text stringlengths 11 513 |
|---|
பானைகளைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தாள். சீனிவாசன் முகத்தில் ஆவல் துடிக்க , மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்தான். " அக்கா அக்கா நம்ம பள்ளிக் கூடத்துக்கு பக்கத்திலே சாவ்டி இருக்கு பாரு.. அதுக்கு பின்புறம் நம்ம வீட்டு கதவு இருக்கக்கா ! கண்ணாலே நான் பார்த்தேன் " என்றான். " அப்படியா ! நிஜமாகவா ? எங்கே வா பாப்போம் " ... |
பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார்கள். ஒருவரும் இல்லை. 181 அவர்களுக்கு உண்டான ஆனந்தத்தைச் சொல்ல முடியாது. அங்கே முளைத்திருந்த சாரணத்தியும் தைவாழைச் செடிகளும் அவர்கள் காலடியில் மிதிபட்டு நொறுங்கின. அதிவேகமாய் அந்தக் கதவின் பக்கம் பாய்ந்தார்கள். அருகில் போய் அதைத் தொட்டார்கள். தடவினார்கள... |
கொண்டாள். முத்தமிட்டாள். சிரித்தாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. சீனிவாசனும் லட்சுமியைப் பார்த்து சிரித்தான். அவர்கள் இருவரின் கைகளும் கதவைப் பலமாகப் பற்றி இருந்தன. 182 மதினிமார்கள் கதை - கோணங்கி உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல் ; இவன் கேட்ட அதே குரல் ; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும... |
வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி. இவளைக் போனவர்களெல்லாம் காணவும்தான் என்ன பழசெல்லாம் பிரியத்துக்குரியவர்களையெல்லாம் ஆனார்கள். வேண்டியதாயிருக்கிறது. எங்கே அவர்களை ? அவன் வந்த ரயில் இன்னும் புகை விட்டபடி புறப்படத் தயாராய் - ஜன்னலோரம் போய் நின்று பூக்கொடுக்கிற , நஞ்சி நறுங்கிப் போன ஆவுடத்தங்க மதினியைப் பார்... |
திரும்பவும் நம்மூரிலிருந்து கொண்டுவந்த சிரிப்பு இன்னும் மாறாமலிருந்தது அவளிடம். ஒவ்வொரு தாய்மாரிடமும் முழம் போட்டு அளந்து கொடுக்கிறாள். கழுத்தில் தொங்கும் தாலிக்கயறும் , நெற்றியில் வேர்வையோடு கரைந்து வடியும் கலங்கிய நிலா வட்டப் பொட்டுமாக அவளைப் பார்த்தான். தானே அசைகிற ஈர உதட்டில் இன்னும் உயிர் வாடாமல் நின்றது. கண்ணுக்க... |
கூட்டத்தோடு வாசல்வரை வந்து ; திரும்பவும் எதிர்நீச்சல் போட்டு முண்டித் தள்ளி உள்ளே வருமுன் விடைபெற்றுச் செல்லும் ரயிலுக்குள் இருந்தாள். பெரிய ஊதலோடு போய்க் கொண்டிருந்தது ரயில் , மூடிக் கிடந்த ஞாபகத்தின் ஒவ்வொரு கதவையும் தட்டித் திறந்து விட்ட ஆவுடத்தங்க மதினி மீண்டும் கண்ணெதிரில் நின்றாள். அதே உதடசையாச் சிரிப்புடன் , பழை... |
மேட்டுப்பட்டிக்கு என்று எழுதியிருந்த போர்டைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டு சந்தோஷப்பட்டான். இப்போது சொந்த ஊருக்கே பஸ் போகும். பஸ்ஸில் ஏறிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் கையெடுத்து வணக்கம் சொல்லணும் போல இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறியிருக்கிறார்களா என்று கழுத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். தெரிந்த முகமே இ... |
மிகுந்தவற்றை எல்லாம் நினைவுப்படுத்திக் கொள்ளும் இசையென சத்தம் வரும். காற்று கூட சொந்தமானதாய் வீசும் , சட்டையின் மேல் பட்டன்களை எல்லாம் கழட்டி விடவும் பனியனில்லாத உடம்புக்குள் புகுந்து அணைத்துக்கொண்ட காற்றோடு கிசுகிசுத்தான். ஜன்னலுக்கு வெளியில் பஜாரில் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று முழித்து முழித்துப் பார்த்துக் கொண... |
சாத்தூரின் கடைசி எல்லையில் நின்றது. அங்கொரு வீட்டில் யாரோ செத்துப் போனதற்காகக் கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸில் வந்த பெண்கள் இங்கிருந்து அழுது கொண்டே படியிறங்கிப் போகவும் பஸ் அரண்டு போய் நின்றது. செத்த வீட்டு மேளக்காரர்கள் மாறி மாறித் தட்டும் ரண்டாங்கு மேளத்துடன் உள்ளடங்கி வரும் துக்கத்தை உணர்ந்தான். மு... |
உணர்ந்தான். யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்களையெல்லாம் எடுத்து ஊதிக் கொண்டிருந்த நாயனக்காரரின் ஊதல் , போகிற பஸ்ஸோடு வெளியில் வந்து கொண்டிருந்தது. அடிவயிற்றிலிருந்து என்றோ செத்துப்போன பாட்டியின் கடைசி யாத்திரை நாள் நினைவுக்கு வந்தது. மயானக்கரையில் தன் மீசை கிருதாவை இழந்த தோற்றத்தில் மொட்டைத் தலையுடன் இவனது அய்யா வந்து ந... |
மூக்கோரத்தில் இருந்துகொண்டுஎம்மா.... எம்மா....... " என்றது. அம்மா இல்லாவிட்டாலும் தெக்குத் தெரு இருந்தது. மேலெழும்பும் புழுதி கிடந்தது அங்கு. புழுதி மடியில் புரண்டு விளையாட , ஓடிப் பிடிக்க , ஏசிப்பேசி மல்லுக்கு நிற்க , தெக்குத் தெரு இருக்கும். எல்லாத்துக்கும் மேலாக இவன் மேல் உசுரையும் பாசத்தையும் சுரந்து கொண்டிருக்க மத... |
ஜாதிக்காரர்களும் நிறைந்த தெக்குத் தெருவில் அன்னியோன்யமாக இருந்தவர்களை எல்லாம் நினைவு கூர்ந்தான். தனிக்கட்டையான தன் அய்யா கிட்ணத்தேவர் திரும்பவும் மீசை முளைத்துக் கிருதாவுடன் இவன் முன் தோன்றினார். அடேய் செம்புகோம் ஏலேய்.....என்று ஊர் வாசலில் நின்று கூப்பிடும்போது இவன் ஓய் ஓய்....என்ற பதில் குரல் கொடுத்தபடி கம்மாய்க்கு அ... |
மதினிமார்களெல்லாம் மஞ்ச மசால் அரைத்து வைத்து ரெடியாகக் காத்திருப்பார்கள். கொழுந்தன் வருகிறாரா....என்று அடிக்கொருதரம் குட்டக்கத்திரிக்கா மதினியைத் தூதனுப்பித் தகவல் கேட்டுக் கொள்வார்கள். தண்ணிக்குள் நீந்தித் திரியும் மீனாக இவன் தெருவெல்லாம் சமைஞ்சு நிற்கும் மதினிமார் பிரியத்தில் நீந்திச் சென்றான். ஒரு மீனைக் கண்டதுபோல எ... |
வீட்டு சுப்பு மதினிக்கும் , பொஷ்பத்துக்கும் இவன் மேல் கொள்ளைப் பிரியம். நாங்க ரெண்டு பேருமே செம்புகத்தையே கட்டிக் கிடப் போறோம்....... என்று ஒத்தைக் காலில் நின்று முரண்டு பண்ணுவதைப் பார்த்து இவன் , நிசத்துக்கே அழுதபடி ,மாட்டேம்.... மாட்டேம்..... மாட்டம் போ. " என்று தூக்கி எறிந்து பேசினான். உடனே அவர்கள் ஜோடிக் குரலில்கலக... |
என்று பனையிலிருந்து பிறக்கிற பண்டங்களோடு காத்திருப்பார்கள். இவனுக்காக , இவனைக் காணாவிட்டால் கொட்டானில் எடுத்துக் கொண்டு தேட ஆரம்பித்து விடுவாள் ரெட்டச்சடை புஷ்பம். பனையேறிச் சேருமுக நாடார் வீட்டுக்குக் கள்ளுக் குடிக்கப் போகும் அய்யாவுக்கும் ரெட்டச்சடைக்கும் ஏழாம்பொருத்தமாய் என்னேரமும் சண்டதான். அவளை மண்டையில் கொட்டவும்... |
கொண்டு போயிருவியளோ. சோத்துக்கு எங்க போட்டும் நா. மடத்துக்கு போயிறவாஎன்று கள்ளு நுரை மீசையில் தெறிக்கப் பேசுவார் நாடாரு. இதைக் கேட்ட அய்யாவுக்குக்கெக்கெக்கே...என்று சிரிப்பு வரும் வெகுளியாய். ஊர் ஊருக்குக் கிணறு வெட்டப்போகும் இவன் அய்யாவும் , தெக்குத் தெரு எளவட்டங்களும் கோழி கூப்பிடவே மம்பட்டி , சம்பட்டி , கடப்பாறை , ஆப... |
உருட்டித் தின்பதற்கு ஊரின் செல்லப் பிள்ளையாய் மதினிமார் இவனைத் தத்தெடுத்திருந்தார்கள். இவனுக்குஓசிக்கஞ்சீ......சட்டிப் பானை உருட்டீ.... புது மாப்ளே...என்ற பட்டங்களுண்டு. ராத்திரி நேரங்களில் எடுக்கிற நடுச்சாமப் பசிக்கு யார் வீட்டிலும் கூசாமல் நுழையும் அடுப்படிப் பூனையாகி விடுவான். இவன் டவுசர் , சட்டை , மொளங்கால் முட்டில... |
வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வான். " மாப்ளைச் சோறு போடுங்கத்தா.... தாய்மாருகளா.....என்றதும் கம்மங் கஞ்சியைக் கரைத்து வைத்துசாப்பிட வாங்க மாப்பிளே....என்று சுட்ட கருவாட்டுடன் முன் வைப்பார்கள். 185 நாளைக்குக் கல்யாணமாகிப் போற காளியம்மா மதினி கூட வளையல் குலுங்க இவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு ஏச்சங்காட்டுவாள். இந்தக்... |
கோணிக்கோணி நடந்து போனாள். இப்போதும் சிரங்குத் தடம் அவள் இடுப்பில் இருக்கும். செம்புகோம்.... செம்புகோம்.. செம்புக மச்சானுக்கு வாக்கப்படப் போறேன் பாரேன்..... " என்று முகத்துக்கு நேராகபளீரென்ற வெத்தலைக் காவிப் பல் சிரிக்கக் காளியம்மா மதினியின் சின்னையா மகள் குட்டக் கத்திரிக்கா திங்கு திங்கென்று குதித்துக்கொண்டே கூத்துக் க... |
குட்டக்கத்திரிக்காவைச் சமாதானப்படுத்த கடைசியில் இவன் கிச்சனங்காட்டவும்தான் அவள் உதட்டிலிருந்து முத்து உதிரும் , சிரிப்பு வரும். வாணியச் செட்டியார் வீட்டு அமராவதி மதினி அரச்ச மஞ்சளாய்க் கண்ணுக்குக் குளிர்ச்சியான தோற்றத்துடன் பண்டார வீட்டுத் திண்ணைக்கு வருவாள். அவளைக் கண்டதுமே கூனிக் குறுகி வெட்கப்பட்டுப்போய் குருவு மதின... |
குருவு மதினி , அமராவதிக்கென்றே தனீப்பின்னல் போட்டு முடிந்து வைத்திருக்கும் பூப்பந்தை விலையில்லாமலே கொடுத்து விடுவாள். குருவு மதினிக்கும் , அமராவதி மதினிக்கும் கொழுந்தப் புள்ளை மேல் தீராத அக்கறை.அவன் குளித்தானா ாப்பிட்டானா என்பதிலெல்லாம். ஊத்தைப் பல்லோடு தீவனம் தின்றால் காதைப் பிடித்துத் திருகி விடுவாள் அமராவதி மதினி. க... |
வைத்திருந்தான். சுத்துப்பட்டிக்கெல்லாம் அவளோடு பூ விக்கப் போனான். காடுகளெங்கும் செல்லங்கொஞ்சிப் பேசிக் கொண்டார்கள் இருவரும். இவன் வெறும் வீட்டு செல்லப் பிள்ளையானான். குருவு மதினியின் அய்யாவுக்குக் காசம் வந்து வீட்டுக்குள்ளேயே இருமிக்கொண்டு கிடந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு போய் ஆசாரிப் பள்ளத்தில் சேர்ப்பதற்காக ராப்பகலாய... |
பசித்ததும் மூஞ்சியைக் குராவிக் கொண்டு கொறச்சாலம் போடுவான். " இந்தா வந்துட்டன் இந்தா வந்துட்டன் என்று எழுந்து வந்து பரிமாறுவாள் குருவு மதினி. சீக்காளி அய்யாவைக் கூட்டிக் கொண்டு போகவேண்டிய நாள் வந்ததும் இவனையும் ஆசாரிப் பள்ளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாள்.வரும்போது ரெண்டு பேரும் பொண்ணு 186 மாப்ளையா வாங்க.... ! என்று எல்... |
வளர்ந்து கூட விட்டான். சுகமாகி வரும்போது அய்யாவுக்கு வேட்டியும் இவனுக்குக் கட்டம் போட்ட சட்டையும் , ஊதா டவுசரும் எடுத்துக் கொடுத்துக் கூட்டி வந்தாள். குருவு மதினிக்கு எத்தனையோ வயசான பின்னும் கல்யாணம் நடக்கவில்லை , குருவு மதினிக்குக் கல்யாணமானால் ஊரைவிட்டுப் போய்விடுவாளோ என்று பயமாக இருக்கும்.மயினி.... மயினி..... நீ வாக... |
காட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ராசாத்தி அத்தையும் அவளது ஆறு பொட்டப் பிள்ளைகளும் எப்போது பார்த்தாலும் பூந்தோட்டத்தில் அக்கறையாய்ப் பூவெடுத்துக் கொண்டு வந்து கொட்டானுக்கு ஆழாக்கு தானியத்தைக் கூலியாக வாங்கிக் கொண்டு போனார்கள். ராசாத்தி அத்தைக்கும் , நாடார் வீட்டு மதினிமார்களுக்கும் குருவு மதினியோடு பேசுவதற்கு எவ்வளவோ ... |
சேர்ந்துஊம்....கொட்டினான். இவன் அய்யாவுக்குக் கலயத்தில் கஞ்சி கொண்டு போன மாணிக்க மதினியின் அழுகுரல் கேட்டு எல்லாரும் ஓடினார்கள். கிணத்து வெட்டில் கல் விழுந்து அரைகுறை உயிரோடு கொண்டு வரப்பட்ட அய்யா அலறியது நினைவில் எழவும் திடுக்கிட வைத்தது இவனை. வெளியில் கிடக்கும் ஆளற்ற வெறுங்கிணறுகள் தூர நகர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு ... |
ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன நாளில் அனாதையாகச் செத்துப் போனார் அய்யா. பஸ்ஸில் நீண்டிருந்த ஜன்னல் கம்பியில் கன்னத்தைச் சாய்த்துத் தேய்த்துக் கொண்டு கலங்கினான். அன்று சாத்தூரில் ரயிலேறியதுதான். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நின்று புறப்படும்போது மதினிமார்கள் கூப்பிடுகிற சத்தம் போடும் ரயில். அய்யாவின் நினைவு பின்தொடர சாத்தூர் ... |
ஓடியது. ஜன்னல் வழியாக மேகத்தைப் பார்த்தான். ஒரு சொட்டு மேகங்கூட இல்லாத வானம் நீலமாய்ப் பரந்து கிடந்தது. ரோட்டோர மரங்களில் நம்பர் மாறி மாறிச் சுற்றியது. ஆத்துப் பாலத்தின் தூண்கள் வெள்ளையடிக்கப்பட்டு மாட்டுக்காரர்களால் 187 கரிக்கோடுகளும் , சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. தாகமெடுத்தவர்கள் ஊத்துத் தோண்டிக் கொண்டிருந்தார்... |
காளியங்கோயிலும் பள்ளிக்கூடத்துக் கோட்டச்சுவரும் இவனை அழைப்பது போலிருந்தது. எல்லா மதினிமார்களுக்கும் கண்டதை எல்லாம் வாங்கிக்கொண்டு போகிறான். மதினிமாரெல்லாம் இருக்கும் தெக்குத் தெருவை நெருங்க இருந்தான் செம்பகம். மனசு பறந்து கொண்டிருந்தது. எல்லாரையும் ஒரே சமயத்தில் பார்த்து ஆச்சரியப்பட இருந்தான். சீக்கிரமே ஊர் வந்து விடப்... |
சந்தோஷம் வந்து துள்ளிக் குதித்தது. மனசு விட்டுப் பாடினான். ம்... ம்... ம்.... ம் ம் ம்வும்.....மென்ற ஊமைச்சங்கீதமாய் முனங்கிக் கொண்டு வந்தான் செம்பகம். பருத்திக் காட்டில் சுளை வெடிக்காமல் நிலம் வெடித்துப் பாளம் பாளமாய் விரிசலாகிக் கிடக்கும். வாதலக்கரை சித்தையாத் தேவனுக்கு வாழ்க்கைப் பட்டுப்போன மாணிக்க மதினி இருந்தால் க... |
குறுக்கத்திலும் எத்தனை வகை தானியங்களுக்கு இடம் வைத்திருந்தாள். அவள் மனசே காடாகும் போது தட்டா நெத்துக்கும் பாசிப்பிதம் பயறுக்கும் நாலு கடலைச் செடிக்கும் பத்துச்செடி எள்ளுக்கும் இடமிருந்தது. காடே கிடையாகக் கிடக்க விதித்திருந்தது அவளுக்கு. காட்டு வெள்ளாமையும் அவளோடு போயிற்று. கண்ணெட்டும் தூரம்வரை நிலம் வறண்டு ஈரமற்றுக் கி... |
எட்டிப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் கமலைக்கல்லும் , தோட்ட நிலமும் நீண்டகால உறக்கத்திலிருந்து மீளாமல் இன்னும் இறுகிக்கொண்டிருந்தது. தோட்டத்தை ஒட்டி நின்ற பஸ் இவனை இறக்கிவிட்டுச் சென்றது. தெக்குத்தெரு வாசலில் படம்போட்ட தோல்பையுடன் நின்றான். குப்புற விழுந்து கிடக்கும் தெக்குமடத்தில் ஒருகல்தூண் மட்டும் தனியாய் நிற்க அ... |
நீண்டு கிடந்தது தெரு. இவன் பண்டார வீடுகளிருந்த இடத்துக்கு வந்து நின்றான். இருண்ட பாகமான வீடுகளாய் இற்று உதிர்ந்து கொண்டு வரும் கூரை முகட்டிலிருந்து மனதை வதைத்தெடுக்கும் ஒலம் கேட்டது. மனதைப் புரட்டிப் புரட்டிக் கொண்டுபோய் படுகுழியைப் பார்த்துத் தள்ளிவிட்டுச் சிரிக்கிற ஓலமாய்க் கூரைகளில் சத்தம் வரும். தெருவே மாறிப்போய் க... |
ஏற்பட்டு , இவனைச் சுற்றி வேடிக்கை பார்க்கவந்த 188 கூட்டத்துக்குள் இவன் இருந்தான். சிறுவர்களும் பெரியவர்களும் இவனைப் பார்த்து சலசலத்துக் கொண்டார்கள்.என்ன வேணும்மென்ற சைகையால் இவனை அந்நியமாக்கினார்கள். இவன் ஒவ்வொன்றாய்ச் சொல்லச் சொல்ல எல்லாரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். இன்னும் கூட்டம் இவனைச் சுற்றி வட்டமாக நின்றது. ... |
பஸ் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிவிட்டார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு வெட்டிப் பேச்சே பிடிக்காது. காட்டில் வெட்டிப் போட்டிருந்த வேலிக்கருவையைக் கட்டித் தூக்கி வர கயறு தேடப்போனார்கள். கொஞ்சநேரத்தில் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் இவன் தனித்து விடப்பட்டான். எல்லாம் தலைக்குமேல் ஏறி சுமையா... |
வழியும் அசடைப் புறங்கையில் துடைத்துக் கொண்டான். " கொழுந்தனாரே.... எய்யா.... கப்பலைக் கவித்திட்டீரா..... கன்னத்தில் கை வைக்காதிரும்.. …. செல்லக் கொழுந்தனாரே.... எய்யா....என்று எல்லா மதினிமார்களும் கூடிவந்து எக்கண்டம் பேச , அவர்கள் மத்தியில் இருக்க வேண்டியவன் , இப்படி மூச்சுத் திணறிப் போய் ஆட்டுரலில் உட்கார்ந்திருக்கும்ப... |
அவசரமாய்ப் போய்க்கொண்டிருப்பான் செம்பகம். 189 புலிக்கலைஞன் அசோகமித்திரன் பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ஆரம்பிக்கும் நேரமும் பதினொன்றாக இருந்திருக்கிறது. பதினொரு மணி காரியாலயத்திற்கு வீட்டில் பத்தரை பத்தே முக்காலுக்... |
க்குத்தான் நிஜமான கூட்டம் இருக்கும். இப்போது காலை பதினொரு மணி என்பதைப் பத்தரையாக்கி , அதையும் ஒரு மாதமாகப் பத்து என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். டிபனுக்காகப் பிற்பகல் ஒன்றிலிருந்து இரண்டு வரை. மாலை ஐந்து மணிக்கும் முடியும் காரியாலயம் , இப்போது ஆறு மணி வரை நீட்டி வைக்கப்பட்டுவிட்டது. வேலை எப்போதும் நடந்த வேலைதான். ஃபாக்... |
டிபார்ட்மெண்ட். இவர்களுக்கு எங்கே வேலை நடந்தாலும் நடக்காது போனாலும் வருடமெல்லாம் கணக்கு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அப்புறம் டெலிபோன் ஆபரேட்டர் டெலிபோனுக்கு இடைவெளி , விடுமுறை என்றிருந்ததே கிடையாது. ஆதலால் இந்தப் பிரிவுகளில் அடங்காதவர்களுக்குத்தான் அவ்வப்போது காரியாலய நேரத்திலேயே ஓய்வு கிடைக்கும். நாட்கணக்கில் , வார... |
காரியாலய நேரத்தில் மேஜை மீது காலைத்தூக்கிப் போட்டுக் கொண்டு தூங்கி , தலைமயிரை நரைக்க வைத்து , அடிவயிற்றில் ஊளைச்சதை சேர்த்து , டயாபடிஸ் நோய்க்கு இடம் கொடுத்து , சிந்தனைக்கு இலக்கு இல்லாத காரணத்தால் விழிகளுக்கு அலைபாயக் கற்றுக்கொடுத்து , பேச்சில் நிறைய உளறலை வரவழைத்துக் கொள்ளலாம். ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு நிஜமாகவே வேலை ... |
கிளர்ச்சியையும் தடுமாற்றத்தையும் இன்று , நாளை என்று நாங்கள் எதிர்பார்த்திருந்த நாளில் தான் அவன் ஒரு பிற்பகல் , நாங்கள் டிபன் முடித்து வெற்றிலை புகையிலை சுவைத்துக் கொண்டிருந்த நேரத்தில் வந்து சேர்ந்தான். 190 ட்டுச் " என்னப்பா வேணும் ? " என்று சர்மா கேட்டார். சர்மா ஒரு காலத்தில் டிரௌசர் அணிந்தவராகவேதான் காணப்படுவார். போல... |
முதலாளியைத் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பிலியனில் ஏற்றிக் கொண்டு வெளிப்புறக் காட்சிகள் எடுக்கக்கூடிய இடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இப்போது வேஷ்டி அணிந்து , புகையிலை போடுவதில் மிகவும் பழக்கப்பட்டுவிட்டார். அவர் எழுந்து நின்றால் கழுத்துக்குக் கீழ் இருதோள்பட்டையும் சச்சதுரமாக இறங்குவதுதான் அவர் ஒரு காலத்தில் தேகப்பயி... |
சபாநாயகரெனக் கொள்ளவேண்டும். நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகளைத் தவிர இன்னும் ஒன்று அதிகப்படியாக இருந்தது. எங்களுடையது எல்லாமே வெவ்வேறு விதமான பழங்கால நாற்காலிகள். அதிகப்படியான நாற்காலியில் ஒரு கால் குட்டை. யார் வந்து அதில் உட்கார்ந்தாலும் ஒருபுறம் சாய்ந்து , அதில் உட்கார்ந்தவரை ஒரு கணம் வயிற்றைக் கலக்கச் செய்யும். வ... |
ஊரிலேயே இல்லையே ? " என்று சர்மா சொன்னார். " காலையிலே வந்தேனுங்க. நீங்க கூட ஒரு குடையை ரிப்பேர் பண்ணிட்டிருந்தீங்க " ஓ , நீயா ? வேலாயுதமில்லை ? " " இல்லீங்க , காதர் டகர் பாயிட் காதர் " 191 " நீ வந்திருந்தயா ? " " ஆமாங்க , வெள்ளை சொன்னான். ஐயாவை வீட்டிலே போய்ப்பாருன்னு " " யாரு வெள்ளை ? " " வெள்ளைங்க. ஏஜண்ட் வெள்ளை. " இப... |
வருபவன். கூட்டமாக இருப்பதைத் தவிர அவர்களிடமிருந்து நடிப்பு ஒன்றும் தேவைப்படாது. நபருக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு போட்டு இரண்டு ரூபாய் என்று கணக்கு , வெள்ளை ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு விடுவான். " இப்போ ஒண்ணும் கிரவுட் சீன் எடுக்கலையேப்பா ? " என்று சர்மா சொன்னார். " தெரியுங்க. உங்களைப் பாத்தா ஏதாவது ரோல் தருவீங்கன்னு அவரு ... |
வேண்டும். இப்போது தோள்பட்டை எலும்பு தெரிய இருந்தான். நன்றாகத் தூங்கியிருந்த அவனுடைய தாடை மூட்டுக்கள் அவனுடைய கரிய கன்னங்களை அளவுக்கு மீறி ஒட்டிப் போனதாக காண்பித்தன. வெள்ளை கொண்டு வரும் ஆட்கள் எல்லாரும் அநேகமாக அப்படித்தான் இருப்பார்கள். ராமராஜ்யம் பற்றி படம் எடுத்தால் கூடப் படத்தில் வரும் பிரஜைகள் தாது வருஷத்து மக்களாக... |
உடனே ஏதாவது பார்த்துக் கொடுத்தீங்கன்னாக்கூடத் தேவலாம் , சார் " என்றான். “ ஷூட்டிங் ஒண்ணும் இன்னும் ஆரம்பிக்கலையேப்பா. கிரவுட் சீனெல்லாம் கடைசியிலேதான் எடுப்பாங்க. " " அதுக்கில்லீங்க. ஏதாவது ரோல் தாங்க. " “ உனக்கு என்ன ரோல்பா தர முடியும் ? அதோ காஸ்டிங் அசிஸ்டெண்ட் இருக்காரு. அவர் கிட்டே எல்லா விவரமும் தந்துட்டுப் போ. " ... |
பேருக்குக் கடிதம் போட்டால் மூன்று கடிதம் திரும்பி வந்துவிடும் , விலாசதாரர் வீடு மாற்றிப் போய்விட்டார் என்று. அப்புறம் எல்லாம் வெள்ளை தான். ஆனால் அவன் என் பக்கம் திரும்பவில்லை. அந்த மூவரில் சர்மாதான் மிக முக்கியமானவர் என்று அவன் தீர்மானமாக இருந்தான். “ நீங்க பாத்துச் சொன்னாத்தாங்க ஏதாவது நடக்கும் " என்றான். “ உனக்கு நீஞ... |
பாய்ஞ்சு நீஞ்சிப் போற மாதிரி ஒரு சீன் எடுக்க வேண்டியிருக்கும். அதுக்கு நீ போறாது. " 193 “ எனக்கு டகர் பாயிட் வரும்க. என் பேரே டகர் பாயிட் காதர்தானுங்க. " “ அதென்ன டகர் பாட் ? ** ” டகர் பாயிட்டுங்க.. டகர் , டகர் இல்லே ? " இப்போது எல்லோரும் கவனமாக இருந்தோம். ஒருவருக்கும் புரியவில்லை. அவன் சொன்னான். “ புலிங்க , புலி.. புல... |
வேஷமெல்லாம் சினிமாவுக்கு எதுக்கப்பா ? புலி வேஷமா ? சரி , சரி வெள்ளை வரட்டும். ஏதாவது சான்ஸ் இருந்தா கட்டாயம் சொல்லி அனுப்பறேன். " " நான் ரொம்ப நல்லா டகர் பாயிட் பண்ணுவேங்க. நிஜப் புலி மாதிரியே இருக்கும். " " நிஜப்புலிக்கு நிஜப்புலி கொண்டு வந்துடலாமே " “ இல்லீங்க நான் செய்யறது அசல் புல்லி மாதிரியே இருக்கும். இப்ப பார்க்... |
நிறையப் போறதே. “ நம்பளது வேறு மாதிரிங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும். " அவன் எங்கிருந்தோ ஒரு புலித் தலையை எடுத்தான். அப்போதுதான் அவன் ஒரு துணிப்பையை எடுத்து வந்திருந்தது தெரிந்தது. புலித்தலை என்பது தலையின் வெளித்தோல் மட்டும். அதை அவன் ஒரு நொடியில் தன் தலையில் அணிந்து கொண்டு முகவாய்க்கட்டை அருகே அந்தப் புலித்தலை முகமூட... |
பார்த்த வண்ணம் இருந்தோம். அவன் கையை உயரத் தூக்கி ஒருமுறை உடம்பைத் தளர்த்திக்கொண்டான். அப்படியே குனிந்து நான்கு கால்களாக நின்று முகத்தைத் திரும்பித் திரும்பிப் பார்த்தான். " பேஷ் " என்று சர்மா மீண்டும் சொன்னார். அவன் பூனைபோல் முதுகை மட்டும் உயர்த்தி உடலை வளைத்துச் சிலிர்த்துக்கொண்டான். பிறகு வாயைத் திறந்தான். நாங்கள் தி... |
கால்களில் அறையில் காலியாகவிருந்த நாற்காலி மீது பாய்ந்து ஒடுங்கினான். நாற்காலி தடதடவென்று ஆடியது. நான் “ ஐயோ ! " என்றேன். அவன் நான்கு கால் பாய்ச்சலில் என் மேஜை மீது தாவினான். கண் இமைக்கும் நேரத்தில் சர்மா மேஜை மீது பாய்ந்தான். சர்மா மேஜை மீதும் தாறுமாறாகப் பல காகிதங்கள் , புத்தகங்கள் , வெற்றிலைப் பொட்டலம் முதலியன சிதறி ... |
பாய்ந்தான். நாங்கள் எல்லோரும் " ஓ ! " என்று கத்திவிட்டோம். 195 அது பழங்காலத்துக் கட்டடம். சுவரில் நெடுக சுமார் பத்தடி உயரத்தில் இரண்டங்கலத்திற்கு விளிம்பு மாதிரி இருந்தது. ஒரு பக்கச் சுவரில் அந்த விளிம்புக்குச் சிறிது உயரத்தில் ஒரு ஒற்றைக் கம்பி போட்ட ஜன்னல் , வெண்டிலேட்டராக இருந்தது. அதில் ஏகமாகப் புழுதி , அழுக்கு , ஒ... |
வெண்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக் கொண்டு மீண்டும் புலி போல கர்ஜித்தான். “ பத்திரம்பா , பத்திரம்பா ! " என்று சர்மா கத்தினார். அந்த உயரத்தில் அவன் முகத்துக்கு நேரே கூரை மின்சார விசிறி பிசாசாகச் சுற்றிக்கொண்டிருந்தது. அவனுக்கும் அந்த விசிறிப் பட்டைகளுக்கும் நடுவே சில அங்குலங்கள் கூட இருக்காது. அவன் அவ்வளவு உயரத்திலிருந்த... |
பயங்கரமாக வாயைப் பிளந்து கர்ஜித்தது. அடுத்த கணம் அவன் உடல் தளர்ந்து தொங்கியது. அவன் எழுந்து நின்றுகொண்டான். சர்மாவால் பேஷ் என்று கூற முடியவில்லை. அவன் சிறுத்தை முகமூடியைக் கழற்றிவிட்டான். நாங்கள் எல்லோரும் பேச முடியாமல் இருந்தோம். அவன்தான் முதலில் பழைய மனிதனானான். " நான் கட்டாயம் ஏதாவது பார்க்கறேம்பா " என்று சர்மா சொன்... |
சொன்னான். நான் குறித்துக்கொண்டேன் ; அவன் தயங்கி , “ ஆனா எவ்வளவு நாள் அங்கே இருப்பேன்னு தெரியாதுங்க ” என்றான். “ ஏன் ? ” என்று சர்மா கேட்டார். “ இல்லீங்க... ” என்று ஆரம்பித்தவன் சடாலென்று சர்மா காலில் விழுந்தான். “ எழுந்திருப்பா எழுந்திருப்பா காதர் " என்று சர்மா பதறினார். நாங்கள் எழுந்து நின்றிருந்தோம். அவனும் எழுந்து க... |
அதுதான் என்ன பண்ணும் ? நாலு குழந்தைங்க. எல்லாம் சின்னச் சின்னது. " அவன் இப்போது அழுதுகொண்டிருந்தான். சர்மாவுக்கு ஏதோ தோன்றி , “ நீ இன்னிக்குச் சாப்பிட்டாயா ? ” என்று கேட்டார். அவன் , “ இல்லீங்க ” என்றான். அவன் அன்றில்லை. எவ்வளவோ நாட்களாக சாப்பிடவில்லை என்பதுகூடக் கேட்கத் தேவையற்றதாகயிருந்தது. சர்மா அவர் ஜேபியில் கையை வ... |
அவன் , “ வேண்டாங்க ” என்றான். “ என்ன வேண்டாம் ? போய்ச் சாப்பிடுப்பா முதல்லே ” என்று சர்மா சொன்னார். 197 “ ஏதாவது ரோல் வாங்கித் தாங்க ஐயா ” என்று அழுதுகொண்டே அவன் சொன்னான். சர்மாவுக்கு அவ்வளவு கோபம் வந்து நான் பார்த்ததில்லை. " கொடுத்த பணத்தை நீ எப்படீய்யா வாங்கிக்க மாட்டேன்னு சொல்லுவே ? பணத்தை மறுத்தா உனக்குப் பணம் எங்க... |
சொன்னார். " ரோல்லெல்லாம் என் கையிலே இல்லைப்பா. உனக்கு முடிஞ்சது நான் செய்யறேன். போ , முதல்லே வயத்துக்கு ஏதாவது போடு. " பிறகு என்னைப் பார்த்து , " கொஞ்சம் இவனை காண்டீனுக்கு அழைச்சுண்டு போய் சாப்பிட வை ” என்றார். நான் உடனே எழுந்தேன். அவன் , “ வேண்டாங்க. நான் போய்ச் சாப்பிடறேங்க. நான் போய்ச் சாப்பிடறேங்க ” என்றான். பிறகு ... |
எடுக்கிறதோ ராஜா ராணிக் கதை. " ஆனால் அவர் வெறுமனே இருந்துவிடவில்லை. இரு வாரங்கள் கழித்து மீண்டும் கதை இலாகா கூடியபோது கதாநாயகன் புலி வேஷமணிந்து எதிரிக் கோட்டைக்குள் நுழைவதாகப் படமெடுக்கலாம் என்று சம்மதம் பெற்றுவிட்டார். புலியாட்டமாகக் காண்பிக்கும்போது கதாநாயகனுக்குப் பதில் காதர்டூப்செய்யலாம். அவனுக்கு ஒரு நூறு ரூபாயாவது... |
நாங்களும் எங்கெங்கோ விசாரித்துத் தேடினோம். கதாநாயகன் எதிரிக் கோட்டைக்குள் நுழையும் காட்சி எடுக்கப்பட வேண்டிய நாள் நெருங்கிக்கொண்டே வந்தது. காதர் கிடைக்கவில்லை. அவன் கிடைத்திருந்தாலும் அதிகம் பயன் இருந்திருக்காது. அந்த ஒரு மாதத்திற்குள் வெளியான ஒரு படத்தில் கிராமிய சங்கீதத்துடன் அந்தக் கதாநாயகன் காவடி எடுப்பதாகக் காட்சி... |
நாற்காலிகள் - ஆதவன் கைலாசம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. அவர் பரபரப்படைந்தார். தாகமில்லாமலிருந்தும்கூட மேஜை மேலிருந்த தம்ளரை எடுத்து ஒரு வாய் நீரைப் பருகி , அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக அறையின் மறு பக்கத்தை நோக்கி ஒரு கணம் - ஒரே கணம் - பார்வையை ஓட விட்டார். அகர்வால் மேஜை மீது குனிந்து ஏதோ ஃபைலை கவனமாகப் பட... |
திடீரென்று இவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பது பற்றிய தன்னுணர்வினால் அவர் பீடிக்கப்பட்டார். அகர்வால் இந்தப் பார்வையைக் கவனித்து ,என்ன , அடுத்த கதையைப் பற்றி யோசனையா ?என்றோ ,என்ஜாயிங் தி சீனரி , கைலாஷ் சாப் ?என்றோ பேசத் தொடங்கப் போகிறான் என்ற பயம்.. அவர் அவசரமாக ஒரு ஃபைலை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டார். அது அவர் ஏற்க... |
சற்று முன் தான் எழுதிய நோட்டை அணுஅணுவாகச் சரிபார்த்தார். தெளிவில்லாதனவாகத் தோன்றிய -க்கள் மேலுள்ள புள்ளிகள் , t- க்களின் மேல் குறுக்காகக் கிழிக்கப்படும் கோடுகள் , ஃபுல் ஸ்டாப்புகள் , கமாக்கள் , எல்லாவற்றிலும் பேனாவை மறுபடி பிரயோகித்து ஸ்பஷ்டமாக்கினார். ஆங்காங்கே சில புதிய கமாக்களைச் சேர்த்தார். ஒரு 0 , a போல இருந்தது. ... |
பார்த்துக் கொண்டிருந்தால் ! ம்ம்என்றவாறு அவர் வேறு ஏதாவதுa oபோலவோ அல்லதுo aபோலவோ ,u vபோலவே ,n rபோலவோ , எழுதப்பட்டிருக்கிறதா என்றுத் தேடத்தொடங்கினார். 200 அகர்வாலின் நாற்காலி கிரீச்சென்று பின்புறம் நகரும் ஓசையும் இழுப்பறை மூடப்படும் ஓசையும் கேட்டன. ஃபைவ் மினிட்ஸில் வருகிறேன்என்று அவரிடம் சொல்லி விட்டு , அவன் அறைக்கு வெள... |
பறந்து சென்றது. அக்காட்சி திடீரென்று மனத்தைப் பல வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்றது. கிராமத்தில் , ஆற்றங்கரை மணலில் உட்கார்ந்திருந்த மாலைகள். பக்கத்தில் நண்பன் ராஜூ. பேசாமலேயே ஒருவரையொருவர் புரிந்து கொண்ட அன்னியோன்யம். ஆனால் இப்போது அவர் கிராமத்தில் இல்லை. தில்லியில் , மத்திய சர்க்கார் அலுவலகம் ஒன்றின் பிரம்மாண்டமா... |
பன்னிரண்டு பத்து. அகர்வால் இதோ வந்துவிடுவான். கைலாசம் சீக்கிரமாக அவனிடம் கூறுவதற்கேற்ற ஒரு காரணத்தை சிருஷ்டி செய்தாக வேண்டும். அவனுடன் தான் ஏன் டிபன் சாப்பிட வரமுடியாது என்பதற்கான காரணம். பேங்குக்குப் போவதாகவோ , இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டப் போவதாகவோ , கடிகார ரிப்பேர் கடைக்குப் போவதாகவோ ஆஸ்பத்திரியில் இருக்கும் ஷட்டகரைப்... |
அவனுடைய அனுதாபத்தை எதிர்கொள்ள வேண்டிவரும். அதையும் வெறுத்தார். லைப்ரரிக்குப் போவதாகச் சொல்லலாமா ? சொல்லலாம். ஆனால் அதில் ஓர் அபாயம் இருக்கிறது. அகர்வால் தானும் வருகிறேனென்று கிளம்பி விடலாம். ஈசுவரா ! என்னைக் காப்பாற்று. 201 கைலாசம் தன்னையுமறியாமல் கண்களை மூடிக்கொண்டு விட்டிருக்க வேண்டும். சில விநாடிகளுக்குப் பிறகு மறுப... |
வந்ததைக் கேக்கறியா , இல்லை தில்லிக்கு வந்ததையா ?என்றான் ராமு. " ரூமுக்குள்ளே இப்பத்தான் வந்தே , தெரியும்.. ஷ்யூர் ? யூ மீன் , நீ இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சியா ? "நான் தூங்கிண்டு இருக்கலை... ' பரவாயில்லையடா , தூங்கிண்டிருந்தாலும்தான் என்ன ? தட்ஸ் யுவர் ஜாப் , இல்லையா ? அரசாங்கத்திலே இனிஷியேட்டிவ் எடுத்துக் கொள்பவன் அல்ல... |
உள்ளே வந்தான். அகர்வால்ஜி ! மீட் மை ஃபிரண்ட்.. மிஸ்டர்ராமச்சந்திரன் ஆஃப் கமானீஸ்... " ராமுவும் அகர்வாலும் கைகுலுக்கிக் கொண்டார்கள். ஆஸஃப் அலி ரோடிலேயோ எங்கேயோ இருக்கிறதல்லவா , உங்கள் அலுவலகம் ?என்றான் அகர்வால். 202ஓ , நோ ! ஹீ இஸ் இன் பாம்பேஎன்ற கைலாசம் , தொடர்ந்து அவசரமாக ,அச்சா அகர்வால் , இவருக்கு ரிசர்வ் பேங்கில் இரு... |
ராமுவும் கைலாசமும் வெளியே வந்தார்கள். இது என்னடாது , ரிசர்வ் பேங்க் , அது இதுன்னு ? ” என்றான் ராமு.வேடிக்கையிருக்கு , இல்லையா ?என்று கைலாசம் சிரித்தார்.என்ன பண்றது... இவன்கிட்டே மாட்டிண்டு அவஸ்தைப் படறேன் நான். சொன்னால்கூடப் புரியுமோ என்னவோ.. போரா ? ' ஆமாம்என்றார் கைலாசம். அவர் முகத்தில் குதூகலமும் நன்றியுணர்வும் ஏற்பட... |
ஒருவேளை தன்னை ஓர் எழுத்தாளனாக இவன் புரிந்து கொள்ளாததுதான் தன் அதிருப்திக்குக் காரணமோ , ஒரு வேளை நட்பு என்பது என்னைப் பொறுத்தவரையில் எழுத்தாளனென்ற என் அகந்தையைத் திருப்தி செய்து கொள்ளும் சாதனம்தானோ என்று ஏதேதோ விபரீத சந்தேகங்கள் அவருக்கு ஏற்படத் தொடங்கியிருந்தன. இந்த அகந்தைக்காகத் தான் பெறும் ஒரு நியாயமான தண்டனையாக அகர்... |
ஏற்பட்டு வந்த சந்தேகங்களை அறவே போக்கினான். ராமுவுக்கு அவர் கதைகள் எழுதுவது தெரியும். ஆனால் அவன் அவற்றை வாசிப்பது கிடையாது. அவர் கதைகளே எழுதாதவராக இருந்தாலும்கூட அவனைப் பொறுத்தவரையில் எந்த 203 வித்தியாசமும் ஏற்பட்டிருக்க முடியாது , பார்க்கப் போனால் “ கதையெழுதும் வீண் வேலையெல்லாம் எதற்கு வைத்துக் கொள்கிறாய் , அது ஒரு கால... |
அவருடைய எழுத்து முயற்சிகள் பற்றிய அவனுடைய இந்த அலட்சிய பாவத்துக்கு அப்பாற்பட்டும் அவர்களிடையே அரியதொரு நட்பு நிலவியது. தம் சின்னஞ்சிறு அங்க அசைவுகளையும் முகச் சுளிப்புகளையும்கூட அவர்கள் பரஸ்பரம் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு இன்பமயமானதொரு அன்னியோன்யத்தில் திளைத்தார்கள். இல்லை , அவருடைய எழுத்துக்கும் இந்த நட்புக்கும் ச... |
யூ.என்.ஐ.யா அதற்குப் பேரு ? - அங்கேயே போகலாம். இல்லை , அங்கே இப்பக் கூட்டமாக இருக்கும்என்றார் கைலாசம் , உண்மையில் அங்கே அகர்வால் வந்துவிடப் போகிறானேயென்று அவருக்குப் பயமாக இருந்தது. அந்த வட்டாரத்திலிருந்த இன்னொரு காரியாலயத்துக்குள் நுழைந்த அவர்கள் , அங்கிருந்த கேண்டீனில் போய் உட்கார்ந்தார்கள். ஆமாம் , போன தடவை நான் வந்... |
உள்ளவர்களுக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும்தான் தனி ரூம்னு சொல்லிட்டான். நான் ஒரு ராங்க் கீழே இருக்கிறவன் ஆனதினாலே , இந்த அகர்வாலோட ஒரு ரூமை ஷேர் பண்ணிக்கும்படி ஆயிடுத்து. ' 204அகர்வாலா ? ' ஆமாம் யு.பி.க்காரன்... ' என்ன பண்றான் ? எப்பவும் தொண தொணங்கிறானா > ' தொண தொணன்னா.. என்ன சொல்றது ? இதெல்லாம் சப்ஜெக்டிவ்தான் இல்லை... |
உள்ளவன்கிறதினாலேயோ ஏற்படுகிற முரண்பாடு இல்லை. இன்ஃபாக்ட் , இதே யு.பி.யைச் சேர்ந்த இன்னொருத்தனுடன் நான் மிகவும் சிநேகமாக இருக்கக் கூடும்... உம்ம்...ராமு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். இது அவாவா இயல்பைப் பொறுத்த விஷயம் , இல்லையா ? மனப்பக்குவத்தைப் பொறுத்த விஷயம்.. இரண்டு மனிதர்கள் ஒத்துப் போகிறார்கள். வேறு இரண்ட... |
உன்னை போர் அடிக்கிறேன் , ரொம்ப. ' 205நோ நோ - ப்ளீஸ் ப்ரொஸீட் , இட்ஸ் வெரி இன்ட்ரஸ்டிங். ' யார் மனசையும் புண்படுத்தக்கூடாது , எல்லாரிடமும் அன்பாக நடந்து கொள்ளணும் , கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளணும் என்று நம்புகிறவன் நான்... ஆனால் அதை ஒரு மூட நம்பிக்கையாக இவன் நிரூபித்து விட்டான். இவனுடனிருக்கும்போது என்னை நான் இயல்... |
கொள்ளவில்லை என்பதை நான் அதிர்ச்சியுடன் உணருகிறேன். ' அவ்வாறு நேர்வதுண்டுஎன்று ராமு அனுதாபப் புன்னகையுடன் தலையை ஆட்டினான். இவ்வளவுக்கும் அவன் என்னிடம் மிகவும் மதிப்பு வைத்திருக்கிறான் , தெரியுமா ? ஆனால் மதிப்பு நேசத்தின் ஆதரவாகிவிட முடிகிறதில்லை.... சில சமயங்களிலே காலை நேரத்தில் அவன் என்னைப் பார்த்து முதல் புன்னகை செய்ய... |
கொண்டுள்ள ஒரு தவறான உருவத்தை நோக்கி , அவற்றை அங்கீகரிப்பது இந்த மோசடிக்கு உடந்தையாயிருப்பது போல் ஆகும். எனவே அவனுடைய சிநேக பாவத்தை ஊக்குவிக்கக் கூடாது என்றெல்லாம் நினைப்பேன். ஆனால் நாள் முழுவதும் நம்முடன் ஒரே அறையில் உட்கார்ந்திருப்பவனுடன் இவ்வாறிருப்பது எப்படிச் சாத்தியமாகும் ? நானும் புன்னகை செய்கிறேன். நாங்கள் பேசத்... |
ராமு சிரித்தான். இது சிரிக்கும் விஷயமல்லஎன்று கைலாசம் ஒரு கணம் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டிருந்துவிட்டு , பிறகு தானும் சிரித்தார். டிபன் வந்தது. இருவரும் சாப்பிடத் தொடங்கினார்கள். 206உனக்கு இந்த மாதிரியான அனுபவம் ஒன்றும் ஏற்பட்டதில்லையா ?என்றார் கைலாசம் ' ராமு தோள்களைக் குலுக்கியவாறு ,நாமெல்லாம் ரொம்பச் சாதாரணமான ஆ... |
இல்யூஷன்கள் எதுவும் கிடையாது. ஸோ எனக்கு எப்போதும் ஏமாற்றம் உண்டாவதில்லைஎன்றான் ராமு தொடர்ந்து. இல்யூஷன்கள் எனக்கும்தான் இல்லை. ஆனால்..என்று கைலாசம் கூறி நிறுத்தினார். தன் மனத்தில் குமிழிட்ட உணர்வுகளுக்கு எவ்வாறு சரியாக வடிவம் கொடுப்பதென்று யோசித்தவராக , அவர் மனத்தில் அகர்வாலின் உருவம் தோன்றியது. அவன் தனக்கு நகைச்சுவையா... |
நண்பர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துதல் , ஏதாவது ஒரு வார்த்தையையோ சொற்றொடரையோ சொல்லி அதற்குத் தமிழில் என்னவென்று கேட்பது , தமிழ்நாட்டு அரசியல் நிலை , அங்கு நடைபெறும் ஏதாவது நிகழ்ச்சி அல்லது அதிகமாக அடிபடும் பிரபலமான பெயர் பற்றி அவரை விசாரிப்பது. அவனுடைய இத்தகைய சிரத்தைப் பிரதியாகத் தானும் அவனுடைய மாநிலத்தின் அரசியல் , பி... |
அனாவசியக் கேள்விகளைக் கேட்பது , அபிப்ராயங்கள் சொல்வது ( ஒரு பொறாமைமிக்க மனைவி போல ).... பலவிதமான நிலைகளிலும் காட்சிகளிலும் அவர் அவனைக் கண்டார். வழக்கமான சோர்வும் குழப்பமும்தான் உண்டாயிற்று. எத்தகைய தெளிவும் ஏற்படவில்லை. உன்னிடம் என்ன சிரமமென்றால் , நீ ஒரு வழவழா கொழகொழாஎன்றான் ராமு. சர்வர் கொண்டு வந்து வைத்த காப்பியை ஒர... |
சிம்பிள். அவன் உன்னுடைய நட்புக்காக ஏங்குவதாக உனக்குத் தோன்றியது. நீ அவனுடைய முயற்சிகளுக்கு வளைந்து கொடுத்தாய் , ஓ.கே. ஆனால் சீக்கிரமே அத்தகைய ஒரு நட்பு ஏற்படுவதற்குத் தேவையான அடிப்படைகள் இல்லையென்று தெரிந்து போயிற்று. ஸோ , அப்படித் தெரிந்த உடனேயே அவனை அவாய்ட் பண்ண வேண்டியதுதானே , இதிலே என்ன பிரச்னைன்னு எனக்குப் புரியலை... |
சந்தேகம். ஒரு வேளை என்னிடமிருந்த ஏதோ குறைபாடுகள் காரணமாகவும் நட்பு தோல்வியடைந்திருக்கலாமோ , அப்படியானால் அந்தக் குறைபாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டாமா என்று ஓர் ஆர்வம்.. " ராமு , தான் சற்றுமுன் சொன்னது நிரூபணமாகி விட்டது என்பதுபோலத் தலையில் அடித்துக்கொண்டான். நான் ஓர் எழுத்தாளன் என்கிற கவர்ச்சியினாலே அவன் என்பால் ஈர்க்க... |
பார்ப்பது போல அவரை ஆயாசத்துடன் பார்த்தான். நீ ஒரு தமிழனாக இல்லாமல் வடக்கத்தியானாக இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குவது போலப் படவில்லையா ? " ஆமாம் , அப்படியும்தான் தோன்றுகிறதுஎன்றார் கைலாசம் ஆச்சரியத்துடன். 208நீ இந்தியில் ஏதாவது பேச முயன்றால் அவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்திப்படம் ஏதாவதொன்றைப் பார்த்து அதைப் ... |
எல்லாம் உனக்கு சப்ளை பண்ணவும் , உன்னுடைய இந்தி அறிவை விருத்தி செய்யத் தன்னாலான உதவிகளைச் செய்யவும் கூடத் தயாராக இருப்பானே / " கைலாசம் சந்தேகத்துடன் ராமுவை உற்றுப் பார்த்தார்.ஏண்டா , கேலி பண்றயோ ?என்றார்.கேலியோ , நிஜமோ , எனக்கு இந்த மாதிரி ஆளெல்லாம் ரொம்பப் பரிச்சயமானவர்கள் , அப்படின்னு சொல்ல வந்தேன். ' சொல்லு , சொல்லு.... |
கொச்சையான மாயைகளிலே தஞ்சமடைகிற ரகம். தனக்கென்று ஒரு ஹோதாவில்லாததினாலே , ஒரு தனித்த ஐடென்டிடி இல்லாததினாலோ , எதன் மீதாவது சாய்ந்து கொள்வதன் மூலமாகத்தான் அவ தன்னை உணர முடிகிறது. நிரூபித்துக் கொள்ள முடிகிறது. பலம் வாய்ந்த , மகத்துவம் வாந்த ஏதாவது ஒன்றுடன் தன்னை ஐடென்டிஃபை பண்ணிக் கொள்வதன் மூலம் , அதன் ஒரு பகுதியாக ஆவதன் ம... |
சாப்பிடுவதில் உனக்கு ஆட்சேபணையில்லை. இதெல்லாம் அவனை மிகவும் பாதுகாப்பற்றவனாக உணரச் செய்திறது போலும். மதராஸிகளை ரசனையற்ற மூடர்களாக , பணிவற்ற காட்டுமிராண்டிகளாக , குறுகிய நோக்கும் அசட்டுக் கர்வமும் உள்ளவர்களாக , சண்டைக்காரர்களாக - எப்படி எல்லாமோ அவன் கற்பனை செய்து கொண்டிருக்கலாம் , உன்னைச் சந்திப்பதற்கு முன்பு. அவன் ஒரு ... |
சரி , எப்படி யிருந்தால் என்ன ? என் மொழிதான் ஆட்சிமொழி , என் சகோதரர்களே ஆட்சி புரிபவர்கள் என்பன போன்ற எண்ணங்களில் தஞ்சமடைந்து அவன் ஆசுவாசம் பெற வேண்டியிருக்கிறது. அதே சமயத்தில் இந்த எண்ணங்கள் அவனைக் குற்ற உணர்ச்சி கொள்ள வைக்கின்றன. இவரும் என்னைப் போன்ற ஒரு யு.பி.வாலாவாக அல்லது குறைந்தபட்சம் ஒரு வடக்கத்தியானாக இருந்தால் ... |
கதையெழுதிவிட்டுப்படுகிற அவஸ்தை போதாதா ? ' இருவரும் சிரித்தவாறே மைஜையை விட்டு எழுந்தனர். கேண்டீனுக்கு வெளியே ஒரு வெற்றிலைப் பாக்குக் கடை இருந்தது. ஆளுக்கொரு பீடா வாங்கி வாயில் போட்டுக் கொண்டு , சற்று நேரம் சுற்றுப்புற உலகை வேடிக்கை பார்த்த அமைதி. அகர்வாலுடன் இப்படி ஒரு நிமிஷமாவது அமைதியாக உணர்ந்திருக்கிறாரா ? சதா அனாவசி... |
யு.பி.வாலாவாக இருந்திருக்கக் கூடாதா ? அப்போது அவர் அவன்பால் எழும் நேச உணர்வுகள் குறித்து இந்த அளவு குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. உடல் வனப்பு நன்கு தெரியும்படியாக உடையணிந்த மூன்று நடுத்தர வயதுப் பெண்மணிகள் அவர்களைக கடந்து நடந்து சென்றார்கள்.தில்லிப் பொம்மனாட்டிகள் பம்பாயிலே இருக்கிறவாளையும் தூக்கியடிச்சுடுவா போலிர... |
விசுக்கென்று நடந்து சென்றாள். ராமுவின் கவனம் அங்கே சென்றது. கைலாசம் வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்தார். ராமுவின் முதுகில் தட்டிக் கொடுத்தார். ′ ஸோ - போன விசிட்டுக்கு இப்ப இங்கே சீனரி இம்ப்ரூவ் ஆகியிருக்கா ?என்றார். டெரிஃபிக் இம்ப்ரூவ்மெண்ட் !என்று ராமு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். புகையை ஊதினான்.ஒரு சந்தேகம்என்றான். எ... |
ஃப்ரீயாகப் பேச முடியாத ஒரு நிர்ப்பந்தமே உறவுகளை இறுக்கமானதாகச் செய்கிறது. ஏன் , ஒரு அப்பாவுக்கும் பிள்ளைக்குமிடையே கூட... ' 211 * நாங்கள் பெண்களைப் பற்றியும் பேசாமலில்லை.கைலாசம். உதட்டைப் பிதுக்கினார். ஒரு பயனுமில்லை. " வேடிக்கைதான். ' வேடிக்கையென்ன இதிலே ? செக்ஸ் எல்லோருக்கும் பொதுவான , அடிப்படையான விஷயம். எனவே எந்த இ... |
உண்டாகிறதென்பது கடவுளுக்குத்தான் ஏற்படுவதில்லை. வெளிச்சம். அது சிலருக்கிடையில் ஏற்படுகிறது. சிலருக்கிடையில் அவ்வளவுதான். ' எத்தகைய ஒரு வீழ்ச்சி ! உன் போன்ற ஒரு பகுத்தறிவுவாதி , சமத்துவவாதி... ! " " எல்லா மனிதர்களும் சமமானவர்களாயிருக்கலாம் , சகோதரர்களாயிருக்கலாம். ஆனால் எல்லா மனிதர்களுடனும் ஓர் அறையைப் பகிர்ந்து கொள்ளவோ... |
நான் குழம்பித்தான் இருக்கிறேன். ' ✓ சரி , நீங்கள் செக்ஸைப் பற்றிப் பேச முயன்றால் என்ன ஆகிறது ? " என்னத்தைச் சொல்ல , நானாக அவனிடம் இந்த டாபிக்கை எடுத்தாலும் அவன் சந்தேகப்படுகிறான். இத்தகைய டாபிக்குகளைப் பேசத்தான் லாயக்கானவென்ற ஒரு மூன்றாம் தரப் பிரஜை உரிமையை அவனுக்கு என் உலகத்தில் வழங்குகிறானோ , என்று. அதே சமயத்தில் அவன... |
வெற்றியடைகிறேன். இது கடைசியில் டேஸ்டைப் பொறுத்த விஷயம்தானோ , என்னவோ ' டேஸ்ட் , பொதுவான குடும்பச் சூழ்நிலை , கலாசாரச் சூழ்நிலை... ' ஐ நோ , ஐ நோ , இதெல்லாம் நட்புக்கு ஆதாரனமானவையென்று நம்பப்படுகின்றன. ஆனால் எனக்கு எப்போதும் நான் ஒரு வித்தியாசமானவென்ற உணர்வு இருந்தது. யார்கூட வேண்டுமானாலும் ஒத்துப்போக முடியுமென்ற கர்வம் -... |
கூடியத்ல்ல என்ற உண்மையை நான் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நான் என்னுடைய சில ஆழ்ந்த நம்பிக்கைகள் வெறும் லட்சியக் கனவுகளாக நிரூபணமாகி , ஒரு முட்டாளைப் போல உணருகிறேன். * ராமு கைலாசத்தின் முதுகில் தட்டிக் கொடுத்து ,இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளாதே ' என்றான். இது சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் ராமு. சில மனித... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.