text
stringlengths
0
439
"translation": "Bend to befriend."
},
{
"number": 16,
"poem": "சனிநீ ராடு",
"meaning": "சனி-சனிக்கிழமைதோறும், நீர் ஆடு-(எண்ணெய் தேய்த்துக்கொண்டு) நீரிலே தலைமுழுகு",
"paraphrase": "சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு(புதன்கிழமைகளிலும் முழுகலாம்.)",
"translation": "Shower regularly."
},
{
"number": 17,
"poem": "ஞயம்பட வுரை",
"meaning": "ஞயம்பட - இனிமையுண்டாக, உரை - பேசு",
"paraphrase": "கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு [நயம் என்பதன் போலி.]",
"translation": "Sweeten your speech."
},
{
"number": 18,
"poem": "இடம்பட வீடெடேல்",
"meaning": "இடம்பட - விசாலமாக, வீடு - வீட்டை, எடேல் - கட்டாதே",
"paraphrase": "அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.",
"translation": "Judiciously space your home."
},
{
"number": 19,
"poem": "இணக்கமறிந் திணங்கு",
"meaning": "இணக்கம் - (நட்புக்கு ஏதுவாகிய) நற்குண நற்செய்கைகளை, அறிந்து - ஆராய்ந்தறிந்து, இணங்கு - (பின் ஒருவரோடு) நண்பு கொள்",
"paraphrase": "நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய",
"translation": "Befriend the best."
},
{
"number": 20,
"poem": "தந்தைதாய்ப் பேண்",
"meaning": "தந்தை-பிதாவையும், தாய்-மாதாவையும், பேண்-காப்பாற்று",
"paraphrase": "உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று",
"translation": "Protect your parents."
},
{
"number": 21,
"poem": "நன்றி மறவேல்",
"meaning": "நன்றி - (ஒருவர் உனக்குச் செய்த) உதவியை, மறவேல் - (ஒருபோதும்) மறவாதே",
"paraphrase": "உனக்குப் பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது.",
"translation": "Don't forget gratitude."
},
{
"number": 22,
"poem": "பருவத்தே பயிர்செய்",
"meaning": "பருவத்தே - தக்க காலத்திலே, பயிர்செய்-பயிரிடு",
"paraphrase": "விளையும் பருவமறிந்து பயிரிடு எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்.",
"translation": "Husbandry has its season."
},
{
"number": 23,
"poem": "மன்றுபறித் துண்ணேல்",
"meaning": "மன்று - நீதிமன்றத்திலே இருந்துகொண்டு, பறித்து- (வழக்குத் தீர்ப்புக்கு வரும் குடிகளுடைய பொருளைக்) கவர்ந்து, உண்ணேல் - உண்டு வாழாதே",
"paraphrase": "நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே 'மண்பறித் துண்ணேல்' என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்று பொருளாம்.",
"translation": "Don't land-grab."
},
{
"number": 24,
"poem": "இயல்பலா தனசெயேல்",
"meaning": "இயல்பு அலாதன - இயற்கைக்கு மாறான செயல்களை, செயேல் - செய்யாதே",
"paraphrase": "நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே",
"translation": "Desist demeaning deeds."
},
{
"number": 25,
"poem": "அரவ மாட்டேல்",
"meaning": "அரவம் - (நஞ்சுடைய) பாம்புகளை, ஆட்டேல் - பிடித்து ஆட்டாதே",
"paraphrase": "பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே",
"translation": "Don't play with snakes."
},
{
"number": 26,
"poem": "இலவம்பஞ்சிற் றுயில்",
"meaning": "இலவம்பஞ்சில் - இலவம்பஞ்சு மெத்தையிலே, துயில் - உறங்கு",
"paraphrase": "இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு",
"translation": "Cotton bed better for comfort."
},
{
"number": 27,
"poem": "வஞ்சகம் பேசேல்",
"meaning": "வஞ்சகம்-கபடச் சொற்களை, பேசேல்-பேசாதே",
"paraphrase": "கபடச் சொற்களைப் பேசாதே",
"translation": "Don't wile."
},
{
"number": 28,
"poem": "அழகலா தனசெயேல்",
"meaning": "அழகு அலாதன - சிறப்பில்லாத செயல்களை, செயேல் - செய்யாதே",
"paraphrase": "இழிவான செயல்களைச் செய்யாதே",
"translation": "Detest the disorderly."
},
{
"number": 29,
"poem": "இளமையிற் கல்",
"meaning": "இளமையில் - இளமைப் பருவத்திலே, கல் - கல்வியைக் கற்றுக்கொள்",
"paraphrase": "இளமைப் பருவத்திலேயே படிக்கத்தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள்",
"translation": "Learn when young."
},