text
stringlengths 0
439
|
|---|
"lord_compliment":
|
"line1": "ஆத்தி சூடி யமர்ந்த தேவனை",
|
"line2": "ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே",
|
"meaning": "ஆத்தி-திருவாத்திப் பூமாலையை, சூடி-தரிப்பவராகிய சிவபெருமான், அமர்ந்த-விரும்பிய, தேவனை-விநாயகக் கடவுளை, யாம்-நாம், ஏத்தி ஏத்தி - வாழ்த்தி வாழ்த்தி, தொழுவோம்-வணங்குவோம்.",
|
"paraphase": "சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் பலகாலும் துதித்து வணங்குவோம். விநாயகக் கடவுள் சிவபெருமானுக்கு மூத்த பிள்ளையார் ஆதலின், சிவபெருமான் விரும்பிய தேவன் என்று கூறப்பட்டார்."
|
"athisudi":
|
"number": 1,
|
"poem": "அறஞ்செய விரும்பு",
|
"meaning": "அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு, விரும்பு - நீ ஆசை கொள்ளு",
|
"paraphrase": "நீ தருமம் செய்ய ஆசைப்படு",
|
"translation": "Intend to do right deeds"
|
"number": 2,
|
"poem": "ஆறுவது சினம்",
|
"meaning": "ஆறுவது-தணியவேண்டுவது, சினம்-கோபமாம்",
|
"paraphrase": "கோபம் தணியத் தகுவதாம்",
|
"translation": "Anger is temporary"
|
"number": 3,
|
"poem": "இயல்வது கரவேல்",
|
"meaning": "இயல்வது-கொடுக்கக்கூடிய பொருளை, கரவேல்- (இரப்பவர்களுக்கு) ஒளியாதே,",
|
"paraphrase": "கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு",
|
"translation": "Aid to your capacity"
|
"number": 4,
|
"poem": "ஈவது விலக்கேல்",
|
"meaning": "ஈவது-(ஒருவர்க்கு மற்றொருவர்) கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே",
|
"paraphrase": "ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே",
|
"translation": "Never stop aiding"
|
"number": 5,
|
"poem": "உடையது விளம்பேல்",
|
"meaning": "உடையது - (உனக்கு) உள்ள பொருளை, விளம்பேல் - (பிறர் அறியும்படி) சொல்லாதே",
|
"paraphrase": "உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.",
|
"translation": "Never boast your possession"
|
"number": 6,
|
"poem": "ஊக்கமது கைவிடேல்",
|
"meaning": "ஊக்கம் - (செய்யுந் தொழிலில்) மன எழுச்சியை, கைவிடேல் - கைவிடாதே",
|
"paraphrase": "நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே(அது: பகுதிப்பொருள் விகுதி.)",
|
"translation": "Never give up enthusiasm"
|
"number": 7,
|
"poem": "எண்ணெழுத் திகழேல்",
|
"meaning": "எண் - கணித நூலையும், எழுத்து - இலக்கண நூலையும், இகழேல் - இகழ்ந்து தள்ளாதே",
|
"paraphrase": "கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள்(கணிதம் - கணக்கு.)",
|
"translation": "Never degrade learning"
|
"number": 8,
|
"poem": "ஏற்ப திகழ்ச்சி",
|
"meaning": "ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி- பழிப்பாகும்",
|
"paraphrase": "இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே",
|
"translation": "Accepting alms is ashamed"
|
"number": 9,
|
"poem": "ஐய மிட்டுண்",
|
"meaning": "ஐயம் - பிச்சையை, இட்டு - (இரப்பவர்களுக்குக்) கொடுத்து, உண் - நீ உண்ணு",
|
"paraphrase": "இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர்கட்கும் பிச்சையிட வேண்டும்.",
|
"translation": "Share with the needy before you eat"
|
"number": 10,
|
"poem": "ஒப்புர வொழுகு",
|
"meaning": "ஒப்புரவு-உலக நடையை அறிந்து, ஒழுகு- (அந்த வழியிலே) நட",
|
"paraphrase": "உலகத்தோடு பொருந்த நடந்துகொள்",
|
"translation": "Act virtuous"
|
"number": 11,
|
"poem": "ஓதுவ தொழியேல்",
|
"meaning": "ஓதுவது - எப்பொழுதும் படிப்பதை, ஒழியேல் - விடாதே",
|
"paraphrase": "அறிவு தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு",
|
"translation": "Never fail learning"
|
"number": 12,
|
"poem": "ஒளவியம் பேசேல்",
|
"meaning": "ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசேல் - பேசாதே",
|
"paraphrase": "நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே",
|
"translation": "Never gossip"
|
{
|
"number": 13,
|
"poem": "அஃகஞ் சுருக்கேல்",
|
"meaning": "அஃகம் - (நெல் முதலிய) தானியங்களை, சுருக்கேல் - குறைத்து விற்காதே",
|
"paraphrase": "மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே",
|
"translation": "Never compromise in food grains"
|
},
|
{
|
"number": 14,
|
"poem": "கண்டொன்று சொல்லேல்",
|
"meaning": "கண்டு-(ஒன்றைக்) கண்டு, ஒன்று-வேறொன்றை, சொல்லேல் - சொல்லாதே",
|
"paraphrase": "கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே(பொய்ச்சாட்சி சொல்லலாகாது.)",
|
"translation": "Don't exaggerate what you saw."
|
},
|
{
|
"number": 15,
|
"poem": "ஙப்போல் வளை",
|
"meaning": "ஙப்போல் - ஙகரம்போல், வளை - உன் இனத்தைத் தழுவு",
|
"paraphrase": "ஙஎன்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள் [ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.]",
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.