text
stringlengths
11
513
இருக்க வேண்டும். அல்லது 4. ஓர் உயர்நீதிமன்றத்திலோ , இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட நீதிமன்றங்களிலோ குறைந்தது பத்தாண்டுகள் வழக்கறிஞராக இருந்தவராக இருக்க வேண்டும். அல்லது குடியரசுத் தலைவர் கருத்தின்படி தனிச்சிறப்பு வாய்ந்த சட்டவியல் நிபுணராக இருத்தல் வேண்டும். உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் அறுபத்தைந்து வயது நிறைவு பெ...
இடங்களிலோ தற்காலிக இருப்பிடமாகக் கொண்டு செயல்படுத்தலாம். உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு ( JURISDICTION OF SUPREME COURT ) 1. முதலேற்பு அதிகார வரம்பு 2. மேன்முறையீட்டு அதிகார வரம்பு 3. ஆலோசனை அதிகார வரம்பு 4. நீதிப் பேராணை அதிகார வரம்பு 5. இன்னபிற அதிகார வரம்பு 1. முதலேற்பு அதிகார வரம்பு ( Original jurisdiction ) இந்...
, அல்லது. ஒருபுறம் , இந்திய அரசாங்கமும் ஏதேனும் மாநிலம் அல்லது மாநிலங்களும் மறுபுறம் பிறிதொரு மாநிலம் அல்லது மாநிலங்கள் இவற்றிற்கிடையே எழும் வழக்கு அல்லது இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே எழும் வழக்கு அடிப்படை உரிமைகள் செயலாக்குவது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்புக்கு ...
உரிமையியல் ) மற்றும் கிரிமினல் ( குற்றவியல் ) வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதி மன்றத்திற்கு முறையீடு செய்யலாம். குறிப்பிட்ட வழக்குகளில் அரசியலமைப்பின் பொருள் குறித்து தெளிவான சட்டப் பிரச்சினை உள்ளது என உயர்நீதிமன்றம் சான்று வழக்கினாலன்றி உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ஏற்றுக் கொள்ளாது. உயர்நீதிமன்றம் இத்தகைய சான...
தொடர்பாகவும் சிவில் வழக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யலாம். குற்றவியல் வழக்கு தொடர்பாகவும் , இந்திய எல்லைக்குட்பட்ட எந்த உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுத்கெதிராகவும் அல்லது குற்றவியல் வழக்கில் வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராகவும் உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்...
தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்துரையைப் பெறுதவற்காக அனுப்பலாம். அந்த அதிகாரத்தை அரசியலமைப்பு குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. 4. நீதிப்பேராணை அதிகாரவரம்பு ( Writ Jurisdiction ) இந்திய அரசியலைப்பின் விதி 32 ல் வழங்கப்படும் உரிமை மனிதனின் இருதயமும் உயிர்சக்தியும் ஆகும். இவ்வுரிமை மூலம் தனிமனிதனின் உரிமையும் சுதந்தி...
4 ) நெறிமுறைக்கேட்பு நீதிப்பேராணை 5 ) தகுதிவினவு நீதிப்பேராணை 1 ) ஆட்கொணர்விப்பு நீதிப்பேராணை ( WRIT OF HABEAS CORPUS ) தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால் அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ ஆணை வழங்கி காவலில் வைக்கப்பட்டவரை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரச் செய்வதாகும். காவ...
செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார். 3 ) தடையுறுத்து நீதிப்பேராணை ( WRIT OF PROHIBITION ) நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து , அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலை செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்பதாகு...
தொடர்பான ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு அனுப்பச்செய்வதாகும். செயலுறுத்து நீதிப் பேராணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , தடையுறுத்து நீதிப்பேராணை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பதும் ஆகும். செயலுறுத்து நீதிப் பேராணை நீதித்துறை என்று மட்டுமல்லாமல் நிர்வாகத்துறையின் அதிகா...
செலுத்துவோருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. 5 ) தகுதிவினவு நீதிப்பேராணை ( WRIT OF QUOWARRANTO ) பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுப் படுத்தக்கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும். அ. அவ்வலுவலர் அரசா...
நிறைவேற்றும் வேலை ஆளாகவோ இல்லாமல் சார்பில்லாத உறுதியாக ஏற்படுத்தப்பட்ட அலுவலராக இருக்க வேண்டும். இ. அவ்வலுவலர் நியமிக்கப்பட்டது அரசியலமைப்பு அல்லது சட்டம் அல்லது சட்டம் சார்ந்த பிரச்சினை சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும். அரசாங்க அலுவல்கள் ஆக்கிரமிப்பை எதிர்த்து பாதுகாக்கும் அதிகாரம் மிக்கதாக தகுதி வினவு ஆணை கருதப்படுகிற...
அனைத்தையும் உடையதாகவும் இருக்கும். ஆ. உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தீர்ப்புகள் இந்திய எல்லைக்குட்பட்ட எல்லா நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நீதிமன்ற நடவடிக்கைகளையும் செயல்முறைகளையும் ஒழுங்குபடுத்துவதற்காக விதிகளை இயற்ற உச்சநீதிமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது. ஈ. உச்சநீதிமன்றம் தனக...
Attorney General ) மேற்கூறப்பட்ட அலுவலர்கள் அனைவரும் அரசியல் சட்ட விதி 76 யின் படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் துறையை சார்ந்தஅலுவல்கள் , கடமைகள் நடைமுறைகள் மற்றும் அவைப்பற்றிய சட்டபூர்வ நிலைமைப்பற்றி தேவைப்படும் போதோ அல்லது கேட்டு கொள்ளும்போதோ , குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை கூற...
நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறும் போது அவை எத்தகைய நீதிமன்றமாக இருந்தாலும் அங்கு தானே நேரில் ஆஜராகி வழக்கு விசாரணையில் உதவுவதற்கு அனுமதியும் உரிமையும் உடையவர். பொது வழக்கறிஞர் குடியரசுத் தலைவருடைய விருப்பம் உள்ளவரை பதவியில் இருப்பார். அவர் அனுமதிக்கும் ஊதியத்தை அவ்வப்போது பெறுவார். பொது வழக்கறிஞரை அடுத்து இன்னும் ஒரு இ...
எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் ஆணையம் , அதன் அதிகாரங்களும் , பணிகளும் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. இந்தப் பாடநூலில் தேசியக் கட்சிகள் , மாநில கட்சிகள் ஆகியவற்றின் அமைப்பு மற்றும் இலக்குகளும் , குறிக்கோள்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் படிநிலை அமைப்பிலான கட்டமைப்பைப் பெற்றுள்ளன. கட்சிகள் தனக்குரிய அ...
பொருளாளர்கள் இருப்பார்கள். நாட்டின் பல்வேறு நிலைகளிலும் அரசியல் கட்சிகள் தமது மாநாடுகள் உரிய காலகட்டங்களில் நடத்துகின்றன. இத்தகைய மாநாடுகள் கட்சித் தொண்டர்கள் கட்சிக்காக நிதி திரட்டவும் , மக்களின் ஆதரவு திரட்டவும் உபயோகப்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட , எல்லா அரசியல் கட்சிகளும் இந்த முறையைப் பின்பற்றுகின...
இலக்குகள் அரசியல் கட்சிகள் இயங்குவதற்கு முக்கியமானவையாகும். இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய நாடாகும். மக்களிடையே இன , மொழி , மதம் , வருவாய்நிலை , சமூக நிலை வேறுபாடுகள் உள்ளன. எனவே பொதுவான ஒரு அமைப்பு உருவாவது கடினம். இது கட்சிகளுக்கும் பொருந்தும். இந்தியாவில் தேசிய , மாநில அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றைப் பற்ற...
தொகுப்பினைக் கருத்தியல் குறிப்பிடுகின்றது. அரசாங்கக் கோட்பாடு ஒன்றையும் , அரசியல் நடவடிக்கைக்குரிய நிகழ்ச்சித் திட்டத்தையும் உருவாக்குவதற்குக் கருத்தியல் செயல்திறனை வழங்குகின்றது. அரசியல் கோட்பாடு மற்றும் அரசியல் தத்துவம் ஆகியவற்றைப் போல் அல்லாமல் , நடவடிக்கைக்குரியதொரு நிகழ்ச்சித் திட்டமாய் கருத்தியல் திகழ்கின்றது. அர...
அரசியல் கட்சிகளின் இலக்குகள் , குறிக்கோள்கள் , கொள்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் வாயிலாக கருத்தியல்கள் செயற்பாட்டைப் பெறுகின்றன. இந்தியத் தேசியக் காங்கிரஸ் இந்தியத் தேசியக் காங்கிரஸ் மிகப் பழமையான அரசியல் கட்சியாகும். அது ஏ.ஓ. ஹியூம் என்பவரால் 1885 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் , 28 ஆம் நாளில் நிறுவப்பட்ட...
அணிதிரண்டனர். எனவே , பிரிட்டிஷ்காரர்கள் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 15 ஆம் நாளன்று நாட்டையும் அதிகாரத்தையும் காங்கிரஸிடம் ஒப்படைத்தனர். அந்த நாள் முதற்கொண்டு , இரண்டு இடைவெளிகளை அல்லது குறுகிய கால எல்லைகளைத் தவிர்த்து ஏற்றத்தாழ ஐம்பது ஆண்டுகளாய்க் காங்கிரஸ் மைய அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருந்து வருகின்றது. 1967 ஆம...
நரசிம்மராவ் மற்றும் பலர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆவர். இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சிப் பிளவுகள் பலவற்றைச் சந்தித்து உள்ளது. அதன் தேர்தல் சின்னம் ' கை ' ஆகும். காங்கிரஸின் அமைப்பு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அமைப்பு 1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தொடரில் வடிவமைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதற்கு இணங...
காங்கிரஸ் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த அமைப்பு அமைச்சரவையைப் போல் உள்ளது. பொதுவாக , மிக மூத்தக் காங்கிரஸ்காரர்கள் இந்த அமைப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ( 3 ) நாடாளுமன்றக் குழு என்ற தனிப்பட்ட அமைப்பு ஒன்றும் உள்ளது. காங்கிரஸ் தலைவரையும் சேர்த்து ஆறு உறுப்பினர்களை அது கொண்டுள்ளது. ( 4 ) காங்கிரஸ் ...
மாவட்டத்திற்குமென , மாவட்டக் காங்கிரஸ் குழுக்கள் ( மாநில காங்கிரஸ் குழுவின் கீழ் அமைந்துள்ளன. இதற்குக் கீழ் நிலையில் சில குழுக்களும் மற்றும் ( 6 ) மண்டலக் காங்கிரஸ் குழுக்களும் உள்ளன. பதினெட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வயதைக் கொண்ட எந்த ஒரு நபரும் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினராக முடியும். காங்கிரஸின் கருத்தியல் செயல்திட...
ஏற்பட்டது. வகுப்பு அல்லது வர்க்க பேதமற்ற , மக்களாட்சிச் சமுதாயம் ஒன்றினை அமைக்கும் குறிக்கோள் 1955 ல் அறிவிக்கப்பட்டது. இக்குறிக்கோளுக்கென , காங்கிரஸ் கட்சியின் ஆவடிக் கூட்டத் தொடரில் “ சமதர்மப் பாங்கிலான சமுதாயம் ” என்னும் தீர்மானம் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாட்டில் நிலவும் மாறுபடும் தேவைகளுக்குப் பொருத்தமான வேறு ப...
அரசாங்கம் முக்கியமான சில பொருளாதார சீர்திருத்தங்களை ஆரம்பித்திருந்தது. இவையும் இதர மாற்றங்களும் சமதர்ம சமதாயக் கொள்கைக்கு முக்கியம் தரவில்லை , வரி விதித்தல் , தொழில் முதலியவைகள் செய்வதற்கு அனுமதி தருதல் போன்றவற்றிற்கு பின்பற்றப்பட்ட கடுமையான விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் தனியார்மயமாக்குதல்...
இம்முறைகளை பின்பற்றவேண்டியது அவசியமாயிற்று. 2004 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பதவிக்கு வந்திருந்த பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசாங்கமும் மேலே சொல்லப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றி வந்தது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மறுபடியும் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கம் பதவி ஏற்று செயல்...
பின்பற்றின. சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரையிலும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவர்கள் காலம் முதல் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுடன் நட்புறவு கொள்கையே பின்பற்றி வருகிறது. உச்ச அதிகாரம் உடைய அமெரிக்க அரசாங்கம் மற்றும் சோவியத் யூனியன் போன்ற நாடுகளுடன் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் நடுநிலைமைக...
ஆண்டில் அது நிறுவப்பட்டது. ஆனால் , அது நிறுவப்பட்ட பிறகு , உடனடியாக , பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக , பெருவாரியான பொதுவுடைமைக் கட்சித் தொண்டர்கள் , காங்கிரஸின் வாயிலாகத் தமது பணியினைத் தொடர்ந்து ஆற்றினர். 1942 ல் நடைபெற்ற “ வெள்ளையனே வெளியேறு " எனும் இயக்கத்தை எதிர்த்ததாலும் , இரண்டாம்...
சுதந்திரத்துக்குப்பின் , தனது நிலையைப் பொதுவுடைமைக் கட்சி மாற்றியது. அரிவாளுடன் கூடிய நெற்கதிர்கள் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேர்தல் சின்னமாகும். அமைப்பும் கருத்தியலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் ஒரு உறுப்பு ஆகும். தேசியக் கட்சிகளில் ஒன்றென அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் , கேரள...
, புரட்சி மற்றும் தீவிரக் கருத்தியலைக் கைவிடும் பொருட்டு கட்சியின் அரசியலமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. கட்சியின் குறிக்கோள்களை அடைவதற்கென சட்ட மன்ற வகையிலான மக்களாட்சி முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது. கட்சியின் கட்டமைப்பு , மக்களாட்சி முறையிலான மைய அதிகார ஒருமிப்புக் கொள்கையின் மீது அமைந்துள்ளது. உள் கட்சி ஜனநாயகம் , மையத் ...
வாதங்களை அடுத்து , செயல்திட்டம் ஒன்றைத் தலைமை தீர்மானித்தவுடன் , கட்சியின் உறுப்பினர்கள் ஒழுங்குக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து , வழிகாட்டு நெறிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனர். கட்சியின் துவக்கநிலை , அமைப்பு ‘ கிளை ’ என்று அழைக்கப்படுகின்றது. கிராமம் , பஞ்சாயத்து , நகராட்சிப் பிரிவு , தொழிற்சாலை போன்ற பலவற்றின் அடிப...
மன்றம் , மாநில மன்றம் மற்றும் தேசிய மன்றம் ஆகியவை உள்ளன. கட்சியின் அரசியலமைப்பைச் செயல்படுத்துதல் , கட்சி மாநாடுகளைக் கூட்டுவித்தல் மற்றும் மைய நிர்வாகக் குழுவிற்குத் தேர்தலை நடத்துதல் போன்ற ஒவ்வொரு முக்கியமான பணியினையும் தேசிய மன்றம் நடத்திவைக்கின்றது. மைய நிர்வாகக் குழு தனது பணிகளைக் கையாள்வதற்குத் தேவையான அமைப்புகளை...
முறையில் கட்சி செயல்படுவதற்கு வலிமையூட்டுகின்றது. தனது பாமரத் தன்மையைத் தக்கவைத்துக் கொள்ள இவ்வமைப்பு கட்சிக்குத் துணைபுரிகின்றது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மார்க்கிசிய லெனினுடைய சிந்தனையை முழுமையாகக் கடைப்பிடிக்கின்றது. அதே சமயம் அது நாடாளுமன்ற முறையிலான பொதுவுடைமைத் தத்துவத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளது. பொது மக்களி...
கருவியாக உருமாற்றம் செய்வதை விரும்புகின்றது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பின்வரும் கொள்கைகளிலும் செயல்திட்டங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ளது. 1. வங்கிகளைத் தேசிய மயமாக்குதல். 2. இந்திய முற்றுரிமைகளையும் , தனியார் வசமுள்ள அயல்நாட்டு தொழில் நிறுவனங்களையும் அழித்தல். 3. அரசுப் பொதுத்துறையின் எல்லையை விரிவாக்குதல். 4. அரசு வ...
ஆதிக்கம் , ஏகாதிபத்தியம் இனவெறி ஆகியவற்றை எதிர்த்தல். மார்க்கிசிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 1964 ஆம் ஆண்டில் பிளவுண்டது. சீன ரஷ்ய உறவுகளின் உள்கட்சிப் பிளவு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உடைந்ததற்குக் காரணமாய் இருந்தது. பொதுவுடைமை அல்லது கம்யூனிசத் தலைவர்கள் நாட்டில் நிலவிய அரசியல் , பொருளாத...
தலைவர்கள் , காங்கிரசை பிற்போக்கான கட்சி என்று கூறி அதற்கு கடுமையான எதிர்ப்பினைக் கோரினர். அவர்களுடைய கருத்தியலான வேறுபாடுகளில் எவ்வுடன்பாடும் தோன்றவில்லை. இறுதியாக , மாற்று கருத்துக் கொண்டோர் தனிப்பட்ட ஒரு மாநாட்டை தெனாலி என்னும் இடத்தில் 1964 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் நடத்தினர். அவர்கள் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின...
அமைத்தனர். மார்க்கிசிய கட்சியின் அமைப்பு , முக்கியக் குறிக்கோள்கள் , கொள்கைகள் ஆகியவை , இந்தியப் பொதுவுடைமைக் கட்சியோடு பெரும்பாலும் ஒத்துக் காணப்படுகின்றன. கிளை மட்டத்திலிருந்து மேல் நிலை வரை , கட்சியின் கட்டமைப்பிற்கு ஆதாரங்களாய் மக்களாட்சிச் சமதர்மம் , உள்கட்சி ஜனநாயகம் ஆகிய நெறிகள் அமைந்துள்ளன. பாமர மக்களுடன் உயிர்...
உருமாதிரி எதுவும் இந்தியாவிற்குப் பொருத்தமுடையதாக இருக்க முடியாது என்று அது நம்புகின்றது. மார்க்கிசியக் கட்சியின் சின்னம் ஒரு சுத்தி , அரிவாள் மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி , மார்க்கிசியக் கட்சி ஆகியவற்றின் கருத்தியல் வேறுபாடுகள் ஒரு சில பொதுவான இலட்சியங்களையும் செயல் திட்டங்க...
புரட்சியைக் கொண்டு வர முடியும் என்று மார்க்கிசியக் கட்சி கருதுகின்றது. ஆனால் , ஏனைய மக்களாட்சிச் சக்திகளோடு நெருக்கமான உறவினைக் கொள்வதன் வாயிலாக சமுதாய உருமாற்றத்தை அடைய முடியும் என்று இந்திய பொதுவுடைமைக் கட்சி நம்புகின்றது. 2. தற்பொழுது செயல்பாட்டில் உள்ள அரசை அகற்றுவதிலும் , அதன் இடத்தில் தொழிலாளர் வர்க்கத்தினால் வழி...
அமைக்கப்படும் கருத்திற்கு ஆதரவாக உள்ளது. தற்போதைய அரசாங்க முறை அகற்றப்படுவதை அது எதிர்க்கவில்லை. காலப் போக்கில் பிற்போக்குச் சக்திகள் நீக்கப்பட்டு , கட்சியின் கைப்பிடிக்குள் அதிகாரம் வந்துவிடும் என்று அது கருதுகின்றது. 3. ஆளும் வர்க்கத்தினர் தாமாக முன் வந்து ஒருபோதும் அதிகாரத்தைக் கைவிடமாட்டார்கள் என்பதில் மார்க்சியக் ...
அடிப்படையில் ஒரு தூய்மையான கருவியாக நாடாளுமன்றத்தை உருமாற்றம் செய்வது அதன் குறிக்கோளாகும். பாரதீய ஜனதாக் கட்சி பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னோடியாகப் பழைய பாரதீய ஜன சங்கம் உள்ளது. ஜன சங்கத்தின் மூலத்தோற்றம் , பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்துத் தேசியம் பெற்ற தோற்றத்துடன் இணைந்துள்ளது. 1875 ல் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரிய ச...
அடிப்படையான நியதிகளாகப் புதிய கருத்துக்கள் அமைந்தன. 1925 ல் கேசவ் ஹெட்கேவார் என்பவர் ராஷ்டிரிய சுயம் சேவச் சங்கத்தை ( ஆர். எஸ்.எஸ் ) ஒரு கலாச்சார அமைப்பாக அமைத்தார். இந்து சமுதாயம் புத்துயிர் பெறுவது அதன் நோக்கமாயிருந்தது. ஷியாம பிரசாத் முகர்ஜி என்பவர் 1951 ஆம் ஆண்டில் ஜனசங்கத்தை அமைத்துக் கொடுத்தார். ஜனசங்கம் இந்து மக...
காங்கிரஸ் ( அமைப்பு ) மக்களாட்சிக்கான காங்கிரஸ் , பாரதீய லோக்தளம் மற்றும் சமதர்மக் கட்சி ஆகியவை ஜனதா கட்சி என்னும் ஒரு கொடியின் கீழ் வந்தன. ஜனதா கட்சி 170 இடங்களில் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாயைப் பிரதம அமைச்சராகக் கொண்டு அரசாங்கத்தை அமைத்தது. ஏ.பி.வாஜ்பாய் போன்ற ஜன சங்கத் தலைவர்கள் காபினெட் தகுதி கொண்ட அமைச்சர்களாயினர...
ஜனதாக் கட்சி வெளிப்படுத்தி வருகின்றது. திரு.ஏ.பி.வாஜ்பாய் மற்றும் திரு.எல்.கே. அத்வானி தலைமையில் தேசிய கட்சியானது. பாரதீய ஜனதாக் கட்சி பிற அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து 1998 இல் மத்தியில் அரசாங்கம் அமைத்தது. மீண்டும் இக்கட்சி 2014 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று , திரு.நரேந்த...
கட்சியின் தேர்தல் சின்னமாகும். பாரதீய ஜனதாக் கட்சியின் கருத்தியல் நெறிகள் 1. பாரதீய ஜனதாக் கட்சி மக்களாட்சியை ஒரு அரசாங்க வகையாகவும் , வாழ்க்கைப் போக்காகவும் ஆதரிக்கின்றது. இந்து மக்களாட்சி அரசில் அது நம்பிக்கை பூண்டுள்ளது. பாரதீய சமஸ்கிருதம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் மீதான அரசியல் பொருளாதாரம் சமூக மக்களாட்சியை அது க...
முக்கியத்துவத்தை அது வலியுறுத்துகின்றது. அரசியலும் பொருளாதாரமும் பன்முகத்துடன் பரவலாக்கப்படுவதை அது அன்புடன் ஆதரிக்கின்றது. 4. பாரதீய ஜனதாக்கட்சி சுதேசிப் பொருளாதாரத்தை அடிப்படையானதும் , இராணுவப் பாதுகாப்பிற்கும் மயமாக்கப்படும் நெறியினை அது கடைப்பிடிக்கின்றது. ஆதரிக்கின்றது. உரிய தொழிற்சாலைகள் தேசிய 5. அயல்நாட்டுக் கொள...
விட்டுக் கொடுக்கும் பரஸ்பரம் அல்லது இருதரப்பு அக்கறையின் மீது அயல்நாட்டுக் கொள்கை அமைந்திருக்க வேண்டும் என்பதையும் , நாட்டின் சுய அக்கறையை மேம்படுத்துவதற்குரிய தேவையினையும் அது வலியுறுத்துகின்றது. 6. பொது வாழ்க்கையில் தூய்மை , பாதுகாப்பு , பொருளாதாரத் தேசியம் மற்றும் இந்துத்துவம் ஆகியவற்றைத் தனது கொள்கைத் திட்டங்களாகப்...
அமைப்பிற்கு இணையானதாகவே உள்ளது. ஜனதா தளத்தின் கொள்கைக் கோட்பாடுகள் மற்றும் செயல் திட்டங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட எந்த ஒருவரும் , கட்சியில் உறுப்பினராகலாம். ஆனால் , அவர் 18 வயதினை அடைந்தவராக இருத்தல் வேண்டும். காங்கிரஸ் கட்சியில் உள்ளதைப் போன்று , ஜனதா தளத்திலும் சாதாரண உறுப்பினர்களும் , துடிப்புமிக்க உறுப்பினர்க...
எந்த ஒரு பதவிக்குமென , செயல் துடிப்பான உறுப்பினர் ஒருவரே தேர்தலில் போட்டியிட முடியும் , வட்டாரம் , மாவட்டம் , மாநிலம் மற்றும் தேசிய நிலைகளில் கட்சிக் குழுக்கள் உள்ளன. ஜனதா தளத்தின் கருத்தியல் நெறிகள் ஜனதா தளத்தின் முக்கியமான கருத்தியலான உள்ளடக்கப் பொருள்களுள் சில பின் வருபவையாகும். காந்திஜியின் இலட்சியங்களுக்கும் , மாண...
தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அச்சமெனும் அடிமைத்தளையிலிருந்து மக்களை விடுவிக்க ஜனதா தளம் விருப்பம் கொண்டுள்ளது. லஞ்சம் ஊழல் அழித்து மாண்புறு அரசியலை மேற்கொள்ள அது ஆதரவு தருகிறது. ( 1 ) தேர்தல் சீர்திருத்தங்கள் ( 2 ) சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல் ( 3 ) அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் ( 4 ) நீதித்துறைக்கு மறு உயிர் ஊட்...
வலிமையானதொரு கூட்டாட்சி நாட்டைப் பெறுதல் ( 8 ) அரசியல் , சமூகப் பொருளாதார நீதியை நிலைநாட்டல் போன்ற இன்னபிற அதன் மக்களாட்சி முறை மாண்புகளுள் இடம்பெற்றுள்ளன. ஜனதா தளத்தின் பொருளாதாரக் கொள்கை காந்தியக் கருத்தியல்களைச் சார்ந்துள்ளன. வேளாண்மை , குடிசை மற்றும் சிறு அளவுத் தொழில்களில் உச்சத் தன்மையை அது வலியுத்துகிறது. வேலை வ...
தணித்துக் குறைத்தல் போன்ற இலட்சியங்களையும் அது ஏற்றுக் கொண்டுள்ளது. சுயமான தொழில் சார்பிலும் அது நம்பிக்கை கொண்டுள்ளது. அயல் நாட்டு கொள்கையை பொறுத்து , காங்கிரஸை விட ஜனதா தளம் வெகுவாக வேறுபட்டிருக்கவில்லை. ஆனால் , நமது தொழிற்சாலைகளுக்கு இழப்பு ஏற்படாதவகையில் , அயல்நாட்டு முதலீடுகளை அது வரவேற்கின்றது. மாநில அரசியல் கட்ச...
மக்களுள் பிராமணர்கள் அனைத்து நிலைகளிலும் செல்வாக்கு உடையவர்களாக இருந்தனர். எனவே பிராமணரல்லாதவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும் என்று உணரப்பட்டது. இந்நோக்கத்திற்கென நடேச முதலியார் மற்றும் சிலரால் 1912 ல் திராவிடச் சங்கம் அமைக்கப்பட்டது. பின்னர் திராவிடச் சங்கம் நீதிக்கட்சி என்று பெயர் பெற்றது. அது திராவிடக் கண்ணோட்...
சமுதாயச் சீர்திருத்த இயக்கமாகும். இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு , பெரியாருக்கும் , அண்ணாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு தோன்றியது. அதன் விளைவாக 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17 ம் நாளன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா துவக்கி வைத்தார். 1949 முதல் 1957 தி.மு.க. ஒரு சமுதாய அமைப்பாக மக்களுக்கு பணி ஆற்றியது. நான்கு...
செய்யப்பட்டதால் , 1963 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 23 ம் நாளன்று திராவிட நாடு என்னும் கொள்கை கருத்தியலை அண்ணா கைவிட்டார். தி.மு.கவின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. உதயசூரியன் தி.மு.கவின் தேர்தல் சின்னமாகும். 1957 ல் முதன் முறையாகத் தி.மு.க தேர்தலில் போட்டியிட்டது. இதற்கடுத்து வந்த தேர்தல்களில் தி.மு.க. நி...
ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 3 ஆம் நாள் வரை பதவியில் நீடித்திருந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின் திரு.மு.கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அவருடைய தலைமையின் கீழ் தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சித்தலைவர் என்ற முறையில் திரு.மு.கருணாநிதி 197...
பிறகு , 1972 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18 ஆம் நாளன்று , தனது சொந்த கட்சியை எம்.ஜி.ஆர் நிறுவினார். அதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர் பெயர் சூட்டினார். 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 12 ஆம் நாளன்று , எம்.ஜி.ஆர் , தனது கட்சியின் பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றினார். எம்.ஜ...
எம்.ஜி.ஆர் அவர்கள் டிசம்பர் திங்கள் 1987 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைவுக்கு பின் , கட்சி செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையின் கீழ் பலமும் , வரவேற்பும் பெற்றுள்ளது. அ.தி.மு.க.வின் அடிப்படை கருத்தியல் ‘ “ அண்ணாயிசம் ’ ” ஆகும். ஏழ்மையையும் தீண்டாமையையும் ஒழிப்பதே அண்ணாயிசத்தின் அடிப்படை கொள்கை ஆகும். மேலும் சுயமரியாதை ,...
என்று நம்புகிறது. முதல் முறையாக அ.தி.மு.க 1973 ஆம் ஆண்டு மே திங்கள் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை சந்தித்தது. மொத்தத்தில் 52 சதவிகித வாக்குகளை பெற்றது. திரு.காமராஜின் காங்கிரஸ் ( ஓ ) இரண்டாவது , தி.மு.க மூன்றாவது இடத்தை பெற்றது. இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிலுள்ள பிரதான கட்சிகளின் தேர்தல் முடிவை நிர்ணயிக்கக்கூ...
தோற்றுவித்தார். திரைப்படத்தில் பல்வேறு வேடங்களில் நடித்து புகழ்பெற்றார். இதனால் பலதரப்பு மக்களையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். அவரை மக்கள் ஒரு தெய்வ நிகர் திருமகனாகப் போற்றி நடந்தனர். தெலுங்குதேசம் கட்சி 1983 , 1985 , 1994 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆந்திர மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றியடைந்தது. ஆந்திரப் ப...
தொடர்ந்தார். இவர் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை முன்னேற்ற பல முக்கிய முயற்சிகளை மேற்கெண்டார். தகவல் தொழில் நுட்பத்தில் இவரது முயற்சி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. திரு.ஏ.பி.வாஜ்பாய் அரசுக்கு இவருடைய அரசு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. 2004 ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நடைபெற்றது. அதே சமயம் , ஆந்திரப்பிரதேச மாநில சட்டமன்ற த...
அமைத்தது. இலக்குகளும் குறிக்கோள்களும் 1. மத்திய , மாநில அரசுகளிடையே நல்லுறவு 2. மக்கள் முன்னேற்ற திட்டங்கள் 3. திட்டமிடுதலின் போது மாநிலத்தின் ஈடுபாடு 4. தேர்தல் சீர்திருத்தங்கள் 5. கட்சி தாவல் தடை செய்தல். 6. தேர்தல் செலவினங்கள் அரசினால் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் போன்றவைகள் ஆகும். அகாலி தளம் இது சமயம் சார்ந்த அரசியல...
இதற்கு பிறகு பஞ்சாப் , அரியானா என்ற 1996 ல் பஞ்சாபி மொழி பேசும் பஞ்சாப் மற்றும் ஹிந்தி மொழி பேசும் அரியானா மாநிலங்கள் நடைமுறைக்கு வந்தன. இதர பிரதேச கட்சிகள் போல அகாலிதளமும் 1967 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் பங்கேற்று சட்டமன்றம் , மற்றும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு வருகிறது. இக்கட்சி பாரதீய ஜன சங்கம் அல்லது ஜனதா கட்சி...
தலைநகரமாக்க வேண்டும் என்பதாகும். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கிடையே ரவி மற்றும் பியாஸ் நதிகளின் நீர்பங்கீடு இரு அரசாங்கங்களுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது மற்றுமொரு முக்கியமான கோரிக்கை ஆகும். சீக்கியர்களுடைய ராணுவ பண்பாடு நடைமுறைகளுக்கு ஏற்ப இந்திய ராணுவத்தில் நியாயமான எண்ணிக்கையில் அவர்களுக்கு பதவிகள் க...
அமிர்தரஸ் நகருக்கும் தரப்படவேண்டும். 2. உள்நாட்டில் வானவெளியில் செல்லும் விமானங்களில் சீக்கியர்கள் அவர்களுக்கே உரிய தலைப்பாகையும் கிரிபான் என்னும் கக்தி போன்ற ஆயுதத்தை எடுத்து செல்ல அனுமதி வேண்டும். கோடிட்ட இடத்தை நிரப்புக. 5. இந்தியக் குடியரசுத் தலைவர் இந்தியாவின் 6. இந்தியக் குடியரசுத் தலைவர் 7. இந்தியப் பிரதம அமைச்ச...
உறுப்பினராக வயது 12. துணைக் குடியரசுத்தலைவர் ஆவதற்கு வயது தலைவர் ஆவார். பகுதி ஆ 13. காந்தியக் கொள்கைகள் பற்றி விவரி. 14. அமைச்சரவை பற்றி சிறு குறிப்பு வரைக. 15. மக்கள் அவை தலைவரின் பணிகள் யாவை ? பகுதி இ குடிமகன் ஆவார். 16. காபினெட்டின் அம்சங்கள் மற்றும் பணிகள் யாவை ? 17. இந்தியப் பிரதமரின் பங்கு பணியினை விவரிக்க. 18. ம...
உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு பற்றி கட்டுரை வரைக. 22. திராவிட அரசியல் கட்சிகளின் குறிக்கோள்கள் பற்றி விவரி. பகுதி ஈ 23. இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள் யாவை ? 24. இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் யாவை ? 25. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றத்தை வரையறு. அத்தியாயம் 8 மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு முன்னுரை...
புதுடில்லி உள்பட 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. அரசியலமைப்பு , மத்திய மற்றும் மாநிலங்களின் ஆளுமைக்கான பகுதிகளைப் பெற்றுள்ளது. அரசியலமைப்பு விதி 370 ன்படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் அதற்கென்று தனி அரசியலமைப்பைப் பெற்றிருப்பதைத் தவிர , அரசியலமைப்பின் VI வது பகுதியில் விதி 152 லிருந்து விதி 237 வரை எல்லா மாநில அரசாங்க...
அமைச்சரவை , சட்டத்துறை , நீதித்துறை , செயலகம் , மாவட்ட நிர்வாகம் மற்றும் அதற்குக் கீழுள்ள அமைப்புகள் போன்றவைகளை விளக்குவதன் மூலம் நாம் இங்கே தமிழ்நாட்டின் அரசாங்கத்தை அறியலாம். 8.1 ஆளுநர் மாநிலத்தின் செயல்துறை அதிகாரம் ஆளுநரிடத்தில் உள்ளது. மற்றும் மாநிலத்தின் எல்லா செயல்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரில் செயல்படுத்த...
ஆனால் , 1956 ஆம் ஆண்டின் அரசியலமைப்புத் திருத்தம் ஒரு ஆளுநர் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் பதவி வகிக்கலாம் என்று வழிவகை செய்தது. ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆனால் , ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார். ஜனாதிபதியின் விருப்பம் உள்ளவரை பதவி வகிக்கிறார். 35 வயது நிரம்பிய எந்த இந்தியக் க...
கூடாது. ஆனால் , ஆளுநராக நியமனம் செய்யப்படவேண்டிய ஒரு நபர் பின்வரும் தன்மைகளில் திருப்தி படுத்தவேண்டும் என்று சர்க்காரியா ஆணையம் கூறியுள்ளது. 1. வாழ்க்கைப் பயணத்தில் சிறந்தவராக அவர் இருக்க வேண்டும். 2. மற்ற மாநிலத்திலிருந்து வரும் ஒருவராக அவர் இருக்க வேண்டும். 4. 3. மாநிலத்தின் அரசியலில் நெருங்கிய தொடர்பு இல்லாதவராக அவர...
ஒரு ஆளுநரை தேர்வு செய்யும் போது , இதுவரை இருந்த சிறுபான்மைக் குழுக்களுக்கு வாய்ப்புத் தர வேண்டுமென்பது தொடர வேண்டும். அரசியலமைப்பிற்கிணங்க , ஆளுநர் ஜனாதிபதியால் நியமனம் செய்யபடுகிறார். ஆனால் , நடைமுறையில் , பிரதம மந்திரியின் பரிந்துரையின்பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். ஆளுநர் பதவியின் இயல்பான காலம் ஐந்து வருடங...
என்று இருக்கின்றபோதிலும் , அவருடைய இராஜினாமாவாலோ அல்லது ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்வதாலோ அவர் பதவி இழக்கலாம். மாநிலச் சட்டத்துறையில் வாக்கெடுப்புப்பெறாத தொகுப்பு நிதியிலிருந்து அவர் தனது சம்பளத்தைப் பெறுகிறார். ஆளுநரின் அதிகாரங்களும் , பணிகளும் ஆளுநர் மாநில செயல்துறையின் தலைவராகத் திகழ்கிறார். மற்றும் அதிகமான அதிகார...
அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையால் வழிநடத்தப்படுகிறார். மாநில அளவிலான செயல்துறைத் தலைவராக ஆளுநர் பின்வருகின்ற பணிகளையும் அதிகாரங்களையும் பெற்றுள்ளார். அ. செயல்துறை அதிகாரங்கள் ஆ. சட்டத்துறை அதிகாரங்கள் நிதி அதிகாரங்கள் ஈ. நீதித்துறை அதிகாரங்கள் உ. தன்விருப்ப அதிகாரங்கள் , மற்றும் ஊ. இதர அதிகாரங்கள். அ. செயல்துறை அதி...
உள்ளவரை பதவி வகிக்கின்றனர். 3. அவர் மாநிலத்தின் தலைமை வழக்கறிஞரை நியமித்து அவரின் சம்பளத்தை நிர்ணயிருக்கிறார். 4. அவர் மாநிலத் தேர்தல் ஆணையரை நியமித்து அவரின் பணி நிலையையும் பதவிக் காலத்தையும் தீர்மானிக்கிறார். அவர் மாநிலப் பொதுப் பணி ஆணையத்தின் தலைவரையும் உறுப்பினர்களையும் நியமிக்கிறார். இருப்பினும் , அவர்கள் ஆளுநரால்...
தனது பெயரால் அமுல்படுத்தப்படுகின்ற ஆணைகள் தொடர்பான விதிகளை ஏற்படுத்தலாம். ஆனால் , அவை நியாமானதாக பிரச்சினைக்கு இடம் தராதவையாக இருத்தல் வேண்டும். 9. அரசாங்க அவர் எந்த விவாதத்தின் மீதான அமைச்சரவையின் முடிவையும் தன்னிடம் சமர்ப்பிக்கும்படி முதலமைச்சரை கேட்கலாம். 4. 10. விதி 356- ன்படி , மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத...
அதிகாரங்கள் ஆளுநர் மாநிலச் சட்டத்துறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளார். ஆனால் , அவர் சட்டத்துறையின் எந்த அவையிலும் உறுப்பினர் அல்லாதவர். இத்தன்மையில் , அவர் பின்வருகின்ற சட்டத்துறை அதிகாரங்களைப் பெற்றுள்ளார். சீர்பாட்டிற்காகவும் , அமைச்சர்களிடையே பகிர்ந்தளிக்கவும் அவர் விதிகளை ஏற்படுத்தலாம். 1. அவர் மாநிலச் சட்டமன...
முதல் கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும் சட்டமன்றத்தில் உரையாற்றுகிறார். அச்செயல்பாடுகளை அவர் சட்டத்துறையின் நிலுவையில் உள்ள மசோதா தொடர்பாக இரு சபைகளுக்கும் செய்திகள் அனுப்பலாம். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகள் காலியாக உள்ளபோது , சட்டசபையில் உள்ள எந்த உறுப்பினரையும் சபைக்கு தலைமை வகிக்க அவர் நியமிக்கலாம். அறிவியல் ,...
சட்டமன்ற மேலவை 1986 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது ). 6. ஆங்கிலோ இந்திய சமூகத்திலிருந்து மாநில சட்டமன்றத்தின் கீழவைக்கு ஒரு உறுப்பினரை அவர் நியமிக்கலாம். 7. தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து மாநில சட்டத்துறை உறுப்பினர்களின் தகுதியின்மை பிரச்சினையை அவர் தீர்மானிக்கிறார். மாநிலச் சட்டத்துறையால் இயற்றப்பட்ட ஒவ்வொரு மசோதாவும் அவ...
அல்லது சட்டத்துறையின் மறுபரிசீலனைக்காக அந்த மசோதாவை திரும்ப அனுப்பலாம். 9. மாநில உயர்நீதிமன்றத்தின் நிலையை பாதிக்கும் வகையில் சட்டத்துறையால் மசோதா இயற்றப்படுமானால் , ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அம்மசோதாவை அவர் ஒதுக்கி வைக்கலாம். 10. விதி 213 - ன்படி மாநில சட்டத்துறை கூட்டத்தொடரில் இல்லாதபோது அவர் இடைக்காலச் சட்டங்களை இய...
அதிகாரங்கள் 1. வருடாந்திர நிதிநிலை அறிக்கை எனப்படும் மாநிலத்தின் வரவுசெலவுத்திட்டம் சட்டமன்றத்தின் முன் வைக்கப்படுகிறதா என்பதைக் கவனிக்க அவர் கடமைப்பட்டுள்ளார். 3. 2. அவரின் முன்பரிந்துரைபெற்ற பின்னரே மாநில சட்டமன்றத்தில் பண மசோதாக்கள் மாநில அரசின் கணக்குள் தொடர்பான மாநில நிதி ஆணையம் , மாநில பொதுப்பணி ஆணையம் , தலைமைக் ...
நிதியிலிருந்து முன்பணத்தை அவர் ஏற்படுத்தலாம். மற்றும் , 2. அறிமுகப்படுத்தப்பட முடியும். எந்த ஒரு மானியக் கோரிக்கைக்கும் அவரின் பரிந்துரை விதிவிலக்கு அளிக்கப்படமாட்டாது. 5. பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலைமையை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ஒரு நிதி ஆணையத்தை அவர் அமைக்கிறார். 3. ஈ. நீதித்துறை அதிக...
மன்னிப்பு வழங்கும் அதிகாரத்திலிருந்து பின்வரும் வழிகளில் வேறுபடுகிறது. அ. மரண தண்டனைக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியும். ஆனால் ஆளுநரால் முடியாது. கடற்துறை நீதிமன்ற தண்டனையை ஜனாதிபதி மன்னிக்க முடியும். ஆனால் ஆளுநரால் முடியாது. ஆ. தொடர்புடைய உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமனம் செய்கின்றபோது , ஜனாதிபதியால் அவர் கலந்த...
ஆணையம் ஆகியவைகளுடனான கலந்தாலோசிப்பினால் , மாநிலத்தின் நீதித்துறைப் பணிக்குப் பணியாளர்களை அவர் நியமிக்கிறார். மற்றும் உ. தன்விருப்ப அதிகாரங்கள் 1. ஜனாதிபதியின் பரிசீலனைக்காக எந்த மசோதாவையும் ஆளுநர் அனுப்பிவைக்கலாம். 2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியின் அமுலாக்கத்திற்காக அவர் பரிந்துரைக்கிறார். 3. மாநிலத்தின் நிர்வாகம் மற்ற...
கட்சியின் தலைவரையும் அமைச்சரவை அமைக்க அவர் அழைக்கலாம். 6. 5. அமைச்சரவை நம்பிக்கையை அதன் மீதான சட்ட சபையில் நிரூபிக்க முடியவில்லையெனில் , அவர் அமைச்சரவையை நீக்கம் செய்யலாம். மற்றும் சட்ட சபையை அமைச்சரவை தனது பெரும்பான்மையை இழந்தால் , அவர் கலைக்கலாம். ஊ. இதர அதிகாரங்கள் மேலே கூறப்பட்ட பணிகள் மற்றும் அதிகாரங்களுடன் , ஆளுந...
விவாதத்திற்காகச் சமர்ப்பிக்கிறார். 2. மாநில அரசாங்கத்தில் பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்ட வரவு மற்றும் செலவினம் தொடர்பான பொதுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளரின் அறிக்கையை அவர் பெறுகிறார். அரசியலமைப்பு நிலை இந்திய அரசியலமைப்பு மத்தியிலும் , மாநிலங்களிலும் பாராளுமன்ற அரசாங்க முறையை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவா...
அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையுடன் , ஆளுநர் தனது அதிகாரங்களையும் , பணிகளையு செயல்படுத்தக் கடமைப்பட்டவர். உண்மையில் , இந்தியக் கூட்டாட்சி முறையில் மாநிலத்தின் அரசியலமைப்புத்தலைவர் , மத்திய அரசின் பிரதிநிதி ஆகிய இரட்டைத்தன்மையான பங்கினை ஆளுநர் பதவிக்கு அரசியலமைப்பு வழங்கயுள்ளது. 1952 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டின் ஆ...
பதவிக்காலம் ஐந்து வருடங்கள் ஆகும். ஆனால் , இராஜினாமாவாலும் , விதி 356 - ன்படி மாநில அவசரநிலை அமுலாக்கத்தாலும் அவர் பதவி இழக்கலாம். முதலமைச்சரின் அதிகாரங்கள் முதலமைச்சர் மாநில நிர்வாகத்தின் தலைவராக இருக்கிறார். அவர் அதிகமான பணிகளையும் , அதிகாரங்களையும் பெற்றுள்ளார். முதலமைச்சரின் பணிகளும் அதிகாரங்களும் பின்வருமாறு அ. அம...
முதலமைச்சர் அதிகாரங்களையும் செயல்படுத்துகிறார். 1. ஆளுநரால் அமைச்சர்களாக நியமிக்கப்படும் நபர்களை பரிந்துரைக்கிறார். 2. அவர் அமைச்சர்களிடையே இலாக்காக்களைப் பகிர்ந்தளிக்கிறார். 3. அவர் அமைச்சரவையை மாற்றியமைக்கிறார் மற்றும் மறுமாற்றமும் செய்கிறார். 4. கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர் ஒரு அமைச்சரை ராஜினாமா செய்ய வேண்டுகிற...
தனது பதவியை இராஜினாமா செய்வதன்மூலம் அமைச்சரவையை முடிவுக்குக் கொண்டுவரலாம். மற்றும் 7. அவர் அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளை வழிநடத்துகிறார் , இயக்குகிறார் , கட்டுப்படுத்துகிறார் மற்றும் ஒருங்கிணைக்கிறார். ஆ. ஆளுநர் தொடர்பானவை 1. விதி 167 - ன்படி ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான தொடர்பின் பிரதான வழியாக முதலமைச்சர...
உறுப்பினர்கள். மாநில திட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநில நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள். மாநில சட்டத்துறைத் தொடர்பானவை. 1. மாநில சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது மற்றும் தள்ளிப்போடுவது தொடர்பாக முதலமைச்சர் ஆளுநருக்கு ஆலோசனை கூறுகிறார். 2. சபையில் அரசாங்கக் கொள்கைகளை அவர் அறிவிக்கிறார். சட்...
கட்சியைக் கட்டுப்படுத்தவும் , நன்னெறிகளை வளர்க்கவும் , முதலமைச்சர் கடமைப்பட்டுள்ளார். மாநிலத்தின் தலைவராக , பல்வேறு பிரிவு மக்களின் கோரிக்கைகளைக் கவனமாக பரிசீலிக்கவும் அவர் கடமைப்பட்டவர். 4. 3. பல்வேறு பணிகளின் அரசியல் தலைவராக , மாநில அளவில் உள்ள பல்வேறு துறைகளின் செயலர்களை மேற்பார்வையிடவும் , கட்டுப்படுத்தவும் மற்றும்...
அமைச்சரவையின் அளவு முதலமைச்சரால் தீர்மானிக்கப்படுகிறது. எனினும் , சமீபத்திய அரசியலமைப்புத் திருத்தத்திற்கிணங்க , சட்டசபை உறுப்பினர்களின் 15 சதவிகித்தை மட்டுமே அவர் அமைச்சர்களாக்க முடியும். இவ்வாறாக , மாநில நிர்வாகத்தில் மிக முக்கியமான மற்றும் உயர்ந்த பங்கில் முதலமைச்சர் செயல்படுகிறார். இருப்பினும் , ஆளுநர் சிறப்பு நிலை...
அவ்வாறு இருக்கமுடியாது. பெயரளவுத் தலைவராக இருக்கிறார் மற்றும் மாநில அரசாங்கத்தின் உண்மையான அதிகாரம் அமைச்சரவையிடம் உள்ளது. ஆளுநர் தன் விருப்ப அதிகாரங்களைப் பெற்றுள்ள போதிலும் , அவர் எப்போதாவது அவைகளைச் செயல்படுத்துகிறார். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல , ஆளுநர் முதலமைச்சரை நியமிக்கிறார் மற்றும் அவரின் பரிந்துரையின்பேரில் ...
பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அவ்வப்போது மாநில சட்டத்துறையால் அமைச்சர்களின் சம்பளங்களும் படிகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. உள்ளனர். என்ற கொள்கை மத்திய அரசாங்கத்தில் உள்ளதைப் போல மாநிலங்களில் பாராளுமன்ற அரசாங்கமுறை பின்பற்றப்படுவதால் , அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மாநிலச் சட்ட சபைக்கு பொறுப்புடையவர்களா...
பணிபுரிகிறது. அமைச்சரவையின் கூட்டு முடிவிலிருந்து ஒரு அமைச்சர் தன்னைப் பிரிக்க முடியாது. சட்டசபையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும்வரை அமைச்சரவை அதிகாரத்தில் இருக்கிறது. சட்ட சபையில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் , முதலமைச்சரால் தலைமை வகிக்கப்படும் அமைச்சரவை இராஜினாமாவை சமர்பிக்க கடமைப்பட்டுள்ளது. இத...
மாநிலங்களில் உள்ள நிர்வாகத் தேவைகளைப் பரந்த நோக்கில் கணக்கில் எடுத்துக்கொண்டு , உத்திரப்பிரதேசம் , பீகார் , மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற பெரிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 20 நபர்களை அமைச்சரவையில் பெற்றிருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். மதராஸ் ( தற்போது தமிழ்நாடு ) , கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் போன்...
அமைச்சரவையில் அளவு , தொடர்புடைய மாநில முதலமைச்சரைச் சார்ந்துள்ளது. ஆனால் , சமீபகால அரசியலமைப்புத் திருத்ததிற்கிணங்க , மாநில சட்டசபையின் மொத்த உறுப்பினர்களின் 15 சதவிகிதத்திற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கை செல்லக்கூடாது. ஒவ்வொரு அமைச்சரும் மாநில சட்டசபையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் , ஆறு மாதத்திற்கு...
அதிகாரங்களும் பின்வருமாறு , 1. மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு , மக்களின் பாதுகாப்பு மற்றும் மக்களின் சொத்துப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பராமரித்தல். 2. மாநிலத்தின் கொள்கைகளை உருவாக்குவது , தீர்மானிப்பது மற்றும் அவைகளை சிறப்பாக அமுல்படுத்துவது. 3. சட்டசபையின் சட்டமியற்றும் திட்டங்களை அது தீர்மானித்தல் மற்றும் அனைத்து ம...
, பல்வேறு துறைகளில் மாநிலத்தைத் தலையெடுக்கச் செய்வது. 6. துறைத்தலைவர்களின் முக்கியமான நியமனங்களைச் செய்தல். 7. மற்ற மாநிலங்களுடனான சிக்கல்மீது விவாதித்து முயற்சிகள் மேற்கொண்டு முடிவெடுப்பது. 8. துணை நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி ஆளுநருக்கு ஆலோசனைக் கூறுதல். 9. ஐந்தாண்டுத் திட்டங்களில் மாநிலப் பணியின் பங்கை பரிசீல...