text stringlengths 11 513 |
|---|
நாட்டைச் சேர்ந்தவர். அறிவியல் கண்டுபிடிப்புகள் பல கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே அவற்றைப் பற்றித் தமது புதினங்களில் எழுதியவர். எண்பது நாளில் உலகத்தைச் சுற்றி , பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம் உள்ளிட்ட பல புதினங்களைப் படைத்துள்ளார். அவர் எழுதிய ஆழ்கடலின் அடியில் என்னும் புதினம் குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் மொழிபெயர்ப்ப... |
திரட்டித் தொகுத்து எழுதுக. மதிப்பீடு ஆழ்கடலின் அடியில் ' கதையைச் சுருக்கி எழுதுக. திரிசொல் பெயர் , வினை , இடை , உரி ஆகிய நான்கு வகையிலும் வரும். ( எ.கா. ) அழுவம் , வங்கம் இயம்பினான் , பயின்றாள் அன்ன , மான கூர் , கழி திரிசொற்களை ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள் எனவும் , பல பொருள் குறித்த ஒரு திரிசொல் எனவும் இருவகைப்படு... |
பல பொருள்களைத் தருவதால் பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பர். பெயர்த் திரிசொல் வினைத் திரிசொல் இடைத் திரிசொல் உரித் திரிசொல் திசைச்சொல் சாவி , சன்னல் , பண்டிகை , இரயில் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. பிறமொழிகளில் இருந்து வந்து தமிழில் வழங்கி வருபவையாகும். இவ்வாறு வடமொழி தவிர , பிற... |
சொற்களையும் திசைச்சொற்கள் என்றே வழங்கினர். வடசொல் வருடம் , மாதம் , கமலம் , விடம் , சக்கரம் முதலிய சொற்கள் தமிழில் வழக்கில் இருந்தாலும் இவை தமிழ்ச்சொற்கள் அல்ல. இவை வடமொழி எனப்படும் சமஸ்கிருத மொழிச்சொற்கள் ஆகும். இவ்வாறு வடமொழியிலிருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள் வடசொற்கள் எனப்படும். வடசொற்களைத் தற்சமம் , தற்பவம்... |
மாற்றி எழுதுவதைச் தற்பவம் என்பர். கற்பவை கற்றபின் நாளிதழ் செய்தியொன்றை எடுத்துக்கொண்டு அதிலுள்ள நால்வகைச் சொற்களையும் வகைப்படுத்திப் பட்டியல் உருவாக்குக. இயல் ஐந்து கவிதைப்பேழை ப இன்பத்தமிழ்க் கல்வி நுழையும்முன் பாரதிதாசன் கவிதை எழுதுவதற்காகத் தாளையும் எழுதுகோலையும் எடுத்தார். எதைப்பற்றி எழுதுவது எனச் சிந்தித்தார். வான... |
நாமும் படித்துச் சுவைப்போம். ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று சொன்னது வான் ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின் ஓவியந் தீட்டுக என்றுரைக்கும் காடும் கழனியும் கார்முகிலும் வந்து கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும் ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர் அன்பினைச் சித்திரம் செய்க என்றார் சோலைக் குளிர்தரு தென்றல் வரும... |
மலையாய் வந்து கூவின என்னை – இவற்றிடையே இன்னவிலே தமிழ் நாட்டினிலேயுள்ள என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார் அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென் ஆவியில் வந்து கலந்ததுவே இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்தி விட்டால் துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை உண்டாகிடும் வீரம் வரும் ! பாரதிதாசன்... |
மலர்களும் " எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக " என்றன. காடும் வயல்களும் கருநிற மேகங்களும் என் கண்களைக் கவர்ந்து , கவிதையில் இடம்பெற முயன்றன. ஆடும் மயில் போன்ற பெண்கள் " அன்பினைக் கவிதையாக எழுதுக " என்றனர். பரிதி அன்னதோர் கார்முகில் துயின்றிருந்தார் சோலையின் குளிர்ந்த தென்றல் வந்தது. பசுமையான தோகையையுடைய மயில் வந்தது. அன்ன... |
காட்சிகள் எல்லாம் பெருந்திரளாக வந்து தங்களைக் கவிதையாக எழுதுமாறு கூறின. ஆனால் , துன்பத்தில் கிடக்கும் என் தமிழ்நாட்டு மக்கள் அறியாமையில் தூங்கிக் கிடக்கிறார்கள். அந்தக் காட்சி என் மனத்தில் இரக்கத்தை உண்டாக்கி , என் உயிரில் வந்து கலந்து விட்டது. இத்துன்பம் நீங்க அனைவரும் இன்பத்தமிழ்க் கல்வியைக் கற்றவர்கள் என்னும் நிலை ஏ... |
இவர் கவிதை , கதை , கட்டுரை , நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர். பாண்டியன் பரிசு , அழகின் சிரிப்பு , இசையமுது , இருண்ட வீடு , குடும்ப விளக்கு , கண்ணகி புரட்சிக் காப்பியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பிசிராந்தையார் என்னும் நாடகநூலுக்குச் சாகித்திய அகாடமி விருது அளிக்கப்பட்டது. 1. 2. கதிரவன் அப்படிஒ... |
நான்கு வரிகளில் கவிதை எழுதுக. ' தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது ' என்பது குறித்து வகுப்பில் கலந்துரையாடுக. இயல் ஐந்து நுழையும்முன் கவிதைப்பேழை அழியாச் செல்வம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பல்வகையான செல்வங்களைச் சேர்த்து வைக்கின்றனர். அவற்றுள் சில செல்வங்கள் களவு போகவோ , அழியவோ கூடும். ஆகையால் பெற்றோர் தம் குழந்த... |
வாய்த்து ஈயில் விச்சை கல்வி வவ்வார் கவர முடியாது எச்சம்- செல்வம் பாடலின் பொருள் வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார் எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன விச்சைமற்று அல்ல பிற. * வாய்க்கும்படி கொடுத்தாலும் கல்வியைப் பொருள் போல வைத்திருப்பினும் அது பிறரால் கொள்ளப்படாது. ஒருவற்கு வாய்... |
முனிவர் நூல் வெளி நாலடியார் சமண முனிவர்கள் பலரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இது நானூறு வெண்பாக்களால் ஆனது. இந்நூலை நாலடி நானூறு என்றும் , வேளாண்வேதம் என்றும் அழைப்பர். திருக்குறள் போன்றே அறம் , பொருள் , இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. இந்நூல் திருக்குறளுக்கு இணையாக... |
செல்வம் கல்விச் செல்வம் ஆகும். பிற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மையுடையன. கல்வி கற்பதற்குக் கால எல்லை இல்லை. கல்வியின் இன்றியமையாமை , கற்க வேண்டிய நூல்கள் , கற்கும் கால அளவு ஆகியவற்றைக் குறித்து அறிந்து கொள்வோம். உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதப்பிறவி தனித்தன்மை உடையது. ஏனென்றால் மனிதப் பிறவிக்குத்தான் எதிர்காலம் சொல்ல... |
ஈன்றால் அஃது எதிர்காலத்தில் பால் தரும் என்று சொல்லிவிடலாம். மனிதன் எதிர்காலத்தில் என்ன ஆவான் என்று சொல்லவே முடியாது. அதனால்தான் இஃது அருமையான பிறவி. ஒரு வீட்டில் குழந்தை பிறந்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் என்ன குழந்தை பிறந்திருக்கிறது என்று கேட்டால் , ஆண்குழந்தை அல்லது பெண்குழந்தை என்றுதான் பெற்ற தாய் சொல்லுவாள். அப... |
கேட்டார்கள். ஆண் குழந்தை என்றுதானே அந்த அம்மா சொல்லி இருப்பார். அப்படி இல்லாமல் " இப்போதுதான் மகாத்மா காந்தியடிகள் பிறந்திருக்கிறார். உங்களுக்கெல்லாம் சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் போகிறார் " என்றா சொல்லியிருப்பார் ? காலமறிதல் உலகில் மிகவும் அருமையானது என்னவென்றால் அது காலம்தான். மற்றவை எல்லாம் போனால் வரும். காலமும் நே... |
இருந்தால் கொடுடா ! மனப்பாடம் பண்ணிவிட்டுத் திரும்பத் தந்து விடுகிறேன் " என்றெல்லாம் கேட்க முடியாது. இதற்காகத்தான் காலமறிதல் , கல்வி என்னும் இரண்டு அதிகாரங்களையும் திருவள்ளுவர் எழுதியுள்ளார். அழியாச்செல்வம் இந்த உலகத்தில் எல்லாச் செல்வமும் மறைந்துவிடும் ; அழிந்துவிடும். நான் வெளியூர் சென்றபோது நண்பரைக் கேட்டேன் , " இருப... |
கட்டடம் இருந்ததே , அஃது எங்கே ? " என்று கேட்டேன். " அது மழை பெய்து இடிந்து விட்டது " என்று பதில் வந்தது. இதுவும் அழிகிற செல்வம். நாம் பேசும் போது , " அதோ போகிறாரே , அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னே இரண்டு இலட்ச ரூபாய் வைத்திருந்தார். இப்போது எல்லாம் செலவாகிப்போய் இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் " என்று சொல்வோம். இஃது அழிகி... |
மாட்டோம். ஏனென்றால் கல்வி அழியாதது. அதனால்தான் , கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்று வள்ளுவர் கூறுகிறார். இல்லை. கூ ஒளிவிளக்கு கல்வி ஓர் ஒளிவிளக்கு. அதாவது இருக்கும் இடத்தை ஒளிமயமாக ஆக்குவது. அதனுடைய குறிப்பு என்னவென்றால் ஒருவன் கற்றுவிட்டால் , அப்படிக் கற்ற கல்வியைப் பலருக்கும் அளிக்க வேண்டும். ... |
மதிக்கமாட்டார்கள். கற்றவரும் கல்லாதவரும் கல்வியறிவு இல்லாதவர்களைத் திருவள்ளுவர் போல் குறை கூறியவர் வேறு எவரும் விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் ( குறள் 410 ) 106 ( குறள் 400 ) என்னும் திருக்குறளில் கல்வியறிவு இல்லாதவனை விலங்கு என்கிறார். ஏன் விலங்கு என்று சொன்னார் ? அது சொன்னால் கேட்காது. மாடு ஒன்ற... |
வைத்துக்கொண்டு காட்டவேண்டும். அது மட்டுமில்லாமல் விலங்கு நல்ல செயல்களைத் தானாகச் செய்யாது. ஒரு பசுமாடு இருக்கிறது. ஒரு பொருளை உருட்ட வேண்டும் என்றால் அது தானாகவே போய் உருட்டிவிடும். ஒருபொருளை உடைக்க வேண்டும் என்றால் தானாகவே போய் உடைத்துவிடும். ஓர் ஆளை முட்ட வேண்டுமென்றால் தானாகவே போய் முட்டிவிடும். இவ்வளவும் கெட்ட செயல... |
கொடுத்து விட்டுப் போகாது. நல்ல செயலை மனிதன் தானாகச் செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர். இன்னொருவர் வந்து சொல்ல வேண்டும் என்று காத்திருக்கக் கூடாது. நன்றின்பால் உய்ப்பது அறிவு என்று வள்ளுவர் இதற்காகத்தான் சொன்னார். அந்த அறிவைப் பெற உதவுவது கல்வி. கல்வியும் பள்ளியும் கல்வி கற்பதற்காகவே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம்... |
இருப்பார்கள். எத்தனையோ அறிவியல் அறிஞர்கள் இருப்பார்கள். அதைக் கண்டுபிடித்துச் சொல்பவர்கள் ஆசிரியர்கள். அதை நோக்கிச் செலுத்துவதற்காகத்தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தார் பாரதியார். " பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் ; எங்கள் பாரத தேசமென்று தோள்கொட்ட... |
போற்றக்கூடிய அறிஞர்களாக ஆகவேண்டும். அதற்காகத்தான் கோயில்களாகிய பள்ளிக்கூடங்களில் குழந்தைகளைக் கொண்டு வந்து விடுகிறோம். ஓர் ஆசிரியர் எல்லா மாணவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்தார். அவர்களெல்லாம் பத்தாம் வகுப்பு , பன்னிரண்டாம் வகுப்பு என்று படித்து வெற்றி பெற்றார்கள். அதற்குப் பிறகு இந்த ஆசிரியர் என்ன செய்வார் ? அவர்களு... |
கொடுத்ததை எல்லாம் திருப்பியா கேட்பார் ? ' என்னிடம் இருந்த கல்வியை எல்லாம் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டேன். எல்லாக் கல்வியையும் நீங்களே எடுத்துக்கொண்டு போய்விட்டால் அடுத்து வருபவர்களுக்கு நான் எப்படிச் சொல்லிக் கொடுப்பேன் ? நான் சொல்லிக்கொடுத்த கல்வியை எல்லாம் திருப்பி கொடுங்க ' என்றா கேட்பார் ? கேட்கமாட்டார். ஏ... |
எழுதுகிறார்கள். சிலர் ஐம்பது புத்தகங்கள் எழுதுகிறார்கள். ஆனால் திருவள்ளுவர் வாழ்நாள் முழுக்க ஒரே ஒரு நூல்தான் எழுதி இருக்கிறார். அப்படி என்றால் எவ்வளவு சிந்தித்துச் சிந்தித்து எழுதி இருக்க வேண்டும் ! சில நூல்களைப் பற்றிச் சிந்தனை செய்யவே வேண்டாம். சில நூல்கள் படித்தவுடனேயே விளங்கும். சில நூல்களைப் படித்துவிட்டு ஆழமாகச்... |
அவற்றை நாம்தான் தோண்டி எடுக்க வேண்டும். அதுபோல நாம் படிக்கும் நூல்களில் சிலவற்றை ஒரு முறை படித்தால் போதாது. மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்தால்தான் அதன் பொருள் விளங்கும். அப்படிப்பட்ட நூல்களை ஆழ்ந்து ஆராய்ந்து படிக்க வேண்டும். அதனால்தான் திருவள்ளுவர் ' கற்க கசடற - கற்பவை ' என்று சொன்னார். எதைப் படிக்க வேண்டுமோ அதைத்தான... |
வகுப்புகள் நடத்தியும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தியும் திருக்குறளைப் பரப்பும் பணி செய்தவர் திருக்குறளார் வீ. முனிசாமி. நகைச்சுவை ததும்பும் தமது பேச்சால் மக்களைக் கவர்ந்தவர் இவர். வள்ளுவர் உள்ளம் , வள்ளுவர் காட்டிய வழி , திருக்குறளில் நகைச்சுவை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். உலகப்பொதுமறை திருக்குறள் உரை விளக்கம் என... |
எ.கா. ) கல்வி கரையில ; கற்பவர் நாள் சில. கோடை விடுமுறை தொடங்கியபோதும் இந்தக் குழப்பம் மதிவாணனுக்கு இருந்தது. நாலைந்து நாள்கள் அக்காவீடு , அத்தை வீடு போய் வந்தான். தொலைக்காட்சி பார்த்துப் பொழுது போக்கினான். நண்பன் கவின் ஒரு நாள் அழைத்தான். " சும்மாதானே இருக்கே. வாடா பின்னலாடை நிறுவனத்துக்குப் போகலாம். புதிய உடைகள் , எழு... |
சேர்ந்துவிட்டான். ஒன்றரை மாதங்கள் ஓடிவிட்டன. பின்னலாடை நிறுவன வேலை புதுசாக இருந்தது. ஆடைகளை அடுக்கிக் கட்டும் வேலைதான். சனிக்கிழமை வாரச் சம்பளம். பத்து மணிக்கும் பிற்பகலிலும் வடை , தேநீர். இரவில் பரோட்டா , தோசை என்று சுவையாகச் சாப்பிட முடிந்தது. அம்மா அவனது சம்பளப் பணத்தைப் பத்திரமாக வைத்திருப்பதாய்ச் சொன்னார். செலவழிந... |
ஆய்வுக்கு வரும்போது வெளியில் அனுப்பி விடுகிறார்கள். ஒரு வேளை கண்டுபிடித்துவிட்டால் , வயது பதினைந்து என்று சொல்லச் சொன்னார்கள். பின்னலாடை நிறுவனத்துக்குப் போய்க்கொண்டே இருந்தால் அவனும் குழந்தைத் தொழிலாளிதான். வாழ்க்கை முழுவதும் தொழிலாளிதான் என்பது நினைவுக்கு வந்தது. தொழிலாளியாக இருப்பது கேவலம் இல்லை. ஆனால் , படிக்கிற வய... |
தொழிலும் செய்யலாம். அப்படி இல்லாமல் இந்த வயதிலிருந்து தொழிலாளியாகவே வாழ்க்கையைக் கடத்துவதா ? சிந்தித்தான். கல்வியறிவு முதன்மையானது. ஒரு பட்டமாவது வாங்க வேண்டும். எதிரில் இருந்த விளம்பரப்பலகை கண்ணில் பட்டது. அதில் அம்பேத்கரும் அப்துல் கலாமும் தென்பட்டனர். இவர்களைப் போல் உயரவேண்டுமானால் படிப்பு வேண்டும். படிப்பில்லாமல் உ... |
வடையும் பரோட்டாவும் வீட்டில் கிடைக்காது. அவற்றுக்கு அடிமையாவதா ? தலையை உலுக்கிக் கொண்டான் மதிவாணன். வரும் பேருந்துகள் நிரம்பி வழிந்தன. ஒவ்வொரு நாளும் இப்படித்தான். மிகுதியான கூட்டம். பேருந்தில் நுழைவது ஒரு விளையாட்டுச் சாதனை. பின்னலாடை நிறுவனத்துக்குப் ( பேருந்து நிலுந்தம் போனால் உடையெல்லாம் கசங்கி அழுக்காகி இருக்கும்.... |
முகம் இடுங்கி இருந்தது. மழிக்கப்படாத முகம். சோர்வாக இருந்தார். " இது நல்லூர் போகுமா ? " என்று கேட்டார். மதிவாணன் வந்து நின்ற பேருந்தைப் பார்த்தான். முதியவரின் பார்வை அக்கம் பக்கமிருந்த சிறுவர்களின்மீது இருந்தது. " என்னப்பா , இது நல்லூர் போகுமா ? " அவர்களுள் ஒரு சிறுவன் பேருந்தின் முகப்பைக் கூர்ந்து கவனித்தான். எதுவும் ... |
கொண்டான். " சின்னப் பசங்களா இருக்கீங்க. இதுகூட படிச்சுச் சொல்லத் தெரியாதா ? " ஒருவன் வெறுப்புடன் இடைமறித்தான். " பெரியவரே... இதப் படிக்கக்கூட உங்களுக்குத் தெரியாதா... ? " ' ஓ... ' வென்று கேலியான ஓசை வந்தது. சிரித்தார்கள். இதைக் கவனித்துக் கொண்டிருந்தான் மதிவாணன். அவர் அருகே சென்றான். " இந்தப் பேருந்து நல்லூர் போகாதுங்க... |
போய்விட்டால் நானும் இப்படித்தான் வாழ்க்கை முழுவதும் அவமானப்படவேண்டும். நல்ல கல்வியறிவு தலைநிமிர்ந்து நிற்க வைக்கும். நல்ல படிப்புதான் சிறந்த மனிதனாக்கும் என்ற எண்ணம் வந்தது. பேருந்துகளின் ஓசை காதை அடைத்தது. விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினான். " டேய் ! " குரல் கவினிடமிருந்து வந்தது. " எங்கடா போறே ? " " பள்ளிக்கு " " பள்... |
யாருமில்லாத பள்ளியை வேடிக்கை பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. நூல் வெளி இக்கதையை எழுதியவர் சுப்ரபாரதிமணியன். இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு , இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை , புதினம் , கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார் ; கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார். பின்ன... |
எழுதப்படிக்கத் தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவுவீர்கள் ? வகுப்பில் கலந்துரையாடுக. மதிப்பீடு மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக. இயல் ஐந்து கற்கண்டு ஓரெழுத்து ஒருமொழி ஈ , பூ , கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள். ஓரெழுத்து ஒருமொழி , பகுபதம் , பகாப்பதம் இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு. இவ்வாறு ஓ... |
இவற்றில் நொ , து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும். பகுபதம் தெரிந்து தெளிவோம் ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும் - 1. ஆ- பசு 2. ஈ- கொடு 3. ஊ- இறைச்சி 4. ஏ- அம்பு 5. ஐ- தலைவன் 6. ஓ மதகுநீர் தாங்கும் பலகை 7. கா- சோலை 8.கூ - பூமி 9. கை- ஒழுக்கம் 10. கோ - அரசன் 11. சா... |
இழிவு 24. நோ- வறுமை 25. பா- பாடல் 26. பூ- மலர் 27 , பே – மேகம் 28 , பை- இளமை 29. போ- செல் 30. மா- மாமரம் 31.மீ- வான் 32. மூ மூப்பு 33. மே- அன்பு 34. மை- அஞ்சனம் 35. மோ- மோத்தல் 36 , யா- அகலம் 37. வா- அழைத்தல் 38. வீ- மலர் 39. வை- புல் 40. வௌ- கவர் 41. நொ- நோய் 42. து- உண். 7th 5id - Tamil CBSEE Paga - 1-222.indd 114 வே... |
பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர். பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர். இயல் ஆறு 48 கற்றல் நோக்கங்கள் $ கலை வண்ணம் கலைகளின் இன்றியமையாமையைக் கவிதை வாயிலாக அறிதல் இருபொருள் தரும் வகையில் அமைந்த பாடலின் சொல் நயங்களை உணர்தல் ஓவியக்கலையின் மேன்மையையும் அது மனித வாழ்வோடு இணைந... |
நுழையும்முன் ஒரு வேண்டுகோள் கலையுலகப் பிரும்மாக்களே மண்ணின் வனப்புக்குப் கவிதைப்பேழை கலைகள் மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன. ஒரு கலைஞன் தான் படைக்கும் ஒவ்வொன்றையும் அழகியலோடு படைப்பான். கலைப்படைப்பு அழகியலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. அது மானுடத்தைப் பேச வேண்டும். இதனைக் கலைஞர்களிடம் ஒரு வேண்டுகோள... |
வயல்வெளி உழவனின் உருவ வார்ப்பெனில் ஈரமண் வாசம் இருக்க வேண்டும் அதில் ஓவியர்களாகத் தாய்மையின் பூரிப்பைச் சித்திரமாக்கினால் அவள் முகப்பொலிவில் வழித்தெடுக்குமாறு இருக்கட்டும் கரிசன பாச உணர்வுகள் ஒரு சின்ன மழலைச் சித்திரமா பால் மணம் கமழ வேண்டும் அதன் பளிங்கு மேனியில் ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களா அட்லாண்டிக் சமுத்திர அலைகளா அமேச... |
கட்டாயம் மனிதன் இல்லாத இணையாத எந்த வனப்பும் வனப்பில்லை அவன் கலவாத எதிலும்ஜீவ உயிர்ப்பில்லை... -தேனரசன் இயல் ஆறு நுழையும்முன் சொல்லும் பொருளும் வண்கீரை முட்டப்போய் மறித்தல் பாடலின் பொருள் கவிதைப்பேழை கீரைப்பாத்தியும் குதிரையும் ( இரட்டுற மொழிதல் ) தமிழில் சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்த பலவகையான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன... |
கால்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய் மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகு மே * காளமேகப்புலவர் வளமான கீரை முழுதாகச் சென்று தடுத்தல் ( மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல் ) , எதிரிகளைத் தடுத்துத் தாக்குதல் பரி கால் கீரைப்பாத்தியில் மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர் ; ம... |
ஓட்டப்படும் ; கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும் ; எதிரிகளை மறித்துத் தாக்கும் ; போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும். இக்காரணங்களால் கீரைப் பாத்தியும் , ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும். குதிரை வாய்க்கால் , குதிரையின் கால் இயல் ஆறு நுழையும்முன் -ரைநடை உலகம் பேசும் ஓவியங்கள் ஆயகல... |
ஓவியத்தால் மிக நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும். அதனால்தான் ஓவியத்தை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க ஓவியக்கலையைப் பற்றி அறிவோம். ஒரு விடுமுறை நாளன்று கண்ணனும் மணியும் அரசுப் பொருள்காட்சிக் கூடத்திற்குச் செல்கின்றனர். ஒவ்வோர் அரங்காகக் கண்டுகளித்தவாறே சென்று இறுதியில் ஓவியக்கூடத... |
பேசுவதைக் கேட்போம். ( மணி பொத்தானை அழுத்துகிறான் ) குகை ஓவியம் : நான்தான் குகை ஓவியம் பேசுகிறேன். பழங்கால மனிதர்கள் குகைகளில்தான் வாழ்ந்து வந்தனர். அங்குதான் அவர்கள் முதலில் ஓவியங்களை வரையத் தொடங்கினார்கள். செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக எங்களை வரைந்தனர். வேட்டைக்குச் செல்லுதல் , நடனம் ஆடுதல் , போர் செய்தல்... |
அறிந்து கொள்ளலாம். மணி : கண்ணா ! இதோ இங்குள்ள சுவர் ஓவியத்தின் பொத்தானை அழுத்து. ( கண்ணன் பொத்தானை அழுத்துகிறான். ) சுவர் ஓவியம் : மனிதர்கள் வீடுகட்டி வாழத் தொடங்கிய காலம் முதல் சுவர் ஓவியங்களாகிய எங்களை வரைந்து வருகின்றனர். அரண்மனைகள் , மண்டபங்கள் , கோவில்கள் போன்றவற்றின் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் எங்களைக் காணமுடிய... |
இருக்கும்போது எங்களை வரைவர். சுவர் உலர்ந்தபிறகு எங்களை வரைவதும் உண்டு. தஞ்சைப் பெரியகோயிலில் சுவர் ஓவியங்களான எங்களை ஏராளமாகக் காணமுடியும். கருவறைச் சுற்றுச்சுவரிலும் மண்டபங்களின் சுவர்களிலும் நாங்கள் அழகாகக் காட்சியளிக்கிறோம். நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளாக நாங்கள் வரையப்பட்டிருக்கிறோம். மணி : ... |
இருந்துள்ளது. ஓவியம் வரையப் பயன்படும் துணியை எழினி , திரைச்சீலை , கிழி , படாம் எனப் பல பெயர்களில் அழைப்பர். சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் குணமாலை என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியைச் சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. தற்காலத்தில் எங்களைக் கலம்காரி ஓவியங்கள் என்னும் பெயரில் தமிழகத்திலும் ஆந்திராவிலு... |
ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான் ) இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் - நெடுநல்வாடை ஓலைச்சுவடி ஓவியம் : ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாகவும் எங்களை வரைவார்கள். நாங்கள் பெரும்பாலும் இதிகாசம் மற்... |
தாள்களில் ஓவியம் வரையும்போதே நாம் அழிப்பான்களைக் கொண்டு பலமுறை அழித்து அழித்து வரைகிறோம். ஒருமுறை எழுத்தாணியால் கீறிவிட்டால் திருத்தமுடியாத ஓலைச்சுவடிகளில் நம் முன்னோர் ஓவியம் வரைந்துள்ளனர். அவர்களின் திறமையை எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. – பரிபாடல் ( 19 : 54-55 ) கண்ணன் : சரி , வா ! செப்பேட்டுஓவியம் என்ன சொல... |
அதைப்போல உளிகொண்டு தெரிந்து தெளிவோம் ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது. 129 -மணிமேகலை அரசு வரைகோடுகளாக எங்களையும் வரைந்தனர். பொதுவாக நீர்நிலைகள் , செடிகொடிகள் , பறவைகள் , விலங்குகள் , குறியீடுகள் ப... |
இருக்கும் ? ( கண்ணன் தந்த ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான் ) தந்த ஓவியம் : நாங்கள் யானைத் தந்தங்களின் மீது வரையப்பட்ட ஓவியங்கள். வயது முதிர்ந்து இறந்த யானையின் தந்தங்களின்மீது பலவகை நீர்வண்ணங்களைப் பயன்படுத்தி அழகான ஓவியங்களாக எங்களை வரைவார்கள். எங்களைக் கேரள மாநிலத்தில் அதிகமாகக் காணமுடியும். கண்ணன் : வா !... |
நினைத்திருப்பீர்கள். ஆனால் , அழகிய வண்ண ஓவியங்களாகிய எங்களை வரையவும் கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர். பலவகையான உருவங்கள் , இயற்கைக் காட்சிகள் போன்றவைகளாக நாங்கள் வரையப்படுகிறோம். எங்களை உருவாக்கும் ஓவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர். மணி : அடடா , ஓவியங்களில்தான் எத்தனை வகைகள் ! இதோ ! இருபதாம் நூற்றாண்டு ஓவியங்கள்... |
அழுத்துகிறான் ) தாள் ஓவியம் : தற்காலத்தில் பரவலான பயன்பாட்டில் இருப்பவர்கள் நாங்களே. கோட்டோவியங்கள் , வண்ண ஓவியங்கள் , நவீன ஓவியங்கள் எனப் பலவகையான வடிவங்களில் நாங்கள் காணப்படுகின்றோம். கரிக்கோல் , நீர்வண்ணம் , எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி எங்களை வரைகின்றனர். ( கண்ணன் அருகிலிருந்த கருத்துப்பட ஓவியத்தின் பொத்த... |
அறிவோம் ஓவியம் ஓவியம் வரைபவர் ஓவியக் கூடம் ஓவு , ஓவியம் , ஓவம் , சித்திரம் , படம் , படாம் , வட்டிகைச்செய்தி கண்ணுள் வினைஞர் , ஓவியப் புலவர் , ஓவமாக்கள் , கிளவி வல்லோன் , சித்திரக்காரர் , வித்தகர் எழுதெழில் அம்பலம் , எழுத்துநிலை மண்டபம் , சித்திர அம்பலம் , சித்திரக்கூடம் , சித்திரமாடம் , சித்திரமண்டபம் , சித்திர சபை தமி... |
தோன்றும்படி வரைவதையே கேலிச்சித்திரம் என்பர். ( கண்ணன் நவீன ஓவியத்தின் அருகிலுள்ள பொத்தானை அழுத்துகிறான் ) தெரிந்து தெளிவோம் நவீன ஓவியம் பாரதியார் வெளியிட்ட கேலிச்சித்திரம் ஓவியக்கலையின் மிகப் புதுமையான வடிவமாக நாங்கள் விளங்குகிறோம். புதுமையான பார்வையில் கருத்துகள் வெளிப்படுமாறு எங்களை வரைகின்றனர். பார்வையாளர்களின் மனப்... |
பயன்படுத்தப்பட்டன. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் கருதப்படுபவர் ஒருவராகக் கொண்டையராஜு. நாட்காட்டி ஓவியங்களைப் பசார் பெயிண்டிங் என்றும் அழைப்பர் கண்ணன் : அதிலும் ஓவியங்களே நம்மோடு பேசியது மிகமிகச் சிறப்பாக இருந்தது. இந்த நாளை நம்மால் மறக்கவே முடியாது ! நாமும் சிறந்த ஓவியங்களை வரைந்து பழகுவோம். கற்பவை க... |
ஓவியங்களைப் பற்றி அறிந்து கொண்டோம். 1. உமக்குப் பிடித்த காட்சியை வரைந்து வண்ணம் தீட்டுக. 2. பருவ இதழ்களில் வெளிவந்த பலவகை ஓவியங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக. மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று அ ) மண்துகள் ஆ ) நீர் வண்ணம் இ ) எண்ணெ... |
எழுதக் கிடைப்பது அ ) கோடு + ஓவியம் ஆ ) கோட்டு + ஓவியம் இ ) கோட் + டோவியம் ஈ ) கோடி + ஓவியம் 4. ' செப்பேடு ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) செப்பு + ஈடு ஆ ) செப்பு + இ ) செப்பு + ஏடு ஈ ) செப்பு + யேடு 3. 5. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் அ ) எழுத்துஆணி ஆ ) எழுத்தாணி ஈ ) எழுதாணி இ )... |
ஓவியங்களின் வகைகள் யாவை ? 2. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை ? 3. தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர் ? சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக. 5. செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை ? சிறுவினா 1. கேலிச்சித்திரம் என்றால் என்ன ? 2. ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண... |
விருப்பம் உடையவர்கள். பழமையான நினைவுச் சின்னங்கள் , இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் , வழிபாட்டு இடங்கள் , கடற்கரைப் பகுதிகள் , தேசியப் பூங்காக்கள் போன்ற இடங்களைக் காண்பது உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தரும். அவற்றுள் தமிழின் பெருமையை விளக்கும் இடங்கள் சிலவற்றை அறிவோம். அன்பு மாணவர்களே ! புத்தகங்களில் பல வகை உண்டு. கதைப் புத்... |
தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை சரசுவதி மகால் நூலகம் முகக இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம் கி.பி. ( பொ.ஆ. ) 1122 முதல் இயங்கி வருவதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இங்குத் தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் பட... |
எண்ணத்தின் அடிப்படையில் தமிழக அரசால் கி.பி. ( பொ.ஆ. ) 1981 இல் தோற்றுவிக்கப்பட்டது ஏக்கர் என்ற தமிழ்ப்பல்கலைக்கழகம். தஞ்சாவூரில் ஆயிரம் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. வானத்தில் இருந்து பார்க்கும் பொழுது " தமிழ்நாடு " எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது. இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும்... |
இருபத்தைந்து துறைகளும் உள்ளன. இப்பல்கலைக்கழகம் தமிழ்மொழி ஆய்வுகள் செய்வது மட்டுமன்றி , சித்த மருத்துவத்துறை மூலம் பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் மருத்துவத் தொண்டு செய்து வருகிறது. இந்திய ஆட்சிப்பணி பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப்பயிற்சியை இப்பல்கலைக்கழகமே வழங்குகிறது. இங்கு மிகப்பெரிய நூலகம் ஒன்று அமைந்துள்ளது. உலக... |
பல்வேறு மொழி நூல்கள் உள்ளன. இங்கு 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன. கீழ்த்திசை நூலகம் - சென்னை இந்நூலகம் கி.பி. ( பொ.ஆ. ) 1869 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்குத் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன. கணிதம் , வானியல் , மருத்துவம் , வரலாறு உள்ளிட்ட பல்வேறு துற... |
ஆகும். இஃது இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்நூலகத்தில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள் , நாளிதழ்கள் , பருவ இதழ்கள் ஆகியவற்றின் ஒரு படி ( பிரதி ) இங்குப் பாதுகாக்கப்படுகிறது. இந்நூலகத்தின் மூன்றாம் தளத்தில் மறைமலை அடிகள் நூலகமும் செயல்பட்... |
அமைக்கப்பட்டுள்ளன. கடைக்கோடி இரண்டு சக்கரங்கள் பெரியனவாகவும் நடுவில் இரண்டு சக்கரங்கள் சிறியனவாகவும் உள்ளன. தேரின் மையத்தில் உள்ள எண்கோண வடிவக் கருவறையில் திருவள்ளுவரின் சிலை கவினுற அமைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டம் சென்னை திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னைக் கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்ன... |
இழுத்துச் செல்வது போன்று கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்கம் ஒன்றும் உள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறட்பாக்களும் செதுக்கப்பட்டுள்ளன. அறத்துப்பால் கருநிறப் பளிங்குக் கல்லிலும் பொருட்பால் வெண்ணிறப் பளிங்குக் கல்லிலும் இன்பத்துப்பால் செந்நிறப் பளிங்குக் க... |
நிறுவப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு அருகில் , கடல் நடுவே நீர் மட்டத்திலிருந்து முப்பது அடி உயரப் பாறை மீது இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கி.பி. ( பொ.ஆ. ) 1990 ஆம் ஆண்டு இப்பணி தொடங்கியது. பொதுமக்கள் பார்வைக்காக 2000 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் அன்று திறந்துவைக்கப்பட்டது. பாறையிலிருந்து சிலையின் உயரம் மொத்தம... |
ஆகியவற்றின் மொத்த அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் சிலை தொண்ணூற்றைந்து அடி உயரம் உடையதாக அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி பீடத்தின் உட்புறத்தில் மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. மண்டபத்தின் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் செதுக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் ... |
வசதி செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். தமிழின் பெருமைமிகு அடையாளமாக இச்சிலை உயர்ந்து நிற்கிறது. உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மதுரை மாநகரின் தல்லாகுளம் பகுதியில் காந்தி அருங்காட்சியகம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. ... |
சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இக்கட்டடம் கட்டப்பட்டு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை கி.பி. ( பொ.ஆ. ) 2016 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. இதனுள் பன்னாட்டு அளவிலான கருத்தரங்கக் கூடங்கள் , ஆய்வரங்கங்கள் , நூலகம் , பார்வையாளர் அரங்கம் ஆகியன கவினுற அமைக்கப்பட்டுள்ளன. வெளிப்புறச் சுற்றுச்சுவர்களில் 1330 கு... |
புராணக் காட்சி இதன் நுழைவாயிலில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள காட்சிக்கூடத்தில் வள்ளல்கள் , புலவர்கள் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் உள்ளன. தொல்காப்பியர் , ஒளவையார் , கபிலர் ஆகியோரின் முழுஉருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இதன் சுற்றுச் சுவர்களில் சங்க இல... |
சிற்பக் கலைக்கூடம் - பூம்புகார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார். இந்நகரைப் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்திலும் பட்டினப்பாலையிலும் இடம்பெற்றுள்ளன. இங்கு மருவூர்ப்பாக்கம் என்னும் கடல் பகுதியும் பட்டினப்பாக்கம் என்னும் நகரப் பகுதியும் அமைந்திருந்ததாகச் சிலப்... |
கலைக்கூடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது. கண்ணகியின் வரலாற்றை விளக்கும் நாற்பத்தொன்பது சிற்பத் தொகுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. மாதவிக்கும் ஒரு நெடிய சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது. கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம் , பாவைமன்றம் , நெடுங்கல்மன்றம் அமைந்துள்ளன. இலஞ்சிமன்றத்திலும் பாவைமன்றத... |
தற்காலச் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாய் நிற்கின்றன. ஆகியன இக்கையேட்டில் நாம் கண்ட பகுதிகள் அனைத்தும் தமிழின் பெருமையை உலகறியச் செய்ய நிறுவப்பட்டவை ஆகும். இவற்றைக் காணும் பொழுது தமிழரின் வாழ்வையும் தமிழ்மொழியின் சிறப்பையும் அறிய முடிகிறது. இத்தகைய சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று பார்வையிடுவதும் அவற்றைப் பாதுகாப்ப... |
நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால் , வள்ளுவர் கோட்டம் / திருவள்ளுவர் சிலை இடத்தைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள் இயல் ஏழு நயத்தகு நாகரிகம் கற்றல் நோக்கங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் காட்டும் சமூக வாழ்வியலைப் புரிந்து கொள்ளுதல் எளிய நாட்டுப்புறப்பாடல்களின் ஓசை நயத்தினையும் அதில் பொதிந்து... |
படித்துச் சுவைத்தல் இயல் ஏழு நுழையும்முன் கவிதைப்பேழை வயலும் வாழ்வும் உலகில் பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பசிதீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழில் முதன்மையானதாகும். நிலத்தைத் தெரிவு செய்தல் , நாற்றுப் பறித்தல் , நாற்று நடுதல் , நீர் பாய்ச்சுதல் , அறுவடை செய்தல் , போரடித்தல் , நெல்பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் ... |
ஏலேலங்கிடி ஏலேலோ சேத்துக்குள்ளே இறங்குறாங்க - ஏலேலங்கிடி ஏலேலோ நாத்தெல்லாம் பிடுங்கையிலே - ஏலேலங்கிடி ஏலேலோ நண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்க ஏலேலங்கிடி ஏலேலோ ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் - ஏலேலங்கிடி ஏலேலோ ஓடியோடி நட்டோமையா - ஏலேலங்கிடி ஏலேலோ மடமடன்னு மடைவழியே - ஏலேலங்கிடி ஏலேலோ மண்குளிரத் தண்ணீர்பாய - ஏலேலங்கிடி ஏலேலோ... |
ஏலேலங்கிடி ஏலேலோ ஆளுபணம் கொடுத்துவாரான் - ஏலேலங்கிடி ஏலேலோ சும்மாடும் தேர்ந்தெடுத்து - ஏலேலங்கிடி ஏலேலோ சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் - ஏலேலங்கிடி ஏலேலோ கிழக்கத்தி மாடெல்லாம் ஏலேலங்கிடி ஏலேலோ கீழே பார்த்து மிதிக்குதையா - ஏலேலங்கிடி ஏலேலோ கால்படவும் கதிருபூரா - ஏலேலங்கிடி ஏலேலோ கழலுதையா மணிமணியா - ஏலேலங்கிடி ஏலேலோ தொகு... |
இறுகக்கட்டி நடவு செய்ய வயலில் இறங்கினர். நாற்றுப் பறிக்கும்போது ஆண்களும் பெண்களும் வயல் வரப்பில் உள்ள நண்டுகளையும் பிடித்தனர். நில அளவைப்பெயர் நீட்டல் அளவைப்பெயர் முற்றிய நெல் பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக்கொள்ளும் துணிச்சுருள் ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயலின் மண்குளிருமாறு மடை... |
நெற்கதிர்களைக் களத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மயங்குமாறு ( நாட்டுப்புறப்பாடல் ) விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்குப் பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்... |
மிதிக்கச் செய்தனர். மாடுகள் மிதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன. நூல் வெளி நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப்பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர். பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை மலை... |
இயல் நுழையும்முன் ரைநடை உலகம் திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி தொடக்கத்தில் காடுகளில் வாழ்ந்து வந்த மனிதன் பின்னர் ஊர்களை உருவாக்கிக் கொண்டு வாழத் தொடங்கினான். சிறிய ஊர்கள் வளர்ச்சி அடைந்து நகரங்களாக மாறின. நகரங்களில் பெரும்பாலானவை ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன. ஆற்றங்கரைகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் தமிழ்நாட்டில்... |
இந்த ஆண்டு என் தந்தையின் பணி மாறுதல் காரணமாக எங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டோம். வரும் கோடை விடுமுறையில் எங்கள் ஊராகிய திருநெல்வேலிக்கு நீ வரவேண்டும் என்று உன்னை அன்புடன் அழைக்கிறேன். திருநெல்வேலி தமிழகத்தின் பழமையான நகரங்களுள் ஒன்று. பழந்தமிழகத்தைச் சேர , சோழ , பாண்டியர் என்னும் மூவேந்தர் ஆண்டு வந்தனர் என்பது நமக்குத்... |
பெயர் பெற்றது. தற்போது நெல்லை என்று மருவி வழங்கப்படுகிறது. திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தரும் , தண்பொருநைப் புனல் நாடு என்று சேக்கிழாரும் திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியுள்ளனர். வேலி ருநெல்வேலி மாவட்டம் மலை வளம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியின் சிறப்புமிக்க மலையாகிய பொதிகை மலை இலக்கியங்களி... |
குற்றாலமலை புகழ் பெற்ற சுற்றுலா இடமாகத் திகழ்கின்றது. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் என்று குற்றால மலைவளத்தைத் திரிகூட இராசப்பக் கவிராயர் தம் குற்றாலக் குறவஞ்சி நூலில் பாடியுள்ளார். திருநெல்வேலிப் பகுதியை வளம் செழிக்கச் செய்யும் ஆறு தாமிரபரணி ஆகும். இதனைத் தண்பொருநை ... |
திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான தெரிந்து தெளிவோம் முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது. மூங்கில்காடு என்பது அதன் பொருளாகும். மூங்கில் நெல் மிகுதியாக விளைந்தமையால் அப்பகுதிக்கு நெல்வேலி என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதுவர். பங்கு வகிப்பது உழவுத்தொழில். தாமிரபரண... |
சிறுதானியங்கள் , எண்ணெய்வித்துகள் , காய்கனிகள் , பருத்தி , பயறுவகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன. இராதாபுரம் , நாங்குநேரி , அம்பாசமுத்திரம் , தென்காசி போன்ற பகுதிகளில் பெருமளவில் வாழை பயிரிடப்படுகின்றது. இங்கு விளையும் வாழைத்தார்கள் தமிழ்நாடு மட்டுமன்றிக் கர்நாடகம் , போன்ற கேரளம் மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நெல்ல... |
கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது. இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது. முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை ( நற்றிணை 23 : 6 ) தெரிந்து தெளிவோம் ருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் நிக... |
விளங்கும் தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன. இவ்வூர் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. கொற்கையில் பெருந்துறை முத்து ( அகம் 27 : 9 ) என்று சங்க இலக்கியங்கள் கொற்கையின் முத்துகளைக் கூறுகின்றன. கிரேக்க , உரோமாபுரி நாடுகளைச் சேர்ந்தவர்களான யவனர்கள் இந்த முத்துகளை விரும்பி வாங்கிச் சென்றனர். பொருநை எனப்படும் தாமிரப... |
சுற்றித் தேரோடும் வீதிகள் அழகுற அமைந்துள்ளன. இங்குத் திங்கள்தோறும் திருவிழா நடைபெறும் என்பதை , திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே என்னும் திருஞானசம்பந்தர் பாடல் அடிகளால் அறியலாம். நெல்லை மாநகரில் உள்ள தெருக்கள் பல அதன் பழமைக்குச் சான்றாக உள்ளன. காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. காவற்புரை என்றால... |
என்பதே மருவிக் கூழைக்கடைத் தெரு என வழங்கப்படுகிறது. அக்கசாலை என்பது அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம். முற்காலத்தில் பொன் நாணயங்கள் உருவாக்கும் பணியாளர்கள் வாழ்ந்த பகுதி அக்கசாலைத் தெரு என்னும் பெயரில் அமைந்துள்ளது. தெரிந்து தெளிவோம் தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்குக் கரையில் பாளையங... |
நகரின் மேற்கே பேட்டை என்னும் ஊர் உள்ளது. வணிகம் நடைபெறும் பகுதியைப் பேட்டை என வழங்குதல் பண்டைய மரபு. இப்பகுதி முன்பு பெருவணிகம் நடைபெற்ற இடமாக இருந்திருக்க வேண்டும். பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை நகர மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரம் எனவும் அவன் தேவியாகிய மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற... |
அம்மையார் பெயரில் உள்ள ஊர் மீனாட்சிபுரம் எனவும் வழங்கப்பட்டு வருகின்றன. சேரன்மாதேவி , கங்கைகொண்டான் , திருமலையப்பபுரம் , வீரபாண்டியப்பட்டினம் , குலசேகரன்பட்டினம் போன்ற ஊர்கள் பண்டைய வரலாற்றை நினைவூட்டுவனவாக உள்ளன. பாளையங்கோட்டை , உக்கிரன்கோட்டை , செங்கோட்டை என்னும் இம்மாவட்டத்தில் கோட்டைகள் பல இருந்தமைக்குச் சான்றாக வி... |
ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர். அயல்நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப் , கால்டுவெல் , வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி. இத்தகைய சிறப்புமிக்க திருநெல்வேலிக்கு உன்னை அன்போடு அழைக்கின்றேன். பெயர்கள் இயல் ஏழு நுழையும்முன் விரிவானம் திருநெல்வேலி... |
பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம். ஒரு நாட்டில் காவியம் உண்டாகிக் கொண்டே இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது அவ்வளவு சரியல்ல. பொதுவாக , ஆயிரம் வருஷத்துக்கு ஒரு தடவை கவிஞன் பிறக்கிறான் என்று சொல்லுவார்கள். ஒருவகையாக அஃது உண்மை... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.