text stringlengths 11 513 |
|---|
ஜிளர் ' என்ற சொல்லின் பொருள் யாது ? 2. ' தீர்த்தங்கரர்கள் ' என்பவர் யார் ? 6.2 , பயிற்சி வினாக்கள் 3. சமண சமயத்தின் இருபிரிவுகள் யாவை ? சமண சமயக் கப்பலின் நங்கூரமாக போற்றப்படுவது யாது ? 5. ' பஞ்சமஹாவரதம் ' என குறிப்பிடுவன யாவை ? 6. ‘ கோமதீஸ்வரர் ’ சிலை எங்கு அமைந்துள்ளது ? 7. சமணர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் நூல்கள் யாவ... |
- விளக்குக. 3. மகாவீரர் போதித்த உண்மைகள் யாவை ? 4. சமணர் கால ‘ கலை வளர்ச்சியை ’ எழுதுக. 5. சமணசமய ' அறக்கோட்பாடுகள் ' யாவை ? 141 6. 3. புத்த சமயம் இந்து சமயத்தில் நிலவிய குறைபாடுகளான மூடப் பழக்கவழக்கங்கள் வேள்விகள் , சடங்குகள் , சாதிக் கொடுமைகள் போன்றவற்றை நீக்க வழி காண வேண்டும் என்ற சிந்தனையின் விளைவே புத்த சமயம் தோன்... |
சமயத்தில் கூறப்பட்டுள்ள “ நவபதார்த்தம் ” பற்றி நீவிர் அறிவன யாவை ? ஈ. நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விடையளி 1. வர்த்தமானரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் போதித்த உண்மைகளையும் கட்டுரை வடிவில் எழுதுக. 2. இந்தியப் பண்பாட்டிற்கு சமண சமயத்தின் பங்கினை விவரி. புத்தமதமானது பாலி பௌத்தம் , திருமறை பௌத்தம் , தென்னாட்டு பௌத்தம் , தே... |
வளத்தில் சுத்தோதனருக்கும் மாயா தேவிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் சாக்கிய வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் “ சாக்கிய முனி ” என்றும் ஆன்மிகத் துறையில் “ புத்தர் ” எனவும் அழைக்கப்பட்டார். சுத்தோதனர் , சித்தார்த்தருக்கு இளமையிலேயே “ யசோதரை ” என்னும் மங்கையை மணம் முடித்து வைத்தார். காலப் போக்கில் அரண்மனை வாழ்க்கை பிடிக்காமல் ... |
துன்பத்தைக் கண்டு அதைப் போக்க வழிகாண முயன்றார். தனது 29 வது வயதில் உண்மையைக் காண அரண்மனை வாழ்வை விட்டு வெளியேறினார். துறவியான புத்தருக்கு ஆசிரியர்களின் அறிவுரையும் , கடுந்தவமும் பயனளிக்காத நிலையில் உருவேலாவிலுள்ள போதி மரத்தடியில் அமர்ந்து 7 வாரங்கள் தியானம் செய்தார். இறுதியில் ஒருநாள் கடுமையான தவம் செய்துக்கொண்டிருக்கு... |
இவ்வுலக வாழ்வை நீத்து “ மகாநிர்வாண ” நிலையை அடைந்தார். 6.3.2. புத்தரது சமய போதனைகள் புத்தர் தாம் கண்ட உண்மைகளை 45 ஆண்டுகள் பல இடங்களுக்கும் சென்று , படித்தவரும் பாமரரும் புரிந்துகொள்ளும். வண்ணம் போதனை செய்தார். அனைத்துச் சாதிப் பிரிவை சேர்ந்தவர்களும் புத்த சமயத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆசையை ஒழித்தால் தான் மன அமை... |
இவ்வுலக வாழ்க்கை துன்பமயமானது ' பிணி , மூப்பு , சாக்காடு ஆகிய துன்பங்கள் நம்மைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தான் இன்பமாக வாழவேண்டுமென்ற ‘ தன்னல ஆசையே ’ துன்பத்திற்குக் காரணம். 1. 2. 3. ' தன்னல ஆசைகளை ஒழித்தால் ’ துன்பங்கள் அறவே நீங்கும். 4. எண்வகை வழிகளை மேற்கொண்டால் ஆசைகளை ஒழித்து துன்பங்களிலிருந்து விடுபட்டு நிர்வாண... |
நினைவுகளை மனதில் பதியச் செய்தல். 3. நல்மொழி - புத்தருடைய கொள்கைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது பிறர் உள்ளங்களைப் புண்படுத்தும் சொற்களைப் பேசாமல் உண்மையும் இனிமையும் கலந்த சொற்களைப் பேசுவது. 144 4. நற்பணி – துறவு வாழ்க்கையின் மூலம் நற்பணிகளைச் செய்தல். 5. நல்ல வாழ்க்கை - பிச்சை எடுத்து வாழ்வதிலும் நல்ல நெறிகளைப் பின்ப... |
கொள்ளுதல். 8. நல்ல தியானம் - மனத்தை நல்லனவற்றில் நிலை நிறுத்தி மௌனத்தை மேற்கொண்டு மன அமைதி பெறுதல். 6.3.2.3. இடைவழி அல்லது மத்திய மார்க்கம் பௌத்த சமயத்தில் அதிகம் உண்டு , உறங்கும் இன்ப வாழ்க்கைக்கு இடமில்லை. உண்ணாமல் , உறங்காமல் தானே வருந்தி வாடுதலும் கூடாது என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்து , உலக இன்பத்தை வெறுத்து , கடு... |
வழங்குவர். 6.3.2.4. நிர்வாணம் “ ஆசையை அகற்றுவதே நிர்வாணம் ” என்று சுத்த பீடகத்தில் கூறப்பட்டிருக்கிறது. பிறப்பு , இறப்பு என்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு நிர்வாண நிலையை அடைய தூய வாழ்வும் , எண் வழி மார்க்கங்களைப் பின்பற்றுவதுமே இதன் அடிப்படையாக அமைகிறது. 6.3.2.5. கர்மவினை இந்து சமயத்தின் கர்மவினைக் கோட்பாட்டிலும் , மறு... |
ஆகும் என்றார். எனவே வினையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதை வலியுறுத்துகிறார் என அறிய முடிகிறது. 6.3.2.6. ஒழுக்கம் இல்லறத்தாரும் , துறவறத்தாரும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் பத்து எனக் கணக்கிட்டு கீழ்க்கண்டவாறு முதல் ஐந்து இல்லறத்தாருக்கும் , மற்ற ஐந்து துறவறத்தாருக்கும் கூறப்பட்டுள்ளது. இல்லறத்தார் பின்பற்ற வேண்... |
நறுமணப் பொருள்கள் போன்ற ஆடம்பரப் பொருள்களைப் பயன்படுத்தாமை 3. அகாலத்தில் உண்ணாமை 4. மகிழ்ச்சியளிக்கும் படுக்கைகளில் உறங்காமை 5. பணத்தை வைத்துக்கொள்ளாமை. இவற்றால் புத்தரின் வாழ்க்கை , அவர் போதித்த கொள்கைகள் முதலியவற்றைப் பார்த்தோம். இனி புத்தர் பின்பற்றிய சமயம் , அதன் நூல்கள் முதலியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். பௌ... |
விளயம் அல்லது அறநெறிகள் , அபிதமம் ( அ ) தத்துவ இயல்பான ஆய்வுகள் என மூன்று வகைப்படும். 6.3.3. புத்த சமயத்தின் பிரிவுகள் புத்த சமயம் ஹுனயானம் , மஹாயானம் என இரண்டு பிரிவாக உள்ளன. ஹீனயானம் என்பது போதிசத்துவர்களால் பின்பற்றப்பட்டது. பழமையான உண்மைகளை ஏற்றுக்கொள்வது. இச்சமயத்தின்படி புத்தர் சாதாரண மனிதராக மதிக்கப்பட்டார். புத... |
மஹாயானம் , புத்தரைக் கடவுளாக நினைத்து வணங்குவதன் மூலந்தான் நிர்வாண நிலையை அடைய முடியும் என்பதை வலியுறுத்தியது. எனவே புத்தருக்கு ஆலயங்கள் எழுப்பி சிலை வைக்கப்பட்டது. சடங்குகள் , வேள்விகள் நடத்தப்பட்டன. மஹாயான புத்தசமயக் கோட்பாடுகள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன. இப்பிரிவு கனிஷ்கர் காலத்தைச் சார்ந்தது. 6. 3.4. இந்தியப் ... |
கற்பிக்கப்பட்டன. 2. தியாகம் , தூய்மை , அறம் , உண்மை , தன்னடக்கம் , அன்பு , இரக்கம் போன்ற உயரிய பண்புகளை வலியுறுத்தியதோடு மனித நலனுக்காகப் பணிபுரிய வேண்டும் என்பதையும் புத்தர் உணர்த்தினார். 3. புத்தரின் அகிம்சைக் கொள்கை இந்து சமயத்தில் காணப்பட்ட தேவையில்லாத சடங்குகளும் , வேள்விகளும் மறையக் காரணமானது. மஹாயான புத்தமதத்தின... |
எனப்படும் பேச்சு மொழியில் இலக்கியங்கள் பெரும் வளர்ச்சியைக் கண்டன. 2. பௌத்த பிக்குகளும் , பெண் துறவிகளும் , படிக்காத பாமரர்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் அவர்களது பேச்சு மொழியில் சமயக் கருத்துகளைப் பரப்பினர். 3. புத்த சமய வேத நூல் - திருமுறை. இது பாலி மொழியில் இயற்றப்பட்டது. 4. “ ஆயுர் வேதம் ” என்னும் மருத்துவநூல் நாக... |
வேறுபாடின்றி எல்லோரும் புத்த சமயத்தில் சேர்ந்து அதன் கோட்பாடுகளைப் பின்பற்றி வாழ்வில் உயர்நிலை அடையலாம் என்னும் வாய்ப்பை புத்த சமயம் அளித்தது. 2. இதனால் சாதிக் கொடுமைகள் மறைந்து சமத்துவம் நிலைத்தது. 3.அமைதி , அன்பு , கருணை , பொறுமை , சகிப்புத்தன்மை போன்ற உயரிய பண்புகள் இந்திய பண்பாட்டிற்கு அளித்த பெருமை புத்த சமயத்தையே... |
இருந்த வேதகால இந்தியாவில் கலை என்பது ஒரு ஏவற் பெண்ணாகக் கருதப் பட்டதால் கட்டடக்கலையோ , சிற்பக்கலையோ வளர்ச்சியடைய வில்லை. வேள்வி செய்வதற்கான யாகசாலைகளும் , பலிபீடங்களும் கட்டப்பட்டன. புத்தர் , போதிசத்துவர் , இவர்களின் நினைவுச் சின்னங்களின்மீது கல்லால் கட்டப்பட்ட ஸ்தூபிகள் போன்ற கட்டடக்கலைகள் மனிதனின் ஆன்மாவை வெளிப்படுத்... |
, சாஞ்சி , அமராவதி போன்ற இடங்களிலுள்ள தூண்களும் கன்ஹேரி , கர்லே போன்ற இடங்களிலுள்ள குகைக்கோயில்களும் பௌத்த சமயச் சிற்பக் கலையினைப் பறைசாற்றும் மிகச் சிறந்த கலைச் சின்னங்களாக விளங்குகின்றன. கனிஷ்கர் காலத்தில் தான் “ காந்தாரக் கலை ” தோன்றியது. புத்த சமயம் இந்தியாவில் தோன்றியதால் இந்தியப் பண்பாட்டின் தனித்தன்மை நீங்கி வெள... |
மஞ்சூரியா , கொரியா , ஜப்பான் , பர்மா , சாவகம் சுமத்திரா , இந்தோசீனா போன்ற நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவியது. புத்த சமயத்தை தழுவிய அந்நியர்கள் புண்ணிய பூமியான , வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டதாலும் இந்திய பண்பாட்டின் சிறப்பு மேலும் வெளிநாட்டில் பரவக்காரணமாயிற்று. முடிவுரை இவ்வாறு சமயங்க... |
என்ன ? 2. ' இடைவழி ' அல்லது ‘ மத்திய மார்க்கம் ’ பற்றி எழுதுக. 3. புத்தசமயத்தின் இருபிரிவுகள் யாவை ? 4. பௌத்த மடாலயங்களின் பெயர் என்ன ? 5. புத்தசமய ‘ வேதநூல் ’ எது ? அது எம்மொழியில் எழுதப்பட்டது ? 6. ' காந்தாரக் கலை ' என்றால் என்ன ? 7. பௌத்த சமயம் எந்நாடுகளில் பரவியது ? ஆ. ஒரு பத்தி அளவில் அல்லது பத்து வரிகளுக்கு மிகாம... |
இலக்கிய வளர்ச்சி பற்றி விவரி.. இ. ஒரு பக்க அளவில் அல்லது முப்பது வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. புத்தரின் வாழ்க்கை வரலாற்றை விவரி. 2. ' நிர்வாணம் ' , ' கர்மவினை ' , ' ஒழுக்கம் ' பற்றிய புத்தரின் கருத்துகளை விவரி ? 3. பௌத்தர் கால கலை வளர்ச்சியை நும் திறம் கொண்டு ஆய்க. ஈ. நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விடையளி 1. புத்தரின் ... |
வரலாற்றில் அரசியல் , பண்பாட்டுத் துறைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது எனக் கூறலாம். இந்த அரசு மரபு. சந்திர குப்த மௌரியரால் நிறுவப்பெற்றது. மௌரியர்கள் ஒரே சீரான நிருவாக முறையை நடத்தி வந்தனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் அரசியல் ஒற்றுமை , சமுதாயத்தில் அமைதி , பொருளாதார வளர்ச்சி , சமய சகிப்புத் தன்மை இவையனைத்து... |
, பிந்துசாரன் கி.மு. 298 லிருந்து கி.மு. 273 வரையும் , அசோகன் கி.மு. 273 முதல் கி.மு. 232 வரையும் , அசோகருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அரசர்கள் கி.மு. 232 முதல் கிமு. 182 வரையும் ஆண்டு வந்தாக அறிகிறோம். 7.1.2. சான்றுகள் மௌரியர்களுடைய ஆட்சியைப் பற்றி அறிந்து கொள்ள மெகஸ்தனிஸ் எழுதிய ‘ இண்டிகா ’ சாணக்கியர் எழுதிய ‘ அர்த்த ... |
ஆகியவை மௌரியர்களின் நல்ல பண்பாட்டு வாழ்க்கை பற்றி அறிய உதவும் சான்றுகளாக விளங்குகின்றன. 151 7.1.3. முக்கிய அரசர்கள் 1. சந்திரகுப்த மௌரியன் ( கி.மு. 322 - கி.மு. 298 ) 2. பிந்து சாரன் ( கி.மு. 298 - கி.மு. 2731 3. அசோகன் ( கி.மு. 273 - கி.மு. 232 ) 7.1.4. அரசியல் நிலை மைய அரசு மைய அரசு , அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் ... |
முடிவாக இருந்தது. மைய அரசு நிருவாக நுணுக்கங்களையும் அமைச்சர்களின் பணிகளையும் , இராணுவ செயல் திறனையும் , நாட்டில் நடைபெறும் ஏனைய நிகழ்வுகளையும் , ஒற்றர்களின் பணியையும் செவ்வளே பராமரிக்க வேண்டும். அமைச்சர்களைத் தவிர அரசனுக்கு அவசர காலங்களில் ஆலோசனை வழங்க ' மந்திரி பரிஷத் ' என அழைக்கப்படும் ஆலோசர்களும் இருந்தனர். செயலகம் ... |
எனவும் , நகர ஆணையாளர்கள் ‘ அஸ்திநாமாய் ’ எனவும் அழைக்கப்பட்டனர். நகர நிருவாகத்தைக் கவனிக்க ‘ மகாமாத்திரர்கள் ' என்ற உயர்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். எழுத்தர்கள் ‘ யுதா ’ எனவும் , செய்தி நிருபர்கள் ‘ பதிவேடகர்கள் ’ எனவும் அழைக்கப்பட்டனர். உயர்ந்த நிலை பூசாரியைப் ‘ புரோகிதர் ’ என்றும் இளவரசரை ‘ யுவராஜா ’ என்றும் சேன... |
அலுவலர்களை அசோகர் நியமித்தார். கருவூல தணிக்கையாளர் களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். மாநில அரசுகள் மௌரியப் பேரரசு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அரசு குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்கள் அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரரர்கள் தலைமையேற்று மாநில ஆளுநராக ஆட்சிப்பொறுப்பை நடத்தி வந்தனர். மாநிலங்க... |
இருந்தது. அதன் பொறுப்பை ஏற்ற அலுவலரைக் ‘ கிராமிகன் ’ எனவும் பத்து கிராமங்களுக்குப் பொறுப்புள்ள அலுவலர் ‘ கோபன் ' எனவும் அழைத்தனர். ஒற்றர் முறை மௌரிய அரசில் சிறந்த ஒற்றர் முறை இருந்தது. அரசு அலுவலர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும் இரகசிய செய்திகளைத் துப்பறிந்து அரசுக்குத் தெரிவித்தும் வந்தனர். இவர்களைக் கௌடில்யர் ‘ க... |
அவைகட்கு மகாமாத்திரர்கள் மற்றும் இராசுக்கர்கள் என்போர் தலைமையேற்றனர். ‘ தருமஸ்தேயம் , ’ ‘ கண்டக்க சோதனம் ' என்ற இருவகை நீதி மன்றங்கள் இருந்தன. சிறிய வழக்குகள் கிராமப் பஞ்சாயத்துகளால் தீர்க்கப்பட்டன. தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட்டன. 153 இராணுவ நிருவாகம் மௌரிய இராணுவம் காலாட் படை , குதிரைப்படை , யானைப்படை , தேர் படை மற்ற... |
முக்கிய வருவாய் நிலவரியாகும். விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு , வரியாக வசூலிக்கப்பட்டது. நில வரியை , ‘ அக்ரநாமி ’ என்பவர் வசூலித்தார். வணிகர் , கைவினைஞர் பல்வேறு தொழில் புரிபவர்களும் வரி செலுத்தி வந்தனர். மதுவின் மேலும் வரி வசூலிக்கப்பட்டது. நாணயமாகவும் பொருளாகவும் கிடைத்த வருவாயை அரசு மக்கள் நலனுக்குச் செலவிட்டது. நீர்... |
நாடு முழுதும் ஆங்காங்கே ஏரிகள் அமைத்து கால்வாய் மூலம் பாசன முறை செம்மைப் படுத்தப்பட்டது. பொதுப்பணிகள் சாலை அமைப்பு முறைகளைக் கவனிக்க ஒரு துறை செயல்பட்டது. இதன் மூலம் புதிய சாலைகள் அமைக்கும் பணியும் , பழைய சாலைகளை பழுது பார்க்கும் பணியும் மேற்கொண்டனர். சாலையோரங்களில் தங்கும் விடுதிகள் ( தருமசாலா ) அமைத்தனர். சாலைகளின் இ... |
நிர்வாகம் செய்தவர்கள் ‘ நகரகர் ’ என்று அழைக்கப்பட்டனர். நகர ஆணையாளர்கள் ‘ அஸ்திநாமாய் ' என்னும் அழைக்கப்பட்டனர். ‘ நகர நிர்வாகம் ’ செயல்படும் விதத்தைப் பற்றி ‘ அர்த்த சாஸ்திரம் ’ மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. மருத்துவ வசதிகள் மௌரியர் காலத்தில் பொது மக்கட்கும் , விலங்குகட்கும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத... |
இறப்பு மக்கட்தொகை கணக்கெடுப்பை முறைப்படுத்த ஒரு நிலையான துறை செயல்பட்டு வந்தது. 7.1.5. சமுதாய நிலை உயர்ந்த ஒழுக்கம் அன்றைய சமுதாயம் உயர்ந்த ஒழுக்கம் நிறைந்ததாய் அமைந்திருந்தது. மக்கள் எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களிடம் உண்மை , நேர்மை , நாணயம் , தைரியம் , அறிவாற்றல் ஆகிய அனைத்து நற்பண்புகளும் ஒருங்க... |
கடமைகளும் மௌரியர்களின் சமுதாயத்தில் வேதகாலத்தில் காணப்பட்டது போன்று பிராமணர்கள் , க்ஷத்திரியர்கள் வைசியர்கள் , சூத்திரர்கள் என்று நான்கு வகை சாதி பிரிவுகள் காணப்பட்டன. 1. பிராமணர்கள் : - ஓதுதல் , ஓதுவித்தல் , வேட்டல் , வேட்பித்தல் , ஈதல் , பெறுதல் போன்று அறுவகைப்பட்ட தொழில்கள் செய்தனர். 155 2. க்ஷத்திரியர்கள் : - ஓதுதல... |
சூத்திரர் : - மேற்கூறிய மூன்று சாதியினருக்கும் பணி செய்தல் , ஆடு மாடு மேய்த்தல் , கைவினைத் தொழில் புரிதல் , ஆடலிலும் , பாடலிலும் ஈடுபடுதல் போன்ற செயல்களைச் செய்தனர். திருமண முறை ஒரே சாதியில் திருமணம் செய்துக் கொள்ளும் பழக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் , கலப்பு சாதி திருமணமான அநுலோமாத் திருமணம் மற்றும் பிரதி லோ... |
நெறியில் நான்குவகை ஆசரமங்களைக் கடைப்பிடிக்கப்பட்டது. அவை 1. பிரம்மச்சரியம் 2. கிரகஸ்தம் 3. வனபிரஸ்தம் 4. சந்நியாசம் மெய்ஞானிகள் மெய்ஞானிகள் எனப்படுபவர் , பிராமணர்கள் , பிராமணிகர்கள் , சிரமணர்கள் , பௌத்தர்கள் என நான்கு வகை பிரிவினர் இருந்தனர். பிராமணர்களில் உதிசா பிராமணர்கள் ( ஆசிரியர் புரோகிதர் ) சதகஹண பிராமணர் ( ஜோதிட... |
, பெண் இன்பம் நீக்கி காடுகளில் வாழ்ந்தனர். பௌத்தர்கள் என்போர் தூய்மையான அறவாழ்க்கையைப் போற்றி வாழ்ந்தனர். சமுதாயப் பழக்க வழக்கங்கள் ‘ சதி ’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்தது என்று ‘ அரிஸ்டோ கூலஸ் ' என்ற ஆசிரியர் குறிப்பிடுகிறார். மௌரியர் காலத்தில் மக்கள் வேள்விக்காலம் தவிரப் பிற்காலங்களில் மது அருந்த... |
காணப்பட்டதாக கிரேக்கர்கள் கூறுகின்றனர். ஆடை அணிகலன்கள் ஆடைகள் எளிமையாய் இருந்தன. சிலர் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்தனர். துறவிகள் மரவுரிகளையும் மான் தோல்களையும் அணிந்து திரிந்தனர். செல்வந்தர்கள் விலையுயர்ந்த மணிகள் , பூ வேலைப்பாடுகள் அடங்கிய மஸ்லின் ஆடைகளை அணிந்தனர். வேட்டி , துண்டு , தலைப்பாகை அணிந்தனர். தந்தத்தாலும் , த... |
தத்துவக்கல்வி பயின்று தன்னடக்கம் நிறைந்தவர்களாக வாழ்ந்தனர். சிலர் அடிமைகளாகவும் இருந்தனர். அரண்மனைகளில் நாட்டியமாடியும் பாடல்கள் பாடியும் மகிழ்வித்தனர். பெண்கள் தங்கள் கணவருடன் சமயச் சடங்குகளில் ஈடுபட்டனர். கணவர் ஈட்டிய பொருளை மனைவியிடம் கொடுத்தார். திருமணமான பெண்டிர் புனித நூல்களால் அறிவைப் பெறுவதற்குத் தடைவிதிக்கப்பட... |
விளையாடினர். வேட்டையாடுதல் , படகோட்டுதல் , நீந்துதல் முக்கியப் பொழுதுபோக்கு. வில்வித்தை கற்றல் , விலங்குகளுடன் போரிடல் , தேரோட்டப் பந்தயம் போன்றவையும் பிரசித்தமானவை. சதுரங்க விளையாட்டும் விளையாடினார்கள். ஆடல் , பாடல் , இசைக்கருவி மீட்டல் போன்றன பெண்களுக்கே உரிய தொழிலாகக் கருதப்பட்டன. 7.1.6. சமய வளர்ச்சி வேதகாலச் சமயத்த... |
சமயத்துறவியுடன் மைசூருக்கு அருகிலுள்ள ‘ சரவண பெலகொலா ' என்ற இடத்தில் வந்து பகுதியில் வாழ்ந்தார். இறந்த பிறகு நினைவாக ' சந்திரபாஸ்டி ' எனப்படும் கோயில் ஒன்று கட்டப்பட்டது. மௌரிய பேரரசராக விளங்கிய அசோகர் கலிங்கப் போருக்குப் பிறகு புத்த துறவியான ' திஸா ' எனப்படும் உபகுப்தருடன் பல இடங்களுக்குச் சென்று புத்த சமய கோட்பாடுகளை... |
தர்ம மகாமாத்திரர்களையும் , தர்மயுக்தரர்களை அசோகர் நியமித்தார். அசோகர் தம் மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரை யையும் இலங்கைக்கு அனுப்பி புத்தசமயக் கொள்கைகளைப் பரப்பினார். பௌத்தர்களுக்கிடையேயிருந்த வேற்றமைகளை அகற்றி ஒற்றுமை ஏற்படுத்த ஒரு மகாநாட்டைக் கூட்டி பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டினார். தர்மநெறிக் கருத்துக... |
நிறைவேற்ற பல தூதர்களை நியமிக்கப்பட்டதை கல்வெட்டில் கூறியுள்ளார். காஷ்மீர் , காந்தாரம் , மைசூர் , வனவாசி , அபராந்தகம் , மகாராஷ்டிரம் , இமயமலைப் பகுதிகள் , சுவர்ண நாடுகளுக்கு அனுப்பியுள்ளார். அசோகர் காலந்தவிர பிறகாலங்களில் வேதகால தெய்வங்களை வழிபட்டனர். விஷ்ணு , சிவன் , ஸ்கந்தன் போன்ற தெய்வங்களை மக்கள் போற்றி வணங்கினர். ச... |
கலை வளர்ச்சி கல்வி மௌரியப் பேரரசின் பெரும்பகுதியில் பள்ளிகளும் உயர்கல்வி நிறுவனங்களும் அரசாலும் , பொது அற நிலையங்களாலும் நடத்தப்பட்டன. பிராமணர்களும் புத்த துறவிகளும் பாடங்களைக் கற்பித்தனர். தட்சசீலம் , உஜ்ஜயினி , காசி போன்ற இடங்களில் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன. இலக்கியம் , சமயக்கல்வி கற்பிக்கப் 159 பட்டன. பாடத் திட... |
காலத்தில் சிற்பக்கலை கட்டடக் கலை மிகவும் புகழ் பெற்ற விளங்கின. சாரநாத்தில் காணப்படும் கற்றூண் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. நமது நாட்டின் தேசிய சின்னத்திலும் நாணயங்களிலும் நான்கு முக சிங்கங்கள் இடம் பெற்றுள்ளன. தேசியக் கொடியில் ‘ தர்மச்சக்கரம் ’ இடம் பெற்றுள்ளது. அசோகர் எண்ணற்ற ஸ்தூபிகளை ( B400 ) தம்முடைய நாடு... |
பக்கங்களிலும் உயரமான நுழைவாயில்கள் அமைந்துள்ளன. இத்தூண்கள் யாவும் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கட்டடங்கள் பெரும்பாலும் மரத்தாலும் , கற்களாலும் கட்டப் பட்டிருந்தன. மௌரியர்கள் கட்டிய அரண்மனைகள் உலகத்திலேயே மிக அழகு வாய்ந்தவை. பாகியான் இதனை , “ இக்கட்டடங்கள் கடவுளின் படைப்புகள் போன்று காட்சியளிக்கின்றன ” ... |
முக்கியமானவை. இராஜ கிருகத்திற்கு அருகில் ‘ சீதா மாருதி ’ அருகேயும் குன்று காணப்படுகிறது. ' லோமாரிஷி ’ குகை மிகவும் சிறப்புடையது. உட்புறம் கண்ணாடி போல் பளபளப்பாகவும் , இருபுறத்திலும் இருதூண்கள் நிற்க வைத்து வீடு கட்டியது போல குகை அமைந்துள்ளது. நுழைவாயில் முக்கோண வடிவமான கூரையுடையது. 160 கல்லாலான ஸ்தூபிகளுக்கும் , குகைக்... |
எங்கெல்லாம் கற்றூண்களும் , கற்பலகைகளும் காணப்படுகின்றனவோ ( பாறைகள் ) அங்கெல்லாம் ( தர்மம் ஆணைகள் ) பொறிக்கப் படுவதாக ” என்று கூறியுள்ளார். ஆகவே , பல இடங்களில் காணப்படும் தூண்களின் அமைப்பையும் , இடத்தையும் கருதி , அங்கெல்லாம் கல்வெட்டுக்களைப் பொறிக்கச் செய்தார். மௌரியர் காலக் கலையின் சிறப்புகளைக் கொண்டு அவற்றைக் கீழ்கண்... |
7. இதர கட்டடங்களும் சிற்பங்களும் இலக்கியம் மௌரியரின் ஆட்சி காலத்தில் சமஸ்கிருதம் பாலி , பிராகிருதம் போன்ற மொழிகள் வட இந்தியா முழுதும் சிறப்புப் பெற்றிருந்தன. மற்றும் கன்னடம் , தமிழ் போன்ற மொழிகள் தென்னிந்திய திராவிட இனத்தவரின் மொழிகளாக சிறப்புற்று விளங்கின. இந்திய கிழக்குப் பகுதியில் பிராகிருத மொழியே அரசாங்க மொழியாக இர... |
வியாக்கரணம் ’ ( இலக்கணம் ) 4. பாணினீயின் – ‘ அஸ்டத்யாயி ' 5. வாத்ஸ்யாயனரின் - ‘ காமசூத்திரம் ’ 6. ‘ சுபந்து ’ வின் - ‘ வாசவதத்தா நாட்டிய தாரா ( நாட்டிய கலை ) ’ 7. வருருசி என்பவர் - ‘ வருருச காவியம் ’ 8. பௌத்த சமயநூல் - ‘ திரிபீடகங்கள் ’ 9. காப்பியங்கள் - ' இராமயணம் , மகாபாரதம் ’ 10. வேதாந்த நூல்கள் - ‘ கிருஹ்ய சூத்திரம... |
காலத்தில் எழுதப்பட்டனவாகும். 7.1.8. இந்திய பண்பாட்டிற்கு மௌரியர்களின் கொடை 1. மௌரியர்களின் ஆட்சி முறையில் மைய அரசு , தலைமைச் செயலகம் , மாநில அரசுகள் நிதி , நீதி நிருவாகம் , பொதுப் பணித்துறை நகராட்சி முறை போன்றன நமக்கு அளிக்கப்பட்டுள்ள கொடைகளாகும். 2. தட்சசீலம் , உஜ்ஜையினி , காசி போன்ற மௌரியர்கால பல்கலைக் கழகங்கள் இன்று... |
சாற்றுகின்றன. 162 4. இந்து தர்மக் கோட்பாடுகளையும் அன்பு , அஹிம்சை போன்ற பௌத்த சமய நெறிகளையும் வெளிநாடுகளில் பரப்பி இந்திய பண்பாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்கள் மௌரிய பேரரசர்கள். 5. மௌரியர்கள் கல்வி , கலை , இலக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தியது போன்று , பிராகிருதம் ( ஆட்சிமொழி ) சமஸ்கிருதம் ( இலக்கியமொழி ) பாலி ( எளிய ம... |
இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியர் காலத்தில் வழங்கப்பட்ட கொடைகளாகும். 7. பொதுப் பணித்துறைகளில் சாலைப்போக்குவரத்து , நீர்ப்பாசன வசதிகள் மற்றும் சாலையோரங்களில் தரும சாலைகள் , மக்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவமனைகள் போன்றவை மௌரியர்களின் இந்தியப் பண்பாட்டின் கூறுகளாக விளங்குகின்றன. 8. அசோகரின் தர்மக் கோட்பாடுகளான 1. அஹிம்... |
) 11. கித தக்ஞதா ( நன்றியுடைமை ) 12. தருத பக்திதா ( அன்புடைமை ) 13. சுஷ்ருசா ( பெற்றோருக்குப் பணிவிடை ) 14. அபிச்சித்தி ஆளரியர் ( பெற்றோருக்கு மரியாதை ) 15. தர்ம மகாமாதா ( அறம் செய்தல் ) 16. பயம் 17. பரிக்ஷா ( தன்னம்பிக்கை ) 18. உத்சாஹா ( மகிழ்ச்சி ) போன்றவை இந்திய பண்பாட்டிற்கு வழங்கப்பட்ட கொடையாகும். 163 7.1 , பயிற்ச... |
குறிப்பு வரைக ? 5. ' தரும மகா மாத்திரர்கள் ' என்போர் யாவர் ? 6. ' கிராமிகர் ’ குறிப்பு வரைக 7. ' குதபுருஷர்கள் ' என்போர் யாவர் ? 8. ‘ நகரகர் ’ சிறு குறிப்பு தருக 9. ‘ அக்கிரநாமி ’ என்பவர் யார் ? 10. நகராட்சி நிருவாகம் இருந்த இடங்கள் யாவை ? 11. நான்கு வகை ஆசரமங்கள் யாவை ? 12. ' மெய்ஞ்ஞானிகள் ' என்பவர் யாவர் ? 13. ‘ சரவண... |
பெண்களின் நிலையாது ? 3. ' அநுலோமா ' ' பிரதிலோமா ’ திருமண முறை யாது ? 4. மௌரியர் கால மக்களின் பொழுது போக்குகள் யாவை ? 5. மௌரியர்கால ஆடை அணிகலன்களை விளக்குக 6. மௌரியர்கால நான்கு வகை சாதிகளும் கடமைகளும் யாவை ? 7. மௌரியர்கால மைய அரசின் செயல்பாடுகள் யாவை ? 8. மௌரியர்கால கலையின் சிறப்புகளைக் கொண்டு எத்தனை வகைகளாகப் பிரிக்கலா... |
மௌரியர்கால சமய நிலையை விளக்குக. 4. மௌரியர்கால இலக்கிய வளர்ச்சியை விவரி. 5. மௌரியர்கால கலை வளர்ச்சியை விவரி. 6. மௌரியர் கால சமுதாயப் பாகுபாடு மற்றும் அவர்களுடைய பழக்க வழக்கங்களை விவரி. 2. 3. ஈ. நான்கு பக்க அளவில் விடையளி 1. மௌரியர்காலப் பண்பாடு பற்றி ஒரு கட்டுரை வரைக. 2. இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியர்களின் கொடை மற்றும் ... |
கல்வி , கலை , இலக்கியம் , சமயம் , இசை , நடனம் ஆகிய அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிலையில் காணப்பட்டார்கள். அகவே தான் வரலாற்றில் குப்தர்காலம் பொற்காலம் ’ என்று கூறப்படுகிறது. 7.2.1. காலம் 7.2.3. முக்கிய அரசர்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸ்ரீ குப்தர் என்பவர் பாடலிபுத்திரத்தில் சிறிய அரசு ஒன்றை அமைத்து ... |
இலக்கியங்களும் , புராணங்களும் , வெளிநாட்டவரின் குறிப்புகளும் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் குறிப்புகளும் சான்றுகளாக கிடைத்துள்ளன. 1. விசாகதத்தர் எழுதிய ‘ முத்ரா இராட்சசம் ’ , 2. காளிதாசரின் இலக்கியங்கள் 3. பாணரின் ' ஹர்ஷ சரிதம் ’ 4. பதினெட்டு புராணங்கள் 5. சீனப்பயணி ‘ பாகியானின் ’ குறிப்புகள் 6. சமுத்திர குப்த... |
குப்தர் ( கி.பி. 330 - கி.பி. 3800 3. இரண்டாம் சந்திர குப்தர் ( கி.பி 380 - கி.பி. 415 ) 4. ஸ்கந்த குப்தர் - ( கி.பி. 456 - கி.பி 468 ) 7.2.4. அரசியல் நிலை குப்தர்களின் காலத்தில் திறமைமிக்க மிகச் சிறந்த நிருவாக அமைப்பு நிறுவப் பெற்றிருந்தது. அவர்கள் தங்கள் நாட்டை பிரிவுகளாக பிரித்து சிறப்பாக ஆட்சி செய்தனர். 1. மத்திய ந... |
நிர்வாகம் செய்யவும் அனைத்துப் பிரச்சினைகட்கும் தீர்வுகாணும் பொறுப்பினைப் பெற்றிருந்தான். நீதித் துறைக்கும் அரசனே தலைவனாக விளங்கினாள். நாடு முழுவதும் உயர் அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பு அரசனையே சார்ந்தது. படையெடுப்புகளைத் தாமே நடத்திச் சென்று மன்னர்கள் பல வெற்றிகளை நிலை நாட்டினர். அரசன் அனைத்து அதிகாரங்களும் பெற்றிருந்... |
மந்திரி என்று பெயர். பொதுவாக அமைச்சரவை பரம்பரைப் பதவியாக இருந்தது. மத்திய நிருவாகத் துறைகள் 1. மகா சேனாதிபதி ( இராணுவ நிர்வாகம் ) 2. மகா தண்ட நாயகன் ( நீதித்துறை நிர்வாகம் ) 3. இராணா - படகாரிகள் ( போர்க்கருவிகள் மற்றும் உணவு சேகரித்தல் ) 4. மகாபாலாதிகாரன் ( இராணுவம் தங்குமிடம் , போர்த் தந்திர முறைகள் போன்ற பணிகள் ) 5. ... |
மகாபக்ச பாலிதன் ( அரசு அலுவலக கோப்பு மற்றும் செலவினங்கள் கவனித்தல் ) 10. சர்வதியாக்சன் ( மத்திய நிர்வாகத் தலைமைச் செயலர் ) 2. மாநில நிருவாகம் குப்த பேரரசு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு மாநிலத்தை புக்தி அல்லது தேசம் , ராஷ்டிரம் , மண்டலம் என அழைத்தனர். மாநிலங்களில் மன்னரின் பிரதிநிதியாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். பெர... |
துறைத்தலைவர் ) 168 3. பாலாதி கரணிகர் ( இராணுவத் தளபதி ) 4. மகா பிரதிகாரர் ( ஆளுநரின் தலைமை அதிகாரி பாட்டியுபரிகர் ( தலைமைக் கணக்காயர் ) கர்த்தா கிருத்திகர் ( தலைமைச் செயவர் ) ஔதரங்கிதர் ( வரிவசூல் புரியும் உயர் அதிகாரி 0 5. 6. 7. 8. அக்கிரகாரிகள் ( அக்கிரகாரத்தை மேற்பார்வையிடுதல் 9. ததாயுக்தர் ( கருவூலத் தலைமை அதிகாரி ... |
மாநிலத் தலைவன் ( ஆளுநர் ) சட்டம் , ஒழுங்கு , அமைதி போன்ற பணிகளை நிலைநாட்ட வேண்டும். பொதுப்பணித் துறையையும் கவனிக்க வேண்டும். 3. மாவட்ட நிருவாகம் மாநிலங்கள் ஒவ்வொன்றும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. அவைகள் ‘ புக்தி ’ என்ற பெயருடன் அழைக்கப் பட்டன. ‘ புக்தியின் ’ தலைவர் ' உபரிகர் ' என்று அழைக்கப்பட்டார். மேலும் ‘ புக்... |
' அதிகரணம் ' என்று அழைக்கப்பட்டன. மாவட்ட அதிகாரியின் கீழ் 1. சௌல்கிகர் ( சுங்க அதிகாரி ) 2. துருவாதி கரணிகள் ( நிலவரி அதிகாரி ) 3. மகாட்ச படலிகர் ( ஆவணக் காப்பாளர் ) 4. பண்டாகாராதி கிரிதர் ( காசாளர் ) போன்று பலர் இருந்தனர். 4. கிராம நிருவாகம் விஷயம் ( வட்டம் ) பல கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கிராமம் ‘ பட்ட ’ என... |
அதிகாரி , நிலத்தகராறு தீர்க்கும் நியாயத்தர் என்ற பல அதிகாரிகள் செயல்பட்டனர். 5. நகர நிருவாகம் குப்தர் ஆட்சி காலத்தில் நகர நிருவாகம் இருந்து வந்தது. நகரத்தைப் ‘ புரம் ’ என்றும் அதன் ஆட்சித்தலைவனை ‘ புரபாலர் ’ ( அல்லது ) ‘ நகர ரட்சகன் ' என்றும் அழைத்தனர். இவர் மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டார். நகரத்தைச் சுற்றி கோட்டையும்... |
சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் சமுத்திரகுப்தரே முன்னின்றார் என்பதால் , படைகளின் வளர்ச்சிக்கு மன்னர் அளித்த ஊக்கம் மகத்தானதாகும். நீதித்துறை குப்தர் காலத்து நீதிமுறைகளைப் பற்றி பிரகஸ்பதி , நாரதர் , காத்தியாயனர்போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். வழக்குகளை 1 சிவில் வழக்குகள் 2. குற்ற இயல் வழக்குகள் ( கிரிமினல் ) என்று இருவ... |
கொண்ட ஒரு தனிக் குழு விசாரணை நடத்தும் திருப்தியடையாதவர் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் அரவர் நீதியின் காவலராக இருந்து தலைநகரில் வழக்குகளை விசாரித்தார். தற்காலிக நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டிருந்தன. கிராமங்களில் கிராம பஞ்சாயத்து முறையும் இருந்தது. 7.2.5. சமுதாய நிலை 1. குப்தர்கள் சமுதாய நிலை சிறந்து விளங்கி... |
4. உணவு வகையில் சைவ , அசைவ உணவுப் பொருள்களை உண்டனர். பெரும்பான்மையான மக்கள் சைவ உணவையே பயன்படுத்தினர். 5. பெண்கள் உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்பட்டனர். மகளிர் கல்வியறிவு பெற்றனர் ; நிர்வாகத்தில் பங்கு பெற்றனர் ; சமூகத்தால் போற்றப்பட்டனர். கணவனின் நன்னடத்தைக்கு வழிகாட்டியாக மனைவி விளங்கினாள். கலப்புச் சாதியைச் சமுதாய... |
பிராமணர்கள் உயர்ந்தவர்களாக கருதப்பட்டனர். சண்டாளர்கள் ( கலப்பு சாதியினர் ) கீழ்சாதிக் காரர்களாகக் கருதப்பட்டனர். அவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதி , ஊருக்குப் புறத்தே வசித்து வந்தனர். 7. வேட்டையாடுதல் முக்கிய பொழுது போக்கு ஆகும். ஆடு , எருமை , யானை , மான் இவைகளுடன் சண்டை போடுவதும் விழாக்காலங்களில் ஆடிப்பாடி மகிழ்வதும்... |
( இந்து சமயம் ) புத்துயிர் பெற்றது. திருமாலும் சிவனும் உயர்ந்த கடவுளர்களாகக் கருதப்பட்டனர். சமய வேள்விகளும் சடங்குகளும் நடத்தப்பட்டன. சமுத்திர குப்தர் அசுவ மேதயாகங்கள் நடத்தினார். வாயு புராணம் , மச்ச புராணம் போன்ற புராணங்கள் இயற்றிச் சிவபெருமானின் பெருமையைப் போற்றினர். மேலும் , சிவன் , திருமால் ஆகிய கடவுளர்களுக்குக் கோ... |
அவதாரக் கோட்பாட்டினை நம்பினர். புனித இடங்களுக்கு யாத்திரை செல்லும் பழக்கம் மக்களிடம் இருந்தது. இந்து சமயத்திற்கு ஆதரவு தந்த மன்னர்கள் புத்த , சமண சமயங்களை வெறுக்கவில்லை. சில குப்த மன்னர்கள் புத்த சமயத்தைப் பின்பற்றினர். மதுரா , உதயகிரி போன்ற இடங்கள் சமண மதத்தின் இருப்பிடங்களாக இருந்தன. 7.2.7. கலை வளர்ச்சி கல்வி வேதங்கள... |
வேதங்கள் , வேதாந்தங்கள் , புராணங்கள் நியாய மீமாம்சங்கள் , தனுர் வேதம் , கந்தர்வ வேதம் , அர்த்த சாஸ்திரம் போன்றவை சேர்க்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வந்தன. மேலும் வானவியல் , கணிதம் , சோதிடம் ஆகியவை குறிப்பிட்ட பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன. அளவை இயல் , தத்துவம் , நியாயம் , இலக்கணம் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டன. இலக்கியம் ... |
இரகுவம்சம் , குமாரசம்பவம் , ( காப்பியங்கள் ) மேகதூதம் , ரிது சம்ஹாரம் ( பாடல்கள் ). 2. விசாகதத்தர் - முத்ரா ராக்ஷஸம் , தேவிசந்திரகுப்தம் போன்ற நாடகங்கள் 3. வாத்ஸ்யாயனர் - காமசூத்திரம் 4. வராகமிஹிரர் - பிருகத் சம்கிதை ( கவிதை ) கணிதம் , சோதிடம் 5. சந்திரர் - சந்திராச்சாரிய வியாக்கரணம் ( இலக்கணம் ) 6. ஜயினேந்திரர் - ஜயின... |
வராகமிகிரர் - பஞ்ச சித்தாந்தகம் ( வானவியல் 12. சாமண்டகன் - நீதிசாஸ்திரம் 13. வீரசேனர் வியாகரணம் கட்டடக்கலை குப்தர்கள் கலை வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டு மிகவும் போற்றத்தக்கதாகும். குப்தர் கால கலைவளர்ச்சியை கட்டடக்கலை , சிற்பக்கலை , ஓவியக்கலை , உலோகக்கலை , இசை , நடனம் , நாடகக்கலை என வகைப்படுத்தலாம். குப்தர் காலத்தில் அழ... |
கோயில்கள் 4. செங்கற் கோயில்கள் குகைக் கோயில்கள் அஜந்தாவில் உள்ளன. ஔரங்காபாத்துக்கு அருகில் கல்லில் குடைந்த பன்னிரண்டு குகைகளும் இதற்குச் சான்றாகும். பௌத்த , சமண , இந்து சார்புடைய குகைக் கோயில்கள் எல்லோரா என்னுமிடத்திலும் காணப்படுகின்றன. மேலும் சாஞ்சிக் கோயில் , தியோகாவிலுள்ள கங்காளிக் கோயில் மற்றும் உதயப்பூர் கோயில் யா... |
நாச்சனக்குதாரா விலுள்ள உள்ள மகாதேவர் ஆலயம் மேடை மீது கட்டப்பட்ட கோயில்கள் ஆகும். பிதார்கான் கோயில் ( கான்பூர் மாவட்டம் ) , தியோகார கோயில் ( ஜான்சி மாவட்டம் ) சாரநாத்தில் உள்ள பெரிய கோயில் , திகாவா வில் உள்ள சிவன் கோயில் ( ஜபல்பூர் மாவட்டம் ) பூமாராவில் உள்ள சிவன் கோயில் ( மத்திய பிரதேசம் ) போன்ற கோயில்களை கருங்கல் மற்ற... |
வராக மூர்த்தி ( உதயகிரி ) சிவன் , பார்வதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. புத்தரது எண்ணற்ற சிலைகள் சாரநாத் திலும் மதுராவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தியோகர் மற்றும் மதுராவில் உள்ள விஷ்ணு சிலை , காசியிலுள்ள கார்த்திகேயன் சிலை , கௌசாம்பியுள்ள சூரிய சிலைகள் மேலும் சிவலிங்கங்கள் , சமண சிலைகள் போன்றன யாவும் குப்தர் காலச் சிற்பக்... |
காட்டப்பட்டுள்ளனர். அஜந்தாவில் காணப்படும் குகைகளின் ஓவியங்களில் தாயும் சேயும் , புத்தரின் துறவு , மரணப்படுக்கையில் இருக்கும் அரசி , நடன மகளிர் , குரங்குகள் , புத்தர் , திருஉருவங்கள் அவரது போதனைகள் , வாழ்க்கை நிகழ்ச்சிகள் போன்றன சித்திரிக்கப்பட்டுள்ளன. இசையும் நடனமும் குப்தர் காலத்தில் இசையும் நடனமும் செழித்தோங்கிய காலம... |
சிற்பங்களிலும் ஓவியங்களிலும் நாணயங்களிலும் காணப்படுகின்றன. காலக் கண்ணாடியாக அஜந்தா குகை ஓவியங்கள் இன்றும் மிளிர்வதைக் காணலாம். நாடகக்கலை காளிதாசரின் ‘ சாகுந்தலம் , ’ ‘ இரகுவம்சம் ’ ‘ குமாரசம்பவம் , ‘ மேகதூதம் ’ ஆகியன நாடகக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். Page 107 of 201 175 ‘ தேவி சந்திரகுப்தம் , ’ ‘ கௌமுதி ... |
நிருவாகத் துறைகள் மாநில அரசு மற்றும் மாநில நிருவாகத் துறைகள் , மாவட்ட ஆட்சிமுறை , நகர மற்றும் கிராம நிருவாக சபைகள் போன்றவை இந்திய பண்பாட்டிற்கு குப்தர்களால் வழங்கப்பட்ட கொடைகள் எனலாம். 2. காளிதாசரின் ' சாகுந்தலம் , ’ ‘.விக்கரமோர்வசியம் , ’ ‘ இரகுவம்சம் ’ ‘ குமாரசம்பவம் , ’ ‘ மேகதூதம் ' மற்றும் பல இலக்கிய படைப்புகள் குப... |
வியாக்கரணம் ( இலக்கணம் ) மற்றும் அமரரரின் நிகண்டு போன்ற நூல்கள் இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன. 4. குப்தர் கால நீதித்துறை மத்திய , மாநில அரசுகளின் கீழ் செயல்பட்டதை இன்றைய நீதித் துறையைப் போன்ற முறைகளையே பறைசாற்றுகின்றன. 5. குப்தர் காலத்தின் சமயச் சார்பற்ற ஆட்சிமுறையானது நமது இந்திய பண்பாட்டிற்கு அடிகோல... |
வளர்ச்சிக்கும் துணை புரிந்தன. 7. சாரநாத் , மதுரா , அஜந்தா , எல்லோரா , பாக் ( Bagh ) போன்ற இடங்களில் உள்ள சிற்பங்கள் , ஓவியங்கள் போன்ற கலை அம்சங்கள் யாவும் இந்தியப் பண்பாட்டின் சிறந்த கூறுகளாக விளங்குகின்றன. எனவே குப்தர் காலம் ‘ பொற்காலம் ’ என்பர். 176 7.2 , பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1. குப்த மன்னர்களி... |
போற்றும் புராணங்கள் யாவை ? 6. குப்தர்கால வழிபாடுகள் யாவை ? 7. குப்தர் கால நான்கு வகை கட்டடக் கலைகள் யாவை ? 8. குப்தர்கால ‘ ஓவியங்கள் ’ எங்கு காணப்படுகின்றன ? 9. குப்தர்கால ' நாடகக் கலைக்கு ' சிறந்த எடுத்துக்காட்டுகள் யாவை ? 10. குப்தர்கால ‘ சிற்பக்கலைக்கு ' சில எடுத்துக்காட்டுகள் கூறு ? 11. இசையும் நடனமும் குப்தர் காலத... |
குப்தர்கால ‘ மத்திய நிர்வாகம் ’ எவ்வாறு செயல்பட்டது ? குப்தர் கால ‘ நீதித்துறையின் ' செயல்பாட்டு முறையினை விளக்குக. 4. குப்தர்காலச் சமய நிலையை விளக்குக. இ. ஒரு பக்க அளவில் விடையளி 1 குப்தர் கால அரசியல் நிலையைப் பற்றி விளக்குக. 2. குப்தர்கால சமுதாயநிலை எவ்வாறு இருந்தது ? 3. குப்தர் கால கல்வி மற்றும் இலக்கியம் குறித்து வ... |
குறித்து ஒரு கட்டுரை வரைக. 3. இந்தியப் பண்பாட்டிற்கு ‘ குப்தர்களின் கொடை ’ குறித்து ஒரு கட்டுரை வரைக. 178 பிற்காலப் பல்லவர்களின் ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் ஒரு பொற்காலமாகத் திகழ்ந்தது. இவர்கள் சோழ , பாண்டியர்களுக்கு ஆட்சித்துறையில் முன்னோடிகளாய் திகழ்ந்தனர் என்பர். பல்லவர்களின் பேரரசு தொண்டை மண்டலம் என்பர். இது வடக்... |
பண்பாடு இவர்கள் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முடிய தொண்டை மண்டலப் பகுதியை சிறப்புடன் ஆட்சி செய்தனர். 7.3.2. சான்றுகள் 4. 5. 1. 2. மகேந்திரனின் ‘ மத்த விலாச பிரகசனம் ’ 3. மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய ‘ நந்திக்கலம்பகம் ’ தேவாரப் பாடல்கள் சீனப் பயணி யுவான் சுவாங்கின் குறிப்புகள் ஆம்பூர் மற்றும் ஒ... |
முதலாம் மகேந்திரவர்மன் ( கி.பி. 590 - கி.பி. 630 ) 2. முதலாம் நரசிம்ம வர்மன் ( கி.பி. 630 - கி.பி. 668 ) 3. இரண்டாம் மகேந்திரவர்மன் ( கி.பி. 668 - 670 4. முதலாம் பரமேஸ்வரன் ( கி.பி. 670- 6900 5. இராஜ சிம்மன் ( கி.பி. 690 - கி.பி. 730 ) 6. இரண்டாம் நந்திவர்மன் ( கி.பி. 731 - 796 ) போன்றோர் குறிப்பிடத்தக்க மன்னர்கள் ஆவர்... |
பண்பாடாகக் கருதப்பட்டது. வாரிசு அற்ற காலத்தில் முன்னாள் மன்னரின் சகோதரர் ஆட்சியின் பொறுப்பை ஏற்றான். நீதி , நிர்வாகம் , இராணுவம் போன்றவற்றிற்கு அரசனே தலைவனாவான். அரசனுக்கு ஆலோசனை வழங்க ' மந்திரி மண்டலம் ’ என்ற குழு செயல்பட்டது. அமைச்சர்களுக்கு ' பிரம்மராஜன் , ’ ‘ பேரையன் ’ என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டன. அரசனுக்கு உதவிய... |
நில அளவைத் துறை , காவல் துறை , வனத்துறை , இராணுவத்துறை என பல துறைகள் பிரிக்கப்பட்டு தனித்தனி உயர் அதிகாரிகளின் கீழ் சிறந்த முறையில் செயல்பட்டன. 180 ஆட்சிமுறை பல்லவநாடு பல ராஷ்டிரங்களாகவும் , ( மண்டலம் ) , ராஷ்டிரங்கள் கோட்டங்களாகவும் வளநாடுகளாகவும் ) , கோட்டம் நாடுகளாகவும் , நாடு ஊர்களாகவும் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செ... |
ராஷ்ரிகர் ’ என்பவர் மாநில ஆளுநராவார். இவர் கீழ் பல அதிகாரிகள் பணி புரிந்தனர். அரசகுமாரன் என்பவர் மாநிலப் பிரிவின் ஆட்சியாளராயிருந்தார். நாடு என்பது சிற்றூர்களை விடப் பெரியதும் கோட்டங்களை விடச் சிறியதுமாகும். அதனை நாட்டார் என்போர் கட்டுப்படுத்தினர். நாட்டுக்கு அடுத்தது ஊர். அதனை ஊரர் என்பவர் கட்டுப்படுத்தினர். ஆழ்வார் எ... |
இச்சிற்றூர்களை பிரம்மதேயச் சிற்றூர்கள் , தேவதானச் சிற்றூர்கள் என அழைத்தனர். ஒவ்வொரு சிற்றூரிலும் கிராம சபை ஒன்று இருந்தது. ஏரி வாரியம் , தோட்ட வாரியம் எனப் பல்வேறு வாரியங்கள் கிராம சபையின் பணிகளைச் செய்து வந்தன. நீதிமுறை பல்லவர்காலத்தில் நகரங்களில் அறங்கூறும் அவைகள் இருந்தன. அவை ‘ அதிகரணங்கள் ' என்று பெயர் பெற்றிருந்தன... |
கரணத்தான் ' எனப்பட்டார். பல்லவர் கால நீதிமன்றங்கள் வழக்குகளை மூன்று வித ஆதாரங்களைக் கொண்டு விசாரித்தன. அவை 1 சாட்சி 2. ஆவணம் 3. அயலார் சாட்சி என்பதாகும். எல்லா நீதி மன்றங்களுக்கும் தலைமை நீதிமன்றமாக ( பொதுமன்றம் ) விளங்கிய நீதிமன்றம் தருமாசனம் என்பதாகும். இது அரசரது நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. காரண தண்டம் , அதிகரணத... |
தேர்ப்படை , மற்றும் கடற்படை என ஐந்து வகைப்படைகள் இருந்தன. ‘ கூரம் ’ பட்டயம் படையின் வலிமையையும் போர் முறைகளையும் கூறுகின்றது. மேலும் , வேலூர் பட்டயம் படைக்கருவிகளைப் பற்றி தெளிவுப்படுத்துகின்றது. இவர்கள் காலத்தில் சிறந்த கடற்படை இருந்ததெனத் தெரிகிறது. முதலாம் நரசிம்மன் தனது நண்பன் மாறவர்மனுக்காக இலங்கை மீது படை நடத்தி ... |
என்ற நான்கு பிரிவுச் சமுதாயத்திற்குப் பல்லவர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர். இந்து சாஸ்திரக் கோட்பாடுகளைப் பின்பற்றி சமுதாயத்தை அமைத்தனர் என்று முதலாம் பரமேஸ்வரனின் ' கூரம் ' பட்டயமும் நந்திவர்மனின் காசக்குடி பட்டயமும் குறிப்பிடுகின்றது. பிராமணர்கள் , க்ஷத்திரியர் களைத் தவிர , வணிகர்கள் , கலைஞர்கள் , பொற்கொல்லர்கள் , கர... |
கருதப்பட்டனர். அவர்கள் சமயத்திலும் , கோயிற் பணிகளிலும் ஈடுபட்டனர். அவர்களுக்கு சொத்துரிமையும் இருந்தது. பெரும்பாலும் ஒருவன் ஒருத்தியையே மணக்கும் பழக்கம் காணப்பட்டது. அரசியரும் அரசகுலப் பெண்களும் பெரும்பாலும் கோயிற்பணிகளிலேயே ஈடுபட்டனர். மற்ற சமூகப் பெண்கள் நூல்நூற்றல் , நெசவு செய்தல் , பால் விற்றல் , பூவிற்றல் போன்ற வி... |
பருப்பும் வெண்ணெயும் ) அக்கார அடிசில் ( சர்க்கரைப் பொங்கல் ) நெய் கலந்த சோறு , அவல் அமுது , மற்றும் தயிர்ச் சோறும் உண்டனர். ஆடை அணிகலன்கள் பல்லவர் காலத்தில் பொதுவாக நீண்ட அங்கியான வேட்டி அணிந்தனர். செல்வந்தரும் , அரசக் குடும்பத்தாரும் ‘ உத்தரீயம் ’ எனப்படும் ஆடையை அணிந்தனர். மேலும் கலிங்கம் , பட்டு , பீதாம்பரம் போன்றவை... |
அணிகளும் , கால் கொளுசுகளும் அணியப்பட்டன. அரசியர் தலையில் மகுடம் , விலை உயர்ந்த நகைகள் அணிந்தனர். Page 111 of 201 183 7.3.6. சமய நிலை பல்லவர்காலச் சமயவாழ்க்கை கோயிலைச் சுற்றியே அமைந்திருந்தது. சிவன் , விஷ்ணு என்னும் கடவுளர் மீது பக்தி பெருக்கெடுத்தோடியது. சக்தி வழிபாடும் சிறப்புற்றிருந்தது மற்றும் சப்தமாதர் , ஜேஷ்டா வழி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.