id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
6295
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF
கர்நாடக இசைக் கச்சேரி
மக்கள் ரசிப்பதற்காக வழங்கப்படும் கர்நாடக இசை நிகழ்ச்சி கர்நாடக இசைக் கச்சேரி என அழைக்கப்படும். இசைக் கச்சேரிகள் வாய்ப்பாட்டு ஆகவோ அல்லது தனி வாத்தியக் கச்சேரியாகவோ இருக்கக் கூடும். வயலின், வீணை, மிருதங்கம் போன்ற இசைக் கருவிகள் தற்காலத்தில் தனி வாத்தியக் கச்சேரிகளில் இடம் பெறக்கூடிய இசைக் கருவிகளாக உள்ளன. நாதஸ்வரம் மற்றும் தவில் கச்சேரிகள் நீண்ட காலமாகவே தனிக் கச்சேரியாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. மரபுகள் கர்நாடக இசைக் கச்சேரிகள் பொதுவாக நிலத்தில் இருந்த நிலையிலேயே நிகழ்த்தப்படுகின்றன. துணை இசைக் கருவிகள் தற்காலத்தில், கருநாடக இசைக் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான இசைக் கருவிகள் வயலினும், மிருதங்கமுமாகும். கடம், கஞ்சிரா, மோர்சிங், வீணை போன்ற பல இசைக் கருவிகளும் கச்சேரிகளில் பயன்படுவது உண்டு. கருநாடக இசை நிகழ்வுகள் கருநாடக இசை
6298
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D
பார்த்திபன்
அர்ஜுனன் - பார்த்திபன் என்ற பெயரும் உண்டு ரா. பார்த்திபன் - தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர். பார்த்திபன் (நடிகர்) - பழம்பெரும் தமிழ் நடிகர் பார்த்திபன் (எழுத்தாளர்)
6303
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D
பிராங்க் லாய்டு ரைட்
பிராங்க் லாய்டு ரைட் (ஆங்கிலம்:Frank Lloyd Wright) (ஜூன் 8, 1867 – ஏப்ரல் 9, 1959), இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞராகத் திகழ்கிறார் . இவர் உருவாக்கிய ஃபாலிங்வாட்டர் (1935) கட்டிடமானது தற்போது வரை அமெரிக்க கட்டிடகலையின் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாக அறியப்படுகிறது. இவர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்பணியில் ஈடுபட்டிருந்தார். இளமைக் காலம் இவர் அமெரிக்க நாட்டில் உள்ள விஸ்கொன்சின் மாநிலத்தின் ரிச்லாந்து மையம் என்னும் நகரமொன்றில் பிறந்தார். குடும்பம் பிராங்க் லாயிட் ரைட் தன்னுடைய வாழ்நாளில் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். ஆவ்ருக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன.அதில் நான்கு ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண்குழந்தைகள் ஆவர்.] மனைவிகள் கேதரின் ரைட் "கிட்டி" (1871-1959); சமூக ஆர்வலர், (ஜூன் 1889 இல் திருமணம்; நவம்பர் 1922 இல் விவாகரத்து செய்தனர்) மேட் ரைட் "மிரியம்" (நோயல்) (1869-1930), கலைஞர் (நவம்பர் 1923 இல் திருமணம்; ஆகஸ்ட் 1927 இல் விவாகரத்து செய்தனர்) ஓல்கா இவனோவ்னா "ஒல்ஜிவன்" லாயிட் ரைட் (1897-1985), நடன கலைஞர், எழுத்தாளரும் ஆவார். (ஆகஸ்ட் 1928 இல் திருமணம்) பணிகள் சான்றுகள் 1867 பிறப்புகள் 1959 இறப்புகள்
6310
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
யோகான்னசு கெப்லர்
யோகான்னசு கெப்லர் (Johannes Kepler, ஜோகான்னஸ் கெப்லர், டிசம்பர் 27, 1571 – நவம்பர் 15, 1630), ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானிய)க் கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய Astronomia nova (ஆசுட்ரோனோமியா நோவா) மற்றும் Harmonice Mundi (ஆர்மோனிசெ முண்டி) ஆகிய நூல்களினூடு முன்வைக்கப்பட்ட கோள்களின் இயக்க விதிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர். கெப்லர், கிராசு பல்கலைக் கழகத்தில் (University of Graz) கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது உருடோல்பு (Rudolf II) பேரரசரின் அரசவைக் கணிதவியலாளராகவும், செனெரல் வாலென்சுட்டைனுக்கு (General Wallenstein) அரசவைச் சோதிடராகவும் பணியாற்றியவர். இவரது தொழிலின் ஆரம்பகாலத்தில் டைக்கோ பிராகி (Tycho Brahe) என்பவருக்கு உதவியாளராக இருந்தார். இவர் கலிலியோ கலிலியின் சமகாலத்தவராவார். இவர் சிலவேளைகளில் "முதலாவது கோட்பாட்டு வானியற்பியலாளர்" எனக் குறிப்பிடப் படுகிறார். கார்ல் சேகன் (Carl Sagan) இவரைக் கடைசி அறிவியற் சோதிடன் எனக் குறிப்பிட்டார். வாழ்க்கை யோகான்னசு கெப்லர் திசம்பர் 27, 1571 -இல் வைல் தெர் இசுடாட்டு (Weil der Stadt) என்னு இடத்தில் பிரைய இரைசிட்டாட்டு (Freie Reichsstadt) (விடுதலைப் பேரரசின் நகரம் எனப்பொருள் கொண்டது; இது இப்போது செருமனிய மாநிலமான பாடென் வுட்டம்பெர்க்கின் இசுட்டட்கார்ட்டுப் பகுதியில் அமைந்துள்ளது) பிறந்தார். கெப்லரின் பாட்டனாரான செபால்ட் கெப்லர் அந்நகர மேயராக இருந்தார். எனினும் கெப்லருடன் பிறந்த இரண்டு உடன்பிறந்தான்களும் ஒரு உடன்பிறந்தாளும் சேர்ந்து அவர்களது குடும்பம் வறுமையில் வாடியது. கெப்லரின் தந்தையாரான என்றிக்குக் கெப்லர் ஒரு வணிகராவார். யோகான்னசு கெப்லருக்கு ஐந்து வயதானபோது அவரது தந்தையார் குடும்பத்தைப் பிரிந்து சென்றார். இவர் நெதர்லாந்தில் நடந்த எண்பதாண்டுப் போரில் இறந்திருக்கலாமென நம்பப்படுகிறது. யோகான்னசு கெப்லர் பிறந்தபோது அவர் ஒரு உடல்வலுக் குறைந்த குழந்தையாக இருந்தார். சிறு வயதிலேயே இவர் வானியல் துறையில் ஈடுபட்டார். தனது ஆறாம் வயதில் 1577ல் பெரும் வால்வெள்ளியை அவதானித்தார். இதனை அவதானிப்பதற்காக அவரது தாயாரால் உயரமான இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது வயதில், இன்னொரு வானியல் நிகழ்வான 1580 -இன் சந்திர கிரகணத்தை அவதானித்தார். இதன் போது, அதனை அவதானிப்பதற்காக அவர் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன்போது சந்திரன் சிறிது சிவப்பு நிறமாகத் தென்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் சிறுவயதில் ஏற்பட்ட சின்னம்மை நோயினால், பார்வைக் குறைபாடுள்ளவராயும், வலுவிழந்த கைகளையுடையவராயும் ஆனார். இதனால் வானியல் அவதானிப்புக்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டார். 1589ல், இலக்கணப் பாடசாலை, லியோன்பெர்கில் இலத்தீன் பாடசாலை மற்றும் மவுல்புரோன் குருத்துவப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்ற பின்பு, தூபிங்கர் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, விட்டஸ் முல்லரின் கீழ் தத்துவமும், யாக்கோபு ஈபிரான்டின் (Jacob Heerbrand) கீழ் இறையியலையும் கற்றார். இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராயும், திறமையான வானியலாளராயும் தம்மை நிலைநாட்டினார். மிக்கல் மைசுத்திலீன் என்பவரின் வழிகாட்டலின் கீழ், 1583 -இலிருந்து 1631வரை கோள்களின் இயக்கங்களுக்கான தொலமியின் முறைமையையும், கோப்பர்நிக்கசின் முறைமையையும் கற்றார். மாணவப் பருவத்தில், சூரிய மையக் கொள்கையை எதிர்த்தார். எனினும், சூரியனே அகிலத்தின் முதன்மைச் சக்தி முதலென அவர் ஏற்றுக்கொண்டார். ஒரு அமைச்சராக வரவேண்டுமென அவர் விரும்பினாலும், அவரது கற்கைகளின் நிறைவில், கணிதம் மற்றும் வானியலைக் கற்பிக்கும் ஆசிரியராக, கிராசிலுள்ள (பின்னர் கிராசு பல்கலைக்கழகம்) கிறித்துவ சீர்திருத்தப் பாடசாலையில் நியமிக்கப்பட்டார். அவர் தனது 23ம் வயதில், ஏப்ரல் 1594ல் அவ்வேலையில் சேர்ந்தார். கிராசு (1594–1600) மைஸ்டிரியம் கோஸ்மோகிராபிகம் யோகான்னசு கெப்லரின் முதல் பெரிய வானியல் புத்தகம் மைஸ்டிரியம் கோஸ்மோகிராபிகம் (அகிலத்தின் புதிர்) என்பதாகும். இதுவே கொப்பர்நிகசின் முறைமையை எதிர்த்த முதல் புத்தகமாகும். கெப்லர் சூலை 19, 1595ல் ஒரு ஆச்சரியமான அனுபவத்தைப் பெற்றார். கிராசில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, இராசி வட்டத்தில் சனிக் கோளினதும், வியாழக் கோளினதும் ஆவர்த்தனப் பொருந்துகையை விளக்கும் போது, ஒழுங்கான பல்கோணியொன்று குறித்த விகிதத்தில் வெளி வட்டமொன்றையும், உள்வட்டமொன்றையும் கொண்டிருக்கும் என அவர் உணர்ந்தார். இதற்கு அகிலத்தின் அமைப்பை அவர் காரணங் காட்டினார். அறியப்பட்ட வானியல் அவதானிப்புக்களைக் கொண்டு ஒரு சீரான பல்கோணிகளின் ஒழுங்கமைப்பைக் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்த பிறகு, கெப்லர் முப்பரிமாண வடிவங்களை பரிசோதிப்பதில் ஈடுபட்டார். இதன்போது, ஒவ்வொரு பிளேட்டோனியத் திண்மமும் சீராக ஒரே {கோளம்|கோளத்தினால்]] சூழப்பட்டதாக இருப்பதைக் கண்டுபிடித்தார். இவ்வாறு ஒவ்வொரு பிளேட்டோனியத் திண்மமும் முற்றாக ஒரு கோளத்தினால் சூழப்பட்டதாகவும், ஒவ்வொரு திண்மத்தினுள்ளும் இன்னொரு திண்மம் இருக்கத் தக்கதாகவும் அமைப்பொன்றை உருவாக்கும்போது, ஆறு அடுக்குகள் கொண்ட ஒரு அமைப்பாக அது இருப்பதைக் கண்டறிந்தார். இவ் ஆறு அடுக்குகளும், அப்போது அறியப்பட்டிருந்த ஆறு கோள்களான, புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றைக் குறிப்பதாக அமைந்திருந்தது. பிளாட்டோனியத் திண்மங்களான எண்முகி, இருபதுமுகி, பன்னிருமுகி, நான்முகி, சதுரமுகி ஆகியவற்றைச் சரியான ஒழுங்கில் வைப்பதன் மூலம் உருவாக்கப்படும் மாதிரியுருவில், அத் திண்மங்களைச் சூழ்ந்துள்ள கோளங்களுக்கிடையிலான இடைவெளிகள் அண்ணளவாக, கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன எனக் கருதும் போது அக்கோள்களின் பாதைகளுக்கிடையிலான தூரங்களுக்கு விகிதசமனாகக் காணப்பட்டது. ஒவ்வொரு கோளினதும் சுற்றுப்பதையின் நீளத்துக்கும் அதன் சுற்றுக்காலத்துக்கும் இடையில் தொடர்பொன்றைக் கண்டுபிடிக்க கெப்லருக்கு இயலுமாயிருந்தது. உட்கோள்களிலிருந்து புறக்கோள்கள் நோக்கிச் செல்லும்போது, சுற்றுக்காலங்களின் விகிதத்தின் அதிகரிப்பானது, சுற்றுப் பாதையின் நீளங்களுக்கிடையிலான வித்தியாசத்தின் இருமடங்காகக் காணப்பட்டது. எவ்வாறாயினும், இச் சூத்திரம் திருத்தம் குறைவானதாக இருந்தமையால், பிற்காலத்தில் கெப்லர் இச் சூத்திரத்தை நிராகரித்தார். தலைப்பில் குறிப்பிட்டவாறு, கடவுளின் அகிலத்துக்கான கேத்திரகணித திட்டத்தைத் தான் வெளிப்படுத்திவிட்டதாக அவர் கருதினார். கொப்பர்நீசிய முறைமை மீதான கெப்லரின் ஆர்வத்துக்குக் காரணம் பௌதிக மற்றும் ஆன்மிகக் கொள்கைகளுக்கிடையிலான அவரது இறையியல் நம்பிக்கையாகும். அதன்படி, இந்த அகிலமே கடவுளின் பிரதி பிம்பம் எனவும், சூரியன் பிதாவைக் குறிப்பதாகவும், வான்கோளம் சுதனை(மகன்) குறிப்பதாகவும், இடையிலுள்ள வெளி பரிசுத்த ஆவியைக் குறிப்பதாகவும் அவர் கருதினார். அவரது முதல் கையெழுத்துப் பிரதியான மைஸ்டிரியம், சூரியமையக் கொள்கை பற்றி விளக்கும் பைபிள் வாசகங்களைக் கொண்டிருந்தது. தனது வழிகாட்டியான மைக்கல் மீசுடிலினின் துணையுடன், கெப்லர் தனது ஆக்கத்தை வெளியிடுவதற்கு, துபிங்கென் பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுக்கொண்டார். எனினும் அதில் காணப்பட்ட பைபிளைப் பற்றிய விமர்சனங்களை நீக்கவும், கொப்பர்நிகசின் முறைமை மற்றும் கெப்லரின் புதிய சிந்தனைகள் பற்றி இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய விளக்கங்களைச் சேர்க்கவும் நிர்வாகம் உத்தரவிட்டது. மைஸ்டிரியம், 1596ன் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. 1597ல் முற்பகுதியில் அதன் பிரதிகளை தனது ஆதரவாளர்களுக்கும், பிரபல வானியலாளர்களுக்கும் அவர் அனுப்பினார். இந்நூல் பெரியளவில் பிரபலமாகாவிட்டாலும், கெப்லரை ஒரு திறமையான வானியலாளராகக் காட்டுவதில் அது வெற்றி பெற்றது. அறிவியற் பணி கெப்லரின் விதிகள் கோள்களின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை கெப்லர் கண்டுபிடித்தார். 1604 சூப்பர்நோவா எனைய அறிவியல் மற்றும் கணிதவியற் பணிகள் Mysticism and astrology Mysticism சோதிடம் கடவுள் பற்றிக் கெப்லர் கெப்லரின் எழுத்துக்கள் Mysterium cosmographicum (The Cosmic Mystery) (1596) Astronomiae Pars Optica (The Optical Part of Astronomy) (1604) De Stella nova in pede Serpentarii (On the New Star in Ophiuchus's Foot) (1604) Astronomia nova (New Astronomy) (1609) Dioptrice (Dioptre) (1611) Nova stereometria doliorum vinariorum (New Stereometry of wine barrels) (1615) Epitome astronomiae Copernicanae (published in three parts from 1618-1621) Harmonice Mundi (Harmony of the Worlds) (1619) Tabulae Rudolphinae (1627) Somnium (The Dream) (1634) - considered the first precursor of science fiction. இவற்றையும் பார்க்கவும் கெப்லர் விண்வெளித் திட்டம் கற்பனைக் கதைகளில் கெப்லர் John Banville: Kepler: a novel. London: Secker & Warburg, 1981 (and later eds.). Also published: Boston, MA:Godine, 1983 . கெப்லரின் பெயரிடப்பட்ட இயந்திரங்கள் கெப்லர் விண்வெளி அவதான நிலையம் வெளியிணைப்புகள் Annotation: Posner Family Collection in Electronic Format Harmonices mvndi The Harmony of the Worlds in fulltext facsimile in இலத்தீன் Full text of Kepler by Walter W. Bryant, from Project Gutenberg Kepler and the "Music of the Spheres" Johannes Kepler Directory மேற்கோள்கள் அறிவியலாளர்கள் 1571 பிறப்புகள் 1630 இறப்புகள் செருமானிய அறிவியலாளர்கள் அண்டவியலாளர்கள் செருமானிய வானியலாளர்கள்
6314
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D
செய்நிரல்
செய்நிரல் என்பது கணிப்பொறிக்கான கட்டளை அல்லது ஆணைகளின் தொகுப்பாகும். அல்லது, நிரல் மொழி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கணிப்பு முறையின் குறிப்பாடு என்றும் கூறலாம். மென்பொருளின் ஒரு அங்கமாக விளங்கும் செய்நிரல் ஆவணங்கள் மற்றும் அக கூறுகளை உள்ளடக்கியுள்ளது. மேலும் பார்க்க நிரல் மொழி மென்பொருள் வழு மேற்கோள்கள் நிரலாக்கம்
6315
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88
மனித மூளை
மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது. மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல், பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. மூளையின் படிவளர்ச்சியில், மிக முந்திய சிறிய பாலுட்டியான மூஞ்சூறில் இருந்து மனிதக் குரங்கு வழியாக உயர்நிலை விலங்கினங்களில் ஒன்றான மனிதன் வரை மூளை-உடல் அளவு விகிதம் படிப்படியாக உயர்ந்துள்ளது; இதை மூளைப் பருமனாக்கம் (encephalisation) என்று அழைக்கின்றனர். மனித மூளையில் உள்ள சுமார் 50–100 பில்லியன் (5000-10000 கோடி) நரம்பணுக்களில் (1011), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells) ஆகும். இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) நரம்பிணைப்புகளை பயன்படுத்துகின்றன. மனித மூளை, தடிப்பான மண்டையோட்டின் எலும்புகளாலும், மூளை முதுகுத் தண்டுநீர்மம் (cerebrospinal fluid) என்னும் நீர்மத்தாலும், அதிர்வுகளிலிருந்தும், வெளிச் சேதங்களிலிருந்தும், குருதி-மூளை வேலி (blood-brain barrier) என்னும் அமைப்பின் மூலம் இரத்த மண்டத்திலிருந்தும், இரத்தம் மூலம் பரவும் நோய்களில் இருந்தும் தீங்குறாமல் பெரிதும் பாதுகாக்கப்படுகிறது. ஆனாலும், அதன் மென்மையான தன்மையால் பல வகை நோய்களாலும், சேதங்களாலும் தீங்குகள் ஏற்படுவது தவிர்க்க இயலாதது. பொதுவாக மூளையில் ஏற்படும் சேதங்கள், உள் தலை காயங்கள் (closed head injuries) எனப்படும் வகையை சார்ந்த, தலையில் ஏற்படும் காயம், மூளையில் இரத்த தடை ஏற்படுவதால் ஏற்படும் பக்கவாதம் (stroke), நரம்பு நச்சுகள் (neurotoxin) எனப்படும் வேதியியல் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படுதல் ஆகியன குறிப்பிடத் தக்கவை. மூளை தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவது மிக அரிதானது. ஏனெனில், இரத்த மண்டலத்தில் கலந்து உடல் உறுப்புக்களைத் தாக்கக் கூடிய பெரும்பாலான பாக்டீரியா கிருமிகளை, மனித மூளையில் குருதி-மூளை வேலி என்ற அமைப்பு வடிகட்டி விடுவதன் மூலம், மூளை தொற்றுநோய் நுண்ணுயிரிகளில் இருந்து பெரும்பாலும் பாதுகாக்கப்படுகிறது. இருப்பினும், மூளை பாக்டடீரியாவால் அரிதாக தாக்கப்படும் போது, பிறஒருளெதிரி (antibodies) மூலம் சிகிச்சை அளிப்பது மிக கடினமானதாகிறது. ஏனெனில் இதே குருதி-மூளை வேலி அமைப்பு நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தடுத்து நிறுத்தி விடுவதே காரணம். தீநுண்மம் (வைரசு) எளிதாக குருதி-மூளை வேலியை தாண்ட வல்லவை. இவை இரத்தத்தில் உள்ள வெண்குருதியணுக்களுடன் சேர்ந்து தாண்டுகின்றன. இவை தவிர பொதுவாகக் காணப்படும் பல மரபியல் நோய்களும் மூளையைத் தாக்க வல்லவை. அவற்றுள், நடுக்குவாதம் (பார்கின்சன் நோய்), உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நரம்பு மண்டலத்தை தாக்கும் மல்டிபிள் சுகுலோரோசிஸ் (multiple sclerosis) ஆகியவை முக்கியமானவை. உளவியல் நோய்களான உளச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, மந்த அறிவு ஆகியவையும் மூளையில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றுகின்றன. அமைப்பு மாந்தரில் ஒரு சராசரி ஆணின் மூளை சுமார் 1.5 கிலோகிராம் எடையும், 1260 கன சென்டிமீட்டர் அளவும் உடையது. பெண்ணின் மூளை சுமார் 1130 கன சென்டிமீட்டர் (cc) அளவுடையது. மனிதன் உயிருடன் இருக்கும்போது, மூளையின் வெளிப்பரப்பு அடர்த்தியான சாம்பல் நிறத்திலும், உள்நிறை மஞ்சள், வெள்ளை நிறமாகவும் காணப்படுகிறது. வலது புறத்தில் உள்ள புகைப்படத்தில் மூளையின் நடுவில் கிடைமட்ட குறுக்குவெட்டு தோற்றம் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் பெருமூளைப் புறணியையும் (மடிப்புகள் நிறைந்த பகுதி) வெண்பொருளையும் காணலாம். கோடிக்கணக்கான மயலின் உடைய நரம்பிழைகள் (myelinated fibre) வெண்பொருளையும், பெருமூளைப் புறணியையும் இணைக்கின்றன. 20 வயதான ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர். மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை பெருமூளை அரைக்கோளங்கள் (cerebral hemispheres) என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி. பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி மூளைத்தண்டு என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி சிறுமூளை (cerebellum) என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிறது. மற்ற பாலூட்டி இனங்களிலும் காணப்படும் சிறுமூளை, மூளையின் சிறிய பகுதிகளில் ஒன்று. மேலும், பொதுவான விதியாக ஓர் உயிரினத்தின் சிறுமூளை எவ்வளவு சிறிதாக உள்ளதோ, அதே அளவு அதன் பெருமூளைப் புறணி பகுதி குறைந்த மடிப்புகளை கொண்டதாக இருக்கும். எலி, சுண்டெலியின் பெருமூளைப் புறணி பகுதி மடிப்புக்களே இன்றி வழுவழுப்பான பகுதியாக இருப்பது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். பாலூட்டிகளில் மிகப்பெரியதான திமிங்கலமும், ஓங்கிலும் (dolphin) மனிதனை விட மிக அதிகமான மடிப்புகளைப் பெருமூளைப் புறணிப் பகுதியில் கொண்டுள்ளன. மனித மூளையின் சிறப்பு வேறுபாடு மிகப் பெரிய அளவிலான பெருமூளைப் புறணிப் பகுதியாகும். மனிதனில் மிகப்பெரிதாக இருப்பதால் அது மூளையின் ஏனைய பகுதிகளை முழுவதும் மறைத்தவாறு காணப்படுகிறது. மனிதனின் சிறுமூளை மற்ற பாலூட்டிகளை விட அளவில் பெரியது. மனிதனின் பெருமூளை புறணி அளவில் மட்டுமல்லாது மூளையின் செயல் பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு எலியின் பெருமூளைப் புறணிப் பகுதி அறுவை முறையில் அகற்றப்பட்ட நிலையிலும், அவ்வுயிரினத்தால் நடக்கவும், உண்ணவும், வெளிப்புற மாற்றங்களை உணரவும் இயலும். ஆனால் பெருமூளைப் புறணி பாதிப்படைந்த நிலையில் உள்ள ஓர் மனிதன், நிரந்தர ஆழ்மயக்க (coma) நிலைக்கு உட்படுவான். பெருமூளைப் புறணி தோராயமாக ஈடான வலது-இடது அரைக் கோளங்களாக பிரிக்கப்படுகிறது.உடற்கூறு வல்லுநர்கள் ஒவ்வொரு அரைக் கோளத்தையும் நான்கு மடல்களாக பிரிக்கின்றனர். அவையாவன, முன் மடல் (frontal lobe), சுவர் மடல் (parietal lobe), பக்க மடல் (temporal lobe), மற்றும் பிடரி மடல் (occipital lobe). இப்பிரிவுகளின் பெயர்கள் அப்பிரிவுகளின் அருகில் இருக்கும் மண்டையோட்டு எலும்புகளின் பெயருக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பெருமூளைப் புறணி பகுதி, ஓர் அகலமான பெரிய நரம்பணு இழைய விரிப்பை பல மடிப்புகளாக மடிப்பதன் மூலம் சுருக்கி குறுகிய மண்டையோட்டினுள் வைத்தது போன்ற வடிவத்தையுடையது. ஒவ்வொரு பெருமூளைப் புறணி அரைக்கோளத்தில் உள்ள நரம்பணு இழையத்தை மடிப்புகளை அகற்றி விரித்தால் அவற்றின் பரப்பளவு சுமார் 1.3 சதுர அடியாகும். உடற்கூறு வல்லுநர்கள் இத்தகைய மடிப்புகளால் ஏற்படும் பள்ளத்தை வரிப்பள்ளம் (sulcus) எனவும், ஒவ்வொரு வரிப்பள்ளத்துக்கும் இடையே உள்ள வழுவழுப்பான பகுதியை மடிமேடு (gyrus) எனவும் குறிப்பிடுகின்றனர். பொதுவாக எல்லா மனிதர்களின் மடிப்புகளும் ஏறத்தாழ ஒரே வடிவத்தைக் கொண்டிருப்பினும், வேறுபாடுகளை அறியத்தக்க அளவில் அவை வடிவத்திலும், மதிப்புகளின் அமைவிடத்திலும் சில மாறுதல்களைக் கொண்டு தனித்தன்மையுடன் விளங்குகின்றன. இருப்பினும், சில பெரிய மடிப்புகளை எல்லா மாந்தரிடமும் காண இயலும். பெருமூளைப் புறணியின் வெவ்வேறு பகுதிகள், வெவ்வேறான புலனறிவுத் திறன்களை (எ.கா, பார்த்தல், கேட்டல், உணர்தல்) கற்று ஆளும் திறனை பெற்றுள்ளன. இதனை பல்வேறு வழிகளின் மூலம் உறுதிப்படுத்த இயலும்: மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதி சேதமடைதல், ஒரு குறிப்பிட்ட புலனை மட்டுமே பாதித்தல், காந்த ஒத்ததிர்வு வரைவு (magnetic resonance imaging) நுட்பத்தின் சிறப்பு வரைவு முறையான வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு (functional magnetic resonance imaging அல்லது fMRI) மூலம் ஓர் குறிப்பிட்ட புலனையும் அதனை ஆளும் மூளையின் குறிப்பிட்ட பகுதியையும் அறிதல், பெருமூளைப் புறணியின் இழைய கட்டமைப்பை ஆராய்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. உடற்கூறு வல்லுனர்களின் கருத்துப்படி நுண்ணோக்கி துணை கொண்டு பெருமூளைப் புறணி இழையத்தை சுமார் 6 அடுக்குகளாக பிரிக்க இயலும். ஆயினும், பெருமூளையின் அனைத்து இடங்களிலும் இவ்வடுக்குகளை பிரித்துக் காண இயலாது. பல உடற்கூறு வல்லுனர்கள் புறணியில் உள்ள இவ்வடுக்குகளை வரைபடமாக குறித்துள்ளனர். இவர்களில் முதன்மையானவராக அறியப்படும் பிராட்மேன் மூளையின் பல்வேறு பாகங்களை 52 பிரிவுகளாக குறித்துள்ளார். (பின்னாளில் உடற்கூறு வல்லுநர்கள் அதனை மேலும் பல உட்பிரிவுகளாக பிர்த்துள்ளனர்). இடவிளக்கவியல் இயக்கப் புறணி முதன்மை இயக்கப் புறணி (primary motor cortex) என்ற பட்டையான நரம்பு இழையம் படத்தில் காட்டியுள்ளபடி நடு வரிப்பள்ளத்தின் (central sulcus) முன்புற ஓரத்தில் அமைந்துள்ள ஒரு இயக்கப் புறணி (motor cortex) ஆகும். இயக்கப் புறணிகள் உடம்பில் உள்ள, மனிதனின் விருப்பத்துக்கேற்ப இயங்கக் கூடிய தசைகளுக்கு ஆணைகளை அனுப்பி கட்டுப்படுத்தும் பகுதிகளாகும். வலது புறத்தில் உள்ள வரைபடம் மூலம் மூளையின் இயக்கப் புறணிகளில் ஒன்றான முதன்மை இயக்கப் புறணியில், உடம்பில் உள்ள பாகங்களின் இயக்க கட்டுப்பாட்டு பகுதிகளை வரிசை முறையே ஒழுங்கு படுத்தி இருப்பதை அறிய முடிகிறது. அதாவது, முதலில் கால் பாதம், அதை தொடர்ந்து கால்கள், தொடை, அடிவயிறு என்று உடம்பில் பாகங்கள் எவ்வரிசையில் அமைந்துள்ளனவோ, அதே வரிசையில் மூளையிலும் அவற்றின் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப் பட்டுள்ளன. புறணியின் ஒரு பகுதியை மின்கிளர்ச்சியூட்டினால், அப்பகுதி கட்டுப்படுத்தும் உடல் உறுப்பின் தசையில் இறுக்கம் ஏற்படுவதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆயினும், ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு அளவு புறணி நரம்பிழையத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக,மனிதனின் தலையில் உள்ள உறுப்புகளை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையம், முதுகினை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையத்தை விட மூன்று மடங்கு அளவில் பெரிது. எந்த அளவு ஒரு உடல் உறுப்பினை கட்டுப்படுத்தும் புறணி நரம்பிழையம் செரிவுமிக்கதாக (பெரிய அளவினை உடையதாக) அமைந்துள்ளதோ, அதே அளவு அவ்வுறுப்பின் இயக்க கட்டுப்பாடும், புலன் பாகுபடுத்தி அறியும் திறனும் அமையும். இக்காரணத்தால், மனிதனின் உதடு, நாக்கு, விரல்கள், முக தசைகள் ஆகிய அவயங்கள் சிறிதாக இருப்பினும் பல நுண்ணிய செயல்பாடுகளை ஆற்றுவதால் ( எ.கா, நாக்கு,உதடு - பேசுதல்) அவற்றைக் குறிக்கும் புறணி நரம்பிழையத்தின் அளவு பெரிதாக அமைந்துள்ளது. பார்வைப் புறணி மனிதனின் பார்வைக்கான புறணி நரம்பிழைய அமைப்புகள், கண்ணின் பின்புறம் அமைந்துள்ள விழித்திரையின் (retina) அமைப்பினை ஒத்துள்ளன. மனிதனின் கண்ணை வந்தடையும் ஒளியினை சமிக்கைகளாக மாற்றும் விழித்திரையின் ஒவ்வொரு நரம்பணுவும், இப்பகுதியில் சில புறணி நரம்பணுக்களால் குறிக்கப்படுகின்றன. அதிலும், விழித்திரையின் நடுவில் உள்ள நரம்பணுக்களுக்கு (பார்வையின் நடுவில் இருக்கும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில்) விழித்திரையின் ஓரத்தில் உள்ள நரம்பணுக்களை விட அதிக அளவு பார்வை புறணி நரம்பணுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெருமூளைப் புறணியில் உள்ள பார்வைப் புறணியில் (visual cortex) விழித்திரையினில் விழும் ஒரு காட்சியின் தோற்றங்களை பல்வேறு கோணங்களில் ஆராய நூற்றுக்கணக்கான வெவ்வேறு விழித்திரை ஒப்புருவ வரைவுகள் (retinotopic maps) உள்ளன. இவற்றின் மூலம் ஒரு தோற்றம், ஒரே நேரத்தில் பல கோணங்களில் ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப் படுகிறது. முதன்மைப் பார்வைப் புறணி (primary visual cortex) (பிராட்மேன் வகைப்பாட்டில் 17வது பகுதி), கண்ணில் இருந்து வரும் நரம்பு சமிக்கைகளை முன்மூளை உள்ளறை (thalamus) வழியே நேரடியாகப் பெறுகிறது. இப்பகுதி பெறப்பட்ட தோற்ற சமிக்கைகளில் உள்ள முக்கிய சிறப்பியல்புகளை (visual feature) எளிதாக பிரித்தெடுக்க வல்லது. முன்மூளை உள்ளறை முன்மூளையில் உள்ள கோள வடிவிலான, சாம்பல் நிற பொருளாலான, இரண்டு பெரிய அறைகளை குறிக்கும். இவை பெருமூளைப் புறணிக்கு புலன்களில் இருந்து வரும் சமிக்கைகளை தம் வழியே அனுப்புகின்றன. காட்சியில் இருந்து பொருளின் நிறம், இயக்கம், வேகம், வடிவம் ஆகியவற்றை முதன்மைப் பார்வைப் புறணிக்கு அடுத்து ஆராயும் பார்வை புறணிகள் கண்டறிகின்றன. கேட்டல் புறணி கேட்டல் புலன் பகுதி, இடமகன்ற தொனியொழுங்கு முறையில் அமைக்கப்பட்ட ஒப்பு வரைவுகளைக் (tonotopic maps) கொண்டது. இடமகன்ற தொனியொழுங்கு முறை என்பது மனிதன் கேட்கும் ஒவ்வொரு மாறுபட்ட தொனியும் (ஒலி அதிர்வெண்ணும்), கேட்டல் புறணியின் வெவ்வேறு இடத்தை கிளர்ச்சி அடையச் செய்தல் ஆகும். சுருக்கமாக, தொனியின் அதிர்வெண்ணைக் கொண்டு, இடமகன்ற வெளியில் ஒழுங்கு படுத்துதல் என்ற பொருள்படும். கேட்டல் புறணியின் பல்வேறு பகுதிகளில் நிகழும் கிளர்ச்சிகளின் மொத்தக் கூட்டு தரும் இணைவுப் பொருத்தம் (combination) ஒரு சொல்லை உருவாக்கும். ஒலிகள் அவை தரும் அதிர்வெண்ணை (அதாவது, உச்ச சுருதி அல்லது தாழ்ந்த சுருதி) கொண்டே பிரித்துணரப் படுகின்றன. பார்வை அமையம் (visual system) போன்றே, கேட்டல் பகுதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடமகன்ற தொனியொழுங்கு முறையில் அமைக்கப்பட்ட புறணி ஒப்பு வரைவுகள் (tonotopic cortical maps) உள்ளன. ஒவ்வொரு ஒப்பு வரைவும் வெவ்வேறு வகையில் ஒலியினை ஆராய விழைகின்றன. வினை இடமறிதல் வினை இடமறிதல் என்பது மூளையின் ஒவ்வொரு கட்டுப்பாட்டு பகுதியையும், அது கட்டுப்படுத்தும் உறுப்பின் செயல்பாடுகளையும் கண்டறிந்து அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்துதல் எனலாம். பெருமூளையின் ஒவ்வொரு அரைக் கோளமும், உடம்பின் ஒரு பாகத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும், வலது பக்க மூளை உடம்பின் இடப்பக்க உறுப்புகளையும், இடப்பக்க மூளை உடம்பின் வலப்பக்க உறுப்புகளையும் கட்டுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இதே முறையிலேயே, மூளைக்கும், முதுகுத் தண்டுக்கும் இடையே உள்ள இயக்க இணைப்புகளும் (motor connections), புலன் இணைப்புகளும் (sensory connections), மூளைத்தண்டின் நடுப்பகுதியில், வலது இடதாகவும், இடது வலமாகவும் இடம் மாறுகின்றன. கலைச் சொற்கள் frontal lobe - முன் மடல் parietal lobe -சுவர் மடல் temporal lobe -பக்க மடல் occipital lobe -பிடரி மடல் cerebellum - சிறுமூளை cerebral hemispheres - பெருமூளை அரைக்கோளங்கள் cerebral - பெருமூளை cortex - புறணி (புறத்தே இருப்பதால் புறணி) cerebral cortex - பெருமூளைப் புறணி nerve tissue - நரம்பிழையம் myelinated fiber - மயலின் உடைய நரம்பிழை white matter - வெண் பொருள் grey matter - சாம்பல் நிறப் பொருள் closed head injuries - உள் தலை காயங்கள் brain stem - மூளைத்தண்டு coma - ஆழ்மயக்கம் sulcus -வரிப்பள்ளம் gyrus -மடிமேடு functional magnetic resonance imaging அல்லது fMRI - வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு primary motor cortex- முதன்மை இயக்கப் புறணி thalamus - முன்மூளை உள்ளறை hypothalamus - முன்மூளை கீழுள்ளறை இவற்றையும் பார்க்கவும் உடல் உறுப்புக்கள் மனித மண்டையோடு முள்ளந்தண்டு மேற்கோள்கள் மேலும் படிக்க Research found the traffic pollution affects brain function Read Article Simon, Seymour (1999). The Brain. HarperTrophy. Thompson, Richard F. (இரண்டாயிரம்.The Brain: An Introduction to Neuroscience. Worth Publishers. Campbell, Neil A. and Jane B. Reece. 2005Biology. Benjamin Cummings. வெளி இணைப்புகள் மூளையைப் பாதிக்கும் போக்குவரத்து நெரிசல் ஆய்வில் தகவல்! (Research Article in Tamil) மூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை மனித மூளையின் அலைவுக் கோலங்கள் மனித மூளை - கணினி இணைப்பு பற்றிய கட்டுரை தூக்கத்திலும் மனிதமூளை விழிப்புடன் செயற்படுகிறது The Brain from Top to Bottom The Whole Brain Atlas High-Resolution Cytoarchitectural Primate Brain Atlases Brain Facts and Figures Current Research Regarding the Human Brain ScienceDaily Estimating the computational capabilities of the human brain When will computer hardware match the human brain? – an article by Hans Moravec How the human brain works Everything you wanted to know about the human brain — Provided by New Scientist. Differences between female & male human brains Surface Anatomy of the Brain Scientific American Magazine (May 2005 Issue) His Brain, Her Brain About differences between female and male brains. மூளை நரம்பியல் விலங்கின உடற்கூற்றியல் ar:دماغ بشري bg:Човешки мозък cs:Lidský mozek de:Gehirn#Das menschliche Gehirn en:Human brain es:Cerebro humano fiu-vro:Inemise ai ga:Inchinn Dhaonna hr:Ljudski mozak hu:Emberi agy is:Mannsheili ml:മനുഷ്യമസ്തിഷ്കം nl:Menselijke hersenen pl:Mózgowie człowieka pt:Cérebro humano ru:Головной мозг человека si:මිනිස් මොළය sl:Človeški možgani tr:İnsan beyni uk:Головний мозок людини vi:Não người zh:人腦
6316
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81
உயிரணு
உயிரணு (இலங்கை வழக்கு: கலம், ஆங்கிலம்:Cell) அல்லது உயிர்க்கலம் என்பது உயிரினங்கள் அனைத்துக்கும் அடிப்படை கட்டமைப்பு, தொழிற்பாட்டு அலகு ஆகும். அனைத்து உயிர்களும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயிரணுக்களின் கூட்டினால் உருவானவை. உயிரினங்களாக வகைப்படுத்தப்படுபவற்றில் காணப்படும் மிகச் சிறிய அலகாக இருக்கும் இந்த உயிரிணுக்களை உயிரினங்களின் கட்டடத் தொகுதிகள் எனலாம். தமிழில் உயிரணுவை செல், கலம், கண்ணறை, திசுள் என்றும் குறிப்பிடுவர். விலங்குகள், தாவரங்களில் உள்ள கலங்கள் 1 தொடக்கம் 100 µm வரை வேறுபடுவதனால், அவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. எனவே அவற்றைப் பார்க்க நுணுக்குக்காட்டி தேவைப்படுகின்றது. உயிரணுக்கள் குறைந்த பட்சம் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகியிருக்கும் என அறியப்படுகின்றது தனியொரு உயிரணுவினால் ஆன உயிரினங்களாக பாக்டீரியா, ஆர்க்கீயா போன்ற நுண்ணுயிர்களை உள்ளடக்கிய நிலைக்கருவிலிகளையும், அநேகமான அதிநுண்ணுயிரிகளையும், ஒரு சில பூஞ்சை இனங்களையும் குறிப்பிடலாம். மனிதன் போன்ற விலங்குகள், தாவரங்கள், அநேகமான பூஞ்சைகள் பல்லுயிரணுவுள்ள உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள். விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து, தாவரங்களின் உயிரணுக்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆண், பெண் வேறுபாடுடைய உயிரினங்களில் பாலணுக்கள் இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு, கருவணு (Zygote) என அழைக்கப்படுகிறது. மனிதரில் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பான சூலகத்தில் இருந்து வெளியேறும் சூல் முட்டையுடன், ஆணின் விந்து இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு, அதாவது கருவணு மீண்டும் மீண்டும் கலப்பிரிவுக்குள்ளாகி, பிரதி செய்யப்பட்டு கோடிக்கணக்கான கூட்டுக் கலங்களாகி குழந்தையாக உருப்பெறுகிறது. வரலாறு 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உயிரணுக்கொள்கை உருவாக்கப்பட்டது. இக் கொள்கை உருவாக்கத்தின் போதும் கூட அதன் வடிவத்தை ஆராயும் நுண்நோக்கி இருக்கவில்லை. மேலும் பல்லாயிரம் மடங்கு பெரிதாக்கிக்காட்டும் திறம் கொண்ட நுண்ணோக்கிகள் வந்த தற்காலத்திலும் பல்வேறு வேதிப்பொருள்களின் துணையுடனும், கணிப்பீட்டுக் கணிதவியல் துறைகளின் உதவியுடனுமே உயிரணுவின் கட்டமைப்பு மாந்தர் கண் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு காரணங்களாக உயிரணுக்கள் மனிதக்கண்ணின் பார்வைப்புலத்தினை விடவும் ஐந்து மடங்கு சிறியளவான 10 முதல் 20 மைக்ரோமீட்டர் (1000 μm= 1mm) விட்டம் கொண்டதாக காணப்படுவதையும், ஒளியூடுமை (ஒளியை ஊடுபுக விடும் தன்மை) கொண்டிருப்பதையும் குறிப்பிடலாம். உயிரணுக் கொள்கையின் முக்கிய கூறுகள் உயிரணுக்கொள்கையானது அதன் அறிவியல் வளர்ச்சிக்கேற்ப, கூடிய தகவல்களை ஏற்றுக்கொண்டு, மாறி வந்திருக்கின்றது. நவீன கொள்கையின்படி: அனைத்து உயிர்களும் உயிரணுக்களால் ஆனவை. உயிரினங்களின் கட்டைமைப்பினதும், தொழிற்பாட்டினதும் அடிப்படை அலகு உயிரணு ஆகும். உயிரணுப் பிரிதலினால் ஒரு உயிரணுவில் இருந்து இன்னொன்று உருவாகின்றது. ஆற்றலை உருவாக்கும் உயிர்வேதியியல் செயற்பாடான வளர்சிதைமாற்றமானது உயிரணுக்களின் உள்ளேயே நடைபெறுகின்றது. உயிரணுக்கள் பரம்பரைத் தகவலை (டி.என்.ஏ) கொண்டிருக்கிறது. இது உயிரணுக்களின் பிரிவின் போது, தாய் உயிரணுவிலிருந்து பிரிந்து வரும் மகள் உயிரணுக்களிற்கு கடத்தப்படுகிறது. அனைத்து உயிரணுக்களும் அடிப்படையில் ஒரே வேதியியல் அமைப்பைக் கொண்டுள்ளன. சில உயிரினங்கள் தனிக்கலத்தாலான (unicellular) உயிரினங்கள் ஆகும். அதாவது ஒரே ஒரு உயிரணுவினால் உருவாக்கப்பட்டவை (ஒரு கலவுயிரி). மற்றயவை பல்கல (multi-cellular) உயிரினங்கள். அதாவது பல உயிரணுக்களினால் ஆனவை. இவை பல்கலவுயிரி எனப்படும். ஒரு உயிரினத்தின் தொழிற்பாடானது, அவ்வுயிரினத்தில் காணப்படும் ஒவ்வொரு தனித்தியங்கும் உயிரணுக்களினதும் மொத்த தொழிற்பாட்டில் தங்கியுள்ளது. பொதுப் பார்வை உயிரணு இரண்டு வகைப்படும்: மெய்க்கருவுயிரி, இது கருவை கொண்டிருக்கும். மற்றையது நிலைக் கருவிலி, இது கருவைக் கொண்டிருக்காது. நிலைக் கருவிலிகள் ஒற்றை உயிரணு கொண்ட உயிரிகளாகும். அதேவேளை மெய்க்கருவுயிரிகள் ஒற்றைக் கலம் முதல் பல்கல அங்கிகள் வரைக் கொண்டிருக்கும். நிலைக் கருவிலி கலம் நிலைக் கருவிலிகள் உயிரின் மூன்று பெரும் ஆட்களங்களில் இரண்டு ஆட்களங்களான பாக்டீரியா மற்றும்ஆர்க்கீயாவை அடக்கும். நிலை கருவிலிகளே புவியில் முதலில் தோன்றிய உயிரினமாகும். இவை மெய்க்கருவுயிரிகளை விட எளிமையானவையாகவும் சிறியவையாகவும் காணப்படும்.மென்சவ்வுகளால் மூடப்பட்ட புன்னங்கங்கள் காணப்படாது. நிலைக் கருவிலிக் கலங்கள் குழியவுருவில் நேரடியாகக் காணப்படும் தனி டி.என்.ஏயைக் கொண்டிருக்கும்.குழியவுருவில் கருவுக்குரிய பகுதி உட்கருவகம் எனப்படும். பெரும்பாலான நிலைக் கருவிலிகள் மிகச் சிறியவைகளாக 0.5 முதல் 2.0 µm விட்டம் கொண்டதாயிருக்கும். மெய்க்கருவுயிரிக் கலங்கள் தாவரங்கள், விலங்குகள், பூஞ்சை, கோழைப்பூசணம் , மூத்தவிலங்கு, மற்றும் அல்காக்கள் எல்லாம் மெய்க் கருவுயிரிகளில் அடங்கும். இவை நிலைக்கருவிலிக் கலங்களைப் போல் பதினைந்து மடங்கு அகன்றதாகவும் ஆயிரம் மடங்கு கனவளவில் அதிகரித்ததாகவும் காணப்படும்.முதன்மையான வெறுபாடாகக் கூறக்கூடியது மெய்க்கருவுயிரிகளில் மென்சவ்வினால் சூழப்பட்ட கலப் புன்னங்கங்கள் காணப்படுவது அதிலும் முக்கியமாக கரு காணப்படுகின்றமை ஆகும். இதுவே டி,என்.க்களைக் கொண்டிருக்கும் கலப்புன்னங்கமாகும். இந்தக் கருதான் இதற்கு மெய்க்கருவுயிரிகள் எனப் பெயர் வரக் காரணமாகும். ஏனைய வேறுபாடுகள்: முதலுரு மென்சவ்வு நிலைக் கருவிலிகளை தொழிற்பாட்டில் ஒத்திருக்கும். சிறிய வேறுபாடு ஒழுங்கமைப்பில் காணப்படும், கலச்சுவர் இருக்கும் அல்லது இல்லாதிருக்கும். மெய்க்கருவுயிரிகளில் நிறமூர்த்தங்கள் எனப்படும் நேரிய மூலக்கூறுகளில் டி.என்.ஏக்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். அவை கிஸ்ரோன் என்படும் புரத உறையைக் கொண்டிருக்கும். மெய்க்கருவுயிரிகளின் டி.என்.ஏ மூலக்கூறுகள் கொண்ட நிறமூர்த்தங்கள் குழியவுருவிலிருந்து கருமென்சவ்வினால் வேறுபடுத்தப்பட சில மெய்க்கருவுயிரிகளின் புன்னங்கங்கள் (இழைமணி முதலியன) டி.என்.யைக் கொண்டிருக்கும். உயிரணுவின் அமைப்பு ஒவ்வொரு உயிரணுவும் மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளன. உயிரணு மென்சவ்வு (Cell Membrane) - வெளியுறை குழியவுரு (Cytoplasm) - பாய்பொருள் கரு - உயிரணுவின் கட்டுப்பாட்டு மையம். (மரபுத்தகவல்கள் அடங்கியுள்ள பகுதி) என மூன்று பெரும் பிரிவுகளும் அதற்குள் ஏராளமான சிறு சிறு மேடுகள், பள்ளங்கள், துளைகள் என்பவைகளையும், உட்பகுதிக்குள் வளைந்து நெளிந்தும், சுருண்டும் செல்லும் அமைப்புகள், மற்றும் வெளிப்புறமாக நீண்டு செல்லும் பகுதிகள் என மிக மிக சிக்கலான அமைப்புகளை இத்தலைப்புகளை ஆழ ஆராயும் போது உப தலைப்புகளாக கொண்டு வரலாம். பிரபலமான டி.என்.ஏ எனும் சொற்பதமும் உயிரணுவின் கருவை (Nucleus) ஆழமாக ஆராயும் போதே அறிமுகமாகிறது. இதனூடாகவே மரபுத் தகவல்களும் கடத்தப்படுகிறது. உயிரணுக்களின் கட்டமைப்பு உயிரினங்களின் வகைக்கு அமைய பல வேறுபாடுகளைக் காட்டுகின்றது. நிலைக்கருவிலிகள் மற்றும் மெய்க்கருவுயிரிகளின் கலங்களுக்கிடையே காணப்படும் வித்தியாசங்களின் சுருக்கம் பின்வருமாறு உயிரணுவின் தொழில் தொடர்ந்தும் கலங்களை மீளமைத்தல், புரதங்களை உருவாக்கல், உயிர்ச்சத்துக்களை பிரித்தெடுத்தல் , தூண்டற்பேற்றை காட்டல் என ஓர் உயிரினம் உயிர் வாழத்தேவையான இன்னுமின்னும் முக்கியப்பணிகளும் இவ்வுயிரணுவின் உள்ளேயே இடம் பெறுகின்றன. ஒருவரின் பரம்பரை நோய்கள், குணங்கள் மற்றும் தோற்றங்கள் என்பதை குழந்தைகளுக்கு கடத்திச்செல்லவும் இக்கலத்தின் கருவே பயன்படுகிறது. மூளைக்கலங்கள் - செய்திப் பரிமாற்றம் தசைக்கலங்கள் - இயக்கம் குடற்கலங்கள் - சமிபாடு நாவுக்கலங்கள் - சுவை ஆய்வுகள் இது குறித்த ஆய்வுகள் உயிரணுவியல் (Cell Biology) என அழைக்கப்படுகிறது. 50 வருடங்களுக்கு முன்னரே "உயிரியலில் நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உயிரணுவியல் பற்றிய ஆய்வு தீர்வு தரும்" என நம்பப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இன்று வரை "உயிரணுவியல்" உயிரியலின் பெரும் பகுதியாகவும் ஆய்வுகளை வேண்டி நிற்கும் பகுதியாகவும் உள்ளது. 2008ம் ஆண்டு முற்பகுதியில் சர்வதேச விஞ்ஞானிகள் கழகம் சமர்ப்பித்த இரண்டாவது கட்ட DNA மரபணு அட்டவணையில் மனிதர்களின் மரபணு ஒன்றில் 99 வீதமானவை மனிதர்களிடையே பொதுவாகவே காணப்படுவதாகவும் மீதி ஒரு வீதமே ஆளாளுக்கு வேறுபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்னும் பெரும் பகுதி உயிரணு ஆய்வில் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே உள்ளது. இக்கலங்களின் சிக்கலான அமைப்பு குறித்து விளக்கும் ப்லோபெல் (Blobel, The Nobel Prize in Physiology or Medicine 1999) இவ்வாறே அனைத்து உயிரியல் பேராசிரியர்களினால் மதிக்கப்படுபவரும், "DNA யின் அமைப்பு இரட்டைச் சங்கிலியுருவுடையது" என்பதை எடுத்துக்காட்டியாவருமான (James Dewey Watson) கூறும் போது இவ்வாறான சிக்கல் வாய்ந்த இக்கல அமைப்பினையும் அதனுள் இடம் பெறும் பரிமாற்றங்களை ஆராயும் நோக்குடனும் 20 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களையும் ஆயிரக்கணக்கான ஆய்வாளர்களையும் உள்ளடக்கி 2000 ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட அமைப்பே AfCS (The Alliance for Cellular Signaling) ஆகும். அடுத்தடுத்த கட்டங்களில் இவ்வமைப்பு கலத்தின் தகவல் வங்கிகள், களஞ்சிய சாலைகள் அடுக்கடுக்கான பாதைகள் இலட்சக்கணக்கான தொழில்களை செய்யும் தனித்தனி பகுதிகள் என்பதையும் ஆய்வு செய்யவுள்ளது. செயற்கைமுறை உயிரணு வளர்ப்பு ஒரு உயிர்க்கலத்தை வளர்ப்பூடகங்களில் (Growth media or Cell culture media) வளர்ப்பதன் மூலம் அக்கலத்தில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்க முடியும் என்ற அடிப்படையிலேயே இழைய வளர்ப்பு (Tissue Culture) முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் வெற்றியை தொடர்ந்து மேலும் நவீன உத்திகளையும் கொண்டு உயிரணு வளர்ப்பு (Cell Culture) முறை சாத்தியமாகி வெற்றியடைந்தது. இவ்வெற்றியே அடுத்த படியெடுப்பு (Cloning) என்ற கிளை வளர்ச்சிக்கு வித்திட்டது. படியெடுப்பு பற்றிய ஆய்வின் அடுத்தப்படியாகவே இன்றைய குருத்தணு ஆய்வு (Stem Cell Research) நோக்கப்படுகிறது காட்சியகம் உசாத்துணைகள் வெளி இணைப்புகள் செல் உயிரியல் செயற்கை உயிரணுக்கள் உற்பத்தி - நிலா முற்றம் கட்டுரை - ஆண்டு 12 தமிழ்நாடு பாடநூல் - தொழில்படும் விலங்கு - மேற்கோள்கள் உயிரணுவியல்
6317
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF
தமிழ் அகரமுதலி
அகரமுதலி அல்லது அகராதி என்பது அகரவரிசைப்படி அட்டவணைப் படுத்தப்பட்ட ஒரு மொழியின் சொற்களையும், அவற்றுக்கான பொருளையும், சில சமயங்களில் அச் சொற்கள் தொடர்பான வேறுபல விவரங்களையும் கொண்டுள்ள நூலைக் குறிக்கும். இவ்வாறு தமிழ்ச் சொற்களுக்கான பொருள் மற்றும் விவரங்களைத் தரும் நூல் தமிழ் அகராதி ஆகும். அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி = அகராதி). அகராதி அகரமுதலி எனவும் வழங்கப்படும். இதன் பெயர் குறிப்பிடுகின்றபடி, இந் நூலிலே சொற்கள் அகர வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும், ஒரே சொல்லில் தொடங்கும் சொற்கள், அவற்றில் இரண்டாவது எழுத்தைக் கொண்டு வரிசைப்படுத்தப்படும். இவ்வாறே சொல்லின் இறுதி எழுத்துவரை அகரவரிசை பின்பற்றப்படும். வரலாறு தமிழில் அகராதிகள் தோன்றுவதற்குமுன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறிந்துகொள்வதற்குப் பயன்பட்டவை நிகண்டுகள் எனப்பட்ட நூல்களாகும். நிகண்டுகளிலே சொற்கள் பொருள் அடிப்படையிலே, தெய்வப் பெயர்கள், மக்கட் பெயர்கள் என்று தொகுதிகளாகக் கொடுக்கப்பட்டிருக்கும். இதுவும் செய்யுள் வடிவத்திலேயே இருக்கும். நிகண்டுகளை மனப்பாடமாக வைத்திருப்பவர்களுக்கே அன்றி மற்றவர்கள் இவற்றிலிருந்து ஒரு சொல்லுக்கான பொருளைத் தேடி அறிதல் மிகவும் கடினமானது. நிகண்டுகளிலுள்ள இக் குறைபாடுகளை நீக்கி எல்லோருக்கும் இலகுவாகப் பயன்படத்தக்க முறையில் சொற்களை ஒழுங்கு படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தன. 16 ஆம் நூறாண்டில் இரேவண சித்தர், முதன் முதல் அகரவரிசைப்படி சொற்களைத் தொகுத்தது ஆக்கிய அகராதி நிகண்டுதான். எனினும் இது செய்யுள் அமைப்பிலே உள்ளது. இதிலே சொற்களின் முதலெழுத்துக்கள் மட்டுமே அகர வரிசையில் அமைக்கப்பட்டிருந்தன. இங்கே அகராதி என்பது ஒரு அடைமொழியாக மட்டுமே பயன்படுத்தப் பட்டிருந்தது. பின்னர் மேற்கத்திய முறைப்படி அமைத்த முதல் தமிழ் அகராதி, சதுரகராதி என்ற பெயரில், தமிழர்களால் வீரமாமுனிவர் என அறியப்படுகின்ற, இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான கிறித்தவ மத போதகரால் 1732 ஆம் ஆண்டு, நவம்பர் 21ஆம் நாள் எழுதி முடிக்கப்பட்டது. ஆயினும் 1824ஆம் ஆண்டில்தான் சதுரகராதி முழுவது அச்சிடப்பட்டு வெளிவந்தது. அந்நூலின் இரண்டாம் பகுதியை 1819இல் எல்லிஸ் என்பவர் அச்சில் வழங்க முனைந்தார். திருச்சிற்றம்பல ஐயர் என்பவர் இதனைச் சீர்திருத்தி உதவினார். கி.பி. 1824இல்தான் சதுரகராதி முழுவதும் சென்னையிலிருந்த கல்லூரியின் இயக்குநர் ரிச்சர்டு கிளார்க்கின் ஆணைப்படி அச்சேறி வெளியாயிற்று. தாண்டவராய முதலியாரும் இராமச்சந்திர கவிராயரும் அப்போது அதனை மேற்பார்வையிட்டனர். பிற பதிப்புகள் 1835, 1860, 1928, 1979 ஆகிய ஆண்டுகளில் வெளியாயின . பட்டியல் மின்னகராதி இவற்றையும் பார்க்க விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை செயல்பாடுகள் ஒருங்கிணைவு|கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு பாடசாலை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழ் அகரமுதலி தமிழ் அகராதிகள் அகராதிகள்
6318
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
நிகண்டு
நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல் வகையாகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை நிகண்டுகள். இந் நூல்கள் முற்காலத்தில் உரிச்சொற்பனுவல் என்ற பெயரால் அழைக்கப்பட்டன, ஆயினும் நிகண்டு என்னும் சொல் வடமொழி என்ற கருத்தும் உள்ளது. WORDS MEANING: சொல்விளக்கம் நிகண்டு என்னும் சொல் தொகை, தொகுப்பு, கூட்டம் என்னும் பொருள் தரும். நிகண்டு என்பது தமிழ்ச்சொல். நிகர் + அண்டு = நிகரண்டு > நிகண்டு. நிகரான சொற்கள் அண்டிக் கிடப்பவை. நிகர் என்னும் சொல்லைத் தொல்காப்பியம் பெயர்ச் சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்துகிறது. சங்கப்பாடல்களில் வரும் 'நிகர்மலர்' என்பது வினைத்தொகை நிகர் + அண்டவாதி = நிகண்டவாதி HISTORY: வரலாறு இக்காலத்தில் அரிய சொற்களின் பொருளை அறிய அகராதிகளைப் பயன்படுத்துகிறோம். இவை சொல்லிலுள்ள முதலெழுத்து நெடுங்கணக்கு வரிசையைப் பின்பற்றி, வரிசைப்படுத்தித் தொகுக்கப்பட்டுள்ளன. தற்கால அகராதிகளுக்கு முன்னரே சொற்களுக்கு பொருள் எடுத்துக்கூறும் மரபும் நூற்களும் தமிழில் நெடுங்காலம் உண்டு. இவ்வாறு சொற்களுக்குப் பொருள் கூறும் நூலே நிகண்டு எனப்படுகிறது. நிகண்டு என்னும் நூல்வகைக்கு முன்னோடி போல் அமைந்தது தொல்காப்பியம். தொல்காப்பியர் அருஞ்சொற்களுக்கு மட்டும் பொருள்கூறிச் செல்கிறார். ஒரு சில எடுத்துக்காட்டுகள்: உரியியலில் அருஞ்சொற்களாகத் தோன்றியவற்றுக்குப் பொருள் தருகிறார். "வெளிப்படு சொல்லே கிளத்தல் வேண்டா, வெளிப்பட வாரா உரிச்சொல் மேன" ("பொருள் வெளிப்படையாகத் தெரிகின்ற சொற்களை விட்டுவிட்டு, பொருள் தெளிவற்ற அரிய சொற்களுக்கு மட்டும் பொருள் கூறுவோம்") என்று குறிப்பிடுகிறார். மரபியலில் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற்பெயர் முதலியவற்றை நிகண்டுகள் போல் தொகுத்துக் கூறி, அவை தமிழ் மரபுப்படி வழங்கும் வழக்கையும் குறிப்பிடுகிறார். நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை. அவற்றில் ஒருபொருட் பல்பெயர், ஒருசொற் பல்பொருள், தொகைப்பெயர் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உண்டு. அவை பெரும்பாலும் நூற்பாவினால் அமைந்தவை. வெண்பா, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை போன்ற பிற பாவகைகளினால் அமைந்த நிகண்டுகளும் உள்ளன. பண்டைய காலத்தில் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அரிய தமிழ்ச் சொற்களின் பொருளை அறிய நிகண்டு நூல்கள் தோன்றின. இவை பாடல்களாக உள்ளன. பாடல்களில் சொற்கள் பொருள் பொருள்நோக்கில் பாகுபடுத்தப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. எ.கா: தேவர்-பெயர், மக்கள்-பெயர், இயற்கைப்பொருட்பெயர், செயற்கைப்பொருட்பெயர், செயல் பற்றிய பெயர்கள், பண்பு பற்றிய பெயர்கள் என அவை சொற்களைப் பாகுபடுத்திக் கொண்டுள்ளன. பாடல்களின் அடிகள் பொதுவாக எதுகைத்தொடையாக அமைவது வழக்கம். எனவே சொற்களின் வரிசையும் இரண்டாம் எழுத்து அடுக்கு எதுகை முறையைப் பின்பற்றி அமைந்துள்ளன. நிகண்டுகளின் வளர்ச்சிப் பாதையில் பிற்கால நிகண்டுகள் ஒரு பொருளைத் தரும் பலசொற்களைத் திரட்டித் தரும் பாங்கினையும் இணைத்துக்கொண்டுள்ளன. காலவரிசைப்படி நிகண்டுகள் பட்டியல் நிகண்டுகளின் தொகுப்புமுறை நிகண்டுகளில் பழமையானது திவாகர நிகண்டு. இது இக்கால அகராதி போலச் சொற்களை அகர வரிசையில் அடுக்கி வைத்துக்கொண்டு சொற்களை விளக்கும் வேறு சொற்களைத் தொகுத்துத் தருகிறது. இதற்குப் பின்னர் தோன்றிய நிகண்டுகள் சொற்களை அடுக்கும்போது முதலெழுத்தை அடுத்து நிற்கும் எதுகை எழுத்து அடிப்படையைக் கையாளுகின்றன. முதலெழுத்து அடுக்குமுறை ஏட்டைப் பார்த்துப் பொருள் உணர்ந்துகொள்ள ஏத்ததாக அமையும். எதுகை எழுத்தடுக்கு முறைமை நூற்பாக்களை மனனம் செய்து மனத்தில் பதிய வைத்துக்கொள்ள ஏதுவாக அமையும். இவற்றையும் பார்க்க சொல் (எண் தொகை) சொல் (ஒருசொல் பல்பொருள்) உசாத்துணைகள் மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005 சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001, சு.ஆனந்தன், தமிழ் இலக்கிய வரலாறு,கண்மணப்பதிப்பகம்.,திருச்சி. மேற்கோள்கள் தொகைப்பெயர் உதாரணம் நானிலம் ஐம்பூதம் நிகண்டுகள்
6329
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
இலங்கைத் தமிழர் பட்டியல்
இலங்கையின் நீண்ட கால வரலாற்றில் தமிழர்களின் பங்கும் முக்கியமானது. இத் தீவின் வரலாற்றின் ஆரம்பகாலம் முதலே தமிழர்கள் பற்றிய குறிப்புக்களைக் காணமுடியும். இலங்கையின் முழு வரலாற்றுக் காலத்திலுமே அரசர்களாகவும், அரச அவைகளிலே உயர்பதவி வகித்தோராயும், கல்விமான்களாகவும், புலவர்களாகவும் பல தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். யாழ்ப்பாண அரசு உருவாகி நிலை பெற்றதன் பின்னரும், குடியேற்றவாத அரசுகளின் காலத்திலும் பெருமளவு இலங்கைத் தமிழர்கள் புகழுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அரசியல் வேலுப்பிள்ளை பிரபாகரன் பொன்னம்பலம் இராமநாதன் பொன்னம்பலம் அருணாசலம் ஜீ. ஜீ. பொன்னம்பலம் எஸ். ஜே. வி. செல்வநாயகம் லக்ஷ்மன் கதிர்காமர் கலை / கல்வி / எழுத்து ஆறுமுக நாவலர் சி. வை. தாமோதரம்பிள்ளை சைமன் காசிச்செட்டி ஆனந்த குமாரசாமி சுவாமி விபுலாநந்தர் தனிநாயகம் அடிகள் சி. ஜே. எலியேசர் விளையாட்டு முத்தையா முரளிதரன் றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட் எதிர் வீரசிங்கம் எஸ். கனகநாதன் - பிரபல இருபக்க கோல் காப்பாளர் உலக சாதனைகள் ஆழிக்குமரன் ஆனந்தன் இலங்கைத் தமிழர் உலக நாடுகளில் தமிழர்
6330
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
புகழ் பெற்ற யாழ்ப்பாணத்தவர்
யாழ்ப்பாண அரசின் தோற்றத்தின் பின்னர் யாழ்ப்பாணமும், யாழ்ப்பாணத்தவரும் இலங்கை வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றனர் எனலாம். அக்காலம் தொட்டு யாழ்ப்பாணத்தவர் பலர் உள்ளூரிலும், வேறு சிலர் இலங்கை முழுவதிலும் புகழுடன் வாழ்ந்தார்கள். இன்னும் சிலர் நாட்டுக்கு வெளியிலும் புகழ் பெற்றார்கள். இவ்வாறு புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. போராளிகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியல்வாதிகள் பொன்னம்பலம் இராமநாதன் பொன்னம்பலம் அருணாசலம் ஜீ. ஜீ. பொன்னம்பலம் எஸ். ஜே. வி. செல்வநாயகம் சி. சுந்தரலிங்கம் அ. அமிர்தலிங்கம் சி. வன்னியசிங்கம் எஸ். கதிரவேலுப்பிள்ளை மு. சிவசிதம்பரம் வி. நவரத்தினம் வி. என். நவரத்தினம் குமார் பொன்னம்பலம் நடராஜா ரவிராஜ் வரலாற்றாய்வாளர்கள் முருகர் குணசிங்கம் கா. இந்திரபாலா சிவசுப்பிரமணியம் பத்மநாதன் பத்திரிகையாளர்கள் கல்வி ஆறுமுக நாவலர் சி. வை. தாமோதரம்பிள்ளை நா. கதிரவேற்பிள்ளை கல்லடி வேலுப்பிள்ளை முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை அ. துரைராஜா, பேராசிரியர் சு. வித்தியானந்தன் தனிநாயகம் அடிகள் ஹென்றி மார்ட்டின் க. கைலாசபதி கா. சிவத்தம்பி செ. சிவஞானசுந்தரம் (நந்தி) காரை செ. சுந்தரம்பிள்ளை அரச நிர்வாகத்துறை சமயம் ஆறுமுக நாவலர் சி. வை. தாமோதரம்பிள்ளை கலைத்துறை வி. வி. வைரமுத்து - நாட்டுக் கூத்து க. சொர்ணலிங்கம் - நாடகம் என். கே. பத்மநாதன் - நாதஸ்வரம் வி. தெட்சணாமூர்த்தி - தவில் க. நவரத்தினம் - கலைப்புலவர் ஏ. இ. மனோகரன் - பாடகர் நித்தி கனகரத்தினம் - பாடகர் சமூக சேவை இந்து போர்ட் இராசரத்தினம் புலவர்கள் அரசகேசரி ஆணல்ட் சதாசிவம்பிள்ளை கணபதி ஐயர் வரத பண்டிதர் சோமசுந்தரப் புலவர் சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர் சேனாதிராய முதலியார் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் சிவசம்புப் புலவர் எழுத்தாளர்கள் சிரித்திரன் சுந்தர் செங்கை ஆழியான் கே. டானியல் செ. கணேசலிங்கன் யாழ்வாணன் கல்வயல் வே. குமாரசுவாமி க. குணராசா யாழ்ப்பாணத்துக்குச் சேவை செய்த வெளிநாட்டவர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்
6332
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81.%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
கு. வன்னியசிங்கம்
குமாரசாமி வன்னியசிங்கம் (Coomaraswamy Vanniasingam, 13 அக்டோபர் 1911 - 17 செப்டம்பர் 1959), இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொடக்கக்காலத் தலைவர்களில் ஒருவரும் ஆவார். 1947 முதல் இறக்கும் வரை கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு வன்னியசிங்கம் தெல்லிப்பழையைச் சேர்ந்த வழக்கறிஞரும் தமிழறிஞருமான வி. குமாரசாமி என்பவருக்குப் பிறந்தவர். வன்னியசிங்கத்தின் சகோதரர் சி. பாலசிங்கம் திறைசேரிச் செயலாளராக இருந்தவர். வன்னியசிங்கம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்று லண்டன் பல்கலைக்கழகப் பட்டத்தை 1933 ஆம் ஆண்டில் பெற்றார். பின்னர் அவர் சட்டத்துறையில் நுழைந்து வழக்கறிஞராகி, யாழ்ப்பாணத்தில் சட்டப்பணியைத் தொடர்ந்தார். மரு. சிறிநிவாசனின் மகள் கோமதியை மணம் முடிந்த வன்னியசிங்கத்திற்கு ஐந்து பெண் பிள்ளைகள்: மரு. ஹேமாவதி பாலசுப்பிரமணியம், சத்தியவதி நல்லலிங்கம், ரேணுகாதேவி சிவராஜன், பகீரதி வன்னியசிங்கம், ரஞ்சினி சாந்தகுமார். அரசியலில் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தினால் தொடங்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் மூலம் இலங்கை அரசியலில் நுழைந்தார். 1947 தேர்தல்ல் கோப்பாய்த் தொகுதி வேட்பாளர் பி. ஜி. தம்பியப்பா தேர்தல் பரப்புரை நேரத்தில் காலமானதை அடுத்து வன்னியசிங்கம் அவருக்குப் பதிலாக தமிழ்க் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைய தமிழ்க் காங்கிரஸ் முடிவெடுத்த போது கட்சியை விட்டு விலகி தமிழரசுக் கட்சியைச் சா. ஜே. வே. செல்வநாயகம் தொடங்கிய போது அக்கட்சியின் தொடக்கக்காலத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். தமிழரசுக் கட்சி 1949 டிசம்பர் 18 இல் தொடங்கப்பட்டது. 1952 தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் சார்பில் கோப்பாய்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். செல்வநாயகம் இத்தேர்தலில் தோல்வியடையவே வன்னியசிங்கம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிற்குத் தலைவரானார். இவர் மீண்டும் 1956 தேர்தல்களில் போட்டியிட்டு மீண்டும் தெரிவானார். மேற்கோள்கள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் 1911 பிறப்புகள் 1959 இறப்புகள் இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் யாழ்ப்பாணத்து நபர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள் இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
6333
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88
முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை
முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை (1820 - 1889) வில்லியம் நெவின்ஸ் (William Nevins) அல்லது நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை எனப் பரவலாக அறியப்பட்டவர். இவர் 19ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் கல்வித்துறையில் அறியப்பட்ட ஒருவராக இருந்தார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றில் பெரும் புலமை மிக்கவர். வைத்தியர் சாமுவேல் பிஸ்க் கிறீனின் மொழிபெயர்ப்புகளுக்கு உறுதுணையாக இருந்தவர். ஆங்கில-தமிழ் அகராதியை உருவாக்கியவர். பிற்காலத்தில் இந்துக் கல்லூரிகள் என்னும் பெயரில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கிளை பரப்பி வெற்றிகரமாக இயங்கிவந்த, இன்னும் முன்னணிக் கல்வி நிறுவனங்களாக இயங்கிவரும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு வித்தாக அமைந்த உள்ளூர்ப் பாடசாலையை (The Native Town High School) உருவாக்கியவர் இவரே. ஆரம்பகாலம் இவர் யாழ்ப்பாணம், மானிப்பாய் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சங்குவேலி என்னும் கிராமத்தில் 1820 ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமாரு என்பவருக்கு ஐந்தாவது மகவாகப் பிறந்தவர். தனது 12ம் வயதில் அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனால் வட்டுக்கோட்டையில் நடத்தப்பட்டுவந்த செமினரியில் (Seminary) சேர்ந்து கல்வி கற்றார். ஒரு இந்துவான இவர் இக்காலத்திலேயே செமினரி நிபந்தனைகளுக்கு அமைய வில்லியம் நெவின்ஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். இவர் தமிழ், ஆங்கிலம் தவிர வடமொழியையும் கற்றார். அக்காலத்தில் கணிதத்தில் இவர் சிறந்த திறமைசாலியாக இருந்ததாகத் தெரிகிறது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராகப் பணியாற்றிய நெவின்ஸ் செல்வதுரை இவரது மகனாவார். தொழில் 1840 இல் கல்வியை நிறைவு செய்துகொண்ட இவர் செமினரியிலேயே பணியில் அமர்ந்துகொண்டார். ஆரம்பத்தில் அங்கே மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த அவர் பின்னர் பேராசிரியராகவும் ஆனார். 1855 இல் புகழ் பெற்ற பலரை உருவாக்கிய வட்டுக்கோட்டை செமினரி மூடப்பட்டதைத் தொடர்ந்து இவர் தமிழ் நாட்டுக்குச் சென்றார். அங்கே, பின்னர் வின்ஸ்லோ அகராதி எனப் பெயர்பெற்ற தமிழ் அகராதி தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த வின்ஸ்லோ என்பவருக்கு உதவியாக இருந்தார். அவருடன் ஐந்து ஆண்டுகள் வரை பணியாற்றிய இவர். 1860 இல் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பினார். தமிழில் தர்க்கவியலை மொழிபெயர்த்து 1850-இல் நியாய இலக்கணம் - Elements of Logic என்னும் எனும் பெயரில் எழுதி வெளியிட்டுள்ளார். 1860 ஆம் ஆண்டில் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்ததும், யாழ்ப்பாணத்தின் முதல் பாடசாலையுமான ஆங்கிலப் பாடசாலையான மத்திய கல்லூரியில் தலைமை ஆசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டார். 26 ஆண்டுகாலப் பணிக்குப் பின் 1886 இல் அக் கல்லூரியை விட்டு விலகினார். நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாடே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. அடுத்த ஆண்டிலேயே மத்திய கல்லூரிக்கு அண்மையில் அமைந்த கட்டிடமொன்றில் சுதேச நகர உயர் பாடசாலை (The Native Town High School) என்ற பெயரில் பாடசாலையொன்றை உருவாக்கினார். 1889 இல் இப் பாடசாலையை வழக்கறிஞராக இருந்த நாகலிங்கம் என்பவர் பொறுப்பேற்றபின்னர் அதே ஆண்டில் சிதம்பரப்பிள்ளை காலமானார். உள்ளூர் நகர உயர் பாடசாலையும், இந்துக்கல்லூரியும் சிதம்பரப்பிள்ளையவர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலை 1890 இல் அக்காலத்தில் இந்து சமய வளர்ச்சிக்காகவும், இந்துப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் பணியாற்றி வந்த சைவபரிபாலன சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. இப் பாடசாலை பின்னர் பொருத்தமான வேறிடத்துக்கு மாற்றப்பட்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எனப் பெயர் பெற்றது. எழுதிய நூல்கள் முத்துக்குமாரு சிதம்பரப்பிள்ளை தமிழ், சமக்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். பல தன்னிலைச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார். ஆங்கிலத் தமிழ் அகராதி (536 பக்கங்கள், 1858) நியாய இலக்கணம் இலக்கிய சங்கிரகம் தமிழ் வியாகரணம் மேற்கோள்கள் யாழ்ப்பாணத்து நபர்கள் இலங்கையின் கல்விமான்கள் 1820 பிறப்புகள் 1889 இறப்புகள் ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் அறிவியல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் தமிழ் அகராதி தொகுப்பாளர்கள் இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள்
6335
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
தமிழ்ப் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டு (Puthandu அல்லது Tamil New year) தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேச இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில கிரெகொரிய நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே. நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது. வரலாறு தமிழரிடையே புத்தாண்டு என்ற பண்டிகை வழக்கில் இருந்ததற்கான பழைய சான்றுகளைப் பெற்றுக்கொள்ளமுடியவில்லை. கார்காலத்தின் ஆரம்பமான ஆவணியை ஆண்டுத்தொடக்கமாக தமிழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில், ஆவணியே முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. பொ.பி பதினான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியத்துக்கு உரைவகுக்கும் நச்சினார்க்கினியரும் ஆவணியே முதல் மாதம் என்கின்றார். ஆவணி முதல் மாதம் என்பது கணிப்பில் பயன்பட்டாலும், அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. தமிழ் நாட்காட்டி இராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேழத்தில் சூரியன் நுழையும் சித்திரையே முதல் மாதமாகக் கருதப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. சங்க இலக்கியமான நெடுநல்வாடையில் மேழமே முதல் இராசி என்ற குறிப்பு காணப்படுவதால், அதை மேலதிக சான்றாகக் கொள்வர். எனினும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய அகத்தியர் பன்னீராயிரம், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புட்பவிதி முதலான நூல்களே தெளிவாக சித்திரை முதல் மாதம் என்று சொல்கின்றன. பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில் தான் வழக்கமாக வேங்கை மரம் பூக்கும். மலைபடுகடாம் "தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை" என்றும், பழமொழி நானூறு "கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாக மிளிர்ந்தது என்றும் சொல்கிறார்கள். இலங்கையில் தமிழரும் சிங்களவரும் சித்திரை ஒன்றையே புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். பொ.பி. 1310-ல் இலங்கையை ஆண்ட தம்பதெனியா மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகுவின் அரசகுருவான தேனுவரைப்பெருமாள் எழுதிய "சரசோதி மாலை" எனும் நூலில் வருடப்பிறப்பின் போது செய்யவேண்டிய சடங்குகள் விவரிக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கையின் திருக்கோணேச்சரம், பொ.பி. 1622-ம் ஆண்டு சித்திரை மாதம், தமிழர் புத்தாண்டு அன்று கொள்ளையிடப்பட்டதாக போர்த்துக்கீசர் குறிப்புகள் சொல்வதையும் நாம் ஊன்றி நோக்கலாம். மரபுகள் புத்தாண்டுக்கு முந்தைய நாட்களை வீடு வாசலை சுத்தம் செய்வதிலும், அலங்கரிப்பதிலும் தமிழர் செலவழிப்பர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப்பொருட்கள் வைத்த தட்டை வழிபாட்டறையில் வைத்து, அதை புத்தாண்டு அதிகாலையில் காண்பது புனிதமாகக் கருதப்படுகின்றது. புத்தாண்டன்று அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபடுவர். மாலை வேளையில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதும், பலகாரங்களை பகிர்ந்துண்பதும் நிகழும். வாழ்க்கை என்றாலே கசப்பும் இனிப்பும் கலந்தது தான். இப்புத்தாண்டிலும் கசப்பும் இனிப்பும் இருக்கும் என்பதன் அடையாளமாக வேப்பம்பூப்பச்சடி, மாங்காய்ப்பச்சடி என்பவற்றை உண்பது குறிப்பிடத்தக்க மரபாகும். இலங்கையில் புத்தாண்டு பிறக்கும் விசூ புண்ணியக் காலத்தில், ஆலயத்தில் வழங்கப்படும் மருத்து நீர் எனப்படும் மூலிகைக் கலவையை இளையவர்களின் தலையில் மூத்தோர் வைத்து ஆசீர்வதிப்பர். அதன்பின்னர் நீராடி அவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம் அல்லது கைமுழுத்தம் பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம் எனப்படுகிறது. போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல், யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து முதலானவை இலங்கையின் பாரம்பரிய புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும். தைப்புத்தாண்டு சர்ச்சை தைப்புத்தாண்டு சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970 மற்றும் 1980களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டதுமான திருவள்ளுவர் ஆண்டு, 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், ஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும். உண்மையில் மறைமலையடிகள் போன்றோரால் வைகாசி அனுடம் என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள் தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது. இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும், சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டு வட்டத்தில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர். இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும், 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும் 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன. வடமொழி அறுபது ஆண்டுகள் சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்கு ஒருமுறை உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது. சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான சம்வத்சரக் கணிப்பீட்டுடன் இணைத்துக் குறிப்பிடும் சாளுக்கியக் கல்வெட்டுகள் அதே சோழர் காலத்திலேயே தமிழகத்துக்கு வடக்கே கிடைத்திருக்கின்றன. எனினும், தமிழகத்தில், 14ஆம் மற்றும் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன. இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப் பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் சூரிய நாட்காட்டியின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது. இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின. மேற்கோள்கள் இவற்றையும் பார்க்கவும் இந்துக் காலக் கணிப்பு முறை சிங்களப் புத்தாண்டு தமிழ் வருடங்கள் தமிழ் மாதங்கள் பிரம்மாவின் புத்தாண்டு‎ தமிழர் விழாக்கள் தமிழ் மாதங்கள் இந்துக் காலக் கணிப்பு முறை இந்து சமய விழாக்கள் இந்தியப் புத்தாண்டுகள் தமிழ்நாட்டு விழாக்கள்
6336
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி என்று இன்று பெயர் பெற்றுள்ள பாடசாலையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட முதலாவது பாடசாலையாகும். இக் கல்லூரி 1817 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அப்போது இதன் பெயர் யாழ்ப்பாணம் வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலை. பின்னர் 1825ஆம் ஆண்டில் தற்போது வேம்படி மகளிர் கல்லூரி இருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. வெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த வண. பீட்டர் பேர்சிவல் பாதிரியாரால் 1834 ஆம் ஆண்டில் இதன் பெயர் யாழ்ப்பாணம் மத்திய பாடசாலை என மாற்றப்பட்டது. ஆண்கள் பாடசாலையான இது யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு தேசிய பாடசாலை ஆகும். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர்களின் பெயர் 1816 ஜேம்ஸ் லிஞ் 1820 ரொபேர்ட் கோர்வர் 1825 ஜோசப் ரொபேர்ட் 1834 கலாநிதி.பீட்டர் பேசிவல் 1852 ஜோன் வோல்ட்டன் இவற்றையும் பார்க்கவும் யாழ்நகரப் பாடசாலைகள் மேற்கோள்கள் இலங்கையின் தேசிய பாடசாலைகள்
6337
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம்
வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம் ஆறுமுக நாவலரால் யாழ்ப்பாண நகரத்திலுள்ள வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் 1848 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அக்காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிமார்களால் தொடங்கப்பட்ட மேல்நாட்டு முறைப்படி கல்வி கற்பிப்பதற்கான பாடசாலைகளில், இந்துப் பிள்ளைகள் மேல் கிறிஸ்தவ மதம் வலிந்து திணிக்கப்படுவதையும், உள்ளூர்ப் பண்பாடுகள் சிதைக்கப் படுவதையும் எதிர்த்து, யாழ்ப்பாணப் பிள்ளைகளுக்கு அவர்களது பண்பாட்டுச் சூழலில், நவீன பாடங்களைக் கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இப் பாடசாலை. இதனால் இது யாழ்ப்பாண மக்களின் தேசிய எழுச்சியின் சின்னமாகவும் திகழ்கிறது என்று கருதப்படுகிறது. இது ஆண், பெண் இரு பால் மாணவர்களும் பயிலும் ஒரு கலவன் பாடசாலையாகும். அமைவிடம் யாழ்ப்பாணத்தில் நாவலர் சந்தி என அழைக்கப்படும், காங்கேசந்துறை வீதி, நாவலர் வீதிகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது இப் பாடசாலை. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி என்பவற்றுக்கு அண்மையில் அவை இரண்டுக்கும் இடையில் இது உள்ளது. மாவட்டத்தின் மிகவும் முக்கியமான அமைவிடத்தைக் கொண்டிருந்தபோதும் இப்பாடசாலை, பெரும்பாலும் அயலிலுள்ள மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கும் பாடசாலையாக இருக்கிறது. வரலாற்றுப் பின்னணி நாவலர் நிறுவிய இப்பாடசாலையின் நோக்கம் பெரு வெற்றி பெற்றது எனச் சொல்லமுடியாது. எனினும், பொதுவாக யாழ்ப்பாணச் சமூக வரலாற்றிலும், குறிப்பாக அதன் கல்வி வரலாற்றிலும், இதன் தோற்றமும், இது தோன்றுவதற்கான காரணங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சைவத்தைப் பரப்புவதற்காகவும், கிறித்தவ மதத்துக்கு இந்துக்களை மதம் மாற்றுவதை எதிர்ப்பதற்காகவும் கிறிஸ்தவ மிஷன் பாடசாலையில் தான் வகித்த பணியைத் துறந்து வெளியேறிய நாவலர், இந்து சமயத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்வதன் மூலமும், பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமும், இந்து சமயத்தை மறுமலர்ச்சியுறச் செய்து அதனைப் பரப்புவதற்காக முப்பது ஆண்டுகள் பணி புரிந்தார் என இலங்கையில் கல்வி வரலாறு பற்றி நூலொன்றை எழுதிய கே. எச். எம் சுமதிபால என்பவர் குறிப்பிட்டுள்ளார். பிற்கால ஆய்வாளர்கள் சிலர், முழு யாழ்ப்பாணச் சமூகத்தினதும் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், இந்துப் பண்பாடு என்னும் பெயரில் யாழ்ப்பாணத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு காட்டும் சமூக அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே நாவலர் முயன்றார் என்கின்றனர். இவற்றையும் பார்க்கவும் யாழ்நகரப் பாடசாலைகள் மேற்கோள்கள் உசாத்துணைகள் சிவத்தம்பி, கார்த்திகேசு; யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை; குமரன் புத்தக இல்லம், சென்னை; ஆவணி 2000. சுமதிபால, கே. எச். எம்; இலங்கையில் கல்வி வரலாறு 1796 - 1965 (Histry of Education in Ceylon 1796 - 1965); திசர பிரகாசகயோ, தெஹிவல; 1968. யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகள்
6338
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF
வேம்படி மகளிர் கல்லூரி
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை (Vembadi Girls’ High School) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலையாகும். யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளுள் ஒன்றாகிய இது ஒரு தேசியப் பாடசாலையாகும். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணப் பெண்பிள்ளைகளின் வசதிக்காக 1838 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இவற்றையும் பார்க்கவும் யாழ்நகரப் பாடசாலைகள் மேற்கோள்கள் யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகள் இலங்கையின் தேசிய பாடசாலைகள்
6340
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
ஆறுமுக நாவலர்
ஆறுமுக நாவலர் (Āṟumuka Nāvalar, 18 திசம்பர் 1822 – 5 திசம்பர் 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். வாழ்க்கைக் குறிப்பு தோற்றம் ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு ஆண்டு மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகனாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம் என்பதாகும். தகப்பனார் ப. கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார். கல்வி ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார். யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது 19-ஆவது வயதில் (1841) அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் எனும் பாதிரியாருக்குக் கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியாருடன் சென்னைப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார். பணிகள் சமயப் பணி சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847-ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது. வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848-இல் தமது மத்திய கல்லூரி, 3 பவுன் மாதச் சம்பள, ஆசிரியப் பணியைத் துறந்தார். அச்சுப் பணி சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1849 ஆடி மாதம் சென்னை சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டையும் சௌந்தரியலகரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார். தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார். தமிழகப் பணி இவரது பணி இலங்கையில் மட்டுமன்றித் தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கிச் சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கிச் சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார். 1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார். குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரைப் பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வரச் சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்புள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். 1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார். போலியருட்பா மறுப்பு இராமலிங்க அடிகள் (வள்ளலார்) பாடிய பாடல்களைத் திருமுறைகளுடன் ஒப்பிட்டு, சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாகத் அவரது பாடல்களைப் பாடுவதைக் கண்ட நாவலர், போலியருட்பா மறுப்பு எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்றார். அப்போது சைவாகம விடயமாகவும் சிவதீட்சை விடயமாகவும் நாவலர் தெரிவித்த சில கருத்துகளால் மனம் பேதித்திருந்த சில தீட்சிதர்கள், வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 ஆனி உத்தரத்தன்று ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு நாவலரைப் பலவாறாக நிந்தித்து விட்டு, நாவலர் தம்மை அடித்ததாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது. சிதம்பர வழக்கின் பின் நாவலர் தருமபுரி, திருவிடைமருதூர், திருவேட்டக்குடி, காரைக்கால், கோடிக்கரை ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். சைவப் பாடசாலை நிறுவல் 1870-இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871-இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது. 1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875-இக்கும் 1878-இக்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார். ஆறுமுக நாவலரின் உரைத்திறன் நீதி வெண்பா உரையில், நன்றறியாத் தீயோர்க் கிடங்கொடுத்த நல்லோர்க்கும் துன்று கிளைக்கும் துயர்சேரும்-குன்றிடத்தில் பின்இரவில் வந்தகரும் பிள்ளைக் கிடங்கொடுத்த அன்னமுதற் பட்டதுபோ லாம் (-74) என்ற பாடற்கதையை நாவலர் பின்வருமாறு விளக்குகின்றார்;- “எவராலும் ஏற முடியாத ஒரு பெரிய மலைக்குகையில் ஓர் அரச அன்னம் அன்னப் பட்சிகளோடு வாசம் செய்து கொண்டிருக்கும் போது, ஒருநாள் இரவு பெருமழையினால் வருந்திய ஒரு காக்கை, தான்இருக்க இடம்கேட்டது. மந்திரியாகிய அன்னம் காக்கைக்கு இடம் கொடுக்கலாகாது என்று சொல்லவும், அரச அன்னம் அதன் சொல்லைக் கேளாமல் காக்கைக்கு இடம் கொடுத்தது. காக்கை அன்று இரவில் அங்கே தங்கி எச்சமிட அவ் எச்சத்தில் இருந்து ஆலம் வித்து முளைத்து எழுந்து பெரிய விருக்ஷமாகி, விழுதுகளை விட்டது. ஒரு வேடன் விழுதுகளைப் பற்றிக் கொண்டு அம்மலையில் ஏறிக் கண்ணிவைத்து அன்னங்களைப் பிடித்தான்”. மொழித்திறன் குறித்த நிகழ்ச்சி ஆறுமுக நாவலர் ஆங்கிலப் புலமையும் வாய்ந்தவர்.வழக்கு ஒன்றில் சாட்சி அளிக்க வேண்டியிருந்தபோது நீதிமன்றத்திற்குத் தமது மாணவர்களுடன் வந்திருந்தார் ஆறுமுக நாவலர். அக்கால ஆங்கிலேய நீதிபதிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்ல அதிகாரிகள் இருப்பார்கள். ஆறுமுக நாவலர் ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பிக்க, குறுகிய மனம் கொண்ட நீதிபதி அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பாமல் முணுமுணுத்தபடி தமிழில் கூறச் சொல்லி உத்தரவிட, ஆறுமுக நாவலர் உடனே, ’எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி’ என்று துவங்கினார். மொழிபெயர்ப்பாளர் திணறிப்போனார். கோபமுற்ற நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட நாவலர் மறுத்து தமிழிலேயே கூறினார். அவரது மாணவர் மொழிபெயர்த்தார். ’சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்பது அவர் கூறியதற்கு அர்த்தம். (எல்லி, ஆழிவரம்பு, கால் ஏற்று, காலோட்டம், புக்குழி எனும் வார்த்தைகளுக்கு முறையே சூரியன், கடற்கரை ஓரம், காற்று வாங்க, சிறுநடை, புறப்பட்டபோது என்று பொருள்) சாதிப்பிரசாரம் சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாசிரமத்தை வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துகளைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார். எனினும், மூடத்தனமான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில், சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம் என்ற கருத்தையும் கூறியிருக்கிறார் நாவலர். நகுலேஸ்வரம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நகுலேஸ்வரம் எனும் பழைமையான சிவபெருமான் திருக்கோயிலை மீண்டும் உருவாக்க முயற்சி செய்தார். இறுதி நாட்கள் நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879-ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசை நாளான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879-ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21-ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார். குருபூசை நாள் : கார்த்திகை - மகம் நினைவு நிகழ்வுகள் நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் நாவலர் மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுக நாவலரின் நினைவாக இலங்கை அரசு 1971 அக்டோபர் 29-இல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது. சென்னை, தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் ஆறுமுக நாவலர் நினைவைப் போற்றும் வண்ணம் "யாழ்ப்பாணம் நல்லூர் தவத்திரு ஆறுமுக நாவலர் கலையரங்கம்" ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாவலர் பதிப்பித்த நூல்கள் ஆறுமுக நாவலர் எழுதிய அல்லது பதிப்பித்த நூல்பட்டியல் (அகர வரிசையில்): அகத்தியர் அருளிய தேவாரத் திரட்டு அன்னம்பட்டியம் இலக்கணக் கொத்து இலக்கணச் சுருக்கம் இலக்கண விளக்கச் சூறாவளி இலக்கண வினா விடை இலங்கை பூமி சாஸ்த்திரம் ஏரெழுபது கந்தபுராண வசனம் கந்தபுராணம் பகுதி 1-2 கொலை மறுத்தல் கோயிற் புராணம் (புதிய உரை) சிதம்பரமான்மியம் சிவஞானபோதமும் வார்த்திகமென்னும் பொழிப்புரையும் சிவஞானபோத சிற்றுரை சிவராத்திரி புராணம் சிவசேத்திராலய மஹாத்ஸவ உண்மைவிளக்கம் சிவாலய தரிசனவிதி சுப்பிரமணிய போதகம் சூடாமணி நிகண்டு (திருக்கோவையார் மூலம், உரை) சேது புராணம் சைவ சமயநெறி சைவ தூஷண பரிகாரம் சைவ வினா விடை சௌந்தர்யலகரி உரை ஞானகும்மி தருக்கசங்கிரகம் தருக்க சங்கிரக தீபிகை தனிப்பா மாலை தாயுமானசுவாமிகள் திருப்பாடல் திரட்டு திருக்குறள் (திருக்கோவையார் மூலம், பரிமேலழகர் உர திருக்கை வழக்கம் திருக்கோவையார் மூலம் திருக்கோவையார் நச் உரை திருச்செந்தூர் நிரோட்டயமக வந்தாதி திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம் திருத்தொண்டர் புராணம் திருமுருகாற்றுப்படை திருவாசகம் மூலம் திருவிளையாடற் புராணம் மூலம் திருவிளையாடற் புராணம் வசனம் தெய்வயாணையம்மை திருமணப்படலம் தொல்காப்பியம் சூத்திர விருத்தி தொல்காப்பியம் சொல். சேனா. உரை நன்னூல் காண்டிகை உரை நன்னூல் விருத்தி உரை நீதி நூல் திரட்டு மூலமும் உரையும் நைடத உரை பதினோராம் திருமுறை பாலபாடம் - 4 தொகுதிகள் பிரபந்தத் திரட்டு பிரயோக விவேகம் புட்ப விதி பெரிய புராண வசனம் போலியருட்பா மறுப்பு மார்க்கண்டேயர் யாழ்ப்பாணச் சமயநிலை வக்கிரதண்டம் வாக்குண்டாம் விநாயக கவசம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஆறுமுக நாவலர் பற்றிய நூல்கள் நாவலர் நூற்றாண்டு மலர் - நூலகம் திட்டம் பிற இணையத்தளங்கள் ஆறுமுகநாவலர் குருபூசை-2007 ஆறுமுக நாவலர் பதிப்பு நெறிமுறைகள், சி. இலட்சுமணன் Graves of Peter Percival, R B Foote, discovered at Yercaud - Percival was not an apostate - Prof. Hoole - ஆறுமுக நாவலர் சைவத்துக்கும் தமிழுக்கும் சிறந்த தொண்டாற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் , தினகரன், நவம்பர் 14, 2011 யாழ்ப்பாணத்து நபர்கள் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்துப் பதிப்பாளர்கள் தமிழ்ப் பதிப்பாளர்கள் தமிழ் இலக்கண அறிஞர்கள் தமிழறிஞர்கள் ஈழத்துத் தமிழறிஞர்கள் 1822 பிறப்புகள் 1879 இறப்புகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் தமிழ்ப் பேச்சாளர்கள் விவிலிய மொழிபெயர்ப்பாளர்கள் இலங்கை மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் தமிழ் உரையாசிரியர்கள் பெரியபுராண உரையாசிரியர்கள் தமிழ் மொழி ஆர்வலர்கள்
6345
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
மகபூப்நகர்
மகபூப்நகர், இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள மகபூப்நகர் மாவட்டத்தின் தலைநகரம். இங்கு உள்ளோர் தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். இது பலமூர் எனவும் அழைக்கப்படுகிறது. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 3,513,934 ஆகும். இம்மாவட்டம் முன்பு நிஜாம்களின் ஆட்சியில் இருந்தது. நிஜாம் ஆட்சியின்போது இது ஹைதராபாத் மாநிலத்தின் தென்மாவட்டமாக இருந்தது. தெற்கில் கிருஷ்ணா ஆறு பாய்கிறது. நல்கொண்டா, ஹைதராபாத், கர்நூல், ராய்ச்சூர், குல்பர்கா ஆகியவை இதன் அண்டை மாவட்டங்கள் ஆகும். வரலாறு முற்காலத்தில் இப்பகுதியானது "ருக்மம்மாபேட்டை" எனவும் "பலமூரு" எனவும் அழைக்கப்பட்டது. இதன் பெயர் ஆனது 1890 டிசம்பர் 4-இல் அப்போது நிஜாமாக இருந்த மகபூப் அலி கான் என்பவரின் நினைவாக மகபூப் நகர் என்று பெயரிடப்பட்டது. முன்பொரு காலத்தில் இது சோழர்களின் நிலம் எனப்பொருள்படும் சோழவாடி என அழைக்கப்பட்டது. படக்காட்சியகம் File:Office of District Educational Officer, Mahabubnagar.jpg|மகபூப்நகர், மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகம் File:Govt. College of Teacher Education, Mahabubnagar.jpg|மகபூப்நகர், அரசு ஆரிரியக் கல்வி கல்லூரி </Gallery> சான்றுகள் தெலங்காணாவில் உள்ள ஊர்களும் நகரங்களும் மகபூப்நகர் மாவட்டம்
6347
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D
கம்மம்
கம்மம் (Khammam) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள ஒரு மாநகரம் ஆகும். இது கம்மம் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது. இங்குள்ள கம்ப மலை என்ற மலையின் காரணமாக கம்மம் என்று பெயரிடப்பட்டது. மேற்கோள்கள் கம்மம் மாவட்டம் தெலங்காணாவில் உள்ள ஊர்களும் நகரங்களும்
6352
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE
காக்கிநாடா
காக்கிநாடா இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள காக்கிநாடா மாவட்டத்தின் தலைநகராகும். இது ஆந்திரத்தின் உர நகரம் என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இதற்கு சிறப்பு பொருளாதார மண்டல தகுதி வழங்கப்பட்டது. தட்பவெப்ப நிலை ஆட்சி காக்கிநாடாவை காக்கிநாடா மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இந்த நகரத்தை ஐம்பது வார்டுகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு வார்டிற்கும் உறுப்பினர் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் தமக்குள் ஒருவரை மேயராக தேர்ந்தெடுப்பர். போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், மாநில நெடுஞ்சாலை வழியாகவும் சாலைப் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். ராஜமுந்திரியில் உள்ள வானூர்தி நிலையத்தை அடைய 65 கி.மீ செல்ல வேண்டும். இந்த நகரில் மூன்று தொடருந்து நிறுத்தங்கள் உள்ளன. ஐதராபாத்து, செகந்திராபாத்து, மும்பை, பெங்களூர், சென்னை, திருப்பதி, சீரடி, பவநகர், எர்ணாகுளம் உள்ளிட்ட நகரங்களுக்கு தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கோள்கள் ஆந்திர ஊர்களும் நகரங்களும் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள் காக்கிநாடா மாவட்டம்
6353
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D
பிட்டுக்குழல்
பிட்டுக்குழல் என்பது பிட்டுத் தயாரிப்பதற்கான ஒரு சாதனமாகும். சாதாரணமாக இது மூங்கில் குழாயைப் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. தற்காலத்தில் அலுமீனியம் முதலிய உலோகங்களையும் பயன்படுத்துகிறார்கள். ஏறத்தாள 3 அங்குலம் விட்டமுடைய மூங்கில் குழாய்களே பிட்டுக்குழல் செய்வதற்குப் பயன்படுகின்றன. நீளம் சுமார் ஒரு அடியாகும். இக் குழாயின் ஒரு முனையிலிருந்து குழாய் நீளத்தின் மூன்றிலொரு பங்கு அளவில் துணியைச் சுற்றி அவ்விடம் பருமனாக்கப்படும். இவ்விடத்தில் விட்டம் சுமார் 6 அங்குலம் இருக்கும். இவற்றையும் பார்க்கவும் தமிழர் சமையலறைச் சாதனங்கள் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள்
6354
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
பிட்டு
பிட்டு அல்லது புட்டு என்பது ஒருவகை உணவுப் பண்டம். இதை அரிசி மாவு, தேங்காய்த் துருவல் கொண்டு செய்கின்றனர். அரிசி மாவைக் கொதித்த நீரில் குழைத்துப் பின்னர் சிறு சிறு துண்டுகளாக ஆக்கிய பின்னர் அதனுடன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து நீராவியில் இட்டுப் பிட்டு அவிக்கின்றனர். அரிசி மாவு தவிர, சிறு தானிய வகைகளில் ஒன்றான குரக்கன் மாவும் பிட்டு சமைப்பதற்குப் பயன்படுகின்றது. ஒடியல் பிட்டு என்னும் ஒருவகைப் பிட்டு, பனங்கிழங்கைக் காயவிட்டுப் பெறப்படும் ஒடியலின் மாவினால் செய்யப்படுகின்றது. தற்காலத்தில் பிட்டு மென்மையாக இருப்பதற்காக அரிசி மாவுடன் கோதுமை மாவையும் கலந்து பிட்டு அவிக்கும் வழக்கம் உண்டு. தமிழ் நாட்டில் கூடுதலாக பிட்டு சமைப்பதில்லை என்றாலும், இலங்கையிலும், கேரளாவிலும் இதைச் சமைத்து மிகவும் விரும்பி உண்கின்றனர். இலங்கைத் தமிழர்கள், பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் காலை, இரவு உணவுகளுக்கு விரும்பி உண்ணும் உணவுகளில் பிட்டும் ஒன்றாகும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தோசையும், இட்டிலியும் போல, இலங்கைத் தமிழர்களுக்குப் பிட்டும், இடியப்பமும் அதிகம் உண்ணப்படும் உணவுப் பண்டங்களாக உள்ளன. தென்கிழக்காசிய நாடுகளிலும் புட்டு உணவு காணக் கிடைக்கிறது. இந்தோனேசியாவில் இதனைப் புத்து என்கின்றனர். அவித்தல் முறை மரபு வழியாகப் பிட்டு அவிப்பதற்கு இரண்டு முறைகள் உள்ளன. ஒரு முறையில் பிட்டுக் கலவையைப் பனையோலையினால் செய்யப்பட்ட கூம்பு வடிவான நீற்றுப் பெட்டியில் இட்டு அவிக்கின்றனர். மற்ற முறையில் பிட்டு அவிப்பதற்கு மூங்கிலால் செய்யப்படும் பிட்டுக் குழல்கள் பயன்படுகின்றன. இம் முறையில் அவிக்கப்படும் பிட்டு "குழற்பிட்டு" எனப்படுகின்றது. குழற்பிட்டுச் செய்யும்போது மாவுத் துண்டுகளும் தேங்காய்த் துருவலும் ஒன்றாகக் கலக்கப்படுவது இல்லை. முதலில் சிறிதளவு தேங்காய்த் துருவலைக் குழலில் இட்டுப் பின்னர் அதன்மேல் ஏறத்தாழ 2 தொடக்கம் 3 அங்குல அளவுக்கு மாவுத் துண்டுகளை இடுவர். இவ்வாறு மாறிமாறிக் குழல் நீளத்துக்கு நிரப்பி அவிப்பது வழக்கம். இவ்வகைப் பிட்டு ஏறத்தாழ 2 அங்குல விட்டம் கொண்ட சிறிய உருளை வடிவத் துண்டுகளாக அமையும். தற்காலத்தில், பிட்டுக் கலவையை பருத்தித் துணியில் இட்டு இட்டிலிச் சட்டியிலோ, அவிக்கும் பாத்திரத்திலோ இட்டும் அவிக்கும் வழக்கம் உள்ளது. பிட்டு வகைகள் செய்முறை வாரியாக குழற்பிட்டு நீத்துப்பெட்டிப் புட்டு பிடிப் புட்டு புட்டுக் கலவை இடுபொருள் வாரியாக அரசிமாப் புட்டு குரக்கன் புட்டு வெள்ளைப் பிட்டு (வெள்ளை மா) கீரைப் பிட்டு வெங்காயப் புட்டு பிட்டுக் கலவை (மரக்கறி, மாமிசம்) அலுவாப்பிட்டு ஆலங்காய்ப்பிட்டு சீனிப்பிட்டு மணிப்பிட்டு பாற்பிட்டு குரக்கன் பிட்டு ஒடியற்பிட்டு ஆட்டாமாப் புட்டு ஊட்டச்சத்து இடுபொருட்களைப் பொறுத்து புட்டின் ஊட்டச்சத்து வேறுபடுகிறது. ஒப்பீட்டளவில் குரக்கன், ஒடியல் மா புட்டுக்கள் வெள்ளைப் புட்டை விட ஊட்டச்சத்து மிக்கவை. பொதுவாக எல்லா வகைப் புட்டுக்களும் புட்டு மாசத்து நிறைந்த உணவு ஆகும். எனவே நிறைய ஆற்றலை வழங்கக் கூடியவை. இவற்றையும் பார்க்கவும் தமிழர் சமையல் சான்றுகள் புட்டு மற்றும் கடலை கறி, கேரள சுற்றுலாத்துறை இணையப் பக்கம் கோதுமை ரவை புட்டு , நாளிதழ்:தினகரன், நாள்: திசம்பர் 26, 2012. உணவு வகைகள் பிட்டு கேரள சமையல் தமிழர் சமையல்
6355
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88
திருகை
திருகை என்பது பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காக உள்ள சாதனமாகும். இது பொதுவாகக் கருங்கல்லினால் செய்யப்படுகின்றது. திருகையில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. இது கிடைத் தளத்தில் வட்ட வடிவம் கொண்டது. திருகையின் அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். ஒரு குட்டையான உருளை வடிவம் எனலாம். இதன் மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் பொருத்தப்பட்ட ஒரு தண்டு காணப்படும். இத்தண்டு பெரும்பாலும் இரும்பினால் செய்யப்பட்டிருக்கும். மற்றப் பகுதியான மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும். இத் துளையினூடாகக் கீழ்ப் பாகத்தின் தண்டைச் செலுத்தி இரண்டு பாகங்களையும் ஒன்றன்மீது ஒன்று வைக்கக்கூடியதாக இருக்கும். கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும். சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள். தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும். இவற்றையும் பார்க்கவும் தமிழர் சமையலறைச் சாதனங்கள் தமிழர் சமையல் கருவிகள் சமையல் கருவிகள் தமிழர் பயன்பாட்டுப் பொருட்கள்
6365
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
ஊர்காவற்றுறை
ஊர்காவற்றுறை (Kayts) என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தீவுகளுள் ஒன்றான, லைடன் தீவு எனவும் அழைக்கப்படுகின்ற, லைடன் தீவில் உள்ள ஒரு ஊராகும். இங்கே ஒரு சிறிய துறைமுகமும் உண்டு. யாழ்ப்பாண அரசுக் காலத்திலும், போத்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலும், இத் துறைமுகம் நாட்டின் வடபகுதியிலிருந்த முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இத்துறைமுகத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைத்துவந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன. புனித பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இத்துறைமுகத்துக்கு 16ம் நூற்றாண்டில் வந்திறங்கி கத்தோலிக்க மதப் பரப்பலில் ஈடுபட்டார். இவற்றையும் பார்க்க தனிநாயகம் அடிகள் மேற்கோள்கள் துணை நூல்கள் கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம். சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம். செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம். சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா. இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை. வேலணைத் தீவு இலங்கையின் தீவுகள்
6366
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
வேதியியல்
இரசாயனவியல் (Chemistry) எனப்படுவது அணுக்களால் அதாவது தனிமங்கள் மற்றும் மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் சேர்மங்களைப் பற்றி ஆராய்கின்ற ஓர் அறிவியல் துறையாகும். பொதுவாக அணுக்களின் இணை இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றின் இயைபு, கட்டமைப்பு மற்றும் அதனால் உருவாகும் பண்புகள் பற்றிய அனைத்து செய்திகளும் இத்துறையில் ஆராயப்படும். அணுக்களும் மூலக்கூறுகளும் இரசாயனப் பிணைப்புகளிலாகின்றன என்பது இங்கு விவரிக்கப்படுகிறது .பல வகையான பிணைப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று சகப்பிணைப்பு ஆகும். இவ்வகைப் பிணைப்பில் ஒன்று சகப்பிணைப்பு ஆகும் . ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்கள் இவ்வகைப் பிணைப்பில் பகிரப்படுகின்றன. ஒரு சேர்மம் மற்றொரு சேர்மத்திற்கு எலக்ட்ரான்களை கொடையளிப்பது அயனிப் பிணைப்பாகும். இவை தவிர ஐதரசன் பிணைப்பு, வாண்டர்வால்ஸ் பிணைப்பு என்ற பிலங்கள் ஆகும். மேலும் பின்வருவனவற்றை வேறு பிரிவுகளாகக் கருதலாம். கரிமயியல் (ப) – Organic Chemistry கனிம வேதியியல்அசேதன இரசாயனம்) – Inorganic Cemistry இயபௌதீக இரசாயனம்) – Physical Chemistry அணுக்கள் பற்றியும், அவ்வணுக்களுடன் இடைவினைகள் பற்றியும், சிறப்பாக வேதியியல் பிணைப்புக்களின் இயல்புகள் குறித்தும் கவனம் செலுத்துகிறது. நிலவியல், பிற இயற்கை அறிவியல்கள் அறிவியல் துகளை இயற்ப இணைக்கும் துறையாக வேதியியல் இருப்பதால், சில வேளைகளில் வேதியியலை "அறிவியலின் மையம்" என்பதுண்டு. வேதியியல் இயற்பிய அறிவியலின் ஒரு பகுதியாக இருப்பினும், இது இயற்பியலில் இருந்தும் வேறானது. கோட்பாடு மரபுவழி வேதியியலானது, அடிப்படைத் துகள்கள், அணுக்கள், மூலக்கூறுகள், சாரப்பொருட்கள், உலோகங்கள், பளிங்குகள், பிற பொருட் சேர்க்கைகள் என்பன பற்றி ஆய்வு செய்கிறது. இவ்வாய்வு அப் பொருட்களின் திண்ம, நீர்ம அல்லது வளிம நிலையில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இடம்பெறலாம். வேதியியலில் ஆராயப்படும் இடைவினைகள், தாக்கங்கள், மாற்றங்கள் என்பன வேதிப்பொருட்களிடையே இடம்பெறும் இடைவினைகளின் விளைவாக அல்லது பொருளுக்கும் ஆற்றலுக்கும் இடையேயான இடைவினைகளின் விளைவாக ஏற்படுபவை. வேதிப் பொருட்களின் இவ்வாறான நடத்தைகள் பற்றிய ஆய்வுகள், வேதியியல் ஆய்வு கூடங்களில் நடைபெறுகின்றன. "வேதியியல் தாக்கம்" அல்லது "வேதிவினை" என்பது சில சாரப்பொருட்கள் ஒன்று அல்லது பல சாரப்பொருட்களாக மாற்றம் அடைவதைக் குறிக்கிறது. இதை ஒரு வேதிச் சமன்பாட்டினால் குறியீடாக வெளிப்படுத்த முடியும். இச் சமன்பாடுகளின் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் உள்ள அணுக்களின் எண்ணிக்கை மிகப் பெரும்பாலும் ஒரே அளவாக இருக்கும். ஒரு சாரப்பொருள் உட்படும் வேதிவினைகளின் இயல்புகளும், அதனோடு ஆற்றல் மாற்றங்களும், வேதியியல் விதிகள் எனப்படும் சில அடிப்படை விதிகளுக்கு அடங்குவனவாக உள்ளன. ஆற்றல், மாற்றீட்டு வெப்பம் ஆகியவற்றைக் கருத்துக்கு எடுத்தல் ஏறத்தாழ எல்லா வேதியியல் ஆய்வுகளிலுமே முக்கியமாக உள்ளது. வேதிச் சாரப்பொருட்களை, அவற்றின் கட்டமைப்பு, நிலை, வேதியியல் சேர்க்கை என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்துகின்றனர். இவற்றை வேதியியல் பகுப்பாய்வுகளுக்கான கருவிகளின் துணையுடன் பகுத்தாய்வு செய்ய முடியும். வேதியியல் ஆய்வுகளில் ஈடுபடும் அறிவியலாளர்கள் வேதியியலாளர் எனப் பெயர் பெறுவர். வேதியியலாளர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேதியியலின் துணைப் பிரிவுகளில் சிறப்புத் தகைமைகளைக் கொண்டிருப்பது உண்டு. வரலாறு பண்டைய எகிப்தியர்கள் கிமு 4000 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை வேதியியலின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். கிமு 1000 ஆண்டளவிலேயே பண்டைய நாகரிக மக்கள் வேதியியலின் பல்வேறு துணைப் பிரிவுகளுக்கு அடிப்படையாக அமையும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றுள் கனிம மூலங்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுத்தல், மட்பாண்டங்களை வனைந்து மெருகிடல், நொதிக்கவைத்துக் மதுவகைகள் தயாரித்தல், ஆடைகளுக்கும், நிறந்தீட்டலுக்கும் வேண்டிய வண்ணங்களைத் தயாரித்தல், மருந்துகளையும் வாசனைப் பொருட்களையும் செய்வதற்கு தாவரங்களில் இருந்து வேதிப் பொருட்களைப் பிரித்தெடுத்தல், பாற்கட்டிகளைச் செய்தல், ஆடைகளுக்கு நிறமூட்டல், தோலைப் பதப்படுத்துதல், கொழுப்பிலிருந்து சவர்க்காரம் உற்பத்திசெய்தல், கண்ணாடி உற்பத்தி, வெண்கலம் போன்ற கலப்புலோகங்களை உருவாக்குதல் போன்றவை அடங்கும். வேதியியல், தாதுப் பொருட்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுப்பதற்கு வழி சமைத்த எரிதல் என்னும் தோற்றப்பாட்டில் இருந்து தோற்றம் பெற்றதாகக் கொள்ளலாம். அடிப்படையான கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பொன்னின் மீதிருந்த பேராசை அதனை தூய்மையாக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க உதவியது. இது தூய்மையாக்குதல் என்றில்லாமல் ஒரு மாற்றம் என்றே அக்காலத்தில் எண்ணியிருந்தனர். அக்காலத்து அறிஞர்கள் பலர் மலிவான உலோகங்களைப் பொன்னாக மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளன என நம்பினர். இது இரசவாதம் தோன்றுவதற்கு அடிப்படை ஆகியதுடன், மூல உலோகங்களைத் தொட்டதும் பொன்னாக மாற்றக்கூடிய "இரசவாதக்கல்"லைத் தேடும் முயற்சிகளுக்கும் வித்திட்டது. கிமு 50 ஆம் ஆண்டில் உரோமரான லூக்கிரட்டியசு என்பவர் எழுதிய பொருட்களின் இயல்பு (De Rerum Natura) என்னும் நூலில் கண்டபடி,கிரேக்கர்களின் அணுவியக் கோட்பாடு கிமு 440க்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. தூய்மையாக்க வழிமுறைகளின் தொடக்ககால வளர்ச்சிகளில் பெரும்பாலானவை குறித்து மூத்த பிளினி என்பவர் தனது இயற்கைசார் வரலாறு (Naturalis Historia) என்னும் தனது நூலில் விளக்கியுள்ளார். வேதியியலின் வளர்ச்சிப் போக்கைப் பருமட்டாகப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்: எகிப்திய இரசவாதம் (கிமு 300 – கிமு 400), "ஆக்டோவாட்" (எண்மடங்கு) போன்ற தொடக்ககாலத் தனிமக் கோட்பாடுகளை உருவாக்கியது. கிரேக்க இரசவாதம் (கிமு 332 – கிபி 642), மசிடோனியப் பேரரசர் அலெக்சாந்தர் எகிப்தைக் கைப்பற்றியபோது அதன் தலைநகர் அலெக்சாந்திரியாவில் உலகின் மிகப்பெரிய நூலகம் இருப்பதையும் அங்கே அறிஞர்கள் ஒன்றுகூடி ஆய்வு செய்வதையும் அறிந்துகொண்டார். இசுலாமிய இரசவாதம் (கிபி 642 – 1200), இசுலாமியர் எகிப்தைக் கைப்பற்றினர். சாபிர் இபின் அய்யான், அல்-ராசி போன்றோர் இரசவாதத்தை வளர்த்தனர், சாபிர் அரிசுட்டாட்டிலின் கோட்பாடுகளைத் திருத்தியமைத்தார். வழிமுறைகளிலும் கருவிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய இரசவாதம் (1300 – இன்றுவரை), சியுடோ-கெபர் என்பார் அராபிய வேதியியலை அடிப்படையாக வைத்து மேலும் அதனை வளர்த்தெடுத்தார். 12 ஆம் நூற்றாண்டில் இருந்து பெரிய முன்னேற்றங்கள் அராபிய மண்ணிலிருந்து ஐரோப்பாவுக்கு மாறின. வேதியியல் (1661), போயில் வேதியியலில் முக்கியமான நூலொன்றை (The Sceptical Chymist) எழுதினார். வேதியியல் (1788), இலவோசியே என்பார் தனது "வேதியியலின் கூறுகள்" (Elements of Chemistry) என்னும் நூலை எழுதி வெளியிட்டார். வேதியியல் (1803), டால்ட்டனின் "அணுக் கோட்பாடு" என்னும் நூல் வெளியானது. வேதியியல் (1869), டிமிட்றி மென்ட்லீவ் தற்கான வேதியியலின் சட்டகமாக அமைந்திருக்கும் ஆவர்த்தன அட்டவணையை முன்வைத்தார். தற்கால வேதியியலின் முன்னோடிகளும், தற்கால அறிவியல் வழிமுறைகளைக் கண்டுபிடித்தவர்களும் நடுக் காலத்தைச் சேர்ந்த அராபிய, பாரசீக அறிஞர்கள் ஆவர். இவர்கள் துல்லியமான கவனிப்புக்களையும், கட்டுப்பாடுள்ள பரிசோதனை முறைகளையும் அறிமுகப் படுத்தியதுடன், புதிய பல வேதிப் பொருட்களையும் கண்டறிந்தனர். மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த முசுலிம் வேதியியலாளர்களுள் சாபிர் இபின் ஐய்யான், அல்-கின்டி, அல்-ராசி, அல்-பிரூனி, அல்-அசென் என்போர் அடங்குவர். சாபிரின் ஆக்கங்கள், 14 ஆம் நூற்றாண்டின் எசுப்பானியாவைச் சேர்ந்த சியுடோ-கெபெர் என்பவரின் இலத்தீன் மொழிபெயர்ப்புக்கள் ஊடாக ஐரோப்பாவுக்கு அறிமுகமாகின. சியுடோ-கெபெர், கெபெர் என்னும் புனை பெயரில் தானாகவும் சில நூல்களை எழுதியுள்ளார். வேதியியலின் வளர்ச்சியில் இந்திய இரசவாதிகளினதும், உலோகவியலாளர்களினதும் பங்களிப்புகளும் குறிப்பிடத் தக்கவை. ஐரோப்பாவில் வேதியியலின் எழுச்சி, இருண்ட காலம் என அழைக்கப்படும் காலத்தில் அடிக்கடி ஏற்பட்ட கொள்ளை நோயின் காரணமாகவே ஏற்பட்டது. இது மருந்துகளுக்கான தேவையைக் கூட்டியது. அக்காலத்தில் எல்லா நோயையும் குணப்படுத்தவல்ல "காயகல்பம்" என ஒன்று இருப்பதாகக் கருதினர். ஆனால், இரசவாதக்கல் என்பதைப் போலவே இதையும் எவரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இரசவாதத்தைக் கைக்கொண்ட சிலர் அதை ஒரு அறிவார்ந்த செயற்பாடாகவே கருதி வந்தனர். அவர்களிற் சிலர் காலப் போக்கில் முன்னேற்றமான கருத்துக்களையும் முன்வைத்தனர். எடுத்துக்காட்டாக பராசெல்சசு (1493–1541) என்பார், வேதியியல் பொருட்களையும் மருந்துகளையும் குறித்துத் தனக்கு இருந்த தெளிவற்ற புரிதலை வைத்துக்கொண்டு, நான்கு மூலக் கொள்கையை மறுத்து இரசவாதமும் அறிவியலும் கலந்த கலப்புக் கொள்கையொன்றை உருவாக்கினார். இதுபோலவே, கணிதத் துறையில் கூடுதலான கட்டுப்பாடுகளையும், அறிவியல் கவனிப்புக்களில் பக்கச் சார்பை நீக்குவதையும் வலியுறுத்திய மெய்யியலாளர்களான சர் பிரான்சிசு பேக்கன் (1561–1626), ரெனே டேக்கார்ட் (1596–1650) போன்றோரின் செல்வாக்கு அறிவியல் புரட்சிக்கு வித்திட்டது. வேதியியலில், இது ராபர்ட் போயில் (1627–1691) என்பவருடன் தொடங்கியது. இவர் வளிம நிலையின் இயல்புகள் தொடர்பான விதி ஒன்றை வெளிப்படுத்தினார். இது போயில்சின் விதி என அழைக்கப்படுகிறது. அந்துவான் இலவாசியே என்பவர் 1783 ஆம் ஆண்டில் திணிவுக் காப்புக் கோட்பாட்டையும், 1800ல் ஜான் டால்ட்டன் அணுக் கோட்பாட்டையும் வெளியிட்டனர். உண்மையில் இதன் பின்னரே வேதியியல் முதிர்ச்சியடைந்தது எனலாம். திணிவுக் காப்பு விதியினதும், லவோய்சியரின் முயற்சிகளையே பெரிதும் அடிப்படையாகக் கொண்ட எரிதலுக்கான ஒட்சிசன் கோட்பாடினதும் விளைவாக வேதியியலை மீளுருவாக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. எல்லாச் சோதனைகளையும், ஒரே கோட்பாட்டுச் சட்டகத்துள் பொருத்துவதற்கான முயற்சியே இலவோசியே வேதியியலுக்கு அளித்த அடிப்படையான பங்களிப்பு ஆகும். இலவோசியே வேதியியல் சமநிலையின் தொடர்ச்சியான பயன்பாட்டை நிலை நிறுத்தினார், ஒட்சிசனைப் பயன்படுத்தி பிளாசித்தன் கோட்பாட்டைத் தூக்கியெறிந்தார், புதிய வேதியியல் பெயரிடல் முறை ஒன்றை உருவாக்கியதுடன் நவீன மீட்டர் அளவு முறைக்கும் பங்களிப்புச் செய்துள்ளார். பழைய, வழக்கொழிந்த வேதியியல் சார்ந்த சொற்களையும் தொழில்நுட்ப மொழியையும் பெரும்பாலும் கல்வியறிவு அற்ற பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்ப்பதிலும் இலவோசியே ஈடுபட்டார். இதனால் வீதியியல் குறித்த மக்களின் ஈடுபாடு கூடியது. வேதியியலில் ஏற்பட்ட இத்தகைய முன்னேற்றங்கள் "வேதியியல் புரட்சி" என்று பொதுவாக அழைக்கப்படும் நிலை ஏற்படக் காரணமாயின. இலவோசியேயின் பங்களிப்புக்கள், உலகம் முழுதும் இன்று கல்வி நிலையங்களில் கற்கப்படும் நவீன வேதியியல் உருவாக வழிசமைத்தன. இதனாலும், அவரது பிற பங்களிப்புக்களினாலும் இலவோசியே நவீன வேதியியலின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அடிப்படைக் கருத்துருக்கள் வேதியியலில் பல்வேறு அடிப்படையான கருத்துருக்கள் உள்ளன. இவற்றுட் சில கீழே விளக்கப்படுகின்றன. அணு அணுவே வேதியியலின் அடிப்படையான அலகு. இது நேரேற்றம் கொண்ட மையப் பகுதியையும், அதைச் சுற்றிலும் இலத்திரன்களையும் (எலெக்ட்ரான்) கொண்டிருக்கும். அணுக்கரு என்று அழைக்கப்படும் மையப்பகுதி புரோத்தன் (புரோட்டான்), நியூத்திரன் (நியூட்ரான்) என்னும் துகள்களால் ஆனது. சூழ இருக்கும் இலத்திரன்கள் எதிரேற்றம் கொண்டவை. அதனால், அணுக்கருவின் நேரேற்றத்தைச் சமநிலைப் படுத்துகின்றன. ஒரு தனிமத்தின் இயல்புகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கக்கூடிய மிகச் சிறிய துணிக்கையும் அணுவே. தனிமம் வேதியியல் தனிமம் என்னும் கருத்துரு வேதியியல் பொருட்கள் என்பதோடு தொடர்புடையது. ஒரு வேதியியல் தனிமம் என்பது அடிப்படையில் ஒரே வகையான அணுக்களைக் கொண்ட ஒரு பொருள். ஒரு குறிப்பிட்ட தனிமம் ஒரு குறித்த எண்ணிக்கை புரோத்தன்களை அதன் அணுக்கருவில் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை அத் தனிமத்தின் அணுவெண் எனப்படும். எடுத்துக் காட்டாக 6 புரோத்தன்களைத் தமது அணுக்கருவில் கொண்ட அணுக்கள் அனைத்தும் கரிமம் என்னும் தனிமத்தில் அணுக்கள். அதேபோல், 62 புரோத்தன்களைக் கொண்ட அணுக்கள் யுரேனியம் என்னும் தனிமத்துக்கு உரியவை. குறித்த தனிமத்துக்கு உரிய அணுக்கள் அனைத்தும் ஒரே எண்ணிக்கையான புரோத்தன்களைக் கொண்டிருக்கும் எனினும், அவற்றில் உள்ள நியூத்திரன்கள் ஒரே எண்ணிக்கையில் இருக்கவேண்டும் என்பதில்லை. இவ்வாறு ஒரேயளவு புரோத்தன்களையும், வெவ்வேறு எண்ணிக்கையான நியூத்திரன்களையும் கொண்ட அணுக்களையுடைய தனிமங்கள் ஓரிடத்தான்கள் அல்லது சமதானிகள் எனப்படுகின்றன. உண்மையில் ஒரு தனிமத்துக்குப் பல ஓரிடத்தான்கள் இருக்க முடியும். புரோத்தன்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 94 வேதியியல் தனிமங்கள் அல்லது அணுவகைகள் இயற்கையில் காணப்படுவதாக அறியப்பட்டுள்ளது. மேலும் 18 வகையான தனிமங்கள் ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. வேதியியல் தனிமங்களைப் பொதுவாக ஆவர்த்தன அட்டவணையில் ஒழுங்கமைக்கின்றனர். இதில் தனிமங்கள் அணுவெண்களின் அடிப்படையிலும், இலத்திரன் அமைப்பின் அடிப்படையில் கூட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அட்டவணையில் உள்ள நிரல்கள் கூட்டங்களையும், கிடை வரிசைகள் ஆவர்த்தனங்களையும் குறிக்கின்றன. இவ்வாறு குறிப்பிட்ட கூட்டங்களில் அல்லது ஆவர்த்தனங்களில் இருக்கும் தனிமங்கள் அணு ஆரை, இலத்திரன் இழுதிறன் போன்ற சில பொது இயல்புகளைக் கொண்டவையாக இருக்கின்றன. சேர்மம் சேர்மம் என்பது, குறிப்பிட்ட சில வேதியியல் தனிமங்களின் அணுக்களைக் குறிப்பிட்ட விகிதத்திலும், குறிப்பிட்ட ஒழுங்கமைப்பிலும் கொண்டுள்ள ஒரு வேதிப்பொருள். இது கொண்டுள்ள தனிமங்கள் அதன் சேர்க்கையையும், ஒழுங்கமைப்பு சேர்மத்தின் வேதியியல் இயல்புகளையும் தீர்மானிக்கின்றன. எடுத்துக்காட்டாக, "நீர்" என்பது ஐதரசன் (ஹைட்ரஜன்), ஒட்சிசன் (ஆக்சிஜன்) ஆகிய தனிமங்களின் அணுக்களை இரண்டுக்கு ஒன்று என்னும் விகிதத்தில் கொண்டுள்ள ஒரு சேர்மம். இதில், ஒட்சிசன் இரண்டு ஐதரசன் அணுக்களுக்கு நடுவே தம்மிடையே 104.5° கோணத்தை உருவாக்கும்படி பிணைக்கப்பட்டு உள்ளது. சேர்மங்கள் உருவாவதும், அவை ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவதும் வேதிவினைகளின் காரணமாக நடைபெறுகின்றன. வேதிப்பொருள் வேதிப்பொருள் என்பது குறித்த சேர்க்கைப் பொருள்களையும், இயல்புகளையும் கொண்ட ஒரு பொருள். இது சேர்வைகள், தனிமங்கள் அல்லது சேர்வைகள் தனிமங்கள் இரண்டினதும் கலவை ஆகும். அன்றாட வாழ்க்கையில் காணும் பெரும்பலான வேதிப்பொருட்கள் ஏதோ ஒரு வகைக் கலவைகளே. வளி, கலப்புலோகம் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். வேதிப்பொருட்களுக்கான பெயரிடல் முறை வேதியியல் மொழியின் முக்கிய பகுதியாகும். பொதுவாக இது வேதியியல் சேர்மங்களுக்குப் பெயரிடும் ஒரு முறையைக் குறிக்கிறது. வேதியியல் வரலாற்றில் தொடக்க காலத்தில் சேர்மங்களுக்கு அவற்றைக் கண்டுபிடித்தவர்களின் பெயரைத் தழுவிப் பெயரிட்டனர். இது பல வகையான குழப்பங்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்திற்று. இன்று, தூய, பயன்பாட்டு வேதியியலுக்கான பன்னாட்டு ஒன்றியத்தினால் உருவாக்கப்பட்ட முறையைப் பயன்படுத்தி இலகுவாகப் பெயரிட முடிகிறது. வேதியியல் பொருள் வகைகளுக்குப் பெயரிடுவதற்கு சிறப்பாக வரையறுக்கப்பட்ட முறைகள் உள்ளன. கரிமச் சேர்மங்களுக்கு கரிமப் பெயரிடல் முறையும், கனிமச் சேர்மங்களுக்குப் பெயரிடக் கனிமப் பெயரிடல் முறையும் பயன்படுகின்றன. இதைவிட வேதிப்பொருட்களை எண்கள் மூலம் அடையாளம் காணும் முறைகளும் உள்ளன. மூலக்கூறு ஒரு மூலக்கூறு என்பது தூய்மையான வேதியியல் பொருளின் மிகச்சிறிய பிரிக்க முடியாத பகுதியாகும். மூலக்கூறு அதன் தனித்துவமான வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளது. அதாவது, ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு வேதியியல் வினைகளை மற்ற பொருட்களுடன் மேற்கொள்ளும் திறன் கொண்டது. இருப்பினும், இந்த வரையறை மூலக்கூறுகளால் ஆன பொருட்களுக்கு மட்டுமே நன்றாக வேலை செய்கிறது. இது பல பொருட்களில் உண்மையாக இருப்பதில்லை. மூலக்கூறுகள் பொதுவாக சகப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்ட அணுக்களின் தொகுப்பாகும். அதாவது மூலக்கூற்றின் கட்டமைப்பு மின்சாரம் நடுநிலையானது மற்றும் அனைத்து இணைதிறன் எலக்ட்ரான்களும் பிற எலக்ட்ரான்களுடன் பிணைப்புகளில் அல்லது தனி சோடிகளாக இணைக்கப்படுகின்றன . எனவே, அயனிகள் போலல்லாமல், மூலக்கூறுகள் மின்சார நடுநிலை அலகுகளாக இருக்கின்றன. இந்த விதி உடைக்கப்டும்போது மூலக்கூறுக்கு ஒரு மின்சுமை அளிக்கப்படுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் மூலக்கூறு அயனி அல்லது பல்லணு அயனி என்று பெயரிடப்படுகிறது. இருப்பினும், மூலக்கூறு கோட்பாடின் தனித்தியங்கும் மற்றும் தனித்துவமுமான தன்மைக்கு பொதுவாக அணுப்பொருண்மை நிறமாலையின் வெற்றிடத்தில் திருப்பப்பட்ட கற்றை போல மூலக்கூறு அயனிகள் நன்கு பிரிக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே இருக்க வேண்டும். மின்சுமையேற்ற பல்லணு அயனிகளின் திரள்கள் திண்மங்களில் காணப்படுகின்றன. பொதுவான சல்பேட்டு அல்லது நைட்ரேட்டு அயனிகளை இதற்கு எடுத்துக் காட்டாக கூறலாம். இவை பொதுவாக வேதியியலில் மூலக்கூறுகள் என்று கருதப்படுவதில்லை. சில மூலக்கூறுகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனி எலக்ட்ரான்களை பெற்று இயங்குறுப்புகளை உருவாக்கலாம். பெரும்பாலான இயங்குறுப்புகள் ஒப்பீட்டளவில் நல்ல வினைத்திறன் மிக்கவையாகவும் நைட்ரிக் ஆக்சைடு போன்ற சில நிலைப்புத்தன்மையோடும் காணப்படுகின்றன. மந்த வாயு தனிமங்களான ஈலியம், நியான், ஆர்கான், கிரிப்டன், செனான் மற்றும் ரேடான் போன்றவை தனி அணுக்களால் ஆக்கப்பட்டுள்ளன. அவ்வணுக்கள் அவற்றின் மிகச்சிறிய தனித்தனியன தனித்தியங்கும் அலகுகள் ஆகும், ஆனால் மற்ற தனிமைப்படுத்தப்பட்ட வேதியியல் தனிமங்கள் மூலக்கூறுகள் அல்லது அணுக்களின் வலை அமைப்புகளால் ஒன்றுடன் ஒன்றாக ஏதோவொரு வழிமுறையில் பிணைக்கப்பட்டுள்ளன அடையாளம் காணக்கூடிய மூலக்கூறுகள் நீர், காற்று போன்ற பழக்கமான பொருட்களையும், ஆல்ககால், சர்க்கரை, பெட்ரோல் மற்றும் பல்வேறு மருந்துகள் போன்ற பல கரிம சேர்மங்களையும் உருவாக்குகின்றன. இருப்பினும், எல்லா பொருட்களும் அல்லது வேதியியல் சேர்மங்களும் தனித்தியங்கும் மூலக்கூறுகளைக் கொண்டிருக்கவில்லை. உண்மையில் புவி மேலோடு, புவி கவசம் மற்றும் புவி உள்ளகம் போன்ற பெரும்பாலான திண்மப் பொருள்கள் மூலக்கூறுகளற்ற வேதிப்பொருள்களாகும். இத்தகைய பிற வகை அயனிச் சேர்மங்கள் மற்றும் வலையமைப்பு சகப் பிணைப்பு திண்மப் பொருள்கள் அடையாளம் காணமுடியாத வகையில் அடுக்கப்பட்டுள்ளன. மாறாக இப்பொருள்கள் மூலக்கூற்று அலகுகள் அல்லது அலகு கூறுகள் வாய்ப்பாட்டு அலகுகளை அடிப்படையாக்க் கொண்டு விவாதிக்கப்பட்டுள்ளன. மேசை உப்பு, கார்பன், மற்றும் வைரம், சிலிக்கா மற்றும் குவார்ட்சு கிரானைட்டு போல சிலிக்கேட்டு கனிமங்கள் போன்ற கனிம உப்புகள் இதற்கு உதாரணங்களாகும். ஒரு மூலக்கூறின் முக்கிய பண்புகளில் ஒன்று அதன் மூலக்கூற்று வடிவியல் அமைப்பாகும். பெரும்பாலும் அது கட்டமைப்பு என்று அழைக்கப்படுகிறது. ஈரணு.,மூவணு, நான்முகி கட்டமைப்பிலுள்ள அணுக்களின் கட்டமைப்பு நேர்க்கோடு, கோண, மற்றும் பட்டைக்கூம்பு படிவத்தில் எளிமையாக இருக்கலாம். ஆறு அணுக்களுக்கு மிகையான பல்லணு மூலக்கூறுகள் கட்டமைப்பு அவற்றின் வேதியியல் தன்மையை தீர்மானிக்கின்றன. வேதிப்பொருளும் சேர்மமும் திட்டவட்டமான இயைபும் சில பண்புகளின் தொகுப்பையும் கொண்ட ஒரு வகையான பருப்பொருள் வேதிப்பொருள் என்று அழைக்கப்படுகிறது. காற்று மற்றும் உலோகக் கலவைகள் போன்றவை சேர்மத்திற்கு எடுத்துக்காட்டுகளாகும். மோல் அளவு மோல் என்பது ஓர் அளவீட்டு அலகு ஆகும், இது வேதிப் பொருளின் அளவைக் குறிக்கிறது இரசாயன அளவு என்றும் அழைக்கப்படுகிறது. சரியாக 0.012 கிலோகிராம் அல்லது 12 கிராம் கார்பனில் காணப்படும் அணுக்களின் எண்ணிக்கை ஒரு மோல் என வரையறுக்கப்படுகிறது, இங்கு கார்பன்-12 அணுக்கள் பிணைப்பற்றும் ஓய்வு நிலையிலும் அடிப்படை நிலையிலும் உள்ளன. ஒரு மோலுக்குள் உள்ள உள்ளீடுகளின் எண்ணிக்கை அவகாட்ரோ மாறிலி என அழைக்கப்படுகிறது, மேலும் இது அனுபவ ரீதியாக சுமார் 6.022 × 1023 மோல் - 1 என தீர்மானிக்கப்படுகிறது. மோலார் அடர்த்தி என்பது கன அளவுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளின் அளவு ஆகும், இது பொதுவாக மோல் / டெசிமீட்டர்3 என்ற அலகால் தெரிவிக்கப்படுகிறது. வேதியியல் விதிகள் வேதிவினைகள் சில விதிகளுக்கு அமைவாகவே இடம்பெறுகின்றன. இவை வேதியியலின் அடிப்படைக் கருத்துருக்களாக உள்ளன. அவற்றுட் சில வருமாறு: அவகாதரோவின் விதி பீர்-லம்பேர்ட்டின் விதி போயில்சின் விதி சார்லசின் விதி கே-லூசாக்கின் விதி லே சட்டலியேரின் விதி என்றியின் விதி எசுவின் விதி ஆற்றல் காப்பு விதி திணிவுக் காப்பு விதி வினைகள் மற்றொரு பொருள் அல்லது சக்தியுடன் ஒரு வேதிப்பொருள் இடைவினை புரிவதன் காரணமாக வேறு ஒரு பொருளாக மாறுகிறது என்றால் அந்த இடைவினையை ஒரு வேதிவினை என்று அழைக்கலாம். எனவே, வேதிவினை என்பது ஒரு பொருளின் வினை தொடர்புடைய கோட்பாடாகக் கருதப்படுகிறது. தொடர்புடைய அவ்வேதிப்பொருள் ஒரு கலவையாகவோ அல்லது கரைசலாகவோ மற்றொரு வேதிப்பொருளுடன் நெருங்கிய தொடர்பு கொள்வது அல்லது ஏதாவது ஒரு சக்திக்கு ஆட்படுவது அல்லது இவ்விரண்டு செயல்களுக்கும் உட்படுவது என்பது வேதிவினை என்ற இக்கோட்பாட்டின் அடிப்படையாகும். இச்செயல்பாட்டின் விளைவாக வினையில் பங்கேற்கும் பொருள்களுக்கு இடையிலும் வினைகலனுக்கு வெளியே உள்ள சுற்றுப்புறத்திலும் ஆற்றல் பரிமாற்றம் நிகழலாம். வினைகலன்கள் என்பவை பெரும்பாலும் ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிக் கருவிகளாக இருக்கும். வேதிவினைகளின் விளைவாக மூலக்கூறுகள் பிரிகை அடையும் செயல் நிகழ்கின்றது. பெரிய மூலக்கூறுகள் உடைந்து சிறிய மூலக்கூறுகளாக மாற்றமடைகின்றன. அல்லது மூலக்கூறுக்குள்ளேயே அவற்றிலுள்ள அணுக்கள் மறுசீரமைப்பு அடைகின்றன. பொதுவாக வேதிவினைகளில் வேதிப் பிணைப்புகள் உடைக்கப்படுகின்றன அல்லது புதிய வேதிப் பிணைப்புகள் உருவாகின்றன. ஆக்சிசனேற்றம், ஒடுக்கம், பிரிகையடைதல், அமிலக் கார நடுனிலையாக்கல், மூலக்கூற்று மறுசீரமைப்பு போன்றவை வேதிவினைகளின் சில வகைகளாகும். வேதிவினைகள் பொதுவாக வேதிசமன்பாடுகளில் குறியீடுகளாகச் சித்தரிக்கப்படுகின்றன. அணுக்கரு வினைகள் அல்லாத வேதிவினைகளைக் குறிக்கும் சமன்பாடுகளில் இருபுறமும் ஒரே எண்ணிக்கை மற்றும் ஒரே வகையான அணுக்கள் சமமாக இருக்கும். அணுக்கரு வினைகளைப் பொருத்தவரை அணுக்கருவின் உட்புறத்தில் உள்ள புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களுக்கு மட்டுமே இது பொருந்தும். ஒரு வேதிவினையில் வேதிப்பிணைப்புகள் எவ்வாறு படிப்படியாக மறுசீரமைக்கப்படுகின்றன என்பதை ஓர் ஒழுங்குமுறையில் படிப்படியாக எடுத்துக்கூறுவது வினைவழிமுறையாகும். ஒரு வேதிவினையில் பல்வேறு விதமான படினிலைகள் காணப்படலாம். ஒவ்வொரு படினிலையும் வெவ்வேறு வினை வேகத்திலும் நிகழலாம். வினை நிகழும்போது பல்வேறுபட்ட வினை இடைநிலைகள் மாறுபடும் நிலைப்புத்தன்மை கொண்டவையாகவும் இருக்கலாம். வினைவழிமுறைகள் இத்தகைய வினை இயக்கவியலையும், வினையின் இறுதியில் கலப்பாக உருவாகும் வினைவிளை பொருள்களைப் பற்றியும் விளக்க முற்படுகின்றன. பல இயற்பியல் வேதியியலாளர்கள் இத்தகைய பல்வேறு வேதிவினைகளின் வினைவழிமுறைகளை விளக்கிக் கூறுவதில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்களாக உள்ளனர். பல அனுபவ விதிகள் இதற்காக உருவாக்கப்பட்டன. வேதிவினைகளின் வினைவழிமுறையை முன்மொழிய உட்வார்டு-ஆப்மான் விதிகள் நடைமுறைக்கு வந்தன. ஒருவகை வேதிப்பொருள் மற்றொரு வகை வேதிப்பொருளாக மாறும் செயல்முறையே வேதிவினை என்று ஐயுபிஏசி முறை வரையறுக்கிறது. இதன்படி வேதிவினை என்பது ஒரு தனிவினையாக நிகழலாம் அல்லது படிப்படியாக நிகழும் வினைகளாக இருக்கலாம். இவ்வரையறையுடன் கூடுதலாக மற்றொரு கருத்தும் சேர்க்கப்படுகிறது. அதாவது வினையின் விளைவாக நிகழும் இடைவினை மாற்றங்கள் சோதனை மூலம் உணரப்படக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற கருத்து வரையறையுடன் சேர்க்கப்பட்டது.இவ்வாறு உணரக்கூடிய வகையில் நிகழும் வேதிவினைகள் பொதுவாக வரையறையில் குறிப்பிட்டுள்ளவாறு மூலக்கூறுகளின் தொகுதிகள் வினையில் பங்கேற்பதை மட்டும் உறுதி செய்கின்றன. ஆனால் வேதிவினை என்ற சொல் நுண்ணோக்கியளவில் உணரக்கூடிய வேதிவினைகளுக்கும் பொருத்தமாக இருப்பதாகக் கருதலாம். குறிப்புகள் இவற்றையும் பார்க்கவும் பகுப்பாய்வு வேதியியல்
6369
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF
அறுதி விகிதசம விதி
வேதியியலில், அறுதி விகிதசம விதி (Law of definite proportions), ஒரு வேதியியல் சேர்வையில் அடங்கியுள்ள தனிமங்களின் திணிவு விகிதம் எப்போதும் ஒரேயளவான விகிதத்தையே கொண்டிருக்கும் என்கிறது. இதையே மாறா விகிதசம விதி அல்லது புரூசுட்டின் விதி (Proust's Law) எனவும் அழைப்பது உண்டு. எடுத்துக்காட்டாக, நீர் என்பது ஒட்சிசனும், ஐதரசனும் சேர்ந்த ஒரு சேர்வை. திணிவின் அடிப்படையில் நீரில் உள்ள ஒட்சிசனின் பங்கு 8/9ம், ஐதரசனின் பங்கு 1/9ம் ஆகும். இவ்விதியின் படி நீரின் எந்தவொரு மாதிரியை எடுத்துக்கொண்டாலும், இந்தவிகிதம் எப்போதும் மாறாமல் இருக்கும். இவ்விதியும், பல் விகிதசம விதியும் சேர்ந்து "விகிதவியல்" (stoichiometry) என்னும் துறைக்கு அடிப்படையாக அமைகின்றன. வரலாறு 1798 ஆம் ஆண்டுக்கும், 1804 ஆம் ஆண்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம், பிரெஞ்சு வேதியியலாளரான யோசேப் புரூசுட்டு என்பவர் இதை முதன் முதலாகக் கவனித்தார். இக்கவனிப்பை அடிப்படையாகக் கொண்டு 1806 ஆம் ஆண்டில் இவ்விதியை உலகுக்கு வெளிப்படுத்தினார். தற்கால வேதியியலாளர்களுக்கு அறுதி விகிதசம விதி வேதியியற் சேர்வை என்பதன் வரைவிலக்கணத்தில் இயல்பாகவே பொதிந்திருக்கும் ஐயத்துக்கு இடமற்ற ஒன்றாகத் தோன்றும். ஆனால், வேதியியற் சேர்வை குறித்து முழுமையான விளக்கம் இல்லாதிருந்த 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இவ்விதி புதுமையானதாகவே இருந்தது. முன்மொழியப்பட்ட காலத்தில், இந்த விதி சர்ச்சைக்கு உரியதாக இருந்ததுடன், பல வேதியியலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக, புரூசுட்டின் நாட்டுக்காரரான குளோட் லூயிசு பர்தோலே இவ்விதியை ஏற்றுக்கொள்ளாமல், தனிமங்கள் எந்த விகிதத்திலும் சேர முடியும் என்று கூறினார். இந்த விவாதங்களை வைத்துப் பார்க்கும்போது அக்காலத்தில், தூய வேதியியல் சேர்வைகளுக்கும், கலவைகளுக்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்து அதிகம் தெளிவு இருக்கவில்லை என்பது தெரியவருகிறது. அறுதி விகிதசம விதி, 1803 ஆம் ஆண்டில் ஜான் டால்ட்டன் என்பவரால் முன்மொழியப்பட்ட அணுக் கோட்பாட்டின் உருவாக்கத்துக்குப் பங்களிப்புச் செய்ததுடன், அணுக் கோட்பாட்டில் இருந்து தனக்கான உறுதியான கோட்பாட்டு அடிப்படையையும் பெற்றுக்கொண்டது. அணுக் கோட்பாடு, ஒவ்வொரு தனிமமும் தனித்துவமான அணுக்களால் ஆனவை என்றும், பல வகையான அணுக்கள் நிலையான நிலையான விகிதத்தில் சேர்ந்து சேர்வைகள் உருவாகின்றன என்றும் விளக்கியது. விகிதவியல் ஒவ்வாச் சேர்வைகள் நவீன வேதியியலின் உருவாக்கத்தில் மிகப் பயனுள்ளதாக இருந்த போதிலும், அறுதி விகிதசம விதி, எல்லா வேளைகளிலும் உண்மையாக அமைவதில்லை. விகிதவியல் ஒவ்வாச் சேர்வைகள் என்ற வகைச் சேர்வைகளில் தனிமங்கள் நிலையான விகிதங்களில் சேராமல், வேறுபட்ட விகிதங்களில் சேர்வதைக் காணலாம். எடுத்துக்கட்டாக, வூசுட்டைட்டு இரும்பு ஒட்சைட்டில் ஒவ்வொரு ஒட்சிசன் அணுவுடனும் 0.83 முதல் 0.95 வரையிலான விகிதங்களில் இரும்பு அணுக்கள் சேர்வதைக் காணலாம். இதன்படி, சேர்வையில் 23%க்கும் 25%க்கும் இடைப்பட்ட திணிவு விகிதங்களில் ஒட்சிசன் அளவு வேறுபடுகிறது. இரும்பு ஒட்சைட்டின் முறையான சூத்திரம் FeO, ஆனால், படிகவியல் வெற்றிடங்கள் இருப்பதனால், இது Fe0.95O என அமைகின்றது. இத்தகைய வேறுபாடுகளைக் கண்டறியக்கூடிய வகையில், புரூசுட்டின் அளத்தல் முறைகள் போதிய அளவு துல்லியமானவையாக இருக்கவில்லை. இத்துடன், எவ்வாறு பெறப்படுகின்றது என்பதைப் பொறுத்து, தனிமங்களில் சமதானிகளின் அளவு வேறுபடக்கூடும். இதனால், தூய விகிதவியல் சேர்வைகளிலும்கூடக் குறித்த தனிமங்களின் திணிவு விகிதங்கள் மாறுபடக்கூடும். குறிப்புகள் இவற்றையும் பார்க்கவும் பல் விகிதசம விதி மறுதலை விகிதசம விதி வேதியியல் விகிதவியல்
6370
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
கரிம வேதியியல்
கரிம வேதியியல் அல்லது சேதன இரசாயனம் (Organic Chemistry), என்பது வேதியியலின் ஒரு துணைப் பகுதியாகும். இது கரிம (Carbon) அணுக்கள் மற்றும் கரிம சேர்மங்கள் ஆகியவற்றால் ஆன வேதிப்பொருட்களின் அமைப்பு, இயல்புகள், வேதிவினைகள் பற்றிய இயல் ஆகும். நன்கு அறியப்பட்ட கரிமப் பொருள் மரக்கரி ஆகும். அச்சொல்லில் இருந்து கரிம வேதியியல் என்ற சொல் பாவனைக்கு (பயன்பாட்டிற்கு) வந்துள்ளது. கரிம வேதிப்பொருட்களின் அமைப்பு பற்றிய கல்வியானது நிறமாலையியலை பயன்படுத்தி இயற்பியல் மற்றும் வேதியியல் வழிமுறைகள் மூலம் கரிம சேர்மங்கள் மற்றும் கரிம வேதிப்பொருட்களின் கூட்டமைவு மற்றும் ஆக்க அமைவு ஆகியனவற்றை கண்டறிதலையும் உள்ளடக்கியதாகும். கரிம வேதிப்பொருட்களின் இயல்புகள் பற்றிய கல்வியானது தூய்மையான நிலை, திரவ நிலை, கலவை நிலை மற்றும் தோற்ற நிலைகளிலுள்ள கரிம வேதிப்பொருட்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை கண்டறிதலோடு அதே முறைகளைப் பயன்படுத்தி அவை ஈடுபடும் வேதிவினைகளின் வலுவறிதலையும் உள்ளடக்கியதாகும். கரிம வேதிப்பொருட்களின் வேதிவினைகள் பற்றிய கல்வியானது கோட்பாடுகளின் வழிநின்றும் ஆய்வகங்களில் செயற்கை முறைகளிலும் கரிம வேதிப்பொருட்களை தயாரிக்கும் முறைகள் பற்றியதாகும். கரிம வேதியியல் ஆய்வின் பரப்பு ஐதரோகார்பன்கள் தொடங்கி கார்பனை அடிப்படையாகக் கொண்டு அவற்றின் அமைப்பில் பங்கேற்கும் பிற தனிமங்களைப் பற்றிய ஆய்வாகவும் நீள்கிறது. மேலும் கரிம வேதியியலானது மருத்துவ வேதியியல், உயிர் வேதியியல், கரிம உலோக வேதியியல், பல்படிமமீச்சேர்ம வேதியியல் மற்றும் பரந்துபட்ட பொருளறிவியலின் பல்வேறு பண்புக்கூறுகள் வரை விரிந்திருக்கிறது. கரிம கலவைகள் அனைத்தும் புவி வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகின்றன. அவை கட்டமைப்புரீதியில் பல்வேறு வகைப்பட்டனவாக மாறுபட்டு கிடக்கின்றன. கரிம கலவைகளின் பயன்பாடு மகத்தான வரம்புகளை கொண்டுள்ளது. அவை நெகிழி, மருந்து, கச்சா எண்ணெய், உணவு, வெடிபொருள், மற்றும் வண்ணப்பூச்சுகள் உட்பட பல முக்கியமான பொருட்களின் பகுதிப்பொருட்களாகவும் உள்ளன. வரலாறு பொதுவாக உயிர்விசைக் கொள்கையின் அடிப்படையில் உயிரினங்களில் இருந்து கொடையாகப் பெறப்பட்ட சேர்மங்கள் கனிம சேர்மங்களிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன என்று பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பு வேதியியல் அறிஞர்களால் நம்பப்பட்டது. அதாவது உயிர்விசைக் கருத்துப்படி கரிமப் பொருள்கள் யாவும் உயிர்விசையின் கொடைகளாகும். பெர்சிலியஸ் என்ற விஞ்ஞானி கரிம சேர்மங்களைப் பற்றி விளக்க உயிர் செயல்முறை சார்ந்த இன்றியமையா உயிர்விசைக் கொள்கையை வெளியிட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், கரிம சேர்மங்கள் தொடர்பான திட்டமிட்ட ஆய்வுகள் பற்றிய சில தகவல்கள் முதல் முறையாக வெளிவந்தன. சுமார் 1816 ஆம் ஆண்டில் மைக்கேல் செவ்ரியுல் என்ற விஞ்ஞானி பல்வேறு கொழுப்புகள் மற்றும் காரங்களால் செய்யப்பட்ட சோப்புகள் பற்றிய ஒரு ஆய்வைத் தொடங்கினார். காரங்கள் பல்வேறு வகையான அமிலங்களுடன் சேர்ந்து பல்வேறு வகையான சோப்புகளை உற்பத்தி செய்கின்றன என்று கூறிய அவர், உயிர்விசையின்றி கொழுப்புகளில் வேதிமாற்றத்தை ஏற்படுத்தி புதிய சேர்மங்களை உருவாக்க முடியும் என்று விளக்கமளித்தார். கரிமவேதியியல் என்ற சொல், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களிடமிருந்து பெறப்பட்ட சேர்மங்களையே குறிப்பதாக இருந்தது. தாவரங்களிலிருந்து பெறப்பட்ட சேர்மங்கள் கார்பன், ஐதரசன், ஆக்சிசன் – ஐயும் விலங்கினங்களிடமிருந்து பெறப்பட்ட சேர்மங்கள் கார்பன், ஐதரசன், ஆக்சிசன், நைட்ரசன், கந்தகம், பாசுபரசு போன்ற தனிமங்களையும் கொண்டுள்ளன என்பதை வேதியியலின் தந்தை என்றழைக்கப்பட்ட லவாய்சியர் என்ற விஞ்ஞானி நிருபித்துக் காட்டினார். கி.பி 1828 ஆம் ஆண்டு ஹோலர் என்றழைக்கப்பட்ட விஞ்ஞானி, அம்மோனியம் சயனேட்டு எனும் கரிம சேர்மத்திலிருந்து முதன்முதலில் யூரியா எனும் கரிம சேர்மத்தை சோதனைச் சாலையிலேயே தயாரித்துக் காட்டினார். இக்கண்டுபிடிப்பு இன்றியமையா விசைக்கொள்கையை அர்த்தமற்றதாக்கி விட்டது. 2KCNO + (NH4)2SO4 → 2NH4CNO + K2SO4 (அல்லது) Pb(NCO)2 + 2NH4OH → Pb(OH)2 + 2NH4(NCO) NH4(NCO) → NH2CONH2 1845 ஆம் ஆண்டு கோல்ப் என்றழைக்கப்பட்ட விஞ்ஞானி, சோதனைச்சாலையில் தனிமங்களிலிருந்தே அசிட்டிக் அமிலத்தை முதன் முதலாக தயாரித்தார். இக்கண்டுபிடிப்பு இன்றியமையா விசைக்கொள்கையை மேலும் அர்த்தமற்றதாக்கி விட்டது. கி.பி 1856 ஆம் ஆண்டில் வில்லியம் என்றி பெர்கின் என்பவர் குயினைன் உற்பத்தி செய்ய முயற்சிக்கும் போது, தற்செயலாக இப்போது பெர்கினின் மெல்லிய ஊதாநிறச்சாயம் என்று அழைக்கப்படும் கரிம சாயம் உற்பத்தியானது. இச்சாயம் தந்த பொருளாதார வெற்றியினால் கரிம வேதியியல் துறை கண்டுபிடிப்புகளில் ஆர்வம் அதிகரித்தது. கி.பி.1858 ல் பிரெடெரிக் ஆகஸ்ட் கெக்கூலே மற்றும் ஆர்ச்சிபால்ட் ஸ்காட் கூப்பர் இருவரும் தனித்தனியாக ஆனால் ஒரே நேரத்தில் உருவாக்கிய இரசாயன அமைப்பு கருத்துதான் கரிம வேதியியலின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. கரிம அணுவின் இணைதிறன் நான்காக இருப்பதால் ஒரு கரிம அணு மற்ற கரிம அணுக்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி சங்கிலித்தொடர் கரிம அணுக்கோவையாக உருவாகிறது. மற்றும் பொருத்தமான இரசாயண வேதிவினைகளை நுணுகி விளக்க முற்படுவதன் மூலமாக அணுப்பிணைப்பு பற்றிய விரிவான வடிவங்களையும் உய்த்துணர முடியும் என்று இருவருமே பரிந்துரைத்தனர். ஜெர்மனியில், அசெடைல் சாலிசிலிக் அமிலம் (தற்பொழுது ஆஸ்பிரின் என்றழைக்கப்படுகிறது). உற்பத்தி பேயர் என்பவரால் தொடங்கப்பட்டு 19 ஆம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளில் மருந்து தொழில் தொடங்கியது. முதன் முதலாக கொடிய மேகநோய்க்கான ஆர்ச்பினாமின் என்ற மருந்து (வணிக பெயர் – சல்வார்சன்) திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்காக பால் எர்லிச் அவருடைய குழுவினருடன் இணைந்து அபாயகரமான நச்சுத்தன்மை கொண்ட ஆர்சனிக் அமிலத்தின் (ஆடாக்சில்) எண்ணற்ற கிளைப்பொருட்களை ஆய்வு செய்தபோதிலும் சிறந்த செயல்திறன் மற்றும் நச்சுத்தன்மை பண்புகளைக் கொண்ட சேர்மத்தையே உற்பத்திக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டார். கரிம வினைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்த ஆரம்பகால உதாரணங்கள் பெரும்பாலும் தற்செயல்களாகவே இருந்தன. கரிம சேர்மங்கள் தொடர்பான முறையான ஆய்வுகள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் தொடங்கப்பட்டு இண்டிகோ (C16H10N2O2) என்ற நீலநிறச் சாயம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு பின்னர் வளர்ச்சி கண்டது. 1897ல் தாவர மூலங்களிடமிருந்து பெறப்பட்ட இண்டிகோவின் அளவு 19000 டன்களிலிருந்து 1914-ல் 1000 டன்களாக குறைந்தது. இவ்வளர்ச்சி செயற்கை முறையில் இண்டிகோ தயாரித்த அடோல்ப் வோன் பேயரையே சார்ந்ததாகும். 2002 ஆம் ஆண்டில் சுமார் 17000 டன்கள் செயற்கை இண்டிகோ பெட்ரோ வேதிப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீச்சேர்மங்களும் உயிர் வினையூக்கிகளும் மிகப்பெரிய கரிம மூலக்கூறுகளாக அறியப்பட்டன. பெட்ரோலியம் உயிரினங்களிடமிருந்து பெறப்பட்ட கரிம சேர்மமாக கருதப்பட்டது. சிக்கலான கரிம சேர்மங்களை பலகட்ட இணைப்புகள் தொகுக்கும் செயற்கை முறையில் சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்ற முறை மொத்த கூட்டிணைப்பு வினை என அழைக்கப்படுகிறது. சிக்கலான கரிம சேர்மங்களான குளுக்கோசு மற்றும் டெர்பினால் போன்ற சேர்மங்களைத் தொகுக்கும் மொத்த கூட்டிணைப்பு வினை கூடுதல் சிக்கலான கரிமச்சேர்மங்களை அடையாளம் காட்டியது. எடுத்துக்காட்டாக, கொழுப்பு சார்ந்த சேர்மங்களை மொத்த கூட்டிணைப்பு வினைக்கு உட்படுத்தும்போது மேலும் சிக்கல் நிறைந்த மனித ஹார்மோன்கள் மற்றும் அவற்றின் கிளைப்பொருட்களை தயாரிக்கும் செயற்கை உற்பத்தி முறைக்கான வழிகளைத் திறந்துவிட்டது. 20 – ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து மொத்த கூட்டிணைப்பு வினையின் தாக்கம் சிக்கலான லைசெரிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 போன்ற உயர் சிக்கல் மூலக்கூறுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த கூட்டிணைப்பு வினை மூலமாக வைட்டமின் பி12 ஐ தயாரித்தது கரிம வேதியியலின் மிகச் சிறந்த சாதனையாகும். பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய வேதியியல் தொழில் வளர்ச்சியின் கண்டுபிடிப்பால் கரிம வேதியியல் துறை பெரிதும் வளர்ச்சி கண்டது. பெட்ரோலியத்திலிருந்து பெறப்பட்ட கரிம சேர்மங்களை பல்வேறு ரசாயன முறைகள் மூலம் பிற வகையான கரிம சேர்மங்களாக மாற்றும்போதுதான் பெட்ரோலிய வேதியியல் தொழில் பிறந்தது. இத்தொழிற்சாலைகள் மூலமாக செயற்கை ரப்பர்கள், பல்வேறு கரிம பசைகள், பெட்ரோலியக் கூட்டுப் பொருள்கள், நெகிழிகள் முதலியன வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டன. உயிரினங்களிடமிருந்து கிடைக்கும் பெரும்பான்மையான வேதிப்பொருட்கள் உண்மையில் கரிமத்தின் கூட்டுப் பொருள்களேயாகும். ஆகவே கரிமவேதியியல் மற்றும் உயிர் வேதியியல் ஆகிய இரண்டு துறைகளும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமானவையாக உள்ளன. உயிர்வேதியியலின் சாரம்சம் கரிம வேதியியலின் ஒரு பிரிவாக கருதப்படுகிறது. சில நான்கு நூற்றாண்டுகள் உயிர் வேதியியியலின் வரலாறு வெளிச்சத்திற்கு வராமல் இருந்தபோதிலும் உயிர் வேதியியல் துறையின் அடிப்படை புரிதல்கள் மட்டுமே 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாகத் தொடங்கியது. உயிர்வேதியியலின் உண்மையான கால வரலாறு 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்டது. பின்னர் இருபதாம் நூற்றாண்டு முழுவதும் உயிர் வேதியியல் ஆய்வுகள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன. எந்தவிதமான் அறிகுறியும் இல்லாமல் தளர்வின்றி நிகழ்ந்த இந்த ஆய்வுகள் வேறுபடுத்துதல் மற்றும் அட்டவணைப்படுத்துதல் சேவை செய்துகொண்டிருந்த அமைப்புகளால் சரி பார்க்கப்பட்டன. வாழ்க்கை அறிவியல் சார்ந்த தகவல் களஞ்சியம் (BIOSIS Previews) என்ற அமைப்பும் வாழ்க்கை அறிவியல் சார்ந்த ஆதார நூற் பட்டியல் (Biological abstracts) என்ற அமைப்பும் 1920 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டவையாகும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தினசரி பயனர்கள் பயன்படுத்துமளவிற்கு நேரிடை மின்னணு தகவல் களஞ்சியமாக உயிர் வேதியியல் துறை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. பண்பாய்வியல் கரிம சேர்மங்கள் பெரும்பாலும் கலவைகளாகவே காணப்படுவதால் அவற்றின் தூய்மையை மதிப்பிட பல்வேறு வகையான பிரிகை நுட்பங்களும் உருவாக்கப்பட்டன. குறிப்பாக நிறவியல், உயர் செயல்திறன் திரவ நிறவியல் மற்றும் வாயு நிறவியல் ஆகியன முக்கியத்துவம் பெற்றிருந்தன. வடித்தல், படிகமாக்கல், வீழ்படிவாக்குதல், கரைப்பானில் இருந்து பிரித்தெடுத்தல் ஆகிய முறைகள் கரிமசேர்மங்களின் தூய்மையை மதிப்பிட உதவும் பாரம்பரிய முறைகளாக இருந்தன. கரிம சேர்மங்கள் பாரம்பரிய முறைகளின்படி பல்வேறு வகையான இரசாயண சோதனைகள் மூலம் பண்பாய்வு செய்யப்பட்டு வந்தாலும் அம்முறைகள் நாளடைவில் நிறமாலையியல் மற்றும் செறிவான கணிப்பொறி வழி ஆய்வு போன்ற முறைகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டன. தோராயமான பயன்பாட்டு ஒழுங்கின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ள முதன்மையான ஆய்வு முறைகள் சில கீழே தரப்பட்டுள்ளன. அணுக்கரு காந்த ஒத்திசைவு (என்எம்ஆர்) நிறமாலையியல் பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்பமுறை இதுவாகும். அடிக்கடி உடன்தொடர்பு நிறமாலையியலைப் பயன்படுத்தி அணு இணைப்பு மற்றும் முப்பரிமாண வேதியியலை முழுமையாக வகுத்தளிப்பது இம்முறையின் நுட்பமாகும். இயல்பாகவே கரிம வேதியியல் உள்ளடக்கிய முக்கிய அணுக்களான ஐட்ரசன் மற்றும் கார்பன் அணுக்கள் அணுக்கரு காந்த ஒத்திசைவில் இயல்பாகவே 1H மற்றும் 13C ஐசோடோப்புகளுக்கு பதிலளிக்கின்றன. மூல பகுப்பாய்வுகள் ஒரு மூலக்கூறின் அடிப்படை அமைப்பை தீர்மானிக்க பயன்படுத்தப்படுத்தப்படும் ஒரு அழித்தல் முறையாகும். உதாரணமாக தாதுப்பொருட்கள், இராசாயனக் கலவைகள் போன்றவற்றை அடிப்படை பகுப்பாய்வு செய்து அவற்றின் மூலங்கள் மற்றும் ஐசோடோப்புகளை கண்டறிய முயல்வது இம்முறையாகும். நிறை நிறமாலையியல் நிறை நிறமாலையியலானது ஒரு சேர்மத்தின் மூலக்கூறு எடையை அதன் மூலக்கூறு அமைப்பு அது துண்டாகும் வடிவங்கள் இவற்றின் அடிப்படையில் கூறுகிறது. உயர் தீர்மான நிறமாலையியல் பொதுவாக ஒரு சேர்மத்தின் சரியான சூத்திரத்தை அடையாளம் காட்டுகிறது. இம்முறை அடிப்படை பகுப்பாய்வு முறைக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது. முற்காலங்களில் நிறை நிறமாலையியலானது பெரும்பாலும் நடுநிலையான மூலக்கூறுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் மேம்பட்ட அயனி நுட்பங்கள் எந்த கரிம கலவையாக இருந்தாலும் பகுப்பாய்வு பெற அனுமதிக்கின்றன. படிகவியல் மூலக்கூறு வடிவியல் படிகவியல் மூலக்கூறு வடிவியல் என்பது மூலக்கூறு வடிவியலை வேறுபாடு ஏதுமின்றி உறுதிபடுத்தும் ஒரு தெளிவான முறையாகும். பொருளின் ஒற்றை படிகமாவது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதும், அந்த படிகம் உறுதிப்படுத்த வேண்டிய பொருளுக்கு உருமாதியாகவும் இருக்கவேண்டும் என்பதே இதற்குத் தேவையான ஒரே நிபந்தனையாகும். மிகை தானியங்கி மென்பொருள் பொருத்தமான படிகத்தின் வடிவத்தை ஒருமணி நேரத்திற்குள் தீர்மானிக்கிறது. அகச்சிவப்பு நிறமாலை, ஒளியியல் சுழற்சி, புறஊதாக் கதிர் காட்சி நிறமாலை போன்ற பாரம்பரிய நிறமாலையியல் முறைகள் ஒப்பீட்டளவில் குறிப்பிடப்படாத கட்டமைப்பு தகவல்களை வழங்குகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட வகுப்பு சேர்மங்களுக்கான முறையாக பயன்பாட்டில் உள்ளது. பண்புகள் பொதுவாக கரிம சேர்மங்களின் இயற்பியற் பண்புகள் அவற்றின் அளவு மற்றும் பண்பியல் அம்சங்கள் இரண்டையும் உள்ளடக்கியிருக்கும். உருகுநிலை, கொதிநிலை, மற்றும் ஒளிவிலகல் எண் ஆகிய கூறுகள் அளவு சார்ந்த பண்புகளிலும் நிறம், மணம், கரைதிறன் மற்றும் நிலைத்தன்மை ஆகிய கூறுகள் பண்பியல் சார்ந்த பண்புகளிலும் அடங்கும். உருகுநிலை மற்றும் கொதிநிலை பண்புகள் பெரும்பாலான கனிம சேர்மங்களுக்கு மாறாக கரிம சேர்மங்கள் பல உருகுகின்றவையாகவும் பல கொதிக்கின்றவையாகவும் உள்ளன. முந்தைய காலங்களில், உருகுநிலை (MP) மற்றும் கொதிநிலை (BP) ஆகிய பண்புகள் கரிம சேர்மங்களின் தூய்மை மற்றும் அடையாளம் குறித்த முக்கியமான தகவல்களை வழங்கின. உருகுநிலையும் கொதிநிலையும் மூலக்கூறு எடை மற்றும் காந்தசக்தியுடன் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருந்தன. ஒத்த பரிமாணமுள்ள சில் கரிம சேர்மங்கள் பதங்கமாகின்றன. அதாவது அவை உருகாமல் நேரடியாக வாயு நிலைக்குச் சென்று விடுகின்ற்ன. துர்நாற்றம் வீசக்கூடிய பாரா டைகுளோரோ பென்சீன் பதங்கமாதலுக்கு சரியான ஓர் உதாரணமாகும். பொதுவாக சில கரிம சேர்மங்கள் தவிர மற்றவை 300 பாகை செல்சியசுக்கு மேல் அதிக நிலைப்புத் தன்மை கொண்டவையாக இருப்பதில்லை. கரைதிறன் நடுநிலைமையான கரிம சேர்மங்கள் கரிம கரைப்பான்களை விட தண்ணீரில் குறைவாகக் கரையக்கூடியனவாக உள்ளன. அயனியாகும் தொகுதிகளைக் கொண்ட கரிம சேர்மங்கள மற்றும் குறைந்த மூலக்கூறு எடை கொண்ட ஆல்ககால்கள், அமைன்கள், நீரகப் பிணைப்பை ஏற்படுத்தக்கூடிய கார்பாக்சிலிக் அமிலங்கள் போன்றவை விதிவிலக்குகளாகும். கரிம சேர்மங்கள் கரிம கரைப்பான்களில் நன்றாக கரைகின்றன. தூய்மையான ஈதர் அல்லது ஈத்தைல் ஆல்ககால் அல்லது பெட்ரோலியம் ஈதர் மற்றும் வெள்ளைச்சாராயம் போன்ற மெழுகு வகை கலவை கரைப்பான்கள் அல்லது தூய அல்லது கலப்பட நறுமண கரைப்பான்கள் போன்றவை அக்கரைப்பான்களுக்கு உதாரணங்களாகும். கரிம சேர்மங்களின் கரைதிறன் அவை கரையக்கூடிய கரைப்பான்களின் தன்மையைப் பொருத்தும் அசிசேர்மத்துடன் இணைந்துள்ள செயல்படும் தொகுதிகளைப் பொருத்தும் அமைகிறது. திடநிலைப் பண்புகள் படிக மூலக்கூறுகள் மற்றும் கரிம பாலிமர்கள் போன்ற இணைக்கப்பட்ட அணுக்கூட்டுகளின் பயன்பாட்டில் பல்வேறு சிறப்புப் பண்புகள் கரிம சேர்மங்களிடம் காணப்படுகின்றன. உதாரணமாக நீர்ம இயந்திரவியல் மற்றும் மின்னணு இயந்திரவியலில் அமுக்க மின்சாரம், மின் கடத்தல் மற்றும் மின்னணு ஒளியியல் போன்ற பண்புகள் சிறப்புப் பண்புகளாக உள்ளன. வரலாற்று காரணங்களுக்காக பிரதானமாக பாலிமர் விஞ்ஞானம் மற்றும் பொருளியல் விஞ்ஞானம் போன்ற பகுதிகளில் இப்பண்புகள் காணப்பட்டன. பெயரிடுதல் இக்காலங்களில், கரிம வேதியியல் என்பது கார்பன் சேர்மங்களின் வேதியியல் என்றும் ஐதரோகார்பன்களும் அவற்றின் வழி பெறுதிகளுடைய வேதியியல் என்றும் வரையறுக்கப்படுகிறது. கரிம சேர்மங்கள், கனிம சேர்மங்களைப் போன்றே, வேதியியலின் அடிப்படை விதிகளுக்கு ஒத்துப் போகின்றன. எனினும் கரிம வேதியியல் ஒரு தனி வேதியியல் பகுதியாகக் கருதப்படுவதற்குக் காரணம்: எல்லா கனிம வேதிகளின் எண்ணிக்கையை விட கரிம வேதிகளின் எண்ணிக்கை மிக அதிகம்; இயைபு, அமைப்பு மற்றும் பண்புகளில் கரிம சேர்மங்கள் கனிம சேர்மங்களிடமிருந்து வெகுவாக மாறுபடுகின்றன; மாற்றியம், சுய சகபிணைப்பை உண்டாக்கும் தன்மை ஆகியவை கரிம சேர்மங்களுக்கே உரித்தான பண்புகளாகும். கார்பனின் (கரிமம்) வலுவளவு நான்கு ஆகும். எனவே கார்பன் ஏனைய மூலகங்களிலும் (தனிமங்கள்) பார்க்க அதிக பிணைப்புக்களை உருவாக்க முடியும். மேலும் கார்பன் ஏனைய மூலகங்களுடன் சேர்ந்து உருவாக்கும் பிணைப்புக்களின் பிணைப்புச் சக்தியும் குறைவாகும். இதன் காரணமாக கார்பன் இயற்கையில் அதிக சேர்வைகளை உருவாக்குகிறது. கரிம சேர்மங்கள் சில விதிகளின் அடிப்படையிலோ அல்லது பாரம்பரியமாக அழைக்கப்படும் பல்வேறு மரபுகளை பின்பற்றி புழக்கத்தில் உள்ள பெயர்களால் பெயரிடப்படுகின்றன. அடிப்படை மற்றும் பயன்சார்ந்த வேதியியலின் பன்னாட்டு சங்கம் (IUPAC) கரிம சேர்மங்களை பெயரிடுவதற்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. முறையான அபவேபச – தின் (அடிப்படை மற்றும் ப்யன்சார்ந்த வேதியியலின் பன்னாட்டு சங்கம் பெயரிடுதல் தெளிவாகக் காணப்படும் மூலக்கூறுகளின் அமைப்பியல் தோற்றத்திலிருந்து தொடங்குகிறது. இந்த அடிப்படை சொல் பின்னர் பின்னொட்டு, முன்னொட்டு மற்றும் எண்களால் திருத்தம் செய்யப்பட்டு ஐயத்திற்கிடமின்றி சேர்மத்தின் மூலக்கூறு அமைப்பை விளக்குகிறது. அபவேபச – தின் கடுமையான விதிமுறைகளின் அடிப்படையில் பல இலட்சக்கணக்கான எளிய கரிம சேர்மங்களின் பெயர்கள் அறியப்படுகின்றன. சிக்கலான கரிம சேர்மங்களின் அபவேபச – தின் பெயரிடுதல் சிக்கலாகவே உள்ளது. முறையான பெயரிடும் முறையை உப்யோகித்து ஒரு சேர்மத்திற்கு பெயரிட ஒருவர் அச்சேர்மத்தின் மரபுசார் கட்டமைப்பின் பெயர், மூலக்கூறு அமைப்பு ஆகியனவற்றை அறிந்து கொள்ளவேண்டும். மரபுசார் கட்டமைப்பு என்பது பதிலிடப்படாத ஐதரோ கார்பன்கள், பல்லின வளைய சேர்மங்கள், ஒற்றை செயல்படு தொகுதிகள் அமைந்த சேர்மங்கள் ஆகியன்வற்றை உள்ளடக்கியதாகும். மரபுசார்ந்த புழக்கத்தில் உள்ள பெயர்கள் எளிமையானதாகவும் திரிபுகளின்றியும் குறைந்த பட்சமாக வேதியியலார்க்கு மட்டும் பயன்படுவதாக இருந்தது. இப்பெயர்கள் சேர்மங்களின் மூலக்கூறு அமைப்பை சுட்டிக்காட்டவில்லை. மேலும் இப்பெயர்கள் சிக்கலான கூட்டமைப்பு சேர்மங்களுக்கு பொதுப் பெயர்களையே வழங்கின. நாளடைவில் கணிப்பொறிகளின் தாக்கத்தால் புதிய பெயரிடும் முறைகள் பழக்கத்திற்கு வந்தன. மூலக்கூறு வடிவங்களை வரைதல் கரிம மூலக்கூறுகள் பொதுவாக வரைபடங்கள் அல்லது வேதியியல் குறியீடுகளின் இணைப்பிலான கட்டமைப்பு வாய்ப்பாடுகள் மூலம் விவரிக்கப்படுகின்றன. குறிப்பாக வரி கோண வாய்ப்பாடுகள் எளிமையாகவும் அய்யமின்றி தெளிவாகவும் காணப்படுகின்றன. இம்முறையில் ஒவ்வொரு வரிசையின் இறுதி மற்றும் வரிசை சந்திப்புகளில் ஒரு கார்பன் மற்றும் ஒரு நீரகம் அணுக்கள் வெளிப்படையாக அல்லது கார்பனின் நான்கு இணைதிறனை நிறைவு செய்யும் விதத்தில் மறைமுகமாக காணப்படுகின்றன. மூலக்கூறு வரைபடங்கள் கொண்டு கரிம சேர்மங்களை விவரிப்பது மிகவும் எளிமையாகும். கிட்டத்தட்ட அனைத்து கரிம சேர்மங்களிலும் கார்பன் நான்கு பிணைப்புகள், நைட்ரஜன் மூன்று பிணைப்புகள், ஆக்சிஜன், இரண்டு பிணைப்புகள் மற்றும் ஹைட்ரஜன் ஒரு பிணைப்பையும் பெற்றுள்ளது என்ற உண்மையை எளிதாக உணரலாம். செயல்படு தொகுதிகள் கரிம வேதியியலில் மூலக்கூறு கட்டமைப்புகளை வடிவமைப்பதும் சேர்மத்தின் பண்புகளை முன்கூட்டியே கணிக்கவும் உதவுவது அச்சேர்மத்துடன் இணைந்துள்ள செயல்படு தொகுதிகளேயாகும். ஒரு செயல்படு தொகுதி என்பது ஒரு சிறிய கட்டமைப்பு அலகு ஆகும். இந்த சிறிய அலகின் வேதிவினை பல்வேறு வகயான சேர்மங்களிலும் மாறாமல் இருக்கும் என சில வரையறைக்குட்பட்டு முன்கூட்டியே அனுமானிக்கலாம். இச்செயல்படு தொகுதிகள் கரிம சேர்மங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. மூலக்கூறுகள் செயல்படு தொகுதிகளின் அடிப்படையிலேயே வகைப் படுத்தப்படுகின்றன. உதாரணமாக எல்லா ஆல்ககால்களும் C – O – H என்ற கிளை அலகைப் பெற்றுள்ளன. இச்செயல்படு தொகுதியின் மூலம் எல்லா ஆல்ககால்களும் கிட்டத்தட்ட நீர்மைத்தன்மை கொண்டிருக்கும். எல்லா ஆல்ககால்களும் எஸ்டர்களை உருவாக்கும். எல்லா ஆல்ககால்களிலிருந்தும் அதேவரிசை ஆலைடுகளை உருவாக்கலாம். பெரும்பாலான செயல்படு தொகுதிகள் கார்பன், ஐதரசன் தவிர்த்த பல அணுக்களால் ஆகியுள்ளன. கரிம வேதியியலில் கரிம சேர்மங்கள், செயல்படு தொகுதிகளின் அடிப்படையிலேயே வகைபடுத்தப்படுகின்றன. கீழே செயல்படு தொகுதிகளின் வாய்பாடுகளும் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 1. ஆல்கைல் ஆலைடு – X 2. ஆல்ககால் – OH 3. ஈதர் – O – 4. ஆல்டிகைடு – CHO 5. நைட்ரோ சேர்மம் – NO2 6. கீட்டோன் – C = O 7. கார்பாக்சிலிக் அமிலம் – COOH 8. எச்டர் – COOR 9. அமைடு O = C-NH2 10. அமில ஆலைடு O = C – X { X = Cl, Br, I } 11. அமில நீரிலி O = C – O – C = O 12. அமீன் – NH2 கரிம சேர்மங்கள் அல்லது சேதனச் சேர்வைகளின் வகைகள் கரிம சேர்மங்கள் அல்லது சேதனச் சேர்வைகள் பிரதானமாக இரண்டு வகைப்படும். அவையாவன: அலிபாட்டிக் சேர்மங்கள் அல்லது திறந்த சங்கிலித் தொடர் சேர்மங்கள் அல்லது வளையமில்லா சேர்மங்கள். அரோமேட்டிக் சேர்மங்கள் அல்லது மூடிய சங்கிலித்தொடர் சேர்மங்கள் அல்லது வளைய சேர்மங்கள். அலிபாட்டிக் சேதனச் சேர்வைகள் இவ்வகை சேர்மங்களில் கார்பன் அணுக்கள் நேர்கோட்டு அமைப்பிலோ அல்லது கிளை சங்கிலித்தொடர் அமைப்பிலோ நீண்ட சங்கிலியைக் கொண்டிருக்கும்.இவை மூடிய அமைப்பில்லாத திறந்த அமைப்பைக் கொண்டுள்ள கரிம சேர்மங்களாகும். கிரேக்க மொழியில் அலிபாட் என்றால் கொழுப்பு என்பது பொருளாகும். அலிபாட்டிக் சேர்மங்கள் மேலும் நிறைவுற்றவை (ஆல்கேன்கள்)என்றும், நிறைவுறாதவை (ஆல்கீன்கள்,ஆல்கைன்கள்) எனவும் அலிசைக்ளிக் (வளைய ஆல்கேனகள்), எனவும் பகுக்கப்பட்டுள்ளன. அல்கேன்கள் கார்பன் அணுக்களுக்கிடையில் ஒற்றைப் பிணைப்பை மாத்திரம் கொண்ட சேர்வைகள் அல்கேன்களாகும். அல்கீன்கள் காபன் அணுக்களிடையே இரட்டைப்பிணைப்புகளைக் கொண்டுள்ள சேர்வைகள் அல்கீன்களாகும். அல்கைன்கள் காபன் அணுக்களிடையே மும்மைப்பிணைப்புகளைக் கொண்டுள்ள சேர்வைகள் அல்கைன்களாகும். அரோமேட்டிக் சேதனச் சேர்வைகள் பென்சீன் வளையத்தைக் கொண்ட சேதனச் சேர்வைகளாகும் தொழிற்பாட்டுக் கூட்டத்தைக் கொண்டு வகைப்படுத்தல் தொழிற்பாட்டுக் கூட்டம் சேதனச் சேர்வையொன்றின் விஷேட இயல்புகள் மற்றும் தாக்கங்களுக்குப் பொறுப்பான அணுக்கள் அல்லது அணுக்கூட்டங்கள் தொழிற்பாட்டுக் கூட்டங்கள் எனப்படும். சில பிரதான சேர்வைகள் பின்வரும் அட்டவணை சில பிரதான சேதனச் சேர்வைகளின் விபரங்களைத் தருகிறது. அறிவியல் சொற்கள் சேர்மம் அமைப்பு இயல்புகள் வேதிவினை அடிக்குறிப்புகள்
6376
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
மரபியல் தலைப்புகள் பட்டியல்
A :en:Adenine - அடினின் :en:Adaptation - இசைவாக்கம் :en:Allele - மாற்றுரு B :en:Base pair :en:Bioinformatics - உயிர் தகவலியல் C :en:Cell - கலம், உயிரணு :en:Cell nucleus - கரு (உயிர்) :en:Chromosome - நிறப்புரி :en:Chromosomal crossover - குறுக்குப் பரிமாற்றம் :en:Common ancestor - பொது மூதாதையர் :en:Cloning - படியெடுப்பு D :en:DNA - டி.என்.ஏ அல்லது ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம் :en:DNA sequencing - டி.என்.ஏ வரன்முறையிடல் E :en:Egg - முட்டை :en:Evolution - படிவளர்ச்சி F G :en:Gene - மரபணு, பரம்பரையலகு :en:Gene expression - மரபணு வெளிப்பாடு :en:Genetic engineering - மரபணு பொறியியல் :en:Genetically modified organism - மரபணு மாற்றப்பட்ட உயிரினம் :en:Gene pool - :en:Genetics - மரபியல் :en:genotype - மரபணுவமைப்பு :en:genome - மரபகராதி :en:Genetic code - மரபுக்குறியீடு :en:Gene drift - மரபணுப்பிறழ்வு நகர்ச்சி :en:Gene therapy - மரபணுச் சிகிச்சை H :en:Human genome - மனித மரபணுத்தொகை :en:Human genome project - மனித மரபகராதித் திட்டம் Hox gene M :en:Molecule - மூலக்கூறு :en:Mitosis - இழையுருப்பிரிவு :en:Meiosis - ஒடுக்கற்பிரிவு :en:Mutation - மரபணு திடீர்மாற்றம், விகாரம், திசு மரபு பிறழ்வு N :en:Natural selection - இயற்கைத் தேர்வு O :en:Overies - சூலகம் P :en:Protein - புரதம் R :en:Reproduction - இனப்பெருக்கம் :en:Reprogramming :en:Restriction enzyme :en:Recssive - பின்னிடைவு :en:RNA - ரைபோ கரு அமிலம் S :en:Sperm - விந்து :en:Sperm cell - விந்து கலம் :en:Seed - விதை :en:Sex - பாலுறவு :en:Sexual selection - இலிங்கத் தேர்வு :en:Species - சிறப்பினம் :en:Stem cell-குருத்தணு Other Words நியூக்ளியிக் - Nucleic உயிரியல் பண்புகள் ?? - species characteristics, traits இவற்றையும் பார்க்க :en:List of basic genetics topics :en:Genetics glossary உயிரியல் மரபியல் அறிவியல் தலைப்புகள் பட்டியல்
6377
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%202005
அக்டோபர் 2005
2005 2005 செய்திகள்
6379
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
படியெடுப்பு
உயிரியலில் படியெடுப்பு (Cloning) என்பது மரபியல் ரீதியில் ஒன்றையொன்று ஒத்த உயிரணு மூலக்கூறுகள், உயிரணுக்கள், உயிரணுக் குழுக்கள் (இழையங்கள்), உயிரினங்கள் போன்றவை ஒரு தனி மூதாதையிலிருந்து உருவாக்கப்படும் செயல்முறையாகும். இயற்கையில் பாக்டீரியாக்களிலும், சில பூச்சிகள், தாவரங்களில், கலவியற்ற இனப்பெருக்கம் நிகழும்போதும் இவ்வகையான இனப்பெருக்கமே நிகழ்கின்றது. உயிரித் தொழில்நுட்பத்தில் படியெடுப்பு என்பது மூன்று வெவ்வேறு நிலைகளில் செய்யப்படலாம். உயிரணுக்களின் மூலக்கூறுகளில் ஒன்றான டி.என்.ஏ. படியெடுப்பு என்பது மூலக்கூற்று படியெடுப்பு (Molecular cloning) எனப்படும். உயிரணுக்களின் படியெடுப்பு என்பது உயிரணுப் படியெடுப்பு (cell cloning) எனப்படும் (எ.கா. குருத்தணுப் படியெடுப்பு). தனிக் கலங்களாகவன்றி உயிரணுக் கூட்டங்களாக, அதாவது இழையங்களாகவும் படியெடுப்பு நிகழும் (எ.கா. சில இழைய வளர்ப்பு முறைகள் படியெடுப்பின் மூலம் ஒரு உயிரினத்தின் புதிய தனியன்களை உருவாக்குதல். கலவிமுறை இனப்பெருக்கத்தில் ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையும் கலவியின் போது இணைவதால் உருவாகும் தனிக்கலமே பின்னர் பிரிவடைந்து செல்வதனால் பெருக்கமடைந்து முழு உயிராக பிரசவமாகிறது. இது விலங்குகளின் பொதுவான இயற்கை கருத்தரிப்பு ஆகும். இவ்வாறான கருத்தரிப்பின் போது தாயினதும் தந்தையினதும் இணைந்த குணங்களும் தோற்றங்களும் மரபு வழியாக குழந்தைக்கு கடத்தப்படுகிறது. படியெடுப்பு இனப்பெருக்கம் எனும் போது கலப்பின் மூலமாக உருவாகும் உயிர்க்கலம் போலல்லாமல் நேரடியாக முதலாமவரின் உயிர்க்கலமொன்றை அவரின் உடலின் ஏதேனுமோர் பகுதியிலிருந்து பிரித்தெடுத்து அடுத்ததோர் பெண்ணின் கருவறையினுள் கருக்கட்டச் செய்வதாகும். இதனால் கருவைச் சுமக்கும் பெண்ணின் பரம்பரை அம்சங்களில் எதுவும் வாரிசுக்கு கடத்தப்படாது.மாறாக 100 வீதமும் முதலாமவரைப் ஒத்த உயிராகவே வளரும். படியெடுப்பு இனப்பெருக்கத்தின் அடிப்படை கருப்பையில் உருவாகும் முதல் நுகக்கலமே பின்னர் ஒன்றையொன்று முற்றிலும் ஒத்த இயல்புடைய உயிர்க்கலங்களை இனப்பெருக்கம் செய்கிறது. இச்செயற்பாடு கருப்பை, பிரசவம் என தொடங்கி மரணம் வரையும் பயணிக்கிறது. உதாரணத்திற்கு கிள்ளி எடுக்கப்படும் நுண்ணிய சதையில் உள்ள ஆயிரக்கணக்கான உயிர்க்கலங்களில் ஒன்றை ஆராய்ச்சிக்குட்படுத்தும் போது அது, ஆணின் விந்தணுவும் பெண்ணின் முட்டையும் இணைந்து உருவான முதல் நுகக்கலத்தை முற்றிலும் ஒத்திருப்பதை காணலாம். இவ்வாறு ஒவ்வொரு உயிர்க்கலமும் நுகக்கலத்தின் அனைத்து இயல்புகளையும் கொண்டிருந்தாலும் அவைகள் வெவ்வேறு தொழில்களை செய்யுமாறே இசைவாக்கமடைந்துள்ளன. மாற்றமாக ஒரு தொகுதியிலுள்ள உயிர்க்கலம் அடுத்த தொகுதியிலுள்ள வேலைகளை செய்வதில்லை. (குடற்கலங்கள் நாவுக்கலங்களின் வேலைகளை செய்வதில்லை) நுகக்கலத்தை முற்றிலும் ஒத்தவைகளே சகல உயிர்க்கலங்களும் என்பதால் அனைத்து உயிர்க்கலங்களும் அனைத்து தொழில்களையும் செய்யக்கூடியதாகவே இருக்கவேண்டும் என்ற அனுமானமே படியெடுப்பு இனப்பெருக்கம்(Cloning) எனும் எண்ணத்திற்கு வழியமைத்தது. உடலின் ஏதேனுமோர் பகுதியில் சீராக இயங்கிக்கொண்டிருக்கும் உயிர்க்கலமொன்றை தூண்டலுக்குள்ளாக்கி மீண்டும் நுகக்கலமாக மாற்ற முடியும் என்பதுவே படியமுறை இனப்பெருக்கத்தின் அடிப்படை. அதாவது "X என்ற நபரின் ஏதேனும் பகுதியிலிருந்து பெறும் நுண்ணிய சதையிலிருந்து (கலத்திலிருந்து) இன்னுமொரு X என்ற நபரை உருவாக்கலாம்" என்ற கருதுகோளிலேயே ஆராய்ச்சிகளை விஞ்ஞானம் மேற்கொண்டு வந்தாலும் இன்னுமும் இந்த அடிப்படை முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை. படியமுறை இனப்பெருக்கத்தின் வெற்றியாக தற்போது அறியப்படுவது,ஒரு உயிரினத்தின் உடலிலிருந்து நுகக்கலத்தின் தொழில்களை செய்வதற்கு இசைவாக்கமடந்த உயிர்க்கலமொன்றை சிறப்பாக தேடிப்பெற்று அதன் கருவை (பரம்பரை தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ள இடம்.) நீக்கி சாதாரண உயிர்க்கலமொன்றின் கருவை அதனுள் செலுத்தி கருவறையினுள் வளரச்செயும் முறையே ஆகும்.(தொடரும் காலங்களில் அடிப்படை அனுமானத்தில் வெற்றி ஏற்படலாம்.) டொலி உருவாக்கம். பெண் செம்மறியாடொன்றின் நுகக்கலத்தை ஒத்த கலமொன்று அதன் சினை முட்டைக் கூட்டத்திலிருந்து கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அதன் கரு நீக்கப்பட்டு உடலின் வேறோர் பகுதியிலிருந்து பெறப்பட்ட உயிர்க்கலமொன்றின் கரு அதனுள் செலுத்தப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட நுகக்கலம் அதே செம்மறியாட்டின் கருவறைக்குள்ளேயே வளர்க்கப்பட்டது. இதனால் ஆணின் துணை இல்லாமல் 100 வீதமும் தாயை ஒத்த உயிரின் உருவாக்கம் சாத்தியமானதை விஞ்ஞான உலகம் நிரூபித்துக்காட்டியது. சமூக சர்ச்சைகள் படியெடு உயிரித்தொழில்நுட்பம் பல சீரிய சமூக சர்ச்சைகளை, கேள்விகளை முன்வைத்துள்ளது. இயற்கையாக நடைபெறும் இனப்பெருக்க முறைகளுடன் இடையூறு செய்வது எவ்வகை பின் விளைவுகளை ஏற்படுத்தும்? ஒரு பெண் தனது உயிர்க்கலத்தை கொண்டே ஆணின் தேவையின்றி தனது குழந்தையை உருவாக்கிகொள்ளலாம், அப்படியானால் ஆண்களின் தேவை என்ன? ஒரு ஆணின் உயிர்க்கலத்தை ஒரு பெண்ணின் முட்டையில் படியெடுத்து, பின்னர் இன்னொரு பெண்ணின் மூலம் குழந்தை பெற செய்தால், குழந்தைக்கு எத்தனை பெற்றோர்? குழந்தை யாருக்கு சொந்தம்? இவற்றையும் பார்க்க உயிர்க்கலம் குருத்துத் திசுள் உசாத்துணை வெளி இணைப்புகள் Cloning Fact Sheet from Human Genome Project Information website. 'Cloning' Freeview video by the Vega Science Trust and the BBC/OU Cloning in Focus , an accessible and comprehensive look at cloning research from the University of Utah's Genetic Science Learning Center Click and Clone . Try it yourself in the virtual mouse cloning laboratory, from the யூட்டா பல்கலைக்கழகம்'s Genetic Science Learning Center "Cloning Addendum: A statement on the cloning report issues by the President's Council on Bioethics," The National Review, 15 July 2002 8:45am மூலக்கூற்று உயிரியல் மரபணுக்கள்
6380
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நீர்கொழும்பு
நீர்கொழும்பு என்பது இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள ஒரு மாநகரமாகும். சிங்கள மொழியில் இது மீகமுவ என அழைக்கப்படுகிறது. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடமேல் மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதன் கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றவை. இதனால் இந் நகரத்தினதும், அதனை அண்டியுள்ள பகுதிகளினதும் கடற்கரையோரங்களில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் அமைந்துள்ளன. இது பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நீர்கொழும்பு நகரப்பகுதியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உரோமன் கத்தோலிக்கர்களும், இதற்கு அடுத்தாக இஸ்லாமியர்கள் மற்றும் பௌத்தர்களும், மிகவும் சிறுபான்மையாக இந்துக்களும் உள்ளனர். நீர்கொழும்பு கம்பகா மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும் கம்பகா மாவட்டம்
6385
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF
ஆத்திசூடி
ஆத்திச்சூடி என்பது பொ.ஊ. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததை உணர்த்தும் விதமாகவும் அன்று வழக்கத்திலிருந்த திண்ணைப் பள்ளிகள், குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப் படுகிற மெக்காலே கல்வி முறை வரை, தமிழ் கற்கும் போது தமிழின் உயிரெழுத்துகளைச் சொல்லித் தருகின்ற பொருட்டு ஔவையின் ஆத்திசூடியைக் கொண்டு கற்பிப்பதை ஆசிரியர்கள் கடைப்பிடித்து வருகின்றார்கள். நூல் ஆசிரியர்: ஔவையார் பாடல்கள்: 109 இலக்கணம்: காப்புச் செய்யுள் -1 கடவுள் வாழ்த்து ஆத்தி-திருவாத்தி பூமாலையைச் சூடி-அணிந்து கொண்டு அமர்ந்த- வீற்று இருக்கின்ற தேவனை- கடவுளை (மத வேறுபாடு இன்றி ) ஏத்தி ஏத்தித்- (மனம்)வாழ்த்தி (மொழி)வாழ்த்தி தொழுவோம்-(மெய்)வணங்குவோம் யாமே-நாமே. உயிர் வருக்கம் 1. அறம் – (விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல் – நல்ல செயல்களைச் செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச் செய்யாமல் இருப்பது) செய – செய்வதற்கு, விரும்பு – நீ ஆசைப்படு. தருமம் செய்ய நீ விரும்புவாயாக நல்ல செயல்களைச் செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும். 2. ஆறுவது- தவிர்க்க வேண்டியது, சினம் - கோபம். கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும். கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சி வசப்பட்டுத் தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அஃது எல்லோருக்கும் நல்லது அல்ல. 3. இயல்வது - நம்மால் முடிந்ததைக் கொடுப்பதற்கு கரவேல் -  வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( "கரவல்" கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே) உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு. 4. ஈவது - தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை விலக்கேல் - நீ தடுக்காதே ஒருவர், மற்றவர்க்குக் கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே 5. உடையது - உனக்கு உள்ள பொருளை விளம்பேல் - நீ பிறர் அறியும்படி  சொல்லாதே உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே. உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளைப் பலரும் அறியும்படி பெருமையாகப் பேசாதே. உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை. 6. ஊக்கமது– செய்தொழிலில் மனஞ்சோராமை, உள்ளக் கிளர்ச்சியைக் கைவிடேல்– நீ தளர்ந்து போக விடாதே. எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது. 7. எண் – கணித நூலையும் எழுத்து - அற நூல்களையும், இலக்கண நூலையும் எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே. 8. ஏற்பது – ஒருவரிடத்திலே போய் இரப்பது  பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – பழிப்பாகும் (அல்லது) இழிவு தரும். இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது. 9. ஐயமிட்டு – உன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்து உண் - பிறகே நீ உண்ண வேண்டும். யாசிப்பவர்கட்குக் கொடுத்துப் பிறகு உண்ண வேண்டும். 10. ஒப்புரவு – உலக போக்கிற்கு ஏற்றவாறு; ஒழுகு – நட உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள். 11. நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு. 12. ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே. 13. அதிக இலாபத்துக்காகத் தானியங்களைக் குறைத்து அளந்து விற்காதே. உயிர்மெய் வருக்கம் 14. கண்ணாற் கண்டதற்கு மாறாகப் (பொய் சாட்சி) சொல்லாதே. 15. 'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துகளைத் தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களைக் காக்க வேண்டும். "ங" என்னும் எழுத்தைக் கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போலப் பணிவாகப் பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம். 16. சனி(குளிர்ந்த) நீராடு. 17. கேட்பவருக்கு இன்பம் உண்டாகும்படி இனிமையாகப் பேசு. 18. உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாகக் கட்டாதே. 19. ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும். 20. உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று. 21. ஒருவர் உனக்குச் செய்த உதவியை ஒரு போதும் மறவாதே. 22. எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும். 23. பிறர் நிலத்தைத் திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது) நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்) 24. நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே. 25. பாம்புகளைப் பிடித்து விளையாடாதே. 26. 'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு 27. கபடச்(உண்மைக்குப் புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களைப் பேசாதே 28. இழிவான செயல்களைச் செய்யாதே 29. இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளைத் (இலக்கணத்தையும் கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள். 30. கடவுளை மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும் 31. கடல் நீரில் விளையாடுவது துன்பம் தரும் மிகுதியாகத் தூங்காதே ககர வருக்கம் 32. யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே. 33. தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது) பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும். 34. உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ் 35. இழிவான குணஞ் செயல்களை நீக்கு 36. நன்மை தரக்கூடிய நல்ல குணங்களைப் பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்). 37. நல்லவரோடு நட்பு செய்து பின் அவரைப் பிரியாதே 38. பிறருக்குக் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யாதே. 39. கற்றவர் சொல்லும் நூற் பொருளைக் கேட்பதற்கு முயற்சி செய் 40. உங்களுக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும். 41. பிறர் பொருளைத் திருடுவதற்கு ஆசைப்படாதே. 42. குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு) 43. வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு சகர வருக்கம் 44. தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் ) 45. அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு. 46. பொய்யான வார்த்தைகளை மெய் போலப் பேசாதே 47. புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே. 48. கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும்படி பேசாதீர் 49. ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே. 50. செய்யும் செயல்களைத் தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும் 51. நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு. 52. பெரியோர் 'சீ' என வெறுக்கும்படி வீணாய்த் திரியாதே 53. பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே 54. முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே. தகர வருக்கம் 55. பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள் 56. யாசிப்பவர்களுக்குத் தானம் செய். 57. நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய் 58. பாவச் செயல்களைச் செய்யாமல் இரு. 59. முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே. 60. ஒரு வேளையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பு அச்செயலைச் செய்யத் தொடங்கவும் 61. கடவுளைப் பழிக்காதே. 62. உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ் 63. மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே. 64. பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை  விட்டுக் கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்) 65. ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதைத் தொடங்காதே. நகர வருக்கம் 66. நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும் 67. நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களைச் செய் 68. உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே. 69. வெள்ளபெருக்கில்  நீந்தி விளையாடாதே 70. நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே 71. அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி 72. நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ். 73. ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட 74. பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே 75. பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே. 76. மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே. பகர வருக்கம் 77. பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே. 78. பாம்புபோலக் கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே. 79. குற்றம் உண்டாகும்படி எதையும் பேசாதே. 80. பெருமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில் 81. உன்னையே நம்பியவர்களைக் காப்பாற்றி வாழ் 82. விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள் 83. அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள் 84. அறியாமையைப் போக்கு 85. அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே. 86. பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ். 87. யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே மகர வருக்கம் 88. எதனாலும் மனக்கலக்கம் அடையாதே 89. பகைவன் உன்னைத் துன்புறுத்தி உன்னை வெல்வதற்கு இடம் கொடுக்காதே. 90. சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே. 91. மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே. 92. எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காகப் போர் முனையிலே நிற்காதே 93. மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே 94. பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ். 95. நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட. 96. விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில் 97. [மொழிவது = பேசுவது] சொல்லப்படும் பொருளைச் சந்தேகம் நீங்கும்படி சொல் பேசுவதைத் தெளிவாகப் பேசு சொல்வதற்கு முன், இதைச் சொல்ல வேண்டுமா? என்று ஆராய்ந்து, பின் சொல்க எதைச் சொல்ல/பேச வேண்டும்? எப்பொழுது சொல்ல/பேச வேண்டும்? எதைச் சொல்லக்/பேசக் கூடாது? எப்பொழுது சொல்லக்/பேசக் கூடாது? எப்படிச் சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்லக் கூடாது? 98. நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு வகர வருக்கம் 99. உன்னுடைய வலிமையை நீயே புகழ்ந்து பேசாதே 100. முந்திக்கொண்டு வாதிடாதே 101. கல்வியாகிய நற்பொருளை விரும்பு 102. முக்தியை பெறுவதற்கான சன்மார்க்கத்திலே வாழ்க்கையை நடத்து 103. உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ். 104. ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ் 105. யாருடனும் கடினமாகப் பேசாதே 106. வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே 107. விடியற்காலையில் தூக்கத்திலிருந்து எழு நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு 108. பகைவர்களை நம்பாதே 109. நம்மைச் சுற்றி உள்ளவர்களைப் பற்றி பிறரிடம் குறை சொல்லக் கூடாது அடுத்தவரைப் பற்றிப் புறம் (தவறாகப்) பேசக் கூடாது எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுநிலையுடன் பேசு. திருக்குறள் அதிகாரம் 19 - புறங்கூறாமை இவற்றையும் பார்க்கவும் திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு வெளி இணைப்புகள் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் - ஔவையார் நூல்கள் அறம் செய விரும்பு தமிழ் சிறுவர் இலக்கியம் தமிழ் அற நூல்கள் 12 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள் சைவ சமய நூல்கள்
6388
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
கிண்டி
கிண்டி (ஆங்கிலம்: Guindy) தமிழ்நாட்டின் சென்னை நகரத்திலுள்ள ஒரு நகர்ப் பகுதியாகும். இது சென்னையின் தென்பகுதியில் அமைந்துள்ளது. கிழக்கே அடையாறும் வடக்கே கோட்டூர்புரமும் உள்ளன. இங்கு புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கிண்டி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இருப்பிடம் ராஜ்பவன் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ள வளாகத்தின் முந்தைய கிண்டி பொறியியற் கல்லூரி, இந்தியாவின் பழமையான பொறியியற் கல்லூரிகளுள் ஒன்றாகும். மேலும் கிண்டியில் ஒரு பாம்புப் பண்ணையும் சிறுவர் பூங்காவும் உள்ளன. இவற்றை அடுத்து இராசாசி, காமராசர் மற்றும் அண்ணல் காந்தி நினைவிடங்கள் உள்ளன. தாம்பரம்–சென்னைக் கடற்கரை சுற்றுப்புற வழித்தடத்தின் நிறுத்தமாக தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகாமையில் தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்தியாவிலே முதன் முதலில் உருவான CIPET அமைந்துள்ளது மேற்கோள்கள் அமைவிடம்  சென்னை சுற்றுப் பகுதிகள் சென்னை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
6389
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%28%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%29
காந்தி நகர் (திருவண்ணாமலை)
காந்திநகர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும். மேற்கோள்கள் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் திருவண்ணாமலை நகர விரிவாக்கப் பகுதிகள் en:Gandhinagar, thiruvannamalai zh:加恩迪纳加尔
6390
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
சண்டிகர்
சண்டிகர், இந்தியாவில் உள்ள ஒரு ஒன்றியப் பகுதி மற்றும் நகரமாகும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பகுதியாக்கப்பட்டது. மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சண்டிகரின் மொத்த மக்கள் தொகை 1,055,450 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 2.75% மக்களும், நகரப்புறங்களில் 97.25% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.19% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 580,663 ஆண்களும் மற்றும் 474,787 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 818 வீதம் உள்ளனர். 114 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சண்டிகரில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 9,258 மக்கள் வாழ்கின்றனர். சண்டிகரின் சராசரி படிப்பறிவு 86.05 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.99 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 81.19 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 119,434 ஆக உள்ளது. சமயம் சண்டிகரில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 852,574 (80.78 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 51,447 (4.87 %) ஆகவும், ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 8,720 (0.83 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 138,329 (13.11 %) ஆகவும் , சமண சமய மக்கள் தொகை 1,960 (0.19 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 1,160 (0.11 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 246 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,014 (0.10 %) ஆகவும் உள்ளது. மொழிகள் சண்டிகரின் ஆட்சி மொழிகளான, ஆங்கிலம், பஞ்சாபி , இந்தி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. போக்குவரத்து தரைவழிப் போக்குவரத்து 1465 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 2 சண்டிகர் நகரத்தை புதுதில்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களுடன் இணைக்கிறது. 323 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 21 சண்டிகர் நகரை இமாச்சலப் பிரதேசத்தின் மலைவாழிட நகரான மணாலியை, சிம்லா வழியாக இணைக்கிறது. 225 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 95 பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் நகரத்துடன் இணைக்கிறது. தொடருந்து சண்டிகர் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து புதுதில்லி, சென்னை, மதுரை , கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, சிம்லா, அமிர்தசரஸ், ஜம்மு போன்ற அனைத்து முக்கிய நகரங்களை சண்டிகர் நகரத்துடன் இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது. வானூர்தி நிலையம் சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடனும், பன்னாட்டு நகரங்களுடனும் வானூர்திகள் மூலம் வான் வழியாக இணைக்கிறது. சுற்றுலா சண்டிகர் நகரத்தில் பாறைச் சிற்பத் தோட்டம், சாகீர் உசேன் ரோசாத் தோட்டம் மற்றும் காந்தி பவன் அருகில் உள்ள சுற்றுலா மையங்கள் அமிர்தசரஸ், வாகா, வாகா எல்லைச் சடங்கு மற்றும் பிஞ்சூர் தோட்டம் படக்காட்சியகம் மேற்கோள்கள் பஞ்சாப் (இந்தியா) மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் அரியானா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் சண்டிகர் இந்தியாவின் ஒன்றியப் பகுதிகள்
6392
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
ஒன்றியப் பகுதி (இந்தியா)
ஒன்றியப் பகுதி அல்லது யூனியன் பிரதேசம் (Union Territory) என்பது இந்தியாவில் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இது மாநிலங்களைப் போலல்லாமல் நேரடியாக இந்திய நடுவண் அரசால் நிர்வகிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன. தற்போதைய ஒன்றியப் பகுதிகள் இவற்றில் புதுச்சேரி, தில்லி மற்றும் சம்மு காசுமீர் ஆகிய மூன்று ஒன்றியப் பகுதிகள் சட்டமன்றத்துடன் கூடிய தகுதி உடையனவாகும். மற்ற ஒன்றியப் பகுதிகள் சட்டமன்றங்கள் இன்றி, நேரடியாக இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் அதிகாரிகளால் நிருவகிக்கப்படுகிறது. தில்லி மற்றும் சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதிகளுக்கு தேர்தல் மூலம் அரசமைக்க உரிமை இருப்பினும், சட்டங்கள் இயற்றுவதற்கு முன், சட்ட முன்மொழிவுகளுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தேவையாக உள்ளது. இந்த 3 ஒன்றியப் பகுதிகளுக்கு துணைநிலை ஆளுநர் தலைமை தாங்குவார். முன்னாள் ஒன்றியப் பகுதிகள் இதனையும் காண்க இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் மாவட்டம் இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய ஒன்றியப் பிரதேங்சகள் - காணொலி - பகுதி 1 இந்திய ஒன்றியப் பிரதேங்சகள் - காணொலி - பகுதி 2 இந்திய ஒன்றியப் பிரதேங்சகள் - காணொலி - பகுதி 3 இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும் இந்திய ஆட்சிப் பிரிவுகள்
6393
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
குறியியல்
குறியியல் (Semiotics) என்பது குறிகள் பற்றித் தனியாகவும், குறி முறைமைகளில் கூட்டாகவும் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். இது குறிகளின் பொருள் எவ்வாறு கடத்தப்படுகிறது (transmit) என்றும், எவ்வாறு விளங்கிக் கொள்ளப்படுகிறது என்பது பற்றிய ஆய்வையும் உள்ளடக்கும். உலகிலுள்ள சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் எவ்வாறு தமக்கேயுரிய குறியீடுகள் தொடர்பில் முன்கூட்டியே அறிந்துகொண்டு அவற்றுக்குத் தம்மை இசைவாக்கம் செய்து கொள்கின்றன என்பது பற்றியும் சில சமயம் குறியியலாளர்கள் அறிந்துகொள்ள முயல்கிறார்கள். சொற்களின் வகைப்பாடு குறியியலாளர்கள், குறிகளையும் (signs), குறி முறைமைகளையும் (sign systems), அவை தொடர்பான பொருள் (meaning) எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை அடிப்படையாக வைத்து வகைப்படுத்துகிறார்கள். இந்தக் குறிகளின் பொருள் காவிச்செல்லப்படும் வழிமுறையானது, தனிச் சத்தங்கள், அல்லது சொற்களை உருவாக்கப் பயன்படும் எழுத்துக்கள், உணர்வுகளை அல்லது மனப்போக்கை வெளிப்படுத்தும் உடலசைவுகள், சிலசமயங்களில் உடுக்கும் உடை என்பவை போன்ற குறியீடுகளில் (codes) தங்கியுள்ளது. ஏதாவது "ஒன்றை"க் குறிக்கும் ஒரு சொல்லை உருவாக்குவதற்கு, ஒரு சமுதாயம் தங்கள் மொழியிலுள்ள அதன் எளிமையான பொருள் விளக்கம் தொடர்பாகப் பொதுவான கருத்தைக் கொண்டிருக்கவேண்டும். ஆனால் அவ்வாறான சொல், குறிப்பிட்ட மொழியின் இலக்கண அமைப்பு மற்றும் குறியீட்டு வரம்புகளுக்கு உட்பட்டே பொருள் விளக்கத்தைக் கொடுக்கின்றன. குறியீடுகள் (codes), பண்பாடொன்றின் விழுமியங்களை குறித்து நிற்பதுடன், வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களுக்கும், பல வகையான உட்பொருள்களையும் கொடுக்க வல்லவையான உள்ளன. குறியியலும், தகவல் தொடர்புதொடர்புத் துறையும் (communication) பல அடிப்படைக் கருத்துருக்களைப் பொதுவாகக் கொண்டுள்ளதுடன் அவற்றின் ஆய்வுப் பரப்பும் பல இடங்களில் ஒன்றுடனொன்று பொருந்தி வரையறுக்கப்படாமல் உள்ளது. எனினும், குறியியல், "தொடர்பு" என்ற அம்சத்தைவிட குறிகளின் தனிச்சிறப்பாக்கம் என்பதற்குக் கூடிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொடர்புத் துறையிலிருந்து வேறுபடுகின்றது. குறியியலானது மொழியியலுடன் எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு துறைகளும் ஒரேயிடத்திலிருந்தே ஆரம்பிக்கின்ற போதும், குறியியல், அனுபவம் சார்ந்த முறையில் ஆய்வை விரிவாகக் கையாண்டு, மொழியியல் சார்ந்த அம்சங்களையும், மொழியியல் சாராத அம்சங்களையும் இணைத்துப் பார்க்க முயல்கிறது. மனிதர்கள் மொழியைச் சமுதாயச் சூழலில் மட்டுமே விளங்கிக் கொள்வதனால், இம்முறையில் ஆய்வு முடிவுகள் கூடிய அளவு பொருத்தமாக அமையும். தூய மொழியியலில் ஆய்வாளர்கள், மொழியைக் கூறுகளாகப் பிரித்து அதன் பயன்பாடு பற்றி ஆராய்கிறார்கள். ஆனால் உலக நடப்பில், மனிதர்களுக்கிடையேயான தொடர்பு நடவடிக்கைகளில், மொழி மற்றும் குறி அடைப்படையிலான தகவல் பரிமாற்றங்கள் தொடர்பில் குழப்பமான தெளிவின்மை காணப்படுகிறது. இது பற்றியும் குறியியலாளர்கள் பகுப்பாய்வு செய்து அவை தொடர்பான விதிகளைக் காணவும் முயல்கிறார்கள். சில முக்கியமான குறியியலாளர்கள் சார்லஸ் சாண்டர்ஸ் பியேர்ஸ் (Charles Sanders Peirce)(1839–1914), பேர்டினன்ட் டி சோசுரே (Ferdinand de Saussure) (1857–1913), Louis Trolle Hjelmslev (1899 - 1965) Charles W. Morris (1901–1979) உம்பெர்த்தோ எக்கோ Algirdas Julius Greimas Thomas A. Sebeok Juri Lotman 1922 - 1993 + அ. பழனிசாமி (தமிழ்த்திரைப்படங்களில் குறியியல்:1998) மேலும் படிக்க முனைவர் அ.பழனிசாமி - தமிழ்த்திரைப் படங்களில் குறியியல், சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு வெளியிணைப்புகள் Applied Semiotics / Sémiotique appliquée The Commens Dictionary of Peirce's Terms Arisbe, The Peirce Gateway Celebrity links in Semiotics Semiotics for Beginners What is semiotics? - by Eugene Gorny The Semiotics of the Web Charles W. Morris Semiotics and the English Language Arts Stanford Encyclopedia of Philosophy entry on Medieval Semiotics Semiotics and ontology: John Deely and John Poinsot மொழியியல்
6394
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
நாவாந்துறை
நாவாந்துறை என்பது இலங்கையின், யாழ்ப்பாண நகருக்குள் அடங்கிய ஒரு இடமாகும். இது யாழ்ப்பாண நகர மத்தியிலிருந்து வடமேற்குத் திசையில் கடற்கரை ஓரமாக அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாநகரசபையின் 23 வட்டாரப் பிரிவுகளுள் ஒன்றாக நாவாந்துறையும் உள்ளது. நாவாந்துறை என்ற பெயர் நாவாய், துறை என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையில் தோன்றியது. நாவாய் என்பது ஒரு வகைக் கடற் கலம். நாவாய்கள் கரைக்கு வந்து செல்லும் சிறிய துறைமுகமாக இருந்த காரணத்தால் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இங்கு வாழும் மக்களில் பலர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள். இவற்றையும் பார்க்கவும் யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்
6395
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
பனங்கூடல்
ஒரு நிலப்பகுதியில் அதிக அளவில் பனை மரங்கள் கூட்டமாக அமைந்திருக்கும்போது அந்த இடம் பனங்கூடல் எனப்படுகிறது. இச் சொல் பனை, கூடல் என்னும் இரண்டு சொற்களின் கூட்டுச் சொல். பனைகள், தென்னை மற்றும் பழ மரங்களைப் போல் நட்டு, நீரூற்றி வளர்க்கப்படுவதில்லை. பனைகள் மரத்திலிருந்து விழும் பனம்பழங்களின் விதைகளில் இருந்து தானாகவே முளைத்து வளர்கின்றன. எனவே பனங்கூடல்கள் தானாகவே உருவானவையாகும். இவற்றையும் பார்க்கவும் பனை மரங்கள் பனையியல்
6396
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
தாவரம்
தாவரம் (Plant) (தாவரவியல் பெயர்: Plantae) அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் (ferns), பாசிகள் (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள். பயன்கள் இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை தாவரங்கள். தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100 மீட்டர் (330 அடி) உயரத்திற்கு மேல் செல்லும் 'சிகொயா' மரங்கள் வரை பல்வேறு வகைகளில் நிறைந்துள்ளன. இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் ஆகியவற்றிற்காக பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை அரிசி, கோதுமை, பருத்தி, சோளம், புகையிலை போன்றவை. பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக பில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல், மண்ணெண்ணெய், டீசல் ஆகியவை கிடைக்கிறன என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது. மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்சிசன் பெருகப் பெருக விலங்குகள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்றத் துவங்கின. தாவரங்களால் மண்சரிவு, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான தட்பவெப்பநிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம். உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாகத் தாவரங்கள் இருக்கின்றன. வரைவிலக்கணம் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில்(384 கி.மு. – 322 கி.மு.) எல்லா உயிரினங்களையும், தாவரங்கள் (நிலைத்திணை), விலங்குகள் (நகர்திணை) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார். 18 ஆம் நூற்றாண்டில் லின்னேயசின் முறைப்படி(Linnaeus' system), இவை வெஜிட்டபிலியா (Vegetabilia), அனிமலியா (Animalia) என்னும் இரண்டு இராச்சியங்கள் (Kingdoms) ஆகின. வெஜிட்டபிலியா இராச்சியம் பின்னர் பிளாண்ட்டே (Plantae) என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் பிளாண்ட்டே இராச்சியத்தில் ஆரம்பத்தில் அடக்கப்பட்ட பல வகைகள் தொடர்பற்றவையாக இருப்பது அறியப்பட்டது. பூஞ்சணங்களும், பல வகை பாசிகளும் (அல்காக்கள்) வெவ்வேறு இராச்சியப் பிரிவுக்கு மாற்றப்பட்டன. இருந்தாலும் இவை பல சூழ்நிலைகளில், தாவரங்களாகவே இன்றளவும் கருதப்பட்டு வருகின்றன. கருத்துருக்கள் தாவரங்கள் என்று கூறும்போது அவை பின்வரும் மூன்று கருத்துருக்களில் ஒன்றால் குறிப்பிடப்படுகின்றன. அவையாவன: நிலத் தாவரங்கள்: இவை எம்பிரையோபைட்டா, மீட்டாபைட்டா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. பச்சைத் தாவரங்கள்: இதற்கு விரிடிபைட்டா, குளோரோபினாட்டா போன்ற பெயர்களும் உண்டு. இதற்குள் முன்னர் குறிப்பிட்ட நிலத்தாவரங்களும் அடங்குகின்றன. அவற்றுடன், கரோபைட்டா, குளோரோபைட்டா என்பனவும் அடங்கும். ஆர்க்கீபிளாஸ்டிடா: பிளாஸ்டிடா, பிரிமோபிளாண்டா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இதற்குள் பச்சைத் தாவரங்கள் அனைத்தும் அடங்குவதுடன் ரொடோபைட்டா, குளுக்கோபைட்டா என்பனவும் அடங்குகின்றன. தாவர வகைப்பாடு உயிரியல் வகைப்பாட்டின்படி, தொடக்ககால வகைப்பாட்டியலாளர்கள் தாவரங்களின் வெளிப்புற உடற் பண்புகளுக்கு அதிக முன்னுரிமைக் கொடுத்தனர். அதன் பின்பு வந்த அறிஞர்கள்(குறிப்பாக லின்னேயஸ் ) தாவரங்களின் மலர் பண்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஏனெனில், மலரின் பண்புகள் மாறுபடாமல் நிலைப்புத் தன்மையுடனும், நிரந்தரமாகவும் இருக்கின்றன. மேலும் பூக்கும் தாவரங்களை ஒருவித்திலைத் தாவரம், இருவித்திலைத் தாவரம் என்று இரு வகையாகவே பிரித்திருந்தனர். தொடக்ககால பல்வேறு விதமான வகைப்பாடுகள், மூன்று முறைகளில் பிரிக்கப்பட்டன. செயற்கை முறை - (எ.கா) லின்னேயஸ் முறை-7300 சிற்றினங்களுடன் விவரித்தார். இயற்கை முறை - (எ.கா) பெந்தம்-கூக்கர் வகைப்பாடு மரபுவழி முறை - (எ.கா) அடால்ஃப் எங்ளர்(1844-1930), கார்ல் பிராண்டல்(1849-1893) இருவரும் கூறினர். பரிசோதனை வகைப்பாட்டியல் - கேம்ப் என்பவரும், கில் என்பவரும் 1943 ஆம் ஆண்டு, இதனைக் கொண்டு வந்தனர் பெயரிடல் தாவரங்களுக்கான பெயரிடல், கீழ்கண்ட அமைப்புகளால் கட்டுப்படுத்தப் படுகிறது. தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை (International Code of Botanical Nomenclature), வளர்க்கும் தாவரங்களுக்கான அனைத்துலகப் பெயரிடல் நெறிமுறை (International Code of Nomenclature for Cultivated Plants) தற்காலத்தில் 2009 ஆம் ஆண்டின் பூக்குந்தாவரக் கூர்ப்பொழுங்குக் குழு III முறை (APG III system - Angiosperm Phylogeny Group III system) என்பதன் படி, இவை எட்டு குழுக்களாக வகைப்படுத்தப்படுகின்றன. அவைபின்வருமாறு;- அம்பொரெல்லா (Amborella) அல்லியம் (Nymphaeales) அவுத்திரோபியன் (Austrobaileyales) பசியவணி (Chloranthales) மூவடுக்கிதழிகள் (Magnoliidae) ஒருவித்திலையிகள் (Monocotyledonae) மூலிகைக்கொம்புகள் (Ceratophyllum) மெய்யிருவித்திலையிகள் (Eudicotyledonae) பல்வகைமை தாவரக் கலம் தாவரக் கலங்கள் கரு உள்ள கலங்களாகும். இவற்றில் ஒளித்தொகுப்புக்குத் தேவையான பச்சையம் காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். இவற்றில் விலங்குக் கலங்களில் காணப்படாத பல விசேட அமைப்புக்கள் உள்ளன. கலச்சுவர், பச்சையவுருமணி, பெரிய புன்வெற்றிடம் ஆகியன தாவரக்கலங்களின் சிறப்பம்சங்களாகும். மேலும் பார்க்க விலங்குகள் ஊனுண்ணித் தாவரம் தாவரவியல் காட்சியகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் உலகிலுள்ள 4 லட்சம் தாவர இனங்களில் 10% அழிவின் விளிம்பில்
6400
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
உண்மையான இயேசு தேவாலயம்
உண்மையான இயேசு தேவாலயம் ஒரு "சுதந்திர புரட்சி கிறிஸ்தவ திருசபை" ஆகும். இச்சபையில் கிறிஸ்துமஸ், உயிர்த்த ஞாயிறு போன்றவை கொண்டாடப்படுவதில்லை. திரித்துவத்தை ஏற்றுக் கொள்வதில்லை, மாறாக ஒரேகடவுள் என்பதை பின்பற்றுகின்றன. இச்சபை சீனாவில் உள்ள பீஜிங்கில் 1917ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது. இத்தேவாலயமானது இந்தியாவில் முதன் முதலாக 1932ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் கிளைகள் தமிழ்நாட்டின் அம்பத்தூர், செங்கல்பட்டு, பம்மல், திருவொற்றியூர், திருநெல்வேலி, திருநீலை, ஓட்டேரி மற்றும் பண்டுவன்சேரி போன்ற இடங்களில் அமைந்துள்ளன. ஐந்து போதனைகள் புனித ஆத்மா நாபட உரைத்து பரிசுத்த ஆவியை ஏற்போமாயின், அதுவே நாம் தேவ இராச்சியத்தின் முழு அருளினை பெறுவதற்கான வழிசெய்யும். திருமுழுக்கு திருமுழுக்கு எனும் சடங்கு, பாவங்களை கழுவி மறுபிறவியளிப்பதாகும். இயற்கையாக அமைந்த நீர்நிலையான ஆறு, கடல் அல்லது ஏரி போன்ற ஒன்றில் திருமுழுக்கு கொடுக்கப்படும். ஏற்கனவே நீரினாலும் படிசுத்த ஆவியாலும் திருமுழுக்கு பெற்ற ஒருவர், இயேசுவின் பெயரால் திருமுழுக்கு கொடுக்க வேண்டும். திருமுழுக்கு பெறுபவர் தலை குனிநத நிலையில் முகம் கீழாக இருக்க முழுமையாக நீரில் அமிழ்த்தப்பட வேண்டும். பாதம் கழுவுதல் "பாதம் கழுவும் திருவருட்சாதம் இயேசுவுடன் பங்குதாரியாக மாற்றுகின்றது. இது தொடர்ந்து அன்பு செய்தலையும், புனிதத்தையும் பணிவையும், மன்னிப்பையும் கடைப்பிடிக்க நினைவூட்டுகிறது. திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவருக்கும் இயேசுவின் பெயரால் பாதங்கள் கழுவப்படும். ஒருவரினொருவர் பாதங்களை கழுவுதல் பொருத்தமான எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படும்". திவ்விய நற்கருணை திவ்விய நற்கருணை இயேசுவின் இறப்பை நினைவுகூறும் திருவருட்சாதானமாகும். இது இயேசுவின் இரத்தத்டிலுன் உடலிலும் எம்மை பங்குகொள்ளச் செய்து இயேசுவுடன் இணைக்கிறது. இதன்மூலம் நிலையான வாழ்வை ஈட்ட வழிசெய்கிறது. இச்சடங்கின் போது புளிக்காத மாவினால் செய்த அப்பமும் திராட்சை இரசமும் பாவிக்கப்படுகிறது. ஓய்வு நாள் முதன்மைக் கட்டுரை: ஓய்வு நாள் "ஓய்வு நாள் அல்லது சபத் நாள்,கிழமையின் 7 வது நாள்(சனிக்கிழமை), புனித நாளாகும். அது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும். கடவுளின் உலக படைப்பையும், வரவிருக்கும் நிலைவாழ்வில் கிடைகும் ஓய்வையும் நினைவு கூறும் வகையில் ஓய்வு நாள் அனுசரிக்கப்படுகிறது". மேலதிக கோட்பாடுகள் யேசு கிறிஸ்து "வார்த்தையாய் இருந்து மாம்சமான, இயேசு கிறிஸ்து பாவிகளின் விடுதலைக்காக சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து விண்ணகம் சென்றார்.அவரே மனுகுலத்தின் ஒரே மீட்பரும், வானங்களையும் பூமியையும் படைத்தவரும் ஒரே உண்மைக் கடவுளுமாவார்." புனித வேதாகமம் "பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் கொண்ட புனித விவிலியம் கடவுளின் வார்த்தையாகும், அதுவே உண்மை வேதமும், கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையுமாகும்." இரட்சிப்பு "மீட்பு விசுவாசத்தினூடாக கடவுளின் கருணையால் வழங்கப்படுவதாகும். விசுவாசிகள் பரிசுத்த ஆவியில் தேவனை மகிமைப் படுத்துவதோடு மனிதத்தை அன்பு செய்ய வேண்டும்". தேவாலயம் "உண்மையான இயேசு தேவாலயம், இயேசுக்கிறிஸ்துவால் பரிசுத்த ஆவி மூலமாக 'latter rain' காலத்தில் தொடக்கப்பட்டதாகும். இது அப்போஸ்தலர் காலத்துல் இருந்த சபைக்கு ஒத்ததாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது." இரண்டாம் வருகை கர்த்தர் இயேசுவின் இரண்டாம் வருகை உலகின் கடைசிநாளில் நடைபெறும். அவர் சகல ஆத்துமாக்களையும் நடுத்தீர்க்க விண்ணகத்திலிருந்து இறங்கிவருவார். நீதிமான்களுக்கு நித்திய சீவனையும், பாவிகளுக்கு நித்திய நரகத்தையும் தீர்ப்பளிப்பார். மேற்கோள்கள் கிறித்தவப் பிரிவுகள்
6402
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D
பிரமிள்
பிரமிள் (Premil, ஏப்ரல் 20, 1939 - சனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தர்மு சிவராம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார். வேலூர் அருகிலுள்ள கரடிக்குடியில், 1997இல் மறைந்தார். எழுத்துலகில் தமது இருபதாவது வயதில், சென்னையிலிருந்து வெளிவந்த எழுத்து பத்திரிகையில் கவிதைகளும் விமர்சனங்களும் எழுத ஆரம்பித்த இவர், பிறகு தமிழகத்திலேயே வாழ்ந்து தம் படைப்புகளை வெளிப்படுத்தியதால், ஒரு தமிழக எழுத்தாளராகவே மதிக்கப்பட்டார். இலங்கை எழுத்துலகமும் இவ்வாறே இவரைக் கணித்து வந்துள்ளது. புதுக் கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்தபட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்வதிலும் திறமை படைத்திருந்தார்; இவரது ஆன்மீக ஈடுபாடு, இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக் கவிஞர்’ என்றும் ‘ஆன்மீகக் கவிஞர்’ என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில் தனித்துயர்ந்து நிற்பதாகும். ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்சனக்கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள், நவீன தமிழ் இலக்கியம் குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர். ஆரம்பக் கல்வி மட்டும் ராமகிருஷ்ணமடம் நடத்திய இரவுப்பாடசாலையில் கிடைத்தது. தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள். இளம் வயதிலேயே மௌனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்குண்டு. "கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்" என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுத்துவில் எழுதினார். மைசூரிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை, கேரளக் கருத்தரங்கில் படித்த தமிழ்க்கவிதை பற்றிய இவரது கட்டுரை ஒன்றைக் கேட்டு வாங்கி வெளியிட்டது. தொடக்கத்தில் எழுத்து- இதழும் இடையில் கொல்லிப்பாவை இதழும் இறுதியில் லயம் பத்திரிகையும் இவருக்கு முதன்மையான படைப்புக் களம் அமைத்துத் தந்தன. பிரமிளின் பெரும்பாலான நூல்கள் லயம் வெளியீடுகளாகவே பிரசுரம் பெற்றன. ஓவியர் புத்தகங்களிலும் இதழ்களிலும் சிவராம் வரைந்த ஓவியங்கள் வெளியாகியுள்ளன. 1971 இல் கண்டி பிரான்சு நட்புறவுக் கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. படைப்புகள் கவிதைத் தொகுதிகள் கண்ணாடியுள்ளிருந்து கைப்பிடியளவு கடல் மேல்நோக்கிய பயணம் பிரமிள் கவிதைகள் சிறுகதை தொகுப்பு லங்காபுரி ராஜா பிரமிள் படைப்புகள் சிறுகதைகள் சில காடன் கண்டது பாறை நீலம் கோடரி கருடனூர் ரிப்போர்ட் சந்திப்பு அசரீரி சாமுண்டி அங்குலிமாலா கிசுகிசு குறுநாவல் ஆயி பிரசன்னம் லங்காபுரிராஜா நாடகம் நட்சத்ரவாசி பிரமிள் நூல் வரிசை (பதிப்பு : கால சுப்ரமணியம்) 1. பிரமிள் கவிதைகள். 1998. (முழுத் தொகுதி). (லயம்). 2. தியானதாரா. 1989 (லயம்), 2005 (ஆகாஷ்), (1999), (2006), 2008 (கவிதா). 3. மார்க்ஸும் மார்க்ஸியமும். 1999. பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). (லயம்). 4. பிரமிள் படைப்புகள். 2003. (அடையாளம்). 5. வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்.2004. (அடையாளம்). 6. பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள். 2007. (வம்சி). 7. பிரமிள் கவிதைகள். 2007. (சிறப்புப் பதிப்பு). (அடையாளம்). 8. விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள். 2009. (விருட்சம்) 9. ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை. 2009. (தமிழோசை). 10. யாழ் கதைகள். 2009. (லயம்). 11. காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள். 2009. (உள்ளுறை). 12. வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். 2011. (வம்சி). 13. வரலாற்றுச் சலனங்கள்: சமுதாயவியல் கட்டுரைகள். 2011. (வம்சி). 14. எதிர்ப்புச்சுவடுகள்: பேட்டிகள், உரையாடல்கள். (வெளிவராதது) 15. அறைகூவல்: இலக்கிய அரசியல் எழுத்துகள். (வெளிவராதது) 16. தமிழின் நவீனத்துவம்: எழுத்து கட்டுரைகள். 2011. (நற்றிணை) 17. சூரியன் தகித்த நிறம் (மொழிபெயர்ப்புக் கவிதைகள். 2011. (நற்றிணை) 18. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் பாதையில்லாப் பயணம். 2014. தமிழினி 19. மார்க்ஸும் மார்க்ஸியமும் - பீட்டர் வோர்ஸ்லி. (தமிழாக்கம்). 2014. தமிழினி 18. பிரமிள் படைப்புகள்: தொகுதி 1 கவிதைகள். 2015. அடையாளம் 19. பிரமிள் படைப்புகள்: தொகுதி 2 கதைகள், நாடகங்கள். 2015. அடையாளம் 20. பிரமிள் படைப்புகள்: தொகுதி 3 விமர்சனக்கட்டுரைகள்-1. 2015. அடையாளம் 21. பிரமிள் படைப்புகள்: தொகுதி 4 விமர்சனக்கட்டுரைகள்-2. 2015. அடையாளம் 22. பிரமிள் படைப்புகள்: தொகுதி 5 பேட்டிகளும் உரையாடல்களும். 2015. அடையாளம் 23. பிரமிள் படைப்புகள்: தொகுதி 6. மொழிபெயர்ப்பு, அறிவியல் ஆன்மீகம். 2015. அடையாளம் விருதுகள் நியூயார்க் விளக்கு அமைப்பு "புதுமைப்பித்தன்" விருதை இவருக்கு அளித்தது. கும்பகோணம் சிலிக்குயில் "புதுமைப்பித்தன் வீறு" வழங்கியது. மறைவு உதரவிதானத்தில் ஏற்பட்ட புற்றுநோயால் பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர், 1997ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி காலமானார். வேலுருக்கு அருகிலுள்ள கரடிக்குடி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பிரமிள் கவிதைகள் நவீன தமிழ் இலக்கிய மேதை தருமு சிவராம், புதுவை கனகராஜ், தினமணி, மார்ச் 13, 011 பிரமீளின் சில கவிதைகள் பிரமிள் - சுந்தர ராமசாமி - இலக்கியச் சண்டை பிரமீள்-கடிதங்கள்-நினைவுகள் பிரமீள் - இறுதி நாட்கள் பிரமிள் (1939-1997), வ.ஸ்ரீநிவாஸன் கால சுப்ரமணியம் https://www.facebook.com/kaala.subramaniam கால சுப்ரமணியம் https://www.facebook.com/pramil after pramil ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்துக் கவிஞர்கள் தமிழ் விமர்சகர்கள் நவீன தமிழ்க் கவிஞர்கள் 1939 பிறப்புகள் 1997 இறப்புகள் திருகோணமலை மாவட்ட நபர்கள் தமிழ் எழுத்தாளர்கள் புற்றுநோயால் இறந்தவர்கள் ஈழத்து ஓவியர்கள்
6403
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%9A%E0%AF%81.%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
சி. சு. செல்லப்பா
சி.சு.செல்லப்பா (C. S. Chellappa, செப்டம்பர் 29, 1912 - டிசம்பர் 18, 1998) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா. பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாகக் கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். வாழ்க்கைச் சுருக்கம் தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி பிறந்த சி.சு.செல்லப்பா, தன் தாய் மாமாவின் ஊரான வத்தலக்குண்டில் வளர்ந்தார். மதுரைக் கல்லூரியில் பி.ஏ.படித்தார். அப்போதே மகாத்மா காந்தியின் கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார். "சுதந்திரச் சங்கு" இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு "மணிக்கொடி" இதழ் கை கொடுத்தது. "சரசாவின் பொம்மை" என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது. 1937ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துவிட்டார் சி.சு.செல்லப்பா. மீனாட்சி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1947ஆம் ஆண்டு முதல் 1953 வரை தினமணி கதிரில் பிரபல எழுத்தாளர் துமிலனுக்கு உறுதுணையாகப் பணியாற்றினார். புதிய எழுத்தாளர்களை சி.சு.செ. அறிமுகப்படுத்தி இருக்கிறார். விமர்சக எழுத்தாளராக சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த "எழுத்து" என்ற இதழைத் தொடங்கினார். பலவித இன்னல்களுக்கிடையே 1970 ஆம் ஆண்டு வரை மொத்தம் 119 இதழ்களை அவர் வெளியிட்டார். ஆனால், 112 இதழ்களை மிகச் சிரமப்பட்டு வெளிக்கொண்டு வந்த "எழுத்து" காலாண்டு இதழாக மாற்றப்பட்டது. 119 இதழுடன் எழுத்து நிறுத்தப்பட்டது. தாக்கங்கள் காந்தி, வ. ராமசாமி பின்பற்றுவோர் பிரமிள் வெளியிட்ட நூல்கள் சி. சு. செல்லப்பா 29 நூல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார். சிறுகதைத் தொகுதிகள் சரசாவின் பொம்மை மணல் வீடு அறுபது சத்தியாகிரகி வெள்ளை நீர்க்குமிழி பழக்க வாசனை கைதியின் கர்வம் செய்த கணக்கு பந்தயம் ஒரு பழம் எல்லாம் தெரியும் குறித்த நேரத்தில் சி. சு. செல்லப்பாவின் கதைகள் 7 தொகுதிகள் குறும் புதினம் வாடி வாசல் புதினம் ஜீவனாம்சம் சுதந்திர தாகம் நாடகம் முறைப்பெண் கவிதைத் தொகுதி மாற்று இதயம் குறுங்காப்பியம் இன்று நீ இருந்தால் 2000வரிகளைக் கொண்ட நெடுங்கவிதையில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் இந்நூல் எழுத்து ஏட்டின் 114ஆவது இதழில் வெளிவந்தது. திறனாய்வு ந. பிச்சமூர்த்தி கதையைப் பற்றிய கருத்து பி.எஸ்.இராமையாவின் சிறுகதைப் பாணி எனது சிறுகதைகள் இலக்கியத் திறனாய்வு மணிக்கொடி எழுத்தாளர்கள் தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது மறைவு சி.சு.செல்லப்பா, 1998ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி மறைந்தார். விருதுகள் இவரது சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. மேற்கோள்கள் சுதந்திர ( தாக ) மனிதர் சி.சு.செல்லப்பா , கலைமாமணி விக்கிரமன், தினமணி வெளி இணைப்பு சி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை தமிழ் விமர்சகர்கள் தமிழக எழுத்தாளர்கள் நவீன தமிழ்க் கவிஞர்கள் 1998 இறப்புகள் 1912 பிறப்புகள் தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் தேனி மாவட்ட எழுத்தாளர்கள்
6406
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
பள்ளிக்கூடம்
பள்ளிக்கூடம், பள்ளி அல்லது பாடசாலை (School) என்பது அடிப்படைக் கல்வி கற்பிக்கும் இடம் எனப் பொருள்படும்.பொதுவாக தொடக்க நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்விக்கான நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. மாணவர்கள், பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள். இந்தியாவில் வித்யாஷ்ரம், வித்தியாலயம், வித்யா மந்திர், வித்யா பவன் என்று சமஸ்கிருதத்தில் பள்ளி அழைக்கப்படுகிறது. பெயர்க்காரணம் தமிழில் பள்ளிக்கூடம் என்ற வார்த்தையின் பெயர்க்காரணத்தை தொ. பரமசிவன் விளக்கியுள்ளார். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் குருகுலத்திற்கு செல்ல முடியாது. சமண, பௌத்த மதங்கள் வளர்ந்தோங்கிய காலத்தில் துறவிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று தங்களது படுக்கை இருக்கும் பகுதிக்கு கல்வி கற்க குழந்தைகளை அனுப்புமாறு கோரினர். தமிழில் படுக்கும் இடத்தைத் தான் பள்ளி என்று அழைத்து வந்துள்ளனர். அவ்வாறு முதன் முதலாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் நாங்கள் பள்ளிக்குப்போகிறோம் : அதாவது, சமண, பௌத்த படுகைகளுக்கு செல்கிறோம் என்று சொன்னதன் வழியாகவே தமிழில் கல்வி கற்கும் இடம் பள்ளி என்றானது என்கிறார் அவர். இந்தியாவில் பள்ளிப்படிப்பு இந்தியாவில் கீழ்நிலைப் பாலர் வகுப்பு (Lower Kinder Garden), மேல்நிலைப் பாலர் வகுப்பு (Upper Kinder Garden), மற்றும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளி, 6 முதல் 8 வகுப்பு வரை நடுநிலைப்பள்ளி, 9வது மற்றும் 10வது வகுப்புகள் உயர்நிலைப்பள்ளி, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் மேல்நிலைப்பள்ளி என 14 ஆண்டுகள் பாடசாலையில் கல்வி கற்பிக்கப்படுகின்றது. இலங்கையில் பள்ளிப்படிப்பு இலங்கையில் தரம் 1 முதல் தரம் 13 வரை பாடசாலைக் கல்வி போதிக்கப்படுகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கல்வி
6407
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF
கோதாவரி
கோதாவரி (Godavari) இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். இது கங்கை, சிந்து ஆறுகளுக்கு அடுத்து மிகப்பெரிய ஆறு ஆகும். இதன் நீளம் 1450 கி.மீ. ஆகும். கோதாவரி ஆறானது இந்தியாவின் நடுப்பகுதியில் உள்ள முதன்மையான நீர்வழிகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் நகருக்கு அருகில் திரிம்பாக் என்னுமிடத்தில் உற்பத்தியாகிறது. திரிம்பாக் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. கிழக்கு நோக்கி தக்காண மேட்டுநிலத்தில் பாய்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களை வளப்படுத்தி இராஜமுந்திரிக்கு அப்பால் இரண்டு கிளைகளாக பிரிகிறது. வடபகுதி கிளைக்கு கௌதமி கோதாவரி என்றும் தென்பகுதி கிளைக்கு வசிஷ்ட கோதாவரி என்றும் பெயர். இரண்டு கிளைகளும் பெரிய வளமான கழிமுகத்தை உண்டாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தென் இந்திய ஆறுகளான கிருஷ்ணா, காவிரி போல் அல்லாமல் கோதாவரியின் கழிமுகம் கலங்கள் செல்ல உகந்தவை. புதுச்சேரியின் ஒரு பகுதியான ஏனாம் இவ்வாற்றின் கழிமுகத்தில் உள்ளது. சொற்பிறப்பு கோதாவரி என்ற சொல்லுக்கு தண்ணீர் கொடுப்பது அல்லது கைன் (மாடுகள்) என்று பொருள். கௌதம முனிவர் ஒரு பசுவைக் கொன்றதற்காக பரிகாரம் செய்வதற்காக இந்த நதியை பூவுலகிற்குக் கொண்டுவந்தார் என்று லோரஸ் கூறுகிறார். இதன் பெயர் சமஸ்கிருத வடிவத்திலிருந்து வந்த "கோதா" அதாவது எல்லை எனப் பொருள்படும். நீர் ஆதாரங்கள் கோதாவரி ,அரபிக் கடலிலிருந்து மகாராஷ்டிராவில் நாசிக் அருகே மத்திய இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகிறது . இது பாய்கிறது , முதலில் கிழக்கு நோக்கி தக்கான பீடபூமி பின்னர் தென்கிழக்கே திரும்பி, மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்திற்குள் நுழைகிறது, இது இரண்டு பகுதிகளாகப், ராஜமகேந்திரவரத்தில் உள்ள தவலேசுவரம் அணையில் நதி ஆற்று முகத்துவாரத்தில் ஒரு பெரிய நதியாக விரிவடைந்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கோதாவரி நதி , இது இந்தியாவின் பரப்பளவில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கு மற்றும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் பகுதிகளை விட அதிகமாக உள்ளது. நதிப் படுகை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மொத்த பரப்பளவில் 24.2% ஆகும். ஆறுகளின் ஆண்டு சராசரி நீர் வரத்து கிட்டத்தட்ட 110 பில்லியன் கன மீட்டர் ஆகும். நீர் கிடைப்பதில் கிட்டத்தட்ட 50% பயன்படுத்தப்படுகிறது. மாநிலங்களிடையே ஆற்றில் இருந்து நீர் ஒதுக்கீடு என்பது கோதாவரி நீர் தகராறு தீர்ப்பாயத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நதி இந்தியாவில் அதிக வெள்ளப் பாய்ச்சல்களைக் கொண்டுள்ளது மற்றும் 1986 ஆம் ஆண்டில் 3.6 மில்லியன் கனகால் வெள்ளத்தைப் பதிவுசெய்தது மற்றும் ஆண்டுக்கு 1.0 மில்லியன் கனகால் வெள்ளம் சாதாரணமானது. மகாராஷ்டிராவுக்குள் மகாராட்டிர மாநிலத்தில், இந்த நதி ஒரு விரிவான போக்கைக் கொண்டுள்ளது, மேல் படுகை ( மஞ்சிராவுடன் அதன் சங்கமத்தின் தோற்றம்) இதில் முழுமையாக மகாராட்டிர மாநிலத்திற்குள் உள்ளது, மொத்தமாக பரப்பளவு கொண்ட பகுதியை வளமாக்குகிறது ( மகாராஷ்டிராவின் பாதி பகுதி). நாசிக் மாவட்டத்திற்குள், அதே பெயரில் ஒரு அணையால் உருவாக்கப்பட்ட கங்காப்பூர் நீர்த்தேக்கத்தில் பாயும் வரை நதி வடக்கு-கிழக்கு பாதையில் பாய்கிறாது. காசிபி அணையுடன் இந்த நீர்த்தேக்கம் அதன் கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான நாசிக்கிற்கு குடிநீரை வழங்குகிறது. அணை வழியாக வரும் நதி, சில மேல்நோக்கி, தொடர்ச்சியான இடைவெளிகள் மற்றும் பாறை லெட்ஜ்களால் அமைந்துள்ள ஒரு பாறை படுக்கையில் பாய்கிறது, இதன் விளைவாக கங்காபூர் மற்றும் சோமேசுவர் நீர்வீழ்ச்சிகள் என்ற இரண்டு குறிப்பிடத்தக்க நீர்வீழ்ச்சிகள் உருவாகின்றன. சோமேசுவரில் அமைந்துள்ள துத்சாகர் நீர்வீழ்ச்சி என்று மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. சுமார் கங்காபூரின் கிழக்கே நாசிக் நகரனினுள் செல்கிறது. அதன் வலது கரையில் நதி நாசரதி என்ற பெயரில் அதன் கழிவுகளின் சேகரிக்கிறது. தெலங்கானாவுக்குள் கந்தகூர்த்தியில் உள்ள நிசாமாபாத் மாவட்டத்தில் தெலங்கானாவுக்குள் கோதாவரி நுழைகிறது, அங்கு மஞ்சிரா, கரித்ரா நதிகள் கோதாவரியுடன் சேர்ந்து திரிவேணி சங்கத்தை உருவாக்குகின்றன. இந்த நதி வடக்கில் நிர்மல் மற்றும் மஞ்சேரியல் மாவட்டங்களுக்கும் அதன் தெற்கே நிசாமாபாத், ஜக்டியால், பெத்தபள்ளி மாவட்டங்களுக்கும் இடையிலான எல்லையில் பாய்கிறது. சுமார் தெலங்கானாவுக்குள் நுழைந்த பின்னர் அது ஸ்ரீராம் சாகர் அணையின் பின்புற நீருடன் இணைகிறது. அணை வாயில்கள் வழியாக வெளிவந்த நதி, ஒரு பரந்த நதி படுக்கையை கொண்டுள்ளது, பெரும்பாலும் மணல் தீவுகளாக பிரிக்கிறது. இந்த நதி ஒரு சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க துணை நதியான கடம் நதியைப் பெறுகிறது. பின்னர் அதன் கிழக்குப் பகுதியில் மகாராஷ்டிராவுடன் மாநில எல்லையாகிறது, பின்னர் அது பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்திற்குள் நுழைகிறது. இந்த மாவட்டத்தில் நதி ஒரு முக்கியமான இந்து புனித யாத்திரை நகரமான பத்ராச்சலம் வழியாக பாய்கிறது. ஒரு சிறிய கிளை நதி கின்னெராசனி நதியைப் பெற்று ஆந்திராவிற்கு வெளியேறிய பிறகு நதி மேலும் பெருகுகிறது. புற இணைப்புகள் Gautami Mahatmya (fourth book of the Brahma-purana) English translation by G. P. Bhatt, 1955 (includes glossary) Godavari basin Rivers Network: Godavari watersheds webmap Nashik City Contrasting Behavior of Osmium in the Godavari River Estuary, India, 2001 Variations of Monsoon Rainfall in Godavari River Basin irfca.org இந்திய ஆறுகள் இந்து தொன்மவியல் ஆறுகள் ஆந்திர ஆறுகள் தென்னிந்தியா மகாராட்டிர ஆறுகள்
6412
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8.%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
ந. பிச்சமூர்த்தி
ந. பிச்சமூர்த்தி (ஆகஸ்ட் 15, 1900 - டிசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. வாழ்க்கை கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக 1900 ஆகத்து 15 இல் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம். நடேச தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர். பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார். பிச்சமூர்த்தி, நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துக்கள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின. இந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. "இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன. படைப்புகள் சிறுகதை பதினெட்டாம்பெருக்கு (1944) ஜம்பரும் வேஷ்டியும் (1947) மோஹினி (1951) குடும்ப ரகசியம் (குறும்புதினம்) (1959) பிச்சமூர்த்தியின் கதைகள் (1960) மாங்காய் தலை (1961) இரட்டை விளக்கு (1967) காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்) (1977) கஞ்சா மடம் (டிசம்பர் 2022) கவிதைத் தொகுப்புகள் காட்டுவாத்து (ஆக.1962) வழித்துணை (1964) குயிலின் சுருதி (1970) கட்டுரைத்தொகுதி மனநிழல்(1977) (சிறுகதைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது) நாடகங்கள் காளி (1946) ஆர்வமூட்டும் செய்திகள் பிச்சமூர்த்திக்கு அவரின் பெற்றோர் அவர் பிறந்தவுடன் இட்ட பெயர், வேங்கட மகாலிங்கம். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்தால் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான் என்ற நம்பிக்கையில் இவரை "பிச்சை" என்று அழைத்தனர். பின்னாளில் பிச்சை, பிச்சமூர்த்தி ஆனார். பிச்சமூர்த்தி, ஸ்ரீராமானுஜர் என்னும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று நடித்திருக்கிறார். பிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஓர் ஆண்டு காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சந்நியாசத்தை விரும்பி ஊர் ஊராக அலைந்திருக்கிறார். தன்னைத் துறவியாக்க வேண்டி, தனக்கு உபதேசம் செய்யுமாறு ரமண மகரிஷியிடமும் சித்தர் குழந்தைசாமியிடமும் அணுகி நின்றார். ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கைதான் பொருத்தமானதென்று உபதேசித்திருக்கிறார்கள். சிந்தனைச் சிதறல்கள் "எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன். ஆகையால் எப்பொழுதுமே ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதவில்லை. உணர்வே என் குதிரையாகிவிட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன்தூள் சிதறப் பறப்பேன். ஒரு சமயம் வெறும் கட்டாந்தரையில் "ஏபால்டில்" செய்வேன். என் மனதிலும் இந்த இரண்டு அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு பகுதி சிறகு விரித்து, சொல்லுக்கு எட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன. மற்றொரு பகுதி எல்லோரையும் போல் மண்ணில் உழலுகிறது. அப்பொழுதெல்லாம் உலகின் இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்" "எழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப் புலப்படாத பாலுணர்வின் தூண்டுதல் போல..." மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ந.பிச்சமூர்த்தி எழுதிய விஜயதசமி என்ற சிறுகதை (அதன் ஆங்கில மொழியாக்கம் ). 1900 பிறப்புகள் 1976 இறப்புகள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் தமிழக எழுத்தாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்
6436
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF
வெதுப்பி
வெதுப்பி (Bread) அல்லது உரொட்டி என்பது மாவும் தண்ணீரும் கலந்து பிசைந்த குழைவில் இருந்து வேண்டிய வடிவத்தில் உருமாற்றி பின்னர் அட்டு (சுட்டு) செய்யப்படும் ஊட்டமிகு உணவாகும். வெதுப்பி வேளாண்மை தொடங்கிய காலமுதல் வரலாறு முழுவதும் உலகெங்கும் நயந்து உட்கொண்ட முதன்மையான மிகப் பழைய செயற்கை உணவாகும். மாவும் பிற உட்கூறுகளின் விகிதமும் செய்யும் வழிமுறைகளும் தணலில் அடுதல் (சுடுதல்) முறைகளும் பேரளவில் வேறுபடும். இதனால், உரொட்டிகளின் வகையும் வடிவமும் உருவளவும் உட்கட்டமைப்பும் உலகெங்கும் வேறுபடுகின்றன. உரொட்டி இயற்கையான நுண்ணுயிரிகளாலோ வேதிமங்களாலோ தொழிலகச் செயல்முறை நொதிகளாலோ உயரழுத்தக் காற்றூட்டத்தாலோ நொதுப்பிக்க அல்லது பதப்படுத்தப்படுகின்றன. சிலவகை உரொட்டிகள் பதப்படுத்துவதற்கு முன்பே மரபாக அல்லது சமயச் சடங்காக சமைக்கப்படுவதும் உண்டு. உரொட்டியில் கூலமல்லாத உட்கூறுகளாகிய பழங்களும் கொட்டைகளும் கொழுப்புகளும் உட்கூறுகளாக அமைவது உண்டு. வணிக உரொட்டிகளில், சில கூடுதல் சேர்க்கைப்பொருள்களைச் செய்தலை எளிதாக்கவும் மணம், வண்னம், வாணாள், உட்கட்டமைபு ஆகியவற்றை மாற்றவும் சேர்ப்பர். பகல் உணவுடன் பல வடிவங்களில் உரொட்டிகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இது நொறுக்காகவும் உண்ணப்படுவதோடு, கலப்படைகள் செய்யும்போது உட்பொருளாகவும் சேர்க்கப்படுகிறது. வறுப்பு உணவுகல் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, உரொட்டிச் சிதைவுகள் கலக்கப்படுவதுண்டு. இது உரொட்டிப் புட்டுகளிலும் உரொட்டி பலகாரங்களில் சாறுகளைத் தேக்கிவைக்க துளைநிரப்பும் அடைபொருள்களாகவும் முதன்மையான உட்கூறாகவும் பயன்படுகின்றது. உரொட்டி ஊட்டப் பொருளாக மட்டுமன்றி, சமூகவய, உணர்ச்சிவயச் சிறப்பையும் பெற்றுள்ளது. இது சமயச் சடங்குகளில் முதன்மை பங்கு வகிக்கிறது. சமய நீக்கப் பண்பாட்டிலும் அன்றாட வாழ்விலும் தவிர்க்க முடியாத பங்கேற்கிறது. இந்நிலை, மொழியிலும் பழமொழிகளிலும் கொச்சையான சொற் பரிமாற்றங்களிலும் வெளிப்படுகின்றது. பேச்சு வழக்கான ("He stole the bread from my mouth")என்பதும் வழிபாட்டில் பயன்படும் ("Give us this day our daily bread") என்பதும் சிறந்த எடுத்துகாட்டுகளாகும். சொற்பொருளியல் உரொட்டிக்கான பழைய ஆங்கிலச் சொல் கிலாப் (half) என்பதாகும். கோதிக் மொழிச் சொல் (கிளைப்சு (hlaifs)) ஆகும். புத்தாங்கிலத்தில் [[உலோஃப் (loaf)) என்பதாகும். இது தான் செருமானிய மொழிகளில் அமைந்த உரொட்டிக்கான மிகப் பழைய சொல்லாகும். பழைய உயர்செருமனி மொழியில் உரொட்டி கிளேய்ப் (hleib) எனப்பட்டது. புது செருமனி மொழியில் இலைபு (Laib) எனப்படுகிறது. இதில் இருந்து போலிழ்சிய மொழிச் சொல்லாகிய சிலெபு (chleb) என்பதும் உருசிய மொழிச் சொல்லாகிய கிளெபு (khleb) என்பதும் பின்னிய மொழிச் சொல்லாகிய இலெய்பா (leipä) என்பதும் எசுதோனிய மொழிச் சொல்லாகிய இலெய்பு (leib) என்பதும் வந்துள்ளன. இடைக்கால ஆங்கிலத்திலும் புத்தாங்கிலத்திலும் வழங்கும் பிரெட் (bread) எனும் சொல் செருமானிய மொழிகளில் ஒன்றான பிரிசிய மொழியில் பிரே (brea) டச்சு மொழியில் புரூடு (brood) எனவும் செருமனி மொழியில் புரோத் (Brot) எனவும் சுவீடிய மொழியில் புரோது (bröd)எனவும் நார்வேய டேனிய மொழிகளில் புரோது (brød) எனவும் வழங்கியுள்ளது; இது பிரூ (brew) என்பதில் இருந்தோ ஒருவேளை உடைந்த துண்டு எனும் பொருளில் பிரேக் (break) என்பதில் இருந்தோ வந்திருக்கலாம். வரலாறு உரொட்டி மிகப் பழைய செய்முறை உணவாகும். 30,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஐரோப்பாவில் பாறைகளில் அரைத்த மாவின் எச்சம் கிடைக்கிறது.இதே நேரத்தில், பெரணி போன்ற தாவர வேர்களில் இருந்து பெறப்பட்ட மாவுப் பொருள், தட்டையான பாறைகளில் ஊற்று நிரவி தீயால் சுட்டு முதனிலை வடிவத் தட்டைரொட்டி செய்யப்பட்டுள்ளது. கிமு 10,000 ஆண்டுகள் அளவில் புதிய கற்காலம் தொன்றி, வேளாண்மை தொடங்கிப் பரவியபோது, உரொட்டி செய்யும் கூலமணிகள் முதன்மை உணவாகியது. அந்த மணிகளின் மீது படர்ந்த ஈச்ட்டு தற்செயலாகவே நொதுப்பியாகச் செயல்பட்டுள்ளது; எனவே இயற்கையாக விடப்பட்ட மாவுஇக் குழைவை இயல்பாக நொதிப்படைகிறது. தொடக்கநிலை உரொட்டி மாவை நொதிப்பிக்கும் பலவகை வாயில்கள் அமைந்துள்ளன. சமைப்பதற்கு முன்பு மாவுக் குழைவையை காற்ரில் வைத்தால் காற்றில் வாழும் ஈச்ட்டுகள் மாவை நொதிப்பிக்கின்றன. பிளின், முதுவர் காலியர்களும் இபேரியர்களும் பீரில் இருந்து கடைந்தெடுத்த நுரை வெண்ணெயை மற்றவரைவிட மென்மையான உரொட்டி செய்யப் பயன்படுத்தியதை அறிவித்துள்ளார். கொடிமுந்திரித் தேறலை அருந்திய மக்கள் அதில் இருந்து செய்த சாறும் மாவும் கலந்து பிசைந்து நொதிக்கத் தொடங்கிய பசையை அல்லது அத்தேறலில் கோதுமை மாவைக் கலந்து பிசைந்த குழைவையை உரொட்டி செய்ய பயன்படுத்தியுள்ளனர். நொதிப்பிக்க பயன்படுத்திய பொது வாயிலாக, முன்னாள் பயன்படுத்திய மாவுப்பகுதியை, அதாவது நொதித்த மாவுக்குழைவையை பயன்படுத்தியதையும் பிளினி அறிவித்துள்ளார். சார்லிவுட் உரொட்டி செயல்முறை 1961 இல் உருவாக்கப்பட்டது; இது நொதிப்புக் காலத்தைக் குறைக்கவும் உரொட்டி செய்யும் நேரத்தைக் குறைக்கவும், மாவுக்குழைவைச் செறிந்த இயக்கத்தால் குழைவிக்கப்பட்டது. இச்செயல்முறையில் உயராற்றல் கலப்புவழியால் தாழ்புரத கூலமணிகளைப் பயன்படுத்த முடிகிறது. இப்போது இம்முறையே உலகெங்கும் உரொட்டித் தொழிலகங்களில் பயன்படுகிறது. எனவே, உரொட்டி வேகமாகவும் குறைந்த விலையிலும் செய்யமுடிகிறது. என்றாலும், இதன் ஊட்டமதிப்பின் மீதான விளைவு ஐயத்தோடு நோக்கப்படுகிறது. வகைகள் உரொட்டி நடுவண் கிழக்குப் பகுதி வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளின் முதனமை உணவாகும். ஐரோப்பியப் பண்பாடு பரவிய தஎன் அமெரிக்கா, ஆத்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் இது முதன்மையான உணவாக விளங்குகிறது; ஆனால், கிழக்கு ஆசியாவில் அரிசியே முதன்மையான உணவாக விளங்குகிறது. உரொட்டி வழக்கமாக நொதிவழி புளித்த கோதுமை மாவுக் குழைவையில் இருந்து செய்யப்படுகிறது; பிறகு அடுமனை அடுப்பில் சுடப்படுகிறது. உரொட்டியில் உள்ள காற்றுப் புரைகள் ஈச்ட்டு சேர்க்கப்பட்டதைக் காட்டுகிறது.மாவுக்கு பஞ்சுத்தன்மையையும் மீள்திறத்தையும் தரும் இதன் உயராற்றல் மட்ட மாப்பிசின் (gluten) காரணத்தால், கோதுமை உரொட்டி செய்யப் பரவலாகப் பயன்படுகிறது; மேலும் கோதுமையே தான் மட்டும் தனியாக உலகின் உணவுக்கு மிகப்பெரும் பங்களிப்பைச் செய்கிறது. பிற கோதுமை இனங்களாகிய இசுபெல்டு, எம்மர், எய்ன்கார்ன் காமுத் ஆகியவற்றின் மாவில் இருந்தும் உரொட்டி செய்யப்படுகிறது. கோதுமையல்லாத கூலங்களாகிய புல்லரிசி, பார்லி, மக்கச்சோளம், காடைக்கண்ணி, சோளம் தினை, அரிசி ஆகிய கூலமணிகளில் இருந்தும் உரொட்டிஎனும் தட்டடை செய்யப்படுகிறது. என்றாலும், புல்லரிசி தவிர, மற்றவற்றோடு, அவை குறைந்த மாப்பிசின்மை பெற்றுள்ளதால், கோதுமை மாவும் உடன்சேர்க்கைப் பொருளாகப் பயன்படுகிறது. மாப்பிசின் இல்லாத உரொட்டிகளும் மாப்பிசின் சார்ந்த நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. மாப்பிசின் சார்ந்த நோய்களாக உடற்குழி நோயும் மாப்பிசின் கூருணர்மையும் அமைகின்றன. மாப்பிசினற்ற உரொட்டிகள் வாதுமை, அரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு, பீன்சு போன்ற பருப்புகளில் இருந்து செய்யப்படுகின்றன; இவற்றின் மாவுகளில் மாப்பிசின் இல்லாத்தால், இவற்றின் வடிவம் செய்யும்போது மாறுவதோடு, காற்றூட்டமின்றி கரடாக அமையும். இவற்றில் மாப்பிசின் இன்மையை ஈடுகட்ட முட்டையோ அல்லது சாந்தம் பிசின், குவார் பிசின், போன்றவை சேர்க்கைப் பொருளாகச் சேர்க்கப்படுகின்றன. இயல்புகள் இயற்பியல், வேதியியல் உட்கூறுகள் கோதுமையில், பீனாலிக் சேர்மங்கள் அதன் உமியில் கரையாத ஃபெரூலிக் அமிலமாக அமைந்து பூஞ்சை நோய்களின் தாக்குதலில் இருந்து கோதுமையைக் காக்கிறது. புல்லரிசி உரொட்டியில் பீனாலிக் அமிலங்களும் ஃபெரூலிக் அமில டீகைரோடிமர்களும் உள்ளன. சணல்விதையமைந்த வணிக உரொட்டியில் மூன்று இயற்கை பீனாலிக் குளூக்கோசைடுகளாகிய செக்கோயிசோலாரிசிரெசினால் டைகுளூக்கோசைடு, பி-கௌமாரிக் அமில குளூக்கோசைடு, ஃபெரூலிக் அமில குளூக்கொசைடு ஆகியன அமைகின்றன. குளூட்டெனின், கிளியாடின் ஆகிய செயல்பாட்டுப் புரதங்கள் கோதுமை உரொட்டியின் புறநிலைக் கட்டமைப்பை உருவாக்குகின்றன. குளூட்டெனின் டைசல்பைடு இடைப்பிணைப்புகளால் ஒருங்கிணைந்த பிசின் வலையமைப்பை உரொட்டிக்குள் அமைக்கிறது. Gliadin binds weakly to the gluten network established by glutenin via intrachain disulfide bonds. கட்டமைப்பைப் பொறுத்தவரையில், உரொட்டியை மீளியல்பு நெகிழ்திற நுரையாக வரையறுக்கலாம். குளூட்டெனின் புரதம், உருமாற்றத்துக்குப் பின் தன் உருவடிவை மீளப்பெறும் தன்மையால், உரொட்டியின் மீளியல்புக்குப் பங்களிக்கிறது. கிளியாடின் புரதம், விசைக்காட்பட்ட பின் தன் கட்டமைப்பைத் திரும்பப் பெற இயலாமையால், உரொட்டியின் நெகிழ்திறத்துக்கு உதவுகிறது. நொதிப்பின்போது மாப்பிசின் வலையமைப்புக்குள் உருவாகும் கரியிரு தீயகி வளிமத்தால் உரொட்டியின் காற்றுப்புரைகள் ஏற்படுகின்றன, எனவே, உரொட்டியை நுரை அல்லது திண்மக் கரைசலில்அடங்கிய வளிமம் என வரையறுக்கலாம். பலகாரப் பயன்கள் ஊட்டச் சிறப்பு முகடு உரொட்டி செய்யும்முறை ஆக்க வாய்பாடு மாவு தண்ணீர் கொழுப்பு வெதுப்பி மேம்படுத்திகள் மேற்கோள்கள் மேலும் படிக்க Kaplan, Steven Laurence: Good Bread is Back: A Contemporary History of French Bread, the Way It Is Made, and the People Who Make It. Durham/ London: Duke University Press, 2006. Jacob, Heinrich Eduard: Six Thousand Years of Bread. Its Holy and Unholy History. Garden City / New York: Doubleday, Doran and Comp., 1944. New 1997: New York: Lyons & Burford, Publishers (Foreword by Lynn Alley), &lt Spiekermann, Uwe: Brown Bread for Victory: German and British Wholemeal Politics in the Inter-War Period, in: Trentmann, Frank and Just, Flemming (ed.): Food and Conflict in Europe in the Age of the Two World Wars. Basingstoke / New York: Palgrave, 2006, pp. 143–171, வெளி இணைப்புகள் ஊட்ட உணவுகள் உலக உணவுகள் தொல்பலகாரங்கள் கோதுமை பலகாரங்கள்
6437
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
பாலாடைக்கட்டி
பாலாடைக்கட்டி, சீஸ் (லத்தீன்) பாலிலிருந்து உருவாக்கப்படும் பக்குவப்படுத்தப்பட்ட கட்டிப்பாலாலான ஒரு திட உணவாகும். இது மென்மையாகவோ கடினமாகவோ (அ) திடக் கூழ்ம நிலையில் இருக்கும். இது பாலிலிருந்து நீரை வெளியேற்றி கேசின் புரதம் தொய்த்தலால் உருவாகிறது. பாலிலுள்ள புரதமும், கொழுப்பும் இதில் அதிகளவில் அடங்கியுள்ளது. மேலும் இதில் உயிர்ச்சத்து A, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. பொதுவாக, பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு முதலிய விலங்கினங்களிலிருந்து பெறப்படும் பாலானது பாலாடைக்கட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் தயாரிப்பின் போது அமிலமாக்கப்பட்ட பால் ரென்னட் எனும் நொதியுடன் வினைபுரிந்து உறைந்து கட்டிப்படுகிறது. இத்திடக்கூழ்ம நிலை அழுத்ததிற்கு உட்படுத்தப்பட்டு தேவையான அமைப்புடைய பாலாடைக்கட்டியாக மாற்றப்படுகிறது. பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான பாலாடைக்கட்டி வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதன் சுவை, மணம், தன்மை, போன்றவை பால் பெறப்படும் மூலம் (விலங்குகளின் உணவூட்முறை உட்பட), தயாரிக்கும் முறை, பதப்படுத்தும் முறை, முதிர்வித்தல், அடங்கியுள்ள கொழுப்புச் சத்து போன்றவற்றைப் பொருத்து மேலும் மாறுபடும். இதில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க்காரணிகள், காரம், மூலிகைகள், புகை மணம், போன்றவை அதன் தனிப்பட்ட நறுமணத்திற்கு காரணமாக அமைகின்றன. இதில் உரகுமஞ்சள் (அன்னட்டோ) சிவப்பு நிற பாலாடைக்கட்டி (லெய்செஸ்டர்) தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சுவைக் கூட்டுப் பொருட்களான கருமிளகு, பூண்டு, இனப்பூண்டு, குருதிநெல்லி (க்ரேன் பெர்ரி) போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. அதிக நாள் கெடாதிருக்க பாலாடைக்கட்டி குளிர் சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்படுகிறது. பாலாடைக்கட்டிகளைப் பாதுகாக்க சீஸ் காகிதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் உட்பகுதி துளையுள்ள நெகிழிகளாலும், மேற்பகுதி மெழுகினாலும் ஆக்கப்பட்டிருக்கும். இக்காகிதம் பாலாடைக்கட்டி சுருங்கி நெடுநாட்கள் பாதுகாக்க உதவுகிறது. சிறந்த பாலாடைக்கட்டி விற்பன்னர்கள் சீஸ் மோங்கர் என அழைக்கப்படுகின்றனர். இதற்காக தனிப்பட்ட கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. பாலாடைக்கட்டிகள் வகைமுறைப்பட்டியல், தேர்வு, மூலப்பொருட்கள் வாங்குதல், தயரித்தல், பாதுகாத்தல் போன்ற பணிகளை இச்சீஸ் மோங்கர்கள் திறம்பட செய்கின்றனர். வரலாறு பாலடைக்கட்டியின் தோற்றம் பற்றிய சரியான வரலாறு அறியப்படவில்லை. இருப்பினும் அதன் பயன்பாடு பற்றி அறியப்பட்டதினால் அதன் காலக்கோடு வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகிறது. தோற்றம் பாலின் பயன்பாடு தொடங்கிய பொழுதே பாலாடைக்கட்டியின் பயன்களும், வகைகளும் அறியப்பட்டிருக்க வேண்டும், ஆயினும் அதன் தோற்றம் பற்றிய முழு வரலாற்று ஆய்வுகள் முழுமைப்பெறவில்லை. சில ஆய்வுகள், கற்பனை நிகழ்வுகள் இதன் தோற்றம் பற்றி சில குறிப்புகளைச் சுட்டுகின்றன, அவை சுமார் கி.மு 7000ஆம் ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய ஆசியாவின் ஈராக் பாலைவனங்களில் செய்யப்பட்ட நீண்ட பயணங்களில் விலங்குத்தோலினால் ஆன நீர்க்கொள்பைகள் (எ.கா.ஆட்டுத்தோலினால் ஆன தோற்பை) பாலை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்டது. அப்பைகளிலுள்ள ரெனின் எனப்படும் செரிம நொதியும், சூரிய வெப்பமும், ஒட்டகத்தின் மேல் பயணப்படும் போது ஏற்படும் கிளர்த்தல் நுரைப்பும், பாலைக் கட்டிப்பட வைத்திருக்க வேண்டும். இதுவே பாலடைக்கட்டி தோற்றம் பற்றிய அறிவியல் பூர்வ கற்பனைக் கதை ஆகும். அதே போல், கடவுள்களுக்கு கோயில்களில் படைத்த பாலானது, சூரிய ஒளியினாலோ, அல்லது குகையில் உள்ள விளக்குகளின் வெப்பத்தினாலோ பாலின் நீர்ப்பதம் குறைந்து கட்டிப்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. கி.மு 3000ஆம் ஆண்டுகளில் மெசபடோமியர்கள் தங்களின் பெண் தெய்வமான நினுர்சாகின் கோயில்களிலுள்ள சுவரோவியங்களில் பாலாடைக்கட்டி தயாரிப்பதன் முறைகள் பற்றிய குறிப்புகளை வரைந்து வைத்திருந்தனர். கி.மு.1615 ஆம் ஆண்டில் சிஞ்சியாங் பாலைவனத்தில் பயன்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்ட பாலாடைக்கட்டி தொல்லியல் ஆய்வில் கண்டறியப்பட்டது. பண்டைய கிரேக்க, உரோமானியத்தின் பயன்பாடு ஹோமர் படைத்தளித்த பண்டைய கிரேக்க இலக்கியமான ஒடிசியில் (கி.மு 8ஆம் நூற்றாண்டு) சைக்ளோப் என்ற ஒற்றைக்கண் கதாபாத்திரமானது ஆட்டுபாலிலிருந்து பாலாடைக்கட்டி தயாரிப்பதன் முறையைக் குறிப்பிடுவதாக அறியப்படுகிறது. கி.மு. 65ல் உரோமானியர்கள் தங்களின் அன்றாட உணவான பாலாடைக்கட்டி தயாரிக்கும் முறைமை பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தனர். ஆல்ப்ஸ், அபினைன் மலைத்தொடர்களில் வாழ்ந்த மக்கள் படைத்த பாலாடைக்கட்டிகளின் வகை, தற்போதுள்ள அறியப்பட்ட வகைகளை விட அளப்பரியதாகும். உரோமானியப் பேரரசைச் சார்ந்த லிகுரியன், பித்னியன் பாலாடைக்கட்டிகள் ஆட்டுப்பாலில் செய்யப்பட்டவை ஆகும். நன்கு அறியப்பட்ட, மிகப்பழமையான இதன் சுவைகள் புகைக்கப்பட்ட பாலாடைக்கட்டிகளை ஒத்ததாகும். நவீனப் பயன்பாடு பாலாடைக்கட்டி அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்திற்காக வெவ்வேறான சுவையுடன் பலதரப்பட்ட வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. நேரடியான உணவாகவோ, உணவில் கலந்த சுவைக் கூட்டாகவோ பாலாடைக்கட்டிகள் பயன்படுகின்றன. பீத்சா பர்கர் சான்விச் காய்கறி, பழக்கலவை வெதுப்பிகள் போன்றவை குறிப்பிட்ட சில உணவு வகைகளாகும். தயாரிப்பு பாலடைக்கட்டி தயாரித்தல் வகைக்கு வகை மாறுபடும். பொதுவான தயாரிப்பு முறையினடிப்படையில் அதன் உற்பத்தி கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. பால் தர நிர்ணயம் தரமான பாலாடைக்கட்டி தயாரிக்க பாலானது புரத, கொழுப்பு அளவுகளின் தரம் சரிபார்க்கப்பட்டு, சரியான விகித அளவில் மேம்படுத்தப்படுகிறது. பால் பதப்படுத்தல் / காய்ச்சுதல் பாலாடைக்கட்டியின் வகைகளுக்கேற்ப பாலானது கரந்த (உடன்) காய்ச்சாத பாலாகவோ, காய்ச்சிப்பதப்படுத்தப்பட்ட பாலாகவோ பயன்படுத்தப்படுகிறது. கரந்த பாலில் செய்யப்படும் பாலாடைக்கட்டிகள் குறைந்த பட்சமாக 60 நாட்கள் முதிர்விக்கப்படுகின்றன. இதனால் பாலிலுள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் குறைக்கப்படுகிறது. சில சமயங்களில் தேவையற்ற புறநுண்ணுயிர்களினால் பால் கெடுவதைத் தவிர்க்க மிதமான முறையில் சூடுபடுத்தப்படுகிறது. கரந்த பாலாயினும், பதப்படுத்தப்பட்ட பாலாயினும் நுண்ணுயிர்க் காரணிகளின் வளர்ச்சிக்காக சுமார் 90ᐤF (32ᐤC) வெப்பநிலையில் சூடுபடுத்தப்படுகிறது. பால் குளிரூட்டல் நன்கு காய்ச்சப்பட்ட பாலானது பதப்படுத்துதலின் இரண்டாம் நிலையான குளிர்வித்தலை அடைகிறது. நுண்ணுயிரிகளால் பாலைத் தோய்த்தல் வெவ்வேறு வகையான பாக்டீரிய நுண்ணுயிரிகளின் மூல வித்துக்கள் வேண்டிய பாலாடைக்கட்டி வகையினைப் பொருத்து சேர்க்கப்படுகின்றன. ரென்னட் நொதியைச் சேர்த்து தயிராக்கல் ரென்னட் எனும் நொதி பாலிலுள்ள கேசின் புரதத்தை நொதிக்கச் செய்து கட்டிப்படுத்தி தயிராக மாற்றுகிறது. தயிரை வெட்டி எடுத்தல் & சூடுபடுத்தல் கட்டிப்படுத்தப்பட்ட தயிரானது வெட்டி எடுக்கப்பட்டு வெப்பபடுத்தப்படுகிறது. மோரை (அ) ஈரப்பதத்தை நீக்கல் தயிரிலுள்ள ஈரப்பதம் வெப்பப்படுத்துவதினால் நீக்கப்படுகிறது. கட்டித்தயிரமைத்தல் ஈரப்பதம் நீக்கப்படுவதால் இருகி மேலும் திடத்தன்மையை அடைகிறது. உப்பு / உப்புக்கரைசல் சேர்த்தல் உவர்ப்புச் சுவைக்காக உப்பு அல்லது உப்புக்கரைசல் சேர்க்கப்படுகிறது. பாலாடைக்கட்டிகளை வெட்டி பகுதியாக்கல் நன்கு முறைப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டிகள் சிறு சிறு பகுதிகளாக வெட்டி எடுக்கப்படுகின்றன. மேலும் இவை சிற்சிறு வட்ட உருளைகளாக ஆக்கப்படுகின்றன. சேமிப்பு & முதிர்வித்தல் சிலவற்றில் துளையிடப்படுகின்றன. துளையில்லா பாலாடைக்கட்டிகள் குருட்டுப்பாலாடைக்கட்டிகள் (அ) ப்ளைன்ட் சீஸ் எனப்படுகின்றன. (எ.கா. சுவிஸ் பாலாடைக்கட்டி) சிப்பமிடுதல் பாலாடைக்கட்டிகளை சந்தைப்படுத்தும் விதமாக வெவ்வேறு வகையான சிப்பமிடல் முறைமைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும் வெப்பநிலை 4°C யில் நிலைப்படுத்தப்படுகிறது. நெகிழிகளில் பொதியம் செய்தல் பெட்டிகளில் அடைத்தல் வெற்றிடச் சிப்பமிடல் (வாக்யூம் பேக்கேஜ்) ஊட்டச்சத்துகள் பாலாடைக்கட்டியில் அதன் வகைகளுக்கேற்ப பலதரப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. காட்டேஜ் வகை 4% கொழுப்புச் சத்தும், 11% புரதச்சத்தையும் கொண்டிருக்கிறது. மேலும் முக்குளம்பு பாலாடைக்கட்டியானது 36% கொழுப்புச்சத்தும், 7% புரதச்சத்தையும் கொண்டிருக்கிறது. பொதுவாக இப்பாலாடைக்கட்டிகள், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளன. 100கி பாலாடைக்கட்டியிலுள்ள பெரு ஊட்டச்சத்துக்கள் (கிராம்) 100கி பாலாடைக்கட்டியிலுள்ள உயிர்ச்சத்துக்கள் (கிராம்) 100கி பாலாடைக்கட்டியிலுள்ள தாது உப்புக்கள் (கிராம்) (Ca-கால்சியம்; Fe-இரும்புச்சத்து; Mg-மக்னீசியம்; P-பாஸ்பரஸ்; K-பொட்டாசியம்; Na-சோடியம்; Zn-துத்தநாகம்; Cu-தாமிரம்; Mn-மாங்கனீசு; Se-சீரியம்) பாலாடைக்கட்டி வகைகள் சுமார் 500க்கும் மேற்பட்ட பாலாடைக்கட்டி வகைகள், உலக பால்பொருள் உற்பத்தி ஆணையத்தால் (International Dairy Federation) வகைப்படுத்தப்பட்டுள்ளது. தன்மையின் அடிப்படையிலான வகைகள் கடின வகை மென்மை வகை கொழுப்பின் அடிப்படையிலான வகைகள் கொழுப்பு குறைவான வகை கொழுப்பு நிறைந்த வகை பூசனத்தின் அடிப்படையிலான வகைகள் பயன்படுத்தப்படும் பூஞ்சை நுண்ணுயிரிகளால் இவை வகைப்படுத்தப்படுகின்றன. மென்மையாகக் கனிதல் பெனிசிலியம் கேமெம்பர்ட்டீ எனும் பூஞ்சையினால் மென்மையாக கனிவிக்கப்படும் பாலாடைக்கட்டிகள் இவ்வகையின. சான்றாக, ப்ரீ, கேமெம்பெர்ட் பாலாடைக்கட்டிகள் குறிப்பிடத் தகுந்தவைகளாகும். உவர்த்து கனிதல் பிரைன் எனப்படும் உவர் நீரில் வெளுக்கப்பட்ட பாலாடைக்கட்டிகள் இவ்வைகையின. (எ,கா: லிம்பர்கர், அப்பன்செல்லர்). மற்றவை பதப்படுத்தப்பட்ட வகை பாலாடைக்கட்டித் தயிர் மேற்கோள்கள் பால் பண்ணை தொழில் பால் உணவுப் பொருட்கள்
6438
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
நாரந்தனை
நாரந்தனை (Naranthanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள ஊர்காவற்றுறைத் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். ஊர்காவற்றுறைத் தீவானது லைடன் தீவு என்ற பெயராலும் அறியப்படுகின்றது. பெயர்க்காரணம் நாரந்தனை என்ற பெயர் வந்ததற்கு இரண்டு அல்லது மூன்று விதமான காரணங்கள் கூறப்படுகின்றன: நாராயணன் என்ற பிரதானியின் ஆட்சிக்குட்பட்டிருந்தமையால் நாரந்தனை என்ற பெயர் உண்டாயிற்று என்பர். முல்லைநிலத் தெய்வமாகிய திருமால் வந்து அணைந்த அதாவது சேர்ந்த இடமாகையால் திருமாலின் பெயராகிய நாராயணன் அணைந்த இடம் நாரந்தனை என வழங்கலாயிற்று என்று வேறு சிலர் கூறுவர். இதற்கு எடுத்துக்காட்டாக இக்கிராமத்தின் வடதிசையிற் கடற்கரைக்கு அண்மையில் 1951ம் ஆண்டு கல் எடுப்பதற்காக வெடி வைத்தபொழுது கற்பாருடன் சேர்ந்து அழகிய அம்மன் சிலையும் முதலாம் இராஜராஜசோழன் காலத்து தங்க நாணயங்களும், தங்க நகைகளும் கொண்ட பெட்டி ஒன்றும் வெளிவந்துள்ளது. இதனையறிந்த இவ்வூர்ச் சைவப்பெருங்குடி மக்கள் சிலை வெளிப்பட்ட இடத்தில் ஆலயம் அமைத்து அம்மன் சிலையைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவ்வாலயம் தான்தோன்றி மனோன்மணி ஆலயம் என்ற பெயருடன் சிறந்து விளங்குகின்றது. தங்க நாணயங்களை யாழ்ப்பாணம் தொல்பொருட் காட்சிச்சாலையில் இன்றும் காணலாம். - ("சப்த தீவு" ஆசிரியர் சதாசிவம் சேவியர்) நாரந்தனை என்பது நாரம், தனை என்ற இரண்டு சொற்களால் ஆனதாகும். நாரம், நரந்தம், நாரங்கம், நாரத்தை என்பன தோடைமர வகைகளுள் ஒன்றாகும். தனை, தானை என்பன இலங்கைத் தமிழ் வழக்காற்றில் இடத்தைக் குறிக்கும். இது தமிழகத்தில் தானம் என்று வழங்கப்படுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டு தமிழகத்திலுள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவாலயமான திருநெய்த்தானம் ஆகும். ஸ்தான என்பது சமஸ்கிருதத்தில் நிலையைக் குறிப்பதாகும். தான என்பது பாளியில் இடத்தைக் குறிப்பதாகும். எனவே தனை, தானை என்பன இவற்றில் இருந்து மருவியிருக்கலாம். எனவே நாரந்தனை என்பது பண்டைய காலத்தில் நாரம் மரம் இருந்த நிலையை அடையாளமாகக் காட்டப் பயன்பட்டு காலப்போக்கில் அதனைச் சூழ்ந்து அமைந்த குடியிருப்புகளுக்கான பெயராக மாறி பின்னர் கிராமத்தின் பெயராக உருவாகியிருக்கின்றது எனக் கருதலாம். வரலாறு தான்தோன்றி மனோன்மணி அம்மன் ஆலயம் இன்று அமைந்துள்ள இடத்தில் கிடைத்த சோழர் காலத்து சிலையும் நாணயங்களும் இந்த ஊர் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாவது பழமையானது என்பதைக் காட்டுகின்றன. நாரந்தனை என்ற பெயரானது சமஸ்கிருதச் சொல்லான ஸ்தான என்பதைவிட பாளி மொழிச் சொல்லான தான என்பதில் இருந்தே மருவியிருப்பது போன்று தென்படுவதால் பண்டைக் காலத்தில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மத்தியில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம் என்று ஊகிப்பதற்கும் இடமிருக்கின்றது. எனவே தமிழர்களிடம் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்த காலமான பக்திக் காலகட்டத்துக்கு முற்பட்ட காலத்திற்கு இப்பெயரின் பழமையானது இட்டுச்செல்கின்றது. முறையான தொல்லியல் ஆய்வுகள் நிகழ்த்தப்படுமானால் தெளிவான ஆதாரங்கள் கிட்டக்கூடும். சமூகம் நாரந்தனை நூறு விழுக்காடு தமிழ் மக்கள் வாழும் கிராமமாகும். இந்த ஊர் விவசாயம், மீன்பிடி, பனைசார் தொழில் போன்ற மரபான தொழில்களை அடிப்படையாகக் கொண்டதாகும். சைவர்களும், கத்தோலிக்கர்களும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் இங்கு வாழ்கின்றனர். உள்நாட்டுப் போரினாலான இடப்பெயர்வுகளால் மக்கள் தொகை பெரிதும் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது. ஆகஸ்ட் 22, 1990 இல் காரைநகர் கடற்படை முகாமில் இருந்து ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் தரையிறக்கப்பட்ட இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட யாழ்க் கோட்டையை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கைக்கு முன்னர் நாரந்தனையில் ஏறத்தாழ 1800 குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. தற்போது ஏறத்தாழ 1000 குடும்பங்கள் வாழ்கின்றன. நிர்வாகப் பிரிவுகள் நாரந்தனையானது தீவகம் வடக்கு, ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்டதாகும். ஊர்காவற்றுறைப் பட்டினம், பருத்தியடைப்பு, கரம்பன், புளியங்கூடல், சுருவில் போன்ற ஊர்காவற்றுறைத் தீவைச் சேர்ந்த பகுதிகளும் அனலைதீவு, எழுவைதீவு போன்ற தீவுகளும் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஏனைய இடங்களாகும். நாரந்தனை வடக்கு, நாரந்தனை வடமேற்கு, நாரந்தனை, நாரந்தனை தெற்கு ஆகிய நான்கு கிராம மேலாளர் பிரிவுகளாக கிராமமானது நிர்வாக வசதிக்காகப் பகுக்கப்பட்டுள்ளது. காலநிலையும்,வானிலையும் புவிநடுக்கோட்டுக்கு அண்மையில் அமைந்திருப்பதால் பருவமழை வீழ்ச்சிக்குரிய காலநிலைக்குரியது.இந்தியப் பெருநிலப்பரப்புக்கு அண்மையில் அமைந்திருப்பதன் காரணமாக பொதுவாக இலங்கையின் வடபகுதியில் நிலவும் அதிகவெப்பநிலையே இங்கும் நிலவுகின்றது.ஆண்டுச் சராசரி வெப்பநிலை 28 °C இலிருந்து 30 °C வரையிலானதாகும். பெப்ரவரியில் இருந்து செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெம்மையானதும் வறட்சியானதுமான கால நிலையும் ஒக்டோபரில் இருந்து ஜனவரி வரை மிதமான குளிரும்,ஈரலிப்பானதுமான காலநிலையும் காணப்படுகின்றது. நவம்பரில் இருந்து பெப்ரவரிக்கு இடையில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சியால் அதிக மழையும்,மே இலிருந்து ஆகஸ்ட்டுக்கு இடையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையால் சிறிதளவு மழையும் கிடைக்கின்றது. வழிபாட்டிடங்கள் அவற்றுள் சில: நாரந்தனை தான்தோன்றி ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயம் நாரந்தனை - சரவணை கர்ணந்தோட்டம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் நாரந்தனை வடக்கு கேணியடி ஞானவைரவர் ஆலயம் தம்பாட்டி முத்துமாரியம்மன் கோயில் புனித பேதுரு புனித பவுல் தேவாலயம் திரு இருதயநாதர் தேவாலயம் புனித லூர்து அன்னை தேவாலயம் பாடசாலைகள் யா/நாரந்தனை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, நாரந்தனை யா/நாரந்தனை வட கணேச வித்தியாலயம், நாரந்தனை யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை. நாரந்தனை துணை நூல்கள் கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம். சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம். செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம். சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா. இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை. இவற்றையும் பார்க்கவும் வேலணைத் தீவு யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்
6441
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D
சாக்கலேட்
சாக்கொலேட் என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் மத்திய கால அமெரிக்க சொல் ஆகும். பல்வேறு இனிப்புகள், அணிச்சல்கள், பனிக்கூழ்கள் மற்றும் குக்கிகளிலும் சாக்கொலேட் ஒரு முக்கியமான இடுபொருளாகும். உலகில் மிகவும் விரும்பப்படும் சுவைமணங்களில் சாக்கொலேட்டும் ஒன்றாகும். மத்திய அமெரிக்காவில் தோன்றிய கொக்கோ மரத்தின் (Theobroma cacao) கொட்டைகளை நுண்ணுயிர் பகுப்புக்குட்படுத்தி (ferment), வறுத்து, அரைக்கும் போது கிடைக்கும் பொருட்கள் சாக்கொலேட் அல்லது கொக்கோ என்றழைக்கப்படுகின்றன. இவை ஒரு வீரிய சுவைமணமும் கசப்புத் தன்மையும் கொண்டவை. இக்கொட்டைப் பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறாக அழைக்கப்பட்டாலும் அமெரிக்க சாக்கொலேட் தொழில் நிறுவனங்களில் கீழ்வருமாறு அழைக்கப்படுகின்றன. கொக்கோ என்பது கொக்கோ கொட்டையின் திடநிலை பொருட்கள். கொக்கோ வெண்ணெய் என்பது கொக்கோ கொட்டையின் கொழுப்புப் பாகம். சாக்கொலேட் என்பது இவ்விரு பாகங்களின் தொகுப்பு. சாக்கொலேட் என்று பொதுவாக அழைக்கப்படும் இனிப்புப் பண்டம், கொக்கோ கொட்டையின் திட மற்றும் கொழுப்புப் பாகங்களின் கலவையை சர்க்கரை, பால் மற்றும் பிற பல இடுபொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கபடுகிறது. சாக்கொலேட்டைப் பயன்படுத்தி கொக்கோ அல்லது பருகும் சாக்கொலேட் என்று அழைக்கப்படும் பானங்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை மத்திய கால அமெரிக்கர்களாலும் அங்கு வந்த முதல் ஐரோப்பிய பயணிகளாலும் பருகப்பட்டன. சாக்கொலேட் பெரும்பாலும் அச்சுக்களில் வார்க்கப்பட்டு கனசெவ்வக வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. விழாக்காலங்களில் விலங்குகள், மனிதர்கள் என பல வடிவங்களில் வார்த்து தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஈஸ்டர் பண்டிகையின் போது முட்டை அல்லது முயல் வடிவிலும், கிறிஸ்துமஸ் பன்டிகையின் போது புனித நிக்கோலஸ் வடிவிலும், காதலர் தினத்தின் போது இதய வடிவிலும் தயாரிக்கப்படுகின்றன. வகைகள் பாகுபாட்டு முறை சாக்கொலேட் ஒரு மிகப் பிரபலமான இடுபொருளானதால் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. தயாரிப்பின்போது உட்பொருட்களின் விகிதத்தை மாற்றுவதன் மூலம் பல நிலை மற்றும் சுவைமணம் கொன்ட சாக்கொலேடுகள் கிடைக்கும். மேலும், அதிக வகை சுவைமணங்களை, கொட்டைகளை வறுக்கும் நேரம் மற்றும் வறுக்கப்படும் வெப்ப நிலைகளை மாற்றுவதால் உருவாக்க முடியும். இனிப்பூட்டப்படாத சாக்கொலேட்: இது தூய வெளிப்பொருள் கலக்காத சாக்கொலேட் கூழ் ஆகும். கொக்கோ கொட்டைகளை அரைத்துத் தயாரிக்கப்படும் இக்கூழ், கசப்பு அல்லது பேக்கிங் சாக்கொலேட் என்றும் அழைக்கப்படுகிறது. ஆழமான சாக்கொலேட் சுவைமணம் கொண்ட இக்கூழ், சர்க்கரை சேர்த்து அமெரிக்க-வகை அடுக்குக் கேக்குகள், பிரௌனிக்களுக்கு அடிப்படைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. கரும் சாக்கொலேட்: பால் கலக்கப்படாத இவ்வகை சாக்கொலேட், கலப்பிலா சாக்கொலேட் என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க அரசாங்கம் இவ்வகை சாக்கொலேடில் 15% சாக்கொலேட் கூழ் இருக்கவேண்டுமென்ற கட்டுப்பாட்டுடன் இதனை இனிப்பு சாக்கொலேட் என்று அழைக்கிறது. ஐரோப்பிய விதிகள் இவ்வகை சாக்கொலேட்டில் குறைந்தது 35% சாக்கொலேட் திடப்பொருட்கள் இருக்க வேண்டுமென வேண்டுகின்றன. கூவெர்சர்: இவை அதிக கொக்கோ வெண்ணெயுடைய உயர்தர சாக்கொலேட்டுகள் ஆகும். இவ்வகை சாக்கொலேட்டுகள் மிக அதிக வீதத்தில் கொக்கோ கூழ் மற்றும் கொக்கோ வெண்ணெய் கொண்டனவாயும், உருக்கும்போது நல்ல திரவ நிலையடைவனவாயும் இருக்கும். பொதுவாக இவை மிக உயர்தர சாக்கொலேட் சுவைமணம் கொன்டவையாகக் கருதப்படுகின்றன. இத்தரமிகு சாக்கொலேடுகளில் கசப்பு முதல் இனிப்பு வரை பல்வேறு வகைகள் இருப்பினும் மிகச்சிறு சுவைமண வேறுபாடுகளைத் தெளிவாகக் இனங்காண முடிவதால் இவை இதே பண்புகளுள்ள உயர்தர ஒயின்களுடன் ஒப்பிடப்படுகின்றன. தொழில்முறை சமையலாளர்களால் இனிப்புப் பண்டங்களில் பயன்படுத்தப்படும் மிகப் பிரபலமான தயாரிப்புகள்: வால்ரோனா, லின்ட் & ஸ்ப்ருங்க்லி, கெக்கோ பெர்ரி, எஸ்பிரிட் டெ ஆல்ப்ஸ் மற்றும் கிட்டார்ட். பால் சாக்கொலேட்: இவ்வகை சாக்கொலேட்டுகள் பெயருக்கேற்ப பால் தூள் அல்லது தடித்த பால் கலந்து தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க அரசாங்கம் இவற்றில் 10% சாக்கொலேட் கூழ் இருக்கவேண்டுமென்றும், ஐரோப்பிய விதிகள் குறைந்தது 25% கொக்கோ திடப்பொருட்கள் இருக்க வேண்டுமெனவும் விதிக்கின்றன. மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்கொலேட்: இவ்வகை சாக்கொலேட்டுகள் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இவை, பொதுவாக அதிக சர்க்கரை கொண்ட கரும் சாக்கொலேட்டுகளேயாகும். ஆனால் இவற்றில் கரும் சாக்கொலேட்டை விட குறைந்த அளவு கொக்கோவே இருக்கிறது. கசப்பு-இனிப்பு சாக்கொலேட்: இது சாக்கொலேட் கூழுடன் சர்க்கரை, கொக்கோ வெண்ணெய், லெசித்தின் மற்றும் வனிலா கலந்து தயாரிக்கப்படுகிறது. இவை மித இனிப்பு வகை சாக்கொலேட்டுகளை விட குறைவான சர்க்கரையும், அதிகமான சாக்கொலேட் கூழும் உடையவை. சுவைக்கேற்ப இவ்விரு வகைகளில் ஒன்றை சமையலில் பயன்படுத்தலாம். உயரிய தரமுள்ள கசப்பினிப்பு சாக்கொலேட்டுகள் கூவெர்சர் வகையாக தயார் செய்யப்பட்டு, அவற்றின் சாக்கொலேட் கூழ் வீதம் பயனீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. எவ்வளவு சாக்கொலேட் கூழ் உள்ளதோ அவ்வளவு கசப்பினிப்புடன் இவற்றின் சுவை இருக்கும். வெள்ளை சாக்கொலேட்: இவை கொக்கோ திடப்பொருட்கள் இல்லாமல் கொக்கோ வெண்ணெய் மட்டுமே கொண்டு உருவாக்கப்படும் இனிப்பு பண்டங்களாகும். கொக்கோ தூள்: இரு வகை சுவையூட்டப்படாத பேக்கிங் கொக்கோ தூள்கள் உள்ளன: இயற்கையான கொக்கோ மற்றும் டச்சு-முறை கொக்கோ. இவை இரண்டுமே மிதமாக கொழுப்பு நீக்கிய சாக்கொலேட் கூழை பொடித்து கொக்கோ வெண்ணெய் நீக்கப்பட்டு தயாராகின்றன. இயற்கையான கொக்கோ வெளிர் நிறமும், சற்றே அமிலத்தன்மையும், மிக அதிக சாக்கொலேட் சுவைமணம் கொண்டதாயும் இருக்கும். பேக்கிங்கின் போது இவ்வகை கொக்கோவுடன் சமையல் சோடா சேர்க்கப்பட வேண்டும். கொக்கோவின் அமிலத்தன்மையும், சோடாவின் காரத்தன்மையும் கலப்பது மாவுக்கலவையை வாயு நிறைத்து மிருதுவாக்கும். டச்சு முறை கொக்கோ தயாரிக்கப்படும் போதே காரம் சேர்க்கப்பட்டு அதன் அமிலத்தன்மை சமனாக்கப் படுகிறது. இவ்வகை கொக்கோ சற்றே குறைந்த சுவைமணமும், ஆழமான நிறமும் கொண்டிருக்கும். புதினா, ஆரஞ்சு அல்லது ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவைமணங்கள் சாக்கொலேட்டுடன் கலக்கப்படுவதுண்டு. நாம் பொதுவாக சாக்கொலேட் என்று சாப்பிடும் இனிப்பு பண்டம் சாக்கொலேட்டுடன் கடலை, அரிசிப்பொரி, கொட்டைகள் போன்ற மற்ற இடுபொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சாராய வகை பானங்கள் கலந்தும் சாக்கொலேட் தயாரிக்கப்படுகிறது. வரையறை முறைப்படிப் பார்த்தால், 100% கொக்கோ திடப்பொருள் மற்றுமல்லது கொக்கோ கொழுப்பினை அடிப்படையாகக் கொண்ட எதுவுமே சாக்கொலேட் ஆகும். எத்தனையோ வகையான பொருட்கள் சாக்கொலேட் கொண்டு தயாரிக்கப் படுவதால், சாக்கலேட்டின் விலை இத்தொழில்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பல்வேறு இடுபொருட்களை சேர்த்து சுவையை மாற்றலாம். அதே சமயம், கொக்கோ திடப்பொருள் விகிதத்தைக் குறைப்பதன் மூலமும், கொக்கோ கொழுப்புக்கு பதிலாக வேறு கொழுப்பை சேர்ப்பதன் மூலமும் சாக்கலேட் பொருட்களின் விலையை கணிசமாகக் குறைக்கலாம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சாக்கொலேட்டின் வரையறை பற்றி கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. ஒரு சாரார் சிறிதளவே கொக்கோ திடப்பொருளும், எவ்வகை கொழுப்பும் கொண்ட எதையும் சாக்கொலேட் என்று வரையறுக்க விரும்புகின்றனர். இதன்படி, சாக்கொலேட்டின் சுவைமணமூட்டப்பட்ட வனஸ்பதி கூட சாக்கொலேட் என்றழைக்கப்படலாம். ஒரு சில நாடுகளில் இவ்வாறிருப்பதால், 50-60% கொக்கோ திடப்பொருள் கொண்ட அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கரும் சாக்கொலேட் விலை உயர்ந்தும் அரிதாகவும் உள்ளது. மற்றொரு சாரார் முன் சொல்லப்பட்ட வரையறையே தொடர வேண்டுமென நம்புகின்றனர். வரலாறு சாக்கொலேட் என்ற சொல் மத்திய மெக்சிகோவில் தோன்றிய சிவப்பிந்தியர்களின் நவாட்ல் மொழிச்சொல்லாகும். மாயன் இன மக்கள் காலத்திய பானைகளில் காணப்படும் கொக்கோ படிமங்கள், சுமார் கி.மு 600 ஆம் ஆண்டிலேயே கொக்கோ பருகப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. அஸ்டெக்குகள் சாக்கொலேட்டை தமது இனவிருத்திக் கடவுளான ஸொசிக்வெட்சலுடன் தொடர்புப்படுத்தி வந்தனர். புதிய உலகத்தில், சாக்கொலேட் வனிலா, மிளகாய் மற்றும் அச்சியோட் சேர்த்து ஸொக்கொட்ல் என்ற பெயருடைய பானமாக பருகப்பட்டு வந்தது. ஸொக்கொட்ல் ஒரு களைப்பு நீக்கி உற்சாக பானமாக கருதப்பட்டது (பெரும்பாலும், அதிலுள்ள தியொப்ரொமினால்). கொலம்பியாவிற்கு முற்பட்ட மத்திய கால அமெரிக்காவில் சாக்கொலேட் ஓர் உயர் மதிப்புள்ள பொருளாகவே கருதப்பட்டு, பண்ட மாற்றுக்குக்கூட பயன்படுத்தப்பட்டது. பிற சாக்கொலேட் பானங்கள் சோளக்கூழ் மற்றும் தேனுடன் பருகப்பட்டு வந்தன. ஸொகொட்ல்-இன் சுவை ஒரு பழகி அறியப்பட்ட சுவையாகக் கருதப்படுகிறது. ஹோஸே டி அகொஸ்டா எனும் ஸ்பெயினைச் சேர்ந்த பாதிரியார் 16 ஆம் நூற்றாண்டில் எழுதியதன் தமிழாக்கம் கீழ் வருமாறு: பழகாதவர்க்கு விரும்பத்தகாத சுவையும், மேலே படர்ந்த ஆடையோ, நுரையோ கொண்டது. இருப்பினும் இப்பானம் (சிவப்பு) இந்தியருக்குள் புகழுள்ளதாக இருக்கிறது; அவர்கள் இதை அவர் நாட்டின் வழியாகச் செல்லும் பெரியோர்க்கு விருந்து படைக்கின்றனர். ஸ்பெயின் நாட்டு ஆண், பெண் இருபாலரும் இந்த சாக்கலேட்டேவிற்கு பேராசைப்படுகின்றனர். அவர்கள் இதனை விதவிதமாகத் தயாரிப்பதாகக் கூறுகின்றனர்; சில சூடாக, சில குளிராக மற்றும் சில பதமாக. மேலும் அதில் மிளகாயைப் போடுகின்றனர்; ஆம், அதன் கூழ் ஏற்படுத்தும் எரிச்சலையும் மீறி வயிற்றுக்கு நல்லது என்று கூறுகின்றனர். அமெரிக்காவை கண்டுபிடித்த கிரிஸ்டோஃபர் கொலம்பஸ், ஸ்பெயினின் ஆளுனர்களுக்கு காண்பிக்க சிறிது கொக்கோ கொட்டைகளை எடுத்து வந்தார். ஆனால் ஹெர்னான்டோ டி சோடோ தான் இவற்றை பரவலாக ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார். பழம் உலகதிற்கான முதல் சாக்கொலேட் பண்டகம் 1585 ஆம் ஆண்டு வெராகுருஸிலிருந்து செவில்லுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அது ஒரு பானமாகவே பருகப்பட்டு வந்தது. ஐரோப்பியர்கள் அதில் சர்க்கரை சேர்த்து மிளகாய் நீக்கி பயன்படுத்தினர். 17ஆம் நூற்றாண்டின் போது சாக்கொலேட் ஓர் உயர் பாரம்பரிய பொருளாக கருதப்பட்டது. 18ஆம் நூற்றான்டின் இறுதியில், முதல் திட வடிவ சாக்கொலேட் துரின் நகரில் தயாரிக்கப்பட்டது. 1826 முதல் பியர் பால் கஃபரேல் என்பவரால் அதிக அளவில் விற்கப்பட்டது. 1828 ல் கான்ராட் ஜே வான் ஹூட்டென் என்ற டச்சுக்காரர் கொக்கோ கொட்டையிலிருந்து கொக்கோ தூள் மற்றும் கொக்கோ வெண்ணெய் தயாரிக்கும் முறையை காப்பீடு செய்தார். மேலும் அவர் டச்சு முறை என்றழைக்கப்படும் கொக்கோ தூள் தயாரிப்பு முறையையும் உருவாக்கினார். ஜோசஃப் ஃபிரை என்ற ஆங்கிலேயர் தான் 1847 இல் முதல் கனசெவ்வக சாக்கொலேட் கட்டியை வார்த்து உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பின் இது காட்பரி சகோதரர்களல் தொடரப்பட்டது. டேனியல் பீட்டர் என்ற சுவிஸ் மெழுகுவத்தி தயாரிப்பாளர் 1867 இல் பால் கலந்து முதல் பால் சாக்கொலேட்டை உருவாக்கினார். ஹென்றி நெஸ்லே என்ற மழலை உணவுத் தயாரிப்பாளர் இவருக்கு பாலிலிருந்து நீரை நீக்கி, தடித்த பால் உருவாக்க உதவினார். இது பூஞ்சைத் தொல்லையிலிருந்து சாக்கொலேட்டுகளைக் காக்க உதவியது. ருடால்ஃப் லின்ட் என்பவர் சாக்கொலேட் கலவையை சீராக்க, அதனை சூடாக்கி அரைக்கும் கான்ச்சிங் எனப்படும் முறையைக் கண்டு பிடித்தார். உடற்செயலியல் விளைவுகள் நாட்டு விலங்குகளுக்கு நச்சுத்தன்மை குதிரைகள், நாய்கள், கிளிகள், சிற்றெலிகள், பூனைகள் (குறிப்பாக பூனைக்குட்டிகள்), பறவைகள் மற்றும் சிறு விலங்குகளுக்கு அதிகமான அளவு சாக்கொலேட் உயிர் நீக்கும் அளவுக்கு நச்சுத்தன்மை கொண்டதாகும். இவற்றால் சாக்கொலேட்டில் காணப்படும் தியொப்ரொமின் எனப்படும் வேதிப்பொருளை நன்றாக வளர்சிதைமாற்றம் செய்ய இயலா. இவற்றின் இரத்தத்தில் தியொப்ரொமின் 20 மணிநேரம் வரை தங்குவதால் இவ்விலங்குகளுக்கு வலிப்பு, இதயச் செயலிழப்பு, உட்புற இரத்த இழப்பு ஆகியவற்றால் மரணம் நிகழலாம். மெர்க் கால்நடை மருத்துவ இணையக் கையேடு எட்டாம் பதிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, நாய் ஒன்று அதன் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 1.3 கிராம் பேக்கர்ஸ் சாக்கொலேட் உட்கொண்டால் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தென்படத் துவங்கும். எடுத்துக்காட்டாக 25 கிலோ எடையுள்ள நாய் ஒரு 25 கிராம் எடையுள்ள பேக்கர்ஸ் சாக்கொலேட் கட்டியை உட்கொண்டால் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தென்படத் துவங்கும். கால்நடை மருத்துவரை அணுகுவதோ இரண்டு மணி நேரத்திற்குள் வாந்தி எடுக்கத் தூண்டுவதோ சரியான மருத்துவ முறையாகும். நாய்களைப் பொறுத்த வரை தியொப்ரொமினின் எல்.டி 50 மதிப்பு ஒரு கிலோ உடல் எடைக்கு 250-500 மி.கி ஆகும். இருப்பினும் 115 மி.கி அளவிலேயே மரணம் நிகழ்ந்தது அறியப்பட்டுள்ளது. 20 கிலோ எடையுள்ள நாய் ஒன்று சுமார் 240 கிராம் பால் சாக்கொலேட் சாப்பிட்டால் குடல் உபாதைகள் தொடங்கி விடும். 500 கிராமுக்கு மேல் உட்கொண்டால் சீரற்ற இதயத்துடிப்போ குறைவான இதயத்துடிப்போ இருக்கும். 5 கிலோ பால் சாக்கொலேட் சாப்பிட்ட நாய் அதிலுள்ள அதிக கொழுப்பு மற்றும் சர்கரையால் அதனை வாந்தி எடுக்காவிடில் அது உயிர் பிழைக்கும் வாய்ப்பு 50% தான். கரும் சாக்கொலேட்டில் சுமார் 50% அதிக தியொப்ரொமின் உள்ளதால் அது நாய்களுக்கு மிக ஆபத்தானதாகும். உடல்நல பலன்கள் அண்மைய ஆய்வுகளின்படி கொக்கோ அல்லது கரும் சாக்கொலேட்டினால் மனிதர்களுக்கு நன்மை மிக்க உடல்நல பலன்கள் விளையக்கூடும் என்று தெரிகிறது. கரும் சாக்கொலேட்டில் காணப்படும் எப்பிகேட்டச்சின் போன்ற ஃப்ளேவனாய்ட்-கள் ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு மூலம் இரத்த நாளங்களைப் பாதுகாக்கவும், இதயத்தை சீராக வைத்திருக்கவும், புற்று நோயைத்தடுக்கவும் உதவுகின்றன. மேலும் சாக்கொலேட் உயர் இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. சொல்லப்போனால், ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு நிறைந்த உணவுகளான சிகப்பு ஒயின், பசும் மற்றும் கரும் தேனீர், நீலபெர்ரி ஆகியவற்றை விட அதிக அளவில் ஃப்ளேவனாய்ட்-கள் சாக்கொலேட்டில் உள்ளன. ஓர் அறிவியல் ஆதாரமற்ற உடல் நல உணவுமுறை கூட மாத்திரை வடிவில் சாக்கொலேட் மற்றும் கொக்கோ தூளை உண்ண பரிந்துரை செய்கிறது. இருப்பினும் பால் சாக்கொலேட்டையோ வெள்ளை சாக்கொலேட்டையோ உண்பது பெரும்பாலும் உடல் நல விளைவுகளை ஏற்படுத்தாது. சாக்கொலேட் ஒரு உடற்சக்திப்பொருளும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவாதலால் நாள்தோறும் சாக்கொலேட் சாப்பிடுவது உகந்ததல்ல. சாக்கொலேட் போதைப்பொருள் அண்மைய ஆய்வுகளின்படி, சாக்கொலேட் தியொப்ரொமின் கொண்டுள்ளதால் ஒரு மிதமான தூண்டும் பொருளாக இருக்கக்கூடும். இருப்பினும், சாக்கொலேட்டிலுள்ள தியொப்ரொமின் அளவு மனிதர்களில் எவ்வித பெரும் விளைவையும் ஏற்படுத்துமளவு அதிகமில்லை; ஒரு காஃபி குடித்த விளைவையே ஏற்படுத்தும். மருந்தியலாளர் ரையன் ஜே ஹக்ஸ்டேபிளின் கூற்றுப்படி "[சாக்கொலேட்] உணவை விட அதிகமாகவும் காஃபியை விட குறைவாகவும் [விளைவேற்படுத்தும்]". இருப்பினும் முன்கூறியவாறு நாய்களிலும், குதிரைகளிலும், சாக்கொலேட் அதிக தூண்டும் விளைவுகளேற்படுத்தும். இதனாலேயே குதிரை ஓட்டத்தில் சாக்கொலேட் தடை செய்யப்பட்டுள்ளது. சில சாக்கொலேட் பொருட்கள் செயற்கையாக சேர்க்கப்பட்ட கஃபீன் கொண்டவை. சாக்கொலேட்டில் சிறிதளவு இயற்கையான ஆனந்தமீன் எனப்படும் கானபினாய்ட் பொருளும், கானபினாய்ட் சிதைமாற்றத்தை தடுக்கும் N-ஓலியோல்-எத்தனாலமீன் (N-oleolethanolamine) மற்றும் N-லினோலியோல்-எத்தனாலமீன் (N-linoleolethanolamine) எனப்படும் பொருளும் உள்ளன. ஆனந்தமீன்கள் நம் உடலில் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்பட்டாலும் அவற்றின் செயல் நேரம் மற்றும் செயல்படும் இடம் தெளிவாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. பரிசோதனைகளின் மூலம், N-ஓலியோல்-எத்தனாலமீன் மற்றும் N-லினோலியோல்-எத்தனாலமீன் ஆகியவை நம் உடலின் கானபினாய்ட் சிதைமாற்றத்தை தடுப்பதால் கானபினாய்டுகள் அதிக நேரம் செயல்படுவதாக அறியப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் சாக்கொலேடின் நேரடித்தாக்கம் இன்னும் சரியாக உறுதிப்படுத்தப்படவில்லை. சாக்கொலேட்டின் இனிமை சாக்கொலேட்டின் உருகுநிலை நமது உடல் வெப்பநிலையை விட குறைவாக இருப்பதால், அது நம் வாயில் உருகுகிறது. இத்தன்மை சாக்கொலேட்டின் சுவையை மேலும் கூட்டுவதாகக் கருதப்படுகிறது. மேலும், சாக்கொலேட் நம் மூளையில் செரோடோனினைச் சுரக்கச் செய்கிறது. செரோடோனின் மிதமான வெயிலைப்போல ஓர் இனிய உணர்வு தரும் பொருளாகும். இருப்பினும், முன்கூறியவாறு சாக்கொலேட் நம் செயல்பாடுகளை மோசமாக பாதிப்பதில்லை. சாக்கொலேட்டின் கிளர்ச்சி காதல் உணர்வு கொண்டோர் பொதுவாக சாக்கொலேட்டை ஒரு கிளர்ச்சியூட்டும் பொருளாகக் குறிப்பிடுகின்றனர். சாக்கொலேட்டின் இத்தன்மை அதன் இனிய சுவை உணர்வால் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சாக்கொலேட்டின் செரொட்டொனின் அல்லது ஃபினைல்-இத்தைலமீன் (phenylethylamine)ஆகியவை கூட கிளர்ச்சியைத் தூண்டக்கூடியவை தான். ஆதாரம் உள்ளதோ இல்லையோ தம் காதலர் அல்லது காதலிக்கு சாக்கொலேட் பரிசளிப்பது மரபாகும் (குறைந்தது மேலை நாடுகளில்). சாக்கொலேட்டும் பருக்களும் சாக்கொலேட் உண்பது முகப்பருக்களை (acne) உண்டாக்கும் என பரவலாகக் கருதப்படுகிறது. இது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படாத ஒரு கருத்தாகும். சாக்கொலேட்டில் ஈயம் சாக்கொலேட் ஈயம் அதிகம் கொண்ட ஒரு உணவுப் பொருளாகும். நைஜீரியா போன்ற வளரும் நாடுகளில் வளர்க்கப்படும் கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கும் கொக்கோ கொட்டைகள் அதிக அளவு ஈயத்தைக் கொண்டுள்ளன. இந்நாடுகளில் ஈயம் சேர்த்த பெட்ரோல் பயன்படுத்தப்படுவதால் இங்கு காற்றில் ஈய மாசுக்கலப்பு அதிகம் உள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆளுநரகம் (FDA), சாக்கோலேட்டில் உள்ள ஈய அளவு, பெரும் விளைவுகளேற்படுத்தாது என்றே தெரிவிக்கிறது. தயாரிப்பு இரகங்கள் மூன்று முக்கியமான கொக்கோ இரகங்கள் சாக்கோலேட் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகின்றன. இவற்றில் மிக விலையுயர்ந்ததும், அரிதானதுமானது கிரியொல்லோ எனப்படும் வட மத்திய அமெரிக்க இரகமாகும். கிரியொல்லோ கொட்டைகள் குறைவான கசப்புத்தன்மை கொண்டதோடல்லாமல் சிறிதளவு வறுத்தாலே நல்ல மணம் தரவல்லது. ஃபொரெஸ்டிரோ என்ற இரகம் இயற்கையாகவும், பயிரிடும் இடங்களிலும் அதிகமாக காணப்படுவதாகும். ட்ரினிடாரியோ என்ற இரகம் மேற்கூறிய இரு இரகங்களின் இயற்கையான கலப்பினமாகும். இது ட்ரினிடாட் நாட்டில் கிரியொல்லோ பயிரில் ஃபொரெஸ்டிரோ அறிமுகப்படுத்தப்பட்ட போது உண்டானது. கடந்த 50 ஆன்டுகளாக பெரும்பாலும் ஃபொரெஸ்டிரோ அல்லது குறைந்த தரமுள்ள ட்ரினிடாரியோ இரக கொக்கோ விளைவிக்கப்படுகிறது. நல்ல தரமுள்ள சுவைமணக் கொக்கோ வெறும் 5 சதவீதமே விளைவிக்கப்படுகிறது. அறுவடை முதலில் கொக்கோ கொட்டைகளைக் கொண்டுள்ள கொக்கோ காய்கள் பறிக்கப்படுகின்றன. பின்னர், அவை நசுக்கப்பட்டு, சுமார் ஆறு நாட்கள் வரை நுண்ணுயிர்ப் பகுப்படைய விடப்படுகின்றன. பின்னர், அவற்றிலிருந்து கொட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டு உலர்த்தப்படுகின்றன. சுமார் ஏழு நாட்கள் உலர்த்துவதன் மூலம் தரமான சாக்கொலேட் தயாரிக்க முடியும். விரைவுபடுத்தப்பட்டோ செயற்கையாகவோ உலர்த்துவதன் மூலம் தயாரிக்கப்படும் சாக்கொலேட் தரம் குறைந்ததாய் இருக்கும். உலர்ந்த கொட்டைகள் வறுத்து, தரம் பிரித்து, அரைக்கப்படுகின்றன. இந்தக் கலவையிலிருந்து அழுத்தத்தின் மூலமோ புரோமோ முறை மூலமோ கொக்கோ வெண்ணெய் பிரித்தெடுக்கப்படுகின்றது. கொக்கோ வெண்ணெய் பிரித்த பின் கிடைக்கும் தூளே கொக்கோ தூளாகும். கலத்தல் பல தரப்பட்ட சாக்கொலேட்டுகளோ கூவெர்சர்களோ தயாரிக்க சாக்கொலேட் கூழ் பல்வேறு அளவுகளில் கொக்கோ வெண்ணெயுடன் கலக்கப்படுகிறது. அமெரிக்க சாக்கொலேட் தயாரிப்பில் ஒவ்வொரு வகை சாக்கொலேட்டிற்கும் கலக்கப்படும் இடுபொருட்கள் பின்வருமாறு (சேர்க்கப்படும் அளவைப் பொருத்து இடு பொருட்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன): 1. கலப்பிலா கரும் சாக்கொலேட்: சர்க்கரை, கொக்கோ வெண்ணெய், கொக்கோ கூழ், வனிலா; 2. பால் சாக்கொலேட்: சர்க்கரை, கொக்கோ வெண்ணெய், கொக்கோ கூழ், பால் அல்லது பால் தூள், வனிலா; 3. வெள்ளை சாக்கொலேட்: சர்க்கரை, கொக்கோ வெண்ணெய், பால் அல்லது பால் தூள், வனிலா. பொதுவாக சோயா லெசித்தின் போன்றதொரு கலப்பான் (emulsifier) சேர்க்கப்படுகிறது. சில தயாரிப்பு நிறுவனங்கள் தூய சாக்கொலேட் பெறவும், மரபணு மாற்றப்பட்ட உணவைத் தவிர்க்கவும் (அமெரிக்காவில் பெரும்பாலான சோயா பயிர் மரபணு மாற்றம் செய்யப்பட்டதாகும்) இதை சேர்ப்பதில்லை. ஆனால், இச்சாக்கொலேட்டுகள் சிலநேரம் சீராக கலக்கப்படாதிருக்கும். சாக்கொலேட்டின் சீரானத்தன்மை தயாரிப்பு முறையாலும் பாதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கலப்பான் சேர்க்காமலேயே, அதிக நேரம் பதன் செய்வதன் மூலம் நல்ல சீரான சாக்கொலேட் தயாரிக்கலாம். ஒவ்வொரு தயரிப்பாளரும் தமக்கேயுரிய வகையில் மேற்கூறிய இடுபொருட்களின் கலப்பு விகிதத்தை உருவாக்குகின்றனர். சிறந்த கரும் சாக்கொலேட்டுகள் குறைந்தது 70% கொக்கோ கொண்டிருக்கும். பால் சாக்கொலேட்டுகளில் சுமார் 50% வரை கொக்கோ உள்ளது. உயர்தர வெள்ளை சாக்கொலேட்டில் வெறும் 33% கொக்கோவே உள்ளது. தரம் குறைந்த மிக அதிக அளவில் தயாராகும் சாக்கொலேட்டுகளில் மிகக்குறைவான கொக்கோவே (பலநேரம் 7%) உள்ளது. இவ்வாறு குறைந்த கொக்கோ உள்ள சாக்கொலேட்டுகளை சாக்கொலேட் என்றே கருத இயலாது என சில சாக்கொலேட் தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். அரைத்தல் அல்லது கொன்ச்சிங் தேவையான இடுபொருட்கள் கலக்கப்பட்டதும் இக்கலவை "கொன்ச்" எனப்படும் சங்கு வடிவ, உலோக மணிகள் நிறைந்த கொள்கலனில் இட்டு கலந்து அரைக்கப்படுகின்றது. இதன் மூலம் கொக்கோவும் சர்க்கரையும் நாவால் இனம் பிரிக்க முடியாத அளவு சிறு துகள்களாக அரைக்கபடுகின்றன. எவ்வளவுகெவ்வளவு இம்முறை மூலம் அரைக்கப்படுகிறதோ அவ்வளவு தரமிகுந்த சாக்கொலேட் கிடைக்கும். உயர்தர சாக்கொலேட்டுகள் சுமார் 72 மணி நேரமும், குறைந்த தரமுள்ள சாக்கொலேட்டுகள் சுமார் 4-6 மணி நேரமும் அரைக்கப்படுகின்றன. பின்னர், இக்கலவை 45-50 டிகிரி C வெப்பநிலையுள்ள தொட்டிகளில் சேமித்து வைக்கப்படுகிறது. கட்டுப்படுத்திய வெப்பநிலை மாற்றம் அல்லது டெம்ப்பரிங் கொக்கோ வெண்ணெய் பல்வெறு உருவிலான படிகங்களை கொண்டதால், மேற்கூறிய கலவை மிக கவனமாக குளிர்விக்கப்பட வேண்டும். அப்போது தான் மென்மையாக கடிபடும், மிருதுவாக உருகும், பளபளப்பான வடிவுள்ள சாக்கொலேட் கிடைக்கும். முதலில் கலவை 45 டிகிரி C இலிருந்து சுமார் 27 டிகிரி C க்கு குளிர்விக்கப்படுகிறது. பின் மீண்டும் 37 டிகிரி C க்கு சூடு செய்யப்பட்டு மீண்டும் திடமாகும் வரை குளிர்விக்கப்படுகிறது. இந்த சாக்கொலேட் பின்னர் வார்ப்புருக்கியோ அல்லது பிற வகைகளிலோ விற்பனைக்குத் தயாராகிறது. வைத்திருத்தல் இருப்பு வைத்திருக்கும் வெப்பநிலையும், ஈரப்பதமும் சாக்கொலேட்டின் தரத்தை பாதிக்கும்; 15-17 டிகிரி C வெப்பநிலையில், 50% க்கும் குறைவான ஈரப்பதமே சிறந்ததாகும். சாக்கோலேட் உடன் வைக்கப்படும் பொருட்களின் மணத்தை தன்பால் சிறிது ஈர்த்துக்கொள்ளுமாகையால், அதனை தனியாகவோ நன்றாக உறையில் சுற்றியோ வைத்திருப்பது நல்லது. விலங்கு சாரா உணவு முறையில் சாக்கொலேட் வேகன் எனப்படும் விலங்கு சாரா உணவு முறையை பின் பற்றுவோர் தகுந்த சாக்கொலேட்டை காண்பது அரிது. பல்வேறு கரும் சாக்கொலேட்டுகளிலும் சிறிதளவு பால் அல்லது பால் பொருட்கள் உள்ளன. குறிப்பிடப்பட்டிருந்தாலொழிய, அதனை வேகன் சாக்கொலேட் என்று கொள்ள முடியாது. மேலும் சாக்கொலேட்டில் கலக்கும் சர்க்கரை, விலங்கு எலும்புச்சாம்பல் மூலம் பதன் செய்யப்பட்டதாக இருக்கலாம். மேற்கோள்கள் சாக்கலேட்
6443
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
உருவாக்க செயல்கூடங்கள்
உருவாக்க செயல்கூடங்கள் (Fab Labs) எதையும் எங்கேயும் உருவாக்குவதற்கும், தன்னை தானே உருவாக்குவதற்கும் என உருவகிக்கப்பட்ட ஒரு நுட்ப அமைப்பு. தமிழில் புனைந்தியற்று கூடங்கள், வனைதல் கூடங்கள் என்றும் கூறலாம். வரலாறு மேசைக் கணினி தகவல் புரட்சியின் ஒரு உந்து. அதன் பரவல் பல கோடி மக்கள் தகவல்களை ஆக்கவும், திருத்தவும், பகிரவும் உந்தியது. அதே போல், பொருள் உற்பத்தியில் ஒரு புரட்சியை உந்துவிக்கக் கூடிய ஒரு கருவியாக FAB Labs பார்க்கப்படுகின்றது. வெளி இணைப்புகள் http://fab.cba.mit.edu/ FAB Central http://www.media.mit.edu/physics/pedagogy/fab/fablab.htm http://www.wired.com/news/technology/0,1282,64864,00.html http://www.edge.org/3rd_culture/gershenfeld03/gershenfeld_index.html http://kybkreis.org/wiki/Fab_Lab http://www.marginalrevolution.com/marginalrevolution/2005/03/fab_labs.html http://fablab.net/ http://www.zcorp.com/ http://www.blog.speculist.com/archives/000262.html Exponential Fab முப்பரிமாண அச்சாக்கம் ஆய்வுக்கூடங்கள் உற்பத்தியும், தயாரிப்பும்
6452
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
தில்லி
தில்லி அல்லது டெல்லி (Delhi, இந்தி: दिल्ली, பஞ்சாபி: ਦਿੱਲੀ, உருது: دلی) இந்தியாவில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் புது தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. வட இந்தியாவில் உள்ள யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந் நகரம் நீண்ட காலம் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கி வருகின்றது. பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்தே இப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் சான்றுகள் காணப்படுகின்றன. தில்லி சுல்தானகத்தின் எழுச்சிக்குப் பின்னர், வடமேற்கு இந்தியாவுக்கும், சிந்து-கங்கைச் சமவெளிக்கும் இடையிலான வணிகப் பாதையில் அமைந்த முக்கியமான அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக இந் நகரம் உருவானது. இங்கே, பெருமளவிலான பழங்காலத்தைச் சேர்ந்தனவும், மத்திய காலத்தைச் சேர்ந்தனவுமான நினைவுச் சின்னங்களும், தொல்லியல் களங்களும் அமைந்துள்ளன. 1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜகான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டுவரை முகலாயப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது. 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், கல்கத்தாவே (இன்றைய கொல்கத்தா) அவர்களது தலைமையிடமாக இருந்தது. கம்பனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது. 1911 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை தில்லிக்கே மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920களில், பழைய தில்லி நகருக்குத் தெற்கே புது தில்லி எனப் பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் தில்லி ஒரு பல்லின மக்கள் வாழும் நகரமானது. இங்கு வாழ்வோரின் உயர்ந்த சராசரி வருமானமும், தில்லியின் விரைவான வளர்ச்சி, நகராக்கம் என்பனவும் நகரைப் பெருமளவு மாற்றியமைத்தன. இன்று இது இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு, அரசியல், வணிக மையமாக விளங்குகின்றது. பெயர் தில்லி என்னும் பெயர்த் தோற்றம் பற்றித் தெளிவு இல்லை. எனினும், இப்பெயர் ஏற்பட்டதற்கான பல காரணங்கள் கூறப்படுகின்றன. மௌரிய வம்சத்தைச் சேர்ந்த டில்லு அல்லது டிலு எனப் பெயர் கொண்ட மன்னனால் பொ.ஊ.மு. 50 ஆம் ஆண்டில் இப்பகுதியில் அமைக்கப்பட்ட நகருக்குத் அவனது பெயரைத் தழுவி இடப்பட்ட பெயர் தில்லி ஆனதாகப் பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இங்கே அரசர் தாவா என்பவரால் நிறுவப்பட்ட இரும்புத் தூண் ஒன்றின் அத்திவாரம் உறுதியற்றதாக இருந்ததாகவும் இதனைக் குறித்து நகரம், இந்தி / பிராகிருத மொழிகளில் தளர்வு என்னும் பொருள்படும் டிலி என்று அழைக்கப்பட்டதாகவும் இதிலிருந்து தில்லி என்னும் பெயர் ஏற்பட்டது என்பதும் இன்னொரு சாரார் கருத்து. ராஜபுத்திர அரசர்கள் காலத்தில் இப்பகுதியில் புழங்கிய நாணயம் தெஹ்லிவால் எனப்பட்டது. சில ஆய்வாளர்கள் இப்பெயர் வாயிற்படி என்னும் பொருள் கொண்ட தெஹ்லீஸ் அல்லது தெஹாலி என்னும் சொற்களிலிருந்து பெறப்பட்டதாகக் கருதுகின்றனர். இந்து-கங்கைச் சமவெளிப் பகுதிக்கு ஒரு வாயிலாகத் தொழிற்பட்டதாலேயே இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். இந்நகரின் தொடக்ககாலப் பெயர் தில்லிக்கா என்பது வேறு சிலருடைய கருத்து. வரலாறு இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகளின்படி தில்லியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பொ.ஊ.மு. இரண்டாவது ஆயிரவாண்டுகளிலும் அதற்கு முன்னரும் குடியேற்றங்கள் இருந்ததாகத் தெரிகிறது. புகழ்பெற்ற இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களின் தலைநகரமான இந்திரப்பிரஸ்தம் இப் பகுதியிலேயே அமைந்திருந்ததாக நம்பப்படுகிறது. மௌரியப் பேரரசுக் காலத்தில் (பொ.ஊ.மு. 300) இக் குடியேற்றங்கள் வளர்ச்சியடைந்தன. ஏழு முக்கிய நகரங்களின் எச்சங்களை தில்லிப் பகுதியில் கண்டறிந்துள்ளனர். தொமாரா மரபினர் பொ.ஊ. 736ல் லால் காட் என்னும் நகரத்தை நிறுவினர். சௌகான் ராஜபுத்திரர் அல்லது ஆஜ்மெர் என அழைக்கப்படுவோர் 1180ல் லால் காட் நகரைக் கைப்பற்றி அதன் பெயரை கிலா ராய் பித்தோரா எனப் பெயர் மாற்றினர். சௌகான் அரசர் மூன்றாம் பிரிதிவிராஜை 1192 ஆம் ஆண்டில் ஆப்கானியரான முகம்மத் கோரி தோற்கடித்தார். 1206 ஆம் ஆண்டில் குலாம் மரபைத் தொடக்கி வைத்த குதுப்-உத்-தீன் ஐபாக் தில்லி சுல்தானகத்தை நிறுவினார். குதுப்-உத்-தீன், குதுப் மினாரையும், குவாத் அல் இஸ்லாம் எனப்படும் இந்தியாவின் மிகப் பழைய பள்ளிவாசலையும் கட்டுவித்தார். குலாம் மரபினர் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின்னர் கில்ஜி, துக்ளக், சய்யித், லோடி ஆகிய துருக்கியையும், நடு ஆசியாவையும் சேர்ந்த மரபினர் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்தனர். இவர்கள் தில்லியில் உள்ள ஏழு நகரங்களுள் அடங்கும் பல கோட்டைகளையும், நகரப் பகுதிகளையும் அமைத்தனர். தில்லியின் முஸ்லிம் சுல்தான்கள் தமது இந்துக் குடிமக்களிடம் தாராளமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டிக்கொண்டு திமூர் லெங்க் எனப்படுவோர் 1398ல் இந்தியாவுக்குள் நுழைந்தனர். தில்லிக்குள் புகுந்த அவர்கள் அதனை அழித்தனர். தில்லி சுல்தான்களின் காலத்தில் தில்லி, சூபியத்தின் முக்கிய மையமாக விளங்கியது. 1526 ஆம் ஆண்டில், சாகிருத்தீன் பாபர், முதலாம் பானிப்பட் போரில், லோடி மரபின் கடைசி சுல்தானை வென்று முகலாயப் பேரரசை நிறுவினார். தில்லி, ஆக்ரா, லாகூர் ஆகியவை இப் பேரரசின் தலைநகரங்களாக விளங்கின. முகலாயப் பேரரசு, 16 ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் ஷேர் ஷா சூரி என்பவரின் ஐந்து ஆண்டு கால ஆட்சி நீங்கலாக, வட இந்தியாவில் மூன்று நூற்றாண்டுகள் நிலை பெற்றிருந்தது. பேரரசர் அக்பர் தலைநகரை ஆக்ராவில் இருந்து தில்லிக்கு மாற்றினார். இன்று, பழைய தில்லி என்று பொதுவாக அழைக்கப்படும் தில்லியின் ஏழாவது நகரை அமைத்தவர் பேரரசர் சாஜகான் ஆவார். அப்போது அந் நகருக்கு பேரரசரின் பெயரைத் தழுவி சாஜகானாபாத் எனப் பெயரிடப்பட்டது. 1638 ஆம் ஆண்டிலிருந்து பழைய தில்லி முகலாயப் பேரரசின் தலைநகராக இருந்தது. 1739 பெப்ரவரி மாதம், நாதிர் ஷா, கர்னால் போரில் முகலாயப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினார். இவர் தில்லியைக் கொள்ளையிட்டு மயிலணை உட்பட்ட பல விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றார். 1761ல் இடம் பெற்ற மூன்றாம் பானிப்பட் போருக்குப் பின், அகமத் ஷா அப்தாலி தில்லியைக் கைப்பற்றினார். 1803 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் நாள், தளபதி லேக் என்பாரின் தலைமையிலான பிரித்தானியப் படைகள் தில்லிப் போரில் மராட்டியரைத் தோற்கடித்து நகரைக் கைப்பற்றின. 1857 ஆம் ஆண்டின் இந்தியக் கலகத்துக்குப் பின், தில்லி பிரித்தானியரின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதற்குச் சிறிது காலத்தின் பின், கல்கத்தா, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரானது. தில்லி, பஞ்சாப் மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆனது. 1911 ஆம் ஆண்டில், தில்லி பிரித்தானிய இந்தியாவின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசின் கட்டிடங்களை அமைப்பதற்காக, பிரித்தானியக் கட்டிடக்கலைஞரான எட்வின் லூட்யென் (Edwin Lutyens) என்பவரின் தலைமையிலான குழு, புதிய அரசியல், நிர்வாகத் தலைநகருக்கான வடிவமைப்பைத் தொடங்கியது. புது தில்லி எனப்பட்ட இப் புதிய நகரம் பிரித்தானிய இந்தியாவின் தலைநகர் ஆனது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதுவே தலைநகராகத் தொடர்ந்தது. இந்தியப் பிரிவினையின் போது ஏராளமான முஸ்லிம்கள் தில்லியிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த அதே வேளை மேற்குப் பஞ்சாப், சிந்து ஆகிய மாகாணங்களில் இருந்து, பெருமளவு இந்துக்களும், சீக்கியரும் தில்லிக்குக் குடி பெயர்ந்தனர். இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பகைமை உணர்வினாலும், காஷ்மீர் தொடர்பான பிணக்கினாலும், தில்லிக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்து வருகிறது. டிசம்பர் 2001ல், இந்திய நாடாளுமன்றக் கட்டிடம் காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. ஆறு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட இத் தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருந்ததாக இந்தியா கருதியது. தொடர்ந்து அக்டோபர் 2005 ஆம் ஆண்டில், இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 62 குடிமக்களும், செப்டெம்பர் 2008 இல் நிகழ்ந்த இது போன்ற இன்னொரு தாக்குதலில் 30 குடிமக்களும் கொல்லப்பட்டனர். மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தில்லி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 16,787,941 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 2.50% மக்களும், நகரப்புறங்களில் 97.50% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.21% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 8,987,326 ஆண்களும் மற்றும் 7,800,615 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 868 பெண்கள் வீதம் உள்ளனர். 1,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 11,320 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 86.21 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 90.94 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.76 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,012,454 ஆக உள்ளது. சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 13,712,100 (81.68 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 2,158,684 (12.86 %) ஆகவும், ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 146,093 (0.87 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 570,581 (3.40 %) ஆகவும் , சமண சமய மக்கள் தொகை 166,231 (0.99 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 18,449 (0.11 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 2,197 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 13,606 (0.08 %) ஆகவும் உள்ளது. மொழிகள் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது, பஞ்சாபி மற்றும் அனைத்து இந்திய மாநிலங்களின் ஆட்சி மொழிகளும் பேசப்படுகிறது. அரசியல் தில்லி மாநிலம் எழுபது சட்டமன்ற உறுப்பினர்களையும், இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை தொகுதிகளையும் கொண்டுள்ளது. புவியியலும் தட்பவெப்பநிலையும் தில்லி தேசிய தலைநகரப் பகுதி, 1,484 ச.கிமீ (573 ச.மைல்) பரப்பளவு கொண்டது. இதில் 783 ச.கிமீ (302 ச.மைல்) பரப்பளவு கொண்ட பகுதி நாட்டுப்புறப் பகுதியாகவும், 700 ச.கிமீ (270 ச.மைல்) பகுதி நகர்ப்புறப் பகுதியாகவும் உள்ளது. தில்லி தேசிய தலைநகரப் பகுதியின் மிகக் கூடிய நீளம் 51.9 கிமீ (32 மைல்), அகலம் 48.48 கிமீ (30 மைல்). இப் பகுதியில் மூன்று உள்ளாட்சி அமைப்புக்கள் உள்ளன. இவை தில்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் (1,397.3 ச.கிமீ அல்லது 540 ச.மை), புது தில்லி முனிசிப்பல் கமிட்டி (42.7 ச.கிமீ அல்லது 16 ச.மை), தில்லி கன்டோன்மென்ட் சபை (43 ச.கிமீ அல்லது 17 ச.மை) என்பனவாகும். தில்லி வட இந்தியாவில் அமைவிடத்தில் உள்ளது. இது கிழக்கில் உத்தரப் பிரதேசத்தையும்; மேற்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் அரியானாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. தில்லி ஏறத்தாழ முழுமையாக கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. தில்லியின் முக்கியமான இரண்டு புவியியல் அம்சங்கள் யமுனை வெள்ளச் சமவெளியும், தில்லி முகடும் ஆகும். தாழ்நில யமுனை வெள்ளச் சமவெளி வேளாண்மைக்கு உகந்த வண்டல் மண்ணை வழங்குகிறது. எனினும் இச் சமவெளி தொடர்ச்சியான வெள்ளப் பெருக்குகளுக்கு உள்ளாகிறது. 318 மீட்டர் (1,043 அடி) வரையான உயரத்தை எட்டும் முகடு, இப் பகுதியின் மிக முக்கியமான அம்சமாக விளங்குகிறது. இது தெற்கே ஆரவல்லி மலைத்தொடரில் இருந்து தொடங்கி நகரின் மேற்கு, வடகிழக்கு, வடமேற்குப் பகுதிகளைச் சுற்றிச் செல்கிறது. இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படும் யமுனை ஆறு மட்டுமே தில்லி ஊடாகச் செல்லும் முக்கியமான ஒரே ஆறு ஆகும். புது தில்லி உட்பட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் யமுனையின் மேற்குப் பகுதியிலேயே அமைந்துள்ளன. நகர்ப்புறப் பகுதியான சாஹ்தாரா ஆற்றின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தில்லி புவிநடுக்க வலயம்-4 இல் அமைந்துள்ளதால் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்காக வாய்ப்பு உண்டு. தில்லி கண்டத் தட்பவெப்பநிலை கொண்டது. கோடை, மாரி காலங்களுக்கிடையே அதிக வெப்பநிலை வேறுபாடு காணப்படுகின்றது. ஏப்ரல் தொடக்கத்துக்கும், அக்டோபர் நடுப் பகுதிக்கும் இடையே நீண்ட கோடை காலமும்; இடையே பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலமும் நிலவுகின்றன. அக்டோபர் பின் பகுதியில் தொடங்கும் மாரிகாலம், ஜனவரியில் உயர் நிலை அடைகிறது. இக் காலத்தில் கடுமையான மூடுபனியும் காணப்படும். வெப்பநிலை −0.6 °ச (30.9 °ப) தொடக்கம் 47 °ச (117 °ப) வரை மாறுபடும். ஆண்டுக்கான சராசரி வெப்பநிலை 25 °ச (77 °ப) ஆக இருக்க, மாதத்துக்கான சராசரி வெப்பநிலை 13 °ச – 32 °ச (56 °ப – 90 °ப) இடையே மாறுபடுகின்றது. ஆண்டுக்கான சராசரி மழைவீழ்ச்சி 714 மிமீ (28.1 அங்குலம்). இதில் பெரும்பான்மையும் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் பெய்கிறது. போக்குவரத்து வான்வழி இங்கிருந்து ஆண்டுதோறும் 37 மில்லியன் மக்கள் வான்வழியாக பயணிக்கின்றனர். சாலைவழி தில்லியில் கீழ்க்காணும் சாலைகள் உள்ளன. உள்வட்டச் சாலைகள் வெளிவட்டச் சாலைகள் தில்லி - குர்கான் விரைவுவழிச்சாலை தேசிய நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலை - 1 தேசிய நெடுஞ்சாலை - 2 தேசிய நெடுஞ்சாலை - 8 தேசிய நெடுஞ்சாலை - 10 இரயில்வே இந்திய இரயில்வே தில்லியில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்து தில்லிக்கும் தொடர்வண்டிகளை இயக்குகிறது. தில்லி மாநிலத்தில் உள்ள தொடர்வண்டி நிலையங்கள் வடக்கு ரயில்வேயின் கட்டுப்பாடில் உள்ளது. தில்லியில் புது தில்லி, தில்லி சந்திப்பு, ஹசரத் நிசாமுதீன், ஆனந்து விகார் முனையம், தில்லி சராய் ரோகில்லா ஆகிய ஐந்து இடங்களில் தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் தில்லியின் சுற்றுப்பகுதிகளுக்கு உள்ளூர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தொடர்வண்டிகளின் மூலம் தில்லியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கும், பரிதாபாது, குர்கான், நொய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களுக்கும் பயணிக்கலாம். இதனையும் காண்க தேசிய தலைநகர் பகுதி, தில்லி மேற்கோள்கள் இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் இந்திய ஊர்களும் நகரங்களும் தில்லி
6457
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
பருத்தி
பருத்தி (Cotton) என்பது ஒரு மென்மையான, விரிந்து பருத்த முதன்மையான நாரிழை ஆகும்.இது விதைகளைச் சுற்றிப் பந்து போல காப்புறைகளில் வளரும். இவ்விதையினைச் சுற்றி வளரும் இழைகளை நாம் பஞ்சு என்று அழைக்கிறோம். இச்செடியின் விதைகள் மூடிய, மிருதுவான, அடர்ந்த இழைகள் கொண்ட பந்து போன்ற அமைப்பினைப் பெற்றிருக்கும்.பருத்தி மால்வசியே குடும்பத்தின் கோசிப்பியம் பேரினத்தைச் சேர்ந்தது. இதன் நாரிழை முழுக்க முழுக்க செல்லுலோசுவால் ஆனதாகும். இயற்கையான நிலைமைகளில், பருத்திப் பந்துகள் விரிந்து விதைகளை வெளியிடும். பருத்தி அமெரிக்கா, ஆப்பிரிக்கா, எகிப்து, இந்தியா ஆகிய நாடுகளில் வெப்ப, மிதவெப்ப மண்டலங்களில் மட்டுமே விளையும் செடிவகை இழைப் பயிராகும்.காட்டுவகைப் பருத்தியினத்தின் பேரளவு பன்முகப் பெருக்கம் முதன்மையாக மெக்சிகோவிலும் பிறகு ஆஸ்திரேலியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அமைகிறது. பருத்தி பழைய, புதிய உலகங்களில் தனித்தனியாக வீட்டினமாக்கப்பட்டது.இந்தச் செடியிலிருந்து நாம் பலவகையில் பயன்படுத்தும் மென்மையான பருத்தி இழைகள் கிடைக்கின்றன. பருத்திச் செடி நில நடுக்கோட்டுப் பகுதியில் தோன்றிய ஒரு செடியினமாகக் கருதப்படுகின்றது. பருத்தி நாரிழை நூலாக நூற்கப்படுகிறது அல்லது இழையாகத் திரிக்கப்படுகிறது. இதில் இருந்து மென்மையான காற்றூடும் துகில் (துணி) நெய்யப்படுகிறது. முந்து வரலாற்றுக் காலத்தில் இருந்தே பருத்தியாடைகள் வழக்கில் வந்துள்ளன; கிமு ஐந்தாய்ரம் ஆண்டுகட்கு முன்பே பருத்தியாடத் துண்டுகள் சிந்துவெளி நாகரிகத்திலும் ஆடையெச்சங்கள் கிமு ஆறாயிரம் ஆண்டுகட்கு முன்பே பெரு நாட்டிலும் கிடைத்துள்ளன. பண்டைய காலத்தில் இருந்தே பயிரிடப்பட்டாலும், நூற்புக் கதிரின் இயற்றலுக்குப் பிறகே பருத்திநூல் விலை குறைந்து பருத்தியாடை பரவலான பயன்பாட்டுக்கு வந்தது; இன்று இதுவே மிகப் பரவலாகப் பயன்படும் இயற்கை நாரிழையாக ஆடைகளில் அமைகிறது. பருத்தி ஒரு நல்ல பணப்பயிர். பருத்தி இழைகளைப் பிரித்தெடுக்கும் போது ஏறத்தாழ 10% மட்டுமே வீணாகிறது. இவ்விழைகளிலுள்ள சிறிதளவு புரதம், மெழுகு போன்றவை நீக்கப்படும்போது மற்றனைத்தும், தூய இயற்கையான செல்லுலோஸ் பலபடி (பாலிமர்) ஆகும். இவ்விழைகளில் செல்லுலோஸின் அமைப்பு முறை பஞ்சுக்கு உறுதியும், நிலைப்புத்தன்மையும், உறிஞ்சும் தன்மையும் தருகின்றன. ஒவ்வொரு இழையும் 20 - 30 செல்லுலோசுப் பலபடிகள் முறுக்கப்பட்டு உருவாகின்றன. பருத்திக்காய் வெடிக்கும் போது அல்லது உடைக்கப்படும் போது, எல்லா இழைகளும் முறுக்கிய நாடாக்கள் போல சிக்கிக்கொண்டு உலர்கின்றன. இவ்வாறு சிக்கிக்கொண்டுள்ள பஞ்சு நூல் நூற்க மிக ஏதுவானதாகும். ஒவ்வோர் ஆண்டும் உலகளாவிய நிலையில் ஏறத்தாழ, 25 மில்லியன் டன் அல்லது 110 மில்லியன் பருத்திச் சிப்பங்கள் 2.5% உலகின் வறட்சி நிலங்களில் விளைகின்றன. உலகின் பேரளவு பருத்தி விலைச்சல் சீனாவில் உள்ளது. என்றாலும் இந்த பருத்தி முழுவதும் உள்நாட்டிலேயே பயன்கொள்ளப்படுகிறது. பல்லாண்டுகளக ஐக்கிய அமெரிக்காவே பேரளவு பருத்தியைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்நாடாக உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் பருத்தி சிப்பங்களில் அளக்கப்படுகிறது. ஒரு சிப்பம் 0.48 பருமீ பருமனும் 226.8 கிகி எடையும் கொண்டதாகும். வகைகள் பண்டைய காலத்தில்லேயே வீட்டினமாக்கப்பட்ட பருத்தி இனங்களில் பின்வரும் நான்கு வகைகள் அமைகின்றன: கோசிப்பியம் கிர்சுட்டம் (Gossypium hirsutum) – மேட்டுநிலப் பருத்தி, நடுவண் அமெரிக்காவைச் சார்ந்த மெக்சிகோ, கரீபிய, தென் புளோரிடா பகுதியைத் தாயகமாகக் கொண்டது (90% உலக விளைச்சல்) கோசிப்பியம் பார்படென்சு (Gossypium barbadense) – நீளமிகு நூலிழைப் பருத்தி, வெப்ப மண்டலத் தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது (8% உலக விளைச்சல்) கோசிப்பியம் ஆர்போரியம் (Gossypium arboretum) – மரப் பருத்தி, இந்தியா, பாக்கித்தானைத் தாயகமாகக் கொண்டது ( 2% அளவுக்கும் குறைவான உலக விளைச்சல்) கோசிப்பியம் எர்பேரியம் (Gossypium herbaceum) – இலெவாந்து பருத்தி, தென் ஆப்பிரிக்காவையும் அராபியத் தீவகத்தையும் தாயகமாகக் கொண்டது ( 2% அளவுக்கும் குறைவான உலக விளைச்சல் ) தற்கால உலகப் பருத்தி விளைச்சலில் பெரும்பகுதியை இரண்டு புத்துலகப் பருத்தி இனங்களே நிறைவு செய்கின்றன. ஆனால், பழைய உலகத்தின் இரண்டு பருத்தி இனங்களே 1900 கள் வரயுலகின் தேவை முழுவதையும் ஈடு செது வந்தன. ப்ருத்தி இயற்கையாக வெண்மை, பழுப்பு, வெளிர்சிவப்பு, பச்சை எனப் பல வண்ணங்களில் விளைந்தாலும், வெண்பருத்தியின் மரபியலுடன் பிற வண்ணப் பருந்தி இனங்கள் கலந்து மாசுபடுத்தாமை இருக்க, வண்னப் பருத்தி இனங்களின் பயிரீடு நிறுத்தப்பட்டுள்ளது. வரலாறு மிக முந்திய வரலாறு தெற்காசியா மிக முந்திய பழைய உலகப் பருத்தியின் பயன்பாடு கிமு 5500 ஆண்டளவுக்கும் முந்தையதாகும். இது புதிய கற்காலக் களமான மெக்ரகாரில் செம்பு மணிகளில் இன்றைய பக்கித்தான், பலூச்சித்தானில் போலன் கணவாயின் மலைச் சாரலில் கிடைத்தது. கி.மு 1500 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட ரிக்-வேதத்திலும் பருத்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு. 2500 ஆம் ஆண்டு இந்தியப் பருத்தி பற்றிப் புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசு "அங்கு செம்மறி ஆட்டிலிருந்து கிடைப்பதை விட அழகான, அதே அளவு தரமான கம்பளி, காடு போல் வளரும் மரங்களில் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் இம் மரக் கம்பளி இழையிலிருந்து உடைகள் நெய்து கொள்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார் (புத்தகம் iii. 106). அமெரிக்கா மெக்சிகோவில் பியூபுளாவின் தெகுக்கானில் உள்ள பழைய குகையருகில் பருத்திப் பந்துகள் கிமு 5500 ஆண்டுக்கு முன்பானவை கிடைத்துள்ளன. எனினும் இந்தக் காலக்கணிப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. மெக்சிகோவில் கிடைத்த கோசிப்பியம் கிர்சுட்டம் பருத்தியின் காலம் கிமு3400 இல் இருந்து கிமு2300 வரையிலான கால இடைவெளியினது எனக் கணிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டில், கோசிப்பியம் பார்படென்சு எனும் தாயகப் பருத்திப் பயிர்விளைச்சல் அன்கானில் கண்டுபிடித்த சான்றுவழி கிமு 4200 எனக் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது,இது கடற்கரைப் பண்பாடுகளான நார்தே சிக்கு, மோச்சே, நாசுக்காஆகிய பண்பாடுகளின் முதுகெலும்பாக விளங்கியுள்ளது.. பருத்தி ஆற்றின் கரைகளில் பயிரிட்டு வலைகள் செய்து, கடற்கரையோர மீன்பிடிக்கும் ஊர்களில் விற்ரு ஏராளமான மீன்கள் பிடிக்கப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மெக்சொகோவுக்கும் பெரு நாட்டுக்கும் வந்த எசுப்பானியர்கள் அங்கு மக்கள் பருத்தி விளவிப்பதையும் அவர்கள் பருத்தியடைகள் அணிவதையும் கண்டனர். தாயக அமெரிக்கர்களும் பருத்தியிலிருந்து ஆடைகளை நெய்ய அறிந்திருந்தனர். பெரு நாட்டுக் கல்லறைகளில் காணப்பட்ட பருத்தித் துணிகள் இன்காப் பண்பாட்டுக் காலத்துக்கு முந்தியவை. அரேபியா பெருமன்னர் அலெக்சாந்தரின் போர்கள் நிகழும் வரை கிரேக்கரும் அராபியரும் பருத்தியை பற்றி அறிந்திருக்கவில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த மெகசுத்தனீசு முதலாம் செலியூக்க்கசு நிக்தேத்தரிடம், " இந்தியாவில் மரங்களில் கம்பளி காய்த்தது" என தனது இந்திகா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்". இது இந்தியத்துனைக்கண்டத்தில் வளர்ந்த தாயகப் பருத்தியினமாகிய "மரப்பருத்தியை", அதாவது கோசிப்பியம் ஆர்போரியத்தைக் குறிப்பிட்டிருக்கலாம். கொலம்பியக் கலைக்களஞ்சியப்படி,: ஈரான் ஈரானில் (பாரசீகத்தில்), பருத்தி வரலாறு கிமு 5 ஆம் நூற்றாண்டில் ஆக்கியெமெனிடு ஊழியில் இருந்து தொடங்குகிறது. என்றாலும் இசுலாமுக்கி முந்திய இரானில் பருத்தி வளர்ப்புக்கான சில தகவல்கள் உள்ளன. ஈரானின் மெர்வு, இரே, பார்சு மாகாணங்களில் பருத்தி வளர்க்கப்பட்டுள்ளது. பாரசீகக் கவிதைகள், குறிப்பாக பெர்தோவின் சானாம் கவிதைகளில் பருத்தி (பாரசீக மொழியில் பான்பே) பற்றிய மேற்கோள்கள் உள்ளன. மார்க்கோ போலோ (13 ஆம் நூற்றாண்டு) பருத்தி உட்பட்ட பாரிய விளைபொருள்களைக் குறிப்பிடுகிறார். 17 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுப் பயணரான ஜான் சார்டின், சாபவிடு பேரரசுகாலத்தில் பாரசீகத்தில்லகல்விரிவான பருத்திப் பண்ணைகள் நிலவியதாகக்றார். சீனா சீனாவில் ஏன் பேரரசு காலத்தில் (கிமு 207 - கிபி 220), பருத்தி யுன்னான் எனும் தென்சீன மாகாணத்தில் பயிரிடப்பட்டுள்ளது. இடைக்காலம் கீழை உலகம் எகுபதியில் கிபி முதல் ஏழு நூற்றாண்டுகளில் பருத்திச் செடி வளர்க்கப்பட்டு நூற்கப்பட்டுள்ளது. ஐரோப்பா இடைக்கால அறுதியில் வட ஐரோப்பாவில் பருத்தி இழைகள் இறக்குமதி செய்த பொருளாக அறியப்பட்டிருந்தது. அப்போது பருத்தி ஒரு தாவரம் என்பதைத் தவிர, அது எப்படி பெறப்பட்டது என்பது பற்றி அறிதிருக்கவில்லை. எரோடோட்டசு வரலாறுகள் எனும் தனது நூல் III, 106 இல் இந்தியக் காடுகளில் கம்பளிதரும் மரங்கள் வளர்ந்ததாகக் கூறுவதால் பருத்த்த் தாவரம் செடியல்ல மரம் என அறியப்பட்டிருந்தது. செருமன் உட்பட்ட பல செருமானிய மொழிகளின் பருத்திக்கான சொற்களின் பொருண்மையில் இந்தக் கூறுபாடு அமைகிறது. செருமானிய மொழியில் பருத்தி பவும்வோல் என அமைகிறது இச்சொல்லின் பொருள் மரப்பருத்தி என்பதாகும். பவும் என்றால் மரம்; வோல் என்றால் கம்பளி ஆகும். முதலாம் நூற்றாண்டளவில் அராபிய வணிகர்கள் மஸ்லின், காலிக்கோ வகைத் துணிகளை இத்தாலி, எசுபானியம் ஆகிய நாடுகளுக்குக் கொண்டு வந்தனர். முஸ்லிம்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் எசுபானியத்தில் பருத்திப் பயிர்செய்வதை அறிமுகப் படுத்தினர். ஃபுஸ்தியன் (Fustian), டிமிட்டி (dimity) ஆகிய பருத்தித் துணிவகைகள் அங்கே நெய்யப்பட்டன. 14 ஆம் நூற்றாண்டில் வெனிசு, மிலான் ஆகிய பகுதிகளிலும் இது பரவியது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் மிகவும் குறைந்த அளவு பருத்தித் துணிகளே இங்கிலாந்தில் இறக்குமதியாயின. 17 ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் குழுமம் அரிய பருத்தித் துணிகளை இந்தியாவிலிருந்து கொண்டுவந்தது. 1500 களின் தொடக்கத்தில் அங்கு சென்ற எசுபானியர்கள் அப்பகுதி மக்கள் பருத்தி பயிரிடுவதையும், அதிலிருந்து ஆடைகள் செய்து அணிவதையும் கண்டுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பருத்தி ஆப்பிரிக்கா, ஐரோப்பாசியா, அமெரிக்காவின் வெப்பமான பகுதிகளில் பயிர் செய்யப்பட்டது. 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியரின் விரிவாக்கத்தையும், குடியேற்றவாத ஆட்சி நிறுவப்பட்டதையும் தொடர்ந்து இந்தியாவின் பருத்தித் தொழில்துறை படிப்படியாக நலிவடையத் தொடங்கிற்று. பிரித்தானிய கிழக்கிந்தியக் குழுமத்தினர், இந்தியாவின் பருத்தி நூற்பு ஆலைகளையும், ஆடை நிலையங்களையும் மூடி, இந்தியாவை மூலப்பொருளாகப் பருத்தியை ஏற்றுமதி செய்யும் நிலைக்கு இறக்கினர். இப் பருத்தியிலிருந்து இங்கிலாந்தில் செய்யப்பட்ட துணிவகைகளைக் கொண்டுவந்து இந்தியாவில் விற்றுப் பொருளீட்டினர். இங்கிலாந்தின் தொழில் புரட்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட நூற்பு இயந்திரங்களும், இந்தியப் பருத்தி தொழில் நசிவடைந்ததற்கான காரணமாகும். தொழிற்புரட்சிக் காலத்தில் இங்கிலாந்தில் பருத்தித் தொழில் பெரு வளர்ச்சி கண்டதுடன், துணி வகை இங்கிலாந்தின் முன்னணி ஏற்றுமதிப் பொருளாகவும் ஆனது. இங்கிலாந்தின் பர்மிங்காமைச் சேர்ந்த லூயிஸ் பால் (Lewis Paul), ஜான் வியாட் (John Wyatt) ஆகியோர் உருளை நூற்பு இயந்திரத்தையும், பருத்தியிலிருந்து சீரான அளவில் நூலை நூற்பதற்கான முறையையும் உருவாக்கினர். பின்னர் 1764 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்பு எந்திரம் (spinning jenny), 1769ல் ரிச்சார்ட் ஆர்க்ரைட்டினால் உருவாக்கப்பட்ட நூற்புச் சட்டகம் (spinning frame) என்பன பிரித்தானிய நெசவாளர்கள் விரைவாக நூல் நூற்கவும், துணி நெய்யவும் உதவின. 18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் பிரித்தானிய நகரமான மான்செசுட்டரில் பெருமளவில் பருத்தித் தொழில் நடைபெற்றதனால் அதற்கு காட்டனோபோலிஸ் (cottonopolis) என்னும் பட்டப்பெயர் வழங்கியது. அத்துடன் மான்செசுட்டர் உலகப் பருத்தி வணிகத்தின் மையமாகவும் ஆனது. 1793 ஆம் ஆண்டில் எலி விட்னி என்பவர் கண்டுபிடித்த, விதையிலிருந்து பஞ்சைப் பிரித்தெடுக்கும் பருத்தி பிரிப்பி (cotton gin) என்னும் எந்திரம் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்தது. மேம்பட்டுவந்த தொழில்நுட்பமும், உலகின் சந்தைகளில் அவர்களுக்கிருந்த கட்டுப்பாட்டு விரிவாக்கமும், உலக வணிகச் சங்கிலித் தொடர் ஒன்றை உருவாக்கப் பிரித்தானியருக்கு உதவியது. குடியேற்ற நாடுகளில் இருந்த பருத்திப் பெருந்தோட்டங்களில் இருந்து வாங்கிய பருத்தியை, இங்கிலாந்துக்குக் கொண்டு சென்று இலங்காஷயரில் இருந்த ஆலைகளில் துணிகளாக உற்பத்தி செய்து, அவற்றைப் பிரித்தானியக் கப்பல்கள் மூலம் சாங்காய், ஆங்காங் ஆகிய நகரங்களூடாக மேற்கு ஆப்பிரிக்கா, இந்தியா, சீனா ஆகியவற்றுக்குக் கொண்டு சென்று விற்றனர். 1840களில், எந்திரமயமான இங்கிலாந்தின் ஆலைகளுக்கு வேண்டிய பெருமளவு பருத்தியை வழங்கும் திறனை இந்தியா இழக்கத் தொடங்கியது. அத்துடன், பெருமளவு இடத்தை அடைக்கும், விலை குறைவான பருத்தியைக் கப்பல் வழி இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்வது செலவு கூடிய ஒன்றாகவும் இருந்தது. அதே நேரம், அமெரிக்காவில் தரம் கூடிய கொசிப்பியம் ஹிர்ஸ்சுட்டம், கொசிப்பியம் பார்படென்சு ஆகிய தாயகப் பருத்தி இனங்களின் பயிரிடுகை வளர்ச்சியடைந்து வந்தது. இவ்வினப் பஞ்சுகளின் இழைகள் நீளமானவையாகவும், வலுவானவையாகவும் இருந்தன. இக் காரணிகள் பிரித்தானிய வணிகர்களை அமெரிக்காவிலும், கரிபியப் பகுதிகளிலும் இருந்த பெருந் தோட்டங்களிலிருந்து பருத்தியை வாங்குவதற்குத் தூண்டின. இது கூலி பெறாத அடிமைகளினால் விளைவிக்கப்பட்டதால் மலிவானதாகவும் இருந்தது. அமெரிக்காவில், பருத்தி, இன்டிகோ,புகையிலை வளர்ப்பு அடிமை மக்களின் தொழிலாக இருந்து வந்தது. பின்னர் அடிமைகள் சம உரிமை பெற்ற பிறகு குத்தகை முறை வேளாண்மையிலும் அவர்கள் இவற்றையே பயிர் செய்தனர். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகப் பருத்தியே விளங்கியது. அமெரிக்காவில் அடிமைகளின் முக்கிய தொழிலாகவும் இது ஆனது. அமெரிக்க உள்நாட்டுப் போர்க் காலத்தில், தென்பகுதித் துறைமுகங்கள் ஒன்றியத்தினால் தடுக்கப்பட்டபோது அமெரிக்காவின் பருத்தி ஏற்றுமதி வீழ்ச்சி கண்டது. பிரித்தானியாவைக் கூட்டமைப்பு அரசை ஆதரிக்குமாறு தூண்டும் என்ற நம்பிக்கையில், ஒரு உத்தியாகக் கூட்டமைப்பு அரசாங்கம் பருத்தி ஏற்றுமதியைக் குறைத்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இங்கிலாந்தும், பிரான்சும் எகிப்திலிருந்து பருத்தியை இறக்குமதி செய்தன. பிரித்தானிய, பிரான்சிய வணிகர்கள் எகிப்தியப் பெருந்தோட்டங்களில் பெரும் முதலீடுகளைச் செய்தனர். எகிப்தின் அரசுத் தலைவரான இசுமாயிலும் ஐரோப்பிய வங்கிகளிலிருந்து பெருந்தொகையைக் கடன் பெற்றிருந்தார். 1865ல் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின்னர் எகிப்தின் பருத்தியைக் கைவிட்ட பிரித்தானியரும், பிரான்சியரும் மீண்டும் மலிவான அமெரிக்கப் பருத்தியை வாங்கத் தொடங்கினர். இதனால், எகிப்து பணப் பற்றாக்குறையினால் 1876 ஆம் ஆண்டில் வீழ்ச்சிநிலையை அடைந்தது. இது 1882ல் எகிப்து பிரித்தானியப் பேரரசுடன் இணைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் ஆகியது. இக்காலத்தில் பிரித்தானியப் பேரரசின் பிற பகுதிகளிலும், குறிப்பாக இந்தியாவில் பருத்தி விளைச்சல் அதிகரித்தது. இது அமெரிக்காவின் தென்பகுதிகளில் ஏற்பட்ட பருத்தி விளைச்சல் இழப்பை ஈடு செய்தது. வரிகளை விதிப்பதன் மூலமும் பிற கட்டுப்பாடுகளாலும் இந்தியாவில் துணி உற்பத்தி செய்வதைக் குடியேற்றவாத அரசு தடுத்துவந்ததுடன், பருத்தியை மூலப் பொருளாகவே இங்கிலாந்துக்கு அனுப்பியது. இது குறித்து மகாத்மா காந்தி பின்வருமாறு விவரித்தார்: பிரித்தானியர், இந்தியக் கூலிகளால் நாளொன்றுக்கு 7 சதம் பெற்றுக்கொண்டு அறுவடை செய்யும் பருத்தியை வாங்குகிறார்கள். அவர்கள் அதனை மூன்று வாரக் கடற்பயணத்தின் மூலம் இலண்டனுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதற்காக நூறுவீத இலாபத்தைப் பெறும் அவர்கள் அதனைக் குறைவு என்கின்றனர். இப் பருத்தி லங்காஷயரில் துணியாக நெய்யப்படுகிறது. இந்தியர் பென்னிகளைப் பெற்றுக்கொண்டு செய்யும் இவ் வேலைக்குப் பிரித்தானியருக்கு ஷில்லிங்குகள் கூலியாகக் கொடுக்கப்படுகின்றன. அத்துடன் பிரித்தானிய உருக்காலைகள் தொழிற்சாலைகளைக் கட்டுவதன் மூலமும், இயந்திரங்களை உற்பத்தி செய்வதன் மூலமும் இலாபம் பெறுகின்றன. இவையனைத்தும் இங்கிலாந்திலேயே செலவு செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஐரோப்பியக் கப்பல்களுக்குக் கட்டணம் கொடுத்து இந்தியாவுக்கு எடுத்து வருகிறார்கள். இதிலும், ஐரோப்பியர்களான கப்பல் தலைவர்களும், அலுவலர்களும், மாலுமிகளுமே பயன்பெறுகிறார்கள். கொண்டுவரப்பட்ட துணிகள் இந்தியாவில் அரசர்களுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் விற்கப்படுகிறது. இவர்கள் 7 சதம் கூலிபெற்று வேலை செய்யும் ஏழைக் குடியானவர்களிடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு இத்தகைய விலையுயர்ந்த துணிகளை வாங்குகிறார்கள். 1996 ஆம் ஆண்டு பெரும்பாலான புழு வகையான அழிக்கும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட மரபணு பி.டி பருத்தி (XXX) எனும் மாற்றம் செய்யப்பட்ட பருத்தி அறிமுகப் படுத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் குறிப்பாக வாரங்கல் பகுதியில் ஸ்போடாப்டிரா புழுவினால் தாக்கப்பட்டு அழிந்த பருத்தி பயிரால் ஏற்பட்ட இழப்பால் நூற்றுக்கணக்கான பருத்திப் பயிர்த்தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நிலாவில் பருத்தி சீனாவின் சாங்கே-4 பருத்தி விதைகளை நிலாவின் கட்புலனாகாத பகுதிக்குக் கொணர்ந்தது. சீனா 2019 ஜனவரி 15 ஆம் நாள் பருத்தி விதை நிலாவில் முளைத்துள்ளதாக அறிவித்துள்ளது. வரலாற்றில், உண்மையிலேயே இதுவே முதல் புறவுலகப் பயிராகும். செவ்வாய் வான் கார்மன் குழிப்பள்ளத்தில், பெட்டகமும் பருத்தி விதைகளும் சாங்கே-4 தரையிறங்கு கலத்தில் அமர்ந்துள்ளன. பயிர்விளைச்சல் தற்போது பருத்தி ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆத்திரேலியா உட்பட உலகெங்கும் பயிரிடப்படுகிறது. இதில் 2015 ஆண்டின் அமெரிக்க வேளாண்துறையின் ஆய்வின் படி இந்தியா பருத்தி விளைச்சலில் முதல் இடத்தில் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிடிக்க வாய்ப்புள்ளதால் பேரளவில் பஞ்சு இழைகளை உருவாக்கவல்ல வகைகள் தேர்ந்தெடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. 2002 ஆம் ஆண்டில் 330,000 ச.கி.மீ. பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு, 2000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2.1 கோடி டன் பஞ்சு விளைச்சல் செய்யப்பட்டது. பருத்தி விவசாயிகள் பெரும்பாலும் வேதி உரங்களையும், பூச்சி மருந்துகளையும் நம்பியுள்ளனர். அண்மைக்காலங்களில், சில பயிர்த்தொழிலாளர்கள் இயற்கை பயிர்த்தொழில் முறையில் பருத்தி பயிரிடத் துவங்கியுள்ளனர். அமெரிக்கவைப் பொருத்தவரை பஞ்சுக்காய் வண்டு (Boll weevil) ஒரு முதன்மை அழிவிக்கும் பூச்சியாகும். இந்தியாவில், பஞ்சுக்காய் புழு (Boll worm) மற்றும் ஸ்போடாப்டிரா (Spodoptera exigua) புழுக்கள் அதிக அளவில் விளைச்சலுக்கு ஊறு விளைவிக்கின்றன. மேலை நாடுகளில் பஞ்சு பெரும்பாலும் எந்திரங்களின் உதவியுடன் அறுவடை செய்யப்படுகிறது. இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ இலைகள் உதிர்ந்ததும் பஞ்சுக்காய்கள் பறிக்கப்படுகின்றன அல்லது தகுந்த வகையினங்களில் பஞ்சு மட்டும் காயிலிருந்து பறிக்கப்படுகிறது. நில நடுக்கோட்டுப் பகுதியில் பஞ்சு பல ஈடுகள் தொடர்ந்து வளரக்கூடியது. பயன்கள் பருத்தி முக்கியமாக உடை தயாரிக்க பயன்படுகின்றது. மீன்பிடி வலைகள், கூடாரங்கள், புத்தக அட்டைகள் ஆகியவற்றிலும் பருத்தி பயன்படுத்தப்படுகிறது. சீனர்கள் உருவாக்கிய முதல் காகிதம் பஞ்சு இழைகளைக்கொண்டே உருவாக்கப்பட்டது. தற்போதைய அமெரிக்க டாலர் நோட்டும், அரசாங்க காகிதங்களும் பஞ்சு இழை கலந்தே செய்யப்படுகின்றன. டெனிம் எனும் உறுதியான முரட்டுத்துணி வகை பெரும்பாலும் பருத்தியைக் கொண்டே செய்யப்படுகிறது. பஞ்சு பிரிக்கப்பட்ட, பருத்தி விதைகளிலிருந்து பருத்திக்கொட்டை எண்ணெய் ஆட்டப்படுகிறது. தூய்ம செய்யப்பட்ட பின், இது மனிதர்களால் மற்ற எண்ணெய்கள் போலவே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய் பிரித்த பின் கிடைக்கும் புண்ணாக்கு, விலங்குகளுக்குத் தீவனமாக பயன்படுகிறது. பன்னாட்டு வணிகம் முன்னணி பருத்தி விளைச்சல் நாடுகள் வணிக நீதி இயக்கம் பருத்தி உலகெங்கிலும் ஒரு முதன்மையான பணப்பயிராக இருப்பினும், வளரும் நாடுகளிலுள்ள பருத்தி வேளாளர்களுக்கு குறைந்த அளவே ஊதியமும் இலாபமும் கிடைக்கிறது. அவர்களால் முன்னேறிய நாடுகளிலுள்ள பெரும் வேளாளர்களுடன் போட்டியிட முடிவதில்லை. இது [வணிக நீதி இயக்கம்] மூலம் சில நாடுகளில் சரி செய்யப்படுகிறது. பிரித்தானியச் செந்தர நூல் அளவுகள் 1 புரி = 1 குஞ்சம் = 80 புரிகள் () 1 சிலுப்பை = 7 குஞ்சங்கள் () 1 பொந்து = 18 சிலுப்பைகள் () இழை இயல்புகள் வேதி உட்கூறுகள் நாரிழையம் (cellulose) 91.00% நீர் 7.85% முற்கணிகம், பெக்டின்கள் 0.55% மெழுகு, கொழுப்புப் பொருள்0.40% கனிம உப்புகள் 0.20% பருத்தி மரபன்தொகை மேற்கோள்கள் மேலும் படிக்க Beckert, Sven. Empire of Cotton: A Global History. New York: Knopf, 2014. Brown, D. Clayton. King Cotton: A Cultural, Political, and Economic History since 1945 (University Press of Mississippi, 2011) 440 pp. Ensminger, Audrey H. and Konlande, James E. Foods and Nutrition Encyclopedia, (2nd ed. CRC Press, 1993). USDA – Cotton Trade Moseley, W.G. and L.C. Gray (eds). Hanging by a Thread: Cotton, Globalization and Poverty in Africa (Ohio University Press and Nordic Africa Press, 2008). Riello, Giorgio. Cotton: The Fabric that Made the Modern World (2013) excerpt Smith, C. Wayne and Joe Tom Cothren. Cotton: origin, history, technology, and production (1999) 850 pages True, Alfred Charles. The cotton plant: its history, botany, chemistry, culture, enemies, and uses (U.S. Office of Experiment Stations, 1896) online edition Yafa, Stephen H. Big Cotton: How A Humble Fiber Created Fortunes, Wrecked Civilizations, and Put America on the Map (2004) excerpt and text search; also published as Cotton: The Biography of a Revolutionary Fiber. New York: Penguin USA, 2006. excerpt வெளி இணைப்புகள் சிதையும் உயிரியல் பொருட்கள் நாரிழையம் பயிர்கள்
6459
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
மின்சார இயக்கி
மின்சார இயக்கி (Electric Motor) அல்லது மின் சுழற்பொறி என்பது மின்காந்த ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் ஒரு இயக்கி ஆகும் . மின்காந்தப் புலம், மின்னோட்டம், இயந்திர அசைவு ஆகியவற்றுக்கு செங்கோணத் தொடர்பு உண்டு. அதாவது, மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் ஒரு மின்காந்தப் புலத்தில், மின் கடத்தி (அல்லது கம்பம்) ஒன்றை மேலே இருந்து கீழே அசைத்தால் அக் கடத்தியின் ஊடாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஒரு மின்னோட்டம் இருக்கும். அக் கம்பத்தை மேலே அசைத்தால் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி மின்னோட்டம் இருக்கும். இந்த அடிப்படை குறிப்பு மின்சார இயக்கிகளை விளங்குவதற்கு முக்கியம். நுட்பியல் சொற்கள் மின்னகம் - Armature மின்னக சுருணை - Armature Winding மின்னக மின்னோட்டம் - Armature Current மின்னோட்ட இடைமாற்றி, நிலை மாற்றி - Commutator மின் தொடி - Brushes அச்சு - Axle சுற்றகம் - Rotor நிலையகம் - Stator இதனையும் பாருங்கள் மின்னியற்றி மின் உற்பத்தி மின்சார இயக்கிகள்
6460
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
கட்டுப்பாட்டியல்
ஓர் அமைப்பின் (System) இயக்கத்தை சரிவர இயங்க ஏற்றவாறு சமிக்ஞைகளை அல்லது உத்தரவுகளை வழங்கும் பிரிவை கட்டுபாட்டு அமைப்பு என்றும், எவ்வாறு அக்கட்டுபாட்டு அமைப்பை கணித ரீதியாக விபரித்து, இலத்திரனியல் சுற்று அல்லது இயந்திர அமைப்பு கொண்டு செயல்படுத்தலாம் என்பதை ஆயும் துறையை கட்டுப்பாட்டியல் (Control theory) என்றும் குறிப்பிடலாம். கட்டுப்பாட்டியல் வரலாறு ஒரு செயல்பாட்டை அல்லது அமைப்பை நிர்வாகிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்ட்டிய தேவை என்றும் இருந்து வருகின்றது. உதாரணத்துக்கு வயல்களுக்கு நீர் பாய்ச்சுதலை கட்டுப்படுத்தல் பயிர்களுக்கு தேவைக்கேற்ற நீரை பகிர உதவுகின்றது. வாய்க்கால்கள், வரம்புகள் துணை கொண்டு வயல்களுக்கு நீர் பகிர்தலை நிர்வாகிக்க முடியும். பாரிய நிறுவன வயல்களில் விமானம் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட நீர் பகிர்தலும் இடம்பெறுகின்றது. மாட்டு வண்டியில் பயணம் செய்யும் பொழுது, கடலில் பாய்மரக்கப்பலில் பயணம் செய்யும் பொழுது வேக விகிதத்தை, திசையை கட்டுப்படித்தல் அவசியமாகின்றது. பாய்மரக்கப்பலின் பாய்களை கட்டுவது இறக்குவது, துலாவது போன்ற நடவடிக்க்கைகளின் ஊடாக அதை கட்டுப்படுத்தலாம். இப்படியாக ஆரம்ப காலம் தொட்டு கட்டுப்படுத்தல் என்பது மனிதனின் அனேக செயல்பாடுகளின் ஒரு அடிப்படை அம்சமாக இருந்து வருகின்றது. நுட்பியல் சொற்கள் பின்னூட்டுக் கட்டுப்பாடு PID கட்டுப்பாடு குறை சுற்றுக் கட்டுப்பாடு நிறை சுற்றுக் கட்டுப்பாடு கட்டுப்பாட்டியல்
6463
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF
பவானி
பவானி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி வட்டம் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஈரோடு மாநகராட்சி எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும். ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவிலும் ஈரோடு சந்திப்பிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம், பவானி, நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சிறப்புகள் இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும், பவானி, கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ்பெற்றவை. மக்கள் வகைப்பாடு 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,147 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 39,225 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.7% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,005 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,519 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 923 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,251 மற்றும் 40 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.33%, இசுலாமியர்கள் 4.24%, கிறித்தவர்கள் 2.35% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர். மேற்கோள்கள் தமிழ்நாடு நகராட்சிகள் ஈரோடு மாவட்டம் இந்து புனித நகரங்கள்
6464
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D
பழம்
பூக்கும் தாவரங்களில் விதையுடன் கூடிய முதிர்ந்த சூலகமானது பழம்(கனி) என்று அழைக்கப்படுகிறது. முதிராத நிலையில் உள்ள பழம் காய் எனப்படுகிறது. பழங்கள் காய்களை விட அதிக சர்க்கரைத் தன்மையைக் கொண்டவை. இது பழத்தை உண்ண வரும் விலங்குகளையும், பறவைகளையும் ஈர்க்க உதவும். விலங்குகளும் பறவைகளும் தொலை தூரம் நகரக்கூடியவையாதலால் அவை பழத்தை உண்பது தாவரங்களின் விதைகளைப் பரப்ப உதவுகிறது. தாவரவியல் கனி மற்றும் சமையல் கனிகள் விதைகள் மற்றும் கனிகள் என்று நாம் அழைக்கும் பொதுவான சொற்கள் தாவரவியல் வகைப்பாடுகளுடன் பொருந்தவில்லை. சமையல் சொற்களில் கனி என்பது தாவரத்தின் இனிப்பான பகுதியாக குறிப்பிடப்படுகிறது. தாவரவியலில் கொட்டை என்பது கடினமான, எண்ணெய் தன்மையுடைய ஓடுடைய உருவாக்கத்தைக் குறிக்கிறது. இதே போல காய்கறி என்பது குறைந்த இனிப்புத் தன்மையுடைய மனமுடைய தாவர பாகங்களைக் குறிக்கிறது. இருப்பினும் தாவரவியலில் கனி என்பது முற்றிய விதைகளுடைய சூற்பையை குறிக்கிறது. கொட்டை உண்மையில் விதைகள் அல்ல. அது முற்றிய சூற்பையுடைய கனியாவே கருதப்படுகிறது. . சமையலில் காய்கறிகள் மற்றும் கொட்டைகள் என்று அழைக்கப்படுபவை தாவரவியலில் கனி என அழைக்கப்படுகிறது, சோளம், குக்கர்பிட்டே (உ.ம். வெள்ளரி, பூசனி, மற்றும் பரங்கிக்காய் ) , கத்திரி, பயறு வகை தாவரங்கள் (பீன்ஸ், நிலக்கடலை, பட்டாணி), இனிப்பு மிளகு மற்றும் தக்காளி. கூடுதலாக மிளகாய், சில மசாலாக்கள் போன்றவைகளும் தாவரவியலில் கனி என அழைக்கப்படுகிறது. அமைப்பு கனியின் பெரும்பாலான உண்ணத்தக்க பகுதி சுற்றுக்கனியம் (pericarp) ஆகும். இது சூலகத்திலிருந்து உருவாகி விதைகளை மூடிக் காணப்படும். இருந்த போதிலும் சில சிற்றினங்களில் வேறு சில தசை பகுதிகளும் உண்ணத்தக்கதாக உள்ளன. சுற்றுக்கனியம் வெளிப்புறம் முதல் உட்பகுதி வரை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. வெளிப்பகுதி வெளியுறை (epicarp) அல்லது தோல் என்றும் நடுப்பகுதி இடைக்கனியம் (mesocarp) என்றும் உட்பகுதி உட்கனியம் (endocarp) எனவும் அழைக்கப்படுகிறது. வளர்ச்சி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மலர்களின் முதிர்ச்சியே கனி உருவாதலுக்கு காரணமாகின்றன. மலர்(கள்) இன் பெண் பகுதியான சூலகம் கனியின் அனைத்துப் பகுதிகளையும் உருவாக்குகிறது. கருவுறுதல் சூலகத்தினுள் உள்ள ஒன்று அல்லது மேற்பட்ட சூலகப் பாலணுக்கள் கரு முட்டையைக் கொண்டுள்ளன. இரட்டைக் கருவுறுதலுக்குப் பின் சூல்கள் விதையாக வளர்கின்றன. இச்சூல்களின் கருவுருதலானது மகரந்தச்சேர்க்கை எனும் செயல்முறையோடு துவங்குகிறது.மலரின் ஆண் இனப்பெருக்க பாகமான மகரந்தப்பையில் இருந்து வெளியேறும் மகரந்தத்தூள் பெண் இனப்பெருக்கப் பகுதியான சூலகத்தின் சூல்முடியை வந்தடைகிறது .(மகரந்தச்சேர்க்கை). பின்னர் மகரந்தத் தூள் முளைக்கத்தொடங்கி அதிலிருந்து குழல் ஒன்று வளரத்தொடங்குகிறது. மகரந்தக் குழல் மூலம் கீழாக சூழ்தண்டினுள் சூற்பையை நோக்கி வளர்ந்து செல்கிறது. பின்னர் மகரந்த குழலின் நுனியானது சூலகத்தை அடைந்தவுடன் சூழ் துளையைத் (micropyle) துளைத்துக்கொண்டு சூற்பைக்குள் நுழைகிறது.அங்கு மகரந்தக்குழலானது வெடித்து தான் சுமந்து சென்ற இரண்டு ஆண் பாலணுக்களை தனித்து விடுகின்றது. தனித்து விடப்பட்ட இரண்டு ஆண் பாலணுக்களில் ஒன்று பெண் பாலணுவுடன் இணைத்து கருவினை உருவாக்குகிறது. மற்றொரு ஆண் இனச்செல்லானது சூற்பையின் மையத்திலுள்ள இரண்டு துருவ உயிரணுக்களுடன் இணைகிறது. இவ்வாறு இரண்டு ஆண் இனச்செல்களில் ஒன்று கருமுட்டையுடனும் (அண்டம்) மற்றொன்று துருவ உயிரணுக்களுடன் (Polar Nuclei) இணையும் மொத்த நிகழ்வும் இரட்டைக் கருவுறுதல் (Double Fertilization) என்றழைக்கப்படுகிறது. இரண்டாவது ஆண் பாலணு மேலும் நகர்ந்து இரண்டு துருவ உயிரணுக்கள் அல்லது இரண்டாம் நிலை உயிரணுக்களுடன் இணைந்து முதல்நிலைக் கருவூண் உயிரணுவை தோற்றுவிக்கிறது. இவ்வாறு இந்த மூன்று உயிரணுக்களை உள்ளடக்கிய இணைதல் நிகழ்ச்சிக்கு மூவிணைவு (Triple Fusion) என்று பெயர்.இந்நிகழ்விற்கு உடல் கருவுருதல் எனவும் அழைக்கப்படுகிறது. சில தாவரங்களில் இந்த உயிரணு பண்மயத்தன்மையுடன் காணப்படலாம்..இவ்வாறு உருவான கருவூண் உயிரணு ஊட்டத்திசுவாக வளர்ந்து முளை சூழ்தசையை (Endosperm) தோற்றுவிக்கிறது.இந்த ஊட்டச்சத்துள்ள திசுவானது வளரும் கருவுக்கு உணவூட்டத்தை அளிக்கிறது.கருவுற்ற பெண் முட்டையைச் (சூழ்) சூழ்ந்துள்ள சூற்பை கனியாக மாறி விதையை (சூல்) பாதுகாக்கிறது இவ்வாறு சூல் விதையாக மாறிய பின்னர் முற்றிய நிலையில் சூலின் வெளிப்பகுதியான சுற்றுக்கனியம், தசைக்கனி (தக்காளி) அல்லது உள்ஓட்டுத் தசைக்கனி (மா) போல சதைப்பற்றுள்ளதாகவோ கொட்டைகளைப் போல கடினமானதாகவோ இருக்கக்கூடும். பல விதைகள் கொண்ட கனிகளில் சதை வளர்ச்சியானது கருவுற்ற சூல்களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதத் தொடர்புடையது. சுற்றுக்கனியமானது வேறுபடுத்தி இறியக்கூடிய வகையில் இரண்டு அல்லது மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அது முன்பு குறிப்பிட்டதைப் போல வெளிப்பகுதி வெளியுறை (வெளி அடுக்கு) (epicarp) அல்லது தோல் என்றும் நடுப்பகுதி இடைக்கனியம் (நடு அடுக்கு) (mesocarp) என்றும் உட்பகுதி உட்கனியம் (உள் அடுக்கு) (endocarp) எனவும் அழைக்கப்படுகிறது. சில கனிகளில் குறிப்பாக தனிக் கனிகள் கீழ் மட்டச் சூற்பையிலிருந்து உருவாகின்றன. மேலும் அவற்றில் பூவின் துணை இனப்பெருக்க உறுப்புகளான அல்லி புல்லி சூல் முடி போன்றவை கனியுடன் இணைந்தே காணப்படுகின்றன. மற்ற ஏனைய கனிகளில் அவை கருவுறுதலுக்குப் பின்னர் உதிர்ந்து விழுந்து விடுகின்றன. இத்தகைய பிற மலர் பாகங்கள் கனியின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாக இருக்கும் போது, அது ஒரு துணைக் கனி என்று அழைக்கப்படுகிறது. மலரின் மற்ற பகுதிகளானது பழத்தின் கட்டமைப்பிற்கு காரணமாக இருப்பதால், ஒரு குறிப்பிட்ட பழ வடிவங்களை புரிந்துகொள்ள அப்பகுதிகள் உதவியாக உள்ளன. கனி உருவாதல் முறை கனியானது மூன்று பொதுவான விதங்களில் உருவாகின்றன. அவையாவன இணையாச் சூலிலைச் சூலகக் கனி (Apocarpous) இணைந்த சூலிலைச் சூலகக் கனி (Syncarpous) கூட்டுக்கனி (Multiple fruits ) மேலும் தாவர அறிவியலாளர்கள் கனிகளை தனிக்கனி திரள்கனி கூட்டுக்கனி என மூன்று முக்கியக் குழுக்களாகப் பிரித்துள்ளனர். இக்குழுக்களில் உள்ள தாவரங்கள் பரிணாம ரீதியாக தொடர்புடையவை கிடையாது. பல்வேறு பரந்து பட்ட வேறுபாடுகளைக் கொண்ட வகைப்பாட்டியலின் கீழுள்ள தாவரங்கள் ஒரே குழுவில் காணப்படக்கூடும். ஆயினும் மலரின் பாகங்கள் மற்றும் கனியின் தோற்றம் உருவாக்கங்களில் ஒற்றுமைகள் காணப்படும். தனிக்கனி ஒரு தனித்த மலரின் சூலகத்திலிருந்து உருவாகும் கனிகள் தனிக்கனிகள் ஆகும். தனிக்கனிகள் சதைப்பற்றுள்ளதாகவோ உலர்ந்த நிலையிலோ காணப்படக்கூடும். மேலும் இவ்வகைக் கனிகள் முற்றியவுடன் வெடித்து விதைகளை வெளியேற்றும் விதமாகவோ அல்லது வெடிக்காமல் சதைப்பகுதி மூடிய நிலையிலோ காணப்படும். உலர்கனியின் வகைகள் அங்காப்பிலி (achene) – ( உ.ம்., : செம்புற்று) பல்புற வெடிகனி (capsule) – ( உ.ம்., : பிரேசில் கொட்டை) கொட்டையுருவுளி (caryopsis) – (உ.ம்., : கோதுமை) குழிவுக்கலனி (cypsela) – ( உ.ம்., : சீமைக் காட்டுமுள்ளங்கி) நார் கொட்டைக்கனி (fibrous drupe) – ( உ.ம்., :தேங்காய் ) ஒருபுறவெடி கனி (follicle) – ( உ.ம்., : எருக்கு) அவரைக் குடுப்பக் கனி (legume) ( உ.ம்., :நிலக்கடலை, பீன்ஸ் ) பருப்புவிதைசூழ் கனி (loment) கொட்டை (nut) சிறகுக் கனி (samara) பிளவையக் கனி (schizocarp) தனி சதைக்கனிகளின் வகைகள் தனிக்கனிகளாக இருக்கும் சதைக்கனிகள் பழுக்கும் போது அவற்றின் சுற்றுக்கனியம் (pericarp) என்றழைக்கப்படும் கனித்தோல் முழுவதுமாகவோ அல்லது அதன் ஒரு பகுதியோ சதைப்பற்று கொண்டதாகவும் சாறு நிறைந்தும் காணப்படும். சதைக்கனி (berry) - தக்காளி , குருதிநெல்லி உள் ஓட்டுச்சதைக்கனி (drupe)- மாங்கனி அணங்கீயம், (Hesperidium) -ஆரஞ்சுவகைக் கனிகள் வௌ்ளரீயம் (pepo) - வெள்ளரி வகைகள் வாங்கிச்சதையம் (pome) - செம்பேரி குமளிப்பழம் (ஆப்பிள்), திரள் கனி ஒரு மலரின் பல இணையாத சூலிலைகளில் இருந்து உருவாகும் கனிகள் திரள் கனிகள் ஆகும். இத்தகைய தனித்த சூலிலைகள் இணைந்திருக்காமல் மேல் மட்டச்சூற்பையில் இருந்து ஒவ்வொன்றும் ஒரே காம்பில் தனித்தனி கனிகளாக உருவாகின்றன. உதாரணம்: நெட்டிலிங்க மரத்தின் கனிகள். கூட்டுக்கனி ஒரு மஞ்சரியின் (Inflorescence) பல மலர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கனியாக வளர்வதை கூட்டுக்கனி என்கிறோம். இவ்வகைக் கனியில் மலர்கள் சேர்ந்து ஒரு பெரிய கனியாக வளர்ச்சியடைகிறது. எனவே இக்கனிகள் ஒரு பொய்க்கனிகள் ஆகும். பலாக்கனி கூட்டுக்கனிக்கான உதாரணங்களில் ஒன்று. பழங்கள்(கனிகள்) பட்டியல் மா பலா/பலாப் பழம் வாழைப் பழம் கொய்யா நெல்லி/நெல்லிக் கனி, நெல்லிக்காய் அன்னாசிப் பழம் ஆரஞ்சுப் பழம் கொடிமுந்திரி, திராட்சை பப்பாளி, பப்பாபழம் இலந்தை மாதுளை மங்குசுத்தான் தோடை குமளி, ஆப்பிள் நாவல்/நாவற் பழம் வில்வம் எலுமிச்சை புளி/புளியம்பழம் பனை/பனம்பழம் அத்தி விளாத்தி, விளாம்பழம் கொவ்வை/கோவம்பழம் குழிப்பேரி (peach) பேரி (pear) கிவி (kiwi) நீலநெல்லி(blueberry) செம்புற்றுப்பழம் (strawberry) சேலாப்பழம் (cherry) கொத்துப்பேரி (plum) வெண்ணைப்பழம் (avocado) ஈச்சம்பழம் பேரிச்சைப் பழம் நாகதாளிப்பழம் வத்தகப்பழம் (watermelon) வெள்ளரிப்பழம் அன்னமுன்னாப்பழம் ஜம்புக்காய் அணிஞ்சில்பழம் அத்திப்பழம் ஈச்சம்பழம் பாலைப்பழம் வெள்ளரிப்பழம் விலிம்பிக்காய் கொவ்வைப்பழம் காரைப்பழம் சூரைப்பழம் - Zizyphus Oenoplia Fruit பூலாப்பழம் நாகப்பழம் நாரத்தம்பழம் துரியன் பழம் சீத்தாப் பழம் முலாம் பழம் முந்திரிப் பழம் தமிழ்ச்சூழலில் பழங்கள் பண்டைய தமிழகத்தில் மா, பலா, வாழை ஆகிய பழங்கள் முக்கனிகள் என்று வழங்கப்பட்டன. ஔவை அதியமானுக்கு கொடுத்த நெல்லிக்கனியும், நாரதர் சிவனிடம் கொடுத்த ஞானப்பழமும் பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடத்தகுந்தவை. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பழங்கள் கலைக்களஞ்சியம் (Encyclopedia of fruits).
6465
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D
ஆப்பிள்
அர்த்திப்பழம் (இலங்கை வழக்கு: அப்பிள்) அல்லது குமளி என்பது வருடத்திற்கொரு முறை இலையுதிரும், ரோசாசிடே குடும்பத் தாவரமாகும். சுவைமிக்க இதன் பழம் குமளிப்பழம், ஆப்பழம், சீமையிலந்தம்பழம், அரத்திப்பழம், ஆப்பிள் அல்லது அப்பிள் என அழைக்கப்படுகின்றது. பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவும் காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும். மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp. ஆப்பிள் மற்ற பழங்களைப் போலப் பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும், அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன. ஆப்பிள் மரம் ஆப்பிள் மரம் சிறிய இலையுதிர்மரமாகும். சுமார் 5–12 மீ உயரம் வரை வளரக்கூடியதுடன், பரந்த கிளைப்பகுதிகளும் கொண்டது. இதன் நீள்கோள வடிவ இலைகள் காம்பில் மாற்றடுக்காக அமைந்துள்ளன. இதன் வெள்ளை நிறப்பூக்கள் ஐந்து இதழ்களுடையவை. ஆப்பிள் பழம் இலையுதிர் காலத்தின் போது முதிர்ச்சி அடைகின்றது. வரலாறு தற்போது விளைவிக்கப்படும் ஆப்பிள் Malus domestica என்ற சிற்றினத்தைச் சேர்ந்தது. இதன் முன்னோடி இனமான Malus sieversii இன்றும் மத்திய ஆசியாவில் கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா (சிஞ்சியாங் பகுதி) ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவ்வினம் பலவிதமான அழிக்கும்பூச்சிகளையும் நோய்களையும் தாங்க வல்லது. இதனால் இன்றும் இவ்வினம் ஆப்பிள் ஆராய்ச்சியில் பயன்படுகிறது. மேலும் Malus baccata மற்றும் Malus sylvestris ஆகிய ஆப்பிள் சிற்றினங்களும் கலப்புவிருத்தி செய்து புதிய ஆப்பிள் இரகங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அனேகமாக, தோடை வகை மரங்களுக்கு அடுத்ததாக, ஆப்பிள்தான் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிர் செய்யப்பட்டு வரும் மரமாக இருக்கும் எனலாம். ஆசியா, ஐரோப்பா, அர்ஜென்டினா போன்ற இடங்களில் வசித்த மக்களின் உணவில், ஆப்பிள் ஒரு முக்கியமான பழமாக இருந்துள்ளது. அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் வருகைக்குபின் ஆப்பிள் பிரபலமடைந்தது. ஆப்பிள் என்ற சொல், பழைய ஆங்கிலச் சொல்லான aeppel (பொருள்: உருண்டை) என்ற சொல்லிலிருந்து வந்தது. சீமையிலந்தம்பழம் (ஆப்பிள்) இரகங்கள் பயிரிடப்படும் ஆப்பிள்களில் சுமார் 7500 இரகங்கள் உள்ளன. தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு பலவித இரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஆப்பிள் மரங்கள் பூக்கக் குளிர் அவசியம் என்பதால், பூமத்தியரேகைப் பகுதிகளில் இவை பூக்கா. அதிகமாக விரும்பப்படும் ஆப்பிள்கள் மிருதுவாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும். ஆப்பிள் கலப்பின விருத்தியில் பின்வரும் குணங்கள் மேம்படுத்தப் படுகின்றன: நிறமுள்ள வெளிப்புறம், கடினத்தோல் இல்லாமை, அதிகநாள் கெடாதிருத்தல், அதிக விளைச்சல், நோய் எதிர்ப்பு, நல்ல ஆப்பிள் வடிவம், நீளமான காம்பு (பழத்தின் மேற்புறம் பூச்சி மருந்து தெளிக்க வசதியாக) மற்றும் விரும்பப்படும் சுவை, மணம். முந்தைய இரகங்கள் பெரும்பாலும் வித்தியாசமான வடிவமும், கடினத்தோலும், பல்வேறு நிறங்களும் கொண்டிருந்தன. இவற்றில் பல, நல்ல சுவைமணம் கொண்டிருப்பினும், குறைந்த விளைச்சல், நோய் எதிர்ப்பின்மை போன்ற குணங்கள் இல்லாமல் இருக்கும். இருப்பினும், இவற்றுள் சில இன்றும் விவசாயிகள் மிகச்சிலரால் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. பற்பல வேறுபட்ட சுவைமணம் கொண்ட ஆப்பிள்கள் இன்றும் பல இடங்களில் உள்ளன. பெரும்பாலான ஆப்பிள்கள் பழமாகச் சாப்பிட உகந்தவை; சில சமைத்துச் சாப்பிடவும், சிடர் பானம் தயாரிக்கவும் உகந்தவை. சிடர் வகை ஆப்பிள்கள், பெரும்பாலும் அதிக உவர்ப்புத்தன்மை உள்ளவை; ஆனால், இவை சிடர் பானத்திற்கு நல்ல சுவைமணம் தருகின்றன. பொதுவாகப் பயிரிடப்படும் ஆப்பிள் வகைகளும், பயிரிடப்படும் இடங்களும் கீழ்வருமாறு: பழமாக உண்ணப்படும் இரகங்கள்: அன்டனோவ்கா (உருசியா) பால்ட்வின் (அமெரிக்கா: மாசசூசெட்சு) ப்ராபொர்ன் (நியுசிலாந்து) ப்ராம்லே (இங்கிலாந்து) கோர்ட்லான்ட் (அமெரிக்கா: நியுயார்க்) ப்யூஜி (யப்பான் மற்றும் ஆசியாவெங்கும், ஆசுத்திரேலியா) கோல்டன் டெலிசியஸ் (அமெரிக்கா: வாசிங்டன்) க்ரானி ஸ்மித் (ஆசுத்திரேலியா) க்ராவென்ஸ்டீன் (யெர்மனி) மக் இன்டோஷ் (கனடா) ராயல் காலா (நியுசிலாந்து) சிடர் இரகங்கள்: டைமாக் ரெட் கிங்ஸ்டன் பிலாக் ஸ்டோக் ரெட் அடிப்பாகக் கன்று இரகங்கள்: வீரிய, மிக வீரிய இரகங்கள்: டவுசின், M1, M2, M16, M25, MM106, MM111 குள்ள இரகங்கள்: பிரென்ச் பாரடைஸ், M9, M26, M27 வறட்சி தாங்கும் இரகங்கள்: நார்தர்ன் ஸ்பை அடிப்பாகக் கன்று இரகத்தைத் தேர்ந்தெடுப்பது சற்றே கடினமான செயலாகும். வீரிய இரகங்கள் நன்றாக வளர்ந்தாலும், சரியாகக் கிளை கழிக்காவிட்டால் அறுவடை செய்வது மிகக் கடினம். குட்டையான இரகங்கள், அறுவடை செய்ய எளிது; ஆனால், குறைவான ஆயுள் கொண்டனவாய் இருக்கும். கீழுள்ள இரகங்களில் 'M' வகைகள் 'கிழக்கு மாலிங் ஆராய்ச்சி நிலையத்தில்' உருவாக்கப்பட்டவை. ஆப்பிள் இரகங்களின் பெரிய பட்டியல் (ஆங்கிலம்) ஆப்பிள் சுவைமணங்கள் இன்றைய ஆப்பிள்கள் முந்தைய ஆப்பிள்களை விடக் கூடுதல் இனிப்பானவை. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பெரும்பாலும் சுவையான, புளிப்புக் குறைவான ஆப்பிள்களும், சிறுபான்மையினரால் உவர்ப்பு வகை ஆப்பிள்களும் விரும்பப்படுகின்றன. ஆசியாவில், குறிப்பாக இந்தியாவில், மிக இனிப்பான ஆப்பிள்கள் விரும்பப்படுகின்றன. ஆப்பிளின் சுவையும், மணமும் பெரும்பாலும் தனிமனித விருப்பத்தையே பொருத்தது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் "ரெட் டெலிசியஸ்" என்ற ஆப்பிள் இரகத்தை வளர்த்துப் புகழடைந்தது. ஆனால், அண்மையில் பல அமெரிக்கர்கள் ரெட் டெலிசியசை, பியுஜி, காலா போன்ற இரகங்களை விடக் குறைந்த தரமுள்ளதாகக் கருதுகின்றனர். ஆப்பிள் வளர்ப்பு கலப்பின விருத்தி பெரும்பாலான பழ மரங்களைப் போல, ஆப்பிள் மரங்களும் ஒட்டுப் போடுவதன் மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள் கன்றுகள், தம் தாய் மரத்தைவிட முற்றிலும் மாறுபட்டிருக்கக்கூடும். பல புதிய ஆப்பிள் வகைகள் தானாக ஏற்படும் மாற்றங்களாலோ, செயற்கையான கலப்பு மூலமோ கன்று வடிவிலேயே தோன்றுகின்றன. ஓர் ஆப்பிள் இரகத்தின் பெயரில் சீட்லிங் (seedling), பிப்பின் (pippin), கெர்னெல் (kernel) போன்ற சொற்கள் இருப்பின், அது கன்று மூலம் உருவானது என அறியலாம். சில இரகங்கள் முளை மொட்டு மூலமும் உருவாகின்றன. இயற்கையாக ஏற்படும் மரபணு மாற்றம் மூலம் சில கிளை மொட்டுக்கள் விரும்பத்தகுந்த குணங்களைக் கொண்டிருக்கும். சில நேரங்களில், இவை தாய் மரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கும். சில கலப்பினவியலாளர்கள் ஆப்பிள்களைக் கடின ஆப்பிள் வகைகளுடன் கலப்பு்ச் செய்து சற்றே கடினமான ஆப்பிள்களை உருவாக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக, மின்னசோட்டா பல்கலைக்கழகத்தின் எக்செல்சியர் ஆராய்ச்சி மையத்தில், பல கடின வகை ஆப்பிள் இரகங்கள் உருவாக்கப்பட்டு மின்னசோட்டா, விஸ்கான்சின் மாநிலங்களில் பயிரிடப்படுகின்றன. ஹரால்சன், வெல்த்தி, ஹனி கோல்ட், ஹனிகிரிஸ்ப் ஆகியவை இங்கு உருவாக்கப்பட்டவை. ஹனிகிரிஸ்ப், மின்னசோட்டா மக்களால் பெரிதும் விரும்பப் பட்டதால் ஒரு காலகட்டத்தில் ஆப்பிள் வளர்ப்போர் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி விட்டு இவ்வகைக் கன்றுகளைப் பயிரிட்டது இன்று வரை கேட்டறியாததாகும். தோட்டம் அமைத்தல் ஆப்பிள் தோட்டங்கள் இரண்டு அல்லது மூன்று வருடக்கன்றுகளை நடுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இக்கன்றுகள் இவற்றுக்கான நாற்றங்கால்களில் ஒட்டு மூலமோ, கிளைமொட்டு மூலமோ உருவாக்கப்படுகின்றன. முதலில் விதை மூலமோ அல்லது திசு வளர்ப்பு மூலமோ, ஓர் ஆப்பிள் கன்று உருவாக்கப்பட்டு ஒரு வருடம் வளர்க்கப்படுகிறது. பின்னர், இதன் மேற்பாகம் வெட்டப்பட்டு, வேறொரு கன்றின் மேற்பாகம் ஒட்டப்படுகிறது. சில நாட்களில் இரு பாகங்களும் இணைந்து மரக்கன்றாகின்றன. இந்த அடிப்பாகக் கன்றுகள் மரத்தின் அளவை நிர்ணயம் செய்கின்றன. விவசாயிகள் பல்வேறு வகை அடிப்பாகக் கன்றுகளை விரும்பினாலும் வீட்டுத்தோட்டத்தில் ஆப்பிள் வளர்ப்போர் பெரும்பாலும் முழு அளவிளான மரத்தையோ, மத்திய குள்ள வகை மரங்களையோ தான் விரும்புகின்றனர். குள்ள வகை மரங்கள் பெரும்பாலும் காற்றினாலும், அதிகக் குளிராலும் சேதமடைகின்றன. எனவே, இவை கழிகள் மூலம் தாங்கப்பட்டு, உயர் அடர்த்தித் தோட்டங்களில் பயிரிடப்படுகின்றன. இவ்வகைத் தோட்டங்கள் பயிரிட எளிதாகவும், அதிக விளைச்சல் தருவனவாகவும் இருக்கும். சில குள்ள இரகங்கள், மேல்பாகத்திற்கும் அடிப்பாகத்திற்கும் இடையே, குள்ள வகை மரத்தை ஒட்டுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு ஒட்டுக்கள் தேவை. மரக்கன்று நடப்பட்டு 3–5 (மத்திய குள்ள இரகங்கள்) அல்லது 4–10 (சாதாரண இரகங்கள்) ஆண்டுகள் கழித்து, அதிக அளவிலான பழங்கள் கிடைக்கும். இக்காலகட்டத்தில் சரியான முறையில் கிளைகளையும், கிளைமொட்டுக்களையும் கழித்து விடுதல் மிக அவசியமாகும். அப்போது தான், பழங்களைத் தாங்கக்கூடிய உறுதியான கிளைகள் உருவாகும். வளர்க்கும் பகுதிகள் குளிர்ப் பகுதிகளில் பலவிதமான மண்களிலும் ஆப்பிள் வளரவல்லது. வேகமாக வீசும் காற்றிலிருந்து பாதுகாப்பும், வசந்த காலத்தின் போது உறைபனி இல்லாத இடமாகவும் இருத்தலும் அவசியம். மேலும் நல்ல வடிகால் வசதி தேவைப்படுவதால், நிலத்தை நன்கு உழுது வேர்கள் நீர் நிறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மகரந்தச் சேர்க்கை ஆப்பிள் மரங்கள் சுயமலட்டுத்தன்மை உள்ளவை, எனவே அவை செயற்கையாகக் கலப்பினம் செய்யப்பட வேண்டும். மகரந்தச் சேர்க்கை மேம்பாடு, ஆப்பிள் வளர்ப்பில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. கன்றுகளை நடும்போதே, மகரந்தக் கொடை மரங்களையும் நடுதல் அவசியம். இவ்வகை மரங்கள், உகந்த மகரந்தத்தை அதிக அளவில் கொடுக்கும். ஆப்பிள் பழத்தோட்டங்களில், பொருத்தமான மகரந்தக் கொடை மரவகைகளை மாற்று வரிசைகளிலோ, ஆங்காங்கோ நடுவதுண்டு. சிலர், மகரந்தக் கொடை மரக்கிளைகளைச் சில பழம் தரும் மரங்களில் ஒட்டுப்போடுவதும் உண்டு. மேலும் சில தோட்டங்களில், முக்கியமாக வீட்டுத்தோட்டங்களில், மகரந்தக் கொடை ஆப்பிள் பூங்கொத்துகளையோ, கிளைகளையோ கொண்டு வந்து தற்காலிகமாக வைப்பதும் உண்டு. தரமான ஆப்பிள் கன்று விற்கும் தோட்டங்களில் மகரந்தப்பொருத்தம் உடைய ஆப்பிள் வகைகளின் விவரத்தைப் பெறமுடியும். ஆப்பிள் தோட்ட விவசாயிகள், பூக்கும் பருவத்தில் மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளைத் தோட்டத்தில் விடுகின்றனர். தேன்கூடுகள் சாதாரணமாக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. தேன்கூடுகளை அவற்றை வாடகைக்கு விடும் தேனீவளர்ப்போரிடம் இருந்து பெறலாம். பழத்தோட்டக் குயவன் ஈக்களும் (Orchard mason bees) பயன்படுத்தப்படுகின்றன. இவை தேனீக்களைப் போலக் கொட்டா. எனவே, வீட்டுத்தோட்டங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வேறு சில வகை ஈக்களும் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன. சிறிய, வடிவற்ற, குறைவான விதைகளுடைய ஆப்பிள்கள் விளைந்தால், அது உரிய மகரந்தச்சேர்க்கை நடக்கவில்லை என்பதன் அறிகுறியாகும். நல்ல மகரந்தச் சேர்க்கையால் விளைந்த ஆப்பிள், ஏழு முதல் பத்து விதைகளைக் கொண்டிருக்கும். மூன்றுக்கும் குறைவான விதைகளுடைய ஆப்பிள்கள் முற்றாமல் உதிர்ந்துவிடும். இதற்கு, மகரந்தக் கொடை மரங்களோ மகரந்தச் சேர்க்கைப் பூச்சிகளோ உரிய அளவில் இல்லாததும், பூக்கும் பருவத்தில் உகந்த பருவநிலை இல்லாதிருத்தலும் காரணங்களாகும். பொதுவாகப், பல ஈக்கள் வந்து அமர்வதன் மூலம், ஒரு பூவுக்குத் தேவையான அளவு மகரந்தம் கிடைக்கும். பருவநிலையைப் பொருத்தவரை, பூத்தபின் ஏற்படும் உறைபனி பூவைச் சிதைத்து விடும். உறைபனி அதிக அளவில் இல்லையெனில், அதிகாலையில் சூரியோதயத்திற்கு முன், நீர் தெளிப்பதன் மூலம் பூக்களை ஒரளவு காப்பாற்றலாம். பூவின் சூல் கருகி இருப்பதே உறைபனி சேதத்தின் அடையாளமாகும். பெரிய நீர்நிலைகளின் அருகே தோட்டம் அமைப்பதன் மூலம் வசந்தகால வெப்பம் சிறிது குறைக்கப்படுவதால், பூப்பது சற்றுத் தள்ளிப்போடப்படுகிறது. இது வசந்தகால உறைபனியிலிருந்து பூக்களைக் காப்பாற்ற உதவுகின்றது. அமெரிக்காவில், மிச்சிகன் ஏரியின் கிழக்குக்கரை, ஓண்டோரியோ ஏரியின் தெற்குக்கரை மற்றும் பல சிறிய ஏரிகளைச் சுற்றிலும் அதிக அளவில் ஆப்பிள் வளர்க்கப்பட இதுவே காரணமாகும். வீட்டில் மரம் வளர்ப்போர், வசந்தகால வெயில் படாத இடங்களில் தோட்டம் அமைப்பதன் மூலம், பூப்பதைத் தள்ளிப்போடலாம். பூமியின் வடகோளத்தில் வடக்குப் பார்த்த சரிவுகளிலும், தென்கோளத்தில் தெற்குப்பார்த்த சரிவுகளிலும் ஆப்பிள் நடுவது பூப்பதை தள்ளிப்போட உதவுவதால் உறைபனியிலிருந்து காக்க உதவும். வெட்டி விடுதல் ஆப்பிள் மரங்கள் ஈராண்டுகளுக்கு ஒருமுறை பூக்கின்றன. ஒரு விளைச்சலின் போது சரியான அளவு கிளைகளையோ பழங்களையோ கழித்துவிடாவிட்டால், அடுத்த விளைபருவத்தில் பூப்பது குறைந்து விடும். சரியான அளவில் கழித்து விடுதல், ஒவ்வொரு பருவமும், சீரான விளைச்சல் பெற உதவும். அழிவுப்பூச்சிகளும் நோய்களும் ஆப்பிள் மரங்கள் பலவிதமான பூஞ்சை அல்லது கோலுரு நுண்ணுயிர்களால் (bacteria) விளையும் நோய்களாலும், அழிக்கும் பூச்சிகளாலும் பாதிக்கப்படுகின்றன. எல்லாப் பழத்தோட்டங்களிலும், பூச்சி மருந்துகள் மூலம் இவை கட்டுப்படுத்தப் படுகின்றன. ஒருங்கிணைந்த அழிவுப்பூச்சி மேம்பாடு, தற்போது கடைப்பிடிக்கப்படுகின்றது. இதன்படி, பூச்சிமருந்துகளின் பயன்பாடு குறைக்கப்பட்டு, இயற்கையான எதிரிகள் மூலம், அழிக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. பூக்கும் பருவத்தில் ஒருபோதும் பூச்சி மருந்துகள் அடிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளையும் கொன்று விடும். அதுபோல, இவ்வகை ஈக்களை ஈர்க்கும் செடிகளையும் தோட்டத்தில் வளர விடக்கூடாது. இவ்வகைச் செடிகளில் தங்கிவிடும் பூச்சிமருந்து, மகரந்தச்சேர்க்கை ஈக்களைக் கொன்றுவிடும். நோய்களில் மிக முக்கியமானது "தீ வாடல்" எனும் கோலுருக்கிருமி நோயாகும். பூஞ்சை நோய்களில் முக்கியமானவை ஜிம்னோஸ்போராஞ்சியம் துரு (Gymnosporangium rust), காய்ந்த தோல் (Apple Scab) மற்றும் கரும்புள்ளி (Black spot). பூச்சிகளில் அதிகச் சேதம் விளைவிப்பது ப்ளம் குர்குலியொ (plum curculio) ஆகும். மற்ற பூச்சிகளில் முக்கியமானவை: பைமடோபஸ் பெஹ்ரன்ஸி (Phymatopus behresii), ஆப்பிள் புழு (Apple maggot), காட்லிங் அந்து (Codling moth), பேரரசு அந்து (Emperor moth), நவம்பர் அந்து (November moth), குளிர்கால அந்து (Winter moth), பச்சை அந்து, ப்ரிம்ஸ்டோன் அந்து (Priumstone moth), போப்லர் கழுகு-அந்து (Poplar hawk-moth), காக்ஸ்கோம்ப் ப்ராமினன்ட் அந்து, மஞ்சள் வால் அந்து (Yellow tail moth), ஷார்ட்-க்லோக்ட் அந்து (Short-cloaked moth). ஆஸ்திரேலியாவில் சில வெளிநாட்டு ஆப்பிள் மரங்களை ஹெபியாலிட் அந்தின் (Hepialid moth) புழுக்கள் தாக்குகின்றன. இவை மரத்தினுள் துளையிடுகின்றன. ஆப்பிள் பழங்களை, இயற்கை விவசாய முறையில் விளைவிப்பது மிகக் கடினம். இருப்பினும் சில தோட்டங்களில் நோய்-எதிர்ப்பு ஆற்றல் கொண்ட இரகங்களைப் பயன்படுத்திக் கூடுதல் வருவாய் ஈட்டி உள்ளனர். இயற்கை விவசாய முறையில், அண்மைய எடுத்துக்காட்டு, பீங்கான் போன்ற கயோலின் களியை (kaolin clay) மெல்லிதாய்ப் படரும்படி ஆப்பிள் பழங்களின் மேல் தெளிப்பது. இது, பூச்சித்தாக்குதல்களிலிருந்தும், வெயிலால் உண்டாகும் அழுகலிலிருந்தும் பழங்களைப் பாதுகாக்கிறது. அறுவடை முற்றிய மரங்களில் ஆண்டுக்குச் சுமார் 100–200 கிலோகிராம் ஆப்பிள்கள் விளையும். கிளைகளினூடே எளிதில் நுழையக்கூடிய முக்காலேணிகள் மூலம் ஆப்பிள் பழங்கள் பறிக்கப்படுகின்றன. கிளைகள் கழிக்கப்படாத சிலவகை மரங்கள் நிறையக் காய்த்தாலும் அறுவடை செய்வது மிகக் கடினம். குள்ள வகை மரங்கள் சுமார் 50–100 கிலோகிராம் காய்க்கும். உடல்நலப் பலன்கள் தினம் ஓர் ஆப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும் (An apple a day keeps the doctor away) என்ற ஆங்கிலப் பழமொழியின் கூற்றுப்படி, நெடுங்காலமாக ஆப்பிள் உடல்நலத்திற்கு மிக நல்லது என்று கருதப்பட்டது. தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது. ஆப்பிளில் காணப்படும் சில வேதிப்பொருட்கள் அல்செய்மர்ஸ் (Alzheimer's), பார்கின்சன் (Parkinson's) நோய்களிலிருந்து மூளையைப் பாதுகாக்கின்றன. ஆப்பிளில் உள்ள ஃபீனால் வகைப் பொருட்கள் (phenolics) இயற்கையாகவே ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி உடையவை என்பதால், மூளையை நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன என கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்கு நியு யார்க் பகுதியில் விளைந்த 'ரெட் டெலிசியஸ்' வகை ஆப்பிள்கள் பயன்படுத்தப்பட்டன. எல்லா ஆப்பிள்களிலும் இவ்வகை வேதிப்பொருட்கள் உள்ளன என்றாலும், அவற்றின் அளவு வருடத்தையும், வளரும் இடத்தையும் பொருத்து மாறுபடும் என்று இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் (ஆதாரம்: Journal of food science, Nov/Dec 2004). ஆப்பிள்கள்களைக் கொண்டு, ஆப்பிள் பால் நெடுங்காலமாகத் தயாரிக்கப்படுகிறது. ஆப்பிள் தயிரிலிருந்து கிடைக்கும் பால், திபெத்தில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது. பண்பாட்டு முதன்மை ஆப்பிள்கள் பல மத வழக்கங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. சில கலாச்சாரங்களில் ஆப்பிள் சாகாவரம், காதல் அல்லது புணர்ச்சியின் சின்னமாக இருந்துள்ளது. பண்டைய கிரேக்க வீரன் ஹெர்குலெஸ், தனது பன்னிரண்டு வேலைகளில் (Twelve labours) ஒன்றாக ஹெஸ்பெரிடஸின் தங்க ஆப்பிள்களைக் கண்டு பிடிக்கவேண்டியிருந்தது. இன்னொரு கிரேக்கப் பிரபலமான பாரிஸ், "காலிஸ்டி" – அழகானவளுக்கு – என்ற சொற்கள் பொறித்த "தங்கஆப்பிளை", மிக அழகான பெண் கடவுளுக்குத் தந்ததும், அதனால் மறைமுகமாக திராயன் போர் நடந்ததும் வரலாறு. கிரேக்க வரலாற்றுக் கதையில், ஓர் ஓட்டப்பந்தயத்தின் போது அடலாண்டாவின் கவனத்தைத் திசைதிருப்ப ஹிப்போமெனெஸ், மூன்று தங்க ஆப்பிள்களை வீசியது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பண்டைக் கிரேக்கக் கலாச்சாரத்தில் ஒருவரின் படுக்கையில் ஆப்பிளை வீசுவது, அவரை உடலுறவுக்கு அழைப்பதைக் குறிக்கும். கிரேக்க வரலாற்றில், ஆப்பிள் பற்றிய மற்றொரு குறிப்பு, ப்லேயீடீஸ் (Pleadis) பற்றியது. நோர்ஸ் (ஸ்கான்டிநேவிய) கலாச்சார நம்பிக்கையின்படி "இடுன்" என்பவர், கடவுள்களை இளமையாகவே வைத்திருந்த "சாகாவர ஆப்பிள்களை"ப் பாதுகாத்து வந்தார். கிரேக்க வரலாற்றாசிரியர் டாசிடஸ் (Tacitus) நோர்ஸ் பற்றிய தனது ருனிக் டிவினிஷன் (runic division) குறிப்பில் 'பழ மரம்' எனக் குறிப்பிட்டது ஆப்பிள் அல்லது ரோவன் மரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. கெல்டிய சமயநம்பிக்கையில் "கொன்லே" என்பவர், ஒரு வருடம் உண்ணக்கூடிய ஆப்பிளைப் பெற்றதாகவும் அது அவரைத் தேவலோகத்தை விழையச் செய்ததாகவும் குறிப்பு உள்ளது. கிறிஸ்துவ நூலான "படைப்பில்" (Genesis), ஆப்பிள் என்று குறிப்பிடப்படாவிட்டாலும் கூடத் "தடை செய்த பழம்" ("forbidden fruit"), ஆப்பிள் தான் என ஐரோப்பியக் கிறித்துவர்கள் நம்புகின்றனர். ஏவாள், ஆதாமுடன் உண்ட அந்தப்பழம் ஆப்பிள் தான் என்பது, ஈடன் தோட்டம் பற்றிய பண்டைய சித்திரங்களில் காணப்படுகிறது. இத்தொன்மையான ஓவியங்களில் காணப்பட்ட ஆப்பிள் பழக் குறியீடு, தற்போதும் கிறிஸ்துவ சமயத்தில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களின் தொண்டைக்குழி, அந்தத் தடைசெய்த பழம் ஆதாமின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் உருவான மனித உறுப்பு என்ற நம்பிக்கையால், ஆதாமின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது. ஆப்பிளைக் கிறித்துவ சமயக் குறியீடாக ஏற்றுக்கொள்ள மற்றுமொரு காரணம், இலத்தீன் மொழியில் "ஆப்பிள்" மற்றும் "சைத்தான்" ஆகியவற்றைக் குறிக்கும் சொல் ஒன்றே (அந்தச் சொல் "மலும்"). இச்சொல் பொதுவாகப் பாவத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ஆதாமின் கையில் இருக்கும் ஆப்பிள் பாவத்தைக் குறிக்கும். அதே சமயம் இயேசு ஆப்பிளை வைத்திருக்குமாறு சித்தரிக்கப்படும்போது அவர் உயிர் படைக்கும் இரண்டாம் ஆதாமாகக் கருதப்படுகிறார். இவ்வாறாகப் பழைய வேதாகமத்தில், ஆப்பிள் மனிதனின் வீழ்ச்சியையும், புதிய வேதாகமத்தில் மனிதனின் எழுச்சியையும் குறிக்கிறது. இதுவே, மடோனா (மேரி மாதா) மற்றும் குழந்தை இயேசுவின் சித்திரங்களில் காணப்படுகிறது. பண்டைய கஸகஸ்தான் நாட்டில் "ஆப்பிள்களின் தந்தை" எனப்பொருள்படும் "அல்மாட்டி" நகரத்தின் பெயர்க் காரணம், அவ்விடத்தில் இயற்கையாகக் காணப்பட்ட ஆப்பிள் காடுகளேயாகும். அமெரிக்காவின், அர்கன்சாஸ் மற்றும் மிச்சிகன் மாநிலங்களின் அரசாங்கப் பூ, ஆப்பிள் பூ ஆகும். ரஷ்ய நாட்டின் "யப்லோகோ" கட்சியின் பெயரின் பொருள், ஆப்பிள் ஆகும். அக்கட்சியின் சின்னம் ஆப்பிளையே குறிக்கிறது. சுவிஸ் நாட்டின் பழங்கதைக் கூற்றுப்படி "வில்லியம் டெல்" என்ற வில்வித்தைக்காரர் தன் மகனின் தலையில் இருந்த ஆப்பிளைத் தன் அம்பால் துளைத்து ஒரு கொடுங்கோலனிடமிருந்து தன் மக்களைக் காப்பாற்றினான். ஐரிஷ் நாட்டுப் பழங்கதைக் கூற்றுப்படி, ஆப்பிள் தோலை ஒரு நாடா போல உரித்துப் பெண்ணொருத்தியின் தோளுக்குப் பின்னால் எறிந்தால், அது அவளது வருங்காலக் கணவனின் முதலெழுத்தின் வடிவில் விழும் என நம்பப்படுகிறது. டென்மார்க் நாட்டுப் பழங்கதைக் கூற்றுப்படி மனைத்துரோகம் புரிந்தவரின் அருகே வைக்கப்படும் ஆப்பிள் வாடிவிடும். அமெரிக்காவின் சில இடங்களில் ஒளித்து வைக்கப்படும் ஆப்பிள்களைக் கண்டுபிடிப்பது ஒரு ஹாலோவீன் பண்டிகைக் கொண்டாட்டமாகும். மேலும், ஆப்பிள்கள் ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும், தோலில் தேய்த்தால் மச்சம் அழியும் என்றும் நம்பப்படுகிறது. அமெரிக்கா, டென்மார்க், சுவீடன் நாடுகளில் ஆசிரியர்களுக்கு நெடுங்காலமாக வழங்கப்படும் பரிசு ஆப்பிளாகும். இப்பழக்கம் தோன்றியதன் பின்னணி, 16 முதல் 18 ஆம் நூற்றாண்டுகளில் ஆசிரியர்களுக்கு மிகக்குறைவான ஊதியமே வழங்கப்பட்டதால், மாணவர்களின் பெற்றோர் அதை ஆப்பிள் கொடுத்து ஈடு செய்தனர். மாணவர்கள் கூடை கூடையாய் ஆப்பிள் கொடுத்து வந்த வழக்கம், ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டபின் ஓர் ஆப்பிளாகக் குறைந்து விட்டது. வணிகமும் பயன்களும் 2002ஆம் ஆண்டு உலகம் முழுவதிலும், சுமார் 1000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள 45 லட்சம் டன் ஆப்பிள்கள் விளைவிக்கப்பட்டன. இதில் பாதியளவு சீனாவில் விளைவிக்கப்பட்டன. அர்ஜென்டினா, அமெரிக்கா ஆகிய நாடுகள் முறையே 15% ஆப்பிள்களையும், 7,5% ஆப்பிள்களையும் உற்பத்தி செய்கின்றன. துருக்கி, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா, சிலி ஆகிய நாடுகளும் ஆப்பிள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்காவில் விற்பனையாகும் ஆப்பிள்களில் 60% வாஷிங்டன் மாநிலத்தில் விளைகின்றன. நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் ஆப்பிள்களின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆப்பிள்கள் பெரும்பாலும் அப்படியே உண்ணப்படுகின்றன. மேலும், ஆப்பிள்கள் பதப்படுத்தப்பட்டோ சாறு பிழியப்பட்டோ சிலநேரம் நுண்ணுயிர் பகுப்புக்குட்படுத்தியோ (ferment) ஆப்பிள் பழச்சாறு, சிடர், வினிகர், பெக்டின் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள் சிடர் கொதி, வடிக்கப்படும்போது ஆப்பிள்ஜாக், கல்வடோஸ் ஆகிய சாராய பானங்கள் கிடைக்கின்றன. ஆப்பிள் கொண்டு ஒயினும் தயாரிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தில் ஆப்பிள்களை இனிப்புப்பாகில் (toffee) நனைத்து "டாஃபி ஆப்பிள்" (toffee apple) எனப்படும் இனிப்புவகை நெடுங்காலமாகத் தயார் செய்யப்படுகிறது. அதுபோலவே, அமெரிக்காவிலும் 'மிட்டாய் ஆப்பிள்' (candy apple) எனப்படும், சாக்லேட் பாகில் நனைக்கப்பட்ட ஆப்பிள்கள் விற்பனையாகின்றன. யூதர்களின் புத்தாண்டின் போது, இனிய புத்தாண்டைக் குறிக்கும் விதமாக ஆப்பிள்கள், தேனில் நனைத்து உண்ணப்படுகின்றன. வெளி இணைப்புகள் குறிப்பு: பின்வரும் இணைப்புகள் அனைத்தும் ஆங்கிலப்பக்கங்களாகும். Fruit book பழங்கள் முழுமையான ஊட்டச்சத்துத் தகவல்கள் 700க்கும் மேற்பட்ட ஆப்பிள் இரகங்களின் பட்டியல் – AllAboutApples.com தளத்திலிருந்து. கசகஸ்தான் காட்டு ஆப்பிள்கள்: 1995 மற்றும் 1996 பயணங்கள். 200க்கும் மேற்பட்ட ஆப்பிள்கள் - ஐக்கிய இராச்சிய தேசிய பழத் தொகுதியில் இருந்து. ஐக்கிய அமெரிக்க ஆப்பிள் கூட்டமைப்பின் கையேடு - ஆப்பிள் இரகங்கள் குறித்த ஆண்டுகள், இடங்கள் பற்றி. ஆப்பிள் பற்றிய உண்மைகள் ஐக்கிய இராச்சிய உணவு ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து. ஆப்பிள் சேமிப்பு மற்றும் அதன் விளைவுகள் - ஐக்கிய அமெரிக்க வேளாண் ஆராய்ச்சி சேவைப் பிரிவில் இருந்து ஆப்பிள் சுவைமணங்கள் – OrangePippin.com தளத்தில் இருந்து. மேற்கோள்கள் பழ மரங்கள்
6466
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
மராத்திய மொழி
மராட்டி (அ) மராட்டியம் (அ) மராட்டிய மொழி என்பது இந்தியாவின் தேசிய மொழிகளுள் ஒன்றாகும். இது மகாராஷ்டிர மாநிலத்தின் அலுவலக மொழியாகும். உலகில் ஏறக்குறைய 9 கோடி மக்களால் பேசப்படுகிறது.உலகில் அதிகம் பேசப்படும் மொழி வரிசையில், 15-ஆவதாக உள்ளது. இந்தியாவில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழியாகும். இதன் எழுத்துகளின் மூல வடிவம் தேவநாகரி ஆகும். இம்மொழியின் இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பு போன்றவை சமசுகிருத மொழியைப் பின்பற்றியே அமைந்துள்ளன. மராட்டி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது. மராட்டிய எழுத்து முறைமைகள் மராட்டிய கீறல்கள் பதினோராம் நூற்றாண்டின் கற்களிலும், தாமிரத் தகடுகளிலும் காணப்படுகின்றன. மகாராசுட்டிரி என்ற பிராகிருதம் எழுத்துமுறையையே அவற்றில் காணப்படுகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து, 1950வரை, மோடி அரிச்சுவடியினைப் பின்பற்றி, எழுதும் முறைமை இருந்தது. இம்மோடி எழுத்து முறைமை, தேவநாகரியின் வேறுபட்ட வடிவமாகும்.எழுதுகோலை எடுக்காமல் எழுத, மோடி எழுத்து முறைமை பெரிதும் பயன்பட்டது.மராட்டியப் பேரரசர்கள், இம்மோடி முறைமையையே பின்பற்றினர். 1950 பிறகு இம்மோடி எழுத்துக்களை, அதிக அளவில் அச்சிடும் போது, இடர்களை உருவாக்கியதால் கைவிடப்பட்டது. தற்பொழுது, தேவநாகரி எழுத்து முறைமையையே அதிகம் பின்பற்றுகின்றனர். உயிர் எழுத்துக்கள் கீழ்கண்ட அட்டவணை, மராட்டிய மொழியின் உயிரெழுத்துக்களை அதற்குரிய ஒலிக்கோப்புகளோடு விவரிக்கிறது. மெய்யெழுத்துக்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய-ஆரிய மொழிகள் இந்திய மொழிகள் மராத்திய மொழி
6467
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
கோபி பாலைவனம்
கோபி பாலைவனம் (Gobi, சீன மொழியில்: 戈壁(沙漠) என்பது சீனத்தின் வடக்குப் பகுதியிலும் மங்கோலியாவின் தெற்குப் பகுதியிலும் பரவியுள்ள ஒரு பெரிய பாலைவனம் ஆகும். உலகின் மிகப் பெரிய பாலைவனங்களுள் ஒன்றான இது ஏறத்தாழ 1,3000, 00 சதுர கிலோ மீட்டர் பரந்து காணப்படுகிறது. இதற் பெரும் பகுதி மணற்பாங்காக இல்லாமல் கற்பாங்கானதாகவே காணப்படுகிறது. பல முக்கியமான தொல்லுயிர் எச்சங்கள் இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் முதல் டைனோசர் முட்டையும் அடங்கும். பாலைவனங்கள் மங்கோலியா சீனப் புவியியல் ஆசிய பாலைவனங்கள்
6471
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D
திருக்குர்ஆன்
குர்ஆன் அல்லது திருக்குர்ஆன் (அரபு: القرآن‎ அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது. ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட பல வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் தூதுத்துவத்திற்கான அத்தாட்சி எனவும் குர்ஆனைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது. முகம்மது நபி(ஸல்), தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குர்ஆனின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார். அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் தாபித்(ரலி) என்பவரின் தலைமையில் குர்ஆனின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான்(ரலி) காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. 4987 ஹதீஸ் புகாரி. முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் , (அவரவர்கள் புரிந்து கொண்ட வகையில்,) கருத்து வேறுபாடுகள் எழுந்தது, அது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனை சரி செய்யும்பொருட்டு, பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள்.Volume :5 Book :66 பெயர் விளக்கம் குர்ஆன் என்ற வார்த்தை, திருகுர்ஆனிலேயே 70 இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு ஓதுதல் அல்லது ஓதப்பட்டது என்பது பொருள் ஆகும். மேலும் இது உண்மைக்கும் பொய்க்குமான பகுத்தறிவான், வேதங்களின் தாய், வழிகாட்டி, ஞானத்தின் திறவுகோல், நினைவு கூறத்தக்கது, இறைவனால் இறக்கப்பட்டது என பல பெயர்களிலும் திருகுர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக அரபு உச்சரிப்பில் கிதாப் (புத்தகம் அல்லது வேதம்) என அழைக்கப்படுகின்றது. திருகுர்ஆனில் குறிப்பிட்டுள்ள பெயர்கள் திருகுர்ஆனின் அமைப்பு திருகுர்ஆன், இயல்பில் ஒரு ஒலி வடிவ தொகுப்பு ஆகும். இது அவ்வாறே முகம்மது நபியால் மற்றவர்களுக்கும் போதிக்கப்பட்டது. எனவே இது எழுதப்பட்ட நூல்களை போல் அல்லாமல், ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறுவது போலவே அமைந்துள்ளது. இதன் காரணமாக தன்னிலை மற்றும் படர்க்கை சொற்கள் ஒரே வசனத்தில் ஒருங்கே பல இடங்களில் வருகின்றன. மேலும் சில வசனங்கள் நினைவூட்டலுக்காக பல இடங்களில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளன. திருகுர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்கள் உள்ளன. இவை அளவில் ஒத்ததாக இல்லாமல் சில மிகவும் சிறியதாகவும், சில மிகவும் பெரியதாகவும் உள்ளன. பொதுவாக இவற்றில் மெக்காவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை நம்பிக்கை, ஒற்றுமை, மரணம், வாழ்வு, சொர்க்கம், நரகம், உலக இறுதி ஆகியவற்றை பற்றியும், மதினாவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை வணக்கம், மனித உறவுகள், சமூக கட்டுப்பாடு, சட்ட திட்டங்கள் ஆகியவற்றை பற்றியும் அதிகம் பேசுகின்றன. திருகுர்ஆனின் உள்ளடக்கம் திருகுர்ஆன் அடிப்படையில் முகம்மது நபியால் பல்வேறு காலங்களில் கூறப்பட்ட வசனங்களின் தொகுப்பு ஆகும். இவை அரபி மொழியில் ஆயத்து என அழைக்கப்படுகின்றன. இவ்வாறான ஒத்த வசனங்களின் தொகுப்பு அத்தியாயம் ஆகும். இவற்றின் எண்ணிக்கை மொத்தம் 114. இவை அரபியில் சூரா என அழைக்கப்படுகின்றன. இவற்றின் பெயர்கள், குறிப்பிட்ட அத்தியாயத்தின் மையப் பொருளை கொண்டு அழைக்கப்படுகின்றன. வரலாறு திருகுர்ஆனின் தோற்றம் முகம்மது நபி இறைவன் குறித்த உண்மையான அணுகுமுறையை அறிய மெக்காவின் அருகில் இருக்கும் ஹிரா குகையில் தியானம் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு நாளில் குகையில் இருந்து திரும்பி வந்த முகம்மது தனது மனைவி கதீஜாவிடம், தன்னை குகையில் சந்தித்த ஒரு வானவர் தனக்கு இறைவனின் செய்தியை அறிவித்ததாக கூறினார். அவ்வாறு அவர் அறிவித்ததாக கூறிய செய்தியே திருகுர்ஆனின் தொடக்கம் ஆகும். அன்று தொடங்கி தனது இறப்பு வரையில் சுமார் 23 வருடங்கள் அவர் இவ்வாறான இறைவசனங்கள் கிடைக்கப் பெறுவதாக கூறினார். ஆனால் இவ்வாறு கூறப்பட வசனங்கள் வரிசைக்கிரமமாக கூறப்படவில்லை. முன்னும் பின்புமாக பல வசனங்கள் இருந்தன. பின் அவை எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் என்பதையும் முஹம்மது நபியே கற்பித்தார். வானவர் ஜிப்ரயீலே தனக்கு இதை கற்பித்ததாகவும், ஒவ்வொரு வருடமும், அவர் இதை தனக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி செல்வதாகவும் முஹம்மது நபி கூறினார். முஹம்மது நபி கூறிய திருகுர்ஆன் வசனங்கள் அவரது தோழர்களால் மனனம் செய்யப்பட்டும், காய்ந்த களிமண் சட்டங்கள், பனை ஓலைகள், விலங்குகளின் தோல் மற்றும் எலும்புகள் ஆகியவற்றில் எழுதப்பட்டும் பாதுகாக்கப்பட்டன. மேலும் இசுலாமியர்கள் தங்களின் பிராத்தனைகளின் போது, திருகுர்ஆனின் வசனங்களை ஓதவும் அறிவுறுத்தப்பட்டனர். இதன் மூலமும் திருகுர்ஆனின் வசனங்கள் சுலபமாக மனனம் செய்யபட்டன. இருப்பினும் முகம்மது நபியின் காலத்தில் திருகுர்ஆன் முழுமையாக எழுத்து வடிவில் தொகுக்கப்படவில்லை. திருகுர்ஆன் தொகுப்பு முஹம்மது நபியின் மறைவுக்கு பின்பு இசுலாமியர்களின் முதல் கலீபாவான அபூபக்கரின் ஆட்சிக் காலத்தில் யமாமா போர் ஏற்பட்டது. பொ.ஆ 633ல் ஏற்பட்ட இந்த போரின் போது திருகுர்ஆனை மனனம் செய்த இசுலாமியர்களில் 70க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இதில் திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்தவரும், பலருக்கு அதை கற்பித்தவருமான சலீமின் மரணம் மிக முக்கியமானது. இதனைத் தொடர்ந்து அபுபக்கரைச் சந்தித்த உமர் பின் கத்தாப், திருகுர்ஆனின் பிரதிகளை எழுத்து வடிவில் தொகுக்க வேண்டிய கட்டாயத்தை தெரிவித்தார். இதற்கு முதலில் தயங்கிய அபூபக்கர், பின்னர் உமரின் கோரிக்கையை ஏற்று சைத் பின் சாபித் என்பவரை இந்த தொகுக்கும் பணிக்கு நியமித்தார். சைத் பின் சாபித், முஹம்மது நபியின் வீட்டிலும் மற்றவர்களிடம் இருந்த திருகுர்ஆனின் எழுத்துப் பிரதிகளை சேகரிக்கத் தொடங்கினார். கூடவே திருகுர்ஆனை மனனம் செய்தவர்கள் மூலமாகவும் புதிய எழுத்துப் பிரதிகளையும் உருவாக்கினார். பின்னர் இவை பலமுறை முகம்மது நபியால் கற்பிக்கப்பட்ட வரிசையின்படி சரிபார்க்கப்பட்ட பின் மூல பிரதி தயாரிக்கப்பட்டு அபுபக்கரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டது. அவரின் மரணத்திற்கு பின் அந்த மூலப் பிரதி, உமர் பின் கத்தாப் மூலம் அவரின் மகளும், முகம்மது நபியின் மனைவியுமான ஹப்சா அம்மையாரை வந்தடைந்தது. திருகுர்ஆன் நகலாக்கம் அபுபக்கர் காலத்தில் திருகுர்ஆன் தொகுக்கப்பட்ட போதிலும், அது முழுமையான மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. மேலும் இது ஒரே புத்தக வடிவில் இல்லாமல், தனித்தனி அத்தியாயங்களாகவே தொகுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருகுர்ஆனை கற்பிப்பதில் பல தவறுகள் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக மூன்றாவது கலீபாவான உதுமான் காலத்தின், இஸ்லாமிய பேரரசு எகிப்து முதல் பாரசீகம் வரை பரந்து விரிந்திருந்தது. இந்த காலத்தில் பல பிரதேசங்களில் இருந்த கல்வியாளர்கள் தங்களுக்கு தெரிந்த அளவிலே திருகுர்ஆனை கற்பிக்க முற்பட்டனர். இது பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து திருகுர்ஆனை தொகுக்கும் பணி மீண்டும் சைத் பின் சாபித்தால் தொடங்கப்பட்டது. முன்பு தொகுக்கப்பட்ட மூலப்பிரதிகளை ஹப்சாவிடம் இருந்து பெற்ற சைத் பின் சாபித், உதுமானின் அறிவுரைப்படி அதை புத்தக வடிவில் தொகுக்கத் தொடங்கினார் இதன் படி அளவில் பெரியதாக இருக்கும் அத்தியாயங்களில் தொடங்கி அளவில் சிறியதாக இருக்கும் அத்தியாயங்கள் வரை வரிசைக் கிரமமாக தொகுக்கப்பட்டன. பின்னர் இந்த வரிசையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக தொகுக்கப்பட்ட திருகுர்ஆன், உதுமானால் அதிகாரப்பூர்வமான திருகுர்ஆன் பிரதியாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற அத்தியாய வரிசைகளில் இருந்த மற்ற திருகுர்ஆன்கள் அழிக்கப்பட்டன. தொடர்ந்த நாட்களில் மீண்டும் சைத் பின் தாபித்தின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய திருகுர்ஆன் தொகுப்புகளை நகல் எடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இவ்வாறு நகல் எடுக்கப்பட்ட திருகுர்ஆன்கள் இசுலாமிய பேரரசின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதோடு, அவற்றில் இருந்து வேறு நகல்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டன. இந்த திருகுர்ஆனின் நகல்களின் அடிப்படையிலேயே இன்றளவும் திருகுர்ஆன் தயாரிக்கப்படுகின்றன. பிற சேர்க்கைகள் திருகுர்ஆனின் தொகுப்பானது புத்தக வடிவில் தொகுக்கப்பட்ட பின்பு, மேலும் சிலரால் இதில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இவை திருகுர்ஆனின் வசனங்களில் அன்றி திருகுர்ஆனை படிப்பதற்கு ஏதுவாக அதன் நடைத் தொகுப்பில் செய்யப்பட்டன. ஜுஸ்உ திருகுர்ஆனின் மொத்த வார்த்தைகளின் அடிப்படையில், அது 30 பெரும் பாகங்களாக பிரிக்கப்பட்டன. இவை யுசூவு (ஜுஸ்வு) என அழைக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு மாதத்தில், மொத்த திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1 வாரத்தில் ஓதி முடிக்க ஏதுவாக 7 மன்ஜில்-லாக தொகுக்கப்பட்டுள்ளன "யுசூவு அட்டவணை " மன்சில் முப்பது பாகங்கள் போல, வாரத்திற்கு ஒரு முறை முழு திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் குர்ஆன் ஏழு பிரிவாகவும் சிலரால் பிரிக்கப்பட்டுள்ளது. இது மன்சில் என அழைக்கப்படுகின்றது. இதன் அடையாளம் திருகுர்ஆனின் ஓரங்களில் குறிப்பிடப்படுகின்றன. ருக்உ பிராத்தனையின் போது, ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு வசனங்களை உச்சரிக்கலாம் என கணக்கிடும்படி திருகுர்ஆனின் அத்தியாயங்கள் சிலரால் பிரிக்கப்பட்டன. இவை ருகூவுகள் என அழைக்கப்படுகின்றன. இவை திருகுர்ஆனின் ஓரங்களில் ع எனும் எழுத்தால் குறிக்கப்படுகின்றன. மக்கீ, மதனீ திருகுர்ஆனின் வசனங்கள் அவை முகம்மது நபியால் கூறப்பட்ட இடங்களின் அடிப்படையில் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டன. மெக்காவில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் மக்கீ எனவும், மதினாவில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் மதனீ எனவும் அழைக்கப்பட்டன. சில திருகுர்ஆன் பதிப்புகளில் இவை ஒவ்வொரு வசனங்களின் தலைப்பிலும் குறிக்கப்பட்டன. திருக்குர்ஆன் ஓதும் முறை திருக்குர்ஆனை சரியான முறையில், எங்கு எவ்வாறு நிறுத்தி ஓத வேண்டும், நிறுத்திய பின் எவ்வாறு திரும்ப ஆரம்பிக்க வேண்டும் என என்பதை அரபி மொழியில் 'தஜ்வீத்' என்பர். திருக்குர்ஆன் 'தஜ்வீத்' முறைப்படி ஓதுவது 'பர்ளு ஐன்' ஆகும் தஜ்வீத்-துடைய கல்வியை படிப்பது 'பர்ளு கிஃபாயா' ஆகும் குர்ஆன் மொழிபெயர்ப்பு அரபு மொழியில் இருக்கும் குர்ஆனின் வசனங்கள் இறைவனின் நேரடி வார்த்தைகள் என்ற இசுலாமிய நம்பிக்கையின் காரணமாக, குர்ஆனை மொழிபெயர்ப்பது பல காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் உதுமானால் தொகுக்கப்பட்ட குர்ஆனானது பழைய அரபு மொழியை கொண்டு எழுதப்பட்டது. அதில் உயிர், மெய் குறியீடுகள் கிடையாது. எனவே இதை மொழிபெயர்க்கும் போது அர்த்தங்கள் மாற வாய்ப்புண்டு எனவும் கருதப்பட்டது. இருப்பினும் முகம்மது நபியின் காலத்திலேயே சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சாபர் பின் அபுதாலிப் என்பவரால், மரியம் அத்தியாயத்திலுள்ள முதல் நாற்பது வசனங்கள் அம்காரிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. போலவே சல்மான் என்பவரால் குரானின் முதல் அத்தியாயமான அல்-பாத்திகா பாரசீகத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது. பொ.ஆ 884ல், சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த இந்து அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லா பின் உமர் என்பரின் தலைமையில் எழுதப்பட்டதே குர்ஆனின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஆகும். ஆகினும் இது எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இதன் பிறகு இராபர்ட் என்பவரால் 1143இல் இலத்தீன் மொழிக்கு குர்ஆன் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இதன் அச்சுப்பதிப்பு 1543இல் வெளிவந்தது. தொடர்ந்து இடாய்ச்சு, பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்கும் குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டது. முதல் ஆங்கில குர்ஆன் 1649ல் வெளிவந்தது. அலெக்சான்டர் ரூசு என்பவர் இதை மொழிபெயர்த்திருந்தார். தமிழ் குர்ஆன் தமிழில் முதல் குர்ஆன் மொழிபெயர்ப்பு 1943ல் வெளிவந்தது. அப்துல் ஹமீத் பாகவி என்பவரால் இது எழுதப்பட்டது. தொடர்ந்து, முகம்மது ஃசான் என்பவரால் 1983இல் மற்றொரு மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. இன்று பல அமைப்புகள் மற்றும் பதிப்பகத்தால் குர்ஆன் தமிழாக்கங்கள் வெளியிடப்படுகின்றன. இசுலாத்தில் குர்ஆனின் முக்கியத்துவம் குர்ஆன் இசுலாமிய கலாச்சாரத்தின் மிக முக்கியமான அங்கம் ஆகும். இதில் உள்ளவை இறைவனின் நேரடி வார்த்தைகள் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. உலகின் மிகவும் தூய்மையான, அழிவற்ற, மாற்றமில்லாத ஒரே பொருள் குர்ஆன் என்பது இசுலாமின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. மேலும் இது மனிதர்களுக்கு இறைவனின் புறத்திலிருந்த வந்த கடைசிக் கொடை எனவும் சொல்லப்படுவதுண்டு. குரான் முகம்மது நபிக்கு கொடுக்கப்பட்ட நாளாக கருதப்படும் லைலத்துல் கத்ர், இசுலாமிய வணக்க வழிபாட்டின் முக்கிய இரவு ஆகும். ஆயிரம் மாதங்களுக்கு சமமான ஒரு இரவாக இது இசுலாமியர்களால் மதிக்கப்படுகின்றது. இசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டம் ஆகியவற்றின் முக்கிய மூல நூலாக குர்ஆன் திகழ்கின்றது. மனிதனின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகள் தொடங்கி சட்ட திட்டம் வரை அனைத்திற்குமான ஆதாரக் குறிப்புகள் இதிலிருந்தே பெறப்படுகின்றன. இசுலாமிய சரீஅத் சட்டங்களும் குர்ஆன் கூறும் கருத்துக்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இசுலாமிய வணக்கத்திலும் குரானின் வசனங்களே படிக்கப்படுகின்றன. இசுலாமிய கலைகளில் குர்ஆனின் தாக்கம் இசுலாமியக் கலைகளில், குறிப்பாக இசுலாமிய கட்டடக்கலையில் குர்ஆனின் தாக்கம் அதிகம். மனித மற்றும் விலங்குகளின் சிலைகளை உருவாக்குவதற்கான இதன் தடையை அடுத்து அவ்வாறான சிலைகள் மற்றும் சித்திரங்கள் இல்லாத வகையில் பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இவற்றிற்கு மாற்றாக மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மலர் அலங்காரங்கள் மற்றும் குரானின் வசனங்கள் அந்த கட்டிடங்களில் செதுக்கப்பட்டன. இது புதிய இசுலாமிய கட்டிடக்கலையின் தொடக்கமாக அமைந்தது. அதே போல தோட்டக்கலையிலும், குர்ஆனின் ஆதிக்கம் இருந்தது. இசுலாமிய கலீபாக்களின் காலத்தில், அவர்களின் அரண்மனைகள், பள்ளிவாயில்கள், சமாதிகள் போன்றவற்றை சுற்றி தோட்டங்கள் அமைக்கப்பட்டன. இவை குர்ஆனில் கூறப்படும் சொர்க்கத்தின் அமைப்பை ஒத்து வடிவமைக்கப்பட்டன. இவ்வகையான தோட்ட அமைப்பு முறை பிற்காலத்தில் இசுலாமிய தோட்டக்கலை என அறியப்பட்டு பிரபலமானது. இவை தவிர்த்து, இசுலாமிய எழுத்தணிக்கலை, ஓவியங்கள், கண்ணாடிப் பொருட்கள், செராமிக் மற்றும் நெசவுக்கலை போன்றவற்றிலும் குரானின் தாக்கம் உள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Quran Word by Word // QuranAcademy.org Quran.com Al-Quran.info Tanzil – Online Quran Navigator Multilingual Quran (Arabic, English, French, German, Dutch, Spanish, Italian) Quranic Arabic Corpus, shows syntax and morphology for each word. Word for Word English Translation – emuslim.com Several digitised Qur'ans in the Cambridge University Digital Library இசுலாமிய சமய நூல்கள் அரபு மொழிச் சொற்கள் இசுலாம் இசுலாமிய இறையியல்
6511
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ரமலான் நோன்பு
ரமலான் நோன்பு (Sawm, ) என்பது இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் நோற்கப்படும் நோன்பு ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்.இது இசுலாமின் ஐந்து அடிப்படை கடமைகளில் மூன்றாவது கடமை ஆகும். நோன்பின் சிறப்பு 1894. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) 'எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறினார்)' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book : 30 புகாரி ரமலான் மாதச் சிறப்பு ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஓர் இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மாதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார். நோன்பின் முக்கியத்துவம் வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் ஒன்றாக உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இது ஒரு சடங்காகக் கருதாமல் வணக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதாகக் கொள்ளப்படுகிறது. நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான். இறையச்சம் என்பது அல்லாவிற்கு பயந்து, அவன் அறிவுறுத்தியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் நடப்பதுதான். இஸ்லாம் நோன்பாளி, யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும் போதும் பசியுள்ளவராக இருந்தும் தன்னிடத்திலுள்ள உணவை உண்ணக் கூடாது. தாகமுள்ளவராக இருந்தும் எதையும் குடிக்கக் கூடாது. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றக் கூடாது. எல்லா வணக்கங்களும் அல்லாவுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். ரமலான் நோன்பு உண்மையான இறையச்சத்தோடும் மனத்தூய்மையுடனும் இருப்பதால் அது தனித்துவப்படுத்தப்பட்டுள்ளது. பசியோடும், தாகத்தோடும் இருப்பது மட்டும் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நோன்பை ஒரு சடங்காகச் செய்பவர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. ஒருவர் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடாமல் உணவை விடுவதிலும், குடியை விடுவதிலும் மட்டும் ஆர்வம் கொள்வதால் பயனை அடைய முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நோன்பும் விதிவிலக்கும் பருவமடைந்த இஸ்லாம் ஆண், பெண் அனைவரும் நோன்பு இருப்பது கடமையாகும். இருப்பினும் சில அவசியங்களின் அடிப்படையில் நோன்பு இருப்பதிலிருந்து கீழ்காணும் நிலையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். பைத்தியக்காரர்கள், நன்மை-தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்கு பதிலாக ஏழைகளுக்கு உணவு ஏதும் கொடுக்க வேண்டியதுமில்லை. சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப்பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். "தீ" மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களை காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும். நோன்பை முறிக்கும் செயல்கள் 1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும். 2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது. 3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது. 4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும். 5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும். நோன்பின் அனுமதிகள் 1. நோன்பின்போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண், காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்வற்றிற்கு அனுமதியுள்ளது. 2. காயங்கள், சிறுமூக்கு உடைதல், பல்பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது. 3. நோன்பு நாட்களின் பகல்பொழுதில் பல் துலக்குவது தவறில்லை. மாறாக அது நோன்பல்லாத நாட்களில் சுன்னத்தாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும். 4. குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வதில் தவறில்லை. அதற்கு அடுத்து வரும் சுப்ஹு தொழுகைக்காக குளித்துக் கொண்டாலே போதுமானது. 5. கடும் வெயிலின் காரணமாக குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக்கொள்வதோ, குளிர் சாதனங்களை உடல்மீது பயன்படுத்துவதிலோ, பகல் மற்றும் மாலைபொழுதில் குளித்துக் கொள்வதிலோ தவறில்லை. 6. நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக்கொண்டு பிறகு வாய்ப்புக் கிடைக்கும் போது சாப்பிட்டு கொண்டால் போதுமானது. 7. வாய் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கிவிட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டைவரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும். 8. நேரம் தெரியாமல் சூரியன் மறைந்து விட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது ஃபஜ்ர் நேரம் வரவில்லை என்று நினைத்து, ஃபஜ்ர் நேரம் வந்ததற்கு பிறகு சாப்பிட்டு விட்டாலோ நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். 9. மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டோ, குடித்தோ விட்டால் நோன்பு முறியாது. ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனே நிறுத்திகொள்ள வேண்டும். நோன்பின் ஒழுங்குகள் 1. ஃபஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும் சூரியன் மறைந்த உடனே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும். 2. பேரித்தம் பழத்தை கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும். 3. ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்துவிட்டது என தெரிந்தும் ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும். 4. ஹலால் என்னும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உணவையே உட்கொள்ள வேண்டும். 5. நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும். 6. ரமலான் கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவை தேடிக்கொள்ள வேண்டும். 7. பெருநாள் தொழுகைக்கு முன்பு ஸதகத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை முறையாகக் கொடுக்க வேண்டும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் "பித்ரா" எனும் நோன்பு பெருநாள் தர்மம் இசுலாம் இசுலாமிய கடமைகள் அரபு மொழிச் சொற்கள் ரமலான்
6514
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நோன்பு
நோன்பு என்பது பொதுவாக குறிப்பிட்ட நேரத்திற்கு உணவு உண்ணாமை அல்லது உணவைக் குறைத்தல் என்பதாகும். இது ஒரு சமயச் சடங்கின் பகுதியாகவும் மேற்கொள்ளப்படும். மேலும் இது உண்ணாநிலை மற்றும் பிற புலனடக்கக் கட்டுப்பாடுகளைக் குறிக்கும் சொல்லாகும். இந்துக்களின் நோன்பு இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங் கருதிச் செய்யும் சாதனைகளில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் எனப் பொருள்படும். இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. சமணர்களின் நோன்பு சமண சமயத்தவர் வீடுபேறு அடைவதற்காக சல்லேகனை எனும் உண்ணா நோம்பிருந்து உயிர்விடுவதைக் குறிக்கும். முஸ்லிம்களின் நோன்பு ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், ஷைத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இவ்வுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் அல்லா ( தமிழில் 'இறைவன்') சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். ஆக சடங்காக இல்லாமல் வணக்கம் என்ற எண்ணத்தில் செய்வதாகும். அதாவது நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. மேற்கோள்கள் சமய நடத்தைகளும் அனுபவங்களும் நோன்பு
6517
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE.%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D
பா. ராகவன்
பா. ராகவன் (பிறப்பு: அக்டோபர் 8, 1971) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆவார். புதினங்கள், சிறுகதைகள், மற்றும் அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியிருக்கிறார். தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பாரதிய பாஷா பரிட்சத் விருது பெற்றவர். வாழ்க்கைக் குறிப்பு பா. ராகவனின் தந்தை பெயர் ஆர். பார்த்தசாரதி. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். வழி வழியாகப் பள்ளிக் கல்வி ஆசிரியர்களாக இருந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். தலைமை ஆசிரியராக, மாவட்டக் கல்வி அதிகாரியாக, பள்ளிக் கல்வித்துறை துணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரும் ஓர் எழுத்தாளர் ஆவார். ஆர்.பி. சாரதி என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் பல எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பில் தீவிர நாட்டம் கொண்டவர். பாபர் நாமாவைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். புகழ்பெற்ற வரலாற்றாசிரியரான ராமச்சந்திர குஹாவின் 'India after Gandhi' நூலைத் தமிழாக்கம் செய்தவர். இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகாவம்சத்தையும் தமிழாக்கம் செய்துள்ளார். பணி மாறுதல்களின்போது அவர் இடம் பெயர்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று பா. ராகவன் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பிறகு சென்னை தரமணி மத்திய தொழில் நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பயின்றார். அச்சமயமே பா. ராகவனின் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்து, சென்னையை நிரந்தர வசிப்பிடமாக்கிக்கொண்டது. பள்ளி நாள்களிலேயே எழுத்தார்வம் ஏற்பட்டு, பத்திரிகைகளில் கவிதைகள், துணுக்குகள் எழுத ஆரம்பித்தார் பா. ராகவன். இவரது முதல் எழுத்து முயற்சியான ஒரு குழந்தைப் பாடல் கோகுலம் சிறுவர் இதழில் வெளிவந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதினார். ஆனால் எதுவும் பிரசுரமாகவில்லை. 1989ம் ஆண்டு எழுத்தாளர் ம.வே. சிவகுமாரின் தொடர்பும் நட்பும் கிட்டிய பின்பே எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டதாகச் சொல்கிறார். 1990ம் ஆண்டு கி. கஸ்தூரி ரங்கன் ஆசிரியராக இருந்த கணையாழி மாத இதழில் இவரது சிறுகதை ஒன்று பிரசுரமானது. எழுத்துலகில் பா. ராகவன் கவனம் பெற அதுவே காரணமாக இருந்தது. 1992ம் ஆண்டு இறுதியில் கல்கி வார இதழில் இவர் எழுதிய 'மொஹஞ்சதாரோ' என்ற சிறுகதை அன்றைய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பாக எழுந்த கலவரங்களை மையப்படுத்தி, நையாண்டி கலந்த விமரிசனத்தை முன்வைத்தது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற அச்சிறுகதையின் வாயிலாகவே பா. ராகவன் பத்திரிகைப் பணிக்குள் நுழைந்தார். 1992ம் ஆண்டு டிசம்பர் முதல் 2000வது ஆண்டு வரை கல்கி வார இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு குமுதம் வார இதழில் மூன்றாண்டுக் காலம் பணி புரிந்தார். குமுதம் ஜங்ஷன் இதழ் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியரானார். 2004ம் ஆண்டு பத்திரிகைத் துறையை விட்டு விலகி, பதிப்புத் துறையில் பணி புரியத் தொடங்கினார். 'நியு ஹொரைசன் மீடியா' நிறுவனத்தின் கிழக்கு பதிப்பகம் தொடங்கப்பட்டபோது அதன் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று, அந்நிறுவனத்தின் 'நலம்', 'வரம்', 'ப்ராடிஜி' உள்ளிட்ட அனைத்துத் தமிழ் பதிப்புகளையும் திறம்படத் துலக்கம் பெறவைத்தார். தமது பதிப்பாசிரியர் பணிக்காலத்தில் சுமார் ஆயிரம் புத்தகங்களைக் கொண்டு வந்தார். தமிழ் பதிப்புத் துறையில் 'கிழக்கு பதிப்பக'த்தின் தோற்றமும் பா. ராகவன் அதில் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட புத்தகங்களும் இன்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. 2011ம் ஆண்டின் மத்தியில் பதிப்புத் துறையில் இருந்து விலகிய பா. ராகவன் அதன்பின் முழு நேர எழுத்தாளராக உள்ளார். இதுவரை பத்து நாவல்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். சென்னை குரோம்பேட்டையில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். எழுத்துப் பணிகள்: இரண்டாயிரமாவது ஆண்டு வரை சிறுகதைகளும் நாவல்களும் மட்டும் எழுதிக்கொண்டிருந்த பா. ராகவன், குமுதம் வார இதழில் பணி சேர்ந்த பின்பு பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றினை ஒரு தொடராக எழுதினார். அதன் வெற்றிக்குப் பின்பு டாலர் தேசம் [அமெரிக்க அரசியல் வரலாறு], நிலமெல்லாம் ரத்தம் [இஸ்ரேல்-பாலஸ்தீன் சிக்கல்களின் வரலாறு], மாயவலை [சர்வதேச தீவிரவாத வலைப்பின்னல் குறித்த விரிவான ஆய்வு நூல்] உள்ளிட்ட ஏராளமான அபுனை நூல்களை எழுதினார். லட்சக்கணக்கான தமிழ் வாசகர்களுக்கு சர்வதேச அரசியல் விவகாரங்களை சிக்கலற்ற எளிய மொழியில் விவரிப்பவர் என்று பெயர் பெற்றார். பத்தாண்டுக் காலம் அரசியல் நூல்களை மட்டுமே எழுதிக்கொண்டிருந்த பா. ராகவன், 2017ம் ஆண்டு தமது 'பூனைக்கதை' என்ற நாவலின் மூலம் மீண்டும் படைப்பிலக்கியத்துக்குள் திரும்பினார். "பூனைக்கதை கலைத்துறை சார்ந்த ஒரு நாவல். ஆனால் வண்ணமோ வாசனையோ சற்றும் இல்லாத அதன் ஒரு பகுதியை மட்டும் இது சித்திரிக்கிறது. கண்ணீரும் இல்லாத, புன்னகையும் இல்லாத ஒரு பேருலகம். இங்கும் மனிதர்கள் வசிக்கிறார்கள். சம்பாதிக்கிறார்கள். கஷ்டப்படுகிறார்கள். சமயத்தில் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். இருப்பதும் இறப்பதும் இங்கும் நிகழ்கிறது. கலையுலகம்தான். ஆனால் இதன் முகமும் அகமும் வேறு. நீங்கள் இதுவரை இந்த உலகத்துக்குள் நுழைந்து பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போது பார்க்கலாம்." என்று தமது பூனைக்கதை குறித்து பா. ராகவன் குறிப்பிடுகின்றார். நெடுங்காலமாகத் தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் வசனகர்த்தாவாகப் பங்கேற்று வந்த தமது அனுபவங்களின் அடிப்படையில் தொலைக்காட்சித் தொடர்களின் உலகினை, அதன் இருள் மூலைகளை இந்நாவலில் காட்சிப் படுத்தியிருக்கிறார். பூனைக்கதைக்குப் பிறகு யதி என்ற நாவலினை எழுதி வெளியிட்டார். இது சன்னியாசிகளின் உலகில் சுற்றிச் சுழலுகின்ற கதை. தனது கல்லூரிக் காலத்துக்குப் பின்பு சிறிது காலம் தீவிர ஆன்மிக வேட்கை உண்டாகி, பல சாதுக்கள், சன்னியாசிகளுடன் சுற்றித் திரிந்தவர் பா. ராகவன். மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைமைத் துறவியாக அப்போதிருந்த சுவாமி தபஸ்யானந்தாவின் சந்திப்புக்குப் பின் அவரால் அமைதிப்படுத்தப்பட்டு, துறவைக் காட்டிலும் எழுத்தே மீட்சிக்கு வழியென உணர்ந்து திரும்பியதாகக் கூறுகிறார். படைப்புகள் புதினங்கள் அலகிலா விளையாட்டு அலை உறங்கும் கடல் இறவான் கபடவேடதாரி கால் கிலோ காதல் அரை கிலோ கனவு கொசு தூணிலும் இருப்பான் நிலாவேட்டை புவியிலோரிடம் புல்புல்தாரா பூனைக்கதை [2017] மெல்லினம் யதி [2018] ரெண்டு சிறுகதைத் தொகுப்புகள் காந்திசிலைக் கதைகள் குதிரைகளின் கதை பறவை யுத்தம் மாலுமி [2018] முன்னூறு வயதுப் பெண் மூவர் அரசியல் வரலாறுகள் மாயவலை - சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய விரிவான ஆய்வு பாக். ஒரு புதிரின் சரிதம் - பாகிஸ்தானின் அரசியல் வரலாறு டாலர் தேசம் (அமெரிக்காவின் அரசியல் வரலாறு) 9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி (2004) நிலமெல்லாம் ரத்தம் (2005) அல் காயிதா : பயங்கரத்தின் முகவரி (2005) ஹிஸ்புல்லா : பயங்கரத்தின் முகவரி (2006) இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் (2006) ஹிட்லர் (2006) அன்புடையீர் நாங்கள் பயங்கரமானவர்கள் (ஸ்பெயினின் ETA போராளிகளைப்பற்றியது) தாலிபன் மீண்டும் தாலிபன் (2021) ஜமா இஸ்லாமியா ஐ.எஸ்.ஐ: நிழல் அரசின் நிஜ முகம் பர்வேஸ் முஷரஃப் மாவோயிஸ்ட்: அபாயங்களும் பின்னணிகளும் ஆர்.எஸ்.எஸ் - வரலாறும் அரசியலும் காஷ்மீர் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு ஆயில் ரேகை பிரபாகரன் - வாழ்வும் மரணமும் கலவரகாலக் குறிப்புகள் ஆடிப்பாரு மங்காத்தா பொன்னான வாக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் - கொலைகாரன்பேட்டை தனிக் கட்டுரை நூல்கள் ஜெயித்த கதை 154 கிலோபைட் 24 கேரட் ஓப்பன் டிக்கெட் எக்சலண்ட்! உணவின் வரலாறு மூன்றெழுத்து பின்கதை சுருக்கம் யானி: இசைப் போராளி ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் (சென்னை நினைவுக் குறிப்புகள்) நகைச்சுவை நூல்கள் அன்சைஸ் குற்றியலுலகம் இங்க்கி பிங்க்கி பாங்க்கி சந்து வெளி நாகரிகம் உய் - வரி இலக்கியம் வாழ்க்கை வரலாறு பொலிக பொலிக - ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு சிறுவர் நூல்கள் அமெரிக்க சுதந்தரப் போர் இஸ்லாம் மொசார்ட் இரண்டாம் உலகப் போர் மகாவீரர் புதையல் தீவு ஐஸ் க்ரீம் பூதம் திரைப்படங்கள் பா. ராகவன் இரண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். கனகவேல் காக்க [2010] தம்பி வெட்டோத்தி சுந்தரம் [2011] தொலைக்காட்சித் தொடர்கள் வாணி ராணி (சன் டிவி) கல்யாணப் பரிசு (சன் டிவி) கண்மணி (சன் டிவி) கெட்டி மேளம் (ஜெயா டிவி) சிவசக்தி (சன் டிவி) உதிரிப்பூக்கள் (சன் டிவி) செல்லமே (சன் டிவி ) முந்தானை முடிச்சு (சன் டிவி) மனெ தேவுரு (உதயா டிவி) முத்தாரம் (சன் டிவி) செல்லக்கிளி ( சன் டிவி ) தேவதை (சன் டிவி) புதுக்கவிதை (விஜய் டிவி) கல்யாணப்பரிசு (சன் டிவி ) சிவசங்கரி (சன் டிவி) என் இனிய தோழியே (ராஜ் டிவி) அருந்ததி (ராஜ் டிவி ) கண்மணி (சன் டிவி) சித்தி 2 (சன் டிவி) புதுப்புது அர்த்தங்கள் (ஜீ டிவி) 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் வரை நீண்ட வாணி ராணி தொலைக்காட்சித் தொடர் தமிழில் வெளிவந்தவற்றுள் மிக நீண்ட தொலைக்காட்சித் தொடராகும். 1750 பகுதிகள் வெளியான இத்தொடர் முழுமைக்கும் வசனம் எழுதியவர் இவரே. இந்திய அளவில் இது ஒரு சாதனையாகக் கணிக்கப்படுகிறது. விருதுகள் பாரதிய பாஷா பரிஷத் இலக்கியப்பீடம் சிறந்த நாவலாசிரியர் விருது ( அலகிலா விளையாட்டு - 2003) திருப்பூர் தமிழ்ச்சங்கப் பரிசு (மெல்லினம் நாவலுக்காக) கம்பம் பாரதி இலக்கியப் பேரவை விருது (இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் - 2008) சன் குடும்பம் சிறந்த வசன கர்த்தா விருது - வாணி ராணி தொடருக்காக [2018] வாசகசாலை சிறந்த நாவலாசிரியர் விருது (பூனைக்கதை, 2018) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் எழுத்தாளர் பா. ராகவனின் இணைய தளம் அமேசான் தளத்தில் பா. ராகவன் வெளியிட்ட மின்னூல்கள் பா. ராகவனின் எழுத்துப் பயிற்சி வகுப்பு தமிழக எழுத்தாளர்கள் இதழாசிரியர்கள் 1971 பிறப்புகள் வாழும் நபர்கள் தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் தமிழ்த் திரைப்பட வசன ஆசிரியர்கள் சென்னை எழுத்தாளர்கள்
6518
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF
சிவகாசி
சிவகாசி (Sivakasi), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டம் மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இந்த மாநகராட்சி தற்போது 48 வார்டுகளைக் கொண்டுள்ளது. சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு, சிவகாசி நகராட்சி 24 ஆகத்து 2021 அன்று தமிழ்நாடு மாநிலத்தின், 21-ஆவது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. புவியியல் இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் (331 அடி) உயரத்தில் இருக்கின்றது. சிவகாசி வரலாறு தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில், அவருடைய ஆட்சி பகுதியின் ஒரு பகுதியாக சிவகாசி இருந்திருக்கிறது. இந்த மன்னர், தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து சிவகாசியில் நிறுவினார். காசியிலிருந்து வந்த சிவலிங்கம் இங்கு நிறுவப்பட்டதால், காசி சிவலிங்கம் பெயராலே சிவகாசி என்று அழைக்கப்படுகிறது. பிற்கால பாண்டிய மன்னர்களும் மற்றும் நாயக்க மன்னரான திருமலை நாயக்கரும் சிவலிங்கம் இருக்கும் கோயிலை மிகப் பெரிய கோயிலாகக் கட்டினர். இந்த கோயில் தற்போது காசி விஸ்வநாதசாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த கோயில் ஆன்மீக பக்தர்கள் மட்டுமல்லாது, சுற்றுலா பயணிகளும் வந்து தரிசித்துவிட்டு அருள் பெரும் முக்கிய ஆன்மீகத் தலமாக விளங்குகிறது. சிவகாசி நகராட்சி 1920 இல் நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், சிவகாசி மெட்ராஸ்(தற்போது சென்னை) மாநிலத்தின் கீழ் ஒரு நகராட்சியாகவும், பின்னர் 1953, 1956 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் மொழியியல் ரீதியாக பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவும் தொடர்ந்தது. பின்னர் 1968 இல் மறுபெயரிடப்பட்டது. பின்னர் 1978 இல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 1978 இல் முதல் நிலை நகராட்சியாகவும், 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013ல் நிர்வாகத் தலைமையிட சிறப்பு நிலை நகராட்சியாகவும் , 24 ஆகஸ்ட் 2021ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிவகாசியானது பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சிடும் தொழில்களில் நிபுணத்துவம் பெற்ற ஒரு தொழில்துறை நகரம். இங்குள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் தீ மற்றும் வெடிவிபத்துகள் என பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மக்கள் வகைப்பாடு இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 71,040 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 35,356 ஆண்கள், 35,684 பெண்கள் ஆவார்கள். சிவகாசி மக்கள்தொகையின் பாலின விகிதம் 1009. அதாவது 1000 ஆண்களுக்கு, 1009 பெண்கள் இருக்கிறார்கள். சிவகாசி மக்களின் சராசரி கல்வியறிவு 88.28% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.76%, பெண்களின் கல்வியறிவு 83.84% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. சிவகாசி மக்கள் தொகையில் 6,963 (9.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிவகாசியில் 18,952 வீடுகள் உள்ளன. 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.42% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 9.21% கிருஸ்துவர்கள் 5.20%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். சிவகாசி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 8.35%, பழங்குடியினர் 0.25% ஆக உள்ளனர். தொழில் சிவகாசி பட்டாசு தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது. 1960களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அன்று இருந்த தேசிய பொருளாதார நிலையின்மையிலும் இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்களின் தொழில் திறனை வைத்து ஸ்திரமான நிலையினை தக்க வைத்துகொண்டனர். இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தான் தயாராகின்றன. மேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஊர் மக்களுக்கு 100% வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 1980களில் இந்த ஊரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்ததாக கணக்கிடப்பட்டு இப்போது அது முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. சிவகாசி நகரமானது மூன்று முக்கிய தொழில்களைச் சார்ந்துள்ளது: பட்டாசுகள், தீப்பெட்டி உற்பத்தி மற்றும் அச்சிடுதல் போன்றவையாகும். இந்த நகரத்தில் 520 பதிவு செய்யப்பட்ட அச்சிடும் தொழில்கள், 53 தீப்பெட்டி தொழிற்சாலைகள், 32 இரசாயன தொழிற்சாலைகள், ஏழு சோடா தொழிற்சாலைகள், நான்கு மாவு ஆலைகள் மற்றும் இரண்டு அரிசி மற்றும் எண்ணெய் ஆலைகள் உள்ளன. இந்த நகரம் தேசிய அளவில் பட்டாசு உற்பத்திக்கான ஒரு முக்கிய நகரமாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டில், இந்தத் தொழிலில் 25,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் ஆண்டு வருமானம் 5 பில்லியன் டாலர் (அமெரிக்க $ 72 மில்லியன்) ஆகும். 2011 ஆம் ஆண்டில், நகரத்தில் பட்டாசு, தீப்பெட்டி தயாரித்தல் மற்றும் அச்சிடும் துறையின் மொத்த வருவாய் சுமார் 20 பில்லியன் (அமெரிக்க $ 290 மில்லியன்) ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் தீப்பெட்டிகள் ஏறத்தாழ 70% சிவகாசியிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. நகரத்தின் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிக்கும் தொழில்களுக்கு உகந்ததாகும். இந்தத் தொழில்களுக்கான மூலப்பொருட்கள் முன்னதாக சத்தூரிலிருந்து வாங்கப்பட்டன, ஆனால் அதிக உற்பத்தி செலவு காரணமாக அவை நிறுத்தப்பட்டன. தற்போது மூலப்பொருட்களின் கேரளா மற்றும் அந்தமான் ஆகிய நகரங்களிலிருந்து வாங்கப்படுகிறது. அச்சிடும் தொழிலுக்கான காகிதம் பல்வேறு மாநிலங்களிலிருந்து வாங்கப்படுகிறது. இந்த நகரம் தினக்குறிப்புப்புத்தகம் தயாரிப்பதில் முக்கின பங்கு வகிக்கிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த தினக்குறிப்புப்புத்தகம் 30% இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. இந்நகரத்தில் அச்சிடும் தொழில் ஆரம்பத்தில் பட்டாசுகளுக்கான லேபிள்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் நவீன இயந்திரங்களுடன் பரிணாமம் அடைந்து அச்சிடும் மையமாக வளர்ந்தது. 2012 ஆம் ஆண்டில், அனைத்து தொழில்களும் மின் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் செலவு அதிகரிப்பதால் 15-20% உற்பத்தி இழப்பை சந்தித்தன. கல்வி நிலையங்கள் 2011 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி, இந்நகரத்தில் ஐந்து அரசுப் பள்ளிகள் உள்ளன. அதில் இரண்டு தொடக்கப் பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி, ஒரு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளிகள் ஆகும். மேலும் பத்து தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு இருக்கும் சிவகாசி இந்து நாடார் உறவின் முறை விக்டோரியா பள்ளிகள் மிகவும் பழமையானதாகும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இந்நகரத்தில் இரண்டு பொறியியல் கல்லூரிகள் உள்ளன, அவற்றில் மெப்கோ பொறியியல் கல்லூரி முக்கியமானது. நகரத்தில் மூன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் மூன்று தொழிற்நுட்பக் கல்லூரிகளும் உள்ளன. மேலும் எச். எப். ஆர் என்னும் மகளிர் கல்லூரியானது, இந்நகரத்தில் பெண்கள் படிப்பதற்கு முக்கிய கல்லூரியாக உள்ளது. அரசியல் இது சிவகாசி சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. 1977 ஆம் ஆண்டு முதல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(அதிமுக) ஐந்து முறையும்(1980, 1984, 1991, 2011 மற்றும் 2016 தேர்தல்களில்), தமிழ் மாநில காங்கிரஸ்(தமாக) இரண்டு முறையும்(1996, 2001), திராவிட முன்னேற்றக் கழகம்(திமுக) ஒரு முறையும் (1989), ஜனதா கட்சி ஒரு முறையும் (1977), மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்(மதிமுக) ஒரு முறையும் (2006) வென்றுள்ளன. இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர், அதிமுகவைச் சேர்ந்த கே. டி. ராஜேந்திர பாலாஜி ஆவார். சிவகாசி தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இதற்கு முன்பு சிவகாசி ஒரு மக்களவைத் தொகுதியாக இருந்தது. தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான சிவகாசி மக்களவைத் தொகுதியும் ஒன்றாகும். சிவகாசி, சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி, சிறீவில்லிப்புத்தூர், இராசபாளையம் (தனி) ஆகியவை இதற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகள் ஆகும். பின்னர் சிவகாசி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம் ஆகிய சட்டசபை தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டு, விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் ஆவார். போக்குவரத்து சாலைப் போக்குவரத்து இந்நகரமானது சாத்தூர், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய நகரங்களுடன் இணைகிறது. இந்நகரத்தை சுற்றி புறவழிச்சாலை இல்லை. இந்நகரத்திலிருந்து மதுரை, விருதுநகர், சென்னை, ஈரோடு, கரூர், கோயம்புத்தூர், காரைக்குடி, திண்டுக்கல், திருச்சி, இராமநாதபுரம், தஞ்சாவூர், சங்கரன்கோவில், செங்கோட்டை, இராஜபாளையம், தென்காசி, கோவில்பட்டி, தூத்துக்குடி போன்ற நகரங்களுக்கு சாலைகள் செல்கிறது. இந்நகரம் ஒரு தொழில்துறை நகரமாக இருப்பதால், குறிப்பிடத்தக்க லாரி போக்குவரத்து உள்ளது, ஒரு நாளைக்கு சுமார் 400-450 லாரிகள் தினமும் நகரத்திற்குள் நுழைகின்றன. தொடருந்து போக்குவரத்து சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து, சிவகாசி தொடருந்து நிலையம் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது. சிவகாசி தொடருந்து நிலையமானது மதுரை - செங்கோட்டை - கொல்லம் வழிதடத்தில் அமைந்துள்ளது. இது விருதுநகர் இராஜபாளையம் மற்றும் செங்கோட்டை, கொல்லம் வழியாக தமிழகத்தை கேரளாவுடன் இணைக்கிறது. பொதிகை அதிவிரைவு இரயிலானது சிவகாசி வழியாக செங்கோட்டை முதல் சென்னை எழும்பூர் வரை செல்கிறது. சிலம்பு, கொல்லம் விரைவு இரயில்களும் சிவகாசி வழியாக செல்லுகின்றன. மேலும் மதுரை - செங்கோட்டை பயணிகள் தொடருந்துகளும் செல்கின்றன. மற்ற அனைத்து விரைவு இரயில்களும், விருதுநகர் தொடருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. காசி விஸ்வநாதசாமி விசாலாட்சி அம்மன் திருக்கோயில்,பத்ரகாளியம்மன் கோவில், சிவகாசி|பத்ரகாளியம்மன் ஆலயம், பராசக்தி மாரியம்மன் ஆலயம், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில், திருவெங்கடாசலபதி ஆலயம், ஸ்ரீ மாரியம்மன் கோயில் போன்றவை சிவகாசியில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான ஆன்மீகத் தலங்கள் ஆகும். இங்கு பங்குனி மாதம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவும் சித்திரை மாதம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆருத்ரா தரிசனம் திருவிழாவும் முக்கியமானதாகும். அய்யனார் நீர்வீழ்ச்சி, முதலியார் ஊத்து, பிளவக்கல் அணை, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், குல்லூர்சந்தை நீர்த்தேக்கம் மற்றும் வெம்பக்கோட்டை ஆகியவை சிவகாசியை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் ஆகும். ஆதாரங்கள் விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
6528
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF
உலக வங்கி
உலக வங்கி (World Bank) என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும்.. உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதிலும் ஈடுபாடு கொண்டவையாக இருக்க வேண்டும். உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆகும். உலக வங்கி உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) மற்றும் பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA) என்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது. உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன :பன்னாட்டு நிதிக் கழகம் (IFC), பலதரப்பு முதலீட்டு பொறுப்புறுதி முகமை (MIGA), பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம் (ICSID) உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசியில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன. தனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியத்தையும் சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் "பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்" என அழைக்கப்பெறுகின்றன. நியூ ஹாம்சயர் மாநில, பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் செலாவணி மற்றும் நிதி மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, 1944) இந்நிறுவனங்களுக்கு இப்பெயர் கிட்டிற்று. உலக வங்கி நிர்வாகம் இதன் தலைவர் எப்பொழுதும் ஓர் அமெரிக்கராக இருப்பதும், அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியராக இருப்பதும் வழக்கம். இதன் செயல்பாடுகள் பலதரபட்ட சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது. வரலாறு உலக வங்கி 1944 பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில், மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. உலக வங்கியின் தலைவர் பாரம்பரியமாக ஒரு அமெரிக்கர். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இரண்டும் வாஷிங்டன்.டி.சி. இருந்து செயல்படுகிறது, மற்றும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் பல நாடுகள் பங்கு பெற்றிருந்தாலும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டும் மிகுந்த சக்திவாய்ந்தவையாக இருந்தன மற்றும் பேச்சுவார்த்தைகளும் ஆதிக்கம் செலுத்தியது. 1944–1974 1974 க்கு முன் உலக வங்கியால் வழங்கப்பட்ட புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி கடன்கள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தன. வங்கியில் உள்ள நம்பிக்கையை உண்டாக்க வேண்டிய அவசியத்தை வங்கி ஊழியர்கள் அறிந்திருந்தனர். நிதிசார் பாதுகாப்புவாத ஆளும், மற்றும் கடன் விண்ணப்பங்கள் கடுமையான விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. உலக வங்கி கடன் பெறும் முதல் நாடு பிரான்சு ஆகும். அந்த நேரத்தில் வங்கியின் தலைவர், சான் சே. மெக்கிலாய், பிரான்சின் மற்ற இரண்டு விண்ணப்பதாரர்களான, போலந்து மற்றும் சிலி ஆகியோரைத் தேர்ந்தெடுத்தார். கடன் 250 மில்லியன் அமெரிக்க டாலர், கோரிய அரை அளவு, அது கடுமையான நிலைமைகளுடன் வந்தது. பிரான்சு ஒரு சமநிலை வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்க ஒப்புக் கொண்டதுடன், மற்ற வங்கிகளுக்கு உலக வங்கிக்கு கடன் திருப்பி செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உலக வங்கியின் ஊழியர்கள், பிரெஞ்சு அரசாங்கத்தின் நிலைமைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்த நிதிகளை பயன்படுத்துவதை நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர். கூடுதலாக, கடன் ஒப்புதலுக்கு முன், ஐக்கிய அமெரிக்க அரசுத் துறை பொதுவுடைமை கட்சியுடன் தொடர்புடைய உறுப்பினர்கள் முதலில் அகற்றப்பட வேண்டும் என்று பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தெரிவித்தனர்.பிரெஞ்சு அரசாங்கம் அதற்க்கு இணங்கி பொதுவுடைமைக் கட்சியுடன் தொடர்புடைய உறுப்பினர்களை நீக்கி, முத்தரப்பு கூட்டணி அரசாங்கம் என்று அழைக்கப்பட்ட, சில மணி நேரங்களில், பிரான்சுக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1974–1980 1974 முதல் 1980 வரையான காலப்பகுதியில் வங்கி வளரும் உலகில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியது. சமூக இலக்குகள் மற்றும் பிற துறைகளில் உள்கட்டமைப்பிலிருந்து கடன் இலக்குகள் விரிவடைந்ததால் கடனாளர்களுக்கான கடன்கள் மற்றும் அளவு அதிகரித்தது. இந்த மாற்றங்கள் லிண்டன் பி. ஜான்சன் 1968 ல் பதவிக்கு நியமிக்கப்பட்ட ராபர்ட் மக்நமாரா காரணமாக இருக்கலாம். நிதியமைப்பின் முதன்மை மூல ஆதாரமாக இருந்த வடக்கு வங்கிகளுக்கு வெளியே மூலதன புதிய ஆதாரங்களைத் தேட வங்கியின் பொருளாளர் யூஜின் ரோட்ட்பெர்யை மக்நமாரா வலியுறுத்தினார். வங்கியிடம் கிடைக்கும் மூலதனத்தை அதிகரிக்க ரோட்ட்பெர் (Rotterberg) உலகளாவிய பத்திர சந்தை பயன்படுத்தியது. வறுமை ஒழிப்புக் கடன் வழங்கும் காலத்தின் விளைவாக, மூன்றாம் உலகக் கடன் விரைவான வளர்ச்சியாக இருந்தது.1976 ஆம் ஆண்டு முதல் 1980 வரையான காலப்பகுதியில் வளரும் உலகக் கடன் சராசரியான 20% வீதத்தில் உயர்ந்தது. 1980 ஆம் ஆண்டில், உலக வங்கியின் குழு மற்றும் அதன் ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறுகளை நிர்ணயிப்பதற்கு உலக வங்கியின் நிர்வாக தீர்ப்பாயம் நிறுவப்பட்டது, அதில் வேலைவாய்ப்பு அல்லது நியமனம் குறித்த விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காத குற்றச்சாட்டுகள் கௌரவப்படுத்தப்படவில்லை. 1980–1989 1980 இல், அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர்ரால் பெயர் குறிப்பிடப்பட்டவர் ஆல்டன் டபிள்யூ. க்ளூசன் அவர்கள் வெற்றி பெற்றார். மௌனமாராவின் பணியாளர்களின் பல உறுப்பினர்களை க்ளோசன் மாற்றினார் மற்றும் வேறுபட்ட முக்கியத்துவத்தை வடிவமைத்தார். 1982 ஆம் ஆண்டில் வங்கியின் முதன்மை பொருளாதார வல்லுனரான ஹாலீஸ் பி. செனெரி பதிலாக அன்னே க்ரூகர் முடிவானது இந்த புதிய கவனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. க்ரூகர், அபிவிருத்தி நிதி பற்றிய தனது விமர்சனத்திற்காகவும் மூன்றாம் உலக அரசாங்கங்களை "வாடகைக்கு தேடும் மாநிலங்களாகவும் விவரிக்கிறார்." 1980 களில் வங்கியானது மூன்றாம் உலக கடனிற்கும், வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு சீரமைப்பு கொள்கைகளுக்கும் கடன் கொடுக்க வலியுறுத்தியது. 1980 களின் பிற்பகுதியில் [UNICEF] அறிக்கை, உலக வங்கியின் கட்டமைப்பு சரிசெய்தல் திட்டங்கள் "ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி அளவுகளை குறைத்துள்ளன" என்று கூறினார். 1989-தற்போது வரை 1989 இல் தொடங்கி, பல குழுக்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களுக்கு பதிலளித்த வகையில், வங்கியின் சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் ஆகியவை அதன் அபிவிருத்தி கொள்கைகளின் கடந்தகால விளைவுகளை குறைப்பதற்கான அதன் கடன்களைத் தவிர்த்தன. இது ஓசோன் மண்டலத்தில் 95 சதவிகித ஓசோன்-குறைக்கும் வேதிப்பொருட்களின் பயன்பாட்டை நீக்குவதன் மூலம், பூமியின் வளிமண்டலத்தில் ஓசோன்-குறைப்பு சேதத்தை நிறுத்துவதற்கு மான்ட்ரியல் ப்ரோட்டோகால்ஸிற்கு இணங்க, ஒரு செயல்பாட்டு நிறுவனத்தை அமைத்துள்ளது. அதன் "Six Strategic Themes" என அழைக்கப்படுவதால், அபிவிருத்திக்கு ஊக்கமளிக்கும் போது சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு கூடுதல் கொள்கைகள் வங்கி செயல்படுத்தியுள்ளது. உதாரணமாக, 1991 ஆம் ஆண்டில், காடழிப்புக்கு எதிராக பாதுகாக்க, குறிப்பாக அமேசானில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த வணிகரிதியான் மரத்துண்டு அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்காது என்று வங்கி அறிவித்தது. உலகளாவிய பொதுப் பொருட்களை மேம்படுத்தும் பொருட்டு உலக வங்கியானது மலேரியா போன்ற தொற்று நோய்களை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது, உலகின் பல பகுதிகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதோடு போர் படைகளில் சேர்கிறது. 2000 ஆம் ஆண்டில், வங்கி "எய்ட்ஸ் மீதான யுத்தம்" ஒன்றை அறிவித்தது, 2011 ஆம் ஆண்டில் வங்கியின் (Stop Tuberculosis Partnership) காசநோய் தடுக்கும் கூட்டி இல் இணைந்தது. சமீபத்தில், சீசெல்சு திட்டத்தில் உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை MAGIC 2010 இல் அறிமுகப்படுத்தியது. அதன் வெற்றிகரமான திட்டம் TIME 2012 இல் தொடங்கப்பட்டது. அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் ஒரு மறைமுகமான புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்டு பாரம்பரியமாக, உலக வங்கியின் [உலக வங்கியின் ஜனாதிபதித் தேர்தல் 2012]] எப்போதும் அமெரிக்கா பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களிடமிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2012 ல், முதல் முறையாக, இரண்டு அமெரிக்க அல்லாத குடிமக்கள் பரிந்துரைக்கப்பட்டனர். மார்ச் 23, 2012 அன்று, அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமா ஜிம் யோங் கிம்யை வங்கியின் அடுத்த தலைவராக அமெரிக்கா நியமிக்கும் என்று அறிவித்தார். ஜிம் யோங் கிம் 27 ஏப்ரல் 2012 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தகுதி தீவிர வறுமை மற்றும் பசி அகற்றும்: 1990 களில் இருந்து 2004 வரை தீவிர வறுமையில் வாழும் மக்களின் விகிதம் ஐந்தில் ஒரு பங்கைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கிலிருந்து குறைவடைந்தது. முடிவுகள் பிராந்தியங்களுக்கும் நாடுகளுக்கும் பரவலாக இருந்தாலும், உலகம் முழுவதும் வறுமையில் வாழும் மக்களின் சதவிகிதம் பாதிக்கப்படுவதற்கான இலக்கை அடைய முடியும் என்று காட்டுகிறது. ஆபிரிக்காவின் வறுமை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, உலகின் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 90% ஆபிரிக்காவில் வாழு 36 நாடுகளில் சேர்ந்தவர்கள். ஊட்டச்சத்து குறைபாடுகளின் இலக்கை அடைய ஒரு கால்நூறுக்கும் குறைவான நாடுகள் தான் சரியான் பாதைகள் அடைந்துள்ளன. உலகளாவிய ஆரம்ப கல்வியை அடைய வேண்டும்: வளரும் நாடுகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் சதவீதம் 1991 ல் 80% இலிருந்து 2005 ல் 88% ஆக அதிகரித்தது. ஆயினும்கூட, முதன்மை பள்ளி வயதில் சுமார் 72 மில்லியன் குழந்தைகள், 57% பெண்கள் , படித்தது இல்லை. பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல்: தொழிலாளர் சந்தையில் பெண்களுக்கு மெதுவாக இயங்குகிறது, ஆண்களை விட 60 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் - பங்களிப்பு செய்கிறார்கள், ஆனால் செலுத்தப்படாத குடும்பத் தொழிலாளர்கள். உலக வங்கி குழு பாலினத் திட்டத் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை முன்னேற்றுவிக்கவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டது. குழந்தை இறப்பு விகிதம் குறைக்க: உலகளவில் உயிர் பிழைப்பு விகிதங்களில் சில முன்னேற்றங்கள் உள்ளன; தெற்காசியா மற்றும் சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் மிக அவசரமாக துரிதப்படுத்தப்பட்ட மேம்பாடுகள் தேவைப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டில் 5 வயதுக்கு உட்பட்ட 10 மில்லியன் குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது; அவர்களது இறப்புகளில் பெரும்பாலானவை தடுக்கக்கூடிய காரணங்களாகும். தாய்வழி உடல்நலத்தை மேம்படுத்துதல்: கர்ப்பம் அல்லது பிரசவத்தில் இறக்கும் கிட்டத்தட்ட அரை மில்லியன் பெண்கள், சப்-சஹாரா ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் வாழ்கின்றனர். பரவலாக அணுகக்கூடிய பல்வேறு வகையான சுகாதாரத் தலையீடுகள் தேவைப்படும் தாய்வழி மரணம் ஏராளமான காரணங்கள் உள்ளன. எச்.ஐ.வி / எய்ட்ஸ், மலேரியா மற்றும் பிற நோய்கள்: புதிய எச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் மற்றும் எய்ட்ஸ் இறப்புக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது, ஆனால் எச் ஐ வி உடன் வாழும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. எட்டு மோசமான பாதிப்புக்குள்ளான ஆப்பிரிக்க நாடுகளில், பாதிப்பு 15 சதவிகிதம் அதிகமாகும். சிகிச்சை உலகளாவிய அளவில் அதிகரித்துள்ளது, ஆனால் இன்னும் 30 சதவிகிதம் தேவைப்படுகிறது (நாடுகளில் பரந்த வேறுபாடுகள்). சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் 2007 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் இறப்புக்கள் மரணத்திற்கு முக்கிய காரணம் எய்ட்ஸ் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 300 முதல் 500 மில்லியன் மலேரியா நோயாளிகள் இருக்கிறார்கள், இது 1 மில்லியன் மில்லியன் மரணங்களுக்கு வழிவகுக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து வழக்குகளும் மற்றும் இறப்புக்களின் 95 சதவிகிதமும் சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் நிகழ்கின்றன. சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துக: காடழிப்பு ஒரு முக்கியமான சிக்கலாக உள்ளது, குறிப்பாக உயிரியல் பல்வகைமையின் பகுதிகளில், இது தொடர்ந்து சரிகிறது. ஆற்றல் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விட பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அபிவிருத்திக்கான உலகளாவிய பங்களிப்பு அபிவிருத்தி: நன்கொடை நாடுகள் தங்கள் உறுதிப்பாட்டை புதுப்பித்துள்ளன. கோர் செயல்திட்டத்தின் தற்போதைய விகிதத்துடன் ஒப்பிட, நன்கொடையாளர்கள் தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும். எம்.டி.ஜி.க்கள் 'உணர்தல் தொடர்பாக விரைவான முன்னேற்றத்திற்கு பல பங்காளி மற்றும் உள்ளூர் பங்காளிகளுடன் வங்கி குழுவின் ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது. இவற்றையும் பார்க்க அமெரிக்க டொலர் ஒழுங்குடைமை அனைத்துலக நாணய நிதியம் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி உலக வங்கிக் குழுமம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் http://www.worldbank.org/ வங்கிகள் உலகப் பொருளாதார முறைமை பன்னாட்டு அமைப்புகள்
6531
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஈமானின் கிளைகள்
எழுபதிற்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட மகத்தான ஈமான், மனித வாழ்வின் எந்தத் துறையையும் விட்டுவைக்காமல் சூழ்ந்துள்ளது. எனவே முழு வாழ்வையும் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஈமானின் வழி காட்டுதலுடன் கழிக்கும் முஸ்லிம் மட்டுமே ஈமானில் முழுமையடைகிறான். வாழ்வில் அனைத்துத் துறையிலும் மிளிர்ந்திடும் ஈமான் அம்மனிதனின் வாழ்க்கையையே வணக்கமாக மாற்றிவிடுகிறது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும். ஈமானிற்கு எழுபதிற்கும் அதிகமாக கிளைகள் உள்ளன. அதில் முதன்மையானது லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதாகும். அதில் இறுதியானது துன்பம் தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவது. வெட்கமும் ஈமானில் ஒரு பகுதியாகும். (நூல்: முஸ்லிம்) 1) அல்லாஹ்வை நம்புவது. 2) இறைத்தூதர்களை நம்புவது. 3) மலக்குமார்களை நம்புவது. 4) திருக்குர்ஆனையும் ஏனைய இறைவேதங்களையும் நம்புவது. 5) நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதே! என்ற விதியை நம்புவது. 6) உலக அழிவு நாளை நம்புவது. 7) மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதை நம்புவது. 8) மரணத்திற்குப் பின் எழுப்பப்பட்டு ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்படும் மஹ்ஷரை நம்புவது. 9) முஃமின் செல்லுமிடம் சொர்க்கம் என நம்புவது. 10) அல்லாஹ்வை நேசிப்பது. 11) அல்லாஹ்வுக்குப் பயப்படுவது. 12) அல்லாஹ்வின் அருளில் ஆதரவு வைப்பது. 13) அல்லாஹ்வின் மீதே பொறுப்புச் சாட்டுவது. 14) முஹம்மது (ஸல்) அவர்களை நேசிப்பது. 15) முஹம்மது (ஸல்) அவர்களை கண்ணியப்படுத்துவது. 16) "இறைநிராகரிப்பை விட நெருப்பில் எறியப்படுவதே மேல்!" எனும் அளவிற்கு இஸ்லாத்தை நேசிப்பது. 17) அல்லாஹ்வைப் பற்றியும் அவனது மார்க்கததைப் பற்றியுமுள்ள கல்வியை கற்பது. 18) கல்வியைப் பரப்புவது. 19) திருக்குர்ஆனை கற்பது மற்றும் கற்றுக் கொடுப்பதன் மூலம் அதனை கண்ணியப்படுத்துவது. 20) தூய்மையாக இருப்பது. 21) ஐவேளை-கடமையான -தொழுகைகளை நிறைவேற்றுவது. 22) ஜகாத் கொடுப்பது. 23) ரமலான் மாதம் நோன்பு நோற்பது. 24) இஃதிகாஃப் இருப்பது. 25) ஹஜ் செய்வது. 26) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவது. 27) அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிவதற்காக ஆயத்தமாவது, தயார் நிலையில் இருப்பது. 28) -அறப்போரில்- எதிரியை சந்திக்கும் போது உறுதியாக நிற்பது, புறமுதுகிட்டு ஓடாமலிருப்பது. 29) முஸ்லிம்களின் ஆட்சித் தலைவருக்கு போரில் கனீமத்தாகக் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைக் கொடுப்பது. 30) அல்லாஹ்விற்காக அடிமையை உரிமை விடுவது. 31) குற்றவாளி அதற்குரிய பரிகாரங்களை நிறைவேற்றுவது. (1. கொலை, 2. லிஹார், 3. ரமலான் நோன்பின் போது தாம்பத்யத்தில் ஈடுபட்டுவிடுதல் போன்றவற்றின் பரிகாரங்கள்) 32) ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது. 33) அல்லாஹ்வின் எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவது. 34) தேவையற்ற விஷயங்களிலிருந்து நாவை பாதுகாப்பது. 35) அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைப்பது. 36) கொலை செய்யாதிருப்பது. 37) கற்பைப் பேணுவது, தவறான வழிகளில் இச்சையைத் தீர்த்துக் கொள்ளாதிருப்பது. 38) திருடாதிருப்பது. 39) உணவு மற்றும் பானங்களில் -ஹலால்,ஹராம்- பேணுவது. 40) மார்க்கத்திற்கு முரணான அனைத்து வீண், விளையாட்டுகளை விட்டும் தூரமாவது. 41) ஆண்கள், பட்டாடை மற்றும் கரண்டைக்கு கீழ் ஆடைகளை அணியாதிருப்பது. 42) ஹராமான பொருளாதாரத்தை உட்கொள்ளாதிருப்பது, செலவு செய்வதில் நடுநிலையை கடைபிடிப்பது. 43) மோசடி, பொறாமை போன்ற தீயபண்புகளை தவிர்ப்பது. 44) மனித கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்காதிருப்பது. 45) அல்லாஹ்வுக்காகவே -மனத்தூய்மையுடன்- நல்லறங்கள் புரிவது. 46) நல்லவைகளைச் செய்தால் மகிழ்வது, தீயவைகளைச் செய்துவிட்டால் கவலைப்படுவது. 47) பாவமன்னிப்பின் மூலம் அனைத்துப் பாவங்களையும் போக்குவது. 48) அகீகா மற்றும் (ஹஜ்ஜின் போது கொடுக்கப்படும்)ஹதீ, உழ்ஹிய்யா போன்ற இறைநெருக்கத்தைப் பெற்றுத் தரும் காரியங்களைச் செய்வது. 49) (இஸ்லாமிய)ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவது. 50) முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் இணைந்திருப்பது. 51) மக்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பது. 52) நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது. 53) நல்லவைகளிலும் இறையச்சமான காரியங்களிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருப்பது. 54) வெட்கப்படுவது. 55) பெற்றோருக்கு பணிவிடை செய்வது. 56) உறவினர்களுடன் இணைந்து வாழ்வது. 57) நற்குணத்துடன் நடப்பது. 58) அடிமை மற்றும் பணியாட்களிடம் நல்லமுறையில் நடப்பது. 59) அடிமை எஜமானுக்குக் கட்டுப்படுவது. 60) பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினரின் உரிமைகளைப் பேணுவது, அவர்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பது. 61) முஸ்லிம்களை நேசிப்பது, அவர்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்புவது. 62) ஸலாத்திற்கு பதிலுரைப்பது. 63) நோயாளியை விசாரிப்பது. 64) முஸ்லிம்களில் மரணித்தவர்களுக்காக தொழுகை நடத்துவது. 65) தும்மியவருக்கு -யர்ஹமுகல்லாஹ் என -பதிலுரைப்பது. 66) இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் சமூகவிரோதிகளை விட்டும் தூரமாகியிருப்பது, அவர்கள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்வது. 67) அண்டை வீட்டாருடன் கண்ணியமாக நடப்பது. 68) விருந்தினர்களை கண்ணியப்படுத்துவது. 69) பிறரின் குறைகளை மறைப்பது. 70) சோதனைகளில் பொறுமையை மேற்கொள்வது. 71) உலக விஷயத்தில் பற்றற்று இருப்பது, உலக ஆசைகளைக் குறைத்துக் கொள்வது. 72) மார்க்க விஷயத்தில் ரோஷப்படுவது. 73) வீணான அனைத்துக் காரியங்களையும் புறக்கணிப்பது. 74) அதிகமாக தர்மம் செய்வது. 75) சிறியவர்களுக்கு இரக்கம் காட்டுவது, பெரியவர்களை மதிப்பது. 76) பிரச்சினைக்குரியவர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பது. 77) தனக்கு விரும்புவதை தனது முஸ்லிம் சகோதரனுக்கும் விரும்புவது. 78) துன்பம் தரும் பொருட்களை பாதையை விட்டும் அகற்றுவது. (ஆதாரம்: ஹதீஸ் கலை வல்லுனர்களில் ஒருவரான இமாம் பைஹகீ(ரஹ்) அவர்களின் "ஷுஃபுல் ஈமான்" என்ற நூல்). இசுலாமிய இறையியல்
6547
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF
நாகூர் ரூமி
நாகூர் ரூமி என்ற பெயரில் எழுதும் ஏ. எஸ். முகம்மது ரஃபி (பிறப்பு: மார் 23, 1958) தமிழக எழுத்தாளர். இவர் சாகுல் அமீது, சித்தி ஜெமீமா பேகம் ஆகியோருக்கு தலைமகனாக நாகூரில் பிறந்தார். ஆம்பூரில் மஸ்ஹரூல் உலும் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றிய இவர் தமது குட்டியாப்பா எனும் சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழ் இலக்கிய உலகில் கவனம் பெற்றார். இந்தத் தொகுப்பு கேரளப் பல்கலைக்கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பாடப்புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ்த்துறையிலும் குட்டியாப்பா தொகுதியிலிருந்து பத்து கதைகள் தமிழிலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. கவிதை, கட்டுரை, நாவல், குறுநாவல், சுய முன்னேற்றம் வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம், மொழியாக்கம் என் பல்வேறு துறைகளிலும் இதுவரை இவர் 51 நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் ஒன்பது நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்படdவை. இவர் கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பல விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தினமணி டாட்.காமின் ஜங்ஷனில் இவர் எழுதிய ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகள் நலம் நலமறிய ஆவல் என்ற நூலாக தினமணியின் வெளியீடாக பிரசுரமானது. இவரது இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் என்கிற நூல், இசுலாத்தைக் குறித்து எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டது. அடுத்த வினாடி, ”இந்த விநாடி”, ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ், “மேஜிக் ஏணி” ஆகியவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இவர் எழுதிய சுய முன்னேற்ற நூல்களாகும். மொழிபெயர்ப்பு சிக்மண்ட் ஃப்ராய்டின் உலகப்புகழ் பெற்ற The Interpretation of Dreams நூலைச் சுருக்கமான கனவுகளின் விளக்கம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார். பாரசீக கவிஞானி ஜலாலுத்தின் ரூமியின் கதைகள் கவிதைகள் என்ற பெயரில் மஸ்னவி காவியத்திலிருந்து சூஃபி கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். பாகிஸ்தான் அரசுத்தலைவர் பர்வேஸ் முஷரஃப் எழுதிய சுயசரிதையான In the Line of Fire என்பதன் தமிழாக்கம் இவர் செய்த அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு ஆகும். உடல் மண்ணுக்கு என்ற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. ஹோமரின் 'இலியட்' காவியத்தையும் இவர் ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். The Rules of Wealth என்ற நூலை பியர்சனுக்காக ”செல்வம் சேர்க்கும் விதிகள்” என்ற தலைப்பிலும், பாரக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலை “நம்மால் முடியும்” என்ற தலைப்பிலும் கிழக்கு வெளியீடாகவும் தமிழாக்கம் செய்துள்ளார். விருதுகள் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்காக, 2004 நல்லி திசையெட்டும் விருது, ஹோமரின் இலியட் காவிய மொழியாக்க விருது, 2009 இலக்கியச் சுடர் விருது, 2009 சிராஜுல் மில்லத் மதநல்லிணக்க விருது, 2017 சிறந்த கட்டுரையாளர், சுகி. சுப்ரமணியன் நூற்றாண்டு விருது, 2017. இதுவரை எழுதி வெளிவந்த நூல்கள் நதியின் கால்கள் (கவிதை, ஸ்நேகா, சென்னை) ஏழாவது சுவை (கவிதைத் தொகுதி, சந்தியா, சென்னை) குட்டியாப்பா (சிறுகதைகள், ஸ்நேகா, சென்னை) கப்பலுக்குப் போன மச்சான் (நாவல், சந்தியா, சென்னை) திரௌபதியும் சாரங்கப் பறவையும் (சிறுகதைத் தொகுப்பு, சந்தியா, சென்னை). திராட்சைகளின் இதயம் (நாவல்,கிழக்கு மற்றும் சிக்ஸ்த்சென்ஸ், 2012, 2013, சென்னை) இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் (ஆன்மிகம், கிழக்கு, சென்னை) அடுத்த விநாடி - 2007 (கிழக்கு, சென்னை. ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது). ஜாலியா ஜெயிக்கலாம் வாங்க ஸ்டூடண்ட்ஸ் (மாணவர்களுக்கு) காமராஜ்: கறுப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை (கிழக்கு, சென்னை) கொல்லப் பிறந்த கொடுங்கோலன் (எச்.ஐ.வி. பற்றிய நூல். நலம், சென்னை). ஆல்ஃபா தியானம் - (ஒலிப்புத்தகமாகவும் வந்துள்ளது. கிழக்கு, சென்னை 2007). நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் (நாகூர் மற்றும் நாகூர் ஆண்டவரின் வரலாறு. வரம், சென்னை). மேஜிக் ஏணி, ப்ராடிஜி, சென்னை முற்றாத புள்ளி (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை, சென்னை). சொற்களின் சீனப்பெருஞ்சுவர் (கட்டுரைத் தொகுப்பு, நேர் நிரை, சென்னை). சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம் (கிழக்கு, சென்னை, 2008) சூஃபி வழி இதயத்தின் மார்க்கம் (சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, 2016) இலியட் (குழந்தைகளுக்கான காவிய அறிமுகம். ப்ராடிஜி, சென்னை) HIV எய்ட்ஸ் (மினிமாக்ஸ், அக்டோபர், 2008,சென்னை) சொல்லாத சொல் (கவிதை, நேர்நிரை, டிசம்பர், 2009 சென்னை.) மென்மையான வாள் (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2011,சென்னை) ஸ்டீஃபன் ஹாகிங்: சக்கர நாற்காலியில் சிக்கிய பிரபஞ்சம் (சிக்ஸ்த்சென்ச் பப்ளிகேஷன்ஸ், ஆகஸ்ட் 2015,சென்னை) முத்துக்கள் பத்து (அம்ருதா பதிப்பகம், 2015,சென்னை) மந்திரச்சாவி (கல்கி, சிக்த்ஸ்சென்ஸ் வெளியீடு, சென்னை, டிசம்பர் 2012, 2016) வரலாறு படைத்த வரலாறு ( சிக்த்ஸ்சென்ஸ் வெளியீடு, சென்னை,2016) மாற்றுச்சாவி (கிழக்கு, சென்னை, 2016) இந்த விநாடி (சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2014) அதே வினாடி (சிக்ஸ்த்சென்ச் பப்ளிகேஷன்ஸ், 2015,சென்னை) நாகூர் நாயகம் அற்புத வரலாறு (கதவுகள், சென்னை, 2007) வெற்றிக்கொடி கட்டு ( சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2012) தாயுமானவள் (அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி, 2013) கதைகதையாம் காரணமாம் ( சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன், சென்னை, 2018) நலம் நலமறிய ஆவல் (பின்னாக்கில் புக்ஸ், 2018) சிலையும் நீ சிற்பியும் நீ (கிழக்கு, சென்னை, 2018) சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் (தி இந்து, 2018) நபிமொழிக்கவிதைகள் (வானவில், சென்னை, 2019) நிஜாமுத்தீன் அவ்லியா (கிழக்கு, சென்னை, 2019) குணங்குடி மஸ்தான் சாஹிப் (கிழக்கு, சென்னை, 2020) புறாக்கள் கட்டிய மாளிகை (யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2019) நாகூர் ரூமி கதைகள் (வானவில், சென்னை 2020) மொழிபெயர்ப்புகள் உடல் மண்ணுக்கு (பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதம்): கிழக்கு, சென்னை. இலியட் -- ஹோமரின் காவியம், கிழக்கு, சென்னை. கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள், சந்தியா, சென்னை.உமர் கய்யாமின் ருபாயியாத், ஆரூத் புக்ஸ்,சென்னை. கனவுகளின் விளக்கம், சிகமண்ட் ஃப்ராய்ட், ஸ்நேகா,சென்னை, அழகப்பர் பதிப்பகம், காரைக்குடி. செல்வம் சேர்க்கும் விதிகள், ரிச்சர்ட் டெம்ப்ளர்(கிழக்கு, சென்னை, 2009), கிழக்கு. சென்னை நம்மால் முடியும், பராக் ஒபாமாவின் The Audacity of Hope என்ற நூலின் தமிழாக்கம் (கிழக்கு, சென்னை, 2009) என் பெயர் மாதவி, சுசித்ரா பட்டாச்சார்யாவின் வங்காளச் சிறுகதைகள் தமிழாக்கம் (அம்ருதா, சென்னை 2010) இதயத்தை நோக்கித் திரும்புதல் (கிழக்கு, சென்னை, 2017) ஆங்கில நூல்கள் HIDAYATUL ANAM (From Tamil to English) THE CAT AND THE SEA OF MILK (A Comparative Study of Kamban and Milton) Value Education (A Text-book for UG First Year Students of Thiruvalluvar University, Vellore, Pub. Kathavugal, Chennai, 2009) YOU ARE YOUR FUTURE (Karaikudi Alagappar Pathippagam, 2012) Alpha Meditation An Introduction (Sixthsense Publications, Chennai, 2012) The Ocean of Miracles: Life of Qadir Wali of Nagore (Kathavugal Publications, Chennai, 2014) Prabakaran Entry and Exit (Translation from Tamil), Amazon Prophetic Traditions in Verse, Select Ahadith in the form of simple English poems, Pub. Sixthsense, Chennai, 2019) You are Your Fortune, Amazon. வெளி இணைப்புகள் நாகூர் ரூமியின் வலைப்பதிவுகள் கப்பலுக்குப் போன மச்சான் (ஜெஸிலாவின் வாசிப்பனுபவம்) மண் வாசனை நாகூர் ரூமி) முத்தமிழ் வளர்த்த முஸ்லீம்கள் தமிழக எழுத்தாளர்கள் ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் வேலூர் மாவட்ட மக்கள் இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள் இந்திய முஸ்லிம்கள்
6564
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86.%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF
செ. குப்புசாமி
செ. குப்புசாமி (டிசம்பர் 13, 1926 – ஏப்ரல் 19, 2013) இந்தியாவின் பன்னிரண்டாவது மக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் சென்னை வடக்கு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிற்சங்க பேரவைத் தலைவராக இருந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய நாடாளுமன்றத் தளத்திலுள்ள அதிகாரப்பூர்வ தகவல் தரவு தொ.மு.ச. பொதுக்குழு கூட்டத்தில் திரு செ. குப்புசாமி நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள் 12வது மக்களவை உறுப்பினர்கள் 13வது மக்களவை உறுப்பினர்கள் 14வது மக்களவை உறுப்பினர்கள் 1926 பிறப்புகள் 2013 இறப்புகள் இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் தமிழக அரசியல்வாதிகள் திருவண்ணாமலை மாவட்ட நபர்கள்
6566
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D
மின்னஞ்சல்
மின்னஞ்சல் (email) என்பது மின்னணுத் தொடர்புச் சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும். சாதாரணமாக அஞ்சல்கள் அனுப்பும் போது யாரிடமிருந்து, யாருக்கு அனுப்புவதைப் போன்று இங்கு உங்கள் மின்னஞ்சலும் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியும் தேவைப்படுகின்றது. ஆரம்பத்தில் அமெரிக்கத் தகவல் இடைமாற்றத் தரக் குறிமுறையில் அமைந்திருந்த மின்னஞ்சல்கள், பின்னர் காலப்போக்கில் உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் யுனிக்கோட் முறையை ஆதரிக்க மின்னஞ்சல் இரு பாகங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று மின்னஞ்சல் தலைப்பு மற்றையது மின்னஞ்சல் உள்ளடக்கம். மின்னஞ்சல் தலைப்பில் கட்டுப்பாட்டுத் தகவல்கள் உள்ளடங்கியுள்ளன. உலகம் முழுவதிலும் ஒரு நாளைக்கு பதினாறு கோடி மின்னஞ்சல்கள் பரிமாறப்படுகின்றன. அவற்றுள் தொண்ணூற்று ஏழு சதவிகிதம் விளம்பரங்கள் போன்ற தேவையற்ற மின்னஞ்சல்களாகும். உருவாக்கம் ஆடோடின் பிணைய மின்னஞ்சல் மூலம் சுமார் மாதம் ஒன்றுக்கு சுமார் 30 மில்லியன் செய்திகள் கையாள, 1,350 பகுதிகளுக்கு சேவையை வழங்கியது. ஆடோடின் பெரிய கணினி பொறிகளின் மூலம் சுமார் 2,500 பகுதிகளுக்கு இடையே வழங்கிய முதல் மின்னஞ்சல் சேவை தளம் ஆகும். புரவலன் அடிப்படையிலான மின்னஞ்சல் அமைப்புகள் 1961 ஆம் ஆண்டில், எம்ஐடி பொருத்தமான நேர பறிமாற்ற அமைப்பு (CTSS) மூலம் பல பயனர்கள் ஒரே நேரத்தில் மைய அமைப்புடன் உள்நுழைந்து தொடர்பு கொள்ள முடிந்தது. தொலைவில் இருந்து இணையம் மூலம் மத்திய வன்தட்டில் கோப்புகளை சேமிக்க மற்றும் அனுப்ப முறைசாரா நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதற்கு "மின்னஞ்சல்" எனப்பெயரிடப்பட்டது. 1965 - எம்ஐடி CTSS மின்னஞ்சல் உருவாக்கம் மற்ற அமைப்புகள் விரைவில் தனிநபர் மின்னஞ்சல் பயன்பாடுகளை கொண்டுவந்தனர். அவை: 1962 - 1440/1460 நிர்வாக முனையம் கணினி உருவாக்கம் 1968 - ATS/360 உருவாக்கம் 1972 - யூனிக்ஸ் மின்னஞ்சல் நிரல் உருவாக்கம் 1972 - லாரி பிரட் மூலம் APL அஞ்சல்பெட்டி உருவாக்கம் 1974 - பிளாட்டோ IV ஆன்லைன் செய்தி பலகை அமைப்பைஉருவாக்கியது.ஆகஸ்ட், 1974 இல் 'தனிப்பட்ட குறிப்புகள்' எழுத இதில் வசதிகள் இருந்தது 1978 - நியூ ஜெர்ஸி மருத்துவம் மற்றும் பல்மருத்துவ பல்கலைக்கழகத்தில் மின்னஞ்சல் (EMAIL) சிவா ஐயாதுரையினால் உருவாக்கம். 1981 - PROFS ஐபிஎம் 1982 - டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன் ஒருங்கமைந்த மின்னஞ்சல் உருவாக்குதல் அவர்கள்களின் அனைத்து மின்னஞ்சல்களும் ஒரே அடிப்படையை கொண்டவையாக இருப்பினும் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அவை வழங்கும் வசதிகள் வேறுபட்டவையாக இருந்தன மின்னஞ்சல் தொடர்பமைப்புகள் உள்ளூர் மற்றும் உலக தொடர்பமைப்புகள் மூலம் பல்வேறு நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைந்த இணக்கமான மின்னஞ்சல்களை உருவாக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 1971 ஆம் ஆண்டு முதல் ஆர்பாநெட் மின்னஞ்சல் RFC561, RFC680, RFC724, மற்றும் 1977 இன் RFC733 மூலம் ஒரு தரப்படுத்தப்பட்ட கணினி அமைப்புகள் மூலம் அனுப்பப்பட்டது. 1978 ஆம் ஆண்டு யு.யு.சி.பி. மூலம் யூனிக்ஸ் மின்னஞ்சல் குழுவலைப் பின்னலுக்குள் தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்பட்டது. 1981 இல் IBM மெயின்பிரேம் மின்னஞ்சல் பிட்நெட் மூலம் இணைக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு DOS இயங்குதளம் மூலம் இயங்கும் ஐபிஎம் கணினிகள் பகிர்வு தகவல்களை மின்னஞ்சல் மூலம் பிறர்க்கு அனுப்புமாறு அமைக்கப்பட்டது. வகைகள் வலை அடிப்படையிலான மின்னஞ்சல் இந்த வகை பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் வகையாகும் உள்ளது. பல இலவச மின்னஞ்சல் வழங்குநர்கள் அவர்களது வலை அடிப்படையிலான மின்னஞ்சல்களை வழங்குகின்றனர். அந்த சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் தங்கள் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறவும் ஒரு இணைய உலாவி மூலம் மின்னஞ்சல் கணக்கில் நுழைகின்றனர். அதன் முக்கிய குறைபாடு அதை பயன்படுத்த எப்போதும் இணையத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். POP3 மின்னஞ்சல் சேவைகள் POP3 என்பது அஞ்சல் அலுவலக நெறிமுறை 3 சுருக்கும். இது இணையத்தில் ஒரு முன்னணி மின்னஞ்சல் கணக்கு வகையாக உள்ளது. ஒரு POP3 மின்னஞ்சல் கணக்கில், மின்னஞ்சல் செய்திகளை வாடிக்கையாளர் தன் கணினியில் பதிவிறக்கம் செய்தவுடன், அச்செய்தி வழங்கியில் இருந்து நீக்கப்படும். எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட கருவிகில் மின்னஞ்சலை சேமித்து வைக்க முடியாது. பெரும்பாலான பாப் வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு நகலை பதிவிறக்கம் செய்த பின்னர் வழங்கியில் செய்திகளை விட்டுவைக்க ஒரு வழியும் இல்லை என்றாலும், பெரும்பாலான மின்னஞ்சல் வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்துகின்றனர். IMAP மின்னஞ்சல் சர்வர்கள் IMAP இணைய செய்தி அனுமதி நெறிமுறை குறிக்கிறது. அது POP3 மின்னஞ்சலின் மாற்று ஆகும். ஒரு IMAP கணக்கு பயனர் மின்னஞ்சல் வழங்கியில் மின்னஞ்சல் கோப்புறைகளை அனுமதிகின்றது. மேலும் செய்திகளின் தலைப்புகள், அனுப்புநர் மற்றும் பொருள் மற்றும் சாதனம் தொடர்புடைய குறிப்பிட்ட செய்திகளை பதிவிறக்கசெய்யலாம். பொதுவாக மின்னஞ்சல் ஒரு மின்னஞ்சல் வழங்கியில் சேமிக்கப்படும். MAPI மின்னஞ்சல் சர்வர்கள் செய்தி பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (MAPI) ஒரு செய்தி அமைப்புகட்டுமானம் மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஏபிஐ அடிப்படையிலான மின்னஞ்சல் வழங்கி ஆகும். மின்னஞ்சல் சேவை வழங்குபவர்கள் உலாவிகள் ஊடாக சேவையை வழங்குபவர்கள் பெரும்பாலும் உலாவிகள் (Browsers) ஊடாக மின்னஞ்சலை அனுப்புதல்/பெறுதல் மிகப்பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பிரபலமான சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஜிமெயில் - http://gmail.com தேடற்பொறி மூலம் பிரபலமடைந்த கூகிளினால் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 10 ஜிபி அளவிற்கு மேலதிகமான இடத்தை இந்த மின்னஞ்சல் மிகப்பிரபலமடைந்து வருகின்றது. மற்றைய நிறுவனங்களைப் போன்று அல்லாமல் எழுத்துகளாலான விளம்பரங்களால் மிகவும் வேகம் குறைந்த இணைப்பிலும் இயங்கக் கூடியது. இதுவே உலகின் அதிகமாக பயன்படுத்தப்ப்படும் மின்னஞ்சல் வழங்குனர் ஆகும். யாகூமெயில் - http://yahoomail.com யாகூமெயில்'' 'யாகூ வின் ஓர் மின்னஞ்சற் சேவையாகும். இலசமான இணைப்பில் அளவற்ற மின்னஞ்சற் சேமிப்பு அளவு அளிக்கின்றார்கள். ஹாட்மெயில் - http://hotmail.com இது அமெரிக்க வாழ் தமிழரான சிவா ஐயாதுரை அவர்களால் உருவாக்கப்பட்ட. பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டது. மின்னஞ்சல் சேவைக்குதவும் மென்பொருட்கள் மைக்ரோசாப்ட் அவுட்லுக் (Microsoft Outlook) இது மைக்ரோசாப்ட் ஆபீசு (Office) பதிப்புக்களுடன் வருவது. இதில் அவுட்லுக் 2003 (Outlook 2003) எரித, குப்பை அஞ்சல்களை (spam) வடிகட்டும் வசதிவாய்ந்து மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஃசுப்பிரசு (Microsoft Outlook Express) இது இணைய உலாவியான இண்டர்நெட் எக்ஃசுப்புளோரர் (Internet Explorer) உடன் இலவசமாக வருவது. மொட்சிலா தண்டர்பேர்ட் (Mozilla Thunderbird) இலவசமாக மின்னஞ்சல் சேவையை வழங்குபவர்கள் விளம்பரங்கள் மூலம் பணத்தை பெற்றுக் கொள்கின்றார்கள். இதில் ஜிமெயில் கூகிள் தேடு பொறி போன்றே சம்பந்தப்பட்ட எழுத்துகளால் ஆன விளம்பரத்தைக் காட்டுகின்றது. பயன்கள் வணிக மற்றும் நிறுவன பயன்பாடுகள் நவீனமயமாக்களின் காரணமாக மின்னஞ்சலானது வளர்ந்து வரும் நாடுகள், வணிக நிறுவனங்கள், அரசுகள் மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் போன்றவற்றால் பரவலாக ஏற்கப்பட்டுள்ளது. 'இ-புரட்சி'யில் இதன் பங்கு மிக முக்கியமானது ஆகும். பணியிட தகவல்தொடர்பு பற்றிய 2010 ஆம் ஆண்டுக்கான ஒரு ஆய்வின்படி, அமெரிக்கர்களில் 83% பேர் தங்களுடைய வெற்றிகரமான வேலைக்கும், உற்பத்தி திறனுக்கும், மின்னஞ்சல் பெரும் உதவியாக இருந்ததாக கூறியுள்ளனர். வணிக நிறுவனத்தில் பிற பயன்கள் பின்வருமாறு தளவாடங்களை மேம்படுத்துதல்உலக வணிகர்கள் பெரும்பாலும் தங்களுடைய வணிக நண்பர்களை தொடர்புகொள்வதில் பல இடர்பாடுகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் ஒரே இடத்திலோ, ஒரே நாட்டிலோ, ஒரே கட்டிடத்திலோ அவர்கள் சந்திப்பதில் உள்ளவை ஆகும். அதற்காக அவர்கள் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புகள், மாநாடுகள் போன்றவை அதிக நேரத்தையும், பொருட்செலவையும் எடுத்துக்கொள்வதாக உள்ளன. ஆனால் மின்னஞ்சல் என்பது இதற்கு மாற்றாகவும் அதனை விட குறைந்த செலவாக இருப்பாதாகவும் உள்ளது. ஒரு தொலைபேசி அழைப்பினை விட இதன் செலவு குறைவு ஆகும். 2.ஒத்தாசையுடன் உதவுதல்வணிகர்கள் அனைவரும் ஒரேசமயத்தில் தொலைபேசியிலேயோ அல்லது மாநாட்டிலோ பங்குபெற வேண்டுமெனில் அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் பங்குபெற வேண்டிய கட்டாயமும், ஒரே கால அளவினை செலவிட வேண்டியுள்ளது. ஆனால் மின்னஞ்சல் பயனபடுத்துவதால் அவர்களுக்கான நேரத்தினை அவர்களே நிர்ணயம் செய்ய இயலும். 3.செலவைக் குறைத்தல்ஒரு மின்னஞ்சல் அனுப்புவது என்பது அஞ்சல் அல்லது தொலைதூர தொலைபேசி அழைப்புகள், டெலக்ஸ் அல்லது தந்தி அனுப்பும் செலவினை விட மிகவும் குறைவானது ஆகும். 4.வேகம்இதற்கான மாற்று வழிகளை விட இதன் வேகம் அதிகம். 5.எழுதப்பட்ட சான்றுநபர்களுக்க்கிடையேயான, தொலைபேசி உரையாடல்கள்களைப் போல் அல்லாமல் இதில் அனுப்பியவர், பெறுபவர், நேரம், தேதி போன்றவைகள் இடம்பெறுவதால் ஒரு சான்றாகவும் இதனைப் பயன்படுத்த முடியும். சேமிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் சில பிரச்சினைகளின் போது அதனை சான்றாக காண்பிக்க உதவும். 6.வணிக மின்னஞ்சல்மின்னஞ்சல் மூலமாக வணிக நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் சலுகைகள் பற்றியும், புதிய பொருட்களின் அறிவிப்பு பற்றியும், பங்களிப்பு< (opt-in") என்பதன் மூலம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடன் அனுமதியுடன் வழங்குகின்றன. பயனர்களின் கலாச்சாரத்தை அறிந்து அதற்கான தொடர்புடைய பொருட்களுக்கான தகவல்களை வழங்குகின்றன. பயனர்களின் அனுமதியின்றி, அனுப்பப்படுமேயானால் அதனை அவர்கள் ஸ்பேம் செய்ய இயலும். தனி நபர் பயன்பாடு 7.தனிநபர் கணினிபயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு அனுப்பிய தனிப்பட்ட மின்னஞ்சலை தங்கள் வீட்டில் அல்லது அபார்ட்மெண்டில் இருந்தபடியே தம் தனிப்பட்ட கணினி மூலம்பார்க்க முடியும். 8.அலைபேசி''' தொடக்க காலத்தில் கணிப்பொறியில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இவை இருந்தன. தற்போதைய நிலையில் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் மடிக்கணினி மூலமாகவும் மின்னஞ்சல் பயன்படுத்தும் வசதிகள் உள்ளன. இதன் மூலம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இல்லாத நேரங்களிலும் மின்னஞ்சல் பார்க்க இயலும். சுமார் 1.4 பில்லியன் பயனர்கள் உள்ளதாகவும் அதில் 50 பில்லியன் ஸ்பேம் மின்னஞ்சகள் தினமும் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது. தங்களுடைய சொந்த மற்றும் அலுவலகம் தொடர்பான மின்னஞ்சல்கள் அதிகம் பார்க்கப்படுகின்றன. அமெரிக்க இளைஞர்கள் தங்களுடைய முகநூல் கணக்கினை விட மின்னஞ்சல்களை அதிகம் பார்ப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. 30 சதவீத மக்கள் தங்களுடைய அலைபேசியை மின்னஞ்சல் பார்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்துவதாகவும், 91% சதவீத மக்கள் ஒரு நாளுக்கு ஒருமுறையேனும் தங்களுக்கு மின்னஞ்சல் வந்துள்ளதா என பார்வையிடுவதாக தகவல்கள் உள்ளன. இவற்றையும் காணவும் அஞ்சல்தலை சேகரிப்பு அஞ்சல் வரலாறு அஞ்சல் குறியீடுகள் அஞ்சலட்டை அஞ்சல்குறி அஞ்சலக சுட்டு எண் இந்திய அஞ்சல் துறை இந்திய தபால் சேவை அபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும் விதவிதமான அஞ்சல் தலைகள் அஞ்சல் தலையில் அழகான பூக்கள் சான்றுகள் தொடர்பியல் மின்னஞ்சல் அமெரிக்கக் கண்டுபிடிப்புகள்
6568
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
எதிர்ப் பண்பாடு
மாறுபட்ட வாழ்வியல்/தத்துவ/அரசியல்/இசை/உடை மற்றும் பிற கூறுகளை உள்ளடக்கி, தனித்துவமானதாகவோ பொதுப் பண்பாட்டு மரபுகளை மீறியதாகவோ இருக்கும் பண்பாட்டு மரபுகளை மறைநிலை அல்லது துணை பண்பாடுகள் (subcultures) என்று கூறலாம். தமிழ் பண்பாட்டுச் சூழலில் சித்தர் மரபு இதற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு ஆகும். பின்வருவன ஆங்கில சூழலில் (குறிப்பாக, அமெரிக்காவில்) காணப்படும் மறைநிலை பண்பாடுகளே ஆகும். இவற்றின் முக்கியத்துவம், ஆழுமை, பரவல் ஆகியவை வேறுபடுகின்றன. அமெரிக்க மறைநிலை பண்பாடுகள் பட்டியல் Hippies - ஹிப்பி Bohemians - மரபொழுங்கார் Anarchists - கலக்ககாரர்கள், பொது சட்ட மறுவிலிகள் Hackers/Crackers - கொந்தர்கள்/பிளவர்கள் Gangs - போக்கிலிகள், தாதாக்கள் Hip-hop - கிப்-கொப், காப்புலிகள் Gypsies - நாடோடிகள் Punks Rockers Gothes Gays/Queer High Flyers Skin Heads Activists Envrironmentalists/Tree Huggers Geeks Cowboys மேற்கோள்கள் எதிர்ப் பண்பாடுகள்
6572
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
யுனிக்சு
UNIX (யுனிக்ஸ் அல்லது யுனிக்ஃசு, UNIX)) என்பது ஒரு கணினி இயக்கு தளம் ("UNIX" வணிகப்பதிவுப் பெயர்). இவ் இயக்குதளம் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடிய, பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய, ஓரு கணினி இயக்கு தளம் . ஆகும். இது 1969 இல் பெல் செயற்கூடங்களில் ("Bell Lab" ) பணியாற்றிய கென் தாம்சன் (Ken Thompson), டென்னிஸ் ரிட்சி, டக்லசு மெக்கில்ராய், சோ. ஓசண்ணா ஆகியோர் அடங்கிய குழுவால் உருவாக்கப்பட்டது. யுனிக்சு இயங்கு தளத்தை யுனிக்சு ஷெல் (shell), யுனிக்சு கருனி (kernal) என இரண்டாகப் பிரிக்கலாம். பயனர்கள் யுனிக்ஸ் ஷெல் ஊடாக கட்டளைகளை இடுவார்கள். யுனிக்ஸ் கருனி கணினியின் வன்பொருட்களை தகுந்தவாறு இயக்கி அந்த கட்டளைகளை நிறைவேற்றும். தற்கால யுனிக்ஸ் பல்வேறு கிளைகளாக பிரிந்து வெவ்வேறு நிறுவனங்களாலும் விரிவாக்கி வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது யுனிக்சின் தொழிற்குறியீட்டு (trademark) உரிமை தி ஓபன் குரூப் (The Open Group) என்ற அமைப்பிடம் உள்ளது. தனி யுனிக்சு குறிப்புகளுக்கு (Single Unix Specification) முற்றிலும் இசைந்த (compliant) இயங்கு தள மென்பொருள்களுக்கே இந்த தொழிற்குறியீடு (trademark) கொடுக்கப்பட்டு சான்றளிக்கப்படுகிறது. சன் குழுமத்தின் சொலாரிஸ் (Sun Solaris), ஐ.பி.எம்.(IBM)-ன் எய்க்ஸ் (IBM AIX), ஹியூலட் பக்கார்டின் ஹெச்.பி.அக்ஸ் (HP-UX), ஸான்றா க்ரூஸ் ஆபரேஸன்ஸின் யுனிக்ஸ்வேர் (SCO Unixware) இயங்கு தள மென்பொருள்கள் ஆகியன முற்றிலும் சான்றளிக்கப்பட்டவை. இவ்வாறு சான்றளிக்கப்படாமல் உள்ளவை யுனிக்ஸ் போன்றவை (Unix-Like) என அழைக்கப்படுகின்றன. லினக்ஸ் (Linux), பி.எசு.டி. (BSD- Free BSD, NetBSD,etc) ஆகியவை இதில் அடங்கும். மேலோட்டம் யுனிக்ஸ் இயங்கு தளம் முக்கியமாக தொழில் ரீதியிலான மென்பொருள்கள் இயங்கக் கூடிய சேவை வழங்கிகளிலும் (server) ஒர்க்ஸ்டேஸன்களிலும் (Workstation) உபயோகப்படுகிறது. இது ஒரு பல்-பயனர் (multi-user), பல்செயல் (multi-tasking) இயங்குதளமாகும். இயங்குதளம் இயங்குதளம் என்பது கணினியின் மற்ற வன்பொருள் மற்றும் மென்பொருள் பாகங்களை இயக்கும் நிரல் (program). கணினியின் வள ஆதாரங்களை (resources) பகிர்ந்து கொடுக்கவும் வேலைகளை (tasks) பட்டியல் இட்டு செயல் படுத்தவும் (schedule) செய்கிறது. இயந்திர சார்பின்மை யுனிக்ஸின் மிக சிறிய பாகமே இயந்திர சார்புடையது. ஆதலால் இதனை வெகு எளிதாக மற்ற கணினி இயந்திரங்களில் இயங்கும்படி மாற்றியமைக்கலாம். யுனிக்ஸ் வரலாறு 1969 யுனிக்ஸ் இயங்கு தளம் உருவாக்கும் வேலை ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாநிலம் முரே ஹில்லில் உள்ள ஏ.டி & டி (AT&T) பெல் ஆய்வகத்தில் துவங்கப்பட்டது. கென் தாம்ஸன் (Ken THOMPSON), டென்னிஸ் ரிட்சி (Dennis RITCHIE), ரூட் கனடே (Rudd CANADAY), ப்ரைன் கேர்நிகேன் (Brian KERNIGHAN) மற்றும் பலர் பெல் ஆய்வகத்தின் பி.டி.பி.-7 என்ற கணினியில் இதற்கானவற்றை துவங்கினர். 1971 யுனிக்ஸின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது. இதன் முக்கிய அம்சம் ஆக்க உரிமை ஆவணங்களை தயாரிக்கும் கருவிகளான roff, ed, தொகுப்பி (assembler) மற்றும் கோப்பு தளம் (file system) ஆகியவை.முதலில் யுனிக்ஸ் சேர்வுமொழி (Assembly language)யில் எழுதப்பட்டாலும் 1973-க்குப் பிறகு பெரும்பாலும் C என்ற உயர்நிலை கணினி மொழியிலேயே இந்த இயங்கு தளம் அமைக்கப்பட்டது. இயந்திர மொழிக்கு சுலபமாக மாற்றக்கூடிய சேர்வுமொழி (Assembly language) மிகமிக குறைவாகவே உபயோகப்படுத்தப்பட்டது. 1975 யுனிக்ஸ் பல இடங்களிலும் கிடைக்கும்படியாக ஏ.டி.& டி. செய்தது. கல்வி நிறுவனங்களுக்கு மிக குறைந்த விலையில் அளிக்கப்பட்டது. 1981-ல் வெளியிடப்பட்ட System III வரை ஏ.டி.& டி. நிறுவனம் யுனிக்ஸின் தர பதிப்புகளில் ஆதார நிரற்ரொடரையும் (Source code) இணைத்தே விற்பனை செய்தது. எனவே இயங்குதளத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் ஆதார நிரற்ரொடரில் மாற்றம் செய்து இருமமாக்கி (compilation) உபயோகிக எளிதாக இருந்தது. இக்காரணத்தால் பல்கலை கழகங்களின் கணினி இயல் துறைகளிலும் மாணவர்களிடமும் மிகவும் பிரபலமாகிவிட்டது. 1985லிருந்து இன்றுவரை பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழகம் யுனிக்ஸை அபிவிரித்தி செய்து பி.எஸ்.டி. (Berkley Standard Distribution) யுனிக்ஸை வெளியிட்டது. பி.எஸ்.டி. யின் சிறப்பியல்புகளை ஏ.டி. & டி. யும் தனது ஸிஸ்டம் V (System V) பதிப்பில் இணைத்துக் கொண்டது. தற்போதைய சான்றளிக்கப்பட்ட யுனிக்ஸ் ஸிஸ்டம் V ரிலீஸ் 4 (SVR 4) ஐ அடிப்படையாக கொண்டது. 1992 - ல் ஏ.டி. & டி. தனது யுனிக்ஸ் வியாபாரத்தை நோவெல் நிறுவனத்திடம் விற்றுவிட்டது. 1993 -ல் நோவெல் யுனிக்ஸ் வர்த்தககுறியீட்டு உரிமையை எக்ஸ்/ஓப்பன் (X/Open) -க்கு விற்றது. 1996 - ல் எக்ஸ்/ஓப்பன் ஓ.ஸ்.எப். உடன் இணைந்து ஓபன் குரூப் உருவானது. இன்னிறுவனமே தனி யுனிக்ஸ் குறிப்புகளை வரையறுக்கிறது. நோவெல் நிறுவனத்திடம் மீதமிருந்த யுனிக்ஸ் வர்த்தகம் 1995 - ல் ஸான்றா க்ரூஸ் ஆபரேஸன்ஸிடம் (SCO) விற்பனை செய்யப்பட்டது. ஸ்கோ வழக்குகள் ஸ்கோ (ஸான்றா குரூஸ் ஆப்பரேஷன்ஸ் - SCO) -வின் உரிமையாளர்கள் யுனிக்ஸ் வர்ததகத்தை வாங்கிய பிறகு 2001-ல் ஸ்கோ - வை கேல்டெரா (Caldera) என்ற லினக்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டனர். கேல்டெரா பின்னர் அதன் பெயரை ஸ்கோ என்று மாற்றிக்கொண்டது. பிறகு அதன் லினக்ஸ் சம்பந்தமான அனைத்து வர்தகங்களையும், செயல்களையும் முடித்துக்கொண்டு முழுமூச்சாக யுனிக்ஸில் இறங்கியது. 2003 - ல் ஐ.பி.எம்.(I.B.M.) யுனிக்ஸ் ஆதார நிரல் தொடர்களின் பகுதிகளை லினக்ஸில் உபயோகிப்பதாகவும், யுனிக்ஸ் உரிமைகள் த்ங்களிடம் இருப்பதால் தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டுமென்றும் வழக்கு தொடர்ந்தது. மேலும் சில லினக்ஸ் உபயோகிக்கும் நிறுவனங்கள் (AutoZone and Daimler Chrysler) மீதும் வழக்கு போட்டது. ஆனால் இந்த வழக்குகளின் முடிவில் எந்த பலனும் ஸ்கோ - விற்கு கிடைக்கவில்லை. யுனிக்ஸின் பாகங்கள் யுனிக்ஸ் இயங்கு தளம் கருனி (kernel),ஷெல் (shell), சிஸ்டம் கால் நூலகம் (System Call Library), பிரயோக நிரல்கள் (Application programs), தளப் பயன்பாட்டு நிரல்கள் (System utility programs), வரைபட பயனர் இடைமுகப்பு (Graphical User Interface) என பல பாகங்களை கொண்டது. பயனர்கள் யுனிக்ஸ் ஷெல் (shell) ஊடாக கட்டளைகளை இடுவார்கள் அல்லது வரைபட பயனர் இடைமுகப்பு வழியாக என்ன செய்ய வேண்டும் என தெரிவு செய்வார்கள். யுனிக்ஸ் கருனி கணினியின் வன்பொருகளை தகுந்தவாறு இயக்கி அந்த கட்டளைகளை நிறைவேற்றும். யுனிக்ஸ் கோப்பு தளம் யுனிக்ஸ் கோப்பு தளம் (File System) என்பது கோப்புகளை (File) மேலாண்மை செய்யவதற்கானது. கோப்பு கணினியானது தரவுகளை (data) இருமங்களாகவே (bits) ஹார்ட் டிஸ்க், சிடி, டிவிடி போன்றவற்றில் சேமித்து வைக்கிறது. கணினியின் பயனர்கள் இரும நிலையில் தரவுகளை கையாள்வது மிகவும் கடினமாதலால், கோப்பு (file) என்ற பெயரில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய தரவுப் பகுதிகளை இணைத்து அழைக்கின்றனர். கீழே கொடுக்கப்பட்டவை ஒரு கோப்பு என்றால் என்ன என்பதற்கு உதாரணங்கள் : 1.நீங்கள் ஒரு கணினி தொகுப்பானை உபயோகித்து ஒரு ஆவணத்தை தயாரித்து சேமிக்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் சேமிப்பது ஒரு கோப்பு ஆகும். 2.ஒரு டிஜிட்டல் கேமராவில் ஒரு நிழற்படம் எடுக்கின்றீர்கள். இந்த படம் ஒரு கோப்பு ஆக கேமராவில் சேமிக்கப்படுகிறது. இதனையே நீங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யும்போது அது கணினியின் கோப்பு ஆகிவிடுகின்றது. யுனிக்ஸின் கோப்பு தளம் கோப்புகளை கையாளவும் மேலாண்மை செய்யவும் பயன்படுகிறது. கோப்பு தள அமைப்பு கோப்பு தளம் ஒரு தலைகீழ் மரத்தை போன்ற அமைப்பைக் கொண்டது. இதனை விவரகொத்து மரம் (Directory Tree) என்று அழைக்கிறார்கள். கோப்பு தளத்தின் உச்சியில் ரூட் (root) என்ற விவரகொத்து இருக்கிறது. இதனை பொதுவாக / என்று குறிப்பிடுவர். இதன் கீழ் வரும் எல்லா கோப்புகளும் (விவரகொத்தும் ஒரு வகை கோப்பு தான்) ரூட்-ன் சந்ததியினர் எனச் சொல்லலாம். எந்த கோப்பாயிருந்தாலும் அதன் முழுப் பெயர் / -ல் இருந்து தொடங்குகிறது. உதாரணமாக படத்தில் கொடுக்கப்பட்டுள்ள john என்ற கோப்பினை /export/home/john என்று குறிப்பிடுவர். யுனிக்ஸ் கட்டளைகள் யுனிக்ஸ் இயங்கு தளத்தை உபயோகிக்க கட்டளைகளை (commands) பயன்படுத்தவேண்டும். அதிகமாக உபயோகமாகும் யுனிக்ஸ் கட்டளைகள்: விவரக்கொத்து மற்றும் கோப்புகளை உருவாக்குதலும் பயணித்தலும் ls cd pwd mkdir rm rmdir cp find touch mv கோப்புகளை பார்வையிடவும் மாற்றியமைக்கவும் more less ed vi emacs head tail ஆவணம் தயாரித்தல் echo cat grep sort uniq sed awk cut tr split printf கோப்புகளை ஒப்பிடுதல் comm cmp diff patch பிற ஷெல் உபகரணிகள் yes test xargs தள மேலாண்மை chmod chown ps su w who |(pipe) தொடர்பியல் mail telnet ftp finger ssh அதிகார சான்றளித்தல் su login passwd யுனிக்ஸ் செயல்கள் யுனிக்ஸ் இயங்குதளத்தில் ஒரு நிரல் (program) துவங்கி செயல்படுவது செயல் (process) என அழைக்கப்படும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு அடையாள எண் (PID) உண்டு. கணீனியை ஆன் (on) செய்யும் பொழுது இயங்கு தளமும் துவங்குகிறது. முதலில் init என்ற செயல் துவங்குகிறது. இதன் அடையாள எண் 1 ஆகும். மற்ற எல்லா செயல்களும் இதன் சந்ததிச் செயல்கள் என்று சொல்லப்படுகிறது. தற்பொழுது எந்தெந்த செயல்கள் நடக்கின்றன என்பதை அறிய ps என்ற கட்டளையை பயன்படுத்தவேண்டும். செயல்களில் இருவகை உண்டு. அவை - முன்னணிச் செயலும் (Foreground process) பின்னணிச் செயலுமாம்(Background process). உள்ளீடு வெளியீடு கணினி இயந்திரத்துடன் பயனர்கள் தொடர்புகொள்ள உள்ளீடு(கீபோர்ட், மவுஸ், போன்றவை) வெளியீடு (கணினியின் திரை - screen, பிரிண்டர், போன்றவை) உதவுகின்றன. யுனிக்ஸ் இவற்றையும் கோப்புகளாகவே பார்க்கிறது. யுனிக்ஸ் செயல்கள் தர உள்ளீட்டிலிருந்து (standard input - keyboard) டேட்டாவை (தரவு) பெறுகிறது. தர வெளியீட்டில் (standard output - screen) எழுதுகிறது அல்லது டேட்டாவை அனுப்புகிறது. தர பிழை' (standard error)- யில் பிழைகளை அனுப்புகிறது. இவை மூன்றும் சானல்கள் (standard channels) எனப்படுகின்றன. சாதாரணமாக, தர வெளியீடு, தர பிழை அகிய இரண்டு சானல்களிலும் அனுப்பப்படும் டேட்டா கணினியின் திரைக்கே போய்ச்சேருகின்றன. கலைச்சொற்கள் இயங்குதளம் - Operating System ஓடு - Shell கருனி - Kernel மேற்கோள்கள் மேலும் படிக்க லயன்ஸ் யுனிக்ஸ் தெளிவுரை யுனிக்ஸ் மரம்: பழைய பதிப்புகளில் இருந்து சில கோப்புகள் The Unix Guru Universe Unix and Linux Forums யுனிக்ஸ் வரலாறு யுனிக்ஸ் விவாதங்கள் யுனிக்ஸின் ஆற்றல் யுனிக்ஸ் பாடங்கள் இயக்கு தளங்கள்
6575
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
எழுத்துப்பெயர்ப்பு
எழுத்துப்பெயர்ப்பு (transliteration) என்பது ஒரு மொழியின் சொல்லை மற்றொரு மொழியின் ஒலிப்பு முறைக்கும் எழுத்து அமைப்புக்கும் தக்கபடி எழுதுவதாகும். ஒவ்வொரு மொழியின் ஒலிப்பு முறையும் எழுத்து அமைப்பும் (Orthography) வேறுபடுவதனால் இது தேவைப்படுகிறது. எழுத்துப்பெயர்ப்பு ஒரு மொழியின் சொற்களின் அல்லது எழுத்துகளின் ஒலிக் குறியீட்டை, முயன்றவரை அதே ஒலியுடன், இன்னொரு மொழியில் எழுதுவதாகும். இதன் மூலம் முதல் குறிப்பிட்ட மொழியின் ஒலிக்குறியீட்டை அறிந்த ஒருவர், இரண்டாவது குறிப்பிட்ட மொழியின் எழுத்துக்கள் மூலம் வாசிக்கவும், புரிந்துகொள்ளவும் முடியும். இக்கடினமான குறிக்கோளை அடைய எழுத்துப்பெயர்ப்பு செய்யப்படும் மொழியின் எழுத்துகளையும், அதன் ஒலிகளையும் மட்டுமல்லாது, எழுதப்படும் மொழியின் எழுத்துகளையும், அதன் ஒலிகளையும், எழுத்துப்பெயர்ப்பாளர் செம்மையாக அறிதல் வேண்டும். எழுத்துப்பெயர்ப்பின் எதிர்மறை வடிவம் ஒலிபெயர்ப்பு ஆகும். ஒலிப்பெயர்பில், ஒரு மொழியின் ஒலிகளை (எழுத்துகளை அன்று) மற்றொரு மொழியின் எழுத்துகளோடு முகப்புதல் வேண்டும். எழுத்துப்பெயர்க்கும் மொழியின் வார்த்தைகளை ஒலித்தலும், எழுதுவதும் ஒன்றாகவே இருந்து, அதே ஒலிகளுக்கான எழுத்துக்கள் எழுதப்படும் மொழியில் இருந்தால், எழுத்துப்பெயர்ப்பும், ஒலிப்பெயர்ப்பும் ஒப்புமையாக அமையும். வெளி இணைப்புகள் தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு எழுத்துப்பெயர்க்கும் கருவி மொழியியல் மேற்கோள்கள்
6577
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF4%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஜி4 நாடுகள்
ஜி4 நாடுகள் என்பது இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் கூட்டணியாகும். இக்கூட்டணி ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஒருவரையொருவர் ஆதரிக்க உருவாக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் ஜி4 நாடுகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன. மேலும் பார்க்க ஜி-20 ஜி-7 ஜி4 நாடுகள் ஜி8 ஜி8+5 காபி குழு பன்னாட்டு அமைப்புகள் உலக நாடுகளின் கூட்டமைப்புக்கள் ஜி-4
6578
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%29
நளினம் (மென்பொருள்)
வரலாறு மலேசியாவில் இருந்த தற்போது கான்பரா ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிவகுருநாதன் சின்னையா அவர்களால் நளினம் மென்பொருளானது வடிவமைக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு மேம்படுத்தல்களுடன் இன்றும் தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை இல் மிகவும் மிக இலகுவாகப் பாவிக்கக் கூடியதுமான மென்பொருள். இது இலாப நோக்கு எதும் இன்றி வெளிவிடப்பட இந்த மென்பொருளை இணையத்திலிருந்து் இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம். தொழில்நுட்பத் தகவல்கள் நளினம் அஞ்சல் (Nalinam Anjal) 2002 மென்பொருளானது ஆங்கில ஒலியியல் முறை விசைப்பலகை அமைப்பை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள். இது திஸ்கி (tscii) முறையில் சேமிப்பதால் விண்டோஸ் 95/98/மில்லேனியம்/2000/எக்ஸ்பி/2003/விஸ்டா இயங்கு தளங்களில் இயங்கக்கூடியது. வெளியிணைப்புக்கள் நளினம் அதிகாரப்பூர்வத் தளம் நளினம் விவாதக்குழு நளினம் பரிநிரலாக மாற இருக்கின்றது - முகுந்தராஜ்ஜின் வலைப்பதிவு . தமிழ்க் கணினி உள்ளீட்டு மென்பொருள்கள்
6579
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
மின்னழுத்தம்
மின்னழுத்தம் (voltage) என்பது மின் தன்மை உள்ள பொருட்களைச் சூழ்ந்துள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம். ஒரு தொட்டியில் தண்ணீர் இருந்து, அத்தொட்டியின் அடியிலே ஒரு ஓட்டை (துளை) இருந்தால், அவ்வோட்டையின் வழியே நீர் பீய்ச்சி அடிக்கும். நீரை உந்தி வெளியே தள்ளுவது அந்த ஓட்டைக்கு மேலே உள்ள நீரின் அழுத்தம் தான். நீரின் அழுத்தம் ஏற்படுவதற்கு தரையை நோக்கி ஈர்க்கும் நிலவீர்ப்பு அல்லது புவியீர்ப்பு விசை இருப்பதால் தான். இதே போல மின்தன்மை (மின்னேற்பு அல்லது மின்னூட்டம்) பெற்ற பொருட்களைச் சுற்றி மின் விசை தரும் மின்புலம் உள்ளது. இம்மின்புலத்தில் இருந்து இந்த மின்னழுத்தம் எழுகின்றது. இந்த மின்னழுத்தம் குறைந்த மின்னழுத்தமுடைய பொருளுடன் இணையும் போது மின்னோட்டமும் உண்டாகும். மின் விளக்கு எரிவதற்கு, மின் அழுத்ததால் உண்டாகும் மின்னோட்டம் உதவுகின்றது. மின்னழுத்தை வோல்ட்டு என்னும் அலகால் அளக்கிறார்கள் மின்துறையாளர். ஒரு வோல்ட்டு மின் அழுத்தத்தை ஒரு 10 ஓம் கொண்ட தடையத்தின் இரண்டு முனைக்கும் இடையே பொருத்தினால், அந்த தடையத்தின் வழியாக 1/10 ஆம்பியர் அளவு மின்னோட்டம் நிகழும். இந்த மின்னழுத்தம், மின்னோட்டம், தடை என்பவற்றினிடையே உள்ள தொடர்பை சார்ச்சு சைமன் ஓம் என்பாரின் ஓமின் விதியால் அறியப்படுகின்றது. மின்னழுத்தம் = (மின்தடை) x (மின்னோட்டம்). இதனையே குறியீடுகள் வழி, V = மின்னழுத்தம் R = மின்தடை I = மின்னோட்டம் என்றால், V = R x I என சுருக்கமாக நினைவில் கொள்ளலாம். மின்னை அளக்கும் அலகு இங்கே மின்னழுத்தம் (V), மின்னோட்டம் (I), மின் தடை (R) என்பவற்றை எப்படி எளிதாகக் கணக்கிடுவது என்பதை காட்டியுள்ளது. இந்த முக்கோணமான படத்தின் மேலே (V) என்ற குறியீடு உள்ளது இது மின்னழுத்தம் ஆகும். மின்னழுத்தத்தை நாம் கண்டறிய வேண்டும் என்றால் கீழே உள்ள மின்னோட்டத்தையும் (I) மின் தடையையும் (R) (IxR=V) பெருக்க வேன்டும் அப்போது மின்னழுத்தத்தின் அளவு தெரியும். அது போன்று மின்னோட்டத்தை (I) கண்டறிய வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னழுத்தத்தை (V) கீழே உள்ள மின்தடையால்(R) (V/R=I) வகுக்கும் போது மின்னோட்டத்தின் அளவு தெரியும். இப்போது மின் தடையை (R) அளக்க வேண்டும் என்றால் மேலே உள்ள மின்னழுத்தத்தை (V) கீழே உள்ள மின்னோட்டத்தினால் (I) (V/I=R) வகுக்கும் போது மின் தடையின் அளவு தெரியும். மின்னழுத்தம் - விளக்கம் ஈறிலாத் தொலைவு காற்று அல்லது வெற்றிடத்தில் ஒரு புள்ளி மின்னூட்டம் (q) வைக்கப்படும் போது அதனருகில் ஒரு புள்ளியில் அம்மின்னோட்டத்தினால் ஏற்படும் மின்புலத்தைக் கருதுவோம். மின்னூட்டத்திலிருந்து அப்புள்ளி இருக்கும் தொலைவைப் பொறுத்து மின்புலச் செறிவு (E) மாறுபடும். தொலைவு அதிகரிக்கும் போது மின்புலச் செறிவு குறைந்து, ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் சுழியாகக் குறைந்து விடும். அத்தொலைவிற்கு அப்பால் உள்ள ஒரு புள்ளியை நாம் ஈறிலாத் தொலைவிலுள்ள புள்ளியாகக் கருதுவோம். ஈரிலாத் தொலைவு எனப்படுவதன் வரையறை யாதெனில் அந்த புள்ளி மின் துளியின் மின் உணர்வு உணரப்படாத எந்த ஒரு புள்ளியையும் கொள்ளலாம். வேலை ஈறிலாத் தொலைவிலிருந்து ஓரலகு நேர் மின்னோட்டம் (+ 1 கூலூம்) ஒன்றை, புள்ளி நேர் மின்னோட்டத்தின் புலத்திலுள்ள ஒரு புள்ளிக்குக் கொணரும் போது, அப்புலத்தினால் ஏற்படும் விலக்கு விசைக்கு எதிராகக் குறிப்பிட்ட வேலையைச் செய்ய வேண்டும். அவ்வேளை அது அந்த மின்னோட்டத்தில் ஆற்றலாகச் சேமித்து வைக்கப்படுகின்றது. எனவே, ஓரலகு நேர்மின்னோட்டத்தை ஈறிலாத் தொலைவிலிருந்து ஒரு புள்ளிக்கு எடுத்துவரச் செய்யப்படும் வேலையே அப்புள்ளியில் புள்ளி மின்னூட்டம் q இன் மின்னழுத்தம் என வரையறுக்கப்படுகிறது. வோல்ட் மின்னழுத்தம் ஓரலகு நேர்மின்னோட்டத்தை ஈறிலாத் தொலைவிலிருந்து ஒரு புள்ளிக்கு எடுத்து வரும்போது செய்யப்படும் வேலை அப்புள்ளியில் மின்னழுத்தம் ஆகும். வெளி இணைப்புகள் Electrical voltage V, current I, resistivity R, impedance Z, wattage P Elementary explanation of voltage at NDT Resource Center மின்காந்தவியல் மின் உறுப்புகள்
6582
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
மின்னோட்டம்
மின்சாரம் (Electric current) என்பது மின்னூட்டத்தின் ஓட்டமேயாகும். மின்சார சுற்றமைப்புகளில் இந்த மின்னூட்டம் பெரும்பாலும் இலத்திரன்கள் கம்பிகளின் வழியாக நகர்வதனால் எடுத்துச் செல்லப்படுகிறது. மின்பகுளிகளில் அயனிகள் மின்னூட்டத்தைக் கொண்டு செல்கின்றன. அயனியாக்கப்பட்ட வளிமமான பிளாசுமாவில் அயனிகள், இலத்திரன்கள் இரண்டாலும் மின்னூட்டம் கொண்டு செல்லப்படும் . விளக்கம் ஆறுகளில் நீர் ஓடுவதை நீரோட்டம் என்பதைப் போல மின்னூட்டங்கள் நகர்ந்து ஓடுவது மின்னோட்டம் ஆகும். புவியீர்ப்பு புலத்தில் புவியீர்ப்பு விசையால், நீர் மேலே இருந்து கீழே பாயும். அது போல மின்புலத்தில் மின்விசையால் மின்னூட்டங்கள் அதிக மின்னழுத்தத்தில் இருந்து குறைந்த மின்னழுத்தத்தை நோக்கி நகரும். வரையறை மின்சாரம் என்பது கடத்தி ஒன்றின் வழியே மின்னூட்டம் பாயும் விதம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு நொடிக்கு எவ்வளவு மின்னூட்டம் ஒரு குறுக்குவெட்டுப்பரப்பை கடக்கின்றது என்பதை பொறுத்து மின்னோட்டம் கணிக்கப்படும் மின்னூட்டம் பாயும் விதம் சீராக அமையாவிடில் காலநேரத்திற்கு ஏற்றபடி மின்னோட்டம் மாறுபடக்கூடும் ஆகையால், காலத்தால் மாறுபடும் மின்னோட்டத்தைக் கீழ்க்காணும் வகையில் குறிக்கலாம்: என்றும், இதையே, மாற்றிப்போட்டு நேரத்திற்கு நேரம் மாறுபடும் மின்னூட்டத்தின் அளவைக் குறிக்க, என்றும் கூறலாம். பல திசைகளிலும் வெளி உந்துதல் ஏதும் இல்லாமல் தன்னியல்பாய் அலையும் மின்னூட்டங்கள் எந்த ஒரு திசையிலும் மின்னோட்டத்தை ஏற்படுத்துவதில்லை. எனினும், அவை மொத்தமாக ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்ந்தால் அத்திசையில் மின்னோட்டம் நிகழும். அனைத்துலக முறை அலகுகளில் அளவிடும்போது, மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் ஆகும். கடத்தியின் ஒரு பகுதியை t காலத்தில் கடந்து செல்லும் மொத்த மின்னூட்டம் q என்றால், மின்னோட்டம் I = q / t என்றாகும். மின்னூட்டத்தின் அலகு கூலும் ஆகும். மின்னோட்டத்தை அளவிடும் கருவி மின்னோட்டமானி எனப்படும். இலத்திரன்களின் ஓட்டம் யூல் வெப்பத்தை ஏற்படுத்தும், இவ் வெப்பம் ஒளிரும் ஒளி விளக்குகளில் ஒளியை உருவாக்குகிறது. மேலும் இவை காந்தப் புலங்களையும் உருவாக்குகின்றன. விசைப்பொறிகள், மின்தூண்டிகள் மற்றும் மின்னியற்றிகள் ஆகியவற்றில் காந்த புலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்னோட்டத்தில் நகரும் மின்னூட்டமானது மின் சுமைகள் என்று அழைக்கப்படுகின்றன. உலோகங்களில் ஒவ்வொரு அணுவிலிருந்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலத்திரன்கள் அணுடன் இலேசாகப் பிணைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை உலோகத்தினுள் சுதந்திரமாக நகர்கின்றன. இந்த கடத்துகை இலத்திரன்களே உலோகக் கடத்திகளில் மின் சுமைகளாகக் கருதப்படுகின்றன. குறியீடு மின் தன்மையில் இரு வகை இருப்பதால், எந்த வகை மின் பொருள் நகர்ந்தாலும் மின்னோட்டம் நிகழும். மின்னோட்டமானது ஆம்பியர் என்னும் அலகால் அளக்கப்படுகின்றது. ஓர் ஆம்பியர் என்பது ஒரு நொடிக்கு ஒரு கூலம் அளவு மின்னூட்டம் ஒரு தளத்தைக் கடக்கும் ஓட்டம் ஆகும். மின்னோட்டம் வழக்கமாக I என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. பிரஞ்சு வாக்கியம் intensité de courant (மின்னோட்டத்தின் செறிவு) என்பதிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆண்ட்ரே-மேரி ஆம்பியர் மின்னோட்டத்தைக் குறிக்க I என்ற குறியீட்டைப் பயன்படுத்தியதால் மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் எனப்பட்டது. பின்னர் இப்பெயர் பிரான்சிலிருந்து இங்கிலாந்திற்கு வந்து நிலை பெற்றது. ஓம் விதி ஒரு மின்கடத்தியில் மின்னழுத்ததைக் கொடுக்கும் போது, அதில் மின்னோட்டம் நடைபெறுகின்றது. மின்னோட்டத்தின் அளவு அதில் கொடுக்கப்படும் மின்னழுத்தத்தின் அளவைப் பொறுத்திருக்கும். எடுத்துக் காட்டாக, R என்ற மின்தடையம் கொண்ட ஒரு மின் கடத்தியின் இரு மின்முனைகளுக்கிடையே, V என்ற அளவு மின்னழுத்தத்தைக் கொடுக்கும் போது, I என்ற அளவு மின்னோட்டம் பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்: . இந்தக் கருத்தை ஜார்ஜ் ஓம் (Georg Ohm) என்ற செருமானிய அறிஞர் 1827-இல் முன் வைத்தார்.அவர் கூறிய இக் கருத்து ஓமின் விதி என்று பின்னால் வழங்கப் பட்டது. சுருங்கக் கூறின், ஒரு மின்கடத்தியில் ஓடும் மின்னோட்டம் I அதன் இரு முனைகட்கு நடுவில் கொடுக்கப்படும் மின்னழுத்தம் V-இன் மீது நேர் விகிதச் சார்பு கொண்டிருக்கும் என்பதுதான் ஓமின் விதியாகும். வேறுவிதமாகக் கூறுவதென்றால், மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையேயான விகிதம் ஒரு மாறிலி ஆகும். அதாவது, இந்த மாறிலி எண் R என்பதே மின் தடை எனப்படும். மின்தடையின் அலகு ஓம் (Ω) (Ohm) ஆகும். இருவகை மின்னூட்டங்களும் மின்னோட்ட திசையும் இரண்டு வகை மின் தன்மைகளில் ஒன்றை நேர்மின் தன்மை என்றும், இத்தன்மை கொண்ட மின்னூட்டத்தை நேர்மின்னூட்டம்ம் என்றும் அழைக்கப்படுகின்றது. நேர்மின்னூட்டத்தை கூட்டல் குறி (+) இட்டுக் காட்டுவது வழக்கம். மற்றது எதிர்மின் தன்மை கொண்டது. அதனை எதிர்மின்னூட்டம் என்பர். எதிர்மின்னூட்டத்தை கழித்தல் குறி (-) இட்டுக் காட்டுவது வழக்கம். மின்னோட்டத்தின் திசை, நேர்மின்னூட்டம் ஓடும் திசை ஆகும். எதிர்மின்னூட்டம் கொண்ட துகள்கள் ஒரு திசையில் ஓடினால், அவை எதிர்மின்னூட்டம் கொண்டிருப்பதால் மின்னோட்டம் வழமையாகத் துகள் ஓடும் திசைக்கு எதிரான திசையில் நிகழ்வதாகக் கொள்ளப்படும். எதிர்மின்னி ஒர் அணுவிலே உள்ள எதிர்மின் தன்மை கொண்ட எதிர்மின்னிகள்/மின்னன்கள் என்னும் இலத்திரன்கள் மின் கம்பிகளின் வழியாக மின்னழுத்த வேறுபாட்டால் ஓடுவது பொதுவாக நிகழும் மின்னோட்டம் ஆகும். இவ்வகை மின்னோட்டத்தால் மின் விளக்கு எரிவது, மின் விசிறிகள் சுழல்வது போன்ற ஆயிரக்கணக்கான பயன் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. நீர் போன்ற வடிவம் கொண்ட நீர்மக் கரைசல்களிலும் மின்னோட்டம் பாயும். ஓர் அணுவில் உள்ள ஒவ்வொரு எதிர்மின்னியும் துல்லியமாக 1.60217653x10−19 கூலம் மின்னூட்ட/மின்னனும் தாங்கி உள்ளது என்று கண்டிருக்கிறார்கள். எனவே ஓர் ஆம்பியர் மின்னோட்டம் என்பது நொடிக்கு 6.24150948x1018 நுண்ணிய எதிர்மின்னிகள் ஒரு தளத்தைக் கடந்து ஓடும் ஓட்டமாகும். சில இடங்களில் நேர்மின் தன்மை கொண்ட நேர்மின்னூட்டம் நகர்வதும் உண்டு. பெரும்பாலும் இவை எதிர்மின்னி/மின்னன் இழந்த ஒரு அணுவாகவோ, மூலக்கூறாகவோ இருக்கும். இவ்வகை மின்னோட்டம் பெரும்பாலும் நீர்மக் கரைசல்களின் வழியே மின்னோட்டம் பாய்ச்சிப் பொருள்களின் மீது மாழைப் (உலோகப்) படிவு அல்லது பூச்சு ஏற்படுத்தும் நிகழ்வுகளில் காணலாம். இவ்வகை மின்னோட்டத்தால் வெள்ளி பூச்சுகள் செய்யப்பட்ட (வெள்ளி முலாம் பூசப்பட்ட) அகப்பை, கரண்டி முதலியன பலரும் அறிந்தது. மாறு மின்னோட்டம் மின்னோட்டம் ஒரே திசையிலும் ஒரே அளவிலும் பாய்ந்தால் அதற்கு நேர் மின்னோட்டம் என்று பெயர். மின்கலத்திலிருந்து பெறும் மின்னோட்டம் நேர் மின்னோட்டம் ஆகும். இதுதவிர முன்னும் பின்னுமாக திசையிலும் அளவிலும் மாறி ஓடும் மின்னோட்டத்திற்கு மாறு மின்னோட்டம் என்று பெயர். வீடுகளில் பொதுவாகப் பயன்படும் மின்னாற்றல் மாறுமின்னோட்டமே. ஒரு நொடிக்கு எத்தனை முறை முன்னும் பின்னுமாய் மின்னோட்டம் மாறுகின்றது என்பதை பொறுத்து அதன் அலைவெண் அமையும். ஒரு நொடிக்கு அமெரிக்காவில் 60 முறை மின்னோட்டம் முன்னும் பின்னுமாய் அலையும். எனவே அலைவெண் 60. இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீட்டு மின்னோட்டம் நொடிக்கு 50 முறை முன்னும் பின்னுமாய் அலையும். எனவே அங்கு அலைவெண் 50. ஒரு நொடிக்கு ஒருமுறை முன்னும் ஒருமுறை பின்னும் ஓடும் மின்னோட்டத்திற்கு ஒரு ஹெர்ட்ஸ் என்று பெயர்.அலைவெண் ஹெர்ட்ஸ் என்னும் அலகால் அளக்கப்படுகின்றது. மின்னோட்டம் காந்தப் புலமுள்ள ஓரிடத்தில் பாயும்பொழுது மின்னோட்டத்தின் திசை மாறும். இது காந்தப்புலத்தின் திசையையும் மின்னோட்டத் திசையையும் பொறுத்தது. ஏன் இவ்வாறு மின்னோட்ட திசையில் மாறுதல் ஏற்படும் எனில், மின்னோட்டம் பாயும் பொழுதுப் பங்கு கொள்ளும் எதிர்மின்னி என்ற மின்னன்களின் நகர்ச்சியால், ஓட்டத்திசையைச் சுற்றி சுழலாக ஒரு காந்தப் புலம் தானே உண்டாகின்றது. இம்மின்னோட்டத்தால் ஏற்படும் சுழல் காந்தப் புலத்தோடு வெளியில் ஏற்கனவே உள்ள காந்தப்புலம் முறண்படுவதால் (ஏற்படும் விசையால்) மின்னோட்ட திசையில் மாறுதல் ஏற்படுகின்றது. [படங்களுடன் இவை இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டும்] மின்மரபு ஒரு மின் கடத்தும் பொருளில் மின்னாற்றலை சுமந்து கொண்டு நகரும் மின்னூட்டத் துகள்கள் மின் சுமைகள் என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான மின்சுற்றுகளில் பயன்படும் கம்பிகள் மற்றும் பிற மின்கடத்திகளை உருவாக்கும் உலோகங்களில் நேர்மின் சுமையானது நிலையாக இருக்கின்றன. எதிர் மின்சுமைகளே ஒர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்லும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளன. இவையே மின்சுமையை கடத்துகின்றன. குறைக்கடத்திகளில் சேர்க்கப்படும் மாசுப்பொருளைப் பொறுத்தே மின்சுமையைக் கடத்துபவை நேர் மின்சுமைகளா அல்லது எதிர்மின் சுமைகளா என்பது அமைகிறது. மின்வேதியியல் செல்களில் இரண்டு மின்சுமைகளுமே மின்கடத்தலைச் செய்கின்றன. நேர்மின் சுமைகளின் ஓட்டத்தால் உருவாகும் மின்சாரமும் அதே மின்னோட்டத்தையும் அதே விளைவுகளையும் அளிக்கிறது, எதிர் திசையில் ஓடும் எதிர்மின் சுமைகளின் ஓட்டத்தால் உருவாகும் மின்னோட்டத்திற்குச் சமமாகவும் உள்ளது. மின்னோட்ட அடர்த்தி மின்னோட்ட அடர்த்தி = மின்னோட்டம் / (குறுக்கு வெட்டுப் பரப்பளவு) = current / unit area கணிதக் குறியீடுகளைக் கொண்டு மின்னோட்டத்தைக் கீழ்காணுமாறு விளக்கலாம்: மேலே உள்ளதில் மீட்டர்-கிலோ கிராம்-நொடி (MKS) அளவியல் அலகு முறை அல்லது உலக முறை அலகுகள் (SI) முறைப்படி: I என்பது ஆம்பியர்கள் அலகில் அளக்கப்பட்ட மின்னோட்டம் j என்பது ஒரு சதுர மீட்டர் குறுக்கு வெட்டுப் பரப்பில் பாயும் ஆம்பியர்கள் என்னும் அலகில் அளக்கப்படும் மின்னோட்ட அடர்த்தி. A என்பது மின்னோட்டம் பாயும் குறுக்கு வெட்டுப் பரப்பளவு சதுர மீட்டர்கள். தோற்றங்கள் இயற்கைத் தோற்றம் இயற்கையில் மின்னல், நிலை மின்சாரம் (static electricity), சூரியக் காற்று, துருவ ஒளி போன்றவற்றில் மின்னோட்டம் காணப்படுகிறது. செயற்கை உருவாக்கம் மனிதர்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தலைக்கு மேலே மின்சாரத்தைக் கொண்டு செல்லும் உலோகக் கம்பிகளில் இலத்திரன்களின் ஓட்டமாக மின்சாரம் காணப்படுகிறது. அதேபோல மின் உபகரணங்களில் உள்ள சிறிய கம்பிகளிலும் மின்சாரம் கடத்தப்படுகிறது. காந்தப் புலங்கள் பரிமாற்றத்தின் போது கடத்திகளில் எட்டி மின்னோட்டம் என்ற பெயரில் மின்னோட்டம் காணப்படுகிறது. இதேபோல மின்கடத்திகளின் மேற்பரப்பில், அவை மின்காந்த அலைகளுடன் தொடர்பு ஏற்படும் போதும் மின்னோட்டம் நிகழ்கிறது. மேலும், மின்னணுவியலில் பயனாகும் வெற்றிடக்குழாய், குறைக்கடத்திகள், மின்கலங்கள், போன்றவற்றிலும் மின்னோட்டம் காணப்படுகிறது. மின்காந்தவியல் மின்காந்தவியலில் மின்னோட்டத்தின் பங்கு முக்கியமானது. மின்காந்தம் மின்காந்த சுருள் ஒன்று, அதிக எண்ணிக்கையிலான சுழற்சியாகச் செல்லும் கம்பிகளை ஒரு உருளை வடிவான அமைப்பினுள் கொண்டிருக்கும். இதனூடாக மின்னோட்டம் செலுத்தப்படும்போது, அது ஒரு காந்தமாகத் தொழிற்படும். மின்னோட்டம் நிறுத்தப்பட்ட உடனேயே, காந்தத் தன்மை அற்றுப்போகிறது. இது மின்காந்தம் எனப்படுகிறது. வானொலி அலைகள் பொருத்தமான அமைப்புள்ள ஒரு கடத்தியினூடாக, வானொலி அதிர்வெண்ணில் மின்னோட்டம் செலுத்தப்படும்போது, வானொலி அலைகள் உருவாகும். இவை ஒளியின் வேகத்துடன் சென்று, தூரத்திலுள்ள ஒரு கடத்தியில் மின்னோட்டத்தை ஏற்படுத்தும். கடத்தல் பொறிமுறைகள் வெவ்வேறு கடத்திகளினூடாக மின்னோட்டம் செலுத்தப்படும் பொறிமுறைகள் வெவ்வேறாகக் காணப்படும். நுட்பியல் சொற்கள் மின்புலம் – Electric Field மின்னழுத்தம் – Voltage மின்னோட்டம் - Current மின்னூட்டம் – Charge மின்கடத்தி – Conductor மேற்கோள்கள் மின்னோட்டம் இயற்பியல் இயல்புகள் SI அடிப்படைக் கணியங்கள்
6583
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D
மின்திறன்
மின்சக்தி பாவிக்கப்படும் அல்லது ஓடும் வேக விகிதம் மின்திறன்(power) ஆகும்; அதாவது மின்திறன் = மின்சத்தி / நேரம். மின்னாற்றல் என்பது ஒரு மின்சுற்றில் சுழலும் மின்சக்தியின் வீதம் ஆகும். ஒரு மின்சாரம் மின்சுற்றில் சுழலும் பொழுது , அது இயற்வினை செய்வதற்கான ஆற்றலை தருகிறது . அந்த ஆற்றலையே மின்னாற்றல் என்பது வழக்கு. கருவிகள் மின்சக்தியை வெப்பம் ( மின்னடுப்புகள்) , ஒளி ( மின்விளக்கு) , இயக்கம் ( மின்னியக்கி) , ஒலி ( ஒலிபெருக்கி), அல்லது ரசாயன மாற்றங்கள் போன்ற பல விதங்களில் மாற்றபடுகிறது. மின்சாரத்தை இயக்கத்தினால் உண்டாக்கலாம் , ரசாயனத்தால் அல்லது ஒளியில் இருந்து நேராக ஒளிமின்ன செதிழ்களால் உருவாக்கலாம் , மேலும் அதை ரசாயன மின்க்கூட்டினில் சேமிக்கலாம் கணித விபரிப்பு மின்சுற்றுகள் மின் சமன்பாடுகளில் மின்னாற்றலை வினைஆற்றலை போலவே P என்ற எழுத்தினால் குறிப்பிடுவர் மின்திறன் = மின்சக்தி / நேரம் மின்திறன் = மின்னழுத்தம் * மின்னோட்டம் கண மின்னழுத்தம் தறுவாய் குறியீட்டில் கண மின்னோட்டம் தறுவாய் குறியீட்டில் கண மின்திறன் கோணவியலின் பின்வரும் சமன்பாட்டை பயன்படுத்தி, கண மின்திறனை பின்வருமாறு விபரிக்கலாம்: கண மின் திறனில் இருந்து சராசரி மின்திறனை கணிப்பதற்கு கால தொகையீடு செய்தல் வேண்டும். அப்படி செய்தால், கால அலகு கொண்ட காசைனின் தொகையீடு 0 ஆக வரும். அதன்படி சராசரி மின்திறன் பின்வருமாறு வரும். மேற்கொண்ட சமன்பாட்டை தறுவாய் குறியீட்டு மின்திறன் சமன்பாட்டுடன் பின்வருமாறு ஒப்பிடலாம்: மேலே மின்னோட்டத்தின் தறுவாய் குறியீட்டு பெறுமதி, அதன் இணை கலப்பெண் (complex conjugate) ஆக மாற்றப்பட்டு இருப்பதை குறிக்க, அதாவது மருவி ஆகியிருக்கின்றது. கலப்பெண் மின்திறன் = செயற்படு மின்திறன் + எதிர்வினை மின்திறன் Complex Power = Average Power + Reactive Power = S = P + jQ Note that Average Power is eqal to the Real Power or Real part of the Complex Power. Beside these, the magnitude of S is said to be Apparent Power. நுட்பியல் சொற்கள் மின்புலம் - Electric Field மின்னழுத்தம் - Voltage மின்னோட்டம் - Current மின்மம் - Charge மின்கடத்தி - Conductor மின் ஆற்றல் (மின்சக்தி) - Electric energy மின்னணுவியல் ஆற்றல் மின்னியல் மின்காந்தவியல் da:Effekt (fysik)#Effekt i elektriske kredsløb et:Võimsus#Võimsus elektrotehnikas sv:Effekt#För likström (DC) och spänning
6584
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மின்காந்த சக்தி வாய்கள்
மின்காந்த சக்தி வாய்கள் (Power Outlets or Sockets) மின்காந்த சக்தியை உபயோகத்துக்கு ஏற்றவாறு வழங்க பயன்படுகின்றது. பொதுவாக வீடுகளில் மும்முனை மின் வாய்கள் அல்லது இருமுனை மின் வாய்கள் இருக்கும். மும்முனை வாய்கள் மின்வழி வாய் (live or hot or red) மின்வெளி வாய் (neutral or cold or black) நில வாய் (earth or ground) மின்வழி வாய் மின்வழி வாய் ஊடாக மின்னோட்டம் (மின்காந்த சக்தி) மின்சாதனங்கள் அல்லது மின்கருவிகளின் சுற்றுக்களுக்குள் வந்து மின்வெளி வாய் ஊடாக வெளியேறும். மின்னோட்டம் எப்பொழுதும் ஒரு மின்சுற்றிலேயே (பயணித்து கொண்டு) இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வட அமெரிக்காவில் மின்வழிவாய் ஊடாக வரும் மின்காந்த சக்தி 120 Vots (rms) மின்னழுத்தையும், 60 Hz அலைஎண்ணையும் கொண்டிருக்கும். இந்தியா, இலங்கை, மற்றும் பல ஆசிய நாடுகளில் மின்ழுத்தம் 220 Volts (rms) ஆகவும், 50 Hz அலைஎண்ணாகவும் இருக்கும். மின்வெளி வாய் பொதுவாக மின்வெளி வாய் 0 Volts மின்னழுத்த செயற்றிறத்தை (electric potential) அல்லது நில வாய்க்கு ஒத்த செயற்றிறத்தை கொண்டிருக்கும். நிலவாய் நிலத்துடன் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தொடர்பு, ஆகையால் 0 Volts மின்னழுத்த செயற்றிறத்தை கொண்டிருக்கும். நில வாய் நில வாய் முக்கிய நோக்கம் பயனர் பாதுகாப்பே. ஒரு மின்சாதன உலோக உறை பெட்டியில் தவறுகாரணமாக மின்னோட்டம் பரவகூடும், அச்சமயம் அப் பெட்டியை தொடும் பயனர் மின் அதிர்ச்சிக்கு உள்ளாகலாம். அதை தடுப்பதற்காவே மின்சாதன உறை பெட்டிகள் நிலவாயுடன் தொடுக்கப்பட்டிருக்கும். அப்படி தொடுப்பதன் மூலம் மின்னழுத்த செயற்றித்தை குறைக்கலாம். மின்சாதனம் திறமையாக வடிவமைக்கப்பட்டிருந்தால், அவ் சாதனம் நில வாயுடன் ஏற்படுத்தபடும் குறுக்கு மின்பாதையின் போது மின் உருக்கியை செயல்பட வைத்து, மின்சாதனத்தை செயலிழக்க செய்துவிடும். நுட்பியல் சொற்கள் மின் உருக்கி - Fuse வெளி இணைப்புகள் Why do the plugs on some appliances have two prongs and others have three prongs? Electrical Outlet Safety Evaluation Household Wiring தொழில்நுட்பம்.காம் தமிழ்ச்சொற் தேடல்கள் மின் உறுப்புகள்
6586
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88
ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப் பலகை
தமிழ் எழுத்துக்களைத் தட்டெழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் விசைப்பலகை முறைகளுள் அல்லது விசைப்பலகைத் தளக்கோலங்களுள் ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப்பலகையும் ஒன்று. ஆங்கில விசைப்பலகை ஒன்றினைப் பயன்படுத்தி, தமிழ் எழுத்துக்களை, அவற்றுக்குச் சமமான ஒலியைத்தரக்கூடிய ஆங்கில எழுத்துகக்ளைத் தட்டுவதன் மூலம் உள்ளிடுகின்ற முறையே இதுவாகும். தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் இருப்பதாலும் பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்திலேயே அலுவலகங்களில் ஆவணங்களை பரிமாறிக் கொள்வதாலும் தமிழ் விசைப் பலகையை கற்றுக் கொள்ள எடுக்கும் நேரத்தாலும் ஆங்கில ஒலியியல் முறை விசைப் பலகை, கடல் கடந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் மிகப் பிரபலம் அடைந்துள்ளது. வடிவமைப்பு ஆங்கில ஒலியியல் முறை விசைப்பலகை என்று அறியப்படும் விசைப்பலகைத் தளக்கோலங்கள் பல உள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் தந்தி அனுப்புதல் போன்ற தேவைகளுக்காக முன்னர் உருவாக்கப்பட்ட ,ரோமன் எழுத்துக்கள் மூலம் தமிழை உள்ளிடுவதற்காகத் தரப்படுத்தப்பட்ட Romanished நியமத்தினை ஒட்டியே அமைந்துள்ளன. ஆனாலும் ஒவ்வொரு தளக்கோலமும் அந்நியமத்திலிருந்து சிற்சில இடங்களில் வேறுபடுகின்றது. பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆங்கில ஒலியியல் முறை தமிழ் விசைப்பலகை முறைகளில் காணப்படும் பொதுவான தளக்கோலம் கீழே தரப்பட்டுள்ளவாறு அமைகிறது. உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் வல்லினம் க் k ச் s ட் d or t த் th ப் b or p ற் R இடையினம் ய் y ர் r ல் l வ் v ழ் z ள் L மெல்லினம் ங் ng ஞ் nj ண் N ந் w ம் m ன் n கிரந்த எழுத்துக்கள் ஹ் h ஸ் S ஜ் j ஷ் sh ஸ்ரீ Sr மேற்கூறியவாறு ஸ்ரீ உருவாகவில்லையெனில். கீழ்க்கண்டவாறு தட்டச்சு செய்யலாம் ஸ்ரீ SrI (அ) Srii உயிர் மெய் க்+அ = க k+a = க தமிழ் விசைப்பலகைகள்
6590
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A
மகிந்த ராசபக்ச
பேர்சி மகேந்திரா ராசபக்ச (Percy Mahendra Rajapaksa, சிங்களம்: පර්සි මහේන්ද්‍ර රාජපක්ෂ; பிறப்பு: 18 நவம்பர் 1945), பொதுவாக மகிந்த ராசபக்ச (Mahinda Rajapaksa) என்பவர் இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் அரசுத்தலைவரும், முன்னாள் பிரதமரும் ஆவார். முன்னர் இவர் 2005 முதல் 2015 வரை 6 ஆவது இலங்கை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். மகிந்தவின் அரசுக்கும், அரசுத்தலைவர் கோட்டாபய இராசபட்சவிற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றுவந்த நிலையில், 2022 மே 9 இல் மகிந்த ராசபக்ச தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.. வழக்கறிஞரரான மகிந்தா 1970 இல் முதன்முதலாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசுத்தலைவராகத் தனது முதலாவது ஆறாண்டு காலப் பதவியை 2005 நவம்பர் 19 இல் தொடங்கினார். 2010 அரசுத்தலைவர் தேர்தலில் இரண்டாம் தடவையாக 2010 சனவரி 27 இல் தெரிவானார். மூன்றாவது தடவையாக 2015 தேர்தலில் போட்டியிட்டு மைத்திரிபால சிறிசேனவிடம் தோற்று 2015 சனவரி 9 இல் பதவியில் இருந்து விலகினார். 2015 நாடாளுமன்றத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். ஆனாலும் இவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால் இவர் பிரதமராக முடியவில்லை. 2018 அக்டோபர் 28 இல், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி விலகியதை அடுத்து மகிந்த ராசபக்ச இலங்கைப் பிரதமராக அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். இந்நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரனாணது எனக் கூறி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இதன் மூலம் நாட்டில் அரசியலமைப்பு நெருக்கடி உருவானது. இலங்கை நாடாளுமன்றம் ராசபக்சவுக்கு எதிராக இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை 2018 நவம்பர் 14, 16 தேதிகளில் கொண்டு வந்தது. இரண்டு தீர்மானங்களையும் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை எனக் காரணம் கூறி சிறிசேன ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில், 2018 திசம்பர் 3 இல் ராசபக்சவின் நியமனத்தை நீதிமன்றம் ஒன்று செல்லுபடியற்றதாக்கியது. ராசபக்ச 2018 திசம்பர் 15 இல் பிரதமர் பதவியில் இருந்து விலகி, எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற இலங்கை பொதுசன முன்னணியின் தலைவராக மகிந்த 2019 இல் பொறுப்பேற்றார். 2019 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்தவின் தம்பி கோட்டாபய இராசபட்ச வெற்றி பெற்றதை அடுத்து மகிந்த நவம்பர் 18 இல் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ராசபக்ச நான்காவது தடவையாக பிரதமரானார். 2022 மே 3 இல் மகிந்தவின் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்று எதிர்க்கட்சிகளினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இராசபட்ச குடும்பத்தின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பொருளாதார நெருக்கடி இலங்கையின் விடுதலைக்குப் பிறகு அதன் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமையினால் நாட்டை திவால் நிலைக்கு கொண்டு வந்தது. போராட்டக்காரர்கள் அவரை "மைனா" என அழைத்து பதவி விலகக் கோரினர். 2022 மே 9 இல், மகிந்த தனது ஆதரவாளர்களை பேருந்துகள் மூலம் அழைத்து வந்து தனது அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார். ஆதரவாளர்கள் இலங்கை பொதுசன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழிநடத்தப்பட்டு, அலரி மாளிகைக்கு வெளியே கூடியிருந்த அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காலிமுகத் திடல் சென்று தாக்குதல்களை நடத்தினர். இதனை அடுத்து தென்னிலங்கையில் பல இடங்களிலும் வன்முறைகள் வெடித்தன. மகிந்த ராசபக்ச 2022 மே 9 இல் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். வாழ்க்கைச் சுருக்கம் பின்னணி மகிந்த இராசபக்ச அம்பாந்தோட்டையில் வீரக்கெட்டிய என்ற ஊரில் புகழ்பெற்ற அரசியல் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை டி. ஏ. ராசபக்ச தகநாயக்காவின் அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். இவரது மாமன் டி. எம். ராசபக்ச அம்பாந்தோட்டை தொகுதியின் அரசாங்க சபை உறுப்பினராக 1930களில் பதவி வகித்து வந்தவர். ஆரம்ப வாழ்வும் கல்வியும் ராசபக்ச காலி, ரிச்மண்ட் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு, நாளந்தா கல்லூரியிலும், தேர்ஸ்டன் கல்லூரியிலும் கல்வி கற்றார். ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று 1977 நவம்பரில் சட்டவறிஞர் ஆனார். தங்காலையில் இவர் சட்டத்தரணியாகப் பணியாற்றினார். குடும்பம் 1983 இல் ராசபக்ச சிராந்தி விக்கிரமசிங்கவைத் திருமணம் புரிந்தார். சிராந்தி சிறுவர்-உளவியலாளரும், கல்வியாளரும் ஆவார். சிராந்தியின் தந்தை இலங்கைக் கடற்படையின் இளைப்பாறிய அதிகாரி ஆவார். இவர்களுக்கு நாமல், யோசித்த, ரோகித்த என மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். நாமல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். யோசித்த இலங்கைக் கடற்படையில் பணியாற்றியவர். மகிந்தவின் சகோதரர் கோத்தாபய ராசபக்ச இலங்கை படைத்துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் மகிந்தவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாலராகப் பணியாற்றினார். இன்னும் ஒரு சகோதரர் பசில் ராசபக்ச கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஆவார். மகிந்தவின் மூத்த சகோதரர் சாமல் ராசபக்ச நாடாளுமன்ற சபாநாயகராகப் பணியாற்றினார். கௌரவ விருதுகள் பலத்தீனுடனான ஒருமைப்பாட்டிற்கான இலங்கை சபையின் தலைவர். இவருக்கு மூன்று மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன: கொழும்புப் பல்கலைக்கழகம் 2009 செடம்பர் 6 இல் சட்டத்துறையில் முனைவர் பட்டம் வழங்கியது. உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் 2010 பெப்ரவரி 6 இல் உலக அமைதிக்கான பங்களிப்பு மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் சிறந்த வெற்றி பெற்றமைக்காகவும் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது. சீனாவில் உள்ள வெளிநாட்டு மொழிகளுக்கான பெய்ஜிங் பல்கலைக்கழகம் 2011 ஆகத்து மாதத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது. கொல்கத்தா, விஸ்வபாரதி பல்கலைக்கழகம் மாண்புமிகு பேராசிரியர் விருதை அவரது மனித உரிமைகள் குறித்த அவரது சாதனைகளுக்காக வழங்கியது. மல்வத்தை பீடத்தினால் ஸ்ரீரோகண ஜனரஞ்சக என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். விமர்சனங்கள் மனித உரிமை மீறல்கள் இலங்கையின் அதிபரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமாகிய மகிந்த ராசபக்சா தமிழர்களுக்கு எதிரான பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளார் என பல சர்வதேச அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. 2007 பெப்ரவரி இல் 3 சிங்கள ஊடகவியலாளர்கள் தனக்கு எதிரான கருத்துக்களைத் தெரித்ததற்காக இராணுவத்தின் உதவியுடன் கடத்தப்பட்டனர். 2006 ஏப்ரல் மாதம், திருகோணமலை நகரில் நடந்த தமிழர்களுக்கு எதிரான கலவரத்தை அடக்குவதற்கு வேண்டிய எவ்விதமான நடவடிகையையும் எடுக்கவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பு ராஜபக்சவுக்கு குற்றம் சாட்டியது. அது இச்சம்பவம் பற்றிய உறுதியான அறிக்கையையோ இப்பகுதியில் சட்டத்தை நிலை நாட்ட எந்த நேரடி தலையீட்டையும் ராஜபக்சா செய்ய தவறிவிட்டார் என குற்றம் சாட்டியது. ஊடகவியலாளர் தராகி சிவராம் கொலை வழக்கில் சூலை 2005 இல் சந்தேக நபர் கைதான போதும் இதுவரையில் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு 2006 ஏப்ரல் மாதத்தில் குற்றம் சாட்டியது. இவரது இரண்டாவது மகன் இலங்கைக் கடற்படையில் இணைந்துள்ளதாகப் பெரிதும் பிரச்சாரம் செய்யப்பட்ட போதும் அரச செலவில் இலண்டனில் மேற்படிப்பிற்காக அனுப்பப்பட்டார். இவர் மீது போர்க்குற்றம் சம்பந்தமான வழக்கு ஒன்று அமெரிக்காவில் பதியப்பட்டது. பிரதமர் பதவியிலிருந்து விலகல் இலங்கை பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு 9 மே 2022 அன்று மகிந்த ராஜபக்ச, இலங்கைப் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பினார். குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மே 2009, 2022:இலங்கை அரசியலில் மகிந்த ராஜபபக்ச பெற்ற உச்சமும் வீழ்ச்சியும் www.mahinda4srilanka.org Sri Lankan President's Official Website Mahinda Rajapaksa's Web Site "Mahinda 4 Sri Lanka" A website with Mahinda Rajapaksa Biography, Photos, News and Critics "Mahinda Rajapakse: inexhaustible capacity for work" A Feature Article BBC report on the election victory ராணுவ புரட்சிக்கு முயற்சி: ராஜபக்சேவிடம் விசாரணை நடத்த முடிவு! சிங்கள அரசியல்வாதிகள் இலங்கை அரசியல்வாதிகள் ராஜபக்ச குடும்பம் 1945 பிறப்புகள் இலங்கைப் பிரதமர்கள் வாழும் நபர்கள் இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் சனாதிபதிகள் இலங்கை சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள் இலங்கை பௌத்தர்கள் இலங்கை வழக்கறிஞர்கள் இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்கள் அம்பாந்தோட்டை மாவட்ட நபர்கள் இலங்கையின் நிதி அமைச்சர்கள் இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
6591
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
கே. ஆர். நாராயணன்
கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர். வெளி இணைப்புகள் 'மரபை மாற்றியமைத்த ஜனாதிபதி!' கே.ஆர் நாராயணன் -விகடன் ஆக்கங்கள் Nehru and his vision [D.C. Books, 1999] India and America: essays in understanding [Asia book corporation of America, 1984] Images and insights Non-alignment in contemporary international relations (இணை ஆசிரியர்) இந்தியக் குடியரசுத் தலைவர்கள் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் 1920 பிறப்புகள் 2005 இறப்புகள் 10வது மக்களவை உறுப்பினர்கள் 8வது மக்களவை உறுப்பினர்கள் 9வது மக்களவை உறுப்பினர்கள் இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
6596
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
மாறுதிசை மின்னோட்டம்
மாறுதிசை மின்னோட்டம் (இலங்கை வழக்கு: ஆடலோட்ட மின்) (Alternating current) என்பது மாறும் மின்னோட்ட வீச்சையும், அவ்வப்பொழுது மாறும் மின்னோட்டத் திசையையும் கொண்ட மின்னோட்டம் ஆகும். இம் மாற்றங்கள் ஒரு சுழற்சி முறையில் அமைகின்றன. பொதுவாக மாறுதிசை மின்னோட்டம் சைன் வடிவ அலையாகவே இருப்பதால் அலையோட்டம் என்றும் குறிக்கப்படுவதுண்டு. மாறுதிசை மின்னோட்டம் நேரோட்ட மின்னோட்டத்துடன் ஒப்பிட்டு நோக்கலாம், ஆயினும் மின்னோட்டம் அடிப்படையில் மின்னணுக்களின் ஓட்ட வேக விகிதமே. ஒரு நிமிடத்தில் எத்தனை தடவை மின்னோட்டம் திசை மாறும் என்பதை கொண்டு மின்னோட்ட அதிர்வெண் கணிக்கப்படுகின்றது. உதாரணமாக ஒரு சைன் மின்னோட்ட அலை ஒரு நிமிடத்துக்கு ஒரு முறை திசை மாறினால், அதன் அதிர்வெண் 1 HZ ஆகும். வட அமெரிக்காவில் பொது மின்சக்தி விநியோகத்திற்கு 60Hzம், பிற கண்டங்களில் 50Hzம் பயன்படுத்தப்படுவதுண்டு. கணித விபரிப்பு மாறுதிசை மின்னோட்டமானது பொதுவாக மாறுதிசை மின்னழுத்தத்துடன் தொடர்பானது. மாறுதிசை மின்னழுத்தம் (v), நேரத்துடன் (t) பின்வரும் சமன்பாட்டினாற் தரப்படும்: இங்கு, A என்பது வீச்சு அல்லது மின்னழுத்தத்தின் பெரும மதிப்பு. இதன் அலகு வோல்ட், ω என்பது கோண அதிர்வெண் (angular frequency). இதன் அலகு ரேடியன்/நொடி, t என்பது நேரம், நொடிகளில் இச்சமன்பாடு பொதுவாக கணிதவியலாளர்களால் பின்வருமாறும் கூறப்படுகிறது: இங்கு f என்பது அதிர்வெண். இது ஹேர்ட்ஸில் (Hz) அளக்கப்படுகிறது. The peak-to-peak value of an AC voltage is defined as the difference between its positive peak and its negative peak. Since the maximum value of sin(x) is +1 and the minimum value is −1, an AC voltage swings between +A and −A. The peak-to-peak voltage, written as VP-P, is therefore (+A) − (−A) = 2 × A. In power distribution work the AC voltage is nearly always given in as a root mean square (rms) value, written Vrms. For a sinusoidal voltage: நுட்பியல் சொற்கள் மின்னோட்டம் - Current நேரோட்ட மின்னோட்டம் - DC Current மாறுதிசை மின்னோட்டம், அலையோட்டம் - AC Current அலைவெண் அல்லது அதிர்வெண் - Frequency வீச்சு - Amplitude வெளி இணைப்புகள் Alternating Current (AC) Electricity மின்னோட்டம்
6600
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
நாமக்கல்
நாமக்கல் (Namakkal) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு நகரமும் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரும், சிறப்பு நிலை நகராட்சியும் ஆகும். நாமக்கல் நகராட்சி ஆசியாவின் முதல் ISO 14001-2004 தரச்சான்றிதழ் பெற்றதாகும். இது "குப்பை இல்லா நகரம்" என்னும் சிறப்பையும் பெற்றதாகும். 2011-இல் நகராட்சியானது கொண்டிசெட்டிப்பட்டி, கொசவம்பட்டி, பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், தும்மங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதலைப்பட்டி, சின்ன முதலைப்பட்டி ஊர்களை இணைத்து விரிவுபடுத்தப்பட்டது. இதனால் நகர்மன்றங்களின் எண்ணிக்கை 30-இலிருந்து 39 ஆக உயர்ந்துவிட்டது. வரலாறு "நாமகிரி" என்று அழைக்கப்படும் 65 மீட்டர் உயர மிகப் பெரிய ஒற்றைப் பாறை நகரின் நடுவில் உள்ளது. நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என்ற பெயர் உருவானது. இவ்வூரின் பழைய பெயர் 'ஆரைக்கல்' என்பதாகும். இப்பெயர் பல கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாறையின் மீது கோட்டை ஒன்று உள்ளது இதை ராமச்சந்திர நாயக்கர் கட்டியது என கருதப்படுகிறது. இதை மைசூர் அரசின் அதிகாரி லட்சுமி நரசய்யா அமைத்தார் என்ற கருத்தும் நிலவுகிறது. பின்னாளில் திப்பு சுல்தான் இப்பாறைக் கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார் என்றும் நம்பப்படுகிறது. மகாத்மா காந்தியின் பொதுக்கூட்டம் இப்பாறை அருகே நடைபெற்றது. அரிசனம் இயக்கத்திற்கு ஆதரவு வேண்டி 1934 பிப்ரவரி 14 அன்று நாமக்கலில் மகாத்மா காந்தி பேசிய கூட்டத்திற்கு 15,000 மக்கள் வந்திருந்தனர். இப்பாறையின் ஓரு புறம் அரங்கநாத பெருமாள் குகைக்கோயில் உள்ளது, மறுபுறம் நரசிம்ம பெருமாள் குகைக்கோயில் உள்ளது. இக்கோயில்கள் கி.பி 784இல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. நாமகிரி என்பதே தமிழில் நாமக்கல் எனப்படுவதாக கருதப்படுகிறது. அமைவிடம் நாமக்கலின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 218 மீட்டர் (715 அடி) உயரத்தில் இருக்கின்றது. இது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொல்லி மலைக்கு அருகில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள ஆறு காவிரி ஆகும். நாமக்கல் நகரம் பின்வரும் நகரங்களில் இருந்து குறிப்பிடத்தக்க தொலைவில் அமைந்துள்ளது (தொலைவு தோராயமாக). சென்னைக்கு தென் மேற்கே 360 கி.மீ. தொலைவில் பெங்களூருக்கு தெற்கே 250 கி.மீ. தொலைவில் கோயம்புத்தூருக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவில் ஈரோட்டிற்கு கிழக்கே 55 கி.மீ. தொலைவில் கரூருக்கு வடக்கே 48 கி.மீ. தொலைவில் சேலத்திற்கு தெற்கே 53 கி.மீ. தொலைவில் திருச்சிக்கு வடமேற்கே 89 கி.மீ. தொலைவில் மக்கள்தொகை 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 55,145 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 27,366 ஆண்கள், 27,779 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 90.76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.04%, பெண்களின் கல்வியறிவு 86.58% ஆகும். மக்கள் தொகையில் 5,002 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, நாமக்கலில் இந்துக்கள் 88.98%, முஸ்லிம்கள் 9.29%, கிறிஸ்தவர்கள் 1.48%, சீக்கியர்கள் 0.01%, சைனர்கள் 0.01%, 0.23% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர். பொருளாதாரம் உள்ளூர் மக்களின் சுய முயற்சியால் சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 10,000 க்கும் அதிகமான லாரி (Lorry) என்னும் சுமையுந்து வண்டிகள் இங்கு உள்ளன. சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. சுமையுந்து தொடர்பான பட்டறை என்னும் தொழில் கூடங்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது. நகர்ப்புறத்தில் சுமையுந்து தொழில் சிறப்படைந்ததை போல கிராமப்பகுதியில் கோழி வளர்ப்பு சிறப்படைந்துள்ளது. கோழி வளர்ப்பில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தொடர்பான கோழி & மாடு தீவன (Feeds) ஆலைகள் பத்துக்கும் மேல் இங்கு உள்ளன. தமிழகத்தின் ஒட்டு மொத்த முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 90 ‌விழு‌க்கா‌ட்டை பூ‌ர்‌த்‌தி செ‌‌‌ய்கிறது. மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் சேக்கோ (Sago) எனப்படும் சவ்வரிசி ஆலைகள் அதிக அளவில் உள்ளன. கோவில்கள் இராமசந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிகளை பாறையை (மலையை) செதுக்கி செய்துள்ளனர். இம்மலையில் இருந்து பார்த்தால் நாமக்கலின் சுற்று வட்டாரம் தெளிவாக தெரியும். நாமக்கல் மலைகோட்டையின் கிழக்கில் ஒரு பூங்காவும் (நேரு பூங்கா) தென் மேற்கில் ஒரு பூங்காவும் (செலம்ப கவுண்டர் பூங்கா) உள்ளது. நேரு பூங்காவில் புதியதாக படகு சவாரியும் உள்ளது. நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரித் தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடைவரை கோயில், இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இவர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். இங்குள்ள ஆஞ்சனேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று. மலையின் கிழக்குபுறம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில், இதுவும் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் கூலிப்பட்டி என்ற இடத்தில் சிறிய குன்றில் முருகன் கோயில் உள்ளது. நாமக்கலிருந்து கரூர் செல்லும் வழியிலுள்ள கீரம்பூர் எட்டுக்கை அம்மன் கோவில், வட நாட்டில் வணங்கப்படும் விஷ்ணு துர்க்கைக்கு ஒப்பாகும். நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் 10 கி.மீ தொலைவில் தத்தகிரி முருகன் ஆலயம் உள்ளது. இங்கு தத்தாஸ்வரேயர் சன்னதியும் உள்ளது. இக்கோயில் சேந்தமங்கலத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு சுயம்பிரகாச அவதூத சரஸ்வதி சுவாமிகள் சமாதி நிலையை அடைந்துள்ளார். நாமக்கலில் இருந்து சேந்தமங்கலம் செல்லும் வழியில் முத்துக்காப்பட்டிக்கு அருகில் கொல்லிமலை அடிவாரத்திலுள்ள புதுக்கோம்பை என்ற இடத்தில் பெரியசாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கட்டடம் ஏதும் இல்லை. கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள தோப்பில் இக்கோயில் அமைந்துள்ளது. வார இறுதி நாட்களில் ஏராளமான மக்கள் வருவர். இக்கோயிலுக்கு முத்தக்காப்பட்டியில் இருந்து சிறிது தொலைவு உள்ளே செல்ல வேண்டும். இங்கு செல்வதற்கு சிற்றுந்து (Mini Bus) வசதி உள்ளது. நைனாமலை உச்சியில் நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. மலை மீது ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். 2500லிருந்து 3000 படிக்கட்டுக்கள் வரை உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமை பெருந்திரளான மக்கள் இங்கு வருவர். இக்கோயில் புதன்சந்தையிலிருந்து, சேந்தமங்கலம் செல்லும் வழியில் உள்ளது. தற்போது மலை உச்சியிலுள்ள கோவிலுக்கு கார் போன்ற ஊர்திகள் செல்ல பாதை அமைக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. ஆகாயகங்கை அருவி நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது. கொல்லி மலையில் அமைந்துள்ள கொல்லிமலை அறப்பளீஸ்வரர் திருக்கோயில் அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது. இதில் சுமார் 1500 படிகள் உள்ளது. அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது. நாமக்கலிருந்து - கரூர் செல்லும் வழியில் பரமத்தி-வேலூர் அருகேயுள்ள கொளக்காட்டுப்புதூரிலுள்ள தங்காயி அம்மன் கோவில் உள்ளது. நாமக்கலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அணைதோட்டம் (நருவலூர் புதூர் கிராமம்) என்ற பகுதி இருக்கும் ஸ்ரீ ஏரிக்கரை முத்துசாமி / கருப்பண்ண சாமி மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு மும்பை மற்றும் டெல்லி இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இப்பகுதி மக்கள் ஏரிக்கரை முத்துசாமிக்கு திருவிழா நடத்துகின்றனர். நாமக்கல்லில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வையப்பமலை ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகோவில்.முருகன் திருவிளையாடல் நடந்தபுகழ்பெற்ற, பழனிக்குநிகரான தலமாகும் விளை பொருட்கள் நாமக்கல் மழை மறை பகுதியில் அமைந்திருப்பதால் இங்கு நன்செய் விவசாயம் சிறிதளவும், புன்செய் விவசாயம் பெருமளவிலும் நடைபெறுகிறது. சோளம், மரவள்ளிக்கிழங்கு, எள், கரும்பு, நெல், வாழை, வெற்றிலை, பாக்கு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, ஆமணக்கு, தட்டைப்பயிறு, பருத்தி மற்றும் நிலக்கடலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. போக்குவரத்து சாலைப் போக்குவரத்து நாமக்கல் மற்ற நகரங்களுடன் சாலை வசதிகளால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை - வாரணாசியுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 ( தேசிய நெடுஞ்சாலை 7, இந்தியாவிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை) நாமக்கல் வழியாக செல்கிறது. சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், கோயம்புத்தூர், பெங்களூர், சென்னை, மதுரை மற்றும் திண்டுக்கல் போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள நகரங்கள் சேலம் (57 கிமீ) , ஈரோடு (54 கிமீ), கரூர் (15 கிமீ), திருச்சி (85 கிமீ), கோயமுத்தூர் (154 கிமீ) ஆகும். சேலத்திலிருந்து திருச்சி & மதுரை செல்லும் பேருந்துகள் நாமக்கல் வழியாகவே செல்கிறது. தொடருந்து போக்குவரத்து நாமக்கல் வழியாக சேலத்தில் இருந்து கரூருக்கு அகலப் பாதை அமைக்கும் திட்டம் 1996-97 ல் ஒப்புதல் பெற்று நிறைவடைந்துள்ளது. மல்லூர், இராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல், லத்துவாடி, மோகனூர், வாங்கல் வழியாக புதிய சேலம் - கரூர் இருப்புப்பாதை திட்டம் செல்கிறது. காலையிலும் மாலையிலும் இத்தடத்தில் சேலம்-கரூர், கரூர்-சேலம் பயணிகள் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. பழனி - சென்னை தொடர் வண்டி இயக்கப்படுகின்றன. தற்போது நாகர்கோவில் - பெங்களூர் தொடர் வண்டி இயக்கபடுகின்றது. 2014 ஆம் ஆண்டு முதல் வாரம் இருமுறை நாகர்கோவில் - கச்சிக்குடா விரைவு தொடர் வண்டி நாமக்கல் வழியாக செல்கிறது. வானூர்தி போக்குவரத்து இங்கிருந்து 52 கி.மீ தொலைவிலுள்ள சேலம் வானூர்தி நிலையமும், 153 கி.மீ தொலைவிலுள்ள கோயம்புத்தூர் வானூர்தி நிலையமும், 85 கி.மீ தொலைவிலுள்ள திருச்சி வானூர்தி நிலையமும் அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் ஆகும். நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் நாமக்கல் நகராட்சியானது நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் (கொமதேக) சேர்ந்த ஏ. கே. பி. சின்ராஜ் வென்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த பி. இராமலிங்கம் வென்றார். கல்வி நாமக்கல் தரமான பள்ளிகள் & கல்லூரிகள் நிறைந்த இடமாகும். நாமக்கல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. கல்லூரிகள் பட்டியல் செங்குந்தர் பொறியியல் கல்லூரி(தன்னாட்சி), திருச்செங்கோடு அரசு கால்நடை மருத்துவ கல்லூரி & ஆராய்ச்சி நிலையம். அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, நாமக்கல் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி, இராசிபுரம் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் பெண்கள் கலைக்கல்லூரி கந்தசாமி கண்டர் அறிவியல் & கலைக் கல்லூரி பிஜிபி அறிவியல் & கலைக்கல்லூரி செல்வம் அறிவியல் & கலைக்கல்லூரி டிரினிட்டி பெண்கள் கல்லூரி பிஜிபி பொறியியல் & தொழிற்நுட்ப கல்லூரி அன்னை மாதம்மாள் சீலா பொறியியற் கல்லூரி, எருமைப்பட்டி அஞ்சல் செல்வம் தொழில்நுட்ப கல்லூரி சி. எம். சி பொறியியற் கல்லூரி கிங் பொறியியல் கல்லூரி கே. எஸ். ரங்கசாமி கல்வி நிலையங்கள் மகேந்திரா பொறியியற் கல்லூரி பள்ளிகள் பட்டியல் பாரதி கல்வி நிறுவனங்கள், ரெட்டிப்பட்டி. அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மோகனூர் சாலை, நாமக்கல்(தெற்கு) அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடக்கு நகராட்சி உயர் நிலைப்பள்ளி டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தி பள்ளி குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, காவேட்டுப்பட்டி கந்தசாமி கண்டர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி கிரீன் பார்க் பள்ளி ஜேக் & ஜில் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி அண்ணா நேரு மெட்ரிகுலேசன் பள்ளி பாரதி மேல்நிலைப்பள்ளி நாமக்கல் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி ஸ்பெக்ரம் அகாடமி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பிஜிபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாருதி வித்யாலயா மருத்துவமனை நாமக்கல் அரசினர் மருத்துவமனை பல்வேறு வசதிகளுடன் உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ART மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி இங்குள்ளது. Anti Retro-Viral Treatment (ART) Anti Retro-Viral drugs (ARV) இங்கு நடமாடும் எய்ட்ஸ் ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளது. வானிலை மற்றும் காலநிலை குறிப்பிடத்தக்க சிறப்புகள் நாமக்கல் முட்டைக் கோழி வளர்ப்புக்கும், கோழி முட்டைக்கும் பெயர்பெற்றது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் ஊர். சிலம்பொலி செல்லப்பனின் ஊர். நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலின் சிலை மிகப் பெரிய சிலைகளில் ஒன்று. சுமையுந்து வண்டிகளின் உடல் அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. படங்கள் மேற்கோள்கள் வெளிஇணைப்புகள் நாமக்கல் நகராட்சி இணையதளம் சேலம்-நாமக்கல்-கரூர் இருப்புப்பாதை குறித்து நடுவன் இருப்புப்பாதை இணை அமைச்சர் வேலு பேச்சு 2006-12-27 தேர்வு நிலை நகராட்சிகள் நாமக்கல் மாவட்டம் தமிழகக் கோட்டைகள்
6601
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF
தூத்துக்குடி
தூத்துக்குடி (Thoothukudi அல்லது Tuticorin) தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும், தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10-ஆவது மாநகராட்சியாக (தூத்துக்குடி மாநகராட்சி), ஆகஸ்ட் 5, 2008-இல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில், பரதவர் இன மக்கள் மீன் பிடித்தும், அதிகளவில் முத்துகுளித்தும் வந்தனர். இன்றளவும் இம்மக்கள், சங்கு குளிக்கும் தொழில் செய்கின்றனர்.இதை நாம், அகநானூறு 350 அதிகாரத்தில் காணலாம். இம்மாவட்டத்திற்கு 'முத்து நகர்' என்ற பெயரும் உண்டு. தூத்துக்குடியில், அனல் மின் நிலையமும், ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன. சங்க காலம் சங்க காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி சாசனம், தூத்துக்குடியைப் பற்றி குறிப்பிடுகிறது. இரும்பு, செம்பு காலங்களைச் சேர்ந்த நாகரிகங்களை வளர்த்தெடுத்த ஆதிச்சநல்லூர், ஒரு புராதன பண்பாட்டுச் சின்னமாகும். வரலாற்றுக் குறிப்புகள் தூத்துக்குடி எனும் பெயர் இந்நகருக்கு வந்ததற்கான வரலாற்றுக் குறிப்புகள் சில உள்ளன. கி.மு.123இல் தாலமி என்ற கிரேக்கப் பயணி, தனது பயண நூலில் "சோஷிக் குரி"(சிறு குடி) சோதிக்குரை என்ற முத்துக்குளித்துரை நகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும் சோதிக்குரை நகரம்தான், 'தூத்துக்குடி' என்று வரலாற்று அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர். அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை, ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்" என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும். கி.பி.80இல் ஒரு அறிமுகமற்ற அடுக்கியந்திரியின், கிரேக்கர்கள் எரித்திரிரேயன் கடல் பெரிப்லஸ், என்ற நூலில் 'தூத்துக்குடி' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி, முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஜேம்ஸ் கர்னல் மன்னார் வளைகுடாவில் முத்துக்குளித்துறையைப் பற்றி, சென்னை அரசாங்கத்திற்கு, தான் சமர்ப்பித்த அறிக்கையில், தோத்துக்குரையாக மாறி இறுதியில் 'தூத்துக்குடி' என்ற பெயர் பிறந்து இருக்கிறது என்று கூறியுள்ளார். தூத்துக்குடி என்ற பெயர், ஐரோப்பியர்களின் உச்சரிப்பில் மாற்றம் பெற்று, 'தூட்டிகொரின்' ("Tuticorin") என்று வந்துள்ளதென்று கால்டுவெல் விளக்கம் அளித்துள்ளார். போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும் கி.பி. 1532-இல் முதன் முதலாக போர்ச்சுக்கீசியர்கள் இம்மாவட்டத்தில் கால் வைத்தனர். 1658-இல் டச்சுக்காரர்கள் வந்ததனால், போர்ச்சுகல் ஆதிக்கம் அகன்றது. பாளையக்காரர்களின் அழைப்பின் பேரிலும், திருவாங்கூர் மன்னரின் படை உதவியுடனும், டச்சுக்காரர்கள் முன்னேறத் தொடங்கினர். முகம்மது யூசுப் படைதிரட்டுவதை கேள்விப்பட்டதும், டச்சுக்காரர்கள் மணப்பாட்டை காலி செய்து விட்டு, தூத்துக்குடி வழியாக தாய்நாடு சென்று விட்டனர். நாயக்கர் ஆட்சி சந்தாசாகிப்பினால் முடிவுற்றது. கருநாடகம் ஆற்காடு நவாப் கையில் விழுந்தது. முகம்மதலி திருநெல்வேலியைக் கைப்பற்ற ஒரு படையை அனுப்பினார். 1755இல் ஹெரான் தலைமையில் ஆங்கிலேயர் படை கிளம்பியது. பாளையக்காரர்கள், கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் இரண்டையும், கிழக்கிந்திய கம்பெனியாரிடம் ஒப்படைத்தனர். இக்காலத்தில், நவாப்பிற்குக் கப்பங்கட்ட மறுத்தவர்களில் தலையானவர் பூலித்தேவர் ஆவார். இப்பகுதியில், ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் தொடர்ந்து கலகம் செய்து வந்தனர். பாளையக்காரர்களுக்கு ஆதரவாக சந்தாசாகிப், பிரெஞ்சுப் படைகள் இருந்தன. 1761-இல் புதுச்சேரியை ஆங்கிலேயர் கைப்பற்றியதால், பிரெஞ்சுக்காரர்கள் பாளையக்காரர்களுக்கு உதவி செய்ய மறுத்துவிட்டனர். 1764 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது. களக்காடு, பணகுடி பகுதிகள் நவாப்பிற்கும், செங்கோட்டை திருவாங்கூர் அரசருக்கும் விட்டுக் கொடுக்கப்பட்டன. 1767 மேஜர் பிளிண்ட் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தார். 1783 ஆம் வருடம் புல்லர்டன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி சூறையாடப்பட்டது. அங்கிருந்த 40,000 பொன் நாணயங்களை ஆங்கிலேயர்கள் பங்கு போட்டுகொண்டனர். 1785 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நவாப்பின் அமில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1797 ஆம் ஆண்டு கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் பேட்டி காண்பதற்கு, இராமநாதபுரத்திலுள்ள இராமலிங்க விலாசத்திற்கு சென்ற போது குழப்பம் வரவே, ஆங்கிலத் தளபதி கிளார்க் கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் சிலகாலம் கழித்து பாஞ்சாலங்குறிச்சி, பானர்மேனால் வெற்றிகொள்ளப்பட்டது. படிப்படியாக எதிர்த்த பாளையக்காரர்கள் அனைவரையும் ஒடுக்கி, நவாப்பையும் செல்லாக்காசாக்கி விட்டு ஆங்கிலேயர் 1801-ஆம் வருடம் திருநெல்வேலியை எடுத்துக் கொண்டனர். 1910 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இராமநாதபுர மாவட்டத்தை உண்டாக்கினர். 1986 ஆம் ஆண்டு நிர்வாக வசதி கருதி, கடற்கரையோரப் பகுதிகளைப் பிரித்து, தூத்துக்குடி மாவட்டம் உண்டாக்கப்பட்டது. சிறப்புப் பெயர்கள் தூத்துக்குடி நகருக்கு, 'திருமந்திர நகர்' என்றும், 'முத்துநகர்' என்றும் வேறு சிறப்புப் பெயர்களும் இருக்கின்றன. திருமந்திர நகர் தூத்துக்குடிக்கு திருமந்திர நகர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு தனிக்கதை உண்டு. இந்தக் கடற்கரை, மிகப்பெரும் காடாக இருந்ததாம். இராவணன், சீதையைக் கடத்திச் சென்ற பின்பு அவளைத் தேடி வர அனுமனை அனுப்பி விட்டு, ராமன் இந்தப் பகுதியில் மந்திரங்களை உச்சரித்தபடி, தவம் செய்யத் துவங்கினாராம். அவருடைய தவத்திற்குக் கடலலைகளின் பேரிரைச்சல் இடையூறாக இருக்க, ராமன் கடலலைகளைச் சப்தமெழுப்பாமல் இருக்க சபித்து விட்டாராம். அன்றிலிருந்து இப்பகுதியில், கடலலைகள் அடங்கி சப்தமில்லாமல் போய்விட்டது. இன்றும் கடலலைகளோ, சப்தமோ இங்கிருப்பதில்லை. ராமன் திருமந்திரங்களை உச்சரித்த இடம் என்பதால் 'திருமந்திர நகர்' என்று பெயர் வந்துவிட்டது என்று ஒரு சிலர் கருத்து சொல்கின்றனர். முத்துநகர் ஆதிகுடியான பரதவர் இன மக்கள், தூத்துக்குடியில் அதிகளவில் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் குலதொழில், 'மீன் பிடித்தல்' மற்றும் கடலுக்கு அடியில் சென்று 'முத்து எடுப்பது' தான். இவர்கள் தொழில் செய்வதை வைத்து முத்துக்கள் அதிகம் கிடைத்த நகரம் என்பதால் முத்து நகர் என்று பெயர் ஏற்பட்டது. பாண்டிய நாட்டின் துறைமுக நகரமாக விளங்கிய நகரம். பரதவர் மக்கள் நேரிடையாக முத்துக்குளித்தலில் ஈடுபட்ட துறைமுக நகரம் ஆதலால், இது 'முத்துக்குளித்துறை' என்று பெயர் பெற்றது. பின்னாட்களில் 'முத்து நகர்' என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் இரயிலுக்கு, முத்து நகர் விரைவு இரயில் என்று பெயர். பெயர்க் காரணம் நீர் நிறைந்த நிலத்தைத் தூத்து, துறைமுகமும், குடியிருப்பும் தோன்றிய ஊர் என்பதால் 'தூத்துக்குடி' என்றாயிற்று. வாகைக்குளம், கங்கைக்கொண்டான் கல்வெட்டுக்களில், இவ்வூர் 'தூற்றிக்குடி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது<ref>{{cite book|editor1-last=என்.பி.ரமீஷா|author2=|title=முஸ்லிம் முரசு இதழ் |volume= |publisher=ஜமாலி பப்ளிகேஷன்ஸ், 42, கண்ண்பிரான் தெரு, சென்னை - 600 051|year=1989|page=158|quote=' சிதம்பரனார் மாவட்டத்தின் தலைநகர் துத்துக்குடி கல்வெட்டுக்களில் இந்நகர் "தூற்றிக்குடி எனக் குறிப்பிடப் பட்டுள்ளது | url=https://books.google.co.in/books?id=XLIXAAAAIAAJ&dq=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%22%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%27+%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D }}</ref>. மக்கள்தொகை பரம்பல் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 237,830 ஆகும். அதில் 118,298 ஆண்களும், 119,532 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.57 % மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். 2011இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 237,830 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 410,760 ஆகவும் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, தூத்துக்குடியில் இந்துக்கள் 64.97%, முஸ்லிம்கள் 4.74%, கிறிஸ்தவர்கள் 30.14%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.03%, சைனர்கள் 0.01% மற்றும் 0.10% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர். துறைமுகம் மன்னார் வளைகுடா அருகே அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம், ஒரு 'இயற்கைத் துறைமுகம்'. இப்பகுதி, புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. தூத்துக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு ஆண்ட பரதவர்களின் ஜாதி தலைவருக்குச் சொந்தமான பாண்டியன் தீவில், இந்தத் துறைமுகம் அமைந்துள்ளது. இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு, இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறு பக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம், சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரம்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது. 1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத்தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய, 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த்துறை ஒன்று, தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்கும் வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெய்ப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. வர்த்தகம் ஏற்றுமதி/இறக்குமதி கையாளும் நிறுவனங்கள். உப்பளங்கள். ஸ்பிக் உரத்தொழிற்சாலை. ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை. தூத்துக்குடி அல்காலி இரசாயன நிறுவனம். தேங்காய் எண்ணெய் ஆலைகள். கடல் சார் உணவு தயாரிப்பு நிறுவனங்கள். துறைமுக வணிகம் பிப்ரவரி 1996 ஆம் ஆண்டில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஐஎஸ்ஓ 9002 என்னும் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கிழக்குக் கடற்கரையோரத்தில் சென்னைக்கு அடுத்த தூத்துக்குடியில், இங்கு ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் நடைபெறுகிறது. இங்கு முக்கிய அமைப்புகள் பெரும்பங்காற்றி வருகின்றன. ஐரோப்பிய வணிகர்களின்-தூத்துக்குடி சேம்பர் ஆஃப் காமர்ஸ். இந்திய வணிகர்களின் - இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ். தூத்துக்குடி தொழிற்சங்கம். தூத்துக்குடி - இலங்கை ஏற்றுமதி இறக்குமதியாளர் வணிகச்சபை. தன்பாது உப்பு வியாபாரிகள் சங்கம். உப்பு உற்பத்தியாளர் சங்கம். தூத்துக்குடி நாட்டுப் படகு உரிமையாளர் சங்கம். தூத்துக்குடி கப்பல் பிரதிநிதிகள் சங்கம். தூத்துக்குடி இரும்பு தளவாட வணிகர் சங்கம். தூத்துக்குடி நார்ப்பொருள் வணிகர் சங்கம். சுங்க வேலைகளை முடித்துக் கொடுக்கும்-வணிக ஏஜெண்டுகளின் சங்கம். கால்நடை ஏற்றுமதியாளர் சங்கம். மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ். விருதுநகர் சேம்பர் ஆஃப் காமர்ஸ். இராமநாதபுரம் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஆகிய அமைப்புகள் பங்காற்றி வருகின்றனர். போக்குவரத்து தூத்துக்குடி நகரமானது சாலை, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் மற்ற முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலை-138 ஐ இணைக்கும் தமிழ்ச்சாலை, தேசிய நெடுஞ்சாலை-38 ஐ இணைக்கும் எட்டையபுரம் சாலை, மாநில நெடுஞ்சாலை-49 ஐ இணைக்கும் இராமநாதபுரம் சாலை, மாநில நெடுஞ்சாலை-176 ஐ இணைக்கும் திருச்செந்தூர் சாலை, வ.உ. சிதம்பரனார் சாலை மற்றும் விக்டோரியா விரிவாக்க சாலை ஆகியவை இந்நகரத்தில் உள்ள முக்கிய சாலைகள். இந்நகரத்திற்கு வெளியே அமைந்துள்ள நெடுசாலையான வ.உ.சி. சாலையானது துறைமுகம், அனல் மின் நிலையம், ஸ்பிக் தொழிற்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை-38 ஆகியவற்றை இணைக்கிறது. இந்நகரத்தில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன; பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் மீனாட்சிபுரம் பிரதான சாலையிலும், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் எட்டையபுரம் சாலையிலும் அமைந்துள்ளது. இந்த இரண்டு பேருந்து நிலையங்களிலிருந்தும் சுமார் 700 பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தூத்துக்குடியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு, தினசரி பேருந்து சேவைகளை இயக்குகிறது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், பெங்களூரு, சென்னை, வேலூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற முக்கியமான நீண்ட தொலைவிலுள்ள நகரங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது. தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாக இருப்பதால், நிறைய கொள்கலன் லாரிகள், இந்நகரத்திற்கு வந்து, செல்கின்றன. 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, நகரத்திற்குள் நுழையும் கொள்கலன் லாரிகளின் எண்ணிக்கை 1000 ஆகும். தொடருந்து போக்குவரத்து தூத்துக்குடி இரயில் நிலையமானது, இந்தியாவின் பழமையான மற்றும் பிரபலமான இரயில் நிலையங்களில் ஒன்றாகும். தூத்துக்குடியில் இருந்து நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகிறது. அவ்வாறு இயக்கப்படும் ரயில்களை சுத்தம் செய்வதற்கும், பராமரிப்பு செய்வதற்கு போதிய வசதிகள் இருக்கும், தென்தமிழ்நாட்டில் உள்ள சில இரயில் நிலையங்களில், இதுவும் ஒன்றாகும். மதுரைக்கும் - தூத்துக்குடிக்கும் இடையிலான பாதை 1874இல் திறக்கப்பட்டது. தூத்துக்குடியை இணைக்கும் இரயில் பாதைகள் சமீபத்தில் மின்மயமாக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியிலிருந்து சென்னை, மைசூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகியவற்றுக்கு, தினசரி இரயில்கள் இயக்கப்படுகின்றன. விவேக் விரைவு இரயிலானது தூத்துக்குடி - ஓகாவை(குசராத்து) இணைக்கின்றது. தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இரயில் நிலையத்துடன் இணைக்கும், முத்து நகர் அதிவிரைவுத் தொடர்வண்டியானது, தெற்கு இரயில்வேயின் முக்கிய ரயில்களில் ஒன்றாகும். குருவாயூர் இரயிலானது, குருவாயூரியிலிருந்து - சென்னைக்கு, தூத்துக்குடி வழியாக பகல் நேர பயணத்தில் செல்லும் இரயிலாகும். வானூர்தி நிலையம் தூத்துக்குடி வானூர்தி நிலையமானது, நகரின் மையப்பகுதியிலிருந்து 14 கி.மீ. (9 மைல்) தொலைவிலுள்ள வாகைக்குளத்தில் உள்ளது. இந்நிலையத்தில் 10/28க்கு நெறிப்படுத்தும் 1351 மீட்டர்கள் நீளமும், 30 மீட்டர்கள் அகலமும் உடைய, தாரிடப்பட்ட ஓர் ஓடுதளம் உள்ளது. 100 மீட்டர்களுக்கு, 60 மீட்டர்கள் அளவுள்ள முகப்புத் தளத்தில் ஒரே நேரத்தில் ஏடிஆர் 72 இரகம் அல்லது அதை ஒத்த இரண்டு வானூர்திகள் நிறுத்த வசதி உள்ளது. இதன் நிலைய வளாகத்தில் உச்சநிலையில் 72 பயணிகளை மேலாளுமாறு வசதிகள் உள்ளன. இங்கிருந்து இன்டிகோ விமானம் சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு, ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னைக்கும் இயக்கப்படுகின்றன. துறைமுகம் இங்குள்ள வ. உ. சிதம்பரனார் துறைமுகம், இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி/இறக்குமதி நடைபெறுகிறது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் தூத்துக்குடி மாநகராட்சியானது, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மற்றும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த இந்திய பொதுத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)வைச் சேர்ந்த கனிமொழி கருணாநிதி வென்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)வைச் சேர்ந்த பெ. கீதா ஜீவன் வென்றார். சுற்றுலாத் தலங்கள் தூத்துக்குடியில் காயல்பட்டினம், திருச்செந்தூர், மணப்பாடு, கழுகுமலை, ஒட்டப்பிடாரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு, நவதிருப்பதி ஆகிய ஊர்கள் சுற்றுலாத் தலங்களாக விளங்குகின்றன. வழிபாட்டுத் தலங்கள் சங்கர ராமேஸ்வரர் கோயில் தூத்துக்குடி நகரில் உள்ள முக்கியமான கோயில்களில் சங்கர ராமேஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஒன்றாகும். தூய பனிமயமாதா பேராலயம் இந்த பேராலயம் ஆனது, ஏழு ஊரில் வாழும் பரதவர் குலமக்களுக்கும் (தூத்துக்குடி, புன்னைக்காயல், வேம்பார், வைப்பாறு, வீரபாண்டியபட்டினம், மணப்பாடு மற்றும் ஆலந்தலை), மற்றும் அனைத்து ஊரில் வாழும் பரதகுல மக்களுக்கும் பாத்தியப்பட்டது. தூத்துக்குடியில் வாழும் பரதர் குல மக்களும், இங்கு வாழும் பிற சமூக மக்களும் பனிமய மாதா ஆலயத்திற்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். 425 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 'பனிமயமாதா தங்கத் தேர் விழா', மிகச் சிறப்பான ஒரு விழாவாகும். சிறப்புகள் இங்கு தயாராகும் உப்பு, ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாகும். இங்கு சுடுமனைகள் (பேக்கரிகள்) அதிக அளவில் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் 'மெக்ரூன்' எனப்படும் இனிப்பு மிகவும் சுவையானது. புரோட்டாவிற்கு பெயர் பெற்ற விருதுநகருக்கு அடுத்து தூத்துக்குடி இரண்டாமிடத்தில் இருக்கிறது. இங்குள்ள பனிமயமாதா பேராலயத் தங்கத்தேர் திருவிழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சிறப்பு பெற்ற ஒரு விழாவாகும். பள்ளிகள் இங்கு பல ஆண்டுகள் பழைமை வாய்ந்த பள்ளிக்கூடங்கள் பல இருக்கின்றன. பிஎம்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பிஎம்சி மேல்நிலைப்பள்ளி பிஎம்சி தொடக்கப்பள்ளி சக்தி விநாயகர் சிபிஎஸ்சி இந்து வித்யாலயா மேல்நிலை பள்ளி எஸ். ஏ. வி. மேல்நிலைப் பள்ளி கமாக் மேல்நிலைப் பள்ளி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி புனித இன்னாசியஸ் மேல்நிலைப்பள்ளி ஸ்டார் மேல்நிலைப் பள்ளி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி சுப்பையா வித்தியாலயம் மேல்நிலைப்பள்ளி புனித மேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி புனித லசாலி மேல்நிலைப்பள்ளி தஸ்நெவிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி. சி.எம். மேல்நிலைப்பள்ளி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஏ. எம். எம். சின்னமணி நாடார் உயர்நிலைப் பள்ளி புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஏ. பி. சி. வீரபாகு'' மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கல்லூரிகள் அரசு தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வ.உ. சிதம்பரனார் கல்லூரி பல்கலைக்கழக வ.உ. சிதம்பரனார் பொறியியல் கல்லூரி (அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி) காமராஜ் கல்லூரி காமராஜ் மகளிர் கல்லூரி புனித மரியம்மை கல்லூரி (தன்னாட்சி உரிமையடையது) அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி பொழுதுபோக்கு இடங்கள் ரோச் பூங்கா. துறைமுக கடற்கரை. நேரு பூங்கா - முத்து நகர் கடற்கரை ராஜாஜி பூங்கா பாரத் ரத்னா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பூங்கா கக்கன் பூங்கா எம்.ஜி.ஆர். பூங்கா முயல் தீவு (முத்தரையர் கோவில்) தெப்பக்குளம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தூத்துக்குடி நகரின் ஒரு இணையதளம் தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள் தூத்துக்குடி மாவட்டம்
6602
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE
ரஃஸ் அல்-கைமா
ரஃஸ் அல்-கைமா, ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கியுள்ள ஏழு அமீரகங்களுள் ஒன்று. இதன் பரப்பளவு 656 சதுர மைல்கள் (1700 கி.மீ²) ஆகும். இது அரேபியத் தீபகற்பத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது. இந்த அமீரகத்தின் மக்கள் தொகை 250,000 ஆகும். இந்த அமீரகம் சுருக்கமாக ராக் சிட்டி என்று அழைக்கப்படுகின்றது. சகுர்அல் காசிமி பின் முகம்மது அல் காசிமி 27-10-2010 அன்று இறந்ததைத் தொடர்ந்து அவரது மகன் சேக் சவூத் பின் சகுர் அல் காசிமி அரசுத்தலைவராக பொறுப்பேற்றுள்ளார். கலாச்சாரம் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இசுலாமிய மதத்தையும் பாரம்பரிய அரபு கலாச்சாரத்தையும் பின்பற்றும் நாடாகும். இஸ்லாமிய மற்றும் அரபு கலாச்சாரத்தின் தாக்கம் அதன் கட்டிடக்கலை, உடை, உணவு என்பன வாழ்க்கை முறைகளில் பிரதிபலிக்கின்றன. நகரங்களும் குடியேற்றங்களும் முக்கியமான நகரங்களும், குடியேற்றங்களும் பின்வருமாறு: ராக் நகரம் - அமீரகத்தின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் ஆகும். அல் ஜசிரா அல் ஹம்ரா - அல் ஹம்ரா கிராம வளர்ச்சி மற்றும் ஒரு தொழில்துறை மண்டலத்திற்கு சொந்தமான ஒரு பழைய கடலோர நகரம் ஆகும். ராம்ஸ் - ஒரு கடலோர நகரம் கடந்த காலத்தில் ஒரு பொதுவான மீன்பிடி மற்றும் முத்துக்குளிக்கும் இடமாகும். கோர் குவைர் - ஒரு தொழிற்துறை மண்டலம் மத்திய கிழக்கில் மிகப் பெரிய கையாளுதல் துறைமுகம் மற்றும் சீமேந்து தொழிற்சாலைகள் போன்ற ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. டிக்டாக்கா - விவசாய நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற கிராமம் ஆகும். காட் - மலைகளால் சூழப்பட்ட ஒரு கிராமம். இது வெப்ப நீரூற்றுகள் மற்றும் பனை தோட்டங்களுக்கு பிரபலமானது. மசாபி - புஜைராவின் எல்லையில் அமைந்துள்ள நகரமாகும். பாட்டில் குடிநீரின் முக்கிய விநியோக நகரமாக அறியப்படுகிறது. பொருளாதாரம் ராஸ் அல் கைமா எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படாத அமீரக நகரம் ஆகும். இந் நகரம் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதுடன் அதன் வளர்ந்து வரும் தொழிற்துறைகளில் வெற்றி அடைந்துள்ளது. முக்கிய பொருளாதார துறைகள் பின்வருமாறு: நில உடைமைகள் : ராஸ் அல் கைமாவில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள், அலுவலகங்கள், வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதுடன் பல முக்கிய முன்னேற்றங்கள் நடந்து வருகின்றன. சுற்றுலாத் துறை : ராஸ் அல் கைமா வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலமாகும். இங்கு உலகின் மிக நீளமான ஜிப்லைன் சாகச பூங்கா அமைக்கப்பட இருக்கின்றது. ஏராளமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் கடற்கரை ரிசார்ட்டுகளும் காணப்படுகின்றன. கட்டுமானத் துறை : ராஸ் அல் கைமாவில் 1970 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் சீமெந்து நிறுவனம் திறக்கப்பட்டது. இப்போது இங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய சீமேந்து உற்பத்தி நடைப்பெறுகின்றது. 1980 ஆம் ஆண்டுகளில் மட்பாண்ட தொழில் அறிமுகப்படுத்தப்பட்டு தற்சமயம் மட்பாண்ட தொழிலில் சிறந்து விளங்குகின்றது. உயர் தொழில்நுட்ப துறை - 1980 ஆம் ஆண்டுகளில் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜூல்பரை எமிரேட் நிறுவப்பட்டது. ஜூல்பர் இப்போது மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமாக திகழ்கின்றது. 2012 ஆம் ஆண்டில், உயர்நிலை கலப்பு தயாரிப்புகளை (விண்வெளி, கட்டுமான பாகங்கள்) உற்பத்தி செய்வதற்கான தொழிற்துறை நிறுவப்பட்டது. சேவைத் துறை : சமீபத்தில் வளர்ந்து வரும் துறைகளாக ராக் வங்கி மற்றும் ஆர்ஏக் காப்பீட்டு நிறுவனங்கள் காணப்படுகின்றன. 2019 ஆம் ஆண்டு சனவரியில் ராக் வங்கி 917.5 மில்லியன் அரபு அமீரக திர்ஹம் இலாபத்தை பதிவு செய்தது. விவசாயம் மற்றும் மீன்வளம் : கடந்த காலத்தில் இவை ராஸ் அல் கைமாவின் முக்கிய பொருளாதாரத் துறைகளாக இருந்தன. தற்சமயம் மேலும் அபிவிருத்தியடைந்துள்ளன. இந்த அமீரகத்திற்கு மட்டுமல்லாமல் முழு ஐக்கிய அரபு அமீரமங்களுக்கும் உணவுப்பொருட்களை வழங்குகின்றன. காலநிலை ராஸ் அல் கைமாவின் கோப்பனின் காலதிலை வகைப்பாட்டின் அடிப்படையில் வெப்பமான பாலைவன காலநிலையை கொண்டுள்ளது. கோடையில் 45 °C ஐ அடைகிறது. அதிக வெப்பநிலை 48.8 °C (119.8 °F) ஆகும். பொதுவாக கோடை மாதங்களில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். மழை மற்றும் இடியுடன் கூடிய மழை அரிதாகவே நிகழ்கிறது. ராஸ் அல் கைமாவின் உயரமான மலைகளில் டிசம்பர் 2004, சனவரி 2009 மற்றும் பிப்ரவரி 2017  ஆகியவற்றில் பனி பதிவாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக உயரமான மலையான ஜெபல் ஜெய்ஸின் உச்சத்தில் −5 °C (23 °F) வெப்பநிலை அளவிடப்பட்டுள்ளது. புள்ளிவிபரங்கள் 1975 ஆம் ஆண்டில் ராஸ் அல் கைமாவின் மொத்த மக்கட் தொகை 43,845 ஆக காணப்பட்டது. அவர்களில் 29,613 பேர் உள்நாட்டினரும், 14,232 பேர் வெளிநாட்டினரும் ஆவார்கள். இந்த எண்ணிக்கை 1980 ஆம் ஆண்டில் 73,918 ஆகவும் (39,148 உள்ளூர்வாசிகள், 34,770 வெளிநாட்டினர்), 1985 ஆம் ஆண்டில் 96,578 ஆகவும், 1995 ஆம் ஆண்டில் 143,334 ஆகவும் காணப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் 210,063 ஆக அதிகரித்துள்ளது. மூலம் இவற்றையும் பார்க்கவும் பாம் தீவுகள் பூர்ஜ் அல் அராப் துபை மெட்ரோ புர்ஜ் கலீஃபா கல்ப் நியூஸ் ஐக்கிய அரபு அமீரகம்
6603
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய அரபு அமீரக திர்கம்
ஐக்கிய அரபு அமீரக திர்கம் (UAE DIRHAM) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் நாணயம் ஆகும். இதன் பெறுமதி ஐக்கிய அமெரிக்க டாலருடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. இதன் ஐஎஸ்ஓ 4217 குறியீடு AED என்பதாகும். அதிகாரபூர்வமற்ற முறையில் இதனை DH, Dhs. எனவும் குறிப்பது உண்டு. ஒரு திராம் 100 சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது ஃபில் எனப்படும். வரலாறு இது 1973 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது, அபுதாபி தவிர்ந்த ஏனைய அமீரகங்களில் 1966 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் இருந்து வந்த கட்டார் மற்றும் துபாய் ரியால் என்னும் நாணயத்துக்கும், அபுதாபியில் புழங்கிய பஹ்ரெய்ன் தினாருக்கும் பதிலாகப் புழக்கத்துக்கு வந்தது. 1966 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுப்பு அமீரகங்கள் வளைகுடா ரூபா (Gulf rupee) என்னும் நாணயத்தைப் பயன்படுத்தின. வளைகுடா ரூபாவில் இருந்து கட்டார் மற்றும் துபாய் ரியாலுக்கு மாறிய இடைக்காலத்தில் சிறிது காலம் சவூதி ரியாலும் இந்த அமீரகங்களில் புழங்கியது. நடைமுறையில் திராம், ஐக்கிய அமெரிக்க டாலருடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க டாலர், 3.6725 திராமுக்குச் சமன் ஆகும். திராம் என்னும் சொல் திராச்மே (Drachmae) என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. திராச்மே உலகில் மிகப் பரவலாகப் புழங்கிய ஒரு நாணயம். நூற்றாண்டுகளாக நடைபெற்ற வணிகத்தின் காரணமாக, ஓட்டோமான் பேரரசு ஊடாக மத்திய கிழக்கில் இது வழங்கி வருகின்றது. நாணயக் குற்றிகள் 1973 ஆம் ஆண்டில் திராம் ஐக்கிய அரபு அமீரகத்தின் நாணயமாக அறிமுகப்படுத்தப்பட்ட போது, 1, 5, 10, 25, 50 ஃபில்கள் மற்றும் 1 திராம் பெறுமதி கொண்ட நாணயக் குற்றிகள் வெளியிடப்பட்டன. 1, 5, 10 ஃபில் நாணயங்கள் வெண்கலத்திலும், உயர் பெறுமது கொண்ட நாணயங்கள் குப்பிரோ நிக்கலிலும் அச்சிடப்பட்டன. 1995 அம் ஆண்டில் 1 திராம், 50 ஃபில் குற்றிகளின் அளவு சிறிதாக்கப்பட்டது. வட்ட வடிவமாக இருந்த 50 ஃபில் குற்றி, எழுகோண வடிவமாக்கப்பட்டது. நாணயத் தாள்கள் 1973 இல், ஐக்கிய அரபு அமீரக நாணயச் சபை 1, 5, 10, 50, 100, 1000 ஆகிய பெறுமதிகளில் நாணயத் தாள்களை வெளியிட்டது. 1982 இன்னொரு தொடர் வெளியிடப்பட்டபோது 1 திராம், 1000 திராம் தாள்கள் விலக்கப்பட்டன. 500 திராம் தாள் 1983 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 200 திராம் தாள் 1989 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2000 ஆவது ஆண்டில் 1000 திராம் தாள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தது. 200 திராம் தாள் 1989 இல் மட்டுமே அச்சடிக்கப்பட்டதால் அண்மைக் காலங்களில் அதன் புழக்கம் மிகவும் அரிதாகவே காணப்பட்டது. மே 2008 இல் புதிய 200 திராம் தாள்கள் வெளியிடப் பட்டுள்ளன. அரபு நாட்டு நாணயங்கள் தேசிய நாணயங்கள்
6607
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
அம்பாந்தோட்டை
அம்பாந்தோட்டை இலங்கையின் தென் மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இலங்கையின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள நகரசபை ஆகும். இது அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தலைநகரமுமாகும். புவியியலும் காலநிலையும் அம்பாந்தோட்டை கரையோரச் சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 0-15 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். இலங்கையின் இரண்டு பருவபெயர்ச்சிக் காற்றுகளிலும் மழைவீழ்ச்சியைப் பெறாத அம்பாந்தோட்டை குறைவரல் வலயத்தில் அமைந்துள்ளது. 1950 மி.மீ.   வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. மக்கள் இது சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். கைத்தொழில் அம்பாந்தோட்டை உப்பு உற்பத்திக்கு பிரசித்தமான பிரதேசமாகும். இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தைப் பெறுகிறது. குறிப்புகள் உசாத்துணைகள் மேற்கோள்கள் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும் இலங்கை மாவட்ட தலைநகரங்கள்
6608
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29
நாயகன் (திரைப்படம்)
நாயகன் 1987ல் வெளிவந்த தமிழ் திரைப்படம். இந்தத் திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்ட திரைப்படமாகும். இதன் இயக்குனர் மணிரத்னம் ஆவார். கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார். இது, மும்பையில் தாதாவாக விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படம் 1988 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இத்திரைப்படம் டைம் வார இதழ் மற்றும் சிஎன்என்-ஐபிஎன் நிறுவனம் உலகின் நூறு சிறந்த திரைப்படங்களிள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இத்திரைப்படம் மூன்று தேசிய விருது மற்றும் பல தனியார் விருதுகளையும் வாங்கியது. வகை நாடகப்படம் / உண்மைப்படம் கதை சிறுவயதிலேயே தந்தையை இழக்கும் சக்திவேல் பம்பாயில் ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெரியவரினால் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்படுகின்றார். திடீரென அவர்கள் தங்கியிருந்த பகுதியை விட்டுச் செல்ல வேண்டும் என்ற கொள்கையினை எதிர்க்கின்றார். அவ்வாறு எதிர்த்த அவரைக் காவல் துறையினரான ஹிந்தி மொழிக்காரனால் அடித்து சிறையில் அடைக்கப்படுகின்றார். பின்னர் வெளியில் வரும் வேலு தன் தந்தையின் கொலைக்குக் காரணமாக விளங்கிய அக்காவல் துறை அதிகாரையைக் கொலை செய்கின்றார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு நாயகனாக விளங்குகின்றார். அனைவராலும் போற்றப்பாட்டு அப்பகுதியினரால் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். சிறிது காலம் கழித்து விபச்சாரிகளின் இல்லத்திற்குச் செல்லும் வேலு அங்கு தவறுதலாக கொண்டு வரப்பட்ட பள்ளி மாணவியை அவர் விரும்பியபடி திருமணம் செய்தும் கொள்கின்றார். அவ்வூர் மக்களுக்கு நல்ல செயல்களைச் செய்யும் வேலு நாயக்கர் பல கடத்தல் தொழில்களிலும் ஈடுபடுகின்றார். இதனைப் பார்க்கும் இவரின் மகள் அவரிடம் வாழப்பிடிக்காது அங்கிருந்து பிரிந்து செல்கின்றார். வேலு நாயக்கரின் மகள் காதலித்து மணம் செய்யும் காவல் அதிகாரியால் வேலு நாயக்கர் வலைவீசித் தேடப்படுகின்றார். இவரின் மீதிருந்த பற்றுதல் காரணமாக காட்டிக்கொடுக்க பொது மக்கள் மறுத்தனர். திடீரென வரும் காவல் துறையினரிடம் இருந்து வேலு நாயக்கரைக் காப்பாற்றுவதற்காக வயது போன அம்மையார் தன்னை தீவைத்துக் கொளுத்தினார். இதனைக் கண்டு மனம் நொந்த காவல் துறை அதிகாரி வேலு நாயக்கர் தன் மனைவியின் தந்தை எனத் தெரிந்து கொள்கின்றார். பொது மக்களின் உயிர்கள் பறிக்கப்படுவதைப் பார்த்த வேலு நாயக்கர் தானகவே சரணடைந்துவிடுவதாக தெரிவித்தார். மேலும் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனை அறிந்த பொது மக்கள் அவரின் விடுதலைக்காகக் காத்திருந்தனர். அவரைக் கைது செய்யத் தேவைப்படும்படி ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் அவரினால் கொல்லப்பட்ட காவல் துறை அதிகாரியின் மகனால் திடீரென சுட்டு வீழ்த்தப்படுகின்றார். நடிகர்கள் கமல்ஹாசன் - சக்திவேல் / வேலு நாயக்கர் சரண்யா - நீலா ஜனகராஜ் - செல்வம் டெல்லி கணேஷ் - ஐயர் விஜயன் - துரை எம். வி. வாசுதேவராவ் - ஹுசைன் பாய், வேலு நாயக்கரின் வளர்ப்பு தந்தை டாரா - ஷகீலா, வேலு நாயக்கரின் தங்கை நிழல்கள் ரவி - சூர்யா, வேலு நாயக்கரின் மகன் கார்த்திகா - சாருமதி, வேலு நாயக்கரின் மகள் நாசர் - பட்டேல், துணை ஆணையர் காவல்துறை பிரதீப் சக்தி - கேல்கர், காவல் ஆய்வாளர் டீனு ஆனந்த் - அஜீத் கேல்கர் ஆர். என். சுதர்சன், ஆர். என். கிருஷ்ண பிரசாத், ஆர். என். ஜெயகோபால் - ரெட்டி பிரதர்ஸ் கிட்டி - வேலு நாயக்கரின் தந்தை (சிறப்பு தோற்றம்) ஆதித்யா - சிறு வயது சக்திவேல், (சிறப்பு தோற்றம்) குயிலி (சிறப்பு தோற்றம்) பாடல்கள் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இது அவரின் 400வது திரைப்படமாகும். புலமைப்பித்தன் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார், 'நிலா அது வானத்து மேலே' பாடலை தவிர, அந்த பாடல் இளையராஜாவால் எழுதப்பட்டது. வெளியீடு மற்றும் விமர்சனம் நாயகன் திரைப்படம் 21 அக்டோபர் 1987 தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இத்திரைப்படம் மலையாளம், கன்னடம்,தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தெலுங்கு மொழியில் நாயக்குடு எனும் பெயரிலும், இந்தி மொழியில் வேலு நாயகன் எனும் பெயரிலும் வெளியானது. மேலும் இத்திரைப்படம் இந்தி மொழியில் தயவான் எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. ஆனந்த விகடன் நாளிதழ் இப்படம் தமிழில் அழுத்த மான முத்திரையைப் பாதித்துள்ளது என விமர்சித்து இப்படத்திற்கு 100க்கு 60 மதிப்பெண்களை வழங்கியுள்ளது. விருதுகள் 60வது சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகாதமி விருதுக்கு இப்படம் இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. 2015 ஆண்டு நடைபெற்ற 10வது ஹாபிடட் திரைப்பட விழாவில் நாயகன் திரையிடப்பட்டது. 35 வது தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா சிறந்த நடிகர் - கமல்ஹாசன் சிறந்த ஒளிப்பதிவு - பி. சி. ஸ்ரீராம் சிறந்த கலை இயக்கம் - தோட்டா தரணி சினிமா எக்ஸ்பிரஸ் விருது சிறந்த நடிகர் - கமல்ஹாசன் சிறந்த இயக்குநர் - மணிரத்னம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 1987 ஆண்டுக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி அந்த ஆண்டு நடைபெறவில்லை. மறு உருவாக்கம் இத்திரைப்படம் இந்தி மொழியில் தயவான் எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. 21 அக்டோபர் 1988 அன்று, சரியாக ஒரு வருடம் கழித்து நாயகன் வெளியான அதே தேதியில் வெளியானது. இப்படத்தில் வினோத் கண்ணா, மாதுரி தீட்சித் நடித்துள்ளனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 1987 தமிழ்த் திரைப்படங்கள் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் நாடகத் திரைப்படங்கள் இந்திய நாடகத் திரைப்படங்கள் தமிழ் உண்மைத் திரைப்படங்கள் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள் இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள் மணிரத்னம் இயக்கிய திரைப்படங்கள் டெல்லி கணேஷ் நடித்த திரைப்படங்கள் சரண்யா பொன்வண்ணன் நடித்த திரைப்படங்கள்
6613
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
உணர்ச்சி
உணர்ச்சி (Emotion) என்பது மனநல செயல்பாட்டு அனுபவம் ஆகும். இது தீவிர உயர் மட்ட இன்பம் அல்லது அதிருப்தி ஆகியவற்றால் தனித்தன்மையளித்து வகைப்படுத்தப்படும் செயல் ஆகும். விஞ்ஞான எண்ணப் பரிமாறல்கள் மற்றும் அலசல்கள் ஒரு வரையறையை எட்டாமல், வேறு அர்த்தங்களுக்கு இழுத்துச் சென்றுள்ளன. உணர்ச்சி எனும் கூறு, பெரும்பாலும் மனநிலை, குணாம்சம், ஆளுமை, ஒழுங்கமைதி மற்றும் ஆர்வமூட்டல் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது. உணர்வு நம்மில் ஐம்புலன்களால் வழங்கப் பெறும் பெருமை, வெட்கம், கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளும், மூளையில் பொங்கி வழியும் சிந்தனைகளும், வழக்கமாக இலட்சிய, ஆன்மீகப் புலப்பாடுகள், அல்லது உணர்வுக்குறிய புலப்பாடுகள், மனிதர் உணரும் சிந்தனை அல்லது மன அல்லது உடல் நிலைகளை "உணர்ச்சி" எனலாம். உணர்ச்சி என்றால் என்ன என்பதை நோக்கிய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது வரைவிலக்கணம் இன்னும் இல்லை. உணர்ச்சிசார் கருத்துகள் உணர்ச்சிகள் சிக்கலானவை நடத்தையை பாதிக்கக்கூடிய உடல் மற்றும் உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு நிலையே உணர்ச்சி எனப்படும். இது ஒரு சிக்கலான நிலையாகும். உணர்ச்சியின் அமைப்பானது நரம்பு மண்டலத்தின் விழிப்புடன் தொடர்புடையது உணர்ச்சி என்பது நடத்தை போக்குடன் தொடர்புடையது. புறமுகர்கள் சமூகமாக இருக்கவும் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் ஆர்வம் காட்டுவர் அகமுகர்கள் சமூகத்தை விட்டு விலகி இருப்பர். தங்கள் உணர்வுகளை மூடிமறைப்பர் நேர்மறை அல்லது எதிர்மறை செயல்கள் அனைத்திலும் உணர்ச்சிகள் பெரும் உந்து சக்தியாகும். உணர்ச்சிகள் இயல்பான சக்திகள் அல்ல (சில சமயங்களில்) உணர்வுகள் பல்வேறு கூறுகளின் தொகுப்பு உணர்ச்சிகளின் கூறுகள்: ஊக்கம், உணர்வு, நடத்தை, உடலியல் மாற்றங்கள், போன்றவை மேற்காண் கூறுகளில் எதுவும் உணர்ச்சி இல்லை மேற்காண் கூறுகளில் எதுவும் உணர்வியாகவும் இல்லை உடற்கூறியல் கூறுகள், கலாச்சார அல்லது உணர்ச்சி அடையாளங்கள் (கோபம், ஆச்சரியம், முதலியன), உணர்ச்சியற்ற உடல் நடவடிக்கைகள், சூழ்நிலைகள், சூழல்களின் மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியவை உணர்ச்சிகள்- பெக்கி தோய்ட்ஸ் நிகழ்கால ஆய்வுகள்: உணர்ச்சி கருத்துக்களில் தற்போது ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டிய பகுதிகள்: உணர்ச்சிகளை உற்சாகப்படுத்தும் பகுதிகள் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கான பொருட்கள் கூடுதலாக பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல் மற்றும் வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு ஆகியவற்றின் மூலம், மூளையில் உள்ள செயல்திறன் செயல்முறைகளை ஆய்வு செய்ய முடியும். கடந்த காலங்களில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு மேற்கொண்ட தழுவல் நடத்தைகளை ஊக்குவிப்பதில் உணர்ச்சிகள் முக்கிய பங்களிக்கின்றன. உணர்வுகள் குறிப்பிடத்தக்க உள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளுக்கு பிரதிபலிப்பாகும். சொற்பிறப்பியல், இயல் வரையறைகள், மற்றும் வேறுபாடுகளைக் கண்டறிதல் "Emotion" (உணர்ச்சி) என்ற சொல் 1579 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது. இது umouvoir என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதற்கு "தூண்டுதல்" என்று பொருள். கல்வி விவாதத்தில் உணர்ச்சி என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இது அதிகமான விருப்பு, உணர்ச்சிவயக் கருத்து, உணர்ச்சி தாக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தனிச் சொல் ஆகும். ஓர் அகராதிப்படி, இந்த வார்த்தையின் ஆரம்பகால முன்னோடிகள், பெரும்பாலும் மொழியின் தோற்றங்களையே சார்ந்து இருக்கிறார்கள். நவீனயுகத்தில், உணர்வு என்ற வார்த்தை பலபடித்தானதாக உள்ளது. யாரோ அல்லது ஏதாவது ஒன்றோ இயக்கும் தீவிர உணர்வுகளைக் குறிக்க உணர்ச்சி என்ற வார்த்தை சில இடங்களில் பயன்பாடுத்தப்பட்டு வருகிறது. உணர்ச்சிகள் பற்றிய பிற கருத்துக்கள் பின் வருமாறு: உணர்ச்சிகள் லேசானவை (எரிச்சலூட்டப்பட்ட அல்லது உள்ளடக்கம் போன்றவை). இவற்றின் இயல் நிலைகள் எந்த விஷயத்தையும் (கவலை மற்றும் மனத் தளர்ச்சி போன்றவை) குறிப்பாகக் குறிக்க பயன்படுத்தப்படுவதில்லை. உணர்ச்சிகள் பற்றிய தொடர் ஆராய்ச்சி, உணர்ச்சிகள் என்ற வார்த்தையை, தினசரி மொழியாக அர்த்தப்படித்துகிறது ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் "உணர்ச்சிகள்" என்ற கருத்தைக் குறிக்க ஒரேமாதிரியான வார்த்தைகள் இல்லை என்று ஓர் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு கூறுகிறது. உணர்ச்சிகள் கால அளவில் சுருக்கமாக உள்ளன. அவை வாய்மொழி, உடலியல், நடத்தை மற்றும் நரம்பியல் வழிமுறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்த துலங்கல்களின் தொகுப்பாக உள்ளன. மனநல மருத்துவர் மைக்கேல் சி. கிரஹாம் "அணைத்து உணர்ச்சிகளும், ஊக்கமிகுதியினால் ஏற்படும் உணர்வின் தொடர்ச்சியாகும்" என விவரிக்கிறார். நடுக்கம், கிலி, பயங்கரம், பயம் அல்லது அவமானம் ஆகியவற்றின் காரணமாக, எளிமையான சங்கடத்திலிருந்து, தடுமாற்றம், மனக்கலவரம் போன்ற இக்கட்டான சூழலுக்கு வரக்கூடும். உணர்ச்சிகளின் பாரம்பரியமானது, உயிரியல் ரீதியாக பெறப்பட்டதாக இருக்கலாம் அல்லது பரிணாமத்தின் விளைவாக ஏற்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏனென்றால், இவை, நமது முன்னோர்கள் எதிர்கொண்ட பண்டைய மற்றும் தொடர்ச்சியான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் பெரிதும் பயன்பட்டன. மன நிலைகள் உணர்ச்சிகளைக் காட்டிலும் குறைந்த செறிவுடைய மனவெழுச்சிகளைக் கொண்டுள்ளன. இவை, பெரும்பாலும் சூழிசைவு சார்ந்த ஆதாரங்களால் ஊக்கப்படுத்தப்படுவதில்லை. உவ்ர்ச்சி சார்ந்த நரம்பியல் விஞ்ஞானத்திற்குள் இது போன்ற பல ஒத்த அமைப்புகள் உள்ளன. அவற்றிலிருந்து மனவெழுச்சிகளை எளிதில் வேறுபடுத்தப்படலாம். எதிர்மறையானவற்றுடன் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய நேர் அல்லது எதிர் உணர்வுகளுக்கும், மனவெழுச்சிகளுக்கும் இடையே தொடர்புகள் உள்ளன. இந்த கருத்துக்கள் மனவெழுச்சிகளின் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் வகைப்படுத்தல் மூலம் விவரிக்கப்பட்டுள்ளன. கிரஹாம் என்பவர் செயல்பாட்டு அல்லது செயலிழப்பு மனவெழுச்சிகளை வேறுபடுத்தி உள்ளார். அனைத்து செயல்பாட்டு மனவெழுச்சிகளும் நன்மைகளையே வெளிப்பாடாகக் கொடுக்கும் என்று வாதிடுகிறார். கூறுகள் ஷெரெரின்(Scherer) உணர்ச்சி கூறுகள் மாதிரியில் உணர்வுகள், ஐந்து முக்கிய கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கூறுகள் செயலாக்க முன்னோக்கின் அடிப்படையில் நோக்கும்போது, உணர்ச்சி அனுபவங்கள் அனைத்தும் ஒரு குறுகிய காலத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்டு, ஒத்திசைக்கப்படுதல் அவசியம். இவை அனைத்தும் மதிப்பீட்டு செயன்முறைகளால் உந்தப்பட்டதாக இருக்க வேண்டும். சில உளவியல் கோட்பாட்டாளர்கள், மனவெழுச்சிகளும், அறிவாற்றலும், தனித்தனியாக இருப்பதாகவும், ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தும் அமைப்புகளாக இருப்பதாகவும் கருதுகின்றனர். அறிவாற்றல் மதிப்பீட்டு அமைப்புகள், கூறு செயலாக்க அமைப்பில் மனவெழுச்சிகளை வகைப்படுத்தப்படுகின்றன. உணர்வுசார் கருப்பொருளை வகைப்படுத்தும் அத்தியாயத்தில், ஒரு தொகுப்பு அல்லது செயலில், ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்புகளை விவரிக்கும் நிகழ்வுகளின் ஒரு தொடர்வரிசைச் சீர்மையாக உள்ளது தெளிவாகிறது. இருப்பினும் அவற்றுக்கிடையே சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ளன. அறிவாற்றல் மதிப்பீடு: நிகழ்வுகள் மற்றும் பொருள்கள் பற்றிய மதிப்பீட்டை வழங்குகிறது. உடல் அறிகுறிகள்: உணர்ச்சி அனுபவத்தின் அடிப்படையிலான உடலியல் வெளிப்பாட்டுக் கூறுகள் செயல்படும் போக்குகள்: ஊக்குவிப்பு திசையில் உடல் இயக்கத் துலங்கல்களை ஏற்படுத்துதல். வெளிப்பாடு: முகம் மற்றும் குரலில் ஏற்படும் வெளிப்பாடு எப்பொழுதும் உணர்வுபூர்வமானதாக உள்ளது. இது செயல்களின் நேர், எதிர்விளைவுகளையும் மற்றும் நோக்கத்தையும் வெளிப்படுத்தும். உணர்வுகள்: ஒரு நிகழ்வு, முடிந்தபின் உணர்வு ரீதியாகத் தோன்றும் நிலைமையின் அகநிலை அனுபவம். வகைப்பாடு உணர்ச்சி தொடர் நிகழ்வுகளுக்கும், மற்றும் உணர்ச்சி ஒழுங்கமைதிக்கும் இடையில் குறிப்பிடத்தக்க ஒரு வேறுபாடு உருவாக்கப்படலாம். உணர்வுக் குறைபாடுகள் நடத்தைப் பண்புகளுக்கு ஒப்பானவையாகும். சில உளவியல் கருத்தாளர்கள், உணர்ச்சிகளைச் சார்ந்து சில பொதுவான " உளப்பாங்கு நிலை" கருத்துகளைக் கொண்டுள்ளனர். அந்த உளப்பாங்கு நிலையில், இன்பம், வலி, ஊக்குவிப்பு நிலைகள் (உதாரணமாக, பட்டினி, உந்துதலால் தோன்றும் அறிவார்வம்), மனநிலைகள், இடர்பாடுகள், ஒழுங்கமைதி நிலைகள், தனிப்பண்புத் திறம் மற்றும் பண்புக்கூறுகள் போன்ற உணர்ச்சிசார் நிகழ்வுகள் அடங்கும். முக்கியமான இரண்டு அடிப்படை கருத்துக் கூறுகளின்படி, உணர்ச்சிகளின் வகைப்பாடு ஆராயப்படுகிறது. முதல் கண்ணோட்டம்: உணர்ச்சிகள் தனித்துவமானவை. தனித்தனியானவை. தனித்தியங்கக்கூடியவை. அடிப்படையில் வேறுபட்ட அமைப்புகளாக இருக்கின்றன. முதல் கண்ணோட்டம்: குழுவில் ஒரு குறிப்பிட்ட பரிமாண அடிப்படையில் உணர்ச்சிகள் வகைப்படுத்தப்படலாம். உணர்ச்சிகள் பட்டியல் அன்பு - Love பாசம் - Affection கோபம் - Anger சினம் - wrath ஆனந்தம் - Joy இன்பம், மகிழ்ச்சி - Happiness துக்கம் - sorrow ஆசை - desire பொறாமை - Jealousy, Envy வெறுப்பு - Hate, Disgust விரக்தி - Anguish அமைதி - Peace பயம் - Fear கவலை - worry எதிர்பார்ப்பு - Anticipation, Hope, ஏமாற்றம் - disappointment ஆச்சரியம் - Surprise வெட்கம் - Shyness பரிவு, இரக்கம் - Pity காதல் - Love காமம் - Sexual Attraction எரிச்சல் - Irritation or discomfort சலிப்பு - Boredom குற்றுணர்வு - Guilt மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம் - Stress ஈர்ப்பு - attraction பெருமை - pride உணர்வின்மை - apathy நம்பிக்கை - hope மனக்கலக்கம் தவிப்பு - Anxiety பற்று - Attachment அவநம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை - lack of trust சோம்பல் - lethargy அதிர்ச்சி - surprise or shock மன நிறைவு அல்லது திருப்தி - satisfaction or contentment தனிமை - loneliness அவா - desire வலி - pain அலட்சியம் - carelessness or negligence திகில் - terror பீதி - phobia or extreme fear மேற்கோள்கள் வெளி இணைப்புகள் List of emotions உணர்ச்சிகள்
6620
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
நிதிஷ் குமார்
நிதிசு குமார் இந்தியாவின் அரசியலாளர் மற்றும் பிகார் மாநில முதலமைச்சர் ஆவார். இந்தியாவின் இருப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார். ஐக்கிய சனதா தளம் என்ற அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2014 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் இவர் பதவியை விட்டு விலகினார். பிறப்பும் படிப்பும் நிதிசு குமார் பாட்னாவுக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்தியார்பூர் என்னும் ஊரில் பிறந்தார். அதே ஊரில் பள்ளிப் படிப்பு. பின்னர் பாட்னா அறிவியல் கல்லூரியில் படித்தார். அதன் பின்னர்  பிகார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து  மின் பொறியியல் படித்துப் பட்டம் பெற்றார். அரசியல் பின்புலம் நிதிசு குமாரின் தந்தை கவிராஜ் ராம் லக்கன் சிங் இந்திய விடுதலைப் போராட்ட ஆவார். செயப்பிரகாசு நாராயணனின் இயக்கத்தினால் நிதிசு குமார் ஈர்க்கப்பட்டார். அந்த இயக்கத்தில் பங்கு கொண்டு செயல்பட்டார். மேலும் சத்யேந்திர நாராயண் சின்கா, கர்ப்பூரி தாக்கூர், ராம் மனோகர் லோகியா, வி. பி. சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் தொடர்பும் நட்பும் கொண்டார். சான்றாவணம் இந்திய அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் 1951 பிறப்புகள் பீகார் முதலமைச்சர்கள் இந்திய இரயில்வே அமைச்சர்கள் 10வது மக்களவை உறுப்பினர்கள் 11வது மக்களவை உறுப்பினர்கள் 12வது மக்களவை உறுப்பினர்கள் 13வது மக்களவை உறுப்பினர்கள் 14வது மக்களவை உறுப்பினர்கள் 9வது மக்களவை உறுப்பினர்கள் இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
6624
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE
ஒட்டாவா
ஒட்டாவா (Ottawa, or ) கனடா நாட்டின் தலைநகரம் ஆகும். இதுவே நாட்டின் 4வது பெரிய நகரம் ஆகும். இந்நகரம் தெற்கு ஒண்டாரியோவின் கிழக்குப்பகுதியில் ஒட்டாவா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இதன் எல்லையில் கியூபெக்கின் கெட்டினாவ் நகரம் அமைந்துள்ளது. இவை இரண்டும் இணைந்து ஒட்டாவா-கெட்டினாவ் பெருநகரப் பகுதியாகவும் தேசிய தலைநகர வலயமாகவும் விளங்குகின்றன. 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 808,391 ஆகும். 1826இல் பைடவுண் என நிறுவப்பட்டு பின்னர் 1855இல் "ஒட்டாவா"வாக ஒருங்கிணைக்கப்பட்டது. ஒட்டாவா கனடாவின் அரசியலுக்கும் தொழினுட்பத்திற்கும் மையமாக விளங்குகிறது. ஆரம்பத்திலிருந்த இதன் எல்லைகள் பல்வேறு சிறு இணைப்புகள் மூலமாக விரிவுபடுத்தப்பட்டு 2001இல் புதிய நகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. "ஒட்டாவா" என்ற பெயர் உள்ளூர் மொழியில் அடவே என்பதிலிருந்து வந்துள்ளது; இதன் பொருள் "வணிகமாடல்" என்பதாகும். துவக்கத்தில் அயர்லாந்திய, பிரான்சிய கிறித்தவர்களாலான குடியேற்றம் தற்போது பலவகை மக்கள் வாழும் பன்முக பண்பாடுடை நகரமாக விளங்குகிறது. கனடாவில் மிகவும் படித்தவர்கள் வாழும் நகரமாக ஒட்டாவா விளங்குகிறது. இங்கு பல உயர்நிலை கல்வி, ஆய்வு மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ளன. உயர்ந்த வாழ்க்கைத்தரமும் குறைந்த வேலையற்றோர் தொகையும் கொண்டதாக உள்ளது. வாழ்க்கைத்தரத்திற்கான மெர்செர் மதிப்பீட்டில் (221 நகரங்களில்) 14வது இடத்தில் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள ரிடொ கால்வாய் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் கனடிய நகரங்களும் ஊர்களும் வட அமெரிக்கத் தலைநகரங்கள் ஒன்ராறியோ
6625
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
பிரான்சிய மொழி
பிரான்சிய மொழி ( அல்லது ) ஓர் உரோமானிய மொழியாகும். இம் மொழி பிரான்சு, சுவிட்சர்லாந்தின் உரோமண்டிப் பகுதி, பெல்சியத்தின் வல்லோனியா மற்றும் பிரசெல்சுப் பகுதி, மொனாகோ, கனடாவின் கியூபெக்கு மற்றும் நியூ பிரான்சுவிக்கு (அக்காடியா பகுதி) மாகாணங்கள் மற்றும் ஐக்கிய அமெரிக்க மாநிலமான மெய்ன், இலூசியானாவின் அக்காடியானா பகுதி ஆகியவற்றில் முதன்மை மொழியாகப் பேசப்படுகிறது. மேலும் உலகெங்குமுள்ள பல்வேறு சமூகத்தினரும் இம் மொழியைப் பேசுகின்றனர். இதை விட பிரான்சை இரண்டாம் மொழியாகப் பேசுவோர் உலகெங்கிலும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிரான்சிய மொழி பேசும் ஆபிரிக்கப் பகுதிகளில் உள்ளனர். ஆபிரிக்காவில், காபொன் (80%), மொரீசியசு (78%), அல்ஜீரியா (75%), செனகல் மற்றும் ஐவரி கோஸ்ட் (70%) ஆகிய நாடுகளில் பிரான்சிய மொழி பேசுவோர் பெரும்பான்மையாக உள்ளனர். பிரான்சிய மொழியைத் தாய்மொழியாகப் பேசுவோர் 110 மில்லியன் எனவும், இரண்டாம் மொழியாகப் பேசுவோர் 190 மில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தாலிய மொழி, போர்த்துக்கேய மொழி, எசுப்பானிய மொழி, ரோமானிய மொழி, லொம்பார்ட் மொழி, காட்டலான் மொழி, சிசிலிய மொழி, மற்றும் சார்டினிய மொழி போன்றே பிரான்சிய மொழியும் பேச்சுவழக்கு இலத்தீன் மொழியிலிருந்தே உருவானது. வடக்குப் பிரான்சிலும், பெல்ஜியத்திலும் பண்டைக்காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் பல மொழிகளுடன் பிரான்சிய மொழி தொடர்புபட்டுள்ளது. எனினும் இம்மொழிகளில் பல பிரான்சிய மொழியின் தாக்கத்தால் வழக்கொழிந்து போயுள்ளன. ரோமானிய கோல் பிரதேசத்தில் பேசப்பட்ட செல்டிக் மொழிகள் மற்றும் ரோமானியருக்குப் பின் பிரான்சை ஆக்கிரமித்த பிராங்கிய ஆக்கிரமிப்பாளர்களின் ஜெர்மானிக் பிராங்கிய மொழி ஆகியன் பிரான்சிய மொழியில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இன்று, பிரான்சின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக பல்வேறு பிரான்சிய மொழியின் அடிப்படையிலான கிரியோல் மொழிகள் உருவாகியுள்ளன. இவற்றுள், எயிட்டிய மொழி குறிப்பிடத்தக்கது. பிரான்சிய மொழி 29 நாடுகளில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. இவற்றில் பெரும்பான்மையான நாடுகள் இணைந்து லா பிரான்கோபோனீ எனும் அமைப்பைத் தோற்றுவித்துள்ளன. மேலும் இது ஐக்கிய நாடுகளின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் ஆகியவற்றில் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. பிரான்சின் வெளிநாட்டு மற்றும் ஐரோப்பிய உறவுகள் அமைச்சின் தகவலின் படி, ஐரோப்பாவில் 77 மில்லியன் மக்கள் பிரான்சியத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். பிரான்சுக்கு வெளியே பிரான்சிய மொழி பேசும் மக்கள் அதிகளவில் கனடா (மக்கள் தொகையில் 25%த்தினர், பெரும்பாலானோர் கியூபெக்கில் வசிக்கின்றனர்), பெல்ஜியம் (மக்கள்தொகையில் 45%த்தினர்), சுவிட்சர்லாந்து (மக்கள்தொகையில் 20%த்தினர்) மற்றும் லக்சம்பேர்க் ஆகிய நாடுகளில் உள்ளனர். 2013ல், அமைச்சு மேற்கொண்ட ஆய்வுகளின்படி, ஐரோப்பாவில் இரண்டாவது பெரும்பான்மை மொழியாக பிரான்சியம் உள்ளது. முதலிடத்தில் ஜெர்மானிய மொழியும் மூன்றாமிடத்தில் ஆங்கில மொழியும் உள்ளன. ஐரோப்பாவில் பிரான்சியத்தைத் தாய்மொழியாகக் கொண்டிராத, 20%மான மக்கள் பிரான்சிய மொழி பேசக்கூடியவர்களாக உள்ளனர். இது கிட்டத்தட்ட 145.6 மில்லியனாகும். 17ம் நூற்றாண்டுக்கும், 20ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்சு மற்றும் பெல்ஜியம் (அவ்வேளையில் இது பிரான்சிய மொழி பேசுவோரால் ஆளப்பட்டது). ஆகியவற்றின் குடியேற்றவாத ஆட்சியின் காரணமாக, அமெரிக்காக்கள், ஆபிரிக்கா, பொலினேசியா, லிவான்ட், தென்கிழக்காசியா மற்றும் கரீபியன் பிரதேசங்களில் பிரான்சிய மொழி அறிமுகமானது. லாவல் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சிய மொழி பேசும் பல்கலைக்கழக ஒன்றியம் ஆகியன நடத்திய சனத்தொகை எதிர்வுகூறல் ஆய்வின்படி, 2025ல் 500 மில்லியன் மக்கள் பிரான்சிய மொழி பேசுவர் எனவும், 2050ல் இது 650 மில்லியன் அல்லது உலக சனத்தொகையின் 7%மாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவியியல் பரம்பல் ஐரோப்பா ஐரோப்பிய ஒன்றியத்தில், தாய்மொழியாகப் பேசப்படும் மொழிகளில் பிரான்சிய மொழி நான்காம் இடத்தில் உள்ளது. பிரான்சில் சட்டத் தகுதிநிலை பிரான்சிய அரசியலமைப்பின்படி, 1992இலிருந்து பிரான்சிய மொழி உத்தியோகபூர்வ மொழியாகும் (எவ்வாறாயினும் இதற்கு முன்னரான சட்ட வரைவுகளில் இது உத்தியோகபூர்வ மொழியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (1539இலிருந்து). பிரான்சின் உத்தியோகபூர்வ அரசாங்க வெளியீடுகள் மற்றும் பொதுக் கல்வியில் பிரான்சிய மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும் ஒப்பந்தங்கள் போன்ற சில இடங்களில் இவ்விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது. விளம்பரங்கள் வெளிநாட்டு மொழிபெயர்ப்பொன்றைக் கொண்டிருக்கவேண்டும். பிரான்சிய மொழியை விட பல்வேறு பிராந்திய மொழிகளும் மொழி வழக்குகளும் காணப்படுகின்றன. பிராந்திய மொழிகளுக்கான ஐரோப்பியப் பட்டயத்தில் பிரான்சு கையெழுத்திட்டுள்ளது. எனினும், 1958ம் ஆண்டின் அரசியலமைப்புக்கு இது விரோதமாக உள்ளதால் இவ்வொப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சுவிட்சர்லாந்து பிரான்சிய மொழி, சுவிட்சர்லாந்தின் நான்கு உத்தியோகபூர்வ மொழிகளில் (ஏனையன ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ரொமான்சு என்பன.) ஒன்றாகும். இது ரோமண்டி எனப்படும், சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் பேசப்படுகிறது. இப்பகுதியிலுள்ள பெரிய நகரம் ஜெனீவா ஆகும். சுவிட்சர்லாந்தின் அரசியல் பிரிவுகளோடு மொழிப்பிரிப்பு பொருந்துவதில்லை. இதனால் சில பிரிவுகள் இரு மொழி நிலையைக் கொண்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையில் 20%த்தினர் பிரான்சியத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மேலும் நாட்டின் மக்கள்தொகையில் 50.4%த்தினர் இம்மொழியைப் பேசுகின்றனர். சுவிட்சர்லாந்தின் பிரான்சிய மொழி பேசும் சமூகத்தினர், பிரான்சின் பிரான்சிய மொழியைப் போல் பேசக்கூடியோராய் உள்ளனர்.எனினும், 69க்குப் பின்னரான எண்கள் மற்றும் சில வாய்மொழிச் சொற்பிரயோகங்கள் என்பன சிறிய வேறுபாட்டைக் கொண்டுள்ளது. பெல்ஜியம் பெல்ஜியத்தில், வல்லோனியாவில் (ஜெர்மன் மொழி பேசும் கிழக்குப் பிரதேசம் தவிர்ந்த) பிரான்சியம் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. மேலும் பிரசெல்சு தலைநகரப் பகுதியில் டச்சு மொழியுடன் இன்னொரு உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது. வல்லூன் மற்றும் பிரசெல்சு தலைநகரப் பகுதி ஆகியவற்றை எல்லையாகக் கொண்டிருந்தாலும் பிரான்சிய மொழியும் ஜெர்மன் மொழியும் ஃபிளெமிஷ் பகுதியில் உத்தியோகபூர்வ மொழியாகவோ அல்லது சிறுபான்மை மொழியாகவோ அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் இங்குள்ள சில நகரப் பிரதேசங்களில் பிரான்சிய மொழி பேசுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் சனத்தொகையில் 40%மானோர் பிரான்சியத்தை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். எஞ்சிய 60%மானோர் டச்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். இவர்களில் 59%த்தினர் பிரான்சியத்தை இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாகக் கொண்டுள்ளனர். இதன்படி, பெல்ஜிய மக்கள்தொகையில் முக்கால் பங்கினர் பிரான்சிய மொழி பேசக்கூடியோராய் உள்ளனர். மொனாகோ மற்றும் அன்டோரா மொனாகோவின் தேசியமொழி மொனெகாஸ்க் மொழியாக இருந்தாலும், இதன் உத்தியோகபூர்வ மொழி பிரான்சிய மொழி மட்டுமேயாகும். நாட்டின் சனத்தொகையில் 47%த்தினர் பிரான்சிய மொழிபேசுவோராவர். அன்டோராவின் உத்தியோகபூர்வ மொழி காட்டலான் ஆகும். எனினும், பிரான்சுக்கு அருகில் இருப்பதாலும், ஏர்ஜெலின் ஆயர் மற்றும் பிரான்சு ஆகியன அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதாலும் இங்கு பிரான்சிய மொழி பயன்படுத்தப்படுகிறது. பிரான்சிய மொழி பேசுவோர் நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 7%மாக உள்ளனர். லக்சம்பேர்க் லக்சம்பேர்க்கின் தாய்மொழியான லக்சம்பேர்கிய மொழி மற்றும் ஜெர்மன் மொழி ஆகியவற்றுடன் பிரான்சிய மொழியும் அந்நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாகும். அரசாங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் பிரான்சிய மொழி முதன்மையாகப் பயன்படுத்தப்படுவதோடு, வெளிநாட்டவர்களுடன் தொடர்பாடுவதற்கான முதன்மை மொழியாகவும் இது உள்ளது. லக்சம்பேர்க்கின் கல்வி முறைமை மும்மொழிகளிலானது. அடிப்படைக்கல்வி லக்சம்பேர்கிய மொழியிலும் பின் ஜெர்மன் மொழியிலும், இரண்டாம் நிலைக் கல்வி பிரான்சிய மொழியிலும் நடத்தப்படும். இரண்டாம் நிலைக் கல்வியில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் போன்ற பாடங்களின் மொழியாக பிரெஞ்சு உள்ளது. லக்சம்பேர்க் பல்கலைக்கழகம் பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் பாடநெறிகளை வழங்குகிறது. இத்தாலி இத்தாலியின் சிறு பிரதேசமான ஓசுடாப் பள்ளத்தாக்கின் உத்தியோகபூர்வ மொழி பிரான்சியம் ஆகும். இப்பகுதியிலுள்ள இத்தாலிய மொழி பேசா மக்களில் பலர் பிரான்சிய மொழியின் ஒரு வழக்கினைப் பேசுகின்றனர். எனினும் இம்மொழிப் பிரிவுக்கான சர்வதேச முக்கியத்துவம் குறைவாக உள்ளதால் இவர்கள் பிரான்சிய மொழியையே எழுத்துத் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். ஐக்கிய இராச்சியம் மற்றும் கால்வாய்த் தீவுகள் ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய சிறுபான்மை மொழியாகவும் குடிப்பெயர்வு மொழியாகவும் பிரான்சிய மொழி உள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் பிரான்சு மக்கள் 300,000 பேர் உள்ளனர். மேலும், ஆபிரிக்காவிலிருந்து ஐக்கிய இராச்சியத்துக்குக் குடிபெயர்ந்தோர் பலராலும் இம்மொழி பேசப்படுகிறது. மேலும், பிரான்சிய மொழி ஒரு பிரபலமான வெளிநாட்டு மொழியாகவும் கருதப்படுகிறது. 2006ம் ஆண்டின் ஐரோப்பிய ஆணையக அறிக்கையின்படி, ஐக்கிய இராச்சியத்தின் சனன்த்தொகையில் 23%மானோர், பிரான்சிய மொழியில் உரையாட வல்லவராய் உள்ளனர். 1066ல் ஏற்பட்ட நோர்மன் படையெடுப்பைத் தொடர்ந்து, நவீன மற்றும் நடு ஆங்கிலத்தில் பண்டைய ஆங்கிலம் மற்றும் ஒயில் மொழிகளின் பிரதிபலிப்பைக் காணமுடியும். நோர்மன் மொழி பேசிய இவர்களது தாய்மொழி ஜெர்மானிக் ஆகும். ஐரோப்பாக் கண்டத்துடனான இங்கிலாந்தின் தொடர்புகள் காரணமாக நவீன ஆங்கிலத்திலுள்ள பல சொற்கள் பிரான்சியத்தின் மூலத்தைக் கொண்டுள்ளன. ஜெர்சி மற்றும் கேர்ன்சியின் உத்தியோகபூர்வ மொழியாக பிரான்சிய மொழி உள்ளது. இவ்விரு இடங்களிலும் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் விழாக்களில் பிரான்சிய மொழி ஓரளவு பயன்படுத்தப்படுகிறது. வட மற்றும் தென்னமெரிக்கா கனடா கனடாவில், ஆங்கில மொழிக்கு அடுத்த முதன்மை மொழியாக பிரான்சியம் உள்ளது. மேலும், இவ்விரு மொழிகளும் அரசாங்க மட்டத்தில் உத்தியோகபூர்வ மொழிகளாய் உள்ளன. கியூபெக் மாகாணத்தின் ஒரே உத்தியோகபூர்வ மொழி பிரான்சியம் ஆகும். இம் மாகாணத்தில் 7 மில்லியன் மக்கள், அதாவது சனத்தொகையின் 80.1% (2006 கணக்கெடுப்பு) மக்கள் பிரான்சியத்தைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். கியூபெக்கின் 95.0%மான மக்கள் பிரான்சியத்தைத் தாய்மொழியாகவோ அல்லது இரண்டாம் மொழியாகவோ பேசுகின்றனர். பிரான்சியத்தைத் தாய்மொழியாகப் பேசுவோர் உள்ள நகரங்களில் இரண்டாமிடத்திலுள்ள மொன்றியல் நகரம் இங்கேயே அமைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக, இருமொழி மாகாணங்களாக நியூபிரன்சுவிக்கும், மானிட்டோபாவும் காணப்படுகின்றன. நியூபிரன்சுவிக்கின் சனத்தொகையில் மூன்றிலொரு பங்கினர் பிரான்சிய மொழி பேசுவோராய் உள்ளனர். ஆட்சிப் பகுதிகளின் (வடமேல் ஆட்சிப் பகுதிகள், நுனாவுட் மற்றும் யூகோன்) உத்தியோகபூர்வ மொழிகளில் பிரான்சிய மொழியும் ஒன்றாகும். இவற்றுள், யூகோனில் அதிகளவில் பிரான்சிய மொழி பேசுவோர் உள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 4%மாக உள்ளனர். கிழக்கு ஒன்ராரியோ, வடகிழக்கு ஒன்ராரியோ, நோவா ஸ்கோட்டியா, நியூபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், அல்பேர்ட்டா மற்றும் மானிட்டோபா ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்களவு பிரான்சிய சமூகத்தினர் உள்ளனர். ஒன்ராரியோ போன்ற பல மாகாணங்கள் இங்குள்ள சிறுபான்மையோருக்கு பிரான்சிய மொழியில் சேவைகளை வழங்குகின்றனர். போர்ட் ஔ போர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் இரு மொழி மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது (இவ்விடங்களில் நியூபவுன்லாந்து பிரான்சியம் என்ற வழக்கு பரவலாகப் பேசப்பட்டுள்ளது).ஏனைய எல்லா மாகாணங்களிலும் சிறியளவான பிரான்சிய சமூகத்தினர் உள்ளனர். கிட்டத்தட்ட 9,487,500 கனேடியர்கள் அல்லது சனத்தொகையில் 30%மானோர் பிரான்சியத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். 2,065,300 பேர் பிரான்சியத்தை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர். இருமொழிப் பாடசாலைத் திட்டம் மற்றும் பிரான்சிய வகுப்புகள் போன்றவற்றால் கடந்த இரு தசாப்த காலங்களில் பிரான்சிய மொழி தெரிந்த கனேடியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கியூபெக்கில் பேசப்படும் பிரான்சிய மொழிக்கும், பிரான்சில் பேசப்படும் பிரான்சிய மொழிக்குமான வித்தியாசம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆங்கிலங்களுக்கிடையிலான வேறுபாட்டை ஒத்தது. பெரும்பான்மை பிரான்சிய மொழி பேசுவோர் வசிக்கும் பகுதியான கியூபெக்கில் அமைந்துள்ள பிரான்சிய மொழிக்கான கியூபெக் சபை, கியூபெக் பிரான்சியத்துக்கான நெறிமுறைகளைச் செயற்படுத்தி வருவதுடன், பிரான்சிய மொழிக்கான பட்டயம் (சட்டமூலம் 101 & 104) மதிக்கப்படுவதையும் உறுதிப் படுத்துகிறது. எயிட்டி எயிட்டியின் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகளில் பிரான்சியமும் ஒன்றாகும். எழுத்து, பாடசாலை நெறிமுறைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் இது முதன்மை மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது அனைத்து கல்விகற்ற எயித்தியர்களாலும் பேசப்படுவதுடன் வணிகத்துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், திருமணம், பட்டமளிப்பு விழா மற்றும் தேவாலயப் பிரார்த்தனை போன்ற நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் மக்கள்தொகையில் 10-15%மானோர் பிரான்சியத்தைத் தமது தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஏனையோர் இதனை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனன்ர். இரண்டாவது உத்தியோகபூர்வ மொழி அண்மையில் தரப்படுத்தப்பட்ட, எயித்தியின் அனைத்து மக்களும் பேசும் எயித்திய கிரியோல் ஆகும். எயித்திய கிரியோல் என்பது பிரான்சியத்தை அடிப்படையாகக் கொண்ட கிரியோல் மொழிகளில் ஒன்றாகும். இதிலுள்ள பெரும்பாலான சொற்கள் பிரான்சிய மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளதோடு, மேற்கு ஆபிரிக்க மொழிகள் மற்றும் சில ஐரோப்பிய மொழிகளின் தாக்கத்தையும் கொண்டுள்ளன. எயித்திய கிரியோல் மொழியானது லூசியானா கிரியோல் மற்றும் ஏனைய பிரான்சிய கிரியோல் மொழிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. எழுத்து முறைகள் எழுத்துகள் எண்கள் வார்த்தைகள் மேலும் காண்க இடாய்ச்சு எசுப்பானியம் ஆங்கிலம் இடச்சு துருக்கியம் இடானிய இலக்கணம் இத்தாலியம் இடானியம் பிரெஞ்சு இலக்கணம் இத்தாலிய இலக்கணம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பிரெஞ்சு மொழி சுவிட்சர்லாந்தின் மொழிகள்
6627
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
சுனில் காவஸ்கர்
சுனில் மனோகர் "சன்னி"காவாஸ்கர் (Sunil Manohar "Sunny" Gavaskar (ஜூலை 10, 1949) முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் மற்றும் அணித்தலைவர் ஆவார். இவர் 1970 ஆம் ஆண்டு முதல் 1980 வரை மும்பை மாநிலத் துடுப்பாட்ட அணிக்காகவும் இந்திய தேசியத் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார். அனைத்துக் காலத்திற்குமான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் துவக்க ஆட்டக்காரர் ஆவார். இவர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர், அதிக நூறுகள் அடித்தவர் உள்ளிட்ட சாதனைகளைப் படைத்தவர். இவர் தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் 34 நூறுகள் அடித்து சாதனை படைத்துள்ளார்.இந்தச் சாதனையானது 20 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது. பின் டிசம்பர், 2005 இல் சச்சின் டெண்டுல்கர் இந்தச் சாதனையை முறியடித்தார். ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இரு பகுதிகளிலும் நூறு ஓட்டங்கள் அடித்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதே போன்று மூன்று முறை இந்தச் சாதனைகளை இவர் புரிந்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஓட்டங்கள் அடித்த முதல் வீரர் இவர் ஆவார். தற்போது 10,000 இலக்குகளுக்கும் அதிகமாக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டிலில் 13 ஆவது வீரராக உள்ளார். இந்தியக் குடியுரிமை விருதுகளான பத்மசிறீ மற்றும் பத்மபூசன் விருதுகளைப் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டில் கல் சி கே நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதினைப் பெற்றார். இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் இவரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் தற்காலிகத் தலைவராக நியமிக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்வுத் துடுப்பாட்டம் கைவிரலில் ஏற்பட்ட காயத்தினால் போர்ட் ஆஃப் ஸ்பெய்ன்,டிரினிடாட்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடாமல் இரண்டாவது போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்கள் எடுத்து அந்த அணிக்கு எதிரான முதல் வெற்றியைப் பதிவு செய்தார். இந்தத் தொடரின் ஜார்ஜ் டவுன் , கயானாவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 116, 64* எடுத்தார்.பின் பிரிடஜ் டவுன், பார்படோசுவில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 1 மற்றும் 117* ஓட்டங்கள் பெற்றார். டிரினிடாட்டில் நடைபெற்ற நான்காவது போட்டியில் 124 மற்றும் 220 ஓட்டங்கள் எடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரை முதன்முறையாக வெற்றிபெற உதவினார். இதன்மூலம் ஒரே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு மற்றும் இருநூறுகள் அடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். இதற்கு முன் டக் வால்டர் இந்தச் சாதனையைப் புரிந்தார்.மேலும் ஒரே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நான்கு நூறுகள் அடித்த முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்த படியாக விஜய் அசாரே ஒரே போட்டியில் இரு முறை நூறு ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்துச் சுற்றுப் பயணம் 1971 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. தனது முதல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதனால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் அந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தவறினார். இரு ஐம்பது ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். ஜான் சுனோ வீசிய ஒரு ஓவரில் வேகமாக ஓர் ஓட்டம் எடுக்க ஓடும் போது சுனோமோதியதில் இவர் கீழே விழுந்தார். அதனால் சுனோ போட்டியில் விளையாடத் தடை பெற்றார். அந்தத் தொடரில் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 144 ஓட்டங்களை 24 எனும் சராசரியோடு எடுத்தார். இதனால் இவரின் தேர்வு பற்றி எதிர்மறைக் கேள்விகள் எழுந்தன. இங்கிலாந்தின் இந்தியச் சுற்றுப் பயணம் 1972-73 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. இதுவே இந்திய மண்ணில் கவாஸ்கர் விளையாடும் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போடி ஆகும். ஆனால் முதல் மூன்று போட்டிகளிலும் சரியாக இவர் விளையாடவில்லை.மொத்த்மாக ஐந்து ஆட்டப் பகுதிகளிலும் சேர்த்து அறுபது ஓட்டங்களே எடுத்திருந்தார். அப்போது இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றிருந்தது. இறுதி இரு தேர்வுப் போட்டிகளிலும் போதுமான அளவு ஓட்டங்கள் எடுத்திருந்தார். இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்தத் தொடரில் மொத்தமாக 224 ஓட்டங்களை 24.89 எனும் சராசரி பெற்றிருந்தார். பின் 1974 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் 101மற்றும் 58 ஓட்டங்களை எடுத்தார்.மொத்தமாக 227 ஓட்டங்களை 37.83 சராசரியில் பெற்றார். இந்தத் தொடரினை இந்திய அணி முழுமையாக இழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணம் 1974-75 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி மேற்கிந்தியத் தீவில் சுற்றுப் பயணம் செய்து ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. அதில் இவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதில் வான்கடே மைதானத்தில் 86 ஓட்டங்கள் எடுத்து லேன்ஸ் கிப்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் ஒரு போட்டியில் 108 ஓட்டங்கள் எடுத்தார். 1975-76 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. பிஷன் பேடிக்கு காலில் காயம் ஏற்பட்டதனால் சனவரி 1976 இல் ஆக்லாந்தில் நடைபெற்ற போட்டியில் இவர் தலைவராகச் செயல்பட்டார். ஆனால் அந்தத் தொடரில் 703 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்த இரண்டாவது போட்டியில் 156 ஓட்டங்களும் டிரினிடாட்டில் நடந்த மூன்றாவது போட்டியில் 102 ஓட்டங்களையும் எடுத்தார். மூன்றாவது போட்டியில் இவர் 102 ஓட்டங்கள் எடுத்து அணியின் ஓட்டத்தினை அதிகரிக்கச் செய்தார்(4/406). இதன்மூலம் அதிகபட்ச வித்தியாசத்தில் (நான்காவது ஆட்டப் பகுதியில்) அதிகபட்ச ஓட்டங்களில் வெற்றி பெற்ற அணி எனும் சாதனையினை இந்திய அணி பெற்றது. சாதனைகள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். டான் பிராட்மனின் சாதனையான 29 நூறுகளைத் தகர்த்து. 34 நூறுகள் எடுத்தார். பின் இவரின் சாதனையானது சச்சின் டெண்டுல்கரால் தகர்க்கப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கிரிக் இன்ஃபோவில் விவரம்: சுனில் மனோகர் காவஸ்கர் நூறு ஓட்டங்கள் எடுப்பதில் திறம் ரீடிஃப் தளத்தில் தரவு யாஹூ கிரிக்கெட் தளத்தில் காவஸ்கரின் ஆக்கங்கள் இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள் 1949 பிறப்புகள் அருச்சுனா விருது பெற்றவர்கள் வாழும் நபர்கள் விசுடென் துடுப்பாட்டக்காரர்கள் இந்தியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள் சாமர்செட் துடுப்பாட்டக்காரர்கள்
6628
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D
கபில்தேவ்
கபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் (Kapil Dev Ram Lal Nikhanj பிறப்பு: ஜனவரி 6, 1959) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது. 1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அப்போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். அந்தச் சாதனையானது 2000 ஆம் ஆண்டில் வால்ஸ் என்பவரால் தகர்க்கப்பட்டது. ஓய்வு பெறும் போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய இரு வடிவங்களிலும் அதிக மட்டையாளர்களை வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 200 மட்டையாளர்களை முதலில் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 434 மட்டையாளர்களையும் 5000 ஓட்டங்களையும் எடுத்த ஒரே வீரர் இவர் ஆவார். இதன்மூலம் துடுப்பாட்ட வரலாற்றில் மிகச்சிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராக ஆனார். மார்ச் 11, 2010 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை தனது புகழவையில் சேர்த்துக் கொண்டது. ஒருநாள் போட்டிகளில் 253 இலக்குகளும் 3,783 ஓட்டங்களும் பெற்றுள்ளார். கபில் தேவ் எழிற்கையான வீசுநடையும் வலிவுமிக்க வெளித்துயல் பந்துவீச்சும் கொண்டிருந்தார். ஹரியானா புயல் என்ற பட்டப்பெயரை அவர் பெற்றிருந்தார். ஆரம்பகால வாழ்க்கை கபில்தேவ் ஜனவரி 6, 1959 இல் சண்டிகர், பஞ்சாபில் பிறந்தார். இவரின் இயற்பெயர் கபில்தேவ் நிகாஞ்ச் ஆகும். இவரின் தந்தை லால் நிகாஞ்ச் , ஒரு மர வியாபரி ஆவார். தாய் ராஜ்குமாரி. இவர் பஞ்சாபி காத்ரி சமூகத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரின் தாயார் பரித்துதின் கஞ்ச்சகர் பிறந்த ஊரான பாக்பத்தானில் பிறந்தார். இவரின் தந்தை பிபல்பூரைச் சேர்ந்தவர். இவர்கள் ஷா யக்கா எனும் இடத்தில் வசித்து வந்தனர். தற்போது இந்த இடம் பாக்கித்தானிலுள்ள ஒகாரா மாவட்டத்தில் உள்ளது. இவருடைய நான்கு சகோதரிகளும் இந்தியப் பிரிப்புக்கு முன்னர் பிறந்தவர்கள். இவருடைய இரு சகோதரர்களும் ஃபாசில்கா மாவட்டத்தில் உள்ளனர். இந்தியப் பிரிப்பிற்கு பின்னர் குடும்பத்துடன் அனைவரும் ஃபசில்கா சென்றனர். பின் சண்டிகர் சென்றனர். டி. ஏ. வி பள்ளியில் பயின்றார். பின் தேஷ் பிரேம் ஆசாத் நிறுவனத்தில் 1971 ஆம் ஆண்டில் சேர்ந்தார். தேர்வுத் துடுப்பாட்டம் 1978 ஆம் ஆண்டில் கபில் தேவ் தனது முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். அக்டோபர் 16, 1978 இல் ஃபசிலாபாத்தில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். ஆனால் அந்தப் போட்டியில் குறிப்பிடத் தகுந்த அளவிலான பங்களிப்புகளைச் செய்யவில்லை. தனது வேகப் பந்துவீச்சு மூலமாக ஒரு முறைக்கும் மேலாக அவர்களின் பாதுகாப்புக் கவசத்தில் தாக்கினார். தனது புறத் திருப்ப பந்துவீச்சு மூலமாக சதிக் முகம்மதுவின் இலக்கினை முதல் இலக்காகக் கைப்பற்றினார். பின் கராச்சி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 33 பந்துகளில் ஐம்பது ஓட்டங்களை அடித்தார். இதன் மூலம் அதிவிரைவாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஐம்பது ஓட்டங்களை அடித்த இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார். இருந்தபோதிலும் அந்தப் போட்டியிலும் அந்தத் தொடரினையும் இந்திய அணி2-0 என பாக்கித்தான் அணியிடம் இழந்தது. அதன் பின் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. தில்லிபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை அடித்தார். 124 பந்துகளில் 126 ஓட்டங்களை அடித்தார். அந்தத் தொடரில் 17 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் இந்தியத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில்  சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தப் போட்டியில் இவர் ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார். ஆனல் 633 ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்தத் தொடரில் 17 இலக்குகளைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 45 ஓட்டங்கள் எடுத்தார். ஒருநாள் துடுப்பாட்டம் 1979 ஆம் ஆண்டில் கபில் தேவ் தனது முதல் ஒருநாள்  துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். இவரின் தேர்வு  மற்றும் ஒருநாள் ஆகிய இரு முதல் போட்டிகளும் பாக்கித்தான் அணிக்கு எதிரான போட்டி ஆகும். 1979 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ணத் துடுப்பாட்டக் கோப்பைத் தொடரிலும் சிறப்பான ஆட்டத்தினை இவர் வெளிப்படுத்தவில்லை. பின் ஆத்திரேலியத்  துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் கபில் தேவ் இருமுறை ஐந்து இலக்குகளைக் கைப்பற்றி ஒரு முதன்மையான பந்துவீச்சாளர் என தனது திறமையினைக் காட்டினார். மேலும் மட்டையாட்டத்தில் 212 ஓட்டங்களை எடுத்தார். மொத்தமாக அவர் 28 இலக்குகளை 23.22 எனும் சராசரியோடு எடுத்தார். 1979-80 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் இரு முறை அணியின் வெற்றிக்கு உதவினார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 69 ஓட்டங்கள் எடுத்து அணியினை வெற்றி பெறச் செய்தார். சென்னை , சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் ஆட்டப் பகுதியில் 90 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 இலக்குகளையும் இரண்டாவதுஆட்டப் பகுதியில் 56 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஏழு இலக்குகளையும் 98 பந்துகள்ளில் 84 ஓட்டங்களையும் எடுத்து அணியினை வெற்றி பெறச் செய்தார். இந்த வெற்றியின் மூலமாக இவர் பரவலாக அறியப்பட்டார். 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் கபில்தேவ் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் அணித் தலைவர் பொறுப்பு ஏற்றார். இந்தத் தொடரில் சுனில் காவஸ்கர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவருக்குத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் முழுமைக்கும் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்தத் தொடரில் 47 ஓவர்களில் கபில் தேவ் 72 ஓட்டங்களும், சுனில் கவாஸ்கர் 90 ஓட்டங்களும் எடுத்து அணியை மொத்த ஓட்டங்கள் 282/5 பெறச் செய்தனர். பின் கபில்தேவ் 2 இலக்குகள் எடுக்க எதிரணியை 255 ஓட்டங்கள் மட்டுமே பெறச் செய்து வெற்றி பெற்றனர். இதே உத்வேகத்துடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியினை 1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் எதிர்த்து விளையாடினர். பின் இரண்டாவது துடுப்பாட்டப் போட்டியில் நூறு ஓட்டங்களும் 17 இலக்குகளையும் 29.24 எனும் சராசரியோடு பெற்றார். நூறு (துடுப்பாட்டம்) அணி வாரியாக அணித் தலைவராக தேர்வுத் துடுப்பாட்டம் சான்றுகள் 1959 பிறப்புகள் நார்தாம்ப்டன்சையர் துடுப்பாட்டக்காரர்கள் அருச்சுனா விருது பெற்றவர்கள் வாழும் நபர்கள் விசுடென் துடுப்பாட்டக்காரர்கள் இந்தியத் தேர்வுத் துடுப்பாட்டக்காரர்கள்
6629
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D
லியாண்டர் பயஸ்
லியாண்டர் பயஸ் () (பி. ஜூன் 17, 1973) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர். பெரு வெற்றித் தொடர் ஆண்கள் இரட்டையர்: 16 (8–8) 2012இல் ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்றை வென்றதை அடுத்து இவர் டென்னிசு போட்டியின் அனைத்து பெரு வெற்றித் தொடர்களையும் வென்ற வீர்ர் என்ற தகுதியை பெற்றார். விருதுகள் பத்ம பூசன் விருது (2014) மேற்கோள்கள் இந்திய ஒலிம்பிக் வீரர்கள் இந்திய டென்னிஸ் வீரர்கள் 1973 பிறப்புகள் வாழும் நபர்கள் வங்காள மக்கள் அருச்சுனா விருது பெற்றவர்கள் பத்மசிறீ விருது பெற்ற விளையாட்டுத்துறையினர் Rio Olympic Editathon 2016
6633
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%20%28%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29
அபுதாபி (அமீரகம்)
ஐக்கிய அரபு அமீரகத்தின் பகுதிகளான ஏழு அமீரகங்களில் பெரியது அபுதாபி அமீரகம் (அபுதாபி அமீரகம்) ஆகும். இதன் பரப்பளவு (67,340 கிமீ²) ஆகவும் முழு நாட்டினதும் பரப்பளவில் கிட்டத்தட்ட 86% ஐ உள்ளடக்கியும் அமைந்துள்ளது. அரபு மொழியில் "தாபி" என்பது ஒரு காலத்தில் இப்பகுதியில் பெருமளவில் காணப்பட்ட ஒரு வகைப் பாலைவனத்து மான்களைக் குறிக்கும். முழு நாட்டினதும் தலைநகரமான அபுதாபி நகரமும் இந்த அமீரகத்திலேயேயுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல் சட்டப்படி அபுதாபி அமீரகத்தின் ஆட்சியாளரே முழுநாட்டினதும் ஆட்சித் தலைவர் (President) ஆவார். அபுதாபி அமீரகமே ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட அமீரகமாகவும் விளங்குகிறது. 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்த அமீரகத்தின் மக்கள் தொகை 2,120,700. இதில் அமீரகக் குடியுரிமை கொண்டவர்கள் 439,100. இது மொத்த மக்கள் தொகையின் 20%க்கும் சற்று அதிகமானது 2011 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் படி அபுதாபியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு விலைகளின்படி அரபு எமிரேட் திராம் 806,031 மில்லியனாக இருந்தது. இதில் பெட்ரோலியத்துறை, இயற்கை வாயுத்துறை உள்ளிட்ட சுரங்கம் கல்லகழ்தல் துறையின் பங்களிப்பு 58.5% ஆகும். கட்டுமானம் சார்ந்த தொழில் துறையே அடுத்த பெரிய பங்களிப்பை வழங்குகிறது. இது 10.1% ஆகும். அபுதாபி அமீரகத்தின் மக்கள் தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 34% ஆகவே இருந்தபோதும், அண்மைக் காலங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 60% அபுதாபி அமீரகத்துக்கு உரியதாகவே உள்ளது. 1970களின் தொடக்கத்தில் இடம்பெற்ற இரு முக்கிய நிகழ்வுகள் அபுதாபியின் வளர்ச்சிப் பாதையில் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியது. முதலாவது 1971 டிசம்பரில் அபுதாபி அமீரகத்தின் தலை நகரமான அபுதாபி நகரத்தை அரசியல் தலைநகரமாகவும், நிர்வாகத் தலைநகரமாகவும் கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் உருவானது ஆகும். இரண்டாவது, 1973 அக்டோபர் மாதப் போரைத் தொடர்ந்து எண்ணெய் விலை பெருமளவு அதிகரித்ததுடன், எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகளில் மாற்றம் ஏற்பட்டு எண்ணெய் வருமானம் பெருமளவு உயர்ந்ததும் ஆகும். பிரிவுகள் அபுதாபி மூன்று முனிசிப்பல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அபுதாபி நடுவத் தலைநகரப் பகுதி. அல் எயின் (கிழக்குப் பிரதேசம்) அல் கார்பியா (மேற்குப் பிரதேசம்) நகரங்களும் பெருநகரங்களும் இந்த அமீரகத்தில் உள்ள மிகப் பெரிய நகரம் அபுதாபி. இது அகன்ற வீதிகளையும், உயர்ந்த கட்டிடங்களையும், பரபரப்பான வணிகப் பகுதிகளையும் உள்ளடக்கியது. இது தவிர அல் எயின், பனியாசு, ருவைசு என்பன பிற முக்கியமான நகரங்கள். அல் எயின், பாலைவனச் சோலை ஒன்றில் அமைந்த நகரம். முக்கிய பெரு நகரங்களும், நகரங்களும் அபுதாபி அபு அல் அப்யாட் அல் எயின் அல்-அர்யம் தீவு அல் முஷ்ரிஃப் டல்மாத் தீவு அப்சான் ஹலத் அல் பஃராணி கலீபா நகரம் கலீபா துறைமுகம் லிவா பாலைவனச் சோலை குறிப்புக்கள் அபுதாபி அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம்
6634
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
வைணவ சமயம்
வைணவ சமயம் (ஆங்கிலம்: Vaishnavism) அல்லது மாலியம் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம். வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படும் இச்சமயம் இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது காக்கும் கடவுளான விஷ்ணு, மனித வடிவில் அவதாரம் எடுத்து அவற்றை அழித்து நல்லவரைக் காப்பார் என்பது வைணவர் நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்கவையான மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசாவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் 14 வைணவ உபநிடதங்களாகும். வைணவ சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம், இராமாயணம், பாகவதம், விஷ்ணு, கருட, நாரதிய, பத்ம, வராக புராணங்கள் ஆகும். குப்தர் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த வைணவம் தெற்காசியா முழுவதும் பரவியிருந்தது. வைணவ தத்துவம் இராமானுஜர் விளக்கிய விசிஷ்டாத்துவைதம் என்ற தத்துவத்தில் ஆதி பரம்பொருள் நாராயணன் என்ற திருமாலே. அவன்தான் உபநிடதங்கள் கூறும் பிரம்மம். அவன் குணம் என்ற குன்றேறித் தாண்டியவன் என்று உபநிடதங்கள் கூறுவதன் உட்பொருள் அவனிடம் எல்லா நல்ல குணங்களும் இருக்கின்றன என்பதாம். அறம், ஞானம், சக்தி, அன்பு இவை யாவும் முடிவிலாத அளவுக்கு அவனிடம் உள்ளன. அவன் உயிரினங்களிடம் வைத்திருக்கும் எல்லையற்ற கருணையினால் அவ்வப்பொழுது அவதரித்து இடர் போக்கி தன்னுடன் சேர்ந்துகொள்ள வழி வகுக்கிறான். பிரம்மமும் சிவனும் உயிரும் உடலும் போல. சிவர்களனைவரும், மற்றும் பிரபஞ்சமனைத்தும் பிரம்மத்தின் உடலாகும். இதற்கு பிரமாணம் பிருகதாரண்யக உபநிடத்து (3-7-22): யோ விஞ்ஞானே திஷ்டன், விஞ்ஞானாதந்தர:, யம் விஞ்ஞானம் ந வேத யசிய விஞ்ஞானம் சரீரம் யோ விஞ்ஞானமந்தரோ யமயதி ஏட்ஷ ஆத்மா அந்தர்யாம்யம்ருத:. இதன் பொருள்: எவன் அறிவுக்குள் உறைபவனோ, அறிவுக்குள் அறிவாக இருப்பவனோ, எவனை அறிவும் அறியமுடியாதோ, எவனுக்கு அறிவே உடலோ, எவன் அறிவையும் உள்ளிருந்து ஆட்டிவைப்பவனோ அவன்தான் இவ்வான்மா, அழியாமல் உள்ளுறைபவன். உயிரும் உடலும் வெவ்வேறானதால் பிரம்மத்திற்கு தன்னுள் வேற்றுமை (சுவகத பேதம்) உண்டு. ஆனால் வேறு வேற்றுமைகள் கிடையா. பிரம்மத்திற்கு சமானமான வேறு உண்மைகள் இல்லை. அதனால் பிரம்மத்தினிடத்தில் செசாதீய பேதம் என்று கூறப்படும் பகுப்புக்குள்ளிட்ட வேற்றுமை கிடையாது. பகுப்புக்கும் பகுப்புக்கும் உள்ள வேற்றுமையும் (விசாதீய பேதம்) கிடையாது; ஏனென்றால் வேறு ஒரு பகுப்பு அறவே இல்லை. இதனால் இதுவும் ஒருவித அத்துவைதம் (இரண்டற்றது)தான். பிரம்மத்தினிடம் குணம் என்ற தன்மை உள்ளதா இல்லையா என்ற ஒரு ஆழமான கேள்வியின் இருவேறு விடைகள்தாம் இதை அத்வைதக் கோட்பாட்டிலிருந்து வேறுபடுத்துகிறது. அதனால் இராமானுஜரின் இக்கோட்பாட்டிற்கு விசிஷ்ட்டாத்வைதம் (விசிஷ்ட்டமான அத்வைதம்) என்று பெயர். விசிஷ்ட்டம் என்றால் சிறப்புற்ற என்று பொருள். ஶ்ரீ விசிஷ்ட்டாத்வைதத்தில் ஶ்ரீ என்ற அன்னை தத்துவம் மையத்திலுள்ளது. இதனால் தான் இந்த சமயப் பிரிவுக்கே ஶ்ரீவைணவம் என்ற பெயர். அன்னை தத்துவத்தை "தாயார்" என்று வைணவர்கள் அன்பொழுக அழைப்பர். இராமானுஜருடைய எல்லா நூல்களிலும் (முழுவதும் வேதாந்தம் பேசும் ஶ்ரீபாஷ்யத்தைத் தவிர) ஶ்ரீ என்ற மகாலட்சுமி, திருமாலின் மார்பில் அவருடன் என்றும் இருப்பதாகவே பேசப்படும். யாண்டும் கூட இருப்பவள் என்று பொருள்படும் அனபாயினி என்ற வடமொழிச் சொல்லை அடிக்கடி காணலாம். இராமானுஜருக்குப் பின் வந்தவர்கள் அன்னை ஶ்ரீயின் அருள் இல்லாமல் பெருமாளிடம் நம் வேண்டுதல் செல்லாது என்பர். அதனாலேயே இன்றும் வைணவத் திருக்கோயில்களில் ஆசாரியனை சேவித்த பின் தாயாரான திருமகளை சேவித்து அதன் பின்னரே கோயில் மூலவரை சேவிக்கும் வழக்கமுள்ளது. வைணவத்தில் மோட்சம் படைத்தல் ஒரு மாயையல்ல; அது கடவுளின் ஓர் உண்மையான செய்கை. உலகப்பொருள், சீவன், ஈசன் ஆகிய மூன்று தத்துவங்களும் மூன்று படிகளிலுள்ள உண்மைகள். கீழ்ப்படியிலுள்ள பொருள் அறிவற்றது. சீவன் அறிவுள்ளது. ஆனால் இரண்டும் கடவுளுடைய எள்ளத்தனை பாகமே. மனிதனுடைய புலன்கள் கீழ்ப்படியில் உறையும் பொருள்களின் பலவித சேர்க்கையே. சீவர்கள் இப்புலன்களின் உந்துதலாலும் உதவியாலும் பொருள்களை அனுபவிக்கின்றன. அவர்களுடைய முந்தைய பிறவிகளில் செய்த தீவினை, நல்வினையைப் பொறுத்து அவர்களுக்கு பயன்களைக் கொடுத்து ஆள்பவன் ஈசன். மோட்சம் என்பது ஈசனான நாராயணனுடன் வைகுண்டத்தில் வசிப்பதே. வைணவத்தில் முக்தியின் வகைகள் நான்கு என்று புராணங்கள் கூறுகிறது. அவைகள்: சாலோக்கியம், சாயுச்சியம், சாமீப்பியம் மற்றும் சாரூப்பியம் ஆகும். சாலோக்கியம்: திருமாலின் வைகுந்த உலகத்தை அடைந்து தொண்டு செய்தல். சாமீப்பியம்: திருமாலின் வைகுந்த உலகத்தை அடைவதோடு அல்லாமல், திருமாலின் அருகாமையில் இருந்து தொண்டாற்றும் பேறு. சாரூப்பியம்: திருமாலின் திருவுருவத்தையும், சின்னங்களையும் பெற்று, இறைவனுக்கு தொண்டு செய்தல். சாயுச்சியம்: திருமாலுடன் ஒன்று படுதல். ஜீவாத்மா - பரமாத்மா ஐக்கிய நிலையை குறிப்பது. வைணவத்தில் கடவுள் இறைவனுக்கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய மகாவிஷ்ணு, இராமர், கிருஷ்ணர் உள்பட அவருடைய பல அவதாரங்களும் யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். அர்ச்சாவதாரங்களை வணங்குவதே நாராயணனை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை எவரும் சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் இச்சுவையை நிறைய ருசிக்கலாம். இறைவனின் இச்சுலபத்தன்மைதான் வைணவத்தின் சிறப்பு. பெரிய திருவடி, சிறிய திருவடி வைணவத்தில் கருடனை பெரிய திருவடி என்றும்; அனுமானை சிறிய திருவடி என்றும் போற்றுவர். வைணவ ஆச்சாரியர்கள் புராண காலத்திலேயே தொடங்கிய ஶ்ரீவைணவம், ஆழ்வார்கள் காலத்துப் பாசுரங்களில் பெருமை பெற்றது. ஒன்பதாவது நூற்றாண்டில் இப்பாசுரங்கள் நாதமுனிகள் என்பவரால் தேடி ஒருங்கிணைக்கப்பட்டுப் புத்துயிர் பெற்றன. அதனால் நாதமுனிகளே தற்கால ஶ்ரீவைணவத்தின் முதல் ஆச்சாரியாராகக் கருதப்படுகிறார். சுந்தரசோழர் என்ற இரண்டாம் பராந்தகன் (பொ.ஊ. 956–973) காலத்தில் அன்பில் கிராமத்தைச் சேர்ந்த வைணவ ஆச்சாரியர் ஶ்ரீநாதர் என்பவருக்கு மான்யம் கொடுக்கப்பட்டதாக ஒரு செப்பேடு திருவரங்கம் கோயிலில் உள்ளது. இந்த ஶ்ரீநாதர் நாலாயிரப் பாசுரங்களைப் பாடமாகவே நடத்தி திருவரங்கம் கோயிலில் உற்சவங்களில் சேவை செய்தாராம். இவர்தான் நாதமுனிகளாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. திருவரங்கம் கட்டுரை நாதமுனிகளுக்குப் பிறகு ஆச்சாரிய பதவியில் வந்தவர்களில் சரித்திரப் பிரசித்தி பெற்றவர்கள் மூவர்: இராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியர், வேதாந்த தேசிகர். இராமானுஜரும், வேதாந்த தேசிகரும், மணவாளமாமுனிகளும் ஆழ்வார் பாசுரங்களை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும் ஆந்திரம், கருநாடகம், ஒரிசா வரை கொண்டு சென்று ஆன்மீகத்தைப் பரப்பியுள்ளனர். அரங்கத்துறையும் இறைவனின் அருளும் அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும், கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர். நாதமுனிகள் காலத்திற்கு முன் ஆழ்வார்களின் பாசுரங்களை குடந்தை, தஞ்சை ஆகிய சில பெரிய ஆலயங்களில் மிகக்குறைவாகவே சொல்லி வந்தனர். பின்பு நாதமுனிகளால் அருந்தவயோக முறையில் நாலாயிரம் பாசுரங்களும் கிடைக்கப்பெற்ற பின், அவை பாரத தேசத்தின் பெரும்பகுதிகளில் பரப்பட்டன. தமிழ்ப் பாசுரங்கள் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், ஒரியா ஆகிய மொழிகளில் எழுதப்பட்டு, அந்தந்த தேசத்து வைணவப் பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தன. வேதம், ஆகம வழிபாட்டில் சமஸ்கிருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலிப்புப் பிழை ஏற்படின் தவறான பொருளாக அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக்கூட பைந்தமிழ்ப் பாசுரங்களை இசைத்துப் பாடும்போது கடவுள் பொறுப்பதாகக் கூறப்பட்டதால், தமிழின் மேன்மையை அறிந்த இராமானுஜர் அனைத்து வைணவ ஆலயங்களிலும் இல்லங்களிலும் பூசை முறைகளில் தமிழ்ப் பாசுரங்களைச் சொல்வதை நடைமுறைக்கு கொண்டு வந்தார். திருவிழாக்களின் போதும் கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் திருத்தி அமைத்தார். இல்லப் பூசைகளிலும் ஆழ்வார்களின் பாசுரங்களை வேதத்துக்கு இணையாக வைணவர்கள் இசைக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது. ஆழ்வார்கள் வடமொழியிலும் தென்மொழியிலும் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களில் பெண் என்பதால் ஆண்டாளையும், நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு. வைணவ இலக்கியங்கள் இராமாயணம் மகாபாரதம் பாகவதம் பகவத்கீதை உத்தவ கீதை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் விஷ்ணு சஹஸ்ரநாமம் திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி வைணவச் சின்னங்கள் திருமண் திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு: வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் பிற சங்கு சக்கரம் துளசி தீர்த்தம் சடாரி வைணவ பிரிவுகள் வைணவ சமயத்தில் ஶ்ரீவைணவம், மாத்வ சம்பிரயாதம், கௌடிய வைணவம், வர்க்காரி, சுவாமிநாராயண் சம்பிரதாயம், அரே கிருட்டிணா இயக்கம் எனப்பல பிரிவுகள் உள்ளன. ஶ்ரீவைணவத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் உண்டு. துணை நூல்கள் Swami Tapasyananda. Bhakti Schools of Vedanta.1990. Sri Ramakrishna Math. Mylapore, Chennai. V.N. Gopaladesikan. A Dialogue on Hinduism. 1990. Vishishtadvaita Research Centre, Madras. Vatsya Ranganatha, Astadasabheda-nirnaya. Edited and translated by Suzanne Siauve. Pondichery: Intitut Francais D 'Indologie Pondichery, 1978 Swami Krishnananda. A Short History of Religious and Philosophical Thought in India. 1970. Divine Life Society, Shivanandanagar. Cultural Heritage of India. Bharatiya Vidya Bhavan, Bombay. Article on ‘The Historical Evolution of Sri Vaishnavism in South India’. V. Krishnamurthy. The Ten Commandments of Hinduism.1994. New Age International. New Delhi. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வைணவ சமயம் பக்தி இயக்கம் இந்து சமயம்
6636
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
திருப்பூர்
திருப்பூர் (Tiruppur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள திருப்பூர் மாவட்டத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது 160 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இம்மாநகரம் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. சமீபத்தில் நடந்த ஆய்வில் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. பின்னலாடை தொழிலில் உலகின் பெரும்பாலான நாடுகள் இந்நகரையே நம்பி உள்ளன. கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகரம் ஆரம்ப காலத்தில் சிறு கிராமமாக இருந்து, இன்று தேசிய அளவில் பின்னலாடை தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. தமிழகத்தில் ஆறாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும். திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரு நகரங்களில் இதுவும் ஒன்று. திருப்பூர் மாநகராட்சியுடன் வேலம்பாளையம், எஸ்.நல்லூர் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், தொட்டிபாளையம், ஆண்டிபாளையம், வீரபாண்டி, செட்டிபாளையம், மண்ணரை, முருகன்பாளையம், நெருப்பெரிச்சல், முத்தனம்பாளையம் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் முக்கியச் சாலைகளாகக் குமரன் சாலை, அவிநாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, காங்கேயம் சாலை, பல்லடம் சாலை, மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட சாலைகள் விளங்குகின்றன. திருப்பூரின் சிறப்புகள் தமிழகத்தின் "டாலர் சிட்டி" என்று அழைக்கப்படும் ஓர் நகரமாக திருப்பூர் உள்ளது. உலக நாடுகள் தங்களது ஆடை உற்பத்திக்கு முதலில் தேர்வு செய்யும் ஓர் நகரமாக திருப்பூர் விளங்குகிறது. கொங்கு மண்டலத்தின் மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி இதுவே ஆகும். சென்னையைப் போலவே வெளிமாநில, வெளிமாவட்ட, வெளிநாட்டினரை சகஜமாக காண முடியும். ஆசிய கண்டத்திலேயே அதிக பெண்கள் பயிலும் பள்ளியாக திருப்பூர் ஜெய்பாவாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இங்கு தான் அமைந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த திருப்பூர் குமரன் உயிர்விட்ட மண் ஆகும். சொற்பிறப்பு திருப்பூர் என்ற பெயர் மகாபாரத காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. புராணக்கதைகளின்படி, பாண்டவர்களின் கால்நடைகள் திருடர்களால் திருடப்பட்டன, பின்னர் அர்ஜுனனின் படைகளால் அது மீண்டும் இவ்வூரிலிருந்து கைப்பற்றப்பட்டது. அதனால் இதற்கு திருப்பூர் (திருப்பு: திரும்பவும் மற்றும் ஊர்: தமிழில் இடம்) என்று பெயர் வந்தது. அதாவது திருப்பித் தரப்பட்ட இடம் என்று பொருள். திருப்பையூர் என்பது இதன் பழைய பெயரெனக் கருதப்படுகிறது. வரலாறு திருப்பூர் ஆனது சங்க காலத்தில் சேரர்களால் ஆளப்பட்ட கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இப்பகுதி இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளை இணைக்கும், ஒரு முக்கிய ரோமானிய வர்த்தக பாதையின் ஒரு பகுதியாக இருந்தது. பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டில் இடைக்கால சோழர்கள் கொங்கு நாட்டை கைப்பற்றினர். பின்னர் இப்பகுதி 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு ஆட்சியின் கீழ் வந்தது. பின்னர் பாளையக்காரர்கள், மதுரை நாயக்கர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர். பின்னர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மதுரை நாயக்கர்களுடன் தொடர்ச்சியான போர்களைத் தொடர்ந்து, இப்பகுதி மைசூர் இராச்சியத்தின் கீழ் வந்தது. ஆங்கிலோ-மைசூர் போர்களில், திப்பு சுல்தானின் தோல்விக்குப் பின்னர், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 1799இல், இப்பகுதியை சென்னை மாகாணத்துடன் இணைத்தது. புவியியல் இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 295 மீட்டர் (968 அடி) உயரத்தில் இருக்கின்றது. மக்கள் வகைப்பாடு 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருப்பூர் மாநகராட்சியின் மக்கள்தொகை 444,352 ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 227,311, பெண்கள் 217,041 ஆகவுள்ளனர். இம்மாநகரத்தின் எழுத்தறிவு 87.81% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 969 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.05%, இசுலாமியர்கள் 10.36%, கிறித்தவர்கள் 3.33% மற்றும் பிறர் 0.26% ஆகவுள்ளனர். 2011 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின், மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 473,637 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 9,63,173 ஆகவும் உள்ளது. திருப்பூரின் தொழில் வளம் தொழில் துறையில் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரம் திருப்பூர். தென்மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பணிபுரிகிறார்கள். ஆண்டு தோறும் பத்து ஆயிரம் கோடிக்கும் மேலான அந்நிய செலவாணியை ஈட்டித் தருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பின்னல் ஆடைகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றவை. பருத்தி பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் 35 இருக்கின்றன. ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ளாடைகள் உற்பத்தியாகின்றன. பனியன் தொழில் வளர்ச்சிக்கு தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உற்பத்திச் செய்கிறது. இதில் 5000 உறுப்பினர்கள் உள்ளனர். அகில இந்திய காதி மற்றும் கிராமத்தொழில் நிறுவனம், கையால் செய்யப்படும் காகிதம் மற்றும் சுத்தமான எண்ணெய் தயாரிக்கும் தொழிலும் திருப்பூரில் நடைபெறுகிறது. திருப்பூர் காதி வஸ்திராலயத்தின் தலைமையிடமாக திருப்பூர் இருக்கிறது. திருப்பூருக்கு மேலும் சிறப்பு செய்யும் தொழிலாக வெளிநாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி தொழில் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் திருப்பூர் மாநகரமானது, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிகள் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். திருப்பூர் மாநகரை உள்ளாட்சி அமைப்பின்படி திருப்பூர் மாநகராட்சி நிர்வகிக்கிறது. 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த கே. சுப்பராயன் வென்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், க. நா. விஜயகுமார் என்பவர் அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதியிலிருந்தும் மற்றும் கே. செல்வராஜ் என்பவர் திமுக சார்பில் திருப்பூர் தெற்கு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போக்குவரத்து பேருந்து நிலையங்கள் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் என இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. திருப்பூர் பழைய பேருந்து நிலையம்: இந்த பேருந்து நிலையம் திருப்பூர் மாநகராட்சியில் மையத்தில் அமைந்துள்ள ஒரு பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திலிருந்து தான் மாவட்டத்தின் அனைத்து நகராட்சி மற்றும் முக்கிய ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக காங்கேயம், தாராபுரம்,உடுமலைப்பேட்டை, அவினாசி, பல்லடம், வெள்ளக்கோயில் என முக்கிய நகரங்களுக்கு பேருந்து சேவைகளை அளிக்கிறது. மேலும் பொள்ளாச்சி, பெரிய நெகமம், காமநாயக்கன்பாளையம், குடிமங்கலம், பொங்கலூர், வால்பாறை, சிவன்மலை, கொடுவாய், சென்னிமலை, குன்னத்தூர், சத்தியமங்கலம், பெருமாநல்லூர், ஊத்துக்குளி, நம்பியூர், பெருந்துறை, கோயம்புத்தூர், சூலூர், காரணம் பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், பழநி, திருச்செங்கோடு, சென்னை, குளித்தலை ஆகிய முக்கிய பகுதிகளுக்கும், மாநகரப் பகுதிகளுக்கு மாநகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தினமும் 20,000 மேற்பட்டோர் பேருந்தில் பயணம் செய்கின்றனர். தினமும் 50,000 மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தை கடந்து செல்கின்றனர். தற்போது பழைய பேருந்து நிலையம் புதுபிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் புதிய பேருந்து நிலையம்: இந்த பேருந்து நிலையம் திருப்பூர் மாநகராட்சியில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பேருந்து நிலையம் ஆகும். இந்த புதிய பேருந்து நிலையம் தான் மாவட்டத்திலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும். இங்கு முழுவதும் வெளி மாவட்டத்தைச் சார்ந்த பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும். இங்கிருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது. குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி, மேட்டுப்பாளையம், ஈரோடு, சத்தியமங்கலம், திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், பெரியகுளம், இராஜபாளையம், கோவில்பட்டி, வேளாங்கண்ணி, கடலூர், சிதம்பரம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தாராபுரம் ஒட்டன்சத்திரம் விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருச்செந்தூர், மணப்பாறை, திருவண்ணாமலை, ஆரணி, வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, பெங்களூர், ஆலங்குடி, கும்பகோணம், மயிலாடுதுறை, முசிறி, விழுப்புரம் என தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநில மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவிழா மற்றும் முக்கிய தினங்களில் பேருந்து நிலையம் நிரம்பி வழியும், காரணம் வெளி மாவட்ட மக்கள் இங்கு அதிகளவில் வசிக்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிலையங்களில் பயணம் செய்கின்றனர். திருப்பூரை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் பின்வருமாறு மாநில நெடுஞ்சாலை 19: பல்லடம் - திருப்பூர் - அவிநாசி மாநில நெடுஞ்சாலை 37: திருப்பூர் - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை 196 மற்றும் 81: திருப்பூர் - கோபிசெட்டிபாளையம் மாநில நெடுஞ்சாலை 169: திருப்பூர் - சோமனூர் மாநில நெடுஞ்சாலை 172: திருப்பூர் - காங்கேயம் : திருப்பூர் - உடுமலைப்பேட்டை : திருப்பூர் - பழனி : திருப்பூர் - கோயம்புத்தூர் : திருப்பூர் - பொள்ளாச்சி : திருப்பூர் - குருவாயூர் : திருப்பூர் - சென்னை : திருப்பூர் - பெங்களூர் : திருப்பூர் - மேட்டுப்பாளையம் : திருப்பூர் - ஈரோடு : திருப்பூர் - சேலம் இங்கிருந்து கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தொடருந்து நிலையம் இந்நகரில் இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இது முழுமையாக மின்மயமாக்கப்பட்ட வழிதடங்கள் ஆகும். இந்த இரயில் நிலையமானது ஈரோடு - கோயம்புத்தூரை நன்கு இணைக்கின்றது. இந்நகரிலிருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள கோயம்புத்தூர் வானூர்தி நிலையம், அருகிலுள்ள வானூர்தி நிலையமாகும். வானிலை மற்றும் காலநிலை திருப்பூரின் சுற்றுலாத் தலங்கள் திருப்பூர் பூங்கா, திருப்பூர் குமரன் நினைவிடம் சுக்ரீஸ்வரா் கோவில் (2500 ஆண்டுகள் பழமையானது), சர்க்கார் பெரியபாளையம். அமராவதி அணை திருமூர்த்தி அணை திருப்பூரில் உள்ள இறை வழிபாடு தலங்கள் சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீசுவரர் கோயில் திருப்பூர் திருப்பதி கைலாசநாதர் திருக்கோயில் திருமுருகன் பூண்டி திருக்கோயில் பெருமாள் கோயில், அழகு மலை ஜோசப் தேவாலயம் அவிநாசி பெரிய கோவில் அருள்மிகு கொண்டத்துகாளியம்மன் திருக்கோவில் காமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீசுவரர் கோவில் முத்தனம்பாளையம் அங்காளம்மன் கோவில் திருப்பூர் பெரிய பள்ளிவாசல் திருப்பூர் ஆறுகள் நொய்யல் ஆறு நல்லாறு கெளசிகா நதி இதனையும் காண்க திருப்பூர் மாவட்டக் காவல்துறை திருப்பூர் மாநகராட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Tirupur Yellow Pages திருப்பூர் மாவட்டம் தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள் தமிழ்நாட்டில் துணித் தொழில்