id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
3033
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D%20%28%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%29
மஞ்சள் (மூலிகை)
மஞ்சள், அரிணம் அல்லது பீதம் (Curcuma longa) உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை தமிழர் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. வளர்வதற்கேற் சூழல் மஞ்சளுக்கு 20 °C and 30 °C (68 °F and 86 °F) இடைப்பட்ட வெப்பநிலை தேவைப்படுகிறது. மேலும் கணிசமான அளவு நீர்ப்பாசனமும் தேவைப்படுகிறது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டமானது மஞ்சள் வேளாண்மைக்கும், சந்தைக்கும் பெயர்பெற்றுள்ளது. வரலாறு மஞ்சள் தமிழ் நாட்டிலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது. இது முதலில் நிறமூட்டவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இது மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. மஞ்சளின் வகைகள் மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது. முட்டா மஞ்சள் கஸ்தூரி மஞ்சள் விரலி மஞ்சள் கரிமஞ்சள் நாக மஞ்சள் காஞ்சிரத்தின மஞ்சள் குரங்கு மஞ்சள் குடமஞ்சள் காட்டு மஞ்சள் பலா மஞ்சள் மர மஞ்சள் ஆலப்புழை மஞ்சள் மஞ்சளின் இயல்புகள் முட்டா மஞ்சள் இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள். கஸ்தூரி மஞ்சள் இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது. விரலி மஞ்சள் இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள். மஞ்சளின் பயன்பாடுகள் . பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது. சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது. வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது. நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கலுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். மேலதிக தகவல்கள் மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன. மஞ்சள்தூளைத் திரவ வடிவத்தில் பயன்படுத்தி வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதரண இயல்பு நிலையில் திரவ மஞ்சள் ஒரு மெல்லிய படலமாக இடப்பட்டால் ஒளியை உறிஞ்சி மிளிரும் தன்மை கொண்டது, மஞ்சளில் உள்ள வேதிப்பொருளானது டி.என்.டி (TNT) போன்ற வெடிபொருட்களின் மூலக்கூறுகளை வளியில் இருந்து அகத்துறிஞ்சுவதனால் மஞ்சளின் ஒளிவெளிவிடும் தன்மை மாற்றம் அடைகின்றது; மிளிரும் தன்மை குறைகின்றது. தமிழர் வாழ்வியல் தமிழர் வாழ்வியலில் மஞ்சளைப் மருத்துவ பொருளாகக் கருதுகின்றனர். புதிதாக ஒரு வீட்டில் குடிபுகுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை கடவுள் படத்தின் முன் வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுகின்றனர். புத்தாடை அணிவதற்கு முன்பு மஞ்சளை நீரில் தேய்த்து அதை ஆடையில் வைத்துக் கொள்கின்றனர். மாரியம்மன் கோயிலுக்கு தீச்சட்டி எடுப்பவர்கள் மீது முதலில் மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்படுகிறது. பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவர். மஞ்சள் தூளை நீரில் கலந்து பிள்ளையார் பிடித்து அறுகம்புல் வைத்து பிள்ளையாராக வழிபடுவர்.. திருவிழாக் காலங்களில் உறவினர்கள் மீது மஞ்சள் நீரை தெளிப்பர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மஞ்சள் குறித்த சீன வானொலியின் கட்டுரை மூலிகைகள் சுவைப்பொருட்கள் இஞ்சிக் குடும்பம் கிழங்குகள் இந்தியத் தாவரங்கள் உணவுச் சேர்பொருட்கள்
3039
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF
செல்லிடத் தொலைபேசி
நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் நகர்பேசி என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லாத் தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு அருகிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் செல்பேசி (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச).8754830145 நகர்பேசியை சாத்தியமாக்கும் தொழில் நுட்பங்கள் குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறை வானொலியை சுருதிகூட்டும் போது சில சமயம் ஒரே அலையெண்ணில் இரண்டு நிலையங்களின் ஒலிபரப்பை ஒரே நேரத்தில் கேட்க முடியும். இதற்குக் காரணம் நிலையங்களிலிருந்து வரும் வானொலிக் குறிகைகள் ஒரே அலையெண்ணில் இருப்பதால் அவை ஒன்றுக்கொன்று குறுக்கிடுகின்றன. குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் இந்த குறுக்கிடுதல் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறது. குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு ஒரு பரவல் குறியீடு மூலம் அலையெண் கற்றையகலம் முழுவதும் பரப்பப்படுகிறது. ஒவ்வொரு அழைப்பிற்கும் (அல்லது இரு நகர்பேசிகளுக்கிடையான தொடர்புக்கும்) ஒரு தனிப்பட்ட பரவல் குறியீடு வழங்கப்படுகிறது. இக்குறியீடு மூலம் அலையெண்ணில் பல அழைப்புகளை ஒன்றுக்கு மேல் ஒன்று உடன்வைக்கலாம். குறியீடு பிரிப்பு பன்னணுகல் வலையத்தில் அழைப்பவர் மற்றும் அழைக்கப்படுபவர் கருவிகளில் மட்டும்தான் ஒரே பரவல் குறியீடு ஒதுக்கப்படுகின்றன. ஆகையால் இவ்விருவர்களுக்கிடையே தொடர்பு தெளிவாக இருக்கும். வலையத்தில் உள்ள மற்ற கருவிகளில் யாதேனும் வேறு வேறு அழைப்புகளில் இணைந்திருந்தால் அவைகளுக்கு வெவ்வேறு பரவல் குறுயீடுகள் ஒதுக்கப்படுகின்றன. எந்த ஒரு தொடர்பையும் அலையெண் கற்றையகலத்தைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற தொடர்புகள் தடங்கல் செய்யாது. இதனால் பல்லாயிரம் அழைப்புகளை கற்றையகலத்தில் பரப்பி ஒன்றுக்கொன்று மேல் அடுக்கலாம். இது பரவல் நிறமாலை தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறை உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறையில், காலப்பிரிப்பு பன்னணுகல் முறையில் அழைப்புகள் (அல்லது தொடர்புகள்) வலையத்தைப் பகிர்கின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு மூலம் குரல் தரவுகள் குறுக்கப்பட்டு அதிக அழைப்புகளை வலையத்தில் ஏற்க இயல்பாகிறது. கம்பியில்லா முறையின் அங்கங்கள் கம்பியில்லா தொலைதொடர்பு அமைப்பு முறையில் பல அங்கங்கள் உள்ளன. அவற்றைக் கீழே காண்போம். நகர் நிலையம் முதலில் இருப்பது நகர் நிலையம். இதுதான் ஒரு சந்தாதாரரின் நகர்பேசி. இது வானலைச் செலுத்துப்பெறுவி, காட்சித் திரை, இலக்கக்குறிகைச் செயலிகள், சூட்டிகையட்டை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சூட்டிகையட்டை, சந்தாதாரர் அடையாளக்கூறு எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு நகர்பேசி சாதனத்தின் தனித்தன்மையான அடையாளத்திற்கு பன்னாட்டு நகர்சாதன அடையாளம் எனப் பெயர். சூட்டிகையட்டையில் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - பதிந்துள்ளது. பன்னாட்டு நகர்சாதன அடையாளம் மற்றும் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் ஒன்றுக்கொன்று தனியானவை, அவைகளில் சேர்மானமும் தனித்தன்மையானது. தள நிலையம் கம்பியில்லா அமைப்பின் அடுத்ததான உறுப்பு தள நிலையம். ஒரு தள நிலையம் என்பது தள செலுத்துப்பெறு நிலையம் மற்றும் தள நிலைய இயக்ககம் என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு தள செலுத்துப்பெறு நிலையத் துணையமைப்பு பல வானலை செலுத்துப்பெறுவிகளைக் கொண்டது. நகரும் நிலையத்தின் தொடர்பிற்கான வானிணைப்புகளை நிர்வகிக்கிறது. மாநகரப் பகுதிகளில் தள செலுத்துப்பெறு நிலையங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஒரு தள நிலைய இயக்ககம் பல தள செலுத்துப்பெறு நிலையங்களை நிர்வகிக்கும். ஒரு தள நிலைய இயக்ககம் வானலைவரிவை துவக்கம், அலைவெண் துள்ளல், கைமாற்றங்கள் ஆகிய செயல்கூறுகளை பூர்த்திசெய்கிறது. தள நிலைய இயக்ககம் எனப்படுவது நகர் நிலைமாற்றகத்திற்கும் நகர்கருவிக்கும் இடைமுகமாக அமைந்துள்ளது. நகர் நிலைமாற்றகம் பிணையத் துணையமைப்பின் மையத்தில் நகர் நிலைமாற்றகம் சேர்ந்துள்ளது. அது ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு ஒரு சாதாரண கணுவாக விளங்குகிறது. இது தவிர, நகர்கருவியுடன் பதிவுசெய்தல், உறுதிபடுத்துதல், இருப்பிடம் புதுப்பித்தல், கைமாற்றம், அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு ஆகிய பொறுப்புக்களை தாங்கும். நகர் நிலைமாற்றகம் துணைமுறைமை SS7 என்ற குறிகைமுறை மூலம் ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு இணைகின்றது. இல் இருப்பிடம் பதிவகம் மற்றும் விஜய இருப்பிடம் பதிவகம் இரண்டும் நகர் நிலைமாற்றகத்துடன் ஓர் உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறை அழைப்பின் திசைவு மற்றும் அலையல் திறமைகளை பூர்த்திசெய்கின்றன. ஒரு சந்தாதாரரின் எல்லா நிர்வாக விவரங்களும் இல் இருப்பிடம் பதிவகம் மூலம் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரரின் தற்போதய இருப்பிடம் நகர்நிலைய அலையல் எண் என்ற வடவத்தில் அறியப்படுகிறது. இந்த நகர்நிலைய அலையல் எண் மூலம்தான் ஓர் அழைப்பு சந்தாதாரர் கருவிக்கு திசைவுசெய்யப்படுகிறது. ஒரு உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு பிணையத்தில் தருக்கம்படி ஓர் இல் இருப்பிடம் பதிவகம் இருக்கும், ஆனால் அதை ஒரு பரவல் தரவித்தளமாகக்கூட செயல்படுத்தப்படலாம். விஜய இருப்பிடம் பதிவகம் அதன் கட்டுப்பாடு பகுதியிலுள்ள நகர்கருவிகளின் ஒருசில நிர்வாக விவரங்கள் மட்டும் இல் இருப்பிடம் பதிவகத்திலிருந்து எடுத்து சேகரிக்கும். நகர் நிலைமாற்றகத்திலேயே நகர்நிலையங்களின் விவரங்கள் சேமிக்கப்படாது. நகர் நிலைமாற்றகமும் விஜய இருப்பிடம் பதிவகமும் கம்பியில்லா நிலைமாற்றுக் கருவிகளில் ஒன்றாக செயல்படுத்தப்படுகிறது. ஆகையால் அவைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளும் ஒன்றானவையே. நகர்கருவி அடையாளப் பதிவகம் மூலம் ஓர் உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு பிணையித்திலுள்ள எல்லா நகர்கருவிகளின் பன்னாட்டு நகர்சாதன அடையாள எண்கள் ஒரு தரவுத்தளத்தில் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரின் நகர்கருவி தொலைந்தால் அதன் பன்னாட்டு நகர்சாதன அடையாள எண் தரவுத்தளத்தில் குறிக்கப்படுகிறது. உறுதிப்படுத்தகம் சந்தாதர்களின் சூட்டிகையட்டையின் ரகசியக் குறியீட்டை சேகரித்து நகர்கருவிகளை ஒரு பிணையத்திலுள் உறுதிபடுத்தும். கைமாற்றம் என்பது ஒரு நிகழும் அழைப்பை ஒரு கலத்திலிருந்து இன்னொன்றுக்கு நிலைமாற்றுவது. ஒரு கம்பியில்லா பிணையத்தில் நான்கு விதமான கைமாற்றங்கள் உண்டு. ஒரு தள நிலைய இயக்ககத்துக்குள்ளேயே தடம் கைமாற்றம் (Channel Handover), மற்றும் கலம் கைமாற்றம் (Cell Handover) இரு தள நிலைய இயக்ககங்களுக்கிடையே ஆனால் ஒரே நகர் நிலை மாற்றகத்திற்குள்ளே இரு நகர் நிலை மாற்றகங்களுக்கிடையே முதல் இரு கைமாற்றங்கள் அக கைமாற்றம் எனறழைக்கப்படுகின்றன. இறுதி இரண்டும் புற கைமாற்றம் என்றழைக்கப்படுகின்றன. கைமாற்றங்கள் நகர்கருவி மூலம் துவக்கப்படுகின்றன அல்லது பிணையத்தின் உபயோகச் சுமையை சீர்ப்படுத்த நகர் நிலைமாற்றகம் மூலமும் துவக்கப்படுகின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பின் பயனில்லா காலகட்டங்கள், மற்றும் குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் குறிப்பிட்ட அலைவெண்களில் நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடத்தை வருடி அருகாமையிலுள்ள கலங்களில் 6 உன்னத கலங்களை அவைகளிருந்து பெறும் வானலை திறத்தின்படி சேகரிக்கும். இத் தகவலை தள நிலைய இயக்ககத்திற்கும் நகர் நிலை மாற்றகத்திற்கும் தெரிவிக்கும். கைமாற்றத்தின் செயல்படுத்தம் கம்பியில்லா பிணையத்தை பொறுத்தவரை உள்ளது. குறைவான ஏற்பு படிமுறைப்படி (Minimum Acceptance Algorithm) ஒரு நகர்கருவியின் பெறும் குறிகைத்திறன் (Received Signal Power) ஒரு அளவிற்கு மீது குறைந்தால் அதன் இயங்கும் திறன் (Operating Power) அதிகரிக்கப்படுகிறது. அது மீறி பெறும் குறிகைத்திறன் முன்னேற்றம் இல்லையினில் நகர்கருவி வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கும். திறன் சேமிப்பு படிமுறைப்படி (Power Budget Algorithm) இயங்கும் கலத்திலிருந்து குறிகைத்திறன் குறைந்தால் வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கப்படும். கம்பியில்லாவில் ஒரு நகர்கருவியின் இருப்பிடம் HLR மற்றும் VLR பதிவகங்கள் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. ஒரு நகர்கருவி ஒரு பிணையத்திலிருந்து மற்றொன்றிற்கு பயணம் செய்யும்போது அதற்கு பெறும் ஒளிபரப்பில் மாற்றம் தெரியும். அப்பொழுது நகர்கருவி தன் IMSI மற்றும் பழைய தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் எண்களை புது பிணையத்தின் VLR பதிவகத்திற்கு ஒரு புதுப்பிப்புக் கட்டளையாக (Update Request) அனுப்புகிறது. நகர்கருவிக்கு ஒரு புது MSRN எண் ஒதுக்கப்பட்டு புது பிணையத்தின் VLR மூலம் புது HLR பதிவகத்திற்கு அனுப்பபடுகிறது. புது HLR பழைய பிணையத்தின் VLRக்கு முந்திய MSRN எண்ணை ரத்து செய்யுமாறு தெரிவிக்கிறது; அந்த எண்ணை மறு உபயோகம் செய்ய இயல்கிறது. புது TMSI எண் ஒதுக்கப்படுகிறது. MSC அமைப்பு பொதுத் தொலைபேசி பிணையத்திற்கும் கம்பியில்லாப் பிணையத்திற்கும் இடைமுகமாகும். ஒரு PSTN பிணையத்திலிருந்து தோன்றும் அழைப்பு ஒரு நுழைவாயில் நகர்பேசி சந்தாதாரர் எண் (Mobile Station ISDN-MSISDN) மூலம் MSC நுழைவாயிலுக்கு திசைவு செய்யப்படுகிறது. இந்த நுழைவாயில் நகர்பேசி MSISDN எண்ணுடன் HSRஐ வினாவித்து MSRN எண்ணை பெறுகிறது. இந்த MSRN எண்ணுடன் அழைப்பு MSCக்கு திசைவு செய்யப்படுகிறது. MSCயின் VLR பதிவகம் MSRNஐ எடுத்து மாற்றி நகர்கருவிக்கு TMSI எண் ஒன்றை அளிக்கிறது. ஒரு அழைப்பு BSCயின் கட்டுப்பாடு மூலம் நகர்கருவிக்கு திசைவு செய்யப்படுகிறது. கம்பியில்லா அணுகு நெறிமுறை கம்பியில்லா தொலைதொரபில் ஒரு முக்கியமான இடம் வைத்திருப்பது கம்பியில்லா அணுகு நெறிமுறை. கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையத்திற்கும் ஒரு நகர்கருவிக்கும் இடையே தொடர்பு இயல்பாகிறது. கம்பியில்லா அணுகு நெறிமுறை என்பது ஒரு தூது நெறிமுறை (Messaging Protocol). கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையம் மூலம் நகர்கருவிகளுக்கு மின்னஞ்சல், குரல்தகவல், நாட்குறிப்பு ஆகிய சேவைகளை நிறைவேற்ற இயல்கிறது. ஒரு கம்பியில்லா அணுகு நெறிமுறை அமைப்பில் 3 பாகங்கள் உண்டு: அவை: கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில், இணைய வழங்கன், மற்றும் கம்பியில்லா அணுகு நெறிமுறை தெரிந்த நகர்கருவி. கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில் (Access Point) WML தகவல்களை கம்பியில்லா அணுகு நெறிமுறையை ஏற்கும் நகர்கருவியுடன் பரிமாற்றுகிறது மற்றும் HTML தகவல்களை இணைய வழங்கன் மூலம் பரிமாற்றுகிறது. இணைய வழங்கன் தரவுத்தளங்களுடன் ASP, ColdFusion, CGI அல்லது PHP ஆகிய மென்பொருள் கருவிகள் மூலம் தொடர்புகொண்டு HTML பக்கங்களை வழங்குகிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் நகர்பேசித் தொழில் நுட்பம் இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக நகரும் தொலைபேசிகள் நகர்புறங்கள் முதல் நாட்டுப்புறங்கள் வரை பரவியுள்ளன. நகர்பேசிகளின் பயன்பாட்டுத் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் நகர்பேசி ஒரு அந்தஸ்துக் குறியாக இருந்த போதிலும் இன்று அது நாடெங்கும் இயல்பாக அனைவரும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகிவிட்டது. பல்வேறு கருவிகள் பல்வேறு திட்டங்கள் பல்வேறு சேவை நிறுவனங்கள்... இந்தியாவில் சி.டி.எம்.ஏ சேவையை வழங்கும் நிறுவனங்கள் டாடா இண்டிகாம் ரிலையன்ஸ் CDMA MTS Virgin CDMA ஜி.எஸ்.எம் சேவையை வழங்கும் நிறுவனங்கள் ஏர்செல் ஏர்டெல் வோடபோன் ஐடியா ஸ்பைஸ் டெலிகாம் யூனிநார் வீடியோகான் மொபைல் ரிலையன்ஸ் ஜி.யெஸ்.எம் ஐடியா செல்லுலார் விர்ஜின் பிஎஸ்என்எல் ஜியோ இலங்கையில் 2005 ஆம் ஆண்டு மே மாதத்தில் CDMA தொழில் நுட்பம் சண்டெல் மற்றும் லங்காபெல் நிறுவனங்களினால் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொலைத்தொடர்பிற்கு மாத்திரமன்றி இணைய இணைப்பிலும் சண்டெல் மற்றும் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் விநாடிக்கு 115.2 கிலொபிட்ஸ் இணைப்பிலும் மற்றும் லங்காபெல் விநாடிக்கு 153கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் சண்டெல் விநாடிக்கு 230.4/115.2 கிலோபிட்ஸ் இணைப்பிலும், டயலொக் விநாடிக்கு 460.8/230.4. கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் உதவுகின்றது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கிளிநொச்சி முல்லைத்தீவு தவிர இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இச்சேவை அறிமுகபப்டுத்தப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்புநிலையத்தின் இச்சேவையை 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இப்போதுள்ள நிலையில் இலங்கைத் தொலைத்தொடர்பு நிலையமும் டயலொக் மற்றும் அதைத் தொடர்ந்து சண்டெல் மற்றும் லங்காபெல் வலையமைப்புக்களும் விளங்குகின்றன. இலங்கையில் CDMA சேவையை வழங்கும் நிறுவனஙகள் : இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் இலங்கைத் தொலைத் தொடர்பு சண்டெல் சண்ரெல் லங்காபெல் லங்காபெல் டயலொக் புறோட்பாண்ட் இலங்கையில் GSM (TDMA) சேவையை வழங்கும் நிறுவனங்கள் மோபிட்டல் (Mobitel ) டயலொக் புறோட்பாண்ட் செல்டெல் ஹட்ச் (Hutch) தொழில் நுட்பக் குறிப்புகள் உங்கள் சர்வதேச நகர்பேசியை அடையாளம் காணும் இலக்கத்தை அறிய கொள்ள நகர்பேசியின் *#06# என்று அழுத்தவும். இதில் AAAAAA-BB-CCCCCC-D இதில் AAAAAA - மாதிரியின் அனுமதிக் குறியீடு இதில் BB - இறுதியாகக் கூட்டிணைக்கும் குறியீடு இதில் CCCCCC - நகர்பேசியின் தொடரிலக்கம் இதில் D - மிகையான இலக்கம் இந்த இலக்கத்தைக் குறித்து வைத்துக்கொள்ளவும் இது நகர்பேசியானது தொலைந்தால் நகர்பேசியை செயலிழக்கச் செய்ய உதவுவதோடு களவெடுத்தவரைக் கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கவும் உதவும். நோக்கியா நகர்பேசி நோக்கியா (Nokia) நகர்பேசிகளின் தயாரித்த திகதியைக் கண்டறிய நகர்பேசியில் *#0000# விசைகளை அழுத்தவும். நோக்கியா நகர்பேசிகளில வேகமான அழைப்புக்களை ஏற்படுத்த xx# என்றவாறு அழுத்தவும் எடுத்துக்காட்டாக 24 ஆவதுசேமிக்கப்பட்ட இலக்கத்தை அழைக்கவேண்டும் எனில் 24# என்றவாறு விரைவாக டயல் செய்யலாம். நோக்கியா நகர்பேசியின் வரண்டி (Warranty) ஐப்பார்க்க *#92702689# அதாவது (*#WAR0ANTY#) வருமாறு அழுத்திப் பெற்றுக் கொள்ளலாம். வெளி இணைப்புகள் கம்பியில்லாத் தொலைத்தொடர்பு குறித்த விளக்கப்பக்கம் பதிகணினியியல் புதிய ஊடகம்
3042
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சில நேரங்களில் சில மனிதர்கள்
சில நேரங்களில் சில மனிதர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ஜெயகாந்தனின், "அக்னி பிரவேசம்" என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். லட்சுமி, ஸ்ரீகாந்த், சுந்தராபாய் மற்றும் பலர் நடித்த இப்படத்தினை ஏ. பீம்சிங் இயக்கினார். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் கொன்னி சமயலுலோ கொம்தரு மனுஷுலு என்ற பெயரில் வெளிவந்தது. 1977 தமிழ்த் திரைப்படங்கள்‎ இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் ஏ. பீம்சிங் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் மனோரமா நடித்த திரைப்படங்கள் நாகேஷ் நடித்த திரைப்படங்கள் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள் தமிழ்ப் புதினங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள்
3043
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF
பாரதி
பாரதி அல்லது பாரதியார் என்ற தலைப்புகளில் உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகள்: சுப்பிரமணிய பாரதி, மகாகவி பாரதியார் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் கவிக் குஞ்சர பாரதி, கருநாடகப் பாடலாசிரியர் கோபாலகிருஷ்ண பாரதியார், கருநாடகப் பாடலாசிரியர் சுத்தானந்த பாரதியார், கவியோகி பாரதிதாசன், கவிஞர் சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் பாரதி, தமிழ்த் திரைப்பட நடிகை பி. வி. நரசிம்மபாரதி, தமிழ்த் திரைப்பட நடிகர் பழனி பாரதி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் பாரதி பாஸ்கர், பட்டிமன்றப் பேச்சாளர் தமிழ்த் திரைப்படங்கள்: பாரதி (திரைப்படம்) ஜெயபாரதி (1940) பாரதி கண்ணம்மா வேறு பாரதியார் பல்கலைக்கழகம், தமிழகப் பல்கலைக்கழகம் பாரதியார் விருது, தமிழக அரசு விருது பாரதி, ஈழத்துத் தமிழ் இதழ்
3078
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88
குடுமியான்மலை
குடுமியான்மலை, தமிழ்நாட்டின் புதுக்கோட்டை நகரத்திற்கு மேற்கே தொலைவில் அமைந்த சிற்றூர் ஆகும். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பண்ணையும் (அண்ணா பண்ணை, குடுமியான் மலையில் இருந்து ஐந்து கிலோமீட்டர்கள்) இங்கு அமைந்துள்ளது. வரலாறு தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில், குடுமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது. சங்கநூல் குறிப்பு 'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியின்கீழ் இந்த ஊர் இருந்தது. இந்த ஊரில் இருந்துகொண்டு இவன் யாகம் செய்ததால் இவனைக் 'குடுமிக் கோமான்' என்று போற்றி மகிழ்ந்தனர். இவன் சிறந்த கொடையாளி. குடைவரைக் கோயில் குன்றின் மேலும், அதன் அருகிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும், கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன்கோயிலும் அடங்கும். குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகள் இந்தக் கல்வெட்டுகள், குடுமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதிசெய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும், பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடுமியான்மலைக் கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டுச்செல்கின்றன. மேலக்கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்தச் சிவாலயம் சைவ சமய மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் இங்குள்ள சிற்பங்கள் ஒன்றில், சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடுமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது. மறு சீரமைப்புப் பணிகள் சோழப் பேரரசின் தொடக்க காலம் முதல்தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தொடக்க காலச் சோழர் கல்வெட்டுகள் (கி.பி ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) மேலக்கோயிலிலோ, இரண்டாம் பிரகாரத்தின் சுவர்களிலோ காணப்படுகின்றனவே தவிர முதன்மைக் கோயிலில் (Main shrine) காண இயலவில்லை. இதனால், இக்கோயில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (remodelled) என்று அறியப்படுகிறது. கட்டடக்கலை பாணியை கருத்தில் கொண்டு பார்க்கையில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில்தான் இந்த மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. கி.பி 1215 முதல் 1265 வரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம், மறு சீரமைப்புப் பணிகள் நடை பெற்றன. பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன. இந்தப்பணியில் கோனாட்டைச் சேர்ந்த நாடுகளும் (வட்டார ஊர்கள் ஒன்றிணைந்த அமைப்பு) நகரங்களும் (வணிகர்களின் அமைப்பு) ஊர்களும், படைப்பற்றுகளும் (Cantonments) பங்கு கொண்டன. ஈகை உள்ளம் கொண்ட தனி நபர்களும் உதவினர். 24 adam-s (one league) கொண்ட ஒவ்வொருவருக்கும் வரிப்பணம் விதிக்கப்பட்டுக் கோயில் பணிக்காகத் திரட்டித் தரப்பட்டது. பணம் தவிர்த்த இன்ன பிற பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மறு சீரமைப்புப் பணிகளுக்கு உதவி 'உமையாள்வி நாச்சி' என்றபெயருடைய தாசிப் பெண்ணும், இந்த மறு சீரமைப்புப் பணிகளுக்குக் கணிசமாக உதவினார். 73,300 தங்க நாணயங்கள் விலை கொடுத்துக் கோயிலின் சில நிலப்பகுதிகளை வாங்கிய துர்கை ஆண்டாரின் மகள்தான் உமையாள்வி நாச்சி. உமையாள்வி நாச்சி, குகைக்கோயிலை அடுத்துள்ள அம்மன் சந்நிதியைக் கட்டி, அதில் மலையமங்கை (அல்லது சௌந்தர நாயகி) சிலையைப் பிரதிஷ்டை செய்தாள். மேலும் விசலூர், பின்னங்குடி, மருங்கூர் (மருங்குபட்டி), காரையூர் மற்றும் மேலமநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து நிலங்கள், தோட்டங்கள், கிணறுகள் வாங்கப்பட்டுக் கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில், குடுமியான்மலைப் பகுதி ஊர்கள் காங்கேயராயர்களாலும் வானதரையர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தன. சென்றடையும் வழி புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து ஏறக்குறைய 20 கி.மீ தொலைவில் குடுமியான்மலை அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருந்து விலகி மலை அடிவாரம் நோக்கிச் சென்றால் கோயில் வளாகத்தை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு. பேருந்து எண் : எண் 5 , 28 . என்ற எண் கொண்ட பேருந்துகள் சுமார் 45 முதல் ஒரு மணிநேரம் வரை ஆகும், வழியாக கடந்துசெல்லும் ஊர்கள், திருவப்பூர் , பெருமாநாடு , குமரமலை விளக்கு, புல்வயல் , அன்னாப்பண்ணை, வயலோகம், விசலூர் , குடுமியான்மலை. அடிக்குறிப்பு புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள் தமிழகத்துக் குடைவரைகள் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
3088
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
பி. ஆர். ராஜமய்யர்
பி. ஆர். ராஜமய்யர் அல்லது பி. ஆர். ராஜம் ஐயர் (ஜனவரி 25, 1872 - மே 13, 1898) ஓர் எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர், ஆன்மிகம் மற்றும் தத்துவ வேட்கை கொண்ட சிந்தனையாளர். இவர் தமிழில் வெளியாகிய முதல் சில நாவல்களில் ஒன்றாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை மிக இளவயதிலேயே (21ஆம் வயதில்) எழுதியவர். வாழ்க்கை ராஜமய்யர், 1872ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு என்ற கிராமத்தில் பிறந்தவர். அவர் ஒரு சாதாரண நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இளமைக் கல்வியை மதுரை பாண்டித்தியப் பாடசாலையில் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 1889 இல் கலைமாணி (B.A.) பட்டம் பெற்று சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இறுதித் தேர்வில் வெற்றி பெறவில்லை. அதனால் விரக்தியில் ஆழ்ந்திருந்த சமயத்தில், தனது மனத்தை ஞான மார்க்கத்தில் செலுத்தினார். இதழியல் தொடர்பு பிரம்மவாதின் என்ற ஆங்கிலத் திங்களிதழில் Man his littleness and greatness என்ற தனது முதல் கட்டுரையை எழுதினார். இவருடைய எழுத்துக்கள், இவர் வாழ்க்கையின் ஆன்மிகத் தேடலின் பிரதிபலிப்பாக அமைந்தன. சுவாமி விவேகானந்தரால் பணிக்கப்பட்டு பிரபுத்த பாரதா என்ற ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர் எழுதிய தத்துவ விசாரணை கட்டுரைகள், பின்னாளில் வேதாந்த சஞ்சாரம் (ஆங்கிலத்தில் Rambles in Vedanta) என்று 900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவந்தது. மறைவு மே 13 ஆம் நாள் 1898 ஆம் ஆண்டு ,தன்னுடைய 26ஆம் வயதில் குடற்சிக்கல் நோய் காரணமாக இயற்கை எய்தினார். பிரபுத்த பாரதாவின் 1898 ஜூன் மாத இதழில் இராஜமையரின் மறைவினால் இந்த இதழ் நிறுத்தப்படுகிறது என்ற செய்தி வெளியிடப்பட்டது. [ஆனால், சுவாமி விவேகானந்தரின் பெருமுயற்சியால், பி. ஆர். ராஜமய்யரின் மறைவை அடுத்து 1898 ஆகஸ்டு இதழில் இருந்து சென்னைக்கு பதிலாக அல்மோராவில் உள்ள அத்வைத ஆசிரமத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது.] கமலாம்பாள் சரித்திரம் தமிழில் முதல் நாவல் என சொல்லப்படும், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் 1870ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ராஜமய்யர், தமிழின் இரண்டாம் நாவலாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை 1893 ஆம் ஆண்டு விவேக சிந்தாமணி என்ற மாத பத்திரிக்கையில் தொடராக எழுத ஆரம்பித்தார். அவருக்கு அப்போது வயது 21. ராஜமய்யர் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழ்ந்த அறிவும், புலமையும் பெற்றிருந்தார். வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் கமலாம்பாள் சரித்திரம், எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், தன்னுடைய கலைத்திறன் மற்றும் வாழ்க்கையினை நோக்கும் பாதை ஆகியவற்றை கொண்டு ஒரு புதிய இலக்கிய மரபை துவக்கிவைத்தார். ஷெல்லி,வேர்ட்ஸ்வொர்த் போன்ற சிறந்த கவிஞர்களின் கவிதைகளை ஊன்றிப் படித்தார். உலகக் கவிஞர்களில் தலைசிறந்தவர் கம்பர் என்பது அவருடைய கருத்து. படைப்புகள் நாவல் கமலாம்பாள் சரித்திரம் கட்டுரைகள் மனிதனின் பெருமையும் சிறுமையும் வேதாந்த சஞ்சாரம் சிந்தனைகள் "இச்சரித்திர மெழுதுவதில் எனக்கு கதையே முக்கிய கருத்தன்று. மற்றென்னையோவெனில், பகவானது மாயா விபூதியாம் பெருங்கடலினுள் ஒர் அலையுள், ஒர் நுரையுள், ஒர் அணுவை யானெடுத்து, அதனுள் என் புல்லறிவுக் கெட்டியமட்டும் புகுந்து பார்த்து, தூண் பிளந்து தோன்றிய அவனே அங்கும் இருக்கக் கண்டு கைகூப்பி ஆடிப்பாடி, அரற்றி உலகெல்லாம் துள்ளித் துதைத்த இளஞ்சேயொப்ப யாரும் ஆடிப்பாடி ஓடவேண்டுமென்பதேயன்றி வேறன்று. இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா பல கஷ்டநஷ்டங்களை அனுபவித்து கடைசியாக நிர்மூலமான ஓர் இன்ப நிலை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்கம்" - கமலாம்பாள் சரித்திரத்தைப் பற்றி "கவிதை இன்பம் வேதனை இரண்டையும் அளிக்கிறது. பிரபஞ்சத்தின் மகிமையையும் மனிதனின் சிறப்பையும் அது பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே உயர்ந்த பட்ச கவிதை என்பது கோவிலுக்குப் போகும் வழியில் உள்ள மண்டபம். சாலையோரம் சற்று இளைப்பாற தங்குமிடம்" "கவிதை தரக்கூடியதை விட மேலான இன்பம் மனிதனின் பிறப்புரிமை. நிரந்தரமாகவும், மாறாத இன்பத்தோடு இருப்பது, நிலவொளி இரவைப் போலவே வெப்பமான பருவகாத்தை ரசிப்பதும், மனிதனின் தயாள, தன்னல தியாகத்தையும், முறைகேடான அக்கிரமத்தையும் சமமான சாந்தத்துடன் மதிக்கவும், காம்பீர்ய சூர்ய அஸ்தமனத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் மட்டும் விடாமல், வானம்பாடிபோல், பாடிப்பறக்கும் வானம்பாடியைப்போல் வானவெளியில் சஞ்சரிப்பது மட்டும் இல்லாமல், பிரபஞ்சத்தோடு கலந்து வருவதுடன் தன்னால் ஒரு போதும் வெளியிட முடியாததை ஆனால் எல்லாவற்றையும் மறைக்க முடியாததை உணர்ந்து, தானே சூர்யனாகவும், அஸ்தமனமாயும், ஒளியாயும், வானம்பாடியாயும், கானமாகவும், வானமாகவும் இன்னும் இந்தப் பிரபஞ்சத்தில் மேன்மையாக உள்ள அத்தனையுமாக ஆகிவிடவேண்டும். மனிதன் தன் வாழ்க்கையிலும் எல்லையற்ற வெளியில் தான் கரைந்து குமுறும் அலைகடலையும், உயர் மலையையும் ஒளிரு தாரகைகளயும் ஓசையிடும் அருவிகளையும் தனக்குள்ளே உணரப்போகிறான். இந்த அர்த்தத்தில் அவன் கடவுள். வேதங்களில் கூறப்படும் பரப்பரும்மன். பந்தம் நீங்கி விடுதலை பெற்ற உணர்ந்த மனிதனின் மனதில் சாசுவத நிலவொளி, வெளியீட்டுக்கும் அப்பாற்பட்ட எல்லையற்ற பேரின்பம், அதாவது நானும் நானே. நானே மற்றவர்களும். நானே பிரம்மனும்" - Rambles in Vedanta பிற எழுத்தாளர்களின் கருத்துக்கள் ராஜமய்யர் என்ற சக்தி, ஒரு வால் நட்சத்திரம் போல, அணு ஆயுத வெடிப்பின் பிரம்மாண்டம் போல ஒரு குறுகிய காலத்திற்குள், பல்வேறு திசைகளில் ஓர் அசாதாரண வேகத்தில் துடித்து இயங்கி மறைந்துவிட்டது. இவ்வியக்கத்தின் துடிப்பும், வேகமும், பலதிசை நோக்கும், வாழ்ந்த காலத்தின் சுருக்கமும், இதை அணுகி புரிந்து கொள்ள முயற்சி செய்பவனைத் திக்கித் திணற வைத்துவிடுகிறது. இதன் விளைவு, வெடித்துச் சிதறிய துணுக்குகளில் தனக்கு அகப்பட்டதை வைத்துக் கொண்டு, ராஜமய்யரை, நாவலாசிரியர், தத்துவ ஞானி என்று பலவாறாக மதிப்பிடுகிறோம் - வெங்கட் சாமிநாதன் சான்றாதாரங்கள் சில இலக்கிய ஆளுமைகள். ஆசிரியர்: வெங்கட் சாமிநாதன். அசோகமித்திரன் கட்டுரைகள் - பாகம் 1. ஆசிரியர் : அசோகமித்ரன் அசோகமித்ரன், "B.R. Rajam Aiyar and His Kamalambal Charitrans", The Literary Criterion 21.1&2 (1986):86-92. உமா பரமேஸ்வரன். "Rajam Aiyar's Vasudeva Sastry" , The Literary Endeavour 6.1 (1985):55-67. S.விஸ்வநாதன். "Rajam Iyer's Vasudeva Sastry or True Greatness: Apologue or Religious Novel?" Journal of Indian Writing in English 2.1: 49-53. க. நா. சுப்பிரமணியம் Rajam Iyer: a pioneer Tamil novelist. (Modern Indian authors), Indian and Foreign Review (New Delhi) 16, no.12 (1 Apr 1979, 20-22 ) மேற்கோள்கள் தமிழக எழுத்தாளர்கள் 1872 பிறப்புகள் 1898 இறப்புகள் தமிழ் எழுத்தாளர்கள் திண்டுக்கல் மாவட்ட நபர்கள்
3095
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%29
திலீப்குமார் (எழுத்தாளர்)
திலீப்குமார் (Dilip Kumar) ஒரு தமிழ் எழுத்தாளர், இலக்கிய திறனாய்வாளர், சிறுகதையாசிரியர். குஜராத்தி மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் பற்று கொண்டவர். சிறுகதை, இலக்கிய திறனாய்வு என இரு துறைகளிலும் எழுதிவருபவர். இவருடைய கதைகள் யதார்த்தின் கனத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவப்பூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள். 2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாஷா பாரதி" என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்றவர். பல இந்திய இலக்கியத் திட்டங்களுக்கு ஆலோசகராகவும், சிறந்த மொழி பெயர்ப்புக்காக வழங்கப்பெறும் தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். புத்தகங்கள் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் குருத்து கடவு A Place to Live: Contemporary Tamil Short Fiction (தமிழ் சிறுகதைகளின் ஆங்கில வடிவம்) இலக்கியத் திறனாய்வு மௌனியுடன் கொஞ்ச தூரம் (மௌனி பற்றிய திறனாய்வு) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கௌரி ராம்நாராயண், திலீப்குமார் பற்றி எழுதிய கட்டுரை . திலீப்குமார் படைப்புகள் சில - அழியாச்சுடர்களில் திலீப் குமார்:மொழியின் எல்லைகளைக் கடந்து..-வெங்கட் சாமினாதன் தமிழக எழுத்தாளர்கள் தமிழ் விமர்சகர்கள்
3128
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D
ராபர்ட் ஹூக்
ராபர்ட் ஹூக் (Robert Hooke) (1635 - 1703), இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஹூக், தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர். அவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹூக் பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தினார். முதன் முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தவரும் இவரே. 1684ல், நடைமுறைப்படுத்த வல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார். முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் ராபர்ட் ஹூக் தான் வடிவமைத்தார். ஹூக் விதியை வரையறுத்தார். 1665ல் எழுதிய மைக்ரோகிராஃபியாவில் (Micrographia), தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு பற்றி விவரித்துள்ளார். செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ராபர்ட் ஹூக், குட்டன்பேர்க் திட்டத்திலிருந்து ஹூக் Timeline http://www.roberthooke.org.uk அறிவியலாளர்கள் 1635 பிறப்புகள் 1703 இறப்புகள் ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர்கள் ஆங்கிலேய இயற்பியலாளர்கள்
3129
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D
ஆன்டன் வான் லீவன்ஹூக்
ஆன்டன் வான் லீவன்ஹூக் ( Anton van Leeuwenhoek, 1632-1723), நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண்ணோக்கிகளை உருவாக்கியவரும் ஆவார். இவரை நுண்ணுயிரியலின் தந்தை என்பர். இவரே முதலாவது நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் நுண்ணோக்கிகளை களை மேம்படுத்தியதுடன், நுண்ணுயிர்கள் என்று அழைக்கப்படும் ஒருகல விலங்குகளை முதன் முதலில் அவதானித்தவரும் இவரே. அவர், 247க்கும் மேற்பட்ட நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கினார்; அவற்றுள் சில, 270 மடங்குக்கும் அதிகமாக உருப்பெருக்கம் செய்யும் திறன் பெற்று இருந்தன. பாக்டீரியாக்கள், புரோட்டோசோவாக்கள், ஸ்பெர்மடோசோவாக்கள், தசைநார்கள், குருதிச் சுற்றோட்டத்தொகுதியில், மயிர்த்துளைக்குழாய்களூடாக, குருதியின் அசைவு என்பவற்றை நுண்ணோக்கியில் அவதானித்து அறிவித்தவரும் இவரே. இரத்த நாள ஓட்டம் பற்றிய விவரிப்பில், இரத்தச் சிவப்பு அணுக்களைப் பற்றியும் பதிவு செய்துள்ளார். வெளி இணைப்புகள் ஆன்டன் வான் லீவன்ஹூக் பற்றிய இணையத்தளம் அறிவியலாளர்கள் 1632 பிறப்புகள் 1723 இறப்புகள்
3130
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
கிரிகோர் மெண்டல்
கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள். மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன. வாழ்க்கைக் குறிப்பு ஆத்திரியப் பேரரசில் உள்ள ஐன்செண்டோர்ஃபு (மொராவியா) (Heinzendorf (Moravia)) (தற்பொழுதைய இன்றிசெட்டு, நவீ இல்றீன் (Hynčice, Nový Jičín) மாவட்டம், செக் குடியரசு) என்ற இடத்தில் பிறந்தார். மெண்டல், தன் இள வயதில் தோட்ட வேலை பார்த்தார். பின் ஓல்முட்டுசு (Olmutz) மெய்யியல் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். 1843ல் பெறனோவில் உள்ள அகத்தீனிய மடத்தில் சேர்ந்தார். அதன் பிறகு வியன்னா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலச் சென்றார். தாவரங்களில் இருந்த வேறுபாடுகளை ஆய்வு செய்வதற்கு, அவரது பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மடத்தில் உடன் பணியாற்றியவர்களும் தூண்டுகோலாக விளங்கினர். மெண்டலுக்கு இயற்கை மீதிருந்த காதலே அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மைக்கு முக்கியக் காரணமாகும். தாவரங்கள் தவிர, வானியலிலும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. மெண்டல், தன் மடத்திலிருந்த தோட்டத்திலேயே ஆராய்ச்சிப் பணிகளைச் செய்தார். 1856இல் இருந்து 1863 வரை பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபுப் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல்முறையை விளக்க, இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவை பின்னாளில் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றன. 1865ஆம் ஆண்டு, பொகீமியாவில் (Bohemia) உள்ள புருன் (Brunn) இயற்கை வரலாற்றுச் சங்கத்தில் நடந்த இரண்டு அமர்வுகளில் தாவரக் கலப்பினமாக்கல் ஆய்வுகள் என்ற தலைப்பிலான தம்முடைய ஆய்வு அறிக்கையை முன்வைத்தார். எனினும், அந்தக் காலகட்டத்தில் மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை எவரும் உணரவில்லை. அதற்கடுத்த 35 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே பிற அறிஞர்கள் அவருடைய ஆய்வை மேற்கோள் காட்டினர். பட்டாணியில் தனது ஆய்வை முடித்துக்கொண்டவர், பின்னர் விலங்குகளிலும் தன் ஆய்வை மேற்கொள்ளும் எண்ணத்துடன் தேனீக்களில் தனது ஆய்வைத் தொடங்கினார். தேனீக்களில் ஒரு கலப்பினத்தை அவர் தோற்றுவித்த போதிலும், அந்தக் கலப்பினம் நிலைத்து நிற்காமல் அழிந்து போனது. இராணித் தேனீயின் இனப்பெருக்க நடவடிக்கையை கட்டுப்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக, தேனீக்களின் மரபியல் பற்றிய சரியானதொரு புரிதலை அவரால் கொடுக்க முடியாமல் போனது. அவர் இனங்கண்டு எடுத்துரைத்த சில புதிய தாவர இனங்களுக்குரிய சீர்தர தாவரவியல் ஆசிரிய குறுக்கங்களில் (The standard botanical author abbreviation) ‘மெண்டல்' எனக் குறிப்பிடப்படுகின்றது. 1868 -இல், அரசாங்கம் சமய நிறுவனங்களின் மீது சிறப்பு வரிகளை விதிக்க முயன்ற போது, அதற்கு எதிராக செயற்பட வேண்டிய நிலையில் இருந்தார். எனவே, தனது அறிவியல் நோக்கிலான வேலைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, நிருவாகக் கடமைகளை செய்யத் தொடங்கினார். சனவரி 6, 1884ஆம் ஆண்டு ஆத்திரியா-அங்கேரி (தற்பொழுதைய செக் குடியரசு)ல் உள்ள பெறனோ என்ற இடத்தில் நீடித்தக் கல்லீரல் அழற்சி (chronic nephritis) நோயால் உயிரிழந்தார். மெண்டலின் ஆராய்ச்சி மீட்டெடுப்பு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம் உணரப்படாமலேயே இருந்தது. 1900ல் இயூகோ டி விரீசு (Hugo de Vries), காருல் கோரென்சு (Carl Correns) மற்றும் எரிக்கு வான் இட்செர்மர்க்கு (Erich von Tschermak) ஆகிய அறிஞர்கள் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளை மீட்டெடுத்தார்கள். அவர்கள் செய்து பார்த்த சோதனைகளில் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளைச் சரிபார்த்துக்கொள்ள முடிந்தது. அதன் பின்னரும் கூட, மெண்டலின் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றி வில்லியம் பேட்சனுக்கும் கார்ல் பியர்சனுக்கும் இடையில் கடும் விவாதங்கள் நிகழ்ந்தன. 1918ல், ரொனால்டு பிசர் மெண்டலின் மரபியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன பரிணாம உயிரியல் துறைக்கு வித்திட்டார். 1930கள் 1940 களில், அவரது ஆய்வுகளை மீட்டெடுத்து, டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையுடன் சேர்த்து, தற்கால நவீன கொள்கைகளை உருவாக்கினார்கள். மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளின் நம்பகத்தன்மை அவ்வப்போது கேள்விக்குளாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற புள்ளியியலாளரான ரொனால்டு பிசர் மெண்டலின் ஆய்வுகளில் கூறப்பட்டிருந்த F1 சந்ததியின் விகிதத்தை ஆய்வுசெய்து, அவை நம்ப முடியாத வகையில் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தை மிக அண்மித்திருப்பதாக கருதினார். மெண்டல், உண்மைக்குப் புறம்பான முறையில் தன் ஆராய்ச்சி முடிவுகளைத் திருத்தி எழுதினார் என்று சொல்ல முடியாது என்றாலும், அவரின் ஆராய்ச்சி முடிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் எளிமையாக உள்ளன. பெரும்பாலும், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் இவ்வளவு எளிமையாக கிடைத்து விடுவதில்லை. இது போக, அவர் பெரும்பாலும் ஒரே மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாகத் தாவரங்களில் விளையும் வேறுபாடுகளை மட்டும் கொடுத்திருந்தார். பல மரபணுக்களையும் அவர் கவனித்திருந்தார் என்றால், மரபணுக்களின் இணைப்புகளின் காரணமாக முடிவுகள் வேறு மாதிரியாகவோ இவ்வளவு எளிமையாகவோ கிடைத்திருக்காமல் இருக்கலாம். இதனால், ஒருவேளை மெண்டல், தான் பரிந்துரைத்த மரபியல் கோட்பாடுகளுக்குப் புறம்பாக வந்த ஆராய்ச்சி முடிவுகளை மறைத்திருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடும் நிலவுகிறது. மெண்டலும் டார்வினும் இங்கிலாந்து இயற்கையிலாளர் சார்லஸ் டார்வினும் (1809 — 1882) மெண்டலும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். மெண்டல், டார்வினின் ”உயிரினங்களின் தோற்றம்” கட்டுரையைப் படித்திருந்த போதிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை. மெண்டலின் ஆராய்ச்சிக் கட்டுரையை டார்வின் பெற்றுக் கொண்ட போதிலும், இறுதி வரை அதைப் படிக்கவில்லை என்று தெரிய வருகிறது. இது போன்ற காரணங்களால், 1920 வரை பரிணாமம் குறித்த கோட்பாடுகள் உருப்பெறாமலே இருந்தன. படங்கள் நூலாதாரம் William Bateson On-line Facsimile Edition: Electronic Scholarly Publishing, Prepared by Robert Robbins Robert Lock, Recent Progress in the Study of Variation, Heredity and Evolution, London, 1906 Reginald Punnett, Mendelism, Cambridge, 1905 Curt Stern and Sherwood ER (1966) The Origin of Genetics. James Walsh, Catholic Churchmen in Science, Philadelphia: Dolphin Press, 1906 Ronald A. Fisher, "Has Mendel's Work Been Rediscovered?" Annals of Science, Volume 1, (1936): 115–137. Discusses the possibility of fraud in his research. வெளி இணைப்புகள் மெண்டல் இணையத்தளம் மெண்டலின் ஆராய்ச்சிக்கட்டுரை (ஆங்கிலத்தில்) மெண்டல் மரபியல் அருங்காட்சியகம் கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் "Mendel, Mendalism" குறித்த பதிவு ஆஸ்திரிய அறிவியலாளர்கள் மரபியலாளர்கள் 1822 பிறப்புகள் 1884 இறப்புகள் செக் உயிரியலாளர்கள் ஆஸ்திரிய உயிரியலாளர்கள்
3131
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
அலெக்சாண்டர் பிளெமிங்
சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார். பெனிசிலின் கண்டுபிடிப்பு உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு. பிறப்பு ஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது. தொழில் நுட்ப கல்லுாரி படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக தனது 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது. நோய்க்கிருமிகளுக்கு எதிரான போர் படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார். நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது. பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெயரிட்டார். காளானிலிருந்து பெனிசிலின் 1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர். பாராட்டுக்களும் விருதுகளும் 1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் 1944 ஆம் ஆண்டில் நைட் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டில் டைம் சஞ்சிகையால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு நிறைவுறும் தறுவாயில் சுவீடனிலிருந்து வெளிவரும் பிரசித்திபெற்ற மூன்று சஞ்சிகைகள் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்தன. 2002 ஆம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரித்தானியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார். அலெக்சாண்டர் பிளெமிங்கின் ஞாபகார்த்தமாக சிறுகோள் படையிலுள்ள ஒரு சிறுகோளுக்கு 91006 பிளெமிங் எனப் பெயரிடப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் டைம் 100: நூற்றாண்டின் மிக முக்கிய மனிதர்கள் அலெக்ஸாண்டர் பிளெமிங் பற்றிய குறிப்பு 1881 பிறப்புகள் நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள் ஆங்கிலேய அறிவியலாளர்கள் இசுக்காட்லாந்து அறிவியலாளர்கள் 1955 இறப்புகள்
3132
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
ஜேம்ஸ் டூயி வாட்சன்
ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) (பிறப்பு - 1928), அமெரிக்கப் பேராசிரியரும் உயிரியலாளரும் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கேவண்டிஷ் ஆய்வகத்தில், பிரான்சிஸ் க்ரிக்குடன் இணைந்து (1951) டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராயும் பணியில் ஈடுபட்டார். (எம். ஹெச். எஃப் வில்கின்ஸின் ஊடு-கதிர் விளிம்பு விளைவு ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு செய்யபட்ட) இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் 1953ல் ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 1962ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசை க்ரிக், வில்கின்ஸ் ஆகியோருடன் இணைந்து வாட்சன் பெற்றுக்கொண்டார்.1989 முதல் 19992 வரை (அமெரிக்க) தேசிய மனித மரபணு ரேகை ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். மரபியல், பாக்டீரியா திண்ணி மற்றும் புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சித் துறைகளில் வாட்சன் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார். மேலும் படிக்க James D. Watson and Francis H. Crick. "Letters to Nature: Molecular structure of Nucleic Acid." Nature 171, 737–738 (1953). James D. Watson, The Double Helix: A Personal Account of the Discovery of the Structure of DNA, Atheneum, 1980, (first published in 1968) James D. Watson, Genes, Girls, and Gamow: After the Double Helix, Random House, January, 2002, hardcover, 259 pages, James D. Watson and Andrew Berry, DNA: The Secret of Life, Random House, April, 2003, hardcover, 464 pages, வெளியிணைப்புகள் ஜேம்ஸ் டூயி வாட்சன் - கோல்ட் ஸ்ப்ரிங் ஹார்பர் ஆய்வகம் அருஞ்சொற்பொருள் பாக்டீரியா திண்ணி - Bacteriophage மனித மரபணு ரேகை - Human genome ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம் - Deoxy ribo nucleic acid 1928 பிறப்புகள் வாழும் நபர்கள் அமெரிக்க இறைமறுப்பாளர்கள் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள் ஆங்கில அமெரிக்கர்கள் அமெரிக்க அறிவியலாளர்கள் சிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்
3133
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D
பிரான்சிஸ் கிரிக்
பிரான்சிஸ் கிரிக் (Francis Crick, சூன் 8, 1916-சூலை 28, 2004), இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார். டி.என்.ஏயின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, 1962 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1959), ராச்செஸ்டர் பல்கலைக்கழகம் (1959), ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி (1960) மற்றும் ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்(Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இவற்றையும் பார்க்கவும் நோபல் பரிசு நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் மேற்கோள்கள் நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள் அறிவியலாளர்கள் 2004 இறப்புகள் 1916 பிறப்புகள்
3138
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF
சீர்காழி
சீர்காழி (Sirkazhi) தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார் மக்கள் வகைப்பாடு இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,228 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 16,196 ஆண்கள், 16,032 பெண்கள் ஆவார்கள். சீர்காழி மக்களின் சராசரி கல்வியறிவு 84.98% ஆகும். சீர்காழி மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்த மக்கள் பரவலாக வாழுகின்றனர். படையாட்சிகள் (வன்னியர்), நாயுடுகள், பிள்ளைமார்கள் என்று வாழ்கின்றனர். பல தலைமுறைகளாக இங்கு கிறித்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்குப் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர். திருக்கோயில்கள் இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் சீர்காழி, செங்கமேடு, திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீசுவரன்கோவில், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில், திருக்கோலக்கா, திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில், திருக்கடையூர், திருவெண்காடு, திருமணஞ்சேரி மற்றும் திருவாழி – திருநகரி விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன. உண்மையான பெயர்: சீகாழி ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே தமிழில், "சீகாழி' என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், "காழி நகரம்" என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர். திருஞானசம்பந்தர் இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் திருஞானசம்பந்தர் ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார். இதைக் கண்ட இறைவன், "கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது. வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், "பால் கொடுத்தது யார்? என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் "தோடுடைய செவியன்' என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார். அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார். இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது. புராண வரலாறு ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் "தோணிபுரம்' என்றும் போற்றப்படுகிறது. மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு "சட்டை நாதர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது. தலப் பெயர்கள் காவிரியின் வடகரைத் தலங்களுள் சீகாழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் "கழுமல வள நகர்' என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி நடைபெற வழிபட்டதால் "பிரம்ம புரம்' என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் "வேணுபுரம்' என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூசித்ததால், "புகலி' என்றும், வியாழன் பூசித்ததால் "வெங்குரு' என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால் "தோணிபுரம்' என்றும், ராகு பூசித்ததால் "சிரபுரம்' என்றும், வராக மூர்த்தி பூசித்ததால் "பூந்தராய்' என்றும், சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றதால் "புறவம்' என்றும், கண்ணன் பூஜித்ததால் "சண்பை' என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் "ஸ்ரீகாளிபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் 47 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீர ராஜேந்திரன், ராஜாதிராஜ தேவர், கோப்பெருஞ் சிங்கன், பரகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன. ஆலய அமைப்பு சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன் பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர் பலிபீடமும் அமைந்துள்ளது. மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. விமானத்தில் பெரிய உருவத்தில் உமா மகேசுவரர், தோணியப்பராகக் காட்சி தருகின்றார். இவரையடுத்து மேல்புறத்தில் சட்டை நாதர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் திருப்பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது. ஆலய வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் திருஞானசம்பந்தர் திருக்கோயிலும், அதனருகே திருநிலைநாயகி திருக்கோயிலும் அமைந்துள்ளன. அதன் அருகே பெரிய அளவில் பிரம்ம தீர்த்தம், நாற்புறமும் கருங்கல் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. இறைவன் இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார். இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர். விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, "சட்டை நாதர்' என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர் விளங்குகிறார். தீர்த்தங்கள் இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் ஊட்டிய இடமான பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாக்கள் இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது. நிர்வாகம் இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய "திருக்கோலக்கா' என்னும் தலமும் அருகில் இருக்கின்றது. ஆதாரங்கள் இவற்றையும் பார்க்கவும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில் வெளி இணைப்புகள் விக்கிமேப்பியாவில் சீர்காழி அமைவிடம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்
3141
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு
கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழகுகிறார்கள். கி. மு. 4,000 - எகிப்தியர்கள் Wine (பழ ரச பானம் ?) செய்வதில் நிபுணத்துவம் அடைகிறார்கள். கி.மு. 2,000 - எகிப்தியர்களும் சுமேரியர்களும் வெண்ணை செய்வதிலும் Brewing-லும் நிபுணத்துவம் அடைகிறார்கள். கி. மு. 1,800 - Yeast-களைக் கொண்டு Wine, Beer, Bread செய்வதில் முதன்முதலாக உயிரித் தொழில்நுட்பக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டன.மது பானம்,Baking செய்வதில் பயன்பட்ட Saccharomyces வகை Yeast-கள் வணிக முக்கியத்துவம் கொண்டிருந்தன. கி. மு. 500 - சீனாவில்,moldy soybean curd நோய் உண்டாக்கும் கிருமிகளைக் கொல்ல பயன்பட்டது. கி. மு. 300 - கிரேக்கர்கள் ஒட்டுத் தாவரங்களை (grafting techniques for plant breeding) செய்யும் முறையை அறிகிறார்கள். கி. பி. 1ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை கி. பி. 100 AD - சீனர்கள், தூளாக்கப்பட்ட chrysanthemum-களிலிருந்து முதல் பூச்சிக்கொல்லியைக் கண்டுபிடிக்கின்றனர். கி. பி. 1663 - ராபர்ட் ஹூக்கின் திசுள் (Cell) கண்டுபிடிப்பு. 1675 - ஆன்டன் வான் லீவன்ஹூக்கின் பாக்டீரியா கண்டுபிடிப்பு. 1700கள் - பல Hybrid வகை தாவரங்களை ஆய்வாளர்கள் கண்டறிகிறார்கள். 1830 - புரதங்கள் கண்டுபிடிப்பு. 1833 - முதல் enzyme கண்டுபிடிப்பு. 1835 - எல்லா உயிரினங்களும் திசுள்களால் ஆனவை என்ற Matthias Scheiden மற்றும் Theodor Schwann கோட்பாடு வெளியீடு;ஒரு திசுளிலிருந்து தான் இன்னொரு திசுள் உருவாக முடியும் என்று Viichow அறிவிக்கிறார். 1859 - சார்லஸ் டார்வினின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "On the Origin of Species" புத்தகம் வெளியீடு. 1861 - Louis Pasteur பால் பதப்படுத்தும் முறையை கண்டறிகிறார். 1865 - ஜான் கிரிகோர் மெண்டல்,Law of heridity-ஐக் கண்டுபிடிக்கிறார். 1870-1890 - பல வகை கலப்பினத் தாவரங்கள் உருவாக்கம். விவசாயிகள், நைட்ரஜனேற்ற பாக்டீரியாக்களை பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். கி.பி.19ஆம் நூற்றாண்டு முதல்.. 1919 - 'Biotechnology’ என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்படுகிறது. 1928 - சர் அலெக்ஸாண்டர் ஃளெமிங்கின் பென்சிலின் (Antibiotic) கண்டுபிடிப்பு. 1941 - Danish நுண்ணுயிரியலாளர் ஏ. ஜஸ்டின் "Genetic engineering” (மரபணுப்பொறியியல்) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். 1942 - பென்சிலின் உற்பத்தி. 1953 - ஜேம்ஸ் வாட்சனும் ஃரான்சிஸ் க்ரிக்கும் முதன்முதலில் DNAவின் Double helix வடிவத்தை விவரிக்கிறார்கள். 1958 - முதன்முதலில், சோதனைக்குழாயில் DNA உருவாக்கப்பட்டது.. 1968 - 20 அமினோ அமிலங்களை உருவாக்கும் மரபியல் குறியீடுகளை ( genetic codes )கண்டறிந்ததற்காக Marshall W. Nirenbergம் ஹர் கோபிந்த் குரானாவும் நோபல் பரிசு பெறுகிறார்கள். 1970 - முதல் restriction enzyme-ஐ அமெரிக்க நுண்ணுயிரியலாளர் டேனியல் நேதன்ஸ் ( Daniel Nathans ) கண்டுபிடித்தார்.restriction enzyme-கள் மரபியல் பண்புகளைத் தரும் வேதிப்பொருட்களை ( genetic material ) பல துண்டுகளாக வெட்ட உதவுவதன் மூலம் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ஏதுவாக இருக்கிறது. 1971 - முதன்முதலில் ஒரு முழு ஜீன் ( Gene ) சோதனைச்சாலையில் உருவாக்கப்படுகிறது. 1972 - DNA துண்டுகளை ஒட்ட உதவும் DNA லைகேஸ் ( DNA ligase ) முதன்முதலில் பயன்படுத்தப்படுகிறது. முதன்முதலில், இரண்டு வெவ்வேறு வைரஸ்களின் DNA துண்டுகளை இணைத்து recombinant molecule செயற்கை முறையில் உருவாக்கப்படுகிறது. 1973 - Stanley Cohen-ம் Herbert Boyer-ம் சேர்ந்து recombinant DNA தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தனர்.இந்நிகழ்வு நவீன உயிரித் தொழில்நுட்பத்திற்கு வித்திட்டதாக கருதப்படுகின்றது. 1976 - ஒரு குறிப்பிட்ட ஜீனை உருவாக்க எந்தெந்த கார ஜோடிகள் ( Base pairs ) சேர்ந்து உருவாக்குகின்றன என்று கண்டறியப்படுகின்றது. 1977 - மிக நீளமான DNA துண்டுகளையும் வேகமாக Sequence செய்வதற்கான செய்முறைகள் கண்டறியப்படுகின்றன. 1978 - Recombinant மனித இன்சுலின் ( Insulin ) முதன்முதலில் உருவாக்கப்படுகிறது. 1980 - முதல் செயற்கை recombinant DNA மூலக்கூறினை உருவாக்கியதற்காக Paul Berg, Walter Gilbert, Fredrick Sanger ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1981 - முதல் transgenic விலங்கு 'the golden carp', சீன விஞ்ஞானிகளால் படி எடுக்கப்படுகிறது ( Cloned ). 1982 - கால்நடைகளுக்கான முதல் recombinant DNA தடுப்பு மருந்து உருவாக்கம். Kary Mullis,சிறிய DNA துண்டுகளை விரைவில் பெருக்கம் செய்ய உதவும் 'பாலிமரேஸ் சங்கிலித்தொடர் வினையை' ( polymerase chain reaction (PCR)) கண்டுபிடிக்கின்றனர். 1990 - உலகின் முதல் 'மனித மரபு ரேகை திட்டம்' ( Human genome project ) தொடங்குகிறது. 1997 - டாலி - படியெடுக்கப்பட்ட முதல் பாலூட்டி - பிறப்பு. மனித மரபு ரேகை மற்றும் மனித உரிமைகள் மீதான அனைத்துலக தீர்மானத்தை யுனெசுகோ அறிவிக்கிறது. 1998 - கிட்டத்தட்ட 30,000 ஜீன்களின் இருப்பிடத்தை வரையறுக்கும் முதல் 'மாதிரி மனித மரபு ரேகை' அறிவிப்பு. ( First draft of HUman Genome ) 2000 - அமெரிக்க விஞ்ஞானிகள் Craig Venter மற்றும் Francis Collins முதல் முழுமையான மனித மரபு ரேகையை உலகுக்கு அறிவிக்கிறார்கள். DNAவின் double helix வடிவத்தை வாட்சனும் க்ரிக்கும் கண்டுபிடித்து 50 ஆண்டுகள் நிறைவு. உயிரித் தொழில்நுட்பம்
3142
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
உயிரித் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்
வேளாண்மை தாவரங்களில் மரபணு மாற்றம் செய்வதின் மூலம், பின்வரும் விரும்பத்தகுந்த குணங்களைப் பெறலாம். அதிக நோய் எதிர்ப்பு (Added Immunity) வறட்சி எதிர்ப்பு (Drought resistance) பூச்சி எதிர்ப்பு (Insect resistance) பூஞ்சை எதிர்ப்பு (Fungal resistance) அதிக விளைச்சல் (Increased yield) அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்கள் (Added nutrients) ஒட்டுத் தாவர இனங்கள் (Hybrid plant varieties) அதிக உப்புத் தன்மை கொண்ட நிலங்களிலும் விளைச்சல் தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள நிலங்களிலும் விளைச்சல் மருத்துவம் DNA தடுப்பு மருந்துகள்(DNA Vaccines) - ஒரு நோய்க்கு எதிரான தடுப்பு சக்தியைத் தரும் குறிப்பிட்ட Antigen-களை உருவாக்கும் மரபணுப்பகுதிகளை நேரடியாக ஒருவருக்கு செலுத்துவதன் மூலம், அந்த நோய்க்கு எதிரான அவருடைய தடுப்பு சக்தியைத அதிகரிக்க இயலும். மரபணு சிகிச்சை (Gene therapy) - பரம்பரை நோய்கள் மற்றும் மரபணு சார்ந்த நோய்கள் உள்ளவர்களின் கோளாறான மரபணுக்களை நல்ல மரபணுக்களைக் கொண்டு மாற்றி அந்நோயை குணப்படுத்துவதோ அடுத்த தலைமுறைக்கு பரவாமல் செய்வதோ கொள்கையளவில் சாத்தியமாகும்.எனினும் இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் முழு வெற்றி அடையவில்லை. சுரப்பிகள் (Hormones) - குறைந்த அளவில் சுரப்பதால் குறைப்பாடுகளை உருவாக்கும் இன்சுலின் போன்ற சுரப்பிகளை பாக்டீரியாக்களைக் கொண்டு தயாரித்து மனித உடலில் செலுத்துவதன் மூலம் அக்குறைப்பாடுகளை போக்க இயலும். சுற்றுச்சூழல் உயிர் நுட்பவியல் சுற்றுப்புறச்சூழலில் முக்கியப்பங்கினை வகிக்கிறது.இதன் மூலம் இயற்கை சுற்றுப்புறச்சூழல் மற்றும் அதன் முக்கிய கூறுகள் ஆகியனவற்றை பாதுகாத்தல் மற்றும் பொருளாதார ரீதியாக பயன்படுத்துதல் உள்ளிற்றவற்றைஉள்ளடக்கியது.சுற்றுப்புறசூழலை மாசுபடுத்தும் காரணிகளை உயிர்காரணிகள் கொண்டு ஒடுக்கவும், அதனை மறுசுழற்சி முறைகள் மூலம் பொருளாதார பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. சட்டம் உயிர்காரணிகள் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் தோற்றம், அதனை பயன்படுத்தும் தர்மம் ஆகியவற்றை உள்ளடக்கியது உயிர்சட்ட வகைமை. இதன் மூலம் உயிர் கூறுகள் பற்றிய ஆராய்ச்சிகள் முறைமை படுத்த படுகின்றன. தொழிற்துறை ஆடை தயாரிப்பு தோல் பதனிடுதல் உணவு பதப்படுத்துதல் பென்சால்டிஹைட் (benzaldihyde) போன்ற பாதுகாப்பான்கள் (preservatives) உணவு பொருட்களுடன் சேர்த்து பல நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம். உயிரித் தொழில்நுட்பம்
3143
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope St. John Paul II), ( - யோவான்னெஸ் பாவுலுஸ் II), கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும். இவர் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவி இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர். இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும். இவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார். தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன. வாழ்க்கைக் குறிப்பு 1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (யோவான் பவுல்), 1929இல் எமிலியா என்ற தமது தாயை இழந்தார். தமது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932இல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941இல் இழந்தார். செருமனிய நாத்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939இல் மூடப்பட்டது. எனவே செருமனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும் பின்னர் சொல்வாய் நகரில் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946இல் குருவானார். 1964இல் கிராக்கோவ் பேராயராகவும் 1967இல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ஆம் நாள் காலமானார். இரண்டாம் அருள் சின்னப்பரின் பயணங்கள் அருளாளர் பட்டம் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்த சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான விசாரணை தொடங்கியது. வழக்கமாக இவ்வகையான விசாரணை தொடங்குவது ஒருவரது இறப்புக்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஆகும். ஆனால், இரண்டாம் யோவான் பவுலை விரைவில் புனிதராகக் காண பொதுமக்கள் விரும்பியதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அந்த விசாரணை உடனடியாகத் தொடங்க ஆணையிட்டு, ஐந்து ஆண்டு தாமதக் காலம் வேண்டாமென்று விதிவிலக்கு அளித்தார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2009, திசம்பர் 19ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். பிரான்சு நாட்டைச் சார்ந்த ஒரு கன்னியர் இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதைத் தொடர்ந்து பார்க்கின்சன் நோயிலிருந்து திடீரென குணம் பெற்றதை ஆராய்ந்த வத்திக்கான் பேராயம், அந்நிகழ்ச்சி இறையருளால் நிகழ்ந்ததே என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலைஅருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.. புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்ட சில மணி நேரம் சென்ற உடனேயே, அவருடைய பரிந்துரையின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்ததாக செய்தி வந்தது. கோஸ்தா ரிக்கா நாட்டு புளோரிபெத் மோரா என்ற பெண்மணிக்கு ஏற்பட்ட மூளை இரத்த அழற்சி, திருத்தந்தை இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதன் விளைவாக, அற்புதமான விதத்தில் மறைந்ததாகவும், அதற்கு மருத்துவர்களால் விளக்கம் தர இயலவில்லை என்றும் செய்தி வெளியானது. இந்த நிகழ்வை ஆய்ந்த வத்திக்கான் பேராயம் அதை ஒரு புதுமை என்று அறிக்கையிட்டது. 2013, சூலை மாதம் 4ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு ஆணைப்படி, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு விரைவில் புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே தருணத்தில் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் புனிதராக அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் தரப்பட்டது. இரு திருத்தந்தையர்களுக்கும் புனிதர் பட்டம் 2014, ஏப்பிரல் 27ஆம் நாள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. இரு திருத்தந்தையர் புனிதர்களாக அறிவிக்கப்படுதல் இரண்டாம் யோவான் பவுல், இருபத்திமூன்றாம் யோவான் ஆகிய இரு திருத்தந்தையருக்கும் ஒரே நாளில், ஒரே நிகழ்ச்சியின்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டது ஒரு சிறப்பு நிகழ்வாயிற்று. அதுபோலவே திருத்தந்தை பிரான்சிசு தமக்கு முன் திருத்தந்தைப் பணியை ஆற்றி அப்பதவியிலிருந்து விலகிய முன்னாள் திருத்தந்தையான பதினாறாம் பெனடிக்டோடு இணைந்து பொதுமக்களுக்குமுன் திருப்பலி நிறைவேற்றி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் வரலாற்றுச் சிறப்பானதாகும். திருச்சபைத் தலைவர்கள் மற்றும் திருப்பயணிகள் பங்கேற்பு புனிதர் பட்டம் வழங்குவதற்காகத் தேர்ந்துகொள்ளப்பட்ட நாள், 2014, ஏப்பிரல் 14, ஞாயிற்றுக் கிழமை கத்தோலிக்கருக்குச் சிறப்பான நாள். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் வருகின்ற அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு முந்திய மாலையில்தான் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்தார். மேலும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறான அந்த நாள் "இறை இரக்க ஞாயிறு" என்ற பெயரால் கொண்டாடப்பட வழிவகுத்தவர் இரண்டாம் யோவான் பவுல். புனிதர் பட்டமளிப்பு நிகழ்ச்சியின்போது மறையுரை ஆற்றிய திருத்தந்தை பிரான்சிசு, தமக்கு முன் திருத்தந்தைப் பணியை ஆற்றிய இரு புதிய புனிதர்களான திருத்தந்தையரின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். அவர்கள் இருவரும் கடவுளின் இரக்கத்தை வலியுறுத்தினார்கள் என்று அவர் கூறினார். திருத்தந்தை இருபத்திரண்டாம் யோவான் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டி (1962-1965), இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தார். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் "குடும்பங்களை ஆதரித்து வளர்த்தார்." திருத்தந்தை பிரான்சிசு நிகழ்த்திய புனிதர் பட்டமளிப்பு விழாவில் அவரோடு முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கூட்டுப் பலி நிறைவேற்றினார். மேலும் உலகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 150 கர்தினால்மார், 700 ஆயர்கள் மற்றும் 1000 குருக்களும் கலந்துகொண்டனர். புனிதர்களாக அறிவிக்கப்பட்ட இரு திருத்தந்தையர்களின் மீபொருள்கள் வெள்ளிப் பேழைகளில் கொண்டுவரப்பட்டு, மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டன. திருத்தந்தை யோவானின் உடல் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழ்க்கோவிலிலிருந்து மேற்கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டபோது அவருடைய உடலிலிருந்து எடுக்கப்பட்ட தோல் பகுதி அவருடைய மீபொருள் ஆனது. புதிய புனிதர்களின் மீபொருள்கள் திருத்தந்தை இரண்டாம் யோவானின் மீபொருளைக் கொண்டுவந்தவர் அவருடைய பரிந்துரையால் குணம் பெற்ற பிளோரிபெத் மோரா டியாஸ் என்னும் கோஸ்தா ரிக்கா நாட்டுப் பெண்மணி. அவர், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் உடலிலிருந்து, அவர் 2005இல் இறப்பதற்குமுன் மருத்துவப் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரது இரத்தம் அடங்கிய பேழை. புதிய புனிதர்களின் உருவங்கள் சித்தரிக்கப்பட்ட பிரமாண்டமான தொங்குதிரைகள் புனித பேதுரு பெருங்கோவிலின் முகப்பிலிருந்து தொங்கவிடப்பட்டிருந்தன. பீடத்தைச் சுற்றிலும் 30 ஆயிரம் மலர்கள் அணிசெய்தன. அம்மலர்களை எக்குவடோர் நாடு நன்கொடையாக அளித்திருந்தது. உலக நாடுகள் பங்கேற்பு சுமார் 500 ஆயிரம் திருப்பயணிகள் கோவில் வளாகத்திலும் அதன் முன் டைபர் நைதி நோக்கிச் செல்லும் பெருஞ்சாலையிலும் கூடி நின்று பங்கேற்றனர். போலந்து நாட்டவரான திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு வணக்கம் செலுத்த வந்திருந்த ஆயிரக்கணக்கான போலந்து திருப்பயணிகள் தம் நாட்டுக் கொடியை அசைத்தவண்ணம் நின்றனர். 93 உலக நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த புனிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன. அவற்றுள் 19 தூதுக்குழுக்கள் நாட்டு அதிபர்கள் தலைமையின்கீழும் 24 குழுக்கள் நாட்டுப் பிரதமர்களின் தலைமையின்கீழும் வந்தன. எசுப்பானியாவின் அரசரும் அரசியும், பெல்ஜியத்தின் முன்னாள் அரசியும் பங்கேற்றனர். உலகின் மிகப்பெரும் போப் சிலை போலந்தில் இவருடைய மிக உயரமான சிலை ஏப்ரல் 2013ல் திறந்து வைக்கப்பட்டது. 45 அடி உயரமும் 5,000 கிலோகிராம் எடையும் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இந்த சிலைதான் உலகிலேயே இவரின் மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சிலியில் 40 அடி உயரமுடைய இவரின் சிலையே உலகில் மிகப்பெரியதாக இருந்தது. இந்த சிலை அமைக்க தொழிலதிபர் லெஸ்ஜெக் லைசன் என்பவர் முழு நிதியுதவியும் அளித்துள்ளார். 2010ஆம் ஆண்டில் குரோஷியா நாட்டுக்குத் தம் குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். அப்போது நீரில் மூழ்கி இவருடைய மகன் இறக்கும் நிலை ஏற்பட்டது. அந்த விபத்தில் இருந்து இவருடைய மகன் உயிர் பிழைத்தார். அதற்கு திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் பரிந்துரையே காரணம் என்று நம்பிய லைசன் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக உலகிலேயே மிக உயரமான ஜான் பாலின் சிலையை அமைக்க நிதியுதவி அளித்தார். அதன்படி போலந்தின் செஸ்டோகோவா என்ற இடத்தில் இந்த சிலையை செஸ்டோகோவா நகரின் பேராயர் வாட்சுவா தேபோ திறந்து வைத்தார். உலகிலேயே உயரமான இயேசு கிறித்துவின் சிலை உலகிலேயே இயேசு கிறித்துவின் மிக உயரமான சிலையும் போலந்து நாட்டில்தான் உள்ளது. 118 அடி உயரம் கொண்ட இச்சிலை 2011இல் ஸ்வீபோட்சின் நகரில் எழுப்பப்பட்டது. அருளாளர் பட்டமளிப்பின் படத்தொகுப்பு புனிதர் பட்ட நிகழ்ச்சி படத்தொகுப்பு ஆதாரங்கள் போலந்து திருத்தந்தையர்கள் போலந்து நபர்கள் 1920 பிறப்புகள் 2005 இறப்புகள் புனித பேதுரு பேராலய கல்லறைகள் போலந்தின் கிறித்தவப் புனிதர்கள்‎ கிறித்தவ மெய்யியலாளர்கள்
3145
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88
ஆழிப்பேரலை
சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை (Tsunami, செப்பானிய மொழி: 津 波 ட்சு னமி "துறைமுக அலை") என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும்போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக்கூடிய மூல காரணிகளாகும். சுனாமி சொல்லிலக்கணம் சுனாமி என்பது செப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை, கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். சுனாமி உண்மையில் அலைகள் இல்லை, ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளில், இத்தொடர் அறிவியல் சமூகத்தில் பயனிழந்து உள்ளது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த இந்த வார்த்தை அதன் பொதுவான தோற்றத்திலிருந்து பெறப்பட்டது. இங்கு "பேரலை" என்பது ஒரு நம்ப முடியாத உயர் அலை போன்ற தோற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பெயராகும். சுனாமி, கடலலை இரண்டும் கடலில் அலையை உருவாக்கி நிலத்தை நோக்கிச் செலுத்துகிறது. இதில் சுனாமியால் ஏற்படும் கடல் நீர் ஏற்றம் பெரிய அளவினதாகவும், அதிக நேரம் நீடிக்கக் கூடியதாகவும், அதனால் உண்டாகும் இயக்கம் மிகவும் அதிகமாகவும் இருக்கும். ‘அலை' என்ற வார்த்தைக்கு “போல" அல்லது “அதே தன்மை கொண்ட" என்ற பொருளும் உண்டு. சுனாமி என்பது துறைமுகங்களில் ஏற்படும் அலை அல்ல என்று புவியியலாளர்கள் மற்றும் கடலியலாளர்களும் கருதுகின்றனர். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உண்டு. தமிழில் “ஆழிப்பேரலை என்று உள்ளது. ஆக்கினசு மொழியில் சுனாமியை “பியுனா" அல்லது “அலோன்" புலூக் என்பர். “அலோன்" என்ற வார்த்தைக்குப் பிலிப்பைன்சு மக்களின் மொழியில் “அலை" என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமித்ரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் உள்ள மொழியில் “சுமாங்" என்றும் சிகுலி மொழியில் “எமாங்" என்றும் அழைப்பர். வரலாறு கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்சு, சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பெலோபொன்னேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365-இல் அலெக்சாந்திரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் உரோமன் வரலாற்றாசிரியர் அம்மியனசு மாசில்லினுசு சுனாமி என்பது, நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீதுதான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரியப்பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு. 365-ஆம் ஆண்டு சூலை 21-ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப நூற்றாண்டுகளைக் கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755-ஆம் ஆண்டு, நவம்பர் 1-ஆம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிசுபனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், போர்ச்சுக்கல், சுபெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது. 1883-ஆம் ஆண்டு வாக்கில் சாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாகத் திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாகத் தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு வரை கூடச் சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964-ஆம் ஆண்டு தான் கடைசியாக அலாசுகா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாசுகா, வான்கூவர் தீவு (பிரித்தானிய கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, அவாய் பகுதிகளைத் தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான். சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது சப்பான் நாடுதான். 2004-இல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் மிக மோசமான ஆழிப்பேரலை காரணமாக 2,30,000 மக்கள் உயிரிழந்தனர். சுமித்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்கு சுனாமிக்கான வாய்ப்புகள் அதிகம். 2004-ஆம் ஆண்டில், திசம்பர் 26-ஆம் நாளன்று, யுரேசியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆத்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியது. அதனால் ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004-ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது. இது 2004-ஆம் ஆண்டு - இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும், ஆழிப்பேரலையும் எனப்படுகின்றது. உற்பத்தி முறைகள் சுனாமி உண்டாவதற்கு முக்கிய காரணம், கடலில் ஒரு கணிசமான அளவு நீர் இடப்பெயர்ச்சி ஆவதே ஆகும். நீர் இடப்பெயர்ச்சி ஆவதற்கு நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் காரணம். மிக அரிதாகச் சில நேரங்களில் விண்கல் மற்றும் அணு சோதனைகள் மூலமும் சுனாமி உருவாகும். இவற்றால் உண்டாகும் அலைகள் பின்பு ஈர்ப்பு சக்தியால் நீடிக்கிறது. அலைகள் சுனாமி உருவாவதில் எந்தப் பங்கும் வகுப்பதில்லை. கடலாழத்தில் ஏற்படும் எந்தப் பாதிப்பின் போதும் வரும். கடலாழ பூகம்பத்தினால் வரும். கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும். மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும். வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை) கடலில் இயற்பியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும். அதிர்வினால் உருவாக்கப்பட்ட ஆழிப்பேரலை கடல் படுகையில் திடீரென ஏற்படும் மாற்றதால் மேலிருக்கும் தண்ணீர் செங்குத்தாக இடமாற்றம் அடைவதால் ஆழிப்பேரலை உருவாகும். டெக்டானிக் நிலநடுக்கங்கள், பூமியின் புவி ஓடு உருக்குலைவதால் உண்டாகும், இது கடலுக்கு அடியில் ஏற்படும் போது சிதைக்கப்பட்ட பகுதியிலுள்ள தண்ணீர், சமநிலையில் இருந்து இடம் பெயர்கிறது. டெக்டானிக் தட்டுகளின் தவறான சுழற்சி காரணமாக, செங்குத்தாக நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது. இயக்கத்தில் ஏற்படும் சாதாரண தவறுகளாலும் கடல் படுகையில் இடப்பெயர்ச்சி ஏற்படும். ஆனாலும் இவை பெரிய சுனாமியை உண்டாக்குவது இல்லை. ஆழிப்பேரலைகள் ஒரு சிறிய அலை வீச்சும், மிக நீண்ட அலை நீளமும் உடையவை சாதாரண கடல் அலை 30 அல்லது 40 மீட்டர் அலைநீளம் உள்ளவை. ஆனால் ஆழிப்பேரலையின் அலைகள் சில நூறு கிலோ மீட்டர் நீளம் உடையவை. இவை கடல் பரப்பைவிட 300 மில்லி மீட்டர் மேலே சிறிய வீக்கம் போன்று உருவாகும். அவை தாழ்வான நீலை அடையும் போது மிக அதிக உயரமாக மேலெழுகிறது. ஆழிப்பேரலையின் சிறிய அலைகூட கடலோரப்பகுதியை மூழ்கடித்து விட முடியும். ஏப்ரல் 1946, அலாசுகாவில் அலேடன் தீவுகளுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவுகள் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் 14 மீட்டர் உயரத்திற்கு அலை மேலே எழுந்து அவாய் தீவில் உள்ள இலோ என்ற இடத்தையே அழித்து விட்டது. பசிபிக் பெருங்கடல் தரையில் அலாசுகா கீழ்நோக்கித் தள்ளப்பட்டதால், உண்டான பூகம்பமே இதற்குக் காரணம். குறுகும் எல்லைகளில் இருந்தும் சுடாரிக்கா என்ற இடத்தில் 8,000 வருடங்களுக்கு முன் சுனாமி தோன்றியது. கிராண்ட் பேங்க் 1929, பப்புவா நியு கினியா 1998 (டப்பின் 2001) சுனாமிகள் ஏற்படக் காரணம் பூகம்பத்தின் மூலம் உண்டான வண்டல் கடலில் சென்று கலந்ததால் உண்டானது. சுடாரிக்கா வண்டல் தோல்விக்குச் சரியான காரணம் தெரியவில்லை. அதிகப்படியான வண்டல்கள், ஒரு நிலநடுக்கம் அல்லது எரிவாயு ஐட்ரேட் வெளியானது (மீத்தேன் போன்ற வாயுக்கள்) காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். 1960 வால்டிவியா பூகம்பம் (9.5 ஆறு), 1964 அலாசுகா பூகம்பம் (9.2 ஆறு), 2004-இல் இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் 2011ல் தோகூ பூகம்பம் (9.0 ஆறு) போன்றவை சமீபத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நீள் ஊடுருவு பூகம்பங்கள். செப்பானில் சிறிய (4.2 ஆறு) பூகம்பம் ஏற்பட்டு அருகிலுள்ள கரையோரப் பகுதிகளை ஒரு சில நிமிடங்களில் பாழ்படுத்தியது. நிலச்சரிவுகளால் உருவான ஆழிப்பேரலை 1950களில் பெரும் நிலச்சரிவுகள் மூலம் தான் பெரிய சுனாமிகள் உண்டானது என்று நம்பப்பட்டது. நீருக்கடியில் ஏற்படும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சுனாமியை “சியோருக்கசு" என்று அழைத்தனர். இதனால் அதிக அளவு நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது ஏனெனில் நிலச்சரிவினால் உண்டாகும் கழிவுகள் அல்லது விரிவாக்கத்தால் உண்டாகும் சக்தி திரும்பவும் நீருக்குள்ளேயே செலுத்தப்டுகிறது. 1958-இல் மிகப்பெரிய நிலச்சரிவு, அலாசுகாவின் லிடுயா விரிகுடா பகுதியில் ஏற்பட்டபோது 524 மீட்டர் உயரத்திற்கு (1700 அடிக்குமேல்) அலை ஏற்பட்டது. இந்த அலை உடனடியாக நிலத்தை அடைந்து விட்டதால் நீண்ட தூரம் பயணிக்கவிலை. இதில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவர் கொல்லப்பட்டனர். ஆனால் மற்றொரு படகு அதிசயமாக அந்த அலையில் சவாரி செய்து கரையை அடைந்தது. விஞ்ஞானிகள் இந்த அலைகளை “மெகா சுனாமிகள்" என்று அழைத்தனர். அறிவியலாளர்கள் எரிமலை தீவின் இடிந்து விழும் மிகப் பெரிய நிலச்சரிவுகளால் மிகப்பெரிய, ஒரு பெருங்கடலையே கடக்கக் கூடிய மிகப் பெரிய “மெகா சுனாமியை” உருவாக்க முடியும் என்றனர். பண்புகள் சுனாமிகள் இரு வழிகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. பெருமளவு சக்தியுள்ள பெரிய அலை (நீரலை) அதிக வேகத்தில் செல்வதாலும், அலைகள் பெரிய அளவு இல்லாவிட்டாலும் நிலப்பகுதியை மொத்தமாக அழித்து, எல்லாப் பொருட்களையும் தன்னுடன் எடுத்துச் சென்று விடுவதாலும் பெரும் சேதம் ஏற்படுகிறது. சாதாரண காற்று அலைகள் 100 மீட்டர் அலை நீளமும், 2 மீட்டர் உயரமும் உடையவை. ஆழமான பெருங்கடலில் ஒரு சுனாமி 200 கிலோ மீட்டர் அலை நீளமும், மணிக்கு 800 கிலோ மீட்டர் பயணிக்கும் சக்தியும் உடையது. அதன் மகத்தான அலைநீளம் ஒரு சுழற்சியை முடிக்க 20 அல்லது 30 நிமிடங்கள் எடுத்து 1 மீட்டர் அலை அலைவு கொண்டதாக உள்ளது. இதனால் ஆழ்கடல் பகுதியில் சுனாமியை அறிய முடிவதில்லை. அரிதாகக் கப்பல்கள் சுனாமி அலை கடப்பதை உணர்கின்றன. சுனாமி கரையை அணுகும் போதும், நீர் ஆழமற்ற இடத்திலிருக்கும் போதும் அதன் வேகம் ஒரு மணிக்கு 80 கிலோ மீட்டருக்குக் கீழ் குறைகிறது. அதன் அலைநீளமும் 20 கிலோ மீட்டராகக் குறைகிறது. ஆனால் அதன் வீச்சு மிகுந்த அளவில் வளரும். சில நிமிடங்களில் சுனாமி அதன் முழு உயரத்தை அடைந்து விடும். மிகப்பெரிய சுனாமியைத் தவிர, நெருங்கிய அலைகளை உடைக்க முடியாது. மாறாக ஒரு வேகமாக நகரும் அலைகளின் துவாரம் போன்று தெரியும். விரிகுடாக்கள் மற்றும் மிகவும் ஆழமான நீர்அருகில் சுனாமிகள் உண்டானால் அவை சுனாமியை ஒரு படிக்கட்டு போன்றும், ஒரு செங்குத்தான அலையாகவும் மாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் சப்பானிய மொழியில் இதனை “துறைமுக அலை” என்று கூறுவர். சில நேரங்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மீன்பிடிக்கும் போது எந்த அசாதாரண அலையையும் உணராமல், கரைக்குத் திரும்பி வந்த பின் கிராமமே பெரிய கடலலையால் அழிவுற்றதைக் கண்டுள்ளனர். சுனாமியின் உச்ச அலை கரையை அடையும் போது, கடல் மட்டம் தற்காலிமாக உயரும். இதை “ரன்” என்று குறிப்பிடப்படுகிறது. இவை கடல் மட்டத்திற்கு மேலிருந்து அளக்கப்படுகிறது. அலை உச்சிகளுக்கு இடையில் பலமடங்கு அலைகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து வந்தால், அதைப் பெரிய சுனாமி என்கிறோம். கரையை அடைந்த முதல் அலை உயர்ந்த ரன் இல்லை, சுனாமிகள் சுமார் 80ரூ பசிபிக் பெருங்கடலில் ஏற்படுறது. ஏரிகள் உள்ளிட்ட பெரிய நீர்ப்பரப்பு பகுதிகளிலேயே சுனாமி ஏற்படுகிறது. அவை பூகம்பங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் நகர்வு போன்றவைகளால் உருவாகிறது. குறைகள் சுனாமியின் குறைபாடு என்னவென்றால் ஒரு அலை முகடு கரையை அடைவதைவிட தொட்டி போன்ற பகுதி முதலில் அடையும். இதனால் கடற்கரைளை ஒட்டிச் சாதாரணமாக மூழ்கி இருக்கும் இடங்கள் வெளிக்கொணரப்படுகிறது. அலை தொட்டி போன்ற பகுதிக்கு வெளிப்புறமாக நீரில் பரவுகிறது. அலை நேரத்தின் பாதி அளவு நேரத்திலேயே அலைகள் தோன்றுகின்றது. சில நேரங்களில் ஆர்வத்தின் காரணமாகவோ அல்லது கடல்படுகையில் உள்ள மீனைப்பிடிக்கும் ஆர்வத்திலோ உள்ள மக்கள் இந்த ஆபத்துகளை உணர முடியாமல் போகிறது. செறிவு மற்றும் அளவு மாறுபாடு பூகம்பங்களைப் போலச் சுனாமியின் செறிவு மற்றும் அளவு மாறுபாடுகளை ஒப்பீடு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுனாமி அடர்த்தியை அளவிட சீபெர்க்-அம்பரசி என்னும் அளவுகோல் மத்திய தரைக் கடலிலும், இம்மாமுரா-லிடா செறிவு அளவுகோல் பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் பயன்படுத்தப்படுகிறது. பிற்காலத்தில் இம்மாமுரா-லிடா செறிவு அளவுகோல் சோலோவைவ் என்பவரால் சூத்திரத்தின்படி மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு ஆவ் அருகிலுள்ள கடற்கரை சராசரி அலை உயரம் உடையது. இந்த அளவுகோல் சோலோவ்-இமாமுரா சுனாமி செறிவு அளவுகோல் எனப்படுகிறது. இந்த அளவு, சுனாமி அளவாக நோவோசிப்ரிசிக் சுனாமி ஆய்வகம் தொகுக்கப்பட்ட உலக சுனாமிப் பட்டியல்களில் பயன்படுத்தப்படுகிறது. பரும அளவுகள் உண்மையில் சுனாமி அளவைக் காட்டிலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை முர்த்தி மற்றும் லூமிசு இருவரும் எம் எல் என்ற அளவினில் சுனாமியின் இயக்க ஆற்றலைக் கணக்கிட்டனர். ஆபே என்பவர் சுனாமியின் அளவுகோலாக மவுண்ட் என்பதை அறிமுகப்படுத்தினார். h என்பது சுனாமியின் அதிக பட்ச அலை வீச்சு. ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பு அமெரிக்காவில் உள்ள அவாய் தீவில்தான் முதன் முதலாகப் பசிபிக் பெருங்கடல் பிராந்திய ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் அவாய். 1946 ஏப்ரல் 1 அன்று அவாய் தீவைத் தாக்கிய ராட்சத ஆழிப்பேரலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின. அமெரிக்கா 1949-ஆம் ஆண்டில் அங்கு பசிபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் ஆழிப்பேரலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்கக் கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’. 1960-ஆம் ஆண்டில் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் அவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் ஆழிப்பேரலை ஏற்பட்டது. முன்னரே முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே இறந்தனர். அப்போது சப்பான், பிலிப்பைன்சு உள்ளிட்ட பசிபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963-ஆம் ஆண்டில் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராகச் சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆத்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்சு, கோசுடரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிசி, பிரான்சு, குவாதமாலா, இந்தோனேசியா, சப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்சு, உருசியா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது. 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை தாக்குதலுக்கு பிறகு இந்திய பெருங்கடல் ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சமிக்ஞைகளாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சமிக்ஞையைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள். இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும். படங்களின் தொகுப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சுனாமி பற்றி களஞ்சியம் இணைய தளத்தின் கட்டுரை ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை செல்லிட பேசியின் (Cell Phone) குறுந்தகவல் (SMS) வழியாக ஆழிப்பேரலை குறித்து கடலோரத்தில் வசிப்பவர்களிடத்தே முன்னெச்சரிக்கை செய்ய ITZ தன்னார்வ குழுவினரால் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இணைய தளம். சுனாமி: அன்றைய அழிவும் இன்றைய மாற்றமும் இயற்கை அழிவுகள் கடலியல் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் நீரின் வடிவங்கள்
3159
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
சார்லசு டார்வின்
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இதுவரை வாழ்ந்த உயிரியலாளர்களில் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை. இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது, அதாவது தகுதியானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர். இளமை டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி (Shrewsbury) எனுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார். சிறு வயது முதற் கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது தந்தையார் விரும்பி எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மகனைச் சேர்த்தார்; ஆனால் இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை. சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார். அவர் தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை இறையியல் பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின். படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்விலேயே மிகுந்திருந்தது. கடற்பயணம் தமது 22ஆம் வயதில் இறையியலில் (Theology) பட்டம் பெற்ற டார்வின் கிறித்தவத் திருச்சபையில் உறுப்பினராகச் சேரவும் மறுத்துவிட்டார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோ (John Stevens Henslow) என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின். சனவரி 1831 சாதாரண பட்ட இறுதிப் பரீட்சையில் அவர் சிறப்பாகச் செய்து, 178 பரீட்சார்த்திகளில் பத்தாவதாக வந்தார். அவர் மூலமாக கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர். ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22. ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. இடரும், இன்னலும் மிகுந்த கடற்பயணத்தைச் சார்லஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பயணத் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தற்போது காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார். இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது. “உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. ஆய்வுப்பணிகள் இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். இவ்வாய்வின் பயனாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” முடிவுக்கு அவர் வந்தார். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும்,தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரையாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை லண்டனில் வெளியிட்டார். திருமணம் தமது 30-ஆவது வயதில் எம்மா வெட்ஜ்வுட் (Emma Wedgwood) என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் டார்வின். திருமணத்திற்குப் பின்னரும், தமக்கு விருப்பமான இயற்கையியல் ஆய்வில் டார்வின் மிகுதியாக ஈடுபட்டார். அவரது குழந்தைகள் நூல்கள் சார்லஸ் டார்வினுக்கும், ஆல்பிரெட் ரஸ்ஸல் வாலஸ் என்ற மற்றொரு இயற்கையியல் அறிஞருக்கும் நட்பு உண்டாயிற்று. டார்வின் தாம் ஏற்கனவே அமெரிக்கக் கடற்கரையோரம் திரட்டிய சான்றுகளிலிருந்து உருவாக்கிய கொள்கைகளுக்கு மேலும் ஆதாரங்களைச் சேகரிப்பதில் நண்பருடன் சேர்ந்து ஈடுபட்டார். புதிய உயிரினங்கள் உருவாவதற்கான ஒழுங்கு மற்றும் விதிமுறைகள், அவ்வாறு உருவாகும் உயிரினங்களுள் சில பிரிவுகள் முழுமையாக மூல நிலையிலிருந்து மாறிவிடுவதற்கான போக்குகள் ஆகியவை பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் டார்வின் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். பரிணாம வளர்ச்சிக் கொள்கை 1858ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், மேற்கூறிய டார்வினின் கண்டுபிடிப்புகளும், அவரது நண்பர் வாலஸின் கட்டுரையும் லண்டன் லின்னன் கழகத்தில் (Linnean Society of London) வாசிக்கப்பட்டன. மேற்கொண்டு ஆய்வு செய்ததன் பயனாக டார்வினுக்குத் தோன்றியதே ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’ ஆகும். 1859 ஆம் ஆண்டு இக்கொள்கையை, டார்வின் உலகை வியப்பில் ஆழ்த்திய ஒரு புத்தகம் மூலம் வெளியிட்டார். "The Origin of Species by Natural Selection" அதாவது 'இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்' என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும்." இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்று கூறினார் டார்வின். இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. டார்வினின் இக்கருத்துகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன; வியப்போடும், ஆர்வத்தோடும் அவரது ஆய்வுகளை மக்கள் படித்தனர். இந்நிலவுலகில் வாழும் உயிரினங்களின் குறிப்பாக விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சியில் இயற்கையோடு ஒன்றிப்போகின்றவை பாதுகாப்போடு வாழ்வதையும், மற்றவை மறைந்து போவதையும் அறிந்து மக்கள் பெரிதும் வியப்படைந்தனர். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. பரிணாம வளர்ச்சிக் கொள்கை மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே தேவாலயங்களின் கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் கொளகை. அவர் வாழ்ந்த போதே அவரது நூல் உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நூல் இன்றும் விவாதத்திற்குரிய, கருத்துமாறுபாடுகளுக்கு இடம்தரும் நூலாக இருக்கிறது. டார்வின் பரிணாம கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது) மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் ஆற்றல்) உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப்பெருக்க முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது) இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் இயல்பினைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை 'நவீன டார்வினியம்' என்கிறார்கள். உயிர் வாழ்தலுக்கான போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து, இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது இன்றைய நவீன டார்வினியமாகும். பிற டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த் திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். அவருடைய நூலான “தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு” என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும். இறப்பு சார்லஸ் டார்வின் 1882ஆம் ஆண்டு ஏப்பிரல் 19ஆம் நாள் காலமானார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஊடகங்கள் குறிப்புகளும் மேற்கோள்களும் வெளி இணைப்புகள் The Complete Works of Charles Darwin Online – Darwin Online; Darwin's publications, private papers and bibliography, supplementary works including biographies, obituaries and reviews Darwin Correspondence Project Full text and notes for complete correspondence to 1867, with summaries of all the rest ; public domain Darwin Manuscript Project Works by Charles Darwin in audio format from LibriVox Video and radio clips கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் Darwin 200: Celebrating Charles Darwin's bicentenary, Natural History Museum A Pictorial Biography of Charles Darwin Mis-portrayal of Darwin as a Racist Darwin's Volcano – a short video discussing Darwin and Agassiz' coral reef formation debate The life and times of Charles Darwin, an audio slideshow, The Guardian, Thursday 12 February 2009, (3 min 20 sec). Darwin's Brave New World – A 3 part drama-documentary exploring Charles Darwin and the significant contributions of his colleagues Joseph Hooker, Thomas Huxley and Alfred Russel Wallace also featuring interviews with ரிச்சர்ட் டாக்கின்சு, David Suzuki, Jared Diamond A naturalist's voyage around the world Account of the Beagle voyage using animation, in English from French National Centre for Scientific Research|Centre national de la recherche scientifique View books owned and annotated by Charles Darwin at the online Biodiversity Heritage Library. 1809 பிறப்புகள் 1882 இறப்புகள் ஆங்கிலேய எழுத்தாளர்கள் எடின்பரோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தாவரவியலாளர்கள் பூச்சியியலாளர்கள் நிலவியலாளர்கள் இயற்கையியலாளர்கள் பயண எழுத்தாளர்கள் விலங்கின நடத்தையியலாளர்கள் உயிரியலாளர்கள் பரிணாம உயிரியல் மாந்தரினப் படிமலர்ச்சி அறிவியலாளர்கள் மரபியலாளர்கள் பிரித்தானிய உயிரியலாளர்கள்
3174
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
தற்குறிப்பேற்ற அணி
தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும். எடுத்துக்காட்டுகள் எ.கா.1: போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட சிலப்பதிகாரம் விளக்கம்: கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார். எ.கா.2: தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல் கூவினவே கோழிக் குலம். நளவெண்பா விளக்கம்: நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாகக் கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார். எ.கா.3: காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கப் படாதேன்றோ - நாதம் அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி ஒளிக்கின்ற தென்னோ உரை. நளவெண்பா விளக்கம்: நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிப்பட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதைக் கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனைப் பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார். இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் அணி அணி இலக்கணம்
3198
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் (Pope Benedict XVI, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்; 16 ஏப்ரல் 1927 – 31 திசம்பர் 2022), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவர். இவர் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்பிரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். தமக்கு முன்னிருந்தவர்களைப் போலவே திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டவுடன் பெயர்மாற்றம் செய்துகொண்டார். 2005 ஏப்பிரல் திங்கள் 24 ஆம் நாள் பாப்பரசராக தமது முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். 2005 மே திங்கள் 7 ஆம் நாள் புனித யோவான் லாத்தரன் பேராலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக மூனிச் உயர்மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக செயற்பட்டுவந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார் . இவர் 28 பெப்ரவரி 2013இல் உரோம் நேரம் இரவு 8 மணிக்கு தனது திருத்தந்தை பதவியிலிருந்து விலகினார். திருத்தந்தை பெனடிக்டின் படிப்பினைகள் இன்றைய உலகில் மக்களின் முழு வளர்ச்சிக்குக் கிறித்தவ சமயம் துணையாக உள்ளது என்னும் கருத்தைத் திருத்தந்தை பெனடிக்ட் வலியுறுத்துகிறார். உலகமயமாக்கும் போக்கு கடவுள் நம்பிக்கையிலிருந்து மக்களைத் திசைதிருப்பி விடும் ஆபத்து உள்ளது என்றும், உண்மையான மதிப்பீடுகளை வாழ்வில் கடைப்பிடிக்கும்போதுதான் மனித வாழ்க்கை வளம்பெறும் என்றும் அவர் எடுத்துரைக்கிறார். கிறித்தவ சமயம் பகுத்தறிவுக்கு எதிராகப் போவதில்லை. மனிதர் பகுத்தறிவு கொண்டுள்ளார்கள் என்றால் அப்பகுத்தறிவு கடவுளுக்கு எதிரானதல்ல, மாறாக, அது கடவுள் மனிதருக்கு வழங்குகின்ற கொடை. அக்கொடையை நன்றியோடு ஏற்பது மனிதரின் பொறுப்பு. கடவுளால் படைக்கப்பட்ட உலகத்தை மனிதர் தம் பகுத்தறிவின் துணைகொண்டு ஆய்ந்து அறிந்து சீரமைக்கும் பொறுப்பு கொண்டுள்ளார்கள். எனவே கடவுள் நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை அல்ல; மாறாக, மனித பகுத்தறிவுக்கு உகந்ததே கடவுள் நம்பிக்கை. ஆனால், பகுத்தறிவு தன்னால் எல்லாம் கூடும் என்று மமதை கொண்டு, கடவுளின் துணை வேண்டாம் என்னும் போக்கில் போவது தவறு. இப்போக்கினைத் திருத்தந்தை பெனடிக்ட் பகுத்தறிவு மிகைவாதம் (rationalism) என்று அடையாளம் காட்டிக் கண்டிக்கின்றார். மேலும், உண்மை என்று ஒன்று இல்லை எனவும், மனிதர் உண்மையான மதிப்பீடுகளை அடையாளம் கண்டு அவற்றைக் கடைப்பிடிக்க இயலாது என்றும் கூறுகின்ற சூழ்நிலைவாத அடக்குமுறை (dictatorship of relativism) என்னும் கொள்கையையும் அவர் தவறு எனக் காட்டுகின்றார். திருத்தந்தை பெனடிக்ட் வெளியிட்ட படிப்பினை ஏடுகள் திருத்தந்தை பெனடிக்ட் பல போதனை ஏடுகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் மூன்று சுற்றுமடல்களும் (encyclicals) அடங்கும். அவை கீழ்வருவன: 1) கடவுள் அன்பாய் இருக்கிறார் (God is Love - இலத்தீனில் Deus Caritas Est): இது திருத்தந்தை பெனடிக்ட் வெளியிட்ட முதல் சுற்றுமடல். 2005, திசம்பர் 25ஆம் நாள், கிறித்து பிறப்புவிழாவன்று கையொப்பமாகி, 2006, சனவரி 25இல் வெளியிடப்பட்ட இம்மடலில் கடவுளுக்கும் அன்புக்கும் இடையே நிலவும் நெருங்கிய பிணைப்பு விளக்கப்படுகிறது. கடவுள் மனிதரைத் தம் சாயலாகப் படைத்துள்ளார். கடவுளின் உள்ளார்ந்த இயல்பு அன்பு ஆகும். அந்த அன்பு மனிதரின் இயல்பாகவும் உள்ளது. எனவே மனிதர் கடவுளையும் மனிதரையும் அன்புசெய்யும் திறன் கொண்டுள்ளார்கள். மனிதர் காட்டும் அன்புக்கு ஊற்றாகவும் அது நிகழ்வதற்கு வழியாகவும் அமைவது கடவுளின் அன்புதான். கடவுளையும் மனிதரையும் பிணைக்கின்ற இந்த அன்பு மனிதரின் தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் துலங்க வேண்டும். இச்சுற்றுமடலின் முதல் சொற்கள் விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டவை: கடவுள் அன்பாய் இருக்கிறார் (1 யோவான் 4:16). மேலும், அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார் (1 யோவான் 4:16). பிறரோடு பகிர்தலும் பிறரிடமிருந்து பெறுதலும் அன்பின் இரு அடிப்படைப் பண்புகள் ஆகும். இதுவே கடவுளின் இயல்பு கூட. அவர் தம்மையே மனிதருக்குக் கையளித்து, தம் உறவை மனிதரோடு பகிர்கின்றார். அதே வேளையில் கடவுள் மனிதரிடமிருந்து பெறுகின்ற அன்பில் கடவுள் மகிழ்கின்றார். இந்த இருவகை அன்பு கிரேக்க கலாச்சாரத்தில் eros, மற்றும் agape என்று அறியப்பட்டன. தன்னையே பலியாக்கி அளிக்கும் அன்பு (agape) பிறருக்கு வாழ்வளிக்கும். பிறரிடமிருந்து பெறும் அன்பு (eros) புலன்களுக்கு மகிழ்வூட்டித் திளைக்கச் செய்யும். இவை இரண்டிற்குமே ஊற்று கடவுள்தாம் என்பதால் இவற்றை மனிதர் பிரித்தலாகாது. 2) எதிர்நோக்கால் மீட்படைகிறோம் (Saved by Hope - இலத்தீனில் Spe Salvi): இச்சுற்றுமடல் 2007, நவம்பர் 30ஆம் நாள் கையொப்பமிடப்பட்டு வெளியானது. உலகில் ஏற்படுகின்ற துன்பங்களின் நடுவே நம்பிக்கை இழக்காமல் வாழ்வது எப்படி, ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்நோக்கி வாழ்வது எப்படி என்று இம்மடல் விளக்குகிறது. மனிதர் பிற மனிதரை மதிக்காமல் அடிமைகள்போல நடத்துகின்ற வேளைகளில், காரணமின்றி இழிவுபடுத்துகின்ற வேளைகளில் எதிர்நோக்கு என்னும் நற்பண்பு நம்மிலிருந்து மறைந்துவிடலாகாது. துன்பமும் துயரமும் அநீதியும் அடிமைத்தனமும் ஒருநாள் மறைந்தொழியும் என்பது கிறித்தவம் தருகின்ற நம்பிக்கை, எதிர்நோக்கு. இதைத் திருத்தந்தை பெனடிக்ட் இம்மடலில் விளக்குகின்றார். இம்மடலின் கருத்து தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது:நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும் எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? (உரோ 8:24). 3) உண்மையில் தோய்ந்த அன்பு (Love in Truth - இலத்தீனில் Caritas in Veritate): இச்சுற்றுமடல் 2009, சூன் 29ஆம் நாள் கையொப்பமிடப்பட்டு, சூலை 7ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதில் திருத்தந்தை பெனடிக்ட் சமூக நீதி பற்றிப் பேசுகின்றார். இன்றைய உலகில் நிலவுகின்ற சமூக அநீதிகள் பல. ஏழை நாடுகளுக்கும் செல்வம் படைத்த நாடுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி செல்வம் குவிக்கின்றன. இலாப நோக்கோடு மட்டுமே வியாபார உறவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசடைவது பற்றிப் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இத்தகு குறைபாடுகளைக் களைய வேண்டும் என்றால் மனிதரிடையே அன்பு வளர வேண்டும் என்று பெனடிக்ட் அறிவுறுத்துகிறார். அந்த அன்பு உண்மையின் அடிப்படையில் எழ வேண்டும். அப்போதுதான் மக்களிடையே நீதி நிலவும் சமுதாயம் உருவாகும். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் சமயத் தலைவர் திருத்தந்தை பெனடிக்ட் நவீன சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார். வத்திக்கான் நகரிலிருந்து திருத்தந்தையின் உரைகள் யூடியூபில் வெளியாகின்றன. முகநூல் வழியாகவும் வத்திக்கான் செய்தித் தொடர்பில் ஈடுபட்டுள்ளது. 2012 திசம்பர் மாதத்திலிருந்து திருத்தந்தை பெனடிக்ட் டிவிட்டர் வழியாகத் தொடர்பு கொள்கின்றார். 12/12/12 அன்று அவர் அனுப்பிய முதல் டிவிட்டர் செய்தி: நண்பர்களே, டிவிட்டர் வழி உங்களோடு தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் தாராள ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு என் இதயப்பூர்வமான ஆசியை வழங்குகின்றேன். திருத்தந்தை உலகில் பரவலாகப் பேசப்படுகின்ற எட்டு மொழிகளில் டிவிட்டர் செய்திகளை அனுப்பினார். அம்மொழிகள்: எசுப்பானியம், போர்த்துகீசியம், ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்சு, போலிஷ், செருமன், அரபி ஆகியன. இலத்தீன் மொழியில் டிவிட்டர் செய்தி 2013, சனவரி 20ஆம் நாள் திருத்தந்தை முதல் முறையாக இலத்தீன் மொழியில் டிவிட்டர் செய்தி அனுப்பினார். "Unitati christifidelium integre studentes quid iubet Dominus? Orare semper, iustitiam factitare, amare probitatem, humiles Secum ambulare" என்று இலத்தீனில் அனுப்பப்பட்ட அச்செய்தி தமிழில், "கிறித்தவர் நடுவே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று உளமார விரும்புவோர் என்ன செய்யவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்? இடைவிடாது இறைவேண்டல் செய்க, நீதி நெறியில் ஒழுகுக, நேர்மையான வாழ்வு நடத்துக, ஆண்டவரோடு பணிவுடன் வழிநடந்திடுக." இலத்தீன் மொழியைப் பேசுவோர் மிகச் சிலரே என்றாலும், எசுப்பானியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு, இத்தாலியம் உரோமேனியம் ஆகிய மொழிகளைப் பெற்றெடுத்த தாய்மொழி என்னும் பெருமை இலத்தீனுக்கு உண்டு என்பதாலும், பல அறிவியல் துறைகளில் வழக்கத்திலுள்ள கலைச் சொற்கள் இலத்தீனில் உள்ளன என்பதாலும் அம்மொழியைப் பலர் பயின்றுவருகின்றனர். திருத்தந்தை பெனடிக்ட் டிவிட்டர் வழியாக 2 மில்லியன் மக்களோடு தொடர்பு கொண்டுள்ளார். இலத்தீன் மொழித் தொடர்பாளர்கள்தான் மிகக் குறைந்த எண்ணிக்கையில், 5000 பேராக உள்ளனர். அவருடைய டிவிட்டர் கைப்பிடி "@Ponttifex" என்னும் இலத்தீன் சொல் ஆகும். அதற்கு "இணைப்பாளர்" (= பாலம் அமைப்பவர்) என்று பொருள். பணி துறப்பு 2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதியிலிருந்து திருத்தந்தை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை 11 பிப்ரவரி 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்டார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாகவும், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து பிப்ரவரி 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து பதவி விலகுவதாக அவ்வறிக்கையில் கூறியிருந்தார். இவர் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் தனது பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் பணி துறப்பு முடிவை எடுத்திருக்கலாம் என்றொரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதினாறாம் பெனடிக்ட், தனக்கு பின் திருதந்தையாக தெரிவு செய்யப்படுபவருக்கு நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை வாக்களித்தார். பணிதுறப்புக்குப்பின்பு வத்திக்கான் நகரின் தோட்டத்திலுள்ள "மாத்தர் எக்லேசியே" (திருச்சபையின் அன்னை) என்னும் துறவு இல்லத்தில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தங்கி இறைவேண்டலில் ஈடுபட்டிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைவு முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வாடிகன் இல்லத்தில் 31 டிசம்பர் 2022 அன்று காலமானார். கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைமைப் பொறுப்பான போப் பதவியை சுமார் 8 ஆண்டுகள் வகித்த 16-வது பெனடிக்ட், 2013-ம் ஆண்டில் உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார். இதன் மூலம் 1415-ம் ஆண்டு 12-வது கிரிகோரிக்குப் பிறகு போப் பதவியில் இருந்து விலகிய முதல் நபரானார். 16-வது பெனடிக்ட் தமது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை வாட்டிகனில் உள்ள மாத்தர் எக்லெசியா மடாலயத்தில் கழித்தார். மேற்கோள்கள் 1927 பிறப்புகள் செருமானிய மெய்யியலாளர்கள் செருமானிய திருத்தந்தையர்கள் 2022 இறப்புகள் கர்தினால் குழு முதல்வர்கள் பணி துறந்த திருத்தந்தையர்கள்
3200
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D
அலெக்சாண்டர் கிரகாம் பெல்
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்." இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். வாழ்க்கை இளமை அலெக்சாண்டர் பெல் ஸ்கொட்லாந்தில் எடின்பேர்க்கில் 3 மார்ச் 1847 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய குடும்ப நண்பரான அலெக்சாண்டர் கிரகாம் என்பவரின் மேல் மிகுந்த மதிப்பு கொண்டு அவருடைய பெயரையும் சேர்த்து அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது. அலெக்சாண்டருக்கு மெல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர். இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். லண்டனில் வசித்த அவருடைய தாத்தா, டப்ளினில் உள்ள அவருடைய மாமா, எடின்பர்க்கில் உள்ள அவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஆகிய அனைவரும் பணி முறையாக நாவன்மை பயிற்றுவிப்பவர்களாகத் (Professed elocutions) திகழ்ந்து வந்தனர். கண்பார்வை அசைவுகளினால் பல்வேறு உணர்வுகளை எவ்வாறு காட்டுவது? உதடுகளின் அசைவைக் கொண்டு ஒருவர் பேசுவதைக் காது கேளாதோர் எவ்வாறு புரிந்து கொள்வது? என்பதைப் பற்றியெல்லாம் பெல்லின் தந்தை பல நூல்களை எழுதியுள்ளார். எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதான போது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது. இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார் . பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவளையே திருமணம் செய்துகொண்டார். பணிகள் கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது. போஸ்டன் நகரத்தில் வசித்த போது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக் கூடத்தை ஏற்படுத்தினார். அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார் .அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பலகலைக் கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது. ஆய்வு பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார் பெல். தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று கிரகாமுக்கு 18 வயதிலேயே தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபடார் . அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன. 1875 இல் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. முதலில் தெளிவில்லாத பேச்சொலிகளை அனுப்ப முடிந்தது. 1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் " வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்."(Watson, come here, I want to see you)என்பதுதான். இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார். பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார். 1877 இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laboratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார். கண்டு பிடிப்புகள் பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை. ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார். விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார். பிற்காலத்தில் கடல் விமானத்தைச் சீர்திருத்தி அமைப்பதில் வெற்றி கண்டார். ஆடுகள் வளர்க்கும் முயற்சியில் புதுமையைப் புகுத்தினார். ஒவ்வொரு முறையும் இரட்டைக் குட்டிகளை ஈடும் பெண் ஆடுகளை உருவாக்கவும் திட்டமிட்டார். பாலைவனங்களில் நாடுகாண முற்படும் படைவீரர்களுகு, காற்றிலுள்ள மிகுந்த ஈரத்தை வடிகட்டி உதவக் கூடிய அரிய கருவியைக் கண்டுபிடித்தார். காது கேளாதோருக்குப் பேச்சுப் பயிற்சியை வளர்ப்பதற்கான சங்கம் ஒன்றை நிறுவினார். கண் தெரியாதவர்களுக்குப் பிரெய்ல் முறையைக் கண்டு பிடித்த ஹெலன் கெல்லருக்கு பெல் பல உதவிகளைச் செய்துள்ளார். ஒலியியல் அடிப்படையில் உலக ஆங்கிலம் என்பதை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். தனிப்பட்ட முறையிலும், பிற அறிவியலறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார் என்பது அவருடைய வரலாற்றில் மிக முக்கியமான அம்சமாகும். சிறப்புகள் 1882 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 1888 இல் உலக புவியியல் கழகத்தை(National Geograph Society) ஆரம்பித்த உறுப்பினர்களில் ஒருவராகவும், அந்தக் கழகத்தின் இரண்டாவது தலைவராகவும் விளங்கினார். He has been described as one of the most influential figures in human history. பிரெஞ்சு அரசு வழங்கிய 'லெஜியன் ஆப் ஆனர்'(Legion of Honour) விருது Acedemic Francise விருது வோல்டா பரிசு ராயல் சொசைட்டி ஆப் ஆர்ட்ஸ்(லண்டன்), ஆல்பெர்ட் பதக்கம்(1902) உர்ஸ்பர்க் பல்கலைக் கழகம் வழங்கிய முனைவர் பட்டம் எடிசன் பதக்கம்(1914) போன்ற பல்வேறு சிறப்புகளையும் விருதுகளையும் பெற்றார். மறைவு அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் காலமானார். அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. காப்புரிமைகள் Improvement in Transmitters and Receivers for Electric Telegraphs, filed March 1875, issued April 1875 (multiplexing signals on a single wire) Improvement in Telegraphy, filed February 14, 1876, issued March 7, 1876 (Bell's first telephone patent) Improvement in Telephonic Telegraph Receivers, filed April 1876, issued June 1876 Improvement in Generating Electric Currents (using rotating permanent magnets), filed August 1876, issued August 1876 Electric Telegraphy (permanent magnet receiver), filed January 15, 1877, issued January 30, 1877 Apparatus for Signalling and Communicating, called Photophone, filed August 1880, issued December 1880 Aerial Vehicle, filed June 1903, issued April 1904 அடிக்குறிப்பு மேற்கோள்கள் துணை நூல்கள் Alexander Graham Bell (booklet). Halifax, Nova Scotia: Maritime Telegraph & Telephone Limited, 1979. Ayers, William C., Therese Quinn and David Stovall, eds. The Handbook of Social Justice in Education. London: Routledge, 2009. . Bell, Alexander Graham. The Question of Sign-Language and The Utility of Signs in the Instruction of the Deaf—Two papers. Washington, D.C.: Sanders Printing Office, 1898. Bethune, Jocelyn. Historic Baddeck (Images of our Past series). Halifax, Nova Scotia, Canada: Nimbus Publishing, 2009. . Bruce, Robert V. Bell: Alexander Bell and the Conquest of Solitude. Ithaca, New York: Cornell University Press, 1990. . Black, Harry. Canadian Scientists and Inventors: Biographies of People who made a Difference. Markham, Ontario, Canada: Pembroke Publishers Limited, 1997. . Boileau, John. Fastest in the World: The Saga of Canada's Revolutionary Hydrofoils. Halifax, Nova Scotia, Canada: Formac Publishing Company Limited, 2004. . Dunn, Andrew. Alexander Graham Bell (Pioneers of Science series). East Sussex, UK: Wayland (Publishers) Limited, 1990. . Eber, Dorothy Harley. Genius at Work: Images of Alexander Graham Bell. Toronto, Ontario, Canada: McClelland and Stewart, 1982. . Evenson, A. Edward. The Telephone Patent Conspiracy of 1876: The Elisha Gray — Alexander Bell Controversy. Jefferson, North Carolina: McFarland Publishing, 2000. . Gray, Charlotte. Reluctant Genius: Alexander Graham Bell and the Passion for Invention. New York: Arcade Publishing, 2006. . Grosvenor, Edwin S. and Morgan Wesson. Alexander Graham Bell: The Life and Times of the Man Who Invented the Telephone. New York: Harry N. Abrahms, Inc., 1997. . Groundwater, Jennifer. Alexander Graham Bell: The Spirit of Invention. Calgary, Alberta, Canada: Altitude Publishing, 2005. . Lusane, Clarence. Hitler's Black Victims: The Historical Experiences of Afro-Germans, European Blacks, Africans, and African Americans in the Nazi Era. Hove, East Sussex, UK: Psychology Press, 2003. . Hart, Michael H. The 100: A Ranking of the Most Influential Persons in History. New York: Citadel, 2000. . Mackay, James. Sounds Out of Silence: A life of Alexander Graham Bell. Edinburgh: Mainstream Publishing Company, 1997. . MacKenzie, Catherine. Alexander Graham Bell. Whitefish, Montana: Kessinger Publishing, 2003. . MacLeod, Elizabeth. Alexander Graham Bell: An Inventive Life. Toronto, Ontario, Canada: Kids Can Press, 1999. . Matthews, Tom L. Always Inventing: A Photobiography of Alexander Graham Bell. Washington, D.C.: National Geographic Society, 1999. . Micklos, John Jr. Alexander Graham Bell: Inventor of the Telephone. New York: Harper Collins Publishers Ltd., 2006. . Miller, Don and Jan Branson. Damned For Their Difference: The Cultural Construction Of Deaf People as Disabled: A Sociological History. Washington, D.C.: Gallaudet University Press, 2002. . Mims III, Forest M. "The First Century of Lightwave Communications." Fiber Optics Weekly Update(Information Gatekeepers), February 10–26, 1982, pp. 6–23. Mullett, Mary B. The Story of A Famous Inventor. New York: Rogers and Fowle, 1921. Parker, Steve. Alexander Graham Bell and the Telephone(Science Discoveries series). New York: Chelsea House Publishers, 1995. . Petrie, A. Roy. Alexander Graham Bell. Don Mills, Ontario: Fitzhenry & Whiteside Limited, 1975. . Phillips, Allan. Into the 20th Century: 1900/1910 (Canada's Illustrated Heritage). Toronto, Ontario, Canada: Natural Science of Canada Limited, 1977. . Ross, Stewart. Alexander Graham Bell (Scientists who Made History series). New York: Raintree Steck-Vaughn Publishers, 2001. . Shulman, Seth. The Telephone Gambit: Chasing Alexander Bell's Secret. New York: Norton & Company, 2008. . Toward, Lilias M. Mabel Bell: Alexander's Silent Partner. Toronto, Ontario, Canada: Methuen, 1984. , . Town, Florida. Alexander Graham Bell. Toronto, Ontario, Canada: Grolier Limited, 1988. . Tulloch, Judith. The Bell Family in Baddeck: Alexander Graham Bell and Mabel Bell in Cape Breton. Halifax, Nova Scotia, Canada: Formac Publishing Company Limited, 2006. . Walters, Eric. The Hydrofoil Mystery. Toronto, Ontario, Canada: Puffin Books, 1999. . Webb, Michael, ed. Alexander Graham Bell: Inventor of the Telephone. Mississauga, Ontario, Canada: Copp Clark Pitman Ltd., 1991. . Winfield, Richard. Never the Twain Shall Meet: Bell, Gallaudet, and the Communications Debate. Washington, D.C.: Gallaudet University Press, 1987. . Wing, Chris. Alexander Graham Bell at Baddeck. Baddeck, Nova Scotia, Canada: Christopher King, 1980. Winzer, Margret A. The History Of Special Education: From Isolation To Integration. Washington, D.C.: Gallaudet University Press, 1993. . வெளியிணைப்புகள் Biography at the Dictionary of Canadian Biography Online Alexander Graham Bell Institute at Cape Breton University Bell Homestead, National Historic Site Bell Telephone Memorial erected in honor both Bell and the Invention of the Telephone in Brantford, Ontario's Alexander Graham Bell Gardens திண்ணை இதழில் பெல் பற்றிய கட்டுரை அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் Institute Bell Homestead, National Historic Site Biography and photos at the Canada's Telecommunications Hall of Fame website Biographical video footage at the Canada's Telecommunications Hall of Fame website Appleton's Biography edited by Stanley L. Klos Alexander Graham Bell National Historic Site Museum located in Baddeck, Nova Scotia containing many of Bell's experiments and models Alexander Graham Bell family papers Online version at the Library of Congress comprises a selection of 4,695 items (totaling about 51,500 images) containing correspondence, scientific notebooks, journals, blueprints, articles, and photographs documenting Bell's invention of the telephone and his involvement in the world's first telephone company, his family life, his interest in the education of the deaf and his aeronautical and other scientific works Bell's path to the invention of the telephone Bell's speech before the American Association for the Advancement of Science in Boston on August 27, 1880, presenting the Photophone, very clear description; published as "On the Production and Reproduction of Sound by Light" in the American Journal of Sciences, Third Series, vol. XX, No. 118, October 1880, pp. 305–324 and as "Selenium and the Photophone" in Nature, September 1880 AlexanderBell.com – Telecom pioneer Alexander Graham Bell gravesite Alexander Graham Bell: Biography and Much More from Answers.com Excellent summary of Alexander Graham Bell's life, has many useful dates for important parts of his life Bell family tree American Treasures of the Library of Congress, Alexander Graham Bell – Lab notebook I, pp. 40–41 (image 22) Scientists' profile: Alexander Graham Bell (Italian) Timeline for Antonio Meucci National Academy of Sciences Biographical Memoir Listen to Alexander Graham Bell's Voice | Audio Gallery | Smithsonian.com இவற்றையும் பார்க்கவும் தொலைபேசி அமெரிக்க அறிவியலாளர்கள் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் 1847 பிறப்புகள் 1922 இறப்புகள் பிரித்தானியக் கண்டுபிடிப்பாளர்கள் அமெரிக்க இயற்பியலாளர்கள் அமெரிக்க அறியொணாமையியலாளர்கள் வானூர்தியியல் முன்னோடிகள் கனடிய இயற்பியலாளர்கள் எடின்பரோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்
3203
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85.%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
அ. மாதவையர்
அ. மாதவையர் அல்லது அ. மாதவையா (A. Madhaviah, ஆகத்து 16, 1872 – அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். பிறப்பு அ. மாதவையர், திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். கல்வி தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892-இல் முதல் மாணவராக முடித்தார். பணி பட்டம் பெற்றதும் தான் பயின்ற சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தனது குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா (Salt and Abkari department) நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector ஆக ஆந்திராவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் தெலுங்கு மொழியினையும் கற்றறிந்தார். தொடர்கதை எழுத்தாளர் மாதவையர் தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903 ஆம் ஆண்டு முத்துமீனாக்ஷி என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது. 1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1924 சித்திரையில் பஞ்சாமிர்தம் என்ற மாத இதழைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை அவ்விதழில் எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையர் மரணமடைந்தார். இதழாளர் அ. மாதவையர் தமிழர் நேசன், பஞ்சாமிர்தம் ஆகிய இதழ்களை வெளியிட்டார். மரணம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து மரணமடைந்தார். குடும்பம் அ. மாதவையாவுக்கு அக்காலத்தில் இருந்த அவரது குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) திருமணம் செய்யப்பட்டது. அவருக்கு, மா. அனந்த நாராயணன், மீனாட்சி தியாகராஜன், மா. கிருஷ்ணன், முக்தா வெங்கடேஷ் என்ற முத்துலட்சுமி, விசாலாட்சி, டாக்டர் சரசுவதி உட்டபட ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என்று எட்டு மகவுகள். அறிவியல் எழுத்தாளர் பெ. நா. அப்புசாமி இவருக்கு அண்ணன் மகன். சுவையான செய்திகள் 1914 ஆம் ஆண்டில் இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டார். 1892 ஆம் ஆண்டில் சாவித்திரியின் கதை (அல்லது சாவித்திரியின் சரித்திரம்) என்ற நாவலை எழுதத் தொடங்கினார். தமிழில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற நாவலுக்குப் பின்பு வந்த இரண்டாம் தமிழ் நாவல், சாவித்திரியின் கதை. ஆனால் நான்கு முறை தடைப்பட்டு 1903இல் முழுமையாக வந்ததாலும், பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல் 1896இல் வந்ததாலும், தமிழின் இரண்டாம் நாவல் என்ற தகுதி பத்மாவதி சரித்திரம் நாவலுக்குக் கிட்டாமல் போனது. படைப்புகள் நாவல் பத்மாவதி சரித்திரம் (1898) முத்துமீனாட்சி (1903) விஜயமார்த்தாண்டம் (1903) Thillai Govindan (1903) Satyananda (1909) The story of Ramanyana (1914) Clarinda (1915) Lieutenant Panju (1915) Markandeya (1922) Nanda (1923) Manimekalai (1923) பத்மாவதி சரித்திரம் மூன்றாம் பாகம் (1928, முற்றுப்பெறாதது) சிறுகதை Kusika's short stories - இரண்டு பாகங்களாக 1916 இலும், 1923-24இலும் வெளிவந்தன. குசிகர் குட்டி கதைகள் (ஆங்கிலத்திலிருந்து அ. மாதவையாவால் தமிழாக்கம் செய்யப்பட்டவை) (1924) நாடகம் உதயலன் என்னும் கொற்கைச் சிங்களவன் (ஷேக்ஸ்பியர் எழுதிய 'ஒத்தெல்லோ எனும் வெனிசு மோரியன்' நாடகத்தின் தமிழாக்கம்) (1903) திருமலை சேதுபதி (1910) மணிமேகலை துறவு (1918) ராஜமார்த்தாண்டம் (1919) பாரிஸ்டர் பஞ்சநதம் (1924) கவிதை Poems (20 கவிதைகள்) (1903) Dox vs Dox poems (1903) பொது தர்ம சத்கீத மஞ்சரி (இரண்டு பாகங்கள், 1914) The Ballad of the penniless bride (1915) புது மாதிரிக் கல்யாணப் பாட்டு (1923) இந்திய தேசிய கீதங்கள் (1925) இந்தியக் கும்மி கட்டுரை Thillai Govindan's Miscellany (1907) ஆசாரச் சீர்திருத்தம் (1916) சித்தார்த்தன் (1918) பால வினோதக் கதைகள் (1923) பால ராமாயணம் (1924) குறள் நானூறு (1924) Dalavai Mudaliar (1924) தளவாய் முதலியார் குடும்ப வரலாறு (1924) தட்சிண சரித்திர வீரர் (1925) இதைத் தவிர தமிழில் சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவை பஞ்சாமிர்தம் என்ற இதழில் 1924 முதல் 1925 வரை வெளிவந்தன. அதைப் போலவே ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன. இவற்றையும் பார்க்கவும் மாதவையா கிருட்டிணன் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Padmavati - A. Madhaviah மொழிபெயர்ப்பு: மீனாட்சி தியாகராஜன், கதா பதிப்பகம் A. Madhaviah - A Biography and a Novella, Sita Anantha Raman and Vasantha Surya, Oxford University Press தமிழக எழுத்தாளர்கள் 1872 பிறப்புகள் 1925 இறப்புகள் திருநெல்வேலி மாவட்ட நபர்கள் இதழாசிரியர்கள் தமிழ் இதழியலாளர்கள் தமிழக ஊடகவியலாளர்கள்
3206
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81
சாகித்திய அகாதமி விருது
சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. சாகித்ய அகாதமி சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954-இல் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு.அது இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு தொடங்கப்பட்டது. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது. இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளைச் செய்வது சாகித்ய அகாதமி. சாகித்திய அகாதமி உறுப்பினராக இருந்தோர் சாகித்ய அகாதமி கழகத்தில் அனைத்து மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. தமிழுக்கான இடத்தில் உறுப்பினராக இருந்தோர்: நெ. து. சுந்தரவடிவேலு நாவலர் நெடுஞ்செழியன் (அப்போதைய சென்னை மாநிலக் கல்வி அமைச்சர்) பரிசுத் தொகை சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் ரூபாய் 5,000 வழங்கப்பட்டது. பின்னர் 1983-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40,000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003-ஆம் ஆண்டில் ரூபாய் 50,000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் முறை இது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஓர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றித் தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும். முதற்கட்டமாகத் தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஓரிரண்டு வல்லுநர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுநர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுநரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்குத் தேர்வுக்குச் செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது. சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள் சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள் சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள் சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்ற எழுத்தாளர்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சாகித்ய அகாதமிக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் இந்திய இலக்கிய விருதுகள் சாகித்திய அகாதமி விருதுகள் பரிசுகளும் விருதுகளும்
3207
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81
ஞானபீட விருது
ஞான பீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு சைனக் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின் என்பவர். இந்தியாவின் முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான டாக்டர். இராஜேந்திரபிரசாத் இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுவழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல தொழில் முனைவோரிடம் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம். இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன சரசுவதி சிலையை உள்ளடக்கியது. 1961ல் இந்த விருது நிறுவப்பட்டது. 1965ல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார். 1982 வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகபட்சமாக, இந்தி மொழி எழுத்தாளர்கள் பதினொரு முறையு இந்த விருதைப் பெற்றுள்ளார்கள். 2015 ஆம் ஆண்டில் பரிசுத் தொகையானது இந்திய மதிப்பில் 11 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மொத்தமுள்ள அங்கீகரிக்கப்பட்ட இருபத்தைந்து மொழிகளில் இதுவரை மொத்தம் பதினைந்து மொழிகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி மொழிகளில் இதுவரை பதினொரு விருதுகளும், கன்னடம் மொழிகளில் எட்டு விருதுகளும், வங்காள மொழியில் இதுவரை 6 விருதுகளும், மலையாளத்தில் 6 விருதுகளும், குஜராத்தி , மராத்திய மொழி, ஒடியா மொழி, உருது போன்ற மொழிகளில் தலா நான்கு விருதுகளும், தெலுங்கு மூன்று விருதுகளும், அசாமிய மொழி, பஞ்சாபி மொழி, மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் இரண்டு விருதுகளும், காஷ்மீரி மொழிகளில், கொங்கணி மொழி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒரு முறையும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் ஐம்பத்தி ஏழு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஏழு நபர்கள் பெண்கள் ஆவர். ஆஷா பூர்ணாதேவி இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆவார். 1965 ஆம் ஆண்டில் புரோதம் புரோதிசுருதி (பொருள்: முதல்சத்தியம்) எனும் வங்காள புதினத்திற்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. பிண்ணனி பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று நிறுவனம் எனும் நிறுவனத்தை 1944 இல் சகு சாந்தி பிரசாத் ஜெயின் என்ற சகு சைனக் குடும்பத்தைச் சேர்ந்தவரால் தோற்றுவிக்கப்பட்டது. மே 1961 இல் இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து சிறந்த நூலிற்கான விருது வழங்க வேண்டும் என நினைத்தனர். பின் நவம்பர் மாத இறுதியில் ரமா ஜெயின் , (பாரதிய ஞானபீடத்தைத் தோற்றுவித்தவர் ) சில இலக்கிய வல்லுநர்களை அழைத்து இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களில் சிலர் காகா காலேல்கர், ஹரிவன்சராய் பச்சன்,ராம்தாரி சிங் திங்கர் , ஜெய்னெந்திர குமார், ஜெகதீசு சந்திர மார்தூர், பிரபாகர் மாசே, அக்சய குமார் ஜெயின் மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின். மேலும் இது பற்றி 1962 இல் அனைத்திந்திய குஜராத்திம் சாகித்திய பரிசத் மற்றும் பாரதிய பாஷா பரிசத்தின் ஆண்டுக் அமர்வில் விவாதிக்கப்பட்டது. ஏப்ரல் 2, 1962 இல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300 எழுத்தளர்களை புதுதில்லிக்கு அழைத்து அவர்களை இரு அமர்வுகளாக தரம்வீர் பாரதி அவர்கள் பரிசோதித்து பின் அந்த முன்வரைவினை பிரசாத்திடம் வழங்கினார். முதல் தேர்வுக்குழுக் கூட்டமானது மார்ச் 16, 1963 இல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரசாத் அவர்கள் பெப்ரவரி 28, 1963 இல் இறந்தார். எனவே காகா காலேல்கர் மற்றும் சம்பூர்ணநந்தர் ஆகியேரை தற்காலிக நிறுவனர்களாக குழு நிர்ணயம் செய்தது. முதல் தேர்வுக் குழு உறுப்பினர்கள் முதல் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நிரஞ்சன் ராய், கரண் சிங், ஆர். ஆர். திவாகர், வி.ராகவன், பி. கோபால் ரெட்டி, ஹரேகிருஷ்ணா மஹாதப், ரமா ஜெயின், மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின் ஆகியோர் இருந்தனர். சம்பூர்ணாநந்தர் தலைவராக செயல்பட்டார். 1921 முதல் 1951 ஆம் ஆண்டுகள் வரையிலான காலங்களில் எழுதப்பட்ட நூல்களை முதல் விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டனர். விதிமுறைகள், தேர்வு செய்யும் நடைமுறைகள் விருதிற்காக பல இலக்கிய வல்லுநர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்கள், பல மொழிகளைச் சேர்ந்த சங்கங்கள், விமர்சகர்கள். போன்றவர்களிடமிருந்து  பரிந்துரைகள் பெறப்படுகின்றன. தற்சமயம் விருது பெற்ற ஒருவரின் நூல்களை அடுத்த இரண்டு வருடத்திற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வுக்குழுவானது சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற மற்றும் நேர்மையான ஏழு முதல் பதினொரு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு உறுப்பினர்களும் மூன்று ஆண்டுகள் தேர்வுக் குழு உறுப்பினர்களாக செயல்படுவர்.தேவையேற்படின் அந்தக் காலத்தை மேலும் இரு ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு செய்யலாம். பரிந்துரைக்கு ஏற்கப்பட்ட நூல்கள் பகுதி அல்லது முழுவதுமாக இந்தி அல்லது ஆங்கிலம்மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்னரே அதனை ஆலோசனைக் குழுக்கள் மதிப்பீடு செய்வர். ஒரு குறிப்பிட்ட ஆண்டிக்கான தேர்வு பெற்றவர் பற்றிய அறிவிப்பை தேர்வுக் குழு வெளியிடும். இதற்கான முழு அதிகாரமும் தேர்வுக் குழுவிற்கே உள்ளது. ஞான பீட விருது பெற்றோர் பட்டியல் (ஆண்டு - பெயர் - ஆக்கம் - மொழி) 1965 - ஜி சங்கர குருப் - ஓடக்குழல் (புல்லாங்குழல்) - மலையாளம் 1966 - தாராசங்கர் பந்தோபாத்தியாய் - கணதேவ்தா - வங்காள மொழி 1967 - குவெம்பு (முனைவர் கே.வி. புட்டப்பா) - ஸ்ரீ இராமயண தரிசனம் - கன்னடம் 1967 - உமா ஷங்கர் ஜோஷி - நிஷிதா - குஜராத்தி 1968 - சுமித்ரானந்தன் பந்த் - சிதம்பரா - ஹிந்தி 1969 - பிராக் கோரக்புரி - குல்-இ-நக்மா - உருது 1970 - விஸ்வநாத சத்யநாராயணா - இராமயண கல்பவ்ரிக்ஷமு - தெலுங்கு 1971 - விஷ்ணு டே - ஸ்ம்ருதி சட்டா பவிஷ்யத் - வங்காள மொழி 1972 - இராம்தாரி சிங் தினகர் - ஊர்வசி - ஹிந்தி 1973 - தத்தாத்ரேய ராமச்சந்திரன் பிந்த்ரே - நகுதந்தி - கன்னடம் 1973 - கோபிநாத் மொஹந்தி - மட்டிமடல் - ஒரியா 1974 - விஷ்ணு சகரம் காண்டேகர் - யயாதி - மராத்தி 1975 - அகிலன் - சித்திரப்பாவை - தமிழ் 1976 - ஆஷாபூர்ணா தேவி - ப்ரதம் ப்ரதிஸ்ருதி - வங்காள மொழி 1977 - க. சிவராம் கரந்த் - முக்கஜ்ஜிய கனசுகலு (ஆயாவின் கனவுகள்) - கன்னடம் 1978 - ச.ஹ.வ. அஜ்னேயா - கித்னி நாவோம் மே கித்னி பார் (எத்தனை முறை எத்தனை படகுகள் - ஹிந்தி 1979 - பிரேந்த்ர குமார் பட்டாச்சார்யா - ம்ருத்யுஞ்சய் (சாகாவரம்) - அஸ்ஸாமி 1980 - ச.க.பொட்டிக்கட் - ஒரு தேசத்திண்டே கதா (ஒரு நாட்டின் கதை) - மலையாளம் 1981 - அம்ரிதா பிரீதம் - காகஜ் தே கான்வாஸ் - பஞ்சாபி மொழி 1982 - மஹாதேவி வர்மா - ஹிந்தி 1983 - மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் - சிக்கவீர ராஜேந்திரா - கன்னடம் 1984 - தகழி சிவசங்கரப் பிள்ளை - மலையாளம் 1985 - பன்னாலால் படேல் - குஜராத்தி 1986 - சச்சிதானந்த் ரௌத் ராய் - ஒரியா 1987 - விஷ்ணு வாமன் ஷிர்வாத்கர் - (குசுமக்ராஜ்) - மராத்தி 1988 - முனைவர். சி. நாராயண ரெட்டி - தெலுங்கு 1989 - குர்ராடுலென் ஹைதர் - உருது 1990 - வி. கே. கோகாக் - பாரத சிந்து ரஷ்மி - கன்னடம் 1991 - சுபாஷ் முகோபாத்யாய் - வங்காள மொழி 1992 - நரேஷ் மேத்தா - ஹிந்தி 1993 - சீதாகாந்த் மஹாபாத்ரா - ஒரியா 1994 - உ. இரா. அனந்தமூர்த்தி - கன்னடம் 1995 - எம். டி. வாசுதேவன் நாயர் - மலையாளம் 1996 - மகாசுவேதா தேவி - வங்காள மொழி 1997 - அலி சர்தார் ஜாஃப்ரி - உருது 1998 - கிரிஷ் கர்னாட் - கன்னடம் 1999 - நிர்மல் வர்மா - ஹிந்தி 1999 - குர்தியால் சிங் - பஞ்சாபி 2000 - இந்திரா கோஸ்வாமி - அஸ்ஸாமி 2001 - ராஜேந்திர கேஷவ்லால் ஷா - குஜராத்தி 2002 - ஜெயகாந்தன் - தமிழ் 2003 - விந்தா கரண்டிகர்' - மராத்தி மொழி 2004 - ரகுமான் ராகி சுப்துக் சோடா, கலாமி ராகி மற்றும் சியா ரோட் ஜாரேன் மான்சு - காஷ்மீரி மொழி 2005 - கன்வர் நாராயண் இந்தி மொழி 2006 - ரவீந்திர கேல்கர் கொங்கணி 2006 - சத்திய விரத் சாஸ்திரி சமசுகிருதம் 2007 - ஓ. என். வி. குரூப்'' மலையாளம் 2009 - அமர் காந்த் - இந்தி & ஸ்ரீ லால் சுக்லா - இந்தி 2010- சந்திர சேகர கம்பரா - கன்னடம் 2011- பிரதிபா ரே யஜனசெனி - ஒரியா 2012 - ரவுரி பாரத்வாச பாகுடுரல்லு - தெலுங்கு 2013 - கேதார்நாத் சிங் - இந்தி 2014- பாலச்சந்திர நெமதே - மராத்தி 2015- ரகுவீர் சவுத்ரி - குஜராத்தி 2017 _ கிருஷ்ணா சோப்தி- இந்தி 2018 - அமிதவ் கோசு - ஆங்கிலம் 2019 - அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி - மலையாளம் 2021 - நீல்மனி பூக்கன் - அசாமி 2022 - தாமோதர் மவுசோ - கொங்கணி மேற்கோள்கள் குறிப்புகள் வெளியிணைப்புகள் இந்திய இலக்கிய விருதுகள் பரிசுகளும் விருதுகளும்
3208
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
குறள் வெண்பா
குறள் வெண்பா என்பது வெண்பா வகையின் இரண்டு அடி உள்வகையாகும். புகழ் பெற்ற திருக்குறள் குறள் வெண்பா வகையையே சார்ந்தது. எடுத்துக்காட்டு எடுத்துக் காட்டாக ஒரு திருக்குறள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. எழுத்துகள் எல்லாவற்றிற்கும் முதலெழுத்தாக அகரம் இருப்பது போல உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் முதலாளாகக் கடவுள் இருக்கிறார் எனப் பொருள்பட இதனைத்  திருவள்ளுவர் ஆக்கியுள்ளார். திருக்குறள் நூலில் முதலாவது குறள் இதுவே. நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாக முதலாமடியும் மூன்று சீர்களைக் கொண்ட சிந்தடியாக இரண்டாமடியும் அமைய, மொத்தமாக ஏழு சீர்களைக் கொண்ட குறள் வெண்பாவாக இத்திருக்குறளைக் காணலாம். 'அகர' என்ற முதற் சீரில் "அ" உம் 'ஆதி' என்ற நான்காம் சீரில் "ஆ" உம் மோனையாக வந்துள்ளது. அதேவேளை முதலடி முதற் சீரில் "அக" உம் இரண்டாமடி முதற் சீரில் "பக" உம் எதுகையாக வந்துள்ளது. இவ்வாறு எதுகை அமைந்தால் "ஒரு விகற்பக் குறள் வெண்பா" என்றும் இவ்வாறு எதுகை அமையாத வேளை "இரு விகற்பக் குறள் வெண்பா" என்றும் சொல்லப்படுகிறது. ஈரசைச் சீர்கள் ஆறும் மூவசைச் சீர் ஒன்றும் அதேவேளை ஈற்றடி ஈற்றுச் சீர் 'பிறப்பு' எனும் வாய்பாட்டிலும் இக்குறள் அமைந்திருக்கிறது. அதாவது, ஈரசைச் சீர்களும் மூவசைச் சீர்களில் காய்ச் சீரும் ஈற்றடி ஈற்றுச் சீர் ஓரசைச் சீரும் (அல்லது உகரம் ஏறிய ஓரசைச் சீரும்) வெண்பாவில் வருவது இயல்பே! மாமுன் நிரை (இயற்சீர் வெண்டளை), காய்முன் நேர் (வெண்சீர் வெண்டளை) என்றவாறு இக்குறளில் தளைகள் வந்துள்ளது. இங்கே விளமுன் நேர் வராவிடினும் அதுவும் இயற்சீர் வெண்டளை ஆகும். குறள் வகை இனக்குறள், விகற்பக்குறள் என்று குறள் இரண்டு வகைப்படும் என்று யாப்பருங்கல விருத்தி குறிப்பிட்டு அவற்றிற்கு எடுத்துக்காட்டுகளைத் தருகிறது. இனக்குறள் சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு [மோனை] தன்னுயிர்க் கின்னாமை தான்றிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் [எதுகை] இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் [முரண்] கடிகை நுதல்மடவாள் சொல்லும் கரும்பு படாஅ முலைமேல் துகில் [இயைபு] கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் [அளபெடை] விகற்பக் குறள் அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் [விகற்பம்] அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ எனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு [விகற்பம்] அறிஞர் இயம்பிய உள்ளத்தும் வைகுமே நன்னுதல் நோக்கோர் வளம் [செந்தொடை] அலகிடுதல் என்பது குறள். இதனை இவ்வாறு முறையாக அலகிடும்போது குறள் வெண்பாவின் இலக்கண அமைதி விளங்கும். சீர்நிலை தளைநிலை யாப்பு இலக்கணப்படித் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கையாண்ட நுட்பங்களையே மேலே காண்கின்றோம். இன்னோர் எடுத்துக்காட்டாக 110ஆவது குறளைப் பார்ப்போம். இதுவோர் இரு விகற்பக் குறள் வெண்பா ஆகும். இக்குறளுக்கு  "எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை." என மு. வரதராசன் விளக்கம் தருகின்றார். மேலும் பார்க்க சிந்தியல் வெண்பா நேரிசை வெண்பா உசாத்துணைகள் யாப்பறிந்து பாப்புனைய - மருதூர் அரங்கராசன் யாப்பதிகாரம் - புலவர் குழந்தை யாப்பரங்கம் - புலவர் வெற்றியழகன் மேற்கோள் வெளி இணைப்புகள் திருக்குறள் அலகிடுதல் வெண்பா திருக்குறள்
3213
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
ராதிகா சரத்குமார்
இராதிகா சரத்குமார் (Raadhika Sarathkumar, பிறப்பு: ஆகத்து 21, 1962) தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் , அரசியல்வாதி ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார். வாழ்க்கைச் சுருக்கம் ராதிகா இலங்கையில் கொழும்பு நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும் அவரது மனைவிகளில் ஒருவரான கீதாவிற்கும் முதல் மகளாக பிறந்தார். மேலும் நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார். நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். இதற்கு முன்னதாகவே ராதிகாவிற்கு இரண்டு முறை திருமணங்கள் நடந்து விவாகரத்துப் பெற்றார். முதல் முறையாக மலையாள மற்றும் தமிழ் திரைப்பட முன்னாள் நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. நடிப்பு அனுபவம் இவர் தமிழ் திரையுலகில் 1980-1990களில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், மோகன் போன்றவர்களுடன் தவிர்க்க முடியாத இணை கதாநாயகியாக நடித்துள்ளர். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகருடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் 1980 முதல் 1990 வரை பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் 90களுக்கு பிற்பகுதியில் தமிழ் திரைப்படங்களில் நடிகை லட்சுமி, ஸ்ரீவித்யா, ராதிகா என்ற மூன்று கதாநாயகிகளும் போட்டி போட்டு கொண்டு தாயார் மற்றும் முதுமையான கதாபாத்திரத்தில் குணச்சித்திர வேடம் ஏற்று திறம்பட நடித்தனர். மேலும் ராதிகா அவர்கள் தனது முதல் திரைப்படமான கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்கும் போதே அவரது தாயார் கீதா அவர்கள் ராதிகா நடிப்பில் சிறிதும் கவர்ச்சியான உடையோ அல்லது கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்ற நிபந்தனையோடு நடிக்க வைத்தார். அதனாலே அன்று முதல் இன்று வரை ராதிகா அவர்கள் கவர்ச்சி விதமான கதாபாத்திரங்களை தவிர்த்து விட்டு நடித்து வருகிறார். இந்த நடிகைகள் பட்டியலில் நடிகை ராதிகா மட்டுமே 2000க்கு பிறகு தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான ராடான் மீடியாவொர்க்ஸ் சார்பில் சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி போன்ற மெகா ஹிட் நாடகங்களில் நடித்து அதிலும் மைய்ய கதாநாயகியாகவும், தாயாராகவும், கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அரசியல் வாழ்க்கை 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் தனது கணவர் சரத்குமாருடன் அதிமுகவில் இணைந்தார். அக்டோபர் 18, 2006 இல் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 2007 முதல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறார். நடித்த திரைப்படங்களில் சில கிழக்கே போகும் ரயில் நிறம் மாறாத பூக்கள் இன்று போய் நாளை வா ஈரவிழிக் காவியங்கள் போக்கிரி ராஜா மூன்று முகம் ரெட்டை வால் குருவி பூந்தோட்ட காவல்காரன் தைப் பொங்கல் ஊர்க்காவலன் கிழக்குச் சீமையிலே வீரபாண்டியன் தெற்கத்திக்கள்ளன் சிப்பிக்குள் முத்து நல்லவனுக்கு நல்லவன் தாவணிக் கனவுகள் பசும்பொன் நானே ராஜா நானே மந்திரி தூங்காதே தம்பி தூங்காதே கேளடி கண்மணி நினைவுச் சின்னம் பவித்ரா ராசய்யா வீரத்தாலாட்டு சூர்யவம்சம் ஜீன்ஸ் தாஜ்மகால் அமர்க்களம் பூமகள் ஊர்வலம் ரோஜாக்கூட்டம் கண்ணாமூச்சி ஏனடா பந்தயம் சகுனி இரண்டாம் உலகம் அமர்க்களம் இராதிகா நடித்துள்ள சில தொலைக்காட்சி தொடர்கள் சித்தி அண்ணாமலை செல்வி அரசி செல்லமே வாணி ராணி சந்திரகுமாரி சித்தி (பருவம் 2) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ராடான் நிறுவனத்தின் இணையதளம் 1963 பிறப்புகள் வாழும் நபர்கள் தமிழ் நடிகைகள் தமிழ்த் திரைப்பட நடிகைகள் சென்னை நடிகைகள் இந்தி திரைப்பட நடிகைகள் கன்னடத் திரைப்பட நடிகைகள் தெலுங்குத் திரைப்பட நடிகைகள் மலையாளத் திரைப்பட நடிகைகள் நடிகர் தொடர்பான குறுங்கட்டுரைகள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள் தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள் தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தமிழ்நாட்டு தொலைக்காட்சி பிரமுகர்கள் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்
3217
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%20%28%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%29
ரேவதி (நடிகை)
ரேவதி (Revathy, பிறப்பு: சூலை 8, 1966) தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக அறியப்படுகிறார். மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, ஆங்கிலத்தில் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். வாழ்க்கைக் குறிப்பு ரேவதி, 1966 ஜூலை 8-ல் கேரளத்தின் கொச்சியில் பிறந்தார். இவர் தந்தை கேளுண்ணி. ரேவதி, 1988 ல் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்தார். பின்னர், 2002 ல் இருவரும் மணமுறிவு பெற்று பிரிந்தனர். நடித்துள்ள திரைப்படங்கள் தேவர் மகன் புதிய முகம் மௌன ராகம் 2 ஸ்டேட்ஸ் இயக்கிய திரைப்படங்கள் மித்ர், மை பிரெண்ட் (ஆங்கிலம்) பிர் மிலேங்கே (இந்தி) விருதுகள் 1992 - சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது. (திரைப்படம் - தேவர் மகன்) 2002 - சிறந்த ஆங்கிலத் திரைப்படத்திற்கான தேசிய விருது. (திரைப்படம் - Mitr, my friend) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ரேவதியின் இணையத்தளம் தமிழ்த் திரைப்பட நடிகைகள் இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் 1966 பிறப்புகள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் வாழும் நபர்கள் இந்தி திரைப்பட நடிகைகள் நடிகர் தொடர்பான குறுங்கட்டுரைகள் தெலுங்குத் திரைப்பட நடிகைகள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் கன்னடத் திரைப்பட நடிகைகள் மலையாளத் திரைப்பட நடிகைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள் தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்
3218
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF
ஜெர்மனி
செருமனி (Germany, ), அல்லது செருமன் கூட்டாட்சிக் குடியரசு (, ), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆத்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்சு, லக்சம்பேர்க், பெல்சியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. செருமனியின் பரப்பளவு 357,021 கிமீ². 82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது. செருமனி கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-செருமனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-செருமனிக்கு பான் (Bonn) தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-செருமனியில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது. 1989 இல் அச்சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட செருமனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது. செருமனி இப்போது 16 மாநிலங்களை (Länder) கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகும். இதன் தலைநகரம் பெர்லின். இதுவே இந்நாட்டின் பெரிய நகரமும் ஆகும். செருமானியா என அறியப்பட்ட பிரதேசத்தில் கி.பி. 100க்கு முன்னரே செருமானிக் மக்கள் குடியேறியமைக்கு ஆதாரங்கள் உள்ளன. குடிப்பெயர்வுக் காலப்பகுதியில், செருமானிக் குழுக்கள் மேலும் தென்பகுதிக்குப் பரவியதோடு ஐரோப்பாவெங்கும் வெற்றிகரமான ராச்சியங்களை ஏற்படுத்தினர். 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், செருமனிப் பகுதிகள் புனித உரோமப் பேரரசின் மையப்பகுதிகளாக இருந்தன. 16ம் நூற்றாண்டில் வடக்கு செருமன் பகுதிகள் புரட்டசுதாந்து சீர்திருத்தத்தின் மத்திய நிலையமாக விளங்கியது. எனினும், தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் உரோமன் கத்தோலிக்கப் பகுதிகளாகவே இருந்தன. இதன் காரணமாக முப்பதாண்டுப் போர் ஏற்பட்டதோடு, கத்தோலிக்க்- புரட்டசுதாந்து பிரிவினையின் ஆரம்பமாகவும் அமைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, செருமானிய சமுதாயத்தின் பண்பைத் தீர்மானிப்பதாகவும் இது இருந்து வருகிறது. நெப்போலியப் போர்களின் போது, செருமானியப் பகுதிகளில் நாட்டுப் பற்று எழுச்சிபெற்றது. இதன் மூலம்,1871இல், புருசியாவைத் தலைமையாகக் கொண்டு, பெரும்பாலான செருமானியப் பகுதிகள் செருமன் பேரரசாக எழுச்சி பெற்றன. 1918-1919 செருமானியப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரில் சரணடைவு என்பவற்றைத் தொடர்ந்து, 1918 இல், நாடாளுமன்ற வைமார் குடியரசு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அதன் சில பகுதிகள் வெர்செயில்சு உடன்படிக்கையின்படி பிரித்தெடுக்கப்பட்டன. இக்காலப்பகுதியில், விஞ்ஞான மற்றும் கலைத் துறைகளில், பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக 1933 இல் மூன்றாவது முடியாட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பின்பு நாட்டில் நாசிசக் கொள்கைகள் பரவின. இதனால் இரண்டாம் உலகப்போரும் மூண்டது. 1945 இன் பின், செருமனி நேச நாடுகளால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவை கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனி என அழைக்கப்பட்டன. 1990 இல் செருமனி மீண்டும் ஒன்றிணைந்தது. 1957ல் ஐரோப்பிய சமூகத்தை உருவாக்குவதில் செருமனியும் பங்கு கொண்டது. இது 1993ல், ஐரோப்பிய ஒன்றியமாக மாறியது. இது சென்சென் பகுதியின் ஒரு பகுதியாகவும், 1999இலிருந்து, யூரோ பகுதியின் ஒரு உறுப்பினராகவும் ஆனது. செருமனி, ஐக்கிய நாடுகள், நேட்டோ, G8, G20, பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்கான அமைப்பு மற்றும் ஐரோப்பியச் சம்மேளனம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான, 2011-2012 காலப்பகுதிக்கான தற்காலிக உறுப்பினராகவும் உள்ளது. செருமனி, உத்தேச மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் நான்காவது பாரிய பொருளாதார நாடாகவும், கொள்வனவுச் சக்தி அடிப்படையில், ஐந்தாம் இடத்திலும் உள்ளது. செருமனி உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இது ஒரு உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட நாடாகவும், சமூகப் பாதுகாப்புடைய நாடாகவும் காணப்படுகிறது. செருமனி உலகின் மிகப் பழைமை வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு முறைமையையும் கொண்டுள்ளது. செருமனியில் பல சிறந்த தத்துவஞானிகள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், இதன் கலாச்சார மற்றும் அரசியல் வரலாறும் சிறப்பானதாகும். சொற்பிறப்பியல் ஜெர்மனி என்ற ஆங்கிலச் சொல் இலத்தீனிய ஜெர்மானியா என்பதிலிருந்து வந்துள்ளது; ரைன் ஆற்றுக்கு கிழக்கில் வசித்த மக்களைக் குறிப்பிட யூலியசு சீசர் இச்சொல்லைப் பயன்படுத்தினார். குறிப்பாக, கால் இனத்தவர்கள் , இவர்களை ஜெர்மனி என அழைத்து வந்தனர். இதிலிருந்தே உரோமானியர்கள் ரைன் ஆற்றுக்கு கிழக்கேயும் தானூப் ஆற்றுக்கு வடக்கேயும் வாழ்ந்த மக்களைக் குறிக்க ஜெர்மனி என்ற பெயரைப் பயன்படுத்த துவங்கினர். இடாய்ச்சு சொல்லான இடாய்ச்சுலாந்து, *தியொடொ என்ற தொன்மைய செருமானிய வேரிலிருந்து வந்ததாகும்; இதன் பொருள் "மக்கள், இனம், நாடு" என்பதாக அமையும். இது ஜெர்மானிய மக்களின் பொதுமொழியைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட பரந்த சொல்லாக இருந்தது. இது குறிப்பாக செருமனி மொழியையோ மக்களையோ குறிப்பிடவில்லை. முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டபோது (பிந்தைய 8-ஆம் நூற்றாண்டு) இது மெர்சியா இராச்சியத்தின் மொழியைக் குறிப்பதாயிருந்தது; உண்மையில் அந்த மொழி பண்டைய ஆங்கிலம் ஆகும். பிற்பாடு பல்வேறு இனங்களும் தங்களுக்கான தனி அடையாளத்தை நிலைநிறுத்த முற்பட்டனர்; பிரித்தானியத் தீவிலிருந்தவர்கள் ஆங்கிலோ-சாக்சன் மக்கள், ஆங்கில்கள் பின்னர் ஆங்கிலேயர் எனப்பட்டனர். இவர்கள் தொன்மைய செருமனியின் அறிஞர்களால் "பவேரியர்கள்", "சாக்சன்கள்" அல்லது "இசுவாபியர்கள் " எனப் பிரித்தறியப்பட்டனர். இச்சொற்கள் பெரும் நிலப்பகுதிகளை ஆண்ட உள்ளக ஆட்சியாளர்களைக் கொண்டு உருவாகின.புனித உரோமைப் பேரரசு உடைபட்டபோது, இத்தகைய தனி அடையாளங்கள் மறைந்து அவரவர் பேச்சுவழக்கில் *தியுடொ என்ற சொல் அடிப்படையில் இதுவரை பெயரிடப்படாத செருமானிய இனக்குழுக்கள் அழைக்கப்பட்டன. இவ்வாறு 13-ம் நூற்றாண்டில் தியுடிக்சுலாந்து (டாய்ச்சுலாந்து, செருமனி) புழக்கத்திற்கு வந்தது. வரலாறு வரலாற்றுக்கு முந்தையக் காலம் 1907இல் கண்டெடுக்கப்பட்ட மாயுவர் 1 தாடையெலும்பு செருமனியில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொன்மையான மக்கள் வாழ்ந்துள்ளனர் எனக் காட்டுகிறது. உலகில் மிகவும் பழைமையான முழுமையான வேட்டைக்கருவிகள் செருமனியில் இசோனின்கென் என்னுமிடத்தில் 1995இல் கண்டுபிடிக்கப்பட்டன; 380,000 ஆண்டுகள் பழைமையான 6-7.5 அடி நீளமுள்ள மூன்று மர எறிவேல்கள் கிடைத்தன. செருமனியில் உள்ள நியாண்டர் பள்ளத்தாக்கில் (பள்ளத்தாக்கு செருமானிய மொழியில் தால் எனப்படும்) முதல்மனித தொல்லுயிர் எச்சம் கிடைக்கப்பெற்றது; 1856இல் இது புதிய மனித இனமாக நியண்டர்தால் மனிதன் என அங்கீகரிக்கப்பட்டது. இந்த நியாண்டர்தால் தொல்லுயிர் எச்சங்கள் 40,000 ஆண்டுகள் பழைமையானதாக மதிப்பிடப்படுகின்றது. இதேயளவு பழைமையான சான்றுகள் உல்ம் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சுவாபியன் யுரா குகைகளிலும் கிடைத்துள்ளன; 42,000 ஆண்டுகள் பழைமையான பறவையின் எலும்பு, பெரும் தந்தங்களிலான புல்லாங்குழல்கள் கண்டறியப்பட்டுள்ளன; இவையே உலகின் மிகவும் தொன்மையான இசைக்கருவிகளாகும். 40,000 ஆண்டுக்கு முந்தைய பனிக்கால சிற்பமான சிங்க மனிதன் உலகின் முதல் கலைவடிவமாக கருதப்படுகிறது. ஜெர்மானிக் குழுக்களும் ஃபிராங்கியப் பேரரசும் ஜெர்மானிக் குழுக்கள், நோர்டிக் வெண்கலக் காலம் அல்லது ரோமானியருக்கு முந்திய இரும்புக் காலத்திலிருந்தே காணப்பட்டமைக்குச் சான்றுகள் உண்டு. அவர்கள் தெற்கு ஸ்கண்டினேவியா மற்றும் வடக்கு ஜெர்மனியிலிருந்து கி.மு. 1ம் நூற்றாண்டிலிருந்து தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிப் பரவத் தொடங்கினர். இதன் மூலம் கவுலின் செல்டிக் குழுக்கள், ஈரானியர்கள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் காணப்பட்ட பால்டிக் மற்றும் ஸ்லாவிக் குழுக்களுடனும் தொடர்பு கொண்டனர். அகஸ்டசின் கீழ், ரோமானியத் தளபதியான பப்லியஸ் குயின்டிலியஸ் வரஸ் ஜெர்மானியாவைக் கைப்பற்றினான் (அண்ணளவாக ரைனிலிருந்து யூரல் மலைத்தொடர் வரையிலான பகுதி). கி.பி. 9ல், வரசினால் வழிநடத்தப்பட்ட மூன்று ரோமப் படைப்பிரிவுகள், செருஸ்கன் தலைவரான ஆர்மினியசினால் தோற்கடிக்கப்பட்டன. டாசியஸ் ஜெர்மானியா என்ற நூலை எழுதிய காலப்பகுதியான கி.பி.100ல், ஜெர்மானியக் குழுக்கள், தற்கால கெர்மனியின் பெரும்பாலான பகுதிகளான, ரைன் மற்றும் டன்யூப் நதிக்கரையோரமாகக் குடியேறினர் (லைம்ஸ் ஜெர்மானிகஸ்). எனினும், ஆஸ்திரியா, தெற்கு பவேரியா மற்றும் மேற்கு ரைன்லாந்து என்பன ரோமானிய மாகாணங்களாகவே இருந்தன. 3ம் நூற்றாண்டில், அலெமனி, ஃபிராங்க்குகள், சட்டி, சாக்சன்கள், ஃபிரிசி, சிகம்ப்ரி மற்றும் துரிங்கி போன்ற பல மேற்கு ஜெர்மானிக் குழுக்கள் எழுச்சி பெற்றன. 260களில், ஜெர்மானிக் மக்களில் பலர் ரோமானியக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். 375ல் ஹன்களின் படையெடுப்பு மற்றும் 395ல் ரோமப் பேரரசின் வீழ்ச்சி ஆகியன காரணமாக ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்மேற்காக நகர்ந்தன. இதேவேளை, சில பாரிய குழுக்கள் உருவாகி, சிறிய ஜெர்மானிக் குழுக்களைப் பிரதியீடு செய்தன. பாரிய பகுதிகள் (மெரோவின்கியன் காலப்பகுதியிலிருந்து இவை ஆஸ்திரேசியா என அறியப்பட்டன.) ஃபிராங்குகளால் கைப்பற்றப்பட்டன. மேலும் வடக்கு ஜெர்மனி சாக்சன்களாலும், ஸ்லாவுகளாலும் ஆளப்பட்டது. புனித உரோமப் பேரரசு டிசெம்பர் 25, 800ல் ஃபிராங்கிய மன்னனான சார்லமக்னே பேரரசராக முடிசூட்டப் பட்டார். இவர் கரோலிங்கியப் பேரரசை உருவாக்கினார். 843ல் இது பிரிக்கப்பட்டது. இதன் கிழக்குப் பகுதியில் புனித உரோமப் பேரரசு உருவாக்கப்பட்டது. இது வடக்கே எய்டர் ஆற்றிலிருந்து, தெற்கே மத்தியதரைக் கடல் வரையும் பரந்திருந்தது. ஒட்டோனியப் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(919–1024), பல பாரிய அரசுகள் ஒன்றிணைந்தன. 962ல் இப்பகுதிகளின் புனித உரோமப் பேரரசராக ஜெர்மானிய மன்னர் முடிசூட்டப்பட்டார். சாலியன் பேரரசர்களின் காலத்தில் (1024–1125), புனித உரோமப் பேரரசு வட இத்தாலியையும் பர்கண்டியையும் உள்வாங்கிக் கொண்டது. ஹொஹென்ஸ்டாஃபென் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(1138–1254), ஜெர்மானிய இளவரசர்கள் தமது ஆதிக்கத்தை, ஸ்லாவுகள் வசித்த தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிறுவிக் கொண்டனர். இதன்மூலம் இப்பகுதிகளிலும், மேலும் கிழக்குப் பகுதிகளிலும் ஜெர்மானியக் குடியேற்றங்களை ஏற்படுத்தினர் (ஓஸ்ட்சீட்லங்). வட ஜெர்மானிய நகரங்கள் வளமிக்க நகரங்களாக வளர்ச்சி பெற்றதோடு, ஹன்சியாட்டிக் லீக்கிலும் அங்கத்துவம் பெற்றன. 1315ல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தினாலும், 1348-50ல் இடம்பெற்ற கறுப்பு இறப்பினாலும் ஜெர்மனியின் சனத்தொகை வீழ்ச்சியடைந்தது. 1356ல் எழுதப்பட்ட கோல்டன் புல் எனும் அரசாணை பேரரசின் அடிப்படை யாப்பாகக் காணப்பட்டது. இதில் ஏழு சக்திமிக்க சிற்றரசுகள் மற்றும் ஆயர் ஆட்சிப் பகுதிகளை ஆண்டோர் மூலம் நடத்தப்படும் தேர்தல் மூலம் பேரரசரைத் தெரிவுசெய்யும் முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1517ல் மார்ட்டின் லூதர் தனது தொண்ணூற்றைந்து வாசகங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரையை விற்றன்பேர்க்கில் பிரசுரித்தார். இதன்மூலம், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்த அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தையும் ஆரம்பித்தார். 1530ன் பின் ஒரு தனியான லூதரன் திருச்சபை பல ஜெர்மானியப் பகுதிகளில் உத்தியோகபூர்வ சமயமாக உருவானது. சமய முரண்பாடு காரணமாக முப்பதாண்டுப் போர் (1618–1648) ஆரம்பமானது இது ஜெர்மானியப் பகுதிகளின் அழிவுக்கும் காரணமானது. ஜெர்மானியப் பகுதிகளின் சனத்தொகை 30%த்தால் குறைவடைந்தது. வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் (1648), ஜெர்மானியப் பகுதிகளில் இடம்பெற்ற சமயப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. எனினும் ஜெர்மானியப் பேரரசு பல்வேறு சுதந்திர சிற்றரசுகளாகப் பிரிந்தது. 18ம் நூற்றாண்டில், புனித உரோமப் பேரரசில் இவ்வாறான 1,800 பகுதிகள் காணப்பட்டன. 1740இலிருந்து, ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க் முடியரசினதும், பிரசிய ராச்சியத்தினதும் இரட்டை ஆட்சி ஜெர்மானிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. 1806ல் நெப்போலியப் போர்கள் காரணமாக இவ்வாட்சி அகற்றப்பட்டது. செருமனிக் கூட்டமைப்பும் பேரரசும் முதலாம் நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு 1814இல் கூடிய வியன்னா மாநாடு செருமானியக் கூட்டமைப்பை (Deutscher Bund) நிறுவியது; இது இறையாண்மையுடைய 39 அரசுகளின் நெகிழ்வான கூட்டணியாகும். ஐரோப்பிய மீளமைப்பு அரசியலுக்கு உடன்படாததால் செருமனியில் முற்போக்குவாத இயக்கங்கள் வெளிவரத் தலைப்பட்டன. ஆஸ்திரிய அரசியல்வாதி மெட்டர்னிக்கின் அடக்குமுறைகள் இந்த எதிர்ப்புக்களை வலுவாக்கின. செருமானிய அரசுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட சோல்பெரைன் என்ற சுங்க ஒன்றியம், அவற்றிடையே பொருளியல் ஒற்றுமைக்கு வழிகோலியது.பிரெஞ்சுப் புரட்சியின் தேசிய முற்போக்கு கருத்துருக்கள் பலரிடையே, குறிப்பாக இளம் செருமானியரிடையே, ஆதரவு பெறத் தொடங்கின. மே 1832இல் நடந்த ஆம்பாக் விழா செருமன் ஒற்றுமைக்கும் விடுதலைக்கும் மக்களாட்சிக்கும் ஆதரவான முதன்மை நிகழ்வாகும். ஐரோப்பாவில் நிகழ்ந்த தொடர் புரட்சிகளின் விளைவாக, செருமனியிலும் பொதுமக்களும் அறிஞர்களும் 1848ஆம் ஆண்டுப் புரட்சிகளைத் தொடங்கினர். பிரசியாவின் நான்காம் பிரெடெரிக் வில்லியத்திற்கு, மிகுந்த குறைவான அதிகாரங்களுடன், பேரரசர் பதவி அளிக்க முன்வந்தனர்; இதனை ஏற்க மறுத்த பிரெடெரிக் வில்லியம் ஓர் அரசியலமைப்பை முன்மொழிந்தார். இது எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. பிரசிய மன்னர் முதலாம் வில்லியமிற்கும் முற்போக்கான நாடாளுமன்றத்திற்கும் இடையே 1862ஆம் ஆண்டு படைத்துறை சீர்திருத்தங்கள் குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. மன்னர் பிஸ்மார்க்கை புதிய தலைமை அமைச்சராக நியமித்தார். 1864இல் பிஸ்மார்க் டென்மார்க் போரில் வெற்றி கண்டார். தொடர்ந்து 1866இல் ஆஸ்திரோ-பிரசியப் போரில் இவரடைந்த வெற்றி வட செருமன் கூட்டமைப்பை நிறுவத் துணை நின்றது. முன்பு செருமானிய விவகாரங்களில் முன்னிலை வகித்த ஆஸ்திரியா இக்கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 1871இல் பிரான்சு தோல்வி கண்டபோது வெர்சாய் அரண்மனையில் 1871இல் செருமன் பேரரசு அறிவிக்கப்பட்டது; ஆஸ்திரியா தவிர்த்த அனைத்து பகுதிகளும் இதில் உள்ளடங்கின. புதிய நாட்டின் மூன்றில் இருபங்கு நிலப்பகுதியும் மக்கள்தொகையும் கொண்ட பிரசியா ஆதிக்கமிகுந்த அங்கமாக விளங்கியது; ஓயென்சொலார்ன் பரம்பரையைச் சேர்ந்த பிரசிய அரசர் அதன் பேரரசராக ஆட்சி செய்தார், பெர்லின் அதன் தலைநகரமாக விளங்கியது. செருமானிய ஒருங்கிணைப்பிற்குப் பிந்தைய காலகட்டத்தில் பிஸ்மார்க்கின் வெளியுறவுக் கொள்கைகள் செருமனியின் நிலையை, பெரும் வளரும் நாடாக, நிலைநிறுத்தியது. பிரான்சுடன் போர் தவிர்ப்பு உடன்பாடு கண்டார். 1884ஆம் ஆண்டு பெர்லின் மாநாட்டின்படி கமரூன் போன்ற செருமனியின் குடியேற்றப்பகுதிகளுக்கு புதிய பேரரசு உரிமை கொண்டாடியது. செருமனியின் இரண்டாம் வில்லியமின் கீழ், மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே, ஆதிக்கவாதத்தை முன்னெடுத்ததால் அண்டைநாடுகளுடனான உறவில் விரிசல் கண்டது. பிஸ்மார்க் கண்ட பல உடன்பாடுகள் புதுப்பிக்கப்படவில்லை; புதிய கூட்டணிகளில் செருமனி இடம்பெறவில்லை. சூன் 28, 1914இல் ஆஸ்திரியாவின் இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட் கொலையுண்டதை அடுத்து முதல் உலகப் போர் துவங்கியது. மைய சக்திகளில் அங்கமாகவிருந்த செருமனி நேசநாடுகளிடம் தோற்றது. இந்தப் போரில், ஏறத்தாழ இரண்டு மில்லியன் செருமானிய படைவீரர்கள் மடிந்தனர். நவம்பர் 1918இல் செருமன் புரட்சி வெடித்தது; பேரரசர் இரண்டாம் வில்லியமும் அனைத்து செருமானிய அரசுகளும் பதவி துறந்தனர். நவம்பர் 11இல் ஏற்பட்ட சமரசம் போரை முடிவுக்குக் கொணர்ந்தது. சூன் 1919இல் செருமன் வெர்சாய் உடன்பாட்டில் ஒப்பிட்டது. செருமானியர்கள் இந்த உடன்படிக்கை தங்களுக்கு அவமானகரமாகவும் நீதிபிறழ்ந்ததாகவும் உணர்ந்தனர். இதுவே பின்னாளில் இட்லர் மேலோங்க அடிப்படையாக அமைந்ததாக சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். வீமர் குடியரசும் மூன்றாம் இராய்க்கும் செருமன் புரட்சியின் துவக்கத்தில் செருமனி தன்னை குடியரசாக அறிவித்துக் கொண்டது. இருப்பினும், அதிகாரப் பகிர்விற்கான போராட்டம் தொடர்ந்தது; இடதுசாரி பொதுவுடைமை பவேரியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகத்து 11, 1919இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது செருமனியின் குடியரசுத் தலைவராக இருந்த பிரெடிரிக் எபெர்ட்டு மக்களாட்சிக்கான வைமார் அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இதன் ஆட்சிக்காலத்தில் பெல்ஜிய, பிரான்சிய ஆக்கிரமிப்புகள், விலைவாசி ஏற்றத்தைத் தொடர்ந்து 1922-23இல் மீயுயர் ஏற்றம், கடன் சீரமைப்புத் திட்டம், 1924இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நாணயம், தேசிய தன்னம்பிக்கை வளர்ச்சி, கலை ஆக்கங்கள், முற்போக்கான பண்பாடு மற்றும் பொருளியல் வளர்ச்சியை செருமனி எதிர்கொண்டது. இருப்பினும் பொருளியல்நிலை நிலையில்லாமலும் அரசியல்நிலை கிளர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தன. 1924 முதல் 1929 வரையிலான செருமனி "பகுதி நிலைபெற்ற" செருமனியாக வரலாற்றாளர் டேவிட் வில்லியம்சன் கூறுகிறார். இது 1929இல் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சியால் சீரழிந்தது. கூட்டமைப்பிற்கு 1930இல் நடந்த தேர்தல்களில் நாட்சி கட்சி 18% வாக்குகளையே பெற்றது. எந்தக் கூட்டணியும் அரசமைக்க இயலாதநிலையில் அரசுத்தலைவர் எயின்ரிக் புருன்னிங் வீமர் அரசியலமைப்பின் 48ஆம் பிரிவின்படி தம்மை நெருக்கடிநிலை அதிகாரங்களுடன் நாடாளுமன்ற ஒப்புதலின்றி ஆள அனுமதிக்குமாறு நாட்டுத்தலைவர் பவுல் ஃபொன் இன்டென்பெர்கை வேண்டினார். இதனை ஏற்றுக்கொண்ட பிறகு ஆட்சி செய்த புருன்னிங் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கத்தை குறைக்க பெரும் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கினார். இது வேலையற்றோர் எண்ணிக்கையை கூட்டியதுடன் சமூக சேவை வசதிகளையும் குறைத்தது. 1932இல் கிட்டத்தட்ட 30% செருமானிய தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்தனர். அந்தாண்டு நடந்த சிறப்புத் தேர்தலில் நாட்சி கட்சி 37% வாக்குகளைப் பெற்றது;இருந்தும் கூட்டணி சேர்த்து ஆட்சி அமைக்க இயலவில்லை. பல்வேறு மாற்று அமைச்சரவைகளை சோதித்து தோல்வியுற்ற பவுல் பொன் இன்டனெபெர்கு சனவரி 30, 1933இல் இட்லரை அரசுத்தலைவராக நியமித்தார். பெப்ரவரி 27, 1933இல் செருமானிய நாடாளுமன்றக் கட்டிடம் தீக்கிரையானது; இந்நிலையில் வழங்கப்பட்ட இராய்க்சுடாக் தீ தீர்ப்பாணையின்படி அடிப்படை குடிம உரிமைகள் இடைநீக்கம் செய்யப்பட்டு இட்லருக்கு]] எல்லையற்ற சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. இட்லர் முழுமையும் மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார். செருமனியின் முதல் செறிவக முகாம்களை பெப்ரவரி 1933இல் நிறுவினார். செப்டம்பர் 1933இல் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் உலக நாடுகள் சங்கத்திலிருந்து விலக செருமனி வாக்களித்தது. இட்லர் படைத்துறையை வலுப்படுத்தத் தொடங்கினார். பற்றாக்குறை நிதியைப் பயன்படுத்தி இட்லர் பல்லாயிரக் கணக்கான செருமானியர்களை பொதுத்துறை திட்டங்களில் வேலைக்கமர்த்தினார். ஆகத்து 1934இல் படைத்துறை வீரர்கள் நாட்டின் தளபதிக்கல்லாது இட்லருக்கு தனிப்பட்ட முறையில் விசுவாச உறுதிமொழி எடுக்கும் சட்டத்தை அமைச்சரவை இயற்றியது. 1934இல் நடந்த பொது வாக்கெடுப்பில் 90% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் பதவியும் நாட்டுத்தலைவர் பதவியும் ஒன்றிணைக்கப்பட்டது 1935இல் படைத்துறையில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டது; வெர்சாய் உடன்பாட்டிலிருந்து விலகிக் கொண்டது; யூதர்களையும் மற்றக் குழுக்களையும் இலக்கு வைத்து நுரெம்பர்கு சட்டங்கள் இயற்றப்பட்டன. 1935இல் நேசப்படைகள் கையகப்படுத்தியிருந்த சார் பகுதியை செருமனி மீட்டது; 1936இல் வெர்சாய் உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்டிருந்த ரைன்லாந்திற்குள் துருப்புக்களை அனுப்பியது. 1938இல் ஆசுதிரியா கையகப்படுத்தப்பட்டது; செப்டம்பர் 1939இல் செக்கோசிலோவாக்கியாவைக் கைப்பற்றியது. பின்னர் போலந்து படையெடுப்பு நடத்துமுகமாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. செப்டம்பர் 1, 1939இல் போலந்து படையெடுப்பு நடைபெற்றது; சோவியத் செஞ்சேனையுடன் போலந்தைக் கைப்பறியது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செருமனி மீது போர் தொடுத்து இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. சூலை 22, 1940இல் பிரான்சின் பெரும்பகுதியை செருமனி கைப்பற்றியபின்னர் பிரான்சு செருமனியுடன் சமரசம் செய்து கொண்டது. பிரித்தானியர்கள் 1940இல் பிரிட்டன் சண்டை என்றறியப்பட்ட செருமனியின் தாக்குதல்களை முறியடித்தனர். சூன் 22, 1941இல் செருமனி மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தை மீறி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தனர். அச்சமயத்தில் செருமனியும் மற்ற அச்சு நாடுகளும் ஐரோப்பாவின் பெரும்பகுதியையும் வடக்கு ஆப்பிரிக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1943 துவக்கத்தில் சுடாலின்கிராட் சண்டையை அடுத்து சோவியத் ஒன்றியத்திலிருந்து மீளத் துவங்கினர். செப்டம்பர் 1943இல் செருமனியின் கூட்டாளி இத்தாலி சரண்டைந்தது; இதனால் இத்தாலியிலிருந்த நேசப்படையினருடன் போரிட கூடுதல் துருப்புக்கள் வேண்டியிருந்தது. பிரான்சில் டி-டே படையிறக்கம் போரின் மேற்கு முனையை திறந்தது; செருமனியின் எதிர்த் தாக்குதல்களுக்கிடையே நேசப்படைகள் 1945இல் செருமனிக்குள் நுழைந்தன. பெர்லின் சண்டையையும் இட்லரின் மரணத்தையும் அடுத்து செருமானியப் படை மே 8, 1945இல் சரணடைந்தது. மனித வரலாற்றின் குருதிமிக்க போராக விளங்கிய இந்த உலகப்போரில் ஐரோப்பாவில் மட்டும் 40 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்; செருமன் படையில் மட்டும் 3.25 மில்லியன் முதல் 5.3 மில்லியன் வீரர்கள் இறந்து பட்டனர். 1 முதல் 3 மில்லியன் செருமானிய குடிமக்கள் மடிந்தனர். சிறுபான்மையர், அரசியல், சமய எதிர்ப்பாளர்களை இலக்காக கொண்டு இயற்றப்பட்ட நாட்சி ஆட்சி கொள்கைகள் பின்னதாக பெரும் இன அழிப்பு என அறியப்பட்டன. இந்த இனவழிப்பில் 6 மில்லியன் யூதர்கள், 220,000இலிருந்து 1,500,000 வரையான ரோமானி மக்கள், 275,000 மனநலம்/உடல்நலம் இல்லாதவர்கள், ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள், ஆயிரக்கணக்கான தற்பால்சேர்க்கையினர், நூறாயிரக்கணக்கான அரசியல் அல்லது சமய மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள் உள்ளிட்ட 10 மில்லியன் குடிமக்கள் அழிக்கப்பட்டனர். தவிர ஆறு மில்லியன் உக்ரைனியர் மற்றும் போலந்துக்காரர்களும் 2.8 மில்லியனாக மதிப்பிடப்படும் சோவியத் போர்க்கைதிகளும் நாட்சி ஆட்சியில் உயிரிழந்தனர். போரில் தோல்வியடைந்ததால் செருமனி நிலப்பகுதிகளை இழந்ததோடன்றி செருமனியின் கிழக்குப் பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலிருந்தும் பல மில்லியன் செருமானிய இனத்தினர் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சில நாட்சிகள் பெரும் இன அழிப்பு போன்ற குற்றங்களுக்காக நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் குற்ற விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டனர். கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் செருமனி சரண்டைந்த பிறகு செருமனியின் மிஞ்சியிருந்த பகுதிகளையும் பெர்லினையும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள் நான்கு இராணுவ ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரித்துக் கொண்டன. இந்த மண்டலங்களில் கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6.5 மில்லியனுக்கும் கூடுதலான செருமானிய இன மக்கள் குடியேற்றப்பட்டனர். பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒன்றிணைத்து மே 23, 1949இல் செருமானியக் கூட்டு மக்களாட்சியாக (Bundesrepublik Deutschland) நிறுவப்பட்டது; அக்டோபர் 7, 1949இல் சோவியத் பகுதி ஜெர்மன் சனநாயகக் குடியரசாக(GDR) (Deutsche Demokratische Republik) அறிவிக்கப்பட்டது. இவை முறைசாராது "மேற்கு ஜெர்மனி" என்றும் "கிழக்கு ஜெர்மனி" என்றும் அழைக்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனிக்கு கிழக்கு பெர்லின் தலைநகராயிற்று; மேற்கு ஜெர்மனிக்கு பான் தற்காலிகத் தலைநகராயிற்று. செருமானியக் கூட்டு மக்களாட்சிக்கு மார்ஷல் திட்டத்தின் கீழான மீள்கட்டமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன. மேற்கு செருமனி, மக்களாட்சி குடியரசாக சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து செயல்பட்டது. 1949இல் இதன் முதல் அரசுத்தலைவராக (சான்சுலர்) கொன்ராடு அடேனார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1963 வரை இப்பதவியில் நீடித்தார். மேற்கு செருமனி 1955இல் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்புடன் இணைந்தது. கிழக்கு செருமனி கிழக்கத்திய திரளணி நாடாக சோவியத் ஒன்றியத்தின் அரசியல் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டது. கிழக்கு செருமனி மக்களாட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் பொதுவுடமையாளர்களின் செருமானிய சோசியலிச ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த பொலிட்பீரோ உறுப்பினர்களிடமே அரசியல் அதிகாரம் இருந்தது. சோவியத்-பாணி திட்டமிட்ட பொருளாதாரம் அமைக்கப்பட்டது; கிழக்கு செருமனி பின்னாளில் காம்கான் நாடாக இணைந்தது. 1961இல் கிழக்கு செருமானியர்கள் மேற்கு செருமனிக்கு தப்பிச் செல்வதைத் தடுக்குமாறு பெர்லின் சுவர் கட்டப்பட்டது. இது பனிப்போரின் ஓர் அடையாளமாக விளங்கியது. எனவே போலந்திலும் அங்கேரியிலும் ஏற்பட்ட மக்களாட்சி மாற்றங்களை அடுத்து 1989இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது பொதுவுடமையின் வீழ்ச்சி, செருமானிய மீளிணைவு மற்றும் டை வென்டே (திருப்பம்) அடையாளமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 12, 1990இல் இரண்டு+நான்கு உடன்பாடு காணப்பட்டு நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு செருமனிக்கு முழுமையான இறையாண்மை கிட்டியது. அக்டோபர் 3, 1990இல் செருமானிய மீளிணைவு ஏற்பட இது வழிவகுத்தது. செருமானிய மீளிணைவும் ஐரோப்பிய ஒன்றியமும் மார்ச்சு 10, 1994இல் இயற்றப்பட்ட பெர்லின்/பான் சட்டப்படி பெர்லின் ஒன்றுபட்ட செருமனிக்கு மீண்டும் தலைநகராயிற்று; பான் நகருக்கு தனிப்பட்ட நிலையாக Bundesstadt (கூட்டு நகரம்) என்ற தகுதி வழங்கப்பட்டது. சில அமைச்சரகங்கள் இங்கு இயங்குகின்றன. அரசு இடமாற்றம் 1999இல் முழுமையடைந்தது. மீளிணைவிற்குப் பிறகு செருமனி ஐரோப்பிய ஒன்றியத்திலும் நாடோவிலும் முனைப்பான பங்காற்றி வருகின்றது. 1999இல் யூகோசுலோவியாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது அமைதிகாப்புப் படையை அனுப்பியது. தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானித்தானிற்கு பாதுகாப்பு வழங்க நாடோவின் முயற்சிகளில் இணைந்து தனது படைகளை அனுப்பியது. இவை பாதுகாப்புப் படைகளை நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற செருமானியச் சட்டங்களுக்கு புறம்பானதால் சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது. 2005இல் அங்கெலா மேர்க்கெல் செருமனியின் முதல் பெண் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புவியியல் செருமனி மேற்கு மற்றும் நடு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் அகலக்கோடுகள் 47°, 55° வ ஆகியவற்றுக்கு இடையிலும், நெடுங்கோடுகள் 5°, 16° கி ஆகியவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. 357,021 ச.கிமீ (137,847 ச.மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 349,223 ச.கிமீ (134,836 ச.மைல்) நிலப் பரப்பும், 7,798 ச.கிமீ (3,011 ச.மைல்) நீர்ப் பரப்பும் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் ஐரோப்பாவின் 7 ஆவது பெரிய நாடாகவும், உலகின் 62 ஆவது பெரிய நாடாகவும் செருமனி விளங்குகிறது. உயரம், அதி கூடிய அளவாகத் தெற்கில் ஆல்ப்சு மலைப்பகுதியில் தொடங்கி வடமேற்கில் வடகடல் கரையோரம் வரையும், வடகிழக்கில் பால்டிக் கடல் கரையோரம் வரையும் குறைகிறது. நடு செருமனியின் காடுகளைக் கொண்ட மேட்டு நிலங்களிலும், வட செருமனியின் தாழ் நிலப் பகுதியிலும் பெரிய ஆறுகளான ரைன், தன்யூப், எல்பே போன்றன ஓடுகின்றன. அல்பைன் பகுதியில் பனியாறுகள் காணப்படினும், தற்போது உருகி இல்லாது போகும் நிலை காணப்படுகிறது. இரும்புத் தாது, நிலக்கரி, பொட்டாசு, மரம், லிக்னைட்டு, யுரேனியம், செப்பு, இயற்கை வளிமம், உப்பு, நிக்கல், விளைநிலங்கள், நீர் என்பன செருமனியின் குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள். தட்ப வெப்பம் செருமனியின் பெரும்பாலான பகுதிகளில், ஈரலிப்பான மேற்குக் காற்று முதன்மை பெறும் மிதவெப்பப் பருவகாலத் தட்பவெப்ப நிலை காணப்படுகின்றது. உயிரிப்பல்வகைமை செருமனிக்கு உட்பட்ட பகுதிகளை இரண்டு சூழல்மண்டலங்களாகப் பிரிக்கலாம். இவை, ஐரோப்பிய-நடுநிலக்கடல் மலைசார் கலப்புக் காடுகளும், வடகிழக்கு-அத்திலாந்திய அடுக்கக் கடல்சார் பகுதிகளும் ஆகும். 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, செருமனியின் நிலப்பகுதியின் 34% விளை நிலங்களாகவும், 30.1% காடுகளாகவும் உள்ளன. 13.4% மட்டுமே நிரந்தரமான புல்வெளிகள். 11.8% குடியிருப்புக்களும், சாலைகளுமாக உள்ளன. நடு ஐரோப்பாவுக்குப் பொதுவான தாவரங்களும் விலங்குகளுமே இங்கும் காணப்படுகின்றன. செருமனியின் காடுகளின் மூன்றில் ஒரு பகுதி "பீச்", "ஆக்" போன்ற இலையுதிர் மரங்களால் ஆனவை. மீள்காடாக்க முயற்சிகளினால் ஊசியிலை மரங்கள் அதிகமாகி வருகின்றன. உயர் மலைப் பகுதிகளில், "இசுப்புரூசு", "ஃபர்" மரங்கள் அதிக அளவில் உள்ளன. மணற் பகுதிகளில் "பைன்", "லார்ச்" போன்ற மர வகைகள் காணப்படுகின்றன. பல வகையான பெரணிச் செடிகள், பூஞ்செடிகள், பூசணங்கள், பாசிகள் என்பனவும் உள்ளன. இங்குள்ள காட்டு விலங்குகளுள், மான், காட்டுப்பன்றி, நரி, பாட்கர், முயல் போன்ற வகைகள் அடங்கும். குறைந்த அளவில் நீரெலிகளும் உள்ளன. செருமனியின் மாநிலங்கள் நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் அதிக மக்கள்தொகை-அடர்த்தி கொண்டது. ஹெஸன் மாநிலத்தில் உள்ள ஃபிரான்க்ஃபர்ட் ஜெர்மனியின் வர்த்தக தலைநகரமாகும். தேசிய விமான சேவையான 'லுஃப்ரான்சாஸா'வின் தலைமைச்செயலகம் மற்றும் விமான கிடங்கும் இங்குதான் உள்ளன. இசையமைப்பாளர் பித்தோவன் பானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் மொழி ஜெர்மனியில் அதிகம் பேசப்படும் மொழி ஜெர்மன் ஆகும். இதுவே தேசிய மொழியும் ஆகும். இது ஆங்கிலம் போன்ற எழுத்துக்களைக் கொண்டிருந்தாலும் மிகவும் வேறுபட்ட ஒலி உடையதாகும் . கூடுதலாக ä,ö,ü,ß போன்ற எழுத்துக்களும் உள்ளன. இவ்வெழுத்துகளுக்கு மேல் இருக்கும் புள்ளிக்கு 'உம்-லௌட்' (umlaut) என்று பெயர். பெயர்சொற்களுக்கு பால் (ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் எனும்) அடிப்படையில் டெயர் ('der'- ஆண்பால்), டீ ('die' - பெண்பால்), டாஸ் ( 'das' - ஒன்றன்பால்) எனும் அடைமொழி சேர்க்கப்படுகின்றது. இந்தியாவில் ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஜெர்மனியின் புகழ்பெற்ற கோத்தே-இன்ஸ்டிட்யூட் (Goethe-Institute) இந்தியாவின் பத்து பெரிய நகரங்களில் ஜெர்மன் மொழி வகுப்புகள் நடத்தி வருகின்றது. முக்கிய ஆறுகள் ஜெர்மனியில் பல முக்கிய நதிகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமான ரைன் ஆறு 1232 கி.மீ. நீளம் கொண்டது. எல்பா மற்றும் தன்யூப் ஆகியன ரைனிற்கு அடுத்த பெரிய நதிகளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு இவ்வாறுகள் உதவுகின்றன. பொருளியல் நிலை செருமனியின் சமூகச் சந்தைப் பொருளாதாரம் மிகவுயர் திறனுடைய தொழிலாளர்களையும் பெரும் மூலதனப் பங்குகளையும், மிகக் குறைந்த நிலையில் ஊழலையும், மிக உயர்ந்த புத்தாக்கத் தூண்டலையும் கொண்டதாக விளங்குகிறது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய, செல்வாக்குள்ள தேசிய பொருளாதாரமான செருமனி உலகில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நான்காவதாகவும் மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவதாகவும் உள்ளது. 2011இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையில் நிகர பங்களிப்பாளர்களில் பெரும் நாடாக செருமனி இருந்துள்ளது. மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 71% சேவைத்துறையிலும் 28% தொழிலுற்பத்தியிலும் 1% வேளாண்மையிலும் கிடைக்கின்றது. தேசிய வேலையில்லாதோர் விழுக்காடு அலுவல்முறையாக ஏப்ரல் 2014இல் 6.8% ஆக இருந்தது. இதில் முழுநேர வேலைத் தேடும் பகுதிநேர ஊழியரும் அடங்கி உள்ளனர். ஐரோப்பிய நாடுகளிடையே நெருங்கிய பொருளாதார, அரசியல் ஒற்றுமைக்கு செருமனி முயன்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையேயான உடன்பாடுகள் மற்றும் ஐ.ஒ. சட்டங்களுக்கேற்ப இதன் வணிகக் கொள்கைகள் வரையறுக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொது நாணயம், ஐரோ, செருமனியில் சனவரி 1, 2002இல் அறிமுகப்படுத்தப்பட்டது. செருமனியின் நாணயஞ்சார் கொள்கைகளை ஐரோப்பிய நடுவண் வங்கி தீர்மானிக்கின்றது. செருமானிய மீளிணைவின் இருபதாண்டுகளுக்குப் பிறகும் வாழ்க்கைத்தரமும் தனிநபர் வருமானமும் முந்தைய மேற்கு செருமனிப் பகுதிகளில் முந்தைய கிழக்கு செருமனிப் பகுதிகளை விடக் கூடுதலாக உள்ளது. கிழக்கு செருமனியின் நவீனமயமாக்கலும் ஒன்றிணைப்பும் நீண்டநாள் செயற்பாடாக உள்ளது; 2019 வரை நீடிக்கும் என மதிப்பிடப்படுகின்றது. மேற்கிலிருந்து கிழக்கிற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ $80 பில்லியன் பரிமாறப்படுகின்றது. சனவரி 2009 இல் செருமானிய அரசு பொருளியல் நிலையைத் தூண்டும் விதமாகவும் நலிந்த துறைகளைக் காப்பாற்றவும் €50 பில்லியன் திட்டம் அறிவித்துள்ளது. உலகில் நடக்கும் முன்னணி வணிக விழாக்களில் மூன்றில் இரண்டு செருமனியில் நடக்கின்றன. 2010ஆம் ஆண்டில் வருமானத்தின் அடிப்படையில், பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட, உலகின் முதல் 500 பெரிய நிறுவனங்களில் (பார்ச்சூன் குளோபல் 500) 37 செருமனியைத் தலைமையிடமாகக் கொண்டவை. செருமனியின் மிகவும் அறியப்பட்ட வணிக நிறுவனங்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ், பி.எம்.டபிள்யூ, எஸ்ஏபி, சீமென்ஸ், போல்க்ஸ்வேகன், அடிடாசு, ஆடி, அலையன்ஸ், போர்ஷ், பேயர், போஸ்ச், மற்றும் நிவியா. செருமனியின் சிறு,குறு நிறுவனங்கள் அவற்றின் சிறப்புத்திறனுக்காக அறியப்பட்டவை. தங்கள் துறையில் தனிச்சிறப்பு பெற்றுள்ள இத்தகைய 1000 நிறுவனங்கள் மறைந்துள்ள வாகையாளர்களாக மதிப்பிடப்படுகின்றனர். புகழ் பெற்ற ஜெர்மானியர்கள் ஐன்ஸ்டீன் பிளாங்க் கெப்ளர் டீசல் போஸ்ச் பாரன்ஹட் சீமன்ஸ் கார்ல் பென்சு கார்ல் மார்க்சு பிரெட்ரிக் ஏங்கல்ஸ் அலெக்ஸாண்டர் ஃபான் ஹம்போல்ட் போன்றோர் ஜெர்மனியில் பிறந்த சில அறிஞர்களாவர். காஸ்பர் டேவிட் பிரடெரிக் மைக்கேல் ஷுமக்கர் பிரபல கார் பந்தய வீரர் ஆவார். பீத்தோவன் புகழ் பெற்ற செவ்வியல் இசையமைப்பாளர் ஆவார். பொறிஸ் பெக்கர் (Boris Becker) (சிறந்த ரெனிஸ் வீரன்) ஸ்ரெஃபி கிராஃப் (Steffi Graf)(சிறந்த ரெனிஸ் வீராங்கனை) உணவு செருமானியர்களின் உணவுப்பழக்கம் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமான உணவை தமது பிரத்தியேக உணவாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த உணவையும் வீணாக்க மாட்டார்கள். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதும், அதன் பின்னும் அவர்கள் அனுபவித்த வறுமையும், பட்டினியும் அதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. இறைச்சி, மீன், முட்டை, மரக்கறி என்று எல்லாவிதமான உணவுகளும் இவர்களது சமையலில் இடம்பெறும். சமைப்பதில் பலவிதமான முறைகளை வைத்திருக்கிறார்கள். உணவில் எல்லாச் சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டுமென்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பால், பாலாடைக் கட்டி, பழங்கள் போன்றவற்றையும் அதிகளவு கவனம் செலுத்தி உண்கிறார்கள். வடக்கு செருமானியர் உருளைக்கிழங்கைப் பிரதான உணவாகக் கொண்டுள்ளார்கள். உருளைக்கிழங்கை அவித்து, பொரித்து, வறுத்து, வெதுப்பி என்று பலவித முறைகளில் செய்து அதற்கு இறைச்சியோ, மீனோ சேர்த்து உண்கிறார்கள். தெற்கு செருமானியர் நூடில்ஸ், ஸ்பெற்சிலே(நூடில்ஸ்வகையில் பிரத்தியேகமான ஒன்று) க்னொய்டெல் போன்றவற்றைப் பிரதான உணவாகக் கொள்கிறார்கள். இவர்களிடம் ஏறத்தாழ 300 வகையான பாண் வகைகள் (Bread) உள்ளன. பாணை பெரும்பாலும் மாலை உணவாகவும், காலை உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். மாலையில் பாணுக்கு இடையில் மரக்கறிகள், இறைச்சித்துண்டங்கள், வூஸ்ற், சீஸ் போன்றவற்றை வைத்துச் சாப்பிடுகிறார்கள். இதை இரவுப்பாண் (Abendbrot) என்பார்கள். காலையில் பெரும்பாலும் பாணை வெண்ணெய், ஜாமுடன் சாப்பிடுவார்கள். கூடவே மரக்கறித் துண்டுகள், பாலாடைக் கட்டி போன்றவைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். காலை உணவில் கண்டிப்பாக ஒரு கிண்ணம் தோடம்பழச் சாறு சேர்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு கிண்ணம் பால் கொடுக்கப்படும். காலை உணவில் தானியவகைகள் கொண்ட Cereal என்னும் உணவும் பிரதான உணவாகக் கொள்ளப்படுகிறது. வூஸ்ட் எனப்படும் உணவு வகை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. துருக்கி நாட்டு உணவு வகையான கேபாப் ஜெர்மன் மக்களிடையே மிகுந்த வரவேற்பபைப் பெற்றுள்ளது. இத்தாலி உணவான பிற்ஸா, பாஸ்தா, லசாணியா போன்ற உணவு வகைகளும் இங்கு விரும்பப் படுகின்றன. இந்திய மற்றும் சீன உணவங்காடிகளும் இங்குள்ளன. ஜெர்மனியில் கோயில்கள் ஜெர்மனியில் அதிகமானோர் கிறித்தவத்தைப் பின்பற்றினாலும் மற்ற மதங்களும் இங்கு ஆதரிக்கப்படுகின்றன. ஜெர்மனியின் நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் உள்ள ஹம் என்னும் ஊரில் கோபுரத்தோடு கூடிய அம்மன் கோயில் உள்ளது . ஜெர்மனியின் பல ஊர்களில் கோயில்கள் இருந்தாலும்,கோபுர அமைப்போடு இருப்பதால் ஜெர்மனியின் மற்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் அதிக அளவில் ஹம்மில் இருக்கும் கோயிலுக்கு வருகின்றனர். ஜெர்மனியில் கல்வி வாய்ப்புகள் ஜெர்மனியின் பல நகரங்களில் பல்கலைக்கழங்கள் உள்ளன . அயல் நாடுகளில் இருந்து வந்து இங்கு படிக்க விரும்பும் மாணவர்கள் http://www.daad.de/deutschland/index.en.html எனும் இணையதளத்திலிருந்து விபரங்களை அறியலாம். இவற்றையும் பார்க்கவும் செருமனி தேசிய காற்பந்து அணி பிரான்சு ஜெர்மனி உறவு செருமானிய உயிரியலாளர் பட்டியல் குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஜெர்மனியின் அதிகாரபூர்வ தளம் ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
3233
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
மியூசிக் ஹால்
மியூசிக் ஹால் (Music Hall) இங்கிலாந்து நாட்டின் ஒரு நாடகக் கலைவடிவமாகும். இக்கலை 1850 முதல் 1960 வரையிலான காலத்தில் மிகவும் பிரபலம் அடைந்தது. இச்சொல் கீழ் காணும் மூன்று பொருள்களிலும் உபயோககிக்கப் பெற்றது. பாடல், நகைச்சுவை மற்றும் நடிப்புக் கொண்ட பல்சுவை நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியின் பிண்ணனி இசை இந்நிகழ்ச்சி நடை பெற்ற அரங்கம் நாடக வகைகள்
3235
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%29
நியூட்டன் (அலகு)
இயற்பியலில், நியூட்டன் (newton, குறியீடு: N) என்பது விசையின் SI அலகாகும். சர் ஐசக் நியூட்டன் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. நியூட்டன் அலகு முதன்முதலில் 1904 வாக்கில் பயன்படுத்தப்பட்டது. 1948-இல் நடந்த நிறைகள் மற்றும் அளவைகள் மீதான பொது மகாநாடு (General Conference on Weights and Measures - CGPM)-க்குப் பிறகு, விசையின் அலகாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு கிலோகிராம் திணிவுள்ள பொருளொன்றில் ஒரு மீட்டர்/செக்கன்2 வேகவளர்ச்சியை (acceleration) உருவாக்கத் தேவையான விசையே ஒரு நியூட்டன் என வரைவிலக்கணம் கூறுகின்றது.. நியூட்டன், SI அடிப்படை அலகுகளில், கிகி x மீ x செக்−2 என்பவற்றை உள்ளடக்கிய ஒரு SI அலகு ஆகும். எடுத்துக்காட்டுகள் நிறை என்பதன் ஒரு வரைவிலக்கணம், புவியீர்ப்பு காரணமாக இரு பொருட்களிடையே உள்ள விசை என்பதனால், நியூட்டன் நிறையின் ஒரு அலகுமாகும். புவி மேற்பரப்பின் வெவ்வேறு இடங்களில் சில பத்திலொரு பங்கு வீதம் அளவுக்கு வேறுபட்டாலும், ஒரு கிலோகிராம் திணிவுள்ள ஒரு பொருள் புவியின் மேற்பரப்புக்கு அண்மையில் அண்ணளவாக 9.81 நியூட்டன்களாக இருக்கும். வேறுவகையில், 9.81−1 கிகி திணிவுள்ள ஒரு பொருள் (≈101.94 கிராம்கள்) அண்ணளவாக ஒரு நியூட்டன் நிறையுடையதாக இருக்கும். மேற்கோள்கள் SI சார் அலகுகள் விசை அலகுகள்
3236
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%29
பாசுக்கல் (அலகு)
பாசுக்கல் அல்லது பாஸ்கல் (Pascal) (குறியீடு Pa) என்பது அழுத்தத்தின் SI அலகு ஆகும். பாசுக்கல் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு நியூட்டன் எடை செயல்படும்போதுள்ள அழுத்தம் ஆகும். அதாவது ஒரு பாசுக்கல் என்பது நியூட்டன்/மீட்டர்2 க்குச் சமமாகும். புகழ் பெற்ற பிரான்சியக் கணித அறிஞரும், இயற்பியலாளரும், மெய்யியல் அறிஞருமான பிளேய்சு பாசுக்கல் (Blaise Pascal) நினைவாக இந்த அலகு பெயரிடப்பட்டுள்ளது. 1 Pa = 1 N/m2 = 1 (kg·m/s2)/m2 = 1 kg/m·s2 = 0.01 மில்லிபார் = 0.00001 பார் இதே அலகு தகைவு (stress (physics)|stress), யங் கெழு அல்லது யங் எண்(Young's modulus), இழுவலிமை (tensile strength) ஆகியவற்றையும் அளக்கப் பயன்படுகிறது. தரையில், கடல்மட்டத்தில், சீரான வளிமண்டல அழுத்தம் 101,325 பா (Pa) = 101.325 கிபா (kPa) = 1013.25 ஃகெபா (hPa) = 1013.25 மிபார் (mbar) = 760 டார் (ISO 2533) ஆகும். உலகெங்கிலும் வானிலையாளர்கள் (Meteorologists) வெகு காலமாக வளிமண்டல அழுத்தத்தை மில்லிபார் என்னும் அலகால் அளந்துவந்தனர். SI அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஃகெக்டோ-பாசுக்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஃகெக்டோ பாசுக்கல் என்பது 100 பாசுக்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாசுக்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாசுக்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். குறைக்கடத்தி கருவி உருவாக்க இயலிலும், வெற்றிடத்தன்மையை (அழுத்தக் குறைவுத் தன்மையை) அளக்க பாசுக்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே டார் (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர். 1 கெக்டோ பாசுக்கல்(hectopascal) (hPa) = 100 Pa = 1 (மில்லிபார்) mbar 1 கிலோபாசுக்கல் (kilopascal) (kPa) = 1000 Pa = 10 hPa முன்னாளைய சோவியத் யூனியனில் மீட்டர்-டன்-நொடி அலகுமுறையில் (mts system) பீசே (pieze) என்னும் அலகை அழுத்தத்திற்குப் பயன்படுத்தினர். அது ஒரு கிலோபாசுக்கலுக்கு ஈடு ஆகும். பல்வேறு (தோராயமான) மதிப்புகளின் எடுத்துக்காட்டுக்கள் (அறிமுகத்துக்கு SI முன்னொட்டு பார்க்கவும்) ¹பூமியின் நிலப்பரப்பில் மற்ற அழுத்த அலகுகளுடன் ஒப்பீடு SI சார் அலகுகள் அழுத்த அலகுகள்
3248
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம. தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து,‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது. தேர்தல் பங்களிப்பு 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற/நாடாளுமன்றத் தேர்தலில் தனது மதிமுகவுடன் அன்றைய மத்திய காங்கிரசின் எதிர்கட்சியான ஜனதா தளம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, திவாரி காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து மக்கள் ஜனநாயக முன்னணி என்று வைகோ தலைமையில் கூட்டணி அமைந்தது ஆனால் கூட்டணி பெயர் பிரச்சனையால் பாமக, திவாரி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது. சென்னை பனகல் பூங்காவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், தமது சொத்துக்கணக்கை வெளியிட்டார் வை. கோபால்சாமி. கழகத்தின் தலைமையில் மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்பட்ட சூழலில், எதிர்பாராத முடிவாக அவ்வாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி கட்சிகளோடு இணைந்து போட்டியிட்ட மதிமுகவும் படுதோல்வி அடைந்ததை அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோவின் ம.தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தனது மக்கள் ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றிருந்த ஜனதாதளமும், சிபிஎம்மும் ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இத்தேர்தலில் மாறாக வைகோவை வெளியேற்றிய கட்சியான திமுக இம்முறை வெற்றி பெறவும் தனது கட்சி சந்தித்த முதல் தேர்தலிலே பெரும் தோல்வி அடைந்தது. 1998 ஆம் ஆண்டு மத்தியில் ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்ததால். மீண்டும் நடைபெற்ற 1998 நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க தனது திமுகவின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அங்கம் வகித்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சிவகாசி, பழநி, திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி ஆதரவுடன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமராக வாஜ்பாய் மத்தியில் ஆட்சி ஆளுவதற்க்கு ஆதரவு அளித்த ம.தி.மு.க முதல் முறையாக வைகோ மக்களவை உறுப்பினர் ஆக பொறுப்பேற்றார். 1999 ஆம் ஆண்டு அதிமுக-பாஜக விற்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டதால் ஒரே ஆண்டில் மீண்டும் வந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்த போது வைகோவை வெளியேற்றிய கட்சியான திமுக–பாஜகவின் தலைமையிலான தேஜகூ கூட்டணியில் இணைந்ததால். பிரதமர் வாஜ்பாய் அவர்களின் வேண்டுகோளை மதித்து வைகோ அக்கூட்டணியில் தொடர்ந்தார். சிவகாசி, பொள்ளாச்சி, திண்டிவனம், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. இம்முறை வாஜ்பாய் அமைச்சரவையில் மதிமுக சார்பில் இரண்டு அமைச்சர்கள் மத்திய இலாக்கா மந்திரியாக பொறுப்பெற்று கொண்டனர். இரண்டாவது முறை வைகோ மக்களவை உறுப்பினர் ஆக பொறுப்பு வகித்தார். 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பிரச்சனையால் ம.தி.மு.க தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் அங்கம் வகிக்கித்திருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க இம்முறையும் சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக–மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆதரவுக்கு ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. அதை காரணம் காட்டி வைகோ அவர்கள் மதிமுக ஆட்சியில் பங்கு ஏற்காமல் பிரச்சாரங்களின் அடிப்படையில் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தார். பின்பு வைகோ ஈழ தமிழர்கள் விவகாரத்தில் எதிராக செயல்பட்ட கூட்டணி தலைமை கட்சியான காங்கிரசின் செயல்பாட்டை கண்டித்து 2007 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டார். 2006 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணியில் தொடர்ந்த ம.தி.மு.க இத்தேர்தலில் தொகுதி உடன்பாட்டு பிரச்சனையால் வைகோ அவர்கள் எதிர்கட்சியான அதிமுகவில் தன்னை முந்தைய ஆட்சி காலத்தில் 19 மாதங்கள் சிறையில் அடைத்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இணைந்தது மக்களிடையே விமர்சிக்கபட்டாலும். இத்தேர்தலில் அதிமுக-மதிமுகவிற்க்கு 35 தொகுதிகள் வழங்கியது அதில் வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், கம்பம், தொண்டான்முத்தூர் ஆகிய 6 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டசபைக்கு சென்றனர். மேலும் இத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் ஆளும் கட்சியான திமுகவிற்கு பலமான எதிர்கட்சித்தலைவியாக ஜெயலலிதா செயல்பட்டார். அதே போல் கூட்டணியில் மதிமுகவின் வைகோ அவர்கள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் சவாலாக செயல்பட்டார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த மதிமுக இத்தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஈரோடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இத்தேர்தலின் போது எதிர்கட்சியான திமுக-காங்கிரஸ் கூட்டணியையும் அக்கட்சியில் நடந்த குறைகளையும், ஈழதமிழற்களின் இனபடுகொலை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வழக்குகள், திமுக அமைச்சர்களின் அத்து மீறிய அதிகார வன்முறை செயல்களை கண்டித்து வைகோ அவர்கள் இக்குற்றங்களை நீதிமன்றத்தில் வழக்காக உருவாக்கி தாக்கல் செய்தும். அதை மக்களிடையே வீதி வீதியாக சென்று பிரச்சாரங்களில் கடுமையாக விமர்சித்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த ம.தி.மு.க இத்தேர்தலில் தொகுதி பங்கீடு தராத காரணத்தால் கூட்டணியிலிருந்து விலகியது. இதை தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தேர்தல் புறக்கணிப்பு செய்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவின் ம.தி.மு.க கட்சி அப்போது மத்தியில் நடந்து கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் மத்திய காங்கிரஸ் இடியமீன் ஆட்சியை நாட்டைவிட்டு விரட்டவேண்டும். என்ற நோக்கத்துடன் காங்கிரசின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியை ஆதரித்து மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை அதற்கு விரைவில் மோடி இந்தியாவிற்கு பிரதமராக தேவை என்று கூறி தமிழகம் முழுவதும் மோடி அலையை உருவாக்கினார். அதே போல் தமிழகத்திலும் திமுக, அதிமுக கட்சிக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சி வரவேண்டும் என்று வைகோ பிரச்சாரத்தில் முழங்கினார். அதனால் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு ம.தி.மு.க-பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டு மத்தியில் பாரதிய ஜனதா கட்சி 10 வருடங்களுக்கு பிறகு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது அக்கட்சியில் நரேந்திர மோடி பிரதமரானார். ஆனால் தமிழகத்தில் பாஜகவின் தலைமையிலான தேஜகூவில் பாஜக மற்றும் பாமக ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்றாலும் ம.தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதைவிட வைகோ தான் இத்தேர்தல் பிரச்சாரத்தில் உயிர் மூச்சாக முழங்கி வெற்றி பெற வைத்த பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை பிரதமர் இராஜபக்சே அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட வைகோ தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என்ற தமிழக தேர்தல் களத்தில் வெற்றி பெற்று ஆளும் கட்சிகளிடம் கூட்டணியில் ஈடுபடாமல் ம.தி.மு.க தலைமையில் வைகோ அவர்கள் உருவாக்கிய மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் அவர்களை முதலமைச்சராக அறிவித்து அவரது தேமுதிக-மதிமுகவுடன் விசிக, தமாகா, சிபிஐ, சிபிஎம் போன்ற தமிழக உள்நாட்டு கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மிக பெரிய கூட்டணியாக அமைந்தது. இக்கூட்டணி தமிழக தேர்தல் வரலாற்றிலே தமிழகத்தில் வெற்றி பெறும் கட்சிகளான திமுக–அதிமுக கட்சிகளுடன் கூட்டணியில் இணையும் பெரும் கட்சிகளை தனது கூட்டணியில் இணைத்து கொண்டு திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று சவாலாக மாற்று ஆட்சி தத்துவத்தில் வைகோ அவர்கள் வழி நடத்தி சென்ற போதிலும் இத்தேர்தலில் இக்கூட்டணி கட்சிகளுக்கு பெரும் தோல்வியே கிடைத்தது. 2019 நாடாளமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரும் முதலமைச்சர்கள் ஆன கருணாநிதி, ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நடந்த இத்தேர்தலில் வைகோ அவர்கள் அதற்கு முந்தைய காலத்தில் கடுமையாக விமர்சித்து வந்த திமுக மற்றும் காங்கிரசுடன் வெகுநாள் கழித்து மீண்டும் தனது மதிமுக இக்கூட்டணியில் சேர்ந்து செயல்பட்டது. தேர்தலுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே திமுகவின் அடுத்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என்று திமுகவே அறிவிக்காத நிலையில் வைகோ அவர்கள் ஸ்டாலினை திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்தார். பின்பு வைகோவும், ஸ்டாலினும் தோழமை பாராட்டி வந்த நிலையில் இந்த பாராளமன்ற தேர்தலில் வைகோ அவர்களை திமுகவில் விலக்கபட்டதிலிருந்து தனது தந்தை கருணாநிதியே வெகுநாட்களாக வழங்காத மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஸ்டாலின் வழங்கி பெருமைபடுத்தினார். இத்தேர்தலில் எதிரணியில் அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா மர்மமான இறப்பை கண்டித்தும் அவர் இறப்பிற்கு பின் அவரது அதிமுக ஆட்சி கலைக்கபடாமல் மத்திய பாஜகவின் பிரதமர் மோடியின் வரைமுறையற்ற அதிகாரத்தையும் அடிமை கூட்டணி அதிமுக-பாஜக அரசை எதிர்த்தும் மத்தியில் பாஜக அரசின் மதவாத செயல்களையும் கண்டித்து வைகோ பிரச்சாரம் செய்தார். இத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இம்முறை மதிமுகவிற்க்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டு திமுகவின் அதிகார பூர்வமான உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சார்பில் அ. கணேசமூர்த்தி வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார். இம்முறை 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 30 வருடங்கள் கழித்து நான்காவது முறையாக வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்த மதிமுக அக்கட்சி உருவாக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் திமுக தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சட்டமன்ற வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இம்முறை சாத்தூர், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, அரியலூர் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். தேர்தல் வெற்றிகள் தேர்தல் சின்னம் சூலை 29, 2010 ஆணையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்தது. ஆனால் இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியது. முக்கிய மதிமுக அரசியல்வாதிகள் வைகோ - நிறுவன பொதுச்செயலாளர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் - அவைத்தலைவர் அ. கணேசமூர்த்தி - மூத்த நிர்வாகி துரை வைகோ - முதன்மை செயலாளர் மல்லை சத்யா - துணை பொதுச்செயலாளர் செஞ்சி ஏ. கே. மணி - துணை பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் - துணை பொதுச்செயலாளர் ரொகையா பீவி சேக் அகமது -துணை பொதுச்செயலாளர் தி. மு.இராசேந்திரன் -துணை பொதுச்செயலாளர் வந்தியத்தேவன் - கொள்கை விளக்க அணி செயலாளர் நெய்வேலி செந்திலதிபன் - பொருளாளர் பால.சசிகுமார் - மாணவர் அணி மாநில செயலாளர் பிரியக்குமார் - அமைப்புச்செயலாளர் நன்மாறன் - செய்தி தொடர்பு செயலாளர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ மதிமுக இணையத்தளம் தமிழக அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டு திராவிட அமைப்புகள் 1993இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
3250
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
பாட்டாளி மக்கள் கட்சி
பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது. இந்த கட்சியின் சின்னம் 'மாம்பழம்' ஆகும். இதுவரை இக்கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. சனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26, 2009 வரை இருந்தது. 14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார். சூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி சின்னத்தை (மாம்பழம்) இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது. தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது. பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது மற்றும் 3.80% சதவீத வாக்குகளை பெற்றது. சின்னம் இக்கட்சி ஆரம்பத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. பகுசன் சமாச் கட்சிக்கு தேசிய அரசியல் கட்சி என்று 1997இல் தகுதி உயர்த்தப்பட்டதாலும் யானை சின்னத்தை அது நாடு முழுக்க பயன்படுத்தியதாலும் யானை சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டது. பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால், அங்கு யானை சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் இசைந்தது. 1998இல் இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும், 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. தலைவர் பேராசிரியர் தீரன் (1989 முதல் - வரை) எடப்பாடி கணேசன் கோ. க. மணி (1998 முதல் 2022 வரை) அன்புமணி ராமதாசு (2022 மே 28 முதல்) பொதுச்செயலாளர் 01 தலித் எழில்மலை 02 வடிவேல் ராவணன் முக்கியத் தலைவர்கள் ச. இராமதாசு - பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் - பாமக மாநில தலைவர் கோ. க. மணி - முன்னாள் மாநில தலைவர் என். டி. சண்முகம் - முன்னாள் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் ஏ. கே. மூர்த்தி - பாமக துணை பொது செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர் அர. வேலு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் இரயில்வே அமைச்சர் வடிவேல் இராவணன் - பாமக மாநிலப் பொதுச்செயலாளர் திலகபாமா - பாமக மாநிலப் பொருளாளர் கோ.க.ம.தமிழ்க்குமரன் - பா.ம.க. இளைஞரணித்தலைவர் வழக்கறிஞர் கே. பாலு - பாமக பேச்சாளர் தேர்தல் வரலாறு தமிழ்நாடு மமுகூ - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேசகூ - தேசிய சனநாயகக் கூட்டணி ஐதேமுகூ - ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி - பாமக-திவாரி காங்கிரசு முன்னணி புதுச்சேரி மக்களவை உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு இக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்த கோரிக்கையின் படி, அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, வன்னியர் சமூகத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் உள் ஒதுக்கீடாக 10.5% வழங்கி சட்டம் இயற்றியும், அரசாணையும் வெளியிட்டது. தமிழ்நாடு அரசு, வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு செய்தது தவறு என்று கூறிய வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், 10.5% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. எனவே திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு, 10.5% உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட்டது. இவற்றையும் பார்க்கவும் மக்கள் தொலைக்காட்சி காமன்வீல் கட்சி தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பா. ம. க கட்சி தளம் பா.ம.க கட்சி வலைப்பூ தமிழக அரசியல் கட்சிகள் 1989இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் பாட்டாளி மக்கள் கட்சி புதுச்சேரி அரசியல் கட்சிகள்
3255
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B
வைகோ
வைகோ (இயற்பெயர்: வை. கோபால்சாமி, பிறப்பு: மே 22, 1944) தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் ஆவார். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். பிறப்பும் வளர்ப்பும் வை கோபால்சாமி பிறந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். வையாபுரி - மாரியம்மாள் தம்பதியினருக்கு 1944ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு மூன்று சகோதரிகள், ரவிச்சந்திரன் என்ற இளைய சகோதரரும் உள்ளனர். குடும்ப வாழ்க்கை வை.கோ ரேணுகாதேவி என்ற பெண்ணை 14ஆம் தேதி சூன் மாதம் 1971ஆம் ஆண்டு மணந்தார், இவர்களுக்கு துரை வையாபுரி என்ற மகனும் ராஜலட்சுமி–ராஜசேகரன் மற்றும் கண்ணகி–பாலகிருஷ்ணன் என்ற மகள்களும் உள்ளனர். அரசியல் வாழ்க்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தித் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (03/04/1978-02/04/1996), இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார். அரசியல் பயணத்தில் 50 ஆண்டு 1964 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார் வைகோ. மக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்றத் தேர்தலில் வைகோ அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த போதிலும் விஜயகாந்த் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தி அவரது தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என ஆறு கட்சிகள் அங்கம் வகித்தன. மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைத்தால் ஊழல்வாதிகள் சொத்துக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கபடுமென வைகோ வாக்குறுதி அளித்தார். இத்தேர்தல் வாக்குறுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது என்றாலும், அரசியல் தலைவர்களிடமும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் எதிர்ப்பை கிளப்பியது. 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின் மையப் பிரச்சினை என்ன? தமிழக மக்களின் மையப் பிரச்சினை என்ன? என்று மக்களிடம் கருத்து கணிப்புகளை கைபேசி மற்றும் புலனம், முகநூல் வழியாக கருத்து கேட்கப்பட்டு மக்களின் பேராதரவுடன் வைகோ எடுத்த இந்த முடிவை பாராட்டி மற்ற தமிழக உள்நாட்டுகட்சி மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்களும் வைகோவின் கருத்தில் உடன்பட்டு மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தனர். மக்களிடையே சரியான வரவேற்பு இருந்தும், பின்னர் ௭திர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தே.மு.தி.க மற்றும் தமாகா விலகியது. பின்பு வரவிருந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மற்ற கட்சிகளோடு உடன்பாடில்லாமல் தனித்து போட்டியிடும் ௭ன்று வைகோ 2016 திசம்பர் மாதம் 27ஆம் தேதி மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் அறிவித்தார். இதன் பிறகு ஏற்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்திற்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடக்காததால். பிறகு தான் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியை முடக்கினார். பின்பு திமுகவில் தனது மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற மக்கள் நல கூட்டணியில் இருந்த தோழமை கட்சிகளோடு இணைந்து செயல்பட்டார். குற்றம் சாட்டுகிறேன் 2004-2009 யில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இந்திய அரசு எப்படி எல்லாம் உதவியது என்பதனை விளக்கி "குற்றம் சாட்டுகிறேன்" எனும் புத்தகத்தினை வைகோ எழுதியுள்ளார். 2004-2009 ஆண்டுகளில் இந்தியப் பிரதமருக்கு தான் எழுதிய கடிதங்களையும், தனக்குப் பிரதமர் எழுதிய கடிதங்களையும் இந்தப் புத்தகத்தில் தொகுத்து உள்ளார் வைகோ. இதை ஆங்கிலத்தில் "I Accuse" என்ற தலைப்பில் வெளியிட்டும் உள்ளார். பொதுச்சேவை வைகோ 2015 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி இரத்ததான முகாமை தொடங்கினார். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாம்களை நடத்தினார். நதிநீர் இணைப்புக்காக ஒரு மாதகாலம் நடைபயணமும் மேற்கொண்டார். இவரின் போராட்டங்கள் தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளான முல்லைப்பெரியாறு பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் என பல போராட்டங்களை நடத்தி வருபவர் வைகோ. மதுவிலக்கு போராட்டம் மதுவை எதிர்த்து 2400 கல் தொலைவு தூரம் தொடர் நடைப்பயணம் மேற்கொண்டவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கடுமையாகப் போராடி அதில் வெற்றி பெற்றவர். 30 முறை கைதானவர். ஐந்து ஆண்டுகள் சிறையில் தன் வாழ்நாளை கழித்தவர். ஒரு கோடி கல் தொலைவுகளுக்கும் மேல் பயணம் செய்தவர், தமிழகத்தில் 50000 கிராமங்களுக்கும் மேல் சென்று மக்களை சந்தித்தவர் ஆவார். சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்காக வழக்குத் தொடுத்து வாதாடி இருக்கின்றார். தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நீர்வளம், நிலவளம் குன்றி வருகிறது. ௭னவே அம்மரங்களை அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பிற துறைகளின் செயலாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டு ஆகத்து 8 ஆம் திகதி கடிதம் எழுதினார். தமிழக அரசின் சார்பில் ௭வ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதே ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதியன்று மாண்பமை நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வில் நடந்த விசாரணையில், தமிழகத்தின் 13 தென்மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை விரைவுபடுத்த ஒவ்வாரு மாவட்டத்திற்கும் 5 வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைத்தது. இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மற்ற 19 மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்களை வெட்ட ஆணை பிறப்பிக்க கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் திகதி அதற்கான உத்தரவையும் பிறப்பித்து, 19 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தாக்கீது அனுப்பியுள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சினை முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக எட்டு ஆண்டுகள் போராடி இருக்கின்றார். மீத்தேன் ௭திர்ப்பு போராட்டம் மீத்தேனை எதிர்த்துத் தஞ்சை மண்டலத்தில் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்திருக்கிறார். காவேரி பிரச்சினை காவிரிப் பிரச்சினையில் பத்தாயிரம் பேர்களைத் திரட்டிக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து கல்லணை வரையிலும் நடந்து சென்றிருக்கிறார். ஸ்டெர்லைட் போராட்டம் ஸ்டெர்லைட் பிரச்சினையில் உலகக் கோடீசுவரர்களுள் ஒருவரான ஸ்டெர்லைட் அதிபரை எதிர்த்துப் பதினெட்டு ஆண்டுகள் போராடி இருக்கின்றார். இதற்காக உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தானாகவே வாதாடியிருக்கின்றார். தனித்தமிழ் ஈழம் தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்காகப் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தை, உலக அரங்கில் முதன்முதலாக முன்வைத்தது இவரே. 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலர் வைகோ ஜெனீவா சென்றார். ஜெனீவா விமான நிலையத்தில் ஈழத் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வைகோவை வரவேற்றனர்.சுவிஸின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பான ஐ.நா. குழுவின் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வகித்த பதவிகள் 1970- கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தனது 25வது அகவையில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் 1978- முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினர் 1984-இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் 1990- மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் என 18 ஆண்டுகள் 1994- ம.தி.மு.க நிறுவன பொதுச்செயலாளர் 1998- பிப்ரவரி மாதம் சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினர் 1999- அக்டோபர் மாதம் இரண்டாவது முறையாக சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினர் திமுக மாநில மாணவரணித் துணைத்தலைவர் திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் திமுக தொண்டர் அணித் தலைவர் 2019 - நான்காவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர். எழுத்துப் பணிகள் வை.கோ 50க்கும் அதிகமான புத்தகங்களை இயற்றியுள்ளார். அதில் குறிப்பிட்ட புத்தகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புக்கள் வைகோவின் இணையத்தளம் மதிமுகவின் இணையத்தளம் தமிழக அரசியல்வாதிகள் நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள் 12வது மக்களவை உறுப்பினர்கள் 13வது மக்களவை உறுப்பினர்கள் வாழும் நபர்கள் 1944 பிறப்புகள் இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் தமிழ்நாட்டின் மது எதிர்ப்புப் போராளிகள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் நாடாளுமன்ற தமிழ்நாட்டு உறுப்பினர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள்
3263
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
இசுலாம்
இசுலாம் (இஸ்லாம் , அரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஓரிறைக் கொள்கையைக் கொண்ட ஓர் ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.907 பில்லியன் (190 கோடி மற்றும் எழுபது லட்சத்திற்கும் மேலான) மக்கள் இம்மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 24.9 சதவீதமாகும், அதாவது கிட்டத்தட்ட மனித சமுதாயத்தில் நான்கில் ஒருவர். உலகின் 49 நாடுகளின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையான இசுலாம், கிறிஸ்தவத்திற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்குப் பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாகக் கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களைப் பெற முடியும் என்பது இசுலாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக் கடமைகளாகும். இசுலாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது. 1. அல்லாஹ்வின் வேதம். (குர் ஆன்) 2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். (ஹதீஸ்) ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இந்த மார்க்கத்தை மெக்கா நகரில் பரப்பத் தொடங்கினார். பின்பு எட்டாம் நூற்றாண்டில் உமையா கலீபகம் காலத்தில் மேற்கின் அந்தலூசியாவிலிருந்து கிழக்கின் சிந்து ஆறு வரை இஸ்லாம் பரவியது. முகம்மது நபி இறைவனின் தூதர் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை ஆகும். இசுலாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது. ஆதம் (அலை), நூஹ் (அலை) (நோவா), இப்ராகிம் (அலை) (ஆபிரகாம்), இஸ்மாயில் (அலை), தாவூத் (அலை), மூசா (அலை) (மோசே) மற்றும் ஈசா (அலை) போன்ற முன் சென்ற நபிமார்களுக்கும் இறைவனின் கட்டளைகள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் முகம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது. உலகில் மிக வேகமாகப் பரவி வரும் பெரும் மதம் இஸ்லாம் ஆகும். சொல்-வேர் இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் சலாம் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். இந்த சொல் முழுமையானவொன்று, சரணடைதல், பிழையில்லாதவொன்று, நேர்மை, பாதுகாப்பு, ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் பொருள் அந்த ஏக இறைவன் எனும் படைத்தவனின் நாட்டத்தை ஏற்றுக் கொண்டு, தம்மை முழுமையாக ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும். நம்பிக்கைகள் (ஈமான்) இசுலாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விடயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இது ஈமான் என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது. கடவுள் (அல்லாஹ்) “கடவுள் ஒருவனே. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இசுலாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும். அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது. அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை. . மலக்குகள் (வானவர்கள்) வானவர்கள் எனப்படுபவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட, இறைவனின் சேவகர்கள் என நம்பிக்கை வைத்தல் ஒரு இசுலாமிய கடமையாகும். இவர்களை இறைவன் ஒளியினால் படைத்ததாக நபிமொழி கூருகின்றது. இறைவனை தொழுதவண்ணம் இருப்பது, இறைத்தூதர்களுக்கு இறைவனின் செய்தியை கொண்டு செல்வது, ஒவ்வொரு மனிதனின் பாவ புண்ணிய கணக்கை குறித்துக்கொள்வது, அவர்களின் உயிரை எடுப்பது ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. ஜிப்ராயீல் வானவ கூட்டத்தின் தலைவராக குறிப்பிடப்படுகின்றார். அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் இரண்டாவது அம்சமாகும். கண்களுக்கு புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது. இவர்களுள் பிரதானமானவரது பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத்தூதர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதாகும். இன்னும் பல முக்கியமான வானவர்கள் உள்ளனர். வேதங்கள் முகம்மது நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் வேதங்கள் கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இசுலாமிய கடமையாகும். தவ்ராத், சபூர், இஞ்சில் ஆகியவை முறையே மூசா, தாவூத், ஈசா ஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டதாகவும், அதனாலேயே இறுதியானதாகவும், திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு குரான் வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் பெயரறிந்து மேற்கூறப்பட்ட வேதங்களையும், மற்றவைகளைப் பொதுவாகவும் அல்லாஹ் அருளியவை என நம்புவது இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த மூன்றாவது அம்சமாகும். அல்லாஹ் அருளிய அனைத்து வேதங்களிலும் இறுதியானது அல்குர்ஆன் ஆகும். . இறைதூதர்கள் (நபிமார்கள்) இஸ்லாம் கூறும் இறைதூதர்கள் (நபிமார்கள்) எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதர்கள் என்பது இசுலாமிய நம்பிக்கையாகும். உலகின் முதல் மனிதன் ஆதம் முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேரு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றது. உலக மக்கள் இறைவனை மறந்து, அநீதியின் பக்கம் செல்லும்போது அவர்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் இறைவனின் செய்தியை அவர்களுக்கு அறிவித்தல் ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. முகம்மது நபி இவர்களில் இறுதியானவராக குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றார். இறுதித் தீர்ப்பு நாள் (மறுமை-கியாமத்) ஒருநாள் இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு, முதல் மனிதன் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை மீள்வுயிர்விக்கப்படுவர். அன்று அவர்கள் செய்த பாவ மற்றும் புண்ணியங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவது ஒரு கடமையாகும். கியாமத் எனப்படும் இந்த நாளில் அவர் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சொர்க்கமோ, நரகமோ தரப்படும் என குரான் குறிப்பிடுகின்றது. மறுமையை நம்ப வேண்டும் என்பது நம்பிக்கை சார்ந்த ஐந்தாவது அம்சமாகும். இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டியவை. ஒரு நாள் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்து விடுவான். அந்நாளின் பெயர்: கியாமத் ஆகும். பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் ஆஜராவார்கள். அதற்கு மஹ்ஷர் என்று பெயர். எல்லா மனிதர்களும் தங்கள் உலக வாழ்வில் எதை எதை செய்தார்களோ அவை முழுவதும் கொண்ட செயல் பட்டியல் இறைவனின் நீதி மன்றத்தில் சமர்ப்பணமாகும். விதி விதி எனப்படுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என நம்புவது இசுலாமின் ஒரு கடமை. விதியை பற்றி சிந்திப்பதையோ அல்லது அதைப் பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் தடுக்கின்றது . இந்தப் பிரபஞ்சமும் இதிலுள்ள படைப்புக்கள் அனைத்தும் அணுவும் பிசகாது அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படியே இயங்குகின்றன என்பது இஸ்லாத்தின் இறை நம்பிக்கை சார்ந்த ஆறாவது அம்சமாகும். மனிதனுடைய கற்பனைகள் கருத்துக்கள் கூட அல்லாஹ்வின் நிர்ணயத்துக்கு உட்பட்டவையே. அல்லாஹ்வின் ஞானத்துக்கு புறம்பாகவோ, அவன் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு மாறாகவோ எதுவும் இயங்க முடியாது. இதன் கருத்து மனிதன் சுதந்திரமாக இயங்குவதற்கான அறிவையும் ஆற்றலையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். அதேவேளை அவற்றில் தன் விதிமுறைகளையும் வைக்க அவன் தவறவில்லை. இது அவனது ஆற்றலில், அறிவில், திறமையில் உள்ளதாகும். கடமைகள் இசுலாம் தன்னைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கடமைகளாக ஐந்தை குறிப்பிடுகின்றது. இவை இசுலாத்தின் ஐந்து தூண்கள் என அழைக்கப்படுகின்றன. உறுதிமொழி (கலிமா) “இறைவன் (அல்லாஹ்) ஒருவனே. அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது அவனது தூதர்.” என்பதில் முழுநம்பிக்கை கொண்டு, வாயால் உறுதிமொழி கொடுப்பது முதல் கட்டாய கடமை. இது கலிமா சகாதா என அழைக்கப் படுகின்றது. ஒரு மாற்று மதத்தவர், இசுலாமிற்கு மாற இதனை உச்சரித்தால் போதுமானதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. கலிமா ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ சிலை வழிபாடு, கபுரு-சமாதி வழிபாடு, முக்கடவுள் வழிபாடு, மதகுருமார்கள் வழிபாடு போன்ற நரகத்திற்கு இட்டுச் செல்லும் கோணல் வழிபாடுகளிலிருந்து விடுபட்டு இறைவன் அளித்துள்ள (பார்க்க 6:153) ஒரே நேர்வழிக்கு வரும்போது மனதில் உறுதி கொண்டு வாயினால் மொழிய வேண்டிய உறுதி மொழியே அரபி மொழி வழக்கில் கலிமா என்பதாகும். “”அல்லாஹ்” என்று அரபி மொழியில் அழைக்கப்படும் இணை, துணை, தாய் தந்தை, மகன், தேவை, இடைத்தரகு எதுவுமே அற்ற ஏகனாகிய இறைவன் தன்னந்தனியனான ஒருவனோ, அதுபோல் அந்த ஓரிறைவனை ஏற்று உறுதி மொழி பகர்வதும் ஒன்றே ஒன்றுதான். அது வருமாறு: அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ. இந்த அரபி மொழி உறுதி மொழியின் தமிழ்ப் பொருள் வருமாறு: “”அல்லாஹ் அல்லாத இறைவனே இல்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன், இன்னும் முஹம்மது(ஸல்) அவர்கள் அவனது அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதியாகக் கூறுகிறேன்” என்பதாகும். இறை வணக்கம் (தொழுகை) பருவவயதடைந்த, புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு இசுலாமியரும் தினமும் ஐந்து முறை இறை வணக்கம் செய்ய வேண்டியது இரண்டாவது கட்டாய கடமையாகும். பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை வணக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. மெக்காவில் உள்ள புனித காபாவை நோக்கி வணங்கப்படும் இந்த முறையில் அரபு மொழியில் உள்ள குரானின் வசனங்கள் ஓதப்படுகின்றன. நோன்பு ஒவ்வொரு வருடமும் இசுலாமிய நாட்காட்டியின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் நீர் ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள் , பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்குநேர பெண்கள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. பொருள் தானம் (ஸக்காத்) ஸக்காத் எனப்படும் கட்டாய பொருள் தானம் இசுலாமின் நான்காவது கட்டாய கடமையாகும். இதன்படி, ஒவ்வொரு இசுலாமியரும் ஆண்டுக்கு ஒருமுறை தனக்குச் சொந்தமான தங்க, வெள்ளி நகைகள் மற்றும் வியாபார பொருள்கள் ஆகிய செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை (100க்கு 2.5%) ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். மொத்த சொத்து 87.5 கிராம் தங்கத்திற்கும் அல்லது 612.5 கிராம் வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் ஒருவனுக்கு இந்த கட்டாய தானம் கடமை ஆகாது. புனித பயணம் (ஹஜ்) வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு இசுலாமியரும், தனது வாழ்நாளில் ஒருமுறை சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள காபாவை தரிசிப்பது இசுலாமின் ஐந்தாவது கடமையாகும். இந்த பயணம் இசுலாமிய நாட்காட்டியின் துல்கச் மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. மற்ற நான்கு கட்டாய கடமைகளில் இருந்து இதற்கு சற்று தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் மற்றும் நோய்வாயப்பட்ட மக்களுக்கு இந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இசுலாமியப் பிரிவுகள் இசுலாமியர்கள் பொதுவாக சுன்னி மற்றும் சியா என்ற இரண்டு பெரும் பிரிவினராக உள்ளார்கள். இதை தவிர சூபிசம் போன்ற சில பிரிவுகளும் உள்ளன. சன்னி இசுலாம் சன்னி இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் மிகப்பெரியது ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 75 முதல் 90 சதவிகிதத்தை கொண்டுள்ளது. சன்னி என்ற சொல் சுன்னத் என்பதன் சுருக்கம் ஆகும். இதற்கு 'முகம்மதை பின்பற்றுதல்' என்பது பொருளாகும். இராக், ஈரான், மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இதன் சட்ட பிரிவுகள் மொத்தம் நான்கு உள்ளன. இவை மத்கபு என அழைக்கப்படுகின்றன. (ஹ)கனபி, சாபி, மாலிக்கி மற்றும் ஹன்பலி ஆகிய நான்கில் ஏதேனும் ஒன்றை பின்பற்ற சன்னி முசுலிம்களுக்கு உரிமை உண்டு. இவற்றோடு சேர்த்து சலபி மற்றும் வஃகாபிசம் ஆகியவையும் அதிக பரப்பில் பின்பற்றப் படுகின்றன. சியா இசுலாம் சியா இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் இரண்டாவது மிகப்பெரிய பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 10 முதல் 20 சதவிகிதத்தை கொண்டுள்ளது. இராக், ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பிரிவு, மற்ற இசுலாமிய நாடுகளிலும் கணிசமான அளவில் உள்ளது. சியா இசுலாம் தன்னகத்தே அனேக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 'பன்னிருவர் பிரிவு' முதன்மையாக உள்ளது. இதை தவிர இசுமாலி, செய்யதி போன்ற பிரிவுகளும் கணிசமான அளவில் உள்ளன. பன்னிருவர் பிரிவின் அனேக நடைமுறைகள் சுன்னி இசுலாம் முறையுடன் ஒத்துப்போகின்றன. சூபிசம் சூபிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். அன்றைய இசுலாமிய ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறைக்கு எதிரான இயக்கமாக இது தொடங்கப்பட்டது. உலக வாழ்வை துறத்தல், தவம், இசை ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்பது இவர்களின் வாதம். இவ்வாறான முயற்சிகளால் இறைவனை அடைந்தவர்கள் சூபிகள் என அழைக்கப் பட்டனர். தனியே தங்களுக்கான சட்ட முறைகளை கொண்டிராத இவர்கள், சுன்னி மற்றும் சியா இசுலாமிய முறைகளையே பின்பற்றுகின்றனர். தர்கா வழிபாடு என்பது இவர்களின் பிரதான வழிபாட்டு முறையாகும். பிற பிரிவுகள் அகுமதிய்யா முசுலிம் சமூகம் - இசுலாத்தின் பல கோட்பாடுகளை பின்பற்றும் இவர்கள், முகமது நபிக்கு பிறகு வந்த மற்றொரு இறைதூதராக மிர்சா குலாம் அஹ்மத் என்பவரை நம்புகின்றனர். இது இசுலாத்தின் அடிப்படைக்கு எதிராக இருப்பதாக கூறி இவர்களை சில முசுலிம்கள் ஏற்பதில்லை. இபாதி - இசுலாத்தின் ஆரம்பகாலங்களில் தோன்றிய காரிசியாக்கள் எனப்படும் அடிப்படைவாத குழுவின் ஒரு பிரிவே இபாதி இசுலாம் ஆகும். இவர்கள் இன்றளவும் ஓமன் நாட்டில் பெரும்பான்மையினராக உள்ளனர். குரானிசம் - நபிமொழி நூல்களின் வழிமுறைகளை தவிர்த்து, குரானின் கோட்பாடுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ்பவர்கள் இவர்கள். யசானிசம் - 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக் அதி இப்னு முசாபிர் என்பவரால் முன்னெடுக்கபட்ட வழிமுறை இது. குர்தியர்களின் தொன்ம நம்பிக்கைகள் மற்றும் சூபிசத்தின் கூருகள் ஆகியவற்றின் கலவையாக இது உள்ளது. இசுலாம் தேசம் - இது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். அமெரிக்காவின் நிறவெறி மற்றும் கிறிஸ்தவத்திற்கு எதிராக இது 20ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. ரோஹிங்கியா முஸ்லிம் இவர்கள் மியான்மர்உள்நாட்டிளேயே அகதிகளாக வாழுகிறார்கள். 2012ஆம் ஆண்டிலிருந்து தாக்குதலால் பலர் இறந்தும், 1,40,000 பேர் உரிமைகள் பரிக்கப்பட்டும் வாழுகிறார்கள். இசுலாமிய பரவல் 2010ல் 232 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு, மொத்தம் 1.57 பில்லியன் மக்கள் இசுலாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூருகின்றது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 23% ஆகும். இதில் 75 முதல் 90 சதவீதம் வரை சுன்னி முசுலிம்களும், 10 முதல் 20 சதம் வரை சியா முசுலிம்களும் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூருகின்றது. ஏறக்குறைய 50 நாடுகளில் இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. கண்டங்கள் விரிசையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகமான அளவில் இசுலாம் பரவி உள்ளது. மொத்த இசுலாமிய மக்கள்தொகையில் 68%தை ஆசிய கண்டம் கொண்டுள்ளது. 638 மில்லியனுக்கும் அதிகமான இசுலாமியர்கள் இந்தோனேசியா, பாகிசுத்தான், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். ஆப்பிரிக்காவை பொருத்த அளவில் எகிப்து மற்றும் நைசீரியா ஆகியவை அதிக இசுலாமிய மக்கள்தொகையை கொண்டுள்ளன. ஐரோப்பாவை பொருத்த அளவில் அநேக நாடுகளில், கிறிஸ்தவத்திற்கு அடுத்த நிலையில் இசுலாம் உள்ளது. துருக்கி, அதிகக் கூடிய இசுலாமிய மக்கள் தொகையை கொண்ட ஐரோப்பிய நாடாகும். அமெரிக்காவில் இசுலாமியர்களின் மக்கள் தொகை 7 மில்லியன் ஆகும். இவற்றையும் பார்க்கவும் இசுலாம் குறித்த விமர்சனங்கள் இசுலாமிய மெய்யியல்‎ இசுலாமிய வரலாறு‎ இஸ்லாத்தில் பெண்ணுரிமை இசுலாமியத் தமிழ் இலக்கியம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழ் இசுலாமிய இனையதளங்கள் தொழுகை நோன்பு Patheos Library – Islam University of Southern California Compendium of Muslim Texts Encyclopedia of Islam (Overview of World Religions) Ethical Democracy Journal views on Islam, other ethical systems and democracy Islam, article at Encyclopædia Britannica Islam, article at Friesian.com Asabiyya: Re-Interpreting Value Change in Globalized Societies, article at Repec/Ideas, University of Connecticut and IZA, Bonn, on Islam and global value change Islam, article at Citizendium Islam (Bookshelf) at Project Gutenberg Islam from UCB Libraries GovPubs Islam and Islamic Studies Resources from Dr. Alan Godlas, Professor, University of Georgia ஆபிரகாமிய சமயங்கள்
3270
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%88
ஒற்றளபெடை
ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும். ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் ஆகிய பதினோரு எழுத்துகளும் தனிமொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும். ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ - நன்னூல்.எழு.92 எ.கா: மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம். ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும். இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் சார்பெழுத்துகள்
3271
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%88
உயிரளபெடை
உயிரளபெடை என்பது உயிரெழுத்து அளபெடுத்து வருதல். உயிரெழுத்துகளில் குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை. மேலும் எழுத்துகளுக்கு ஒலியளவைக் கூட்டவேண்டி வரும்போது ஒத்த ஒலியுடைய எழுத்தைக் கூட்டி எழுதி ஒலித்துக்கொள்ளுமாறு காட்டுவர். அளபெடுகும் எழுத்துகள் உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு அளபெடுக்கும். அளபெடுக்கும் இடங்கள் மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.: எடுத்துக்காட்டு: மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காணலாம். ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும். வகைகள் இதில் செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்று வகைகள் உள்ளன. அளபெடைப் பெயர் ஆடூஉ மகடூஉ இந்தச் சொற்களைத் தொல்காப்பியம் பால் உணரும்படி வந்த சொற்கள் எனக் குறிப்பிடுகிறது. இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் உசாத்துணை முனை. நல்லாமூர் கோ. பெரியண்ணன், அடிப்படை எளிய தமிழ் இலக்கணம், வனிதா பதிப்பகம், சென்னை-17, முதல் பதிப்பு 2003 அடிக்குறிப்புகள் சார்பெழுத்துகள்
3272
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%81
செங்குருதியணு
செங்குருதியணு அல்லது இரத்தச் சிவப்பணு (Erythrocytes or Red blood cell) (இலங்கை வழக்கு: செங்குருதிக் கலம் அல்லது செங்குருதிச் சிறுதுணிக்கை) முதுகெலும்புடைய விலங்குகளின் குருதியில் உள்ள உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாகும். இவையே இவ் விலங்குகளில் ஆக்சிசனை நுரையீரலிலிருந்து இழையங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. பிற்பாடு, இழையங்களிலிருந்து வெளியிடப்படும் கரியமில வாயுவையும் நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன. இப்பணியில் உதவுவது இவற்றிலுள்ள ஹீமோகுளோபின் என்ற புரதமாகும். இவை வட்ட வடிவில் இருபுறமும் குழிந்த செல்கள் இச்செல்களில் உட் கரு இல்லை. ஆண்களின் இரத்தத்தில் ஒவ்வொரு கன மில்லிமீட்டர் இரத்தத்திலும் ஏறக்குறைய 5.2 மில்லியன் சிவப்பணுக்கள் உண்டு. (அளவீடு 4.2-5.8 மில்லியன்) பெண்களின் இரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 4.5 மில்லியன் சிவப்பணுக்கள் (அளவீடு 3.3-5.2 மில்லியன்) அமைந்திருக்கும். தட்டு வடிவில் உள்ள சிவப்பணுவின் குறுக்கு விட்டத்தின் அளவு 7.5 mm ஆகும். ஒவ்வொரு செக்கனிலும் 2.4 மில்லியன் செங்குருதியணுக்கள் உருவாக்கப்படுகின்றன. எலும்பு மச்சையில் இவை உற்பத்தியாகின்றன. இவை குருதியில் 100-120 நாட்கள் இருந்து, பின்னர் முதிர்வடைந்த சிவப்பணுக்கள் பெருவிழுங்கி (Macrophage) இனால், கல்லீரல், மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன. தொழில்கள் பிரதான தொழில்: செங்குருதிக் கலங்களின் பிரதான தொழில் ஆக்சிசன் வாயுவைக் காவுவதும் விடுவிப்பதுமாகும். செங்குருதிக் கலங்களிலுள்ள ஹீமோகுளோபின் புரதத்திலுள்ள இரும்பு அயன்களுடனேயே ஆக்சிசன் இணைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு பின் ஆக்சிசன் குறைவான இடத்தில் விடுவிக்கப்படுகின்றது. குருதியில் கொண்டு செல்லப்படும் ஆக்சிசனில் 98%க்கும் மேற்பட்ட வீதமான ஆக்சிசன் செங்குருதிக் கலங்களிலேயே காவப்படுகின்றன. குருதியில் காவப்படும் 5-10% காபனீரொக்சைட்டை ஹீமோகுளோபினின் புரதப்பகுதியோடு இணைத்துக் காவி விடுவித்தல். (குருதி முதலுருவில் கரைந்த இரு காபனேற்று அயன் (HCO3-) வடிவில் காவப்படுவதே பிரதான முறையாகும். கரைந்த CO2 வடிவிலும் காவப்படுகின்றது) காபனீரொக்சைட்டுக் கொண்டு செல்லலில் இக்கலத்திலுள்ள நொதியங்கள் உதவுகின்றன. முள்ளந்தண்டுளிகளின் செங்குருதியணு முள்ளந்தண்டுளிகளில் மாத்திரமே செங்குருதியணு காணப்படுகின்றது. இவற்றில் இனத்துக்கினம் செங்குருதியணுவின் வடிவமும், கட்டமைப்பும் மாற்றமடைகின்றது. முலையூட்டிகள் தவிர ஏனைய அனைத்து முள்ளந்தண்டுளிகளின் (மீன்கள், ஈரூடகவாழிகள், ஊர்வன, பறவைகள்) செங்குருதிக் கலங்களிலும் கரு உள்ளது. செங்குருதிக் கலங்களே குருதிக்குச் சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. செங்குருதிக் கலங்களின் ஹீமோகுளோபினின் ஹீம் கூட்டத்தின் இரும்பு அயன்களாலேயே இரத்தம் சிவப்பு நிறமாகின்றது. செங்குருதிக் கலங்கள் நீக்கப்பட்ட குருதி முதலுரு வைக்கோல் மஞ்சள் நிறத்திலேயே இருக்கும். உலகில் குடும்பம் Channichthyidae மீன்களில் மாத்திரமே செங்குருதிக் கலங்களோ ஈமோகுளோபினோ காணப்படுவதில்லை. இவை அந்தார்ட்டிக் சமுத்திரத்தின் குளிர் நீரில் வாழ்வதால் அந்நீரே அவற்றுக்குத் தேவையான ஆக்சிசனைக் காவுகின்றது. (குளிர் நீரில் ஆக்சிசனின் கரைதிறன் அதிகமாகும்). பொதுவாக செங்குருதிக் கலத்தின் விட்டம் குருதி மயிர்க்குழாயின் விட்டத்தை விட 25% அதிகமாகும். எனினும் செங்குருதிக் கலங்களின் கலமென்சவ்வின் மீள்தன்மை (Elasticity) காரணமாக அக்குறுகிய இடைவெளியூடாகவும் நசிந்து கொண்டு செல்கின்றன. இவ்வாறு இருப்பதால் செ.கு.கலங்கள் மெதுவாக மயிர்த்துளைக் குழாயூடாக செல்கின்றன. இம்மெதுவான அசைவால் அதிகளவு ஆக்சிசன் பரவக் கூடியதாக உள்ளது. ஈமோகுளோபின் முள்ளந்தண்டுளிகளின் பிரதான சுவாச நிறப்பொருள் ஈமோகுளோபின் ஆகும். ஈமோகுளோபினில் குளோபின் எனும் புரதப்பகுதியும் ஹீம் எனும் அயன் பகுதியும் உண்டு. ஆக்சிசன் இரும்பு அயனோடு இணையும்; CO2 புரதப்பகுதியோடு இணையும். எனவே ஆக்சிசன் கொண்டு செல்லலுக்கு காபனீரொக்சைட்டு போட்டியாக இருப்பதில்லை. எனினும் புகையிலுள்ள காபனோரொக்சைட்டு (CO) இரும்போடு இணைவதால் ஆக்சிசன் கொண்டு செல்லலுக்குப் போட்டியாக அமைந்து ஆக்சிசன் காவலைக் குறைக்கின்றது. ஒரு ஈமோகுளோபின் புரதத்தில் நான்கு இரும்பு அயன்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு செங்குருதிக் கலத்தில் கிட்டத்தட்ட 270 மில்லியன் ஈமோகுளோபின் மூலக்கூறுகள் உள்ளன. முலையூட்டிகளின் செங்குருதிக் கலம் மனிதன் உட்பட முலையூட்டிகளின் செங்குருதிக் கலம் ஆக்சிசன் காவல் வினைத்திறனை அதிகரிப்பதற்கென பல இசைவாக்கங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் கருவோ, இழைமணியோ இருப்பதில்லை. எனவே இவற்றின் செங்குருதிக் கலங்களில் டி.என்.ஏ இருப்பதில்லை. முலையூட்டிகளின் செங்குருதிக் கலங்களுக்குத் தேவையான சக்தி காற்றின்றிய சுவாசம் மூலமே பெறப்படுகின்றது. இழைணி இன்மையால் கிடைக்கும் நன்மை: காவப்படும் ஆக்சிசன் காவிக் கலமான செ.கு.கலத்தால் உபயோகிக்கப்பட மாட்டாது. கரு இல்லாததால் கிடைக்கும் நன்மை: கரு பிடிக்கும் கனவளவு மீதப்படுத்தப்பட்டிருப்பதால், அதிக ஆக்சினைக் காவலாம். டி.என்.ஏ இல்லாததால் செ.கு.கலங்களை எந்தவொரு வைரஸ்ஸாலும் தாக்கி அழிக்க முடியாது. முலையூட்டிகளின் செங்குருதிக் கலங்கள் இரட்டைக் குழிவான தட்டுருவானவை. இவ்விரட்டைக் குழிவும் ஆக்சிசன் பரவலடையும் மேற்பரப்பின் பரப்பளவை அதிகரிப்பதாக உள்ளது. செங்குழிய வாழ்க்கைக் காலம் செங்குழியங்கள் பொதுவாக செவ்வென்பு மச்சையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு செக்கனிலும் 2-4 மில்லியம் செங்குழியங்கள் உருவாகின்றன. இவற்றின் உற்பத்திக்கு இரும்புச்சத்து, புரதம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12 என்பன அவசியமாகும். ஒவ்வொரு செங்குழியமும் முதல் 7 நாட்களை செவ்வென்பு மச்சையினுள் ஆரம்ப நிலையிலும், கிட்டத்தட்ட 120 நாட்களை குருதியிலும் கழிக்கின்றன. செங்குழியங்களின் முன்னோடிக் கலங்கள் வலையுருக்குழியங்கள் ஆகும். வாழ்வுக் காலத்தை முடித்த செங்குழியங்களும், காயமடைந்த அல்லது வித்தியாசமான செங்குழியங்களும் குருதியிலிருந்து நீக்கப்படுகின்றன. பிரதானமாக மண்ணீரலிலும், ஈரலிலும் இவை நீக்கப்படுகின்றன. ஈரலில் அழிக்கப்படும் செங்குழியங்களின் கூறுகளிலிருந்தே பித்த நிறப்பொருட்கள் உருவாகின்றன. கருப்பையில் உள்ள முதிர்மூலவுரு நிலையில் மாத்திரமே செங்குழியங்கள் பிரதானமாக ஈரலில் உருவாக்கப்படுகின்றன. மனிதரில் செங்குழியம் விட்டம்:6.2–8.2 µm தடிப்பு:0.8–1 µm மேற்பரப்பளவு:136 μm2 வடிவம்:இருகுழிவான வட்டத்தட்டு வடிவம் எண்ணிக்கை: மொத்தமாக 20-30 திரில்லியன். இது உடலில் உள்ள மொத்தக் கலங்களின் எண்ணிக்கையில் கால்ப்பங்காகும். ஆண்களில்- 5.5-6 மில்லியன்/µL பெண்களில்- 4.5-5 மில்லியன்/µL செங்குழியத்துடன் தொடர்புடைய நோய்கள் குருதிச்சோகை- குருதியில் செங்குழிய எண்ணிக்கை குறைவடைவதால் அல்லது செங்குழிய வடிவம் விகாரமாவதால் ஏற்படும் நோய் நிலமை. இதனால் உடலில் ஆக்சிசன் கொண்டு செல்லும் வினைத்திறன் குறைவடையும். இரும்புச் சத்துக் குறைபாட்டு குருதிச்சோகை- உணவில் இரும்புச் சத்து குறைவாக உள்ளமை/ உடலினுள் இரும்புச் சத்து உறிஞ்சப்படல் குறைவடைவதால் ஏற்படும் குருதிச் சோகை. செங்குழிய உற்பத்திக்கு இரும்புச் சத்து அவசியமென்பதால் உருவாக்கப்படும் செங்குழியங்களின் எண்ணிக்கை குறைவடைந்து குருதிச் சோகை ஏற்படும். அரிவாள்-கலச் செங்குழிய குருதிச் சோகை- இது மரபணு சார்ந்த நோயாகும். மரபணுவில் ஏற்படும் மாறுதலால் உண்டாகின்றது. செங்குழியங்கள் அரிவாள் போன்ற வடிவை எடுக்கின்றன. அவற்றின் மீள்தன்மையும், ஆக்சிசன் காவும் திறனும் குறைவடைகின்றன. குருதிக் கலன்கள் விகாரமுள்ள இக்கலங்களால் அடைக்கப்படலாம். இதனால் வலியும், பக்கவாதமும் ஏற்படலாம். மண்ணீரலும் பாதிக்கப்படலாம். தலசீமியா- மரபணு சார்ந்த நோய். ஈமோகுளோபின் உப அலகுகள் சரியான வீதத்தில் உருவாக்கப்படாமையால் ஏற்படும் நோய் நிலமை. கோளக் குழியமாதல் - மரபணு சார்ந்த நோய். செங்குழிய மென்சவ்வில் ஏற்படும் விகாரத்தால் கலம் சிறிய கோள வடிவத்தை எடுக்கும். இக்கலங்கள் மண்ணீரலில் இவற்றின் விகாரத்தன்மை காரணமாக அழிக்கப்படுவதால், செங்குழிய எண்ணிக்கை குறைவடைந்து குருதிச் சோகை ஏற்படும். செங்குழியச் சிதைவு-உருவாக்கப்படும் அளவை விட செங்குழியங்கள் அதிகளவில் அழிக்கப்படுவதால் ஏற்படும் நோய் நிலமை. மலேரியா- மலேரியாவை ஏற்படுத்தும் Plasmodium புரோட்டோசோவா தன் வாழ்க்கை வட்டத்தில் சில காலத்தை செங்குழியத்தினுள்ளே களிக்கும். அது செங்குழியத்தினுள்ளே உள்ள ஈமோகுளோபினை பிரிகையடையச் செய்து காய்ச்சலை ஏற்படுத்தும். செங்குழிய எண்ணிக்கை அதிகரித்தல்- இந்நிலைமை குருதியின் பிசுக்குமையை அதிகரித்து குருதியோட்டத்தைக் குறைக்கும். பிழையான குருதி மாற்றீடு - பொருந்தாத குருதி வகைகளை மாற்றீடு செய்வதால் ஏற்படும் நோய் நிலமை. குருதி வாங்கியின் பிறபொருளெதிரிகள் பொருத்தமில்லாத குருதியிலுள்ள செங்குழியங்களை அழிப்பதால் இறுதியில் இறப்பு நிகழலாம். மேற்கோள்கள் வெளி இணைப்பு http://en.wikipedia.org/wiki/Erythrocytes குருதி
3273
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88
சந்திரசேகர் வரையறை
சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit) என்பது ஒரு நிலையான வெண் குறுமீனின் அதிக பட்ச திணிவு (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும் (2.765×1030 kg). இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் தமிழ் நாட்டில் பிறந்த புகழ் பெற்ற விஞ்ஞானியும், இயற்பியலிற்கான நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் ஆவார். வெண் குறுமீன்கள், எலக்ட்ரான் சமநிலை குலைவு அழுத்தத்தால் (Electron Degeneracy Pressure) தமது திண்மத்தால் ஏற்படும்புவியீர்ப்பு விசையால் ஏற்படக்கூடிய குலைவைத் (Gravitational Collapse) தடுத்து நிலைபெறுகின்றன (பொதுவாக விண்மீன்கள், திண்மத்தால் ஏற்படக்கூடிய புவியீர்ப்பு குலைவை, அணுக்கரு இணைப்பில் உருவாகும் அழுத்தத்தால் (Thermal Pressure) ஈடுசெய்து நிலைத்திருக்கின்றன). சந்திரசேகர் வரையறை திண்ம அளவைத் தாண்டும்போது, புவியீர்ப்பு குலைவை எலக்ட்ரான் சமநிலை குலைவு அழுத்தத்தால் ஈடுசெய்ய இயலாமல் போகிறது. அதன் தொடர்ச்சியாக, அவ்விண்மீன் ஈர்ப்பு விசை குலைவின் விளைவாக நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது கருந்துளையாகவோ (Blackhole) உருப்பெருகிறது. சந்திரசேகர் வரையறைக்குள்ளாக திண்மம் கொண்ட விண்மீன்கள், வெண் குறுமீன்களாக நிலைத்திருக்கும். உசாத்துணைகள் வானியற்பியல் வெண் குறுமீன்கள்
3274
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF
வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி
வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம். மருத்துவர்கள் அவற்றை ஆராய்ந்து உடலின் கூறுகளை அறிய முடியும். வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (C.T. ஸ்கேன் என்பது) X-rayவை உடலுக்குள் செலுத்தி கம்ப்யூட்டர் மூலம் திரையில் பார்ப்பது மூளைக் கழலை, நுரையீரல், சிறுநீரகம், எலும்பு மற்றும் இரத்த நாளங்களை ஆய்வதற்குப் பயன்படுகிறது. இச்சாதனத்தைப் பலமுறை பயன்படுத்துவதன் மூலம் புற்று நோய் வருவதற்கான சிறிய வாய்ப்பும் உள்ளது. இவற்றையும் பார்க்கவும் காந்த அதிர்வு அலை வரைவு மீயொலி நோட்டம் மருத்துவப் படிமவியல் மருத்துவக் கருவிகள் மருத்துவ சோதனைகள்
3279
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D
எரிமம்
எரிமம் அல்லது எரிபொருள் (Fuel) என்பது பெரும்பாலும் நெருப்புடனோ நெருப்பின்றியோ எரிப்பதன் மூலம் ஆற்றல் தரும் பொருட்களைக் குறிப்பதாகும். அணுக்கருப் பிளவு அல்லது அணுக்கரு இணைவு போன்ற மற்ற ஆற்றல் மூலங்களையும் எரிபொருள் எனக் குறிப்பிடலாம். இவ்வெரி பொருட்களைச் சரியான முறையில் எரிக்கும் போது வெளிப்படும் ஆற்றல் வீட்டு மற்றும் தொழிற்சாலைத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எரிமங்களின் வகைகள் எரிமங்களை இரு பெரும் வகைகளாகப் பிரிக்கலாம். இயற்கை அல்லது முதல்நிலை எரிபொருள்: இவை இயற்கையாகப் பெறப்படுபவை. விறகு, நிலக்கரி, பாறை எண்ணெய், இயற்கை வாயு போன்றவை இயற்கை எரிபொருட்களாகும். செயற்கை அல்லது இரண்டாம் நிலை எரிபொருள்: இவை இயற்கை எரிபொருட்களிலிருந்து பெறப்படுபவை. மரக்கரி, கல்நெய் , டீசல், மண்ணெண்ணெய், கரிவாயு போன்றவை செயற்கை எரிபொருட்களாகும். எரிபொருட்கள் பொதுவாக திண்ம, நீர்ம, வளிம எரிபொருட்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. திண்ம எரிமங்கள் மரம், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி என்பன திண்ம எரிபொருள். நீர்ம எரிமங்கள் கல்நெய், மண்ணெண்ணெய், எரிசாராயம், எரிநெய் போன்றவை நீர்ம எரிபொருள். வளிம எரிமங்கள் நீர்ம நிலைப்படுத்தப்பட்ட பெட்ரோலிய வாயு, இயற்கை வாயு, சாணவாயு, உற்பத்தி வாயு, நீர்வாயு போன்றன வாயு எரிபொருட்கள். எரிமங்களின் கலோரி மதிப்பீடு ஓர் அலகு பருமன் உள்ள எரிபொருள் முழுவதுமாக எரியும்போது வெளிப்படும் மொத்த ஆற்றல் அவ்வெரிபொருளின் கலோரி மதிப்பீடு எனப்படுகிறது. திண்ம அல்லது நீர்ம எரிபொருட்களின் கலோரி மதிப்பீடு கிலோஜூல்/கிலோகிராம் (kJ/kg) என்ற அலகிலும் வளிம எரிபொருட்களின் மதிப்பீடு கிலோஜூல்/மீட்டர்3 (kJ/m3) என்ற அலகிலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பார்க்க உயிரி எரிபொருள் ஹைடிரோகார்பன் மண்ணெய் நிலக்கரி ஆற்றல் கரிம வேதியியல் மேற்கோள்கள்
3282
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%202005
உலக இயற்பியல் ஆண்டு 2005
2005 ஆம் ஆண்டை உலக இயற்பியல் ஆண்டு (World year of Physics 2005) என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1905 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நான்கு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதன் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உலக இயற்பியல் ஆண்டு கொண்டாடப்பட்டது. சார்பியல் கொள்கை, பிரவுனியன் இயக்கம், ஒளி மின் விளைவு, ஒளிக் குவையமாக்கம் ஆகிய நான்கு ஆய்வுகளும் இயற்பியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இயற்பியல் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள் உருவாக்கிய பெரும் மாற்றங்கள் குறித்து இவ்வாண்டில் பன்னாட்டு அளவில் விவாதிக்கப்பட்டது. மேலும் 21 ஆம் நூற்றாண்டில் இயற்பியல் சந்திக்கவிருக்கும் அறைகூவல்கள் குறித்தும் நடப்பாண்டில் கருத்துப் பரிமாற்றம் பன்னாட்டு அளவில் பரவலாக மேற் கொள்ளப்பட்டன. பல்வேறு அறிவியல் துறைகளில் இயற்பியல் நிகழ்த்திவரும் மாற்றங்கள் பற்றியும் உலகமுழுவதும் அறிவியல் அறிஞர்கள் விவாதித்தார்கள். வரலாறு இயற்பியல் இயற்கையையும் புறநிலை உலகையும் முழுமையாகப் புரிந்து கொள்ள உதவு அடிப்படையான அறிவியலாகும். இன்றைய தொழினுட்பத்தின் பெரும்பகுதி இயற்பியலின் பயன்பாடுகளால் உருவாகியதே ஆகும். உலகளாவிய நிலையில் இயற்பியல் சார்ந்த விழிப்புணர்வை உயர்த்தல், அப்புலத்தின் பெருவளர்ச்சிகளைக் கொண்டாடுதல் எனும் இரு நோக்கங்களுக்காக பன்னாட்டு தூய, பயன்முறை இயற்பியல் ஒன்றியம் 2005ஆம் ஆண்டை உலக இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடுவதென தீர்மானம் நிறைவேற்றியது. பிறகு இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையாலும், ஐக்கிய அமெரிக்கப் பேராயத்தாலும் ஏற்கப் பட்டு வழிமொழியப்பட்டது. ஆன்னசு மிராபிலிசு கடந்த நூறு ஆண்டுகளாக இயற்பியலின் மெய்யியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான 2005 ஆண்டு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைகிறது. இம்மாற்றங்கள் 1905ஆம் ஆண்டில் ஐன்சுட்டீன் வெளியிட்ட பின்வரும் நான்கு ஆய்வுக் கட்டுரைகளுடன் தொடங்கின. இவை பிரவுனிய இயக்கம், சிறப்புச் சார்பியல் கோட்பாடு , ஒளிமின் விளைவு, ஒளியாற்றல் குவையமாக்கம் ஆகிய நான்குக் கருத்துப் படிமங்களை அறிமுகப்படுத்தின. இந்நிகழ்வு குவைய இயக்கவியலை உருவாக்கி வளர்க்கப் பேருந்துதல் தந்தது. E = mc2 என்ற பொருள்-ஆற்றல் சமன்பாட்டைப் பெற்றெடுத்த்து. இவை "Annus Mirabilis கட்டுரைகள்" என வழங்கப்படுபவை. ஏனெனில் இவை 1905ஆம் ஆண்டை இயற்பியலின் விந்தையாண்டாக மாற்றியவையாகும். பெரும்பாலான இயற்பியலார் முதல் மூன்றை நோபல் பரிசு பெறுமளவுக்குச் சிறப்பானவையாகக் கருதிட, நான்காவதான ஒளிமின் விளைவே நோபெல் பரிசை வென்றது. இந்தக் கட்டுரைகளின் சிறப்பே என்னவென்றால், கோட்பாட்டு இயற்பியலில் இருந்தே ஏரணமுறைப்படி செய்முறை முடிவுகளைத் தெளிவாக விளக்கியமைதான் எனலாம். இது பிறகு பல பத்தாண்டுகளாக இயற்பியல் அறிஞகளை வியப்பிலாழ்த்தியது. ஒளிமின் விளைவு முதல் ஆய்வுக் கட்டுரை ஆற்றல் குவையம் எனும் கருத்துப் படிமத்தை முன்மொழிந்தது. அதைப் பயன்படுத்தி ஒளிமின் விளைவு நிகழ்வை எப்படி விளக்கமுடியும் எனக் காட்டியது. ஆற்றல் குவையம் பற்றிய எண்ணக்கரு, மாக்சு பிளாங்கின் கரும்பொருள் கதிர்வீச்சு விதியைக் கொணர, பின்னவர் பயன்படுத்திய ஒளிர்வு ஆற்றல் ”குவையம்” எனும் இடைவிட்டு அமையும் சிறுசிறு அளவுகளிலேயே உறிஞ்சவோ உமிழவோ முடியும் என்ற கற்பிதத்தில் இருந்து பெற்றதாகும். ஐன்சுட்டீன் ஒளியை இடைவிட்டுஅமையும் ஆற்றல் குவைகளாகக் கொள்ளும்போது எப்படி புதிராக இருந்த ஒளிமின் விளைவை எளிதாக விளக்கமுடியும் எனக் காட்டினார். ஒளிக்குவைய எண்ணக்கரு ஒளியின் அலைக்கோட்பாட்டுடன் முரண்பட்டது. ஒளிசார்ந்த அலைக்கோட்பாடு, ஜேம்சு மாக்சுவெல்லின் மின்காந்தவியல் சமன்பாடுகள் தரும் நடத்தையை விளக்கும் ஆற்றலின் ஈறிலாத பிரிதிறக் கற்பிதத்தைச் சார்ந்து உருவாகியதாகும். செய்முறைகள் ஐன்சுட்டீனின் ஒளிமின் விளைவுச் சமன்பாடுகள் துல்லியமானவை என நிறுவிய பிறகும் அவருடைய விளக்கம் எல்லோராலும் பொதுவாக ஏற்கப்படவில்லை. என்றாலும், 1921ஆம் ஆண்டளவில் இவருக்கு நோபெல் பரிசளிக்கும் மேற்கோளில் அவரது ஒளிமின் விளைவு ஆய்வுக்காகத் தரப்படுவதாக வெளியிட்ட பிறகே, பெரும்பாலான அறிவியலார் ஒளிக்குவையம் இருக்கமுடியும் என்பதை ஒப்புக் கொண்டனர். குவைய இயக்கவியல் வளர்ந்து முதிர்வுற்ற பிறகே ஒளிமின் விளைவின் முழுக்காட்சியையும் பெறமுடிந்தது. பிரவுனிய இயக்கம் அந்த ஆண்டின் அவரது இரண்டாம் ஆய்வுக் கட்டுரை பிரவினிய இயக்கத்தில் துகள்களின் இடப்பெயர்ச்சி நெறியம், (Vector) நிரல் சதுர வேர் மதிப்புக் கோவை உருவாக்கும் நிகழ்தகவுப் படிமத்தைச் சார்ந்துள்ளதை முன்மொழிந்தது. அப்போது எதிர்க்கப்பட்ட பாய்ம இயக்க்க் கோட்பாட்டைப் பயன்படுத்தி, அதுவரை கண்டுபிடிக்கப்பட்டு பல பத்தாண்டுகளாகியும் விளக்கப்படாமல் இருந்த இந்த நிகழ்வை நிறைவாக விளக்கி, அணுக்களின் நிலவலுக்கான செய்முறைச் சான்றையும் காட்டினார். இது அப்போது எதிர்ப்பில் இருந்த புள்ளியியல் இயக்கவியலுக்குப் பெரும் மதிப்பூட்டியது. இதற்கு முன்பு அணுக்கள் பயன்மிக்க கருத்துப்படிமங்களாகவே கருதப்பட்டன. ஆனால் இயற்பியலாரும் வேதியியலாரும் அணுக்கள் உண்மையாக நிலவும் உருப்படிகளா எனச் சூடான விவாதத்தில் இறங்கி இருந்தனர். ஐன்சுட்டீனின் அணுநடத்தை பற்றிய புள்ளியியல் விளக்கம் செய்முறை வல்லுநர்களுக்கு அவற்றை நுண்ணோக்கியால் எண்ணிட ஒரு வழிமுறையை உருவாக்கித் தந்தது. அணுவெதிர்ப்புச் சிந்தனைப் பள்ளியின் தலைவர்களில் ஒருவரான வில்கெல்ம் ஆசுட்வால்டு, ஆர்னால்டு சோமர்ஃபீல்டு அவர்களிடம் தான் ஐன்சுட்டீனின் பிரவுனிய இயக்க விளக்கத்தால் அணுநம்பும் கூட்டத்தில் சேர்ந்துவிட்டதாகக் கூறினாராம். சிறப்புச் சார்பியல் கோட்பாடு அந்த ஆண்டின் ஐன்சுட்டீனின் மூன்றாம் ஆய்வுக் கட்டுரை ஓர் உயர்திறத் தன்னுள்ளடக்கமான ஆய்வாகும். இதை உருவாக்க வேறு மேற்கோள்கள் என எவற்றையும் அவர் பயன்படுத்தவில்லை. இந்த ஆய்வில் ஐன்சுட்டீன் காலம், தொலைவு, பொருண்மை, ஆற்றல் ஆகிவற்றின் உறவுசார்ந்த கோட்பாட்டை மின்காந்தவியலோடு பொருந்துமாறு உருவாக்கினார். ஆனால் இதில் இவர் ஈர்ப்புவிசையைக் கருதவில்லை. ஐன்சுட்டீனின் விளக்கம் இரு எடுகோள்களில் இருந்து உருவாகிறது: முதல் எடுகோள் கலிலியோவின் ஒருவருக்கொருவர் நிலையான சார்பு விரைவுகளில் செல்லும் அனைத்து நோக்கர்களுக்கும் இயற்பியல் விதிகள் ஒன்றுபோலவே அமையும் என்ற எண்ணக்கருவாகும். இரண்டாம் எடுகோள் எந்தவொரு நோக்கருக்கும் ஒளியின் விரைவு ஒன்றுபோலவே அமையும் என்பதாகும். இந்த இரண்டாம் எடுகோள் மைக்கேல்சன்-மோர்லி செய்முறை அறிவியலில் உருவாக்கிய சிக்கலைத் தவிர்த்தது. தனித்த காலமும் தனித்த வெளியும் ஒளியின் தனித்த நிலையான விரைவுடன் பொருந்திவராததால் குறிப்பிடத்தக்க பல தொடர்ச்சியான விளைவுகளைக் கொண்டதாகும்.. எனவே இந்தக் கோட்பாடு ஏராளமான முரண்புதிர்களை எழுப்பியது. அதனால் கோட்பாட்டைப் பொருளற்றதாகியது. மேலும் இது ஐன்சுட்டீனையும் கேலிப்பொருளாக்கியது. என்றாலும் அவர் இந்தத் தோற்றநிலை முரண்பாடுகளையெல்லாம் பின்னர் கவனமாகக் கருதிப்பார்த்து அந்தச் சிக்கல்களை எல்லாம் தீர்த்துவைத்தார். தொடர்விளைவுகள் ஐன்சுட்டீனின் சிறப்புச் சார்பியல் கோட்பாடு புதுவகை இயற்பியலை முன்வைத்தது. இது ஐசக் நியூட்டனின் நுண்கலனக் கணிதம் உருவாக்கிய செவ்வியல் இயக்கவியலில் இருந்து பேரளவில் வேறுபட்டது. ஒளிமின் விளைவு ஆய்வு குவைய இயக்கவியலைக் கிளர்ந்தெழச் செய்தாலும் உறுதியின்மை நெறிமுறை கருதுப்படிமத்தை இயற்பியல் உலகில் அறிமுகப்படுத்திய குவைய இயக்கவியலை முழுமையற்றதாகக் கருதினார். அவரது தீர்வியல்புக் கண்ணோட்டத்தை " அவர் (கடவுள்) தாயம் ஆடமாட்டார் என நான் நம்புகிறேன்]." என்ற பெயர்பெற்ற மேற்கோளில் இருந்து அறியலாம். அவர் குவைய இயக்கவியலை, குவையப் புலக் கோட்பாடு, பொதுச் சார்பியல் கோட்பாடு, மின்காந்தவியல் ஆகியவற்றை ஒருங்கிணக்க முயலும் ஒன்றிய புலக் கோட்பாட்டிற்கு வைக்கும் வெடியாகக் கருதினார்.என்றாலும், குவைய இயக்கவியல் வெற்றிகரமாக இயற்பியல் நிகழ்வை முன்கணிப்பதை அவர்மறுத்ததில்லை. அவரது ஒன்றிய புலக் கோட்பாட்டுக்கான ஆர்வம் இன்றும் மங்காமல் குவைய இயக்கவியல், சரக் கோட்பாடு, மீக்கடத்துமை ஆகிய புலங்களில் தொடர்கிறது. இயற்கை மெய்யியலில், ஐன்சுட்டீனின் 1905ஆம் ஆண்டு ஆய்வுகளால், ஏற்பட்டுள்ள தனிநிலைக் கோட்பாட்டில் இருந்து உறுதியின்மை மற்றும் சாபுடைமைக் கோட்பாட்டுக்கான அடிப்படைப் பெயர்ச்சியை அல்லது கோட்பாட்டுச் சட்டக மாற்றத்தை இந்த ஆண்டு குறிக்கிறது. சிறப்பு விழாக்கள் அமெரிக்காவில் மேரிலாந்துப் பல்கலைக்கழகக் கல்லூரி சிமித்சோனியன் நிறுவனத்துடனும் நாசாவின் கோடார்டு விண்பறத்தல் மையத்துடனும் இணைந்து விரிவுரைகளும் இருப்பிடத் திட்டங்களும் உட்பட்ட பல்வேறு செயல்பாடுகளை நிறைவேற்றியது. பெர்லின் நகரில் பெயர்பெற்ற அண்டர் டென் இலிண்டன் பொலிவார்டின் ஒரு பகுதியில் பதினாறு மாபெரும் செந்நிற E'கள் நிறுவப்பட்டன. "ஐன்ஸ்டைன் மைல்" எனப்பட்ட இந்த E's, 2005 ஏப்பிரல் முதல் செப்டம்பர் வரை ஆல்பெர்ட் ஐன்சுட்டீனின் கோட்பாடுகள், வாழ்க்கை நிகழ்ச்சிகள் சார்ந்த தகவல்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது. எகிப்தில் அலெக்சாந்திரியா நூலகம், ஐன்சுட்டீன் கருத்தரங்கை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தது. சான் மரீனோ ஒரு €2 கொண்டாட்ட நாணயத்தை வெளியிட்டது. செக் குடியரசு, கடானில் உள்ள கிர்விட்சர் நாள் 2005 ஐன்சுட்டீன் கோட்பாடுகளுக்காகக் காணிக்கையாக்கப்பட்டது. கனடா, வாட்டர்லூவில் உள்ள கோட்பாட்டு இயற்பியல் சுற்றளவு நிறுவனம் செப்டம்பர் 30இல் இருந்து அக்டோபர் 23வரை ஐன்சுட்டீன் திருவிழாவை விருந்தோம்பியது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் 2005 டிசம்பர் 1ஆம் நாளன்று ஐன்சுட்டீனுக்கு அப்பால் வைய விரிவு வலைப்பரப்புதல் எனும் நிகழ்வை ஒருங்கிணைத்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் உலக இயற்பியல் ஆண்டு 2005 அதிகாரப்பூர்வ இணையத்தளம் இயற்பியல்.ஓர்க் இயற்பியல் ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் 2005 நிகழ்வுகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
3286
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
நெல்லி
நெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். வளரியல்பு நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்துக், கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய். மலைகளில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும். அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக் காய்களை உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது. இலையடி செதில் மிகச் சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும், பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும், கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும். பூ இதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பலவீனப் பட்டதாக இருக்கும். உருண்டை வடிவமானது. சதைப்பற்று உள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்று கோணங்கள் உடையது. விதையுறை கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 வருடங்கள் கூடச் செல்லலாம். நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. அடங்கியுள்ள சத்துக்கள் புரதம் – 0.4 கி கொழுப்பு – 0.5 கி மாச்சத்து – 14 கி கல்சியம் – 15 மி.கி பொஸ்பரஸ் – 21 மி.கி இரும்பு – 1 மி.கி நியாசின் – 0,4 மி.கி வைட்டமின் ´பி1` - 28 மி.கி வைட்டமின் ´சி` - 720 மி.கி கரிச்சத்து சுண்ணாம்பு தாதுப் பொருட்கள் கலோரிகள் - 60 இதில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளதாகக் கருதப்படுகின்றது. தமிழ் இலக்கியத்தில் இடம் கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது. மருத்துவப் பலன்கள் கீழ்கண்ட மருத்துவ குணங்கள் நெல்லியில் இருப்பதாக, சித்த மருத்துவர்களாலும், இயற்கை அறிஞர்களாலும் நம்பப் படுகின்றன. இருப்பினும், இவை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியன ஆகும். தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது. நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும். நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும். நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம். நல்ல நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், சரிசெய்துவிடலாம். முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம். நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம். நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும். நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும். சான்றுகள் மேற்கோள்கள் பழ மரங்கள் இந்தியத் தாவரங்கள்
3287
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
குருதி உறைதல்
'இரத்தம் உறைதல்' என்பது காயம் ஏற்படும்பொழுது திசுக்கள் பாதிக்கப்படுவதனால் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு நிகழும். இரத்தத்தில் இரத்தச் சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இரத்தப்பெருக்கைத் தடுக்க,இரத்தத் தட்டுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.பாதிக்கப்படும் இடத்தில் அவை கூடி வலை போன்ற அமைப்பினை ஏற்படுத்துகின்றன. இவை ஃபைப்ரின்கள் எனப்படும். இவ்வகை வலை போன்ற சல்லடையே இரத்தம் உறைதலுக்குக் காரணமாகின்றது மேலும் பார்க்க நாரீனி (புரதம்) குருதி de:Hämostase#Übersicht über Gerinnungsfaktoren und Inhibitoren
3337
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பிரௌனியன் இயக்கம்
பிரௌனியன் இயக்கம் (Brownian motion) என்பது கீழ்காணுபவற்றைக் குறிக்கும்: நீர்மத்தில் நுண்ணிய துகள்களின் "ஒழுங்கற்றது போல் தோன்றும்" அல்லது குறிப்பில்வழி (random) இயக்கம். மேல் குறிப்பிடப்பட்டுள்ள வகை இயக்கங்களின் கணித மாதிரி. முதன் முதலில், இராபர்ட் பிரௌன் (Robert Brown) என்ற தாவிரவியலாளரால் முன் வைக்கப்பட்ட இக்கருத்துருவை, லூயி பாசெலியர் (Louis Bachelier) என்பவர் கோட்பாட்டு நிலைக்கு கொண்டு வந்தார். அல்பர்ட் ஐன்ஸ்டீனும் இதில் பங்களிப்புச் செய்தார். சான் பத்தீட்டு பெரென் என்பவர் தனது ஆய்வுகள் மூலம் இக்கோட்பாட்டிற்கு வலு சேர்த்தார். வரலாறு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இராபர்ட் பிரௌன் என்பவர் 1827ஆம் ஆண்டில் தண்ணீரில் மகரந்தத் தூள்களைப் போட்டு அவற்றை ஒரு நுண்ணோக்கியின் மூலம் பார்த்தார். மகரந்த்த் தூள் ஒவ்வொன்றும் அங்குமிங்கும் ஓடியது. ஆனால் தண்ணீரில் எந்தவிதமான அசைவுமிருப்பதாகத் தெரியவில்லை. மகரந்தத் தூள்களுக்கு உயிர் உண்டோ என்ற சந்தேகம் அவருக்கு முதலில் ஏற்பட்டது. ஆனால் அடுத்து அவர் ஒரு சாயப் பொடியைத் தண்ணீரில் கலந்து நுண்ணோக்கியின் மூலமாகப் பார்த்த போது, உயிரில்லாதவை என்று உறுதியாகத் தெரிந்த சாயத் துகள்களும் அங்குமிங்கும் ஓடியாடியதைக் கண்டார். பிரௌனுக்கு அதற்கான காரணம் விளங்கவில்லை. எனினும் அதை அவர் முதலில் அறிவித்ததால் அத்தகைய துகள்களின் இயக்கத்திற்கு பிரௌனியன் இயக்கம் என்று பெயரிடப்பட்டது. பிரௌனியன் இயக்கம் 1860களில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாரான ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் வாயுக்களில் நுண்ணிய அணு அல்லது மூலக்கூறுகளிருப்பதாகவும், அவை ஓய்ச்சலின்றி அங்குமிங்கும் கண்டபடி ஓடிக்கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்து வாயுக்களின் நடத்தைகள் பற்றிய விதிகளை உருவாக்கினார். திரவங்களிலும் கூட மூலக்கூறுகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் எண்ணத் தலைப்பட்டனர். அதன் மூலம் பிரௌனியன் இயக்கத்திற்கான காரணம் விளங்க தொடங்கியது. தண்ணீரிலுள்ள மூலக்கூறுகள் மகரந்த்த் தூள்களையும், சாயத் தூகள்களையும் நாலா திசைகளிலிருந்தும் வந்து தாக்கிப் பந்தாடி கொண்டிருக்கின்றன. ஒரு திசையில் திடீரொன்று மோதல் அதிகமாகிவிட்டால் மகரந்த்த் தூள் அந்தத் திசையில் உந்தப்பட்டு ஓடுகிறது. சிறிது தூரம் ஓடியதும் வேறு துகள்கள் அதனுடன் மோதி தைத் திசை திருப்பி விடுகின்றன. ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள துகள் இவ்வாறு நகர்த்தப்படுகிற தொலைவு நீர் மூலக்கூறின் நிறையைப் பொறுத்தது என்ற கருத்தை 1905 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கண்டறிந்து அதற்கான ஒரு சமன்பாட்டையும் உருவாக்கினார். சான் பத்தீட்டு பெரென் என்ற பிரெஞ்சு இயற்பியலாளர் 1908-11 ஆண்டு காலங்களில் செய்முறை ஆராய்ச்சி மூலம், ஐன்ஸ்டைன் கண்டறிந்த சமன்பாட்டை உறுதி செய்தார். அந்த சமன்பாட்டை பயன்படுத்தி நீர் மூலக்கூறுகளின் பரிமாணத்தைக் கணக்கிட்டார். மேற்கோள்கள் இயற்பியல் கோட்பாடுகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூழ்ம வேதியியல்
3341
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF
இத்தாலி
இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி (இத்தாலிய மொழி: Repubblica Italiana அல்லது Italia - இட்டாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்பப் பகுதியையும், மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜி8, ஜி20 ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்று. இத்தாலியின் தலைநகரான உரோம் நகரம் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளது. புவியியல் இத்தாலி தெற்கு ஐரோப்பாவில் உள்ளது. மொழிகள் இத்தாலிய மொழியே இத்தாலியின் ஆட்சி மொழியாகும். ஐந்தரை கோடி மக்கள் இம்மொழியை தாய்மொழியாகப் பேசுவதாக அறியப்படுகிறது. இருப்பினும் உலகளவில் 15 கோடி மக்கள் இம்மொழியை பேசுவதாக கணிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல வட்டார வழக்குகள் உள்ளன. சிறுபான்மையினரின் மொழிகளும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, செருமன் மொழிகள் சில வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இத்தாலிய மொழியுடன் சிறுபான்மையினரின் மொழிகளிலும் கல்வி பயில வாய்ப்பு உள்ளது. சமயம் கிறித்தவமே பிரதான சமயமாகும். பிற சமயத்தினர் குறைவான விகிதத்திலேயே வாழ்கின்றனர். கத்தோலிக்கக் கிறித்தவமே பலரால் கடைப்பிடிக்கப்படுகிறது. விளையாட்டு கால்பந்தாட்டமே பிரதான விளையாட்டாகும். உலகக் கால்பந்தாட்டக் கோப்பையிலும் இத்தாலி கலந்துகொண்டு கோப்பைகளை வென்றுள்ளது. கைப்பந்தும், கூடைப்பந்தும் முக்கியமான விளையாட்டுகளாகும். இத்தாலியின் சிறப்புகள் இத்தாலியில் கி.மு.8000(Neolithic) ஆண்டு காலத்திலேயே, காமுனி(Camunni) நாகரீகம் இருந்துள்ளது. அதற்கானச் சான்று, இத்தாலியின் லோம்பார்டி மண்டலப் பகுதியிலுள்ள வால்கமோனிகா(Valcamonica)பள்ளத்தாக்குப் பகுதியின், பாறை ஓவியக் கீறல்களிலுள்ளன.. இத்தாலி, ஐரோப்பியப் பண்பாடுகள் பலவற்றின் உறைவிடமாக விளங்கியது. மேற்குலக பண்பாட்டின் தலைநகராக ரோம் நகரம், பல நூற்றாண்டுகளாக இருந்தது. பரோக் என்றழைக்கப்படும் மேற்குலக கலாச்சாரம், 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோமிலேயே ஆரம்பமானது. அத்துடன் கத்தோலிக்க திருச்சபையும் இங்கேயே இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரையில், இத்தாலி காலனித்துவப் பேரரசாக இருந்தது. இன்று, இத்தாலி ஒரு மக்களாட்சிக் குடியரசாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரநிலை அளவீட்டில் உலகின் 8ஆவது நாடாக இத்தாலி விளங்குகிறது. இத்தாலி ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகிய அமைப்புகளின் ஆரம்ப உறுப்பு நாடாகும். ஜி8 அமைப்பிலுள்ள ஒரு உறுப்பு நாடாகும். இத்தாலியின் தோற்றம் தற்போதுள்ள இத்தாலியக் குடியரசு நாடு 1946 ஜூன் 2 இல் உருவானது. அதற்குமுன், இத்தாலிய பேரரசாக (Kingdom of Italy) 1861, மார்ச் 17 முதல் இருந்தது. இத்தாலிய இராச்சியம் உருவாவதற்கான விதைக்கரு பல்வேறு வரலாற்று நிகழ்வுகளால் தோன்றியது. அவை வருமாறு;- 14-17ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட எலிக்கொள்ளை நோய் (Plague); 65 ஆண்டுகள் நடந்த இத்தாலியப் போர்கள் – (1494–1559); அப்போர்களுக்குப்பின், உருவான அரசுகளின் அமைதியான ஒருங்கிணைந்த ஆட்சிமுறைகள்; 154 ஆண்டுகள் நடைபெற்ற எசுப்பானிய (Habsburg Spain) ஆட்சி முறை – (1559–1713). 83ஆண்டுகள் நடைபெற்ற ஆஃசுதிரிய (Habsburg Austria) ஆட்சி முறை – (1713–1796); 18ஆண்டுகள் நடைபெற்ற பிரென்'சு குடியரசின் ஆட்சி முறை – (1796–1814); 1814ல் நடைபெற்ற வியன்னா பேராயத்தின் தீர்மானங்களும், செயலாக்கங்களும் ஆகும். இத்தாலியின் மண்டலங்கள் இத்தாலிய நாடானது, 20 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து மண்டலங்களுக்கு, சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவை, சாதாரண அதிகாரங்களுள்ள மண்டலங்கள் ஆகும். அம்மண்டலங்கள் ஆட்சி நிர்வாகத்திற்காக, இரண்டு அல்லது அதற்கு மேலும் ஒரு தடவை பிரிக்கப்பட்டுள்ளன. அ'சுடாப் பள்ளத்தாக்கு(Valle d'Aosta) என்ற சிறப்பு மண்டலம், அங்ஙனம் பிரிக்கப்படாத மண்டலமாகும். இவற்றையும் பார்க்க இத்தாலிய ஐக்கியம் இத்தாலிய மொழி பொம்பெயி வெளி இணைப்புகள் Presidenza della Repubblica - இத்தாலிய அதிபரின் உத்தியேகபூர்வ இணையத்தளம். (இத்தாலிய மொழியில்) Parlamento - இத்தாலிய நாடாளுமன்ற உத்தியேகபூர்வ இணையத்தளம்.(Senate in Italian only) Italia.gov.it Main governmental portal (இத்தாலிய மொழியில்) Ministero degli Affari Esteri, Italian Foreign Office இத்தாலிய வரைபடம். - இத்தாலியின் வரைபடமும் பிராந்தியங்களும். இத்தாலி - வரைபடமும் வாநிலையும் - வரைபடமும் ஆறு நாட்களிற்கான வாநிலை முன் அறிவித்தலும். இத்தாலித்தமிழ்.கொம் இத்தாலி வாழ் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது இணையத் தளம். இத்தாலித் தமிழர்களின் கலை, கலாச்சார, சமூக, புகலிட மற்றும் பலவற்றை உள்ளடக்கி வெளி வந்துள்ளது. மேற்கோள்கள் இத்தாலி ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
3345
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
ஐக்கிய இராச்சியம்
ஐக்கிய பேரரசு (United Kingdom, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு ), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ஐக்கிய பேரரசு என்றோ UK அல்லது பிரித்தானியா (Britain) என்றோ (தவறுதலாக) பெரிய பிரித்தானியா என்றோ அழைக்கப்படும் ஐக்கிய பேரரசானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பெரிய பிரித்தானியத் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய பேரரசின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய பேரரசின் ஒரே பன்னாட்டு நில எல்லையாகும். ஐ. இ. உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது. பல ஒன்றிணைப்புச் சட்டங்களின் வாயிலாக (வேல்ஸை உள்ளடக்கிய), இங்கிலாந்து பேரரசோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, இலண்டன் மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ. இ. உருவாக்கப்பட்டது. 1922இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய பேரரசிலிருந்து விடுபட்டு ஒரு விடுுதலைபெற்ற நாடாக உருவானது (எனினும் 1949 வரை, ஐக்கிய பேரரசின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய பேரரசுடனே தொடர்ந்தன. ஐ.இ. ஐரோப்பியக் கண்டத்தின் வடமேற்குக் கரைக்கு அப்பால் உள்ளது. அது அயர்லாந்து குடியரசுடன் உள்ள நில எல்லையைத் தவிர, வடக்குக் கடல், ஆங்கிலக் கால்வாய், செல்டிக் கடல், ஐரியக் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றால் முற்றிலும் சூழப்பட்டிருக்கின்றது. "பெரிய பிரித்தானியா" அல்லது "பிரித்தானியா" என்பது பிரித்தானியத் தீவுகளிலேயே மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும். (அதாவது, வடக்கு அயர்லாந்தைத் தவிர்த்து ஐக்கிய பேரரசின் ஏனைய பகுதிகள்). "பெரிய பிரித்தானியாவின் ஐக்கிய பேரரசு " ஒன்றிய சட்டம் 1707 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு, ஸ்காட்லாந்தை "வடக்குப் பிரித்தானியா" என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை "தெற்குப் பிரித்தானியா" என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இவ்வழக்கம் நாளடைவில் மறைந்து போயிற்று. இன்றைய வழக்கில் "பிரித்தானியா" என்னும் பெயர் சுருக்கமாக மொத்த ஐக்கிய பேரரசை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஐக்கிய பேரரசு என்பதற்கு "பெரிய பிரித்தானியா" என்று குறிப்பிடுவது பிழையாகும், ஏனென்றால் இந்தப் பெயர் வடக்கு அயர்லாந்தை உட்படுத்தாது. இது மனவருத்ததை ஏற்படுத்தலாம். பிரித்தானியத் தீவுகள் என்பது பெரிய பிரித்தானியத் தீவு மற்றும் அயர்லாந்து தீவு மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான கால்வாய் தீவுகள், ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, மான் தீவு, Isle of Wight, ஷெட்லாந்து தீவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும், பிரித்தானியாவுக்குச் (அதாவது ஐக்கிய பேரரசிற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக அயர்லாந்தில். இதற்கு மாற்றுப் பெயராக, அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், வடக்கு அட்லாந்தியத் தீவுகள் என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது. வரலாறு கொட்லாந்தும் இங்கிலாந்தும் 10ம் நூற்றாண்டிலிருந்து தனித்தனி அமைப்புகளாக இயங்கி வந்துள்ளன. 1284ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழிருந்த வேல்ஸ், ஒன்றியச் சட்டங்கள் 1536–1543 வாயிலாக இங்கிலாந்து பேரரசுடன் இணைந்தது. 1603 முதல் ஒரே மன்னரைக் கொண்ட தனித்தனி பேரரசுகளான இங்கிலாந்தும் கொட்லாந்தும் ஒன்றியச் சட்டம் 1707 வாயிலாக ஒரு நிரந்தர ஒன்றியமாக இணைந்தன, பெரிய பிரித்தானியாவின் பேரரசாக. இது நடந்த நேரத்தில் கொட்லாந்து பொருளாதாரச் சீரழிவை எதிர்நோக்கியிருந்தது. இங்கிலாந்துடனான ஒருங்கிணைப்பு கொட்லாந்து மக்களின் பரவலான எதிர்ப்பைப் பெற்றது. 1169ஆம் ஆண்டிலிருந்து 1691ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்ட அயர்லாந்து பேரரசு, ஒன்றியச் சட்டம் 1800 வாயிலாகப் பெரிய பிரித்தானிய பேரரசுடன் இணைந்ததால், பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு உருவானது. இதுவும் ஐரிய மக்களின் விருப்பமின்றியே நடைபெற்றவொரு ஒருங்கிணைப்பாகும். இதற்குச் சற்று முன்னரே, 1798ஆம் ஆண்டில் ஐக்கிய ஐரிய மக்களின் புரட்சி வெடித்துத் தோல்வியடைந்திருந்தது (பார்க்க: ஐக்கிய ஐரிய மக்கள் சமூகம்). நெப்போலிய மன்னனின் போர்த் தொடுப்புகளால் எழுந்த பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி, இந்த ஒருங்கிணைப்புச் செயல் விரைவு படுத்தப்பட்டது. 1922ஆம் ஆண்டு நிகழ்ந்த கடும் போரைத் தொடர்ந்து ஆங்கில - ஐரிய ஒப்பந்தம் ஏற்பட்டு, அயர்லாந்து தீவு ஐரிய சுதந்திர நாடு மற்றும் வடக்கு அயர்லாந்து என்று பிரிவடைந்து, பின்னது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தது. ஒப்பந்தத்தில் முடிவானபடி ஐரிஷ் மாகாணமான அல்ஸ்டரிலுள்ள ஒன்பது வட்டாரங்களில் ஆறு வட்டாரங்கள் ஐக்கிய பேரரசுடன் தொடர்ந்தன. இங்கு வாழும் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% உள்ளவர்கள் சுதந்திர அயர்லாந்துடன் ஒருங்கிணைய விரும்புகின்றனர். 1927ஆம் ஆண்டு அயர்லாந்தின் பெரும்பகுதியின் வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய பேரரசின் பெயர் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு என மாற்றப் பட்டது. தொழிற்துறையிலும், கப்பற்துறையிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்த ஐ.இ, மேற்கத்திய சிந்தனைகளான உடைமை, சுதந்திரம், முதலாளித்துவம் மற்றும் நாடாளுமன்ற மக்களாட்சி அகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. உலக இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளிலும் பெரும் பங்காற்றியது. அதன் உச்ச நிலையில், பிரித்தானிய ஏகாதிபத்தியம் உலகின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஐக்கிய இராச்சியத்தின் ஆதிக்கம் இரு உலகப் போர்களால் வெகுவாகக் குறைந்ததைக் காணமுடிந்தது. 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலோ, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கலைக்கப் பட்டு, முற்றிலும் மறைந்தது. ஆனால் ஐ.இ தன்னை ஒரு நவீனமயமான, வளமையான நாடாக வளர்த்துக் கொண்டது. தற்போது ஐ.இ ஐரோப்பிய கண்டத்துடனான ஒருங்கிணைப்பின் விகிதத்தைக் குறித்து சிந்தித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்திருந்தும், உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவும் தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலைக் குறித்த அரசின் கணிப்புகளாலும், ஐ.இ இன்னும் ஐரோவை அதன் நாணயமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு மக்கள் மத்தியில் தீவிர எதிர்ப்பு நிலவுகிறது. சில ஆங்கிலேயப் பொருளாதார வல்லுனர்களின் கோரிக்கை, ஐ.இ ஐரோவைப் பின்பற்றுவதற்கு முன்னர், ஐரோப்பிய மத்திய வங்கி இங்கிலாந்தின் வங்கியை முன்மாதிரியாகக் கொண்டு சீர்திருத்தம் பெற வேண்டும் என்பதே. ஜெர்மனி ஐரோவை ஏற்றுக் கொண்டபின் சந்தித்த பொருளாதார இக்கட்டுகளைக் கருத்தில் கொண்டால், மேற்கூறிய கோரிக்கை நிறைவேற்றப்படும் சாத்தியங்களிருப்பதாகத் தென்படலாம். அரசியல் சட்டச் சீர்திருத்தமும் தற்போதைய ஒரு நிகழ்வாகும். பிரபுக்களின் அவையில் சீர்திருத்தங்கள், கொட்லாந்து தனது ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத்தை 1999ஆம் ஆண்டு தேர்வு செய்தது, அதே வருடம் அதிகாரப் பரவலாக்கங்கள் வேல்ஸிலும் வடக்கு அயர்லாந்திலும் நடைபெற்றது, ஆகியவை அண்மை கால நிகழ்வுகள். தடைகளற்ற சுதந்திரமான பின்புலத்தைக் கொண்டிருந்தும், அரசின் தகவல் ஆணையரின் 2004ஆம் வருடக் கூற்றுப் படி ஒரு பரவலான கண்காணிப்புடைய சமூகமாக ஐ. இ உருமாறும் வாய்ப்புள்ளது. ஐ.இ காமன்வெல்த் நாடுகள் மற்றும் NATO ஆகியவற்றில் ஒரு அங்கமாகும். அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் ஒரு நிரந்தர உறுப்பினர் ஆகவும் உள்ளது. அதனால் அதற்கு வெட்டு ஓட்டு அதிகாரமும் உண்டு. ஐ. இ, உலகிலுள்ள வெகு சில அணு ஆயுத சக்தியுடைய நாடுகளில் ஒன்றாகும். பார்க்கவும்: பிரித்தானிய அரச பரம்பரை; பிரித்தானிய வரலாறு; இங்கிலாந்து வரலாறு; அயர்லாந்து வரலாறு; கொட்லாந்து வரலாறு; வேல்ஸ் வரலாறு; ஐ.இ வட்டார வரலாற்றுச் சொற்கள் அரசியல் ஐக்கிய பேரரசு ஓர் அரசியல்சட்ட முடியாட்சியாகும் (constitutional monarchy). அதை அரசாளும் அதிகாரம் பிரதமரின் தலைமையிலுள்ள அரசிடம் உள்ளது. பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் கொண்டது அமைச்சரவை. மகுடாதிபதிக்கு ஆலோசனைகள் வழங்கும் ஆலோசனைக்குழுவில் (privy council) அமைச்சரவை ஒரு துணைக்குழுவாகும். அரசாளும் உரிமையைக் கொண்ட மன்னர், நாட்டின் தலைவராகத் திகழ்கிறார். எனினும், நடைமுறையில் அவரது அரசு கீழவையான மக்களவைக்குக் (British (House of Commons) கட்டுப்பட்டே செயல்பட இயலும். மக்களவையானது ஐக்கிய பேரரசின் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப் பட்ட ஒரே நாடாளுமன்ற அவையாகும். மரபுவழிப் படி, அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து (members of the Commons) தேர்வு செய்யப் படுகிறார்கள். வெகு சிலர் மேலவையான பிரபுக்களவையிலிருந்தும் (British House of Lords) நியமிக்கப் படுகிறார்கள். அமைச்சர்கள் ஆலோசனைக்குழுவுக்கும் சேர்த்தே நியமனம் செய்யப் படுகிறார்கள். இவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் உண்டு. பொதுவாக, மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரே பிரதமராகக் கண்டுகொள்ளப் பட்டு மன்னரால் (அரசரால்) அரசாங்கம் அமைக்கும்படி உத்தரவிடப்படுவார். இதற்கு அவருக்கு மக்களவையின் ஆதரவு இருப்பது அவசியம். தற்போதைய பிரதமர் லிஸ் டிரஸ் ஆவார். 2022ஆம் ஆண்டு முதல் பதவியிலிருக்கிறார். ஐக்கிய பேரரசின் ஏகாதிபத்தியப் பின்புலத்தின் விளைவாக, பிரித்தானிய அரசமைப்பு உலகெங்கும் பின்பற்றப் படுகிறது. பிரித்தானியப் பாணிப் நாடாளுமன்ற முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகள், வெஸ்ட்மின்ஸ்டர் அரசாட்சி முறையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்றன. தற்போதைய முடிக்குரியவர் மூன்றாம் சார்லசு (Charles III) ஆவார். இவர் 2022ஆம் ஆண்டு அரியணை ஏறினார். நவீன கால ஐக்கிய பேரரசில் முடிக்குரியவரின் பங்கு என்பது, பொதுவாகப் பெயரளவில்தான், எனினும் எப்பொழுதும் அவ்வாறல்ல. அவருக்கு அமைச்சரவையின் எல்லா ஆவணங்களுக்கும் அனுமதியுண்டு. வாரமொருமுறை பிரதமர் அவரைச் சந்தித்து அரசின் நிகழ்வுகள்குறித்து தெரியப்படுத்துவார். அரசுச் சட்ட ஆசிரியர் வால்டர் பேக்ஹாட் (Walter Bagehot), முடிக்குரியவருக்குக் கீழ்கண்ட மூன்று உரிமைகள் இருப்பதாகக் கூறினார்: கலந்தாலோசிக்கப்படும் உரிமை, அறிவுரைக்கும் உரிமை மற்றும் எச்சரிக்கும் உரிமை. இவ்வுரிமைகள் அரிய சந்தர்ப்பங்களிலேயே உபயோகிக்கப் பட்டாலும், தக்க தருணங்களில் இன்றியமையாதவையாக அமைந்துள்ளன — உதாரணம், "தொங்கு நாடாளுமன்றம்" ஏற்பட்ட பொழுதெல்லாம். ஒவ்வொரு வருடமும், பொதுவாக நவம்பர் மாதத்தில், அரசர் அவர்கள் நாடாளுமன்றத்தைத் துவக்கி வைத்து, அரசின் அடுத்த வருடத்திற்கான செயல் திட்டங்கள்குறித்த சிறப்புரையை வழங்குவார். அரசர் அவர்கள் நாடாளுமன்றத்தின் இன்றியமையாத ஒரு அங்கத்தினராகக் கருதப் படுகிறார். நாடாளுமன்றத்திற்கு, கூடும் அதிகாரத்தையும், சட்டங்களியற்றும் அதிகாரத்தையும் மேன்மைமிகு அரசர் அவர்களே வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு நாடாளுமன்ற சட்டவரைவு மேன்மைமிகு அரசர் அவர்கள் கையொப்பமிடும் வரை சட்டமாக அங்கீகாரம் பெறாது. இத்தகைய இராச அங்கீகாரம் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்ட எந்த மசோதாவுக்கும் மறுக்கப் பட்டதில்லை ( ஒரே ஒரு முறை அரசி ஆன் (Queen Anne) 1708ஆம் ஆண்டில் அவ்வாறு செய்ததைத் தவிர). மேன்மைமிகு அரசி அவர்கள் செய்யும் இன்னொரு பணி, நாட்டிற்குப் பெருந் தொண்டாற்றியவர்களுக்குப் பட்டங்களும் பதக்கங்களும் வழங்கிக் கௌரவிப்பதாகும். முடிக்குரியவரே நாட்டின் தலைவராகவும் அரசு நிர்வாகத்தின் தலைவராகவும் திகழ்கிறார். பிரித்தானிய அரசும் அதிகாரபூர்வமாக மேன்மைமிகு அரசரின் ஐக்கிய பேரரசின் அரசு என்றே அழைக்கப் படுகிறது. அரசரால் நியமிக்கப் பட்டதாகக் கருதப்படும் பிரதமரே, அரசாங்கத்தின் தலைவராவார். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, போர் தொடுப்பது போன்ற எல்லா வெளியுறவுக் கொள்கைகளும், மேன்மைமிகு அரசர் அவர்களின் பெயரிலேயே மேற்கொள்ளப் படுகின்றன. ஐக்கிய பேரரசினடி முடிக்குரியவரே நீதியின் பிறப்பிடமாவார். அனைத்துக் குற்றப் பத்திரிக்கைகளும் முடிக்குரியவரின் பெயரிலேயே எழுதப் படுகின்றன (அரசரானால் "ரெக்ஸ்" என்ற பெயரிலும், அரசியானால் "ரெசினா" என்ற பெயரிலும்). மேன்மைமிகு அரசரின் போர்ப்படை என்றழைக்கப்படும் பிரித்தானியப் போர்ப்படைக்கும் அவரே தலைமைத் தளபதியாவார். அண்மை காலத்திலேற்பட்ட இழுக்குகள் மற்றும் விவாதங்களையும் தாண்டி, முடிக்குரியவருக்கு மக்களிடையே வலுவான ஆதரவே இருந்து வந்துள்ளது. அரசியல் பின்புலமுள்ள சனாதிபதி முறையை விட, அரசியல் சார்பற்ற முடிக்குரியவரை (அவர் அத்தகுதியைப் பிறப்பால் அடைந்தவர் என்றாலும்) நாட்டின் தலைவராகக் கொள்வதே மேலானதாகக் கருதப் படுகிறது. பிரித்தானிய முடிக்குரியவர் மற்றொரு 15 சுதந்திர நாடுகளுக்கும் தலைமை வகிக்கிறார். இந்நாடுகள் பொதுநலவாய நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. ஐக்கிய பேரரசிற்கு இந்நாடுகளின் மீது அரசியல் ரீதியாகவோ அல்லது ஆட்சி ரீதியாகவோ எந்தவொரு அதிகாரமும் இல்லையென்றாலும், நெடுங்காலத்திய, நெருக்கமான உறவுமுறைகளின் காரணமாக ஒரு செல்வாக்குண்டு. சில பொதுநலவாய நாடுகளுக்குப் பிரித்தானிய ஆலோசனைக்குழுவே உச்ச நீதிமன்றமாக விளங்குகிறது. ஒப்பந்தச் சட்டத்தின்படி (Act of Settlement 1701) முடிக்குரியவர் ஒரு ரோமன் கத்தோலிக்கரை மணந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட 646 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை, மற்றும் நியமன உறுப்பினர்களையே கொண்ட பிரபுக்களவை, ஆகிய இரு அவைகளையும் உள்ளடக்கியதாகும். மக்களவை பிரபுக்களவையை விடக் கூடுதல் அதிகாரத்தை உடையதாகும். அதன் 646 உறுப்பினர்களும், ஐக்கிய பேரரசின் நான்கு பாகங்களிலிருந்தும், மக்களால் நேரடியாக, தொகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். பிரபுக்களவை தற்போது 706 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் எவரும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களல்ல. இவர்கள் அனைவருமே வம்சாவளியாகவோ அல்லது கௌரவிக்கப் பட்டோ உயர்குடிகளானவர்கள் (nobility), மற்றும் இங்கிலாந்து தேவாலயத்தின் மதகுருமார்கள், ஆகியவர்களே. பண்டைய நாட்களில், பிரபுக்களவை உயர்குடிகளையே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. இவர்களுக்குப் பிறப்புரிமை கருதி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டன. எனினும் இன்றைக்கு இவ்வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும், பிரபுக்களவைச் சட்டம் 1999, வம்சாவளி உறுப்பினர்களின் தொகையை வெகுவாகக் குறைத்தது. 706 உறுப்பினர்களில் 92 பேர்களுக்கே பிறப்புரிமையால் பதவி பெறும் வாய்ப்புண்டு, அதுவும் அவர்கள் மற்ற உயர்குடிகளால் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் அல்லது Earl Marshal, Lord Great Chamberlain போன்ற பேரரசிய பதவிகளை உடையவர்களாக இருக்க வேண்டும். பிரபுக்களவை சீர்திருத்தங்கள் முதலில் எல்லா வம்சாவளி உறுப்பினர்களின் வாக்குரிமையையும் பறிப்பதற்கு முயற்சி செய்தது. பிறகு சமரசம் செய்து கொள்ளப்பட்டு, அவர்கள் படிப்படியாக உரிமைகளை இழக்கும்படி மாற்றியமைக்கப்பட்டது. ஐக்கிய பேரரசு ஒரு நடுவண் ஆட்சி, அல்லது ஒற்றையாட்சி (unitary) அரசு என்றும், வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள நாடாளுமன்றமே ஐக்கிய பேரரசின் ஒட்டுமொத்தமான அரசதிகாரத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்றும், விவரிக்கப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முழுவதிலும் ஐக்கிய பேரரசு அயர்லாந்துக்குச் சுயாட்சி வழங்குவது குறித்து விவாதித்தது. 1920ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. ஆனால் அது 1972ஆம் ஆண்டு நடந்த பலத்த உள்நாட்டுக் கலவரத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப் பட்டது. 1990களில் தன்னாட்சி மீண்டது, கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் சுயாட்சிப் நாடாளுமன்றங்கள் உருவான பொழுது. 1999இல் ஸ்காட்டியப் நாடாளுமன்றமும் வேல்ஸ் தேசிய அவையும்]] நிறுவப் பட்டன, முன்னது சட்டமியற்றும் அதிகாரமும் கொண்டதாக. இப்பொழுது கல்வி வட்டாரங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுவது என்னவென்றால், கார்னிஷ் மக்களும் அவர்கள் வாழும் பகுதிகளும் ஐக்கிய பேரரசின் தனியொரு பகுதியாகவும் நாடாகவும் கருத வாய்ப்புள்ளதா என்பதே. கார்ன்வாலில் ஒரு தேசிய இயக்கம் ஒரளவுக்கு செயல்பட்டு வருகிறது. தன்னாட்சி கோரி ஒரு மனு சமர்பிக்கப் பட்டு, அதற்கு 50000 ஆதரவுக் கையொப்பங்களும் சேகரிக்கப் பட்டன. எனினும், ஐக்கிய பேரரசி அரசுக்கு, கார்ன்வாலுக்கு எவ்வகையான தன்னாட்சியையும் வழங்கும் எண்ணமில்லை. மாகாண அவைகள் வடக்கில் முயற்சி செய்யப்பட்டு, மக்கள் ஆதரவின்றி கைவிடப்பட்டன. எனினும், துணைப் பிரதமரின் அலுவலகம் கூறுவது என்னவென்றால், "அரசு தொடர்ந்து அதிகாரத்தைப் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் பிராந்திய அளவில் செயல்பாடுகளைச் செம்மைப் படுத்தி, எல்லா ஆங்கிலப் பிரதேசங்களையும் வலிமையாக்கும் கொள்கையில் தெளிவாகவுள்ளது" என்பதே. நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிகாரப் பகிர்வுடைய ஒரு அவையின் நிர்மாணிப்பு என்று வடக்கு அயர்லாந்தின் சமீபத்திய சுயாட்சி முயற்சியும் தூய வெள்ளி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்டது, ஆனால் அது தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. பன்முக (federal) அரசமைப்பைப் போலல்லாது, தன்னாட்சிப் நாடாளுமன்றங்களுக்கு அரசுச் சட்டத்தில் எந்தவொரு உரிமையோ, இடமோ கிடையாது. அவை இலண்டன் பாரளுமன்றத்தால் உருவாக்கப் பட்டு, 1972இல் வடக்கு அயர்லாந்தில் நிகழ்ந்தது போல், இலண்டன் பாரளுமன்றத்தாலேயே கலைக்கப் பட்டும் விடலாம். பிரிவுகளும் துணைப்பிரிவுகளும் ஐக்கிய பேரரசு நான்கு பிரிவுகளைக் கொண்டது: ஐக்கிய பேரரசின் பிரிவுகள் கீழ்க்கண்டவாறு துணைப்பிரிவுகளைக் கொண்டுள்ளன: இங்கிலாந்தின் பிராந்தியங்கள், மற்றும் வட்டாரங்கள்; ஸ்காட்லாந்தின் துணைப்பிரிவுகள்; வேல்ஸின் வட்டாரங்கள்; வடக்கு அயர்லாந்தின் மாவட்டங்கள். ஒன்றியச் சட்டம் 1536 இங்கிலாந்தையும் வேல்ஸையும் ஒருங்கிணைத்தது. நான்கு பிரிவுகளும் பண்டைய நாட்களிலேயே வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இங்கிலாந்தின் மக்கள்தொகை மற்றதுகளை விட வெகு அதிகமாதலால், அண்மை காலத்தில் அது ஒன்பது பிராந்தியங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை: வடகிழக்கு, வடமேற்கு, யார்க்-ஷையர் மற்றும் ஹம்பர், கிழக்கு மிட்லேண்ட்ஸ், மேற்கு மிட்லேண்ட்ஸ், கிழக்கு இங்கிலாந்து, பாரிய இலண்டன், தென்கிழக்கு இங்கிலாந்து, தென்மேற்கு இங்கிலாந்து ஆகியவை. ஒவ்வொரு பிராந்தியமும் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சமயத்தில், ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒரு பிராந்திய அவையை அமைக்கத் திட்டமிடப் பட்டிருந்தாலும், முதலில் முயற்சிக்கப்பட்ட வடகிழக்குப் பிராந்தியத்தில் இதற்கு மக்களின் ஆதரவு கிட்டாததால், இத்திட்டத்தின் வருங்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. கொட்லாந்து 32 வட்டாரங்களையும், வேல்ஸ் 22 வட்டாரங்களையும், வடக்கு அயர்லாந்து 26 மாவட்டங்களையும் கொண்டுள்ளன. அவ்வப்பொழுது சேர்த்துக் கூறப்பட்டாலும், சட்டப்படி ஐக்கிய பேரரசின் பிரிவாக இல்லாதவை அதன் மகுடச் சார்பு நாடுகளாகும். அவை தன்னாட்சி முறையில் இயங்கும் மகுடச் சொத்துக்களாகும். இத் தவிர ஐக்கிய பேரரசு பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. இராணுவம் ஐக்கிய பேரரசின் போர்ப்படைகளாவன பிரிட்டிஷ் போர்ப்படைகள் என்றோ மேன்மைமிகு அரசரின் போர்ப்படைகள் என்றோ அல்லது அதிகாரபூர்வமாக மகுடத்தின் போர்ப்படைகள் என்று வழங்கப்படுகின்றன. அவற்றின் தலைமைத் தளபதி மேன்மைமிகு அரசர் ஆவார். அவை பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப் படுகின்றன. பிரிட்டிஷ் போர்ப்படையின் தலையாய கடமை, ஐக்கிய பேரரசையும் அதன் கடல் கடந்த நிலப்பரப்புகளையும் பாதுகாப்பதே. அத்துடன், பிரிட்டனின் பாதுகாப்புக்கு இன்றியமையாத மற்ற அம்சங்களையும் கவனிக்கும் பொறுப்பும், சர்வதேச அமைதி முயற்சிகளில் பங்கு பெறுவதும் அதன் கடமைகளே. அவை, NATO மற்றும் இதர கூட்டு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து நற்பணியாற்றி வருபவையாகும். 2004ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் நிலப்படை 112.700 வீரர்களையும் (இதில் 7.600 பெண் வீரர்களும் அடக்கம்), இராச விமானப்படை 53,400 வீரர்களையும் கொண்டிருந்தன. 40.900 வீரர்களைக் கொண்ட இராசக் கப்பற்படை ஐக்கிய பேரரசின் தன்னிச்சையான அணு ஆயுத செயல்திட்டப் பிரிவினை உள்ளடக்கியது. அது நான்கு டிரைடெண்ட் எறிகணை நீர்மூழ்கிகளைக் கொண்டது. இராச கப்பற்படை வீரர்கள் நீர்-நில அதிரடி நடவடிக்கைகளில் NATO நிலப்பரப்பிலும் அதனைத் தாண்டியும் பங்கு பெறுவர். மேற்கூறிய அனைத்துப் போர்வீரர்களையும் சேர்த்தால், மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 210,000 ஆகும். பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பிரிட்டனும் ஐரோப்பாவின் சக்திவாய்ந்த மற்றும் முழுமையானதொரு போர்ப்படையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. பிரிட்டனின் பரவலான செயல்திறன்களையும் தாண்டி, அண்மையில் நிலவும் பாதுகாப்புக் கொள்கையானது, பிரிட்டன் தனித்துப் போரிடாமல், தோழமை நாடுகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளில் மட்டுமே பங்கு பெறுவது, என்பதே. பாஸ்னியா, கொசோவோ, ஆஃப்கானிஸ்தான், இராக் (கிரேன்பி நடவடிக்கை, விமானத்தடைப் பிராந்தியங்கள், டெசர்ட் பாக்ஸ் நடவடிக்கை, டெலிக் நடவடிக்கை) ஆகியவற்றை இக்கொள்கைக்கு உதாரணங்களாகக் கூறலாம். பிரிட்டிஷ் படை கடைசியாகத் தனித்துப் போரிட்டது 1982ஆம் ஆண்டு நடந்த ஃபாக்லாண்ட்ஸ் போரில்தான். பிரிட்டிஷ் படைகள் வடக்கு அயர்லாந்தில் நடக்கும் கலவரங்களை ஒடுக்குவதிலும் பங்கு பெறுகின்றன. எனினும், அங்கு படைக் கலைப்பு படிப்படியாகச் செயல்படுத்தப் படுகிறது. புவியியல் இங்கிலாந்தின் பெரும்பாகம் சமவெளிப் பிரதேசமாகும். கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் மலைப்பகுதிகள் வடமேற்கில் லேக் மாவட்டத்திலுள்ள கம்ப்ரயன் மலைகளும், வடக்கில் பெனைன்ஸ் மலைப்பிரதேசம் மற்றும் பீக் மாவட்டத்திலுள்ள சுண்ணாம்புக்கல் மலைகள் ஆகியன. மற்ற மலைப்பகுதிகள் பர்பெக் தீவிலுள்ள கீழ் சுண்ணாம்புக்கல் மலைகள், வடக்கு மலைச்சரிவுகளான காட்ஸ்வோல்ட்ஸ், லின்கன்ஷையர் மற்றும் சாக் சரிவுகள், தெற்கு மலைச்சரிவுகள் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் சில்டர்ன்ஸ் ஆகியவை. இங்கிலாந்தில் 1000 மிட்டர்களுக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்ட சிகரமெதுவுமில்லை. முக்கியமான ஆறுகளும் கயவாய்களும் (estuaries) இவையே: தேம்ஸ், செவெர்ன், ட்ரெண்ட், ஔஸ் மற்றும் ஹம்பர் ஆகியன. பெருநகரங்களாகியன இலண்டன், பர்மிங்காம், மான்செஸ்டர், லீட்ஸ், ஷெஃபீல்ட், லிவர்பூல், பிரிஸ்டொல், நாட்டிங்ஹம், லீசெஸ்டர் மற்றும் நியூ கேசில். டோவருக்கு அருகிலுள்ள கால்வாய் சுரங்கம் (Channel tunnel) ஐக்கிய பேரரசை பிரான்ஸுடன் இணைக்கிறது. வேல்ஸ் பெரும்பாலும் மலைப்பாங்கான நிலப்பரப்பையுடையது. அதன் உயரமான சிகரம் 1085 மீட்டர் உயரமுள்ள ஸ்நோடௌன் ஆகும். வேல்ஸ் மையப்பகுதிக்கு வடக்கில் இருப்பது அங்க்லெசி தீவு. வேல்ஸின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் தெற்கிலுள்ள கார்டிஃப் ஆகும். இன்ன பிற மாநகரங்கள் ஸ்வேன்சீ, நியூ போர்ட் மற்றும் ரெக்ஸ்ஹம் ஆகியன. ஸ்காட்லாந்தின் பூகோள அமைப்பு பலதரப்பட்டது. தெற்கிலும் கிழக்கிலும் சமவெளிகளாகவும் வடக்கிலும் மேற்கிலும் மலைப்பகுதிகளாகவும் உள்ள நிலப்பரப்பைக்கொண்டது கொட்லாந்து. அதன் 1343 மீட்டர் உயரமுள்ள பென் நெவிஸ் சிகரமே ஐக்கிய பேரரசின் மிகுந்த உயரமான சிகரமாகும். பல நீளமான கயவாய்களும் ஏரிகளும் ஸ்காட்லாந்தில் உண்டு. மேற்கிலும் வடக்கிலும் பல தீவுகளையும் உள்ளடக்கியது கொட்லாந்து. ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, ஷெட்லேண்ட் தீவுகள் மற்றும் மனிதக் குடியிருப்பில்லாத ராக்கெல் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. முக்கிய நகரங்கள் எடின்பரோ, கிளாஸ்கோ, அபர்தீன் மற்றும் டண்டீ ஆகியவை. அயர்லாந்து தீவின் வடகிழக்கிலுள்ள வடக்கு அயர்லாந்து, பெரும்பாலும் மலைப்பகுதியே. பெல்ஃபாஸ்ட் மற்றும் லண்டண்டெர்ரி அதன் முக்கிய நகரங்களாகும். ஐக்கிய பேரரசு மொத்தமாக 1098 சிறிய தீவுகளைக் கொண்டது. இவற்றில் பல இயற்கையானவை. மற்றவை செயற்கையாக, கற்களையும் மரத்தையும் கொண்டு பண்டைய காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் இயற்கையான பாழ்பொருட்களும் அவற்றின் மேல் படிந்ததால் படிப்படியாக விரிவாக்கமடைந்த செயற்கைத் தீவுகளாகும். பொருளாதாரம் ஐக்கிய பேரரசு முன்னணியில் இருக்கும் ஒரு வணிக சக்தி மற்றும் நிதித்துறை மையமாகும். முதலாளித்துவத்தையே முதன்மையாகக் கொண்ட அதன் பொருளாதாரம், உலகில் நான்காவது இடத்தை வகிப்பதாகும். கடந்த இருபது வருடங்களாக அரசு, தனியார்மயமாக்கல்களை மேற்கொண்டு அரசுடைமையைப் பெரிதும் குறைத்துக் கொண்டுள்ளது. மக்கள்நல அரசமைப்பையும் (welfare state) வெகுவாகக் கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. உழவுத் தொழில், ஐரோப்பிய அளவில், அதீதமான, மிகவும் இயந்திரமயமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க முறையில் மேற்கொள்ளப்பட்டு, நாட்டின் உணவுத் தேவைகளின் 60 % பங்கு, மக்கள்தொகையில் 1 % அளவே உள்ள உழவர்களைக் கொண்டு நிறைவு செய்யப்படுகிறது. ஐக்கிய பேரரசு பெரிய அளவில் நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது. அதன் மின்னாற்றல் தயாரிப்பின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆகும். இது United Kingdom போன்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மிக அதிகமானவொரு எண்ணிக்கையாகும். சேவைகளே நிகர உள்நாட்டு உற்பத்தியின் பெரும் பங்கை வகிக்கின்றன. குறிப்பாக, வங்கித் துறை, காப்புறுதித் துறை மற்றும் வணிகத்துறையைச் சார்ந்த சேவைகள், ஆகியன. தொழில்த்துறையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், ஐ. இ இன்னும் சாலை வாகனங்கள், போராயுதங்கள், பெட்ரோலியப் பொருட்கள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் கைபேசிகள் ஆகியவற்றுக்கு ஐரோப்பாவின் முன்னணி உற்பத்தியாளராகத் திகழ்கிறது. சுற்றுலாத் துறையும் இன்றியமையாததே. வருடத்துக்கு 23.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐ.இ, உலக சுற்றுலா மைய நாடுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. டோனி ப்ளேர் அரசு, ஐ.ஒ அமைப்புடன் இணைவது குறித்து பதிலளிக்கும் முகமாக, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை: ஐந்துப் பொருளாதாரப் பரிசோதனைகளில் வெற்றி, அதன் பிறகு மக்களிடம் வாக்கெடுப்பு, ஆகியன. இவையனைத்தையும் வெற்றிகரமாகக் கடந்த பிறகே ஐ.இ ஐ.ஒ-உடன் இணையும் வாய்ப்புள்ளது. மக்கள்தொகை பரம்பல் முதன்மையாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். மற்ற ஆதிகுடி மொழிகளாவன: செல்டிக், வெல்ஷ், ஸ்காட்டிஷ் கேலிக், அதற்கு நெருங்கியத் தொடர்புடைய ஐரிஷ் கேலிக், கார்னிஷ், ஆங்கிலத்துடன் நெருங்கியத் தொடர்புடைய சமவெளி ஸ்காட்ஸ், ரோமனி, பிரிட்டிஷ் சைகை மொழி, ஐரிஷ் சைகை மொழி ஆகியவை. பல நூற்றாண்டுகளாக வடக்கு இங்கிலாந்தில் செல்டிக் வட்டார மொழியான கம்ப்ரிக்கின் பாதிப்பு இருந்து வந்திருக்கிறது. இதற்குச் சிறந்தவொரு உதாரணம், அப்பகுதிகளில் செம்மறி ஆடுகளை எண்ணுவதற்கென்றே பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் கம்ப்ரிக் எண்கள் ஆகும். அண்மை காலத்தில் குடியேறிவர்கள், குறிப்பாகக் காமன்வெல்த் நாட்டவர்கள், வேறு பல மொழிகளையும் பேசுகிறார்கள். அவை (சீன நாட்டின்) கேன்டனியம், பஞ்சாபி, குஜராத்தி, ஹிந்தி, உருது மற்றும் ஜமேய்க்கக் கிரியோல் ஆகியவை. பார்க்க: ஐக்கிய பேரரசின் மொழிகள் பண்பாடு உலகிலேயே மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் இரண்டை ஐக்கிய பேரரசு கொண்டுள்ளது. அவை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவை. இவ்விரண்டும் பல விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கியவை. சில உதாரணங்கள்:சர் ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின், மைக்கேல் பரடே, பால் டிரக் மற்றும் ஐசம்பார்ட் கிங்டம் ப்ரூனெல் ஆகியோர். பல கண்டுபிடிப்புகள் இந்நாட்டில் நடந்துள்ளன. அவற்றில் சில: நீராவி இயந்திரம், உந்துபொறி (locomotive), 3-பீஸ் சூட், தடுப்பு ஊசி, ஈயப் படிகம், தொலைக்காட்சி வானொலி, தொலைபேசி, நீர்மூழ்கி, ஹோவர்கிராஃப்ட், உட் தகன இயந்திரம் (internal combustion engine) மற்றும் ஜெட் இயந்திரம் ஆகியன. பலதரப்பட்ட விளையாட்டுக்களும் ஐக்கிய பேரரசிலேயே உருவாகின. உதாரணம், கால்பந்து, கோல்ஃப், கிரிக்கெட், குத்துச் சண்டை, ரக்பி கால்பந்து, பில்லியர்ட்ஸ் மற்றும் அமெரிக்காவில் அதிகமாக விளையாடப்படும் பேஸ்பாலின் முன்னோடியான ரௌண்டர்ஸ் எனும் விளையாட்டு. இங்கிலாந்து உலக கால்பந்துக் கோப்பை 1966 மற்றும் 2003 ரக்பி ஒன்றிய உலகக் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளது. விம்பிள்டன் கோப்பை எனும் சர்வதேச டென்னிஸ் போட்டி, தெற்கு இலண்டனிலுள்ள விம்பிள்டனில் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் நடைபெறும் ஒரு உலகப் புகழ் வாய்ந்த நிகழ்ச்சியாகும். நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் உலகின் மிகச்சிறந்த எழுத்தாளராகப் பலரால் கருதப் படுபவர். மற்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் ப்ராண்ட் சகோதரிகள் (சார்லோட், எமிலி மற்றும் அன்), ஜேன் ஆஸ்டின், ஜே. கே. ரௌலிங், அகதா கிரிஸ்டி, ஜே ஆர் ஆர் டோல்கியன் மற்றும் சார்ல்ஸ் டிக்கன்ஸ் ஆகியோர். முக்கியமான கவிஞர்கள் லார்ட் பைரன், ராபர்ட் பர்ன்ஸ், லார்ட் டென்னிசன், தாமஸ் ஹார்டி, வில்லியம் ப்ளேக் மற்றும் டிலன் தாமஸ் ஆகியோர் ஆவர். (பார்க்க: பிரிட்டிஷ் இலக்கியம்) ஐக்கிய பேரரசின் குறிப்பிடும்படியான இசைப் படைப்பாளர்கள் வில்லியம் பைர்ட், ஜான் டவர்னர், தாமஸ் டேலிஸ் மற்றும் ஹென்றி பர்செல் ஆகியோர் 16ஆம் நூற்றாண்டு மற்றும் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்களாவர். அண்மை காலத்தில், சர் எட்வர்ட் எல்கர், சர் ஆர்தர் சல்லிவன், ரால்ஃப் வான் வில்லியம்ஸ், பெஞ்சமின் பிரிட்டென் ஆகியோர் 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்களாவர். ராக் அண்ட் ரோல் இசை வகையின் வளர்ச்சிக்கு ஐக்கிய பேரரசும் அமெரிக்காவுமே பிரதான பங்களிப்பாளர்களாவர். ஐக்கிய பேரரசு பல பிரபலமான இசைக்குழுக்களை உலகுக்கு வழங்கியுள்ளது. அவை: பீட்டில்ஸ், க்வீன், ரோலிங் ஸ்டோன்ஸ், லெட் ஸெப்பிலின், பிளாக் ஸப்பாத், பிங்க் ஃப்ளாயிட், டீப் பர்பிள் மற்றும் பல. பங்க் ராக் இசையில் 1970களில் ஐ. இ முன்னணியில் இருந்தது. இவ்வகை இசையை வழங்கியவர்கள் செக்ஸ் பிஸ்டல்ஸ் மற்றும் த க்ளேஷ் குழுவினர். ஹெவி மெட்டல் வகை இசையில் புகழ்பெற்ற ஐ.இ குழுவினர் மோட்டர்ஹெட் மற்றும் அயர்ண் மெய்டன் ஆகியோர். அண்மைய வருடங்களில் பிரிட்பாப் வகை பிரபலமடைந்து ஒயாஸிஸ், ப்ளர் மற்றும் சூப்பர்கிராஸ் ஆகிய குழுக்கள் சர்வதேசப் புகழ் அடைந்தன. எலக்டிரானிகா வகை இசையிலும் ஐ. இ முன்னிடம் வகிக்கிறது. இவ்வகையில் வல்லமை பெற்ற இசைஞர்கள் அஃபெக்ஸ் ட்வின், தல்வின் சிங், நிதின் சாஹ்னி, மற்றும் லாம்ப் ஆகியோர் (பார்க்க: ஐக்கிய இராச்சியத்தின் இசை). நிலைப்பாட்டு எண்கள் (Rankings): UNDP: மனித வளர்ச்சி அட்டவணை (Human Development Index) 2004, 12ஆவது இடம், 177 நாடுகளில் அனைத்துலக வெளிப்படைத்துவ நிறுவனம் (Transparency International): ஊழல் அனுமான அட்டவணை(Corruption Perceptions Index) 2004 , 11ஆவது இடம், 146 நாடுகளில் எல்லையற்ற நிருபர்கள்(Reporters Sans Frontières): மூன்றாவது வருடத்திய உலகளாவியப் பத்திரிகை சுதந்திர அட்டவணை 2004 , 28ஆவது இடம், 167 நாடுகளில் இதனையும் காண்க பெரிய பிரித்தானியா பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் வெளி இணைப்புகள் What’s the Difference Between Great Britain and the United Kingdom? ஐக்கிய பேரரசு நாடாளுமன்றம் எண் 10, டௌனிங் தெரு ஐ.இ அரசு சேவைகள் மற்றும் இணையத்தளங்களின் முகப்பு முடியரசு பிரித்தானிய ஒலி/ஒளிபரப்பு நிறுவனம் (பிபிசி) தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகம் ஐ.இ 2004 தகவல் புத்தகம் ஐக்கிய பேரரசிற்கு உட்பட்ட தேசங்களின் வரலாறு ஐக்கிய பேரரசைப் பற்றிய தனிப்பட்ட கண்ணோட்டம் ஐக்கிய பேரரசின் வரைபடங்கள் ஐ.இ பற்றிய CIA தகவல் புத்தகம் ஐ.இ நகரங்கள் பற்றிய வழிகாட்டி ஐ.இ சுற்றுலா வழிகாட்டி ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய நாடுகள் தீவு நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
3359
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
ரவி சங்கர்
பண்டிட் ரவி சங்கர் (Ravi Shankar, வங்காளம்: রবি শংকর; 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012),, உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார் விருதுகள் 1992 ஆம் ஆண்டு ரமன் மக்சேசே விருது. இவருக்கு 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. காளிதாஸ் சம்மன் விருது (1987-1988) கிராமி விருதுகள் 1967 ஆம் ஆண்டு எகுடி மெனுஹின் என்ற வயலின் இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட் எனும் இசைக் கோவைக்கு முதல் தடவையாக "கிராமி விருதை" இவர் பெற்றார். 1972 ஆம் தி கன்செர்ட் பார் பங்களாதேஷ்என்ற ஆல்பத்திற்கு இரண்டாம் தடவை விருது கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு புல் சர்கிள் என்ற ஆல்பத்திற்கு மூன்றாம் தடவை விருது கிடைத்தது. 2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் கிராமி விருது. 2013 ஆம் ஆண்டு கலாசார நல்லிணக்கத்துக்கான முதல் தாகூர் விருது விருது மாநிலங்களவை உறுப்பினர் 1986இல் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார் . . மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ரவி சங்கரின் வலைத்தளம் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் 1920 பிறப்புகள் 2012 இறப்புகள் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் ரமோன் மக்சேசே விருது பெற்றோர் சித்தார் இசைக் கலைஞர்கள் காளிதாஸ் சம்மன் விருது பெற்றவர்கள் வங்காள மக்கள் கிராமி விருது வென்றவர்கள்
3366
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நிறுத்தக்குறிகள்
நிறுத்தக்குறிகள் (punctuation marks) பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும். பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நிறுத்தக்குறிகள் பின்வருவன: கால்புள்ளி (தமிழ் நடை) – (,) அரைப்புள்ளி (தமிழ் நடை) – (;) முக்கால்புள்ளி (தமிழ் நடை) -(:) முற்றுப்புள்ளி (தமிழ் நடை) – (.) புள்ளி (தமிழ் நடை) – (.) முப்புள்ளி (தமிழ் நடை) – (…) கேள்விக்குறி (தமிழ் நடை) -(?) உணர்ச்சிக்குறி (தமிழ் நடை) – (!) இரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை) – (" ") ஒற்றை மேற்கோள்குறி (தமிழ் நடை) – (' ') தனி மேற்கோள்குறி (தமிழ் நடை) – ( ' ) மேற்படிக்குறி (தமிழ் நடை) – ( " ) பிறை அடைப்பு (தமிழ் நடை) – ( ) சதுர அடைப்பு (தமிழ் நடை) – [ ] இணைப்புக்கோடு; இணைப்புக்கோடு (தமிழ் நடை); இடைக்கோடு - ( - ) சாய்கோடு (தமிழ் நடை) – (/) அடிக்கோடு (தமிழ் நடை) – (_) உடுக்குறி (தமிழ் நடை) – (*) சான்றுகள் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.
3411
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81
ஈரோடு
ஈரோடு (Erode) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கும் மாநகராட்சி ஆகும். இது மாநில தலைநகரான சென்னையிலிருந்து தென்மேற்குத் திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும், காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையில் அமைந்துள்ளது. பெயர்க் காரணம் 'ஈரோடு' எனும் சொல்லானது, பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற இந்த இரண்டு ஓடைகள் சேர்ந்ததுதான் ஈரோடை. ஈரோடைதான் காலப்போக்கில் மருவி `ஈரோடு’ என்றானதாக நவீன வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர். பைரவ புராண விளக்கவுரையில், சிவனின் மாமனாரான தட்சன், தாம் நடத்திய யாகத்திற்கு தமது மருமகனான இறைவன் சிவனை அழைக்கவில்லை; அவரது மனைவி தாட்சாயினி, தமது கணவர் விருப்பத்திற்கு எதிராக யாகத்திற்குச் சென்றாள்; யாகத்தில், தமது கணவரை, தந்தை இழிவுபடுத்தியதால் மனமுடைந்து திரும்பினாள். மேலும் அவள் சிவனிடம் திரும்பியபின் சிவன் கோபமுற்று தாட்சாயினியை எரித்தார் எனக் கூறுகிறது. அதைக் கேட்ட பிரம்மா, தன் ஐந்தாவது தலையைத் துண்டித்தார். அந்த மண்டை ஓடு சிவனை ஒட்டிக்கொண்டு, 'பிரம்மதோசம்' பிடித்தது. பிரம்மதோசத்தின் காரணமாக சிவன் இந்தியா முழுவதும் சுற்றினார். அப்போது ஈரோடு வந்த போது, இங்குள்ள கபால தீர்த்தத்தில் நீராடியதால் மண்டை ஓடு சிதைந்தது. இந்த மண்டைத் துணுக்குகள், ஈரோட்டைச் சுற்றியுள்ள வெள்ளோடு (Vellode ("வெள்ளை மண்டை")), பேரோடு (Perode ("பெரிய மண்டை")) மற்றும் சித்தோடு (Chithode ("சிறிய மண்டை")) ஆகிய இடங்களில் விழுந்ததாகக் கூறுகிறது. அவற்றின் பெயர்களும் முன்னுதாரணமாக அமைந்துள்ளன. கபால தீர்த்தமானது, ஆருத்ர கபாலீசுவரர் கோயிலின் (கோட்டை ஈசுவரன் கோவில்) இடதுபுறத்தில் உள்ளதை இன்றும் காணலாம். மேற்கண்டவாறு வரலாற்றினை பைரவ புராணமானது விளக்குகிறது. திருமாலின் அவதாரங்களில், குறிப்பிடத்தக்க அவதாரமான கூர்ம அவதாரத்திற்கான அடித்தளமாக இது திகழ்வதாக சான்றுகள் உள்ளன. வரலாறு ஈரோடு நகரமானது உள்ளூர் கங்கை வம்ச அரசர்களான சேர மன்னர்கள் மற்றும் மேற்கு கங்கை வம்ச அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தாராபுரமானது அவர்களின் தலைமையகமாகத் திகழ்ந்தது. சோழர்கள் ஆட்சிக்கு பின்னர், முஸ்லிம்கள் (மோடின் சுல்தான் (Modeen Sulthans)) மதுரை நாயக்கர்களின் கீழ் ஆட்சி புரிந்தனர். ஐதர் அலி ஆட்சிக்கு பின் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் மாவீரன் தீரன் சின்னமலை உதவியுடன் ஆதிக்கத்தினைச் செலுத்தினர். 1799 இல், திப்பு சுல்தான் தமது ஆட்சியினை பிரிட்டிஷ் அரசிடம் இழந்தார், சங்ககிரி மலைக் கோட்டையில் தீரன் சின்னமலையின் மறைவிற்கு பின், கிழக்கு இந்திய கம்பெனியானது ஆட்சி புரிந்தது. ஹைதர் அலி ஆட்சியின் போது, ஈரோடு நன்கு புனரமைக்கப்பட்டு 300 வீடுகள் மற்றும் 1500 மக்கள் தொகை கொண்ட செழிப்பான நகரமாக இருந்தது. சுமார் 4000 சிப்பாய்கள் மூலம் கேர்ரிசன் களிமண் கோட்டையை, கிழக்கு நோக்கிய எல்லையாக (பட்சன் குறிப்பு - 1800 ஆம் ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8)வும், வடக்கில் காவிரி ஆற்றின் மீது காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டதால் தென்னந்தோப்புகள் மற்றும் வளமான நிலங்களால் சூழப்பட்டு இருந்தது. அடுத்தடுத்த மராட்டிய, மைசூர் மற்றும் பிரிட்டிஷ் படையெடுப்புகள் காரணமாக வார்ஸ் கோட்டை பாதுகாப்பு அரண் உட்பட, கிட்டத்தட்ட சிதைந்த ஈரோடு நகரமாக மாறியது. எனினும் பிரிட்டிஷ் சமாதானத்தால் மக்கள் திரும்பி இங்கு குடியேறினர். ஓர் ஆண்டுக்குள் அது வளர்ச்சி காட்ட ஆரம்பித்தது. கேர்ரிசன் 1807இல் விலகிக்கொண்டது, நகரின் மையத்தில் பாழாக்கி கோட்டையை 1877 ஆம் ஆண்டு பஞ்சத்தின் போது நிவாரண வேலை மூலம் சரி செய்தது. பாதுகாப்பு அரண் உள்ள இடத்தில் தற்போது வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் கோட்டை இருந்த இடத்தில் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு இந்து மதக் கோயி்ல்கள் தற்போது இருக்கின்றன. பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. இராச ராச சோழனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியினை ராஷ்ட்ராகுட்டாக்கள் கோசம்புதுரினை தலைமை இடமாக கொண்ட கோசாரஷ் என்ற துருப்புகள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் கோவையில் பயிற்சி பெற ஏதுவாக தங்கும் பகுதியாக பயன்படுத்தினர். இதை சாளுக்கியர்கள் தங்கள் பகுதியாக்கி கொண்டனர். பின்னர் மதுரை பாண்டிய மன்னர்களும் ஒய்சாளர்களும் தமதாக்கிக் கொண்டனர். கொங்கு மண்டல சதக பாடல் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாலசுந்தர கவிராயர் என்பவர், சீரிய செங்கமலமாய மேவுந்திரு வெழின்மிக் காரிருள் வோருடன் கூடிக் கலந்தங் கவர் பொருட்டாற் போரியல் வேல்விழி யிற்தாரணி நாயகன் பொன்னொடுபூ மாரிபொழிந்தது மீரோடை சூழ்கொங்கு மண்டலமே என பாடியுள்ளார். இதன் மூலம் 12ம் நூற்றாண்டிலேயே ஈரோடு, ஈரோடை என்ற பெயரில் கொங்குமண்டலத்தில் சிறப்புக்குரிய ஊராக விளங்கியதை அறியலாம். (சான்று:தினத்தந்தி 29.01.2020 ஈரோடு பதிப்பு - நம்ம ஊரு நல்ல ஊரு பகுதி - ஆய்வாளர் புலவர் ராசு மற்றும் ஆடிட்டர் மாரிமுத்து எழுதிய 'மாவீரன் சந்திரமதி முதலியார் வரலாறு' புத்தகம்) புவியியல் இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஈரோட்டின் உள்ளூர் திட்டக் குழுமம் 700 ச.கி.மீ-ஆகத் திகழ்கிறது. பொதுவாக ஈரோடு குறைந்த மழை மற்றும் ஒரு வறண்ட காலநிலையினை கொண்டு உள்ளது. அதிகபட்ச மழையானது கோபிச்செட்டிபாளையத்தில் பதிவு செய்யப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டு இடைவெளியானது கோயம்புத்தூர் மாவட்டம் காலநிலையினை வறண்ட தன்மையாக மாற்றுகிறது. பாலக்காட்டு கணவாய் வழியாக மேற்கு கடற்கரையிலிருந்து வரும் பருவகாற்று, அதன் ஈரப்பதத்தை இழப்பதால் கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளும், ஈரோடு பகுதியும் உலர் அடைகின்றன. மக்கள் வகைப்பாடு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 157,101 ஆகும். அதில் 78,222 ஆண்களும், 78,879 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.93 % மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். 2011இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 157,101 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 521,891 ஆகவும் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, ஈரோடில் இந்துக்கள் 83.15%, முஸ்லிம்கள் 12.37%, கிறிஸ்தவர்கள் 3.94%, சீக்கியர்கள் 0.06%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.36% மற்றும் 0.12% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர். மாநகராட்சி, நிர்வாகம் மற்றும் அரசியல் ஈரோடு நகரம் 2008 ல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு, 2011ல் 109.52சதுர கி.மீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சியின் எல்லைகள் வடக்கில் பவானி ஆறு வரையும், மேற்கில் சித்தோடு மற்றும் செம்மம்பாளையம் வரையும், தென்மேற்கில் திண்டல்மேடு வரையும், தெற்கில் முத்தம்பாளையம் மற்றும் ஆணைக்கல்பாளையம் வரையும், தென் கிழக்கில் சோலார் வரையும் அமையப்பெற்றுள்ளது. ஈரோடு நகரக் காவல், தமிழ்நாடு காவல்துறையின் மாவட்டக் காவல் அமைப்பான ஈரோடு மாவட்டக் காவல் பிரிவில் உள்ளடங்கியது. ஈரோடு மாநகரில், 8 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், ஒரு குற்றப் பிரிவு காவல் நிலையமும் இரண்டு போக்குவரத்துக் காவல் நிலையங்களும் உள்ளன. ஈரோடு மாநகரமானது, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அ. கணேசமூர்த்தி வென்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், எஸ். முத்துசாமி என்பவர் திமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியிலிருந்தும் மற்றும் திருமகன் ஈ. வெ. ரா என்பவர் காங்கிரசு சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முக்கிய தொழில்கள் இங்கு மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டு, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய அளவில் நிஜாமுதீனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மஞ்சள் மார்க்கெட் ஈரோட்டில் தான் உள்ளது. இதனால் ஈரோடு மஞ்சள் மாநகரம் என்று அழைக்கப்படுகிறது. கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கும் புகழ் பெற்றது இந்நகரம். எனவே இது ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக இங்கே அப்துல் கனி துணி சந்தை போன்று நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பல ஜவுளி சந்தைகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன. இப்பகுதி பருத்தி விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும். மேலும் நகரிலும் புறநகர்ப்பகுதிகளிலும் ஜவுளி உற்பத்தி தொழிலைச் சார்ந்த சாயத் தொழிற்சாலைகளும் அதிகளவில் இயங்கி வருகின்றன. உணவுப் பொருட்களின் மதிப்புக் கூட்டு பொருட்கள் உற்பத்தியும் அதிகளவில் நடைபெறுகிறது. தோல் பதனிடும் தொழிலும் இங்கே குறிப்பிட்ட அளவில் நடைபெறுகிறது. விவசாயம் சார்ந்த புற நகர்ப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளதால், நவீன அரிசி ஆலைகளும், தீவனத் தொழிற்சாலைகளும், எண்ணை ஆலைகளும் அதிகளவில் இயங்கி வருகின்றன. உலகமுழுவதும் ஏற்றுமதி ஜவுளிப் பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள், மற்றும் மஞ்சள் ஆகியன உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முக்கிய சுற்றுலாத்தலங்கள் தந்தை பெரியார் நினைவிடம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் திண்டல் முருகன் கோயில் கொடுமுடி மகுடேசுவரர் கோயில் (ஈரோட்டிலிருந்து 38 கீ.மீ தொலைவு) பவானி சங்கமேசுவரர் கோயில் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் (ஈரோட்டிலிருந்து 25 கீ.மீ தொலைவு) கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி திருக்கோயில் (ஈரோட்டிலிருந்து 30 கீ.மீ தொலைவு) பண்ணாரி அம்மன் கோவில் (பண்ணாரி, சத்தியமங்கலம்) பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் (கோபிசெட்டிபாளையம்) கொடிவேரி நீர் வீழ்ச்சி, சத்தியமங்கலம் செல்லும் வழி (ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 51kms) பவானி சாகர் அணை (ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 89kms) தேவாரத் திருத்தலங்கள் பவானி சங்கமேசுவரர் கோயில், கொடுமுடி மகுடேசுவரர் கோயில் என தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளன. பிற கோவில்கள் கோட்டை ஈசுவரன் கோவில். ஈரோடு நகரின் நடுநாயகமாக விளங்கும் இக்கோவிலைக் கட்டியவர்கள் 'சிறு நல்லாள்', 'பெரு நல்லாள்' என்ற கன்னியர் ஆவர். இவர்கள் கணிகையர் ஆக இருந்து சிவத்தொண்டு புரிந்து சிறு கோவிலாக 12ம் நூற்றாண்டில் கட்டி வழிபட்டனர். ஆரம்பத்தில் இக்கோவில் சிவன் தொண்டீஸ்வரர் என அழைக்கப்பட்டு வழிபடப்பட்டார். தொண்டீஸ்வரர் என்ற பெயர் புராண இதிகாசங்களிலும் மற்றெங்கிலும் காணப்படாதால் இது காரணப் பெயர் எனக் கருதப்படுகிறது. பின்னாளில் இவ்இறைவன் ஆருத்ரா கபாலீஸ்வரர் என வணங்கப் பெறுகிறார் நாகேஸ்வரர் திருக்கோவில் தலையநல்லூர் சிவகிரி பொன்காளியம்மன் கோவில் தலையநல்லூர் சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சிவகிரி ஆருத்ர கபாலீஸ்வரா் கோவில் மகிமாலீஸ்வரா் திருக்கோவில் பொிய மாாியம்மன் வகையறா கோவில்கள் கொங்காலம்மன் கோவில் அரங்கநாதா் திருக்கோவில் கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் ஷீரடி சாய்பாபா திருக்கோவில், வள்ளிபுரத்தான் பாளையம் சாய்பாபா திருக்கோவில், இரயில்வே காலனி சித்தி விநாயகா் திருக்கோவில், இரயில்வே காலனி கோட்டை முனீஸ்வரன் திருக்கோவில் மாாியம்மன் திருக்கோவில், வீரப்பன்சத்திரம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், கருங்கல்பாளையம் கோதண்டராமா் கோவில், கருங்கல்பாளையம் காமாட்சி அம்மன் திருக்கோவில், கருங்கல்பாளையம் ஐயப்பன் கோவில், கருங்கல்பாளையம் சாய்பாபா திருக்கோவில், கருங்கல்பாளையம் வலம்புாி விநாயகா் திருக்கோவில், மாநகராட்சி கட்டிட வளாகம் கோட்டை அங்காளம்மன் திருக்கோவில் போக்குவரத்து ஈரோடு போக்குவரத்து ஈரோடு மாநகரின் தொழில் முயற்சிகளுக்குப் பெரிதும் துணையாக இருப்பது போக்குவரத்து; ஈரோட்டிலிருந்து சென்னை, பெங்களூரு,மைசூர் ,கொச்சி உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும், தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சாலை போக்குவரத்து உள்ளது. நேர்விரைவுப் பேருந்து சென்று வருகிறது. ஈரோடு மத்திய பேருந்து நிலையம் நகரின் முக்கியப் போக்குவரத்து மையமாக விளங்குகிறது. ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம், ஈரோடு மாநகரின் பிரதான தொடருந்து நிலையமாக விளங்குகிறது. தென் மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும், இந்தியாவின் வடக்குப் பகுதிகளோடு இணைக்கும் முக்கிய தொடருந்து சந்திப்பாக உள்ளது. இங்கிருந்து எந்த நேரமும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் தொடருந்து வசதி உள்ளது. ஈரோடு மாநகரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலை சந்திப்பாக விளங்குகிறது. பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளும், மாநில நெடுஞ்சாலைகளும் சந்திக்குமிடமாக ஈரோடு உள்ளது. சேலம், கோவை, கொச்சி, சத்தியமங்கலம், மேட்டூர், கொல்லேகல், கரூர், திருச்சி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், பழனி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள் இங்கு இணைகின்றன. ஈரோடு மாநகரின் வாகன நெரிசலை குறைப்பதற்காக (Outer Ring Road) வெளிவட்டச்சாலையானது முதல் கட்டத்தில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொக்கராயன்பேட்டையிலிருந்து திண்டல் அடுத்த நஞ்சனாபுரம் வரை 14.8 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இரண்டாவது கட்டத்தில் பவளத்தான்பாளையத்திலிருந்து நசியனூர் அல்லது சித்தோட்டை இணைத்து அதன் வழியாக பவானி சாலையை இணைக்க திட்டமிட்டுள்ளார்கள். இதன் உத்தேச நீளம் 5 கி.மீ ஆகும். இதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு மிகவும் அதிகம் என்பதால், இதற்கான அடிப்படை பணிகளுக்கான அரசு ஒப்புதல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. எனவே தற்காலிகத் தீர்வாக, தற்போது பயன்பாட்டிலிருக்கும் திண்டல்-வில்லரசம்பட்டி-பெரியசேமுர் இணைப்பு சாலையை பல்வழித்தடத்திலான உள்வட்டச்சாலையாக (Inner Ring Road) விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வானிலை மற்றும் காலநிலை பொதுவாக இங்கே பருவ மழை சீசன் போது தவிர மற்ற நாட்கள் முழுவதும் மிதமான-வறண்ட வானிலை உள்ளது. ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வசந்த காலங்களாக உள்ளன, ஆனால் மார்ச் மாதம், தொடங்கி மே இறுதி வரை கத்திரி வெயில் தொடர்வதால் அதிகபட்ச வெப்பநிலையினை எட்டுகிறது. பொதுவாக மே மாதத்தில் அதிகபட்ச வெப்பமானது பதிவு செய்யப்படுகிறது. இந்த காலத்தில் குறைந்த மழை பொழிவானது வெப்பநிலை குறைக்க முடியாமல் இருக்கிறது. சூன்-ஆகத்து காலத்தில் காலநிலை வசந்த காலநிலையாக மாறுகிறது. இந்த முன் பருவ காலத்தில், வெப்பநிலையில் அதன் போக்கு தலைகீழாகிறது. செப்டம்பர் மாதத்தில் இருண்ட வானிலை நிலவிய போதிலும் மழையளவு மிகக்குறைந்த அளவே உள்ளன. வட கிழக்கு பருவமழை மூலம் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மழை பெய்கிறது. டிசம்பர் மாதத்தில் தீவிரமடைந்து தெளிவான வானிலையை பெற்றுவிடுகிறது. இவ்வூரில் பிறந்த புகழ்பெற்ற மனிதர்கள் தந்தை பெரியார் சீனிவாச ராமானுஜம் எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரபூர்வ வலைத்தளம் தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள் ஈரோடு மாவட்டம்
3419
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
இழையம்
இழையம் (Tissue (biology)) (அல்லது திசு ) என்பது, ஒரு உயிர்ச் செயலைப் புரியும் ஒத்த பண்புகளுடைய உயிரணுக்களின் கூட்டமைப்பு ஆகும். திசுக்களைப் பற்றி ஆராயும் துறை இழையவியல் அல்லது திசுவியல் (Histology) ஆகும். நோய்களைக் கண்டறிவது தொடர்பாக இழையவியலை ஆராயும் போது அது இழையநோயியல் (Histopathology) என அழைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட இழையம் ஒரே மாதிரியான உயிரணுக்களைக் கொண்டிருப்பது அவசியமில்லை எனினும், ஒரே பிறப்பிடத்திலிருந்து பெறப்பட்ட உயிரணுக் கூட்டங்களைக் கொண்டிருக்கும். ஒரே தொழிலைச் செய்யக் கூடிய பல இழையக் கூட்டங்களைச் சேர்த்தே உறுப்பு அல்லது அங்கம் உருவாகின்றது. இழையங்களை பரஃபீன் (Paraffin) எனப்படும் மெழுகுக்கட்டிகளில் பதித்து, பின்னர் மெல்லிய படலமாக வெட்டியெடுத்து (Sectioning), இலகுவாகப் பார்ப்பதற்கு ஏற்றவகையில் அவற்றை இழையச்சாயங்கள் கொண்டு சாயமேற்றி (Staining), பின்னர் நுண்நோக்கிகள் மூலம் பார்த்து ஆராயும் முறை காலங்காலமாகப் பயன்பட்டு வருகின்றன. அண்மைய தொழில்நுட்ப முன்னேற்றங்களான இலத்திரன் நுண்நோக்கி (Electron Microscope), நோய்த்தடுப்பாற்றல் உடனொளிர்வு (Immunoflorescence), உறைநிலையில் திசுக்களைப் படலமாக வெட்டியெடுத்தல் (frozen tissue sectioning) போன்றன திசுவியல் ஆராய்ச்சிகளை வேகப்படுத்தவும் எளிமைப்படுத்தவும் உதவியுள்ளன. இக்கருவிகளையும் நுட்பங்களையும் கொண்டு, இழையங்களைத் தாக்க வல்ல நோய்களைக் கண்டறியவும், முன் கூட்டியே கணிக்கவும் இயலும். விலங்கு இழைய வகைகள் விலங்குகளில் நான்கு அடிப்படைத் இழைய வகைகள் உள்ளன. இவற்றில் வெவ்வேறு இழைய வகைகள் இணைந்து உறுப்புகளையும், பின்னர் உறுப்புக்கள் இணைந்து உடலையும் உருவாக்கும். புறவணியிழையம் உட்புற மற்றும் வெளிப்புற உடற்பாகங்களை மூடும் புறச்சவ்வு புறவணியிழையத்தால் (Epithelial tissue) ஆனது. இவ்வகை இழையமானது புறச் சூழலுடன் தொடர்புடைய அனைத்து உள், வெளி உறுப்புக்களையும் மூடி இருக்கும். உடல் உறுப்புக்கள் உடலின் மேற்பரப்பை மூடியுள்ள தோல், சமிபாட்டுத் தொகுதி, சுவாசத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி போன்றவற்றை மூடியுள்ள மேற்பரப்பு போன்றவை இவ்வகை இழையங்களால் ஆனது. இந்த இழையங்கள் உடல் உறுப்புக்களுக்கு பாதுகாப்பளித்தல், உடலிற்குத் தேவையான சில சுரப்புக்களைச் சுரத்தல், சமிபாடடைந்த உணவை அகத்துறிஞ்சல் போன்ற செயல்களைச் செய்யும். அத்துடன் இந்த இழையங்கள் ஏனைய இழையங்களிலிருந்து ஒரு அடிமென்சவ்வினால் (basal membrane) பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த இழையமானது உடலை நுண்ணுயிர்களின் தாக்கம், காயம் ஏற்படுதல், உடலிலிருந்து திரவ இழப்பு நேர்தல் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கும். இணைப்பிழையம் இணைப்பிழையம் (Connective tissue) அல்லது தொடுப்பிழையம் என்பது உடற்பாகங்களை அல்லது வேறுபட்ட இழையங்களை இணைப்பவையாக, அவற்றிற்கு ஆதரவளிப்பவையாக அல்லது அவற்றைப் பிரித்து வைப்பவையாக இருக்கும் இழையமாகும். குருதி, எலும்பு, கொழுப்பிழையம் போன்றன இவ்வகை இழையங்களாகும். எலும்பானது உடல் உறுப்புகளுக்கு அமைப்பைக் கொடுப்பதுடன் உறுப்புக்களை இணைத்து வைத்திருக்கவும் உதவும். குருதி உடல் உயிரணுக்களுக்குத் தேவையான ஆக்சிசன், உணவு, சுரப்புக்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும், கழிவுகளை அகற்றவும் உதவும். தசை இழையம் தசை இழையம் அல்லது தசையிழையம் எனப்படும் இழையங்கள் சுருங்கி விரியும் இயல்புள்ள இழையங்களாகும். இவை உடலசைவு, உள்ளுறுப்புக்களின் அசைவுக்கு உதவும். இவை மூன்று வகைப்படும். மழமழப்பானதசை அல்லது அழுத்தமான தசை (Smooth muscle): இவை உறுப்புக்களின் உள் படையாகக் காணப்படும். எலும்புத் தசை (Skeletal muscle): இவை எலும்புகளுடன் தொடர்புடையவையாக இருந்து அசைவுக்கு உதவும். இதயத் தசை (Cardiac muscle): இது இதயத்தில் காணப்படும். இதயம் சுருங்கி விரிய உதவுவதால் குருதியை உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்புவதில் பங்கெடுக்கும். நரம்பிழையம் நரம்புத் தொகுதி யை உருவாக்கும் இழையம் நரம்பிழையம் எனப்படும். இவ்வகைக் இழையங்கள் மூளை, தண்டு வடம் போன்ற மைய நரம்பு மண்டலம்தையும், புற நரம்பு மண்டலத்தையும் உருவாக்கும் இழையங்கள் ஆகும். நரம்பிணைப்பு மூலமான நரம்புத் தொடர்புகளில் இவ்வகை இழையங்கள் தொழிற்படும். தாவர இழைய வகைகள் தாவர இழையங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். புறத்தோல் அல்லது மேற்றோல் (Epidermis): இலைகளினதும், இளம் தாவரத்தினதும் வெளி மேற்பரப்பை ஆக்கும் கலங்களால் ஆன இழையமாகும். கலனிழையம் (Vascular tissue): முக்கியமாக இரு இழைய வகைகளைக் கொண்டிருக்கும். அவை காழ், உரியம் என்பனவாகும். இவை ஊட்டச்சத்து, திரவங்களைத் தாவரத்தின் உள்ளாகக் கடத்தும் இழையங்களாகும். அடியிழையம் (Ground tissue): இவ்வகை இழையமே மிகவும் குறைவாக வேறுபாட்டுக்கு உட்பட்டதாக இருக்கும். இவ்விழையம் ஒளிச்சேர்க்கையில் உணவைத் தயாரிக்கும் இடமாகவும், அவற்றைச் சேமித்து வைக்கும் இடமாகவும் இருக்கும். தாவர இழையங்கள் வேறொரு வகையிலும் பிரிக்கப்படும். பிரியிழையம் (Meristematic tissue) இவை தொடர்ந்து உயிரணுப்பிரிவு (Cell division), உயிரணு வேற்றுமைப்பாடு (cell differentiation) நடைபெறும் இயக்கத்திலுள்ள கலங்களைக் கொண்டிருக்கும். பொதுவாகத் தண்டு நுனி, வேர் நுனி, மற்றும் காழ், உரியக் கலங்களை உருவாக்கவல்ல தண்டின் உள்பகுதியில் காணப்படும் மாறிழையம் (Cambium) போன்றவை இவ்வகைப் பிரியிழையமாகும். இவை பிரிவுக்குட்பட்டு புதிய கலங்களை உருவாக்கும்போது அவை ஆரம்பத்தில் பிரியிழையக் கலங்களாக இருக்கும். பின்னர் அவை வேறுபாட்டுக்குட்பட்டு, வெவ்வேறு இழையங்களை உருவாக்கும். இவ்வகை இழையத்திலுள்ள கலங்கள் செலுலோசினால் ஆன மெல்லிய கலச்சுவரைக் கொண்டிருக்கும். வெவ்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு பிரியிழையங்கள், அமைப்பில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு முட்டை வடிவம், பல்கோண வடிவம், நாற்கோண வடிவமென வேறுபடும். ஆனால், ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள ஒரு இழையத்தின் கலங்கள் ஒரே அமைப்பைக் கொண்டிருக்கும். கலங்கள் அடர்த்தியான குழியவுருவையும், பெரிய கருவையும் மிகச் சிறிய அளவில் புன்வெற்றிடங்களையும் கொண்டிருக்கும். அத்துடன் கலங்கள் மிக நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி காணப்படுவதுடன், கலங்களுக்கிடையே இடைவெளியும் இருப்பதில்லை. இவ்வகை இழையம் மூன்று பிடிவுகளில் வருகின்றது. நுனிப்பிரியிழையம்: தண்டு, வேர் என்பவற்றின் வளரும் நுனிப்பகுதியில் காணப்படும். இதன் தொடர்ச்சியான பிரிவினால், தண்டு, வேர்ப்பகுதிகள் நீட்சியுற்று தாவர வளர்ச்சியில் உதவும். இது முதன்மையான வளர்ச்சி என்றும் நேர்வளர்ச்சி என்றும் அழைக்கப்படும். பக்கப்பிரியிழையம்: இவ்வகை இழையத்திலுள்ள கலங்கள் ஒரு தளத்திலேயே பிரிவைக் கொண்டிருப்பதனால், இதனால் உண்டாகும் வளர்ச்சி பக்க வளர்ச்சியாக இருக்கும். இதனால் தண்டு, வேர் போன்ற அங்கங்களின் விட்டம் அதிகரிக்கும். மரங்களின் வெளிப்பட்டைக்கு கீழாக இருக்கும் தக்கை மாறிழையம் (cork cambium), இருவித்திலைத் தாவரங்களின் கலனிழையத்தில் இருக்கும் கலனிழைய மாறிழையம் என்பன இவ்வகை இழையங்களாகும். இடைப்பிரியிழையம்: இவை நிரந்தர இழையங்களுக்கு இடையில் காணப்படும். கணுக்களின் அடிப்பகுதி, கணுக்களுக்கு இடையிலான பகுதிகள், இலையின் அடிப்பகுதி போன்ற இடங்களில் இவ்வகை இழையம் காணப்படும். தண்டுகளின் பக்க வளர்ச்சியிலும், தாவரங்களின் சில பகுதிகளில் நீட்சிக்கும் உதவும். நிலை இழையம்(Permanant tissue) பிரியிழையத்திலிருந்து உருவாகும் கலக்கூட்டம் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்ய ஆரம்பிக்கும்போது, அவை தமது தொடர்ந்து பிரியும் தன்மையை இழந்து நிலை இழையமாகின்றது. கலங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு, உருவம், தொழில் என்பவற்றை அடையும் செயல்முறையே கலவேறுபாடு (cell differentiation) எனப்படுகின்றது. இந்த நிலை இழையம் மேலும் பல வகையாகப் பிரிக்கப்படும். எளிமையான நிலை இழையம் புடைக்கலவிழையம் (Parenchyma) பச்சையவிழையம் (Chlorenchyma) காற்றுக்கலவிழையம் (Arenchyma) ஒட்டுக்கலவிழையம் (Cloeenchyma) வல்லருகுக்கலவிழையம் (Sclerenchyma) மேற்றோல் அல்லது புறத்தோல் (Epidermis) புடைக்கலவிழையம் இது செலுலோசினால் ஆன மிக மெல்லிய கலச்சுவர் கொண்ட கலங்களாலானது. கலங்களுக்கிடையே கல இடைவெளியையும் கொண்டிருக்கும். இவ்விழையத்திலிருக்கும் கலங்கள் கிட்டத்தட்ட ஒரே அளவானதாகவும், வடிவத்தில் கோள வடிவ அல்லது முட்டை வடிவ அமைப்பையும் கொண்டிருக்கும். இது தாவரங்களின் பல பகுதிகளிலும் காணப்படும். வேர், தண்டு, இலை, பூ, பழம் ஆகிய எல்லா அங்கங்களிலும் காணப்படும். பொதுவாக மேற்றோல் அல்லது தக்கைப் பகுதியிலும், இலைகளில் இலைநடுவிழையத்திலும் காணப்படும். இவ்விழையத்தின் முக்கிய தொழில், மாப்பொருள், கொழுப்பு, புரதம் போன்ற உணவுப் பொருட்களைச் சிதைமாற்றம் எனப்படும் வளர்சிதைமாற்றத்துக்கு உட்படுத்தி சேமித்தல் ஆகும். அத்துடன் கழிவுப் பொருட்களான பசை, பிசின், சில கனிமப் பொருட்களையும் சேமிக்கின்றது. பச்சையவிழையம் இவ்விழையத்தின் கலங்கள் பச்சைய நிறமியையுடைய பச்சையவுருமணிகளைக் கொண்ட கலங்களால் ஆனது. இவை பொதுவாகப் பச்சை இலைகளின் மென்மையான இழையத்திலும், செடிகளில் ஒளித்தொகுப்புச் செய்யக்கூடிய தண்டின் மேற்பட்டைப் பகுதியிலும் காணப்படும். காற்றுக்கலவிழையம் இவை ஒருவகை புடைக்கலவிழையமே ஆகும். நீர்த் தாவரங்களில், இவ்விழையத்திலுள்ள கல இடைவெளிகள் பெரிதாக அமைந்து காற்றுக் குழிகளை உருவாக்குவதால், அந்தத் தாவரங்கள் மிதக்கும் தன்மையுடையவையாக இருக்க முடிகின்றது. ஒட்டுக்கலவிழையம் இவையும் செலுலோசாலான மெல்லிய கலச்சுவரைக் கொண்டிருப்பினும், பல கலங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளிகளான கலத்தின் மூலைப் பகுதிகளில் செலுலோசு, பெக்டின் போன்ற பொருட்களால் கலச்சுவர் தடிப்படைந்து காணப்படும். இங்கே கலங்கள் கல இடைவெளிகளின்றி மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டு இருக்கும். இவை பொதுவாகத் தண்டுகள், இலைகளில், தோலுக்குக் கீழான இழையமாகக் காணப்படும். இவை ஒரு வித்திலைத் தாவரத்திலோ, வேர்களிலோ காணப்படுவதில்லை. இளம் தாவரத் தண்டுகளில் ஒரு ஆதாரம் வழங்கும் இழையமாகத் தொழிற்படும். இவை தாவர உடல்களில் இழுவிசை, மீள்திறன் போன்ற இயல்புகள் உருவாகக் காரணமாகும். இலைகளின் கரைப்பகுதிகளில் அமைந்திருந்து, காற்றில் அவை கிழிந்து போகாமல் பாதுகாக்கும். அத்துடன் எளிய காபோவைதரேட்டு பதார்த்தங்களை உருவாக்குவதிலும், மாப்பொருளைச் சேமிப்பதிலும் இவ்விழையம் பங்கு கொள்ளும். வல்லருகுக்கலவிழையம் இவ்விழையம் தடித்த கலச்சுவரைக் கொண்ட இறந்த கலங்களாலானது. இக்கலங்கள் லிக்னின் என்னும் பதார்த்தத்தால் ஆன தடித்த, இறுக்கமான துணைக் கலச்சுவரைக் கொண்டுள்ளன. இந்த லிக்னின் படிவானது மிகவும் தடிப்பாக இருப்பதனால், இக்கலங்கள் வளையாத, உறுதியான, நீரை உட்புகவிடாத இயல்புகளைக் கொண்டிருக்கும். கல இடைவெளியற்று, மிக நெருக்கமாக அடுக்கப்பட்ட கலங்கள் பல்கோண வடிவத்தைக் கொண்டிருக்கும். இவ்விழையம் முக்கியமாகக் கீழ்த்தோல், பரிவட்டவுறை, துணைக் காழ், துணை உரியம் போன்ற இடங்களில் காணப்படும். இவ்விழையத்தின் முக்கியமான தொழில் தாவரத்துக்கு உறுதியைக் கொடுப்பதனால், அவற்றிற்கான ஆதாரத்தை வழங்குவதாகும். இவ்விழையத்தின் கலங்களை இரு வகைப்படுத்தலாம். நார் (fibres): இவை நீளமாகவும், கூர்மையான கல முடிவுகளையுடைய நீட்சியடைந்த கலங்களைக் கொண்டுமிருக்கும். வன்கலங்கள் (sclerids): இவை லிக்னின் ஏற்றப்பட்ட மிகத் தடித்த கலச்சுவர் கொண்ட, குறுகிய கலங்களாகும். மேற்றோல் தாவரத்தின் எல்லாப் பகுதிகளையும் மூடியிருக்கும் தனிப் படலத்தால் ஆன கலங்களைக் கொண்டதே இந்த மேற்றோல் ஆகும். இவை பொதுவாகத் தட்டையான கலங்களால் ஆனது. கலங்களின் மேற்சுவரும், பக்கச் சுவர்களும், உட்சுவரை விடத் தடிப்பமானதாக இருக்கும். இங்கே கலங்கள் கல இடைவெளியற்று, ஒரு தொடர்ந்த விரிப்பாக அடுக்கப்பட்டும் தாவரத்தை மூடி இருந்து பாதுகாப்பளிக்கும். சிக்கலான நிரந்தர இழையம் ஒரே கல உற்பத்தியைக் கொண்ட, ஒன்றுக்கு மேற்பட்ட இழையக் கூட்டங்கள் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்வதற்காக ஒன்றாக இணைந்து தொழிற்படுமாயின் அவை சிக்கலான இழையம் எனப்படும். கலனிழையங்களான காழ், உரியம் இவ்வகை இழையங்களாகும். மாறிழையத்தில் உள்ள பெற்றோர்க் கலங்கள் இவ்வகையான காழ் உரிய இழையங்களை உருவாக்கும். இவை நீர், கனிமம். ஊட்டச்சத்துக்கள், மற்றும் கரிமப் பதார்த்தங்களைத் தாவரத்தினுள் கடத்துவதில் பங்கெடுக்கும். காழ் கலன்றாவரங்களில் நீர், கனிமங்களைக் கடத்தும் முக்கிய இழையமாகக் காழ் இருக்கிறது. தாவரத்தின் தண்டு, வேர்களின் நடு அச்சைச் சுற்றி, குழாய் போன்ற அமைப்புக்களை இந்த இழையம் ஏற்படுத்தி இருக்கும். அக்குழாய்களின் ஊடாக நீர், கனிமம்மேல் நோக்கிக் கடத்தப்படும். உரியம் தாவரத்தால் உற்பத்தியாக்கப்படும் உணவுப் பொருட்களைக் கரைந்த நிலையில் தாவரத்தில், தேவைக்கேற்ப மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ, எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் இந்த உரிய இழையம் உதவும். மேற்கோள்கள் உடற்கூற்றியல் இழையவியல்
3432
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் (Pudukkottai district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் புதுக்கோட்டை ஆகும். சனவரி 14, 1974-இல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை (புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் எல்லைகள் புதுகை மாவட்டத்தின் எல்லைகள் வடக்கு மற்றும் வடமேற்கே திருச்சி மாவட்டமும், தெற்கு மற்றும் தென்மேற்கே சிவகங்கை மாவட்டமும், தென்கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், பாக் நீரிணையான (வங்காள விரிகுடா கடலும்), கிழக்கு மற்றும் தென்கிழக்கே தஞ்சாவூர் மாவட்டமும் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளது. மாவட்டத்தின் அமைப்பு புதுகை மாவட்டம் கிழக்கு நிலைக்கோட்டில் 78° 25' மற்றும் 79° 15'க்கு இடையேயும் வடக்கு நேர்க்கோட்டில் 9° 50' மற்றும் 10° 40'க்கு இடையேயும் அமைந்துள்ளது. புதுகை ஏறக்குறைய ஒரு கடற்கரை மாவட்டமாகும். கடற்கரையின் நீளம் 42 கிலோமீட்டர் ஆகும். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதி கீழ் கடற்கரைப் பகுதியைக் காட்டிலும் கடல் மட்டத்திலிருந்து சரிவாக 600 அடி உயரத்தில் உள்ளது நிலப்பரப்பு ஏறத்தாழ சமமானதாகும். மேலும் பொன்னமராவதி பகுதி மட்டும் சிறிது ஏற்றயிறக்கம் கொண்ட பகுதியாக இருக்கும். முக்கிய அமைவிடங்கள் மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் தென்கிழக்கு பகுதியான மீமிசல் என்ற ஊரின் பாக் நீரிணை கடற்கரையில் இருந்து 30 கி.மீ தொலைவில் இலங்கை நாட்டையும் அதன் வடக்கு மாகாண பெரும் நகரமான யாழ்ப்பாணத்தையும் கடல் வழியில் அடையாளம். மேலும் இந்த மீமிசல் கடற்கரையானது புதுக்கோட்டைக்கும் அதன் அருகில் உள்ள திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை போன்ற தமிழ்நாட்டின் நடுமையமான பெரும் நகரங்களுக்கும் கடற்கரை பகுதியாகவும், கடல் வழி போக்குவரத்திற்கான பகுதியாகவும் உள்ளது. இம்மாவட்டத்தில் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள நார்த்தாமலை குன்றுகள் மற்றும் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள பிரான்மலை தவிர்த்து பெரிய மலைகள் ஏதும் இம்மாவட்டத்தில் இல்லை. இம்மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் மட்டும் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன்வழியாக விவசாயம் செய்யப்படுகின்றது. மேலும் பலாப்பழம் உற்பத்தியில் அந்த பகுதியே மிகவும் சிறந்ததாக உள்ளது. குறிப்பாக வடகாடு, மாங்காடு, அனவயல், கொத்தமங்கலம், செரியலூர் ஊராட்சி, கீரமங்கலம், நெடுவாசல் கிழக்கு ஊராட்சி, புள்ளான்விடுதி குளமங்கலம் போன்ற பகுதிகளாகும். வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன. இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு. 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது. "மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271) "மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44) "கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம். "சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலகட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலகட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன. தமிழி கல்வெட்டு பிராமி (தமிழி) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது. "எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்" என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில் (அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது). சமணமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன. தொல் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுக் குறிப்புகள் செறிந்து காணப்படும் புதுக்கோட்டையின் பன்முக பாரம்பரியத்தை புரிந்து கொள்ள, புதுக்கோட்டையின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது. புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதத்தக்கது. புதுக்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொல் மனிதக் குடியிருப்புகளின் எச்சங்களும் தென்னிந்தியாவில் காணக்கிடைக்கும் மிகப்பழமையான கல்வெட்டுக்களில் சிலவும் காணக்கிடைக்கின்றன. பாண்டியர்கள், சோழர்கள், முத்தரையர்கள், பல்லவர்கள், விஜய நகர ஆட்சியாளர்கள், மதுரை நாயக்கர்கள் மற்றும் ஹொய்சாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர். அவர்கள், புதுக்கோட்டையின் வர்த்தக, சமூக அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவியதோடு, தனிச்சிறப்பு வாய்ந்த பல கோயில்களையும் நினைவுச்சின்னங்களையும் அங்கு கட்டினர். சங்ககாலம் சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குரியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும். "தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமிழ் பன்னிரு நாடென்" என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்கு தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியது. இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71-ஆவது பாடலில் கூறப்படுகிறது. அகநானூற்றில் 25-ஆவது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள். புறநானூறு 246, 247-ஆவது பாடல் இவள் பாடியதாகும். சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சங்க இலக்கியத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒலியமங்கலம் (திருமயம் வட்டம்), ஒல்லையூர் என்று புறநானூற்றில் குறிப்படப்பட்டுள்ளது. ஒலியமங்கலம், சங்கக் கவிஞர் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான் மற்றும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆகியோரின் பிறந்த இடமாக விளங்கியுள்ளது. அகநானூற்றிலும் ஒல்லையூர் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஒல்லையூர் முக்கியமான நகரமாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இன்னும் 4 ஊர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. அவையாவன: அகநானூறில் குறிப்பிடப்பட்டுள்ள அம்புக்கோவில் (பண்டைய அலும்பில்); ஆவூர்கிழார், ஆவூர் முலம்கிழார் ஆகிய புலவர்களின் ஊரான ஆவூர்; எரிச்சி (பண்டைய எரிச்சலூர்) - புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் உள்ள எரிச்சி கிராமம் (எனினும், அண்மைய ஆய்வுகளின்படி இவ்வூர் இலுப்பூர் அருகே இருப்பதாக கருதப்படுகிறது.) இவ்வூர் மடலன் மதுரைக் குமரனார் என்ற புலவரின் ஊராக இருக்கக்கூடும்; ஔவையாருடன் தொடர்புப்படுத்தி பார்க்கத்தக்க அவயப்பட்டியில் ஔவையார் சிறிது காலம் வாழ்ந்திருக்ககூடும்; பொன்னமராவதி அருகே உள்ள பரம்பு மலையில் (தற்பொழுது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது) கடையேழு வள்ளல்களில் முதலாமவரான பாரியின் நிலமாகும். கபிலர், பாரியின் கீழ் அமைச்சராகப் பணியாற்றியவர். இங்கு, செந்தமிழ் கல்லூரி என்ற தமிழ் மொழிக்கான கல்லூரி ஒன்று அமைந்திருக்கிறது. இம்மாவட்டம் சங்க காலத்தில் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்தாலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய சில பகுதிகள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. சில ஊர்களின் பெயர்களின் தொடக்கத்தில் காணப்படும் கிள்ளி, வளவன் ஆகிய சோழர்களின் பட்டங்களைக் கொண்டு இதனை அறியலாம். புதுக்கோட்டையில் ரோமாபுரி திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது.(செலாவணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்) இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம், நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை பாதுகாக்கப்பட்டு சென்னை,புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன. களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590) பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது. முதல் பாண்டியப் பேரரசு புதுக்கோட்டை பகுதி பாண்டியன் கடுங்கோனின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் ரணதீரன்(கி.பி 710 - 740), மாறன் சடையன்(கி.பி 765 - 815), ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன்(இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), வரகுணவர்மன்(கி.பி 862 - 880) வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது. பல்லவர் புதுக்கோட்டைப் பகுதியில் கி.பி 8-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின்(கி.பி 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும். தந்திவர்மன் (கி.பி 775 - 826), நிருபதுங்கவர்மன் (கி.பி 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. முத்தரையர் தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன. முற்காலத்தில் பெருநிலக்கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். புதுக்கோட்டை தொண்டைமான்கள் இராமநாதபுர மன்னர் இரகுநாத கிழவன் என்ற கிழவன் சேதுபதி, இரகுநாதராயத் தொண்டைமானின் தங்கையை மணந்துகொண்டதால், புதுக்கோட்டைப் பகுதியை, இரகுநாதராயத் தொண்டைமான் தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யுமாறு செய்தார். மன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் இங்கு ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் புதுக்கோட்டை என்ற பெயர் வழங்கப்பட்டது. இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து விஜயரகுநாதத் தொண்டைமான் (1730-1769). இராய ரகுநாதத் தொண்டைமான் (1769-1789), விஜயரகுநாதத் தொண்டைமான் (1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர். கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் திருச்சியைச் சந்தா சாகிப்பும், பிரெஞ்சுக்காரர்களும் முற்றுகையிட்ட பொழுதும், ஆங்கிலேயர்கள் ஐதர் அலியுடன் போர்புரிந்தபொழுதும் புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உதவியாக இருந்தார். பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு (1799), அங்கிருந்து தப்பிவந்த வீரபாண்டிய கட்ட பொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானின் படைகள் உதவின. பின்னர் மன்னரான விஜயரகுநாதராயத் தொண்டைமான் (1807-1825), தமது 10-ஆவது வயதில் ஆட்சிக்கு வந்ததால் இவருக்கு பிளாக்பர்ன் என்ற ஆங்கில அரசியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். விஜயரகுநாதராயத் தொண்டைமானை அடுத்து இரகுநாதத் தொண்டைமானும் (1825-1839), இராமச்சந்திரத் தொண்டைமானும் (1839-1886) புதுக்கோட்டையின் மன்னராக வந்தனர். இராமச்சந்திரத் தொண்டைமான் சிறுவயதினராய் இருந்ததால் புதுக்கோட்டை நகரின் நிர்வாகத்தை சேஷய்ய சாஸ்திரி என்ற திவான் கவனித்தார். இராமச்சந்திரத் தொண்டைமான் அடுத்து மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் புதுக்கோட்டையின் மன்னரானார் (1886). 1912-ஆம் வருடம் புதுக்கோட்டை நகரத்தில் நகராட்சி மன்றம் நிறுவப்பட்டது. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது. புதுக்கோட்டைப் பகுதிகள், திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுச் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக ஆயிற்று. புதுக்கோட்டையின் கடைசி மன்னராக இருந்தவர் இராஜ இராஜ கோபாலத் தொண்டைமான் ஆவார். மக்கள்தொகை பரம்பல் 4,644 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 16,18,345 ஆகும். அதில் ஆண்கள் 803,188 ஆகவும்; பெண்கள் 815,157 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 10.88% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1015 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 960 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 348 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 77.19% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,79,688 ஆகவுள்ளனர். இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 14,28,784 (88.29%), கிறித்தவர்கள் 72,850 (4.50%), இசுலாமியர்கள் 1,14,194 (7.06%) ஆகவும் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் வருவாய் நிர்வாகம் இம்மாவட்டம் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் என மூன்று வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 45 உள்வட்டங்களும், 763 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் இம்மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களையும் , 497 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. மேலும் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி என இரண்டு நகராட்சிகளையும் மற்றும் 8 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. காலநிலை புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 41.2° C மற்றும் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 23.1° C ஆகும். ஆண்டிற்கு சராசரியாக 887.4 மி. மீ. மழைப்பொழிவை இம்மாவட்டம் பெறுகிறது. வேளாண்மை புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்மையாகப் பயிர் செய்யப்படும் பயிர்கள் அரிசி, சோளம், மக்காச்சோளம், உளுந்து, எள், வேர்க்கடலை, தென்னை, கரும்பு, மா, வாழை மற்றும் முந்திரி ஆகியவை ஆகும். கல்வி 2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரம் பின்வருமாறு[2] மேலும் இங்கு சிறப்பாக செயல்படகூடிய மகளிர் கல்லுரிகளும் அமைந்துள்ளது.அரசு மகளிர் கலை கல்லூரி புதுக்கோட்டை. பாரதி மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை. நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரி, ராஜேந்திரபுரம். அரசியல் இம்மாவட்டம் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் கரூர், திருச்சி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டவை. உணவு முட்டை மாஸ் மற்றும் முட்டை லாப்பா புரோட்டா எனும் உணவு புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த பிரபலமான உணவு ஆகும். சுற்றுலாத் தலங்கள் புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலயம் குடுமியான்மலை சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் கொடும்பாளூர் ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கோகர்ணேஸ்வரர் கோயில் ஆவூர் விராலிமலை முருகன் கோயில் திருமயம் பொன்னமராவதி திருவரங்குளம் பொற்பனைக்கோட்டை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் இணையத்தளம் தமிழ்நாடு மாவட்டங்கள்
3446
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D
மே நாள்
மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலக அளவில் கொண்டாடப்படுவதாகும். மே தின வரலாறு தொழிலாளர் போராட்டம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும். பிரான்சில் தொழிலாளர் இயக்கம் 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது. ரஷ்யாவில் மே தினம் சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். சிக்காகோ பேரெழுச்சி மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கறுப்பு தினம் நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் மே தினம் 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது. இந்தியாவில் மே தினம் இந்தியாவில் சென்னை மாநகரில் 1923-ஆம் ஆண்டில் மெரீனா கடற்கரை மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில், இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவான்மியூர் கூட்டத்தில், சுப்பிரமணிய சிவா மற்றும் எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையில் இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது. மே தினச் நினைவுச் சின்னங்கள் fearless girl statue,america அமெரிக்க ஐக்கிய நாடுகள் spirit of solidarity statue, america அமெரிக்க ஐக்கிய நாடுகள் haymarket tragety statue, amarica அமெரிக்க ஐக்கிய நாடுகள் உசாத்துணை மே தினம் நூற்றண்டு வரலாறு, சோவியத் வெளியீடு, மாஸ்கோ, 1990 - சாசன இயக்கம், உலகின் முதல் தொழிலாளர் இயக்கம், என். ராமகிருஷ்ணன். சென்னை தொழிலாளர் சங்கம், 60வது ஆண்டு மலர். வெளி இணைப்புகள் Annual listing of May Day events around the world May Day classroom resources May Day in Cuba, a Retrospective Photos by Bill Hackwell, Havana Times Apr 27 2009 Pretanic World Holiday Traditions from England, Scotland, Wales and Ireland that may pre-date the Christian Era "Children Maypole Dancing - Archive Footage" English Heathenism - Roots of May Day in English heathenism. May Day history at The Holiday Spot Mayday in Berlin The history of May Day - Radio France Internationale in English Round-up of 2009 May Day marches - Radio France Internationale in English Website with information on modern Hawaiian Lei Day celebration with information on the lei as a traditional Hawaiian cultural art Website on modern Lei Day and May Day celebrations in Hawai`i ‘Fearless Girl’ Statue to Stay in Financial District (for Now) ‘ The Haymarket Square Riot and Aftermath The Spirit of Solidarity, which was dedicated in 2007 Emma Miller – Mother of the Australian Labor Party Triumph of Labour Physical Labour Stock Photos and Images தொழிலாளர் உரிமைகள் மே நாள் சர்வதேச தொழிலாளர் தினம் மே சிறப்பு நாட்கள் பொதுவுடைமை
3451
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
மீயொலி நோட்டம்
புறவொலி அலகீடு (இலங்கை வழக்கு: கழியொலி) அல்லது மீயொலி அலகீடு (Ultra Sound Scan) என்பது எர்ட்சு முதல் எர்ட்சு அலைவெண்ணுக்கு மேற்பட்ட புறவொலிகளைப் பயன்படுத்தி உடலின் உட்பகுதிகளை படிம மாக்கும் கருவியாகும். மருத்துவ புறவொலி வரைவியல் (Medical ultrasound) (அல்லது நோய்நாடல் புறவொலி வரைவியல் (diagnostic sonography) அல்லது எளிமையாக, புறவொலி வரைவியல்) என்பது புறவொலி அல்லது கேளா ஒலியைப் பயன்படுத்திச் செய்யும் மருத்துவப் படிமவியல் நுட்பமாகும், இது உடலகக் கட்டமைப்புகளாகிய தசைநாண்கள், தசைகள், மூட்டிகள், குருதிக்குழல்கள், பிற உள்ளுறுப்புகளைப் படிம ம்க்க உதவுகிறது. இதன் நோக்கம் நோயறிதலும் அதை நீக்கலும் ஆகும். கருதரித்த பெண்களின் கருவைப் புறவொலியால் ஆயும் நடைமுறை கருத்தரிப்புப் புறவொலி வரைவியல் எனப்படுகிறது. இம்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது.கருத்தரிப்புப் புறவொலி வரைவியல் எனப்படுகிறது. இம்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது. புறவொலிகள் அல்லது கேளா ஒலிகள் என்பவை 20,000 அலைவெண்ணுக்கும் மேலான அலைவெண்கள் வாய்ந்த ஒலி அலைகளாகும். ஒலிவரைகள் எனப்படும் புறவொலிப் படிமங்கள் புறவொலித் துடிப்புகளைப் புறவொலி ஆய்கோல்களைப் பயன்படுத்தி இழையங்களுக்குள் அனுப்ப்ப்படுகின்றன. இழையங்கள் தம் தன்மையைச் சார்ந்து இந்த புறவொலியைப் பல்வேறு அளவுகளில் எதிரொலிக்கின்றன. இந்த எதிரொலிகளை ஆய்கோல்கள் பதிவுசெய்து கணினிக் காட்சித்திரையில் படிமங்களாகக் காட்டுகிறது. இந்த ஒலிவரைவுக் கருவிகளால் பலவகைப் படிமங்களை உருவாக்கலாம், இவற்றில் மிகவும் பரவலாக எடுக்கப்படும் படிமம் பி-முறைமைப் படிமம் (B-mode image ) ஆகும். இது இழையத்தின் இருபருமான வெட்டுமுகத்தின் ஒலியியல் மறிப்பைக் (acoustic impedance) காட்டுகிறது. பிறவகைப் படிமம், குருதிப் பாய்வையோ நேரஞ்சார்ந்த இழைய இயக்கத்தையோ குருதிபடிந்த இடத்தையோ குறிப்பிட்ட மூலக்கூறுகள் உள்ளமையையோ இழைய விறைப்பையோ உறுப்பு அல்லது உடற்பகுதியின் முப்பருமான உடற்கூற்றியலையோ காட்டும். இம்முறை மற்ற மருத்துவப் படிம முறைகளைவிட பல மேம்படுகளைக் கொண்டுள்ளது. இது நடப்பு நேரப் படிமங்களைத் தருகிறது; இதை எங்கும் கொண்டு செல்லலாம். ஒப்பீட்டளவில் குறைவான செலவுடையது. இது தீங்குதரும் மின்னணுவாக்க்க் கதிர்வீச்சுகளைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் இதற்கு நோயாளிகள் ஒத்துழைப்பு தேவைப்படும்; இதன் காட்சிப்புல வரம்பு குறுகியதாகும்; காற்று, எலும்புக்குப் பின்னுள்ள கட்டமைப்புகளைக் காண முடியாது; இதற்குப் பயிற்சி பெற்ற திறமை வாய்ந்த மருத்துவர்கள் அல்லது தொழில்நுட்பர்கள் தேவைப்படுகின்றனர். உறுப்பு அல்லது அமைப்பு ஆய்வு ஒலிவரைவியல் (புறவொலி வரைவியல்) மருத்த்வத்தில் பரவலாகப் பயன்படுகிறது. புறவொலியின் வழிகாட்டலைக் கொன்டு நோய்நாடலும் மருத்துவ இடையீட்டுச் செயல்முறைகளையும் உயிர்நுள் பிரிப்பு, தேங்கிய பாய்ம வடிப்பு போன்ற இடையீடு வழிமுறைகளையும் மேற்கொள்ளலாம். புறவொலி வரவாளர்கள் ம்ருத்துவ வல்லுனர்கள் ஆவர். இவர்கள் அலகீட்டைச் செய்து அலகீட்டுப் படிமங்களைத் தாமே விளக்குகின்றனர். இப்படிமங்களைக் கதிரியலாளர் அல்லது மருத்துவப் படிமவியலில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களோ அல்லது இதயவியலாளரோ (எதிரொலி இதயவரைவுப் படிமங்களை) விளக்குவர்ரொலிவரைவியலாளர்கள் வழக்கமாக ஆற்றல்மாற்றி (transducer) எனப்படும் ஆய்கோலை நோயாளி மீது வைத்து அலகீடு செய்வர். மேலும் கூடுதலாக மருத்துவமனையாளரும் உடல்நலத் தொழில் வல்லுனர்களும் புறவொலி வரைவியல் முறையைதங்கள் மருத்துவகங்களிலும் அலுவலகங்களிலும் பயன்படுத்துகின்றனர். உடலின் மென்னிழையங்களுக்கு ஒலிவரைவியல் ஏற்றதாகும். 7 முதல் 16 மெகாஎர்ட்சுகள் வரையிலான உயர் அலைவெண்களில் தசைகள், தசைநாண்கள், விரைகள், மார்பகங்கள், கேடய, இணைகேடயச் சுரப்புகள், புதுக்குழவியின் மூளை ஆகிய மேலீடான உடல் உறுப்புகளை புறவொலியால் அலகிடலாம்; உயர் அலைவெண்களில் செய்யும் அலகீடு உயர்ந்த அச்சுவழி, பக்கவாட்டுக் கோணப் பிரிதிறன்களைப் பெற்றுள்ளது. கணையம், சிறுநீரகம் போன்ற ஆழ் உரூப்புகளை 1 முதல் 6மெகாஎர்ட்சு வரையிலான தாழ் அலைவெண்களில் அலகீடு செய்யலாம்; தாழ் அலைவெண்களில் செய்யும் அலகீடு குறைந்த அச்சுவழி, பக்கவாட்டுக் கோணப் பிரிதிறன்களைத் தந்தாலும் ஆழமாக ஊடுருகின்றன. பெரும்பாலான படிமங்களுக்கு பொதுப்பயன் புறவொலி அலகீட்டுக் கருவியே போதுமானதாகும். சிறப்புப் பயன்பாடுகளுக்குச் சிறப்பு ஆற்றல்மாற்றிகள் (ஆய்கோல்கள்) பய்ன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான புறவொலி அலகீடுகள் உடலின் மேற்பரப்பிலே செய்யப்படுகின்றன; ஆனால், ஆய்கோலை உடலின் உள்ளே வைத்து அலகீடு செய்வது கூடுதலான தன்னம்பிக்கையைத் தரும். இதற்காக, பிறப்பு உறுப்பக, மலக்குடலக, உணவுக் குழலகச் சிறப்பு ஆய்கோல்கள் பயன்படுகின்றன இதைவிட மிக நுட்பமான குருதிக்குழல் அலகீட்டிற்கு மிகச் சிறிய வட்ட ஆய்கோல்கள் குழலில் பொறுத்தி குருதிக்குழல்களில் உள்ளே அனுப்பப்படுகின்றன. இவை குருதிக்குழல் சுவர்களையும் நோய் அறிகுறிகளையும் படிமம் எடுக்கின்றன. உணர்வு மரக்கடிப்பியல் குழல் ஓர்வு (குருதிக் குழல்) இதயவியல் முதன்மைக் கட்டுரை; எதிரொலி இதயவரைவியல் நெருக்கடிநேர மருத்துவம் இவற்றையும் பார்க்கவும் காந்த அதிர்வு அலை வரைவு வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி வெளி இணைப்புகள் தொடர்புடைய இணையத்தரவுகளின் பட்டியல் மீயொலி வரிக் கண்ணோட்டத்தின் கண்டுபிடிப்பைப் பற்றிய தரவு கதிர்வரைவியல் மருத்துவக் கருவிகள் ஒலியியல்
3452
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF
மீயொலி
மீயொலி (Ultrasound) (இலங்கை வழக்கு: கழியொலி) என்பது ஒலியின் அதிர்வெண் 20,000க்கு மேற்பட்ட ஒலி அலைகளைக் குறிக்கும். மீயொலிகளை மனிதர்களால் கேட்க முடியாது. மாந்தர்கள் தம் செவியால் 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட ஒலியலைகளைத்தான் கேட்க இயலும். மீயொலி கேட்கும் திறன் நாய்கள், ஓங்கில் (டால்பின்), வௌவால் போன்ற சில விலங்குகள் மீயொலியைக் கேட்கும் திறன் கொண்டவை. மேலும் குழந்தைகளும் பெரியர்வகளைக் காட்டிலும் உயர் அதிவெண்கள் கொண்ட ஒலிகளைக் கேட்க வல்லவர்கள்.வௌவால் இரவு நேரங்களில் பறந்து பயணம் செய்யும் போது அது உண்டாக்கும் மீயொலிகள் பிற பொருட்களின் மீது பட்டு எதிரொலிக்கும் அளவை உணர்ந்து கொண்டே தம் திசையை நிர்ணயிக்கின்றன. மீயொலிகளின் பயன்கள் மீயொலிகள் நீர்மப்பொருள் வழி சென்று ஒரு பொருளின் மீது ஒட்டியிருக்கும் நுண்ணிய அழுக்குகளை உலுப்பி விடுவிக்க வல்லது. இதனை வேதியியலிலும், குறைக்கடத்தி மின் கருவிகள் செய்வதிலும், வேறு பல துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். குறைக்கடத்தி மின் கருவிகளில், கருவியில் அலுமினியம் போன்ற மின் கம்பிகளை சிலிக்கான் சில்லோடு இணைக்க (ஒட்டுவிக்க) மீயொலிகளைப் பயன்படுத்துகின்றனர். மீயொலி அதிர்ச்சியால் அணுக்கள் அதிரும் பொழுது அணுக்கவையால் ஒட்டுதல் ஏற்படுகின்றது. மீயொலியானது மருத்துவச் சோதனை முறைகள் பலவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றது. கர்ப்பம் தரித்திருக்கும் தாய்மாரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை அறிதலில் மிகவும் பயன்பாடுள்ளதாக அமைகின்றது. ஒலி
3465
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
தொல்லுயிர் எச்சம்
தொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு உயிரியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப் பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன (பார்க்கவும்: அம்பர்). வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை இன அழிவுக்குள்ளான இனமாகக் கருதப்படும். மூலக்கூற்று உயிரியல்
3467
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
ஐரோப்பா
ஐரோப்பா கண்டம் யுரேசியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களைக் காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரீசு நாடே மேற்கத்திய பண்பாட்டின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா கண்டமானது, 10,180,000 ச.கி;மீகள் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் ஏழு கண்டங்களில் பரப்பளவின் அளவில், இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வத்திக்கான் நகர் மிகச் சிறிய நாடாகும். மக்கள் தொகை பரவலில் ஆசியா, ஆப்பிரிக்கா விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஐரோப்பா காணப்படுகிறது. ஐரோப்பாவில் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்), இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும். ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது. ஐரோப்பாவின் ஆளுமை 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து உலக நிகழ்வுகள் மற்றும் அதன் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக ஐரோப்பா விளங்கி வருகின்றது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஸ்பெயின், போர்த்துக்கல் என்பன உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளைக் கண்டறிந்தனர். முக்கிய இடங்களில் கால்வாய்களையும் அமைத்தனர் அதே போலப் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரோப்பாவில் நிகழ்ந்தன. இதன் விளைவாகப் பல நாடுகளைப் பிடிக்கும் ஆவலில் ஆப்பிரிக்கா, ஆசியா , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களிலுள்ள நாடுகளைக் குடியேற்ற நாடுகளாக்கித் தமது ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப்போர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிடையே நடந்தது. இந்தப் பாதிப்பின் விளைவாக ஐரோப்பாவின் உலக ஆளுமை இக்காலகட்டத்தில் வீழ்ந்தது. 20ம்நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முன்னணிச் சக்திகளாக வளர்ந்தன. பனிப்போர்க் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையிலான "நேட்டோ" எனப்படும் "வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பிலும்", கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சேவியத் ஒன்றியத்தின் தலைமையிலான "வார்சோ ஒப்பந்த" அடிப்படையிலான அணியிலும் இருந்தன. 1991 ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டு முன்னணிச் சக்தியாக வளர்ந்து வருகிறது. இது,முன்னைய வார்சோ ஒப்பந்தநாடுகள்பலவற்றையும்இணைத்துக்கொண்டு விரிவடைந்து வருகிறது. வரைவிலக்கணம் "ஐரோப்பா" என்பதற்கான வரைவிலக்கணம் வரலாற்றினூடாகப்பல மாறுதல்களை அடைந்து வந்துள்ளது. பழைய காலத்தில் கிரேக்க வரலாற்றாளரான ஏரோடாட்டசு (Herodotus), உலகம் யாராலோ ஐரோப்பா, ஆசியா,லிபியா (ஆப்பிரிக்கா) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். நைல் ஆறும், ஃபாசிசு ஆறும் இவற்றிடையே எல்லைகளாக இருந்தனவாம். அதே வேளை, ஃபாசிசு ஆற்றுக்குப் பதிலாக, டான் ஆறே ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையேயான எல்லை என்று சிலர் கருதுவதாகவும் ஏரோடாட்டசு குறிப்பிட்டுள்ளார். முதலாம் நூற்றாண்டில் புவியியலாளர் இசுட்ராபோ (Strabo) டான் ஆற்றை ஐரோப்பாவின் கிழக்கு எல்லையாக வரையறுத்துள்ளார் யூதர்களின் பழைய மத நூலான "யுபிலீசு நூல்", கண்டங்கள் நோவாவினால் அவரது மூன்று மகன்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவும், ஆப்பிரிக்காவை அதிலிருந்து பிரிக்கும் சிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஏர்க்குலீசுத்தூண்களில் இருந்து, ஆசியாவிலிருந்து அதனைப் பிரிக்கும் டான் ஆறு வரையுள்ள பகுதியே ஐரோப்பா எனவும் கூறுகிறது. கிறித்தவ-இலத்தீன் பண்பாட்டின் அடிப்படையிலும், செருமானிய மரபுகளின் அடிப்படையிலும் 8ஆம் நூற்றாண்டில் உருவான பண்பாட்டுக் கூட்டான இலத்தீன்-கிறித்தவ உலகமே ஐரோப்பா என்பது அதற்கான பண்பாட்டு வரைவிலக்கணம். இது பைசன்டியம், இசுலாம் என்பவற்றுக்குப் புறம்பாக வடக்கு ஐபீரியா, பிரித்தானியத் தீவுகள், பிரான்சு,கிறித்தவமாக்கப்பட்ட மேற்கு செருமனி, அல்பைன் பகுதிகள், வடக்கு இத்தாலி, நடு இத்தாலி என்பவற்றை உள்ளடக்கியது. இந்தக் கருத்துரு "கரோலிங்கிய மறுமலர்ச்சி"யின் நீடித்திருக்கும் மரபுரிமைகளுள் ஒன்று ஆகும். புவியியல் அடிப்படையிலும் பண்பாட்டுஅடிப்படையிலுமான இந்தப் பிரிப்பு முறைபிந்திய நடுக்காலம் வரை தொடர்ந்தது. கண்டுபிடிப்புக் காலத்தில் இதன் சரியான தன்மை பற்றிக் கேள்வி எழுந்தது. ஐரோப்பாவின் எல்லைகளை வரையறுக்கும் பிரச்சினை 1730 ஆம் ஆண்டில் தீர்க்கப்பட்டது.சுவீடியப்புவியியலாளரும் நிலப்பட வரைவாளருமான இசுட்ரகலன்பர்க் (Strahlenberg) என்பவர் ஆறுகளுக்குப் பதிலாக ஊரல் மலைகளைக் கிழக்கு எல்லையாகக் கொள்ள வேண்டும் என முன்மொழிந்தார். இது உருசியாவிலும், ஐரோப்பாவிலும் ஆதரவு பெற்றது. தற்காலப் புவியியலாளர்கள் ஐரோப்பாவை யூரேசியாவின் மேற்கு அந்தலையில் உள்ள தீவக்குறை என வரையறுக்கின்றனர். இதன் வடக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் பெரிய நீர்ப்பரப்புகள் உள்ளன. ஊரல் மலை, ஊரல் ஆறு, காசுப்பியன் கடல் என்பன இதன் கிழக்கு எல்லைகளாக விளங்குகின்றன. தென்கிழக்கில் காக்கசசு மலைகள், கருங்கடல், கருங்கடலையும் நடுநிலக் கடலையும் இணைக்கும் நீர்வழிகள் என்பன எல்லைகளாக உள்ளன. சமூக-அரசியல் வேறுபாடுகள், பண்பாட்டு வேறுபாடுகள் என்பன காரணமாக ஐரோப்பாவின் எல்லைகள் தொடர்பாக வேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சைப்பிரசு ஏறத்தாழ அனத்தோலியா (அல்லது சின்ன ஆசியா) ஆகும். ஆனால் அது இப்போது ஐரோப்பாவின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள்ளது. இது போலவே, இப்போது ஐரோப்பாவில் உள்ளதாகக் கருதப்படும் மால்ட்டா, பல நூற்றாண்டுகளாக வடக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. ஐசுலாந்து, வட அமெரிக்காவின் கிரீன்லாந்துக்கு அண்மையில் இருந்தபோதும் அதுவும் ஐரோப்பாவின் பகுதியாகவே இப்போது உள்ளது. சிலவேளைகளில், ஐரோப்பா என்னும் சொல் குறுகிய புவியரசியல் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையோ அல்லது பண்பாட்டு அடிப்படையிலான ஒரு உட்குழு நாடுகளை மட்டுமோ குறிக்கப்பயன்படுவதுண்டு. ஆனால், ஐரோப்பிய அவையில் 47 நாடுகள் இருந்தாலும், அவற்றில் 27 நாடுகள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன. அத்தோடு, அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், வட அத்திலாந்திய மற்றும் நடுநிலக்கடல் தீவுகள், சில சமயங்களில் இசுக்கன்டினேவிய நாடுகள் ஆகியவற்றில், ஐரோப்பியத் தலை நிலத்தை வெறுமனே "ஐரோப்பா" என்றும் "கண்டம்" என்றும் அழைப்பது வழக்கமாக உள்ளது. ஐரோப்பாவிலுள்ள நாடுகள் குறிப்புகள் வெளி இணைப்புகள் Council of Europe European Union The Columbia Gazetteer of the World Online Columbia University Press "Introducing Europe" from Lonely Planet Travel Guides and Information Historical Maps Borders in Europe 3000BC to the present Geacron Historical atlas Online history of Europe in 21 maps கண்டங்கள்
3468
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
உயிரினம்
உயிரியியலிலும், சூழ்நிலையியல் அல்லது இயற்கை அறிவியலிலும் (ecology), ஓர் உயிரினம் என்பது நிலம், நீர், காற்றில் காணப்படும் உயிர் வாழும் பண்புடைய அனைத்து வகை நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றைக் குறிக்கும். வாழும் உயிர்த்தொகுதிகளனைத்தும் உயிரினங்களாகும். இதுவரை 'உயிர்' என்ற சொல்லுக்கான முறையான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. எனினும் அவற்றுக்கிடையில் காணப்படும் சில பொதுவான பண்புகளைக் கொண்டு அவற்றை உயிரற்ற பொருட்களிலிருந்து இலகுவாக வேறுபடுத்திக் கொள்ள முடியும். உயிரினங்களின் மிக அடிப்படையான பண்புகள் அனுசேபமும் இனப்பெருக்கமுமாகும். இவ்விரு அடிப்படை இயல்புகளைக் காட்டாதவை உயிரினமாகக் கருதப்படுவதில்லை. உதாரணமாக வைரஸ் என்பதை ஒரு மூலக்கூறாகவே அறிவியலாளர்கள் கருதுவர். வைரஸ்களால் சுயமாக அனுசேபத்திலோ இனப்பெருக்கத்திலோ ஈடுபட முடியாது. உயிரினங்கள் ஒருகல உயிரினமாகவோ பல்கல உயிரினமாகவோ காணப்படலாம். பல்கல உயிரியின் ஒவ்வொரு தனிக்கலமும் மற்றைய கலங்களில் தங்கியுள்ளன. ஒவ்வொரு கலத்தாலும் தனித்துச்செயற்பட முடியாது. உயிரினங்களை கலத்தில் கருவுள்ள மெய்க்கருவுயிரிகளாகவும் கலத்தில் கருவற்ற நிலைக்கருவிலிகளாகவும் பாகுபடுத்தலாம். ஆர்க்கியா மற்றும் பக்டீரியா ஆகிய பேரிராச்சியங்கள் நிலைக்கருவிலிகளுக்குள் அடங்குவதுடன் மெய்க்கருவுயிரி தனியான பேரிராச்சியமாக உள்ளது. மனிதன் உட்பட விலங்குகள், தாவரங்கள், புரட்டோசோவாக்கள், பங்கசுக்கள், அல்காக்கள் என்பன மெய்க்கருவுயிரிகளாகும். வரையறை ஒன்றாக தொகுக்கப்பட்ட மூலக்கூறுகள் செயல்பட்டு அதிகமாகவோ அல்லது பகுதியளவோ நிலைப்புத்தன்மையுடையன வாழ்வியல் பண்புகளை வெளிப்படுத்துபவை என உயிரினங்களைக் கருதலாம்.உயிரினங்கள் என்பதற்கு அகராதிகளில் கூறப்படும் வரையறைகள் பரந்து பட்டதாக இருக்கலாம் “தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியங்கள் போன்ற எந்த எந்தவொரு வாழும் உயிரின அமைப்பும் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை மேற்கொள்கின்றன” .இது போன்ற பல வரையறைகள் தீ நுண்மங்கள் (வைரஸ்கள்) மற்றும் சாத்தியமான மனிதனால் உருவாக்கப்பட்ட கரிம அல்லாத உயிரினங்களைப் பற்றி விளக்குகிறது, ஏனெனில் வைரஸ்கள் என்றழைக்கப்படும் தீ நுண்மங்கள் இனப்பெருக்கம் மேற்கொள்ள ஒரு ஓம்புயிர் செல்லின் உயிர்வேதியியல் இயங்குமுறையைச் சார்ந்தே உள்ளன.கரையான் உள்ளிட்ட சிறப்புயிரினங்கள் (superorganism) ஒன்றாகச் சேர்ந்து ஒரே பணியைச் செய்யும் ஒவ்வொரு தனிப்பட்ட உயிரினங்களைக் கொண்ட ஒற்றைச் செயல் அலகுகளாகவோ அல்லது சமூக அலகுகளாக செயல்படுகின்றன . உயிரினம் என்ற சொல்லை வரையறை செய்வதில் சிறப்பான முறை எது என்பது பற்றிய சர்ச்சைகள் நீடிக்கின்றன அத்தகைய வரையறை அவசியமா இல்லையா என்பதைப் பற்றிய விவாதங்களும் நடைபெறுகின்றன . உயிரணுசாரா வாழ்க்கை தீ நுண்மங்கள் அல்லது வைரசுகள் (Viruses) தன்னியக்க இனப்பெருக்கம், வளர்ச்சி அல்லது வளர்சிதை மாற்றம் ஆகிய செயல்களைச் செய்ய இயலாமல் இருப்பதால், பொதுவாக அவை உயிரினங்களாக கருதப்படுவதில்லை.இத்தகைய சர்ச்சை சிக்கல் வாய்ந்தது ஏனெனில் சில உயிரணு உயிரினங்கள் (cellular organisms) சுயாதீனமான உயிர்வாழ்வதற்கு இயலாது. (ஆனால் அவை சுயாதீனமான வளர்சிதை மாற்றமும் வளர்ச்சியும் உடையவையாகும்) மற்றும் உயிரணுக்குள்ளே கடமைப்பாடுள்ள ஒட்டுண்ணிகளாக வாழ தகவமைத்துக்கொண்டுள்ளன.வைரசுகள் ஒரு சில நொதிகள் மற்றும் உயிரினங்களின் பண்புக்கூறுகளின் மூலக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன என்றாலும், அவை அவற்றின் சொந்த வளர்சிதை மாற்றத்தை கொண்டிருக்கவில்லை. மேலும் வைரசுகளால் அவை உருவாக்கப்பட்டிருக்கும் கரிமச் சேர்மங்களை ஒருங்கிணைக்கவோ தொகுக்கவோ முடியாது.வைரசுகள் ஓம்புயிரி உயிரணுக்களில் மட்டுமெ வலிமையாக செயல்பட்டு இனப்பெருக்கம் போன்ற செயல்களைச் செய்கின்றன. ஆனால் ஓம்புயிரி செல்களுக்கு வெளியே ஒரு உயிரற்ற சடப்பொருளாகவே கருதவேண்டியுள்ளது. வைரஸ்கள் சுயாதீனமான வளர்சிதை மாற்றத்தைத் தக்கவைக்கவில்லை ஆதலால் அவை வழக்கமாக உயிரினங்களாக வகைப்படுத்தப்படவில்லை இருப்பினும் அவற்றில் சொந்த மரபணுக்கள் இருக்கின்றன, அவை உயிரினங்களின் பரிணாம வழிமுறைகள் போன்ற இயங்குமுறைகளால் உருவாகின்றன. உயிரினங்களாக வைரஸ்கள் ஆதரிக்கும் மிகவும் பொதுவான வாதம், அவை பரிணாமத்திற்கு உட்பட்ட மற்றும் தன்னியக்கமாக பெருக்கமடையும் திறனுடைவதாகும்.சில விஞ்ஞானிகள் வைரசுகள் உருவாகவுமில்லை சுய-இனப்பெருக்கம் செய்யவுமில்லை என்றும் வாதிடுகின்றனர்.உண்மையில், வைரசுகள் தங்கள் ஓம்புயிர் அல்லது புரவலன் செல்கள் (host cells) மூலம் உருவாகின்றன, அதாவது, இதில் வைரஸ்கள் மற்றும் ஓம்யிபுர் செல்களின் இணை-பரிணாமம் இருப்பதாக அறியப்படுகிறது.ஓம்புயிர் செல்கள் இல்லாவிட்டால், வைரசுகளின் பரிணாமம் சாத்தியமற்றதாக இருக்கும்.இனப்பெருக்கம் செய்வதைப் பொறுத்தவரை, வைரசுகள் பெருமளவில் ஓம்புயில் செல்களின் இயங்கு செயல்முறைகளை நம்பியிருக்கின்றன . பல உயிரினங்களில் காணப்படும் பொதுப் பண்புகள் ஒழுங்கும் ஒழுங்கமைப்பும் இசைவாக்கங்கள் அனுசேபம் அசைவு தூண்டற்பேறு இனப்பெருக்கம் வளர்ச்சியும் விருத்தியும் பாரம்பரியமும் தலைமுறையுரிமை அடைதலும் கூர்ப்பு கட்டமைப்பு வேதியியல் உயிரினங்கள் அனைத்தும் மிகவும் சிக்கலான இரசாயனத் தொகுதிகளாகும். இவை தப்பி பிழைப்பதையும் இனப்பெருக்கத்தையும் நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. புவியிலுள்ள அனைத்து உயிரினங்களும் கார்பனையும் நீரையும் மைய இரசாயனக் கட்டமைப்புப் பொருட்களாகக் கொண்டு கூர்ப்படைந்துள்ளன. கார்பன் மற்றும் நீரின் இரசாயன இயல்புகள் இதற்குக் காரணமாய் அமைந்துள்ளன. கார்பனே ஐதரசனுக்கு அடுத்த படியாக மிக அதிகளவான சேர்வைகளை உருவாக்கும் தனிமமாகும். கார்பனால் ஒற்றை, இரட்டை, மற்றும் முப்பிணைப்புகளை உருவாக்க முடியும். அத்தோடு கார்பன் குறைந்த சார்பணுத்திணிவையும் சார்பளவில் அதிகமாகக் கிடைக்கும் தனிமமாகும். எனவே தான் புவியில் கார்பனை மையமாக வைத்து உயிரினங்கள் கூர்ப்படைந்துள்ளன. நீரின் இரசாயன இயல்புகளும் புவியில் உயிரினங்களின் கூர்ப்பில் பெரும் பங்கு வகித்துள்ளது. உயிரினங்களின் நிலவுகைக்கு உதவிய நீரின் பண்புகளான உயர் தன்வெப்பக் கொள்ளளவு, உயர் உருகல், ஆவியாதல் வெப்பம், ஒட்டற்பண்பு, மயிர்த்துளைமை, மேற்பரப்பிளுவை போன்ற பண்புகளுக்கு நீரில் காணப்படும் ஐதரசன் பிணைப்பு காரணமாகும். நீர் அயனாக்கும் சக்தியையும் கொண்டுள்ளது. எனவே தான் நீரை நேரடியாக உட்கொள்ளாத பாலைவன உயிரினங்களின் உடல்களில் கூட நீர் கணிசமான சதவீதத்தைப் பிடித்துள்ளது. மாமூலக்கூறுகள் உயிரினங்களை புரதங்கள், காபோவைதரேட்டுக்கள், இலிப்பிட்டுக்கள் மற்றும் கருவமிலங்கள் ஆகிய நான்கு பிரதான மாமூலக்கூறுகள் (பெரிய மூலக்கூறுகள்) ஆக்கின்றன. தலைமுறையுரிமைத் தகவல்களைச் சேமிப்பதற்கும (டி.என்.ஏயில்) அத்தகவல்களை ஈடுபடுத்துவற்கும் (ஆர்.என்.ஏயின் மூலம்) கருவமிலங்கள் பயன்படுகின்றன. புரதங்கள் உயிரினத்தில் பல்வேறு செயற்பாடுகளைப் புரிகின்றன. நொதியங்களாகத் தொழிற்பட்டு உயிர்வேதியியல் தாக்கங்களை ஊக்கப்படுத்துகின்றன. கட்டமைப்பு ரீதியான பலத்தை வழங்குகின்றன. கலச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன ஹோர்மோன்களாகச் செயற்படுகின்றன. நுண்ணுயிர்களுக்கு எதிராகத் தொழிற்பட்டு, உடலுக்குப் பாதுகாப்பு வழங்கும் பிறபொருளெதிரியாகச் செயற்படுகின்றன. இலிப்பிட்டுகள் கலமென்சவ்வுகளை ஆக்கவும் சக்தி வழங்கவும் பயன்படுகின்றன. பொஸ்போலிப்பிட்டுகளே கலமென்சவ்வை ஆக்கும் பிரதான கூறாகும். பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வு சில வகை (கலத்துக்குத் தேவைப்படும்) பொருட்களை மாத்திரமே உள்ளனுப்பும் ஆற்றலுடையது. சில விலங்குகளிலும் தாவரங்களிலும் சக்தி சேமிக்கும் கூறாகவும் இலிப்பிட்டுக்கள் உள்ளன. காபோவைதரேற்றுகளே உயிரினங்களில் சக்தி வழங்கலுக்குப் பயன்படும் பிரதான மாமூலக்கூறுகளாகும். பௌதிகக் கட்டமைப்பு உயிரினங்களின் அடிப்படைத் தொழிற்பாட்டலகு கலமாகும். ஒருகல உயிரினங்களில் இதுவே முதன்மையானதும் இறுதியானதுமான கட்டமைப்பலகாகும். எனினும் பலகல உயிரினங்களில் கலங்கள் இழையங்களாக, அங்கங்களாக, அங்கத் தொகுதிகளாக இறுதியில் ஒரு பல்கல உயிரினமாக ஒன்று சேருகின்றன. மனிதரில் தனித்தனியான உடலியக்கங்களைக் கொண்ட, அதேசமயம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இயங்கும் பல உடல் தொகுதிகள் காணப்படுகின்றன. பல்கல உயிரினத்தில் உள்ள அனைத்து கலங்களும் ஒரே மாதிரியான டி.என்.ஏ க்களைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு கலமும் தனக்கென ஒதுக்கப்பட்ட தொழிலைச் செய்கின்றது. கலம் கலக்கொள்கை 1839ஆம் ஆண்டு ஸிச்சுவான் மற்றும் ஸ்க்லெய்டன் ஆகியோரால் முன்மொழியப்பட்டது. 'எல்லா உயிரினங்களும் கலங்களால் ஆக்கப்பட்டுள்ளன', 'கலமே உயிரின் அடிப்படையலகு' என்பனவே இக்கொள்கையின் அடிப்படை வசனங்களாகும். கலத்தை விடச் சிறிய கலப் புன்னகங்கள் காணப்பட்டாலும் அவற்றால் சுயமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது. எனவே கலம் என்பதே உயிருள்ளவற்றின் பண்புகளைக் காட்டும் மிகச் சிறிய அலகாகும். எல்லாக் கலங்களிலும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ உள்ளன. கலம் இரட்டை பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வால் சூழப்பட்டிருக்கும். ஆயுட்காலம் ஒரு உயிரினத்தின் அடிப்படை அளவுருக்களில் அதனுடைய ஆயுட்காலமும் ஒன்றாகும். சில உயிரினங்கள் குறுகிய காலம் உயிர் வாழ்வதைப் போன்று சில தாவரங்களும் பூஞ்சைகளும் ஆயிரக்கணக்கான வருடங்கள் உயிர் வாழக் கூடியனவாக உள்ளன. பரிணாமம் பால் இனம் தற்போதுள்ள மெய்க்கருவுயிரிகளிடையே பாலியல் இனப்பெருக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. இது மெய்க்கருவுயிரிகளின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாகும். வெளி இணைப்புகள் உயிரியல் விநோதம் உயிரின அடுக்கு வரைபடம்
3474
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF
பிபிசி
பிபிசி (BBC) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த, பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம், 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிபிசி தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குகிறது. இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் வழங்கும் செய்திகள் உலகளவில் சேகரிக்கப்படுகின்றது. இதன் பிரதான பணி ஐக்கிய இராச்சியத்திலுள்ள பகுதிகளுக்கு அரசு சார்பாக ஒலிபரப்புவதாகும். இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கும் பிபிசி வானொலி பிபிசி தமிழோசை என்ற பெயரில் நாள்தோறும் அரை மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. தமிழோசை நிகழ்ச்சிகளை பெப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி ஒலிபரப்புச் செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளை பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பெப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது. எதிர்ப்பு இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் நடந்த பெண் வல்லுறவு நிகழ்வை ஒட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி பெண்களை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி, இதை ஒளிபரப்பு செய்த பிபிசியின் மீது இந்தியா அரசு நடவடிக்கை எடுக்க முயன்றது. வருமான வரி சோதனையும், வரி ஏய்ப்பும் பி பி சி இந்தியா அலுவலகத்தில் 14 பிப்ரவரி 2023 அன்று இந்திய வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். 6 சூன் 2023 அன்று பி பி சி இந்தியா, தாங்கள் ரூபாய் 40 கோடியை வருமான வரி கணக்கில் குறைத்துக் காட்டியதாக மின்னஞ்சல் மூலம் வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உசாத்துணைகள் வெளி இணைப்புகள் பிபிசி இணையத்தளம் பிபிசி தமிழ் வானொலிச் சேவை பிபிசி டுவிட்டர் பக்கம் பிபிசி டெலிகிராம் பக்கம் ஆங்கில தொலைக்காட்சி சேவைகள் பிரித்தானிய வானொலி நிறுவனங்கள்
3479
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
இலட்சம்
ஒரு இலட்சம் () (Lakh) அல்லது ஒரு நியுதம் என்பது, எண்ணிக்கையில் நூறு ஆயிரங்களுக்கு சமமான ஒரு எண். நூறு இலட்சங்கள் சேர்ந்து ஒரு கோடியாகும், இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன்படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன. மேலும் இது அளவைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது, உதாரணமாக "Lakhs of people" (Lakhs லட்சக்கணக்கான) லட்சக்கணக்கான மக்கள் என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. (லட்சக்கணக்கான இது பொருளாதார பயன்பாட்டிற்கு அல்ல.) இலட்சம் என்பதற்கு பதிலாக இலகாரம் என்று எழுதுதல் தூய தமிழ் என்று கருதப்படுகிறது. எடுத்துக்காட்டு மேல் நாட்டு முறையில் பெரிய எண்களை எழுதும் போது ஆயிரம் ஆயிரமாகப் பிரித்துக் காட்டுவது வழக்கு. ஆயிரம் (1,000), மில்லியன் (1,000 x 1,000), பில்லியன் (1,000 x 1,000 x 1,000) என்றவாறு ஆயிரத்தின் மடங்குகளுக்கே தனிப் பெயர்களும் உள்ளன. ஆனால், இந்திய முறையில் ஆயிரம் (1,000), இலட்சம் (100 x 1,000), கோடி (100 x 100 x 1,000) ஆயிரத்தின் நூற்று மடங்குகளுக்கே தனிப்பெயர்கள் உள்ளன. இதனால், இந்திய முறையில் ஆயிரத்துக்குப் பின் நூறு நூறாகவே பிரித்துக் காட்டுவது வழக்கம். மேற்கோள் எண்ணிக்கை முழு எண்கள்
3481
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF
கோடி
ஒரு கோடி (Crore) என்பது, எண்ணிக்கையில் நூறு இலட்சங்களுக்கு சமமாகும். நூறு கோடிகள் சேர்ந்து ஒரு பில்லியன் ஆகும். இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும்போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன்படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டு அயல் நாடுகளில் 30 மில்லியனை 30,000,000 என எழுதுவர். இதுவே கோடி அடிப்படையில் எழுதும் பொழுது, 3,00,00,000 என எழுதப்படும். எண்ணிக்கை முழு எண்கள்
3495
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%29
மாத்திரை (தமிழ் இலக்கணம்)
தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துகள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண் இயல்பாகவே மூடித் திறந்து கொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் இமைத்துக் கொள்ளும் கால அளவுதான் மாத்திரை. குற்றெழுத்துகளுக்கு (குறில் எழுத்துகளுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு) நெட்டெழுத்துகளுக்கு (நெடில் எழுத்துகளுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ) தனி மெய்யெழுத்துகள், ஆய்த எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும். உயிரளபெடை மூன்று மாத்திரையளவும், ஒற்றளபெடை ஒரு மாத்திரையளவும் ஒலிக்கும். ஔகாரக்குறுக்கம், ஐகாரக்குறுக்கம் என்பன ஒன்று அல்லது ஒன்றரை மாத்திரையளவு ஒலிக்கும். மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பன கால் மாத்திரையளவு ஒலிக்கும். அடிக்குறிப்பு எழுத்திலக்கணம்
3497
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF
விக்சனரி
விக்சனரி (Wiktionary) என்பது சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், உச்சரிப்பு முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலி ஒன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் விக்கிமீடியா நிறுவனத்தினால் வழிநடத்தப்படுகிறது. வணிக நோக்கற்ற இந்த அகரமுதலியை இலவசமாக எவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்; பங்கேற்கவும் முடியும். விக்கிப்பீடியாவைப் போன்றே விக்சனரிகளும் பல மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. விக்சனரியில் சொற்களுக்குப் பொருள் தவிர விளக்கம், பயன்பாடு, சொற்பிறப்பியல், இணை சொற்கள், சொல்வளம் ஆகியவையும் தர வாய்ப்புள்ளது. ஒரு மொழியில் உருவாக்கப்படும் விக்சனரியில் அம்மொழி தவிர, பிற மொழிச் சொற்களும் இடம்பெறலாம். விக்சனரி வரலாறு இணையத்தில் விக்சனரியின் தோற்றம் 2002 டிசம்பர் 12 ஆம் திகதி உருவாக்கம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலம் அல்லாத முதல் மொழி விக்சனரியாக 2004 மார்ச்சு 28 ஆம் திகதி பிரஞ்சு மற்றும் பொலிசு மொழி அகரமுதலிகள் தோற்றப்பெற்றன. அதனைத் தொடர்ந்தே ஏனைய மொழிகளிலும் விக்சனரிகள் தோற்றம் பெறத்தொடங்கின. விக்சனரி தோற்றம் பெற்ற காலகட்டத்தில் அதன் இணைய முகவரியாக (wiktionary.wikipedia.org) என்றே 2004 மே 1 ஆம் திகதி வரை இருந்தது. தற்போது விக்சனரியின் இணைய முகவரியாக (www.wiktionary.org) என்றுள்ளது. தமிழ் விக்சனரி வரலாறு முதன்மைக் கட்டுரை: தமிழ் விக்சனரி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் விக்சனரி இணையத்தளம் தமிழ் விக்சனரி இணையத்தளம் அகராதிகள் விக்கிமீடியா திட்டங்கள் மீடியாவிக்கி இணையங்கள் சொற்பிறப்பியல்
3502
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D
டோனி பிளேர்
டோனி பிளேர் (Tony Blair), (பி. மே 6, 1953) ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் ஆவார். 1994ல் ஜான் ஸ்மித்தின் இறப்பிற்குப் பிறகு, தொழிற் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தி 1997ல் நடந்த பொதுத் தேர்தல்களில் ஜான் மேஜரைத் தோற்கடித்து தொழிற் கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தார். அன்று முதல், தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். தொழிற் கட்சித் தலைவர்களிலேயே அதிக காலம் பிரதமாரகப் பொறுப்பு வகிப்பவரும், தொடர்ந்து மூன்று முறை பொதுத் தேர்தல்களில் அக்கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தவரும் டோனி பிளேர் தான். இவர் ஜூன் 27, 2007 அன்று தமது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். வெளி இணைப்புகள் 10 Downing Street official site Guardian Unlimited Politics Ask Aristotle: Tony Blair They Work For You - Tony Blair Ministerial Whirl - A tool showing Tony Blair's cabinet changes since 1997 ஐக்கிய இராச்சியத்தின் அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் 1953 பிறப்புகள் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்கள்
3504
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88
மாத்திரை
மாத்திரை (தமிழ் இலக்கணம்). மாத்திரை (மருத்துவம்).
3507
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
இராமாயணம்
இராமாயணம் () வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும். இது பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் என்னும் புலவர் புலவர்களுக்கே உண்டான பாணியில் பல கற்பனைகளை இனைத்து இதனைத் தமிழில் எழுதினார். இது கம்ப இராமாயணம் எனப்படுகின்றது. கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய் மொழியில் உள்ள ராமகியென், லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும். கோசல நாட்டின் தலை நகரமான அயோத்தியை சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இதிகாசம், உறவுகளுக்கு இடையேயான கடமைகளை எடுத்துக் காட்டுகின்றது. சிறந்த வேலையாள், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்கவேண்டும் என்பது இதன் கதை மாந்தர்கள் மூலம் விளக்கப்படுகின்றது. சொற்பிறப்பியல் இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். காவியத்தின் மையப் பாத்திரத்தின் பெயரான இராம, இரண்டு சூழ்நிலை அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அதர்வவேதத்தில், இது 'அடர், அடர் நிறம், கருப்பு' என்று பொருள்படும் மற்றும் 'இரவின் இருள் அல்லது அமைதி' என்று பொருள்படும் இராத்திரி என்ற வார்த்தையுடன் தொடர்புடையது. மகாபாரதத்தில் காணக்கூடிய மற்றொரு பொருள், 'மகிழ்ச்சியானது, இனிமையானது, வசீகரமானது, அழகானது, அழகானது' என்பதாகும். அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பது "இராமனின் பயணம்" என்று பொருள்படும், அக சாந்தியின் சமஸ்கிருத இலக்கண விதியின் காரணமாக அயனா அயனாவாக மாற்றப்பட்டது. காலம் மதிப்பீடு ஜோதிட கணக்கீடுகளின்படி, ராமாயணத்தின் விவரிப்பு பொ.ஊ.மு. 5301 இல் திரேதா யுகம் காலகட்டத்தில் நடந்தது. ராபர்ட் பி. கோல்ட்மேனின் கூற்றுப்படி ராமாயணத்தின் பழமையான பகுதிகள் பொ.ஊ.மு. 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கும் பொ.ஊ.மு. 6 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு இடைப்பட்டவை. பௌத்தம் அல்லது மகத ராஜ்ஜியத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடாத கதையே இதற்குக் காரணம். சாகேதா அல்லது ஷ்ரவஸ்தியின் வாரிசு தலைநகர் என்பதற்குப் பதிலாக, அயோத்தியை கோசலத்தின் தலைநகர் என்றும் உரை குறிப்பிடுகிறது. கதை காலத்தின் அடிப்படையில், ராமாயணம் மகாபாரதத்திற்கு முந்தையது என்பது வெளிப்படையானது. பொ.ஊ.மு. 7 முதல் 4 ஆம் நூற்றாண்டுகள் வரை கிடைக்கக்கூடிய உரையின் ஆரம்ப கட்டத்திற்கான அறிஞர்களின் மதிப்பீடுகள். இந்திய மொழிகளில் இராமாயணம் தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர். வடமொழி இராமாயண நூல்கள் . யோக வசிஷ்ட (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (பொ.ஊ. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு) . அத்யாத்ம இராமாயணம் (பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது) . அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்) . ஆனந்த இராமாயணம் (பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது. வால்மீகி இராமாயணத்தின் அமைப்பு இராமாயணத்தின் கதை பல மட்டங்களில் தொழிற்படுகின்றது. ஒரு மட்டத்தில் இது அக்காலத்துச் சமூகத்தை விவரிக்கின்றது. பரந்த பேரரசுகள், அடுத்த அரசர்களாக வரவிருக்கும் இளவரசர்களின் வாழ்க்கை, தாய்மாருக்கும் மாற்றாந் தாய்களுக்கும் இடையிலான போட்டி, உடன்பிறந்தோருக்கு இடையிலான அன்புப் பிணைப்பும் விசுவாசமும், இளவரசிகளை மணம் முடிப்பதற்கான போட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். இன்னொரு மட்டத்தில் இது, நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஒரு தலைவனாக எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதையும், நிலைமைகளை ஒன்றுபோல எதிர்கொண்டு, சமயத்துக்குத் தக்கபடி நடந்து, தனது சொந்தத் துன்பங்கள் முதலியனவற்றுக்கும் அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு மட்டத்தில் இது, தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் கதையும் ஆகும். வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை: பால காண்டம்: இராமனினதும் உடன்பிறந்தோரினதும் பிறப்பு, கல்வி, திருமணம் என்பவை பற்றிய கதைப் பகுதி. அயோத்தி காண்டம்: இராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துக் கதைப் பகுதி. ஆரண்ய காண்டம்: இராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்ததும். கிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் இராமனது வாழ்க்கை. சுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய கதைப் பகுதி. யுத்த காண்டம்: இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய கதைப் பகுதி. உத்தர காண்டம்: இராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி. இந்த இராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளினதும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர். வால்மீகி இராமாயணத்தின் கதைச் சுருக்கம் பால காண்டம் அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்து வந்தார். அதனால் தன் மந்திரி சுமந்தரர் மற்றும் தன் குலகுருவான வசிட்டரின் அறிவுரைப்படி புத்திர-காமேஷ்டி யாகம் நடத்தினார். அப்போது மகா விஷ்ணு தோன்றி, ஓர் தங்கத்திலான பாத்திரத்தை தசரதனிடம் கொடுத்து அதிலிருக்கும் புனிதமான தேனைத் தசரதனின் மனைவியரை பருகும்படி கேட்டு கொண்டார். அதன்படி தசரதரும் தன் மனைவியரான கௌசல்யா, சுமித்திரை மற்றும் கைகேயியிடம் அந்த தேனை பகிர்ந்தளிதார். விரைவிலேயே கௌசல்யாவுக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு இரட்டையரான இலக்குவன் மற்றும் சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர். சிறிது காலத்திற்கு பின்பு நால்வரும் வசிட்டரிடம் சீடர்களாக சேர்ந்து பல்வேறு கலைகளை கற்று கொள்ள ஆரம்பித்தனர். இந்நிலையில் விசுவாமித்திர முனிவர், அயோத்தியை அடைந்து தசரதரிடம் தன் யாகங்களுக்கு சில ராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை அழிக்க இராமனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு இராமனையும், லட்சுமணனனையும் அவருடன் அனுப்பி வைத்தார். சகோதரர்கள் வந்த வேலையை செவ்வனே செய்த்தால், விசுவாமித்திரர் அவர்களுக்கு சில அஸ்திரங்களை அருளி ஆசிர்வதித்தார். அயோத்தி காண்டம் விசுவாமித்திரர் இராமனையும், இலட்சுமணனையும் ஜனகன் என்னும் அரசன் ஆட்சி செய்த விதேக நாட்டின் தலைநகரமான மிதிலைக்கு அழைத்துச் சென்றார். ஜனகனுடைய மகள் சீதை. இவளுக்குத் திருமணம் செய்வதற்காக அரசர் போட்டியொன்றை ஒழுங்கு செய்திருந்தார். பல இளவரசர்கள் கலந்து கொண்ட அப்போட்டியில் வென்ற இராமன், சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்திக்கு மீண்டான். இராமனுக்கும், சீதைக்கும் திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதும், வயதான தசரதர், இராமருக்கு மகுடம் சூட்ட விருப்பம் தெரிவிக்கிறார், அதற்கு கோசல அரசவையும் குடிமக்களும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள். மாபெரும் நிகழ்வின் முந்திய நாளில், மந்தரை என்கிற பொல்லாத வேலைக்காரியால் கைகேயியின் பொறாமை தூண்டப்படுகிறது. தசரதன் நீண்ட காலத்திற்கு முன்பு தனக்கு வழங்கிய இரண்டு வரங்களை நினைவு கூறுகிறார். இராமரை பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குள் அனுப்புமாறும், தனது மகன் பரதன் நாடாள வேண்டுமென்றும் தசரதனிடம் கைகேயி கோருகிறார். இதனால் மனம் உடைந்த அரசன், கொடுக்கப்பட்ட வரத்தின் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டு, கைகேயியின் கோரிக்கைகளுக்கு இணங்குகிறார். இராமர் தனது தந்தையின் ஆணையை முழுமையான சமர்ப்பிப்பு மற்றும் அமைதியான சுய கட்டுப்பாட்டுடன் ஏற்றுக்கொள்கிறார். இது கதை முழுவதும் அவரை வகைப்படுத்துகிறது. இவருடன் சீதாவும் லட்சுமணனும் இணைந்து காடு செல்கின்றனர். அவரைப் பின்தொடர வேண்டாம் என்று அவர் சீதாவிடம் கூறும்போது, ​​"நீங்கள் வசிக்கும் காடு எனக்கு அயோத்தி, நீங்கள் இல்லாமல் அயோத்தி என்பது எனக்கு ஒரு உண்மையான நரகமாகும்" என்று கூறுகிறாள். ராமர் வெளியேறிய பிறகு, தசரத மன்னர், துக்கத்தை தாங்க முடியாமல் காலமாகிறார். இதற்கிடையில், தனது நாட்டிற்குத் திரும்பிய பரதன், அயோத்தியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்கிறார். பரதன் தனது தாயின் பொல்லாத சூழ்ச்சியினால் அரியணை ஏற மறுத்து, காட்டில் ராமரை சந்திக்கிறான். பரதன் ராமரிடம் திரும்பி வந்து ஆட்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார். ஆனால் தனது தந்தையின் கட்டளைகளை நிறைவேற்ற தீர்மானித்த ராமர், நாடு திரும்ப மறுக்கிறார். ஆரண்ய காண்டம் சில காலத்தின் பின் தனது மூத்த மகனான இராமனுக்கு முடிசூட்டத் தசரதர் எண்ணினார். அரச குடும்பத்தினரும் மக்களும் இது குறித்து மிகவும் மகிழ்ந்தனர். ஆனால், கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தியான கூனி என்பாள் இராமன் மீது வெறுப்புற்றிருந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை. அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் வலையில் விழுந்துவிட்டாள். முன்னொருபோது தசரதனின் உயிரைக் கைகேயி காத்தமைக்காக இரண்டு வரங்கள் தருவதாகத் தசரதன் வாக்களித்திருந்தான். அவ்விரு வரங்களையும் கேட்டு வாங்கும்படி கூனி கைகேயிக்கு ஆலோசனை கூறினாள். தனது மகனான பரதன் அரசனாக வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்னும் இரண்டு வரங்களைக் கைகேயி தசரதரிடம் கேட்டாள். மனதை மாற்றிக்கொள்ளும்படி தசரதர் வேண்டியும் கைகேயி பிடிவாதமாக மறுத்துவிட்டதனால், தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி அவளுடைய கோரிக்கைக்குத் தசரதன் இணங்க வேண்டியதாயிற்று. தசரதரின் முடிவைக் கேள்வியுற்ற இராமன் உடனடியாகவே காட்டுக்குக் கிளம்பினான். அவன் தடுத்தும் கேளாமல் சீதையும், இலட்சுமணனும் இராமனுடன் காட்டுக்குக் கிளம்பினர். இராமன் காட்டுக்குப் போய்விட்டான் என்பதைக் கேள்வியுற்ற தசரதர் கவலை தாங்காமல் உடனேயே இறந்துவிட்டார். அவ்வேளையில் பரதனும், சத்துருக்கனும் நாட்டுக்கு வெளியே இருந்தனர். தந்தையின் இறப்புச் செய்தி கேள்வியுற்ற அவர்கள் உடனடியாக நாடு திரும்பி நடந்ததை அறிந்து கொண்டனர். நடந்தவை அனைத்துக்கும் தனது தாயே காரணம் என்பதை அறிந்த பரதன் கோபம் கொண்டான். முடி சூட்டிக்கொள்ள மறுத்த அவன் இராமனைத் திரும்பவும் கூட்டி வருவதற்காகக் காட்டுக்குச் சென்றான். தந்தையின் சொல்லைக் காப்பாற்றுவதற்காக அயோத்திக்கு வர இராமன் மறுக்கவே, பரதன் இராமனின் காலணிகளை கேட்டுப் பெற்றுக்கொண்டு அயோத்திக்குச் சென்றான். அங்கே இராமனின் பாதுகைகளை அரியணையில் வைத்து இராமன் காட்டிலிருந்து மீளும் வரை அவனுக்காகப் பரதன் ஆட்சியை நடத்தினான். இராமனும், சீதையும், இலட்சுமணனும் காட்டில் வாழ்ந்து வந்தபோது அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை என்பவள் இராமன் மீது ஆசை கொண்டாள். இலட்சுமணன் அவளது மூக்கை வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த அவள் தனது அண்ணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன் இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில், அசோகவனத்தில் சிறை வைத்தான். சீதையில் அழகில் மயங்கிய அவன், தன்னை மணந்து கொள்ளுமாறும் அவளை வற்புறுத்தினான். கிஷ்கிந்தா / சுந்தர / யுத்த காண்டங்கள் சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்கிரீவனின் அமைச்சனும், காற்றுக் கடவுளின் மகனுமான அனுமன் இராமனிடம் பெரும் பக்தி கொண்டிருந்தான். சுக்கிரீவனின் ஆணைப்படி வானரப் படைகள் பல திசைகளிலும் சென்று சீதையைத் தேடின. அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றான். அங்கே அசோக வனத்தில் சிறையிருந்த சீதையைக் கண்டான். அனுமன் மூலம் சீதை இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட இராமன், வானரப் படைகளின் உதவியோடு இலங்கைக்குச் சென்றான். இராவணனின் தம்பியான விபீடணன், சீதையை விட்டுவிடுமாறு இராவணனுக்கு ஆலோசனை கூறியும் அவன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் இராமனை அடைந்து அவனுக்கு உதவினான். இடம்பெற்ற போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை இலங்கை அரசனாக முடி சூட்டினான். இராமன் சீதையை மீட்டான். எனினும், சீதையின் தூய்மையை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. இவ்வேளையில் இராமனுக்கு விதிக்கப்பட்ட நாடுகடந்த வாழ்க்கைக் காலமான பதினான்கு ஆண்டுகள் முடிவடைந்தன. இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் அயோத்திக்கு மீண்டனர். இராமன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு லவன், குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர். அக்காலத்தில் இராமன் தனது பேரரசை மேலும் பெருப்பிக்கும் நோக்குடன் அசுவமேத யாகம் எனப்பட்ட யாகத்தை ஒழுங்கு செய்தான். இந்த யாகத்தைச் செய்யும் ஒரு மன்னன் ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அவனுடன் போரிடமுடியாமல் அடிபணிய விரும்பும் அரசர்கள் அக் குதிரையைத் தமது நாட்டில் உலவ விடுவர். அப்படியின்றி அவ்வரசன் அடிபணிய விரும்பாவிட்டால் குதிரையைப் பிடித்துக் கட்டிவிடுவான். குதிரையை அனுப்பிய அரசன் போர் புரிந்து குறிப்பிட்ட நாட்டைத் தோற்கடிக்கவேண்டும். இராமன் அனுப்பிய குதிரை அவனது பிள்ளைகளான லவனும், குசனும் வாழ்ந்த காட்டில் உலவியபோது அவர்கள் அதனைப் பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். இதைக் கேள்வியுற்ற இராமன் காட்டுக்கு வந்து தனது பிள்ளைகளையும், சீதையையும் கண்டான். சில காலத்தின் பின் புவியில் தனது காலம் முடிவுக்கு வருவதை சீதை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி புவியன்னையை வேண்டினாள். சீதையின் வேண்டுகோளுக்கு இணங்கிப் புவி பிளந்து அவளை ஏற்றுக்கொண்டது. லவனும், குசனும் அயோத்திக்குச் சென்று தந்தையுடன் வாழ்ந்தனர். சுந்தர காண்டம் சுந்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தின் இதயமாகவும், அனுமனின் சாகசங்களைப் பற்றிய விரிவான, தெளிவான கதையயும் கொண்டுள்ளது. சீதையைப்பற்றி அறிந்த பிறகு, அனுமன் ஒரு அழகிய வடிவத்தை எடுத்துக் கொண்டு, கடலுக்கு குறுக்கே இலங்கைக்கு பறந்து செல்கிறார். வழியில் அவர் தனது திறன்களை சோதிக்க ஒரு பேய் வடிவத்தில் வரும் ஒரு கந்தர்வ கன்னியை எதிர்கொள்வது போன்ற பல சவால்களை சந்திக்கிறார். அவர் மைனாகுடு என்ற மலையை எதிர்கொள்கிறார். அவர் அனுமனுக்கு ஓய்வு அளித்து அவருக்கு உதவுகிறார். சீதாவைத் தேடுவதற்கு இன்னும் சிறிது காலமே மீதமுள்ளதால் அனுமன் அவருடைய உதவியை மறுக்கிறார். இலங்கைக்குள் நுழைந்த பிறகு, இலங்கை முழுவதையும் பாதுகாக்கும் லங்கினி என்ற அரக்கியை காண்கிறார் அனுமன் அவளுடன் சண்டையிட்டு இலங்கைக்குள் செல்வதற்காக அவளை அடிபணியச் செய்கிறார். இந்த செயல்பாட்டில், லங்கினியை தோற்கடித்தால் இலங்கையின் முடிவு நெருங்குகிறது என்று அர்த்தமாகும் என்று கடவுளர்களிடமிருந்து பெற்ற எச்சரிக்கையை லங்கினி எடுத்துரைக்கிறாள். இங்கே, அனுமன் அரக்கர்களின் நாட்டை ஆராய்ந்து இராவணனை வேவு பார்க்கிறார். அவர் சீதையை அசோக வனத்தில் காண்கிறார். அங்கு சீதையை தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ராவணன் அச்சுறுத்துகிறான். நம்பிக்கையின் அடையாளமாக ராமரின் மோதிரத்தை கொடுத்து அனுமன் சீதாவுக்கு உறுதியளிக்கிறார். அவர் சீதையை மீண்டும் ராமரிடம் கொண்டு செல்ல முன்வருகிறார்; இருப்பினும், அவள் மறுத்து, அது தர்மம் அல்ல என்று கூறி, அனுமன் அவளை ராமரிடம் அழைத்துச் சென்றால் ராமாயணத்திற்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறுகிறாள் - "ராமர் இல்லாதபோது ராவணன் சீதையை வலுக்கட்டாயமாக சுமந்து சென்றான். ராவணன் இல்லாதபோது, ​​அனுமன் சீதையை மீண்டும் ராமனிடம் கொண்டு சென்றான் " என்ற அவப்பெயர் வராதிருக்கவும் தான் கடத்தப்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கவும் இராமரே வர வேண்டும் என்று சீதை கூறுகிறாள். அனுமன் பின்னர் இலங்கையில் மரங்களையும் கட்டிடங்களையும் அழித்து இராவணனின் வீரர்களைக் கொல்வதன் மூலம் அழிவை ஏற்படுத்துகிறார். ராவணனின் வீரர்கள் தன்னைப் பிடித்து ராவணனிடம் அழைத்துச் செல்ல அனுமதிக்கிறார். சீதையை விடுவிக்க ராவணனுக்கு தைரியமான சொற்பொழிவு செய்கிறார். ராவணனால் அவரது வால் தீ வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர் பிணைப்புகளில் இருந்து தப்பித்து கூரையிலிருந்து கூரைக்குத் தாவுகிறார். ராவணனின் கோட்டைக்கு தீ வைத்து விட்டு தீவில் இருந்து பறந்து செல்கிறார். மகிழ்ச்சியான செய்திகளுடன் கிஷ்கிந்தாவுக்குத் திரும்புகிறார். உத்தர காண்டம் கம்ப இராமாயணத்தின் இறுதிக் காண்டமாக உத்தர காண்டம், ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது. கம்பர் தம் இராமாயணத்தைப் பால காண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில், விடைகொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன், வீடணன் மற்றும் வானரர் முதலியோர்க்கு பரிசில்கள் கொடுத்து இராமன் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு இராமர் பல்லாண்டு மனுநெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி, இராமாயணத்தைக் கம்பர் நிறைவு செய்து விட்டார். அதன்பின் நிகழ்வுகளாக, சீதை தொடர்பான வதந்தியினை குடிமகன் மூலம் கேட்ட இராமர், ஐந்து மாத கர்ப்பிணியான சீதையை, இலக்குமணனைக் கொண்டு காட்டில் விட்டுவிடுதல், காட்டில் சீதைக்கு வால்மீகி ஆசிரமத்தில் லவன் மற்றும் குசன் எனும் இரட்டைக் குழுந்தைகள் பிறப்பதும், இராமர் செய்த அசுவமேத யாகக் குதிரைகளை லவ-குசர்கள் கட்டி வைத்தல், சத்துருக்கனன், பரதன் மற்றும் இலக்குமணராலும் வெல்ல முடியாத இலவ-குசர்களை, இராமரே நேரில் வந்து பார்த்து போரிடுவதும், பின்னர் லவ-குசர்களை அயோத்திக்கு அழைத்து செல்லுதலும், பூமி பிளந்து சீதை பூமாதேவியுடன் சேர்தல் போன்ற செய்திகளை, தான் எழுதிய உத்தர காண்டம் மூலம் ஒட்டக்கூத்தர் வடிவம் கொடுத்துள்ளார். இறையியல் முக்கியத்துவம் இராமாயணத்தின் முக்கிய கதை மாந்தனான இராமன், இந்துக்களின் முதன்மைக் கடவுளரில் ஒருவர். மும்மூர்த்திகளுள் ஒருவரான திருமாலின் 10 அவதாரங்களுள் ஒருவராகப் போற்றி வழிபடப்படுபவர். உலகில் தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் இப் புவியில் தோன்றியதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆண்டு தோறும் பலர் இராமர் பயணம் செய்த பாதையைப் பின்பற்றி யாத்திரை செய்கின்றனர். இந்த இதிகாசம், ஒரு இலக்கியமாக மட்டுமன்றி, இந்து சமயத்துடன் இரண்டறக் கலந்துள்ளது. இதனைப் படிப்பவர்களதும், படிக்கக் கேட்பவர்களதும் பாவங்கள் நீங்கி, இறைவன் அருள் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. மகாபாரதத்தில் இராமாயாணம் மகாபாரத காவியத்தின் வன பருவத்தில் இராமாயண நிகழ்வுகளை மார்க்கண்டேய முனிவர் தருமனுக்கு எடுத்துரைத்தார். தமிழ் இலக்கியங்களில் இராமாயணம் பற்றிய குறிப்பு பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டில் கம்பர், கம்பராமாயணத்தை தமிழில் எழுதுவதற்கு முன்பே, இராமாயணக் கதையைப் பற்றிய பல பழங்கால குறிப்புகள் உள்ளன, இது பொது சகாப்தத்திற்கு முன்பே தமிழ் நிலங்களில் நன்கு அறியப்பட்ட கதை என்பதைக் குறிக்கிறது. இக்கதை பற்றிய குறிப்புகள் அகநானூறு (பொ.ஊ.மு. 1ஆம் நூற்றாண்டு) மற்றும் புறநானூறு (பொ.ஊ.மு. 300 தேதியிட்டது), சிலப்பதிகாரத்தின் இரட்டைக் காப்பியங்கள் (பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டு) மற்றும் மணிமேகலை (காண்டோஸ் 5, 17 மற்றும் 18), மற்றும் குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆண்டாள் மற்றும் நம்மாழ்வார் ஆகியோரின் ஆழ்வார் இலக்கியங்கள் (பொ.ஊ. 5 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவை) ஆகியவற்றில் காணப்படுகின்றன. நாயன்மார்களின் பாடல்களில் கூட இராவணன் மற்றும் சிவபெருமான் மீது அவன் கொண்ட பக்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. இராமாயணமும் இலங்கையும் இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை இன்றைய இலங்கைத் தீவைக் குறிக்கிறது என்பதே பெரும்பாலோரது கருத்து. எனினும், இதை மறுத்து இந்தியாவில் ஒடிசாவில் உள்ள லங்கையை இராமாயணத்தின் இலங்கையாகக் கொள்பவர்களும் உள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுவனவும், இராமர் பாலம் என்று அழைக்கப்படுவனவுமான ஆழம் குறைந்த திட்டுக்களே வானரப் படைகளால் அமைக்கப்பட்ட பாலம் எனச் சிலர் கருதுகின்றனர். அத்துடன் இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர். இராமாயண அவையடக்கம் குலோத்துங்க சோழ அரசனின் ஆணைப்படி கம்பரால் இயற்றப்பட்டது கம்பராமாயணம். இதனைக் கம்பர் வான்மீகி முனிவரின் இராமாயணத்தின்படி எழுதியிருக்கின்றார். அதனை அவர் தனது இராமாயண அவையடக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார் - “தேவபாடையின் இக்கதை செய்தவர் மூவரானவர் தம்முளும் முந்திய நாவினார் உரைப்படி நான் தமிழ்ப் பாவினால் இஃதுணர்த்திய பண்பரோ!“ வடமொழியில் இராம கதையை வகுத்து வான்புகழ் கொண்ட வான்மீகி முனிவரின்படி நான் தமிழ்ப்பாவினால் பாடியிருக்கின்றேன் என்று கம்பர் கூறுகின்றபோதும் - சிற்சில இடங்களில் அழகுசெய்வான் பொருட்டு வான்மீகி இராமாயணத்தில் இல்லாதவற்றையும் எழுதியிருக்கின்றார். இவை தமிழ் மக்களிடையே நிலவிய இராமாயணக் கதைகளில் இருந்தும் சேர்ந்திருப்பதால், கம்பர் மெருகூட்டியவை முழுதும் அவரது கற்பனையே என்று ஊறு விட இயலாது. உதாரணம் : இராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்னர் ஒருவரையொருவர் கண்டு கழிபெரும் காதல் கொண்டதாய் வான்மீகி கூறவில்லை. ஆயினும், கம்பர் தமிழ் மரபினைத் தழுவி, தலைவனும் தலைவியும் திருமணத்தின் முன்னர் ஒருவரையொருவர் கண்டு கழிபெருங் காதல் கொண்டதாய்ச் சொல்கிறார். தமிழியற் கொப்ப அவ்வாறு கூறியமை - முதனூலுக்கு மாறுகொள்ளக் கூறியமை - வழுவாகாத; மரபெனவே கொள்ளப்படுகிறது. இராமாயணம் குறித்து சுவாமி விவேகானந்தர் கருத்து தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். விஷ்ணு புராணம், இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் வரலாற்று உண்மை உள்ளதா என்ற இந்து பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு அளித்த பதிலில் சுவாமி விவேகானந்தர் கூறியதாவது: "ஏதோ ஒரு வரலாற்று உண்மையே புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம்...இராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி, அவை இராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியதே இல்லை. ஆனால் அவை உயர்ந்த கருத்துக்களை மனித இனத்தின் முன் வைப்பதால், அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்களாகக் கருத வேண்டும். எந்தப் புராணமானாலும் சரி, அதிலுள்ள தத்துவத்தை அறிய, அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா கற்பனையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை. மனித இனத்திற்குப் போதிப்பதே புராணங்களின் நோக்கம். இராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு, அவன்மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும்." இதையும் பார்க்க சக்கரவர்த்தித் திருமகன் கம்ப இராமாயணம் தாய்லாந்து இராமாயணம் இராமர் சீதை திராவிட இயக்க ஆதரவாளர் எம்.ஆர்.ராதாவின் இராமாயண எதிர்ப்பு நூல்கள்: ராமாயணத்தை தடை செய் (நூல்) ராமாயணமா?கீமாயணமா? குறிப்புகளும் மேற்கோள்களும் வெளி இணைப்புகள் கம்பராமாயணத்திற்கு முன்பே எழுதப்பட்ட பழைய தமிழ் இராமாயணங்களின் மிச்சம் கம்பராமாயணம் நூல் http://valmikiramayanam.in/?tag=தமிழில்-வால்மீகி-ராமாயணம் ராமாயணத்தை கொண்டாடும் தாய்லாந்தின் 'ராமா' மன்னர்கள் இராமாயணம் காப்பியங்கள் இந்து தொன்மவியல் இந்திய தொன்மவியல் சமசுகிருத இலக்கியம் பண்டைய நூல்கள் கிழக்கின் புனித நூல்கள்
3517
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D
ருக்மிணி தேவி அருண்டேல்
உருக்மிணி தேவி அருண்டேல் (Rukmini Devi Arundale) (பெப்ரவரி 29, 1904 – பெப்ரவரி 24, 1986) மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977 ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார். வாழ்க்கை வரலாறு உருக்மிணி தேவி, 1904 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 29 ஆம் தேதி நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதியருக்கு மகளாக, மதுரையில் பிறந்தார். உருக்மிணியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி, அன்னி பெசண்ட் துவக்கிய பிரம்மஞான சபையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சாஸ்திரி தனது பணி ஒய்வுக்கு பிறகு சென்னையில் உள்ள அடையாரில், தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். தியசோஃபிக்கல் சொசைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். மேலும் ஒரு பாடலும் பாடினார். இதைப் பார்த்த அவர் தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். உருக்மிணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார். 1920 ஆம் ஆண்டில், ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக, அன்னிபெசன்ட் அழைத்தார். அன்னிபெசன்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், உருக்மிணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு, அன்னி பெசண்ட்டின் அனுமதியோடு, உருக்மிணியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் அக்கால கட்டத்தில் உருக்மிணியின் உறவினர்களிடையே ஒரு பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. உருக்மிணி, ஜார்ஜுடன் ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார். அங்கு இசை, சிற்பம், ஆப்பரா, பாலே முதலிய பல கலைகளுக்கு அறிமுகமானார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவிடமும், கிளியோ நார்டி என்பவரிடமும், பாலே நடனம் கற்றுக்கொண்டார். பாவ்லோவா, இந்திய பாரம்பரிய நடனத்தினையும் கற்குமாறு உருக்மிணியை அன்புடன் கேட்டுக்கொண்டார். அதுவரை சதிர் என்ற இந்திய பாரம்பரிய நடனத்தினை உருக்மிணி கண்டதில்லை. தமது கணவர் அருண்டேலைப் பற்றி கூறும் போது, அவரை இந்தியர்களை விடச் சிறந்த இந்தியர் என்றும் இந்திய நாட்டின் மேன்மையில், இந்திய நாட்டில் பிறந்த மகரிசிகளின் ஆன்மீக சக்தியில் நம்பிக்கை கொண்டிருந்தவர் என்றும் பாரதப் பண்பாட்டைப் புரிந்து அதை நேசித்தவர் என்றும் உருக்மிணி தேவி குறிப்பிடுவார். 1933 ஆம் ஆண்டில், கிருஷ்ண அய்யர், சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமியில், ஒரு தேவதாசி சதிர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதைக் காண உருக்மிணியை அழைத்திருந்தார். அந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார். அக்கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தாலும், சதிர் ஆட்டத்தினை கற்க வேண்டும் என்று தீர்மானித்தார். அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மா என்றவரிடம் தனியாகக் கற்க ஆரம்பித்தார். இதற்கு உருக்மிணியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். முதலில் கௌரி அம்மாவிடமும், பிறகு பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் நடனம் பயின்றார் உருக்மிணி. நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, 1935 ஆம் ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, அரங்கேற்றம் செய்தார். பலரும் இவருடைய நடனத்தினைப் பாராட்டினர். உருக்மிணியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது. சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார், உருக்மிணி. இதற்காக, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார். உருக்மிணி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார். 1977 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், உருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார். 1986 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24 ஆம் தேதி, உருக்மிணி இறந்தார். அதன் பிறகு, அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. கலைகளில் பங்கு நாட்டியம் உருக்மிணி, தனது சிறுவயதிலேயே, கலைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார். ஆனால் அந்தக் காலகட்டத்தில் (1900 +) இளம்பெண்கள், பாட்டு மற்றும் நடனம் கற்றுக்கொள்வது சமூகத்தில் ஒரு இழுக்காகக் கருதப்பட்டது. ஏனெனில் பாட்டு மற்றும் நடனம் போன்றவை தேவதாசிகள் என்று அழைக்கப்பட்ட சமூகத்தினரால் மட்டுமே செய்யபட வேண்டியது என்ற எண்ணம் பரவியிருந்தது. அந்நிலையில் சதிர் என்ற ஆட்டத்தின் அழகியல் தன்மையினை உணர்ந்து, அதன் சிறப்பினை அறிந்து, அக்கலை போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது என்று நினைத்தார். தேவதாசிகள் மட்டும் பயின்று, சமூகத்தில் அக்கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது இழுக்கு என்ற நிலையினை மாற்றியதில் பெரும் பங்கு உருக்மிணிக்கு உண்டு. அதுவரை சதிராட்டம் சிருங்கார இரசம் அதிகம் நிறைந்து, பார்வையாளர்களை மகிழ்விப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. உருக்மிணி, அந்த தளத்திலிருந்து மேலெழுந்து, ஆன்மிகத்தன்மையினையும் வெளிப்படுத்தி அக்கலையினை அனைவரும் ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அனுபவிக்கவும் வழிசெய்தார். தேவதாசிகள் சதிராடிய போது, சேலையும், தொள தொளவென்ற கால்சட்டையும், அழகான நகைகள் பலவற்றையும் அணிந்திருந்தனர். மேலும் இவர்கள் ஆடும் போது, பக்க வாத்தியக்காரர்கள் இவர்கள் பின் தொடர்ந்து நின்றோ/நடந்தோ கொண்டிருந்தனர். இந்த நிலையில், நடனத்தின் அழகியல் தன்மை குறைவதாக உருக்மிணி கருதினார். அதில் சில மாற்றங்கள் கொண்டுவந்தார். பக்கவாத்தியக்காரர்களையும், பாடுபவர்களையும் மேடையில் ஒர் இடத்தில் அமருமாறு செய்தார். பாரம்பரிய சிற்பக் கலைகளின் உதவியாலும், இத்தாலிய உடை நிபுணர் மேடம் காஸன் உதவியாலும் புதுவித உடைகளையும், ஒப்பனையும் செய்தார். அதைப் போலவே, மேடையின் பின்புலத்தினை மாற்றி, பிரோஸினியம் (மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் மூடிய) வகையான மேடைதான் நாட்டியத்திற்கு சிறந்தது என்று மேடையினை மாற்றினார். கான்ராட் வோல்ட்ரிங், அலெக்ஸ் எல்மோர், மேரி எல்மோர் போன்ற நாடகக் கலைஞர்களின் உதவியால் மேடையின் ஒளியமைப்பினையும் மாற்றினார். உலகின் சிறந்த அனைத்துக் கலைகளுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்து, அதற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார். வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களுக்கு நடனம் அமைத்தார். நெசவு உருக்மிணி, இந்தியாவின் பாரம்பரியக் கலைகளில் முழுமையான ஆர்வம் கொண்டிருந்தார். 1937 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உதவியோடு, நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலினை, ஊக்குவிக்கும் பொருட்டு, சில நெசவு ஆலைகளை நிறுவினார். பல்வேறு வகைகளிலும், கண்கவர் வண்ணங்களிலும், அழகான வேலைப்பாடுகளுடைய கைத்தறி ஆடைகளை இந்த ஆலை தயாரித்தது. கமலாதேவி சட்டொபத்யாயவின் உதவியோடு, துணிகளுக்கு இயற்கையான சாயங்களை பயன்படுத்தும் முறையினை பயின்றார். அதோடு இல்லாமல் கலம்கரி என்ற துணிகளில், சாயம் கொண்டு வேலைப்பாடு செய்யும் முறைகளையும் ஊக்குவித்தார். மரபுக்கொடை 2016ல், கூகிள் நிறுவனம், உருக்மணி தேவியின் 112 வது அகவையை தமது முதற்பக்கக் கிறுக்கல் படத்தின் வாயிலாக அங்கீகரித்தது. பெற்ற விருதுகள் பத்ம பூசண் விருது காளிதாஸ் சம்மன் விருது சங்கீத நாடக அகாதமி விருது, வழங்கியது: சங்கீத நாடக அகாதமி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கலை விமர்சகர் சுனில் கோத்தாரி, உருக்மிணி தேவி அருண்டேல் பற்றி எழுதிய கட்டுரை உருக்மிணி தேவி பற்றி கலாக்ஷேத்திரா தளத்தில் உள்ள கட்டுரை சென்னை ஆன்லைன் தளத்தில் உள்ள உருக்மிணி தேவி பற்றிய கட்டுரை ரீடிஃப் இணையதளத்தில் உருக்மிணியினைப் பற்றிய கட்டுரை பரதநாட்டியக் கலைஞர்கள் 1904 பிறப்புகள் 1986 இறப்புகள் மதுரை மக்கள் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் காளிதாஸ் சம்மன் விருது பெற்றவர்கள் விலங்குரிமை செயற்பாட்டாளர்கள் தமிழ்நாட்டு நடனக்கலைஞர்கள் இந்தியப் பாரம்பரிய பெண் நடனக் கலைஞர்கள் மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள்
3524
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D%29
இல்லறவியல் (திருக்குறள்)
திருக்குறளின் அறத்துப்பால், பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டுள்ளது. அதிகாரங்கள் இல்லறவியலில் இருபது அதிகாரங்கள் அடங்கியுள்ளன. இல்வாழ்க்கை – மனைவியோடு கூடிவாழ்தல் வாழ்க்கைத் துணைநலம் – மனைவியின் சிறப்பு மக்கட்பேறு – அறிவுள்ள பிள்ளைகளைப் பெறுதலின் சிறப்பு அன்புடைமை – அன்பு செலுத்துதல் விருந்தோம்பல் – விருந்தினரை உபசரிக்கும் முறைமை இனியவைகூறல் – இனிமையான சொற்களையே சொல்லுக செய்ந்நன்றி அறிதல் – பிறர் செய்த நன்மையை என்றும் மறவாமை நடுவு நிலைமை அடக்கமுடைமை – உணர்வுகளை தீயவழியில் செல்லாமல் அடக்குதல் ஒழுக்கமுடைமை – நல்ல நெறிகளை கடைப்பிடித்தல் பிறனில் விழையாமை – பிறனுடைய மனைவியை விரும்பாமை பொறையுடைமை – பொறுமை காத்தல் அழுக்காறாமை – பொறாமை கொள்ளாமை வெஃகாமை – பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமை புறங்கூறாமை – பிறர் பற்றி கோள் சொல்லாமை பயனில சொல்லாமை – பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமை தீவினையச்சம் – பிறருக்கு தீமை செய்ய அஞ்சுதல் ஒப்புரவறிதல் – பொதுவான அறங்களை அறிந்து செய்தல் ஈகை – ஏழைக்கு இரங்குதல் புகழ் – நிலையான புகழ் திருக்குறள் திருக்குறள் ஆய்வு நூல்கள்
3558
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF
வானொலி
வானொலி (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி (அ) ரேடியோ என்பர். இந்த மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. ஒலி அலைகளுடன் மின்காந்த அலைகளைக் கலந்து வானொலி நிலையங்களிலிருக்கும் மிக உயரமான கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள அனுப்பும் கருவிகள் மூலம் வான்வெளியில் மின்காந்த அலைகளாக ஒலிபரப்பப்படுகின்றது. இப்படி ஒலிபரப்பப்பட்ட மின்காந்த அலைகளைப் பயனர்கள் தங்களிடம் உள்ள ஒலி வாங்கிகள் எனப்படும் வானொலிப் பெட்டியின் மூலம் கேட்டு மகிழ்கிறார்கள். வானொலிப் பெட்டிகள், வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட மின் காந்த அலைகளை உள்வாங்கி, அதனூடே கலந்திருக்கும், ஒலி அலைகளை மட்டும் பிரித்தெடுத்து சத்த ஒலிபெருக்கி ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. வானொலி நிலையங்கள் சென்னை வானொலி நிலையம், திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம், திருநெல்வேலி வானொலி நிலையம், கோயம்புத்தூர் வானொலி நிலையம், கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம், மதுரை வானொலி நிலையம், நாகர்கோவில் வானொலி நிலையம், உதகமண்டலம் வானொலி நிலையம், தூத்துக்குடி வானொலி நிலையம், உள்ளன . வானொலி ஒலிபரப்பு தத்துவம் ஒரு வானொலி நிலையத்தில், ரேடியோ அலைகளை உருவாக்கி, பின் அவைகளை ஒலி அலைகளோடு பண்பேற்றம் செய்து , அதன்பின் அவைகளை பரப்புவதற்குப் பயன்படும் சாதனம் பரப்பி (Transmitter) என அழைக்கப்படுகிறது. இது ‘ஹென்ரிச் ஹெர்ட்ஸ்’ என்பவரால் முதல் பரப்பி உருவாக்கப்பட்டது. இது துண்டுகளான ரகசிய சைகைகளை (Morse – Code Signal) மட்டும் பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது. பின் 1909 ஆம் ஆண்டில் முதல் வானொலி தொலைபேசி பரப்பி உருவாக்கப்பட்டது. வகைகள் அ. ஊர்தி அலைப்பரப்பி (Carrier wave transmitter ) ஆ. பண்பேற்றப்பட்ட ஊர்தி அலைப்பரப்பி (Modulated carrier wave transmitter) இ. வானொலி தொலைபேசி பரப்பி (Radio Telephone Transmitter) ஊர்தி அலைப்பரப்பிகள் பழைய வகை பரப்பிகள் ஆகும். அவைகள் துண்டுச் சிக்னல்களை மட்டும் (Morse Signals) பரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. துண்டு சிக்னல்கள் புள்ளிகளையும் (dots) சிறிய கோடுகளையும்( dashes) கொண்டது. ஆனால் வானொலி பரப்பிகள் ரேடியோ அலைகளை பரப்புவதற்கு அதிக அளவில் பயன்படுகின்றன. இவைகள் ஏ.எம் ((AM) வானொலி பரப்பி மற்றும் எஃப் எம் ((FM) வானொலி பரப்பி என பிரிக்கப்படுகின்றன. வீச்சு மாற்றி வானொலி பரப்பி (Am Radio transmitter) இந்த பரப்பி வீச்சுப்பண்பேற்றம் செய்யப்பட்ட ரேடியோ அலைகளைப் பரப்புகின்றன. இது கீழ்கண்ட வெவ்வேறு நிலைகளைப் (Stage) பெற்றுள்ளது. வானொலி அதிர்வெண் அலையாக்கி இது ஊர்தி அலைகளை உற்பத்தி செய்கிறது. வெப்பநிலை மற்றும் மின்னழுத்த வேறுபாடுகள் ஆகியவற்றினால் இது உற்பத்தி செய்யும் அதிர்வெண் மாறாதவாறு வடிவமைக்கப்படுகிறது. அதற்கு கிறிஸ்டல் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இதற்கு கிறிஸ்டல் ஆசிலேட்டர் என்ற பெயரும் உண்டு. பஃபர் ஆம்ப்ளிஃபையர் (Buffer Amplifier) இது ஒரு இம்பிடன்ஸ் பொருந்தும் கிளாஸ் ஏ (Class) ஆர்.எஃப் ஆம்ப்ளிஃபையர் ஆகும். இது ஆர்.எஃப் ஆசிலேட்டர் நேரடியாக அவுட்புட் நிலையுடன் பளு ஆவதைத் தடுக்கிறது. இதனால் ஆர்.எஃப் அதிர்வெண் மாறிலியாகக் (Constant) கிடைக்கிறது. இண்டர் - மீடியேட் பவர் ஆம்ப்ளிஃபையர் இதுவும் ஒரு கிளாஸ் ஏ ஆம்ப்ளிஃபையராகும். இது பஃபர் மற்றும் மாடுலேட்டர் பகுதிகளை இணைக்கிறது. இது ஊர்தி அலையின் திறனைப் பெருக்குகிறது. ஒலிவாங்கி (Microphone) இது ஒரு சக்தி மாற்றும் சாதனம் (Transducer) ஆகும். இது ஒலியை, ஒலி மின்னலைகளாக (Audio Signals)) மாற்றுகிறது. முன்பெருக்கி (Pre Amplifier) முதலில் ஒலி மின்னலைகளில் உள்ள இரைச்சல் வடிகட்டப்பட்டு, பின்பு பெருக்கப்படுகிறது. செவி உணர்வு அதிர்வெண் பெருக்கி ((AF Amplifier) இது ஒலி மின்னலைகளின் திறனைப் பெருக்குகிறது. பெருக்கிய பின், மாடுலேட்டர் மற்றும் ஆர்.எப் பவர் ஆம்ப்ளிஃபையர் பகுதிக்குக் கொடுக்கிறது. மாடுலேட்டர் மற்றும் ஆர்.எஃப் பவர் ஆம்ப்ளிஃபையர் இங்கு ஒலிமின்னலை மற்றும் ஊர்தி அலைகள் வீச்சுப்பண்பேற்றம் (Ampliitude Modulation)) செடீநுயப்படுகிறது. பண்பேற்றப்பட்ட அலைகள், கடைசி நிலை ஆர்.எப் பவர் ஆம்ப்ளிபையரினால் மிக அதிக அளவில் பெருக்கப்பட்டு, பரப்பும் ஆண்டெனாவிற்குத் தரப்படுகிறது. பரப்பும் ஏரியல் (Transmitting Antenna) இது பண்பேற்றப்பட்ட அலைகளை மின்காந்த அலைகளாக ((Electromagnetic waves) மாற்றி, வான்வெளியில் பரப்புகிறது. பண்பலை பரப்பி (FM Transmitter) இந்த பரப்பி அதிர்வெண் பண்பேற்றம் செய்யப்பட்ட ஒலி அலைகளை உற்பத்தி செய்து அவைகளைப் பரப்புகிறது. இது கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளையும் மற்றும் நிலைகளையும் கொண்டுள்ளது. 1. ஹகு பெருக்கி (AF amplifier) 2. பிரி – எம்பசிஸ்( Pre – emphasis) 3. கிறிஸ்டல் அலையாக்கி (Crystal – Oscillator) 4. அதிர்வெண் மடங்காக்கி (Audio processing stage) 5. ரியாக்டன்ஸ் - பண்பேற்றி (Audio processing stage) 6. பவர் பெருக்கி ஒலி – அலை தயாரிப்பு பகுதி (Audio processing stage) இப்பகுதி ஒலி வாங்கியையும், பிரி-எம்பசிஸ் மற்றும் ஹகு பெருக்கியையும் கொண்ட பகுதியாகும். முதலில் ஒலி வாங்கியின் மூலம் பெறப்பட்ட ஒலியானது, மின் அலையாக மாற்றப்பட்டு, பின்பு ஹகு ஆம்பிளிபயரின் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்டு, பிரி – எம்பசிஸ் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. உயர் அதிர்வெண் ஒலி அலைகள் இரைச்சலால் அதிகம் பாதிக்கப்படுவதால், இதனை நீக்க இவ்வலையின் வீச்சானது பெருக்கப்பட்டு மறுப்புப் பண்பேற்ற பகுதிக்கு அனுப்பப்படுகிறது. இதுவே பிரி-எம்பசிஸ் எனப்படும். இவ்வாறு பெருக்கப்பட்ட இவ்விரைச்சல் அலை ரிசீவரில் டி –எம்பசிஸ் என்ற சுற்றின் மூலம் மிக எளிமையாக நீக்கப்பட்டு விடும். மறுப்புப் பண்பேற்ற பகுதி (Reactance Modulator) இப்பகுதி கிறிஸ்டல் அலையாக்கி, அதிர்வெண் மடங்காக்கி மற்றும் மறுப்பு பண்பேற்றப் பகுதிகளைக் கொண்டதாகும். இப்பகுதியில் பயன்படுத்தப்படும் காயில் அல்லது மின்தேக்கியின் ரியாக்டன்ஸ், வருகின்ற ஒலி அலையின் அளவிற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டிற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டிற்கு ஏற்றவாறு பண்பேற்றத்திற்கு தேவையான உயர் அதிர்வெண் ஊர்தி அலைகளை, கிறிஸ்டல் அலையாக்கி உற்பத்தி செய்து தரும். இவ்வூர்தி அலைகளின் அதிர்வெண் மடங்காக்கியின் மூலம் பெருக்கப்பட்டு பவர் பெருக்கி பகுதிக்கு அனுப்பப்படுகிறது. பவர் பெருக்கி மற்றும் ஒலிபரப்பு ஏரியல் பண்பேற்றம் நிகழ்த்தப்பட்ட ஒலிஅலையானது அதன் மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் ஆகிய இரு முறைகளிலும் பெருக்கப்பட்டு ஒலிபரப்பு ஆண்டெனாவிற்கு அனுப்பப்படுகிறது. பரப்பும் ஆண்டெனாவானது RF அலைகளை மின்காந்த அலைகளாக மாற்றி வான்வெளியில் பரப்புகிறது. வானொலியின் பயன்கள் கப்பல்கள் மற்றும் நிலங்களுக்கு இடையில் மோர்ஸ் குறியீட்டைப் பயன்படுத்தி தந்திக்குறிப்புகளை அனுப்புவதற்கு, கடல்வழியே ஆரம்பகாலத்தில் பயன்படுத்தப்பட்டன. 1905 ஆம் ஆண்டில் சுஷிமா போரின் போது ரஷ்ய கப்பற்படையை ஜப்பானிய கடற்படையைக் கைப்பற்றியது அந்த தகவல்கள் ரேடியோ குறியீடு மூலம் அனுப்பப்பட்டன . முதன் முதலாக 1912 ஆம் ஆண்டில் ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்டது . மூழ்கிய கப்பல் மற்றும் அருகிலுள்ள கப்பல்கள் , மற்றும் உயிர் பிழைத்தவர்கள் பட்டியலிட்டு நிலையங்களுக்கு அனுப்பும் தகவல்தொடர்பு சாதனமாக ரேடியோ தந்தி பயன்பட்டது . முதல் உலகப் போரில் இரு தரப்பினரும் இராணுவம் மற்றும் கடற்படைகளுக்கு இடையே உத்தரவுகளையும் தகவல்களையும் அனுப்ப ரேடியோ பயன்படுத்தப்பட்டது; அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட தகவலை ஜெர்மனிக்கு தெரியப்படுத்த ரேடியோ தகவல்தொடர்புகளைப் பயன்பட்டது. , ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ரேடியோ பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு , வானொலி நிகழ்ச்சிகளில் செய்திகளும்,இடம்பெற்றன . 1920 கள் மற்றும் 1930 களில் பரவலாக வானொலியின் பயன்பாடு அதிகரித்தது . போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரேடியோ மற்றும் ராடார் பயன்படுத்தி விமானம் மற்றும் கப்பல்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டது . இன்று, வானொலி பல வகையான வடிவங்களில், வயர்லெஸ் நெட்வொர்க்குகள் மற்றும் அனைத்து வகையான மொபைல் தகவல்தொடர்புகள், ரேடியோ ஒளிபரப்பும் அடங்கும். தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பாக, வணிக ரீதியான வானொலி ஒலி பரப்புகள் செய்தி மற்றும் இசை மட்டுமல்லாமல் , நாடகங்கள், நகைச்சுவை, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பல வகையான பொழுதுபோக்குகள் வழங்கின .1920 களின் பிற்பகுதி முதல் 1950 களின் இடைப்பட்ட காலம் வரை பொதுவாக வானொலியின் பொற்காலம் எனலாம் . வானொலி என்பது வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தி தனித்துவமக விளங்கியது . நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடமுடியாதது. கல்வி சேவை , மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் , போன்றவற்றை வழங்குகின்றன . இன்று உலக முழுவதும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்கள் உள்ளன . தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் வானொலி என்றால் அது மிகையாகாது. ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாடுகின்றனர். 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது. ரேடியோ அலை மூலம் இயங்கும் கட்டுப்பாட்டுக் கருவி ரேடியோ அலைகளை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கருவியை ( Remote control) உருவாக்கி ஏவுகணைகள், படகுகள், கார்கள், மற்றும் விமானங்கள் ஆகியவற்றை தொலைதூரத்தில் இருந்து இயக்க பயன்படுத்தப்பட்டது . பெரிய தொழில்துறையில் கிரேன்களை இயக்க இப்போது, பொதுவாக டிஜிட்டல் ரேடியோ நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன, இவை பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன.1898 இன் மின் கண்காட்சியில் மாடிசன் ஸ்கொயர் கார்டனில், நிகோலா டெஸ்லா வெற்றிகரமாக ஒரு ரேடியோ கட்டுப்பாட்டு மூலம் படகை இயக்கி காண்பித்தார் "கப்பல்கள் அல்லது வாகனங்களை நகர்த்துவதற்கான கட்டுப்பாட்டு முறைமைக்கான கருவி மற்றும் கருவிக்கான" அமெரிக்க காப்புரிமை எண் 613,809 வழங்கப்பட்டது. இவற்றையும் காண்க உலக வானொலி நாள் வானொலி ஆர்வலர் மேற்கோள்கள் இத்தாலியக் கண்டுபிடிப்புகள் ஊடக வடிவங்கள்
3560
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D
அகிலன்
அகிலன் (Akilan) என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (சூன் 27, 1922 - சனவரி 31, 1988) தமிழக எழுத்தாளர் ஆவார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்குப் பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்குப் பல முகங்கள் உண்டு. ஆரம்ப வாழ்க்கை அகிலாண்டத்தின் புனைபெயர் அகிலன் ஆகும். இவர் 1922 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். பெருங்காளூர் என்ற இக்கிராமத்திலேயே அகிலன் தன்னுடைய இளமைப்பருவத்தைக் கழித்தார். அவரது தந்தை வைத்தியலிங்கம் பிள்ளை ஒரு கணக்கு அலுவலர் ஆவார். தன்னுடைய ஒரே மகன் அகிலன் மீது அவர் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராவிதமாக அகிலன் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழக்க நேர்ந்தது. ஆனால் அவரது தாயார் அமிர்தம்மாள் ஓர் அன்பான மனிதராக இருந்தார், ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பாளி என்ற முறையில், தன் மகனை ஒரு எழுத்தாளராக அவர் வடிவமைத்தார். பள்ளி நாட்களில் அகிலன் காந்திய தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், சுதந்திரப் போராட்டத்தில் களம் இறங்க வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தியாகம் செய்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அவர் இரயில்வே அஞ்சல் சேவை பிரிவில் பணியில் சேர்ந்தார், அதன் பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இணைந்து முழுநேர எழுத்தாளராக எழுத்துப் பணியில் ஈடுபட்டார். இவர் எழுதிய கதைகள் பெரும்பாலும் சிறிய பத்திரிகைகளில் தோன்ற தொடங்கின. விருதுகள் அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற வரலாற்று நாவல் 1975-ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஞான பீட விருதை வென்றது. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது 1963-இல் கிடைத்தது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975-ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது. கண்ணான கண்ணன் என்ற இவர் எழுதிய குழந்தை நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சிறப்புப்பரிசு வழங்கி சிறப்பித்தது. அகிலன் 45 தலைப்புகளில் பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர இவருடைய படைப்புகள் ஆங்கிலம், செருமனி, சீனா, மலாய் மற்றும் செக்கோசுலவேகிய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. படைப்புகள் புதினங்கள் நிகழ்காலப் புதினங்கள் அவளுக்கு இன்ப நினைவு எங்கே போகிறோம் ? கொம்புத்தேன் கொள்ளைக்காரன் சித்திரப்பாவை சிநேகிதி துணைவி நெஞ்சின் அலைகள் பால்மரக்காட்டினிலே பாவை விளக்கு (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.) புதுவெள்ளம் பெண் பொன்மலர் வாழ்வெங்கே (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.) வானமா பூமியா வரலாற்றுப் புதினங்கள் வேங்கையின் மைந்தன் (இராசேந்திர சோழனின் கதை) அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவல் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஆயிரமாயிரம் தமிழ் மக்களால் இந்நாவல் படிக்கப்பட்டது. சோழ வம்சத்தின் வரலாற்றை முழுமையாக எடுத்துக் கூறும் நாவலாக இது பார்க்கப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கனேசனால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டு பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. உலகின் மற்ற பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வேங்கையின் மைந்தனாக இருந்த சிறப்புமிக்க இராஜேந்திர சோழனின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிய நுண்ணறிவை அகிலன் இந்நாவலில் வழங்கியுள்ளார் . இராசேந்திர சோழன் இராசராச சோழனின் மகன் ஆவார். அவரது காலம் கலை, இலக்கியம் மற்றும் நிர்வாகத்தில் தமிழர்களின் பேரரசு புகழின் உச்சத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தோனேசியா, இலங்கை, கடாரம் எனப்படும் மலேசியா, இந்தியாவின் தெற்கு மற்றுன் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் ஆகியனவற்றை இவர் வெற்றி கொண்டார். கி.பி 1010 இல் இவர் வாழ்ந்ததாகவும் இவருடைய வம்சம் பல்வேறு வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நாவலானது கடாரத்தின் மீது பெற்ற வெற்றியையும், இந்தியாவின் வடக்குப் பகுதியை வெற்றி கொண்டதற்காக புதிய நகரமான கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரத்தை உருவாக்கியதையும் பிரதிபலிக்கிறது. புதிதாகக் கட்டப்பட்ட கோயிலும் நகரமும் போர் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் பல கட்டடக்கலை வடிவமைப்புகளைக் கொண்டிருந்தது. நாடுகளை வென்றதுடன் அழகிய பெண்களான அருள்மொழி மற்றும் ரோகினி ஆகியோரின் இதயங்களையும் இளங்கோ வேல் கைப்பற்றினார். அவர்கள் காட்டிய அன்பும் பாசமும் அகிலனின் எளிய சக்திவாய்ந்த வார்த்தைகளால் சித்திரிக்கப்பட்டது. இராசேந்திர சோழனின் மூத்த ஆலோசகராக வந்தியத்தேவன் நாவலில் தோன்றி போர் மற்றும் நிர்வாகத்தில் ஆலோசனைகள் வழங்குகிறார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் தொடர்ச்சியாகவும் வேங்கையின் மைந்தன் நாவல் பார்க்கப்படுகிறது. சோழர் காலத்தின்போது நடந்த வரலாற்று உண்மைகளை விவரிப்பதாலும் சரியான மொழியைப் பயன்படுத்தியிருந்ததாலும் இந்த நாவல் இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 'கயல்விழி (இது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. தமிழக அரசின் பரிசு பெற்றது. வெற்றித்திருநகர்- இது விசயநகரப் பேரரசை மையமாகக் கொண்ட வரலாற்று நாவல் ஆகும். கலை கதைக் கலை புதிய விழிப்பு சுயசரிதை எழுத்தும் வாழ்க்கையும் மொழிபெயர்ப்பு நூல்கள் தாகம் - ஆஸ்கார் வைல்ட் சிறுகதை தொகுதிகள் சத்ய ஆவேசம் ஊர்வலம் எரிமலை பசியும் ருசியும் வேலியும் பயிரும் குழந்தை சிரித்தது சக்திவேல் நிலவினிலே ஆண் பெண் மின்னுவதெல்லாம் வழி பிறந்தது சகோதரர் அன்றோ ஒரு வேளைச் சோறு விடுதலை நெல்லூர் அரசி செங்கரும்பு அகிலன் சிறுகதை - அனைத்துக் கதைகளும் அடங்கிய தொகுப்பு சிறுவர் நூல்கள் தங்க நகரம் கண்ணான கண்ணன் நல்ல பையன் பயண நூல்கள் நான்கண்ட ரஷ்யா சோவியத் நாட்டில் மலேசியா சிங்கப்பூரில் அகிலன் கட்டுரை தொகுப்புகள் இளைஞருக்கு! 1962 தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி வெளியீடு நாடு நாம் தலைவர்கள் (கட்டுரைகள், 2000) வெற்றியின் ரகசியங்கள் நாடகம் வாழ்வில் இன்பம் திரைக்கதை வசனம் காசுமரம் ஒலித்தகடு நாடும் நமது பணியும் - அகிலன் உரை'' விருதுகள் ஞானபீட விருது சாகித்திய அகாதமி விருது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Akilan home page More info about the novel in Tamil Akilan book list Tamil அகிலன் படைப்புகள் பற்றிய முக நூல் பக்கம் . தமிழ் எழுத்தாளர்கள் ஞானபீட விருது பெற்றோர் 1922 பிறப்புகள் 1988 இறப்புகள் புதுக்கோட்டை மாவட்ட நபர்கள் தமிழக எழுத்தாளர்கள்
3562
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
கொல்கத்தா
கொல்கத்தா () (முன்பு கல்கத்தா) என்பது முன்னாள் இந்தியாவின் தலைநகரும் தற்போதைய இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகர் கிழக்கு இந்தியாவின் கலாச்சாரம், கல்வி மற்றும் வர்த்தக நடுவமாக விளங்குகிறது. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் உலக அளவில் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகருமாகும். கல்கத்தா நகர், ஆங்கிலேய ஆட்சியின்போது, 1911 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் தலைநகராக விளங்கியது. அக்காலத்தில் கல்வி, அறிவியல், தொழில், பண்பாடு மற்றும் அரசியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கொல்கத்தா நகர், 1954 ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற அரசியல் சார்ந்த வன்முறைகளாலும், சச்சரவுகளினாலும் பொருளாதாரத்தில் பின்னடைவுற்றது. 2000 ஆம் ஆண்டுக்கு பின், சிறிதளவு பொருளாதார மறுமலர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், பிற இந்திய நகரங்களை நோக்குங்கால் கொல்கத்தா இன்னமும் வறுமை, சுற்றுச்சூழல் மாசுறுதல், போக்குவரத்து நெரிசல் ஆகிய நகரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்வதில் பின்தங்கி இருப்பது கண்கூடு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் கொல்கத்தா நகரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இடதுசாரி கட்சிகளின் ஆதிக்கம், தொழிலாளர் சங்கங்களின் வளர்ச்சி ஆகிய பல அரசியல் மற்றும் சமுக மாற்றங்களில் கொல்கத்தா நகர் மற்ற இந்திய நகர்களை விட மாறுபட்டது. பெயர்க்காரணம் கொல்கத்தா என்ற பெயரும், ஆங்கிலேயர் இட்ட கல்கத்தா என்ற பெயரும், காளிகத்தா என்ற பழமையான பெயரில் இருந்து தோன்றியவையே. இப்பகுதியில், ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இருந்த ஒரு சிற்றூரின் பெயர் இதுவாகும். இப்பெயருக்கு பல்வேறு பெயர் காரணங்கள் கூறப்படுகிறது. காளிகத்தா என்ற பெயர் காளிசேத்ரா (, காளி அன்னையின் (இந்து பெண் தெய்வம்) இடம்) என்ற பெயரில் இருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். வங்காள மொழியின் கில்கிலா (தட்டையான நிலம்) என்ற பதத்தில் இருந்தும் இப்பெயர் தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும், கால்வாய் என்ற பொருள் படும் கால் என்ற சொல்லும், தோண்டு என்ற பொருள்படும் கத்தா இணைந்தே இச்சொல் தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கல்கத்தா என்று வழங்கி வந்த இந்நகரின் பெயர், 2001-ஆம் ஆண்டில் வங்காள மொழி உச்சரிப்பான கொல்கத்தா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நகரத்தின் பெயர் வங்காள மொழியினர் எப்பொழுதும் கொல்கத்தா என்றே அழைத்து வந்த போதும், ஆங்கிலேயர் இதனை கல்கத்தா என்று அழைத்தனர். இதனால் இதன் அதிகாரபூர்வப் பெயர் கல்கத்தா என்றே வழங்கி வந்தது. 2001-ஆம் ஆண்டில் கொல்கத்தா என்னும் உள்ளூர்ப் பெயரையே அதிகாரபூர்வப் பெயர் ஆக்கினர். வரலாறு கொல்கத்தா நகருக்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூரில் கிடைத்த அகழ்வாராய்ச்சி சின்னங்கள் மூலம் இப்பகுதியில் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதலே மக்கள் வசித்து வருவது அறியப்படுகிறது. இருப்பினும், நகரின் தெளிவான வரலாற்றை 1690 பின் இப்பகுதிக்கு வந்த பிரித்தானிய கிழக்கிந்திய வாணிப கழகத்தின் வருகைக்கு பின்னே அறிய முடிகிறது. இவ்வணிக கழகத்தின் உயர் அலுவலகராக பணியாற்றிய ஜோப் கேமொக் என்பவர் இந்நகரை நிறுவிய பெருமையை பெறுகிறார். அக்காலத்தில், இப்பகுதியை வங்காள நவாப் சிராஜ்-உத்-தவுலா ஆட்சிப் புரிந்தார். இப்பகுதியில் பாசக் இன மக்களும், வணிகத்தில் சிறந்த செட் இன மக்களும் வசித்து வந்தனர். 17 ஆம் நூற்றண்டின் இறுதியில், ஆங்கிலேயர் இப்பகுதியில் வேற்று நாட்டு குடியேற்ற சக்திகளான நெதர்லாந்து நாட்டவர், போர்த்துகீசியர், மற்றும் பிரெஞ்சு நாட்டவர் ஆகியோருடம் இருந்து தம் நலனை பாதுகாக்க ஒரு கோட்டையைக் கட்ட விரும்பினர். அதன் படி 1702ஆம் ஆண்டு வில்லியம் கோட்டையைக் கட்டினர். இக்கோட்டையே, ஆங்கிலேய படையினரின் குடியிருப்பாகவும், தலைமையிடமாகவும் இருந்தது. பின், கல்கத்தா வங்காள மாகாணத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக கழக படையினரால் தொடந்து ஆங்கிலேயர் தாக்கப்பட, 1756 ஆம் ஆண்டு, வங்காள நவாப் சிராஜ்-உத்-தவுலாவின் எதிர்ப்பையும் மீறி ஆங்கிலேயர் தம் கோட்டையை மேலும் பலமாக்கி, போர்கருவிகளைப் பெருக்கினர். இதனால் கோபமடைந்த நவாப் கோட்டையைத் தாக்கி கைப்பற்றினார். கைப்பற்றப்பட்ட போர் கைதிகளான ஆங்கிலேயர் பலர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை கல்கத்தாவின் கருப்பு நிலவறை என்று குறிப்பிடுவர். அடுத்த ஆண்டே, ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய படைகள் மீண்டும் கோட்டையைக் கைப்பற்றினர். ஆங்கிலேய இந்தியாவின் தலைநகராக கல்கத்தா நகர் அறிவிக்கப்பட்டது. 1864-ஆம் ஆண்டு முதல் கோடைக்கால தலைநகராக மலைப்பாங்கான சிம்லா நகர் அறிவிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் கொல்கத்தா நகர் மாபெரும் வளர்ச்சியினை பெற்றது. மாளிகைகளின் நகர் என்ற பெயரை கொல்கத்தா நகர் பெற்றது. நகரின் அருகில் அமைந்திருந்த சதுப்பு நிலங்களில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு, நிலம் மேம்படுத்தப்பட்டது. கவர்னர்-ஜெனரல் ரிச்சர்டு வெல்லஸ்லி ஆண்ட 1797–1805 ஆண்டுகளில், நகரின் பொது கட்டிடக்கலை மாபெரும் வளர்ச்சியுற்றது. கல்கத்தா நகர் 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேய கிழக்கு இந்திய வணிகக் கழகத்தின் அபின் போதை பொருள் வாணிபத்தின் தலைமையிடமாக இருந்தது. கல்கத்தாவின் புறநகர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட அபின் கல்கத்தா நகரில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் கல்கத்தா நகர் இரண்டாக பிரிக்கப்பட்டது; ஆங்கிலேயர் வாழும் வெள்ளையர் நகர், இந்தியர் வாழும் கறுப்பர் நகர். அந்நூற்றாண்டின் நடுக்காலத்தில் கல்கத்தா நகர் பெரும் பெருளாதார வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக நூற்பு தொழிலிலும், சணல் சார்ந்த தொழில் துறைகளிலும் பெரும் வளர்ச்சி பெற்றது. புதிய இரயில் பாதைகள், தொலை தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆங்கிலேய மற்றும் இந்திய பண்பாடு தொடர்பினால் உயர் வருமானம் கொண்ட இந்தியர்கள் உருவாகினர். இவர்களை பாபு என்று மக்கள் அழைத்தனர். 19-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் நிகழ்ந்த சமூக-பண்பாட்டு மாற்றத்தினை வங்காள மறுமலர்ச்சி என்றே வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 1883-ஆம் ஆண்டு, சுந்தர்நாத் பானர்ஜி தலைமையில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கு, இந்தியாவில் தேசிய அளவில் நடைபெற்ற முதல் கருத்தரங்கு ஆகும். படிப்படியாக கல்கத்தா நகர் இந்திய விடுதலை போராட்டத்தின் மையமாக மாறியது. குறிப்பாக வன்முறை வழியே விடுதலை அடைய விரும்புவோரின் மையமாக இருந்தது. 1905-ஆம் ஆண்டு ஆங்கில அரசு மதத்தைக் காரணமாக கொண்டு நடத்திய வங்காள பிரிவினை, மக்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. ஒத்துழையாமை இயக்கம், வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணித்தல், சுதேசி இயக்கம் ஆகியவை வலிமை பெற்றன. இத்தகைய மக்கள் எதிர்ப்பினாலும், நகரின் அமைவிடத்தினாலும், 1911-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு தன் தலைநகரை கல்கத்தா நகரில் இருந்து புது தில்லி நகருக்கு மாற்றியது. இரண்டாம் உலகப் போரில் கல்கத்தா நகரும் புறநகர் பகுதிகளும், துறைமுகமும் ஜப்பானிய தரைப்படையால் தாக்கப்பட்டன. 20 டிசம்பர் 1942 முதல், 24 டிசம்பர் 1944 வரை கல்கத்தா நகர் பலமுறை தாக்கப்பட்டது. இப்போரில் இலட்சக்கணக்கானோர் பஞ்சத்தினால் உயிரிழந்தனர். 1946-ஆம் ஆண்டு, இசுலாமிய நாட்டை உருவாக்கும் கோரிக்கை வலு பெற்றதன் விளைவாக உருவான மதக்கலவரத்தில் ஏறத்தாழ 4,000 மக்கள் உயிரிழந்தனர். இந்திய பிரிவினையின் போது மூண்ட வன்முறையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான இசுலாமியர் சமூகம் கிழக்கு பாக்கிஸ்தானுக்கு சென்றனர். 1960-ஆம் ஆண்டு முதல் 1980 ஆண்டு வரை மாநிலத்தில் வலிமை பெற்ற பொதுவுடமை கொள்கையால் தொழில் நலிவடைந்தது. எண்ணற்ற கதவடைப்பு போராட்டங்களாலும், தொழிலாளர் பிரச்சனைகளாலும்,நக்சலைட்டுகள் வலுப் பெற்றதாலும் நகரின் பொது நிருவாகம் பாதிப்படைந்ததோடு , பொருளாதார தேக்கம் ஏற்பட்டது. 1971-ஆம் ஆண்டு, இந்தியா, பாக்கிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான அகதிகள் கொல்கத்தா நகரில் தஞ்சம் புகுந்ததன் விளைவாக நகரின் கட்டமைப்பு பெரும் நெருக்கடிக்குள்ளானது. 1980 களில்,மும்பை நகர் கொல்கத்தா நகரை விட கூடுதல் மக்கள் தொகை கொண்ட நகரானது. இன்றும் கொல்கத்தா நகர் இந்திய பொதுவுடமை கட்சியின் வலிமையான தலைமையிடமாக உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தை பொதுவுடமை கட்சி சுமார் 30 ஆண்டுகளாக ஆண்டு வருவது குறிப்பிடத்தக்கது இந்தியாவின் மற்ற மாநிலங்களின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு மேற்கு வங்க அரசு தற்காலத்தில் தொழில் வளர்ச்சிக்கு உதவ முனைந்துள்ளது. புவியமைப்பு கொல்கத்தா கிழக்கு இந்தியாவில் உள்ள கங்கை முகத்துவாரம் அருகில் அமைந்துள்ளது. ஊக்லி ஆற்றின் கரையில் தெற்கு-வடக்காக நீள வாக்கில் அமைந்துள்ள இந்நகரின் பெரும்பாலான நிலம் முற்காலத்தில் சதுப்பு நிலமாகவும், ஈரநிலமாகவும் இருந்தவை. மக்கள் வளர்ச்சிக்காக அவை பின்னர் மேம்படுத்தப்பட்டவை. மீதம் இருக்கும் இவ்வகை சதுப்பு நிலம் சுற்றுப்புறச் சூழலை கருத்தில் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. கங்கை சமவெளியின் பல்வேறு பகுதிகளைப் போன்றே இப்பகுதியும் மிகுதியான அளவில் வளமான வண்டல் மண்ணையும், களி மண்ணையும் கொண்டது. இந்திய புவியியல் ஆய்வாளர்களின் கூற்றின்படி, இந்நகரின் அமைவிடம் மூன்றாவது நில நடுக்க அழிவுப் பகுதியில் உள்ளமையால் இப்பகுதி நில நடுக்கங்களால் பாதிப்படைய வாய்ப்புள்ளது. மேலும், இப்பகுதி அயனமண்டல புயல்களால் மிகவும் பாதிப்படையக் கூடிய பகுதி என்று ஐக்கிய நாடுகள் அவை முன்னேற்றத் திட்டத்தின் அறிக்கை கூறுகிறது. கொல்கத்தா கடல் மட்டத்திலிருந்து 1.5 மீட்டரில் (5 அடி) இருந்து 9 மீட்டர் (30 அடி) வரையான உயரங்களுக்கிடையே அமைந்துள்ளது. இது ஊக்லி ஆற்றின் கரையோரமாக நீணு வளர்ச்சியடைந்து உள்ளது. இந்த நகரம் இருக்கும் இடத்தின் பெரும்பகுதி முன்னர் ஈரநிலமாகக் காணப்பட்டது. காலப்போக்கில், அதிகரித்து வந்த மக்கள் தொகையை அடக்குவதற்காக இந்நிலங்கள் படிப்படியாக இவ்வீரநிலங்கள் நிரப்பப்ட்டன. இவ்வாறு நிரப்பப்படாமல் மீந்திருந்த ஈரநிலம், இப்போது கிழக்குக் கல்கத்தா ஈரநிலம் என்று அழைக்கப்படுகின்றது. பெரும்பாலான இந்திய கங்கைச் சமவெளிப் போலவே இங்கு முக்கியமாகக் காணப்படும் மண்வகை வண்டல் ஆகும். களிமண், பல அளவுகளிலான மணல், சிறு கற்கள் என்பன நகரத்தின் அடியில் காணப்படுகின்றன. இப்படிவு இரண்டு களிமண் படைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இவற்றுள் மிகக் கீழுள்ள படை நிலமட்டத்தில் இருந்து 250 மீட்டருக்கும், 650 மீட்டருக்கும் இடையில் அமைந்துள்ளது. மேலுள்ள படை 10 மீட்டருக்கும், 40 மீட்டருக்கும் இடையிலான தடிப்புக் கொண்டதாக உள்ளது. இந்தியத் தர நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த நகரம், புவியதிர்வு வலயம் 3க்குள் அடங்குகிறது. நகர அமைப்பு கொல்கத்தா நகர், கொல்கத்தா மாநகராட்சி மன்றத்தின் (KMC), ஆட்சி எல்லைக்குள் சுமார் 185 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. முறையான நகர எல்லை இவ்வளவாக இருப்பினும், நகரின் புறநகர் பகுதி மிகப்பெரியது. புற நகர் பகுதிகளையும் சேர்த்து கணக்கிட்டால் கொல்கத்தா நகர பரப்பளவு குறைந்தது 1750 சதுர கிலோமீட்டர் ஆகும். இப்பரப்பளவில் 72 நகரங்களும் 527 பேரூர்களும் அடங்கும். நகர் பொதுவாக வடக்குப் பகுதி, நடுப் பகுதி, தெற்குப் பகுதி என மூன்றாக பிரிக்கப்படுகிறது. வடக்கு கொல்கத்தா பகுதி நகரின் பழமையான பகுதியாகும். இப்பகுதியில் உள்ள பல கட்டிடங்களில், 19-ஆவது நூற்றாண்டு கட்டிடக்கலை வெளிப்படுவதைக் காணலாம். மேலும் பல தெருக்கள் குறுகிய சந்துகளாக காணப்படுகிறது. தெற்கு கொல்கத்தா இந்தியா விடுதலை அடைந்த பின் உருவாக்கப்பட்ட பகுதியாகும். இப்பகுதி பெரும்பாலும் வசதி படைத்த செல்வர்களின் பகுதியாக காணப்படுகிறது. நடு கொல்கத்தா பெரும்பாலும் வணிகப் பகுதியாக திகழ்கிறது. அரசு அலுவலகங்கள், தலைமை செயலகம் , தலைமை அஞ்சல் அலுவலகம் , கல்கத்தா உயர் நீதிமனறம், லால் பசார் காவலர் தலைமையகம் மற்றும் பல தனியார் அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன. மெய்டன் திடல் இப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய திறந்த வெளித் திடல் ஆகும். இத்திடலில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும், பொது நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. கிழக்கு மேற்குத்திசையில், இந்நகரம் மிக ஒடுக்கமானது. இது மேற்கே ஊக்ளி ஆற்றில் இருந்து தொடங்கி கிழக்கே கிழக்கத்திய மெட்ரோபாலிட்டன் பைபாசு வரை சுமார் 5 கிமீ நீளம் உள்ளதாகக் காணப்படுகின்றது. இந்த நகரம், வடக்குக் கொல்கத்தா, நடுக் கல்கத்தா, தெற்குக் கல்கத்தா என மூன்று பிரிவுகளாக உள்ளது. வடக்குக் கல்கத்தாப் பகுதியே நகரின் மிகப் பழைய பகுதியாகும். இங்கே 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்களையும் ஒடுங்கிய தெருக்களையும் காண முடியும். தெற்குக் கொல்கத்தா பெரும்பாலும் விடுதலைக்குப் பிற்பட்ட பகுதிகளைக் கொண்டதாகும். இங்கே பாலிகுங்னே, அலிப்பூர், புதிய அலிப்பூர் போன்ற உயர் மட்டத்தினர் வாழும் பகுதிகள் உள்ளன. நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உப்பு ஏரி நகரம் எனப்படும் பிதான் நகர்ப் பகுதி திட்டமிட்டுக் கட்டப்பட்ட பகுதியாகும். காலநிலை கொல்கத்தா மாநகர் அயன மண்டல காலநிலையான, வறண்ட மற்றும் ஈரமான பருவங்களைக் கொண்டுள்ளது. ஆண்டின் சராசரி வெப்பம் 26.8 C ஆகும்; மாத சராசரி வெப்ப நெடுக்கம் சுமார் 19 C முதல் 30 C வரை ஆக உள்ளது கோடைக் காலம் (மே மற்றும் ஜூன் மாதங்கள்) சுமார் 30 இல் இருந்து 40 °C (104 °F) வரை வெப்பமாகவும், ஈரப்பதம் மிகுந்ததாகவும் உணரப்படுகிறது . டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உணரப்படும் குளிர்காலத்தில், வெப்ப நிலை 9 °C – 11 °C (54 °F – 57 °F) வரை குறையக் கூடும். இந்நகரில் பதியப் பட்டுள்ள உயர் வெப்பம் 43.9 C ஆகும். குறைந்த வெப்பநிலை 5 C ஆகும். இப்பகுதி தென்மேற்கு பருவக்காற்றினால் பருவமழையைப் பெறுகிறது. ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை பெய்யும் பருவமழையின் அளவு சராசரியாக 1582 MM ஆகும். ஆகஸ்டு மாதம் அதிகமான அளவு (306 MM) மழை பெய்கிறது. சுற்றுப்புறத் தூய்மைக் கேடு கொல்கத்தா மாநகரின் முக்கிய பிரச்சனையாகும். மற்ற இந்திய நகரங்களை விட கொல்கத்தா நகர் வளி மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வான்மங்கலாலும், பனிப்புகையாலும் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் வளியில் உள்ள நச்சுப் பொருள்களால் மக்கள் மூச்சு சார்ந்த நோய்களாலும், நுரையீரல் புற்றுநோயாலும், காச நோயாலும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர். பொருளாதாரம் கொல்கத்தா, கிழக்கு இந்தியாவின் வணிக, நிதித் துறைகளின் மையமாக திகழ்கிறது. கல்கத்தா பங்கு சந்தை நாட்டின் இரண்டாவது பெரிய பங்கு மாற்றகம் ஆகும் இந்நகரின் துறைமுகங்கள் வணிக நோக்கிலும், இராணுவ நோக்கிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய பன்னாட்டு வானூர்தி நிலையம் கொல்கத்தா நகரிலேயே அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் பொருளாதாரம், அறிவியல், கலை என எல்லா துறைகளிலும் முன்னணியில் இருந்த கொல்கத்தா நகர் இந்திய விடுதலைக்கு பின் பல்வேறு அரசியல் மற்றும் சமூக காரணங்களால் பின்னடைவுற்றது. பல தொழிலகங்கள் மூடப்பட்டன. பல தொழில்கள் வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டன. 1990-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையால் தொழில்கள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இருப்பினும் நகரின் 40% தொழிலாளர்கள் தாமே தொடங்கிய தொழில்களையே நம்பி உள்ளனர். ஆதலால் பொருளாதார மாற்றங்கள் எளிதில் மக்களை சென்றடைவதில்லை. எடுத்துக்காட்டுக்கு, கொல்கத்தா நகரின் தெரு வணிகர்களின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 8,772 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அண்மைய காலத்தில் கொல்கத்தா நகரின் பொருளாதார வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இத்துறை ஆண்டுக்கு 70% வளர்ச்சி எனற வேகத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் கட்டுமானத் துறையிலும் கடந்த சில ஆண்டுகளாக பெரும் வளர்ச்சி கிட்டியிருக்கிறது. இந்தியாவின் பல சிறந்த வணிக நிறுவனங்கள் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டவை. அவற்றுள் பாட்டா காலணி நிறுவனம், பிர்லா குழுமம், நிலக்கரி இந்தியா லிமிடெட், தாமோதர் வாலி குழுமம், யுனைட்டட் வங்கி, யுஸிஓ வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அண்மைய காலத்தில் இந்திய அரசு பல்வேறு பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை இப்பகுதியில் நிறைவேற்ற முனைகிறது. இன்றியமையா சேவைகள் மற்றும் ஊடகங்கள் கொல்கத்தா மாநகராட்சி கழகம் நகரின் குடிநீர் தேவையை ஊக்லி ஆற்றின் மூலம் நிறைவு செய்கிறது. மாநகரின் 2500  டன் கழிவு பொருள்கள் தினமும் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள தாபா என்ற கழிவு நிலத்தில் கொட்டப்படுகிறது. இககழிவுப் பொருள்களை இயற்கை உரமாக பயன்படுத்த வேளாளர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். நகரின் பல பகுதிகளில் கழிவு நீர் வசதிகள் இன்றியும், நல்ல கழிப்பிடங்கள் இன்றியும் உள்ளன. நகர் பகுதியில், மின்சார உற்பத்தி, பகிர்ந்தளிப்பு தனியார் மயமாக்கப்பட்டு, கல்கத்தா மின்சார பகிர்ந்தளிப்பு குழுமத்தினால் நிருவகிக்கப் படுகிறது. புறநகர் பகுதிகளில் மேற்கு வங்காள மாநில மின்சாரம் வாரியம் மின்சாரத்தை அளிக்கிறது. தொடர்ச்சியான மின்சார தடங்கல் நகரின் பெரும் பிரச்சனையாக முந்தைய காலங்களில் இருந்து வந்தாலும் அண்மைய காலத்தில் நிலைமை சீராகி உள்ளது. நகரில் சுமார் 20 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 7 ,500 தீயணைப்பு, மீட்புப்பணிகளில் இவை பணியாற்றுகின்றன. அரசு தகவல் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும், தனியார் நிறுவனங்களான ஹட்ச், ஏர்டெல், ரிலையன்ஸ், ஏர்செல் மற்றும் டாட்டா இண்டிகாம் ஆகியனவும் தொலைபேசி, செல்பேசி சேவைகளை மக்களுக்கு அளிக்கின்றன. மேம்படுத்தப்பட்ட GSM, CDMA சேவைகளும் இந்நகரத்தில் மக்களுக்கு கிடைக்கிறது. அகலப்பட்டை இணைய இணைப்பு சேவையை பிஎஸ்என்எல், ஏர்டெல் ,ரிலையன்ஸ் மற்றும் டாட்டா இண்டிகாம் ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன. வங்காள மொழி நாளிதழ்களான ஆனந்தபசார் பத்திரிக்கா, ஆஜ்கல், பர்தாமன், கனசக்தி ஆகியவை விரும்பி படிக்கப் படுகின்றன. பல வட்டார, தேசிய ஆங்கில நாளிதழ்களும் கொல்கத்தா நகரில் வெளிவருகின்றன. அவற்றுள் தி டெலிகிராப் , தி ஸ்டேட்ஸ்மேன் , எசியான் எய்ஜ், இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆகியவை குறிப்பிடத்தக்க அளவு விற்பனையாகின்றன. அகில இந்திய வானொலி, மேற்கு வங்காள மாநில வானொலி, பல தனியார் வானொலி சேவையாளர்கள் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றனர். இது தவிர பல தனியார் பண்பலைவரிசைகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமும் பல தனியார் கம்பி வட தொலைக்காட்சி நிறுவனங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. போக்குவரத்து பொது போக்குவரத்து வசதிகளை கொல்கத்தா புறநகர் இருப்புப்பாதை , கொல்கத்தா சுரங்க இரயில், தண்டுப் பேருந்து (TRAM), பேருந்துகள் ஆகியவை அளிக்கின்றன . புறநகர் போக்குவரத்துப் பிணையம் தொலைதூர புறநகர் வரை நீண்டுள்ளது. கொல்கத்தா சுரங்க இரயில் வலையமைப்பு, இந்திய இரயில்வேயினால் நடத்தப்படும் பழமையான சுரங்க இரயில் ஆகும். இது ஊக்லி ஆற்றுக்கு இணையாக தென்-வடக்காக நகரத்தின் ஊடே 16.45 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. பேருந்துகள் நகரின் விரும்பத்தக்க போக்குவரத்து முறையாக அமைந்துள்ளன. இவை அரசாலும், தனியாராலும் இயக்கப்படுகின்றன. இந்திய நகர்களில் கொல்கத்தா நகரில் மட்டுமே தண்டுப் பேருந்துகள் புழக்கத்தில் உள்ளன. இவை கல்கத்தா தண்டுப் பேருந்து நிறுவனத்தால் பராமரிக்கப்ப் படுகின்றன. மிக மெதுவாக இயங்கும் தண்டுப் பேருந்துகள் நகரில் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன. மழைக் காலத்தில் தேங்கும் மழைநீரால் கொல்கத்தா நகரின் பொது போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கை. நகரின் பல பகுதிகளில் மிதி இழுவண்டிகளையும், கையால் இழுக்கப்படும் இழுவண்டிகளையும் காணலாம். மற்ற இந்திய நகர்களை ஒப்பிடும்போது கொல்கத்தா நகரில் சொந்த வண்டிகளை வைத்திருபோர் எண்ணிக்கை மிகக் குறைவு. பல வகையான பொது போக்குவரத்து வசதிகள் அமைந்திருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்நிலைமை மாறி வருகிறது; 2002 ஆம் ஆண்டு தகவலின்படி கடந்த ஏழு ஆண்டுகளில் தனியார் வண்டிப் பதிவு 44% உயர்ந்துள்ளது. கொல்கத்தா நகர், அவுரா நிலையம் மற்றும் சீல்டா நிலையம் என்ற இரண்டு தொலைதூர இருப்புப்பாதை நிலையங்களை கொண்டுள்ளது. கொல்கத்தா என்று பெயரிடப்பட்டுள்ள மூன்றாவது தொலைதூர இரயில் நிலையம் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . இந்நகர் இந்திய இரயில்வேயின் இரண்டு பிரிவுகளுக்கு தலைமையிடமாக அமைந்துள்ளது . அவையாவன கிழக்கு இரயில்வே மற்றும் தென் கிழக்கு இரயில்வே. நகரின் ஒரே ஒரு வானூர்தி நிலையமான, நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள டம் டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வானூர்திகள் புறப்படுகின்றன. கொல்கத்தா நகர் கிழக்கு இந்தியாவின் பெரிய ஆற்று துறைமுக நகராகும்.கொல்கத்தா துறைமுக பொறுப்பாட்சி கொல்கத்தா கப்பல் துறையையும், ஹால்டியா கப்பல துறையையும் நிருவகிக்கிறது. கொல்கத்தா நகருக்கும் அதன் இரட்டை நகரமான அவுரா நகருக்கும் இடையே பயணப்படகு சேவைகளும் உள்ளன. மக்கள் 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி கொல்கத்தாவின் மக்கள்தொகை 4,580,544 ஆக இருந்தது. சூழவுள்ள நகரப்பகுதிகளையும் சேர்த்து இது 13,216,546 ஆகும். 2009 ஆம் ஆண்டுக்கான கொல்கத்தா நகரத்தின் மக்கள்தொகை 5,080,519 ஆக இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். பால் விகிதம் 928 பெண்களுக்கு 1000 ஆண்கள் ஆக உள்ளது. இது நாட்டின் சராசரி விகிதத்திலும் குறைவானதாகும். நாட்டுப்புறங்களில் இருந்து வரும் பல ஆண்கள் தமது குடும்பத்தினரை ஊரிலேயே விட்டுவிட்டு நகரில் தனியாக வாழ்வதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கொல்கத்தாவின் எழுத்தறிவு வீதம் 81% ஆகும். இது நாட்டின் சராசரியிலும் 1% அதிகமானது. கொல்கத்தா மாநகரக் கார்ப்பரேசன் பகுதியின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 4.1%. இது இந்தியாவிலுள்ள மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களோடு ஒப்பிடும்போது குறைவானது. வங்காளிகள் 55% மக்கள் தொகையுடன் பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மார்வாரிகளும், பீகாரிகளும் 20% மக்கள்தொகையைக் கொண்டோராக உள்ளனர். கொல்கத்தாவில் வாழும் சிறிய சிறுபான்மையினரில், சீனர், தமிழர், நேபாளிகள், ஒரியர், தெலுங்கர், அசாமியர், குசராத்தியர், ஆங்கிலோ இந்தியர், ஆர்மேனியர், திபேத்தியர், மராட்டியர், பஞ்சாபியர், பார்சிகள் என்போர் அடங்குவர். வங்காளி, இந்தி, உருது, ஆங்கிலம், ஒரியா, போச்பூரி ஆகிய மொழிகள் கொல்கத்தாவில் பேசப்படும் முக்கியமான மொழிகள். மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி இங்கு வாழ்வோரில் 80 சதவீதமானோர் இந்துக்கள் ஆவர். 20.27% முசுலிம்களும், 0.88%% கிறித்தவரும், 0.46% சமணரும் இங்கே வாழ்கின்றனர். சீக்கியர், பௌத்தர், யூதர், சோரோவாசுட்டிரியர் என்போரும் குறைந்த அளவில் உள்ளனர். 1.5 மில்லியன் மக்கள் அல்லது மொத்த மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியைனர் 2,011 பதிவுசெய்யப்பட்ட சேரிப் பகுதிகளிலும், 3,500 பதிவு செய்யப்படாத சேரிகளிலும் வாழ்கின்றனர். பண்பாடு கொல்கத்தா நீண்டகாலமாகவே அதன் இலக்கியம், கலை மற்றும் புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இந்தியாவின் முன்னைய தலைநகரமான இது நவீன இந்திய இலக்கியம், கலைச் சிந்தனைகள் ஆகியவற்றின் தோற்ற இடமாக விளங்குகின்றது. கொல்கத்தாவின் மக்கள், கலைகளையும் இலக்கியத்தையும் ரசிப்பதில் சிறப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதுடன், புதிய திறமைகளை வரவேற்கும் அவர்களது பாரம்பரியம் கொல்கத்தாவை ஆக்கத்திறன் ஆற்றல் கொண்ட ஒரு நகரமாக ஆக்குகிறது. இக் காரணங்களால் கொல்கத்தா இந்தியாவில் பண்பாட்டுத் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. பலமான சமுதாய உணர்வுகொண்ட பரா எனப்படும் அயல்கள் கொல்கத்தாவின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆகும். பொதுவாக, இத்தகைய ஒவ்வொரு அயலும், ஒரு சமூகக் கழகத்தையும், அதற்கான ஒரு இடம், சில சமயங்களில் ஒரு விளையாட்டிடம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும். கொல்கத்தா மக்கள் அரட்டைகளில் ஈடுபடுவதைப் பழக்கமாகக் கொண்டவர்கள். இவை அறிவு பூர்வமான உரையாடல்களாக அமைவது உண்டு. இந்நகரத்தில் அரசியல் தொடர்பான சுவர் எழுத்துக்கள் வழமையாகக் காணப்படும் ஒரு அம்சம் ஆகும். இவை வெளிப்படையான கண்டனங்கள் முதல், கேலிப் படங்கள், பரப்புரைகள் வரை பலவகையாகக் காணபடுகின்றன. கொல்கத்தாவில், கோதிக், பரோக், ரோமனிய, கீழைத்தேச, இந்திய-இசுலாமிய கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்ட கொண்ட பல கட்டிடங்கள் உள்ளன. புடியேற்றவாதக் காலத்தைச் சேர்ந்த பல கட்டிடங்கள் நல்லநிலையில் பேணப்பட்டு வருவதுடன் இவற்றுட் பல பாரம்பரியச் சின்னங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் பல பழங்காலக் கட்டிடங்கள் பல்வேறு மட்டங்களில் அழியும் நிலையில் காணப்படுகின்றன. 1814 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இங்குள்ள இந்திய அருங்காட்சியகம் ஆசியாவிலேயே பழமையான அருங்காட்சியகம் ஆகும். இது இந்தியாவின் இயற்கை வரலாறு, கலைகள் என்னும் துறைகளைச் சார்ந்த ஏராளமான காட்சிப் பொருட்களைக் கொண்டுள்ளது. கொல்கத்தாவின் முக்கிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகிய விக்டோரியா நினைவகம், நகரின் வரலாறு தொடர்பான ஒரு அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது. இங்குள்ள இந்தியத் தேசிய நூலகமும், நாட்டின் முன்னணிப் பொது நூலகங்களில் ஒன்றாக விளங்குகின்றது. கவின் கலைகள் அக்கடமியும், பிற ஓவியக் கூடங்களும், அடிக்கடி ஓவியக் கண்காட்சிகளை நடத்துகின்றன. கொல்கத்தாவில் "சாத்ரா" என அழைக்கப்படும் ஒருவகையான பாணியில் அமைந்த நாடகப் பாரம்பரியம் வழக்கில் உள்ளது. வங்காள மொழித் திரைப்படங்களையும், இந்தித் திரைப்படங்களையும் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இங்குள்ள டாலிகஞ்ச் என்னும் இடமே வங்காளத் திரைப்படத்தயாரிப்பின் மையமாகத் திகழ்கின்றது. இதனால் வங்காளத் திரைப்படத்துறையை "டாலிவூட்" எனவும் அழைப்பதுண்டு. நீண்ட காலப் பாரம்பரியத்தைக் கொண்ட இத் திரைப்படத்துறை பல புகழ் பெற்ற இயக்குனர்களைத் திரைப்பட உலகுக்கு அளித்துள்ளது. இவர்களுள் பழைய தலைமுறையைச் சேர்ந்த சத்யசித் ரே, மிருணாள் சென், தப்பன் சின்கா, ரித்விக் காட்டக் போன்றவர்களும், தற்காலத்தைச் சேர்ந்த அபர்ணா சென், ரித்துப்பார்னோ கோஷ் ஆகியோரும் அடங்குவர். கொல்கத்தாவின் உணவு வகைகளுள் முக்கியமானவை சோறும், மீன் கறியும் ஆகும். ரசகுல்லா, சந்தேசு, இனிப்புத் தயிர் என்னும் இனிப்பு வகைகளுக்கும் கொல்கத்தா பெயர் பெற்றது. கொல்கத்தாவில் வங்காளிகள் மிகவும் விரும்பும் மீனை அடிப்படையாக் கொண்ட பலவையான உணவு வகைகள் கிடைக்கின்றன. மேற்கோள்கள் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் முன்னாள் தேசிய தலைநகரங்கள் மேற்கு வங்காளத்திலுள்ள மாநகரங்கள் இந்தியாவின் மெட்ரோ நகரங்கள்
3563
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
புகழ் பெற்ற இலங்கையர்கள்
இலங்கையின் சனாதிபதிகள் வில்லியம் கோபல்லாவ ஜே.ஆர் ஜெயவர்த்தனா ரணசிங்க பிரேமதாசா டி.பி.விஜயதுங்க சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமர்கள் டி.எஸ்.சேனநாயக்கா 1948-1952 டட்லி சேனாநாயக்க 1952-1953, 1960-1960, 1965-1970 ஜொன் கொதலாவல 1953-1956 எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1956-1959 டப்ளியூ. தகநாயக்க 1959-1960 சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960-1965, 1970-1977, 1994-2000 ஜே.ஆர் ஜெயவர்த்தனா 1977-1978 ரணசிங்க பிரேமதாசா 1978-1989 டி.பி.விஜயதுங்க 1989-1993 ரணில் விக்கிரமசிங்க 1993-1994, 2001-2004 சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க 1994- இரத்னசிறி விக்கிரமநாயக்கா 2000-2001 மகிந்த ராஜபக்ச 2004- இலங்கையின் அரசியல்வாதிகள் சர். பொன். இராமநாதன் சர். பொன். அருணாசலம் பிலிப் குணவர்த்தனா என். எம். பெரேரா கொல்வின் ஆர். டி சில்வா பீட்டர் கெனமன் ஜீ. ஜீ. பொன்னம்பலம் எஸ். ஜே. வி. செல்வநாயகம் சௌமியமூர்த்தி தொண்டமான் அ. அமிர்தலிங்கம் ரோஹண விஜேவீர லக்ஷ்மன் கதிர்காமர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையின் தேசிய வீரர்கள் ஆறுமுக நாவலர் அநகாரிக்க தர்மபால இலங்கையின் விளையாட்டு வீரர்கள் டங்கன் வைட் துலிப் மெண்டிஸ் அர்ஜூன றணதுங்க அரவிந்த டி சில்வா சமிந்த வாஸ் முத்தையா முரளிதரன் மஹேல ஜயவர்த்தன சனத் ஜெயசூரிய சுசந்திகா ஜயசிங்க தமயந்தி தர்சா சிந்தன விதானகே இலங்கைக் கலைஞர்கள் விஜய குமாரதுங்க ஜீவன் குமாரதுங்க காமினி பொன்சேகா மாலினி பொன்சேகா பண்டித அமரதேவ ருக்மணிதேவி இலங்கை எழுத்தாளர்கள் இலங்கையின் அறிஞர்கள் சைமன் காசிச்செட்டி பரணவிதான ஆனந்த குமாரசுவாமி சுவாமி விபுலாநந்தர் சி. வை. தாமோதரம்பிள்ளை
3564
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
சைமன் காசிச்செட்டி
சைமன் காசிச்செட்டி (Simon Casie Chetty, மார்ச் 21, 1807 - நவம்பர் 5, 1860), 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில் ஒருவர் ஆவார். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். இவை தவிர தான் எழுதிய நூல்கள்மூலம் காசிச்செட்டி அவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். இளமைக் காலம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பமொன்றில் 21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில் இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள புத்தளம் என்னும் நகருக்கு அண்மையில் கற்பிட்டியில் கவிரியேல் காசிச் செட்டியின் புதல்வராகப் பிறந்தார். இன்று சிங்களப் பிரதேசமாக மாறிவிட்ட இப்பகுதி அக்காலத்தில் பெருமளவு தமிழர் வாழ்ந்த பகுதியாக இருந்தது. வணிக மொழியாகவும் தமிழே விளங்கியது. தமிழ் நாட்டைச் சேர்ந்த செட்டிமார் முதலான வணிகக் குழுவினர் இங்கே வாழ்ந்து வந்தனர். காலப் போக்கில் இவர்கள் பிரித்தானியர் நடையுடைகளையும், அவர்கள் சமயத்தையும் சார்ந்து கொழும்புச் செட்டிகள் என வழங்கப்பட்டனர். இளம் வயதிலேயே தனது தாய்மொழியான தமிழ், சிங்களம், அக்காலத்து ஆட்சி மொழியான ஆங்கிலம் என்பவற்றைக் கற்றுப் புலமை எய்தினார். இவை தவிர, சமஸ்கிருதம், போத்துக்கீச மொழி, டச்சு மொழி, இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், அரபு மொழி ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். இவர் வகித்த பதவிகள் இவரது பதினேழாவது வயதில், 1824 ஆம் ஆண்டு புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கினார். இதன் போது இவரது திறமைகள் வெளிப்பட்டதால் இவரது இருபத்தொன்றாவது வயதில் 1828-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளுக்கான மணியக்காரராக (Cheif Headman) உயர்வு பெற்றார். தனது இருபத்தேழாம் வயதில் 1833-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தின் முதலியாராகவும் எற்கனவே இருந்த மணியக்காரர் பதவியிலும் பணியாற்றினார். கோல்புறூக் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ் பேசும் மக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஆ. குமாரசுவாமி முதலியார் 1836 ஆம் ஆண்டு நவம்பரில் காலமாகிவிடவே உறுப்புரிமை வெற்றிடமானபோது, 1838 இல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1845-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார். இலங்கை நிருவாகச் சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர், மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் போன்ற பெருமைகள் இவரைச் சாரும். ஆற்றிய சேவைகளும், சாதனைகளும் தனது அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்பற்றி எழுதியதோடு, தமிழ் - வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்த் தாவரவியல் அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார். யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன. இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கசெற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், இலங்கையில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட "சிலோன் கசற்றியர்" என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், இலண்டனிலும் கூடப் புகழ் பெற்றார். இவர் உதயாதித்தன் என்னும் தமிழ் மாசிகை ஒன்றையும் 1841 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் எனினும் நீண்டகாலம் அதை நடத்தமுடியாமல் நிறுத்திவிட்டார். இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், "தமிழ் புளூட்டாக்" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். இதில் 189 தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மாலத்தீவு மொழியிலே சிங்கள மொழி கலந்துள்ளமை பற்றியும், ஜாவாத்தீவின் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் காசிச்செட்டி எழுதியுள்ளார். அத்துடன் இலங்கையின் வரலாற்றைக் கூறும் "சரித்திர சூதனம்" எனும் நூலையும் இவர் எழுதியுள்ளார். கத்தோலிக்க சமயம் தொடர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளார். "கத்தோலிக்கத் தேவாலயங்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும்" எனும் தலைப்பில் நூல் எழுதிய இவர் யோசப் வாஸ் எனும் பாதிரியார் பற்றியும் எழுதியுள்ளார். கிரேக்க மொழியிலிருந்து கிறித்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்த 'பிலிப் டி மெல்லோ என்பவர்பற்றிய வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் கிறித்தவ வேதாகமத்தின் பழைய ஏற்பாடான ஆதியாகமம் பற்றிய ஓர் நூலையும் எழுதியுள்ளார். "புத்தளப் பிரதேச முக்குவ குலத்தவரின் உற்பத்தியும் - வரலாறும்" எனும் ஆய்வுக் கட்டுரையையும் முஸ்லிம்களுடைய பாரம்பரியம், பழக்கவழக்கம் எனும் தலைப்பிலும் ஆய்வுக்கட்டுரையையும் எழுதியுள்ளார். சைவசமயம் சம்பந்தமான நூல்களையும் எழுதியுள்ளார். திருக்கோணேச்சரம் பற்றிக் கூறும் கவிராஜவரோதயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831 ஆம் ஆண்டில் வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இறப்பு சைமன் காசிச்செட்டி 1860 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று ஐம்பத்து மூன்றாவது வயதில் காலமானார். இவற்றையும் பார்க்கவும் தமிழ் புளூட்டாக் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள் - பொ. பூலோகசிங்கம் An Outline of the Classification of the Tamul Castes (January 1, 1865) - ஈழத்து எழுத்தாளர்கள் 1807 பிறப்புகள் 1860 இறப்புகள் கொழும்புச் செட்டிகள் இலங்கை சட்டசபை உறுப்பினர்கள் தமிழ் நூற்பட்டியலாளர்கள் இலங்கை முதலியார்கள் புத்தளம் மாவட்ட நபர்கள்
3565
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE.%20%E0%AE%9C%E0%AF%87.%20%E0%AE%B5%E0%AF%87.%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
சா. ஜே. வே. செல்வநாயகம்
தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (Samuel James Velupillai Chelvanayagam, மார்ச் 31, 1898 - ஏப்ரல் 26, 1977) அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் 2 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவராக இருந்தவர். ஆரம்ப வாழ்க்கை செல்வநாயகம் 1898 மார்ச் 31 இல் மலேசியாவின் ஈப்போ நகரில் ஜேம்சு விசுவநாதன் வேலுப்பிள்ளை, ஹரியட் அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது மகனாகப் பிறந்தார். செல்வநாயகத்தின் தந்தை யாழ்ப்பாணம் தொல்புரம் என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து வர்த்தகர் ஆனார். இவரது குடும்பம் பின்னர் தைப்பிங் நகருக்கு இடம்பெயர்ந்தது. செல்வநாயகத்தின் சகோதரர்கள் ஏர்னெஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பி. 1901), எட்வர்ட் ராஜசுந்தரம் (பி. 1902). தங்கை அற்புதம் இசபெல் இளம் வயதிலேயே இறந்து விட்டார். செல்வநாயகம் 4 வயதாக இருக்கும் போது, தாய், சகோதரர்களுடன் இலங்கை திரும்பினார். செல்வநாயகம் குடும்பத்துடன் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் வாழ்ந்து வந்தார். செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு சென்று புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இவருடன் இக்கல்லூரியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பின்னாளைய பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கா ஆவார். செல்வநாயகம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் படித்து தனது 19வது அகவையில் அறிவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியில் ஆசிரியரானார். ஆசிரியப் பணியில் இருந்த போதே இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார். 1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ. சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர். உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர். செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார். அரசியலில் ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர். இவருடைய மகன் செ. சந்திரகாசன் தமிழகத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற இலங்கை அகதிகளுக்கு அகதிகளால் செயல்படுத்த கூடிய அமைப்பை அமைத்து செயலாற்றி வருகின்றார். இவருடைய மகன் வழிப்பேத்தி பூங்கோதை சந்திரஹாசன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். தேர்தல் வரலாறு உசாத்துணை வெளி இணைப்புகள் What Velupillai Chelvanayakam Envisaged Velupillai Prabakaran தந்தை செல்வாவின் அரசியல் வாழ்க்கை வரலாறு இலங்கை அரசியல்வாதிகள் 1898 பிறப்புகள் 1977 இறப்புகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள் இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள் இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் யாழ்ப்பாணத்து நபர்கள் இலங்கையின் வட மாகாண நபர்கள்
3568
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D
பொன்னம்பலம் இராமநாதன்
சேர் பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். வாழ்க்கை வரலாறு பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராகக் கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் (கொழும்பு வேத்தியர் கல்லூரி) கற்றார். 13 ஆவது வயதில், மாநிலக் கல்லூரியில் கல்வி கற்பதற்காகச் சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார். அரசியல் சேவை 1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1897ம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் 50வது ஆண்டு விழாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக செல்லப் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களே தெரிவுச்செய்யப்பட்டார். அந்த விழாவின் போது அவருக்குப் பிரித்தானிய அரசினால் இலங்கையின் முழுமையான தேசியவாதி எனும் தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாற்றில் 1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது. இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகப் பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்துகொண்டனர். உடனடியாகப் பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த இனக்கலவரத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யவும் கட்டளையிட்டது. அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூறே போன்ற இலங்கையின் முன்னணி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களைக் கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களைப் பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கிய காரணமான அனைவருக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட்டது. இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும். பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர். சமூக சேவை இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது. சமய சேவை அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார். தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். 1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார். யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காகக் கொழும்பு காலிமுகத் திடலில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது உருவச்சிலை 1946 நவம்பர் 26 இல் ஆளுநர் என்றி மொங்க்-மேசன் மூரினால் திறந்து வைக்கப்பட்டது. விமர்சனங்கள் இலங்கையில் பெண்கள் வாக்குரிமை வழங்குவதை பொன். இராமநாதன் கடுமையாக எதிர்த்தார். இது தொடர்பாக இவர் கடுமையாக விமர்சனத்திற்குட்படுத்துகின்றார். அவரது காலத்தில் இலங்கையில் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக இருந்த இராமநாதன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது எனவும், படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தேச வழமைச் சட்டத்தை முன்னிறுத்தி டொனமூர் ஆணைக் குழு முன் வாதிட்டார். இவரது நூல்கள் An Eastern Exposition of the Gospel of Jesus According to St. Mathew (1898) An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John (1902) The Culture of the Soul Among Western Nations (1906) The Spirit of the East Contrasted with the Spirit of the West (1905) On Faith or Love of God (1897) The Gospel of Jesus According to St. Matthew, as Interpreted to R. L. Harrison by the Light of the Godly Experience of Sri Paránanda The Judgments of the Supreme Court of Judicature: And of the High Court of Appeal of the Island of Ceylon, Delivered Between the Years 1820-1833 Riots and martial law in Ceylon, 1915 Reports of Important Cases Heard and Determined by the Supreme Court of Ceylon...: 1860, 1861 and 1862. 1880 The Spirit of the East Contrasted with the Spirit of the West: Being a Lecture Delivered ... Before the Brooklyn Institute of Arts and Sciences at Its Open Meeting of the Season of 1905-6 Reports of Important Cases Heard and Determined by the Supreme Court of Ceylon: During the Years 1860, 1861 and 1862 : with an Appendix Containing Cases Decided During that Period by the Judicial Committee of the Privy Council on Appeal from the Supreme Court of Ceylon On the Ethnology of the "Moors" of Ceylon பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும் (1914) திருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் என்னும் விருத்தியுரையும் (1919) ஸ்ரீ இராமநாத தர்மசாஸ்திர பாடம் தேர்தல் வரலாறு மேற்கோள்கள் 1851 பிறப்புகள் 1930 இறப்புகள் இலங்கை அரசியல்வாதிகள் யாழ்ப்பாணத்து நபர்கள் இலங்கை சட்டசபை உறுப்பினர்கள் கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள் இலங்கை இந்துக்கள் இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் சர் பட்டம் பெற்ற இலங்கையர் இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள்
3576
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
கூட்டுக் குடும்பம்
பெற்றோர், அவர்களது மணமாகாத பிள்ளைகள், மணமான பிள்ளைகளும் அவர்களது துணைவரும் பிள்ளைகளும், சிலசமயம் பெற்றோரின் உடன்பிறந்தவர்கள் என இரத்த உறவால் பிணைக்கப்பட்ட, நேர்வழியிலும், கிளை வழியிலும் உறவினரானவர்கள் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக் குடும்பம் (Joint Family) எனப்படும். இந்தியச் சமுதாயத்தில் இத்தகைய முறை பரவலாகக் காணப்படுகின்றது. இந்தியாவில் பொதுவாக ஆண்வழி உறவினர்களே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். இவற்றையும் பார்க்கவும் தனிக் குடும்பம் (Nuclear Family) உள்தனிக் குடும்பம் (Subnuclear Family) இணைப்புவழித் தனிக் குடும்பம் (Suplimented Subnuclear Family) குடும்பம் மானிடவியல் சமூகவியல் en:Complex family mr:एकत्र कुटुंब पद्धती
3577
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
ஈமோஃபீலியா
ஈமோஃபீலியா (Haemophilia அல்லது Hemophilia) என்பது, மனித உடலில் குருதி உறையாமல் போகும் பரம்பரை நோயின் பெயராகும். மரபணு குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான சமயங்களில், தன்னுடல் தாக்குநோய் (autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் குருதி நீர்மக் (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் நோய் உண்டாகிறது. உடலில், உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து குருதிப்பெருக்கு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று. வகைகள் ஈமோஃபீலியா A - குருதி உறைதற்காரணி VIII குறைபாடு , "முதல்நிலை ஈமோஃபீலியா" (X-இணைந்த பின்னடைவு) ஈமோஃபீலியா B - குருதி உறைதற்காரணி IX குறைபாடு, "கிறித்துமசு நோய்" ("Christmas disease") (X-இணைந்த பின்னடைவு) ஈமோஃபீலியா C - குருதி உறைதற்காரணி XI குறைபாடு (ஆழ்சுக்கெனாட்ஃசி யூதர்கள் (Ashkenazi Jews), (தன்மூர்த்தப் பின்னடைவு) ஒத்த நோயான வான் வில்லர்பிராண்டு நோய் இம்மூவகை இரத்த உறையாமைகளைவிட வலுக்குன்றியதாகும். வான் வில்லர்பிராண்டு வகை மூன்று மட்டும் ஓரளவு வலுவுடையது. இது இரத்த உறைதலுக்கு காரணமான ஒரு புரதமான வான் வில்லர்பிராண்டு காரணியில் ஏற்படும் மாறுதலால் ஏற்படுகிறது. இரத்த உறைதலில் ஏற்படக்கூடிய சிக்கல்களில் பரவலாகக் காணப்படுவது இது. நோய் வரும் முறை ஈமோஃபீலியா நோய்க்குக் காரணமாக X நிறப்புரியில் உள்ள பின்னடைவான மாற்றுருக்கள் (alleles) காணப்படுகின்றன. இலிங்க நிறப்புரிகளைப் பொறுத்தவரையில் பெண்கள் இரண்டு X நிறப்புரிகளைக் கொண்டுள்ளனர், ஆண்கள் ஒரு Xஉம் ஒரு Yஉம் கொண்டுள்ளனர். X நிறப்புரியிலேயே குருதி உறைதற்காரணிக்குரிய மரபணு காவப்படுகிறது, Y நிறவுடலில் இவை காவப்படுவதில்லை. மனித உடலில், ஏனைய விலங்குகளைப் போலவே, இருமடிய நிலை பேணப்படுவதனால், அங்கே ஒரு குறிப்பிட்ட மரபணுவிற்குரிய இரு மாற்றுருக்கள் காணப்படும். அவையிரண்டும் ஒரே மாதிரியானவையாகவோ (Homozygous), வேறுபட்டவையாகவோ (Heterozygous) இருக்கலாம். ஆண்களில் ஒரு X நிறப்புரி மட்டுமே இருப்பதனால், X நிறப்புரியினால் காவப்படும் ஒரு இயல்பிற்குரிய மாற்றுருவில் ஒன்று மட்டுமே ஆண்களில் இருக்கும். பெண்களில் இரு X நிறப்புரிகள் இருப்பதனால் இரு மாற்றுருக்களும் காணப்படும். ஆண்களில் இந்த மாற்றுருக்களில் ஆட்சியுடைய ஒரு அலகு காணப்படுமாயின், நோய் வெளிப்படாது. ஆனால் பின்னடைவான மாற்றுருவாக அது இருப்பின் நோய் வெளிப்படும். பெண்களில் X நிறப்புரியில் இரு மாற்றுருக்கள் இரண்டும் ஆட்சியுடையதாகவோ, அல்லது ஏதாவது ஒன்று மட்டும் ஆட்சியுடையதாகவோ இருப்பின், பெண் நோயற்றவராக இருப்பார். ஆனால் ஆட்சியுடைய ஒரு மாற்றுருவையும், பின்னடைவான ஒரு மாற்றுருவையும் கொண்டவர் நோயைக் காவும் தன்மை உடையவராக இருப்பார். பெண்ணுக்கு கிடைக்கும் ஒரு மாற்றுரு ஆணிலிருந்து பெறப்படுவதனால், அது அனேகமாக ஆட்சியுடையதாகவே இருப்பதற்கான சந்தர்ப்பமே அதிகமாக இருப்பதனால் பெண்ணுக்கு கிடைக்கும் இரு மாற்றுருக்களும் பின்னடைவானதாக இருப்பதற்கான நிகழ்தகவு மிகமிகக் குறைவாகவே இருக்கும். நோயைக் கண்டறிவதற்கான சோதனைகள் கர்ப்ப காலத்திற்கு முன் கருத்தரித்துள்ள பெண்ணிடமிருந்து இந்நோய் குழந்தைக்குக் கடத்தப்படும் அபாயத்தைத் தவிர்க்க சோதனைகள் பொருட்டு மரபியல் சோதனைகள் மருத்துவத் துறையில் உள்ளன. இச்சோதனையில் இரத்த மாதிரி அல்லது திசு மாதிரி சேகரிக்கப்பட்டு அதில் ஈமோஃபீலியா நோய்க்குக் காரணமாக இருக்கக்கூடிய மரபுப்பிறழ்விற்கான அறிகுறிகள் ஏதும் உள்ளனவா என்பது சோதிக்கப்படுகிறது. கர்ப்பகாலத்தில் தனது குடும்பத்தில் ஈமோஃபீலியா தாக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வரலாற்றைக் கொண்டிருந்தால் ஈமோஃபீலியா மரபணு இருப்பதற்கான வாய்ப்பைக் கண்டறியும் சோதனையை செய்து கொள்ளலாம். இத்தகைய சோதனைகளில், கர்ப்ப காலத்தின் 11 ஆம் வாரம் முதல் 14 ஆம் வாரம் வரையிலான காலகட்டத்தில் கருப்பையின் சூல்வித்தகத்திலிருந்து மாதிரி எடுக்கப்பட்டு ஈமோஃபீலியா மரபணுவிற்காக சோதிக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தின் 15 ஆம் வாரம் முதல் 20 ஆம் வாரம் வரையிலான காலகட்டத்தில் பனிக்குட நீரின் மாதிரி எடுக்கப்பட்டு சோதிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த பின் ஒரு குழந்தை பிறந்த பின்னர் ஈமோஃபீலியா இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்தால், இரத்தப் பரிசோதனை இந்நோயின் இருப்பினை உறுதி செய்ய இயலும். ஈமோஃபீலியா நோய் தாக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் பிறக்கும் குழந்தையின் தொப்புட்கொடியிலிருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரி ஈமோஃபீலியா நோயின் இருப்பினையும், அந்நோய் ஈமோஃபீலியா ஏ அல்லது ஈமோஃபீலியா பி இவற்றில் எவ்வகையைச் சார்ந்தது என்பதையும், நோயின் தீவிரத்தன்மை எந்த நிலையில் உள்ளது என்பதையும் கூடக் கண்டறிய முடியும். சிகிச்சை இதுவரை இந்நோய்க்கு சிகிச்சை ஏதுமில்லை எனினும், அவசியப்படும் பொழுது (ஈமோஃபீலியா Aக்கு காரணி VIII, ஈமோஃபீலியா Bக்கு காரணி IX) குருதி உறைதற்காரணிகளை ஊசி மூலம் நோயாளியின் உடலில் செலுத்தலாம். இதனால் தற்காலிகமாக இரத்த ஒழுக்கு சரி​ செய்யப்பட்டு நிறுத்தப்படுகின்றது.​பொதுவாக இரத்த உ​றைதற்கான காரணிகள் மனிதர்களின் உடலில் இருந்து தானமாகப் ​பெறப்படும் குருதிகளில் இருந்து பிரித்​தெடுக்கப்பட்டு உ​றைநி​லைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. இதில் இரத்தத்​தொற்று ​நோய்கள் பரவும்அபாயம் காணப்படுகின்றது. ஆனால் தற்காலத்தில்​ செயற்க்​கையாக உருவாக்கப்பட்ட குருதி உ​றைக்காரணிக​ளையும் தயார் ​செய்கின்றனர். இதில் அபாயங்கள் காணப்படுவதில்​லை. குருதிஉ​றைதற்காரணிக​ளை அதிகமாக பயன்படுத்துவதனால் உடலில் ஒரு எதிர்ப்பு தனிப்பி​ தோன்றிவிடுகிறது. அச்ச​மயங்களில் அதிக வலுவான காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன. வரலாறு இந்நோயைப் பற்றி குறிப்பிட்ட மருத்துவ வல்லுநர் அபுல்காசிஸ் என்பவர் ஆவார். பத்தாம் நூற்றாண்டில் இவர் சில இலேசான காயங்களுக்குப் பிறகு ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கின் காரணமாக ஆண்களை இழந்த குடும்பங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த நோயைப் பற்றிய பல விளக்கவுரைகள் மற்றும் நடைமுறைக் குறிப்புகள் வரலாற்றுப் பதிவுகள் பலவற்றிலும் காணப்பட்டாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் அறிவியல்ரீதியான பகுப்பாய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 1803 ஆம் ஆண்டில் ஜான் கான்ராட் ஓட்டோ என்ற பிலெடெல்பியாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் "சில குடும்பங்களில் காணப்படும் இரத்த ஒழுக்கு" என்ற நூலில் "இரத்தப்போக்கு நோயாளிகள்" என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்நோய் மரபுவழியாக வருகிறதென்றும், குடும்பத்திலுள்ள ஆரோக்கியமான பெண்களின் வழியாக கடத்தப்படுகிறது என்பதையும், பெரும்பாலும் இந்நோய் ஆண்களையே தாக்குகிறது என்பதையும் அறிந்திருந்தார். இவருடைய ஆய்வறிக்கை X இல் இணைந்த மரபுப் பிறழ்வுகள் குறித்த இரண்டாவதாகும். (முதல் ஆய்வறிக்கையானது ஜான் டால்டன் என்பவரால் தனுது குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட நிறக்குருடு பற்றியதாகும்). 1720 ஆம் ஆண்டு நியூ ஆம்சையர், பிளைமவுத் என்ற இடத்தில் வசித்த ஒரு பெண்ணிடம் இந்நோயைக் கண்டறிந்தார். பாதிப்பு ஏற்பட்ட ஆண்களால் அவர்களின் பாதிக்கப்படாத பெண் வாரிசுகளுக்கு இந்நோய் கடத்தப்படக்கூடும் என்ற கருத்தாக்கம் 1813 ஆம் ஆண்டு வரை ஜான் எப் ஹே என்பவரின் ஆய்வறிக்கை தி நியூ இங்கிலாந்து மருத்துவ பருவ இதழில் வெளிவரும் வரை அறியப்படாமல் இருந்தது. 1924 ஆம் ஆண்டில் பின்லாந்து மருத்துவர் பின்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் ஆலண்ட் தீவுகளில், மரபுவழியாக வந்த, ஈமோபீலியாவினை ஒத்த, சீரற்ற இரத்தப்போக்கு தன்மையைக் கண்டறிந்தார். இந்த சீரற்ற இரத்தப்போக்கு வான் வில்பர்ட் என அழைக்கப்படுகிறது. இவற்றையும் பார்க்கவும் இரத்த உறைதல் உலக ஈமோஃபீலியா கூட்டமைப்பு வெளி இணைப்புகள் குருதி நோய்கள் மரபணுப் பிறழ்ச்சிகள் குருதியியல்
3578
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
பச்சையம்
பச்சையம் (Chlorophyll - கிரேக்க சொல் மூலம்: chloros = பச்சை, phyllon = இலை) என்பது தாவரங்கள், பாசி வகைகள், சிலவகை பாக்டீரியாக்கள் ஆகியவற்றிலுள்ள ஒரு பச்சை வர்ண ஒளிச்சேர்க்கை நிறமி ஆகும். ஒளிச்சேர்க்கையின் முதல்படியாக பச்சையத்தின்மீது ஒளி விழுகிறது. இதன் மூலம் அது அயனாக்கம் (ionise) ஆகிறது. இதில் விளையும் வேதியியல் ஆற்றலை ஏ.டி.பி மூலக்கூறுகள் (molecules) உள்வாங்கி, பின்னர் அதைப்பயன்படுத்தி கரியமில வாயுவையும் நீரையும் காபோவைதரேட்டு மற்றும் ஒட்சிசனாக வேதிமாற்றம் செய்கின்றன. மின்காந்த அலை நிறமாலையின் (spectrum) சிவப்பு மற்றும் நீல நிறக்கதிர்களை அதிகம் உள்வாங்குவதால் பச்சையம் பச்சை வண்ணம் கொண்டுள்ளது. அணு அமைப்பு பச்சையம் ஒரு குளோரின் நிறமியாகும். அது ஹீம் போன்ற போர்ஃபிரின் நிறமிகளை ஒத்த அணு அமைப்பைக் கொண்டுள்ளது. குளோரின் வளையத்தின் மத்தியில் ஒரு மெக்னீசியம் அயன் (ion) உள்ளது. பலவகை பக்கச் சங்கிலிகள் இருந்தாலும், பொதுவாக ஒரு நீண்ட ஃபைடில் (phytyl) சங்கிலி இருக்கும். இயற்கையில் இது பல வடிவங்களில் அமைந்துள்ளது: இன்றியமையாமை பச்சையும் வெண்மையும் கொண்ட இலை ஒன்றிலிருந்து மாவுச் சத்தை நீக்கிவிட்டு அந்த இலையை சிறிது நேரம் வெயிலில் வைத்திருக்க வேண்டும். அதன்பின் அயோடின் கரைசல் கொண்டு ஆய்வு செய்தால் மாவுச் சத்து பச்சையான இடங்களில் மட்டுமே இருப்பதைக் காணலாம். இதன்மூலம் ஒளிச்சேர்க்கைக்கு பச்சையம் இன்றியமையாதது என அறியலாம். இவற்றையும் பார்க்கவும் பசுங்கனிகம் ஒளிச்சேர்க்கை நிறமிகள்
3580
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%20%E0%AE%8F.
டி. என். ஏ.
டி.என்.ஏ (DNA) அல்லது தாயனை என்பது ஆக்சிசன் குறைந்த இரைபோ கருக்காடி (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid – DNA) எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும் (ஆர்.என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல் சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். உயிரினங்களின் (சில தீநுண்மங்கள் உட்பட) உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏ யில் அடங்கியுள்ளது. உயிரினங்களின் பாரம்பரியப் பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் (offspring) வருவதற்கு டி.என்.ஏ யே காரணமாகும். இனப்பெருக்கத்தின் பொழுது டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. புரதம், ஆர்.என்.ஏ போன்ற உயிரணுக்களின் ஏனைய கூறுகளை அமைப்பதற்குத் தேவையான தகவல்களை டி.என்.ஏ கொண்டிருப்பதனால் இதனை நீல அச்சுப்படி தொகுப்பு ஒன்றுக்கு ஒப்பிடலாம். டி.என்.ஏ யில் மரபியல் தகவல்களைக் கொண்ட பகுதிகள் மரபணு எனப்படும். ஏனைய பகுதிகள் கட்டமைப்பிற்கும், மரபியல் தகவல்களின் பயன்பாட்டை ஒழுங்கமைப்பதிலும் பங்கெடுக்கும். டி.என்.ஏ கட்டமைப்பு இதன் வடிவம், ஓர் ஏணியை முறுக்கியது போன்று இரட்டைச்சுருள் (Double helix) வடிவத்தைக் கொண்டிருக்கின்றது. டி.என்.ஏ யானது நியூகிளியோட்டைடுக்கள் என அழைக்கப்படும் எளிய அலகுகளின் கூட்டால் உருவாகும் ஒரு பல்பகுதியக் கட்டமைப்பாகும். இதன் வடிவத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்கள் சேமுசு டி. வற்சன் (James D. Watson), பிரான்சிசு கிரிக் (Francis Crick) ஆகிய இருவருமாவர். ஒரு பொது அச்சைச் வட்டமாகச் சுற்றிச் செல்லும் இரு சுருளிச் சங்கிலி வடிவங்கள், 10 அங்க்சுரோம் (1.0 நானோ மீற்றர் nm) ஆரையையும், 34 அங்க்சுரோம் (3.4 nm) புரியிடைத் தூரத்தையும் கொண்டிருக்கும் அமைப்பொன்றை இவர்கள் கண்டு பிடித்தனர் உயிரினங்களில் டி.என்.ஏ யானது பொதுவாக தனியான மூலக்கூறாக இல்லாமல், இரு மூலக்கூறுகள் இறுக்கமாக இணைந்த நிலையில் காணப்படும். இரு இழைகளும், ஒன்றை ஒன்று சுற்றி இருப்பதனால் இரட்டைச் சுருளி அமைப்பைப் பெறுகின்றது. நியூக்கிளியோடைட்டுக்கள் (nucleotide) எசுத்தர் பிணைப்பால் இணைக்கப்பட்ட ஒற்றைச்சர்க்கரைகளையும், அவற்றுடன் இணைந்த தாங்கி (base) மூலக்கூறுகளையும், பொசுபேற் (Phosphate) கூட்டங்களையும் கொண்டிருக்கும். ஒற்றைச்சக்கரை மூலக்கூறுகள் ஒவ்வொன்றுடனும், அடினின் (Adenine – A), தையமின் (Thymine -T), சைற்றோசின் (Cytosine – C), குவானின் (Guanine – G) என்ற நான்கு தாங்கிகள் (bases) என்றழைக்கப்படும் மூலக்கூறுகளில் ஏதாவது ஒன்று பிணைந்திருக்கும். ஒற்றைச்சக்கரை ஒன்றுடன் ஒரு தாங்கி மூலக்கூறு இணைந்து வரும் தொகுதி நியூக்கிளியோசைட்டு (nucleoside) எனப்படும். பின்னர் அது பொசுபேற்றுடன் இணையும்போது நியூக்கிளியோடைட்டு எனப்படுகின்றது. நியூக்கிளியோடைட்டுக்களில் காணப்படும் இந்த தாங்கி மூலக்கூறுகளின் ஒழுங்கு வரிசையே அனைத்து மரபியல்சார் தகவல்களையும் கொண்டிருக்கும் மரபுக் குறியீடுகளை நிர்ணயிக்கும். இந்த மரபுக் குறியீடுகள் புரதங்களின் எளிய கூறுகளான அமினோ அமிலங்களுக்கான வரிசையை தீர்மானிக்கும். இந்த தாங்கி மூலக்கூறுகளில் அடினினும், குவானினும் பியூரின் (purine) வகை எனவும், சைற்றோசினும், தயமினும் (pirimidine) பிரிமிடின் வகை எனவும் பாகுபடுத்தப்படும். (ஆர்.என்.ஏ யில் தயமினுக்குப் பதிலாக யூராசில் (uracil) எனப்படும் தாங்கி காணப்படும்) டி.என்.ஏ யின் ஆதார இழையில் ஒற்றைச்சக்கரைகளும், பொசுபேற்றுக்களும் ஒன்றுவிட்டு ஒன்றான ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கும். டி.என்.ஏ யிலுள்ள ஒற்றைச்சக்கரை, ஐந்து கரிம அலகுகளைக் கொண்ட 2-deoxyribose ஆகும் (ஆர்.என்.ஏ யிலுள்ள ஒற்றைச்சக்கரை ribose ஆகும்). அருகருகாக உள்ள இரு ஒற்றைச்சக்கரை வளைய மூலக்கூறுகளில் 3 ஆம், 5 ஆம் இடங்களிலுள்ள கரிமங்களுடன் ஒரு பொசுபேற் மூலக்கூறானது பொசுபேற்-இரு-எசுத்தர் பிணைப்பினால் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியான சமச்சீரற்ற பிணைப்புக்களால், ஒவ்வொரு இழையும் ஒரு திசையைக் கொண்டிருக்கும். டி.என்.ஏ யில் ஒரு இழையின் நியூக்கிளியோடைட்டுக்களின் திசைக்கு எதிர்த் திசையிலேயே அடுத்த இழையின் நியூக்கிளியோடைட்டுக்களின் திசை அமையும். இதனால் இரு இழைகளும், ஒன்றுக்கொன்று எதிரான திசையில் இருப்பதைக் காணலாம். இழைகளின் நுனிகளும் சமச்சீரற்ற நிலையிலேயே காணப்படும். ஒரு இழையின் ஒரு நுனியில், ஒற்றைச்சக்கரையின் 5 ஆம் கரிமத்துடன் இணைந்த பொசுபேற் அலகு காணப்படும். இதனை 5' (5 prime) என்பர். அதே பக்கமுள்ள அடுத்த இழையின் நுனியில் ஒற்றைச்சக்கரையின் 3 ஆம் கரிமத்தில் இணைந்த OH கூட்டம் (hydroxyl group) காணப்படும். இதனை 3' (3 prime) என்பர். டி.என்.ஏ யிலுள்ள புரியிடைத் தூரம் மிகச் சிறியதாக இருப்பினும், இது மில்லியன் எண்ணிக்கையிலான நியூக்கிளியோடைட்டுக்களைக் கொண்ட பல்பகுதியமாகும். மனிதனில் உள்ள நிறப்புரிகளில் முதலாவது நிறப்புரி கிட்டத்தட்ட 220 மில்லியன் இணைதாங்கிகளைக் (base pairs) கொண்டது. டி.என்.ஏ இழைகளின் பகுதிகள் குறிப்பிட்ட வெவ்வேறு புரதங்களிற்கான தகவல்களை அல்லது கட்டளைகளைக் கொண்ட மரபணுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு டி.என்.ஏ மூலக் கூறும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் அணுக்களால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு முழு மனிதத் தொகுதியில் 46 நிறப்புரிகள் உள்ளன: இதில் 23 தாயின் முட்டை உயிரணுவிலிருந்தும் மற்ற 23 தந்தையின் விந்தணுவில் இருந்தும் வந்தவை. ஒரு உயிரணு பிரியும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிறப்புரிகளில் உள்ள டி.என்.ஏ இன் ஒவ்வொரு துண்டும் நகல் எடுக்கப்படுகிறது. டி.என்.ஏ மூலக்கூறு மிக நீண்டது, மென்மையானது; ஸ்பேகெட்டி (spaghetti) என்னும் இத்தாலியத் தின்பண்ட நூலிழையின் 5 மைல் நீள அளவுக்கு இது அமையும்.. டி.என்.ஏ யின் அமைவிடங்கள் மெய்கருவுயிரிகள் விலங்குகள், தாவரங்கள், பூஞ்சைகள், அதிநுண்ணுயிரிகள் போன்ற மெய்க்கருவுயிரிகளில் அதிகளவான டி.என்.ஏ க்கள் உயிரணுக் கருவிலும், சிறியளவிலான டி.என்.ஏ க்கள் இழைமணிகள், பச்சையவுருமணிகள் போன்ற உயிரணுவின் உள்ளுறுப்புக்களான நுண் உறுப்புக்களிலும் அமைந்திருக்கும். உயிரணுக்களில் நீளமான அமைப்பான நிறப்புரிகளில் இந்த டி.என்.ஏக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். டி.என்.ஏ க்கள் இசுடோன் எனப்படும் புரதத்தினுள் இறுக்கமாகப் பொதிந்து நியூக்கிளியோசோம்களை உருவாக்கும். இவ்வமைப்பு டி.என்.ஏ சுருள் சுருளான அமைப்பை எடுக்க உதவும். நியூக்கிளியோசோம் அலகுகளின் தொகுப்பு, குரோமற்றின் (chromatin) என்னும் டி.என்.ஏ-புரதச் சிக்கலை (DNA-Protien complex) உருவாக்குகின்றது. இது மேலும் சுருள் வடிவில் உருவாகும்போது தோன்றும் அமைப்பே நிறப்புரிகளாகும். ஒவ்வொரு கலப்பிரிவின்போதும், டி.என்.ஏ இரட்டிப்பு எனும் தொழிற்பாட்டினால், நிறப்புரிகள் இரட்டிப்படையும். நிலைக்கருவிலிகள் ஆனால் பாக்டீரியா, ஆர்க்கீயா போன்ற நிலைக்கருவிலிகளில், டி.என்.ஏ யானது குழியமுதலுருவில் (cytoplasm) காணப்படும். டி.என்.ஏ யின் இயல்புகள் பள்ளங்கள் (Grooves) இரட்டைச்சுருள் வடிவமான இரு இழைகளும் டி.என்.ஏ யின் ஆதாரமாக இருக்கும். அவ்விரு இழைகளுக்கு இடையிலான இடைவெளிகள் அல்லது பள்ளங்களை அவதானித்தால், அவையும் இரட்டைச்சுருளி வடிவத்தைக் கொண்டிருப்பதை காணலாம். இணைதாங்கிகளுக்கு (Base pairs) க்கு அண்மையாக உள்ள இந்த பள்ளங்களே இணைப்புப் பகுதிகளாக (binding sites) இருக்கும். இழைகள் ஒன்றுக்கொன்று நேரடியாக எதிர் எதிராகச் செல்லாமையினால், பள்ளங்களின் அளவு வேறுபடும். இவற்றில் பெரிய பள்ளம் (Major grooves) 22 அங்க்ஸ்ரொம் ஆகவும், சிறிய பள்ளம் (Minro grooves) 12 அங்க்ஸ்ரொம் ஆகவும் இருக்கும். சிறிய பள்ளமானது ஒடுங்கி இருப்பதனால், பெரிய பள்ளங்களிலேயே தாங்கிகளை அணுகுவது எளிதாக இருக்கும். இதனால், இரட்டை இழை கொண்ட டி.என்.ஏ யின் குறிப்பிட்ட இடத்தில் பிணைப்பை ஏற்படுத்தும் புரதங்கள் பெரிய பள்ளங்களில் வெளித்தெரியும் தாங்கிகளுடன் பிணையும். உயிரணுக்களினுள் டி.என்.ஏ யானது வழமையற்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும்போது, புரத மூலக்கூறுகளின் பிணைப்பு ஏற்படும் இடங்களிலும் மாற்றம் ஏற்படலாம். ஆனால் டி.என்.ஏ தனது வழமையான B உருவத்திற்கு வரும்போது, பெரிய பள்ளம், சிறிய பள்ளம் என்பன அவற்றின் அளவையே குறிக்கும். இணைதாங்கிகள் (Base pairs) மேலே: மூன்று ஐதரசன் பிணைப்புடன் உள்ள GC இணைதாங்கி, கீழே: இரண்டு ஐதரசன் பிணைப்புடன் உள்ள AT இணைதாங்கிஇரு இழைகளிலுமுள்ள தாங்கி மூலக்கூறுகளுக்கிடையில் ஏற்படும் ஐதரசன் பிணைப்புக்களால், இரு இழைகளும் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு இழையிலுள்ள குறிப்பிட்ட தாங்கி மூலக்கூறானது, அடுத்த இழையிலுள்ள ஒரு குறிப்பிட்ட தாங்கி மூலக்கூறுடன் மட்டுமே இணையும். அடினினானது அடுத்த இழையிலுள்ள தயமினுடனும், ஒரு இழையிலுள்ள சைற்றோசினானது, அடுத்த இழையிலுள்ள குவானினுடனும் மட்டுமே இணையும். இவ்வாறு இணையும் இரு தாங்கிகளையும் சேர்த்து இணைதாங்கி எனலாம். ஐதரசன் பிணைப்பானது பகிர்பிணைப்பு (அல்லது பங்கீட்டுப் பிணைப்பு அல்லது சம பிணைப்பாக = covalent bond) இருப்பதனால், அவை இலகுவில் பிரியவும் மீண்டும் சேரவும் கூடியனவாக இருக்கும். பொறியியல் விசை மூலமோ, அதிக வெப்பம் மூலமோ, இலகுவாக பல்லிணைவுப்படிகை போன்று இரு இழைகளும் பிரிக்கப்படலாம். இதன் மூலம், ஈரிழை டி.என்.ஏ யின் ஒவ்வொரு இழையிலும் உள்ள அனைத்து தகவல்களும் ஒவ்வொரு இழையிலும் இந்த இயல்பானது டி.என்.ஏ இரட்டிப்புக்கு மிகவும் அவசியமானதாகும். இரட்டிக்கப்பட்டு புதிய நிரப்பு இழைகள் தோன்றும். இவ்வாறாக நிரப்பு இணைதாங்கிகளுக்கிடையே (complementary base pairs) நிகழும் மீள்தகு இடைவினையானது உயிரினங்களில் டி.என்.ஏ யின் தொழில்கள் அனைத்துக்கும் மிகவும் முக்கியமானதாகும். பியூரீன், பிரிமிடீன் என்ற இரு வகையான தாங்கி மூலக்கூறுகளிலும் ஏற்படும் ஐதரசன் பிணைப்புக்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உண்டு. அடினின், தயமினுக்கு இடையில் இரு ஐதரசன் பிணைப்புக்களும், சைற்றோசின், குவானினுக்கு இடையில் மூன்று ஐதரசன் பிணைப்புக்களும் தோன்றும். மேலதிகமாக உள்ள ஒரு ஐதரசன் பிணைப்பின் விளைவால், GC அளவு அதிகமாகவுள்ள டி.என்.ஏ யானது, GC அளவு குறைவாக உள்ள டி.என்.ஏ யிலும்பார்க்க நிலைத்தன்மை கூடியதாக இருக்கும். GC அளவு அதிகமாக உள்ள, நீண்ட இழைகளைக் கொண்ட டி.என்.ஏ க்கள் உறுதியான பிணைப்புக்களையும், AT அளவு அதிகமுள்ள, குறுகிய இழைகளைக் கொண்ட டி.என்.ஏ க்கள் பலவீனமான பிணைப்புக்களையும் கொண்டிருக்கும். பரிசோதனைக் கூடங்களில், இங்குள்ள பிணைப்புக்களின் உறுதித்தன்மையை அறிய, ஐதரசன் பிணைப்புக்களை உடைக்கத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு அளவிடப்படும். ஒரு டி.என்.ஏ யிலுள்ள அனைத்து ஐதரசன் பிணைப்புக்களும் உடைக்கப்பட்டால், இரு இழைகளும் முழுமையாக தனிப்படுத்தப்பட்டு, இரு தனித்தனி மூலக்கூறுகளாக காணப்படும். இவ்வாறான ஒற்றை இழை டி.என்.ஏ (Single-starnded DNA = ssDNA) ஒரு பொதுவான அமைப்பைக் கொண்டிருப்பதில்லை. ஆனாலும் சில குறிப்பிட்ட வடிவங்கள் ஏனையவற்றைக் காட்டிலும் உறுதியானவையாக இருக்கும். மேலான சுருளாக்கம் (Supercoiling) டி.என்.ஏ யானது மேலான சுருளாக்கம் மூலம் ஒரு கயிறுபோல முறுக்கப்படக்கூடியது. சாதாரண நிலையில் இரட்டைச்சுருளி டி.என்.ஏ யிலுள்ள ஒரு இழையானது, 10.4 இணைத்தாங்கிகளுக்கு ஒரு தடவை தனது அச்சைச் சுற்றி வரும். ஆனால் இழைகள் முறுக்கப்படும் நிலையில் இழைகள் நெருக்கமாகவோ, அல்லது தளர்வாகவோ வர நேரிடும். டி.என்.ஏ யிலுள்ள சுருளின் திசையில் முறுக்கப்படுமாயின், தாங்கிகள் இறுக்கமான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இது நேர்மறையான மேலான சுருளாக்கம் (positive supercoiling) எனப்படும். சுருளின் திசைக்கு எதிர்த் திசையில் முறுக்கப்படுமாயின், அது எதிர்மறையான மேலான சுருளாக்கம் (negative supercoiling) எனப்படும். இந்நிலையில் டி.என்.ஏ இழைகளில் தளர்வு ஏற்பட்டு, தாங்கிகள் விலகிச் செல்லும். இயற்கயில் ரொப்போஐசோமரேசு என்னும் நொதியத்தின் தாக்கத்தால் சிறிதளவு எதிர்மறையான மேலான சுருளாக்க நிலையிலேயே காணப்படும். டி.என்.ஏ இரட்டிப்பு மற்றும் படியெடுத்தல்/ பிரதியாக்கம் (transcription) செயல்முறையின்போது, டி.என்.ஏ இழைகளில் முறுகலால் ஏற்படக்கூடிய அழுத்தத்தை நீக்குவதிலும் இந்த நொதியம் பயன்படும். மாற்று டி.என்.ஏ வடிவங்கள் தொழிற்படும் உயிரினங்களில் பொதுவாக B, Z டி.என்.ஏ வடிவங்களே காணப்பட்டாலும், A டி.என்.ஏ, வேறும் பல வடிவங்களில் டி.என்.ஏ அறியப்படுகின்றது. டி.என்.ஏ யில் நிகழும் நீரேற்ற அளவு, டி.என்.ஏ வரிசை, மேலான சுருளாக்கத்தின் அளவு, திசை, இணைதாங்கிகளில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள், உலோக அயனிகளின் வகை, செறிவு, கரைசலில் உள்ள polyamines என்பவற்றைப் பொறுத்து டி.என்.ஏ யின் வடிவங்கள் மாறுபடும் மேற்கோள்கள் வெளி இணைப்புக்கள் DNA binding site prediction on protein DNA the Double Helix Game From the official Nobel Prize web site DNA under electron microscope Dolan DNA Learning Center Double Helix: 50 years of DNA, Nature ENCODE threads explorer ENCODE home page. Nature (journal) Double Helix 1953–2003 National Centre for Biotechnology Education Genetic Education Modules for Teachers—DNA from the Beginning Study Guide Rosalind Franklin's contributions to the study of DNA U.S. National DNA Day—watch videos and participate in real-time chat with top scientists Clue to chemistry of heredity found த நியூயார்க் டைம்ஸ் June 1953. First American newspaper coverage of the discovery of the DNA structure DNA from the Beginning Another DNA Learning Center site on DNA, genes, and heredity from Mendel to the human genome project. The Register of Francis Crick Personal Papers 1938 – 2007 at Mandeville Special Collections Library, University of California, San Diego Seven-page, handwritten letter that Crick sent to his 12-year-old son Michael in 1953 describing the structure of DNA. See Crick’s medal goes under the hammer, Nature, 5 April 2013. 3D map of DNA reveals hidden loops that allow genes to work together (11 December 2014), Science (Daily News) கரு அமிலங்கள் மரபியல் உயிரணுவியல் டி. என். ஏ உயிரித் தொழில்நுட்பம்
3600
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்
பின்வருபவை அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் ஆவன. மேற்கோள்கள் அணு ஆயுதங்கள் அணு ஆற்றல் ஆயுதங்கள் பனிப்போர்
3607
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88
முன்கழுத்துக் கழலை
முன்கழுத்துக் கழலை அல்லது கண்டக்கழலை (Goitre) என்பது தைராய்டு சுரப்பி பெரிதாவதால் கழுத்தில் தொண்டைப் பகுதிக்குக் கீழே ஏற்படும் வீக்கமாகும்.. இது பெரும்பாலும் அயோடின் குறைபாட்டின் விளைவாகவே ஏற்படுகிறது. சில வேளைகளில் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகவும் சிலரிடையே தோன்றுவதாகவும் அறியப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாததால் முன்கழுத்துக் கழலை உருவாகிறது. உலக அளவில் 90% முன்கழுத்துக் கழலை நோய்கள் அயோடின் குறைபாட்டால் ஏற்படுகிறது. அவை பெரும்பாலும் தீங்கற்ற கட்டிகளாகவே உள்ளன. முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தைராய்டு சுரப்புக் குறை மற்றும் அதிதைராய்டியம் ஆகியவற்றின் காரணமாக முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன. அதிதைராய்டியம் காரணமாக அட்ரீனல்வினையிய செயல்பாடுகளான: இதயத் துடிப்பு மிகைப்பு, மிகுதியான நெஞ்சுத்துடிப்பு (palpitations), பதற்றம் (nervousness), உடல் நடுக்கம் (tremor), உயர்த்தப்பட்ட குருதி அழுத்தம் மற்றும் சுற்று சூழலால் ஏற்படும் வெப்பத்தை தாங்க முடியாமல் போவது (heat intolerance) ஆகியவை உண்டாகும். அதியவளர்சிதைமாற்றம் (hypermetabolism), அதிகப்படியான தைராய்டு இயக்குநீர் சுரப்பு, அதிக ஆக்சிசன் நுகர்வு, புரத வளர்சிதையில் ஏற்படும் மாற்றங்கள், இயல்புக்கு மீறிக் கண்விழி பிதுங்கியிருத்தல் (exophthalmos) ஆகிய அறிகுறிகள் மூலமாகவும் முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தென்படுகின்றன. தைராய்டு சுரப்புக் குறைவால் பசியில்லாவிட்டாலும் உடல் எடை அதிகரிக்கிறது, மலச்சிக்கல், சோம்பல் மற்றும் குளிர் தாங்க இயலாமை (cold intolerance) ஆகிய அறிகுறிகளும் காணப்படுகிறது. சுரப்பி வீக்கமடைதல் குறைந்த அயோடின் மட்டத்தில் றைஅயடோதைரோனின்(Triodothyronin) மற்றும் ரெட்ராஅயடோதைரோனின்(Tetreiodothyronin) குறைவடைகின்றன. இதனால் அசினர் கலங்கள்(Acini Cell) தைராயிட்டு சுரப்பியிலிருந்து வீக்கமடையத் தொடங்குகின்றன. முன் கழுத்துக் கழலை ஏற்படக் காரணங்கள் உலக அளவில், முன் கழுத்துக் கழலை ஏற்பட அயோடின் குறைபாடே காரணமாகும். அயோடின் கலந்த உப்பு பயன்படுத்தாத நாடுகளில் இந் நோய் அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. செலீனியம் குறைவாலும் இந் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அயோடின் கலந்த உப்பை பயன்படுத்தும் நாடுகளில் காசிமோடோவின் தைராய்டழற்சி (Hashimoto's thyroiditis) என்ற நோய் உண்டாகிறது. சயனைடு விசத்தாலும் முன் கழுத்துக் கழலை ஏற்படுகிறது. வெப்ப மண்டல நாடுகளில் சயனைடு அதிகமுள்ள மரவள்ளி கிழங்கை அதிகம் உண்ணும் நாடுகளில், இந் நோய் அதிகம் காணப்படுகிறது. குறை தைராய்டு, அயோடின் குறைபாடு, தைராய்டு வீக்க நோய்க் காரணி (Goitrogen), கபச்சுரப்பி நோய் (Pituitary disease), கிரேவின் நோய் (Graves' disease), தைராய்டு புற்று நோய் ஆகியவையும் முன் கழுத்துக் கழலையுடன் தொடர்புடைய சில நோய்கள் ஆகும். அயோடின் பற்றாக்குறை காரணமாகவே பொதுவாகக் கண்டக் கழலை ஏற்படுகின்றது.ஆயினும் அயோடின் குறைபாடு இல்லாத வேளையிலும் உணவில் கழலையைத் தோற்றுவிக்கும் கூறுகள் (Goitrogenic substances) உள்ளெடுக்கப்படும் போது சிலருக்கு கண்டக் கழலை ஏற்படுகின்றது. கழலையைத் தோற்றுவிக்கும் கூறுகள் சில தாவர உணவு வர்க்கங்களில் காணப்படும் எதிர்ப் போசனைக் கூறுகள்(Anti nutritional Factors) கழலையைத் தோற்றுவிக்கின்றன. எ.கா: தயோசயனைட்டு(Thiocyanate): மரவள்ளி, கோவா, பூக்கோவா, முள்ளங்கி என்பவற்றில் தயோசயனைட்டு அதிக அளவில் காணப்படுகின்றது. பேர்க்குளோரேட்டு(Perchlorate): கரட், கடுகு என்பவற்றில் பேர்க்குளோரேட்டு அதிக அளவில் காணப்படுகின்றது. தயோயூரியா(Thiourea): தயோயுரசில்(Thiouracil): கோயிற்றின்(Goitrin) புற அமைப்பியல் முன் கழுத்துக் கழலைகள் வளர்ச்சி வீதம் அல்லது வளர்ச்சியின் அளவைப் பொறுத்து, அவை வகைப்படுத்தப்படுகின்றன. வளர்ச்சி வீதம் ஒரு கணுவுள்ள முன் கழுத்துக் கழலை: பல கணுக்களுள்ள முன் கழுத்துக் கழலை;பரவலான முன் கழுத்துக் கழலை:''' மிகைப்பெருக்கம் காரணமாக உருவாகிறது. அளவு வகை I (அழுத்தச்சோதனை முன் கழுத்துக் கழலை (palpation goitre)): பொதுவாகத் தெரிவதில்லை, ஆனால் அழுத்தச்சோதனை மூலமே கண்டறிய முடியும். வகை II: தொட்டு உணரக்கூடிய முன் கழுத்துக் கழலையாக இருக்கும், எளிதில் கண்டறியலாம். வகை III: மிகப் பெரிய முன் கழுத்துக் கழலை, அழுத்திய இடம் அமுக்கப்பட்டிருக்கும். முன் கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் கழுத்தின் கீழ் பகுதியில் கண்ணுக்குத் தெரியுமாறு வீக்கம் இருக்கும். தொண்டைப் பகுதியில் இறுக்கமாக உணருதல் இருமல் குரலில் மாற்றம் உணவை விழுங்குவதில் சிரமம் மூச்சு விடுவதில் சிரமம் சிகிச்சை முன் கழுத்துக் கழலை ஏற்படும் காரணத்தைப் பொறுத்து சிகிச்சை முறை மாறுபடுகிறது. தைராய்டு இயக்குநீர் (thyroid hormone) அதிகமாக சுரக்கும் பட்சத்தில் அவற்றை சுருக்க கதிரியக்க அயோடின் (radioactive iodine) பயன்படுத்தப்படுகிறது. முன் கழுத்துக் கழலை அயோடின் குறைபாட்டால் ஏற்பட்டால் லுகோலின் அயோடின் (Lugol's Iodine) அல்லது பொட்டாசியம் அயோடைடு கரைசல் ஆகியவை குறைந்த அளவில் மருந்தாக வழங்கப்படும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறைவால் முன் கழுத்துக் கழலை ஏற்பட்டால், அவற்றை தூண்டும் உணவுகள் வழங்கப்படும். மிகவும் முடியாத நோயாளிகளின் தைராய்டு சுரப்பி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நீக்கப்படும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தேசிய நலவாழ்வுப் பணிகள், ஐக்கிய இராச்சியம் THYROID-DISEASE.ORG.UK (ஆங்கிலம்) நாளமில்லாச்சுரப்பியியல் ஊட்டக்குறைபாடு
3612
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D
மியூனிக்
மியூனிக் (ஜெர்மன்: München (ஒலிப்பு: ), ஜெர்மன் நாட்டு மாநிலமான பவேரியாவின் தலைநகரமாகும். 1.402 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மியூனிக், பெர்லின் மற்றும் ஹம்பர்க்குக்கு அடுத்து ஜெர்மனியில் பெரிய நகரமாக விளங்குகிறது. இந்நகரம் இசர் ஆற்றங்கரையில் அச்சரேகையில் அமைந்துள்ளது. 1972 ல் இங்கு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவந்த இஸ்ரேல் வீரர்களை பலஸ்தீனப் போராளிகள் கொலை செய்தனர். இதன் பின்னர் 2006 உலகக் கிண்ணக் கால் பந்தாட்டப் போட்டி இங்கு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வூரில் பழமைவாய்ந்த இடாய்ச்சு அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. இங்கு தொழில் நுட்பம் சார்ந்த நூற்றாண்டுக்கும்மேலான பொருட்கள பல காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பி. எம். தபிள்யூ தானுந்து நிறுவனத்தின் தலைமையகமும் அதன் தானுந்து அருங்காட்சியகமும் மியூனிக்கில் தான் உள்ளன. வரலாறு 1158 ஆண்டில் தான், மியூனிக் நகரம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் என பழங்கால ஆவணக்குறிப்புகளால் கருதப்படுகிறது. 8ம் நூற்றாண்டில் துறவிகள் இங்கு அதிக எண்ணிக்கையில் வாழ்ந்திருந்தாலும், கற்காலத்திற்குப் பின்னர் வந்த காலங்களிலே, மியூனிக்கில் குடியிருப்புகள் பெருகின. அந்த காலத்தில் தான், பெனதிக்டை துறவிகள் தங்கியிருந்த இடத்தின் அருகிலுள்ள இசர் ஆற்றின் மீது, குயல்ப் ஹென்ரி, சாக்ஸனி மற்றும் பவேரியா பிரபு ஆகியோர்களால், ஒரு பாலம் கட்டப்பட்டது. வர்த்தகர்கள் தனது பாலத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்தினர். மேலும் அவ்வாறு அவர்கள் கடப்பதற்கு, கட்டணம் வசூலிக்கவும் செய்தனர். இதற்கு அருகிலுள்ள பிஷப் அவருக்குச் சொந்தமான பாலத்தையும் ஹென்ரி அழித்தார். இது குறித்து 1158ம் ஆண்டு, ஆக்ஸ்பர்க்கிலுள்ள அப்போதைய பேரரசர் பிரடெரிக் முதலாம் பர்பரோச்சர் முன்பு பிஷப்பும் மற்றும் ஹென்ரியும் கூச்சலிட்டனர். இதை விசாரித்த அரசர், ஹென்ரிக்கு தடையும், மற்றும் பிஷப்புக்கான ஒரு ஆண்டு இழப்பீட்டுத் தொகையும் வழங்கவேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மியூனிக் மக்களின் உரிமைகளான வர்த்தகம் மற்றும் நாணயத்தை உறுதி செய்தார். மாநிலங்கள் 1992ம் ஆண்டிற்குப் பிறகு, மியூனிக் நாடானது 25 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அல்லாச் - உந்தர்மெஞ்சிங் அல்ஸ்டாத் - லெகல் ஆவுபிங் - லோச்சவுசென் - லாங்வய்டு ஆவு - ஹைதாவுசென் பெர்க் அம் லாயம் போகனாவுசென் பெல்ட்மொச்சிங் - அசன்பெர்கிள் ஆதெரன் லாயம் லாதுவிக்ஸ்வார்ஸ்டாத் - ஐசர்வார்ஸ்டாத் மேக்ஸ்வார்ஸ்டாத் மில்பெர்ட்சாபன் - அம் அர்த் மூசச் நியுவுசென் - நியும்பன்பர்க் ஓபர்கியாசிங் பாசிங் - ஓபர்மென்சிங் ராமர்ஸ்தார்ப் - பேர்லாச் சிசுவாபிங் - பிரைமன் சிசுவாபிங் - மேற்கு சிசுவாந்தலர்ஹோயி செந்திலிங் செந்திலிங் - வெஸ்பார்க் தால்கிருச்சன் - ஓபர்செந்திலிங் - போர்ஸ்தன்ராயட் - பர்ஸ்தன்ராயட் - சாலன் துருதெறிங் - ரெய்ம் அண்தர்கெயிசிங் - ஆர்லாசிங் புவி அமைப்பு பவேரியின் உயர்ந்த சமவெளியில் அமைந்தருக்கும் மியூனிக் நாடு, கடல் மட்டத்திலிருந்து உயரத்தில், ஆல்ப்ஸ் வடக்கு முனையின் வடக்கே தொலைவில் அமைந்துள்ளது. இசர் மற்றும் வார்ம் ஆறுகள், இந்நாட்டை வளப்படுத்துகின்றன. மியூனிக் தெற்கில் அல்பைன் போர்லாந்து அமைந்துள்ளது. காலநிலை இந்நாட்டின் காலநிலையானது, இருபெரும் காலநிலைகளான கோடை மற்றும் குளிர் ஆகியவற்றின் விளிம்பிலுள்ளது. இங்கு ஆனி மற்றும் ஆடி மாதங்களில் கோடையும், மார்கழி மற்றும் தை மாதங்களில் குளிரும் இருக்கும். ஆண்டின் சராசரியாக, இடி மின்னலுடன் கூடிய மழை, வசந்த மற்றும் கோடைக் காலங்களில் இருக்கும். குளிர்காலங்களில், மழை சற்று குறைவாகவே இருக்கும். ஆண்டின் சராசரி குறைந்த மழையளவாக, பிப்ரவரி மாதத்தில் பெய்யும். மேலும் ஆல்ப்ஸ் மலையை ஒட்டி இருப்பதால், ஜெர்மனியை விட அதிக மழையும் பனிப்பொழிவும் காணப்படும். மலையடிவாரத்தில் காணப்படும் வெப்ப சலனத்தால், (குளிர் காலத்திலும்) ஒரு சில மணி நேரத்திற்குள் வெப்பநிலை தீவிரமாக உயர வாய்ப்புள்ளது. மியூனிக் நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையாக 13 ஆகத்து 2003ம் ஆண்டு 37.1 C˚யும், குறைந்தபட்சமாக 21 சனவரி 1942ம் ஆண்டன்று -30.5 C˚வும் பதிவாகியுள்ளது. மியூனிக்கைச் சுற்றியுள்ளவை அல்பைன் மலையடிவாரத்தின் சமவெளியில் அமைந்திருக்கும் மியூனிக் நகரமானது, 2.6 மில்லியன் மக்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் நாட்டின் சிறு நகரங்களான தகாச்சு, ஃபிரியசிங், எர்திங், ஸ்டார்ன்பர்க், லான்துசட் மற்றும் மூஸ்பர்க் ஆகியவை சேர்ந்தவையே, மியூனிக் மாநகராட்சியாகும். இங்கு 4.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். பன்னாட்டு நல்லுறவுகள் கீழ்க்கண்ட நாடுகளுடன், பன்னாட்டு நல்லுறவு வைத்துள்ளது மியூனிக். எதின்பர்க், ஸ்காட்லாந்து (1954) வெரோனா, இத்தாலி (1960) போர்தியாக்ஸ், பிரான்ஸ் (1964) சப்போரோ, சப்பான் (1972) சிஞ்சினாத்தி, ஓஹியோ, அமெரிக்க ஐக்கிய நாடு (1989) கியிவ், உக்ரைன் (1989) ஹராரே, ஜிம்பாவே (1996) மேற்கோள்கள் செருமானிய நகரங்கள் உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்
3613
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D
பெயர்ச்சொல்
பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல் பொருட் பெயர் இடப் பெயர் காலப் பெயர் சினைப் பெயர் பண்புப் பெயர் தொழிற் பெயர் என ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர். "பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது". தொல்காப்பிய விளக்கம் நிலனும் பொருளும் காலமும் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ் அறுபொருள் 5 Ckjgrs நன்னூல் விளக்கம் 'இடுகுறி காரண மரபோடு ஆக்கம் தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே' எடுத்துக்காட்டுகள் இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம். 1. இயற்கைப் பெயர்கள் 2. ஆக்கப் பெயர்கள் 1. இடுகுறிப் பெயர்கள் 2. காரணப் பெயர்கள் 1. சாதாரண பெயர்கள் 2. பதிலிடு பெயர்கள் 1. நுண்பொருட் பெயர்கள் 2. பருப்பொருட் பெயர்கள் 1. உயிர்ப் பெயர்கள் 2. உயிரில் பெயர்கள் 1. உயர்திணைப் பெயர்கள் 2. அஃறிணைப் பெயர்கள் 1. தனிப் பெயர்கள் 2. கூட்டுப் பெயர்கள் பெயர்ச்சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு பெயர் பதிலிடு பெயர் அல்லது மாற்றுப் பெயர் எனப்படுகின்றது. நான், நீ, அவன், அவள் போன்றவை பதிலிடு பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். பதிலிடு பெயர்களை, மூவிடப் பெயர்கள், பிற பதிலிடு பெயர்கள் என வகைப்படுத்துவது வழக்கம். மூவிடப் பெயர்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடங்களைக் குறித்து வருவனவாகும். இவை ஒவ்வொன்றையும், ஒருமைப் பெயர்களாகவும் பன்மைப் பெயர்களாகவும் மேலும் இரண்டாகப் பிரிக்கலாம். தன்மை : நான், நாங்கள். முன்னிலை : நீ, நீர், தாங்கள். படர்க்கை : அவன், அவள், அவர்கள், அது, அவை. தன்மை ஒருமை : நான். தன்மை பன்மை : நாங்கள். முன்னிலை ஒருமை : நீ, தம். முன்னிலை பன்மை : நீர், தாங்கள். படர்க்கை ஒருமை : அவன், அவள், அது. படர்க்கை பன்மை : அவர்கள், அவை. இவற்றையும் பார்க்கவும் பெயரெச்சம் தமிழ் இலக்கணம் மேற்கோள்கள் பெயர்ச் சொல் இலக்கணம்
3614
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D
வினைச்சொல்
வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். எ.கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும். முற்று இருவகைப்படும். அவை தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று எச்சம் இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம் வினையெச்சம் ஒரு வினையானது (செயலானது) முடிவுறாமல் தொக்கி நிற்பது எச்சம். இதனை எச்சவினை என்பர். இத்தகைய எச்சவினையானது பெயரைக்கொண்டு முடிவுற்றால் அது பெயரெச்சம். வினையைக் கொண்டு முடிவுற்றால் அது வினையெச்சம் சான்று: படித்த- இதனோடு பெயரை மட்டுமே சேர்க்க இயலும் படித்து- இதனோடு வினையை மட்டுமே சேர்க்க இயலும் இப் பெயர், வினை எச்சங்கள் 1.தெரிநிலை 2. குறிப்பு என இரண்டாகப் பகுக்கப்படும் முற்று தெரிநிலை வினைமுற்று செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும் எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள் குறிப்பு வினைமுற்று பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும். எ.கா: அவன் பொன்னன். எச்சம் வினையெச்சம் வினையெச்சம் என்பது வினை முற்றினைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும். எ.கா: படித்துத் தேறினான் இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் வினைச் சொல்
3615
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D
இடைச்சொல்
இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும் பயன்படும். இடைச்சொற்களின் சில வகைகள் வருமாறு: 1.வேற்றுமை உருபுகள்- வேற்றுமையில், உருபுகள் இல்லாத முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் நீங்கலாக எஞ்சிய ஆறு வேற்றுமைகளுக்கும் உரிய அசை உருபுகள். 2.விகுதிகள்- அன், அள், உம், து போன்றன. 3.இடைநிலை- த், ட், ற், ன், கிறு, ப் போன்றன. 4.சாரியை- அத்து, அற்று, அம் போன்றன. 5.தத்தம் பொருள் உணர்த்தி வரும் இடைச்சொற்கள்- ஏ, ஓ, உம், தோறும், தான், என, என்று போன்றன. சில எடுத்துக்காட்டுகள்: கவிதாவைப் பார்த்தேன் - ஐ மற்று அறிவாம் நல்வினை - மற்று மலர் போன்ற கை - போன்ற வந்தான்- ஆன் அக்காளை, இக்காளை - அ, இ சென்றானா?- ஆ மேலே குறிப்பிட்டுள்ளவற்றைக் கவனியுங்கள். இவற்றுள் ஐ என்பது வேற்றுமை உருபு. மற்று என்பது பொருள் குறிக்காது வரும் அசைச்சொல். ஆன் என்பது ஆண்பால் உணர்த்தும் விகுதி. போன்ற என்பது உவமையை உணர்த்தும் உவமை உருபு. அ, இ என்பன சுட்டெழுத்துகள் ஆ என்பது வினா எழுத்து இவை எல்லாம் பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ இடமாகக் கொண்டு வருகின்றன. இவை யாவும் தனித்து வருவதில்லை. இவை பெயர்ச்சொல்லைப் போன்றோ வினைச்சொல்லைப் போன்றோ தனித்து நின்று பொருள் தருவன அல்ல. பெயர்களோடும் வினைகளோடும் சேர்ந்து அவற்றின் இடமாகவே வரும். இவை பெயர்ச்சொற்களும் அல்ல; வினைச் சொற்களும் அல்ல. பெயர் வினைகளைச் சார்ந்து அவற்றை இடமாகக் கொண்டு வருவதனால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன. இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் இடைச்சொல் விளக்கம் சொல்லிலக்கணம்
3616
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D
உரிச்சொல்
உரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாகத் திகழும் சொல். ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும் உரிச்சொல் நிலையினைப் பெறுகிறது. இது பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும். ஒப்பீட்டு விளக்கம் தமிழில் உரிச்சொல் முழுச்சொல்லாகவும் குறைசொல்லாகவும் வரும். தொல்காப்பியர் சொல்லதிகாரம் உரியியலில் 120 உரிச்சொற்களைக் குறிப்பிடுகிறார். செல்லல், இன்னல், இன்னாமையே. - இது முழுச்சொல்லாக வந்த உரிச்சொல் வகை. தடவும் கயவும் நளியும் பெருமை. - தடமருப்பு எருமை, கயவாய் மதகு, நளியிரு முந்நீர் - இவற்றில் தட, கய, நளி என்னும் உரிச்சொற்கள் குறைசொற்களாக உள்ளன. பாகுபாடும் விளக்கமும் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், "உரிச்சொல்" என்ற நான்கு வகைச்சொற்களின் வரிசையில் "உரிச்சொல்" இறுதியாக வருகிறது. உரிச்சொல்லானது, பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும். பெயருக்கு அல்லது வினைக்கு உரிய பான்மையை உணர்த்தும். அதாவது, பொருளுக்குரிய பண்புகளைக் குறிப்பதாகும். "உரி" என்னும் அடைமொழியைச் "சொல்" என்பதனோடு சேர்த்து "உரிச்சொல்" என்றனர். உரிச்சொல்லின் வகைகள் உரிச்சொல் இருவகைப்படும் ஒருபொருட்குறித்த பலசொல் பலபொருட்குறித்த ஒருசொல் சான்று: ஒரு பொருள் குறித்த பல சொல் சாலப்பேசினான். உறுபுகழ். தவஉயர்ந்தன. நனிதின்றான். இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரேபொருளையுணர்த்துவன. பலபொருட்குறித்த ஒருசொல் கடிமனை - காவல் கடிவாள் - கூர்மை கடிமிளகு - கரிப்பு கடிமலர் - சிறப்பு இந்நான்கிலும்வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பலபொருள்களையுணர்த்தும் உரிச்சொல் குறிப்பவை உரிச்சொல் குறிக்கும் பண்புகள் பின்வருமாறு: உயர்திணைப் பண்புகள் உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார் (நூற்பா 452).அவை, அறிவு அருள் ஆசை அச்சம் மானம் நிறைவு பொறை (பொறுமை) ஓர்ப்பு (தெளிவு) கடைப்பிடி மையல் (மயக்கம்) நினைவு வெறுப்பு உவப்பு (மகிழ்வு) இரக்கம் நாண் வெகுளி (கோபம்) துணிவு அழுக்காறு (பொறாமை) அன்பு எளிமை எய்த்தல் (சோர்வு) துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல் (பகை), வென்றி (வெற்றி) பொச்சாப்பு (பொல்லாங்கு) ஊக்கம் மறம் மதம் (வெறி) மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும். இவை தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் பகுதியில் காட்டப்பட்டுள்ளன. அஃறிணைப் பண்புகள் நன்னூல், 454-ஆவது நூற்பா அஃறிணைப் பண்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்துகின்றது. வடிவங்கள் வட்டம் இருகோணம் முக்கோணம் சதுரம் முதலிய பலவகைளும் நாற்றங்கள் நறுநாற்றம் துர்நாற்றம் வண்ணங்கள் வெண்மை செம்மை (சிவப்பு) கருமை பொன்மை (மஞ்சள்) பசுமை சுவைகள் கைப்பு (கசப்பு) புளிப்பு துவர்ப்பு உவர்ப்பு கார்ப்பு (காரம்) இனிப்பு எட்டு ஊறுகள் அல்லது தொடு உணர்வுகள் வெம்மை (வெப்பம்) தண்மை (குளிர்ச்சி) மென்மை, வன்மை நொய்மை (நைதல்) திண்மை இழுமெனல் (வழவழப்பு) சருச்சரை (சொரசொரப்பு) இரண்டிற்கும் பொதுவான பண்புகள் உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல்,455). தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல் நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல் ஈதல் மேலும் காண்க தமிழிலக்கணம் பெயருரிச்சொல் வினையுரிச்சொல் இலக்கணம் ஆங்கிலவிலக்கணம் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் மொழி மேற்கோள் குறிப்புகள் வெளி இணைப்புகள் http://www.tamilvu.org/courses/degree/a021/a0214/html/a0214111.htm சொல்லிலக்கணம் தமிழ் அகராதியியல்
3618
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
டின்டால் விளைவு
டின்டால் விளைவு (Tyndall effect) என்பது கூழ்ம நிலையிலுள்ள பொருட்களின் வழியாகப் பாயும் ஒளிக்கதிர்களை அவற்றிலுள்ள கூழ்மத்துகள்கள் (colloidal particles) சிதறடிப்பதைக் குறிப்பதாகும். இவ்வாறு ஒளிச்சிதறடிக்கப்படுவதால் ஊடுருவும் ஒளிக்கதிரின் பாதைப் புலனாகிறது. இவ்விளைவு இதைக் கண்டுபிடித்த அயர்லாந்து அறிவியலர் இஞ்சான் டின்டால் என்பவரின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பனிக்காலத்தில் வண்டிகளிலுள்ள முன்விளக்குகளின் ஒளி சிதறுவது இவ்விளைவினாலே ஆகும். புவியின் காற்று மண்டலமும் ஒரு கூழ்மக் கலவையே. இதன் காரணமாக சூரிய ஒளி சிதறடிக்கப்படுகிறது. குறைந்த அலைநீளம் (wavelength) கொண்ட கதிர்களே கூடுதலாக சிதறடிக்கப் படுகின்றன. இதன் காரணமாகவே வானம் நீல நிறமாகத் தென்படுகின்றது. இவற்றையும் பார்க்கவும் இராமன் விளைவு மேற்கோள்கள் இயற்பியல் கோட்பாடுகள் சிதறல்
3620
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஒளித்தொகுப்பு
ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பு (Photosynthesis) என்பது தாவரங்கள், பாசிகள் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள் போன்றவற்றில் நிகழும் ஒரு உயிர்வேதியியல் நிகழ்வு ஆகும். ஒளிச்சேர்க்கையின் மூலம் இவ்வுயிரினங்கள் ஒளியின் ஆற்றலைப் பயன்டுத்திக் காபனீரொக்சைட்டு வளிமத்தைத் தமக்குத் தேவையான மாப்பொருள் என்னும் காபோவைதரேட்டு போன்ற கரிமவேதியல் பொருளாக மாற்றிக் கொள்ளும். தாவரங்களிலுள்ள பச்சையம் என்ற நிறமி பெரும்பாலும் இதற்கு உதவுகிறது. ஒளிச்சேர்க்கைவழியே தாவரங்களும், பாசிகளும், சயனோபாக்டீரியா (cyanobacteria) என்னும் உயிரினமும் கார்பனீரொக்சைட்டு வளிமத்தையும் நீரையும் ஒளியின் ஆற்றலையும் பயன்படுத்திக் கார்போவைதரேட்டுக்களாக மாற்றிக் கொண்டு, உயிர்வளியைக் (அல்லது ஆக்சிசனைக்) கழிவுப்பொருளாக வெளிவிடுகின்றன. ஒளிச்சேர்க்கையின் விளைவால் ஆக்சிசன் (உயிர்வளி) வெளியாவதால் உலகின் உயிர்வாழ்வுக்கு இவ் ஒளிச்சேர்க்கை மிக அடிப்படையான ஒரு நிகழ்வாகும். ஏறத்தாழ எல்லா உயிர்களும் ஆக்சிசனை நேரடியான ஆற்றல் வாயிலாகவோ (மூலமாகவோ) அல்லது உணவுக்கு அடிப்படையாகவோ கொள்ளுகின்றன.. ஒளிச்சேர்க்கையின் வழி பற்றப்படும் (பிடிக்கப்படும்) ஆற்றல் மிக மிகப் பெரியதாகும்: ஏறத்தாழ ஆண்டுதோறும் 100 டெரா வாட் ஆகும் (100,000,000,000,000 வாட்) என்று கணக்கிட்டு இருக்கின்றார்கள். இது ஏறத்தாழ உலக முழுவதும் மக்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் மொத்த ஆற்றலின் அளவைப்போல் ஏழு மடங்காகும். உலகில் நிகழும் ஒளிச்சேர்க்கையால் மரஞ்செடிகொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடு தனை உயிரகப் பொருளாக (biomass) ஆண்டுதோறும் மாற்றுகின்றன. ஒளித்தொகுப்பு பற்றிய ஒரு மேலோட்டம் ஒளித்தற்போசணிகளிலேயே ஒளித்தொகுப்பு நடைபெறுகின்றது. ஒளியின் ஆற்றலைப் பயன்படுத்தி ஒளித்தொகுப்பு மூலம் அசேதன கார்பன் (காபனீரொக்சைட்டில்) சேதன வடிவுக்கு மாற்றப்படுகின்றது. இரண்டு வகையான ஒளித்தொகுப்பு வகைகள் உள்ளன. தாவரங்களும், அல்காக்களும், சயனோபக்டீரியாக்களும் நிகழ்த்தும் ஒளித்தொகுப்பின் பக்கவிளைபொருளாக ஒக்சிசன் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகின்றது. இம்முறை ஒக்சிசன் வெளியேற்றும் ஒளித்தொகுப்பாகும். எனினும் சில பக்டீரியாக்கள் மற்றவற்றைப் போல காபனீரொக்சைட்டை கார்பன் மூலப்பொருளாக உள்ளெடுத்தாலும், அவை ஒக்சிசனை வெளிவிடுவதில்லை. இது ஒக்சிசன் வெளியேற்றாத ஒளித்தொகுப்பு வகையாகும். இரு வகைகளிலும் சூரிய ஒளியே சக்தி முதலாக உள்ளது. ஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பே பொருளாதார ரீதியில் மனிதனுக்கு முக்கியத்துவமானதால் அம்முறையே இங்கு அதிகம் ஆராயப்படுகின்றது. கார்பன் நிலைப்படுத்தல் அல்லது கார்பன் பதித்தல் எனும் உயிரிரசாயனச் செயன்முறை மூலம் காபனீரொக்சைட்டில் உள்ள கார்பன் உயிரிகளுக்குப் பயன்படும் வடிவமான வெல்ல வடிவத்துக்கு மாற்றப்படுகின்றது. ஒளித்தொகுப்பு ஒரு தொகுப்புக்குரிய தாக்கமாகையால் (எனவே அகவெப்பத்தாக்கம்) இதற்குப் புறத்தேயிருந்து ஒரு சக்தி முதலும், கார்பனை காபோவைதரேட்டாக மாற்ற இலத்திரன்களும் தேவைப்படுகின்றன. இச்சக்தித் தேவைப்பாட்டை சூரிய ஒளி நிறைவு செய்கின்றது. ஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பில் பிரதான இலத்திரன் வழங்கியாக நீர் உள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் சுவாசத்துக்கு எதிர்மாறான செயன்முறையாக ஒளித்தொகுப்பு விளங்குகின்றது. சுவாசம் சக்தியை பயன்பாட்டுக்கு வெளியேற்றுகின்றது (புறவெப்பத்தாக்கம்); ஒளித்தொகுப்பு ஒளிச்சக்தியை இரசாயன் சக்தியாக சேமிக்கின்றது. எனினும் இரண்டு உயிரிரசாயனச் செயன்முறைகளும் நடைபெறும் விதம் நேர்மாறாக இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட விதத்தில் நடைபெறுகின்றன. ஒளித்தொகுப்பின் மேலோட்டமான தாக்கம்:- 2n CO2 + 2n DH2 + போட்டோன்கள் → 2(CH2O)n + 2n DO காபனீரொக்சைட்டு + இலத்திரன் வழங்கி + ஒளிச்சக்தி → காபோவைதரேட்டு + ஒக்சியேற்றப்பட்ட இலத்திரன் வழங்கி ஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பின் தாக்கச்சமன்பாடு: 2n CO2 + 4n H2O + போட்டோன்கள் → 2(CH2O)n + 2n O2 + 2n H2O காபனீரொக்சைட்டு + நீர் + ஒளிச்சக்தி → காபோவைதரேட்டு + ஒக்சிசன் + நீர் தாக்கத்தை சுருக்குவதற்காக பொதுவாக இருபக்கத்திலுமுள்ள 2n நீர் மூலக்கூறுகள் நீக்கப்பட்டு பின்வரும் எளிய சமன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது: 2n CO2 + 2n H2O + போட்டான்கள் → 2(CH2O)n + 2n O2 காபனீரொக்சைட்டு + நீர் + ஒளிச்சக்தி → காபோவைதரேட்டு + ஒக்சிசன் சில நுண்ணங்கிகள் இலத்திரன் வழங்கியாக நீருக்குப் பதிலாக ஆர்சனைட்டைப் பயன்படுத்துகின்றன.; இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஆர்சனைட்டை ஆர்சனேற்றாக ஒக்சியேற்றுகின்றன: CO2 + (AsO33–) + போட்டான்கள் → (AsO43–) + CO காபனீரொக்சைட்டு + ஆர்சனைட்டு + ஒளிச்சக்தி → ஆர்சனேற்று + காபனோரொக்சைட்டு (தொடர்ந்து வரும் தாக்கங்களில் வேறு சேர்மங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றது.) பொதுவாகன ஒளித்தொகுப்பு இரு படிநிலைகளில் நடைபெறுகின்றது. முதலாவது படிநிலை ஒளிச்சக்தியை உறிஞ்சும் ஒளித்தாக்கம் அல்லது ஒளி தேவைப்படும் தாக்கங்களாகும். இப்படிநிலையில் ஒளிச்சக்தியானது தூண்டப்பட்ட இலத்திரன்களின் வடிவில் பச்சையத்திலிருந்து சக்தி சேமிக்கும் மூலக்கூறுகளான ATP NADPH ஆகியவற்றில் சேமிக்கப்படுகின்றது. பச்சையத்திலிருந்து இழக்கப்பட்ட இலத்திரன்களை நீரிலிருந்து பெற்றுக்கொள்கின்றது. இச்செயற்பாட்டில் நீர் ஒக்சியேற்றமடைந்து ஒக்சிசனாக மாறி வளிமண்டலத்துக்குள் விடுவிக்கப்படுகின்றது. இரண்டாவது படிநிலை இருட்தாக்கம் அல்ல்து ஒளி நேரடியாகத் தேவைப்படாத தாக்கங்களாகும் (இப்படிநிலை இருட்தாக்கம் என அழைக்கப்பட்டாலும் இவை நடைபெற மறைமுகமாக ஒளிச்சக்தி அவசியமாகும்). இப்படிநிலையில் ATP மற்றும் NADPH ஆகியவற்றில் உள்ள சக்தியைக் கொண்டு காபனீரொக்சைட்டு காபோவைதரேட்டாக மாற்றப்படுகின்றது. அனேகமான ஒளித்தொகுப்பை மேற்கொள்ளும் உயிரினங்கள் கட்புலனாகும் ஒளியையே பயன்படுத்துகின்றன. எனினும் சில மாத்திரம் அகவெப்பக்கதிர்களைப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒளித்தாக்கங்கள் தாவரங்களில் ஒளித்தாக்கங்கள் பசுங்கனிகத்தின் மணியுருவிலுள்ள தைலக்கொய்ட் மென்சவ்வில் நடைபெறுகின்றன. தைலக்கொய்ட் மென்சவ்வு வழமையான கல மென்சவ்வை ஒத்த ஒரு பொஸ்போஇலிப்பிட்டு இருபடை மென்சவ்வாகும். இம்மென்சவ்வில் இரண்டு ஒளித்தொகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தாக்க மையம் உள்ளது. தாக்க மையத்தில் தாவரங்களின் முதன்மையான ஒளித்தொகுப்பு நிறப்பொருளான பச்சையம் a (chlorophyll a) உள்ளது. தாவரங்களின் ஒளித்தொகுப்பில் இரண்டு ஒளித்தொகுதிகள் பங்கெடுக்கின்றன. இவை கண்டுபிடிக்கப்பட்டதின் வரிசையில் ஒளித்தொகுதி I மற்றும் II என பெயரிடப்பட்டாலும், ஒளித்தாக்கச் செயற்பாட்டில் ஒளித்தொகுதி இரண்டே முதலில் செயற்படும். ஒளித்தொகுதி இரண்டின் அமைப்பும் செயற்பாடும் ஊதாக் கந்தக பக்டீரியாக்களின் ஒளித்தொகுதியை ஒத்ததாக உள்ளது. ஒளித்தொகுதி II 680 nm அலைநீளம் உள்ள ஒளியை சிறப்பாக உறிஞ்சுவதால் அது P680 என அழைக்கப்படுகின்றது. ஒளித்தொகுதி I 700 nm அலைநீளமுடைய ஒளியை சிறப்பாக உறிஞ்சுவதால் அது P700 என அழைக்கப்படும். ஒளித்தொகுதி II தாக்கங்கள்: ஒளியினால் இலத்திரன் அருட்டப்படல் ஆரம்பிப்பது ஒளித்தொகுதி IIஇலே ஆகும். ஒளித்தொகுதி IIஇல் உள்ள பச்சையம் b (chlorophyll b), கரோட்டீன் போலிகள் என்பன வேறுபட்ட அலை நீளங்களில் ஒளியை அகத்துறிஞ்சி தாக்கமையத்திலுள்ள குளோரோபில் a மூலக்கூறுக்குக் கடத்துகின்றன. இந்த போட்டோனை உறிஞ்சுவதால் தாக்க மையத்திலுள்ள குளோரோபில் a மூலக்கூறிலுள்ள இலத்திரன் அருட்டப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்விலத்திரன் ஃபியோபைட்டின் எனும் மூலக்கூறுக்குக் கடத்தப்படும். பின்னர் அதிலிருந்து இலத்திரன் பிளாஸ்டோகுயினோன் மூலக்கூறுக்குக் கடத்தப்படுகின்றது. பிளாஸ்டோ குயினைன் இவ்விலத்திரனிலுள்ள சக்தியைப் பயன்படுத்தி பஞ்சணையினுள் உள்ள H+ அயன்களை மணியுரு உள்ளிடத்தினுள் பம்பும். இதனால் மணியுருவினுள் H+ அயன் செறிவு அதிகரிக்கும். இலத்திரன் வெளியேற்றப்படுவதால் பச்சையத்தில் (குளோரோபில் a) இலத்திரன் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இத்தட்டுப்பாடை ஈடுசெய்ய நீர் மூலக்கூற்றில் உள்ள ஐதரசன் அணுக்களின் இலத்திரன்கள் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு நீர் ஒக்சியேற்றப்படும் போது ஒக்சிசனும், H+ அயன்களும் பக்கவிளைபொருளாகத் தோன்றுகின்றன. இவ்வாறு நீரை ஒக்சியேற்றுவதற்காக ஒளித்தொகுதி II உடன் இணைந்தவாறு ஒக்சிசன் உருவாக்கும் சிக்கல் (ஒரு நொதியம்) உள்ளது. இவ்வாறு ஒளி முந்நிலையில் பச்சையத்தில் ஏற்படும் இலத்திரன் தட்டுப்பாட்டை நீக்க நீர் பிரிகையடைந்து இலத்திரனை வழங்கல் நீரின் ஒளிப்பகுப்பு எனப்படும். இதனால் H+ அயன்களின் செறிவு தைலக்கொய்ட் மென்சவ்வின் ஒரு பக்கத்தில் அதிகமாக இருக்கும். நீரின் ஒளிப்பகுப்பு மற்றும் பிளாஸ்டோகுயினைனின் பம்பலால் தோன்றிய H+ அயன் செறிவுப் படித்திறனைக் கொண்டு தைலக்கொய்ட் மென்சவ்வில் இருக்கும் ATP தொகுப்பி (ATP synthase) எனும் நொதியம் ATP சக்தி மூலக்கூறுகளைத் தொகுக்கின்றது. ஒளித்தொகுதி I தாக்கங்கள்: ஒளித்தொகுதி I இலும் ஒளியால் தாக்க மையத்திலுள்ள பச்சையத்திலிருந்து இலத்திரன் அருட்டப்படும். இதனால் ஏற்படும் நேரேற்றத்தை ஒளித்தொகுதி II இலிருந்து வெளியேற்றப்படும் இலத்திரன் ஈடு செய்கின்றது. ஒளித்தொகுதி I இலிருந்து வெளியேற்றப்பட்ட இலத்திரன் பெரோடொக்சின் ஊடாக NADP+ தாழ்த்தும் நொதியத்தை அடையும். அங்கு H+, இலத்திரன், NADP+ என்பன இணைந்து NADPH உருவாகும். NADPH பின்னர் இருட்தாக்கத்துக்கு ஐதரசன் மூலமாகவும், தாழ்த்தியாகவும் தொழிற்படும். ஒட்டுமொத்த ஒளித்தாக்கச் சமன்பாடு: 2 H2O + 2 NADP+ + 3 ADP + 3 Pi + ஒளி → 2 NADPH + 2 H+ + 3 ATP + O2 Z வரைபடம் நீரின் ஒளிப்பகுப்பினால் வெளியேற்றப்படும் இலத்திரன் பச்சையவுருமணியூடாக பரிமாற்றப்படும் ஒவ்வொரு நிலையிலும் கொண்டுள்ள சக்தியை Z வரைபடம் காட்டுகின்றது. ஒளித்தொகுதி IIஇல் பெற்ற சக்தி ATPயை உருவாக்க பயன்படுவதுடன் ஒளித்தொகுதி Iஇல் பெற்ற சக்தி ஃபெரோடொக்சின் இலத்திரன் காவியூடாகக் கடத்தப்பட்டு NADPH மூலக்கூறுகளை உருவாக்கப் பயன்படும். ஒளி தங்கியிருக்காத கார்பன் பதித்தல் தாக்கங்களின் போது ATP, NADPH ஆகிய சக்தி மூலக்கூறுகளில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலே பயன்படுத்தப்பட்டு G3P யும் அதிலிருந்து குளுக்கோசும் தொகுக்கப்படுகின்றன. ஒளி நேரடியாகத் தேவைப்படாத தாக்கங்கள் இத்தாக்கங்கள் இருட்தாக்கங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஒளி தேவைப்படும் தாக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ATP மற்றும் NADPH ஆகியவற்றின் சக்தியைப் பயன்படுத்தி காபனீரொக்சைட்டை காபோவைதரேட்டாக மாற்றுவதே இதன் பிரதான செயன்முறையாகும். இத்தாக்கங்கள் தைலக்கொய்ட் மென்சவ்வுக்கு வெளியே பசுங்கனிகத்தின் கலச்சாறுக்கு ஒப்பான ஸ்ட்ரோமாவில் நிகழ்கின்றன. இத்தாக்கங்களுக்கு நேரடியாக ஒளிச்சக்தி தேவைப்பலவில்லையென்றாலும் ஒளித்தாக்கங்களின் விளைவுகளான ATP மற்றும் NADPH என்பன தேவைப்படுகின்றன. ஒளி நேரடியாகப் பங்கெடுக்காத தாக்கங்களில் மூன்று படிநிலைகள் உள்ளன. அவையாவன கார்பன் நிலைப்படுத்தல்/ கார்பன் பதித்தல், தாழ்த்தல் தாக்கங்கள், ரிபியுலோசு 1,5 இருபொசுபேட்டு (RuBP) மீள்தொகுப்பு என்பனவாகும். இப்படிநிலைகள் மொத்தமாக கல்வின் வட்டம் என அழைக்கப்படுகின்றன. இத்தாக்கங்களில் மிக முக்கியமான நொதியமாக RuBisCO விளங்குகின்றது. இது NADPHஇலுள்ள சக்தியைப் பயன்படுத்தி காபனீரொக்சைட்டை C3H6O3-பொஸ்பேட்டாக நிலைப்படுத்துகின்றது. இருட்தாக்கம் பிரதானமாக மூன்று படிநிலைகளில் நிகழ்கின்றது. கார்பன் பதித்தல்: காபனீரொக்சைட்டு RuBisCO நொதியத்தின் ஊக்குவிப்புடன் RuBP உடன் இணைதல். உருவாகும் PGAஇல் 1/6 பங்கு வெல்ல உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். தாழ்த்தல்: மீதி 5/6 பங்கு PGA இப்படிநிலையினுள் உள்வாங்கப்படும். ஒளித்தாக்கத்தில் உருவான முழு NADPHஉம், சிறிதளவு ATP உம் இங்கு PGA ஐத் தாழ்த்தப் பயன்படுத்தப்படும். RuBP மீளுருவாக்கம்: மீதி ATPஐப் பயன்படுத்தி காபனீரொக்சைட்டு வாங்கியான RuBP மீளுருவாக்கப்படும். மொத்த இருட்தாக்கம்: 3 CO2 + 9 ATP + 6 NADPH + 6 H+ → C3H6O3-phosphate + 9 ADP + 8 Pi + 6 NADP+ + 3 H2O இவ்வாறு உருவாக்கப்படும் C3H6O3 பின்னர் குளுக்கோசாக C6H12O6 மாற்றப்பட்டு அதன் பின்னர் தேவையான வடிவத்துக்கு மாற்றப்படுகின்றது. பொதுவாக தாவர இலைகளில் ஒளித்தொகுப்பின் பின்னர் குளுக்கோசு மாப்பொருளாகச் சேமிக்கப்படுகின்றது. கல்வின் வட்டத்தின் போது ஐந்து கார்பன் வெல்லமான ரிபியுலோசு 1,5 இருபொசுபேட்டுடன் (RuBP) காபனீரொக்சைட்டு இணைந்து, மூன்று கார்பன் வெல்லமான கிளிசரேட்-3பொஸ்பேட்டு (PGA அல்லது GP) உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் PGAஇல் ஆறில் ஐந்து பங்கு மூலக்கூறுகள் RuBPஐ மீண்டும் தொகுக்கவும் மீதி ஒரு பங்கு ஒளித்தொகுப்பில் ஈடுபடும் உயிரினத்துக்குத் தேவையான வெல்லத்தைத் தொகுக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. மேலே கூறப்பட்ட ஒளித்தொகுப்பின் இருட்தாக்கம் C3 தாவரங்களுக்குரியதாகும். இவற்றில் நடைபெறும் நீரிழப்பு, ஒளிச்சுவாசம் ஆகிய செயன்முறைகளால் இப்பொதுவான முறை வெப்பவலய நாடுகளில் வினைத்திறன் குன்றியதாக உள்ளது. இதற்கான இசைவாக்கங்களாக சில தாவரங்கள் சி4 கார்பன் பதித்தலையும், சில CAM கார்பன் பதித்தலையும் மேற்கொள்கின்றன. இவ்விரு செயன்முறைகளிலும் கல்வின் வட்டத்துக்கு மேலதிகமாக காபனீரொக்சைட்டைச் சேமித்து விடுவிக்கும் அனுசேபச் செயன்முறைகளும் உள்ளன. ஒளித்தொகுப்பு வீதத்தில் செல்வக்கு செலுத்தும் காரணிகள் ஒளித்தொகுப்பு வீதத்தில் பிரதானமாக மூன்று காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன: ஒளிச்செறிவும் ஒளியின் அலைநீளமும் காபனீரொக்சைட்டின் செறிவு வெப்பநிலை ஒளிச்செறிவும் வெப்பநிலையும் ஒளிச்செறிவும் வெப்பநிலையும் ஒன்றின் விளைவை மற்றையது கட்டுப்படுத்தும் ஒளித்தொகுப்புக் காரணிகளாக உள்ளன. இத்தோற்றப்பாடு ஃப்ரெடரிக் பிளாக்மான் என்பவரால் அவதானிக்கப்பட்டது. இத்தோற்றப்பாடானது ஒளித்தொகுப்பில் இரு நிலைகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தியது. வெப்பநிலை ஒளித்தொகுப்பின் கல்வின் வட்டத்திலும், ஒளிச்செறிவு ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கங்களையும் பாதிக்கின்றன. காபனீரொக்சைட்டின் செறிவு ஒளித்தொகுப்பு வினைத்திறனாக நடைபெற இலைக்குள் காபனீரொக்சைட்டின் குறிப்பிட்டளவு செறிவு தேவைப்படுகின்றது. காபனீரொக்சைட்டின் செறிவு அளவுக்கதிகமாகக் குறைந்தால் (அதிக வெப்பமான நேரத்தில் இது நடைபெறும். அதிக வெப்பமான நேரத்தில் ஆவியுயிர்ப்பைக் குறைப்பதற்காக இலைவாய்கள் மூடிக்கொள்ளும். இதனால் ஒளித்தொகுப்புக்கு காபனீரொக்சைட்டு இலைக்குள் செல்ல முடியாது) ஒளித்தொகுப்பின் வினைத்திறனை மோசமாகப் பாதிக்கும் ஒளிச்சுவாசம் எனும் செயன்முறை நடைபெறத் தொடங்கும். கல்வின் வட்டத்தில் பயன்படுத்தப்படும் RuBisCO நொதியம் CO2 மற்றும் O2 ஆகிய இரண்டுடனும் தாக்கமடையக்கூடியது. காபனீரொக்சைட்டு குறைவான நேரத்தில் ஒக்சிசனுடன் தாக்கமடைந்து உருவாக்கப்பட்ட வெல்லத்தை காபனீரொக்சைட்டாக மாற்றி வீணாக்குகின்றது. என்வே அதிக ஒக்சிசன் செறிவும் குறைந்த காபனீரொக்சைட்டுச் செறிவும் மிக மோசமாக ஒளித்தொகுப்பைப் பாதிக்கின்றது. எனவே சோளம் போன்ற சில வெப்ப வலையத் தாவரங்கள் ஒளிச்சுவாசத்தைக் குறைக்கும் முகமாக C4 ஒளித்தொகுப்பு முறையைப் பயன்படுத்துகின்றன. விக்கிக் காட்சியகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Metabolism, திசுள் மூச்சு (Cellular respiration) மற்றும் ஒளிச்சேர்க்கை - உயிர் வேதியியல் மற்றும் திசுள் உயிரியலுக்கான மின் நூலகம் ஒளிச்சேர்க்கை தாவர உடலியங்கியல் தாவரவியல் உயிரணு ஆற்றல் பரிமாற்றம் சூழல் மண்டலம்
3621
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
தெரிநிலை வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று என்பது செய்பவன் முதலா செய்பொருள் ஈறாக அமையும் ஆறையும் காட்டும் வினைமுற்று ஆகும். எ.கா: கயல்விழி தொடுத்தாள் இதில் கயல்விழி என்பது வினையைச் செய்யும் கருத்தா தொடுத்தாள் என்பது கருத்தாவின் செயலை உணர்த்தும் வினைமுற்று. இச்சொல்லிலிருந்து, ஆகியவற்றை அறியலாம். இவ்வாறு, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும். இவற்றுள் சில குறைந்து வரும் ஆனால் காலத்தைத் தெளிவாகக் காட்டும். இவற்றையும் பார்க்கவும் குறிப்பு வினைமுற்று வினைச்சொல் தமிழ் இலக்கணம் சொல்லிலக்கணம்
3622
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
குறிப்பு வினைமுற்று
பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று எனப்படும் எடுத்துக்காட்டு அவன் பொன்னன்பெற்றது. எ.கா:அவன் பொன்னன். இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னையுடையன் என்று பொருள் தரும். இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும். இவற்றையும் பார்க்கவும் தெரிநிலை வினைமுற்று வினைச்சொல் தமிழ் இலக்கணம் சொல்லிலக்கணம்
3623
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
பவேரியா
பவேரியா (Bavaria) ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள பதினாறு ஜெர்மானிய மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் மியூனிக் ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும். நியூரம்பெர்க் இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். ஜெர்மனி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். பவேரியா மாநிலம் ,தொடக்கத்தில் உரோமைப் பேரரசின் பெரிய நிலப்பகுதியாக கிமு 6-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தது. பின் ஜெர்மனியின் தனி மாநிலமாக உருவானது. பவேரியா மக்கள் தங்களுக்கு எனத் தனிக் பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான சுமார் 52 விழுக்காடு மக்கள் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அக்டோபர் திருவிழா முதலிய திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது. ஜெர்மனி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்த மாநிலம் உள்ளது. இதன் மூலம் வளமான மாநிலமாக இது கருதப்படுகிறது. வரலாறு தொன்மைக்காலம் பவேரியாக்கள் வடக்கு ஆல்ப்ஸ் இல் தோன்றியதாக அறியப்படுகிறது. அதற்கு முன்பாக உரோமைப் பேரரசுவின் மாகாணங்களான இரேத்சியா மற்றும் நோரிகம் போன்ற மாகாணங்களில் வசித்துவந்தனர். பவேரியாக்கள் தொன்மையான இடாய்ச்சு மொழியைப் பேசினர். பவேரியன் என்பதற்கு பயாவின் ஆண்கள் என்பது பொருளாகும். இவர்கள் முதன் முதலில் எழுத்துப்பூர்வமாக அறியப்பட்டது 17-ஆம் நூற்றாண்டில் தான். யூத வரலாற்று ஆசிரியர் டேவிட் சாலமன் கன்சு என்பவர் இவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். நிலவியல் பவேரியா மாநிலம் தனது எல்லைகளை ஆஸ்திரியா, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுடன் பங்கிட்டுக்கொள்கிறது. தன்யூப் ஆறு மற்றும் முக்கிய ஆறு (மெயின் ஆறு) இந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது. மொழிகள் , கிளை மொழி மூன்று ஜெர்மன் கிளை மொழிகளில் பவேரியா மக்கள் பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வாழ்கிற மக்கள் தொமையான பவேரிய மொழி பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கில் வசிக்கும் மக்கள் சுவாபியன் ஜெர்மன் எனும் கிளை மொழியையும், வடக்குத் திசையிலுள்ள மக்கள் கிழக்கு ஃப்ரேன்கொனைன் ஜெர்மன் எனும் கிளை மொழியில் பேசினர். விளையாட்டு பவேரிய மாநிலத்தில் பல காற்பந்துச் சங்கங்கள் உள்ளன. குறிப்பாக பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம், எஃப் சி நியூரம்பெர்க், 1.எஃப் சி ஔசுபூர்கு, டி எஸ் வி 1860 மியூனிக் . இதில் பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் மிகவும் பிரபலமானது. இந்தக் கழகம் இருபத்தி ஏழு முறைகள் ஜெர்மனியின் வாகையாளர் கோப்பையில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த படியாக 1. எஃப் சி நியூரம்பெர்க் ஒன்பது முறையும், டி எஸ் வி 1860 மியூனிக் கழகம் ஒரு முறையும் பெற்றுள்ளன. பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் ஐந்து முறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டியிலும், ஜெர்மன் வாகையாளர் போட்டியில் இருபத்தி ஏழு முறைகளும் வெற்றி பெறுள்ளன. புகழ்பெற்ற பவேரியாக்கள் அறிவியல் அறிஞர்கள் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் மேக்ஸ் பிளாங்க், எக்சு-கதிர் அலைகளைக் கண்டறிந்த வில்லெம் ரோண்ட்கன், குவாண்டம் இயங்கியலைத் தோற்றுவித்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான வெர்னர் ஐசன்பர்க், ஆதம் ரைஸ் . மதத் தலைவர்கள் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவரான திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், போப் தமாசஸ் II, போப் விக்டர் II இவற்றையும் பார்க்க பவேரிய மொழி இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள் சான்றுகள் வெளி இணைப்புகள் பவேரியாவில் உள்ள தேவாலயங்கள் பவேரியா சுற்றுலாத்துறை பவேரிய அரசு இணையத்தளம் செருமானிய மாநிலங்கள்
3624
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
பெயரெச்சம்
பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். அப்பெயரெச்சம் இருவகைப்படும். அவை தெரிநிலைப் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் பெயரெச்சச் சொற்கள் அகரவோசையையோ உம் என்னும் ஓசையையோ கொண்டு முடியும். தெரிநிலைப் பெயரெச்சம் காலத்தையும் செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும் எ.கா: படித்த மாணவன் படிக்கின்ற மாணவன் படிக்கும் மாணவன் இத்தொடர்களில் படித்த, படிக்கின்ற, படிக்கும் என்னும் சொற்கள் பொருள் முடிவு பெறவில்லை. அவை முறையே முக்காலத்தையும், படித்தல் என்னும் செயலையும் உணர்த்திநின்று மாணவன் என்னும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. இவ்வாறு, காலத்தையும் செயலையும் உணர்த்திநின்று, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறு பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். குறிப்புப் பெயரெச்சம் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும். எ.கா: நல்ல மாணவன் அழகிய மலர் நல்ல, அழகிய என்னும் சொற்கள் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால் இது குறிப்பு பெயரெச்சம் ஆகும். இவற்றையும் பார்க்கவும் வினையெச்சம் வினைச்சொல் தமிழ் இலக்கணம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் வினைச் சொல்
3625
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
வினையெச்சம்
தமிழில் பத்து வகையான எச்சங்கள் உண்டு. அவற்றில் ஒன்று வினையெச்சம் (வினை+எச்சம்). வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். வினையெச்சம் இருவகைப்படும். அவை, தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்பன. எ.கா : படித்து வந்தான். மெல்ல நடந்தான். வினையெச்சச் சொற்கள் பொதுவாக இ அல்லது உ ஆகிய ஓசைகளைக் கொண்டு முடியும். தெரிநிலை வினையெச்சம் ஒரு வினையெச்சத் தொடரில் காலத்தையும் செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும் எ.கா: படித்துத் தேறினான் குறிப்பு வினையெச்சம் ஒரு வினையெச்சத் தொடரில் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்திநின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் எனப்படும் எ.கா: மெல்ல நடந்தான் வினையெச்சப் புணர்ச்சி பொதுவாக வல்லினம் வந்து புணரும்போது குற்றியலுகரத்தில் முடியும் வினையெச்சங்களில் மென்தொடர், இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக நிற்க வருமொழியில் வல்லினம் வந்தாலும் ஒற்று மிகா. ஏனைய அனைத்து வகையான வினையெச்சங்களும் இடையொற்று மிக்கே முடியும். எடுத்துக்காட்டு மிகாதன நடந்து போனான் - மென்-தொடர்க் குற்றியலுகரம் முன்னர் ஒற்று மிகவில்லை. செய்து பார்த்தான் - இடைத்தொடர்க் குற்றியலுகரம் முன்னர் ஒற்று மிகவில்லை. மிகுவன பார்த்துப் படித்தான் - வன்-தொடர்க் குற்றியலுகரம் முன்னர் ஒற்று மிகுந்தது. மெல்லப் பேசு - குறிப்பு வினையெச்சம் முன்னர் ஒற்று மிகுந்தது. செய்யச் சொன்னான் - 'அ' எழுத்தில் முடியும் வினையெச்சம் முன் ஒற்று மிகுந்தது. செய்யாக் கிடந்தான் - 'ஆ' எழுத்தில் முடியும் வினையெச்சம் முன் ஒற்று மிகுந்தது. ஓடிப் போனான் - 'இ' எழுத்தில் முடியும் வினையெச்சம் முன் ஒற்று மிகுந்தது. செய்யூஉக் கிடந்தான் - 'ஊ' எழுத்தில் முடியும் வினையெச்சம் முன் ஒற்று மிகுந்தது. சில குறியீடுகள் செய்யிய என்பது வினையெஞ்சு கிளவிகளில் ஒன்று செய்யா என்னும் வினையெஞ்சு கிளவி இன்றி என்னும் வினையெஞ்சு கிளவி செயின் - னகர இறுதி வினையெஞ்சு கிளவி இவற்றையும் பார்க்கவும் பெயரெச்சம் வினைச்சொல் தமிழ் இலக்கணம் அடிக்குறிப்பு வினைச் சொல்
3630
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
சுரங்களின் அறிவியல்
தென்இந்திய இசையில் மட்டுமல்லாமல் அனைத்து இசைகளுக்கும் சுரங்கள் இன்றியமையாதவை. இத்தகைய சுரங்களின் அறிவியல் அம்சங்கள் இக் கட்டுரையில் எடுத்தாளப்படுகின்றன. மேற்கத்திய இசையை எடுத்துக் கொண்டால், சுரங்கள், 'நோட்' என்று வழங்கப்படுகின்றன. பியானோ அல்லது கீபோர்ட் ஒன்றில் இருக்கும், கருப்பு மற்றும் வெள்ளைக் கட்டைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு 'நோட்'-டைக் குறிக்கும். சுரங்களின் குறியீடு மேற்கத்திய சுரங்கள் 'A', 'B', 'C' ,... போன்ற குறியீடுகளால் வழங்கப்படுகின்றன. எழுத்து வடிவத்தில் 'A', 'B', 'C' ,... என்று குறிப்பிட்டாலும் பாடும்போது சுரங்களை குறிப்பதற்கு 'டோ', 'ரி', 'மி', 'ஃபா', 'ஸோ', 'லா', 'தீ' என்று வழங்குகிறார்கள். இவை முறையே, 'ஸ', 'ரி', 'க', 'ம', 'ப', 'த', 'நி' ஆகிய சுரஸ்தானங்களுக்கு சமானமாகும். அறிவியல் பின்னணி இந்த சுரங்களின் அதிர்வெண்ணின் பின்னணியில் சுவாரஸ்யமான கணிதமும், இயற்பியலும் இருக்கிறது! அதிர்வலைகளின் நிறமாலையில் (spectrum), ஒரு சிறு பகுதி மட்டுமே மனிதனின் காதுகளால் கேட்கக்கூடிய ஒலியினை எழுப்பக் கூடியவை. இவற்றின் அதிர்வெண் 16 Hz முதல் 16,000 Hz வரை. அவற்றில் 1000 Hz முதல் 16,000 Hz வரையுள்ள பகுதியில்தான் காதுகளும், ஒலியை புரிந்துகொள்ள மூளையும் நன்றாக உணர முடியும். அதிலும் அதிலுள்ள ஒவ்வொரு அதிர்வெண் ஒலியையும் நம் காதுகளால் வேறுபடுத்தி அறிய இயலாது. எடுத்துக்காட்டாக அதிர்வெண் 240 Hz ஒலிக்கும், 241 Hz ஒலிக்கும் வேறுபாடு எதுவும் நம் கேள்வியில் தெரியாது. ஒலிநிறமாலையை எண்மங்களாகப் (octave) பிரித்துக் கொள்ளலாம். மனிதர்களால் கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து எண்மங்களில் ஒலி எழுப்ப முடியும். எண்மங்களின் தொடக்க அதிர்வெண் f1 என்றால், முடியும் அதிர்வெண் தொடங்கிய அதிர்வெண்ணின் இரண்டு மடங்காக, 2 x f1 ஆக இருக்கும். விளக்குவதற்காக வேண்டி, ஒரு எண்மத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒரு எண்மத்தில் இருக்கும் ஒலி அதிர்வுகளை அதிர்வெண் வாரியாக பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அதிர்வெண்ணுக்கும் இடைவெளி, 1.059 இன் மடங்கு என்று வைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு ஒலி அதிர்வின் எண் 240 Hz என்றால், அதற்கு அடுத்த அதிர்வெண், 240 x 1.059 = 254 Hz ஆக இருக்கும். இப்படியே, 240,254,269,...என்று, பன்னிரெண்டு வரை செல்லும், பதிமூன்றாவது மடங்கு, தொடங்கிய 240 Hz க்காட்டிலும் இரண்டு மடங்காக இருக்கும்!. அதன் பின் அடுத்த ஆக்டேவ் துவங்கும். ஆக, ஒரு எண்மத்தில் 12 அதிர்வெண் ஒலிகள். இதிலிருந்து 12 என்னும் எண்ணுக்கும் சுரங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்துகொள்ளலாம். 12 சுரங்களின் அதிர்வெண் இடைவெளியும் 1.509 Hz இன் மடங்குகள்தான். மேற்கத்திய சங்கீதத்தில் மேற்சொன்ன பன்னிரெண்டு அதிர்வெண் கணக்கும், 240 Hz போன்றதொரு நிலையான அதிர்வெண் ஆக்டேவ் தொடக்கமும் பின்பற்றப்படுகிறது. இந்திய சங்கீதத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. மேலும் இதை முதல் நிலையாக கொண்டு அதற்கு மேல் ‘கமகம்’ என்ற சொல்லப்படும் வழிமுறையையும் சேர்த்து, அடுத்த நிலையில் பயணிக்கிறார்கள். இம்முறை 16ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுச் சங்கீதத்திலும் இருந்ததாக சொல்லப்படுகிறது. எளிமை வேண்டி, அவை மேற்கத்திய சங்கீத வழக்கத்தில் அவ்வளவாக இல்லை. (Beatles, Simon போன்றவர்களின் ஆல்பங்களில் அவ்வப்போது காணலாம்). இசை
3633
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%80%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AF%82
லீ குவான் யூ
லீ குவான் யூ (Lee Kuan Yew, 16 செப்டம்பர் 1923 - 23 மார்ச்சு 2015) சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவரை சிங்கப்பூரின் தந்தை எனச் சொல்லுவர். இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார். நவம்பர் 12 ஆம் நாள் 1954 ஆம் வருடம் மக்கள் செயல் கட்சியை நிறுவினார். 1959 முதல் 1990 வரை இவரது மக்கள் செயல் கட்சியை 7 முறை வெற்றிபெற வைத்தவர்.1990 - ல் மக்கள் செயல் கட்சியின் கோ சோக் தோங்கு பிரதமராக இருக்கும் போது இவர் அதில் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், இவரின் மகன் ஆவார். லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். பின்னர் 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் (Minister Mentor) பதவியில் பணியாற்றினார். சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன்னான 1948 ஆம் ஆண்டு தேர்தலில் ' தஞ்சோங் பாகர் ' தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவரின் மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியினால் 'லி குவான் யூ' ஜூன் 3 ஆம் நாள் 1959 -இல் பிரதமராகப் பொறுப்பேற்றார். குடும்பம் லீ குவான் யூ, அவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான்காவது தலைமுறைச் சிங்கப்பூர்காரர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் மூதாதையார் லீ போக் பூன், 1846ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்தொங் மாகாணத்தில் இருந்து வெளியேறி சிங்கப்பூரின் நீரிணைக் குடியேற்றத்துக்கு (Strait settlements) 1863ல் வந்ததாக கூறி உள்ளார். லீ குவான் யூவின் தாத்தா லீ ஹூட் லாங் 1871ல் சிங்கப்பூரில் பிறந்தவராவார். லீ குவான் யூ வழக்கறிஞர் படிப்பை முடித்தவர். லீயின் குடும்பத்தினர் பலர் சிங்கப்பூர் சமூகத்தில் முக்கியப் பதவிகளில் உள்ளனர். அவரது இளைய மகன், லீ ஹசைன் யாங், முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் முன்னாள் தலைவராக இருந்துள்ளார் மற்றும் மேலும் சிங்டெல் நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார். இளமைக் காலம் லீ சிங்கப்பூரில் 92 கம்போங் ஜாவா சாலை 1923-இல் ஒரு பிரித்தானியக் குடிமகனாகப் பிறந்தார். லீ முதன் முதலில் டெலோக் குராவோ முதன்மைப் பள்ளியில் படித்துள்ளார். பின்னர் அவர் ராஃபிள்ஸ் நிறுவனத்தில்(RI) பயின்றார். அவர் இந்நிறுவனத்திற்காக கிரிக்கெட், டென்னிஸ், சதுரங்கம் விளையாடி பல விவாதங்களில் பங்கு கொண்டுள்ளார். லண்டனில் படிப்பு முடித்து அவர் 1949ல் சிங்கப்பூர் திரும்பினார். விருதுகள் அரசு மரியாதைகள் தி ஆர்டர் ஆப் தி ரைசிங் சன் (1967) ஆர்டர் ஆப் கம்பேனியன்ஸ் ஆப் ஹானர் (1970) கனைட் கிரான்ட் கிராஸ் ஆப் செயின்ட் மைக்கேல் மற்றும் புனித ஜார்ஜ் (1972) தி ப்ரிடம் ஆப் தி சிட்டி ஆப் லன்டன் (1982) தி சேரி பாதுகா மாஹகோடா ஜோர் (1984) தி ஆர்டர் ஆப் கிரேட் லீடர் (1988) 2002 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வு முயற்சிகள் வளர்ச்சிக்காக லீ முறையாக சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழிற்துறையில் தனது பதவி உயர்வு அங்கீகாரமாக இம்பீரியல் காலேஜ் லண்டன் பெல்லோஷிப்பிற்கு அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை லீ குவான் யூ, 05 பெப்ரவரி2015 அன்று நிமோனியா காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக உள்ளதாக அரசு அறிவித்தது. 2015ஆம் ஆண்டு மார்ச்சு 22ந்தேதி மருத்துவமனையில் மரணமடைந்தார் சிங்கப்பூர் நேரம் ஞாயிறு (23 மார்ச்சு) அதிகாலை 3.18 மணி அளவில் இறந்தார். இறுதிச் சடங்கு லீ குவான் யூவின் மறைவை ஒட்டி மார்ச்சு 23 முதல் மார்ச்சு 29 வரை ஒரு வாரகாலம் தேசிய அளவில் துக்க வாரமாக சிங்கப்பூர் அரசு கடைபிடிக்கப்பட்டது. லீ குவான் யூவின் குடும்பத்தினர் அவருக்கு மார்ச்சு 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் மார்ச்சு 25 முதல் மார்ச்சு 28 வரை அஞ்சலி செலுத்தினர். இதில் கிட்டத்தட்ட 4,15,000 பொதுமக்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வந்து நேரடியாக அஞ்சலி செலுத்தினர். இது மொத்த மக்கட்தொகையில் 12 விழுக்காடு ஆகும். அரசு முறையிலான இறுதிச் சடங்கு மார்ச்சு 29 அன்று பிற்பகல் இரண்டு மணிக்குத் தேசிய பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் மண்டாய் தகனச் சாலையில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. மேலும் நரேந்திர மோதி, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், இங்கிலாந்து நாடாளுமன்ற செயலாளர் வில்லியம் கக் உள்பட 23 நாட்டு தலைவர்கள் லீ இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். இந்தியாவில் லீ குவான் யூவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவில் 29 மார்ச்சு 2015 அன்று துக்க தினமாக கடைபிடிக்கப்பட்டது. மேலும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டார். மேலும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேற்கோள்கள் சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் 1923 பிறப்புகள் 2015 இறப்புகள் சிங்கப்பூரின் பிரதமர்கள்
3635
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D
சோழர்
சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து' என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர். சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத் தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினார். 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழரும், அவரது மகனான முதலாம் இராசேந்திர சோழரும், தற்போதய இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர். பொ.ஊ. 10-12 ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் சாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தார். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், சிரீவிசயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. பண்டைய கால அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர். சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி. தோற்றமும் வரலாறும் சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை .பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குடிகள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ இயலவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பவை ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன. முற்காலச் சோழர்கள் இன்றைய தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களை தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இவனை பரணர், கழாத்தலையார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான். முதலாம் கரிகாலன் கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான்.<ref name="Proceedings of the Indian History Congress, Volume 39, page 156">Proceedings of the Indian History Congress, Volume 39, page 156</ref> பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர். கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக் கொன்று தப்பித்தான், பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான். கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது. பிற சோழ மன்னர்கள் இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இடைக்காலச் சோழர்கள் களப்பிரர் வருகை பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்த கன்னட நாட்டிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். பொ.ஊ. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது. நாட்டில் தெளிவற்ற பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும். இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கிராந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். பொ.ஊ. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகரர் இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும். பழையாறை சோழர்கள் தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் குறிப்பாக உறையூர், பழையாறை நகரங்களிலிருந்து சோழ நாட்டின் சிலபகுதிகளை மட்டும் ஏறத்தாழ இருநூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் ஆண்டு வந்தனர். இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாகக் கூறும்போது, காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்றுச் செய்திகளைத் தரவில்லை. இசை வெங்கிள்ளி பொ.ஊ. 300–330 கைவண்கிள்ளி பொ.ஊ. 330–350 பொலம்பூண்கிள்ளி பொ.ஊ. 350–375 கடுமான்கிள்ளி பொ.ஊ. 375–400 இரண்டாம் கோச்சோழன் செங்கணான் பொ.ஊ. 400–440 நல்லடி சோழன் பொ.ஊ. 440–475 பெயர் தெரியவில்லை பொ.ஊ. 476–499 மூன்றாம் கோச்சோழன் செங்கணான் பொ.ஊ. 499–524 புகழ்சோழன் பொ.ஊ. 524–530 மூன்றாம் கரிகாலன் பொ.ஊ. 530–550 அரசநாட்டுச் சோழர்கள் களப்பிரர் மற்றும் முத்தரையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், மூன்றாம் கரிகாலன் களப்பிரர், முத்தரையர் ஆகியோரை விரட்டியதோடு, பல்லவ மன்னனான திரிலோசன பல்லவனை வெற்றி கொண்டு தொண்டை நாட்டை கைப்பற்றினான். ஆனால், கரிகாலனின் மறைவிற்குப் பின் பொ.ஊ. 550 இல் பல்லவ மன்னன் சிம்மவிட்டுணு சோழர்களை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். இக்காலத்தில் சோழர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி பல்லவருக்கு அடங்கிய வட தமிழக தென் ஆந்திரநாட்டு எல்லைப் புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அதன்படி மூன்றாம் கரிகாலனின் புதல்வனான நந்திவர்மச் சோழன் வேங்கடமலைக்கு வடக்கே கடப்பை, சந்திரகிரி, அனந்தபுரம், கோலார் பகுதிகளையும், வேங்கடத்திற்கு தெற்கே காளத்தி, நெல்லூர், திருப்பதி, சிற்றூர், புங்கனூர் பகுதிகளையும் ஆளத் தொடங்கினன். நந்திவரும சோழனுக்குப் பின் அவனின் புதல்வனான சிம்மவிட்டுணு சோழன் பல்லவரை எதிர்த்துப் போரிட்டு மாண்டான். அவனையடுத்து, அவனது தம்பியரான சுந்தரானந்த சோழன் மற்றும் தனஞ்செய சோழன் ஆகியோர் பல்லவருக்கு அடங்கி ஆளத் தலைப்பட்டனர். இவர்கள் பல்லவர்கள், சாளுக்கியர், மேலைக் கங்கர்கள், கீழைக் கங்கர்களோடு மணவுறவும் பூண்டனர். இவர்கள் அரசநாட்டுச் சோழர்கள் (ரேனாட்டுச் சோழர்கள்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர். அப்பகுதிகளில் காடுகளை அழித்து நெல்லூர், சிற்றூர், புங்கனூர், திருப்பதி போன்ற புதிய ஊர்களை உருவாக்கினர். பொ.ஊ. 550 இல் கருநாடகத்தை ஆண்ட கங்க அரசர்களில் ஒருவனான துர்விந்தன் என்ற சிறந்த மன்னனின் மனைவியார் ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம சத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள். நந்திவரும சோழன் பொ.ஊ. 550–575 தனஞ்செய சோழன் பொ.ஊ. 575–609 மகேந்திரவருமச் சோழன் பொ.ஊ. 609–630 புண்ணியகுமார சோழன் பொ.ஊ. 630–655 விக்கிரமாதித்த சோழன் பொ.ஊ. 650–680 சக்திகுமார சோழன் பொ.ஊ. 680–705 விக்கிரமாதித்த சோழன் II பொ.ஊ. 705–730 சத்தியாதித்தச் சோழன் பொ.ஊ. 730–755 விசயாதித்த சோழன் பொ.ஊ. 755–790 சிரீகாந்த சிரீமனோகர சோழன் பொ.ஊ. 790–848 புண்ணியகுமார சோழனின் ஆட்சிக் காலத்தில் வருகை தந்த'யுவான் சுவாங்' என்ற சீனப் பயணி இவர்கள் நாட்டை' சூளியே' என்றும் அவர்கள் தம்மைச் சோழன் கரிகாலன் பரம்பரையினரைச் சேர்ந்ததாகக் கூறிக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார். இச்சோழப் பேரரசர்களின் சோழநாட்டு எல்லை, தான்ய கடகத்திற்கு தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அது 480 கல் சுற்றளவு கொண்டதாகவும் தலைநகரம் 2 கல் சுற்றளவு கொண்டதாகவும் அச்சீனப்பயணி தன் பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். பல்லவருக்கு கீழடங்கி ஆண்ட சிற்றரசனான விசயாலய சோழன் என்பவன் பாண்டிய மேலாதிக்கத்திலிருந்து ஆட்சி செய்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான். சிரீகாந்த சிரீமனோகர சோழனின் வழித்தோன்றல் விசயாலய சோழன் என சுந்தர சோழன் வெளியிட்ட அன்பில் பட்டயம் தெரிவிக்கின்றது. பிற்காலச் சோழர்கள் பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிய வெங்கையா, உல்ச், கிருட்டிணசாத்திரி ஆகியோர் தொகுத்த கல்வெட்டுகளும் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகளும் வழி செய்கின்றன. அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தைச் செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெடன் செப்பேடுகள் ஆகியவை அவற்றுள் சில. இவை தவிர இலக்கிய, இலக்கணங்களும் கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகள், திவ்யசூரிசரிதம், வீர சோழியம், தண்டியலங்காரம் போன்ற நூல்களும் இக்காலத்தை அறிய உதவும் சன்றுகளாக உள்ளன. விசயாலய சோழன் (பொ.ஊ. 850-871) பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது.பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், பொ.ஊ. 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.அது முதல் பொ.ஊ. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் பொ.ஊ. 871 இல் இறந்தான். முதலாம் ஆதித்த சோழன் (பொ.ஊ. 871-907) விசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். பொ.ஊ. 880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் பல்லவன் அபராசிதனுக்கும் இடையே திருப்புறம்பியம் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், [[மேலைக் கங்கர்|கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர். நிருபத்துங்க பல்லவனுக்கு பாண்டியன் வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றிபெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். திருப்புறம்பியப் போர் சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற பாண்டியர்கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான். அபராசிதனும் சோழர்களுக்குச் சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும் முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான். முதலாம் பராந்தக சோழன் (பொ.ஊ. 907-955) பொ.ஊ. 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே காளத்தி முதல் தெற்கே காவிரி வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான்.உலக வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான். இவன் காலத்தில் குடவோலை முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. கண்டராதித்த சோழன் (பொ.ஊ. 955-962) பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இராசாதித்தர் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரகூடர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது மகன் கண்டராதித்தன் பொ.ஊ. 950-இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும் குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்றும் பல உள்ளன. இவன் காலத்தில் தொண்டை மண்டலம் முழுவதும் இராட்டிரகூடர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அரிஞ்சய சோழன் (பொ.ஊ. 962-963) கண்டராதித்தனை அடுத்து அவன் தம்பி அரிஞ்சயன் சோழ அரசனானான். முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனான இராசாதித்தன் திருக்கோவிலூரில் இராட்டிரகூட மன்னனை எதிர்க்கப் படையுடன் தங்கியிருந்த போது அவனுக்குத் துணைபுரிய இவனும் தங்கியிருந்த சிறப்புடையவன். இராட்டிர கூடன் கைப்பற்றிய தொண்டை நாட்டைத் தான் மீட்க முயற்சிகள் செய்தான். இடையில் சிறிது காலமே ஆட்சி புரிந்த அரிஞ்சய சோழனும் குறுகிய காலத்தில் போரில் மடிந்தான். சுந்தர சோழன் (பொ.ஊ. 957-973) சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்தது தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதுடன், பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். எனினும், பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் பகைவர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக, இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரமாதிராசன் என்பவன் இவனுக்கு அமைச்சராய் இருந்தவன். கருணாகர மங்கலம் என்ற ஊரினை இறையிலியாக அவனுக்கு அளித்த செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள் ஆகும். உத்தம சோழன் (பொ.ஊ. 970-985) பொ.ஊ. 973 இல் சுந்தரசோழன் இறந்த பின்பு, அவன் மகன் இராசராசன் மன்னனாகவில்லை. கண்டராதித்தனின் மகனும் இராசஇராசனின் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னதாகவே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவன் காலத்தில் நாடு அமைதியுடன் இருந்தது. உத்தம சோழனின் செப்பேட்டிலிருந்து அக்காலத்தில் வரிவடிவில் இருந்த தமிழ் எழுத்துக்களின் தன்மையை அறியலாம். புலியுருவம் பொறித்து உத்தமசோழன் என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய நாணயம் இவன் காலத்து வரலாற்றுச் சான்றாகும். இராசராச சோழன் (பொ.ஊ. 985-1014) பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராசராச சோழன் மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன. காந்தளூர்ச் சாலை இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. சேரர், பாண்டியர், சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து உதகை, விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான். கங்கபாடி, நுளம்பாடி சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் (மைசூரின் தென்பகுதியும் சேலம் மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கர்கள் இந்நாட்டை ஆண்டனர். மைசூர் நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் பல்லவர்களின் வம்சத்தவராகிய நுளம்பர்களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான். இப்போர்களில் தலைமை ஏற்று நடத்தியவன் இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் ஆவான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். துளுவர், கொங்கணர், தெலுங்கர், இராட்டிரகூடர் ஆகியோரை வென்று வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஈழத்துப் போர் இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது. இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளி. ராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களைத் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நிவந்தமாக அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள முந்நீர்ப் பழந்தீவு எனப்படும் இலட்சத்தீவுகள் மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது. முதலாம் இராசேந்திர சோழன் (பொ.ஊ. 1012-1044) இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது. சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான். வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் பெரும் பகுதி போர்கள் நிறைந்திருந்தது. வடநாட்டை வென்று பெற்ற கங்கை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாகக் கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு தஞ்சைப் பெருவுடையார் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கம்' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான். பின்வந்த சோழ மன்னர்கள் முதலாம் இராசாதிராசன் இராசேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான். இரண்டாம் இராசேந்திரன் இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இரசேந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள் தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் செல் நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. பிற மன்னர்கள் இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால், தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில் சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சாளுக்கிய சோழர்கள் முதலாம் குலோத்துங்கன் பொ.ஊ. 1070-1120 இராசராசசோழனின் தமக்கையான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் கடாரத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் முதலாம் குலோத்துங்க சோழன். முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விசயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது. குலோத்துங்கன் இயன்ற வரை பயனற்ற போரை ஒதுக்கினான். இராசராச சோழன் கைப்பற்றிய நாடுகள் அந்நாட்டு மன்னர்களின் முயற்சியாலும் குலோத்துங்கனின் அமைதிக் கொள்கையாலும் சோழர் கையை விட்டு நழுவின. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன. வெளிநாட்டுத் தொடர்புகள் முதலாம் இராசராசன் மற்றும் முதலாம் இராசேந்திரன் காலங்களிலேயே சீன நாட்டுடன் சோழ நாட்டிற்குத் தொடர்பு இருந்து வந்தது. குலோத்துங்கனும் தன் ஆட்சிக் காலத்தில் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72 பேர்களடங்கிய ஒரு தூதுக் குழுவைச் சீனத்திற்கு அனுப்பிவைத்தான் மேலும் கடாரம், சுமத்திரா போன்ற தீவுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தான். ஆட்சிப் பணிகள் குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது வரியை நீக்கினான். எனவே சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்பட்டான். இராசராசனின் ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு முழுவதையும் அளக்கும் பணி தொடங்கி இரு ஆண்டுகளில் முடிவுற்றது. நிலமளந்த செயல் இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பான செயலாகும். இவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும் வைணவ, சமண, பௌத்த சமயங்களையும் ஆதரித்ததாகக் கல்வெட்டு கூறுகின்றது. குலோத்துங்கனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் செயங்கொண்டார். இவர் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப் பரணி இயற்றினார். சோழப் பேரரசின் வீழ்ச்சி முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன. 1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் பொ.ஊ. 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று. சோழ அரசர்களின் பட்டியல் பிற சோழர்கள் குளக்கோட்ட சோழன் (17 ஆம் நூற்றாண்டு) எல்லாள சோழன் (பொ.ஊ.மு. 205 - பொ.ஊ.மு. 161) வீரசேகர சோழன் (பொ.ஊ. 1511–1561) சோழ நாடு தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர். உறையூர் பொ.ஊ. 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இந்நகரங்களில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இவை வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விசயாலய சோழன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்குப் பின் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் நகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராசேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது. கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராசராசனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராசராசனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராசராசனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராசேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாகக் கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின. முத்தொள்ளாயிரத்தில் வரும் ஒரு பாடல் சோழரின் ஆட்சிப் பரப்பைக் கூறுகிறது. "கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் தத்து நீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா பிற்றையும் ஈழம் மிதியா வருமே எம் கோழியர் கோக்கிள்ளிக் களிறு" சோழர் ஆட்சி சோழர் ஆட்சியில் ஆட்சிமுறை, கட்டிடக் கலை, இலக்கியம், இசை, சிற்பம். நாடகம், ஊராட்சி ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடிக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்றவற்றில் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் இருப்பது போலச் சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின் நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது. ஆட்சிப் பிரிவுகள் சோழ அரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது.கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. படைகள் கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது, இந்த படைபிரிவு செங்குந்தம் பிடிக்கும் கைக்கோளர் வகுப்பினரால் நிரப்பப்பட்டது. இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது. - பாவாணர் சமூகநிலை சோழரும் சாதியமும் சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும், பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். சாளரம் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள். பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாகச் செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள். பெண்டிர் சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாகச் சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர். உடன்கட்டை ஏறுதல் கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராசராச பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்தச் சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆடல் வல்லார் சோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன.ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். இவ்ர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்குத் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குக் கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம். சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி (அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, பொ.ஊ. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது. அடிமைகள் சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு" என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார். ரொமிலா தபார் (Romila Thapar) என்று வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது பிறராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். சோழரின் வணிகம் சோழர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கினர். சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, பொ.ஊ. 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றது. சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள் சோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தைத் தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது. பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டுத் தாக்கங்களைப் பல நாடுகளிலும் உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே. கலைகள் சோழர்காலத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. சோழர்களின் நகரம், உள்ளாலை, புறம்பாடி'' என்ற இரு பிரிவாக இருந்தது. நகரங்கள் மிகப்பெரியவை. பல மாடிவீடுகள் கொண்டவை. இன்ன இடத்தில் இன்ன வகையான வீடுகள் தான் கட்டலாம் என்றும், இன்னவர்கள் இத்தனை மாடிகளுடன்தான் வீடுகள் கட்ட வேண்டும் என்றும் விதிகள் இருந்தன. பல அங்காடிகள் இருந்தன. இவர்களின் கட்டடக்கலை உன்னதத்தை விளக்குவன சோழர் அமைத்த கோவில்களே ஆகும். சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விசயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராசராசனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரியவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதால், இராசராசன் காலத்திலும் அவன் மகனான இராசேந்திர சோழன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. பொ.ஊ. 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும். சோழர் காலம், கல்லாலும் வெண்கலத்தாலும் ஆக்கப்பட்டச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விட்டுணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் குறிப்பிடத் தகுந்தவை ஆகும். கல்வி சோழர் காலத்தில் கல்வி சமசுகிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள். இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது. மொழி சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது". இலக்கியம் சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. இராசராச சோழன் காலத்தில் தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. சமண, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன. ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். செயங்கொண்டாரரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். இரண்டாம் குலோத்துங்க சோழன் பெற்ற கலிங்கத்து வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழ உலா என்னும் நூலையும் தக்கயாகப் பரணி, மூவருலா என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சேக்கிழாரின் பெரிய புராணமும் இக்காலத்ததே. சோழ்ர் காலத்தில்தான் திருப்பாவை, திருவெம்பாவை போன்றவை சோழ நாடெங்கும் ஓதப்பட்டன. சோழர் காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சத்தை எட்டியது. சைவ சித்தாந்த நூல்களும் இக்காலத்தே மலர்ந்தன. மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். வாகீச முனிவரின் ஞானாமிர்தம், திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் எழுதிய திருவுந்தியார், அருள்நந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞான சித்தியார், உமாபதிசிவாச்சாரியாரின் எட்டு நூல்கள் என சைவ சித்தாந்த அறிவு சோழர் காலத்தில் உருவாகி முறையான வடிவம் பெற்றது. சமயம் சோழர் இந்து சமயத்தை, சிறப்பாகச் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். எனினும் பிற மதங்களையும் ஆதரித்தனர். சைவம், வைணவம் என்ற இரு மதங்களும் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. ஏராளமான சைவ, வைணவ மடங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு சாற்று முறை செய்ய வரியில்லா நிலங்கள், பணியாளர்கள் எனப்பெரும் பொருள் செலவிடப்பட்டது. இம்மடங்களில் உணவிடுதல், வழிப்போக்கருக்கு உப்பு, விளக்கெண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது ஆகியன் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் சிந்தனை பக்திநெறியில் செல்ல இவை வழிவகுத்தன. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைணவர் பால், சிறப்பாக இராமானுசர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராசேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள். இவற்றையும் பார்க்கவும் சோழர் கலை சோழர் காலக் கட்டிடக்கலை சோழர் இலக்கியங்கள் சோழர்கால வாணிகம் சோழர்காலச் சமுதாயம் சோழர்கால ஆட்சி இலங்கையில் சோழர் ஆட்சி தளிச்சேரி ஊடகங்களில் சோழர் திரைப்படம் ராஜ ராஜ சோழன் (திரைப்படம்) அம்பிகாபதி (திரைப்படம், 1937) அம்பிகாபதி (1957 திரைப்படம்) கரிகாலன் (திரைப்படம்) புதினம் சேரர் கோட்டை (புதினம்) கடல் புறா (புதினம்) வேங்கையின் மைந்தன் (புதினம்) உடையார் (புதினம்) இராஜகேசரி (புதினம்) பொன்னியின் செல்வன் பார்த்திபன் கனவு (புதினம்) மன்னன் மகள் (புதினம்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சோழர் கட்டடக்கலை. சோழர் வெண்கல சிற்பங்கள். Feudalism & Chola Rule UNESCO World Heritage sites constructed by the Chola Empire. Pictures தென்னிந்திய கோவில்கள் . சோழ மன்னர்களின் பட்டியல் . இந்திய கடற்படை சோழர் காலத்தில் தமிழும் பெளத்தமும் - சுவீடன் பேராசிரியர் பேராசிரியர் பீட்டர் சல்க் பேட்டி Art of Cholas Chola coins of Sri Lanka தமிழ்நாட்டு அரச வம்சங்கள் இந்தியப் பேரரசுகள் இந்துப் பேரரசுகள் இந்திய அரச மரபுகள் ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள் தமிழ் அரச வம்சங்கள் தமிழ்நாட்டு வரலாறு சோழப் பேரரசு தஞ்சாவூர் வரலாறு
3645
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
ஆய்த எழுத்து
இதே பெயருடைய திரைப்படம் பற்றி அறிய ஆய்த எழுத்து (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க. ஆய்த எழுத்து () என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். எடுத்துக்காட்டு அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய் இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய் ஆய்தம் என்னும் சொல் ஆய்தம் என்பது பெயர்ச்சொல். ஆய்தல் என்பது வினைச்சொல். ஆய்வுரை நுணுகிப் பார்ப்பது. ஆய்தல் என்னும் உரிச்சொல் இருப்பதை நுட்பமாக்கிக் காட்டும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இதனால் ஆய்தம் என்னும் சொல் ஒலியை நுண்மையாக்கி அதாவது மென்மையாக்கிக் காட்டுவது என்னும் பொருள்பட நிற்பதைக் காணமுடிகிறது. வரலாறும் இலக்கணமும் உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றிய பின்னர் எழுத்துமொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது. "அ" என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து. "அ" என எழுதினால் அது வரிவடிவ எழுத்து. காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன. உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் "தனிநிலை" எனப்படுகிறது. இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது. ஓசையின் அடிப்படையில் அஃகேனம் எனப் பெயர் பெற்றுள்ளது. வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர். "ஆயுத" எழுத்து எனக்கூறுவது தவறு. பத்துவகைச் சார்பெழுத்துகளில் 2 ஆய்த எழுத்து பற்றியதாகும். அதில் ஒன்று முற்றாய்தம் (தன்னரை மாத்திரையை முழுமையாகப் பெற்று ஒலிப்பது) மற்றொன்று ஆய்தக்குறுக்கம் (தன் மாத்திரை அளவிலிருந்து பாதியாகக் குறைந்து ஒழிப்பது) ஆகும்.இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்பொழுது, "ஆய்தக்குறுக்கம்" என்ற சார்பெழுத்து ஆகிறது. ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும். கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆய்தக்குறுக்கமாகிச் சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும். ஆய்தம் என்பது பொதுவாகக் கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது. போர்வீரனின் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது. போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம். தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது. தொல்காப்பியம் எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. அவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. ஆயுதம் ஆயுதம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் இல்லை. இந்த வரிசையில் ஆயு, ஆயுங்கால, ஆயும், ஆயுள் என்னும் 4 சொற்கள் மட்டுமே உள்ளன. (சங்கநூல் சொல்லடைவு 1967) சங்ககாலத்தில் இல்லாத ஆயுதம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு ஆய்தம் என்னும் தொல்பழஞ் சொல்லுக்குக் கற்பனைப் பொருள் கற்பிப்பது சாலாது. ஆய்த எழுத்து - விளக்கம் (ஃ) – அடைப்புக்குறிக்குள் உள்ள இந்த எழுத்தை ஆய்தம் என்னும் பெயரால் குறிப்பிடுவது வழக்கம். தொல்காப்பியர் இந்த ஆய்த எழுத்து சார்பெழுத்தின்பாற்பட்டது எனக் குறிப்பிடுகிறார். அஃகான் என்னும் பெயரிட்டு இதனை முன்னோர் வழங்கிவந்தனர். தொல்காப்பியரும் அவ்வாறே இதனை வழங்குகிறார். நன்னூல் அஃகேனம் என்னும் பெயரும் உண்டு எனக் குறிப்பிடுகிறது. தனிநிலை என்னும் சொல்லாலும் இதனைக் குறிப்பிடுகிறது. தமிழ் எழுத்துகளை ஆனா(அ), ஆவன்னா(ஆ) … எனப் படிக்கும் முறைமை ஒன்று இருந்துவந்தது. இந்த முறையில் படிப்போர் ஆய்த எழுத்தை அஃகன்னா எனப் படிப்பர். ஆய்தம் = ஒலி நுணுக்கம் தமிழில் ஆய்த எழுத்து வல்லெழுத்து ஒலியை நுணுக்கம் செய்யப் பயன்படுத்தப்படும். “ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது தொல்காப்பியம் (உரியியல்) ஆய்தல் என்னும் சொல் நுணுக்கமாக நோக்கும் ஆராச்ச்சியைக் குறிக்க இன்றும் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். வலிமையான கற்களை நுணுக்கி மென்மையாக்கிக் கொள்வது போல ஆய்த எழுத்துகளை ஊர்ந்து வரும் வல்லின எழுத்துகளை நுண்மையாக்கிக் காட்ட இந்த ஆய்த எழுத்து பயன்படுவதை நாம் காண்கிறோம். முற்றாய்தம் எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்னும் சொற்களில் ஆய்த எழுத்து அடுத்துள்ள வல்லின எழுத்தை மென்மையாக்கிக் காட்டுவதை இவற்றை ஒலித்துப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். இவற்றில் ஆய்த எழுத்துக்கு இயல்பான அரை மாத்திரை. எனவே இதனை முற்றாய்தம் எனக் குறிப்பிடலாயினர். ஆய்தம் தன் மாத்திரையில் குறுகும் ஆய்தக் குறுக்கம் இருப்பதை வேறுபடுத்திக் காட்ட முற்றாய்தம் என்னும் சொல் தோன்றியது. சார்பெழுத்து என்பதிலிருந்து தெளிவுபடுத்திக்கொள்ள முதலெழுத்து என்னும் சொல்லை நன்னூல் வழக்குக்குக் கொண்டுவந்தது போன்றது இது. எஃகு = வேல், கஃசு = தொடி, கஃசு என்பன நிறுத்தலளவைக் குறியீடுகள், கஃடு = கள், பஃது = பத்து , பஃறி = கட்டுமரம் உயிரோடு புணரும்போது ஆய்த எழுத்து தோன்றுதல் உண்டு. ஆய்தக் குறுக்கம் (கல்+தீது) கஃறீது, (முள்+தீது) முஃடீது, (அவ்+கடிய) அஃகடிய –எனப் புணர்ச்சியில் வரும் ஆய்தவெழுத்து ஆய்தக் குறுக்கம். வடமொழி ஒலி ஒப்பீடு சமற்கிருதத்தில் (வடமொழியில்) இந்த ஒலியெழுத்தை அஹ என ஒலிப்பர். இந்த மொழியில் இந்த ஒலி சொல்லின் இறுதி ஒலியாக வரும். தமிழில் இந்த ஒலி இறுதி ஒலியாக வராது. வல்லின எழுத்துகள் ஆறும் ஊர்ந்துவரும் நுண்ணொலி எழுத்தாக இடையில் மட்டுமே வரும். திருக்குறள் காட்டும் ஆய்த-எழுத்து இலக்கணம் திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரைமாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக்கொள்ளுமாறு கையாளப்பட்டுள்ளது. இப்படி அலகிட்டுக்கொள்வதற்கான இலக்கணம் எழுத்தியல் கூறும் எந்த இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எந்த யாப்பியல் இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எனவே அதனைத் தனியே குறிப்பிடவேண்டியுள்ளது. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49) நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் (476) அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல் பிணியன்னறோ பீடு நடை (1014) இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டு அரைமாத்திரையால் அலகிட்டுக்கொள்கிறோம். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி (226) வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில் (363) கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு) ஒற்கத்தின் ஊற்றாம் துணை (414) இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்துக்கு ஒருமாத்திரை தந்து உயிரெழுத்தைப் போல் அலகிட்டுக்கொள்கிறோம். இதனால்தான் தமிழ் நெடுங்கணக்குக் கட்ட-வரிசையில் உயிரெழுத்துக் கிடைவரிசையின் இறுதியிலும், மெய்யெழுத்துக் குத்து வரிசைத் தொடக்கத்தின் மேலும் ஆய்த எழுத்தை வைத்துள்ளனர். இக்கால நிலை இக்காலத்தில் பிறமொழி (திசை)ச் சொற்களை எழுதும்போது ஃபாதர், ஃபேன், செல்ஃப், புரூஃப் என்றெல்லாம் எழுதிவருகிறோம். மாற்றுக் கருத்து முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் என்ற நூலில் ஆய்த எழுத்து குறித்து கீழ்காணும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்தத்தின் வடிவமாக முப்பாற்புள்ளியைத் தொல்காப்பியர் குறித்துள்ளார். இன்று எழுதப்படுவது போன்று ஆய்தம் அன்றும் எழுதப்பட்டது என்று கூறுவது ஐயத்திற்கிடமாக உள்ளது. அசோகர் காலத்தில் இன்றைய ஆய்தப் புள்ளிகள் இகரமாகப் படிக்கப்பட்டதாக கோபிநாத் ராவ் கூறுகிறார். ஆய்தத்தின் வடிவம் பிற்காலத்து வழக்கென்றும், நச்சினார்க்கினியர் காலத்தில் நடுவு வாங்கி எழுதும் வழக்கம் இருந்ததென்றும் மு.இராகவையங்கார் கருதுகிறார் . எனவே, தொல்காப்பியர் காலத்து ஆய்தப் புள்ளிகள் எவ்வாறு அமைந்து அதை மக்கள் எழுதினர் என்று அறிய முடியவில்லை, அவை படுக்கை நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ ஒன்றன் பின் ஒன்றாக அமைந்து ஆய்தத்தை அறிவுறுத்தியிருக்கலாம். எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் காலத்ததாக அமைந்த காச குடிப்பட்டயத்துள் வெஃகா என்ற சொல் வருமிடத்து மேலும் கீழும் புள்ளிகளும், இவற்றிடையே வளைந்த கோடுமுடைய ஆய்த வடிவம் கிடைக்கிறது. ஒலிப்புக் குறைவை உணர்த்த எகர ஒகரங்கள் புள்ளி பெற்றது போல வைப்பு முறையில் ஆய்தத்திற்கு முன்னாக வரும் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒரு புள்ளியும், இரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்று கொள்ளவும் இடமிருக்கிறது. ஒலிப்பு நிலையமைப்பில் ஏறுமுகமாகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் அமைந்து ஒன்று, இரண்டு, மூன்று புள்ளிகளைப் பெற்றன என்று கொள்வதும் தவறாகாது அல்லது ஒலிப்புக் குறைவின் அடிப்படையில் குற்றியலிகரம் இரு புள்ளியும், குற்றியலுகரம் ஒரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்றோ அவை ஒவ்வொரு புள்ளி (நாகியாது, காடு) மட்டுமே பெற்று எழுதப்பட்டன என்றோ கருதலாம். "ஒற்றெழுத்தியற்றே குற்றியலுகரம்" என்ற செய்யுளில் நூற்பாவும் இங்கு நினைக்கத் தக்கது. யாப்பருங்கல இரண்டாம் நூற்பாவின் மேற்கோளாக வரும் "சங்கயாப்பின்" "குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும் மற்றவை தாமே புள்ளி பெறுமே" என்பதும் இங்குச் சுட்டத்தக்கது. முப்பாற்புள்ளியே ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய மூன்றற்கும் பொது எழுத்தாய்த் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது என்ற கருத்துக் குழப்பத்தை விளைவிக்குமாதலின் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. இவற்றையும் காண்க ஆய்தக்குறுக்கம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்! , "காரணப்பெயர் புலவர்" ம.நா.சந்தானகிருஷ்ணன், தினமணி, மார்ச் 7, 2010 சார்பெழுத்துகள் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்
3650
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
மதுரைக் காஞ்சி
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. "பெருகு வளமதுரைக் காஞ்சி" எனச் சிறப்பிக்கப்படும் இப்பாட்டு "கூடற்றமிழ்" என்றும் "காஞ்சி பாட்டு"என்றும் சிறப்புப் பெயர்களைப்பெறும். 1 பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப்பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார். போரின் வழியாக கொடுமையை விளக்குதல் பெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த் திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார். நாடெனும்பேர் காடுஆக ஆசேந்தவழி மாசேப்ப ஊர் இருந்தவழி பாழ்ஆக போரினால் நாடாக இருந்த இடம் காடாகும். பசுக்கள் திரிந்த வழியில் புலிகள் உலவும். ஊர் முழுதும் பாழாகும் என்று சொல்கிறார். நாளங்காடி மற்றும் அல்லங்காடி சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதனால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார். மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது கரைபொருது இரங்கும் முந்நீர் போல, கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது. ஓர் இரவு (அல்) ஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யா‌வற்றையும் மருதனார் கூறுகிறார். குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார். வெளி இணைப்புகள் சொல்வனம் இதழில் குமரன் கிருஷ்ணன் கட்டுரை: https://solvanam.com/?p=51185 பத்துப்பாட்டு 1.தமிழ் இலக்கிய வரலாறு. முனைவர் கா.கோ.வேங்கடராமன்.பக்கம்-78.பதிப்பு 2008.
3652
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
பட்டினப் பாலை
பட்டினப்பாலை (Pattinappalai) என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும். நூலின் சிறப்பு சங்க நூலாகிய பத்துப்பாட்டு வரிசையில் ஒன்பதாவது பாட்டு பட்டினப்பாலையாகும். பட்டினப்பாலையின் செய்யுள்கள் இடையிடையே வஞ்சிப்பாவின் அடிகள் விரவி இருந்தாலும் ஆசிரியப்பாவால் இயன்றவை. பட்டினம் துறைமுகத்தை ஒட்டியுள்ள பெரு நகரங்கள் பட்டினம் என அழைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் பழம்பெரும் நகரமாகும். தலைநகரமாக விளங்கிய துறைமுகப்பட்டினம். இது தமிழகத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கீழ்க்கோடியிலே காவிரி நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. இப்போது இது ஒரு சிறிய ஊராகும். ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களிலே ஒன்றான மணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய செய்தி காணப்படுகிறது. பாலை பாலை என்பது பாலைத்திணை ஆகும். பிரிவைப் பற்றிக் கூறுவது பாலைத்திணையாகும். கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து போவது - அல்லது பிரிந்து போக நினைப்பது - அல்லது பிரிந்து போக வேண்டுமே என நினைத்து வருந்துவது இவை பாலைத்திணையின்கண் அடங்கும். கணவன் தான் பொருள் தேடப் பிரிந்து செல்வதைத் தன் மனைவிக்கு அறிவிப்பதும், அதை அவள் தடுப்பதும் பாலைத் திணையில் அடங்கும். பட்டினப்பாலை என்பது பட்டினம்- பாலை என்ற இரு சொற்களைக் கொண்ட தொடர். "பட்டினத்தின் சிறப்பைக் கூறிப் பிரிவின் துன்பத்தை உணர்த்துவது" என்பது இதன் பொருளாகும். பாட்டின் அமைப்பு பொருள் தேடப் பிரிந்து செல்ல நினைக்கின்றான் தலைவன். பிரிந்து சென்றால் தன் காதலியின் நிலை என்ன அகும்? அவள் தன் பிரிவைப் பொறுப்பாளா? தான் திரும்பும் வரை அவள் உயிர்கொண்டு உறைவாளா? என்ற ஐயம் அவன் உள்ளத்திலே எழுந்து அவனை வாட்டுகின்றன. பிரிந்து சென்றால் தானும் மன அமைதியோடு சென்ற இடத்தில் செயலாற்ற முடியாது. வேதனைதான் மிஞ்சும்; வேதனையோடு செய்யும் செயலில் வெற்றிகாண முடியாது. ஆகையால் பிரிவு காதலிக்குத் துன்பம் தருவதோடு தனக்கும் துன்பத்தைத் தரும் என நினைக்கிறான் இதனால் " நான் பிரிந்து செல்ல நினைக்கும் காட்டு மார்க்கம், கரிகாற்சோழன் தன் பகைவர்களின் மேல் வீசிய வேல்படையைக் காட்டினும் கொடுமையானது. என்காதலியின் மெல்லிய தோள்கள் அந்தக் கரிகாற்சோழனுடைய செங்கோலைக் காட்டினும் குளிர்ச்சியைத் ( நன்மையை, இன்பத்தை)தருவன. ஆதலால் நீங்காத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினமே கிடைப்பதாஇருந்தாலும் கூட என் காதலியை விட்டுப் பிரிந்து வரமாட்டேன். என் மனமே! பிரிந்து போகவேண்டும் என எண்ணுவதை மறந்துவிடு". என்ற முடிவுக்கு வருகிறான். இதுவே பட்டினப்பாலையின் அகப்பொருள் கருத்தாகும். இதனை " திருமாவளவன் தெவ்வர்க்கு ஓங்கிய வேலினும் வெய்ய கானம்; அவன், கோலினும் தண்ணிய தடம்மெல் தோளே. முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே." என்று வரும் பட்டினப்பலை அடிகளால் அறியலம். நூலின் பொருள் காவிரியாற்றின் சிறப்பு; சோழநாட்டின் நிலவளம்; காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு; காவிரித்துறையின் காட்சி; செம்படவர்களின் வாழ்க்கை; பொழுதுபோக்கு இவைகளை இந்நூல் விரிவாகக் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்தில் நடைபெற்ற வாணிகம்; அந்நகரத்திலே குவிந்திருந்த செல்வங்கள்; அங்கு நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வாணிகம்; வாணிகர்களின் நடுவுநிலைமை; பண்டங்களைப் பாதுகாக்கும் முறை இவைகளையெல்லாம் இந்நூலிலே காணலாம். இந்த நகரத்தின் தலைவனான கரிகாற்சோழனின் பெருமை, வீரம், கொடை முதலியவற்றையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இந்நூல் பாலைத்திணை என்னும் அகப்பொருளைப் பற்றியதாயினும் புறப்பொருள் செய்திகளே இதில் மிகுதியாகக் காணப்படுகின்றன. கரிகாற்சோழன் பட்டினப்பாலையில் குறிப்பிட்டிருக்கும் கரிகாற்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவன். காவிரிப் பூம்பட்டினமே இவனுடைய தலைநகரமாக இருந்தது. இவன் இளைஞனாய் இருந்தபோது பகைவரால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.எப்படியோ சிறைலிருந்து தப்பித் தனக்குரிய அரசாட்சியையும் கைப்பற்றினான். பிறகு தன் பகைவர்களின் மேல் படை திரட்டிச் சென்று அவர்களையெல்லாம் வீழ்த்தி வெற்றிபெற்றான். இச்செய்தி பட்டினப்பாலையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. இவனைப் பற்றி மேலும் பழமொழி, பொருநராற்றுப்படை, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றில் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன. கரிகால் சோழன் சிறுவனாய் இருந்த போது அவனைக் கொல்ல பகைவர்கள் சூழ்ச்சி செய்து அவரிருந்த இல்லத்திற்குத் தீ வைக்க அஞ்சாமல் தீயினின்றும் வெளிவந்து தப்பித்துக்கொண்டான். அவன் தீயிலிருந்து வெளிவரும் போது அவனுடைய கால் தீப்பட்டுக் கரிந்து போனதால் கரிகால்சோழன் என்று பெயர் வந்தது. இவன் வெண்ணி என்னும் ஊரின் பக்கத்திலிருந்த போர்க்களத்தில் சேரமான் பெருஞ்சேரலாதன் என்பவனோடு போர் செய்து வென்றான். அப்பாேது அதே போர்க்களத்தில் சேரலாதனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் எதிர்த்துப் போர் செய்து வென்றான். ஆகவே பாண்டியன், சேரன் இருவரையும் வென்றவன் இவன். இவன் இமயம் வரை படையெடுத்துச் சென்றான். இடையிட்ட மன்னர்களை எல்லாம் வென்று இமயத்தில் புலிக்கொடியையும் நாட்டினான். இவன் இளையோனாய் இருந்த போது நரை முடித்து நீதி கூறிய கதையும் வழங்குகிறது. கரிகால் சோழன் தமிழன்பன். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவன். இரும்பிடர்த்தலையார் என்னும் புலவர் இவனது தாய்மாமன். பட்டினப்பாலையைப் பாடிய உருத்திரன்கண்ணனாருக்குப் பதினாறு நூறாயிரம் ( 16,00,000-16 லட்சம்) கழஞ்சு (பொன்) பரிசளித்தான் என்ற செய்தி இவனுடைய தமிழ்ப்பற்றை விளக்குவதாகும். இதை உற்றுநோக்கினால் 188 அடிகளுக்கு 16,00,0000 கழஞ்சு பொன் என்றால் ஒரு அடிக்கு 8,510.6 களஞ்சு பொன் கொடுத்தான் என்பதை அறிய முடிகிறது. ஆசிரியர் வரலாறு பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை என்ற நூலினையும் இவர்தான் இயற்றியுள்ளார். பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. பட்டினப்பாலை கரிகால்சோழன் மீது பாடப்பட்டது. ஆகவே இவர் கரிகாலன், இளந்திரையன் என்ற இரண்டு மன்னர்களின் அன்புக்குரியவராக வாழ்ந்தார் என்பதை அறியலாம். இவரின் வரலாற்றினை அறிவதற்கான சான்று எதுவும் இல்லை. கடியலூர் என்பதை இவர் பிறந்த ஊராகக் கருதுகின்றனர். இவ்வூர் எதுவெனத் தெரியவில்லை. இவர் தொண்டைமானையும், சோழனையும் பாடியிருப்பதால் இந்த ஊர் சோழ நாட்டிலோ, தொண்டை நாட்டிலோதான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவர் கூறியிருக்கும் இயற்கை நிகழ்ச்சிகளும் உவமைகளும் அக்கால காவிரிப்பூம்பட்டினத்தை நம் மனக்கண்ணால் படம் பிடித்துக் காட்டுவது போல் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெருமை, தமிழர் நாகரிகத்தின் உயர்வு, தமிழர்களின் வீரம், பண்பாடு இவையெல்லாம் இந்தப் பட்டினப்பாலையில் காணலாம். பத்துப்பாட்டில் உள்ள நூல்களில் இரண்டு நூல்கள் இவருடைய படைப்புகள் (பெரும்பாணாற்றுப்படை 500 அடிகள் பட்டினப்பாலை 301 அடிகள்) ஆகும். உசாத்துணை பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை. சாமி சிதம்பரனார். இலக்கிய நிலையம். இரண்டாம் பதிப்பு. 1973. இவற்றையும் பார்க்கவும் சங்க இலக்கியம் ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை முல்லைப்பாட்டு நெடுநல்வாடை மதுரைக் காஞ்சி குறிஞ்சிப் பாட்டு மலைபடுகடாம் பத்துப்பாட்டு