text stringlengths 11 513 |
|---|
மனத்தினாலும் தீண்டேன் என்று கூறி விலகினார். மாதர் மீது வைத்த காதலை அறவே துறந்து இறைவன் மீது வைத்த பேரன்பினைப் பெரிதாய் மதித்ததால் இவர் பெரியராயினர். இவ்விரதத்தை இனிது பேணிய இவரது இறை அன்பின் திறத்தை உலகிற்கு அறிவித்து இறைவன் அருள் புரிந்தான். உலக இன்பங்களிலும் இறையின்பமே ஏற்றமுடையது என்பதை இவரது வரலாறு விளக்குகிறது. 9.... |
கொடுத்தேன் " என்றார். மனைவியார் கணவரிடம் “ தங்கள் கட்டளைப்படி நடப்பதே என் கடமை. என் உயிருக்கும் துணைவராகிய நீர் சொன்னபடி செய்வதையன்றி வேறு சிந்திப்பதற்கு வேறு யாதும் இல்லை ” எனக் கூறி இசைந்து சென்றார். சுற்றத்தார் சினத்துடன் வந்து இயற்பகையை எதிர்க்க 268 அவர்கள் மீது வாள்போர் புரிந்து வெற்றி பெற்றார். இறைவன் இவரது செயற்... |
வேண்டுமென விரும்பும்பொழுது கொடுத்து விடுவதே முறையாகும். அதனையே இயற்பகையார் மேற்கொண்டார் என்பார். 9.4.2.7. இளையான்குடிமாறனார். இவரது சரித்திரத்தால் அடியார்கள் இம்மைச் செல்வம் அனைத்தையும் இறைவன் அடியவர்களுக்கு அளிக்கச் சிறிதும் தயங்காதவர்கள் என்பது தெரிகிறது. 9.4.2.8. மெய்ப்பொருள் நாயனார் இவரது வரலாறு மிகவும் வியப்பினை உ... |
அவிழ்ப்பவன் போலப் பையிலிருந்து ஆயுதத்தை எடுத்து ஊறு செய்த போதும் அவனைத் தொழுது நின்றதிலிருந்து சிவனடியார்களைச் சிவனெனக் கருதும் இவரது சிறப்பு விளங்குகிறது. 9.4.2.9. சிறுத் தொண்டர் சிறுத்தொண்டர் தனது அருமைப் புதல்வனை அடியவருக்கு அமுதூட்ட வாளால் அரிந்தார். குழந்தையிடத்தில் இவர் கொண்ட அன்பு அளவற்றதெனினும் , இறைவனடியாரை அம... |
வந்த 269 சலவையாரை வணங்கினார். மேனி முழுதும் திருநீறு பூசிய சிவனடியராய் கருதி வணங்கினார். சலவையாளர் மிகவும் அஞ்சி தான் இன்னார் என அறிவித்த பிறகும் வணங்கி “ திருநீற்றின் வாரவேடம் நினைப்பித்தீர் வருந்தா தேகும் என ’ ’ விடுவித்ததிலிருந்தும் , அரசாட்சியை ஏற்குமாறு மந்திரி முதலானோர் வந்து வேண்டிய பொழுது “ இன்பம் பெருகும் திரு... |
அடியார்களாய் அருந்தொண்டாற்றினர். அவர்கள் மங்கையர்க்கரசியார் , காரைக்கால் அம்மையார் , இசை ஞானியார் என்போர் ஆவர். இவர்களுள் மங்கையர்கரசியார் “ மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் ” என்று சேக்கிழார் சுவாமிகளால் பாராட்டப் பெற்றுள்ளார். பாண்டி நாட்டில் சைவம் தளர்ந்து சமணம் வளர்ந்ததைப் பாண்டிமா தேவியார் கண்டு வருந்தி , திரு... |
வருந்தியதும் , அம்மையாரின் சமயப்பற்றை இனிது விளக்குகின்றது. சம்பந்தர் சமண மதத்தை வென்று சைவத்தை நிலை நாட்ட உறுதுணையாய் இருந்தவர் இவ்வம்மையாரே ஆவார். சம்பந்தர் , " மங்கையர்க்கரசி வளர்கோன் பாவை வரிவளைக்கை பங்கயச் செல்வி பாண்டிமாதேவி ” என இவரைப் பதிகத்தில் பாராட்டியுள்ளார். 270 இசைஞானியார் சடையனாருக்கு இசைந்த ஞானியராகி சட... |
துணிந்ததில் இருந்து அவரது உயர்ந்த பண்பு விளங்குகின்றது தம்பியராகிய நாவுக்கரசர் உயிர்வாழ வேண்டித் தவநிலை ஏற்று வாழ்ந்ததும் , சமணம் சார்ந்த தம்பியை சைவ சமயத்தில் சாரும்படிச் செய்ததும் அவரது சைவப் பண்புகளை நன்கு விளக்குகின்றன. இதர அடியார்களின் வரலாற்றைப் பெரிய புராணத்தில் கண்டு , ஆராய்ந்து அறிந்து , அடியார்களிடத்து மதிப்ப... |
மறைஞானசம்பந்தர் , உமாபதிசிவம் எனும் நால்வரும் சந்தனாசாரியர்கள் எனக் கூறப்படுவர். சந்தானம் - இச்சொல்லுக்கு பரம்பரை என்பது பொருள். சந்தானம் அகச்சந்தானம் , புறச்சந்தானம் என இருவகைப்படும். அகச்சந்தானத்தார் - கயிலை மலையில் வாழ்வோராவர். இவர்கள் ஸ்ரீகண்ட பரமசிவனிடம் சிவஞான உபதேசம் பெற்ற நந்திதேவர் , சனற்குமாரர் , சத்திய ஞான த... |
அருணந்தி சிவத்திடம் மறைஞான சம்பந்தமும் , மறைஞான சம்பந்தரிடம் உமாபதி சிவமும் உபதேசம் பெற்றனர். இதை மெய் கண்ட சந்தான பரம்பரை என்பர். 271 அருளிச் செய்த நூல்கள் மெய்கண்ட தேவர் - சிவஞான போதம் அருணந்தி சிவாசாரியார் - சிவஞான சித்தியார் , இருபா இருபஃது 6. நாயன்மார்களால் சைவம் புத்துணர்வு பெற்றது. தனக்கென ஒரு மரபையும் உருவாக்கி... |
பிரகாசம் முதலிய சித்தாந்த அஷ்டகம் எனும் எட்டு நூல்களை இயற்றியுள்ளார். தில்லையில் ஏறாதிருந்த கொடியைக் ‘ கொடிக்கவி ' பாடி ஏற்றினார். சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் இறையருளில் கலந்தார். 9.4.4. நாயன்மார்களின் சமயத் தொண்டு நாயன்மார்களின் சமயத்தொண்டு அளவிடற்கரியது. அவற்றுள் சிலவற்றை காண்போம். 1. பக்தி நெறியை நாயன்மார்கள... |
தொண்டு செய்தல் முதலியவற்றில் சிலர் ஈடுபட்டனர். உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். ‘ என் கடன் பணி செய்து கிடப்பதே ' என்றார் அப்பர் பெருமான். 3. 4. சைவ சமயத் தத்துவக் கோட்பாடுகளையும் , சைவ சமயத்தைப் பின்பற்றுவோர் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளையும் நாயன்மார்கள் தங்கள் வாழ்வில் வாழ்ந்து காட்டினார்கள். 5. சைவ சமயத்தை உலகறியச் செய்... |
பொருளாதாரப் பிரிவுகளிலிருந்தும் தோன்றினர். இதனால் ஒருமைப்பாட்டு உணர்வும் சமத்துவ மனப்பான்மையும் சகோதரத்துவமும் வேரூன்றித் தழைத்தது. 9. நாயன்மார்களின் சமுதாய நல்வாழ்வுப் பணிகள் , ஆலயப் பணிகள் மக்கள் மனதில் சேவை மனப்பான்மையை வளர்த்தது. 10. நாயன்மார்களில் சமயக் குரவர் எனப் போற்றப்படும் நால்வர் வாழ்ந்து காட்டிய நன்னெறிப் ப... |
2. திருநாவுக்கரசு 3. திருசுந்தரர் 4. திருமாணிக்கவாசகர் 5. திருமளிகைத் தேவர் , சேந்தனர் மற்றும் அருளாளர்கள் பாடியது 6. திருமூலர் 7. திருவாலவுடையார் 8. பட்டினத்தடிகள் , காரைக்காலம்மையார் மற்றும் நம்பியாண்டார் நம்பிகள் பாடல்கள் 9 - ஆம் திருமுறை திருவிசைப்பா , திருப்பல்லாண்டு 10 - ஆம் திருமுறை திருமந்திரம் ( தேவாரம் } 11 -... |
10.1.1. இந்தியாவின் நிலை பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் நமது நாட்டில் அரசியல் , சமுதாய , சமய , பொருளாதாரத் துறைகளில் சீர் குலைவு ஏற்பட்டது. அரசியலில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் நாட்டில் குழப்பமும் , வன்முறைகளும் , அராஜகமும் தலைவிரித்தாடின. நாட்டில் சட்டம் ஒழுங்கு , மக்களுக்கு பாதுகாப்பு போதுமான அளவு இல்லாத நிலை... |
சமயத்தின் பெயரால் மக்கள் ஏமாற்றப்பட்டு பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்ய தலைப்பட்டனர். ஆண்களின் ஆதிக்கம் மிகுந்தும் , பெண்கள் ஒடுக்கப்பட்டவராயும் இருந்தனர். இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரசியல் , பொருளாதார , சமய , சமுதாய , பண்பாட்டு , இலக்கியத் துறைகளில் பல மாற்றங்கள் தோன்றின. ஆங்கிலேயப் பேரரசு தன் ஆட்சிய... |
துறைகளில் பல மாற்றங்கள் தோன்றின. இம்மாற்றங்களை விழிப்புணர்வு என்றே கூறலாம். இந்த விழிப்புணர்வையே ' மறுமலர்ச்சி ' என்று கூறுகின்றனர். 279 இம்மறுமலர்ச்சி பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. உண்மையாகவே இன்றைய இந்தியா தனது நிலைக்கு மறுமலர்ச்சிக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது என பி.என். லூனியா க... |
மேற்கொண்டது. இதன் விளைவாக நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டன. இது இந்திய மக்கள் மனதில் தங்களது உண்மையான நிலையை அறிந்து கொள்ள வாய்ப்பை அளித்தது. 2. கி.பி. 1835 ஆம் ஆண்டு மெக்காலே பிரபுவின் முயற்சியால் ஆங்கிலம் பயிற்று மொழியாக்கப்பட்டது. இதன் வாயிலாக இந்தியர்கள் மேற்கத்திய நாகரிகத்தை எளிதில் அறிந்தனர். மேலை... |
உண்டாக்கியது. 3. மேலைநாடுகளின் வரலாற்றுச் செய்திகளின் வாயிலாக அவர்கள் பின்பற்றிய எளிய போக்கும் , செயற்கையான போலியான வாழ்க்கை முறைகளும் இல்லாததையும் தெரிந்து கொண்டனர். மக்களிடையே நம் நாட்டையும் சமுதாய தீய பழக்க வழக்கங்களில்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற உணர்வு தோன்றியது. இதற்கு முன்னோடியாக வித்திட்டவர் இராஜாராம் மோகன்ராய... |
சுட்டிக்காட்டப் பட்டன. எனவே சமயத்துறையிலும் சமுதாயத் துறையிலும் குறிப்பாக பிரம்மசமாஜம் , ஆரியசமாஜம் , பிரம்மஞான சபை போன்ற சீர்திருத்த இயக்கங்கள் உருவாயின. 5. ஆங்கிலேய ஆட்சியின் விளைவாக இந்தியா , அறிவியல் தொழில்நுட்பத்துறைகளில் முன்னேறி உலக நாடுகளுடன் தொடர்பை உண்டாக்கிக் கொண்டது. இத்தொடர்பு இந்திய மக்களிடையே முற்போக்கு ... |
தன்னம்பிக்கையையும் மறந்து வாழ்ந்து வந்த மக்களுக்கு இச்சீர்திருத்த இயக்கங்கள் ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தன. நமது பாரம்பரிய பெருமையை உலகறியும் வண்ணம் வேதங்களையும் , உபநிடதங்களையும் சமஸ்கிருத மொழியிலிருந்து மேலைநாடுகளில் மொழிபெயர்த்தனர். இது மக்களிடையே நாட்டுப் பற்றையும் , நாமும் உலக அரங்கில் உயர வேண்டும் என்ற உயரிய எண்ணத்த... |
இந்திய வரலாற்றை எழுதினர். இவற்றை அறிந்து இந்தியர்கள் தாங்கள் மேலும் தக்க ஆதாரங்களுடன் இந்திய வரலாற்றை தெளிவாக உலகம் வியக்கும் வண்ணம் எழுதினர். 3. இந்து சமயத்திலேயே சீர்திருத்தங்களை பல சீர்திருத்தவாதிகள் மேற்கொண்டனர். பிரம்மசமாஜம் , ஆரிய சமாஜம் , பிரம்மஞான சபை மற்றும் இராமகிருஷ்ண இயக்கம் போன்ற சமய சமூக சீர்திருத்த இயக்க... |
ஆற்றிய உரை உலகறிந்த ஒன்றாகும். 4. இந்து சமயத்தில் நிலவிவந்த பல்வேறு தீமைகளையும் , மூடப்பழக்கவழக்கங்களையும் மக்கள் அறியத் தொடங்கினர். கிறிஸ்தவ சமயப்பரப்பு குழுவினர் சமுதாயத்தில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை தங்கள் பால் ஈர்த்தனர். இதைக் கண்டு சீர்திருத்தவாதிகள் விரைந்து செயல்பட்டு அவர்களது நி... |
சமய , சமுதாய சீர்திருத்தங்கள் பெருமளவில் செயல்படுத்தப்பட்டன. தீண்டாமை என்னும் கொடுமையைக் களைய மகாத்மா காந்தியடிகள் ஒரு பெரும் இயக்கத்தினை வழிநடத்தி வெற்றியும் கண்டார். பகுத்தறிவுச் சிந்தனை மக்கள் மனதில் வேரூன்றியது. மக்கள் மனதில் குறுகிய கண்ணோட்டம் அகன்று பரந்த மனப்பான்மையும் சமத்துவ , சகோதரத்துவ மனப்பான்மையும் மேலோங்க... |
வழிவகுக்கப்பட்டது. ‘ பர்தா ’ முறை ஆரிய சமாஜத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்டது. ‘ விதவை மணம் ’ பல சீர்திருத்தவாதிகளால் ஆதரிக்கப்பட்டது. குழந்தை மணம் சட்டரீதியாக தவறு என உணரத்தப்பட்டது. ‘ சாரதா ’ சட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய அளவு மக்கள் உணர்ந்தனர். மகளிர் முன்னேற்றத்திற்கு மாபெரும் தொண்டாற்றியவருள் ஈசுவர சந்திர த்யாசாகர் க... |
ஆய்வுகளில் ஈடுபட ஆரம்பித்தன. கணித மேதை இராமானுஜம் , ஜெகதீஸ் சந்திர போஸ் போன்றோரது கண்டுபிடிப்புகள் உலகை வியப்படையச் செய்து இந்திய புகழை உலகறியச் செய்தன. 8. நமது பாரம்பரியம் மிக்க நுண்கலைகள் வளர்ச்சி பெற்றதற்கு மறுமலர்ச்சி முக்கிய காரணம் எனலாம். மேலை நாட்டினர் நம் அழகுக் கலைகளை நூல்களாக எழுதி உலகறியச் செய்தனர். இசை , ஓவ... |
வேளாண்துறையில் வளர்ச்சியும் புதிய முறைகளும் காணப்பட்டன. இந்தியாவில் பல பொருள்கள் தயாரிக்கப்பட்டன. நூற்பு ஆலைகளும் , நெசவு ஆலைகளும் தோன்றின. 10. ஆங்கிலேயர் வருகையாலும் , ஆளுகையாலும் சமுதாய நிலையில் மாற்றங்கள் காணப்பட்டன. எழுத்தர்களும் , அலுவலகம் பணியார்களும் சமுதாயத்தில் மதிக்கப்பட்டனர். ஆங்கிலம் தெரிந்தோர் உயர்ந்தவர்கள... |
பின்பற்றப்பட்ட விமர்சன முறையும் பாங்கும் இந்திய மொழிகளில் பிரதிபலித்தன. இலக்கியத்துறையில் உலகம் போற்றும் இலக்கிய மேதைகள் உருவாயினர். 12. இந்திய மறுமலர்ச்சி இந்நாட்டு மக்களிடையே பண்டைய பெருமையை உணரச் செய்தது. மேலை நாட்டுப் பண்பாட்டில் நாகரிகத்திலும் , அறிவியலிலும் கண்ட நல்ல தீய கூறுகளை மக்கள் அறிந்து பின்பற்றி உயரச் செய... |
பிரம்மசமாஜம் கி.பி. 1828 ல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும். இராசாராம் மோகன்ராய் கி.பி. 1772 ல் பிறந்தார். வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கற்றறிந்த மொழிகள் ஆங்கிலம் , பிரஞ்சு , இலத்தீன் , ஹீபிரு , கிரேக்கம் , சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும். இந்து சமய... |
வயதில் வேலையை விட்டு விலகினார். எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார். அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கை களுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய க... |
கிறித்துவப் பாதிரியார்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. இதன் விளைவாக இந்து சமயத்தை சீர்திருத்தி அமைக்க வேண்டுமென விரும்பினார். கி.பி. 1815 ல் கல்கத்தாவில் ‘ ஆத்மிக சபை என்பதை நிறுவினார். இதில் நடுத்தர , கீழ் தர மக்கள் கலந்து கொண்டனர். 1819 ல் வேதாந்த சாத்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும் , வங்காள மொழியிலும் வெளியிட்ட... |
திருச்சபைக் குருக்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர். அவற்றையெல்லாம் 284 சிறிதும் பொருட்படுத்தாது , கிறித்துவ மக்களுக்கு ஒரு முறையீடு என மூன்று கட்டுரைகள் வெளியிட்டார். 10.2.1. பிரம்மசமாஜத்தின் தொண்டுகள் 10.2.1.1. சமயத்தொண்டு ‘ ஒரு தெய்வ ’ வழிபாட்டைத் தான் இந்நிறுவனத்தை சார்ந்தோர் பின்பற்ற வேண்டும். இதனை பிரம சமாஜ பொறுப... |
செய்ய வேண்டும். ஒன்றே குலம் , ஒருவனே தேவன் என்பதையும் மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதையும் இவர் வலியுறுத்திக் கூறினார். எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே ந... |
அளவிடற்கரியது. பயனற்ற சமுதாய பழக்கவழக்கங்களைச் சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்க ஆங்கில ஆட்சியாளரின் துணையை நாடினார். ' சதி ’ அல்லது ‘ உடன்கட்டை ஏறுதல் ’ என்ற பழக்கம் அந்நாளில் இருந்த வந்தது. வில்லியம் பெண்டிங்கை அது சட்டத்திற்கு புறம்பானது என அறிவிக்கச் செய்தார். அவர் வாழ்ந்த காலத்தில் வங்காளத்தில் இளம் விதவைகள... |
வன்மையாகவே எதிர்த்தார். பெண் குழந்தைகளைக் கொல்வதையும் 285 கண்டித்தார். உருவ வழிபாட்டையும் , வேள்விகளையும் முற்றிலுமாகச் சாடினார். மகளிர் நலனுக்காக போராடினார். பெண்கள் சொத்துரிமை பற்றியும் கலப்பு மணத்தை பற்றியும் சமுதாயத்திற்கு உணர்த்தினார். 10.2.1.3. எழுத்துரிமை செய்தித்தாள்கள் முழு உரிமையுடன் செயல்படவேண்டு மென்றார். ம... |
இவர் ஏழை உழவர்களின் நிலை உயர பாடுபட்டார். ஜமின்தார்கள் அவர்களுக்கு விதித்த நிலத்தீர்வைகளைக் குறைக்கும்படி கோரினார். 10.2.2. இராசாராம் மோகன்ராய் - ஒரு மதிப்பீடு இவர் சமுதாய சீர்திருத்தவாதி மட்டுமல்லாமல் சிறந்த நாட்டுப்பற்று உடையவராகவும் திகழந்தார். மக்களிடையே அரசியல் விழிப்புணர்வைத் தோற்றுவிக்க முயன்றார். இந்தியாவின் “ ... |
இருந்தார். மகளிர் நலனுக்காகவும் விடுதலைக்காகவும் இதற்கு முன்பு இவரைப் போல் எவரும் பாடுபட்டதில்லை என்பதை உறுதியாகக் கூறலாம். தீண்டாமையை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினார். அக்காலத்தில் நல்ல இலக்கிய புலமை நிறைந்தவராக இருந்தார். இலக்கிய படைப்புகளை அளித்தவராகவும் இருந்தார். இவர் உருது , வங்காளம் , இந்தி , சமஸ்கிருதம் , பாரச... |
மொழியில் ‘ மிராதுல் அக்பர் ' என்ற இதழையும் வெளியிட்டார். செய்தித்தாள் உலகில் முன்னோடியாக விளங்கி , இளம் 286 எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அரசியல் வானில் இவர்தான் புதிய இந்தியாவின் தீர்க்கதரிசியாக ( வருவது உரைப்பவராக ) இருந்தார். உரிமை பெற வேண்டும் என்பதும் அதனைச் சட்டத்தின் மூலமே பெற வேண்டும் என்பதும் இ... |
மனித நேய உறவை வலியுறுத்திய எளிய தூய மனிதாபிமானியாகவும் திகழ்ந்தார். பட்டுப் போகாத பழமைக்கும் வளரும் புதுமைக்கும் இணைப்புப் பாலமாகவே இவர் இருந்தார். ‘ இவர் இந்தியாவில் புதிய காலத்தைத் தொடங்கி வைத்தவர் ' என இரவீந்திர நாத தாகூர் கூறுகிறார். 10.2.3. பிரம்மசமாஜம் - இராசாராம் மோகன்ராய் காலத்திற்குப்பின் இராசாராம் மோகன் ராய் ... |
முன்னேற்றம் தடைபெற்றது. 1843 - ல் தேவேந்திரநாத் தாகூர் இவ்வியக்கத்தில் சேர்ந்து இதைப் புதுப்பித்தார். அவருடைய தலைமையின் இவ்வியக்கம் வெற்றி நடைபோட்டது. அவர் மாதா கோயில் வழிபாட்டு முறை , நன்றி நவிலும் தொழுகை முறை , புகழஞ்சலி வழிபாடு போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். ' கேசவ சந்திர சென் ' என்பவர் 1862 - ல் இவ்வியக்கத்தில் சே... |
சமாஜத்தில் பல உட்பிரிவுகள் இருந்தாலும் இவ்வியக்கத்திற்குப் பின் தோன்றிய ' ஆர்யசமாஜம் ’ போன்று செல்வாக்குடன் விளங்கவில்லை. இந்துக்களின் இதயங்களை மாற்றுவதிலும் , மேலைநாட்டுக் கருத்துகளைச் சிந்திக்க வைப்பதிலுமே இவ்வியக்கம் பெரும் பங்காற்றியது. 10. 3. ஆரிய சமாஜம் ஆரிய சமாஜம் கி.பி. 1875 - ல் தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தோற்... |
20 வது வயதில் திருமணம் முடிக்க இவரது தந்தை விரும்பினார். அதில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். உண்மையைத் தேடி இந்தியா முழுமைக்கும் சுற்றி பல இடங்களில் கல்வி கற்றார். 15 ஆண்டுகள் அலைந்து , திரிந்து இறுதியாக மதுராபுரிக்குச் சென்றார். அங்கு சுவாமிஜி வீராஜானந்தரிடம் சீடராக ஆனார். அதன் பின்பு ' சத்தியார்த்த ப... |
தலைப்பட்டனர். 10.3.1. ஆரியசமாஜம் - விளக்கம் ‘ ஆரியா ’ என்பதன் பொருள் கடவுளின் குழந்தை என்பதாகும். ( Arya means son of God ). அனைத்து ஆன்மாக்களும் , கடவுளின் குழந்தைகள் என்றும் , அவை கடவுளுக்கு கீழ்படிதல் உள்ளவையாக இருக்க வேண்டும் என்பதும் தயானந்தரின் கருத்துகளாகும். 10.3.2. ஆரியசமாஜத்தின் கோட்பாடுகள் 1. அனைவரும் கடவுளி... |
வேதங்கள் போதிக்கவில்லை. தியானத்தின் மூலமாகவும் , தன்னலமற்ற நற்செயல்களின் மூலமாகவும் வேதங்களை பரப்புவதன் மூலமாகவும் கடவுளை வழிபட முடியும். 3. கடவுளிடம் நமது குறைகளை முறையிட எந்தவொரு பிரதிநிதியும் ( Agents ) தேவையில்லை. மாறாக அனைத்து ஆண்களும் , பெண்களும் கடவுளின் பிரதிநிதிகளே. கடவுளைப் பற்றியும் , அவரது கருத்துகளைப் பரப்... |
என்பது முடிவற்றது. தவிர்க்க முடியாததும் கூட. எனவே அதனைப் பற்றிய அச்சம் கூடாது. வாழ்வில் மேற்கொள்ளும் நற்செயல்கள் மூலமாக இறப்பை , அடுத்த பிறவியல் அதனை புனிதப் பிறப்பாக்கிக் கொள்ளலாம். 6. ஆன்மா பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. கடவுளைப் போன்றே ஆன்மாவும் நிலையானது. 7. தீபம் ஏற்றுதல் என்பது அதன் ஒளியில் எதிர்காலத்தில் நற்... |
மாறுகிறது. 9. ஆன்மா பாவம் அற்றது. அது கடவுளின் கோட்பாடுகளை மீறும் போது பாவமடைகிறது. ஆன்மாவானது மன எழுச்சிக்கு அடிமையாகும் போது இச்செயல் நடைபெறுகின்றது. எனவே மன எழுச்சியானது ஆன்மாவைப் பாதிக்கா வண்ணம் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது. 10. எல்லா பாவத்தினின்றும் விடுதலை பெருவதே வீடுபேறாகும். பல்வேறு பிறப்பு மற்றும் இறப்பின்... |
12. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம். ஆன்மாவிற்கு பாலின வேறுபாடுகள் கிடையாது. ஆன்மா முழுமையானதும் புனிதமானதும் ஆகும். 13. சமயச் சடங்குகளின் வழி முறைகள் மூலமாக உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும். 14. மதம் மற்றும் மதநம்பிக்கைகள் மூலமாக மட்டும் இன்றைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இயலாது. மாறாக அறிவுப்பூர்வமான சிந்தனை மற்றும... |
சமயத்தில் இருந்து வரும் தீமைகளைக் களையவும் வேத சமயத்திற்கு புத்துயிர் அளிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. 10.3.3.1. வேதங்களைப் பரப்புவது வேதங்கள் மிகவும் நம்பத்தகுந்த செய்திகளை உள்ளடக்கி இருப்பதால் அதனைப் பரப்ப நூற்றுக்கணக்கான போதகர்களும் , துறவிகளும் நாடு முழுமைக்கும் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வேதக் கரு... |
' வலியுறுத்தி வருகிறார்கள். 290 10.3.3.2. இந்தியப் பண்பாட்டை மக்களிடம் எடுத்துச் செல்வது சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஈடுபாடு ஏற்படும் வகையிலும் பண்டைய நாகரிகங்களை அறியும் வகையிலும் இச்சமாஜத்தின் ஊழியர்கள் செயல்படுகின்றர். நம் மூதாதையர்கள் கூறிச் சென்றுள்ள அறிவியல் கருத்துகளை ஆய்வு ( Research ) செய்வதற்கு இ... |
குருகுலம் ’ மற்றொன்று ‘ பள்ளி மற்றும் கல்லூரிகளாகும். குருகுலத்தில் குறிப்பாக சமஸ்கிருத மொழியிலும் சமயம் மற்றும் மதம் பற்றிய கருத்துக்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகள் Dayanand Anglo vedic பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என்ற பெயர்களைக் கொண்டிருக்கும். சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் கல்வித்துறை அல்லது பல... |
செய்யப்பட்டுள்ளன. சில நிறுவனங்களில் வணிகப்படிப்பும் ( Commercial Education ) சொல்லித்தரப்படுகின்றன. நாடு முழுமைக்கும் கல்வி நிறுவனங்கள் இச்சமாஜத்தால் நடத்தப்படுகின்றன. ஒரே நகரில் பல கல்வி நிறுவனங்களும் நிறுவப்பட்டுள்ளன. இந்திய நாட்டில் இளைஞர்களும் இளம் பெண்களும் ஏற்றம் பெறும் வகையில் , வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்த... |
291 பேணிக் பாதுகாக்கப்படுகின்றனர். மேலும் அவர்களுக்கு அடிப்படை மற்றும் தொழில் கல்விகளும் போதிக்கப்படுகின்றன. இதனால் வாழ்க்கையில் தனக்குத் தேவையானவற்றை தாங்களே பெற்றுக் கொள்ள வழிவகை கிடைக்கின்றது. 10.3.4.2. குழந்தைகள் இல்லம் படிப்பறிவு இல்லாத ஏழைப் பெற்றோர்களின் குழந்தைகளுக்குக் கல்வி புகட்ட ஆஜ்மீர் நகரில் குழந்தைகள் இல... |
துன்பப்படுத்தப்படுகின்றனர். எனவே விதவைகள் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட விதவைகளுக்கு புகலிடமாக விதவைகள் இல்லங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு சரியான துணை கிடைக்கும்போது மறுமணம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படுகின்றது. 10. 3. 4. 4. கைவிடப்பட்ட / அநாதைப் பெண்களுக்கான ஆசிரமம் கைவிடப... |
இங்கு போதிக்கப்படுகின்றன. 10.3.4.5. தொண்டர் குழுக்கள் ‘ தைரியமான ஆரியன் ' என்ற தொண்டர் படையும் இந்நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் , மக்களை மகிழ்விப்பதற்கான பொது விழாக்களை ஏற்பாடு செய்வது மட்டுமன்றி தூய்மையான குடிநீர் கிடைக்க செய்வதிலும் , மருத்துவ மனைகளை ஒழுங்காக செயல்பட வைப்பதிலும் பங்கேற்கின்றனர். 29... |
பாடுபடுகின்றது. அவையாவன. 10.3.5.1. குழந்தை மணத்திற்கு எதிராக சமுதாயத்தில் மிகவும் கொடிய பழக்கமாக குழந்தை திருமணம் உள்ளது. இதனால் எண்ணற்ற பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீய நடைமுறையை இவ்வியக்கமானது முற்றிலுமாக எதிர்க்கிறது. இதனை தடுக்க ஆரிய சமாஜம் சாரதா சட்டத்தை ( Saradha Act ) ஆதரித்தது. அரச... |
எதிராக இந்து சமுதாயத்தில் உள்ள மற்றுமொரு இழிச்செயல் ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது என்பதாகும். தற்போது இந்து மதத்தைச் சார்ந்த எந்தவொரு ஆணும் பெண்ணும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்ள முடியாதவாறு அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளது. பலதார மணத்தை ஆரிய சமாஜம் எப்போதும் எதிர்த்து வந்துள்ளது. 10.3.5.3. வயதான ஆண்மகனின் திருமணத்... |
செய்து , நான்கு சுவர்களுக்குள் முடங்கி கிடப்பதே பெண்ணின் 293 கடமை என்று கருதப்பட்டு வந்தது. இதை ஆரிய சமாஜம் வன்மையாக எதிர்க்கிறது. ஆண்களையும் பெண்களையும் சமுதாயத்தின் இருகண்களாகவே பாவிக்கின்றது. கடமைகளும் உரிமைகளும் இருபாலருக்கும் சமமாக இருக்க வேண்டுமென்று கூறுகிறது. கணவள் இறந்துவிட்டால் , வேறொரு ஆணின் துணை அவசியமென்று... |
ஆரம்ப காலம் முதலே எதிாக்கிறது. மேலும் பிறந்த ஜாதியினால் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை என்று வலியுறுத்துகிறது. மேலும் எவன் ஒருவன் உள்ளதமான செயல்களை செய்கிறானோ அவனையே உயர்ந்தவனாக கருத வேண்டும் என்று கூறுகிறது. இந்நிறுவனம் நூற்றுக்கணக்கான கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளது. அதில் பல்லாயிரக்கானோர் பங்கேற்றுள்ளனர். எனவே ... |
இந்து மத கோட்பாடுகளை ஏற்று இந்துவாக மாறமுடியாத நிலை இருந்தது. ஆனால் ஆரிய சமாஜமோ இந்து மதத்தின் கதவுகளை எல்லோருக்கும் திறந்து வைத்துள்ளது. 10.3.5.7. ஆரியசமாஜத்தின் தொண்டுகள் நடைபெறும் இடங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டாலும் இதன் கிளைகள் அயல்நாடுகளிலும் பரவியுள்ளன. இந்தியர்கள் குடியேறி வாழ்கின்ற இலண்டன் மற்றும் நியூயார்க் ப... |
10.3.6. சுவாமி தயானந்தர் ஒரு மதிப்பீடு சுவாமி தயானந்தர் சிறந்த சீர்திருத்தவாதி. வேத சமயம் , நாகரிகம் , பண்பாடு இவை மூன்றையும் உலகிலேயே சிறந்தவையாக அவர் கருதினார். இவற்றிற்கு புத்துயிர் அளித்தால் தான் இந்தியா மேம்பாடு அடைய முடியும் என்றும் கருதினார். வேறு சமயத்திற்கு மாறிய இந்துக்கள் , இந்து சமயத்திற்கு திரும்பி வர புனி... |
எனக் கருதினார். இவர் அடிக்கடி சுயராஜ்யம் ( நமது அரசு ) சுய பாஷை ( நமது மொழி ) சுய தர்மம் ( நமது சமயம் என்று மக்களிடையே கூறியது விடுதலை உணர்வை , மக்களிடையே தோற்றுவித்தது. சுவாமி தயானந்தர் ஒரு சிறந்த ஞானி கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் பாலமாக அவர் விளங்கினார். ' உண்மையே வெல்லும் ' ' மீண்டும் வேதங்களுக்கு செ... |
பெருந்தலைவர்களை நாட்டிற்கு தந்துள்ளது. சுவாமி தயானந்தா ஆரிய சமாஜத்தை நிறுவிய 8 ஆண்டுகளில் அகால மரணமடைந்தார். அதன் பின் மகாத்மா ஹன்ஸ்ராஜ் என்பவர் தயானந்த ஆங்கில வேத கல்லூரி நிறுவினார். 1902 - ல் ஆரிய சமாஜத்தில் டிஎ.வி ( D.A.V. ) கல்லூரி பிரிவு , குருகுலப் பிரிவு என இரு பிரிவுகள் தோன்றலாயின. குருகுலப்பிரிவு குருகுல கங்கே... |
ஏற்படுத்திய பெருமை இவ்வியக்கத்தையே சாரும். இவ்வியக்கமானது மனித சமுதாயத்தை ' ஒன்றே குலம் ஒருவனே தேவன் ' என்ற பாதையின் கீழ் வரவேற்கிறது. 10.4. இராமகிருஷ்ண இயக்கம் 10.4.1. இராமகிருஷ்ணரின் வாழ்வு இந்தியாவில் குழப்பமும் அமைதியின்மையும் தலை விரித்தாடிக் கொண்டிருந்தபொழுது அமைதியையும் அறிவொளியை யும் நல்க இந்திய வானில் தோன்றிய ... |
இடத்தில் அமைந்திருந்த காளிகோயிலில் தமது காலத்தைக் கழித்த இவர் , எல்லாச் சமயங்களின் சாரத்தையும் அறிந்து , உண்மைகளை உணர்ந்து சுவைத்து வாழ்ந்து காட்டிய ஞானி , 1875 ஆம் ஆண்டு இறுதியில் அவருடைய ஆய்வுகள் முடிந்தன. பின்பு கேசவ சந்திரசென்னும் பிரம்ம சமாஜமும் காணவிரும்பிய மறுமலர்ச்சி எண்ண அலைகளோடு தொடர்பு கொண்டார். பின்பு 1886 ... |
போதித்தார். படித்தோரும் , பாமரரும் ஆடவரும் , பெண்டிரும் , இளைஞரும் , முதியோரும் கேட்டு இன்புற்று அறநெறியில் நிற்க முனைந்தார். சாரதா தேவியார் இவருக்கு உற்ற துணையாக இருந்து , இவருடைய சமயப் பணிகள் சரிவர நடைபெறப் பல்லாற்றானும் துணை புரிந்தார். இவர் 1834 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஹுக்ளி மாவட்டத்தில் காமர் புக்கூர் என்ற கிராமத்... |
இவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்துவிடுவார். நாளடைவில் காளியைக் கண்டு , கண்ட அந்தப் பேரின்ப நிலையிலே இருப்பார். பின்பு பல்வேறு அநுபூதி நிலைகளில் கண்ணனையும் இராமனையும் கண்டு பேரானந்தம் எய்தினார். இவரை இளம்வயதில் ‘ கதாதரீ ’ என அழைப்பர். 10.4.2. இராமகிருஷ்ணரின் கொள்கைகள் சமயவெறியில் நிற்பதெனின் இறைவனை உணருதல் என்பது இவரது கரு... |
காலம் வாழ்ந்த வாழ்வின் முழுமைச் சின்னம் இராமகிருஷ்ணர் , அவர் , பல்லாயிர மக்களின் குரல்கள் , மனித இன நம்பிக்கைகள் கூடி அமையப் பெற்ற இயைபுடைய சீரிய பவ்வியமாக விளங்கினார் என உரோமன் ரோலந்து கூறுகிறார். சமயம் ஓர் அனுபவம் விந்தை நிறைந்தது சமயம். இதை இலக்கணமும் , அளவை இயலும் ( Logic ) விளக்கிவிட முடியாது. அனுபவத்தின் ஆண்டவனைக... |
உரையாடல்களையும் தவிர்த்தார். இறைவனை அடைய வேண்டுமென்ற ஏக்கம் , இறைவன் பால் அன்பு இவைகளே வேண்டுபவை ; ஆனால் இறைவனைப் பற்றிய அறிவென்று உருவவழிபாடு சமயவாழ்விற்கு இன்றியமையாதது எனக் கருதினார். அனைத்துத் திருவுருச் சிலைகளிலும் ஆண்டவன் நிறைந்திருப்பதைக் காணலாம் என்பது இவரது கருத்து. இறைவனை அடைய உருவ வழிபாடு ஒரு வழி. அதுவே முடி... |
வியத்தகு கலவை ” என விவேகானந்தர் கூறுகிறார். 297 10.4.3. சுவாமி விவேகானந்தர் விவேகம் + ஆனந்தம் = விவேகானந்தம். விவேகத்தால் ஆனந்தம் பெற்றதால் விவேகானந்தர் என அழைக்கப் பெற்றார். இராமகிருஷ்ணரின் மிகச் சிறந்த சீடர் விவேகானந்தர். இவர் 1863 ஆம் ஆண்டில் சில்லாவைச் சேர்ந்த தத்தா குடும்பத்தில் கல்கத்தாவில் பிறந்து , ஆங்கிலப் பள்... |
கல்வியும் , பகுத்தறிவு மனப்பான்மையும் , குழந்தைப் பருவத்திலே இறை நம்பிக்கையும் , வைதீக நம்பிக்கையும் சரியா என வினவத் தலைப்பட்டன. இவற்றின் விளைவாக இவரது அறிவென்னும் அடிவானம் அகன்ற நிலையை அடைந்தது. பின்பு பிரம சமாஜத்தின் உறுப்பினரானார். இங்கும் இவரது ஆன்ம திருப்திக்கு உணவு கிட்டவில்லை. உண்மையே உய்த்துணரப் பலரையும் , பல இ... |
இவரால்தான் விரும்பிய தெய்விகப்பணி நிறைவேறும் என நம்பி இருந்தார். கல்வியாலும் பண்பாலும் இரு துருவங்களைப் போன்ற இரண்டு உள்ளங்கட்கு ஏற்பட்ட சந்திப்பு இறைவனின் திருக் கருணையால் ஏற்று , இவருக்கு இறையுணர்வை உணர்த்தித் தம் சீடராக ஏற்றுக் கொண்டார். நரேந்தரரின் ஐயப்பாடுகள் அகன்றன. மனதில் அமைதி தோன்றியது. குழப்பங்களுக்கு தீர்வுக... |
குடிகொண்டமையால் அயராது சமயப்பணிகளை ஆற்றத் தலைப்பட்டார். இராமகிருஷ்ணரின் இறுதிநாள்களில் அறிவாற்றல் நிறைந்த ஒரு இளைஞர் கூட்டம் அவரைச் 298 சூழ்ந்திருந்தது. அன்னையின் பரிவோடும் பாசத்தோடும் அவர்களை வளர்த்து சமயப் பணிகளுக்குப் பெறச் செய்தார். அவர்களை விவேகானந்தரிடம் ஒப்படைத்ததாக ‘ உனது பராமரிப்பில் அவர்களை விடுகிறேன். அவர்கள... |
இவர்கள் மாறினார் 10.4.4. இராமகிருஷ்ண இயக்கம் நிறுவப்படல் 1896 ஆம் ஆண்டு தமது குரு இராமகிருஷ்ண பரஹம்ஸாரின் நினைவாக , விவேகானந்தர் இராமகிருஷ்ண இயக்கத்தை நிறுவினார். இந்தியப் பண்பாட்டை உலகெங்கும் பரப்புவது இதன் முக்கிய குறிக்கோள். விவேகானந்தர் , ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவலாகப் பயணம் செய்து வேதாந்த தத்துவத்தைப் பரப்... |
உத்தமர் இவர். உலக அரங்கில் இந்தியாலை உன்னத நாடாகக் கருதச் செய்தமையால் இவரை நாட்டுப்பற்று மிக்க ஞானியென அழைத்தனர். இவர் ஏழ்மையை மூட நம்பிக்கைகளை , தீமைகளை அறவே நீக்க முற்பட்டார் அனைவரும் கல்வி பெற வேண்டும். சமுதாயத்தின் அடிமட்டத்திலிருப்போருக்குப் பணி புரிய வேண்டும் என மக்களைத் தூண்டினார். இராமகிருஷ்ண இயக்கத்தின் கிளைகள... |
வேதாந்தக் கருத்துகளை உயர்ந்த பணியிலும் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு கிளைகளைக் கொண்டு மருத்துவமனைகள் , பள்ளிகள் , கல்லூரிகள் , நூலகங்கள் , அனாதை இல்லங்கள் போன்றவற்றை நிறுவி மிக சிறிய பணிகளை செய்து வருகின்றது. சிகாகோ உலகச் சமய மாநாட்டில் விவேகானந்தர் இந்து சமயத்தைப் பற்றி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரை நிகழ்த்தி இந... |
இராமகிருஷ்ண இயக்கத்தின் நோக்கங்களும் குறிக்கோள்களும் 1. இராமகிருஷ்ணா எடுத்துரைத்த வண்ணம் , வேதாந்தக் கொள்கைகள் அடங்கிய கல்வியைப் புகட்ட வேண்டும். இதைப் புகட்ட அவருடைய அன்றாட நடைமுறை வாழ்வில் கண்ட எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். பிற சமய இறையியலுடனும் ஒப்பிட்டுச் சென்மையாகச் செய்தல் வேண்டும். 2. கலைகள் , அறிவிய... |
மக்களும் கல்வி புகட்டும் பணியினைத் தொடர்ந்து செய்துவரல் 5. பள்ளிகள் , கல்லூரிகள் , அனாதை இல்லங்கள் , தொழிற் சாலைகள் , ஆய்வுக்கூடங்கள் , மருத்துவமனைகள் , மருந்தகங்கள் , உடலுறுப்பிழந்தோருக்கும் பிணியாளர்கட்கும் துயருறுவோருக்கும் உறைவிடங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் , அறப்பணிகள் போன்றவற்றை நிறுவிப் பேணி வளர்த்துத் தொ... |
அச்சடித்துப் பதிப்பித்து விற்றல் அல்லது இலவசமாக வழங்கல் 7. மேலே கண்ட நோக்கங்களைக் கணக்கிடப்பட்ட முறையில் நேரடியாகவோ , மறைமுகமாகவோ , நிறைவேற்றத் தொடர்புடைய பணிகளையும் , பிறபணிகளையும் எவற்றை எல்லாம் இயக்கம் செய்யத் தகுதி வாய்ந்ததெனக் கருதுகிறதே அவையனைத்தையும் செய்தல். இவ்வியக்கம் கீழ்கண்ட பணிகளையும் செய்தன 1. மருத்துவப்ப... |
இவற்றை வெளிநாடுகளில் பரப்புதல் 5. ஆன்ம , பண்பாட்டுத்துறைகளில் பணிபுரிதல். 6. மகளிர் நலனுக்காகப் பல நிறுவனங்களை நிறுவிப் பணிபுரிதல். இவ்வாறாக இராமகிருஷ்ண இயக்கம் இன்றும் உலகெங்கம் உயர்ந்த பணிகளை ஆற்றி வருகின்றது. 10. 4. 6. விவேகானந்தர் பொன்மொழிகள் இளைஞர்களே , உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் , என்னை நம்புவதற்... |
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. 301 பிரம ஞான சபை இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால் , பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும். அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான். ஏழை , எளியவர்கள் , ஒதுக்கப்பட்டவர்கள் , கல்வியறிவில்லாதலர்கள் ஆகிய இவ... |
எதற்காகவும் உண்மையைத் துறக்காதே. வலிமையே மகிழ்ச்சிகரமான , நிரந்தரமான , வளமாக , அமரத்துவமான வாழ்க்கை ஆகும். தன்னலம் சிறிதும் இல்லாமல் , நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். இரக்கம் உள்ள இதயம் , சிந்தனை ஆற்றல் படைத்த மூளை , வேலை செய்யக் கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை. வீரர்... |
விளங்கு ! உடல் பலவீனத்தையோ , மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. 302 பிற இயக்கங்கள் சமுதாய சீர்திருத்தங்களை மேற்கொண்டதைப் போலவே பிரம ஞான சபையும் இந்திய மக்களின் வாழ்வைச் சீர்ப்படுத்துவதில் பெரும்பங்காற்றியுள்ளது. இச்சபை முதன் முதலில் 1875 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது. ஹெச்.பி. ப... |
வெற்றிக்கு திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார் பெரிதும் உதவினார். இவ்வியக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். 1847 - ஆம் ஆண்டு ஆங்கில அயர்லாந்து பிறந்தவர் இவர் 1897 - ஆம் ஆண்டு இந்தியா வந்தார். 1898 ஆம் ஆண்டு காசியில் மத்திய இந்திய கல்லூரியைத் தொடங்கினார். சுயமரியாதையும் பண்டைய கோட்பாடுகளில் நம்பிக்கையும் பெருமையும் ... |
தொல் மரபுகள் ஆகியவற்றை இந்து , பௌத்த மதங்களிலிருந்து எடுத்து அதற்கு மிக எளிய உயர்ந்த விளக்கங்களை அளித்தார். இந்துக் கோட்பாடுகளான கருமவிளை , மறு பிறவி , ஆன்மாவின் அழியாத இயல்பு , பல்வேறு யோக நிலைகள் மற்றும் அவதாரங்கள் போன்றவற்றை மிக அற்புதமாக அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி இந்துக்களின் அகக் கண்களைத் திறந்தார்.... |
வளர்ச்சியால் ஏற்பட்ட மேல்நாட்டு பொருளியல் கோட்பாட்டை வன்மையாகக் கண்டித்தார். அதன் விளைவாக இந்து சமயத்தில் ஒரு விழிப்புணர்ச்சி தோன்றியதுடன் , மக்கள் அதை மிகுந்த ஊக்கத்துடன் பின்பற்றத் தலைப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான ஆங்கிலம் கற்ற நம் நாட்டு மக்களின் உள்ளத்தில் இந்து சமயத்தை மீண்டும் குடியேற வழிவகை செய்தார். இந்தியாவின் ... |
உறுதிப்படுத்தி மக்கள் உள்ளத்தில் அதை படியச் செய்ய ஆவன செய்தார். இந்து பள்ளி வளர்ச்சி அடைந்து நாளடைவில் கல்லூரியாகவும் பின்பு பல்கலைக் கழகமாக மாறியது. இந்திய அரசியல் அரங்கில் , இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் சமுதாயச் சீர்திருத்தங்களைப் புகுத்துவதற்கும் இவர் ஆற்றிய தொண்டு இவரை பெரும் தலைவராக்கியது மட்டுமில்லாமல் உலகத்தி... |
இந்து சமயம் , பௌத்த சமயம் , போன்றவற்றில் பொதிந்துள்ள அறிவுக் கருவூலங்களின் மதிப்பை வெளிக்கொணர இச்சபை பெருந்தொண்டாற்றியது. இச்சபையின் ‘ மறைவியல் கல்விப் பள்ளி ' ( Esoteric School ) , இந்திய மறைவியலை ( Occultism ) இந்தியாவில் மட்டுமின்றி மேலை நாட்டிலும் மிகப் பிரசித்தமாக்கியது. இச்சபை கீழை நாட்டுச் சமய இலக்கியங்களை மேலை ... |
அகற்றுதல் மற்றும் பர்தா முறையை ஒழித்தல் போன்ற அரும்பணிகளை இந்த இயக்கம் செய்து வந்தது. இதனுடைய கல்வி நிறுவனங்கள் இந்தியப் பண்பாட்டையும் , கலைகளையும் பரப்பும் மையங்களாகத் திகழ்ந்தன. கீழை 304 நாடுகளிலும் மேலை நாடுகளிலும் நிற வேறுபாட்டால் மக்களிடையே வெறுப்புணர்வு கொழுந்து விட்டு எரிந்தபோது அதைத் தணித்து உலகில் எல்லோரும் உட... |
ஒரே உண்மையைப் போதிக்கின்றன என்பதே இவ்வியக்கத்தின் கருத்தாகும். பல்வேறு சமயங்களை சார்ந்தோர்கள் இச்சங்கத்தின் உறுப்பினர்கள் ஆனார்கள். இந்தியர்கள் குழந்தைகள் அல்லவென்றும் அவர்கள் பொறுப்புள்ள மனிதர் களென்றும் அவர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும் என்பதும் அம்மையாரின் கருத்துகளாகும். இவ்வாறாக இச்சபை பலவழிகளிலும் இந்... |
மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசத் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா ! நீ வாழ்க ! வாழ்க. என மகாகவி பாரதியாரால் பாராட்டப்பட்ட மகாத்மா காந்தியைப் பற்றி நாம் அறிவது மிகச் சிறந்ததாகும். அடிமைகளாய் , கோழைகளாய் , ஏழைகளாய் ஆங்கில ஆட்சியில் அவதியுற்று , அல்லல்பட்டு எவ்வுரிமையின்றி இருளில் வாழ்ந்... |
பெற்றவர் காந்தியடிகள். தேசத் தந்தை என்று இந்தியரால் பாசத்தோடு அழைக்கப்படும் பண்பாளர். அவருடைய வாழ்க்கை , உண்மையானது , எளிமையானது , மனித இனத்துக்கும் மகத்தான பாடமாக என்றும் விளங்குவது ஆகும். இவர் 1869 -ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 - ஆம் நாள் குஜராத்திலுள்ள போர்பந்தரில் பிறந்தார். காந்தி என்பது குடும்பப் பெயர். காபர் காந... |
படிக்கும் காலத்தில் ஒருவருடைய கையெழுத்து தெளிவாகவும் , திருத்தமாகவும் இருக்க வேண்டும். அப்படிப் பழகிக் கொள்வது நல்லது. பள்ளிப் பருவத்தில் காந்தி தம் கையெழுத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தார். பிற்காலத்தில் அதற்காக அவர் வருந்தினார். ' நல்ல கையெழுத்தும் படிப்பிள் ஒரு பகுதியே’என்பதை அவர் மக்களுக்கு வலியு... |
என்பது. அந்நூலிலிருந்து பெற்றோர்களிடம் ஒரு பிள்ளை எந்த அளவிற்கு பயத்தோடும் , பக்தியோடும் , பண்போடும் , பாசத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டார். தம் இளமைப் பருவத்திலே காந்தியின் மனத்தை மிகவும் பாதித்த ஒரு நாடகம் ஹரிசந்திரன் ஆகும். அந்த நாடகத்தை அடிக்கடி பார்த்தார். தாமும் எந்த நிலையிலும் பொய்யே பேசக் க... |
தொடர்ந்து கல்வி பயின்றார். காந்தி உயர்கல்விக்காக இங்கிலாந்து செல்ல விரும்பினார். ஆனால் , மிகவும் ஆசாரமாக இருந்த அவர் அன்னை அவரை அங்கு அனுப்ப விரும்பவில்லை. அங்கு சென்றால் அவர் பாழ்பட்டு விடுவார் எனக் கருதினார். ஆனால் காந்தி , தாம் இங்கிலாந்து சென்றால் மதுவையும் , மாமிசத்தையும் , பிற மாதினியையும் அறவே தொடமாட்டேன் என சத்... |
பணியாற்றினார். பின்பு ஒரு இஸ்லாமிய நிறுவனம் சார்பாக தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு வெள்ளையர்கள் இந்தியர்களுக்கு இழைக்கும் இன்னல்களைக் கண்டு அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்தார். இதன் விளைவாக நீதிக்குப் புறம்பான சட்டங்கள் அங்கே அகற்றப்பட்டன. அங்கு வாழ்ந்த இந்திய மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டினார். அவர்கள் அச்சம் தவிர்த... |
ஆம் ஆண்டு காந்தி இந்தியாவிற்குத் திரும்பினார். அப்போது முதல் உலகப்போர் தொடங்கியது. ஆங்கிலேயர் மேல் கொண்ட நம்பிக்கையின் பால் இந்தியர்களை இப்போரில் ஈடுபட்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்பு 1918 - ஆம் ஆண்டு ஆங்கில அரசு இந்தியர்களுக்கு வேண்டிய சலுகைகளை அளிக்கவில்லை. பின்பு அரசு ரௌலட் சட்டத்தை மக்களுடைய விருப்பத்தி... |
பிரகடனப் படுத்தியது. ஜெனரல் டையர் அமிர்தசரசில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக மகாத்மா காந்தி பிரிட்டானியாரிடமிருந்து நீதியையும் நேர்மையையும் சிறிதும் எதிர்பார்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். இந்து - முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்க ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். அதனால் நல்ல பலன் கிட்டியது. 1920 - ல் பாலகங்... |
மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்று பிரிட்டானிய அரசின் போக்காலும் இந்தியா திரும்பினார். இந்நாட்டிற்குக் கத்தியின்றி இரத்தமின்றி 1947 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 - ஆம் நாள் விடுதலை பெற்றுத் தந்தார். விடுதலை பெற்றுத் தந்த இந்த உத்தமரை நாத்துராம் கோட்ஸே பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஜனவரி 30 - ஆம் நாள... |
பல்வேறு துறைகளைத் தழுவியுள்ளதோடு ஒவ்வொரு துறைக்கும் புதிய கொள்கையையும் நடைமுறை நெறிகளையும் அளிந்துள்ளன. சபர்மதியில் ஓர் ஆசிரமத்தை நிறுவித் தமது கொள்கையையும் , கோட்பாடுகளையும் நடத்திக் காட்டி , அவை நடைமுறைக்கு ஒவ்வாத வெறும் வரட்டுத் தத்துவங்கள் அன்று நடைமுறை வாழ்வுக்கு உகந்தவை தாம் என நிரூபித்தார். மகாத்மா - சொல் விளக்க... |
கடவுளருளால் செயற்கரிய செயல் செய்வோரும் மகாத்மா ஆவர். மகாத்மாக்கள் தமக்கென்று வாழாதவர். பிறர்க்கென்று வாழ்பவர். 308 மகாள் எனும் சொல்லுக்குப் பெரியவர் என்று பொருள். இஃது உலக வழக்கு. மகான்களால் நற்செயல் நிகழ்த்தல் கூரும். செயற்கரிய செய்தல் அரிது. மகாத்மா என்பதற்கு தமிழில் அடிகள் என்பதாகும். ஆன்ற ஒழுக்கத்திற் சிறந்த அறவோரை... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.