source
large_stringlengths
7
437
target
large_stringlengths
11
581
"The tsunami didn't come by itself, it dragged cars, logs, houses, it hit everything on land," Nugroho said, adding that the tsunami had traveled across the open sea at speeds of 800 kph (497 mph) before striking the shoreline.
சுனாமியின்போது கார்கள், வீடுகள் அனைத்தும் இழுத்துச் செல்லபட்டன. கரையில் உள்ள அனைத்தையும் அது தாக்கியது என்று நுகரஹொ தெரிவித்தார். கடற்கரையை எட்டும்முன் சுனாமியின் வேகம் கடலில் மணிக்கு 800 kph (497 mph) அளவில் இருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
Some people climbed trees to escape the tsunami and survived, he said.
மரங்களின் மீது ஏறிய சிலர் தப்பித்ததாக அவர் தெரிவித்தார்.
Around 16,700 people were evacuated to 24 centers in Palu.
பலுவில் உள்ள 24 மையங்களுக்கு சுமார் 16,700 பேர் வெளியேற்றப்பட்டனர்.
Aerial photographs released by the disaster agency showed many buildings and shops destroyed, bridges twisted and collapsed and a mosque surrounded by water.
சிதைக்கப்பட்ட கட்டடங்கள், கடைகள், சிதைந்து விழுந்த பாலங்கள் மற்றும் நீர் சூழப்பட்ட மசூதிகள் ஆகியவற்றின் ஏரியல் புகைப்படங்களை பேரிடர் முகமை வெளியிட்டது..
Aftershocks continued to rock the coastal city on Saturday.
சனிக்கிழமையன்று பாதிப்புகளுக்கு பிறகான சிக்கல்கள் தொடர்ச்சியாக கடற்கரை நகரைப் பாதிக்கிறது.
The series of earthquakes were felt in an area with 2.4 million people.
2.4 மில்லியன் மக்கள் வாழுமிடத்தில் தொடர்ச்சியான நிலநடுக்கம் உணரப்பட்டது.
Indonesia's Agency for the Assessment and Application of Technology (BPPT) said in statement the energy released by Friday's massive quake was around 200 times the power of the atomic bomb dropped on Hiroshima in World War Two.
இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டின் சக்தியை விட 200 மடங்கு சக்திவாய்ந்தது வெள்ளிக்கிழமை நடந்த நிலநடுக்கம் என இந்தோனேசியாவின் மதிப்பீடு மற்றும் தொழில்நுட்ப உள்ளீடு முகமை (BPPT)தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
The geography of the city, which sits at the end of a long, narrow bay, could have magnified the size of the tsunami, it said.
நீண்ட குறுகிய கடலின் எல்லையில் அமைந்த நகரின் புவியியல் அமைப்பு, சுனாமியின் அளவைப் பெரிதாக்கியிருக்கலாம் என அறிக்கை தெரிவிக்கிறது.
Nugroho described the damage as "extensive" and said thousands of houses, hospitals, shopping malls and hotels had collapsed.
ஆயிரக்கணக்கான வீடுகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் உணவுவிடுதிகள் சிதைந்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருப்பதாக நுக்ரோஹோ தெரிவித்தார்.
Bodies of some victims were found trapped under the rubble of collapsed buildings, he said, adding 540 people were injured and 29 were missing.
சிதைந்த கட்டடங்களின் இடுக்குகளில் உயிரிழந்தவர்களின் உடல் சிக்கியிருப்பதாகத் தெரிவித்த அவர், 540 பேர் காயமடைந்திருப்பதாகவும் 29 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவித்தார்.
Nugroho said the casualties and the damage could be greater along the coastline 300 km (190 miles) north of Palu, an area called Donggala, which is closer to the epicenter of the quake.
பலுவிலிருந்து வடக்குப் பக்கம் 300 கிலோமீட்டர் (190 மைல்கள்) தொலைவில் இருக்கும் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு மிக அருகிலுள்ள பகுதியான டோங்கலாவில் உயிரிழப்பும் பாதிப்பும் மிக.
Communications "were totally crippled with no information" from Donggala, Nugroho said.
டோங்கலாவில் "தகவல்தொடர்பு மொத்தமாக அறுபட்டு" தகவலற்ற நிலை நிலவுவதாக நுக்ரோஹோ கூறினார்.
There are more than 300,000 people living there," the Red Cross said in a statement, adding that its staff and volunteers were heading to the affected areas.
300,000-க்கும் அதிகமான மக்கள் அங்கு வாழ்கிறார்கள், " என தெரிவித்த செஞ்சிலுவை அமைப்பு, தனது பணியாளர்களும், தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று கொண்டிருப்பதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"This is already a tragedy, but it could get much worse," it said.
இது ஒரு பெரும் சேதம். ஆனால் இது இன்னும் மோசமானதாக மாறலாம் எனத் தெரிவிக்கிறது அறிக்கை.
The agency on Saturday was widely criticized for not informing that a tsunami had hit Palu, though officials said waves had come within the time the warning was issued.
அதிகாரிகள் அலைகளைக் குறித்து எச்சரிக்கை விடித்திருந்தபோதும், பலுவில் சுனாமி தாக்கியதைத் தெரிவிக்காததாக முகமை மீது சனிக்கிழமையன்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
In amateur footage shared on social media a man on the upper floor of a building can be heard shouting frantic warnings of the approaching tsunami to people on the street below.
சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், கட்டடம் ஒன்றின் மேல்மாடியில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் தெருவில் இருந்த மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை கோஷங்களை எழுப்பி எச்சரித்துக்கொண்டிருந்தது தெரிய வருகிறது.
Within minutes a wall of water crashes onto the shore, carrying away buildings and cars.
சில நிமிடங்களுக்குள், கரைக்கு வந்த பெரிய அளவிலான அலைகள் கட்டடங்களையும், கார்களையும் தன்னுள்ளே வாரிச்சென்றது.
Reuters was not able to immediately authenticate the footage.
ராய்டர்ஸால் உடனடியாக அந்த வீடியோவின் உண்மைத்தகவலை கண்டறியமுடியவில்லை.
The quake and tsunami caused a major power outage that cut communications around Palu making it difficult for authorities to coordinate rescue efforts.
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட மின் துண்டிப்புகளால், தகவல் தொடர்பு முழுமையாக பாதிக்கப்பட்டு பலுவைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒருங்கிணைப்பதில் அதிகாரிக்குச் சிரமம் ஏற்பட்டது்.
The military has started sending in cargo planes with aid from Jakarta and other cities, authorities said, but evacuees still badly need food and other basic necessities.
ஜகார்ட்டா மற்றும் பிற நகரங்களில் இருந்து கார்கோ விமானங்கள் மூலமாக உதrpaவிகள் ராணுவத்தால் அனுப்பப்பட்டாலும், உணவு மற்றும் மிக அடிப்படையான தேவைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The city's airport has been reopened only for relief efforts and will remain closed until Oct.
நகரத்தின் விமான நிலையம், நிவாரண உதவிகளுக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இறுதிவரை மூடப்பட்டிருக்கும்.
President Joko Widodo was scheduled to visit evacuation centers in Palu on Sunday.
ஞாயிற்றுக்கிழமையன்று பலுவில் உள்ள நிவாரண மையங்களை அதிபர் ஜோகோ விடோடோ பார்வையிடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
Indonesia Tsunami Toll Soars Above 800.
இந்தோனேசிய சுனாமியில் பலியானோர் எண்ணிக்கை 800-ஆக உயர்ந்துள்ளது.
It Is Very Bad.
இது மிகவும் கேடானது.
While World Vision's staff from Donggala have made it safely to Palu city, where employees are sheltering in tarpaulin shelters set up in the courtyard of their office, they passed scenes of devastation on the way, Mr. Doseba said.
டோங்கலாவின் இருந்து வேர்ல்டு விஷன் பணியாளர்கள் பலுவுக்கு பாதுகாப்பாக பயணித்தாலும், பலுவில் அலுவலக அரங்கில் தார்ப்பாலின் குடில்கள் அமைத்து பணியாளர்கள் தங்கியிருந்தாலும், சேதங்களைக் குறித்து பயண வழியில் அவர்கள் தெரிவித்ததாக திரு.டொசெபா கூறினார்.
"They told me they saw lots of houses that were destroyed," he said.
பல வீடுகள் அழிந்திருந்ததை அவர்கள் பார்த்ததாக தெரிவித்தார்கள் என அவர் கூறினார்.
It is very bad.
இது மிகவும் மோசமானது.
Even as aid groups began the grim motions of starting the gears of disaster relief, some complained that foreign aid workers with deep expertise were being prevented from traveling to Palu.
உதவிக் குழுக்கள் முழுவீச்சில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், அனுபவம் வாய்ந்த வெளியாட்டு உதவித் தன்னார்வலர்கள் பலுவுக்கு பயணமாவதைத் தடுக்கிறார்கள் என சிலர் குற்றம்சாட்டினர்.
According to Indonesian regulations, funding, supplies and staffing from overseas can only start flowing if the site of a calamity is declared a national disaster zone.
இந்தோனேசிய விதிமுறைகளின்படி, பாதிப்பு நடந்த பகுதி தேசியப் பேரிடர் மண்டலமாக அறிவிக்கப்பட்டால்தான் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி மற்றும் பொருள் விநியோகம் நாட்டுக்குள் நுழையமுடியும்.
That has not happened yet.
அது இன்னும் நடக்கவில்லை.
"It's still a province level disaster," said Aulia Arriani, a spokesperson for the Indonesian Red Cross.
இது இன்னும் மாகாண அளவிலான சேதமாக இருக்கிறது என இந்தோனேசிய செஞ்சிலுவை சங்கத்தின் செய்தித்தொடர்பாளரான அலியா அர்ரியானி தெரிவித்தார்.
"Once the government says, "O.K., this is a national disaster," we can open for international assistance but there's no status yet."
ஆம், இது தேசியப் பேரிடர்தான்" என அரசு அறிவித்த அடுத்த நிமிடம் நம்மால் சர்வதேச உதவியைப் பெறமுடியும். ஆனால் அது இன்னும் நடக்கவில்லை.
As the second night fell on Palu after Friday's earthquake and tsunami, friends and family of those still missing were holding out hope that their loved ones would be the miracles that leaven the bleak story lines of natural disasters.
நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்ட பிறகு, பலுவின் இரண்டாவது இரவில், காணாமல் போன தங்களின் அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருந்த குடும்பங்களும், நண்பர்களும் இயற்கைச் சீற்றங்களின் வலியை உணர்த்தின.
On Saturday, a little boy was plucked from a sewer.
சனிக்கிழமையன்று சிறுவன் ஒருவன் கழிவுநீர்த்தொட்டியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டான்.
On Sunday, rescuers freed a woman who had been pinned under rubble for two days with the body of her mother next to her.
ஞாயிற்றுக்கிழமையன்று,, கட்டட இடிபாடுகளுக்கு இடையில் தன் இறந்த தாயின் உடலுக்கு அருகிலேயே சிக்கியிருந்த பெண்ணை நிவாரணப் பணியாளர்கள் மீட்டனர்.
Gendon Subandono, the coach of the Indonesian national paragliding team, had trained two of the missing paragliders for the Asian Games, which wrapped up earlier this month in Indonesia.
இந்த மாதத் தொடக்கத்தில் இந்தோனோசியாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், காணாமல் போன இரண்டு பாராக்ளைடர்களை பயிற்றுவித்தவர், இந்தோனேசிய தேசிய ஜெண்டன் சுபாண்டோனோ.
Others of those trapped at the Roa Roa Hotel, Mr. Mandagi included, were his students.
மிஸ்டர் மண்டகி உட்பட Roa Roa உணவகத்தில் அகப்பட்டவர்கள் அனைவரும் அவரது மாணவர்கள்.
"As a senior in the paragliding field, I have my own emotional burden," he said.
பாராக்ளைடிங் துறையில் மூத்தவர் என்பதால் எனக்கு இதில் மிகப்பெரிய உணர்வுச்சுமையாக இருக்கிறது எனத் தெரிவித்தார்..
Mr. Gendon recounted how, in the hours after the news of the Roa Roa Hotel collapse circulated among the paragliding community, he had desperately sent WhatsApp messages to the Palu competitors, who were taking part in the beach festival.
பாராக்ளைடிங் சமூகத்தில் Roa Roa உணவகம் சிதைந்தது தொடர்பான செய்தி கிடைத்தவுடன், பீச் திருவிழாவில் இருந்த பலு போட்டியாளர்களுக்கு எப்படி WhatsApp செய்திகளை அனுப்பினார் என்பதை நினைவுகூர்ந்தார்.
His messages, though, only resulted in one gray check mark, rather than a pair of blue checks.
அவரது செய்திகளுக்கு நீல நிற குறியீடுகள் கிடைப்பதற்கு பதிலாக, வெறும் சாம்பல் நிற குறியீடுகள்தான் கிடைத்திருக்கிறது
"I think that means the messages were not delivered," he said.
செய்திகள் அவர்களைச் சென்று சேரவில்லை என நினைத்தேன் என்று கூறினார்.
Thieves take $26,750 during ATM refill at Newport on the Levee
லெவீயில் உள்ள நியூபோர்ட்டில், ஏடிஎம் நிரப்பப்படும்போது, $26,750-ஐத் திருடர்கள் திருடிச்சென்றார்கள்.
Thieves on Friday morning stole $26,750 from a Brink's worker refilling an ATM at Newport on the Levee, according to a news release from the Newport Police Department.
நியூபோர்ட் காவல்துறை வெளியிட்ட செய்தியின்படி, வெள்ளிக்கிழமையன்று காலை லெவீயில் உள்ள நியூபோர்ட்டில் ப்ரிங்க்கின் பணியாளர் ஏடிஎம்மை நிரப்பும்போது $26750-ஐ திருடர்கள் திருடிச்சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The car's driver had been emptying an ATM in the entertainment complex and preparing to deliver more money, Det. Dennis McCarthy wrote in the release.
அந்த பொழுதுபோக்கு வளாகத்திலிருந்த ஏடிஎம்மைக் காலி செய்து, அதில் பணத்தை நிரப்புவதற்கான தயாரிப்பில் அந்த காரில் ட்ரைவர் இருந்தார். டெட்.டென்னிஸ் மெக் கார்த்தி அறிக்கையில் இப்படித் தெரிவித்திருந்தார்.
While he was occupied, another man "ran up from behind the Brink's employee" and stole a bag of money meant for delivery.
அந்த வேலையை அவர் செய்துகொண்டிருந்தபோது, நிரப்பப்படவிருந்த பணத்தை, "ப்ரிங்க் பணியாளரின் பின்புறத்தில் இருந்து வந்த நபர் திருடிக்கொண்டு சென்றார்".
Witnesses spotted multiple suspects fleeing the scene, according to the release, but police did not specify the number involved in the incident.
அறிக்கையின்படி அச்சம்பவத்தைப் பார்த்தவர்கள் பலரைச் சந்தேகப்பட்டனர். ஆனால் அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் சரியான எண்ணிக்கையை போலீசார் இன்னும் தெரிவிக்கவில்லை.
Anyone with information about their identities should contact Newport police at 859-292-3680.
திருடர்கள் அடையாளங்களைக் குறித்த தகவல்கள் எவருக்கும் தெரிந்தால், 859-292-3680 என்னும் எண்ணுக்கு நியூபோர்ட் போலீஸைத் தொடர்புக்கொள்ளவும்.
Kanye West: Rapper changes his name to Ye
கன்யே வெஸ்ட்: ராப் பாடகர் தனது பெயரை யெ என மாற்றிக்கொண்டார்
Rapper Kanye West is changing his name - to Ye.
ராப் பாடகர் கன்யே வெஸ்ட் தனது பெயரை யே என மாற்றிக்கொண்டார்.
Announcing the change on Twitter on Saturday, he wrote: "The being formally known as Kanye West."
சனிக்கிழமையன்று பெயர் மாற்றத்தை ட்விட்டரில் அறிவித்தார் என்று அவர் எழுதினார்: அவர் பொதுவாக கன்யே வெஸ்ட் என்று அழைக்கப்படுவார்.
West, 41, has been nicknamed Ye for some time and used the moniker as the title for his eighth album, which was released in June.
41 வயதான வெஸ்ட் சில காலத்துக்கு தனது புனைப்பெயரான யே என்று அழைக்கப்பட்டார். ஜூனில் வெளியான தனது எட்டாவது ஆல்பத்துக்கு அதையே தலைப்பாக வைத்தார்.
The change comes ahead of his appearance on Saturday Night Live, where he is expected to launch his new album Yandhi.
வெஸ்ட்டின் புதிய ஆல்பமான யந்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில், சனிக்கிழமை நேரலையில் இந்த பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்டது.
He replaces singer Ariana Grande on the show who cancelled for "emotional reasons," the show's creator said.
உணர்வுரீதியான காரணங்களுக்காக ஷோவை ரத்து செய்த பாடகர் ஏரியானா க்ராண்ட்டை இடமாற்றுவதாக ஷோவின் இயக்குநர் தெரிவித்தார்.
As well as being an abbreviation of his current professional name, West has previously said the word has religious significance for him.
தற்போதைய தொழிற்பெயருக்கு சுருக்கமான வடுவமாக இருப்பதாலும், அவருக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த பெயராகவும் அதை வைத்திருப்பதாக வெஸ்ட் தெரிவித்தார்.
"I believe 'ye' is the most commonly used word in the Bible, and in the Bible it means 'you,'" West said earlier this year, discussing his album title with radio host Big Boy.
"'யே' என்பது பைபிளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எனவும், யே என்றால் 'நீ' என்றும்" பிக்பாய் வானொலி நெறியாளரிடம் ஆல்பத்தில் தலைப்பைக் குறித்துப் பேசும்போது வெஸ்ட் கூறினார்.
"So I'm you, I'm us, it's us.
ஆக, நான்தான் நீ. நான்தான் நாம்.
It went from Kanye, which means the only one, to just Ye - just being a reflection of our good, our bad, our confused, everything.
அதுதான் கன்யேவிலிருந்து யே-வாகக் காரணம். நம் நன்மை, தீமை, குழப்பம் மற்றும் எல்லாவற்றையும் பற்றியது இது.
The album is more of a reflection of who we are."
நம் ஒவ்வொருவரைப் பற்றிய எல்லாவற்றையும் கொண்டதுதான் இந்த ஆல்பம்.
He is one of a number of famous rappers to change their name.
பெயரை மாற்றிக்கொண்ட பிரபல ராப் பாடகர்களுள் அவரும் ஒருவர்.
Sean Combs has been variously known as Puff Daddy, P. Diddy or Diddy, but this year announced his preference for the names Love and Brother Love.
சீன் கோம்ப்ஸ் puff daddy, P.Diddy அல்லது Diddy எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டார். ஆனால், Love மற்றும் Brother Love என்னும் பெயர்களுக்கு இந்த வருடம் முன்னுரிமை அளித்திருக்கிறார்.
A former West collaborator, JAY-Z, has also made do with or without a hyphen and capitals.
முன்னாள் வெஸ்ட் கூட்டாளரான JAY-Z கூட, தனது பெயரை ஹைஃபென் வைத்தும், இல்லாமலும், கேபிட்டல் எழுத்திலும் மாற்றினார்.
Mexico's AMLO vows not to use military against civilians
மெக்சிகோவின் AMLO குடிமக்களுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்துவதில்லை என உறுதியெடுத்திருக்கிறது.
Mexican President-elect Andres Manuel Lopez Obrador has vowed to never use military force against civilians as the country approaches the 50th anniversary of a bloody reprisal against students.
மாணவர்களுக்கு எதிரான ரத்தவெறித் தாக்குதல் நடந்த 50வது ஆண்டு நெருங்குவதால், குடிமக்களுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்துவதில்லை என மெக்சிகன் அதிபர் ஆண்ட்ரெஸ்
Lopez Obrador promised Saturday at Tlatelolco Plaza to "never ever use the military to repress the Mexican people."
லாடெலோல்கோ ப்ளாஸாவில் சனிக்கிழமையன்று, "மெக்சிகன் மக்களுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்துவதில்லை" என உறுதி அளித்தார் லோபெஸ் ஓப்ரடார்.
Troops fired on a peaceful demonstration at the plaza on Oct. 2, 1968, killing as many as 300 people at a time when leftist student movements were taking root throughout Latin America.
லத்தீன் அமெரிக்கா முழுவதும் இடதுசாரி மாணவர் இயக்கங்கள் வேர்விட்டபோது, ஒரு நேரத்தில் அக்டோபர் 2, 1968 அன்று 300 பேர்கள் கொல்லப்பட்டதற்காக படைகள் அமைதி ஊர்வலத்தை நடத்தினர்.
Lopez Obrador has pledged to support young Mexicans by giving monthly subsidies to those who study and opening more free public universities.
படிப்பவர்களுக்கு மாதாந்திர மானியம் அளிப்பதாகவும், கூடுதல் இலவச பொதுப் பல்கலைக்கழகங்களை அமைத்து மெக்சிகன் மக்களுக்கு ஆதரவு தர இருப்பதாகத் தெரிவித்தார் லோபெஸ் ஓப்ரடார்.
He has said that unemployment and a lack of educational opportunities draws youth to criminal gangs.
வேலைவாய்ப்பின்மையும், கல்வி வாய்ப்புகள் குறைவாக இருப்பதும்தான் மாணவர்களை குற்றச்செயல்களைச் செய்யும் கும்பலோடு இணைக்கிறது என்று கூறினார்.
U.S. should double A.I. funding
அமெரிக்கா, A.I நிதியை இரட்டிப்பாக்க வேண்டும்
As China becomes more active in artificial intelligence, the U.S. should double the amount it spends on research in the field, says investor and AI practitioner Kai-Fu Lee, who has worked for Google, Microsoft and Apple.
செயற்கை நுண்ணறிவில் சீனா மிகுந்த ஈடுபாட்டோடு இருக்கும் நிலையில், இந்தத்துறையில் அமெரிக்கா தனது ஆய்வு நடவடிக்கைகளை இரட்டிப்பாக்க வேண்டும் என முதலீட்டாளரும், A.I பயிற்சிசெய்யும் நபரும், Google,Apple மற்றும் Microsoft-இல் பணிபுரிந்தவருமான கை-ஃபு லீ தெரிவித்தார்.
The comments come after various parts of the U.S. government have made AI announcements, even as the U.S. overall lacks a formal AI strategy.
முறையான A.I யுக்தி அமெரிக்காவுக்கு குறைவாக இருந்தாலும், அமெரிக்க அரசின் பல பகுதிகளும் A.I அறிவிப்புகளை அறிவிக்கும்போது இந்த கருத்துக்கள் வரத் தொடங்கின.
Meanwhile, China introduced its plan last year: it's aiming to be No.1 in AI innovation by 2030.
இதற்கிடையில், சீனா கடந்த ஆண்டு தனது திட்டத்தை அறிவித்தது: 2030-இல் A.I கண்டுபிடிப்புகளில் நம்பர் 1-ஆக மாறும் திட்டம் அது.
"Double the AI research budget would be a good start, given that all other countries are so much farther behind U.S., and we're looking for the next breakthrough in AI," said Lee.
மற்ற நாடுகள் அமெரிக்காவை விட மிகவும் பின்தங்கியிருக்கும் நிலையில், A.I-க்கான ஆய்வு பட்ஜெட்டை இரட்டிப்பாக்குவது நல்ல தொடக்கமாக இருக்கும். மேலும் நாங்கள் அதை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார் லீ.
Doubling funding could double the chances that the next big AI achievement will be made in the U.S., Lee told CNBC in an interview this week.
இரட்டிப்பான நிதி ஒதுக்கீடு, அமெரிக்காவின் AI சாதனைகளுக்கான வாய்ப்புகளையும் இரட்டிப்பாக்கும் என இந்த வாரம் CNBC-க்கு அளித்த நேர்காணலில் லீ தெரிவித்தார்.
Lee, whose book "AI Superpowers: China, Silicon Valley and the New World Order" was published this month by Houghton Mifflin Harcourt, is CEO of Sinovation Ventures, which has invested in one of the most prominent AI companies in China, Face++.
எனினும் லீயின் புத்தகம்: சீனா, Face++-இல் முதன்மையான AI நிறுவனங்களில் ஒன்றில் முதலீடு செய்திருக்கும் Sinovation Ventures-இன் CEO-வான ஹவுட்டன் மிஃப்ளின் ஹார்கோர்ட்டால் இந்த மாதம் வெளியிடப்பட்டது.
In the 1980s at Carnegie Mellon University he worked on an AI system that beat the highest-ranked American Othello player, and later he was an executive at Microsoft Research and president of Google's China branch.
1980-களில் உயர்ந்த அமெரிக்கன் ஆதல்லோ ப்ளேயரை முந்திய AI அமைப்பில், கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். Microsoft-இல் எக்சியூட்டிவ்வாகவும் Google-இன் சீனப் பிரிவுக்கு தலைவராகவும் இருந்தார்.
Lee acknowledged previous U.S. government technology competitions like the Defense Advanced Research Projects Agency's Robotics Challenge and asked when the next one would be, in order to help identify the next visionaries.
அடுத்த தொலைநோக்காளர்களைக் கண்டறியும் விதமாக, அடுத்த யார் என்பது தொடர்பாகவும், பாதுகாப்பு மேம்பட்ட ஆய்வு திட்ட முகமைகளின் ரோபோட்டிங் சவால்கள் போன்ற முந்தைய அமெரிக்க அரசின் தொழில்நுட்ப போட்டிகளை லீ அங்கீகரித்தார்.
Researchers in the U.S. often have to work hard in order to win government grants, Lee said.
அரசின் மானியத்தைப் பெறுவதற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் இன்னும் அதிகமாக கடின உழைப்பைச் செலுத்தவேண்டும் என லீ கூறினார்.
"It's not China that is taking away the academic leaders; it's the corporates," Lee said.
கல்வியில் சிறந்தவர்களை சீனா எடுத்துக்கொள்ளவில்லை, கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுத்துக்கொள்கின்றன என லீ கூறினார்.
Facebook, Google and other technology companies have hired luminaries from universities to work on AI in recent years.
சமீபத்திய ஆண்டுகளில் AI-இல் பணிபுரிவதற்கு, பல்கலைக்கழகங்களிலிருந்து அறிவுஜீவிகளை Facebook, Google மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தார்.
Lee said immigration policy changes could also help the U.S. bolster its AI efforts.
குடியேற்றக் கொள்கைகளில் மாற்றம் செய்வதுகூட AI முயற்சிகளில் அமெரிக்காவின் போல்ஸ்டருக்கு உதவியாக இருக்கும் என லீ தெரிவித்தார்.
"I think green cards should automatically be offered to PhD's in AI," he said.
AI-இல் முனைவர் பட்டம் பெற்ற எல்லோருக்கும் தானாகவே க்ரீன் கார்டு கிடைக்கவேண்டும் என நினைக்கிறேன், என அவர் கூறினார்.
China's State Council issued its Next Generation Artificial Intelligence Development Plan in July 2017.
சீனாவின் ஸ்டேட் கவுன்சில், அதன் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு வளர்ச்சித் திட்டத்தை ஜூலை 2017-இல் வழங்கியது.
China's National Natural Science Foundation provides funding to people at academic institutions similar to the way that the National Science Foundation and other government organizations dole out money to U.S. researchers, but the quality of academic work is lower in China, Lee said.
தேசிய அறிவியல் நிறுவனம் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி அளிப்பதைப்போல், சீனாவின் தேசிய இயற்கை அறிவியல் நிறுவனம் கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. ஆனால், கல்விப்பணிகளின் தரம் சீனாவில் குறைவாக உள்ளது என தெரிவித்தார் லீ.
Earlier this year the U.S. Defense Department established a Joint Artificial Intelligence Center, which is meant to involve partners from industry and academia, and the White House announced the formation of Select Committee on Artificial Intelligence.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனங்களிலிருந்தும் கல்வி நிறுவனங்களிலிருந்தும் கூட்டாளர்களைப் பணியில் உட்படுத்தும் வகையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை கூட்டு செயற்கை நுண்ணறிவு மையத்தைத் தொடங்கியது. செயற்கை நுண்ணறிவின் மீதான தேர்வுக் கமிட்டி உருவாக்கத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டது.
And this month DARPA announced a $2 billion investment in an initiative called AI Next.
DARPA, இந்த மாதம் AI NEXT என்னும் தொடக்க முயற்சியில் $2 பில்லியன் முதலீட்டை அறிவித்திருக்கிறது.
As for the NSF, it currently invests more than $100 million per year in AI research.
NSF-ஐப் போல, AI ஆராய்ச்சியில் ஒரு ஆண்டுக்கு $100 மில்லியனைத் தற்போது முதலீடு செய்கிறது.
Meanwhile, U.S. legislation that sought to create a National Security Commission on Artificial Intelligence has not seen action in months.
இதற்கிடையே, செயற்கை நுண்ணறிவின் மீதான தேசிய பாதுகாப்பு கமிஷனைக் கோரிய அமெரிக்க சட்டம் சில மாதங்களாக நடவடிக்கை ஏதுமற்று உள்ளது.
Macedonians vote in referendum on whether to change country's name
மேகடோனியன்கள், நாட்டின் பெயரை மாற்றும் வாக்கெடுப்பில் வாக்களிக்கிறார்கள்
The people of Macedonia voted in a referendum on Sunday on whether to change its name to "Republic of North Macedonia," a move that would resolve a decades-old dispute with Greece which had blocked its membership bids for the European Union and NATO.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், NATO-க்குமான அதன் உறுப்பினராகுவதைத் தடுத்துவந்த க்ரீஸ் உடனான பல்லாண்டு பிரச்சனைக்குத் தீர்வளிக்கக்கூடியது பெயர் மாற்றம். "வட மேகடோனியக் குடியரசு" என்னும் பெயர் மாற்றம் வேண்டுமா என்னும் வாக்கெடுப்பில் மாசிடோனிய மக்கள் வாக்களித்தனர்.
Greece, which has a province called Macedonia, maintains that its northern neighbor's name represents a claim on its territory and has vetoed its entrance into NATO and the EU.
மேகடோனியா என்னும் மாகாணத்தைக் கொண்ட க்ரீஸ், வடக்குப் பெயர் கொண்ட மேகடோனியப் பகுதி தனது அதிகாரத்தை தொடர்ந்து NATO-இலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் தனது நுழைவைப் பதிவு செய்திருக்கிறது.
The two governments struck a deal in June based on the proposed new name, but nationalist opponents argue the change would undermine the ethnic identity of Macedonia's Slavic majority population.
முன்மொழியப்பட்ட புதிய பெயரின் மீது, ஜூன் மாதம் இரு அரசுகளும் உடன்பாட்டுக்கு வந்தது. ஆனால், இந்த பெயர் மாற்றத்தால் மேகடோனியாவின் ஸ்லேவிக் பெரும்பான்மை மக்கள் தங்களது இன அடையாளத்தின் வலிமையை இழப்பார்கள் தேசியவாத எதிர்தரப்பு வாதிடுகிறது.
President Gjorge Ivanov has said he will not be voting in the referendum and a boycott campaign has cast doubts on whether turnout will meet the minimum 50 percent required for the referendum to be valid.
வாக்கெடுப்பில் வாக்களிக்கப்போவதில்லை எனத் தெரிவித்தார் அதிபர் ஜார்ஜ் இவனோவ். வாக்கெடுப்பு செல்லுபடியாவதற்கான 50 சதவிகிதம் வாக்கெடுப்பாவது இருக்குமா என புறக்கணிப்பு பிரச்சாரங்கள் கேள்வி எழுப்புகின்றன.
The question on the referendum ballot read: "Are you for NATO and EU membership with acceptance of the agreement with Greece."
வாக்கெடுப்பு பேலட்டில் உள்ள கேள்வியின்படி: க்ரீஸுடனான ஒப்பந்தத்தின் ஏற்புடன் NATO மற்றும் EU உறுப்பினர்தன்மைக்கானவரா நீங்கள்.
Supporters of the name change, including Prime Minister Zoran Zaev, argue that it is a price worth paying to pursue admission into bodies such as the EU and NATO for Macedonia, one of the countries to emerge from the collapse of Yugoslavia.
முதன்மை அமைச்சர் ஜொரான் ஜேவ் உட்பட பெயர்மாற்றத்தின் ஆதரவாளர்கள், யுகோஸ்லேவிய சிதைவிலிருந்து உருவாக்கும் நாடுகளில் ஒன்றாக, மேகடோனியாவிற்கான EU மற்றும் NATO-ஐப்போலான நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது சரியானதுதான் என விவாதித்தார்.
"I came today to vote for the future of the country, for young people in Macedonia so they can be live freely under the umbrella of the European Union because it means safer lives for all of us," said Olivera Georgijevska, 79, in Skopje.
நாட்டின் எதிர்காலத்துக்காக வாக்களிக்க வந்திருக்கிறேன். இளைஞர்களுக்காக வாக்களிக்க வந்திருக்கிறேன். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அடியில் அவர்கள் சுதந்திரமாக வாழவேண்டும். ஏனெனில் அதுதான் நம் அனைவரின் வாழ்க்கைக்கும் பாதுகாப்பானது என்று கூறினார் ஸ்கோப்ஜேவைச் சேர்ந்த 79 வயதான ஆலிவெரா ஜார்ஜியோவ்ஸ்கா.
Although not legally binding, enough members of parliament have said they will abide by the vote's outcome to make it decisive.
சட்டப்படியானதாக இல்லாமல் இருந்தாலும், முடிவெடுப்பதற்கு வாக்கெடுப்பின் முடிவையே சார்ந்திருப்பதாக பாராளுமன்றத்தின் போதிய உறுப்பினர்கள் தெரிவித்துவிட்டார்கள்.
The name change would requires a two-thirds majority in parliament.
பெயர் மாற்றத்துக்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பகுதி உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.
The state election commission said there had been no reports of irregularities by 1 p.m.
1 மணி வரையில் எந்த விதிமுறை மீறல்களும் நடக்கவில்லை என மாநில தேர்தல் கமிஷன் தெரிவித்தது.
However, turnout stood at only 16 percent, compared to 34 percent in last parliamentary election in 2016 when 66 percent of the registered voters cast their ballot.
எனினும், வாக்கெடுப்பு சதவிகிதம் 16. 66 சதவிகிதம் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளித்த 2016 பாராளுமன்ற தேர்தலில் 34 சதவிகிதம் வாக்குப்பதிவு இருந்தது.
"I came out to vote because of my children, our place is in Europe," said Gjose Tanevski, 62, a voter in the capital, Skopje.
எனது குழந்தைகளுக்காக நான் வாக்களிக்க வந்தேன். நாங்கள் வசிக்கும் இடம் ஐரோப்பா, தலைநகரத்தின் வாக்காளரான ஸ்கோப்ஜேவிலிருந்து 62 வயதான வாக்காளர் ஜோஸ் டெனவ்ஸ்கி கூறினார்.