id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
|---|---|---|---|
6999
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2021
|
திசம்பர் 21
|
வடக்கு அரைக்கோளத்தில், டிசம்பர் 21 ஆண்டின் குறுகிய நாள் ஆகும். இந்நாளைக் குளிர்காலம் ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர். தெற்கு அரைக்கோளத்தில், டிசம்பர் 21 ஆண்டின் மிக நீளமான நாள் ஆகும். இப்பகுதியில் இந்நாளைக் கோடை காலம் ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர்.
நிகழ்வுகள்
69 – வெசுப்பாசியான் உரோமைப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.
1124 – இரண்டாம் இனோரியசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1768 – நேப்பாள இராச்சியம் தோற்றுவிக்கப்பட்டது.
1832 – எகிப்தியப் படையினர் உதுமானியர்களை கொன்யா பொரில் தோற்கடித்தனர்.
1872 – சலஞ்சர் ஆய்வுப் பயணம் இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தில் இருந்து ஆரம்பமானது.
1902 – இலங்கையில் பூர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
1907 – சிலியப் படையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட குறைந்தது 2,000 சுரங்கத் தொழிலாளர்களைப் படுகொலை செய்தனர்.
1910 – இங்கிலாந்தில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 344 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1913 – உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் புதிர் "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.
1919 – அரசியல் எதிர்ப்பாளர் எம்மா கோல்ட்மன் என்ற அமெரிக்கர் உருசியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.
1923 – ஐக்கிய இராச்சியமும் நேப்பாளமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
1937 – உலகின் முதலாவது முழு-நீள இயங்குபடம் சினோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் வெளியிடப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: தாய்லாந்துக்கும் யப்பானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1946 – சப்பான், நான்கைடோ என்ற இடத்தில் 8.1 Mw அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1963 – சைப்பிரசில் துருக்கியர்களுக்கு எதிரான போராட்டம் தொடங்கியது.
1965 – அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை அறுமுகப்படுத்தப்பட்டது.
1967 – உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற தென்னாபிரிக்காவைச் சேர்ந்த லூயிசு நாசுகான்சுகி என்பவர் சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.
1968 – சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
1970 – எப்-14 போர் விமானத்தின் முதலாவது பறப்பு மேற்கொள்ளப்பட்டது.
1973 – அரபு-இசுரேல் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான ஜெனீவா மாநாடு ஆரம்பமானது.
1979 – ரொடீசியாவின் விடுதலைக்கான உடன்பாடு லண்டனில் கையெழுத்திடப்பட்டது.
1988 – இசுக்காட்லாந்தில் லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – உலகின் மிகப்பெரிய வானூர்தி அன்டனோவ் ஏ.என் 225 மிரியா பறக்க விடப்பட்டது.
1991 – கசக்ஸ்தானில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1992 – இடச்சு விமானம் பாரோ விமான நிலையத்தில் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.
1995 – பெத்லகேம் நகரம் இசுரேலியர்களிடம் இருந்து பாலத்தீனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2004 – ஈராக் போர்: ஈராக்கின் மோசுல் நகரில் அமெரிக்கப் படைகள் மீதான தற்கொலைத் தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
2007 – பாக்கித்தானில் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1118 – தாமஸ் பெக்கெட், ஆங்கிலேய ஆயர், புனிதர் (இ. 1170)
1550 – மான் சிங், முகலாயப் படைத்தலைவர் (இ. 1614)
1804 – பெஞ்சமின் டிஸ்ரைலி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1881)
1871 – நா. கதிரைவேற்பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1907)
1890 – ஹெர்மன் முல்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1967)
1892 – ரெபெக்கா வெஸ்ட், ஆங்கிலேய ஊடகவியலாளர், நூலாசிரியர் (இ. 1983)
1898 – இரா சுப்பிரேகு போவன், அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1973)
1920 – தெ. வ. இராசரத்தினம், இலங்கை வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி (இ. 1994
1921 – ஆர். உமாநாத், தமிழக இடதுசாரி அரசியல்வாதி (இ. 2014)
1932 – உ. இரா. அனந்தமூர்த்தி, இந்தியக் கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2014)
1937 – பண்ருட்டி இராமச்சந்திரன், தமிழக அரசியல்வாதி
1942 – கூ சிங்தாவ், சீனாவின் 6வது அரசுத்தலைவர்
1947 – பாக்கோ தே லூசீயா, இசுப்பானிய கித்தார் இசைக்கலைஞர் (இ. 2014)
1948 – ஈ. வெ. கி. ச. இளங்கோவன், தமிழக அரசியல்வாதி
1948 – சாமுவேல் எல். ஜாக்சன், அமெரிக்கநடிகர், தயாரிப்பாளர்
1949 – தோமசு சங்காரா, புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (இ. 1987)
1954 – கிரிசு எவர்ட், அமெரிக்க டென்னிசு வீரர்
1959 – கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தமிழக துடுப்பாட்ட வீரர்
1963 – கோவிந்தா, இந்தித் திரைப்பட நடிகர், பாடகர், அரசியல்வாதி
1967 – மிக்கைல் சாக்கஷ்விலி, ஜார்ஜியாவின் 3வது அரசுத்தலைவர்
1972 – ஜெகன் மோகன் ரெட்டி, இந்திய அரசியல்வாதி
1977 – இம்மானுவேல் மாக்ரோன், பிரான்சின் அரசுத்தலைவர்
1985 – ஆண்ட்ரியா ஜெரெமையா, இந்தியப் பின்னணிப் பாடகி, நடிகை
1989 – தமன்னா, இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
72 – தோமா (திருத்தூதர்), உரோமைப் புனிதர் (பி. 1)
1597 – பீட்டர் கனிசியு, டச்சு மதகுரு, புனிதர் (பி. 1521)
1940 – எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1896)
1942 – பிராண்ஸ் போவாஸ், செருமானிய-அமெரிக்க மானிடவியலாளர் (பி. 1858)
1975 – கோவை அய்யாமுத்து, தமிழக எழுத்தாளர், காந்தியவாதி (பி. 1898)
1986 – சோமசுந்தரம் நடேசன், இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1904)
1988 – நிக்கோ டின்பெர்ஜென், நோபல் பரிசு பெற்ற டச்சு ஆங்கிலேய மருத்துவர் (பி. 1907)
1998 – துரை விஸ்வநாதன், ஈழத்து பதிப்பாளர், தொழிலதிபர் (பி. 1931)
2006 – வரதர், ஈழத்தின் மறுமலர்ச்சி எழுத்தாளர் (பி. 1924)
2008 – கே. இந்திரகுமார், ஈழத்து எழுத்தாளர், நடிகர்
2010 – ஈழத்துப் பூராடனார், ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் (பி. 1928)
2011 – பி. கே. அய்யங்கார், இந்திய அணு அறிவியலாளர் (பி. 1931)
2015 – சார்வாகன், தமிழகத் தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (பி. 1929)
2018 – பிரபஞ்சன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர் (பி. 1945)
சிறப்பு நாள்
சங்கமித்தை நாள் (தேரவாத பௌத்தம்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பிபிசி: இன்றைய நாளில்
நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
திசம்பர் 21 வரலாற்று நிகழ்வுகள், OnThisDay.com
திசம்பர்
ஆண்டின் நாட்கள்
|
7001
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
|
ஜோசப் ஸ்டாலின்
|
சோசப் சுடாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் உருசிய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் சோசிப் விசாரியோனவிச் சுதாலின் (Iosif Vissarionovich Stalin, சியார்சிய மொழி: იოსებ ბესარიონის ძე ჯუღაშვილი, உருசிய மொழி: Иосиф Виссарионович Сталин, திசம்பர் 18, 1878 - மார்ச்சு 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியகுழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார். இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் உருசியா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது; அதன் பொருளாதாரம் மேம்பட்டது. சுடாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதாரச் சீரமைப்புகள் குறுகிய கால நோக்கிலும் தொலை நோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது. இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைப்படுத்தல் கொள்கையை (Great Purge) பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாகக் கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் பயங்கரவாதி (Great Terror) என்றும் அழைக்கப்பட்டார்.
வரலாறு
ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர் ஆவார். இயோசிப் விசாரி யோனோவின் டிலுகாசு விலி என்பது இவருடைய இயற்பெயராகும். இவர் திசம்பர் 6, 1878 இல் சியார்சியாவில் கோரி என்னும் நகரில் கேகே மற்றும் பெசோ தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவருக்கு முன் பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிடவே, ஒற்றை மகனாக இவர் வளர்க்கப்பட்டு வந்தார். சிறுவயது முதலே இவரின் எதிர்காலம் குறித்து இவருடைய பெற்றோரிடம் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. இவருடைய தாயார் கேகே இவரை நன்றாகப் படிக்க வைக்க விரும்பியிருக்கிறார். ஆனால், இவருடைய தந்தை பெசோ கொடிய வறுமை காரணமாக, இவரை சுயமாக உழைக்கச் செய்து குடும்பத்தை வாழவைக்கப் பணித்திருக்கிறார்.
ஜார்சியன் மொழி இவருடைய தாய்மொழியாகும். இது ரஷ்ய மொழியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனினும்,ரஷ்ய மொழியை இவர் பின்நாட்களில் கற்றுக் கொண்ட போதிலும், அதனை இவர் ஜார்சிய மொழிச்சாயலுடனேயே எப்போதும் பேசி வந்தார். தாயின் அரவணைப்பில் கோரி நகரிலுள்ள ஒரு மடாலயப் பள்ளியில் பல்வேறு உதவித் தொகைகளைப் பெற்றுக்கொண்டு இவர் கல்வி பயின்றார். அங்குப் படிக்கும் காலத்திலேயே, தன்முனைப்பும், மிகுதியான துணிச்சலும் இருந்த காரணத்தினால் பல்வேறு சமூகக் குழுக்களின் தலைமைப் பண்பை ஏற்று வழிநடத்தி வந்திருக்கின்றார். இவரது தலைமையிலான குழு முதலிடத்தில் காணப்பட்டது.
பதின் பருவத்தில் டிரிப்ளிசில் ஓர் இறையியல் கல்விக் கூடத்தில் கல்வி பயிலத் தொடங்கினார். அங்கு இவருக்கு, கார்ல் மார்க்சசின் சிந்தனைகளை கற்கும் சூழல் அமைந்தது. மார்க்சியக் கொள்கைகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, உடன் அங்கிருந்த உள்ளூர் பொதுவுடைமைக் கட்சி ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார். அக்கால கட்டத்தில் சோவியத் நாட்டை ஆட்சி புரிந்துவந்த சிசர் நிக்கோலசு-II என்பவரின் ஆட்சிக்கு எதிராக, அப்போது உருசியாவில் பல்வேறு குழுக்களின் மனநிலை நிலவியது. சிசர் நிக்கோலசு-II இன் முதலாளித்துவம், தனியார்மயம் மற்றும் முதல் உலகப்போரில் உருசியாவை வலிந்து ஈடுபடுத்திய செயல் போன்றவை மக்களிடையே பரவலான எதிர்ப்பை உருவாக்கி இருந்திருக்கிறது. பட்டம் பெற சில மாதங்கள் இருந்த நிலையில், 1899 இல், புரட்சிக் கருத்துகளைப் பரப்புரை செய்ததற்காக கல்விக் கூடத்திலிருந்து வெளியேறும சூழ்நிலை ஏற்பட்டது. கி.பி. 1900 இல் சுடாலின், ஒரு புரட்சியாளராக, சிசர் நிக்கோலசு-II க்கு எதிராக தனது முதல் உரையை நிகழ்த்தினார்.
அதன்பின்னர், தலைமறைவு புரட்சிக்குழுவினருடன் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்டாலின் முதன் முதலாகக் காவலர்களால் 1902 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 1903 ஆம் ஆண்டு வரை சைபீரிய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலைப் பெற்றதும் சிசர் நிக்கோலசு-II க்கு எதிராக நடந்த உருசியப்புரட்சி(1905) யின்போது புரட்சியாளர்களை ஒருங்கிணைக்கும் போல்செவிக்சின் (Bolsheviks) தலைமைப் பணியைச செவ்வனே செய்தார் சுடாலின். இதற்கிடையில், 1902-1913 கால கட்டத்தில் சுடாலின் பலமுறை சிறைக்குச் சென்றும், அச்சிறையிலிருந்து ஆறு தடவைத் தப்பிப் பிழைத்ததும் நடந்தேறி உள்ளன. இதனிடையில், தன்னுடன் இறையியல் கல்விக் கூடத்தில் படித்த தனது நண்பன் ஒருவனின் சகோதரியான யெகேத்தரினா என்னும் பெண்ணைக் காதலித்து 1904 இல் திருமணம் புரிந்தார்.
கி.பி.1905 இல் லெனினை ஸ்டாலின் முதன் முதலில் சந்தித்தார். அப்போது ஸ்டாலினின் திறமைகள் பற்றி அறிந்துகொண்ட லெனின் அவரை மிகவும் ஊக்கப்படுத்தினார். அதற்குப்பின் பல சமயங்களில் சுடாலின் நடத்தி முடித்த கொள்ளைகள் மூலம் போல்செவிக்சின் பொருளாதாரத்தை உயர்த்த உதவி உள்ளார். 1912 இல் லெனினின் கம்யூனிச கட்சியின் இதழான ப்ரவ்டா (Pravda) வின் செய்தியாசிரியராக (Editor) நியமனம் செய்யப்பட்டார். அதன்பின், அதே 1912 ஆம் ஆண்டில் போல்செவிக்சின் மத்திய குழுவில் ஸ்டாலின் உறுப்பினராக்கப்பட்டு கம்யூனிச இயக்கத்தின் முக்கிய நபராக உருவாக்கப்பட்டார். அவர் செய்தியாசிரியராக பணியாற்றியபோது தாம் எழுதிய முதல் புரட்சிக் கட்டுரையின் முடிவில் ஸ்டாலின் என்னும் புனைப்பெயரில் கையெழுத்திட்டதன் மூலமாக சோசப் ஸ்டாலின் எனும்பெயர் வரலாற்றில் நிலைத்துவிட்டது.
பதவியேற்றல்
1924ல் இலெனின் இறந்ததால் அந்த பதவிக்கான போட்டியில் சுடாலினும் இடிராட்சுகியும் இறங்கினர். சுடாலினும் காமனேவும் சினோவ்யேவும் தொழிற்துறை மேம்பாடடைய வேளாண்மையும் அதைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் இதர சமூகத்தினரின் வளர்ச்சியும் முக்கியம் எனக் கூறி வந்தனர். அதை சுடாலின் எதிர்த்ததுடன் ஒரே நாட்டில் சமவுடைமை என்னும் தத்துவத்தை முன்மொழிந்தார். ஆனால் அதை எதிர்த்த இடிராட்சுகி தொழிற்துறை வளர்ச்சி முதன்மை பெற வேண்டும் என்றும் அதில் உலகப்புரட்சி தேவை எனவும் கூறினார். ஆனால் சுடாலினின் அரசியல் வளர்ச்சியே சிறந்திருந்தது. இதனால் அவரின் சகாக்களான காமனேவும் சினோவ்யேவும் சுடாலினுக்கு எதிராக செயல்பட்டனர். ஆனால் அனைத்தையும் தாண்டி சுடாலினே ஆட்சியை பிடித்தார்.
மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் (1928 - 1942)
1927 இல் நடைபெற்ற புரட்சியின் 10 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் பின்னர், இப்புரட்சியின் அதிகார பூர்வமான பெயராக மாபெரும் அக்டோபர் சமூகவுடைமைப் புரட்சி என்னும் பெயரே வழங்கி வருகின்றது. இந்த பத்தாண்டு கொண்டாட்டத்தில் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களை சோசப் சுடாலின் செயல்படுத்தினார். முதலாம் ஐந்தாண்டு திட்டம் 1928ஆம் ஆண்டு முதல் 1932ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் கூட்டுப்பண்ணை விவசாயம், தொழிற்துறை வளர்ச்சி, தொடர்வண்டிகளின் முன்னேற்றம் போன்றவை முக்கியத்துவம் பெற்றன. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் 1933ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இதில் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை விட தொழில் வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. அதனால் இரண்டரை மடங்கு மூலதனம் ஒதுக்கப்பட்டது.
இந்த இரண்டு திட்டங்களின் விளைவாகப் பொறியியல் துறையில் இயந்திரங்கள் 44 விழுக்காடு வளர்ந்தது. கலனினக்கன், இடிரான்சுகாகசசு பர்க்கானா ஆகிய இடங்களில் நெசவாலைகளும் செலியபிசுக், கிசல், ரோவ்கா போன்ற இடங்களில் போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்கள் கட்டப்பட்டன. தானியங்கள் ஏற்றுமதிக்காக துர்கிசுத்தான் சைபீரிய இருப்புப் பாதை 1500 கிமீ தூரம் போடப்பட்டதால் ஏற்றுமதி அதிகமானது. குசுனட்சுக்கு, மாக்னிதோ, கோர்சுக் ஆகிய இடங்களில் இரும்பு, எஃகு ஆலைகள் திடங்கப்பட்டதால் நாட்டின் இயந்திர இறக்குமதி சிறிது சிறிதாக குறைந்து பின்னர் நிறுத்தவும் பட்டது. 6000 தொழில் நிறுவனங்கள் தோற்றம் பெற்றன. 2.5 இலட்சம் கூட்டுப்பண்னைகள் உருவாக்கப்பட்டது. 1913ல் இருந்ததை விட 5 மடங்கு நாட்டின் வருவாய் அதிகரித்து.
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தால் இரசியா எண்ணெய் உற்பத்தியில் முதலாம் நாடாகவும், எஃகு உற்பத்தியில் மூன்றாம் நாடாகவும், நிலக்கரி உற்பத்தியில் நான்காம் நாடாகவும் வளர்ந்தது. தொழில் ஏடுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் தொழிலாளிகளின் தினசரி அலுவல்களும் பணிகளும் பதிவு செய்யப்பட்டன.
இறப்பு
இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போதே சுடாலினின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இவரின் அதிக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் தமனிக்கூழ்மைத் தடிப்பு ஏற்பட்டது. மார்ச்சு 5,1953 ஆம் ஆண்டு இவருக்கு இதயத்திசு இறப்பு ஏற்பட்டதால் இறந்தார்.
மூலம்
மேற்கோள்களும் குறிப்புகளும்
வெளி இணைப்புகள்
ஸ்டாலினின் படைப்புகள்
ஸ்டாலினின் கடிதங்களும் பிற ஆவணங்களும்
இவற்றையும் பார்க்க
விளாடிமிர் லெனின்
சோவியத் ஒன்றியத் தலைவர்கள்
1878 பிறப்புகள்
1953 இறப்புகள்
தனிநபர் வழிபாடு
|
7003
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
|
ஸ்டாலின்
|
ஸ்டாலின் என்ற பெயர் பின்வரும் தலைப்புகளைக் குறிக்கலாம்.
ஜோசப் ஸ்டாலின் - புரட்சியாளர் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் இரண்டாவது தலைவர்
மு. க. ஸ்டாலின் - தமிழக அரசியல்வாதி.
எவ்ரில் ஸ்டாலின் - இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.
ஸ்டாலின் (2006 திரைப்படம்) - சிரஞ்சிவி நடித்த தெலுங்குத் திரைப்படம்
|
7012
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
|
கடல்
|
கடல் () அல்லது ஆழி(Sea), உலகப் பெருங்கடல் (World ocean), அல்லது வெறுமனே பெருங்கடல் (Ocean) என்பது புவியின் பரப்பில் 70 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ள உப்பான நீர் கொண்ட தொடர்ச்சியான (connected) நீர்நிலை ஆகும். இது புவியின் பருவநிலையை நிலைப்படுத்துவதோடு நீர் சுழற்சி, கரிமச் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி ஆகியவற்றிலும் முதன்மைப் பங்காற்றுகிறது. பழங்காலங்களிலிருந்து கடலில் பயணங்கள் செய்யப்பட்டும் தேடல்கள் நடந்தும் வந்தாலும், அறிவியல் அடிப்படையிலான கடலியல் அல்லது பெருங்கடலியல் என்பது பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலை ஜேம்ஸ் குக் 1768 க்கும் 1779 க்கும் இடைப்பட்ட காலத்தில் கண்டறிந்து ஆராய்ந்ததில் இருந்துதான் தொடங்குகிறது. கடல் எனும் சொல்லானது பெருங்கடலின் சிறிய, பகுதியளவு நிலத்தால் சூழப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆழி, விரிநீர், பெருநீர், பருநீர், முந்நீர் முதலானும் குறிக்கப்படுகிறது.
கடல் நீரில் மிக அதிகளவு கரைந்துள்ள திடப்பொருள் சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) ஆகும். மேலும் இந்நீரில் மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற உப்புகளும் மேலும் பல தனிமங்களும் உள்ளன. இதில் சில குறைந்த செறிவுத்தன்மையுடன் காணப்படுகின்றன. உவர்ப்புத் தன்மை (salinity) இடத்திற்கு ஏற்றாற்போல் வெகுவாக வேறுபடுகிறது. கரைக்கு அருகிலும் கழிமுகப் பகுதியிலும் (ஆறும் கடலும் கலக்கும் இடம்) ஆழக்கடல் பகுதியிலும் உவர்ப்புத் தன்மை குறைவாகக் காணப்படுகிறது. எவ்வாறேனும், பெருங்கடல்களில் கரைந்திருக்கும் உப்புகளின் "ஒப்புமை" விதங்கள் பொதுவாக ஒன்றாகவே இருக்கின்றன; பெரிதாக மாறுவதில்லை. கடல் பரப்பின் மீது வீசும் காற்றினால் அலைகள் உருவாகின்றன. இவை ஆழம் குறைவான நீரை அடையும்போது கொந்தளிப்புடன் உடைந்து சிதறுகின்றன. வீசும் காற்றின் உராய்வின் மூலமாக பரப்பு நீரோட்டங்கள் உருவாகின்றன. இது பெருங்கடல்கள் முழுவதும் மெதுவான ஆனால் நிலையான ஒரு நீரோட்டத்தை ஏற்படுத்துகிறது. இந்த நீர்ச்சுழலின் திசைகள் கண்டங்களின் வடிவங்கள், புவியின் சுழற்சி (சுழலகற்சி விளைவு; Coriolis effect) போன்ற காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. உலகளாவிய இயங்கு பட்டை என்று அறியப்படும். ஆழ்கடல் நீரோட்டங்கள், அருகில் இருக்கும் துருவங்களில் இருந்து அனைத்து பெருங்கடல்களுக்கும் குளிர் நீரை எடுத்துச் செல்கின்றன. ஓதங்கள் தினமும் இருமுறை கடல்மட்டத்திலிருந்து உயர்ந்து தாழ்கின்றன. இந்த ஏற்ற இறக்கமானது புவியின் சுழற்சியினாலும் புவியைச் சுற்றும் நிலவின் ஈர்ப்பு விசையினாலும் மிகக்குறைந்த அளவு சூரியனாலும் ஏற்படுகின்றன. ஓதங்கள் விரிகுடாக்களிலோ கழிமுகங்களிலோ அதிக வீச்சுடன் இருக்கும். அழிவுத்தன்மை கொண்ட ஆழிப்பேரலைகள் கடலடி நிலநடுக்கங்களால் ஏற்படுகின்றன. இந்த நிலநடுக்கங்கள் கடலடியில் ஏற்படும் கண்டத்தட்டு நகர்வு, எரிமலை வெடிப்பு, பெரும் நிலச்சரிவு அல்லது பெரிய விண்வீழ்கற்களால் ஏற்படுகின்றன.
வைரசுகள், பாக்டீரியங்கள், புரோடிஸ்ட்கள், பாசிகள், தாவரங்கள், பூஞ்சைகள் இவற்றுடன் விலங்குகள் போன்ற பெரும் அளவிலான உயிரினங்கள் கடலில் வாழ்கின்றன. இந்த உயிரிகள் சூரியஒளி அதிகம் படும் பரப்பு நீர் முதல் சூரிய ஒளியே படாத அதிக அழுத்தத்திலும் குளிர்ச்சியிலும் இருட்டிலும் இருக்கும் அதிஆழ நீர் வரை பரவியுள்ளன. குறுக்குக் கோடு வாக்கில் (latitude) கடலின் தன்மையும் மாறுகிறது. எடுத்துக்காட்டாக, ஆர்க்டிக் பனிக்கு அடியில் குளிர் நீரையும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வண்ணமயமான பவளப் பாறைகளையும் கடல் கொண்டுள்ளது. முதன்மையான பல உயிரினக் குழுக்கள் கடலில்தான் சிறந்துவந்தன (evolved). மேலும், உயிரும் கடலிலேயே தோன்றியிருக்கக்கூடும்.
கடல் மக்களுக்குக் கணிசமான அளவு உணவுப் பொருட்களைத் தருகிறது. இதில் முதன்மையானதாக மீன், ஆளிகள், கடல்வாழ் பாலூட்டிகள், கடல்பாசி போன்றவை அடங்கும். கடல்பாசிகள் காட்டில் அறுவடை செய்யப்பட்டோ நீருக்கடியில் வளர்க்கப்பட்டோ கிடைக்கின்றன. வணிகம், பயணம், கனிமப் பிரித்தெடுப்பு, திறன் ஆக்கம் (power generation), போர், ஓய்வுநேரச் செயல்பாடுகளான நீச்சல், அலைச்சறுக்கு (surfing), பாய்மரப் பயணம் (sailing), கருவியுதவியுடன் குதித்தல் (scuba diving) போன்றவற்றுக்கும் கடல் பயன்படுகிறது. மாசுபாட்டினால் கடல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. வரலாறு முழுதும் கடல் பல பண்பாடுகளிலும் பெரிதும் உதவியுள்ளது. கடல் ஓமரின் ஒடிசி போன்ற இலக்கியங்களிலும் முதன்மையான கூறாக இருந்திருக்கிறது. இது கடல்சார் ஓவியத்திலும், அரங்கங்களிலும், பண்டைய இசையிலும் பெரும்பங்காக இருந்து வந்துள்ளது.
வரையறை
கடல் புவியின் அனைத்துப் பெருங்கடல் நீரையும் உடனிணைத்த ஓர் அமைப்பாகும். இவ்வமைப்பில் "பெருங்கடல்கள்" என்று அழைக்கப்படும் அட்லாண்டிக், பசிபிக், இந்தியப் பெருங்கடல், தென்முனைப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல் ஆகிய ஐந்தும் அடங்கும். "கடல்" எனும் சொல் குறிப்பாக குறைந்த அளவு கடல்நீரைக் கொண்டவற்றைக் குறிப்பிடப் பயன்படுகின்றது. அதாவது செங்கடல், கருங்கடல் போன்றவை.
கடலைக் குறிக்கும் பிற சொற்கள்
தமிழில் கடலானது அரலை, அரி, அலை, அழுவம், அளம், அளக்கர், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலநிதி, சலராசி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என பல சொற்களால் தமிழில் கடல் குறிப்பிடப்படுகிறது.
கடலின் இயற்பியல்
சூரியக் குடும்பத்தில் நீர்ம நிலையில் (திரவ நிலை) புறப்பரப்பில் நீரைக் கொண்டுள்ள ஒரே கோள் புவியே ஆகும். ஆனால், சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள புவியை ஒத்த கோள்களில் பெருங்கடல்கள் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. புவியின் புறப்பரப்பின் 70 விழுக்காட்டிற்கும் மேலாக கடல் நீரால் சூழப்பட்டுள்ளது. புவியின் 97.2 விழுக்காடு நீரானது கடலிலேயே காணப்படுகிறது. இது கிட்டத்தட்ட என்ற அளவுக்குச் சமம். மீதி 2.15 விழுக்காடு நீரானது பனியாறுகளிலும், கடல் மேல் உறைந்த பனிக்கட்டியிலும் அடங்கியுள்ளது. 0.65 விழுக்காடு நீரானது நீராவி, பிற நன்னீர் ஏரிகள், ஆறுகள், நிலத்தடி நீர் மற்றும் காற்றிலும் உள்ளது. விண்வெளியிலிருந்து பார்க்கும்போது நமது கோள் நீல நிற கோலி போன்று காட்சியளிக்கும். அறிபுனை எழுத்தாளர் ஆர்தர் சி. கிளார்க் நமது புவியில் கடலே ஓர் ஆதிக்கமான அம்சமாக இருப்பதால் "புவி (Earth)" என்று அழைப்பதற்குபதில் "பெருங்கடல் (Ocean)" என்று இதனை அழைக்கலாம் என்று கூறினார்.
பெருங்கடல் இயற்பியல் (Physical Oceanography) அல்லது கடல் இயற்பியல், என்பது கடலின் புறவியல் (இயற்பியல்) பண்புகளான வெப்பநிலை-உவர்ப்புத் தன்மை கட்டமைப்பு, கலப்பு, அலைகள், உள்ளக அலைகள், புறப்பரப்பு ஓதங்கள். உள்ள்க ஓதங்கள், சுழற்சிகள் ஆகியவற்றைப் பற்றிய படிப்பு ஆகும். சுழற்சிகள் (currents), ஓதங்கள், அலைகள் வடிவிலான நீரின் இயக்கமானது கடற்கரையோரப் பகுதிகளில் பருவநிலை மாற்றம் போன்றவற்றுக்குக் காரணமாக உள்ளது. கடலின் புவியியல் என்பது பெருங்கடல் வடிகால்களின் வடிவத்தையும் அவற்றின் நீட்சியையும், மேலும் கடலில் முடியும் நிலப்பகுதியின் கரைகளையும் பற்றிய படிப்பாகும். கடல் படுகையின் வடிவமைப்பும் அதன் நீட்சியும் புவியிலுள்ள பொருட்கள் எதனால் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய உதவுகின்றன. மேலும், இவற்றின் மூலம் கண்ட நகர்வு, நிலநடுக்க பாதிப்புள்ள பகுதிகள், எரிமலைப் பகுதிகளின் செயல்பாடுகள், படிவுப் பொருட்களின் மூலம் படிவுப் பாறைகள் உருவான விதம் ஆகியவற்றைப் பற்றி அறிய முடிகிறது.
கடல் நீர்
கடலிலுள்ள நீரானது 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த புவியின் எரிமலைகளினால் உருகிய பாறைகளில் இருந்து வெளிப்பட்ட பொருள்களினால் உருவானது என்று எண்ணப்பட்டது. ஆனால், அண்மைய ஆய்வுகள் புவியின் நீரானது விண்வீழ்கற்களிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறுகின்றன.
பெருங்கடல்கள் உப்பு நீரைக் கொண்டுள்ளது. உப்புக் கனிமங்கள் நிலத்திலிருந்து ஆறுகள் வழியாக கடலில் கலப்பதால், கடல்நீர் உப்புத் தன்மைக் கொண்டுள்ளது. வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயு, மழை நீருடன் கலந்து சிறிது அமிலத் தன்மையாக மாறி, பின் மலைநீர் ஆறாக உருவமாறி, மலைப் பாறைகள் மற்றும் மண்னில் உள்ள பலவகையான உப்பு முதலிய கனிமங்களுடன் கலந்து இறுதியாக கடலில் கலப்பதாலும் கடல் நீர், அருந்த முடியாத அளவிற்கு உப்புநீராக மாறுகிறது. மேலும் கடலுக்கடியில் உள்ள எரிமலைகள் நீராவியை கக்குவதாலும், எரிமலைகள் வெடிப்பதாலும், புவிக்கடியில் உள்ள உப்புக் கனிமங்கள் கடலில் கலப்பதால் கடல்நீர் உப்புத் தன்மையாக மாறுகிறது.
இதனால் கடல் நீர் உவர்ப்பு தன்மையாக உள்ளது.
உவர்ப்புத்தன்மை பொதுவாக ஆயிரத்தில் இத்தனை பகுதிகள் (parts per thousand - இது ‰ குறி கொண்டோ "/ மில்லியன்" என்றோ குறிப்பிடப்படுகிறது) என்று அளக்கப்படுகிறது. ஒரு திறந்த பெருங்கடலின் ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் திடப்பொருளைக் கொண்டுள்ளது. அது 35 ‰ என்று குறிப்பிடப்படுகிறது. (பெருங்கடலின் 90% நீரானது 34‰ முதல் 35‰ வரையிலான உவர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ளன). நடுநிலக்கடல் சிறிது அதிகமாக 37 ‰ என்ற அளவைக் கொண்டுள்ளது. அந்த நீரில் சாதாரண உப்பு, சோடியம், குளோரைடு ஆகியவை 85 விழுக்காட்டு அளவில் உள்ளன. மேலும் அதில் மக்னீசியம், கால்சியம் ஆகியவற்றின் உலோக அயனிகளும், சல்ஃபேட், கார்பனேட், புரோமைடு போன்றவற்றின் எதிர்மின் அயனிகளும் கரைந்துள்ளன. பல்வேறு கடல்களில் வெவ்வேறு உவர்ப்புத் தன்மை காணப்பட்ட போதிலும் ஒப்புமை பங்கீட்டளவு உலகம் முழுதும் நிலையான ஒன்றாகவே உள்ளது. கடல் நீர் மனித சிறுநீரகங்களுக்கு மிகவும் ஆபத்தானது. அதிலுள்ள அதிகப்படியான உப்பினை அவற்றால் சுத்திகரிப்பு செய்யமுடியாது. ஆனால், எதிர்மறையாக நிலம் சூழப்பட்ட அதிஉவர் ஏரிகள் (hypersaline lakes) சிலவற்றில், எடுத்துக்காட்டிற்கு சாக்கடல் ஆனது ஒரு லிட்டரில் 300 கிராம் கரைந்த திடப்பொருள்களைக் கொண்டுள்ளது (அதாவது 300 ‰)
மேற்பரப்பு நீரின் ஆவியாதல் வீதம் (உயர் வெப்பநிலை, காற்று வீசும் வீதம், அலை இயக்கத்தினால் அதிகரிக்கும்), வீழ்படிவாக்கும் திறம், கடல் பனி உருகுதல் அல்லது உறைதல், பனியாறு உருகுதல், புதிய ஆற்று நீர் உள்புகுதல், வெவ்வேறு உவர்ப்புத் தன்மை கொண்ட நீர்நிலைகளின் கலப்பு ஆகியவற்றால் கடலின் உவர்ப்புத் தன்மை மாறுகிறது. எடுத்துக்காட்டாக, பால்டிக் கடலின் குளிர்ச்சியான சூழலுள்ள குறைந்த ஆவியாகும் தன்மை, நிறைய ஆறுகளின் கலப்பு இவைமட்டுமன்றி, வடக்குக் கடலில் இருந்து குளிர்ந்த நீர் அடிக்கடி இக்கடலில் வந்து நிரம்புதல் போன்றவற்றால் இதன் அடி அடுக்கு அடர்வானதாக மாறி அதன் பரப்பு அடுக்குகளுடன் கலக்க முடியாமல் போகிறது. அதனால் மேல்மட்ட அடுக்கின் உவர்ப்புத் தன்மை 10இலிருந்து 15 ‰ வரை மட்டுமே உள்ளது. மேலும் அதன் கழிமுகப் பகுதிகளில் இன்னும் குறைவானதாக இருக்கிறது. வெதுவெதுப்பான செங்கடல் அதிகபட்ச ஆவியாதல் அளவையும் ஆனால் குறைவான வீழ்படிவாதல் பண்பையும் பெற்றிருக்கிறது; சில ஆறுகளும் அதனுள் கலக்கின்றன. மேலும், ஆதாம் வளைகுடாவுடன் கலக்கும் பாப்-எல்-மாண்டெப் ஆனது மிகவும் குறுகலாக உள்ளது. எனவே அதன் சராசரி உவர்ப்புத் தன்மை 40 ‰ என்ற அளவில் உள்ளது.
கடலின் வெப்பநிலை அதன் பரப்பில் விழும் சூரிய ஒளியைப் பொறுத்தது. வெப்பமண்டலப் பகுதிகளில் உச்சியில் சூரியன் இருக்கும்பொழுது அதன் வெப்பநிலை30 °C ஆக இருக்கும். ஆனால், துருவப் பகுதிகளில் கடல் வெப்பநிலை கடலிலுள்ள பனியுடன் ஒரு சமநிலையில் உள்ளது. அது எப்போதும் -2 °C என்ற அளவில் உள்ளது. பெருங்கடல்களில் தொடர்ச்சியான ஒரு நீரோட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. வெதுவெதுப்பான பரப்பு நீரோட்டங்கள் வெப்பமண்டலத்தை விட்டு விலகுகையில் குளிர்கின்றன. குளிர்வதால் அந்நீரின் அடர்த்தி அதிகரிக்கிறது. அதனால், அது கீழே செல்கிறது. அந்தக் குளிர் நீர் ஆழக் கடல் நீரோட்டத்தின் காரணமாக மீண்டும் நிலநடுக்கோட்டினருகில் வருகிறது. இந்த சுழற்சி முழுவதும் வெப்பநிலை அடர்த்தி மாற்றங்களால் நிகழ்கிறது. உலகம் முழுவதும் அடி ஆழக்கடல் வெப்பநிலை -2 °C முதல் 5 °C வரை இருக்கலாம்.
பெருங்கடல்கள்
அத்திலாந்திக் பெருங்கடல்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடல் இதுவாகும். இதன் மொத்தப்பரப்பு 106,4 மில்லியன் சதுர கிலோ மீட்டர் ஆகும். இது பூமியின் பரப்பில் சராசரியாக இருபது சதவிகிதம் ஆகும். இதன் மேற்கு பகுதியில் வட அமெரிக்க, தென் அமெரிக்க கண்டங்களும், கிழக்கு எல்கையில் ஐரோப்பாவும், ஆப்பிரிக்காவும்அமைந்துள்ளன. இக்கடலின் மிக ஆழமான பகுதி ப்யூரிடோ ரிகோ ஆகும். அட்லாண்டிக் கடலின் சராசரி ஆழம் 28,232 அடிகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 10,936 அடிகள் ஆகும்.
தென்முனைப் பெருங்கடல்
.
அன்டார்க்டிக் நிலபரப்பைச்சூழ்ந்துள்ள கடல்பரப்பு ஆகும். இது பனிபாறைகள் நிரம்பிய ஒரு குளிர்ந்த கடல் ஆகும். இங்கு பத்து டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் இரண்டு டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெட்ப நிலை நிலவுகிறது. இங்கு பனிப்பாறைகள் கடல் மட்டத்திற்கு கீழ் பல நூறு அடிகளுக்கு மிதந்துக் கொண்டிருக்கிறது. மார்ச் மாதங்களில் பனிப்பாறைகளின் பரப்பளவு 26 லட்சம் சதுர கி.மீ. ஆக இருக்கும். செப்டம்பர் மாதத்தில் இதன் பரப்பு குறைந்து 19.8 லட்சம் சதுர கி.மீ ஆக ஆகி விடுகிறது. இக்கடல் ராஸ் கடல், அமுன்ட்சென் கடல், வெடல் கடல் மற்றும் அன்டார்க்டிகா விரிகுடாக்களையும், இன்னும் பல விரிகுடாக்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது.
உலகின் நான்காவது பெருங்கடலாக விளங்குவது அன்டார்க்டிக் பெருங்கடல். இது பல நேரங்களில் தெற்கு பெருங்கடல் என அழைக்கப்படுகிறது. 2000 - ஆம் ஆண்டில் சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இக்கடலின் எல்லையை விரிவுபடுத்தி 60 டிகிரி தெற்கு ரேகைக்கு தெற்கே உள்ள கடல் பகுதிகளை அன்டார்க்டிக்காவுடன் இணைத்தது. தற்போது இதன் மொத்த பரப்பளவு இரண்டு கோடியே மூன்று லட்சத்து இருபத்தியேழாயிரம் சதுர கி.மீ. ஆகும். 4,000 முதல் 5,000 மீட்டர் ஆழம் காணப்படுகிறது.
இக்கடல் பகுதிகளில் மிகப் பெருமளவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் நிறைந்துள்ளன. சீல் எனப்படும் கடல் சிங்கங்களும், திமிங்கலங்களும் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.
ஆர்டிக் பெருங்கடல்
ஆர்க்டிக் பெருங்கடல், உலகிலுள்ள பெருங்கடல்களுள் சிறியது. இது முழுவதுமாக ஆர்க்டிக் வட்டத்திற்கு மேல் அமைந்துள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 14,090,000 சதுர கி.மீ. ஆகும். இதன் சராசரி ஆழம் 3,658 மீ. இதன் மிக அதிகபட்ச ஆழம் 4,665 மீ. ஆகும். இப்பெருங்கடல் முழுவதுமாக நிலப்பரப்பால் சூழப்பட்டுள்ளது. அலாஸ்கா - ரஷ்யா இடையே அமைந்துள்ள பேரிங் நீரிணையம், கிரீன்லாந்து - கனடா இடையே அமைந்துள்ள டேவிஸ் நீரிணையம், கிரீன்லாந்து - ஐரோப்பா இடையே அமைந்துள்ள டென்மார்க் நீரிணையம், நார்வேஜியன் கடல் போன்றவை ஆர்க்டிக் பெருங்கடலை வெளி உலகுடன் இணைக்கின்றன.
ஆர்க்டிக் பெருங்கடல் பூமி அடித்தட்டின் அடிப்படையில் இரு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. அவை யுரேசியன் தட்டு, வட அமெரிக்கத் தட்டு ஆகும். ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் கடல்களுக்கு இடையில் அவற்றின் விளிம்புகள் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. ஆர்க்டிக்கை சுற்றியுள்ள நிலப்பரப்புகளும், மூழ்கியுள்ள தட்டுப்பகுதிகளும் வெளி நீர் உட்புகாதவாறு தடுக்கின்றன. எனவே, இக்கடல் குளிர்ந்த நீர் நிறைந்த ஒரு நீர்த்தேக்கம் போல் உள்ளது.
ஆர்க்டிக் பெருங்கடலின் மையப்பகுதி நிரந்தரமாக பத்து அடி ஆழத்திற்கு பனிக்கட்டியாக உறைந்துள்ளது. வெயில் மாதங்களில் பனிக்கட்டிகளை சுற்றி நீர் சூழ்ந்து அவை மிதக்க துவங்கிவிடும். குளிர் மாதங்களில் வெயில் மாதங்களில் இருந்ததைப் போன்று இருமடங்கு அதிக பரப்பில் பனிக்கட்டி உறைந்து விடுகிறது.
ஆர்டிக் பெருங்கடல் அலைகளே இல்லாத பெருங்கடலாகும். இதில் கப்பற்பயணம் செய்ய முடியாது. குளிர்காலத்தில் உறைபனியாகவும், இதரப்பருவங்களில் பனிக்கட்டித் துண்டங்கள் மிதக்கும் பகுதியாகவும் இது விளங்குகிறது. 130 இலட்சம் ச.கி.மீ.க்கும் அதிகமான இடத்தை நிரப்பிக் கொண்டிருப்பதாலேயே பெருங்கடல் என்ற சிறப்புடன் இது அழைக்கப்படுகிறது.
இந்தியப் பெருங்கடல்
உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடல் ஆகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும்.
சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இரண்டாயிரமாண்டில் இந்திய பெருங்கடலின் எல்லைகளை வரையறை செய்தது. அதன்படி இந்திய பெருங்கடலின் தெற்கே 60 டிகிரிக்கு கீழ் உள்ள பகுதி பிரிக்கப்பட்டு தெற்கு பெருங்கடலின் (அன்டார்க்டிக்) எல்லை விரிவாக்கப்பட்டது.
இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதி ஜாவா நீர்வழி ஆகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். இக்கடலில் அதிகமாக பெட்ரோலியப் பொருள்களும், இயற்கை எரிவாயுக்களும் இயற்கையாக, மிகுதியாக காணப்படுகின்றன. உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மீன் போன்ற கடல் உணவுப் பொருள்கள் அதிக அளவில் கிடைப்பது இக்கடலின் மற்றுமொரு இயற்கை வளமாகும். இந்திய பெருங்கடல் நாடுகள் உட்பட ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, தாய்வான் நாட்டு மீன்பிடி கப்பல்கள் இதை தங்கள் மீன்பிடித் தளமாக பயன்படுத்துகின்றன.
இந்திய பெருங்கடல் முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா பகுதிகளை இது ஐரோப்பாவுடன் இணைக்கிறது
பசிபிக் பெருங்கடல்
உலகின் மிகப்பெரும் பரப்பளவை தன்னகத்தே கொண்ட பெருங்கடல் பசிபிக் (Pacific Ocean) ஆகும். பசிபிக் என்பதன் லத்தின் பொருள் அமைதியான கடல் என்பதாகும். வடக்கே ஆர்க்டிக் கடல் முதல் தெற்கே தென்கடல் வரை இது பரந்து விரிந்துள்ளது. மேற்கில் ஆஸ்திரேலியாவும், ஆசியாவும், கிழக்கே அமெரிக்கக் கண்டங்களும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. பதினாறு கோடியே தொண்ணுத்திரெண்டு லட்சம் ச.கி.மீ. பரப்பளவில் இக்கடல் அமைந்துள்ளது. சுமாராக 62 புள்ளி 2 கோடி கனசதுர கி.மீ. நீரை இக்கடல் கொண்டுள்ளது. உலக நீர் இருப்பில் 46 சதவிகிதத்தையும், உலகின் மொத்தப் பரப்பளவில் 30 சதவிகிதத்தையும் இக்கடல் கொண்டுள்ளது.
உலகிலேயே பெரிய கடல் பசிபிக் பெருங்கடலாகும். பூமியின் பரப்பளவில் 35.25 சதவிகிதம் கொண்டது. உலகிலேயே ஆழம் கூடிய மிண்டானா பகுதி இதிலுள்ளது. இதன் ஆழம் 11,516 மீட்டர். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தீவுகளும் இக்கடலில் தான் உள்ளன.
வடமேற்கு பசிபிக்கடலில் உள்ள மரியானா ட்ரென்ச் என்ற பகுதியே உலகிலேயே ஆழமான கடல் பகுதி ஆகும். இதன் ஆழம் 10,911 மீட்டர். பசிபிக்கின் சராசரி ஆழம் 4028 முதல் 4188 மீட்டர் ஆகும். இக்கடலில் சுமார் 25,000 தீவுகள் உள்ளன. பெரும்பாலான தீவுகள் தென் பசிபிக்கிலேயே கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் சில கடலில் மூழ்கி உள்ளன. பெரும்பாலானவை உயரமான தீவுகள். தற்போது பூமி தட்டின் நகர்வினால் பசிபிக் கடல் சுருங்கி வருகிறது. மாறாக அட்லாண்டிக் கடல் விரிவடைந்து வருகிறது. சராசரியாக ஆண்டிற்கு அரை கிலோ மீட்டர் சுருங்குகிறது.
பசிபிக் கடலின் மேற்கு எல்லையில் பல கடல்கள் அமைந்துள்ளன. அவை செலிபஸ் கடல் (Celebes Sea), கோரல் கடல் (Coral Sea), கிழக்குச்சீன கடல், ஜப்பான் கடல், தென் சீன கடல், சுலு கடல் (Sulu Sea), பிலிபைனி கடல் (Philippine Sea), டாஸ்மான் கடல் (Tasman Sea) மற்றும் மஞ்சள் கடல் போன்றவை ஆகும்.
கடல்கள்
அரபிக்கடல்
இந்தியாவிற்கு மேற்கே அமைந்துள்ள கடல் பகுதி அரபிக்கடல் என அழைக்கப்படுகிறது. இது பண்டைக் காலத்திலும், இடைக்காலத்திலும் பச்சிம் சமுத்திரம் என அழைக்கப்பட்டது. இக்கடலின் கிழக்கே இந்தியாவும், மேற்கே சவுதி அரேபியாவும் - ஆப்பிரிக்காவும், வடக்கே ஈரானும் - பாகிஸ்தானும், தெற்கே இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளன.
இக்கடலின் மிக அகலமான பகுதி ஏறத்தாழ 2400 கி.மீ. ஆகும். தெற்கில் இக்கடல் இந்தியப் பெருங்கடலுடன் கலப்பதால் இதன் தெற்கு எல்லையை அறுதியிட்டு கூற இயலாது. சிந்து, நர்மதை, தபதி ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன. ஓமன் வளைகுடா இதனை பாரசீக வளைகுடாவுடனும், ஏடன் வளைகுடா இதனைச் செங்கடலுடனும் இணைக்கின்றன. இக்கடலின் கரையில் ஏடன், கராச்சி, பம்பாய், கொச்சி போன்ற பெரிய துறைமுகங்களும், பல புகழ்பெற்ற நகரங்களும் அமைந்துள்ளன.
ஆரல் கடல்
ஆரல் கடல் ( Aral sea ) என்பது துர்க்கிஸ்தான் பகுதியில் காஸ்பியன் கடலுக்குக் கிழக்கே 240 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மிகப் பெரியதோர் உப்புநீர் ஏரியாகும். இந்த ஏரி உலகிலேயே நில உட்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்நிலை ஆகும். இதன் மொத்த பரப்பளவு 66,459 சதுர கி.மீ. ஆகும். இது 17 முதல் 68 மீட்டர் ஆழமுடையது. ஆரல் கடலில் பல தீவுகள் அமைந்துள்ளன. அமுதாரியா (Amu Darya), சைர் தாரியா ( Syr Darya ) ஆகிய ஆறுகள் இக்கடலில் கலக்கின்றன.
அயோனியன் கடல்
அயோனியன் கடல் ( Ionian Sea ) என்பது மத்தியதரைக் கடலின் ஆழமிக்க பகுதியாகும். இக்கடல் இத்தாலியையும் - சிசிலியையும், அல்பேனியாவிலிருந்தும் - கிரீசிலிருந்தும் பிரிக்கிறது. இக்கடலையும் அட்ரியாடிக் (Adriatic) கடலையும் ஆட்ராண்டோ நீர்ப்பிரிவு ( Strait of Otranto ) இணைக்கிறது. இக்கடலின் அகலம் 676 கி.மீ. ஆகும். சில பகுதிகளில் இக்கடலின் ஆழம் 5093 மீட்டர் ஆகும்.
இன்லான்ட் கடல்
ஜப்பான் நாட்டில் பசிபிக் பெருங்கடலில் கால்வாய் போன்று அமைந்துள்ளது இன்லான்ட் கடல் (Inland sea). இது தென் ஜப்பானில் ஹான்சிகோக், கியூஸ் ஆகிய தீவுகளுக்கிடையில் உள்ளது. ஆழம் குறைந்த இக்கடலில் 950 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இதன் மொத்த நீளம் 9505 கி.மீ. ஆகும். இது குறுகிய கால்வாய் ஒன்றின் மூலம் ஜப்பான் கடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்லான்ட் கடலின் கடற்கரைகளில் மக்கள் தொகை மிகுதி. இக்கடல் இயற்கை எழிலுடன் புகழ்பெற்று விளங்குகிறது.
வங்காள விரிகுடா
இந்தியாவின் கிழக்கே எல்லையாக அமைந்திருப்பது வங்காள விரிகுடா (Bay of Bengal) ஆகும். இது 21 லட்சத்து 73 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் வடகிழக்கே இக்கடல் அமைந்துள்ளது. இதன் மேற்கே இந்தியாவும், இலங்கையும் எல்லையாக உள்ளன. வடக்கே பங்களாதேசமும், மியான்மரும் (பர்மா), கிழக்கே பெனின்சுலாவும், தெற்கே இலங்கையின் தென் முனையும், இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவு வரையிலான கடலும் வங்காள விரிகுடாவின் எல்லைகளாக உள்ளன.
இக்கடலின் மேற்கே பல முக்கியமான ஆறுகள் கலக்கின்றன. மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவேரி போன்றவையே அவையாகும். வடக்கே பிரம்மபுத்திரா ஆறும் இக்கடலில் கலக்கின்றன. இக்கடலில் அமைந்துள்ள ஒரே தீவுக் கூட்டம் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகும். இதன் சராசரி ஆழம் 2,600 மீட்டர் ஆகும். இக்கடலின் அதிகபட்ச ஆழம் 4,694 மீட்டர்.
வங்காள விரிகுடாவில் எண்ணெய் வளமும், இயற்கை எரிவாயு வளமும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதிகமான கனிமவளம் நிறைந்த மண் இக்கடலில் நிறைந்துள்ளது. இங்கு அதிகமான மீன் வளம் உள்ளதால் கடற்கரை நாடுகளும், ஜப்பான் நாடும் மீன்பிடித்தலில் ஈடுபடுகின்றன. இக்கடல் பல பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த கடல்வழிகளைக் கொண்டுள்ளது. அவை பல சர்வதேச துறைமுகங்களை பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியாவின் கிழக்கு துறைமுகங்களுடன் இணைக்கின்றன.
பெருங்கடல் வாரியாக கடல்களின் பட்டியல்
அட்லாண்டிக் பெருங்கடல்
அர்கெந்தீனக் கடல்
பபின் குடா
சென். லாரன்ஸ் வளைகுடா
ஃபண்டி வளைகுடா
கரிபியன் கடல்
மெக்சிக்கோ வளைகுடா
சர்கசோ கடல்
வடகடல்
சேஸபீக் குடா
பால்டிக் கடல்
மத்திய பால்டிக் கடல்
போத்னியா வளைகுடா
போத்னியா குடா
போத்னியக் கடல்
பின்லாந்து வளைகுடா
ஹெப்ரைட்ஸ் கடல்
ஐரிஷ் கடல்
செல்டிக் கடல்
ஆங்கிலக் கால்வாய்
மத்தியதரைக் கடல்
ஏட்ரியாட்டிக் கடல்
ஈஜியன் கடல்
மிர்தூன் கடல்
கிரீட் கடல்
திரேசியன் கடல்
அல்போரன் கடல்
மர்மரா கடல்
கருங்கடல்
அசோவ் கடல்
கட்டாலன் கடல்
அயோனியன் கடல்
லிகுரியக் கடல்
திர்ரேனியக் கடல்
சித்ரா வளைகுடா
அன்டார்டிக் பெருங்கடல்
வேட்டெல் கடல்
ரோஸ் கடல்
கிரேட் ஆத்திரேலிய பைட்
சென். வின்சன்ட் வளைகுடா
ஸ்பென்சர் வளைகுடா
ஸ்காட்டியாக் கடல்
அமுன்சென் கடல்
பெல்லிங்க்ஷுசென் கடல்
டேவிஸ் கடல்
ஆர்க்டிக் பெருங்கடல்
ஹட்சன் குடா
ஜேம்ஸ் குடா
பேரன்ட்ஸ் கடல்
காராக் கடல்
பியூபோர்ட் கடல்
அமுன்சென் வளைகுடா
கிறீன்லாந்து கடல்
நோர்வே கடல்
சுக்சிக் கடல்
லப்டேவ் கடல்
கிழக்கு சைபீரியக் கடல்
வெண் கடல்
லிங்கன் கடல்
இந்தியப் பெருங்கடல்
செங்கடல்
ஏடென் குடா
பாரசீக வளைகுடா
ஓமான் வளைகுடா
அரபிக்கடல்
வங்காள விரிகுடா
அந்தமான் கடல்
திமோர் கடல்
பசிபிக் பெருங்கடல்
சிலியன் கடல்
பெரிங் கடல்
அலாஸ்கா வளைகுடா
சலிஷ் கடல்
கலிபோர்னிய வளைகுடா
ஒக்கொட்ஸ் கடல்
ஜப்பான் கடல்
செடோ உள்நாட்டுக் கடல்
கிழக்கு சீனக் கடல்
தெற்கு சீனக் கடல்
சூலு கடல்
செலேபெஸ் கடல்
மிண்டானோக் கடல்
பிலிப்பைன் கடல்
கமோட்ஸ் கடல்
ப்லோரெஸ் கடல்
பண்டா கடல்
அரபுராக் குடல்
தீமோர் கடல்
தாஸ்மான் கடல்
மஞ்சள் கடல்
பொகாய்க் கடல்
கோரல் கடல்
கார்பெண்டாரிய வளைகுடா
பிஸ்மார்க் கடல்
சொலொமன் கடல்
செரம் கடல்
ஹல்மஹெறக் கடல்
மொலுக்கக் கடல்
சாக்கடல்
ஜாவாக் கடல்
தாய்லாந்து வளைகுடா
நிலம் சூழ் கடல்கள்
ஆரல் கடல்
காஸ்பியன் கடல்
சாக்கடல்
கலிலேயக் கடல்
சால்டன் கடல்
உப்புப் பேரேரி
மேலும் பார்க்க
பெருங்கடல்
கடலியல்
உசாத்துணை
அமுதம் தகவல் களஞ்சியம் வலைவாசல்
மேற்கோள்கள்
நீர்நிலைகள்
மேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை
|
7014
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
|
கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை
|
கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை அல்லது கேண்டரின் கோணல்கோடு வாதம் (Cantor's diagonal argument) என்பது கியார்கு கேன்ட்டர் என்ற கணித அறிஞர் மெய்யெண்கள் (real numbers) எண்ணவியலா முடிவிலிகள் (uncountably infinite) என்று நிறுவுதற் பொருட்டு கையாண்ட நிறுவல் முறையைக் குறிக்கும். இந்த கணித உண்மைக்கு அவர் ஏற்கனவே வேறு ஒரு முறையில் நிறுவல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதே முறையைக் கொண்டு பல முடிவிலி கணங்களின் (sets) எண்ணவியலா தன்மையை நிறுவ முடிந்தது. இதன் விளைவாக இவ்வாறான அனைத்து நிறுவல்களுக்கும் "கோணல்கோடு சார்பின் மாறி" என்பது பொதுப் பெயராயிற்று.
மெய்யெண்கள் தொடர்பான நிறுவல்
கேண்ட்டரின் சொந்த நிறுவல் [0,1] என்ற மெய்யெண் இடைவெளி எண்ணவியலா முடிவிலி என்பது தான்.
முரண்பாடு வகை நிறுவல் (proof by contradiction) பின்வருமாறு:
தற்கோள் (assumption) பொருட்டு [0,1] இடைவெளி எண்ணப்படக் கூடியது என்று வைத்துக் கொள்வோம்.
மேற்கண்ட தற்கோளின்படி இந்த இடைவெளியிலுள்ள ஒவ்வொரு எண்ணுடன் ஒரு இயல்பெண் (natural number) என்ற விகிதமாக தொடர்பு படுத்தி தொடர்வு ஒன்றை ஏற்படுத்துவோம். அது (r1, r2, r3, ... ) என்று இருக்கட்டும்.
நாம் ஏற்கனவே அறிந்திருந்தபடி ஒவ்வொரு மெய்யெண்ணுக்கும் ஒரு பதின்பகுப்பு விரித்தல் (decimal expansion) இருக்கும்.
இந்த எண்களை இப்போது எந்த வகைப்படுத்தலும் இன்றி ஒரு குறிப்பில்வழி வரிசையில் எழுதவும். அந்த வரிசை பின்வருமாறு உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.
r1 = 0 . 5 1 0 5 1 1 0 ...
r2 = 0 . 4 1 3 2 0 4 3 ...
r3 = 0 . 8 2 4 5 0 2 6 ...
r4 = 0 . 2 3 3 0 1 2 6 ...
r5 = 0 . 4 1 0 7 2 4 6 ...
r6 = 0 . 9 9 3 7 8 3 8 ...
r7 = 0 . 0 1 0 5 1 3 5 ...
...
இந்த வரிசையிலுள்ள ஒவ்வொரு எண்ணிலிருந்தும் புள்ளியிலிருந்து அதன் வரிசையெண் இடத்தில் இருக்கும் இலக்கத்தை எடுத்து [0,1] இடைவெளியில் ஒரு மெய்யெண்ணை உருவாக்குவோம். எடுத்துக் கொண்ட ஒவ்வொரு இலக்கமும் தடித்த அடிக்கோடிட்ட குறியீடுகளில் தரப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தின் காரணமாகவே இந்நிறுவல் முறைக்கு "கோணல்கோடு நிறுவல்முறை" என்ற பெயர் ஏற்பட்டது.
r1 = 0 . 5 1 0 5 1 1 0 ...
r2 = 0 . 4 1 3 2 0 4 3 ...
r3 = 0 . 8 2 4 5 0 2 6 ...
r4 = 0 . 2 3 3 0 1 2 6 ...
r5 = 0 . 4 1 0 7 2 4 6 ...
r6 = 0 . 9 9 3 7 8 3 8 ...
r7 = 0 . 0 1 0 5 1 3 5 ...
...
தேர்ந்தெடுத்த இலக்கங்களைக் கொண்டு x என்ற ஓர் எண்ணைப் பின்வரும் முறையில் உருவாக்குவோம்.
k-ஆம் எண்ணின் k-ஆம் இலக்கத்தில் 5 இருந்தால் நாம் உருவாக்கும் எண்ணில் k-ஆம் இலக்கத்தில் 4 என்று எழுதுவோம்.
k-ஆம் எண்ணின் k-ஆம் இலக்கத்தில் 5-ஐத் தவிர வேறொரு எண்ணிருந்தால் நாம் உருவாக்கும் எண்ணில் k-ஆம் இலக்கத்தில் 5 என்று எழுதுவோம்.
நாம் மேற்கூறியவாறு உருவாக்கிய எண் (x) கண்டிப்பாக [0,1] இடைவெளியில் உள்ள ஒரு மெய்யெண்ணாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த எண்ணுக்கு ஒரு பதின்பகுப்பு விரிதல் உண்டு. அது நாம் எடுத்துக் கொண்ட எடுத்துக்காட்டு வரிசையில் பின்வருமாறு:
x = 0 . 4 5 5 5 5 5 4 ...
நமது முதலாவது தற்கோளின்படி [0,1] இடைவெளியில் உள்ள அனைத்து மெய்யெண்களையும் ( r1, r2, r3, ... ) நாம் வரிசைப் படுத்தி விட்டோம். ஆதலால், ஏதெனும் ஒரு n மதிப்புக்கு, rn = x என்று இருக்க வேண்டும்.
ஆனால், நாம் 4 மற்றும் 5 என்ற இலக்கங்களை 6-ம் படியில் தேர்ந்தெடுத்த முறையின் காரணமாக, x இலக்கம் nல் rnஇலிருந்து வேறுபடும்., ஆகவே, x பின்வரும் வரிசையில் ஒரு உறுப்பினராகாது.( r1, r2, r3, ... ).
ஆகையால், அந்த வரிசை [0,1] இடைவெளியில் உள்ள அனைத்து மெய்யெண்களின் தொகுப்பாகாது. இது நம் முதல் தற்கோளோடு முரண்படுகிறது.
இதன்மூலம், நமது முதலாவது தற்கோள் (அதாவது [0,1] இடைவெளியிலுள்ள மெய்யெண்கள் எண்ணக்கூடியவை என்பது) தவறு என அறிகிறோம்.
மேலே நிறுவப்பட்ட முடிவின் நேரடி கிளைத்தேற்றம் (corollary) அல்லது துணை முடிவு மெய்யெண்கள் எண்ணவியலா முடிவிலிகள் என்பதாகும். ஏனெனில், மெய்யெண்களைக் கொண்ட கணத்தின் ஒரு சிறு உட்கணம் [0,1] என்ற இடைவெளி; இருந்தும் இந்த இடைவெளியே எண்ணவியலா முடிவிலி என்று நிறுவப்பட்டுள்ளது. தவிர, மெய்யெண்களின் கணத்திற்கும் [0,1] இடைவெளிக்கும் ஒரு இருவழிக்கோப்பு உறவு ஒன்றை ஏற்படுத்த முடியும். (0,1) என்ற திறந்த இடைவெளிக்கும் மெய்யெண் கணத்திற்கும் இடையே பின்வரும் உறவை ஏற்படுத்தலாம்.
defined by . இதன் மூலம், இந்த இடைவெளியும் மெய்யெண் கணமும் ஒரே எண்ணிக்கையிலான உறுப்புக்களைக் கொண்டுள்ளன என நிறுவலாம்.
இயல்பெண்களின் நிலை
இதே நிறுவல் முறையில் ஏன் இயல்பெண்களின் கணத்தையும் எண்ணவியலா முடிவிலி என்று நிறுவ முடியாது என்ற கேள்வி பொதுவாக எழுவது. அவ்வாறு ஏன் நிறுவ முடியாதென்றால், சுழி (பூஜ்யம்) அல்லாத இலக்கங்களைக் கொண்ட எந்த ஒரு பதின்பகுப்பு விரிதலும் இயல்பெண்ணாகாது. உண்மையில், இயல்பெண்களின் கணம் "எண்ணக்கூடிய" முடிவிலியாகும்.
வெளி இணைப்புகள்
1891-ம் ஆண்டு வெளிவந்த நிறுவலின் ஜெர்மன் மூலம், ஆங்கில உரையுடன்
பகுவியல்
கணக் கோட்பாடு
|
7021
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D
|
முதலாம் பராந்தக சோழன்
|
மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் முதலாம் பராந்தக சோழன் (பொ.ஊ. 907-953) முதலாம் ஆதித்த சோழனின் மகனாவான். இவனுடைய இயற்பெயர் வீர நாராயணன். களப்பிரரை முறியடித்து பொ.ஊ. 575 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட பாண்டிய அரசு, இவன் காலத்தில் பொ.ஊ. 915 ஆம் ஆண்டில் முறியடிக்கப்பட்டது. அச்சமயத்தில் பாண்டிய நாட்டை ஆண்டவன் இரண்டாம் இராசசிம்ம பாண்டியன் ஆவான்.பல ஆண்டுகள் நடைபெற்ற இப்போரில், இலங்கை மன்னன் ஐந்தாம் காசியப்பன் (பொ.ஊ. 913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான். முடிவில் பராந்தகன் மதுரையைக் கைப்பற்றினான். போரின் முடிவில் பாண்டிய மன்னன் இலங்கைக்கு தப்பி ஓடினான். பாண்டியனின் அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வாகும். தன் தந்தை கட்டத்தவறிய பல கோயில்களை இவன் முயன்று கட்டினான்.
தஞ்சையையும், உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழ் ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த வந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான காரணமாயிருந்தவன் ஒப்பற்ற வீரனும், இராஜதந்திரியுமான முதலாம் ஆதித்தனே ஆவான்.
முதலாம் ஆதித்தனுக்குப் பிறகு இவன் மகன், முதலாம் பராந்தகன் என்ற அபிசேகப் பெயருடன் அரியணையில் அமர்ந்த, சிறிது காலத்திலேயே பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே "மதுரை கொண்ட" என்ற விருதினை இவன் பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரி வரையிலான பகுதியும், மேற்குக் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது. கங்க மன்னர்கள் சோழரது அதிகாரத்திற்கு உட்பட்ட நண்பராகவும், சேரமன்னன், நெருங்கிய நண்பராகவும் கருதப்பட்டனர்.
இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகா வமிசம் கூறும் குறிப்புகளிலிருந்து(மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழர் - பாண்டியனிடம் நடந்த போரினை மூன்று கட்டங்களாக அறியலாம். முதல் கட்டத்தில், பராந்தகனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள், சோழப்படையிடம் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும்.
ஈழப்போர்
தான் புதிதாக வெற்றி பெற்ற பகுதிகளில், தன்னுடைய அதிகாரத்தை ஏற்கச் செய்யும் செய்யும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று பராந்தகன் எண்ணினான். தன் வெற்றியை, மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் பாண்டிய மன்னன் இராசசிம்மனால், ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனவே பராந்தகன், நான்காம் உதயன் ஆட்சிக் காலத்தில் (பொ.ஊ. 945 – 53) இவற்றை, ஈழ மன்னனிடமிருந்து திரும்பிப் பெறுவதற்கு மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைந்தான்.
இவை பராந்தகனின் ஆட்சிக் காலத்தின் இறுதி ஆண்டுகளுடன் தொடர்புடையதாகவே இருக்க வேண்டும். மறக்கமுடியாமல் இருந்த இவனது தோல்வி, பல ஆண்டுகளுக்கு பிறகு, இவனது வலிமைமிக்க, வழித்தோன்றலான முதலாம் இராஜேந்திரனால் வென்றெடுக்கப்பட்டது. அதாவது ஈழமன்னனும், பாண்டியனும் பழிவாங்கப்பட்டனர்.
பராந்தகனின் நண்பர்கள்
கேரள மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும், பாண்டியருக்கான போர்களில் பராந்தகனுக்காக உதவி செய்தனர்.
கொடும்பாளூர் வமிசத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கோவேள் என்பவரின் குடும்பத்தை சார்ந்த பூதி ஆதிக்க பிடாரி என்பவளைப் பராந்தகனின் மக்களில் ஒருவனான அரிகுலகேசரி முன்பே திருமணம் செய்திருந்தான்.
ஆட்சிக்காலம்
முதலாம் பராந்தகன் 48 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்பதை அவனது 48-ம் ஆட்சி ஆண்டின் கல்வெட்டிலிருந்து அறியலாம். இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே முறியடித்தான். அது முதல் பராந்தகன் தன் ஆட்சிக்காலம் முழுவதும் வெற்றிமேல் வெற்றி பெற்று பீடுநடைப்போட்டான். தன் தந்தையின் வெற்றிகளை நிறைவேற்றும் வகையில், இவன் பாண்டியர்களின் சுதந்திரத்தைப் பறித்து, தன் நாட்டைத் தெற்கே கன்னியாகுமரிவரை பரவச்செய்தான். ஈழத்தின் மீதும் படையெடுத்தான். ஆனால் இம்முயற்சியில், இவனது குறிக்கோள் நிறைவேறாததை முன்னர் பார்த்தோம். ஏனைய போர்களில் இவன் பாணர்களை வெற்றி கொண்டதுடன், கங்க மன்னன் ஹுஸ்தி மல்லனைத் தன் அதிகாரத்திற்கு உட்படுத்தினான.
எஞ்சியிருந்த பல்லவர்களின் அதிகாரம் அடியோடு மறைந்தது. பராந்தகன் ஆட்சிக் காலத்தில் சோழநாடு, வடக்கே நெல்லூர் வரை விரிவடைந்திருந்திருந்தது. எனினும் இவனது ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன், மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். தக்கோலத்தில் நடைபெற்ற போரில், பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்த சோழன் உயிரழந்தான். இதற்குப்பின் பராந்தகனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. இது முதல், முதலாம் இராஜராஜன் பொ.ஊ. 985 ஆம் ஆண்டில் அரியணையில் அமர்ந்தது வரையிலான, முப்பது ஆண்டுகள் வரையில், சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.
தக்கோலப்போர் மற்றும் பிரதிவிபதியின் மரணம்
சுமார் பொ.ஊ. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும், அவன் ஆளுகைக்கு உட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பிரிதிவீபதியின் தாயாதியான இரண்டாம் பூதுகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக இப்போது விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும், வைதும்பர்களும், ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக் கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர்.
இச்சூழ்நிலையில், அப்போதுதான் தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன்(இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.
இவ்வரசன் காலத்தில் மாதவர் என்ற வேதியர் ருக்வேத பாஷ்யம் என்னும் நூலை எழுதினார். இந்நூலில் ஜகதேகவீரன் என இவ்வரசனைக் குறிப்பிடுகின்றார் . இச்சுவடி இன்றும் சரசுவதி மகாலில் உள்ளது. மேலும் பல வேத நூல்களும் சரசுவதி மகால் நூலகத்தில் சேர்க்கப்பட்டன. திருவொற்றியூர் கோயில் கல்வெட்டில் உள்ள குறிப்பின்படி இவ்வரசன் தன் காலத்தில் தேவாரம் திருவெம்பாவை பாடல்களைக் கோயில்களில் பாட அறக்கட்டளைகள் ஏற்படுத்தினான் எனத் தெரிகின்றது.
மேற்கோள்கள்
இடைக்காலச் சோழ அரசர்கள்
907 பிறப்புகள்
955 இறப்புகள்
இந்திய அரசர்கள்
|
7024
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2022
|
திசம்பர் 22
|
நிகழ்வுகள்
69 – பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
401 – முதலாம் இன்னசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
856 – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.
880 – தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது.
1135 – இசுட்டீவன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
1216 – தொமினிக்கன் சபையை திருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார்.
1769 – சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு வந்தது.
1790 – துருக்கியின் இசுமாயில் நகரை உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான படையினர் கைப்பற்றினர்.
1807 – வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அரசுத்தலைவர் ஜெபர்சனின் கோரிக்கைப் படி அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1845 – பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
1849 – உருசிய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
1851 – இந்தியாவின் முதலாவது சரக்குத் தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.
1869 – எடின்பரோ கோமகன் இளவரசர் அல்பிரட் கல்கத்தா வந்தார்.
1885 – இட்டோ இரோபுமி என்ற சாமுராய் சப்பானின் முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1891 – புகைப்படம் மூலம் முதன் முதலாக '323 புரூசியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1915 – மலேசிய இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
1921 – சாந்திநிகேதன் கல்வி நிலையம் ஆரம்பமானது.
1942 – இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வி-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இட்லர் உத்தரவிட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: இந்தோசீனாவில் சப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
1948 – சாஃப்ருதீன் பிரவிரனேகரா மேற்கு சுமாத்திராவில் இந்தோனேசியக் குடியரசின் இடைக்கால அரசை அறிவித்தார்.
1963 – லக்கோனியா என்ற இடச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மதீராவில் மூழ்கியதில் 128 பேர் உயிரிழந்தனர்.
1964 – தனுஷ்கோடி புயல், 1964: தமிழ்நாடு, தனுஷ்கோடி, மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் புயல் தாக்கியதில், 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1974 – பிரான்சிடம் இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து கொமொரோசு மக்கள் வாக்களித்தனர். மயோட்டே பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.
1978 – மாவோ-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்தினார்.
1978 – இலங்கையில் அப்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காக நடத்தப்பட்ட தேசிய வாக்கெடுப்பில் 54.66% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
1989 – உருமேனியாவின் கம்யூனிச அரசுத்தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இயோன் இலியெசுக்கு ஆட்சியைக் கைப்பற்றினார்.
1989 – கிழக்கு செருமனியையும் மேற்கு செருமனியையும் பெர்லினில் பிரித்த பிரான்டென்போர்க் வாயில் 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
1990 – லேக் வலேசா போலந்தின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1990 – மார்சல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன பொறுப்பாட்சி மன்றத்திடம் இருந்து விடுதலையடைந்தன.
2001 – வடக்குக் கூட்டணியின் தலைவர் புர்கானுத்தீன் ரப்பானி ஆப்கானித்தானின் ஆட்சியை ஹமித் கர்சாய் தலைமையிலான இடைக்கால அரசிடம் கையளித்தார்.
2018 – இந்தோனேசியாவில் சுண்டா நீரிணை ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 430 பேர் வரை உயிரிழந்தனர்.
பிறப்புகள்
1183 – சகதை கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1242)
1300 – குதுக்து கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1329)
1666 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு, கவிஞர் (இ. 1708)
1853 – சாரதா தேவி, இந்திய ஆன்மிகவாதி, மெய்யியலாளர் (இ. 1920)
1858 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1924)
1887 – சீனிவாச இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)
1885 – கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின், உருசிய வானியலாளர் (இ. 1946)
1892 – எர்மன் போட்டோச்னிக், குரோவாசிய-ஆத்திரியப் பொறியாளர் (இ. 1929)
1911 – குரோட் இரெபெர், கதிர்வீச்சு வானியலாளர் (இ. 2002)
1929 – சிலம்பொலி செல்லப்பன், தமிழக எழுத்தாளர் (இ. 2019)
1933 – சாலினி இளந்திரையன், தமிழறிஞர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (இ. 2000
1955 – தாமஸ் சி. சுதோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர்
1958 – ஜெயமாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1419 – எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
1936 – நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி, சோவியத் உருசிய எழுத்தாளர் (பி. 1904)
1942 – பிராண்ஸ் போவாஸ், செருமனிய-அமெரிக்க மொழியியலாளர் (பி. 1858)
1988 – சிகோ மெண்டிஸ், பிரேசில் தொழிற்சங்கத் தலைவர், செயற்பாட்டாளர் (பி. 1944)
2006 – வி. நவரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1910)
2008 – லன்சானா கொண்டே, கினியின் அரசுத் தலைவர் (பி. 1934)
2014 – ஜக்தேவ் சிங் ஜசோவால், பஞ்சாப் நூலாசிரியர், இலக்கியவாதி (பி. 1935)
2020 – அப்துல் ஜப்பார், தமிழக-இலங்கை ஊடகவியலாளர் (பி. 1939)
சிறப்பு நாள்
அன்னையர் நாள் (இந்தோனேசியா)
தேசிய கணித தினம் (இந்தியா)
ஆசிரியர் நாள் (கியூபா)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பிபிசி: இன்றைய நாளில்
நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
திசம்பர் 22 வரலாற்று நிகழ்வுகள், OnThisDay.com
திசம்பர்
ஆண்டின் நாட்கள்
|
7026
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
|
வவுனியா
|
வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள். இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் மிகவும் வளர்ச்சியுடைய நகரமாக அமைந்துள்ளது. ஈழப்போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இம்மாவட்டத்திலேயே உள்ளனர். மெனிக்பாம் நலன்புரி நிலையம் இங்கு அமைந்துள்ளது. கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் இன்றைய வவுனியா மாவட்டம் ரஜரட்டையின் ஒரு பகுதியாக இருந்தது. வவுனியா மாவட்டம் பின்னர் வன்னியர் தலைமைகளால் ஆளப்பட்டது, இந்த மாவட்டம் பின்னர் போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1815 இல் ஆங்கிலேயர்கள் முழுத் தீவின் கட்டுப்பாட்டையும் பெற்றனர். அவர்கள் தீவை மூன்று இன அடிப்படையிலான நிர்வாகக் கட்டமைப்புகளாகப் பிரித்தனர்: கீழ் நாட்டு சிங்களவர்கள், கண்டிய சிங்களவர்கள் மற்றும் தமிழ். அப்போது வன்னி மாவட்டம் என்று அழைக்கப்பட்ட மாவட்டம் தமிழ் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1833 ஆம் ஆண்டில், கோல்ப்ரூக்-கேமரூன் கமிஷனின் பரிந்துரைகளின்படி, இன அடிப்படையிலான நிர்வாக கட்டமைப்புகள் ஐந்து புவியியல் மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு ஒற்றை நிர்வாகமாக ஒருங்கிணைக்கப்பட்டன. வன்னி மாவட்டம், யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்டத்துடன் இணைந்து புதிய வடக்கு மாகாணத்தை உருவாக்கியது. வன்னி மாவட்டம் பின்னர் முல்லைத்தீவு மாவட்டமாகவும் பின்னர் வவுனியா மாவட்டமாகவும் மாற்றப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த நேரத்தில், வட மாகாணத்தில் அமைந்துள்ள மூன்று மாவட்டங்களில் வவுனியாவும் ஒன்றாகும். செப்டம்பர் 1978 இல் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதியிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை உருவாக்கப்பட்டது.
வவுனியா மாவட்டத்தின் மேற்பரப்பு நீர்
புவி மேற்பரப்பில் காணப்படும் நீர் வளிமண்டலச் செயற்பாடுகளுடன் இணைந்ததுடன் கண்டங்களின் காலநிலைகளை நிர்ணயிப்பதிலும் ஓர் அடிப்படைக் காரணியாக விளங்குகின்றது. அயன மண்டல நாடான இலங்கையின் நீர்வளங்கள் மழைவீழ்ச்சியில் காணப்படும் பருவகால, இடம்சார்ந்த வேறுபாடுகளினா தீரமானிக்கப்படுகின்றன. புவி மேற்பரப்பில் காணப்படுகின்ற நீரானது மேற்பரப்பு நீர், தரைகீழ்நீர் என வகைப்படுத்தப்படுகின்றது. நீர்த்தேக்கங்கள், ஏரிகள், குளங்களில் தேங்கியுள்ள வடிவிலும் ஆறுகள், கங்கைகளில் ஓடும் நீர் வடிவிலும் மேற்பரப்பு நீர் காணப்படுகின்றது. இலங்கையின் மத்திய மலைத்திணிவுகளிலிருந்து 103 ஆறுகள் நாட்டின் பல பாகங்களினூடாக ஆரை வடிவில் பாய்ந்தோடுகின்றன. இலங்கை ஒரு பொருளாதார நாடாக இருப்பதனால் உலர்வலய விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசன வசதிகள் அவசியமானதாக உள்ளது. இந்த வகையில் இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள வவுனியா மாவட்டத்தில் விவசாய அபிவிருத்தியில் நீரானது நேரடியான தாக்கத்தைக் கொண்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் மேற்பரப்பு நீர்வளங்களாக குளங்களும் ஆறுகளும் காணப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் வவுனியா மாவட்டத்தில் நீர்த் தேவைகள் குளங்களில் இருந்து பூர்த்தி செய்யப்பட்டது. எனினும் விவசாயத் தேவைக்கான நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காக தோட்டக் கிணறுகள் போன்ற ஆழமான கிணறுகள் பயன்படுத்தப்படுகின்றது.
இங்குள்ள குளங்களில் பாரிய குளங்கள் ஆண்டு முழுவதும் நீரினைக் கொண்டு காணப்படுகின்றது. எனினும் சிறிய குளங்கள் மாரி காலங்களில் நீரினைக் கொண்டதாகவும் வரண்ட மாதங்களில் வற்றிவிடும் தன்மையும் கொண்டுள்ளது. அந்தவகையில் இம் மாவட்டத்தில் ஒரு பெரிய குளம் உட்பட 22 நடுத்தர குளங்களும், 674 சிறிய நீர்பாசன குளங்களும் அத்துடன் 22 புராதன குளங்களும் காணப்படுகிறது. இங்கு நீர் வளமானது மழைவீழ்ச்சியிலும் வற்றாத ஆறுகளிலும் தங்கியுள்ளது. 674 சிறிய நீர்ப்பாசன திட்டத்தில் 83 கைவிடப்பட்டுள்ளது. உலக வங்கி நிதிஉதவித்திட்டத்தின் கீழ் NEIAP – I மூலம் 103 சிறிய நீர்ப்பாசன திட்டங்கள் 01.04.2005 ஆண்டின் இறுதியில் பூரணப்படுத்தப்பட்டது. அத்துடன் 22 குளங்கள் 2004 இல் 10,000 சிறிய குளங்கள் மீளமைப்பு திட்டத்தின் கீழ் மீளமைக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் காணப்படுகின்றன.
கல்வி
பல்கலைக்கழகம்
இலங்கையின் வவுனியா பல்கலைகழகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் பல்கலைகழகத்திற்கு ஒரு தொகுதி நிலப்பரப்பானது A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ள பம்பைமடுப் பகுதியில் ஒதுக்கப்பட்டு விடுதிகளிற்கான ஆரம்பவேலைகள் தொடங்கியுள்ளபோதிலும் உள்நாட்டுப் போர் காரணமாக இதன் கட்டட வேலைகள் முடிவடையவில்லை.
இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக்கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளன.
பாடசாலைகள்
வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை (1878 இல் அமைக்கப்பட்டது, வவுனியாவின் முதல் பாடசாலை)
வவுனியா மகா வித்தியாலயம்
இறம்மைக்குளம் மகளிர் கல்லூரி
வவுனியா பெரியகோமரசன்குளம் மகா வித்தியாலயம்
வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம் ( )
பாவற்குளம் மகாவித்தியாலயம்
வவுனியா விபுலாநந்தா கல்லூரி
சைவப்பிரகாச வித்தியாலயம்
வவுனியா இந்துக் கல்லூரி
வவுனியா பூந்தோட்டம் தமிழ் மகா வித்தியாலயம்
மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயம்.
ஓமந்தை மத்திய கல்லூரி
வவுனியா சர்வதேசப் பாடசாலை
சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
பூவரசன்குளம் மகாவித்தியாலயம்
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயம்
வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம்.
தொழில் நுட்பக் கல்லூரி
வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது.
விவசாயக் கல்லூரி
வவுனியா யாழ்ப்பாணம் வீதியில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் வவுனியா விவசாயக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, 1989 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தில், விவசாய பட்டயப் படிப்பை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.
மத வழிபாட்டுத் தலங்கள்
வவுனியாவில் நான்கு மதங்களுக்குமான வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
சைவக் கோயில்கள்
சித்திவிநாயகர் ஆலயம், குடியிருப்பு
வவுனியா கோவில்குளம் சிவன் கோயில்
லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம், பூந்தோட்டம்
வவுனியா சிறிதேவி பூதேவி மகாவிஷ்ணு கோயில்
காளிகோயில்-குருமன்காடு
ஸ்ரீ கந்தசாமி கோயில் வவுனியா நகர்
ஸ்ரீ கந்தசாமி கோயில் தாண்டிக்குளம்
சிந்தாமணிப் பிள்ளையார் கோயில்
பழனி மலை முருகன் கோயில்-சிதம்பரபுரம்
ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்-வெளிக்குளம்
சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- சமளங்குளம்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்- தெற்கிலுப்பைக்குளம்
ஸ்ரீ நரசிம்மர் ஆலயம்-தெற்கிலுப்பைக்குளம்
ஐயப்பன் தேவஸ்தானம்-கோவில்குளம்.
கருமாரி அம்மன் கோவில் (வைஜயந்த் சர்மா)
தேடிவந்த பிள்ளையார் கோவில் (வைத்தீஸ்வரக்குருக்கள்)
பூவரசங்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயம்.
ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் , கூமாங்குளம்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் - தோணிக்கல்
சாஸ்த்திரிகூழாங்குளம் சிவன் கோயில்
தோணிக்கல் நாகதம்பிரான் ஆலயம்
கிறித்தவ ஆலயங்கள்
கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
புனித அந்தோனியார் தேவாலயம்-இறம்பைக்குளம்
கிறிஸ்து அரசா் ஆலயம் -குருமன்காடு
புனித செபஸ்ரியார் தேவாலயம்-தெற்கிலுப்பை
குருசாண்டவர் தேவாலயம்- தச்சன்கு
யெகோவாவின் சாட்சிகளின் வணக்கஸ்தலம் - உக்குளாம் குளம்
புனித குழந்தை இயேசு தேவாலயம்-சமளங்குளம்
போக்குவரத்து
வவுனியா தொடருந்து நிலையம் ஊடான தொடருந்து சேவைகள் காங்கேசன்துறை முதல் கொழும்பு கோட்டை வரை நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து சேவைகள் வவுனியா ஊடாக கொழும்பு மற்றும் பிற நகரங்களுக்குச் செல்கின்றன. இருபத்து நான்கு மணிநேரமும் போக்குவரத்து வசதியை பெற முடிதல் வவுனியா நகரின் சிறப்பாகும்
தொலைத் தொடர்பு
வவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன.
அஞ்சற் குறியீடு: 43000
தொலைபேசிக் குறியீடு: 024 (வேறு மாவட்டங்களில் இருந்தும் நகர்பேசியூடாகத் தொடர்பு கொள்ள)
டயலாக், மொபிடெல், ஹட்ச், எயார்டேல், எடிசலட் மற்றும் லங்காபெல் போன்ற தனியார் தொலைபேசி நிறுவங்களும் சிறி லங்கா டெலிகொம்மும் தொலைபேசி மற்றும் 4G இணையத்தள சேவையினை வழங்குகின்றன
அரச இலவச Wi-fi ( வயர்லெஸ் ) சேவையினை வவுனியா பேருந்து நிலையம், வவுனியா புகையிரத நிலையம், வவுனியா பொது நூலகம் ஆகிய இடங்களில் பெற முடிவதுடன் தனியார் சேவையினை அசிச்டியா ( Assistia ) நிறுவனம் வழங்குகிறது
வானொலிகள்
புகழ் இணைய வானொலி
இலங்கை வானொலி வன்னிச்சேவை
பண்பலை நாதம்
இதழ்கள்
சகா பத்திரிகை
நிலம் - கவி இதழ்
தேடல் - இளையோர் தொடர்புசாதனப்பிரிவினது
பூங்கனி - மாதமொருமுறை
வெளி - சிந்தனை இதழ்
மேற்கோள்கள்
வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்
இலங்கை மாவட்ட தலைநகரங்கள்
|
7040
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
|
எட்வர்ட் ஜென்னர்
|
எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner மே 17, 1749 - ஜனவரி 26, 1823), இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் அறிவியலாளரும் ஆவார். இளவயது முதலே இயற்கை குறித்தும் தன் சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அறியப்படுகிறார். இவர் நோயெதிர்ப்பு முறையின் தந்தை என சிறப்பு பெற்றார். இவருடைய கண்டுபிடிப்பு பிற கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் மனித உயிர்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவியது.
இளமை
இங்கிலாந்திலுள்ள பெர்க்கிலி நகரில் 1749-ஆம் ஆண்டு மே 17-ஆம் நாள் ஒன்பது குழந்தைகளுள் எட்டாவது குழந்தையாக எட்வர்ட் ஜென்னர் பிறந்தார். இவருடைய தந்தை ரெவரண்ட் ஸ்டீபன் ஜென்னர் அக்கிராமத்தின் புரோகிதராக இருந்தார். இது ஜென்னருக்கு மிகச் சிறந்த அடிப்படை கல்வி கிடைக்க வழிசெய்தது. ஜென்னர் வோட்டனிலும் சிரென்செஸ்டரிலும் பள்ளிக் கல்வியைப் பெற்றார். இச்சமயத்தில் தான் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆர்வமேற்பட்டது.
கல்வியும் பணியும்
தனது பதினான்கு வயதில் சிப்பிங்க் சோட்பரி என்ற இடத்தில் டேனியல் லட்லாவ் (Daniel Ludlow) என்ற அறுவை சிகிச்சை மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சிக்குச் சேர்ந்தார். ஏழாண்டுகள் பெற்ற இப்பயிற்சியின் காரணமாக ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகத் தேர்ந்தார். அந்த சமயத்தில் பண்ணை மக்களிடையே நிலவிய ஒரு நம்பிக்கை ஜென்னருக்கு அம்மை நோய்க்கு மருந்து கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. 'கௌபாக்சு' எனப்படும் பசுக்களின் மடிக்காம்புகளை புண்ணாக்கும் ஒரு நோய் ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால் அதே மனிதனுக்கு பெரியம்மை நோய் வராது என்பதுதான் அந்த நம்பிக்கை. எனவே பெரியம்மை நோய் வராமல் தடுக்க 'கௌபாக்சு' நோயை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையை மற்ற சமகால மருத்துவர்கள் பாமர நம்பிக்கை என்று உதறித்தள்ளினர். ஜென்னர் மட்டும் அதில் உண்மை இருக்குமா என்று ஆராயத் தொடங்கினார். சுமார் இருபது ஆண்டுகள் விடாமல் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்தார். இதனிடையில் 1770 இல் புனித ஜார்ஜ் மருத்துவமனையில் ஒரு புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராகவும் உடற்கூறு அறுவையாளராகவும் பணியாற்றினார். ஜென்னருக்கு இயற்கை மீதிருந்த ஆர்வம் மற்றும் சிறப்பான பணியின் காரணமாக இங்கிலாந்தின் இராயல் கழக உறுப்பினருக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். பயற்சிக்குப் பின் 1773 இல் தனது சொந்த ஊரான பெர்க்கிலி திரும்பினார். அங்கும் ஒரு சிறந்த மருத்துவராகவும் விளங்கினார்.
இயற்கை, அறிவியல், திருமணம்
இயற்கை ஆர்வலரான ஜென்னர் குயில்களின் வாழ்வு முறை பற்றி குறிப்பாக அடைகாக்கும் கூட்டினுள் குஞ்சுகளுக்கு 12 நாட்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து அதற்கான காரணத்தை ஆய்வு செய்து வெளியிட்டார். மற்ற பறவைகளின் கூட்டில் வைக்கப்படும் குயில் குஞ்சின் முதுகில் ஒரு வித அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் காரணமாகவே அது மற்ற பறவைக் குஞ்சுகளிலிருந்து வேறுபடுகிறது. ஆனால் இவரது ஆய்வு 20 ஆம் நூற்றாண்டில் குயிலின் வாழ்க்கை முறை பற்றிய புகைப்படங்கள் வெளிவந்த பின்னரே உண்மையென ஒத்துக் கொள்ளப்பட்டது. 1788 இல் ராயல் கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திருமணம்
எட்வர்சு ஜென்னர் 1788 மார்ச்சு மாதம் கேதரின் கிங்ஸ்கோட் என்பவரை மணந்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார். இவர் குளுசெஸ்டெர்சையர் என்ற இடத்திலுள்ள கிங்க்ஸ்கோட் பூங்கா உரிமையாளரான ஆந்தோனி கிங்ஸ்கோட் என்பவரின் மகளாவார்.
மருத்துவமும் ஆய்வுகளும்
1792-ஆம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவப் பட்டம் பெற்றார். குளுசெஸ்டெர்ஷைர் என்ற நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்தார். மார்பு முடக்குவலி (angina pectoris) பற்றி முதலில்ஆராய்ந்து வெளியிட்ட பெருமையும் ஜென்னரைச் சேரும். ஹிபர்தீன் என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வலியால் பாதிக்கப்பட்ட இதயத் தமனிகள் அவற்றின் செயல்பாடுகளைச் செய்ய முடியாது போவதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி முறை
தடுப்பூசி முறை 1721 இலிருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆனால் இதில் நோயைக் கட்டுப்படுத்தி முழுதுமாக போக்க முடியவில்லை. லேடி மேரி வோட்லே மாண்டேகு என்பவர் இஸ்தான்புல்லில் பிரித்தானியத் தூதுவராக இருந்த தனது கணவருடன் சென்ற போது அங்கு பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி முறையை பிரிட்டனுக்கு இறக்குமதி செய்து வந்தார். ஆனால் இம்முறையில் 60 % மக்கள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட 60% மக்களில் 20% பேர் இறந்து போயினர். சிர்க்கான்சிய மக்களிடமிருந்த இம்முறையை துருக்கி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
1765 இல் ஜான் ஃபியூஸ்டெர் என்ற மருத்துவர் பெரியம்மை நோய்க்கு கௌபாக்சு நோயினால் பெரியம்மை நோயைத் தடுக்க முடியும் என்ற தனது கட்டுரையை லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார். ஆனால் அதற்கான விளக்கத்தை அவரால் அளிக்க இயலவில்லை.
பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை காரணமாக செய்த இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் கிராம மக்களின் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் ஜென்னர். அதனை சோதித்துப் பார்க்க எண்ணிய ஜென்னர் 1796-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தனது தோட்டக் காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர். சாரான நில்மெசு என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கௌபாக்சு கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு கௌபாக்சு நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குணமடைந்தான்.
சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தினார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர் சிறுவனின் உயிரோடு விளையாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் சற்றும் மனம் தளராமல் அந்த தடுப்பூசியை சிறுவனுக்குக் குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்படவில்லை. அம்மைக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டது என்பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வரலாற்றில் அழியா இடம் கிடைத்தது. டூட்டிங்கில் புனித ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி நூலகத்திலுள்ள சுவரில் ஜேம்பிப்சும் இடம்பெற்றுள்ளார். அதன்பின் மேலும் பல ஆய்வுகளைச் செய்து தனது முடிவுகளை 1798-ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.
எட்வர்டு என்னருக்கு முன்னர் 1770 களிலேயே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஐந்து கண்டுபிடிப்பாளர்கள் (செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி 1774, ரெண்டெல், பிளெட் 1791 ) கௌபாக்சு நோயிலிருந்து தடுப்பூசியினை பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்திருந்தனர். இதில் பெஞ்சமின் ஜெஸ்டி என்பவர் பெரியம்மை நோய்க்கெதிரான தடுப்பூசியினை தானும் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு செலுத்தி வெற்றி பெற்றார். ஆனால் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து எட்வர்டு ஜென்னர் வெளியிட்ட முடிவுகளே விளக்கத்துடன் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருந்தது.
சிறப்புகள்
பிரிட்டிஷ் ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மை குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை ஐரோப்பாவெங்கும் பரவியது. ஃபிரான்சிஸ்கோ சேவியர் டி பால்மிஸ் என்பவர் உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்து எட்வர்டு ஜென்னர் கண்டறிந்த தடுப்பூசி முறையின் மூலமாக பெரியம்மை நோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டார். மூன்று வருடங்கள் இடைவிடாது பயணித்து அமெரிக்கா, பிலிப்பைன்சு, மக்காவ், சீனா, செயின்ட் ஹெலனா தீவு ஆகிய நாடுகளில் ஆயிரம் தடுப்பூசிகளை செலுத்தினார். இதனால் ஜென்னரின் புகழ் உலகெங்கும் விரைவாக பரவியது.
எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு. ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802-ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808-ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர். அம்மை நோயைத் துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன.
இறுதி வாழ்க்கை
1810-ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் இறந்து போனார். அதனால் துவண்டுபோன ஜென்னர் மருத்துவத் தொழிலிருந்தும், ஆராய்ச்சிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது மனைவியும் இயற்கை எய்தினார். மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜென்னர் ஒடிந்து போனார். 1823 ஜனவரி 23 இல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து குணமடையும் முன்பே இரண்டாவது முறையும் பக்கவாத நோய் தாக்கியது. 1823-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் தமது 73-ஆவது அகவையில் அவர் காலமானார்.
மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது. அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்குப் பலியாகியிருப்பர். அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980-ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
மேற்கோள்கள்
மேலதிக வாசிப்புக்கு
Papers at the Royal College of Physicians
Baron, John M.D. F.R.S., "The Life of Edward Jenner MD LLD FRS", Henry Colburn, London, 1827.
Baron, John, "The Life of Edward Jenner with illustrations of his doctrines and selections from his correspondence". Two volumes. London 1838.
Edward Jenner, the man and his work. BMJ 1949 E Ashworth Underwood
Fisher, Richard B., "Edward Jenner 1749-1823," Andre Deutsch, London, 1991.
Ordnance Survey showing reference to Smallpox Hil: http://explore.ordnancesurvey.co.uk/os_routes/show/1539
1970 Davies JW. A historical note on the Reverend John Clinch, first Canadian vaccinator. CMAJ 1970;102:957–61.
1970 Roberts KB. Smallpox: an historic disease. Memorial University of Newfoundland Occas Papers Med Hist 1978;1:31–9.
1951 LeFanu WR. A bio-bibliography of Edward Jenner, 1749–1823. London (UK): Harvey and Blythe; 1951. p. 103–8.
வெளி இணைப்புகள்
"EDWARD JENNER." LoveToKnow 1911 இணையக் கலைக்களஞ்சியம். © 2003, 2004 LoveToKnow.
தடுப்பு மருந்து முறை குறித்த ஜென்னரின் ஆய்வுக்கட்டுரைகள்
ஜென்னர் அருங்காட்சியகம்
A digitized copy of An inquiry into the causes and effects of the variola vaccine (1798), from the Posner Memorial Collection at கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம்
The Evolution of Modern Medicine. Osler, W (FTP)
Flickr images tagged Edward Jenner
Flickr images tagged Temple of Vaccinia
Review of The Edward Jenner Museum on SoGlos.com
கண்டுபிடிப்பாளர்கள்
ஆங்கிலேய அறிவியலாளர்கள்
1749 பிறப்புகள்
1823 இறப்புகள்
|
7041
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
|
தடுப்பு மருந்து
|
தடுப்பு மருந்து (Vaccine) என்பது ஒரு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஊக்குவிக்கும் நோய்க்காரணிப் புரதத் தயாரிப்பு ஆகும். இது நோய் உண்டாக்கும் கிருமிகளின் தாக்குதல்களிலிருந்து உயிர்களைக் காக்கவோ, தாக்குதல்களின் வீரியத்தைக் குறைக்கவோ பயன்படுகிறது.
இந்தத் தடுப்பு மருந்தானது குறிப்பிட்ட நோய்க்கான நோய்க்காரணியை ஒத்திருப்பினும், குறிப்பிட்ட மருந்தானது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரியையோ அல்லது அதன் நச்சுப்பொருளில் இருந்தோ பெறப்பட்ட ஒரு பகுதிப்பொருளையோ கொண்டதாக இருக்கும். இவ்வாறு உட்செலுத்தப்படும் இந்த மருந்து உடலினால் அந்நியப் பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை அழித்துச் சிதைக்க உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை தொழிற்படும். இது பின்னர் நினைவில் கொள்ளப்பட்டு, அதுபோன்ற வேறு நுண்ணுயிர் பின்னர் உடலைத் தாக்கும் போது விரைவான தொழிற்பாட்டால் நோய் ஏற்படாது தடுக்கப்படும். பாக்டீரியா, வைரசு போன்ற நுண்ணுயிரிகளை சில குறிப்பிட்ட நிருவகிப்பின் மூலம் மாற்றியமைத்து இவ்வகையான தடுப்பு மருந்துகள் பெறப்படுகின்றன.
இந்த தடுப்பு மருந்தானது தடுப்பு மருந்தேற்றம் மூலம் உடலினுள் செலுத்தப்படும்
மருந்துகள்
நோய் எதிர்ப்பு முறைமைகள்
நோய்த் தடுப்பு மருந்துகள்
18-ஆம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்புகள்
|
7050
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88
|
பெரியம்மை
|
பெரியம்மை (smallpox), மனிதர்களை மட்டும் தாக்கும் அதிகத் தொற்றுத் தன்மை கொண்ட நோயாகும். இது வரியோலா மேசர் (Variola major) மற்றும் வரியோலா மைனர் (Variola minor) ஆகிய இரு அதி நுண் நச்சுயிர்களால் உண்டாகிறது. இவற்றுள் வரியோலா மேசர் அதிக உயிர்ப்பலிகளை உண்டாக்க வல்லதாகும். இக்கிருமி தாக்கியவர்களுள் 20 முதல் 40 விழுக்காட்டினர் இறந்து விடுகின்றனர். வரியோலா மைனர் கிருமி தாக்கியவர்களுள் ஒரு விழுக்காட்டினர் மட்டுமே இறக்கின்றனர். உயிர் பிழைத்தவர்களில் பலரும், (ஒன்று அல்லது) இரண்டு கண்கள் குருடாவதுடன், நீங்காத தழும்புகளையும் பெறுகின்றனர். 20ஆம் நூற்றாண்டில் இந்நோய் காரணமாக 300-500 மில்லியன் மக்கள் இறந்தனர். 1967ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி அந்த ஆண்டு மட்டும் 15 மில்லியின் மக்கள் அந்நோய்யால் பாதிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர். எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். 1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய இராச்சியத்தில் ஜேனட் பார்க்கர் என்பவர் இந்நோய் தாக்கி இறந்தார். அதன் பின் இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை.
வரலாறு
பெரியம்மையின் முதல் தோற்றம் இன்னும் தெரியவில்லை. ஆனால் பல நூற்றாண்டுகளாக, இந்தக் கொடிய நோய், உலகின் பல்வேறு இடங்களில் தாக்கியுள்ளது. இதற்கான காலவரிசை கீழே உள்ளது
3ம் நூற்றாண்டு - எகிப்து நாட்டில் வாழ்ந்த பார்வோன் ராம்சேஸின் மம்மியில், பெரியம்மையின் தடயங்கள் தென்பட்டன. 3ம் நூற்றாண்டிலே, பெரியம்மை இவ்வுலகில் இருந்தது என்பதற்கு இதுவே சான்றாகும்.
4ம் நூற்றாண்டு - சீனாவில், இந்த நோயின் அறிகுறிகளைப் பற்றி எழுத்து வடிவில் 4ம் நூற்றாண்டில் பதிவு செய்துள்ளனர். இந்த நோயிலிருந்து குணமடைய தேவன் 'யோ ஹோ லாங்'கிடம் மக்கள் வேண்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
6ம் நூற்றாண்டு - சீனாவுக்கும், கொரியாவுக்கும் இடையே வர்த்தகம் அதிகரித்த காலம், 6ம் நூற்றாண்டு. இதன் மூலமாக கொரியாவுக்கும், சப்பானுக்கும் பெரியம்மை பரவத் தொடங்கியது. 'சிவப்பு வண்ணம்/ஒளி பெரியம்மையை நீக்கும்' என்னும் கட்டுக்கதை உலகும் முழுவதும் நம்பப்பட்டது. சப்பான் கலாச்சாரத்திலும் அப்படித்தான், பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் சிவப்பு உடைகளை அணிந்தனர்.
7ம் நூற்றாண்டு - 7ம் நூற்றாண்டில், இந்திய துணைக் கண்டத்திற்கு பரவியது. பின்னர், அரேபியர்கள் மூலம் வடக்கு ஆபிரிக்காவுக்குப் பரவத் தொடங்கியது.
10ம் நூற்றாண்டு - 10ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிரேக்கம், துருக்கி, ரோமெனியா போன்ற நாடுகள், பெரியம்மையால் பாதிக்கப்பட்டன. ஆசியாக் கண்டத்தில் வர்த்தகம் மூலமாகப் பெரியம்மை பரவியதாகக் கருதப்படுகிறது.
11ம் நூற்றாண்டு - ஐரோப்பிய கண்டத்தில் பெரியம்மை பரவியது. சிலுவைப் போரின் காரணமாக, ஐரோப்பிய கிருத்துவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குக் குடிபுகுந்த போது பரவியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
13ம் நூற்றாண்டு - மக்கள் தொகை பெருக்கத்தினாலும், உலகம் சுற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், பெரியம்மை வடக்கு ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்துக்கு பரவியது.
15ம் நூற்றாண்டு - 15ம் நூற்றாண்டில், பெரியம்மை ஐரோப்பிய நாடுகளில் பரவலாக தென்பட்டது. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த மக்கள் மேற்கொண்ட கடல் வழி பயணத்தால், கிழக்கு ஆபிரிக்காவுக்குப் பெரியம்மை பரவியது
16ம் நூற்றாண்டு - ஐரோப்பியர்களின் குடியேற்றத்தினாலும், ஆபிரிக்காவின் அடிமை வர்த்தகத்தினாலும், அமெரிக்கக் கண்டங்களுக்கு பெரியம்மை பரவியது. 1520ல் ஸ்பாணியர்கள் தற்போதைய மெக்ஸிகோவில் பெரியம்மையபை் பரப்பினர். அப்போது அங்கு வாழ்ந்த அஸ்டெக் நாகரிகமே அழிந்ததிற்கு பெரியம்மையும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதற்கிடையே 16ம் நூற்றாண்டில், வரியோலேசன் என்னும் பெரியம்மையின் தடுப்பு முறை சீனாவிலும் இந்தியாவிலும் பரவலாக பின்பற்றபட்டது. வரியோலேசன் என்பது, பெரியம்மையால் பாதிக்கப்பட்டவரின் பொருக்கை எடுத்து நன்றாக வரண்ட பிறகு, அதை பொடித்து வைப்பதாகும். பெரியம்மையால் பாதிப்படையாதவர்கள், இந்த பொடியை மூச்சு வழியாக உள்ளிழுக்க வேண்டும். இதன் மூலம் பெரியம்மை கட்டுப்படுத்தினர்.
17ம் நூற்றாண்டு - 'வரியோலேசன்' தடுப்பு முறை, ஒட்டோமன் பேரரசாங்கத்திலும் பின்பற்றத் தொடங்கினர். இதன் பொருட்டு, துருக்கி மற்றும் வட ஆபிரிக்கா நாடுகளில், இந்த தடுப்பு முறை பயன்படுத்தப்பட்டது.
18ம் நூற்றாண்டு - 'வரியோலேசன்' தடுப்பு முறை இங்கிலாந்து நாட்டில் 'லேடி மேரி வார்ட்லி மான்டெகு' அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர், துருக்கி நாட்டின் ஆங்கிலேய தூதரின் மனைவி ஆவார். இவர் துருக்கியில் பெரியம்மையால் நோயுற்ற போது, தனது இரு குழந்தைகளுக்கும் 'வரியோலேசன்' தடுப்பு முறையை அளித்தார். இதற்கிடையே 1796ம் ஆண்டில், 'எட்வார்ட் ஜென்னர்' மாட்டு அம்மை மூலமாக, பெரியம்மையை தடுக்க முடியும் என நிரூபித்தார். இதுவே, பெரியம்மையின் தடுப்பு ஊசிக்கு அடிப்படையாக அமைந்தது.
20ம் நூற்றாண்டு - 20ம் நூற்றாண்டில், பெரியம்மை ஆபிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களில் இன்னும் தென்பட்டது. ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க கண்டங்களில் தடுப்பூசி மூலம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. உலகளாவிய வேருடன் அழித்தல் முகாம் மூலம், 1980ம் ஆண்டில் பெரியம்மை முற்றிலுமாக நீக்கப்பட்டது.
அறிகுறிகள்
பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர், குணமடையும் முன் கீழ் காணும் கட்டங்களை கடக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திற்கும் சில அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் உள்ளன.
1) நோயரும்பல் : இந்தக் கால கட்டத்தில், பெரியம்மையின் நோய்க்கிருமி மனிதனின் உடலில் பெருகிக்கொண்டிருக்கும். ஆனால் எந்த அறிகுறியும் தெரியாது.
அறிகுறிகள் : இல்லை
காலம்: 7 - 19 நாட்கள் (பெரும்பாலும் 7 -14) வரை நீடிக்கும்.
பரவும் தன்மை : இல்லை
2) ஆரம்ப அறிகுறிகள் : இந்த கட்டத்தில், நோயுற்றவர்கள் எந்த வேலையும் செய்ய இயலாத அளவிற்கு, சோர்வு அடைந்திருப்பார்கள்.
அறிகுறிகள் : அதிகபடியான காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி மற்றும் அவ்வப்போது வாந்தியெடுத்தல்
காலம் : 2 - 4நாட்கள்
பரவும் தன்மை : சில சமயங்களில்
3) முற்கால வேனற்கட்டி : சின்ன வேனற்கட்டிகள், முதலில் நாக்கிலோ அல்லது வாயினிலோ வரும். இந்த கட்டிகள் புண்னாகி வெடித்தப்பின், இந்த நோய்கிருமி பெரிய அளவில் உடம்பு முழுவதும் பரவும். முகத்தில் ஆரம்பித்து, 24 மணி நேரத்திற்குள், கை மற்றும் கால் வரை, உடம்பில் எல்லா இடங்களிலும் பருக்கள் தென்பட ஆரம்பிக்கும். இப்படி கட்டிகள் தென்படும் தருணத்தில் காய்ச்சல் சற்று தனிந்திருக்கும். நான்காம் நாளில், எல்லா கட்டிகளும் தடித்து புண்ணாகி விடும். இந்த புண்ணில் தடித்த, தெளிவற்ற திரவம் இருக்கும். இந்த தருணத்தில் காய்ச்சல் மீண்டும் அதிகரிக்கும்
அறிகுறிகள் : அதிகபடியான காய்ச்சல், உடம்பு முழுவதும் தடித்த, தெளிவற்ற வேனற்கட்டிகள்
காலம் : 4நாட்கள்
பரவும் தன்மை : ஆமாம், அதிகமாக பரவும் கட்டம்
4) சீழ் கொப்புளங்கள் மற்றும் பொருக்குகள் : இந்த கட்டத்தில், உடம்பில் உள்ள புண்கள், கொப்புளங்களாக மாறும். இந்த கொப்புளங்களின் தன்மை, சற்று எழுப்பப்பட்ட, வட்டமாகவும் தொடுவதற்கு தோலுக்குள் பட்டாணி இருப்பது போல தோன்றும். சுமார் 5 நாட்களுக்கு பிறகு, இந்த கொப்புளங்களின் மேல் ஓடுகள் போன்று உருவெடுக்கும், பின்னர் பொருக்களாகும். பொருக்கள் என்பது காய்ந்த புண்ணின் மேல் படிந்திருக்கும் ஓடு போன்றது.
அறிகுறிகள் : கொப்புளங்கள் மற்றும் பொருக்குகள்
காலம் : சுமார் 10 நாட்கள் நீடிக்கும்
பரவும் தன்மை : ஆமாம்
5) பொருக்குகள் உதிர்வது : இந்த கட்டத்தில், காய்ந்த பொருக்கள் உதிர ஆரம்பிக்கும். காய்ந்த போதிலும், இன்னும் பரவும் தன்மை கொண்டது. ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். உதிர்ந்தப் பின், உடம்பில் தழும்புகள் இருக்கும்.
அறிகுறிகள் : பொருக்குகள் உதிரும்
காலம் : 6 நாட்கள் வரை நீடிக்கும்
பரவும் தன்மை : ஆமாம்
6) பொருக்கின்மை : எல்லா பொருக்குகளும் உதிர்ந்தப் பின், நோய் பரவாது. பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டவர், முழுவதும் குணமடைவதற்கான அறிகுறி இது.
பரவும் தன்மை : இல்லை
மருத்துவ சிகிச்சை
பெரியம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை ஒன்றும் கிடையாது. எந்த ஒரு சிகிச்சையும் பயனளிக்காது. ஆயினும், சில சமயங்களில் நச்சுயிருக்கு எதிரான சில மருந்துகளும், நுண்ணுயிர்க்கு எதிரான சில மருந்துகளும் பரிந்துரைக்கப்படலாம். இவை பெரியம்மையின் நச்சுயிரை எதிர்ப்பதற்காக இல்லை. பெரியம்மையால் பாதித்த போது மற்ற நோய்கள் தாக்கக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படலாம்.
வருமுன் காத்தல்
பெரியம்மைக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் இல்லாததால், இதனை வருமுன் காப்பதே நல்லது. இதற்காக தடுப்பூசிகள் உள்ளன.
பெரியம்மை நச்சுயிர்கள் தாக்கும் முன் எடுத்துக் கொண்டால், நோயிலிருந்து முற்றிலுமாக காத்திடலாம்
நச்சுயிர்கள் தாக்கிய 3 நாட்களுக்குள் எடுத்துக் கொண்டால், தடுப்பூசி அந்த நச்சுயிகள் பெருக விடாமல் காக்கும். இதனால் பாதிப்பு இருக்காது
தாக்கிய 4-7 நாட்களுக்குள் எடுத்துக் கொண்டால், நோயிலிருந்து காத்துக் கொள்ள இயலும். இருப்பினும் நோய் வசப்பட்டால், அதன் தாக்கம் சற்று குறைவாகத் தான் இருக்கும்
வேருடன் அழித்தல்
பெரியம்மை தொற்றும் தன்மை கொண்டிருந்தமையால், இது மிகவும் கொடிய நோயாக கருதப்பட்டது. பெரியம்மைக்கு தடுப்பு ஊசிகள் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இருந்த போதிலும், ஆபிரிக்கா, ஆசியா கண்டங்களில் இந்த நோய் பரவிக்கொண்டு தான் இருந்தது. 1959ம் ஆண்டில் தான், உலக சுகாதார மையம், பெரியம்மையை முற்றிலுமாக நீக்க முடிவெடுத்தது. நிதி பற்றாகுறையினாலும், போதுமான தன்னார்வத் தொண்டர்கள் இல்லாததாலும், இதனை வெற்றிகரமாக செயலாக்க இயலவில்லை. 1967ம் ஆண்டில், மீண்டும் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது.
அழித்த காலவரிசை
பெரியம்மையின் கடைசி தோற்றங்கள்,
வட அமெரிக்கா கண்டம் - 1952
தென் அமெரிக்கா கண்டம் - ஏப்ரல் 19, 1971 (பிரேசில்)
ஐரோப்பிய கண்டம் - 1953
ஆப்ரிக்கா கண்டம் - அக்டோபர் 12, 1977 (சோமாலியா)
ஆசியா கண்டம் - அக்டோபர் 16, 1975 (வங்காளதேசம்)
ஆஸ்திரேலியா கண்டம் - நோய் இங்கு பரவியதற்கு எந்த அடையாளமும் இல்லை
இறுதித் தோற்றம்
1975ம் ஆண்டில், வங்காளதேசத்தில், 'ரஹிமா பானு' என்னும் 3 வயது சிறுமி பெரியம்மை 'வரியோலா மேசர்' நோயால் இயற்கை முறையில் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடைசி மனிதராவார்.
அக்டோபர் 12, 1977 அன்று, 'அலி மாவோ மாலின்' என்னும் சமையல்காரர், பெரியம்மை 'வரியோலா மைனர்' நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார்.
1978ம் ஆண்டில், 'ஜேனட் பார்க்கர்' என்னும் மருத்துவ புகைப்படம் எடுப்பவர், பெரியம்மை நோயின் ஆராய்ச்சியின் போது நோயுற்று, செப்டம்பர் 11 அன்று இறந்தார்.
பெரியம்மை நோய் வேருடன் அழிக்கப்பட்டதாக, மே 8, 1980 அன்று, உலக சுகாதார் சட்டசபையில், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. உலகிலிருந்து பெரியம்மை நொய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, 27 ஆண்டுகளாகிறது (2017ல்).
மேலும் படிக்க
http://www.who.int/archives/fonds_collections/bytitle/fonds6_inventory.pdf?ua=1
http://www.who.int/wer/90-anniversary/WER1976_51_353-356-N46.pdf?ua=1
http://www.who.int/features/2010/smallpox/en/
Archives of the smallpox eradication programme, a guide and inventory, WHO, Geneva, 1982, 2 vol
மேற்கோள்கள்
நோய்கள்
|
7051
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
|
உலக சுகாதார அமைப்பு
|
உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான
லீக் ஆப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.
நோக்கம்
"உலகில் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்". இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.
உருவாக்கம்
உலக சுகாதார அமைப்பானது ஐக்கிய நாடுகளின் ஆரம்பத்தில் இருந்தே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இதன் உருவாக்கமானது சம்பிரதாய பூர்வமாக 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி உலக சுகாதார தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்த அமைப்பின் சட்டத்தை உலகின் 61 நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையில் கையெழுத்திட்டன. இதன் தொடக்கத்தில் இருந்தே பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய முக்கியத்துவம், நோய்த்தொற்று தடுப்பதும், எய்ட்சு, மலேரியா, காச நோய் ஆகியவற்றிற்குல் தீர்வு காண்பதும் ஆகும். உடல்நலம் சார்ந்த உலகின் முன்னணி இதழான வேர்ல்டு ஹெல்த் ரிப்போர்ட், இந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது.
இதன் சின்னமாக நோயைக் குணப்படுத்தும் அஸ்லெப்பியசின் தடி ஏற்கப்பட்டுள்ளது.
இதன் தலைமையகம், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் உள்ளது. இது 1966 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.
கிளை அலுவலகங்கள்
1949 - 1952 ஆண்டுகளுக்கு இடையில், மண்டலப் பிரிவுகள் பிரிக்கப்பட்டன. இவை இந்த அமைப்பின் 44வது பிரிவுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு முடிவுகள் மண்டல அளவில் எடுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டலக் குழு உண்டு. இது ஆண்டுக்கு ஒரு முறை கூடும். ஒவ்வொரு நாட்டுப் பிரதிநிதியும் கலந்துகொள்வார். அங்கிகரிக்கப்படாத நாட்டின் பிரதிநிதிகளும் பங்கேற்பர். மண்டலங்களுக்கு தனித்தனி அலுவலகங்கள் உண்டு. இந்த அலுவலகத்தின் தலைவராக மண்டலக் குழுவால் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பணியில் இருப்பார்.
இந்த மண்டலக் குழுவிற்கு, ஒவ்வொரு உறுப்பு நாட்டின் உடல்நலத் துறைத் தலைவர்கள் பங்கேற்பர். உலக சுகாதார அவையின் திட்டங்களை மண்டல அளவில் செயல்படுத்துவதும் மண்டலக் குழுவின் பொறுப்பாகும்.
நோக்கம்
இதன் நோக்கம், “எல்லா மக்களுக்கும் முடிந்தவரையிலான உடல்நலத்தைப் பெற வழி வகுத்தல் ”
இதன் நோக்கத்தை நிறைவேற்ற, கீழ்க்கண்ட செயல்பாடுகள் உதவுகின்றன.
(1) உலக அளவில், சுகாதாரத்தைப் பேணும் நேரடி, உயர்நிலை அமைப்பாக இருத்தல்
(2) ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து, சிறப்பு சுகாதார குழுக்களை ஏற்படுத்தல்
(3) அரசுகளின் வேண்டுகோளுக்கு இணங்கி, சுகாதாரத்தைப் பேண உதவுதல்
(4) அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப, அவசரகால உதவிகளை செய்து தருதல்
(5) ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கு ஏற்ப, பகுதிவாரியாக சிறப்புக் குழுக்களுக்கு பயிற்சி அளித்தல்
(6) தேவையான நிர்வாக, தொழில்நுட்ப உதவிகளை மேற்கொள்ளல்.
(7) நோய்த்தடுப்பு முறைகளை மேம்படுத்தல்
(8) விபத்துக் காலங்களில், சிறப்புக் குழுக்களுடன் இணைந்து செயல்படுதல்
(9) சுற்றுச்சூழலில் சுகாதாரத்தைப் பேணுவதற்கான காரணிகளை கவனித்து, மேம்படுத்தல்
(10) சுகாதாரத்தை மேம்படுத்த உழைக்கும் குழுக்களை ஊக்குவித்தல்
(11) சட்டங்கள், ஆலோசனைகள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தல்
நாடுகளும் அலுவலகங்களும்
இந்த அமைப்பு 147 நாடுகளில் இயங்குகிறது. . இது சில உதவி அலுவலகங்களையும் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள், உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம். ஆகியவற்றிற்காக இவை செயல்படுகின்றன. கேன்சர் தடுப்பிற்கான சர்வதேச ஆய்வு மையம், பிரான்சில் லியோன் நகரில் உள்ளது.
சுகாதார மேம்பாட்டிற்கான மையம், ஜப்பானின் கோபே நகரில் உள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் ஓர் அலுவலகம் இருக்கும். சில நாடுகளில் மண்டலத்திற்குத் துணை அலுவலகங்களும் உள்ளன.
இந்த அமைப்பிற்கான நாட்டின் பிரதிநிதி, அந்த நாட்டின் அலுவலகத் தலைவராக இருப்பார்.
இது 147 நாடுகளில் 8,500 பேர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.
சட்டசபை
உலக சுகாதார அவை, இந்த அமைப்பின் உயரிய பொறுப்பைக் கொண்டதாகும். இதன் தலைமையகம், ஜெனிவா நகரில் உள்ளது. ஆண்டுக்கொருமுறை மே மாதம் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்டவர், அவையின் தலைவராக, ஐந்தாண்டு காலம் பதவி ஏற்பார். இந்த அவை செயலாக்க அவையின் செயற்பாடுகளை மீள்பார்வையிடுகிறது.
சுகாதாரத்துறையில் சிறந்த 34 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, செயலாக்க அவையில் இடம்பெறுவர். சட்டசபையின் கொள்கைகளுக்கு உட்பட்டு திட்டங்களை வகுப்பது செயலாக்க அவையின் பொறுப்புகளில் ஒன்று.
நிர்வகித்தல்
இந்த அமைப்பின் பதின்மூன்று கொள்கைகள் இதைச் சார்ந்தே உள்ளன.
”ஐக்கிய நாடுகள் சபை, நாடுகள் ஆகியவற்றுடன் இணைந்து, சுமுகமான உறவை மேம்படுத்தி, உலக சுகாதார மேம்பாட்டிற்கு உழைத்தல்” என்பது இதன் முதல் கொள்கை. "இந்த அமைப்பை சிறப்பாகச் செயல்படச் செய்ய ஏதுவாக இருத்தல்” என்பது இதன் இரண்டாவது கொள்கை.
உறுப்பினர்கள்
2013 ஆம் ஆண்டு வரையில், இந்த அமைப்பிற்கு 194 உறுப்பு நாடுகள் உள்ளன. இவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களாக உள்ளன. லீச்டென்ஸ்டெயின், குக் தீவுகள், நியுவே ஆகிய நாடுகள் இதன் உறுப்பினர்கள் இல்லை. புவேர்ட்டோ ரிக்கோ, டோக்கெலாவ் ஆகியன இதன் துணை உறுப்பினர்களாக உள்ளன. பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர்களாக ஏற்கப்பட்டுள்ளன.
இதன் சட்டத்தின்படி, அனைத்து ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்களும் இதன் உறுப்பினராகத் தகுதி உடையன. ஐநா சபையில் இல்லாத பிற நாடுகளும், ஐநா சபையின் வாக்கெடுப்பில் தேர்வானால் உறுப்பினராக சேர்க்கப்படுகின்றன.
மேலும் பார்க்கவும்
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு
பொது நலம்
அயனமண்டல நோய்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
உலக சுகாதார நிறுவனம்
அமைப்புகள்
ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்
|
7062
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
கன்னிமாரா பொது நூலகம்
|
சென்னையிலுள்ள கன்னிமாரா பொது நூலகம் (Connemara Public Library) இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். ஆதலால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் சஞ்சிகைகள் ஆகியவற்றின் ஒரு படி (பிரதி) இங்குப் பெறப்படும். 1890-இல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க, புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இஃது ஐக்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது.
வரலாறு
கன்னிமாரா நூலகத்தின் ஆரம்பம் 1860-இல் தொடங்குகிறது. அன்றைய பிரிட்டிசு இந்தியப் பேரரசின், மதராஸ் மாகாணத்தின் மதராஸ் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாகச் சிறு நூலகம் கேப்டன் ஜீன் மிட்செலால் தொடங்கப்பட்டது. இங்கிலாந்தின் எய்லிபரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தேவைக்கதிகமாக இருந்தன, அவையாவும் மதராஸ் மாகணத்துக்கு அனுப்பப்பட்டன. அவை, மதராஸ் அருங்காட்சியகத்துக்கு அளிக்கப்பட்டன. பிரிட்டிசு அருங்காட்சியக-நூலக மாதிரியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்நூலகம் 1890 வரை அருங்காட்சியகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அன்றைய மதராஸ் மாகாணத்தின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு, மாகாணத்துக்கான பொது நூலகம் அமைக்கும் தேவையை உணர்ந்து 1890-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் நாள் அடிக்கல் நாட்டினார். 1896-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. இந்த நூலகம் திறக்கப்பட்டபோது அவர் ஆட்சியில் இல்லாவிடினும் அவருடைய பெயரே நூலகத்துக்கும் சூட்டப்பட்டது.
1948-ஆம் ஆண்டு மதராஸ் பொது நூலகச் சட்டத்தின்படி, (இச்சட்டமே இந்தியாவிலேயே முதன்முதலில் பொதுநூலகங்களை அங்கீகரித்து, அமைத்து, நிருவகித்தல் சம்பந்தமான முக்கிய செயல்பாடு ஆகும்) கன்னிமாரா பொது நூலகம் மாநிலத்தின் மைய நூலகமாயிற்று.
கட்டமைப்புக் கலைகளின் ஒருங்குமையைக் குறிக்குமாறு அமைந்த கட்டடங்களோடு 1973-இல் மேலும் ஒரு கட்டடம் கட்டப்பட்டது. இவற்றில், வார இதழ்கள்-நாளிதழ்கள் பிரிவு, பாடப்புத்தகப் பிரிவு, குறிப்புதவிப் பிரிவு, இந்திய மொழிகள் பிரிவு, வேற்றுமொழி இலக்கியங்கள் பிரிவு, காணொளி பிரிவு ஆகியவற்றோடு இந்திய ஆட்சிப் பணி தேர்வு ஆயத்தத்துக்கான தனித்துவ பிரிவு ஆகியவை இருக்கின்றன. நூலகம் முழுமைக்கும் கணினிமயப்படுத்தல் முடிவுறும் தறுவாயில் உள்ளது. இங்கு மொத்தம் ஆறு இலட்சத்துக்கும் மேலான புத்தகங்கள் உள்ளன.
1981-ஆம் ஆண்டு இந்திய நடுவண் அரசின் ஆணைப்படி கன்னிமாரா பொது நூலகம் நாட்டின் களஞ்சிய நூலகமானது. நாட்டில் மொத்தம் நான்கு களஞ்சிய நூலகங்கள் உள்ளன. எனினும் கன்னிமாரா பொது நூலகம், நூலக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பில் பதிவுபெற்ற உறுப்பினராக இல்லை.
நூலகர்கள்
வெளி இணைப்புகள்
கன்னிமாரா பொதுநூலக இணையத்தளம்
மேலும் பார்க்க
அண்ணா நூற்றாண்டு நூலகம்
அரசு அருங்காட்சியகம், சென்னை
உசாத்துணைகள்
சென்னை
சென்னை நூலகங்கள்
|
7065
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE
|
கார்த்திக் ராஜா
|
கார்த்திக் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் ஆவார். கார்த்திக் ராஜா இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த ஒரு இந்திய இசையமைப்பாளர். தமிழ்த் திரைப்படமான பாண்டியன் (1992) திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டப்பட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
கார்த்திக் ராஜா இசை அமைப்பாளர் மேஸ்ட்ரோ இளையராஜாவின் மூத்த மகன். அவரது சகோதரர் யுவன் சங்கர் ராஜா மற்றும் தமிழ் திரைப்பட இசை இயக்குநர்கள் மற்றும் பின்னணி பாடகர்களான சகோதரி பவதாரிணி ஆகியோர் அவருடன் குறிப்பிடத்தக்க திட்டங்களில் பணியாற்றியுள்ளனர். சென்னையில் உள்ள செயின்ட் பேட்ஸ் பள்ளி மற்றும் பாஸ்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை செய்தார். 8 ஜூன் 2000 அன்று, கார்த்திக் ராஜா இந்தியாவின் ஆந்திராவின் திருப்பதியில் ராஜா ராஜேஸ்வரியை மணந்தார்.
தொழில்
இசைக்கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த இவர், சிறு வயதிலேயே பல்வேறு வகையான இசையை வெளிப்படுத்தினார். டிரினிட்டி ஸ்கூல் ஆஃப் மியூசிக், முக்கியமாக பியானோவில் (ஜேக்கப் ஜானுடன் இணைந்தவர்) மேற்கத்திய கிளாசிக்கல் இசையில் முறையான பயிற்சி பெற்றார். டி. வி. கோபாலகிருஷ்ணன் மற்றும் மலையாள இசையமைப்பாளர் வெ. தட்சிணாமூர்த்தி ஆகியோரிடமிருந்தும் கர்நாடக இசையில் பயிற்சி பெற்றார்.
ஒரு குழந்தையாக இருந்தபோது, அவர் அடிக்கடி தனது தந்தையுடன் ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்கு வருவார். தனது 13 வயதில் கார்த்திக் ராஜா தமிழ்த் திரைப்படமான நினைக்க தெரிந்த மனம் (1987)இன் கண்ணுக்கம் பாடலுக்கு விசைப்பலகை வாசித்தார். நாயகன் திரைப்படத்தின் ஒலிப்பதிவுக்கு விசைப்பலகை வாசிப்பது உட்பட இதுபோன்ற பல பயணங்களைத் தொடர்ந்தார். கார்த்திக் தனது தந்தைக்கு பல பதிவுகளையும் ஏற்பாடு செய்ததோடு, பாண்டியன் (1992) திரைப்படத்திற்காக தனது முதல் பாடலான "பாண்டியனின் ராஜ்ஜியத்தில்" மற்றும் ஆத்மா (1993) திரைப்படத்திற்காக "நினைக்கின்ற பாதையில்" பாடலுக்கு இசையமைத்தார். இந்த நேரத்தில், அவர் தொலைக்காட்சி தொடரான விவிலியத்திற்கு பின்னணி இசையை இயற்றினார்.
1996 ஆம் ஆண்டில் அலெக்சாண்டர் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் முழு அளவிலான இசையமைப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மாணிக்கம் திரைப்படத்திற்காக இசையமைத்தார். பின்னர் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பைப் பெற்றார். குறிப்பாக உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர் , காதலா காதலா மற்றும் டும் டும் டும் போன்றவையாகும். கிரஹனுடன் இந்திப் படங்களிலும் அறிமுகமானார். இது சிறந்த புதிய திறமைக்கான ஆர்.டி. பர்மன் விருதை பெற்றுத் தந்தது.
இசையமைத்த சில திரைப்படங்கள்
மாணிக்கம்
உல்லாசம்
அலெக்சாண்டர்
நாம் இருவர் நமக்கு இருவர்
உள்ளம் கொள்ளை போகுதே
டும் டும் டும்
ஆல்பம்
ரகசியமாய்
குடைக்குள் மழை
நெறஞ்ச மனசு
நாளை
மனதோடு மழைக்காலம்
சகாப்தம்
''முருகா
மேற்கோள்கள்
இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்
1973 பிறப்புகள்
வாழும் நபர்கள்
1970 பிறப்புகள்
பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
தமிழ்நாட்டு இசைக்கலைஞர்கள்
|
7066
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE
|
யுவன் சங்கர் ராஜா
|
யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja; பிறப்பு: ஆகத்து 31, 1979) தமிழ்த் திரைப்பட இசைக்கலைஞர், பின்னணி பாடகர், பாடல் ஆசிரியர் ஆவார். பெரும்பான்மையாக தமிழ் படங்களிள் பணியாற்றுகிறார். பல்துறை இசையமைப்பாளராகக் கருதப்படும் இவர், குறிப்பாக மேற்கத்திய இசையைப் பயன்படுத்தியதற்காக அறியப்படுபவர் , மேலும் தமிழ் திரைப்படம் மற்றும் இசைத் துறையில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர் . தமிழ் நாட்டில் "ரீமிக்ஸ்” கலாச்சாரத்தை தொடங்கி அதனை பிரபலபடுத்தியவர். ராம் படத்தின் இசைக்காக 2006 இல் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் இவர். அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் மற்றும் விசுவாசமான ரசிகர் பட்டாளம் அவருக்கு "யூத் ஐகான்" என்ற புனைப்பெயரைப் பெற்றுத்தந்தது.
15 வருட காலத்திற்குள், யுவன் சங்கர் ராஜா 100 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனான இவர் , 1996 ஆம் ஆண்டில், தனது 16 வயதில், அரவிந்தன் என்ற திரைப்படத்திற்காக இசையமைத்து , தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் துள்ளுவாதோ இளமை (2001) படத்தின் இசை மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமானார், மேலும் 2000 களின் நடுப்பகுதியில் தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்தார். 2015 ஆம் ஆண்டில், அவர் தனது சொந்த இசை லேபிளான U1 ரெக்கார்ட்ஸை உருவாக்கி, 2017 ஆம் ஆண்டில், தனது சொந்த திரைப்பட தயாரிப்பு ஸ்டுடியோ, ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் தொடங்கினார்.
யுவன் இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்; 2004 ஆம் ஆண்டில், 7 ஜி ரெயின்போ காலனி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது மற்றும் 2009 ஆம் ஆண்டில் ஒய்! என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறப்பு விருது விருதினைப் பெற்றார். பிலிம்பேர் விருதுகளுக்காக ஆறு பரிந்துரைகளையும், 2006 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இரண்டு தமிழக மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை
இசைக்கலைஞரும் திரைப்பட இசையமைப்பாளருமான இளையராஜாவின் மூன்றாவது மற்றும் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. அவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா மற்றும் பின்னணி பாடகர்- இசையமைப்பாளர் பவதாரிணியின் தம்பி. யுவன் ஒருமுறை தனது சகோதரர் கார்த்திக் ராஜா தன்னை விட திறமையானவர் என்று ஒப்புக்கொண்டுள்ளார் . அவரது தந்தையும், உடன்பிறப்புகளும் அவரது இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளனர். திரைப்பட இயக்குனரும் திரைப்பட இசையமைப்பாளருமான கங்கை அமரன் மற்றும் ஆர்.டி.பாஸ்கர் அவரது மாமாக்கள் மேலும் தமிழ் திரையுலகில் பணியாற்றிவரும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் மற்றும் பார்த்தி பாஸ்கர் ஆகியோர் அவருடைய உறவினர்கள்.
யுவன் ஷங்கர் ராஜா தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பு வரை மற்றுமே பயின்ற யுவன் பின்னர் ஜேக்கப் மாஸ்டரிடமிருந்து இசையைக் கற்கத் தொடங்கினார். இங்கிலாந்தின் லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியுடன் இணைந்த சென்னையில் உள்ள "மியூசி மியூசிகல்" என்ற பியானோ வகுப்புகளில் கலந்துக்கொண்டார். தான் எப்போதும் ஒரு விமானி ஆகவும், உலகம் முழுவதும் பயணிக்க விரும்புவதாகவும் யுவன் சங்கர் ராஜா கூறினார், ஆனால் தன்னை சுற்றியுள்ள இசையுடன் வளர்ந்ததால், இறுதியில் இசைக்கலைஞரானார்.
2014 ஆம் ஆண்டு பிப்ரவரியில் யுவன் தான் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விட்டதாக தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்தார். தன்னுடைய முஸ்லிம் பெயர் அப்துல் ஹாலிக் என்பதாகவும் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று ஜஃப்ரூன் நிஷா என்ற பெண்ணை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இசைப்பயணம்
திரைப்பட இசை
ஆரம்பக்காலம் (1997-2000)
1996 ஆம் ஆண்டில், இசையை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ளுமாறு அவரது தாயார் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜா ஒரு ஆல்பத்திற்கான தாளங்களை இசையமைக்கத் தொடங்கினார். அரவிந்தன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் டி.சிவா, யுவனின் சில இசைக்கோர்வைகளைக் கேட்டபின், அப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளுக்காக இசையமைக்கச் சொன்னார். அவ்விசையால் ஈர்க்கப்பட்டு, அப்படத்தின் முழு இசையின் பொறுப்பையும் யுவனுக்கு வழங்கினார், பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, யுவன் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்; இவ்வாறு யுவனின் இசைப்பயணம் தொடங்கியது. யுவன் அரவிந்தன் படத்திற்கு இசையமைக்கும்போது அவருடைய வயது 16. இன்றளவிலும் அச்சிறுவயதில் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் யுவன். தான் இசையமைக்க வந்தது முற்றிலும் தற்செயலானது என்று குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், அரவிந்தன் படம் மற்றும் இசை மக்களை ஈர்க்கத் தவறிவிட்டன. இதனை தொடர்ந்து யுவனின் இசையில் வெளியான வேளை (1998) மற்றும் கல்யாண கலாட்டா (1998) தோல்வியை சந்தித்தது. அப்படத்திற்கான இசையும் பெருமளவில் ஏற்கப்படவில்லை. விமர்சகர் ஒருவர் பின்னணி இசை குறிப்பிடும் அளவுக்கு இல்லை என்றார்.யுவனின் முதல் சில படங்கள் தோல்வியடைந்ததை அடுத்து அவருக்கு யாரும் பட வாய்ப்புகள் கொடுக்கவில்லை. அச்சமயத்தில் தான் இயக்குனர் வசந்த் அவருடைய பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்திற்கு இசையமைக்க யுவனை அனுகினார், யுவனும் ஒப்புக்கொண்டார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் இசைக்காக யுவனுக்கு பாராட்டுகள் குவிய தொடிங்கின. அதன் இசை முற்றிலும் மாறுபட்ட புதுமையான முயற்சி என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பாராட்டியது, ராஜா என்ற பெயருக்கு தகுதியுடையவர் என்று குறிப்பிட்டு இருந்தது. மிகவும் பாராட்டப்பட்ட “இரவா பகலா”, “சுடிதார் அணிந்த்து” போன்ற பாடல்கள் யுவனை குறிப்பாக இளைஞர்கள் குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலப்படுத்தியது. சுந்தர் C உடன் சேர்ந்து இரண்டு படங்கள் (உனக்காக எல்லாம் உனக்காக – 1999, ரிஷி – 2000) பணியாற்றிய யுவன் பிறகு அஜித் நடிப்பில் A R முருகதாஸ் இயக்கத்தில் வந்த அதிரடி திரைப்படம் தீனா வில் பணியாற்றினார். தீனா யுவனின் முதல் வெற்றி படமாக அமைந்தது. அதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது, படத்தின் வெற்றியில், யுவனின் இசைக்கு பெரும் பங்கு உண்டு.
குறிப்பிடத்தக்க வளர்ச்சி (2001-2003)
2001 ஆம் ஆண்டு செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை. இப்படத்தை கஸ்தூரி ராஜா இயக்கினார், ஆனால் அவரது மகனான செல்வராகவன் திரைக்கதை எழுதி, படத்தின் இசைக்காக யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றினார். துள்ளுவதோ இளமையின் இசை இளையத்தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது. இப்படம் செல்வராகவனின் தம்பியும் நடிகருமான தனுஷின் அறிமுகப்படமாகும். வணிகரீதியாக இப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து வெளிவந்த பாலாவின் நந்தா(2001) திரைப்படத்திற்கு யுவனுக்கு பாராட்டுகள் குவிய தொடங்கின. அதற்கு அடுத்த வருடம் வெளியான ஏப்ரல் மாதத்தில்(2001) படத்தின் இசையும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்தது. பிறகு வந்த திரைப்படங்கள் காதல் சாம்ராஜ்யம்-2002 (படம் திரைக்கு வரவில்லை, பாடல்கள் மட்டும் வெளிவந்தது) மௌனம் பேசியதே-2002, புன்னகை பூவே-2002 (யுவனுக்கு படத் திரையில் அறிமுகம்)
இவர் இசையமைத்துள்ள திரைப்படங்கள்
தமிழில்
அரவிந்தன் (1997) (அறிமுகம்)
வேலை (1998)
கல்யாண கலாட்டா (1998)
பூவெல்லாம் கேட்டுப்பார் (1999)
தி பிளாஸ்ட் (திரைப்பட இசையல்லாத இசைக்கோப்பு)
உனக்காக எல்லாம் உனக்காக (1999)
ரிஷி (2000)
தீனா (2000)
துள்ளுவதோ இளமை (பாடல்கள் மாத்திரம்) (2001)
மனதை திருடி விட்டாய் (2001)
நந்தா (2001)
ஜூனியர் சீனியர் (2002)
காதல் சாம்ராஜ்ஜியம் (2002)
ஏப்ரல் மாதத்தில் (2002)
பாலா (2002)
மௌனம் பேசியதே (2002)
புன்னகைப் பூவே (2002)
பாப் கார்ன் (2002)
வின்னர் (2003)
காதல் கொண்டேன் (2003)
புதிய கீதை (பாடல்கள் மாத்திரம்) (2003)
தென்னவன் (2003)
குறும்பு (2003)
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் (2003)உள்ளம் (2004)எதிரி (2004)பேரழகன் (2004)7 ஜி ரெயின்போ காலனி (2004)மன்மதன் (2004)போஸ் (2004)அது (பின்னணி இசை மாத்திரம்) (2004)ராம் (2005)அறிந்தும் அறியாமலும் (2005)தாஸ் (2005)ஒரு கல்லூரியின் கதை (2005)கண்ட நாள் முதல் (2005)சண்டக்கோழி (2005)கள்வனின் காதலி (2005)அகரம் (2005)புதுப்பேட்டை (2005)பட்டியல் (2006)அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)கேடி (2006)வல்லவன் (2006)திமிரு (2006)பருத்திவீரன் (2006)தாமிரபரணி (2006)
தீபாவளி (2007)
சென்னை 600028 (பாடல்கள் மாத்திரம்) (2007)
சத்தம் போடாதே (2007)
தொட்டால் பூ மலரும் (2007)
கண்ணாமூச்சி ஏனடா (2007)
கற்றது தமிழ் (2007)
வேல் (2007)
மச்சக்காரன் (2007)
பில்லா 2007 (2007)
வாழ்த்துகள் (2008)
சரோஜா (2008)
யாரடி நீ மோகினி (2008)
ஏகன் (2008)
சிலம்பாட்டம் (2008)
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009)
சிவா மனசுல சக்தி (2009)
சர்வம் (2009)
வாமனன் (2009)
முத்திரை (2009)
யோகி (2009)
பையா (2009)
தீராத விளையாட்டு பிள்ளை (2009)
கோவா (2010)
பாணா காத்தாடி (2010)
காதல் சொல்ல வந்தேன் (2010)
தில்லாலங்கடி (2010)
நான் மகான் அல்ல (2010)
பாஸ் (எ) பாஸ்கரன் (2010)
பதினாறு (2010)வானம் (2011)அவன் இவன் (2011)
ஆரண்ய காண்டம் (பின்னணி இசை மாத்திரம்) (2011)
மங்காத்தா (2011)
ராஜபாட்டை (2011)
வேட்டை (2012)
கழுகு (2012)
பில்லா 2 (2012)
சமர் (பாடல்கள் மாத்திரம்) (2013)
அமீரின் ஆதிபகவன் (2013)
மூன்று பேர் மூன்று காதல் (2013)
கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013)
தில்லு முல்லு (2013) (ம. சு. விசுவநாதனுடன் இணைந்து)
தங்க மீன்கள் (2013)
ஆதலால் காதல் செய்வீர் (2013)
பிரியாணி (2013)
ஆரம்பம் (2013)
வடகறி(ஒரு பாடல்)(2014)
வானவராயன் வல்லவராயன்
திருடன் போலீஸ்
அஞ்சான்
பூஜை
வை ராஜா வை
இடம் பொருள் ஏவல்
மாஸ்(2015)
யட்சன்
தர்மதுரை(2016)
சென்னை600028-2
யாக்கை
நெஞ்ஞம் மறப்பதில்லை
தரமணி
சத்ரியன்(2017)
கடம்பன்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன்
சந்தனதேவன்(1 Song out)
செம்ம போதை ஆகாது
பலூன்
இரும்புதிரை(2018)
ராஜா ரங்குஸ்கி
பேய்பசி
பேரன்பு
பியார் பிரேமா காதல்
ஓம்(1Song)
ஜுனீயஸ்
சண்டக்கோழி 2
மாரி 2
கண்ணே கலைமானே(2019)
கழுகு 2
சூப்பர் டீலக்ஸ்
என். ஜி. கே
சிந்துபாத்
நேர்கொண்டபார்வை
ஹுரோ
== இவர் இசையமைத்து வெளிவரவுள்ள திரைப்படங்கள்
சந்தனதேவன்
மன்னவன் வந்தானடி
மாமனிதன்
எரியும் கண்ணாடி
குருதியாட்டம்
களத்தில் சந்திப்போம்
டிக்லோனா
கசடதபர
ஆலிஸ்
மாநாடு
வலிமை
சக்ரா
YuvanBadri3
விருதுகள்
சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருது (2006)
சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - 7 ஜி ரெயின்போ காலனி (2004)
விருப்பமான பாடலுக்கான விஜய் விருது - "என் காதல் சொல்ல" - பையா (2010)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பிரசித்தமான பாடல்கள்
இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்
பாடலாசிரியர்கள்
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்
1979 பிறப்புகள்
வாழும் நபர்கள்
தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
சென்னை இசைக்கலைஞர்கள்
இந்திய முஸ்லிம்கள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
சென்னைப் பாடகர்கள்
தமிழ் முசுலிம் நபர்கள்
|
7069
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2023
|
திசம்பர் 23
|
நிகழ்வுகள்
562 – கான்ஸ்டண்டினோபில் நகரில் நிலநடுக்கங்களால் சேதப்படுத்தப்பட்ட ஹேகியா சோபியா பெருங்கோவில் புனரமைக்கப்பட்டது.
962 – அரபு–பைசாந்தியப் போர்கள்: நிக்கொப்போரசு போக்கசு தலைமையில் பைசாந்திய இராணுவம் அலெப்போ நகரைத் தாக்கியது.
1572 – செருமனிய இறையியலாளர் யொகான் சில்வான் ஐடெல்பெர்கு நகரில் அவரது திரிபுவாத திருத்துவ-எதிர்க் கொள்கைகளுக்காகத் தூக்கிலிடப்பட்டார்.
1688 – மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார்.
1783 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையின் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார்.
1876 – கான்ஸ்டண்டினோபில் மாநாட்டின் ஆரம்ப நாளில் பால்கன் குடாவில் அரசியல் சீர்திருத்தத்திற்கு உடன்பாடு காணப்பட்டது.
1914 – முதலாம் உலகப் போர்: ஆத்திரேலிய, நியூசிலாந்துப் படைகள் கெய்ரோவில் தரையிறங்கினர்.
1916 – முதலாம் உலகப் போர்: எகிப்தின் சினாய்க் குடாவில் கூட்டுப் படைகள் துருக்கியப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றன.
1941 – இரண்டாம் உலகப் போர்: 15 நாட்கள் சண்டைக்குப் பின்னர் சப்பானிய இராணுவம் வேக் தீவைக் கைப்பற்றியது.
1947 – முதலாவது டிரான்சிஸ்டர் பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1948 – ஏழு சப்பானியப் போர்க் குற்றவாளிகளுக்கு டோக்கியோவின் சுகோமோ சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1954 – முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
1958 – டோக்கியோ கோபுரம், உலகின் மிகப்பெரிய இரும்பினாலான கோபுரம், திறக்கப்பட்டது.
1968 – வட கொரியாவில் 11 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 82 அமெரிக்க மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
1970 – நியூயார்க் நகரில் அமைந்துள்ள உலக வணிக மையத்தின் வடக்குக் கோபுரம் உலகின் மிக உயர்ந்த கட்டடமாக அறிவிக்கப்பட்டது.
1970 – காங்கோ மக்களாட்சிக் குடியரசு அதிகாரபூர்வமாக ஒரு-கட்சி நாடாக மாறியது.
1972 – நிக்கராகுவா தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் 10,000 இற்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
1972 – தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் மலைத்தொடரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் தப்பிய 16 பேர் 73 நாட்களுக்குப் பின்னர் காப்பாற்றப்பட்டனர்.
1979 – ஆப்கான் சோவியத் போர்: சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.
1986 – எங்கும் தரையிறங்காமல் முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த வொயேஜர் விமானம், டிக் ரூட்டன், ஜீனா யேகர் ஆகிய விமானிகளுடன் கலிபோர்னியாவில் தரையிறங்கியது.
1990 – 88% சுலோவீனிய மக்கள் யுகோசுலாவியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2003 – சீனாவின் சோங்கிங்கில் இடம்பெற்ற இயற்கை வாயு வெடி விபத்தில் 234 பேர் உயிரிழந்தனர்.
2005 – அசர்பைஜான் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் பக்கூ நகரில் வீழ்ந்து நொருங்கியதில் 23 பேர் உயிரிழந்தனர்.
2005 – சாட் சூடானுடன் போரை அறிவித்தது.
2007 – நேபாள இராச்சியம் கலைக்கப்பட்டு குடியரசாக மாறுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. பிரதமர் அரசுத்தலைவரானார்.
பிறப்புகள்
1722 – ஏக்சல் பிரெடரிக் குரான்ஸ்டெட், சுவீடன் கனிமவியலாளர், வேதியியலாளர் (இ. 1765)
1777 – முதலாம் அலெக்சாந்தர், உருசியப் பேரரசர் (இ. 1825)
1805 – இரண்டாம் யோசப்பு இசுமித்து, அமெரிக்க மதத் தலைவர் (இ. 1844)
1807 – அந்தோனி மரிய கிளாரட், ஸ்பானிய ரோமன் கத்தோலிக்க மறைப்போதகர் (இ. 1870)
1867 – மேடம் சி. ஜே. வாக்கர், அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1919)
1902 – சரண் சிங், 5வது இந்தியப் பிரதமர் (இ. 1987)
1912 – அன்னா ஜேன் ஆரிசன், அமெரிக்க வேதியியலாளர் (இ. 1998)
1922 – அரோல்டு மாசுர்சுகி, அமெரிக்கப் புவியியலாளர், வானியலாளர் (இ. 1990)
1933 – அக்கிகித்தோ, சப்பானியப் பேரரசர்
1938 – பாபு கான், அமெரிக்கக் கணினி அறிவியலாளர், பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறையைக் கண்டுபிடித்தவர்
1940 – மம்நூன் உசைன், பாக்கித்தானின் 12-வது அரசுத்தலைவர்
1948 – ஜான் பீட்டர் அக்ரா, அமெரிக்க வானியலாளர் (இ. 2010)
1958 – அனிதா பிரதாப், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர்
1962 – இசுடீபன் எல், நோபல் பரிசு பெற்ற உருமேனிய-அமெரிக்க வேதியியலாளர்
1967 – கார்லா புரூனி, இத்தாலிய-பிரான்சிய பாடகி
1981 – ராதிகா சிற்சபையீசன், இலங்கை-கனடிய அரசியல்வாதி
இறப்புகள்
1834 – தோமஸ் மால்தஸ், ஆங்கிலேய பொருளியலாளர் (பி. 1766)
1907 – பியேர் ஜான்சென், பிரான்சிய வானியலாளர் (பி. 1824)
1952 – சா. தர்மராசு சற்குணர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1877)
1959 – இர்வின் பிரபு, பிரித்தானிய அரசியல்வாதி (பி. 1881)
1973 – ஜெரார்டு குயூப்பர், டச்சு-அமெரிக்க வானியலாளர், கோள் அறிவியலாளர் (பி. 1905)
1981 – பி. கக்கன், இந்திய விடுதலை போராட்ட வீரர், அரசியல்வாதி (பி. 1908)
2004 – பி. வி. நரசிம்ம ராவ், 9வது இந்தியப் பிரதமர் (பி. 1921)
2010 – கே. கருணாகரன், கேரளாவின் 7வது முதலமைச்சர் (பி. 1918)
2013 – மிக்கைல் கலாசுனிக்கோவ், ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்த உருசியப் பொறியாளர் (பி. 1919)
2014 – கே. பாலச்சந்தர், தமிழகத் திரைப்பட இயக்குனர் (பி. 1930)
2014 – கூத்தபிரான், தமிழக நாடகக் கலைஞர் (பி. 1932)
சிறப்பு நாள்
குழந்தைகள் நாள் (தெற்கு சூடான், சூடான்)
தேசிய உழவர் நாள் (இந்தியா)
வெளி இணைப்புகள்
பிபிசி: இன்றைய நாளில்
நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
திசம்பர் 23 வரலாற்று நிகழ்வுகள், OnThisDay.com
திசம்பர்
ஆண்டின் நாட்கள்
|
7071
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
|
டிரில்லியன்
|
மேற்கத்திய எண்முறையில் மும்மநுல்லியம் அல்லது டிரில்லியன் என்பது ஓராயிரம் இருமநுல்லியம் / பில்லியனைக் (1000 X 1000 X 1000 X 1000)குறிக்கும். ஒரு டிரில்லியன், 1,000,000,000,000 என எழுதப்படுகிறது. ஒன்றின் பின் 12 சுழிகள். அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு டிரில்லியன், 1012 என எழுதப்படும்.
ஒரு டிரில்லியன் என்பது ஓராயிரம் மும்மடி ஆயிரம் (1000 X 10003). இதே போல குவாட்ரில்லியன் என்பது ஓராயிரம் நான்கு மடி ஆயிரம் (1000 X 10004). குவின்ட்டில்லியன் என்பது ஓராயிரம் ஐந்துமடி ஆயிரம் (1000 X 10005). இவ்வெண் முறையில் எண்களின் பெயர்கள் இவ்வாறு ஆயிரத்தின் பன்மடிகளாக அடுக்கப்பட்டு பெயர்சூட்டப்பட்டுள்ளன. முன்னொட்டுகளாகிய டிரி (tri), குவார்ட் (quart), குவின்ட் (quint) என்பன முறையே மூன்று, நான்கு, ஐந்து ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள். எண்களைப்பற்றி, அனைத்துலக முறைப்படி வழங்கும் முன்னொட்டு சொற்களை அறிய SI முன்னொட்டுச் சொற்கள் என்னும் கட்டுரையைப் பார்க்கலாம்.
எண்கள்
அளவை
|
7072
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
|
பிலிப்பீன்சு
|
பிலிப்பீன்சு அல்லது பிலிப்பைன்ஸ் ; (ஆங்கிலம்: Philippines; பிலிப்பினோ: pɪlɪˈpinɐs, (Pilipinas); என்று அழைக்கப்படும் பிலிப்பீனியக் குடியரசு (Republika ng Pilipinas) தென்கிழக்காசியாவின் இறைமையுள்ள ஒரு தீவு நாடாகும். மேற்கு பசிபிக் பெருங்கடலின் எல்லையில் அமைந்துள்ளது.
லூசோன் (Luzon), விசயாஸ் (Visayas) மற்றும் மின்டனாவு (Mindanao) எனப் பொதுவாக மூன்று முக்கியப் புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்சு நாடு 7,641 தீவுகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரம் மணிலா (Manila); மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் குவிசோன் நகரம் (Quezon City). இவ்விரு நகரங்களும் மணிலா பெருநகரத்தின் (Metro Manila) பகுதிகளாகும்
பிலிப்பீன்சின் எல்லைகளாக வடக்கே லூசோன் நீரிணைக்கு அப்பால் தாய்வான்; மேற்கே தென் சீனக் கடலுக்கு அப்பால் வியட்னாம் நாடுகளும்; தென்மேற்கே சுலு கடலுக்கு அப்பால் புரூணை தீவுகளும் உள்ளன. தெற்கே இந்தோனேசியாவின் தீவுகளில் இருந்து பிலிப்பீன்சைப் பிரிக்கும் செலிபிஸ் கடலும்; கிழக்கில் பிலிப்பைன்ஸ் கடலும்; பலாவு எனப்படும் ஒரு தீவு நாடும் உள்ளன.
பொது
பிலிப்பீன்சு பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் (Ring of Fire) அமைந்துள்ளது. அத்துடன் நில நடுக் கோட்டுக்கு அருகில் உள்ளதால் பூகம்பங்களும் சூறாவளிகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
இருந்தாலும், ஏராளமான இயற்கை வளங்களையும்; உலகின் மிகப் பெரிய உயிரியற் பல்வகைமையையும் இந்த நாடு கொண்டுள்ளது. பரப்பளவைக் கொண்ட பிலிப்பீன்சு உலகில் 72-ஆவது-பெரிய நாடாக விளங்குகின்றது.
110 மில்லியன் மக்கள்தொகை
110 மில்லியன் மக்கள்தொகையுடன் பிலிப்பீன்சு, ஆசியாவில் ஏழாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாகவும்; உலகில் 12-ஆவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாகவும் விளங்குகின்றது. மேலதிகமாக 12 மில்லியன் பிலிப்பினோக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் இது உலகின் மிகப்பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.
தீவுகள் எங்கும் பல்வேறுபட்ட இனங்களும் பண்பாடுகளும் காணப்படுகின்றன. ஆரம்ப வரலாற்றுக் காலத்தில், தீவுக் கூட்டத்தின் ஆரம்பக் குடிமக்களுள் சிலராக நெகிரிட்டோக்கள் காணப்பட்டனர். அவர்களின் வருகைக்குப் பின்னர் ஆஸ்திரோனேசிய மக்கள் அலைஅலையாக வந்து குடியேறினர். சீன, மலாய, இந்திய மற்றும் இசுலாமிய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்ந்தன. பின்னர், டாத்துக்கள், ராஜாக்கள், சுல்தான்கள் அல்லது லக்கன்களின் கீழ் பல்வேறு அரசுகள் நிறுவப்பட்டன.
லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ்
1521-இல் பெர்டினென்ட் மகலன் (Ferdinand Magellan) ஹொமொன்கொன் என்பவர், கிழக்கு சமருக்கு வருகை தந்தார். அதுவே எசுப்பானியக் காலனி ஆதிக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. 1543-இல், எசுப்பானிய நாடுகாண் பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு அரசருக்குக் கௌரவமளிக்கும் பொருட்டு இந்தத் தீவுக் கூட்டத்திற்கு லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ் எனப் பெயரிட்டார்.
மெக்சிக்கோ நகரத்தில் இருந்து மிகுவெல் லோபேஸ் டி லெகாஸ்பி (Miguel López de Legazpi) என்பவரின் வருகையுடன் 1565-இல் இந்தத் தீவுக் கூட்டத்தின் முதலாவது எசுப்பானியக் குடியிருப்பு நிறுவப்பட்டது. பிலிப்பீன்சு 300 வருடங்களுக்கு மேலாக எசுப்பானியப் பேரரசின் பகுதியாக இருந்தது.
வணிக மையமாக மணிலா
இதன் விளைவாகக் கத்தோலிக்கம் நாட்டின் முக்கியமான சமயமானது. இந்தக் காலத்தில், ஆசியாவுடன் அமெரிக்கா கண்டங்களை இணைத்த பசிபிக் பெருங்கடல் வழியாக மணிலா - அகபல்கோ வணிகத்தின் மேற்கத்திய மையமாக மணிலா உருவானது.
19-ஆம் நூற்றாண்டு நிறைவு அடைந்து 20-ஆம் நூற்றாண்டு ஆரம்பிக்கும் காலத்தில், முதலாவது பிலிப்பீன் குடியரசு தோன்றக் காரணமான பிலிப்பைன் புரட்சியும் அதனைத் தொடர்ந்து, பிலிப்பீன்–அமெரிக்கப் போரும் நிகழ்ந்தன. சப்பானியக் குடியேற்றக் காலத்தைத் தவிர்த்து இத்தீவுகள் மீதான இறையாண்மையை 1945-ஆம் ஆன்டு வரை ஐக்கிய அமெரிக்கா தக்க வைத்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிலிப்பீன்சு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது. அதன் பின்னர், சர்வாதிகாரத்தை பிலிப்பீன்சு மக்கள் தோற்கடித்தனர். அதிகாரப் புரட்சி; மற்றும் மக்களாட்சியில் பல கொந்தளிப்பான அனுபவங்களை பிலிப்பீன்சு எதிர்கொண்டது.
ஓர் இடைநிலை வல்லரசு
பாரிய மக்கள்தொகை அளவும், பொருளாதார உள்ளாற்றலும் இந்த நாட்டை ஓர் இடைநிலை வல்லரசாக வகைப்படுத்தப்படக் காரணமாக அமைந்துள்ளன. இது ஐக்கிய நாடுகள் அவை, உலக வணிக அமைப்பு, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, மற்றும் கிழக்காசிய உச்சிமாநாடு ஆகியவற்றை நிறுவிய உறுப்பு நாடுகளுள் ஒன்றாக விளங்குகின்றது.
ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் இங்கு அமைந்துள்ளது. பிலிப்பீன்சு ஒரு வளர்ந்து வரும் சந்தையாகவும்
புதிதாகக் கைத்தொழில்மயப்பட்ட நாடாகவும் கருதப்படுகின்றது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த பொருளாதாரம் தற்போது சேவை மற்றும் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றமடைந்து வருகின்றது.
பெயர் வரலாறு
எசுப்பானிய மன்னர் இரண்டாம் பிலிப்பின் (Philip II of Spain) நினைவாக பிலிப்பீன்சு என்ற பெயர் இத்தீவுக் கூட்டத்திற்குச் சூட்டப்பட்டது. எசுப்பானிய நாடுகாண் பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் (Ruy López de Villalobos) தன் 1542-ஆம் ஆண்டு பயணத்தின் போது அன்றைய எசுப்பானிய முடிக்குரிய இளவரசரின் நினைவாக லெய்ட்டி தீவு (Leyte), சாமார் தீவு (Samar) ஆகிய தீவுகளுக்குப் "பிலிப்பினாசு" (Felipinas) என்ற பெயரைச் சூட்டினார்.
இறுதியாக லாஸ் ஐலாஸ் பிலிப்பினாஸ் ("Las Islas Filipinas") என்ற பெயர் இந்தத் தீவுக்கூட்டம் முழுவதுக்கும் பொதுவானதாகப் பயன்படுத்தப்பட்டது. இப்பெயர் பொதுவானதாக மலர்வதற்கு முன்னர், ஐலாஸ் டெல் பொனியென்டே (Islas del Poniente: மேற்குத் தீவுகள்) என்றும் சான் லாசரோ தீவுகளை பேர்டினண்ட் மகலன் தீவுகள் என்றும் எசுப்பானியர்கள் அழைத்து வந்தனர்.
பிலிப்பீனியப் புரட்சி
பிலிப்பீன்சின் அதிகாரபூர்வப் பெயர் பலமுறை மாற்றத்திற்கு உள்ளானது. பிலிப்பீனியப் புரட்சியின் போது மலொலோஸ் காங்கிரஸ் (Malolos Congress) ரிபப்ளிக்கா பிலிப்பினா (República Filipina) அல்லது பிலிப்பீன் குடியரசை நிறுவுவதாகப் பிரகடனப் படுத்தியது. எசுப்பானிய-அமெரிக்கப் போர் (1898) மற்றும் பிலிப்பீன்-அமெரிக்கப் போர்க் (1899–1902) காலத்திலிருந்து பொதுநலவாயக் காலம் (1935–46) வரை அமெரிக்கக் காலனித்துவ அதிகாரிகள் எசுப்பானியப் பெயரின் மொழிபெயர்ப்பான பிலிப்பீன் தீவுகள் என இந்நாட்டைக் குறிப்பிட்டனர்.
1898 பாரிசு உடன்படிக்கை ஏற்பட்டதில் இருந்து பிலிப்பீன்சு என்ற பெயர் தோன்றி நாட்டின் பொதுவான பெயராகவும் மாறியது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் பிலிப்பீன்சு குடியரசு என்பது அலுவல்முறைப் பெயராக வழங்கப்பட்டு வருகின்றது.
வரலாறு
ஆரம்ப வரலாறு
இதுவரை இந்தத் தீவுக் கூட்டத்தில் கண்டறியப்பட்ட மனித எச்சங்களுள் கலாவோ குகை மனிதனின் (Callao Cave hominins) எச்சமே மிகப் பழமையானது. கலாவோ மனிதனின் கணுக்கால் எலும்புகளை யுரேனியத் தொடர் நாட்கணிப்பிற்கு உட்படுத்திய போது 67,000 ஆண்டுகள் பழமையானது என நம்பகமான முறையில் தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னர் இந்தச் சிறப்பை, கார்பன் நாட்கணிப்பின் (Uranium–thorium dating) மூலம் 24,000 ஆண்டுகள் பழமையானது எனக் கணிக்கப்பட்ட, பிலிப்பீன்சின் மாகாணமான பலாவனைச் சேர்ந்த, தபொன் மனிதன் (Tabon Man) பெற்றிருந்தான்.
நெகிரிட்டோக்களும் இத்தீவுக்கூட்டத்தின் முற்காலக் குடியேறிகளுள் ஒரு குழுவினராக இருந்த போதிலும் அவர்களின் முதல்குடியேற்றம் பிலிப்பீன்சில் எப்போது நிகழ்ந்தது என்பது இன்னும் நம்பகமான முறையில் கணிக்கப்படவில்லை.
தொல்லியல் சான்றுகள்
பண்டைய பிலிப்பினோக்களின் மூதாதையர்கள் பற்றிப் பல வேறுபாடான கோட்பாடுகள் நிலவுகின்றன. "தாய்வானில் இருந்து வந்தோர்" என்னும் கருத்தே மொழியியல் மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்றது.
இதன்படி தாய்வானிலிருந்து வந்த ஆஸ்திரோனேசியர்கள் முன்னர் வந்தவர்களை இடம்பெயரச்செய்து, கி.மு. 4000 இல் பிலிப்பீன்சில் குடியேறினர். கி.மு. 1000 அளவில், வேட்டையாடும் பழங்குடியினர், போர்வீரர்கள், மலைநாட்டின் பணம் படைத்த செல்வக்குழுக்கள் மற்றும் கடலோரத் துறைமுக ஆட்சிப்பகுதியினர் என நான்கு வகையான சமூகக் குழுக்களாக மக்கள் வாழலாயினர்.
மரபு வழி அரசுகள்
பிலிப்பீன்சு தீவுகளில் பரவியிருந்த சில சமூகங்கள் தனிமைப் படுத்தப்பட்டு இருந்தன. இருந்த போதிலும் அவற்றில் பல சமூகங்கள் அரசுகளாக மாற்றம் அடைந்தன. புரூணை, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சப்பான் மற்றும் ஏனைய ஆஸ்திரோனேசிய தீவுகள் உள்ளடங்கலாக கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்களுடன் கணிசமான வணிகம் முதலான தொடர்புகளை வளர்த்துக் கொண்டன.
தன்னாட்சி கொண்ட அரசுகள்
முதலாவது ஆயிரம் ஆண்டுகாலத்தில் கடலோரத் துறைமுக ஆட்சிப் பகுதிகள் எழுச்சியுற்று தன்னாட்சி கொண்ட பராங்கீசுகளை (Barangay state) உள்ளடக்கிய கடல்சார் நாடுகளாக உருவெடுத்தன. இவை சுதந்திரமானவையாக அல்லது டாத்துக்கள் (Datus) தலைமையிலான மலாய் கடலாதிக்க அரசுகள், குவாங்குகளால் ஆளப்பட்ட சீனத்தின் சிற்றரசுகள் அல்லது ராஜாக்களால் நிர்வகிக்கப்பட்ட இந்தியப் பண்பாட்டுச் சார்புடைய அரசகங்கள் போன்றவை பெரிய நாடுகளைச் சார்ந்தவையாக இருந்தன.
எடுத்துக்காட்டாக, அட்டியின் தலைவனான மரிகுடோவிடமிருந்து மட்ஜா-அஸ் -இன் கெடாத்துவானை டாத்து புட்டி மன்னர் விலைக்கு வாங்கி ஆட்சி செய்தார். மட்ஜா-அஸ், அழிக்கப்பட்ட அவர்களது தாயகமான பன்னய் அரசைத் தழுவிப் பெயரிடப்பட்ட பனய் தீவில் நிறுவப்பட்டது. புட்டுவான் இராச்சியம் ராஜா ஸ்ரீ பட ஷாஜாவின் ஆட்சியின் கீழ் முக்கியத்துவம் பெற்றது. டொண்டோ அரசகம் லகன்டுலா மரபு வழி அரசர்களாலும். செபு அரசகம் ராஜமுதா ஸ்ரீ லுமாயினாலும் ஆளப்பட்டது.
ராஜா சிபாத்
இக்காலத்தில் காணப்பட்ட ஏனைய நாடுகளாக, குவாங் கட் சா லி-ஹானால் நிர்வகிக்கப்பட்ட சீனமயமாக்கப்பட்ட மா-இ இராச்சியம் மற்றும் இசுலாமியமயம் ஆவதற்கு முன்னர் இந்திய இராச்சியமாக முதலாவது ஆட்சியாளரான ராஜா சிபாத் (Rajah Sipad) என்பவரின் கீழ் இருந்த சூலு என்பன விளங்கின. மாபெரும் காப்பியங்களான ஹினிலவொட், டரங்கன் மற்றும் பியாங் நி லாம்-அங் என்பன இக்காலத்தில் தோன்றியவையாகும்.
1300-களில் பிலிப்பைன் தீவுக் கூட்டத்தில் இசுலாம் நுழைந்து பரவியது. 1380-இல், கரிம் உல் மக்தும் சூலுவில் இசுலாத்தை அறிமுகப் படுத்தினார். ஜொகூரில் பிறந்த அராபிய வர்த்தகரான சையத் அபூ பக்கர் மலாக்காவிலிருந்து சுலுவிற்கு வந்து சுலுவின் ராஜாவை மதம் மாற்றியதுடன், அவரது மகளைத் திருமணம் செய்து சூலு சுல்தானகத்தை நிறுவி, ஷாரிபுல் ஹாசெம் என்னும் பெயருடன் அதன் முதல் சுல்தான் ஆனார்.
புருணை பேரரசு
15 ஆம் நூற்றாண்டின் முடிவிலே, ஜொகூரின் செரிப் முகமது கபங்சுவான் மின்டனவு தீவில் இசுலாமை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, இரனுன் இளவரசியான பரமிசுலியை திருமணம் முடித்து, அவர் மகுயின்டனவு சுல்தானகத்தை நிறுவினார். சுல்தானக வடிவிலான அரசாங்கம் லனவு வரை மேலும் விரிவடைந்தது.
இறுதியில் இசுலாம் தெற்கில் மின்டனவுக்கும் வடக்கில் லூசோனுக்கும் பரவியது. 1485 முதல் 1521 வரை பொல்கியா சுல்தானின் ஆட்சிக்காலத்தில் மணிலா கூட இசுலாமிய மயமாக்கப்பட்டது. அதேவேளை புருணை பேரரசு ராஜா சலாலிலாவை இசுலாமிற்கு மாற்றியதன் மூலம் டொண்டோ இராச்சியத்தை அடிமைப்படுத்தியது.
இருந்த போதிலும், விலங்குகளை வழிபடும் இகோரொட், மலாய மட்ஜா-அஸ், சீனமயமாக்கப்பட்ட மா-இ, மற்றும் இந்தியமயமாக்கப்பட்ட புட்டுவன் போன்ற அரசுகள் தமது பண்பாடுகளைத் தொடர்ந்து பேணினார்கள். சில இராச்சியங்களில் இசுலாமிய எதிர்ப்பு உணர்வு காணப்பட்டது. இதன் விளைவாக, டாத்துக்கள், ராஜாக்கள், குவாங்குகள், சுல்தான்கள், மற்றும் லக்கன்களுக்கிடையில் போட்டிகள் உருவாயின. இறுதியில் எசுப்பானியக் காலனியாக்கத்திற்கு இலகுவில் வழிகோலியது. எசுப்பானியப் பேரரசுக்குள் இவ்வரசுகள் ஒருங்கிணைக்கப்பட்டு எசுப்பானிய மயமாக்கமும் கிறித்தவ மயமாக்கமும் நடைபெற்றன.
காலனி ஆதிக்கம்
1521 ஆம் ஆண்டு, போர்த்துக்கேய நாடுகாண்பயணியான பேர்டினண்ட் மகலன் பிலிப்பைன்சை வந்தடைந்து இத்தீவுக்கூட்டத்தை எசுப்பானியாவிற்கு உரித்துடையதாக்கினார். எசுப்பானிய நாடுகாண்பயணியான மிகுவெல் லோபேஸ் டி லெகாஸ்பி 1565 ஆம் ஆண்டு மெக்சிக்கோவிலிருந்து இங்கு வந்து, முதலாவது ஐரோப்பியக் குடியேற்றங்களை செபுவில் அமைத்தார்.
அப்பொழுதிலிருந்து காலனியாதிக்கம் ஆரம்பமானது. பனய் தீவுகளிற்கு எசுபானியர்கள் இடம் மாறினர். பிறகு உள்நாட்டு விசயன் தலைமையில் கூடிய கூட்டுப்படையையும் எசுப்பானிய படைவீரர்களையும் கூட்டணியாக ஒருங்கிணைத்தனர். அதற்குப்பின் எசுபானியர்கள் இசுலாமிய மணிலாவை நோக்கிப் படையெடுத்தனர். எசுப்பானிய ஆட்சியின் கீழ், 1571 ஆம் ஆண்டு எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் தலைநகரமாக மணிலாவைப் பிரகடனப்படுத்தினார்கள். அங்கு டொண்டோ சதித்தி்ட்டத்தை முறியடித்து சீனக் கடற்கொள்ளைப் போர்ப் பிரபுவான லிமஹொங்கைத் தோற்கடித்தனர்.
மெக்சிக்கோ சுதந்திரப் போர்
எசுப்பானிய ஆட்சியானது இத்தீவுக்கூட்டத்தின் பிரிவுபட்ட பிராந்தியங்களின் மத்தியில் அரசியல் ஒற்றுமையைக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. 1565 இல் இருந்து 1821 வரை பிலிப்பைன்ஸ் தீவானது புதிய எசுப்பானியாவின் உப அரசின் ஒர் பிரதேசமாக ஆட்சிசெய்யப்பட்டு, மெக்சிக்கோ சுதந்திரப் போரின் பின்னர் மட்ரிட்டிலிருந்து (எசுப்பானியாவிலுருந்து) நேரடியாக ஆட்சிசெய்யப்பட்டது.
16 ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை மணிலா கலியன் என்ற கப்பலும் பெரிய கடற்படையும் மணிலாவிற்கும் அக்கபல்கோவிற்கும் இடையே ஒரு வருடத்தில் இருமுறை பயணித்தது. இவ்வர்த்தகம் சோளம், தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகாய், மிளகுத்தூள், அன்னாசி போன்ற அமெரிக்காவில் இருந்து வந்த உணவுகளை இங்கு அறிமுகப்படுத்தியது. உரோமன் கத்தோலிக்க மதப்பரப்புரையாளர்கள் பெரும்பாலான வறிய ஏழை மக்களை கிறித்தவத்திற்கு மதம் மாற்றியதுடன் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் வைத்தியசாலைகளையும் அமைத்தனர்.
ஜோஸ் ரிசால்
எசுப்பானிய ஆணையின் மூலம் 1863 ஆம் ஆண்டு இலவசப் பொதுப்பள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அமெரிக்கக் காலகட்டத்திலேயே வெகுசன பொதுக்கல்வி முறையின் முயற்சிகள் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தன.
எசுப்பானியா தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல்வேறு உள்ளூர் புரட்சிகளை எதிர்கொண்டதுடன் சீனக் கடற்கொள்ளையர்கள், டச்சுக்கள், போர்த்துகேயர்கள் முதலியவர்களிடமிருந்து பல்வேறு குடியேற்றச் சவால்களையும் எதிர்கொண்டது. ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழு ஆண்டுகள் போரின் ஒரு நீடிப்பாகப் பிரிட்டனின் படைகள் 1762 இல் இருந்து 1764 வரை மணிலாவைக் கைப்பற்றிக்கொண்டனர். 1763 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையைத் தொடர்ந்து எசுப்பானியாவின் ஆட்சி மீட்டெடுக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ் சமூகத்தில் மாற்றங்கள்
19 ஆம் நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் துறைமுகங்கள் உலக வர்த்தகத்திற்காகத் திறந்து வைக்கப் பட்டதில் இருந்து பிலிப்பைன்ஸ் சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பல எசுப்பானியர்கள் பிலிப்பைன்சில் பிறந்தனர் (கிரியொல்லோ). அத்துடன் கலப்பு வம்சாவளியைச் சேர்ந்தோர் (மெஸ்டிசோஸ்) செல்வந்தர்களாக மாறியதுடன், ஐபேரியன் குடாநாட்டில் (பெனின்சுலரிஸ்) பிறந்த எசுப்பானியர்கள் பாரம்பரியமாக வகித்து வந்த அரசாங்கப் பதவிகள், இலத்தீன் அமெரிக்காவில் இருந்து வருகை தந்த குடியேற்றக்காரர்களும் திறந்துவிடப்பட்டது.
புரட்சிக்கான சிந்தனைகளும் தீவுகள் முழுவதும் பரவ ஆரம்பித்தன. 1872 ஆம் ஆண்டு கவைட் கலகத்தில் ஏற்பட்ட கிரியொல்லோ அதிருப்தி பிலிப்பைன்ஸ் புரட்சியின் முன்னோடியாகத் திகழ்ந்தது.
பிலிப்பைன்சில் அரசியல் சீர்திருத்தங்கள்
மூன்று பாதிரியார்களான-மரியானோ கோமேஸ், ஜோஸ் பர்கோஸ் மற்றும் ஜாசின்டோ ஜமோரா (கூட்டாக கொம்பர்சா என அறியப்படுகின்றனர்) ஆகியோர் காலனித்துவ அதிகாரிகளால் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்ட பின்பு, புரட்சிகர உணர்வுகள் 1872-ஆம் ஆண்டில் தூண்டுதல் பெற்றன.
இந்தச் சம்பவம் மார்செலோ எச். டெல் பிலார், ஒசே ரிசால், மற்றும் மரியானோ பொன்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட எசுப்பானியாவிலுள்ள பரப்புரை இயக்கம், பிலிப்பைன்சில் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பாகப் பரப்புரை செய்ய ஊக்குவித்தது. இறுதியில் ரிசால் கிளர்ச்சிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு டிசம்பர் 30, 1896 அன்று தூக்கிலிடப்பட்டார். சீர்திருத்த முயற்சிகள் எதிர்ப்பைச் சந்தித்ததால், ஆயுதக் கிளர்ச்சி மூலம் எசுப்பானியாவிடமிருந்து சுதந்திரம் பெற முயன்ற ஆண்ட்ரஸ் பொனிபாசியோ, 1892 இல் கடிபுனன் என்ற இரகசிய அமைப்பை நிறுவினார்.
எசுப்பானிய அமெரிக்கப் போர்
பொனிபாசியோவும் கடிபுனனும் பிலிப்பைன் புரட்சியை 1896 இல் ஆரம்பித்தனர். இறுதியில் கடிபுனனின் ஒரு பிரிவான, கவிட்டே மாகாணத்தின் மக்டலோவால் புரட்சியின் தலைவரான பொனிபாசியோவின் நிலைக்குச் சவால் விடப்பட்டதுடன் எமிலியோ அக்கினால்டோ அப்பதவியை எடுத்துக்கொண்டார்.
1898 இல் எசுப்பானிய அமெரிக்கப் போர் கியூபாவில் ஆரம்பித்து பிலிப்பைன்சை வந்தடைந்தது. சூன் 12, 1898 இல் கவிட், கவிட்டே என்ற இடத்தில் அக்கினால்டோ எசுப்பானியாவிடமிருந்து பிலிப்பைன்சின் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தியதுடன், அடுத்த வருடம் முதலாவது பிலிப்பைன் குடியரசு பரசோயின் தேவாலயத்தில் வைத்து நிறுவப்பட்டது.
அமெரிக்காவின் ஆட்சிக் காலம்
எசுப்பானிய அமெரிக்கப் போரில் எசுப்பானியா தோற்றதால் எசுப்பானியா இத்தீவுகளை ஐக்கிய அமெரிக்காவிற்கு விட்டுக்கொடுத்தது. 1898 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையின் மூலம் இதற்கு இழப்பீட்டுத் தொகையாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய அமெரிக்கா எசுப்பானியாவிற்கு வழங்கியது.
அப்போது புதிதாக உருவான முதலாவது பிலிப்பைன் குடியரசை அங்கீகரிக்க முடியாது என ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. இதன் காரணமாகப் பிலிப்பைன்-அமெரிக்கப் போர் வெடித்ததுடன் முதலாவது குடியரசு தோற்கடிக்கப்பட்டுத் தீவுக்கூட்டமானது ஒரு தனிமைப்பட்ட அரசாங்கத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டது.
அமெரிக்காவின் அடக்குமுறை
அமெரிக்கர்கள் முதலாவது குடியரசின்போது காணப்பட்ட உப-அரசுகளான: நலிவுறும் சூலு சுல்தானகம், கிளர்ச்சி கொள்ளும் தகலாகு குடியரசு, விசயாசிலுள்ள நெக்ரோக்களின் குடியரசு மண்டலங்கள், மின்டனவுவிலுள்ள சம்பொவங்கா குடியரசு என்பவற்றை அடக்கினார்கள்.
இந்தக் காலத்தில், பிலிப்பைன் பண்பாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டதுடன் பிலிப்பைன் திரைத்துறை மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் ஒரு விரிவாக்கம் நிகழ்ந்தது.
மணிலாவை நவீன நகரமாக மாற்றும் பொருட்டு டானியல் பெர்ன்ஹாம் ஒரு கட்டுமானத் திட்டத்தை வடிவமைத்தார்.
1935-ஆம் ஆண்டு, மானுவல் குவிசோன் அதிபர் பொறுப்பை ஏற்றதுடன் பிலிப்பைன்சிற்குப் பொதுநலவாய அந்தஸ்து வழங்கப்பட்டது. அவர் தேசிய மொழியொன்றை நியமித்ததுடன் பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் நிலச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்.
மணிலாப் போர் 1945
இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் சப்பானியப் பேரரசு படையெடுத்தது. மேலும் ஜோஸ் பி. லாரல் தலைமையில் இரண்டாம் பிலிப்பைன் குடியரசு சப்பானின் கூட்டு நாடாக நிறுவப்பட்டது. ஆகவே இந்தக் காரணங்களால், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான திட்டங்கள் தடைப்பட்டன.
பட்டான் மரண அணிவகுப்பு மற்றும் மணிலாப் போரின் போது உச்சக்கட்டத்தை அடைந்த மணிலா படுகொலை போன்ற பல அட்டூழியங்களும் போர்க் குற்றங்களும் யுத்தத்தின் போது இழைக்கப்பட்டன. 1944 இல் அமெரிக்காவில் நாடுகடத்தப்பட்ட நிலையில் குவிசொன் இறந்ததுடன் செர்ஜியோ ஒஸ்மெனா அவரைத் தொடர்ந்து சனாதிபதி ஆனார். நேச நாடுகளின் படைகள் 1945 ஆம் ஆண்டு சப்பானியர்களைத் தோற்கடித்தனர். போரின் முடிவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிலிப்பினோக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பனிப்போர்க் காலம்
ஒக்டோபர் 24, 1945 இல், பிலிப்பைன்ஸ் ஐக்கிய நாடுகள் அவையினை நிறுவிய அங்கத்தவர்களுள் ஒருவரானதுடன், அடுத்த வருடம் சூலை 4, 1946 இல் மனுவேல் ரொக்சாசின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய அமெரிக்காவால் சுதந்திர அரசாக அறிவிக்கப்பட்டது. பொதுவுடமை இயக்கமான குக்பலகப்பிடம் நடவடிக்கைகளில் பிரிந்தவர்கள் நாட்டுப்புறங்களில் கட்டுப்பாடின்றி உலவத் தொடங்கினர்.
மார்க்கோஸ்
அவர்கள் சனாதிபதி எல்பீடியோ குவிரினோவிற்குப் பின்வந்த ரமன் மக்சேசேயால் அடக்கப்பட்டனர். மக்சேசேக்குப் பின்வந்த கார்லஸ் பி. கார்சியா பிலிப்பினோ முதன்மைக் கொள்கையை ஆரம்பித்தார். இது டியொஸ்டாடோ மகபகலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டதுடன் சுதந்திர விழாக் கொண்டாட்டம் சூலை 4 இல் இருந்து எமிலியோ அகுயினால்டோவின் பிரகடனத் திகதியான சூன் 12 இற்கு மாற்றப்பட்டது. அதே நேரத்தில், வட போர்னியோவின் கிழக்குப் பகுதிக்கான உரிமை கோரிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
மனித உரிமை மீறல்கள்
1965 இல், சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேர்டினண்ட் மார்க்கோசிடம் மகபகல் தோல்வியடைந்தார். மார்க்கோசு அவரது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் பல்வேறு பொதுத் திட்டங்களை ஆரம்பித்த போதிலும் பொது நிதிகளில் பில்லியன் கணக்கான டொலர்கள் மோசடி செய்தார். இதுபோன்ற பாரிய ஊழல்கள் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
பாரிய சமூகக் கொந்தளிப்பிற்கும் தனது ஆட்சி முடிவடைவதற்கும் இடையில் மார்க்கோஸ் இராணுவச் சட்டத்தை செப்டம்பர் 21, 1972 இல் பிரகடனம் செய்தார். அவரது இந்த ஆட்சிக் காலம் அரசியல் ஒடுக்குமுறை, தணிக்கை முறை, மற்றும் மனித உரிமை மீறல்கள் நிறைந்ததாகக் காணப்பட்டது. பெரும்பாலான பிலிப்பினோக்கள் வறுமையுடன் இருந்தபோது அவரது மனைவி இமெல்டா மார்க்கோசு ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தார்.
மக்களின் அதிகாரப் புரட்சி
ஆகஸ்ட் 21, 1983 இல், மார்க்கோசின் முக்கியப் போட்டியாளரான எதிர்க்கட்சித் தலைவர் பெனிக்னோ அக்கீனோ இளையவர், மணிலா பன்னாட்டு விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். மார்க்கோஸ் இறுதியில் 1986 இல் முன்னறிவிப்பற்ற சனாதிபதித் தேர்தலுக்கு அக்கீனோவின் மனைவியான கொரசோனுக்கு எதிராக அழைப்பு விடுத்தார்.
இதில் மார்க்கோஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட போதிலும் தேர்தல் முடிவுகளில் மோசடி நடந்திருக்கின்றது என்று பரவலாகக் கருதப்பட்டது. இந்நிலைமை மக்கள் அதிகாரப் புரட்சிக்கு வித்திட்டது. மார்கோசும் அவரது கூட்டாளிகளும் ஹவாய்க்குத் தப்பியோடியதுடன் அக்கினோ சனாதிபதியாக அங்கீகரிக்கப்பட்டார்.
தற்கால வரலாறு
மீண்டும் 1986-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்களாட்சிப் பாதைக்குத் திரும்பும் முயற்சியும் அரசாங்கப் புதிய சீர்திருத்தங்களும் சில காரணங்களால் தடைப்பட்டன. தேசியக் கடன், அரசாங்கத்தின் ஊழல், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள், பேரழிவுகள், தொடர்ச்சியான பொதுவுடைமைக்காரர்களின் கிளர்ச்சி, மற்றும் மோரோ பிரிவினைவாதிகளுடன் (Moro separatists) மோதல்கள் என்பன அந்தக் காரணங்கள் ஆகும்.
அமெரிக்க இராணுவப் படைகள்
அதிபர் கொரசோன் அக்கினோவின் (Corazon Aquino) நிர்வாகம், சூன் 1991-இல் பினாதுபோ எரிமலையின் (Mount Pinatubo) வெடிப்புடன் முடிவடைந்தது. அமெரிக்கத் தளங்களின் நீட்டிப்பு உடன்படிக்கையை நிராகரித்ததன் காரணமாக அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. நவம்பர் 1991-இல் கிளார்க் வான் படைத் தளமும் டிசம்பர் 1992-இல் சபிக் குடாவும் அதிகாரப்பூர்வமாக பிலிப்பீன்சு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டன. இவ்வாறாக அமெரிக்க இராணுவப் படைகள் பிலிப்பீன்சு நாட்டில் இருந்து பிபவாங்கின.
பிலிப்பீன்சு நாட்டின் பொருளாதாரம் "ஆசியாவின் புலிப் பொருளாதாரம்" என அழைக்கப்பட்டது. மே 11-இல் நடைபெற்ற பிலிப்பைன்சு அதிபர் தேர்தலில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிடெல் வி. ராமோஸ் (Fidel V. Ramos) அவர்களின் நிர்வாகக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் (மொத்த உள்நாட்டு உற்பத்தி) சராசரியாக 6% வளர்ச்சி கண்டது. இருந்தபோதிலும், 1996 இல் மோரோ தேசிய விடுதலை முன்னணியுடனான சமாதான உடன்படிக்கை, போன்ற அரசியல் உறுதிப்பாடும் பொருளாதார மேம்பாடுகளும் 1997-ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியின் காரணமாகக் கவனம் பெறாமல் போயின.
மோரோ இசுலாமிய விடுதலை முன்னணி
அதிபர் ராமோசிற்குப் பின் வந்தவர் ஜோசப் எஸ்திராடா (Joseph Estrada). சூன் 1998-இல் பதவியேற்றார். 1997 ஆசிய நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை -0.6% இல் இருந்து 3.4% ஆக மீழ் எழச் செய்தார். மார்ச் 2000-இல் அரசாங்கம் மோரோ இசுலாமிய விடுதலை முன்னணிக்கு எதிராகப் போர்ப் பிரகடனத்தை அறிவித்தது. அத்துடன் கிளர்ச்சியாளர்களின் தலைமையகம் உட்பட அனைத்து முகாம்களையும் அழித்தொழித்தது.
அபு சயாப் கிளர்ச்சியாளர்களுடன் தொடரும் மோதலுக்கு நடுவில், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்; மற்றும் ஒரு முடக்கிவிடப்பட்ட பாரிய குற்ற பிரேரணையின் காரணமாக 2001 எட்சா புரட்சி (2001 EDSA Revolution) மூலம் ஜோசப் எஸ்திராடாவின் நிர்வாகம் அகற்றப்பட்டது.
சனவரி 20, 2001-இல், அதிபர் ஜோசப் எஸ்திராடாவின் நிர்வாகத்தில் துணை அதிபராக இருந்த குளோரியா மகபகல்-அர்ரொயோ (Gloria Macapagal Arroyo) நிர்வாகத்தை ஏற்று தொடர்ந்து ஆட்சி செய்தார்.
குளோரியா மகபகால்-அர்ரொயோ
அர்ரோயோவின் ஒன்பது ஆண்டு நிருவாகத்தில், பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2002-இல் 4% ஆக இருந்து 2007 இல் 7% ஆக வளர்ச்சி அடைந்ததுடன், 2004-இல் எல்.ஆர்.டி லைன் 2 போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்துடன், பெரும் பொருளியல் நிலைத் தேக்கத்தைத் தவிர்க்க முடிந்தது.
இருப்பினும், இக்காலத்தில் இலஞ்சமும் 2004-ஆம் அதிபருக்கானத் தேர்தலில் வாக்குகளை மோசடி செய்தது தொடர்பான ஹெலோ கார்க்கி ஊழல் போன்ற அரசியல் ஊழல்களும் நிறைந்து காணப்பட்டன. நவம்பர் 23, 2009 இல் இடம்பெற்ற, மகுயின்டனவு படுகொலை (Maguindanao massacre) 34 பத்திரிகையாளர்களின் இறப்புக்கு வழிவகுத்தது.
2010 தேசியத் தேர்தலில் பெனிக்னோ அக்கீனோ III (Benigno Aquino III) வெற்றி பெற்றார். அத்துடன் பிலிப்பைன்சின் 15-ஆவது அதிபராகவும் தேர்வு செய்யப்பட்டார். இவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது வயது குறைந்த நபராகவும்; முதலாவது திருமணம் ஆகாதவராகவும் விளங்குகின்றார்.
பாங்சமொரோ தன்னாட்சி அரசியல் அமைப்பு
முன்னைய ஆண்டுகளின் போது, அக்டோபர் 15, 2012-இல் பாங்சமொரோ (Bangsamoro) தொடர்பான கட்டமைப்பு உடன்பாடு; பாங்சமொரோ எனும் ஒரு தன்னாட்சி அரசியல் அமைப்பு உருவாக முதற்படியாக அமைந்தது. இருந்த போதிலும், கிழக்கு சபா மற்றும் தென் சீனக் கடற் பிராந்தியங்களில் மோதல்கள் தீவிரமடைந்தன. நாட்டின் பொருளாதாரம் குறிப்பாக 2013 இல் சிறப்பாகச் செயற்பட்டது. 2013 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2% வளர்ச்சியடைந்ததுடன் ஆசியாவின் 2 ஆவது அதிவேகமானதாகக் காணப்பட்டது.
நாட்டின் கல்வி முறையை மேம்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட, பொதுவாக கே–12 நிகழ்ச்சித் திட்டம் (K–12 program) என அழைக்கப்படும் 2013 இன் மேம்படுத்தப்பட்ட அடிப்படைக் கல்வி உரிமைச் சட்டத்தை, மே 15, 2013 இல் அக்கீனோ நிறைவேற்றினார். நவம்பர் 8, 2013 இல் சூறாவளி ஹையான் நாட்டைத் தாக்கியதுடன், நாட்டைக், குறிப்பாக விசயன் பிராந்தியத்தைப் பெரிதும் பேரழிவிற்கு உட்படுத்தியது.
ரொட்ரிகோ துதெர்த்தே
முன்னாள் தாவோ நகர மேயர் (Davao City Mayor) ரொட்ரிகோ துதெர்த்தே (Rodrigo Duterte) 2016 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். மிண்டானாவோ தீவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர். இவர் பதவிக்கு வந்ததும் ஒரு போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தையும் மற்றும் ஒரு உள்கட்டமைப்பு திட்டத்தையும் தொடங்கினார்.
2018 இல் பாங்சமோரோ ஆர்கானிக் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம், மிண்டானாவோவில் தன்னாட்சி பெற்ற பாங்சமோரோ பகுதி உருவாக வழிவகுத்தது. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கோவிட்-19 தொற்றுநோய் நாட்டை சீர்குலைத்தது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5%-ஆகச் சுருங்கியது.
முன்னாள் அதிபரபெர்டினாண்ட் மார்கோசின் மகன், பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், 2022 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதிபர் ரொட்ரிகோ துதெர்த்தே மகள் சாரா துதெர்த்தே துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அரசியல்
பிலிப்பைன்ஸ், அதிபர் முறையைக் கொண்ட ஓர் அரசியலமைப்புக் குடியரசு; மக்களாட்சி அரசாங்கத்தைக் கொண்டது. தேசிய நடுவண் அரசாங்கத்தில் இருந்து சுதந்திரமாகச் செயற்படும் முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதியைத் தவிர ஏனைய பிரதேசங்கள், ஓர் ஒற்றையாட்சி அரசாக நிர்வகிக்கப் படுகின்றது.
ராமோசின் நிர்வாகத்தில் இருந்து அரசாங்கத்தை ஓரவை நாடாளுமன்ற அரசாங்கமாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
நாட்டினுடைய தலைவராகவும் அரசாங்கதின் தலைவராகவும் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாகவும் அதிபர் செயற்படுகின்றார். அதிபர் ஆறு ஆண்டு காலத்திற்கு ஒருமுறை மக்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
ஈரவை முறைமை
அவரின் காலத்தில் அமைச்சரவையை நியமிப்பதுடன் அதற்குத் தலைமையும் வகிக்கின்றார். பிலிப்பைன்சு இரு அவைகளைக் கொண்ட ஒரு காங்கிரஸ் நிர்வாகம். ஆறு வருட காலத்திற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் செனட் சபை மேலவை; மூன்று வருட காலத்திற்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் சபை கீழவை; என இரு அவைகள்.
செனட் சபையின் உறுப்பினர்கள் (24 பேர்) நாட்டின் அனைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர், பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் சட்டமன்ற மாவட்டங்களில் இருந்தும் துறைவாரியான பிரதிநிதித்துவத்தின் மூலமும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
நீதி அதிகாரம் உச்ச நீதிமன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதில் தலைமையில் அதிகாரியான பிரதம நீதியரசரும், நீதித்துறை மற்றும் வழக்கறிஞர் மன்றத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளில் இருந்து அதிபரால் நியமிக்கப்பட்ட 14 இணை நீதிபதிகளும் அங்கம் வகிக்கின்றனர்.
பன்னாட்டு உறவுகள்
பிலிப்பைன்சின் பன்னாட்டு உறவுகள், மற்றைய நாடுகளுடனான வர்த்தக நடவடிக்கைகளையும், நாட்டின் வெளியே வாழும் 11 மில்லியன் வெளிநாட்டுப் பிலிப்பினோக்களின் நல்வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையை நிறுவிய மற்றும் அதன் செயற்படும் அங்கத்தவர் என்ற வகையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் அங்கத்தவர்களுள் ஒருவராகப் பிலிப்பைன்ஸ் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கார்லஸ் பி. ரொமுலோ ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். பிலிப்பைன்சானது மனித உரிமைகள் ஆணையத்தின் ஆர்வம்மிகு உறுப்பினராக உள்ளதுடன், குறிப்பாகக் கிழக்குத் திமோரில் சமாதானப் பாதுகாப்புப் பணிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றது.
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடாக இருப்பதற்கு மேலதிகமாக, இந்நாடானது தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பை நிறுவிய மற்றும் அதன் தற்போதைய சுறுசுறுப்பான உறுப்பினராகவும் இருக்கின்றது. தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பானது தென்கிழக்காசியப் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கிடையில் உறவுகளை வலுப்படுத்தவும் பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். பிலிப்பைன்ஸ் பல ஆசியான் மாநாடுகளை நடத்தியதுடன் இவ்வமைப்பின் வழிகாட்டல் மற்றும் கொள்கைகளை அமைப்பதில் ஆர்வமுள்ள பங்களிப்பாளராகச் செயற்படுகின்றது.
பிலிப்பைன்ஸ் ஐக்கிய அமெரிக்காவுடன் பெறுமதியான உறவுகளைக் கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸ் பனிப்போர் காலத்திலும் தீவிரவாதத்திற்கு எதிரான போரிலும் ஐக்கிய அமெரிக்காவை ஆதரித்ததுடன் இது ஒரு முக்கிய நேட்டோ அல்லாத கூட்டணி ஆகும்.
இவ்வாறாக நல்லெண்ண வரலாற்றைக் கொண்டுள்ள போதிலும், சபிக் குடா, கிளார்க் விமான தளம் ஆகியவற்றில் தற்போதும் முன்னாள் அமெரிக்க இராணுவ தளங்கள் இருத்தல், மற்றும் அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள வருகை படைகள் ஒப்பந்தம், தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து கொண்டிருக்கின்றன.
சப்பான் தோழமை
நாட்டின் அலுவல்முறையில் நிதி மற்றும் வளர்ச்சி உதவியில் பாரிய பங்களிப்புச் செய்கின்ற நாடான சப்பான், ஒரு நட்பு நாடாகக் கருதப்படுகின்றது. இருந்தபோதிலும் ஆறுதலளிக்கும் பெண்களின் அவல நிலை போன்ற வரலாற்று ரீதியான அழுத்தங்கள் இன்னமும் இருக்கின்றன. இரண்டாம் உலக போர் நினைவுகளால் ஏற்பட்ட பகையணர்வு தற்போது மிகவும் குறைந்துள்ளது.
மற்ற நாடுகளுடன் உள்ள உறவும் பொதுவாக நல்ல நிலையில் இருக்கின்றது. மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஜனநாயக விழுமியத்துடனான எளிதான உறவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ள அதேவேளை பொருளாதார அக்கறையுடன் உதவுதல் என்பவற்றின் மூலம் மற்றைய வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளுடன் உறவைப் பேணுகின்றது.
வரலாற்று ரீதியான பிணைப்புக்கள் மற்றும் பண்பாட்டு ஒற்றுமைகள் என்பன எசுப்பானியாவுடனான உறவில் ஒரு பாலமாகச் செயற்படுகின்றன. உள்நாட்டு முறைகேடு மற்றும் வெளிநாட்டு பிலிப்பினோ தொழிலாளர்களைப் போர் பாதித்தல் போன்ற இடர்கள் இருந்த போதிலும், மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவுகள் நட்பு ரீதியாக உள்ளன என்பது, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுப் பிலிப்பினோக்கள் தொடர்ச்சியாக வேலைசெய்துகொண்டு அங்கு வாழ்வதிலிருந்து தெளிவாகின்றது.
ஸ்பிரட்லி தீவுகள்
முன்பு இருந்தது போன்று இனிமேல் பொதுவுடைமை முறையில் அச்சுறுத்தல் இல்லை என்பதால், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிற்கு இடையே 1950 களில் ஏற்பட்ட பகையுணர்வு குறைந்து உறவுகள் தற்போது பெரிதும் மேம்பட்டுள்ளது.
தாய்வான் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஸ்பிரட்லி தீவுகள், மற்றும் சீனாவின் செல்வாக்கு விரிவடைதல் தொடர்பான கவலைகள் போன்றவை இருப்பதால் சீனாவுடனான உறவை அதிக எச்சரிக்கையை கொண்டு பேணுகிறது. சமீபத்திய வெளிநாட்டு கொள்கைகள், அதன் தென்கிழக்கு ஆசிய மற்றும் ஆசிய பசிபிக் அண்டை நாடுகளுடனான பொருளாதார உறவுகளைப் பற்றியே பெரும்பாலும் இருந்து வருகின்றது.
கிழக்கு ஆசிய உச்சிமாநாடு (EAS), ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (APEC) இலத்தீன் ஒன்றியம், குழு 24, மற்றும் அணிசேரா இயக்கம் ஆகியவற்றில் பிலிப்பைன்ஸ் ஆர்வம் மிக்க உறுப்பினராகச் செயற்பட்டு வருகின்றது. இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பார்வையாளர் அந்தஸ்தைப் பெறுவதன் மூலம், இசுலாமிய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தப் பிலிப்பைன்ஸ் முயன்று வருகின்றது.
படைத்துறை
பிலிப்பைன்சின் பாதுகாப்பு பிலிப்பைன்ஸ் ஆயுதப் படைகளின் மூலம் கையாளப் படுகிறது, இவ்வமைப்பு வான் படை, தரைப் படை, கடற்படை (கடற்படைச் சிறப்புப் பிரிவு உட்பட) என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.
தற்போது, தன்னார்வப் படைகளால் பிலிப்பைன்சின் ஆயுதப் படைகளின் மனித ஆற்றல் நிரப்பப் படுகிறது, அதாவது ஆட்சேர்ப்பு மூலம் தன்னார்வலர்களை அதன் சிப்பாய்களாகக் கையகப் படுத்துகின்றது. இருந்த போதிலும், பிலிப்பைன்சின் அரசியலமைப்பின் விதி II இன் பிரிவு 4-இல் குறிப்பிட்டுள்ளபடி கட்டாய இராணுவச் சேவைக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளல் சாத்தியமானது. குடிமக்கள் பாதுகாப்பானது, உள்துறை மற்றும் உள்ளூர் அரசாங்கத் திணைக்களத்தின் (DILG) கீழ் இயங்கும் பிலிப்பைன் தேசியக் காவல்துறையால் கையாளப்படுகின்றது.
மோரோ தேசிய விடுதலை முன்னணி
முசுலிம் மின்டனவு தன்னாட்சிப் பகுதியில் மிகப்பெரிய பிரிவினைவாத அமைப்பான மோரோ தேசிய விடுதலை முன்னணி தற்போது அப்பகுதியின் அரசாங்கத்தை அரசியல் ரீதியில் செயற்படுத்துகின்றது. குறிப்பாக மின்டனவுவின் தெற்குத் தீவுகளில் இதர போராளி குழுக்களான மோரோ இசுலாமிய விடுதலை முன்னணி, பொதுவுடைமை புதிய மக்கள் இராணுவம், மற்றும் அபு சயாவ் போன்றவை இன்னும் உலவிக் கொண்டிருக்கிறது.
அத்துடன் பணத்திற்காக வெளிநாட்டவரைக் கடத்துதல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றன. ஆனால் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் பாதுகாப்பின் காரணத்தால் அண்மைய ஆண்டுகளில் இவ்வியக்கங்களின் நடமாட்டம் இப்பகுதியில் வெகுவாகக் குறைந்துள்ளது.
இரண்டாம் உலகப் போரிலிருந்து பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் நேச நாடாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை 1951 இல் கைச்சாத்திடப்பட்டது. பிலிப்பைன்ஸ் பனிப்போர்க் காலத்தில் அமெரிக்கக் கொள்கைகளுக்கு ஆதரவளித்ததுடன் கொரிய மற்றும் வியட்நாம் போர்களிலும் பங்கு பெற்றது.
சீட்டோ அமைப்பு
பிலிப்பைன்ஸ் தற்போது செயற்பாட்டில் இல்லாத சீட்டோ அமைப்பில் அங்கத்துவம் வகித்தது. இவ்வமைப்பு நேட்டோவைப் போன்று சேவையாற்றியதுடன் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து, பாக்கிஸ்தான், தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஐக்கிய அமெரிக்காவை உள்ளடக்கியிருந்தது.
ஐக்கிய அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு ஆதரவான கூட்டணியின் ஒரு உறுப்பு நாடாக இருந்து ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருந்தது.
நிர்வாகப் பிரிவுகள்
பிலிப்பைன்ஸ் லூசோன், விசயாஸ், மற்றும் மின்டனவு என மூன்று தீவுக்கூட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை 17 பிராந்தியங்களாகவும், 81 மாகாணங்களாகவும், 144 நகரங்களாகவும், 1,491 நகரசபைகளாகவும், 42,028 பரங்கய்களாகவும் மேலும் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, குடியரசுச் சட்டம் எண். 5446 இன் பகுதி 2, பிலிப்பைன் தீவுக் கூட்டத்தைச் சுற்றியுள்ள பிராந்தியக் கடல் வரையறை சபாவின் கிழக்கு பகுதி மீது தாக்கம் செலுத்தாது என்பதனை வலியுறுத்துகின்றது.
புவியியல்
பிலிப்பைன்சானது 7,107 தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்டமாகும். உள்நாட்டு நீர் நிலைகள் உள்ளடங்கலாக இதன் மொத்தப் பரப்பளவு அண்ணளவாக ஆகும். அத்துடன் நீளமான கடலோரப் பகுதியைக் கொண்ட பிலிப்பைன்ஸ், உலகின் ஐந்தாவது நீளமான கடலோரப் பகுதியைக் கொண்ட நாடாக விளங்குகின்றது.
இது 116° 40', மற்றும் 126° 34' கிழக்கு நெடுங்கோட்டிற்கும் 4° 40' மற்றும் 21° 10' வடக்கு அகலக்கோட்டிற்கும் இடையில் அமைந்துள்ளது. பிலிப்பைன்சின் எல்லைகளாக, கிழக்கே பிலிப்பைன் கடலும், மேற்கே தென் சீனக் கடலும், தெற்கே செலேபெஸ் கடலும் அமைந்துள்ளன.
வெப்பமண்டல மழைக்காடுகள்
போர்னியோ தீவுகள் தென்கிழக்கில் சில நூறு கிலோட்டர் தொலைவில் அமைந்துள்ளதுடன் சரியாக வடக்குத் திசையில் தாய்வான் அமைந்துள்ளது. மொலுக்காஸ் மற்றும் சுலாவெசி ஆகிய தீவுகள் தென்-தென்மேற்கில் அமைந்துள்ளதுடன் பிலிப்பைன்சின் கிழக்கில் பலாவு அமைந்துள்ளது.
இங்குள்ள மலைப்பாங்கான தீவுகளில் பெரும்பாலானவை வெப்பமண்டல மழைக்காடுகளை உடையவை. ஆரம்பத்தில் அவை எரிமலையாக இருந்துள்ளன. இத்தீவுகளில் உள்ள மிக உயரமான மலையாக அப்போ மலை விளங்குகின்றது. இது கடல் மட்டத்திற்கு மேல் உயரத்தில், மின்டனவு தீவில் அமைந்துள்ளது. பிலிப்பைன்ஸ் ஆழியில் உள்ள கலத்தியா ஆழமே இந்நாட்டின் மிக ஆழமான இடமாகவும், உலகின் மூன்றாவது ஆழமான இடமாகவும் உள்ளது. இந்த ஆழி பிலிப்பைன் கடலில் அமைந்துள்ளது.
மணிலா விரிகுடா
மிக நீளமான ஆறாக வடலூசோனில் அமைந்துள்ள ககயான் ஆறு விளங்குகின்றது. தலைநகரான மணிலா அமைந்துள்ள மணிலா விரிகுடா, பிலிப்பைன்சின் மிகப்பெரிய ஏரியாகிய லகுனா டி பே உடன் பாசிக் ஆற்றினால் இணைக்கப்பட்டுள்ளது. சபிக் விரிகுடா, டவாவோ வளைகுடா, மற்றும் மோரோ வளைகுடா ஆகியவை இங்குள்ள ஏனைய முக்கிய விரிகுடாக்கள் ஆகும்.
சமர் மற்றும் லெய்ட்டி தீவுகளை பிலிப்பைன்சிலிருந்து சான் யுவானிக்கோ நீரிணை பிரிக்கின்ற போதிலும் அதன் குறுக்காக அமைந்துள்ள சான் யுவானிக்கோ பாலத்தின் மூலம் இவை இணைக்கப்பட்டுள்ளன.
1990 லூசோன் பூகம்பம்
பசுபிக் நெருப்பு வளையத்தின் மேற்கு எல்லைப்புறத்தின் மீது அமைந்துள்ளமையால் பிலிப்பைன்சில் அடிக்கடி பூமியதிர்ச்சி மற்றும் எரிமலை வெடிப்புக்கள் நிகழ்கின்றன. பிலிப்பைன்சிற்குக் கிழக்கில் பிலிப்பைன் கடலில் அமைந்துள்ள பென்ஹாம் மேட்டுநிலம் துரிதமாக நில அடுக்குகள் கீழ் அமிழும் கடலுக்கடியிலுள்ள பிரதேசமாகும்.
கிட்டத்தட்ட 20 நிலநடுக்கங்கள் தினமும் பதிவு செய்யப்படுகின்ற போதிலும் பெரும்பாலானவை வலுவற்றவை ஆகையால் அவை உணர முடியாதவையாக உள்ளன. 1990 லூசோன் பூகம்பமே இறுதியாக ஏற்பட்ட பாரிய பூமி அதிர்ச்சியாகும்.
மயோன் எரிமலை, பினாடுபோ மலை, மற்றும் தால் எரிமலை ஆகியவை இன்றும் செய்யற்பாட்டிலுள்ள எரிமலைகளாக உள்ளன. 1991 ஆம் ஆண்டு சூன் மாதம் ஏற்பட்ட பினாடுபோ மலையின் எரிமலை வெடிப்பே 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பெரிய, தரையில் எற்பட்ட எரிமலை வெடிப்பாக உள்ளது.
இங்குள்ள அனைத்துக் குறிப்பிடத்தக்க புவியியல் அம்சங்களும் அழிவை சார்ந்தவையாக இல்லை. புவியியல் தொந்தரவுகளற்ற அமைதியான மரபுரிமைத் தலமாக புவேர்டோ பிரின்செசா எனப்படும் பூமிக்கு அடியிலுள்ள ஆறு விளங்குகின்றது. இப்பிரதேசம் உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாக்கும் ஒரு வாழ்விடமாக இருக்கின்றது. மேலும் ஒரு முழுமையான மலை முதல் கடல் வரை பல்வேறுவகையான சூழலமைப்பைக் கொண்டுள்ளதுடன் ஆசியாவில் மிக முக்கியமான காடுகள் சிலவும் இங்கு அமைந்துள்ளன.
இத்தீவுகளில் உள்ள எரிமலைத் தன்மை காரணமாக இங்கு கனிமப் படிமங்கள் ஏராளமாக உள்ளன. தென்னாபிரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது அதிக தங்கப் படிமங்கள் கிடைக்கும் இடமாக பிலிப்பைன்ஸ் விளங்குவதுடன் உலகின் மிகப்பாரிய செப்புப் படிமங்கள் உள்ள இடமாகவும் உள்ளது.
இங்கு நிக்கல், குறோமைட்டு மற்றும் துத்தநாகம் ஆகியவையும் பேரளவில் கிடைக்கின்றன. இவ்வாறு இருந்த போதிலும்கூட மோசமான நிர்வாகம், அதிக மக்கள் தொகை மற்றும் சுற்று சூழல் விழிப்புணர்வின்மை ஆகிய காரணங்களால் இக்கனிம வளங்கள் பாரியளவில் தோண்டி எடுக்கப்படாத நிலையில் உள்ளன.
பிலிப்பைன்சில் எரிமலைகளின் விளைபொருளாகிய புவிவெப்பச் சக்தியைப் பயனுள்ள வகையில் வெற்றிகரமாகப் பயன்படுத்துகின்றனர். ஐக்கிய அமெரிக்காவிற்கு அடுத்த படியாக உலகின் இரண்டாவது பெரிய புவிவெப்பச் சக்தி உற்பத்தியாளராக பிலிப்பைன்ஸ் விளங்குவதுடன், 18% வீதமான நாட்டின் மின்சாரத் தேவைகள் புவிவெப்பச் சக்தியின் மூலம் பூர்த்திசெய்யப்படுகின்றது.
வனவிலங்குகள்
பிலிப்பைன்சின் மழைக்காடுகளும் அதன் தொடர்ச்சியான கடலோரப் பகுதிகளும், பலவிதமான பறவைகள், தாவரங்கள், விலங்குகள், மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் என்பவற்றிற்கு வாழ்விடமாக உள்ளன. பிலிப்பைன்ஸ், மிகவும் உயிரியல் பன்முகத்தன்மை மிக்க முதல் பத்து நாடுகளில் ஒன்றாக உள்ளதுடன் ஓரலகுப் பகுதியில் அதிக உயிர்ப் பல்வகைமை உள்ள நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. வேறெங்கும் இல்லாத வகையில், 100 வகையான பாலூட்டிகளும் 170 வகையான பறவைகளும் உள்ளடங்கலாகக் கிட்டத்தட்ட 1,100 வகையான தரைவாழ் முள்ளந்தண்டுளிகள் பிலிப்பைன்சில் இனங்காணப்பட்டுள்ளன. பிலிப்பைன்சானது உலகிலேயே மிக உயர்ந்த விகிதத்தில் உயிரினங்களின் கண்டுபிடிப்பு நிகழும் நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. கடந்த பத்து வருடங்களில் பதினாறு புதிய பாலூட்டி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகப் பிலிப்பைன்சிற்கு உரித்தான உயிரினங்களின் விகிதம் உயர்ந்துள்ளதுடன் இதே போன்று மேலும் உயரக்கூடிய சாத்தியங்களும் உள்ளன.
மலைப்பாம்பு மற்றும் நாகம் போன்ற பாம்புகள், உவர்நீர் முதலைகள், தேசியப் பறவையாக விளங்கும் பிலிப்பைன் கழுகு போன்ற இரைதேடியுண்ணும் பறவைகள் என்பவற்றைத் தவிர்த்துப் பிலிப்பைன்சில் பெரிய இரைதேடியுண்ணும் உயிரினங்கள் இல்லை. பிலிப்பைன் கழுகே உலகின் மிகப் பெரிய கழுகென்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். மிகப் பெரிய சிறைப்பிடிக்கப்பட்ட முதலையாக, உள்நாட்டில் லொலொங் என அழைக்கப்படும், தெற்குத் தீவாகிய மின்டனோவில் பிடிக்கப்பட்ட முதலை விளங்குகின்றது.
ஏனைய பூர்வீக விலங்குகளில் போகொலில் உள்ள ஆசிய மரநாய், ஆவுளியா, பிலிப்பைன் டார்சியர் போன்றவயும் உள்ளடங்குகின்றன. இங்குள்ள கிட்டத்தட்ட 13,500 வகையான தாவரங்களுள், 3,200 வகைகள் இத்தீவுகளுக்கு மட்டும் உரித்தானவை. பல்வேறு அரிய வகையான ஆர்க்கிட் மற்றும் ரபிளீசியா என்பவை உள்ளடங்கலாகப் பல்வேறு தாவர வகைகள் பிலிப்பைன் மழைக்காடுகளில் உள்ளன.
பிலிப்பைன்சின் கடற்பரப்பானது அளவில் சூழ்ந்திருப்பதுடன் தனித்துவம் மிக்க மற்றும் பல்வேறுபட்ட கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் இடமாகவும், பவள முக்கோணத்தின் ஒரு முக்கியமான பகுதியாகவும் உள்ளது. இங்குள்ள பவளப்பாறைகளின் மொத்த எண்ணிக்கை அண்ணளவாக 500 எனவும், கடல் மீன் இனங்களின் மொத்த எண்ணிக்கை அண்ணளவாக 2,400 எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய பதிவுகள் மற்றும் இனங்களின் கண்டுபிடிப்புகள் என்பன தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லுதல், பிலிப்பைன்சின் கடல் வளங்களின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. சுலு கடலிலுள்ள துபட்டஹா பவளப்பாறை 1993 ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியக் களமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. பிலிப்பைன் நீர்நிலைகளும் முத்துக்கள், நண்டுகள், மற்றும் கடற் தாவரங்களின் பயிர்ச்செய்கைக்கு உகந்ததாக உள்ளன.
அடிக்கடி சட்டவிரோதமாக மரம் அறுப்பதன் விளைவாக ஏற்படும் காடழிப்பு, பிலிப்பைன்சில் ஒரு கடுமையான பிரச்சினையாக உள்ளது. 1900 ஆம் ஆண்டு, நாட்டின் மொத்த நிலப் பரப்பளவின் 70% ஆக இருந்த காடுகள், 1999 ஆம் ஆண்டு 18.3% ஆகக் குறைவடைந்துள்ளன. பல உயிரினங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், பிலிப்பைன்சும் ஒரு அங்கமாக உள்ள தென்கிழக்காசியா, 21 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் 20% ஆன பேரழிவு மிக்க அழிவு விகிதத்தை எதிர்கொள்ளும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கொன்சர்வேசன் இன்டர்னசனல் என்ற அமைப்பு பாரிய உயிர்ப்பல்வகைமை கொண்ட சில நாடுகளில் ஒன்றாக உள்ள பிலிப்பைன்சை, உலகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும் முக்கிய இடங்களில் ஒன்றாகத் தரப்படுத்தியுள்ளது.
காலநிலை
பிலிப்பைன்ஸ் ஒரு வெப்பமண்டல கடற் காலநிலையைக் கொண்டுள்ளதுடன் இது வழக்கமாக வெப்பமாகவும் ஈரப்பதம் நிறைந்ததாகவும் உள்ளது. இங்கு மூன்று வகையான காலநிலைகள் காணப்படுகின்றன. அவையாவன: உலர் வெப்பப் பருவகாலமாகிய டக்-இனிட் அல்லது டக்-அரோ எனப்படும் மார்ச் தொடங்கி மே வரை இடம்பெறும் கோடைக்காலம்; டக்-உலான் எனப்படும் சூன் தொடங்கி நவம்பர் வரை இடம்பெறும் மழைக்காலம்; டக்-லமிக் எனப்படும் டிசம்பர் தொடங்கி பெப்ரவரி வரை இடம்பெறும் உலர் குளிர்காலம் என்பனவாகும். மேயில் இருந்து அக்டோபர் வரை வீசும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று ஹபகட் என்றும், நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை வீசும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றாகிய உலர் காற்று அமிஹான் என்றும் அழைக்கப்படுகின்றது. வெப்பநிலை பொதுவாக முதல் ஆகக் காணப்படுவதுடன் இது பருவத்தைப் பொறுத்துக் குளிர்ந்ததாக அல்லது சூடானதாக மாறும். மிகக் குளிர்ந்த மாதமாக சனவரியும், மிக வெப்பமான மாதமாக மேயும் காணப்படுகின்றன.
சராசரி வருடாந்த வெப்பநிலை கிட்டத்தட்ட ஆக உள்ளது. இங்கு வெப்பநிலையைக் கருத்தில் கொள்ளும்போது, அகலக்கோடு மற்றும் நெடுங்கோடு என்ற அடிப்படையில் இட அமைவு குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தும் காரணியாக் காணப்படவில்லை. நாட்டின் வடக்கு, தெற்கு, கிழக்கு, அல்லது மேற்குப் பகுதியில், கடல் மட்டத்தில் உள்ள வெப்பநிலை ஒரேயளவாக உள்ளது. ஆனால் அமைவிடத்தின் உயரம் வெப்பநிலையில் முக்கிய தாக்கம் செலுத்துகின்றது. கடல் மட்டத்திலிருந்து உயரத்திலுள்ள பாகியோ என்ற இடத்தின் சராசரி வருடாந்த வெப்பநிலை ஆகக் காணப்படுவதுடன், வெப்பம் மிகுந்த கோடை காலத்தில் இது ஒரு பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது.
பிலிப்பைன்ஸ் சூறாவளிப் பட்டையில் அமைந்துள்ளதால், சூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பெரும்பாலான தீவுகளில் வருடாந்தம் பருவ மழை மற்றும் இடி மின்னல் என்பன ஏற்படுகின்றன. கிட்டத்தட்ட பத்தொன்பது சூறாவளிகள் பிலிப்பைன்சிற்கு உரித்தான கடற் பிராந்தியத்தில் ஏற்படுவதுடன், அவற்றுள் எட்டு அல்லது ஒன்பது சூறாவளிகள் கரையை அடைகின்றன. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியானது மலைப்பாங்கான கிழக்கு கடற்கரை பகுதியில் கிட்டத்தட்ட ஆகவும், சில மழைமறைவுப் பள்ளத்தாக்குகளில் குறைவாக என்ற அளவிலும் உள்ளது. இத்தீவுக்கூட்டத்தில் தாக்கம் செலுத்திய மிகவும் ஈரப்பதன் மிகுந்த வெப்ப மண்டலச் சூறாவளியாக சூலை 1911 சூறாவளி விளங்குவதுடன் இதன்போது பாகியோவில் 24 மணித்தியால நேரத்தில் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. பக்யோ என்பது வெப்பமண்டலச் சூறாவளிக்குப் பிலிப்பைன்சில் வழங்கப்படும் பெயராகும்.
பொருளாதாரம்
2014 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியான $289.686 பில்லியனுடன், பிலிப்பைன்சின் தேசியப் பொருளாதாரம் உலகின் 39 ஆவது பாரிய பொருளாதாரமாக உள்ளது. குறை கடத்திகளும் மின்னணுத் தயாரிப்புகளும், போக்குவரத்துக் கருவிகள், ஆடையணிகள், செப்புத் தயாரிப்புக்கள், பெட்ரோலியப் பொருட்கள், தேங்காய் எண்ணெய், மற்றும் பழங்கள் ஆகியவை முதன்மையான ஏற்றுமதிப் பொருட்களுக்குள் உள்ளடங்குகின்றன. அத்துடன் ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், சீனா, சிங்கப்பூர், தென் கொரியா, நெதர்லாந்து, ஹொங்கொங், செருமனி, தாய்வான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் முதன்மையான வர்த்தகப் பங்குதாரர்களாக உள்ளனர். இந்நாட்டின் நாணய அலகாகப் பிலிப்பைன் பெசோ (₱ அல்லது PHP) விளங்குகின்றது. பிலிப்பைன்ஸ் ஒரு நடுத்தர சக்தி மிக்க நாடாகும். புதிதாகத் தொழில்மயமாக்கப்பட்ட நாடு என்ற வகையில் பிலிப்பைன்சின் பொருளாதாரம், விவசாயத்தை அடிப்படையாகக் கொணட பொருளாதாரத்திலிருந்து சேவைகள் மற்றும் உற்பத்திகளை அடிப்படையாகக் கொணட பொருளாதாரமாக மாறிவருகின்றது. கிட்டத்தட்ட 40.813 மில்லியனாகவுள்ள நாட்டின் மொத்தத் தொழிலாளர்களில் 32% ஆனோர் விவசாய துறையில் இருக்கும் போதிலும், இவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14% ஆன பங்களிப்பையே வழங்குகின்றனர். தொழில் துறையில் இருக்கும் 14% ஆன தொழிலாளர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஆன பங்களிப்பை வழங்குகின்றனர். இதேவேளை 47% ஆன சேவைத் துறையைச் சார்ந்தோர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56% ஆன பங்களிப்பை வழங்குகின்றனர்.
டிசம்பர் 14, 2014 இல் வேலைவாய்ப்பின்மை 6.0% ஆக உள்ளதுடன் 1.05 மில்லியன் வேலை வாய்ப்புக்கள் தேவைப்படுவதுடன், சூலை 2014 இல் 6.7% இருந்து தற்போது குறைவடைந்துள்ளது. இதேவேளை அடிப்படைத் தேவைகளுக்குக் குறைந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் நவம்பர் மாதமளவில் பணவீக்க வீதம் 3.7% ஆக உள்ளது. 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் மொத்த சர்வதேச இருப்புக்கள் $83.201 பில்லியனாக (அமெரிக்க டாலர்) உள்ளது. 2004 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பொதுக் கடன் 78% என உயர்வாக மதிப்பிடப்பட்டு அதிலிருந்து குறைவடைந்து மார்ச் 2014 இல் 38.1% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நாடு ஒரு நிகர இறக்குமதியாளராக உள்ள போதிலும் கடன் வழங்கும் நாடாகவும் உள்ளது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர், ஒரு முறை இந்நாடு கிழக்கு ஆசியாவில் சப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிக செல்வம் நிறைந்த நாடாகக் கருதப்பட்டது. எனினும், 1960 களில் மற்ற நாடுகளின் பொருளாதாரம் பிலிப்பைன்சின் பொருளாதாரத்தை விட முன்னேற்றமடையத் தொடங்கியது. பிலிப்பைன்சின் பொருளாதாரம், சனாதிபதி பெர்டினாண்ட் மார்கோசின் சர்வாதிகாரத்தின் கீழ், தவறான பொருளாதார முகாமைத்துவம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையின்மை ஆகிய காரணங்களால் தேக்கம் கண்டது. மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளியல் பின்னடைவு ஆகிய காரணங்களால் நாட்டின் பொருளாதாரம் தேக்கநிலைக்கு போனது. 1990 களில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார தாராளமயமாக்கல் திட்டத்திற்கு பின்னரே பொருளாதாரம் மீளக் கட்டியெழுப்பப்பட்டது. 1997 ஆசிய நிதி நெருக்கடி பொருளாதாரத்தைப் பாதித்ததனால் பெசோவின் மதிப்பு நீடித்த சரிவைக் கண்டதுடன் பங்கு சந்தையும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் பிலிப்பைன்சின் சில ஆசிய அண்டை நாடுகள் பாதிக்கப்பட்ட அளவிற்கு அது ஆரம்பத்தில் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை. இந்நிலை அரசாங்கத்தின் நிதித்துறைப் பழமைவாதத்தின் காரணத்தினாலும், பல தசாப்தங்களாக இருந்த கண்காணிப்பு மற்றும் அனைத்துலக நாணய நிதியத்தின் நிதி மேற்பார்வை என்பவற்றின் விளைவாகவும் ஏற்பட்டதுடன், பொருளாதார வளர்ச்சியின் விரைவான முடுக்கம் அதன் அண்டை நாடுகளின் பாரியளவு செலவினங்களுடன் ஒப்பிடுகையில் நன்னிலையில் உள்ளது. அதிலிருந்து முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் இருந்து வருகின்றன. 2004 ஆம் ஆண்டில், பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% வளர்ச்சி கண்டுள்ளதுடன் 2007 ஆம் ஆண்டு 7.1% ஆக வளர்ச்சியடைந்தது, இதுவே மூன்று தசாப்தங்களில் வேகமான வளர்ச்சி ஆகும். 1966–2007 காலகட்டத்தில் தனிநபர் சராசரி வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.45% ஆக உள்ளது, ஆனால் கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தினை ஒரு முழுப் பிரதேசமாகக் கருதும் போது அது 5.96% ஆக உள்ளது. பிலிப்பைன்ஸ் மக்கள்தொகையில் 45% ஆனோரின் நாளாந்த வருமானம் $2 (அமெரிக்க டாலர்) இலும் குறைவாகவே உள்ளது.
பிலிப்பைன்சிற்கு ஏனைய முரண்பாடுகள் மற்றும் சவால்கள் இப்போதும் இருந்து வருகின்றன. இதன் பொருளாதாரம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை வெளிநாட்டு நாணய மூலமாகப் பரிமாறும் பணம் அனுப்புதலிலேயே பெரிதும் சார்ந்துள்ளது. பணம் அனுப்புதல் மூலம் 2010 இல் 10.4% மற்றும் 2012 இல் 8.6% தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி பெறப்பட்டுள்ளது. இங்கு பிராந்திய வளர்ச்சி சமநிலையற்றதாக உள்ளது. லுசான் மற்றும் மணிலா பெருநகருக்கும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இடையிலான வேறுபாடு இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. ஏனைய பகுதிகளின் செலவில் பெரும்பாலான புதிய பொருளாதார வளர்ச்சியை மணிலா பெருநகரே பெற்றுக்கொள்கின்றது. என்றாலும் அரசாங்கம் நாட்டின் பிற பகுதிகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், சுற்றுலாத்துறை மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம் போன்ற சேவைத் தொழில்கள், நாட்டின் வளர்ச்சிக்குச் சிறந்த வாய்ப்புகளைக் கொண்ட பகுதிகளாக அடையாளங்காணப்பட்டுள்ளன.
அடுத்த பதினொரு பொருளாதாரங்களுள் பிலிப்பைன்சையும் கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளடக்கியுள்ளது. ஆனால் சீனா மற்றும் இந்தியா ஆகியவை முக்கிய பொருளாதாரப் போட்டியாளர்களாக எழுச்சிபெற்றுள்ளன. 2050 ஆம் ஆண்டளவில் பிலிப்பைன்ஸ் உலகின் 14 ஆவது பாரிய பொருளாதாரமாக உருவெடுக்குமென கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்பிட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டளவில் பிலிப்பைன்சின் பொருளாதாரம் உலகின் 16 ஆவது பாரிய பொருளாதாரமாகவும், ஆசியாவின் 5 ஆவது பாரிய பொருளாதாரமாகவும், தென்கிழக்காசியாவின் மிகப் பாரிய பொருளாதாரமாகவும் உருவெடுக்குமென ஏச்.எஸ்.பி.சி யும் கணக்கிட்டுள்ளது. உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு (WTO), பிலிப்பைன்சின் நகரான மன்டலுயொங்கைத் தலைமையகமாக கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி, கொழும்புத் திட்டம், ஜி-77, மற்றும் ஜி-24 ஆகிய ஏனைய குழுக்கள் மற்றும் நிறுவனங்களில் பிலிப்பைன்ஸ் அங்கத்துவம் வகிக்கின்றது.
போக்குவரத்து
பிலிப்பைன்சில் போக்குவரத்து உட்கட்டமைப்பு ஒப்பீட்டளவில் வளர்ச்சி குன்றியதாகக் காணப்படுகின்றது. இந்நிலை மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் சிதறிய புவியியல் அமைப்பைக் கொண்ட தீவுகளின் காரணமாக ஏற்பட்டுள்ள போதிலும், உட்கட்டமைபின் வளர்ச்சியில் அரசாங்கம் குறைவாக முதலீடு செய்வதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 2013 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு செலவிடப்பட்டதுடன் இது மிகவும் குறைந்த அளவாகக் காணப்படுகின்றது. இதன் விளைவாக, நீளமான வீதிகள் நாட்டில் உள்ள போதிலும் இவற்றுள் 25.56% ஆனவையே செப்பனிடப்பட்டுள்ளன. பெனிக்னோ அக்கீனோ III இன் கீழான தற்போதைய நிர்வாகம் பல்வேறு திட்டங்களின் ஊடாக நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைப்புக்களை மேம்படுத்த முனைகின்றது. இருப்பினும், குறிப்பாக நகர்ப்புறப் பகுதிகளில் பயணம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன. பிரதான நகரங்களிலும் பட்டணங்களிலும் பேருந்துகள், ஜீப்னிகள், வாடகை வண்டிகள், மற்றும் மோட்டார் இணைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகள் எனப் பல போக்குவரத்து முறைகள் பொதுவாகக் காணப்படுகின்றன. 2007 இல், 5.53 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள் காணப்பட்டதுடன், பதிவுகள் வருடாந்தம் 4.55% இனால் அதிகரித்துச் செல்கின்றன.
பிலிப்பைன்சில் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்குச் செல்ல வான் வழிப் பயணம் முக்கியமான ஒரு தேர்வாக உள்ளது. பிலிப்பைன்சின் பொது வானூர்தி போக்குவரத்து ஆணையமானது வானூர்தி நிலையங்களை முகாமை செய்வதுடன், பாதுகாப்பான வான் பயணம் தொடர்பான கொள்கைகளைச் செயற்படுத்துகின்றது. 85 வானூர்தி நிலையங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. கிளார்க் சர்வதேச வானூர்தி நிலையத்துடன் நினோய் அக்கினோ சர்வதேச வானூர்தி நிலையம் (NAIA) மணிலா பெருநகரப் பகுதியில் சேவை செய்கின்றது. பிலிப்பைன் ஏர்லைன்ஸ், ஆசியாவிலுள்ள தற்போதும் உண்மையான பெயரில் இயங்கிவரும் மிகவும் பழமையான வணிக வானூர்தி நிறுவனமாக உள்ளதுடன், குறைந்த விலையில் சேவை வழங்கும் முன்னணி வானூர்தி நிறுவனமாக செபு பசுபிக் விளங்குகின்றது. இவ்விரு வானூர்தி சேவைகளுமே உள்ளூர் மற்றும் சர்வதேச பயணங்களுக்குச் சேவையாற்றும் முதன்மையான வானூர்தி சேவைகளாக விளங்குகின்றன.
டிசம்பர் 2007 அளவில் பிலிப்பைன்சின் வீதிகளும் நெடுஞ்சாலைகளும் தேசிய மற்றும் மாகாண நெடுஞ்சாலைகளின் வலையமைப்பு, அதிவேக நெடுஞ்சாலைகள், இரண்டாம் தர மற்றும் நகரசபை வீதிகள் என நீளமான வீதிகளை உள்ளடக்கியிருந்தன. நெடுஞ்சாலைகளும் அதிவேக நெடுஞ்சாலைகளும் அதிகமாக லூசோன் தீவுகளில் உள்ளன. இங்கு லூசோன், சமர், லெய்டே, மற்றும் மின்டனவுவை இணைக்கும் ஆசிய நெடுஞ்சாலை 26, வட லூசோன் அதிவேக நெடுஞ்சாலை, தென் லூசோன் அதிவேக நெடுஞ்சாலை, மற்றும் சுபிக்–கிளார்க்–டார்லக் அதிவேக நெடுஞ்சாலை என்பன அமைந்துள்ளன.
பிலிப்பைன்சின் புகையிரதப் போக்குவரத்து, பயணிகள் மற்றும் சரக்குகளைப் முதன்மையான நகரங்களுக்கிடையில் பரிமாறவும் நீண்ட தூரப் பயணங்களுக்கும் மிக முக்கியமானதாக விளங்குகின்றது. பிலிப்பைன்சின் புகையிரத வலையமைப்பு, மணிலா பெருநகரப் பிராந்தியத்தில் சேவையாற்றும் மணிலா சிறிய புகையிரதப் போக்குவரத்து அமைப்பு (LRT-1 மற்றும் LRT-2) மற்றும் மணிலா மெட்ரோ புகையிரதப் போக்குவரத்து அமைப்பு (MRT-3), லூசோன் தீவுகளில் சேவையாற்றும் பிலிப்பைன் தேசிய புகையிரத சேவை (PNR), பனய் தீவுகளீல் முன்னர் சேவையாற்றித் தற்போது செயற்படாமல் இருக்கும் பனய் புகையிரத சேவை என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் முழுமையான தானியங்கிப் புகையிரதமான தானியக்க வழிகாட்டிப் போக்குவரத்து, நீண்ட இரு வகையில் அமைக்கப்படும் பேருந்தான கலப்பின மின்சார சாலைப் புகையிரதம், மற்றும் முழு அளவிலான பயணிகள் புகையிரதம் என மூன்று வகையான புகையிரத அமைப்புக்கள் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
தீவுக் கூட்டமென்ற வகையில், தீவுகளுக்கிடையிலான படகுகள் முலமான போக்குவரத்து இன்றியமையாததாக உள்ளது. மணிலா, செபு, இலொய்லோ, டவாவோ, ககயன் டி ஒரோ, மற்றும் சம்பொவங்கா ஆகியன மும்முரமான துறைமுகங்களாக விளங்குகின்றன. பயணிகள் கலத்தின் ஊடாக பல்வேறு நகரங்களையும் பட்டணங்களையும் இணைக்கும் 2கோ டிரவல் மற்றும் சல்பிசியோ லைன்சு ஆகியன மணிலாவில் சேவை புரிகின்றன. 17 நகரங்களை உள்ளடக்கிய நெடுஞ்சாலைப் பிரிவுகள் மற்றும் படகுப் பாதைகள் ஒருங்கிணைக்கப்பட்ட நீளமான வலுவான குடியரசு கடல் நெடுஞ்சாலை (SRNH) 2003 இல் நிறுவப்பட்டது. பசிக் ஆற்றின் படகுச்சேவை, பசிக் ஆற்றையும் மரிகினா ஆற்றையும் உள்ளடக்கி, மணிலா, மகட்டி, மண்டலுயொங், பசிக் மற்றும் மரிகினா போன்ற இடங்களில் தரிப்பிடங்களைக் கொண்டு, பெருநகரின் முதன்மையான ஆறுகளில் செவை புரிகின்றது.
அறிவியலும் தொழினுட்பமும்
பிலிப்பைன்ஸ் அறிவியலிலும் தொழினுட்பத்திலும் முன்னேற்றமடையப் பல்வேறு முயற்சிகளைப் பின்பற்றுகின்றது. பிலிப்பைன்சில் அறிவியல் மற்றும் தொழினுட்பம் தொடர்பான திட்டங்களின் ஒருங்கிணைப்புத் தொடர்பான வளர்ச்சிக்குப் பொறுப்பான நிறுவனமாக அறிவியல் மற்றும் தொழினுட்பத் திணைக்களம் விளங்குகின்றது. பிலிப்பைன்சில் அறிவியலின் பல்வேறு துறைகளில் பங்களித்தவர்களுக்கு பிலிப்பைன்சின் தேசிய அறிவியலாளர் விருது வழங்கப்படுகின்றது. கல்மன்சி நிப், சொயாலக் மற்றும் வாழைப்பழ கெட்சப் போன்ற முறைப்படுத்தப்பட்ட உணவு பொருட்களால் புகழடைந்த உணவுத் தொழினுட்ப வல்லுனரான மரியா ஒரோசா, எட்டு தசாப்தங்களாகத் தொடர்ந்து குழந்தை மருத்துவத்தில் முன்னோடியாகச் செயற்பட்ட துடிப்பான குழந்தை மருத்துவரான பே டெல் முண்டோ, அணுக்கரு மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புக்களை வழங்கியதால் "பிலிப்பைன்சின் அணுக்கரு மருத்துவத்தின் தந்தை" என அழைக்கப்பட்ட மருத்துவரான பவுலோ கம்போஸ், மா மரங்களில் மேலும் மலர்களை உருவாக்குவதற்கான முறையைக் கண்டுபிடித்ததற்காகப் புகழடைந்த கண்டுபிடிப்பாளரும் தோட்டக்கலை நிபுணருமான ரமொன் பர்பா போன்றவர்கள் குறிப்பிடத்தக்க பிலிப்பினோ அறிவியலாளர்களாக விளங்குகின்றனர்.
சூலை 1996 இல், மபுகே பிலிப்பைன்ஸ் செயற்கைக்கோள் கூட்டமைப்பிற்குச் சொந்தமான, நாட்டின் முதலாவது செயற்கைக்கோளான பலபா பி-2பி (Palapa B-2P) ஏவப்பட்டு ஆகஸ்ட் 1, 1996 இல் ஒரு புதிய சுற்றுவட்டப் பாதையை நோக்கி நகர்த்தப்பட்டதுடன் மபுகே எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2016 அளவில் நாட்டின் முதலாவது நுண் செயற்கைக்கோளை ஏவுவதற்கான திட்டங்கள் அறிவியல் மற்றும் தொழினுட்பத் திணைக்களத்தால் சப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது. 1960 இல் நிறுவப்பட்ட, லொஸ் பனோஸ், லகுணாவில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு சர்வதேச சுயாதீன ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளடங்கலாகப் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டன. இந்நிறுவனம் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு உதவவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், புதிய நெல் இனங்கள் மற்றும் நெற்பயிர் முகாமைத்துவ நுட்பங்கள் தொடர்பான வளர்ச்சிகளில் கவனம் செலுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்டது.
தகவற் தொடர்பாடல்
பிலிப்பைன்ஸ், அதிநவீன கைபேசித் தொழிற்சாலையையும் மிகவும் அதிகமான பாவனையாளர்களையும் கொண்டுள்ளது. குறுஞ்செய்தி அனுப்புதலானது ஒரு பிரபலமான தொடர்பாடல் வடிவமாகக் காணப்படுவதுடன், 2007 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் தினமும் சராசரியாக ஒரு பில்லியன் குறுஞ் செய்திகள் அனுப்பப்பட்டன. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான கைபேசிப் பாவனையாளரகள் தமது கைபேசிகளை பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்துகின்றார்கள். இதன் காரணமாகப் பிலிப்பைன்ஸ், நிதி பரிவர்த்தனைகளை கைபேசி வலையமைப்பினூடாக வழங்குவதில் வளரும் நாடுகளின் மத்தியில் முன்னணியில் உள்ளது. பி.எல்.டி.ரி (PLDT) என அழைக்கப்படும் பிலிப்பைன் தொலை தூர தொலைபேசி நிறுவனம் முன்னணி தகவற் தொடர்பாடற் சேவை வழங்குனராக விளங்குகின்றது. இதுவே இந்நாட்டிலுள்ள பாரிய நிறுவனமாகவும் விளங்குகின்றது. நாடெங்கிலுமுள்ள அனைத்துத் தொலைத்தொடர்பு சேவைகளின் மேற்பார்வை, வழக்குத்தீர்ப்பு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றுக்குப் பொறுப்பான நிறுவனமாகத் தேசியத் தொலைத்தொடர்பு ஆணையம் விளங்குகின்றது. பிலிப்பைன்சில் அண்ணளவாக 383 ஏ.எம் மற்றும் 659 எப்.எம் (பண்பலை) வானொலி நிலையங்களும், 297 தொலைக்காட்சி மற்றும் 873 கம்பி வட தொலைக்காட்சி நிலையங்களும் உள்ளன. மார்ச் 29, 1994 இல் நாட்டின் இணையம் பி.எல்.டி.ரி (PLDT) ஆல் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட திசைவியின் உதவியுடனும் 64 கிலோபிட்/நொடி இணைப்பின் வழியாகக் கலிபோர்னியா வேகத்தொடர்பாடல் திசைவியுடனும் நேரலையாக்கப்பட்டது. பிலிப்பைன்சில் இணைய ஊடுருவல்கள் அண்ணளவாகக் குறைந்தது 2.5 மில்லியனில் இருந்து கூடியது 24 மில்லியன் மக்கள் வரை பரவலாகக் காணப்படுகின்றது. சமூக வலைத்தளப் பாவனையும் காணொளிகளைப் பார்வையிடலும் அடிக்கடி இடம்பெறும் இணைய நடவடிக்கைகளாகக் காணப்படுகின்றன.
சுற்றுலாத்துறை
போக்குவரத்தும் சுற்றுலாத்துறையும் பிலிப்பைன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.1% பங்களிப்பதுடன், பொருளாதாரத்தில் முதன்மையான பங்களிப்பாளர்களாகவும் உள்ளன. 2013 இல் மொத்த வேலைவாய்ப்பில் 3.2 சதவீதமான 1,226,500 வேலைவாய்ப்புக்கள் இத்துறையின் மூலம் கிடைக்கின்றன. சுற்றுலாத்துறை 2013 இல் $4.8 (அமெரிக்க டாலர்) பில்லியனாக வளர்ந்துள்ளது. 2,433,428 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் 2014 சனவரியிலிருந்து சூன் வரை வருகை தந்துள்ளதுடன், இவ்வெண்ணிக்கை 2013 இல் இதே காலப்பகுதியில் இருந்ததைவிட 2.22% அதிகமாகும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தென் கொரியா, சீனா, மற்றும் சப்பானிலிருந்து 58.78% ஆகவும், அமெரிக்காவிலிருந்து 19.28% ஆகவும், ஐரோப்பாவிலிருந்து 10.64% ஆகவும் உள்ளது. சுற்றுலாத்துறைத் திணைக்களம் சுற்றுலாத்துறையின் முகாமைத்துவத்திற்கும் மேம்பாட்டிற்கும் பொறுப்பான ஆளுகைக் குழுவாக விளங்குகின்றது. சனவரி 6, 2012 இல் சுற்றுலாத்துறைத் திணைக்களத்தின் "பிலிப்பைன்சில் மேலும் கேளிக்கைகள் உள்ளன" (It's More Fun in the Philippines) என்ற புதிய முழக்கம் (சுலோகம்) பெயரிடப்பட்டது. வார்க் 100 இன் படி இம்முழக்கம் சிறந்த சந்தைப்படுத்தல் பரப்புரைகளில் உலகின் மூன்றாவது இடத்தில் தரப்படுத்தப்பட்டது.
7,107 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் என்ற வகையில், பிலிப்பைன்ஸ் பல்வேறு கடற்கரைகள், குகைகள், மற்றும் பாறை அமைப்புக்களைக் கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களுள், 2012 இல் டிரவல் + லெசர் (Travel + Leisure) சஞ்சிகையால் சிறந்த தீவாகப் பெயரிடப்பட்ட பொரகாயில் உள்ள வெள்ளை மணல் கடற்கரை, மணிலாவில் அமைந்துள்ள எஸ் எம் மால் ஒஃப் ஆசியா, விழாக்கால பெரும் வளாகம்(பெஸ்டிவல் சுப்பர்மால்) உள்ளிட்ட வணிகக்கடை வளாகங்கள், இபுகாவோவிலுள்ள பனவுவே நெல் விளைநிலம், விகனிலுள்ள வரலாற்றுச் சிறப்புடைய நகரம், பொகோலிலுள்ள சாக்கலேட் குன்றுகள், செபுவிலுள்ள மகலனின் சிலுவை, விசயாசிலுள்ள துப்பட்டகா பவளப்பாறை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைந்துள்ள ஏனைய இடங்களும் உள்ளடங்குகின்றன.
மக்கள் வகைப்பாடு
1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டளவில் பிலிப்பைன்சில் மக்கள்தொகை அண்ணளவாக 28 மில்லியனால் அதிகரித்துள்ளது, இது 45% வளர்ச்சியாகும். பிலிப்பைன்சின் முதலாவது அலுவல்முறையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 1877 இல் இடம்பெற்றதுடன் மக்கள்தொகை 5,567,685 ஆகப் பதிவாகியது. 2013 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் 100 மில்லியன் மக்கள்தொகையுடன், உலகின் 12 ஆவது மக்கள்தொகை கூடிய நாடாகவும் உள்ளது.
கணக்கெடுப்பின்படி பிலிப்பைன்சின் அரைவாசி மக்கள் லூசோன் தீவிலேயே வாழ்கின்றனர். 1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரை 3.21% ஆகக் காணப்பட்ட மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 2005 முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 1.95% ஆகக் குறைவடைந்தமை ஒரு பிரச்சினையாகவே உள்ளது. மக்கள்தொகையின் சராசரி வயது 22.7 வருடங்களாக உள்ளதுடன் 60.9% ஆனோர் 15 இற்கும் 64 இற்கும் இடைப்பட்ட வயதினராகக் காணப்படுகின்றனர். பிறப்பின் பொது ஆயுள் எதிர்பார்ப்பு 71.94 வருடங்களாக உள்ளதுடன், பெண்களுக்கு 75.03 வருடங்களாகவும் ஆண்களுக்கு 68.99 வருடங்களாகவும் உள்ளது.
கிட்டத்தட்ட 12 மில்லியன் பிலிப்பினோக்கள் பிலிப்பைன்சிற்கு வெளியில் வாழ்கின்றனர். 1965 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் குடியேற்ற சட்டங்கள் தாராளமயமாக்கப்பட்டதிலிருந்து, பிலிப்பினோ வம்சாவழியைக் கொண்ட அமெரிக்க மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 12 மில்லியன் பிலிப்பினோக்கள் கடல்கடந்த நாடுகளில் வாழ்கின்றனர்.
அலுவல்முறையான கணக்கெடுப்பின்படி பிலிப்பைன்சின் மக்கள்தொகை சூலை 27, 2014 இல் 100 மில்லியனை எட்டியதுடன், இவ்வெண்ணிகையை அடைந்த 12 ஆவது நாடாக பிலிப்பைன்ஸ் விளங்குகின்றது.
நகரங்கள்
மணிலா பெருநகரப் பகுதியே பிலிப்பைன்சிலுள்ள 12 வரையறுக்கப்பட்ட பெருநகரப்பகுதிகளில் அதிக மக்கள் தொகையைக் கொண்டதாக உள்ளதுடன் உலக அளவில் 11 ஆவது அதிக மக்கள் தொகையைக் கொண்டதாக விளங்குகின்றது. 2007 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு மக்கள்தொகை 11,553,427 ஆகக் காணப்பட்டதுடன், தேசிய மக்கள்தொகையில் 13% ஐ உள்ளடக்கியிருந்தது. மணிலா பெருநகரப் பகுதியின் புறநகரப்பகுதிகளாக அடையாளப்படுத்தப்படும் மணிலாவுக்கு அடுத்துள்ள மாகாணங்களின் (புலக்கன், கவிட்டே, இலகுணா, மற்றும் றிசால்) பகுதிகளையும் உள்ளடக்கும்போது மக்கள் தொகை கிட்டத்தட்ட 21 மில்லியனாகக் காணப்படுகின்றது.
மணிலா பெருநகரப் பிராந்தியத்தின் மொத்தப் பிராந்திய உற்பத்தி சூலை 2009 கணக்கெடுப்பின்படி ₱468.4 பில்லியனாக (நிலையான 1985 ஆம் ஆண்டு விலையில்) இருந்ததுடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33% ஆகவும் காணப்பட்டது.
2011 இல் மணிலா பெருநகரப் பகுதி உலகளவில் 28 ஆவது செல்வம் நிறைந்த நகர்புறக் குழுமமாகவும், தென்கிழக்காசியாவில் 2 ஆவதாகவும் பிரைசுவாட்டர்ஹவுசுகூப்பர்சு (PricewaterhouseCoopers) என்ற பன்னாட்டு தொழில்முறை சேவைகள் வலையமைப்பினால் தரப்படுத்தப்பட்டது.
இனம்
2000 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 28.1% பிலிப்பினோக்கள் தகலாகு இனத்தவர்களாகவும், 13.1% செபுவானோ, 9% இலொகானோ, 7.6% பிசயா/பினிசயா, 7.5% ஹிலிகய்னொன், 6% பிகோல், 3.4% வராய், மற்றும் 25.3% ஏனையவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்த ஏனையவர்களுக்குள் மோரோ, கபம்பங்கன், பங்கசினென்ஸ், இபனக், மற்றும் இவட்டன் போன்ற பழங்குடி அல்லாத குழுக்கள் உள்ளடங்குகின்றன. இகொரொட், லுமட், மங்யன், பஜவு, மற்றும் பாலவான் பழங்குடியினர் போன்ற பழங்குடி மக்களும் ஏட்டா மற்றும் அட்டி போன்ற நெகிரிட்டோக்களும் இத்தீவுகளில் தொன்று தொட்டு வாழும் குடிமக்களாகக் கருதப்படுகின்றனர்.
பிலிப்பினோக்கள் பொதுவாக ஆஸ்திரோனேசிய அல்லது மலாய-பொலினீசிய மொழி பேசுபவர்கள் என்பவர்களுள் ஒரு பகுதியாக மொழிரீதியாகவும் இனவழியாக சில ஆசிய குழுக்களுக்களை சார்ந்தவர்களாகவும் வகைப்படுத்தப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரோனேசிய மொழி பேசும் தாய்வான் பழங்குடியினர் தாய்வானிலிருந்து பிலிப்பைன்சிற்கு இடம்பெயர்ந்த போது விவசாயம் மற்றும் சமுத்திரப் பயணம் தொடர்பான அறிவை இங்கு கொண்டுவந்ததுடன், இறுதியில் முன்னர் இத்தீவுகளில் வசித்துவந்த நெகிரிட்டோ குழுக்களை இடம்பெயரச்செய்தனர் என நம்பப்படுகின்றது.
மிகவும் முக்கியமான இரு பழங்குடியினர் அல்லாத இடம்பெயர்ந்தவர்களுக்குள் சீனர்களும் எசுப்பானியர்களும் உள்ளடங்குகின்றனர். பெரும்பாலும் 1898 ஆம் ஆண்டின் பின்னர் புஜியன்-சீனாவிலிருந்து குடியேறியவர்களின் வழித்தோன்றல்களான சீனப் பிலிப்பினோக்கள் 2 மில்லியனாகக் காணப்படுவதுடன், 18 மில்லியன் பிலிப்பினோக்கள் பகுதியான சீன வழித்தோன்றலை உடையவர்களாக, முன்காலனித்துவ சீனப் புலம்பெயர்ந்தோரில் இருந்து கிளைத்தெழுந்தவர்களாகக் கணிப்பிடப்பட்டுள்ளனர். குழுக்களுக்கிடையிலான கலப்புத் திருமணம் பிரதான நகரங்களிலும், நகர்ப்புற பகுதிகளிலும் தெளிவாகத் தெரிகின்றது.
லூசோனின் மக்கள்தொகையில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கினரும், விசயாஸ் மற்றும் மின்டானோவின் நகரான சம்பொவாங்காவிலுள்ள சில பழங்குடியேற்றத்தினரும் ஹிஸ்பானிய வம்சாவளியைக் (லத்தீன் அமெரிக்கா மற்றும் எசுப்பானியா வரையிலான பல்வேறு இடங்களில் தோற்றம் பெற்றவர்கள்) கொண்டுள்ளனர். இவ்வாறான கலப்பு தம்பதியினரின் வழிவந்தோர் மெஸ்ரிசொஸ் என அழைக்கப்படுகின்றனர்.
மொழிகள்
175 தனிப்பட்ட மொழிகள் பிலிப்பைன்சை சார்ந்தவை என எத்னோலொக் பட்டியலிடுகின்றது. இவற்றுள் 171 மொழிகள் தற்போதும் பயன்பாட்டில் உள்ளதுடன், ஏனைய நான்கு மொழிகளைப் பேசுவோர் தற்போது இல்லாததால் அவை பயன்பாட்டில் இல்லை. பெரும்பாலான தேசிய மொழிகள், ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தின் அங்கமாக உள்ள மலாய-பொலினீசிய மொழிகளின் ஒரு கிளையான பிலிப்பைன் மொழியின் பகுதியாக விளங்குகின்றன. பிலிப்பைன்சிலுள்ள, ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தினுள் அடங்காத, பிலிம்பைன்சுக்கு உரிய மொழியாக எசுப்பானிய அடிப்படை கிரியோலான சவகான மொழி விளங்குகின்றது.
பிலிப்பினோ மற்றும் ஆங்கிலம் ஆகியவை பிலிப்பைன்சின் அலுவல்முறை மொழிகளாக விளங்குகின்றன. பிலிப்பினோ மொழியானது தகலாகு மொழியின் தரப்படுத்தப்பட்ட பதிப்பாக உள்ளதுடன், மணிலா பெருநகர்ப் பகுதி மற்றும் ஏனைய நகர்ப்புறப் பகுதிகளில் அதிகமாகப் பேசப்படுகின்றது. பிலிப்பினோ மற்றும் ஆங்கில மொழிகள் அரசாங்கம், கல்வி, அச்சு ஊடகம், ஒலிபரப்பு ஊடகங்கள், மற்றும் வணிக நடவடிக்கைகள் என்பவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. எசுப்பானிய மற்றும் அராபிய மொழிகள் ஒரு தன்னார்வ மற்றும் விருப்ப அடிப்படையில் முதன்மை மொழிகளாக உயர்த்தப்படலாம் என அரசியலமைப்பு குறிப்பிடுகின்றது.
அக்லனொன், பிகோல், செபுவானோ, சவகானோ, ஹிலிகய்னொன், இபனக், இலோகானோ, இவட்டன், கபம்பங்கன், கினரய்-அ, மகுவின்டனவு, மரனவு, பங்கசீனன், சம்பல், சுரிகவுனொன், தகலாகு, தவுசக், வரே-வரே, மற்றும் யகன் ஆகிய பத்தொன்பது பிராந்திய மொழிகள் துணை அலுவல்முறை மொழிகளாகச் செயற்படுவதுடன் அறிவுறுத்தல் ஊடகங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய பழங்குடி மொழிகளான குயொனொன், இபுகவு, இட்பயாட், கலிங்கா, கமயோ, கன்கனேய், மஸ்படெனோ, ரொம்பிளொமனொன் மற்றும் சில விசயன் மொழிகள் தத்தமது மாகாணங்களில் பொதுவாகக் காணப்படுகின்றன. எசுப்பானியாவிலிருந்து (மெக்சிகன் மற்றும் பெருவியன் திரிபு) பிறந்த ஒரு கிரியோல் மொழியான சவகான மொழி கவிட்டே மற்றும் சம்பொவாங்கா போன்ற இடங்களில் பேசப்படுகின்றது.
இத்தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்டிராத மொழிகளும் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றன. சீனப் பிலிப்பினோ சமூகத்தின் சீனப் பாடசாலைகளில் மாண்டரின் பயன்படுத்தப்படுகின்றது. மின்டனவுவிலுள்ள இசுலாமியப் பாடசாலைகள் பாடத்திட்டத்தில் அரபு மொழியை உள்ளடக்கிக் கற்பிக்கின்றன. வெளிநாட்டு மொழியியல் நிறுவனங்களின் உதவியுடன் பிரான்சியம், செருமானியம், சப்பானியம், கொரியன், எசுப்பானியம் ஆகிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. 2013 இல் கல்வித் திணைக்களம் மலாயு மொழிகளான இந்தோனேசிய மற்றும் மலேசிய மொழிகளைக் கற்பிக்க ஆரம்பித்துள்ளது.
சமயம்
பிலிப்பைன்ஸ் தேவாலயம் மற்றும் அரசு என அரசியலமைப்புப் பிரிப்பினைக் கொண்ட ஒரு மதச்சார்பற்ற நாடாகும். எசுப்பானியப் பண்பாட்டுத் தாக்கத்தின் விளைவாகப் பிலிப்பைன்ஸ், ஆசியாவிலுள்ள இரு பெரும்பான்மையான உரோமன் கத்தோலிக்க நாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இன்னோரு நாடாக முன்னாள் போர்த்துக்கேயக் காலனித்துவ நாடான கிழக்குத் திமோர் விளங்குகின்றது. 90% இற்கும் மேலதிகமான மக்கள் கிறித்தவர்களாக உள்ளனர். இவர்களுள் 80.6% ஆனோர் உரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்தைச் சார்ந்தவர்களாகவும், 9.5% ஆனோர்
சீர்திருத்தத் திருச்சபையின் பிரிவுகளான இக்லேசியா நி கிரிசுட்டோ, பிலிப்பைன் சுதந்திரத் திருச்சபை, பிலிப்பைன்சின் கிறித்தவ ஐக்கிய திருச்சபை மற்றும் யெகோவாவின் சாட்சிகள் போன்றவற்றை பின்பற்றுகின்றனர்.
முசுலிம் பிலிப்பினோக்களின் தேசிய ஆணையத்தின் (NCMF) படி 2012 இல் முசுலிம்கள் மக்கள்தொகையில் 11% ஐ உள்ளடக்கியவர்களாகக் காணப்பட்டனர். இவர்களுள் பெரும்பான்மையானோர் மின்டானவுவின் பகுதிகள், பலாவன் மற்றும் பங்சமோரோ அல்லது மோரோ பிராந்தியம் எனப்படும் சுலு தீவுக்கூட்டம் ஆகிய பிராந்தியங்களில் வசிக்கின்றனர். இவர்களுள் சிலர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் வந்து குடியேறியுள்ளனர். ஷாபி பாடசாலையின்படி பெரும்பாலான முசுலிம் பிலிப்பினோக்கள் சுன்னி இசுலாமை பின்பற்றுகின்றனர். அகமதியா முசுலிம்களும் இங்கு வசிக்கின்றனர்.
பிலிப்பைன்சின் பாரம்பரியச் சமயங்கள் தற்போதும் பூர்விக மற்றும் பழங்குடிக் குழுக்கள் போன்ற 2% ஆன மக்கள்தொகையினரால் பின்பற்றப்படுகின்றன. இந்தச் சமயங்கள் கிறித்தவ மற்றும் இசுலாமிய சமயங்களுடன் இணங்கிச் செல்கின்றன. ஆன்ம வாதம், நாட்டுப்புற மதம் மற்றும் சூனிய நம்பிக்கை ஆகியவை முதன்மை சமயங்களின் அடிப்படையாக அல்புலார்யோ, பபய்லான், மற்றும் மங்கிகிலொட் என்பவற்றினூடாகத் தற்போது காணப்படுகின்றன. இங்குள்ள மக்கள்தொகையில் 1% மக்கள் பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர். அத்தோடு சீன சமூகங்களில் தாவோயியம் மற்றும் சீன நாட்டுப்புற சமயம் என்பன பிரதானமாகக் காணப்படுகின்றன. இந்து சமயம், சீக்கியம், யூத சமயம் மற்றும் பகாய் சமயம் போன்றவற்றை சிறு எண்ணிக்கையான மக்கள் பின்பற்றுகின்றனர். மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 1% முதல் 11% வரையானோர் எந்தச் சமயத்தையும் சாராதவர்களாக உள்ளனர்.
கல்வி
2008 ஆம் ஆண்டு பிலிப்பைன்சின் சாதாரண எழுத்தறிவு வீதம் 95.6% ஆகவும் இதில் ஆண்களுக்கு 95.1% ஆகவும் பெண்களுக்கு 96.1% ஆகவும் காணப்பட்டதுடன் பிலிப்பைன்சின் செயற்பாட்டு எழுத்தறிவு வீதம் 86.45% ஆகவும் இதில் ஆண்களுக்கு 84.2% ஆகவும் பெண்களுக்கு 88.7% ஆகவும் காணப்பட்டது. பெண்களின் எழுத்தறிவு வீதம் ஆண்களைவிட அதிகமாகக் காணப்படுகின்றது. முன்மொழியப்பட்ட 2015 ஆம் ஆண்டுதேசிய வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக 16.11% செலவிடப்படுகின்றது.
உயர் கல்வி ஆணையகம் (CHED) பிலிப்பைன்சில் 2,180 உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளதாகப் பட்டியலிடுவதுடன், இவற்றுள் 607 பொது உயர் கல்வி நிறுவனங்களாகவும் 1,573 தனியார் உயர் கல்வி நிறுவனங்களாகவும் விளங்குகின்றன. வகுப்புக்கள் சூன் மாதத்தில் ஆரம்பித்து மார்ச்சு மாதத்தில் முடிவடைகின்றன. பெரும்பாலான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சூன் முதல் ஒக்டோபர் வரை மற்றும் நவம்பர் முதல் மார்ச்சு வரையெனக் காணப்படும் கல்வியாண்டு நாட்காட்டியைப் பின்பற்றுகின்றன. கற்கை நெறிகளைக் கொண்ட பல வெளிநாட்டுப் பாடசாலைகளும் இங்கு காணப்படுகின்றன. குடியரசுச் சட்டம் எண். 9155 பிலிப்பைன்சின் அடிப்படைக் கல்வி பற்றிய கட்டமைப்பைக் குறிப்பிடுவதுடன் 6-வருடம் ஆரம்பக் கல்வியையும் 4-வருடம் உயர் கல்வியையும் கட்டாயமாக்கியுள்ளது. ஆனால் திருத்தியமைக்கப்பட்ட குடியரசுச் சட்டம் எண். 10533 அல்லது மே 15, 2013 இல் கைச்சாத்திடப்பட்ட 2013 இன் மேம்படுத்தப்பட்ட அடிப்படைக் கல்விச் சட்டம் (பொதுவாக K-12 சட்டம் எனப்படுகின்றது) என்பன நாட்டின் அடிப்படைக் கல்வி அமைப்பில் இரண்டு வருடங்களை மேலதிகமாக இணைக்கின்றன.
பல அரசாங்க துறைகள் கல்வி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன. கல்வித் திணைக்களம் ஆரம்ப, இடைநிலை மற்றும் முறைசாராக் கல்வி என்பவற்றைக் கையாள்கின்றது. தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அதிகார சபை (TESDA) பிந்தைய இரண்டாம் இடைநிலைக் கல்விப் பயிற்சி மற்றும் அபிவிருத்தியை நிர்வகிக்கின்றது. உயர் கல்வி ஆணையகம் (CHED) கல்லூரி, பட்டதாரிக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் பட்டப்படிப்பு என்பவற்றை மேற்பார்வை செய்வதுடன், உயர் கல்வியின் தரத்தினை ஒழுங்குபடுத்துகின்றது.
2004 ஆம் ஆண்டு மதராசா கல்வி நிறுவனங்கள் நாடளாவியரீதியில் முதன்மையாக மின்டனவுவிலுள்ள முசுலிம் பிராந்தியங்கள் உள்ளடங்கலாக 16 பிராந்தியங்களில் கல்வித் திணைக்களத்தின் ஆதரவுடனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழும் செயற்படுகின்றன. பொதுப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மதச்சார்பற்ற நிறுவனங்களாகக் காணப்படுவதுடன், பொதுத்துறை பல்கலைக்கழகம் (SUC) அல்லது உள்ளூர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் (LCU) என மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்சின் தேசியப் பல்கலைக்கழகமாகப் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் விளங்குகின்றது.
சுகாதாரம்
நாட்டின் சுகாதாரப் பராமரிப்பு பெரும்பாலும் தனியார் சுகாதாரச்சேவை வழங்குநர்களினால் கையாளப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு சுகாதாரத் துறையின் மொத்தச் செலவினங்கள் 3.8% ஆகக் காணப்பட்டதுடன் உலகச் சுகாதார அமைப்பின் இலக்கான 5% ஐ விடக் குறைவாகவே உள்ளது. 2009 இல் 67.1% ஆன சுகாதாரப் பராமரிப்பு தனியார் செலவீனங்களிலிருந்து பெறப்பட்டதுடன் 32.9% அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. மொத்தத்தில் 2.9% ஆனவை வெளிப்புற வளங்களால் பூர்த்திசெய்யப்பட்டன. மொத்த அரசாங்கச் செலவுகளில் சுகாதார செலவினங்கள் 6.1% ஆகக் காணப்படுகின்றன. தனிநபரொருவருக்கான மொத்தச் செலவினம் சராசரிப் பரிமாற்ற வீதத்தில் $52 ஆகக் காணப்படுகின்றது. 2010 இல் சுகாதாரப் பராமரிப்பிற்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடு ₱28 பில்லியன் (அண்ணளவாக $597 மில்லியன்) அல்லது நபரொருவருக்கு ₱310 ($7) ஆகக் காணப்படுகின்றது. ஆனால் கீழவைச் சட்டமூலம் 5727 (பொதுவாகச் சின் வரி சட்டமூலம்) இலிருந்து வரி அறவீட்டினால் 2014 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு அதிகரித்தது.
கணக்கெடுப்பின்படி 90,370 மருத்துவர்கள் அல்லது 833 பேருக்கு ஒரு மருத்துவர் இங்கு உள்ளதுடன், 480,910 தாதியர்கள், 43,220 பல் மருத்துவர்கள், மற்றும் 769 பேருக்கு ஒரு மருத்துவமனைப் படுக்கை இங்கு காணப்படுகின்றன. திறமையான மருத்துவர்களைத் தக்க வைத்தல் ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. 70% ஆன தாதியர் பட்டதாரிகள் வேலை செய்வதற்கு வெளிநாடு செல்கின்றனர். பிலிப்பைன்ஸ் உலகின் மிகப்பெரிய தாதியர் வழங்குநராகக் காணப்படுகின்றது.
2001 இல் 1,700 மருத்துவமனைகள் காணப்பட்டதுடன், இவற்றுள் 40% ஆனவை அரசாங்கத்தாலும் 60% ஆனவை தனியாராலும் நடாத்தப்படுகின்றன. மொத்த இறப்பின் 25% இற்கும் மேலதிகமான இறப்புக்கள் இதயக் குழலிய நோயால் ஏற்படுகின்றன. அலுவல்முறைக் கணக்கெடுப்பின்படி 2003 இல் 1,965 எச்.ஐ.வி (HIV) நோயாளர் பதிவுசெய்யப்பட்டதுடன், இவர்களுள் 636 பேர் எய்ட்சு (AIDS) நிலையை அடைந்தனர். இருந்தபோதிலும் 2005 இல் 12,000 ஆக இருந்து ஏப்ரல் 2014 இல் 17,450 ஆக எச்.ஐ.வி/எய்ட்சு நோயாளர் எண்ணிக்கை அதிகரித்ததுடன் 5,965 எச்.ஐ.வி/எய்ட்சு நோய் எதிர்ப்பு சிகிச்சை எடுத்தனர் கணக்கெடுப்பின்படி பிலிப்பைன்சில் வயது வந்த மக்களில் 0.1% ஆனோர் எச்.ஐ.வி-நேர்மறையைக் கொண்டுள்ளமையால், குறைந்த எச்.ஐ.வி நோய்த்தாக்கம் கொண்ட நாடாகப் பிலிப்பைன்ஸ் விளங்குகின்றது.
பண்பாடு
பிலிப்பைன்சின் பண்பாடு கீழைத்தேய மற்றும் மேலைத்தேயப் பண்பாடுகளின் சேர்க்கையாகக் காணப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் ஏனைய ஆசிய நாடுகளில் காணப்படும் அம்சங்களை மலாய மரபினூடாக வெளிப்படுத்துகின்றது. ஆனாலும் இதன் பண்பாட்டில் எசுப்பானிய மற்றும் அமெரிக்கப் பண்பாடுகளின் தாக்கத்தினைக் காணக்கூடியதாக உள்ளது. புனிதத் துறவிகளின் திருவிழா நாட்களை நினைவுகூர்வதற்காகக் கொண்டாடப்படும் பரியோ பியெஸ்டாஸ் (மாவட்டத் திருவிழாக்கள்) எனப்படும் பாரம்பரியத் திருவிழாக்கள் இங்கு பொதுவாகக் காணப்படுகின்றன.
மோரியோன்ஸ் திருவிழாவும் சினுலொக் திருவிழாவும் மிகவும் புகழ்பெற்ற திருவிழாக்களாகத் திகழ்கின்றன. இந்த சமூகக் கொண்டாட்டங்கள் விருந்து, இசை, மற்றும் நடனம் என்பவற்றிற்கான நேரமாகக் காணப்படுகின்றன. நவீனமயமாக்கலின் காரணமாகச் சில விழாக்கள் மாற்றத்திற்குள்ளாவதுடன் படிப்படியாக மக்களால் மறக்கப்பட்டும் வருகின்றன. பிலிப்பைன்ஸ் எங்கும் பரந்து காணப்படும் பல்வேறுபட்ட மரபுசார்ந்த கிராமிய நடனங்களைப் பாதுகாக்கும் பொருட்டு பயனிஹன் பிலிப்பைன் தேசிய கிராமிய நடன நிறுவனம் உருவாக்கப்பட்டது. ரினிக்லிங் மற்றும் சிங்கில் போன்ற மூங்கில் தடிகளை அடித்து ஆடப்படும் நடனங்களில் இவர்களது குறிப்பிடத்தக்க செயற்பாட்டினால் இவர்கள் புகழ்பெற்றுள்ளனர்.
எசுப்பானிய மற்றும் அமெரிக்கத் தாக்கம்
பிலிப்பினோ மக்களிடையே எசுப்பானியப் பெயர்களும் குடும்பப் பெயர்களும் பயன்படுத்தப்படுவது வெளிப்படையாகத் தெரிகின்ற ஹிஸ்பானியப் பாரம்பரியங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இருந்த போதிலும் எசுப்பானிய வம்சாவளியைக் கொண்ட மக்கள் மட்டுமல்லாது பிறரும் எசுப்பானியப் பெயர்களையும் குடும்பப் பெயர்களையும் பயன்படுத்தினர். இந்த விசேட தன்மை காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததன் விளைவாக ஆசிய மக்களிடையே தனித்துவமாகக் காணப்படுவதுடன், கவ்வேரிய அரசாணை மக்களின் மீது எசுப்பானியப் பெயரிடும் முறையைச் செயற்படுத்தியதுடன் திட்டமிட்டு எசுப்பானியக் குடும்பப் பெயர்களைப் பரவலாக்கம் செய்தது.
பல வீதிகள், நகரங்கள், மற்றும் மாகாணங்கள் என்பவற்றின் பெயர்களும் எசுப்பானிய மொழியில் அமைந்துள்ளன. பிலிப்பைன்சில் பல நகரங்கள் ஒரு மத்திய சதுரத்தை சுற்றி அமைந்துள்ளமை எசுப்பானியக் கட்டடக்கலையின் அடையாளமாக அமைந்துள்ளது. ஆனால் எசுப்பானியக் கட்டடக்கலை மூலம் அமைக்கப்பட்ட பல கட்டடங்கள் இரண்டாம் உலகப் போரின் போது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. பிலிப்பைன்சின் தேவாலயங்கள், அரசாங்கக் கட்டடங்கள், மற்றும் பல்கலைக்கழகங்கள் எசுப்பானியக் கட்டடக்கலைக்குச் சில எடுத்துக்காட்டுகளாக எஞ்சியுள்ளன. மணிலாவிலுள்ள சான் அகஸ்டின் தேவாலயம், இலோகொஸ் நோர்டேயிலுள்ள பவோவா தேவாலயம், இலோகொஸ் சர்ரிலுள்ள நுவெஸ்திரா செனோரா டி லா அசுன்சியொன் (சான்டா மரியா) தேவாலயம், இலொய்லோவிலுள்ள சான்டோ தோமஸ் டி வில்லானுவேவா தேவாலயம் ஆகிய நான்கு பிலிப்பைன் பரோக் தேவாலயங்கள் உலகப் பாரம்பரியக் களப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இலோகொசிலுள்ள விகன் நகரம், ஹிஸ்பானியப் பாணியிலான வீடுகள் மற்றும் கட்டடங்கள் பாதுகாக்கப்படுவதால் புகழ்பெற்று விளங்குகின்றது.
ஆங்கில மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுவது பிலிப்பீனியச் சமூகம் மீதான அமெரிக்கத் தாக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இது அமெரிக்கப் பொப் பண்பாட்டுப் போக்குகள் ஏற்றுக்கொள்ளப்படவும் தாக்கம் செலுத்தவும் பங்களித்துள்ளது. இந்த நாட்டத்தைப் பிலிப்பினோக்களின் துரித உணவு, மேற்கத்தேயத் திரைப்படம் மற்றும் இசை மீதான நாட்டத்தின் மூலம் காணக்கூடியதாக உள்ளது. துரித உணவு விற்பனை நிலையங்கள் பல வீதியோரங்களில் காணப்படுகின்றன. பிரபல அமெரிக்க உலகளாவிய துரித உணவுச் சங்கிலி பிலிப்பைன்சின் சந்தைக்குள் நுழைந்த போதிலும், உள்ளூர் துரித உணவுச் சங்கிலிகளான கோல்டிலொக்ஸ் மற்றும் நாட்டின் முன்னணி துரித உணவுச் சங்கிலியான ஜொல்லிபீ ஆகியன, தங்கள் வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கு எதிராக வெற்றிகரமாகப் போட்டியிடவும் நிலைத்து நிற்கவும் முடியுமாயிருந்தன.
சமையல்
பிலிப்பைன்சின் சமையல் முறை அதன் மலாய-பொலினீசிய மூலத்திலிருந்து சில நூற்றாண்டுகளாக மாற்றமடைந்து வருவதுடன் ஹிஸ்பானிய, சீன, அமெரிக்க, மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் தாக்கத்திற்குள்ளாகி கலப்புச் சமையல் முறையாக உருவானதுடன், உள்ளூர் சமையற் பொருட்கள் மற்றும் பிலிப்பினோக்களின் சுவையைத் தழுவித் தனித்துவமான உணவுகள் உருவாகியுள்ளன. மிகவும் இலகுவான உணவான பொரித்த மீன், சோறு, விழாக்களில் செய்யப்படும் பெல்லாக்கள் கொசிடோஸ் போன்ற பல்வேறுபட்ட உணவு வகைகள் இங்குக் காணப்படுகின்றன.
லெசோன், அடொபோ, சினிகாங், கரே-கரே, டப்பா, மொறுமொறுப்பான பட்டா, பஞ்சிட், லும்பியா, மற்றும் ஹாலோ-ஹாலோ போன்ற உணவுகள் புகழ்பெற்ற உணவு வகைகளாகத் திகழ்கின்றன. கலமொன்டின்கள் (கலப்பின பழவகை, இது பிலிப்பினோ எலுமிச்சை, சீன ஆரஞ்சு என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது) தேங்காய்கள், சபா (ஒரு வகையான சிறிய அகலமான வாழைப்பழம்), மாம்பழங்கள், பால் மீன், மற்றும் மீன் சுவைச்சாறு (சோஸ்) என்பன சமையலில் பயன்படுத்தப்படும் பொதுவான உள்ளூர் சமையற் பொருட்களுள் சிலவாகும். பிலிப்பினோக்களின் சுவை மொட்டுகள் வலுவான சுவைகளுக்குச் சாதகமாக உள்ளபோதிலும், பிலிப்பைன் சமையல் அதன் அண்டை நாடுகளைப் போலக் காரமான உணவாக இருப்பதில்லை.
கிழக்கு ஆசிய நாட்டவரைப் போலப் பிலிப்பினோக்கள் ஒரு சோடிக் குச்சிகளின் உதவியுடன் உண்ணாமல், மேற்கத்திய உபகரணங்களின் உதவியுடனேயே உண்கின்றனர். இருந்த போதிலும் முதன்மை உணவாக சோறு இருப்பதன் காரணமாகவும், பெரும் எண்ணிக்கையிலான கஞ்சி வகைகள் மற்றும் குழம்புடன் கூடிய முதன்மை உணவுகள் பரவலாக உண்ணப்படுவதால் பிலிப்பினோக்கள் உணவு உண்ணும்போது கத்தியைப் பயன்படுத்துவதில்லை. மாறாக சிறுகரண்டியையும் முள்கரண்டியையும் கொண்டு பெரும்பாலோர் உண்ணுகிறார்கள். கமயான் என்று அழைக்கப்படும் கைகளின் மூலம் உணவு உண்ணும் மரபு சார்ந்த முறை சிறிய நகரங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது.
இலக்கியம்
பிலிப்பைனின் தொன்மவியல் முதன்மையாக பிலிப்பினனோ மக்களின் மரபுசார்ந்த வாய்வழி நாட்டுப்புற இலக்கியங்களின் வழியாகவே தற்காலத் தலைமுறைக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஒவ்வொரு தனித்துவமான இனக்குழுவினரும் தமது சொந்தக் கதைகளையும் தொன்மங்களையும் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்து மற்றும் எசுப்பானியத் தாக்கங்களைப் பல சந்தர்ப்பங்களில் பரவலாகக் காண முடிகின்றன. பிலிப்பைனின் தொன்மவியல் பெரும்பாலும் படைப்புக் கதைகள் எனப்படும் அஸ்வாங், மனனங்கல், டிவட்டா/எங்கன்டோ போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட உயிரினங்கள் மற்றும் இயற்கை பற்றிய கதைகளைக் கொண்டுள்ளது. மரியா மகிலிங், லம்-அங், மற்றும் சரிமனொக் போன்றவர்கள் பிலிப்பைனின் தொன்மவியல்களிலுள்ள சில புகழ்பெற்ற நபர்களாக விளங்குகின்றனர்.
பிலிப்பினோ, எசுப்பானியம், ஆங்கில மொழி போன்ற மொழிகளில் எழுதப்பட்ட படைப்புக்களைப் பிலிப்பைனின் இலக்கியம் பொதுவாகக் கொண்டுள்ளது. சில பிரபலமான படைப்புக்கள் 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டன. புளோரன்டே அட் லவுரா என்ற காவியத்தை எழுதிய கவிஞரும் நாடக ஆசிரியருமான பிரான்சிஸ்கோ பலக்டாஸ், பிலிப்பினோ மொழியில் முன்னணி எழுத்தாளராகத் திகழ்கின்றார். நொலி மீ தாங்கெரே (என்னைத் தொடாதே) மற்றும் எல் பிலிபஸ்டெரிஸ்மோ (காலங் கடத்துதல், பேராசையின் ஆட்சிக்காலம் என்றும் அழைக்கப்படுகின்றது) போன்ற நாவல்களை எழுதிய ஒசே ரிசால் தேசிய நாயகனாகக் கருதப்படுகின்றார். எசுப்பானிய ஆட்சியின் அநீதி தொடர்பான அவரது எழுத்துச் சித்தரிப்பும், அரசின் துப்பாக்கி வீரர்கள் அடங்கிய குழுவால் சுடப்பட்டு அவர் மரண தண்டனை பெற்ற நிகழ்வும், சுதந்திரத்தைப் பெறுவதற்கு ஏனைய பிலிப்பீனியப் புரட்சியாளர்களுக்கு உந்துதலாக அமைந்தது. என். வி. எம். கொன்சலேஸ், அமடோ வி. ஹெர்னான்டெஸ், பிரான்சிஸ்கோ ஆர்செல்லனா, நிக் ஜொகுவின் மற்றும் பல பிலிப்பினோ எழுத்தாளர்களுக்குப் பிலிப்பைன்சின் தேசியக் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஊடகம்
பிலிப்பைன் ஊடகங்கள் முதன்மையாக பிலிப்பினோ மற்றும் ஆங்கில மொழியைப் பயன்படுத்துகின்றன. பல்வேறு விசயன் மொழிகள் உள்ளடங்கலாக ஏனைய பிலிப்பைன் மொழிகள், விசேடமாகப் பிற ஊடக சேவைகள் இல்லாத, வெகு தொலைவிலுள்ள கிராமப்புறங்களை அடையக்கூடியதாக உள்ளபடியினால் வானொலிகளில் பயன்படுத்தப்படுகின்றன. புகழ்பெற்ற தொலைக்காட்சி வலையமைப்புக்களான ஏபிஎஸ்-சீபிஎன் (ABS-CBN), ஜீஎம்ஏ (GMA), டிவி5 (TV5) ஆகியன விரிவான வானொலி அமைப்பையும் கொண்டுள்ளன.
பொழுதுபோக்குத் துறை துடிப்பாக உள்ளதுடன் சஞ்சிகைகளும் சிறு பத்திரிகைகளும் புகழ்பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் பரபரப்பான ஊழல்கள் பற்றிய தகவல்களைத் தொடர்ச்சியாக வழங்குகின்றன. நாடகங்கள் மற்றும் கற்பனை நிகழ்ச்சிகளில் இலத்தீன் டெலினொவெலாஸ், அசியமொவெல்லாஸ், மற்றும் அனிமே என்பவற்றை எதிர்பார்க்கலாம். பகல் நேரத்தில் தொலைக்காட்சிகளில் குழு விளையாட்டு நிகழ்ச்சிகள், வேறுபட்ட நிகழ்ச்சிகள், மற்றும் ஈட் புலகா மற்றும் இட்ஸ் ஷோடைம் போன்ற பேச்சு நிகழ்ச்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பிலிப்பைன் திரைத்துறை நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதுடன் உள்நாட்டில் புகழ்பெற்று உள்ளது. ஆனால் அமெரிக்க, ஆசிய, மற்றும் ஐரோப்பியத் திரைப்படங்கள் மூலம் அதிகரித்த போட்டித்தன்மையை எதிர்நோக்கியுள்ளது. விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுள் மய்னிலா: சா ம்கா குகோ ங் லிவனக் (மணிலா: ஒளியின் கால்களில்) மற்றும் ஹிமலா (அதிசயம்) போன்ற திரைப்படங்களுக்காகப் பாராட்டப்பட்ட லினோ புரொக்கா மற்றும் நோரா அவுனோர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். அண்மைய ஆண்டுகளில் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் வலம் வரும் புகழ்பெற்றவர்கள், பின்னர் அரசியலில் நுழைந்து சர்ச்சைக்களை தூண்டுவது கவலைக்குரியதாக உள்ளது.
விளையாட்டு
கூடைப்பந்து, குத்துச்சண்டை, சேவல் சண்டை, கைப்பந்தாட்டம், காற்பந்து, இறகுப்பந்தாட்டம், கராத்தே, டைக்குவாண்டோ, பில்லியார்ட்ஸ், பத்துப்பின் பௌலிங், சதுரங்கம், மற்றும் சிபா உள்ளடங்கலாகப் பல்வேறு விளையாட்டுக்களும் பொழுதுபோக்குகளும் பிலிப்பைன்சில் புகழ்பெற்றுள்ளன. மோட்டர் கிராசு, சைக்கிளோட்டம், மற்றும் மலையேற்றம் என்பனவும் புகழடைந்து வருகின்றன. கூடைப்பந்து தொழில்முறையற்றவர்களாலும் தொழில்முறை சார்ந்தவர்களாலும் விளையாடப்பட்டு பிலிப்பைன்சில் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டாக விளங்குகின்றது. 2010 இல், மன்னி பக்குவியோ 2000களின் (தசாப்தம்) பத்தாண்டின் சிறந்த சண்டைக்காரராக அமெரிக்காவின் குத்துச்சண்டை எழுத்தாளர்கள் கூட்டமைப்பு (BWAA), உலக குத்துச்சண்டை சபை (WBC), மற்றும் உலக குத்துச்சண்டை அமைப்பு (WBO) என்பவற்றால் குறிப்பிடப்பட்டார்.
பிலிப்பைன்ஸ் 1924ஆம் ஆண்டிலிருந்து கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்குபெற்று வருவதுடன், முதன் முறையாகப் போட்டிகளில் பங்குப்பெற்று பதக்கத்தை வென்ற முதலாவது தென்கிழக்காசியா நாடாகத் திகழ்கின்றது. பிலிப்பைன்ஸ் அனைத்து கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் பங்குபெற்று வந்த போதிலும் 1980 கோடைகால ஒலிம்பிக்கிக்கை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் புறக்கணித்த போது மட்டும் பங்கு பெறவில்லை. பிலிப்பைன்ஸ் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் போட்டியிடும் முதலாவது வெப்பமண்டல நாடாக விளங்குகின்றது.
லக்சங் பகா, படின்டெரோ, பிகோ, மற்றும் டும்பங் பிரெசோ போன்றவை மரவு வழி பிலிப்பைன் விளையாட்டுக்கள் ஆகும். இவை சிறுவர்களின் விளையாட்டுகளாக இளைஞர் மத்தியில் பெரும்பாலும் தற்போது விளையாடப்படுகின்றன. சுங்கா என்பது பிலிப்பைன்சைச் சேர்ந்த மரபு சார்ந்த பிலிப்பைன் பலகை விளையாட்டாகும். விழாக்காலங்களில் சீட்டாட்டம் புகழ்பெற்று காணப்படுவதுடன், புசோய் மற்றும் டொங்-இட்ஸ் என்பன சட்டவிரோத சூதாட்டத்தின் ஒரு வடிவமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில பிலிப்பைன் சமூகங்களில் மஹ்ஜொங் விளையாடப்படுகின்றது. பிலிப்பைன்சில் புகழ்பெற்ற விளையாட்டுப் பொம்மையாக யோ-யோ விளங்குவதுடன், பெட்ரோ புளோரெசால் இலோகானோ மொழியில் இது பெயரிடப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டது. அர்னிஸ் (சில பிராந்தியங்களில் எஸ்கிர்மா அல்லது காளி எனப்படுகின்றது) என்பது தேசிய தற்காப்புக் கலையாகவும் விளையாட்டாகவும் விளங்குகின்றது.
இவற்றையும் பார்க்க
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு
சான்றுகள்
மேற்கோள்கள்
நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
அரசாங்கம்
பிலிப்பைன்சின் அலுவல்முறையான வர்த்தமானியின் அலுவல்முறை இணையத்தளம்
பிலிப்பைன்சின் பிரதிநிதிகள் சபையின் அலுவல்முறை இணையத்தளம்
பிலிப்பைன்சின் உச்ச நீதிமன்றத்தின் அலுவல்முறை இணையத்தளம்
பாங்கோ சென்ட்ரல் இங் பிலிப்பினாசின் (பிலிப்பைன்சின் மத்திய வங்கி) அலுவல்முறை இணையத்தளம்
தேசிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி ஆணையத்தின் (NEDA) அலுவல்முறை இணையத்தளம்
விவசாயப் புள்ளியியல் செயலகத்தின் அலுவல்முறை இணையத்தளம்
பிலிப்பைன் தேசிய காவல்துறையின் (PNP) அலுவல்முறை இணையத்தளம்
சுற்றுலாத்துறைத் திணைக்களத்தின் அலுவல்முறை இணையத்தளம்
பிலிப்பைன்சின் இணைய நேரடி சுற்றுலா வழிகாட்டி
வர்த்தகம்
உலக வங்கியின் பிலிப்பைன்சின் வர்த்தகப் புள்ளிவிபரச் சுருக்கம்
பொதுவான தகவல்கள்
பிபிசி செய்திகளிலிருந்து பிலிப்பைன்சின் விவரக்குறிப்பு
at UCB Libraries GovPubs
வணிக ஊழல் ஒழிப்பு வலைவாசலில் இருந்து பிலிப்பைன்சின் ஊழல் தொடர்பான விவரக்குறிப்பு
பிலிப்பைன்ஸ் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில்
இன்டர்னசனல் பியூச்சர்சில் இருந்து பிலிப்பைன்சிற்கான முக்கிய அபிவிருத்தி முன் அறிவிப்புகள்
புத்தகங்களும் கட்டுரைகளும்
குட்டன்பேர்க் திட்டத்திலிருந்து பல தொகுதிகளில் பிலிப்பைன் தீவுகளின் வரலாறு (பொது ஆசிரியரான எம்மா ஹெலென் பிளயிரின் கீழ் சுட்டுவரிசைப்படுத்தப்பட்டுள்ளது)
விக்கிமீடியா
விக்கிமீடியா பிலிப்பைன்ஸ்
ஏனையவை
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)
விக்கிமேப்பியாவில் பிலிப்பைன்சின் விக்கி செயற்கைக்கோள் தோற்றம்
பிலிப்பீன்சு
தீவு நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
|
7081
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2024
|
திசம்பர் 24
|
நிகழ்வுகள்
640 – நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
820 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் லியோ கான்ஸ்டண்டினோபில், ஹேகியா சோபியாவில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார்.
1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியைத் துறந்ததை அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1690 – யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன.
1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.
1814 – பிரித்தானியாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 முடிவுக்கு வந்தது.
1846 – பிரித்தானியர் புரூணையிடம் இருந்து லாபுவான் தீவைப் பெற்றனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இத்தீவு மலேசியாவுக்குச் சொந்தமானது.
1851 – அமெரிக்கக் காங்கிரசு நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.
1865 – அமெரிக்காவின் இரகசிய அமைப்பான கு கிளக்சு கிளான் தோற்றுவிக்கப்பட்டது.
1906 – ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.
1913 – மிச்சிகனில் இத்தாலி மண்டபத்தில் கிறித்துமசு கொண்டாட்டத்தின் போது இடம்பெற்ற நெரிசலில் 59 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்தனர்.
1914 – முதலாம் உலகப் போர்: கிறித்துமசு தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
1924 – அல்பேனியா குடியரசாகியது.
1939 – இரண்டாம் உலகப் போர்: திருத்தந்தை பன்னிரண்டாம் பயசு கிறித்துமசு நாள் அமைதி அமைதி காக்கக் கோரிக்கை விடுத்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் பங்காசி நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் சப்பானியரிடம் வீழ்ந்தது.
1951 – லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் இத்ரிசு லிபிய மன்னராக முடிசூடினார்.
1953 – நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.
1966 – அமெரிக்கப் படையினரை ஏற்றிச் சென்ற கனடாஏர் விமானம் தெற்கு வியட்நாமில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 129 பேர் உயிரிழந்தனர்.
1968 – மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
1969 – வடகடலின் நோர்வே பகுதியில் முதன் முதலாக எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
1974 – ஆத்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் இறந்தனர்.
1994 – ஏர் பிரான்சு விமானம் 8969 அல்ஜியர்சில் கடத்தப்பட்டது. மூன்று நாட்கள் நீடித்த இக்கடத்தலின் முடிவில் மூன்று பயணிகளும் நான்கு கடத்தல்காரரும் கொல்லப்பட்டனர்.
1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காட்மாண்டிற்கும், தில்லிக்கும் இடையில் கடத்தப்பட்டு, ஆப்கானித்தான், கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது. டிசம்பர் 31 இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பேர் விடுவிக்கப்பட்டனர்.
2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துணை இராணுவக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2005 – டிசம்பர் 18 இடம்பெற்ற தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சாட் சூடான் மீது போரை அறிவித்தது.
2008 – உகாண்டாவின் கிளர்ச்சிக் குழு ஒன்று காங்கோ சனநாயகக் குடியரசில் நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1166 – இங்கிலாந்தின் ஜான் (இ. 1216)
1740 – ஆண்டர்சு இலெக்செல், பின்லாந்து-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1784)
1761 – ழீன் உலூயிசு பொன்சு, பிரான்சிய வானியலாளர் (இ. 1831)
1818 – ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1889)
1822 – மேத்யு அர்னால்ட், ஆங்கிலேயக் கவிஞர், திறனாய்வாளர் (இ. 1888)
1837 – பவேரியாவின் எலிசபெத் (இ. 1898)
1822 – சார்ல்ஸ் ஹெர்மைட், பிரான்சியக் கணிதவியலர் (இ. 1901)
1881 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (இ. 1958)
1896 – மங்காராம் உதராம் மல்கானி, சிந்தி அறிஞர், விமர்சகர், எழுத்தாளர் (இ. 1980)
1905 – ஹோவார்ட் ஹியூஸ், அமெரிக்கத் தொழிலதிபர், பொறியியலாளர், விமானி (இ. 1976)
1924 – முகமது ரபி, இந்தியப் பின்னணிப் பாடகர் (இ. 1980)
1924 – நாராயண் தேசாய், காந்தியவாதி, நூலாசிரியர் (இ. 2015)
1932 – மதன் லால் மேத்தா, இந்திய இயற்பியலாளர் (இ. 2006)
1938 – சுரேஷ் கிருஷ்ணா, இந்தியத் தொழிலதிபர்
1939 – இல. செ. கந்தசாமி, தமிழறிஞர், இதழாளர் (இ. 1992)
1944 – ஆஸ்வால்டு கிராசியாஸ், இந்தியப் பேராயர், கருதினால்
1946 – நா. மம்மது, தமிழிசை ஆய்வாளர், எழுத்தாளர்
1957 – ஹமித் கர்சாய், ஆப்கானித்தானின் 12வது அரசுத்தலைவர்
1959 – அனில் கபூர், இந்திய நடிகர்
1964 – தமிழ்மகன், எழுத்தாளர்
1969 – எட் மிலிபாண்ட், ஆங்கிலேய அரசியல்வாதி
1971 – ரிக்கி மாட்டின், புவெர்ட்டோ ரிக்கோ-அமெரிக்கப் பாடகர்
இறப்புகள்
1524 – வாஸ்கோ ட காமா, போத்துக்கீச இந்தியாவின் ஆளுநர், மாலுமி (பி. 1469)
1950 – பி. ஜி. வெங்கடேசன், திரைப்பட நடிகர்
1973 – ஈ. வெ. ராமசாமி, திராவிடர் கழகத்தினை தோற்றுவித்தவர் (பி. 1879)
1987 – எம். ஜி. இராமச்சந்திரன், தமிழக நடிகர், தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (பி. 1917)
1997 – டோஷிரோ மிபூன், சீன-சப்பானிய நடிகர் (பி. 1920)
2002 – வி. கே. ராமசாமி, தமிழ் திரைப்பட நடிகர் (பி. 1926)
2005 – ஜோசப் பரராஜசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)
2005 – பி. பானுமதி, தமிழ்த் திரைப்பட நடிகை (பி. 1925)
2008 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய நாடகாசிரியர் (பி. 1930)
சிறப்பு நாள்
விடுதலை நாள் (லிபியா)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பிபிசி: இன்றைய நாளில்
நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
திசம்பர் 24 வரலாற்று நிகழ்வுகள், OnThisDay.com
திசம்பர்
ஆண்டின் நாட்கள்
|
7082
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D
|
ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல்
|
ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல் (டிசம்பர் 24,1818 - அக்டோபர் 11,1889) இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு இயற்பியல் அறிவியலாளர் ஆவார். இவர் வெப்பவியலில் தனது ஆய்வுகளை மேற்கொண்டார். வெப்பத்திற்கும் இயந்திர வேலைக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்ந்தார். இவருடைய ஆய்வுகளே ஆற்றல் அழிவின்மை விதி கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது. இவருடைய நினைவாக வேலையின் அலகு ஜூல் என்று அழைக்கப்படுகிறது.
ஆரம்ப காலம்
பெஞ்சமின் ஜூலின் (1784-1858) மகனாக பிறந்தார். பெஞ்சமின் ஒரு பணக்கார மது தயாரிப்பாளர், மற்றும் அவரது மனைவி ஆலிஸ் பிரஸ்காட், ஜூல் சால்ஃபோர்டில் புதிய பெய்லி தெருவில் பிறந்தார்.
ஜூலின் இளம் வயதில் அவருக்கு பிரபலமான விஞ்ஞானி ஜான் டால்ட்டன்னால் பயிற்சி அளிக்கப்பட்டது, பின் வேதியியலாளர் வில்லியம் ஹென்றி மற்றும் மான்செஸ்டர் பொறியாளர்களான பீட்டர் எவர்ட் மற்றும் ஈடன் ஹோட்கின்சோன் ஆகியோர் ஜூலுக்கு பயிற்று வித்தனர். அவர் மின்சாரத்தை பார்த்து ஆச்சரியத்துக்குள்ளானார், மேலும் அவர் தனக்கும் மற்றும் அவரது சகோதரருக்கும் ஒருவருக்கொருவரும் மற்றும் குடும்ப ஊழியர்களுக்கும் மின் அதிர்ச்சி கொடுத்து சோதனை செய்து பார்த்தார்.
உரிய வயது வந்தவுடன், ஜூல் மது தயாரிக்கும் ஆலையை நிர்வகித்தார். அப்போது அறிவியல் வெறுமனே ஒரு தீவிர பொழுதுபோக்காக இருந்தது. 1840 ஆம் ஆண்டு, சில நேரங்களில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மின் மோட்டார் மூலம் மதுபானம் தயாரிக்கும் நீராவி இயந்திரங்களை மாற்றுவதற்கான சாத்தியத்தை ஆராயத் தொடங்கினார். அறிவியல் விஞ்ஞானத்தில் முதன்முதலாக விஞ்ஞானி வில்லியம் ஸ்டர்ஜனின் மின்சாரத்திற்கான அறிவியல் இதழில் தனது ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுப் பங்களித்தார். ஜூல் லண்டன் எலக்ட்ரானிக் சொசைட்டி உறுப்பினராக இருந்தார், இது ஸ்டர்ஜன் மற்றும் பலரால் நிறுவப்பட்டது.
1841 ஆம் ஆண்டில் ஜூல் முதல் விதி கண்டுபிடித்தார், "எந்தவொரு வால்டிக் மின்னோட்டத்தின் சரியான நடவடிக்கை மூலம் உருவான வெப்பம் அந்த மின்னோட்டத்தின் தீவிரத்தின் சதுர விகிதத்திற்கு மற்றும் எதிர்ப்பின் பெருக்கம் ஆகியவற்றின் விகிதாசாரமாகவும் கடத்தல் வெப்பம் கொண்டதாகவும் இருக்கும்".
ஒரு நீராவி எஞ்சினில் எரியும் ஒரு பவுண்டு அளவுள்ள நிலக்கரி ஒரு எலக்ட்ரிக் பேட்டரி ஒன்றில் உட்கொண்டிருந்த விலையுயர்ந்த ஒரு பவுண்டு அளவுள்ள துத்தநாகத்தை விட சிக்கன்மானதாகவும் மலிவானதாகவும் இருப்பதாக ஜூல் உணர்ந்தார். ஜூல், பொதுவான தரநிலை, ஒரு பவுண்டு, ஒரு அடி உயரம், கால்-பவுண்டு ஆகியவற்றை உயர்த்தும் திறன்களின் மாற்று வழிமுறைகளின் வெளியீட்டை கைப்பற்றினார்.
இருப்பினும், ஜூலினுடைய ஆர்வம் குறுகிய நிதிப்பற்றிய கேள்வியில் இருந்து திசை திருப்பப்பட்டு, ஒரு குறிப்பிட்ட மூலத்திலிருந்து எவ்வளவு ஆற்றல் எடுக்கப்படும், அந்த ஆற்றல் மாறும் தன்மை பற்றி ஊகிக்கவும் வழிவகுத்தது. 1843 ஆம் ஆண்டில் அவர் வெப்ப விளைவு என்று காட்டும் பரிசோதனைகளின் முடிவுகளை வெளியிட்டார், இதற்கு அவர் 1841 ஆம் ஆண்டில் செய்த ஒரு சோதனை, கடத்தியில் வெப்ப உற்பத்திக் காரணமாக இருந்தது மற்றும் உபகரணத்தின் மற்றொரு பகுதிக்கு அதன் ஆற்றல் பரிமாற்றம் செய்யப்படவில்லை. இந்த முடிவுகள் கலோரிக் கோட்பாட்டிற்கு நேரடி சவால் ஆகும் என்னெனில் அது வெப்பம் உருவாக்கப்படவோ அழிக்கப்படவோ முடியாது என்று கூறியது. 1783 இல் ஆன்டெய்ன் லாவோசியரால் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, கலோரிக் கோட்பாடு வெப்ப விஞ்ஞானத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
வெப்ப இயந்திரவியல் சமநிலை
ஜூல் மின்சார மோட்டார் கொண்டு மேலும் சோதனைகள் மற்றும் அளவீடுகள் பல செய்ததன் மூலம் அவரால் வெப்பம் இயந்திரவியல் சமமான மதிப்பீட்டை மதிப்பீடு செய்ய முடிந்தது. ஒரு பவுண்ட் அளவுள்ள தண்ணீர் ஒரு டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை அதிகரிக்க 4.1868 joules ஒரு கலோரி அளவிலான வேலை தேவைப்படுகிறது என்றார். ஆகஸ்ட் 1843 ஆண்டில் கார்க் நகரில் அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் அசோசியேஷனின் இரசாயன பிரிவின் கூட்டத்தில் அவர் தனது முடிவுகளை அறிவித்தார், அப்போது அங்கு ஒரு மயான அமைதி நிவவியது.
ஜூல், வேலையை வெப்பமாக மாற்றுவதற்கு முற்றிலும் இயந்திரவியல் சோதனைகளைத் தொடங்கினார். ஒரு சிறு துளைகளிடப்பட்ட உருளை உள்ளே நீரைக் கட்டாயப்படுத்தி செலுத்துவதன் மூலம், திரவத்தின் சிறிய பிசுபிசுப்பான வெப்பத்தை அவர் அளவிட்டார். மேலும் வெப்பத்தின் பொறிமுறைச் சமவலு 770 ft·lbf/Btu (4.14 joule/calorie (J/cal) ஆக இருந்தது. மின்சார வழிமுறையாலும், முற்றிலும் இயக்க வழிமுறையாலும் பெறப்பட்ட மதிப்புகள் வேலை வெப்பமாக மாற்றப்படுவதை அவருக்கு உறுதி செய்தது.
ஜூல் இப்போது மூன்றாவது வழியைத் தேடினார். வாயுவை அதிக அழுதத்திற்கு உள்ளாகும் போது உருவாக்கப்பட்ட வெப்பத்தை அவர் அளந்தார். அவர் 798 ft·lbf/Btu (4.29 J/cal) இயக்கச் சமமான மதிப்பைப் பெற்றார். பல வழிகளில், இந்த பரிசோதனையானது ஜூலிலின் விமர்சகர்களுக்கான எளிதான இலக்கை வழங்கியது, ஆனால் ஜூல் புத்திசாலித்தனமான பரிசோதனையால் எதிர்பார்த்திருந்த எதிர்ப்பை ஒழித்தார். சூலை 20, 1844 அன்று ராயல் சொசைட்டிக்கு தனது ஆராய்ச்சிக் கட்டுரையை அனுப்பினார், எனினும், அவரது கட்டுரை ராயல் சொசைட்டி வெளியிடாமல் நிராகரிக்கப்பட்டது மற்றும் அவர் 1845 இல் தத்துவ ஞானி பத்திரிகையில் தனது ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். கட்டுரையில் அவர் கார்னாட் மற்றும் எமிலி கிளாப்பிரோரின் கலோரிக் காரணங்களை நிராகரித்தார், ஆனால் இதில் அவருடைய இறையியல் நோக்கங்களும் தெளிவாகத் தெரிந்தது:
இயக்கவியல் கோட்பாடு
இயக்கவியல் என்பது இயக்கத்தின் அறிவியலாகும். ஜூல் டால்டனின் மாணவர் என்பதால் இயல்பாகவே அவர் அணு கோட்பாடு மீது ஒரு உறுதியான நம்பிக்கை கொண்டவராக இருந்தது ஆச்சரியமானதாக இல்லை, மேலும் அவரது காலத்தில் பல விஞ்ஞானிகள் இருந்தபோதிலும் இந்தக் கோட்பாட்டின் மீது இன்னும் சந்தேகம் கொண்டிருந்தனர். ஜான் ஹெராபத்தின் வாயுக்களின் இயக்கவியல் கோட்பாட்டு பலரால் புறக்கணிக்கப்பட்ட போதும் அவரது வேலையை ஏற்றுக்கொள்ளும் சிலரில் ஜூலும் ஒருவராக இருந்தார். 1813 ஆம் ஆண்டின் பீட்டர் எவார்ட்டின் இயங்கு விசைத் தாளில் மீது அவருக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜூல், அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் வெப்ப இயக்கவியல் கோட்பாட்டிற்கும் இடையிலான உறவை உணர்ந்தார். அவரது ஆய்வக குறிப்பேடுகள் அவர் வெப்பம் ஒரு சீரான வடிவ இயக்கம் அல்ல, மாறாக சுழற்சியின் வடிவம் என்று நம்புவதாக வெளிப்படுத்தியது.
ஜூல், அவரது கண்டுபிடிப்புகளுக்கு எதிரான கருத்துக்களை, பார்வையை தனது முன்னோடிகளான பிரான்சிஸ் பேக்கன், ஐசாக் நியூட்டன், ஜான் லாக், பெஞ்சமின் தாம்சன் (கவுண்ட் ரம்ஃபோர்ட்) மற்றும் சர் ஹம்பிரி டேவி ஆகியோரிடம் காணமுடியவில்லை. அத்தகைய பார்வைகள் நியாயமானவை என்றாலும், ரம்ஃபோர்ட்டின் பிரசுரங்களிலிருந்து 1034 அடி பவுண்டுகள் வெப்பமான இயந்திர சமமான மதிப்பை மதிப்பீடு செய்ய ஜூல் முயன்றார். சில நவீன எழுத்தாளர்கள் இந்த அணுகுமுறையை விமர்சித்துள்ளனர், ரம்ஃபோர்டின் சோதனைகள் எந்த வகையிலும் முறையான அளவு அளவீடுகளைக் குறிப்பிடவில்லை. தன்னுடைய தனிப்பட்ட குறிப்புகளில் ஒன்றில், ஜூல் மேமரின் அளவீடு ரம்போர்ட்டை விட துல்லியமானது அல்ல என்று வாதிடுகிறார், ஒருவேளை மேயர் தனது சொந்த வேலையை எதிர்பார்த்திருக்கவில்லை என்ற நம்பிக்கையில் கூறினார்.
கெளவரவங்கள் மற்றும் பாராட்டுக்கள்
ஜூல் சேல்லில் உள்ள வீட்டில் இறந்தார், அங்கு ப்ரூக்லாண்ட்ஸ் கல்லறையில் புதைக்கப்பட்டார். இந்த கல்லறை "772.55" என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது, இது அவரது climacteric 1878 இயக்கச் சமமான வெப்பம் அளவாகும், அதில் அவர் ஒரு அடி பவுண்டுகள் வேலை அளவு என்பது 60 முதல் 61 F வரை ஒரு பவுண்டு தண்ணீர் வெப்பநிலையை உயர்த்த கடல் மட்டத்தில் செலவிடப்பட வேண்டும் என்று கண்டுபிடித்தார். ஜான்னின் நற்செய்தியில் இருந்து ஒரு மேற்கோள் இவ்வாறு உள்ளது, "என்னை அனுப்பினவருடைய கிரியைகளை நான் செய்யவேண்டும், இரவும் பகலும் பாராது. எந்த மனிதனும் வேலை செய்ய இயலாது என்ற போதும் செய்யவேண்டும்"(9:4). ஜூல் அவரகள் மரணம் எய்திய விஸ்டர்ஸ் ஸ்பூன் விற்பனை நிலையத்திற்கு, அவரது நினைவாக "J. P. ஜூல்" என்ற பெயரிடப்பட்டது. இன்றும் ஜூலின் குடும்ப மதுபான உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது ஆனால் இப்போது ஆலை சந்தை தெருவில், டிரேடனில் அமைந்துள்ளது (மேலும் தகவலுக்கு joulesbrewery.co.uk இனைய தலத்தை பார்க்கவும்)
ராயல் சொஸைட்டியின் சகா, (1850);
ராயல் மெடல், (1852) '1850 ஆம் ஆண்டிற்கான தத்துவவியல் பரிவர்த்தனைகளில் அச்சிடப்பட்ட வெப்பத்தின் இயக்கச் சமநிலை பற்றிய தனது ஆராய்ச்சிக் கட்டுரைக்காக';
கோப்ளி மெடல், (1870) 'வெப்ப இயக்கவியல் கோட்பாட்டின் மீதான அவரது பரிசோதனை ஆய்வுகள்';
மான்செஸ்டர் இலக்கிய மற்றும் தத்துவ சங்கத்தின் தலைவர், (1860);
அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் அசோசியேஷனின் தலைவர், (1872, 1887);
ஸ்காட்லாந்தில் பொறியியலாளர்கள் மற்றும் கப்பல்கட்டும் வல்லுநர்களின் நிறுவனத்தின் கௌரவ உறுப்பினர் , (1857);
கெளரவ பட்டங்கள்:
LL.D., டிரினிட்டி கல்லூரி, டியுப்ளின், (1857);
DCL, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், (1860);
LL.D., எடின்பர்க் பல்கலைக்கழகம், (1871).
அவரது விஞ்ஞான சேவைகளுக்காக 1878 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 200 பவுண்டுகள் ஓய்வூதியம் பெற்றார்.
ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸின் ஆல்பர்ட் மெடல், (1880) 'அவரது கடின ஆராய்ச்சிகளின் பலனாக, வெப்பம், மின்சாரம் மற்றும் இயந்திர வேலைகளுக்கு இடையேயான உண்மையான தொடர்பு அறியபட்டதற்காக வழங்கப்பட்டது,'.
வெஸ்ட்மினிஸ்டர் அபேயின் வடக்கு தேவாலயப் பாடகர் தெருவில், ஜூல்லுக்கு ஒரு நினைவுச்சின்னம் உள்ளது, அங்கு அவர் அடக்கம் செய்யப்படவில்லை என்றாலும், சில வாழ்க்கை வரலாற்று புத்தகங்களில் கூறப்பட்டுள்ளதற்கு முரணாக உள்ளது.
ஆல்ஃபிரெட் கில்பெர்ட் உருவாக்கிய ஜூலின் சிலை, மான்செஸ்டர் டவுன் ஹாலில் உள்ளது, அது டால்டன் சிலைக்கு எதிரே உள்ளது.
குடும்பம்
1847 ஆண்டில், அவர் அமெலியா கிரிம்ஸ்ஸை மணந்தார். அவர்களது திருமணம் குறுகிய காலம் தான் நீடித்தது, 1854 ஆண்டில் அவர் மனைவி இறந்தார்.
அவர்களுக்கு ஒரு மகன், பெஞ்சமின் ஆர்தர் ஜூல் (1850-1922), ஒரு மகள் ஆலிஸ் அமெலியா (1852-1899) மற்றும் இரண்டாவது மகன், ஹென்றி (1854 ஆம் ஆண்டு பிறந்தார், பிறந்த மூன்று வாரங்களுக்கு பின்னர் இறந்துவிட்டார்).
மேற்கோள்கள்
ஆங்கிலேய அறிவியலாளர்கள்
1818 பிறப்புகள்
1889 இறப்புகள்
ஆங்கிலேய இயற்பியலாளர்கள்
|
7086
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE
|
அர்கெந்தீனா
|
அர்கெந்தீனா (ஆங்கிலம்: Argentina) தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ரெப்பு'ப்லிக்கா அர்ஃகென்ந்தீனா (எசுப்பானிய மொழியில் República Argentina, ஒலிப்பு: reˈpuβlika aɾxenˈtina). இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே என்பனவும் எல்லைகளாக உள்ளன.
இது, 23 மாகாணங்களையும்; தன்னாட்சிப் பகுதியும், தலைநகரமுமான புவெனசு ஐரிசு நகரத்தையும் உள்ளடக்கிய கூட்டாட்சி அமைப்புக் கொண்டது. பரப்பளவு அடிப்படையில், இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும். எசுப்பானிய மொழி பேசும் நாடுகளுள் இதுவே பெரியது. எசுப்பானிய மொழி நாட்டின் அரசு அலுவல் மொழி ஆகும். ஆர்கெந்தீனா, ஐக்கிய நாடுகள் அவை, "மெர்கோசுர்" எனப்படும் தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியம், ஐபீரோ அமெரிக்க நாடுகள் அமைப்பு, உலக வங்கிக் குழு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றின் தொடக்ககால உறுப்பு நாடுகளுள் ஒன்று. அத்துடன் 15 நாடுகள் குழு (சி-15), 20 முக்கிய பொருளாதாரங்கள் குழு ஆகியவற்றிலும் ஒரு நாடாக உள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதேச வல்லரசும், இடைத்தர வல்லரசுமான ஆர்கெந்தீனா, இலத்தீன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம். மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையில் மிக உயர்ந்த தரநிலையிலும் இது உள்ளது. இலத்தின் அமெரிக்காவில், ஆர்கெந்தீனா ஐந்தாவது பெரிய தலைக்குரிய பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், மிகக்கூடிய வாங்கும் திறன் சமநிலையையும் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய சந்தையாக இருப்பதாலும், பெரிய அளவு நேரடி வெளிநாட்டு முதலீடு உள்ளதாலும், மொத்த ஏற்றுமதிப் பொருட்களில் உயர் தொழில்நுட்ப உற்பத்திகளின் ஏற்றுமதி வீதம் காரணமாகவும், எதிர்கால வளர்ச்சிக்கான அடிப்படைகள் ஆர்கெந்தீனாவுக்கு உள்ளன எனப் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்கள் இதனை நடுத்தர வளரும் பொருளாதாரம் என வகைப்படுத்துகின்றனர்.
சொற்பிறப்பு
"ஆர்கெந்தீனா" என்னும் சொல், வெள்ளி என்னும் பொருள் தரும் ஆர்கென்டும் (argentum) என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. லா பிளாட்டா வடிநிலம் எனப்படும் இப்பகுதியில் வெள்ளிக்கான மூலங்கள் எதுவும் கிடையா. ஆனால், இங்கே வெள்ளி மலை உள்ளது என்னும் வதந்தியை நம்பியே முதன் முதலில் எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர்கள் இப்பகுதிக்கு வந்தனர். இவ்வதந்தியே இப்பெயர் ஏற்படக் காரணமாயிற்று. இச் சொல்லின் முதற் பயன்பாடு, மார்ட்டின் டெல் பார்க்கோ சென்டெனேரா (Martín del Barco Centenera) என்பவர் 1602 ஆம் ஆண்டில் எழுதிய கவிதை ஒன்றில் காணப்படுகின்றது. இப்பகுதிக்கு ஆர்கெந்தீனா என்னும் பெயர் 18 ஆம் நூற்றாண்டில் பரவலாக வழங்கப்பட்டது ஆயினும், முறைப்படி இது ரியோ டி லா பிளாட்டா வைசுராயகம் என்றும் விடுதலைக்குப் பின்னர் ரியோ டி லா பிளாட்டா ஒன்றிய மாகாணங்கள் என்றும் அழைக்கப்பட்டது.
இச்சொல்லின் முறைப்படியான பயன்பாடு 1826 ஆம் ஆண்டின் அரசியல் சட்டத்தில் காணப்படுகின்றது. இதில், "ஆர்கெந்தீன் குடியரசு", "ஆர்கெந்தீன் நாடு" என்னும் தொடர்கள் பயன்பட்டுள்ளன. இவ்வரசியல் சட்டம் அகற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் இப்பகுதி, "ஆர்கெந்தீன் கூட்டமைப்பு" என வழங்கியது. இது பின்னர் 1859ல் "ஆர்கெந்தீன் நாடு" எனவும், 1860ல் தற்போதைய அமைப்பு உருவான பின்னர் "ஆர்கெந்தீன் குடியரசு" எனவும் மாற்றப்பட்டது.
அரசியல் பிரிவுகள்
ஆர்கெந்தீனா 22 மாகாணங்களையும், ஒரு தன்னாட்சி கொண்ட நகரத்தையும் உள்ளடக்குகிறது. மாகாணங்களின் நிர்வாகப் பிரிவுகள் திணைக்களங்களும் (Departments), முனிசிபாலிட்டிகளும் ஆகும். புவேனசு அயர்சு மாகாணம் மட்டும் பார்ட்டிடோசு என்னும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சிப் பகுதியான புவேனசு அயர்சு நகரத்தைக் கம்யூன்களாகப் பிரித்துள்ளனர். தனித் தனியான அரசியல் சட்டங்களைக் கொண்ட மாகாணங்கள் கூட்டாட்சி முறையில் இணைக்கப்பட்டுள்ளன. நடுவண் அரசுக்கெனக் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதிகாரங்களைத் தவிர ஏனைய எல்லா அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஆர்கெந்தீனாவின் விடுதலைப் போரின்போது முக்கியமான நகரங்களும், அவற்றைச் சூழவுள்ள நாட்டுப்புறங்களும் மாகாணங்கள் ஆயின. பின்னர் இடம்பெற்ற அராசகம் இதனை முழுமையாக்கி 13 மாகாணங்களை உருவாக்கியது. 1834 ஆம் ஆண்டில், குகூய் மாகாணம், சால்ட்டா மாகாணத்தில் இருந்து பிரிந்தபோது மாகாணங்களின் தொகை 14 ஆகியது. பத்தாண்டுக்காலம் பிரிந்திருந்த புவேனசு அயர்சு 1860ல் ஆர்கெந்தீனாவின் 1853 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. 1880ல் புவேனசு அயர்சு கூட்டாட்சிப் பகுதியானது.
1862ல், ஆர்கெந்தீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றனவும், ஆனால், மாகாணங்களுக்கு வெளியே இருப்பனவுமான பகுதிகள் தேசியப் பகுதிகள் என அழைக்கப்படும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இது, 1884 ஆம் ஆண்டில், மிசியோன்சு, பார்மோசா, சாக்கோ, லா பம்பா, நியூக்கின், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு, தியேரா டெல் புவேகோ என்னும் புதிய ஆளுனரகங்கள் நிறுவப்பட்டன. எல்லைத் தகராறு தொடர்பில் 1900 ஆவது ஆண்டில் சிலியுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்துக்குப் பின்னர், லாசு ஆன்டெசு என்னும் புதிய தேசிய ஆட்சிப்பகுதி உருவாக்கப்பட்டது. இதன் பகுதிகள் 1943ல், குகூய், சால்ட்டா, கட்டமார்க்கா ஆகிய மாகாணங்களுக்குள் சேர்க்கப்பட்டன. 1951 ஆம் ஆண்டில், லா பம்பாவும், சாக்கோவும் மாகாணங்கள் ஆயின. 1953ல் மிசியோன்சும், 1955ல், பார்மோசா, நியூக்கின், ரியோ நேக்ரோ, சுபுத், சாந்தா குரூசு என்பனவும் மாகாணங்களாகத் தரம் உயர்ந்தன. கடைசித் தேசியப் பகுதியான தியேரா டெல் புவேகோ 1990ல் மாகாணம் ஆகியது.
புவியியல்
ஆர்கெந்தீனா தென்னமெரிக்காவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அன்டெசு மலைத்தொடர் இதன் மேற்கிலும், தென் அத்திலாந்திக் பெருங்கடல் இதன் கிழக்கிலும், தெற்கிலும் அமைந்துள்ளன. ஆர்கெந்தீனா உரிமை கோருகின்ற ஆனால் அதன் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகள் நீங்கலாக அதன் பரப்பளவு 2,780,400 சதுர கிலோமீட்டர்கள் (1,073,500 சதுர மைல்). இதில், 43,710 சதுர கிலோமீட்டர் (16,880 சதுர மைல்) அல்லது 1.57% நீர்ப் பகுதி ஆகும். ஆர்கெந்தீனாவில் ஆறு முக்கிய பிரதேசங்கள் உள்ளன. இவற்றுள் வளம் கொண்ட தாழ்நிலப் பகுதியான பம்பாசு நடுப் பகுதியிலும், கிழக்கிலும் அமைந்துள்ளது. மெசொப்பொத்தேமியா என்னும் பகுதியும் ஒரு தாழ்நிலப் பகுதி. பரானா, [[உருகுவே ஆறு|உருகுவே ஆகிய ஆறுகளினால் சூழப்பட்டுள்ளது. கிரான் சாக்கோ என்னும் பகுதி மெசொப்பொத்தேமியாவுக்கும், ஆன்டெசுக்கும் இடையில் உள்ளது. கூயோ என்னும் பிரதேசம் ஆன்டெசுக்குக் கிழக்கிலும், ஆர்கெந்தீன வடமேற்கு என்னும் பகுதி அதற்கு வடக்கிலும் காணப்படுகின்றன. பட்டகோனியா பிரதேசம் ஒரு பெரிய சமவெளி. இது தெற்குப் பகுதியில் உள்ளது.
கடல் மட்டத்துக்கு மேல் மிக உயரமான இடம் மென்டோசா மாகாணத்தில் உள்ள செர்ரோ அக்கொன்காகுவா (Cerro Aconcagua) ஆகும். 6,959 மீட்டர் (22,831 அடி) உயரத்தில் உள்ள இவ்விடமே தென்னரைக் கோளம், மேற்கு அரைக்கோளம் ஆகிய பகுதிகளிலும் மிகவும் உயர்ந்த பகுதியாக உள்ளது. மிகவும் தாழ்வான பகுதி, சாந்தா குரூசு மாகாணத்தில் உள்ள லகுனா டெல் கார்பொன் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 105 மீட்டர் (344 அடி) கீழே அமைந்துள்ளது. தென்னமெரிக்காவின் மிகத் தாழ்வான இடமும் இதுவே. கிழக்கு அந்தலை மிசியோனெசில் உள்ள பர்னார்டோ டி இரிகோயெனுக்கு வடகிழக்கிலும், மேற்கு அந்தலை சாந்தா குரூசு மாகாணத்தில் உள்ள பெரிட்டோ மொரேனோ தேசியப் பூங்காவிலும் உள்ளன. வடக்கு அந்தலை, குகூய் மாகாணத்தில் கிரான்டே டெ சான் யுவான் ஆறும், மொகினேத்தே ஆறும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. தெற்கு அந்தலை, தியேரா டெல் புவெய்கோ மாகாணத்தில் உள்ள சான் பியோ முனை ஆகும்.
ஆர்கெந்தீனாவின் மிகப் பெரிய ஆறு பரானா. பில்க்கோமாயோ, பராகுவே, பெர்மேகோ, கொலராடோ, ரியோ நேக்ரோ, சலாடோ, உருகுவே என்பன பிற முக்கியமான ஆறுகள். பரானா, உருகுவே ஆகிய ஆறுகள் இணைந்து ரியோ டி லா பிளாட்டா கழிமுகத்தை உருவாக்குகின்றன.
4,725 கிலோமீட்டர் (2,936 மைல்) நீளமான அத்திலாந்திக் கடற்கரை, மணல் குன்றுகள் தொடக்கம் மலை முகடுகள் வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது. கண்டத்திட்டு பெரும்பாலும் அகலமானது.அத்திலாந்திக்கின் இந்த ஆழம் குறைந்த பகுதியை ஆர்கெந்தீனக் கடல் என்கின்றனர். கரைப் பகுதியைப் பாதிக்கும் மிக முக்கியமான பெருங்கடல் நீரோட்டங்கள் இரண்டு. ஒன்று சூடான பிரேசில் நீரோட்டம், மற்றது குளிரான போக்லாந்து நீரோட்டம்.
குறிப்புகள்
தென் அமெரிக்க நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
|
7088
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
|
மக்கள் தொகை அடர்த்தி வரிசையில் நாடுகள்/குடியிருப்புகள் பட்டியல்-குடியிருப்போர்/கிமீ² அடிப்படையில்.
இங்கு குறிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு, ஆறுகள், ஒடைகள், ஏரிகள் போன்ற உள்நாட்டு நீர்நிலைகளின் பரப்பையும் உள்ளடக்கியது. ஜுலை 2005கான மக்கள் தொகை மதிப்பீடு. இறையாண்மை வாய்ந்த நாடுகள் மட்டுமே இலக்கம் இடப்பட்டுள்ளன; ஆனால், இறையாண்மையற்ற பகுதிகளும் உவமி நோக்கும்கால் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளன.
முதன்மையான அட்டவணை
சார்பு பிரதேசங்களின் பெயர்கள் சாய்வு எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் அந்தந்த நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ வலைதளங்களிலிருந்து பெறப்பட்டவையகும்.
மக்கள் தொகை அடர்த்தியான நாடுகள்
மக்கள் தொகை அடர்த்தியில் முதல் 100 நாடுகள் பட்டியல்கள்
2005 ஆம் ஆண்டு புள்ளவிவரங்கள்
ஆதாரங்கள்: நடுவண் ஒற்று முகமை த வேர்ல்டு ஃபக்ட்புக் ; US Census Bureau
நாடுவாரித் தகவல்களுக்கான வெளி இணைப்புகள்
https://web.archive.org/web/20010405082105/http://www.world-gazetteer.com/home.htm
http://www.cia.gov/cia/publications/factbook/index.html
http://www.state.gov/r/pa/ei/bgn/
http://news.bbc.co.uk/1/hi/country_profiles/default.stm
http://www.lonelyplanet.com/destinations/
இவற்றையும் பார்க்கவும்
மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
குறிப்புகள்
மேற்கோள்கள்
நாடுகள் தொடர்பான பட்டியல்கள்
மக்கள் தொகையியல்
|
7089
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
|
இது பரப்பளவு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட உலக நாடுகளின் பட்டியலாகும்.
அரசுரிமை (இறையாண்மை) பெற்றுள்ள நாடுகளை மட்டுமே இங்கு எண்ணிக்கையுடன் தொகுத்துள்ளோம். அரசுரிமை (இறையாண்மை) இல்லாத நிலப்பரப்புகளை, வாசகர்கள் பொருந்தி காண்பதற்காக, சாய்வெழுத்துக்களில் தொகுத்துள்ளோம். குளங்கள், நீர்தேக்கங்கள், ஆறுகள் போன்ற நிலம்சார்ந்த நீர்நிலைகளும் இப்பரப்பளவுகளில் அடக்கம். அண்டார்டிகாவின் சில பகுதிகளை பல நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அப்பகுதிகளின் பரப்பளவுகளை இங்கு கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை.
ஆதாரம்
சி.ஐ.ஏ உலக ஆதார புத்தகம் (CIA World Factbook),
இவற்றையும் பார்க்கவும்
மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
மக்கள்தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்
நாடுகள் தொடர்பான பட்டியல்கள்
|
7125
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
|
ஐதரசன்
|
நீரகம் அல்லது ஹைட்ரஜன் என்பது H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதை நீரியம், நீர் வளி, நீரியம், ஐதரசன் என்று பல பெயர்களால் அழைக்கிறார்கள். இத்தனிமத்தின் அணு எண் 1, அணு எடை 1.008. தனிமவரிசை அட்டவணையில் இடம் பெற்றுள்ள தனிமங்களில் மிகவும் இலேசான தனிமமாகக் கருதப்படுவது ஹைட்ரஜனாகும். பிரபஞ்சத்தில் அதிக அளவிலுள்ள ஒற்றை அணு தனிமம் ஹைட்ரஜனேயாகும். அண்டத்தில் மொத்த அணுக்கூறு நிறையில் 75% ஹைட்ரஜனாகிய ஒற்றையணு நிரம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது . சில விண்மீன்கள் பெருவாரியாக பிளாஸ்மா நிலை ஹைட்ரஜன் நிரம்பிய விண்மீன்களாகக் கருதப்படுகின்றன. 1H என்ற குறியீட்டால் குறிக்கப்படும் புரோட்டியம் என்ற ஐசோடோப்பு பெரும்பாலாகக் காணப்படும் ஹைட்ரஜனின் ஓரிடத்தான் (ஐசோடோப்பு) ஆகும். இதன் உட்கருவில் நொதுமி அல்லது நியூட்ரான் என்பது எதுவும் இல்லாமல் ஒரு நேர்மின்னி (புரோட்டான்) மட்டுமே இருக்கும்.
ஹைட்ரஜனானது, சீர்நிலை வெப்ப அழுத்தத்தில், நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வளிமம் ஆகும். இத்தனிமம் மாழையல்லா (உலோகமற்ற) வகையைச் சேர்ந்தது. இது ஒற்றை இயைனியப் (univalent) பண்பும், இரண்டு நீரிய அணுக்கள் இணைந்து, ஈரணு (H2) வடிவு கொள்ளும் பண்பும் கொண்ட தனிமம் ஆகும்.
நீரியம், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றிலும் எடை குறைவானதும், கூடிய அளவு கிடைக்கக்கூடியதும் ஆகும். பூமியில் எரிமலை உமிழ் வளிமங்களிலும்,பாறை உப்புப் படிவங்களிலும் நீரியம் தனித்துக் காணப்படுகிறது. புவி வளிமண்டலத்தில் மில்லியனில் 0.5 பங்கு என்ற அளவில் செழுமை பெற்றுள்ளது. ஆர்கான், நியான்,ஈலியம், கிரிப்டான் போன்ற மந்த வளிமங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் 1 விழுக்காடும் நீர்மண்டலத்தில் 10.82 விழுக்காடும் நீரியம் சேர்ந்துள்ளது. அண்டத்தின் 75% தனிமத் திணிவு நீரியத்தாலானது. அதாவது, அண்டப் பெருவெளியில், நாள்மீன்கள் போன்ற யாவும் உள்ளடக்கிய பேரண்டத்தில் உள்ள பொருள்களில் 75% ஹைட்ரஜன் தான் இருப்பதாகக் கணித்துள்ளார்கள். இது நீர், அனைத்து உயிரகச் (organic) சேர்மங்கள், (கூண்டு மூலக்கூறுகளாகிய பக்மினிசிட்டர் புல்லரீன் (buckminsterfullerene) போன்ற விதிவிலக்குகள் தவிர்த்து) மற்றும் அனைத்து உயிரினங்களிலும் இடம் பெற்றுள்ளது. விலங்கினங்கள், தாவரங்களில் நீர் முக்கிய மூலப்பொருளாக இருப்பதால், ஹைட்ரஜனின் சேர்மானம் இல்லாத உயிரினமே இல்லை எனலாம். கார்பனுடன் சேர்ந்து எண்ணிலா கரிம வேதிப்பொருட்களை ஹைட்ரஜன் தந்துள்ளது.
இது வேதியியல் வினைவழி பெரும்பாலான பிற தனிமங்களுடன் வினையாற்றவல்லது. ஹைட்ரஜன் அம்மோனியா உண்டாக்காகவும், எடை குறைவானதால் காற்றில் மேலுந்தும் வளிமமாகவும், தானுந்து போன்ற ஊர்திகளுக்கு மாற்று எரிபொருளாகவும், எரிபொருள் கலன்களுக்கான வளிமமாகவும் பயன்படுகின்றது.
வரலாறு
தனிம அட்டவணையில் முதலாவதாக இருப்பது ஹைட்ரஜனாகும். இது தனிமங்களுள் இலேசானது,வளிம நிலையில் உள்ளது. கிரேக்க நாட்டில் பாராசெல்சஸ் (Paracelsus) என்பவர் 16-ஆம் நூற்றாண்டிலேயே ஹைட்ரஜனைக் கண்டறிந்திருந்தாலும் பிற எரியக் கூடிய வளிமங்களுடன் குழம்பிப் போயிருந்தார். 1671 ஆம் ஆண்டில், ராபர்ட் பாயில் என்பவரால் ஐதரசன் கண்டுபிடிக்கப்பட்டது
1766 இல் ஹென்றி காவெண்டிஷ் (Henry Cavendish) என்பவர் முதன் முதலாக ஐதரசனின் பண்புகளை அறிந்து தெரியப்படுத்தினார். இதை எரி வளிமம் (highly combustible) எனக் குறிப்பிட்டார். அந்துவான் இலவாய்சியர் இதற்கு ஹைட்ரஜன் என்று பெயரிட்டார். "ஹைட்ரோ" என்றால் கிரேக்க மொழியில் நீர் என்றும் "ஜன்" என்றால் "உண்டாக்குதல்" என்றும் பொருள். ஹைட்ரஜன் ஆக்ஜிசனுடன் சேர்ந்து நீரை உண்டாக்குவதால் அதற்கு இப்பெயர் வைக்கப்பட்டது.
உற்பத்தி
ஐதரசன் வாயு வேதியியல் மற்றும் உயிரியியல் ஆய்வகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது, பெரும்பாலும் பிற தயாரிப்புகளின் போது ஒரு உடன் விளைபொருளாக ஐதரசன் தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் நிறைவுறாத தளப்பொருள்களின் ஐதரசனேற்றத்திற்காக இதைப் பயன்படுத்துகிறார்கள். மற்றும் இயற்கையில் உயிர்வேதியியல் வினைகளில் ஒடுக்கும் முகவருக்குச் சமமானப் பொருள்களை வெளியேற்றும் பொருளாகப் பயன்படுகிறது.
நீரை மின்னாற்பகுத்தல் மூலமாக எளிய வழியில் ஐதரசனை தயாரிக்கலாம். குறைந்த அளவு மின்சாரம் நீரின் வழியாகச் செலுத்தப்படுகிறது. நேர்மின் முனையில் ஆக்சிசன் வாயு உருவாகிறது. அதேபோல எதிர்மின் முனையில் ஐதரசன் வாயு உருவாகிறது. பொதுவாக உற்பத்தியாகும் ஐதரசன் வாயுவை சேமிப்பதற்காக பிளாட்டினம் அல்லது வேறொரு மற்றொரு மந்த உலோகத்திலிருந்து எதிர்மின்வாய் தயாரிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் ஐதரசன் வாயு ஓர் எரிபொருளாக எரிக்கப்பட வேண்டும் என்றால், எரிதலுக்கு உதவுவதற்கு ஆக்சிசன் விரும்பத்தக்கதாகும். எனவே இரண்டு மின்வாய்களும் மந்த உலோகங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக இரும்பினால் மின்வாய்கள் தயாரிக்கப்பட்டால் அது ஆக்சிசனேற்றமடைந்து வெளிப்படும் ஆக்சிசனின் அளவை மட்டுப்படுத்தும். அதிகபட்ச செயல்திறன் கோட்பாட்டின் படி உற்பத்தி செய்யப்படும் ஐதரசனின் உற்பத்தித் திறன் 88-94% ஆகும்
2 (l) → 2 (g) + (g).
புரோட்டான் பரிமாற்ற சவ்வின் மின்னாற்பகுப்பு மின்னாற்றல் செயல் திறனை உறுதிப்படுத்த அதிக வெப்ப மதிப்பு பயன்படுத்தப்படுகிறது . ஏனெனில் இந்த வினையூக்க அடுக்கு தண்ணிருடன் நீராவியாக இடைவினை புரிகிறது. இச்செயல்முறை 80° செல்சியசு வெப்பநிலையில் நிகழும்போது புரோட்டான் பரிமாற்ற சவ்வு மின்பகுப்பி உபரி வெப்பத்தை நீராவி உற்பத்திக்கு திருப்பி விடுகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக உயர் மின் செயல்திறன் விளைகிறது. கார மின்பகுப்பிகளைப் பயன்படுத்தும்போது தாழ் வெப்ப மதிப்பு பயன்படுத்த வேண்டும். இம்மின்பகுளிகளுக்கு தண்ணீர் நீர்ம வடிவிலேயே தேவைப்படுகிறது. காரத்தன்மை இங்கு ஐதரசன் மற்றும் ஆக்சிசன் அணுக்களுக்கு இடையிலான பிணைப்பை உடைக்க தேவையாகிறது. தாழ் வெப்ப மதிப்பு எரிபொருள் மின்கலன்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு நீராவி உள்ளிடப்படுவதற்குப் பதிலாக வெளியிடப்படுகிறது.
நீராவி மறு உருவாக்கம்
பெரும்பாலும் ஐதரசன் இயற்கை எரிவாயுவையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. உயர் வெப்பநிலைகளில் ஐதரோகார்பன்களில் இருந்து ஐதரசன் வாயுவை நீக்குவது இத்தயாரிப்பு முறையின் தத்துவமாகும். 2000 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 95% ஐதரசன் நீராவி மறு உருவாக்கச் செயல்முறையின் மூலமே தயாரிக்கப்பட்டது இயற்கை வாயுவிலிருந்து வர்த்தக ரீதியாக பேரளவில் ஐதரசன் தயாரிக்கவும் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது... உயர் வெப்பநிலையில் (1000-1400 கெல்வின், 700-1100 ° செல்சியசு அல்லது 1300-2000 பாரன்கீட்டு), நீராவி மீத்தேனுடன் வினைபுரிந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் ஐதரச வாயுவை உற்பத்தி செய்கிறது.
+ → CO + 3 .
இந்த வினை குறைவான அழுத்தத்தில் நிகழ சாதகமானது ஆகும். ஆனால் இருப்பினும் உயர் அழுத்தத்தில் (2.0 மெகாபாசுக்கல், 20 வளிமண்டல அழுத்தம் அல்லது 600 மி. மீ. பாதரசம்) நடத்தப்படுகிறது. ஏனெனில் உயர் அழுத்த ஐதரசன் வாயுவை சந்தைப்படுத்துதல் இலாபகரமானது. தயாரிப்பு மற்றும் அழுத்தம் ஊசலாலம் (PSA) சில வகையான சுத்திகரிப்பு அமைப்புகள் அதிக அழுத்த ஐதரசன் வாயுவில் சிறப்பாக செயல்படுகின்றன. உற்பத்தியாகும் தயாரிப்புக் கலவை தொகுப்பு வாயு எனப்படுகிறது. இவ்வாயு நேரடியாக மெத்தனால் மற்றும் தொடர்புடைய சேர்மங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகிறது. மீதேன் தவிர இதர ஐதரோகார்பன்கள் வேறுபட்ட தயாரிப்பு விகிதங்களைக் கொண்டு தொகுப்பு வாயுவை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படலாம். இந்த உகந்த தொழில்நுட்பத்திற்கு நேரிடக்கூடிய பல சிக்கல்களில் ஒன்று நிலக்கரி அல்லது கார்பன் உருவாவதே ஆகும்.
CH4 → C + 2 H2
நீராவி மறு உருவாக்கச் செயல்முறையில் அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலான ஐதரசன் வாயுவை நீராவி மற்றும் கார்பனோராக்சைடைப் பயன்படுத்தி இரும்பு ஆக்சைடு வினையூக்கி முன்னிலையில் தயாரித்துக் கொள்ள முடியும். இம்முறை கார்பனீராக்சைடு தயாரிப்பதற்கும் ஆதார மூலமாகும் :
CO + → + .
ஐதரோ கார்பன்களை பகுதியாக ஆக்சிசனேற்றம் செய்வது மற்றொரு தயாரிப்பு முறையாகும் :
2 + → 2 CO + 4 .
நிலக்கரியைப் பயன்படுத்தியும் ஐதரசன் வாயுவை தயாரிக்கிறார்கள் :
C + → CO +
ஒரே செயல்முறையில் ஐதரசன் தயாரிக்கப்பட்டு, பிரிக்கப்படாமல் அதை பயன்படுத்திக் கொள்வதுமுண்டு. அமோனியா தயாரிக்கப்படும் ஏபர் செயல்முறை இதற்கு உதாரணமாகும் உப்பு நீரை மின்னாற்பகுப்பு செய்து குளோரின் தயாரிக்கும் போதும் ஐதரசன் வாயு உடன் விளைபொருளாக விளைகிறது .
பண்புகள்
ஹைட்ரஜன் வளிமம் மணமற்றது, சுவையற்றது, நிறமற்றது. இது மிகவும் இலேசானது. இதன் அணு மிகவும் எளிமையான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதன் அணுக் கருவில் ஒரே ஒரு நேர் மின்னூட்டம் கொண்ட புரோட்டான் மட்டும் உள்ளது. மின்னூட்டமற்ற நியூட்ரான் இல்லாத ஒரே ஒரு தனிமம் ஹைட்ரஜன் என்று கூறலாம். புரோட்டானைச் சுற்றி ஒரு எதிர் மின்னூட்டம் கொண்ட எலெக்ட்ரான் ஒரு வட்டப் பாதையில் இயங்கி வருகிறது. ஹைட்ரஜனின் எளிமையான கட்டமைப்பு, அண்டத்தில் இதன் செழுமை மிக அதிகமாக இருப்பதற்குக் காரணமாக அமைகிறது. அண்டவெளியில் ஹைட்ரஜன் 93 விழுக்காடு உள்ளது. சூரியன் மற்றும் விண்மீன்களில் இதன் பங்கு முக்கியமானது. அதில் ஹைட்ரஜனே முதல் மற்றும் முக்கியமான அணு எரிபொருளாக (atomic fuel) உள்ளது.
அண்டத்தில் மிகுந்திருக்கும் ஹைட்ரஜன் பூமியில் குறைவாக இருப்பதற்குக் காரணம் அதன் வெப்ப இயக்க ஆற்றலால் பெறும் இயக்க வேகம், தப்புதல் வேகத்தை (escape velocity) விட அதிகமாக இருப்பது தான். சனி, வியாழன் போன்ற பெரிய கோள்களில் ஈர்ப்புக் கவர்ச்சி அதிகம். அதனால் அவற்றின் வளி மண்டலத்தில் ஹைட்ரஜன் கூடுதலாக உள்ளது. மேலும் தாழ்ந்த வெப்ப நிலையும் உயரளவு அழுத்தமும் இருப்பதால் இந்த ஹைட்ரஜன் உறைந்து கோளின் உட்புறத்தில் உலோக ஹைட்ரஜனாக (Metallic hydrogen) இருக்கிறது என்றும் கண்டறிந்துள்ளனர். உலோக ஹைட்ரஜன் மீக்கடத்தும் தன்மைப் பெற்றுள்ளது என்பதால் அது பற்றிய ஆய்வு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
H - என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ஹைட்ரஜனின் அணு எண் 1,அணு நிறை 1.008,அடர்த்தி ௦.089 கிகி /க.மீ.இதன் உறை நிலையும்,கொதி நிலையும் முறையே 13.95 மற்றும் 20.35 K ஆகும். சாதாரண சூழலில் ஹைட்ரஜன் வளிமம் ஈரணு மூலக் கூறுகளால் ஆனது. இதை H 2 என்று குறிப்பிடுவர்.
இது மிகவும் எளிதாக தீப் பற்றி எரியக் கூடியது என்பதால் கவனமாகக் கையாளவேண்டும். காற்றில் எரியும் போது, அதிலுள்ள ஆக்சிஜனுடன் வீரியமாக இணைந்து நீராக மாறுகிறது. அப்போது பெருமளவு ஆற்றல் வெளிப்படுகிறது. ஹைட்ரஜன் மிகச் சிறிதளவே நீரில் கரைகிறது. பெரும்பாலான அலோகங்கள் (non-metals) மற்றும் சில உலோகங்களுடன் சேர்ந்து ஹைட்ரைடுகளைக் (hydrides) தருகிறது. ஆக்சிஜன்-ஹைட்ரஜன் கலந்த கலவைக்கு நெருப்பூட்டினால் வெடிக்கிறது. புளூரினுடன் (Fluorine) இணையும் போது இருட்டில் கூட வெடிக்கிறது. குளோரினுடன், சாதாரண வெப்ப நிலையிலும் புரோமின், அயோடின், ஆக்சிஜன், கந்தகம் ஆகியவற்றுடன் உயர் வெப்ப நிலையிலும் இது நிகழ்கிறது. பழுக்கச் சூடுபடுத்தப்பட்ட கார்பனுடன் சேந்து சிறிதளவு மீத்தேனை உண்டாக்குகின்றது. ஹைட்ரஜன் சேர்மங்களில் உள்ள ஆக்சிஜனைப் பிரித்து அதனுடன் இணைவதால் இது ஒரு ஆக்சிஜனீக்கி (Oxidising agent) எனக் கூறப்படுகிறது.
பயன்கள்
உந்து வளிமம்
ஹைட்ரஜன் மிகவும் இலேசானது என்பதால் அதை பலூன்களில் நிரப்பி, வானத்தில் மிதக்கவிட்டு காடுகளிலும், மலைப்பாங்கான பகுதிகளிலும் பயணித்து மனிதர்கள் நுழைய முடியாத இடங்களையும் வளி மண்டலத்தில் அதிக உயரங்களில் இருந்து கொண்டு ஆய்வுசெய்கிறார்கள். 1937ல் ஜெர்மன் நாட்டில் ஹைட்ரஜன் பலூனில் ஏற்பட்ட ஒரு சிறிய தீப்பொறி பலூன் கப்பலை எரித்துவிட்டது. அதன் பிறகு பலூன் கப்பலுக்கு ஹீலியத்தைப் பயன்டுத்துவதே பாதுகாப்பானது என்பதை அறிந்து கொண்டனர்.
மார்கரின்
தாவர எண்ணெய்களின் ஊடாக ஹைட்ரஜனைச் செலுத்தும் போது, அது மார்கரின் (Margarine)எனப்படும் திண்மமாக உறைகிறது. இதை ஹைட்ரஜனூட்டம் (hydrogenation) என்பர். இரத்தக் குழாய்களில் படிந்து பாய்வுக்குத் தடை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்புப்பொருள் இதில் குறைவாக இருப்பதால் வெண்ணைக்குப் பதிலாக மார்கரினைப் பயன்படுத்துகிறார்கள். இதில் நிக்கல் வினை ஊக்கியாகக் கொள்ளப்படுகிறது.
அம்மோனியா
வேதியியல் தொழிற்சாலைகளில் அமோனியா(Ammonia) உற்பத்திக்கு ஹைட்ரஜன் வளிமம் பயன்படுகிறது. இது அமோனியா சல்பேட் என்ற முக்கிய உரத்திற்கு மூலப் பொருளாக உள்ளது.
நீர்
ஹைட்ரஜனின் ஒரு முக்கியமான,பொதுவான சேர்மம் நீராகும். விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிரினங்களுக்கு நீர் இன்றியமையாதது. நீரில் மட்டுமின்றி பல கரிமச்சேர்மங்களிலும், உயிர் வேதிச் சேர்மங்களிலும் ஹைட்ரஜன் நிறைந்துள்ளது. இதில் பெரும்பாலும் கார்பனுடன் நேரடியாக இணைந்துள்ளது. இவற்றுள் ஹைட்ரோ கார்பனைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இயற்கை எரிவளிமம் பெட்ரோல் போன்றவற்றில் நீண்ட சங்கிலித் தொடராக மூலக்கூறு அமைந்துள்ளது. இத் தொடரைப் பிரித்து விடுவிக்கும் போது பெருமளவு ஆற்றல் வெளிப்படுகிறது. இன்றைக்கு மின்உற்பத்தி நிலையங்களிலும், தானியங்கு உந்து வண்டிகளிலும் இது பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
நீர்ம வளிமம்
நீரைப் பகுத்து வர்த்தக ரீதியில் ஹைட்ரஜனை உற்பத்தி செய்கிறார்கள். நீராவி வினையாக்கம் (Watergas reaction) என்ற வழிமுறையில் நீராவியைச் சூடான நிலக்கரியில் பீச்சியடிக்கின்றார்கள். சில சமயங்களில் நிலக்கரிக்குப் பதிலாக மீத்தேன் வளிமத்தையும் பயன்படுத்துவார்கள். மீவெப்ப மேற்றிய நீராவியைப் பயன்படுத்தும் போது மீத்தேன் மற்றும் நீரவியிலுள்ள மூலக் கூறுகளிலுள்ள ஹைட்ரஜன் விடுவிக்கப்படுகிறது. இவை ஹைட்ரஜன் மூலக் கூறுகளாக உருவாக்கம் பெறுகின்றன. நிலக்கரியில் நீராவி வினை புரிந்து ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்கின்றன. இந்த இரு வளிமங்களையும் இயற்பியல் முறைப்படி பிரித்தெடுக்கலாம். சில சமயங்களில் இந்த இருவளிமங்களின் கலவையை அப்படியே பயன்படுத்துவார்கள். இதுவே நீர்ம வளிமம் எனப்படுகிறது. இது தொழிற்சாலைகளில் பயன்படுகிறது. ஏவூர்தியைச் செலுத்துவதற்கு நீர்ம ஹைட்ரஜன் ஓர் எரிபொருளாகப் பயன்படுகிறது. இதை ஆக்சிஜனுடன் கலந்து எரிவறைக்குள் செலுத்த, அவை எரிந்து சூடான நீராவியை உற்பத்தி செய்கின்றது. இது ஏவூர்தியை இயக்குவதற்குத் தேவையான உந்தலைத் தருகிறது.
கார்போ ஹைட்ரேட்டு
ஹைட்ரஜனின் மற்றொரு வகையான சேர்க்கைத் தொகுதி கார்போ ஹைட்ரேட்டுகளாகும். இது ஹைட்ரஜன், கார்பன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களின் சேர்கையால் ஆனதாகும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் நீரையும்,கார்பன்டை ஆக்சைடையும் ஒருங்கிணைத்து கார்போ ஹைட்ரேட்டுக்களை உற்பத்தி செய்கின்றன. அதனால் தாவர உணவுப் பொருட்களில் இதன் செழுமை அதிகமாக இருக்கின்றது. இது மனிதர்களுக்கும், தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்கினங்களுக்கும் தேவையான ஆற்றலைத் தருகிறது.
கதிரியக்க மூலப்பொருள்கள்
ஹைட்ரஜனின் மற்றொரு பயன்பாடு அணுக்கருப் பிணைப்பு (Nuclear fusion) வினைக்கான மூலப்
பொருளைப் பெறுவதாகும். ஹைட்ரஜன், டியூட்டிரியம் (deuterium) மற்றும் டிரைட்டியம் (tritium) என்ற இரு அணு எண்மங்களை (isotope) பெற்றுள்ளது. டியூட்டிரியம் நிலையானது, டிரைட்டியம் கதிரியக்கத்தால் சிதையக் கூடியது. டியூட்டிரியம் இயற்கையில் நீரில் கன நீராக உள்ளது. இயற்கையில் இதன் செழுமை 1 /200 %. அதாவது 6000 நீர் மூலக் கூறுகளில் ஒரு மூலக் கூறு கனநீராகும். மின்னாற் பகுப்பு மூலம் கனநீரைப் பிரித்தெடுக்கின்றார்கள். சாதாரண நீரில் 40% மேல் கனநீர் இருப்பின் அது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும். கன நீர் அணு உலையில் நியூட்ரான்களை மட்டுப்படுத்தவும் (வேகத்தைக் குறைக்கவும்) குளிர்வூட்டி ஆற்றலை அப்புறப்படுத்தவும் செய்கின்றது. யுரேனியம் அணுக்கரு குறைந்த வேகத்துடன் இயங்கும் நியூட்ரானால் பிளவுறும் வாய்ப்பை அதிகம் பெறுகிறது. இந்த அணுக்கரு வினையின் பயனுறு திறனை கனநீர் பெரிதும் தூண்டுகிறது. டிரைட்டியம் ஓர் எலெக்ட்ரான் உமிழ்வானாகும். இதன் அரை வாழ்வுக்காலம் (Half life period) 12.26 ஆண்டுகள். பூமியின் வளி மண்டலத்தில் அண்டக் கதிர்கள் (Cosmic rays) ஊடுருவும் போது டிரைட்டியம் ஒரு சீரான வீதத்தில், ஆனால் மிக மிகக் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. டியூட்ரியமும், டிரையட்டியமும் அணுக்கருப் பிணைப்பு வினைக்குத் தேவையான மூலப் பொருள்களாயிருக்கின்றன. கதிரியக்கக் கழிவு ஏதுமின்றி ஆற்றலைப்பெற முடிவதாலும், மூலப்பொருள் எளிதாகவும் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதாலும், இது எதிர்காலத்தின் ஆற்றல் மூலம் எனப்படுகின்றது.
பல்ம நீர்
பல்மநீர் (Poly water) என்ற நீர்மம் நீரிலிருந்து வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் அடர்த்தி, பாகு நிலையில் குறிப்பிடும் படியான மாற்றம் பெற்றிருப்பதால், இதை முரணிய நீர் (anomalous water) என்றும் கூறுவர். இதற்கு நீர் மூலக்கூறில் ஏற்படும் மாற்றம் காரணமில்லை நீரில் இருக்கும் மிதவல் (Colloidal) துகள்களின் பங்களிப்பே என்று ஒரு பகுதியினரும், ஹைட்ரஜன் பிணைப்பின் கட்டமைப்பில் ஏற்படும் வேறுபாடுகள் என்று மற்றொரு பகுதியினரும் கூறுகின்றனர்.
பிற
ஹைட்ரஜன் சேர்ந்த சேர்மங்கள் எண்ணற்றவை. வாசனைத் திரவியங்கள், சாயங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகள், மரபணு மூலக்கூறுகள், புரோட்டீன் என ஹைட்ரஜனின் பயன்பாடு நீளுகிறது.
ஹைட்ரஜன் தொல் படிவு எச்ச எரி பொருட்களைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.
அமோனியம் சல்பேட் என்ற முக்கிய உரத் தயாரிப்புக்குத் தேவையான மூலப் பொருளான அம்மோனியா உற்பத்தியில் ஹைட்ரஜன் பயன்படுகிறது.
ஹைட்ரஜனேற்றம் செய்து மெத்தனால் தயாரிக்கவும், எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருள்களில் உள்ள உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கின்ற தெவிட்டாத (unsaturated) கார்பன்களை நலம் தரும் தெவிட்டிய கார்பன்களாக மாற்ற உதவுகிறது.
ஹைட்ரஜன் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில், வளிமம், நீர்மம் மற்றும் திண்மம் ஆகிய நிலைகளுடன் ஒரு சமநிலையில் இருக்க முடியும் .இதை முச்சந்திப்பு புள்ளி (triple point) என்பர். இது ஒரு சில வெப்ப நிலை மானிகளை அளவீட்டுத் திருத்தம் (calibration) செய்யப் பயன்படுகிறது.
ஹைட்ரஜனின் நிலையற்ற அணு எண்மமான டிரைட்டியம், ஹைட்ரஜன் குண்டு (Hydrogen bomb) தயாரிக்கப் பயன்படுகிறது. இது சாதாரண அணு குண்டுவை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது .
ஒளிரும் பூச்சுகளில் இது கதிரியக்க மூலமாகப் பயன்படுகிறது. உயிரியல் தொடர்பான ஒரு சில ஆய்வுகளிலும், சிகிச்சை வழி முறைகளிலும் இது ஒரு தடங் காட்டியாகவும் (tracer) பயன் படுத்தப்படுகிறது.
ஹைட்ரஜனை அப்படியே அல்லது நைட்ரஜனுடன் கலந்து ஒரு சில தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் காணப்படும் கசிவுகளை இடமறியப் பயன்படுத்தப்படுகிறது.
மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்னியக்கிகளில் சுழல் வட்டுகளின் சூட்டைத் தணிக்கும் ஒரு குளிவூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஹைட்ரஜன் வளிமம், ஹைட்ரஜன் அணு பற்றவைப்பு வழி முறையில் ஒரு காப்பு வளிமமாகப் (shielding gas) பயன்படுகிறது.
ஹைட்ரஜன் பல கனிம மற்றும் கரிம வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் வழி முறையில் பயன்படுகிறது.
ஹைட்ரோ குளோரிக் அமிலம் தயாரிக்கும் முறையில் ஹைட்ரஜன் நேரடியாகப் பயன்படுகிறது.
பல உலோகத் தாதுக்களை ஆக்ஸிஜனீக்கம் செய்து பதப்படுத்த ஹைட்ரஜன் பயன்படுகிறது.
ஆக்சிஜனோடு கலந்து நீர் தயாரிக்கப் பயன்படுகிறது.
வகைகள்
ஹைட்ரஜனில் ஆர்த்தோ மற்றும் பாரா ஹைட்ரஜன் என இரு வகையுண்டு. அறை வெப்ப நிலையில் இயற்கை ஹைட்ரஜனில் 25% பாராவும், 75% ஆர்த்தோவும் உள்ளன . பாராவில் புரோட்டான் எலெக்ட்ரானின் தற்சுழற்சி ஒன்றுக்கொன்று எதிராகவும், ஆர்தோவில் இணையாகவும் உள்ளன. இவற்றின் ஆற்றல் வேறுபட்டிருப்பதால், இயற்பியல் பண்புகளும் மாறுபட்டிருக்கின்றன. பாரா ஹைட்ரஜனின் உறை மற்றும் கொதி நிலைகள் சாதாரண ஹைட்ரஜனை விட 0.1 டிகிரி செல்சியஸ் தாழ்வாக இருக்கிறது. இரு வேறு ஆற்றல் நிலைகளுக்கு இடையே ஏற்படும் நிலை மாற்றத்தினால் உமிழப்படும் ஆற்றலின் அலைநீளம் வானவியலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஹைட்ரஜன், வேதிவினைகளில் ஈடுபடும் போது ஹைட்ரஜன் பிணைப்பை ஏற்படுத்தி ஒரு வழக்கமான எலெக்ட்ரான் பகிர்வுப் பிணைப்புடன், வலுவற்ற புரோட்டான்-எலெக்ட்ரான் பிணைப்பையும் உண்டாக்குகின்றது. இது உயிரியல் மூலக் கூறுகளில் பேரியல் மூலக் கூறுகளை உருவாக்கும் முறைக்கு பயனுடையதாக இருக்கின்றது.
கலைச்சொற்கள்
ஈரணு - diatomic
மேலுந்து வளிமம் - lifting gas
எரிபொருள் கலன் - fuel cell
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Hydrogen phase diagram.
Computational Chemistry Wiki
Basic Hydrogen Calculations of Quantum Mechanics
Hydrogen (University of Nottingham)
High temperature hydrogen phase diagram
Wavefunction of hydrogen
தனிமங்கள்
ஒடுக்கிகள்
ஈரணு அலோகங்கள்
குளிர்பதனூட்டிகள்
|
7130
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88
|
யோசப் பரராஜசிங்கம் படுகொலை
|
இலங்கை, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான யோசப் பரராஜசிங்கம் அவர்கள் டிசம்பர் 24, 2005 அன்று 12:15 மணியளவில் மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் வைத்து அடையாளம் காணப்படாத ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராகவும், பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினராவும் இருந்தவர்.
"மாமனிதர்" பட்டம்
இறப்பின்பின் யோசப் பராஜசிங்கத்துக்கு விடுதலைப் புலிகளால் "மாமனிதர்" பட்டம் வழங்கப்பட்டது.
கிளிநொச்சியில் அஞ்சலி
அவரது உடல் கிளிநொச்சிக்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பிரபாகரன் உட்பட முக்கிய விடுதலைப் புலி உறுப்பினர்கள், மலையக தமிழர் தலைவர்கள், பிற முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
வெளி இணைப்புகள்
Tamil Net - Joseph Pararajasingham MP shot dead in Batticaloa church
நிதர்சனம் - ஜோசப் பரராஜ சிங்கம் சுட்டுக்கொலை
ஜோசப் பரராஜ சிங்கம் பற்றிய பி.பி.சி. தமிழ் வானொலிக் கட்டுரை
செய்திகள்
இலங்கையில் தனிநபர் படுகொலைகள்
|
7133
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
யோசப் பரராஜசிங்கம்
|
யோசப் பரராஜசிங்கம் (நவம்பர் 26, 1934 - டிசம்பர் 24, 2005) என்பவர், இலங்கை, மட்டக்களப்பு பகுதியைச் சார்ந்த முக்கிய தமிழ் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இவர் டிசம்பர் 24, 2005 அன்று படுகொலை செய்யப்பட்டார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர். தமிழ்த் தேசிய விடுதலைக்காக அறவழியில் போராடிய அன்னாருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் மாமனிதர் விருது வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு திருப்பலிப் பூசையின் போது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் பரராஜசிங்கம் சுடப்பட்டார்.
ஜோசப் பரராஜசிங்கத்துக்கு மரணிக்கும்போது வயது 71. மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் என நான்கு பிள்ளைகள் இவருக்கு; இவரது ஒருமகன் சிறுவயதிலேயே காலமாகிவிட்டார்.
அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர், தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியார் பெயரில் (சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர இவர் எழுதிய கட்டுரைகள் பல அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானவை.மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்திரிகையாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதிலும் முன்னின்றவர் இவர். அந்த அமைப்பின் ஆரம்பத் தலைவரும் இவரே.
1989இல் பல தமிழ் அமைப்புகள் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டியலில் தேர்தலில் போட்டியிட்ட சமயம் இவரும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றார். ஆயினும் அப்போது அவர் அந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இருந்தபோதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாம் தம்பிமுத்து, கொழும்பில் கனடியத் தூதரகத்துக்கு முன்பாக வைத்து தனது மனைவியார் கலா தம்பிமுத்து சகிதம் சுட்டுக்கொல்லப்படவே, அந்த இடத்து நாடாளுமன்ற உறுப்பினராக ஜோசப் நியமிக்கப்பட்டார்.
அதனை அடுத்த தேர்தல்களில் ஜோசப் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த போதிலும், வடக்கு கிழக்கில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் காரணமாக கடந்த பொதுத் தேர்தலில் அவர் தோல்வியடைய நேர்ந்தது. ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (தமிழரசுக்கட்சி) சார்பில் தேசியப் பட்டியல் மூலமான உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
இவற்றையும் பார்க்க
யோசப் பரராஜசிங்கம் படுகொலை
வெளி இணைப்புகள்
பரராஜசிங்கம் வாழ்க்கைக் குறிப்பு-பி.பி.சி செய்தி
இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
1934 பிறப்புகள்
2005 இறப்புகள்
இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மட்டக்களப்பு மாவட்ட நபர்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்
இலங்கை அரசியல்வாதிகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்
இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்
மாமனிதர் விருது பெற்றவர்கள்
இலங்கை உரோமன் கத்தோலிக்கர்கள்
இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை பழைய மாணவர்கள்
|
7136
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
|
கே. எஸ். ரவிக்குமார்
|
கே. எஸ். ரவிகுமார் (பிறப்பு: மே 30, 1958) தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் இணை இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் ஒருவர் ஆவார்.
திரைப்படவியல்
தமிழ் மொழி அல்லாத படங்கள் நட்சத்திர குறியுடையவை
இயக்குனராக
தயாரிப்பாளர்
எழுத்தாளராக
நடிகராக
வெளி இணைப்புக்கள்
மேற்கோள்கள்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
1954 பிறப்புகள்
தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
1957 பிறப்புகள்
வாழும் நபர்கள்
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள்
தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
|
7138
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2025
|
திசம்பர் 25
|
நிகழ்வுகள்
274 – சூரியனுக்கான கோவில் உரோமை நகரில் அமைக்கப்பட்டது.
336 – உரோமை நகரில் நத்தார் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது.
508 – பிராங்குகளின் மன்னர் முதலாம் குளோவிசு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றார்.
800 – சார்லமேன் புனித உரோமைப் பேரரசனாக முடிசூடினான்.
1000 – அங்கேரிப் பேரரசு முதலாம் இசுடீவனின் கீழ் கிறித்தவ நாடானது.
1066 – நோர்மண்டி இளவரசர் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
1100 – முதலாம் பால்டுவின் எருசலேமின் முதலாவது மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடிசூடினார்.
1492 – கொலம்பசின் சாண்டா மரியா கப்பல் எயிட்டி அருகே பவளப் படிப்பாறையில் மோதியது.
1559 – நான்காம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1643 – கிறித்துமசு தீவு கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ரோயல் மேரி கப்பலின் தலைவன் வில்லியம் மைநோர்ஸ் என்பவரால் இத்தீவுக்கு கிறித்துமசுத் தீவு எனப் பெயரிடப்பட்டது.
1741 – ஆன்டர்சு செல்சியசு தனது செல்சியசு வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.
1758 – ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் செருமனியரால் அவதானிக்கப்பட்டது. இதன் மூலம் எட்மண்டு ஏலியின் எதிர்வுகூறல் நிறுவப்பட்டது.
1776 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையுடன் இரவோடிரவாக டெலவேர் ஆற்றைக் கடந்து டிரெண்டனில் பிரித்தானியப் படைகளுடன் போரில் ஈடுபட சென்றார்.
1831 – ஜமேக்காவில் அடிமைகள் விடுதலை வேண்டி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1868 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.
1914 – முதலாம் உலகப் போர்: செருமனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறித்துமசு நாள் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
1932 – சீனாவின் கான்சு நகரில் 7.6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 275 பேர் இறந்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஆங்காங் மீதான சப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.
1947 – சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
1962 – சோவியத் ஒன்றியம் கடைசித் தடவையாக நிலத்திற்கு மேலான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.
1968 – கீழ்வெண்மணிப் படுகொலைகள்: கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 44 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழவெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
1976 – எகிப்திய விமானம் பேங்காக் நகரில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும், தரையில் 19 பேரும் உயிரிழந்தனர்.
1977 – இசுரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்.
1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.
1989 – உருமேனியாவின் முன்னாள் கம்யூனிசத் தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 – உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
1991 – சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1991 – உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.
2003 – பெனின் விமான நிலையத்தில் போயிங் 727 விமானம் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.
2003 – மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.
2004 – காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் டைட்டன் துணைக்கோளில் இறக்குவதற்காக இயூஜென்சு என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது 2005 சனவரி 14-இல் டைட்டானில் இறங்கியது.
2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் அதிகாலை 12:15 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஒருவனால் சுட்டு கொல்லப்பட்டார்.
2012 – கசக்ஸ்தானில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.
2016 – உருசிய பாதுகாப்பு அமைச்சின் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 92 பேரும் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
1642 (யூநா) – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1726/1727)
1724 – ஜான் மிச்சல், ஆங்கிலேய மெய்யியலாளர், கருந்துளையை எதிர்வு கூறியவர் (இ. 1793)
1861 – மதன் மோகன் மாளவியா, இந்திய அரசியல்வாதி (இ. 1946)
1876 – அடால்ஃப் வின்டாஸ், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1959)
1876 – முகம்மது அலி ஜின்னா, பாக்கித்தானின் 1வது ஆளுநர் (இ. 1948)
1899 – ஹம்பிறி போகார்ட், அமெரிக்க நடிகர் (இ. 1957)
1905 – டி. கே. இராமானுஜக் கவிராயர், வைணவப் புலவர், தமிழறிஞர் (இ. 1985)
1906 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, நோபல் பரிசு எப்ற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1988)
1918 – அன்வர் சாதாத், எகிப்தின் 3வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1981)
1924 – அடல் பிகாரி வாச்பாய், 10வது இந்தியப் பிரதமர் (இ. 2018)
1927 – ராம் நாராயண், இந்துத்தானி இசைக்கலைஞர்
1942 – என்ரீக்கே மொறேந்தே, எசுப்பானியப் பாடகர் (இ. 2010)
1949 – நவாஸ் ஷெரீப், பாக்கித்தானின் 12வது பிரதமர்
1956 – பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்
1960 – நோயெல் இம்மானுவேல், இலங்கைத் தமிழ் கத்தோலிக்க மதகுரு, ஆயர்
1971 – ஜஸ்டின் துரூடோ, கனடாவின் 23வது பிரதமர்
1974 – நக்மா, இந்திய நடிகை
இறப்புகள்
1796 – வேலு நாச்சியார், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி (பி. 1730)
1921 – விளாதிமிர் கொரலென்கோ, உருசிய ஊடகவியலாளர், எழுத்தாளர், செய்ற்பாட்டாளர் (பி. 1853)
1931 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (பி. 1871)
1961 – ஒட்டோ லோவி, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1873)
1972 – ராஜாஜி, சென்னை மாகாண முதல்வர், அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1978)
1977 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர் (பி. 1889)
1994 – ஜெயில் சிங், 7வது இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1916)
2004 – நிரூபன் சக்கரபோர்த்தி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1905)
2005 – யோசப் பரராஜசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)
2006 – ஜேம்ஸ் ப்ரௌன், அமெரிக்கப் பாடகர் (பி. 1933)
2006 – தமிழோவியன், இலங்கை மலையக இலக்கியவாதி, கவிஞர்
2016 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர் (பி. 1928)
2018 – நரேந்திரநாத் சக்ரவர்த்தி, வங்காள மொழிக் கவிஞர் (பி. 1924)
2018 – நான்சி கிரேசு உரோமன், அமெரிக்க வானியலாளர் (பி. 1925)
2019 – சிறீகாந்தலட்சுமி அருளானந்தம், ஈழத்து நூலகர், எழுத்தாளர் (பி. 1961)
சிறப்பு நாள்
கிறித்துமசு நாள்
குழந்தைகள் நாள் (கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், எக்குவடோரியல் கினி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காபோன், கொங்கோ குடியரசு)
நல்லாட்சி நாள் (இந்தியா)
வெளி இணைப்புகள்
பிபிசி: இன்றைய நாளில்
நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
திசம்பர் 25 வரலாற்று நிகழ்வுகள், OnThisDay.com
திசம்பர்
ஆண்டின் நாட்கள்
|
7145
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81
|
பி. வாசு
|
பீ. வாசு என்பவர் பி. வாசு என அறியப்படுபவர். இவர் தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அக்காலகட்டத்தில் வெளிவந்த போது வணிக மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்களாகும். உதாரணமாக என் தங்கச்சி படிச்சவ, பொன்மன செல்வன், பணக்காரன், நடிகன், சின்னத் தம்பி, மன்னன், செந்தமிழ் பாட்டு, இது நம்ம பூமி, உழைப்பாளி, உடன் பிறப்பு, வால்டர் வெற்றிவேல், சேதுபதி ஐ.பி.எஸ், சந்திரமுகி ஆகிய திரைப்படங்கள் ஆகும். மேலும் இவர் தந்தை பீதாம்பரம் அவர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆரின் ஆஸ்தான ஒப்பனை கலைஞராகவும், நெருங்கிய நண்பராகவும் இருந்தார். ஆப்த மித்ரா படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார்.
இயக்கிய திரைப்படங்கள்
பன்னீர் புஷ்பங்கள்
சின்னத் தம்பி
கிழக்கு கரை
பாண்டித்துரை
மன்னன் (திரைப்படம்)
உழைப்பாளி
சீனு
காதல் கிசுகிசு
சந்திரமுகி
பரமசிவன்
தொட்டால் பூ மலரும்
மேற்கண்ட தமிழ்த் திரைப்படங்கள் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
உசாத்துணைகள்
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
வாழும் நபர்கள்
1954 பிறப்புகள்
பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
கலைமாமணி விருது பெற்றவர்கள்
தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
கன்னடத் திரைப்பட இயக்குநர்கள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
சென்னை நடிகர்கள்
சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள்
|
7151
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
|
கண்டிய நடனம்
|
கண்டிய நடனம் (Kandyan dance) சிங்களவர்களது கலாச்சாரத்தை பறைசாற்றும் ஒரு பாரம்பரியமிக்க கலை வடிவமாகும். இது பல நூற்றாண்டுகளாக சிறப்பான முறையில் ஆடப்பட்டுவருகின்றது. இந்நடனமானது சிங்களவர்களது புனித கலாச்சார நிகழ்வுகளின் போது தவறாது ஆடப்படும். 16-19 நூற்றாண்டுகளில் வாழ்ந்த கண்டி அரசர்களால் இதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது. இந்திய கதகளி பாணியை ஒத்த இந்நடனத்தின் இந்து புராணக் கதை, புராண நாயகர்கள், மிருகங்களின், நடத்தைகள் ஆடப்படுகின்றது. கண்டி பெரஹரவில் ஒரு அங்கமாக இந்நடனம் இடம்பெறும். கண்டி நடனமாடுபவர்கள் தலையில் குஞ்சத்துடன் கூடிய முடியும், உடலெங்கும் பலவிதமான நகைகள் அணிந்திருப்பர்.
கண்டிய நடன வரலாறு
செவிவழிக் கதைகளின்படி, கண்டி நடனம் தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து வந்த மந்திரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொகொம்ப கங்காரிய என்னும் பேயோட்டுச் சடங்கிலிருந்து தோன்றியது ஆகும். இலங்கை அரசன் ஒருவனுடைய கனவில் சிறுத்தை ஒன்று அடிக்கடி வரலாயிற்று. சிங்களவர்களின் முதல்வன் எனக் கருதப்படும் முதல் மனைவியாகிய குவேனி என்பவள் வைத்த சூனியம் காரணமாக ஏற்பட்ட ஒரு நோய் இது எனக் கருதப்பட்டது. இதிலிருந்து மீள்வதற்காக இம் மந்திரவாதிகளை இலங்கை அரசன் இலங்கைக்கு அழைப்பித்தான். கொகொம்ப கங்காரிய என்னும் பேயோட்டுச் சடங்கு செய்த பின்னர் அரசன் இந் நோயிலிருந்து மீண்டான். இதைத் தொடர்ந்து பல இலங்கையர் இந்தச் சடங்கை நிகழ்த்தலாயினர்.
பிற்காலத்தில் சிங்கள நிலவுடைமை அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களே இந் நடனத்தை ஆடினர். ஆண்கள் மட்டுமே இந் நடனத்தை ஆடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். புத்தர் பற்கோயிலுடன் தொடர்புடையவர்களாக இருந்த இச் சாதியினர் அக்கோயிலில் நிகழும் தலதா பெரகரா என அழைக்கப்படும் ஊர்வலத்தில் முக்கிய பங்கு வகித்தனர். கண்டி அரசர்களின் காலத்தில் இந்த நடனம் அரசின் ஆதரவுடன் வளர்ந்தது. கண்டி அரசு 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானியரிடம் வீழ்ச்சியடைந்த பின்னர், இந்த நடனம் செல்வாக்கு இழந்தது. விடுதலைக்குப் பின்னர் இந்நடனம் புத்துயிர் பெற்றுள்ளதுடன் மேடைகளில் ஆடத்தக்க வகையில் வளர்ச்சியும் அடைந்துள்ளது. இலங்கையின் பண்பாட்டு அடையாளமாகவும் இது இன்று விளங்கிவருகிறது.
உடை
கண்டி நடனக் கலைஞர்கள் வேலைப்பாடுகளுடன் கூடிய உடைகளை அணிந்து ஆடுவர். இது "வெஸ் உடை" எனப்படுகிறது. ஆண்கள் தலைப்பாகை அணிவதுடன், மேற்சட்டை எதுவும் அணியாமல், மணிகளால் இழைத்து வலைபோல் செய்யப்பட்ட மார்பணி ஒன்றை அணிவர். தலைப்பாகையின் முன்புறம் உலோகத்தால் ஆன அமைப்பைக் கொண்டது. இடுப்புக்குக் கீழ் கணுக்கால் வரை நீண்ட உடை அணிவர். இடுப்பில் ஒட்டியாணம் போல் அமைந்த இடுப்புப் பட்டியின் முன்புறம் முக்கோண வடிவில் அமைந்து முழங்காலுக்குச் சற்று மேல் வரை நீண்டிருக்கும். இவற்றைவிட கைகளில் தோள்பட்டைக்குக் கீழ் மேற்கையிலும், முழங்கைகளுக்குச் சற்றுக் கீழும் அணிகள் அணிந்திருப்பர். காலில் சலங்கையும் அணிவது உண்டு. கண்டி நடனக் கலைஞர் முதன் முதலாகத் தலை அணி அணிவது ஒரு சடங்காக மேற்கொள்ளப்படுகிறது. இது "வெஸ் மாங்கல்யம்" என அழைக்கப்படுகிறது.
இசை
கண்டி நடனத்தைத் தாளக் கருவிகளுடன் ஆடுவதே மரபு. "கெத்த பெர" எனப்படும் ஒருவகை மத்தளம் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டது. இதைக் கண்டி நடனத்துக்கு மட்டுமே பயன்படுத்துவது வழக்கம். இந்த மத்தளம் வாசிப்பவரும் இதற்கென உள்ள சிறப்பு உடைகளுடன் நடனக் கலைஞருக்கு அருகில் நின்று வாசிப்பார். "தாளம்பொத்த" எனப்படும் சல்லாரியையும் பயன்படுத்துவர். சிலவகைக் கண்டி நடனங்களில் பாடல்களுடன் கூடிய இசையும் பயன்படுகின்றது.
கண்டிய நடனத்தின் இன்றைய நிலை
முற்காலத்தில் பெண்கள் கண்டி நடனங்களில் இடம்பெறுவதில்லை. தற்போது பெண்களும் இந் நடனங்களை ஆடுவதற்குப் பயில்கின்றனர். எனினும் பெண்களுக்கு என அமைந்த "வெஸ் உடை" கிடையாது. எனவே ஆண்களுக்கான உடைகளில் வெவ்வேறு வகையான மாற்றங்களைச் செய்து பெண்கள் உடுத்துகின்றனர்.
1970 களில் சித்திரசேன டயஸ் என்பவர் கண்டிய நடனத்தை மேடைகளில் ஆடுவதற்கு ஏற்றவாறு அமைத்தார். தான் உருவாக்கிய மேடை நடன நிகழ்ச்சிகளில் கண்டிய நடன அசைவுகளையும் அம்சங்களையும் பயன்படுத்தினார். இவரது புகழும், இந்த நடனம் தொடர்பாக இருந்துவந்த சாதித் தடைகளை உடைப்பதற்கு உதவியதுடன், கண்டிய நடனத்தை நகர்ப்புற மக்களும், தற்காலத்துச் சுவைஞர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் ஆக்கியது. இன்றுவரை இலங்கையில் கண்டி நடனத்தைப் பயிற்றுவிப்பதற்காக இயங்கும் பள்ளிகளில் பெரியது சித்திரசேன நடனப் பள்ளியே.
வெளி இணைப்புகள்
video of Ves dance
video
creative kandyan dance
Kandyan
Kandy Asela Perahara
Some photos of Kandyan Dancers
கண்டி
சிங்களவர் கலைகள்
சிங்களவர் பண்பாடு
இலங்கையின் நாட்டுப்புறவியல்
இலங்கையின் நடனங்கள்
|
7153
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
அமேசான்
|
அமேசான் மழைக்காடு.
அமேசான் ஆறு.
அமேசான் படுகை.
அமேசான்.காம்.
அமேசான் கின்டில்.
அமேசான்கள்.
|
7154
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%2026
|
திசம்பர் 26
|
நிகழ்வுகள்
887 – முதலாம் பெரிங்கார் இத்தாலியின் மன்னராக லோம்பார்டி பிரபுக்களால் நியமிக்கப்பட்டார்.
1489 – பெர்டினாண்டு, இசபெல்லா ஆட்சியாளர்களின் கத்தோலிக்கப் படைகள் அல்மேரீயாவை கிரனாதா அமீரகத்தின் சுல்தானிடமிருந்து கைப்பற்றின.
1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: டிரென்டன் சண்டையில், அமெரிக்க விடுதலைப் படை எசியன் படைகளுடன் போரிட்டு வென்றது.
1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் பதினாறாம் லூயி மன்னனுக்கெதிரான கடைசி விசாரணைகள் ஆரம்பமாயின.
1805 – ஆஸ்திரியாவும், பிரான்சும் பிரெசுபர்க் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
1811 – வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் வேர்ஜீனியாவின் ஆளுநர் ஜோர்ஜ் வில்லியம் சிமித் இறந்தார்.
1825 –புருசியப் பேரரசர் முதலாம் நிக்கலாசுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான உருசியத் தாராண்மைவாதிகள் சென் பீட்டர்ஸ்பேர்க் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
1862 – ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவில் 39 அமெரிக்கப் பழங்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.
1870 – ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
1882 – யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
1896 – 1896 சிலாபம் கலவரம்: இலங்கை, சிலாபம் நகரில் சோனகர்களுக்கும், கத்தோலிக்க சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் வெடித்தது.
1898 – மேரி கியூரி, பியேர் கியூரி ஆகியோர் ரேடியத்தைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1925 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1925 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
1943 – இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில் செருமனிய போர்க்கப்ப்பல் ஷார்ன்ஹோஸ்ட் பிரித்தானியக் கடற்படையினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1944 – ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை உருவாக்கினார்.
1948 – வட கொரியாவில் இருந்து கடைசி சோவியத் படைகள் வெளியேறின.
1972 – வியட்நாம் போர்: அமெரிக்காவின் பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் போர் வானூர்திகள் ஹனோய் நகரைத் தாக்கின.
1973 – சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.
1974 – சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1975 – உலகின் முதலாவது வணிக-நோக்கு சுப்பர்சோனிக் வானூர்தி துப்போலெவ் டி.யு-144 சேவைக்கு விடப்பட்டது.
1976 – நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைக்கப்பட்டது.
1979 – சோவியத் சிறப்புப் படையினர் ஆப்கானிஸ்தானின் அரசுத்தலைவர் மாளிகையைக் கைப்பற்றினர்.
1985 – கொரில்லா பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் டயான் ஃபாசி கொல்லப்பட்டார்.
1991 – சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.
1999 – மத்திய ஐரோப்பாவில் சூறாவளி தாக்கியதில் 137 பேர் உயிரிழந்தனர்.
2003 – தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் 26,000 பேர் உயிரிழந்தனர்.
2004 – வடக்கு சுமாத்திராவை 9.1–9.3 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் தாக்கியதில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள், மலேசியா, மியான்மர், வங்காளதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 300,000 பேர் வரை இறந்தனர்.
2006 – சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.
2006 – நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய்க் குழாய் ஒன்று வெடித்ததில் 260 பேர் உயிரிழந்தனர்.
2009 – உலகின் மிக நீளமான அதி-விரைவு தொடருந்துப் பாதை சீனாவில் பெய்ஜிங்கிற்கும் குவாங்சௌவிற்கும் இடையில் அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
1617 – பெர்னாவ் தெ குவெய்ரோசு, போர்த்துக்கீச இயேசு சபை கத்தோலிக்கக் குரு, மதப்பரப்புனர், வரலாற்று எழுத்தாளர் (இ. 1688)
1780 – மேரி சோமர்வில்லி, இசுக்கொட்டியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1872)
1791 – சார்ல்ஸ் பாபேஜ், ஆங்கிலேயக் கணிதவியலாளர், வித்தியாசப் பொறியைக் கண்டுபிடித்தவர் (இ. 1871)
1864 – யுன் சி - கோ, கொரிய செயற்பாட்டாளர், அரசியல்வாதி(இ. 1945)
1880 – எல்டன் மேயோ, ஆத்திரேலிய உளவியலாளர் (இ. 1949)
1893 – மா சே துங், சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் (இ. 1976)
1896 – சேனரத் பரணவிதான, இலங்கையின் முன்னோடித் தொல்லியலாளர், கல்வெட்டியலாளர் (இ 1972)
1899 – உத்தம் சிங், இந்தியப் புரட்சியாளர் (இ. 1940)
1901 – பீட்டர் வான் தெ கேம்ப், டச்சு வானியலாளர் (இ. 1995)
1904 – மீனாம்பாள் சிவராஜ், தமிழக பெண்ணியவாதி, அரசியல் செயற்பாட்டாளர் (இ. 1992)
1910 – எமிலி செங்கல், இந்திய விடுதலை போராட்ட செயற்பாட்டாளர், ஆத்திரியர் (இ. 1996)
1914 – பாபா ஆம்தே, இந்திய சமூக சேவகர், செயற்பாட்டாளர் (இ. 2008)
1925 – இரா. நல்லகண்ணு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர்
1929 – முருகு சுந்தரம், தமிழகக் கவிஞர் (இ. 2007)
1931 – எஸ். ஜேசுரத்தினம், ஈழத்து நாடக, திரைப்பட நடிகர், வானொலிக் கலைஞர் (இ. 2010)
1936 – விற்பி நீமெலா, பின்லாந்து-அர்ச்செந்தீன வானியலாளர் (இ. 2006)
1950 – ராசா பர்வைசு அசரஃப், பாக்கித்தானின் 17வது பிரதமர்
1971 – ஜாரெட் லெடோ, அமெரிக்க நடிகர்
1986 – கிட் ஹாரிங்டோன், ஆங்கிலேய நடிகர்
1990 – தெனீசு சேரிசெவ், உருசிய காற்பந்து வீரர்
இறப்புகள்
268 – தியோனீசியுஸ் (திருத்தந்தை)
418 – சோசிமஸ் (திருத்தந்தை)
1530 – பாபர், மங்கோலியப் பேரரசர் (பி. 1483)
1624 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (பி. 1573)
1886 – தியோடோர் வான் அப்போல்சர், ஆசுத்திரிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1841)
1931 – மெல்வில் தூவி, தூவி தசம வகைப்படுத்தல் முறையைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1851)
1972 – ஹாரி எஸ். ட்ரூமன், அமெரிக்காவின் 33வது அரசுத்தலைவர் (பி. 1884)
1981 – சாவித்திரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1985 – டயான் ஃபாசி, கொரில்லாவைப் பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (பி. 1932)
1989 – கே. சங்கர் பிள்ளை, இந்தியக் கேலிச்சித்திர ஓவியர் (பி. 1902)
1998 – ராம் ஸ்வரூப், இந்திய மெய்யியலாளர், எழுத்தாளர் (பி. 1920)
1999 – சங்கர் தயாள் சர்மா, இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர் (பி. 1918)
2001 – கே. டி. கே. தங்கமணி, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர், தொழிற்சங்கத் தலைவர் (பி. 1914)
2006 – ஜெரால்ட் ஃபோர்ட், அமெரிக்காவின் 38வது அரசுத்தலைவர் (பி. 1913)
2011 – சாரெகொப்பா பங்காரப்பா, கருநாடகத்தின் 15வது முதலமைச்சர் (பி. 1932)
2018 – ராய் கிளாபர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1925)
சிறப்பு நாள்
விடுதலை மற்றும் ஒற்றுமை நாள் (சுலோவீனியா)
பொக்சிங் நாள், (பொதுநலவாய நாடுகள்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பிபிசி: இன்றைய நாளில்
நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
திசம்பர் 26 வரலாற்று நிகழ்வுகள், OnThisDay.com
திசம்பர்
ஆண்டின் நாட்கள்
|
7165
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF
|
ஒருங்குறி
|
ஒருங்குறி அல்லது யுனிகோட் (Unicode) என்பது, எழுத்துகளையும் வரியுருகளையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு குறிமுறை நியமம் ஆகும்.
ஒருங்குறி குறிமுறை என்பது சோ பெக்கர் (Joseph.D.Becker) லீ காலின்சு (Lee Collins) மார்க் இடேவிசு (Mark.E.Davis) ஆகிய மூவரும் உருவாக்கியதாகும்
இது கலிஃபோர்னியாவின் ஒருங்குறி கூட்டமைப்பால் (Unicode Consortium) நிர்வகிக்கப்படுகிறது
இன்று உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு வரிவடிவங்கள் இந்நியமத்தில் அடங்கியுள்ளன. அவற்றுடன், சில அரிதாக பயன்படுத்தப்படும் வரிவடிவங்களும், கணிதம், மொழியியல் போன்ற துறைகளில் பயன்படும் சில வரியுருகளும் அடங்கியுள்ளன.
கணியுலகில் வெவ்வேறு வரிவடிவங்களுக்காக வெவ்வேறு குறிமுறைகள் இன்று பயன்பாட்டிலுள்ளன. மேலும், தமிழ் போன்ற சில மொழிகளில் ஒரே வரிவடிவத்திற்குப் பல்வேறு குறிமுறைகளும் காணப்படுகின்றன. பன்மொழிச் சூழல்களில் இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளைப் பயன்படுத்துவதால் உருவாகும் சிக்கல்கள் பல. ஒருங்குறி, இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளுக்கு மாற்றாக ஒரு நியம குறிமுறையை நிறுவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். இன்று பல்வேறு எண்முறை, கணினியியல் நிறுவனங்களும் செயற்றிட்டங்களும் ஒருங்குறிக்கு ஆதரவு வழங்கி இக்குறியீட்டு நியமத்திற்கான ஆதரவையும் தமது தயாரிப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன.
புதிதாக தோன்றும் நியமங்களும் ஒருங்குறியை அடிப்படை கட்டமைப்பாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. (எ+கா) XML
குறிமுறை நியமங்களின் வரலாற்றுப் பின்னணி
=== அமெரிக்க
க்ஷ குறிமுறை நியமங்களின் வரலாறு ===
தமிழ் குறிமுறை நியமங்களின் வரலாறு
அஸ்கி (ASCII)
ஆரம்பகாலத்தில் தமிழ் தட்டச்சுக் கருவியைத் தழுவி பாமினி என்கின்ற எழுத்துரு அறிமுகம் ஆனது. இது ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக தமிழை உட்புகுத்தியது.
தகுதரம் (TSCII)
இந்த ஏற்பாட்டில், இணையத்தின் வரவு புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப் (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. தவிர்த்து, பல தரவுத் தளங்களில் (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேர்க்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை (அதாவது, Tamil Standard Code for Information Interchange [TSCII]) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துகள் தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை (American Standard Code for Information Interchange [ASCII]) ஒத்தது. மிகுதியான 128-155ல் தமிழ் எழுத்துகள் நிரப்பப்பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, Me ஆகிய பதிப்புக்களில் TSCII அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இஸ்கீ (ISCII)
இஸ்கீ (Indian Script Code for Information Interchange, ISCII) என்பது இந்திய மொழிகளுக்கான ஒரு குறியீட்டு முறை, இது பெரும்பாலான மொழிகளையும், அதன் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிடத்தக்கது. பின்வரும் மொழிகளில் இஸ்கீ குறியீட்டு முறை: அஸ்ஸாமி, பெங்காலி (பங்களா) ஸ்கிரிப்ட், தேவநாகரி, குஜராத்தி, அச்சுப், கன்னடம், மலையாளம், ஒரியா, தமிழ், மற்றும் தெலுங்கு.
ஒருங்குறி (UNICODE)
ஒருங்குறி ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று உலகின் பிரதான மொழிகளை ஒன்றிணைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகமானது. விண்டோஸ் 2000/XP/2003/Vista, ஆப்பிள் மாக் 10.4, லினக்ஸ் ஆகிய அனைத்து இயங்கு தளங்களும் தமிழ் ஒருங்குறியை ஆதரிக்கின்றன. இன்று அநேகமாக உலகிலுள்ள தேடுபொறிகள் (Search Engines) கூகிள் மற்றும் யாகூ ஒருங்குறியில் தேடல்கள் செய்ய வல்லன. மேலும் மைக்ரோசொஃப்ட் நிறுவனம் ஒருங்குறியினூடாக தமிழ் விண்டோஸ் மொழி இடைமுகப் பதிப்பை ஆபிஸ் 2003 மற்றும் விண்டோஸ் XPல் அறிமுகம் செய்ததுடன் ஆபிஸ் 2003 பதிப்பில் ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகளை அறிமுகம் செய்து தமிழில் எழுத்துப் பிழைவசதிகளையும் ஒத்தசொல் வசதிகளையும் அறிமுகம் செய்தது.. உலகிலுள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.
எண்முறை சாதனங்களில் ஒருங்குறி
கணினி
கணினி இயங்குதளங்களும் (operating system) பயன்பாட்டு மென்பொருட்களும் படிப்படியாக ஒருங்குறிக்கான முழுமையான ஆதரவை வழங்கத்தொடங்கியுள்ளன.
கனூ/லினக்ஸ் இயங்குதளம்
ஒருங்குறிப் பயன்பாட்டை ஆரம்பகாலங்களில் உள்வாங்கிக்கொண்ட இயங்குதளங்களுள் கனூ/லினக்ஸ் இயங்குதளமும் அடங்கும். utf-8 ஒழுங்கினைப்பின்பற்றி கனூ/லினக்ஸ் இயங்குதளங்களில் ஒருங்குறி கையாளப்படுகிறது. இந்த அடிப்படையே வின்டோஸ் போன்ற இயங்குதளங்கள் ஒருங்குறியைக் கையாளு முறைமையிலிருந்து கனூ/லினக்ஸ் இணை வேறுபடுத்துகிறது. பழைய மென்பொருள்களிலும் ஒருங்குறி பயன்படுத்தப்படக்கூடியதாய் இருக்கவேண்டும் என்கிற பழசோடும் ஒத்திசைதல் எனும் எண்ணக்கருவினை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பகாலங்களில் utf-8 ஒழுங்கு உள்வாங்கிக்கொள்ளப்பட்டது.
கனூ/லினக்ஸில் தமிழ் ஒருங்குறிப்பயன்பாடு ஏறத்தாழ முழுமையடைந்திருக்கிறது. உலகின் முதல் தமிழ் இடைமுகப்பை கொண்ட முழுமையான இயங்குதளமாக வெளிவந்த மான்ட்ரேக் லினக்ஸ் 10.0 ஒருங்குறி ஆதரவினைக் கொண்டிருந்தது. ஆரம்பகால கனூ/லினக்ஸ் இடைமுகப்பு தமிழாக்கத்தின்போது தமிழ்க் கணினி வல்லுநர்கள் ஒருங்குறி அல்லாத குறிமுறைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழ் நொப்பிக்ஸ் இதற்கு நல்ல உதாரணமாகும்.
யுனிக்ஸ், சொலாரிஸ்
வின்டோஸ்
விண்டோஸ் இயங்குதளங்களில் விஸ்டாவில் தமிழ் மொழி உட்பட இந்திய மொழிகளுக்கான நேரடி ஆதரவுண்டு. புதிதாக ஒரிய மொழியானது ஒருங்குறியில் விண்டோஸ் ஆதரவளிக்கின்றது.தமிழை உத்தியோகப்பூர்வமாக ஆதரித்த முதலாவது விண்டோஸ் பதிப்பு விண்டோஸ் 2000 ஆகும். எ-கலப்பை மென்பொருள் தனித்தியங்கும் ஓர் ஒருங்குறி இயந்திரமொன்றைக் கொண்டுள்ளதால் கொள்கை ரீதியில் விண்டோஸ் 98 இயங்குவேண்டும்.
விண்டோஸ் 2000/XP
விண்டோஸ் XP
உங்களிடம் விண்டோஸ் XP சேவைப் பொதி 2 இருந்தால விண்டோஸ் மொழி இடைமுகப் பொதியை நிறுவிக் கொள்ளலாம்.
மாக்கின்டோஷ்
செல்பேசி
செல்பேசிகளில் ஜாவா தொழிநுட்பம் ஒருங்குறிக்கான ஆதரவை வழங்குவதால், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாடு சாத்தியமாகியுள்ளது. தற்போது டாட் நெட் நுண்ணியக்க சூழலும், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாட்டை சாத்தியப்படுத்திவருகிறது. இலங்கையில் சண்ரெல் மடிமேற்கணினிகளில் பாவிக்கப் படும் PCMCIA CDMA தொலைபேசியும் ஒருங்குறியை ஆதரிக்கின்றது. இங்கே நேரடியா எ-கலப்பை மூலமாக தமிழில் குறுஞ்செய்திகளைத் தயாரிக்க முடியும்.
வெளி இணைப்புகள்
உன்கோடு என்கோடு தனிக்கோடு யுனிகோடு
எழில்நிலா.வணியில் யுனிக்கோடு விளக்க கட்டுரைகள்
DecodeUnicode – Unicode WIKI அணுகப்பட்டது 22 பெப்ரவரி 2007
சொந்த வீடு தரும் மகிழ்ச்சி
விண்டோஸ் 98 கணினிகளில் தமிழ் யூனிகோடில் எழுதுவது எப்படி? முகுந்தராஜின் கட்டுரை.
உத்தமம் நிறுவனத்தின் தலைவர் திரு .முத்து நெடுமாறனுடனான நேர்காணல்
ஒருங்குறி அமைப்பு உதவி
பன்னாட்டு ஒருங்குகுறி சேர்த்தியத்தின் வலைக்களத்தில் தமிழ்ப்பக்கம்
https://home.unicode.org (ஒருங்குறி கூட்டமைப்பின் இணையத்தளம்)
https://www.unicode.org/history/summary.html (ஒருங்குறியின் வரலாறு)
https://en.wikipedia.org/wiki/Joe_Becker_(Unicode)
https://en.wikipedia.org/wiki/Lee_Collins_(Unicode)
https://en.wikipedia.org/wiki/Mark_Davis_(Unicode)
ஒருங்குறி
தமிழ் எழுத்து குறிமுறைகள்
தமிழ்க் கணிமை
|
7189
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
|
முன்னிறுத்தல்
|
முன்னிறுத்தல் (Presentation)
சிக்கலான கருத்தையும்கூட எளிமையாகவும் தெளிவாகவும் வெற்றிகரமாகச் சொல்லுங்கள்
பலர் கூடியிருக்கும் அவையில் பேசும்போது விறுவிறுப்பாகவும், அவையோருக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் பேசவேண்டும். சரியான முறையில் தயார் செய்யப்படாத அல்லது நமது குறிக்கோளைப்பற்றிய தெளிவற்ற நிலையில் பேசும்போது மிகச் சிறந்த, நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் முன்னிறுத்தம் (presentation) அல்லது நமது உரையளிப்பு முற்றிலும் வீணாகப் போய்விடும்.
தயார் படுத்துதல்: வெற்றிகரமாக உரையளிப்பிற்கு முக்கியமான காரணி.
உங்களது உரையளிப்பு ஆற்றலுடன் இருக்க வேண்டுமென்றால் முதலில் உங்கள் குறிக்கோளில் தெளிவான முடிவுடன் இருங்கள். உங்கள் முன்னிருக்கும் கேள்விகள்:
நான் ஏன் இந்த உரையளிப்பைக் கொடுக்கிறேன்?
இந்த உரையளிப்பின் மூலம் அவையோருக்கு நான் சொல்ல விரும்புவது என்ன?
அடுத்து
எப்படிப்பட்ட பார்வையாளர்களுக்கான உரையளிப்பை நீங்கள் அளிக்கப்போகிறீர்கள், அவர்களுக்கு இந்த உரையளிப்பின் தலைப்பு மற்றும் சாரத்தைப் பற்றி எந்த அளவுக்கு விவரம் தெரியும் என்பதைப் பொருத்து உங்களின் உரையளிப்பு அமையவேண்டும்
முன்னிருத்தலின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும்?
உங்களது முன்னிருத்தலின் குறிக்கோளையும், நோக்கத்தையும் அதற்கானப் பார்வையாளர்களையும் நீங்கள் முடிவு செய்தப்பிறகு இப்பொழுது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான வேலை முன்னிருத்தலின் அமைப்பு.
முதலாவதாக இந்த முன்னிருத்தலுக்கு எவ்வளவு நேரம் தேவை என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை பல சிறிய பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாகமும் உங்களது முன்னிருத்தலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை விளக்கும் வகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும், அதே சமயத்தில் உங்களது முக்கியமான குறிக்கோளிலிருந்து வெளியில் செல்லாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக முதல் பகுதி அறிமுகம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பகுதியில் நீங்கள் உங்களது முன்னிருத்தலைப் பற்றிய சுருக்கமான நோக்கம், அதாவது நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பிற்கான காரணம், அதன் மூலம் நீங்கள் எதை அடைய விரும்புகிறீகள்.போன்றவற்றைச் சுருக்கமாக விளக்கவேண்டும்.
அடுத்தப் பகுதியில் உங்கள் நிகழ்வுப் பட்டியலின் (Agenda) முதலில் உள்ள தலைப்பு இடம்பெற வேண்டும். அதைத் தொடர்ந்து நிகழ்வுப் பட்டியலின்படி மற்றத் தலைப்புகள் வரிசைப் பிரகாரம் அமையவேண்டும்.
உங்களின் அறிமுகம் மற்றும் மற்றப்பகுதிகளைப் பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு ஏற்பட்ட பிறகு நீங்கள் சிறிது நேரம் செலவழித்து உங்களது முன்னிறுத்தலின் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்கவேண்டும். பொதுவாக ஒரு முன்னிருத்தலில் அறிமுகம் மற்றும் முடிவுரைப் பகுதிகள்தான் மிக முக்கியமானப் பகுதிகளாகக் கருதப்படுகிறது. அவைதான் உறுதியான, அழுத்தமானத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உங்கள் முன்னிறுத்தல் தெளிவாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் இருக்க நீங்கள் செய்யவேண்டியது:
உங்களின் முன்னிறுத்தல் சிறியதாகவும், எளிமையாகவும் இருக்கவேண்டும்.
பொதுவாக பார்வையாளர்கள் நீங்கள் சொல்லும் எல்லாக் கருத்துக்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால் மிக முக்கியமானக் கருத்துக்களை சிறப்பான வகையில் உயர்த்திக் கூறவேண்டும்.
உங்கள் முன்னிறுத்தல் மிகநீளமாக இருக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் பார்வையாளர்களுக்கு சலிப்படையும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
சில சமயம் பார்வையாளர்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும். அப்போது நீங்கள் செய்யவேண்டியது:
நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று விளக்கவேண்டும் (உதாரணமாக, "இந்த முன்னிறுத்தலின் மூலம் நான் உங்களுக்குச் சொல்லப்போவது என்னவென்றால்…")
முக்கியமான கருத்துக்களை தெளிவாகவும், விவரமாகவும், நிதானமாகவும் சொல்லவேண்டும்
நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை மறுபடியும் சொல்லவேண்டும் (அதாவது இறுதியாக அல்லது சுருக்கமாக….) என்று முடிக்கவேண்டும்.
காட்சி சார்ந்த உபகரணங்களின் (visual aids) மூலம் உங்களின் முன்னிறுத்தலை பலப்படுத்தவேண்டும்:
காட்சி சார்ந்த உபகரணங்களைப் பயன்படுத்தும்பொழுது, காட்சிவில்லை (slide), ஒளிப்படக்காட்டி (projector) ஒளிக்காட்சி (video) மற்றும் கணினி உபயோகப்படுத்தும் பொழுது முதலில் அவை சரியாக வேலை செய்கின்றனவா என்பதைச் சோதித்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக அவற்றை உங்களுக்குச் சரியாக உபயோகிக்கிவும் தெரிந்திருக்கவேண்டும்.
ஒரே காட்சிவில்லையில் (slide) அதிகமான தகவல்களை இடுவதைத் தவிர்த்திடுங்கள். பொதுவாக ஒரு வில்லையில் அதிகபட்சமாக ஐந்து அல்லது ஆறு வரிகள் இருக்கவேண்டும்.
சித்திரங்கள் அல்லது வரைப்படங்கள் பெரிதாகவும் தெளிவாகவும், அரங்கிலுள்ள அனைத்துப் பார்வையாளர்களாலும் சரியாகப் பார்க்கக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும். குறிப்பாக படங்களில் உபயோகிக்கப் பட்டிருக்கும் வண்ணங்கள் கண்ணை உறுத்தாத வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
பொதுவாக உங்கள் முன்னிருத்தல் காட்சிவில்லைகளின் தரத்தைப் பொருத்தே நிர்ணயிக்கப் படுகின்றன. அதனால் வில்லைகளின் வடிவமைப்பு (slide design) மற்றும் நடை (style) நீங்கள் சொல்லவிருக்கும் கருத்துடன் இணைந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
உபரிப்பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். விளக்கப் படங்கள், அட்டவணை ஆகியவற்றை முடிந்தவரை முதலிலேயே தயார் செய்து வைத்திருக்கவேண்டும். முன்னிருத்தலில் குறிப்புகள் எழுதும் பொழுது பார்வையாளர்களுக்கு நன்றாகத் தெரியும் வகையில் பெரிய அளவில் அவற்றைத் தயாரிக்க வேண்டும்.
அரங்கத்தைத் தயார் செய்தல்
பொதுவாக முன்னிறுத்தல் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னதாகவே அரங்கைச் சென்று பார்க்கவேண்டும். இருக்கைகள் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும் (நீள் வட்ட அல்லது அரை வட்ட வடிவில் இருக்கைகள் அமைந்திருப்பது கருத்தாடலுக்கு நல்லது. இருக்கைகள் வரிசைகளில் அமைந்திருந்தால் கருத்தாடலுக்கு இடைஞ்சலாக இருக்கும்).
உங்களுடைய காட்சி சார்ந்த உபகரணங்கள் எவ்விதம் பயன்படுத்தவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும். வெளிச்சம், இடவசதி மட்டுமல்லாது அரங்கின் தட்பவெட்ப நிலையையும் ஆரம்பத்திலேயே சரிப்பார்த்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு இருக்கையாளரும் உபயோகிக்கும் வகையில் கையேடு, எழுதுகோல் முதலியவற்றை எல்லா இருக்கைகளுக்கு அருகிலும் வைக்கவேண்டும். குடிதண்ணீர் மற்றும் டம்ளர்களை மேசையில் சரியானப்படி வைக்கவேண்டும். நிகழ்ச்சி அரைமணி நேரத்திற்கு மேல் ஆகுமென்றால் சிறிய இடைவேளைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். கழிவறை வசதிகள் அருகிலிருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.
உங்களது முன்னிறுத்தல் முழுவதையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய தேவையில்லை. ஆனால் அதைப்பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கும் விதத்தில் பலமுறை ஒத்திகை ஓட்டம் செய்துப்பார்த்துக்கொள்வது நல்லது. ஒருமுறைக்கு இருமுறை முழு முன்னிறுத்தலையும் வெள்ளோட்டம் பார்ப்பது மிகவும் பயன் தரும். எவ்வளவுகெவ்வளவு அதிகமாக நீங்கள் ஒத்திகை செய்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு மிக நம்பிக்கையுடன் உங்கள் முன்னிறுத்தலை நீங்கள் அளிக்க இயலும், உங்கள் முன்னிறுத்தலை நீங்கள் கையாளும் விதத்தைப் பார்த்து அவையோருக்கும் ஒரு நல்ல ஈடுபாடு வரும். உங்கள் முன்னிறுத்தலை நீங்கள் சரியான படியும் முறையாகவும் தெரிந்திருக்கும் பட்சத்தில் உங்களால் மிகவும் நம்பிக்கையுடனும், உரக்கவும், தெள்ளத் தெளிவாகவும் விளக்கமுடியும்.
அவையோருக்கு சந்தேகங்களோ அல்லது மன ஈடுபாடோ ஆர்வக் குறைவோ உண்டாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது மிக முக்கியம். உங்கள் குறிக்கோளில் நீங்கள் உறுதியாக இருங்கள். அவையோருக்கு நீங்கள் சொல்வதை நன்றாகப் புரியும்படி விளக்குங்கள். நீங்கள் சொல்ல விரும்புவதை ஆணித்தரமாக எடுத்துச்சொல்லுங்கள் அதன் மூலம் அவையோருக்கு அதிக ஈடுபாடு ஏற்படும், உங்கள் முன்னிறுத்தலும் வெற்றியடையும்.
சில முக்கியமான பயன் தரும் குறிப்புகளும், தொழில் நுணுக்கங்களும்:
உங்கள் முன்னிறுத்தல் வெற்றிகரமாக அமைய:
முடிந்தவரை அதிகமான புள்ளிவிவரங்களையும், குழம்ப வைக்கக்கூடிய தகவல்களையும் தவிர்த்துவிடுங்கள். அப்படிப்பட்ட விவரங்களை தனியாக அச்சடித்து பிறகு படித்து பார்க்கும் விதத்தில் கையில் கொடுத்துவிடுங்கள்.
உங்கள் விளக்கத்தின்போது குறிப்பிட்ட ஒரு வார்த்தையை மறந்துவிட்டால் ஒரு கணம் நிறுத்தி உங்களின் குறிக்கோளை மனதில் கொண்டு வாருங்கள். இதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையை மறந்திருந்தாலும், உங்களின் நோக்கம் மாறாமலும் புதிய பல கருத்துக்களும், எண்ணங்களும் தோன்றக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.
உங்களுக்கு வெற்றிகிட்டும் என்பதில் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.
நிதானமாக மூச்சை விட்டுக்கொண்டு ஆரம்பியுங்கள்
ஆரம்பிப்பதற்குமுன் அவையோருக்கு ஏதாவது தேவவப்படுகிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள்.
பலவிதமான காட்சி சார்ந்த துணைக்கருவிகள் பயன்படுத்தும்பொழுது பார்வையாளர்களை நேராகப் பார்த்து விளக்கக்கூடிய வகையில் உங்களுடைய இடத்தை அமைத்துக்கொள்ளுங்கள். எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் முதுகைப் பார்வையாளர்கள் பார்க்கக் கூடிய விதத்தில் திரும்பிக்கொண்டு நிற்காதீர்கள்.
ஏற்கெனவே விளக்கியப்படி ஒரே வில்லையில் அதிகமான விவரங்களை எழுதுவதைத் தவிறுங்கள். சிலர் முன்னிறுத்தல் அளிக்கவேண்டுமென்றால் ஏற்கெனவே சேமிக்கப்பட்டிருக்கும் விவரங்களை அப்படியே வெட்டி ஒட்டி விடுகிறார்கள். இது மிகவும் தவறான செயல். ஒரு கருத்து இரண்டு அல்லது மூன்று வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருத்துகளுக்கு வரிசைப் புள்ளிகளோ அல்லது வரிசை எண்களோ (bullets or serial number) கொடுப்பது நல்லது.
காட்சி வில்லைகளை (slides) பயன்படுத்தும் முறை:
எல்லா வில்லைகளும் ஒரே அமைப்பில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். முதல் வில்லையைப் போலவே எல்லா வில்லைகளும் ஒரே வண்ணத்திலும் எழுத்துருவிலும் இருப்பது நலம்.
பின்திரை வண்ணம் (background color) எழுத்துக்களை மறைக்காதவாறு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். பொதுவாக வெண்மை அல்லது வெளிர் நீலம் நன்றாக இருக்கும்.
வில்லைகளில் ஒரே எழுத்துருவை உபயோகியுங்கள், தலைப்பு, துணைத்தலைப்புகளுக்கு எழுத்தின் அளவு கொஞ்சம் பெரிதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
வரைப்படங்களில் அதிக வண்ணங்களைத் தவிர்க்கவும்
தேவையில்லாத வில்லைகளை நீக்கி விடுங்கள். (மறதியினால் நீக்காமல் பல குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன)
இந்த முன்னிறுத்தலை மட்டும் தனியாக பெயரிட்டு சேமித்து வையுங்கள். ஒரு நகலும் எடுத்து வையுங்கள் (சில சமயம் உங்கள் கணினி வேலை செய்யாமல் போய் விடும் பொழுது வேறு கணினியைப் பயன்படுத்தலாம்)
உங்களின் முன்னிறுத்தலை அச்செடுத்து வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
வரைப்படங்களை தவறுதலாகச் சொடுக்கும் பொழுது சில சமயம் அது அதன் மூல மென்பொருளுக்குப் போய்விடும். அதனால் வரைப்படம் முடிந்தவுடன், மூல மென்பொருளின் இணைப்பைத் துண்டித்து விடுங்கள்.
எழுத்துக்களும், படங்களும் குதிப்பதும் நடனமாடுவதும் போன்ற இயக்கமூட்டல்களை (animation) முடிந்தவரை தவிர்த்திடுங்கள். இவை பல சமயங்களில் முன்னிறுத்தலின் குறிக்கோளிலிருந்து தடம் மாற்றிவிடும் சக்திக்கொண்டவை. முடிந்த வரை மிகவும் எளிமையாக சொல்லவந்த விஷயத்தைச் சார்ந்ததாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
பார்வையாளர்களை நேரடியாகப் பார்க்கவேண்டும்
ஒரே பார்வையாளரைப் பார்த்துப் பேசாமல் அனைவரையும் மாறி மாறிப் பார்த்துப் பேசவேண்டும்.
உங்களது முன்னிறுத்தல் விறுவிறுப்பாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சிறிது விறுவிறுப்புக் குறைந்தாலும், பார்வையாளர்களின் ஈடுபாடு குறைந்து விடும். சிலர் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள்.
நடு நடுவே புத்துணர்ச்சியூட்டும் விதத்தில் நகைச்சுவையைக் கலந்துப் பேசுவது மிகவும் பயன் தரும்.
உங்கள் முன்னிறுத்தலை ஒளிப்படமாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்காக நீங்கள் தனியாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் சரியான இடத்தில் உங்கள் ஒளிப்படக்கருவியை பொருத்திவைத்துவிட்டால் போதும்.
முடிவுரை:
முன்னிறுத்தல் பற்றி ஏற்கனவே நண்பர்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். நான் ஒரு சிறிய முயற்சி எடுத்திருக்கிறேன். ஏதாவது குறைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். உங்கள் ஐயங்களையும் எழுதவும். எனக்குத் தெரிந்தவரை விளக்க முயற்சிக்கிறேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி.
இந்தியாவில் வெளியூர்களில் முன்னிறுத்தல் அளிக்கப் போகும்போது மறக்காமல் கீழ்க்கண்ட பொருட்களையும் எடுத்துச்செல்ல வேண்டும்.
பொருத்துக்குழி, தாங்கு குழி (Socket)
செருகி (Plugs)
ஊசி, பொருதிக்கம்பி, செருகாணி (செருகி ஆணி), ஆணி (Pin)
மின்வடம், மின்கம்பி (cable, wire)
வெண்திரை (white screen)
ஒளிப்படக் காட்டி: (Projector)
தகவல் தொழில்நுட்பம்
இணையம்
|
7191
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
|
சார்புக் கோட்பாடு
|
ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இரு பெரும் கோட்பாடுகளான சிறப்புச் சார்புக் கோட்பாடு (Special Relativity) மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடு (General Relativity) ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து பொதுவாக சார்புக் கோட்பாடு (Theory of Relativity) என்று கூறப்படுகிறது.
சார்புக் கோட்பாடு பின்வரும் கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்துகிறது:
கணக்கிடப்படும் வெவ்வேறு அளவுகள், பார்வையாளரின் திசைவேகத்தைப் பொறுத்தே அமையும். குறிப்பாக, காலமும் வெளியும் விரிந்தோ சுருங்கியோ இருக்கலாம்.
வெளிநேரம்: வெளியும் காலமும் ஒருசேரவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்; ஒன்றைப் பொறுத்து மற்றொன்று அமையும்.
அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒளியின் வேகம் ஒரு மாறிலியாகும்.
சார்புக் கோட்பாடு அல்பர்ட் ஐன்ஸ்டீனால் முன்வைக்கப்பட்ட பிரபலமான கோட்பாடாகும். E = mc2 என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐன்ஸ்டீன் உணர்த்தினார்.
சிறப்புச் சார்புக் கோட்பாடு
சிறப்புச் சார்புக் கோட்பாடு (special theory of relativity) என்னும் கொள்கை ஆல்பர்ட் ஐன்ஸ்டினால் 1905ல் வெளியிடப்பட்ட கருத்தாக்கமாகும். இது துகள்களின் இயக்கம் தொடர்பானது. இது எந்தவொரு இயக்கமும் சார்பானது என்றும், எதுவும் தீர்க்கமானதாக இருக்காது என்றும் ஒரு கருத்தை முன் வைத்தது. இதற்கு முன்னரே 1687 ஆம் ஆண்டில் சர். ஐசக் நியூட்டன் பொருட்களின் இயக்கங்கள் தொடர்பான விதிகளை வெளியிட்டிருந்தார். இவ்விதிகள் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புபட்ட இயக்கங்களுக்குப் பொருத்தமாக அமைந்தது.
சிறப்புச் சார்புக் கோட்பாட்டின் கருதுகோள்கள்
சிறப்புச் சார்புக் கோட்பாடு இரண்டு கருதுகோள்களைக் கொண்டுள்ளது.
ஒளியின் வேகம் மாறாத் தன்மை- கவனிப்பவர்களுடைய சார்பு வேகம் எதுவாக இருப்பினும், அவர்கள் எல்லோருக்கும் ஒளியின் வேகம் ஒன்றே.
எந்தவொரு சடத்துவக் குறியீட்டுச் சட்டத்திலும் இயற்பியல் விதிகள் ஒன்றே. சார்பு நிலையில் துகள் ஒன்றுடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும், சோதனைச் சாலையில் நிலையாக இருக்கும் ஒருவருக்கும் இயற்பியல் விதிகள் ஒன்று என்பதே இதன் பொருள்.
பொதுச் சார்புக் கோட்பாடு
பொதுச் சார்புக் கோட்பாடு என்பது 1916ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் வெளியிடப்பட்ட ஈர்ப்புக்கான வடிவவியல் கோட்பாடு ஆகும். பொதுச் சார்பின் மையக் கருத்து வெளியும் நேரமும் வெளிநேரம் எனப்படுவதன் இரண்டு அம்சங்கள் என்பதாகும். வெளிநேரம் அதில் இருக்கும் பொருள், ஆற்றல், உந்தம் என்பவற்றின் காரணமாக வளைந்து காணப்படுகிறது
எடுத்துக்காட்டுகள்
ஒரு மானிடன் பேருந்தின் உள் ஓடிக் கொண்டிருக்கும் போது அதைப் பேருந்திற்கு வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஓடுபவர் பேருந்தின் வேகத்திலேயே ஓடுவதாய்த் தோன்றும். (உதாரணம்: ஒரு மணி நேரத்துக்கு 100 கி.மீ.) ஆனால் பேருந்தின் உள் அமர்ந்திருந்து பார்ப்பவர்களுக்கு அந்த மானிடர் ஒரு மணி நேரத்துக்கு 20 கி.மீ. வேகத்திலேயே ஓடுவதாய் தெரியும். அதன் காரணம் சிறப்புச் சார்புக் கோட்பாடு ஆகும். பேருந்தின் உள் இருந்து பார்ப்பவர் ஏறக்குறைய ஓடும் மானிடரின் வேகத்திலேயே பேருந்தில் செல்வதால் அவருக்கு மானிடரின் ஓட்ட வேகம் குறைவாகவே தெரியும். ஆனால் பேருந்திற்கு வெளியே இருப்பவர் நின்று கொண்டிருப்பதால் அவருக்கு அம்மானிடரின் ஓட்ட வேகம் அதிகமாகத் தெரியும்.
தற்போது பேருந்தில் வெளியே இருந்து பார்த்தவர் அடுத்த பேருந்தில் ஏறிச் செல்கிறார் எனில் அவரின் எடை கூடும். பேருந்து போகும் திசையில் அவர் சுருங்குவார். அவரின் கடிகாரம் சற்று மெதுவாக ஓடும். ஆனால் இவற்றின் மாறுபாடுகளை கணிப்பது மிகவும் கடினமாகும். அவரின் கைக்கடிகாரத்தின் நேர வித்யாசம் ஒரு நொடியில் பல கோடி கோடி மடங்குகள் குறைவாக இருப்பதால் அதை மானிடர் எளிதாக உணர முடியாது.
இதைப் போன்ற எளிதில் புரிந்து கொள்ள முடியாததாய் ஐன்சுடீன் தந்த விளக்கங்கள் அமைந்ததால் இவருடைய இந்தக் கோட்பாடுகளுக்கு எதிர்ப்பும் வந்தன.
நியூட்டன் விதிகளும் சார்ப்புக் கோட்பாடும்
நியூட்டனின் விதிகளின் படி குறைவான வேகத்தையும் குறைந்த ஈர்ப்பு விசையையும் கொண்ட அண்டப் பொருட்களின் தன்மைகளையே கண்டறிய முடியும். வேகமாகவோ அதிக ஈர்ப்பு விசையோடு இயங்கும் அண்டப் பொருட்களின் தன்மைகளையோ நியூட்டன் விதிகளின் படி கணிப்பதில் பிழைகள் நேரலாம். இதற்கு உதாரணமாக புதன் கோளின் சுற்றுப் பாதையிலும் இரட்டை மீயொளிர் விண்மீன்களின் சுற்றுப்பாதைகளிலும் உள்ள தன்மைகளை கணிப்பதில் உள்ள பிழைகளைக் கூறலாம். ஆனால் இதை ஐன்சுடீனின் சார்ப்புக் கோட்பாட்டின் படி பிழையில்லாமல் கணிக்க முடியும்.
அதன் காரணம் இங்கு அதனால் நியூட்டனின் விதிகள் பெருமளவு புவியின் உள்ளும் ஐன்சுடீனின் சார்புக் கோட்பாடு வானியல் ஆராய்ச்சிகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன.
புகழும் இகழும்
அல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு சார்புக்கொள்கை பெரிய புகழை பெற்றுத் தந்தது. அவர் இதை கண்டறிந்ததற்காக நிகோலஸ் கோபர்நிகஸ், கெப்லர், ஐசக் நியூட்டன் போன்றவர்களோடு ஒப்பிடப்பட்டார். சார்புக்கொள்கை கண்ட அல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு யூத மதத்தவர் என்பதால் அவரை நேரடியாக விமர்சிக்காமல் சார்புக் கொள்கையை புரிந்து கொள்வதில் இருந்த இடர்களை காட்டி விமர்சித்தனர்.
சிறப்புச் சார்புக் கோட்பாட்டை விமர்சித்தவர்கள்
எட்மன்டு விட்டேகர் (1954)
ஜெரால்டு ஹால்டன் (1960)
கேசுவானி (1965)
ஆர்தர் மில்லர் (1973)
ஆப்ரகாம் பயசு (1982)
எலிய் சகார் (1983)
ஜான் சுடேச்சல் (1995)
பீட்டர் கலிசன் (2002)
கிரிசுடோபர் ஜான் (2003)
ஒலிவர் தரிகோல் (2004)
அனட்டோலி அலெக்சுவிச்சு இலகுனோவ் (2004)
ஹார்வே பிரவுன் (2005)
ரோஜர் செர்ப் (2006)
சால் கட்ஜர் (2005)
சுகாட் வால்டர் (2005, 2007)
பொதுச் சார்புக் கோட்பாட்டை விமர்சித்தவர்கள்
விட்டேகர்
அல்பர்சிடு ஃபொல்சிங் (1993)
கொரி/ரென்/சுடேச்சலும் வின்டர்பெர்கும் (1197/2003)
அனட்டோலி அலெக்சுவிச்சு இலகுனோவ் (2004)
வியூன்சும் சோமரும் (2005)
டேவிட் ரோவ் (2005)
சார்புக் கொள்கையின் சிறுபான்மைப் பார்வை
சார்புக் கொள்கை அனைத்து நவீன கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இக்கொள்கையே நவீன இயற்பியலுக்கு மாதிரியாய்க் கருதப்படுகிறது. ஐன்சுடீன் தான் சார்புக் கொள்கையை கண்டறிந்தவர் என்று பலர் கூறினாலும் சிலர் இவருக்கு முன்னரே தாங்கள் சார்புக் கொள்கையை கண்டுள்ளோம் என்றும் கூறியிருக்கின்றனர்.
மேலும் பார்க்க
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
சிறப்புச் சார்புக் கோட்பாடு
பொதுச் சார்புக் கோட்பாடு
வெளிநேரம்
மூல நூல்
வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், .
வெளி இணைப்புகள்
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/02/050207_einstein.shtml
இயற்பியல் கோட்பாடுகள்
|
7206
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
எண்சட்டம்
|
[[படிமம்:Gregor Reisch, Margarita Philosophica, 1508 (1230x1615).png|right|thumb|250px|Calculating-Table by Gregor Reisch: Margarita Philosophica. The woodcut shows Arithmetica instructing an algorist and an abacist (inaccurately represented as Boethius and பித்தாகரசு). There was keen competition beween the two from the introduction of the Algebra into Europe in the 12th century until its triumph in the 16th.]]எண்சட்டம் அல்லது அபக்கசு (Abacus) என்பது, முக்கியமாக ஒரு சில ஆசிய நாடுகளில் எண்கணித செயற்பாடுகளில், பயன்படுத்தப்பட்ட ஒரு கணிப்பீட்டுக் கருவியாகும். தற்காலத்தில், இந்த எண்சட்ட கருவியானது மூங்கிலாலான செவ்வக வடிவ சட்டத்தில், குறுக்காக உள்ள இணைப்புக்களில், மணிகளைக் கோர்த்து உருவாக்கப்படுகிறது. ஆனால், ஆரம்ப காலத்தில் இது மண், கல், மரம் அல்லது உலோகத்தில் ஏற்படுத்தப்படும் நீண்ட, குறுகிய பள்ளமான அமைப்புக்களில், பயற்றம் விதைகள் அல்லது சிறிய கற்களை வைத்து நகர்த்துவதுபோல் அமைக்கப்பட்டிருந்தது. தற்கால எண்களுக்குரிய எழுத்து வடிவம் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த எண்சட்ட முறையானது தோன்றியிருந்தபோதிலும், தற்காலத்திலும், பல ஆசிய, ஆபிரிக்க பிரதேசங்களில் வியாபாரிகள், வர்த்தகர்கள், எழுத்தர்களால் இம்முறை பரந்தளவில் பயன்பட்டு வருகிறது.
அபக்கஸ் (Abacus) என்பது Abq (மிருதுவான மணல் என்பது பொருள்) என்ற அரேபிய சொல்லில் இருந்தோ, அல்லது Abax (table, frame) என்ற கிரேக்க வார்த்தையில் இருந்தோ வந்திருக்க முடியும் என்பது ஆராச்சியாளர்களின் கருத்து. அபக்கஸ் என்ற சொல்லானது கி.பி. 1387 இல் பாவனைக்கு வந்ததாகவும், மணல் எண்சட்டத்தை குறிக்க லத்தீன் மொழியிலிருந்து இந்தச் சொல் பெறப்பட்டதாக அறியப்படுகிறது.
வரலாறு
கணிதம்
கணிதம் (Math அல்லது Maths) என்று நாம் பொதுவாக நோக்கும்போது எமக்கு உடனடியாக தோன்றுவது இலக்கங்களும், அதன் செய்முறைகளும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல்), அத்துடன் உருவ அமைப்புக்களும்தான் (shapes).
ஆனால் கணிதம் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடனும், அதன் பிரயோகங்களுடனும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் ஒரு அறிவியல் சாதனமாகும். கணிதத்தின் தேவை எமது அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும். இதனால்தான் கலிலியோ "கணிதத்தின் உதவியால் நாம் இவ்வுலகத்தையே அறியலாம்" என்று கூறினார். ஆரம்ப காலங்களில் கணிதம் என்பது எண்கணிதம் (arithmetic) (எண்களின் உபயோகம், அதன் அடிப்படை இயல்புகள், செய்முறைகள்) என்ற அடிப்படை தொகுதியாக இருந்த போதிலும், தொடர்ந்த காலங்களில் மேலும் பல தொகுதிகளாக (அட்சர கணிதம் (algebra), கேத்திர கணிதம் (geometry), நுண்கணிதம் (calculus) இப்படி பல பிரிவுகளாக) பிரிக்கப்பட்டு அறிவியல் சார் வல்லுனர்களுக்கு மிகவும் பயனுடையதாக பரிணமித்து விட்டது.
பண்டைய நாகரீகம்
இவ்வுலகத்தில் இருந்த பண்டைய நாகரீகங்கள் (ancient civilizations) யாவும் தமது காலங்களில் ஓரளவுக்கு கணிதத்தை வளர்த்து விட்டுள்ளன. சில காலங்களில் கணித வளர்ச்சியானது ஒரு நாகரீகத்தில் இருந்து வேறொரு நாகரீகத்துக்கு பரவியுள்ளது. உதாரணமாக, ஆரம்ப கணித செயற்பாடுகள் கி.மு 20 ஆம் நூற்றாண்டில், எகிப்து (Egypt), பபிலோன் (Babylon) போன்ற இடங்களில் ஆரம்பித்து, பின்பு கிரேக்கத்தில் (Greece) தொடர்ச்சியாக வளர்ச்சியுற்றது. கணித சம்பந்தமான ஆவணங்கள் அரபு மொழியில் (Arabic) இருந்து கிரேக்க மொழிக்கும் (Greek), மற்றும் கிரேக்க மொழியில் இருந்து அரேபிய மொழிக்கும் மொழி பெயர்க்கப்பட்டன. அதே நேரம் இந்திய மொழியில் இருந்தும் அரபு மொழிக்கு கணித ஆவணங்கள் மொழி பெயர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.
கணிதத்தின் பரிணாமம்
இதன்பின்பு கணித ஆவணங்கள் யாவும் லத்தின் (Latin) மொழியில் வாசிக்க கூடியவாறு மாற்றப்பட்டது. இப்படியாக வளர்ச்சியடைந்த கணிதம்தான் பல நூற்றாண்டுகளின் பின்பு மேற்கு ஐரோப்பாவில் மேலும் பல விதமான வளர்ச்சிகளைக் கண்டு தற்போது சர்வதேச கணிதமாக பரிணமித்துள்ளது. இக்கால கட்டங்களில் ஒரு சில கணிதத்துறைகளில், குறிப்பிடத்தக்க வளர்ச்சியானது ஐரோப்பா தவிர்ந்த ஏனைய கீழைத்தேய நாடுகளில், குறிப்பாக சீனா, தென்னிந்தியா, யப்பான் போன்ற நாடுகளில் நடை பெற்றுள்ளது. இவற்றின் பயன்கள் தற்போதுள்ள சர்வதேச கணிதத்தில் மறைக்கப்பட்டு விட்டாலும், அவை இன்றும் அந்த நாடுகளில் அவர்களுடைய பாரம்பரிய கணிதமாக கருதப்பட்டு, நடை முறையில் இருக்கின்றது.
ஆதிகால கணிதம்
எண்களுக்குரிய எழுத்து வடிவம் அறியப்படாமல் இருந்தபோது எவ்வாறு எண்கணித மதிப்பீடுகளை கணித்திருக்கமுடியும் என்பது தற்போது சிந்திப்பதற்கு சிறிது கடினமான விடயம். ஆனால் இப்படியான வசதிகள் மற்றும் எழுத்து வடிவம் என்பன இல்லாதபோது மனிதன் தனது கை விரல்களை உபயோகித்து எண்களை இனம் கண்டான். விரல்களின் எண்ணிக்கையை விட கூடுதலான பொருட்கள் தென்பட்டபோது கற்கள், மணிகள், உலோகங்கள் என்பவற்றின் உதவியை நாடினான். பெரும்பாலும் ஒப்பீட்டு முறையிலேயே அவன் எண்களை தரம்பிரித்தான். இதன் தொடர்ச்சியாகத்தான் இவ்வாறான மதிப்பீடுகள் செய்வதற்கு ஒரு கருவியின் அவசியம் அவனுக்குத் தேவைப்பட்டது. அவ்வாறான காலத்தில் தோன்றியதுதான் அபக்கஸ் (Abacus) எனப்படும் எண்கணிதக் கருவியாகும்.
மெசபத்தோமியா
இதுதான் முதன் முதலில் தோன்றிய ஒரு கணிப்பொறி ஆகும். கி.மு. 500 ஆம் ஆண்டில் சீன நாகரீகத்தின்போது இது பாவனைக்கு உகந்ததாக இருந்தபோதும், கி.மு. 400 ஆம் ஆண்டில் மெசபதோமியா (Mesopotamia) நாகரீகத்தில் உருவாகிய 'மணல் அபக்கஸ்'தான் (sand abacus) அக்காலத்தில் பிரபல்யமாக இருந்தது. இது பலகையால் அல்லது களி மண்ணினால் ஆன ஒரு செவ்வக வடிவான தட்டு ஆகும். இதன்மீது மிருதுவான மணலை நிரப்பி, அதில் பல கோடுகளை வரைவதன் மூலம் அம்மணல் பல பாகங்களாக பிரிக்கப்பட்டது. அதில் உள்ள நிரல்கள் யாவும் வெவ்வேறு எண் நிலைகளைக் குறித்தது. இதில் வியாபாரத்தின் நிமித்தம் சந்தைக்கு கொண்டு வரப்படும், விற்கப்படும் பொருட்களின் எண்ணிக்கைகள் வெவ்வேறு வடிவங்களாக அல்லது உருவங்களாக மணற்கோடுகளிடையே வரையப்பட்டு கணக்கிடப்பட்டது.
பபிலோனியா
இதன் தொடர்ச்சியாக கி.மு. 300 ஆம் ஆண்டில் சலவைக்கல்லால் (marble) ஆன கணிதப்பலகை ஒன்று பபிலோனியரால் (Babilonians) அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பலகையில் சமாந்தரமாக பல கோடுகள் வரையப்பட்டு, அக்கோடுகளுக்கிடையில் சிறு கோலிகளை (marble balls) உபயோகித்து கணித அளவீடுகளைக் கணித்தார்கள். இக்கருவியானது பரவலாக எகிப்து, ரோம், கிறீஸ், இந்தியா உட்பட பல பண்டைய நாகரீகங்களால் உபயோகப்படுத்தப்பட்டது. இதனை நாம் இப்போதும் ஏதன்ஸ் (Athens) நகரில் உள்ள அரும்பொருட்காட்சிச்சாலையில் பார்க்க முடியும். பிரபலமான இந்தக் கணிப்பொறியை "சலாமி அபக்கஸ்" (Salami abacus) என்று அழைத்தனர். இது 1846 ஆம் ஆண்டில் சலாமித்தீவில் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.
ரோமானியா
சலாமி அபக்கஸ் பாவனையில் இருந்த காலத்தில், அதனை விட சிறந்த அமைப்புடைய செப்பு உலோகத்தாலான கணிதப்பொறி (Hand abacus, Grooved abacus) ஒன்றை ரோமானியர்கள் அறிமுகப்படுத்தினார்கள். இது கிட்டத்தட்ட கி.பி. 500 ஆம் ஆண்டுவரை பாவனையில் இருந்ததாக வரலாறு கூறுகின்றது.
சீனர்களின் மணிக்கணிதம்
இதன் பின்புதான் சீனர்களின் மணிகள் பாவித்து கணக்கிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அம்முறையே மணிக்கணிதம்''' எனவும் அழைக்கப்படுகிறது. இக்கருவியும் ஓரளவு ரோமானியர்கள் பாவித்த கணிப்பொறி போன்ற அமைப்பை கொண்டிருந்தாலும், பல மாற்றங்களையும் கொண்டிருந்தது. முக்கியமாக இது பலகைச் சட்டங்களாலும், மணிகளாலும் ஆக்கப்பட்டு இருந்ததால் இதன் நிறை மற்றைய கருவிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக இருந்தது. இதனைச் சீனர்கள் சுயன் பான் (Suan-pan) என அழைத்தனர்.
இது ஒரு செவ்வக வடிவமுடைய சட்டமொன்றில் மணிகளைக் கோர்த்து அமைக்கப்பட்ட உருவமாகும். இங்கு மணிகளை நாம் நிரல்களாக அவதானிக்க முடியும். நிரல்களாக உள்ள மணிகள் ஒரு குறுக்குச் சட்டத்தால் (cross bar) இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மேற்பாகத்திலும் (upper deck), கீழ் பாகத்திலும் (lower deck) முறையே 2 மணிகள், 5 மணிகள் என்ற விகிதத்தில் அடுக்கப்பட்டுள்ளன. இதனை பொதுவாக 2/5 அபக்கஸ் என்று அழைத்தனர். இந்த 2/5 அபக்கஸ் இல் 1650 ஆம் ஆண்டுவரை மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்த போதும், 1/5அபக்கஸ் (அதாவது 1 மணி மேற் பகுதியிலும், 4 மணிகள் கீழ் பகுதியிலும்) சீனாவில் நடை முறைக்கு வந்தது. ஆனாலும் 1/5 அபக்கஸ் முறை சீனாவில் மிகவும் அரிதாகவே பாவிக்கப்பட்டது.
யப்பானில் எண்சட்டம்
இந்த 1/5 அபக்கஸ் ஆனது கொரியாவினூடாக யப்பானுக்கு (Japan) சென்று அங்கு சொறோபான் (Soroban) என்ற பெயரில் பிரபல்யமாகியது. பின்பு யப்பானியர் 1930 ஆம் ஆண்டளவில் அதனை 1/4 அபக்கஸ் ஆக மாற்றி, அதற்கும் சொறோபான் என்று பெயரிட்டார்கள்.
யப்பானியர்களின் அபக்கஸ் (soroban) அமைப்பு மிகவும் இலகுவானதாகும். இதனை நாம் விளையாட்டுப் பொருட்களைக்கொண்டு உருவாக்கிவிடமுடியும். ஒரு செவ்வக வடிவான சட்டத்தில் குறுக்காக 13 நேரிய, மெலிதான, உருளை வடிவான தடிகள் பொருத்தப்பட்டு, அவற்றில் மணிகள் அடுக்கப்படுகின்றன. ஆரம்ப நாட்களில் 9 அல்லது 13 தடிகள் பாவிக்கப்பட்டு வந்திருந்தாலும், தற்போது, பெருக்கல் (multiplication), பிரித்தல் (division), தசமதானங்களில் கணிதச் செயல்முறைகளைச் செய்வதற்கும், மற்றும் இலக்கமொன்றுக்கு வர்க்க மூலம் (square root), கனமூலம் போன்றவற்றை கணிப்பதற்கும் இலகுவாக 13 - 25 நிரல்கள் பாவிக்கப்படுகிறது. இந்த நிரல் மணிகளை இரு பகுதிகளாகப் பிரிப்பதற்கு, ஒரு குறுக்குச் சட்டம் (cross bar) உபயோகப்படுகிறது. குறுக்குச் சட்டத்தின் மேற்பாகத்தில் நிரலுக்கு ஒரு மணியும், கீழ்ப் பாகத்தில் நிரலுக்கு 4 மணிகளும் கோர்க்கப்பட்டு உள்ளன. மணிகளை மேல்பாகத்தில் இருந்தும், கீழ் பாகத்தில் இருந்தும், குறுக்குச் சட்டத்திற்கு அருகாக கொண்டு வருவதன் மூலம் இலக்கங்கள் குறிக்கப்படுகின்றன. மணிகளை குறுக்குச் சட்டத்தின் அருகாக கொண்டு வருவதை அடுக்குதல் (stacking) என்றும், குறுக்குச் சட்டத்தில் இருந்து தூரமாக தள்ளி வைப்பதை மீளப்பெற்றுக் கொள்ளல் (withdrawing) என்றும் அழைக்கலாம்.
ரஷ்யா
17 ஆம் நூற்றாண்டில் ரஷ்யரும் Stschoty என்ற அபக்கஸ் ஐ அறிமுகப்படுத்தினார்கள்.
பாடசாலை எண்சட்டம்
உலகெங்கும் பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியில் எண்களின் பயன்பாட்டுக்கும், எண்கணிதக்கல்விக்கும் எண்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. மேலைத்தேய நாடுகளில் நிலைக்குத்தான சட்டங்களில் குறுக்காக செல்லும் கம்பிகளில் கோர்க்கப்பட்டிருக்கும் மணிகளைக் கொண்டதே இவ்வமைப்பாகும் (படத்தைப் பார்க்கவும்). இது பிளாஸ்டிக் அல்லது மரத்தாலான விளையாட்டுப் பொருளாகவும் பயன்படுகிறது. இங்கு மணிகள் அமையப்பட்டிருக்கும் இடத்திற்கான பெறுமைதியைக் காட்டாமல், வெறும் எண்களையே குறிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100 வரையான எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்கால பாவனை
தற்போதும் அபக்கஸ் முறையானது மக்களால் பாவிக்கப்படுகின்றது. சீனாவில் 2/5 அபக்கஸ் (suan-pan) பாவனையில் இருந்தாலும், சீனாவிற்கு வெளியே, குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளில் 1/4 அபக்கஸ் (soroban) பிரபல்யமாக இருக்கிறது. சீனா, யப்பான் போன்ற நாடுகளில் வியாபார நிலையங்களில், வங்கிகளில், பாடசாலைகளில் எண்கணிதச் செய்முறைகளைச் செய்வதற்கு இதனை உபயோகிக்கின்றார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் இது எண்கணிதம் படிப்பதற்கு ஒரு கருவியாகப் பாவிக்கப்படுகிறது. ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் முதலாம் வகுப்பில் இருந்தே அபக்கஸ் முறையில் எண்கணித செயற்பாடுகள் கற்பிக்கப்படுகின்றன. அபக்கஸ் படிப்பதன் மூலம், மாணவர்கள் தமது கணிதத் திறனையும், புத்தி சாதுரியத்தையும் மேம்படுத்தலாம் என்பது அறிஞர்களின் கருத்து.
இம்முறையில் பயில்வதற்கு எமக்கு 0 முதல் 10 வரையிலான எண்களுக்குள் எவ்வாறு கூட்டல், கழித்தல் செய்ய முடியும் என்பது தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது. அதைக் கொண்டே மிகப் பெரிய எண்களையும் நாம் கையாள முடியும். அபக்கஸ் முறையை ஐந்து வயதிலிருந்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்குவது அவர்களது மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் எனவும், எண்களைப் பற்றிய அறிவு உள்ளுணர்விலேயே அதிகரிக்கும் எனவும் தனது மதிப்பீடுகள் பற்றிய அவர்களது நம்பிக்கையை வளப்படுத்தும் எனவும் அறிஞர்கள் நம்புகின்றனர். கூட்டல், கழித்தல் கணக்குகளை இலகுவாக செய்யவும், மிகப் பெரிய எண்களை எளிதில் கையாளவும் முடியும். இதனால் கூர்ந்து கவனிக்கும் திறன் அதிகரிக்கும்.
மேலும் பார்க்க
நழுவு சட்டம்
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புக்கள்
The Abacus: A brief history
"The Abacus: A History"
A History: Invention of the Abacus
Min Multimedia
Abacus in Various Number Systems at cut-the-knot
Java applet of Chinese, Japanese and Russian abaci
An atomic-scale abacus
Examples of Abaci
Aztex Abacus
கணினி அறிவியல்
எண்கணிதம்
கணிதக் கருவிகள்
கிரேக்கக் கணிதம்
இந்தியக் கணிதவியல்
|
7216
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
|
டி. எஸ். சேனநாயக்கா
|
டி. எஸ். சேனநாயக்கா (Don Stephen Senanayake, , அக்டோபர் 20, 1884 - மார்ச் 22, 1952) இலங்கையின் முதலாவது பிரதமரும், அரசியல்வாதியும் ஆவார். பௌத்தரான இவர் கொழும்பில் கல்கிசையில் உள்ள பரிதோமாவின் கல்லூரியில் பயின்றார். பின்னர் சிறிது காலம் நில அளவை திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். அதன் பின் தனது தந்தையாருக்கு சொந்தமான இறப்பர்த் தோட்டத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டார்.
1929 இல் இலங்கை சட்டவாக்கப் பேரவையில் ஓர் உறுப்பினரானார். 1931 அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்டதுடன் வேளாண்மை, காணி அமைச்சரானார். வேளாண் மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். 1946 இல் பிரித்தானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சேர் பட்டத்தை மறுத்தார். எனினும் பிரித்தானியருடன் நல்லுறவை விரும்பினார். 1947 இல் நடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இலங்கையின் முதலாவது பிரதமரானார். 1948 பெப்ரவரி 4ல் பிரித்தானியக ஆதிக்கம் முடிவுற்றதும் முழு இலங்கையையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார். கல்லோயா திட்டத்தினைத் தொடங்கி வைத்தார். 1952 இல் குதிரைச் சவாரியின் போது விழுந்து காயமடைந்து இறந்தார். இவருக்கு பின் இவரது மகன் டட்லி சேனாநாயக்க இலங்கையின் பிரதமரானார்.
மேற்கோள்கள்
1884 பிறப்புகள்
1952 இறப்புகள்
இலங்கைப் பிரதமர்கள்
இலங்கை பௌத்தர்கள்
இலங்கை அரசியல்வாதிகள்
இலங்கை அரசாங்க சபை உறுப்பினர்கள்
இலங்கை சட்டசபை உறுப்பினர்கள்
இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சிங்கள அரசியல்வாதிகள்
இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்
இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
|
7223
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF
|
கோலுயிரி
|
கோலுயிரி அல்லது கோலுரு பாக்டீரியா அல்லது கோலுரு நுண்ணுயிரி (Bacillus) என்பது குச்சி அல்லது கோல் போன்ற உருவத்தையுடைய பசிலசு (Bacillus) எனும் பேரினத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் ஆகும். இந்த பேரினத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் கிராம்-நேர் பாக்டீரியாக்கள் ஆகும். இவை கட்டாயமான காற்றுவாழ் (Aerobic organism), அல்லது அமையத்துக்கேற்ற காற்றின்றிவாழ் (Anaerobic organism) உயிரினமாக இருக்கும்.
பாக்டீரியாக்கள் உருவவியல் அடிப்படையில், மூன்று வகையாகப் பிரிக்கப்படும்போது, அவற்றில் ஒரு வகையாக இந்தக் கோலுயிரி (Bacillus) என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய இரு வகைகளும் கோளவுயிரி, சுருளியுயிரி என்பனவாகும். பொதுக் கருத்தைக் கொள்கையில், உருவவியல் அடிப்படையில், அனைத்து கோல் வடிவ உயிரினமும் கோலுயிரிகளே. எனவே கோல் வடிவம் கொண்ட அனைத்து உயிரினங்களும், பொதுவில் கோலுயிரி என்று அழைக்கப்பட முடியுமென்பதனால், இந்தச் சொல் சிலசமயம் கருத்து மயக்கத்தைத் தரக் கூடும். எடுத்துக் காட்டாக எசரிக்கியா கோலை என்ற கிராம்-எதிர் பாக்டீரியா கோல் வடிவில் இருப்பதனால், பொதுக் கருத்தில் கோலுயிரி என அழைக்கப்பட முடியுமாயினும், இந்த பாக்டீரியா பசிலசு பேரினத்தைச் சார்ந்ததல்ல.
பாக்டீரியாக்கள்
|
7224
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
|
பாக்டீரியா
|
பாக்டீரியா (இலங்கை வழக்கு: பற்றீரியா, ஆங்கிலம்: Bacteria) என அழைக்கப்படுபவை நிலைக்கருவிலி பிரிவைச் சேர்ந்த நுண்ணுயிரிகளில் மிகப்பெரிய ஆட்களத்தில் உள்ள உயிரினங்கள் ஆகும். பொதுவாகச் சொல்வதென்றால் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் வகைகளில் ஒரு பிரிவுக்கு பாக்டிரியாக்கள் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது எனக் கூறலாம். பாக்டீரியா என்னும் சொல் கிரேக்கச் சொல்லாகிய βακτήριον, (baktērion, பா'க்டீரியொன்) என்பதில் இருந்து வந்தது (இது βακτρον என்பதன் சுருக்கம் என்கிறது ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி). பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள உயிரினம் ஆகும். மண், நீர், புவியின் ஆழமான மேலோட்டுப் பகுதி, கரிமப் பொருட்கள், தாவரங்கள் விலங்குகளின் உடல்கள் என்று அனைத்து இடங்களிலும் வாழும். சில வகை பாக்டீரியாக்கள் உயிரிகளுக்கு உகந்ததல்லாத சூழல் எனக் கருதப்படும் வெந்நீரூற்றுக்கள், கதிரியக்க கழிவுகள் போன்றவற்றிலும் வாழும் தன்மை கொண்டனவாக உள்ளன. இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழும் திறனைக் கொண்டவையாக இருக்கின்றன.
பெரும்பாலான பாக்டீரியாக்கள் ஒரு கலம் மட்டும் கொண்டதாகவும் நுண்ணோக்கியில் மட்டும் பார்க்க வல்லதாகவும் உள்ளன. இவை உயிரணுக் கரு அற்று, பச்சையவுருமணிகள், இழைமணிகள் போன்ற கல நுண்ணுறுப்புக்கள் ஏதுமின்றி மிக எளிய கல அமைப்பை கொண்டுள்ளன. இவை கோளவுரு, கோலுரு, சுருளியுரு போன்ற பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன.
தாவரங்கள், பூஞ்சைகள் போல் பாக்டீரியாக்களும் வழக்கமாக கலச்சுவரைக் கொண்டிருந்தாலும் அவற்றின் அடக்கக்கூறுகள் மாறுபட்டவையாகும். பெரும்பாலானவை நகரிழைகள் துணை கொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்கின்றன. எனினும், இவை பிறகுழுக்கள் பயன்படுத்தும் நகரிழைகளில் இருந்து வேறுபட்டவை.பாக்டீரியாக்களில் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய கொடிய பாக்டீரியாக்களும் உள்ளன.
மனித உடலில், மனித உயிரணுக்களை விட 10 மடங்கிற்கு அதிகமாகவே பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. தோலும், குடலுமே மிக அதிகளவில் பாக்டீரியாக்களைக் கொண்ட உடல் பகுதிகளாகும்.. மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை காரணமாக, இவற்றில் அநேகமானவை உடலுக்குத் தீங்கு விளைவிக்காத நிலையிலேயே இருக்கும். ஒரு சில நன்மை பயக்கும் பாக்டீரியாக்களாகவும் இருக்கும். அதேவேளை சில பாக்டீரியாக்கள் நோய்க்காரணிகளாகத் தொழிற்பட்டு,
தொற்றுநோய் விளைக்கும் நுண்ணுயிரிகளாகவும் இருக்கும். நோய் விளைக்கும் நுண்ணுயிரிகளில் அநேகமானவை பாக்டீரியாக்களாகும். ஊட்டச்சத்து மீள்சுழற்சியிலும் (nutrient cycles) பாக்டீரியாக்கள் மிக முக்கிய பங்காற்றி, தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற உதவுகின்றன.
வரலாறு
1676 இல், முதன் முதலாக தானாகவே தயாரித்த ஒற்றை வில்லை நுணுக்குக்காட்டியினூடாக (single-lens microscope), பாக்டீரியாவை அவதானித்தவர் அன்டன் வான் லீவன்ஃகூக் என்பவராவார். அவர் தான் அவதானித்ததை "animalcules" எனப் பெயரிட்டு, Royal Society க்கு பல கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தினார். பின்னர், 1838 இல் கிறிசிடியன் கொட்பிரைட் எகிரன்பெர்க் (Christian Gottfried Ehrenberg) என்பவரே பாக்டீரியா என்ற சொல்லைப் பாவித்தார்.
உருவவியல்
இவற்றுள் பல மிகச்சிறிய அளவுடையதாகும்; வழக்கமாக 0.5-5.0 µm நீளம் இருக்கும். எனினும் Thiomargarita namibiensis, Epulopiscium fishelsoni போன்றவை கிட்டத்தட்ட 0.5 மி.மீ அளவு வளரக்கூடியதாகவும், வெறும் கண்களால் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும். பாக்டீரியாக்களின் உருவம் அநேகமாக கோளவடிவிலோ, கோல் வடிவிலோ இருக்கும். கோள வடிவானவை கோளவுரு நுண்ணுயிர் (கொக்கசு - Coccus) எனவும், கோல் வடிவானவை கோலுரு நுண்ணுயிர் (பசிலசு - Bacillus) எனவும் அழைக்கப்படும். சில இவற்றிலிருந்து சிறிது வேறுபட்ட வடிவங்களிலோ, சுருளி வடிவிலேயோ காணப்படும். வேறும் சில மிக நுண்ணியவையாகவும், கலச்சுவர் அற்றதாகவும் இருக்கும். அவை மிகுநுண்ணுயிர் (மைக்கோபிளாசுமா - Mycoplasma) என அழைக்கப்படும். இந்த மிகுநுண்ணுயிரானது அதி பெரிய வைரசின் அளவில், கிட்டத்தட்ட 0.3 µm பருமனையுடைய, மிகவும் சிறிய பாக்டீரியாவாகும்.
கலக் கட்டமைப்பு
பக்டீரியக் கலங்கள் உலகில் மிகச்சிறிய கலங்களை ஆக்கின்றன. இவை பொதுவாக மைக்ரோமீற்றரில் அளவிடப்படும் வீச்சில் காணப்படுகின்றன. எனினும் இவை கலத்தினுள் பல்வேறு கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன. மெய்க்கருவுயிரி கலத்துக்கு ஒப்பிடக்கூடியளவுக்குச் சிக்கலான அனுசேபத்தைக் கொண்டுள்ளன. பொதுவாக மெய்க்கருவுயிரிக் கலங்களின் பத்திலொரு பகுதியின் அளவிலேயே இவை காணப்படுகின்றன.
பாக்டீரியக் கலங்கள் ஏனைய அனைத்துக் கலவகைகளைப் போல பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வால் சூழப்பட்டுள்ளன. பொதுவாக இவற்றில் மெய்க்கருவுயிரிகளில் காணப்படுவது போல மென்சவ்வால் சூழப்பட்ட புன்னங்கங்கள் காணப்படுவதில்லை. பாக்டீரியாக்களில் மென்சவ்வால் சூழப்பட்ட கருவோ, இழைமணியோ, பச்சையுருமணியோ காணப்படுவதில்லை. எனவே இவை அர்க்கியாக்களுடன் இணைந்து நிலைக்கருவிலி கல ஒழுங்கமைப்பைக் காட்டுகின்றன. ஒளித்தொகுப்பில் ஈடுபடும் பாக்டீரியாக்களில் ஒளித்தொகுப்புப் புடகங்கள்/ தைலக்கொய்ட் மென்சவ்வு எனப்படும் கலத்தக மென்சவ்வுக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஏனைய பக்டீரியாக்களிலும் இதற்கு ஒப்பான கலத்தக மென்சவ்வுகள் காணப்படுகின்றன. ஆனால் டி.என்.ஏயைச் சூழ எந்தவொரு மென்சவ்வும் காணப்படுவதில்லை.
பாக்டீரியாக்களில் திட்டமான கரு காணப்படுவதில்லை. டி.என்.ஏ சுயாதீனமாகக் கலத்தின் குழியவுருவில் வளைய நிறமூர்த்தம்/ வளைய டி.என்.ஏயாகக் காணப்படும். டி.என்.ஏயுடன் இசுட்டோன் புரதம் சேர்ந்து மெய்க்கருவுயிரிகளை ஒத்த நிறமூர்த்தக் கட்டமைப்பை உருவாக்குவதில்லை. பாக்டீரியாக்களில் மெய்க்கருவுயிரிகளினதை விடச் சிறிய இரைபோசோம் காணப்படுகின்றது. இவை 70S வகை இரைபோசோம்களாகும். பாக்டீரியாக்களில் கிளைக்கோசன் போன்ற சேதனச் சேர்வைகளின் உணவொதுக்குகளும் காணப்படுகின்றது. சயனோபாக்டீரியாக்களில் ஆக்சிசன் வாயுவைச் சேமிக்கும் வாயுச் சேமிப்புகளும் உள்ளது. சேமித்துள்ள ஆக்சிசன் வாயுவைப் பயன்படுத்தி சயனோபாக்டீரியாக்களால் நீரில் மிதக்கக்கூடியதாக உள்ளது.
பாக்டீரியாக்களின் கலச்சுவர் மிகவும் தனித்துவமானது. பாக்டீரியக் கலச்சுவரைக் கொண்டே அவை ஏனைய உயிரினங்களிலிருந்து பிரித்தறியப்படுவதுடன் அவற்றினுள்ளும் வகைப்படுத்தப்படுகின்றன. அனைத்து பக்டீரியாக்களிலும் பெப்டிடோகிளைக்கனாலான (peptidoglycan) கலச்சுவர் காணப்படுகின்றது. கலச்சுவரின் கட்டமைப்பு வேறுபாட்டால் பாக்டீரியாக்களின் இரு வகைகளும் கிராம் சாயமேற்றலுக்கு வெவ்வேறு விளைவைக் கொடுக்கின்றன. கிராம் நேர் பக்டீரியாக்களில் தடிப்பான பெப்டிடோகிளைக்கன் கலச்சுவர் உள்ளது. கிராம் எதிர் பாக்டீரியாக்களில் மெல்லிய பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரும் அதற்கு வெளியே இலிப்போ-பல்சக்கரைட்டு மென்சவ்வும் காணப்படுகின்றன.
இனப்பெருக்கம்
பாக்டீரியாக்கள் பிரதானமாக இருகூற்றுப் பிளவு மூலம் இனம்பெருகுகின்றன. இதன் போது பாக்டீரியாவின் டி.என்.ஏ இரட்டிப்படைந்து இரு வளைய டி.என்.ஏக்கள் உருவாக்கப்படும். இதன் பின் மிக எளிமையாக கலம் இரண்டாக பிளக்கப்படுகின்றது. இவ்விருகூற்றுப் பிளவு கலம் ஓரளவுக்கு வளர்ச்சியடைந்த பின்னரே நடைபெறும். சரியானளவுக்குப் போசணை வழங்கப்பட்டால் அல்லது தற்போசணை பாக்டீரியா ஆயின் சரியான வளர்ச்சி நிபந்தனைகள் காணப்பட்டால் பாக்டீரியாக்கள் மிக வேகமாக இரட்டிப்படைகின்றன. இருகூற்றுப் பிளவு மிகவும் எளிமையான இனப்பெருக்க முறையென்பதால் பாக்டீரியாக்களின் இனப்பெருக்க வேகம் மிக அதிகமாகும். எனினும் இயற்கையில் உணவுத் தட்டுப்பாடு, போட்டி காரணமாக பாக்டீரியாக்கள் அவ்வளவு வேகமாக இனம்பெருகுவதில்லை.
சக்தி மூலமும் அனுசேபமும்
பக்டீரியாக்களில் அனுசேப முறையில் மிகப்பாரியளவான பல்வகைமை காணப்படுகின்றது. இதனாலேயே கடலின் அடிப்பகுதி முதல் நாம் உண்ணும் உணவிலும், எம் குடலிலும் மேலும் நாம் அவதானிக்கும் அனைத்து இடங்களிலும் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. சில தற்சார்பு உயிரிகளாகவும், சில பிறபோசணிகளாகவும் உள்ளன. சில தம் சக்திக்காக சூரிய ஒளியையும், சில இரசாயனங்களையும், சில சேதனச் சேர்வைகளையும் நம்பியுள்ளன. பல பக்டீரியாக்களின் டி.என்.ஏயில் மிகவும் சிக்கலான உயிரிரசாயனச் செயல்முறைகளை நிகழ்த்துவதற்கான பாரம்பரியத் தகவல் சேமிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை தயிருற்பத்தி, சேதனப் பசளை உற்பத்தி, பாற்கட்டி உற்பத்தி, சூழல் மாசுக்களை நீக்கல், செம்பு,தங்கம் போன்ற உலோகங்களைப் பிரித்தெடுத்தல் போன்ற பல்வேறு கைத்தொழில் உற்பத்திகளில் பயன்படுத்த முடியும். இவ்வனைத்து உபயோகங்களுக்கும் பாக்டீரியாக்களில் உள்ள அனுசேபப் பல்வகைமையே காரணமாகும்.
கைத்தொழில் ரீதியிலான பயன்கள்
பல்வேறு உணவு மற்றும் குடிபான உற்பத்திகள் பக்டீரியாக்களின் செயற்பாட்டால் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலுற்பத்திப் பொருட்களான தயிர், யோகர்ட், பாற்கட்டி, சீஸ் போன்றவை பாக்டீரியாக்களின் நொதித்தல் செயற்பாடு மூலமே சாத்தியமாகின்றன. வினாகிரி உற்பத்தியில் Acetobactor பாக்டீரியா பயன்படுத்தப்படுகின்றது.
சில பாக்டீரியாக்களால் ஐதரோகார்பன்களையும் பிரிகையடையச் செய்ய முடியும். எனவே சமுத்திரங்களில் கப்பல்கள் மூழ்குவதால் ஏற்படும் மசகெண்ணைக் கசிவை நீக்க பாக்டீரியாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில பாக்டீரியாக்களை பூச்சிகொல்லிகளாகவும் பயன்படுத்த முடியும். இரசாயன் பூச்சிகொல்லிகளால் சூழற்சமநிலை பாதிக்கப்படும் ஆனால் அவற்றிற்குப் பதிலீடாக பாக்டீரியாக்களைப் பயன்படுத்தினால் உயர் விளைச்சல் கிடைப்பதுடன் சூழற்சமநிலையும் பேணப்படுதல் பக்டீரியாக்களின் குறிப்பிடத்தக்க நன்மையாகும். Bacillus thuringiensis எனும் மண்ணிலுள்ள பாக்டீரியாவே பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லி பாக்டீரியாவாகும்.
தங்கம் உருவாக்கக்கூடிய பாக்டீரியா
கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் (Cupriavidus metallidurans) மற்றும் டெல்ப்டியா அசிடோவரன்சு (Delftia acidovarans) போன்ற சிலவகைப் பக்டீரியாக்கள் நீர்ம நிலையில் உள்ள தங்க குளோரைடு என்ற பயனற்ற, நச்சுத்தன்மையான சேர்மத்தை தங்க நானோ துணிக்கைகளாக மாற்றவல்லன என்று சில ஆய்வுகளில் அறியப்பட்டுள்ளது. மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் கியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் தூய 24 காரட் தங்கத்தை உருவாக்க கூடியன என்று கண்டறிந்துள்ளனர். இவை தங்கக் குளோரைடை தமது உயிரணுவில் எடுத்துக்கொண்டு அவற்றை நானோ தங்கத்துகள்களாக உருமாற்றி வெளிவிடுகின்றன. ஆய்வின் போது ஆய்வுகூடத்தில் ஒரு வாரம் கழித்து பார்த்த போது தங்க குளோரைடு, திடத் தங்கமாக (தங்கக் கட்டி) மாறியிருந்தது
பக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்
பாக்டீரியாக்கள் மனிதர்களின் பிரதான நோய்க்காரணிகளாகும். எனினும் இதுவரை அறியப்பட்ட பக்டீரிய இனங்களில் அனேகமானவை நோயைத் தோற்றுவிப்பதில்லை. பல பக்டீரிய இனங்கள் மனிதர்களின் குடலிலும், தோலிலும் ஒரு விதத் தீங்கும் புரியாமல்/ ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. ஏற்பு வலி, நெருப்புக் காய்ச்சல், டிப்தீரியா, குடற் காய்ச்சல், கொலரா, தொழு நோய், சிபிலிஸ், காச நோய், உணவு நஞ்சாதல் போன்ற உயிராபத்தைத் தோற்றுவிக்கும் நோய்கள் பாக்டீரியாக்களால் தோற்றுவிக்கப்படுகின்றன. விலங்கு வேளான்மை மற்றும் விவசாயத்திலும் பக்டீரியாக்களால் ஏற்படும் நோய்கள் பாரிய சேதத்தையும் நட்டத்தையும் தோற்றுவிக்கின்றன. இவற்றினால் ஏற்படும் சேதத்தை/ நோய்களைத் தடுப்பதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பாக்டீரியாக்கள் அவற்றிற்கு எதிர்ப்புத்தன்மையை உருவாக்கிக் கொள்கின்றன. இதனாலேயே தகுந்த மருந்துகள் காணப்பட்டாலும் பாக்டீரிய நோய்கள் முற்றாக அழிக்கப்படவில்லை. நோயேற்படுத்தும் பாக்டீரியாக்கள் நேரடியாக இழையங்களை உணவுக்காகத் தாக்குவதாலும், உணவுக்காகப் போட்டியிடுவதாலும், நஞ்சைச் சுரப்பதாலும் நோயைத் தோற்றுவிக்கின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பாக்டீரியாக்கள்
|
7237
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
புனித பிரிஜட் கன்னியர் மடம்
|
புனித பிறிஜட் கன்னியர் மடம் கொழும்பில் இருக்கும் பிரபல பெண்கள் பாடசாலைகளுள் ஒன்றாகும். 1902 ஆம் ஆண்டு இங்கிலாந்து திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இத்திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் பழைமையான ஒன்றாகும். இங்கு சிங்கள மொழி மூலமும், தமிழ் மொழி மூலமும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
வரலாறு
1902 ஆம ஆண்டு அதி வணக்கத்துக்குரிய Dr. T. A. Melizan கொழும்பு பேராயராக இருந்தபோது அவரது வழிநடத்தலின் கீழ் நல்லாயன் கன்னியர்கள் புனித பிறிஜட் கன்னியர் மடம் பாடசாலையை ஆரம்பித்தனர்.
முக்கிய பழைய மாணவிகள்
சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க
சிறிமாவோ பண்டாரநாயக்கா
வெளி இணைப்புக்கள்
வலைத்தளம்
கொழும்பு மாவட்டப் பாடசாலைகள்
இலங்கையின் பெண்கள் பாடசாலைகள்
|
7255
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
நேர் மின்னோட்டம்
|
மின்னணுக்கள் ஓடும் வேக விகிதமே மின்னோட்டம் ஆகும். மின்னணுக்கள் ஒரே சீரான வேகத்தில், ஒரே திசையில் பயணம் செய்தால் அம்மின்னோட்டம் நேர் மின்னோட்டம் எனப்படும். சில சந்தர்ப்பங்களில் நேர் மின்னோட்டம் ஒரே துருவ மின்னோட்டத்தையும் குறித்து நிற்கும். நேர்மின்னோட்டம் ஒரே துருவ மின்னோட்டத்தை குறித்து நிற்கும் பொழுது நேர் மின்னோட்ட அழுத்த வீச்சு சீராக அமைய வேண்டியதில்லை, துருவம் ஒரே நோக்கில் இருந்தால் சரி.
மின்னோட்டம்
|
7259
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
|
வலைப்பதிவு
|
வலைப்பதிவு அல்லது வலைப்பூ (Blog) என்பது, அடிக்கடி இற்றைப்படுத்துவதற்கும், கடைசிப்பதிவு முதலில் வருமாறு ஒழுங்குபடுத்தப்படுத்துவதற்கும் என சிறப்பாக வடிவமைத்த தனிப்பட்ட வலைத்தளமாகும். இற்றைப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வாசகர் ஊடாடுவதற்குமான வழிமுறைகள், வலைத்தளங்களைக் காட்டிலும் வலைப்பதிவுகளில் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
சில நிறுவனங்கள் சாதாரண இணையப்பயனரும் இலகுவாக பயன்படுத்தும் வகையில்
இற்றைப்படுத்துவதற்குத் தயாரான நிலையில் வலைப்பதிவுகளை வடிவமைத்து வழங்குகின்றன.
வலைப்பதிவுகளை தனிப்பட்ட வழங்கிகளிலோ, வலைத்தளங்களில் ஒரு பகுதியாகவோ
வடிவமைத்து வைத்துக்கொள்ள முடியும்.
வலைப்பதிவுகளின் பொதுவான இயல்புகள்
அடிக்கடி இற்றைப்படுத்தப்படல்
பெரும்பாலும் வலைப்பதிவுகள் எல்லாவற்றுக்குமான பொது இயல்பாக அவை அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதைச்
சொல்லலாம். புதிய பதிவுகளை, ஆக்கங்களை அடிக்கடி வலைப்பதிவாளர்கள் தம்
வலைப்பதிவுகளில் வெளியிடுவர். சில வலைப்பதிவுகள் தனி நபர்களின் சொந்த
நாட்குறிப்பேடுகளாகக்கூட உள்ளன.
இலக்கு வாசகர்கள்
அநேகமான வலைப்பதிவுகள், வாசகர்களை இலக்காகக் கொண்டே
எழுதப்படுகின்றன. ஒவ்வொரு வலைப்பதிவுகளுக்கும் சிறப்பான ஒரு வாசகர் வட்டம் இருக்கும். பிளாக்கிங்கிற்கு வரும்போது, உங்கள் பார்வையாளர்களை அறிந்து கொள்வது முக்கிய கருத்தாகும். பெரும்பாலான வலைப்பதிவுகள் ஒரு குறிப்பிட்ட வாசகர் வட்டத்தை மனதில் கொண்டு எழுதப்படுகின்றன, மேலும் அந்த குறிப்பிட்ட குழுவின் ஆர்வங்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளடக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பதிவராக, உங்கள் வாசகர்கள் யார், அவர்கள் எதைப் பற்றி படிக்க விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இது உங்கள் பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்க உங்களுக்கு உதவும் மற்றும் மேலும் பலவற்றிற்கு அவர்களை மீண்டும் வர வைக்கும்.
=== வாசகர் ஊடாட்ட
ம் ===
தொழிநுட்ப அடிப்படையில் வாசகர் ஊடாடுவதற்கென வலைப்பதிவுகள்
சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பதிவுகளைப் படித்த வாசகர்கள் அதற்கான தமது
எதிர்வினையை, கருத்துக்களை மறுமொழிகளாக உடனடியாகவே அவ்வலைப்பதிவில் பதிவு
செய்துகொள்ளக்கூடிய வசதி வழங்கப்பட்டிருக்கும். மறுமொழிகளை அடுத்து வரும் வாசகர்கள்
பார்க்கக்கூடியதாயிருக்கும். தேவையேற்படும் பட்சத்தில் மறுமொழிகள் விடயத்தில்
வலைப்பதிவாளர் மட்டுறுத்தல்களையும் மேற்கொள்ள முடியும். முழு திரைப்படத்தையும் பார்க்க உங்களுக்கு நேரம் இல்லையென்றால் என்ன செய்வது?
நெட்ஃபிக்ஸ், ஹுலு மற்றும் அமேசான் பிரைம் போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகளின் அதிகரிப்புடன், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு முன்பை விட அதிக அணுகல் உள்ளது. இருப்பினும், இது ஒரு செலவில் வந்துள்ளது; பெரும்பாலான ஸ்ட்ரீமிங் சேவைகள் இப்போது வரையறுக்கப்பட்ட தேர்வை வழங்குகின்றன மற்றும் அவற்றின் உள்ளடக்கத்திற்கு பெரும்பாலும் அபத்தமான அதிக விலையை வழங்குகின்றன.
செய்தியோடை வசதி
வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் உடனுக்குடன் செய்தியோடைகள் வழியாக அனுப்பப்படும். இவ்வசதியைப் பயன்படுத்தி வாசகர்கள் தமக்குப்பிடித்த
வலைப்பதிவுகளின் செய்தியோடைகளை தத்தமது கணினிகளில் அதற்கான மென்பொருட்களின் உதவியுடன்
இணைத்துக்கொண்டு, வலைப்பதிவுகளுக்குச் செல்லாமலேயே இற்றைப்படுத்தல்களைக் கணினியில்
பெற்றுக்கொள்ளலாம். இச்செய்தியோடை வசதியே, வலைப்பதிவுத்
திரட்டிகளையும், வலைப்பதிவர் சமுதாயங்களையும்
சாத்தியப்படுத்தியுள்ளது.
வலைப்பதிவொன்றின் பகுதிகள்
வலைப்பதிவொன்றில் பொதுவாக இருக்கக்கூடிய பகுதிகள் அல்லது உறுப்புக்களாகப் பின்வருவனவற்றைக்
குறிப்பிடலாம்.
வலைப்பதிவுத் தலைப்பு
வலைப்பதிவுகள் தமக்கென பெயரொன்றைக் கொண்டிருக்கும். இப்பெயர் வலைப்பதிவின் உள்ளடக்கம் பற்றிய
சிறு அறிமுகத்தை வாசகர்களுக்கு சில வேளைகளில் கொடுக்கக்கூடும். பெரும்பாலும்
வித்தியாசமான, கவரத்தக்க தலைப்புக்கள் வழங்கப்படுகின்றன.
விவரிப்பு/சுலோகம்
வலைப்பதிவர், தனது வலைப்பதிவு பற்றியோ, அதன் நோக்கங்கள் பற்றியோ விவரிக்கும் ஓரிரு
சொற்களை, வரிகளை இது கொண்டிருக்கும். சிலவேளை, விளையாட்டாக,
நகைச்சுவைக்காகக்கூட இது எழுதப்பட்டிருக்கும். வலைப்பதிவர் விரும்பும் வாசகமொன்றாகக்கூட
இது அமையலாம்.
பதிவின் தலைப்பு
ஒவ்வொரு பதிவும் (அல்லது பதிப்பிக்கும் ஆக்கங்களும்) தலைப்பொன்றினைக் கொண்டிருக்கும்.
வலைப்பதிவுத் திரட்டிகளில் உறுப்பினராக உள்ள வலைப்பதிவர்கள், இத்தலைப்புக்களை மிக
கவர்ச்சிகரமாகவும், பதிவின் உள்ளடக்கத்தை ஓரளவுக்கேனும் தெரியப்படுத்தும் விதமாகவும்
அமைப்பர்.
பதிவு/உள்ளடக்கம்
இதுவே வலைப்பதிவில் அடிக்கடி இற்றைப்படுத்தப்படும் பகுதியாக இருக்கும். இவ்வுள்ளடக்கம்
எழுத்தாக்கமாகவோ, ஒலி வடிவமாகவோ, சலனப்படக் காட்சியாகவோ, படமாகவோ
அமையலாம். இவ்வுள்ளடக்கம் இணையத்தின் பொதுவான உள்ளடக்கங்களைப் போன்று மீயுரை
வடிவங்களுக்கே உரித்தான பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கலாம்.
மறுமொழிகள்
பதிவின் உள்ளடக்கத்தைப் படிக்கும் வாசகர்கள் வலைப்பதிவொன்றில் பதிவுசெய்த மறுமொழிகள் இங்கே
காட்சிப்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள மறுமொழிகளோடு, புதிதாக மறுமொழி இடுவதற்கான
தொடுப்பும் அங்கே இருக்கும்.
இடுகைகளுக்கான தனிப்பக்கங்கள்
வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் காண்பிக்கப்படும் இடுகைகளை விட, ஒவ்வொரு இடுகைக்கென்றும்
தனித்தனிப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அவ்விடுகைகளுக்கான மறுமொழிகளையும் அப்பக்கங்களில்
காணலாம். அனைத்துப் பக்கங்களும் தமக்கெனத் தனியான முகவரிகளைக் கொண்டிருக்கும்.
இப்பக்கங்கள் வலைப்பதிவொன்றின் முகப்பில் தொடுப்பாகச் சேர்க்கப்பட்டிருக்கும். பொதுவாக அண்மையில்
எழுதிய பத்து, இருபது இடுகைகளின் தொடுப்புக்கள் தலைப்புக்களோடு முகப்பில்
பட்டியலிடப்பட்டிருப்பதை வலைப்பதிவுகளில் காணலாம்.
சேமிப்பகம்
வலைப்பதிவு தொடர்ச்சியாக இற்றைப்படுத்தபட்டு வருவதால், முன்னர் எழுதிய பதிவுகள் முகப்புப்பக்கத்தில் இடம்பெறாமலோ,
பட்டியலிடப்படும் தனிப்பக்கங்களில் கூட இடம்பிடிக்காமலோ போகலாம். அவற்றை வாசகர்கள் பார்ப்பதற்கும்,
வலைப்பதிவொன்றின் அத்தனை ஆக்கங்களும் பட்டியலிடப்படுவதற்கும் இத்தகைய சேமிப்பகங்கள் உதவுகின்றன. சேமிப்பகம் ஓர் அவிழ் பட்டியலாகவோ தனிப்பக்கமாகவோ, சாதாரண பட்டியலாகவோ இருக்கலாம். சேமிப்பகத்தில் பதிவுகள் மாதவாரியாகவோ, வார வாரியாகவோ பட்டியற்படுத்தப்பட்டிருக்கலாம்.
தொடுப்புகள்
வலைப்பதிவரது விருப்பங்களுக்கு ஏற்ப, வெளி இணையத்தளங்களுக்கான தொடுப்புகள் வலைப்பதிவில்
கொடுக்கப்பட்டிருக்கும்.
மேலதிக நிரற் துண்டுகள்
வலைப்பதிவரின் நிரலாக்க அறிவு, தேவை என்பவற்றைப் பொறுத்து பல சிறப்பான பணிகளை ஆற்றக்கூடிய நிரல் துண்டுகள்
வலைப்பதிவொன்றில் சேர்க்கப்பட்டிருக்கலாம். வருனர்களின் எண்ணிக்கையை அறியவோ, அல்லது எழிலூட்டுவதற்காகவோ இவை
பொருத்தப்பட்டிருக்கலாம்.
சிறந்த எடுத்துக்காட்டாக, தமிழ்மணம் திரட்டியில் இணைந்திருக்கும் தமிழ் வலைப்பதிவர்களில் பலர், தமது வலைப்பதிவிலே
அத்திரட்டியினால் வழங்கப்படும் சிறப்புப் பட்டை ஒன்றினைப் பொருத்தியிருப்பர்.
வலைப்பதிவோடு தொடர்புடைய தமிழ்க் கலைச்சொற்கள்
வலைப்பதிவு; பதிவு
வலைப்பதிவர்; பதிவர், வலைப்பதிவில் எழுதுபவர், இணையம் மூலமாக தனது கருத்துக்களையும், சிந்தனைகளையும் முன்வைக்கும் கட்டுப்படுத்த முடியாத ஒரு ஊடகவியலாளர்.
வாசகர் - வலைப்பதிவினைப் பார்ப்பவர்கள்.
பின்னூட்டம்/கருத்து / மறுமொழி - வாசகரால் வலைப்பதிவின்மீது செய்யப்படும் கருத்து வழங்கல்கள்.
செய்தியோடை; ஓடை - - இற்றைப்படுத்தல்களை உடனுக்குடன் பரிமாற உதவும் xml முகவரி
தட்டெழுதல் - வலைப்பதிவுகளை விசைப்பலகை கொண்டு உள்ளிடுதல். "தட்டச்சு செய்தல்" என்ற பழைய சொல்லின் தொழிநுட்பரீதியான மருவல்.
நிரலாக்கம் – ஆணைத்தொடர்களை எழுதுதல்
நிரல் துண்டு - சிறப்பான தேவைகளுக்கென வலைப்பதிவொன்றில் பொருத்தப்படும் மேலதிக ஆணைத்தொடர். அநேகமாக ஜாவாஸ்க்ரிப்ட், HTML,XMl ஆக இருக்கலாம்
வார்ப்புரு – template - வலைப்பதிவொன்றின் அத்தனை செயற்பாடுகளையும் கவனித்துக்கொண்டு, பின்னணியிலுள்ள php போன்ற வழங்கிசார் நிரலுடன் தொடர்புகளைப்பேணி வலைப்பதிவை ஆக்கும் சட்டகம்.இது css எழிலூட்டு நிரல்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். வார்ப்புருவை மாற்றியமைப்பதன்மூலம் வலைப்பதிவொன்றின் வடிவத்தையும் செயற்பாடுகளையும் மாற்றியமைக்கலாம்.
திரட்டி - வலைப்பதிவுகளின் செய்தியோடைகளை ஓரிடத்தில் திரட்டி, இற்றைப்படுத்தல்களை உடனுக்குடன் காண்பிக்கும் வலைத்தளம், வலைச்செயலி.
வலைப்பதிவர் சமுதாயம் - திரட்டிகள் மூலம் இணைந்து தம்முள் இடைத்தொடர்புகளைப் பேணும் வலைப்பதிவர்கள்.
மட்டுறுத்தல் - பின்னூட்டங்களைப் பரிசீலித்து தேவையானவற்றை மட்டும் வலைப்பதிவில் தோன்றச்செய்தல் (எல்லாவகையான "பரிசீலிப்பின் பின்னான பிரசுரிப்பும்" இதனுள் அடக்கம்
பதிவிடல் - உள்ளடக்கத்தினை வலைப்பதிவொன்றில் பிரசுரித்தல்.
பெயரிலி/முகமூடி - தன்னை அடையாளப்படுத்தாது மறுமொழிகள் இடுபவர். தமிழ் வலைப்பதிவர் சமுதாயத்தில் பொதுவாகிப்போன சொற்கள்.(இப்பெயர்களை சில வலைப்பதிவாளர்கள் தமக்கு வைத்துக்கொண்டுள்ளனர்.)
வழங்கி - வலைப்பதிவுகளுக்குத் தேவையான கோபுக்களை வைத்திருந்து இணையத்திற்குப் பரிமாறும் சிறப்புக் கணினி.
வலைப்பதிவர் சந்திப்பு - வலைப்பதிவர்கள், தமது வலைப்பதிவர் அடையாளத்தை முன்னிறுத்திக் கூடுதல்.
கூட்டுப்பதிவு/கூட்டு வலைப்பதிவு - ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் பராமரிக்கப்படும் வலைப்பதிவுகள்.
இடுகை - வலைப்பதிவில் உள்ளடக்கம் ஒன்றினை இடும் செயல் (வினை). வலைப்பதிவொன்றில் உள்ளிடப்பட்ட உள்ளடக்கம் (பெயர்)
பின்தொடர்தல் - குறித்த இடுகை சார்ந்து எழுதப்படும் மறுமொழிகள், வெவ்வேறு இடங்களில் அதைத்தொட்டு எழுதப்படும் விடயங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் கணினியில் மென்பொருட்களின் உதவியுடன் தெரிவிக்கும் வசதி.
வலைப்பூ - வலைப்பதிவு ஆரம்பமான காலத்தில் உருவாக்கப்பட்ட கலைச்சொல். இது வலைப்பதிவையே குறிக்கும். வலைக்குறிப்பு, வலைக்குடில் போன்ற சொற்களும் வழக்கத்திலிருந்தன. தற்போது வலைப்பதிவு என்பதே பொதுச்சொல்லாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வலைத்தளங்களுக்கும் வலைப்பதிவுகளுக்குமான வேறுபாடுகள்
[[படிமம்:Thamizmanam.png|thumbnail|தமிழ் வலைப்பதிவுத் திரட்டி ஒன்று... வலைப்பதிவுகளின் இற்றைப்படுத்தல்கள் ஓரிடத்தில் திரட்டப்படுதலைக் காண்க... நன்றி: தமிழ் மணம் திரட்டி
வலைப்பதிவுகளில், புதிய வலைப்பக்கங்களை உருவாக்குவது மிகவும் இலகுவானது. ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் படிவங்களில் உள்ளடக்கத்தை உள்ளிட்டுவிட்டு இலகுவாக ஒரு விசை மூலம் சமர்ப்பித்துவிட்டால் தானாக பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுவிடும். வார்ப்புருக்கள் இந்தப் பணியைச் செய்து முடிக்கின்றன.
வாசகர்கள் உடனுக்குடன் தமது கருத்துக்களை வலைபப்திவிலேயே பதிவு செய்யும் வசதிகள் உண்டு.
வலைப்பதிவுகள் செய்தியோடையைப் பயன்படுத்தி பெரும் சமுதாயமாக திரட்டி ஒன்றினைச்சுற்றி உருவாகிக்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
நிறுவனங்கள் வலைப்பதிவுகளை வைத்திருப்பதற்கான இடவசதியையும் வார்ப்புருக்களையும் மின்னஞ்சல் போன்று இலவசமாகவே வழங்குவதால், வழங்கி, ஆள்களப்பெயர் போன்றவற்றுக்கு எந்தவிதமான கட்டணங்களும் செலுத்தவேண்டியதில்லை.
தேடுபொறிகள் தமக்கென தனியான வலைப்பதிவுத் தேடல்களை வைத்திருப்பதாலும், வலைப்பதிவுகள் எல்லாம் பெரும் வலையமைப்புடன் இணைந்திருப்பதாலும் சில நாட்களிலேயே வலைப்பதிவு உள்ளடக்கங்கள் தேடுபொறிகளில் பட்டியலிடப்பட்டுவிடும்.
செய்தியோடை வசதி, தன்னியக்க ஒழுங்குபடுத்தல்களுக்கான நிரலாக்கம் எல்லாம் சேவை வழங்குநர்களாலேயே பெரும்பாலும் தரப்பட்டுவிடுவதால், பராமரிப்பதற்கோ, உருவாக்குவதற்கோ கணினி இயல் அறிவு பெரிதாகத் தேவைப்படாது.
வலைப்பதிவின் வரலாறு
WebLog என்ற பெயர் முதன் முதலில் 17-12-1997 இல் Jorn Barger என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.
குறுக்க வடிவமான blog என்ற சொல்லை Peter Merholz என்பவரே முதன் முதலில் பயன்படுத்தினார். 1999 ஏப்ரல் அல்லது மே மாதமளவில் இவரது வலைப்பதிவின் பக்கப்பட்டையில் WebLog என்ற சொல் இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்றவாறு காண்பிக்கப்பட்டிருந்தது.
1994 இலிருந்து தனது தனிப்பட்ட வலைப்பதிவை எழுதிவரும் Justin Hall என்பவர் வலைப்பதிவின் முன்னோடிகளுள் ஒருவராக பொதுவில் கருதப்படுகிறார்.
1996 இல் Xanga'' என்ற வலைத்தளம் வலைப்பதிவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. 1997 அளவில் 100 நாட்குறிப்பேடுகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 2005 அளவில் அவற்றின் எண்ணிக்கை 50,000 இனைத் தாண்டியது, தற்போது உலக அளவில் 3639-ம் இடத்தில் உள்ளதாக அலெக்ஸா தெரிவிக்கின்றது.
ஏறத்தாழ இதே காலப்பகுதியில் blogger.com என்ற வலைப்பதிவுச் சேவை வழங்குநர்கள் தமது சேவையைத் தொடங்கினர். இச்சேவை பின்னர் 2003 பெப்ரவரியில் google நிறுவனத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டது.
முதல் தமிழ் வலைப்பதிவாளராய் கார்த்திகேயன் இராமசுவாமி''' கருதப்படுகிறார். இவரது முதல் தமிழ் இடுகை ஜனவரி 01 2003 இல் இப்பதிவு இடப்பட்டுள்ளது
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
வெளி இணைப்புக்கள்
தமிழ் வலைப்பதிவுத் திரட்டிகள்
தமிழ்BM
தமிழ்ச்சரம்
தமிழ் திரட்டி
இண்டி பிளாக்கர்
வலைப்பதிவு சேவை வழங்குநர்கள்
வேர்ட்பிரஸ்
பிளாக்கர்
Blogsome
குறிப்புகள்
வலைப்பதிவு
வலை 2.0
புதிய ஊடகம்
|
7260
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
|
மின்னழுத்த ஒழுங்காக்கி
|
சீரான மின்னழுத்தத்தை தரவல்ல இலத்திரனியல் சுற்று அல்லது கருவி மின்னழுத்த ஒழுங்காக்கி (Voltage Regulator) ஆகும். குறிப்பாக சுமை மாறினாலும் வெளிப்பாட்டில் சீரான மின்னழுத்தை தரவேண்டும். இக்கருவியை மின்னழுத்த சீர்படுத்தி என்றும் குறிப்பிடப்படுவதுண்டு.
வெளிப்படும் மின்னழுத்தத்தை தேவைப்படும் மின்னழுத்துடன் ஒப்பிட்டு அவ்வித்தியாசத்திற்கேற்ப கட்டுப்பாட்டை சீர்படுத்தி அல்லது ஒழுங்காக்கி சீரான மின்னழுத்தத்தை மின்னழுத்த ஒழுங்காக்கி தரும்.
ஒரு எளிய மின்னழுத்த ஒழுங்காக்கி சேனர் இருமுனையம் ஆகும். சேனர் இருமுனையம் ஒரு குறிக்கப்பட்ட மின்னழுத்தத்தில் கடத்த ஆரம்பிக்கும், அதன்பின்னர் மின்னோட்டத்தில் ஏற்படும் எந்த மாற்றங்களுக்கும் அக்குறிக்கப்பட்ட அளவை விட்டு சேனர் இருமுனையம் மாறாது. சேனர் இருமுனையங்களின் பயன்பாட்டு மின்னோட்ட அளவுக்குள் இலத்திரனியல் சுற்று அமையவேண்டும்.
நுட்பியல் சொற்கள்
சீரான - Constant
மின்னழுத்தம் - Voltage
சுமை - Load
வெளிப்பாடு - Output
கட்டுபாடு - Control
இருமுனையம் - Diode
கடத்தல் - Conduct
மின்னோட்டம் - Current
மின்னியல்
மின்னணுவியல்
மின் உறுப்புகள்
|
7262
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20-%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
|
நேரோட்ட - நேரோட்ட மாற்றி
|
மின் திறனை ஒரு அளவு நேரோட்ட மின்னழுத்தத்தில் இருந்து வேறொரு அளவு நேரோட்ட மின்னழுத்திற்கு மாற்றும் ஒரு கருவி நேரோட்ட - நேரோட்ட மாற்றி அல்லது நேர்-நேர் மாற்றி (DC to DC Converter) ஆகும்.
மின் கருவிகள் அல்லது கருவிகளின் உபசுற்றுக்கள் வெவ்வேறு மின்னழுத்த தேவைகளை கொண்டிருக்கும். ஆனால், பொதுவாக ஒரு தரப்பட்ட நேரோட்ட மின்னழுத்தமே கிடைக்ககூடியதாக இருக்கும். அச்சமயங்களில் நேர்-நேர் மாற்றிகள் கிடைக்கும் மின்னழுத்தம் அளவில் இருந்து தேவைப்படும் அளவுக்கு மாற்ற பயன்படுகின்றன.
மின்ழுத்தப் பங்கிடுவி ஒரு அளவில் இருந்து இன்னொரு அளவுக்கு மாற்ற பயன்படலாம். ஆனால், இவ்வழிமுறைக்கு பாரிய குறைபாடுகள் உண்டு. அவை:
மின்னழுத்தம் ஒழுங்காக்கம் செய்யாதது
சுமையின் அளவு தெரிய வேண்டும்
குறைந்த திறன், கூடிய வெப்ப வெளிப்பாடு
தரப்பட்ட மின்னழுத்துக்கு மீறி கூடிய மின்னழுத்துக்கு மாற்ற முடியாது
எதிர்மறை மின்னழுத்தம் தோற்றவிக்க முடியாது
மின் உறுப்புகள்
ja:電源回路#直流入力直流出力電源(DC to DC )
|
7266
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
மின்கடத்தி
|
மின்கடத்தி (Conductor) அல்லது கடத்தி என்பது மின்னோட்டத்தை இலகுவாக அனுமதிக்கும் பொருள் ஆகும். அனேக உலோகங்கள் நல்ல கடத்தும் தன்மை கொண்டவை. வெள்ளி, செப்பு, பொன், அலுமினியம், இரும்பு, இரசம் ஆகிய உலோகங்கள் கடத்திகள் ஆகும். மின்கம்பிகளும் கடத்திகளால் ஆனவையே.
பொருட்களின் கடத்தல் தன்மையை அல்லது மின்கடத்து திறனை ஓம் விதி விபரிக்கின்றது. ஓம் விதி ஒரு கடத்தியின் மின்னோட்டத்திற்கும் பிரயோகிக்கப்படும் மின்புலத்திற்கும் நேர் விகித தொடர்பு உண்டு என்கின்றது. அந்நேர் விகித தொடர்பை சமனாக்கும் காரணியே மின்கடத்து திறன் எனப்படும்.
கணித விபரிப்பு
மின்னோட்டம் (j), மின்புலம் (E), கடத்துதிறன் (σ) ஆகியவற்றுக்கான தொடர்பை பின்வரும் சமன்பாடு விபரிக்கின்றது:
j = σ E
தலைகீழாக தடைத்திறனை (ρ) பின்வரும் சமன்பாடு விபரிக்கின்றது:
j = E / ρ
எளிய உலோகங்களின் கடத்து திறனை பின்வரும் சமன்பாடு விபரிக்கின்றது:
,
τ - தணிவுறு காலம் - Relaxation time
n - சுயாதீன இலத்திரன்களின் அடர்த்தி - density of conduction electrons
e - இலத்திரன் மின்னணு அளவு - electron charge
m - இலத்திரன் மெதுகை - electron mass
நுட்பியல் சொற்கள்
உலோகம் - Metal
ஓம் விதி - Ohm Law
நேர் விகித தொடர்பு - Directly Proportional Relationship
மின்கடத்து திறன் - Electrical Conductivity
மின்தடு திறன் - Electrical Resistivity
மின்னியல்
|
7267
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D
|
சப்கொமன்டான்ரி மார்க்கோஸ்
|
சப்கொமன்டான்ரி மார்க்கோஸ் (Subcomandante Marcos) மெக்ஸிகோவில் இயங்கும் தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அவ்வியக்கத்தின் ஊடகத் தொடர்பாளரும் ஆவார். 2006 ஆரம்பத்தில் அவர் தன் பெயரை டெல்காடொ சீரோ என்று மாற்றிக்கொண்டார். இவர் ஒரு இடதுசாரி போராளி ஆவார். இவரது போராட்டங்கள் மெக்சிகோவின் முதல் குடிமக்கள் உரிமைகளை முன்வைத்து அமைகின்றன. இவரின் போராட முறை பின் நவீனத்துவ கூறுகளை அல்லது நுட்பங்களை கொண்டுள்ளது என்பர்.
இவற்றையும் பார்க்க
தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை
வெளி இணைப்புகள்
A Place Called Chiapas - a 1998 Documentary by Nettie Wild about the Zapatista movement.
Conversations with Don Durito - a collection of Marcos' stories explaining Zapatista resistance through the voice of the beetle Don Durito.
Interview with Marcos
EZLN and Subcomandante Marcos official web page
மெக்சிக்கோ
அமெரிக்க இடதுசாரி தலைவர்கள்
1957 பிறப்புகள்
வாழும் நபர்கள்
|
7275
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
|
வேலுப்பிள்ளை பிரபாகரன்
|
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே அல்லது 18 மே 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
உலகத் தமிழர்கள் இவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் இவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி படுகொலையில், இவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் இவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். அத்துடன் இவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள். பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது. மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.
சிறுவயது அனுபவங்கள்
பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் இவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை இவர் கேள்விப்பட்டார். இவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை இவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் இவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று இவர் முடிவு செய்தார்.
ஆரம்பக் கல்வியும் போராட்ட ஈடுபாடும்
பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ஆம் வகுப்பு வரையிலும் கல்வி கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ஆம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரனின் போக்கு இவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.
பிரபாகரன் கூற்றுகள்
"இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி."
'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.'
"ஒரு தவறு நடந்தால் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்."
"உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார்.
"வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்."
"ஏதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போராளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்."
"செய் அல்லது செத்துமடி."
பிரபாகரன் சிற்பம்
நாகப்பட்டினம் மாவட்டத்தில், தெற்குப்பொய்கைநல்லூர் எனும் ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் பிரபாகரனுக்கு சுதை சிற்பம் அமைக்கப்பட்டது. இரண்டு குதிரை சிலைகளும், ஒரு யானை சிலையும் அமைக்கப்பட்டு அதில் ஒரு குதிரை வீரன் சிலையும், மற்றொரு குதிரை அருகே பிரபாகரன் சிலையும் அமைக்கப்பட்டது. பிரபாகரன் கையில் துப்பாக்கியுடனும், விடுதலைப் புலிகள் சீருடையுடனும் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.
2015 சூலை மாதம் இந்த சிலை இரவில் அகற்றப்பட்டு சிமெண்ட் தளம் போடப்பட்டது. ஊர்மக்கள் இவ்வாறு காவல் துறையினரே செய்தனர் என தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சடையாண்டிகுப்பம் எனும் ஊரில் உள்ள ஐயனார் கோயிலில் வீரப்பன் மற்றும் பிரபாகரனின் சுதை சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 2010 இல் கட்டப்பட்ட ஐயனார் கோயிலில் இவ்வாறு சிலைகள் இருப்பதை அறிந்த காவல்துறையினர் மக்களிடம் அவற்றை அகற்ற கூறியுள்ளனர்.
தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் இருந்து பிரபாகரன் சிலை அகற்றப்பட்டது குறித்து சூன் 2015 இல் சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டார். அதில் பிரபாகரன் சிலையை மீண்டும் நிறுவ நாம் தமிழர் கட்சி முயலும் என்றார். வைகோவும் இந்த சிலை உடைப்பிற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.
குடும்பம்
பிரபாகரன் 1 அக்டோபர் 1984 இல் மதிவதனியை திருமணம் செய்து கொண்டார். இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிரபாகரன் குடும்பத்தின் எஞ்சிய உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை என்று மே 2009 இல் கூறினார். "நாங்கள் அவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்கவில்லை, அவற்றைப் பற்றி எந்த தகவலும் இல்லை" என்று அவர் கூறினார். முழுக் குடும்பமும் அழிக்கப்பட்டதாக கருதப்படுகிறது; மதிவதனி, துவாரகா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் சடலங்கள் பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் ஒரு புதர் திட்டில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது இவரது 12 வயது மகன் தூக்கிலிடப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரபாகரனின் பெற்றோர், திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதி ஆவர். 70 வயதில், வவுனியா நகருக்கு அருகில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மெனிக் பண்ணை முகாமில் காணப்பட்டனர் . தங்களை விசாரிக்கவோ, தீங்கு செய்யவோ அல்லது மோசமாக நடத்தப்படவோ மாட்டோம் என்று இலங்கை இராணுவமும் அரசாங்கமும் பொதுமக்களுக்கு உறுதியளித்தன. சனவரி 2010 இல் வேலுப்பிள்ளை இறக்கும் வரை அவர்கள் இலங்கை இராணுவக் காவலில் வைக்கப்பட்டனர். பிரபாகரனுக்கு வினோதினி ராஜேந்திரன் என்ற சகோதரி உள்ளார்.
ஊடகங்களில்
தபால்தலை வெளியீடு
பிரான்சில் உள்ள செயற்பாட்டாளர்கள் இவரது உருவப்படத்தைக் கொண்ட தபால்தலையை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரான்சின் அஞ்சல் துறை அங்கீகாரம் அளிக்கவில்லை. இத்துடன் தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலர், புலிக்கொடி ஆகியவற்றைக் கொண்ட தபால்தலை முத்திரைகளும் வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகம் கண்டனம் வெளியிட்டது.
குற்றச்செயல்கள்
வேலுபிள்ளை பிராபாகரன் தீவிரவாதம் , கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக 1991 முதல் பன்னாட்டுக் காவலகம் அமைப்பால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். மேலும் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் 1991இல் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டார்.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
பொன். சிவகுமாரன்
இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
மேலும் படிக்க
M.R.Narayan Swamy. (2003). Inside an Elusive Mind – Prabhakaran. USA: Literate World, Inc.
Prabhakaran – A Leader for All Seasons – Glimpses of the Man behind the Leader
வெளி இணைப்புகள்
பிரபாகரன் குறித்து T. சபாரத்தினம்
The Pirabakaran Phenomenon by Sachi Sri Kantha
www.tamilnation.org தளத்தில் பிரபாகரன் குறித்த தகவல்
www.eelamweb.com தளத்தில் பிரபாகரன் குறித்த தகவல்
முதல் நேர்காணல்
புகழ்பெற்ற தமிழர்கள் - வேலுப்பிள்ளை பிரபாகரன்
1954 பிறப்புகள்
2009 இறப்புகள்
விடுதலைப் புலிகளின் தலைவர்கள்
ஈழ விடுதலைப் போராளிகள்
|
7277
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D
|
சதாம் உசேன்
|
சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி (அரபு மொழி: صدام حسين عبد المجيد التكريتي), (பிறப்பு: ஏப்ரல் 28, 1937 , இறப்பு: டிசம்பர் 30, 2006) இவர் ஈராக் நாட்டின் முன்னாள் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 7 2005 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.
ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் (أحمد حسن البكر) கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.
அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை (authoritarian government) நடத்தினார்.
ஈரான் – ஈராக் போர் (1980–1988) மற்றும் குவைத் போர் (1991) நடந்த காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.
மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.
ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.
மேற்கோள்கள்
ஈராக்கியர்கள்
1937 பிறப்புகள்
2006 இறப்புகள்
20-ஆம் நூற்றாண்டு குற்றவாளிகள்
21-ஆம் நூற்றாண்டு குற்றவாளிகள்
|
7282
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8B%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81
|
ஊகோ சாவெசு
|
ஊகோ ரஃபயெல் சாவெசு ஃபிரியாஸ் (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் 45வது அரசுத் தலைவர் ஆவார். தென் அமெரிக்க முதற்குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் சனாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு இடது சாரித் தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். பொலிவேரியப் புரட்சியின் தலைவராக இவர் மக்களாட்சி சோசியலிசம் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வல்லதிகார எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளின் தனது சொந்த பார்வையை பரப்பி வந்தவர். இவர் தனது சமகால முதலாளித்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்து வந்தவர். உலகில் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு உத்வேகமூட்டிய சாவேஸ் இன்றில்லை. குறுகிய காலமே வாழ்ந்து, அளப்பறிய சாதனை புரிந்த அவர் இன்றில்லை. அவர், போரற்ற உலகம், பசி, நோய், கல்லாமை இல்லாத சமத்துவ ஜனநாயக சமூகத்திற்காக போராடினார்.
வாழ்க்கை வரலாறு
1954-ல் இடதுசாரி இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலா நாட்டின் சபேனட்டா என்ற கிராமத்தில் ஒரு பள்ளி ஆசிரியர் ஒருவரின் 7 குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் சாவெசு. சாவேஸ், வெனிசுலாவின் ஒரு கடற்கரையோரக் கிராமத்தில், ஆசிரியர் தம்பதியருக்குப் பிறந்தார்.
ஆரம்பகால வாழ்க்கை
வறுமையின் காரணமாக சாவெசையும் அவரது சகோதரரையும் பெற்றோர்கள் பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அருகில் இருந்த தேவாலயத்தில் இருந்த பாதிரியாருக்கு உதவியாளனாக வேலை செய்ததால் படிப்பிற்கு இடைஞ்சலில்லாமல் பள்ளி பருவம் கழிந்தது அவருக்கு.
கல்லூரி வாழ்க்கை
தனது கல்வித் திறனால் 17 வயதில் வெனிசுவேலா இராணுவ கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நாட்டுப்பற்று மிக்க சில ராணுவ அதிகாரிகளின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டமே சாவேசின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. ராணுவப் பாடத் திட்டங்களோடு அரசியல், பொருளாதாரம், அரசாங்க நிர்வாகம் இவைகளைப் பற்றிய பாடங்களும் அந்த பாடத்திட்டத்தில் இருந்தன. மார்க்சிய நூல்களையும் அவர் படிக்க நேர்ந்தது. அதில் சே குவேராவின் டைரி, அவரது மனப்போக்கை பெரிதும் மாற்றிவிட்டது. கியூபாவின் பிடெல் காஸ்ட்ரோவை ஒரு தோழனாக அந்த டைரியே சாவெசுவைக் கருத வைத்தது. மார்க்சிய நூல்களை ஆழ்ந்து கற்றதால் சில எதார்த் தங்களை உறுதியாக பற்றி நிற்க அவருக்கு உதவின.
பொலிவாரியன் இயக்கம்
ராணுவ கல்லூரியை விட்டு வெளியேறும் பொழுது ஒரு புதிய மனிதனாக மாற வேண்டும் என்று உறுதி பூண்டார். இராணுவ அதிகாரியாக பதவியேற்றவுடன் வெனிசுவேலா அரசியலமைப்பு உழைக்கும் மக்களை ஏழையாக்குகிறது என்பதைக் கண்டார். 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எசுப்பானிய மன்னரின் ஆதிக்கத்திலிருந்த தென் அமெரிக்க பகுதிகளை விடுவிக்க ஆயுதமேந்திப் பேராடிய சிமோன் பொலிவார் வழியில் ஒரு நல்ல மனிதனின் சர்வாதிகாரமே மக்களைக் காக்கும் என்ற முடிவிற்கு வந்து ஒத்த மனதுள்ள ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து "புரட்சிகர பொலிவேரியன் இயக்கம் - 200" என்ற இரகசிய அமைப்பை உருவாக்கினார். ஆட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கினார். சைமன் பொலிவார் கருத்துக்களால் உத்வேகம் பெற்று 1982ல் ராணுவத்தில் “புரட்சிகர சோசலிச இயக்கம்” எனும் ரகசியக் குழுவினை உருவாக்கினார். இராணுவ வீரர்களைக் கொண்டு அரசைக் கவிழ்க்க முயன்று முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தார்.
23 ஆண்டு காலமாக உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை வெறியுடன் அமல்படுத்திய அதிபர் கார்லோஸ்-க்கு எதிராக 1992ல் ராணுவப் புரட்சி செய்தார். ஆனால் ராணுவப் புரட்சி தோல்வியுற்றது. அவருக்கும் சிறிய எண்ணிக்கையிலான குழுவினருக்கும் சிறைத் தண்டனை. இதன் மூலம் வெனிசுலா மக்களிடம் புகழ்பெற்றார். இரண்டு ஆண்டுகள் சிறைவாசம். 1994 தேர்தலில், ஆட்சிக்கு வந்த எதிர்க் கட்சித் தலைவர் ரஃபேல் அரசு அவரை விடுதலை செய்தது.
பொலிவாரிய குடியரசுக் கட்சி
வெனிசுலாவிற்கு ராணுவக் குழுவினரின் புரட்சி பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்திருந்தார் சாவேஸ். பொலிவேரியன் இயக்கம் அரசியல் இயக்கமாக, பிற நாட்டு இடதுசாரி இயக்கங்களின் ஆதரவோடு காஸ்ட்ரோ வழியில் செல்வது அவசியம் என்ற முடிவிற்கு வந்து அந்த வழியில் நேர்மையாகவும், உறுதியாகவும் செல்ல தொடங்கினார்.
வெனிசுலா ஜனாதிபதி
1997ல் 5 வது குடியரசுக் கட்சியைத் துவக்கினார். வெனிசுலா மக்களை வாட்டி வதைக்கும் உலகமயக் கொள்கைக்கு மாற்றாக, சமூக, பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வருவதே தமது கட்சியின் லட்சியம் எனப் பிரகடனம் செய்தார். 1998-ல் நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பெற்று வெனிசுலாவின் அதிபரானார். அதிபரானதும் இராணுவத்திலுள்ள ஊழல் செய்த அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கினார்.
சாவேஸ் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் மக்களுக்கு விரோதமாக செயல்படும் ஜனாதிபதியை மக்களே திரும்ப அழைக்கும் உரிமையை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கையெழுத்திட்ட மனு தேர்தல் ஆணையத்திடம் அனுப்பினால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது. இந்த பிரிவை கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சிகள் 2004-ம் ஆண்டில் இதனையே பயன்படுத்தி சாவேசை அகற்ற வாக்காளர் பட்டியலில் செத்தவர்கள் கையெழுத்தையும் சேர்த்து மகஜர் அனுப்பினர். அந்த மகஜரையும் ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை சாவேஸ் சந்தித்தார்.
பொலிவாரிய சோசலிச குடியரசு
தான் வாக்களித்தவாறு புதிய அரசியல் சட்டத்தினை உருவாக்கி நாட்டின் பெயரை “பொலிவாரிய சோசலிசக் குடியரசு” என பெயரை மாற்றினார். பெண்களுக்கும் பூர்வீகக் குடிமக்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சாவேஸ் எண்ணெய் வளத்தின் பலனை மக்களுக்கு அளிக்க முடிவு செய்தார். வெனிசுலாவில் அபரிமிதமான எண்ணெய் வளம் எப்போதும் இருந்தது. ஆனால், சாவேஸ்தான் உரிய முறையில் அதைப் பயன்படுத்தினார். அதுவரை, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செலுத்தி வந்த ராயல்ட்டி தொகையை 1 சதவீதத்தி லிருந்து 16 சதவீதமாக உயர்த்தினார்.
வெனிசுலா மக்களின் கனவை நனவாக்கியவர்
முற்போக்கான வரித் திட்டத்தினை உருவாக்கி பணக்காரர்களும், நிறுவனங்களும் உரிய வரியை செலுத்தச் செய்தார். இதனால் அவர்கள் சாவேசை வெறுத்தனர். அதிகரித்த வருவாயில், 66 சதவீத சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தினார். மின்சார நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் பொதுத்துறையாக்கப்பட்டன. உலகமயக் கொள்கைகளுக்கு மாற்று இல்லை என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கூக்குரலிடும் போது “மாற்று உலகம்” சாத்தியம் என்பதை நிரூபித்தார்.பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி கியூப ஆசிரியர்கள் உதவியுடன் வழங்கப்பட்டது. உலகில், மலிவான கட்டணத்தில் மின்சாரம் பெறுகின்றனர்.
வெனிசுலா மக்கள் பண்டமாற்று முறையில், எண்ணெய்க்குப் பதிலாக மருத்து வர்கள் என கியூபாவுடன் ஒப்பந்தம் செய்தார். வெனிசுலா மக்களுக்கு இலவசமாக முதல்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்தார். உருகுவேயிடமிருந்து, எண் ணெய்க்குப் பதிலாக மாடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.
உணவுப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டன.இன்று வெனிசுலாவின் தொழிலாளர்கள் 20 சதவீதம் பேர் பொதுத்துறையில் வேலை செய்கின்றனர். குறைவான அள வில் முதலாளித்துவம் அதிகமான அளவில் சோசலிசம் வேண்டும் என்றார். இன்று, உலகில் மிகவும் குறைவான அளவில் அசமத்துவம் உள்ள நாடாக வெனிசுலா உள்ளது. சாவேசுக்கு முன்புவரை வெனிசுலா பேசப்படவே இல்லை. இன்று உலகம் முழுவதும், வெனிசுலா பேசு பொருளாக மாறியுள்ளது. சாவேசுக்கு முந் தைய வெனிசுலா மற்றும் லத்தீன் அமெ ரிக்க நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு ஆட்சியர்களாய் சீரழிக்கப்பட்டிருந்தன. சாவேஸ் மக்களின் கனவுகளை நனவாக்கினார்.
சைமன் பொலிவாரின் கனவுகள்
சைமன் பொலிவார் இன் கனவு தென் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு ஆகும். பொலிவாரின் கனவை சாவேஸ் நிறைவேற்றும் முயற்சியில் வெகுதூரம் முன்னேறினார். சாவேஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பினை வலிமைப்படுத்தினார். ஒரு காலத்தில் உலக வங்கி, சர்வதேச நிதியம் அகற்றப்பட்டு, அதன் இடத்தில் ‘சர்வதேச மனிதநேய உதவிக்கான நிதியம்’ உருவாக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். யூரோ பொது நாணயம் போல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பொது நாணயம் உருவாக்கப்பட வேண்டும் என்பேத சைமன் பொலிவாரின் கனவாகும்.
இந்தியா வருகை
உலக நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். குறிப்பாக கியூபா, சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தினார்.
கொல்கத்தா வருகை அவர் இறப்பதற்கு (2013 மார்ச் 5) சரியாக 8 ஆண்டுகளுக்கு முன்பு (2005 மார்ச் 5) வருகை தந்தார். கொல்கத்தாவுக்கும் பயணம் செய்தார். அவர் மறக்க முடியாதபடி மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர் கொல்கத்தா மாநகர மக்கள். வெனிசுலாவுக்கு வெளியே, பிரேசில் தலைநகர் போர்ட்டே அலெக்ரே நகர மக்களுக்கு அடுத்து, கொல்கத்தா மக்கள் அளித்த வரவேற்பு மிகப் பெரிய அளவில் இருந்ததாக சாவேஸ் மகிழ்ச்சியடைந்தார்.
கொல்கத்தாவில் இருப்பதை தமது காரகசில் இருப்பதைப் போலவே உணர்வதாகக் கூறினார். அன்று உணர்ச்சி ததும்பும் உரையாற்றினார். “நான் உங்களை எல்லாம் நேசிக்கிறேன்” என்று வங்கமொழியில் தனது பேச்சைத் துவக்கினார். அவரது இயல்புக்கு ஏற்றவாறு அவர் தாகூரின் பாடலையும் பாடினார். இந்தியாவுடன் உறவைப் பலப்படுத்த சாவேஸ் ஆவலாக இருந்தார்.
மரணம்
இடுப்பு புற்று நோயுடன் இரண்டு ஆண்டு காலமாக போராடிய அவர் , உலகப் புகழ்பெற்ற கியூபா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் மருத்துவமனையிலிருந்து நாடு திரும்பி வருவதுமாக இருந்தார். தனது 54ஆம் வயதில் அந்த நோயால் மரணமடைந்தார்.
சாவேஸ் மரணத்தில் சந்தேகம்
புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸின் மரணம் குறித்த விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இறுதி அஞ்சலி
சாவேசின் இறுதி ஊர்வலத்தில் மக்களின் கூட்டம் 8 கி.மீட்டருக்கு மேல் நீண்டது. இது போன்றதொரு இரங்கல் ஊர்வலத்தை லத்தீன் - அமெரிக்க கண்டம் இதுவரை கண்டதில்லை. 20 லட்சம் மக்கள் பொறுமையாகக் காத்திருந்து, தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த தலைவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.லத்தீன்-அமெரிக்க நாடுகள், ஈரான், நைஜீரியா போன்ற நாடுகள் தங்கள் நாடு களில் அரசுப்பூர்வ துக்கம் அறிவித்தன. உலகம் முழுவதிலும் இருந்து, 55 நாடு களின் தலைவர்களும், உயர்மட்டக் குழுக் களும் சாவேசுக்கு இறுதி மரியாதை செலுத்த வெனிசுலாவில் திரண்டனர். லத்தீன் -அமெரிக்க -கரீபியன் நாடுகளின் ஒன்றியத்தை (ECLAC) உருவாக்கிய தலைவருக்கு அஞ்சலி செலுத்த அனைத்து லத்தீன் அமெரிக்க அதிபர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
மேற்கோள்கள்
உசாத்துணை
சவெஸின் வரலாறு பிபிசி
புற இணைப்புகள்
வெனிசுவேலா அரசியல்வாதிகள்
தென் அமெரிக்க இடதுசாரி தலைவர்கள்
1954 பிறப்புகள்
2013 இறப்புகள்
இலத்தீன் அமெரிக்க புரட்சியாளர்கள்
|
7285
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE
|
லூலா த சில்வா
|
லூலா என அழைக்கப்படும் லூயிசு இனாசியோ லூலா த சில்வா (Luiz Inácio Lula da Silva (; பிறப்பு: 27 அக்டோபர் 1945), பிரேசில் அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும் ஆவார். இவர் 2023 சனவரி 1 முதல் பிரேசிலின் 39-ஆவது அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார். தொழிலாலர் கட்சியின் உறுப்பினரான இவர், முன்னதாக 2003 முதல் 2011 வரை 35-ஆவது அரசுத்தலைவராகப் பதவியில் இருந்துள்ளார். லூலா, மூன்றாவது முறையாக பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரேசில் அரசுத்தலைவரும், தேர்தலில் தற்போதைய அரசுத்தலைவரைத் தோற்கடித்த முதல் நபரும் ஆவார். 77 வயதில், பதவியேற்பின் போது இவர் மிகவும் வயதான அரசுத்தலைவரும் ஆவார்.
இவர் ஏழ்மைப் பின்புலத்தில் இருந்து போராடி முன்வந்தவர். இவர் தொழிலாளர் சங்கங்களில் அடிமட்ட நிலையிலும் தலைமைத்துவ மட்டத்திலும் செயலாற்றியவர். இவர் இடதுசாரி மற்றும் மாற்று சிந்தனை அரசியல் தத்துவத்தை கொண்டவர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Luiz Inácio Lula da Silva's official page on Facebook
Profile: Luiz Inácio Lula da Silva. BBC News. 28 January 2010.
Moore, Michael (20 April 2010). "The 2010 TIME 100: Luiz Inácio Lula da Silva". டைம்.
1945 பிறப்புகள்
வாழும் நபர்கள்
பிரேசிலின் அரசியல்வாதிகள்
தென் அமெரிக்க இடதுசாரி தலைவர்கள்
|
7291
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
|
முல்லைத்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை
|
முல்லைத்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை இலங்கையின் முல்லைத்தீவில் உள்ள ஒரு அரச பாடசாலையாகும். இது 1956ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப் பாடசாலையின் மகுடவாக்கியம் "கல்வியே கற்று ஒழுகு" என்பதாகும்.
முல்லைத்தீவு மாவட்ட தமிழ்ப் பாடசாலைகள்
|
7295
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
எண்ணுறா முடிவிலிகள்
|
கணிதத்தில் எண்ணுறா முடிவிலிகள் அல்லது எண்ணவியலா முடிவிலிகள் (Uncountable set) என்பன எண்ணிக்கையிட முடியாத அளவிலான உறுப்புக்களைக் கொண்ட கணங்களாகும். அனைத்து முடிவுள்ள கணங்களும் இயலெண் கணம் முதலிய பல முடிவிலிக் கணங்களும் எண்ணக்கூடியவையே. மாறாக, அனைத்து எண்ணவியலாக் கணங்களும் முடிவிலிகளே.
முடிவிலிகளில் எண்ணிக்கையிடக் கூடிய தன்மை சற்று விந்தையாகத் தெரியலாம். எண்ணிக்கையிடக் கூடியவை என்று கூறுகையில், ஒரு கணத்தின் எல்லா உறுப்பினர்களையும் எண்ணி முடித்து இறுதியாக ஒரு எண்ணிக்கையைத் தரக்கூடியவை என்று பொருளல்ல. ஒவ்வொரு உறுப்பினருடன் ஒரு இயலெண்ணைத் தொடர்புபடுத்தி வரிசையிடப் படக்கூடியவை என்பதே பொருள். இவ்வாறு எண்ணிக்கையிடக் கூடியவை முடிவிலிகளாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக முழு எண்களைக் கொண்ட கணம் முடிவிலியாக இருப்பினும் எண்ணக்கூடியதே. இக்கணத்தில் சுழி என்பதை முதலாம் உறுப்பினராகவும், ஒன்று என்பதை இரண்டாம் உறுப்பினராகவும், எதிர்ம ஒன்று (-1) என்பதை மூன்றாவதாகவும், இரண்டு என்பதை நான்காவதாகவும், எதிர்ம இரண்டை ஐந்தாவதாகவும் குறிப்பிட்டு, பிற உறுப்பினர்களையும் இதே அடிப்படையில் இயலெண்களுடன் தொடர்வு ஏற்படுத்த முடியும். இவ்வாறாக, இத்தகைய கணங்கள் முடிவிலிகளாக இருந்தும் விரல் விட்டு எண்ணப்படக் கூடியவை (முடிவுள்ள நேரத்தில் எண்ணிமுடிக்கப்பட முடியாதவையாயினும்).
சில முடிவிலி கணங்களை மேற்கூறிய முறையில் இயலெண் கணத்துடன் தொடர்வு ஏற்படுத்த முடிவதில்லை. எடுத்துக்காட்டாக மெய்யெண் கணத்தைக் கொள்ளலாம். கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறையில் மெய்யெண் கணம் மற்றும் வேறுசில கணங்களையும் எண்ணவியலாக் கணங்கள் என்று நிறுவ முடியும்.
பார்க்கவும்
எண்ணுறுமையும் எண்ணுறாமையும்
கணக் கோட்பாடு
ru:Счётное множество#Связанные понятия
|
7296
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%29
|
கணம் (கணிதம்)
|
கணிதத்தில், கணம் () அல்லது தொடை (set) என்பது பல்வேறு பொருட்களின் திரட்டு அல்லது தொகை ஆகும். இது மிகவும் எளிய கருத்தாகத் தோன்றினாலும், கணிதத்தின் ஆழம் உடைய ஓர் அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்றாக விளங்குகிறது. கணம் அல்லது தொடை என்பதில் உள்ள பொருட்களை உறுப்புகள் என்பர். எடுத்துக்காட்டாக, 4, 7, 9 ஆகிய எண்களை ஒரு தொகுதியாகக் கொண்டு அதனை C என்னும் பெயர் கொண்ட ஒரு கணமாகக் கொண்டால், C யின் உறுப்புகள் 4, 7, 9 என்பன ஆகும். ஒரு கணத்தின் உறுப்புகளை நெளிந்த அடைப்புக் குறிகளுக்கு இடையே குறிப்பது வழக்கம். எடுத்துக்காட்டாக, C என்னும் கணத்தை C = {4, 7, 9} என்று குறிப்பர். கணத்தில் அளவிடக்கூடிய எண்ணிக்கையுடைய உறுப்புகள் இருப்பவையும் உண்டு, அளவிட இயலா எண்ணிக்கை உடைய உறுப்புகள் கொண்டவையும் உண்டு. ஒல்லத்தக்க (இயலக்கூடிய) கணங்களின் அமைப்புகளையும் தொடர்புகளையும் பற்றிய கோட்பாடுகளுக்குக் கணக் கோட்பாடு என்று பெயர். இத்துறை மிகவும் வளமையானது.
கணக் கோட்பாடு, 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், இது தொடக்க வகுப்புக்களிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, கணிதக் கல்வியில் எங்கும் காணப்படும் ஒரு பகுதியாக ஆகியுள்ளது. தற்காலக் கணிதக் கல்விக்குப் பயன்படும் அடிப்படைக் கணித மொழிகளில் இது முக்கியமான ஒன்றாகும்.
வரைவிலக்கணம்
கணம் அல்லது தொடை என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பொருள்களின் ஒரு தொகுப்பு ஆகும். கணமொன்றிலுள்ள பொருள்கள் உறுப்புகள் (elements) எனப்படுகின்றன. கணமொன்றின் உறுப்புகள், எண்கள், மக்கள், எழுத்துகள், வேறு கணங்கள் என எதுவாகவும் இருக்கலாம். கணங்களை A, B, C, முதலிய ஆங்கில அகர வரிசையின் பெரிய (தலைப்பு) எழுத்துக்களினால் குறிப்பது மரபு. A யும் B யும் ஆகிய இரண்டு கணங்களும் ஒரே உறுப்புக்களைக் கொண்டிருப்பின், அவையிரண்டும் ஒன்றுக்கொன்று ஈடாகும் (சமனாகும்). அதாவது A யில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் B யில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஈடு (=சமம்) எனின் A = B எனக் குறிக்கப்படும்.
அன்றாட வாழ்க்கையின் பொருட்தொகுப்புகள் அல்லது பல்கு கணங்களில் உள்ளதைப் போல ஒரு கணத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்புகள் ஒத்ததாக இருத்தல் கூடாது.
வாய்ப்பாடு
கணங்களை விவரித்தல் முறை, பட்டியல் முறை, கணக் கட்டமைப்பு முறை ஆகியவற்றின் மூலம் குறிக்கலாம்.
விவரித்தல் அல்லது வருணனை முறை
கணங்களை அவற்றின் உறுப்புகளின் பண்பினை விளக்கும் சொற்களைக் கொண்டு குறிக்கும் முறை விவரித்தல் முறை அல்லது வருணனை முறை (Desciption Methed) எனப்படும்.
எடுத்துக்காட்டாக:
A = முதல் நான்கு நேர்ம முழு எண்களை உறுப்புகளாகக் கொண்ட கணம்.
B = இந்தியக் கொடியில் உள்ள நிறங்களை உறுப்புகளாகக் கொண்ட கணம்.
பட்டியல் முறை
நெளிந்த அடைப்புக் குறிக்குள் உறுப்புகளைப் பட்டியலிடுவதன் மூலம் (Listing Method) கணங்களை விளக்கலாம்.
எடுத்துக்காட்டாக:
C = {4, 2, 1, 3}
D = {காவி, வெள்ளை, பச்சை, நீலம்}
ஏராளமான உறுப்புகளைக் கொண்ட பெரிய கணங்களைப் பொறுத்தவரை, அத்தனை உறுப்புகளையும் ஒவ்வொன்றாக எழுதிப் பட்டியலிடுதல் செயல்முறையில் மிகவும் கடினமானது. எடுத்துக்காட்டாக, E = {முதல் ஆயிரம் நேர்ம முழு எண்கள்} என்பதைப் பட்டியல் இடுவதென்பது எழுதுபவருக்கும், அதனை வாசிப்பவருக்கும்கூட மனச்சோர்வூட்டுகின்ற வேலையாகும். எனினும் ஒரு கணிதவியலாளர் இவ்வாறு பட்டியலிடுவதில்லை என்பதுடன், சொற்களாலும் விரித்துரைப்பதில்லை. மாற்றாகச் சுருக்கமான குறியீட்டு முறையில் பின்வருமாறு எழுதுவார்:
E = {1, 2, 3, ..., 1000}
வாசிப்பவருக்குப் புரியக்கூடிய வகையில் ஒழுங்குமுறையில் அமைந்த உறுப்புக்களைக் கொண்ட E போன்ற கணமொன்றைப் பொறுத்தவரை, பட்டியலைச் சுருக்கக் குறியீடாக எழுதி விளக்க முடியும். முழுப் பட்டியலும் எச்சப்புள்ளி (...) குறியீட்டைப் பயன்படுத்திச் சுருக்கப்பட்டுள்ளது.
முடிவுறாக் கணங்களையும் முப்புள்ளியைப் பயன்படுத்தி விளக்கலாம்.
எடுத்துக்காட்டாக:
அனைத்து இரட்டை முழுவெண்களின் கணம்:
இக்குறியீட்டைப் பயன்படுத்தும்போது, ஒழுங்குமுறை தெளிவாகப் புரியும் வகையில் போதிய அளவு உறுப்புகள் காட்டப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, கீழேயுள்ள கணம் முதல் பதினாறு முழு எண்களையோ அல்லது இரண்டின் முதல் ஐந்து அடுக்குகளையோ குறிக்கக் கூடும்:
X = {1, 2, ..., 16}
அமைந்திருக்கும் ஒழுங்குமுறை இலகுவில் புரிந்துகொள்ள முடியாதபடி அமையுமாயின், மேற்காட்டிய சுருக்கிய பட்டியலின் பயன்பாட்டைத் தவிர்ப்பது நல்லது. எடுத்துக்காட்டாக,
F = {–4, –3, 0, ..., 357}
என்பதை வாசிக்கும்போது இக்கணமானது,
F = {வர்க்க எண்ணிலும் நான்கு குறைவான முதல் 20 எண்கள்},
என்பது வெளிப்படையாகவோ தெளிவாகவோ தெரியவில்லை. இக்குறைபாட்டைக் கணக்கட்டமைப்பு முறை நிவர்த்தி செய்கிறது.
கணிதக்கட்டமைப்பு முறை
ஒரு கணத்திலுள்ள அனைத்து உறுப்புகளின் பண்புகளை நிறைவு செய்யும் வகையில் அமைவது கணிதக்கட்டமைப்பு முறையாகும் (Set Builder Notation).
கணிதக்கட்டமைப்பு முறையில் கணத்தை விளக்குவதற்கு கணிதக் குறியீடுகளும் சில மரபான குறிப்பு மொழிகளும் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக:
F = {வர்க்க எண்ணிலும் நான்கு குறைவான முதல் 20 எண்கள்} - வருணனை முறை
F = {–4, –3, 0, ..., 357} - பட்டியல் முறை
F = { – 4 : n ஒரு முழு எண், மற்றும் 0 ≤ n ≤ 19} -கணக்கட்டமைப்பு முறை
கணக்கட்டமைப்பு முறையில் பயன்படுத்தப்படும் முக்கால் புள்ளி அல்லது விளக்கக்குறி (:) என்பதனை "எப்படி எனில்" அல்லது ஆங்கிலத்தில் such that என்று படிக்க வேண்டும்.
கணக்கட்டமைப்பு முறையை வாசிக்க வேண்டிய விதம்:
“மேற்கண்ட F என்னும் கணத்தின் உறுப்புகளாவன – 4 என்னும் வகையான எண்களாகும்; எப்படி எனில் n என்னும் முழு எண்ணானது, 0 முதல் 19 வரை, இவ்விரு எண்களும் உட்பட, உள்ள எண்களாகும்”.
முக்கால் புள்ளி (:)என்னும் விளக்கக் குறிக்குப் பதிலாக சில நேரங்களில் பைப் (pipe) என்னும் நெடுங்கோடும் | குறியாகப் பயன்படுத்தப்படும்.
குறிப்புகள்
ஒரே கணத்தை இரண்டு விதங்களிலும் குறிக்கமுடியும்.
எடுத்துக்காட்டாக, மேலே வரையறுக்கப்பட்டுள்ள கணங்களுள் A , C இரண்டும் ஒரே கணத்தின் இரு வெவ்வேறான உருவகிப்புகளாகும்.
A = C ஆகும்.
இதேபோல, B , D இரண்டும் ஒரே கணத்தின் இரு வெவ்வேறான உருவகிப்புகளாகும்.
B = D
கணங்களுக்கிடையே முற்றொருமையானது கண உறுப்புகளின் வரிசை ஒழுங்கிலோ அல்லது ஒரே உறுப்பு திரும்பத் திரும்ப வருவதிலோ தங்கியிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக,
{3, 9} = {9, 3} = {9, 9, 3, 9}.
கணத்தின் உறுப்பு
ஒரு பொருள் ஒரு கணத்தினுள் உள்ள ஓர் உறுப்பு என்றோ அல்லது ஓர் உறுப்பு அல்ல என்றோ குறிக்கக் கீழ்க்காணும் குறிவடிவுகளை முறையே பயன்படுத்துவர்.
and . எடுத்தக்காட்டாக, மேலே A என்னும் கணத்தைப் பார்த்தால் அதில் 4 என்பது A யில் உள்ள ஓர் உறுப்பு என அறியலாம். எனவே அதனைக் கீழ் காணுமாறு குறிப்பர்.
அதே போல 285 என்னும் எண் F என்னும் கணத்தில் உள்ள ஓர் உறுப்பு. அதனைக்காட்ட
(since 285 = 17² − 4); என எழுதுவர்.
ஆனால் ஒரு பொருள் உறுப்பு அல்ல என்பதைக் கீழ்க்காணுமாறு குறிப்பர்
and . (இந்தியக் கொடியில் பச்சை ஒரு நிறம் இல்லை).
கணங்களின் எண்ணளவை
S கணத்தின் எண்ணளவை (Cardinality of a set), | S | என்பது அக்கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
மேலே விரித்துரைக்கப்பட்ட கணங்கள் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையுள்ள உறுப்புகளைக் கொண்டுள்ளன.
எடுத்துக்காட்டாக,
கணம் A நான்கு உறுப்புகளைக் கொண்டுள்ளது.
எனவே | A | = 4.
ஒரு கணம் உறுப்புகள் எதுவுமற்ற கணமாகவும் இருத்தல் கூடும். அத்தகைய கணம் வெற்றுக் கணம் எனப்படும். இது ø அல்லது {}என்ற குறியீட்டால் குறிக்கப்படும். எடுத்துக்காட்டாக, மூன்று பக்கங்களையுடைய சதுரங்களின் கணம் A என்று கூறினால் A என்பது உறுப்புகள் எதுவுமற்ற கணம் ஆகும். A = ø ஆகும். வெற்றுக் கணத்தின் எண்ணளவை பூச்சியமாகும்.
ஒரு கணம் முடிவிலி எண்ணிக்கையான உறுப்புகளையும் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, எல்லா இயல்பெண்களினது கணம் ஒரு முடிவிலியாகும். முடிவுறாக் கணங்கள் முடிவிலி எண்ணளவை கொண்டவை.
n உறுப்புகள் உள்ள ஒரு கணத்தை n-கணம் என்று சொல்லும் வழக்கமும் உண்டு.
உட்கணங்கள்
A என்னும் கணத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் B என்னும் வேறு ஒரு கணத்தின் உறுப்புகளாக இருப்பின், A என்னும் கணமானது B என்னும் கணத்தின் உட்கணம் (Subset) எனப்படும். இதனைக் கீழ்க்காணுமாறு குறிவடிவில் குறிப்பர்.
. இதனைப் படிக்கும் பொழுது A ஆனது B யுள் அடங்கும். அல்லது A ஆனது B யின் உட்கணம்.
வெற்றுக்கணம் எல்லா கணங்களின் உட்கணம் ஆகும். அதேபோல எல்லாக் கணங்களும் அதனதனுடைய உட்கணமும் ஆகும்.
தக்க உட்கணம்
A என்னும் கணம் B யின் உட்கணமாக இருந்து B -க்கு ஈடாக (சமமாக) இல்லாமல் இருந்தால், A ஆனது B யின் தக்க உட்கணம் அல்லது தகு உட்கணம் (proper subset) என்பர். இதனை கீழ்க்காணுமாறு எழுதுவர்.
(A என்பது B யின் தக்க உட்கணம்) அல்லது (B ஆனது A யின் தக்க கொள்ளும் கணம்). என்றாலும் சில கணித எழுத்துக்களில் இக்குறியீடுகள் ஒரே மாதிரியாகவே படிப்பர். மற்றும் , எனவே தக்க உட்கணங்களைத் தெளிவாக உணர்த்துவதற்கு பிரித்தறியும் குறியீடுகளைப் பயன்படுத்தல் நலம். மற்றும்
A ஆனது B யின் உட்கணம்
எடுத்துக்காட்டுகள்:
T எல்லா ஆண்களையும் கொண்ட கணமானது மாந்தர்கள் எல்லாம் கொண்ட கணத்தின் தக்க உட்கணம் ஆகும்.
மேற்கணம்
வேறொரு ஈடான (சமமான) முறையில் சொல்வதானால் ; அதாவது இதனைப் படிக்கும் பொழுது 'B ஆனது A யைக் கொள்ளும் கணம் ., அல்லது 'B ஆனது A யைச் சூழும் கணம் " அல்லது B ஆனது A யை அடக்குக் கணம் என்று படித்தல் வேண்டும். இந்த கணிதத் தொடர்பை உட்கொள்ளுமை அல்லது அடக்குமை என்று குறிப்பர். B யை A யின் மேற்கணம் (Superset) என்றும் சொல்வதுண்டு.
அடுக்கு கணங்கள்
ஒரு கணத்தின் அனைத்து உட்கணங்களையும் கொண்ட கணமானது, (வெற்றுக்கணத்தையும் அதே கணத்தையும் சேர்த்து) அக்கணத்தின் அடுக்கு கணம் (Power set) என அழைக்கப்படுகிறது. கணம் ன் அடுக்கு கணத்தினை , P(S), ℘(S) என்ற குறியீடுகளால் குறிக்கலாம்.
எடுத்துக்காட்டு:
{1, 2, 3} கணத்தின் அடுக்கு கணம்: {{1, 2, 3}, {1, 2}, {1, 3}, {2, 3}, {1}, {2}, {3}, ∅}.
கணத்தின் எண்ணளவை || = n எனில், அடுக்கு கணத்தின் எண்ணளவை, ஆகும்.
முடிவுறு அல்லது முடிவுறா கணங்களின் எண்ணளவைகளை விட அவற்றின் அடுக்கு கணங்களின் எண்ணளவைகள் கண்டிப்பாக அதிகமானவையாக இருக்கும். எண்ணுறு முடிவிலா கணங்களின் அடுக்கு கணங்கள் எண்ணுறா முடிவிலா கணங்களாக அமையும்.S இன் ஒவ்வொரு பிரிவினை கணமும் S இன் அடுக்கு கணத்தின் உட்கணமாக இருக்கும்.
சிறப்புக் கணங்கள்
அதிக அளவு இன்றியமையாமை காரணமாகவும், அடிக்கடி புழங்கப்படுவதாலும், சில கணங்கள் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் ஒன்று வெற்றுக் கணம் ஆகும். எண்களைக் கொண்ட சில சிறப்புக் கணங்களாவன:
என்பது, எல்லா இயல்பெண்களினதும் கணத்தைக் குறிக்கின்றது. அதாவது, = {1, 2, 3, ...}, அல்லது, சில சமயங்களில் = {0, 1, 2, 3, ...}.
என்பது, எல்லா முழுஎண்களினதும் (integers) கணத்தைக் குறிக்கின்றது. (நேர், எதிர், சூனியம் எதுவாயினும்). ஆகவே = {..., -2, -1, 0, 1, 2, ...}.
என்பது, எல்லா விகிதமுறு எண்களினதும் (rational number) கணத்தைக் குறிக்கும். (that is, the set of all proper and பின்னம்s). ஆகவே, = { : a,b and b ≠ 0}. எடுத்துக்காட்டாக, and . ஒவ்வொரு முழு எண் a உம் ஒரு பின்னமாகக் குறிக்கப்படலாம் என்பதால், எல்லா முழு எண்களும் இந்தக் கணத்தில் உள்ளன. .
என்பது எல்லா மெய்யெண்களினதும் கணமாகும். இந்தக் கணம் எல்லா விகிதமுறு எண்களையும், (rational numbers) அத்துடன் எல்லா விகிதமுறா எண்களையும் (irrational numbers) உள்ளடக்கியுள்ளது. (அதாவது, and √2 என்பவை போலப் பின்னங்களாக எழுத முடியாத எண்கள்).
என்பது எல்லாச் சிக்கலெண்களினதும் (complex number) கணம்.
இந்த எண்களைக் கொண்ட கணங்கள் ஒவ்வொன்றும், முடிவிலி எண்ணளவுகளைக் கொண்டது. அத்துடன், .
அடிப்படைச் செயல்கள்
ஒன்றிப்புகள்
ஏற்கெனவேயுள்ள கணங்களிலிருந்து புதிய கணங்களை உருவாக்குவதற்குப் பல வழிகள் உள்ளன. இரண்டு கணங்களைக் "கூட்ட" முடியும். A இனதும் B இனதும் ஒன்றிப்பு A U B என்பதால் குறிக்கப்படும். இதுவே A அல்லது B இன் உறுப்புக்களாக இருந்த எல்லாப் பொருட்களையும் கொண்ட கணமாகும்.
எடுத்துக்காட்டுகள்:
{1, 2} U {சிவப்பு, வெள்ளை} = {1, 2, சிவப்பு, வெள்ளை}
{1, 2, green} U {சிவப்பு, வெள்ளை, பச்சை} = {1, 2, சிவப்பு, வெள்ளை, பச்சை}
{1, 2} U {1, 2} = {1, 2}
ஒன்றிப்பின் சில அடிப்படை இயல்புகள்:
A U B = B U A A is a subset of A U B A U A = A A U ø = A வெட்டுகள்
கணங்களுக்கு இடையே உள்ள பொது உறுப்புகளைக் கொண்ட ஒரு புதுக் கணம் பெற முடியும். இதற்கு வெட்டுதல் (Intersection) என்று பெயர். A என்னும் கணமும் B என்னும் கணமும் வெட்டு உற்றால் கிடக்கும் கணத்தில் உள்ள உறுப்புகள் A மற்றும் B ஆகிய இரண்டிற்கும் பொதுவாக உள்ள உறுப்புகள் மட்டுமே கொண்டு இருக்கும். A யும் B யும் வெட்டுதலை A ∩ B என்று குறிப்பர். . A ∩ B = ø, என்றால் A யும் B யும் தொடர்பற்றவை. (disjoint).
எடுத்துக்காட்டுகள்:
{1, 2} ∩ {சிவப்பு, வெள்ளை} = ø
{1, 2, green} ∩ {சிவப்பு, வெள்ளை, பச்சை} = {பச்சை}
{1, 2} ∩ {1, 2} = {1, 2}
வெட்டுக்களின் சில அடிப்படை இயல்புகள்:
A ∩ B = B ∩ A A ∩ B என்னும் கணம் A இன் உட்கணம் ஆகும்.
A ∩ A = A A ∩ ø = ø
நிரப்பிகள்
இரு கணங்கள் ஒன்றில் இருந்து ஒன்றை கழிக்க முடியும். கழிக்கப்பட்ட கணம் முதல் கணத்தின் நிரப்பிக் கணம் (Complement set) எனப் பெயர் கொள்ளும். அதாவது A என்னும் கணத்தின் ஒப்பீட்டு நிரப்பிக் கணம் B என்பதை B − A, (or B \ A) எனக் குறிப்பர். இந்த B − A, (or B \ A) என்னும் கணமானது A யில் இல்லாது ஆனால் B யில் மட்டும் உள்ள எல்லா உறுப்புகளும் கொண்ட கணமாகும். ஒரு கணத்தில் இல்லா உறுப்புகளை நீக்குதல் (கழித்தல்) ஒரு சரியான செயலே. எடுத்துக்காட்டாக green (பச்சை) என்பதை {1,2,3} என்னும் கணத்தில் இருந்து கழிக்கலாம் - இதனால் விளைவு ஏதும் இல்லை (ஏனெனில் இல்லாததைத்தானே நீக்குகிறோம்!).
சில நேரங்களில் எல்லாக் கணங்களும் ஒரு அனைத்துக்கணம், U , என்று வரையறை செய்யப்பட்ட கணத்தின் உட்கணங்களாகக் கொள்ளப்படும். அப்படிப்பட்ட சூழல்களில், U − A, எனப்படுவது முழு நிரப்பி ( absolute complement) எனப்படும் அல்லது A யின் நிரப்பி என்று கூறப்படும். இதனை A′ எனக் குறிப்பர்.
B இல் A இன் சார் நிரப்பி
U -இல் A—இன் நிரப்பி
எடுத்துக்காட்டுகள்:
{1, 2} − {சிவப்பு, வெள்ளை} = {1, 2}
{1, 2, பச்சை} − {சிவப்பு, வெள்ளை, பச்சை} = {1, 2}
{1, 2} − {1, 2} = ø
U என்பது நேர்ம முழு எண்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு கணம் என்று கொண்டால், பின்னர் E என்னும் கணம் இரட்டைப்படை எண்களைக் குறிக்கும் என்றும், O என்னும் கணம் ஒற்றைப்படை எண்களைக் குறிக்கும் என்றும் கொண்டால் U வில் E யின் நிரப்பியானது O ஆகும், வேறு வகையில் ஈடாகக் கூற வேண்டுமெனில் E′ = O எனலாம்.
நிரப்பிகளின் சில அடிப்படை இயல்புகள்:
A U A′ = U A ∩ A′ = ø
(A′ )′ = A A − A = ø
A − B = A ∩ B′கார்ட்டீசியன் பெருக்கற்பலன்
கணம் மற்றும் கணம் என்ற இருகணங்களின் கார்ட்டீசியன் பெருக்கலின் குறியீடு ஆகும். இந்தக் கார்ட்டீசியன் பெருக்கலானது வரிசைச் சோடிகளாலான (வரிசை இருமங்கள்) கணமாக அமையும். இக்கணத்திலுள்ள வரிசைச் சோடிகளின் முதல் உறுப்பு கணத்தின் உறுப்பாகவும் இரண்டாவது உறுப்பு கணத்தின் உறுப்பாகவும் அமையும்.
, எனில் கணக் கட்டமைப்பு முறையில் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் கீழுள்ளவாறு அமையும்:
எடுத்துக்காட்டுகள்:
அடிப்படைப் பண்புகள்:
A , B இரு முடிவுறு கணங்கள் எனில் அவற்றின் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் கணத்தின் எண்ணளவை A , B இன் எண்ணளவைகளின் பெருக்கற்பலனாக இருக்கும்:
| A × B | = | B × A | = | A | × | B |.
டி மோர்கனின் விதி
இரு கணங்களுக்கான இரு விதிகள்:A , B என்பன இரு கணங்கள் எனில்:
(A ∪ B)′ = A′ ∩ B′A ஒன்றிப்பு B இன் நிரப்பியானது A இன் நிரப்பி, B இன் நிரப்பி இரண்டின் வெட்டுக்கணமாக இருக்கும்.
(A ∩ B)′ = A′ ∪ B′A வெட்டு B இன் நிரப்பியானது A இன் நிரப்பி, B இன் நிரப்பி இரண்டின் ஒன்றிப்பாக இருக்கும்.
இவற்றையும் பார்க்கவும்
மாற்றுக் கணக் கோட்பாடு (Alternative set theory)
கணத் தொகுதி) (Class of sets))
கணித அமைப்பு (Mathematical Structure)
கணக் கோட்பாடு
பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா
தொடர்வரிசை
வகைபிரித்தல்
உசாத்துணைகள்
Halmos, Paul R., Naive Set Theory, Princeton, N.J.: Van Nostrand (1960)
Stoll, Robert R., Set Theory and Logic'', Mineola, N.Y.: Dover Publications (1979)
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
C2 Wiki – Examples of set operations using English operators.
Mathematical Sets: Elements, Intersections & Unions, Education Portal Academy
கணக் கோட்பாடு
|
7297
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D
|
இயல் எண்
|
கணிதத்தில், இயல் எண் (natural number) என்பது முதல் வரிசை நேர்ம முழு எண்கள் (, , , , ...) ஆகவும், எதிர்ம எண் அல்லாத முழு எண்கள் வரிசை (, , , , , ...) ஆகவும் வரையறுக்கப்படுகின்றது. அதாவது, இயலெண் குறித்த சில வரையறைகள்
இயலெண்களை இலிருந்து தொடங்குகின்றன. இவ்வரையறைகளில் இயலெண்கள் எதிர்மமில்லா முழு எண்களோடு ஒத்ததாக அமைகின்றன (). மேலும், இயலெண்கள் 1 இலிருந்து துவங்குவதாகக் கொள்ளும் வரையறைகளில் இயலெண்கள் நேர்ம முழுவெண்களை ஒத்து அமைகின்றன (). முந்தைய வரைவிலக்கணம் எண் கோட்பாட்டிலும், பிந்தையது கணக் கோட்பாட்டிலும் கணினி அறிவியலிலும் விரும்பப்படுகிறது.
இயல் எண்களின் கணத்தை என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது
.
இயல் எண்களுக்கு இரண்டு இயல்பான பயன்கள் உள்ளன. பொருட்களை எண்ணப் பயன்படுத்தலாம் (எ-கா:தட்டில் 4 மாம்பழங்கள் உள்ளன). மேலும் எண்ணிக்கை அளவில் எத்தனையாவது என்று வரிசைமுறைமையைக் காட்டலாம் (எ-கா:சென்னை இந்தியாவிலேயே 4 ஆவது பெரிய நகரம்). எண்ணுதலின் போது இயலெண்கள் "முதலெண் அல்லது கார்டினல் எண்"கள் முதலெண்கள் எனவும், வரிசையைக் குறிக்கும்போது அவை "வரிசை எண் அல்லது ஆர்டினல் எண்"கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
எண் கோட்பாட்டுத் துறையில், இந்த இயல் எண்களின் வகு நிலை வகு படா நிலை என்பதைக் குறிக்கும் வகுமைப் பண்புகள் பற்றியும், பகா எண்கள் எப்படி விரவி உள்ளன என்பது பற்றியும் ஆய்வு செய்யப்படுகின்றது.
இயலெண்களை அடிப்படையாகக் கொண்டு அதன் நீட்சியாக ஏனைய எண்கள் வரையறுக்கப்படுகின்றன:
இயலெண்களோடு முற்றொருமை உறுப்பு 0 ஐயும் ஒவ்வொரு இயலெண்ணின் (n) கூட்டல் நேர்மாறுகளையும் (−n) சேர்த்தால் முழு எண்களின் கணம் பெறப்படுகிறது; *இயலெண்களோடு முற்றொருமை உறுப்பு 0 ஐயும் ஒவ்வொரு இயலெண்ணின் (n) கூட்டல் நேர்மாறுகளையும் (−n), ஒவ்வொரு பூச்சியமற்ற இயல் எண்ணின் பெருக்கல் நேர்மாறுகளையும் (1/n) சேர்க்க விகிதமுறு எண்கள் பெறப்படுகின்றன.
இவற்றுடன் விகிதமுறா எண்கள் சேரும்போது மெய்யெண்கள் கிடைக்கின்றன.
மெய்யெண்களோடு -1 இன் வர்க்கமூலம் சேர்க்கப்படுபோது சிக்கலெண்கள் பெறப்படுகின்றன.
இச்சங்கிலித் தொடர் நீட்சிகளால் பிற எண்களுக்குள் உட்பொதிவாக இயலெண்கள் அமைகின்றன.
குறியீடு
இயலெண்களின் கணத்தை N அல்லது என்ற குயீடுகளால் கணிதவியலாளர்கள் குறிக்கின்றனர். பழைய புத்தகங்களில் அரிதாக J என்ற குறியீடும் இயலெண்கள் கணத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. இயலெண்களின் கணம் முடிவுறா கணமாகவும். அதே சமயத்தில் எண்ணத்தக்க கணமாகவும் உள்ளது. இக்கணம் எண்ணத்தக்கது என்பதைக் குறிக்கும்வகையில் இதன் முதலெண் என்ற குறிக்கப்படுகின்றன.
"0" சேர்க்கப்பட்ட அல்லது சேர்க்கப்படாத இயலெண்கள் கணமா என்பதைத் தெளிவுபடுத்தும்வகையாக பின்னதற்கு "" அல்லது என்ற ""மேலொட்டும், முன்னதற்கு "" என்பது மேலொட்டு அல்லது கீழொட்டாகச் சேர்க்கப்படுகிறது.
ℕ0 = ℕ0 = {0, 1, 2, …}
ℕ* = ℕ+ = ℕ1 = ℕ>0 = {1, 2, …}.
மாறாக, நேர்ம முழுஎண்களிலிருந்து இயலெண்களை சுட்டெண் குறியீடு மூலம் வேறுபடுத்திக் காட்டலாம். ஆனால் இரு குறியீடுகளுமே பயன்படுத்தப்படுவதால் அந்தந்தச் சூழலைக் கொண்டே புரிந்து கொள்ளல் வேண்டும்.
ℕ = {0, 1, 2, …}.
ℤ+= {1, 2, …}.
பண்புகள்
கூட்டல்
இயலெண்களில் கூட்டல் செயலைக் கீழ்வருமாறு வரையறுக்கலாம்:
, .
இதில் என்பது ஒரு இயலெண்ணின் தொடரியெண்ணைக் குறிக்கிறது.
இதனால் இயலெண்கள் கணம் ஒரு பரிமாற்று ஒற்றைக்குலம்; அதன் முற்றொருமை உறுப்பு 0. இந்த ஒற்றைக்குலம் நீக்கல் விதிகளை நிறைவு செய்யும்; மேலும் இந்த ஒற்றைக்குலத்தை ஒரு குலத்தில் உட்பொதிவு செய்யலாம். இயலெண்களைக் கொண்ட மிகச் சிறிய குலம் முழு எண்களாகும்.
"1" வரையறுக்கப்பட்டால்,
.
அதாவது என்பது இன் தொடரி (அடுத்த எண்) ஆகும்.
பெருக்கல்
கூட்டல் வரையறையுடன் ஒத்ததாகப் பெருக்கல் கீழ்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
.
இந்த வரையறையால் இயலெண்களின் கணம் , 1 ஐ பெருக்கல் சமனியாகக் கொண்ட பரிமாற்று ஒற்றைக்குலமாகிறது. இக்குலத்தின் பிறப்பாக்கி பகா எண்களின் கணமாகும்.
கூட்டலுக்கும் பெருக்கலுக்குமான தொடர்பு
கூட்டல் மற்றும் பெருக்கலின் ஒத்தியங்கும் தன்மை, பங்கீட்டுப் பண்பால் விளங்கும்:
.
இப்பண்பினால் இயலெண்களின் கணம் ஒரு பரிமாற்று அரைவளையமாகும். இயலெண்களின் கணத்தில் கூட்டல் நேர்மாறு (எதிர்ம எண்கள்) கிடையாதென்பதால் இயலெண்களின் கணம் வளையமாக முடியாது; அது ஒரு அரைவளையம் மட்டுமே ஆகும்.
"0" ஐத் தவிர்த்துவிட்டு, "1" இலிருந்து துவங்கும் இயலெண்களுக்கும் கூட்டல் மற்றும் பெருக்கல் வரையறைகள், ; என்பதைத் தவிர மேலுள்ளவாறே அமையும்.
வரிசைமுறை
இப்பகுதியில் என்பது ஐக் குறிக்கும்.
இயலெண்களின் முழுவரிசைமுறையின் வரையறை:
என்றவாறு என்ற இயலெண் இருந்தால், இருந்தால் மட்டுமே, ஆகும்.
இந்த வரிசைமுறை இயலெண்களில் எண்கணிதச் செயல்களோடு ஒத்தியங்கக் கூடியது:
, , மூன்றும் இயலெண்கள்; எனில்,
மற்றும் ஆகும்.
வகுத்தல்
இப்பகுதியில் என்பது ஐக் குறிக்கும். மேலும் வழக்கமான செயலியை அமல்படுத்தும் வரிசை முறை பின்பற்றப்படும்.
ஒரு இயலெண்ணை மற்றொரு இயலெண்ணால் வகுத்து ஒரு இயலெண்ணை விடையாகப் பெறுவதென்பது, எல்லா இயலெண்களுக்கும் பொருந்தாது. அதற்குப் பதிலாக மீதிவரக்கூடிய வகுத்தல்முறை உள்ளது.
, இரு இயலெண்கள்; எனில் கீழ்வரும் முடிவினை நிறைவு செய்யும் , என்ற இரு இயலெண்களைக் காண முடியும்:
; .
ஐ ஆல் வகுத்தலில் ஈவு என்றும் மீதி என்றும் அழைக்கப்படும். ஒவ்வொரு , இணைக்கும் அந்தந்த , இன் மதிப்புகள் தனித்துவமானவை. பல பண்புகள் (எகா: வகுதன்மை,) படிமுறைத்தீர்வுகள் (எகா: யூக்ளிடிய படிமுறைத்தீர்வு மற்றும் எண்கோட்டின் கருத்துக்களுக்கு யூக்ளிடிய வகுத்தல் அடிப்படையாக அமைகிறது.
இயலெண்கள் நிறைவுசெய்யும் இயற்கணிதப் பண்புகள்
கூட்டல் மற்றும் பெருக்கலுக்கான அடைவுப் பண்பு:
அனைத்து இயலெண்கள் , ஆகியவற்றுக்கு, , இரண்டும் இயலெண்களே.
சேர்ப்புப் பண்பு:
அனைத்து இயலெண்கள் , , ஆகியவற்றுக்கு,
;
.
பரிமாற்றுத்தன்மை:
அனைத்து இயலெண்கள் , என்பனவற்றுக்கு,
;
.
முற்றொருமை உறுப்பு:
ஒவ்வொரு இயலெண்ணுக்கும் (a''):
;
.
கூட்டல்-பெருக்கல் பங்கீட்டுப் பண்பு;
, , இயலெண்கள் எனில்:
.
, இயலெண்கள்;
எனில், அல்லது (அல்லது இரண்டுமே பூச்சியம்).
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
எண்களின் பட்டியல்
சூனியமும் இடமதிப்புத் திட்டமும்
எண்கள்
அடிப்படைக் கணிதம்
முழு எண்கள்
|
7300
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF.%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF
|
ஜி. திலகவதி
|
கோ. திலகவதி (பிறப்பு:1951) தமிழக காவல்துறையின் முதல் தமிழ்ப்பெண் தலைமை இயக்குனர். தமிழ் எழுத்தாளர். 2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர்.
பிறப்பு
திலகவதி தர்மபுரி குமாரசாமி பேட்டையில் காதலித்து, சொந்தங்களைத் துறந்து, மணந்து வாழ்ந்த இணையர்களான கோவிந்தசாமி ரெட்டியாருக்கும் அவர் மனைவிக்கும் 1951ஆம் ஆண்டில் பிறந்தவர். இவரின் தந்தையார் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; தாயார் அரசுப் பள்ளி ஆசிரியர். இவருக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை.
கல்வி
திலகவதி தன்னுடைய பள்ளிக் கல்வியை தர்மபுரியில் பெற்றார். வேலூர் ஆக்சீலியம் கல்லூரியில் பொருளாதாரத்தில் கலை இளவர் பட்டம் பெற்றார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பயின்று பொருளாதாரத்தில் கலை முதுவர் பட்டம் பெற்றார். பின்னர் தமிழ்நாடு பிற்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஒன்றியப் பொதுப் பணியாளர் தேர்விற்கான பயிற்சி நடுவத்தில் (UPSC Civil Service coaching centre, run by Department of Backward Development) சேர்ந்து ஓராண்டு பயிற்சி பெற்றார். அத்தேர்வில் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாகத் தேர்வானார். சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.
பணி
திலகவதி தமிழ்நாட்டிலிருந்து இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான முதல் தமிழ்ப்பெண் ஆவார். இவர் 1976 ஆம் ஆண்டில் தமிழகக் காவல்துறையில் பணியில் சேர்ந்தார். 34 ஆண்டுகள் அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் பின்வரும் பதவிகளை வகித்துள்ளார்:
காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் (Assistant Superintendent of Police - ASP 1976 - )
வேலூர்
திருச்சி கூடுதல் இணை-ஆணையர்
காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police - SP)
வேலூர் காவல் பயிற்சி பள்ளி முதல்வர்
சென்னை, துணை-ஆணையர்
சென்னை கூடுதல் ஆணையர்
சென்னை, புலனாய்வுத்துறை (CID)
சென்னை, குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு (Civil Supplies)
சென்னை, குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை
சென்னை, தலைமையிடத் துணை-ஆணையர்
வனத்துறை
வணிகவியல் துறை குற்றப்பிரிவு (Commercial Crime Investigation Wing)
இருப்புப்பாதை காவல்துறை (Railway Police) 1993
காவல்துறை உதவித் தலைவர் (Deputy Inspector General of Police - DIG 1993-?)
செங்கற்பட்டு (1993)
காவல்துறைத் தலைவர் (Inspector General of Police - IG)
தலைமையிடக் காவல்துறைத் தலைவர்
ஊர்க்காவல் படை (Home guard)
இருப்புப்பாதை காவல்துறை (Railway Police) 1997
காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (Additional Director General of Police - ADGP 2007 - 2010)
கடலோரப் பாதுகாப்புப் படை
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர்
தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவு
மதுவிலக்குப் பிரிவு (? - 2008 மே 22 வரை)
காத்திருப்போர் பட்டியல் (2008 மே 22 முதல் ? ) -
பொருளாதார குற்றப்பிரிவு (2008 திசம்பர் 19 முதல் 2010 சூன் 16 ஆம் நாள் வரை)
காவல்துறை தலைமை இயக்குநர் (Director General of Police - DGP 2010. - 2011)
தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் (2010 சூன் 17 ஆம் நாள் முதல் 2011 மார்ச் 31 ஆம் நாள் வரை)
காவலர் வீட்டுவசதிக்கழக உறுப்பினர்
காவல்துறை தலைமை இயக்குநர் பதவியை அடைந்த முதல் தமிழ்ப்பெண் இவரே. தமிழகத்தில் இப்பதவியை அடைந்த இரண்டாவது பெண் இவர் ஆவார்.
காவல்துறை தலைமை இயக்குநர் தகுதியில் தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராகப் பணியாற்றிய திலகவதி 2011 மார்ச் 31 ஆம் நாள் அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.
பிற பொறுப்புகள்
மகளிர்நல ஆணைய உறுப்பினர்
சாகித்ய அகாதமி உறுப்பினர்
மண வாழ்க்கை
முதல் திருமணம்
திலகவதி தான் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும்பொழுது தன்னைப் பின்தொடர்ந்து வந்து தன் காதலைத் தெரிவித்த இளங்கோ என்பவரை தன் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். தனது படிப்பிற்கு தடைபோட்ட தன் மாமியாரோடு ஏற்பட்ட பிணக்கால் ஜாய்ஸ்ரேகா, பிரபுதிலக் என்னும் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் மணவிலக்குப் பெற்றார்.
இரண்டாவது திருமணம்
திலகவதி ஐ. பி. எஸ். தேர்வில் வெற்றி பெற்று, ஐதராபாத் நகரில் உள்ள தேசிய காவல் கழகத்தில் (National Police Academy) பயிற்சி பெற்றபொழுது உடன் பயிற்சி பெற்ற காவல் துறை அலுவலர் நாஞ்சில் குமரன் என்பவரை 1982ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திவ்யா என்னும் மகள் பிறந்தார். பின்னர் கருத்துவேற்றுமையின் காரணமாக 29.5.1987ஆம் நாள் திலகவதி தான் குமரனோடு குடும்பம் நடத்திய வீட்டிலிருந்து வெளியேறினார். பின்னர் மணவிலக்குப் பெற்றார்.
படைப்புகள்
திலகவதி 9 புதினங்கள், 18 குறும்புதினங்கள், 9 சிறுகதைத் தொகுதிகள், 11 கட்டுரைத்தொகுப்புகள், 14 மொழிபெயர்ப்புத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
கட்டுரைகள்
முடிவெடு
வேர்கள் விழுதுகள்
சமதர்மப் பெண்ணியம்
மானுட மகத்துவங்கள்
சிறுகதைகள்
திலகவதியின் முதல் சிறுகதை - உதைத்தாலும் ஆண்மக்கள் - 1987ஆம் ஆண்டில் தினகரன் இதழில் வெளிவந்தது.
தேயுமோ சூரியன்
அரசிகள் அழுவதில்லை
நாவல்கள்
இனிமேல் விடியும் (மாலைமதி; 2-3-1989; மதி: 15 மாலை:18)
உனக்காகவா நான்; அம்ருதா பதிப்பகம், சென்னை; 2007.
ஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்
கண்திறந்திட வேண்டும்; 1996 கலைமகளில் வெளிவந்த தொடர்
கல்மரம் (சாகித்ய அகாதெமி விருது பெற்றது); அம்ருதா பதிப்பகம், சென்னை; 2005.
கனவைச் சூடிய நட்சத்திரம்; 2001
கைக்குள் வானம்
சொப்பன பூமியில்; அம்ருதா பதிப்பகம், சென்னை; மு.பதி. 1998;இ.பதி 1998.
தமிழ்க்கொடியின் காதல்; அம்ருதா பதிப்பகம், சென்னை; 2007.
தீக்குக் கனல் தந்த தேவி
திலகவதி நாவல்கள் 1 & 2(தொகுப்பு); புதுமைப்பித்தன் பதிப்பகம்; 2004
நேசத்துணை; அம்ருதா பதிப்பகம், சென்னை; 2007.
பத்தினிப்பெண் (1983ஆம் ஆண்டில் திரைப்படமாக உருவானது)
கவிதை
அலை புரளும் கரையோரம்
வானொலி உரைகள்
காலந்தோறும் அறம்
தொகுத்தவை
தொப்புள்கொடி (சிறுகதைகள்)
மரப்பாலம் (தென்கிழக்காசியச் சிறுகதைகள்)
மொழிபெயர்ப்பு
அன்புள்ள பிலாத்துவுக்கு - பால் சக்காரியா
இத்வா முண்டாவுக்கு வெற்றி - மகாசுவேதா தேவி (நேஷனல் புக் டிரஸ்ட்)
உதிரும் இலைகளின் ஓசை (உருது சிறுகதைகள்) - குர்ரத்துலைன் ஹைதர் (சாகித்திய அகாதெமி)
போலுவும் கோலுவும் - பங்கஜ் பிஷ்ட் (நேஷனல் புக் டிரஸ்ட்)
ஆய்வுகள்
திலகவதியின் படைப்புகளைச் சிலர் இளம்முனைவர் பட்டத்திற்கும் முனைவர் பட்டத்திற்கும் ஆய்வுசெய்துள்ளனர். அவற்றுள் சில:
திலகவதி புதினங்களில் பெண்கள் (முனைவர் பட்ட ஆய்வேடு); இராசு, நி; சி.பி.எம்.கல்லூரி, கோயம்புத்தூர்; 1998
திலகவதி நாவல்களில் பாத்திரப்படைப்பு (முனைவர் பட்ட ஆய்வேடு), பியூலஜா தி க; 2017; மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
திலகவதி நாவல்கள் ஒரு பெண்ணியப் பார்வை (இளம்முனைவர் பட்ட ஆய்வேடு); இ. உமாமகேஸ்வரி; புதுவைப் பல்கலைக்கழகம்; 2000.
திலகவதி நாவல்களில் பெண் சித்திரிப்பு (முனைவர் பட்ட ஆய்வேடு); எஸ். ஆஞ்சல் ஜெயலட் ராணி; அருள் பதிப்பகம், சென்னை;
திலகவதியின் நாவல்களில் சமுதாயக் கருத்துகள் (இளம்முனைவர் பட்ட ஆய்வேடு); டோலி; ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி, நாகர்கோவில்.
திலகவதியின் 'தேவை ஒரு தேவதைக்கதை'யில் சமுதாயச் சிந்தனைகள் (கலைமுதுவர் பட்ட ஆய்வேடு); தீபலட்சுமி; தெ.தி.இந்துகல்லூரி, நாகர்கோவில்.
திலகவதி நாவல்களில் சமூதாயச் சிக்கல்களும் தீர்வுகளும்; கோ. தனலட்சுமி; ஸ்ரீ. கா. சு. சு. கலைக் கல்லூரி, திருப்பனந்தாள்.
விருதுகள்
சாகித்ய அகாதமி விருது
தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2020)
அரசியல்
திலகவதி 2013 மார்ச் 13ஆம் நாள் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
திலவதியின் நாவல்களைப் பற்றி திசைகள் இணைய இதழில் வந்த கட்டுரை
தமிழோவியம் இணைய இதழில், திலகவதியின் "உனக்காகவா நான்" என்ற நாவலில் இருந்து சில பத்திகள்
டீக்கடை வலைப்பதிவில், திலகவதியின் கைக்குள் வானம்'' என்ற நாவலில் இருந்து சில வரிகள்
தமிழக எழுத்தாளர்கள்
தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்
தமிழ்ப் பெண் காவல்துறை அதிகாரிகள்
1951 பிறப்புகள்
தருமபுரி மாவட்ட நபர்கள்
வாழும் நபர்கள்
இந்திய காவல் பணி அதிகாரிகள்
|
7303
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
|
அளவீடு
|
அளவீடு என்பது ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு என் மதிப்பு மற்றும் அளவு வழங்கும் முறை ஆகும். அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் இயலை அளவியல் (:en:Metrology எனலாம். அளத்தல் அறிவியலுக்கு அடிப்படை என்பதனால் அளவியலும் அறிவியலின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும்.
ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படுகிறது. கணிதம், இயற்பியல், கட்டுபாட்டுவியல், புள்ளியியல், கணினியியல் ஆகிய துறைகளும் அளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இயற்கை அறிவியல் மற்றும் பொறியியலில் அளவீடுகள், பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றுபது கடினமாக உள்ளது. அவை பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளன.இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிபரவியல் சமூக அறிவியல் மற்றும் நடத்தை அறிவியலில் அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி, விகித அளவுகோல்கள் எனும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன.
வணிகம், அறிவியல், தொழில்நுட்பம், அளவுசார் ஆய்வு ஆகியவற்றின் பல துறைகளிலும் அளவியல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு அளவியல் முறைகள் மனிதகுலம் தோன்றியது முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பங்குதாரர்கள் அல்லது உடனுழைப்பவர்களுக்கிடையே ஏற்படும் இடம்சார்ந்த உடன்பாட்டின் அடிப்படையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ளன. 18 ஆம் நூற்றாண்டு முதல் இவை ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வழக்கத்தில் அனைவராலும் ஏற்று நடைமுறைப்படுத்தப்படும் முறை ஒன்றை நோக்கி நகர்ந்தது. அவ்வாறு தரப்படுத்தப்பட்ட, பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையே அனைத்துலக முறை அலகுகள் முறையாகும். இந்த முறையானது பொருள்சார் அளவீடுகள் அனைத்தையும் ஏழு அடிப்படை அலகுகள் இணைந்த கணிதவியல் அளவீடாக மாற்றிக் கொடுத்தது.
மரபுசார் வரையறை
அளவீடு என்பதற்கான மரபுசார் வரையறையானது இயன் அறிவியலில் உள்ள அனைத்துக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது. இது எண்ணிக்கைகளுக்கான விகிதங்களின் எண் கணிப்பீடு அல்லது தீர்மானத்தைக் குறிக்கிறது. எண்ணிக்கை, மற்றும் அளவீடு என்பதற்கான வரையறைகள் ஒன்றையொன்று ஒத்தவையாகும். கொள்கை அடிப்படையில் எண்ணிக்கைக்கான பண்புகளை அளவிட முடியும். எண்ணிக்கை என்பதற்கான மரபுசார் கருதுகோளானது :en:John Wallis, ஐசாக் நியூட்டன் ஆகியோர் காலத்திலேயே எடுத்தாளப்பட்டு, பின்னர் யூக்ளிட்டின் எலிமென்ட்ஸ் என்பதில் முன் குறித்துக்க்காட்டப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ கோட்பாடு
பிரதிநிதித்துவக் கோட்பாட்டில், அளவீடு என்பது எண்களற்ற தனி உருக்களுக்கும் எண்களுக்கும் ஏற்படும் தொடர்பு
இக்கோட்பாட்டின்படி எண்ணியல் அமைப்புக்களும், பண்பியல் அமைப்புக்களும் ஒப்பிடப்படுகின்றன. இவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புகளின் அடிப்படையிலும், ஒற்றுமைகளின் அடிப்படையிலும் எண்கள் ஒதுக்கப்படுகின்றன. அத்தகைய கட்டமைப்புகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் நிறுவப்பட்டு உருவாக்கப்படும் அளவுகோல், அளந்தறிதற்குரிய ஒரு அளவுசார்ந்த அளவுகோல் ஆகும்.
சில நிகழ்வுகளில், பிரதிநிதித்துவ கோட்பாட்டின் பயன்பாட்டு வடிவங்கள் பலவீனமானதாக இருக்க நேரிடும். இது போன்ற நிகழ்வுகளில், ஸ்டானிலி ஸ்மித் ஸ்டீவன்ஸின் (Stanley Smith Stevens) வழிகாட்டுதல்படி, உள்ளடக்கமான, பொருள் தொக்கி நிற்கின்ற,உள்ளர்த்தமுள்ள,வெளிப்படையற்றகூறுகளைஅளவிட,கூறுகளின் இயல் திறன் அடிப்படையில் விதிகள் அமைக்கவேண்டும்.அந்தவிதிமுறைகளுக்கேற்பதரவுஎண்கள்நிர்ணயிக்கப்படல் வேண்டும். நிர்ணயிக்கப்பட தரவு எண்களைக் கொண்டு கூறுகளை அளவிட வேண்டும்.
அளவீட்டு அலகுகளின் தரப்படுத்தல்
அளவீட்டிற்கான பொதுவான ஒப்பீட்டுக் கட்டமைப்பாக அனைத்துலக முறை அலகுகளே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்பின்படி ஏழு அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை கிலோகிராம், மீட்டர், கேண்டெலா, நொடி (கால அளவு), ஆம்பியர், கெல்வின், மோல் என்பனவாகும். இவற்றில் கிலோகிராம் தவிர்ந்த ஏனைய ஆறு அலகுகளும், குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்து வரையறுக்கப்படவில்லை. ஆனால் கிலோகிராம் என்ற அலகானது, பாரிஸில், Sèvres இலுள்ள, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தின் தலைமயகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாக உள்ளது.
சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce)(1839-1914) முதன் முதலில், எஸ்.ஐ. என்ற முறையின் அடிப்படை அலகை, எந்தவொரு ஆணையையும் சார்ந்திராத ஒரு தரப் பரிசோதனையுடன் சமன் செய்யும் முன்மொழிவை வைத்தார். இவர், நிறமாலை வரிசையின் அலைநீளத்தின் அடிப்படையில், நீளத்தின் அலகான மீட்டர் என்ற திட்ட அலகை வரையறுக்க முன்மொழிந்தார். இது மைக்கேல்சன்-மோர்லி (Michelson–Morley) பரிசோதனையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மைக்கேல்சன்-மோர்லி, ஆகியோர் பியர்ஸை மேற்கோள் காட்டி, தங்களது முறையை மேம்படுத்திக் கொண்டனர்.
அளவீட்டு முறைகளும், அலகுகளும்
உலகில் சில வேறுபட்ட அளவீட்டு முறைகளும், அவ்வாறு அளப்பதற்கான அலகுகளும் காணப்படுகின்றன.
:en:Imperial and US customary measurement systems
மெட்ரிக் முறை
மெட்ரிக் முறை என்பது அனைத்துலக தசமப்படுத்தப்பட்ட அளவை முறை ஆகும்.
அனைத்துலக முறை அலகுகள்
மெட்ரிக் முறையிலிருந்தே இம்முறை உருவாக்கப்பட்டது. இம்முறை உலகெங்கிலும் அறிவியலில் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல் - விற்றல் போன்ற நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை இதுவேயாகும். இந்த அனைத்துலக முறையே உலகின் பெரும்பாலான நாடுகளின் அதிகாரப்பூர்வமான அளவீட்டு முறைமையாகும்.
அனைத்துலக முறை அலகுகள் (பிரஞ்சு மொழியில், சர்வதேச அலகுகள் ஒழுங்கமைப்பு (ஸிஸ்டெமெ இன்டர்நேஷனல் டி யுனிடெஸ் - Système International d'Unités) சுருக்கமாக எஸ்.ஐ., (SI) என குறிக்கப்படுகிறது.
இது பதின்ம அடுக்கு அளவு முறையின் நவீன மாற்றமைவு ஆகும்.
இது அன்றாட வியாபாரத்திலும், அறிவியலிலும் உலகில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அலகு முறை ஆகும்.
முதலில் பயன்படுத்தப்பட்ட சென்டிமீட்டர்-கிராம்-வினாடி என்ற சி.ஜி.எஸ் (CGS) அமைப்பில் பல மாறுபாடுகளும் மாற்றுக்களும் இருந்தன. அவற்றைக் களைய, மீட்டர்-கிலோகிராம்-வினாடி என்ற அமைப்பிலிருந்து எம்.கே.எஸ் (MKS) முறை உருவாக்கப்பட்டது. இதிலிருந்து 1960ஆம் ஆண்டு எஸ்.ஐ (SI) அலகுகள் தோன்றின. எஸ்.ஐ., அலகுமுறையின் வளர்ச்சியின் போது, பதின்ம அடுக்கு அளவு முறையில் பயன்படுத்தப்படாத பல புதிய அலகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அடிப்படையான ஏழு வகை, பொருள் அல்லது இருப்பு சார்ந்த அளவுகளுக்கான அசல் எஸ்.ஐ., அலகுகளின் பட்டியல்:
நீளம்
இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் எஸ்.ஐ., படித்தர அலகு மீட்டர் ஆகும்.
மீட்டர் அலகுக்கான வரையறை: கிரிப்டான் மின்னிறக்க விளக்கில், அணுநிறை 86 உள்ள கிரிப்டான் தனிமத்தின் தனித்தனி அணுக்களால் உமிழப்பட்ட ஆரஞ்சு - சிவப்பு ஒளியின் 1,650,763.73 அலை நீளம் ஒரு படித்தர மீட்டருக்குச் சமம்.
நிறை
பொருளொன்று பெற்றுள்ள பருப்பொருளின் அளவு நிறை ஆகும். இது வெப்பநிலையையும் அழுத்தத்தையும் பொருத்ததல்ல. நிறையானது இடத்திற்கு இடம் மாறுபடாது. நிறையின் அலகு கிலோகிராம் ஆகும்.
கிலோகிராம் அலகுக்கான வரையறை: பிரான்சில், பாரீசில் உள்ள சவரெசு (Sèvres) என்ற இடத்தில், எடைகள் மற்றும் அளவீடுகளின் பன்னாட்டு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையிலான உருளையான கை வண்ணப் பொருளின் நகலின் நிறை ஒரு கிலோகிராமிற்குச் சமம்
காலம்
1960-ஆண்டு வரை படித்தர காலம் என்பது, சராசரி சூரிய நாளைக் கொண்டு கணக்கிடப்பட்டது. அதாவது, தீர்க்கரேகை வழியாக, மிக உயரமான புள்ளியில் சூரியன் கடக்கக்கூடிய அடுத்தடுத்த இரு நிகழ்வுகளுக்கான கால இடைவெளியைக் கொண்டு, ஒரு ஆண்டின் சராசரியாக காலம் கணக்கிடப்பட்டது. காலத்தின் எஸ்.ஐ., அலகான நொடி, 1967-ஆம் ஆண்டு அணுவின் படித்தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நொடி எனும் அலகுக்கான வரையறை: ஒரு படித்தர நொடி என்பது, அணுநிறை 133 கொண்டுள்ள சீசியம் அணுவின் இரு அடிஆற்றல் நிலைகளின், மீநுண்ணிய மட்டங்களுக்கிடையே சீரான பரிமாற்றம் ஏற்படுகிறது. இந்நிகழ்வால் ஏற்படும் மீநுண்ணிய சீரான பரிமாற்ற கதிர்வீச்சிற்குரிய 9,192,631,770 அலைவுக் காலம் ஒரு நொடி ஆகும்.
மின்னோட்டம்
மின்னோட்டத்தை அளக்கும் அலகாக ஆம்பியர் என்பது இருக்கிறது. வெற்றிடத்தில், ஒரு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்ட, புறக்கணிக்கத்தக்க குறுக்குப் பரப்பு உடைய, இரு முடிவில்லா நீளங்கள் உடைய இணைக் கடத்திகள் வழியே ஒரு மீட்டர் நீளத்தில் பாயும் சீரான மின்னோட்டம், அவ்விரு கடத்திகளுக்கிடையே 2×10−7 நியூட்டன் விசையை ஏற்படுத்தினால், அம்மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.
வெப்பநிலை
வெப்பநிலையை அளக்க கெல்வின் என்னும் அலகு பயன்படுத்தப்படுகிறது. கெல்வின் என்பது நீரின் முப்புள்ளியில் (triple point) வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையில் 1/273.16 பின்னப்பகுதி ஒரு கெல்வின் என்று வரையறுக்கப்படுகிறது.
ஒளிச்செறிவு
ஒளிச்செறிவை அளக்க கேண்டெலா என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. ஒளிமூலம் ஒன்று உமிழும் 540×1012 எர்ட்சு அதிர்வெண் உடைய ஒற்றை நிறக் கதிர்வீச்சின் செறிவு, ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு ஸ்டேரிடியனுக்கு 1/683 வாட் எனில், அத்திசையில் ஒளிச்செறிவு ஒரு கேண்டிலா என வரையறுக்கப்படுகிறது.
வேதிப்பொருளின் அளவு
வேதிப்பொருளொன்றின் அளவை அளக்க மோல் என்ற அலகு பயன்படுகின்றது. 0.012 கிலோகிராம் கார்பனில் உள்ள கார்பன்-12 அணுக்கள் போன்ற பல அடிப்படைத் துகள்களை உள்ளடக்கிய பொருளின் அளவு மோல் எனப்படும்.
அணுசார் படித்தர நிறை
அணுவின் அடிப்படையிலான படித்தர நிறை, இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில், பெரிய அளவுகோல் போன்று, துல்லியமாக அணுவின் அளவுகோலில் நிறைகளை அளந்தறிய முடியவில்லை.
சில சிறப்பு பெயர்கள்
சில அலகுகளின் மடங்குகளைக் குறிப்பதற்காக சில முறையற்ற பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
100 கிலோகிராம்கள்
= 1 குவிண்டால்;
1000 கிலோகிராம்கள்
= 1 மெட்ரிக் டன்;
10 ஆண்டுகள்
= 1 தசாப்தம் / பதிகம்
100 ஆண்டுகள்
= 1 நூற்றாண்டு / சதம்
1000 ஆண்டுகள்
= 1 பத்தாயிரம் ஆண்டு
கட்டிட வர்த்தகங்கள்
1966 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கட்டிட வர்த்தகங்கள், மெட்ரிக் முறைமையை முழுமையாக ஏற்றுக்கொண்டன. நீளத்தை அளவிடுவதற்கு மீட்டர் (மீ), செண்டிமெட்டர் (செ.மீ.), மில்லிமீட்டர் (மிமீ) எனும் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, கட்டிட திட்டங்களைத் தயாரிக்கும்போதும், படிக்கும்போதும் மிகுந்த குழப்பங்களை விளைவிப்பதால் தவிர்க்கப்படுகின்றன
உதாரணமாக,
இரண்டு மீட்டர்களும், ஒரு அரை மீட்டரும் இணைந்த நீளம் வழக்கமாக 2500 மிமீ அல்லது 2.5 மீ என பதிவு செய்யப்படுகிறது. 250 செ.மீ என பதிவு செய்வது தரமற்றதாக கருதப்படுகிறது.
மதிப்பீட்டுக் கணக்கெடுப்பு ஆய்வு
கணக்கெடுப்பு ஆராய்ச்சி துறையில், தனிப்பட்ட மனஅணுகுமுறை, மனோநிலை, சான்றாண்மை, தோரணை, நடத்தை, ஒழுக்கம் போன்றவை, ஆளுமை வினவல் பட்டியல், அமைப்பற்ற வினாப்பட்டியல், ஆய்வு வினாப்பட்டியல், அமைப்புடைய வினாப்பட்டியல் எனும் பலவகையான வினவுதாள் ஆதாரங்களை ஆய்வு அளவீட்டுக் கருவிகளாகப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றன. அளவீடுகளீன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மற்ற அளவீடுகளைப் போல, கணக்கெடுப்பு ஆராய்ச்சி அளவீடுகளும் அளவீட்டு பிழைகளால் பாதிக்கப்படக்கூடியவை ஆகும்.
அதாவது, அளவீட்டு கருவியின் மூலம் பெறப்படும் மதிப்பானது அதன் உண்மையான மதிப்பிலிருந்து மாறுபடுகின்றது..
நுட்பியல் சொற்கள்
அளவு (Scale, Measure)
எண்ணுதிகள் (Quantities)
அளக்கும் முறைகள் (Measurement Techniques)
அளவீடு கோட்பாடு (Measurement Theory)
அளவுப்படி அமைத்தல் (Standardization)
அளவுப்பொறியமைப்பு (Instrumentation)
மேற்கோள்கள்
அளவியல்
|
7306
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%202005
|
டிசம்பர் 2005
|
2005 செய்திகள்
|
7311
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
வேதியியல் தலைப்புகள் பட்டியல்
|
பொருள்
பொருள், சடப்பொருள் - Matter
பொருண்மை, திணிவு நிறை- Mass
எடை - Weight
கனவளவு - Volume
அணு, அணு அமைப்பு
அணு - Atom
அணு அமைப்பு - Atomic Structure
எதிர்மின்னி, எலக்ட்ரான்
நேர்மின்னி, புரோட்டான்
நொதுமி, நியூட்ரான்
தனிமம், சேர்வை, கலவை
தனிமங்கள், மூலகங்கள் - Elements
மூலக்கூறு - Molecule
சேர்வை - Compound
கலவை - Mixture
கரையம் - Solute
கரைப்பான் - Solvent
கரைசல் - Solution
வீழ்படிவு - Precipitation
கூழ் கூழ்மம் - Colloid
பொருட்களின் இயல்நிலைகள்
திண்மம் - Solid
திரவம் நீர்மம் - Liquid
வாயு வளிமம்- Gas
State of matter பொருளின் இயல்நிலை
phase பொருளின் நிலைமுகம்
திண்மம்
நீர்மம்
வளிமம்
பிளாசுமா
உறைதல் - freezing
உருகுதல் - melting
fusion இளகுதல், உருகுதல்
நீர்மம்
கொதித்தல் - boiling
evaporation - ஆவியாதல்
condensation குளிர் படிவு
sublimation நேரடியாக ஆவியாதல், பொசுங்குதல் பதங்கமாதல்
vaporization ஆவியாதல்
வேதியியற் பிணைப்பு
bonding - பிணைப்பு (வேதியியல்)
ionic bonding - அயனிப் பிணைப்பு
covalent bonding - சகப்பிணைப்பு
ion - அயனி
anion - எதிர் அயனி
cation நேர் அயனி
ionization - அயனியாதல்
electrovalency - எலக்ரோன் இணைதிறன்
ionic compound - அயனிச் சேர்மம்
polar bond - மின்முனைமப் பிணைப்பு
eleconegativity - எலக்ட்ரான் கவர்திறன்
metallic bonding - உலோகப் பிணைப்பு
வேதி வினை
வேதியியற் தாக்கம், இரசாயனத் தாக்கம் - Chemical Reaction
ஒட்சியேற்றம் ஆக்சிசனேற்றம்- Oxidation
reactivity வினையுறுமை
reactant வினைப் பொருள்
product விளைபொருள்
reagent
விதிகள்
அறுதி விகிதசம விதி
திணிவுக்காப்பு விதி
law of multiple proportions
gas laws
இதர தலைப்புகள்
சக்தி ஆற்றல்- Energy
அடர்த்தி - Density
ஒளியின் கதி ஒளி வேகம் ஒளி விரைவு- Speed of Light
வேதி
வேதியியல்
இரசாயன இயல்புகள், வேதியியல் இயல்புகள் - Chemical Properties
பெளதிக இயல்புகள், இயல்பியல் இயல்புகள் - Physical Properties
முகம் அலை முகம்- Phase
ஒரினத்தன்மை - Homogeneous
பல்லினத்தன்மை - Heterogeneous
மோல் - Mole
மோல்நிறை - Molarmass
மூலக்கூற்றுச் சூத்திரம் மூலக்கூற்று ஈடுகோள்- Molecular Equation
அமிலம், காடி - acid
காரம்
உப்பு - salt
வெப்பநிலை
அமுக்கம்
செறிவு - concentration
ஊக்கி - catalyst
ஒட்சியேற்றம்
நைத்திரேற்றம்
வேதியியல்
அறிவியல் தலைப்புகள் பட்டியல்
வேதியியல் பட்டியல்கள்
|
7312
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81
|
ஐங்குறுநூறு
|
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தவை. அன்பின் ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணைகள் ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந்நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன. அவை, ஆசிரியப்பாவில் அமைந்த 3 அடி சிற்றெல்லையும் 6 அடி பேரெல்லையும் கொண்டதாக விளங்குகிறது. இந்நூல் குறைந்த அடியெல்லை கொண்ட பாக்களால் அமைந்தமையால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.அந்தப் பாடல் சிவபெருமானின் விரிவாக்கத் தன்மையை ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புலவர்கள்
ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த 100 பாடல்களையும் ஒவ்வொரு புலவர் இயற்றியுள்ளார். அவ்வகையில் இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன. இவற்றைத் தொகுக்க உதவும் வெண்பாவைக் கீழ்க்காண்போம்.
சான்று :
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சிக் கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லைப் பேயனே
நூலையோ தைங்குறு நூறு.
விளக்க உரை :
மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்
ஆகியோர் பாடியுள்ளனர். இந்நூலைத் தொகுத்தவர் "புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்" என்னும் புலவர். தொகுப்பித்தவன் "யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை" என்ற வேந்தன் ஆவார்.
நூலின் அமைப்பு
எட்டுத்தொகை நூல்களில் நிலம் சார்ந்த திணை முறைமையின்படி குறிஞ்சித் திணைப் பாடல்களை முதலில் வைக்காமல் மருதத் திணைப் பாடல்களை முதலில் வைத்துத் தொகுக்கப்பட்ட நூல் ஐங்குறுநூறு ஒன்றே ஆகும். இதில் திணைப்பாடல்கள் அமைவுமுறையை, "மருதநெய்தல் நற்குறிஞ்சி பாலை முல்லையென, இரும்பொறையால் கூடலூர்கிழார் தொகைசெய்த ஐங்குறுநூறே" என்ற அடிகள் தெளிவுபடுத்துகின்றன. இந்நூலில் நூறு நூறு பாடல்களாகப் பயின்று வரும் பாடல்களினாலோ அப்பாடல்களில் பயின்று வரும் சொல்லாட்சியினாலோ ஒவ்வொரு பத்துப் பாடல்களும் சிறப்பான தலைப்புப் பெயர்கள் பெற்றுள்ளன. வேட்கைப்பத்து, வேழப்பத்து, தெய்யோப்பத்து, களவன் பத்து போன்றவை சொல்லாட்சியாலும் பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, செவிலி கூற்றுப்பத்து முதலியன பொருளமைப்பாலும் பெயர் பெற்றன. மேலும் தொண்டிப்பத்து (பாடல் 171-180) என்ற தலைப்பின் கீழ் அமைந்த பத்துப் பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன. இதனைப் பாடியவர் நெய்தல் திணையைப் பாடிய அம்மூவனார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாய்ப்பத்து சொல்லாட்சியும் பொருளமைதியும் பொருந்தியது. ஐந்திணைக் கருப்பொருட்களான விலங்குகளையும் பறவைகளையும் அடிப்படையாகக் கொண்டு எருமைப்பத்து, கேழற்பத்து (கேழல்-பன்றி), குரக்குப்பத்து, கிள்ளைப்பத்து (கிள்ளை-கிளி), மஞ்ஞைப்பத்து (மஞ்ஞை-மயில்), போன்ற பெயர்களும் பாடல்களின் தொகுப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
ஐங்குறுநூறு குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் நிறைந்துள்ள பாடல்களைக் கொண்டுள்ளது. ஆனால் இந்நூலின் பாடல்கள் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி பொருட்கள் மூன்றும் குறைவாக அமைந்துள்ளது.
பதிப்பு வரலாறு
ஐங்குறுநூற்றின் பாடல்கள் கடைச்சங்க காலம் முதலாகச் சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1903-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர்த் தமிழறிஞர் பலரும் இந்நூலுக்கு உரைகள் எழுதி வெளியிட்டுள்ளனர்."
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
தமிழ் இலக்கியம்
வெளியிணைப்புகள்
ஐங்குறுநூறு (மதுரைத் திட்ட மின் பதிப்பு)
ஐங்குறுநூறு மூலம் (தமிழ் இணையப் பல்கலைக் கழகம்)
ஐங்குறுநூறு
தமிழ் மெய்யியல்
எட்டுத்தொகை
|
7313
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81
|
அகநானூறு
|
அகநானூறு எட்டுத்தொகை எனப்படும் சங்ககாலத்தமிழ் நூல் தொகுப்பில் உள்ள ஒரு நூலாகும். இந்நூல் அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது. இதற்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியன. ஆயினும் அவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. இந்நூல் 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நீண்ட பாடல்களைக் கொண்டிருப்பதால் இதனை, 'நெடுந்தொகை' (நெடுமை+தொகை, நெடிய அல்லது நீண்ட பாடல்களின் தொகுப்பு) என்றும் கூறுவர்.
நூலமைப்பு
இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் மிகக் குறைந்த அளவாக 13 அடிகளையும் அதிக அளவுவாக 31 அடிகளையும் கொண்டு அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை
களிற்றியானை நிரை(1-120)
மணிமிடை பவளம் (121-300)
நித்திலக் கோவை (301-400)
என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன.
பாடல் வைப்புமுறை
1,3,5,... என ஒற்றை எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - பாலைத்திணை(200 பாடல்கள்)
10,20,... என வரும் பாடல்கள் - நெய்தல் திணை(40 பாடல்கள்)
4,14,... என 4 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - முல்லைத்திணை(40 பாடல்கள்)
2,8,12,18 என 2,8 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - குறிஞ்சித்திணை(80 பாடல்கள்)
6,16,26 என 6 எனும் எண்ணைப் பெற்று வரும் பாடல்கள் - மருதத்திணை(40 பாடல்கள்)
பாடியோர்
இத்தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத்தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.
அகநானூற்றின் மூன்று பகுப்புகள்
அகநானூற்று கருத்துகளைத் தொகுத்து அகவல் பாவால் (ஆசிரியப் பாவால்) மற்றுமொரு நூல் யாக்கப்பட்டிருந்தது. இதனை 'நெடுந்தொகை அகவல்' என்று நாம் குறிப்பிடலாம். இந்தக் குறியீடு அதனைப் பற்றிக் கூறும் பழம்பாடலிலிருந்து கொள்ளப்பட்டது. சோழநாட்டிலுள்ள இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன் என்பவன் இந்த நூலைப் பாடினான்.
பழம்பாடல்
நின்ற நீதி வென்ற நேமிப்
பழுதில் கொள்கை வழுதியார் அவைக்கண்
அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து
வான் தோய் நல்லிசைச் சான்றோர் குழீஇ
அருந்தமிழ் மூன்றும் தெரிந்த காலை (5)
ஆய்ந்த கொள்கைத் தீந்தமிழ்ப் பாட்டுள்
நெடிய ஆகி அடிநிமிர்ந்து ஒழுகிய
இன்பப் பகுதி இன்பொருட் பாடல்
நானூறு எடுத்து நூல்நவில் புலவர்
களித்த மும்மதக் 'களிற்றியானை நிரை' (10)
மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம்
மேவிய நித்திலக் கோவை என்றாங்கு
அத்தகு மரபின் முத்திற மாக
முன்னினர் தொகுத்த நன்னெடுந் தொகைக்குக்
மருத்து என் பண்பினோர் உரைத்தவை நாடின் (15)
அவ்வகைக்கு அவைதாம் செவ்விய அன்றி
அரியவை ஆகிய பொருண்மை நோக்கிக்
கோட்டம் இன்றிப் பாட்டொடு பொருந்தத்
தகவொடு சிறந்த அகவல் நடையால்
கருத்து இனிது இயற்றியோனே பரித்தேர் (20)
வளவர் காக்கும் வளநாட்டுள்ளும்
நாடெனச் சிறந்த பீடுகெழு சிறப்பின்
கெடலருஞ் செல்வத்து இடையள நாட்டுத்
தீதில் கொள்கை மூதூருள்ளும்
ஊரெனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்
செம்மை சான்ற தேவன்
தொப்மை சான்ற நன்மையோனே.
இஃது அகநானூறு மூன்று பகுப்புகளாக அமைந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது.
களிற்றியானைநிரை
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.
மணிமிடை பவளம்
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும் செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.
நித்திலக் கோவை
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஓரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.
அகநானூற்றுத் தொகுப்பு
அகநானூற்றைத் தொகுக்க பின்வரும் பாடல்கள் உதவியுள்ளன
பாடல் 1 - பஃறொடை வெண்பா
வியமெல்லாம் வெண்டேர் இயக்கம் கயமலர்ந்த
தாமரையா றாகத் தகைபெறீஇக் காமர்
நறுமுல்லை நான்காக நாட்டி வெறிமாண்ட
எட்டும் இரண்டும் குறிஞ்சியாக் குட்டத்து
இவர்திரை பத்தா இயற்பட யாத்தான்
தொகையின் நெடியதனைத் தோலாச் செவியான்
வகையின் நெடியதனை வைப்பு.
இரண்டாம் பாடலில் கூறப்பட்டுள்ள செய்திதான் இந்தப் பாடலிலும் கூறப்பட்டுள்ளன. எனினும், இதில் திணையின் விளக்கங்கள் கருப்பொருள்களை மையமாகக் கொண்டுள்ளன.
வெண்தேர் என்னும் கானல்காற்று ஓடுவது பாலை
தாமரை என்பது ஆகுபெயராய் அது பூத்திருக்கும் மருத நிலத்தைக் குறிக்கும்
காமம் உண்டாக்கக் கூடிய முல்லைப்பூ பூத்திருக்கும் நிலம் முல்லை. இதுவும் ஆகுபெயர்.
வெறி என்பது மணத்தையும், வெறியாட்டத்தையும் குறிக்கும். இந்த இரண்டும் உள்ளது குறிஞ்சி.
குட்டத்தில் (உப்பங்கழிகளில்) அலைகள் பாயுமிடம் நெய்தல்
பாடல் 2 - வெண்பா
ஒன்றுமூன் றைந்தேழொன் பான்பாலை ஓதாது
நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே
ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு
கூறா தவைகுறிஞ்சிக் கூற்று.
பாட்டு வரிசை எண்களில் 1,3, 5, 7, 9 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (1, 11, 21 இப்படி \ 3, 13, 23, இப்படி \ பிறவும்) - பாலைத் திணை
பாட்டு வரிசை எண்களில் 4 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (4, 14, 24 இப்படி) - முல்லைத் திணை
பாட்டு வரிசை எண்களில் 6 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (6, 16, 26 இப்படி) - மருதத் திணை
பாட்டு வரிசை எண்களில் 10 என்னும் அடுக்கு எண்ணில் முடியும் பாடல்கள் (10, 20, 30 இப்படி) - நெய்தல் திணை
பாட்டு வரிசை எண்களில் 2, 8 என்னும் எண்ணில் முடியும் பாடல்கள் (2, 12, 22 இப்படி \ 8, 18, 28 இப்படி) - குறிஞ்சித் திணை
பாடல் 3 - வெண்பா
பாலை வியமெல்லாம் பத்தாம் பனிநெய்தல்
நாலு நளிமுல்லை நாடுங்கால் - மேலையோர்
தேறு மிரண்டெட் டிவைகுறிஞ்சி செந்தமிழின்
ஆறு மருதம் அகம்.
பாட்டு 2-ல் கூறப்பட்டுள்ள செய்தியே இந்தப் பாட்டிலும் வேறு வகையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இவற்றையெல்லாம் 'செந்தமிழின் ஆறு(நெறி)' என்று குறிப்பிடுவது பிற மொழிகளில் இல்லாத தமிழ்நெறி இந்தத் திணைப் பாகுபாடு என்பதைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது. தமிழ்நெறி என்பது தமிழிலக்கிய நெறியாகும்.
அகப்பொருள்
பண்டைத் தமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். "உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஊழினால் ஒன்று கூடி தாம் உணர்ந்த இன்பம் இதுதான் என பிறருக்குச் சொல்ல முடியாமல் உள்ளத்தே அனுபவிக்கும் உணர்ச்சியே அகம்" எனப்படும். அகப்பாடல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்ற ஐந்திணைகளுக்கும் உரிய அக ஒழுக்கங்களை ”அன்பின் ஐந்திணை” எனக் கூறுகின்றன. பொருந்தாத காதலைப் பெருந்திணை என்றும் ஒருதலைக் காமத்தைக் கைக்கிளை என்றும் கூறுகின்றன.
அகநானூற்றில் வரலாற்றுச் செய்திகள்
அகப்பொருள் நூலான அகநானூற்றில் புறப்பொருள் செய்திகளும் உள்ளன. தித்தன், மத்தி, நன்னன், கரிகாற் பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், போன்ற பெருநில வேந்தர்கள் பற்றியும் ஆதன்எழினி, ஆட்டனத்தி, அன்னிமிஞிலி, பாணன், பழையன் போன்ற குருநில மன்னர்கள் பற்றியும் எண்ணற்ற வரலாற்றுச் செய்திகளைத் தருகிறது. அலெக்சாண்டரின் படையெடுப்பின் போது கஞ்சி நந்தர்கள் தமது செல்வங்களையெல்லாம் கங்கையாற்றின் அடியில் புதைத்து வைத்த வரலாற்றுச் செய்தியும் இந்நூலின் 20,25 ஆம் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலும் வாணிபமும்
நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க "குடவோலை முறை" பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்தி அகநானூறு வழி தெரிகிறது. யவனர்கள் வாசனைப் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தி காணப்படுகிறது. முசிறி என்னும் சேரநாட்டுத் துறைமுகப்பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு விலையாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாக அகநானூறு குறிப்பிடுகிறது.
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி
(அகநானூறு, 149:9-11)
(நன்கலம் = நல்ல கப்பல்; கறி = மிளகு) இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.
"உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்"(225)
என்ற வரிகள் பெரிய கப்பலை பற்றி எடுத்துரைக்கிறது
வாழ்க்கை முறை மற்றும் பண்பாடுகள்
அகநானூற்றின் 86, 136 ஆம் பாடல்களில் தமிழர் தம் திருமண நிகழ்ச்சி கூறப்படுகிறது. "மணவிழாவில் மணப்பந்தலில் வெண்மணல் பரப்பி விளக்கேற்றி, மணமகளை நீராட்டித் தூய ஆடை அணிகள் அணிவித்து, இறைவழிபாடு நடத்தித் திங்கள் உரோகிணியைக் கூடிய நல்ல வேளையில் வாகை இலையோடு அருகின் கிழங்கையும் சேர்த்துக் கட்டப்பெற்ற வெண்ணூலை தலைவிக்குக் காப்பாகச் சூட்டுவர்"- என்று விளக்கப்படுகிறது.
பதிப்பு வரலாறு
இந்நூல் உரையுடன் முதற் பகுதி 'மெட்ராஸ் கம்பர் விலாஸ் புக் டிப்போட் மயிலாபூர்' என்றவர்களால் 1918-இல் முதலில் பதிப்பிக்கபட்டது. ஆனால், இப்பதிப்பின் முகப்பு பக்கத்தைத் தவிர வேறு எந்தப் பக்கமும் பார்க்கக் கிடைக்கவில்லை, அகநானூற்றின் இரண்டாம் பகுதி 1920-இல் வந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்த தகவலைத் தவிர இப்பதிப்பும் பார்க்கக் கிடைக்கவில்லை. இந்நூலின் முழு பதிப்பானது 1923-இல் 'அகநானூறு மூலமும் பழைய உரையும்" என்னும் பெயரில் ரா.இராகவையங்கார் பதிப்பிக்க, கம்பர் விலாசம் இராஜகோபாலையங்கார் என்பவரால் வெளியிடபட்டது."
வெளி இணைப்புகள்
பாடல் மூலம், செய்தி, ஆங்கில விளக்கம், பாடல் வாரியாக
குறிப்புகள்
எட்டுத்தொகை
சங்க இலக்கிய தமிழிசை ஆதாரங்கள்
|
7314
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81
|
புறநானூறு
|
புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு, நந்தா விளக்கம் என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களில் புறநூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் பாக்கள் 4 அடி முதல் 40 அடி வரையிலான ஆசிரியப்பாவால் அமைந்து உள்ளன. சிறுபான்மையாக வஞ்சி அடிகளும் விரவி வரும். புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
பாடியவர்கள்
இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இந்நூலில் அதிக பாடல்களைப் பாடியவர் ஔவையார் (33 பாடல்கள்) ஆவார். அவரை அடுத்து அதிக பாடலைப் பாடியவர் கபிலர் (28 பாடல்கள்) ஆவார். இந்நூலில் இடம்பெறும் புலவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்லர். அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.
நூல் அமைப்பு
இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர், வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அதனை அடுத்துப் போர்ப் பற்றிய பாடல்களும் கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள்ளனர். புறப்பொருள் கருத்துகளைத் தழுவிப் பாடப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன.
புறப்பொருள்
அகப்பாடல்கள் ஐந்திணை ஒழுக்கங்களைக் குறித்தது போலப் புற ஒழுக்கங்களைக் குறித்து அமைந்த பழங்கால வாய்பாட்டுப் பாடல் நமக்கு விளக்குகிறது.
பாடல்:
வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்.
இப்புற ஒழுக்கங்களை வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்ற எட்டுத் திணைகளாகக் குறிப்பிடுகின்றன. இதில் பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய திணைகளும் அடங்கும். திணையின் உட்பிரிவு துறை எனப்படுகிறது.
புறப்பாடல்கள் புற ஒழுக்கங்களான போர்த்திறம், வள்ளல் தன்மை, மகளிர் மாண்பு, சான்றோர்களின் இயல்பு போன்றவற்றைக் குறிப்பிடுகின்றன.
புறநானூறு வழி அறியலாகும் செய்திகள்
அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன், பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளைப் புறநானூறு வழி அறியலாம்.
சமூக நிலை
பெண்கள் மங்கல அணி அணிதல், இறந்தவரைத் தாழியில் கவித்தல், நடுகல் நடுதல், நட்ட கல்லைச் சுற்றி மயிற்பீலி அணிவித்து மது வார்த்தல், கணவனை இழந்த பெண்கள் அணிகளைக் களைந்து, கைம்மை நோன்பு நோற்றல், உடன்கட்டையேறல் போன்ற பழக்க வழக்கங்களையும் 10 வகை ஆடைகளையும், 28 வகை அணிகலன்களையும் 30 படைக்கலக்கருவிகளையும் 67வகை உணவுகளையும் எடுத்து இயம்புகின்றன. பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்குக் கையில் வேல் கொடுத்துப் போருக்கு அனுப்பும் மகளிர், முறத்தால் புலியை விரட்டும் மகளிர் எனப் பெண்களின் வீரத்தையும் போற்றுகின்றன. அக்கால சமூக நிலையைக் காட்டும் கண்ணாடி எனப் புறநானூறு விளங்குகிறது.
வரலாற்றுக் குறிப்புகள்
புறநானூற்றுப் பாடல்களில் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. பாண்டியன் நெடுஞ்செழியன் முதலான 15 பாண்டிய மன்னர்களையும் கரிகாற்சோழன் போன்ற 18 சோழ அரசர்களையும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் போன்ற 18 சேர அரசர்களையும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். பண்டைய போர்க் களங்களான வெண்ணிப்பறந்தலை, வாகைப்பறந்தலை, கழுமலம், தகடூர், தலையாலங்கானம், கானப்பேரெயில் போன்ற போர்க்களங்கள் குறிப்பிட்டுள்ளன.
எடுத்துக்காட்டுப் பாடல்
தொடியுடைய தோண்மணந்தனன்
கடிகாவிற் பூச்சூடினன்
தண்கமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
நட்டோரை யுயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
வேந்துடை யவையத் தேங்குபுகழ் தோற்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன்
கடும்பரிய மாக்கடவினன்
நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
ஓங்குகியல களிறூர்ந்தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்,
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
செய்ப வெல்லாஞ் செய்தன னாகலின்
இடுக வொன்றோ சுடுக வொன்றோ
படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் றலையே.
- நம்பி நெடுஞ்செழியன் - புறம் - பாடல் 235
மொழிபெயர்ப்புகள்
பேராசிரியர் யோர்ச். எல். அகார்ட் என்பவரால் புறநானூறு The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of Poems from Classical Tamil, the Purananuru எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் (1999) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஜி.யு.போப் (போப்பையர்) என்பவரால் புற நானூற்றின் பல பாடல்கள் " Extracts from purananooru & Purapporul venbamalai" எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பதிப்பு வரலாறு
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் 1894-ஆம் ஆண்டு பழைய உரையோடு (முதல் 266 பாடல்களுக்கு மட்டுமே பழைய உரை கிடைத்துள்ளது) நூல் முழுமைக்கும் குறிப்புரையும் எழுதி முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.
இவற்றையும் பார்க்கவும்
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கியம்
புறநானூற்றுப் புலவர்கள்
அடிக்குறிப்பு
வெளி இணைப்புகள்
"ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய விளக்கவுரையுடன் - புறநானூறு"
சங்க இலக்கியம்
சங்க இலக்கிய தமிழிசை ஆதாரங்கள்
புறநானூறு
தமிழ் மெய்யியல்
எட்டுத்தொகை
|
7315
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
பதினெண் கீழ்க்கணக்கு
|
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
நூல்வகைகள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்:
"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு."
இந்தப் பாடல் குறிப்பிடும் நூல்கள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று)
இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று)
கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று)
களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று)
ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று)
முப்பால் (திருக்குறள்)
திரிகடுகம்
ஆசாரக் கோவை
பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்
கைந்நிலை
முதுமொழிக் காஞ்சி
ஏலாதி
இந்தப் பாடலில் கைந்நிலை என்பது ஒழுக்கத்தைக் குறிக்கும்.
வாய்ப்பாட்டுப் பாடலில் பாட வேறுபாடு
நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியுட னேலாதி யென்பதூஉம்,
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு
இந்தப் பாடலில் இனிய நிலையை உடைய காஞ்சி என்று அடைமொழியாகக் கொள்ளப்பட்டுக் கைந்நிலை என்பது தனி நூலாகக் கொள்ளப்படும்.
இன்னிலை, கைந்நிலை, நூல்களில் எது பதினெண்கீழ்க்கணக்கு தொகுப்பில் சேரவேண்டும்
இன்னிலை அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருள் மேல் 45 வெண்பாப் பாடல்களைக் கொண்ட நூல். இதன் ஆசிரியர் பொய்கையார். "இன்னிலை" நூலைத் திரு.வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் அச்சிற் பதிப்பித்தார்.
"கைந்நிலை" என்ற நூலை இயற்றியவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார். இதனை ஆசிரியர் திரு. அனந்தராமையர் அவர்கள் அச்சில் பதிப்பித்தார். இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணை மேல் பாடப்பட்ட 60 பாடல்கள் உள்ளன.
இன்னுரை நூலுக்கு உரை எழுதும் சங்குப் புலவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்னிலை, கைந்நிலை வேறுபாடு
பகுப்பு
இன்னிலை சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொன்று நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.
நீதி நூல்கள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
திருக்குறள்
திரிகடுகம்
ஏலாதி
பழமொழி நானூறு
ஆசாரக்கோவை
சிறுபஞ்சமூலம்
முதுமொழிக்காஞ்சி
அகத்திணை நூல்கள்
ஐந்திணை ஐம்பது
திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
கார் நாற்பது
கைந்நிலை
புறத்திணை நூல்
களவழி நாற்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கியம்
வெளி இணைப்புகள்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
|
7316
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
|
நாலடியார்
|
நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.
வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.
கீழ்க்கணக்கு நூல்கள்
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்குஅடிகளுக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். சங்ககாலச் சான்றோர்கள் பட்டறிந்த உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக் கருத்துகளாகப் போற்றினர்.
நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்கிற பதினொரு நூல்களும் நீதிநூல்களாகும்.
திருக்குறளும் நாலடியாரும்
நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். நாலடியாரைத் தொகுத்து, அதிகாரம் வகுத்தவர் பதுமனார். முப்பாலாகப் பகுத்தவர் தருமர். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையைத் திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.
நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை
கடவுள் வாழ்த்து : 1
அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்)
பொருட்பால் : 240 பாடல்கள் (24 அதிகாரங்கள்)
காமத்துப்பால் : 30 பாடல்கள் (3 அதிகாரம்)
மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)
எடுத்துக்காட்டு பாடல்கள்
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனதளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.
<p align=right>(2. பொருட்பால், 2.14 கல்வி, 131)
இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.
கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.
<p align=right>2. பொருட்பால், 2.14 கல்வி, 132)
உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.
<p align=right>(2.25 அறிவுடைமை, 247)
கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்
வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்"
சினமால் பொருத களத்து.
மொழிபெயர்ப்பு
ஆங்கிலத்தில் ஜி.யூ.போப்பால் மொழிபெயர்க்கப்பட்டது இந்நூல்.
இவற்றையும் பார்க்கவும்
பதினெண் கீழ்க்கணக்கு
வெளி இணைப்புகள்
நாலடியார்
நாலடியார்
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
தமிழ் அற நூல்கள்
|
7321
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88
|
அகத்திணை
|
அகத்திணை என்பது உலகியல் வழக்கத்துக்கும், நாடக வழக்கத்துக்கும் பொருந்திவருமாறு பின்னப்பட்டதோர் வாழ்க்கைக் களஞ்சியம்.
பண்டைய தமிழ் இலக்கியங்கள் அக்காலத் தமிழர் வாழ்வை அக வாழ்வு, புற வாழ்வு என இரு வகையாகக் கொள்வதைக் காணலாம். இவற்றுள் ஓர் ஆணும், பெண்ணும் காதலால் இணைந்து தமக்குள்ளே இன்பம் துய்த்து வாழ்தல் அக வாழ்வு ஆகும். இவ்வாறு அவர்கள் தமது உள்ளத்துள், அதாவது அகத்துள், நுகரும் உணர்வுகள் குறித்தவற்றையே பழந்தமிழ் இலக்கியங்கள் அகத்திணை என்கின்றன.
இன்று நமக்குக் கிடைக்கக்கூடியதாக உள்ள மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை பற்றி விரிவாக விளக்குகின்றது.
அகத்திணை என்பது நாடக வழக்கிலும்,உலகியல் வழக்கிலும் உள்ள செய்திகளைக் கூறும். இதில் யாருடைய பெயரையும் சுட்டிக் கூறும் பழக்கம் இல்லை. இவற்றில் தமிழரின் வாழ்க்கைப் பாங்குகளும், பண்புகளும் இழையோடிக் கிடக்கும்.
அகத்திணை மாந்தர் அகப்பொருளின் உறுப்பினர்கள்.
அகத்திணைப் பிரிவுகள்
தொல்காப்பியம் அகத்திணையை ஏழு பிரிவுகளாக வகுத்துள்ளது. இவை,
கைக்கிளை
குறிஞ்சித் திணை
பாலைத் திணை
முல்லைத் திணை
மருதத் திணை
நெய்தல் திணை
பெருந்திணை
என்பனவாகும். இவற்றுள் கைக்கிளை மற்றும் பெருந்திணை முறையே ஒருதலைக் காமத்தையும், பொருந்தாக் காமத்தையும் குறிக்கின்றன. இதனால் இவை தமிழர் வாழ்வியலில் பெருமைக்கு உரியனவாகக் கருதப்படுவது இல்லை. ஏனைய ஐந்தும், நிலத்திணைகளுடன் இணைத்துப் பெயர் இடப்பட்டிருப்பதைக் காணலாம். அகவாழ்வின் அம்சங்களாகத் தமிழ் இலக்கியங்கள் காணும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை ஒவ்வொன்றும் ஐவகை நிலத்திணைகளில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பானவையாகக் கொண்டு இலக்கியம் செய்யப்படுதல் அக்கால வழக்கம். இதனால் பாடல்களில் எந்த பாடுபொருள் எடுத்தாளப்படுகிறதோ அதனோடு இணைந்த நிலப் பெயர் கொண்ட திணைப் பிரிவுள் அப்பாடல் அடங்கும். இதனை விளக்கும் வாய்பாட்டுப் பாடல்
போக்கெல்லாம் பாலை, புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கம் அளி ஊடல் அணி மருதம் - நோக்கு ஒன்றி
இல் இருத்தல் முல்லை, இரங்கிய போக்கு ஏர் நெய்தல்
புல்லும் கவிமுறைக்கு ஒப்பு
இவற்றையும் பார்க்கவும்
சங்க இலக்கியம், ஐந்திணை வளம், திணை விளக்கம்
அடிக்குறிப்பு
தமிழர் வாழ்வியல்
பொருள் இலக்கணம்
|
7328
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D
|
புறப்பொருள்
|
வாழ்க்கை நிகழ்வுகளையும், இலக்கியப் பொருண்மைகளையும் தொல்காப்பியம்
பொருள் என்னும் பாகுபாட்டில் விளக்குகிறது. தொல்காப்பியத்தில் 'புறத்திணையியல்' என்னும் இயல் தலைப்பு புறப்பொருளில் உள்ள திணைகளைக் கூறும் இயல் என்பதாகும். புறப்பொருள் வெண்பா மாலை, நம்பி அகப்பொருள் என்னும் நூலின் தலைப்புகளும் புறப்பொருள் அகப்பொருள் என்னும் பாகுபாடுகளையே குறிப்பிடுகின்றன.
பழந்தமிழர் வாழ்வியலில் போர், அரசியல் முதலியவை தொடர்பான வாழ்வு புற வாழ்வு எனப்படுகின்றது. மேற்படி புற வாழ்வு தொடர்பான ஒழுக்கம் புறப்பொருள் என வழங்கப்படுகின்றது. புற வாழ்வு அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்படும் இலக்கியங்களைப் புறப்பொருள் இலக்கியங்கள் என வகைப்படுத்துவது தமிழ் இலக்கிய மரபு.
புறத்திணைப் பிரிவுகள்
புறப்பொருளில் உள்ள துறைப் பிரிவுகளைத் தொல்காப்பியர் ஏழு எனக் காட்டுகிறார். புறப்பொருள் வெண்பாமாலை 12 எனப் பகுத்துக் காட்டுகிறது.
தொல்காப்பிய நெறி
பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் அதன் பொருளதிகாரத்தில் அகப்பொருளில் உள்ள திணைகள், புறப்பொருளில் உள்ள திணைகள் பற்றி விரிவாக விளக்கம் தருகின்றது. இதன்படி புறப்பொருளில் உள்ள திணைகள் பின்வருமாறு ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
வெட்சித் திணை
வஞ்சித் திணை
உழிஞைத் திணை
தும்பைத் திணை
வாகைத் திணை
காஞ்சித் திணை
பாடாண் திணை
ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் ஒரு மன்னன் அந்நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் (பசுக் கூட்டம்) கவர்ந்து செல்வதையும். அவ்வாறு களவாடிச் செல்லப்படும் ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை வெட்சித் திணையுள் அடங்கும். மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது வஞ்சித் திணை. படை நடத்திச் செல்லும் அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், அக்கோட்டையைப் பாதுகாத்து நிற்கும் பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது உழிஞைத் திணையாகும். படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர்செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுதல் தும்பைத் திணையுள் அடங்கும். மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுதல் வாகைத் திணையைச் சாரும். உலகத்தின் நிலையாமை தொடர்பான பொருள்களை விளக்குவது காஞ்சித் திணையுள்ளும், பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது பாடாண் திணையுள்ளும் அடங்குகின்றன.
புறப்பொருள் வெண்பாமாலை நெறி
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என 12 திணைகளாக இந்த நூல் பகுத்துக்காட்டுகிறது.
புறம் 12 எனில் அகமும் 12 என மாட்டேறு பெறுதல் வேண்டும். அங்ஙனம் பெறாமையின் இப்பாகுபாடு மரபு-வழு ஆகும் என்று இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.
திவாகர நிகண்டு விளக்கம்
திவாகர நிகண்டு புறப்பொருளின் திணைகள் கூறும் செய்திகளை எளிமைப்படுத்திக் காட்டுகிறது.
1 வெண்பாச் சூத்திரம்
வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் – உட்கார்
எதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகும் உழிஞை.
2 ஆசிரியப்பாச் சூத்திரம்
அதிரப் பொருவது தும்பை ஆகும்
போர்க்களத்து மிக்கார் செருவென்றது வாகையாம்
அத்திணைத் தொழிலும் அத்திணைப் பூவும்
அப்பெயர் பெறுதல் அந்நிலத்து உரியவே
இவற்றையும் பார்க்கவும்
அகத்திணை
அடிக்குறிப்பு
தமிழர் வாழ்வியல்
பொருள் இலக்கணம்
|
7329
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D
|
விக்கிரம சோழன்
|
விக்கிரம சோழன் (பொ.ஊ. 1122-1135) முதலாம் குலோத்துங்கனுக்கும் இரண்டாம் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகிக்கும் பிறந்த நான்காவது மகனாவான். மூத்தவர்களை விட்டு இவனே சோழ இராச்சியத்தின் அரசனாக கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூட்டப்பட்டான். பெரும்பாலும் போரின்றியே இவன் ஆட்சி இருந்தது. விக்கிரமசோழ உலா எனும் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட நூலில் இவனைப் பற்றி அறியலாம்.
வேங்கிப் போர்
சாளுக்கிய மன்னனாகிய விக்கிரமாதித்தனின் மறைவுக்கு பின் சாளுக்கிய அரசர்கள் வலுவிழந்தனர். அது மட்டும் இல்லாமல் தங்களின் மரபு வழி பூமியாகிய வேங்கியை இழக்க விக்ரம சோழனும் விரும்பவில்லை ஆதலால் தனது மகன் அபயகுலோத்துங்கனின் தலைமையில் ஒரு படையினை வெங்கிக்கு அனுப்பி வைத்தான். சோழர்களுக்குத் துணையாக சோட நாட்டுத் தலைவர்களாகிய கொனகண்டேஸ்வரனும் கிரிபச்சிமாவும் துணை இருந்தனர்.
இந்த போரின் மூலம் சோழ தேசம் எந்த எல்லையையும் விக்கிரம சோழனின் காலத்தில் இழக்காமல் இருந்தது.
கலிங்கப் போர்
குலோத்துங்கனின் காலத்திற்கு பின்பு இவன் காலத்திலும் கலிங்கப் போர் நடைபெற்றதாக குறிப்புகள் உள்ளன. முதலாம் குலோத்துங்கனின் காலத்திலும் விக்கிரம சோழனே படைகளுடன் சென்றுள்ளான். கருணாகரப் பல்லவன் விக்ரம சோழனின் காலத்திலும் துணை இருந்துள்ளதாக இந்த போரின் குறிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் இந்தப் போரினை அடுத்து நிகழ்ந்த கங்காவடி போரினிலும் கலந்து கொண்டுள்ளான். ஆதலால் கருணாகரன் குலோத்துங்கன் காலத்திலும் விக்கிரமன் காலத்திலும் சோழர்களுக்கு துணை இருந்துள்ளான் என்பதனை அறிந்து கொள்ளலாம். விக்கிரம சோழன் கலிங்கத்தின் மீது படை எடுத்தமையை ஒட்டக்கூத்தர் உலா மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த கலிங்கத்து போரிலும் சோழர்கள் வெற்றி பெற்றமையால் சோழ நாடு சுருங்காமல் இருந்தது.
கங்காவடிப் போர்
இந்தக் கால கட்டமே ஹோய்சாளர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற காலம் ஆகும். சாளுக்கியர்களின் காலம் முடிந்து, ஹோய்சாலர்களின் ஆட்சிக் காலம் ஆரம்பம் ஆகிய காலத்தே நிகழ்ந்த இந்தப் போரின் கங்காவாடிப் பகுதியை சோழர்களிடம் இருந்து பறித்துக் கொண்டனர். ஆதலால் விக்கிரம சோழன் ஹோய்சாளர்கள் மீது போர் தொடுத்து கங்காவாடிப் பகுதியை மீட்டான்.
தேச அளவு
தன் தந்தையின் காலத்தில் பல போர்களில் பங்கெடுத்த விக்கிரமன், தனது ஆட்சிக் காலத்தில் மிக குறைந்தப் போர்களிலேயே ஈடுப் பட்டான். சேர நாடும் பாண்டிய நாடும் இவனுக்கு பணிந்தே இருந்தனர். இலங்கை தேசம் புலனருவா பகுதி வரை சோழ அரசு விரிந்து இருந்தது.
திருசிற்றம்பலம்
விக்கிரம சோழன் தீவிர சிவ பக்தனாக விளங்கினான். சிதம்பரம் தில்லைநாதன் கோவிலுக்கு பொற்கூரை வேயந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் அருகே தனக்கு ஒரு மாளிகையும் கட்டிக் கொண்டு அங்கே தன் ஆட்சியின் இறுதி ஆண்டுகளை கழித்தான்.
தியாகசமுத்ரம்
விக்கிரம சோழனின் ஆட்சிக் காலத்தில் மழை இல்லாமல் சிறிது வறுமை தலை தூக்கியது. ஆதலால் விக்கிரமன் தனது மக்களுக்கு பற்பல தானங்கள் வழங்கி வறுமை களைந்தான். ஆதலால் அவனுக்கு இந்தப் பெயர் கிடைத்தது.
சாளுக்கிய சோழர்கள்
சோழர்
|
7336
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
|
இங்கிலாந்து
|
இங்கிலாந்து ஐக்கிய இராச்சியத்திலுள்ள நான்கு நாடுகளுள் பெரியதாகும். மேற்கில் இது வேல்ஸ் நாட்டையும் வடக்கில் ஸ்காட்லாந்து நாட்டையும் நில எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஐரிஷ் கடலினை வட மேற்கிலும், செல்டிக் கடலைத் தென் மேற்கிலும் வடகடலைக் கிழக்கிலும் கொண்டுள்ளது. ஐரோப்பியக் கண்டத்தில் இருந்து ஆங்கிலக் கால்வாய் இங்கிலாந்தைப் பிரிக்கிறது. பெரிய பிரித்தானியாவின் தென், நடுவண் பகுதிகளைக் கொண்டிருப்பதுடன் சில்லி தீவுகள் போன்ற நூற்றுக்கும் மேலான சிறுசிறு தீவுகளையும் அடக்கி உள்ளது. ஐரோப்பாக் கண்டத்துக்கு வட மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லண்டன் ஆகும். இந்நாடு பத்தாம் நூற்றாண்டில் உருவானது.
தற்போது இங்கிலாந்தாக அறியப்படும் பகுதியில் பிந்தைய கற்காலத்திலிருந்தே மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர். இருப்பினும் ஐந்தாவது மற்றும் ஆறாவது நூற்றாண்டுகளில் இங்கு குடிபுகுந்த செருமானிய பழங்குடிகளில் ஒன்றான ஆங்கில்களைக் கொண்டே இது ஆங்கிலேய நாடு எனப்பொருள்படும் இங்கிலாந்து என அறியப்படலாயிற்று. இங்கிலாந்து முற்றிலுமாக கிபி 927இல் ஒன்றிணைக்கப்பட்டது; 15வது நூற்றாண்டிலிருந்து உலகெங்கும் சட்ட, பண்பாட்டு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆங்கில மொழி, ஆங்கிலிக்கத் திருச்சபை, மற்றும் ஆங்கிலச் சட்டம்—பல நாடுகளில் நடப்பில் இருக்கும் பொதுச் சட்டத்திற்கான சட்ட அடிப்படை—இங்குதான் உருவானது. இங்கிலாந்தின் நாடாளுமன்ற முறைமை உலகின் பலநாடுகளின் அரசியலமைப்புக்களில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானியப் பேரரசின் மையமாக விளங்கிய இங்கிலாந்திலேயே 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற் புரட்சியால் உலகின் முதல் தொழில்மயமான நாடாக விளங்கியது.
இங்கிலாந்தின் புவிப்பரப்பு பெரும்பாலும் சிறு குன்றுகளும் சமவெளிகளாகவும் உள்ளது. இருப்பினும் வடக்கிலும் தென்மேற்கிலும் சில உயரமான மலைப்பகுதிகளைக் காணலாம். இங்கிலாந்தின் முன்னாள் தலைநகரமாக வின்செஸ்டர் இருந்தது; 1066இல் தலைநகர் இலண்டனுக்கு மாற்றப்பட்டது. இன்றைய நாள் இலண்டன் ஐக்கிய இராச்சியத்திலேயே மிகப்பெரும் நகரமாக விளங்குகிறது. இங்கிலாந்தின் மக்கள்தொகை ஏறத்தாழ 53 மில்லியனாகும்; இது ஐக்கிய இராச்சியத்தின் மக்கள்தொகையில் 84% ஆகும்.
வேல்சு அடங்கிய இங்கிலாந்து இராச்சியம் 1707இல் ஒன்றிணைப்புச் சட்டங்கள் மூலமாக பெரிய பிரித்தானிய இராச்சியமாக இசுகாட்லாந்துடன் இணையும்வரை தனி மன்னராட்சியாக விளங்கியது. 1801இல், பெரிய பிரித்தானியா அயர்லாந்து இராச்சியத்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் உருவானது. 1922இல், அயர்லாந்து தனிநாடாகப் பிரிந்தாலும் 1927 சட்டத்தின்படி வடக்கு அயர்லாந்தின் ஆறு கௌன்ட்டிகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து தற்போதுள்ள பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துகளின் ஐக்கிய இராச்சியம் நிலைபெற்றது.
பெயர்க் காரணம்
இங்கிலாந்து "England" என்ற பெயர் பழைய ஆங்கிலத்தின் இங்கலாந்து (Englaland) என்பதில் இருந்து தோன்றியதாகும். இதற்கு ஆங்கில்களின் நிலம் என்று பொருள் . ஆங்கில்கள் செருமானிய பழங்குடிகள் ஆவார்கள். இவர்கள் வரலாற்றின் இடைக்காலத்தின் போது இங்கு குடியேறினார்கள். ஆங்கில்கள் பால்டிக் கடல் பகுதியில் அமைந்த ஆங்கில் மூவலந்தீவின் இருந்து வந்தவர்கள் . ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகரமுதலியின் படி இங்கிலாந்து என்ற சொல் முதலில் பிரிந்தானிய தீவின் தென் பகுதியை குறிக்க 897 ல் குறிபிடப்பட்டதாக தெரிகிறது.
இங்கிலாந்திற்கு அல்பியன் என்றொரு மற்றொரு பெயரும் உண்டு. ஆரம்ப காலத்தில் அல்பியன் என்ற சொல் பிரித்தானிய தீவு முழுவதையும் குறிப்பதாக இருந்தது. கிமு 4ம் நூற்றாண்டில் அரிசுடோடலியன் கார்பசு முதலில் இச்சொல்லை குறித்துள்ளார் . தற்பொழுது அல்பியன் என்பது கவிதைகளில் இங்கிலாந்தை குறிக்க பயன்படுகிறது .
வரலாறு
வரலாற்றுக்கு முந்தைய காலம்
.
780,000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் இங்கிலாந்தில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 500,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனின் மண்டையோடு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .. தற்கால மனிதர்கள் கற்காலத்தின் இறுதியில் இங்கு இருந்தாலும் நிலையான குடியிறுப்புகள் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஏற்பட்டன .. கடைசி பனி யுகத்தின் பின்பு பெரிய உருவமுடைய மாமூத், காட்டெருது (பைசன்) முடியுடைய மூக்குக் கொம்பன் போன்ற விலங்குகள் மட்டும் தப்பி இருந்தன. 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் குறைவாக இருந்த பொழுது இங்கிலாந்து இருக்கும் பெரிய தீவான பிரிட்டனும், அயர்லாந்தும் ஐரோவாசியாவுடன் இணைந்திருந்தது.. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்த பொழுது அயர்லாந்து தனி தீவாகவும் 8000 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டன் தனி தீவாகவும் ஐரோவாசியாவில் இருந்து பிரிந்தன.
இப்பகுதியில் மிகுதியாக செப்பும் வெள்ளீயமும் கிடைத்தது அதைக்கொண்டு வெண்கலத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வெண்கலக் காலத்தின் போது ஸ்டோன் ஹெஞ்ச் போன்றவை கட்டப்பட்டன.
இடைக்காலம்
ஐந்தாம் நூற்றாண்டில் "ஆங்கிள்கள்" எனப்படும் ஜெர்மானிக் பழங்குடிகள் தற்போதைய இங்கிலாந்தின் நடு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் குடியேறினர். இவர்களை ஒத்த சாக்சன்கள் எனப்படும் பிரிதொரு பழங்குடியினர் இங்கிலாந்தின் தென்பகுதியில் குடியேறினர். வரலாற்றின் இந்தக் காலகட்டம் "ஆங்க்லோ-சாக்சன்" காலகட்டம் எனப்படுகிறது. துவக்கத்தில் ஒரு ஒன்றிணைந்த நாடாக இல்லாது பல குறுமன்னர்களால் ஆளப்பட்டு வந்த இங்கிலாந்து இந்த காலகட்டத்தில் மெதுவே ஒன்றிணையத் தொடங்கியது.
இந்த ஒன்றிணைவு 937இல் நிறைவடைந்து முதல் இங்கிலாந்து மன்னராக ஏதெல்சுதான் ஆட்சி ஏற்றார். இவரது காலத்தில் டென்மார்க் நாட்டவர் படையெடுத்து கிழக்கிலும் வடக்கிலும் பல பகுதிகளை கைப்பற்றி தனிநாடு உருவாக்கினர். இப்பகுதியில் உள்ள பல ஊர்களும் நகரங்களும் இன்றும் டேனிசு பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. பல சண்டைகளுக்குப் பிறகு வெசெக்சின் மன்னர் ஆல்பிரெட் முழுமையான இங்கிலாந்தை மீண்டும் கையகப்படுத்தி இங்கிலாந்து மன்னரானார். பழைய குறுநாடுகள் எர்ல்கள் (Earldoms) என அழைக்கப்பட்டன. மன்னர் ஆல்பிரெட்டின் மறைவிற்கு பின்னர் டென்மார்க் மன்னர் இங்கிலாந்தை ஆண்டார்.
எட்வர்டு மன்னரின் மறைவிற்கு பின்னர் மீண்டும் வெசக்சின் மன்னர் ஹெரால்டு இங்கிலாந்தின் மன்னரானார். ஆனால் வடக்கு பிரான்சில் நார்மண்டியின் மன்னராக இருந்த வில்லியம் ஹெரால்டு தம்மை மன்னராக்குவதாக உறுதி கொடுத்ததை மீறியதாக அவர்மீது 1066இல் ஹேஸ்டிங்ஸ் சண்டையில் போரிட்டார். இதில் வெற்றி பெற்ற வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். அடுத்த 300 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து பிரெஞ்சு பேசும் மன்னர்கள் ஆட்சியில் இருந்தது. (அரசி, இரண்டாம் எலிசபெத் வில்லியமின் வழிவந்தவராக கருதப்படுகிறார்). 13வது நூற்றாண்டில் இங்கிலாந்து வேல்சு நாட்டை இணைத்துக் கொண்டது. இசுக்காட்லாந்தையும் கைப்பற்ற பல போர்கள் பிரான்சிற்கும் இசுகாட்லாந்திற்கும் இடையே நிகழ்ந்தவண்ணம் இருந்தன.
இங்கிலாந்து உரோமன் கத்தோலிக்க கிறித்தவத்தை பின்பற்றி வந்தது. இங்கிலாந்திலிருந்த பல ஆயர்களும் திருத்தந்தையின் ஆணைகளைப் பின்பற்றினர். 1500இல் மன்னராக இருந்த ஹென்றி VIII மணமுறிவை வேண்டியபோது அதனை திருத்தந்தை மறுத்தார். இதனால் வெகுண்ட மன்னர் சீர்திருத்தத் திருச்சபையாக இங்கிலாந்து திருச்சபையை நிறுவி தமது மணமுறிவை நிறைவேற்றிக் கொண்டார். சீர்திருத்த கிறித்தவமே அலுவல்முறை சமயமாகவும் அறிவித்தார்.அடுத்த 200 ஆண்டுகளுக்கு இங்கிலாந்து அரசர் (அரசி) உரோமன் கத்தோலிக்கராக இருக்க வேண்டுமா அல்லது சீர்திருத்த கிறித்தவராக இருக்க வேண்டுமா என்ற சண்டை இருந்து வந்தது.
முதலாம் எலிசபெத் ஹென்றியின் இரண்டாம் மகள். இவர் இங்கிலாந்தை 40 ஆண்டுகள் ஆண்டுவந்தார். இவருக்கு மக்கள் இல்லாமையால், இவர் மறைந்தபோது இசுக்காட்லாந்தின் ஜேம்ஸ் (இசுக்காட்லாந்து அரசி மேரியின் மகன்) 1603இல் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். இவரே இருநாடுகளையும் அடங்கிய பகுதியை "பெரிய பிரித்தானியா" எனப் பெயரிட்டார். இவரது காலத்தில் இரு நாடுகளும் தங்களுக்கென தனித்தனி நாடாளுமன்றங்களுடனும் சட்டங்களுடனும் ஒரே மன்னரின் கீழ் தனித்தனி நாடுகளாக இருந்தன.
ஜேம்சின் மகன் சார்லசும் இங்கிலாந்து நாடாளுமன்றமும் பிணக்கு கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டன. இதில் இசுக்காட்லாந்தும் அயர்லாந்தும் பங்கேற்றன. நாடாளுமன்றப் படையின் தலைவராக பொறுப்பேற்ற ஆலிவர் கிராம்வெல் அரசப் படைகளை தோற்கடித்தார். 1649ஆம் ஆண்டில் முதலாம் சார்லசு மன்னரின் தலையைக் கொய்து தாம் ஆட்சியாளராக (பாதுகாப்பு பிரபு) அறிவித்துக் கொண்டார். இவரது மறைவின் பின்னர் இவரது மகன் ரிச்சர்டுக்கு ஆட்சி செய்ய திறன் இல்லாதமையால் கொலையுண்ட மன்னர் சார்லசின் மகன் இரண்டாம் சார்லசை இங்கிலாந்து மன்னராக முடிசூட அழைக்கப்பட்டார். 1660இல் இரண்டாம் சார்லசு இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். இவரை அடுத்து இவரது உடன்பிறப்பு இரண்டாம் ஜேம்ஸ் முடி சூடினார். இவர் உரோமன் கத்தோலிக்கராக இருந்தது மக்களிடையே கசப்பை ஏற்படுத்தியது. நெதர்லாந்தின் குறும்பகுதி ஒன்றின் மன்னராக இருந்த வில்லியம் (மன்னர் ஜேம்சின் மகள் மேரியின் கணவர்) இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். இவர் ஒரு சீர்திருத்த கிறித்தவராக இருந்ததால் மக்கள் இவரை ஆதரித்தனர். இதனால் ஜேம்சு சண்டை எதுவும் இன்றி நாட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து இங்கிலாந்தின் நாடாளுமன்றம் வில்லியத்தையும் மேரியையும் இணையாக அரசர் அரசியாக முடிசூட அழைத்தனர். மேரி இறந்தபிறகு வில்லியம் தனியே ஆண்டுவந்தார். அடுத்த மன்னராக மேரியின் உடன்பிறப்பு ஆன் பொறுப்பேற்றார். இவரது ஆட்சியில் 1707இல் இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் ஒன்றாக சட்டப்படி இணைந்தன. இரண்டு நாடாளுமன்றங்களும் இணைந்து இலண்டனில் இருந்த நாடாளுமன்றம் பிரித்தானிய நாடாளுமன்றம் என அழைக்கப்பட்டது.
தற்காலம்
புதியதாக உருவான பெரிய பிரித்தானிய இராச்சியத்தில் அறிவியலும் பொறியியலும் தழைத்தோங்கியது. இவை பிரித்தானியப் பேரரசை உருவாக்க உதவின. உள்நாட்டில் தொழிற்புரட்சிக்கு வித்திட்டது. இந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் சமூகப்பொருளியல் மாற்றங்களும் பண்பாட்டு சீர்திருத்தங்களும் ஏற்பட்டன. வேளாண்மை, தயாரிப்பு, சுரங்கத்துறை தொழில்மயமாயின. சாலைகள், இருப்புப் பாதைகள், நீர்ப் போக்குவரத்து வசதிகள் கட்டமைக்கப்பட்டன.. 1825இல் உலகின் முதல் பயணியர் நீராவி உந்து இழுத்த தொடர்வண்டி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
பிரெஞ்சுப் புரட்சியின்போது இங்கிலாந்தில் அமைதி நிலவியது. நெப்போலியப் போர்களின்போது, நெப்போலியன் இங்கிலாந்தின் தென்கிழக்கில் படையெடுக்கத் திட்டமிட்டிருந்தான். ஆனால் இத்திட்டத்தை நிறைவேறவிடாது கடலில் பிரித்தானியக் கடற்படை நெல்சனின் தலைமையிலும் தரையில் வெல்லிங்டன் பிரபுவின் தலைமையிலும் முறியடித்தன. இப்போர்களினால் இசுக்காட்லாந்தியரும் வேல்சு மக்களும் இங்கிலாந்து மக்களுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்து உண்மையான பிரித்தானிய நாட்டுப்பற்று உருவானது; அனைவரும் பிரித்தானியர்களாக தங்களை அடையாளப்படுத்தினர்.
விக்டோரியா அரசியார் காலத்தில் இலண்டன் உலகின் மக்கள்தொகை மிக்க நகரமாக வளர்ச்சியுற்றது; பிரித்தானிய பேரரசுக்குள் வணிகம் செய்வது மதிப்புமிக்கதாக இருந்தது. சட்ட சீர்திருத்தங்களும் அனைவருக்கும் வாக்குரிமையும் உருவாகின. கிழக்கு-நடுவண் ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டிகளால் முதலாம் உலகப் போர் மூண்டது. இபோரில் பல்லாயிரம் பிரித்தானிய போர்வீரர்கள் மடிந்தனர்.|group=nb}} இருபதாண்டுகள் கழித்து மீண்டும் இரண்டாம் உலகப் போர் மூண்டது. இந்தப் போரிலும் இங்கிலாந்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இப்போர்களைத் தொடர்ந்து பிரித்தானியா தனது குடியேற்றப் பகுதிகளுக்கு விடுதலை வழங்கத் தொடங்கியது.
தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஏற்பட்டன; ஜெட் உந்துகள் வடிவமைக்கப்பட்டு போக்குவரத்து எளிதானது. தனிநபர் தானுந்து பயன்பாட்டால் நகர அமைப்புக்கள் மாற்றங்களைக் காணத் தொடங்கின. 1948இல் தேசிய நலச் சேவை துவங்கப் பட்டது. இதன்மூலம் அனைவருக்கும் கட்டணமில்லா சிகிட்சை வழங்கப்படது.
இருபதாம் நூற்றாண்டில் பிற பிரித்தானியத் தீவுகளிலிருந்தும் பொதுநலவாய நாடுகளிலிருந்தும், குறிப்பாக இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தும், கணிசமான மக்கள் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தனர். 1970களிலிருந்து தயாரிப்புத் தொழிலில் இருந்து விலகி சேவைத்துறை தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான சந்தைக் கொள்கையில் பங்கேற்கிறது. அதிகாரப் பரவல் கொள்கைகளின்படி இசுக்காட்லாந்து, வேல்சு மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு தன்னாட்சி தகுதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கிலாந்தும் வேல்சும் ஒரே ஆள்புலமாக விளங்குகிறது. இந்த அதிகாரப் பரவலினால் ஆங்கிலம் சார்ந்த அடையாளமும் நாட்டுப்பற்றும் வலியுறுத்தப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் பெறும் மற்ற நாடுகளுக்கு தனி நாடாளுமன்றம், அதிகாரங்கள் வழங்கப்பட்டபோதும் இங்கிலாந்து பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடி ஆட்சியிலேயே உள்ளது. மற்றவற்றைப் போன்ற உள்நாட்டு அமைப்புகளை உருவாக்கிட ஏற்பட்ட முயற்சிகள் பொது வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.
புவியியல்
புவியியல்படி இங்கிலாந்து பெரிய பிரித்தானியத் தீவின் மூன்றில் இரண்டு பங்கு மத்திய,தென்பகுதிகளை உள்ளடக்கியது. கடல்கடந்த பகுதிகளாக வைட்டுத் தீவு, சில்லி தீவுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக ஐக்கிய இராச்சியத்தின் மற்ற இரு நாடுகள், வடக்கில் இசுக்காட்லாந்தும் மேற்கில் வேல்சும், அமைந்துள்ளன. பிரித்தானியாவின் வேறெந்த பகுதியைவிட ஐரோப்பாவிற்கு இங்கிலாந்தே அண்மையில் உள்ளது. பிரான்சிலிருந்து தொலைவுள்ள கடல்பிரிவால் பிரிக்கப்பட்டுள்ளது; தற்போது இருநாடுகளும் கால்வாய் சுரங்கத்தால் பிணைக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு ஐரிஷ் கடல், வடகடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் கடற்கரைகள் உள்ளன.
தேம்சு, மெர்சி மற்றும் டைன் ஆற்று பொங்குவடித வெள்ளத்தில் முறையே இலண்டன், லிவர்ப்பூல், நியூகாசில் துறைமுகங்கள் அமைந்துள்ளன. நீளமுள்ள செவர்ன் ஆறு இங்கிலாந்தில் ஓடுகின்ற மிகநீளமான ஆறாகும். இந்த ஆறு பிரிஸ்டல் கால்வாயில் சேர்கிறது; இங்குள்ள செவர்ன் போர் பொங்குவடிதல் அலைகள் குறிப்பிடத்தக்கன. இவை வரை உயரக் கூடியவை. ஆனால், இங்கிலாந்திற்குள்ளேயே ஓடும் மிக நீளமான ஆறாக தேம்சு தொலைவு ஓடுகிறது. இங்கிலாந்தில் பல ஏரிகள் உள்ளன; ஏரி மாவட்டத்தில் உள்ள வின்டர்மேர் ஏரி மிகப் பெரியதாகும்.
புவியியல் கூற்றில், "இங்கிலாந்தின் முதுகெலும்பு" என அறியப்படும் பெனைன்சு மலைத்தொடர் நாட்டின் மிகத் தொன்மையான மலைகளாகும்; இவற்றின் துவக்கம் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. இவற்றின் புவியியல் கூறுகளாக மணற்கல், சுண்ணக்கல், மற்றும் நிலக்கரி உள்ளன. இத்தொடரில் மூன்று தேசியப் பூங்காக்கள், யார்க்சையர் டேல்சு, நார்த்தம்பர்லாந்து தேசியப் பூங்கா, பீக் மாவட்டம் உள்ளன. இங்கிலாந்தின் மிக உயரமான சிகரம் உயரமுள்ள இசுகாஃபெல் பைக் ஆகும். இங்கிலாந்திற்கும் இசுகாட்லாந்திற்கும் இடையே எல்லையாக செவியட் மலைகள் உள்ளன.
பெனைன்சு மலைகளின் தெற்கே ஆங்கில தாழ்நிலங்களில் பசுமையான மலைக்குன்றுகள் உள்ளன. டோவரில் இவை கடலை சந்திக்குமிடத்தில் வெள்ளைநிற செங்குத்துப் பாறைகள் உள்ளன. தென்மேற்குத் தீபகற்பத்தில் உள்ள டார்ட்மோர் மற்றும் எக்சுமோர் தேசியப் பூங்காக்களாகும்.
காலநிலை
இங்கிலாந்தில் கடலோர மிதமான காலநிலை நிலவுகிறது: வெப்பநிலை குளிர்காலத்தில் 0 °Cக்கு கீழே தாழ்ந்து செல்லாமலும் கோடைகாலத்தில் க்கு மிகாமலும் உள்ளது. காலநிலை ஈரப் பதத்துடன் அடிக்கடி மாறும் தன்மையுடையதாக உள்ளது.சனவரியும் பெப்ரவரியும் மிகவும் குளிர்ந்த மாதங்களாகவும் சூலை மிகவும் வெப்பமான மாதமாகவும் உள்ளன. மே, சூன்,செப்டம்பர் மற்றும் அக்டோபர் மிதமான காலநிலையுடன் உள்ளன. ஆண்டு முழுவதும் பரவி மழை சமமாக பெய்கிறது.
இங்கிலாந்தின் காலநிலையில் அட்லாண்டிக் பெருங்கடல் அருகாமை, புவியின் வடக்குப் பகுதியில் அமைவு மற்றும் வளைகுடா ஓடையால் கடல் வெப்பமடைதல் ஆகியன தாக்கமேற்படுத்துகின்றன. மழைப்பொழிவு மேற்கில் கூடுதலாக உள்ளது. இதுவரையான மிகக்கூடுதலான வெப்பநிலை ஆகத்து 10, 2003இல் 38.5|°ஆக கென்ட்டில் பதிவாகியுள்ளது; மிகவும் குறைந்த வெப்பநிலை சனவரி 10, 1982இல் 26.1 °Cஆக எட்ஜ்மோன்டில் பதிவாகியுள்ளது.
அரசமைப்பு
அரசியல்
ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாக உள்ள இங்கிலாந்தின் அரசியல் அமைப்பு நாடாளுமன்ற முறைமையும் அரசியலமைப்பின்படியான முடியாட்சியும் அடிப்படையாகக் கொண்டது. வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் கீழவையான பொதுமக்கள் அவையில் மொத்தமுள்ள 650 இடங்களில் இங்கிலாந்திற்கு 532 இடங்கள் உள்ளன. ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்த பிறகு இங்கிலாந்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு 55 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது.
2010இல் நடந்த பொதுத்தேர்தல்களில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி இங்கிலாந்தில் பெரும்பான்மையான இடங்களில் வென்றிருந்தும் மக்கள் அவையில் பெரும்பான்மை பெறாததால் மூன்றாவதாக வந்த லிபரல் டெமக்கிராட்சுடன் கூட்டணி அமைத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் டேவிட் கேமரன் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
இங்கிலாந்திற்கான தனி நாடாளுமன்றம் எதுவும் இல்லை; நேரடியாக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் ஆளப்படுகிறது. அதிகாரப் பரவலிற்கு பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் மற்ற அங்க நாடுகளுக்கு—இசுக்காட்லாந்து, வேல்சு மற்றும் வடக்கு அயர்லாந்து —தங்கள் உள்நாட்டுப் பிரசினைகளுக்கு தீர்வுகாண தனித்தனி சட்டப்பேரவைகள் உள்ளன.இங்கிலாந்தின் பல்வேறு மண்டலங்களுக்கு இத்தகைய அதிகார பரவலை வழங்க முன்மொழியப்பட்ட திட்டம் பொதுவாக்கெடுப்பில் வடகிழக்கு இங்கிலாந்து ஏற்காததால் கைவிடப்பட்டது.
இதனால் இங்கிலாந்தின் உள்நாட்டு பிரச்சினைகளிலும் பிறநாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது; மாறாக அவர்களுடைய பிரச்சினைகளில் இங்கிலாந்தின் எம்பிக்கள் தலையிட முடியாது. இது மேற்கு லோத்தியன் வினா என குறிக்கப்படுகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் புற்றுநோய்க்கு இலவச சிகிட்சை, முதியோருக்கு வீட்டுக் கவனிப்பு, பல்கலைக்கழக கட்டண சலுகைகள் போன்றவை இல்லாதநிலையில் ஆங்கில தேசியம் வளர்ந்தோங்கி வருகிறது.
சட்டம்
பல நூற்றாண்டுகளாக மேம்படுத்தப்பட்டு வந்துள்ள ஆங்கிலச் சட்ட முறைமையே பெரும்பான்மையான பொதுநல வாய நாடுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் (லூசியானா மட்டும் விலக்கு) நடைமுறையில் உள்ள பொதுச் சட்டத்திற்கு அடிப்படையானது.
இங்கிலாந்திலும் வேல்சிலும் உள்ள நீதிமன்றங்களுக்கு மேல்நிலையில் குடிமையியல் வழக்குகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் உள்ளன; குற்றவியல் வழக்குகளுக்கு கிரௌன் நீதிமன்றம் உள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் உச்ச நீதிமன்றம் குடிமையியல், குற்றவியல் இருதரப்பட்ட வழக்குகளுக்கும் இவற்றிற்கெல்லாம் உயரிய நீதிமன்றமாக அமைந்துள்ளது. அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த நீதிமன்றம் 2009ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதற்கு முன்னதாக பிரபுக்கள் அவை இந்த அதிகாரங்களைக் கொண்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதன் கீழுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்; இந்த நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அவை ஏற்க வேண்டும்.
1981க்கும் 1995க்கும் இடையே குற்றங்கள் மேலோங்கியபோதும் 1995-2006 பத்தாண்டுகளில் 42% குறைந்துள்ளன. இந்தக் காலகட்டத்தில் மேற்கு ஐரோப்பாவில் மிகக் கூடுதலானோர் சிறையில் அடைக்கப்பட்ட நாடாக இங்கிலாந்து விளங்கியது.
நிர்வாகம்
இங்கிலாந்து மத்திய காலத்தில் 39 கௌன்டிகளாக பிரிக்கப்பட்டிருந்தன. நகரமயமாக்கலை அடுத்து இவற்றின் பல இன்று சீரமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மக்கள் இந்த மரபுவழி கௌன்டி பெயர்களை இன்றும் பயன்படுத்துகின்றனர். இருபதாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீரமைப்புக்களின்படி நாடு நான்கு நிர்வாக நிலைகளில் அமைந்துள்ளது. முதல்நிலையில் 9 மண்டலங்களாகவும் அடுத்த இரண்டாம் நிலையில் கௌன்டிகளாகவும் மூன்றாம் நிலையில் மாவட்டங்களாகவும் நான்காம் அடிமட்ட நிலையில் கோவிற்பற்றுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நகரமயமாக்கலை ஒட்டி நகர்ப்புற கௌன்டிகள் எனவும் நகர்புறமல்லா கௌன்டிகள் எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் சில கௌன்டிகளில் கௌன்டி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து ஒற்றை ஆள்புலம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் சிட்டி என்பதற்கும் டௌன் அல்லது டவுன் என்பதற்கும் வேறுபாடு உள்ளது. சிட்டி என்பது அரசரால் பட்டியலிடப்பட்ட நகரமாகும். வரலாற்றுப்படி இங்கு ஒரு கதீட்ரல் அமைந்திருக்கும். மற்றவை டவுன் ஆகும். காட்டாக, 2000 பேரே உள்ள வேல்சின் செயின்ட்.டேவிட் ஒரு சிட்டி ஆகும்; ஆனால் 135,600 மக்கள் வாழும் இசுடாக்போர்ட் ஒரு டவுன் ஆகும்.
இங்கிலாந்தின் 200,000 மக்கள்தொகை கொண்ட பத்து பெரிய நகர்புற கௌன்டிகளாவன (2001 ஐக்கிய இராச்சிய கணக்கெடுப்பின்படி):
இலண்டன் (7172000)
பர்மிங்காம் (1001200)
செபீல்டு (520732)
மான்செஸ்டர் (486,000)
பிராட்போர்டு (485,000)
லீட்சு (457875)
லிவர்பூல் (447500)
கிர்க்லீசு (அட்டர்சுபீல்டு) (394,600)
பிரிஸ்டல் (393900)
வேக்பீல்டு (315,000)
பொருளாதாரம்
சராசரி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி £22,907 அளவிலுள்ள இங்கிலாந்தின் பொருளாதாரம் உலகில் மிகப்பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாகும். கலப்புப் பொருளாதாரமாகக் கருதப்பட்டாலும் பல திறந்த சந்தைப் பொருளாதார கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. மேம்பட்ட சமூகநல கட்டமைப்புக்களையும் கொண்டுள்ளது. அலுவல் நாணயமாக பவுண்டு இசுடெர்லிங் விளங்குகிறது. ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்தின் வரிவீதம் குறைவானதே; 2009இல் தனிநபர் வரிவீதம் £37,400 வருமானம் வரை 20%ஆகவும் இதற்கு கூடிய வருமானத்திற்கு 40% ஆகவும் உள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதாரத்தில் பெரும்பங்கு இங்கிலாந்திற்கு உள்ளது. இங்கிலாந்து வேதியியல் மற்றும் மருந்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தில் முதன்மையான விண்வெளித்துறை, ஆயுதத் தொழிற்சாலைகள்போன்றவற்றில் முன்னணியில் உள்ளது. மென்பொருள் துறையின் தயாரிப்புத் துறையிலும் ஈடுபட்டு வருகிறது. ஐரோப்பாவின் மிகப்பெரும் பங்குச் சந்தையான இலண்டன் பங்குச் சந்தை உள்ள இலண்டன் இங்கிலாந்தின் மிகப்பெரும் நிதிய மையமாகும் — ஐரோப்பாவின் 500 பெரிய நிறுவனங்களில் 100 இலண்டனில் உள்ளன. இலண்டன் உலகின் மிகப்பெரும் நிதிய மையமாகவும் விளங்குகிறது.
1694இல் இசுகாட்லாந்து வங்கியாளர் வில்லியம் பேட்டர்சன் நிறுவிய இங்கிலாந்து வங்கி ஐக்கிய இராச்சியத்தின் நடுவண் வங்கி ஆகும். இங்கிலாந்து அரசுக்கான தனியார் வங்கியாகத் துவக்கப்பட்ட இது 1946இல் தேசியமயமாக்கப்பட்டு அரசுத்துறை வங்கியாக உள்ளது. இந்த வங்கியே இங்கிலாந்திலும் வேல்சிலும் நாணயத்தாள் அச்சடிக்க இயலும்; இருப்பினும் இந்த தனியுரிமை ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளுக்கு இல்லை. நாட்டின் நாணயக் கொள்கையை மேலாண்மை செய்யவும் வட்டி வீதத்தை நிர்ணயிக்கவும் வங்கியின் நாணயக் கொள்கை குழுவிற்கு பிரித்தானிய அரசு பொறுப்பு வழங்கி உள்ளது.
இங்கிலாந்து மிக்க தொழில்மயமான பொருளாதாரமாக இருந்தபோதும் 1970களுக்குப் பிறகு வழக்கமான கனரக மற்றும் தயாரிப்பு தொழில்களில் இறக்கம் ஏற்பட்டுள்ளது. சேவைசார் தொழில்கள் வலுவடைந்து வருகின்றன. சுற்றுலாத்துறை குறிப்பிடத்தக்க தொழிலாக இங்கிலாந்திற்கு ஆண்டுதோறும் பல மில்லியன் பயணிகளை ஈர்க்கிறது. மருந்துகள், தானுந்துகள், பாறை எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள், வானூர்தி பொறிகள் மற்றும் மதுபான வகைகளை ஏற்றுமதி செய்கிறது. வேளாண்மை மிகவும் தானியங்கிமயமாக உள்ளது; 2% தொழிலாளர்களுடன் இத்துறை 60% உணவுத்தேவையை நிறைவு செய்கிறது. வேளாண்மை உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு கால்நடைகளிலிருந்து பெறப்படுகிறது; மிகுதி பயிரிடப்படக்கூடிய தானியங்களிலிருந்து பெறப்படுகின்றன.
அறிவியலும் தொழில்நுட்பமும்
இங்கிலாந்தை தாய்நாடாக கொண்ட விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள் பலர் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமான சிலர் சர் ஐசக் நியூட்டன், ஜே. ஜே. தாம்சன், மைக்கேல் பாரடே, ஸ்டீபன் ஹாக்கிங், சார்லஸ் டார்வின், ஆலன் டியூரிங், டிம் பேர்னேர்ஸ்-லீ.
போக்குவரத்து
அரசின் போக்குவரத்துத் துறை இங்கிலாந்தின் போக்குவரத்து தேவைகளை மேற்பார்வையிடும் பொறுப்பு உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பின்னிப் பிணைக்கும் மோடார்வேக்களும் நெட்சாலைகளும் கட்டமைக்கப்பட்டு உள்ளன. இங்கிலாந்தில் உள்ள மிக நீளமான விரைவுச் சாலை M6 ஆகும். இது வார்விக்சையரின் ரக்பியிலிருந்து வடகிழக்கு இங்கிலாந்து வழியாக ஆங்கிலோ-இசுகாட்டிஷ் எல்லை வரைச் செல்கிறது. மற்ற விரைவுச்சாலைகள்:இலண்டன் – லீட்சு (எம் 1), இலண்டனைச் சுற்றியுள்ள எம்25, மான்செஸ்டரைச் சுற்றியுள்ள எம் 60, இலண்டனிலிருந்து தென் வேல்சிற்குச் செல்லும் எம்எம் 4, லிவர்பூல் – மான்செஸ்டர் – கிழக்கு யார்க் சையர் எம்62, பர்மிங்காம் – பிரிஸ்டல் எம் 5.
நாடெங்கும் பேருந்து போக்குவரத்து பரவியுள்ளது; முதன்மையான நிறுவனங்களாக தேசிய எக்ஸ்பிரெஸ், அர்ரைவா, கோ-அகெட் பேருந்து சேவைகளை இயக்குகின்றன. சிவப்பு வண்ண இரட்டை அடுக்கு பேருந்துகள் இலண்டனின் அடையாளமாகவே உள்ளன. இங்கிலாந்தின் இரண்டு நகரங்களில் விரைவு தொடர்வண்டி சேவைகள் நகர்ப்புறப் போக்குவரத்திற்காக இயக்கப்படுகின்றன; இலண்டன் அண்டர்கிரவுண்டு, டைன் அன்டு வியர் மெட்ரோ. பல ஒற்றைத் தண்டூர்தி அமைப்புகள் கட்டப்பட்டுள்ளன:பிளாக்பூல் டிராம்வே, மான்செஸ்டர் மெட்ரோலிங்க், செபீல்டு சூப்பர்டிராம், மிட்லாந்து மெட்ரோ, மற்றும் தென் இலண்டனின் கிராய்டனை மையமாகக் கொண்ட டிராம்லிங்க்அவற்றில் சிலவாகும்.
இங்கிலாந்திலுள்ள இருப்புப் பாதை போக்குவரத்து உலகின் மிகத் தொன்மையானதாகும். 1825இல் பயணியர் தொடர்வண்டி இங்கிலாந்தில் தொடங்கியது. பிரித்தானியாவிலுள்ள இருப்புப் பாதைகளில் பெரும்பாலும் இங்கிலாந்திலேயே உள்ளன; இருப்பினும் இவற்றில் பல பாதைகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மூடப்பட்டு விட்டன. பிரான்சிற்கும் பெல்ஜியத்திற்கும் 1994ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கால்வாய் சுரங்கம் மூலம் தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.
இங்கிலாந்தின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்துக்கான வான்வழித்தடங்கள் மிகவும் பரவலானவை. நாட்டின் பெரிய வானூர்தி நிலையமான இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம் உலகின் வேறெந்த வானூர்தி நிலையத்தை விட பன்னாட்டு பயணியர் போக்குவரத்து கூடுதலாக உள்ள ஒன்றாகும். மற்ற பெரிய வானூர்தி நிலையங்கள்: மான்செஸ்டர் வானூர்தி நிலையம், இலண்டன் இசுடான்சுடெட் வானூர்தி நிலையம், லூட்டன் வானூர்தி நிலையம்மற்றும் பர்மிங்காம் வானூர்தி நிலையம். கடல்வழிப் போக்குவரத்தில், பெரும்படகுகள் உள்ளூர் மற்றும் அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட பன்னாட்டுப் போக்குவரத்துக்காக இயக்கப்படுகின்றன. இங்கிலாந்தில் மட்டும் தொலைவிற்கு நீர்வழிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் தேம்ஸ் இங்கிலாந்தின் முக்கிய நீர்வழியாகும்; இதன் கழிமுகத்தில் அமைந்துள்ள தில்பரி துறைமுகம் இங்கிலாந்தில் உள்ள மூன்று துறைமுகங்களில் முதன்மையானதாகும்.
மக்கள் தொகையியல்
53 மில்லியனுக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட இங்கிலாந்தே ஐக்கிய இராச்சியத்தின் நாடுகளில் மிகவும் பெரியதாகும்; மொத்த மக்கள்தொகையில் இது 84% ஆகும. இங்கிலாந்தை மட்டும் தனியாக கருத்தில்கொண்டால் மக்கள்தொகைப்படி இது ஐரோப்பிய ஒன்றியத்தில் நான்காவது இடத்திலும் உலகளவில் 25ஆவது இடத்திலும் உள்ளது. சதுர கிமீக்கு 407 நபர்கள் உள்ள இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் மிகவும் மக்கள் அடர்த்தி மிக்க நாடுகளில் மால்ட்டாவிற்கு அடுத்து இரண்டாவதாகும்.
.
1086இல் இரண்டு மில்லியனாக இருந்த இங்கிலாந்தின் மக்கள்தொகை, 1801இல் 8.3 மில்லியனாகவும் 1901இல் 30.5 மில்லியனாகவும் வளர்ந்தது. குறிப்பாக தென்கிழக்கு இங்கிலாந்தில் பொருளாதார முன்னேற்றத்தினால் ஐக்கிய இராச்சியத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேறினர்.
1950களிலிருந்து பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகளிலிருந்து புலம்பெயர் மக்கள் வரத் துவங்கினர். இங்கிலாந்தில் 6% மக்கள் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்களாவர். மக்கள்தொகையில் 2.90% பேர் பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளாயிருந்த கரிபியன் மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வந்த கருப்பின மக்களாவர். சீனர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். 2007 துவக்கப்பள்ளி மாணவர்களில் 22% சிறுவர்கள் சிறுபான்மை இனப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகும்.
1991இலிருந்து 2001 வரையிலான மக்கள்தொகை பெருக்கத்தில் 50% புலம் பெயர்ந்து குடியேறியவர்களால் ஏற்பட்டதாகும். இதனால் புதிய குடியேற்றத்தை தடுக்கவேண்டும் என்ற அரசியல் கருத்தாக்கம் வலுவடைந்து வருகிறது.
கல்வி
இங்கிலாந்து கல்வி துறை 3 வயது முதல் 4 வயது வரை மழலை கல்வியும் பின்னர் 4 வயது முதல் 11 வயது வரை
ஆரம்ப கல்வியும் 11 வயது முதல் 16 வயது வரை இடைநிலை கல்வியும் (ஆரம்ப கல்வியும் மற்றும் இடைநிலை கல்வியும்
இங்கிலாந்து நாட்டில் கட்டைய கல்வியாகும்) கட்டைய கல்வியை முடித்த பின் 2 ஆண்டு வரை கல்வியை தொடர்ந்து
ஜீ. சி. எஸ். ஈ பரீட்சைக்கு தோன்ற முடியும்.பரீட்சை முடிவுகளை தொடர்ந்து கல்லூரிகளில் அனுமதியினை பெறமுடியும்.
இங்கிலாந்து நாட்டில் 90 மேற்பட்ட பல்கலைகழகங்கள் உள்ளன இவற்றில் உலக பிரபல்யம் அடைந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இம்பீரியல் காலேஜ் லண்டன், ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி இங்கிலாந்து நாட்டில் தான் உள்ளது.
விளையாட்டு
பற்பல விளையாட்டுக்கள் இங்கிலாந்தில் காலாகாலமாக ஆடப்பட்டு வருகின்றன. இக்காலத்தில் உலகத்தில் விளையாடப்பெறும் பல விளையாட்டுக்கள் 19-ஆம் நூற்றாண்டுக் காலத்தில் இங்குதான் தோற்றுவிக்கப்பட்டு, விதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இங்கிலாந்தில் ஆடப்படும் அனைத்து விளையாட்டுகளினும் புகழ்பெற்று விளங்குவது கால்பந்து ஆகும். இங்கிலாந்தின் தேசிய கால்பந்து அணியின் மைதானமான வெம்ப்ளி விளையாட்டரங்கத்தில் 1966-ஆம் ஆண்டின் கால்பந்து உலகக் கோப்பையை மேற்கு செருமனியை 4-2 என்ற இலக்கு கணக்கில் வீழ்த்தி வாகை சூடியது. அவ்வருடம் மட்டுமே இங்கிலாந்து கால்பந்து உலகக் கோப்பையை நடத்தியுள்ளது, இங்கிலாந்தின் ஒரே கால்பந்து உலகக் கோப்பை வாகையும் அதுவேயாகும்.
இங்கிலாந்தில் செஃபீல்டு கால்பந்துக் கழகம் 1857-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது(உலகின் மிகப் பழமையான கால்பந்துக் கழகம்). ஆகையால், ஃபிஃபாவினால் கழகக் கால்பந்தின் பிறப்பிடமாக இங்கிலாந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தின் கால்பந்துக் கூட்டமைப்பே உலகின் மிகப் பழமையான காலபந்துக் கூட்டமைப்பாகும். கால்பந்து கூட்டமைப்புக் கோப்பை மற்றும் கால்பந்துக் கூட்டிணைவு ஆகியவை முறையே உலகின் மிகப் பழமையான கால்பந்துக் கோப்பை மற்றும் கூட்டணைவுப் போட்டித் தொடர்களாகும். தற்போதைய காலகட்டத்தில் இங்கிலாந்தின் பிரீமியர் லீக் உலகின் கவர்ச்சிகரமான, புகழ்வாய்ந்த கால்பந்து கூட்டிணைவுத் தொடராகும். and amongst the elite. ஐரோப்பியக் கோப்பையை (தற்போது யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு என்று அறியப்படுகின்றது) இங்கிலாந்தின் கால்பந்துக் கழகங்களான லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட், நாட்டிங்காம் ஃபாரஸ்ட், அஸ்டன் வில்லா, செல்சீ ஆகிய அணிகள் வென்றுள்ளன; மேலும் ஆர்சனல் லீட்சு யுனைடெட் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.
துடுப்பாட்டத்தின் (மட்டைப்பந்து,கிரிக்கெட்) தாயகம் இங்கிலாந்து. மேலும் அந்நாட்டின் தேசிய விளையாட்டும் இதுவே. இங்கிலாந்து முதல் மூன்று துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளையும் (1975, 1979, 1983) அதன் பிறகு 1999-ம் ஆண்டும் நடத்தியது. பதுஅ உலக இருபது20 போட்டிகளை 2009இல் நடத்தியது. இதுவரை இங்கிலாந்து மூன்றுமுறை(1979, 1987, 1992) துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தாலும் ஒருமுறை கூட வென்றதில்லை. இலண்டனிலுள்ள இலார்ட்சு துடுப்பாட்ட மைதானம் "துடுப்பாட்டத்தின் மெக்கா"எனப்படுகிறது.
இலண்டன் மூன்றுமுறை கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுக்களை 1908, 1948, 2012 ஆண்டுகளில் நடத்தி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பொதுநலவாய விளையாட்டுக்களில் இங்கிலாந்து பங்கேற்கிறது. இங்கிலாந்தின் விளையாட்டுக்களை வழிநடத்தவும் நிதிகளை வழங்குவதற்கும் இசுபோர்ட் இங்கிலாந்து என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராண்டு பிரீ தானுந்து போட்டிகள் சில்வர்சுடோன் என்றவிடத்தில் நடத்தப்படுகின்றன.
உலக ரக்பி யூனியன் கோப்பையை 2003ஆம் ஆண்டு இங்கிலாந்து வென்றது. 1991இல் இந்த போட்டிகளை ஏற்று நடத்திய இங்கிலாந்து மீண்டும் 2015இல் நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ரக்பி கால்பந்து விளையாட்டின் மற்றொரு வடிவமான ரக்பி லீக் விளையாட்டு 1895இல் அட்டர்சுபீல்டில் பிறந்தது. ரக்பி லீக்கில் இங்கிலாந்தின் அணி உலகளவில் மூன்றாவது நிலையிலும் ஐரோப்பாவில் முதல்நிலையிலும் உள்ளது. பெரிய பிரித்தானியாவின் அணி மூன்று உலகக்கோப்பைகளை வென்றபிறகு ஓய்வுபெற்றநிலையில் இங்கிலாந்தின் அணியே 2008 முதல் நாட்டு அணியாக பங்கேற்கிறது. 2013இல் நடக்கவுள்ள ரக்பி லீக் உலக்க் கோப்பை போட்டிகளை ஐக்கிய இராச்சியம் ஏற்று நடத்த உள்ளது.
டென்னிசில், விம்பிள்டன் கோப்பை மிகவும் பழைமையான போட்டியாகவும் உலகின் மதிப்புமிக்க ஒன்றாகவும் விளங்குகிறது.
இங்கிலாந்தின் குறிப்பிடத்தக்க மக்கள்
இங்கிலாந்தில் பலர் பெரும் புகழ் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருசிலர்:
வில்லியம் சேக்சுபியர், மிகவும் புகழ்பெற்ற ஆங்கில நாடகாசிரியர்;
சர் ஐசக் நியூட்டன், ஈர்ப்பு கோட்பாட்டைக் கண்டறிந்த அறிவியலாளர்;
சார்லஸ் டிக்கின்ஸ், 19வது நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்;
சர் டிம் பேர்னேர்ஸ்-லீ, உலகளாவிய வலையைக் கண்டறிந்தவர்;
பீட்டில்ஸ், இசைக்கலைஞர்கள், லிவர்பூல் நகரத்தினர்;
சர் வின்ஸ்டன் சர்ச்சில், முன்னாள் பிரதமர், இரண்டாம் உலகப் போரில் நாட்டை முன்நடத்தியவர்;
மன்னர் ஹென்றி VIII, 16வது நூற்றாண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற மன்னர்;
அரசி விக்டோரியா 19வது நூற்றாண்டின் பெரும்பகுதியும் அரசியாக விளங்கியவர்;
சார்லஸ் டார்வின், புகழ்பெற்ற இயற்கையாளர், படிவளர்ச்சிக் கொள்கைக்கான ஆய்வால் அறியப்பட்டவர்;
டயானா, வேல்ஸ் இளவரசி (1961–1997).
குறிப்புகள்
மேற்கோள்கள்
ஐக்கிய இராச்சியத்தின் நாடுகள்
தீவு நாடுகள்
|
7337
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81
|
பழமொழி நானூறு
|
பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பழ மொழிகள் இலக்கியம் சார்ந்தவையாகும். சங்க காலத்தினைப் பற்றி இந்நூல் அதிக தகவல்களைத் தருகின்றது. இதன் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.
உள்ளடக்கம்
இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புகளும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரப்பட்டுள்ளன.
கல்வி (10)
கல்லாதார் (6)
அவையறிதல் (9)
அறிவுடைமை (8)
ஒழுக்கம் (9)
இன்னா செய்யாமை (8)
வெகுளாமை (9)
பெரியாரைப் பிழையாமை (5)
புகழ்தலின் கூறுபாடு (4)
சான்றோர் இயல்பு (12)
சான்றோர் செய்கை (9)
கீழ்மக்கள் இயல்பு (7)
கீழ்மக்கள் செய்கை (17)
நட்பின் இயல்பு (10)
நட்பில் விலக்கு (8)
பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல் (7)
முயற்சி (13)
கருமம் முடித்தல் (15)
மறை பிறர் அறியாமை (6)
தெரிந்து செய்தல் (13)
பொருள் (9)
பொருளைப் போற்றுதல் (8)
நன்றியில் செல்வம் (14)
ஊழ் (14)
அரசியல்பு (17)
அமைச்சர் (8)
மன்னரைச் சேர்ந்தொழுகல் (19)
பகைத்திறம் (26)
படைவீரர் (16)
இல்வாழ்க்கை (21)
உறவினர் (9)
அறம் செய்தல் (15)
ஈகை (15)
வீட்டு நெறி (13)
பழமொழி நானூறில் - வரலாற்றுச் செய்திகள்
பின்வரும் வரலாற்று நிகழ்ச்சிகள் பழமொழி நானூறில் குறிப்பிடப்பட்டுள்ளது:
தூங்கும் எயிலும் தொலைத்தலால் (பா.156) (தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியனைக் குறித்தது)
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (பா.243) (மனு நீதி கண்ட சோழன்)
தவற்றை நினைதுத்தன் கைக்குறைத்தான் தென்னவனும் (பா.77) (பொற்கைப் பாண்டியன்)
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் (பா.75) (குறுநில வள்ளல் பாரி மற்றும் பேகன்)
பாரி மடமகள் பாண்மகற்கு..... நல்கினாள்(பா.382) (பாரியின் மகள்)
நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் (பா.7) (கரிகால் சோழன்)
சுடப்பட்டுயிர் உய்ந்த சோழன் மகனும் (பா.240) (தீயினால் கொளுத்தப்பட்டும் அதிலிருந்து பிழைத்த இளம்சேட்சென்னி சோழன் மகனாகிய கரிகால் சோழன்)
அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் (பா.381) (தம் புகழைப் பாடிய கௌதமனாருக்கு அவர் குறை தீர வேள்வி செய்த சேரன் செங்குட்டுவன்).
பழமொழி நானூறில் வரும் புராணக் குறிப்புகள்
பின்வரும் புராணக் குறிப்புகள் பழமொழி நானூறில் இடம் பெற்றுள்ளன:
பொலந்தார் இராமன் துணையாகத் தான் போந்து (பா.258) - இராமாயணம்
அரக்கில்லுள் பொய்யற்ற ஐவரும் போயினார் (பா.235) - பாரதம்
பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா (பா.357) - பாரதம்
ஆ ஆம் எனக்கெளிதென்று உலகம் ஆண்டவன் [பா.184] - மாவலி
உலகந்தாவிய அண்ணலே (பா.178) - உலகம் அளந்த வாமானன்
சான்றுகள்
வெளியிணைப்புகள்
மதுரைத் தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தில்
இவற்றையும் பார்க்கவும்
சங்க இலக்கியம்
பழமொழி நானூறு-உரைநூல்,ஆசிரியர், மா. நன்னன், வெளியீடு:ஏகம் பதிப்பகம்,சென்னை-600005
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
தமிழ்ப் பழமொழி நூல்கள்
தமிழ் அற நூல்கள்
|
7341
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
|
சிறுபஞ்சமூலம்
|
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து செய்திகளை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடல்களிலும் ஐந்து செய்திகள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந்நூலை இயற்றிய காரியாசானும் ஏலாதி நூலை இயற்றிய கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர் ஆவார்.
நூல் பெயர்க்காரணம்
பஞ்சம் என்றால் ஐந்து என்று பொருளாகும்,மூலம் என்பதற்கு வேர் என்பது பொருளாகும். தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களைத் தீர்ப்பதற்குக் கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களைச் சேர்த்து மருந்தாக்குவது போல, ஐந்து விடயங்கள் மூலம் நீதியைப் போதித்து. இந்நூல் ஒழுக்கக் கேட்டுக்கு மருந்தாகிறது. காரியாசான் என்ற சமணப் புலவர் இதனை இயற்றினார். இவரை மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் 'மா' என்னும் அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கின்றது. இந்நூலில் 97 செய்யுள்கள் அமைந்துள்ளன.
இதன் அமைப்பு
தமிழிணையப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தின், சுவடியகப்பிரிவில் 'சிறுபஞ்சமூலம்' உள்ளது. இதன் முழு மின்நூல், மதுரைத் திட்டத்தில் கிடைக்கிறது. மொத்த 153 ஓலைகளில், இது 20 மற்றும் 21-ஆவதாவது ஒலைகளிலுள்ள, பிரித்தெடுக்கப்பட்ட 37-ஆவது பாடல் பகுதி பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஓலை நறுக்குகளில், 'மயிர்வனப்பும் …' என்ற 37-ஆவது பாடல் மட்டும் இருக்கிறது.
அந்த 37-ஆவது பாடலும், அதற்குப் பின்புலமாக மூல ஓலையின் பகுதிகளும் அமைந்துள்ளது.
இப்பாடல்,'மனிதன் சாதாரணமாக மயங்கும் அழகுகளை வர்ணித்து, பின் அவற்றை விட நூலுக்கேற்ற சொல்லழகே சிறந்தது' என்கிறது.
இவற்றையும் பார்க்கவும்
சங்க இலக்கியம்
வெளியிணைப்புகள்
தமிழிணையப் பல்கலைக் கழக நூலகம் மூல ஓலைகள் மற்றும் நூல்கள் உள்ளது.
மதுரைத்திட்ட இணையத்தளம் (ஒருங்குறிப் பட்டியலில் இதன் முழுநூலை பதிவிறக்கலாம்)
சென்னை நூலகம் இணையத் தளம் இதன் உரையைக் காணலாம்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
தமிழ் அற நூல்கள்
|
7357
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
|
புத்தளம்
|
புத்தளம் (ஆங்கிலம்: Puttalam, ) இலங்கையின் மேற்குக் கடற்கரையை அண்டியுள்ள ஒரு நகரம் ஆகும். இது வடமேல் மாகாணத்தில் நகர சபை ஆட்சிக்கு உட்பட்டு அமைந்துள்ளது. இது அதே பெயரையுடைய புத்தளம் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.
கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி 130 வது கி.மீ (81 மைல்) தூரத்தில் கடல் நீரேரியைத் தொட்டவாறு காட்சி தரும் நகரம் புத்தளம். கல்பிட்டி நகரையும் புத்தளம் நகரையும் இணைத்து 28 கி.மீ (17 மைல்) நீண்டு கிடக்கும் கடல்நீர் ஏரி புத்தளம் நகரை அண்மித்ததாகத்தான் தனது இறுதி எல்லையைப் பூர்த்தி செய்கிறது. புத்தளம் நகரிற்கும், கல்பிட்டிக்கும் இன்னும் பல கிராமங்களுக்கும் உயிரோட்டமான அழகைத் தருவதில் இக்கடல் நீர் ஏரிக்கு முக்கிய பங்குண்டு. உள் நாட்டிற்குள் அமைந்த மிகப் பெரிய நீர்ப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக இதைக் குறிப்பிட முடியும். ஆங்கிலேயர் காலத்தின் பிற்பகுதியில் கொழும்பிலிருந்து கல்பிட்டி வரை தரைப்பாதை திறக்கப்பட்டதன் பின்னர்தான் இந்நீர்ப் போக்குவரத்து படிப்படியாக நிறுத்தப்பட்டது. புத்தளம் நகரின் பெயர் தான் மாவட்டத்தின் பெயருமாகும். புத்தளம் என்பது நகரையும் குறிக்கிறது மாவட்டத்தையும் குறிக்கிறது. சிலாபம், குருநாகல் நகரங்கள் பெற்றுக்கொள்ளாத பல முக்கியத்துவம் நவீன வரலாற்றில் புத்தளம் பெறக்கூடியதாக இருந்தது ஒரு குறிப்பிடத்தக்க விடயம்.
இன்று புத்தளம், கல்பிட்டி இரண்டும் முசுலிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கடலோர நகரங்களாகவும், வர்த்தக நகரங்களாகவுமே தலைநிமிர்ந்து நிற்கின்றன. சிறிய, பெரிய அளவில் பலநூறு கிராமங்கள் ஒன்றிணைந்து கைத்தொழில், கல்வி, வர்த்தகம், மீன்பிடி, உப்பு உற்பத்தி, இறால் பண்ணை என்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இந்த மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்கேற்றுவருகின்றன.
வரலாறு
14ம் நூற்றாண்டில் இங்கு கால் பதித்த இப்னு பதூதா இந்நகரை "பத்தாளா” என்று குறிப்பிட்டுள்ளார். ‘புத்தளம்’ என்றோ அதற்கு கிட்டிய மற்றொரு பெயரிலோ இது அழைக்கப்பட்டதற்கும், அது ஒரு சுறுசுறுப்பான கடல் வணிக நகராக இருந்ததற்கும் முசுலிம் ‘சுல்தான்’ ஒருவர் அதை ஆட்சி செய்து கொண்டிருந்தான் என்பதற்கும் இபுனு பதூதாவின் ‘இரேகிலா’ எனும் பிரயாணக்குறிப்பில் கூறப்பட்டுள்ளன.
இலங்கையில் குடியேற்றம் ஆரம்பமாவதற்கு முதல்வராக இருந்த விசயன் மற்றும் அவனுடைய சகாக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திறங்கியது புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள தம்ப பன்னி பிரதேசத்திலேயேயாகும். மேலும் விசயன் அரசனாவதற்கு உதவிபுரிந்ததாக கூறப்படும் குவேனி என்பவளின் இருப்பிடமும் இப்பிரதேசத்திலேயே இருந்துள்ளது. பிற்காலத்தில் விசய அரசர் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட 'புத்தகச்சான' எனும் இளவரசியை திருமணம் செய்ததால் அங்கிருந்து சென்ற குவேணி தோணிகல எனும் பிரதேசத்தில் வாழ்ந்ததாக கதைகளில் கூறப்படுகின்றது. இப் பிரதேசத்திலேயே இலங்கையின் மிக நீண்ட கல் வெட்டும் காணப்படுகின்றது. இது புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது.
12ம் நூற்றாண்டின் பின்னர் மத்திய மலை நாட்டிலும் குருநாகல் இராச்சியத்திலும் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கும் குருநாகல் உட்பட மத்திய மலை நாட்டிற்குத் தேவையான கடல் வழிப்பாதை, துறைமுகம், பொருட்களைக் களஞ்சியப்படுத்தல், சிங்கள அரசர்களுக்கும் மக்களுக்கும் தேவையான ஆயுதங்கள், ஆடம்பரப் பொருட்கள், உணவுப்பதார்த்தங்கள், உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தல், வெளி நாடுகளுக்கு அனுப்புதல், வெளிநாடுகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளுதல் ஆகிய பல தேவைகளை புத்தளமும் கல்பிட்டியும் தான் நிறைவேற்றின. புத்தளம் உள்துறைமுகமாகச் செயற்பட்டது. கல்பிட்டி கிட்டத்தட்ட சர்வதேசத் துறைமுகமாக இருந்தது. இவற்றிற்கு சுமார் 20 அல்லது 30 மைல் தொலைவில் இரண்டாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த குதிரை மலைத் துறைமுகம் அமைந்துள்ளது.
இந்த இரு நகரங்களினதும் துறைமுக வர்த்தக நடவடிக்கைகளும், கடல் வாணிபத்திற்கான வசதியும், புவியியல் ரீதியான அமைவிடமும், கேந்திர முக்கியத்துவமும் வரலாற்றில் எப்போதுமே உரோமர், பாரசீகர், பினீசியர், சபாயியர், அரேபியர் போன்றோரையும் பின்னர் போர்த்துக்கேயரையும், இடச்சுக்காரர்களையும், ஆங்கிலேயர்களையும் கவரத்தூண்டிய விடயங்களாக இருந்தன.
காலநிலை
சனவரி முதல் மார்ச்சு வரையும் சூன் முதல் செப்டம்பர் வரையிலான ஒரு குறுகிய உலர் பருவத்தில் மற்றும் இரண்டாவது உலர் பருவத்தில் வெப்பமான நிலவியல் காலநிலை உள்ளது. மழைக்காலத்துக்கு அக்டோபர் முதல் திசம்பர் வரை முக்கியமாக உள்ளது. வெப்பநிலை இடையே உள்ள சிறிய வேறுபாடுகள் ஆண்டு முழுவதும் நிலைத்து நிற்கிறது.
பொருளாதாரம்
தெங்கு முக்கோண பிரதேசத்திற்குட்பட்ட தெதுறு ஓயா மற்றும் மா ஓயா வரையிலான பிரதேசமானது தெங்கு உற்பத்தியில் சிறந்து விளங்குவதடன் அதற்கான சிறந்த மண்வளமும் இங்கு காணப்படுகிறது.
புராதன அரசர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட தப்போவ, தினிபிட்டிய, கரவிட்ட, கட்டுப்பொத, கொட்டுக்கச்சிய மற்றும் இங்கினிமிட்டிய ஆகிய நீர்பாசன முறைமையின் கீழ் இன்றும் கூட நெற் செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதோடு நீர்பாசன முகாமைத்துவ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கபட்ட நீலபெம்ம மற்றும் ரதவிபெந்தி கால்வாயினைச் சார்ந்தும் நெற்ச் செய்கை செய்யப்படுகிறது.
உப்பு உற்பத்தியும் இம்மாவட்டதத்தில் சிறந்து விளங்குவதோடு இறால் வளர்ப்பும் பொருளாதார ரீதியாக இலாபமீட்டக்கூடிய தொழிலாக காணப்படுகிறது. புத்தளம் மாவட்டத்திட்குட்பட்ட சிறுகடலானது இறால் வளர்ப்பிற்கு மிகவும் பொருத்தமானதாக உள்ளதால் பெருமளவிலான அந்நிய செலாவணியை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடிகிறது.
வென்னப்புவையிலிருந்து கற்பிட்டி வரையான கடல் பிரதேசத்தில் மீன்கள், அட்டைகள், சிப்பிகள், போன்ற கடல் சார் வளங்கள் நிறைந்து காணப்படுவதோடு, மீன்பிடித் தொழிலும் சிறந்து விளங்குகிறது. மேலும் இப்பிரதேசத்திலுள்ள மண்வளம் மரக்கறிச்செய்கைக்கு உகந்ததாக காணப்படுகிறது.
வனாத்தவில்லு பிரதேசத்தில் மரமுந்திரிகைச் செய்கை பெருமளவில் மேற் கொள்ளப்படுகிறது. இப்பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள எலுவன்குளம் பகுதியில் சீமெந்து உற்பத்திக்கான சுண்ணாம்பு மூலப் பொருட்கள் காணப்படுகின்றன.
HOLCIM சீமெந்து தயாரிப்பு புத்தளம் நகரின் மிகப்பெரிய உற்பத்தி திறன் கொண்ட தொழிற்சாலைகளில் ஒன்று.
போக்குவரத்து
புத்தளம் மாவட்டதின் முக்கிய நகரங்களுக்கு என்று மூன்று அகன்ற நெடுஞ்சாலைகள் உள்ளன. நீர்கொழும்பு வழியாக கொழும்பு உடன் புத்தளம் இணைக்கும் A3. குருநாகல் வழியாக கண்டி உடன் புத்தளம் இணைக்கும் A10, மற்றும் அனுராதபுரம் வழியாக திருகோணமலை உடன் புத்தளம் இணைக்கும் A12.
தினசரி பேருந்து போக்குவரத்து வசதிகள் தலைநகர் கொழும்பு, குருநாகல், கண்டி, மற்றும் அனுராதபுரம் போன்ற நகரங்கழுக்கு கிடைக்கின்றன. நீர்கொழும்பு வழியாக இருந்து கொழும்பு புத்தளம் இடையே ஒரு தொடருந்து சேவையும் உள்ளது.
கல்வி
புத்தளத்தில் உள்ள பாடசாலைகள்:
சாகிரா தேசிய கல்லூரி; ஆண்களுக்கான தமிழ் மொழி மூல கற்கை முறை.
பாத்திமா கல்லூரி; பெண்கலுக்கான தமிழ் மொழி மூல கற்கை முறை.
செயின்ட் ஆண்டுரூசு கல்லூரி; இரு பாலருக்குமான சிங்கள மூல கற்கை முறை.
ஆனந்த தேசிய கல்லூரி; இரு பாலருக்குமான சிங்கள மூல கற்கை முறை.
இந்து மத்திய கல்லூரி; இரு பாலருக்குமான தமிழ் மூல கற்கை முறை.
தில்லையடி முசுலிம் மகா வித்தியாலயம்
இக்ரா சர்வதேச பள்ளி
வட்டக்கன்டல் முசுலிம் வித்தியாலயம்
ஒரு திறந்த பல்கலைக்கழகமும், மகிந்தோதய விஞ்ஞான கல்லூரியும் உள்ளது.
மின்சாரம் உற்பத்தி
சேகுவந்தீவு லிமிட்டெட், விடத்தமுனை வின்ட் பவர் நிறுவனமும் சேர்ந்து $ 55 மில்லியன் முதலீட்டில் புத்தளம் பகுதியில் 20 மெகாவாட்கள் மின்சாரம் உற்பத்தி செய்வற்கு 25 காற்றாலைகளைப் பராமரிக்கிறது.
நுரைச்சோலை முன்னுற்பத்தி நிலையம் இலங்கையில் ஒரு பெரிய அனல் மின் நிலையமாக உள்ளது. கட்டுமான அமைப்பு வசதி முதலில் 2006 மே 11 இல் தொடங்கியது முதல் 300 மெகாவாட் உற்பத்தி கட்டம் முடிந்ததும், 2011 மார்ச் 22 அன்று சனாதிபதி மகிந்த இராசபட்ச தலைமையில் செயட்பாட்டை நியமித்தது. இலங்கை மின்சார சபையின் தகவல் படி, அமெரிக்க $455 மில்லியன் மதிப்பீட்டில் முதல் கட்டமாக ஆண்டுதோறும் 1.7 TWh (TeraWatt Hour) மின்சாரம் உருவாக்குகிறது; 2011இன் மதிப்பின் படி 11.5 TWh மின் உற்பத்தி இலங்கை நாட்டின் மொத்த உற்பத்தியில் பங்கு வகிக்கின்றது. எல்லா உற்பத்தியும் ஆலையில் இருந்து 115 கி.மீட்டர் (71 மைல்) தொலைவில் உள்ள வேயாங்கொடையின் சேமிப்பு தளத்துக்கு 220-கிலோவுவோற்று கம்பியின் வழியாக அனுப்பப்படுகிறது.
மதம்
புத்த மற்றும் கிறித்தவ மதத்தவர்கள் அதிகமானோர் நகரின் வெளியே வசிக்கும் வேளை, நகர்ப்புற பகுதிகளில் முசுலிம்கள் (95%) செறிந்து வாழ்கின்றனர். இந்துக்கள் சிறுபான்மையாக உள்ளனர். அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நகர எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டிடக் கலையழகுடன் கூடிய புத்தளம் முசுலிம்களின் பெரிய பள்ளிவாசல் நூற்றாண்டு கால வரலாற்றை உள்ளடக்கியுள்ளது.
விளையாட்டு
துடுப்பாட்டம் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. கால்ப்பந்து உள்ளூரில் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது, பல ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு அணிகளாக உருவாக்கப்பட்டு நகர சபைக்கு சொந்தமான மைதானத்தில் தேசிய மட்டத்தில் போட்டிகள் நடைபெறும். மேலும், கைப்பந்து நகரத்தில் உள்ள புகழ்பெற்ற மற்றுமொரு மாலை நேர பொழுது போக்காக நகர சபைக்கு சொந்தமான சங்க மைதானத்தில் விளையாடப்பட்டு வருகின்றன.
மேற்கோள்கள்
புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஊர்கள்
இலங்கை மாவட்ட தலைநகரங்கள்
|
7358
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
வல்லிபுரம்
|
வல்லிபுரம் என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஒரு ஊராகும். இப்பொழுது இது மிகவும் குடித்தொகை அடர்த்தி குறைந்த இடமாக உள்ளது. பழங்காலத்தில் இவ்விடத்தில் முக்கியமான குடியிருப்புக்கள் இருந்ததற்கான தொல்பொருட் சான்றுகள் கிடைத்துள்ளன. இதனையும், வேறு இலக்கிய ஆதாரங்களையும் முன்வைத்து, சிங்கைநகர் என்று குறிப்பிடப்படுகின்ற யாழ்ப்பாண அரசின் தலைநகரமே வல்லிபுரம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்விடத்தில் பிரபலமான வல்லிபுர ஆழ்வார் கோயில் ஆலயமும் உண்டு.
வெளி இணைப்புகள்
வந்தியத்தேவன்
வல்லிபுர ஆழ்வார் கோவில்-கஜரஞ்சிதன்
வல்லிபுர ஆழ்வார் கோவில்
வல்லிபுர ஆழ்வார் கோவில்
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்
தமிழர் இடையே பௌத்தம்
யாழ்ப்பாண மாவட்டம்
|
7370
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%2C%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
|
வெலிங்டன், நியூசிலாந்து
|
{{Infobox settlement
|name = வெலிங்டன்
|native_name =
|native_name_lang=
|nickname = துறைமுகத் தலைநகரம்
|settlement_type = Metropolitan City & Capital
|total_type =
|motto =
|image_skyline = Wellington at dawn.jpg
|image_size = 300px
|image_caption = வெலிங்டன் துறைமுகம்.
|image_map = Location of Wellington.png
|map_caption = நியூசிலாந்தில் இருக்கும் நகர அமைப்பு.
|image_map1 =
|mapsize1 =
|map_caption1 =
|coordinates_region = NZ
|subdivision_type = Country
|subdivision_name =
|subdivision_type1 =
|subdivision_name1 =
|subdivision_type2 =
|subdivision_name2 =
|government_footnotes =
|government_type =
|leader_title = மேயர்
|leader_name = சிலியா வடே-பிரவுன்
|established_title =
|established_date =
|established_title1 =
|established_date1 =
|area_footnotes =
|area_urban_km2 = 444
|area_land_km2 =
|area_water_km2 =
|area_metro_km2 = 1390
|area_blank1_sq_mi =
|elevation_footnotes =
|elevation_m =
|elevation_ft =
|elevation_max_m =
|elevation_max_ft =
|elevation_min_m = 0
|elevation_min_ft = 0
|population_as_of =
|population_footnotes =
|population_note =
|population_urban =
|population_metro =
|population_density_urban_km2 = auto
|population_density_metro_km2 = auto
|population_blank1_title = Demonym
|population_blank1 = Wellingtonian
|timezone = NZST
|utc_offset = +12
|timezone_DST = NZDT
|utc_offset_DST = +13
|coor_type =
|latd=41 |latm=17 |lats=20 |latNS=S
|longd=174|longm=46 |longs=38 |longEW=E
|blank_name =Local iwi
|blank_info =Ngāti Toa Rangatira, Ngāti Raukawa, Te Āti Awa
|postal_code_type = Postcode(s)
|postal_code = 5000-5499, 6000-6999
|area_code = 04
|website = www.wellingtonnz.com
|footnotes =
}} வெலிங்டன் நியூசிலாந்தின் தலைநகரமாகும். இது நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். நியூசிலாந்து நாடு வடக்கு தெற்கு என இரண்டு பகுதிகளை கொண்டது. வெலிங்டன் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவின் தெற்கு மூலையில் உள்ளதுபெயர் காரணம் :-
வாடேர்லூ யுத்தத்தில் வெற்றி பெற்ற ஆர்தர் வேல்லேச்லே என்பவரை சிறப்பிக்கும் விதமா இந்த பெயர் இந்நகருக்கு வழங்கபட்டுள்ளது.சிறப்பு''' :-
வெலிங்டன் நியூசிலாந்தின் நாட்டின் அரசியல் தலைநகராக விளங்குகிறது. Mercer நிறுவனம் நடத்திய 2007 ஆண்டுக்கான ஆய்வில், இந்நகரம் உலக அளவில் 12 வது சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நகரமாக அறிவித்துள்ளது.
மேற்கோள்கள்
ஓசியானியா தலைநகரங்கள்
நியூசிலாந்து நகரங்கள்
|
7372
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%28%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%29
|
தருமர் (உரையாசிரியர்)
|
தருமர் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நூல் உரையாசிரியர்களில் ஒருவர். திருக்குறள், நாலடியார் பாடல்களுக்கு இவர் உரை எழுதியுள்ளார்.
திருக்குறளில் “இருள்சேர் இருவினையும் சேரா”, “பொறிவாயில் ஐந்தவித்தான்” ஆகிய இரண்டு குறட்பாக்களுக்கு மட்டும் தமிழ்ப்பொழில் மாத இதழிலும், பிற பதிப்புகளிலும் வெளியாகியுள்ளன.
நாலடியார் பாடல்கள் 400-க்கும் இவரது உரை உள்ளது.
இவரது உரை பதுமனார் உரையைத் தழுவிச் செல்லும் பாங்கு இவரைப் பதுமனாரின் மாணாக்கர் எனக் கொள்ள வைக்கிறது.
இவரது உரையில் காணப்படும் பாடல் ஒன்று இவரைத் "தண்டார்ப் பொறைத் தருமன்" எனக் குறிப்பிடுகிறது.
இவரது உரைக்கு இவர் எழுதியுள்ள விநாயகர் வணக்கப் பாடல் 12ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல் 'பாலும் தெளிதேனும்' என்னும் பாடல் போல் அமைந்துள்ளதால் இவரது காலம் 13ஆம் நூற்றாண்டு எனல் பொருத்தமாகிறது.
இவர் நாலடியார் நூலைப் பகுப்பு செய்துள்ள பாங்கை இந்த உரைநூலுக்கு எழுதப்பட்டுள்ள பாயிரப் பாடல் குறிப்பிடுகிறது.
அறவியல் 13
அரசர்க்கு உரிய பொருளியல் 24
இன்பத்துப் பால் 3
இவரது உரையில் வடமொழித் தொடர் வருகிறது.
இவர் சீவக சிந்தாமணி பாடல் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார்.
கருவிநூல்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
தமிழ்ப் புலவர்கள்
தமிழ் உரையாசிரியர்கள்
திருக்குறள் உரையாசிரியர்கள்
|
7376
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
|
நாளந்தா
|
நாளந்தா (Nalanda) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும். இது மாநிலத் தலைநகரான பாட்னாவிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இங்கு தான் பண்டைய காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது. 14 ஹெக்டேர் பரப்பளவுள்ள பல்கலைக்கழக கட்டடம் செங்கற்களால் ஆனது. திபெத்தியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள், பெர்சியர்கள் என பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், அறிஞர்களும் இந்த பல்கலைக்கழகத்தால் ஈர்க்கப்பட்டனர். பொ.ஊ. 1193 ஆம் ஆண்டு பக்தியார் கில்ஜியின் இராணுவத்தால் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டது. இவர்களால் அழிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் நூலகம் தீயிட்டு மூன்று மாதங்களாக எரிந்ததாகக் கூறப்படுகிறது, இதன் மூலம் அங்குள்ள நூல்களின் எண்ணிக்கையை மதிப்பிடலாம்.
மேற்கோள்கள்
பௌத்த தொல்லியற்களங்கள்
பிகார் தொல்லியற்களங்கள்
இந்தியத் தொல்லியற்களங்கள்
பௌத்த யாத்திரைத் தலங்கள்
பௌத்த கோயில்கள்
இந்திய பௌத்த கோயில்கள்
பீகார் வரலாறு
பீகாரில் கல்வி
இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்
|
7404
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
|
பெய்ஜிங்
|
பெய்ஜிங் (சீனம்: 北京, அல்லது "வட தலைநகரம்") சீன மக்கள் குடியரசின் தலைநகரமாகும். இது வட சீனாவில் அமைந்துள்ளது. சீனாவில் சாங்காய் நகரத்திற்கு அடுத்து மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவேயாகும்.
பெயர்க்காரணம்
கடந்த 3000 ஆண்டுகளாக பெய்ஜிங் நகரம் பல பெயர்களால் வழங்கப்பட்டு வந்திருக்கின்றது. பெய்ஜிங் என்பது சீன மொழியில் வடதலைநகரம் என பொருள்படும். தென்தலைநகரம் என பொருள்படும் சான்ஜிங்கிலிருந்து வேறுபடுத்தும் நோக்கில் 1403 இல் மிங் வம்சத்தினரால் இந்நகருக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
வரலாறு
பெய்ஜிங் நகரம் 250,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்நகரிலுள்ள ஒரு கிராமத்திலுள்ள குகையொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களிலிருந்து, பீக்கிங் மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பெய்ஜிங்கின் முதல் மதில் சூழ்ந்த நகரமாக, கி.மு.11ஆம் நூற்றாண்டு முதல் கி.மு.7ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் 'ஜி' எனும் நகரம் விளங்கியது. தற்போதைய நகரத்தில் பெய்ஜிங் மேற்கு புகையிரத நிலையத்திற்குத் தெற்காக இந்த ஜி நகரம் அமைந்திருந்தது. பல்வேறு சீன ஆட்சியாளர்களால் பெயர் மாற்றங்களுக்குள்ளான இந்நகரம் 1949 அக்டோபர் முதலாம் திகதி மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டபோது மீண்டும் பெய்ஜிங் என பெயரிடப்பட்டது.
புவியியல்
கிட்டத்தட்ட முக்கோண வடிவம் கொண்ட வட சீன சமவெளியின் வடக்குக் கோணத்தில் பெய்ஜிங் அமைந்துள்ளது. இது வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கே மலைகளால் சூழப்பட்டுள்ளது.
அரசு
பெய்ஜிங் மாநகராட்சி சீனப் பொதுவுடமைக் கட்சியினால் ஆட்சி செய்யப்படுகின்றது. இந்நகரம் 16 நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 14 மாவட்டங்களாகவும் 2 கவுண்டிகளாகவும் விளங்குகின்றன.
விளையாட்டு
பெய்ஜிங்கில் பல சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முக்கியமானது. இது தவிர 2001இல் உலகப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகள் மற்றும் 1990இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்பனவும் இங்கு நடைபெற்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளாகும்.
போக்குவரத்து
வட சீனாவில் மிக முக்கியமான போக்குவரத்து மையமாக பெய்ஜிங் விளங்குகின்றது. இது ஒன்பது அதிவேக நெடுஞ்சாலைகள், பதினொரு தேசிய நெடுஞ்சாலைகள், இரு அதிவேக புகைவண்டிப் பாதைகள் மற்றூம் ஒன்பது சாதாரண புகைவண்டிப் பாதிகள் ஒன்றிணையும் இடமாக இந்நகரம் திகழ்கின்றது. பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் நகர மத்தியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. இது உலகில் அதிகளவு பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையங்களின் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ளது.
பொருளாதாரம்
சீனாவில் சிறந்த பொருளாதார வளர்ச்சி பெற்ற நகரங்களில் ஒன்றாக பெய்ஜிங் விளங்குகின்றது. இந்நகரின் முக்கிய பொருளாதார முறையாக சேவைக்கைத்தொழில் திகழ்கின்றது.
முக்கிய இடங்கள்
பெய்ஜிங்கிலுள்ள பேரரண் நகரம் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டையகால அரண்மனை மற்றும் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது. மேலும் பெய்ஹாய், சிச்சஹாய், சொஞ்சன்ஹாய், ஜிங்சான், சொங்சான் ஆகிய இடங்கள் உட்பட இந்நகரிலுள்ள பல பூங்காக்கள் சீனத் தோட்டக்கலை மிளிரும் பூங்காக்களாக விளங்குகின்றன.
இரட்டை/சகோதர நகரங்கள்
பெய்ஜிங் பல இரட்டை நகரங்கள் அல்லது சகோதர நகரங்களைக் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் அந்தந்த நாடுகளின் தலைநகரங்களாக விளங்குகின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பெய்ச்சிங்கிலுள்ள பிரபல பூங்காக்கள்
ஆசியத் தலைநகரங்கள்
|
7410
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
நுண்கணிதம்
|
நுண்கணிதம் (Calculus) என்பது நுண்ணிய பகுப்பாய்வுகளால் கணிப்பீடுகளும் கணிதத் தொடர்பு-உறவுகள் பற்றியும் அறிந்து ஆயும் ஒரு கணிதத் துறை. பொதுவாக ஒன்று (காலத்தாலோ இடத்தாலோ) மாறும்பொழுது அது எந்த விகிதத்தில் மாறுகின்றது எப்படியெல்லாம் மாறுகின்றது என்பதை நுண்ணிய பகுப்பாய்வு செய்வதன் மூலம் அதைப்பற்றியும் அதன் மாற்றத்தைப் பற்றியும் பல பண்புகள் வெளிப்படுகின்றன. இப்படிப்பட்ட பற்பல ஆய்வுகளுக்கு இத்துறை பயன்படுகின்றது. இயற்கையில் உள்ள பல அறிவியல் விதிகள் மற்றும் இயக்கங்கள் இவ்வகை நுண்ணிய பகுப்பாய்வால் கண்டறியப்பட்டுள்ளன. நுண்கணிதத் துறையில் வகைநுண்கணிதம், (பகுப்பாய்வின் அடிப்படையில்) தொகைநுண்கணிதம் என்னும் இரு பிரிவுகள் உண்டு. இத்துறையில் அடைவெல்லை (Limits), நுண்மாறுவிகிதம் (derivative), நுண்தொகுமுறை (integration), முடிவிலி அடுக்குவரிசை (infinite series) முதலிய தலைப்புகள் அடங்கும்.
வரலாறு
நுண்கணிதத்தின் வரலாறு தொல்பழங்காலத்தில் இருந்து தொடங்குகின்றது. பழங்கால எகிப்தியர் கி.மு 1800 இலேயே இணைவெட்டுக் கூம்புப்படிகம் (pyramidal frustrum) போன்ற திண்மவடிவங்களின் பரும அளவை (கன அளவை) கணிக்க பகுப்பாய்வு முறைகளைக் கையாண்டனர். (பார்க்க எகிப்திய மாஸ்க்கோ பாப்பிரசு ). யூடோக்ஸஸ் (Eudoxus)(கி.மு. 408-355) என்னும் கிரேக்க அறிஞர் முடிவற்ற பல்கோணக நுண்பகுப்பு முறை என்னும் முறையைப் பயன்படுத்தி பல வடிவங்களின் பரப்புகளைக் கணித்தார். இது தற்கால முடிவிலி அடைவெல்லை முறைக்கு இனமான முன்கருத்து. இதே கருத்தை சீனாவில் லியு ஹுயி (Liu Hui) என்பார் கி.பி 3 ஆவது நூற்றாண்டில் கண்டுபிடித்து, அதன்வழி வட்டத்தின் பரப்பளவைக் கணக்கிட்டார். இதே முறையைப் பயன்படுத்தி சு சோங்சி என்னும் சீனர் உருண்டையின் பரும அளவை (கன அளவை)க் கண்டுபிடித்தார்.
இடைக்காலத்தில் இந்திய கணித இயலர் ஆர்யபட்டா கி.பி. 499 ல் முடிவிலிநுண்ணி (infinitesimals) என்னும் கருத்தை முன்வைத்து அதன் அடிப்படையில் விண்ணியலில் பயன்படும் சில கருத்துக்களை நுண்கணித சமன்பாடுகளாகக் கொடுத்தார் . இதன் அடிப்படையில் கி.பி 12 ஆம் நூற்றாண்டில் பாஸ்கரா-2 என்னும் இந்திய அறிஞர் முடிவிலிநுண்ணி அடிப்படையில் நுண்மாறுவிகிதம் (derivative) என்னும் கருத்தை முன்னமே அடைந்து ரோலின் தேற்றம் என்னும் வடிவத்தின் முன்வடிவை அடைந்தார். கி.பி 1000 ஆம் ஆண்டின் அண்மையில், இபுன் அல்-ஹய்தம் (அல்ஹசன்) என்னும் இராக்கிய அறிஞர் முதன்முதலாக, நான்மடிகளின் வரிசையின் கூட்டுத்தொகையை கணிதத்தூண்டுகோள் (mathematical induction) என்னும் கருத்தை முன்வைத்துக் கண்டுபிடித்தார். அதன் அடிப்படையில் எந்த முழு எண்மடிகளின் கூட்டுத்தொகையையும் கண்டுபிடிக்க ஒரு பொது வாய்பாடு கண்டுபிடித்தார். இம்முறை தொகுநுண்கணித முறைக்கு அடிப்படையான ஒரு கருத்து . கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இரானிய கணித இயலர் ஷ்ராஃவ் அல்-டின் அல்-துசி என்பவர் மும்மடியத் தொடரின் நுண்மாறுவிகிதத்தைக் கண்டுபிடித்தார். இது பகுநுண்கணிதத்தில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும் . 14 ஆவது நூற்றாண்டில் கேரளாவில் உள்ள சங்கமகிராமா என்னும் இடத்தைச் சேர்ந்த மாதவா என்னும் கணித அறிஞர் தம் கேரள வானியல் கணிதவியல் அறிஞர் குழுவுடன் சேர்ந்து தற்காலத்தில் டெய்லர் வரிசை என்று அழைக்கப்படும் ஒரு வரிசையின்வகையில் ஒரு தனி வகையைப் பற்றி யுக்திபாஷா என்னும் நூலில் விளக்கியுள்ளார் .
உசாத்துணை
நுண்கணிதம்
|
7412
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
புள்ளியியல்
|
புள்ளியியல் அல்லது புள்ளிவிபரவியல் என்பது, தரவுகளைச் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, பகுப்பாய்வு, விளக்கம் என்பன குறித்த பாடத்துறை ஆகும். கள ஆய்வுகள், சோதனைகள் என்பவற்றின் வடிவமைப்புத் தொடர்பிலான தரவுச் சேகரிப்புத் திட்டமிடல் உட்பட மேற்குறித்தவற்றில் எல்லா சிறப்புகளையும் இத்துறை கையாள்கிறது.
புள்ளியியலில் உரிய பயிற்சி பெற்று அத்துறைசார் பணிகளில் ஈடுபடுபவர் புள்ளியியலாளர் எனப்படுவார். புள்ளியியலாளர்கள், புள்ளியியல் பகுப்பாய்வின் வெற்றிகரமான பயன்பாட்டுக்குத் தேவையான வழி முறைகள் குறித்து நல்ல அறிவு பெற்றவராக இருப்பார். இத்தகையவர்கள், பொதுவாகப் புள்ளியியலின் பல்வேறுபட்ட துறைகளுள் ஏதாவது ஒன்றிலோ பலவற்றிலோ பணிபுரிந்து பட்டறிவு பெற்றவர்களாகவும் இருப்பர்.
செயற்பரப்பு
புள்ளி தகவல், புள்ளியியல் என்பன தரவுகளை சேகரித்தல், ஆராய்தல், பொருளை விளங்கவைத்தல் அல்லது விவரித்தல் மற்றும் தரவுகளை அளித்தல் போன்றவை அடங்கிய கணிதம் சார்ந்த அறிவியலாக சிலர் கருதுகிறார்கள் மற்றும் சிலர் அதனை தரவுகளை சேகரித்து அதன் பொருளை புரிந்துகொள்ளும் கணிதத்தின் ஒரு கிளையாக கருதுகின்றனர்.
புள்ளியியல் வல்லுனர்கள் சோதனைகளை வடிவமைத்து மற்றும் எடுத்துக்காட்டு மதிப்பீடுகள் மூலம் தரவுகளின் தரத்தை மேம்படுத்துகிறார்கள் தரவுகள் மற்றும் புள்ளியியல் எடுத்துக்காட்டடகளை பயன்படுத்தி எதிர்கால விளைவுகளை கணிக்கவும் மற்றும் எதிர்காலத்தை பகுப்பாய்வு செய்யவும் புள்ளியியல் ஒரு கருவியாக பயன்படுகிறது. புள்ளியியல் பலதரப்பட்ட துறைகளில் பயன்படுகிறது, கல்வி சார்ந்த துறைகளில், இயற்கை மற்றும் சமுதாய அறிவியல், அரசு, மற்றும் தொழில் அல்லது வணிகம் போன்றவை அடங்கும்.
புள்ளி தகவல் முறைகளை கொண்டு தரவுகளின் சேகரிப்பை தொகுத்து அளிக்க இயலும்: இதனை விளக்கமான புள்ளிவிபர முறை என்று அழைக்கின்றனர். ஆய்வுகளின் தீர்வுகளை வெளிப்படுத்த, இந்த முறை ஆராய்ச்சிகளில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, தன் போக்கிலமைந்த மற்றும் சமவாய்ப்புள்ள நிலையிலான மாறும் நிலையில்லா வகையிலான தரவுகளில் உருப்படிமங்களை முன்மாதிரியாக வைத்து கண்கானித்து, மற்றும் அதிலிருந்து அதன் செய்முறை அல்லது அதன் இனத்தொகையை ஆராய்ந்து கணிப்பதை; அனுமான புள்ளியியல் என அறியப்படுகிறது. அறிவியற் பூர்வமாக முன்னேற்றம் அடைய அனுமானம் ஒரு தலைமை அங்கமாகும், ஏன் என்றால் ஒரு தத்துவம் தர்க்க பூர்வமாக எங்கு செல்லும் என்பதை முன்கூட்டியே அறிய (தரவுகளின் அடிப்படையில்) அது வழிவகுக்கிறது. வழிகாட்டும் தத்துவத்தை நிரூபிக்க, இவ்வகையான கணிப்புகளை சோதித்தும் பார்ப்பதுண்டு, அப்படி செய்வது அறிவியல் முறைகளின் ஒரு பங்காகும். நினைத்தல் உண்மையாக இருந்தால், அப்போது புதிய தரவுகளின் விளக்கமான புள்ளி தகவல்கள் அது அந்த கருதுகோளின் வலுவான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. விளக்கமான புள்ளியியல் மற்றும் உய்த்துணர் புள்ளியியல் (யூகிக்கும் புள்ளி தகவல்கள் என்றும் அறியப்படுவது) இவை எல்லாம் சேர்ந்து செயல்முறை சார்ந்த புள்ளியியல் அல்லது புள்ளி தகவல்கள் என அறியப்படுகிறது.
இதைத்தவிர கணிதம் சார்புடைய புள்ளியியல் என்ற ஒரு பிரிவும் உள்ளது, அது தலைப்பின் கொள்கைகளின் அடிப்படையைப் அறிந்துகொள்ள உதவும்.
ஆங்கிலத்து சொல்லான statistics ஒருமையிலோ அல்லது பன்மையிலோ பயன்படுத்தலாம். அதன் ஒருமை வடிவம், statistics இந்த தொகுப்பில் உரைக்கப்பட்ட கணித அறிவியலைக் குறிக்கும். பன்மை வடிவில், statistics அதாவது statistic என்ற ஒருமைச் சொல்லின் பன்மை வடிவம், ஒரு அளவை குறிப்பதாகும் (அதாவது தரவுகளை கணித்துப்பெறும் நடுமட்டம்) என்ற அளவைக் குறிக்கும்.
புள்ளியியல், நிகழ்தகவுக் கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு உடையது. நிகழ்தகவுக் கோட்பாட்டில், மொத்தத் தொகையின் கொடுபொருட்களில் இருந்து தொடங்கி
எடுத்துக்காட்டுகளோடு தொடர்பான நிகழ்தகவுகளை உய்த்தறிகின்றனர். ஆனால், புள்ளியியலில் இது எதிர்த் திசையில் நடை பெறுகிறது. இங்கே எடுத்துக்காட்டிலிருந்து துவங்கி முழு அளவின் கொடுபொருட்கள் உய்த்தறியப்படுகின்றன.
வரலாறு
சில அறிஞர்கள் புள்ளியியல் முதல் முதலாக 1663 ஆண்டில் தோன்றியதாக சுட்டிக்காட்டுகின்றனர், ஜான் கிரான்ட் என்பவர் அவ்வாண்டு நாச்சுரல் அண்ட் பொலிடிகல் ஓப்செர்வேசன்ஸ் அபான் தி பில்ஸ் ஒப் மோர்டாலிடி என்ற கட்டுரையை வெளியிட்டார். நாட்டின் மக்கள் தொகை மற்றும் பொருளாதார தேவைகளின் அடிப்படையில் முந்தைய சிந்தனையாளர்கள் நாட்டிற்கான கொள்கைகளை உருவாக்க நினைத்ததால், ஆங்கிலத்தில் தொடக்கத்தில் ஸ்டேட் - என்ற சொல்தோற்றத்திற்கு காரணமாக அமைந்தது. புள்ளியியல் என்ற பிரிவின் நோக்கெல்லை 19 ஆம் நூற்றாண்டில் மேலும் விரிவடைந்தது மேலும் பொதுவாக தரவுகளை சேகரிப்பது மற்றும் தரவுகளை ஆராய்ந்து பார்ப்பதையும் அத்துடன் இணைத்துக் கொண்டது. இன்று, புள்ளியியல் மிகவும் பரவலாக அரசு, தொழில் அல்லது வணிகம், இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற துறைகளில் பயன்பட்டு வருகிறது.
அனுபவபூர்வமான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதாலும், மற்றும் அதன் குவிமையம் பயன்பாட்டில் வேரூன்றியதாலும், புள்ளியியல் என்பது கணிதத்தின் ஒரு கிளையாக அல்லாமல், பொதுவாக ஒரு தனிப்பட்ட கணித அறிவியலாக கருதலாம்.
17 ஆம் நூற்றாண்டில் பிளைஸ் பாஸ்கல் மற்றும் பிஎர்ரே தே பெர்மாத் ஆகிய இருவரும் நிகழ்ச்சித்தகவு கொள்கை என்ற பகுப்பை மேலும் மேம்படுத்தினார்கள் மற்றும் அதனுடைய கணிதத்திற்குரிய அடித்தளத்தையும் அமைத்தார்கள். நிகழ்ச்சித்தகவு கொள்கை என்ற பிரிவானது வாய்ப்புகளுக்கான விளையாட்டுக்களை பயிலும் போது ஏற்பட்டது. முதன் முதலாக குறைந்த வர்க்க முறை (method of least squares) கார்ல் பிரீட்ரிச் காஸ் (Carl Friedrich Gauss) என்பவர் 1794 ஆண்டுகளில் விவரித்தார். இன்றைய நவீன கணினிகளின் பயன்பாடு மிகையான அளவிலான புள்ளிவிவரங்கள் சார்ந்த கணக்கிடுதல் முறைகளை துரிதப்படுத்தியுள்ளது மேலும் மனிதனால் இயலாத சில புதிய முறைகளை செயல்படுத்தவும் அதன் மூலம் சாத்தியமாகி உள்ளது.
தி அமெரிக்கன் ஸ்டட்டடிக்கல் அசோசியேஷன் (American Statistical Association) என்ற அமைப்பு டெமிங் (Deming), பிஷேர் (Fisher), மற்றும் சி ஆர் ராவ் (CR Rao) போன்றவர்களை எக்காலத்தையும் சார்ந்த மிகவும் மகத்தான புள்ளியியல் வல்லுனர்களாக தரவரிசைப்படுத்தியுள்ளது.
மீள்பார்வை
புள்ளியியல் முறைகளை அறிவியல், தொழில் அல்லது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு பயன்படுத்தும்போது, அதனை மக்கள்தொகை (கூட்டுத்தொகை) அல்லது வழிப்படுத்துதலை முதலில் வைத்துக்கொண்டு துவங்குவது பயில்வதற்கு முக்கியமாகும். மக்கள் தொகை அல்லது கூட்டுத்தொகை என்பது "ஒரு நாட்டில் வசிக்கும் அனைத்து மக்கள்" போன்றதோ அல்லது "ஒரு படிகத்தை சார்ந்த ஒவ்வொரு அணு" வாகவோ வேறுபட்டு இருக்கலாம். ஒரு கூட்டுத்தொகையானது ஒரு வழிபடுத்துதலுக்கான வெவ்வேறு நேரங்களில் எடுத்த பல அவதானிப்புகள் கொண்டவையாக இருக்கலாம், ஒவ்வொரு அவதானிப்பிலும் கிடைத்த தரவு மொத்த குழுமத்தில் ஒரு தனிப்பட்ட அங்கமாக இருக்கலாம். இவ்வகை "கூட்டுத்தொகை"யில் இருந்து சேகரித்த தரவு காலத்தொடர் வரிசை எனப்படும் முறையை சார்ந்ததாகும்.
நடைமுறை காரணங்களுக்காக, மொத்த குழுவையும் சார்ந்த தரவுகளை பயன்படுத்துவதற்கெதிராக (இந்த நடவடிக்கையை மக்கள் தொகைக்கணக்கு என்பார்கள்) - கூட்டுத்தொகையில் இருந்து தெரிவுசெய்த ஒரு மாதிரி பயன்படுகிறது. பயன்படும் கூட்டுத்தொகையை பிரதிநிதியாகக்கொண்ட ஒரு மாதிரி வரையறுத்ததும், அவ்வகை மாதிரி அங்கங்களிடமிருந்து ஒரு நோக்குதற்குரிய அமைப்பிலோ அல்லது சோதனைக்குரிய அமைப்பிலோ இருந்து தரவுகள் சேகரிக்கலாம். இந்தத்தரவு பிறகு புள்ளியியல் ஆய்விற்கு உள்ளாக்கப்படும், அவை இரு தொடர்புள்ள காரணங்களுக்கு பயன்படும்; விரித்துரைப்பு (விவரணம்) மற்றும் உய்த்துணர்வு.
விரித்துரைப்பு புள்ளியியல் மாதிரிகளை ஆராய்ந்ததில் தெரியவந்ததை எண்ணளவில் அல்லது வரைபட அமைப்பு மூலமாக கூட்டுத்தொகை பற்றிய விவரங்கள் சுருக்கப்படுகின்றன. எண்ணளவிலுள்ள விவரிப்புகளில் நடுமட்டம் மற்றும் தரவிலக்கம், (திட்ட விலக்கம்) போன்றவை தொடர்ந்து வரக்கூடிய தரவு வகைகளுக்கும் (உயரம், எடை போன்றவை), அதே நேரத்தில் அலைவெண் மற்றும் விழுக்காடு கணக்கு போன்ற ஆணித்தரமான தரவுகளை (ஓட்டப்பந்தயம் போன்ற) விவரிக்க மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றன.
உய்த்துணர்வு புள்ளியியல் உருப்படிமங்களை மாதிரி தரவுகளில் பயன்படுத்தி கூட்டுத்தொகையைப்பற்றிய உய்த்துணர்வுகளை அறிந்திட பயன்படுத்தப்படுகின்றன, அவை சீரற்ற இயல்பினை பிரதிநிதியாக கொண்டவையாகும். இவ்வகையான உய்த்துணர்வுகள் கிழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களை எடுக்கலாம்: தரவுகள் குறித்த ஆம்/இல்லை பதில்களை கொண்ட கேள்விகள் (எடுகோள் சோதனை) (hypothesis testing) தரவுகளின் எண்ணுக்குரிய சிறப்பியல்புகளை மதிப்பிடுதல் (எண் கணிப்பு) (estimation), தரவுகளில் காணப்படும் கூட்டாளிகளை விவரித்தல் (இயைபுப்படுத்தல்) (correlation), தரவுகளுக்கிடையே காணப்படும் மாதிரி உறவுகளை கண்டறிதல் (தொடர்புப்போக்கு) (regression), புறமதிப்பிடல் (extrapolation), இடைச்செருகல் (interpolation), அல்லது இதர மாதிரியமைத்தல் (modeling) இயல் நுட்பக்கூறுகள் (techniques) அநோவா (ANOVA), காலத்தொடர் வரிசை (time series), மற்றும் தரவுகளை சுரண்டி எடுத்தல் (data mining).
இயைபுப்படுத்தல் எனும் கருத்துப்படிவம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தரவு தொகுப்பு (data set) ஒன்றினை புள்ளிவிவர ஆய்விற்கு உட்படுத்தும்போது, கூட்டுத்தொகையின் இரு வேறுபட்ட குணங்கள் (properties) இணைந்து வேறுபடுவதாக காணலாம், ஏதோ அவர்களுக்கிடையே இணக்கம் இருப்பதுபோல. எடுத்துக்காட்டாக, வருடாந்தர வருவாய் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றில் இறந்தவர்களின் வயதுடன் கணக்கிடும் போது, பணக்காரர்களுக்கிடையே இருப்பதை விட, ஏழை மக்கள் குறைந்த வயதிலேயே இறந்து விடுவதாக காணப்படுவது. இவ்விரு மாறிகள் இயைபுப்படுத்தல் கொண்டவையாக கருதப்படுகின்றன; இருந்தாலும் அவை ஒன்றோடு ஒன்று நிகழ்வதற்கான காரணிகளாகவோ, அல்லாமலோ இருக்கலாம். இத்தகைய இயைபுப்படுதலுக்கான காரணம் ஒரு மூன்றாவதான, முன்பு கருதப்படாத ஒரு தோற்றப்பாடாக இருக்கலாம், அது ஒரு பதுங்கியிருக்கும் மாறியாக (lurking variable) இருக்கலாம் அல்லது ஒரு திகைப்பூட்டும் மாறியாக (confounding variable) இருக்கலாம். இக்காரணத்தினால், இவ்விரு மாறிகளுக்கிடையே ஒரு இயைபுப்படுத்தல் இருப்பதாக உடனுக்குடன் ஒரு காரணத்தொடர்பு உடையவையாக இருக்கும் என்று கூற இயலாது. (பாருங்கள் இயைபுப்படுத்தல் என்பது தூண்டு காரணமாக இருக்கலாம் என்று எண்ண இயலாது.)
ஒரு மாதிரி, முழு அளவின் ஒரு காட்டாக ஆவதற்கு, அது அதன் கூட்டுமொத்த அளவின் உண்மையான பிரதிநிதியாக இருத்தல் வேண்டும். ஒரு உண்மை பிரதிநிதியாக இருப்பது உறுதியானால், உய்த்துணர்வுகள் மற்றும் முடிவுகளை மாதிரிகளில் இருந்து முழு கூட்டுத்தொகைக்கு மொத்தமாக விரிவாக்கலாம். ஒரு தெரிவு செய்த மாதிரியானது எந்த அளவிற்கு உண்மையான பிரதிநிதியாக இருக்கும் என்பதை முடிவு செய்வது ஒரு பெரிய பிரச்சினையாகும். புள்ளியியல் மூலமாக ஒரு மாதிரிக்குள் ஏதேனும் இயைபிலா போக்கினை திருத்தவோ, மதிப்பீடு செய்வதற்கோ இயலும் மற்றும் தரவுகளை சேகரிக்கும் முறையையும் சரிசெய்யும். ஒரு பயில்வின் தொடக்கத்திலேயே இது போன்ற விவகாரங்களை குறைத்திடும் வகையான சோதனைகளை வடிவமைக்கவும் இயலும், அதன் மூலமாக அதன் கூட்டுத்தொகையின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளும் திறமையை மேலும் வலுவடைகின்றது. புள்ளியியல் வல்லுனர்கள் வலுவான முறைகளை "கம்பீரமானவை" என கருதுகின்றனர்.(செய்முறைத் திட்டத்தைபார்க்கவும்.)
சீரற்ற இயல்புகளை புரிந்துகொள்வதற்கான கணித கருத்துப்படிவம் ஊக அளவை ஆகும். கணித புள்ளியியல் புள்ளியியல் கோட்பாடு எனவும் அறியப்படுவது, இது பயன்பாட்டுக் கணிதத்தின் கிளையாகும், இது ஊக அளவை கோட்பாடு மற்றும் பகுப்பாய்வு போன்றவைகளுடன் புள்ளியியலின் அறிமுறை அடிப்படையை சோதிக்க பயன்படுகிறது. எந்த முறையான புள்ளிவிபரமுறை பயன்பாட்டிற்கும் அதன் மக்கள்தொகை அல்லது கூட்டுத்தொகையானது அந்த முறையின் கணிதமுறையிலான அனுமானங்களுடன் ஒத்துப்போக வேண்டும், அப்போது தான் அவை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும்.
புள்ளியியல் முறைகளை தவறுதலாக பயன்படுத்தினால், அப்போது நேர்த்தியான மற்றும் கடுமையான பிழைகள் மற்றும் அதன் பொருள் விளக்கம் பிழைவடையும்- நேர்த்தியானது என்பது ஏன் என்றால் அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள் கூட இது போன்ற தவறுகளை செய்வார்கள், மற்றும் கடுமையான என்பது அதன் காரணமாக சூறையாடும் வகையான தவறுதலான முடிவுகள் எடுப்பதற்கு காரணமாகலாம் என்பதே ஆகும். எடுத்துக்காட்டாக, சமூகக் கொள்கை, மருத்துவ பயிற்சி மற்றும் பாலங்கள் போன்ற அமைப்புகளின் நம்பகம் யாவும் புள்ளியியலின் சரியான பயன்பாட்டை பொறுத்து இருப்பதேயாகும்.
புள்ளியியல் சரியாக பயன்பட்டு இருந்தாலும், சரியான தேர்ச்சி இல்லாதவர்களால் முடிவுகளை சரியான விதத்தில் பொருள் விளக்கம் செய்து கொள்ள இயலாது. தரவுகளில் காணப்படும் புள்ளிவிவர முறைப்பொருளுடைய தனிச்சிறப்புடன் கூடிய போக்கு - மாதிரியில் எந்த அளவுக்கு இயைபிலா மாறுபாடுகள் காரணமாக போக்குகள் பாதிக்கப்படுவது- அதனுடைய ஒரு உள்ளுணர்வு அளிக்கும் தனிமுறைச்சிறப்புடன் ஒத்துபோகலாம் அல்லது போகாமலும் இருக்கலாம். பொது மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அடிப்படையான புள்ளியியல் திறமைகள் (மற்றும் சந்தேகம்) போன்றவைகளை புள்ளியியல் எழுத்தறிவு என்று அறியப்படுகிறது.
புள்ளியியல் முறைகள்
சோதனை மற்றும் நோக்குதற்குரிய ஆராய்ச்சிகள்
புள்ளியியல் சார்ந்த ஆராய்ச்சித்திட்டத்தின் பொதுவான குறிக்கோளானது காரணமாகச் செயல்படுதலுக்கான காரணத்தை கண்டுபிடித்தல், மற்றும் குறிப்பாக முன்கூற்றுகள் அல்லது சார்பற்ற மாறிகளில்ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக சார்புடைய மாறிகளில் மாற்றங்கள் அல்லது பதில்களை கொண்டு முடிவுகளை எடுப்பதே. இரு பெரும்வகையான காரண புள்ளிவிபர ஆய்வுகளை / ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இயலும், அவை: சோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சிகள் மற்றும் நோக்குதற்குரிய ஆராய்ச்சிகள். இரு ஆராய்ச்சிமுறைகளிலும், ஒரு சார்பற்ற மாறியில் (அல்லது மாறிகளில்) ஏற்படும் வேறுபாடுகள் இன்னொரு சார்புடைய மாறியின் நடத்தையை எவ்வாறு பாதிக்கின்றது என்பது கண்டறியப்படுகிறது. இவ்விரு முறைகளிலும் உள்ள வேறுபாடுகள் இந்த ஆய்வு நடைமுறையில் செய்முறைப் படுத்தியதைப் பொறுத்தே இருக்கும். ஒவ்வொன்றும் பயனுள்ளதாகவே இருக்கும்.
ஒரு சோதனை ஆராய்ச்சி என்பது ஆய்வுக்கு உட்பட்ட முறைகளின் அளவுகளை அளந்துபார்ப்பது மற்றும் அந்த ஆய்வு முறையை கையாள்வது, மற்றும் பின்னர் மீண்டும் அதே முறையில் அளவுகளை அளந்துபார்ப்பது, அதன் மூலம் கையாண்டதன் விளைவாக அளவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதாகும். இதற்கு எதிராக, நோக்குதற்குரிய ஆய்வுகளில் சோதனை மூலம் கையாளும் பாங்கு நடப்பதில்லை. பதிலாக, தரவுகளை சேகரித்து, மற்றும் அதன் மூலம் ஊகங்கள் மற்றும் பதில்களுக்கு இடையேயான இயைபுப்படுத்தல் தொடர்புகள் கண்டறியப்படுகிறது.
ஒரு நோக்குதற்குரிய ஆய்வின் பெயர்பெற்ற எடுத்துக்காட்டு ஹவ்தொர்ன் ஸ்டடி (Hawthorne study) யாகும், அதில் ஹவ்தொர்ன் என்ற இடத்தில் அமைந்த வெஸ்டேர்ன் எலெக்ட்ரிக் கம்பெனியின் ஆலையில் நிலவிய பணிபுரியும் சூழலை மாற்றியமைப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய்ந்து பார்த்தது. ஆராய்ச்சியாளர்கள் பணிபுரியும் இடத்தில் நிலவிய ஒளியூட்டத்தை அதிகரிப்பதால் பூட்டல் பட்டறை பணியாளர்களின் உற்பத்தித்திறன் மேலும் கூடுமா என்பதை அறிய விழைந்தனர். ஆராய்ச்சியாளர்கள் முதலில் நிலவிய உற்பத்தித்திறனை அளந்து பார்த்தார்கள், பிறகு ஆலையின் ஒரு பகுதியில் ஒளியூட்டத்தின் அளவை மாற்றியமைத்தார்கள் மற்றும் இவ்வகை மாறுதல்களினால் உற்பத்தித்திறனில் ஏற்பட்ட மாறுதலை கண்காணித்தார்கள். இதனால் உற்பத்தித்திறன் மேம்பட்டதை அவர்கள் கண்டார்கள். (சோதனைக்கு உட்பட்ட இடங்களில்/ நிலைமைகளில்.) இருந்தாலும், இந்த ஆய்வினை இன்று திறனாய்வாளர்கள் மிகவும் கடுமையாக விமரிசனம் செய்கிறார்கள், ஏன் என்றால் சோதனைக்குட்பட்ட செயல்முறைகளில் ஏராளமான தவறுகள் இருந்தன, முக்கியமாக அதற்கான ஒரு தனி கட்டுப்பாட்டுக் குழு இல்லாமல் செயல்பட்டது மற்றும் குருட்டுத்தன்மை போன்றவையாகும். ஹவ்தொர்ன் எப்பெக்ட் என அறியப்படுவது என்னவென்றால் ஒரு விளைவு (இந்த நிகழ்வில், பணியாளர்களின் உற்பத்தித்திறன்) நோக்குதற்குரிய காரணங்களினாலேயே மேம்பாடு அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஹவ்தொர்ன் ஆய்வில் ஈடுபட்டவர்களின் உற்பத்தித்திறன் ஒளியூட்டத்தை மாற்றி அமைத்ததால் வந்ததல்ல, ஆனால் அவர்கள் கவனிப்புக்கு ஆளானார்கள் என்பதே மெய்யாகும்.
நோக்குதற்குரிய ஆய்வுகளின் இன்னுமொரு எடுத்துக்காட்டு புகை பிடிப்போர் மற்றும் நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கிடையே நிலவும் இயைபுப்படுத்தலை வெளிப்படுத்துவது ஆகும்.
இதுபோன்ற ஆய்வுகளில், நாம் ஆர்வம் கொண்டுள்ள ஒரு பொருளை தெரிந்தெடுத்து அதைப்பற்றிய ஆய்விற்காக ஒரு எடுத்துக்காட்டான முறையில் கருத்தாய்வு மூலம் தரவுகளை சேகரித்து மேலும் அதனை ஒட்டிய புள்ளிவிபர ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, ஆராய்ச்சியாளர்கள் புகை பிடிப்பவர்கள் மற்றும் புகை பிடிக்காதவர்களிடம் இருந்து தரவுகளை சேகரிப்பார்கள், ஒரு வேளை கட்டுப்பாட்டுடன்கூடிய- நிகழ்வு மூலமாக, மற்றும் அவற்றில் ஒவ்வொரு குழுவிலும் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஆய்வின் மூலம் பதிவு செய்வார்கள்.
சோதனைகள்
சோதனை புரிவதற்கான அடிப்படைகொண்ட படிகள் இவ்வாறு அமைதல் வேண்டும்:
ஆராய்ச்சியை திட்டமிடுவது, அதற்கான தகவல்களை எங்கிருந்து திரட்ட வேண்டும், ஆராய்ச்சி செய்வதற்கான தலைப்பினை தேர்ந்தெடுத்தல், மற்றும் செய்யப்போகும் ஆராய்ச்சி மற்றும் அணுகுமுறை குறித்த நன்னடத்தை நெறிகளை கருத்தில் கொண்டு செயல்படுவது போன்றவை அடங்கும்.
சோதனைகளை வடிவமைப்பது, தெரிவுசெய்த மாதிரிமுறைகளை செறிவாக்குதல் மற்றும் சார்பற்ற மாறிகள் மற்றும் சார்புடைய மாறிகளுக்கு இடையேயான இடைவிளைவுகள் மீது கவனம் செலுத்துதல்.
தேவையற்ற விவரங்களை தவிர்த்து மாதிரி மாறிகளுக்கிடையே பொதுவாக காணப்படும் சேகரித்து கவனிப்புகளை தொகுத்தல். (விளக்கமான முறை கொண்ட புள்ளியியல்)
கவனம் செலுத்திய உலகத்தில் இருந்து கிடைத்த கவனிப்புகள் மூலம் திரட்டிய தகவல் எதை குறிக்கிறது என்பது பற்றி கருத்தொருமையுடன் கூடிய முடிவுகளை எடுத்தல். (புள்ளிவிவரங்களின் அடிப்படையிலான உய்த்துணர்வு)
ஆய்வில் இருநது கிடைத்த முடிவுகளை ஆவணப்படுத்துதல் மற்றும் அவற்றை தொகுத்து காட்சி அளித்தல்
அளவை நிலைகள்
புள்ளியியல் சேகரிப்பில் நான்கு வகையிலான அளவைகள் உள்ளன அல்லது அளவை நிலைகள் உள்ளன:
பெயரளவில் ஆனவை,
வரிசையெண்ணுக்குரியவை,
இடைவேளை, மற்றும்
விகிதம்
புள்ளியியலுக்கான ஆராய்ச்சியில் அவற்றில் ஒவ்வொன்றிற்கும் வேறுபடும் அளவிலான பயன்பாடுகள் உண்டு. விகித அளவு முறைகளில் பூச்சியத்தின் அளவு தெளிவாக தனிப்பட்ட வகையில் அர்த்தமுள்ள மதிப்பீடு கொண்டதாகவும் மேலும் அதனுடன் சேர்ந்து இதர இடைவெளிகளைக் குறிக்கும் அளவுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன; இவற்றின் உதவியுடன் தரவுகளை ஆராய்வதற்கான மிகவும் வளைந்துகொடுக்கும் தன்மையுடைய இணக்கமுள்ள புள்ளியியல் முறைகள் மிகவும் பயனுடையதாக அமைகின்றன. இடைவெளிகளுக்கான அளவுகளில் அளவுகளுக்கு இடையேயான அளவீடுகள் முறையாக வரையறுக்கப்பட்டுள்ளது (எடுத்துக்காட்டாக ஐ க்யு அளவுகள் அல்லது வெப்பமானியில் உள்ள ஃபாரன்ஹீட்போன்ற அளவுகள்) வரிசையெண்ணுக்குரிய அளவுகளில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக வரும் அளவுகள் துல்லியமாக இல்லாவிட்டாலும், அதற்கான பெறுமதி மிகவும் அர்த்தமுள்ள வரிசைக்கிரமம் கொண்டதாகும். பெயரளவிலான அளவுகளில் அவற்றின் வரிசைக்கிரமம் அர்த்தமுள்ள பெறுமதிகள் கொண்டவையல்ல.
பெயரளவிலான மற்றும் வரிசையெண்ணுக்குரிய அளவுமுறைகள் எண்ணளவில் அளவிட இயலாததால், சிலநேரங்களில் அவற்றை இணைத்து ஆணித்தரமான மாறிகள் என அழைக்கின்றனர், ஆனால் விகிதம் மற்றும் இடைவெளி அளவுகள் கொண்டவை இரண்டும் சேர்ந்து அளவையியல் அல்லது தொடரியல் சார்ந்த மாறிகளாக, அவற்றின் எண்ணுக்குரிய இயல்புகள் காரணமாக, அறியப்படுகின்றன.
சில நன்கு-அறிந்த புள்ளியியல் சோதனைகள் மற்றும் செய்முறைகள் ஆனவை:
மாறளவுப் பகுப்பாய்வு அநோவா (ANOVA)
சி-ஸ்கொயர் சோதனை (Chi-square test)
இயைபுப்படுத்தல், (உடன் தொடர்பு) (Correlation)
காரணிப்பகுப்பாய்வு
மன்–விட்னி யு (Mann–Whitney U)
எடையுடன் கூடிய சராசரி விலகல் வர்க்கம் (MSWD)
பியர்சன் பெருக்கு-திருப்புதிறன்-தொடர்புறு குணகம் (கெழு) (Pearson product-moment correlation coefficient
தொடர்புப் போக்குப் பகுப்பாய்வு(Regression analysis)
ச்பியர்மானின் மதிப்பிடத் தொடர்பு கெழு (குணகம்) (Spearman's rank correlation coefficient)
ஸ்டூடெண்டின் t சோதனை (Student's t-test)
காலத்தொடர் வரிசை பகுப்பாய்வு (Time series analysis)
மிகச்சிறப்பு வாய்ந்த துறைகள்
சில துறைகள் பயன்பாட்டுப் புள்ளியியல் ஆராய்ச்சிகளை பரவலாக மேற்கொள்வதால், அவற்றிற்கு மிகச்சிறப்பு வாய்ந்த பெயர்களும் உள்ளன. கீழே வழங்கிய துறைகள் அவற்றை சார்ந்தவை:
உண்மையுரிமை அறிவியல்
பயன்பாட்டுத் தகவல் பொருளாதாரம்
உயிரிபுள்ளியியல்
காலணி நூல் மற்றும் மாலுமிக்கத்தி மறு மாதிரிமுறை
வணிகவியல் புள்ளியியல்
வேதியியல் புள்ளியியல் (வேதியியல்சம்பந்தப்பட்ட தரவுகளுக்கான புள்ளியியல் ஆய்வு)
தரவு பகுப்பாய்வு
தரவுகளை சுரண்டி எடுத்தல் (புள்ளியியல் மற்றும் கோலப்பாங்குகளை அடையாளம் காணுதல் மூலமாக தரவுகளில் இருந்து அறிவாற்றலை கண்டெடுத்தல்)
மக்கள்தொகையியல்
பொருளாதாரப் புள்ளியியல் (எகோநோமேற்றிக்ஸ்)
சக்தி புள்ளியியல்
(ஆற்றல் புள்ளியியல்)
பொறியியற் புள்ளியியல்
புறப்பரவியல்
புவியியல் மற்றும் புவியியல் தகவல் அமைப்புப் பொறியியல், குறிப்பாக இடமகன்ற ஆய்வுகள்
பிம்ப செயல்முறையியல்
உளப்புள்ளியியல்
ஏற்புடைமைப் பொறியியல்
சமூக புள்ளியியல்
புள்ளியியல் வகைப்பாடு
எழுத்தறிவு புள்ளியியல்
புள்ளியியல் மாதிரியமைத்தல்
புள்ளியியல் ஆய்வுகள்
கட்டமைத்த தரவுகளின் ஆய்வு (புள்ளியியல்)
பிழைப்புத்திறனாய்வு
அடிப்பந்தாட்டம் மற்றும் துடுப்பாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கான புள்ளியியல்
வணிகவியல் மற்றும் உற்பத்தித்துறையிலும் புள்ளியியல் ஒரு முக்கிய அடிப்படைக்கருவியாக விளங்குகிறது. அதை வைத்துக்கொண்டு அளவுமானிகளின் மாறுபடும் தன்மையை அறிந்துகொள்ளவும், செய்முறைகளை கட்டுப்படுத்தவும், (புள்ளியியல் செயல்முறை கட்டுப்பாடு போன்ற (SPC), தரவுகளை தொகுப்பதற்காகவும், மற்றும் தரவுகளை சார்ந்த முடிவுகளை எடுப்பதற்காகவும் பயன்படுகிறது. இதுபோன்ற பணிகளில், இது ஒரு முக்கியமான கருவியாகும், மற்றும் நம்பத்தகும் ஒரே கருவியாகவும் இது இருக்கலாம்.
புள்ளிவிவரங்களை மதிப்பிடும் முறை
20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப்பகுதியின் துவக்கம் முதல் கணிக்கும் முறைகளில் ஏற்பட்டுள்ள விரைவான மற்றும் விடா உறுதி வாய்ந்த ஆற்றல் புள்ளிவிவர அறிவியல் வழக்கங்களில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முந்தைய புள்ளிவிவர மாதிரிகள் அனைத்தும் நேரோட்ட செயலாக்கம் கொண்ட மாதிரிகள் ஆகும், ஆனால் வலிமையான கணினிகள், மற்றும் அதனுடன் இணைந்த ஆற்றல் மிகுந்த நெறிமுறைகள், காரணமாக நேர் போக்கற்ற மாதிரிகளை (எடுத்துக்காட்டு நரம்பு சார்ந்த வலையமைப்புகளில்) ஆர்வத்தை தூண்டியது மேலும் புதிய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன, எடுத்துக்காட்டாக பொதுவான நேரிடை மாதிரிகளை மற்றும் பலவகைமட்டம் கொண்ட மாதிரிகள்.
மேம்பட்ட கணினி மூலம் கிடைத்த ஆற்றலால் கணினி- மிகையாக பயன்படுத்தக்கூடிய முறைகளான மறுமாதிரிகளின் பயன்பாட்டினை உயர்த்தியுள்ளது, அவற்றில் பல்வகை நிலை மாற்றம் அடங்கிய சோதனைகள், மற்றும் பூட்ஸ்ட்ரேப் (bootstrap), மற்றும் கிப்ஸ் சாம்ப்ளிங் முறைகள் போன்றவை பயேசியன் மாதிரிகளை (Bayesian models) மேலும் பயனுள்ளதாக மாற்றியுள்ளது. கணினி புரட்சி புள்ளியியலுக்கான எதிர்காலத்தை மேலும் "சோதனை" மற்றும் "அனுபவத்திற்குரிய" புள்ளியியலாக மேன்மையடைய வழிவகுக்கிறது. மிகுந்த எண்ணிக்கைகளில் பொதுவான மற்றும் சிறப்பு தகுதிகள் கொண்ட புள்ளியியலுக்கான மென்பொருட்கள் இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன.
தவறான பயனீடு
புள்ளியியல் அறிவாற்றலை வேண்டுமென்றே அடிக்கடி அதனை பயன்படுத்தும் வல்லுனர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் /0} என்ற எண்ணம் பொது மக்களிடையே மேலோங்கி வருகிறது மேலும் அவர்கள் தங்களுக்கு வேண்டிய முறைகளில் தரவுகளை பொருள் விளக்கம் செய்துகொள்கிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. பெஞ்சமின் டிஸ்ரேலி என்பவர் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள், "மூன்று விதங்களிலான புளுகுகள் உள்ளன: புளுகுகள், தெறுமொழிகொண்ட புளுகுகள், மற்றும் புள்ளியியல்." 1909 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் ப்ரெசிடென்ட் ஆன லாவ்ரென்ஸ் லோவெல் எழுதியது புள்ளியியல், "...கன்று இறைச்சியைப்போல, அதை யார் செய்தார்கள் என்பதைப் பொறுத்து அது நன்றாக இருக்கும், மற்றும் அதில் கலந்துள்ள பொருட்களைப்பற்றியும் உறுதியாக இருக்க வேண்டும்."
பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்தால், மக்கள் அது போன்ற ஆராய்ச்சிகளில் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு ஆய்வு ஒரு உணவுமுறை அல்லது செய்கை இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாகவும், மேலும் இன்னொன்று இரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் கூறலாம். இதுபோன்ற வேறுபாடுகள் சோதனை முறைகளில் நேர்த்தியான மாற்றங்கள் காரணமாக ஏற்படலாம், எடுத்துக்காட்டாக நோயாளிகளின் குழுவில் வேறுபாடு அல்லது ஆராய்ச்சிக்கான நெறிமுறைகள் மாறுபட்டிருக்கலாம், அவற்றை பொதுமக்களால் எளிதாக புரிந்துகொள்ள இயலாது. (ஊடக அறிக்கைகள் பொதுவாக இதுபோன்ற முக்கியமான தகவல்களை மொத்தமாக வழங்க தவறுகிறார்கள், அவை மிகவும் சிக்கல் கொண்டதாக இருப்பதால்.)
ஒரு குறிப்பிட்ட மாதிரியை தெரிவுசெய்தோ (அல்லது தவிர்ப்பதாலோ, அல்லது மாற்றியமைத்தோ), முடிவுகளை கையாளலாம். இதுபோன்ற கையாளுதல் தீயநோக்குடனோ அல்லது நேரற்றதாகவோ இருக்காது; அவற்றை ஆராய்ச்சியாளர் தற்செயலாக புரிந்திருக்கலாம். தரவுகளை சுருக்கி விளக்கும் வரைபடங்கள் கூட தவறானவையாக இருக்கலாம்.
உண்மையில், கருதுகோள் சோதனை முறையானது, பரவலாக பயன்பட்டாலும் மற்றும் சட்டப்படி அல்லது விதிமுறைகள் காரணமாக வரையறுக்கப்பட்டாலும், சூனிய எடுகோள் என்ற கருதுகோளை அவை மிகையாக சார்ந்து இருப்பது ஒருவனை கட்டாயப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது மேலும் பெரிய அளவிலான ஆராய்ச்சிகளில் காணப்படும் சிறிய வேறுபாடுகளின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவதாகவும் காணப்படுகிறது என்ற ஆழ்ந்த குற்றச்சாட்டுக்கள் கொண்டதாகும். புள்ளியியல் கருத்துகள் படி மிகவும் உயர்ந்த தனிமுறைச்சிறப்பு கொண்ட ஒரு வேறுபாடு நடைமுறையில் ஒரு சிறப்பும் இல்லாமல் போகலாம். (கருதுகோள் விமரிசனம் மற்றும் சூனிய எடுகோள் பற்றிய சர்ச்சையை பார்க்கவும்.)
இதற்கான ஒரு விடையானது p -மதிப்பீட்டிற்கு மிகையான முக்கியத்துவம் கொடுப்பதாகும், கூடவே கொடுக்கப்பட்ட தனிச்சிறப்பு அளவிற்கு கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதையும் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். இருந்தாலும், p -மதிப்பீடானது, விளைவின் அளவை சுட்டிக்காட்டுவதில்லை. மற்றுமோர் மிகையாக பயன்படும் பொது முறையானது நம்பிக்கை இடைவெளி யை முறையே அறிவிப்பதாகும். இது போன்ற கணிப்புகள் (calculations கணக்கீடுகள்) கருதுகோள் சோதனை முறை அல்லது p -மதிப்பீடுகள் செய்யும் முறையை தழுவியதாக இருப்பினும், அவை விளைவின் அளவு மற்றும் அதை சுற்றியுள்ள நிலையின்மையை, இரண்டையும் விவரிப்பதாகும்.
கணிதம் அல்லது கலைத்துறை சார்ந்த புள்ளியியல்
மரபுவழி, அரைகுறை தரம் கொண்ட ஆராய்ச்சி முறையியல் மூலமாக புள்ளியியல் உய்த்துணர்வுகளை பெற்றுவந்தது மேலும் அது மிகையான அறிவியல் பாடங்களிலும் "கற்றுக்கொள்ள தேவைப்பட்டது." புள்ளியியல் உய்த்துணர்வுகள் இல்லா சூழ்நிலைகளில் பயன்பட தொடங்கியதும் இது மாறுதல் அடைந்துள்ளது. ஒரு காலத்தில் மிகவும் வெறுப்புடன் அணுகிய ஒரு பாடம், பட்டம் பெறுவதற்காகவே பல துறைகளில் பாடமாக நுழைக்கப் பெற்றது, இன்று உற்சாகத்துடன் வரவேற்கப்படுகிறது. துவக்கத்தில் சில கணித வல்லுனர்கள் புறகணித்த இந்த பாடம், இப்போது சில துறைகளில் இன்றியமையாத ஒரு ஆராய்ச்சி முறையியலாக கருதப்படுகிறது.
எண்ணியலில், பரவல் சார்பாக உருவாக்கிய தரவுகளின் சிதறல் படங்கள் மீது புள்ளியியல் முறைகளை பயன்படுத்தி அடிப்படையான கோலங்களை கண்டறியலாம் மற்றும் அவற்றின் மூலமாக கருதுகோளுக்கு சென்றடையலாம்.
புள்ளியியல் முறைகள் மூலமாக முன்கூட்டி சொல்லும் முறையான எதிர்காலத்தை உய்த்தறிதல், அத்துடன் ஓழுங்கின்மை கோட்பாடு மற்றும் பிராக்டல் வடிவவியல் மூன்றும் கலந்த பயன்பாட்டினால் மிகவும் அழகிய வேலைப்பாடுகளுடைய வீடியோ படங்களை உருவாக்கலாம்.
ஜாக்சன் பொல்லாக் பயன்படுத்திய வழிப்படுத்துதல் கலை இயற்கையில் தோன்றும் அடிப்படை பட்டுவாடா முறைகளை கலைவண்ணத்துடன் கூடிய சோதனைகள் மூலமாக வெளிப்படுத்தியதேயாகும், கணினிகளின் வரவுடன், புள்ளியியல் முறைகள் மூலம் இது போன்ற இயற்கை உந்துதல் பெற்ற பட்டுவாடா முறைகளை செயல்படுத்தி, மேலும் அவற்றின் மூலமாக விதரண விதிமுறைகளை ஆராய்ந்து, சலனத்துடன் கூடிய வீடியோ படங்களை எடுத்து ஆராய வழிபிறந்துள்ளது.
புள்ளியியலுக்கான முறைகளை பயனிலையுடன் செயல்திறக் கலையில் பயன்படும்போது, எடுத்துக்காட்டாக மார்கோவ் செய்முறை போன்ற சீட்டு வித்தைகளில், அது சில நேரங்களில் மட்டுமே பணி புரியும், அந்த நிகழ்வினை புள்ளியியல் முறைகளின் படி சரியாக யூகித்து (ஊகித்து) விடலாம்.
புள்ளியியல் முறைகள் பயனிலையுடன் கலைகளை உருவாக்க பயன்படுத்தலாம், எடுத்துக்காட்டாக ஐயன்னிஸ் சேனகிஸ் (Iannis Xenakis) என்பவர் கண்டுபிடித்த புள்ளியியற் பொறிமுறை மூலமாக புள்ளியியல் அல்லது முதன்மூல இசையை செய்முறைப்படுத்தலாம், இவ்விசையானது ஆற்றுகை-ஏற்றது ஆகும். நாம் நினைத்தபடி இக்கலை எப்போதும் இசையை வெளிப்படுத்தாவிட்டாலும், அதனை ஒரு குறைந்த எல்லைக்குள் யூகத்தின் அடிப்படையில் புள்ளியியல் முறைகளில் நடக்க வைக்கலாம்.
மேலும் பார்க்க
நிகழ்தகவு மற்றும் புள்ளியியலுக்கான சொற்களஞ்சியம்.
புள்ளியியல் குறித்த கட்டுரைகளின் உள்ளடக்கம்
தர்க்கதீரியான புள்ளியியல் மன்றங்களின் பட்டியல்
தேசிய மற்றும் சர்வதேச புள்ளிவிவர சேவைகளின் பட்டியல்
புள்ளியியல் சார்ந்த முக்கியமான வெளியீடுகள் குறித்த பட்டியல்
புள்ளிவிவரங்கள் பொட்டலங்களின் பட்டியல் (மென்பொருள்)
ஊக அளவை மற்றும் புள்ளியியலில் பயன்படுத்தப்படும் குறியீடு
எதிர்காலத்தை உய்த்தறிதல்
புள்ளியியலின் அஸ்திவாரம்
பல்மாறி புள்ளியியல்
அதிகாரபூர்வமான புள்ளியியல்
தொடர்புப் போக்குப்பகுப்பாய்வு
புள்ளிவிவர ஆலோசகர்கள்
புள்ளியியல் வல்லுனர்கள், புள்ளியியல் வல்லுனர்களின் பட்டியல்
கட்டமை சமன்பாடு மாதிரி
தொடர்புடைய துறைகள்
சமூக அறிவியல்
அரசியல் அறிவியல்
சமூகவியல்
நேர்க்காட்சி வாதம்
சமூக ஆராய்ச்சி
குறிப்புகள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
உடன் செயலாக்க வணிகத்திற்குரியல்லாத பாடநூல்கள்
"எ நியூ வியூ ஒப் ஸ்டாடிஸ்டிக்ஸ்" ("A New View of Statistics"), வில் ஜி. ஹோப்கின்ஸ்,எ உ டி பல்கலைகழகம்
"என் ஐ எஸ் டி / செமடேக் ஈ-ஹேண்ட்புக் ஒப் ச்டாடிச்டிகள் மேதட்ஸ்" "NIST/SEMATECH e-Handbook of Statistical Methods",யு எஸ் நேசனல் இன்ஸ்டிட்யுட் போர் ச்டாண்டார்ட்ஸ் மற்றும் டெக்னாலஜி (U.S. National Institute of Standards) மற்றும் செமடேக் (SEMATECH)
"ஆன்லைன் ஸ்டாடிஸ்டிக்ஸ்: அன் இண்டராக்டிவ் மல்டிமீடியா கோர்ஸ் ஒப் ஸ்டடி" ("Online Statistics: An Interactive Multimedia Course of study"), டேவிட் லேன், ஜோன் லு, கமில்லே பெரேஸ், எமிலி ஜிடேக், போன்றோர்.
"தி லிட்டில் ஹேண்ட்புக் ஒப் ஸ்டாடிஸ்டிகல் ப்ராக்டிஸ்" ("The Little Handbook of Statistical Practice"), கேரர்ட் ஈ. டல்லால், Tufts பல்கலைக்கழகம்
"ஸ்டாட்சொப்ட் எலேக்ற்றோனிக் டேக்ச்ட்புக்", ஸ்டாட்சொப்ட்
இதர வணிகத்திற்குரியல்லாதவள ஆதாரங்கள்
புக் ஒப் ஒட்ட்ஸ், தி ஒட்ட்ஸ் ஒப் எவரிடே லைப்.(Book of Odds, The odds of everyday life)
இலவச புள்ளியியல் (இலவச மற்றும் திறமூல மென்பொருள், தரவு மற்றும் தனிமுறைப் பயிற்சி) Free Statistics (free and open source software, data, and tutorials)
ஊக அளவை வெப் (Probability Web) (கார்ல்டன் காலேஜ்)
ஊக அளவை மற்றும் புள்ளியியல் பயிற்சி மற்றும் பயில்வதற்கான வள ஆதாரங்கள் (Resources for Teaching and Learning about Probability and Statistics) (ஈ ஆர் ஐ சி (ERIC))
ரைஸ் வெர்ச்சுவல் லேப் இன் ஸ்டாடிஸ்டிக்ஸ் (Rice Virtual Lab in Statistics) (ரைஸ் பல்கலைக்கழகம்)
ஸ்டாடிஸ்டிகல் சைன்ஸ் வெப் (மெல்போர்ன் பல்கலைக்கழகம்)
ஸ்டாடிஸ்டிக்ஸ் கால்குலேடர்ஸ் (Statistics Calculators)
அப்ப்லைட் ஸ்டாடிஸ்டிக்ஸ் ஆப்லேட்ஸ்
மல்டிமீடியா
Introduction to Probability and Statistics - Animated video tutorial from the Defense Acquisition University
பயன்பாட்டுக் கணிதம்
முறைசார் அறிவியல்கள்
மதிப்பீட்டு முறைகள்
புள்ளிவிபரம், புள்ளியியல்
மனோ அளவைகள்
தரம்
கணித அறிவியற் தொழில்கள்
புள்ளியியல்
தரவு
கூகுள் தமிழாக்கம்-கணிதவியல்
|
7418
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
|
யூலியசு சீசர்
|
கையுசு யூலியசு சீசர், சுருக்கமாக யூலியசு சீசர் (Gaius Julius Caesar, சூலை 12 அல்லது சூலை 13, கிமு 100 – மார்ச் 15, கிமு 44) உரோம இராணுவ மற்றும் அரசியற் தலைவர் ஆவார். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் இவரும் ஒருவராவார். இலத்தீன் உரைநடை இலக்கியம் படைத்த எழுத்தாளருமாவார்.
உரோமைக் குடியரசின் வீழ்ச்சிக்கும் உரோமைப் பேரரசின் எழுச்சிக்கும் வித்திட்ட நிகழ்வுகளில் முக்கியப் பங்கேற்றார். கிமு 60 ஆம் ஆண்டில், சீசர், கிராசசு, பாம்பெ என்ற மூவரும் முதல் மூவராட்சியை ஏற்படுத்தினர்; இந்த அரசியல் கூட்டணி பல ஆண்டுகளுக்கு உரோமானிய அரசியலில் தாக்கத்தை விளைவித்தது. மக்கள் விரும்பும் திட்டங்கள் மூலம் அதிகாரத்தை குவிக்கும் இவர்களது திட்டங்களை செனட்டின் பழமைவாத ஆளுங்கட்சியினர் எதிர்த்தனர். கிமு 51இல் சீசர் கவுலில் பெற்ற வெற்றிகள், உரோமின் ஆட்சியை ஆங்கிலக் கால்வாய் மற்றும் ரைன் ஆறு வரை நீட்டியது. இவை இரண்டையும் கடந்த முதல் உரோமை படைத்தலைவராக சீசர் ரைன் ஆற்றின் மீது பாலத்தைக் கட்டினார்; பிரித்தானியா மீதான முதல் ஊடுருவலை மேற்கொண்டார்.
கிமு 53இல் கார்கெ போரில் கிராசசின் இறப்பிற்குப் பின்னர் பாம்பெ செனட்டுடன் ஒத்துழைக்கத் துவங்கினார்; தனது படைத்துறை சாதனைகளால் செல்வாக்குப் பெற்றிருந்த சீசர் பாம்பெயை எதிர்த்து நின்றார். கவுலில் போர் முடிவுற்றபோது செனட் சீசரை பதவி விலகி உரோமிற்குத் திரும்பப் பணித்தது. இதனை ஏற்க மறுத்த சீசர் கிமு 49 இல் ரூபிகான் ஆற்றைக் கடந்து உரோமானியப் படைகளுடன் கடந்து வந்து இத்தாலியை அடைந்தார். இதனால் விளைந்த உள்நாட்டுப் போரில் வென்ற சீசர் எதிர்பற்ற சர்வாதிகாரியாக மாறினார்.
அரசை தன்வயப்படுத்திய சீசர், சமூக, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளலானார். புதிய யூலியன் நாட்காட்டியை உருவாக்கினார். குடியரசின் அதிகாரங்களை மையப்படுத்தினார். எக்காலத்திற்கும் சர்வாதிகாரி என அறிவித்தார். இருப்பினும் அரசியல் கிளர்ச்சிகள் முழுவதுமாக அடக்கப்படவில்லை; நட்ட நடு மார்ச்சு (15 March) கிமு44 இல், புரூட்டசின் தலைமையிலான செனட் உறுப்பினர்கள் சீசரைக் கொலை செய்தனர். தொடர்ந்து உரோமானிய உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன; இதன்பிறகு அரசியல் சட்டத்தின்படியான முழுமையான குடியரசு நிறுவப்படவில்லை. சீசரின் வளர்ப்பு மகனான ஓக்டோவியசு, பின்னாட்களில் அகட்டசு, உள்நாட்டுப் போர்களில் வென்று ஆட்சியமைத்தார். இவரது ஆட்சியில் உரோமைப் பேரரசு உருவாகத் தொடங்கியது.
ஆங்கில நாடக மேதை வில்லியம் சேக்சுபியரின் புகழ் பெற்ற சூலியசு சீசர் (கிபி 1599) நாடகத்தின் கதாநாயகனாகவும், கிரிகோரியன் நாட்காட்டியை சீரமைத்து தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டியை உருவாக்கியவராகவும் சீசர் அறியப் பெறுகிறார். இவருடைய சிந்தனையில் உருவான அடிமைகள் விளையாட்டு அரங்கம் மிகவும் புகழ் பெற்றது. சீசர் கிரேக்க வரலாற்றில் பெரும் வீரராகவும், போரின் பொழுது கருணை காட்டாதவராகவும், இலக்கியவாதி மற்றும் சீர்திருத்தவாதியாகவும் அறியப் பெறுகிறார்.
இளமைக்கால வாழ்வு
யூலியசு சீசர் சாதாரண குடும்பத்தில் ஔரெலியாவின் மகனாக கி.மு.100 வது ஆண்டில் பிறந்தார். சுபுரா என்ற ரோம நகரப்பகுதியில் ஒரு சாதாரண வீட்டில் வளர்ந்தார். சீசரின் தந்தையை விட அவர் தாயின் கவனிப்பில் தான் வளர்ந்தார். சீசரின் கல்வி அவரின் ஏழாம் வயதில் இலத்தீன், கிரேக்க மொழிப் பாடங்களுடன் துவங்கியது. கிரேக்க, இலத்தீன் இலக்கணம், கணித இயல், எழுத்துத்திறன் முதலியவற்றை சீசரும், அவரின் தங்கைகளும் வீட்டிலேயே கற்று அறிந்தனர். பன்னிரண்டு வயதில் இலக்கியம், கவிதைகள் இவற்றையும் சீசர் கற்றிருப்பார். சீசரின் ஆசிரியர் பெயர் "மார்க்குஸ் அந்தோனியுஸ் க்னிஃபொ". அவர் எகிப்திய நாட்டிலுள்ள அலெக்சாந்திரியா நகரத்தில் கிரேக்கம், இலத்தீன் மொழிகளை நன்கு கற்றுணர்ந்தார்.
யூலியஸ் சீசர் கான்சல் கொர்னெலியுஸ் மகள் கொர்னெலியாவை கி.மு. 84 ஆம் ஆண்டில் கல்யாணம் செய்து கொண்டார். சீசர் தன் பத்தொன்பதாம் வயதில், படைவீரனாகச் சேர்ந்தார். தெர்முஸ் என்ற உரோமப்படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார். அம்முற்றுகை வெற்றி அடைய, அவருக்கு ஒரு கப்பல் படை தேவைப்பட்டது. சீசரின் முயற்சியால், கப்பல் படையுடன் தெர்முஸ் மிதிலின் நகரை வென்றார். சீசர் “Corona Civica” என்ற வெற்றி முடியை அணியும் உரிமையைப் பெற்றார். கி. மு. 78 ஆம் ஆண்டில், சுல்லா உரோமை நகரில் காலமானார். உடனே சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்து சேர்ந்தார்.
சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்ததும் தன் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார். கி. மு. 69ஆம் ஆண்டில் சீசரின் மனைவி கொர்னெலியா காலமானார். கி. மு. 67ஆம் ஆண்டில் சுல்லாவின் பேத்தி பொம்பெயாவை மணந்து கொண்டார். அதே ஆண்டில், மிகவும் முக்கியமான ஆப்பியன் வழியை (Appian Way) சீர்திருத்தும் பொறுப்பை ஏற்றார். இந்தப்பணியில் அவர் கற்றது கல்லியா நாட்டில் வெற்றி அடையத் துணை செய்தது. உரோமப் பேரரசின் படைவலம் ஓங்க, ஆப்பியன் வழிப் பேருதவி செய்தது. ஆப்பியன் வழியும், மற்றும் உரோமையர் கட்டிய பாலங்களும், இன்றும் நிலைத்திருக்கின்றன.
ஏறக்குறைய அதே சமயத்தில், பொம்பெய் (Pompeius Magnus) என்ற படைத்தலைவர் கடற்கொள்ளையரை அடக்கி மத்தியதரைக் கடலில் உரோமை அரசின் செல்வாக்கை நிலை நாட்டினார். மேலும், ஆசியா மைனர், சிரியா நாட்டையும் உரோமையின் அதிகாரத்துக்கு அடியில் கொண்டு வந்தார். பொம்பெயின் செல்வாக்கும், போர்த்திறமையும் வளர்ந்தது. சீசர் தன் அரசியல் செல்வாக்குக்கு, பொம்பெய் ஒரு சவாலாக வருவார் என்பதைச் சீக்கிரம் கண்டுணர்ந்தார்.
கிளியோபட்ராவுடனான வாழ்க்கை
ஜூலியஸ் சீசர் எகிப்தினை போரின் மூலம் வெல்ல துணிந்தார். அப்பொழுது ஆதரவற்ற நிலையில் இருந்த கிளியோபாட்ரா சீசருடன் இணைந்து கொண்டார். கிளியோபாட்ராவை விரட்டிவிட்ட அவரது கணவன் தொலமியுடன் சீசர் போரிட்டார். இப்போரில் தோலமியை சீசர் கொன்றார். வரலாற்று ஆசிரியர்கள் சிலர் தொலமியை கொன்றது கிளியோபாட்ரா என்றும் கூறுகின்றனர்.
கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய ஜூலியஸ் சீசர் அவரை காதலியாக ஏற்றுக் கொண்டார். எகிப்தினை வென்றவர் அதற்கு கிளியோபாட்ராவை தலைவியாக்கினார். இவர்களுக்கு சிசேரியன் என்ற மகனுண்டு.
கவுல் போர்
கி. மு. 58-ல் ஐரோப்பிய கண்டங்களிருந்து பல்வேறு பழங்குடிகள் கவுல் நகரினை நோக்கி வந்தார்கள். கவுல் என்பது வடக்கு இத்தாலி, யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி மற்றும் தெற்கு பிரான்ஸ் ஆகிய மூன்று மாகாணங்கள் இணைந்த பகுதியாகும். பழங்குடியினரின் வருகையை அறிந்த சீசர், ரோமிற்கு இவர்களால் பிரட்சனை உண்டாகுமென எண்ணி அவர்கள் மீது போர் தொடுத்தார். அப்போரில் சீசருடைய இராணுவப் படை இருபதாயிரம் வீரர்களை மட்டுமே கொண்டிருந்தது. ஏழு ஆண்டுகள் கடுமையாக நடைபெற்ற இந்தப் போரானது, மிகச் சவாலாக இருந்தது. இதில் இருபது இலட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து இலட்சம் பழங்குடியினர் விற்பனை செய்யப்பட்டனர். இப்போர் மூலம் சீசர் பெரும் மாவீரனாக உலகிற்கு அறிமுகமானார்.
கடற்கொள்ளையர்கள்
கி. மு. 75-ல் கிரேக்க நாட்டிற்கு கப்பல் வழியே பயணப்படும் பொழுது சீசர் மற்றும் கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் கடற்கொள்ளையர்களால் சிறை செய்யப் பெற்றனர். ஒவ்வொருவரையும் விடுவிக்க 20 தங்கக் காசுகள் விலையாகக் கேட்டனர். சீசர் அவர்களிடம் 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்தார். ஜூலியஸ் சீசரை கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்க சீசரின் நண்பர்கள் பெரும்பணம் கொடுத்தாகவும் செய்தியுள்ளது. அதனால் கடற்கொள்ளையர்கள் பலரை சீசர் சிலுவையில் அறைந்து கொன்றார்.
மரணம்
ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. கிரேக்கமெங்கும் சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர்.
கி. மு. 44 பங்குனி 15 ல் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு மகனான அக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
உடல்நலம் மற்றும் உடல் தோற்றம்
புளூடார்ச்சின் குறிப்புகளின்படி, சீசருக்கு சிலநேரங்களில் கால்-கை வலிப்பு வந்துள்ளதாகத் தெரிகின்றது. தற்கால வரலாற்று அறிஞர்கள் இதுகுறித்து "மிகவும் பிளவுபட்டுள்ளனர்"; தவிரவும், சிலர் சீசருக்கு மலேரியா தாக்கியதாக நம்புகின்றனர். பல தலைவலி சிறப்பு மருத்துவர்கள் கால்-கை வலிப்பிற்கு மாற்றாக மைக்ரேன் தலைவலி ஏற்பட்டிருக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். வேறு சிலர் இந்த கால்-கை வலிப்புக்கள் மூளையில் தீநுண்ம தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர்.
சீசருக்கு நான்கு முறை வலிப்பு ஏற்பட்டுள்ளதை ஆவணங்கள் உறுதி செய்கின்றன. தவிர, அவரது இளமையில் வலிப்புக்கள் வந்திருக்கலாம். சீசருக்கு ஏற்பட்ட வலிப்பு குறித்த முதல் குறிப்பை தன்வரலாற்றாளர் சுடோனியசு பதிவு செய்துள்ளார். இவர் சீசர் இறந்த பிறகு பிறந்தவராவார். வலிப்பு குறித்த பதிவுகளை எதிர்க்கும் மருத்துவ வரலாற்றாளர்கள் இத்தகைய வலிப்புகளுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவைக் காரணமாகக் கூறுகின்றனர்.
2003இல் மனநல மருத்துவர் ஆர்பர் எஃப். ஓடர் சீசரின் வலிப்பு நோய் காரணமாக ஏற்பட்ட மனநோயை "சீசர் காம்ப்ளெக்சு" என்று பெயரிட்டுள்ளார்; வலிப்புநோயால் தான் வருத்தமுறுவதை மற்றவர் அறியக்கூடாதென்பதற்காகவே தனது மெய்க்காப்பாளர்களை விலக்கிக் கொண்டதும் அதுவே சீசரது கொலைக்குக் காரணமானதும் இந்த மனநோயாலேயாகும்.
சேக்சுபிரியரின் நாடக வரியொன்றிலிருந்து சீசருக்கு ஒரு காது கேளாதிருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது: எனது வலதுகைப் பக்கம் வா, இந்தக் காது கேட்காது. எந்த வரலாற்று நூலும் சீசருக்கு காதுக் குறை இருப்பதாக குறிப்பிடவில்லை.
உரோமானிய வரலாற்றாளர் சுடோனியசு சீசரை "உயரமான, வெண்ணிற, குறையற்ற உறுப்புகளுடைய, கருப்பு கண்களுடனான" மனிதராக விவரிக்கிறார்.
பெயர் மற்றும் குடும்பம்
பெற்றோர்கள்
தந்தை காயுஸ் ஜூலியஸ் சீசர்
தாய் ஆரேலியா
சகோதரிகள்
ஜூலியா சீசர்ஸ் மூத்தவள்
ஜூலியா சீசர்ஸ் இளையவள்
மனைவிகள்
முதல் திருமணம் கிமு 83ல் கார்னெலியாவுடன் நடைபெற்றது. கர்னெலியா பிரசவத்தின் பொழுது இறக்கும் (கிமு 68 அல்லது 69) வரை இந்த உறவு தொடர்ந்தது.
இரண்டாவது திருமணம் கிமு 67ல் பொம்பெயாவுடன் நடந்தது. இந்த உறவு கிமு 61ல் விவாகரத்து பெறும் வரை தொடர்ந்தது.
மூன்றாவது திருமணம் கிமு 59ல் Calpurnia Pisonisவுடன் நடந்தது. இந்த உறவு சீசரின் மரணம் வரை தொடர்ந்தது.
குழந்தைகள்
ஜூலியா, கிமு 83 அல்லது 82ல் கார்னெலியா ஜூலியஸ் சீசர் தம்பதிகளுக்குப் பிறந்தவர்.
சிசேரியன், கிமு 47ல் ஏழாம் கிளியோபாற்றா மற்றும் ஜூலியஸ் சீசருக்கு பிறந்தவர். இவர் 17ம் வயதில் ஆக்டோவியஸ் என்ற சீசரின் வளர்ப்பு மகனால் கொல்லப்பட்டார்.
பேரரசர் அகஸ்டஸ் என அறியப்பட்ட ஜூலியஸ் சீசர் ஆக்டோவியஸ் சீசரின் வளர்ப்பு மகனாவார். இவர் சீசர் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்கஸ் ஜூனியஸ் ப்ரூடஸ்
பேரப்பிள்ளைகள்
பாம்பே மற்றும் சீசரின் மகள் ஜூலியாவிற்குப் பிறந்த பெயரிடப்படாத குழந்தை. இக்குழந்தை சில நாட்களில் இறந்தது
காதலிகள்
கிளியோபாட்ரா VII சிசேரியனின் தாய்
செர்வில்லா புரூட்டசின் தாய்
ஈனோய் (Eunoë)
குறிப்பிடத்தக்க உறவினர்கள்
அகஸ்டஸ்
மார்க் ஆண்டனி
கேயுஸ் மரியஸ்
லூசியஸ் ஜூலியஸ் சீசர்
ஜூலியஸ் சபன்யஸ்
அரசியல் வதந்திகள்
இலக்கிய படைப்புகள்
ஜூலியஸ் சீசர் தனது வாழ்க்கை வரலாற்றினை மூன்று பாகங்களாக எழுதியிருக்கிறார். அத்துடன் படையெடுப்புகளை விவரித்து ஏழு பாகங்கள் கொண்ட நூலினை எழுதியுள்ளார்.
நாடகங்கள்
சீசரை மையமாக வைத்து எழுதப்பெற்ற நாடகங்கள்
ஜூலியஸ் சீசர் – வில்லியம் ஷேக்ஸ்பியர்
சீசர் அன்ட் கிளியோபட்ரா – பெர்னாட்சா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
C. Julius Caesar Jona Lendering's in‑depth history of Caesar (Livius. Org)
Guide to online resources
History of Julius Caesar
Julius Caesar at BBC History
Grey, D. The Assassination of Caesar , Clio History Journal, 2009.
கிமு 100 பிறப்புகள்
கிமு 44 இறப்புகள்
உரோமைப் பேரரசர்கள்
கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்
|
7424
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
|
சாங்காய்
|
சாங்காய் (சீனம்: 上海 ஷாங் ஹாய், என்னும் "கடல் பக்கத்தில்") சீன நாட்டிலும் உலகளவிலும் மக்கள்தொகைப்படி மிகப்பெரிய நகரமாகும் . இது சீனாவின் வணிக மற்றும் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது. 23 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சாங்காய் சீனாவின் நான்கு மாநிலளவிலான நகராட்சிகளில் ஒன்றாகும். பன்னாட்டு மக்களும் வாழும் இந்நகரம் வணிகம், பண்பாடு, நிதியம், ஊடகம், கவின்கலை, தொழினுட்பம், மற்றும் போக்குவரத்தில் தாக்கமேற்படுத்தி வருகிறது. முதன்மை நிதிய மையமாக விளங்கும் சாங்காய் உலகின் மிகுந்த போக்குவரத்து மிக்க சரக்குக்கலன் துறைமுகமாகவும் உள்ளது.
இது சீனாவின் கிழக்குப் பகுதியில் யாங்சே ஆற்றின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது. சீனக் கடலோரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் ஜியாங்சு மற்றும் செஜியாங் மாநிலங்களாலும் கிழக்கில் கிழக்கு சீனக்கடலாலும் சூழப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக முதன்மையான நிர்வாக, கடல்வணிக, பண்டமாற்று மையமாக விளங்கிய சாங்காய் 19வது நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையால் விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. சாங்காய் துறைமுகத்தின் அமைவிடமும் பொருளியல் முக்கியத்துவமும் ஐரோப்பியர்களால் உணரப்பட்டது. முதலாம் அபினிப் போரில் பிரித்தானியர் வென்றபிறகு வெளிநாட்டு வணிகத்திற்கு திறக்கப்பட்ட பல துறைமுகங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது. 1842ஆம் ஆண்டில் கண்ட நாஞ்சிங் உடன்படிக்கையின்படி சாங்காயில் வெளிநாட்டினர் குடியேற்றங்கள் அனுமதிக்கப்பட்டன. இதன்பிறகு கிழக்கிற்கும் மேற்கிற்குமான வணிகத்தில் சாங்காய் முக்கிய பங்கு வகித்தது. 1930களில் ஆசிய பசிபிக் மண்டலத்தின் தன்னிகரில்லா நிதிய மையமாக முன்னேற்றம் கண்டது. இருப்பினும், 1949இல் பொதுவுடமைக் கட்சி கையகப்படுத்தி பின்னர், சோசலிச நாடுகளுக்கு மட்டுமே வணிகம் குவியப்படுத்தப்பட்டது. இதனால் பன்னாட்டளவில் இதன் தாக்கம் குறையலாயிற்று. 1990களில் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்திய சீனப் பொருளாதார சீர்திருத்தங்களால் நகர வளர்ச்சி மீண்டும் புத்துயிர் பெற்றது. வெளிநாட்டு மூலதனம் குவியலாயிற்று.
சாங்காய் சுற்றுலாத் தலமாகவும் புகழ்பெறத் தொடங்கியது. இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்த்துறை, நகர தேவதை கோவில், யூயுவான் பூங்கா போன்றவையும் வளர்ந்துவரும் வானளாவிக் கட்டிடஙளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சீன நிலப்பகுதியின் பொருளாதார மேம்பாட்டின் காட்சியகமாக சாங்காய் குறிப்பிடப்படுகிறது.
பெயர்க்காரணம்
சீன எழுத்துமுறையில் இந்நகரத்தைக் குறிக்கும் இரு எழுத்துக்களான '上' (சாங் - "மேலே") மற்றும் '海' (ஹாய் - "கடல்"), இணைந்து இதற்கு சொல்விளக்கமாக "கடல்-மேல்" எனப் பொருள்தருகின்றன. இந்தப் பெயரின் பயன்பாடு முதன்முதலில் 11வது நூற்றாண்டின் சொங் அரசமரபு காலத்தில் கிடைக்கிறது. அப்போதே இங்குள்ள ஆற்று கழிமுகத்தில் இப்பெயருடைய ஊர் இருந்துள்ளது. இந்தப் பெயரை எவ்வாறு பொருள் கொள்வது என்பதற்கு பல விவாதங்கள் நடைபெற்றபோதும் சீன வரலாற்றாளர்கள் தாங் அரசமரபு காலத்தில் இந்நகர் உண்மையாகவே கடலின் மேல் இருந்ததால் அதுவே சரியான விளக்கமாக கொள்கின்றனர்.
மேற்சான்றுகள்
மேலும் அறிய
பெரிய எழுத்துக்கள்==வெளி இணைப்புகள்==
அலுவல்முறை வலைத்தளம்
சாங்காய் சுற்றுலா
சாங்காய் சுற்றுலா வழிகாட்டி
சீன நகரங்களும் ஊர்களும்
|
7427
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88
|
இமயமலை
|
இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆன இது ஆசியாவில் அமைந்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரியதும், மிகவுயர்ந்ததுமான மலைத்தொடர் இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெசுட்டு சிகரமும் ஒன்றாகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இது மேற்கே காசுமீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் உயரம் 7200 மீட்டருக்கு மேலாகும். இதற்கு மாறாக, ஆசியாவுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய சிகரம் அக்கோன்காகுவா அன்டேசு மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 6961 மீட்டராகும்.
மூன்று இணையான உப தொடர்களைக் கொண்டுள்ள இது ஐந்து நாடுகளில் பரவியுள்ளது.பூடான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாக்கித்தான் என்பனவான அவற்றில் முதல் மூன்று நாடுகளில் அதிகமான மலைத்தொடர் பரவியுள்ளது. இமயமலையின் வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்து குஃசு மலைத்தொடரையும் தெற்கே சிந்து-கங்கை சமவெளியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. உலகின் சில பெரிய நதிகளான சிந்து, கங்கை, மற்றும் பிரமபுத்திரா உற்பத்தியாகிறது. இந்நதிகளின் மொத்த வடிகால் 60 கோடி மக்களின் இருப்பிடமாகும். இமயமலை தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளது. இமயமலையில் உள்ள பல சிகரங்கள் இந்து மற்றும் புத்த மதங்களில் புனிதமாகக் கருதப்படுகிறது.
இமயமலை மேற்கு-வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு-வடகிழக்கு பகுதிவரை 2400 கிலோமீட்டர் வட்டவில்லாக அமைந்துள்ளது. இதன் மேற்கில் உயர்ந்த சிகரம் நங்கா பர்பத் சிந்து நதியின் வடக்கு வளைவில் அமைந்துள்ளது, இதன் கிழக்கில் உயர்ந்த சிகரம் நமுசா பருவா பரமபுத்திராவின் பெரிய வளைவில் மேற்கே அமைந்துள்ளது. மலைத்தொடரின் அகலம் மேற்கில் 400 கிலோமீட்டரும் கிழக்கில் 150 கிலோமீட்டரும் ஆகும்.
சுற்றுப்புறம்
இமயமலையின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் காலநிலை, மழை, உயரம், மற்றும் மண் கொண்டு மாறுபடும். மலை அடிவாரத்தில் வெப்ப மண்டல காலநிலையும், மிக உயர்ந்த இடத்தில் பனிக்கட்டி மற்றும் உறைபனியாகவும் காணப்படுகிறது. கடக ரேகையின் அருகே உள்ளதால் இதன் பனி வரி 5500 மீட்டர் ஆகும். இது உலகிலேயே உயர்ந்ததவற்றில் ஒன்று. ஆண்டு மழை அளவு தெற்கு முகப்பில் மேற்கிலிருந்து கிழக்கு வரை அதிகரிக்கும். இத்தகைய உயர மாறுபாடு, மழை அளவு ,மண்ணின் நிலை மற்றும் மிக அதிக பனி வரி காரணமாக நிறைய தாவரங்களும் விலங்குகளும் உயிர் வாழ உதவுகிறது. உதாரணமாகத் தீவிர குளிர் மற்றும் அதிக உயரம் (குறைந்த காற்றழுத்தம்) காரணமாக உச்சவிரும்பிகள் உயிர் வாழுகின்றன.
இமயமலையின் தனித்துவமான தாவர மற்றும் விலங்கு செல்வம் காலநிலை மாற்றம் காரணமாகக் கட்டமைப்பு மற்றும் இயைபு மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. வெப்பநிலை அதிகரிப்பு காரணமாகப் பல இனங்கள் உயரமான இடங்களுக்குச் சென்று உயிர் வாழ்கின்றன. கர்வால் இமயமலை பகுதியில் கருவாலி மரங்கள் இருந்த இடத்தில தேவதாரு மரங்கள் வளர்கின்றன. சில மர இனங்களில் குறைந்த காலத்திலேயே பூத்தலும் பழுத்தாலும் நிகழ்கின்றன, குறிப்பாக ர்ஹோடோதேண்ட்ரோன், ஆப்பிள் மற்றும் மைரிக்கா ஈஸ்கிலேண்டா.
நிலவியல்
இமயமலை இக்கிரகத்தில் உள்ள இளம் மலைத் தொடர்களில் ஒன்றாகும். இது பெரும்பாலுமாக வலுவூட்டப்பட்ட படிவுக்கலன்கள் மற்றும் உருமாறி பாறைகளைக் கொண்டுள்ளன. நவீன டெக்டோனிக் கொள்கையின் படி இமயமலை இந்திய ஆஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்களிடையே நிகழ்ந்த மோதலால் உருவாகியது. இது தான் மடிப்பு மலை என்று கூறுகிறோம்.
வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய-ஆஸ்திரேலிய தகடுக்கும் யுரேசியன் தகடுக்கும் 7 கோடி ஆண்டுகள் முன்பு இந்த மோதல் தொடங்கியது . 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வேகமாக நகரும் இந்திய ஆஸ்திரேலிய தகடு முழுமையாகத் தெதைஸ் பெருங்கடலை மூடிவிட்டது, இதன் இருப்பு அங்குள்ள படிவ பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகின்றது. இந்தப் படிவுகள் அடர்த்தி குறைவாக இருந்ததால் அவை கடலின் கீழே போகாமல் ஒன்று சேர்ந்து மலையை உருவாக்கின. இந்திய ஆஸ்திரேலிய தட்டு கிடைமட்டமாக நகர்வதால் திபெத்திய பீடபூமி உயர்ந்து வருகிறது. மியான்மரில் உள்ள அரகான் யோமா உயர்நிலங்கள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்த மோதலால் உருவாகியது.
இன்னும் இந்திய ஆஸ்திரேலிய தட்டு வருடத்திற்கு 67 மிமீ நகர்ந்து வருகிறது, மற்றும் அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இது ஆசியாவினுள் 1,500 கிமீ நகரும். இந்திய-ஆசிய குவிதல் ஆண்டிற்கு 20 மிமீ தெற்கு இமாலய முகப்பின் அழுத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது. இந்தியத் தகடு ஆசியத் தகடுகள் நுழைவதால் இப் பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது.
நீர் வள இயல்
இமயமலைப்பகுதி 15000 பனியாறுகளைக் கொண்டுள்ளது அதில் 12000 கன கிலோ மீட்டர் தண்ணீர் உள்ளது. அதன் பனிப்பாறைகள் கங்கோத்ரி மற்றும் யமுனோதிரி (உத்தரகண்ட்) மற்றும் க்ஹும்பு பனிப்பாறைகள் (எவரெஸ்ட் பகுதியில்), மற்றும் சேமு (சிக்கிம்) ஆகியவை அடங்கும்.
இமயமலை வெப்ப மண்டலத்திற்கு அருகே இருந்தாலும் அதன் உயர் பகுதிகுள் ஆண்டு முழுவதும் பனி நிறைந்து காணப்படுகிறது. இது பல வற்றாத ஆறுகளின் ஊற்றாகத் திகழ்கிறது. இவை இரண்டு பெரிய ஆறு அமைப்புகளாக உள்ளன:
மேற்கு ஆறுகள் சிந்து படுக்கையில் இணைகின்றன. இவற்றில் சிந்து நதிதான் பெரிய நதி. சிந்து நதி திபெத்தில் உருவாகி தென்மேற்காகப் பாய்ந்து இந்தியா, பாகிஸ்தான் வழியாக அரபிக் கடலில் செல்கிறது . இந்நதி ஜீலம், செனாப், ரவி, பியாஸ், மற்றும் சட்லெஜ் ஆறுகளால் ஊட்டப்படுகிறது.
மற்ற இமாலய நதிகளின் கங்கா-பிரம்மபுத்ரா படுக்கைக்குச் செல்கிறது. இதன் முக்கிய நதிகள் கங்கை, பிரம்மபுத்ரா மற்றும் யமுனை. பிரம்மபுத்திரா மேற்கு திபெத்தில் யார்லுங் ட்சன்க்போ நதியாக உருவாகி கிழக்கு திபெத் மற்றும் அசாம் சமவெளி வழியாகப் பாய்கிறது. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா பங்களாதேசத்தில் சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஆற்று படுக்கை வழியே சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கிழக்கு இமாலய நதிகளின் கிழக்கு அயேயர்வாடி நதியை ஊட்டுகின்றன, இந்நதி திபெதில் உருவாகி தெற்கு நோக்கிப் பர்மா வழியாக அந்தமான் கடலில் கலக்கிறது.
சல்வீன்,மீகாங்,யாங்சே மற்றும் ஹுவாங் ஹி (மஞ்சள் ஆறு) திபெத்திய பீடபூமியில் உருவாகின்றன. ஆகையால் இவை உண்மையான இமயமலை ஆறு அல்ல. சில புவியியலாளர்கள் இவ் ஆறுகளை வெளிச்சுற்று இமாலய ஆறுகள் என்று அழைகின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில், விஞ்ஞானிகள் உலக காலநிலை மாற்றத்தின் விளைவாக அப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் குறைவு விகிதம் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, பனிப்படல ஏரிகள் கடந்த சில தசாப்தங்களில் பூட்டான் இமயமலை பகுதியில் குப்பைகள் உள்ளடங்கிய பனிப்பாறைகளின் மேற்பரப்பில் வேகமாக உருவாகி வருகின்றன. இந்த விளைவு பல ஆண்டுகளாக உணரப்படாது என்றாலும் உலர் பருவங்களில் பணிப்பறைகளால் உருவாகும் ஆறுகளைச் சார்ந்து இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பேரிழப்பு ஏற்படும்.
ஏரிகள்
இமயமலை பகுதியில் மானசரோவர் ஏரி போன்று நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன. பெரும்பாலான ஏரிகள் 5,000 மீ உயரத்திற்கு கீழே உள்ளன, அதன் பரப்பு உயரத்திற்கு ஏற்றவாறு குறைந்துள்ளது. இந்திய சீன எல்லையில் விரிந்த பாங்காங்-த்சோ ஏரியும் மத்திய திபெதில் உள்ள யம்ட்ரோக் த்சோ ஏரியும் முறையே 700 சகிமீ ,638 சகிமீ கொண்டு மிகப்பெரியதாகும். குறுப்பிடத்தக்க மற்ற ஏரிகள் வட சிக்கிமில் உள்ள குருடோக்மார் ஏரி, சிக்கிமில் உள்ள த்சொங்க்மோ ஏரி மற்றும் நேபாளில் உள்ள டிளிசோ ஏரி.
பனிப்பாறை நிகழ்வினால் ஏற்படும் மலை ஏரிகளுக்கு டர்ன்ஸ் என புவியியலாளர்களால் அழைக்கப்படுகின்றன. டர்ன்ஸ் உயர் இமயமலையில், 5500 மீட்டர் மேல், காணப்படுகின்றன.
காலநிலை பாதிப்பு
இமயமலை இந்திய துணைகண்டம், திபெத்திய பீடபூமி பகுதியில் உள்ள காலநிலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவை உலர் விரைப்பான தென் நோக்கிச் செல்லும் ஆர்க்டிக் காற்றை தடுத்து தென் ஆசியாவை மிதவெப்பமாக வைத்து மற்றும் அவர்கள் மற்ற கண்டங்களில் தொடர்புடைய வெப்பமான பகுதிகளை விட வெப்பமாக உள்ளன. இவை பருவக்காற்றை வடுக்கு நோக்கிச் செல்வதை தடுத்து டேராய் பகுதிகளில் கன மழை பெய்ய உதவுகிறது. இமயமலை மத்திய ஆசிய பாலைவனங்களான தக்ளமகன் மற்றும் கோபி பாலைவனங்கள் உருவானதில் முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.
மதம்
இந்து மதத்தில் இமயமலையை பார்வதியின் தந்தையான இமாவான் (பனிக் கடவுள்) என உருவகப்படுத்தப்பட்டுள்ளது அவர் சிவனை திருமணம் செய்த பார்வதி , கங்கா மற்றும் சரஸ்வதியின் தந்தை ஆவார்.
இமயமலையில் உள்ள பல இடங்கள் இந்து, சமண, சீக்கிய மற்றும் புத்த மதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறுப்பிடத்தக்க எடுதுக்க்காட்டானது பத்ம சம்பாவ புத்த மதத்தைத் தோற்றுவித்த பூட்டானில் உள்ள பரோ தக்ட்சங் இமயமலையில் உள்ளது.
தலாய்லாமாவின் இருப்பிடம் மற்றும் திபெத்திய புத்த இடங்கள் இமய மலையில் உள்ளது. திபெத்தில் 6,000 மடங்கள் இருந்தன. திபெத்திய முஸ்லிம்கள் லாசா மற்றும் ஷிகட்சே இடங்களில் சொந்த மசூதிகள் கொண்டுள்ளனர்.
கைலாயம், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி, ஜோஷி மடம், அமர்நாத் கோயில், வைஷ்ணவதேவி கோயில் போன்ற இந்து சமய வழிபாட்டிடங்கள் உள்ளது.
வரலாற்றில் இமயமலையின் பங்கு
இதன் உயரமான பரவலினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் இயற்கை அரணாக விளங்குகிறது. இந்திய துணைக்கண்டத்தினை மங்கோலிய, சீனா மக்களின் நாகரிகத்திலிருந்து பிரிக்கின்றது. உதாரணமாகச் செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்கு பங்கு உண்டு.
தமிழ் - சங்க இலக்கியங்களில் இமயம்
சேரலாதன் கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பின்னர் இமயத்தில் வில்லைப் பொறித்தான். - அகம் 127
வஞ்சி நகருக்குப் பெருமை அதன் அரசன் வானவன் இமயத்தில் வில்லைப் பொறித்தது. அந்த இமயம் "வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோடு" கொண்டது. - புறம் 39
வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த ... இயல் தேர்க் குட்டுவன். - சிறுபாணாற்றுப்படை 48-
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் தன் முத்திரையாகிய வில்லைப் பொறித்தான். - பதிற்றுப்பத்து பதிகம் 2
இந்தியாவில் இமயப் பகுதி அரசர்கள் குமரிமுனை வரையில் கைப்பற்றக் கனவு கண்டனர். இமையவரம்பன் அவர்களது கனவுகளைப் பொய்யாக்கித் தன் புகழை இமயம் வரையில் நிலைகொள்ளச் செய்தான். - பதிற்றுப்பத்து - 2ஆம் பத்து - பாடல் 11
வடதிசை எல்லை இமயமாகத் தென்திசைக் குமரிவரை ஆண்ட அரசர்களின் நாட்டை அழித்துப் போரிட்டவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன். - பதிற்றுப்பத்து 43
கொண்டல் மழை இமயத்தைத் தீண்டிப் பொழியும். - புறம் 34
இமயம் போல உயர்ந்து வாழ்க. - புறம் 166
வடதிசை இமயமும், தென்திசை ஆய்குடியும் உலகைச் சமனிலை கொள்ளச் செய்யும். - புறம் 132
தலைவி ஒருத்தி தன் காதலனை இமயம் ஆடினாலும் தன் காதலனின் பண்பு ஆட்டங்கூடக் காணாது என்கிறாள் . - குறுந்தொகை 158
அரவணையான் புகழ் இமயத்துக்கு அப்பாலும் பரவ வேண்டும் என்று புலவர் திருமாலை வாழ்த்துகிறார். - கலித்தொகை 105
தென்கடல் பரப்பில் மேய்ந்த அன்னப் பறவை இமயமலையிலுள்ள வானர மகளிரிடம் இருப்புக் கொள்ளுமாம். அதுபோல, என் காதலியை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க மறுப்பவர்கள் என்றேனும் ஒருநாள் கொடுப்பார்கள் என்கிறான் தலைமகன் ஒருவன். - நற்றிணை 356
பொன்னுடை நெடுங்கோட்டு இமயம் போன்ற வேழம் பரிசாகத் தருக என்கிறார் ஒரு புலவர்.- புறம் 369
என் காமம் இமயத்திலிருந்து இழிதரும் கங்கை ஆறு போல மாலை வேளையில் பெருகுகிறது என்கிறாள் ஒருத்தி. - நற்றிணை 369
அந்தி வேளையில் அலையாமல் ஓரிடத்தில் தங்கும் விலங்கினம் போல ஆயத்தோடு ஆற்றுத்துறை மணல்மேல் ஒரிடத்தில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு நல்லவரைப் பார்த்தேன் என்று பரத்தைமாட்டுச் சென்ற தன் தலைவனைப்பற்றி ஒருத்தி குறிப்பிடுகிறாள். - கலித்தொகை 92
நம் காதலர் பொருள் தேடச் சென்றாரே அந்தச் செல்வம் இமயத்தைப் போன்றதா, அன்றி நந்தர் பாடலி நகரில் மறைத்து வைத்த நிதியம் போன்றதா? ஆயினும் அந்தச் செல்வம் நம்மைக் காட்டிலும் பெரிதா? என்று சொல்லித் தலைவி தோழியிடம் அங்கலாய்த்துக் கொள்கிறாள். - அகம் 265
சிவன் திரிபுரம் எரித்தபோது இமயம் அவனுக்கு வில்லாயிற்று. - கதை \ பரிபாடல் திரட்டு 1
இமயத்தை வில்லாக்கிக்கொண்ட சிவன் கதை பேசப்படுகிறது. - கலித்தொகை 38
அந்தி வந்ததும் அந்தணர் தம் கடமையாக முத்தீ வளர்க்கும் இடங்களுள் ஒன்று இமயம். மற்றொன்று பொதியில். அந்த முத்தீ விளக்கொளியில் பெரிய பெண்மான் உறங்குமாம். இந்த இரு மலைகளையும் போலப் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் உயர்விலும், புகழிலும் நடுக்கம் இல்லாமல் வாழவேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார். - புறம் 2
திருபரங்குன்றம் புகழால் இமயக் குன்றுக்கு ஒப்பானது. - பரிபாடல் 8
இவற்றையும் காணவும்
இமயமலையின் சிகரங்கள் மற்றும் கணவாய்கள் பட்டியல்
இமயம் (திரைப்படம்)
இமயமலை சிற்றெலி
இமயப் பாறைமுயல்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
The Digital Himalaya research project at Cambridge and Yale
The making of the Himalaya and major tectonic subdivisions
Geology of the Himalayan mountains
Birth of the Himalaya
Some notes on the formation of the Himalaya
Pictures from a trek in Annapurna (film by Ori Liber)
Geology of Nepal Himalaya
South Asia's Troubled Waters Journalistic project at the Pulitzer Center for Crisis Reporting
இந்திய மலைத்தொடர்கள்
நேபாள மலைத்தொடர்கள்
பாக்கித்தானிய மலைத்தொடர்கள்
சீன மலைத்தொடர்கள்
இமயமலைத் தொடர்
இந்தியப் புவியியல்
|
7430
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
அடிப்படை இயற்கணிதம்
|
அடிப்படை இயற்கணிதம் (elementary algebra) என்பது இயற்கணிதத்தின் ஒரு முக்கியப் பிரிவு. இது இயற்கணிதத்தின் அடிப்படைக் கருத்துருக்களை விவரிக்கிறது. எண்கணிதம் மற்றும் இயற்கணிதம் இரண்டிற்குமுள்ள முக்கிய வேறுபாடு, இயற்கணிதத்தில் கையாளப்படும் மாறிகள்தான். எண்கணிதத்தில் எண்கள் மற்றும் அவற்றைக் கொண்டு செய்யப்படும் அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவை குறித்த கருத்துக்கள் விவரிக்கப்படுகின்றன. அடிப்படை இயற்கணிதத்தில் x மற்றும் y போன்ற மாறிகளும், எண்களுக்குப் பதில் a மற்றும் b போன்ற மாறிலிகளும் பயன்படுத்தப்பட்டு கணிதச் செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாறிகளை உபயோகித்து நுண்மமாக (abstract) சிந்தித்து செய்யப்படும் கணிப்புக்களை
அடிப்படை இயற்கணிதம் கொண்டுள்ளது. இக்கணிதப் பிரிவை அடிப்படை அட்சர கணிதம் அல்லது அடிப்படை குறுக்கணக்கியல் என்றும் குறிப்பிடுவதுண்டு. பொதுவாக, மாணவர்கள் முதலில் எண்கணிதம் கற்று, பின்னர் இயற்கணிதத்தின் மூலம் மேலும் நுண்மமாகச் சிந்திக்க உந்தப்படுகின்றார்கள். இயற்கணிதத்தில் சமன்பாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இயற்கணிதத்தின் சிறப்புக்கூறுகள்
மாறிகள்
இயற்கணிதத்தில் ஓர் எண்ணுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் எழுத்து அல்லது குறியீடு மாறி என அழைக்கப்படுகிறது. கணிதச் செயல்முறைகளை விதிகளாக பொதுமைப்படுத்துவதற்கு மாறிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன:
கணிதச் சமன்பாடுகளையும் அசமன்பாடுகளையும் விதிகளாக மாற்றுவதற்கு மாறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:
....
அதாவது இரு முழு எண்களைக் கூட்டும் போது வரிசை மாற்றி செயல்பட்டாலும் இறுதி மதிப்பு மாறுவதில்லை. இதனை முழு எண்களின் பரிமாற்று விதியாகப் பின்வருமாறு தரலாம்.
அனைத்து a மற்றும் b எனும் முழு எண்களுக்கு:
இது முழு எண்களுக்கு மட்டுமல்லாமல் மெய்யெண்களுக்கும் பொருந்தும். மாறிகளைப் பயன்படுத்தி செயல்முறைகளை விதிகளாக எழுதும் முறை, மெய்யெண்கள் கணத்தின் பண்புகளைப் பற்றிய அறிதலுக்கு முதல்படியாக அமைகிறது.
மதிப்பு அறியப்படாத கணியங்களைக் குறிக்க மாறிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கணக்கில் மதிப்புத் தரப்படாத ஒரு கணியத்தினை ஒரு மாறியால் குறித்துக் கொண்டு சமன்பாடுகளை அமைத்து, அவற்றைத் தீர்ப்பதன் மூலம் அம்மாறியின் அதாவது அது குறிக்கும் கணியத்தின் மதிப்பைக் கணக்கிடலாம்.
எளிய எடுத்துக்காட்டு:
இரு முழு எண்களின் கூடுதல் 11. அவற்றின் வித்தியாசம் 5 எனில் அவ்விரு எண்களைக்காண:
இரு எண்கள்: x, y என்க.
தரவினைக் கொண்டு அமைக்கப்படும் சமன்பாடுகள்:
கீழே உள்ள ஒருபடிச் சமன்பாடுகளின் தொகுதி பிரிவில் தரப்பட்டுள்ளபடி இச்சமன்பாடுகளைத் தீர்த்து வேண்டிய இரு எண்கள் 8, 3 என்பதைக் கணக்கிடலாம்.
இது ஒரு எளிய கணக்கு. இவ்வாறு சமன்பாடுகள் அமைத்துத் தீர்வு காணும் முறையில் மேலும் சிக்கலான கணக்குகளுக்கும் எளிதாக விடை காண முடியும்.
கணியங்களுக்கு இடையேயான தொடர்புகளை அமைக்கவும் ஆய்வு செய்யவும் மாறிகள் பயன்படுகின்றன.
எடுத்துக்காட்டு:
ஒருவர் x புத்தகங்கள் விற்றால் அவருக்குக் கிடைக்கும் லாபம்: 3x − 10 ரூபாய்.
கோவைகள்
அடிப்படை இயற்கணிதத்தில் கோவை என்பது எண்கள் மற்றும் மாறிகளால் அமைந்த உறுப்புகளைக் கணித அடிப்படைச் செயல்களைக் கொண்டு இணைக்கப்பட்ட ஒரு அமைப்பு. கோவைகளின் இடப்பக்கத்தின் முதல் உறுப்பாக அதிக அடுக்குள்ள உறுப்பு எழுதப்படுவது வழக்கம்:
உயர் இயற்கணிதக் கோவைகள் சார்புகளைக் கொண்டும் அமையும்.
செயல்கள்
எண் கணிதத்தில் உள்ளதுபோல அடிப்படை இயற்கணிதத்திலும் அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் வரையறுக்கப்பட்டுள்ளன.
கூட்டல்:
ஒன்றுகளின் மீள்கூட்டலைக் குறிக்கும்: a + n = a + 1 + 1 +...+ 1 (n தடவைகள்);
கூட்டலின் எதிர்ச் செயல் கழித்தல்: (a + b) − b = a (அல்லது) a − b = a + (−b);
பெருக்கல்:
மீள்கூட்டலைக் குறிக்கிறது: a × n = a + a +...+ a (n தடவைகள்);
பெருக்கலின் எதிர்ச் செயல் வகுத்தல் (பூச்சியமற்ற எண்களுக்கு மட்டும்): (ab)/b = a, (அல்லது) a/b = a(1/b);
கூட்டலின் மீதான பங்கீட்டுப் பண்புடையது: (a + b)c = ac + bc;
பெருக்கலைச் சுருக்கமாக எழுதுதல்: a × b ≡ ab;
அடுக்கேற்றம்:
மீள்பெருக்கலைக் குறிக்கும்: an = a × a ×...× a (n தடவைகள்);
அடுக்கேற்றத்தின் எதிர்ச் செயல் மடக்கை காணல்: alogab = b = logaab;
பெருக்கலின் மீதான பங்கீட்டுப் பண்புடையது: (ab)c = acbc;
n-ம் படி மூலங்கள் வாயிலாக எழுதலாம்: am/n ≡ (n√a)m எதிர் எண்களுக்கு இரட்டை மூலங்கள் மெய்யெண்களில் கிடையாது.
பண்பு: abac = ab + c;
பண்பு: (ab)c = abc.
பொதுவாக: ab ≠ ba மற்றும் (ab)c ≠ a(bc);
பண்புகள்
செயல்களின் வரிசை
கணிதத்தில் ஒரு கோவையின் மதிப்பு காணும் போது அல்லது சுருக்கி எழுதும் போது அதில் அமைந்துள்ள செயல்களைக் குறிப்பிட்ட வரிசையில் செய்ய வேண்டியது முக்கியமான ஒன்று. செயல்களின் வரிசை பின்வருமாறு அமையும்:
தொகுப்புக் குறியீடுகள்: அடைப்புக்குறி, தனிமதிப்புக் குறியீடு மற்றும் பின்னக் கோடு
அடுக்குக் குறி மற்றும் மூலக் குறியீடு
பெருக்கல் மற்றும் வகுத்தல்
கூட்டல் மற்றும் கழித்தல்
ஆங்கிலத்தில் இந்த செயல் வரிசையை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதற்கு பின்வரும் நினைவி பயன்படுத்தப்படுகிறது:
PEMDAS
P -paranthesis
E -exponentiation
M -multiplication
D -division
A -addition
S -subtraction
சமன்பாடுகள்
இரண்டு இயற்கணிதக் கோவைகள் ஒரே மதிப்பு கொண்டவையாக, சமமானவையாக அமையும் என்பதை ஒரு சமன்பாடு நிலைநாட்டுகிறது. சில சமன்பாடுகள் அவற்றில் உள்ள மாறிகளின் அனைத்து மதிப்புகளுக்கும் உண்மையானதாக இருக்கும். அத்தகைய சமன்பாடுகள் முற்றொருமைகள் என அழைக்கப்படும். மாறிகளின் குறிப்பிட்ட சில மதிப்புகளுக்கு மட்டும் உண்மையாக இருக்கும் சமன்பாடுகள் நிபந்தனைக்குட்பட்ட சமன்பாடுகள் எனப்படும். ஒரு சமன்பாட்டினை உண்மையாக்கும் மாறியின் மதிப்புகள் அச்சமன்பாட்டின் தீர்வுகள் எனவும் அம்மதிப்புகளைக் கண்டுபிடிக்கும் முறை, சமன்பாட்டைத் தீர்த்தல் எனவும் அழைக்கப்படுகிறது.
சமன் பண்புகள்
சமன் (=) என்ற உறவு:
எதிர்வு உறவு (reflexive relation): b = b;
சமச்சீர் உறவு (symmetric relation): a = b எனில் b = a;
கடப்பு உறவு (transitive relation): a = b மற்றும் b = c எனில் a = c.
a = b மற்றும் c = d எனில்: a + c = b + d; ac = bd;
a = b எனில் a + c = b + c.
சமனின்மையின் பண்புகள்
(<) - சிறியது என்ற உறவு:
கடப்பு உறவு: a < b மற்றும் b < c எனில் a < c;
a < b மற்றும் c < d எனில் a + c < b + d;
a < b மற்றும் c > 0 எனில் ac < bc;
a < b மற்றும் c < 0 எனில் bc < ac.
(>) - பெரியது என்ற உறவு:
கடப்பு உறவு: a > b மற்றும் b > c எனில் a > c;
a > b மற்றும் c > d எனில் a + c > b + d;
a > b மற்றும் c > 0 எனில் ac > bc;
a > b மற்றும் c < 0 எனில் bc < ac.
இயற்கணித எடுத்துக்காட்டுகள்
நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய சமன்பாடுகள் கீழே தரப்படுகின்றன.
ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாடுகள்
ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாடுகள் தீர்ப்பதற்கு மிகவும் எளிதானவை. அவை மாறிலிகள் மற்றும் ஒரேயொரு மாறியை மட்டும் கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டு:
சமன்பாட்டின் இருபுறமும் ஒரே எண்ணால் கூட்டி அல்லது கழித்து அல்லது பெருக்கி அல்லது வகுத்து அச்சமன்பாட்டில் உள்ள மாறியை சமன்பாட்டின் ஒரே பக்கமாகத் தனிமைப்படுத்துவதே இச்சமன்பாடுகளைத் தீர்க்கும் முறையாகும். சமன்பாட்டில் அமைந்துள்ள மாறி இவ்வாறாக சமன்பாட்டின் ஒரேபக்கத்துக்கு நகர்த்தப்பட்டால் சமன்பாட்டின் மற்றொரு பக்கத்தில் உள்ளது அம்மாறியின் மதிப்பாக அமையும். அதாவது அச்சமன்பாட்டின் தீர்வாக அமையும்.
மேலே தரப்பட்டுள்ள சமன்பாட்டைத் தீர்த்தல்:
சமன்பாட்டின் இருபுறமும் 4 -ஐக் கழிக்க:
இப்பொழுது இருபுறமும் 2 -ஆல் வகுக்க:
சமன்பாட்டின் தீர்வு:
இதே முறையில் இவ்வகையானப் பொதுச் சமன்பாடு -ன் தீர்வு:
இருபடிச் சமன்பாடுகள்
ஒரு மாறியில் அமைந்த இருபடிச் சமன்பாடு:
ax2 + bx + c = 0,
இங்கு a பூச்சியமாக இருக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு இருந்தால் சமன்பாட்டின் இரண்டடுக்கு உறுப்பு பூச்சியமாகி இருபடிச்சமன்பாடு ஒருபடிச் சமன்பாடாக மாறிவிடும்.
a ≠ 0 என்பதால், a -ஆல் வகுத்து மாற்றியமைக்க:
இங்கு p = b/a மற்றும் q = −c/a.
வர்க்க நிரப்பி முறையில் இச்சமன்பாட்டைத் தீர்த்து இருபடி வாய்ப்பாட்டைக் காணலாம்:
இருபடிச் சமன்பாடுகளை காரணிப்படுத்தல் முறையிலும் தீர்க்கலாம்:
எடுத்துக்காட்டு:
தீர்வுகள்: x = 2 அல்லது x = −5
கலப்பெண் முறைமையில் அனைத்து இருபடிச் சமன்பாடுகளுக்கும் இரண்டு தீர்வுகள் உண்டு. ஆனால் மெய்யெண் தீர்வுகள் இல்லாத இருபடிச் சமன்பாடுகளும் உண்டு.
எடுத்துக்காட்டு:
எந்தவொரு மெய்யெண்ணின் வர்க்கமும் -1 என இருக்காது என்பதால் இச்சமன்பாட்டிற்கு மெய்யெண்களில் தீர்வுகள் இல்லை.
சில இருபடிச் சமன்பாடுகளுக்கு இரண்டு தீர்வுகளும் சமமானவையாக அமையலாம்:
எடுத்துக்காட்டு:
இச்சமன்பாட்டிற்கு −1 இருமுறை தீர்வாக அமைகிறது.
அடுக்குக்குறி மற்றும் மடக்கைச் சமன்பாடுகள்
அடுக்குக்குறிச் சமன்பாடு
a > 0
இச்சமன்பாட்டின் தீர்வு:
b > 0.
ஒரு அடுக்குக்குறிச் சமன்பாட்டைத் தீர்ப்பதற்கு முன் அதனை மேலே தரப்பட்டுள்ள அடுக்குக்குறிச் சமன்பாட்டு வடிவிற்கு மாற்றக் கொள்ள வேண்டும்.
எடுத்துக்காட்டு:
இருபுறமும் 1 -ஐக் கழிக்க:
இருபுறமும் 3 -ஆல் வகுக்க:
எனவே தீர்வு:
(அல்லது)
மடக்கைச் சமன்பாடு
a > 0,
இச்சமன்பாட்டின் தீர்வு:
எடுத்துக்காட்டு:
இருபுறமும் 2 -ஐக் கூட்ட:
இருபுறமும் 4 -ஆல் வகுக்க:
எனவே தீர்வு:
ஃ
படிமூலச் சமன்பாடுகள்
படிமூலச் சமன்பாடு:
Xm/n = a, m, n -முழு எண்கள்
இதன் தீர்வு:
m ஒற்றை எண் எனில்,
m இரட்டை எண் மற்றும் a ≥ 0 எனில்,
எடுத்துக்காட்டு:
.
ஒருபடிச் சமன்பாடுகளின் தொகுதி
ஒருபடிச் சமன்பாட்டுகளின் தொகுதி ஒன்றில் உள்ள சமன்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தீர்வுகளை அதாவது மாறிகளின் மதிப்புகளைக் காணலாம். தீர்வுகள் காண்பதற்கு அத்தொகுதியில் உள்ள சமன்பாடுகளின் எண்ணிக்கையும் சமன்பாடுகளில் உள்ள மாறிகளின் எண்ணிக்கையும் சமமாக இருத்தல் வேண்டும்.
மூன்று மாறிகளில் அமைந்த ஒருபடிச் சமன்பாட்டுத் தொகுதியின் பொதுவடிவம்:
இரு மாறிகளில் அமைந்த ஒருபடிச் சமன்பாட்டுத் தொகுதியின் பொதுவடிவம்:
இரு மாறிகளில் அமைந்த இரண்டு சமன்பாடுகள் கொண்ட ஒரு சமன்பாட்டுத் தொகுதியைத் தீர்க்கும் முறை:
நீக்கல் முறை
இரண்டாவது சமன்பாட்டை இரண்டால் பெருக்க:
இப்பொழுது இவ்விரண்டு சமன்பாடுகளையும் கூட்ட:
இருபுறமும் 8 -ஆல் வகுக்க:
x = 2 என இரண்டில் ஏதேனும் ஒரு சமன்பாட்டில் பிரதியிட்டு, y = 3 என்பதை அடையலாம்.
எனவே மேலே தரப்பட்ட சமன்பாட்டுத் தொகுதியின் முழுத்தீர்வு:
இந்த நீக்கல் முறையில் x -க்குப் பதில் முதலில் y -ஐ நீக்கிவிட்டு x-ன் மதிப்பையும் பின் அதனைப் பயன்படுத்தி y -ன் மதிப்பு கண்டுபிடித்தும் தீர்வு காணமுடியும்.
பிரதியிடல் முறை
இரண்டில் ஏதாவது ஒரு சமன்பாட்டிலிருந்து y -ஐக் வருவித்துக் கொண்டு, அதனை அடுத்த சமன்பாட்டில் பிரதியிட்டு x -ன் மதிப்பைக் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுது x மதிப்பை ஏதாவது ஒரு சமன்பாட்டில் பிரதியிட்டு y மதிப்பைக் காணலாம். அல்லது இதேபோல முதலில் y -க்குப் பதில் x -ஐ எடுத்துக் கொண்டும் தொடராலாம்.
இரண்டாவது சமன்பாட்டிலிருந்து:
இருபுறமும் 2x -ஐக் கழிக்க:
இருபுறமும் -1 ஆல் பெருக்க:
இந்த y மதிப்பை முதல் சமன்பாட்டில் பிரதியிட:
x = 2 என இரண்டில் ஏதேனும் ஒரு சமன்பாட்டில் பிரதியிட்டு y = 3 எனக் காணலாம். எனவே சமன்பாட்டுத் தொகுதியின் தீர்வு:
ஒருபடிச் சமன்பாட்டுத் தொகுதிகளின் வகைகள்
ஒருபடிச் சமன்பாட்டுத் தொகுதிகளின் தீர்வுகளைப் பொறுத்து அவற்றை இரு வகைகளாகப் பிரிக்கலாம்:
ஒருங்கிசைவுடையவை (consistent);
ஒருங்கிசைவுடைய ஒருபடிச் சமன்பாட்டுத் தொகுதியின் தீர்வுகள்,
தனித்தன்மை (uniqueness) உடையவை. அதாவது அத்தொகுதிக்கு ஒரேயொரு தீர்வு மட்டுமே இருக்கும்.
(அல்லது)
முடிவிலா எண்ணிக்கையிலானவை.
ஒருங்கிசைவற்றவை (inconsistent).
ஒருங்கிசைவிலா ஒருபடிச் சமன்பாட்டுத் தொகுதிக்குத் தீர்வுகளே கிடையாது.
மேற்கோள்கள்
Leonhard Euler, Elements of Algebra, 1770. English translation Tarquin Press, 2007, , also online digitized editions 2006, 1822.
Charles Smith, A Treatise on Algebra, in Cornell University Library Historical Math Monographs.
Redden, John. Elementary Algebra . Flat World Knowledge, 2011
வெளி இணைப்புகள்
Elementary Algebra An open textbook published by Flat World Knowledge.
அடிப்படை இயற்கணிதம்
இயற்கணிதம்
|
7439
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
தமிழ்க் கணிமை செயலிகள் பட்டியல்
|
கிளிக்-எழுதி
எ-கலப்பை
தமிழ் விசை - தண்டர்பேர்ட் மற்றும் பயர்பாக்ஸில் இயங்கும்.
சுரதா புதுவை தமிழ் எழுதி
தமிழா தமிழ் உள்ளீடு பயர்பாக்ஸில் மாத்திரம் இயங்கும்
பரஹா
இந்திய மொழி மாற்றி
வெளி இணைப்புகள்
தமிழா
பால்ஸ் மின்அகராதி (தமிழ்-தமிழ்-ஆங்கிலம்)
உத்தமம்
தமிழ் தேசம்
கிளிக்-எழுதி
தமிழ்க் கணினி உள்ளீடு மென்பொருள்கள்
தமிழ் மென்பொருள்கள்
|
7440
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
சுரதா புதுவை தமிழ் எழுதி
|
சுரதா புதுவை தமிழ் எழுதி யுனிக்கோட் குறிமுறையில் கணினியில் தமிழில் எழுத உதவும் மென்பொருள் செயலி ஆகும். அஞ்சல் எனப்படும் தமிங்கில முறை, பாமினி, அமுதம், Tam ஆகிய தட்டச்சு முறைகளின் மூலம் இதில் எழுதலாம். ஜாவாஸ்க்ரிப்ட் மொழி கொண்டு எழுதப்பட்ட இச்செயலியை இலவசமாக இணையத்தில் இருந்தவாறும் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். இச்செயலியைக் கணினியில் நிறுவத் தேவை இல்லை என்பதால், இச்செயலியைப் பயன்படுத்த கணினிப் பயனருக்கு கணினியில் சிறப்பு அனுமதிகள் தேவை இல்லை.
இச்செயலி உலாவியின் உதவியுடன் குறிப்பிட்ட இணையப் பக்கத்தில் மட்டுமே இயங்கும். எனவே, பிற இணையப் பக்கங்கள், ஆவணங்களில் நேரடியாக இதைக் கொண்டு எழுத முடியாது. முதலில் சுரதா எழுதியில் எழுதி பிறகு அதை வெட்டி எடுத்து பிற பக்கங்களில் ஒட்ட வேண்டும்.
எனினும், இணையத்தில் தமிழில் எழுத முனையும் பலரும் அறிந்ததாகவும் அவர்களின் முயற்சிக்குத் தொடக்கக் கருவியாகவும் இவ்வெழுதி விளங்குகிறது.
தமிழ்க் கணினி உள்ளீட்டு மென்பொருள்கள்
|
7445
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88
|
மண் பானை
|
மண்பானை என்பது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் (பாத்திரம்/ஏனம்) ஆகும். பொதுவாக, உட்புறம் வெறுமென உள்ள உருண்டை வடிவில் இதன் அடிப்பாகமும் சிறிய கழுத்துப் பகுதியும் இருக்கும். களிமண் தொகுதியை சுழல விட்டு, கைகளைக் கொண்டு இதன் வடிவத்தை வரையறுத்து இவற்றை உருவாக்குவார்கள். பானை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் குயவர் என்று அழைப்பர்.
பானை கொள்கலனாக மட்டும் இன்றி ஓர் அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பானைகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கடம் என்ற கர்நாடக இசைக் கருவியும் பானை வடிவில் இருக்கிறது.
பானை செய்முறை :
இதில பலமுறைகள் உள்ளன அந்த மண்ணுக்கு ஏற்ப அவை மாறுபடும். மண்ணை நன்றாக குழைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் அல்லது கருப்பட்டி, உப்பு, கடுக்காய், வண்ண பவுடர்கள் (வண்ணத்துக்காக) சேர்த்து நன்றாக குழைத்து. அதற்காகவே செய்யப்பட்டுள்ள வண்டிச்சக்கரத்தின் நடுவில் வைத்து அச்சக்கரம் வேகமாக சுழலும்போது பானை செய்வார்கள் .
பானை வகைகள்
நம் தமிழகத்துள் வழங்கப்பெற்ற,வழங்கப்பெறும்) பானை வகையுள் சில.
அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
ஓதப் பானை - ஈரப் பானை
ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )
கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
கரிப்பானை - கரி பிடித்த பானை
கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)
காடிப் பானை - கழுநீர்ப் பானை
காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
கூர்ப் பானை - கூர் முனைப் பானை
கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை
சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
சின்ன பானை - சிறிய பானை
தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)
திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை
நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
படரப்பானை - அகற்ற - பெரிய பானை
பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
மிண்டப் பானை - பெரிய பானை
மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
முகந்தெழு பானை - ஏற்றப் பானை
முடலைப் பானை - உருண்டையுருவப் பானை
முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)
மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை
வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை
தமிழ் விக்சனரியின் இப்பக்கத்தில் 50க்கும் மேற்பட்ட பானைகளைக் கண்டறியலாம்.
பானைகள்
மேற்கோள்கள்
தமிழ் பொங்கல்
தமிழர் சமையல் கருவிகள்
மட்பாண்டங்கள்
en:Pottery
|
7452
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
|
கரும்பு
|
கரும்பு () என்பது சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் சக்கரம் ஆபிசினேரம். இது 'கிராமினோ' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தென் ஆசியாவில் சூடான வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, உண்பதற்கு இனிக்கும் சர்க்கரை நிறைந்த ஒரு இடை தட்ப வெப்ப நிலைத் தாவரம் ஆகும்.வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு பயிர் செழித்து வளரும் உலகெங்கும் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் ஹெக்டேர்களில் வானிகப் பயிராக கரும்பு பயிரிடப்படுகிறது. இது நீண்ட இழைமத் தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாக வளரும் இயல்புடையது. கரும்பு 6 அடி முதல் 19 அடி உயரம் வரை வளரக் கூடியது. புல் இனத்தைச் சேர்ந்த தாவரமான கரும்பு. மக்காச்சோளம், கோதுமை, அரிசி, மற்றும் பல தீவனப் பயிர்கள் உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவமான தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கரும்பில் பல கலப்பினங்களை உருவாக்கியுள்ளனர். கரும்பு ஒரு பணம் கொழிக்கும் வாணிகப் பயிராகும்.பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன.((க்யூபா)) அதிக அளவில் கரும்பு பயிரிடுவதால், 'உலகின் சர்க்கரை கிண்ணம்' என்று அழைக்கப்படுகிறது. கரும்பிலிருந்து பெறப்படும் முக்கியப் பொருள் சுக்ரோஸ் ஆகும். இது கரும்பின் தண்டுப்பகுதிகளில் சேர்த்து வைக்கப்படுகிறது. கரும்பாலைகளில் இதன் சாறினைப் பிழிந்து தூய்மைப்படுத்தப்பட்ட சுக்ரோஸ் பிரித்தெடுக்கப்படுகிறது.
வரலாறு
சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500 - ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் சீனாவுக்குப் பரவியது. 'சர்க்கரை' என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். கி.பி. 636 -ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. புறநானூற்றின் 99 ஆவது பாடல் அதியமான் என்ற சேரமன்னன் கரும்பைத் தமிழகத்தில் அறிமுகபடுத்தினான் என்கிறது.
தமிழர் பண்பாட்டில் கரும்பு
கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்று தமிழர் கருதுவர். ஆகையால், தைப்பொங்கல் போன்ற விழா நாட்களில் கரும்பு பகிர்ந்து மகிழ்வது வழமை.
கரும்பு என ஆரம்பிக்கும் தமிழ் பெயர்கள்:
கரும்பு, கரும்பமுதம், கரும்பமுது, கரும்பரசி, கரும்பழகி, கரும்பிசை, கரும்பூராள், கரும்பெழிலி, கரும்பு, கரும்புநகை, கரும்புமொழி, கரும்புவில், கரும்புவிழி.
கரும்புடன் தொடர்புடைய பழமொழிகள்:
கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?
காட்சி
வெளி இணைப்புகள்
கரும்பு ஆராய்ச்சி மையம், கோவை - இந்திய தலைமை கரும்பு ஆராய்ச்சி மையம்
கேன் இன்போ : விவசாயிகள் மற்றும் விரிவாக்கப் பணியாளர்களுக்கான இணைய தளம் - கோவை கரும்பு இனப்பெருக்கு நிலையம்.
தினமலர் செய்தி
ஒருவித்திலைத் தாவரங்கள்
பயிர்கள்
|
7459
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%20%28%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%29
|
சி (நிரலாக்க மொழி)
|
சி நிரலாக்க மொழி ('C' Computer Programming Language) என்பது கணினியில் பயன்படுத்தப்படும் ஒரு கணிமொழி. இது 1970 இல் அமெரிக்காவின் AT&T (அமெரிக்கத் தொலைத்தொடர்பு தொலைபேசி) ஆய்வுக்கூடத்தின் பிரையன் கேர்நிங்காம் (Brian Kernighan) மற்றும் டென்னிசு ரிச்சி (Dennis Ritchie) ஆகியோரால் உருவாக்கப் பட்டது.
தொடக்கத்தில் 1970இல் யுனிக்ஸ் இயங்குதளத்தில் மட்டுமே சி-மொழி இயங்கியது. பின்னர் ஏனைய இயங்குதளங்களிலும் இயக்கும் வசதியேற்பட்ட பின்னர் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் நிரலாக்க மொழியாக மாறியது. புதிதாகக் கணினி பயில்பவர்களுக்கு ஏற்ற மொழியாக இல்லாவிடினும் மிக விரைவாக இயங்கியதால் கணினி இயங்குதளங்களை உருவாக்கவும் வேறு பயனுள்ள மென்பொருள்கள் உருவாக்கவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வரலாறு
தொடக்க கால வளர்ச்சி
1969 க்கும் 1973 க்கும் இடையில் சி மொழியின் தொடக்க கால வளர்ச்சி நிகழ்ந்தது. டென்னிசு ரிச்சியின் கருத்துப்படி 1972 ஆம் ஆண்டில் தான் மிகமுக்கியமான வளர்ச்சிப்பணிகள் அமெரிக்காவின் AT&T பெல் ஆய்வுக்கூடத்தில் நடைபெற்றன. தொடக்கத்தில் BCPL (Basic Combimed Programming Lanaguage) ஐப் பின்பற்றி B என்னும் நிரலாக்கல் மொழி உருவாகியது. இதைத்தொடர்ந்து வந்த இம்மொழியின் பெயராக BCPL இல் இரண்டாவது எழுத்தான C ஐ எடுத்துக் கொண்டனர். பின்னர் ++ என்ற கூட்டல் குறியை இதன் வழிவந்த 'சி++' நிரலாக்க மொழிக்குச் சேர்த்துக் கொண்டனர்.
எடுத்துக்காட்டு
கீழ்கண்ட நிரலை விண்டோசு/டாஸ் (தமிழ் வரியை விட்டுவிடவும்) இயங்குதளங்களில் செயல்படுத்திப் பார்க்கவும். லினக்சில் gedit எனக் கட்டளையிட்டுப் பின்னர் கோப்பைச் சேமிக்க இயலும். லினக்ஸ் இயங்குதளத்தில் உள்ளவர்கள் கடைசி வரியையும் தட்டச்சுச் செய்து சோதிக்கலாம்.
#include <stdio.h>
void main()
{
printf("This is a C program\n");
printf("ஹலோ உலகமே \n")
}
இங்கு #include <stdio.h> என்ற கட்டளை சி மொழியில் தலைப்புக் கோப்பு எனப்படும். இங்கு h தலைப்பைக் (header) குறிக்கின்றது. இங்கு stdio என்பது Standard Input Outputஆக கணினிகளில் தரவுகளை உட்புகுத்துதல் மற்றும் வெளியிடுதல் செயலுக்காகத் தலைப்புக் கோப்பைச் சேர்ப்பதாகும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட நிரலாக்க முறையாக (கட்டாயம் என்றல்ல) <stdio.h> போன்ற <தலைப்புக் கோப்பு> சி மொழியின் செந்தரக் கோப்புக்களாகும். #include "programmercreated.h" என்பது நிரலாக்கர் ஒருவர் உருவாக்கிய தலைப்புக் கோப்பொன்றை சேர்க்கும் வழிமுறையாகும். ரேபோ சி எனும் தொகுப்பி "நிரலர் உருவாக்கிய தலைப்புக் கோப்பு வரி ஒன்றைக் காண்கையில் முதலில் நிரலரின் இயங்கிக் கொண்டிருக்கும் கோப்புறையுள் இக்கோப்பினைத் தேடிவிட்டே பின்னர் நியமத் தலைப்புக் கோப்புள்ள இடத்தில் அதனைத் தேடும்.
main () இங்குள்ள முதன்மை செயற்கூறு (function) ஆகும். இங்கிருந்தே நிரலாக்கத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கும். இதில் void என்பது இயங்குதளத்திற்கு எதையும் திருப்பி அனுப்புவதில்லை என்பதாகும். மைக்ரோசாப்ட் தொகுப்பிகளான விசுவல் சி++ போன்றவை இதை int அதாவது இலக்கம் என்றவாறு எதிர்பார்த்து ஓர் எச்சரிக்கைச் செய்தியொன்றைத் தரும். இதைத் தவிர்க்க விரும்பினால் int main() என்றவாறு ஆரம்பித்து கடைசியாக } இற்கு முன்னால் return 0; என்று சேர்க்கலாம். இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று என்னவென்றால் பஸ்கால் நிரலாக்கல் மொழி (அல்லது பாஸ்கல்) போன்றல்லாமல் இங்கே ; அரைநிறுத்தற்குறியானது (செமிகோலன்) கூற்றுக்களை வேறாக்குவதால் (Statement Separator) அல்ல கூற்றுக்களை முடிவடைக்கும் கூற்றாகும் (Statement Terminator). பஸ்கால் மொழி main பக்ஷன் நிரலின் இறுதியில் அல்லாமல் நிரலின் எந்தப் பகுதியிலும் இருக்கலாம். நிரல் main பகுதியில் இருந்தே செயற்பட ஆரம்பிக்கும்.
இதில் தமிழில் சேர்க்கப்பட்டுள்ள கடைசிவரி லினக்ஸ் இயங்குதளத்தில் சோதனைசெய்யலாம் விண்டோஸ் இயங்கு தளத்தின் டாஸ் (DOS) prompt தமிழையோ ஏனைய இந்திய மொழிகளையோ ஆதரிக்காது என்பதால் கடைசி வரியை விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள நிரலாக்கர்கள் விட்டுவிடவும். லினக்ஸ் Termninal தமிழை ஆதரிக்கும் எனினும் அதுவும் திருப்பதி கரமானதல்ல என்பதையும் கவனிக்க.
{ செயற்பாட்டின் தொடக்கம்
printf() ஆனது print funtion ஆகும். இந்த நிரலின் வெளிப்பாடு This is a C program என்பதைக் கணினித் திரையில் காட்டும். இதில் \n எனது புதிய வரியைச் சேர்ப்பதாகும் (new line feed). எனவே நிரலை இயக்கியவுடன் cursor அடுத்த வரியில் வந்து நிற்கும்.
} செயற்பாட்டின் முடிவு
இப்போது நீங்கள் விண்டோஸ் அல்லது டாஸ் இயங்குதளத்தில் இருந்து ரேபோ சி கம்பைலரைப் பாவித்தால் F9 ஐப் பாவித்து நிரலை இயக்கலாம். லினக்ஸ் இயங்குதளங்களில் terminal இல் gcc -o desniation source.c என்றவுடன் கம்பைல் பண்ணும், இதைப் பின்னர் ./destination (உருவாக்கப்பட்ட Binary கோப்பு) என்றவாறு கொடுத்து terminal இல் இயக்கலாம்.
இந்த நிரலில் பெட்டி[stack] முறையில் சேமிக்கலாம்.
#include <stdio.h>
#include <ctype.h>
#include <math.h>
#define MAX 100
int top=-1;
int stack_arr[MAX];
int main()
{
register int choice;
void push(),pop(),display();
while(1)
{
printf(" இந்த நிரலில் பெட்டி[stack] முறையில் சேமிக்கலாம். உங்கள் தேர்வை கொடுக்க \n ");
printf("1.ஏற்று\n 2.நீக்கு\n 3.காண்பி\n 4.மூடு\n\n உங்கள் தேர்வு [1 - 4]: ");
scanf("%d",&choice);
switch(choice)
{
case 1:
push();
break;
case 2:
pop();
break;
case 3:
display();
break;
case 4:
break;
default:
printf("தவறான தேர்வு \n" );
break;
}
}
return 0;
}
void push()
{
register int pitem;
if(top==(MAX-1))
printf("பெட்டியில் இடமில்லை \n");
else
{
printf("ஏற்ற வேண்டிய பொருளை கொடுக்க : ");
scanf("%d",&pitem);
top=top+1;
stack_arr[top]=pitem;
printf("பொருள் ஏறிற்று \n" );
}
}
void pop()
{
register int temp;
if(top==-1)
printf("பெட்டி காலி \n");
else
{
printf("நீக்கபட்ட பொருள் : %d \n",stack_arr[top]);
temp=stack_arr[top];
top=top-1;
}
}
void display()
{
register int i;
if(top==-1)
{
printf("பெட்டி காலி \n");
}
else
{
printf("பெட்டி பொருள்கள் : \n");
for(i=top;i>=0;i--)
printf("%d \n",stack_arr[i]);
}
}
உசாத்துணை
வெளி இணைப்புகள்
பயிற்சிகள்
விக்கி நூல்கள் தளத்தில் C Programming.
Everything You Ever Wanted to Know about C Types
C Programming (course at University of Strathclyde Computer Centre)
The C Book by M.Banahan-D.Brady-M.Doran (Addison-Wesley, 2nd ed.) — A very interesting and complete book for beginners/intermediate, now off-print and free.
C Unleashed by Richard Heathfield and others contributors in comp.lang.c (Sams) — An interesting book about advanced ISO-C.
Essential C — Short C guide, great for programmers new to C.
Everything you need to know about pointers in C.
வளங்கள்
சி-மொழிப் பாடங்கள்
சி-மொழிப் பாடங்கள்
C பற்றிய எண்ணங்கள் இலவச மின்னூல் .
சி மொழியின் அடிப்படைத் தத்துவங்கள் .
ISO C Working Group (அதிகாரப்பூர்வத்தளம்)
comp.lang.c அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்.
comp.lang.c Wiki.
GNU C Library documentary (மூல நிரல்களை பதிவிறக்கலாம்)
Programming in C (document collection at Lysator)
The New C Standard: An economic and cultural commentary — "detailed analysis of the International Standard for the C language. (PDF)" பற்றிய இன்னும் பதிக்கப்படாத புத்தகம்.
போர்லாண்ட் ரேபோ C இலவசப் பதிவிறக்கம்.
Optimization techniques
Programming Optimization
C optimization tutorial
International Obfuscated C Code Contest
C99
The current Standard (C99 with Technical corrigenda TC1 and TC2 included) – in PDF
Open source development using C99 — Is your C code up to standard? by Peter Seebach
Are you Ready For C99?
உதவி
C மன்றம் Cprogramming.com ல்
C and C++ டானி வெப்பில்
வரலாறு
சி மொழியின் விருத்தி டெனிஸ் எம். ரிட்சி ஆல் எழுதப்பட்டது
பணிமுறை நிரலாக்க மொழிகள்
நிரல் மொழிகள்
அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்
பல்லியக்குதள மென்பொருட்கள்
|
7464
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
|
நீலாவணன்
|
நீலாவணன் (மே 31, 1931 - சனவரி 11, 1975) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மஹாகவி, முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர். நீலா-சின்னத்துரை, அம்மாச்சி ஆறுமுகம், கொழுவுதுறட்டி, வேதாந்தி, நீலவண்ணன், எழில்காந்தன், *இராமபாணம், சின்னான் கவிராயர் ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்.
வாழ்க்கைச் சுருக்கம்
கவிஞர் நீலாவணன் அம்பாறை மாவட்டம் முன்னர் மட்டக்களப்பு மாவட்டம், பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்த வைத்தியர் கேசகப்பிள்ளை, தங்கம்மா ஆகியோரின் மூத்த புதல்வர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே ‘நீலாவணன்’ என்னும் புனைபெயருடன் எழுதி வந்தார்.
எழுத்துலகில்
இவர் 1948 இல் இருந்து எழுதத் தொடங்கினார். 1952 இல் இவரது பிராயச்சித்தம் என்ற சிறுகதை சுதந்திரனில் வெளியானது. கே. சி. நீலாவணன் எனும் புனைபெயரில் 1953 இல் சுதந்திரனில் வெளியான ‘ஓடி வருவதென்னேரமோ?’ எனும் கவிதை மூலம் கவிஞராக அறிமுகம் ஆனார். 1963 இல் எழுதிய ‘மழைக்கை’ கவிதை நாடகம் முதன் முதல் மேடை ஏறிய கவிதை நாடகமாகும். ‘மழைக்கை’ 1964 இல் வீரகேசரியிலும் வெளிவந்தது.
மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள், பழக்கவழக்கங்களை நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாக பதிவு செய்து கொண்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் இதுவரை செய்யவில்லை. மட்டக்களப்பு வாழ்க்கை முறை, சடங்குகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கக் கூடியவை. இவரது இறுதிக் கவிதை ‘பொய்மை பொசுங்கிற்று’ என்பதாகும்.
இலக்கிய இதழ்
1967 இல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து, ‘பாடும் மீன்’ என்னும் இலக்கிய இதழை நடத்தினார். இரண்டு இதழ்களே வெளி வந்தது.
குடும்பம்
இவரது துணைவியார் அழகேஸ்வரி (அழகம்மா) சின்னத்துரை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு எழில்வேந்தன், வினோதன் ஆகிய இரு புதல்வர்களும் எழிலரசி, ஊர்மிளா, கோசலா ஆகிய மூன்று புதல்விகளும் உள்ளனர்.
வெளிவந்துள்ள நூல்கள்
வழி (கவிதைத் தொகுதி - சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது),
வேளாண்மை (காவியம்)
ஒத்திகை (கவிதைத் தொகுதி)
ஒட்டுறவு (கதைத் தொகுதி)
நீலாவணன் பா நாடகங்கள் (பா நாடகங்கள்)
நீலாவணன் காவியங்கள் (காவியங்கள்)
நீலாவணன் பற்றிய நூல்கள்
கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் - நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும் (ஆசிரியர்: கலாநிதி சி. மௌனகுரு, மார்ச் 1994)
நீலாவணன் - எஸ். பொ. நினைவுகள் (ஆசிரியர்: எஸ். பொ, செப்ரெம்பர் 1994)
மேற்சான்றுகள்
வெளி இணைப்புக்கள்
நீலாவணன் பற்றிய வலைத்தளம்
கவிஞர் நீலாவணனின் வாழ்க்கைக் குறிப்புகள்
கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும்
ஈழத்து எழுத்தாளர்கள்
1931 பிறப்புகள்
1975 இறப்புகள்
ஈழத்துக் கவிஞர்கள்
மட்டக்களப்பு மாவட்ட நபர்கள்
|
7475
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
|
புனித டேவிட் கோட்டை
|
புனித டேவிட் கோட்டை கடலூா் அருகிலுள்ள ஒரு பிரித்தானியக் கோட்டையாகும். இது இந்தியாவின் சோழ மண்டல கடற்கரையோரமாகச் சென்னையில் இருந்து நூறு மைல்கள் தொலைவில் கடலூர் அருகே உள்ளது. இது 1650 இல் மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் வாங்கப்பட்டது. 1756 இல் ராபர்ட் கிளைவ் புனித டேவிட் கோட்டையின் ஆளுனராகப் பதவி வகித்தார்.
வரலாறு
கெடிலம் ஆற்றங்கரையில் அழிபாடுகளாக உள்ள புனித டேவிட் கோட்டை குறிப்பிடத்தக்க வரலாற்றை உடையது. செஞ்சி மன்னர்களால் கட்டப்பட்ட சிறிய கோட்டையாயிருந்த இது 1677 இல் செஞ்சிக் கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் மராட்டியரின் கைக்கு வந்தது. மராத்தியர்களிடமிருந்து பிரித்தானியரால் 1690 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையும் மற்றும் சுற்றிலும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களும் மொத்தமாக வாங்கப்பட்டன. இதன்பிறகு இக்கோட்டைக்கு சென்னை ஆளுநரான எலிகு யேல், புனித டேவிட் கோட்டை என்று பெயரிட்டார். மேலும் கோட்டையை வலுப்படுத்தானார். கோட்டை, மற்றுமுள்ள இடங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்காக விநோதமான வழிமுறை கையாளப்பட்டது.
கோட்டையில் இருந்து வானை நோக்கி ஒரு பீரங்கிக் குண்டு சுடப்பட்டு, அந்த பீரங்கிக் குண்டு விழுந்த இடம் வரை கோட்டைக்குச் சொந்தமான பகுதியாக கைக்கொள்ளப்பட்டது. இன்றும் அந்தக் கிராமங்கள் ‘பீரங்கிக்குண்டு கிராமங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. 1693, 1698, 1702, 1725, 1740, 1745 ஆகிய ஆண்டுகளில் மேலும் மேலும் படிப்படியாக கோட்டை விரிவுபடுத்தப்பட்டதோடு வலுப்படுத்தவும் பட்டு வந்தது. 1745இல் ராபர்ட் கிளைவ் இதன் காவலில் நன்கு கவனம் செலுத்தினார்.
தெனிந்தியத் தலைநகர்
கி.பி. 1746ஆம் ஆண்டில் இக்கோட்டை பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே ஆண்டில் பிரெஞ்சு ஆளுனர் டூப்ளேயின் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது. 1756ஆம் ஆண்டு இராபர்ட் கிளைவ் பிரித்தானிய ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். பிரெஞ்சுக்காரா்கள் இதனை 1758ஆம் ஆண்டு கைப்பற்றினார். 1782ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்ட இக்கோட்டை 1783ஆம் ஆண்டு பிரித்தானியர் தாக்குதலின்போது வெற்றிகரமாகப் பாதுகாக்கப்பட்டது. அதன் பின் 1785ஆம் ஆண்டு இறுதியாக பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
மேலும் காண்க
சிரின்கர் லாரன்சு
கடலூர் சண்டை
கடலூர் முற்றுகை
மேற்கோள்கள்
தமிழகக் கோட்டைகள்
கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள்
|
7480
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
|
இசைச் சொற்பொழிவு
|
சங்கீத கதாப்பிரசங்கம் என்ற வடமொழிச் சொற்றொடரால் பரவலாக அறியப்படும் இசைச் சொற்பொழிவு, பெரும்பாலும் இந்து சமயக் கதைகளையும் கருத்துக்களையும் மக்களிடையே பரப்புவதற்கான ஒர் ஊடகமாகப் பயன்பட்டு வருகிறது. இது, சமயம் சார்ந்த புராணங்களையும், கருத்துக்களையும் இடையிடையே பாடப்படும் இசைப் பாடல்களின் துணையோடு மக்களுக்குச் சுவைபட எடுத்துக்கூறும் ஒரு கலையாகும். இவ் இசைச் சொற்பொழிவில் இயல், இசை, நாடகம் என முத்தமிழும் விரவி வரவேண்டும். இயல், இசையோடு ஏற்ற இறக்கம், உச்சரிப்புக்கள், தனியுரை, இசையிட்ட உரை, நாடகத்திற்கு புலப்படுவது போல் நல்ல முகபாவனைகள் கொண்டு முற்று முழுதாக இவ்வம்சங்களைக் கொண்டு அமைவதே இசை சொற்பொழிவாக அமைகிறது. இவ்வகைக் கலையில் இசைப் பக்கவாத்தியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை சொற்பொழிவு தோன்றியது எனுபதற்கான ஆதாரங்கள் கிடையாது.
காதாப்பிரசங்கியார்கள்
திருமுருக கிருபானந்த வாரியார்
ஆறுமுக நாவலர்
ந. சிவசண்முகமூர்த்தி
கலைகள்
கருநாடக இசை
|
7481
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
ஒத்துழையாமை இயக்கம்
|
ஒத்துழையாமை இயக்கம் (Non-cooperation movement) என்பது இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமாகும். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பெப்ரவரி 1922 வரை தொடர்ந்தது.
ரவ்லட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இந்தியர்கள் காலனிய அரசுடன் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசுப் போக்குவரத்து, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன. இவ்வியக்கத்தைக் காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஒத்துழையாமையின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.
ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த போதே காந்தியால் திடீரென்று திருப்பிப் பெறப்பெற்றது. பெப்ரவரி 5, 1922ல் உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. காவல் துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது. அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க, அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது.
ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றது காங்கிரசு உறுப்பினர்களிடையெ கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இச்செயல் பல தேசியவாத இளைஞர்களை ஆயுதப்புரட்சி இயக்கங்களில் சேரத்தூண்டியது. வன்முறையைத் தடுக்க காந்தி பாடுபட்டாலும் காலனிய அரசு அவர் மீது ஆட்சிவிரோத எழுத்துகளை வெளியிட்டார் என்று குற்றம் சாட்டி ஆறாண்டுகள் சிறையிலடைத்தது.
மேற்கோள்கள்
இந்திய விடுதலைப் போராட்டம்
காந்தியம்
எதிர்ப்புப் போராட்ட வடிவங்கள்
அறப் போராட்ட அமைப்புகள்
|
7483
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
சைவ சமயம்
|
சைவ சமயம், சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. சிவம் என்ற சொல் பல நூற்றாண்டு திரிபு சொல்லாக மாறி சைவம் என்று மாறியதாகக் கூறப்படுகிறது. இச்சைவ நெறி சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். இன்றைய இந்து மதத்தின் ஒரு பிரிவாக அமைந்துள்ளது.
சைவ வரலாறு
சிவபெருமான் அனைவருக்கும் உரிய இறைவனாகக் கருதப்படுகிறார். ஆயினும் சிவபெருமானின் அடிகளாராக விளங்கிய 63 நாயன்மார்களால் சைவம் என்று சிவபெருமானின் தனித்தன்மையை விளக்குவதற்குச் சைவ வழியைத் தோற்றுவித்தனர்.
இந்தியாவின் ஆதி கிளைநெறிகளில் அமைந்து விளங்கும் சைவமும் வைணவமும் பின்நாட்களில் இந்து சமயத்தின் பெரும்பான்மையானோர் பின்பற்றும் சமயமாகக் காணப்படுகின்றன.
இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று குறிப்பிடுகின்றது.
சைவ சமயத்தின் முழு முதற் கடவுளாகச் சிவபெருமான் விளங்குகிறார். உமை, விநாயகர், முருகர், பரமனின் (சிவபெருமானின்) அம்சமான பரிவார கடவுள்கள் பைரவர் (வீரத்தின் அதிபதி), தட்சிணாமூர்த்தி/பரமகுரு (ஞானத்தின் அதிபதி), வீரபத்திரர், நாகதம்பிரான் மற்றும் சிறு தெய்வ வழிபாட்டு தெய்வங்களும் சைவ சமயத்தவரின் வழிபாட்டுத் தெய்வங்களாகச் சைவர்களால் வழிபடப்படுகின்றன.
திருக்கயிலையில் நந்தி தேவர் பணிவிடை செய்ய, விநாயகரும், முருகனும் அருகிருக்க பார்வதி துணையிருக்க வீற்றிருக்கும் சிவபிரானே சைவர்களின் பரம்பொருளாக விளங்குகின்றார். பொ.பி 12-ஆம் நூற்றாண்டில் தன் உச்சத்தை அடைந்திருந்த சைவநெறி, ஆப்கானிஸ்தான் முதல் கம்போடியா வரையான தெற்காசியா - தென்கிழக்காசியா முழுவதற்குமான தனிப்பெரும் நெறியாக விளங்கியமைக்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
இன்றைக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், காஷ்மீர், நேபாளம், தமிழீழம், வங்காள தேசம், மலேசியா முதலான பகுதிகளில் வாழும் மக்களின் முதன்மையான சமயமாகச் சைவமே திகழ்கின்றது.
சைவ முறை பெயர்
சிவபெருமான் – பரமசிவன்
பார்வதி – பராசக்தி
பிள்ளையார் – விநாயகமூர்த்தி
ஐயப்பன் – ஹரிஹரபுத்திரர்
முருகர் – சண்முகநாதா
தட்சிணாமூர்த்தி – பரமகுரு
பைரவர் – திகம்பரர்
தோற்றம்
பழங்குடித் தொடர்ச்சி
இமய மலைச் சாரலில் வாழ்ந்த மலைக்குடி வேடுவர்களின் நீத்தார் வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்திருக்கின்றது என்று நம்பப்படுகின்றது. சைவம் என்ற சொல்லின் சரியான தமிழ் வடிவம் சிவனியம் ஆகும். இமயம் காலத்தால் பிந்தியது என்பதால், தென்னகத்தே எழுந்த இன்னொரு மலைத்தெய்வ வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்து, மக்கள் குடிப்பெயர்ச்சியால் இமயம் வரை நகர்ந்திருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. சிவனை உருவகிப்பதில் சாம்பல் பூசுதல், புலித்தோலாடை தரித்தல், மானையும் மழுவையும் கையில் வைத்திருத்தல், பன்றிக்கொம்பு, எலும்புகளை அணிதல் போன்ற பழங்குடிகளின் கூறுகள் முக்கிய பங்கு வகிப்பதால், பல இனக்குழுக்களின் கலப்பின் விளைவாகப் பிறந்த பெருந்தெய்வமே சிவன் எனலாம். நாகர் பழைமை வாய்ந்த தனி இனம் என்று வழக்காடுவோர், சிவனின் அணிகலனாக நாகங்கள் காணப்படுவதைக் கொண்டு, சிவன் நாகரின் தெய்வம் என்பர். சிவ இலிங்க வழிபாட்டுக்கு அடிப்படையாக நடுகல் வழிபாடே அமைந்திருக்கலாம் என்ற கருதுகோளும் உண்டு. இத்தகைய சான்றாவணங்களால், சிவ வழிபாடு மிகத்தொன்மையானது என்றும், மானுடர்களின் மிகப்பழைய தெய்வங்களில் ஒருவன் சிவன் என்றும் அறியமுடிகின்றது.
சிந்துவெளி நாகரிகச் சான்றுகள்
பொ.ஊ.மு. 2500 முதல் 2000 வரை நிலவியதாகக் கருதப்படும் சிந்துவெளி நாகரிகக் களவெளிகளில் கிடைத்த சில ஆதாரங்கள், அக்காலத்தே கூட, சிவ வழிபாடு நிலவியிருக்கக்கூடும் என்ற ஊகத்தை வலுப்படுத்துவனவாக இருக்கின்றன. மொகெஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் சிவலிங்கத்தை ஒத்த பல கற்கள் கிடைத்துள்ளன. இருகொம்புகளுடன் விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் மனித உருவ முத்திரை, ஈசனின் "பசுபதித்" தோற்றத்தைக் குறிக்கின்றது என்றும் அதுவே மிகப்பழைய முந்து-சிவன் சிற்பம் என்றும் சிந்துவெளி ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்திருந்தனர். அதைக் கூர்ந்து ஆராய்ந்த பலர், அது சிவவடிவம் என உறுதியாகச் சொல்லமுடியாதென்றும், எனினும் அமர்ந்திருக்கும் நிலை, தெளிவற்றுத் தெரியும் மூன்று முகங்கள், பிறைநிலா எனக் கொள்ளக்கூடிய இரு கொம்புகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, இது சிவன் எனும் பெருந்தெய்வம் எழுவதற்கு முந்திய வடிவமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர்.
வேதக் காலச் சைவம்
பொ.ஊ.மு. 1500-க்கும் 500-க்கும் இடைப்பட்ட வேதக்காலத்து நூல்களில் வருகின்ற உருத்திரன், இயமன் முதலான தெய்வங்களின் கலவையாகவே பின்னாளில் சிவன் எழுந்தான் என்பர். இருக்கு வேதத்தில், எவ்வித முகன்மையும் இல்லாமல், மிகச்சில பாடல்களிலேயே போற்றப்படும் உருத்திரன், யசுர் வேதத்தின் திருவுருத்திரப் பகுதியில், இன்றைய சிவனாக வளர்ந்து நிற்பதைக் காணலாம். வேதங்களை அடுத்து உருவான உபநிடதங்களில் பலச் சிவ வழிபாட்டைப் போற்றுவதிலிருந்து, வேதக்காலத்தின் பிற்பகுதியிலேயே சிவன் இன்றைய வழிபாட்டு முகாமையை அடைந்துவிட்டதை அறியமுடியும்.
தென்னகச் சைவம்
சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் காணப்பட்டாலும் அவை கிறித்துவுக்குப் பிந்தியவை என்பது பொதுவான கருத்தாகக் காணப்படுகின்றது. எனினும் தமிழக மற்றும் இலங்கையில் பொறிக்கப்பட்ட கிறித்துவுக்கு முந்திய பிராமி ஆவணங்களிலும் நாணயங்களிலும் காணப்படும் "சிவ" என்ற பெயரும், நந்தி, திரிசூலம், பிறைநிலா முதலான சிவச்சின்னங்களும், தென்னகத்தில் பல்லாண்டுகளாகவே சைவம் நிலவிவந்ததற்குச் சான்று கூறும்.
சைவத்தின் எழுச்சி
தெளிவான அடையாளங்களுடன், சைவமானது முழுமையான ஒரு மதமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டது, பொ.ஊ.மு. 3 முதல் பொ.ஊ. 2-ம் நூற்றாண்டுகட்கு இடையில் என்று சொல்லப்படுகின்றது. பொ.ஊ.மு. 6–4-ம் நூற்றாண்டுகளுக்கு இடையே தொகுக்கப்பட்ட சுவேதாசுவதரமே மிகப்பழைமையான சைவ நூலாகக் கொள்ளப்ப்படுகின்றது. உலக இன்பங்களைத் துறந்து கடுநோன்புகள் புரிந்து தாந்திரீக நெறியில் சிவனை வழிபடும் வழக்கம், கிறித்து காலத்திலேயே தொடங்கிவிட்டது. இவர்கள் "பாசுபதர்" என்று அறியப்பட்டனர். பாணினியின் அஷ்டாத்யயி எனும் சங்கத இலக்கண நூலுக்கு பதஞ்சலி முனிவர் எழுதிய மாபாடிய உரையில் (பொ.ஊ.மு. 2-ம் நூற்றாண்டு), பாசுபதர் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகின்றது. பாசுபதரில் தலைசிறந்தவரான இலகுலீசர் இக்காலத்திலேயே (பொ.ஊ.மு. 2 முதல் பொ.ஊ. 2-ம் நூற்றாண்டு) தோன்றி, பாசுபத நெறியை வளப்படுத்தியதாகத் தெரிகின்றது.
இலகுலீசருக்குப் பின் அவர் ஏற்படுத்திய புரட்சி, பாசுபதத்திலிருந்து, காளாமுகம், காபாலிகம் எனும் இரு கிளைச்சைவங்களை அடுத்தடுத்து உருவாக்கியது. இவை மூன்றும் ஆதிமார்க்கம் என்றே அறியப்பட்டதுடன், துறவிகளுக்கு, குறிப்பாக அந்தணராகப் பிறந்து சைவத் துறவிகளாக மாறியோரால் மாத்திரமே கடைப்பிடிக்கப்பட்டது. வைணவம், புத்தம், சமணம் முதலான நெறிகளுடன் இவைகொண்ட உரையாடல்கள், சைவத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச்சென்றதுடன், பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்குப் பின் சைவம் மாபெரும் சமயமாக எழுச்சி பெறுவதற்கான உறுதியான கால்கோள்களாக விளங்கின.
சைவத்தின் உன்னதக்காலம்
பொ.ஊ. 600 முதல் 1200 வரையான காலம், சைவத்தின் பேரெழுச்சிக் காலமாக அறியப்படுகின்றது. ஆதிச் சமயத்துக்குப் பின் உருவான சித்தாந்தமும், வாமம், தட்சிணம் முதலான புறச்சித்தாந்த நெறிகளும் மந்திரமார்க்கம் எனும் பிரிவைச் சைவத்தில் தோற்றுவித்தன. இவை துறவிகளுக்கு மாத்திரமன்றி, இல்லறத்தாருக்கும் உலகியல் இன்பங்களுக்கும் உரிய முன்னுரிமை கொடுத்ததால், தீவிரமாக மக்கள் நடுவில் பரவலாயிற்று. சமணம், புத்தம் என்பவற்றுக்கு எதிராக, அப்பர், சம்பந்தர் முதலான நாயன்மார், பத்தி (பக்தி) இயக்கத்தை ஏற்படுத்தி, சமூக மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தனர். வடநாட்டில் இதே காலத்தில் உருவான புராணங்கள் மக்கள் நடுவில் சைவத்தை எடுத்துச்செல்லலாயின.
இக்காலத்தில் சைவம், இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமன்றி, தென்கிழக்காசியா வரை கூட மிகச்சிறப்புடன் திகழ தொடங்கியது. பாதாமி சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் (பொ.ஊ. 660), கீழைக்கங்கன் தேவேந்திரவர்மன் (பொ.ஊ. 682/683), காஞ்சியின் இரண்டாம் நரசிம்ம பல்லவன் (பொ.ஊ. 680–728) போன்றோர், சைவ மதத் தலைவர்களிடம் மகுடம் பெற்றே பட்டம்சூடிக்கொண்டதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. கம்போடியாவின் அங்கோர் வழிதோன்றலின் முதல் மன்னன் ஈசானவர்மனும் சைவத்துறவியிடமே அரச மணிமுடி பெற்றுக்கொண்டதும், சாவகத்து மயாபாகித்துப் பேரரசு மன்னன் விசயன், சைவ அரச மகுடம் பெற்று நாட்டை ஆண்டதும், தென்கிழக்காசிய வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, துறவிகளின் மதமாக இருந்த சைவம், அரச ஆதரவைப் பெற துவங்கியதுடன், அதற்கு முன் அரச ஆதரவைப் பெற்றிருந்த சமணம், பௌத்தம் என்பவற்றைத் தன் மெய்யியல் செழிப்பால் தோற்கடித்துத் தன்னை வலுப்படுத்திக்கொண்டது.
பிற்காலம்
காஷ்மீரில் பல்கிப்பெருகிய சைவநெறி, தொடர்ச்சியான முகலாயப் படையெடுப்பால் தென்னகம் நாடவேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே சைவம் செழித்திருந்த தென்னகம், சைவத்தை மேலும் வரவேற்றதுடன், காசுமீரில் தோன்றி வளர்ந்துகொண்டிருந்த சித்தாந்த மந்திரமார்க்கத்தை மேலும் வலுப்படுத்தி, இந்திய மெய்யியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, சமற்கிருதம் அல்லாத வேற்றுமொழியொன்றில் - தமிழில் - சைவ மெய்யியலொன்றைத் தோற்றுவித்து வரலாறு படைத்தது. அதேகாலத்தில் பிராமண எதிர்ப்புடன் கன்னடத் தேசத்தில் தோன்றிய வீர சைவம் சாதிமத வேறுபாடின்றி, அனைவரிடமும் சைவத்தைக் கொண்டு சேர்த்தது. இவ்வாறு, தமிழகம், காசுமீர், கன்னடம் ஆகிய மூன்று பகுதிகளும், சைவச் சமயத்தின் தவிர்க்கமுடியாத - இன்றியமையாத பாகங்களாக மாறிப்போயின.
சைவக் கிளைநெறிகள்
ஊர்த்தசைவம், அனாதி சைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேத சைவம், அந்தரசைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், இயோகசைவம், ஞானசைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபாதசைவம், சுத்தசைவம் என்று பதினாறு வகைப்பட்டதாய்ச் சிவனைப் பரதெய்வமாகக்கொண்டு வழிபடுஞ் சமயம், சைவம் ஆகும்.
காசுமீர சைவம்
வீர சைவம்
சிவாத்துவைதம்
பாசுபதம்
காபாலிகம்
காளாமுகம்
இவற்றின் மெய்யியல்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. சைவச் சித்தாந்தத்தை மெய்யியலாகக் கொண்டு விளங்குவது சித்தாந்தச் சைவம், இந்தியாவில் மட்டுமன்றி நேபாளம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது.
சைவ மெய்யியல்
வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (பற்று) என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய உயிரே பதியின் இடையறாத கொடையால் (அ) உதவியால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்டகால பட்டறிவில் பாசத்தடையில் (பற்றிலிருந்து) இருந்து நீங்கிப் பதியைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்தன்மையான பண்பாகும்.
சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும் சிவாகமங்கள் இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான ஆலயமும் ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் வினை யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல் பூசை செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும்.
கொலை, களவு, கள் குடித்தல், ஊன் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல் போன்றவற்றினை சைவம் குற்றம் என்கிறது. இதனைச் செய்பவர்கள் நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை உய்ப்பர் (அனுபவிப்பர்) என்கிறது. புண்ணியம், பதிப் புண்ணியம் பசுப்புண்ணியம் என இருவகைப்படும். பதிப் புண்ணியம் சிவப்புண்ணியம் எனவும்படும். பசுப் புண்ணியம் உயிர்புண்ணியம் எனவும் படும். பதிப் புண்ணியம், சிவப் பெருமானை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் ஆகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கிச் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பசுப்புண்ணியம் ஆகும். பதிப் புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முத்தியைக் கொடுக்கும். பசுப் புண்ணியங்களுக்கும் பயன் உண்டு; ஆனால், அப்பயன் உணர்ந்து முடிந்ததும் அழிந்துவிடும். பதிப் புண்ணியப்பயன் சிவப் பெருமானால் உணரப்படாததால், அழிவதில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும்.
“பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்." - சிவஞானபோதம் 8:1
இதன் பொருள் பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசுப் புண்ணியம்; அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்பு உண்ட உணவின் பயன் உணரப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசுப் புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது.
சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவப் புண்ணியமாகும், மேலும் 1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றனவும் புண்ணியத்தில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு புண்ணியங்களைச் செய்தவர்கள் சிவ இன்பத்தையும், உயிர் புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் உய்ப்பர் என்று சைவர்கள் நம்புகிறார்கள். சைவ அடியாளர்கள் உடலில் திருநீறு அணிய வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும்.திருநீறு அணிந்து சிவப்பெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும். தூய நீர் கொண்டு காலை வழிபாடு செய்துத் திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள் ஓத வேண்டும்.
சைவ அடியவர்கள்
சைவ உலகில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். இவர்களைச் சைவசமயக் குரவர்கள் என்றும் அழைப்பர். சந்தானக் குரவர் என்போர் இவரிலும் வேறுபட்ட, மெய்யியல் சான்றோர். வீரச் சைவருக்கு பசவர் முதலான சரணரும், காசுமீரிகளுக்கு அபிநவகுப்தர், வசுகுப்தர் முதலானோரும், சிரவுத்தருக்கு அப்பைய தீட்சிதர், ஸ்ரீகண்டர், அரதத்தர் ஆகியோரும், நாத சைவருக்கு கோரக்கர் முதலானோரும் முதன்மையான சைவப்பெரியோர்.
சைவ நெறி நூல்கள்
சைவ ஆகமங்கள் முதன்மையான சைவநூல்கள். வடநாட்டில் வழக்கிலுள்ள பைரவத் தந்திரங்களும் இத்தகையன. தமிழ்ச் சைவருக்குப் பன்னிரு திருமறைகள், பதினான்கு சாத்திரங்கள் முதன்மையானவை. வீரச்சைவருக்கு வசன சாகித்தியம், நாதச் சைவருக்கு சித்தச் சித்தாந்தப் பத்ததி, சிரவுத்தருக்குச் சுருதிச் சூத்தி மாலை என்று சைவ நூல்கள் அளவில.
இவற்றையும் காண்க
சைவ சமய மடங்கள்
சைவ நெறி இலக்கியங்கள்
சைவச் சிற்றிலக்கியங்கள்
உலக சைவ மாநாடுகள்
சைவக் கிரியை
சைவ தத்துவங்கள்
சைவத் திருமணச் சடங்கு
நாயன்மார்
சமயக்குரவர்
சந்தானகுரவர்
ஆதாரங்கள்
உசாத்துணை
க. கணேசலிங்கம், சைவசித்தாந்த வினாவிடை, கொழும்பு, 2005
வெளி இணைப்புகள்
சைவம்.ஒர்க்
Myth of Divine Tamil - Article from Passions of the Tongue by Sumathi Ramaswamy
சிவார்ச்சனா சந்திரிகை
தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை
சைவ சமயம்
|
7491
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
|
குறிஞ்சி
|
குறிஞ்சி என்ற சொல் பல்வேறு இடங்களில் பின்வருமாறு பயன்படுகிறது.
குறிஞ்சி (திணை)
குறிஞ்சிச் செடி
குறிஞ்சி (இராகம்)
குறிஞ்சிப் பாட்டு
குறிஞ்சிக்கலி
|
7497
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE
|
மணிலா
|
மணிலா ( Manila ) , பிலிப்பீன்சு நாட்டின் தலைநகரமும் , கியூசான் நகரத்திற்கு அடுத்தப்படியாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது பிலிப்பீன்சு தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய தீவான லூசான் தீவில் அமைந்துள்ளது. மேலும் மணிலா அந்நாட்டின் தேசியத் தலைநகரப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ மணிலா ஒருங்கிணைந்த நகரப் பகுதியில் அங்கம் வகிக்கும் பதினாறு நகரங்களுள் ஒன்றாகும் .
அமைவிடம்
மணிலா நகரம், மணிலா வளைகுடாவிற்குக் கிழக்கே உள்ளது. நாட்டின் மிகப்பெரிய நகரமான கியூசான், மணிலா நகருக்கு வடகிழக்கே உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள்தொகை
2010ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மணிலா நகரில் 16,52,171 மக்கள் அதன் சிறிய 38.55 சதுர கி.மீ பரப்பளவில் வசிக்கின்றனர். எனவே, மணிலா உலகில் மக்களடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்றாகும்.
உள்ளாட்சி அமைப்புகள்
மணிலா நகரம் ஆறு சட்டமன்ற மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சட்டமன்ற மாவட்டங்கள், 16 நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பின்வருமாறு:
பிநோன்டோ
எம்ரிடா
இன்ற்றமுரோஸ்
மலடே
பாகோ
பண்டக்கன்
துறைமுகப் பகுதி
குயப்போ
சம்பளக்
சான் அன்றேசு
சான் மிகுவேல்
சான் நிகோழசு
சாண்டா ஆனா
சாண்டா கிரசு
சந்தா மேசா
தொண்டோ ஆகியன ஆகும்.
காலநிலை
மணிலா நகரம், வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளதால் வெப்பமான சீதோசனநிலையே காணப்படுகிறது . ஈரப்பதமும் ஆண்டு முழுமைக்கும் உள்ளது. வெப்பநிலை பொதுவாக 20°C க்கு குறையாமலும் 40°Cக்கு மிகாமலும் உள்ளது. மேலும் வெப்பநிலை 45°C யைத் தாண்டவும் வாய்ப்புள்ளதாகக் கடந்தக் கால வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மழைப்பொழிவும் ஆண்டிற்கு சராசரியாக 104 நாட்கள் உள்ளது. அதிகபட்சமாக 190 நாட்கள் உள்ளது.
மக்களடர்த்தி
மணிலா உலகின் மக்களடர்த்தி மிகுந்த பெருநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். ஒரு சதுர கி.மீ பரப்பளவிற்கு ஏறத்தாழ 43,709 மக்கள் வசிக்கிறார்கள். மேலும் ஆறு மாவட்டங்களில், ஆறாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 68,266 பேர் வசிக்கிறார்கள். அடித்தபடியாக முதலாம் மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 64,936 பேரும், இரண்டாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 64,710 பேரும் உள்ளனர். கடைசியாக, ஐந்தாம் மாவட்டத்தில் மிகவும் குறைவாக ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 19,235 பேர் வசிக்கிறார்கள். உலக அளவில் மணிலாவிற்கு அடுத்தபடியாக இந்திய நாட்டிலுள்ள, மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரும், பிரித்தனியயிந்தியாவின் முன்னால் தலைநகருமான கல்கத்தா மாநகரம் ஒரு சதுர கி.மீக்கு 27,774 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மொழி
பிலிப்பீன்சு நாட்டின் உள் நாட்டு மொழி பிலிப்பினோ என்பதாகும். ஆயினும் ஆங்கிலமே பெரும்பாலும் அலுவல், தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
நிர்வாக மாவட்டங்கள்
மணிலாவில் 16 நிர்வாக மாவட்டங்களை உள்ளது. அவை பருங்காய் எனப்படும் குறும்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றிக்குப் பெயர் எதுவும் கிடையாது. நிர்வாக வசதிக்காக அவை எண்களால் குறிக்கப்படும் .
நிர்வாக மாவட்டங்களிலுள்ள பருங்காய்கள், அவற்றின் மக்கள் தொகை, பரப்பளவு ஆகியவை கீழே,
சட்டமன்ற மாவட்டங்கள்
முதல் மாவட்டம் :தொண்டோ (ஒரு பகுதி) , துறைமுகப் பகுதி(வடக்கு)
இரண்டாம் மாவட்டம்:தொண்டோவின் ககலங்கின் பகுதி.
மூன்றாம் பகுதி:பிநோன்டோ,குயப்போ ,சான் நிகோழசு,சாண்டா கிரசு
நான்காவது மாவட்டம்:சம்பளக்
ஐந்தாவது மாவட்டம்: எம்ரிடா , மலடே , இன்ற்றமுரோஸ் , ஏனைய துறைமுகப் பகுதி
ஆறாவது மாவட்டம்:பாகோ,பண்டக்கன்,சான் மிகுவேல்,சாண்டா ஆனா ,சந்தா மேசா ஆகியற்றை உள்ளடக்கும்.
மணிலா நகரின் உலகளாவிய சகோதர நகரங்களாவன
அக்காபுல்கோ ,மெச்சிகோ
அசுடானா , கசகசுத்தான் (தமிழ்ப்படுத்தி கழகசுத்தான் என்று சிலர் எழுதுகிறார்கள் ..அனால் கழகசுத்தானம் நமது தமிழகத்தை குறிக்கும் சொல்லாகும்)
பாங்காக்,தாய்லாந்து
பெய்சிங் , சீனா
சகார்த்தா, இடாய்ச்சு கிழக்கிந்தியக் கம்பெனி
புது தில்லி,இந்தியா
நட்பு நகரங்கள்
பூசன்,தென்கொரியா
சாங்காய் , சீனம்,
சி'அன் , சீனா .
மேற்கோள்கள்
ஆசியத் தலைநகரங்கள்
பிலிப்பீனிய நகரங்கள்
|
7498
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
மலையக இலக்கியம்
|
இலங்கையின் மலையகப் பகுதியில் பெரும்பாலும் வசிக்கும் தமிழ் மக்களின் இலக்கிய ஆக்கங்கள் மலையக இலக்கியம் எனப்படும். மலையகத் தமிழர் பெரும்பாலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இந்தியாவிலிருந்து குடியேற்றப்பட்டவர்களது சந்ததியினராவர். இந்தப் பின்னணி காரணமாக மலையக இலக்கியமானது மற்றைய நிலைப்பிரிவுகளிலிருந்து வெளிப்பட்ட இலக்கியத்திலிருந்து தெளிவான வேறுபாட்டைக் கொண்டுள்ளது. மலையக இலக்கியம் மலையக மக்களின் பொருளாதார, சமூக, கல்வி, அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து பெரும்பாலும் அமைகின்றது. சி. வி. வேலுப்பிள்ளை போன்றவர்கள் மலையக இலக்கியத்தில் குறிப்பிடத்தகவர்கள்.
தொடக்க காலப் படைப்புகள்
கோப்பிக் கிருஷிக் கும்மி - 1869 - ஆபிரகாம் யோசப் - A Cummi poem on Coffee planting (in Tamil) with an English translation
தேயிலைக்குருஷக்கும்மி
தேயிலைக் கொய்யும் தெம்மாங்கு -
சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி - 1937
உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு
நூலகம் திட்டத்தில் மலையக இலக்கியம் தொடர்பான நூல்கள்
மலையகத் தமிழ் இலக்கியம் - க. அருணாசலம்
மலையக வாய்மொழி இலக்கியம் - சாரல்நாடன்
மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் - சாரல்நாடன்
மலைகமும் இலக்கியமும் - அந்தனி ஜீவா
மேற்கோள்கள்
|
7500
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
ஈழத்து முஸ்லீம் இலக்கியம்
|
இலங்கை முஸ்லீம்கள் என்று தனித்துவமாக அரசியல் ரீதியில் தம்மை அடையாளப்படுத்தி கொள்ளும் பெரும்பாலான இலங்கை முஸ்லீம்களின் தாய் மொழி தமிழ். அவர்களின் ஆக்கங்கள் ஈழத்து முஸ்லீம் இலக்கியம் எனலாம். முஸ்லீம் மரபுகளை அல்லது வடிவங்களை தமிழ் மொழியில் எடுத்தாளும் பொழுதோ முஸ்லீம்களுக்கு தனித்துவமான கருப்பொருள்களை மையமாக கொண்டு எழுதும்போதோ முஸ்லீம் எழுத்தாளர்களால் ஆக்கங்கள் படைக்கப்படும் பொழுது அவ்வாக்கங்கள் ஈழத்து முஸ்லீம் இலக்கியம் என்று குறிக்கப்படலாம்.
ஈழத்து முஸ்லீம் இலக்கியம்
|
7505
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
ஈழப் போராட்ட இலக்கியம்
|
இலங்கையில் தமிழர்களின் தன்னாட்சி உரிமை, மனித உரிமைகள் ஆகியவற்றை மையப்படுத்தி இடம்பெறும் ஈழப்போராட்டச் சூழலில் எழும் ஆக்கங்கள் ஈழப் போராட்ட இலக்கியம் எனலாம். உலகப்புகழ் பெற்ற எதிர்ப்பிலக்கியங்கள் வரிசையில் குறிப்பிடக்கூடியவை ஈழத்து எதிர்ப்பிலக்கியங்கள். மரணத்தில் வாழ்வோம் என்ற கவிதைத் தொகுப்பு அவ்வாறான எதிர்ப்பிலக்கியங்களை தொகுத்து ஈழத்தில் உருவாகிய முதல் நூலாகக் குறிப்பிடப்படக்கூடியது.
வெளி இணைப்பு
மரணத்துள் வாழ்வோம் - மின்னூல் - நூலகம் திட்டம்
ஈழப் போராட்ட இலக்கியம்
ஈழத்துக் கவிஞர்கள்
|
7508
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
|
சிந்தியல் வெண்பா
|
சிந்தியல் வெண்பா என்பது தமிழ்ப் பா வகைகளுள் ஒன்றான வெண்பா வகைகளுள் ஒன்று. இது மூன்று அடிகளை மட்டுமே கொண்டிருக்கும். இவற்றில் முதல் இரண்டு அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்திருக்கும். இவ்வாறு நான்கு சீர்களைக் கொண்டுள்ள அடிகள் அளவடிகள் என அழைக்கப்படுகின்றன. சிந்தியல் வெண்பாவின் மூன்றாவது அடி, சிந்தடி என அழக்கப்படும், மூன்று சீர்களைக் கொண்ட அடியாக இருக்கும்.
சிந்தியல் வெண்பாக்களில் இரண்டு வகைகள் உண்டு. அவை,
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
நேரிசைச் சிந்தியல் வெண்பா
என்பனவாம்.
மேலும்
ஒரு விகற்பச் சிந்தியல் வெண்பா
பல விகற்பச் சிந்தியல் வெண்பா
என்னும் பாகுபாடுகளும் உண்டு. இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா விளக்கங்களில் ஒரு விகற்பச் சிந்தியல் வெண்பாக்கள் காட்டப்பட்டுள்ளன. இங்குப் பல விகற்பச் சிந்தியல் வெண்பாக்கள் காட்டப்பட்டுள்ளன.
இன்னிசை
நேரிசை
மேற்கோள்
வெண்பா
|
7509
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%20%28%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%29
|
அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)
|
அடி என்பது செய்யுள் உறுப்புகள் ஆறனுள் ஐந்தாவதாக அமைந்த ஒன்று ஆகும். ‘எழுத்து அசை, சீர், பந்தம், அடி, தொடை’ என்று அமிதசாகரரால் வைப்பு முறை சொல்லப்படுகின்றது. தமிழ்ப் பாக்களின் இலக்கணத்தைக் கூறும் யாப்பியல் நூல்கள், பாக்களின் உறுப்புகளாக, எழுத்து, அசை, சீர், அடி என்பவற்றைக் குறிப்பிடுகின்றன. எழுத்துகள் சேர்ந்து அசையும், அசைகள் சேர்ந்து சீரும், சீர்கள் சேர்ந்து அடியும் உருவாகின்றன.
விளக்கம்
மனிதன், விலங்கு முதலியன அடிகளால் நடக்கின்றன. நடக்கத் துணையாகும் அடியைப் ‘பாதம்’ என்கின்றோம். பாட்டும் அடியால் நடத்தல் ஒப்புமை பற்றிப் பாடலடியையும் அமிதசாகரர் ‘பாதம்’ என்கின்றார்.
என்னும் நூற்பா, ‘அடி’ என்றதன் பெயர்க்காரணத்துடன் அதன் விளக்கத்தையும் ஒருங்கே அறிவிப்பதாக அமைகிறது.
சீர்களின் தொடர் இயக்கத்தால் உண்டாகும் ஒலி ஒழுக்கை அல்லது ஒலிநடையைத் (Rhythm) தளை என்றால், சீர்கள் தொடர்ந்து இயங்கும் வடிவியக்கம் (concatenated on chain movement) அடி என்று சொல்லலாம் எனவும் அடிக்கு விளக்கம் தருகின்றனர். சுருக்கமாகச் ‘சீர்கள் தம்முள் தொடர்ந்து இயங்கும் செய்யுளியக்க அலகு அடி’ என்று சொல்லி வைக்கலாம்.
என்பது குறள் வெண்பா. இஃது, இரண்டு வரிகளால் ஆகியது என்று கூறக்கூடாது; இரண்டு அடிகளால் வந்தது என்றே கூறுதல் வேண்டும். இங்கு, அடி என்பது பாவின்அடி,
என்பதில் இரண்டு சீர்கள் உள்ளன. இவை ஒரு தளையை உண்டாக்குகின்றன. ஒரு தளையை உண்டாக்குகின்ற இரண்டு சீர்களே பாவின் ஓரடியாகி நிரம்புவதும் உண்டு.
சான்று:
இவ்வாறு வருவனவற்றைச் ‘சீர்அடி’ என்பர். சீர்கள் இரண்டினால் ஓரடி நிரம்பினால் அதைக் குறளடி என்றனர். சீர்கள் மூன்றினால் நிரம்பினால் அது சிந்தடி; சீர்கள் நான்கினால் நிரம்பினால் அளவடி அல்லது நேரடி; ஐந்தினால் நிரம்பினால் நெடிலடி; ஆறு, ஏழு, எட்டு என ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் நிரம்பினால் கழிநெடிலடி என்றனர் யாப்பிலக்கண நூலார். இவற்றையே சொல்லும்முறை மாற்றி இரண்டு சீர்களால் இயங்குவது குறளடி; மூன்று சீர்களால் இயங்குவது சிந்தடி; நான்கு சீர்களால் இயங்குவது அளவடி; ஐந்து சீர்களால் இயங்கும் அடி நெடிலடி; ஐந்துக்கும் மேற்பட்ட அடிகளால் இயங்கும் அடி, கழிநெடிலடி என்றும் கூறுவர்.
மேலும் யாப்பிலக்கண நூலார் சிலர், ஒருதளையான் வந்த அடி, ‘குறளடி’; இருதளையான் வந்த அடி ‘சிந்தடி’; மூன்று தளையான் வந்த அடி, அளவடி; நான்கு தளையான் வந்த அடி, நெடிலடி; நான்கு தளையின் மிக்கு ஐந்து தளையானும் ஆறு தளையானும் ஏழு தளையானும் வரும் அடி, கழிநெடிலடி என்றும் சொல்வதும் உண்டு.
இவ்வகையில் ‘சீரடி’ குறளடி, சிந்தடி,அளவடி(அ)நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும்.
அடிகளின் உருவாக்கம்
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா
மேலேயுள்ள பாடலிலே ஒவ்வொரு வரியும் ஓர் அடியாகும். முதல் அடியானது 1. பாலும், 2. தெளிதேனும், 3. பாகும், 4. பருப்புமிவை என நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சீர் என அழைக்கப்படுகின்றது. இப்பாடலிலே முதல் மூன்று அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்துள்ளன. நான்காவது அடி மூன்று சீர்களால் அமைந்துள்ளது.
பொதுவாகப் பாடல்களின் அடிகளில் இரண்டு சீர்கள் முதல் பதினாறு சீர்கள் வரை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வெவ்வேறு எண்ணிக்கையான சீர்களைக் கொண்டு அமைந்த அடிகள் வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன. செய்யுள் அல்லது பாக்கள் யாவும் அடிகளைக் கொண்டு விளங்குபவையே. பாடலைச் சொல்லும் போது வரிகள் அல்லது சொற்கள் என்று கூறாமல், அடிகள், சீர்கள் என்றே விளிக்க வேண்டும். பொதுவாகப் பாவினங்களில் அடிகள் ஐந்து வகைப்படும்:
குறளடி - இரண்டு சீர்கள் கொண்டது.
சிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது.
அளவடி - நான்கு சீர்கள் கொண்டது.
நெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது
கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் கொண்டது.
இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது.
கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.
உசாத்துணை
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
வெண்பா
யாப்பிலக்கணம்
|
7515
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
பஞ்சமர் இலக்கியம்
|
பஞ்சமர் என்பவர்கள் இந்து மதத்தில் உள்ள நால் வருனங்களுக்கு அப்பாற்பட்ட ஐந்தம் வருனத்தார்கள்.
ஈழத்து தாழ்த்தப்பட்ட மக்களின் ஆக்கங்கள், அவர்களின் பிரச்சினைகளை கருப்பொருளாக அல்லது முன்னிறுத்தும் ஆக்கங்கள் ஆகியவை ஈழத்து பஞ்சமர் இலக்கியம் எனலாம். சாதி, ஆதிக்க, சமய, அரசியல், சமூக கட்டமைப்புக்களின் தாக்கங்கள், அக்கட்டமைப்புக்களில் இருந்து மீட்சி, அக்கட்டமைப்புகளை உடைப்பது அல்லது மாற்றியமைப்பது தொடர்பான சிந்தனைகளைத் தாழ்த்தப்பட்ட இலக்கியம் பிரதானமாக மையப்படுத்துகின்றது. மேலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல், உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதர மேன்படுத்தல், மாற்று சமூக கட்டமைப்பு வடிவங்கள், சமத்துவம் என்று தாழ்த்தப்பட்ட இலக்கியக் கருப்பொருள்கள் மேலும் விரியும். ஈழத்து சூழலில் அதனை மையப்படுத்து எழும் தாழ்த்தப்பட்ட இலக்கியங்கள் பிற தாழ்த்தப்பட்ட இலக்கியங்களில் இருந்து மாறுபட்டு நிற்கும்.பஞ்சமி நிலம் இந்தியாவில் பஞ்சமர் என்கிற பறையர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கிய நிலங்கள் பஞ்சமி நிலம் என்று அழைக்கப்படுகிறது
ஈழத்து பஞ்சமர் எழுத்தாளர்கள்
கே. டானியல்
எஸ். பொ
லெ. முருகபூபதி
டொமினிக் ஜீவா<ref>{{Cite web |url=https://www.vikatan.com/arts/literature/tribute-to-writer-dominic-jeeva |title="டொமினிக் ஜீவா... சாதியத்திற்கு எதிரான போரில் இறுதிவரை அவர் பணியவேயில்லை! - ஷோபா சக்தி |last=Contributor |first=Guest |website=www.vikatan.com/ |language=ta |access-date=2021-10-23}}</ref>
என். கே. ரகுநாதன்
தெணியான்
யோ. பெனடிக்ற் பாலன்
நந்தினி சேவியர்
தேவா
அருந்ததி
அ.தேவதாசன்
மா. பாலசிங்கம்
ஈழத்து பஞ்சமர் எழுத்தாளர்களின் படைப்புகள்
ஈழத்து தாழ்த்தப்பட்ட சிறுகதைகள்''
மேற்கோள்கள்
பஞ்சமர் இலக்கியம்
|
7517
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
ஈழத்து சமய இலக்கியம்
|
ஈழத்து தமிழ் இலக்கியத்தின் சமயம் சார் வெளிப்படுத்தல்கள் கருத்துரைகள் ஈழத்து சமய இலக்கியம் எனலாம். ஈழத்து சமய இலக்கியத்தில் சைவம், கிறீஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களின் படைப்புக்கள் முக்கிய கூறுகளாக அமைகின்றன.
தக்கிணகைலாசபுராணம், திருக்கரசைப்புராணம், கதிரை மலைப்பள்ளு, வியாக்கிரபாதபுராணம், கண்ணகி வழக்குரை போன்ற நூல்கள் ஆரம்பகாலச் சமய நூல்களாகும். ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து கிறித்தவ சமய நூல்கள் எழுதப்படலாயின. ஞானப்பள்ளு, அர்ச்யாகப்பர் அம்மானை, ஞானானந்தபுராணம், திருச்செல்வர் காவியம், சந்தியோகுமையூர் அம்மானை, திருச்செல்வர் அம்மானை, மருதப்பக்குறவஞ்சி போன்றவை ஆரம்பகால கத்தோலிக்க இலக்கியங்களாகும்.
ஈழத்து சமய இலக்கியம்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.