text stringlengths 11 513 |
|---|
மற்றும் பிற வாய்ப்புகளை வழங்க ஒரு நகரீயம் வசதிகளைப் பெற்றுள்ளது. எனவே பெரும் அளவிலான மக்கள் அதை நாடிச் செல்கின்றனர். நகரிய உள்ளாட்சி அரசாங்கம் தொழில்நிறுவனத்தின் இயல்பான நிர்வாகப் பொறுப்பாக அனுசரிக்கப்படுகின்றது. நெய்வேலி போன்ற சில நகரங்களில் , தொழில் நிறுவனங்களால் நியமனம் செய்யப்படும் நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். இந்நி... |
அச்சத்தின் காரணமாக , நகரீயம் மக்களாட்சி அமைப்பு எதனையும் கொண்டிருக்கவில்லை. மேலும் , நகரீயங்களின் குடியிருப்பாளர்கள் தற்போதுள்ள ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்து மனநிறைவைப் பெற்றவர்களாக உள்ளனர். 9.2.4 இராணுவக் கூட வாரியங்கள் ( Contonment Boards ) மைய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும். அவை பாதுகாப்பு அமைச்சக... |
நிறுத்தப்படுவதற்கென அல்லது தங்குவதற்கென ஒரு நகரத்தில் உள்ள இடமே இராணுவக் கூடமாகும். இராணுவக் கூடப்பகுதியின் உள் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கென்று இராணுவக் கூட வாரியம் அமைக்கப்படுகிறது. இராணுவக் கூட வாரியத்தின் தலைவர் நிலையக் கட்டுப்பாட்டு அல்லது கட்டளை அதிகாரி ஆவார். அவருக்கு வாரியத்தில் விருப்பவாக்குச் சீட்டு வழங்கப்பட... |
நீடிக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தமக்கென்று ஒரு துணைத்தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கின்றார். நகராட்சிப் பணிகள் இராணுவக் கூட வாரியத்திடம் ஒப்படைக்கப்படுகின்றன. நகராட்சி மன்றத்தில் காணப்பெறுவதைப் போன்று இப்பணிகள் கட்டாயமானவை , தன் விருப்பமானவை என பாகுபாடு செய்யப்பட... |
கட்டுப்பாட்டு அதிகாரி வாரியத்தினால் தயாரிக்கப்படும் நிதிநிலை அறிக்கையை அனுமதிக்கின்றார். இராணுவக்கூட வாரியங்களின் நிலைப்பாடு , தனிப்பட்ட அமைப்புகள் ஆகியவை பொருத்தமற்றதாய் உள்ளன. எனவே காலப்போக்கில் அவை அண்டை நகராட்சி அமைப்புகளின் உறுப்புகளாக இடம்பெறலாம். 9.2.5 நகர எல்லைப் பகுதி குழுக்கள் அசாம் , கேரளா , மத்திய பிரதேசம் ... |
நிர்வகிக்கப்படுகின்றன. நகர எல்லைப் பகுதிக்குழுவின் மீது மாவட்ட ஆட்சியாளர் அதிகப்படியான கட்டுபாட்டினையும் அதிகாரத்தையும் கொண்டுள்ளார். நகர எல்லைப் பகுதிக் குழுவின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் அல்லது அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றனர். அல்லது ஒரு பங்கினர் தேர்ந்தெடுக்கப்பட்டோராகவும் மற்றொரு பங்கினர் ... |
பஞ்சாயத்திற்குள் உட்படுத்திக் கொள்ளப்படலாம். குறிப்பிட்ட எல்லைப்பகுதி குழுக்கள் ( Notified Area Committee ) இக்குழுக்கள் பீகார் , குஜராத் , அரியானா , மத்தியப்பிரதேசம் , கர்நாடகம் , ஜம்மு காஷ்மீர் , உத்திரபிரதேசம் மற்றும் இமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன. ஒரு நகராட்சி அமையப் பெறுவதற்குரிய தேவையான நிபந்தனைகளை நிறை... |
அதிகாரப்பூர்வமான அரசிதழில் அரசாங்கத்தினால் அறிவிப்பு செய்யப்படுகின்றது. எனவே தான் அது அறிவிப்பு செய்யப்பட்டுள்ள எல்லைப் பகுதிக்குழு என அழைக்கப்படுகின்றது. இக்குழு மாநில நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகின்றது. ஆனால் அதிகாரப்பூர்வமான அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது அறிவிக்கப்பட்டுள்ள நகராட்சிச் சட்ட ஏற்பாட... |
நியமன அமைப்பாகும். இக்குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வமைப்பு தற்போதைய சட்ட அடிப்படையில் இல்லை என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். 9.3.1 மூன்று அடுக்கு பஞ்சாயத்து முறை பஞ்சாயத்து முறை அரசியல். மாவட்டப்பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றியம் கிராம பஞ்சாயத்து... |
அடுக்காகும். இது மாவட்டம் முழுவதும் அதிகார எல்லையைக் கொண்டுள்ளது. எனினும் , நகராட்சியில் சேர்க்கப்பட்டுள்ள மாவட்டப்பகுதிகள் , அல்லது நகரப் பஞ்சாயத்து அல்லாத தொழில் நகரியம் அல்லது மாநகரப் பொறுப்புகள் கீழ் உள்ள பகுதிகள் அல்லது இராணுவக் கூட வாரியம் போன்றவை அதனுள் அடங்காது. மாவட்டப் பஞ்சாயத்து பின்வருவோரை உறுப்பினரர்களாய்க... |
அமைக்கப்படுகின்றது. ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் ஒரே ஒரு உறுப்பினர் நேரிடையாகத் தேர்ந்தெடுக்ப்படுகின்றார். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்ட பஞ்சாயத்தின் உறுப்பினராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. மாவட்ட பஞ்சாயத்து பகுதியின் மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள். மாவட்டத்திற்குள் ஓர் வாக்காளராகப்... |
கீழ்வரும் உறுப்பினர்கள் மாவட்டப்பஞ்சாயத்தின் நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். ஆனால் வாக்களிக்க முடியாது. தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு மாவட்ட பஞ்சாயத்துப் பகுதியில் உள்ள மொத்த மக்கட்தொகையில் அவர்களின் எண்ணிக்கை பெற்றுள்ள விகிதாசாரத்திற்கேற்ப இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்... |
பஞ்சாயத்திற்கு நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஒரு உறுப்பினருக்கு வயதுத் தகுதி 21 ஆகும். ஆனால் , அவ்விருசாராருடைய பெயர்களும் சம்பந்தப்பட்ட வாக்காளர்பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். மைய , மாநில அரசாங்கங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிபுரிவோர் , மாவட்டப் பஞ்சாயத்தின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட... |
நடத்தப்படவேண்டும். ஏனைய அனைத்துப் பிரதிநிதித்துவ அமைப்புகளுக்கு உள்ளதைப் போன்று , சட்டத்தின் கீழ் தகுதிக் கேடான எந்த நபரும் மாவட்டப் பஞ்சாயத்தில் வாக்களராக அல்லது உறுப்பினராக இருத்தல் முடியாது. தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஒவ்வொரு மாவட்டப் பஞ்சாயத்தும் ஒரு தலைவரையும் , துணைத்தலைவரையும் பெற்றுள்ளது. அவர்கள் தேர்ந்தெடுக்... |
வழங்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளையும் அவர்கள் அனுபவிக்கின்றனர். தலைவரின் பணிகள் மாவட்டபஞ்சாயத்தின் அரசியல் ரீதியான தலைமை நிர்வாகி அதன் தலைவர் ஆவார். அதன்படி , மாவட்ட பஞ்சாயத்தின் கூட்டங்களைக் கூட்டுவித்துத் தலைமை தாங்கி , அதன் செயல் நடவடிக்கைகளை நடத்துகின்றார். அவர் பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் பஞ்சாயத்துகள் செயல்படுவதை ... |
மந்தன அறிக்கையோடு இணைக்கப்படுகிறது. தமது பணிகளுள் எதனையும் துணைத்தலைவருக்கு அவர் ஒப்படைவு செய்யலாம். நெருக்கடியான சமயத்தின் போது , மாவட்டப்பஞ்சாயத்துத் தொடர்பான எப்பணியினையும் நிறைவேற்ற அவர் உத்தரவிடமுடியும். ஆனால் மாவட்டப் பஞ்சாயத்தின் அடுத்த கூட்டத்தில் அத்தகைய செயலை , அவர் அறிக்கை அறிவிப்புச் செய்யவேண்டும். மாவட்டப்... |
மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளார். அரசாங்கத்திற்கும் மாவட்டப் பஞ்சாயத்திற்கும் இடையே அவர் தகவல் தொடர்பு பாலமாக அமைந்துள்ளார். மாவட்டப் பஞ்சாயத்து அல்லது ஜில்லா பரிஷத்தின் அதிகாரங்களும் பணிகளும் மாநிலச் சட்டமன்றத்தால் இயற்றப்பட்டுள்ள சட்டத்தில் கூறப்பட்டுள்ளன. மாவட்டப் பஞ்சாயத்து ஓர் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை ... |
சமிதிகளுக்கு அது உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றது. 3. பஞ்சாயத்து ஒருங்கிணைக்கின்றது. சமிதிகளால் தயாரிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை அது 4. மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் சம்பந்தமாக அது மாநில அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்குகின்றது. 5. மாவட்டத்தின் உள்ளூர் ஆணையுரிமை படைத்த நிறுவனங்களின் பணிகள் குறித்து அது புள்ளி விவரங்களைச... |
ஆகியவற்றிற்குச் செய்யப்படவேண்டிய பணி ஒதுக்கம் மீது அது மாநில அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குகின்றது. 8. தனக்கு 9. மாநில கீழ் அமைந்துள்ள பஞ்சாயத்து இராச்சிய அடுக்கு முறை அமைப்புகளுக்கிடையிலான நல் உறவுகளை ஒழுங்கு முறைபடுத்துகின்றது. அரசாங்கத்தினால் அளிக்கப்படும் எல்லா அதிகாரங்களையும் அது செயல்படுத்துகின்றது. நிலைக்குழுக்கள... |
2. விவசாயம் , கூட்டுறவு , பாசனம் மற்றும் கால்நடைப் பராமரிப்பு. Page 168 of 204 3. குடிசை , கிராம மற்றும் சிறிய அளவிலான தொழில்கள். 4. கல்வி மற்றும் சமுதாயப் பொதுநலன். 5. நிதி மற்றும் வரிவிதிப்பு. 6. பொதுச்சுகாதாரம். இக்குழுக்களின் தலைவர்களும் உறுப்பினர்களும் தம்மால் தமக்குள்ளிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாவட்டப் ... |
ஒரு மாவட்டப் பஞ்சாயத்து பின்வரும் வருவாய் ஆதாரங்களைப் பெற்றுள்ளது. 1. தொழில் , வர்த்தகம் மற்றும் வாழ்க்கைப் பணி மீது விதிக்கப்படும் வரி. 2. பொதுக்கேளிக்கைகள் மற்றும் நீர் மீது விதிக்கப்படும் வரி. 3. பயணிகள் மீதான வரி. 4. மாநில அரசாங்கம் வழங்கும் மானியங்கள் மற்றும் கடன்கள். 5. பணியாளர் குழாம் மற்றும் சீரமைப்பு பற்றி மான... |
விதிக்கப்படும் வரி. 9. தனது சொத்திலிருந்து வரும் வருமானம். ஒவ்வொரு மாவட்ட பஞ்சாயத்திற்கென , மாவட்டப் பஞ்சாயத்து நிதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பின்வரும் இனங்கள் மாவட்டப் பஞ்சாயத்து நிதியினுள் செலுத்தப்படுகின்றன. 1. மாநிலத்தின் திரண்ட நிதிக்குவிப்பிலிருந்து மாவட்டப் பஞ்சாயத்தின் நிதிக்கென்று ஒதுக்கம் செய்யப்பட்ட தொகை. 2... |
குத்தகைத் தொகை. 4. தனிநபர்களிடமிருந்து அல்லது நிறுவனங்களிடமிருந்து மாற்றம் செய்யப்படும் அல்லது மானியங்களாய்ப் பெறப்படும் , அனைத்து வட்டிகள் , இலாபங்கள் மற்றும் நன்கொடையால் திரண்டுள்ள பிற வருமானங்கள். 5. மாவட்டப் பஞ்சாயத்தினால் விற்பனை செய்யப்பட்ட நிலம் மற்றும் சொத்துக்களின் மூலம் வரும் அனைத்து வருமானங்கள். 6. மாவட்டப் ... |
ஒன்றினை அரசாங்கம் வழங்குதல் வேண்டும். தலைமை நிர்வாக அலுவலர் மாவட்ட ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் ஒரு தலைமை நிர்வாக அலுவலர் அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகின்றார். பல்வேறு மாநிலங்களில் அவருடைய பதவிப் பெயர் மாறுபடுவதாய் உள்ளது. தமிழ்நாட்டில் இந்த அலுவலர் கிராம வளர்ச்சி இணை இயக்குனருக்குண்டான நிலையினை வகிக்கின்றார். தலைமை ... |
நிர்வாக அலுவலரின் பணிகள் , அதிகாரங்கள் மற்றும் கடமைகள். 1. தலைமை நிர்வாக அலுவலர் மாநிலச் சட்டமன்றத்தால் தன் மீது சுமத்தியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் செயல்படுத்துகின்றார். 2. மாவட்டப் பஞ்சாயத்துப் பணிகள் அனைத்தின் செயலாக்கத்தை அவர் மேற்பார்வையும் கட்டுப்பாடும் செய்கின்றார். 3. மாவட்டப் பஞ்சாயத்து மற்றும் அதன் குழுக்களி... |
பஞ்சாயத்தின் தீர்மானங்களின் செயலாக்கம் பற்றியும் வரி வசூலிப்பு பற்றியும் கால அறிக்கைகளை அவர் வழங்குதல் வேண்டும். 6. மாவட்டப் பஞ்சாயத்தின் அலுவலர்களையும் பணியாட்களையும் அவர் கட்டுப்பாடு செய்கின்றார். 7. மாவட்டப் பஞ்சாயத்தின் செயல்படுத்துகின்றார். உத்தரவுகளையும் கட்டளைகளையும் அவர் 8. மாவட்டப் பஞ்சாயத்தின் எந்த ஒர் அலுவலர... |
நடு அடுக்காகப் பஞ்சாயத்து சமிதி அமைந்துள்ளது. அது ஒரு இடைநிலையான அடுக்காகவும் கருதப்படுகிறது. பஞ்சாயத்து யூனியன் அல்லது ஊராட்சி ஒன்றியம் என அது பலவகையாகப் பெயரிடப்பட்டுள்ளது. அமைப்பும் அளவும் தேசிய விரிவாக்கக் குறிக்கோளாக அமையப் பெறும் பஞ்சாயத்து வளர்ச்சிக்கு வட்டாரத்துடன் பொதுவாக முடிவதைலில் பஞ்சாயத்து சமிதியின் என்று... |
பஞ்சாயத்து யூனியன் ஊராட்சி ஒன்றியம். 1. பஞ்சாயத்து ஒன்றியம் உள்ள வட்டாரங்களிலிருந்து நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு உறுப்பினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றார். 2. பஞ்சாயத்து ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த ( மக்களவை ) உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள். 3. பஞ்சாயத... |
என்ற வகையில் கிராமப் பஞ்சாயத்து அவையில் இடம்பெறுகின்றார். பஞ்சாயத்து ஒன்றியப் பகுதியில் உள்ள கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் தமக்குள் இவ்வுறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். தலைவர் மற்றும் துணைத்தலைவர் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் பிரமுகர் , பிரதான் என்று பல மாநிலங்களில் பெயரிடப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அவர் சேர்மன் (... |
இழக்கப்பட்டாலன்றி ( அ ) பதவியிலிருந்து நீக்கப்பட்டாலன்றி அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிக்கின்றனர். பஞ்சாயத்து ஒன்றியமன்றத்தினால் தடை செய்யப்பட்டாலன்றி எழுத்து மூலமாக உத்தரவின் மூலம் , தலைவர் அவருக்குண்டான எப்பணிகளையும் துணைத்தலைவருக்கு ஒப்படைவு செய்யலாம். எனினும் தலைவர் பதவி காலியாக இருக்கும் போது தலைவருக்குண்டான ... |
அலுவல் சார்பான உறுப்பினராகவும் தலைவராகவும் இருப்பார். தலைவரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் பஞ்சாயத்து யூனியனின் தலைவர் அரசியல் ரீதியான செயலாக்கத் தலைவராவார். அவருடைய அதிகாரங்களும் பணிகளும் பின்வருவனவாகும். 1. பஞ்சாயத்து சமிதியின் கூட்டங்களைக் கூட்டித் தலைமை தாங்குவதோடு அதன் செயல்முறைகளை அவர் நடத்துகின்றார். 2. பஞ்சாயத்த... |
Page 153 of 204 3. திட்டங்களை தீட்டுவதிலும் உற்பத்திச் செயல்திட்டங்களை செயல்படுத்துவதிலும் பஞ்சாயத்துக்களை ஊக்குவித்து அவைகளுக்கு வழித்துணையாக அவர் திகழ்கிறார். 4. பஞ்சாயத்து ஒன்றிய மன்றத்தின் ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வமான தகவல் பரிமாற்றம் அனைத்தும் தலைவரின் மூலமாக மேற்கொள்ளப்படவேண்டும். 5. ஒன்றியம் மற்றும் அரசாங்க... |
திகழும் பட்சத்தில் அலுவல் சார்பு முறையில் நிலைக்குழுவின் தலைவராக அவர் திகழ்கின்றார். பஞ்சாயத்து ஒன்றியத்தின் முறைமையின் முக்கியமான அமைப்பாக பஞ்சாயத்து சமிதி திகழ்கிறது. அது சமூக மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த தலையாயச் செயலாக்க அமைப்பாக உள்ளது. தனக்கென குறிப்பிட்ட வகையில் ஒதுக்கப்படும் பொறுப்புகளை செயல்படுத்துவதில்... |
அனைவருக்கும் தேவையான தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவியை வழங்குகின்றது. இறுதியில் தனது எல்லைக்குள் உள்ள பஞ்சாயத்தின் நிதிநிலை அறிக்கைகளை ஆராய்ந்து அனுமதிக்கும் பொதுப்படையான அதிகாரத்தையும் பெற்றுள்ளது. பஞ்சாயத்து சமிதியின் பணிகள் 1. பஞ்சாயத்து சமிதியின் பணிகள் இருவகைப்படும். அவை குடியியல் வசதிகள் மேம்படச் செய்வது மற்றும் ... |
சாலைகள் அமைத்துப் பராமரித்தல். குடிநீர் வழங்கல். வடிகால் குழாய்களை பராமரித்தல். 2. 3. 4. தாய் சேய் நல இல்லங்களையும் ஆரம்ப சுகாதார மையங்களையும் நிறுவுதல். 5. மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகளை ஏற்படுத்துதல். 6. ஆரம்ப மற்றும் ஆதாரப் பள்ளிகளுக்கான ஏற்பாடு செய்து முதியோர் கல்வி மையங்களை நிறுவுதல். 7. ஊட்டுப்பாதைகளாக உள்ள ... |
சமூக வளர்ச்சி திட்டங்களைப் பஞ்சாயத்து சமிதி நிறைவேற்றுகின்றது. அதன் பணிகள் , 1. சமூக மேம்பாட்டின் கீழ் அனைத்து திட்டங்களையும் செயலாக்குதல். 2. வீரிய வித்துக்களைப் பெருக்கி , வினியோகித்தல். 3. தேர்ச்சியான உரங்களைச் சேகரித்தல் , வினியோகித்தல் , பிரபலமாக்குதல். 4. மண்வளம் , நிலத்தை மேம்படுத்துதல். 5. வேளாண்மைக்கான கடன் வழ... |
வளர்ப்பு அறிமுகம் செய்தல். 9. தேர்ச்சி வாய்ந்த கால்நடை தீவனத்தை அறிமுகம் செய்தல். 10. கால்நடைகளுக்கு வியாதி வராமல் தடுத்தல் மற்றும் உரிய நிவாரணம் அளித்தல். 11. பால்பண்ணை அமைத்தல் , பால் வினியோகம் செய்தல். 12. கூட்டுறவுச் சங்கங்களை துவங்கி மேம்படுத்துதல். 13. மீன் காப்பகங்களைப் பராமரித்தல். 14. குடிசை , கிராம மற்றும் சி... |
இக்குழுக்கள் சட்டமுறையிலான பணிகளையாற்றும் பொருட்டு ஐந்து குழுக்கள் உள்ளன. அமைப்புகளாகும். கீழ்க்காணும் அ. நிதி மற்றும் வரி விதிப்பு. ஆ. வேளாண்மை உற்பத்தி கால்நடைப் பராமரிப்பு மற்றும் பாசனம். இ கல்வி மற்றும் மாதர் நலன் உள்ளிட்ட சமுதாய பொதுநலன். ஈ. பொதுச் சுகாதாரம் மற்றும் துப்புரவு. உ. தகவல் , தொடர்பு மற்றும் கூட்டுறவு.... |
பஞ்சாயத்து சமிதியினால் தமக்கு ஒப்படைவு செய்யப்படும் அதிகாரங்களை இக்குழுக்கள் செயல்படுத்துகின்றன. வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்குழுக்களின் செயலாளராகப் பணி புரிகின்றார். வருவாய் ஆதாரங்கள் பொதுவாக ஒரு பஞ்சாயத்து சமிதி பின்வரும் வருவாய் ஆதாரகளைக் கொண்டுள்ளது. 1. பஞ்சாயத்து சமிதி விதிக்கும் வரிகள் , கட்டணங்கள் , ஆகியவற்றில... |
மாநில அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் கடன் தொகைகள். 5. பஞ்சாயத்து சமிதியினால் அனுமதிக்கப்படும் பொதுப் இன்ன பலவற்றின் குத்தகைகளிலிருந்து கிடைக்கும் வருமானம். பணித்துறையில் சந்தைகள் , 6. மாவட்ட பஞ்சாயத்தின் வாயிலாக ( அ ) மாவட்டப் பஞ்சாயத்திலிருந்து பெறப்படும் தற்காலிக மானியங்கள். 7. பங்களிப்புகள் மற்றும் நன்கொடைத் தொகைகள... |
1994 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் பஞ்சாயத்துக்கள் சட்டப்படி ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றியத்துக்கும் பஞ்சாயத்து ஒன்றிய பொது நிதி என்றும் பஞ்சாயத்து ( கல்வி ) நிதி ஒன்றும் அமைக்கப்படவேண்டும். சட்டத்தில் குறிப்பிட்டவாறு பொது நிதி 27 இனங்களில் கிடைக்கப்பெறும் தொகைகளைக் கொண்டுள்ளன. மற்ற மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து சமிதிகளும் பஞ்ச... |
தாங்கப்படுகிறது. வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உதவி புரிய விரிவாக்க அலுவலர்கள் உள்ளனர். இவ்வளர்ச்சி அலுவலர்கள் மாநில அரசாங்கத்தினால் ஊதியம் வழங்கப்படும் பணியாளர்கள் ஆவர். அவர்கள் விவசாயம் , கால்நடை பராமரிப்பு , பொதுச் சுகாதாரம் போன்ற சம்பந்தப்பட்ட துறைகளில் வல்லுனர்களாய் உள்ளனர். அவர்களுக்கு கீழ் மற்ற பணியாளர்கள் உள்ளனர்... |
சார்ந்தவராக உள்ளார். அவர் ( அ ) அலுவலகத் தலைவராகவும் ( ஆ ) விரிவாக்க அலுவலர்களைக் கொண்ட ஒரு அணியின் தலைவராகவும் ( இ ) பஞ்சாயத்து யூனியனின் செயலாளராகவும் பணி ஆற்றுகின்றார். விரிவாக்க அலுவலர் அணியின் ஓர் தலைவர் என்ற வகையில் வட்டாரத்தில் பல்வேறு தொழில்நுட்பம் வாய்ந்த பணிகளை அவர் ஒருங்கிணைத்து பலவகையான வளர்ச்சி திட்டங்களை ... |
தீர்மானங்களை நிறைவேற்றம் செய்கின்றார். 2. வட்டாரத்திலுள்ள பஞ்சாயத்துகளை மேற்பார்வை செய்கின்றார். பஞ்சாயத்து யூனியன் மற்றும் அதன் நிலைக்குழுக்கள் ஆகியவற்றின் கூட்டங்களுக்கு அவர் அறிக்கைகளை பிறப்பிக்கின்றார். அக்கூட்டங்களின் நடவடிக்கைகளைப் பதிவு செய்து பராமரிக்கின்றார். 3. வாக்களிக்கும் உரிமையை பெறாத வகையில் யூனியன் கூட்... |
ஆட்சியாளருக்கும் புகார் செய்கின்றார். 6. பொருத்தமான அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்களையும் , திட்ட செயல்களையும் செயலாக்கம் செய்கின்றார். 7. தனது வட்டாரத்திற்குள் உள்ள பஞ்சாயத்துகளின் நிதி நிலவரத்தை அவர் ஆய்வு செய்கிறார். 8. பஞ்சாயத்து யூனியனின் பணியாட்கள் மற்றும் ஏனைய அலுவலர்களை அவர் மேற்பார்வையும் கட்ட... |
கிராமச் சபை உள்ளது. அது ஒரு பொதுவான அமைப்பாகும். அது ஒரு சட்டமுறையிலான அமைப்பாக ஏற்கப்பட்டுள்ளது. கிராமப் பஞ்சாயத்தின் தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களைக் கொண்டு அது அமையப் பெற்றுள்ளது. சராசரி 500 மக்கட் தொகையுடன் கூடிய ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கிராமங்களை ஒரு கிராம பஞ்சாயத்து அதிகார எல்லையாக கொண்டிருக்கலாம்.... |
கிராம சபையானது , குறைந்தது மூன்று கூட்டங்களைளேனும் ஒரு நிதியாண்டில் நடத்தவேண்டும். கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் , கிராம சபையின் கூட்டங்களைக் கூட்டுவதற்குப் பொறுப்பினைப் பெற்றுள்ளார். பணிகள். 1. கிராமசபை பஞ்சாயத்து ஆற்றும் பணிகளை சீராய்வு செய்கின்றது. 2. அது சபை எல்லைக்குரிய வளர்ச்சித் திட்டத்தை வரைகின்றது. 3. அது பஞ்சாய... |
5. அது கிராமப் பஞ்சாயத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் வழங்குகிறது. கிராமசபை இறைமை கொண்ட ஓர் அமைப்பாகும். எனவே அது சில செயல்பாடுகளைச் செய்யயும் பொருட்டு கிராமப் பஞ்சாயத்திற்கு அதிகாரங்கள் மற்றும் உரிமையை வழங்கலாம். கிராமப் பஞ்சாயத்து பஞ்சாயத்து இராச்சிய இறைமையின் முதலாவத... |
குறைந்தபட்ச எண்ணிக்கை ஐந்தாகவும் , அதிகப்பட்சமாகப் பதினைந்தாகவும் அதன் மக்கள் தொகையைச் சார்ந்து இருக்கும். கிராமப் பஞ்சாயத்து கிராம சபையின் செயலாக்க குழுவாக உள்ளது. அதன் உறுப்பினர்கள் இரகசிய வாக்களிப்பு மூலம் கிராம சபையினால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். கிராமம் முழுவதும் வட்டங்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு வ... |
of 204 கிராமப் பஞ்சாயத்து ஒரு தலைவரால் தலைமையேற்கப்படுகிறது. கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் கிராம சபையின் உறுப்பினர்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கிராம சபையின் மூன்றில் ஒரு பங்கினரின் பெரும்பான்மையுடன் அவருக்கு எதிரான ஒரு நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் அவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படலா... |
துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட முடியும். கிராமப்பஞ்சாயத்தின் பதவிக்காலமும் அதன் உறுப்பினர்களின் பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகளாகும். முன் கூட்டியே பஞ்சாயத்து கலைக்கப்படுமாயின் ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். தலைவரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள் கிராமப் பஞ்சாயத்தின் அரசியல் சார் செயலாக்க அதிகாரியாகத் த... |
தலைமையேற்கிறார். 3. பஞ்சாயத்தின் ஆவணங்களைப் பராமரிக்கிறார். 4. பஞ்சாயத்துப் பணியாளர்கள் மீது நிர்வாகக் கட்டுப்பாட்டை செலுத்துகின்றார். 5. பஞ்சாயத்தின் இயற்றப்பட்ட தீர்மானங்களின் செயலாக்கத்தை பார்வை செய்கின்றார். 6. கிராமப் பஞ்சாயத்தில் எடுக்கப்படும் முடிவுகள் செயல்படுத்தப்படுவதற்கான பொறுப்பினை அவர் பெற்றுள்ளார். 7. பஞ்... |
9. மாநில அரசாங்கச் சட்டத்தினால் ( அ ) அச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள விதிகளால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் அவர் செயல்படுத்துகின்றார். தலைவர் இல்லாதிருக்கும் நேரத்தில் துணைத்தலைவர் இப்பணிகளை ஆற்றுகின்றார். கிராமப் பஞ்சாயத்தின் பணிகள் கிராமப் பஞ்சாயத்திடம் பலவகையான பொதுநலப்பணிகளும் , வளர்ச்சி நடவடி... |
அரசாங்கத்தின் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து பணிகளையும் கிராமப் பஞ்சாயத்து ஆற்றவேண்டும். அவை கட்டாயமான பணிகள் மற்றும் தன்னிச்சையான பணிகள் என பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. கட்டாயமான பணிகள் கிராமப் பஞ்சாயத்து பின்வரும் கட்டாயமான பணிகளைப் பெற்றுள்ளது. 1. வேளாண்மை முன்னேற்றம் 2. குடிசை தொழில்களின் வளர்ச்சி 3. பொதுக் கிணறு... |
7. இடுகாடு மற்றும் சுடுகாடுகளைப் பராமரித்தல். 8. பிறப்புகள் , இறப்புகள் , திருமணங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்தல். 9. கால்நடை நீர்க்குட்டைகளைப் பராமரித்து , உயிர் நடைகளை பற்றி பொதுவான அக்கறை கொள்ளுதல். 10. கிராமப் பஞ்சாயத்தின் சொத்துக்களைப் பாதுகாத்தல். 11. சிறு அளவிலான பாசன வேலைகளைக் கட்டுவித்துப் பராமரித்தல். 12. பொதுச... |
செய்திகளைச் சேகரித்துப் பராமரித்தல். 16. வீரிய வித்துக்களையும் உரங்களையும் வினியோகிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தல். 17. தாய் சேய் நல ( பிரசவ ) விடுதிகளையும் இறைச்சிக் தொட்டிகளையும் பராமரித்தல். 18. நிலச்சீர்திருத்தம் , திட்டங்களின் செயற்பாட்டில் உதவியினை வழங்குதல். 19. அம்மை ஊசி , காலரா ஊசி மற்றும் கொள்ளை நோய்களுக்கெதிர... |
தர்மசாலைகள் , ஓய்விடங்கள் , விளையாட்டு மைதானங்கள் , நூலகங்கள் , படிப்பறைகள் , பூங்காக்கள் போன்ற பிறவற்றை நிறுவிப் பராமரித்தல். 3. சுகாதாரமற்ற வட்டாரங்களை மீட்பு செய்தல். 4. சமூகக் கூடங்களை மேலாண்மை செய்தல். 5. ஏழைகளுக்கு நிவாரணம் அளித்து பொதுச் சுகாதாரத்தைக் கவனித்துக் கொள்ளுதல். 6. நெற்களஞ்சியங்களையும் , தானியப்பயிர் ... |
10. கிராமப் பஞ்சாயத்தின் துப்புறவுப் பணியாளர்களுக்கு இல்லங்களைக் கட்டிப் பராமரித்தல். வருவாய் ஆதாரங்கள் மேற்குறிப்பிட்டுள்ள பணிகளை ஆற்றி கிராமப் பஞ்சாயத்து செயல்படுவதற்கான நபர்கள் , சொத்து மற்றும் வர்த்தகத்தின் மீது வரிகளை விதிப்பதற்கு அது அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஒரு கிராம பஞ்சாயத்து கீழ்வரும் ஆதாரங்களின் மூலமாக வருவா... |
செலுத்தப்படும் கட்டணங்கள். 5. தனது எல்லைக்குள் கால்நடைகள் விற்பனை செய்வதற்கு விதிக்கப்படும் கட்டணங்கள். 6. கிராமச் சொத்துடைமையிலிருந்து பெறப்படும் வாடகை 7. வட்டார வர்த்தக வரி 8. மாட்டு வண்டிகள் போன்ற ஊர்திகள் மீதான வரி 9. மாநில அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவி மானியங்கள் 10. மாநில அரசாங்கத்தினால் வழங்கப்பெறும் துணை மா... |
கிராமப் பஞ்சாயத்தின் ஒரு செயல் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் இருக்கிறார். அவர் மாநில அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்படுகிறார். அவர் கிராம பஞ்சாயத்தின் தீர்மானங்களை செயல்படுத்துகின்றார். அவர் கிராமப் பஞ்சாயத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாட்களைக் கட்டுப்பாடு செய்கிறார். தனது கடமைகளை ஆற்றுவதன் வாயிலாக அவர் தனது அதிகார எ... |
இரண்டாவது பகுதியில் சமூகப் பொருளாதாரக் களங்களில் மிகவும் குறிப்பாக விவசாயம் மற்றும் அரசியல் களங்களில் பல மேம்பாடுகளைக் கண்டுள்ளது. இந்தியர்கள் ஒருமைப்படுவதில் செல்வாக்கு செலுத்தவும் , அவர்களின் தேசியநிலை மற்றும் சுதந்திரத்தை அடைவதை நோக்கிப் பல்வேறு நடவடிக்கைகளை துவக்கவும் பன்மையில் ஒற்றுமை என்பது முக்கியமான காரணியாக இர... |
கோடிக்கணக்கான மக்களுக்காக வாழ்வு மற்றும் பாதுகாப்பை வழங்கும் நிலவுகின்ற முறைமைகள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்கும் உருவிலும் இருந்தது. இந்திய மக்களது வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் மிக நீண்ட தன்மையுடையதாக இருந்தது. அவர்களுக்கு முன்பு பொருளாதார மேம்பாட்டின் மிகப்பெரிய பணி இருந்தது. பாதுகாப்புடன் கூடிய பொருளாதார வளமை , சம... |
எதிர்கால நோக்கர்கள் 50 மற்றும் 60 - களில் தொடங்கி அவர்களால் முடிந்த அளவு மக்களுக்காகப் பலதிட்டங்களை தீட்டி நிறைவேற்றினர். ஆனால் , அவைகளைச் சாதிக்கும் முயற்சியில் மிகக் கடினமான சவால்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. குறை கூறுபவர்களின் கருத்துகள் இருந்தும் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அதை சரிசெய்தார்கள் மற்றும் ஒரு ஸ்திரமான வளர்ச... |
கடினமான சூழ்நிலைகளின் மூலம் பொறுப்பு மற்றும் வழிகாட்டலைப் பெற்றிருந்த நலிந்த தலைவர்களுடன் கூடிய நிலையற்ற காலத்தால் அது தொடரப்பட்டது. ஆனால் , மிகச் சமீபத்தில் , அடல் பிகாரி வாஜ்பாயால் தலைமைவகித்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தில் இந்திய அரசியல் முறைமை மற்றும் அதன் நிறுவனங்களின் மேன்மை இருந்தது. இந்தக் காலத்தில் , உள்நா... |
இங்கிலாந்து , ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் நோக்கம் செரிந்த நேர்மறையான உறவையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை ஏற்படுத்தியது என்று மேலும் கூறப்பட்டது. பிரதம மந்திரியாக முனைவர் மன்மோகன் சிங்கின் சீரிய தலைமையிலும் , பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகளை சேர்ந்த பல சிறந்த உறுப்பினர்... |
வெளியிலிருந்து தேசத்தை ஆள்வதிலும் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் இடது மற்றும் வலதுசாரிக் கம்யூனிசக் கட்சிகளின் ஆவலான ஒரு பங்கைப் பெற்றிருக்கின்ற கணிக்கமுடியாத அல்லது எதிர்பாராத மேம்பாடாக Page 1 / & of 204 இது உள்ளது. தேசிய அரசாங்கத்தை எந்நிலையிலும் குறை கூறுகின்ற பலரின் இயல்பான கருத்தாக இது உள்ளது. இருப்பினும் , அ... |
உதவுவதற்கு 21 - ஆம் நூற்றாண்டிலுள்ள அரசாங்கம் முன்னேற முடியும். பொருத்தமான திட்டங்களை துவக்கமுடியும். மற்றும் திட்டவட்டத்துடன் அவைகளை நிறைவேற்ற முடியும் என்று ஒவ்வொருவரும் நம்ப முடியும். 10.1 தற்போதைய நிலை உறுதியான சாதனைகள் மூலமாக திருப்திகரம் அல்லது அதிக திருப்திகரமான முடிவுகளை அடைந்துள்ள இந்தியாவில் உள்ள சில களங்கள் ... |
போன்றவைகள் கணக்கில் எடுக்கப்பட்ட மற்றும் ஆராயப்பட்ட களங்களாகும். இவைகள் ஒவ்வொன்றும் ஒரு தெளிவான புரிதிறனுக்காக சில துணைக் களங்களினடியில் விளக்கப்பட்டு பகுத்தாயப்படுகிறது. 1. சமூக மேம்பாடு பொதுவாகவே , பல்வேறு தன்மைகளில் பல்வேறு ஜாதிகள் , மதங்கள் , மொழிகள் , கலாச்சாரங்கள் மற்றும் இனங்கள் நிலவுகின்ற ஒரு பன்மைச் சமூகமாக இந... |
ஒவ்வொரு பத்து வருடத்திற்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. 1920 - வரை இந்தியாவின் மக்கள்தொகை மெதுவாக வளர்ந்தது. 1911 - லிருந்து 1920 வரையிலான பத்து ஆண்டுகளிலும் மற்றும் 1921 - லிலும் பரவும் நோய்கள் நிலவியதற்கிணங்க மக்கள்தொகை வளர்ச்சியில் சரிவு இருந்தது. அட்டவணை 1 ல் காட்டியுள்ளதைப் போல சுதந்திரத... |
மீது 21.34 சதவீதம் அதிகரித்திருந்தது. அதே காலத்தில் இறப்பு விகிதம் குறைந்திருந்ததாலும் வாழ்வு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்ததாலும் இவ்வதிகரிப்பு இருந்தது. 2001 - ன் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி , கவன ஈர்க்கும் விவரங்கள் சில பின்வருகின்றன. அ. நாட்டின் ஒட்டுமொத்தத்திற்கான சராசரி மக்கள் தொகை நெருக்கம் ஒரு சதுர கிலோமீட்டருக... |
பெற்றிருக்கும் வேளையில் , அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு அது 13 நபர்களாக உள்ளது. 5. மக்கள்தொகையுடன் கலந்த சமூக மேம்பாட்டு இலக்குகளை வடிவமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை ஏற்றுக்கொள்ளல். மற்றும் 6. சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துடன் தொடர்புள்ள துறைகளை மாற்றியமைக்கக்கூடிய விண்வெளி ஆணை... |
இந்திய அரசாங்கம் அறிவித்தது. 1. கர்ப்பத்தடை , சுகாதார நலக்கட்டுமானம் , அடிப்படை மறுஉற்பத்தி மற்றும் குழந்தை சுகாதாரக் கவனத்திற்கான நிறைவேற்றாத தேவைகளை நிவர்த்தி செய்வது உடனடியான நோக்கமாக உள்ளது. 2. 2010 ல் 2.1 % விகிதமாக மாற்றும் அளவிற்கு மொத்த மகப்பேறு விகிதத்தை ( TFR ) கொண்டுவருவது நடுத்தரக் கால நோக்கமாக உள்ளது. மற்ற... |
விளைவாக பிரதம மந்திரியைத் தலைவராகவும் , மாநில முதலமைச்சர்கள் , மத்திய அமைச்சர்கள் , அரசுசாரா நிறுவனங்கள் , மக்கட்தொகை நிபுணர்கள் மற்றும் பொதுச் சுகாதார பணியாளர்கள் போன்றோரை உறுப்பினர்களாகவும் பெற்றுள்ள மக்கள்தொகை மீதான ஒரு தேசிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அந்தக் கொள்கைய... |
செயல்பாட்டிற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிசளித்தல் , குடும்பக் கட்டுப்பாடு செய்கின்ற தாய்மார்களுக்கும் மற்றும் ஜோடிகளுக்கும் ரொக்க ஊக்கங்கள் மற்றும் இதுபோன்றவைகள் அந்தக் கொள்கையில் கூறப்பட்டுள்ள சில சிறந்த மற்றும் ஊக்குவிக்கும் செயல்பாடுகளாக உள்ளன. சாதனைகள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்கள்தொகையைக் உண்மையில் , கட்டுப... |
குறைந்துள்ளது. 2. 1951 - ல் 1000 க்கு 146 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம் 2000 - ல் 1000 - க்கு 68– ஆகக் குறைந்துள்ளது. 3. 1951 - ல் 25 ஆக இருந்த தோராய இறப்பு விகிதம் 2000 - ல் 8.5 ஆகக் குறைந்துள்ளது. 4. 1951 - ல் 37 வருடமாக இருந்த ஒரு சராசரி இந்தியரின் வாழ்வு எதிர்பார்ப்பு 2000 - ல் 67 வருடமாக உயர்ந்துள்ளது. மற்றும் ... |
விவசாயம் உள்ளது. கச்சாப் பொருட்களுடனான அதிக எண்ணிக்கையுள்ள தொழில்களை விவசாயம் ஏற்படுத்தியது. அதனால் அது நாட்டின் தொழில் மேம்பாட்டிற்கு முக்கியமானதாக உள்ளது. இந்தியாவில் 64 % சதவிகித உழைப்புச் சக்திக்கு அது நேரடி வாழ்வளிக்கிறது என்பது இந்திய விவசாயத்தின் இயல்பான தன்மையாகும். இந்திய ஏற்றுமதியின் மொத்த மதிப்பில் கிட்டத்தட... |
திடச் சுற்றுச்சூழலில் உள்ள வேறுபாடுகளுக்கிணங்க , இந்தியாவில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. நெல் , கோதுமை , மக்காச்சோளம் , பார்லி , கரும்பு , பருத்தி , சணல் , பயிர்வகைகள் , தேனீர் , காப்பி , ரப்பர் , பட்டு மற்றும் புகையிலை போன்றவைகள் முக்கியமான பயிர்களாக உள்ளன. மேம்பாட்டின் முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் விளைவாக ... |
மேல் அதிகரிப்பதற்கு அது நோக்கம் கொண்டுள்ளது. ஒப்பந்தப் பண்ணை மற்றும் நிலக்குத்தகை ஏற்பாடுகள் மூலமாக தனியார்துறை பங்கேற்பை மேம்படுத்துவதற்கு அது நாடுகிறது. மேலும் , உள்நாட்டு விவசாயச் சந்தைகளின் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் 4 சிக்கலான சட்டங்களையும் போக்குவதற்கு அது நாடுகிறது. அதனால் விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொ... |
பல்வேறு அளவைகளில் வருவதால் , ஒட்டுமொத்தத்தையும் ஒரு பொது அளவையில் அளப்பது இயலாமல் உள்ளது. ஆதலால் , மதிப்புகள் பண ரீதியாக வெளிப்படுத்தப்படுகின்றன. இவ்வாறாக , தேசிய வருமானம் என்பது ஒரு வருடத்தில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து இறுதியான பொருட்கள் மற்றும் பணிகளின் பணமதிப்பாக உள்ளது. இந்தியாவில் ஒரு அடிப்படை வருட... |
அடித்தளத்தைப் பலவகையான விவசாய மற்றும் சுரங்க கச்சாப் பொருட்கள் ஏற்படுத்தியுள்ளன. தொழில்களின் மேம்பாட்டில் செயல்படுவதற்கு ஒரு சிறந்த பங்கை அரசு பெற்றிருந்தது என்ற கருத்து ஜவஹர்லால் நேருவை தலைவராகக் கொண்ட தேசிய திட்டக்குழுவின் ( 1950 ) அறிக்கையில் காணப்பட்டது. இது தொழில் கொள்கையின் ( 1945 ) அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது... |
கொள்கைத் தீர்மானம் , 1956 4. தொழில் கொள்கை அறிக்கை , 1973 5. தொழில் கொள்கை அறிக்கை , 1977 6. தொழில் கொள்கை அறிக்கை , 1980 மற்றும் 7. புதிய தொழில் கொள்கை , 1991. இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அறிவியல் ஆய்வு தொழில்நுட்ப மையங்களை நிறுவுதல் , கருவிகளை நவீனப்படுத்துதல் , ஹைட்டரஜன் மற்றும் நைட்ரஜன் குண்டுகளைத் த... |
உதாரணத்தை இந்தியா பின்பற்றியது. இருப்பினும் , இதுவரையிலான பொருளாதார மற்றும் விவசாய மேம்பாடு தொடர்பாக , முன்னுரிமைத் திட்டமிடல் மற்றும் முறையான அமுலாக்கத்தை வலியுறுத்திய சோவியத் முன் மாதிரியை அது பின்பற்றியது. திட்டமிட்ட மேம்பாட்டின் ரஷ்ய முறையின் ஆதரவாளராகச் சமதர்மவாதியான பண்டித ஜவஹர்லால் நேரு இருந்தார். அவரின் முயற்சி... |
முன்னுரிமைகளையும் அட்டவணை –4 காண்பிக்கிறது. அட்டவணை 4 ஐந்தாண்டுத் திட்டங்களும் முன்னுரிமைகளும் | முன்னுரிமைகள் விவசாயம் , நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரத் | திட்டங்கள் | தொழில் | ஐந்தாண்டுத்திட்டங்கள் | முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் 1951-56 | இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் 1956-61 மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் 1961-66 நான்... |
ஐந்தாண்டுத் திட்டம் 1997-2002 | பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் 2002-07 அடிப்படைத் தொழில்கள் | பங்கீட்டு நிதியுடன் வளர்ச்சி வறுமை ஒழிப்பு மற்றும் சுயசார்பு வறுமை ஒழிப்பு வேலைவாய்ப்பை உருவாக்குதல் 2000 - ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல் | சமூக நீதியுடன் வளர்ச்சி மற்றும் சமத்துவம் வறுமை மற்றும் மக்கள் தொக... |
விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் வருடாந்திரத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டன என்பது அதன் பொருளாகும். பசுமைப் புரட்சி , பணவாட்டத்தைக் குறைத்தல் மற்றும் வங்கிகளை தேசியமயமாக்குதல் போன்றவைகள் அந்தக் காலகட்டத்தில் பிரதான வளர்ச்சிப் படிகளாக இருந்தன. III. அரசியல் மாற்றம் இங்கே , அரசியல் மாற்றத்தை குற... |
முடிந்தது. ஒரு புதிய அரசியலமைப்பை வரையும் பணி இந்திய அரசியலமைப்புச் சபையால் மேற்கொள்ளப்பட்டது. பண்டித நேரு , அம்பேத்கர் , பட்டேல் , கிருஷ்ணமாச்சாரி மற்றும் பல சிறந்த உறுப்பினர்களை அது பெற்றிருந்தது. அதன் தலைவராக இராஜேந்திரப்பிரசாத் இருந்தார். அது இறுதியாக நவம்பர் , 26 , 1949 - ல் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. அப்ப... |
நாடாகத் திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் இந்திய அரசியலமைப்பு மிகவும் பெரியதாகும். அரசியலமைப்பின் செயல்பாட்டுக் காலத்தில் , திருத்தங்கள் மூலமாக பல்வேறு மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அம்மாற்றங்களில் மிகவும் முக்கியமானது , எல்லா மாநிலங்களிலும் பஞ்சாயத்துராஜ் மற்றும் நகராட்சி முறைகளை அறிமுகப்படுத்துவது கட்டாயத் தேவை... |
பின்வருவன சில அரசியல் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களாகும். 1. அரசியலமைப்பின் பெரிதாக்கம் இந்தியாவின் ஆரம்ப அரசியலமைப்பு ஒரு முகவுரை , 22 பகுதிகள் , 395 விதிகள் மற்றும் 8 அட்டவணைகளைப் பெற்றிருந்தது. தற்போது , அது ஒரு முகவுரை , 22 பகுதிகள் , 444 விதிகள் மற்றும் 12 அட்டவணைகளைப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் , விதி 368 - ... |
அரசியலமைப்பின் முகவுரையில் இறைமை , ஜனநாயகம் மற்றும் குடியரசு போன்ற பிரதான கொள்கைகள் மட்டுமே இடம்பெற்றன. ஆனால் , 1976 - ஆம் ஆண்டின் நாற்பத்து இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சமதர்மம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய அடுத்த இரண்டு பிரதானக் கொள்கைகளை முகவுரையில் புகுத்தியது. எனவே , இந்தியா ஒரு இறைமையான , சமதர்ம , மதச... |
அடிப்படை அமைப்புகளின் பராமரிப்பு அரசியலமைப்பின் ஆரம்ப உள்ளதைப் போல கொள்கைகளின் அடிப்படை அமைப்புகள் எவ்வித குளறுபடியுமின்றி முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இறைமை , மதச்சார்பின்மை , சமதர்மம் , மக்களாட்சி , குடியரசு , பாராளுமன்ற அரசாங்கமுறை , சட்டத்தின் ஆட்சி போன்றவைகள் அரசியலமைப்பின் சில அடிப்படை அமைப்புகளாகும். கேசவ... |
மாற்றப்படாமல் நிலவவேண்டும். 4. அடிப்படைக் கடமைகள் 42 - வது திருத்தத்தால் , அரசியலமைப்பின் ஒரு புதிய பகுதி IV அ - வில் அடிப்படைக் கடமைகள் உள்ளடக்கப்பட்டன. மற்றும் ஒரு புதிய விதி 51 – அ புகுத்தப்பட்டது. அரசியலமைப்பை மதித்து நடத்தல். அதன் கொள்கைகள் மற்றும் நிறுவனங்கள் தேசியக்கொடி , தேசிய ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஒருமைப... |
IX- ல் பஞ்சாயத்துக்களை இடம்பெறச் செய்துள்ளது. இந்தப் பகுதி இந்தியாவில் கிராமபுற உள்ளாட்சி அமைப்புகளான பஞ்சாயத்து ராஜ்யத்தின் அமைப்பு மற்றும் பணிகளை விளக்குகிறது. மேலும் பஞ்சாயத்துகளின் 29 பணிகளை வரிசைப் படுத்துகின்ற அரசியலமைப்பின் 11 - வது அட்டவணையை 73 - வது திருத்தம் ஏற்படுத்தியுள்ளது. 6. நகராட்சிகள் 1992 - ன் 74 வது ... |
பங்கேற்புப் போன்றவைகளும் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. மேலும் , நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் 18 பணிகளை வரிசைப்படுத்துகின்ற அரசியலமைப்பின் 12 - வது அட்டவணையை 74 - வது திருத்தம் ஏற்படுத்தியுள்ளது. 7. கூட்டுறவுக் கூட்டாட்சி மாநிலங்களுக்கிடைே யேயான ஆரம்பத்திலேயே கூட்டாட்சி மற்றும் ஒற்றையாட்சி அரசாங்க முறைகளின் தன்மைகளை... |
ஆகியவைகளுக்கிடையே பல பிரச்சனைகளைப் பெற்றிருப்பதாலும் , கவுன்சிலை உருவாக்கியுள்ளது. சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைகளின் படி மே அது ஏற்படுத்தப்பட்டது. அந்தக் கவுன்சில் பிரதம மந்திரி , அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் சட்ட சபைகளைப் பெற்றுள்ள யூனியன் முதலமைச்சர்களையும் பெற்றுள்ளது. கூடுதலாக , மத்திய அமைச்சரவையிலிருந்து அமை... |
வகிக்கப்படுகின்றன. உண்மையில் , இந்தக் கவுன்சிலின் செயல்பாடு இந்தியாவில் ஒரு கூட்டுறவுக் கூட்டாட்சியை உருவாக்கியுள்ளது. 8. தேர்தல் சீர்திருத்தங்கள் இந்தியாவில் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக பல குழுக்களும் ஆணையங்களும் நியமிக்கப்பட்டன. அவைகளில் , பல பரிந்துரைகளை வழங்கியுள்ள டார்குண்டே குழு ( 1974 ) மற்றும் தினேஷ் கோஸ்வாமி... |
நான்கு மாதத்திற்குள் தேர்வுசெய்ய வேண்டிய ஒரு அறிவிப்பை தேர்தல் ஆணையம் 1994 - ல் வெளியிட்டது. கட்சிமாறா தடைச்சட்டம் ( 1985 ) , 18 வயதடைந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கிய 61 - வது அரசியலமைப்புத் திருத்தம் போன்றவைகள் இந்தியாவில் முக்கியமான தேர்தல் சீர்த்திருத்தங்களாகும். 9. தேர்தல்கள் சுதந்திரத்திலிருந்து , இந... |
மக்களுக்கான தருணத்தை தேர்தல்கள் வழங்கியுள்ளன. மற்றும் மக்களிடையே விழிப்புணர்வையும் உருவாக்கியுள்ளன. இதுவரை , இந்தியாவில் பொதுவாக பல்வேறு தன்மைகளில் அரசியல் மாற்றத்தைக் குறிப்பாக அரசியலமைப்பு மாற்றங்களை நாம் விவாதித்துள்ளோம். இருப்பினும் , இன அரசியல் , மத அரசியல் பிராந்தியம் , அரசியலில் பணத்தின் பங்கு , பாரம்பரியக் காரண... |
இந்திய நிர்வாகத்தின் பல களங்கள் பிரிட்டிஷ் விட்டுச் சென்றதன் அடிப்படையாக உள்ளன. சுதந்திரத்தின் போது , ஏகாதிபத்திய அரசங்கத்தின் வரையறுக்கப்பட்ட பணிகளின் செயல்பாட்டிற்காக முதன்மையாக வடிவமைக்கப்பட்டிருந்த மற்றும் இந்தியாவின் ஒரு மதச்சார்பற்ற , சுதந்திரமான , ஜனநாயக மற்றும் சமதர்மக் குடியரசின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இயற்க... |
இந்தியாவில் , நிர்வாகத்தின் மேம்பாடுகள் நிர்வாகக் சீர்திருத்தங்களாக உள்ளன. இங்கே , இந்திய நிர்வாகத்தின் சீர்த்திருத்தங்கள் மற்றும் மேம்பாட்டிற்காக பரிந்துரைத்த பல குழுக்களை நாம் விவாதிக்கலாம். 1. அய்யங்கார் குழு , 1949 அமைப்புமுறை மாற்றங்கள் , பணியாளர் திறனில் முன்னேற்றம் மற்றும் அரசாங்க நடவடிக்கை முறைகளில் முன்னேற்றம்... |
துறைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அந்தக்குழு பரிந்துரைத்தது. 28 துறைகள் , 8 மத்திய நிர்வாக அலுலகங்கள் மற்றும் ஒரு அமைச்சர்குழுச் செயலகம் போன்றவைகள் அடங்கிய அமைப்பின் 37 பிரதான அலகுகளாக மத்தியச் செயலகம் பிரிக்கப்பட வேண்டும் என்று அந்தக்குழு பரிந்துரை செய்தது. மேலும் ஒவ்வொரு துறையிலும் ஒரு ‘ அமைப்பு மற்றும் முறைகள் ’ பிரி... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.