes with desire and
gives me leaves and garlands, at dawn,
when great darkness disappe... | Notes: தலைவன் தலைவியைச் சந்தித்தல் அரிதாயிற்று. அதனால் வருந்திய தலைவியின் காதற் பெருமையை அறிந்த தோழி, தலைவன் விரைவில் திருமணம் புரிய வேண்டி, களவுப் புணர்ச்சியை மறுத்தாள். அதனால் வருந்திய தலைவன் உரைத்தது. இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – குறுமாக்கள் தலைவியாகவும் எருமையின் பால் மிகுதியாகக் கறக்க விரும்புதல்... | Meanings: மன்ற எருமை – buffaloes in the town’s common grounds, மலர் தலைக் காரான் – wide-headed buffaloes, இன் தீம் பால் பயம் கொண்மார் கன்று விட்டு – they leave the calves so that they can get the very sweet milk (இன் தீம் – ஒருபொருட் பன்மொழி), ஊர்க் குறுமாக்கள் – the young kids in town, மேற்கொண்டு – climbing on them, க... | தொழுவத்தில் உள்ள அகன்ற தலையையுடைய கரிய எருமைகளின் மிக இனிய பாலாகிய பயனைக் கொள்ளும்பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் விட்டுவிட்டு ஊரில் உள்ள மாடு மேய்க்கும் இளம் சிறுவர்கள் அந்த எருமைகளின் மேல் ஏறி ஓட்டிச் செல்லும் இருள் மிகவும் நீங்கும் விடியற்காலையில், விருப்பத்துடன் வந்து தழை ஆடையையும் அணிய மாலையையும் தந்தான் ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0081 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 81 | நற்றிணை 81, அகம்பன்மாலாதனார், முல்லைத் திணை – தலைவன் தேர்ப்பாகனிடம் சொன்னது | Natrinai 81, Akampanmālāthanār, Mullai Thinai – What the hero said to the charioteer, on his way home | Akampanmālāthanār | Mullai Thinai | null | What the hero said to the charioteer, on his way home | null | null | null | null | இரு நிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள்,
மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப,
பூண்க தில் பாக, நின் தேரே! பூண் தாழ் 5
ஆக வன முலைக் கரை வலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை
விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய
முறுவல் இன்னகை காண்கம்,
உறு பகை த... | The hostility of the king with a sword-bearing
army has ended. Hitch the skilled horses
to the chariot, oh charioteer!
With their trimmed manes on their napes and
hanging bells that jingle, they cut into the vast
land pressing their feet hard and trotting without
being tired, running straight for long with their
strong... | Notes: வினை முற்றிய தலைவன் தேர்ப்பாகற்கு உரைத்தது. தில் (5) – ஒளவை துரைசாமி உரை – அசைநிலை, விழையுமாம், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – விழைவின்கண் வந்தது, வலம் (6) – ஒளவை துரைசாமி உரை – ஏழனுருபு, sign of the locative. உறு -உறு தவ நனி என வரூஉம் மூன்றும் மிகுதி செய்யும் பொருள என்ப (தொல்காப்பியம், உரியியல் 3). | Meanings: இரு நிலம் குறைய – the wide land reduced (by digging into it while running), by the distance getting reduced, கொட்டிப் பரிந்தின்று – pressing firmly and trotting, ஆதி போகிய – running straight for a long distance, அசைவு இல் – without being tired, நோன் தாள் – strong legged, மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி – h... | பாகனே! மிக்கப் பகையை அடக்கிவிட்டான் வலிமையுடைய வாட்படையை உடைய நம் வேந்தன். பெரிய நிலம் குழியும்படி காலால் கொட்டி நடந்து விரைந்து நேராக ஓடுகின்ற தளர்ச்சி இல்லாத வலிமையான கால்களையுடைய, மன்னர்கள் மதிக்கும் மாட்சிமைபட்ட ஓட்டத்தை உடைய குதிரைகளின் கொய்யப்பட்ட மயிருடைய பிடரியில் கட்டப்பட்ட மணிகள் ஒலிக்க, உன் தேரில் அவற்றைப் ப... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0082 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 82 | நற்றிணை 82, அம்மள்ளனார், குறிஞ்சித் திணை – தலைவன் தலைவியிடம் சொன்னது | Natrinai 82, Ammallanār, Kurinji Thinai – What the hero said to the heroine | Ammallanār | Kurinji Thinai | null | What the hero said to the heroine | null | null | null | null | நோயும் நெகிழ்ச்சியும் வீடச்சிறந்த
வேய் வனப்புற்ற தோளை நீயே,
என்னுள் வருதியோ, நல் நடைக் கொடிச்சி
முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல? நின்
உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே, 5
போகிய நாகப் போக்கு அருங்கவலை
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண,
வெள் வசிப் படீஇயர், மொய்த்த வள்பு அழீஇக்
கோள் நாய்... | Oh young woman of fine walk from
the mountains!
In your small village,
……….where a small-eyed, harsh, large
……….boar with mud and dust on its
……….back got trapped and fell into an
……….empty pit on a harsh, forked forest
……….path with tall nākam trees, hunting
……….dogs killed it ruining the net straps
……….and started t... | Notes: தலைவியைக் கூடிய தலைவன் தன் நெஞ்சில் உள்ள எண்ணத்தைத் தலைவியிடம் கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘பண்பிற் பெயர்ப்பினும்’ (தொல்காப்பியம், களவியல் 12) என்ற நூற்பாவின்கண் ‘பரிவுற்று மெலியினும்’ என்றதற்கு இதனைக் காட்டுவர் நச்சினார்க்கினியர். உள்ளுறை (1) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – பன்றி தலைவியாகவும், வார் இனகப... | Meanings: நோயும் நெகிழ்ச்சியும் – love affliction and physical distress, வீட – to end, சிறந்த வேய் வனப்புற்ற தோளை நீயே – you are with fine bamboo-like pretty arms, என்னுள் வருதியோ – will you unite with me, நல் நடைக் கொடிச்சி – oh young woman of fine walk who resides in the mountain, oh young woman of good behavior who ... | நான் கொண்ட காதல் நோயும் உடல் தளர்ச்சியும் நீங்கும்படியான சிறந்த மூங்கிலின் அழகையுடைய தோளையுடையவை நீ. நல்ல ஒழுக்கத்தைக் கொண்ட குறிஞ்சிநில மகளே! உயர்ந்து வளர்ந்த நாக மரங்கள் உடைய அரிய பிரிவுகளையுடைய வழியில் சிறிய கண்களையும் பெரிய சினத்தையுமுடைய ஆண் பன்றி சேற்றில் புரண்டதால் சேறு அதன் கரிய முதுகில் படிய வெற்று நிலத்தில் உ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0083 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 83 | நற்றிணை 83, பெருந்தேவனார், குறிஞ்சித் திணை – தோழி கூகையிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 83, Perunthevanār, Kurinji Thinai – What the heroine’s friend said to an owl, as the hero listened nearby | Perunthevanār | Kurinji Thinai | null | What the heroine’s friend said to an owl, as the hero listened nearby | null | null | null | null | எம் ஊர் வாயில் உண் துறைத் தடைஇய
கடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய
தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,
வாய்ப் பறை அசாஅம், வலிமுந்து கூகை!
மை ஊன் தெரிந்த நெய் வெண்புழுக்கல், 5
எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;
எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்
துஞ்சாது அலமரு பொழுதின்,
அஞ்சு வரக் கடுங்குரல் பயிற்றாதீமே. | Oh owl of great strength, an unworn curved beak,
clear eyes and sharp claws, who lives on a huge, old
tree where a god resides, near our town’s drinking
water tank!
With a principle of not ruining, please do not hoot
with your drum-like, harsh voice that causes fear,
when we are distressed and unable to sleep,
desirin... | Notes: இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறியது. ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பா உரையில் இப்பாட்டினை எடுத்தோதி, ‘இஃது இரவுக்குறி வந்த தலைவன் சிறைப்புறமாகக் கூகைக்கு உரைப்பாளாய்த் தோழி கூறியது’ என்பர் நச்சினார்க்கினியர். மரங்களில் கடவுள் உறைதல்: அகநானூறு 27... | Meanings: எம் ஊர் வாயில் உண் துறைத் தடைஇய கடவுள் முது மரத்து – on a huge old tree near the drinking water pond at our town’s entrance on which a god resides (தடைஇய – அளபெடை), உடன் உறை பழகிய – used to staying there, used to living there, தேயா – sharp, not blunt, வளைவாய் – curved beak, தெண் கண் – sharp eyes, கூர் உகிர் –... | எம்முடைய ஊரின் முகப்பில் உள்ள உண்ணும் நீருடைய துறையில் உள்ள, பருத்த, கடவுள் வாழும் முதிய மரத்திலிருந்து, எம் அருகில் உறைதலைச் செய்து பழகிய தேயாத வளைந்த வாயினையும் கூரிய நகத்தையுமுடைய வாயாகிய பறையால் ஒலி எழுப்பிப் பிறரை வருத்தும் வலிமை வாய்ந்த கூகையே! ஆட்டு இறைச்சியுடன் தெளிந்த நெய் இட்டுச் சமைத்த வெண்மையான சோற்றினை வெள... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0084 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 84 | நற்றிணை 84, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது | Natrinai 84, Poet is Unknown, Pālai Thinai – What the heroine said to her friend | Unknown | null | null | null | null | null | null | null | கண்ணும், தோளும், தண் நறும் கதுப்பும்,
திதலை அல்குலும், பல பாராட்டி,
நெருநலும் இவணர் மன்னே! இன்றே
பெருநீர் ஒப்பின் பேஎய் வெண்தேர்
மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம், 5
சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன
உவர் எழு களரி ஓமை அம் காட்டு,
வெயில் வீற்றிருந்த வெம்பலை அருஞ்சுரம்
ஏகுவர் என்ப தாமே தம் வ... | Yesterday he praised greatly
my eyes, arms, cool fragrant
hair and loins with pale spots.
Today they say he will go alone on
the long, harsh, hot wasteland path
devoid of trees,
where the sun scorches and mirages
appear like large bodies of water
where deer go to drink with desire,
and caked salt deposits in the lovel... | Notes: பிரிவிடை ஆற்றாளாகிய தலைவி தோழிக்குச் சொல்லியது. இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கானல் நீரைக் குடிநீராகக் கொண்டு மான்கள் விரும்பி ஓடும் என்றது அருளில்லாத தலைவனிடம் அறமுடையான் என்று கருதித் தலைவி மயங்கினாள் என்பது குறித்து அமைந்தது. இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லாதோரே (11-12) – ஒளவை துரைசாமி உ... | Meanings: கண்ணும் தோளும் – eyes and arms, தண் நறும் கதுப்பும் – and cool fragrant hair, திதலை அல்குலும் – loins with pallor spots, பல பாராட்டி – praised a lot, நெருநலும் இவணர் – he was here yesterday, மன் – கழிவுக்குறிப்பு, what was in the past, ஏ – அசைநிலை, இன்றே – today, பெருநீர் ஒப்பின் – like a big body of water, ப... | என்னுடைய கண்களையும் தோள்களையும் குளிர்ந்த மணம் கமழும் கூந்தலையும் தேமல் படர்ந்த அல்குலையும் மிகவும் பாராட்டி நேற்றும் அவர் இங்கு இருந்தார். இன்று பெரிய நீர்நிலையை ஒத்துத் தோன்றும் வெள்ளை கானல்நீரை மரங்கள் இல்லாத நீண்ட வழியில் மான்கள் கண்டு நீரென்று எண்ணி விரும்பி ஓடும், மண்ணால் செய்து சுடப்பட்ட தயிர் பானையில் மத்தால் க... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0085 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 85 | நற்றிணை 85, நல்விளக்கனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 85, Nalvilakkanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby | Nalvilakkanār | Kurinji Thinai | null | What the heroine’s friend said to her, as the hero listened nearby | null | null | null | null | ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,
வேய் மருள் பணைத்தோள் விறல் இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறு வரி இரும்புலி அஞ்சிக் குறு நடைக்
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், 5
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி
வாரற்க தில்ல தோழி, சாரல்
கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை,
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொட... | My friend! Your flower-like,
moist eyes spill clear drops of
tears, the beautiful jewels worn
on your round, bamboo-like
arms have slipped down,
and this loud, ancient town gossips.
May he not come on the fearful
small paths in the pitch darkness
of night,
……….where an elephant is standing
……….guard over her calf with... | Notes: தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது. வரைவு கடாயது. புலவர் பெயர் – ஒளவை துரைசாமி உரை – நல்விளக்கனார் என அச்சுப் பிரதியிற் காணப்படும் இப்பெயர் ஏடுகளில் நல்விளக்குன்றனார் என்று இருக்கிறது. பூங்குன்றன், முதுகுன்றன் என்றாற் போல விளக்குன்றன் என்பது மக்கட் பெயர்வகையுள் ஒன்றாகவும் இருக்கலாம். ஏடு எழுதினார் நல்வி... | Meanings: ஆய் மலர் மழைக் கண் – moist eyes that are beautiful like flowers, moist eyes that are like chosen flowers, தெண் பனி உறைப்பவும் – drop clear drops of tears, வேய் மருள் பணைத்தோள் – bamboo-like thick arms (மருள் – உவம உருபு, a comparison word), விறல் இழை – victorious jewels, beautiful jewels, நெகிழவும் – to becom... | தோழி! உன் அழகிய மலர்போன்ற குளிர்ச்சியுடைய கண்களிலிருந்து தெளிந்த கண்ணீர் வடிந்து விழவும், உன் மூங்கில்போன்ற பருத்த தோள்களிலிருந்து சிறப்பான வளையல்கள் நெகிழ்ந்து விழவும், பழிகூறும் இப்பழைய ஊர் மிக்க அலர் தூற்றனாலும், குறுகிய வரியுடைய கரும்புலிக்கு அஞ்சி. மெல்லிய நடையையுடைய தன் கன்றைப் பிடியானை காத்து நிற்கும் அடர்ந்த இர... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0086 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 86 | நற்றிணை 86, நக்கீரர், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 86, Nakkeerar, Pālai Thinai – What the heroine’s friend said to her | Nakkeerar | Pālai Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | அறவர் வாழி தோழி, மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்
கை வல் வினைவன் தையுபு சொரிந்த 5
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவி முகை அவிழ, ஈங்கை
நல் தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னி வந்தோரே. | My friend! Your lover left in the
very harsh early dew season, when
plate-like, round pakandrai flowers,
as wide as spear blades of warriors,
with skin-like, hairy petals were in
bloom, and you trembled.
He has come back in early summer
when the kōngam flowers
that are as lovely as the head-jewels
created by skilled a... | Notes: குறித்த பருவத்தில் வினை முடித்து தலைவன் வந்தமை கேட்ட தோழி தலைவிக்கு உரைத்தது. கலித்தொகை 78 – பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தால், அகநானூறு 217 – பகன்றை நீல் உண் பச்சை நிற மறைத்து அடைச்சிய தோல் எறி பாண்டிலின் வாலிய மலர. வாழி – இச்சொல் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரையில் தலைவரை ... | Meanings: அறவர் வாழி – long live the just man, தோழி – oh friend, மறவர் – warriors, வேல் என விரிந்த – spread like a spear, கதுப்பின் – with hair, தோல – with skin, பாண்டில் – round shape, disc, bowl, ஒப்பின் – like, பகன்றை மலரும் – pakandrai flowers bloom, Operculina turpethum, Indian jalap, கடும் பனி – harsh dew, அற்சிர... | தோழி! மறவர்களின் வேல் போன்று விரிந்த மயிரை ஒத்த தோலையுடைய வெள்ளி வட்டிலைப் போல் பகன்றை மலரும் கடுமையான முன்பனியுடைய அற்சிரக்காலத்தில் நாம் நடுங்குமாறு நம்மை விட்டுப் பிரிந்து, அழகு பொருந்துமாறு விளங்கும் கைத்தொழிலில் திறமையுடைய பொற்கொல்லன் பலநிறக் கற்களை இட்டு இழைத்த பொன்னாலாகிய சுரிதகம் என்னும் அணிகலனைப் போன்ற வடிவத்த... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0087 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 87 | நற்றிணை 87, நக்கண்ணையார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது | Natrinai 87, Nakkannaiyār, Neythal Thinai – What the heroine said to her friend | Nakkannaiyār | Neythal Thinai | null | What the heroine said to her friend | null | null | null | null | உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,
வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங்காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,
அது கழிந்தன்றே தோழி, அவர் நாட்டுப் 5
பனி அரும்பு உடைந்த பெருந்தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்,
பெருந்தண் கானலும் ... | When I was day dreaming about his
country’s seashore with huge, cool groves,
and the joy of fishermen in small villages,
where large-trunked punnai trees with
opening, cool flower buds drop pollen on the
wet backs of grazing oysters, my dream ended,
oh friend, like the dreams of bats with sharp
teeth that hang on the t... | Notes: வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைவி கனாக்கண்டு தோழிக்கு உரைத்தது. உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – இப்பியின் புறத்தைப் புன்னையின் தாது மூடிக்கொள்ளும் என்றது, பசலை தலைவியின் மேனியை மறைக்குமாறு பரவும் என்பது. வரலாறு: சோழர், அழிசி. Natrinai 190 describes Azhisi owing Ārkadu town. According to K.N. Sivaraja ... | Meanings: உள்ளூர் – town’s, மாஅத்த – on mango trees (அத்துச்சாரியை அகர விகுதி பெற்றது), முள் எயிற்று வாவல் – bats with thorn-like teeth, bats with sharp teeth, ஓங்கல் அம் சினை – on tall branches, தூங்கு – hanging, துயில் பொழுதின் – when sleeping, வெல் போர்ச் சோழர் – victorious in battle Chōzha king, அழிசி அம் பெருங்காட... | தோழி! தலைவரது நாட்டில் உள்ள பெரிய அடியையுடைய புன்னை மரத்தின் குளிர்ந்த அரும்புகள் உடைந்து, அவற்றின் தாது கடலின் துறையில் மேய்கின்ற சிப்பியின் ஈரமான புறத்தில் விழும் சிறுகுடியில் உள்ள பரதவர் அடைந்த மகிழ்ச்சியையும் பெரிய குளிர்ந்த கரையில் உள்ள சோலையையும் நான் நினைத்த அப்பகல் பொழுதில், ஊரில் உள்ள மாமரத்தில் இருக்கின்ற முள... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0088 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 88 | நற்றிணை 88, நல்லந்துவனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 88, Nallanthuvanār, Kurinji Thinai – What the heroine’s friend said to her, as the hero listened nearby | Nallanthuvanār | Kurinji Thinai | null | What the heroine’s friend said to her, as the hero listened nearby | null | null | null | null | யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?
வருந்தல், வாழி தோழி! யாம் சென்று
உரைத்தனம் வருகம் எழுமதி! புணர் திரைக்
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல், உதுக்காண், 5
தம்மோன் கொடுமை நம் வயின் ஏற்றி,
நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது
கண்ணீர் அருவியாக
அழுமே தோழி, அவர் பழமுதிர் குன்றே. | May you live long, oh friend!
Why are you getting confused,
not analyzing our past actions?
Rise up! Let’s go and talk to him!
I worry that you are melting and
getting ruined like heaps of salt,
the ambrosia of oceans, that melts
away when rain pours.
Look there!
His mountain that drops fruits
weeps, its waterfalls fl... | Notes: வரையாது வந்தொழுகும் தலைவன் சிறைப்புறமாக இருப்பதை அறிந்த தோழி, தலைவியிடம் கூறியது. வரைவு கடாயது. ஒளவை துரைசாமி உரை – ‘நாற்றமும் தோற்றமும்’ (தொல்காப்பியம், களவியல் 24) என்ற நூற்பாவின்கண் ‘என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ அன்பு தலையடுத்த வன்புறைக் கண்ணும்’ என்றதற்கு இப்பாட்டை எடுத்தோதி ‘இது பிரிவிடைத் தோழி ... | Meanings: யாம் செய் தொல் வினைக்கு – for our past deeds, எவன் பேதுற்றனை – why are you confused, வருந்தல் – do not feel sad, வாழி – அசைநிலை, an expletive, may you live long, தோழி – oh friend, யாம் சென்று உரைத்தனம் வருகம் – let us go and talk to him and come back, எழுமதி – rise up (மதி – முன்னிலையசை, an expletive of the s... | நாம் செய்த பழைய வினை அவ்வாறு இருக்க, அதை ஆராயாது, எதற்காக வருந்துகின்றாய்? வருந்தாதே! நீடு வாழ்வாயாகத் தோழி! நாம் தலைவனிடம் சென்று பேசி வருவோம். நீ எழுவாயாக. பொருந்திய அலைகளையுடைய கடலில் விளைந்த உப்பு மழையை ஏற்று உருகியதைப் போல் நீ உருகுகின்றாய் என்று நான் அஞ்சுகின்றேன். அங்கே பார்! தலைவன் நமக்கு இழைத்த கொடுமையை எண்ணி,... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0089 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 89 | நற்றிணை 89, இளம்புல்லூர்க் காவிதி, முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 89, Ilampullūr Kāvithi, Mullai Thinai – What the heroine’s friend said to her | Ilampullūr Kāvithi | Mullai Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | கொண்டல் ஆற்றி விண் தலைச்செறீஇயர்,
திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,
நிரைத்து நிறை கொண்ட கமஞ்சூல் மா மழை
அழிதுளி கழிப்பிய அழிபெயல் கடை நாள்,
இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின், 5
அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு,
இன்னும் வருமே தோழி, வாரா
வண்கணாளரோடு இயைந்... | In the last day of the rains, the eastern
winds carried huge, full, dark clouds
that are in rows in the sky. Climbing
over peaks, they appear like sprays of
waves, exhausted and without heavy
rain drops.
The unfavorable, cold northern winds,
that blow and sway the broad leaves of
uzhunthu plants with hairy pods remain... | Notes: தலைவன் பொருள் முற்றி மீண்டான் என்பதை அறிந்த தோழி, தலைவியிடம் உரைத்தது. கமம் – நிறைவு, கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57). புலம்பு – புலம்பே தனிமை (தொல்காப்பியம், உரியியல் 35). | Meanings: கொண்டல் ஆற்றி – the eastern winds carrying, the eastern winds blowing (ஆற்றி – செலுத்தி), விண் தலைச் செறீஇயர் – becoming crowded in the sky, becoming dense in the sky (செறீஇயர் – அளபெடை), திரைப் பிதிர் கடுப்ப – like the sprays of waves (கடுப்ப – உவம உருபு, a comparison word), முகடு உகந்து ஏறி – rising high ov... | கீழ்க்காற்று செலுத்துவதால் வானில் அடர்ந்து நீர் அலையில் உள்ள பிசிர் போல் தோன்றி மலையுச்சியில் விருப்பத்துடன் ஏறி ஒழுங்காக (வரிசையாக) நிரம்பிய கருவுற்ற கரிய முகில்கள் மிக்க மழைத்துளிகளைப் பெய்து ஒழிந்த கார்காலத்தின் இறுதியில், அகலாமல் நாள்தோறும் வருத்தும் நம்மிடம் அன்பு செலுத்தாத வாடைக் காற்று, பருமம் பூண்ட யானை தளர்ச்ச... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0090 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 90 | நற்றிணை 90, அஞ்சில் அஞ்சியார், மருதத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, பாணன் கேட்கும்படியாக | Natrinai 90, Anjil Anjiyār, Marutham Thinai – What the heroine’s friend said to her, as the messenger bard listened nearby | Anjil Anjiyār | Marutham Thinai | null | What the heroine’s friend said to her, as the messenger bard listened nearby | null | null | null | null | ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்,
உடை ஓர் பான்மையின் பெருங்கை தூவா,
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப் புகர் கொண்ட புன் பூங்கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர, ஓடிப் 5
பெருங்கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்,
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி,
நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள்,
ஊசல் உறு தொழில் பூச... | Listen! In this ancient town with
festivities and dances,
a washer-woman who washes perfectly
and does not know poverty, soaks at
night clothes in thin rice starch and rinses
them, and the soft fine clothes washed
by her are worn by the young woman
donning a gold garland that sways as
she runs, refusing to play on a sw... | Notes: தோழி தலைவிக்கு உரைப்பாளாய்ப் பாணனுக்கு வாயில் மறுத்தது. பரத்தையினால் பிரிந்த தலைவன், தலைவியின் ஊடல் தணியப் பாணனை அனுப்புகிறான். அப்பாணன் கேட்குமாறு, தோழி தலைவியிடம், “அப்பரத்தை ஊஞ்சலாடாது அழுதாள். அவளை ஆற்றுவித்து மீண்டும் ஊஞ்சலாடுமாறு செய்ய அமையாதவனாய் உள்ளான் நம் தலைவன். அவள் ஊடியதால் இங்கு வர விரும்புகின்றான்... | Meanings: ஆடு இயல் விழவின் – with festivals with dances, with festivals with artists, அழுங்கல் மூதூர் – loud ancient town, loud uproarious town, உடை ஓர் பான்மையின் – in the manner of analyzing and washing clothes (ஓர்தல் – ஆராய்தல், பான்மை – முறைமை), பெருங்கை தூவா – with non-stopping business (கை ஓயாத), வறன் இல் – with... | கேட்பாயாக! நடனமாடுகின்ற விழாக்களில் ஒலியை உடைய பழமையான ஊரில் ஆடைகளைத் துவைக்கும், பெரிதும் தன் கை ஓயாத வறுமை இல்லாத வண்ணாத்தி இரவில் துவைத்த சோற்றின் கஞ்சியை இட்ட சிறிய பூ வேலைப்பாடு அமைந்த ஆடையுடன், தன் பொன் மாலை அசைய ஓடிச் சென்று பெரிய கயிற்றால் தொங்கவிட்ட கரிய பனை நாரால் செய்யப்பட்ட ஊஞ்சலில் மலரைப் போலும் கண்களையுடை... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0091 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 91 | நற்றிணை 91, பிசிராந்தையார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 91, Pisirānthaiyār, Neythal Thinai – What the heroine’s friend said to her | Pisirānthaiyār | Neythal Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | நீ உணர்ந்தனையே தோழி, வீ உகப்
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு
உடங்கு இரை தேரும் தடந்தாள் நாரை
ஐய சிறுகண் செங்கடைச் சிறுமீன், 5
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பைத்
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப்படச் சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்
பெருநல் ஈகை நம் சிறுகுடிப் பொலிய,
புள் உய... | Did you know this my friend?
The lord of the vast ocean comes during
the day in his tall chariot, hitched to fast
horses wearing bell necklaces that sound
like the chirps of the birds in our thriving,
greatly charitable village,
where a big-footed male stork, along with
his mate, searches for food in the sweet
shade of... | Notes: பொருள் தேடிப் பிரிந்த தலைவன் பொருள் முற்றி பகல் பொழுதில் பலரும் காணுமாறு வருவதைக் கண்ட தோழி, தலைவியிடம் உரைத்தது. உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – நாரை கடலிற் சென்று இரை தேடித் தம் பிள்ளையை அருத்தும் என்றது, தலைவன் வேற்று நாட்டிற் சென்று பொருள் தேடித் தமரைப் பேணுதல் என்பதாம். நீ உணர்ந்தனையே (1) – ஒளவை துரை... | Meanings: நீ உணர்ந்தனையே தோழி – did you know my friend, வீ உகப் புன்னை பூத்த இன் நிழல் – in the sweet shade of laurels tree which drop flowers, Calophyllum inophyllum, Mast wood Tree, உயர் கரை – high shores, tall banks, பாடு இமிழ் பனிக் கடல் – cold sea with loud sounds, துழைஇ – searches (அளபெடை), பெடையோடு உடங்கு இரை தே... | மலர்கள் விழும்படி புன்னை மரங்கள் மலர்ந்திருக்கின்ற இனிய நிழலையுடைய உயர்ந்த கரையையுடைய ஓசை முழங்கும் குளிர்ந்த கடலில் துழாவி தன் பெடையுடன் சேர்ந்து ஒன்றாக இரையைத் தேடுகின்ற பெரிய கால்களையுடைய நாரை, மெல்லிய சிறிய கண்களையுடைய சிறு மீன்களைப் பிடித்து மேலோங்கிய கிளையில் உள்ள ஓங்கிய உயர்ந்த இடத்தில் உள்ள கூட்டிலிருந்து தம் த... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0092 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 92 | நற்றிணை 92, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 92, Poet is Unknown, Pālai Thinai – What the heroine’s friend said to her | Unknown | null | null | null | null | null | null | null | உள்ளார் கொல்லோ தோழி, துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி, அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் 5
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,
புன்தலை மடப் பிடி கன்றோடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே? | Does he think about you, my friend,
your lover who went through the wasteland
where, in summer’s heat, a chameleon crawls
with its mate, with difficulty, both moving
like ground snakes and looking like withered
tender hemp leaves with stripes, and in a small
village of hunters high on the mountain peak,
a killer bull e... | Notes: பிரிவிடை வருந்திய தலைவிக்குத் தோழி சொல்லியது. வழலை (2) – ச. வே. சுப்பிரமணியன் உரை – கருவழலைப் பாம்பு, University of Madras Lexicon – ஒருவகைப் பாம்பு, Lycodontidae, ஒளவை துரைசாமி உரை – ஆண் ஓந்தி, பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – ஓந்தியாகிய வழலை, வழலை ஒரு வகைப் பாம்பு. பாடு நடை (2) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ... | Meanings: உள்ளார் கொல்லோ தோழி – does he think about you oh friend (கொல் – ஐயப்பொருட்டு, ஓ – அசைநிலை, an expletive), துணையொடு – with its mate, வேனில் – in summer, ஓதி பாடு நடை – a chameleon walks with difficulty, a chameleon walks creating sounds (ஓதி – ஓந்தி, இடைக்குறை), வழலை – a kind of snake, a ground snake, Lycodont... | தன் துணையுடன், வேனில் காலத்தில் வருந்திய நடையையுடைய வழலைப் பாம்புபோல் நகரும் ஓணான் வரியுடைய மரல் இளமடலின் போல் வாடிய அவ்விடத்தில் உள்ள வறட்சியுடைய குன்றின் பக்கத்திலுள்ள வேடவரின் சிற்றூரின்கண், அகன்ற வாயையுடைய கிணற்றிலிருந்து பயன்தரும் ஆநிரை உண்ணுமாறு எடுத்து வைத்த தெளிந்த நீருடைய தொட்டியில் உள்ள நீரை உண்ணுவதற்காக, புல... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0093 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 93 | நற்றிணை 93, மலையனார், குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 93, Malaiyanār, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero | Malaiyanār | Kurinji Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,
வரை வெள்ளருவி மாலையின் இழிதரக்,
கூலம் எல்லாம் புலம் புக, நாளும்
மல்லற்று அம்ம இம் மலை கெழு வெற்பு எனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட! 5
செல்கம், எழுமோ, சிறக்க நின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்திழைப் பணைத்தோள்,
நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள்,
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய
பழங்க... | Oh lord of the lofty mountains, where
honeycombs hang, waterfalls look like
garlands, jackfruits are in clusters, grains
and legumes are always harvested in
abundance, there is prosperity in the
mountains, and those who have left
will feel sad! We are leaving! Rise up
and go! May you live long and prosper!
She with pe... | Notes: தோழி வரைவு கடாயது. அம்ம (4) – ஒளவை துரைசாமி உரை – கேட்க, உரையசை, H.வேங்கடராமன் உரை – வியப்பு. இறைச்சி – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நின்னைப் புகல்ப்புக்கேமைக் கைவிடுகின்ற நினது மலையாயிருந்தும் பிரிந்தோர் இரங்குமாறு இன்னும் வளனுடைத்தாயிரா நின்றது. இஃதென்ன வியப்போ எனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றியது காண்... | Meanings: பிரசம் தூங்க – honey combs hang, பெரும் பழம் துணர – jackfruits hang in clusters, Artocarpus heterophyllus, வரை வெள் அருவி – white waterfalls of the mountains, மாலையின் இழிதர – flowing down like garlands (மாலையின் – இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கூலம் எல்லாம் – all the grains and legumes,... | தேனிறால்கள் மரங்களிலும் பாறைகளிலும் தொங்க, பலாவின் பெரிய பழங்கள் கொத்துக் கொத்தாகப் பழுக்க, மலையில் வெள்ளை அருவிகள் இறங்கிவர, நெல் தினை முதலிய கூலங்கள் எல்லாம் விதைக்கப்பட்டுப் பொலிய, சிறிய குன்றுகள் பொருந்திய இப்பெரிய மலையை விட்டுப் பிரிந்தவர்கள் வருந்தும் பெரிய மலையின் நாடனே! யாம் இங்கிருந்து எம் ஊர்க்குச் செல்கின்றோ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0094 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 94 | நற்றிணை 94, இளந்திரையனார், நெய்தல் திணை – தலைவி தோழியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 94, Ilanthiraiyanār, Neythal Thinai – What the heroine said to her friend, as the hero listended nearby | Ilanthiraiyanār | Neythal Thinai | null | What the heroine said to her friend, as the hero listended nearby | null | null | null | null | நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கிக்,
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப குவி இணர்ப் 5
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன் கொல் தோழி, தன் வயின்
ஆர்வம் உடையர் ஆகி
மார்பு அணங்குறுநரை அறியாதோனே? | What kind of man is he, oh friend,
the lord of the shores,
……….where punnai trees put out
……….clusters of flowers with pointed
……….petals when the ocean waves
……….spray flesh-reeking water on
……….them,
who does not understand the woman
who loves him, who is wasting away
in sorrow, desiring his chest?
When a woman stru... | Notes: தலைவன் சிறைப்புறமாகத் தலைவி தோழிக்கு உரைப்பாளாய்ச் சொல்லியது. புன்னை அரும்பிய (6) – ஒளவை துரைசாமி உரை – பூங்கொத்துக்களையுடைய புன்னை மரம், அலராமற் குவிந்த பூங்கொத்துக்கள். ஒளவை துரைசாமி உரை – ‘மறைந்தவற் காண்டல்’ (தொல்காப்பியம், களவியல் 21) என்ற நூற்பாவின்கண் வரும் ‘ஏமம் சான்ற உவகைக்கண்ணும்’ என்றதற்கு இப்பாட்டினை ... | Meanings: நோய் அலைக்கலங்கிய – when this love affliction causes distress (அலைக்கலங்கிய – அலைத்தலால் கலங்கிய), மதன் அழி பொழுதில் – when strength is lost, காமம் செப்பல் – talking in a loving manner, ஆண்மகற்கு அமையும் – it is fitting for a man, யானே – me, பெண்மை தட்ப – my feminine nature blocking, நுண்ணிதின் தாங்கி – I tol... | காதல் நோயானது நம்மை வருத்துகின்றபோது நாம் மனம் கலங்கி வலிமை அழிகின்ற வேளையில் அன்போடு வந்து அருகில் இருந்து நம்மை ஆற்றுவித்தல் ஆண்மகனுக்கு உரிய சிறந்த பண்பாகும். நான் என்னுடைய நலனைத் தாங்கி என் பெண்மையால் தடுத்துக் கொண்டேன். கைத்தொழிலில் வல்லவன் அழகுபெற கழுவாத பசிய முத்து தன்னுடைய ஒளியை வெளியே செலுத்தாதது போல, குவிந்த ... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0095 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 95 | நற்றிணை 95, கோட்டம்பலவனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் தோழனிடம் சொன்னது | Natrinai 95, Kōttampalavanār, Kurinji Thinai – What the hero said to his friend | Kōttampalavanār | Kurinji Thinai | null | What the hero said to his friend | null | null | null | null | கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,
ஆடுமகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவத் தீம் கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன் பறழ் தூங்க,
கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து, 5
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்று அகத்ததுவே, குழு மிளைச் சீறூர்;
சீறூரோளே நாறு மயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையகத்ததுவே, பிறர்
விடுத்தற... | In the small, well-guarded hamlet in the
mountain where my lover with fragrant hair lives,
bamboo flutes and many musical instruments
create loud music and children of mountain
dwellers climb rapidly on big boulders and clap
to beats, as a strong young monkey,
child of a female monkey with fuzzy hair on
her head and a ... | Notes: தலைவன் பாங்கற்கு, இவ்விடத்து இத்தன்மையத்து என உரைத்தது. ஒளவை துரைசாமி உரை – ‘மெய் தொட்டுப் பயிறல்’ (தொல்காப்பியம் களவியல் 11) என்ற நூற்பாவின் கண் வரும் ‘குற்றம் காட்டிய வாயில் பெட்பினும்’ என்றதற்கு இப்பாட்டினைக் காட்டுவர் இளம்பூரணர். இறைச்சி – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – கழைக்கூத்தி ஆடிய கயிற்றின் மேல் குரங்கின... | Meanings: கழை – bamboo flute, பாடு இரங்க – with sounds nearby, பல் இயம் கறங்க – many instruments sound, ஆடுமகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – on a strong twisted rope on which a dancing girl walked, அதவத் தீம் கனி அன்ன – like a sweet fig, செம் முகத் துய்த்தலை மந்தி – a red-faced female monkey with fuzzy head hair, வ... | புல்லாங்குழல் ஒலிக்க, பல இசைக் கருவிகளும் முழங்க, ஆடும் மகள் நடந்த முறுக்குடைய வலிமையான கயிற்றில், இனிய அத்திப் பழத்தைப் போன்ற சிவந்த முகத்தைக் கொண்ட பெண் குரங்கின் வலுவான குட்டியானது இறுக்கமாக பற்றிக் கொண்டு தொங்கி ஆட , சிறுவர்கள் மூங்கில் அருகில் உள்ள பெரிய பாறையின் மீது ஏறி, வேகமாக எழுந்துத் தாளம் கொட்டும் அம்மலையில... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0096 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 96 | நற்றிணை 96, கோக்குளமுற்றனார், நெய்தல் திணை – தோழி தலைவியிடம் சொன்னது, சிறைப்புறத்தானாக இருந்த தலைவன் கேட்கும்படி | Natrinai 96, Kōkulamutranār, Neythal Thinai – What the heroine’s friend said to the heroine, as the hero listened nearby | Kōkulamutranār | Neythal Thinai | null | What the heroine’s friend said to the heroine, as the hero listened nearby | null | null | null | null | இதுவே, நறு வீ ஞாழல் மா மலர் தாஅய்,
புன்னை ததைந்த வெண்மணல் ஒரு சிறைப்,
புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,
பொம்மல்படு திரை நம்மோடு ஆடி,
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் 5
துவரினர் அருளிய துறையே அதுவே,
கொடுங்கழி நிவந்த நெடுங்கால் நெய்தல்
அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇத்,
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு
உள்ளுதோறு உள்... | You say,
“This is where he embraced me first on
one side of the grove where gnāzhal and
punnai trees have dropped their huge, fragrant
flowers on the white sand. This is where he
played with us in the overflowing dashing waves,
as he squeezed out water and sweetly dried my thick,
bright, black hair with five-part braid... | Notes: வரைவு கடாயது. புதுவது புணர்ந்த பொழிலே (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – என்னைப் புதுவதாக இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த சோலை, ஒளவை துரைசாமி உரை – புதுத்தளிரும் புது மலரும் செறிந்து புதுமைக்காட்சி வழங்கும் பொழிலிடம் ஆகும். நெய்தல்அம் பகை நெறித் தழை (7-8) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – நெய்தலின் அழகிய... | Meanings: இதுவே – this is, நறு வீ ஞாழல் – fragrant flowered gnāzhal, ஞாழல், புலிநகக்கொன்றை, tigerclaw tree, Cassia Sophera, மா மலர் – huge flowers, தாஅய் – dropped, spread (அளபெடை), புன்னை ததைந்த வெண்மணல் – white sand where punnai trees grow densely, நாகம் – Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum, ஒரு சிறை... | “இதுவே, நறுமணம் கமழும் பூக்களையுடைய ஞாழல் மரத்தின் மலர்கள் உதிர்ந்து பரவிய புன்னை மரங்கள் அடர்ந்த வெள்ளை மணலின் ஒரு புறம் என்னுடன் அவர் இணைந்த பொழில். அதன் பின்னதே, பொலிவுடைய கடலலையில் நம்முடன் விளையாடி என் முதுகில் தாழ்ந்து கரிதாக உள்ள நீண்ட அடர்ந்த ஐந்து பகுதியாக உள்ள கூந்தலைப் பிழிந்து துவட்டினராக அவர் அருள் செய்த த... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0097 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 97 | நற்றிணை 97, மாறன் வழுதி, முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது | Natrinai 97, Māran Valuthi, Mullai Thinai – What the heroine said to her friend | Māran Valuthi | Mullai Thinai | null | What the heroine said to her friend | null | null | null | null | அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்தாங்குப்,
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே;
அதனினும் கொடியள் தானே, ‘மதனில் 5
துய்த்தலை இதழ பைங்குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?’ என
வண்டு சூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனி மட மகளே. | When a cuckoo sings near me in plaintive notes,
the hurt is like that of a lance plunged into an
unhealed, deeply wounded heart.
Harsher than that is when the river runs with
abundant clear water.
Much harsher than that is the farmer’s special,
naive daughter from the grove, who calls out and sells
in her bee-swarmin... | Notes: பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி தோழிக்கு உரைத்தது. நற்றிணை – நற்றிணை 118 – புது மலர் தெருவுதொறு நுவலும் நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே, புறநானூறு 293 – பிறர் மனை புகுவள் கொல்லோ அளியள் தானே பூ விலைப் பெண்டே. பெரும்பாணாற்றுப்படை 355 – தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின். பிரிவில (3) – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை ... | Meanings: அழுந்துபடு விழுப்புண் – deep big wound sore, வழும்புவாய் புலரா – the edges on fatty flesh have not dried, எவ்வ நெஞ்சத்து – into the distressed heart, எஃகு எறிந்தாங்கு – like a spear was plunged, பிரிவில – without leaving, புலம்பி நுவலும் குயிலினும் – more than the cuckoo bird singing mournfully, தேறு நீர் கெழ... | ஆழ்ந்த பெரிய புண்ணின் மேல் தசை காயாத துன்பம் தாங்கிய மார்பில் வேலைப் பாய்ச்சினாற்போல், பிரியாதிருப்பினும் வருந்திக் கூவும் குயிலைக்காட்டிலும் தெளிந்த நீர் நிறைந்து வரும் ஆறு மிகவும் கொடியது. அதைக்காட்டிலும் கொடியவள் ஆக உள்ளாள், வலிமை இல்லாத பஞ்சுபோன்ற மேற்பகுதியுடைய இதழ்களைக் கொண்ட பசிய குருக்கத்தி மலர்களுடன் பிச்சியின... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0098 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 98 | நற்றிணை 98, உக்கிரப் பெருவழுதி, குறிஞ்சித் திணை – தோழி தலைவனிடம் சொன்னது | Natrinai 98, Ukkira Peruvaluthi, Kurinji Thinai – What the heroine’s friend said to the hero | Ukkira Peruvaluthi | Kurinji Thinai | null | What the heroine’s friend said to the hero | null | null | null | null | எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின்
செய்ம்ம் மேவல் சிறுகண் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில் தாழாது
பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென, 5
மெல்ல மெல்லப் பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ்பதம் நோக்கி,
இரவின் வர... | Oh man from the country,
where a small-eyed pig with neck
hair as coarse as porcupine quills,
walked toward the wide millet
field on the tall mountain, anxious
to graze, unaware of the big trap,
heard lizard clucks, took that as
an omen, and slowly walked back
to his mountain cave to sleep!
You come into our father’s ... | Notes: இரவுக்குறி வந்தொழுகும் தலைவனைத் தோழி வரைவு கடாயது. இது தலைவி கூற்றைத் தன் கூற்றாகத் தோழி கொண்டு கூறியது. உள்ளுறை – கு. வெ. பாலசுப்ரமணியன் உரை – பன்றி நூழையுட் புகுங்கால் பல்லியின் ஒலிகேட்டுத் திரும்பும் என்றது, காவல்மிக்க மாளிகையின் உள்ளே தலைவன் நுழைய முயலும் போது, காவலர் வரினும், நிலவு வெளிப்படினும் இது தக்க வே... | Meanings: எய்ம் முள் அன்ன – like the quills of a porcupine, like thorns that are thrown, பரூஉ மயிர் எருத்தின் – with a neck with coarse hair (பரூஉ – அளபெடை), செய்ம்ம் – in a field, மேவல் – desiring, சிறுகண் பன்றி – a small-eyed pig, ஓங்கு மலை – tall mountain, வியன் புனம் – wide field, படீஇயர் – in order to graze, in or... | முள்ளம்பன்றியின் முள்ளைப் போன்ற பருத்த மயிரை உடைய பிடரியினைக் கொண்ட, வயலில் உண்ணுவதற்கு விருப்பமுடைய சிறிய கண்களை உடைய பன்றி, உயர்ந்த மலையில் உள்ள தினைப்புனத்தில் மேய எண்ணியது. அந்தப் பன்றி, பன்றியைப் பிடிக்க வைத்திருக்கும் பொறியை உடைய சிறு பாதையில் நுழையும் பொழுது விரைந்து அருகில் இருந்த பல்லி ஒலிக்கக் கேட்டு, தன் மலை... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0099 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 99 | நற்றிணை 99, இளந்திரையனார், முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது | Natrinai 99, Ilanthiraiyanār, Mullai Thinai – What the heroine’s friend said to her | Ilanthiraiyanār | Mullai Thinai | null | What the heroine’s friend said to her | null | null | null | null | ‘நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைத்,
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர்
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ?’ என்றிசின் மடந்தை! மதி இன்று, 5
மறந்து கடல் முகந்த கமஞ்சூல் மா மழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல,
பிடவமும் கொன்றையும் கோ... | You asked me whether this is the season
he is supposed to return, the man who
went on the long, waterless, endless, harsh
paths of the wasteland scorched by the
blazing sun’s rays that spread like white
cloth, causing fear and trembling.
Oh young woman! Without using their
intelligence, forgetfully, the huge clouds
ab... | Notes: பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, ‘பருவம் அன்று’ என்று வற்புறுத்தியது. நற்றிணை 43 – துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின். குறுந்தொகை 66 – மடவ மன்ற தடவு நிலைக் கொன்றை கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியைக் கார் என மதித்தே, குறுந்தொகை 94 – பெர... | Meanings: நீர் அற – without water, வறந்த – dried, நிரம்பா நீள் இடை – endless long path, long path without anybody, துகில் விரித்தன்ன – like fabric has been spread, வெயில் அவிர் உருப்பின் – due to the harsh blazing sun, அஞ்சுவரப் பனிக்கும் – fearful and causing trembling, வெஞ்சுரம் இறந்தோர் – one who went to the harsh w... | தோழி! நீர் இல்லாது வறண்ட ஒன்றும் நிரம்பாத நீண்ட வழியில் வெள்ளை ஆடையை விரித்தாற்போன்று வெயிலின் ஒளி வீசும் வெப்பத்தினால் காண்பவர்கள் அஞ்சும்படியாக நடுங்கச்செய்யும் கொடிய பாலைநிலத்தின்கண் சென்ற நம் தலைவர் தாம் வருவோம் எனத் தெளிவாகக் கூறிய பருவம் இதுவோ எனக் கேட்கின்றாய். அறிவு இல்லாது பருவத்தை மறந்து கடல் நீரை உண்ட கருக்க... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
natrinai_0100 | Ettuthokai | Natrinai | நற்றிணை | 100 | நற்றிணை 100, பரணர், மருதத் திணை – பரத்தை விறலியிடம் சொன்னது | Natrinai 100, Paranar, Marutham Thinai – What the concubine said to the virali | Paranar | Marutham Thinai | null | What the concubine said to the virali | null | null | null | null | உள்ளுதொறும் நகுவேன் தோழி, வள் உகிர்
மாரிக் கொக்கின் கூர் அலகு அன்ன
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்
வான் கோல் எல் வளை வெளவிய பூசல் 5
சினவிய முகத்து, ‘சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல்’ என்றலின், முனை ஊர்ப்
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்
தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப்
புலம் ப... | Whenever I think about it, I laugh,
oh friend.
The man from the cool shores,
where white waterlilies in deep ponds
blossom resembling the sharp beaks
of rainy season storks with sharp claws,
pulled my honey-fragrant, five-part
braid and plucked my white, bright
bangles from my hand, upsetting me.
I told him with an an... | Notes: பரத்தை, தலைவியின் தோழியர் கேட்ப, தன் தோழியாகிய விறலியிடம் கூறியது. வரலாறு: மலையன். Natrinai 77, 100, 291 and 320 have references to Malaiyamān. எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21). | Meanings: உள்ளுதொறும் – whenever I think about it, நகுவேன் தோழி – I laugh my friend, வள் உகிர் – sharp claws, மாரிக் கொக்கின் – rainy season storks’, கூர் அலகு – sharp beaks, அன்ன – like, குண்டு – pond, நீர் – water, ஆம்பல் – white waterlily, தண் துறை ஊரன் – the man from the town with cool shores, தேம் கமழ் – honey fra... | பெரிய நகங்களையுடைய மழைக் காலத்தில் உலவும் கொக்கின் கூர்மையான அலகைப் போன்ற ஆம்பல் பூவை உடைய தண்ணிய நீர்த் துறையின் ஊரன், என் கூந்தலைப் பற்றி இழுத்து, என் கையில் உள்ள வெள்ளிய வேலைப்பாடு அமைந்த வளையல்களைக் கழற்றிக் கொண்ட பூசலினால், சினம் கொண்ட முகத்துடன் அவனை நோக்கி, “சினம் கொள்ளாமல் உன் மனைவியிடம் சென்று உரைப்பேன்” என்று... | https://sangamtranslationsbyvaidehi.com/ettuthokai-natrinai-1-200/ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.