id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
|---|---|---|---|
3653
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
|
மலைபடுகடாம்
|
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.
நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
சங்க இலக்கியம்
அடிக்குறிப்புகள்
பத்துப்பாட்டு
ஆற்றுப்படைகள்
|
3658
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
|
இரைபோ கருவமிலம்
|
இரைபோ கருவமிலம் அல்லது ஆர்.என்.ஏ. (RNA - ribonucleic acid) என்பது ஒரு கருவமிலம் ஆகும். இதனை இரைபோக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருக்காடி, ஐவினியக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருவமிலம், ஐவினியக் கருவமிலம் என்ற பெயர்கள் கொண்டும் அழைக்கலாம்.
இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றான கருவமிலங்களில் ஒன்றாகும். இவையும் டி.என்.ஏ யைப் போன்றே நியூக்கிளியோட்டைடுக்களாலான நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டிருக்கும். உயிர்களுக்குத் தேவையான மரபுக் கட்டளைகளை டி.என்.ஏ. யிலிருந்து பெற்று புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஆர்.என்.ஏ. மிக முக்கிய பங்கு வகிக்கும். சில தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏ யே மரபியல் தரவுகளைக் கொண்டிருக்கும் மூலக்கூறாகவும் இருக்கும்.
ஆர்.என்.ஏ. வகைபாடுகள்
ஆர்.என்.ஏ க்கள் அவற்றின் உரு மற்றும் செயலாற்றுதல் மூலம் பல்வேறுவகையாக வகைப்படுத்தப்படுகின்றன.
புரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏக்கள்
புரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏக்கள் (RNA in translation): செய்தி பரிமாற்ற ஆர்.என்.ஏ (messenger RNA -mRNA), இடமாற்று ஆர்.என்.ஏ (transfer RNA-tRNA), இரைபோசோமல் ஆர்.என்.ஏ (ribosomal RNA -rRNA).
ஒழுங்காற்று ஆர்.என்.ஏக்கள்
ஒழுங்காற்று ஆர்.என்.ஏக்கள் (Regulatory RNAs): குறு ஆர்.என்.ஏ (micro-RNA), சிறு ஆர். என். ஏ (small RNA), நீண்ட செய்தியற்ற ஆர்.என்.ஏ (long non-coding RNA).
=dhdhj
ஆர்.என்.ஏ மரபுத்தொகை=
ஆர்.என்.ஏ மரபுத்தொகை (RNA genomes): ஒரிழை ஆர்.என்.ஏ (single strand RNA), ஈரிழை ஆர்.என்.ஏ. (double strand RNA).
உயிரித் தொழில்நுட்பம்
|
3661
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
|
அல்கா
|
அல்காக்கள் (Algae), அல்லது பாசி (இலங்கை வழக்கு) பல்வேறு குழுக்களைச் சேர்ந்த, ஒளிச்சேர்க்கை செய்ய வல்ல உயிரினங்கள் ஆகும். இவை பொதுவாக நீர் நிலைகளிலும் ஈரப்பரப்புகளிலும் காணப்படுகின்றன. நெடுங்காலமாக பாசிகள், எளிய தாவர வகைகளாகக் கருதப்பட்டாலும், சில பாசிகள் உயர் தாவர அமைப்பை பெற்றிருக்கின்றன. சில பாசிகள் அதிநுண்ணுயிரி மற்றும் புரோட்டோசோவா வகை உயிரினங்களின் பண்புகளையும் பெற்றிருக்கின்றன. ஆக, பாசிகளை பரிணாம வளர்ச்சியின் எந்த ஒரு குறிப்பிட்ட கால நிலையுடனும் தொடர்பு படுத்தாமல், பரிணாம வளர்ச்சியில் திரும்பத் திரும்பக் கடந்து வரப்பட்ட ஒரு உயிர் அமைப்பு நிலையாகக் கருதலாம். பாசிகளின் வகைகள் ஒரு கல அமைப்பிலிருந்து, பல கல அமைப்பு வரை வேறுபடுபவையாகும். இந்த ஒரு செல் அல்கா தாவரங்கள் தானாகவே உணவை தயாரித்துக் கொள்கின்றன. இவை நீரில் உள்ள கார்பனீராக்சைடையும் சூரிய ஒளியையும் பயன்படுத்தி உணவை தயாரித்தன. அப்போது ஆக்சிசனை வெளியிடுகிறது. இந்த ஆக்சிசன் சிறு சிறு நீர் குமிழிகளா வெளியேறி நீர் மட்டத்திற்கு மேல் வந்து சேர்கிறது. பிறகு இவை உடைந்து ஆக்சிசன் மேலே செல்கிறது. பல கோடான கோடி ஆண்டுகளாக இவைகள் இவ்வாறு ஆக்சிசனை வெளியிட்டதால் காற்றில் போதிய அளவு ஆக்சிசன் கிடைத்தது.
வகைகள்
அல்காக்களில் பச்சை அல்கா, பழுப்பு அல்கா, இருகலப்பாசிகள் எனப்பல வகைகள் உண்டு. இவ்வல்காக்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், கழிமுகங்கள் மற்றும் கடலில் வாழக்கூடியவை. நன்னீரில் வாழ்பவை உவர்நீரில் வாழா. அதே போல் உவர்நீரில் வாழ்பவை நன்னீரில் வாழாது. கழிமுகங்களில் வாழக்கூடியவை நன்னீரிலும், உவர்நீரிலும் வாழா.
நிலத்தாவரத் தோற்றம்
பூமியில் உள்ள அனைத்துத் தாவரங்களும், அல்காக்களிலிருந்தே தோன்றியதாக, மரபியல்பரிணாமச் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு வகையான கடற்பாசிகள் கடற்நீர்பரப்பிலிருந்து, நிலப்பகுதிக்கு வந்ததாகவும், அவற்றில் ஒரு வகையே(பச்சைப்பாசி) இன்றுள்ள நிலத்தாவரங்களாக சிக்கலான பரிணாம வளர்ச்சிக்கு பிறகு மாறியுள்ளன. இதனை லூசியானா மாநில பல்கலைக் கழகத்தின் தொல்தாவரவியல் அறிஞர் இரசெல் சாஃப்மேன்(Russell Chapman) உறுதிபடுத்தியுள்ளார்.
தமிழ் இலக்கியங்களில் பாசி
தமிழில் வழங்கிய பண்டைய இலக்கியங்களில் பாசி, அல்கா பற்றி அறிவியல் ரீதியாக வேறுபடுத்தாமையால் இரண்டையும் வழங்க ஒரே சொல்லாட்சியே பயன்பட்டது.
இராவண காவியம் ;-
கூசி லாதுகொல் கோள்வன் முதலைய
ஏசி லாநீர்க் கிடங்கி னிருதலை
மாசி லாத மறவ ரெதிரெதிர்
பாசி போலப் பதிந்து பொருதனர்.(கிடங்கிடைப் போர், 16)
பாரதியாரின் தேசிய கீதங்கள்;-
நாட்பட நாட்பட நாற்றமு சேறும்
பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்
நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ?
விதியே விதியே தமிழச் சாதியை
(24. தமிழ்ச் சாதி)
ஐங்குறுநூறு;-
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள்,
பாசி சூழ்ந்த பெருங் கழல்,
தண் பனி வைகிய வரிக் கச்சினனே!
(கபிலர்)
அகநானூறு;-
அருவிய யான்ற பெருவரை மருங்கில்
சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயங் காணாது
பாசி தின்ற பைங்கண் யானை
ஓய்பசிப் பிடியோ டொருதிறன் ஒடுங்க
(பாலை- மாமூலனார்)
புறநானூறு;-
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து,
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ,
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்,
(பாடல் முதல் குறிப்பு:அறவை நெஞ்சத்து ஆயர்)
குறுந்தொகை;-
பரணர், மருதத் திணை – தலைவி சொன்னது
ஊருண் கேணி உண் துறைத் தொக்க
பாசி யற்றே பசலை காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே. ( 399-பரணர், மருதத் திணை – தலைவி சொன்னது )
மலைபடுகடாம் ;-
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா
வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பம் உம் உடைய (..222)
நற்றிணை ;-
அமுதம் உண்க நம் அயல் இலாட்டி
கிடங்கில் அன்ன இட்டு கரை கான் யாற்று
கலங்கும் பாசி நீர் அலை கலாவ
ஒளிறு வெள் அருவி ஒள் துறை மடுத்து (..65)
ஊடகங்கள்
̈
மேற்கோள்கள்
பாசிகள்
|
3662
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88
|
பூஞ்சை
|
மிகப் பெரிய மெய்க்கருவுயிரி உயிரினக் குழுக்களில் பூஞ்சைகளும் (Fungii) (இலங்கை வழக்கு:, பூஞ்சணம், பூசணம், பங்கசு) ஒன்று. தற்போதைய பாகுபாட்டியலின் அடிப்படையில், பூஞ்சைகள் ஒரு தனி இராச்சியமாக வகைப்படுத்தப்படுகின்றன. வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து, நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது. தொடக்கத்தில் தாவர இராச்சியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட பூஞ்சைகள், பின்னர் தாவரங்கள், விலங்குகள் போலத் தனிப்பெரும் உயிர் இராச்சியமாக வகைப்படுத்தப்பட்டன. பூமியில் எல்லா வகை சுற்றுச்சூழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட, ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றன. பல முக்கியமான ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொள்ளும் உயிரினங்கள், மற்றும் சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் பூஞ்சை இராச்சியத்தில் உள்ளன. பூஞ்சைகள் பச்சையம் அற்ற மெய்க்கருவுயிரி (யூக்காரியோட்டிக்) உயிரினங்கள். இவை தாவரங்களைப் போலச் சுவருடைய உயிரணுக்களை உடையனவாகக் காணப்பட்டாலும், இவற்றில் பச்சையம் இல்லை.
இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள், சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவு பூஞ்சையியல் (mycology) எனப்படுகிறது.
பூஞ்சைகள் பொதுவாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும். எனினும் காளான்களாக இவை விருத்தியடையும் போது கண்ணுக்குத் தென்படுகின்றன. ஏனைய நுண்ணியிர்கள் போலவே இவற்றிலும் மனிதர்களுக்குப் பயனுடையவை, பயனற்றவை, தீமையானவை என உள்ளன. கன்டிடயாசிஸ் போன்ற நோய்களுக்கு இவை காரணமாகின்றன; உணவைப் பழுதடையச் செய்கின்றன. எனினும் பெனிசிலின் போன்ற முக்கியமான நுண்ணியிர்க்கொல்லிகளை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன. பூஞ்சைகள் பல தாவரங்களுடனும், வேறு உற்பத்தியாக்கிகளுடனும் ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. இலைக்கன் (அல்கா-பூஞ்சை அல்லது சயனோபக்டீரியா-பூஞ்சை கூட்டணி) இதற்கு மிக முக்கியமான உதாரணமாகும். மரங்களின் வேர்களில் கனியுப்பு அகத்துறிஞ்சலுக்கு இவை ஒன்றியவாழிகளாகச் செயற்பட்டு உதவுகின்றன.
பூஞ்சைகளின் பண்புகள்
பூஞ்சைகள் உயிரியல் வகைப்பாட்டில் தனி இராச்சியமாகக் கருதப்படுகின்றன. முற்காலத்தில் தாவரங்களுடன் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது பூஞ்சைகளின் தனித்துவமான இயல்புகள் கண்டறியப்பட்டுள்ளதால் இவை தனி இராச்சியமான Fungiiக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பூஞ்சைகள் பிற போசணிகளாகும். இவற்றால் சுயமாக உணவை உற்பத்தி செய்ய முடியாது.
பூஞ்சைகள் மெய்க்கருவுயிரிகளாகும். இவற்றின் கலங்களில் உண்மையான, மென்சவ்வால் சூழப்பட்ட கரு/கருக்கள் உள்ளன.
இவற்றின் கலங்களில் தாவரக் கலத்தைப் போல புன்வெற்றிடம் உள்ளது.
கைட்டின் மற்றும் குளுக்கான்களாலான கலச்சுவரைக் கொண்டது. (தாவரக் கலச்சுவர் அனேகமாக செல்லுலோசால் ஆனது)
L-லைசின் அமினோ அமிலத்தைத் தொகுக்கும் ஆற்றலுடையன.
ஹைப்பே (பூஞ்சண இழை) எனப்படும் நீண்ட இழை போன்ற பல கருக்களைக் கொண்ட கலங்களாலானவை
பூஞ்சைகள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதில்லை.
உடற்கூற்றியல்
அனேகமான பூஞ்சைகள் பூஞ்சண இழைகளாக (hyphae) வளர்கின்றன. பூஞ்சண இழைகள் 2–10 µm விட்டமும் சில சென்டிமீட்டர்கள் நீளமுடையனவாகவும் வளர்கின்றன. பல பூஞ்சண இழைகள் ஒன்று சேர்ந்து பூஞ்சண வலையை (mycelium) ஆக்குகின்றன. பூஞ்சைகள் பூஞ்சண இழையை நீட்சியடையச் செய்வதன் மூலம் வளர்ச்சியடைகின்றன. வளர்ச்சி இழையுருப்பிரிவு மூலம் நிகழ்கின்றது. கருப்பிரிவு நிகழ்ந்து புதிய கருக்கள் உருவாக்கப்பட்டாலும், அக்கருக்களுக்கிடையிலான பிரிசுவர் (septum) முழுமையாக அவற்றைப் பிரிக்காததால் பூஞ்சைகள் அடிப்படையில் பொதுமைக் குழியக் கட்டமைப்பைக் காட்டுகின்றன. அதாவது (இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைத் தவிர) ஒரு பூஞ்சணத்தில் உடல் முழுவதும் ஒரே தொடர்ச்சியான குழியவுருவால் நிரப்பப்பட்டுள்ளது. இதனால் இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைத் தவிர வேறு வகையான இழைய வியத்தம் பூஞ்சைகளில் தென்படுவதில்லை. புதிய பூஞ்சண இழைகள் பழைய பூஞ்சண இழைகள் கிளை விடுவதன் மூலம் உருவாகின்றன. அனேகமான பூஞ்சைகள் பல்கல (உணமையில் பல்கரு) அங்கத்தவர்களென்றாலும், மதுவம் என்னும் கூட்டப் பூஞ்சைகள் தனிக்கல பூஞ்சணங்களாக உள்ளன. சில பூஞ்சணங்கள் தமது அகத்துறிஞ்சல் முறைப் போசணையை நிறைவேற்றுவதற்காக பருகிகள் (haustoria) என்னும் கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன. இவற்றின் பூஞ்சண இழையினுள் பல சிறு புன்வெற்றிடங்கள் உள்ளன. இப்புன்வெற்றிடங்கள் தாவர புன்வெற்றிடம் புரியும் தொழிலையே புரிகின்றன. இதனைத் தவிர சாதாரண மெய்க்கருவுயிரி (யூக்கரியோட்டா) கலத்திலுள்ள அனைத்துப் புன்னங்கங்களும் பூஞ்சண இழைகளில் உள்ளன. இவை பொதுவாக காற்றுவாழிகள் (மதுவம் போன்றவற்றைத் தவிர்த்து) என்பதால் இவற்றில் இழைமணிகள் பல காணப்படும்.
பேசிடியோமைக்கோட்டா அங்கத்தவர்களின் இனப்பெருக்கக் கட்டமைப்புக்கள் நன்றாக வளர்ச்சியடைந்து வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் காளான் பூஞ்சணத்தை ஆக்குகின்றன. சில கைற்றிட் பூஞ்சைகளைத் தவிர ஏனைய பூஞ்சண இனங்களில் சவுக்குமுளை காணப்படுவதில்லை.
வளர்ச்சியும் உடற்றொழிலியலும்
பூஞ்சணங்களின் உடற்கட்டமைப்பு அவற்றின் போசணை முறைக்கமைய இசைவாக்கமடைந்துள்ளது. இவை இழையுருவான கட்டமைப்பைக் கொண்டுள்ளதால் இவற்றின் மேற்பரப்பு கனவளவு விகிதம் மிகவும் உயர்வாகும்; இதனால் பூஞ்சைகள் மிக அதிகமான அகத்துறிஞ்சல் வினைத்திறனைக் கொண்டுள்ளன. அனேகமானவை அழுகல்வளரிகளாகவும், பிரிகையாக்கிகளாகவும், சில ஒட்டுண்ணிகளாகவும், சில ஒன்றிய வாழிகளாகவும் உள்ளன. அனைத்துப் பூஞ்சணங்களும் அவற்றின் உணவின் மீதே வளர்வனவாக உள்ளன. தாம் வளரும் வளர்ச்சியூடகம்/ உணவு மீது நீர்ப்பகுப்பு நொதியங்களைச் சுரக்கின்றன. இந்நொதியங்கள் அவ்வுணவு மீது தொழிற்பட்டு அவ்வுணவு நீர்ப்பகுப்படைந்து குளுக்கோசு, அமினோ அமிலம் போன்ற எளிய உறிஞ்சப்படக்கூடிய வடிவத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கும். இவ்வெளிய சேதனப் பதார்த்தங்களை உள்ளெடுத்து பூஞ்சணம் வளர்ச்சியடைகின்றது. பூஞ்சணங்களின் நொதியங்கள் பல்சக்கரைட்டுக்கள், புரதம், இலிப்பிட்டு என அனைத்து வகை உயிரியல் மூலக்கூறுகளிலும் செயற்படக் கூடியது. பாக்டீரியாக்களைத் தாக்கியழிக்கப் பயன்படும் நுண்ணுயிர்க் கொல்லிகளால் இவற்றை அழிக்க முடியாது. பூஞ்சணங்கள் உயர் வளர்ச்சி வீதமுடையவை. இதனாலேயே இரவோடிரவாக ஒரே நாளில் காளான் வளர்ந்திருப்பதை அவதானிக்கலாம்.
பூஞ்சணங்கள் தாம் உள்ளெடுக்கும் உணவின் ஒரு பாகத்தைத் தம் வளர்ச்சி, இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தி மீதியை கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய்ச் சிறுதுளிகளாகச் சேமிக்கின்றன.
இனப்பெருக்கம்
பூஞ்சணங்கள் இலிங்க முறை மற்றும் இலிங்கமில் முறையில் இனம்பெருகுகின்றன. அனேகமானவை இரு முறைகளையும் மேற்கொண்டாலும் சில இனங்கள் இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்வதில்லை.
இலிங்கமில் முறை இனப்பெருக்கம்:
பதிய வித்திகள் (conidia) மூலம் பிரதானமாக இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழ்கிறது. இதனைத் தவிர துண்டுபடல் இழையுருவான பூஞ்சணங்களில் நிகழும். அதாவது புற விசைகலால் பூஞ்சண வலை சேதமுறும் போது, ஒவ்வொரு துண்டமும் புதிய பூஞ்சணமாக வளர்ச்சியடையும் ஆற்றலுடையது. மதுவம் போன்ற தனிக்கல பூஞ்சணங்களில் அரும்புதல் (budding) மூலம் இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழும். தனியே இலிங்கமில் இனப்பெருக்கத்தை மாத்திரம் காட்டும் பூஞ்சணங்கள் டியூட்டெரோமைக்கோட்டா (Deuteromycota) எனும் பூஞ்சணக் கூட்டமாக வகைப்படுத்தப்படுகின்றன.
இலிங்க முறை இனப்பெருக்கம்:
அனேகமான பூஞ்சணங்கள் ஒடுக்கற்பிரிவுடன் கூடிய இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன. பூஞ்சணங்களின் வாழ்க்கை வட்டத்தில் பொதுவாக ஒரு மடிய (n), இருகருக்கூட்ட அவத்தை(n+n), இருமடிய நிலைகள்(2n) உள்ளன. வெவ்வேறு பூஞ்சைக் கூட்டங்களில் வெவ்வேறு நிலை ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. கைற்றிட் பூஞ்சணத்தில் இருகருக்கூட்ட அவத்தை காணப்படுவதில்லை. காளான் இருகருக்கூட்ட அவத்தை உடைய இனப்பெருக்கக் கட்டமைப்பாக உள்ளது. இவை நுகவித்தி (Zygospore), கோணி வித்தி (ascospore), சிற்றடி வித்தி (basidospore), இயங்கு வித்தி (zoospore) என பல்வேறு இலிங்க முறை இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைக் காட்டுகின்றன. உதாரணமாக ஒரு காளானின் குடையின் அடிப்பாகத்தில் நுணுக்குக்காட்டியினூடாக பல சிற்றடிகளையும், சிற்றடி வித்திகளையும் அவதானிக்கலாம். (இரு கருக்கூட்ட அவத்தை என்பது கருக்கட்டலின் போது உடனடியாக கருக்கட்டலில் ஈடுபடும் புணரிக் கருக்கள் (ஒருமடியம்-n) ஒன்றிணையாமல் ஒரு கலத்தினுள்ளேயே இரண்டும் சேர்ந்திருக்கும் (n+n) நிலை)
இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது முதலில் நேர் மற்றும் எதிர் குல பூஞ்சண இழைகளின் இணைதல் (conjugation) நிகழும். இவற்றின் இணைதலைத் தொடர்ந்து உடனடியாகக் கருக்கட்டல் நிகழ்வதில்லை. முதலில் குழிவுருப் புணர்ச்சி இடம்பெற்று இரு கருக்கூட்ட அவத்தை ஆரம்பமாகும். அதன் முடிவிலேயே கருப்புணர்ச்சி இடம்பெறும்.
பூஞ்சைகளின் வகைபாடு
பூஞ்சணங்களின் பிரதான கூட்டங்கள்
பூஞ்சணங்கள் அவை ஆக்கும் இலிங்க இனப்பெருக்கக் கட்டமைப்புக்க்களின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன. பின்வருவன பிரதான பூஞ்சண கணங்களாகும்:
கைற்றிடோ மைக்கோட்டா (Chytridiomycota): இவை இயங்குவித்திகளை ஆக்கும் பூஞ்சணங்களாகும். இவ்வித்திகளில் சவுக்குமுளை உள்ளதால் இவை நீரினுள் அசையும் திறன் கொண்டவையாக உள்ளன. பொதுவாக கைற்றிட்டுக்கள் நீர்வாழ்க்கைக்குரியனவாக உள்ளன. இவற்றில் சந்ததிப் பரிவிருத்தி உள்ளதுடன், இருமடிய, ஒருமடிய இரு நிலைகளும் சம ஆதிக்கத்துடன் உள்ளன. இவற்றில் இருகருக்கூட்ட அவத்தை காணப்படுவதில்லை. இவற்றில் கிட்டத்தட்ட 1000 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவை இருமடிய இயங்கு வித்தி மூலம் இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தையும், ஒருமடிய இயங்கு வித்தி மூலம் இலிங்க முறை இனப்பெருக்கத்தையும் மேற்கொள்கின்றன. இக்கூட்டமே அறியப்பட்ட பூஞ்சணக் கூட்டங்களுள் கூர்ப்பில் ஆதியானதாக உள்ளது.
உ-ம்: Allomyces
ஸைகோ மைக்கோட்டா (Zygomycota): இருமடிய நுகவித்தியை ஆக்கும் பூஞ்சைகள் இக்கூட்டத்தினுள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் ஒருமடிய, இரு கருக்கூட்ட அவத்தை (Dikaryon stage) மற்றும் இருமடிய ஆகிய மூன்று நிலைகளும் இருந்தாலும், ஒருமடிய நிலையே ஆதிக்கமான நிலையாக உள்ளது. கிட்டத்தட்ட 1050 இனங்கள் இக்கூட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாணில் வளரும் பாண் பூஞ்சணம் இவ்வகையைச் சார்ந்ததாகும். இவற்றில் கருக்களிடையே பிரிசுவர் காணப்படுவதில்லை. உ-ம்: Rhizopus, Pilobus
குளோமெரோ மைக்கோட்டா (Glomeromycota): இலிங்க முறை இனப்பெருக்கத்தைக் காட்டுவதில்லை. இவையே தாவரங்களின் வேரில் ஒன்றியவாழிகளாக வளரும் வேர்ப்பூஞ்சணங்களாகும். கிட்டத்தட்ட 150 இனங்கள் அறியப்பட்டுள்ளன.
அஸ்கோ மைக்கோட்டா (Ascomycota): இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது கோணி வித்திகளை உருவாக்கும் பூஞ்சணங்கள் இக்கணத்தினுள் உள்ளடக்கப்படுகின்றன. கோணி (ascus) என்னும் கட்டமைப்புக்குள் இவ்வித்திகள் உருவாக்கப்படுகின்றன. இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தின் போது தூளிய வித்திகளை (conidio spores) உருவாக்குகின்றன. கிட்டத்தட்ட 45000 இனங்கள் அறியப்பட்டுள்ளன.
உ-ம்:Saccharomyces, Kluyveromyces, Pichia, Candida
பேசிடியோ மைக்கோட்டா (Basidiomycota): இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது சிற்றடி வித்திகளை உருவாக்கும் பூஞ்சணங்கள். இவை பொதுவாக காளான் என்னும் வெற்றுக்கண்ணுக்குத் தென்படக்கூடிய கட்டமைப்பை ஆக்குகின்றன. கிட்டத்தட்ட 22000 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் இருகருக்கூட்ட அவத்தை ஆதிக்கத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உ-ம்: Ustilago maydis, Malassezia, Cryptococcus neoformans
சூழலியல்
பூஞ்சைகள் புவியிலுள்ள அனைத்து வகையான சூழல்த்தொகுதிகளிலும் காணப்படுகின்றன. பக்டீரியாக்களும் பூஞ்சைகளுமே உயிரியல்த் தொகுதிகளில் முக்கியமான பிரிகையாக்கிகளாகும். எனவே இவை மீண்டும் சூழலுக்குக் கனியுப்புக்கள் சென்றடைவதை உறுதிப்படுத்துகின்றன. எனவே பூஞ்சைகள் அழிக்கப்பட்டால் புவியில் சூழலின் நிலைப்புத் தன்மை சீர்குலைந்து விடும்.
ஒன்றியவாழ்வு
பூஞ்சைகள் ஆர்க்கியாவைத் தவிர்ந்த மற்றைய அனைத்து இராச்சியங்களைச் சேர்ந்த உயிரினங்களுடனும் ஒன்றியவாழிகளாகச் செயற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வாறான நிலமையில் இரு உயிரினங்களும் பயனடையும் வகையில் அவற்றுக்கிடையில் இடைத்தொடர்புகள் காணப்படும்.
தாவரங்களுடன்
தாவரங்களின் வேர்களில் சில வகைப் பூஞ்சைகள் (நோய்த்தொற்று ஏற்படுத்துபவையைத் தவிர்த்து) வளர்ந்து வேர்ப் பூஞ்சணம் (மைகொரிஸா-Mycorrhiza) எனும் கட்டமைப்பை ஏற்படுத்துகின்றன. இவை பொதுவாக பெரும் மரங்களில் காணப்படும். மைகொரிஸா நீர் மற்றும் கனியுப்பு அகத்துறிஞ்சலின் வினைத்திறனை அதிகரிக்கின்றது. இதனால் மைகொரிஸா கட்டமைப்புடைய தாவரம் நன்மையடைகின்றது. பூஞ்சைகள் தாமுள்ள தாவர வேரிலிருந்து தமக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்கின்றன. வேர் மயிர்கள் குறைவான தாவரங்களில் மைகொரிஸா மூலமே அனேகமான நீர் மற்றும் கனியுப்புத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன. முக்கியமாக பொஸ்பேட்டு அகத்துறிஞ்சலுக்கு இக்கட்டமைப்புகள் உதவுவதாக அறியப்பட்டுள்ளது. அறியப்பட்டுள்ள தாவரங்களில் கிட்டத்தட்ட 90% ஆனவை மைகொரிஸா மூலம் பூஞ்சைகளுடன் ஒன்றிய வாழிகளாகச் செயற்படுகின்றன. இத்தொடர்புக்கான ஆதாரங்கள் கடந்த 400 மில்லியன் வருடங்களாக உள்ளன.
சில பூஞ்சைகள் தாவரங்களின் இலைகள் மற்றும் தண்டினுள் ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. இப்பூஞ்சைகள் சுரக்கும் நச்சுப்பதார்த்தங்கள் தாவரவுண்ணிகளிடமிருந்து இப்பூஞ்சைகள் வாழும் தாவரத்துக்குப் பாதுகாப்பளிக்கின்றன. பூஞ்சைகள் தாவரங்களிடமிருந்து உணவு மற்றும் உறையுள்ளைப் பெறுகின்றன. இத்தொடர்பை சில வகை புற்களில் அவதானிக்கலாம்.
அல்கா மற்றும் சயனோபக்டீரியாவுடன்
பூஞ்சையானது அல்கா அல்லது சயனோபக்டீரியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒன்றியவாழிக் கூட்டணியே லைக்கன் எனப்படும். லைக்கன்கள் ஏனைய உயிரினங்கள் வாழ முடியாத பாறைகளிலும் வாழும் ஆற்றலுள்ளன. இது இவ்வொன்றியவாழிக் கூட்டணியாலேயே சாத்தியமானது. பூஞ்சை அல்காக்கு/சயனோபக்டீரியாக்கு பாதுகாப்பு, நீர் மற்றும் கனியுப்புத் தக்கவைப்பை வழங்குவதுடன் அல்கா/சயனோபக்டீரியா உணவை உற்பத்தி செய்து பூஞ்சைக்குரிய பங்கை வழங்குகின்றது. லைக்கன்கள் புவியில் மண் தோன்றுவதில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளன. 17500 தொடக்கம் 20000 வரையான பூஞ்சையினங்கள் (20% பூஞ்சைகள்) லைக்கன்களைத் தோற்றுவிக்கின்றன.
பூஞ்சைகளின் பயன்பாடுகள்
பொருளாதார ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் இவை பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. காளான்களும், பெனிசிலியமும், மதுவமும் எமக்கு நன்றாகப் பழக்கப்பட்ட பூஞ்சைகளாகும். பெனிசிலியம் மருந்து தயாரிப்பிலும், மதுவம் மற்றும் காளான் உணவுற்பத்தியிலும் பயன்படுகின்றன.
மருந்துற்பத்தி
பெனிசிலின் போன்ற நுண்ணியிர்க்கொல்லிகளின் தயாரிப்பில் பூஞ்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையாக பெனிசிலியம் பூஞ்சையிலிருந்து பெறப்படும் பெனிசிலின் சிறிதளவான பக்டீரியாக்களையே எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. எனவே இயற்கையாகப் பெறப்படும் பெனிசிலினை மாற்றத்துக்குட்படுத்தி பலம் கூடிய பெனிசிலின் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. Penicillium griseofulvum எனும் பூஞ்சை இனத்திலிருந்து கிரீசியோஃபல்வின் எனும் நுண்ணியிர்க்கொல்லி உற்பத்தி செய்யப்படுகின்றது. கொலஸ்திரோல் சுரப்பை நிரோதிக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யவும் பூஞ்சைகள் பயன்படுகின்றன.
உணவுத் தயாரிப்பில்
தனிக்கல பூஞ்சை வகையான மதுவம் பாண் தயாரிப்பிலும், மதுபானத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. Saccharomyces எனும் மதுவத்தின் நொதித்தல் தொழிற்பாட்டின் மூலம் மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன.
படத்தொகுப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Tree of Life இணையத் திட்டம்:பூஞ்சைகள்
பூஞ்சையியல் வலையகம்
பூஞ்சை வலை
வட அமெரிக்க பூஞ்சையியல் கூட்டமைப்பு
பசிபிக் வடமேற்கு பூஞ்சைகள் தரவுத்தளம்
அருஞ்சொற்பொருள்
இராச்சியம் - Kingdom
புல்லுருவி, ஒட்டுண்ணி - Parasite
சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள், பிரிகையாக்கிகள் - Decomposers
பூஞ்சைகள்
|
3667
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%20%28%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%29
|
சீனா (பக்கவழி நெறிப்படுத்துதல்)
|
சீனா அல்லது சோங்கு ('Zhōngguó) என்பது பினவருவனவற்றைக் குறிக்கும்:
அகண்ட சீனா
சீன மக்கள் குடியரசு அல்லது சீனக் குடியரசு, சோங்கு ('Zhōngguó) என்பது பாரம்பரியப் பெயர்.
|
3677
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
கருநாடகம்
|
கருநாடகம் (Karnāṭaka, , கர்நாடகம்) என்பது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள, ஒரு மாநிலமாகும். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ் இம்மாநிலம் நவம்பர் 1, 1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம்மாநிலம் 1973-இல் கர்நாடகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கருநாடக மாநிலமானது மேற்கில் அரபுக் கடல், வட மேற்கில் கோவாவையும், வடக்கில் மராட்டிய மாநிலத்தையும், வடகிழக்கில் தெலுங்கானாவையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் தமிழ்நாட்டையும், தென் மேற்கில் கேரளாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம்மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள் தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. கன்னடம் ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது.
கருநாடகம் என்ற பெயருக்குப் பல வித சொல்லிலக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், 'கரு' மற்றும் 'நாடு' என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து. இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். ஆங்கிலேயர்கள் இம்மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர்.
பழங்கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கருநாடகம், தொன்மையான மற்றும் நடு கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. இப்பேரரசுகளால் சார்பகண்ட மெய்ப்பொருள் அறிவச்செம்மல்களும், இசை வல்லுநர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர். அவை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத் தகுந்தது. இந்தியாவிலேயே கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் அதிக அளவில் ஞானபீட விருது பெற்றுள்ளார்கள். மாநிலத் தலைநகராக விளங்கும் பெங்களூரு, இந்தியா சந்தித்து வரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடியாக உள்ளது.
வரலாறு
கருநாடக வரலாற்றை அப்பகுதியில், கிடைத்துள்ள கைக் கோடரிகள் மற்றும் இதர கண்டுபிடிப்புகள் மூலம் பழங்கற்கால கைக் கோடரி கலாச்சாரத்துடன் அதற்கு இருந்துள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. புதிய கற்காலக் கலாச்சாரத்தின் சான்றுகளும் இம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பண்டைய சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் எச்சமான ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் கருநாடகத் தங்க சுரங்களைச் சார்ந்ததாக அறியப்படுவதன் வழியே கருநாடகப் பகுதி பண்டைய காலம் தொட்டே வணிகம், கலாச்சாரம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பது தெரிய வருகிறது. பொ.ஊ. 3 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, கருநாடகத்தின் பெரும் பகுதி, பேரரசர் அசோகரின் மௌரிய ஆட்சிக்கு உட்படு முன், நந்தா பேரரசின் கீழ் இருந்தது. நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த சதவாகன ஆட்சி பெருமளவு கருநாடகத்தை அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொள்ள உதவி புரிந்தது. சாதவாகனர்களின் ஆட்சி இறக்கம் கருநாடகத்தை அடிச்சார்ந்த, முதல் அரசநாடுகளான கடம்பர்கள் மற்றும் மேலைக் கங்க வழியினரும் வளர வழி வகுத்தது. அதுவே, அப்பகுதி பக்கச் சார்பற்ற அரசியல் உருபொருளாக புகுந்து அடையாளம் காணவும் வழி வகுத்தது. மௌரிய சர்மாவால் தொடங்கப்பட்ட கடம்ப வழிமரபு, பனவாசியை தலைநகராக கொண்டது. அது போல், மேலைக் கங்கர் மரபினர், தாலகாட்டை தலைநகராக கொண்டு அமைக்கப் பட்டது.
கடம்பர், சாளுக்கியர்
கடம்பர் மரபைச் சார்ந்த முதலாவது அரசாங்கங்கள் கன்னட மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தினர் என்பது கால்மிதி கல்வெட்டு வழியாகவும் மற்றும் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த செப்பு நாணயங்கள் வழியாகவும் அறியலாம். இவ்வம்சத்தைத் தொடர்ந்து சாளுக்கியர் வலிமை பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். தக்காணத்தை முழுவதுமாக ஆட்சிக்குள் கொண்டு வந்த சாளுக்கியர் கருநாடகத்தை முழுவதும் இணைத்த பெருமை பெற்றவர்கள். சாளுக்கியர் கட்டிடக் கலை, கன்னட இலக்கியம், இசை ஆகியவற்றைப் பெரிதும் வளர்த்தனர்.
விசயநகரப் பேரரசு, இசுலாமியர் ஆட்சி
பொ.ஊ. 1565ஆம் ஆண்டு, கருநாடகம் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் முக்கிய அரசியல் மாற்றத்தைச் சந்தித்தது. பல நூற்றாண்டுகளாக வலிமை பெற்று திகழ்ந்த விசயநகரப் பேரரசு இசுலாமிய சுல்தானகத்துடன் தோல்வியைத் தழுவியது. பின் பிஜபூர் சுல்தானகத்திடம் ஆட்சி சிறிது காலம் இருந்து, பின் மொகலாயர்களிடம் 17ஆம் நூற்றாண்டு இடம் மாறியது. சுல்தானகத்தின் ஆட்சிகளின் போது உருது மற்றும் பாரசீக இலக்கியங்களும் வளர்க்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து வடக்கு கருநாடகம் ஐதராபாத் நிசாமாலும் தெற்கு கர்நாடகம் மைசூர் உடையார்களாளும், ஆளப்பட்டது. மைசூர் அரசரான இரண்டாம் கிருட்டிணராச உடையார் மரணத்தைத் தொடர்ந்து, படைதலைவரான ஹைதர் அலி ஆட்சியைக் கைப்பற்றினார். ஆங்கிலேயருடன் பல போர்களில் வெற்றி கொண்ட அவரைத் தொடர்ந்து அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்று ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆங்கிலேயருடனான நான்காவது போரிற் திப்பு சுல்தான் மரணம் அடைந்ததன் வழியே மைசூர் அரசு ஆங்கிலேய அரசுடன் 1799 இல் ஒருங்கிணைக்கப்பட்டது.
புவியமைப்பு
கருநாடகத்தின் மேற்கில் அரபிக் கடலும், வடமேற்கில் கோவாவும், வடக்கில் மகாராஷ்டிரமும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும், தென்கிழக்கில் தமிழகமும், தென்மேற்கில் கேரளமும் அமைந்துள்ளன. கருநாடகத்தில் பெரும்பாலும் மலைப் பகுதிகளே காணப்படுகிறது. கருநாடக மாநிலத்தின் தென் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆறு கருநாடகத்தில் தொடங்குகிறது.
இம் மாநிலம் 3 முக்கிய நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது கரவாளி கடற்கரை நிலப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான மலைப்பாங்கான மலைநாடு நிலப்பகுதி மற்றும் தக்காண பீடபூமியின் பாயலுசீமா சமவெளி. மாநிலத்தின் பெரும்பகுதி பாயலுசீமா சமவெளியின் வரண்ட நிலப்பகுதியாகும். பெயர் . கருநாடகத்தில் பாயும் ஆறுகளாவன: காவேரி, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆறு மற்றும் சரவதி .
கருநாடகத்தில் நான்கு பருவகாலங்கள் உணரப்படுகின்றன. குளிர்காலம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களிலும், கோடைக்காலம் மார்ச் மற்றும் மே மாதங்களிலும், பருவக்காற்று காலம் சூன் முதல் செப்டம்பர் வரையிலும்,பருவக்காற்று கடைக்காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் உணரப்படுகின்றது..
மாவட்டங்கள்
1,91,791 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கர்நாடக மாநிலம் 31 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 31 மாவட்டங்கள், பெங்களூர், பெல்காம், குல்பர்கா, மைசூர் ஆகிய நான்கு ஆட்சிப்பிரிவுகளுள் அடங்கும்.
பெங்களூர் ஆட்சிப்பிரிவு
பெங்களூர் மாவட்டம்
பெங்களூரு ஊரக மாவட்டம்
சித்ரதுர்கா மாவட்டம்
தாவண்கரே மாவட்டம்
கோலார் மாவட்டம்
ஷிமோகா மாவட்டம்
தும்கூர் மாவட்டம்
சிக்கபள்ளாபூர் மாவட்டம்
ராமநகரம் மாவட்டம்
பெல்காம் ஆட்சிப்பிரிவு
பாகல்கோட் மாவட்டம்
பெல்காம் மாவட்டம்
பிஜப்பூர் மாவட்டம்
தார்வாட் மாவட்டம்
கதக் மாவட்டம்
ஹவேரி மாவட்டம்
உத்தர கன்னடம் மாவட்டம்
குல்பர்கா ஆட்சிப்பிரிவு
குல்பர்கா மாவட்டம்
யாத்கிர் மாவட்டம்
பெல்லாரி மாவட்டம்
பீதர் மாவட்டம்
கொப்பல் மாவட்டம்
ராய்ச்சூர் மாவட்டம்
விஜயநகர மாவட்டம்
மைசூர் ஆட்சிப்பிரிவு
சிக்மகளூர் மாவட்டம்
சாமராசநகர் மாவட்டம்
தெற்கு கன்னடம் மாவட்டம்
ஹாசன் மாவட்டம்
குடகு மாவட்டம்
மாண்டியா மாவட்டம்
மைசூர் மாவட்டம்
உடுப்பி மாவட்டம்
மக்கள் தொகையியல்
2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கருநாடகத்தின் மொத்த மக்கள் தொகை 61,095,297 ஆக உள்ளது. அதில் 30,966,657 ஆண்களும்; 30,128,640 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 973 பெண்கள் வீதம் உள்ளனர். 2001 ஆண்டின் மக்கள் தொகையுடன் ஒப்புநோக்கும்போது மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.60% உயர்ந்துள்ளது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 319 நபர்கள் வீதம் உள்ளனர். நகரப்புறங்களில் 38.67% மக்களும், மக்கள் கிராமப்புறங்களிலும் 61.33% வாழ்கின்றனர். சராசரி கல்வியறிவு 75.36% ஆகவும், ஆண்களின் கல்வியறிவு 82.47 % ஆகவும், பெண்களின் கல்வியறிவு 68.08% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,161,033 ஆக உள்ளது.
சமயம்
ஆறு கோடியே பதினொன்று இலட்சம் மக்கள்தொகை கொண்ட கருநாடக மாநிலத்தில் 51,317,472 (84.00 %) மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 7,893,065 (12.92%) இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 1,142,647 (1.87%) கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 440,280 (0.72%) சமண சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 95,710 (0.16%) பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 28,773 (0.05%) சீக்கிய சமயத்தைப் பின்பற்றுபவராகவும் உள்ளனர். பிற சமயத்தை பின்பற்றுவர்கள் எண்ணிக்கை 11,263 (0.02 %) ஆக உள்ளது. சமயம் குறிப்பிடாதவர்கள் எண்ணிக்கை 166,087 (0.27%) ஆக உள்ளது.
மொழிகள்
கருநாடகம் மாநிலத்தில் கன்னட மொழி அலுவல் மொழியாகவும் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. சுமார் 64.75% மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். இது தவிர, தமிழ், மராத்தி, கொங்கனி, மலையாளம், துளு, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.
பண்பாடு
பொருளாதாரம்
கடந்த ஆண்டு கருநாடகத்தின் உள்மாநில உற்பத்தி குறைந்தது ரூ. 2152.82 பில்லியன் ($ 51.25 billion) என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் மாநிலங்களில் ஒன்றாக கருநாடகம் கருதப்படுகிறது. இம்மாநிலத்தின் 2007–2008 ஆண்டுகளுக்கான உள்மாநில உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்தது 7% . 2004-05 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கருநாடக மாநிலத்தின் பங்களிப்பு குறைந்தது 5.2% சதவிதமாக இருந்தது.
கருநாடகம் கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. பத்தாண்டுகளில் உள்மாநில உற்பத்தி 56.2% சதவிகிதமும், தனி நபர் உள்மாநில உற்பத்தி 43.9% சதவிகிதமும் வளர்ந்துள்ளது.
2006–2007 ஆம் ஆண்டுகளில் மட்டும் ரூ. 78.097 பில்லியன் ($ 1.7255 பில்லியன்) கருநாடகம் அன்னிய நேரடி முதலிடாக பெற்று இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. 2004ஆம் ஆண்டின் முடிவில், கருநாடகத்தில் வேலையில்லாதவர் விகிதம் 4.94% . இது தேசிய சராசரியான 5.99% விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
கருநாடகத்தின் தலைநகரமான பெங்களூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக கருதப்படுகிறது. கருநாடகத்தில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன.
கருநாடகம் மிகப்பெரிய பொதுத் துறை தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. இந்துஸ்தான் வானூர்தியல் நிறுவனம் (Hindustan Aeronautics Limited) , நாட்டு விண்வெளி ஆய்வகங்கள்(National Aerospace Laboratories), பாரத மிகுமின் தொழிலகம் (Bharat Heavy Electricals Limited), இந்திய தொலைபேசித் தொழிலகங்கள்(Indian Telephone Industries), இந்துஸ்தான் பொறியியங்கி கருவிகள்(Hindustan Machine Tools), இந்திய மற்றும் பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்கள் பெங்களூரு நகரில் உள்ளன. இந்திய அறிவியல் கழகம் மற்றும் இஸ்ரோ போன்ற அறிவியல் மையங்கள் பெங்களூருவில் அமைந்துள்ளது.
சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள்
கர்நாடக மாநில முக்கிய சுற்றுலாத் தலங்களும் கோயில்களும்; மைசூர் அரண்மனை, ஜோக் அருவி, சிவசமுத்திரம் அருவி, ஹம்பி, ஹளேபீடு, பாதமி குகைக் கோயில்கள், விஜயாபுரா கோல்கும்பாபந்திப்பூர் தேசியப் பூங்கா, பன்னேருகட்டா தேசியப் பூங்கா, அன்ஷி தேசியப் பூங்கா, சரவணபெலகுளா, அமிர்தேஸ்வரர் கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில், முருகன் கோயில், கேசவர் கோவில், சென்னகேசவர் கோயில், சென்னகேசவர் கோயில், பேளூர், மூகாம்பிகை கோயில், விருபாட்சர் கோயில், ஹோய்சாலேஸ்வரர் கோவில், திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில், முருதீசுவரா கோயில், சாமுண்டீசுவரி கோயில் மற்றும் தர்மஸ்தால கோயில் ஆகும்.
இவற்றையும் பார்க்க
கருநாடக ஆளுநர்களின் பட்டியல்
கர்நாடக மாவட்டப் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கருநாடக அரசு வலைத்தளம்
கருநாடக அரசு சேவைகளுக்கான மற்றுமோர் அலுவல்தளம்
கர்நாடகம்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
|
3680
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
மரபியல்
|
மரபியல் (Genetics) அல்லது பிறப்புரிமையியல் என்பது மரபணுக்கள், பாரம்பரியம் மற்றும் உயிரினங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த அறிவியல் துறையாகும். நெடுங்காலமாகவே தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபுப் பண்புகள் பற்றிய விழிப்புணர்வு மனிதர்களுக்கு இருந்தது. அந்த அறிவே விவசாயத்தில், தாவரங்களிலும், கால்நடைகளிலும் தேர்வு இனப்பெருக்கம் (selective breeding) மூலம் அவற்றை முன்னேற்ற உதவியது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிரிகோர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) என்பவரின் மரபியல் சம்பந்தமான ஈடுபாட்டின் பின்னரே, நவீன மரபியலானது வளர்ச்சியுற்று, முழுமையான ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது. கிரீகர் மெண்டலுக்கு மரபியலின் அடிப்படை நுட்பங்கள் புரிந்திருக்காவிடினும், உயிரினங்களின் பாரம்பரிய இயல்புகளுக்குக் காரணம், பரம்பரையூடாகக் கடத்தப்படக் கூடிய ஏதோ சில அலகுகளே என்பதை அறிந்திருந்தார். அவையே பின்னர் மரபணு அல்லது பரம்பரை அலகு என அறியப்பட்டது. தற்காலத்தில், மரபணுக்கள் பற்றி ஆராய்வதற்கான முக்கிய கருவிகளையும், கோட்பாடுகளையும் மரபியல் ஆராய்ச்சி வழங்குகிறது.
சந்ததிகளூடாகக் கடத்தப்படக்கூடிய பாரம்பரிய இயல்புகள் யாவும் டி.என்.ஏ யில் இருக்கும் மரபணுக்களில் நியூக்கிளியோட்டைடுக்கள் (Nucleotide) ஒழுங்குபடுத்தப்படும் வரிசை முறையில் தங்கியிருக்கும். டி.என்.ஏ யானது ஒன்றுக்கொன்று எதிர்நிரப்பு இயல்புடைய இரு இழைகளால் ஆனது (டி.என்.ஏ யின் படத்தைப் பார்க்க). இந்த இழைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு புதிய துணை இழையைத் தோற்றுவிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதனால், நகல் எடுக்கும் செயல்முறை மூலம், அவை சந்ததியூடாக இயல்புகளைப் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து கடத்த உதவும்.
ஒரு உயிரினத்தின் தோற்றம் இயல்புகளைத் தீர்மானிப்பதில் மரபியல் மிக முக்கிய பங்கு வகித்த போதிலும், அந்த உயிரினத்தில் சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டே அந்த உயிரினத்தின் இறுதியான தோற்றம், இயல்புகள் தீர்மானிக்கப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
தொடர்புடைய இதழ்கள்
இயற்கை மரபியல்
இயற்கை மறு ஆய்வு மரபியல்
மனித மூலக்கூறு மரபியல்
மனித மரபியலுக்கான அமெரிக்க இதழ்
Nature Genomics
மனித மரபியலுக்கான ஐரோப்பிய இதழ்
Pharmacogenetics
மரபியல் மருத்துவ இதழ்
மேம்பட்ட மரபியல்
மரபியல் மறு ஆய்வு ஆண்டு மலர்
மரபணு மற்றும் வளர்ச்சி
பாரம்பரியம் பற்றிய இதழ்
பிற
மரபியல் கல்விக்கூடம்
மரபியலுக்கான இணைய நூலகம்
வில்லியம் பேட்சனால் ஆதம் செட்குவிக்கிற்கு 1905-ல் எழுதப்பெற்ற ஒரு மடல்
அடிக்குறிப்பு
|
3701
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
|
சங்கர்
|
சங்கர் அல்லது ஷங்கர் என்பது ஒரு சமசுகிருத சொல்லாகும். சங்கரம் என்றால் நன்மை செய்தல் என்பது பொருளாகும். எல்லோருக்கும் நன்மை செய்பவர் என்ற பொருளில் இது சிவனைக் குறிக்கும் சொல்லாக உள்ளது.
ஷங்கர் (அல்லது சங்கர்) எனப்படுபவர் பின்வருவோரில் ஒருவராக இருக்கலாம்.
ஆனந்த் சங்கர் இந்தியத் திரைப்பட இயக்குனர்,
கேணல் சங்கர் - தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர், மாவீரர்.
கே. சங்கர் பிள்ளை - இந்திய கேலிச்சித்திர ஒவியர்
கே. சங்கர் - இந்தியத் (தமிழ், இந்தி) திரைப்பட இயக்குனர்
சங்கர் கணேஷ் - சங்கர், சங்கர்-கணேஷ் என அறியப்படும் இரட்டையர்களுள் ஒருவர். இவர்கள் இருவரும் இணைந்து இந்திய திரையிசை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள்.
சங்கர் சங்கரமூர்த்தி, பிபிசி ஒலிபரப்பாளர்
சங்கர் மகாதேவன் - இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர்,
சங்கர், மலையாள நடிகர், இயக்குனர்
லெப்டினன்ட் சங்கர் - தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரர்.
ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) - இந்தியத் (தமிழ், இந்தி) திரைப்பட இயக்குனர்,
பக்கவழி நெறிப்படுத்தல்
|
3710
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
|
உடுமலைப்பேட்டை
|
உடுமலைப்பேட்டை (ஆங்கிலம்:Udumalaipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். இந்த நகராட்சிதான் மாவட்டத்திலேயே மிகப்பெரிய நகராட்சி ஆகும். உடுமலைப்பேட்டையில்தான் தமிழக அரசின் சார்பில் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த சர்க்கரை ஆலையின்மூலம் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சர்க்கரை தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது. வெளிமாவட்டங்களுக்கு சர்க்கரை ஏற்றி செல்ல ஆலையின் அருகாமையிலேயே ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் கரும்பு சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. மத்திய அரசின் சைனிக் பள்ளி இங்கு தான் அமைந்துள்ளது.
உடுமலைப்பேட்டையில் பல காற்றாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன.
உடுமலைப்பேட்டை நகராட்சி
இந்த உடுமலைப்பேட்டை நகராட்சியானது 1918 - ம் ஆண்டு முதன்முதலில் நகராட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.
உடுமலைப்பேட்டை மாநகராட்சி
தமிழ்நாட்டில் மேலும் பல புதிய மாநகராட்சிகள் ஏற்படுத்தப்படும் என 26.04.2022 சட்டப்பேரவையில் அமைச்சர் திரு. கே.என்.நேரு அறிவித்தார். அதன்படி உடுமலைப்பேட்டை நகராட்சியை அருகாமையில் உள்ள கணக்கம்பாளையம், இராகல்பாவி, போடிப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கிணறு குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளை இணைத்து புதிதாக உடுமலைப்பேட்டை மாநகராட்சி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய இந்த ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு வார்டு மறுவரையறை பணிகள் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சி நான்கு மண்டலங்களுடன் சுமார் அறுபது வார்டுகளுடன் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,132 1குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 61,133 ஆகும். மக்கள்தொகையில் 29,958 ஆண்களும், 31,175 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,041 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4939 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 984 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,302 மற்றும் 42 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.83%, இசுலாமியர்கள் 14.49%, கிறித்தவர்கள் 3.19% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.
திருவிழாக்கள்
ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையானது. நவம்பர்-டிசம்பர் மாதம் நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், ஆடி மாதம்-ஜூலை-ஆகஸ்ட் மற்றும் முழு நிலவு நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை கொண்டாடப்படும். திருவிழா சமயம் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைகிறார்கள். உடுமலைப்பேட்டை சுமார் 30+ கிராமங்களில் மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடங்கி மழை பெய்கிறது. தேர் திருவிழா (Chariot festival) புகழ்பெற்றது.
சுற்றுலா தலங்கள்
திருமூர்த்தி மலை
திருமூர்த்தி அணை
திருமூர்த்தி அருவி
அமராவதி அணை
அமராவதி முதலைப் பண்ணை
மறையாறு
சின்னாறு
போக்குவரத்து
இந்த நகராட்சியில் இருந்து பல தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. அதனடிப்படையில் பொள்ளாச்சி, திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர், குருவாயூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, வால்பாறை, மூணாறு, மறையூர், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், குமுளி, போடிநாயக்கனூர், சங்கரன்கோவில், சிவகாசி, ராசபாளையம், அருப்புக்கோட்டை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், விளாத்திகுளம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, வேளாங்கண்ணி, கரூர், சேலம், ஓசூர், சென்னை, அந்தியூர், ஈரோடு, கோபிச்செட்டிபாளையம், திருப்பூர், தாராபுரம், சத்தியமங்கலம், மைசூரு, கூடலூர், உதகை, கோத்தகிரி, மேட்டுப்பாளையம், ஆனைகட்டி, என தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கும் குதிரையாறு அணை, அமராவதி அணை, திருமூர்த்தி அணை, ஆழியாறு அணை, போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், கொழுமம், பெரிய நெகமம், காட்டம்பட்டி, பனப்பட்டி காளியாபுரம், கோட்டூர், இரமணமுதலிபுதூர், கணியூர், கடத்தூர், பெல்லம்பட்டி, செஞ்சேரிமலை, குடிமங்கலம், காமநாயக்கன்பாளையம் , சுல்தான்பேட்டை, பல்லடம், கேத்தனூர், கோமங்கலம், மடத்துக்குளம் போன்ற கிராமப்பகுதிகளுக்கும் பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. மேலும் நகராட்சி மற்றும் புறநகர் கிராமங்களுக்கு நகர பேருந்து சேவையும் உள்ளது.
இங்கிருந்து கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் 80 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
உடுமலைப்பேட்டை காய்கறிச் சந்தை
உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள காய்கறி சந்தையானது கொங்கு நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய காய்கறி சந்தை ஆகும். ஒட்டன்சத்திரம், திருப்பூர் காய்கறி சந்தைக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய சந்தை ஆகும். சுற்றுவட்டார பகுதிகளான பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, மடத்துக்குளம், பழநி, தாராபுரம், குண்டடம், செஞ்சேரிமலை, பூளவாடி ஆகிய வட்டாரங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இந்த காய்கறி சந்தையில் நேரடியாக மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாகவும் விற்கப்படுகிறது. மேலும் உழவர் சந்தையும் உடுமலைப்பேட்டை நகரில் இயங்குகிறது.
உடுமலைப்பேட்டை தொடருந்து நிலையம்
உடுமலைப்பேட்டை நகராட்சியில் தளி ரோட்டில் இரயில் நிலையம் உள்ளது. சேலம் கோட்டத்தில் அமைந்துள்ளது. ரயில் போக்குவரத்து நேரங்களில் எப்பொழுதுமே சுறுசுறுப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தென்தமிழக பகுதிகளுக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து சேவை உள்ளது.
இந்த இரயில் நிலையம் 1,2&3 என மூன்று நடைமேடைகள் உள்ளன. இதில் ஒன்று மற்றும் இரண்டாவது நடைமேடைகள் பயணிகளை கையாளும் விதமாகவும் மூன்றாவது நடைமேடை சரக்குகளை கையாளும் விதமாக அமைந்துள்ளது.
புகழ்பெற்ற மனிதர்கள்
உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்.
சாதிக்பாட்சா முன்னாள் அமைச்சர்.
கவுண்டமணி பிரபல நகைச்சுவை நடிகர்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
கல்வி மாவட்டமான உடுமலைப்பேட்டையில் இராணுவ துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமராவதிநகர் சைனிக் பள்ளி இயங்கி வருகிறது.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி
பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
ஜிவிஜி விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி
காந்தி கலாநிலையம் மேல்நிலைப்பள்ளி
வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி
மலையாண்டிபட்டினம் மேல்நிலைப்பள்ளி
ஜல்லிபட்டி மேல்நிலைப்பள்ளி
பூலாங்கினறு மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு பள்ளிகளும்
சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
ஆர்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
ஆர்கேஆர் மேல்நிலைப்பள்ளி,
ஆக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி
லூர்து மாதா காண்வெண்ட் மேல்நிலைப்பள்ளி
ஜிவிஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
பொன்நாவரசு பள்ளி இன்னும் பல தனியார் பள்ளிகளும்
வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி
கமலம் கலை அறிவியல் கல்லூரி
விஷ்டம் மேலாண்மை கல்லூரி
சுகுனா கோழி வளர்ப்பு மேலாண்மை கல்லூரி
ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலைக்கல்லூரி
அரசு கலைக்கல்லூரி ஒன்றும் உடுமலையில் இயங்கி வருகிறது .தற்போது மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது நிருவிந்தியா தத்தா நிகேதன் மாண்டிசோரி பள்ளி இயங்கி வருகின்றன.
ஆதாரங்கள்
தேர்வு நிலை நகராட்சிகள்
திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாட்டிலுள்ள மலை வாழிடங்கள்
|
3715
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF
|
கோவை தொழில்நுட்பக் கல்லூரி
|
கோவை தொழில்நுட்பக்கல்லூரி (Coimbatore Institute of Technology) தமிழ்நாட்டின் கோவை நகரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியாகும். இது 1956 ஆம் ஆண்டு வி. இரங்கசாமி நாயுடு கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. இது அரசு உதவி பெறும் ஒரு கல்லூரியாகும். 1987 முதல் தன்னாட்சிக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.
வரலாறு
கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம் 1956 ஆம் ஆண்டில் வி.ரங்கசாமி நாயுடு கல்வி அறக்கட்டளையால் (வி.ஆர்.இ.டி) நிறுவப்பட்டது. உலகப் புகழ்ப் பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்டில் பயின்றவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபரும் தொலைநோக்கு சிந்தனையாளருமான பேராசிரியர் பி. ஆர். ராமகிருஷ்ணன் கல்லோரியின் முதலாம் முதல்வர் ஆவார்.
இந்த நிறுவனம் 1956 முதல் 1980 வரை மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது, பின்னர் 1980 ஆம் ஆண்டில் பாரதியார் பல்கலைக்கழகத்துடனும் 2001 இல் அண்ணா பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் மற்றும் தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனம் 1987 ஆம் ஆண்டிலிருந்து தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டுவருகிறது
கல்வித் திட்டங்கள்
வெளி இணைப்புகள்
கல்லூரியின் அதிகாரபூர்வ வலைத்தளம்
கோயம்புத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரிகள்
|
3716
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
|
டாட்டா எலக்சி
|
டாடா எலக்சி (Tata Elxsi) என்பது இலத்திரனியல் மற்றும் கணினி வரைகலை சார்ந்த துறைகளுக்கான வன்பொருள் மாதிரி மற்றும் மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமாகும். இது இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனக் குடும்பமான டாடா குழுமத்தின் ஒரு பிரிவாகும்.
இது பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது.
கிளைகள்: திருவனந்தபுரம்,சென்னை, மும்பை.
வெளி இணைப்புகள்
அலுவலக வலைத்தளம்
குறிப்புகளும் மேற்கோள்களும்
டாட்டா குழுமம்
|
3723
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF
|
புலி
|
புலி (Panthera tigris ) என்பது பூனைக் குடும்பத்தில் உள்ள மற்ற இனங்களை விட உருவில் மிகப்பெரிய இனமாகும். இது பெரும்பூனை என்ற பேரினத்தைச் சேர்ந்தது. இதன் உடலானது செங்குத்தான கருப்புக் கோடுகளுடன் சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற மென்மயிர்ளையும் வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும். உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் மற்றும் மாடு வகைகள் போன்றவற்றைத் தன் இரையாக்கிக் கொள்கின்றது. இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் விலங்காகும். இது இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன.
புலியானது ஒருகாலத்தில் கிழக்கு அனாத்தோலியப் பகுதி தொடங்கி அமுர் ஆற்று வடிப்பகுதி வரையிலும், தெற்கில் இமயமலை அடிவாரங்கள் தொடங்கி சுந்தா தீவுகளில் உள்ள பாலி வரையிலும் பரவியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து புலிகள் தங்கள் வாழ்விடத்தில் குறைந்தபட்சம் 93% அளவு வரை இழக்கத் தொடங்கின. நாளடைவில் அவற்றின் எண்ணிக்கையானது மேற்கு மற்றும் நடு ஆசியா, சாவகம் மற்றும் பாலி தீவுகள், தென்கிழக்கு, தென்னாசியா மற்றும் சீனா ஆகிய பகுதிகளில் குறையத் தொடங்கின. தற்போது அவை சைபீரிய வெப்பக் காடுகள் தொடங்கி இந்தியத் துணைக்கண்டம் மர்றும் சுமாத்திரா ஆகிய பகுதிகளில் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலயக் காடுகள் வரை மட்டுமே பரவலாகக் காணப்படுகின்றன. புலியானது, 1986ஆம் ஆண்டில் இருந்து பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக இருந்து வருகிறது. 2015ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் உள்ள காட்டுப் புலிகளின் எண்ணிக்கை 3,062 மற்றும் 3,948 ஆகிய எண்களுக்கு இடையே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 20ஆம் நூற்றாண்டில் இருந்ததை விட ஏறக்குறைய 100,000 எண்கள் குறைவாகும். மக்கள்தொகை அடர்த்தி மிகுந்த சில பகுதிகளில் வாழும் புலிகள் மனிதர்களுடன் குறிப்பிடத்தக்க அளவு பிணக்குகளை ஏற்படுத்தியுள்ளன.
உலகில் பரவலாக அறியப்படும் பெருவிலங்குகளில் புலியும் ஒன்று. இது பண்டைய தொன்மவியல் மற்றும் பழங்கதை ஆகியவற்றில் முக்கிய இடம் வகித்தது. தற்போது திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்கள், பல்வேறு கொடிகள், மரபுச் சின்னங்கள், உருவப் பொம்மைகள் ஆகியவற்றிலும் இடம்பெறுகிறது. இந்தியா, வங்காளதேசம், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலியாகும்.
பண்புகள்
புலியானது தசைநிறந்த பெருவுடலும் வலிமையான முன்னங்கால்களும் தன் உடலில் பாதியளவு வாலும் கொண்டுள்ளது. இதன் கடினமான அடர்ந்த உடல் மயிர்கள் பழுப்பு மற்றும் ஆரஞ்சு வகை நிறங்களில் இருக்கும். மேலும் உடலில் உள்ள செங்குத்தான கருநிறப் பட்டைகள் ஒவ்வொரு புலிக்கும் தனித்துவமாக இருக்கும். புலிகள் வேட்டைக்காகச் செல்லும்போது பல நிறத்தாலான நிழல்களிலும் நீண்ட புல்வெளிகளிலும் தங்களை மறைத்துக்கொள்ள இந்தப் பட்டைகள் உதவுவதால் இவை தோற்ற மறைப்பு செயலுக்கு உதவுவதற்கான அம்சமாகத் தெரிகிறது. இந்தப் பட்டைகளின் வடிவமைப்பானது புலியின் தோலில் இருக்கிறது. எனவே அதன் உடல் மயிர்களை மழித்தெடுத்தாலும் இந்தப் பட்டை அமைப்புகள் நீங்குவதில்லை. பிற பெரிய பூனைகளைப் போலவே புலிகளின் காதுகளின் பின் பகுதியிலும் ஒரு வெண்ணிறப் புள்ளி உள்ளது.
காட்டில் காணப்படும் பூனைகளில் மிகப் பெரியதாக இருப்பது புலிகளின் கூடுதல் தனித்தன்மையாகும். மிக வலுவான கால்களையும் தோள்களையும் பெற்றுள்ள இவை சிங்கங்களைப் போலவே பெரும்பாலும் தன்னை விட எடையில் அதிகமான விலங்குகளையும் இழுத்து வேட்டையாடக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. இருப்பினும் பெர்க்மானின் விதியால் தீர்மானிக்கப்பட்டபடி வளர்ச்சியானது அகலக்கோட்டுக்கு நேர்விகிதத்தில் அதிகரித்துக்கொண்டே வருவதாகத் தெரிகிறது. மேலும் குறிப்பிடுமளவுக்கு அளவில் இவை பெரிதும் வேறுபடுகின்றன. இப்படி பெரிய ஆண் சைபீரியன் புலிகள் (பாந்தெரா டைகிரிஸ் அல்டைக்கா) "வளைவுகளுடன் சேர்த்து அளவிடுகையில்" ("கால்களுக்கிடைப்பட்ட தூரம்" 3.3 மீ) 3.5 மீ வரையிலான நீளமும் 306 கிலோகிராம்கள் எடையும் கொண்டவை, இவை சுமத்ரா தீவுகளில் வாழும் 75-140 கி.கி எடை கொண்ட சிறிய புலிகளைக் காட்டிலும் குறிப்பிடுமளவு மிகப் பெரியவை. ஒவ்வொரு உள்ளினத்திலும் பெண் புலிகள் ஆண் புலிகளை விடச் சிறியதாகவே உள்ளன. பெண் புலிகளைக் காட்டிலும் 1.7 மடங்கு அதிக எடை கொண்ட ஆண் புலிகள் கூட உள்ளதால் பெரிய உள்ளினங்களில் ஆண் மற்றும் பெண் புலிகளுக்கிடையே உள்ள அளவு வேறுபாடானது குறிப்பிடத்தக்கது. கூடுதலாகப் பெண் புலிகளை விட ஆண் புலிகள் அகலமான முன் பாதங்களைப் பெற்றுள்ளன. இந்தப் பெரும் வேறுபாட்டை உயிரியலாளர்கள் புலிகளின் வழித் தடத்தை வைத்து அவற்றின் பாலினத்தைக் கண்டறியப் பயன்படுத்துகின்றனர். முன்பகுதியில் தாழ்ந்தோ அல்லது தட்டையாகவோ இல்லாவிட்டாலும் புலியின் மண்டை ஓடானது சிங்கத்தின் மண்டை ஓட்டைப் போலவே உள்ளது. இது சிறிது நீண்ட விழிகுழியின் பின் பகுதியைக் கொண்டுள்ளது. சிங்கத்தின் மண்டை ஓடானாது அகன்ற நாசித் துளைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும் இவ்விரு இனங்களுக்குமான மண்டை ஓட்டின் வேறுபாட்டின் அளவு குறைவாக இருப்பதன் காரணமாக வழக்கமாகக் கீழ்த் தாடையின் அமைப்பைப் பயன்படுத்துவதே இனங்களை அறிவதற்கு நம்பகமானது.
கிளையினம்
புலி இனத்தில் உள்ள எட்டு கிளையினங்களில் இரண்டு அழிந்துவிட்டன. வரலாற்றின்படி இவை இந்தோனேசியாவின் சில தீவுகள் உட்பட வங்காளதேசம், சைபீரியா, ஈரான், ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் பரவியிருந்தன. தற்போது அவை வெகுவாகக் குறைந்துவிட்டன. தற்போது வாழும் கிளையினங்கள், அவற்றின் பண்புகள் இறங்கு வரிசையில் இங்கே தரப்பட்டுள்ளன:
வங்கப் புலி (P. t. tigris), இவை இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பூடான் மற்றும் பர்மா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. புல்வெளிகள், துணை வெப்பவலய மற்றும் வெப்பவலய மழைக்காடுகள், புதர்க்காடுகள், ஈரப்பத மற்றும் வறண்ட இலையுதிர்க் காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் ஆகியன இவற்றின் வாழ்விடங்கள் ஆகும். பொதுவாகக் காடுகளில் உள்ள ஆண் புலிகளின் எடை 205 முதல் 227 கி.கி (450-500 பவுண்ட்) ஆகவும், பெண் புலிகளின் சராசரி எடை 141 கி.கி வரையிலும் இருக்கும். இருப்பினும், வட இந்தியப் புலிகளும் வங்கப்புலிகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதிகளில் காணப்படுபவற்றை விடச் சற்று கொழுத்தவையாக உள்ளன. இந்த ஆண் புலிகள் சராசரியாக எடை கொண்டவையாக உள்ளன. ஏற்கனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், புலிகளின் எண்ணிக்கை 2000-த்திற்கும் குறைவாக இருப்பதாக நம்பினார்கள். இந்திய அரசின் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் மிகச் சமீபத்திய கணக்கெடுப்பின் படி, காடுகளில் புலிகளின் எண்ணிக்கை வெறும் 1,411 (1165-1657 வரை புள்ளிவிவரப் பிழையை அனுமதிக்கின்றது) என்று தேராயமாக மதிப்பிட்டு இருக்கிறார்கள். இது கடந்த பத்தாண்டுகளில் 60% குறைந்துள்ளது. 1972 ஆம் ஆண்டு முதல் வங்கப்புலிகளைப் பாதுகாக்க புலிகள் பாதுகாப்புத் திட்டம் எனப்படும் அரிய வனவிலங்குப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டமானது வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களுள் வெற்றிகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ஒரு புலிகள் சரணாலயமானது (சரிஸ்கா புலிகள் சரணாலயம்) அதன் மொத்த புலிகளின் எண்ணிக்கையையும் வேட்டையாடுவதன் காரணமாக இழந்து விட்டது.
இந்தோசீனப் புலி (P. t. tigris ), கார்பெட்டின் புலி என்றும் அழைக்கப்படுகிறது. இவை கம்போடியா, சீனா, லாவோஸ், பர்மா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகியவற்றில் வாழ்கின்றன. இந்தப் புலிகள் வங்கப்புலிகளை விடச் சிறியதாகவும் கருப்பாகவும் இருக்கின்றன: இவற்றில் ஆண்புலிகளின் எடை 150 முதல் 190 கி.கி (330–420 பவுண்ட்) ஆக உள்ளது. பெண் புலிகளின் எடை இவற்றை விடக் குறைவாக 110-140 கி.கி (242–308 பவுண்ட்) ஆக இருக்கும். மலைகள் அல்லது உயரமான பகுதிகளில் உள்ள காடுகளே அவற்றின் விருப்பமான வாழ்விடங்களாகும். இந்தியசீனப் புலிகளின் எண்ணிக்கை சுமார் 1200 முதல் 1800 வரை உள்ளது. இவற்றில் சில நூறுகள் மட்டுமே காடுகளில் மீதமுள்ளன. சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடுதல், முதன்மை இரை இனங்களான மான் மற்றும் காட்டுப்பன்றி போன்றவற்றை சட்டத்திற்குப் புறம்பாக வேட்டையாடுவதால் ஏற்படும் இரைப் பற்றாக்குறை, வாழ்விடத் துண்டாக்கம் மற்றும் இனக்கலப்பு போன்றவற்றால் தற்போது இருக்கும் எண்ணிக்கையைத் தக்கவைத்தல் என்பது மிகவும் கடினம். வியட்னாமில் சீனர்களின் மருந்துக்கடைகளுக்கு இருப்பு வழங்கவதற்காக அவற்றின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட முக்கால்வாசி புலிகள் கொல்லப்பட்டுவிட்டன.
மலேசியப் புலி (P. t. tigris), மலாய் தீபகற்பத்தின் தெற்குப்பகுதியில் மட்டுமே காணப்பட்டன. அங்கு 2004 ஆம் ஆண்டு வரை ஒரு கிளையினமாகக் கருதப்படாமல் இருந்தது. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் பயிற்சி நிறுவனத்தின் பகுதியான மரபியல் வேறுபாட்டுக்கான ஆய்வுக்கூடத்திலிருந்து, லியோ எட் ஆல் அவர்களின் ஆய்வு வந்த பிறகு புதிய வகைப்பாடு தோன்றியது. சமீபத்திய கணெக்கெடுப்பானது காடுகளில் 600-800 புலிகள் இருப்பதாகக் காண்பித்தது. இதுவே புலிகளின் எண்ணிக்கையில் வங்கப்புலிகள் மற்றும் இந்தியசீனப் புலிகளுக்கு அடுத்ததாக மலேயப் புலிகளுக்கு மூன்றாவது இடத்தைப் பெற்றுத்தந்தது. முக்கியப் பகுதிகளில் வாழும் புலிகளின் கிளையினங்களில் மலேயப் புலி தான் மிகவும் சிறியதும் வாழும் கிளையினங்களில் இரண்டாவதும் ஆகும். சராசரியாக எடையளவு, ஆண் புலிகள் 120 கி.கி மற்றும் பெண்புலிகள் 100 கி.கி ஆகும். மலேயப்புலியானது மலேசியாவில் கோட் சின்னங்களிலும் மேபேங்க் போன்ற மலேசிய நிறுவனங்களின் சின்னங்களிலும் தேசிய உருவமாகத் திகழ்கிறது.
சுமாத்திராப் புலி (P. t. tigris), இது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் மட்டுமே காணப்படுகின்றது. மேலும் மிகவும் ஆபத்தானது. வாழும் புலியின் கிளையினங்கள் அனைத்திலும் மிகச்சிறியது, வயதுவந்த ஆண்புலிகளின் எடை 100 - 140 கி.கி (220–308 பவுண்ட்) மற்றும் பெண்புலிகளின் எடை 75–110 கி.கி (154–242 பவுண்ட்). அவற்றின் இந்தச் சிறிய அளவானது அவைகள் வாழும் சுமத்ரா தீவின் கடினமான அடர்ந்த காடுகளுக்கு ஏற்றதாகவும் அதே போல் சிறிய இரைக்கு ஏற்ற வகையிலுமே அமைந்துள்ளது. காட்டில் இவற்றின் எண்ணிக்கை 400க்கும் 500க்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. இவை தீவில் உள்ள தேசியப் பூங்காக்களில் அதிகம் காணப்படும். சமீபத்திய மரபணு சோதனையானது அந்த இனம் அழிந்து விடாமல் இருக்கும்பட்சத்தில் அவை ஒரு தனிப்பட்ட இனமாக உருவாகலாம் என்பதைக் குறிக்கும் குறிப்புகள் உள்ளதாக உணர்த்தியது. இதுவே மற்ற கிளையினங்களை விடச் சுமத்ரா புலிகளைப் பாதுக்காக்க கண்டிப்பாக அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைகள் வரக்காரணமாக அமைந்தது. அதுபோல் வாழ்விடங்களை அழித்தலே தற்போதைய புலிகளின் எண்ணிக்கைக்கு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது (தேசியப் பூங்காக்களிலும் இது போன்ற செயல்களின் பதிவுகள் தொடர்கின்றன), 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளுக்கு இடையே மட்டும் 66 புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அல்லது மொத்த எண்ணிக்கையில் சுமார் 20% குறைந்துள்ளது.
சைபீரியப் புலி (P. t. tigris), இது அமுர், மஞ்சுரியன், அல்டைக், கொரியன் அல்லது வடக்கு சீனப் புலி என்றும் அறியப்படுகிறது. இது கிழக்கு சைபீரியாவின் தூரத்தில் உள்ள பிரிமோர்ஸ்கை க்ரையின் பகுதியான அமுர்-உஸ்ஸூரி மற்றும் ஹபரோவ்ஸ்க் க்ரை ஆகியவற்றுக்குள் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய கிளையினமாகக் கருதப்பட்டது. தலையுடன் சேர்த்து உடலின் நீளம் 190–230 செ.மீ (ஒரு புலியின் வாலின் நீளம் 60–110 செ.மீ) மற்றும் சராசரி ஆண் புலிகளின் எடை , அமுர் புலியானது கெட்டியான அதன் தோலுக்காகவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் வெளிர் தங்கநிறத்தாலும் சில பட்டைகளாலும் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணப்படுகிறது. காட்டில் வாழும் பெருத்த சைபீரியன் புலியின் எடை 384 கி.கி எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மஸாக்கின் கூற்றுப்படி இந்த உருவத்தில் பெரிய புலிகளைப் பற்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய குறிப்புகள் எதுவும் உறுதி செய்யவில்லை. இருந்தாலும் பிறந்து ஆறு மாதமான சைபீரியன் புலியானது முழுவதும் வளர்ந்த சிறுத்தைப் புலியைப் போலப் பெரியதாக இருக்கும். கடந்த இரண்டு கணக்கெடுப்பின்படி (1996 மற்றும் 2005), 450-500 அமுர் புலிகள் தனியாக மற்றும் ஏறக்குறைய தொடர்ச்சியாகவும் பரவிக் காணப்படுகின்றன. இது உலகின் பிரிக்கப்படாத புலிகளின் இனத்தில் ஒன்றாக உள்ளது. 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற மரபணு ஆராய்ச்சியில் சைபீரியன் புலிகளும் மேற்கு "காஸ்பியன் புலிகளும்" (இவை கடந்த 1950களில் காடுகளிலிருந்து அழிந்தவிட்ட இரு வேறு கிளையினங்களாகக் கருதப்பட்டன) இயல்பாக ஒரே கிளையினத்தைச் சேர்ந்தவை. இங்கு கடந்த நூற்றாண்டில் மனிதனின் கண்டுபிடிப்புகளினால் இந்த இரண்டு எண்ணிக்கைகளுக்குமான வேறுபாடானது மிகச் சமீபத்தில் ஏற்பட்டிருக்கலாம்.
தென்சீனப் புலி (P. t. tigris), அமோய் அல்லது ஜியாமென் புலி என்றும் அறியப்படுகிறது. இது புலியின் கிளையினங்களில் மிகவும் அதிக ஆபத்தானது மற்றும் உலகின் அதிக ஆபத்தான 10 விலங்குகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இது புலியின் கிளையினங்களில் சிறியவற்றுள் ஒன்று தென்சீனப் புலிகளில் ஆண் மற்றும் பெண் புலிகளின் நீள வரம்பு இவற்றுக்கிடையே உள்ளது. ஆண் புலிகளின் எடை 127 கி.கி. மற்றும் 177 கி.கி. (280–390 பவுண்ட்) இடையேயும் பெண் புலிகளின் எடை 100 கி.கி. மற்றும் 118 கி.கி. (220–260 பவுண்ட்) இடையேயும் இருக்கும். 1983 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையில் தென்சீனப் புலிகள் எதுவும் காணப்படவில்லை. 2007 ஆம் ஆண்டில் விவசாயி ஒருவர் இவ்வகைப் புலியைப் பார்த்ததாகக் கூறி, ஆதாரமாகப் புகைப்படங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அந்தப் புகைப்படமானது சந்தேகத்திற்குரியதாக இருந்தது. பின்னர் அந்தப் புகைப்படம் போலியானது என்பதும் சீனக் காலெண்டரிலிருந்து நகலெடுத்து ஃபோட்டாஷாப்பில் வடிவமைக்கப்பட்டது என்பதும் வெளிப்பட்டது. அந்த “உருவகம்” மிகப்பெரிய புரளியானது.
1977 ஆம் ஆண்டில் சீன அரசாங்கம், காடுகளில் உள்ள புலிகளைக் கொல்லுவதைத் தடைசெய்ய ஒரு சட்டத்தைப் பிறப்பித்தது. ஆனால் இச்சட்டம் கிளையினத்தைக் காப்பதற்கு மிகவும் தாமதமாகப் பிறப்பிக்கப்பட்டுவிட்டது. ஏனெனில் அது ஏற்கனவே காடுகளில் அழிந்துபோய் இருந்தது. சீனாவில் தற்போது 59 தென்சீனப் புலிகள் சிறைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஆனால் இவை ஆறு விலங்குகளிலிருந்து உருவானவை மட்டுமே என அறியப்படுகின்றன. ஆகவே கிளையினத்தைத் தக்கவைப்பதற்குத் தேவையான மரபியல் வேறுபாடு இப்போது இல்லாமல் போயிருக்கலாம். தற்போது இந்தப் புலிகளைக் காடுகளில் மறுபடியும் உருவாக்க அங்கு இனப்பெருக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.
அழிந்துவிட்ட கிளையினங்கள்
பாலினேசி புலி (பாந்தெரா டைகிரிஸ் பாலிகா), பாலி தீவு எல்லைக்குள் மட்டுமே இருந்தது. அவை அனைத்து புலி கிளையினங்களிலேயே மிகவும் சிறியதாக இருந்தன. அத்துடன் ஆண்புலிகளின் எடை 90-100 கி.கி. ஆகவும் பெண் புலிகளின் எடை 65-80 கி.கி. ஆகவும் இருந்தன. இந்தப் புலிகள் வேட்டையாலேயே அழிந்துபோயின-கடைசி பாலினேசி புலியானது 27 செப்டம்பர் 1937 அன்று மேற்கு பாலியில் உள்ள சும்பர் கிமா என்ற இடத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது வயதுவந்த பெண் புலியாகும். எந்தப் பாலினேசிப் புலியும் காப்பகப்படுத்தப்படவில்லை. இந்தப் புலியானது பாலினேசி இந்து சமயத்தில் இன்றும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
ஜாவாப் புலி (பாந்தெரா டைகிரிஸ் சண்டைகா), இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்குள் மட்டுமே இருந்தது. தற்போது இந்தக் கிளையினமானது வேட்டையாடுதல் மற்றும் காடுகள் அழிப்புகளின் விளைவாக 1980களிலே அழிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் இந்தக் கிளையினத்தின் அழிவு 1950கள் முதல் நிகழத் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்பட்டது (அப்பொழுது காடுகளில் 25க்கும் குறைவானவை மீதம் இருந்ததாகக் கணிக்கப்பட்டு இருக்கிறது). கடைசியாக 1979 ஆம் ஆண்டில் அவற்றின் மாதிரியைப் பார்த்ததாக உறுதிசெய்யப்பட்டது. ஆனால் 1990களில் உருவகங்கள் இருந்ததாகச் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆண் புலிகள் 100-141 கி.கி எடையுடனும் பெண் புலிகள் 75-115 கி.கி எடையுடனும் இருந்தன. ஜாவாப் புலிகள் மிகச்சிறிய புலி கிளையினங்களில் ஒன்றாக இருந்தது. இவை அளவில் தோராயமாகச் சுமத்திராப் புலிகளைப் போன்றே இருந்தன.
கலப்பினங்கள்
புலிகள் உட்பட பெரிய பூனைகளிடையே கலப்பினமாக்கலின் கருத்து, 19ஆம் நூற்றாண்டில் முதலில் உருவானது. அப்பொழுது குறிப்பாக விலங்கியல் பூங்காக்கள், விநோதமாகக் காண்பித்து வியாபாரப் பெருக்கத்திற்காகக் கலப்பினமாக்கலில் நாட்டம் செலுத்தின. சிங்கப்புலி மற்றும் புுலிச்சிங்கம் எனப்படும் கலப்பினங்களை உருவாக்கச் சிங்கங்களைப் புலிகளுடன் (அதிகமாக அமுர் மற்றும் வங்கப்புலி கிளையினங்கள்) இனப்பெருக்கம் செய்ததாக அறியப்பட்டது. இப்படிப்பட்ட கிளையினங்கள் விலங்கியல் பூங்காக்களில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யப்பட்டன. ஆனால் இனங்கள் மற்றும் கிளையினங்களைக் காக்க வேண்டும் என்பது வலுப்பெற்றதால் கலப்பினமாக்கல் இப்பொழுது ஊக்கம் இழந்துள்ளது. கலப்பினங்கள், சீனாவில் உள்ள தனியார் அருங்காட்சியகங்களிலும் விலங்கியல் பூங்காக்களிலும் இன்னமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
லிகர் என்பது ஆண் சிங்கம் மற்றும் பெண் புலி இடையே இனப்பெருக்கம் செய்யப்பட்ட கலப்பினமாகும். ஏனெனில் தந்தை சிங்கம் ஒரு வளர்ச்சியை மேம்படுத்தும் மரபணுவைச் செலுத்துகிறது. ஆனால் அதேபோன்று பெண் புலியிடமிருந்து வரும் வளர்ச்சியைத் தடுக்கும் மரபணு வராததால் லிகர்கள் தனது பெற்றோரில் ஒன்றை விட அதிக வளர்ச்சியடைகின்றன. அவை தனது பெற்றோர் இனங்கள் இரண்டின் உடல் மற்றும் நடத்தைகளையும் பகிர்ந்துள்ளன (சந்தன வண்ணப் பின்புலத்தில் புள்ளிகள் மற்றும் பட்டைகள்). ஆண் லிகர்கள் மலட்டுத்தன்மையுடையன, ஆனால் பெண் லிகர்கள் பெரும்பாலும் இனப்பெருக்கத்திறன் கொண்டுள்ளன. ஆண் லிகர்களுக்கு பிடரி மயிர் கொண்டிருப்பதற்கு 50% வாய்ப்புள்ளது. இருப்பினும் அவற்றின் பிடரி மயிரானது அசல் சிங்கத்தினது அளவில் பாதியளவே இருக்கும். லிகர்கள் பொதுவாக 10 முதல் 12 அடி வரை நீளத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் எடை 800 முதல் 1000 பவுண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம்.
அரிதான டைகான் என்பது பெண் சிங்கம் மற்றும் ஆண் புலி ஆகியவற்றின் கலப்பினமாகும்.
நிற வேறுபாடுகள்
வெள்ளைப் புலிகள்
வெள்ளைப் புலி நன்கு அறிந்த மரபணு சடுதி மாற்றத்தால் உருவாக்கப்பட்டது. தொழிநுட்பப்படி அது சின்சில்லா அல்பினிஸ்டிக் என்று அறியப்படுகிறது. இது காடுகளில் அரிதாக இருந்தாலும் அதன் பிரபலத்துக்காக விலங்கியல் பூங்காக்களில் அதிகம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. வெள்ளைப் புலிகளின் இனப்பெருக்கம் பல சமயங்களில் உள்ளினப் பெருக்கத்திற்கு (தனித்தன்மை பின்னடைவதால்) வழிநடத்தும். கிளையினங்களை இனக்கலப்பு செய்யும் செயலில் பெரும்பாலும் ஏற்படும் சிக்கலைத் தவிர்க்க, வெள்ளை மற்றும் ஆரஞ்சுப் புலிகளின் புணர்ச்சியில் நிறைய புது முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இது போன்ற உள்ளினக்கலப்பு, வெள்ளைப் புலிகள் பிறக்கும்போதே வெட்டப்பட்ட மேல்தாடை மற்றும் பக்கவளைவு (வளைந்த முதுகுத்தண்டு) போன்ற உடல் ஊனத்துடன் இருப்பதற்கு வழிவகுக்கிறது. மேலும், வெள்ளைப் புலிகள் மாறு கண்களைக் (இதுவே மாறுகண் எனப்படுகிறது) கொண்டிருக்க வாய்ப்புள்ளது. திடகாத்திரமானதாகத் தோன்றும் வெள்ளைப் புலிகளும் கூடப் பொதுவாக அவற்றின் ஆரஞ்சு புலிகளைப் போல நீண்டநாள் வாழாது. வெள்ளைப் புலிகள் குறித்தப் பதிவுகள் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் முதலில் நடைபெற்றன. அதன் பெற்றோர் புலிகள் இரண்டும் வெள்ளைப் புலிகளின் அரிதான மரபணுவைப் பெற்றிருந்தால் மட்டுமே அவை நிகழ்கின்றன. இந்த மரபணுவானது ஒவ்வொரு 10,000 பிறப்புகளில் ஒன்றிற்கு மட்டுமே நிகழும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வெள்ளைப் புலி என்பது ஒரு தனிப்பட்ட கிளையினம் அல்ல. அது ஒரு நிற மாறுபாடே ஆகும்; காட்டில் காணப்பட்ட ஒரே வெள்ளைப் புலி இனம் வங்கப்புலிகள் மட்டுமே (காப்பகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வெள்ளைப் புலிகளுமே குறைந்தபட்சம் வங்கப்புலி வகையைச் சேர்ந்தவையே ஆகும்), வெள்ளை நிறத்திற்குக் காரணமாக்க இருக்கும் ஒடுங்கிய பண்பு கொண்ட மரபணு வங்கப்புலிகளின் மூலமே வருகிறது என்று பொதுவாகக் கருதப்பட்டது. இருப்பினும் இதற்கான காரணங்கள் அறியப்படவில்லை. பொதுவாக புலிகளை விட இவை மிகவும் ஆபத்தானவை என்ற பொதுவான ஒரு தவறான கருத்தும் உள்ளது. வெள்ளைப் புலியின் பட்டைகளில் நிறமி இருப்பது தெளிவாக வெளிப்படை எனினும் வெள்ளைப் புலிகள் வெளிரியவை என்பது மற்றொரு தவறான கருத்து. அவை அவற்றின் வெள்ளைச் சாயலில் மட்டுமே மாறுபடவில்லை. அவை ஊதாக் கண்கள் மற்றும் இளஞ்சிவப்பு நிற மூக்குகளையும் பெற்றுள்ளன.
தங்கநிறப் பட்டைப் புலிகள்
கூடுதலாக மற்றொரு ஒடுங்கிய பண்பு மரபணுவானது, மிகவும் வழக்கத்திற்கு மாறான "தங்கநிறப் பட்டை" நிற வேறுபாட்டை உருவாக்கலாம், சிலநேரங்களில் அது "ஸ்ட்ராபெர்ரி" எனவும் அறியப்படுகிறது. தங்கநிறப் பட்டைப் புலிகளானது வெளிர் தங்கநிற மென்மயிர், வெளிரிய கால்கள் மற்றும் மங்கிய ஆரஞ்சுநிறப் பட்டைகளையும் கொண்டுள்ளன. அவற்றின் மென்மயிரானது பெரும்பாலும் இயல்பைவிட சற்று கடினமானதாக இருக்கும். தங்கநிறப் பட்டைப் புலிகளின் எண்ணிக்கை மொத்தம் 30. இதில் மிகக் குறைவானவையே காப்பகப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளைப் புலிகளைப் போன்றே ஸ்ட்ராபெர்ரி புலிகளும் வங்கப்புலிகளின் வகையைச் சேர்ந்தவையே ஆகும். பல மரபுக்கலப்புப் புலிகள் என்று அழைக்கப்படுகின்ற சில தங்கநிறப் பட்டைப் புலிகள் வெள்ளைப் புலியின் மரபணுவைக் கொண்டுள்ளன. இத்தகைய இரண்டு புலிகளைக் கலப்பினம் செய்யும்போது சில பட்டையில்லாத வெள்ளைச் சந்ததியை உருவாக்கலாம். வெள்ளை மற்றும் தங்கநிறப் பட்டைப் புலிகள் இரண்டுமே பெரும்பாலும் சராசரி வங்கப்புலிகளை விடப் பெரியதாக இருக்கின்றன.
பிற நிற வேறுபாடுகள்
"ஊதா" அல்லது பலகைக் கல்நிறப் புலி, மால்டீஸ் புலி மற்றும் அதிகபட்ச அல்லது முழுமையான கருப்புப் புலிகள் ஆகியவையும் உள்ளதாகச் சில உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் கூறுகின்றன, இவை ஊகங்களாகவே உள்ளன. உண்மையாக இருந்தால் தனிப்பட்ட இனங்களாக இல்லாமல் இடைவெளியிட்ட மரபணு சடுதி மாற்றமாகவே இருக்கும்.
உயிரியல் மற்றும் நடத்தை
இடம் சார்ந்த நடத்தை
புலிகள் தனியாக வாழ்வன, அவை இடம்சார்ந்த விலங்குகள் ஆகும். புலியின் வாழ்விட அளவு வரம்பானது முதன்மையாக இரை கிடைக்கக்கூடிய தமையைச் சார்ந்தது. மேலும் ஆண் புலிகள் பெண் புலிகளை அடைவதற்கான வாய்ப்பையும் பொருத்தது. ஒரு பெண் புலியானது அதன் இருப்பிடமாக 20 சதுர கிலோமீட்டர்கள் பரப்புள்ள இடத்தைக் கொண்டிருக்கும். இருப்பினும் ஆண் புலிகளின் இருப்பிடம் சற்று அதிகம். அவை 60–100 கி.மீ2 இடத்தில் வசிக்கின்றன. ஆண் புலிகளின் எல்லை வரம்பில் சில பெண்புலிகளின் எல்லைகளும் அடங்குகின்றன.
தனிப்பட்ட புலிகள் ஒவ்வொன்றுக்கும் இடையேயான தொடர்புகள் மிகச் சிக்கலானது, இடம்சார்ந்த உரிமைகள் மற்றும் எல்லை மீறல்கள் தொடர்பாகப் புலிகள் பின்பற்றுவதற்கான எந்த "விதிகளும்" அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாகப் பெருவாரியான புலிகள் ஒன்றை ஒன்று சந்திப்பதைத் தவிர்க்கின்றன. இருப்பினும் ஆண் மற்றும் பெண் புலிகள் இரையை ஒன்றாகப் பகிர்ந்து கொள்வதற்கான சான்றுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு ஆண் புலியானது தான் கொன்ற இரையை இரண்டு பெண் புலிகள் மற்றும் நான்கு குட்டிகளுடன் பகிர்வதை ஜார்ஜ் ஸ்கால்லெர் பார்த்துள்ளார். பெண் புலிகள் பெரும்பாலும் ஆண்புலிகள் அதன் குட்டிகளின் அருகில் இருப்பதை விரும்புவதில்லை. ஆனால் ஸ்கால்லெர் இந்தப் பெண்புலிகள் தனது குட்டிகளை ஆண் புலிகளிடமிருந்து காப்பதற்காக எந்த முயற்சியும் எடுப்பதில்லை என்பதைக் கண்டு அது குட்டிகளுக்குத் தந்தையாக இருக்கலாம் எனக் கருதுகிறார். ஆண் சிங்கங்ளைப் போலல்லாமல் ஆண் புலிகள், பெண் புலிகளும் குட்டிகளும் தான் கொன்றுவந்த இரையை முதலில் உண்ண அனுமதிக்கின்றன. மேலும் புலிகள் கொன்ற இரையைப் பகிரும்போது நெருக்கமாகவும் இணக்கமாகவும் நடந்து கொள்வதைக் காணமுடிகிறது. மாறாகச் சிங்கங்கள் அந்த நேரத்தில் சின்னத்தனமான சண்டையிட்டுக் கொண்டும் இருக்கும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத புலிகளும் தங்கள் இரையை பகிர்ந்துகொள்வதும் காணப்பட்டுள்ளது. ஸ்டீபன் மில்ஸின் புலி என்ற புத்தகத்தில் ஒரு நிகழ்வை ரத்தம்பூரில் வால்மிக் தப்பரும் ஃப்த்தே சிங் ரத்தோரும் பார்த்த நிகழ்ச்சியைப் பற்றிப் பின்வரும் மேற்கோளில் விளக்குகிறார்:
பத்மினி என்று அழைக்கப்படும் ஒரு ஆதிக்கமிக்கப் பெண் புலியானது 250 கி.கி (550-பவுண்ட்) உடைய ஒரு ஆண் நீலான் மானைக் கொன்றது - நீல்கை என்பது மிகப்பெரிய மானினம் ஆகும். அவர்கள் விடிந்தபிறகு அந்த மானைக் கொன்ற இடத்தில் அந்தப் பெண் புலியையும் அதன் மூன்று 14 மாதக் குட்டிகளையும் கண்டனர். மேலும் அந்தக் குட்டிகள் எந்தவித இடையூறுமின்றி அவை இருந்ததைப் பார்த்தனர். அந்த நேரத்தில் அந்தக் குடும்பத்தில் 2 வயது வந்த பெண்புலிகளும் ஒரு வயது வந்த ஆண் புலியும் சேர்ந்துகொண்டன - அவை பத்மினியின் முந்தைய ஈற்று வாரிசுகளாகும் மேலும் இரண்டு தொடர்பில்லாத புலிகளும் சேர்ந்து கொண்டன. அவற்றில் ஒன்று பெண் புலி மற்றொன்று அடையாளம் காணப்படவில்லை. மூன்று மணியளவில் அந்தக் கொல்லப்பட்ட இரையைச் சுற்றி ஒன்பது புலிகளுக்குக் குறையாமல் இருந்தன.
இளம் பெண் புலிகள் தனது இருப்பிடத்தை முதலில் அமைக்கும்போது அவை தமது தாயின் இருப்பிடப்பகுதிக்கு மிக அருகிலேயே அமைக்கின்றன. பெண்புலி மற்றும் அதன் தாய்ப்புலி ஆகியவற்றின் பிரதேசத்தின் பொதுவான பகுதியானது காலப்போக்கில் குறைகிறது. இருப்பினும் ஆண் புலிகள் அவற்றின் உறவான பெண் புலிகளைவிட அதிக இடத்தை அமைத்துக்கொள்கின்றன. மேலும் அவை இளம் வயதிலேயே தனியான இடத்தை அமைத்துக்கொள்ளுமாறு வெளியேற்றப்படுகின்றன. ஒரு இளம் ஆண் புலியானது மற்ற ஆண் புலிகளின் எல்லைக்குள் அடங்காத பகுதியைப் பார்த்து ஆக்கிரமிக்கும் அல்லது மற்ற ஆணின் பிரதேசத்தில் பிற ஆணிற்கு போட்டியாக மாறத் தேவையான வலிமை மற்றும் வயது வரும்வரை தற்காலிகமாக வாழும். தமது சொந்தப் பகுதிகளை விட்டு வெளியேறித் தனிப்பட்ட பிரதேசங்களை அமைப்பதற்காக வெளியேறிய இளம் புலிகளில்தான், வயதுவந்த புலிகளின் அதிகபட்ச இறப்பு வீதம் (ஆண்டுக்கு 30-35%) பதிவாகியுள்ளது.
பிற பகுதியைச் சேர்ந்த பெண் புலிகள் தங்கள் பகுதிக்குள் வருவதைப் பெண் புலிகள் சகித்துக்கொள்ளும் அளவுக்கு ஆண் புலிகள் சகித்துக்கொள்வதில்லை. இருந்தாலும் பெரும்பான்மையான பிரதேச சிக்கல்கள், நேரடியான தாக்குதல் மூலமாக இல்லாமல் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதன் மூலமே வழக்கமாகத் தீர்க்கப்படுகின்றன. பலம் குறைவான புலிகள் புரண்டு விழுந்து முதுகு தரையில் படிய விழுந்து தோற்ற பல காட்சிகள் காணப்பட்டுள்ளன. பலசாலியான புலியானது ஒருமுறை தனது பலத்தை நிலைநாட்டிவிட்டால் அந்த ஆண் புலியானது தோல்வியடைந்த புலியைத் தன் பகுதிக்குள் வசிக்க அனுமதிக்கிறது. ஆனாலும் மிக நெருக்கமாக வராதவரை மட்டுமே அவை அனுமதிக்கப்படுகின்றன. ஒரு பெண் புலி காமவேட்கையில் இருக்கும்போது மட்டுமே இரண்டு ஆண் புலிகளுக்கு இடையே மிகவும் ஆபத்தான சண்டை நிகழும். அதன் விளைவாக ஏதேனும் ஒரு ஆண் புலி இறக்கலாம். இருந்தபோதிலும் இயல்பாக இது போன்ற நிகழ்வு அரிதுதான்.
தனது பிரதேசங்களை அடையாளம் காண ஆண் புலிகள் மரங்களில் சிறுநீர் மற்றும் மலவாய்ச் சுரப்பிகளில் தோன்றும் சுரப்புநீர் ஆகியவற்றை தெளித்து அதனைக் குறியிடுகின்றன. அதேபோல் கழிவுகளைப் பரப்பித் தடம்பதிப்பதன் மூலமும் குறியிடுகின்றன. ஆண்புலிகள், பெண்புலிகளின் இனப்பெருக்கத்திற்கான நிலமையை அவற்றின் சிறுநீர் குறியீடுகளை முகர்ந்து பார்ப்பதன் மூலமாக அறிந்து உந்தலுணர்வை முகச்சுளிப்பைக் கொண்டு காட்டுகின்றன, இது ஃப்ளெமென் பதில் என்று அழைக்கப்படும்.
வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி புலிகள் காட்டில் ஆராயப்பட்டிருக்கின்றன. புலிகளின் எண்ணிக்கை கடந்தகாலங்களில் அவற்றின் கால்தடங்களின் ப்ளாஸ்டர் அச்சுத்தடங்களைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டன. இந்த முறை தவறானது எனக் கண்டறியப்பட்டது அதற்குப் பதிலாகக் கேமராப் பதிவைப் பயன்படுத்த முயற்சிக்கப்பட்டது. அவற்றின் கழிவுகளிலிருக்கும் DNA அடிப்படையில் மதிப்பிடும் புதிய உத்திகளும் உருவாகி வருகின்றன. காடுகளில் ஆராய்ந்து அவற்றைத் தடமறிதலுக்கு ரேடியோ கழுத்துப்பட்டைகளும் பிரபலமான அணுகுமுறையாக இருந்திருக்கிறது.
வேட்டையாடுதலும் உணவும்
காடுகளில் புலிகள் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான விலங்குகளை அதிகம் உண்கின்றன. சாம்பார் மான், காட்டெருமை, சீதல் மான், காட்டுப்பன்றி, நீலான் மான், நீர் எருமை மற்றும் எருமை ஆகியவையே இந்தியாவில் புலிகளின் பிடித்தமான இரையாகும். சிலநேரங்களில் இவை சிறுத்தைகள், மலைப்பாம்புகள், ஸ்லோத் கரடிகள் மற்றும் முதலைகள் ஆகியவற்றையும் உண்கின்றன. சைபீரியாவில் இவற்றின் முக்கிய இரையினங்கள் மஞ்சூரியன் வாப்பிடி மான், காட்டுப்பன்றி, சைகா மான், கடமான், ரோய் மான் மற்றும் கஸ்தூரி மான் ஆகியவையாகும். சுமத்ராவில் சாம்பார் மான், முண்ட்ஜக் மான், காட்டுப்பன்றி மற்றும் மலேசியப் பன்றி ஆகியவை இவற்றின் இரையினங்களாகும். காஸ்பியன் புலியின் முன்னாள் வரம்பில் சைகா ஆண்ட்டிலோப் மான், ஒட்டகங்கள், கௌகசியன் காட்டெருமை, யாக் மாடு மற்றும் காட்டுக்குதிரை ஆகியவை இரையினங்களாக இருந்தன. நிறைய ஊனுண்ணிகளைப் போலவே இவையும் சந்தர்ப்பவாதிகள் ஆகும். அவை குரங்குகள், மயில்கள், குழி முயல்கள் மற்றும் மீன் போன்ற மிகச்சிறிய இரைகளையே உண்ணுகின்றன.
வயதுவந்த யானைகளைப் பொது இரையாக உண்பது மிகவும் கடினம். ஆனால் புலிகள் மற்றும் யானைகளுக்கு இடையே ஏற்படும் சண்டையிடும் சில நேரங்களில் யானை இரையாவதும் உண்டு. ஒரு சமயம் ஒரு புலியானது ஒரு வயதுவந்த இந்தியக் காண்டாமிருகத்தை கொன்றதாக அறியப்பட்டுள்ளது. இளம் யானை மற்றும் காண்டாமிருகக் குட்டிகளையும் எப்போதாவது இரையாகக் கொள்ளப்படுகின்றன. புலிகள் சில நேரங்களில் நாய்கள், பசுக்கள், குதிரைகள் மற்றும் கழுதைகள் போன்ற வீட்டு விலங்குகளையும் இரையாக்கிக்கொள்கின்றன. இவை விளையாட்டுக் கொல்லிகள் என அழைக்கப்படாமல் கால்நடைத் திருடர்கள் அல்லது கால்நடைக் கொல்லிகள் எனப்படுகின்றன.
வயதான புலிகள் அல்லது காயம்பட்ட புலிகள் அவற்றின் இயற்கையான இரையை பிடிக்க முடியாத போது மனித உண்ணிகளாக மாறியுள்ளன; இந்த நிகழ்வு இந்தியாவில் அடிக்கடி நிகழ்ந்துள்ளது. சுந்தரவனக் காடுகளைச் சேர்ந்தவை இதற்கு விதிவிலக்காகும். இங்கு திடகாத்திரமான புலிகள், காட்டுப் பொருட்களைத் தேடிவரும் மீனவர்கள் மற்றும் கிராமவாசிகளைக் கொன்று உண்கின்றன. இதன் அர்த்தம் மனிதர்கள் புலியின் உணவில் சிறிய பங்கே என்பதாகும். புலிகள் சிலசமயங்களில் நார்ச்சத்து உணவுக்காகத் தாவரங்களை உண்ணும், ஸ்லோ மேட்ச் மரத்தின் பழம் அதற்கு மிகவும் பிடித்ததாக இருக்கிறது.
புலிகள் வழக்கமாக இரவில்தான் வேட்டையாடும். பொதுவாக அவை தனியாகவே வேட்டையாடும். பெரும்பாலான பூனை இனங்களைப் போலவே பதுங்கியிருந்து எந்தக் கோணத்திலிருந்தும் பாய்ந்து தனது உடலின் அதிகமான திறனைச் செலுத்தி தனது உடல் அளவையும் வலிமையையும் பயன்படுத்தி பெரிய இரையையும் நிலைகுலையச் செய்யும். அதிக எடையைக் கொண்டிருந்தாலும் புலிகள் 49-65 கிலோமீட்டர்கள்/மணி (35-40 மைல்கள்/மணி) என்ற வேகத்தில் செல்லக்கூடியவை. இருப்பினும் புலிகளின் திண்மைக் குறைவு என்பதால் மிகக் குறுகிய தொலைவு மட்டுமே இவை இவ்வேகத்தில் செல்ல முடியும். இதனால் புலிகள் இரையைத் தாக்கத் தொடங்கும் முன்பு இரைக்கு மிகநெருக்கமாக இருக்க வேண்டியது அவசியம். புலிகள் சிறப்பாகத் தாவும் திறனைப் பெற்றுள்ளன; அது கிடைமட்டமாக 10 மீட்டர்கள் தாவியுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கமாக இதில் பாதியளவிலேயே தாவல்கள் இருக்கின்றன. இருப்பினும் இருபது வேட்டைகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிகரமாக இரையைக் கொள்ள முடிகிறது.
பெரிய இரையை வேட்டையாடும்போது புலிகள் பெரும்பாலும் முதலில் அவற்றின் தொண்டையைக் கடிக்கின்றன. முன்னங்கால்களைப் பயன்படுத்தி இரையைப் பிடித்துத் தரையில் இழுத்துத் தள்ளுகின்றன. புலியானது இரையின் மீது கிடுக்குப்பிடி போட்டுச் சாகும்வரை இரையின் கழுத்தை நெருக்குகிறது. இந்த முறையில் புலிகள் தம்மைவிட சுமார் ஆறு மடங்கு அதிக எடையுள்ள காட்டெருமை மற்றும் நீர் எருமைகளைக் கொல்கின்றன. சிறிய இரையை புலிகள் அதன் பிடரியைக் கடிக்கின்றன. பெரும்பாலும் தண்டுவடத்தை உடைத்தல், மூச்சுகுழலைக் கடித்தல், அல்லது தொண்டைக் குருதிச் சிரையை அல்லது கரோட்டிட் தமனியைக் கடித்து உடைத்தல்போன்ற முறைகளில் கொல்கிறது. புலிகள் இரையைக் கொல்ல தனது பாதநகங்களால் தாக்குவதும் வீட்டு விலங்குகளின் மண்டையோட்டை நொறுக்கும் அளவுக்குப் போதுமான பலமுள்ளதாக இருக்கிறது. இருப்பினும் இந்தத் தாக்குதல் முறை அரிதானதாகவே அறியப்படுகிறது. மேலும் ஸ்லோத் கரடிகளைத் தாக்கும்போது அவற்றின் முதுகை உடைக்கின்றன.
1980களில் ரந்தம்பூர் தேசியப்பூங்காவில் "கெங்ஹிஸ்" என்று பெயரிடப்பட்ட ஒரு புலியானது தனது இரையை அடிக்கடி ஆழமான ஏரி நீரில் வேட்டையாடுகின்றது என அறியப்பட்டது. இந்த 200 ஆண்டுகளுக்கும் மேலான கண்காணிப்புகளில் இதற்கு முன்னர் இந்த மாதிரியான தாக்குதல் குணமானது அறியபட்டிருக்கவில்லை. மேலும் இந்தப் புலி மிகச்சிறந்த வெற்றியாளராகத் தோன்றியது. அதிகபட்சம் அதன் வேட்டைகளில் 20% இரையைக் கொல்வதில் முடிந்துள்ளது.
இனப்பெருக்கம்
புலிகளின் புணர்ச்சி ஆண்டு முழுவதும் நிகழலாம். ஆனால் பொதுவாக நவம்பர் முதல் ஏப்ரல் வரை அதிகம் நடைபெறுகிறது. ஒரு பெண் புலி சில நாட்களுக்கு மட்டுமே இனப்பெருக்கத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கிறது. அந்தக் கால இடைவெளியில் புணர்ச்சி அடிக்கடி நடைபெறுகிறது. ஒரு இணைப் புலிகள் பொதுவாகப் பிற பூனையினங்களைப் போலவே சத்தத்துடன் அடிக்கடி புணர்கின்றன. கருவளர் காலம் 16 வாரங்களாகும். ஒவ்வொரு ஈற்றுக்கும் வழக்கமாக 3-4 குட்டிகள், ஒவ்வொன்றும் எடையில் பிறக்கின்றன. அவை பிறப்பிலேயே குருடாகவும் தனியே விட்டப்பட்டவையாகவும் இருக்கின்றன. பெண்புலிகள் அவற்றைத் தனியாக வளர்க்கின்றன, அவற்றைத் தோப்புக்கள் மற்றும் பாறைப் பிளவுகள் போன்ற மறைவிடங்களில் பாதுகாக்கின்றன. குட்டிகளின் தந்தைப் புலியானது பொதுவாக அவைகளை வளர்ப்பதில் பங்கெடுப்பதில்லை. பெண் புலிகளானது முந்தைய ஈற்றுக் குட்டிகளை இழந்துவிட்டால் 5 மாதங்களில் அடுத்த ஈற்றுக்குத் தயாராகிவிடுகின்றன என்பதால் பெண்புலியை இனப்பெருக்கத்திற்கு ஏற்றதாக்குவதற்காகச் சுற்றித்திரியும் தொடர்பில்லாத ஆண் புலிகள் கூடப் புலிக்குட்டிகளைக் கொன்றுவிடலாம். புலிக்குட்டிகளின் இறப்பு வீதம் மிகவும் அதிகம் - சராசரியாகக் குட்டிகளில் பாதி இரண்டு வயதுக்கு மேல் பிழைத்து இருப்பதில்லை.
பொதுவாக ஒவ்வொரு ஈற்றிலும் ஒரு மேலாங்கிய குட்டி இருக்கிறது. பொதுவாக அது ஆணாக இருக்கும் ஆனால் அது வேறு பாலினமாகவும் இருக்கலாம். இந்தக் குட்டியானது பொதுவாகச் சகோதரர்களுடன் விளையாடும்போது ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் அதிக சுறுசுறுப்புடன் இருக்கும். அது வழக்கத்தை விட வெகு குறுகிய காலத்திலேயே தாயை விட்டு விலகிச்செல்கிறது. 8 வாரங்களில் குட்டிகள் மறைவிடத்தைவிட்டு வெளியே வந்து தம் தாயைப் பின்தொடரத் தயாராகின்றன. இருப்பினும் அவை வயதாகும் வரை தாய்ப்புலி தனது பிரதேசத்தில் சுற்றித்திரியுமளவுக்கு அவை தாயுடன் பயணிப்பதில்லை. குட்டிகள் அவற்றின் வயது 18 மாதங்களை நெருங்கும்போது தாயைச் சாராதவையாகின்றன. ஆனாலும் அவை 2–2½ ஆண்டுகள் வயதாகும் வரை தங்கள் தாயைவிட்டுப் பிரிவதில்லை. பெண்புலிகள் பாலின முதிர்ச்சியை 3-4 ஆண்டுகளில் அடைகின்றன. ஆண்புலிகள் 4-5 ஆண்டுகளில் பாலின முதிர்ச்சியை அடைகின்றன.
ஒரு பெண்புலி தனது வாழ்நாளில் சராசரியாகச் சம எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் குட்டிகளைப் பிரசவிக்கும். காப்பகப்படுத்தப்பட்ட நிலையில் புலிகளின் இனப்பெருக்கம் நன்றாக உள்ளது. மேலும் அமெரிக்காவில் காப்பகப்படுத்தப்பட்ட புலிகளின் எண்ணிக்கையானது உலக காடுகளில் உள்ள எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கலாம்.
இனங்களுக்கிடையே வேட்டையாடும் தொடர்புகள்
புலிகள், சிறுத்தைப்புலிகள், மலைப்பாம்புகள் மற்றும் முதலைகள் போன்ற பயங்கர மிருகங்களைக் கூடச் சிலநேரங்களில் கொல்லலாம். இருப்பினும் வேட்டையினங்கள் பொதுவாக ஒன்றையொன்று கொல்வதைத் தவிர்க்கின்றன. ஒரு முதலையிடம் அகப்படும் போது புலியானது தன் பாதங்களால் அந்த ஊர்வனத்தின் கண்களைத் தாக்கும். சிறுத்தைப்புலியானது நாளின் வெவ்வேறு நேரங்களில் வேட்டையாடுதல் மற்றும் வேறுபட்ட இரையை வேட்டையாடுதல் மூலமாகப் புலியிடமிருந்து வரும் போட்டியைத் தட்டிக்கழிக்கின்றன. பொதுவாகத் தேவையான அளவு இரையை கொண்டுள்ளதால் புலிகளும் சிறுத்தைப்புலிகளும் போட்டிச் சண்டைகள் மற்றும் சவன்னா என்ற வெப்பப் புல்வெளிகளில் பொதுவாகக் காணப்படும் இனங்களுக்கிடையேயான மேலாதிக்க நிலைகள் போன்ற சிக்கல்களின்றி வெற்றிகரமாக ஒன்றாக வாழ்கின்றன. இரண்டு இனங்கள் சேர்ந்து வாழும் பகுதிகளில் புலிகள் நரி எண்ணிக்கையைக் குறைக்கின்றன என அறியப்படுகிறது. செந்நாய் கூட்டம் உணவுப் பிரச்சினையில் புலிகளைத் தாக்கிக் கொல்வதாக அறியப்படுகிறது. இருப்பினும் வழக்கமாகப் பெரிய இழப்புகள் ஏற்படுகிறது. சைபீரியன் புலிகளும் பழுப்புநிறக் கரடிகளும் போட்டியாளர்களாக இருக்கலாம், வழக்கமாக அவை போட்டியைத் தவிர்க்கின்றன; இருந்தாலும் சிலநேரங்களில் புலிகள் கரடிகளின் குட்டிகளையும் சில வயதுவந்த கரடிகளையும் கொல்கின்றன. கரடிகள் (ஆசிய கருப்புக் கரடிகள் மற்றும் பழுப்புநிறக் கரடிகள்) ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் புலிகளின் உணவில் 5-8% பங்காக உள்ளன. தற்பாதுகாப்புக்காகவோ அல்லது இரைச் சண்டையின் காரணமாகவோ பழுப்புநிறக் கரடிகள், புலிகளைக் கொன்றதற்கான பதிவுகளும் உள்ளன. சில கரடிகள் குளிர்கால ஒடுக்கத்திலிருந்து எழும்போது புலிகளின் இரையை அபகரிக்க முயற்சிக்கும். இருப்பினும் புலிகள் சிலநேரங்களில் அதன் தாக்குதலைத் தடுத்துநிறுத்தும். ஸ்லோத் கரடிகள் மிக முரட்டுத்தனமானவை, சிலநேரங்களில் இளம் வயது புலிகளை அவற்றின் இரை இருக்கும் இடத்தை விட்டுத் தூக்கி எறிகின்றன. இருப்பினும் வங்கப்புலிகளின் உணவு பெரும்பாலும் ஸ்லோத் கரடிகளே.
புலிச்சின்னம்
தொன்றுதொட்டு சோழ அரசர்களின் அடையாளச் சின்னமாக விளங்கியது புலி.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இயக்கக் கொடியில் புலியின் சின்னம் இருந்தது.
வாழ்விடம்
பொதுவாகப் புலியின் வாழ்விடம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது: எப்போதும் எளிதில் மறைவிடங்களைக் கொண்டிருக்கும். மேலும் அது நீர்நிலைகள் அருகில் உள்ளதும் இரை நிறைந்த பகுதியாகவும் இருக்கும். வங்கப்புலிகள் அஸ்ஸாம் மற்றும் கிழக்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் உள்ள மழைக்காடுகள், பசுமைமாறாக் காடுகள், பகுதியளவு-பசுமைமாறாக் காடுகள்; கங்கை டெல்டாவின் சதுப்புநிலக் காடுகள்; நேபாளத்தின் இலையுதிர்க் காடுகள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் முட்காடுகள் உட்பட அனைத்து விதமான காடுகளிலும் வாழ்கின்றன. அடர்ந்த தாவரங்கள் நிறைந்த பகுதிகள் புலிகள் மறைந்துகொள்ள ஏற்றதாக இருப்பதால் சிங்கத்துடன் ஒப்பிடும்போது, அவை பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதியைத் தேர்வுசெய்கிறது. மேலும் ஒப்பிடுகையில் மதிப்பும் ஆதிக்கமும் குறைவில்லாமல் தனி வேட்டையாடியாக இருக்கக்கூடிய இடத்தையே விரும்புகின்றன. பெரிய பூனையினங்களில் புலியும் ஜாக்குவார் சிறுத்தையும் மட்டுமே நன்கு நீந்துபவை; புலிகள் பெரும்பாலும் குளங்கள், ஏரிகள் மற்றும் ஆறுகளில் அடிக்கடி குளிக்க்கின்றன. மற்ற பூனையினங்கள் போலத் தண்ணீரை ஒதுக்காமல் புலிகள் அவற்றை விரும்பித் தேடிச்செல்லும். சில நாட்களில் அதிக வெப்பமான நேரங்களில் அவை பெரும்பாலும் குளங்களில் குளித்துச் சூட்டைத் தணிக்கின்றன. புலிகள் மிகச்சிறப்பாக நீந்துபவை, அவை 4 மைல்கள் வரை நீந்தக்கூடியவை. புலிகள் பெரும்பாலும் இறந்துபோன அவற்றின் இரையை ஏரிகளில் கொண்டு செல்வதும் பொதுவாகக் காணப்படக்கூடிய ஒரு நிகழ்வு.
பாதுகாப்பு முயற்சிகள்
காட்டிலுள்ள புலிகளின் எண்ணிக்கையானது தோலுக்காக வேட்டையாடுதல் மற்றும் அதன் இருப்பிடத்தை அழித்தல் ஆகிய செயல்களால் மிகவும் குறைந்துவிட்டது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் 100,000 புலிகளாக மதிப்பிடப்பட்டிருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது காடுகளில் அதன் எண்ணிக்கை 2,000 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. சில மதிப்பீடுகள் இன்னும் குறைவாக, 2,500ஐ விடக் குறைவான முதிர்ந்த இனப்பெருக்கம் செய்யக்கூடிய புலிகளே உள்ளதாகக் கூறுகின்றன. முதிர்ந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியவையின் எண்ணிக்கை 250க்கு அதிகமான புலிகளைக் கொண்டுள்ள துணை எண்ணிக்கை எதுவும் இல்லை என்றும் கூறுகின்றன. சுமார் 20,000 புலிகளைத் தற்சமயம் காப்பகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த அழிவு ஆபத்தானது ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் இவ்வாறு காப்பகப்படுத்தப்பட்டவையின் எண்ணிக்கையில் 4-5,000 புலிகள் சீனாவில் உள்ள வியாபார நோக்கம் கொண்ட புலிகள் பண்ணைகளில் உள்ளன. அவை அனைத்தும் குறைந்த மரபணு வேறுபாடு கொண்டவை.
இந்தியா
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா அதிக எண்ணிக்கையிலான வனப்புலிகளைக் கொண்டுள்ள நாடாகவும் உள்ளது. புலிகள் பாதுகாப்புத் திட்டம் என்று அறியப்படும் முக்கிய பாதுகாப்புத் திட்டம் 1973 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களால் தொடங்கப்பட்டு செயலில் உள்ளது. மனித முன்னேற்றம் இல்லாத இடங்களை மீட்டெடுத்து நன்கு கண்காணிக்கப்படும் சுமார் 25 புலிகள் சரணாலயத்தை உருவாக்கியதே இதன் அடிப்படை நடவடிக்கையாகும். இந்தத் திட்டத்தின் விளைவாக 1973 ஆம் ஆண்டில் 1,200 என்று இருந்த வன வங்கப்புலிகளின் எண்ணிக்கை 1990களில் 3,500க்கும் அதிகமாக மாறி மூன்று மடங்காகியது. இருப்பினும் இந்திய அரசாங்கத்தின் அறிக்கைகள் சில சந்தேகங்களுக்குள்ளாயின. சமீபத்தில் பிறப்பிக்கபட்ட சிற்றினங்கள் சட்டம், புலிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அந்த சிற்றினங்களை வாழ்வதற்கு அனுமத்தித்தது. இது அத்திட்டம் தொடர்ந்து வெற்றி பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
2007 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட புலிகளின் கணக்கெடுப்பின் அறிக்கை 12 பிப்ரவரி 2008 அன்று வெளியிடப்பட்டது. அது இந்தியாவில் வனப் புலிகளின் எண்ணிக்கை தோராயமாக 1,411 என்று குறைந்துள்ளதாகக் காட்டுகிறது. அந்த அறிக்கையில் புலிகளின் எண்ணிக்கை குறைவிற்கு சட்டவிரோதமாக வேட்டையாடுதலே நேரடியான காரணமாகலாம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரஷ்யா
1940களில் காடுகளில் உள்ள சைபீரியன் புலியானது 40 புலிகள் என்ற அளவில் அழிந்துபோகும் நிலையில் இருந்தது. சோவியத் யூனியன் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட வேட்டையாடுதலுக்கு எதிரான அமைப்புகள் வேட்டையாடுதலைக் கட்டுப்படுத்தின. மேலும் பாதுகாப்பு பகுதிகளின் (ஜபோவெட்னிக்குகள்) குழுக்கள் தொடங்கப்பட்டது. அவை புலிகளின் எண்ணிக்கையைச் சில நூறுகளாக அதிகரிக்க வழிவகுத்தது. 1990களில் ரஷ்யாவின் பொருளாதரம் சீர்குலைந்தபோது வேட்டையாடுதல் மீண்டும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது, உள்ளூர் வேட்டைக்காரர்கள் தடைசெய்யப்பட்ட மிகுந்த வருமானமளித்த சீனச்சந்தையை முற்றுகையிட அணுகினர். அப்பகுதிகளில் மரம்வெட்டுதல் அதிகரித்தது. உள்ளூர் பொருளாதார முன்னேற்றம், பாதுகாப்பு முயற்சிகளில் பெரிய வளங்களை முதலீடு செய்ய வழிவகுத்தது, பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பு முன்னேற்ற விகிதத்தையும் காடுகளை அழிப்பதையும் அதிகரிக்கச் செய்தது. இனங்களைக் காப்பதில் உள்ள முக்கியத் தடையாக இருப்பது தனிப்பட்ட புலிகளுக்குத் தேவைப்படும் பரந்த அளவிலான பிரதேசமே (ஒரு பெண் புலிக்குச் சுமார் 450 கி.மீ.2 வரை தேவைப்படுகிறது) ஆகும். தற்போதுள்ள பாதுகாப்பு முயற்சிகள் உள்ளூர் அரசாங்கங்களாலும் உலகளாவிய நிதி மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் போன்ற சர்வேதச அமைப்புகளின் ஆதரவில் உள்ள NGOக்களின் மூலமும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பெரிய பூனையினம் குளம்பு விலங்குகளின் எண்ணிக்கையை ஓநாய்களின் எண்ணிக்கையை விடக்குறைப்பதாலும் ஓநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதாலும், கிழக்குப் பகுதி வேட்டையாடுபவர்களைச் சமரசம் செய்வதற்காக ரஷ்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புலிகளைக் கொண்டு ஓநாய்களின் எண்ணிக்கையைக் குறைத்தனர். தற்போது 400-550 விலங்குகள் காடுகளில் உள்ளன.
திபெத்
திபெத்தில் புலி மற்றும் சிறுத்தைப்புலியின் தோல்கள் பல்வேறு விழாக்கள் மற்றும் உடைகளில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வனவிலங்குகள், அவற்றின் தயாரிப்புகள் அல்லது அவற்றின் வழிவந்த பொருட்களைப் பயன்படுத்துவது, விற்பது அல்லது வாங்குவது ஆகியவற்றுக்கு எதிரான தீர்மானம் எடுக்குமாறு தலாய்லாமா 2006 ஜனவரியில் அறிவுரை கூறினார். வேட்டையாடப்பட்ட புலி மற்றும் சிறுத்தைப்புலியின் தோல்களுக்கு கிராக்கிக்கு இது நீண்டகால வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கப்படுகிறது.
வனமீட்பு
இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலரான பில்லி அர்ஜான் சிங் என்பவரே வனமீட்பு செயலில் முதலில் ஈடுபட்டவர். அவர் தான் வளர்த்துவந்த விலங்குகள் பூங்காவில் பிறந்த தாரா என்ற பெண் புலியை 1978 ஆம் ஆண்டில் தத்வா தேசியப் பூங்காவின் காடுகளில் மீண்டும் விட்டார். ஒரு பெண்புலி பலரைக் கொன்று கொண்டிருந்தது. பின்னர் அது சுட்டுக் கொல்லப்பட்டது இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இதையே பின்பற்றினர். அரசு அதிகாரிகள் அந்தப் புலியே தாரா எனவும் சிங் அது தாரா இல்லை எனவும் ஒருவருக்கொருவர் எதிர்த்து வாதிட்டுக்கொண்டனர். தாரா பகுதியளவு வங்கப்புலியாக இருந்ததால் அதன் அறிமுகத்தினால், அந்தப் பகுதியைச் சேர்ந்த புலிகளின் மரபணுத் தொகுதியில் கலப்படம் ஏற்பட்டது. அது வளர்க்கப்பட்ட இடமான ட்வைக்ராஸ் விலங்கியல் பூங்காவில் சரியாக இல்லாத பதிவுகளின் காரணமாக இந்த உண்மை முதலில் தெரியவில்லை. இதனால் வனமீட்புச் செயல் மதிப்பை இழந்தது.
சீனப் புலிகளைக் காப்போம்
சீனப் புலிகளைக் காப்போம் என்ற அமைப்பு சீனாவின் மாநில வனப்பாதுகாப்பு ஆணையம் மற்றும் சீனப் புலிகள் தென்னாப்பிரிக்க அறக்கட்டளையும் இணைந்து சீனப் புலிகளை மீண்டும் காடுகளில் விடுவது தொடர்பான ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன. பெய்ஜிங்கில் 2002 நவம்பர் 26 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் சீனாவில் தென்சீனப் புலிகள் உள்ளிட்ட புலிகளை மீண்டும் காட்டில் விட்டு அவற்றின் இயல்பான காட்டை உருவாக்கித் தரும் ஒரு பிரதான சரணாலயத்தை உருவாக்கி அதன் மூலம் ஒரு சீனப் புலிப் பாதுகாப்பு மாதிரியை வழங்கியது. சில காப்பகங்களில் பிறந்த தென்சீனப் புலிகள் அவற்றின் வேட்டையாடும் திறன்களை மீண்டும் பெறும் பயிற்சிக்காக அவற்றைத் தென்னாப்பிரிக்காவில் விட்டு மிகவும் அருகிவரும் தென்சீனப் புலிகளை மீண்டும் காட்டில் விடுவதையே சீனப் புலிகளைக் காப்போம் அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் ஒரு புலிகள் சரணாலயத்தை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இந்தச் சரணாலயம் தயாரானதும் அந்தப் புலிகளை மீண்டும் சீனாவின் சரணாலயத்தில் விடப்படும். பயிற்சிக்கு விடப்பட்ட புலிகளின்வழி உருவான குட்டிகள் சீனாவின் பிரதான சரணாலயத்தில் விடப்படும். முதலில் விடப்பட்ட விலங்குகள் தொடர்ந்து இனப்பெருக்கத்தைத் தொடர தெனாப்பிரிக்காவிலேயே இருக்கும்.
இதற்குத் தென்னாப்பிரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்கு அங்கு தென்சீனப் புலிகளுக்குத் தேவையான திறமையும் வளங்களும், நிலமும் விளையாட்டு வாய்ப்பும் கிடைப்பதே காரணமாகும். இந்தத் திட்டத்தின்கீழ் காடுகளில் விடப்பட்ட தென்சீனப் புலிகள் வெற்றிகரமாகத் தாமே சொந்தமாக வாழவும் வேட்டையாடவும் தேவையான திறமையைப் பெற்றுவிட்டன. இந்தத் திட்டம் காடுகளில் விடப்பட்ட தென்சீனப் புலிகளின் இனப்பெருக்கத்திற்கும் உதவியது. இந்தத் திட்டத்தின்போது 5 புலிக்குட்டிகள் பிறந்தன. இந்த 2வது தலைமுறைக் குட்டிகள் தமது தாயிடமிருந்தே வேட்டையாடுதல் மற்றும் வாழ்தலுக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
மனிதர்களிடையே உள்ள உறவு
புலி-இரையாக
ஆசியாவின் ஐந்து பெரிய விளையாட்டு விலங்குகளில் புலியும் ஒன்றாக இருந்தது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு காலத்தில் புலி வேட்டை என்பது மிக அதிக அளவில் நடைபெற்ற நிகழ்வாக இருந்தது. காலனியாதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்கிலேயர்கள் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் செல்வச்செழிப்புமிக்க மாநிலங்களின் மஹராஜாக்களால் கௌரவமிக்க பாராட்டுக்குரிய விளையாட்டாப் போற்றப்பட்டது. சில வேட்டைக்காரர்கள் புலிகளை நடந்து சென்று வேட்டையாடினர். பிறர் உயர்பந்தல்களில் அமர்ந்துகொண்டு ஆடு அல்லது மாட்டை இரையாகப் பயன்படுத்தியும் வேட்டையாடினர். இன்னும் சிலர் யானையின் மீது அமர்ந்தபடியும் வேட்டையாடினர். சில நேரங்களில் கிராமவாசிகள் கொட்டு வாத்தியங்களை முழங்கி மிருகங்களை மரண வளையத்திற்குத் துரத்த உதவினர். புலிகளின் தோலை உரித்தல் குறித்து பல விளக்கமான வழிமுறைகள் உள்ளன. மேலும் புலிகளின் தோலுரித்துப் பதப்படுத்தலில் நிபுணர்களும் இருந்தனர்.
மனித உண்ணிப் புலிகள்
புலிகள் வழக்கமாக மனிதர்களை இரையாக உண்பதில்லை எனினும், பிற பூனையினங்களை விடவும் அதிகமாக மனிதர்களைக் கொன்றுள்ளன. குறிப்பாகப் புலிகளின் வாழிடங்களைப் பாதிக்கும் வகையில் மக்கள் தொகையும், மரம் வெட்டுதலும் விவசாயமும் நடைபெறும் பகுதிகளில் இது அதிகமாக நிகழ்கிறது. மனிதர்களை உண்ணும் புலிகள் பெரும்பாலும் பல்லிழந்த,வயது முதிர்ந்த புலிகளே. இவை தமக்குத் தேவையான இரையை வேட்டையாடும் திறன் இல்லாமல் போவதால் மனிதர்களை உண்ண முயற்சிக்கின்றன. மனிதர்களை உண்ணும் புலிகள் என அறியப்பட்ட அனைத்துப் புலிகளுமே பெரும்பாலும் விரைவில் பிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு விட்டன அல்லது விஷம் வைத்துக் கொல்லப்பட்டு விட்டன. தொடர்ந்து மனிதர்களைக் கொல்லும் புலிகள் கூட மனித உண்ணிச் சிறுத்தைப் புலிகள்போல மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதில்லை. அவை வழக்கமாகக் கிராமத்தின் வெளிப்புறத்தில் இருக்கும். இருப்பினும் கிராமங்களிலும் சில நேரங்களில் தாக்குதல் நடைபெறுகிறது. இந்தியாவிலும் வங்காளதேசத்திலும் குறிப்பாகக் குமாயன், கர்வால் மற்றும் வங்காளத்தின் சுந்தரவன சதுப்புநிலத் தாழ்நிலங்களில் ஆரோக்கியமான புலிகள் மனிதர்களை வேட்டையாடுவது மிகக் குறிப்பிடக்கூடிய ஒரு சிக்கலாகக் கருதப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் புலிகளின் துரித வாழிட இழப்பு காரணமாக மனிதர்களின் மீதான அவற்றின் தாக்குதல் சுந்தரவனப் பகுதிகளில் அதிகரித்துள்ளது.
ஆசியாவின் பாரம்பரிய மருத்துவம்
சீனாவின் பெரும்பாலான மக்கள், புலியின் பல உடற்பகுதிகள் மருத்துவ குணமுள்ளவை எனவும் வலி நிவாரணியாகவும் பாலுணர்வூக்கியாகவும் இருப்பதாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கைகளை நிரூபிக்கப் போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை. புலிகளின் உடற்பகுதிகளை மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தும் நடவடிக்கைகளைச் சீனாவில் முன்பே தடை செய்துள்ளனர். புலிகளைச் சட்ட விரோதமாக வேட்டையாடுவதற்கு மரண தண்டனை வழங்குமளவுக்கு சீன அரசு அளவு மீறிச் சென்றுமுள்ளது. மேலும் உலகில் அருகிவரும் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைக் காப்பதற்கான வணிக மரபின் கீழ் புலியின் உடலில் எந்தப் பகுதியையும் வணிக நோக்கத்திற்காகப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது. மேலும் சீனாவிலும் 1993 ஆம் ஆண்டிலிருந்து தேசிய அளவிலான இவ்வகைக்கான வணிகத் தடை உள்ளது. இருப்பினும் அங்கு பூனையினங்களை இனப்பெருக்கம் செய்து இலாபம் அடையும் செயலில் ஈடுபட்டுள்ள புலிப் பண்ணைகள் பல உள்ளன. தற்போது இந்தப் பண்ணைகளில் காப்பகங்களிலேயே பிறந்த அரைத் திறனுள்ள 4,000க்கும் 5,000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான விலங்குகள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகளாக
விலங்கியல் பூங்காக்கள் மற்றும் மீன் காட்சியகங்களின் கூட்டமைப்பு மதிப்பிட்டபடி அமெரிக்காவில் மட்டும் 12,000 புலிகளைச் செல்லப் பிராணிகளாக வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக இது உலகில் காடுகளில் உள்ளவற்றின் எண்ணிக்கையை விட அதிகம். அதில் டெக்ஸாஸ் மாகாணத்தில் மட்டுமே 4,000 புலிகள் காப்பகப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
அமெரிக்காவின் அதிக புலி எண்ணிக்கைக்கு ஒரு பங்குக் காரணம், சட்டமாக்குவதில் உள்ள அக்கறையின்மையாகும். அமெரிக்காவின் 19 மாநிலங்களில் மட்டுமே தனிப்பட்ட முறையில் புலிகளைச் சொந்தமாக வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. 15 மாநிலங்கள் உரிமம் இருந்தால் புலிகளை வளர்க்க அனுமதிக்கிறது. மேலும் 16 மாநிலங்களில் எந்த ஒழுங்குமுறையும் இல்லை.
அமெரிக்காவின் விலங்கியல் பூங்காக்களிலும் சர்க்கஸிலும் விலங்குகளின் இனப்பெருக்கத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதின் விளைவாக, 1980 மற்றும் 1990களில் விலங்குக் குட்டிகளின் எண்ணிக்கை வெகுவாகப் பெருகியது. இதனால் அதன் விலை மிகவும் குறைந்தது. SPCA அமைப்பு ஹௌஸ்டன் பகுதியில் மட்டும் 500 சிங்கங்களும் புலிகளும் பிற பூனையினங்களும் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டில் வெளியான ஸ்கார்ஃபேஸ் என்ற திரைப்படத்தில் டோனி மாண்டனா ஏற்று நடித்த கதாப்பாத்திரம், அமெரிக்கனின் கனவு வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் குவிப்பதில் மிகுந்த வெறி கொண்டவராக நடித்திருப்பார். அதில் அவர் கண்ணோட்டத்தில் வீட்டில் இருக்க வேண்டியவற்றில் ஒரு செல்லப் பிராணியாகப் புலியும் இருக்கும்.
கலாச்சார சித்தரிப்புகள்
கிழக்கு ஆசியக் கலாச்சாரத்தில் மிருகங்களின் அரசனாகச் சிங்கத்திற்குப் பதிலாகப் புலியே மேலோங்கி இருக்கிறது. அது கௌரவம், அச்சமின்மை மற்றும் கோபத்தையும் குறிப்பதாக உள்ளது. அதன் நெற்றியில் சீன மொழியில் எழுத்தில் "ராஜா" எனப் பொருள் குறிக்கும் ஓர் எழுத்தான 王 என்பதை ஒத்த குறி உள்ளது; இதனால் சீனா மற்றும் கொரியாவில் கார்ட்டூன் வருனனைகளில் புலியை நெற்றியில் அந்த 王 எழுத்தைக் கொண்டே குறிக்கின்றனர்.
சீனாவின் புராணம் மற்றும் கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் பெற்றுள்ள புலி, சீன இராசியைக் குறிக்கும் 12 விலங்குகளில் ஒன்றாகும். மேலும் பல்வேறு சீனக் கலை மற்றும் தற்காப்புக் கலைகளில் புலியானது பூமியின் சின்னமாகவும் சீன ட்ராகனுக்கு- இணையானதாகவும் இடம்பெறுகிறது. புலியும் ட்ராகனும் முறையே பொருள் மற்றும் ஆத்மாவைக் குறிக்கின்றன. உண்மையில் தென் சீனத் தற்காப்புக் கலையான ஹுங் கா, புலி மற்றும் கொக்கு ஆகியவற்றின் அசைவுகளை அடிப்படையாகக் கொண்ட கலையாகும். பேரரசான சீனாவில் புலி போரின் உருவகமாக விளக்கியது. சில நேரம் உயர் இராணுவத் தளபதி (அல்லது தற்போது உள்ள பாதுகாப்புச் செயலர்) ஆகியோரைக் குறித்தது. அதே நேரம் பேரரசரும் அரசியும் ட்ராகன் மற்றும் ஃபோனிக்ஸ் ஆகியவற்றால் குறிக்கப்பட்டனர். வெள்ளைப் புலியானது () சீன இராசி மண்டலங்களின் நான்கு சின்னங்களில் ஒன்றாகும். அது சில நேரங்களில் மேற்கின் வெள்ளைப் புலி (西方白虎) எனவும் அழைக்கப்படுகிறது. அது மேற்கையும் இலையுதிர்க்காலத்தையும் குறிக்கிறது.
புத்த மதத்தில் அறிவற்ற மூன்று உயிரினங்களில் ஒன்றாகக் குறிக்கப்படுகிறது. அதில் குரங்கு பேராசையையும், மான் காதல் நோயையும், புலி கோபத்தையும் குறிக்கின்றன.
தங்குஸிக் மக்கள் சைபீரியன் புலியை ஒரு தெய்வமாகவே கருதினர். அதை "தாத்தா" அல்லது "கிழம்" என அழைத்தனர். உடேஜ் மற்றும் நனாய் மக்கள் அதை "அம்பா" என அழைத்தனர். மஞ்சு மக்கள் சைபீரியன் புலியை ஹூ லின் ராஜா எனக் கருதினர்.
பரவலாக வழிபடப்படும் இந்துக் கடவுளும் தேவி-பார்வதியின் ஒரு அம்சமுமானதுர்கா, பத்துக் கரங்களுடன் போர்க்களத்திற்கு பெண்புலி அல்லது (பெண் சிங்கத்தில்) பவனி வரும் போர் வீராங்கனையாக விவரிக்கப்படுகிறார். தென்னிந்தியக் கடவுள் ஐயப்பனும் புலியில் பவனி வருபவராக விளக்கப்படுகிறார்.
ஆசியாவின் உருமாற்றக் கதைகளில் ஓநாயாக மாறக்கூடியவர்களின் பாத்திரங்களுக்குப் பதிலாகப் புலியாக மாறக்கூடியவர்கள் இடம்பெற்றனர்; இந்தியாவில் இவர்கள் தீய மந்திரவாதிகளாகவும் மலேசியாவில் ஓரளவு நியாயமானவர்களாகவும் விவரிக்கப்பட்டனர்.
புலி இலக்கியத்திலும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது; ருட்யார்ட் கிப்ளிங் மற்றும் வில்லியம் ப்ளேக் ஆகிய ஆசிரியர்கள் முறையே த ஜங்கில் புக் மற்றும் த சாங்க்ஸ் ஆப் எஸ்பீரியன்ஸ் ஆகிய தங்கள் படைப்புகளில் புலியை மிரட்டும் மற்றும் வீரமுள்ள அச்சமூட்டும் மிருகமாகச் சித்தரித்துள்ளனர். த ஜங்கில் புக் கதையில் ஷேர் கான் என்ற புலி, மோக்லி என்ற கதாநாயகனின் ஜென்ம விரோதியாகும். இருப்பினும் பிற சித்தரிப்புகள் அவ்வளவு மிக நல்லவை: ஏ.ஏ. மில்னேவின் வின்னீ த பூஹ் கதைகளில் வரும் டிகெர் என்ற புலி மிகவும் அனிய விரும்பக்கூடிய விலங்காகும். மேன் புக்கர் பரிசை வென்ற "லைஃப் ஆப் பீ" என்ற புதினத்தில் கதாநாயகனான பை பட்டேல், பசுபிக் பெருங்கடலில் உடைந்த கப்பலில் சிக்கிக்கொண்ட தனி மனிதனாகச் சித்தரிக்கப்படுகிறான். அவனுக்கு அங்கு ஒரு நட்பு கிடைக்கிறது: அது ஒரு பெரிய வங்கப் புலி ஆகும். கால்வினும் ஹோப்ஸும் என்ற பிரபல சித்திரக் கதையில் கால்வின் என்ற பாத்திரத்துடன் அவனது திறமைசாலியான புலியும் இடம்பெறுகிறது அதன் பெயர் ஹோப்ஸ். பிரபலமான உணவான ஃப்ராஸ்டெட் ஃப்ளேக்ஸின் ("ஃப்ராஸ்டிஸ்" என்றும் குறிக்கப்படும்) அட்டைப் பெட்டியிலும் "டோனி த டைகர்" என்ற பெயர் கொண்ட புலி ஒன்று இடம் பெற்றிருந்தது.
புலியானது வங்காள தேசம், நேபாளம், இந்தியா (வங்கப் புலி) மலேசியா (மலேசியா), வட கொரியா மற்றும் தென் கொரியா (சைபீரியன் புலி) ஆகிய நாடுகளின் தேசிய விலங்காகத் திகழ்கிறது.
உலகின் மிகப் பிடித்தமான விலங்கு
அனிமல் ப்ளானெட் நிகழ்த்திய வாக்கெடுப்பில், புலி சிறிய வித்தியாசத்தில் நாயை வென்று உலகின் மிகப் பிடித்த விலங்காகத் தேர்ந்தெடுக்கபட்டது. இந்த வாக்கெடுப்பில் 73 நாடுகளிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட பாவையாளர்கள் வாக்களித்தனர். மொத்த வாக்குகளில் புலிகளுக்கு 21% வாக்கும் நாய்களுக்கு 20% வாக்கும், டால்ஃபின்களுக்கு 13% வாக்கும், குதிரைகளுக்கு 10% வாக்கும், சிங்கங்களுக்கு 9% வாக்கும், பாம்புகளுக்கு 8% வாக்கும், அவற்றைத் தொடர்ந்து யானைகள், சிம்பான்ஸிகள், உராங்குட்டான்கள் மற்றும் திமிங்கலங்கள் ஆகியவையும் இடம்பிடித்தன.
அனிமல் ப்ளானெட்டில் பணி புரிந்த விலங்குகள் நடத்தை ஆய்வாளரான கேண்டி டி'சா என்பவர் இவற்றைப் பட்டியலிட்டு மேலும் கூறியதாவது: "வெளித்தோற்றத்திற்கு மிரட்டும் விதமாகவும், அச்சுறுத்தும் ஆற்றலுடையதாகவும் தோன்றினாலும் அகத்தில் அமைதியாகவும் கூரிய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனும் கொண்ட புலிகள் நம்மைப் போன்றதே".
உலகளாவிய வனவிலங்குக் கூட்டிணையப் பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச விலங்கினங்களின் அதிகாரியான கால்லம் ரேங்கின், இந்த முடிவுகள் அவருக்கு நம்பிக்கையளித்திருப்பதாகக் கூறினார். "மக்கள் புலியைத் தமது விருப்பமான விலங்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், மக்கள் புலிகளின் முக்கியத்துவத்தையும் அவை காக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வெகுவாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதே பொருள்" எனக் கூறினார்.
படத்தொகுப்பு
மேற்கோள்கள்
குறிப்புகள்
(1993). பிக் கேட்ஸ் கிங்டம் ஆஃப் மைட், வாயஜர் ப்ரெஸ்.
. (2001) அனிமல் ஹேபிடட்ஸ் P. 172
& (eds). 2005த தெஷாரஸ் ஆஃப் இண்டியன் வைல்ட்லைஃப் . பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொஸைட்டி அண்ட் ஆக்ஸ்ஃபோர்டு உனிவெர்ஸிடி ப்ரெஸ், மும்பை.
(1981). பாந்தெரா டைகிரிஸ். (PDF). மம்மலியன் ஸ்பீஷியஸ், 152: 1-8. பாலூட்டிகளுக்கான அமெரிக்க அமைப்பு.
(1999) வாக்கர்'ஸ் மம்மல்ஸ் ஆஃப் த வேர்ல்ட் . ஜான்ஸ் ஹோப்கின்ஸ் யுனிவெர்ஸிட்டி பிரஸ்.
அப்பிரிட்ஜ்ட் ஜெர்மென் ட்ரான்ஸ்லேஷன் ஆஃப் ரிட்டர்ன் ஆஃப் த டைகர் , லஸ்டர் பிரஸ், 1993.
. (1999) ரைடிங் த டைகர். {0டைகர் கன்செர்வேஷன் இன் ஹியூமந்டாமினேட்டட் லேண்ட்ஸ்கேப்ஸ் {/0}கேம்பிரிட்ஜ் யுனிவெர்சிட்டி பிரஸ்.
புற இணைப்புகள்
வங்கப் புலிகள் — பி பி சி புகைப்படங்கள்
21ஆம் நூற்றாண்டுப் புலி, புலிகள் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள்பற்றிய தகவல்கள்
பாந்தெரா டைக்ரீஸுக்கான உயிர்வேறுபாடியல் களஞ்சிய நூலகத்தின் நூற்பட்டியல்
புலிகளைக் காப்பாற்றுங்கள் நிதி : தேசிய மீன் மற்றும் வனவிலங்கு நிறுவனத்தின் திட்டம்
டைகர் கேன்யான்ஸ் ஹொம்பேஜ்: புலிகள் மற்றும் கலப்பினம் செய்யப்பட்டு மீண்டும் காட்டில் விடப்பட்ட புலிகளைப் பற்றிய தகவல்கள்
ஆபத்தில் உள்ள புலிகள்: உலகின் மிக அருகிவரும் புலிகள்பற்றிய தகவல்கள்
WWF – புலிகள்
டைகர் ஸ்டாம்ப்ஸ் : பல்வேறு நாடுகளின் புலி படங்கள் மற்றும் அஞ்சல் தலைகள்.
சீனப் புலிகளைக் காப்போம் : புலிகள் மற்றும் ஆப்பிரிக்காவின் தென்சீனப் புலிகளின் வன மீட்புத் திட்டம்பற்றிய தகவல்கள்
சுந்தரவன புலித் திட்டம்: உலகின் மிகப் பெரிய மீதமுள்ள சதுப்புநிலக் காடுகளில் புலிகள்பற்றிய ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு
T.I.G.E.R.S ஐப் பாருங்கள்: மிகவும் அருகிவரும் மற்றும் அரிதாகிவரும் இனங்களுக்கான கல்விநிறுவனம்(The Institute of Greatly Endangered and Rare Species)
புலிகள்
மேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்
|
3724
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF
|
திருவாசி
|
திருவாசி என்பது கோயிலில் கடவுள் சிலை இருக்கும் பீடத்தின் மேல் அமைந்திருக்கும், வேலைப்பாட்டுடன் கூடிய, உலோகத்தினால் செய்யப்பட்ட அலங்கார அமைப்பு ஆகும். இதனை திருவாசிகை, திருவாட்சி, வாகனப்பிரபை போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு. இது சிலைக்குப் பின்னணியாக இருக்கும்படி அமைந்திருக்கும். வளைவாக அமைந்து காணப்படினும், இவை பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன.
சமய அடிப்படையில் இதற்குப் பல தத்துவங்கள் கூறப்படுகின்றன. உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த நூல் சிவனின் நடராச தத்துவத்தை விளக்கும்போது ஓங்காரமே திருவாசி என்று திருவாசியை ஓங்கார வடிவமாகக் காட்டுகிறது. இதுதவிர திருவாசி பிரபஞ்சத்தைக் குறிக்கிறது என்ற கருத்தும் உண்டு. நடராஜர் சிற்பங்களில் திருவாசி ஏறத்தாழ வட்டவடிவில் காணப்படும். இவ்வட்டத்தின் மையம் ஆடல் புரியும் நிலையில் உள்ள சிலையின் தொப்புளுடன் பொருந்தி வரும்படி அமைந்திருக்கும். வளைவின் வெளிப்புறம் வரிசையாகத் தீச்சுவாலைகள் இருக்கும்.
சில திருவாசிகளில் இருபுறமும் பீடத்திலிருந்து தூண்போன்ற அமைப்புக்களும் அதன் மேல் வளைவான அமைப்பும் காணப்படும். உச்சியில் யாளியின் முகம் அமைந்திருக்க, இரு பக்கங்களிலும் தூண் அமைப்பின் உச்சியிலிருந்து வளைவு தொடங்கும் இடங்களில் பக்கத்துக்கு ஒன்றாக இரு மகர உருவங்கள் இருப்பது உண்டு.
திருவாசிகள் பித்தளை, செப்பு, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம் போன்ற பலவகை உலோகங்களால் ஆக்கப்படுவது உண்டு.
ஆதாரங்கள்
இந்துக் கோயிலில் காணும் பொருட்கள்
சிவாலயங்களில் காணும் பொருள்கள்
|
3725
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
வேங்கடசூரி சுவாமிகள்
|
வேங்கடசூரி சுவாமிகள் (1817-1889) ஒரு பன்மொழிப் புலவரவார்.
வாழ்க்கைக் குறிப்பு
தஞ்சை, அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ள இராமச்சந்திராபுரம் என்ற ஊரில், வைதீக புரோகிதத்தை தொழிலாக கொண்ட நாராயண சர்மா என்பவருக்கும், தாய் அரங்கநாயகி தேவி அம்மையாருக்கும் பிறந்தார்.
வேங்கடசூரி சுவாமியின் இயற்பெயர் சுப்புராமன். தமது 15ம் அகவையில் நரசிம்மமூர்த்தியின் உபாசகராகி கவி பாடும் திறன் பெற்றார். பின் வாலாசாப்பேட்டை வேங்கடரமண பாகவதரின் சீடராகி கர்நாடக சங்கீதம் மற்றும் ஹடயோகம் பயின்றார். சமசுகிருதம், தெலுங்கு, சௌராட்டிர மொழி மற்றும் தமிழ் முதலிய மொழிகளிலும், குலத்தொழிலான வைதீகம் மற்றும் புரோகிதத்திலும் புலமை பெற்றார்.
தமது 21வது அகவையில் இலக்குமிதேவி என்ற பெண்மணியை மணந்து இல்லறம் நடத்தினார். பரமக்குடியில் ஆறு ஆண்டுகள் வசித்த பின்னர் தஞ்சையில் 25 ஆண்டுகள் வசித்ததால் இவரை தஞ்சாவூர் அய்யான் என்று புகழ் பெற்றார்.
பிற்காலத்தில் மதுரை, தெற்குமாசி வீதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தங்கி சௌராஷ்டிர மொழியை மேம்படுத்த பள்ளிக்கூடத்தை நடத்தினார். வேங்கடசூரி சுவாமிகள் இரண்டாம் முறை காசிக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு திரும்புகையில் யமுனை ஆற்றாங்கரையில் தமது 72ம் அகவையில் வைகுண்டப்பதவியை அடைந்தார்.
விருதுகள்
தஞ்சை மராத்திய அவையில் சமசுதான பண்டிதராக விளங்கிய வேங்கடாச்சாரியை தர்க்க வாதத்தில் வென்று தமது புலமையை நிலை நாட்டியதால் ‘வேங்கடசூரி’ என்ற பட்டத்தை பெற்று தஞ்சை மன்னரவைப் புலவரானார். ”சூரி” என்றால் மராத்திய மொழியில் ”வென்றவன்” என்றும், சமசுகிருத மொழியில் ”பெரும் புலவர்” என்று பொருள்படும். மேலும் தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலைய ஆராய்ச்சி உறுப்பினர் தகுதி மன்னரால் வழங்கப்பட்டு பெருமை பெற்றார்.
வாழ்நாள் சாதனைகள்
சௌராட்டிர மொழியில் இசை வடிவில் முழு இராமாயணத்தை பாடி உள்ளார். (இதனை சௌராட்டிர மொழி வளர்ச்சி குழுவினர் 1904ல் தெலுங்கு & தமிழ் மொழியில் வெளியிட்டனர்)
தியாகப்பிரம்மம் தியாகராசஜரின் தெலுங்கு மொழி]]யில் இயற்றிய நவுகா சரித்திரம் எனும் இசை நாடக நூலை சமசுகிருதத்த்ல் மொழி பெயர்த்துள்ளார்.
சௌராட்டிரமொழியை செம்மைப்படுத்தி புதிய பாட நூல்களை வெளியிட்டார்
இதிகாச, புராண உபந்யாசங்களில் தன்னிகரில்லாதவர்.
உசாத்துணைகள்
சௌராட்டிரர் வரலாறு, கே.ஆர்.சேதுராமன், 2008
சௌராட்டிர பிராமணர் சரித்திரம், கே.ஏ.அன்னாசாமி சாத்திரியார், 1914
வெளி இணைப்புகள்
சௌராட்டிரர் சமூக வரலாறு கேட்க
http://sapovadia.wordpress.com/2012/04/03/saurashtra-a-language-region-culture-community
http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=759 History of Saurashtrians of Tamilnadu
சௌராட்டிரர்
சௌராட்டிர அறிஞர்கள்
சௌராட்டிர நபர்கள்
|
3726
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
|
வேங்கடரமண பாகவதர்
|
வேங்கடரமண பாகவதர் (18-2-1781 - 18-12-1874) சௌராட்டிர மொழி, தமிழ், சமஸ்கிருத மொழி மற்றும் தெலுங்கு மொழிகளில் புலமையும், கருநாடக பக்தி இசையில் மிகுந்த தேர்ச்சியும் உடையவராய் விளங்கியவர். தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்போட்டையில், குப்பையா நன்னுசுவாமி பாகதவருக்கு ஐந்தாம் மகனாகப் பிறந்தவர்.இவரும், இவரது மகன் கிருஷ்ணசாமி பாகவதரும் தியாகராஜ சுவாமியின் சீடர்களாக விளங்கியவர்கள்.
வாழ்நாள் சாதனைகள்
இவர் தியாகராஜரின் தலைமை மாணவர் ஆவார். தெலுங்கு மற்றும் சௌராட்டிர மொழியில் பல்வேறு பக்திக் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். தமது அனைத்து தெலுங்கு கீர்த்தனைகளின் இறுதியில் தியாகராஜ என்ற முத்திரையிட்டுக் குரு காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
தியாகராச சுவாமிகள் தெலுங்கு மொழியில் இயற்றிய நௌகா சரிதம் எனும் நூலை, வேங்கடரமண பாகவதவர் சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
தியாகராஜர் மறைவுக்குப் பின்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டைக்கு குடிபெயர்ந்தார். தியாகராஜர் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவத நூல், கையெழுத்து ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீ வேங்கடரமணபாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள் முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகளை பாதுகாத்து வந்தார்.
வேங்கடரமணரின் மறைவிற்குப் பின் அவரிடம் ஏட்டுச் சுவடிகள் மற்றும் அவர் பயன்படுத்திய பூஜைப் பொருட்கள் மதுரை சௌராட்டிர சபையைச் சேர்ந்த வேங்கடரமண மந்திரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் வேங்கடரமணரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் செளராட்டிரர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
வேங்கடரமணரின் கர்நாடக பக்தி இசையை பாராட்டி, அவரின் உருவம் பதித்த அஞ்சல் வில்லையை இந்திய அஞ்சல் துறை 2009-ஆம் ஆண்டில் வெளியிட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
http://www.venkataramanabhagavadar.org/Index.html
http://sangeetasagaram.blogspot.in/2011/10/walajpet-venkataramana-bhagavatar.html
வேங்கடரமண பாகவதரின் நினைவு இல்லம், வாலாஜாப்பேட்டை
வேங்கடரமண பாகவதரின் வலைதளம்
18 ஆம் நூற்றாண்டுக் கருநாடக இசைக் கலைஞர்கள்
கருநாடக இசைக் கலைஞர்கள்
வைணவ அடியார்கள்
1781 பிறப்புகள்
1874 இறப்புகள்
சௌராட்டிரர்
சௌராட்டிர அறிஞர்கள்
இந்து சமயப் பெரியார்கள்
சௌராட்டிர நபர்கள்
|
3731
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87
|
அலைபாயுதே
|
அலைபாயுதே (Alaipayudhey) மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர். இது ஒரு காதல் படம் ஆகும்.
நடிகர்கள்
மாதவன் - கார்த்திக்
சாலினி (நடிகை) - சக்தி செல்வராஜ்
ஜெயசுதா - சரோஜா
சொர்ணமால்யா (நடிகை) - பூரணி செல்வராஜ்
விவேக் - சேது
பிரமீட் நடராஜன் - வரதராஜன்
ரவி பிரகாஷ் (நடிகர்)
வேணு அரவிந்த் - ஆறுமுகம்
K. P. A. C. லலிதா கார்த்திக்கின் அம்மா
சுகுமாரி (நடிகை) - சக்தியின் அத்தை
அழகம்பெருமாள் - நாயர்
ஹரி நாயர்
கார்த்திக் குமார் - சியாம்
அரவிந்த்சாமி as ராம்
குஷ்பு - மீனா
சோபியா ஹகியூ (செப்டம்பர் மாதம் பாடல்)
கதை
கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் (மாதவன்) சக்தியைச் (ஷாலினி) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் புகைவண்டிப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள்.
மேற்கோள்கள்
2000 தமிழ்த் திரைப்படங்கள்
காதல் திரைப்படங்கள்
ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்
மாதவன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
விவேக் நடித்த திரைப்படங்கள்
குஷ்பூ நடித்த திரைப்படங்கள்
அரவிந்த்சாமி நடித்த திரைப்படங்கள்
|
3733
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
|
ஆந்திரப் பிரதேசம்
|
ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின்படி நாட்டின் 8-ஆவது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின்படி இது இந்தியாவின் 10-ஆவது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் விசாகப்பட்டினம் ஆகும். இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான தெலுங்கு இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது.
2 சூன் 2014 நாளன்று ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த ஐதராபாத் நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014-இன்படி ஐதராபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள்வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக அமராவதி என்ற நகரம் உருவாக்கப்பட்டபிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும்.
குசராத்தை அடுத்து ஆந்திரப் பிரதேசம், இந்தியாவின் 2-ஆவது மிக நீளமான கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளது. இது வடமேற்கில் தெலுங்கானா, வடகிழக்கில் சத்தீசுகர் மற்றும் ஒடிசா, மேற்கில் கருநாடகா மற்றும் தெற்கில் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் கிழக்கில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது. மேலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மாவட்டமான யானம் என்ற சிறிய பகுதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி டெல்டாவில் காக்கிநாடா நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
விசயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும்.
புவியமைப்பு
கோதாவரி, கிருட்டிணா ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது.
வரலாறு
1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி தெலுங்கு பேசும் சென்னை மாகாணத்தின் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே ஆகும். தற்போதைய தெலுங்கானா பகுதிகள் ஐதராபாத் அரசாட்சி பகுதியாகவே இருந்தது. இராயலசீமை, கடற்கரை ஆந்திரா சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே 2014 சூன் மாதம் தெலுங்காணா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்டது.
மாவட்டங்கள்
அல்லூரி சீதாராம ராசு
அனகாபள்ளி
அனந்தபூர்
அன்னமய்யா
பாபட்லா
சித்தூர்
கொனசீமா
கிழக்கு கோதாவரி
ஏலூரு
குண்டூர்
காக்கிநாடா
கிருட்டிணா
கர்நூல்
நந்தியால்
என் டி ஆர்
பாலநாடு
பார்வதிபுரம் மண்யம்
பிரகாசம்
சிறீகாகுளம்
நெல்லூர்
சிறீசத்ய சாய்
திருப்பதி
விசாகப்பட்டினம்
விசயநகர
மேற்கு கோதாவரி
கடப்பா
வருவாய் பிரிவுகள்
இந்த 13 மாவட்டங்கள் 50 வருவாய் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 7 வருவாய் பிரிவுகளும், விசயநகர மாவட்டத்தில் 2 மட்டுமே உள்ளன.
மண்டலங்கள்
50 வருவாய் பிரிவு 670 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 66 மண்டலங்கள் உள்ளன. விசயநகர மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 34 மண்டலங்கள் உள்ளன.
நகரங்கள்
ஆந்திரப் பிரதேசத்தில் 16 நகராட்சிகள் மற்றும் 14 மாநகராட்சிகள் உட்பட மொத்தம் 31 நகரங்கள் உள்ளன. விசாகப்பட்டினம் மற்றும் விசயவாடா ஆகிய நகரங்கள் இருபது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஆகும்.
பொருளாதாரம்
உழவு ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாக பழக்கத்திலுள்ள தொழிலாகும். அரிசி, புகையிலை, பருத்தி, மிளகாய், கரும்பு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் தனிகவனம் அளிக்கப்பட்டு வருகிறது. கடப்பா மாவட்டத்தில் உள்ள 2664 கனிம சுரங்கங்கள் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் வளம் பெறுகிறது.
காக்கிநாடா துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் மசூலிப்பட்டினம் துறைமுகங்கள் மாநிலத்தின் வருவாய்க்கு வகை செய்கிறது.
நீர் ஆதாரங்கள்
கோதாவரி ஆறு, கிருட்டிணா ஆறு, சிரீசைலம் அணை, எம். பி. ஆர் அணை, மயிலாவரம் அணை, சோமசீலா அணை மற்றும் போலவரம் திட்டம் மாநிலத்தின் நீர் ஆதாரங்களாக உள்ளது.
மக்கள் தொகையியல்
மே 2014-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநில அரசின் புள்ளி விவரப்படி 1,60,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 4,93,86,799 ஆகும். அதில் ஊர்நாட்டு மக்கள் தொகை 3,47,76,389 (70.4); நகரப்புற மக்கள் தொகை 1,46 ,10,410 (29.6%) ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 50.1% ஆகவும்; பெண்கள் 49.9% ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 308 மக்கள் வீதம் வாழ்கின்றனர். பதினெட்டு வயதிற்குட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 9 52,22,384 (10.6%) ஆகும். மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 67.41% ஆக உள்ளது. அதில் ஆண்களின் படிப்பறிவு 80.9%; பெண்களின் படிப்பறிவு 64.6% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் தொகை 84,45,398 (17.1 %) ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 26,31,145 (5.3%) ஆக உள்ளனர். மாநிலத்தில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 2,29,69,906 ஆகும். இவர்களில் முதன்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை 1,92,31,167 ஆகவும்; திறன் குறைந்த பணியாளர்களின் எண்ணிக்கை 37,38,739 ஆகவும் உள்ளது. பயிரிடுவோர்கள் எண்ணிக்கை 30,70,723 ஆகவும்; வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 85,57,567 ஆகவும் உள்ளது.
கல்வி
ஆரம்பப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 37,45,340; நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 21,01,928 ஆக உள்ளது.
மொழிகள்
ஆந்திரப் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழி தெலுங்கு. சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் தெலுங்கு மொழியை ஒரு பாரம்பரிய மொழியாக அறிவித்துள்ளார்.
மதங்கள்
ஆந்திரத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள், முசுலிம்கள் கணிசமான சிறுபான்மையினர். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலங்களில் இந்துக்கள் (90.87%), முசுலிம்கள் (7.32%) மற்றும் கிரித்துவர் (1.38%) உள்ளனர். புத்த மதத்தினர், சீக்கியர்கள், செயின் மற்றும் அவர்களது மதத்தை நிலைநாட்ட மறுத்துவிட்ட மக்கள் மீதமுள்ள பகுதியை உருவாக்குகின்றனர்.
அரசியல்
இம்மாநிலத்தில் 175 சட்டப் பேரவை தொகுதிகளும் 58 சட்ட மேலவை தொகுதிகளும் உள்ளன. மேலும் 25 மக்களவைத் தொகுதிகளும் 11 மாநிலங்களவை தொகுதிகளும் உள்ளன.
தெலங்கானா மாநில பிரிவினைக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில், செகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று, தற்போதைய முதல்வராக உள்ளார்.
நிர்வாகம்
இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பதின்மூன்று வருவாய் மாவட்டங்களாகவும்; எண்பது வருவாய் கோட்டங்களாகவும், 664 வருவாய் மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பெரும் நகரங்கள்
விசாகப்பட்டினம், விசயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் இம்மாநிலத்தின் பெரும் நகரங்கள் ஆகும்.
வழிபாட்டுத் தலங்கள்
திருப்பதி வெங்கடாசலபதி கோயில்
திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்
சிரீசைலம் மல்லிகார்சுனர் கோயில்
விசயவாடா கனகதுர்கை கோயில்
ராமகிரி வாலீசுவரர் கோயில்
புங்கனூர் சிவன் கோயில்
சிம்மாச்சலம் திரிபுராந்தகேசுவரர் கோயில்
பீமாவரம் சிவன் கோயில்
கலாச்சாரம்
தெலுங்கு ஆந்திரப் பிரதேசத்தின் முதன்மை மொழியும், ஆட்சி மொழியும் ஆகும். கருநாடக இசையில் தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான உகாதி, ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. குச்சிப்புடி ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும்.
ஐதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு திரைப்படத் துறை, இந்தியாவில் மூன்றாவது பெரிய திரைப்படத்துறையாகும்.
ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை.
போக்குவரத்து
தொடருந்து
விசயவாடா மற்றும் விசாகப்பட்டினம் தொடருந்து நிலையங்கள் இருப்புப்பாதை மூலம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
வானூர்தி நிலையங்கள்
விசாகப்பட்டினம், விசயவாடா மற்றும் திருப்பதி வானூர்தி நிலையங்கள், வானூர்தி மூலம் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் இம்மாநிலத்தை இணைக்கிறது.
விளையாட்டு
மட்டைப்பந்து விளையாட்டு மிகவும் பரவலான விளையாட்டு ஆகும். விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA விளையாட்டரங்கம் ஆந்திரப் பிரதேச கிரிக்கெட் அணிக்கு சொந்தமானது. இந்த இடம் தொடர்ந்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்குப் பொருந்தும். ஆந்திராவில் இருந்து குறிப்பிடத்தக்க வீரர்கள், விசயநாகரத்தின் மகராச்சுகுமார், எம். வி. நரசிம்ம ராவ், எம். எசு. கே. பிரசாத், வி.வி.எசு. லட்சுமண், திருமலசீட்டி சுமன், அர்சத் அய்யூப், அம்பதி ராயுடு, வெங்கடாபதி ராசா, அரவிந்த நாயுடு, யலக்க வேணுகோபால் ராவ் ஆகியோராவர். ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் பெண் இந்தியரான கர்ணம் மல்லேசுவரி, ஆந்திராவின் திருகாகுளம் மாவட்டத்திலிருந்து வந்தவர். 19 செப்டம்பர் 2000 அன்று, 69 கிலோ பிரிவில் 240 கிலோ எடை கொண்ட வெண்கலப் பதக்கம் வென்றார்.
பௌத்தத் தொல்லியல் களங்கள்
நாகார்சுனகொண்டா
அமராவதி
உண்டவல்லி
போச்சன்ன கொண்டா
கண்டசாலா
சந்திராவரம்
மேலும் பார்க்க
ஆந்திரப் பிரதேச அரசு
ஆந்திரப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல்
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
16. https://www.makeourmoments.com/tour/munnar-day-tour/
வெளி இணைப்புகள்
வெளி இணைப்புகள்
தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் ஆந்திர ராச்சியம் என்ற தலைப்பிலான கட்டுரை உள்ளது.
ஆந்திரப் பிரதேச அரசு இணைய தளம்
தெலங்கானா பிரிவினைக்குப் பின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வரைபடம்
ஆந்திரப் பிரதேசம்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
|
3778
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81.%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
|
சு. வில்வரத்தினம்
|
சு. வில்வரத்தினம் (1950 - டிசம்பர் 9, 2006) 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்தவர். சு.வி என்ற பெயரால் அறியப்படுபவர்.
வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வில்வரத்தினம், ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு. தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது. மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளிவந்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார்.
இவரது காற்றுவழிக் கிராமம் என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது. இவர் கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும்கூட.
வில்வரத்தினம் இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். அங்குள்ள கல்வித் திணைக்களத்தில் பணியாற்றினார். 2 பிள்ளைகளின் தந்தை ஆவார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வில்வரத்தினம் கொழும்பில் 9 டிசம்பர் 2006 அன்று தனது 56வது வயதில் காலமானார்.
நாட்டுப்பற்றாளர் விருது
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்புகளுக்காக கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
படைப்புகள்
குரல்
நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்
அகங்களும் முகங்களும் - நூலகம் திட்டம்
காற்றுவழிக் கிராமம் - நூலகம் திட்டம்
உயிர்த்தெழும் காலத்திற்காக - நூலகம் திட்டம்
வெளி இணைப்புக்கள்
சு. வில்வரத்தினம் (சோமியின் நினைவுப்பதிவு)
சு. வில்வரத்தினம் (டிசேயின் நினைவுப்பதிவு)
கரைவு (கந்தையா இரமணிதரனின் நினைவுப்பதிவு)
சு. வில்வரத்தினம் குரல் பதிவு
என்பிலிகளுக்கு - சு.வி.யின் கவிதை
என்னைக் கவர்ந்தவர்கள் - 5 (கவிஞ்ர் சு.வில்வரத்தினம்)- (கே.எஸ்.பாலச்சந்திரனின் நினைவுப்பதிவு)
1950 பிறப்புகள்
2006 இறப்புகள்
புங்குடுதீவு நபர்கள்
ஈழத்துக் கவிஞர்கள்
ஈழத்து எழுத்தாளர்கள்
|
3779
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
தொல்காப்பியம்
|
தொல்காப்பியம் () என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும்.
தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.
தொல்காப்பியர் காலம்
தொல்காப்பிய நூலுக்கு சிறப்புப் பாயிரம் இயற்றியவர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியர் உடன் பயின்றவர். இது பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூலுக்கு சமகாலத்து நூல்கள். தொல்காப்பியர் காலத்தில் தமிழில் இருந்த 'முந்துநூல்' (அகத்தியமும்) கண்டிருந்தார். தோற்றம் என்ற தலைப்பில் சான்றுடன் கூடிய தொல்காப்பியர் காலம் இணைக்கப்பட்டுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை பொ.ஊ.மு. 711 என்று பொருத்தியது.
தொல்காப்பியம் – பெயர் விளக்கம்
தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துகள் அறிஞர்களிடையே நிலவி வருகின்றன.தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரு சொல் நீர்மைத்து.பொருளை விளக்கும் போது அதைத் தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.பழமையைத், தொன்மையைக் காத்து இயம்புவது என்று பொருள் பெறும்.தமிழரின் தொன்மையை பழமையைக் காத்து இயம்பும் நூல்.தொன்மை + காப்பியம் (தொன்மைகளை காத்து இயம்புதல்)= தொல்காப்பியம்.(பண்புத்தொகை): மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது "தொல்காப்பியம்" என்று அழைக்கப்படுகின்றது.
தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம்
தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான 'வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் 'தொல்காப்பியம்' என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.காப்பியக்குடியில் ஆசிரியர் தொல்காப்பியர் தோன்றினாலும்,பழமையைக் காத்து இயம்புவதற்காகப் புனைபெயராகத்தான் தமக்குத் "தொல்காப்பியன்" எனப்பெயர் வைத்துக்கொண்டார்.அதனால்தான் சிறப்புப் பாயிரத்தில் 'தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி'எனக் குறிப்பிடுகிறார்.தொல்காப்பியன் எனத் தன் பெயரைத் தோற்றுவித்துக் கொண்டு என்பது இதன் பொருள் ஆகும்.
அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம்.ஐந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும் தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும் பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் கருத்தா இன்றி காரியமில்லை அதனால் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் எனக் கொள்வதே முறைமை.
கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது.
தொல்காப்பியப் பாயிரம் “புலம் தொகுத்தோன் … ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்” என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம்(=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவற்றை விடுத்துத் தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனக் கூறுவோர் வரலாற்றை எண்ணிப்பார்க்க வேண்டும்.
தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர்
இயம்புவது "இயம்" ஆகும். இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது "காப்பியம்". தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது.
தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது.
தோற்றம்
தொல்காப்பியப் பாயிரம் இவரை: "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்' தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைகளங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எழுத்து முதலான களங்களைக் காட்டுவது புலம் ஆகும். ஆகவே தொல்காப்பியர் புலம் தொகுத்தார் ஆனார். தொல்காப்பியர் பற்றி வேறு தனிப்பட்ட தகவல்கள் அதிகம் காணப்படவில்லை. தொல்காப்பிய ஆசிரியர் சமணர் என்று சிலர் குறிப்பிட்டாலும், வேறு சிலர் இது பலரால் பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல் என்றே நம்புகின்றனர்.
தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்களில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள்.
பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் பொ.ஊ.மு. 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இஃது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் பொ.ஊ.மு. 700-ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை பொ.ஊ.மு. 500-இக்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய ச. வையாபுரிப்பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். ஆயினும் மா.இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் மணி மேகலை எழுதப்பட்ட காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்று பல்வேறு சான்றுகளுடன் எசு. வையாபுரி பிள்ளையின் கருத்துகளை மறுத்தும், மா. இராச மாணிக்கனார் தொல்காப்பியர் காலம் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு என்றும் உறுதியாக கூறுகிறார்.
தொல்காப்பியர் காலம்
சங்க காலப் புலவர் மாமூலனாரின் காலம் பற்றிய தவறான கணிப்பே கடைச்சங்க காலம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. மாமூலனார் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பிறகு ஆண்ட மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார்.கள்ளில் ஆத்தி --ரையனார், ஊன்பொதி பசுங்குடையார் மேலும் 3 புலவர்கள் இப்போரினை தம் இலக்கியங்களில் பதிவு செய்து போரில் வென்றவன் கரிகாலனின் தந்தை இளஞ்சேட் செண்ணி என்கின்றனர். இதன் மூலம் திருவள்ளுவர் போன்றோரின் காலம் பொ.ஊ.மு. 5-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனத் தெரிகிறது. இதனால் தொல்காப்பியரின் காலம் பொ.ஊ.மு. 10-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனத் தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. மேலும் சங்க காலப் புலவர் கபிலர், அரசன் இருங்கோவேள் பற்றிக் கூறுகையில் அவனுடைய முன்னோர்கள் 49 தலைமுறையாகத் துவரை (துவாரகை) மாநகரை ஆண்டு வந்ததாகவும் அவர்களில் முன்னோன் ஒருவன் கழாத்தலை புலவரை இழிவு படுத்தியதன் காரணமாகவே இருபெரு மாநகரங்கள் (துவரை, வேட்துவாரகை) அழிவடைந்ததாகவும் கூறுகிறார். மாமூலனார் காலத்தின் மூலம் கபிலர் காலம் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் பொ.ஊ.மு. 280-290 இடைப்பட்ட காலமாகும். ஒரு தலைமுறைக்கு 27 எனக் கொள்ள, 49×27=1323 ஆக 265+1323=1588 பொ.ஊ.மு. 16-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்ட விடயங்களைப் பற்றியும் மேலும் அக்காலத்தில் கழாத்தலையார் என்ற புலவர் வாழ்ந்தது பற்றியும் கபிலர் கூறுகிறார். இதன் மூலம் தொல்காப்பியரின் காலம் பொ.ஊ.மு. 20-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனத் தாராளமாகக் கூறலாம். கபிலர் காலத்திலும் கழாத்தலை என்ற புலவர் வாழந்ததாகவும் அப்புலவரால் பாடப்பட்ட அரசர்களின் பெயர்கள் மூலம் தெரியவருகிறது. வரலாற்றாசிரியர்கள் பொ.ஊ.மு. 1500-ஆம் ஆண்டு வாக்கில் துவாரகை கடலாள் கொள்ளப்பட்டதாகக் கூறுவது கபிலரின் பாடலை 100 சதவீதம் உறுதிபடுத்தும் விதமாக உள்ளது. இதன் மூலம் கபிலரின் காலம் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு என்பதும் நக்கீரர் (பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு-கபிலரை விட ஒரு தலைமுறை இளயவர்) என்பவரின் கூற்றின் மூலம் தொல்காப்பியர் இடைச்சங்கத்தில் (பொ.ஊ.மு. 5770-பொ.ஊ.மு. 2070) பிறந்தவர். கபிலர் பாடல் மூலம் தொல்காப்பியர் காலம் பொ.ஊ.மு. 21-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. அதாவது இடைச்சங்கத்தில் பிறந்தவர் எனத் துள்ளியமாகத் தெரிகிறது.காரணம் நக்கீரர், தொல்காப்பியரை இடைச்சங்கத்தில் பிறந்து வாழ்ந்து இறந்ததாகவே குறிப்பிடுகிறார்.இடைச் சங்கம் பொ.ஊ.மு. 21-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதால் தொல்காப்பியர் பொ.ஊ.மு. 2100-இக்கும் முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.
அமைப்பு
தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது.
எழுத்ததிகாரம்
நூல் மரபு – (நூன்மரபுச் செய்திகள்)
மொழி மரபு – (மொழிமரபுச் செய்திகள்)
பிறப்பியல் – (பிறப்பியல் செய்திகள்)
புணரியல் – (புணரியல் செய்திகள்)
தொகை மரபு – (தொகைமரபுச் செய்திகள்)
உருபியல் (உருபியல் செய்திகள்)
உயிர் மயங்கியல் (உயிர் மயங்கியல் செய்திகள்)
புள்ளி மயங்கியல் (புள்ளிமயங்கியல் செய்திகள்)
குற்றியலுகரப் புணரியல் (குற்றியலுகரப் புணரியல் செய்திகள்)
எழுத்ததிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்
எழுத்ததிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.
முதலாவதாக உள்ள நூன்மரபு என்னும் இயலில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துகளைப் பற்றிய செய்திகள் உள்ளன. எழுத்துகளின் தொகுப்புப்பெயர்கள், எந்த எழுத்தோடு எந்த எழுத்து சேரும் என்பன போன்ற செய்திகள் இதில் சொல்லப்படுகின்றன.
இரண்டாவதாக உள்ள மொழிமரபு என்னும் இயலில் சார்பெழுத்துகளைப் பற்றிய விளக்கமும் சொல் தொடங்கும் எழுத்துகள், சொல்லில் முடியும் எழுத்துகள் பற்றிய செய்திகளும் உள்ளன.
மூன்றாவதாக உள்ள பிறப்பியலில் எழுத்துகளின் ஒலி எவ்வாறு எந்தெந்த உறுப்புகளில் பிறக்கும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன.
நான்காவதாக உள்ள புணரியலில் நின்ற சொல்லின் இறுதி எழுத்தோடு வருகின்ற மொழியின் முதலெழுத்து எவ்வாறு புணரும் என்று விளக்கப்படுகிறது. இயல்பு, திரிபு, சாரியை பெறுதல் முதலானவை சொற்கள் புணரும்போது நிகழும் பாங்கு இதில் கூறப்படுகிறது.
ஐந்தாவதாக உள்ள தொகைமரபு என்னும் இயலில் வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சி முதலானவை விளக்கப்படுகின்றன.
ஆறாவதாக உள்ள உருபியலில் எந்தெந்த எழுத்தின் இறுதியில் எந்தெந்த சாரியைகள் இணைந்து புணரும் என்று விளக்கப்படுகிறது.
ஏழாவதாக உள்ள உயிர்மயங்கியலில், உயிரெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
எட்டாவதாக உள்ள புள்ளிமயங்கியலில் மெய்யெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
ஒன்பதாவதாக உள்ள குற்றியலுகரப் புணரியலில் குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது.
இப்படி எழுத்து, மொழி(word), புணர்மொழி(combination of words) ஆகிய மொழிக்கூறுகள் எழுத்ததிகாரத்தில் விளக்கப்படுகின்றன.
சொல்லதிகாரம்
கிளவியாக்கம்
வேற்றுமை இயல்
வேற்றுமை மயங்கியல்
விளி மரபு
பெயரியல்
வினை இயல்
இடையியல்
உரியியல்
எச்சவியல்
சொல்லதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்
சொல்லதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.
முதலாவது கிளவியாக்கம் என்னும் இயலில் தமிழ்ச் சொற்றொடர் வாக்கியமாக அமையும் பாங்கு கூறப்படுகிறது.
இரண்டாவது வேற்றுமையியலில் வேற்றுமை உருபுகள் இன்னின்ன கருத்துகளைப் புலப்படுத்திக்கொண்டு சொற்றொடராக அமையும் என்பது விளக்கப்படுகிறது.
மூன்றாவது வேற்றுமை மயங்கியலில் 2, 3, 4, 5, 6, 7 வேற்றுமை உருபுகள் உருவில் திரிந்தும் பொருளில் வேறுபட்டும் நிற்கும் இடங்கள் எவை என விளக்கப்படுகிறது.
நான்காவது விளிமரபு என்னும் இயலில் 8-ஆம் வேற்றுமையாக எந்தப் பெயர்ச்சொல் எவ்வாறு மாற்றம் கொள்ளும் என்பது விளக்கப்படுகிறது.
ஐந்தாவது பெயரியலில் பெயர்ச்சொற்கள் தோன்றுமாறும் அவை ஒருமை, பன்மை என்னும் எண்ணைப் புலப்படுத்தும்போதும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் இடத்தைப் புலப்படுத்தும்போதும் எவ்வாறு அமையும் என்பது விளக்கப்படுகிறது.
ஆறாவது வினையியலில் வினைச்சொற்கள் காலம் காட்டும் பாங்கும் ஐம்பால் மூவிடங்களில் ஈறுகள் கொள்ளும் பாங்கும் எச்சங்களாகத் திரியும் பாங்கும் விளக்கப்படுகின்றன.
ஏழாவது இடையியலில் பெயரையும் வினையையும் கூட்டுவிக்க இடையில் வந்தமையும் இடைச்சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
எட்டாவது உரியியலில் பெயருக்கும், வினைக்கும் உரிமை பூண்ட உரிச்சொறகள் எடுத்துக் காட்டப்பட்டு அவை உணர்த்தும் பொருள்கள் இவை என்பதும் சொல்லப்படுகிறது.
ஒன்பதாவது எச்சவியலில்
இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாடுகளும்,
பெயரெச்சம், வினையெச்சம், சொல்லெச்சம் பிரிநிலையெச்சம், எதிர்மறை எச்சம், ஒழியிசை எச்சம், உம்மை எச்சம், என-என்னும் எச்சம் முதலானவை பற்றிய விளக்கங்களும்,
ஈ, தா, கொடு ஆகிய சொற்களின் சிறப்புப்பொருள்களும்,
இடக்கரடக்கல், குறைசொற்கிளவி பற்றிய விளக்கங்களும்,
காலமயக்கம், ஒருமை-பன்மை மயக்கம் பற்றிய பல்வகை மொழிக்கூறுகளும்
விளக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு இடையே நிரல்நிறை, சுண்ணம், அடிமறி-மாற்று, மொழிமாற்று ஆகிய செய்யுளின் பொருள்கோள் வகை புகுந்துள்ளது விந்தையே.
மொத்தத்தில் சொல்லதிகாரம் மொழியின் வாக்கிய அமைப்பைக் (Syntax) கூறுகிறது எனலாம்.
பொருளதிகாரம்
அகத்திணையியல்
புறத்திணையியல்
களவியல்
கற்பியல்
பொருளியல்
மெய்ப்பாட்டியல்
உவமவியல்
செய்யுளியல்
மரபியல்
பொருளதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள்
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று 3 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன. பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. வாழ்வியல் நூல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதையும் விளக்குகிறது.
பொருளதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன.
முதலாவதாக உள்ள அகத்திணையியல், புறத்திணையியல் ஆகியவை முறையே அகத்திணைகள் ஏழையும், புறத்திணைகள் ஏழையும் விளக்குகின்றன.
மூன்றாவதாக உள்ள களவியலும், நான்காவதாக உள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்பு விளக்கங்கள்.
ஐந்தாவதாக உள்ள பொருளியல் அகப்பாடல்களுக்குப் பொருள் காணும் முறைமையை விளக்குகிறது.
ஆறாவதாக உள்ள மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும் புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. பெய்ப்பாடு என்பது உள்ளத்து உணர்வுகள் உடலில்(மெய்யில்) வெளிப்படுவது.
ஏழாவதாக உள்ள உவம இயல் வாய்மொழியில் பொருளை வெளிப்படுத்தும் பாங்கை விளக்குகிறது.
எட்டாவதாக உள்ள செய்யுளியல் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பண்டைய பாடல்களும் நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பதை விளக்குகிறது.
ஒன்பதாவதாக உள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடும் அவற்றின் இளமை, ஆண், பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்களும் விளக்கப்படுகின்றன. அத்துடன் ஓரறிவு உயிர்களை மரம் என்றும், புல் என்றும் பாகுபடுத்தி அவற்றின் இலை, காய், பழம், முதலானவற்றிற்கு வழங்கப்படும் பெயர்களும் சுட்டப்படுகின்றன. நிலம், தீ, நீர், வளி, விசும்பு என்னும் வரிசையில் ஐந்து பூதப்பொருள்களும் சுட்டப்படுகின்றன.
உயிரினங்களின் இளமை, ஆண், பெண் ஆகியவற்றை விளக்கிய பின்னர், ஓரறிவு உயிரினங்களை விளக்கியிருப்பதற்கு முன்னர், இடைப்பகுதியில், மக்களை அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்னும் பாகுபாடு, நிரல் மாறி உள்ளதால் இந்தப் பாகுபாட்டைப் பிற்கால இடைச்செருகல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
மேலும் மரபியலுக்குப் புறனடையாக அமைந்துள்ள நூற்பாக்களுக்குப் பின்னர் ஓர் இணைப்பைப் போல் நூல், உரை, உத்தி பற்றிய பாகுபாடுகள் பிற்காலத்து 13-ஆம் நூற்றாண்டு நன்னூலார் பாங்கில் அமைந்துள்ளன.
மொத்தத்தில் பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலையும் தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்குகிறது எனலாம்.
இலக்கணம் - சொல்விளக்கம்
தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம்.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள்
தொல்காப்பிய ஆறு பண்டை உரையாசிரியர்கள்
இளம்பூரணர்-எழுத்து, சொல், பொருளதிகாரத்திற்கு
பேராசிரியர்-
சேனாவரையர்- சொல்லதிகாரத்திற்கு
நச்சினார்க்கினியர்
தெய்வச்சிலையார்
கல்லாடனார்
தொல்காப்பியம் - ஆங்கில மொழிபெயர்ப்பு
சுப்பிரமணிய சாத்திரி, இலக்குவனார், முருகன் ஆகியோர் மொழிபெயர்ப்பின் வழி செய்யப்பட்டுள்ளது.
தொல்காப்பியம் சிறப்புப்பற்றிய பேராசிரியர்களின் கருத்து
1. தொல்காப்பியம் தமிழர்களின் உயிர் நூல் எனக் கூறுவார் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார்.
செய்தித் தொகுப்புக் கட்டுரைகள்
அகத்திணையில் உரையாடுவோர் (அகத்திணை மாந்தர்) (அகத்திணைப் பாத்திரங்கள்)
அகத்திணை வாயில்கள் (அகத்திணைத் தூதர்கள்)
தொல்காப்பியத்தில் விலங்கினம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தொல்காப்பியம்.pdf
தொல்காப்பியம் பகுதிகள்
தொல்காப்பியரின் இலக்கிய கோட்பாடு - ஆய்வுக் கட்டுரை (1996)
தொல்காப்பியத்தின் சமகால முக்கியத்துவம்
தொல்காப்பியம் இணைய வகுப்பு
தமிழ் இலக்கண நூல்கள்
|
3783
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81
|
நோபல் பரிசு
|
நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.
பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.
வரலாறு
ஆல்ஃபிரட் நோபல் ( 1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும். இவரது வாழ்நாளில் வேதியாளராயும் பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார். 1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார். அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்-கை இவர்தான் கண்டுபிடித்தார். இதுவே பிரித்தானியத் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்-டுக்கும் முன்னோடியாகும். அதைச் சார்ந்து ஒரு பதிப்புரிமை வழக்கும் நோபலால் தொடரப்பட்டிருந்தது. நோபல் தன் வாழ்நாளில் மிகப்பெருமளவில் செல்வம் சேர்த்தார். அவரது வருமானத்தில் பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால் கிடைத்தது, அவற்றுள் முக்கியமானது டைனமைட் ஆகும்..
1888-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார். ஆனால் அப்போது இறந்தவர் ஆல்ஃபிரடின் சகோதரரான லுட்விக் ஆவார். ஆனால் அச்செய்தி நோபலை துணுக்குறச் செய்தது, தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு ஆளானார். இதுவே அவரை தன்னுடைய உயிலை மாற்றி எழுதச் செய்தது.. 63 வயதான போது திசம்பர் 10,1895 அன்று இத்தாலியின் சான் ரெமோ மாளிகையில் ஆல்ஃபிரட் நோபல் காலமானார்.
அனைவரும் பெருத்த வியப்புக்கு உள்ளாகும் வகையில் நோபலின் கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி 'மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு' பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். நோபல் தன் வாழ்நாளில் பல உயில்களை எழுதியிருந்தார். அவரது கடைசி உயில் நவம்பர் 27, 1895 அன்று பாரிசிலிருந்த சுவீடன்-நார்வே மன்றத்தில் எழுதப்பட்டு அவரால் கையொப்பமிடப்பட்டிருந்தது. தனது சொத்தில் 94%-தினை, 31 மில்லியன் சுவீடன் குரோனார்(2008 மதிப்பின்படி 150 மில்லியன் யூரோ, 186 அமெரிக்க டாலர்கள்), ஐந்து நோபல் பரிசுகளை வழங்குவதற்காக எழுதி வைத்தார்.. அவரது உயிலின் மீதிருந்த ஐயங்களால் ஏப்ரல் 26, 1897 அன்றுதான் நார்வேயின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. நோபலின் உயிலை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களால், ராக்னார் சோல்மான் மற்றும் ருடோல்ஃப் லியெக்விஸ்ட், அவரது சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை ஒழுங்குபடுத்த/முறைப்படுத்தவும் "நோபல் அறக்கட்டளை" அமைக்கப்பெற்றது.
நோபலின் குறிப்புகளின்படி, அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு அமைக்கப்பெற்றது, அதன் உறுப்பினர்கள் உயில் அங்கீகரிக்கப்பட்ட சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர், ஏனைய பரிசுகளை வழங்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை கரோலின்சுகா நிறுவனம் (சூன் 7), சுவீடன் சங்கம் (சூன் 9), ராஜாங்க சுவீடன் அறிவியற் கழகம் (சூன் 11). எவ்வாறு பரிசுகள் வழங்கப்படவேண்டுமென்ற விதிமுறைகள் நோபல் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்டபின், மன்னர் ஆஸ்கர் II -வினால் 1900-ல் பிரகடனப்படுத்தப்பட்டன. 1905-ஆம் ஆண்டு நார்வேயும் சுவீடனும் பிரிந்தன. அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசை அளிப்பதன் பொறுப்பு நார்வேயின் வசமும் மற்ற பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடனிலிருக்கும் அமைப்புகளின் வசமும் உள்ளது.
நோபல் அறக்கட்டளை
நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் கவனிக்க சூன் 29, 1900 அன்று "நோபல் அறக்கட்டளை" ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது. நோபெலின் உயிலின்படி, அறக்கட்டளையின் முதற்கடமை நோபெல் விட்டுச்சென்ற சொத்தினை பாதுகாப்பதாகும். சகோதரர்கள் ராபர்ட் மற்றும் லுட்விக் நோபெல் அசர்பெய்ஜானிலிருந்த எண்ணெய் நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்திருந்தனர். சுவீடன் நாட்டு வரலாற்றாசிரியரான இ. பார்கென்கிரன், நோபெல் குடும்ப வரலாற்றுத் தொகுப்புகளை நேரில் பார்வையிட்டவர், அவரின் கூற்றுப்படி பாகு-விலிருந்து நோபெலின் முதலீடுகளை திரும்பப் பெற்றதே பரிசுகளை வழங்க ஆரம்பத்தில் மிக்க உறுதுணையாயிருந்தது. நோபெல் அறக்கட்டளையின் மற்றொரு பணி, பரிசுகளை உலக அளவில் கொண்டு சேர்ப்பதும் பரிசு வழங்கல் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதுமாகும். அறக்கட்டளை பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த பங்கும் எடுப்பதில்லை. பல வகைகளில் இந்த அறக்கட்டளை ஒரு முதலீட்டுக் குழுமமாகவே செயல்படுகிறது, நோபெலின் சொத்தை முதலீடாகக் கொண்டு பரிசு வழங்கவும் அதன் நிர்வாகத்துக்குமான நிதியை அது உற்பத்தி செய்கிறது. 1946-லிருந்து சுவீடனில் அனைத்து வித வரிகளிலிருந்தும் நோபெல் அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 1953-லிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் அனைத்து வித வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. 1980-களிலிருந்து இதன் முதலீடுகள் பெரும் லாபமீட்டிவருகின்றன. திசம்பர் 31, 2007-படி நோபெல் அறக்கட்டளையின் சொத்து மதிப்பு 3.628 பில்லியன் சுவீடன் குரோனார்கள் (560 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.
விதிகளின்படி, அறக்கட்டளையானது ஸ்டாக்ஹோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும். மேலும், சுவீடன் அல்லது நார்வே நாட்டின் குடிமக்கள் ஐவர் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருப்பர். அறக்கட்டளையின் தலைவர், மன்னருக்கான ஆலோசனைக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்ற நான்கு உறுப்பினர்களும் நோபல் பரிசுகளுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் அமைப்புகளின் அறங்காவலர்களால் தேர்ந்தெடுக்ககப்படுவர். அறக்கட்டளை உறுப்பினர்களிடையே அதன் செயற்குழு இயக்குனரும், ஒரு துணை இயக்குனர் மன்னருக்கான ஆலோசனைக் குழுவாலும், மேலும் இரு இணை இயக்குனர்கள் அமைப்புகளின் அறங்காவலர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர். எனினும், 1995-லிருந்து அனைத்து உறுப்பினர்களும் நோபல் பரிசு அமைப்புகளின் அறங்காவலர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இயக்குனர் மற்றும் துணை இயக்குனரும் அறக்கட்டளை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் தவிர்த்து, நோபல் அறக்கட்டளையானது அனைத்து பரிசு வழங்கும் அமைப்புகள்(சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகம், கரோலின்சுகா நிறுவனம், சுவீடன் கழகம், நார்வே நோபெல் கழகம்), அவற்றின் அறங்காவலர்கள் மற்றும் தணிக்கையாளர்களை உள்ளடக்கியது.
முதல்முறை வழங்கப்பட்ட பரிசுகள்
நோபல் அறக்கட்டளை நிறுவப்பட்டு அதன் விதிமுறைகளும் வகுக்கப்பட்ட பின்னர், நோபல் கழகங்கள் பரிசுகளுக்கான முதல் முறை வழங்கப்படப்போகும் முன்மொழிவுகளைத் தயார் செய்தன. அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பட்டியல்கள் பரிசு வழங்கும் கழகங்களுக்கு அனுப்பப்பட்டன. பரிசுகளின் நம்பகத்தன்மையைக் கூட்டும் வகையில், நார்வே நோபல் கழகம் புகழ்பெற்ற யார்கன் லொவ்லான்ட், யார்ன்ஸ்ட்யெர்ன் யார்ன்சன் மற்றும் யொகானசு ஸ்டீன் ஆகியோரை பரிசு வழங்கும் குழுவில் நார்வே நோபல் கழகம் நியமித்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ந்துவந்த அமைதி இயக்கங்களிலிருந்த புகழ்பெற்ற இருவருக்கு பரிசு வழங்குவதற்கு நோபல் கழகம் முடிவு செய்தது: ஃபிரடெரிக் பாசி (உலக நாடுகளின் கூட்டமைப்பின் துணை நிறுவனர்) மற்றும் யென்றி டூனான்ட் (உலகளாவிய செஞ்சிலுவைக் கழக நிறுவனர்)..
இயற்பியலில் நோபல் பரிசுக்கு தகுதியுடையவர்களாக நோபல் கழகம் இருவரைத் தேர்ந்தெடுத்தது: எக்ஸ்- கதிர்களைக் கண்டுபிடித்த வில்யெம் கொன்றாடு ரான்ட்ஜன் மற்றும் கேதோடு கதிர்களைக் கண்டறிந்தவரான பிலிப் லெனார்டு. சுவீடன் அறிவியற் கழகம் ரான்ட்ஜனை பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுத்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் பல வேதியியலாளர்கள் முக்கியமான கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் செய்திருந்தனர். ஆகையால் பரிசு வழங்கப்பட வேண்டும் எனும்படியான வகையில் தகுதிப்பட்டியலை தயாரிக்கவே பரிசு வழங்கும் கழகம் தள்ளப்பட்டது. இத்துறையில் 20 முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. அவற்றுள் 11 யாகோபசு வான் கா-வுக்கானவை. முடிவில் யாகோபசு வான் கா-வுக்கு வேதியியல்-வெப்ப இயக்கவியலில் அவரின் பங்களிப்புக்கு நோபல் பரிசு தரப்பட்டது..
முதல் நோபல் இலக்கியப்பரிசுக்கு சல்லி புருதோமை, சுவீடன் கழகம் தேர்ந்தெடுத்தது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 42 எழுத்தாளர்கள், கவிஞர்கள் இதனை எதிர்த்துப் போராடி தமது அதிருப்தியைத் தெரிவித்தனர், அவர்கள் லியோ டால்ஸ்டாய்தான் வெல்லுவார், அவரே பரிசுக்கு மிகச் சரியானவர் என எண்ணினர். சிலர், பர்டன் பெல்டுமான் உட்பட, சல்லி புருதோம் ஒரு சாதாரண கவிதான் என்ற எண்ணங்கொண்டிருந்தனர். பர்டன் பெல்டுமான், பரிசு வழங்கும் கழகத்தினர் விக்டோரிய இலக்கிய ஆவலர்கள் போலும், ஆதலால் தான் விக்டோரிய கவிக்கு பரிசு கொடுத்திருக்கின்றனர், என்று குற்றஞ்சாட்டினார். மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசு யெர்மானிய உடலியங்கியல் மற்றும் நுண்ணியிரியியலாளரான எரிக் வான் பெரிங்-குக்கு வழங்கப்பட்டது. 1890-களில் எரிக் வான் பெரிங் டிப்தீரியாவுக்கான நஞ்செதிரியைக் கண்டறிந்தார், அதுநாள் வரையிலும் டிப்தீரியாவால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து கொண்டிருந்தனர்.
இரண்டாம் உலகப்போர்
1938 மற்றும் 1939-ல் அடால்ஃப் ஹிட்லர்-இன் மூன்றாம் செல்வம், நோபல் பரிசு வென்ற மூவரை (ரிச்சர்டு குன், அடால்ஃப் பிரைட்ரிச் யொகான் பியூட்டெனான்ட் மற்றும் யெர்கார்டு டொமாக்) பரிசினைப் பெற்றுக்கொள்ள விடவில்லை.. ஆனால், ஒவ்வொருவரும் பின்னர் அவர்களது பட்டயத்தையும் பரிசினையும் பெற்றுக்கொண்டனர். சுவீடன் இரண்டாம் உலகப் போரின்போது நடுவுநிலைமையை வகித்தாலும் நோபல் பரிசுகள் இடைவெளிவிட்டு விட்டு கொடுக்கப்பட்டன. 1939-ல் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் தரப்படவில்லை. 1940-42 காலகட்டத்தில், நார்வே யெர்மனியால் கைப்பற்றப்பட்டிருந்தது, எந்த துறையிலும் பரிசு வழங்கப்படவில்லை. அதற்கடுத்த ஆண்டு அமைதி மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளைத் தவிர ஏனையவை தரப்பட்டன.
நார்வே கைப்பற்றப்பட்ட பின்னர் மூன்று நோபெல் அறக்கட்டளை உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினர். ஆசுலோவிலிருந்த நோபல் கழக மாளிகை சுவீடன் நாட்டு சொத்து என்று நோபல் கழகம் அறிக்கை விட்டதன் காரணத்தால் அங்கிருந்த மற்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் நாசிக்களின் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பர். ஆதலால் அக்கழக மாளிகை யெர்மானிய ராணுவத்திடமிருந்து தப்ப ஒரு புகலிடமாக இருந்தது, ஏனெனில் யெர்மனியுடன் சுவீடன் போரில் ஈடுபடவில்லை. அங்கிருந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் நோபெல் கழகத்தின் வேலைகளை தொடர்ந்து கவனித்து வந்தாலும் பரிசுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 1944-ல் நோபல் அறக்கட்டளை, வெளிநாட்டுக்குத் தப்பிய மூன்று உறுப்பினர்களும் சேர்த்து, முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன, அமைதிக்கான நோபல் பரிசு எப்போதும் போல இனி வழங்கப்படுமென அறிவித்தனர்.
பொருளாதார அறிவியலுக்கான பரிசு
1968-ஆம் ஆண்டு சுவீடன் நடுவண் வங்கியானது தனது 300-வது வருட கொண்டாட்டத்தின்போது, ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து நோபலின் பெயரில் ஒரு பரிசினை ஏற்படுத்த வைத்தது. அதற்கடுத்த வருடம் நோபல் நினைவு பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டது. பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகத்தின் பொறுப்பில் விடப்பட்டது. முதல் பொருளாதாரத்துக்கான பரிசினைப் பெற்றவர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் ஃபிரிச் ஆவர். அவர்கள் "பொருளாதார செயற்பாடுகளுக்கான இயங்கு படிமங்களை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயற்படுத்தியும் உள்ளனர்" என்பது நோபல் குழுவின் குறிப்பு. ஒரு நோபெல் பரிசாக இல்லாவிட்டாலும் இது ஏனைய நோபெல் பரிசுகளோடே அடையாளப்படுத்தப்படுகிறது. பரிசுக்குரியவர்களும் மற்ற நோபெல் பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்படும்போதே அறிவிக்கப்படுகிறார்கள். பொருளாதார அறிவியலின் பரிசு சுவீடனின் நோபல் பரிசு வழங்கும் விழாவிலேயே வழங்கப்படுகிறது. இந்த பரிசினை சேர்த்த பின்னர், நோபல் அறக்கட்டளைக் குழு கூடி விவாதித்து இனி ஏதும் புதிய பரிசுகளை வழங்குவதில்லையென முடிவெடுத்தது.
விருது வழங்கும் முறை
விருது வழங்கும் முறை அனைத்து நோபல் பரிசுகளுக்கும் ஒத்ததாக உள்ளது; முக்கிய வேறுபாடு என்னவென்றால் யார் அவர்களை ஒவ்வொருவராக பரிந்துரை செய்வது என்பதாகும்.
பரிந்துரைகள்
3000 தனிநபர்களுக்கு பற்றிய பரிந்துரையை வடிவங்கள் நோபல் கமிட்டி மூலம் அனுப்பப்படுகின்றன, பொதுவாக செப்டம்பர் மாதம் பரிசுகள் வழங்கப்படுவதற்கு ஒரு ஆண்டின் முன்னதாகவே அனுப்பப்படும். அமைதிக்கான நோபல் பரிசுக்கான விசாரணை, அரசாங்கங்கள், சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி தலைவர்கள், முன்னாள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் நார்வே நோபல் கமிட்டியின் தற்போதைய அல்லது முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படுகின்றன. பரிந்துரையை வடிவங்கள் திரும்பி வருவதற்கான காலக்கெடு விருது ஆண்டின் ஜனவரி 31 ஆக உள்ளது. நோபல் பரிசு குழு, இந்த வடிவங்கள் மற்றும் கூடுதல் பெயர்களில் இருந்து சுமார் 300 திறன் பெற்றவர்களை பரிந்துரைக்கும்.
தேர்வு
நோபல் பரிசு குழு, பின்னர் தொடர்புடைய துறைகளில் நிபுணர்களின் ஆலோசனை பிரதிபலிக்கும் ஒரு அறிக்கை உருவாக்குகிறது. இது, ஆரம்ப வேட்பாளர்கள் பட்டியலை சேர்த்து, பரிசு வழங்கும் நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்படும். இது, ஒரு பெரும்பான்மை வாக்குகளை ஒவ்வொரு துறையில் பரிசு பெற்றவர்களின் தேர்வைச் சந்திக்கின்றது. அதிகபட்சமாக மூன்று பரிசு பெற்றவர்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு படைப்புகள் உடையவர்கள் ஒவ்வொரு விருதுக்கான தேர்வாக இருக்கலாம். நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடிய அமைதி பரிசு தவிர, விருதுகளை தனி நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லையெனில், அதற்கான பணத்தை அறிவியல் சார்ந்த பரிசுகளுக்கு இடையே பிரித்து தரப்படும். இதுபோல இதுவரை 19 முறை நடந்துள்ளது.
விருது வழங்கும் விழா
வருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது வழக்கம். அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும். ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நோர்வேயில் அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியும், இதனையொட்டி நடைபெறும் விழாக்களும், சமீப காலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன.
நோபல் பரிசும் தமிழரும்
நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆவர்.
இவற்றையும் பார்க்கவும்
நோபல் பரிசு சர்ச்சைகள்
நோபெல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்
அமைதிக்கான நோபெல் பரிசு
இயற்பியல் நோபல் பரிசு
பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு
விக்கிமுலம்:இயற்பியலுக்கான நோபெல் பரிசு விரிவுரைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
நோபெல் மின்-அருங்காட்சியகம் — அதிகாரப்பூர்வ தளம்
The Nobel Committees of the Royal Swedish Academy of Sciences
The Nobel Committee of the Karolinska Institute
The Swedish Academy
The Norwegian Nobel Committee
The Nobel Prize Internet Archive — an unofficial site
நோபெல் பரிசு பெற்றவர்கள்-கால வரிசைப்படி
The Nobel Prize
Countries Ranked by Population to Nobel Prize Ratio
Nobel prizewinner dies before announcement
நோபல் பரிசு வரலாறு - காணொளி
நோபெல் பரிசு
பரிசுகளும் விருதுகளும்
|
3786
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88
|
பல்லவர் காலக் கட்டடக்கலை
|
தென்னிந்தியக் கட்டிடக்கலையில் ஒரு திருப்புமுனையாக அமைந்து அதன் வளர்ச்சியில் ஆகக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது பல்லவர் காலமே எனில் அது மிகையல்ல. இப்பகுதியில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பித்து வளர்ச்சியடைந்த திராவிடக் கட்டிடக்கலையின் ஆரம்பம் இந்தக் காலமே.
பின்னணி
பல்லவ வம்சத்தினர் தமிழகத்தின் வடபகுதியில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சியிலிருந்து வந்தாலும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரையான 3 நூற்றாண்டுக் காலமே காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஒரு வலுவுள்ள அரசை நிறுவியிருந்தனர். இவர்கள் தமிழர் அல்ல என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படினும், இவர்கள் பூர்வீகம் பற்றியோ, தமிழ் நாட்டுக்கு இவர்கள் வந்து சேர்ந்த விதம் பற்றியோ சரியான தகவல்கள் இல்லை. பல்லவர்கள் காலத்தை முற்காலப் பல்லவர் காலம், இடைக் காலப் பல்லவர் காலம், பிற்காலப் பல்லவர் காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது உண்டு. கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மகேந்திரவர்மனின் ஆட்சியுடன் பிற்காலப் பல்லவர் காலம் ஆரம்பமானது. பல்லவர்களின் பொற்காலத்தின் ஆரம்பமும் அதுவே.
பிற்காலப் பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் உச்ச நிலையடைந்தன. மகேந்திர பல்லவனுடன் துவங்கிய பிற்காலப் பல்லவ மன்னர் வரிசையிலே, மாமல்லன் எனப்பட்ட முதலாம் நரசிம்மன், இராஜசிம்மன் எனப்பட்ட இரண்டாம் நரசிம்மன், நந்திவர்மன் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர்.
பல்லவர் கட்டிடக்கலையின் பல்வேறு கட்டங்கள்
பல்லவர் கட்டிடக்கலையை இரண்டு கட்டங்களாகப் பிரிப்பதுண்டு. முதல் கட்டம் சுமார் கி.பி. 610 தொடக்கம் கி.பி. 690 வரையான காலமாகும். இக்கட்டத்தில் அமைக்கப்பட்டவை அனைத்துமே குடைவரை கோயில்கள் ஆகும். இரண்டாம் கட்டமான கி.பி. 690 இலிருந்து கி.பி. 900 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டவை அனைத்தும் கட்டுமானக் (Structural) கட்டிடங்களாகும்.
இவற்றுள் முதல் கட்டத்தில் கட்டப்பட்டவை மகேந்திரன் கட்டிடங்கள், மாமல்லன் கட்டிடங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பிரிவில் தூண்கள் அமைந்த மண்டபங்கள் மட்டுமே அடங்குகின்றன. இரண்டாம் பிரிவில் மண்டபங்களுடன் இரதங்கள் எனப்படும் ஒற்றைக்கல் கோயில்களும் அடக்கம்.
இரண்டாம் கட்டமும், நரசிம்மன் கட்டிடங்கள், நந்திவர்மன் கட்டிடங்கள் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இவ்விரண்டிலும் அடங்குபவை கட்டுமானக் கோயில்களாகும்.
தமிழ் நாட்டுக் கட்டிடக்கலை வளர்ச்சியில் பல்லவர்களின் பங்களிப்பு
பழங்காலத்தில் தமிழ் நாட்டில் கட்டிடங்கள் அழியக்கூடிய கட்டிடப்பொருட்களான மரம், சுதை மற்றும் செங்கல்களினால் அமைக்கப்பட்டதாகப் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. வடக்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் அசோகப் பேரரசன் காலம் முதலும் பின்னர் ஆந்திரப் பகுதிகளிலும் பயன்பாட்டிலிருந்து வந்த பெரிய பாறைகளைக் குடைந்து குடைவரைகளை அமைக்கும் முறை தமிழ் நாட்டில் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதற்குப் பல பண்பாட்டு, பொருளாதார மற்றும் தொழில் நுட்பக் காரணிகளை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். ஆறாம் நூற்றாண்டளவில் தென் தமிழ் நாட்டில் பாண்டியர்களினால் குடைவரைகள் அறிமுகப் படுத்தப்பட்டதாகக் கருதப்படினும், தமிழ் நாட்டில், தேவையான சூழலும், வளங்களும், அரசியல் ஆதரவும் அளித்து இதன் வளர்ச்சிக்குப் பெருமளவு ஊக்கம் கொடுத்த பெருமை பல்லவர்களையே சாரும்.
தமிழ் நாட்டுக்கு வடக்கே ஏற்கனவே முகம் காட்டத் தொடங்கியிருந்த திராவிடக் கட்டிடக்கலை என இன்று குறிக்கப்படும் புதிய தென்னிந்தியக் கட்டிடக் கலைப் பாணிக்குத் தமிழ் நாட்டில் உரமளித்து, இந்தியாவின் முக்கியமான கட்டிடக் கலைப் பாணிகளில் ஒன்றாக வளர்வதற்கு அடித்தளமிட்டதும் பல்லவர் காலமேயாகும்.
பல்லவர் கட்டிடக்கலையின் சிறப்பம்சங்கள்
பல்லவர்களால் கட்டப்பட்ட மாமல்லபுர மரபுக்கோயில்கள், யுனெசுக்கோ அமைப்பால் உலக பாரம்பரிய களமாக அறிவித்துள்ளதை அடுத்து பல்லவர் கட்டிடக்கலை சிறப்பினை அறியலாம்.
முக்கியமான பல்லவர் கட்டிடங்கள்
குடைவரைகள்
பல்லவர்கள் அமைத்த குடைவரைகள் தமிழ் நாட்டில், மண்டகப்பட்டு, பல்லாவரம், மாமண்டூர், குரங்கணில் முட்டம், வல்லம், மகேந்திரவாடி, தளவானூர், திருச்சிராப்பள்ளி, சீயமங்கலம், விளாப்பாக்கம், அரகண்டநல்லூர், திருக்கழுக்குன்றம், சிங்கப்பெருமாள் கோயில், சிங்கவரம், மேலச்சேரி, சாழுவன் குப்பம், கீழ்மாவிலங்கை, மாமல்லபுரம், ஆவூர், திரைக்கோயில், புதூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
கற்றளிகள் அல்லது ஒற்றைக்கல் கோயில்கள்
பஞ்சபாண்டவர் ரதங்கள் - மாமல்லபுரம்
கட்டுமானக் கோயில்கள்
கடற்கரைக் கோயில்கள், மாமல்லபுரம்
கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்
வைகுந்தப்பெருமாள் கோயில், காஞ்சிபுரம்
இலங்கை கட்டிடக்கலையில் பல்லவர்களின் தாக்கம்
தம்புள்ளையில் அமைந்துள்ள நாலந்த சிலை மண்டபம் இலங்கை கட்டிடக்கலையில் பல்லவ கட்டிடக்கலையை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
திராவிடக் கட்டிடக்கலை
சோழர் காலக் கட்டிடக்கலை
பாண்டியர் காலக் கட்டிடக்கலை
விஜயநகரக் கட்டிடக்கலை
நாயக்கர் காலக் கட்டிடக்கலை
வெளியிணைப்புகள்
கட்டிடக்கலை வரலாறு
திராவிடக் கட்டிடக்கலை
இந்துக் கோயில் கட்டிடக்கலை
|
3787
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF
|
திருநெல்வேலி
|
திருநெல்வேலி அல்லது நெல்லை (, Tirunelveli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர் அல்வாவிற்கு பெயர் பெற்றது.
திருநெல்வேலி மாநகரம், தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
பெயர் விளக்கம்
16 ஆம் நூற்றாண்டு நூல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு 'வேணுவனம்' என்று பெயர் சூட்டிப்படுகிறது. 'வேணு' என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர், மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால், இந்த ஊரை 'நெல்வேலி' எனப் பெயரிட்டு வழங்கியிருக்கிறார்கள். இது தவறானது
அந்தணர் ஒருவர் நெல்லையப்பர் சுவாமிக்கு சமைத்து படைப்பதற்காக நெல்லை வெய்யிலில் காய வைத்து விட்டு சென்றிருக்க மழை பொழிய ஆரம்பித்து விட்டது. பயந்தோடி வேகமாக வந்தவர் வியந்து போனார். இறைவன் அருளால் நெல்லைச் சுற்றி மழை பொழியாமல் வேலியிட்டார் போல காணப்பட்டது. இவ்வாறு இறைவன் நெல்லுக்கு வேலியிட்டதால் திரு என்னும் அடைமொழியுடன் திருநெல்வேலி ஆனது.
இந்த விளக்கத்தை நெல்லையப்பர் சுவாமி கோவிலிலும் காணலாம்.
பெயர்க் காரணம்
முன்னொரு காலத்தில் தீவிர சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். தமது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டி ஒவ்வோர் ஊரிலும் அமைந்த சிவனை வழிபட்டு வந்தார்.
சிவன் அருளால் வேதபட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தன. வேணுவனம் (திருநெல்வேலி) வந்த வேதபட்டர் சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரைச் சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்குச் சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லைக் காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.
அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காகக் காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே எனப் பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார்.
மன்னரும் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம், நெல்வேலி எனப் பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.
இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.
ஓர் ஏழை விவசாயி இறைவனுக்குப் படைக்க நெல்லைக் காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரெனப் பெய்ய, சிவன் (நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர் என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.
வரலாறு
திருநெல்வேலியின் வரலாற்றை இங்கு வந்திருந்த கிறித்தவப் பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் (1814–91) ஆய்வு செய்துள்ளார். திருநெல்வேலி பாண்டிய அரசர்களின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது; அவர்களின் முதன்மைத் தலைநகரமாக மதுரை இருந்தது. இங்கிருந்த பாண்டிய வம்சம் அனோ டொமினிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன; அசோகர் (பொ.ஊ.மு. 304–232) காலக் கல்வெட்டுக்களிலும் மகாவம்சம், வராகமிகிரரின் பிரகத் சம்கிதை மற்றும் மெகஸ்தனிசின் (பொ.ஊ. 350–290) நூலிலும் இப்பேரரசு குறிக்கப்பட்டுள்ளது. இந்த இராச்சியம் பொ.ஊ. 1064இல் இராசேந்திர சோழன் காலத்தில் சோழர் ஆட்சியின் கீழ் வந்தது. 13ஆவது நூற்றாண்டு வரை சோழரின் ஆட்சியிலிருந்த திருநெல்வேலி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பிற்காலப் பாண்டியரின் கீழ் வந்தது.
பொ.ஊ. 13ஆவது, 14ஆவது நூற்றாண்டுகளில் நெல்லையப்பர் கோவில் பாண்டியர்களின் அரசக் கோவிலாக விளங்கியது. அரச ஆதரவினால் அக்காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டன. குலசேகரப் பாண்டியனின் (1268–1308) மரணத்திற்குப் பிறகு, 16ஆவது நூற்றாண்டில் விசயநகர மன்னர்களும் (பாளையக்காரர்கள்) ஆட்சி புரிந்தனர். தெலுங்கு, கன்னடர்கள் கிழக்கத்திய கரிசல் மண் பிரதேசத்திலும் குடியேறினர். திருநெல்வேலி மதுரை நாயக்கர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்தது; விசுவநாத நாயக்கர் (1529–64) காலத்தில் 1560இல் திருநெல்வேலி மீளமைக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கற்றளிகளில் இவரது தாராளமான நன்கொடை பதியப்பட்டுள்ளது. 1736இல் நாயக்கராட்சி முடிவுக்கு வந்தது; 18ஆம் நூற்றாண்டின் மையக்காலத்தில் இப்பகுதியை சந்தா சாகிப் (1740–1754), ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் (1725–1764) கைப்பற்றினர்.
1743இல் நிசாம்-உல்-முல்க், தக்காணப் பீடபூமியின் தளபதி, இப்பகுதியில் இருந்த மராத்தியர்களை விரட்டியடித்து, இப்பகுதி ஆற்காடு நவாப் ஆட்சியின் கீழ் வந்தது. இருப்பினும் அதிகாரம் நாயக்கர்களின் படைத்தளபதிகளாக இருந்த பாளையக்காரர்களிடம் இருந்தது. திருநெல்வேலி நாயக்கர் ஆட்சியிலும், நவாப் ஆட்சிக்காலத்திலும் முதன்மை வணிக நகரமாக விளங்கிய இந்நகரம் நெல்லைச் சீமை எனப்பட்டது; சீமை என்பதற்கு "வளர்ச்சியுற்ற வெளிநாட்டு நகரம்" எனப் பொருள் கொள்ளலாம். பாளையக்காரர்கள் மலைகளில் கோட்டைகள் கட்டிக்கொண்டு, தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு வந்தனர். 1755இல் பிரித்தானிய அரசு மேஜர் எரானையும் மகபுசு கானையும் அனுப்பி அமைதி ஏற்படுத்தினர். திருநெல்வேலி நகரம் மகபூசு கானுக்கு வழங்கப்பட்டது. பாளையக்காரர்கள் மகபூசு கானுடன் சண்டையிட்டனர். மகபூசுகானுக்கு உதவியாக கிழக்கிந்தியக் கம்பனி முகமது யூசபை அனுப்பியது. கான் ஆட்சியைக் கைபற்றிய பின்னர் 1763இல் எதிர்பாளராக மாறினார். இதனால் 1764இல் கான் தூக்கிலிடப்பட்டார். 1758இல் பிரித்தானிய துருப்புகள் தளபதி புல்லர்டன் தலைமையில் கட்டபொம்மனை வென்றனர். 1797இல் பானர்மேன் தலைமையிலான பிரித்தானியருக்கும் கட்டபொம்மன் தலைமையிலான பாளையக்காரர்களுக்கும் முதலாம் பாளையக்காரப் போர் மூண்டது. எட்டையபுரம் மன்னர் போன்ற சில பாளையக்காரர்கள் பிரித்தானியர்களுக்கு ஆதரவாயிருந்தனர். கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டு தனது பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார். இரண்டாண்டுகள் கழித்து இரண்டாம் பாளையக்காரர் போர் நிகழ்ந்தது. மிகுந்த எதிர்ப்புக்கு பிறகு பிரித்தானியர் மீண்டும் வென்றனர். நவாபுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கர்னாடிக் பகுதி பிரித்தானியர் ஆட்சி கீழ் வந்தது.
1801இல் நவாபிடமிருந்து திருநெல்வேலியைப் பெற்ற பிறகு பிரித்தானியர் இதனைத் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரமாக்கினர். நிர்வாக, படைத்துறை தலைமையகங்கள் பாளையம்கோட்டையில் அமைந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்டத் தலைநகரமாக விளங்கியது. 1986இல் தனியாக தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தது. தற்போதைய இந்திய அரசின் 100 நுண்சீர் நகரங்களில் ஒன்றாக திருநெல்வேலி அடையாளம் காணப்பட்டுள்ளது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 47 மீட்டர் (154 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 4,73,637 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருநெல்வேலி மக்களின் சராசரிக் கல்வியறிவு 90.39% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.75%, பெண்களின் கல்வியறிவு 86.18% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. திருநெல்வேலி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2011 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 4,73,637 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 4,97,826 ஆகவும் உள்ளது.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, திருநெல்வேலியில் இந்துக்கள் 69.00%, முஸ்லிம்கள் 20.02%, கிறிஸ்தவர்கள் 10.59%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.02%, 0.35% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர்.
இரட்டை நகரங்கள்
திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் (TWIN CITY) என்றழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆறு ஆனது இவ்விரு நகரங்களுக்கிடையே ஓடுகின்றது. திருநெல்வேலி ஆனது ஆற்றின் மேற்குப் புறமும், பாளையங்கோட்டை கிழக்குப் புறமும் அமைந்துள்ளன.
பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது.
பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.
போக்குவரத்து
திருநெல்வேலி ஒரு விரிவான போக்குவரத்துப் பிணையத்தினைக் கொண்டுள்ளது; இது சாலை, இரயில் மற்றும் விமானம் மூலம் பிற முக்கிய நகரங்களோடு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி சாலைகளை மொத்தம் பராமரிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் முப்பது கிலோமீட்டர்கள் சாலையும், மாநில நெடுஞ்சாலைகள் துறை மூலம் இருபத்தி இரண்டு கிலோமீட்டர் சாலையும் பராமரிக்கப்படுகின்றன. 1844 ஆம் ஆண்டில் திருநெல்வேலி - பாளையங்கோட்டையை இணைக்கும் வகையில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கர்னல் ஹார்ஸ்லேவினால் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இன்று அது சுலோச்சன முதலியார் பாலம் என்றழைக்கப்டுகிறது. திருநெல்வேலி நகரம் தேசிய நெடுஞ்சாலை 7 மேல், மதுரைக்குத் தெற்கே தொலைவிலும் மற்றும் கன்னியாகுமரிக்கு வடக்கே தொலைவிலும் அமைந்துள்ளது,. தேசிய நெடுஞ்சாலை 7A, இது தேசிய நெடுஞ்சாலை 7-ன் ஒரு நீட்டிப்பு ஆகும்; இது தூத்துக்குடி துறைமுகத்தினை பாளையங்கோட்டையோடு இணைக்கிறது.
திருநெல்வேலி நகரில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன.
2003 இல், மத்தியப் பேருந்து நிலையம் (புதிய பஸ் ஸ்டாண்ட்) வேய்ந்தான் குளத்தில் திறக்கப்பட்டது. இங்கிருந்து மற்றைய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆனது பெங்களூர், சென்னை, கன்னியாகுமாரி மற்றும் பிற நகரங்களுக்கு அதிதூரப் பேருந்து சேவையை இயக்குகிறது.
மேலும் சந்திப்பு மற்றும் பாளைப் பேருந்து நிலையங்களிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி நகர மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்குப் பேருந்து சேவையை இயக்குகிறது.
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் இந்தியாவில் பழமையான இரயில் நிலையங்களில் ஒன்றாகும். செங்கோட்டை - திருநெல்வேலி தொடருந்து இணைப்பு 1903 ஆம் ஆண்டு முதல் திறக்கப்பட்டது; பின்பு கொல்லம் வரை இணைக்கப்பட்ட இது பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் மாகாணத்திற்கு மிக முக்கியமான வர்த்தகப் பாதையாக இருந்தது. திருநெல்வேலி நகரம் நான்கு திசைகளிலும் தொடருந்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. வடக்கே மதுரை, தெற்கே நாகர்கோயில், மேற்கே கொல்லம் செல்லும் தொடருந்து இணைப்பு தென்காசி, செங்கோட்டையுடனும், கிழக்கே திருச்செந்தூருடனும் இணைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து தினமும் திருச்சிராப்பள்ளி, சென்னை, மதுரை, கன்னியாகுமரி, மும்பை, குருவாயூர், ஹவுரா, தில்லி மற்றும் திருவனந்தபுரம் ஊர்களுக்கு விரைவுப் பயணிகள் சேவைகள் உள்ளன. மேலும் மதுரை, திருச்செந்தூர், திருச்சி மற்றும் கொல்லம் தென்காசி பாசஞ்சர் சேவை உள்ளது.
திருநெல்வேலியின் அருகில் உள்ள விமான நிலையம் தூத்துக்குடி வானூர்தி நிலையம் ஆகும்; இது திருநெல்வேலி நகரின் கிழக்குத் திசையில் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாகைகுளம் (Vaagaikulam) என்ற ஊரில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து சென்னைக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (TRV) தொலைவில் உள்ளது. மற்றுமோர் அருகில் உள்ள சர்வதேச விமான நிலையம் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம், ஆகும்.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
திருநெல்வேலி மாநகராட்சியானது திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக-வை)ச் சேர்ந்த எஸ். ஞானதிரவியம் வெற்றி பெற்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியில், பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார்.
கல்வி
மாநில கீதமான "தமிழ்த் தாய் வாழ்த்தினைப்" பாடிய மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் பெயரில் இங்கு ஒரு பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அபிசேகப்பட்டியில் உள்ளது. பெரும்பாலான கிறித்தவப் பள்ளிகளும், கல்லூரிகளும் பாளையங்கோட்டையில் உள்ளன.
திருநெல்வேலியில் 80 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 29 மேல்நிலைப் பள்ளிகளும், 12 உயர்நிலைப் பள்ளிகளும், 22 நடுநிலைப் பள்ளிகளும், 17 தொடக்கப் பள்ளிகளும் உள்ளன; திருநெல்வேலி மாநகராட்சி இவற்றில் 33 பள்ளிகளை நடத்துகின்றது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், மற்றும் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி ஆகிய தொழில்சார்ந்த கல்லூரிகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றன. செ. சேவியர் கல்லூரி, செ. ஜான்ஸ் கல்லூரி கிறித்தவ டயோசிசின் அமைப்பினரால் நடத்தப்படுகின்றன. மேலும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி (பாரதியார் இங்கு படித்தார்), சதுக்கத்துல்லா அப்பா கல்லூரி, சாரா டக்கர் கல்லூரி குறிப்பிடத்தகுந்தவை.
இந்தியன் இன்ஸ்டிட்யுட் ஆப் ஜியோமெகனடிசம் (IIG) அதன் பிராந்திய நிறுவனமாக, 'the Equatorial Geophysical Research Laboratory'-ஐ நிறுவி, மண்ணியல், வளிமண்டல மற்றும் வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.
திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையம் உள்ளது. இது பெங்களூரிலுள்ள விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின், துணைப்பிரிவு ஆகும். இங்கு நிரந்தரக் காட்சியகங்ளும், அறிவியல் காட்சிகளும், ஊடாடும்(Interactive) மற்றும் சுய வழிகாட்டுதல் (self-guided) சுற்றுலாவும், சிறியகோளரங்கம் மற்றும் வானிலைக்கூர்நோக்கும் மையமும் உள்ளன.
முக்கிய இடங்கள்
நெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்தியமலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப்பிடிப்புகள் நடந்துள்ளன. பாபநாசத்தில், புகழ் பெற்ற அகத்தியர் அருவி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் புகழ் பெற்ற குற்றால அருவித்தொடர் உள்ளது. இந்தக் குற்றால அருவி நெல்லையிலிருந்து 50கி.மீ. தொலைவில் உள்ளது. தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இங்கு மெயின் அருவி, ஐந்தருவி, தேனருவி, செண்பகாதேவி, புலிஅருவி, பழைய குற்றாலம் எனப் பல அருவிகள் உள்ளன. மெயின் அருவி மிகவும் பிரசித்தி பெற்றது. வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட இந்த அருவிக்கு மக்கள் வருகின்றனர்.
நெல்லையப்பர் கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் இந்த நகரில் அமைந்துள்ளது. ஸ்ரீ காந்திமதி-நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும், சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று உள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.
திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வழி கருப்பூந்துறை ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் திருக்கோயில் கோரக்க மகரிஷியால் வழிபட்ட தலம் ஆகும்.
ஆதாரங்கள்
தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகள்
பண்டைய இந்திய நகரங்கள்
|
3789
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்
|
நோபெல் பரிசுகள் (, ) ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தாலும் (The Royal Swedish Academy of Sciences), சுவீடியக் கல்விக்கழகத்தாலும் (The Swedish Academy), கரோலின்சுகா நிறுவனத்தாலும் (The Karolenska Institute) மற்றும் நார்வே நோபெல் குழுவாலும் (The Norwegian Nobel Committee) தனியொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் ஆகிய அறிவியல்புலங்களில் பெரும்பங்களிப்பு ஆற்றுபவர்களுக்குத் தரப்படுகின்றன. இவை ஆல்ஃபிரெட் நோபெலின் 1895அம் ஆண்டு உயிலின்படி நிறுவப்பட்டுத் தரப்படுகின்றன.இது நோபெல் அறக்கட்டளையால் ஆளப்படுமெனக் கூறுகிறது. பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசு 1968இல் சுவீடன்னைச் சார்ந்த Sveriges Riksbank எனும் வங்கியால் பொருளியலில் பெரும்பங்களிப்பவர்களுக்காக நிறுவப்பட்டது. இதில் ஒவ்வொரு பரிசாளருக்கும் பொற்பதக்கமும் பட்டயமும் நோபெல் அறக்கட்டளை குறிப்பிட்ட ஆண்டில் முடிவுசெய்யும் பணத்தொகையும் வழங்கப்படும்.
பரிசு
ஒவ்வொரு பரிசும் ஒரு தனிக்குழுவால் தரப்படுகிறது; இயற்பியல், வேதியியல், பொருளியல் பரிசுகளைச் சுவீடிய அரசுக்கழகம் தருகிறது; கரோலின்சுகா நிறுவனம் உடலியங்கியல் அல்லது மருத்துவப் பரிசுகளை வழங்குகிறது; நார்வே நோபெல்குழு அமைதிக்கான பரிசுகளை அளிக்கிறது. ஒவ்வொரு பரிசாளரும் ஆண்டுஅகளைச் சார்ந்து வேறுபடும் பதக்கத்தையும் பட்டயத்தையும் பணத்தொகையையும் பெற்றுவந்துள்ளனர். முதல்நோபெல் பரிசுகள் 1901இல் பரிசாளர்களுக்கு 150,782 SEK அமைந்தன.இது 2007இல் 7,731,004 SEK மதிப்புக்குச் சம்மானது. பரிசாளர்களுக்கு 2008இல் பணத்தொகையாக 10,000,000 சுவீடியக் குரோனர்கள்(SEK) வழங்கப்பட்டன. பரிசுகள் நோபெல் மறைந்த நாளான திசம்பர் 10இல் அவரது நினைவு ஆண்டுவிழாவில் சுட்டாக்கொல்மில் தரப்படுகின்றன.
பெயர்கள் தரப்படாததாலோ வேறு புறநிகழ்வுகளாலோ நோபெல் பரிசு தரப்படாவிட்டால் பரிசுத்தொகை உரிய பரிசுக்கணக்கில் திரும்பச் செலுத்தப்படும். நோபெல் பரிசு போர்மூண்டதால் 1940முதல் 1942வரை தரப்படவில்லை.
பரிசாளர்கள்
கடந்த நூற்றாண்டு 1901 முதல் இந்த நூற்றாண்டு 2012 வரை நோபல் பரிசுகளும் பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசுகளும் 555 தடவைகள் 863 பேருக்கும் நிறுவனங்களுக்கும் தரப்பட்டுள்ளன. இதில் சிலர் ஒருதடவைக்கும் மேல் பரிசு வாங்கியுள்ளதால் மொத்தத்தில் 825 பேரும் 21 நிறுவனங்களும் பரிசு பெற்றுள்ளன. நான்கு நோபெல் பரிசாளர்களுக்கு அவர்களது அரசுகள் இப்பரிசைப் பெற இசைவு தரவில்லை. [அடோல்ஃப் ஃஇட்லர் மூன்று செருமானியர்களான இரிச்சர்ட் குஃன் (வேதியியல், 1938), அடோல்ஃப் புட்டனண்ட் (வேதியியல், 1939), and ஜெரார்டு டொமாக் (உடலியங்கியல் அல்லது மருத்துவம், 1939), ஆகியோரை நொப்ர்ல் பரிசை வாங்கவிடவில்லை. முன்னாள் சோவியத் ஒன்றிய அரசு போரிசு பாசுதர்னாக்கை (இலக்கியம், 1958) பரிசை மறுக்கும்படி வற்புறுத்தியது. இரு நோபெல் பரிசாளர்களான [[ழீன் பௌல் சாட்ட்ரேயும்(இலக்கியம், 1964) இலே டக் தோவும் (அமைதி,1973) இப்பரிசை வாங்க மறுத்துவிட்டனர். சாத்ரே எந்த அலுவல்முறைப் பரிசையும் வாங்க விரும்பாதால் மறுத்தார்.இலே அப்போது வியட்நாம் இருந்த நிலைமையால் மறுத்தார்.
ஆறு பரிசாளர்கள் ஒரு தடவைக்கும் மேல் பரிசு பெற்றுள்ளனர்.; அந்த அறுவருள் செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக்குழு அமைதிக்கான நோபெல் பரிசை மும்முறை பெற்றது வேறெவருமே மும்முறை பெறவில்லை.. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் இருமுறை அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்றது. மேலும் ஜான் பர்டீனுக்கு இருமுறை இயற்பியலுக்கான நோபெல் பரிசும் ஃபிரெடெரிக் சாங்கருக்கு இருமுறை வேதியியலுக்கான நோபெல் பரிசும் வழங்கப்பட்டன. வெவ்வேறு புலங்களில் இருவருக்கு வழங்கப்பட்டன: மேரி கியூரி (இயற்பியலும் வேதியியலும்);இலினசு பௌலிங் (வேதியியல், அமைதி). 826 பரிசாளர்களில் 43பேர் பெண்கள்; நோபெல் பரிசுபெற்ற முதள் பெண்மணி மேரி கியூரி ஆவார். இவர் 1903இல் இயற்பியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார். இருபாலாரிலுமே முதல்முறையாக இரு நோபெல் பரிசு பெற்றவர் மேரி கியூரியே. இவர் இரண்டாவதாக 1911இல் வேதியியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Official website of the Royal Swedish Academy of Sciences
Official website of the Nobel Foundation
Downloadable Database of Nobel Laureates
|
3791
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
பெங்களூர்
|
பெங்களூர் (Bangalore), அலுவல்முறையில் பெங்களூரு (Bengaluru, , ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்குப் பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் உள்ளது. இங்கு கன்னடம் பேசுவோர் (44%), தமிழ் பேசுவோர் (28%), தெலுங்கு பேசுவோர் (14%) என்பதாக உள்ளது. நகரத்தின் பன்முகத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக பெங்களூருவின் மக்கட் தொகை 1 கோடியைத் தாண்டியது.
நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் முதலாம் கெம்பை கவுடர் இந்த இடத்தில் ஒரு செங்கல்லில் செய்த கலவைக் கோட்டையைக் கட்டினார். விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் இந்நகரத்தின் நவீன வரலாறு துவங்கியது. பிரித்தானிய ஆட்சியின் போது, இந்நகரம் தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது.
இன்று, ஒரு பெரிய வளரும் பெருநகரமாக, இந்தியாவின் புகழ்பெற்ற பல கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு இருக்கிறது. பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறை வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணி ஆகிய காரணங்களால், பெங்களூரு இந்தியாவின் 'சிலிகான் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது. மக்கள்பரவலில் பன்முகத்தன்மை கொண்டதான பெங்களூரு பெரும் பொருளாதார மையமாகத் திகழ்வதோடு இந்தியாவில் மிகத் துரிதமாய் வளரும் பெரு நகரமாகவும் உள்ளது. 2015 ஆம் ஆண்டு பெங்களூரு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பெயர் வரலாறு
பெங்களூரு என்ற நகரப் பெயரின் ஆங்கிலவயமாக்க பிரயோகமான பெங்களூர் என்னும் பெயர் தான் சில ஆண்டுகள் முன்பு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. "பெங்களூரு" என்கிற பெயருக்கான முதற்குறிப்பு ஒன்பதாம் நூற்றாண்டு மேற்கு கங்க வம்சத்தின் "வீரக் கல்" (ஒரு மாவீரனின் சிறப்பம்சங்களைப் போற்றும் கல் எழுத்துக்கள்) ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களில் காணத்தக்கதாக இருக்கிறது. பெகரில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டில், "பெங்களூரு" என்பது 890 ஆம் ஆண்டில் போர் நடந்த ஒரு இடமாகக் குறிப்பிடப்படுகிறது. கங்க சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இந்த இடம் இருந்தது. இது பெங்கவால்-ஊரு, அதாவது ஹளேகன்னட என்றழைக்கப்பட்ட பழைய கன்னட மொழியில் வெங் காவல் ஊர் (காவலர்களின் நகரம்) என்று அழைக்கப்பட்டது. தி ஹிந்து பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது:பொ.ஊ. 890 ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, பெங்களூரு 1,000 ஆண்டுகளுக்கும் பழமையானது என்று தெரிவிக்கிறது. ஆனால் இக்கல்வெட்டு நகருக்கருகில் பேகூரில் (வேகூர்) நாகேஸ்வரா கோவிலில் கவனிப்பாரின்றி இருக்கிறது. ஹலே கன்னட (பழைய கன்னடம்) மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு எழுத்துக்கள் 890 ஆம் ஆண்டின் பெங்களூரு போர் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இதனை வரலாற்று ஆசிரியரான ஆர். நரசிம்மச்சார் தனது கருநாட்டக கல்லெழுத்தியல் (தொகுதி. 10 துணைச்சேர்ப்பு) தொகுப்பில் பதிவு செய்திருந்தும் கூட, அதனை பாதுகாக்க இதுவரை எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.
சொல்வழக்கு கதையாக இருந்தாலும் கூட பிரபலமான பழைய சம்பவம் ஒன்று இவ்வாறு நினைவுகூர்கிறது: 11 ஆம் நூற்றாண்டின் ஹோய்சாலா அரசரான இரண்டாம் வீர வல்லாளர், வேட்டையாட சென்ற போது காட்டில் வந்த வழியை மறந்து விட்டார். பசியிலும் களைப்பிலும் இருந்த போது, ஒரு ஏழைக் கிழவியை அவர் சந்தித்தார். அந்தக் கிழவி அவருக்கு அவித்த பயிறு பரிமாறினார். ராஜா நன்றியுடன் "பெந்த-கால்-ஊரு" () (வார்த்தை அர்த்தத்தில், "வெந்த கடலை ஊர்") என்று அந்த இடத்திற்கு பெயரிட்டார். அது இறுதியில் "பெங்களூரு" என்று ஆனது.
11 டிசம்பர் 2005 அன்று, பெங்களூர் என்கிற பெயரை பெங்களூரு என்று பெயர்மாற்றம் செய்வதற்கு ஞானபீட விருது வென்ற யூ. ஆர். அனந்தமூர்த்தி அளித்திருந்த ஒரு யோசனையை ஏற்றுக் கொண்டதாக கர்நாடக அரசு அறிவித்தது. 27 செப்டம்பர் 2006 அன்று புருகத் பெங்களூரு மகாநகர பலிகே]] (BBMP) உத்தேசிக்கப்பட்ட பெயர் மாற்றத்தை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றியது. கர்நாடகா அரசாங்கத்தால் அந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அலுவல்ரீதியாக 1 நவம்பர் 2006 முதல் பெயர் மாற்றத்தை அமலாக்க முடிவு செய்யப்பட்டது. ஆயினும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்களின் காரணமாக இந்த நிகழ்முறை சற்று முடங்கியது.
வரலாறு
மேலைக் கங்கர்களின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு, பொ.ஊ. 1024 ஆம் ஆண்டு சோழர் களால் பெங்களூரு கைப்பற்றப்பட்டு பின் 1070 ஆம் ஆண்டில் சாளுக்கிய-சோழர்களின் வசம் சென்றது. 1116 ஆம் ஆண்டில், ஹோய்சாளப் பேரரசு சோழர்களை தூக்கியெறிந்ததோடு தனது ஆட்சியை பெங்களூருக்கும் நீட்டித்தது. நவீன பெங்களூரு விஜயநகர சாம்ராச்சியத்தின் குத்தகைதாரர்களில் ஒருவரான முதலாம் கெம்பெ கவுடாவினால் நிறுவப்பட்டது. இவர் செங்கல்-கலவை கோட்டை ஒன்றையும் நந்தி கோயில் ஒன்றையும் நவீன பெங்களூருவின் அருகாமையில் 1537 ஆம் ஆண்டில் கட்டினார். புதிய நகரத்தை கெம்பெ கவுடா "கந்துபூமி" அல்லது "நாயகர்களின் பூமி" என்று குறிப்பிட்டார்.
பெங்களூரு கோட்டைக்குள்ளாக, நகரம் சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் ஒரு "பேட்டெ" (பேட்டை) என்றழைக்கப்பட்டது. நகரம் இரண்டு முக்கிய வீதிகளைக் கொண்டிருந்தது. சிக்கபேட்டெ வீதி கிழக்கு - மேற்காக சென்றது. தொட்டபேட்டெ வீதி வடக்கு - தெற்காக சென்றது. இவை குறுக்கிட்ட இடம் பெங்களூரின் இதயமான தொட்டபேட்டெ சதுக்கத்தை உருவாக்கியது. கெம்பெ கவுடாவுக்கு அடுத்து வந்த, இரண்டாம் கெம்பெ கவுடா, பெங்களூரின் எல்லைகளாக அமைந்த நான்கு புகழ்பெற்ற கோபுரங்களைக் கட்டினார். விஜயநகர ஆட்சியின் போது, பெங்களூரு "தேவராயநகர" மற்றும் "கல்யாணபுரா" ("மங்கள நகரம்") என்றும் அழைக்கப்பட்டது.
விஜயநகரப் பேரரசு வீழ்ந்த பின், பெங்களூரின் ஆட்சி பல கைகளுக்கு மாறியது. 1638 ஆம் ஆண்டில், ரனதுல்லா கான் தலைமையிலான ஒரு பெரும் பீஜப்பூர் படை சாஜி போன்ஸ்லேவுடன் இணைந்து மூன்றாம் கெம்பெ கவுடாவைத் தோற்கடித்தது. பெங்களூரு சாஜிக்கு கொடையாகக் கொடுக்கப்பட்டது. 1687 ஆம் ஆண்டில், முகலாய தளபதியான காசிம் கான் சாஜியின் மகனான எகோஜியைத் தோற்கடித்து, பெங்களூரை மைசூரின் சிக்கதேவராஜ உடையாருக்கு (1673-1704) 300,000 ரூபாய்க்கு விற்றார். 1759 ஆம் ஆண்டில் இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் இறந்த பிறகு, மைசூர் ராணுவத்தின் படைத் தளபதியாக இருந்த ஹைதர் அலி தன்னை மைசூரின் உண்மையான ஆட்சியாளராக பிரகடனப்படுத்திக் கொண்டார். பின்னர் ஆட்சி மைசூர்ப் புலி என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் வசம் சென்றது. நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரில் (1799) திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு இறந்த பிறகு இறுதியில் பெங்களூரு பிரித்தானிய இந்திய சாம்ராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. பிரித்தானியர்கள் பெங்களூரு "பீடெ"யின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மைசூர் பேரரசரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, கன்டோன்மென்டை மட்டும் தங்கள் ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டனர். மைசூர் ராச்சியத்தின் 'இருப்பிடம்' முதலில் மைசூரில் 1799 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பின் இது 1804 ஆம் ஆண்டில் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இந்தக் காலத்தில் மதராஸ் பிரசிடென்சியில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்தி பின் அவர்களை கன்டோன்ட்மென்ட் பகுதிக்கு மாற்றுவது பிரித்தானியருக்கு சுலபமானதாக இருந்தது. மைசூர் ராஜ்ஜியம் தனது தலைநகரை மைசூர் நகரத்தில் இருந்து பெங்களூருக்கு 1831 ஆம் ஆண்டில் மாற்றியது.
இந்த காலகட்டத்தின் இரண்டு முக்கிய வளர்ச்சிகள் நகரின் துரித வளர்ச்சிக்கு பங்களித்தது. அவற்றுள் ஒன்று தந்தி இணைப்புகளின் அறிமுகம். மற்றொன்று 1864 ஆம் ஆண்டின் மதராசுக்கான இரயில் இணைப்பாகும்.
19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர். 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகத்து மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரச பிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆனது.
தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தித் தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது. 1985 ஆம் ஆண்டில், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் பெங்களூரில் தனது தளத்தை அமைத்த முதல் பன்னாட்டு நிறுவனமாகும்.
பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பின்தொடர்ந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், பெங்களூரு தன்னை இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்காக உறுதியாக நிறுவிக் கொண்டது.
புவியியல்
தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்தின் தென்கிழக்கில் பெங்களூரு அமைந்துள்ளது. இது மைசூர் பீடபூமியின் (இருதய பகுதியில் கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய பரந்த தக்காண பீடபூமியின் ஒரு பகுதி) 920 மீ (3,018 அடி) சராசரி உயரத்தில் அமைந்துள்ளது. இது 741 கிமீ² (286 மைல்²). பரப்பளவில் அமைந்துள்ளது. பெங்களூரு நகரத்தின் பெரும் பகுதி கர்நாடகத்தின் பெங்களூரு நகர மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகள் பெங்களூரு கிராம மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். பழைய பெங்களூரு கிராம மாவட்டத்தில் இருந்து ராமநகரா என்னும் புதிய மாவட்டத்தை கர்நாடகா அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது.
நகரின் வழியாய் ஓடும் பெரிய ஆறு எதுவும் இல்லை. ஆயினும் வடக்கில் 60 கிமீ தொலைவில் (37 மைல்கள்) நந்தி மலையில் ஆர்க்காவதி ஆறும் தென்பெண்ணை ஆறும் சந்தித்துக் கொள்கின்றன. அர்காவதி ஆற்றின் சிறு கிளைநதியான விருட்சபவதி ஆறு நகருக்குள்ளாக பசவனகுடியில் தோன்றி நகரின் வழியே பாய்கிறது. பெங்களூரின் பெரும் கழிவுகளை அர்க்காவதி மற்றும் விருட்சபவதி ஆறுகள் சேர்ந்து தான் சுமக்கின்றன. 1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு கழிவுநீக்கம் அமைப்பு நகரின் 215 கிமீ² (133 மைல்²) தூரத்திற்கு பரந்து அமைந்து பெங்களூரின் சுற்றளவில் அமைந்துள்ள ஐந்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை இணைக்கிறது.
16 ஆம் நூற்றாண்டில், நகரின் நீர்த்தேவைகளை நிறைவு செய்வதற்காக முதலாம் கெம்பெ கவுடா பல ஏரிகளைக் கட்டினார். கெம்பம்புதி கெரே தான் இந்த ஏரிகளில் மிகவும் முதன்மையானதாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், நகருக்கு நீர் விநியோகம் செய்வதற்கு சர் மிர்சா இஸ்மாயில் (மைசூர் திவான், பொ.ஊ. 1926-41) மூலம் நந்தி ஹில்ஸ் வாட்டர்ஒர்க்ஸ் நிறுவப்பட்டது. தற்போது நகருக்கான நீர் வழங்கலில் சுமார் 80% பங்கினை காவிரி நதி அளிக்கிறது. எஞ்சிய 20% திப்பகொண்டனஹல்லி மற்றும் ஹெசராகட்டா ஆகிய அர்காவதி ஆற்றின் நீர்த்தேக்கங்கள் மூலம் பெறப்படுகிறது. பெங்களூரு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர்கள் (211 மில்லியன் அமெரிக்க கேலன்கள்) நீரைப் பெறுகிறது. இது வேறு எந்த ஒரு இந்திய நகரத்தைக் காட்டிலும் அதிகமானதாகும். ஆயினும், பெங்களூரு சில சமயங்களில் குறிப்பாக கோடைப் பருவங்களின் போது நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
பெங்களூரு ஏராளமான நன்னீர் ஏரிகள் மற்றும் குளங்களைக் கொண்டிருக்கிறது. மடிவாலா குளம், ஹெப்பல் ஏரி, அல்சூர் ஏரி மற்றும் சாங்க்கி குளம் ஆகியவை அவற்றில் பெரியவையாகும். வண்டல் படிவுகளின் வண்டல் மற்றும் மணல் அடுக்குகளில் இருந்து நிலத்தடிநீர் தோன்றுகிறது.
நகரத்தின் தாவர வகைகளைப் பொறுத்த வரை பெரும் எண்ணிக்கையில் இலையுதிர் வகை மரங்களும் சிறு எண்ணிக்கையில் தென்னை மரங்களும் உள்ளன. பெங்களூரு நிலவதிர்வு மண்டலத்தில் இரண்டாம் அடுக்கு பகுதியாக (ஒரு திடமான மண்டலம்) வகுக்கப்பட்டிருந்தாலும், 4.5 ரிக்டர் அளவுக்கான பெரிய பூகம்பங்களை கண்டிருக்கிறது.
காலநிலை
அதிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் காரணத்தால், பெங்களூரு ஆண்டு முழுவதும் பெரும்பாலும் ரம்மியமான காலநிலையையே கொண்டிருக்கிறது. ஆயினும் அவ்வப்போது ஏற்படும் வெப்ப அலைகள் கோடையில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. சனவரி மாதம் மிகவும் குளிர்ந்த மாதமாக இருக்கிறது. சராசரி குறைந்த வெப்பநிலை 15.1 °C ஆக இருக்கும். ஏப்ரல் மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கிறது. சராசரி உயர்ந்த வெப்பநிலையாக 33.6 °C இருக்கும். பெங்களூரில் மிக அதிகமாகப் பதிவான வெப்பநிலை 38.9°C ஆகும். மிகவும் குறைந்தபட்சமாக 7.8 °C (1884 ஜனவரி) பதிவாகியிருக்கிறது. குளிர்கால வெப்பநிலைகள் அபூர்வமாக 12 °C க்கு கீழ் சரியும். கோடை வெப்பநிலைகள் அபூர்வமாக 36-37 °C (100 °F) க்கு அதிகமாக இருக்கும். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவக்காற்று இரண்டில் இருந்தும் பெங்களூரு மழைப்பொழிவைப் பெறுகிறது. செப்டம்பர், அக்டோபர் மற்றும் ஆகத்து ஆகியவை முறையே மிகவும் மழைப்பொழிவு மிகுந்த காலங்களாகும். ஓரளவு அடிக்கடி நிகழும் இடிமின்னலுடனான புயல் மழையால் கோடை வெப்பம் சரிக்கட்டப்படுகிறது. இது மின்துண்டிப்பு மற்றும் உள்ளூர் வெள்ளப்போக்கிற்கும் அவ்வப்போது காரணமாகிறது.
24 மணி நேர காலத்தில் பதிவான மிக அதிக மழைப்பொழிவு அக்டோபர் 1, 1997 அன்று பதிவானது.
நகர நிர்வாகம்
புருகத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) நகரத்தின் நிர்வாகத்திற்கான பொறுப்பில் இருக்கிறது.
புருகத் பெங்களூரு மகாநகர பலிகே பெருநகர மாமன்றம் மூலம் நடத்தப்படுகிறது. மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வார்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மாமன்றத்தின் ஒரு மேயர் மற்றும் ஆணையர் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் இருந்து ஒருவருக்கோ அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவருக்கோ இந்த இடம் ஒதுக்கப்படுகிறது.
பெங்களூரின் துரித வளர்ச்சியானது போக்குவரத்து நெருக்கடி மற்றும் உள்கட்டுமான பழமைப்படல் ஆகியவை தொடர்பான பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இவை பெங்களூரு மகாநகர பாலிகேவுக்கு தீர்ப்பதற்கு சவாலளிக்கும் பிரச்சினைகளாக உள்ளன. 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த பெங்களூரின் இயற்பியல், உயிரியல் மற்றும் சமூகபொருளாதார அளவீடுகள் குறித்த பெதெல்ல சுற்றுச்சூழல் மதிப்பீடு அமைப்பு (BEES), பெங்களூரின் தண்ணீர் தரம் மற்றும் பிராந்திய மற்றும் நீர்ப்புற சூழலமைப்பு ஏறக்குறைய உன்னதமானவை யாக இருப்பதாக சுட்டிக் காட்டியது. நகரின் சமூக பொருளாதார அளவீடுகள் (போக்குவரத்து நெரிசல், வாழ்க்கைத் தரம்) ஆகியவை குறைந்த மதிப்பெண்களே பெற்றன.
நகரின் திட்டமிடப்படாத வளர்ச்சியானது பெரும் போக்குவரத்து நெருக்கடியில் விளைந்தது. மேற்பால அமைப்பு கட்டுவதன் மூலமும் ஒருவழிப்பாதைகள் மூலமும் இந்த பிரச்சினையைத் தீர்க்க மாநகராட்சி முனைந்தது. சில மேற்பாலங்களும் ஒருவழிப் பாதைகளும் போக்குவரத்து நெருக்கடியான சூழலை ஓரளவுக்குக் குறைக்க உதவினாலும் நகர போக்குவரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை. 2005 ஆம் ஆண்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் தங்களது வருடாந்திர நிதி ஒதுக்கீட்டில் பெங்களூரின் உள்கட்டுமான மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க தொகையை ஒதுக்கின. நகர வளர்ச்சித் திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் பெங்களூரு வளர்ச்சிக் கழகம் (BDA) மற்றும் பெங்களூரு திட்டப் பணிப்படை (BATF) ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு மகாநகர பாலிகே செயல்படுகிறது.
ஒரு நாளைக்கு 3,000 டன்கள் திடக்கழிவினை பெங்களூரு உருவாக்குகிறது. இதில் 1,139 டன்கள் சேகரிக்கப்பட்டு கர்நாடகா கழிவு மேம்பாட்டு வாரியம் போன்ற கூட்டுரம் பிரிவுகளுக்கு அனுப்பப்படுகின்றன. எஞ்சிய திடக் கழிவுகள் நகராட்சியால் திறந்த வெளிகளிலோ அல்லது நகருக்கு வெளியே சாலையோரங்களிலோ கொட்டப்படுகின்றன.
போக்குவரத்து காவல்துறை, நகர ஆயுதப்படை காவல்துறை, மத்திய குற்றவியல் பிரிவு மற்றும் நகர குற்றவியல் ஆவணப் பிரிவு உள்ளிட்ட ஆறு புவியியல் மண்டலங்களை பெங்களூரு நகர காவல்துறை (BCP) கொண்டுள்ளது. அத்துடன் இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 86 காவல் நிலையங்களையும் இயக்குகிறது. கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் என்கிற வகையில் கர்நாடகா உயர்நீதி மன்றம், கர்நாடகா சட்டமன்றம் மற்றும் கர்நாடக ஆளுநர் இல்லம் ஆகிய முக்கிய மாநில அரசாங்க அமைப்புகளின் இருப்பிடங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு மூன்று உறுப்பினர்களையும், கர்நாடகா சட்ட மன்றத்திற்கு 28 உறுப்பினர்களையும் பெங்களூரு பங்களிப்பு செய்கிறது.
பெங்களூரில் மின்சார ஒழுங்கு கர்நாடகா மின் விநியோக நிறுவனம் (KPTCL) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் பல நகரங்களைப் போலவே, பெங்களூரிலும் அறிவிக்கப்பட்ட மின்தடை உள்ளது. குறிப்பாக கோடை காலங்களில். வீட்டுத் தேவைகள் மற்றும் பெருநிறுவனத் தேவைகள் இரண்டின் நுகர்வையும் பூர்த்தி செய்வதற்கு மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுக்கு இது அவசியமாகிறது.
பொருளாதாரம்
பெங்களூரின் பொருளாதாரம் (2002-03 மொத்த மாவட்ட வருவாய்) அதனை இந்தியாவின் ஒரு பிரதான பொருளாதார மையமாக ஆக்குகிறது. 10.3% பொருளாதார வளர்ச்சியுடன், பெங்களூரு இந்தியாவில் மிகத்துரித வளர்ச்சியுறும் முக்கிய பெரு நகரமாக இருக்கிறது. தவிரவும், பெங்களூரு இந்தியாவின் நான்காவது பெரிய துரித நகர்வு நுகர்வு பொருட்கள் (FMCG) சந்தையாக இருக்கிறது. மிக உயர்ந்த சொத்துமதிப்பு கொண்ட தனிநபர்]]கள் எண்ணிக்கையில் மூன்றாவது பெரிய மையமாக இருக்கும் இந்நகரம் 10,000 க்கும் அதிகமான டாலர் மில்லியனர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் முதலீடு செய்யத்தக்க உபரியைக் கொண்டுள்ள சுமார் 60,000 பெரும் பணக்காரர்களையும் கொண்டுள்ளது. 2001 வாக்கில், அந்நிய நேரடி முதலீட்டில் பெங்களூரின் பங்களிப்பு இந்திய நகரங்களில் நான்காவது பெரியதாகும்.
1940 ஆம் ஆண்டில் சர் மிர்சா இஸ்மாயில் மற்றும் சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆகிய தொழில்துறை முன்னோடிகள் பெங்களூரின் வலிமையான உற்பத்தி மற்றும் தொழில்துறை அடித்தளத்தை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்கை ஆற்றினார்கள்.
பல பொதுத்துறை நிறுவனங்களின் தலைமையகங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. 1972 ஜூன் மாதத்தில், விண்வெளித் துறையின் கீழ் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் இந்நகரில் அமைந்தது.
இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன. நகரில் அமைந்துள்ள ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் காரணமாக பெங்களூரு இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இவை இந்தியாவின் 2006-07 தகவல்தொழில்நுட்ப சேவை ஏற்றுமதியில் 33% பங்களிப்பு செய்தன.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது நகருக்கு சவால்களையும் அளித்திருக்கிறது. நகரத்தின் உள்கட்டமைப்பில் மேம்பாட்டைக் கோரும் நகரின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், கர்நாடகத்தின் கிராமப் பகுதி மக்களையே தங்கள் பிரதான வாக்கு வங்கிகளாகக் கொண்டிருக்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையே சிலசமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் உயிரித் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளின் மையமாக பெங்களூரு விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டில், இந்தியாவின் 265 உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 47% இங்கு அமைந்திருந்தன; இந்தியாவின் மிகப்பெரிய உயிரிதொழில்நுட்ப நிறுவனமான பயோகான் நிறுவனமும் இதில் அடங்கும்.
போக்குவரத்து
பெங்களூரில் புதிதாகக் கட்டப்பட்ட பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (ATA குறியீடு: BLR) 24 மே 2008 முதல் தனது செயல்பாட்டைத் துவக்கியது. முன்னதாக நகருக்கு எச்ஏஎல் வானூர்தி நிலையம் சேவையாற்றி வந்தது. இது இந்தியாவின் நான்காவது பரபரப்பான வானூர்தி நிலையமாக இருந்தது. ஏர் டெக்கான் மற்றும் கிங்பிசர் ஏர்லைன்சு நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன.
நம்ம மெட்ரோ என்றழைக்கப்படும் துரித போக்குவரத்து அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
நிறைவுறுகையில் இது 41 நிறுத்தங்களை அடக்கி, தரைக்கு மேலும், தரைக்குகீழும் ஆன தொடர்வண்டி வலைப்பின்னலைக் கொண்டிருக்கும். இந்திய ரயில்வே மூலம் பெங்களூரு நாட்டின் பிற நகரங்களுடன் நல்ல இணைப்பைப் பெற்றிருக்கிறது. ராஜதானி விரைவுத் தொடருந்து நகரை இந்திய தலைநகரான புது டெல்லியுடன் இணைக்கிறது. இருப்புப் பாதை வழியே கர்நாடகாவின் அநேக நகரங்கள், மற்றும் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடனும் பெங்களூரு இணைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள் என்றழைக்கப்படும் மூன்று சக்கர, கருப்பு மற்றும் மஞ்சள் நிற தானியங்கி மூவுருளி உந்து போக்குவரத்துக்கு பிரபலமானதாகும். மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இவை மூன்று பயணிகள் வரை சுமந்து செல்லும். சற்று கூடுதல் கட்டணத்தில் வாடகை மகிழுந்து சேவைகளும் உண்டு.
பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC) மூலம் இயக்கப்படும் பேருந்துகளும் நகரில் பொதுப் போக்குவரத்துக்கான ஒரு வழியாக இருக்கின்றது. பயணிகள் இந்த பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு பேருந்து முன் அனுமதிச் சீட்டு வசதியையும் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. முக்கிய தடங்களில் குளிரூட்டப்பட்ட, சிவப்பு வண்ண வால்வோ பேருந்துகளையும் இப்போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. பெங்களூரை கர்நாடகாவின் பிற பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் 6,600 பேருந்துகளை 5,700 கால அட்டவணை நேரங்களில் இயக்கி வருகிறது.
மக்கள் வாழ்வியல்
பெங்களூரு நகரம் மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமாகவும் உலகின் 28வது பெரிய நகரமாகவும் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு மக்கள்தொகை 5,300,000 இருந்ததாய் மதிப்பிடப்பட்டது. 1991-2001 காலத்தில் புது டெல்லிக்கு அடுத்து மிகத் துரித வளர்ச்சி கண்ட இந்திய பெருநகரம் பெங்களூரு ஆகும். இந்த பத்தாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 38% ஆக இருந்தது. பெங்களூருவாசிகள் ஆங்கிலத்தில் பெங்களூரியன்ஸ் என்றும் கன்னடத்தில் பெங்களூரினவாரு என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் நகர மக்கள்தொகையில் சுமார் 39% ஆக இருக்கிறார்கள்.
நகரத்தின் பன்முகக் கலாச்சார இயல்பால் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பெங்களூரு வந்து குடியேறுகின்றனர். நகரின் மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 14.3% இருக்கிறார்கள்.
கன்னடம் மற்றும் ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவை நகரில் பேசப்படும் பிற முக்கிய மொழிகளாக உள்ளன. 2001 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பெங்களூரு மக்கள்தொகையில் 79.37% பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இது ஏறக்குறைய தேசிய சராசரியை ஒட்டி இருக்கிறது. முஸ்லீம்கள் மக்கள்தொகையில் 13.37% பேர் இருக்கிறார்கள். இதுவும் ஏறக்குறைய தேசிய சராசரி அளவை ஒட்டியே உள்ளது. கிறிஸ்தவ மற்றும் சமண மதத்தவர்கள் மக்கள்தொகையில் முறையே 5.79% மற்றும் 1.05% இருக்கிறார்கள். இது இம்மதங்களின் தேசிய சராசரிகளை விட இருமடங்காகும். ஆங்கிலோ இந்தியர்களும் நகரில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலுள்ள பிரிவினராக உள்ளனர். பெங்களூரு மக்கள்தொகையில் பெண்கள் 47.5% உள்ளனர். மும்பைக்கு பிறகு இந்திய பெருநகரங்களில் பெங்களூரு தான் இரண்டாவது பெரிய எழுத்தறிவு விகிதம் (83%) கொண்ட நகரமாய் உள்ளது. பெங்களூரு மக்கள்தொகையில் சுமார் 10% சேரிகளில் வாழ்கிறார்கள். மும்பையுடனும் மற்றும் நைரோபி போன்ற வளரும் நாடுகளின் பிற நகரங்களுடனும் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவேயாகும். இந்தியாவின் 35 பெரிய நகரங்களில் பதிவாகும் மொத்த குற்றங்களில் பெங்களூரு 9.2% பங்களிப்பை கொண்டிருப்பதாக 2004 தேசிய குற்றப் பதிவுகள் கழகம் சுட்டிக் காட்டுகிறது. டெல்லி மற்றும் மும்பை முறையே 15.7% மற்றும் 9.5% பங்களிக்கின்றன.
பண்பாடு
பெங்களூரு "இந்தியாவின் தோட்ட நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இங்கு லால் பாக் மற்றும் கப்பன் பார்க் உள்ளிட்ட பல பொதுப் பூங்காக்கள் உள்ளன.
பழைய மைசூர் சாம்ராச்சியத்தின் பாரம்பரிய கொண்டாட்ட அடையாளமான மைசூர் தசரா, அரசாங்கப் பண்டிகை ஆகும். பெரும் உற்சாகத்துடன் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
"கரக சக்தியோத்சவா" அல்லது பெங்களூரு கரகா என்றழைக்கப்படும் பெங்களூரின் மிக முக்கியமான பழமையான பண்டிகைகளை நகரம் கொண்டாடுகிறது. "தீபங்களின் பண்டிகை"யான தீபாவளி மக்கள்வாழ்க்கைமுறை மற்றும் மத எல்லைகளைக் கடந்து கொண்டாடப்படும் மற்றுமொரு முக்கிய பண்டிகையாகும். பிற பாரம்பரிய இந்திய பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி, உகாதி, சங்கராந்தி, ஈத் உல்-பித்ர், மற்றும் கிறிஸ்துமஸ் ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகின்றன. கன்னடத் திரைப்பட துறையின் தாயகமாக பெங்களூரு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 கன்னட திரைப்படங்கள் இங்கிருந்து வெளியாகின்றன.. மறைந்த நடிகரான ராஜ்குமார் கன்னடத் திரையுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்களில் மிக முக்கியமான ஒருவர் ஆவார்.
சமையல்கலையின் பன்முகத்தன்மை பெங்களூரின் சமூக மற்றும் பொருளாதார பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாய் உள்ளது. ரோட்டோரக் கடையினர், தேநீர்க்கடையினர், மற்றும் தென்னிந்திய, வட இந்திய, சீன மற்றும் மேற்கத்திய துரித உணவுகள் நகரில் மிகவும் பிரபலம் பெற்றுள்ளன. உடுப்பி உணவகங்கள் மிகவும் பிரபலம் பெற்றவையாக உள்ளன. இவை முதன்மையாக பிராந்திய சைவ உணவுகளை வழங்குகின்றன.
இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் முக்கிய மையமாகவும் பெங்களூரு இருக்கிறது. பாரம்பரிய இசை மற்றும் நடனக் கச்சேரிகள் ஆண்டு முழுவதிலும் குறிப்பாக ராமநவமி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களின் போது பரவலாக நடத்தப்படுகின்றன. நகரில் உற்சாகமான கன்னட நாடக இயக்கமும் இருக்கிறது. ரங்க சங்கரா போன்ற அமைப்புகள் இதனை முன்னெடுத்துச் செல்கின்றன. சர்வதேச ராக் கச்சேரிகள் நடப்பதற்கான முதன்மை இடங்களில் ஒன்றாகவும் பெங்களூர் ஆகியுள்ளது.
விளையாட்டு
மட்டைப்பந்து பெங்களூரின் மிகப் பிரபல விளையாட்டுகளுள் ஒன்றாகும். குறிப்பிடத்தக்களவில் தேசிய மட்டைப்பந்து வீரர்கள் பெங்களூரில் இருந்து வந்துள்ளனர். சிறுவர்கள் சாலைகளிலும் நகரின் பல பொது இடங்களிலும் சாலையோர கிரிக்கெட் விளையாடுகிறார்கள். பெங்களூரின் முதன்மையான உலகளாவிய மட்டைப்பந்து மைதானமாக எம். சின்னசுவாமி அரங்கம் உள்ளது. இது 40,000 பேர் அமரும் இடம் கொண்டதாகும். 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆகியவற்றின் ஆட்டங்கள் இங்கு நடந்துள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிளையணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பிரீமியர் ஹாக்கி லீக் (PHL) கிளையணியான பெங்களூரு ஹை-ஃபிளையர்ஸ் ஆகியவை நகரில் அமைந்துள்ளன. இந்தியாவின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணி உறுப்பினர்களான மகேஷ் பூபதி மற்றும் ரோகன் போபன்னா ஆகியோரும் பெங்களூரில் தான் வசிக்கிறார்கள். நகரில் ஆண்டுதோறும் பெண்கள் டென்னிஸ் கழகத்தின் பெங்களூரு ஓபன் போட்டிகள் நடக்கின்றன. செப்டம்பர் 2008 துவங்கி, ஆண்டுதோறும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் டென்னிஸ் ஓபன் ஏடிபி போட்டிகளும் பெங்களூரில் நடைபெறுகின்றன.
தேசிய நீச்சல் வெற்றிவீரரான நிஷா மிலெட், உலக ஸ்னூக்கர் வெற்றிவீரரான பங்கஜ் அத்வானி மற்றும் முன்னாள் அனைத்து இங்கிலாந்து ஓபன் பூப்பந்து வெற்றிவீரரான பிரகாஷ் படுகோனே ஆகியோரும் பெங்களூரில் இருந்து வரும் பிற விளையாட்டு பிரபலங்களில் அடங்குவர்.
கல்வி
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது. மும்மடி கிருஷ்ணராஜ உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது.
சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன. இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன. தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள். தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது.
1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும். இந்திய பல்கலைக்கழக தேசிய சட்டப் பள்ளி (NLSIU), இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூரு (ஐஐஎம்-பி) மற்றும் இந்தியப் புள்ளியியல் ஆய்வு நிறுவனம் ஆகிய தேசியப் புகழ்பெற்ற நிறுவனங்களும் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்தியாவின் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமும் பெங்களூரில் தான் அமைந்துள்ளது. முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (NIMHANS) பெங்களூரில் அமைந்துள்ளது.
ஊடகங்கள்
முதல் அச்சகம் பெங்களூரில் 1840 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 1859 ஆம் ஆண்டில் பெங்களூரு ஹெரால்டு பத்திரிகை பெங்களூரில் வெளியிடப்படும் முதல் வாரமிருமுறை ஆங்கில இதழாக வெளியானது. 1860 ஆம் ஆண்டில் மைசூர் விருட்டினா போதினி பெங்களூரில் விற்பனையாகும் முதல் கன்னட செய்தித்தாளானது. தற்போது விஜய கர்நாடகா மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை தான் முறையே கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பெங்களூரில் மிக அதிக அளவில் விற்பனையாகும் பத்திரிகைகளாக இருக்கின்றன. இவற்றுக்கு நெருக்கமாக பிரஜாவாணி மற்றும் டெக்கான் ஹெரால்டு ஆகியவை வருகின்றன.
இந்திய அரசாங்கத்தின் அலுவல்முறை ஒலிபரப்பு நிறுவனமான அனைத்து இந்திய வானொலி தனது பெங்களூரு நிலையத்தில் இருந்து 1955 ஆம் ஆண்டில் ஒளிபரப்பைத் துவக்கியது. ரேடியோ சிட்டி தான் பெங்களூரில் ஒலிபரப்பான முதல் தனியார் பண்பலை வானொலியாகும். சமீப ஆண்டுகளில், ஏராளமான பண்பலை நிலையங்கள் பெங்களூரில் தங்கள் ஒலிபரப்பைத் துவக்கியுள்ளன.
நவம்பர் 1, 1981 அன்று தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பு மையத்தை இங்கு நிறுவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் துவங்கியது. தூர்தர்ஷனின் பெங்களூரு அலுவலகத்தில் 1983 ஆம் ஆண்டில் ஒரு தயாரிப்பு மையம் நிறுவப்பட்டது. இதனையடுத்து 19 நவம்பர் 1983 முதல் கன்னடத்தில் ஒரு செய்தி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த முடிந்தது. 15, ஆகஸ்டு 1991 அன்று தூர்தர்ஷன் கன்னட செயற்கைக்கோள் சேனல் ஒன்றையும் துவக்கியது. அது இப்போது டிடி சந்தனா என்று பெயரிடப்பட்டுள்ளது. 1991 செப்டம்பர் மாதத்தில் ஸ்டார் டிவியின் சேனல்கள் ஒளிபரப்பைத் துவக்கியபோது தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் பெங்களூரில் கால்பதித்தன. பெங்களூரில் பார்க்க முடிகிற செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை சென்ற வருடங்களில் மிகுந்த வளர்ச்சி கண்டிருந்தாலும், இந்த வளர்ச்சி தொலைக்காட்சி அலைவரிசை வழங்குனர்கள் இடையே அவ்வப்போது மோதல்களுக்கும் இட்டுச் செல்கிறது.
பெங்களூரில் துவங்கிய முதல் இணைய சேவை வழங்குநர் பெங்களூரு STPI ஆகும். இந்நிறுவனம் 1990களின் ஆரம்பத்திலேயே இணைய சேவைகளை வழங்கத் துவங்கியிருந்தது. ஆயினும் இந்த இணைய சேவை பெருநிறுவனங்களுக்கு மட்டுமே அதிகம் பயன்பட்டதாய் இருந்தது. 1995 ஆம் ஆண்டின் இறுதியில் VSNL பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தத்தக்க தொலைபேசிக் கம்பிவழி இணைய சேவைகளை அறிமுகப்படுத்திய பின் தான் இந்நிலை மாறியது. இப்போது பெங்களூரு தான் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான அகலப்பட்டை இணைய இணைப்புகள் கொண்ட நகரமாக உள்ளது.
கூடுதல் பார்வைக்கு
பெங்களூரு சுற்றுலாத் தளங்கள்
கர்நாடகா
நம்ம மெட்ரோ
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
புருகத் பெங்களூரு மகாநகர பாலிகே - (மாநகராட்சி)
பெங்களூரு ஒருமுகச் சேவை வலைமனை
லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு
பெங்களூரு / பெங்களூரு நகர இணையதளம்
பெங்களூரு நிகழ்வுகள்
இந்தியாவின் மெட்ரோ நகரங்கள்
கருநாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள்
கர்நாடகாவிலுள்ள மாநகரங்கள்
பெங்களூர் நகர மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்
|
3794
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
|
எயிட்சு
|
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்,
இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்ற நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது
இத்தகைய நோய்ப்பரப்புதல் ஆசனவாய், யோனிக் குழாய் அல்லது வாய் வழி கொள்ளும் உடலுறவினாலோ, இரத்ததானத்தினாலோ, கிருமி பாதித்த ஊசிகளின் உபயோகத்தினாலோ, தாயிடமிருந்து குழந்தைக்கு கருத்தரிப்பு, பிரசவம், பாலூட்டுதல் போன்றவைகளினாலோ அல்லது வேறெந்த வகையிலாவது மேற்சொன்ன உடல்திரவங்களைச் சாரும்பொழுதோ ஏற்படக்கூடும்.
எயிட்சு தற்பொழுது ஒரு பரவல் தொற்று நோயாகும். 2007-ல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்சோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது. இம்மரணங்களில் நான்கில் மூன்று பகுதி ஆப்பிரிக்காவின் சகாராவுக்கருகில் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மனித மூலதனத்தைச் சிதைத்திருக்கிறது.
மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி. தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது,. எயிட்சு முதன்முதலில் அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் 1981-ல் கண்டறியப்பட்டது. 1980-களின் முற்பகுதியில் இந்நோய்க்கான காரணம் எச்.ஐ.வி. எனக் கண்டறியப்பட்டது.
எச்.ஐ.வி. எயிட்சுக்கான சிகிச்சை, நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வல்லதாயிருந்தாலும் தற்சமயம் இந்நோய்க்கு தடுப்பூசியோ நிரந்தர தீர்வோ இல்லை. மீளூட்டுநச்சுயிரி எதிர்மருந்து எச்.ஐ.வி. நோயின் இறப்புவிகிதத்தையும், பாதிப்பு விகிதத்தையும் குறைக்க வல்லதாயிருந்தாலும் இம்மருந்துகள் விலையுயர்ந்தனவாகவும், கிடைப்பதற்கு அரியனவாகவும் இருப்பதால் அனைத்து நாடுகளிலும் வாடிக்கையாக கிடைப்பதில்லை. இந்நோயை குணப்படுத்துவதற்கு உள்ள இத்தகைய இடர்பாடுகளால், நோய் வராமல் தடுத்தலே இப்பரவல் தொற்றுநோயைக் கட்டுபடுத்துவதிலுள்ள முக்கிய குறிக்கோள் எனக்கருதி வைரசின் பரவலைத் தடுக்க சுகாதார நிறுவனங்கள் பாதுகாப்பான உடலுறவையும், புதிய ஊசிகளை பயன்படுத்துதலின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர்.
அறிகுறிகள்
ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலமுடைய மனிதர்களில் உருவாகாத சில நிலைகளின் விளைவே எயிட்சு நோயின் அறிகுறிகள் ஆகும்.பெரும்பாலும் இவ்வசாதாரண நோய் நிலைகள் பாக்டீரியா, வைரசு, காளான் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நோய்கிருமிகளின் தாக்கத்தால் ஏற்படுகின்றன. இந்நோய்க் கிருமிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் எச்.ஐ.வியால் சீரழிக்கப்படுவதே நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்குக் காரணமாகும்.
வாய்ப்பை எதிர்நோக்கிய நோய்த் தொற்றுக்கள் எயிட்சு கண்ட மனிதர்களில் மிகுதியாகக் காணப்படுகிறது. எச்.ஐ.வி. கிட்டத்தட்ட அனைத்து உறுப்பு மண்டலங்களையும் பாதிக்கிறது.
எயிட்சு நோய் கண்டவர்களுக்கு காபோசியின் சதைப்புற்று, கருப்பை முகப்பு புற்றுநோய், நிணத்திசுப் புற்று என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்பு மண்டல புற்றுநோய் போன்ற புற்று நோய்கள் எளிதாக தாக்கும் தன்மை உள்ளது. கூடுதலாக எயிட்சு நோய் கண்டவர்களில் உடலளாவிய நோய் அறிகுறிகளான காய்ச்சல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில்) வீங்கிய சுரபிகள், நடுக்கம், தளர்ச்சி மற்றும் எடை குறைவு போன்றவை காணப்படும். அவரவர் வாழும் நிலப்பகுதியில் நிலவும் நோய் விகிதத்திற்கேற்ப எயிட்சு நோயாளிகள் பிரத்தியேக நோய்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்.
சுவாச நோய் தாக்கம்
நியுமோசிஸ்டிஸ் நிமோனியா (முன்பு நியுமோசிஸ்டிஸ் கரினியை நிமோனியா என அழைக்கப்பட்ட காரணத்தால் பிசிபி எனச் சுருக்கி வழங்கப்பட்டு இப்பொழுதும் அவ்வாறே அழைக்கப்படுகிறது). இது ஆரோக்கியமான நோயெதிர்ப்புத்திறன் பெற்றவர்களில் மிக அரிதாகவும், எச்.ஐ.வி. நோயாளிகளில் மிக சாதரணமாகவும் காணப்படுகின்றது. இந்நோய் நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியை எனும் கிருமியினால் ஏற்படுகின்றது.
மேற்கத்திய நாடுகளில் சரியான நோய்கண்டறிதல், சிகிச்சைமுறை மற்றும் நோய்க்கட்டுப்பாடு கண்டறியப்படும் முன்னர் இந்நோயே உடனடி மரணத்திற்கு காரணமாய் இருந்தது. "சி.டி.4" எண்ணிக்கை ஒரு மைக்ரோ லிட்டர் ரத்ததில் இருநூறு செல்களுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே நோய்த் தாக்கும் அபாயம் உள்ள போதிலும், வளர்ந்து வரும் நாடுகளில் எயிட்சு நோய் பரிசோதிக்கப்படாத நபர்களில் இந்நோய் எயிட்சின் முதல அறிகுறியாக உள்ளது.
காசநோய் எச்.ஐ.வியோடு தொடர்புடைய நோய் தாக்கங்களில் தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இது நோய் எதிர்ப்புத்திறன் உள்ள மனிதர்களுக்கும் சுவாசம் வழியாகப் பரவக்கூடியது. இந்நோய் கண்டறியப்படும் பட்சத்தில் எளிதாகக் குணப்படுத்தமுடியும். இந்நோய் எச் ஐ வி - யின் ஆரம்ப நிலையில் ஏற்படலாம். சிகிச்சையின் மூலம் குணப்படுத்த வல்லது. இருப்பினும், பன்மருந்துஎதிர்ப்பு ஒரு அதீத பிரச்சனையாகவே உள்ளது.
காசநோய் தாக்கம் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் நேரடி சிகிச்சை முறை மற்றும் ஏனைய மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளினாலும் குறைந்துவருகின்றது. ஆனால் எச்.ஐ.வி. பரவியுள்ள வளர்ந்துவரும் நாடுகளில் இத்தகைய மாற்றம் இல்லை. எச்.ஐ.வி-யின் ஆரம்ப நிலையில் ("சி.டி.4" எண்ணிக்கை > 300 செல்கள்/மைக்ரோ லிட்டர்), காசநோய் ஒரு வரையறுக்கப்பட்ட சுவாசநோயாக வெளிப்படுகிறது. எச்.ஐ.வி. நோய்த்தாக்கம் அதிகரிக்கும்பொழுது, காசநோய் சுவாசநோய்த் தன்மையில் இருந்து மாறுபட்டு நுரையீரலுக்கு வெளியே (உட்பரவிய) நோயாக வெளிப்படுகிறது. நோயறிகுறிகள் ஒரே பகுதியில் அல்லாமல், வெகுவாக எலும்பு மஜ்ஜை, எலும்பு, சிறுநீரக மற்றும் இரைப்பைக்குடல் வழி, கல்லீரல், மண்டல நாள முடிச்சு மற்றும் மைய நரம்பு மண்டலம் போன்றவைகளை பாதிக்கின்றது.
இரைப்பைக் குடல் கிருமித்தாக்கங்கள்
உணவுக்குழல் அழற்சி என்பது உணவு குழலின் (தொண்டையையும் இரைப்பையையும் இணைக்கும் குழல்) கீழ் முனையில் உள்ள படர்சவ்வில் ஏற்படும் அழற்சியாகும். எச் ஐ வி நோய் பாதிக்கப்பட்ட நபர்களில் இது காளான் (கேண்டிடியாசிஸ் )அல்லது வைரசினால் (ஹெர்பெஸ் சிம்ப்லக்ஸ்-1 அல்லது சைட்டோமேகல்லோ வைரசு )ஏற்படும் நோய்த்தாக்கம். அரிய நிகழ்வாக இது மைகோபாக்டீரியாவாலும் ஏற்படும்.
எச்.ஐ.வி. நோய் தாக்கத்தில் ஏற்படும் நாள்பட்ட வயிற்றுபோக்கிற்கான காரணங்கள் பலவாகும். அவைகளில் பொதுவாக பாக்டீரியாவால் (சால்மனெல்லா ,ஷிகல்லா , லிஸ்டீரியா அல்லது காம்பைலோபேக்டர் ) மற்றும் ஒட்டுண்ணி தாக்கம் மற்றும் அறிய சந்தர்ப்ப நோய்தாக்கங்களான கிரிப்டோஸ்போரிடியாஸிஸ், [[மைக்ரோஸ்போரிடியாஸிஸ்|மைக்ரோஸ்போரிடியாஸிஸ்{ /6}, மைகோபாக்டீரியம் ஏவியம் கூட்டு (எம் எ சி ) மற்றும் வைரசு (ஆஸ்ட்ரோ வைரசு, அடினோ வைரசு, ரோட்டா வைரசு மற்றும் சைட்டோமேகல்லோ வைரசு) சைட்டோமேகல்லோ வைரசு பெருங்குடல் அழற்சியை ஏற்படுத்துகிறது .
சில நிகழ்வுகளில், எச் ஐ வி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பக்கவிளைவாகவோ அல்லது எச் ஐ வி நோயின் தொடர்விளைவாகவோ வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.இது பெரும்பாலும் ஆரம்ப கால நோயின் குணாதிசயமாக இருக்கிறது.எதிருயிரிணியைப் பயன்படுத்தி கிளாஸ்ற்றிடியம் டிபிசில் போன்ற பாக்டீரியாக்கள் விளைவிக்கும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த நினைக்கும் போதும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எச் ஐ வி நோயின் பிந்தைய காலங்களில் ஏற்படும் வயிற்றுப்போக்கானது உணவு பாதையின் சத்துக்களை கிரகிக்கும் திறனில் ஏற்படும் மாற்றத்தால் விளைந்து எச் ஐ வி யின் உடலை இளைக்க வைக்கும் தன்மைக்கு துணைபோவதாய் இருக்கிறது.
நரம்பு மண்டல மற்றும் மனநல தொடர்பு
இந்நோயின்போது நாளடைவில் பலகீனமாகி விட்ட நரம்பு மண்டலத்தை நுண்ணியிரிகள் தாக்குவதின் மூலமாகவோ அல்லது நேரடி நோய்ப்பிணியின் காரணமாகவோ விதவிதமான மூளைநரம்பு விளைவுகள் ஏற்படலாம்.
ஒருவகை ஓரணு ஒட்டுண்ணி நோய் (டாக்சாப்பிளாசுமம்) ஒரு செல் ஒட்டுயிரியான டாக்சோபிளாசுமா காண்ட்டையால் ஏற்படுகிறது. இது பொதுவாக மூளையைத் தொற்றி டாக்சோபிளாசுமா மூளையழற்சியையும், கண்கள் மற்றும் நுரையீரலின் வியாதிகளையும் ஏற்படுத்தவல்லது. கிரிப்டோகாக்கல் மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைச்சவ்வு அழற்சி கிரிப்டோகாக்கஸ் நியோபார்மன்சு எனும் காளான் மூளை மற்றும் தண்டுவடத்தை சூழ்ந்துள்ள மூளை உறையைத் தொற்றும்போது ஏற்படுகிறது. இது காய்ச்சல், தலைவலி, மயக்கம், வாந்தி எடுக்கவேண்டும் என்ற உணர்வு மற்றும் வாந்தியை ஏற்படுத்தலாம். நோயாளிகளுக்கு வலிப்பு மற்றும் மன குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். சிகிச்சை அளிக்கத் தவறினால் மரணமும் ஏற்படலாம்.
தீவிர பல்குவிய வெள்ளையணு மூளையழற்சி (PML) என்பது மூளையின் நரம்பணுவால்களை சூழ்ந்துள்ள மையலின் நரம்புறையை படிப்படியாக அழித்து நரம்புகளில் அனிச்சை விளைவுக் கடத்தலைப் பாதிக்கும் [[நரம்புறை சிதைவு நோயாகும். இந்த நோயானது 70 சதவிகித மக்களிடையே உட்புதை நிலையையிலுள்ள நச்சுயிரியான ஜே சி வைரசால் நோயெதிர்ப்பு சக்தியற்ற எயிட்சு நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்படுகிறது. இந்நோய் விரைவாக முன்னேறி பெரும்பாலும் கண்டுபிடித்த சில மாதங்களுக்குள்ளேயே மரணத்தை ஏற்படுத்தவல்லது.
எயிட்சு மறதிநோய் தொகுப்பு என்பது எச் ஐ வி நோய்த்தொற்றால் தூண்டப்பட்டு எச் ஐ வி தொற்றிய மூளை, பெருவிழுங்கிகள் மற்றும் மைக்ரோகிளையாவின் நோயெதிர்ப்புத்திறன் ஊக்கத்தால் கிளர்ந்தெழும் ஒரு வளர்சிதைமாற்ற மூளையழற்சி நோயாகும். இவ்விதமான செல்கள் எச் ஐ வி யால் வளமாக தொற்றப்பட்டு நோயாளினதும் நச்சுயிரினதுமான நரம்புநச்சை சுரக்கின்றன. பிரத்தியேக நரம்புக் கோளாறுகள் எச் ஐ வி நோய் தொற்றி பல வருடங்கள் களித்து வெளிவந்து அறிவு, நடவடிக்கை மற்றும் வெளி நோக்கு நரம்பியக்கத் திறன் குறைபாடுகளைக் கொண்டிருக்கும். இவை குறைந்த "சி.டி.4" + "டி" செல் அளவுகளையும் இரத்தத்தில் அதிக நச்சுயிரி சுமையையும் கொண்டிருக்கும்.
இதன் பரவல் மேற்கத்திய நாடுகளில் 10 -20 சதவிகிதமும் இந்தியாவில் 1 -2 சதவிகிதமாகும்,. இந்த வித்தியாசம் எச் ஐ வி யின் உள்வகைகளைப் பொருத்ததாகும். எச் ஐ வி நோயாளிகளுக்கு பிந்தைய காலத்தில் எயிட்சுடன் தொடர்புடைய பித்து பிடிக்கக் கூடும். இது நரம்புகளின் அதிர்வுகடத்தும் பண்பின் இருமுனைக் கோளாறினால் ஏற்படும் பித்து நிகழ்வுகளைவிட அதிகமான எரிச்சலும், அறியும்சக்தி குறைபாடும், குறைவான வளமான மனநிலையையும் கொண்டிருக்கும். எச் ஐ வி யால் ஏற்படும் பித்து நாள்பட்டதாகவும் இருக்கும். பல்நோக்கு மருந்துகளாலான சிகிச்சையினால் இக்கூட்டு அறிகுறிகள் குறைவாகவே தென்படுகிறது.
கட்டிகளும் ஆபத்தான புற்றுகளும்
எச் ஐ வி நோயாளிகள் பலவிதமான புற்று நோய்களுக்கான வாய்ப்பை பெருமளவு கூட்டியிருக்கின்றனர். இது பிரதானமாக புற்றுநோய் திறனுள்ள டி என் ஏ வைரசு களான எப்ஸ்டீன்-பார் வைரசு (EBV), காபோசியின் சதைப்புற்று தொடர்புடைய ஹெர்பிஸ் வைரசு (KSHV) மற்றும் மனித பாப்பில்லோமா நச்சுயிரி போன்றவைகளின் சகத்தொற்றால் ஏற்படுகிறது.
காபோசியின் சதைப்புற்று எச் ஐ வி நோயாளிகளில் சாதாரணமாக காணப்படும் கட்டியாகும். இந்த கட்டி 1981 இல் ஓரினச்சேர்க்கையாளர்களிடையே தென்பட்டதே எயிட்சு பரவலின் முதன்மை அறிகுறிகளில் ஒன்றாகும். காமா ஹெர்பிசு வகையைச் சேர்ந்த காபோசியின் சதைப்புற்று தொடர்புடைய ஹெர்பிஸ் வைரசு (KSHV) எனும் நச்சுயிரியால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் ஊதா முடிச்சுகளாக தோலில் மட்டுமல்லாது பிற உறுப்புக்களான வாய், உணவு குழாய் மற்றும் நுரையீரலையும் தாக்க வல்லது.
உயர் நிலை பி செல் நிணத்திசுப் புற்று க்களான பர்கிட்டின் நிணநீர்ச் சுரப்பிப் புற்று, பர்கிட்ஸ் லைக் நிணநீர்ச் சுரப்பிப் புற்று, டிஃப்யூஸ் லார்ஜ் பி -செல் நிணநீர்ச் சுரப்பிப் புற்று, மற்றும் பிரைமரி சென்ட்ரல் நர்வஸ் சிஸ்டம் நிணநீர்ச் சுரப்பிப் புற்று ஆகியன எச் ஐ வி நோயாளிகளில் பெரும்பான்மையாக காணப்படுகின்றன.இத்தகைய புற்றுக்கள் மோசமான முன்னறிவித்தலை அறிவிக்கின்றன. சில நிலைகளில் இத்தகைய நிணத்திசுப்புற்றுகள் எயிட்ஸினை விவரிப்பதாக அமைந்துள்ளன. எப்ஸ்டீன்-பார் வைரசு(EBV) இத்தகைய நிணத்திசுப்புற்றுகள் பலவற்றை உருவாக்குகிறது.
எச் ஐ வி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை முகப்பு புற்றுநோயும் எயிட்ஸினை விவரிப்பதாக உள்ளது. இது மனித பேபில்லோமா வைரசினால் (HPV) ஏற்படுத்தப்படுகிறது.
மேலே கூறப்பட்ட எயிட்ஸினை விவரிக்கும் கட்டிகளைத்தவிர எச் ஐ வி நோயாளிகள் ஹாட்ஜ்கின்'சு நோய் மற்றும் மல துவார மற்றும் ஆசன வாய் புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியன எச் ஐ வி நோயாளிகளில் அதிகம் காணப்படுவதில்லை. எயிட்சு நோய் சிகிச்சைக்கு மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை அதிகம் உபயோகிக்கப்படும் இடங்களில் எயிட்ஸோடு தொடர்புடைய ஆபத்து வாய்ந்த புற்றுக்களின் தென்படுதல் குறைகிறது. ஆனாலும் எச் ஐ வி நோயாளிகள் மரணத்திற்கு ஆபத்தான புற்றுக்களே மிக முக்கிய காரணமாக விளங்குகிறது [62].
ஏனைய சந்தர்ப்பவாத தொற்றுக்கள்
பால்வினை (எயிட்சு) நோயாளிகளிடம் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நோய்த்தொற்றுகளால் மிதமான காய்ச்சல், எடை குறைவு போன்ற இனம் புரியாத நோய் அறிகுறிகளைக் காணலாம். இது மைகொபேக்டீரியம் ஏவியம்,மைகொபேக்டீரியம் இண்டர்செல்லுலரே மற்றும் சைடோமெகலோவைரசு(CMV) போன்ற தொற்றுக்களை உள்ளடக்கியது. CMV பெருங்குடல் அயர்ச்சியையும், சி எம் வி விழித்திரை அழற்சியையும் உருவாக்கி பார்வையின்மையை ஏற்படுத்த வல்லது.
நோய் பரவியுள்ள தென் கிழக்கு ஆசியாவில் பெனிசிலியம் மார்ணபீ தோற்றுவிக்கும் பெனிசிலினோசிசு நோய், எக்ஸ்ட்ரா பல்மனரி டியுபர்குளோசிஸ் மற்றும் கிரிப்டோகாகோசிசு க்கு அடுத்தப்படியாக எச் ஐ வி நோயாளிகளை அதிகம் தாக்கும் சந்தர்ப்பவாத நோய்த்தொற்றாக இருக்கிறது.
காரணம்
எச் ஐ வி நோய்த்தொற்றின் மிகக் கடுமையான உந்துதலில் விளைவதே எயிட்சு நோயாகும். எச் ஐ வி என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய உறுப்புகளான டி செல்களின் உட்பிரிவான சி.டி 4 + "டி" செல்கள், பெருவிழுங்கிகள் மற்றும் நரம்பு இழை செல்களைத் தொற்றும் ஒரு மீள்ஊட்டு நச்சுயிரியாகும் (Retrovirus). அது சி.டி 4+ "டி" செல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ அழிக்கிறது.
இரத்தத்தில் ஒரு மைக்ரோலிட்டருக்கு, இருநூறு செல்களே இருக்கும் அளவிற்கு சி.டி4+ "டி" செல்களின் அளவு எச் ஐ வி யால் அழிக்கப்பட்ட உடன் செல்வழி நோயெதிர்ப்பு ஒழிக்கப்படுகிறது. இரத்தத்தில் மீதமிருக்கும் சி.டி4+ "டி" செல்களின் அளவைப்பொருத்தும், மேலே குறிப்பிட்டதைப் போல ஏனைய தொற்றுக்களினைப் பொருத்தும் தீவிர எச் ஐ வி தொற்று நாளடைவில் நோய் உட்புதை எச் ஐ வி தொற்றாகவும், அதன்பின்னர் ஆரம்ப அறிகுறிகளுடைய எச் ஐ வி தொடராகவும், இறுதியாக எயிட்சாகவும் முன்னேறுகிறது [69].
மீள்ஊட்டு நச்சுயிரி எதிர்ப்புமருந்து உபயோகப்படுத்தாத பொழுது எச் ஐ வி எயிட்சாக முன்னேறுவதற்காகும் கால இடைநிலை ஒன்பது முதல் பத்து வருடங்களாகவும், எயிட்சு உருவான பின்னர் உயிர்வாழும் காலத்தின் இடைநிலை 9.2 மாதங்களே மட்டுமாகவும் உள்ளது [71]. எனினும், மருத்துவ குணாதிசயங்களுடனான வியாதியாக முன்னேறும் வேகம் மனிதர்களுக்கிடையே இரு வாரங்கள் முதல் இருபது வருடஙகள் வரையிலான மாறுபட்ட காலஅளவை உடையதாய் காணப்படுகிறது.
நோய் வளர்ச்சியின் வேகத்தை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. இதில் நோயாளியின் நோயெதிர்ப்புசக்தி எனும் எச் ஐ வி யிலிருந்து உடலைப் பாதுகாக்கும் காரணிகளும் அடங்கும்,. வயதானவர்கள் பலகீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டுள்ளதால் அத்தகையோரில் நோய் முற்றல் மிக விரைவாக நடக்கும் ஆபத்தைப் பெற்றிருக்கின்றனர்.
மருத்துவவசதியின்மை மற்றும் காசநோய் போன்ற சகத்தொற்று நோய்கள் ஆகியன விரைவான நோய் முற்றுதலுக்கு வழிவகுக்கின்றன,. நோய்த்தாக்கிய மனிதனின் மரபணு பாரம்பரியம் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே சிலர் குறிப்பிட்ட சில வகை எச் ஐ வி கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தி உடையவர்களாயிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒத்த மரபு நிலை CCR5-Δ32 மாறுபாடு உடையவர்கள், சில எச் ஐ வி வகைகளுக்கு எதிர்ப்பு சக்தியை உடையவர்களாய் இருக்கின்றனர். எச் ஐ வி மரபியல் மாறுபாடுகள் உடையதாக இருப்பதால் பல்வேறு வகைகளாக தோன்றி நோய்முற்றலில் வேறுபட்ட வேகத்தை கொண்டனவாய் இருக்கிறது,.
உடலுறவின் வாயிலாக பரவுதல்
ஒருவரின் உடல் திரவங்களோடு இன்னொருவரின் ஆசனவாய், பிறப்புறுப்பு அல்லது வாயின் உட்பகுதியில் உள்ள படர்சவ்வு படலம் தொடர்பு கொள்ளும் பொழுது இது ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பரவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவில் ஏற்றுக்கொள்ளுபவர்களுக்கு, செருகச் செய்பவர்களை விட ஆபத்து அதிகமாயும், பாதுகாப்பற்ற ஆசனவாய் வழி உடலுறவு மேற்கொள்ளுபவர்களுக்கு, பிறப்புறுப்பு வழி மற்றும் வாய் வழியேயான உடலுறுவு மேற்கொள்பவர்களை விட நோய்த் தொற்றும் ஆபத்து அதிகமாயும் காணப்படுகிறது. எனினும், செருகச் செய்பவர்களுக்கும், ஏற்றுக்கொள்ளுபவர்களுக்கும் நோய் பரவும் ஆபத்து சம அளவில் இருப்பதால், வாய்வழி உறவும் பதுகாப்பானதென்று கூறுவதற்கில்லை,. பலவந்தபடுத்தி உடலுறவு கொள்ளுதல் ஆணுறை பயன்படுத்தாமலேயே கொள்ளப்படுவதாலும், யோனிக்குழாய்க்கு அதிக சேதம் விளைவிப்பதாலும் எச் ஐ வி பரவுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது.
ஏனைய பாலியல் நோய்த்தொற்றுக்கள் (STI) பிறப்புறுப்புகளில் நுண்ணிய அரிமான புண்களை ஏற்படுத்தி தோல் மேலணியை சேதப்படுத்துவதன் மூலமும், விந்து மற்றும் யோனி மட கசிவுகளில் சிறுக சிறுக சேர்ந்துகொண்டிருக்கும் எச் ஐ வி தொற்றிய அல்லது தொற்றுக்காளாகும் நிணத்திசுக்கள் மற்றும் பெருவிழுங்கிகளின் மூலமும் எச் ஐ வி யின் கடத்துதலையும் நோய்த்தொற்றுதலையும் அதிகரிக்கச்செய்கிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் நோய்ப்பரவல் குறித்த ஆய்வுகள் பால்வினை நோய்களான சிபிலிஸ், கேன்க்ராய்ட் முதலியவைகளால் உருவாக்கப்படும் பிறப்புறுப்பு அரிமானப் புண்கள், எச் ஐ வி நோய்த்தொற்றை நான்கு மடங்குகள் அதிகரிக்கச் செய்வதாய் கூறுகின்றன. நிண அணுக்கள் மற்றும் பெருவிழுங்கிகளின் கூட்டணியை தன்னைச் சார்ந்த பகுதிகளில் அதிகரிக்கச் செய்வதன் மூலம் மேகவெட்டை நோய், கிளமீடியா மற்றும் ட்ரைக்கொமோனியாஸிஸ் போன்ற பால்வினை நோய்கள் நோய்தொற்றும் அபாயத்தை குறைந்த அளவேனும் அதிகரிக்கச் செய்வதாய் இருக்கின்றன.
எச் ஐ வி யின் நோய்பரப்புதல், அதன் நோய்த்தொற்று திறனின் அடையாளக் குறியீட்டைப் பொறுத்தும், நோயில்லாதவரின் நோய்த்தொற்றுக்குள்ளாகும் அபாயத்தைப் பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. நோயின் நிலையைப் பொறுத்து நோய்த்தொற்றுதிறன் மாறுபடுவதாயும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானதாயும் இருக்கிறது. இரத்தத்தில் நச்சுயிரி சுமை கண்டுபிடிக்க முடியாததாய் இருந்தாலும் விந்து மற்றும் பிறப்புறுப்புக் கசிவுகள் நச்சுயிரியற்று உள்ளன எனச் சொல்வதற்கில்லை. எனினும் இரத்தத்தில் ஏற்படும் ஒவ்வொரு பத்து மடங்கு எச் ஐ வி அதிகரிப்பும் நோய்த்தொற்றை 81 சதவிகிதம் அதிகரிக்கும். இயக்குநீர் மாற்றங்களாலும் பெண்ணுறுப்பின் நுண்ணுயிரிச் சூழலாலும், உடல் இயக்கு இயலினாலும், பெண்கள் எச் ஐ வி நோய்த்தொற்றுக்களாகும் வாய்ப்பையும், பால்வினை நோய்களுக்குள்ளாகும் தன்மையையும் பெற்றிருக்கின்றனர்,. எச் ஐ வி யின் ஒரு மாதிரியால் தொற்றப்பட்டவர்கள் பிற்காலங்களில் வேறு ஆபத்தான மாதிரிகளால் தொற்றக்கூடும்.
ஒரே முறை உடலுறவினால் நோய்த்தொற்றுவது கடினமாகும். பலருடன் வைத்திருக்கும் நீண்ட கால பாலியல் தொடர்புகளின் போக்குடன், அதிவேகமான நோய்த்தொற்று பரவல் காணப்படுகிறது. இத்தகைய நிலைமை இந்நச்சுயிரி நோய்ற்ற துணைக்குப் பரவி அவரிடமிருந்து பிறருக்கு பரவ வழிவகுக்கிறது. ஒருவர் ஒரு காலகட்டத்தில் இன்னொருவருடன் மற்றுமே உறவு வைத்திருப்பது அல்லது எப்போதாவது நிகழும் உடலுறவுகள் குறைந்த நோய்த்தொற்று வேகத்தைக் கொண்டிருக்கிறது. ஆணோடு பெண் வைத்திருக்கும் உறவின் மூலம் எச் ஐ வி பரவுவது வேற்றிடங்களைவிட ஆப்பிரிக்காவில் அதிகமாக பரவுகிறது. இதற்கான காரணம் ஐம்பது சதவிகித ஆப்பிரிக்க பெண்களின் யோனியின் படர் சவ்வினை சிதைக்கும் குறட்டை நோய் சிஸ்டோஸோமியாசிஸ் எனும் ஒட்டுண்ணி வியாதியாகும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இரத்தத்தின் நோய்க் காரணிகளால் பாதிக்கப்படும்பொழுது
இந்த நோய்த் தொற்றல் வழி பெரும்பாலும் சிரை வழியாக போதைமருந்து போடுபவர்களுக்கும், இரத்தம் உறையாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இரத்ததானம் மற்றும் இரத்த பொருட்கள் தானம் பெறுபவர்களுக்கும் பொருத்தமானது. எச் ஐ வி தொற்றப்பட்ட இரத்தத்தால் கிருமி தாக்கப்பட்ட ஊசிகளை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பலமுறை பயன்படுத்துதல் எச் ஐ வி பரப்ப முக்கியமான காரணமாய் இருக்கிறது.
வட அமெரிக்கா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் ஊசிகளைப் பகிர்தலே மூன்றில் ஒரு பங்கு எச் ஐ வி நோய்த் தொற்றுக்கு காரணமாகும். எச் ஐ வி நோயாளி மீது பயன்படுத்தப்பட்ட ஊசியை ஒரே முறை பயன்படுத்துவதால் 150 பேரில் ஒருவருக்கு எச் ஐ வி தொற்றுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. (மேலே அட்டவணை பார்க்க) எச் ஐ வி எதிர் மருந்துகள் மூலம் தொடர்புக்கு பிந்தைய நோய்க்கட்டுப்பாடு முறைகளை மேற்கொள்ளுவதன் மூலம் நோய் தொற்றும் அபாயத்தை மேலும் குறைக்கலாம்.
பச்சை குத்துதல் மற்றும் துளையிடுதல் ஆகியன மேற்கொள்ளுபவர்களுக்கும் இதே வழிமுறை மூலம் நோய்த்தொற்று நிகழலாம். சப்-சகாரன் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் திகழும் மருத்துவ வசதிக் குறைபாடு மற்றும் போதிய பயிற்சியின்மை போன்றவை இந்நாடுகள் உலகளாவிய நோய்த்தடுப்பு முறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக இல்லை.
ஏறத்தாழ இரண்டரை சதவிகிதம் எச் ஐ வி நோய்த்தொற்று பாதுகாப்பற்ற உடல்நலம் பேண பயன்படுத்தப்படும் ஊசிகளால் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் அவை மக்கள் நல பணியாளர்கள் மூலம் எச் ஐ வி பரவுவதைத் தடுக்க நோய்த் தடுப்பு முறைகளைக் கையாளுமாறு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது.
வளர்ந்த நாடுகளில் இரத்ததானத்தின் மூலம் எச் ஐ வி பரவுதல் தரமான நன்கொடையாளர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் எச் ஐ வி நோய் பாதிப்பு ஆய்வின் மூலமும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பான்மையான மக்களுக்கு பாதுகாப்பான இரத்தம் கிடைப்பதில்லை எனவும் உலகளாவிய எச் ஐ வி நோய் பரவலில் ஐந்து சதவிகிதம் முதல் பத்து சதவிகிதம் இரத்ததானத்தின் மூலமும் இரத்தபொருட்கள் தானத்தின் மூலமுமே நடக்கிறது எனவும் உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.
பிறப்பு சார்ந்த நோய் பரவுதல்
தாயிடமிருந்து குழந்தைக்கு,குழந்தை கருப்பையில் இருக்கும்போதே கர்ப்பகாலத்தின் கடைசி வாரங்களிலும் பிரசவத்தின் போதும் நோய்த் தொற்றல் நடக்கிறது. சிகிச்சை அளிக்காத பொழுது கர்ப்பகாலத்தின் போதோ, பிரசவ வலியின் போதோ அல்லது பிரசவத்தின் போதோ தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுதல் 25 சதவிகிதமாகும். ஆனால் தாய் ரெட்ரோ வைரல் எதிர் மருந்து சிகிச்சைக்கு உட்பட்டு மகப்பேறு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பொழுது நோய்பரவுதல் வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே. நோய்த்தொற்றும் அபாயம் குழந்தை பெரும் பொழுது தாயின் வைரசு சுமையைப் பொறுத்துள்ளது. வைரசு சுமை அதிகமாக இருப்பின் நோய்த்தொற்றும் அபாயம் அதிகமாக இருக்கும். தாய்ப்பாலூட்டுதலும் நோய்ப் பரவலை நான்கு சதவிகிதம் அதிகரிக்கிறது.
தவறான நம்பிக்கைகள்
எச் ஐ வி/எயிட்சை சுற்றி பல தவறான கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் சாதாரண தொடுதலின் மூலம் எயிட்சு பரவும், கன்னியுடன் கொள்ளும் உடலுறவு எயிட்சை குணமாக்க வல்லது மற்றும் எச் ஐ வி ஓரினச் சேர்க்கையாளர்களையும் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களையுமே தாக்கும் என்ற மூன்றும் முக்கியமானவை. ஆசனவாய் மூலம் ஓரினச் சேர்க்கையாளர்களிடையே உடலுறவு கொள்வது எயிட்சுக்கு வழிவகுக்கும் என்பதும், பள்ளிகளில் ஓரினச்சேர்க்கை பற்றிய திறந்த கலந்துரையாடல் ஓரினச்சேர்க்கையையும் எயட்சையும் பெருக்கும் என்பன இது போன்ற ஏனைய தவறான எண்ணங்களாகும் [121].
உடல் இயக்க நோய்க்குறி இயல்
எயிட்ஸின் உடல் இயக்க நோய்க்குறியியல் ஏனைய கூட்டியங்களைப் போல மிக சிக்கலானது. [124] இறுதியில் எச் ஐ வி "சி.டி.4" + "டி" உதவி நிண அணுக்களை அழித்து எயிட்சை உருவாக்குகிறது. எயிட்சோ நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி வாய்ப்பு எதிர்நோக்கிக் காத்திருக்கும் நோய்த்தொற்றுக்களுக்கு வழிவகுக்கிறது. நோய் எதிர்ப்பு உருவாவதற்கு "டி" நிண அணுக்கள் மிகவும் இன்றியமையாதவை ஆகும். அவை இல்லாத பொழுது நோய்த் தொற்றுக்களை விரட்டவும் புற்று அணுக்களை அழிக்கவும் உடலால் இயலாது. "சி.டி.4" + "டி" செல் அழிவின் முறை தீவிர நோய்நிலையிலும் நாள்பட்ட நோய்நிலையிலும் மாறுபடுகிறது.
தீவிர நோய்நிலையில் "சி.டி.4" + "டி" செல்களின் அழிவு, எச் ஐ வி யால் தூண்டப்பட்ட செல் அழிவு மற்றும் செல் நச்சு "டி" செல்களின் நோய்தொற்றிய செல்களைக் கொல்லும் பாங்கு ஆகியவற்றின் வாயிலாக நிகழ்கிறது. திட்டமிடப்பட்ட செல் மரணத்தின் மூலமாகவும் இது நிகழலாம். நாள்பட்ட நோய் நிலையில், உடலளாவிய நோயெதிர்ப்பு தூண்டுதலின் விளைவுகளினால், புது "டி" செல்கள் தயாரிக்கும் வல்லமையை நோயெதிர்ப்பு மண்டலம் படிப்படியாக இழந்து விடும் தன்மையே "சி.டி.4" + "டி" செல்கள் குறைவதற்கு காரணமாய் இருக்கிறது.
எயிட்ஸின் பிரதான குணாதிசயமான நோயெதிர்ப்புக் குறைபாட்டின் அறிகுறிகள், மனிதரை நோய்த்தொற்றி பல வருடங்கள் வரை புலப்படாமல் போனாலும் நிண அணுக்களின் புகலிடமான குடற்பகுதி மேல்சவ்வு போன்ற பகுதிகளில், "சி.டி.4" +"டி" செல்களின் பெரும்பான்மை இழப்பு, நோய்த்தொற்றின் முதல் வாரங்களிலேயே ஏற்பட்டுவிடுகிறது. [128]குறிப்பாக குடற்பகுதி மேல்சவ்வு பகுதிகளில் "சி.டி.4" + "டி" செல்கள் அழிக்கப்பட காரணம் ,பெரும்பான்மையான "சி.டி.4" + "டி" செல்கள் CCR5 சக ஏர்புணர்விகளைக் கொண்டிருக்கும். இரத்தத்தில் இருக்கும் "சி.டி.4" + "டி" செல்களோ மிகக் குறைவான CCR5 சக ஏர்புணர்விகளையே கொண்டிருக்கும்.[130]
தீவிர நோய் நிலையில் எச் ஐ வி CCR5 சக ஏர்புணர்விகளைக் கொண்டிருக்கும் "சி.டி.4" + செல்களை, தேடிப் பிடித்து அழிக்கிறது. ஒரு பலமான நோயெதிர்ப்பு சக்தி எழும்பி, படிப்படியாக நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி நோயுட்புதை நிலையைத் தோற்றுவிக்கிறது. ஆரம்ப நோய்நிலையில், உயிருக்கு ஆபத்தான பிற நோய்த்தொற்றுக்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு நிலைத்திருப்பினும், குடற்பகுதி மேல்சவ்வு "சி.டி.4" + "டி" செல்கள் நோய்க்கிருமித்தாக்கம் முழுவதும் அழிந்தவண்ணமே இருக்கும்.
விடாமல் நடந்துகொண்டிருக்கும் எச் ஐ வி யின் பல்பிரிவாக்கம், நாள்பட்ட நோய் நிலை முழுவதிலும் ஒரு உடலளாவிய நோய் எதிர்ப்பு தூண்டுநிலையைத் தோற்றுவிக்கிறது. நோய் எதிரணுக்களைத் தூண்டி அழற்சி உண்டுபண்ணும் சைடோகைன்களை வெளிவிடும் இத்தகைய நோயெதிர்ப்பு தூண்டுநிலை, எச் ஐ வி மரபணு பொருட்களாலும், எச் ஐ வி பல்பிரிவாக்கத்திற்கு எதிராக எழும் நோய் எதிர்ப்புத் திறன் உருவாக்கத்தாலும் ஏற்படுகிறது.தீவிர நோய்நிலையில் நிலவும் குடற்பகுதி மேல்சவ்வு பகுதிகளின் "சி.டி.4" + "டி" செல்களின் அழிவு ஏற்படுத்தும், உட்சவ்வு வேலி நோயெதிர்ப்பு கண்காணிப்பு ஒழுங்குச்சேதம் மற்றுமொரு காரணமாகும்.
மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தைக் குடலின் இயற்கையான நுண்ணுயிரிகளுக்கு கையளித்து விடுகிறது. ஆரோக்கியமான நபர்களிலோ இந்நுண்ணுயிரிகள் உட்சவ்வு நோயெதிர்ப்பு மண்டலத்தால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நோயெதிர்ப்புத் தூண்டுதலால் ஏற்படும், "டி" செல் தூண்டப்படுதலும் அவற்றின் பெருக்கமும் அவற்றை எச் ஐ வி நோய்க் கிருமியின் புதிய இலக்காக்குகின்றன.இரத்தத்தின் "சி.டி.4" + "டி" செல்களில் 0.01-0.10 சதவிகிதம் அளவே நோய்த்தொற்றுக்காளாவதால், "சி.டி.4" + "டி" செல்களின் ஒட்டுமொத்த அழிவிற்கு, எச் ஐ வி யின் நேரடி தாக்குதல் மட்டுமே காரணமாக இருத்தல் இயலாது.
நோயெதிர்ப்பு மண்டலம் தூண்டப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது ஏற்படும் திட்டமிடப்பட்ட செல் மரணத்திற்கு ஆளாவதே "சி.டி.4" + "டி" செல் அழிவிற்கு முக்கிய காரணமாகும். இழந்த "டி" செல்களை ஈடுகட்ட வெளிக்கணையமானது புது "டி" செல்களை விடாமல் தயாரித்துக் கொண்டிருந்தாலும், வெளிக்கணைய அணுக்கள் மீதான எச் ஐ வி யின் நேரடி தாக்குதல், வெளிக்கணையத்தின் இழப்பு மீட்புத் தன்மையைப் படிப்படியாக அழித்து விடுகிறது. எனவே நாளடைவில் போதுமான நோயெதிர்ப்புசக்தினிலைக்குத் தேவையான குறைந்தபட்ச "சி.டி.4" +"டி" செல்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, எயிட்ஸுக்கு வழிவகுக்கிறது.
பாதிக்கப்பட்ட செல்கள்
எச் ஐ வி நச்சுயிரி எந்த வழியில் நுழைந்தாலும் கீழ்கண்ட செல்களை முதலில் தாக்குகிறது.
நிண நாள மண்டலம் :
"சி.டி."4+ "டி"-உதவிச் செல்கள்
பெருவிழுங்கிகள்
ஒற்றைக் குழியங்கள்
"பி"-"பி"-நிணநீர்க் குழியங்கள்
சில நாள உட்சவ்வு செல்கள்
மைய நரம்பு மண்டலம் :
நரம்புமண்டலத்தின் மைக்ரோகிளையா
ஆஸ்ட்ரோசைட்டுகள் - நரம்பு நார்த்திசுக்கள்
ஒலிகோடென்றோசைட்டுகள்
நரம்பு செல்கள் - சைடோகைன்கள் மற்றும் ஜி.பி.-120 யின் செயல் மூலம் மறைமுகமாக
நோயின் விளைவு
இந்நச்சுயிரிக்கு உயிரணு தாக்கும் பண்பு உள்ளது. ஆனால் அது எவ்வாறு நடைபெறுகிறது என்பது இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. இது நீண்ட காலங்கள் செல்களில் செயலற்று இருக்கும் வல்லமையையும் பெற்றுள்ளது. இந்த பண்பு "சி.டி."4-ஜி.பி. 120 இடையே நடக்கும் பின்னிய செயல்விளைவால் நிகழ்கிறதென எண்ணப்படுகிறது.
எச் ஐ வி வைரசின் மிக முக்கிய விளைவு, "டி"-உதவி செல்களின் வீழ்ச்சியும் அழிவும் ஆகும். செல்லானது கொல்லப்படுகிறது அல்லது செயல்பட முடியாத அளவிற்கு சிதைக்கப்படுகிறது. (இவை வெளிப்புரதங்களுக்கு சவாலாக இருப்பதில்லை). நோய்த்தொற்றிய "பி" செல்களாலும் எதிர்ப்பான்களை தயார் செய்ய இயல்வதில்லை. இவ்வாறாக நோயெதிர்ப்பு மண்டலம் வீழ்ச்சியடைந்து நோய்த்தொற்றுக்கள் மற்றும் புற்றுக்கட்டிகள் போன்ற பிரத்தியேக எயிட்சு சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது (மேலே பார்க்க).
மைய நரம்பு மண்டலத்தின் செல்களில் ஏற்படும் நோய்த்தொற்று தீவிர கிருமிகளற்ற மூளை உறை அழற்சியையும், தீவிரக்குறைவான மூளை அழற்சியையும் வெற்றிட தண்டுக்கொழுப்பழற்சியையும் புற எல்லை நரம்பழற்சியையும் ஏற்படுத்துகிறது. பின்னர் அது எயிட்சு நோய் புத்தி சுவாதீனமின்மையைத் (எயிட்சு பித்து) தோற்றுவிக்கிறது.
"சி.டி."4-ஜி.பி.120 இன் பின்னிய செயல்விளைவு (மேலே பார்க்க) சைடோமகேலோ வைரசு, கல்லீரல் அழற்சி வைரசு மற்றும் ஹெர்பிஸ்சிம்ப்ளெக்சு வைரசு போன்ற நச்சுயிரிகளுக்கு அனுமதியளிக்கும் காரணத்தால் செல் சிதைவு வலுப்பெறுகிறது.
மரபணு அடிப்படை
விரிவான விளக்கத்திற்கு கீழ் காண்பவற்றைக் காண்க:
எச் ஐ வி யின் அமைப்பும் மரபணுக் கோர்வையும்
எச் ஐ வி யின் பல்பிரிவாக்கச் சுழற்சி.
எச் ஐ வி யின் நகரும் விளைவு'' நோய் நிர்ணயம்
எச் ஐ வி யினால் தாக்கப்பட்ட மனிதர்களில் நோய் கண்டறிதல் சில நோய் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது. ஜூன் 5,1981-லிருந்து எச் ஐ வி யின் நோய்த் தோன்று வழி ஆய்தல் மற்றும் நோய் அழிவு ஆய்தலைப் பற்றி, பேங்குய் வரையறை மற்றும் 1994 இன் உலக சுகாதார நிறுவனத்தின் விரிவான எயிட்சு நோய்க்கான வரையறை, போன்ற பல வரையறைகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.ஆனாலும் இவ்வரையறைகள் நுட்பமற்றதாகவும் பிரத்யேகமற்றதாகவும் இருப்பதினால் நோயாளிகளை அவரவர் நோய்நிலைப்படி வகைப்படுத்துதல் இவற்றிற்கு தேவையற்றது. வளரும் நாடுகளில் நோய் மற்றும் ஆய்வக ஆராய்ச்சி ஆதாரக் கூறுகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட எச் ஐ வி தொற்று மற்றும் நோய்க்கான உலக சுகாதார நிறுவன வகைப்பாட்டு முறையும், வளர்ந்த நாடுகளில் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் நோய்ப்பகுப்பு முறையும் பின்பற்றப்படுகின்றன.
உலக சுகாதார அமைப்பு நோய் நிலை நிர்ணயம்
1990 இல் உலக சுகாதார நிறுவனம் இந்நோய்த் தொற்றுகளையும் நிலைகளையும் ஒன்றுபடுத்தி எச் ஐ வி-1 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான வகைப்பாட்டு முறையை அளித்துள்ளது. இது, செப்டம்பர் 2005 இல் மறுவரையறுக்கப்பட்டது. இந்நோய் நிலைகள் பெருமளவு ஆரோக்கியமான மனிதர்களில் எளிதாகக் குணப்படுத்தவல்ல சந்தர்ப்பவாத நோய்த் தொற்றுக்களேயாகும்.
நிலை I: எச் ஐ வி நோய்த் தொற்று அறிகுறிகளற்றதாக இருக்கிறது. இதை எயிட்சு என்று கூறமுடியாது.
நிலை II: இது தோல் மற்றும் உட்சவ்வு வெளிப்பாடுகளையும் திரும்பத் தோன்றும் மேல் சுவாச பாதையின் நோய்த் தொற்றுக்களையும் கொண்டிருக்கும்.
நிலை III: ஒரு மாதத்துக்கு மேலாக இருந்துகொண்டிருக்கும் காரணம் கூற இயலாத நாள்பட்ட வயிற்றுப்போக்கு, கடுமையான பாக்டீரியாக்களின் தொற்று மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட காசநோயைக் கொண்டிருக்கும்.
நிலை IV: இது மூளையில் டாக்சோபிளாசுமோசிசையும், உணவுக் குழாய், மூச்சுக் குழாய், சிறு மூச்சுக் குழாய், நுரையீரல் போன்றவற்றில் கேண்டிடியாசிசு, காபோசியின் சதைப்புற்று ஆகியவற்றையும் கொண்டிருக்கும். இந்நோய்கள் எயிட்சின் அறிகுறிகளாகத் திகழ்பவை.
நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் வகைப்பாட்டியல் முறை
நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களால் எயிட்சைக் குறித்து இரு வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. முதலாவது வரையறை, எயிட்சினை அதனுடன் சம்பந்தப்பட்ட நோய்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, எச் ஐ வி யின் கண்டுபிடிப்பாளர்கள், அதற்கு அப்பெயரை இடுவதற்கு காரணமாய் இருந்த நோயானது நிணநீர்ச் சுரப்பி நோயாகும் [142][144]. 1993 இல் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் எயிட்சின் வரையறையை "சி.டி.4" + "டி" செல்களை, ஒரு மைக்ரோ லிட்டர் இரத்தத்தில் இருநூறுக்கும் குறைவாகவோ அல்லது அனைத்து நிண செல்களின் எண்ணிக்கையில் பதினான்கு சதவிகிதத்திற்கு குறைவாகவோ பெற்றிருக்கும் அனைத்து எச் ஐ வி நேர்மறை மக்களும் எயிட்சில் அடங்குவர் என எயிட்சின் வரையறையை விரிவாக்கம் செய்திருக்கிறது [146]. வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான எயிட்சு நோயாளிகளுக்கு இந்த வரையறையையோ, அல்லது 1993 க்கு முந்தைய வரையறையையோ பயன்படுத்துகின்றனர். இத்தகைய எயிட்சு நோய் நிர்ணயம், சிகிச்சைக்கு பின்னர் இரத்தத்தின் 1 மைக்ரோ லிட்டருக்கு, "சி.டி.4" + "டி" செல்களின் எண்ணிக்கை இருநூறை விட அதிகரித்தாலும் அல்லது எயிட்சு இருப்பதைப் பறைசாற்றும் ஏனைய நோய் அறிகுறிகள் குணமாக்கப்பட்ட பின்னரும் நிலைத்து நிற்கிறது.
எச் ஐ வி சோதனை
எச் ஐ வி யால் தொற்றப்பட்டிருப்பதை பல மக்கள் அறியாதிருக்கின்றனர். உடலுறவு கொள்ளும் நகர மக்கள்தொகையில் 1சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே, எச் ஐ வி சோதனைக்கு உட்பட்டிருக்கின்றனர். கிராமங்களில் இந்த விகிதம் இன்னும் குறைவானதாகும். மேலும் நகர நல வாரியங்களுக்கு வருகை தரும் 0.5 சதவிகித கர்ப்பிணிப் பெண்களே அறிவுறுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு சோதனை முடிவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர். கிராம நல வாரியங்களில் இது இன்னும் குறைவாயிருக்கிறது.. எனவே மருத்துவம் மற்றும் மருத்துவ ஆய்வில் பயன்படுத்தப்படும் கொடையாளரின் இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்கள் நோய் பாதிப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.
எச் ஐ வி சோதனைகள் பெரும்பாலும் தமனி இரத்தத்திலேயே நடத்தப்படுகின்றன. பெரும்பாலான ஆய்வகங்கள் எதிர் எச் ஐ வி எதிர்க் காரணிகளையும் (IgG மற்றும் IgM), எச் ஐ வி p24 நோய் எதிர்ப் புரதத்தையும் கண்டறியும், நான்காம் தலைமுறை நோய் பாதிப்பாய்வு சோதனைகளை பயன்படுத்துகின்றன. முந்தைய சோதனையில் எதிர்மறையென கருதப்பட்ட நோயாளியிடம் எச் ஐ வி எதிர்காரணியோ அல்லது எதிர்ப்புரதமோ கண்டறியும் பட்சத்தில் அது எயிட்சு நோய்க்கு சான்றாக எண்ணப்படும்.நோயாளிகளின் முதலாம் மாதிரி எயிட்சு நோய்க்கூறுகளை வெளிப்படுத்தினால் அவர்கள் அதனை உறுதிப்படுத்தும் படிக்கு அவர்கள் பிறிதொரு இரத்த மாதிரி மூலம் இரண்டாம் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
முதலாம் நோய்த்தொற்றிற்கும் அதற்கு எதிராகக் கண்டுபிடிக்கவல்ல நோய் எதிர்க்காரணிகள் உருவாகும் காலத்திற்கும் இடைப்பட்ட காலமான ஜன்னல் காலம் ஊனீர் மாற்றமடைந்து நேர்மறைஎன சோதித்தறிவதற்கு 3–6 மாதங்கள் பிடிக்கும். ஜன்னல் காலத்தில் பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலம் இந்நச்சுயிரியைக் கண்டுபிடித்தல் சாத்தியமான ஒன்றாகும்.இதன் மூலம் நான்காம் தலைமுறை EIA நோய்பாதிப்பாய்வைவிட விரைவாக நோய்த்தொற்று கண்டுபிடிக்கப் படுகிறதென ஆய்வுகள் கூறுகின்றன.
பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலம் நேர்மறையென அறிவிக்கப்பட்ட முடிவுகள் எதிர்க்காரணி சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
எச் ஐ வி யால் தொற்றப்பட்ட தாய்க்குப் பிறந்த பச்சிளம் குழந்தைகளில் நடத்தப்படும் வழக்கமான எச் ஐ வி சோதனைகள் குழந்தையின் இரத்தத்தில் இருக்கும் தாய் வழி நோய் எதிர்க்காரணிகளால் நம்பத் தகுந்தவை அல்ல. எனவே குழந்தையின் நிண அணுக்களில் அமையப்பெற்றிருக்கும் எச் ஐ வி முன் நச்சுயிரியின் டி என் ஏ யை சோதித்தறியும் பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலமே நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்க இயலும்.
தடுக்கும் முறைகள்
எச் ஐ வி நோய் பரப்பலுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுபவை உடலுறவு, நோய்த்தொற்றிய உடல் திரவங்கள், மற்றும் திசுக்களுடனான தொடர்பு, பிறப்பு சார்ந்த காலகட்டத்தில் தாயிடமிருந்து கருவுக்கோ, குழந்தைக்கோ ஏற்படுவது. நோய்த் தொற்றப்பட்டவர்களின் உமிழ்நீர், கண்ணீர் மற்றும் சிறுநீரில் எச் ஐ வி கண்டுபிடிக்கப்படும் போதிலும் இத்தகைய சுரப்பு நீர்களின் மூலம் நோய்த்தொற்றியதாக எவ்வித பதிவுகளும் இல்லை. இவற்றின்மூலம் நோய்தொற்றும் அபாயம் மிக அற்பமானாதே.
உடலுறவு
பெரும்பாலான எச் ஐ வி நோய்த்தொற்றுக்கள், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பரப்பப்படுகிறது. உலகம் முழுவதும் எச் ஐ வி நோய் பரப்பலுக்கான முக்கிய காரணம் ஆணும் பெண்ணும் கொள்ளும் உடலுறவினால் விளைவதேயாகும். உடலுறவு நிகழ்வின் போது ஆணுறை அல்லது பெண்ணுறை உபயோகிப்பது மட்டுமே எச் ஐ வி மற்றும் ஏனைய பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்தையும் கர்ப்பமடைவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. முறையான ஆணுறை பயன்பாடு வெவ்வேறு பாலரிடையே எச் ஐ வி நோய்த்தொற்றும் அபாயத்தை ஏறத்தாழ எண்பது சதவிகிதம் குறைத்தாலும், ஒவ்வொரு தருணத்திலும் ஆணுறைகளை சரியாக உபயோகப்படுத்தும்போது அதிக பலன் விளைவதாகத் தற்போதைய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
மரப்பால் வகை ஆணுறைகளை எண்ணெய் போன்ற வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்துவதே எச் ஐ வி மற்றும் ஏனைய பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்தைக் குறைக்க வல்ல ஒரே சிறந்த தொழில்நுட்மாகும். பெட்ரோலியம் ஜெல்லி, வெண்ணெய், பன்றிக் கொழுப்பு போன்ற எண்ணெய் போன்ற வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிப்பது மரப்பாலை கரைத்து துளைத்தன்மையுடையதாக்குமாதலால் இவற்றை உபயோகிப்பது ஏற்றதல்ல என்று ஆணுறை தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். தேவைப்பட்டால் தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிக்கலாம் என்கின்றனர்.
பாலியூரிதீன் ஆணுறைகளில் வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிக்கலாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.
பெண்ணுறை, ஆணுறைக்கு மாற்றாக, பெண்களால் உபயோகப்படுத்தப்படுவது. இது பாலியூரிதீன் கொண்டு தயாரிக்கப்படுவதால் இவற்றோடு எண்ணெய் போன்ற வழுவழுப்பூட்டும் மசகுப் பொருட்களை உபயோகிக்கலாம். இவை ஆணுறைகளை விடப் பெரியதாகவும், விரைப்பான வளையம் போன்ற வாய்பகுதியைக் கொண்டதாகவும் இருக்கின்றன. இவை யோனிக்குள் செருகப்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பெண்ணுறைகள் ஒரு உள் வளையத்தைப் பெற்றிருக்கின்றன. இவ்வளையம் யோனிக்குள் பெண்ணுறை நழுவாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது. இவ்வளையத்தை அழுத்தும்போது பெண்ணுறை யோனிக்குள் செருகக் கூடியதாய் இருக்கிறது. இருப்பினும் தற்சமயம் பெண்ணுறைகள் கிடைப்பதற்கரியதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. முதல்நிலை ஆய்வுகள் பெண்ணுறைகள் போதிய அளவில் இருக்கும் பொழுது, ஒட்டுமொத்த பாதுகாப்பான உடலுறவு நிகழ்வுகள், பாதுகாப்பற்ற உடலுறவு நிகழ்வுகளோடு ஒப்பிடும் போது அதிகமாகின்றன. இது பெண்ணுறையை முக்கியமான எயிட்சு தடுப்பு யுத்தியாக்குகிறது.
இருவரில் ஒருவரை இந்நோய் தாக்கியிருக்கும் பட்சத்தில், விடாது ஆணுறை உபயோகிக்கும் பொழுது, நோய்த்தாக்கம் இல்லாதவரை இந்நோய்த் தொற்றும் வாய்ப்பு வருடம் ஒரு சதவிகிதத்திற்குக் கீழ் என கணவன்-மனைவிகளிடம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோய்த்தடுப்பு யுத்திகள் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் நன்கறியப்பட்டுள்ள போதிலும், கணிசமான அளவு இளைஞர்கள் எச் ஐ வி/எயிட்சு பற்றிய அறிவைப் பெற்றிருக்கும் போதிலும், தாங்கள் எச் ஐ வி தொற்றுதலுக்காளாகும் அபாயத்தைக் குறைவாக மதிப்பிட்டு, பேராபத்து விளைவிக்கும் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர் என ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவின் நோய்பரவல் மற்றும் நடத்தை பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கன்றன.
ஆண் விருத்தசேதனம் ஈரின மனிதர்களிடையே எச் ஐ வி நோய்த்தொற்று அபாயத்தை அறுபது சதவிகிதம் குறைக்கின்றன என சுற்று மாதிரி கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் போக்கு கணக்கற்ற நடைமுறை, கலாச்சார மற்றும் கருத்து சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியிருக்குமென்றாலும் இது பல நாடுகளில் உத்வேகத்துடன் பரிந்துரைக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள் தங்கள் சேதப்படத்தக்க தன்மையை உணராது பாதுகாபற்ற உடலுறவு நடவடிக்கைகளில் இறங்குவது விருத்தசேதனம் செய்ததால் கிடைக்கப்பெற்ற தற்காப்பை இல்லாததாக்கிவிடும் என சில வல்லுனர்கள் கருதுகின்றனர். எனினும், ஒரு சுற்றுமாதிரி கட்டுபடுத்தப்பட்ட சோதனை வயது வந்த ஆண்களின் விருத்தசேதனமானது எச் ஐ வி அபாயத்தை அதிகரிக்கும் நடவடிக்கை அல்ல என்று கூறுகிறது.
நோய்பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்களுடனான தொடர்பு
நல ஊழியர்கள் கிருமி பாதித்த இரத்தத்துடனான தொடர்பைக் குறைக்க எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எச் ஐ வி க்கு அவர்கள் ஆளாவதைத் தடுக்கவல்லது.கையுறைகள், முகமூடிகள், பாதுகாப்புக் கண் அணிகள் மற்றும் மூடிகள், அங்கிகள் அல்லது மேலாடைகள் போன்றவை தோல் அல்லது படர்சவ்வுப் படலத்திற்கு இரத்தத்தின் நோய்க்காரணிகளுடனான நேரடி தொடர்பை ரத்து செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும். கிருமிபாதித்த இரத்தத்துடனோ அல்லது உடல் திரவங்களுடனோ ஏற்பட்ட தொடர்புக்குப் பின்னர் தோலை அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல் நோய்த்தொற்று நிகழும் வாய்ப்பைக் குறைக்கவல்லது. இறுதியாக ஊசிகள், அறுவை கிழி கத்திகள், கண்ணாடிகள் போன்றவைகளை, கிருமிபாதித்தவைகளால் ஏற்படும் ஊசிகுத்து காயங்கள் நிகழாவண்ணம் கவனமாக நீக்கி விடுதல் அவசியமானதாகும். எச் ஐ வி நோய்ப்பரவல் பெரும்பாலும் சிரை வழி மருந்து செலுத்துவதன் மூலம் ஏற்படுவதால் வளர்ந்த நாடுகளில் நடத்தப்பெறும், தீங்கு குறைப்பு யுத்திகளான, ஊசி பரிமாற்ற நிகழ்ச்சி போன்றவை தவறான மருந்து பிரயோகத்தினால் விளையும் நோய்த்தொற்றைக் குறைக்க உதவுகின்றன.
தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுதல்
ஏற்றுக்கொள்ளத்தக்க, எளிதாகப் பெற்றுக்கொள்ளவல்ல, நிலையான மற்றும் பாதுகாப்பான, மாற்று உணவு இருப்பின் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்கள் சிசுவிற்குத் தாய்ப்பாலூட்டுவதைத் தவிர்க்க வேண்டுமென தற்போதைய பரிந்துரைகள் அறிவிக்கின்றன. எனினும் அவ்வாறு இயலாதப்பட்சத்தில் குழந்தையின் ஆரம்ப கால மாதங்களில் பிரத்தியேக தாய்ப்பால் கொடுப்பதும் பின்னர் முடிந்தவரை விரைவாக அதனை நிறுத்திவிடுதலும் சிறந்தது. தங்களது சொந்த குழந்தைகளல்லாத அந்நிய குழந்தைகளுக்கும் பெண்கள் பாலூட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது; பார்க்க செவிலித்தாய்
சிகிச்சை
எச் ஐ வி அல்லது எயிட்ஸுக்கான தடுப்பூசியோ அல்லது தீர்வோ தற்சமயம் இல்லை. வைரஸுடனானத் தொடர்பைத் தவிர்ப்பதன் மூலமும் அது இயலாத பட்சத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புக்குப் பின்னர் தொடர்புக்குப் பிந்தைய நோய்க்கட்டுப்பாடு (பி இ பி)என்றழைக்கப்படும் ரெட்ரோவைரல் எதிர்மருந்து சிகிச்சைக்கு உட்படுவதன் மூலமுமே இந்நோயைப் பரப்புதலைக் கட்டுப்படுத்த முடியும். [215] தொடர்புக்குப் பிந்தைய நோய்க்கட்டுப்பாடு (பி இ பி)க்கு மிக அத்தியாவசியமான நான்கு வார வைத்திய கால அட்டவணை உள்ளது. விரும்பத்தகாத பக்க விளைவுகளான வயிற்றுப்போக்கு, தேக அசௌகரியம், வாந்தி எடுக்கவேண்டுமென்ற உணர்வு மற்றும் களைப்பு ஆகியனவற்றை இது ஏற்படுத்தவல்லது.
வைரசுக்கெதிரான சிகிச்சை
எச் ஐ வி நோய்க்கான தற்போதைய வைத்தியம் அதி தீவிர ரெட்ரோ வைரல் எதிர்மருந்து அல்லது மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையினைக் கொண்டது. புரத நொதி வினைத் தடுப்புப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் 1996 ஆம் ஆண்டு அறிமுகத்திற்குப் பிறகு, இது பல எச் ஐ வி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நன்மை விளைவித்துள்ளது. தற்போதைய அனுகூலமான மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் தேர்வுகள் குறைந்தது மூன்று மருந்துகளை உள்ளடக்கிய, இரண்டு வித ரெட்ரோ வைரல் எதிர்மருந்துகளின் சேர்வுகளைக் கொண்டிருக்கும். இது காக்டெயில்கள் (கலப்பு பானங்கள்)என்று குறிக்கப்படுகிறது.பிரத்தியேக மருத்துவ நியமங்கள், இரு நியுக்ளியோசைடு ஒத்தஅமைப்புச்செயலி தலைகீழ்மரபணுமாற்ற நொதி எதிர்வினைப்பொருட்களையும் (NARTI அல்லது NRTI) மற்றும் புரத நொதி எதிர்வினைப் பொருட்களையோ அல்லது நியுக்ளியோசைடு அல்லாத தலைகீழ்மரபணுமாற்ற நொதி எதிர்வினைப்பொருட்களையோ கொண்டிருக்கும். எச் ஐ வி நோயின் வளர்ச்சிப் போக்கு வயது வந்தவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதாலும்,குறிப்பாக இளம் சிசுக்களுக்கு ஆய்வக சோதனைக் குறியீடுகள் நம்பத்தகுந்தவையாயில்லாததாலும், சிகிச்சை பரிந்துரைகள் வயதுக்கு வந்தவர்களை விட குழந்தைகளுக்கு மிக வன்மையாக உள்ளன. மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் மருந்து இருப்பில் இருக்கும் வளர்ந்த நாடுகளில்,நச்சுயிரி சுமை, CD 4 இன் சரிவு, மற்றும் நோயாளியின் ஆயத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் தொடக்க சிகிச்சையைப் பரிந்துரைக்கின்றனர்.
மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் முக்கிய குறிக்கோள் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, நோய் சிக்கல்களைக் குறைப்பது இரத்தத்தின் எச் ஐ வி அளவை கண்டுபிடிக்க முடியாத அளவிற்குக் குறைப்பது. ஆனால் இது எச் ஐ வி யை குணமாக்கவோ சிகிச்சையை நிறுத்தியவுடன் இரத்தத்தில்ஹார்ட் எதிர்ப்பு சக்தியுள்ள எச் ஐ வி அளவு அதிகமாவதைத் தடுக்கவோ இயலாததாய் இருக்கிறது. மேலும் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையினைப் பயன்படுத்தி எச் ஐ வி யிலிருந்து விடுபடுவதற்கு ஒருவருக்கு அவரது வாழ்நாள் காலமே போதுவதில்லை. இருந்தும், பல எச் ஐ வி நோயாளிகள் தங்கள் பொதுவான உடல்நலத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து எச் ஐ வி யின் இறப்பு விகிதமும், நோயுற்ற விகிதமும் சரிவதற்குக் காரணமாயிருந்திருக்கின்றனர். மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை இல்லாத பொழுது எச் ஐ வி நோய்த்தாக்கம் எயிட்சு ஆக வளர்ச்சியடைவதற்கு ஒன்பது முதல் பத்து வருடங்கள் கால இடைநிலையும் எயிட்சு ஆக மாறியபிறகு உயிர் வாழும் காலத்திற்குரிய கால இடைநிலை 9.2 மாதங்களேயாகவும் இருக்கிறது. மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை உயிர்வாழும் கால இடைநிலையை 4 முதல் 12 வருடங்கள் அதிகப்படுத்தும் என எண்ணப்படுகிறது.
ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளில் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை அனுகூலமான பலனை அளிப்பதில்லை. காரணம் மருந்துகளின் ஒவ்வாமை, பக்கவிளைவுகள், முந்தைய பலனற்ற ரெட்ரோ வைரல் எதிர்மருந்து சிகிச்சை, மருந்து எதிர்ப்பு சக்தியுடைய எச் ஐ வி மாதிரிகள் போன்றவை. சிகிச்சை பின்பற்றாமை, மற்றும் சிகிச்சையில் உறுதியற்று இருத்தல் போன்றவைகளே மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை சில மக்களில் பலனளிக்காமல் இருப்பதற்கு காரணம். சிகிச்சையில் உறுதியற்று இருத்தல் மற்றும் பின்பற்றாமல் இருப்பதற்கான காரணங்கள் பலவாகும். மருத்துவ வசதியின்மை, சமூக உதவியின்மை, மனநல வியாதி மற்றும் போதை பழக்கம் போன்றவையே சமூக நல பிரச்சினைகள் ஆகும். அதிக எண்ணிக்கையில் மாத்திரைகள் அடிக்கடி சாப்பிட வேண்டியிருப்பதால் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை நியமம் சிக்கலானதாகவும் பின்பற்றுவதற்கு கடினமானதாகவும் இருக்கிறது.கொழுப்புத் திசு இறப்பு இரத்தத்தின் கொழுப்படர்த்தியில் ஏற்படும் மாறுபாடு, வயிற்றுப்போக்கு, இன்சுலின் எதிர்ப்பு இதய மற்றும் இரத்தக் குழாய் அபாயம், பிறப்புக் குறைபாடுகள் போன்ற பக்க விளைவுகளும் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையினைப் பின்பற்றுவதில் சிரமத்தை விளைவிக்கின்றன. மீளூட்டு நச்சுயிரி (Retrovirus) எதிர் மருந்து விலையுயர்ந்ததாகவும் இருப்பதால் உலகத்தின் பெருவாரியான நோய் தொற்றிய மக்களுக்கு இவை கிடைப்பதில்லை.
ஆராய்ச்சி நிலையிலுள்ள சிகிச்சை முறைகள்
தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கக்கூடும் என்பதாலும், இதனால் வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள எதுவாய் இருக்கும் என்பதாலும், தடுப்பூசி இருக்கும் பட்சத்தில் தினசரி சிகிச்சை தேவையற்றது என்பதாலும் இப்பரவல் தொற்றினைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று கணிக்கப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பின்னும் எச் ஐ வி-1 தடுப்பூசி தயாரிப்பதற்கு கடினமான இலக்காகவே இருக்கிறது.
தற்போதைய மருந்துகளின் பக்கவிளைவுகளைக் குறைப்பது, சிகிச்சை பின்பற்றப்படுதலை அதிகரிக்க மருந்து நியமங்களை எளியவையாக்குதல், மற்றும் மருந்துக்கான எதிர்ப்பை சமாளிக்க சிறந்த மருந்து நியமத் தொடர்களைத் தீர்மானித்தல் ஆகியனவைகளை உள்ளடக்கியதே தற்போதைய சிகிச்சை முறைகளை முன்னேற்றும் ஆராய்ச்சியாகும். சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுக்களைத் தடுத்தல் எச் ஐ வி நோய்த்தாக்கிய அல்லது எயிட்சு நோயாளிகளின் சிகிச்சைக்கு நன்மை பயக்கும் என்பதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்லீரல் அழற்சி "எ" மற்றும் "பி" க்கான நச்சுயிரிகளினால் தொற்றப்படாதவர்களுக்கு, தொற்றும் அபாயத்தைக் குறைக்க இந்நோய்களுக்கான தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு அடக்குதலைப் பெற்றவர்கலுக்கு, நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியையால் ஏற்படும் நுரையீரலழற்சி, டாக்ஸோபிளாஸ்மோசிஸ் மற்றும் கிரிப்டோகாக்கஸ் மூளையுறையழற்சி (மெனிஞ்சைடிஸ்) போன்ற நோய்களுக்கும் நோய்க்கட்டுப்பாடு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
கிளைக்கோப்புரதம் 120 (ஜி.பி.120) எனும் "சி.டி.4" பிணையும் இடத்துக்கான புரதத்தை அளிக்கவல்ல ஒரு எதிர்க்காரணி நொதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அனைத்து எச் ஐ வி மாதிரிகளுக்கும் பொதுவான இப்புரதம் "பி" நிண செல்களும் இணையும் இடமாக இருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை விட்டுவிடுகிறது.
ஜெர்மனியின் பெர்லினில் பத்து வருடங்களுக்கு மேலாக எச் ஐ வி நோய்தொற்றறினால் அவதிப்பட்டு வந்த ஒரு 42 வயதான இரத்தப்புற்று நோயாளிக்கு CCR5 செல் மேற்பரப்பு ஏற்புணர்வியின் அசாதாரண இயற்கை மாதிரியைக் கொண்ட செல்களாலான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சோதனை அடிப்படையில் நடத்தப்பட்டது. INTHACCR5-Δ32 மாதிரியானது தன்னை இயல்பாகக் பெற்றிருக்கும் மக்களின் சில அணுக்களை, குறிப்பிட்ட வகை எச் ஐ வி கிருமிகளுக்கான எதிர்ப்பு சக்தி உடையவையக்குகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை முடிந்து ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பின் அந்த நோயாளி ரெட்ரோ வைரல் எதிர்மருந்து உட்கொள்ளுவதை நிறுத்திய பின்னரும் அவரது இரத்தத்தில் எச் ஐ வி நோய்க் கிருமி காணப்படவில்லை.
மாற்று வைத்திய முறைகள்
நோய் அறிகுறிகளை குணமாக்கவும் நோயின் போக்கைக் கட்டுப்படுத்தவும் பல விதமான மாற்று வைத்திய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. நோயுற்ற விகிதத்தையும், இறப்பு விகிதத்தையும் மாற்றுமருந்துகளால் கட்டுப்படுத்துவது இயலாது என்றும் எயிட்சு நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் ஒருவேளை இவற்றின் உபயோகத்தால் மேம்படலாம் எனத் தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வகை வைத்திய முறைகளின் மனோதத்துவ விளைவுகளே மிகுந்த நன்மை பயப்பதாகும். அக்குபங்க்சர் இந்நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதிலும், எச் ஐ வி நோயைக் குணப்படுத்தும் முயற்சியிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மூலிகை மருந்துகளின் விளைவுகளைக் கண்டறியும் பல சுற்றுமாதிரி நோய் சோதனைகள் இம்மூலிகைகளுக்கு நோயின் வளர்ச்சிப் போக்கில் எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் இவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கின்றன.
போதுமான உணவு உட்கொள்ளுதலைக் கொண்ட எச் ஐ வி நோய்த்தாக்கிய வயதுவந்தவர்களுக்கு பல்லுயிர்ச்சத்து உபபொருட்களால் நோய்த்தாக்கு விகிதத்திலும் இறப்பு விகிதத்திலும் எந்த மாற்றமும் இல்லை. நோயெதிர்ப்பிலும் ஊட்டச்சத்திலும் கீழ்மட்டத்திலுள்ள கருத்தரித்துள்ள மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு தினசரி பல்லுயிர்ச்சத்து உபபொருட்கள் அளிப்பதால் தாய் சேய் இருவருக்கும் அதிக பலன் கிட்டியதென்று ஒரு பெரிய தான்சானிய ஆய்வு தெரிவிக்கிறது. எச் ஐ வி நோயாளிகள் RDA அளவுகளில் உணவு நுண்சதது உட்கொள்ளுதல் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளில் A உயிர்ச்சத்து சேர்த்துக்கொள்ளுதல் இறப்பு விகிதத்தைக் குறைத்து வளர்ச்சியை அதிகரிக்கிறது. செலீனியத்தின் அன்றாட உட்கொள்ளுதல் எச் ஐ வி நச்சுயிரி சுமையைக் குறைத்து "சி.டி.4" எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட வைரசு எதிர் சிகிச்சைக்கு சேர்வைப் பொருளாக செலீனியம் பயன்படும் போதிலும் அது தனியாக இறப்புவிகிதத்தையும் நோய்பாதிப்பு விகிதத்தையும் குறைக்க இயலாது..
முடிவு
ரெட்ரோவைரல் எதிர்ப்புமருந்து உபயோகப்படுத்தாத பொழுது எச் ஐ வி கிருமி வகையைப் பொறுத்து மொத்த உயிர்வாழும் கால இடைநிலை 9 முதல் 11 வருடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளது. எயிட்சு நோய்க் கண்டறித லுக்குப் பிறகு போதிய வசதிகளற்ற மருத்துவ வசதியில்லாத இடங்களில் உயிர்வாழும் கால இடைநிலை 6 முதல் 19 மாதங்களே மட்டுமாகவும் உள்ளது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சைக் கிடைக்கும் இடங்களில் எச் ஐ வி நோய்தாக்கத்திற்கும் எயிட்ஸுக்கும், சக்தி வாய்ந்த அதனை உபயோகிக்கும் பொழுது இறப்பு விகிதம் 80 சதவிகிதம் வரைக் குறைக்கப்படுகிறது. மேலும் எச் ஐ வி நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நபர் உயிரோடிருக்கும் காலம் 20 வருடங்கள் என நிர்ணயிக்கப்பட்ட்டுள்ளது.
புதிய சிகிச்சை முறைகள் நடைமுறைக்கு வந்து கொண்டிருந்தாலும் எச் ஐ வி சிகிச்சைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பதால் உயிர் வாழும் காலத்தின் கணிப்பு மாறிக் கொண்டே இருக்கிறது. ரெட்ரோ வைரல் எதிர் மருந்து இல்லாவிட்டால் ஒரு வருட காலத்திற்குள் பொதுவாக மரணம் நிகழ்ந்து விடுகிறது. பெரும்பாலான நோயாளிகள் சந்தர்ப்பவாத தொற்றுக்களினாலோ அல்லது ஆபத்தான புற்றுக்களினாலோ ஏற்படும் படிப்படியான நோயெதிர்ப்பு மண்டல செயலிழப்பால் மரணமடைகின்றனர். நோய் வளர்ச்சிப் போக்கு ஊட்டுயிரியின் நோய் பாதிப்பு வாய்ப்பு, நோயெதிர்ப்பு செயல்பாடு, மருத்துவ வசதி, சக தொற்றுக்கள், மற்றும் நச்சுயிரியின் வகை என்பதைப் பொறுத்து ஒருவருக்கொருவர் கணிசமான அளவு மாறுபடுகிறது.
நோய் பரவல்
எயிட்சு நோய்ப்பரவலானது வேறுபட்ட உள்வகைகளின் பல்வேறு பரவல்களாகவும் காணப்படுகிறது.இந்நோயின் பரவலில் முக்கிய பங்காற்றுபவை உடலுறவு மூலம் பரவுதல் மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு பிறப்பின் போதும்,பாலூட்டும் போதும் நிகழும் செங்குத்துப் பரவல் முறை ஆகியன. தற்போது ரெட்ரோ வைரல் எதிர் மருந்து இருப்பும் கவனிப்பும் உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ள போதிலும் எயிட்சு நோய்ப்பரவல் 2007 ஆம் ஆண்டு 2 .1 மில்லியன் மக்களை (இடைவெளி) 1.9 -2.4 மில்லியன்) உயிரிழக்கச் செய்திருக்கிறது.இவர்களில் 330,000 பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். உலகம் முழுவதிலும் 2.5 மில்லியன் குழந்தைகள் உட்பட 33.2 மில்லியன் மக்கள் 2007-ல், எயிட்ஸுடன் வாழ்ந்திருக்கின்றனர். 2007-ல், 420,000 குழந்தைகள் உட்பட 2.5 மில்லியன்(இடைவெளி 1.8–4.1 million) புதிதாக நோய்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் சகாராவை ஒட்டிய பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும்.2007-ல் அப்பகுதி எயிட்ஸுடன் வாழ்பவர்களில் 68 சதவிகிதத்தையும், எயிட்சினால் மரணமடைந்தவர்களில் 76 சதவிகிதத்தையும் உள்ளடக்கியிருந்ததோடல்லாமல், பிறகு வந்த 1.7 மில்லியன் புதிய நோய்த்தொற்றுக்கள், எச் ஐ வி யுடன் வாழ்வோர் எண்ணிக்கையை 22.5 மில்லியன் என்ற அளவிற்கு உயர்த்தியதையும், அப்பகுதியில் எயிட்ஸினால் அனாதையாக்கப்பட்ட 11.4 மில்லியன் குழந்தைகள் வாழ்ந்து வருவதையும் கண்டிருக்கிறது. ஏனையப் பகுதிகளைப் போலல்லாமல் சகாராவையொட்டிய பகுதிகளில் எச் ஐ வி யுடன் வாழ்வோரில் 61 சதவிகிதம் பெண்களாவர். 2007 ஆம் ஆண்டு வயது வந்தோரில் நோய் நிலவு விகிதம் 5.0 சதவிகிதமாகவும், இப்பகுதி இறப்புவிகிதத்தின் தனிப்பெரும் காரணம் எயிட்சு ஆகவும் இருக்கிறது [300]. தென்னாப்பிரிக்காவே உலகிலேயே அதிக அளவில் எச் ஐ வி நோயாளிகளைக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன [302]. தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் இரண்டாவதாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2007 இல் எயிட்சுடன் வாழும் மக்களில் 18 சதவிகிதம் பேர் இப்பகுதியில் இருந்தனர். 300,000 மரணங்கள் எயிட்சினால் நிகழ்ந்தன [303]. இந்தியாவில் 2.5 மில்லியன் நோய்த்தொற்றுக்களும், வயது வந்தோரில் நோய்த்தாக்கம் 0.36 சதவிகிதமாக உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது [304]. மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் சராசரி வாழ்நாள் காலம் வேகமாகச் சரிந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2006 இல் போட்ஸ்வானாவில் இது 65 வருடங்களிலிருந்து 35 வருடங்களாகச் சரிந்துள்ளது [306].
வரலாறு
எயிட்சு முதன்முதலாக ஜூன் 5, 1981 இல் அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையங்களில் (CDC) கண்டறியப்பட்டது. இம்மையங்கள் (CDC) லாஸ் ஏஞ்சல்ஸின் 5 ஒரினச்சேர்க்கையாளர்களிடையே நியுமோசிஸ்டிஸ் கரினியை நிமோனியாவைக கண்டுபிடித்தது. இப்பொழுதும் PCP என்றே வகைப்படுத்தப்பட்டு நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியையால் உண்டாவதாகக் கருதப்படுகிறது)ஆரம்பத்தில் இந்நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் CDC யிடம் இல்லாத காரணத்தால் இதனுடன் தொடர்புடைய நோய்களின் பெயரை வைத்து (எடுத்துக்காட்டாக நிணநீர்ச்சுரப்பிநோயான லிம்படினோபதி) இந்நச்சுயிரிக்குப் பெயரிட்டனர் இதன் கண்டுபிடிப்பாளர்கள். காபோசியின் சதைப்புற்று மற்றும் சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுக்கள் என்ற பெயரும் இதற்கிடப்பட்டு 1981 இல் அப்பெயரில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. பத்திரிகையாளர்களிடையே GRID (ஓரினச்சேர்கையாளர்களோடு தொடர்புடைய நோயெதிர்ப்புக் குறைபாடு) என்று பெயரிடப்பட்டது. CDC பெயர் தேடி அலைந்த பின்னர் நோயுற்ற சமுதாயங்களைப் பார்த்து "4H நோய்"(ஹைதியைச் சேர்ந்தவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், இரத்தம் உரையாமையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஹெராயின் பயன்படுத்துபவர்கள்)என்று பெயரிட்டது. எனினும் எயிட்சு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மட்டும் உரியதல்ல எனக் கண்டறிந்த பின்னர் "கிரிட்" (GRID) என்ற சொல் பொருத்தமானதாகத் தோன்றாத காரணத்தால் 1982 ஜூலையில் எயிட்சு என்ற சொல் அறிமுகப்பட்டது. செப்டம்பர் 1982 க்குள் CDC எயிட்சு என்ற பெயரை உபயோகப்படுத்த ஆரம்பித்து இந்நோய்க்கு சரியான விரிவாக்கத்தை அளித்தது..
எயிட்சு நோய் பரவல் பிந்தைய 1950 களில், பெல்ஜியத்தின் காங்கோவில், ஹிலாரி கோப்ரொவ்ஸ்கியின் போலியோமையலைடிஸ் தடுப்பூசிக்கான அசட்டையான ஆய்வின் பொழுது ஆரம்பித்துவைக்கப்பட்டதாகும் என பலத்த சர்ச்சைக்குள்ளான தேற்றமான OPV எயிட்சு கருதுகோள் தெரிவிக்கிறது. விஞ்ஞானிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விவரம் கிடைக்கும் ஆதாரங்களால் உறுதிசெய்யப்படவில்லை.
எச் ஐ வி ஆப்பிரிக்காவிலிருந்து ஹைதிக்குச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்றிருக்கலாம் என்று அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
எச் ஐ வி கிருமி கமரூன் நாட்டில் இருந்த சிம்பன்சியை மனிதன் வேட்டையாடி அதை வெட்டும் போது சிம்பன்சியின் இரத்தம் அதை இறைச்சிக்காக வெட்டிய மனிதனின் கையில் இருந்த காயம் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது.
எய்ட்ஸ் நோயின் தோற்றம் பற்றி ஆராய்ச்சிகளை நடத்திய மேற்குலக விஞ்ஞானிகள் 1920களில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டில் கின்ஷாஸா நகரில் இருந்துதான் ஹெச்.ஐ.வி கிருமி பரவ ஆரம்பித்தது என்று கூறுகின்றனர்.
சமுதாயமும் கலாச்சாரமும்
களங்கம்
எயிட்சு நிந்தையானது உலகம் முழுவதிலும் பல விதங்களில் காணப்படுகிறது. சமுதாயத்தில் இருந்து தள்ளிவைத்தல், விலக்குதல், பாகுபாடு , எச் ஐ வி தாக்கப்பட்ட மக்களைத் தவிர்த்தல், நோயாளியின் விருப்பமின்றி அவரை கட்டாயப்படுத்தி எச் ஐ வி சோதனைக்கு உட்படுத்தி நோயாளி பற்றிய இரகசியங்களை வெளியிடுதல், எச் ஐ வி நோய்த்தாக்கியவர்கள் அல்லது நோய்தாக்கியவர்கள் என்று எண்ணப்பட்டவர்களுக்கெதிரான வன்முறை, மற்றும் எச் ஐ வி நோயாளிகளை நோய் பாதிப்பறிய தனிமைப்படுத்துதல் போன்றவையே இவை . இந்நிந்தையுடன் கூடிய வன்முறை அல்லது வன்முறையைப் பற்றிய பயம் போன்றவை அநேக மக்கள் எச் ஐ வி சோதனையை நாடுவதிலிருந்தும், முடிவுகளை அறிய திரும்பிவருவதிலிருந்தும், சிகிச்சை பெற்றுக்கொள்வதிலிருந்தும் தடுப்பதால் சமாளிக்கவல்ல நாள்பட்ட வியாதி நிலையிலிருந்து இந்நோய் மரணதண்டனையாக உருவெடுத்து எச் ஐ வி பரவலை நிரந்தரமாக்குகிறது.
எயிட்சு நிந்தை கீழ்க்கண்ட மூன்று பிரிவினைகளாக வகைப்படுத்தப்படுகிறது.
விளைவுக்கு பயந்த எயிட்சு நிந்தை -சாவை ஏற்படுத்தவல்ல தொற்று வியாதியுடனான பயம் மற்றும் பீதியின் பிரதிபலிப்பு.
அடையாளப்படுத்தும் எயிட்சு நிந்தை —நோயின் காரணங்களாகக் கருதப்படும் கூடி வாழும் சகவாச பிரியர்களையும்,வாழ்க்கை முறைகளையும் பற்றிய நிந்தை
விரும்பத்தகாத அடைமொழியுடனான எயிட்சு நிந்தை '' —எச் ஐ வி/எயிட்சு அல்லது எச் ஐ வி நேர்மறை மக்களுக்குத் தரப்படும் நிந்தையான அடைமொழி
பெரும்பாலும் எயிட்சு நிந்தையானது ஒன்றோ பலதோ ஆன பிற நிந்தைகளுடன் கூட்டாகப் பிரயோகிக்கப்படுகிறது. குறிப்பாக ஓரினச்சேர்க்கை, ஈரினச்சேர்க்கை, ஒழுக்கமின்மை, விபச்சாரம் மற்றும் சிறை வழி போதைமருந்து போடுதல் போன்றவையே இவை.
வளர்ந்த நாடுகள் பலவற்றில் எயட்சுக்கும் ஓரின மற்றும் ஈரின சேர்க்கையுடன் இருக்கும் தொடர்பு பாலுறவில் வெறுப்பையும் ஒரினசேர்க்கைக்கெதிரான கருத்துகளையும் ஏற்படுத்துகிறது. அனைத்து ஆண் உடலுறவிலும், நோய்த்தாக்கம் இல்லாத ஆண்களுக்கிடையேயான உடலுறவிலும் கூட எயிட்சு வாய்ப்பிருப்பதாக எண்ணப்படுகிறது.
பொருளாதார பாதிப்பு
]
எச் ஐ வி மற்றும் எயிட்சு மனித மூலதன இருப்பைக் குறைத்து பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது. மனித மூலதனம்பொருளாதார வளர்ச்சி<CITE class=goog-gtc-mediawiki-ref gtc:inserted gtc:temp gtc:prefix='</CITE>வளர்ந்த நாடுகளைப் போலல்லாது, சரியான போஷாக்கு, உடல் பராமரிப்பு மற்றும் மருந்துகளின்றி எயிட்சு தொடர்பான சிக்கல்களினால் பலர் அவதிப்பட்டு மரிக்கின்றனர். வேலைசெய்ய முடியாத நிலையில் அவர்களுக்கு தகுந்த மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது. குறிப்பிடத்தக்க எயிட்சு மக்கள்தொகை உடைய நாடுகளில் இது சமூக பொருளாதாரங்களின் சரிவை ஏற்படுத்தும் என்பதே இத்தகைய நோய்த்தாக்கத்தின் முன்னறிவிப்பாகும். நோய்ப்பாதிப்பு கடுமையாக உள்ள சில பகுதிகளில் இந்நோய்பரவல் வயதான தாத்தா பாட்டிகளால் பராமரிக்கப்படும் நிலையிலுள்ள பல அனாதைகளை விட்டுச் சென்றிருக்கிறது.
இப்பகுதிகளின் அதிகரித்திருக்கும் இறப்புவிகிதம் பணியாளர் சமுதாயத்திலும் தொழில் அனுபவமுடையோர்களின் எண்ணிக்கையிலும் பெரும் சரிவை ஏற்படுத்துகிறது. இங்ஙனம் சரிவடைந்த பணியாளர் சமுதாயமும் பெருமளவில் குறைந்த ஞானமும் பணி அனுபவமும் உடைய இளைஞர்களைக் கொண்டிருப்பதால் இது குறைந்த உற்பத்திக்கு வழிவகுக்கும். நோயுற்ற குடும்பத்தினரை பார்த்துக்கொள்ளவோ, தான் நோயுற்றிருக்கும் நிமித்தமாகவோ பணியாளர்களால் அனுபவிக்கப்படும் மருத்துவ விடுப்பும் உற்பத்தியைக் குறைக்க வல்லது. வருமான இழப்பு மற்றும் பெற்றோரின் மரணம் மூலம் மனித முதலீட்டையும், மக்களின் பேரில் முதலீடு செய்வதையும், பெருக்குவதற்கான நுட்பங்களை அதிகரிக்கப்பட்ட இறப்புவிகிதம் பலவீனப்படுகிறது. இளைஞர்களை பெருமளவில் கொல்வதன் மூலம் வருமான வரி செலுத்தும் மக்கள் தொகையை கணிசமாகக் குறைத்து கல்வி மற்றும் நல பணி எயிட்சு அல்லாத பொது செலவினங்களுக்கான ஆதாரத்தைக் குறைத்து நாட்டில் நிதி நெருக்கடியையும் பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்துகிறது. இது வரியாதாரத்தின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதோடல்லாமல் நோயாளிகளுக்கான சிகிச்சை, நோய்ப்பட்ட பணியாளர்களுக்குப் பதிலாக பணியமர்த்தியிருக்கும் ஊழியர்களுக்கான பயிற்சி, மருத்துவ விடுப்பூதியம் மற்றும் எயிட்சு அனாதைகள் பராமரிப்பு போன்ற அதீத செலவுகளால் வரியாதார வளர்ச்சிப் பின்னடைதலை அதிகரிக்கிறது. வயது வந்தோர்களின் இறப்பு விகித அதிகரிப்பினால், அநாதைகளைப் பராமரிக்கும் பொறுப்பும், நிந்தனையும் குடும்பத்திலிருந்து அரசுக்கு மாற்றப்படும் பொழுது இத்தகையதொரு சூழ்நிலை ஏற்படுகிறது.
வீட்டளவில் எயிட்சு நோய் வருமான இழப்பையும் உடல்நல பேணுதலில் செலவு அதிகரிப்பையும் விளைவிக்கறது. இத்தகைய வருமான இழப்புகள், செலவு குறைப்பு நடவடிக்கைகளையும், படிப்பிற்கு பதிலாக உடல் நலம் பேணுதல் மற்றும் மயான செலவுகளில் ஈடுபடும் மாற்று விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எச் ஐ வி /எயிட்சு நோயாளி இருக்கும் இல்லங்கள் மற்றவைகளை விட இருமடங்கு மருத்துவச் செலவுகளுக்காளாவதாக, கோட் டி ஐவாய்ர் ஆய்வு தெரிவிக்கிறது.
எயிட்சும் மதமும்
மத தலைவர்களில் பலர் விஞ்ஞானிகளால் நோய்ப்பரவலைத் தடுக்க ஒரே வழியெனக் கருதப்படும் கருத்தடை சாதனங்கள் உபயோகத்திற்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவிக்கும் காரணத்தால் மதமும் எயிட்சும் என்ற தலைப்பு கடந்த இருபத்து ஆண்டுகளாக பெறும் விவாதத்திற்குள்ளானதாகும். உலகளாவிய நல பணிகளிலும், மதசார்பற்ற நிறுவனங்களான UNAIDS மற்றும் உலக சுகாதார நிறுவனத்துடனான ஒத்துழைப்பிலும் ஈடுபட்டிருக்கும் மதங்களின் பங்கேற்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.
எயிட்சு மறுதலிப்பு
சில சீர்திருத்தவாதிகள் எச் ஐ விக்கும் எயட்சுக்குமான தொடர்பையும் எச் ஐ வி என்ற ஒன்று உள்ளதா எனவும் தற்போதைய சிகிச்சை முறைகளின் நம்பகத்தன்மையையும் குறித்தும் கேள்வி எழுப்பிவருகின்றனர். மருத்துவ சிகிச்சையே எயிட்சு மரணங்களுக்குக் காரணம் என்றும் கொக்கரிக்கின்றனர். இத்தகைய பறைசாற்றல்கள் விஞ்ஞானிகளால் விரிவாக சோதிக்கப்பட்டு முழுமையாக நிராகரிகப்பட்டுள்ள போதிலும் எச் ஐ வி யே எயிட்சு நோய்க்குக் காரணம் என்பதற்கான விஞ்ஞானிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆதாரத்தைப் பின்வரும் குறிப்புகளில் காணவும்,,,,, அவை இணையதளத்தின் மூலம் பரப்பப்பட்டு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் தபோ ம்பெகி யின் எயிட்சு மறுதலிக்கும் போக்கு எயிட்சு நோய் பரவலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் பலனற்று போகக் காரணமாய் இருந்ததோடல்லாமல் ஆயிரக்கணக்கான எயிட்சுமரணங்களையும் ஏற்படுத்திற்று.
எச் ஐ வி நோய் வேட்டை
ஓரினச்சேர்க்கையாளர்களில் ஒரு பிரிவினர் எச் ஐ வி நேர்மறையான கூட்டாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டு நோய்த்தொற்றை சுறுசுறுப்பாகப் பின்தொடர்கின்றனர். நோய்த்தொற்றை பின்தொடர்பவர்கள் பூச்சிவிரட்டுபவர்கள் எனவும் அவர்களுக்கு நோயைக் கொடுப்பவர்கள் பரிசளிப்பவர்கள் எனவும் கொச்சையான அடைமொழிகளால் இது அழைக்கப்படுகிறது. எச் ஐ வி நோய்த்தொற்றை பெற்றுக் கொள்வதில் எந்த நாட்டமும் இல்லாமல் பாதுகாப்பற்ற உடலுறவைத் தேர்ந்துகொள்பவர்களைக் குறிக்கும் அடைமொழியான பேர்பேக்கிங் எனப்படும் சேணமற்ற குதிரை போன்ற என்ற வார்த்தையிலிருந்து இத்தகைய எயிட்சு பின்தொடரும் நிலை வித்தியாசப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
இத்தகைய பழக்கத்தின் உண்மையான விரிவு அறியப்படாததாகவே இருக்கிறது. இத்தகைய கலாச்சாரத்தின் அங்கத்தினர்கள் என தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் அனைவரும் எச் ஐ வி பரப்புதலில் நாட்டம் கொண்டவர்கள் அல்ல. சில பக் சேசர்கள் இணையதளத்தின் மூலம் கிப்ட் கிவர்களோடு தொடர்பு கொள்ள முற்படுகின்றனர். வேறு சில நோய்க்கிருமியைப் பின்தொடர்வோர் எச் ஐ வி நேர்மறையாளர்கள், எச் ஐ வி எதிர்மறையாளர்களோடு நோய்தொற்றை அடையவேண்டும் என்ற நோக்குடன் ("பரிசு பெறுவது") பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் நோய்க்கிருமி கேளிக்கைகளில் நிலைமாற்ற விருந்துகளை ஏற்பாடுசெய்து அதில் கலந்து கொள்கின்றனர்.
தவறான கருத்துக்கள்
எச்.ஐ.வி குறித்தும் எயிட்சு குறித்தும் பல தவறான கருத்துக்களும் நம்பிக்கைகளும் நிலவுகின்றன. மிகவும் பரவலான பிழையான கருத்துக்களாக இருப்பவை:
எயிட்சு சாதாரணத் தொடுதல் மூலம் பரவுகின்றது;
கன்னியருடன் பாலுறவு கொள்வது எயிட்சு நோயைக் குணமாக்கும்;
எச்.ஐ.வி தீநுண்மம் தற்பால் சேர்க்கையாளர்களையும் போதைப்பொருள் பயன்படுத்துவோரையும் மட்டுமே தாக்குகின்றது;
தொற்றில்லாத இரு ஆண்மக்களிடையே குதவழிப் பாலுறவு எச்.ஐ.வி தொற்றுக்கு வழி வகுக்கும்;
பள்ளிச்சாலைகளில் எச்.ஐ.வி குறித்தும் தற்பால் சேர்க்கை குறித்தும் அறியத்தருதல் எயிட்சு நோய் தாக்குவீதம் கூட வழிவகுக்கும்
என்பனவாகும்.
சிலர் எச்.ஐ.வி தீநுண்மத்திற்கும் எயிட்சிற்கும் தொடர்பில்லை எனக் கருதுகின்றனர். வேறு சிலர் எச்.ஐ.வி. தீநுண்மம் இருப்பதையும் அதற்கான சோதனைகளின் செல்லுந்தன்மை குறித்தும் ஐயமுறுகின்றனர். எயிட்சு மறுப்பாளர்கள் எனப்படும் இவர்களது கூற்றுக்கள் அறிவியல் குமுகத்தால் ஆயப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்; தென்னாபிரிக்காவில் 1999-2005 காலகட்டத்தில் எயிட்சு மறுப்புவாதத்திற்கு அரசாதரவு இருந்தது. இதனால் அந்நாட்டில் எயிட்சு நோய்ப்பரவல் தடுக்கப்படாது தவிர்த்திருக்கக்கூடிய பல்லாயிர உயிரிழப்புக்களும் எச்.ஐ.வி தீநுண்மத்தொற்றுக்களும் ஏற்பட்டன.
எச்.ஐ.வி என்பது அறிவியலாளர்களால் தவறாகவோ விருப்பத்துடனோ உருவாக்கப்பட்ட பொய்மை என பல சதிக் கொள்கைகள் பரவியுள்ளன. சோவியத் நாட்டில் எச்ஐவி/எயிட்சு ஐக்கிய அமெரிக்காவால் பரப்பப்பட்ட பொய்மை என பரப்புரை செய்யப்பட்டது. இதனை பல மக்கள் நம்புவதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குறிப்புகள் மற்றும் ஒப்பீடுகள்
கூடுதல் வாசிப்பு
புற இணைப்புகள்
எச் ஐ வி/எயிட்சு சிகிச்சைத் தகவல்கள்
எச் ஐ வி/எயிட்சு குறித்த ஐக்கிய நாடுகளின் திட்டங்கள்
எச் ஐ வி/எயிட்சு குறித்த தகவல்கள்
எய்ட்ஸின் தோற்றம் 1920களின் கின்ஷாஸா என்கிறது புதிய ஆராய்ச்சி
எச்ஐவி வைரஸை வெளியேற்றும் புற்றுநோய் மருந்து
கொள்ளை நோய்கள்
பாலுறவு நோய்கள்
நச்சுயிரி நோய்கள்
நோய் எதிர்ப்பு முறைமைகள்
நுண்ணுயிரியல்
எயிட்சு
கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்
|
3796
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81
|
கதிரைமலைப் பள்ளு
|
கதிரைமலைப் பள்ளு என்பது யாழ்ப்பாணத்தில் வழங்கும் மூன்று பள்ளுகளில் காலத்தால் முதன்மையானது. 1915 ஆம் ஆண்டு முதன்முதலாக அச்சில் வெளிவந்த இந்நூலின் காலமும் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இது மரபு வழி இலக்கிய அம்சங்களையும் நாட்டார் இலக்கியப் பண்புகளையும் இசைநாடகக் கூறுகளையும் கொண்டதாகக் காணப்படுகிறது. இது வேளாண்மை பற்றிய நூல் ஆகும். நெல், மீன் வகைகளையும், பள்ளர்கள் தொழிலையும் நாட்டின் வளப்பத்தையும் இது விளக்குகிறது. இந்நூல் 130 செய்யுள்கள் கொண்டது. பிற்காலத்திய இடைச்செருகல்கள் சிலவுங் காணப்படுகின்றன. ஈழத்துக் கதிரைமலைப் பள்ளினைப் பின்பற்றியே தமிழகத்திற் பள்ளுப் பிரபந்தங்கள் எழுந்தன என்பர்.
கதிரையப்பர் பள்ளு எனவும் இது அழைக்கப்படுகிறது. இந்நூல் கதிர்காமத்தில் கோவில் கொண்டுள்ள முருகன் மீது பாடப்பட்டுள்ளது. முருகனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. பள்ளன், பள்ளி, பண்ணைக்காரன், இளையபள்ளி என நான்கு பாத்திரங்கள் உண்டு. சிந்து, விருத்தம் ஆகிய பாவகைகளும் பேச்சு சொல்லும் இந்நூலில் காணப்படுகிறது.
இந்நூலாசிரியரின் பெயர் புலப்படவில்லை. (1478 - 1519 )இல் நல்லூரிலிருந்து அரசாண்ட பரராசசேகர மகாராசாவின் காலத்தது இந்நூல் என்பதற்குப் பல ஆதரங்களுள. பரராசசேகரனின் ஆணையின்படி பன்னிரு புலவரால் இயற்றப்பட்ட பரராசசேகரம் என்னும் வைத்தியநூலில் 'தென்கதிரைவேலர்' பலவிடங்களிற புகழப்படுகிறார். இப் பன்னிருபுலவர்களுள் ஒருவரே 'கதிரைமலைப்பள்ளு'ப் பாடியிருக்கக்கூடும்.
பதிப்புகள்
கதிரைமலைப் பள்ளு (1935) - முத்துலிங்க சுவாமிகளின் ஆதரவில் வ. குமாரசுவாமி அவர்களால் தொகுக்கப்பட்டது. சி. வி. ஜம்புலிங்க பிள்ளை என்பவரால் சென்னை, புரோகிரசிவ் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மறுபதிப்பு 1996 இல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கொழும்பு யுனி ஆர்ட்சு அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
ஈழத்து நூல்கள்
15 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்
பள்ளு
ஈழத்துச் சிற்றிலக்கியங்கள்
ஈழத்து சமய இலக்கியம்
|
3797
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF
|
அரசகேசரி
|
பாடலரசன் அரசகேசரி பண்டாரம் (நல்லூர், 16- 17 ஆம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலவர் ஆவார்.
வாழ்க்கை குறிப்பு
அரசகேசரி, யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகனும், எதிர்மன்னசிங்கம் என்னும் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த ஆரியச் சக்கரவர்த்தியின் (1591-1616) மாமனும் ஆவார்.
பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றிய அரசகேசரி பரராசசேகரச் சக்கரவர்த்தியின் இரண்டாம் மனைவியாகிய வள்ளியம்மையின் மகளாகிய மரகதவல்லியின் கணவராவார். வள்ளியம்மையும் பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றலே. பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மகனும் மரகதவல்லியின் தமையனுமாகிய யாழக மன்னன் பெரியபிள்ளையின் மகன்தான் எதிர்மன்னசிங்கம் ஆவான்.
எதிர்மன்னசிங்கனால் மரணப்படுக்கையிலே தன் மகன் வயதுக்கு வரும்வரை இராச்சிய பரிபாலனம் செய்யும்படி வேண்டப்பட்டவர் அரசகேசரி. எதிர்மன்னசிங்கனின் நியமனத்தைப் போர்த்துக்கேய தேசாதிபதி ஏற்குமுன் சங்கிலி குமாரனாற் கொல்லப்பட்டவர். சங்கிலி குமாரனின் ஆட்சி 1615-1619.
இலக்கியப் பங்களிப்பு
தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் வல்லவர். காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சம் என்னும் மகா காவியத்தை இவர் தமிழில் புராண நடையில் பாடி இரகு வமிசம் என்னும் பெயர் சூட்டினார். காரைதீவு கா.சிவசிதம்பர ஐயர் 1887 ம் ஆண்டிலே சென்னையில் பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்றும் இடம்பெறுகின்றது.
இவரின் இருமொழி புலமைக்கும், மொழி பெயர்க்கும் ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டு ஒன்று காட்டுதும்:-..
ஸ்ராஜ்யம் குருணாதத்தம் பிரதிபத்யாதிகம் பபெள
திநாந்தெ நிஹிதம் தேஜஸ் சவித்திரே வஹா
என்னும் வடமொழி இரகுவமிச சுலோகத்தை தமிழில்:-
கனைகழல் வீரனுங் காவ லான்றரு
புனைமணி முடியொடும் பொலிந்து தோன்றினான்
றினகரன் றிவாந்தகா லத்திற் சேர்த்திய
வினவொளி கொடுகன லிலங்கிற் றென்னவே
இவர் இரகுவமிசம் பாடுங்காலத்தில், நல்லூருக்குக் கீழைத் திசையில் உள்ள நாயன்மார்க்கட்டில் உள்ள அரசடிப்பிள்ளையார் கோவிலின் தாமரை குளத்தின் கரையில் இருந்த வண்ணம் பாடினார் என்பர். இதனால்தான் நாட்டுப் படலம் பாடும் போது குளங்களை முதலில் பாடினார் என்று கூறுவர்.
இவர் வயல்களை பாடும்போது குளத்துக்கு அருகில் இருந்த கரும்பு மற்றும் நெல் வயல்களையும் வாழை மற்றும் கமுகுத் தோப்புகளையும் இரகுவமிச செய்யுளில் வருணித்து பாடயுள்ளார். இதற்கு சான்றாக தமிழ் இரகுவமிச பாடல் ஒன்று காட்டுதும்:-
கூறு வேழத்தி னரம்பையின் வளைந்தன கதிர்க
ளூறு செய்திடத் தொடுத்தகூன் குயமொத்த வேனும்
பாறு நெட்டிலைப் பூகமேல் வீழ்ந்தன பழுக்காய்த்
தாறு வேறிடக் கொளீஇயன தோட்டியிற் றங்கும்
இவர் அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற நூல்களில் மிக தேர்ச்சியுடையவர் என்பது, சங்க இலக்கியங்களில் வரும் சொல்ப் பயன்பாட்டை தனது தமிழ் இரகுவமிச செய்யுளுள் அருமையாக அமைத்து பாடியமை சான்றாகும்.
இதற்கு உதாரணமாக ஒன்று காட்டுதும்:-
பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும்
அரிமுக வம்பியு மருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கில்
என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய அம்பி சிறப்புக்களை ( அம்பி = தோணி) ,
அறிமுக மடுத்து வீழு மான்மத வளறு நாறிக்
கரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு காப்பச்
சுரிமுக நெற்றி துற்றிச் சுடர்மணி வர்க்கந் தொக்க
பரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு போனார்
என்னுஞ் செய்யுளுள் அமைத்து பாடியுள்ளர்.
மேலும் இவர் கம்பர் பாடிய கம்ப இராமாயணதை பின்பற்றி, காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சதை தமிழில் மொழிபெயர்த்து, மிக கடினமான சொற்களில் பாடியமையால் இது அறிஞர்களால் மட்டும் சுவை உணர்ந்து மேச்சும்படியாகுள்ளது. இவர் வாழ்ந்த அரண்மனை நல்லூர் யமுனா ஏரிக்கு அருகாமையில் இன்றும் அரசகேசரிவளவு என்று விளங்கும் நிலப்பரப்பில் அமைந்திருந்தது என்பர்...
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தமிழ் இரகுவமிசம் நூல் தந்த அரசகேசரி
ஈழத்துப் புலவர்கள்
|
3800
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE.%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88
|
நா. கதிரைவேற்பிள்ளை
|
நா. கதிரைவேற்பிள்ளை (திசம்பர் 21, 1871 – 26 மார்ச் 1907) இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' திரு. வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். சதாவதானி எனப் போற்றப் பெற்றவர்.
பிறப்பு
கதிரைவேற்பிள்ளை பருத்தித்துறை, மேலைப்புலோலியில் வாழ்ந்த நாகப்பபிள்ளை என்பவருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் 1871-ஆம் ஆண்டு பிறந்தார். (திரு. வி. க தனது நூலில் நா. கதிரைவேற்பிள்ளை 1860 நவம்பரில் பிறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.) அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆறுமுக நாவலரின் மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார்.
தமிழகம் பயணம்
தமிழின் மீதான ஆர்வத்தினால் சென்னைக்குப் பயணமானார். சென்னையில், தமிழ் கற்க விரும்பியவருக்குத் தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் உதவினார். புலமையும், கருணையும் கொண்டிருந்த தி. த. கனகசுந்தரம்பிள்ளை, கதிரவேற்பிள்ளையை மாணவராக ஏற்றுக் கொண்டார். தமிழின் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்ததோடு, சைவ சித்தாந்த சாத்திரங்களையும் பயின்று புலமை பெற்றார் கதிரவேற்பிள்ளை. வடமொழியிலும் தேர்ச்சி பெற்ற கதரவேற்பிள்ளை, சென்னை ரிப்பன் அச்சகத்தின் அதிபர் சிவசங்கரன் செட்டியாரின் பழக்கத்தால், தாள் திருத்தும் பணியை ஏற்று, படிக்கின்ற காலத்திலேயே, சென்னையில் செலவுக்கு வேண்டியதை ஈடு செய்து கொண்டார்.
நூல்கள் இயற்றல்
தமிழ்நாட்டிற்கு வந்து பல சைவ நூல்களையும், நைடதத்திற்கு உரையையும் இயற்றினார். இலங்கையில் கதிர்காமம் என்ற தலத்துக்கு ஒரு கலம்பக நூல் இயற்றினார். பழனித் தலப் புராணம், திருவருணைக் கலம்பகம், சிவராத்திரிப் புராணம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய கதிரவேற்பிள்ளை, அதிவீரராம பாண்டியர் இயற்றிய தமிழ்க் கூர்ம புராணத்திற்கு விளக்கவுரை கண்டார். சிவஷேத்திராலய மகோற்சவ விளக்கம், திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரிதவசனச் சுருக்கம், ஏகாதசிப் புராணத்திற்கு அரும்பதவுரை ஆகிய நூல்களையும் எழுதினார்.
வெளியிடப்பட்ட நூல்கள்
சிவக்ஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், 1896, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை
சைவ பூஷண சந்திரிகை, (இரண்டாம் பதிப்பு: 1902, சென்னை சி.நா.அச்சியந்திரசாலை)
புத்தமத கண்டனம், 1903
சுப்பிரமணிய பராக்கிரமம், 1906, சென்னை: வித்யாரத்நாகர அச்சுக்கூடம்
அதிவீரராமபாண்டியனார் இயற்றிய நைடதமூலமும் விருத்திஉரையும், 1912, சென்னை: வித்யாரத்நாகர அச்சுக்கூடம்
தாயுமான சுவாமிகள் அருளிச்செய்த திருப்பாடற்றிரட்டு, 1939, சென்னை: வித்யாரத்நாகர அச்சுக்கூடம்
தாயுமானவர் பாடல், 1930
அகராதி தொகுத்தல்
சென்னை வாழ் தமிழறிஞர் பலருடைய வேண்டுகோளுக்கிணங்கத் தமிழ்ப்பேரகராதி எழுதி வெளியிட்டார். இவ்வகராதியின் பெருமையைப்,
என்று தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் புகழ்ந்திருக்கிறார்.
ஆசிரியப் பணி
கதிரைவேற்பிள்ளை, தமது 1897 ஆம் ஆண்டில், சென்னையில் இருந்த உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணி ஏற்றார். அப்போதுதான், திரு. வி. கல்யாணசுந்தரனார், பிள்ளையவர்களின் மாணாக்கராகும் பேறு பெற்றார். கதிரவேற்பிள்ளையின் பேச்சுத் திறன், சென்னையில் மட்டும் அல்லாது, தமிழகமெங்கும் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, தமிழ் மொழியின் செழுமைக்கும், சைவ நெறியின் வளர்ச்சிக்கும் உரையாற்றிப் புகழ் பெற்றார்.
மருட்பா மறுப்பு
சைவத் தமிழ் உலகம் போற்றி வந்த திருமறைகளே 'அருட்பா' என்றும் வள்ளல் பெருமான் இராமலிங்கர் பாடியுள்ளவை 'மருட்பா' என்றும் சைவநெறிப் பற்றால் கூறத் துணிந்தார் கதிரவேற்பிள்ளை. இந்த 'அருட்பாப் பூசல்', பெருமான் ஆறுமுக நாவலர் காலத்தில் தொடங்கியது, மீண்டும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நடைபெறலாயிற்று. பேசியதோடு, இராமலிங்க சுவாமியின் பாடல்கள் மருட்பாவேயன்றி, அருட்பா அல்ல எனக் கதிரவேற்பிள்ளை 'மருட்பா மறுப்பு' எழுதியதை ஆதாரமாக வைத்து, சென்னை நீதிமன்றத்தில் வள்ளல் பெருமான் அன்பர்களால் பிள்ளையவர்களின் மீது மானநஷ்ட வழக்குத் தொடரப் பெற்றது. இந்த வழக்கில், தமது ஆசிரியர் கதிரைவேற்பிள்ளைக்கு ஆதரவாக திரு. வி. க. சாட்சியமளித்தார். இறுதியில், நீதிபதியால் வழக்கு தள்ளுபடி செய்யப் பெற்றது.
விருதுகள்
தமிழ்நாட்டுச் சைவ மடங்களாலும், குறுநில மன்னர்களாலும், புரவலர்களாலும் வழங்கப் பெற்ற நாவலர், சைவசித்தாந்த மகாசரபம், அத்துவித சித்தாந்த மகோத்தாரணர், மகாவித்துவான், பெருஞ்சொற்கொண்டல் முதலிய பட்டங்களைப் பெற்றார். சென்னை இலக்குமி விலாச மண்டபத்தில் கவிராயர்கள், பண்டிதர்கள், புரவலர்கள் முன்னிலையில் கதிரவேற்பிள்ளை சதாவதானம் செய்து சதாவதானி என்னும் பட்டத்தையும் பெற்றார்.
சதாவதானி
ஒருவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்தால் சதாவதானி என்பர். கதிரைவேற்பிள்ளை செய்த சதாவதானம் பலர் முன்னிலையில் நடந்து வெள்ளைக்கார துரைகளால் பாராட்டப்பட்டது. கதிரைவேற்பிள்ளை முதலில் யாழ்ப்பாணம் மேலைப்புலோலி கந்தசுவாமி கோவிலில் நன்னூல் காண்டிகையுரை ஆசிரியர் வித்துவான் அ. குமாரசாமிப் புலவர் தலைமையில் 18 அவதானங்களை செய்து முடித்தார். பின்னர் சென்னையில் லெட்சுமிவிலாச நாடகசாலையில் பாலசரசுவதி ஞானானந்த சுவாமிகள் தலைமையில்,
வேலும் மயிலும் துணையென நவிலல்
இலாட சங்கிலி கழற்றல்
சிலேடைக் கட்டளைக் கலித்துறை, சிலேடை வெண்பா, நீரோட்டகம் முதலியன
6 இலக்கண விடை உபந்நியாசம்
இரண்டறக் கலத்தல் உபந்நியாசம்
பாரதச் செய்யுளுரை
இங்கிலீஷ் கண்டப் பத்திரிக்கை வருடந்தேதி, பிறந்த நாள், இலக்கினம், பிறந்த நட்சத்திரம் முதலியவை
எண் கணக்கில் கூட்டல் 1, கழித்தல் 1, பெருக்கல் முதலியவை
இவற்றை செய்து முடித்து சதாவதானியென்ற பட்டத்தைப் பெற்றார்.
இறுதி நாட்கள்
மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராகத் திகழ்ந்த கதிரைவேற்பிள்ளை, தமிழ்ப் பணிக்காக, அடிக்கடி சென்னையிலிருந்து நீலகிரி சென்று வந்தார். 1907 ஆம் ஆண்டில் ஒருமுறை நீலகிரி சென்றபோது, குன்னூரில் கடுஞ்சுரத்தால் உடல் நலிவுற்று பராபவ ஆண்டு பங்குனி 13 செவ்வாய்க்கிழமை (1907 மார்ச் 26) அன்று இறந்தார்.
பிறர் எழுதிய வாழ்க்கை வரலாறு நூல்கள்
திரு. வி. க., தமது ஆசிரியரின் நினைவைப் போற்றும் வகையில், யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் சதாவதானி நா கதிரைவேற்பிள்ளை சரிதம் என்ற அரியதொரு நூலாக எழுதி 1908 இல் வெளியிட்டார்.
கதிரைவேற்பிள்ளையின் மாணாக்கரும், புரசை முனிசாமி நாயகர் குமாரருமாகிய பாலசுந்தர நாயகர் என்பவர் 1908 ஆம் ஆண்டில் ஸ்ரீமான் நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் சரித்திரமும் அவரது பிரிவாற்றாமையினால் பல புலவ சிகாமணிகளார் கூறிய பாக்களும் என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
குறிப்புகள்
மேற்கோள்கள்
யாழ்ப்பாணத்து நபர்கள்
தமிழறிஞர்கள்
ஈழத்துத் தமிழறிஞர்கள்
1871 பிறப்புகள்
1907 இறப்புகள்
தமிழ் அகராதி தொகுப்பாளர்கள்
|
3801
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85.%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D
|
அ. குமாரசாமிப் புலவர்
|
சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (Kumaraswamy Pulavar, சனவரி 18, 1854 – மார்ச்சு 23, 1922) என அழைக்கப்படும் அ. குமாரசாமிப்பிள்ளை இலங்கையைச் சேர்ந்த புலவரும், தமிழறிஞரும், பதிப்பாளரும், உரையாசிரியரும் ஆவார். ஆங்கிலேயக் குடியேற்ற ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர்.
பிறப்பு
யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் என்ற ஊரில் பிறந்த குமாரசுவாமிப் புலவரின் தந்தை அம்பலவாணர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை தமது பெரிய தகப்பனாராகிய முத்துக்குமாரக் கவிராயரிடம் கற்றுத் தேறியவர். அத்துடன் சைவ சமய ஈடுபாடும் கொண்டவர். தென்கோவை குமாருடையார் மகள் சிதம்பராம்மை என்பவரை 1840 வைகாசி ஐந்தாம் நாள் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் முறையே சிவகாமிப்பிள்ளை, குமாரசுவாமி மற்றும் காமாட்சிப்பிள்ளை என மூன்று மகவுகளைப் பெற்றனர். 1854 ஆம் ஆண்டு தை 18 ஆம் நாள் குமாரசுவாமி பிறந்தார்.
கல்வி
குமாரசுவாமிக்கு ஐந்து வயதானதும், தந்தையார் குலகுருவான வேதாரணியம் நாமசிவாய தேசிகர் என்பவரை அழைத்து இவருக்கு ஏடு தொடக்குவித்தார். பின்னர் மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். இவர் ஆங்கிலத்தில் அடிப்படை புலமை அடைந்த பின்பு, இவரை ஆங்கில பாடசாலையை விட்டு விலக்கிய இவரது தந்தையார், சுண்ணாகம் முருகேச பண்டிதரிடம் இவரை தமிழ் கல்வி பயிலுமாறு அனுப்பினார். முருகேச பண்டிதரிடம் தமிழ்க் கல்வி கற்ற காலத்தே இவருடன் கூட கல்வி கற்றவருள் குறிப்பிடத்தக்கவர்கள் ஊரெழு சு. சரவணமுத்துப்புலவர், மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சுண்ணாகம் மு. வைத்தியநாதபிள்ளை போன்றோர் ஆவர். இவர் மாணவராக இருந்த போது, சொல்லும் பொருளும் சுவைபட பாடுவதிலும், கட்டுரை எழுதுவதிலும், சொற்பொழிவு ஆற்றுவதிலும் திறமை பெற்றிருந்தமையால் இவரைப் புலவர் என்று பட்டப் பெயரால் அழைத்தனர். இப்பட்டப் பெயரே இவருக்கு பிற்காலத்தில் இயற்பெயராகிற்று என்று புலவரது மாணவராகிய புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் செய்யுள் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பாரேறு சுன்னைக் குமார சுவாமிப் புலவனுக்கே
ஏரே இடுகுறி யாகிப் புலவரெனும் பெயர்தான்
பாரேறு மற்றைப் புலவருக்குக் காரணப் பண்புறலற்
சீரே இடுகுறி காரண மாகித் திகழ்ந்ததுவே.
நாவலருடன் தொடர்பும் வடமொழிக் கல்வியும்
புலவரவர்கள் கல்வி கற்று வரும் காலத்தே, தமிழகம் சென்று தமிழ் மற்றும் சைவத் தொண்டாற்றி விட்டு தாயகம் திரும்பிய ஆறுமுக நாவலருக்கு வெகு சிறப்பான வரவேற்பு விழா ஒன்றை யாழ்ப்பாண மக்கள் 1869 ஆம் ஆண்டு நடாத்தினர். இவ்விழாவில் புலவரவர்கள் நாவலர் பெருமானை முதலில் நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றார். இதையடுத்து நாவலர் சைவ சொற்பொழிவுகளுக்கு தவறாது சென்று செவிமடுத்து மகிழ்ந்த புலவருக்கு, உடன் கற்ற நண்பன் ஊரெழு சரவணமுத்துப் புலவர் மூலம் நாவலர் அறிமுகம் கிடைத்தது. நாவலரும் தனது பழைய நண்பனாகிய முத்துக்குமாரக் கவிராயாரின் வழிதோன்றல்தான் புலவர் என்றறிந்து, புலவரின் தமிழ்க் கல்விக்கு ஊக்கமளித்தது மட்டுமல்லாது வடமொழி மற்றும் சைவசித்தாந்தகளை முறையே கற்குமாறு அறிவுரை வழங்கினார். இந்நட்பு நாவலரின் மறைவு வரை மிக நெருக்கமாக இருந்தது என்பதை, புலவர் நாவலர் மீது கூறிய சரமகவிகள் நன்கு விளக்கும்..
நாவலரின் அறிவுரைப்படி புலவரும் வடமொழி கற்கும் பொருட்டு, நெருங்கிய உறவினரும், கற்பிட்டி நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளரும், நான்கு மொழிகளில் புலமை உடையவருமாகிய நாகநாத பண்டிதரை அணுகி வடமொழி கற்று வரலானார். நீதிசாரம், இராமோதந்தம், சாணக்கிய சதகம், முக்தபோதம், மாகம்,
இரகுவமிசம், சாகுந்தலம் முதலிய வடமொழி நூல்களை முதலில் புலவரவர்கள் கற்றுத் தெளிந்தார். பண்டிதர் வேலை மாற்றம் பெற்று கற்பிட்டி சென்ற பின்னர், தபால் மூலம் புலவரின் கல்வி தொடர்ந்தது. இவ்வாறு பண்டிதரால் மொழிபெயர்த்து அனுப்பப்பட்ட நூல்களுக்குள் ஒன்றாகிய இதோபதேசம் புலவரால் 1886 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இங்கனம் வடமொழியைச் செவ்வனே கற்றதன் பலனாகப் புலவர் பல வடமொழி நூல்களை மொழி பெயர்த்து தமிழில் பாடியுள்ளார்.
மேலும் சைவசித்தாந்த அறிவைப் பெருக்கும் பொருட்டு தனது குடியின் குரவராகிய நமசிவாய தேசிகரை அணுகி சைவசித்தாந்தம் மற்றும் சைவச் சான்றோர் வரலாறு முதலியவற்றை கற்கலானார். புலவரவர்கள் மேல் கூறிய தனது முக்குரவருக்கும் தான் இயற்றிய மேகதூதக் காரிகை என்னும் நூலின் குரு வணக்கச் செய்யுளில் வணக்கம் கூறி உள்ளார்.
வேறு புலவரை நாடுதல்
புலவரின் தமிழ் குரவர் முருகேச பண்டிதர் தமிழகம் சென்ற சிறிது காலத்தில், ஆறுமுக நாவலர் இறந்தார். இதனால்ப் புலவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், சைவசித்தாந்தம் முதலியவற்றில் ஏற்பட்ட சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு முறையே அளவெட்டி கனகசபைப் புலவரிடமும், இணுவில் நடராசையரிடமும் வினாவித் தெளிந்தார். புலவர் தனக்கு கம்பராமாயணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை நீக்க, கவித்தலம் துரைச்சாமி மூப்பன் இயற்றிய கம்பராமாயண கருப்பொருளுரை என்னும் நூலை அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெற முடியாததால், துரைச்சாமி மூப்பன் அவர்கள் பேரில் சிட்டுக்கவி ஒன்றை வரைந்து அவருக்கு அனுப்பினார். இச்சிட்டுக்கவியால் மகிழ்வுற்ற துரைச்சாமி மூப்பன் கம்பராமாயண கருப்பொருளுரை என்னும் நூலையும் தாம் இயற்றிய வேறு சில நூல்களையும் அனுப்பி வைத்தார்.
ஆசிரியர் பணி
சி. வை. தாமோதரம்பிள்ளை 1876 ஆம் ஆண்டு ஆவணி 10ம் நாள் யாழ்ப்பாணம், ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். இப்பாடசாலையில் முருகேச பண்டிதரும் புலவரும் முறையே தலைமையாசிரியராகவும் உதவியாசிரியராகவும் பணியமர்த்தப்பட்டனர். 1878 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முருகேச பண்டிதர் தமிழகம் செல்ல நேரிட்டதால் புலவரவர்களை தலைமை ஆசிரியராக பணியமர்த்தினார் தாமோதரம்பிள்ளை. புலவரிடம் தனது பாடசாலைப் பொறுப்புக்கள் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு அரசுப் பணி நிமித்தம் தமிழகம் பயணமானார். ஆறுமுகநாவலர், முருகேச பண்டிதர், கொக்குவில் ச. சபாரத்தினமுதலியார், வித்துவசிரோன்மணி ச. பொன்னம்பலபிள்ளை போன்ற மூத்த அறிஞர்களால் ஆண்டுதோறும் இப்பாடசாலை மாணவர்களின் திறமை சோதிக்கப்பட்டது. இச்சோதனைகளைப் பற்றிய அறிக்கைகள் சென்னைப் பட்டணத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு அனுப்பப்பட்டது. புலவரின் கற்பிக்கும் திறமையால் தமது பாடசாலை வளர்ச்சி அடைவதை, நேரில் பார்த்தும் சோதனையறிக்கைகள் மூலமும் அறிந்து மகிழ்ச்சி எய்திய தாமோதரம்பிள்ளை புலவருக்கு எழுதிய கடிதம்:-
சென்னை,
பிரமாதீச ௵மாசி ௴ 22 ௳ (1880)
நின்னிரு பங்கண்டு நென்னலென் றன்மன நெக்குருகித்
தன்னிற் கரைந்தது தானென்சொல் கேனேத்துந் தாங்குமொரு
வன்னெஞ் சுளேனெனு மாற்றம்பொய்யாது
டின்ன மிவருனைப் போற்குமார சாமி யெனக்கன்பரே.
இங்ஙனம்,
அன்பன்,
சி. வை. தாமோதரம்பிள்ளை
புலவரின் மாணாக்கர்கள்
ஏழாலை சைவபிரகாச வித்தியாசாலையில் புலவரிடம் தமிழ் கற்று தெளிந்தவர்களில் , வித்துவான் சிவானந்தையர்(1873 -1916), தெல்லிப்பழை பாலசுப்ரமணிய ஐயர், தெல்லிப்பழை சுப்ரமணியபிள்ளை, இளவாலை க. சங்கரப்பிள்ளை, தெல்லிப்பழை நா. மயில்வாகனம்பிள்ளை, மாவிட்டபுரம் விசுவநாத முதலியார், கையிட்டி பொன்னையர், சுண்ணாகம் மாணிக்கதியாகராச பண்டிதர், ஏழாலை வி. தம்பையாபிள்ளை, கொக்குவில் இளையதம்பிப்பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கினர். இவர்களுக்குள் ஆழ்ந்த கல்வியறிவும் செய்யுள் புனையுமாற்றலும் நூலுரைகள் இயற்றும் திறமையும் பெரிதும் பொருந்தி விளங்கியவர் சிவானந்தையராவர். இவர் தருக்க சங்கிரக மொழிபெயர்ப்பு, புலியூர்ப் புராணம், புலியூரந்தாதி, சனிதுதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார். மாணிக்கதியாகராசப் பண்டிதர் கதாப்பிரசங்கஞ் செய்வதிலும், தம்பையாபிள்ளை புராண படனஞ் செய்வதிலும் சிறந்து விளங்கினர்.
இல்வாழ்வு
1884 ஆம் ஆண்டு உடுவில் மயில்வாகனம், நாகமுத்தம்மையார் தம்பதியினரின் மகளாகிய சின்னாச்சியம்மையாரை புலவருக்கு மணம் முடித்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் புலவரின் பெற்றோர், தமக்கையார் முதலியோர் அடுத்தடுத்து இறந்தமையால் தடைப்பட்ட திருமணம் 1892 இல் நடந்தது. இவர்களுக்கு விசலாட்சியம்மையார் (1893-1925) என்னும் ஒரு மகளும், அம்பலவாணர் (1895-1974), முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900-1987) என இரு மகன்களும் பிறந்தனர். மகன்கள் இருவரும் தமிழ்க் கல்வியில் பெரிதும் சிறந்து விளங்கி, யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். புலவரின் இளைய மைந்தர் சென்னை லயோலாக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் 1930-1932 காலப்பகுதியில் பணியாற்றியுள்ளார். மேலும் மைந்தர்கள் இருவரும் புலவரின் நூல்கள் மற்றும் முத்துகுமாரகவிராயர் நூல்கள் எல்லாவற்றையும் பதிப்பித்துள்ளார்கள்.
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில்
1913ஆம் ஆண்டு சென்னை அரசு தமிழ் அகராதி ஒன்றைத் தொகுக்கும் பொருட்டு பாதிரியார் சாண்டிலர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவினர் அகராதியின் மாதிரி நகல் ஒன்றை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பினர். சங்கத்தினர் இதனை ஆராய்ந்து அறிக்கை வரையும் பொறுப்பை புலவரிடம் ஒப்படைத்தனர். 1913 ஏப்ரல் 4 இல் இடம்பெற்ற சங்கக் கூட்டத்தில் புலவரின் இவ்வறிக்கை நீண்ட தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. புலவரால் அறிக்கையில் கூறப்பட்ட பிழைகள் எல்லாவற்றையும் வாசித்து அறிந்த சாண்டிலர் யாழ்ப்பாணம் வந்து புலவரை உடுவில் மகளிர் கல்லூரியில் சந்தித்து பல தடவை அகராதி தொடர்பாக கலந்துரையாடினார். சாண்டிலர் புலவரின் அறிவுரைப்படி பல திருத்தங்களை அகராதியில் செய்திருந்தார். புலவர் தனது வாழ்நாள் முழுவதும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கி, அதன் சார்பாக பல கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் வழங்கியுள்ளார்.
வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலை
சி. வை .தாமோதரம்பிள்ளை புதுக்கோட்டையில் நீதிபதிப் பணியிலிருந்து இளைப்பாறிய பின் அவரது உடல் வளமும், பொருள் வளமும் நலிவுற்ற காரணத்தால், ஏழாலை சைவப்பிரகாசப் பள்ளிக்கூடம் 1898 இல் மூடப்பட்டது. புலவர் வேலையில்லாது இருந்த காலத்தில் நீதிபதி உடுப்பிட்டி கு. கதிரவேற்பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் தொகுத்த தமிழ்ச் சொல் அகராதியை தொகுக்கும் பொருட்டு உதவி வந்தார். மேலும் இக்காலத்தில் புலவர் யாழ்ப்பாணம் வைதிக சைவபரிபாலன சபையில் முக்கிய உறுப்பினராக இருந்தமையால், சபை சார்பாக பல கோவில்களுக்கு சென்று சைவத்தின் சிறப்பு பற்றி சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். ஆறுமுக நாவலரால் 1848 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியர் திரு ா . வைத்திலிங்கம்பிள்ளை நோய்வாய்ப்பட்டு இறந்ததை அடுத்து, 1902 அக்டோபர் 1 இல் புலவர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இங்கு புலவர் தமது வாழ்நாள் முழுவதும் பணியாற்றி வந்துள்ளார். இங்கு இவர் தமிழ் இலக்கண இலக்கியம், சைவ சித்தாந்தம், மற்றும் வடமொழி இலக்கண இலக்கியம் முதலியவற்றை கற்பித்துள்ளார்.
பிற்கால மாணாக்கர்கள்
1898 ஆம் ஆண்டுக்குப் பின் புலவரிடத்தில் கல்வி கேட்டுத் தெளிந்தவர்களில் பலர் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் புலவரிடத்தில் கற்றவர்கள், சிலர் புலவருடைய வீட்டுக்கு சென்று கற்றவர்களாவர். இவர்களுள் முக்கியமானவர்கள், இளவாலை க. சங்கரப்பிள்ளை, கொக்குவில் சீ. முருகேசையர், கந்தரோடை அ. கந்தையாப்பிள்ளை, வட்டுக்கோட்டை க. சிதம்பரநாதன், வண்ணார்பண்ணை ஆ. சண்முகரத்தின ஐயர், புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர், தென் கோவை ச. கந்தையாப் பண்டிதர், உடுவில் வ. மு. இரத்தினேசுவர ஐயர், உடுவில் மு. ஜகநாதையர், காரைநகர் ச.பஞ்சாட்சர ஐயர், இருபாலை சி. வேதாரணிய தேசிகர், இருபாலை சி. தியாகராசபிள்ளை, தாவடி மு.பொன்னையாபிள்ளை, நாயன்மார்கட்டு செ. சிவசிதம்பரப்பிள்ளை, நீர்வேலி வி. மயில்வாகனப்பிள்ளை, தெல்லிப்பழை மேற்கு சி. கதிரிப்பிள்ளை, வேதாரணியம் தி அருணாசல தேசிகர், சிறுப்பிட்டி த. கார்த்திகேயப்பிள்ளை, நல்லூர் க. குருமூர்த்தி சிவாசாரியார், மட்டுவில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, மட்டக்களப்புப் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை முதலியோராவர். இவர்களுக்குள் புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர் புலவரைப் போல் ஆழ்ந்த இலக்கண அறிவு கொண்டிருந்தமையால் பிற்காலத்தில் தொல்காப்பியக்கடல் என அழைக்கப்பட்டவர்; புலவரின் மறைவுக்குப் பின் புலவரின் வரலாற்றை எழுதியவரும் இவரே. மேலும் இருபாலை சேனாதிராசா முதலியாரின் வழித்தோன்றலாகிய தென்கோவை கந்தையா பண்டிதர், கொழும்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் வித்தகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். கணேசையரும் கந்தையா பண்டிதரும் பிற்காலத்தில் ஈழ நாட்டின் சிறந்த தமிழறிஞர்களாக விளங்கினர்.
மதுரைத் தமிழ்ச் சங்கம்
1901ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பொ. பாண்டித்துரைத் தேவர் புலவரின் திறமைகளைக் கேள்வியுற்று புலவரை சங்க உறுப்பினராக்கும் பொருட்டு 1902 அக்டோபர் 17 இல் கடிதம் மூலம் வேண்டியிருந்தார். இதற்கு இணங்கிய புலவர், பல கட்டுரைகள் வரைந்து சங்கத்தின் பத்திரிகையாகிய செந்தமிழுக்கு அஞ்சல் செய்துள்ளார். மேலும் சங்கத்தினால் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு வினாத்தாள்களும் எழுதி அனுப்பியுள்ளார். 1909 ஆம் ஆண்டு புலவர் தமிழ்நாடு சென்ற போது தேவரினால் வரவேற்கப்பட்டு, சங்கப் புலவர்களுக்கு அறிமுகம் செய்து கௌரவிக்கப்பட்டார். மீண்டும் 1914 ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்த போது, சங்கத்தின் தலைவரான இராசராசேசுவர சேதுபதி மன்னவரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். புலவர் இறந்தபோது அவரது 21 ஆண்டுத் தமிழ் தொண்டைப் பாராட்டி இச்சங்கத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புலவரின் கடைசி நூலாகிய இராமோதந்தம் 1923 ஆம் ஆண்டு இச்சங்கத்தால் பதிப்பித்து வெளியிடப்பட்டது..
இறுதி நாட்கள்
1922, மார்ச்சு 10 இல் புலவரை சுரமும் வயிற்றுழைவு நோயும் வருத்தத் தொடங்கின. மருத்துவத்தால் நோய் தணியாது, 1922 மார்ச்சு 23 அதிகாலை மூன்றரை மணியளவில் உயிர் துறந்தார். புலவர் நோயுற்ற காலத்தே அங்கு இருந்து பணிவிடை புரிந்த, அவரது மாணவனாகிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை சுடுகாட்டில் புலவரின் உடல் எரியூட்டப்பட்ட போது பின்வரும் இரங்கற்பாவினால் தனது குரவருக்கு இறுதி வணக்கம் கூறினார்:
செந்தமிழும் ஆரியமுந் தேர்ந்து வீறித் தேயமேலாம் சென்றிலகும் சீர்த்தி ஒன்றே
இந்தநில மிசையிருப்ப இணையி லாத எண்ணில்பல கவிதழைத்த இனிய வாயும்,
அந்தமிலாக் கவிகள்பல எழுதி வைத்த அம்புயநேர் திருக்கரமும், அந்தோ! அந்தோ!
இந்தனத்திற் செந்தழலில் உருகி வீய யாமிதனைப் பார்த்திருத்தல் என்ன! என்ன!
புலவரின் செய்யுள் நூல்கள்
குமாரசாமிப் புலவர் தொடக்கக் காலத்தில் இயற்றிய செய்யுள்கள், பதிகம், ஊஞ்சல், சிந்து, இரட்டைமணிமாலை, அட்டகம், கும்மி மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களாக விளங்கின.
பதிகங்கள்
வதுளை கதிரேசன் பதிகம் (1884)
வதுளை மாணிக்கவிநாயகர் பதிகம் (1884)
மாவைப் பதிகம் (1892)
துணைவை அரசடி விநாயகர் பதிகம் (1894)
அமராவதி பூதூர் பாலவிநாயகர் பதிகம்(1897)
ஊஞ்சல்கள்
வதுளைக் கதிரேசன் ஊஞ்சல் (1884)
துணைவை அரசடி விநாயகர் ஊஞ்சல் (1889)
கீரிமலை நகுலேசர் ஊஞ்சல் (1896)
ஏழாலை அத்தியடி விநாயகரூஞ்சல் (1897)
கைலாய பிள்ளையார் ஊஞ்சல் (1904)
கோப்பாய் வெள்ளெருவை விநாயகர் ஊஞ்சல் (1905)
விளிசிட்டி பொற்கலந்தம்பை பைரவர் ஊஞ்சல் (1912)
தெல்லிப்பழை தில்லையிட்டி அம்மன் ஊஞ்சல் (1915)
பன்னாலை வள்ளிமலை கந்தசுவாமி ஊஞ்சல் (1916)
அராலி முத்துமாரியம்மான் ஊஞ்சல் (1921)
வேறு சிற்றிலக்கிய நூல்கள்
வதுளைக் கதிரேசன் சிந்து (1884)
மாவையிரட்டை மணிமாலை (1896)
நகுலேசர் சதகம் (தசகம்) (1896)
அத்தியடி விநாயகர் அட்டகம் (1897)
கும்மி
மிலேச்சமதவிகற்பகக் கும்மி (1888)
மொழிபெயர்ப்புச் செய்யுள்கள்
ஏகவிருத்தபாரதம் முதலியன (1896)
மேகதூதக் காரிகை (1896)
சாணக்கிய நீதிவெண்பா (1914)
இராமோதந்தம் (1921)
வசன அல்லது உரைநடை நூல்கள்
திருக்கரைசைப் புராண பொழிப்புரை (1890)
இப்புராணம் திருகோணமலைக்கு அருகில் உள்ள கரைசையம் என்னும் மகாவலி ஆற்றங்கரையில் உள்ள இடத்தில் அமைந்துள்ள சிவன் திருக்கோவிலின் சிறப்புரைக்கும்.இது சூதமுனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட ஒரு புராணமாகும். இதனை தமிழில் இயற்றியவர் யாவர் என்று புலப்படவில்லை. திருகோணமலை வாழ் நண்பரான வே அகிலேசபிள்ளை விரும்பியவாறு, இப்புராண பொழிப்புரையை புலவர் எழுதியுள்ளார்.
சூடாமணி நிகண்டு முதல் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1896)
சூடாமணி நிகண்டு இரண்டாம் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900)
சூடாமணி நிகண்டு முதலைந்து தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900)
சூடாமணி நிகண்டு என்னும் நூல்ளுள் காணப்படும் தமிழ் சொற்களுக்கு பின்கலநிகண்டு மற்றும் பல இலக்கண நூல்களின் உதவியோடும், வடமொழிச் சொற்களுக்கு இலிங்கபட்டியம், அபிதநிகம், மகாவியாக்கியானம் போன்ற நூல்கள் உதவியோடு புலவர் தனது பொருள் விளக்கத்தை எழுதியுள்ளார். இந்நூலில் தெளிவற்றுக் கிடந்த பல சொற்களுக்கு பொருள் விளக்கம் கூறுவதன் மூலம் தமிழ்க் குரவரும், அதனைக் கற்போரும் பயனடையக்கூடியதாகயுள்ளது.
இலக்கணசந்திரிகை (1897)
தமிழில் அகராதி எழுதிய உடுப்பிட்டி கு கதிரவேற்பிள்ளை விரும்பியவாறு எழுதப்பட்ட சொல்லியல் ஆய்வு நூலாகும். இதில் பவணந்தி முனிவர் நன்னூலில் கூறிய நெறியை பின்பற்றாது திரிபுனால் விகாரம் அடைந்து இலக்கியங்களில் விளங்கும் சொற்களுக்கு விதியுரைக்குகிறார் புலவர். மேலும் தமிழில் வடிவம் மாறி வரும் வடமொழிச் சொற்கள் பற்றியும் இதில் ஆராயப்படுகிறது.
கண்ணகி கதை (1900)
யாப்பருங்கலப் பொழிப்புரை (1900)
யாப்பருங்கலம் என்பது யாப்பிலக்கணத்தை நூற்பா அகவல் எனப்படும் சூத்திர யாப்பிலமைத்துச் செய்த ஒரு பழைய நூலாகும். யாப்பருங்கலக் காரிகைக்கு மூலநூல் இதுவே. கற்போருக்கு பயனுள்ளவாறு புலவரர்கள் இப்பொழிப்புரையை வெளியிட்டார்.
இரகுவம்சக் கருப்பொருள் (1900)
வடமொழியில் காளிதாசர் பாடிய இரகுவம்சத்தைத், தமிழில் பாடிய அரசகேசரியின் செய்யுள்களுக்கு உடுப்பிட்டி கு கதிரவேற்பிள்ளை விரும்பியவாறு புலவரால் உரை எழுதபட்டது.
வெண்பா பாட்டியல் பொழிப்புரை (1900)==
இதுவும் புலவரால் பொழிப்புரை எழுதப்பட்ட ஒரு நூலாகும். இதில் வெண்பாவில் உள்ள இலக்கண விதிமுறைகளைப் பற்றி விளக்கம் தரப்படுகிறது.
கலைசைச் சிலேடை வெண்பா அரும்பதவுரை (1901)
தொட்டிக்கலைச் சுப்ரமணிய முனிவர் இயற்றிய இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளும் இரண்டாமடிகள் இரண்டு மூன்று பொருள் கொள்ளும்படி சிலேடையுடையனவாகவும், பின்னிரண்டடிகளும் திரிபுயமக முடையனவாகவும் எழுதப்பட்டுள்ளது. இச்செய்யுட்களுக்கு புலவரால் அரும்பதவுரை வழங்கப்பட்டுள்ளது.
நீதிநெறி விளக்கப் புத்துரை (1901)
திருக்குறள் முதலிய நீதி நூல்களை தழுவி குமரகுருபர சுவாமியால் வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூலுக்கு எத்தனையோ நுட்பமான திருத்தங்களும், மேற்கோள்களும், பிறவும்,சுருக்கமும், விளக்கமும் உள்ளவாறு புத்துரை ஒன்றை புலவரவர்கள் வழங்கியுள்ளார்கள்.
மறைசையந்தாதி அரும்பதவுரை (1901)
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் வேதாரணியேசுரர் (திருமறைக்காடுறையும் சிவன் ) மிது பாடிய இவ்வந்தாதிக்கு புலவர் அரும்பதவுரை எழுதியுள்ளார்.
தண்டியலங்கார புத்துரை (1903)
இந்நூல் காளிதாசரால் வடமொழியில் இயற்றபட்ட காவியதர்சம் என்னும் நூலைத் தழுவி தமிழில் தண்டிப்புலவரால் தண்டியலங்காரம் எனும் பெயரில் இயற்றப்பட்டது. இது செய்யுள்களை மேலும் சிறப்பாக்க கையாளப்படவேண்டிய விதிமுறைகளை பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் எனும் மூன்று பகுதிகளில் கூறுகிறது. இதற்கு பலர் உரை எழுதியிருந்த போதும், அவற்றில் வழுக்கள் மிகுதியாக இருந்தமையால் அவற்றைத் திருத்தி புதியதொரு உரையை புலவர் வழங்கியுள்ளார்.
திருவாதவூரர் புராணப் புத்துரை (1904)
மாணிக்கவாசக பெருமானின் வரலாற்றை கூறும் இந்நூல் கடவுள் மாமுனிவரால் எழுதப்பட்டது. முன்பு இதனை திருத்தி பதிப்பித்த புலவரவர்கள்,1904 ஆம் ஆண்டு இதற்கு ஒரு புத்துரையை எழுதி வெளியிட்டார்.
யாப்பருங்கலகாரிகைப் புத்துரை (1908)
முன்னர் பொழிப்புரையுடன் வெளியிட்ட இந்நூலுக்கு 1908 ஆம் ஆண்டு புதியதோர் உரையை புலவரவர்கள் வரைந்துள்ளார். இதன் இரண்டாம் பதிப்பை 1925 இல் கு. அம்பலவாணபிள்ளை வெளியிட்டார். இதன் மறுபதிப்பு 2015 இல் சென்னையில் வெளியிடப்பட்டது.
முத்தகபஞ்சவிஞ்சதி குறிப்புரை (1909)
புலவரவர்கள் தனது மூதாதையரான முத்துக்குமாரகவிராயர் இயற்றிய பல நூறு செய்யுள்கள் காலத்தால் அழிவுற்ற நிலையில் உறவினர் மற்றும் கவிராயரிடம் கற்றவரிடமும் வினவியும் தேடியுமறிந்த இருபத்தைந்து செய்யுள்களை இந்நூலில் பதிப்பித்துள்ளார். கவிராயர் பிரகேளிகை, நாமாந்தரிதை, சங்கியாதை, வியிற்கிராந்தை, மடக்கலங்க்காரம் முதலிய யாப்பணிகளை நூதனமாக நல்லிசைச் செய்யுளுள் அமைத்துப் பாடியுள்ளார். இச்செய்யுள்களை கற்றவரும் மற்றவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் புலவரவர்கள் இவற்றுக்கு குறிப்புரை எழுதுயுள்ளார்.
அகப்பொருள் விளக்க புத்துரை (1912)
1912ஆம் ஆண்டு இறையனார் அகப்பொருளுக்கு, புலவரவர்கள் திரு த.தி.கனகசுந்தரம்பிள்ளையுடன் இணைந்து புதியதோர் உரை எழுதி வெளியிட்டுள்ளார்கள்.
வினைப்பகுபதவிளக்கம் (1913)
இந்நூலிற் கையாளப்பட்ட இலக்கணவாராய்ச்சி முறை நன்னூலிலுள்ள 'நடவாமடிசீ' என்னுஞ் சூத்திரத்தைப் பீடிகையாகக்கொண்டு இருபத்துமூன்று பகுதிகளையும் தனித்தனியே விளக்கிக் காட்டுகின்றது. இந்நூல் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை விரும்பியவாறு இயற்றப் பெற்றது.
இலக்கியச் சொல்லகராதி (1915)
இது சங்க இலக்கியங்களிலும், சங்கமருவிய இலக்கியங்களிலும், பிற்றைச் சான்றோரிலக்கியங்களிலும் வருகின்ற அருஞ் சொற்களாகிய இலக்கியச் சொற்களைத் தொகுத்து புலவரால் இயற்றப்பட்டது. மற்றைய அகராதிகளில் வழுவுற எழுதப்பட்ட சொற்களும், சொற்பொருள்களும் இதன்கண் திருத்தமுற எழுதப்பட்டுள்ளன. பிற அகராதிகளில் வராத அனேகம் புதுச்சொற்கள் இதிற் சேர்க்கப்பட்டுள்ளன. இது பண்டைக்கால இலக்கியங்களைப் பயில்வாருக்குப் பெரிதும் பயன்படும்.
தமிழ்ப் புலவர் சரித்திரம் (1916)
இந்நூலில் பல புலவர்களுடைய சரித்திரச் சுருக்கமும், அவர்கள் பாடிய அருங்கவிகளும், அவற்றின் உரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலின் வசனங்கள் சுருக்கமும், தொடைநயமும் பொருந்த அழகுற எழுதி சேதுபதி மன்னவருக்கு அர்ப்பணித்துள்ளார். மேலும் இந்நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டக்கல்விப் பாடநூலாக விளங்கியது.
இராமாயணம் பாலகாண்டம் அரும்பதவுரை (1918)
இது புலவரவர்கள், தி. த. கனகசுந்தரம்பிள்ளையுடன் சேர்ந்து எழுதிய நூல். இராமாயணச் செய்யுள்களில் பதிக்கும்போது சொற்குற்றங்கள் பெருகிவருவதை கண்ட இவர்கள், பழைய ஏட்டுச்சுவடிகளை தமிழகத்தில் தேடிக் கண்டெடுத்து, அவற்றின் துணையுடன் திருத்தமாக அரும்பதவுரையுடன் பாலகாண்டத்தை வெளியிட்டனர். புலவரின் உடல்நலக் குறைவாலும், கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் சென்னையில் வசிக்க நேரிட்டதாலும் திட்டமிட்டபடி மிகுதி இராமாயணம் வெளியிடப்படவில்லை.
ஏரேழுபது பொழிப்புரை (1920)
கம்பரால் இயற்றப்பட்ட இந்நூலுக்கு புலவர் பொழிப்புரை வழங்கியுள்ளார்.
இதோபதேசம் (1920)
இது விட்டுணூசர்மர் என்பவரால் வடமொழியில் சுதர்சனர் என்னும் அரசனின் மைந்தருக்கு அரசியல் நெறி போதிக்கும் பொருட்டு எழுதப்பட்ட நூலாகும். இதனை புலவரின் வடமொழிக் குரவர் நாகநாத பண்டிதர் தமிழில் செய்யுள் வடிவில் மொழிபெயர்த்தார். அவற்றை புலவர் வசனநடையில் எழுதியுள்ளார்.
கல்வளையந்தாதி பதவுரை (1921)
நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் எழுதிய கல்வளையந்தாதிக்கு புலவர் பதவுரை எழுதியுள்ளார்.
சிசுபாலசரிதம் (1921)
சிசுபாலவதம், மகாபாரதம், பாகவதம் ஆகிய வடமொழி நூல்கள் கூறும் சேதினாட்டரசன் சிசுபாலன் வரலாற்றைப் புலவரவர்கள், மொழிபெயர்த்து உரைநடையமைப்பில் தமிழில் தந்துள்ளார்.
இரகுவமிச சரிதாமிர்தம் (1922)
முதலில் வடமொழியில் காளிதாசராலும், பின்னர் தமிழில் அரசகேசரியாலும் பாடப்பட்ட இந்நூலை புலவர் வசனநடையில் எழுதியுள்ளார். இரகுவமிசம் திலீபன் முதல் இலவகுசர் வரையான இரகுகுல அரசரின் வரலாற்றை கூறுகிறது.
புலவர் பதிப்பித்த நூல்கள்
இதோபதேசம் (1886)'
இது புலவரின் வடமொழிக் குரவர் நாகநாத பண்டிதரால் வடமொழியிலிருந்து தமிழுக்கு செய்யுள் வடிவில் மொழி பெயர்க்கப்பட்டதாகும். இதனை பண்டிதரவர்கள் புலவருக்கு கல்வி கூறும் பொருட்டுச் செய்திருந்தார்.
நகுலமலைக் குறவஞ்சி நாடகம் (1895)
அராலி விசுவநாத சாத்திரிகளால் இயற்றப்பட்ட இந்நூல், புலவரால் பல மேற்கோள்களோடு பதிப்பிக்கப்பட்டது.
யாப்பருங்கலக்காரிகை பழையவுரை (1900)
இதில் நிலவிய சொற்குற்றங்களை நீக்கிப் புலவரால் 1900 ஆம் ஆண்டு பதிப்பிடப்பட்டது.
ஆசாரக்கோவை (1900)
புலவரால் பதிக்கப்பட்ட ஆசாரக்கோவை பெருவாயில் முள்ளியரால், ஆசாரமுரைக்கும் வகையில் இயற்றப்பட்டதாகும்.
நான்மணிக்கடிகை (1900)
ஆத்திசூடி வெண்பா (1901)
இராமபாரதி இயற்றிய இந்நூலை, புலவர் 1901 ஆம் ஆண்டு பதிப்பித்தார்.
சிவசேத்திர விளக்கம் (1901)
திருவண்ணாமலை அண்ணாமலைத்தேசிகர் இயற்றிய இந்நூலை புலவர் ஆராய்ந்து, மூன்று சிறப்புப்பாயிரப் பாக்கள் வழங்கிப் பதிப்பித்தார்.
உரிச்சொனிகண்டு (1902)
தமிழில் வரும் உரிச் சொற்களுக்கு பொருள் வரையறுத்துக் கூறும் இந்நூலை புலவர் திறனாய்வு செய்து பதிப்பித்தார்.
திருவாதவூரர் புராணமுலம் (1902)
கடவுள் மாமுனிவரால் இயற்றப்பட்ட இந்நூலின் பிற பதிப்புகளில் மிகுதியாகக் காணப்பட்ட சொல்லியல் வழுக்களை நுண்ணறிவால் களைந்தது மிகத் திருத்தமாக புலவர் இதனை பதிப்பித்தார்.
பழமொழி விளக்கம் (1903)
பழமொழிகளின் கதைகளைத் தழுவி இயற்றப்பட்ட இந்நூல் 1903 ஆம் ஆண்டு புலவரால் பதிப்பிக்கப்பட்டது.
சதாசாரக்கவித்திரட்டு (1901)
சிவத்தோத்திரக்கவித்திரட்டு (1911)
கண்டனங்களும், கட்டுரைகளும், சொற்பொழிவுகளும்
புலவர் செய்யுள்கள்,கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் முதலியவற்றைக் கையாண்டு தமது கண்டனங்களை வழங்கியுள்ளார். இவை இரு வகைப்படும். கிறித்து மதத்தவர் மேலைநாட்டு ஆட்சியாளரின் துணையுடன் தங்கள் மதத்தை தமிழரிடையே பரப்பும் பொருட்டு சைவத்தை இழிந்து வந்ததை எதிர்த்து தொடக்ககாலத்தில் புலவர் கண்டனங்கள் பல வழங்கியுள்ளார். புலவர் கிறித்து மதத்தவரின் சைவநிந்தனையை மறுத்து வரைந்த கட்டுரைகள் பின்வருமாறு.
இலங்கை நேசன் என்னும் செய்தித்தாளில் வெளிவந்த கண்டனங்கள்.
கிறீஸ்து தேவனா? (1878)
பன்னகவரி (1881)
உதயபானு என்னும் செய்தித்தாளில் வெளிவந்த கண்டனங்கள்:
நற்புத்தி (1880)
அஞ்ஞானி என்னுஞ் சொன்மறுப்பு (1881)
கிறீஸ்து சிருட்டிகர் (1881)
பாதுகாவலன் பத்திராதிபருக்கு (1881)
காரைக்கால் சத்திய வேத ஆசாரப் பிரியருக்கு (1881)
வடவிலங்கைக் கிறீஸ்த வித்தகருக்கு (1882)
நாகரீகசார விநாசம்(1882)
ஆறுமுக நாவலர் இறந்தபோது, கிறித்துவ மதச்சபைகள் தங்கள் மதத்தை பரப்ப நல்ல தருணம் எனக் கருதிப் பல சைவமதக் கண்டனங்களை வெளியிட்ட போது அவற்றை மறுத்து மேல்க்கூறிய தலைப்புக்களில் புலவரவர்கள் கண்டனங்களை வெளியிட்டார். 1889 ஆம் ஆண்டுக்கு பின் மதம் பரப்பும் நடவடிக்கை ஓரளவு தணிவுற்றதால் புலவரும் கண்டனம் எழுதுவதை கைவிட்டார்.
இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரையேழுதுபவர்கள் மற்றும் அவற்றைப் பதிப்பிப்போர் செய்யும் பொருள் மற்று சொற் குற்றங்களை தனது நுண்ணறிவால் கண்டறிந்து, அவற்றைத் திருத்தும் பொருட்டு கண்டனங்கள் வரைவதில் புலவரவர்கள் அக்காலத்தில் தலைசிறந்தவராக விளங்கினார். இதனை கண்டு வியந்த நல்லூர் சரவணமுத்துப் புலவர் யாப்பருங்கலக் காரிகைப் பதிப்புக்கு வழங்கிய சிறப்புப் பாயிரத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.
எம்மை விஞ்சிடுவோர் எவருமிங் கிலையெனாத்
தம்மைத் தாமே தனிவியந் தெழுதும்
போலி நாவலர் புரைபட இயற்றிய
நூலுரைப் பிழைகளை நுண்ணிதி னாய்ந்தோன்
புலவர் தனது காலத்தே பல பல கண்டனங்களை வரைந்துள்ளார், ஆனால் மிகுந்த பரபரப்பையும், அறிஞர்களின் வரவேற்பையும் பெற்ற மூன்று கண்டனங்கள் வருமாறு:
கந்தபுராண வியாக்கியானம் (1876)
புலவர் இளமைக்காலத்தில் வரைந்த இக்கண்டனம் நகைச்சுவை ததும்பும் வகையில் உள்ளது. கந்தபுராணம் முதலியவற்றைப் பிரசங்கஞ் செய்யும் உரையாசிரியர்கள் செய்யும் பிழைகளைக் கண்டித்துக் கூறும் இக்கண்டனத்தை வாசித்த ஆறுமுக நாவலர் அதன் உரைநடையின் சிறப்பையும், தருக்கரீதியாக எழுதப்பட்டிருப்பதையும் கண்டு களித்ததோடமையாது அதற்குச் சார்பாக ஒரு கடிதம் வரைந்து இலங்கை நேசனில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் புலவரின் கண்டன திறமையை தமிழ் அறிஞர்கள் எல்லோரும் அறிந்தனர்.
இலக்கண வினா(1880)
இப்பெயருடைய கண்டனம், யோன் சங்கரப்பிள்ளை என்பவர் புதிய முறையில் இலக்கணச் சல்லாபம் என்னும் நூலைத் தமிழ் மரபு கவனியாது எழுதியமையால் புலவரால் வரையப்பட்டு உதயபானுவில் வெளிவந்தது. இது அக்காலத்தில் அறிஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
சிவக சிந்தாமணிப் பிழைகள் (1901)
புலவர், உ. வே. சாமிநாதையர் பதிப்பித்த சிவக சிந்தாமணிப் பதிப்பிலுள்ள பிழைகளை திரட்டி மேல் கூறிய பெயரில் வெளியிட்டார். முன்னைய நாட்களில் சாமிநாதையரின் மாணவகராகிய சண்முகம்பிள்ளை, புலவரின் தமிழ்க் குரவராகிய முருகேசப் பண்டிதரை ஈழநாட்டாரும் சாதாரண இலக்கிய விலக்கணக் கல்வியறிவில்லாத அற்பரும் என இழிந்து கண்டனம் எழுதியதால், சாமிநாதையர் புலவரின் கண்டனத்தை பழிவாங்கும் நடவடிக்கை எனக் கருதினார். இதனால் புலவருக்கும் சாமிநாதையருக்கும் இடையே நிலவிய நட்பில் பன்னிரு ஆண்டு கால இடைநிறுத்தம் ஏற்பட்டது.
புலவரவர்கள் கண்டனக் கட்டுரைகள் தவிர சில நூறு இலக்கணவிலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மற்றும் சைவான்மீகக் கட்டுரைகளையும், உதயபானு, இலங்கை நேசன், திராவிடகோகிலம், செந்தமிழ், சிறிலோகரஞ்சனி முதலிய பத்திரிகைகளுக்கும் பிற வெளியீடுகளுக்கும் வழங்கி உள்ளார். மேலும் அக்காலத்தில் கோவில்கள் மற்றும் கல்விக்கூடங்கள் போன்ற இடங்களில் புலவரவர்கள், ஆன்மீகம் மற்றும் இலக்கணவிலக்கியம் சார்ந்த தலைப்புகளில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சுண்ணாகம் அ.குமாரசுவாமிப்-புலவர்
இலங்கைத் தமிழ் அறிஞர்களில் இன்றும் போற்றப்படுபவர் குமாரசுவாமிப்புலவர்
சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர்
ஈழத்துப் புலவர்கள்
யாழ்ப்பாணத்து நபர்கள்
ஈழத்து எழுத்தாளர்கள்
ஈழத்துப் பதிப்பாளர்கள்
தமிழ்ப் பதிப்பாளர்கள்
தமிழ் இலக்கண அறிஞர்கள்
ஈழத்துத் தமிழறிஞர்கள்
1854 பிறப்புகள்
1922 இறப்புகள்
|
3802
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
|
விபுலாநந்தர்
|
சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 – சூலை 19, 1947) கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர்.
வாழ்க்கை
பிறப்பு
சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 1892 மார்ச்சு 27 (1892 கர ஆண்டு பங்குனி 16) அன்று சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தார்.
கல்வி
இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) சோதனையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார்.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912-ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915-ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916-இல் அறிவியலில் பட்டயத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே.
ஆசிரியப் பணி
கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 1920-ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளரும், திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில், 1925-ஆம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலாநந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928-இல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். 1926-ஆம் ஆண்டிலிருந்து 1930 வரை திருகோணமலையில் இருந்தபடியே யாழ்ப்பாணம் இராமகிருட்ண மிசன் வைத்தீசுவர வித்தியாலயத்தின் முகாமையாளராகவும் செயற்பட்டார்.
துறவறம்
மனதை ஈர்த்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922-ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சர்வானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் அங்குப் பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும்,வேதாந்த கேசரி (Vedanta Kesari) என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார். மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
1924-ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சர்வானந்தரால் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.
இசை ஆராய்ச்சி
செட்டி நாட்டரசர் வேண்டுகோளின்படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்துப் போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934-ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்தி விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா(Almorah) என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் 'பிரபுத்த பாரதம்' (Prabuddha Bharatha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934-ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது.
1943-ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராகப் பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியில் செல்லவேண்டும் என்ற திட்டங்களைச் சுவாமி விபுலாநந்தரே வகுத்தார் என்பது நினைவில் இருக்கத்தக்கது.
கலைச்சொல்லாக்கம்
சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு 1936 செப்டெம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. திருவாங்கூர் திவான் சேர் சி. பி. இராமசாமி ஐயர் தொடக்கி வைத்தார். சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை அரசாங்கம், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் ஆகியன அறிஞர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன. சுவாமி விபுலாநந்தர் கலைசொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், வேதியியல் கலைச்சொல் நூற் குழுவின் தலைவராகவும் இருந்து செயற்பட்டார். 1936 செப்டம்பர் 27 அன்று சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்ற போது, கலைச்சொல்லாக்கத்தைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யாழ் நூல் அரங்கேற்றம்
சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல் ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரண்யேசுவரர் கோயிலில் திருஞானசம்பந்தரின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள், கற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில் தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947-ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.
முதல் நாள் விழாவில் இயற்றமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களைத் தெற்குக் கோபுர வாயிலின் வழியாகத் திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். சுவாமி அவர்கள் தான் ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர்த் தான் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கிச் சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய 'நாச்சியார் நான்மணிமாலை' வித்துவான் ஔவை துரைசாமி அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுரைகளுக்குப் பின்னர்ச் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது.
இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தைக் கவியரசு அ. வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர்ச் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது.
மறைவு
யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். 1947 சூலை 19-ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் இறந்தார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது. இத்துடன் நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு நாளான அன்றே கொண்டாடப்படுகின்றது.
வெளிவந்த நூல்கள்
மதங்க சூளாமணி
யாழ்நூல்
சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் (127 கட்டுரைகளின் தொகுப்பு, 3 பாகங்கள், 1997)
விபுலானந்தர் இலக்கியம் (தொகுப்பு)
மொழிபெயர்த்து
சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்; மொழிபெயர்ப்பு:விபுலாநந்தர்; 1957; ராமகிருஷணமடம், சென்னை-4.
விபுலாநந்தர் பற்றிய ஆக்கங்கள்
அடிகளார் படிவமலர் - ம. சற்குணம்
விபுலானந்தர் இமயம் - மட்டக்களப்புத் தமிழ் சங்கம்
விபுலானந்தர் காவியம் - சுப்பிரமணியம் சிவலிங்கம்
சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும் - சி. மௌனகுரு
சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் - கா. சிவத்தம்பி
யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் - அ. கௌரிகாந்தன்
இவற்றையும் பார்க்கவும்
சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி
விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது
உசாத்துணை
தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் - குன்றக்குடி பெரியபெருமாள்
நூலகம் திட்டத்தில் விபுலானந்தர் பற்றிய நூல்கள்
சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும் - சி. மௌனகுரு
சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் - கா. சிவத்தம்பி
யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் - அ. கௌரிகாந்தன்
வெளி இணைப்புகள்
விபுலாநந்தர் தமிழ்த் தொண்டு, முனைவர் மு. இளங்கோவன்
இசைத்தமிழின் இலங்கை முகம், முனைவர் மு.இளங்கோவன்
பிபிசியில் விபுலாநந்தர் பற்றிய ஆய்வு
தமிழிசை இயக்கமும் விபுலாநந்தரும்
தினமணியில் விபுலானந்தர் பற்றிய கட்டுரை
தமிழறிஞர் விபுலாநந்தர்
விபுலாநந்தர் பிறந்த தினம்
Swami Vipulananda: The Monk Who Recreated Lost Ancient Tamil Musical Instruments, Aravindan Neelakandan, 27 மார்ச் 2022
ஈழத்து எழுத்தாளர்கள்
மட்டக்களப்பு மாவட்ட நபர்கள்
தமிழிசைக் கலைஞர்கள்
தமிழறிஞர்கள்
ஈழத்துத் தமிழறிஞர்கள்
1947 இறப்புகள்
1892 பிறப்புகள்
தமிழிசை ஆய்வாளர்கள்
தமிழ் நாடக ஆய்வாளர்கள்
தமிழ் கலைச்சொல் அறிஞர்
தமிழிசை இயக்க செயற்பாட்டாளர்கள்
அம்பாறை மாவட்ட நபர்கள்
புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை பழைய மாணவர்கள்
|
3803
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
ஈழத்தமிழ் நாடகங்கள்
|
ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகளும் நவீன நாடகங்களாகும்.
மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாதுவிடினம் ஈழத்தில் நாடக வடிவ இலக்கியங்களான பள்ளு குறவஞ்சி நூல்களின் தோற்றக் காலமான 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஈழத்தில் பல மரபுவழி நாடகப் பிரதிகள் தொடர்ச்சியாகத் தோன்றத் தொடங்கின என்று அறிகிறோம். கணபதி ஐயரே (1709-1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முதலாசிரியர் என்பர். இவர் வாளபீமன் நாடகத்தை எழுதினார். இதுவரை கிடைத்த பல்வேறு தகவல்களிலிருந்து ஈழத்தில் ஏறத்தாள 200க்கு மேற்பட்ட மரபுவழி நாடக நூல்கள் இருந்ததாக அறிய முடிகிறது. ஆனால் ஏட்டுருவிலோ அன்றி அச்சுருவிலோ கையிற் கிடைப்பவை அவற்றினும் பாதியே.
போத்துக்கேயர் வருகையின் பின் ஈழத்தில் வளர்ச்சி பெற்ற கத்தோலிக்க மதத் தாக்கத்தினால் கத்தோலிக்க மதச் சார்பு பொருந்திய கூத்துக்களும் தோன்றின. என்றிக் எம்பரதோர் நாடகம், ஞானசவுந்தரி நாடகம் என்பன இதற்கு உதாரணங்களாகும். ஈழத்து மரபுவழி நாடகங்களில் கத்தோலிக்காரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய இடங்களிலெல்லாம் இம் மரபு வழி நாடகங்கள் இன்றும் வழக்கிலுள்ளன. இவற்றிற்கிடையே பிரதேசத்திற்குப் பிரதேசம் சிற்சில வேறுபாடுகளிருப்பினும் இவை அனைத்தும் ஓரிடத்திலுருவாகி, பின்னர் ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களிற் சுவறின என்பதற்கு ஆதாரங்களுண்டு. இம்மரபுவழி நாடகங்களே ஈழத்து நாடக மரபின் ஆரம்பமாகும்.
பார்ஸி வழி நாடகக்காரரது வரவினால் 18 ஆம் நூற்றாண்டில் விலாசம் என்றொரு நாடக வடிவம் ஈழத்தில் வந்து புகுந்தது. அரிச்சந்திர விலாசம், மதனவல்லி விலாசம் என்பன இதற்கு உதாரணம். கூத்திலிருந்த ஆட்ட முறைகள் நீக்கப்பட்டமையும் கர்னாடக சங்கீத இசை இடம் பெற்றமையும் விலாசத்தை கூத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டிய அம்சங்களாகும். கூத்து ஆட்ட முறைகளை விட்டு கர்னாடக இசையுடன் மேற்கத்திய, இந்துஸ்தானி இசைகளும் கலந்து சபா, டிறாமா போன்ற நாடக வடிவங்களும் 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் எழுந்தன. நாட்டுக்கூத்திற் காணப்படாத காட்சியமைப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் இந்நாடகங்களின் பிரதான அம்சங்களாகும்.
துணை நூல்கள்
வெளி இணைப்புகள்
ஈழத்து நாடக நூல்கள்
கந்தன் கருணை - நூலகம் திட்டம்
வந்து சேர்ந்தன, தரிசனம் - நூலகம் திட்டம்
சமூக விரோதி - நூலகம் திட்டம்
நான்கு நாடகங்கள் - நூலகம் திட்டம்
இலங்கைத் தமிழ் நாடகங்கள்
|
4222
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
|
மரபியல் கலந்தாய்வு
|
பிறக்கவுள்ள குழந்தைக்கு பாரம்பரியக் காரணங்களால் சில மரபுப் பண்புகள் ஏதேனும் அமைய வாய்ப்புள்ள பட்சத்தில், (பொதுவாக) கருவுறுவதற்கு முன்னரே தகுந்த மரபியல் மருத்துவக் கலந்தாய்வுப் பயிற்சி பெற்றோரைக் கலந்தாலோசிப்பது மரபியல் கலந்தாய்வு (Genetic counseling) எனப்படும்.
இக்கலந்தாய்வை பல கால கட்டங்களில் அவசியத்தின் படி செய்து கொள்ளலாம்:
கருவுறுவதற்கு முன்னர் (பெற்றவர்களில் ஒருவரோ இருவருமோ குறிப்பிட்ட மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில்)
கருவுற்ற பின்னர் (மீயொலி வரிக் கண்ணோட்டச் சோதனையில் குறைபாடுகள் தென்படும் பட்சத்தில் அல்லது பிரசவ சமயத்தில் தாயின் வயது 35க்கு மேல் இருக்கும் பட்சத்தில்)
குழந்தை பிறப்பிற்கு பின்னர் (பிறப்புக் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில்)
குழந்தைப் பருவத்தில் (குழந்தையின் வளர்ச்சியில் தேக்கம் இருக்கும் பட்சத்தில்)
வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் (வயதான பின் வரக்கூடிய சில பரம்பரை நோய்கள் குறித்து)
ஏற்கனவே, உலகின் சில பகுதிகளில், திருமணத்திற்கு முந்தைய மரபுப் பரிசோதனைகள் செய்யும் வழக்கம் வந்து விட்டது. (எ.கா) சிக்கில் செல் அனீமியா (Sickle cell anemia) மிகுந்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாட்டு மக்கள் மற்றும் கிழக்கு ஐரோப்ப அஷ்கெனாசி (Ashkenazi) பின்னணி உடைய யூதர்கள் இடையே திருமணத்திற்கு முந்தைய மரபுப் பரிசோதனைகள் செய்யும் வழக்கம் காணப்படுகிறது.
மரபியல், செவிலியம், உயிரியல், பொது சுகாதாரம், உளவியல் போன்ற பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பும் கலந்தாய்வில் அனுபவமும் உள்ளவர்கள் மரபியல் கலந்தாய்வு பணியாளர்களாகப் (Genetic counselor) பணியாற்றுகிறார்கள்.
வெளி இணைப்புகள்
அமெரிக்க தேசிய மரபியல் கலந்தாய்வு பணியாளர்கள் அமைப்பு
மரபியல்
கலந்தாய்வு
|
4225
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81
|
மரபணு
|
மரபணு (இலங்கை வழக்கு: பரம்பரை அலகு, ஆங்கிலம்: gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு புரதத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் மரபுக்குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் (DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.
உடலுக்கும் உயிர்வாழ்வுக்கும் தேவையான அனைத்துப் புரதங்களையும், தொழிற்பாடுடைய ஆர்.என்.ஏ யையும் தோற்றுவிக்க இந்த மரபணுக்கள் அவசியமாதலால், இவை உயிரினத்தின் இன்றியமையாத மூலக்கூறாகும். உடலின் உயிரணுக்களை ஆக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும், உடற்தொழிற்பாடுகளுக்கும், உயிரினங்களின் இயல்புகள் சந்ததிக்கு கடத்தப்படவும் இந்த மரபணுக்களே தேவை. உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான உயிர்வேதியியல் செயல்முறைகளுக்கும், உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (எ.கா. தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (எ.கா.குருதி வகை) இருக்கலாம்.
வரலாறு
1866 ஆம் ஆண்டு முதன்முதலில் கிரிகோர் மெண்டல் சந்ததி வழி தொடர்பில் பண்புகள் கடத்தப்படுவதைக் கண்டறிந்தார்.
1900 ல் ஹ்யூகோ டி வெரிஸ், கார்ல் காரன்ஸ், எரிக் வான் டெஸ்ச்மாக் ஆகிய மூன்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் தங்களது சொந்த ஆராய்ச்சி மூலம் மெண்டலின் ஆய்வுகளை நிரூபித்தனர். எனினும் பாரம்பரிய இயல்புகளின் அடிப்படை அலகான மரபணு சரிவர வரையறுக்கப்படவில்லை.
1940 இல், மரபுப் பண்புகளுக்கு மரபணுதான் காரணம் என அறியப்பட்டது.
1941 இல், ஜார்ஜ் வெல்ஸ் பேடில் மற்றும் எட்வர்ட் லார்ரி டாட்டம் ஆகியோர் குறிப்பிட்ட வளர்சிதைமாற்றங்களை, குறிப்பிட்ட மரபணுக்கள், குறிப்பிட்ட வழிகளில் கட்டுப்படுத்துவதையும், மரபணுவில் ஏற்படும் மாற்றங்களால் வளர்சிதை மாற்ற வழிமுறைகளில் குறிப்பிட்ட படிகளில் பிழைகள் எற்படலாம் எனவும் கண்டறிந்தனர்
1953 ல் ஜேம்ஸ் டி வாட்சன் மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் மரபணுவானது ஆர்.என்.ஏயாகப் படியெடுக்கப்பட்டு, பின்னர் புரதங்களாக மொழிபெயர்க்கப்படுகின்றது எனக் கூறினர்.
1977 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் ஜே. ராபர்ட்ஸ் மற்றும் பிலிப் ஏ. ஷார்ப் ஆகியோர் தனித்தனியாகச் செய்த ஆய்வுகளின்படி, மரபணுக்கள், இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்ததுபோல், ஈரிழை டி.என்.ஏ யில் அமைந்திருக்கும் தொடர்ச்சியான தனியான ஒரு கூறு அல்லவென்றும், ஒன்றுக்கு மேற்பட்ட துண்டாக்கப்பட்ட கூறுகளைக் கொண்டிருக்கலாம் எனவும் கூறினர்.
மரபணு திடீர்மாற்றம்
மரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) என்பது மரபணுத்தொடரில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அளவிலான மாற்றங்களைக் குறிக்கும். இது மரபணு விகாரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தகைய மாற்றங்கள் அம்மரபணுத் தொடர் புரதமாக வெளிப்படுத்தப்படுதலைப் பாதிக்கும். இம்மாற்றங்களை ஏற்படச் செய்யும் காரணிகளை திடீர்மாற்றநச்சுகள் என அழைக்கலாம். புற ஊதாக் கதிர்கள், பலவித நச்சு வாயுக்கள் மற்றும் பலவித நச்சு வேதிகள் காரணிகளாகச் செயல்படுகின்றன. ஆயினும், திடீர்மாற்றங்கள் இயல்பாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையில் பிறப்பு நிகழும் போது ஏற்படுகின்றன. திடீர்மாற்றங்களே பரிணாம வளர்ச்சியின் உயிர்நாடி ஆகும். மிகுதியாக ஏற்படும் திடீர்மாற்றங்கள் தொகுக்கப்படும் போது அதனால் புதிய வகை உயிரினம் உண்டாகிறது. இந்த திடீர்மாற்றங்களை செயற்கையாகத் தூண்டுவதன் மூலம், ஒரு நுண்ணுயிரியில் வேண்டிய நொதிகள் மட்டும் மிகுதியாக சுரக்குமாறு செய்ய இயலும். இதன் மூலம் அந்த நொதிகளின் உற்பத்தியை மிகுதிப்படுத்த இயலும். தொழிலகங்களில் இம்முறை மிக வேண்டத்தக்கதாகும்.
மரபணுத் தொடரிகள்
மரபணுத் தொடரிகள் (gene promoter) என்பது டி.என்.ஏ. ஈரிழையில் இருந்து ஆர்.என்.ஏ நகல் (transcript) வருவதை செயல்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு வரிசை (sequence) ஆகும். பொதுவாக இவைகள் ஒரு மரபணுவின் தொடக்க புள்ளியில் இருந்து (transcription start site) மேல் வரிசையில் அமைந்து இருக்கும். நிலை கருவற்ற மற்றும் நிலைகருவுள்ள (Prokaryotic and Eukaryotic) தொடரிகளின் டி.என்.ஏ வரிசையில் பல மாறுதல்கள் உள்ளன. மேலும் நிலை கருவற்ற உயிர் தொடரிகளின் (Prokaryotic Promoters) வரிசையில் ஆர்.என்.ஏ பாலிமரசு (RNA polymerase, sigma factor) மற்றும் அதனுடன் இணைந்த சிக்மா கரணி, ஒரு மரபணுவின் வெளிபடுதலை (transcription ) தொடக்கி வைக்கும். மேலும் இவ் உயிர்களில் டி.என்.ஏ வரிசையில், தொடரிக்கான வரிசைகளை பிரிப்நொவ் பேழை(Pribnow box) என அழைக்கப்படும்.
நிலைகருவுள்ள உயிர்களின் தொடரிகளில் டாட்டா பேழை (TATA box) என்கிற தயமின் மற்றும்அடினைன் நிறைந்த வரிசைகள் அமைந்து உள்ளன. மரபணு வெளிபடுதலை ஆர்.என்.ஏ பாலிமரசு II என்ற நொதியும், ஆர்.ஆர்.என்.ஏஎன்றால் ஆர்.என்.ஏ. பாலிமரசு I அவைகளுடன் இணைந்த தொடரூக்கிகள் மற்றும் செயலாக்கிகள்(Promoter binding, transcription binding and activation factors) டாட்டா பேழையில் பிணைந்து தொடரிக்கு ஒரு தொடக்க புள்ளியாக (transcription start site) அமையும். டி.என் ஏ வரிசையில் உள்ள மாற்றிகள்(Enhancer) ஒரு தொடரியின் வெளிபடுதலை மிகையாகவோ அல்லது குறைவகாவவோ ஆக்க முடியும்.
நவீன மூலக்கூற்று உயிரியல், மற்றும் மரபியல்படி, மரபணுத்தொகை (Genome) என்பது ஒரு உயிரினத்தின்முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினங்களின் டி.என்.ஏயில், அல்லது பல தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏயில் குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப்பற்றிய அனைத்து மரபியல் தகவல்களையும் குறிக்கிறது. மரபணுத்தொகையானது, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ யில் அமைந்திருக்கும் மரபணுக்களையும் அத்துடன் , குறியாக்கத்தைக் கொண்டிராத பகுதிகளையும் சேர்த்தே குறிக்கின்றது[1]. மரபணுத்தொகை என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். மரபணுத்தொகையை மரபகராதி, மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபுப்பதிவு என்றும் குறிப்பர்.
மனித மரபணுத்தொகைத் திட்டம் மூலம் 2000 ஆண்டு மனித மரபணுத்தொகையின் முழு வடிவத்தையும் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலே எடுத்தது. தற்போது ஒரு உயிரினத்தின் மரபணுத்தொகையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேறியுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தமது தனித்துவமான மரபணுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேற்கோள்கள்
மூலக்கூற்று மரபியல்
|
4231
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF8
|
ஜி8
|
எட்டு பேர் குழு எனப் பொருள் தரும் ஜி8 (G8 - Group of Eight) என்பது உலகில் அதிக ஆலைத் தொழில் முன்னேற்றம் அடைந்த குடியரசு நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், ஐக்கிய இராச்சியம், (1975 வரை ஜி6), கனடா (1976 வரை ஜி7) மற்றும் ரஷ்யா ( எல்லா நடப்புகளிலும் பங்கு கொள்வதில்லை ) ஆகியவை இந்தக் குழுவில் உள்ள நாடுகளாகும். ஆண்டு தோறும் இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் அனைத்துலக அதிகாரிகள் பங்கு கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் உச்சி மாநாடுகள் ஜி8-இன் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.
இதனையும் காண்க
ஜி-20
ஜி-7
ஜி4 நாடுகள்
ஜி8
ஜி8+5
பன்னாட்டு அமைப்புகள்
|
4235
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
ஒலிம்பிக்கு விளையாட்டுகள்
|
ஒலிம்பிக்கு விளையாட்டுகள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுகளுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன. பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண்டு அனைத்துலக ஒலிம்பிக்கு குழுவை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் ஒலிம்பிக்கு பட்டயத்தினால் வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக்கு குழுவே ஒலிம்பிக்கு இயக்கத்தை நிர்வகித்து வருகிறது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக்கு விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக்கு இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக்கு விளையாட்டுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக்கு போட்டிகள், ஊனமுற்றோருக்கான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக்கு விளையாட்டுகள், பதின்ம வயதினருக்கான இளையோர் ஒலிம்பிக்கு விளையாட்டுகள் என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர்கால ஒலிம்பிக்கு விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக்கு விளையாட்டுகள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடைக்கால ஒலிம்பிக்கு விளையாட்டுகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக்கு விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக்கு குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக்கு குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக்கு போட்டிகள் உலகப் போரினால் நடைபெறவில்லை. பனிப்போர்க் காலத்தில் பல நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்ததனால், 1980, 1984 ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்புடனேயே நடைபெற்றன.
ஒலிம்பிக்கு இயக்கம் அனைத்துலக விளையாட்டுகள் கூட்டமைப்பு, தேசிய ஒலிம்பிக்கு குழுக்கள், ஒவ்வொரு ஒலிம்பிக்கு போட்டிகளுக்குமான ஏற்பட்டுக் குழுக்கள் என்பவற்றை உள்ளடக்குகிறது. முடிவுகளை எடுக்கும் அமைப்பு என்ற அளவில், அனைத்துலக ஒலிம்பிக்கு குழு எந்த நகரில் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கின்றது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் நகரம், ஒலிம்பிக்கு பட்டயத்துக்கு ஏற்றவகையில், போட்டிகளை ஒழுங்கு செய்வதற்கும், நிதி வழங்குவதற்குமான பொறுப்பை ஏற்கவேண்டும். போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுகளை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அனைத்துலக ஒலிம்பிக்கு குழுவிடமே உள்ளது. ஒலிம்பிக்கு கொடி, தீப்பந்தம் போன்ற சின்னங்களும், தொடக்கவிழா, நிறைவுவிழா போன்ற நிகழ்வுகளும் ஒலிம்பிக்கு போட்டிகளின் பகுதிகளாக உள்ளன. கோடைகால ஒலிம்பிக்கிலும், குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வெவ்வேறு விளையாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறும் ஏறத்தாழ 400 போட்டிகளில் 13,000க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் வீரர்களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
ஏறத்தாழ உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பங்கேற்கும் அளவுக்கு ஒலிம்பிக்கு போட்டி வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய வளர்ச்சி, புறக்கணிப்புகள், போதை மருந்துப் பயன்பாடு, கையூட்டு, பயங்கரவாதச் செயல்கள் போன்றவை தொடர்பான பல சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டிகளும், அது தொடர்பான ஊடக விளம்பரமும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும் சில சமயங்களில் பன்னாட்டு அளவிலும் கூடப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. அத்துடன் போட்டிகளை நடத்தும் நகரமும், நாடும் தம்மை உலகுக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஒலிம்பிக்கு ஏற்படுத்துகிறது.
பண்டைக்கால ஒலிம்பிக்கு விளையாட்டுகள்
பண்டைக்கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரீசு நாட்டின் ஒலிம்பியாவில் இருந்த சேயுசு கோவிலடியில் சமயமும், விளையாட்டும் சார்ந்த விழாவாக இடம்பெற்றது. இது அக்காலக் கிரீசில் இருந்த நகர அரசுகள், இராச்சியங்கள் என்பவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு இடையேயான போட்டியாகும். பெரும்பாலும் தடகள விளையாட்டுக்களே இடம்பெற்றாலும், மற்போர், குதிரைப் பந்தயம், தேர்ப் பந்தயம் போன்ற சண்டை சார்ந்த போட்டிகளும் நடைபெற்றன. இவ்விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலங்களில் நகர அரசுகளுக்கு இடையேயான பிணக்குகள் அனைத்தும் போட்டிகள் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டதாகப் பலரும் எழுதி உள்ளனர். இது ஒலிம்பிக்கு அமைதி அல்லது ஒலிம்பிக்கு போர் நிறுத்தம் என அறியப்பட்டது. ஆனால் இது தற்காலத்தில் எழுந்த ஒரு உண்மையல்லாத கருத்து. கிரேக்கர்கள் என்றுமே தமக்கு இடையேயான போர்களை ஒத்திவத்தது இல்லை.
ஒலிம்பிக்கின் தோற்றம் பற்றிச் சரியாகத் தெரியாவிட்டாலும், அது குறித்துப் பல கதைகள் உள்ளன. சேயுசுக் கடவுளின் மகனான ஏராக்கிள்சு தனது தந்தையைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக்கு விளையாட்டு அரங்கைக் கட்டினானாம். இது முடிவடைந்ததும், ஒரு நேர்கோட்டில் இருநூறு அடிகள் நடந்து அத் தூரத்தை ஒரு இசுட்டேடியன் என அறிவித்தான். இது பின்னர் தூரத்தின் அளவாகக் கொள்ளப்பட்டது. கிமு 776 ஆம் ஆண்டில் ஒலிம்பிக்கு விளையாட்டுகள் தோன்றியதாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அக்கால ஒலிம்பிக்கு போட்டிகளில் ஓட்டப் போட்டிகளுடன், பாய்தல் போட்டிகள், வட்டம் எறிதல், ஈட்டி எறிதல், மற்போர், குதிரை ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம் பெற்றன. மரபுக் கதைகளின்படி எலிசு என்னும் நகரைச் சேர்ந்த கொரோயெபசு என்னும் பெயர் கொண்ட சமையற்காரன் ஒருவனே முதல் வெற்றியாளன் ஆவான்.
அக்கால ஒலிம்பிக்சு அடிப்படையில் சமய முக்கியத்துவம் கொண்டது. இதில், விளையாட்டு நிகழ்வுகளுடன் சேயுசுக் கடவுளையும், தேவ வீரனும், தொன்மங்களில் ஒலிம்பியாவின் அரசனாகக் குறிப்பிடப்படுபவனும் ஆகிய பெலோப்சுவையும் கௌரவிக்கும் முகமாகச் சடங்கு சார்ந்த வேள்விகளும் இடம்பெற்றன. விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்கள் குறித்துக் கவிதைகள் இயற்றப்பட்டதுடன், சிலைகளையும் அமைத்து அவர்களைப் பெருமைப்படுத்தினர்.
ஒலிம்பிக்கு விளையாட்டு கிமு ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் அதன் உச்சநிலையில் இருந்தது. உரோமரின் பலம் அதிகரித்துக் கிரேக்க நாட்டில் அவர்களின் செல்வாக்கு வலுப் பெற்றபோது ஒலிம்பிக்கின் முக்கியத்துவமும் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்று. இவ்விளையாட்டுக்கள் எப்போது நிறுத்தப்பட்டன என்பது குறித்து அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லாவிட்டாலும், முதலாம் தியடோசியசு எல்லாச் சிலை வணக்கச் சமயங்களையும், அவை தொடர்பான சடங்குகளையும் தடை செய்த ஆண்டான கிபி 393ல் நிறுத்தப்பட்டது என்பதே பெரும்பான்மைக் கருத்தாகும். அவனது வாரிசான இரண்டாம் தியடோசியசு, எல்லாக் கிரேக்கக் கோயில்களையும் இடிக்கக் கட்டளையிட்டான்.
ஒலிம்பிக்சு நடந்த இடங்கள்
<table border="0" cellspacing="2" cellpadding="0" width="100%">
வருடம்
இடம்
ஆண்டு
இடம்
1896
ஏதென்ஸ், கிரேக்கம்
1900
பாரிஸ், பிரான்சு
1904
செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா
1908
இலண்டன், இங்கிலாந்து
1912
ஸ்டாக்ஹோம், சுவீடன்
1920
ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்
1924
பாரிஸ், பிரான்சு
1928
ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து
1932
லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா
1936
பெர்லின், ஜெர்மனி
1948
லண்டன், இங்கிலாந்து
1952
ஹெல்சின்கி, பின்லாந்து
1956
மெல்போர்ன், ஆஸ்திரேலியா
1960
ரோம், இத்தாலி
1964
டோக்கியோ, ஜப்பான்
1968
மெக்ஸிகோ சிட்டி, மெக்சிக்கோ
1972
ம்யூனிச், ஜெர்மனி
1976
மாண்ட்ரீல், கனடா
1980
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
1984
லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா
1988
சியோல், தென் கொரியா
1992
பார்சிலோனா, எசுப்பானியா
1996
அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா
2000
சிட்னி, ஆஸ்திரேலியா
2004
ஏதென்ஸ், கிரேக்கம்
2008
பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு
2012
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
2016
ரியோ டி ஜனேரோ, பிரேசில்</tr>
</table>
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது. அடுத்த கோடை கால ஒலிம்பிக்கு விளையாட்டுக்கள் 2016ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரில் நடந்தது.
2020ம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடக்கவுள்ளது.
பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்
<table border="0" cellspacing="2" cellpadding="0" width="100%">
வருடம்
இடம்
ஆண்டு
இடம்
1924
சாமொனிக்ஸ், பிரான்ஸ்
1928
செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து
1932
ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா
1936
கார்மிஷ்ச், ஜெர்மனி
1948
செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து
1952
ஆஸ்லோ, நார்வே
1956
கார்டினா, இத்தாலி
1960
ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா
1964
இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
1968
க்ரெநோபில், பிரான்ஸ்
1972
சாப்போரோ, ஜப்பான்
1976
இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா
1980
ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA
1984
சாராஜெவோ, யுகோஸ்லாவியா
1988
கால்கேரி, கனடா
1992
ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ்
1994
லில்லேஹாம்மர், நார்வே
1998
நாகானோ, ஜப்பான்
2002
சால்ட் லேக் சிட்டி, ஐக்கிய அமெரிக்கா
2006
தோரீனோ, இத்தாலி</tr>
2010
வான்கூவர், கனடா</tr>
2014
சோச்சி, இருசியா</tr>
</table>
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
1992 வரை பனி ஒலிம்பிக்சும் கோடைக்கால ஒலிம்பிக்சும் ஒரே ஆண்டிலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்சை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது கோடைக்கால ஒலிம்பிக்சு நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்சு நடக்கும்.
அடுத்த பனி ஒலிம்பிக்சு, 2014ல் இருசியாவின் சோச்சி நகரில் நடந்து முடிந்தது. அதன் பின்னர் 2018 ல் தென்கொரியாவின் ப்யாங்சங்க் நகரில் நடந்து முடிந்தது . அடுத்த பனி ஒலிம்பிக்கு சினாவின் பீஜிங்கில் 2022 ஆண்டு நடக்க இருக்கிறது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
பெய்சிங்கில் ஒலிம்பிக்கு கல்வி குறித்த சீனவானொலிக் கட்டுரை
ஒலிம்பிக்கு போட்டிகள் பற்றிய சுவாதி.சுவாமி கட்டுரை
ஒலிம்பிக்கு அமைப்பின் அலுவல் தளம் -
பெலோப்ஸ் என்ற பெயருடைய ஒலிம்பியா நாட்டின் அரசனின் கதை -
ஒலிம்பிக் விளையாட்டுகள்
|
4241
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D
|
தமிழ் புளூட்டாக்
|
தமிழ் புளூட்டாக் (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும். இது இலங்கை, கற்பிட்டியைச் சேர்ந்த சைமன் காசிச்செட்டி(1807 - 1860) என்பவரால் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு, ரிப்ளே அண்ட் ஸ்ட்ரோங் (Ripley & Strong) பதிப்பகத்தாரால் யாழ்ப்பாணத்தில் 1859 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கருதப்படுகின்றது.
பெயர்
பண்டைய கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞரான புளூட்டாக் என்பவர் தனது காலத்தின் புகழ்பெற்ற நாற்பத்தாறு பேரின் வரலாற்றை எழுதினார். புகழ் பெற்ற இந்த நூல் எழுதியவரின் பெயரால் "புளூட்டாக்" எனவும் வழங்கப்பட்டது. இதைப் பின்பற்றியே காசிச்செட்டி அவர்கள் தான் இயற்றிய தமிழ்ப் புலவர் வரலாற்றுக்குத் தமிழ் புளூட்டாக் எனப் பெயரிட்டார்.
உள்ளடக்கம்
இந் நூலில் 195 தலைப்புகளின் கீழ் புலவர்களுடைய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எனினும், வேறு ஐந்து புலவர்கள் பற்றிய தகவல்கள் தனித் தலைப்புகளிலன்றிப் பிற புலவர்களைப் பற்றிக் கூறும்போது கொடுக்கப்பட்டுள்ளன. அதங்கோட்டாசிரியர், சேனாவரையர், இளம்பூரணர், குணசாகரர், அம்பிகாபதி ஆகிய மேற்படி ஐவரில் முதல் மூவர் தொல்காப்பியரின் கீழும், நாலாமவர் அமிர்தசாகரரின் கீழும், அம்பிகாபதி அவர் தந்தையாரான கம்பரின் கீழும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தவிர பெருந்தேவனார் என்னும் தலைப்பில் இரு வேறு பெருந்தேவனார்களைப் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்நூல் 202 தமிழ்ப் புலவர்களைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது.
பதிப்புக்கள்
இந்நூல் முதன் முதலாக 1859 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. பின்னர், 1946 ல் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், விபுலானந்த அடிகள் ஆகியோரின் அணிந்துரைகளுடன் கூடி இதன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. அண்மையில் "ஆசிய கல்விச் சேவை" (Asian Educational Services) நிறுவனத்தினர் இதனை மறுபதிப்புச் செய்துள்ளனர்.
இவற்றையும் பார்க்கவும்
பாவலர் சரித்திர தீபகம்
சைமன் காசிச்செட்டி
சங்கப் புலவர்கள் பட்டியல்
வெளி இணைப்புகள்
The Tamil Plutarch, A Summary Account of the Lives of the Poets and Poetesses of Southern India and Ceylon- TamilNation.org
தமிழ் இலக்கியம்
ஈழத்து நூல்கள்
தமிழ்ப் புலவர்கள்
|
4244
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
ஐரோப்பிய ஒன்றியம்
|
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருள்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நடமாட்டங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது வெளிநாட்டு அலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் நிகராண்மைக் (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "நாட்டோ" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. செஞ்சென் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கம், அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.
1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது.
2012 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2013 ஜூலை 1-ம் தேதி குரோவாசியா நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்டது.
வரலாறு
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிணைப்புத் தொடர்பான நகர்வுகளை, அக்கண்டத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்குகளிலிருந்து தப்பும் ஒரு வழியாகப் பலர் நோக்கினர். ஐரோப்பியர்களை ஒன்றிணைக்கும் இத்தகையதொரு முயற்சியாகவே ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் தொடங்கப்பட்டது. இது முன்னர் உறுப்பு நாடுகளின் தேசிய நிலக்கரி மற்றும் உருக்குத் தொழில்துறையில் மையப்படுத்திய கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் மிதமான நோக்கம் கொண்ட ஒரு முயற்சியாக இருந்தது. எனினும் இது "ஐரோப்பியக் கூட்டாட்சிக்கான முதல் அடி" என அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு செருமனி ஆகிய நாடுகள் இதன் தொடக்க உறுப்பினர்களாக இருந்தன.
1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று ஐரோப்பியப் பொருளியல் சமூகம் மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம். 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி மூன்று சமூகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின. இவை ஒருங்கே ஐரோப்பிய சமூகங்கள் என அழைக்கப்பட்டன.
1973 ஆம் ஆண்டில் இச் சமூகங்கள், டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. இதே சமயத்தில் நோர்வேயும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அந்நாடு சமூகத்தில் இணையவில்லை. 1979 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது.
போர்த்துக்கல், கிரேக்கம், எசுப்பானியா ஆகிய நாடுகள் 1980ல் இதில் இணைந்தன. 1985 ஆம் ஆண்டில், செஞ்சென் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத்தக்க வகையில் அவற்றின் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. 1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன், தலைவர்கள் ஒற்றை ஐரோப்பியச் சட்டமூலம் (Single European Act) ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.
1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது. ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு-மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் கோப்பன்ஹேகன் கட்டளைவிதி (Copenhagen criteria) ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1993 நவம்பர் 1 ஆம் தேதி மாசுடிரிச் ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல் ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2002 ஆம் ஆண்டில் 12 உறுப்பு நாடுகளில் அவற்றின் நாணயங்களுக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட யூரோ நாணயம் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் ஐரோ வலயம் 15 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம் பெற்றது. அப்போது மால்ட்டா, சைப்பிரஸ், சுலோவீனியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன.
2007 ஜனவரி 1 ஆம் தேதி ருமேனியாவும், பல்கேரியாவும் இதன் புதிய உறுப்பு நாடுகளாயின. அதேவேளை சிலோவேனியா யூரோவைத் தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்து செயல்படாமல்போன ஐரோப்பிய அரசியலமைப்புக்குப் பதிலாக உருவானது. ஜூன் 2008 இல் இதனையும் அயர்லாந்து வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
புவியியல்
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பரப்பளவை கொண்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய மலைச் சிகரம் அல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள மோண்ட் பிளாங்க் ஆகும். கடல்மட்டத்திற்கு மேல்.
உறுப்பு நாடுகள்
ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 27 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது. இவை, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சிலோவேனியா, எசுப்பானியா, சுவீடன் என்பவை. 27 உறுப்பு நாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பு ச.கி.மீ. ஆகும்.
மசிடோனியக் குடியரசு, துருக்கி ஆகிய இரு நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொசுனியா எர்செகோவினா, மொண்டெனேகுரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை.
மொழிகள்
ஐரோப்பிய ஒன்றியம் இருபத்து நான்கு மொழிகளை உத்தியோகபூர்வ மற்றும் வேலை மொழிகளாக கொண்டுள்ளது:: பல்கேரிய மொழி, குரோவாசிய மொழி, செக் மொழி, டேனிய மொழி, டச்சு மொழி, ஆங்கிலம், எசுத்தோனிய மொழி, பின்னிய மொழி, பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி, கிரேக்கம் (மொழி), அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, ஐரிய மொழி, இலத்துவிய மொழி, இலித்துவானிய மொழி, மால்திய மொழி, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, உருமானிய மொழி, சுலோவாக்கிய மொழி, சுலோவேனிய மொழி, எசுப்பானியம், மற்றும் சுவீடிய மொழி. முக்கியமான ஆவணங்கள் அனைத்து உத்தியோக பூர்வ மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகம் பேசப்படும் மொழி ஆகும். தாய்மொழியாக பேசுபவர்கள் மற்றும் இரண்டாம் மொழியாக பேசுபவர்கள் என்ற அனைவரையும் கணக்கில் எடுத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆங்கிலம் பேசுவோரின் சதவிகிதம் 51% ஆகும். இடாய்ச்சு மொழி அதிகமாகவும் பரவலாகவும் தாய்மொழியாக பேசப்படும் மொழி ஆகும் (2006 இல் சுமார் 88.7 மில்லியன் மக்கள்). 56% சதவிகிதமான ஐரோப்பிய ஒன்றியமக்கள் தங்கள் தாய்மொழி தவிர்ந்த என்னொரு மொழியை பேசக்கூடிய திறமை வாய்ந்தவர்கள்.யுராலிய மொழிக்குடும்பத்தை சார்ந்த அங்கேரியன், பின்னிஷ், எஸ்டோனியன் மொழிகளையும் ஆபிரிக்க-ஆசிய மொழிகுடும்பத்தை சார்ந்த மால்டீசையும் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அதிகமான உத்தியோகபூர்வ மொழிகள் இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சார்ந்தன. சிரில்லிக் எழுத்துக்கள் இல் எழுதப்படுகின்ற புல்கேரியன் மற்றும் கிரேக்க எழுத்துக்களில் எழுதப்படுகின்ற கிரேக்க மொழியையும் தவிர அதிகமான ஐரோப்பிய ஒன்றிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகின்றன.
சனத்தொகை
ஐக்கிய இராச்சியம் வெளியேறல்
ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடித்து இருப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து, சூன் 2016-இல் நடந்த பொதுசன வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளிவேற வேண்டும் என விரும்பி பெரும்பாலன மக்கள் வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக விரும்பாத ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலக முன்வந்துள்ளார்.
மேலும் பார்க்க
யூரோ பிரதேசம்
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புக்கள்
அதிகாரப்பூர்வ ஐ.ஓ வலைத்தளம்
ஐரோப்பா வரைபடங்கள்
பத்திரிக்கையாளர் சந்திப்புகள் மற்றும் உரைகள் (எம்.பி.3 மற்றும் RealAudio).
ஐ.ஓ சட்டம் மற்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்ட மாதிரி
சீனா குறித்த ஐ.ஓ கொள்கை
சி.ஐ.ஏ உலகத் தகவல் புத்தகப்பக்கம்
ஐரோப்பிய பிரமுகர்கள் பிரிட்டன் மக்களுக்கு அனுப்பிய கடிதம்
பன்னாட்டு அமைப்புகள்
பன்னாட்டுப் பெருநாடுகள்
மேற்கோள் வழு-ref குறிச்சொல்லுக்கு உரையில்லாதவை
|
4245
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
பாவலர் சரித்திர தீபகம்
|
பாவலர் சரித்திர தீபகம் என்பது தமிழ் மொழியில் எழுதப்பட்ட தமிழ்ப் புலவர் வரலாற்றுத் தொகுப்பு நூல் ஆகும். The Galaxy of Tamil Poets என்ற ஆங்கிலத் துணைத்தலைப்பு ஒன்றும் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 1859 ல் சைமன் காசிச்செட்டி என்பரால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் புளூட்டாக் என்னும் நூலினைத் தழுவி எழுதப்பட்டதே இந்த நூல். தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புலவர் வரலாற்று நூல் இதுவே. இது யாழ்ப்பாணம், மானிப்பாயிலிருந்த "ஸ்ட்ரோங் அண்ட் அஷ்பரி" (Strong and Ashbury Printers) அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு 1886 ஆம் ஆண்டில் வெளிவந்தது.
பின்னணி
இந் நூலின் ஆசிரியர் இலங்கை, யாழ்ப்பாணம், நவாலி என்னும் ஊரைச் சேர்ந்த ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (ஜே. ஆர். ஆர்னோல்ட்) என்பவராவார். இவர் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயதாரகை என்னும் பத்திரிகையின் ஆசிரியரும், வட்டுக்கோட்டை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தமிழ் ஆசிரியருமாவார். சைமன் காசிச்செட்டியின் தமிழ் புளூட்டாக் நூலைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்ய ஆரம்பித்த சதாசிவம்பிள்ளை அதைப் புதிய தகவல்களுடன் விரிவு படுத்தினார்.
உள்ளடக்கம்
தமிழ் புளூட்டாக் நூலில் குறிப்பிடப்பட்ட 202 புலவர்களில் 201 புலவர்கள் பாவலர் சரித்திர தீபகத்திலும் இடம் பெறுகின்றனர். இவர்களைவிட மேலதிகமாக 209 புலவர்களைச் சேர்த்து 410 புலவர்கள் பற்றிய தகவல்கள் தரும் நூலாகப் பாவலர் சரித்திர தீபகம் ஆக்கப்பட்டுள்ளது. காசிச் செட்டியவர்களின் நூலில் 202 புலவர்களில் 13 பேர் மட்டுமே இலங்கையைச் சேர்ந்தவர்கள். சதாசிவம்பிள்ளை அவர்கள் மேலும் 69 இலங்கைப் புலவர்களைச் சேர்த்து ஈழத்துப் புலவர்களின் எண்ணிக்கையை 82 ஆக உயர்த்தினார்.
இரண்டாவது பதிப்பு
ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தினை பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் தொகுத்த முதலிரு பாகங்களும் 1975 இலும் 1979 இலும் கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்தன.
இவற்றையும் பார்க்கவும்
சைமன் காசிச்செட்டி
தமிழ் புளூட்டாக்
வெளி இணைப்புகள்
இந்த வாரம் கலாரசிகன், முனைவர். நீ.வ.கருப்புசாமி, தினமணி, டிசம்பர் 6, 2009
தமிழ் இலக்கியம்
ஈழத்து நூல்கள்
வரலாற்றியல் தமிழ் நூல்கள்
1886 தமிழ் நூல்கள்
19 ஆம் நூற்றாண்டுத் ஈழத்துத் தமிழ் நூல்கள்
|
4250
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86.%20%E0%AE%AA.%20%E0%AE%9C%E0%AF%86.%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
|
ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
|
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam, 15 அக்டோபர் 1931 – 27 சூலை 2015) பொதுவாக டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் இந்தியாவின், 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.
கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார்.
கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.
தொடக்க வாழ்க்கையும் கல்வியும்
கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் ஒரு படகுச் சொந்தக்காரரும், மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் மற்றும் இல்லத்தரசி ஆஷியம்மா ஆகியோருக்கு 5வது மகனாகப் பிறந்தார். இவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் என்பதால், இளம் வயதிலேயே, இவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். இவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாணவனாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்குப் பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும் இவர் சித்தரிக்கப்படுகிறார்.
இராமேசுவரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு ஆண்டு படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார். பின்னர் 1955 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி சென்னையில், விண்வெளி பொறியியல் படிப்பிற்காக, சென்னை சென்றார். அங்கு அவர் முதுகலை பட்டமும் பெற்றார். கலாம் பல புகழ்மிக்க முனைவர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், முறையான படிப்பை, எம்.ஐ.டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார்.
கலாம் ஒரு உயர்தரத் திட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த போது, கல்லூரி முதல்வர், அந்த திட்டத்தின் முன்னேற்றத்தைக் குறித்து மனக்குறை ஆனதோடு, இரண்டு நாட்களுக்குள் திட்டம் முடிக்கப்படவில்லை என்றால் அவருடைய கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும் என்று மிரட்டினார். அதனால் கலாம், ஓய்வு ஒழிவில்லாமல் அந்த திட்டத்திற்காக உழைத்து, திட்டத்தை உரிய காலத்தில் முடித்து, கல்லூரி தலைவரின் நன்மதிப்பை பெற்றார். பின்னர் அவர் "நான் உனக்கு அதிக பளு கொடுத்து எளிதில்லாத காலக்கெடுவை விதித்தேன்" என்று கூறினார்.
அறிவியல் பணித்துறை
சென்னை தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை அறிவியலாளராக சேர்ந்தார். கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து பணித்துறையை தொடங்கினார். இருப்பினும் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்ந்தது குறித்து ஒரு வித மனக்குறையுடன் இருந்தார். புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த ஒரு குழுவின் (INCOSPAR) அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (launcher) (எஸ். எல். வி-III) திட்டத்தின் இயக்குனர் ஆனார். (எஸ்.எல்.வி-III) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980 இல் ஏவியது. கலாமின் வாழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. கலாம் எஸ். எல். வி திட்டத்தில் வேலை செய்ய தொடங்கியப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. கலாம் 1965 இல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விரிவுப்படுத்தக்கூடிய வின்கலத்திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969 இல், கலாம் அரசாங்கத்தின் இசைவு பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.
1963–64 இல், அவர் நாசாவின் ஹாம்ப்டன் வர்ஜீனியாவில் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்பெல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜினியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான வசதி ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார்.
1970லிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கலாம் போலார் எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எல்.வி-III திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன.
கலாம் அணு ஆயுத வடிவமைப்பு, வளர்ச்சி, மற்றும் சோதனைத் தள முன்னேற்பாடு ஆகியவற்றில் பங்கேற்காதபோதிலும், நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையான புன்னகைக்கும் புத்தன் திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால் முனைய எறிகணை ஆய்வகத்தின் பதிலியாக அழைக்கப்பட்டார். 1970 இல், எஸ்.எல்.வி விண்வெளிக்கலனைப் பயன்படுத்தி ரோகினி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது, இசுரோவின் சாதனை ஆகும். 1970களில், கலாம் வெற்றிகரமான எஸ்.எல்.வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் உற்பத்திக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வாலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும் தலைவர் இந்திரா காந்தி தனது தன்னாற்றல் மூலம் கலாமின் கீழ் இயக்க உள்ள விண்வெளி திட்டங்களுக்கு மர்மமான நிதி ஒதுக்கினார். கலாம் மத்திய அமைச்சரவை இந்த விண்வெளி திட்டங்களின் உண்மையான தன்மையை மறைப்பதற்கு ஏற்கும்படி செய்வதில் தலைமைப்பங்கு வகித்தார். அவரது ஆராய்ச்சி மற்றும் கல்வி தலைமையால் அவருக்குக் கிடைத்த பெரும் வெற்றி மற்றும் மரியாதையால், 1980 களில், அவரை அரசாங்கம் தனது இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் முனைவர் வி.எஸ் அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும் அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். ஆர். வெங்கட்ராமன் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டப் (IGMDP) பணிக்காக 388 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய நடுவணரசின் ஒப்புதல் பெறுவதற்கும், கலாமை தலைமை நிர்வாகியாக்கவும் காரணமாக இருந்தார். அக்னி இடைநிலை தூர ஏவுகணை, ப்ரித்வி தந்திரோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் பல ஏவுகணைகளை உருவாக்குவதில் ஏற்படும் தவறான நிர்வாகம், அதிக செலவு மற்றும் கால விரயம் பற்றி குறையாக பேசப்பட்டாலும் கலாம் இந்தத் திட்டத்தில் தலைமைப் பங்கு வகித்தார். சூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். அவர் இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களித்தார். சோதனை கட்டத்தில் கலாம், ஆர். சிதம்பரத்துடன் சேர்ந்து தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் கலாமை நாட்டின் உயர்மட்ட அணு அறிவியலாளராக உயர்த்திக்காட்டியது.
1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான மருத்துவர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" என பெயரிடப்பட்டது. 2012 இல் கிராமப்புறங்களில் உள்ள சுத்த வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி "கலாம், ராஜூ டேப்லெட்" என்று பெயரிடப்பட்டது.
குடியரசுத் தலைவர் பதவி
அப்துல் கலாம் இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக, கே ஆர் நாராயணனுக்குப் பிறகு பணியாற்றினார். அவர் 2002இல் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் 1,07,366 வாக்குகளைப் பெற்ற இலட்சுமி சாகலை, 9,22,884 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் 25 சூலை 2002 முதல் 25 சூலை 2007 வரை பணியாற்றினார்.
10 சூன் 2002 இல் அப்பொழுது அதிகாரத்தில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஜனாதிபதி பதவிக்கு கலாமை முன்மொழியப் போவதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் அவரை வேட்பாளராக ஆதரிப்பதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி கலாமிற்கு தனது ஆதரவை அறிவித்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி கே ஆர் நாராயணன் இரண்டாவது முறையாக போட்டியிடாமல் கலாம் நாட்டின் 11 வது குடியரசுத் தலைவர் ஆவதற்கு களத்தை விட்டு வெளியேறினார்.
18 சூன் 2002 இல் கலாம், வாஜ்பாய் மற்றும் அவரது மூத்த அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து இந்திய பாராளுமன்றத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
15 சூலை 2002 இல் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாநிலங்கள் அவையுடன் பாராளுமன்றத்தில் ஊடகங்களின் கலாமிற்கு வெற்றியென்ற முடிவான கூற்றுடன் நடந்தது. வாக்குகள் எண்ணும் பணி சூலை 18 ம் தேதி நடைபெற்றது. கலாம் ஒரு தலை போட்டியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் இந்தியக் குடியரசின் 11 ஆவது தலைவரானார். சூலை 25 ஆம் தேதியில் பதவியேற்ற பின்பு ராஷ்ட்ரபதி பவனுக்கு குடியேறினார். குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதி ஆவார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்(1954) மற்றும் டாக்டர் சாகிர் ஹுசைன்(1963) ஆகியோர் ஜனாதிபதி ஆவதற்கு முன் பாரத ரத்னா விருது பெற்றவர்கள். அவர் ராஷ்ட்ரபதி பவனை ஆக்ரமித்த முதல் விஞ்ஞானி மற்றும் மணமாகாதவர் ஆவார்.
அவரின் ஜனாதிபதி காலத்தில், அவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அன்பாக அழைக்கப்பட்டார். அவர், ஆதாயம் தரும் பதவி மசோதாவை கையெழுத்திடுவதே தனது பதவி காலத்தில் எடுத்த கடினமான முடிவு என்று கூறுகிறார்.
21 இல் 20 கருணை மனுக்களை ஜனாதிபதியாக விசாரித்து முடிவெடுப்பதில் செயலற்றவர் என்று விமர்சிக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் 72 வது சட்டத்தின் கீழ் மன்னிப்பு வழங்கல், இறப்பு தண்டனை வழங்கல் மற்றும் நிறுத்தல், மாற்று இறப்பு வரிசையில் குற்றவாளிகளின் மரண தண்டனையை நிகழ்த்தல் ஆகியவற்றை செயல்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலாம் தனது 5 ஆண்டு பதவிக் காலத்தில், கற்பழிப்பு குற்றம் புரிந்த தனஞ்சாய் சட்டேர்ஜீயின் கருணை மனுவை தள்ளுபடி செய்து தூக்கிலிட ஆணை கொடுத்து ஒரே ஒரு தீர்மானமெடுத்தார். 20 மனுக்களில் மிக முக்கியமான காஷ்மீரி தீவிரவாதி அப்சல் குருவிற்கு அவர் டிசம்பர் 2001 ல் பாராளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலுக்காக 2004 ல் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. 20 அக்டோபர் 2006 ம் நாள் மரண தண்டனை நிறைவேற்ற வழங்கிய உத்தரவின் மீதான கருணை மனு நிலுவையில் வைக்கப்பட்டதால் அவர் மரண வரிசையில் தொடர்ந்து வைக்கப்பட்டார்.
20 சூன் 2007 ஆம் தேதியில், தனது பதவிக் காலத்தின் இறுதியில், 2007 ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றி நிச்சயமாக இருந்தால் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க தனது சம்மதத்தைத் தெரிவித்தார். எனினும், இரண்டு நாட்கள் கழித்து எந்த அரசியல் செயல்பாடுகளிலிருந்தும் ராஷ்ட்ரபதி பவனை சம்பந்தப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். என்று கூறி மறுபடியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்தார். அவருக்கு இடது சாரி, சிவ சேனா மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் புதுப்பிக்கப்பட்ட ஆணை / ஆதரவு இல்லை.
24 சூலை 2012 , 12 வது குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டிலின் பதவிக் காலம் முடிவு பெரும் நிலையில், ஏப்ரலில் ஊடக அறிக்கைகள் இரண்டவது முறையாக கலாம் பரிந்துரைக்கப்படலாம் என்று கூறின. அந்த அறிக்கைக்குப் பிறகு, சமூக வலைப்பின்னல் தளங்கள் கலாம் வேட்பாளராக நிற்பதற்கு ஆதரவை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் செயல்பட்டன. திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தனது பரிந்துரையான கலாமை 2012 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கூறியது. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முலாயம் சிங் யாதவ் மற்றும் மமதா பானெர்ஜி கலாமிற்கு தங்களது ஆதரவையும் அவரின் பெயரை முன்மொழியவும் ஆர்வம் தெரிவித்தனர். சம்மதம் தெரிவித்த சில நாட்களில் முலாயம் சிங்க் யாதவ் மமதா பானெர்ஜியை தனி ஆதரவாளராக்கி விட்டு பின்வாங்கினார். 18 சூன் 2012 ம் தேதியில் பல ஊகங்களுக்குப் பிறகு, கலாம் 2012 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டார்.
விமர்சனங்களும், சர்ச்சைகளும்
போக்ரான் II இன் நம்பகமான மற்றும் உண்மை அறிக்கை பற்றிய பற்றாக்குறையால், ஒரு விஞ்ஞானியாக கலாமைச் சுற்றி சர்ச்சை உள்ளது. தள சோதனை இயக்குனர் கே. சந்தானம் வெப்ப அணு ஆற்றல் குண்டு ஒரு தோல்வியுற்ற சோதனையென்றும் கலாமின் அறிக்கை தவறானதென்றும் விமர்சித்தார். எனினும் இந்த கூற்றை கலாமும், போக்ரான் II இன் முக்கிய கூட்டாளியான ஆர். சிதம்பரமும் மறுத்தனர்.
தனிநபர் தாக்குதல்கள்
அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய போதிலும், அணு அறிவியலில் கலாமிற்கு "அதிகாரம்" இல்லை என்று அவரின் பல சக பணியாளர்கள் கூறினர். ஹோமி சேத்னா என்ற இரசாயனப்பொறியாளர், அணு அறிவியல் மற்றும் அணு இயற்பியல் கட்டுரைகளை வெளியிட கலாமிற்கு எந்தப் பின்னணியும் இல்லை என்று விமர்சித்தார். கலாம் அணுப் பொறியியலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மேலும் அவரது சாதனைகளுக்காக பல பல்கலைக்கழகங்கள் வழங்கிய பட்டமும் அணுப் பொறியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் சேத்னா கூறினார். 1950 இல் கலாம் தனது கல்லூரிப் படிப்பில் மேம்பட்ட இயற்பியலில் தோல்வி அடைந்தார் என்றும் "அவருக்கு அணு இயற்பியல் பற்றி என்ன தெரியும்" என்றும் சேத்னா அவரது கடைசி தேசிய தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார். மேலும் அணு விஞ்ஞானி என்ற தேசிய அந்தஸ்து பெற ஜனாதிபதி பதவியை உபயோகிப்பதாகவும் கூறினார். மற்றவர்கள், இந்திய அணு சக்தி ஆலைகளில் கலாம் பணிபுரியவில்லையென்றும் ராஜா ராமண்ணா கீழ் முடிக்கப்பட்ட அணு ஆயுத வளர்ச்சியில் அவருக்கு பங்கு இல்லையென்றும் கூறினர். 1970 இல் எஸ். எல். வி திட்டத்தில் விண்வெளிப் பொறியாளராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்வதற்கு முன், 1980 முதல் திட்ட இயக்குநராகவும் இருந்தார் என்றும் சேத்னா முடித்தார். பெங்களூருவில் உள்ள பிரபல இந்திய அறிவியல் கழகம், அறிவியல் சான்றிதழ்கள் இல்லாததால் கலாமின் விண்ணப்பத்தை நிராகரித்தது.
2008 இல் ஏவுகணை திட்டத்தில் ஏவுகணை கண்டுபிடிப்புகள் பற்றிய அவரின் சொந்தப் பங்களிப்பை இந்திய ஊடகங்கள் கேள்வியாக்கியது. கலாம் அக்னி, ப்ரித்வி மற்றும் ஆகாஷ் ஏவுகணை கண்டுபிடிப்பில் தனி புகழ் பெற்றிருந்தார். மேற்கண்ட எல்லாவற்றையும் பிற விஞ்ஞானிகள் ஆராய்ந்து, வடிவமைத்து, உருவாக்கியபோது கலாம் அதற்கான நிதி மற்றும் பல ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் என்ற முறையில் கலாமிற்கு நிறைய புகழ் சென்றடைந்தன. மேம்பட்ட கணினி ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் அக்னி ஏவுகணை முன்னாள் இயக்குநரான அகர்வால் அக்னி ஏவுகணையின் வெற்றிகரமான வடிவமைப்புக்கு உண்மையான காரணமாக இருந்தார் என்று கருதப்படுகிறது. கலாம் அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றில், அக்னி ஏவுகணை கண்டுபிடிப்பில் முன்னாள் சென்னை தொழில்நுட்ப நிறுவன மாணவரான அகர்வாலின் முக்கியப் பங்கை புகழ்ந்து எழுதினார். பிரித்வி திட்டத்தில் சுந்தரம் என்பவரை நிழல் மூளை என்றும் திரிசூல் ஏவுகணைத் திட்டத்தில் மோகனை என்பவரையும் புகழ்ந்துள்ளார். 2006 இல் பிரபல மூத்த ஊடக நிருபர் பிரபுல் பிடவை ஒரு செய்தித்தாளில் (THE DAILY STAR), முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அங்கீகரிக்கப்பட்டு டாக்டர் அப்துல் கலாம் இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட இரண்டு விண்வெளித் திட்டங்கள் "மொத்தத் தோல்வி" என்று எழுதியிருந்தார். 1980 களில் இந்தத் திட்டங்கள் இரண்டும் இந்திய இராணுவம் கொடுத்த அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டன.
உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் கூடங்குளம் அணு சக்தி ஆலை அமைப்பதில் ஆதரவு தந்து தனது நிலைபாட்டைக் கூறிய கலாமை மக்கள் குழுவினர் குறை கூறினர். அவர்கள் கலாம் ஒரு அணு சக்தி சார்பு விஞ்ஞானி என்றும் பாதுகாப்பு பற்றிய அவரது உறுதிமொழியை ஏற்க விருப்பமில்லாமலும் அவரது வரவை விரோதமாகவும் கருதினர்.
அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் தனி நபர் சோதனை
29 செப்டம்பர் 2011 இல் நியூ யார்க்கின் கென்னெடி விமான நிலையத்தில் விமானம் ஏறும் போது தனி நபர் சோதனைக்கு உட்பட்டார். அமெரிக்கப் பாதுகாப்பு நெறி முறைகளின் கீழ் பாதுகாப்பு சோதனை நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட முக்கிய பிரமுகர்கள் வகையின் கீழ் அவர் வரவில்லை என்று "தனித் திரையிடப்பட்ட" சோதனைக்குட்பட்டார். இதற்கு விமானக் குழுவிலிருந்து எதிர்ப்பு இருந்த போதிலும், "தனித் திரையிடப்பட்ட" சோதனை நிபந்தனையின் கீழ் சரி என்று கூறி, அவரது வெளிச்சட்டை மற்றும் காலணிகளை அவர் "ஏற் இந்திய" விமானம் ஏறிய பிறகு சோதனைக்கு கேட்டனர். 13 நவம்பர் 2011 வரை இச்சம்பவம் வெளி வரவில்லை. இச்சம்பவம் பொதுச் சீற்றத்தை நாட்டு மக்களிடம் உருவாக்கியுள்ளது என்றும் இதற்கு இந்தியா பதிலடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அச்சுறுத்தியது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தும், பதிலாக அமெரிக்க அரசு சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கலாமிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது என்றும் தெரிவித்தது. இதற்கு முன் 2009 இல், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் இந்தியாவில் பாதுகாப்பு சோதனை விலக்கு பட்டியலில் கலாம் இருந்த போதிலும், புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான மையத்தில் "காண்டினெண்டல் ஏர்லைன்ஸ்" ன் அடிப்படை பணியாளர்கள் அவரை ஒரு சாதாரண பயணியைப்போல் சோதனைக்கு உட்படுத்தினர்.
எதிர்கால இந்தியா: 2020
அவருடைய இந்தியா 2020 என்ற நூலில் கலாம், இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு தனது பணியை அர்ப்பணிக்கிறார்.
அவருடைய நூல்களின் மொழி பெயர்ப்புப் பதிப்புகளுக்கு தென் கொரியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் வேறு பல வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். உயிரி செயற்கை பதியன்கள் (BIO-IMPLANTS) வளர்ப்பதற்கான ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். அவர் தனியுரிமை தீர்வுகள் மீது திறந்த மூல ஆதரவாளராகவும் மற்றும் பெரிய அளவிலான இலவச மென்பொருள் பயன்படுத்துதல், பெருமளவு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப நன்மைகளை கொண்டு வரும் என்றும் நம்புகிறார்.
அறிவியலாலோசகர் பதவியிலிருந்து 1999 இல் பதவி விலகிய பிறகு, ஒரு இலட்சம் மாணவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார்.
அவர் அவரது சொந்த வார்த்தைகளில் "நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இனிமேல் என்னுடைய பட்டறிவை பகிர்ந்து கொள்ளும் நோக்கமும் அவர்களுடைய கற்பனைத்திறனை ஊக்குவிக்கவும் இந்தியாவை வல்லரசாக மாற்றும் திட்டத்திற்கு அவர்களை தயார்படுத்தவும் வரை படம் ஏற்கனவே தயாரித்துள்ளேன்.
அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், அதற்கு பிந்தைய காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தோரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும், அதிபராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும், பேராசிரியராக சென்னை அண்ணா பலகைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேர்ப்பு / வருகை ஆசிரியராகவும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார்.
பிரபல கலாசாரம்
மே 2011 இல், கலாம், ஊழலைத் தோற்கடிக்க பணியை மைய கருவாக கொண்ட "நான் என்ன கொடுக்க முடியும்" என்ற திட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு தமிழ்க் கவிதை எழுதுவதிலும், கம்பியைக் கொண்டு தயாரான தென்னிந்திய இசைக் கருவியான வீணை வாசிப்பதிலும் ஆர்வம் இருந்தது.
2003 மற்றும் 2006 ஆம் வருடங்களுக்கான ஒரு சங்கீதத் தொலைக்காட்சியின் (எம்.டி.வி.) "யூத் ஐகான்" விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் வாடிய ஆனால் புத்திசாலியான "சோட்டு" என்ற பெயருள்ள ராஜஸ்தானி பையனிடம் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதாகவும், அந்தச் சிறுவன் கலாமை கௌரவிக்கும் விதமாக தன்னுடைய பெயரை கலாம் என்று கொண்டதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
காட்சியகம்
ராமேஸ்வரம், மசூதி தெருவில் உள்ள அப்துல் கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், மிஷன் ஆப் லைப் காலேரி (Mission of Life Gallery) என்ற பெயரில், அப்துல் கலாம் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சியம் நாள்தோறும் காலை எட்டு மணி முதல் இரவு ஏழு மணி வரை பொது மக்கள் கட்டணமின்றி காணும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பெற்ற விருதுகளும் மரியாதைகளும்
ஐக்கிய நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்கள் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியாற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் இந்திய அரசு வழங்கிக் கௌரவித்தது.
இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார்.
மறைவு
சூலை 27, 2015 இல் இந்தியாவின், மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார்.
இறுதி மரியாதை
இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 சூலை மாதம் 30ஆம் தேதி, மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மறைவுக்குப் பின்னர் பெற்ற சிறப்புகள்
பீகார் மாநிலம் பாட்னாவில் கிஷான்கஞ்சில் உள்ள வேளாண் கல்லுாரி மற்றும் அறிவியல் நகரத்துக்கு, அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்தது.
அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15 ஆம் தேதி வாசிப்பு நாளாக கொண்டாடப்படும் என்று மகாராஷ்ட்ர அரசு அறிவித்தது.
உத்தரபிரதேச மாநில தொழில் நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார்.
2015-ஆம் ஆண்டு அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு சார்பில் கொண்டாடப்படும் எனவும், ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை நாளான ஆகத்து 15 ஆம் தேதியன்று அறிவியல் வளர்ச்சி, மாணவர் நலன் மற்றும் மனிதவியலில் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.
புதுதில்லியில் உள்ள அவுரங்சீப் சாலைக்கு ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் சாலை எனப் பெயரிட்டு, புதுதில்லி மாநகராட்சி ஆணையிட்டது.
ஆந்திர பிரதேச சட்டபேரவையில் இவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதன் விவேகனந்தர், 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் காந்தி அடிகள், 21 ஆம் நூற்றாண்டின் சிறந்த மனிதர் அப்துல் கலாம் அவர்கள் என்று புகழ் பாடப்பட்டது.
கலாம் எழுதிய புத்தகங்கள்
Turning Points; A journey through challenges 2012.
Wings of Fire: An Autobiography அக்னிச் சிறகுகள் அருண் திவாரியுடன் இணைந்து எழுதிய சுய சரிதை; பல்கலைக்கழகங்கள் பிரஸ், 1999.
இந்தியா 2020: புதிய ஆயிரம் ஆண்டு காலத்திற்காக ஒரு பார்வை வை எஸ் ராஜனுடன் இணைந்து எழுதியது; நியூயார்க், 1998.
Ignited Minds : Unleashing the Power Within India ; வைகிங், 2002.
The Luminous Sparks (வெளிச்சத் தீப்பொறிகள்) ; புண்ய பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், 2004.
Mission India (திட்டம் இந்தியா) ; ஏ.பீ.ஜே. அப்துல் கலாம், மானவ் குப்தா மூலம் ஓவியங்கள் ; பென்குயின் புக்ஸ், 2005.
Inspiring Thoughts (ஊக்கப்படுத்தும் யோசனைகள்) ; ராஜ்பால் & சன்ஸ், 2007.
Developments in Fluid Mechanics and Space Technology ரோட்டம் நரசிம்காவுடன் இணைந்து எழுதியது; இந்திய அறிவியல் கலைக்கழகம், 1988.
(Guiding souls) எனது வானின் ஞானச் சுடர்கள் தனது நண்பர் அருண் கே.திவாரியுடன் இணைந்து எழுதியது.
கலாமின் முன்மொழிவுகள்
நான்கு செயற்களங்கள்
கடுமையாக உழைப்பதை வழக்கமாக்கிக் கொளல்
கற்பனைத் திறனை வளர்த்துக் கொளல்
ஆட்சியின் நுணுக்கங்களை அறிந்து கொளல்
சமுதாயக் கடமைகளை செவ்வனே செய்தல்.
உறுதிமொழி
எனது கல்வி அல்லது பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்து அதில் சிறப்பானதொரு இடத்தை அடைவேன்.
எழுதப் படிக்கத் தெரியாத பத்துப்பேருக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுப்பேன்.
மதுபானத்திற்கும், சூதாட்டத்திற்கும் அடிமையாகியுள்ள ஐந்து பேரை அதிலிருந்து விடுவிப்பேன்.
அல்லல்படும் எனது சகோதரர்களின் இன்னல்களைத் தீர்க்கத் தொடர்ந்து பாடுபடுவேன்.
குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பேன்.
சாதி, மதம், மொழி அடிப்படையிலான பாகுபாட்டிற்கும் வேதங்களுக்கும் ஆதரவளிக்கமாட்டேன்.
நேர்மையில் முன்னுதாரணமாக இருந்து ஊழலற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுவேன்.
பெண்களை மதிப்பேன், பெண் கல்வியை ஆதரிப்பேன்
உடல் ஊனமுற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாக இருந்து அவர்கள் நம்மைப் போல இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்படுத்த உழைப்பேன்.
நாட்டின் வெற்றியையும், மக்களின் வெற்றியையும் நான் பெருமிதத்துடன் மகிழ்ந்து கொண்டாடுவேன்.
இந்த உறுதிமொழிகளை ஏற்று இளைஞர்கள் தளராத உறுதியோடு வளமான, மகிழ்ச்சியான பாதுகாப்பான இந்தியாவுக்காக உழைக்கும் போது வளர்ந்த இந்தியா மலர்வது திண்ணம்.
- A.P.J. அப்துல்கலாம்.
கலாம் குறித்த வாழ்க்கை சரிதங்கள்
Eternal Quest: Life and Times of Dr. Kalam எஸ். சந்திரா; பென்டகன் பதிப்பகம், 2002.
ஆர்.கே. ப்ருதி மூலம் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்; அன்மோல் பப்ளிகேஷன்ஸ், 2002.
A. P. J. Abdul Kalam: The Visionary of India கே. பூஷன், ஜி காட்யால் ; APH பப். கார்ப், 2002.
பி தனாபால் A Little Dream (ஒரு சிறிய கனவு ) (ஆவணப்படம்); மின்வெளி மீடியா பிரைவேட் லிமிடெட், 2008 இயக்கியது.
The Kalam Effect: My Years with the President பீ.எம். நாயர்; ஹார்ப்பர் காலின்ஸ், 2008.
Fr.AK ஜார்ஜ் மூலம் My Days With Mahatma Abdul Kalam (மகாத்மா அப்துல் கலாமுடன் என் நாட்கள்) ; நாவல் கழகம், 2009.
இவற்றையும் பார்க்க
டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விருது
அக்னிச் சிறகுகள்
எழுச்சி தீபங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அப்துல் கலாம் எழுதி பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள்
Going all out for neutrino research - சிரீஜன் பால் சிங்குடன் இணைந்து எழுதியது
அப்துல் கலாம் குறித்தான கட்டுரைகள்
Igniting minds - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழின் தலையங்கம்
A.P.J.Abdul Kalam: A visionary and dreamer
A.P.J.Abdul Kalam: A teacher till the very end
Dr. Kalam: An idea, a vision and a dream - சிரீஜன் பால் சிங்
The Kalam I knew - எம்.எம். இராஜேந்திரன்
பிற
அதிகாரப்பூர்வ வாழ்க்கைக்குறிப்பு
அப்துல் கலாமின் இணையத்தளம்
ஒளிப்படங்களின் தொகுப்பு
அப்துல் கலாம் வரலாறு
1931 பிறப்புகள்
2015 இறப்புகள்
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்
இந்திய அறிவியலாளர்கள்
தமிழ் அறிவியலாளர்கள்
தமிழ் பொறியியலாளர்கள்
பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்
பத்ம விபூசண் விருது பெற்ற தமிழர்கள்
இராமநாதபுரம் மாவட்ட நபர்கள்
இந்திய முஸ்லிம்கள்
இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
தமிழ் முசுலிம் நபர்கள்
தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
|
4251
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
|
விவேகானந்தர்
|
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றவை.
வாழ்க்கை
பிறப்பும் இளமையும்
விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.
சகோதர சகோதரிகள்
சுவாமி விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் எனும் இரு இளைய சகோதரர்களும், மூத்த, இளைய சகோதரிகளும் இருந்தனர். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமை தாளாது தற்கொலை செய்து கொண்டார்.
இராமகிருஷ்ணருடன்
இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.
துறவறம்
1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.
குரல் வளம்
தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற இனிமையான குரல் என்று சட்டம்பி சுவாமிகள், சுவாமி விவேகானந்தரது குரல் வளம் குறித்துக் கூறுகின்றார்.
மேலைநாடுகளில்
கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். 1893-இல் சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமயங்களின் மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு, அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.
இந்தியா திரும்புதல்
1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுகள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது.
உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவுகளால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.
கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 சனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.
மறைவு
1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.
விவேகானந்தரின் கருத்துகள்
மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துகளிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துகளை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.
தமிழர் பற்றி விவேகானந்தர்
சென்னை மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே விவிலியம் உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.
விவேகானந்தரின் பொன்மொழிகள்
உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
கடவுள் இருந்தால் அவரை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லை யென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு செய்வதை விட நாத்திகனாக இருப்பதே மேல்<ref name="qoutes".
உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகைத் தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.
உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.
என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு
அவரது கவிதைகள்
கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.
எடுத்துக்காட்டாக..
அனைத்தும் ஆகி அன்பாகி
அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
உடனே தருக என் நண்பா
இவைகள் யாவும் உன்முன்னே
இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
இறைவனைத் தேடுகின்றாய் நீ
மனத்தில் வேற்றுமை இல்லாமல்
மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்
--விவேகானந்தர்
நூல்கள்
விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
இவையே பின்னர் எழுந்திரு! விழித்திரு! என்ற தலைப்பில் 11 பகுதிகளாக வெளியிடப்பட்டன.
மரபுரிமை பேறுகள்
விவேகானந்தா பன்னாட்டு அறக்கட்டளை
தமிழ்நாட்டில் விவேகானந்தர் நினைவிடங்கள்
விவேகானந்தர் பாறை
விவேகானந்தர் நினைவு மண்டபம்
விவேகானந்தர் இல்லம்
விவேகானந்த கேந்திரம்
கல்வி நிலையங்கள்
இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி, சென்னை
விவேகானந்தர் கல்லூரி, அகத்தீசுவரம்
விவேகானந்தர் கல்லூரி, மதுரை
அஞ்சல் தலைகள்
சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறையினர் வெளியிட்ட அஞ்சல் தலைகள்:
இதனையும் காண்க
சுவாமி விவேகானந்தரின் இந்தியப் பயணங்கள் (1888–1893)
உலகச் சமயங்களின் பாராளுமன்றம்
இராமகிருசுண இயக்கம்
இராமகிருட்டிண மடம்
இராமகிருஷ்ண மடம், சென்னை
மேற்கோள்கள்
http://sollaeruzhavar.blogspot.com/2023/07/blog-post.html
வெளி இணைப்புகள்
விவேகானந்தர் ஆற்றிய பணிகளின் முழுத்தொகுப்பு (ஆங்கிலம்)
விவேகானந்தரின் வாழ்க்கைக் குறிப்பு
இராமகிருஷ்ண மட சென்னைக் கிளை இணையத்தளம்
எழுதிய மற்றும் பேசியவற்றின் தொகுப்புகள் (ஆங்கிலம்)
விவேகானந்தரின் கவிதைகள் (ஆங்கிலம்)
23-01-1897 இல் சுவாமி விவேகானந்தர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து....வானொலி நிகழ்ச்சி
விவேகானந்தரின் புகைப்படங்கள்
சுவாமி விவேகானந்தரின் கடைசி நாட்களில் நடந்தது என்ன? - காணொலி
ராமகிருஷ்ணரின் பதினாறு துறவிச் சீடர்கள்
1863 பிறப்புகள்
1902 இறப்புகள்
இந்திய மெய்யியலாளர்கள்
இந்து மெய்யியலாளர்கள்
அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்
வங்காள மக்கள்
கொல்கத்தா நபர்கள்
இந்து சமய எழுத்தாளர்கள்
ராமகிருஷ்ணர்
இந்து சமயப் பேச்சாளர்கள்
|
4255
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
|
காமராசர்
|
காமராசர் (ஆங்கிலம்: K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தொடக்கக்கால வாழ்க்கை
காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு சூலை 15ஆம் தேதி பிறந்தார். இவர்தம் பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். முதலில் இவருக்குக் குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.
சிறை வாழ்க்கையும் படிப்பும்
பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும்போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுகளில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.
ராசாசியின் தலைமையில் 1930 மார்ச்சு மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடுவின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை ஆனார். 1940 இல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-இல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாகப் பெற்றார்.
1933 ஜூன் 23-ம் தேதி விருது நகர் நகராட்சித் தேர்தலில் போட்டி யிட்ட காமராஜர், நீதிக்கட்சியின் செல்வாக்கு மிகுந்தவர்களால் கடத்தப்பட்டார். முத்துராமலிங்கத் தேவர் அவர்களால் மீட்கப்பட்டார். விருதுநகர் நகராட்சிக்கு தேர்தல் வந்தது. வரி செலுத்துவோர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற விதி இருந்தது. ஓர் ஆட்டுக் குட்டியை விலைக்கு வாங்கிய தேவர், காமராஜர் பெயரில் வரி கட்டி ரசீதைப் பெற்றார். காமராஜரை தேர்தலில் நிறுத்தி வெற்றிபெறச் செய்தார். அவரை நகரசபைத் தலைவராக்கி பெருமை சேர்த்தார்.
அரசியல் குரு
காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-இல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார். காமராசரை அனைவரும் கிங் மேக்கர் என்று அழைக்கின்றனர். அரசியல் தந்திரங்களை நன்கு அறிந்தவர். இவரை இந்திய அரசியலின் குரு என்றும் அழைக்கின்றனர்.
தமிழக ஆட்சிப் பொறுப்பு
1953-இக்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)
குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-இல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம். நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணியாகும்.
அமைச்சரவை
காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் இருந்தன:
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர்.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. "தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன்" என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்துபூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)
அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி. பரமேசுவரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.
முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது.
காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம், சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
பாரத மிகு மின் நிறுவனம்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை.
காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார். நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 339</ref>
1967 ஆம் ஆண்டுத் தேர்தல் தோல்வி
1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் என்பவரால் 1,285 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடிக்கப்பட்டார். நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1969 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
அகில இந்திய காங்கிரசு தலைமை
மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர், பதவியைவிடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பிக் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல் செய்து (2. அக்டோபர் 1963) பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 அன்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் ஆனார். லால் பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு. கே. பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.
அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரின் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964 இல் சவகர்லால் நேரு இறந்தவுடன் இந்தியாவின் தலைமை அமைச்சராக லால் பகதூர் சாசுதிரியை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-இல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின்போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின்போது இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.
இறுதிக் காலம்
காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர் துறந்தார்.
1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
நினைவுச் சின்னங்கள்
தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. பார்க்க
திரைப்படங்கள்
2004 ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
காமராசரைப் பற்றிய கருத்துக்கள்
“தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராசு, காமராசு மகாபுருசர்.”-காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி
"திறமை, நல்லாட்சி, இவற்றிற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஓர் அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராசர் சென்னை முதல் அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வாரென நான் நம்புகிறேன். -நேரு
“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் நமது காமராசர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தைச் சாதித்த நமது காமராசரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?" -பெரியார்.
“காமராசு தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.” -இந்திரா காந்தி
"சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராசை நான் பிள்ளையாகப் பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்." -சிதம்பரம் சுப்ரமண்யம்
"காமராசர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- ம. கோ. இராமச்சந்திரன்
"தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."- கருணாநிதி
"காமராசர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், சுதந்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது." - மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமசு
உசாத்துணை
வெளி இணைப்புகள்
காமராசரின் அரிய ஒளிப்படங்கள் தொகுப்பு
Kamaraj.com
Perunthalaivar.org
காமராஜர்: மக்களுக்கான அரசியல்வாதி
1903 பிறப்புகள்
1975 இறப்புகள்
விருதுநகர் மாவட்ட நபர்கள்
தமிழக அரசியல்வாதிகள்
தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்
பேச்சுக் கட்டுரைகள்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
4வது மக்களவை உறுப்பினர்கள்
5வது மக்களவை உறுப்பினர்கள்
இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
1ஆவது மக்களவை உறுப்பினர்கள்
|
4257
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்
|
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai) என்பது தமிழ் இலக்கியங்களை, இணையத்தில் இலவசமாக வெளியிடும், ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 ஆம் ஆண்டு, பொங்கல் தினத்தன்று, தொடங்கப்பட்ட இத்திட்டம், இன்றளவில் தொடர்ந்து இயங்கி வருகிறது. மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும். உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும், முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும், தமிழார்வலர்களும், ஒருங்கிணைந்து, இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். பெப்ரவரி 25, 2021 ஆம் ஆண்டில், சுமார் 777 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் தலைவராக, சுவிட்சர்லாந்தில் வசிக்கும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் என்பவரும், துணைத்தலைவராக அமெரிக்காவிலுள்ள முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் என்பவரும் உள்ளனர். ஒரு சமூகத்தின் மரபை பிரதிபலிப்பவை, அச்சமூகத்தின், இலக்கிய வளங்கள்தான். அதை செவ்வனே ஆவணப்படுத்தி, உலகலாவிய தமிழர்களும், பிற பயனாளிகளும், தேடித்தேடிப் பகிர்ந்துகொள்ளும் வண்ணம் கொண்டு சேர்க்கும் கூட்டு முயற்சியே மதுரைத் திட்டமாகும்.
மதுரைத் திட்டத்தின் மின்னூல்கள், ஆரம்ப காலத்தில், இணைமதி, மயிலை ஆகிய தமிழ் எழுத்துருக்களைக் (fonts) கொண்டு தொகுக்கப்பட்டன. ஆனால் 1999ஆம் ஆண்டிலிருந்து, இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர - (Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தொகுக்கப்பட்ட மின்னூல்கள் ஆவணப்படுத்தி, வெளியிடப்பட்டு வருகின்றன. மின்னூல்கள், இணையத்தில், இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் சேமிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டு வருகின்றன. 2003ஆம் ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறையில் தொகுக்கப்பட்ட மின்னூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
குறிப்புகளும் மேற்கோள்களும்
நூற் பட்டியல்
பார்க்க: மதுரைத் திட்டம் நூல்கள் பட்டியல் (அகர வரிசை)
வெளி இணைப்புகள்
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்ட இணையத்தளம்
தமிழ் இலக்கியம்
தமிழ் எண்ணிம நூலகங்கள்
|
4260
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
|
புவியின் வளிமண்டலம்
|
புவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். இது ஐந்தில் நான்கு பங்கு நைட்ரஜனையும், ஐந்தில் ஒரு பங்கு ஆக்ஸிஜனையும் மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு உட்பட்ட மேலும் பல வாயுக்களையும் கொண்டுள்ளது. சூரியக் கதிர்வீச்சிலிருக்கும் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், பகல், இரவு நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் பூமியில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது.
வளிமண்டலத்துக்குச் சடுதியாக முடிவடையும் ஓர் எல்லை கிடையாது. வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து வந்து இல்லாமல் போய் விடுகிறது. வளிமண்டலத்துக்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை எதுவும் இல்லை. வளிமண்டலத்தின் முக்கால் பகுதித் திணிவு புவியின் மேற்பரப்பிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்துக்குள் அடங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 80.5 கி.மீட்டர்களுக்கு மேல் செல்லும் எவரும் விண்வெளிவீரர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். விண்வெளியிலிருந்து திரும்பும் போது வளிமண்டலத்தின் பாதிப்புப் புலப்படத் தொடங்குமிடம் 120 கிமீ உயரத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. 100 கிமீ உயரத்திலுள்ள கர்மான் கோடு எனப்படும் கோடும் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாகக் கருதப்படுவதுண்டு.
ஆக்கும் கூறுகள்
புவியின் வளிமண்டலம் நைதரசன் மற்றும் ஒக்சிஜன் ஆகியவற்றையே கூடுதலாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர ஆர்கன், காபனீரொட்சைட்டு, நீராவி மற்றும் பல வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தை ஆக்குகின்றன.
வளிமண்டலப் படைகள்
புவியின் வளிமண்டலமானது ஐந்து படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன
அடிவளிமண்டலம் (Troposphere)
படைமண்டலம் (Stratosphere)
இடை மண்டலம் (mesosphere)
வெப்ப வளிமண்டலம் (thermosphere)
புறவளி மண்டலம் (exosphere)
அடிவளிமண்டலம்
அடிவளிமண்டலம் (Troposphere) என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் திணிவின் 75 வீதமும்; நீராவி, தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின் சராசரித் தடிப்பு சுமார் 17 கிலோமீட்டர் (10 மைல்கள்) ஆகும். வெப்பவலயப் பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது. துருவப் பகுதிகளில் கோடையில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன் தடிப்பு மாரி காலங்களில் தெளிவற்றதாக உள்ளது.
படைமண்டலம்
படைமண்டலம் (Stratosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் இரண்டாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது அடிவளிமண்டலத்திற்கும் இடை மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.இதிலேயே ஓசோன் படலம் காணப்படுகின்றது
இடை மண்டலம்
இடை மண்டலம் (mesosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் மூன்றாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது படை மண்டலத்திற்கும் வெப்ப மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.
வெப்ப வளிமண்டலம்
வெப்ப வளிமண்டலம் (thermosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் நான்காவதாக உள்ள அடுக்கு ஆகும். இது இடை மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.
புறவளி மண்டலம்
புறவளி மண்டலம் (exosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் ஐந்தாவதாக உள்ள அடுக்கு ஆகும்.
வெப்பநிலையும் வளிமண்டலப் படலங்களும்
வளிமண்டல வெப்பநிலை புவி மேற்பரப்பிலிருந்தான உயரத்துடன் வேறுபடுகின்றது; வெப்பநிலைக்கும், உயரத்துக்கும் இடையிலான கணிதத் தொடர்பும் வெவ்வேறு வளிமண்டலப் படலங்களிடையே வேறுபடுகின்றது:
அடிவளிமண்டலம்/ மாறன் மண்டலம் (troposphere): மேற்பரப்பிலிருந்து 7 கிமீ தொடக்கம் 17 கிமீ வரை, அகலாங்குகள் மற்றும் காலநிலை சார்ந்த காரணிகளைப் பொறுத்து உயரத்துடன் வெப்பநிலை குறைவடைகின்றது. வளியிலுள்ள வாயுக்களில் 90% காணப்படும்
படைமண்டலம்/மீவளிமண்டலம் (Stratosphere): அடிவளிமண்டலத்துக்கு மேல் 50 கி.மீ வரை உயரம் அதிகரிக்க வெப்பநிலை கூடுகின்றது. ஓசோன் படை இம்மண்டலத்தில் காணப்படும்.
இடை மண்டலம் (mesosphere): 50 கி.மீட்டரிலிருந்து 80 - 85 கிமீ வரையான பகுதிக்குள் உயரம் அதிகரிக்க வெப்பநிலை குறைகின்றது.
வெப்ப வளிமண்டலம் (thermosphere): 80 - 85 கிமீ முதல் 640+ கிமீ வரை வெப்பநிலை உயரத்துடன் அதிகரிக்கின்றது. வானொலி அலைகள் இம்மண்டலத்தில் தெறிப்படைந்து பூமியை அடையும்
செய்மதிகள் இம்மண்டலத்திலேயே அதிகளவில் காணப்படும்.
புறவளி மண்டலம் (exosphere)
மேற்படி பகுதிகளுக்கிடையான எல்லைகள் அடிவளி எல்லை (tropopause), அடுக்கெல்லை (stratopause), இடையெல்லை (mesopause) எனப்படுகின்றன.
பூமியின் மேற்பரப்பில் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 14 °C ஆகும்.
அழுத்தம்
முதன்மைக் கட்டுரை: வளிமண்டல அழுத்தம்
வளிமண்டல அழுத்தம் என்பது வளியின் நிறையின் நேரடியான விளைவாகும். புவி மேற்பரப்பின் மேலுள்ள வளியின் அளவும் அதன் நிறையும் இடத்துக்கு இடமும், நேரத்தை ஒட்டியும் வேறுபடுவதன் காரணமாக வளியமுக்கமும் இடத்தையும் நேரத்தையும் பொறுத்து வேறுபடுகின்றது. சுமார் 5 கிமீ உயரத்தில் வளிமண்டல அழுத்தம் ~50% வீழ்ச்சியடைகின்றது. (இன்னொரு வகையில் கூறுவதானால் சுமார் வளிமண்டலத் திணிவின் 50% கீழுள்ள 5 கிமீக்குள் அடங்கி விடுகின்றது). கடல் மட்டத்தில் சராசரி வளி அமுக்கம் சுமார் 101.3 கிலோபாஸ்கல்கள் (ஏறத்தாழ சதுர அங்குலத்துக்கு 14.7 இறாத்தல்கள்) ஆகும்.
ஆய்வுகள்
வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
உசாத்துணைகள்
The thermosphere: a part of the heterosphere , by J. Vercheval (viewed 1 Apr 2005)
இவற்றையும் பார்க்கவும்
வளி
புவி வெப்ப நிலை அதிகரிப்பு
அடிவளிமண்டலம்
வெப்ப வலயம்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
NASA atmosphere models
NASA's Earth Fact Sheet
American Geophysical Union: Atmospheric Sciences
வளிமண்டலம்
சூழல் மண்டலம்
புவி
புவியின் கட்டமைப்பு
புவியின் வளிமண்டலம்
hu:Homoszféra
|
4264
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
இளையராஜாவின் திருவாசகம்
|
இளையராஜாவின் திருவாசகம் (Thiruvasagam by Ilayaraaja) என்பது, இளையராஜா ஆரட்டோரியோ (Oratorio) எனும் இசை வடிவில் வெளியிட்டுள்ள இசைத் தொகுப்பு ஆகும்.
திருவாசகப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களை ஸ்டீஃபன் ஷ்வார்ட்ஸ் (Stephen Schwartz) ஆங்கில வரிகளாக மொழி பெயர்த்துள்ளார். திருவாசகத்தின் சில பகுதிகளை , இளையராஜா, பவதாரிணி மற்றும் குழுவினர் பாடியுள்ளனர்.
ஹங்கேரியின் பாரம்பரியமிக்க புடாபெஸ்ட் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்டிரா குழுவினர் நூற்றுக்கணக்கான வயலின்களும், மேற்கத்திய வாத்தியங்களும் சேர்த்து இப்பாடல்களுக்கு இசை அமைத்திருக்கின்றனர்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
sagam.html Ilaiyaraaja's Offical site
A detailed review of Thiruvasagam
இளையராஜா இசையமைத்த திருவாசகப் பாடல்களுக்கு உரை தரும் விக்கி நூல்கள் வலை தளம்
இசைத் தொகுப்புக்கள்
|
4268
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88
|
மும்பை
|
மும்பை (1995 வரை அதிகாரப்பூர்வமாக பம்பாய் என அழைக்கப்பட்டது) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரம் மற்றும் இந்தியாவின் நடைமுறைப்படியான நிதி மையமாகும். ஐக்கிய நாடுகள் அவையின் கூற்றுப்படி, 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, தில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நகரமாக மும்பை உள்ளது மேலும் தோராயமாக 2 கோடி (20 மில்லியன்) மக்கள்தொகை கொண்டதாக, உலகின் எட்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக உள்ளது. 2011-ஆம் ஆண்டின் இந்திய அரசாங்க மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பெருநகரமும்பையின் எல்லையில் வசித்த 1.25 கோடி (12.5 மில்லியன்) மக்கள்தொகையுடன், இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக மும்பை இருந்தது. மும்பை மும்பை பெருநகரப் பகுதியின் மையமாக உள்ளது, 2.3 கோடி (23 மில்லியன்) மக்கள்தொகை கொண்டு உலகின் ஆறாவது அதிக மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதியாக உள்ளது. மும்பை இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ளது. இங்கு ஆழமான இயற்கை துறைமுகம் உள்ளது. 2008-ஆம் ஆண்டில், மும்பை ஆல்பா உலக நகரமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள எல்லா நகரங்களையும் விட மும்பையில் அதிக எண்ணிக்கையிலான மில்லியனர்களும், பில்லியனர்கள் உள்ளனர்.
மும்பையை உள்ளடக்கிய ஏழு தீவுகள் ஒரு காலத்தில் மராத்திய மொழி பேசும் கோலி மக்களின் தாயகமாக இருந்தது. அடுத்தடுத்த பூர்வீக ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பம்பாயின் ஏழு தீவுகள் பின்னர் போர்த்துகல் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசை கேத்தரின் திருமணம் செய்தபோது, வரதட்சணை மூலம் வந்த்த பிறகு 1661-இல் கிழக்கிந்திய நிறுவனத்திடம் வந்து சேர்ந்தது. 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பம்பாய் ஹார்ன்பி வெல்லார்ட் திட்டத்தால் மறுவடிவமைப்பு செய்யபட்டது. இது கடலில் இருந்து ஏழு தீவுகளுக்கு இடையில் உள்ள பகுதியை ஒருங்கிணைத்தது. முக்கிய சாலைகள் மற்றும் தொடருந்து பாதைகள் கட்டுமானத்துடன், 1845-இல் முடிக்கப்பட்ட சீரமைப்புத் திட்டத்தால், பம்பாய் அரபிக்கடலில் ஒரு பெரிய துறைமுகமாக மாறியது. 19-ஆம் நூற்றாண்டில் பம்பாய் அதன் பொருளாதாரம் மற்றும் கல்வி வளர்ச்சியால் குறிப்பிடத்தக்க ஒன்றாக வளர்த்தெடுக்கபட்டது. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பம்பாய் இந்திய விடுதலை இயக்கத்திற்கான வலுவான தளமாக மாறியது. 1947-இல் இந்தியா விடுதலை அடைந்தவுடன், நகரம் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. 1960-இல், சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கத்தைத் தொடர்ந்து, பம்பாயைத் தலைநகராகக் கொண்டு புதிய மகாராட்டிர மாநிலம் உருவாக்கப்பட்டது.
மும்பையானது இந்தியாவின் நிதி, வணிக, பொழுதுபோக்கு தலைநகரம் ஆகும். இது உலகளாவிய நிதி செயல்பாடுகளின் அடிப்படையில் உலகின் முதல் பத்து வர்த்தக மையங்களில் ஒன்றாக உளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.16%, தொழில்துறை உற்பத்தியில் 25%, இந்தியாவில் கடல்சார் வர்த்தகத்தில் 70% (மும்பை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம்), இந்தியாவின் பொருளாதாரத்தில் மூலதன பரிவர்த்தனையில் 70% விகிதங்களை மும்பை கொண்டுள்ளது. உலகின் எந்த நகரத்திலும் இல்லாத வகையில் மும்பையில் எட்டு மிகப்பெரிய பில்லியனர்கள் உள்ளனர். மேலும் 2008 இல் மும்பையின் பில்லியனர்கள் உலகின் எந்த நகரத்திலும் இல்லாத சராசரி அளவு சொத்துக்களைக் கொண்டிருந்தனர். இந்த நகரத்தில் பல முக்கிய இந்திய நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பெருநிறுவன தலைமையகங்கள் உள்ளன. இது இந்தியாவின் சில முதன்மையான அறிவியல் மற்றும் அணுசக்தி நிறுவனங்களின் அமைவிடமாகவும் உள்ளது. இந்த நகரம் பாலிவுட் மற்றும் மராத்தி திரைப்படத் தொழில்களின் அமைவிடமாகவும் உள்ளது. மும்பையின் வணிக வாய்ப்புகள் இந்தியா முழுவதிலும் இருந்து வரும் புலம்பெயர்ந்தோரை ஈர்க்கின்றது.
சொற்பிறப்பியல்
மும்பை (, , இந்தி : मुंबई) என்ற பெயர் மும்பா அல்லது மஹா-அம்பா என்ற சொல்லிலிருந்து வந்தது. இது பூர்வீக கோலி சமூகத்தின் குலதெய்வமான மும்பா தேவியின் பெயர். இது மகாராட்டிராத்தின் அதிகாரப்பூர்வ மொழியும், கோலி மக்களின் தாய் மொழியுமான மராத்திய மொழி பெயராகும். கோலி மக்கள் கத்தியவார் மற்றும் மத்திய குஜராத்தில் தோன்றியவர்களாவர், மேலும் சில ஆதாரங்களின்படி அவர்கள் தங்கள் தெய்வமான மும்பாவை கத்தியவாரில் (குஜராத்) இருந்து கொண்டு வந்தனர். அங்கு முப்பாதேவி இன்னும் வழிபடப்படுகிறார். இருப்பினும், மும்பையின் பெயர் மும்பா தேவியின் பெயரில் இருந்து வந்தது என்பதை மற்ற ஆதாரங்களில் மாறுபாடுகள் உள்ளன.
நகரத்தின் மிகப் பழமையான பெயராக அறியப்பட்ட பெயர்கள் ககாமுச்சி மற்றும் கலாஜுங்க்ஜா ஆகும். இவை சில நேரங்களில் இன்னும் பயன்படுத்தப்படுகின்றன. 1508 ஆம் ஆண்டில், போர்த்துகீசிய எழுத்தாளர் காஸ்பர் கொரியா தனது லெண்டாஸ் டா ஆண்டியா (இந்தியாவின் தொன்மங்கள்) இல் "பாம்பைம்" என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார். இந்த பெயர் கலிசியன் -போர்த்துகீசிய சொற்றொடரான போம் பைம், அதாவது "நல்ல சிறிய விரிகுடா" என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம், மேலும் போம்பைம் என்பது போர்த்துகீசிய மொழியில் தற்போதும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. 1516 ஆம் ஆண்டில், போர்த்துகீசிய ஆய்வாளர் துவார்த்தே பர்போசா தானா-மையம்பூ என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார். தானா என்பது பக்கத்து நகரமான தானே என்பதையும், மையம்பூ என்பது மும்பாதேவியையும் குறிக்கிறது.
16 மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட பிற மாறுபாட்ட பெயர்கள் பின்வருமாறு: மொம்பைன் (1525), பம்பாய் (1538), பம்பை (1552), பாம்பேம் (1552), மொன்பேம் (1554), மொம்பைம் (1563), மொம்பேம் (1644), பம்பாய் (1666), பம்பைம் (1666), பாம்பே (1676), பூன் பே (1690), பான் பஹியா. 17-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்நகரைக் கைப்பற்றிய பிறகு, போர்த்துகீசியப் பெயரானது பம்பாய் என்று ஆங்கில வடிவம் ஆக்கப்பட்டது. குஜராத் மாகாணத்தின் ஏகாதிபத்திய திவான் அல்லது வருவாய் அமைச்சர், அலி முஹம்மது கான், மிராட்-இ அகமதியில் (1762) நகரத்தை மன்பாய் என்று குறிப்பிடுகிறார்.
20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இந்த நகரம் மராத்தி, கொங்கணி, குஜராத்தி, கன்னடம், சிந்தி மொழிகளில் மும்பை அல்லது மம்பை என்றும், இந்தியில் பம்பாய் என்றும் குறிப்பிடப்பட்டது. 1995 நவம்பரில் இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக நகரின் பெயரை மும்பை என மாற்றியது. மகாராட்டிர மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற மராத்திய தேசியவாத கட்சியான சிவ சேனா கட்சியின் வற்புறுத்தலின் பேரில் இந்த பெயர்மாற்றம் ஏற்பட்டது. மேலும் நாடு முழுவதும் மற்றும் குறிப்பாக மகாராட்டிரத்தில் இதே போன்ற பெயர் மாற்றங்களை பிரதிபலிப்பதாக இது அமைந்தது. ஸ்லேட் இதழின் கூற்றின்படி, "பாம்பே' என்பது 'மும்பை'யின் சிதைந்த ஆங்கில வடிவம் என்றும் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் தேவையற்ற மரபுத் தொடர்ச்சி என்றும் அவர்கள் வாதிட்டனர்." மேலும் ஸ்லேட்டின் கூற்றில், "மகாராட்டிர பிராந்தியத்தில் மராத்தி அடையாளத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாக பம்பாய் பெயர் மாற்றம் நிகழ்ந்தது." இந்நகரத்தில் வசிக்கும் இன்னும் சிலராலும், சில இந்தியர்களாலும் பம்பாய் என்று குறிப்பிடப்பட்டாலும், மும்பையை என்ற பெயரை விடுத்து வேறு பெயரால் நகரத்தைக் குறிப்பிடுவது சர்ச்சைக்குரியதாக உள்ளது, இதன் விளைவாக உணர்ச்சி வெடிப்புகள், சில நேரங்களில் வன்முறை என்பது அரசியலில் இயல்பாக உள்ளது.
மும்பைக்காரர்கள்
மும்பையில் வசிப்பவர்கள் மராத்தியில் மும்பைகர் என்று அழைக்கப்படுகிறனர். இதில் -கர் என்ற பின்னொட்டுக்கு வசிப்பவர் என்று பொருள். இந்த சொல் சில காலமாக பயன்பாட்டில் இருந்தது, ஆனால் அதிகாரப்பூர்வமாக நகரின் பெயர் மும்பை என மாற்றப்பட்ட பிறகு அது பிரபலமடைந்தது. பாம்பேயிட் போன்ற பழைய சொற்களும் பயன்பாட்டில் உள்ளன.
வரலாறு
ஆரம்பகால வரலாறு
மும்பை ஒரு காலத்தில் ஏழு தீவுகள் கொண்ட ஒரு தீவுக்கூட்டத்தில் உருவாக்கப்பட்டது. அந்த ஏழுதீவுகள் பம்பாய் தீவு, பரள், மசாகன், மாகிம், கொலாபா, வொர்லி, கிழவித் தீவு (ஓல்டு உமன்ஸ் ஐலாண்ட் அல்லது லிட்டில் கொலாபா என்றும் அழைக்கப்படுகிறது). இந்த தீவுகளில் எப்போதிருந்து மக்கள் வாழ்கின்றனர் என்பது சரியாகத் தெரியவில்லை. வடக்கு மும்பையில் உள்ள கன்டிவலியைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் காணப்படும் பிலிசுடோசின் படிவுகள் தெற்காசிய கற்காலத்திலிருந்து தீவுகளில் மக்கள் வாழ்ந்ததாக சான்றுரைக்கின்றன. பொது ஊழியின் தொடக்கத்திலோ அல்லது அதற்கு முந்தைய காலத்திலோ தீவுகள் கோலி மீனவ சமூகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம்.
பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டில், இத்தீவுகள் மௌரியப் பேரரசின் ஒரு பகுதியாக ஆயின. தெற்கில் அப்பேரரசின் விரிவாக்கத்தின் போது, மகதத்தின் புத்த பேரரசர் அசோகரால் ஆளப்பட்டது. போரிவலியில் உள்ள கான்கேரி குகைகள் பொ.ஊ. முதல் நூற்றாண்டில் எரிமலைப்பாறையில் குடையப்பட்டன. மேலும் இது பண்டைய காலங்களில் மேற்கு இந்தியாவில் பௌத்தத்தின் முக்கிய மையமாக செயல்பட்டது. பொ.ஊ. 150-இல் கிரேக்க புவியியலாளர் தொலெமியால் இந்த நகரம் ஹெப்டனேசியா (பண்டைய கிரேக்கம்: ஏழு தீவுகளின் கூட்டம்) என்று அறியப்பட்டது. அந்தேரியில் உள்ள மகாகாளி குகைகள் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. 6-ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் குடையப்பட்டன.
பொ.ஊ.மு. 2-ஆம் நூற்றாண்டு மற்றும் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டுக்கு இடையில், தீவுகள் தொடர்ச்சியாக உள்நாட்டு வம்சங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அவை சாதவாகனர், மேற்கு சத்ரபதிகள், அபீரர், வாகடகடர், காலச்சுரிகள், கொங்கன் மௌரியர்கள், சாளுக்கியர், இராஷ்டிரகூடர் ஆகும். பின்னர் பொ.ஊ. 1260-இல் ஷிலாரார்களின் ஆளுகைக்குள் வந்தது. இந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட நகரத்தின் பழமையான கட்டிடங்களில் சில ஜோகேஸ்வரி குகைகள் (520 - 525-இற்கு இடையில்), எலிபண்டா குகைகள் (ஆறாம் மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடையில்), வாக்கேஷ்வர் கோயில் (10-ஆம் நூற்றாண்டு), பங்காங்கா குளம் (12-ஆம் நூற்றாண்டு). போன்றவை ஆகும்.
மன்னர் பீமதேவன் 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் தனது இராச்சியத்தை நிறுவினார். தனது தலைநகரை மஹிகாவதியில் (இன்றைய மாகிம் ) நிறுவினார். நகரத்தின் ஆரம்பகால குடியேறியவர்களான பத்தரே பிரபுக்கள் மன்னர் பீம்தேவனால் பொ.ஊ. 1298-ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள சௌராஷ்டிராவிலிருந்து மஹிகாவதிக்கு அழைத்து வரப்பட்டனர். தில்லி சுல்தானகம் 1347-48-இல் தீவுகளை கைப்பற்றி 1407 வரை தன் கட்டுப்பட்டில் வைத்திருந்தது. இந்த காலகட்டத்தில், தீவுகள் குசராத்தின் முசுலீம் ஆளுநர்களால் நிர்வகிக்கப்பட்டன. அவர்கள் தில்லி சுல்தானகத்தால் நியமிக்கப்பவர்களாக இருந்தனர்.
தீவுகள் பின்னர் 1407-இல் நிறுவப்பட்ட சுதந்திர குஜராத் சுல்தானகத்தால் ஆளப்பட்டன. சுல்தானகத்தின் ஆதரவானது பல பள்ளிவாசல்களைக் கட்டுவதற்கு வழிவகுத்தது. அதில் முக்கியமானது வொர்லியில் உள்ள ஹாஜி அலி தர்கா, 1431-இல் முஸ்லிம் துறவியான ஹாஜி அலியின் நினைவாக கட்டப்பட்டது. 1429 முதல் 1431 வரை, இந்த தீவுகள் குஜராத் சுல்தானகத்திற்கும் தக்காணத்தின் பஹ்மனி சுல்தானகத்திற்கும் இடையே ஒரு சர்ச்சை ஏற்படுவதற்கு காரணமாக இருந்தன. 1493-இல், பாமினி சுல்தானகத்தின் பகதூர் கான் கிலானி தீவுகளைக் கைப்பற்ற முயன்றார், ஆனால் தோற்கடிக்கப்பட்டார்.
போர்த்துக்கேயர் மற்றும் பிரித்தானியர் ஆட்சி
கிபி. 1526-இல் நிறுவப்பட்ட முகலாயப் பேரரசு, 16-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்திய துணைக் கண்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக இருந்தது. முகலாயப் பேரரசர் உமாயூனின் ஆற்றலைக் கண்டு அஞ்சிய, குஜராத்தின் சுல்தான் பகதூர் ஷா, 1534 திசம்பர் 23 அன்று போர்த்துக்கேயப் பேரரசுடன் பஸ்சின் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். ஒப்பந்தத்தின்படி, பாம்பேயின் ஏழு தீவுகளும், அருகிலுள்ள மூலோபாய நகரமான பஸ்சீன் மற்றும் அதன் சார்பான பகுதிகள் போர்த்துகீசியர்களுக்கு வழங்கப்பட்டன. 1535 அக்டோபர் அன்று பிரதேசங்கள் கையளிக்கபட்டன.
போர்த்துக்கேயர்கள் பம்பாயில் ரோமன் கத்தோலிக்க சமய அமைப்புகளுக்கு அடித்தளம் அமைத்து அதன் வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்கள் தீவுகளை பல்வேறு பெயர்களால் அழைத்தனர், இது இறுதியாக பாம்பைம் என்ற எழுத்து வடிவத்தை அடைந்தது. அவர்களின் ஆட்சியின் போது தீவுகள் பல போர்த்துகீசிய அதிகாரிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டன. போர்த்துகேய பிரான்சிஸ்கன் சபை மற்றும் இயேசு சபைகள் நகரத்தில் பல தேவாலயங்களைக் கட்டினார்கள். அவற்றில் முக்கியமானவை மாகிமில் உள்ள செயின்ட் மைக்கேல் தேவாலயம் (1534), அந்தேரியில் உள்ள செயின்ட் ஜான் தி பாப்டிஸ்ட் தேவாலயம் (1579), பாந்த்ராவில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ தேவாலயம் ( 1580), மற்றும் பைகுல்லாவில் உள்ள குளோரியா தேவாலயம் (1632). ஆகியவை ஆகும். போர்த்துக்கேயர்கள் நகரைச் சுற்றி பம்பாய் கோட்டையகம், காஸ்டெல்லா டி அகுவாடா (காஸ்டெலோ டா அகுவாடா அல்லது பாந்த்ரா கோட்டை), மத் கோட்டை போன்ற பல கோட்டைகளைக் கட்டினர். பம்பாய் மீது மேலாதிக்கம் செய்வதற்காக போர்த்துக்கேயர்களுடன் ஆங்கிலேயர்கள் தொடர்ந்து போராடினர், ஏனெனில் அவர்கள் அதன் மூலோபாய இயற்கை துறைமுகம் மற்றும் நில தாக்குதல்களில் இருந்து இயற்கையாகவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது அவர்களைக் கவர்வதாக இருந்தது. 17-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இடச்சுப் பேரரசின் வளர்ந்து வரும் சக்தியானது ஆங்கிலேயர்களை மேற்கு இந்தியாவில் ஒரு முக்கியமான இடத்தைக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு கட்டாயத்துக்கு ஆளானது. 1661-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மற்றும் போர்ச்சுகல் மன்னர் நான்காம் ஜானின் மகள் பிரகன்சாவின் கேத்தரின் ஆகியோரின் திருமண ஒப்பந்தம் ஆனது. இதனால் சார்லசுக்கு கேத்தரினை திருமண வரதட்சணையின் ஒரு பகுதியாக தீவுகள் ஆங்கிலப் பேரரசின் வசம் வந்தன. இருப்பினும், சால்சேட், பஸ்சைன், மசாகன், பரள், வொர்லி, சியோன், தாராவி, வடலா ஆகிய பகுதிகள் இன்னும் போர்த்துக்கேயர் வசமே இருந்தன. 1665 முதல் 1666 வரை, ஆங்கிலேயர்கள் மஹிம், சியோன், தாராவி மற்றும் வடலாவை கைப்பற்றினர்.
27 மார்ச் 1668 நாளிட்ட ராயல் சாசனத்தின்படி, இங்கிலாந்து இந்த தீவுகளை ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு 1668-இல் ஆண்டுக்கு £ 10 என்ற தொகைக்கு குத்தகைக்கு விடுத்தது. 1661 இல் 10,000 ஆக இருந்த இதன் மக்கள்தொகை விரைவாக 1675-இல் 60,000 ஆக உயர்ந்தது. 1672 அக்டோபரில் முகலாயப் பேரரசின் கடற்படைத் தளபதியான [3] [4] [5] [6] முஸ்லிம் கோலி யாகுத் கான், 1673 பெப்ரவரி 20 அன்று டச்சு இந்தியாவின் தலைமை ஆளுநரான ரைக்லாவ் வொன் கூன்சு, மற்றும் 1673 அக்டோபர் 10 அன்று சித்தி கடற்படைத் தளபதி சம்பல் ஆகியோரால் தீவுகள் தாக்கப்பட்டன.
1687-ஆம் ஆண்டில், ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையகத்தை சூரத்திலிருந்து பம்பாய்க்கு இடம் மாற்றியது. இந்த நகரம் இறுதியில் பம்பாய் மாகாணத்தின் தலைமையகமாக மாறியது. தலைமையகம் இடமாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனத்தின் நிறுவனங்களின் தலைமையகங்களும் பம்பாயில் திறக்கபட்டன. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில், தீவுகள் மீண்டும் 1689-90 இல் யாகுத் கானின் ஊடுருவல்களைச் சந்தித்தன. பேஷ்வா பாஜி ராவின் தலைமையில் மராத்தியர்கள் 1737-இல் சால்சேட்டையும், 1739-இல் பாசைனையும் கைப்பற்றியதன் விளைவாக போர்த்துக்கேயரின் இருப்பு பம்பாயில் முடிவுக்கு வந்தது. 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பம்பாய் ஒரு பெரிய வர்த்தக நகரமாக வளரத் தொடங்கியது. மேலும் இந்தியா முழுவதும் இருந்து புலம்பெயர்ந்து பெருமளவில் வந்து சேர்ந்தனர். பின்னர், ஆங்கிலேயர்கள் 1774 திசம்பர் 28 அன்று சால்சேட்டை ஆக்கிரமித்தனர். சூரத் உடன்படிக்கையின் மூலம் (1775), ஆங்கிலேயர்கள் சால்சேட் மற்றும் பஸ்சின் மீது முறையாக கட்டுப்பாட்டைப் பெற்றனர். இதன் விளைவாக முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் ஏற்பட்டது. புரந்தர் உடன்படிக்கை (1776), பின்னர் சல்பாய் உடன்படிக்கை (1782) ஆகியவற்றின் மூலம் முதல் ஆங்கிலோ-மராத்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கையெழுத்திட்டதன் மூலம் ஆங்கிலேயர்கள் மராட்டியர்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடிந்தது.
1782-ஆம் ஆண்டு முதல், ஆர்ன்பி வெல்லார்ட் எனப்படும் தரைப்பாலத்தின் மூலம் பம்பாயின் ஏழு தீவுகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில், பெரிய அளவிலான கட்டுமானப் பொறியியல் திட்டங்களுடன் நகரம் மறுவடிவமைக்கப்பு பணிகள் துவங்கியது. இவை 1784-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டன. 1817 ஆம் ஆண்டில், மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோனின் தலைமையில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கிர்கி போரில் மராத்திய கடைசி பேஷ்வாவான பாஜி ராவை தோற்கடித்தது. அவரது தோல்வியைத் தொடர்ந்து, தக்காணப் பீடபூமி முழுவதுமே பிரித்தானியர் ஆட்சியின் கீழ் வந்தது. மேலும் அவை பம்பாய் இராசதானியில் இணைக்கப்பட்டன. தக்காணத்தில் பிரித்தானியர் போர்த்தொடரின் வெற்றியானது, பூர்வீக சக்திகளின் அனைத்து தாக்குதல்களுக்கும் முடிவு கட்டியது.
1845 வாக்கில், பெரிய அளவிலான நில மீட்பு திட்டமான ஆர்ன்பி வெல்லார்ட் திட்டத்தின் மூலம் ஏழு தீவுகளும் ஒன்றிணைந்து ஒரே நிலப்பகுதியாக மாற்றப்பட்டது. 16 ஏப்ரல் 1853-இல், இந்தியாவின் முதல் பயணிகள் தொடருந்து பாதை அமைக்கபட்டது. இது பம்பாயை அண்டை நகரமான தானேவுடன் இணைத்தது. அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது (1861-1865), பம்பாய் நகரம் உலகின் முக்கிய பருத்தி-வர்த்தகச் சந்தையாக மாறியது. இதன் விளைவாக நகரத்தின் பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்பட்டு, நகரத்தின் அந்தஸ்து அதிகரித்தது.
1869-இல் சுயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. இது பம்பாயை அரபிக்கடலில் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாக மாற்றியது. 1896 செப்டம்பரில், பம்பாய் புபோனிக் பிளேக் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டது. அதனால் நகரில் வாரத்திற்கு 1,900 பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டது. இதனால் சுமார் 850,000 பேர் பம்பாயிலிருந்து வெளியேறினர் மேலும் ஜவுளித் தொழில் மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த நகரம் பம்பாய் மாகாணத்தின் தலைநகராக இருந்தபோது, இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியான 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தையும் 1946 ராயல் இந்தியன் கடற்படை கலகத்தையும் வளர்த்தது. .
சுதந்திர இந்தியா
1947-இல் இந்திய விடுதலைக்குப் பிறகு, பம்பாய் மாகாணமானது பம்பாய் மாநிலமாக மறுசீரமைக்கப்பட்டது. இந்திய ஒன்றியத்துடன் இணைக்கபட்ட பல பழைய சமஸ்தானங்கள், பம்பாய் மாநிலத்துடன் சேர்க்கபட்டதால் பம்பாய் மாநிலத்தின் பரப்பளவு அதிகரித்தது. பின்னர், இந்த நகரம் பம்பாய் மாநிலத்தின் தலைநகராக மாறியது. 1950 ஏப்ரலில், மும்பை புறநகர் மாவட்டம் மற்றும் பம்பாய் நகரத்தை இணைத்து பெருநகர மாநகராட்சி உருவாக்கபட்டதன் மூலம் பம்பாய் மாநகராட்சி எல்லை விரிவுபடுத்தப்பட்டது.
பம்பாயை உள்ளடக்கிய தனி மகாராட்டிர மாநிலத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கம் 1950 களில் உச்சம் கண்டது. 1955 மக்களவை விவாதங்களில், இந்த நகரத்தை தனி நகர மாநிலமாக ஆக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியது. மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழு தனது 1955 ஆண்டைய அறிக்கையில் பம்பாயை பொது தலைநகராக கொண்டு மகாராட்டிரா- குசராத்து ஆகிய இருமொழிவாரி மாநிலங்களை உருவாக்க பரிந்துரைத்தது. பம்பாய் குடிமக்கள் குழு, முன்னணி குஜராத்தி தொழிலதிபர்களின் வழக்கறிஞர்களின் குழு, பம்பாய்க்கு தனி நகர மாநில அந்தஸ்து அளிக்க வற்புறுத்தியது.
மொழிவாரி மாநிலம் கோரிய இயக்கத்தினருக்கும் காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோததில் 105 பேர் உயிரிழந்த போது ஏற்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, பம்பாய் மாநிலம் 1960 மே முதல் நாள் அன்று அன்று மொழிவாரி மாநிலமாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. பம்பாய் மாநிலத்தின் குஜராத்தி மொழி பேசும் பகுதிகள் குஜராத் மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. பம்பாய் மாநிலத்தின் மராத்தி மொழி பேசும் பகுதிகள், மத்திய மாகாணங்களில் இருந்து எட்டு மாவட்டங்கள் மற்றும் பெரார், ஹைதராபாத் மாநிலத்திலிருந்து ஐந்து மாவட்டங்கள் மற்றும் அவற்றுக்கிடையே இருந்த பல சமஸ்தானங்கள் ஒன்றிணைக்கபட்டு பம்பாயை தலைநகராக கொண்டு மகாராட்டிர மாநிலம் உருவாக்கப்பட்டது. சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தின் தியாகிகளின் நினைவாக, புளோரா நீரூற்று ஹுதாத்மா சௌக் (தியாகிகள் சதுக்கம்) என பெயர் மாற்றப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.
அடுத்த தசாப்தங்களில் நகரமும், அதன் புறநகர்ப் பகுதிகளும் பாரிய விரிவாக்கம் கண்டன. 1960களின் பிற்பகுதியில், நாரிமன் முனை மற்றும் குஃபே பேரேடு ஆகியவை உருவாக்கப்பட்டன. பம்பாய் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (பிஎம்ஆர்டிஏ) மும்பை பெருநகரப் பகுதியில் வளர்ச்சி நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்குமான ஒரு உச்ச அமைப்பாக மகாராஷ்டிரா அரசாங்கத்தால் 26 ஜனவரி 1975 அன்று நிறுவப்பட்டது. 1979 ஆகத்தில், தானே மற்றும் ராய்காட் மாவட்டங்கள் முழுவதும் மாநகரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக் கழகத்தின் (சிட்கோ) மூலம் நவி பாம்பேயின் ஒரு சகோதரி நகரியம் நிறுவப்பட்டது. 50-இற்கும் மேற்பட்ட ஜவுளி ஆலைகளில் கிட்டத்தட்ட 2,50,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 1982-ஆம் ஆண்டைய பெரிய பாம்பே ஜவுளி வேலைநிறுத்தத்திற்குப் பிறகு பம்பாயில் ஜவுளித் தொழில் பெருமளவில் காணாமல் போனது. பம்பையின் செயலிழந்த பருத்தி ஆலைகள் தீவிர மறுவளர்ச்சியின் மையமாக மாறின. அதன் பொருளாதாரம் பெட்ரோ வேதிப்பொருள், மின், மின்னணு, தானுந்து ஆகிய துறைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தபோது, மும்பையில் தொழில் வளர்ச்சி தொடங்கியது.
சவகர்லால் நேரு துறைமுகம், இந்தியாவின் 55-60% சரக்குக் கொள்கலன்களைக் கையாளுகிறது. இது பம்பாய் துறைமுகத்தின் நெரிசலைக் குறைக்கும் விதத்திலும், நகரத்தின் மையத் துறைமுகமாகச் செயல்படுத்தும் நோக்கிலும் 26 மே 1989 அன்று நவா ஷேவாவில் உள்ள சிறுகுடாவில் அமைக்கபட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. 1990 அக்டோபர் முதல் நாளன்று பெருநகர பம்பாய் மாவட்டமானது பம்பாய் நகரம் மற்றும் பம்பாய் புறநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களாக பிரிக்கபட்டது. இருப்பினும் அவை தொடர்ந்து அதே மாநகராட்சி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.
1990 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் பம்பாயில் வன்முறையும், பயங்கரவாத நடவடிக்கைகளும் அதிகரித்தன. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1992-93 இந்து-முஸ்லீம் கலவரங்களால் நகரம் அதிர்ந்தது. இதில் 1,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 1993 மார்ச்சில், இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் பம்பாய் நிழல் உலக குற்றவாளிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட 13 குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டு, 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2006-ஆம் ஆண்டில், நகரின் புறநகர் தொடருந்தில் ஏழு குண்டுகள் வெடித்ததில் 209 பேர் கொல்லப்பட்டு, 700இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2008-ஆம் ஆண்டில், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் ஒருங்கிணைந்து மூன்று நாட்கள் மேற்கொண்ட பத்து தொடர்ச்சியான தாக்குதல்கல்களில் 173 பேர் கொல்லப்பட்டு, 308 பேர் காயமுற்றனர். மேலும் பல பாரம்பரிய அடையாளங்கள் மற்றும் மதிப்புமிக்க தங்கு விடுதிகளும் கடுமையான சேதம் அடைந்தன. 2011 சூலையில் ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் மற்றும் தாதர் ஆகிய இடங்களில் நிகழ்ந்த மூன்று ஒருங்கிணைந்த குண்டுவெடிப்புகள் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் சமீபத்தியவையாகும். இதன் விளைவாக 26 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர்.
மும்பை இந்தியாவின் வர்த்தக தலைநகரமாகவும், உலகளாவிய நிதி மையமாகவும் உருவாகியுள்ளது. பல தசாப்தங்களாக இது இந்தியாவின் முக்கிய நிதிச் சேவைகளின் அமைவிடமாக, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தனியார் முதலீடு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துகிறது. ஒரு பழங்கால மீன்பிடி சிற்றூராக இருந்த இது, காலனித்துவ வர்த்தக மையமாக இருந்து, தெற்காசியாவின் மிகப்பெரிய நகரமாகவும், உலகின் மிகச் சிறந்த திரைப்படத் துறையின் தாயகமாகவும் மாறியுள்ளது.
நிலவியல்
மும்பை சால்சேட் தீவின் தென்மேற்கில் உள்ள ஒரு குறுகிய தீபகற்பத்தில் உள்ளது. இதன் மேற்கில் அரேபிய கடலும், கிழக்கில் தானே கடற்கழியும், வடக்கே வசை கடற்கழி ஆகியவை அமைந்துள்ளன. மும்பையின் புறநகர் மாவட்டம் தீபகற்பத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. நவி மும்பை தானே கடற்வழிக்கு கிழக்கே உள்ளது மற்றும் தானே வசை கடற்கழிக்ககு வடக்கே உள்ளது. மும்பை இரண்டு தனித்துவமான பகுதிகளான மும்பை நகர மாவட்டம் மற்றும் மும்பை புறநகர் மாவட்டம் என அமைந்துள்ளது. இது மகாராட்டிரத்தின் இரண்டு தனி மாவட்டங்களாக உள்ளது. நகர மாவட்டப் பகுதி பொதுவாக தீவு நகரம் அல்லது தெற்கு மும்பை என்றும் குறிப்பிடப்படுகிறது. மும்பையின் மொத்த பரப்பளவு 603.4 கிமீ 2 (233 சதுர மைல்) ஆகும். இதில், தீவு நகரம் 67.79 கிமீ 2 (26 சதுர மைல்), பரப்பளவில் உள்ளது, புறநகர் மாவட்டம் 370 கிமீ 2 (143 சதுர மைல்), பரப்பளவைக் கொண்டுள்ளது. மொத்தம் 437.71 கிமீ 2 (169 சதுர மைல்) பரபள்ளவு பகுதியானதுபெருநகரமும்பை மாநகராட்சியின் (எம்சிஜிஎம்) நிர்வாகத்தின் கீழ் வருகின்றது. மீதமுள்ள பகுதிகள் பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சொந்தமானவையாக, மும்பை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய அணுசக்திப் பேரவை மற்றும் போரிவலி தேசிய பூங்கா ஆகியவை பெருநகராட்சியின் அதிகார வரம்பிற்கு வெளியே உள்ளன. மும்பை பெருநகரப் பகுதியானது மேலும் கூடுதலாக தானே, பால்கர் மற்றும் ராய்காட் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாக, 4,355 கிமீ 2 (1681.5 சதுர மைல்) பரப்பளவில் பரந்து உள்ளது. மும்பை இந்தியாவின் மேற்கு கடற்கரையில், கொங்கண் என்று அழைக்கப்படும் கடலோரப் பகுதியில் உல்லாஸ் ஆற்றின் முகப்பில் அமைந்துள்ளது. மும்பை மேற்கு அரபிக்கடலால் சூழப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகள் கடல் மட்டத்திற்கு சற்று மேலே அமைந்துள்ளன. உயரமானது கடல் மட்டத்திற்கு மேலே 10 மீ (33 அடி) முதல் 15 மீ (49 அடி) வரை உள்ளது. நகரம் சராசரியாக 14 மீ (46 அடி) உயரத்தில் உள்ளது. வடக்கு மும்பை (சல்செட்) மலைப்பாங்கானது, மற்றும் நகரின் மிக உயரமான புள்ளி 450 மீ (1,476 அடி) பவய் - கன்கேரி மலைத்தொடரில் உள்ள சல்செட்டில் உள்ளது. சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா (போரிவலி தேசியப் பூங்கா) மும்பை புறநகர் மாவட்டத்திலும், ஒரு பகுதி தானே மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இது 103.09 கிமீ 2 (39.80 சதுர மைல்).பரப்பளவில் பரவியுள்ளது.
நகரத்தின் நீராதாரமாக பட்சா அணை மற்றும் ஆறு பெரிய ஏரிகளான விகார், கீழ் வைத்தர்ணா, மேல் வைத்தர்னா, துளசி, தான்சா, பவய் போன்றவை உள்ளன. துளசி ஏரி மற்றும் விகார் ஏரி ஆகியவை நகர எல்லைக்குள் போரிவிலி தேசிய பூங்காவில் அமைந்துள்ளன. நகர எல்லைக்குள் உள்ள போவாய் ஏரியில் உள்ள நீராதாரமானது வேளாண்மை மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மூன்று சிறிய ஆறுகளான தகிசர், பொய்சார் (அல்லது போய்சார்) மற்றும் ஓசிவாரா (அல்லது ஓஷிவாரா) ஆகியவை தேசிய பூங்காவிற்குள் உருவாகின்றன. அதே நேரத்தில் மாசுபட்ட மித்தி ஆறு துளசி ஏரியிலிருந்து உருவாகிறது மேலும் விகார் மற்றும் போவாய் ஏரிகளில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் இந்த ஆற்றுசன் சேர்கின்றது. நகரின் கடற்கரையானது ஏராளமான கடற்கழி மற்றும் விரிகுடாக்களால் உள்தள்ளப்பட்டுள்ளது, கிழக்கில் தானே கடற்கழியிலிருந்து மேற்கு முகப்பில் மத் மார்வ் வரை கடற்கரை நீண்டுள்ளது. சல்செட் தீவின் கிழக்குக் கடற்கரையானது பெரிய அலையாத்தித் தாவரங்கள் கொண்ட சதுப்பு நிலங்களால் சூழப்பட்டுள்ளது. இது பல்லுயிர் வளம் நிறைந்தது. மேற்கு கடற்கரை பெரும்பாலும் மணல் மற்றும் பாறைகள் நிறைந்தது.
கடலுக்கு அருகாமையில் இருப்பதால் நகரப் பகுதியில் உள்ள மண் பெரும்பாலும் மணலாக உள்ளது. புறநகர்ப் பகுதிகளில், மண்ணடுக்கு பெரும்பாலும் வண்டல் மற்றும் களிமண் கொண்டதாக உள்ளது. இப்பகுதியின் அடிப்படையான பாறையானது தக்காண கருப்பு எரிமலைப்பாறைகளால் ஆனவை. இவை கிரீத்தேசிய மற்றும் ஆரம்ப இயோசீன் காலத்துக்ககு முந்தையவை. மும்பைக்கு அருகில் இரு நிலவடுக்குகள் இருப்பதால் நில அதிர்வுக்கு வாய்ப்புள்ள மண்டலத்தில் அமர்ந்திருக்கிறது. இப்பகுதி நிலநடுக்க மண்டலம் III பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது ரிக்டர் அளவுகோலில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதி.
காலநிலை
மும்பையில் வெப்பமண்டல காலநிலை நிலவுகிறது. குறிப்பாக கோப்பென் காலநிலை வகைப்பாட்டின் கீழ் வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலை நிலவுகிறது. இங்கு திசம்பர் முதல் பெப்ரவரி வரையில் குளிர்ந்த பருவமும், மார்ச் முதல் மே வரை வெப்பமான பருவ காலமாக இருக்கும். சூன் முதல் செப்டம்பர் இறுதி வரையிலான காலம் தென்மேற்குப் பருவமழைக் காலமாகவும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவமழைக்குப் பிந்தைய பருவமாகவும் இருக்கிறது.
சூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், மும்பையில் தென்மேற்கு பருவமழை பெய்யும். மே மாதத்தில் பருவமழைக்கு முந்தைய மழை பெய்யும். எப்போதாவது, அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். 1954 இல் 3,452 மிமீ (136 அங்குலம்) என அதிகபட்ச வருடாந்திர மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 26 சூலை 2005 அன்று ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழை அளவு 944 மிமீ (37 அங்குலம்) ஆகும். நகரத்தில் சராசரி மொத்த ஆண்டு மழைப்பொழிவு 2,213.4 மிமீ (87 அங்குலம்) மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு 2,502.3 மிமீ (99 அங்குலம்) ஆகும்.
சராசரி ஆண்டு வெப்பநிலை 27 °C (81 °F), மற்றும் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 2,213 மிமீ (87 அங்குலம்) ஆகும். நகரத்தில், சராசரி அதிகபட்ச வெப்பநிலை 31 °C (88 °F), சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 24 °C (75 °F) ஆகும். புறநகர்ப் பகுதிகளில், தினசரி சராசரி அதிகபட்ச வெப்பநிலை வரம்பு 29 °C (84 °F) முதல் 33 °C (91 °F) வரை இருக்கும், அதே சமயம் தினசரி சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 16 °C (61 °F) முதல் 26 °C ( 79 °F) வரை இருக்கும். அதிகபட்சமாக 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி 42.2 °C (108 °F) வெப்பம் பதிவாகியுள்ளது. மற்றும் குறைந்தபட்ச வெப்பமாக 7.4 °C (45 °F) 27 ஜனவரி 1962 இல் பதிவானது.
அரிதாக வெப்பமண்டல சூறாவளிகள் நகரத்தை தாக்கியுள்ளன. மும்பையை இதுவரை தாக்கியிராத மிக மோசமான சூறாவளி 1948 மும்பை சூறாவளி ஆகும். அன்று ஜூஹூவில் மணிக்கு 151 கிமீ / (94 மைல்) வேகத்தில் காற்று வீசியது. புயலால் 38 பேர் இறந்தனர், 47 பேர் காணாமல் போயினர். புயல் 20 மணி நேரம் பம்பாயை தாக்கி நாசமாக்கியது.
பருவநிலை மாற்றத்தால் மும்பையில் கடலில் அதிக அலைகளால் மற்றும் பருவமழையின்போது கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. உலக வங்கியின் கூற்றின் படி, திட்டமிடப்படாத வடிகால் வசதிகள் மற்றும் முறைசாரா குடியேற்றம் ஆகியவை அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திற்கு முக்கிய காரணியாகும். மும்பையில் வெள்ளம் ஏற்படுவதற்கான பிற காரணங்களில், அதன் புவியியல் இருப்பிடமும் ஒரு காரணமாக உள்ளது. மும்பை நகர்ப்புறம் தீபகற்ப வடிவத்தில் உள்ளது, (ஏழு தீவுகளை இணைக்கும் நிலம் நிறைந்த பகுதி) தாழ்வான பகுதியாகவும் உள்ளது. இதன் புறநகர்ப் பகுதி உயரமான இடத்தில் உள்ளது, கடந்த சில தசாப்தங்களாக, புறநகர் பகுதியில் புதிய முறைசாரா குடியிருப்புகள் உருவாக்கப்பட்டது, மக்கள் தொகையின் விரைவான அதிகரிப்பு போன்றவை முறையற்ற கழிவு மேலாண்மை மற்றும் வடிகால் நெரிசல் ஆகியவை ஏற்படுத்தியது. இப்பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீரின் கணிசமான அளவு குடிசைகள் மற்றும் உயரமான கட்டிடங்கள் கொண்ட தாழ்வான நகர்ப்புற பகுதிகளை நோக்கி பாய்கிறது. இதன் விளைவாக, மோசமாகக் கட்டப்பட்ட சேரிகள் வெள்ளத்தால், அடித்துச் செல்லப்படுகின்றன அல்லது இடிந்து பெரும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் வெள்ளத்திற்குப் பின்பு நீர் தேங்கும் நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள், தொடருந்து பாதைகளில் அடைப்பும் ஏற்படுகிறது-(மும்பையில் பலர் பயன்படுத்தப்படும் பொது போக்குவரத்து). கடந்த சில தசாப்தங்களாக, மும்பையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, 2005 மும்பை வெள்ளத்தில் 500-1000 இறப்புகள், குடும்பங்களின் இடப்பெயர்வுகள், சேதமடைந்த உள்கட்டமைப்பு வசதிகள்-(பாரம்பரிய தளங்கள் உட்பட) மற்றும் 1.2 பில்லியன் US$ நிதி இழப்பு ஏற்பட்டது. மும்பையில் வெள்ள பாதிப்பைக் குறைக்கும் செயல்பாட்டுக்கான திட்டங்களை மகாராஷ்டிர அரசு மேற்கொண்டு வருகிறது.
குறிப்புகள்
மும்பை
இந்தியாவின் மெட்ரோ நகரங்கள்
மகாராட்டிரத்திலுள்ள மாநகரங்கள்
இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள்
மகாராட்டிரத்தில் உள்ள மாநகராட்சிகள்
Webarchive template wayback links
Coordinates on Wikidata
|
4270
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
மகாராட்டிரம்
|
மகாராட்டிரம் ( , ஒலிப்பு: ) இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல், வடமேற்கில் குசராத் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகிய தாத்ரா மற்றும் நகர் அவேலி, வடகிழக்கில் மத்தியப் பிரதேசம், கிழக்கில் சத்தீசுக்கர், தெற்கில் கருநாடகம், தென்கிழக்கில் தெலுங்கானா மற்றும் தென்மேற்கில் கோவாவையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ. / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் மும்பை, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். புணே மற்றும் நாக்பூர் மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.
முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960-இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06-ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15%- உம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.2%-உம் பங்களிக்கிறது.
பிரிவுகள்
மகாராட்டிரா ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஔரங்காபாத் மண்டலம், புணே மண்டலம், அமராவதி மண்டலம், கொங்கண் மண்டலம், நாக்பூர் மண்டலம், நாசிக் மண்டலம், நாந்தெட் மண்டலம் ஆகியனவாகும்.இவை அரசாண்மைக்கு பிரிக்கப்பட்ட வருமானத்துறை பிரிவுகளாகும்.
நிலப்பரப்பு, அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும்.
விதர்பா (நாக்பூர் மற்றும் அமராவதி மண்டலங்கள்),
மராத்வாடா (ஔரங்காபாத் மண்டலம்),
வட மகாராட்டிரம் அல்லது காந்தேஷ் (நாசிக் மண்டலம்),
மேற்கு மகாராட்டிரம் அல்லது தேஷ் (புணே மண்டலம்),
கொங்கண் (கொங்கண் மண்டலம்).
நிர்வாகம்
3,07,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தை நிர்வாக வசதிக்காக அமராவதி கோட்டம், கொங்கண் கோட்டம், அவுரங்காபாத் கோட்டம், நாக்பூர் கோட்டம், புணே கோட்டம் மற்றும் நாசிக் கோட்டம் என ஆறு கோட்டங்களாகவும்; 36 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
அமராவதி கோட்டத்தின் மாவட்டங்கள்
அகோலா
அமராவதி
புல்டாணா
வாசிம்
யவத்மாள்
கொங்கண் கோட்டத்தின் மாவட்டங்கள்
மும்பை
மும்பை புறநகர்
பால்கர்
ராய்கட்
ரத்னகிரி
சிந்துதுர்க்
தானே
அவுரங்காபாத் கோட்டத்தின் மாவட்டங்கள்
அவுரங்காபாத்
பீடு
ஹிங்கோலி
ஜால்னா
லாத்தூர்
நாந்தேடு
உஸ்மானாபாத்
பர்பணி
நாக்பூர் கோட்டத்தின் மாவட்டங்கள்
பண்டாரா
சந்திரப்பூர்
கட்சிரோலி
கோந்தியா
நாக்பூர்
வர்தா
நாசிக் கோட்டத்தின் மாவட்டங்கள்
அகமதுநகர்
துளே
ஜள்காவ்
நந்துர்பார்
நாசிக்
புணே கோட்டத்தின் மாவட்டங்கள்
கோலாப்பூர்
புனே
சாங்க்லி
சாத்தாரா
சோலாப்பூர்
மாநகராட்சிகள்
அகமத்நகர்
அகோலா
அமராவதி
பிவண்டி
சந்திரப்பூர்
துளே
ஜல்கான்
கோலாப்பூர்
லாத்தூர்
மாலேகான்
மிரா-பியாந்தர்
நான்தேட்
பர்பணி
சாங்கலி
சோலாப்பூர்
உல்லாஸ்நகர்
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 112,374,333 ஆக உள்ளது. நகரங்களில் 45.22% மக்களும், கிராமப்புறங்களில் 54.78% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.99% உயர்ந்துள்ளது. மக்கள்தொகையில் 58,243,056 ஆண்களும் மற்றும் 54,131,277 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 929 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 365 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.34% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 88.38% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.87% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13,326,517 ஆக உள்ளது. நகர்புறங்களில் மக்களும், கிராமப்புறங்களில் மக்களும் வாழ்கின்றனர். இம்மாநில மக்கள் தொகையில் பில் பழங்குடி மக்கள் தொகை 18,18,792 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 89,703,057 (79.83 %) ஆகவும், இசுலாமியர் மக்கள் தொகை 12,971,152 (11.54 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,080,073 (0.96 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 223,247 (0.20 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,400,349 (1.25 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 6,531,200 (5.81 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 178,965 (0.16%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 286,290 (0.25%) ஆகவும் உள்ளது.
மொழி
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மராட்டியுடன், குஜராத்தி, பார்சி மொழி, கன்னடம், இந்தி, உருது மற்றும் கொங்கணி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
பத்து இலட்சம் மக்களுக்கு மேல் வாழும் நகரங்கள்
மும்பை
புனே
நாக்பூர்
தானே
பிம்பிரி-சிஞ்ச்வடு
நாசிக்
கல்யாண்-டொம்பிவலி
வசாய்-விரர்
நவி மும்பை
அவுரங்காபாத்
சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்
அஜந்தா குகைகள்
எல்லோரா
எலிபண்டா குகைகள்
தடோபா தேசியப் பூங்கா
சண்டோலி தேசியப் பூங்கா
கிரிஸ்னேஸ்வரர் கோயில்
திரிம்பகேஸ்வரர் கோயில்
பீமாசங்கர் கோயில்
மகாலெட்சுமி கோயில்
சனி சிங்கனாப்பூர்
விட்டலர்
சீரடி
மேற்கோள்கள்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
|
4274
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
|
ஜெமினி கணேசன்
|
ஜெமினி கணேசன் (Gemini Ganesan, 16 நவம்பர் 1920 – 22 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பிறப்பு
தமிழகத்தின் புதுக்கோட்டையில் 16 நவம்பர் 1920இல் ராமசாமி ஐயர், கங்கம்மாள் இணையருக்குப் பிறந்தவர் ஜெமினி கணேசன். இவரது இயற்பெயர் கணபதிசுப்ரமணியன் சர்மா என்பதாகும். பின்னர் இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்ற காரணத்தால் ஜெமினி கணேசன் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
வளர்ப்பு
ரத்னகண்ணு ராமசாமி ஐயா் கணேசன் என்பதன் முழுபெயர் கொண்ட ஜெமினிகணேசன், தனது 10ஆவது வயதில் தன் தந்தையை இழந்து தனது சித்தப்பா நாராயணன் அரவணைப்பில் வளர்ந்தார்.
படிப்பு
கணேசன் மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை-யில் பயின்று வேதியியலில் அறிவியல் இளவர் (B.Sc. Chemistry) பட்டம் பெற்றார்.
குடும்பம்
ஜெமினி கணேசன், தன் வீட்டினர் செய்த ஏற்பாட்டின்படி பாப்ஜி என்ற அலமேலு என்பவரை மணந்தார். இவர்களுக்கு ரேவதி, கமலா, நாராயணி, ஜெயலட்சுமி நான்கு பெண்மக்கள் பிறந்தனர்.
தன்னோடு திரைப்படங்களில் நடித்த புஷ்பவல்லி என்பவரோடு வாழ்ந்தார். இவர்களுக்கு பானுரோகா (1954 அக்டோபர் 10]], ராதா என்னும் இரண்டு பெண்மக்கள் பிறந்தனர்.
மனம்போல் மாங்கல்யம் என்ற படத்தில் தன்னுடன் நடித்த சாவித்திரி என்ற நடிகையோடு வாழ்ந்தார். இவர்களுக்கு விஜயசாமுண்டீஸ்வரி (1958) என்ற மகளும் சதீஷ்கிருஷ்ணா (1965) என்ற மகனும் பிறந்தனர்.
கல்லூரி ஆசிரியர்
கல்லூரிக்கல்வியை முடித்த கணேசன் சென்னை கிருத்துவ கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
திரையுலகில்
தொடக்க காலப்பணி
பின்னர், ஜெமினி ஸ்டூடியோவில் புதுமுகங்களைத் தேர்வுசெய்யும் கேஸ்டிங் டைரக்டராகப் பணியாற்றினார்.
நடிகர்
முதல் படம்
1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் முதன்முறையாக சிறிய வேடம் ஒன்றில் நடித்த ஜெமினி கணேசன், தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.
பெயர்க்காரணம்
ஆரம்ப காலப் படங்களில் அவரது பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. "பராசக்தி' மூலமாக தமிழ்த்திரையுலகிற்கு வந்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே அழைக்கப்பட்டார். எனவே, பெயர்க்குழப்பம் ஏற்படுவதை தவிப்பதற்காக, தனது பெயருடன் தான் திரையுலகில் நுழைந்த ஜெமினி நிறுவனத்தின் பெயரை முன்பகுதியில் இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.
வில்லன்
ஜெமினி கணேசன் இரண்டு படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அவை:
1952-இல் வெளியான "தாயுள்ளம்' என்ற படத்தில் ஜெமினி கணேசன் வில்லனாகவும் ஆர்.எஸ்.மனோகர் கதாநாயகனாகவும் நடித்தனர். பிற்காலத்தில் ஆர்.எஸ்.மனோகர் வில்லன் ஆகவும் ஜெமினி கதாநாயகன் ஆகவும் நிலைபெற்று விட்டனர். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் ஜெமினி கணேசன் இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார்.
கதாநாயகன்
கதாநாயகன் வேடத்தில் ஜெமினி நடித்த முதல் படம் 1953-ஆம் ஆண்டு வெளியான "பெண்'. இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார். 1953-ஆம் ஆண்டில் வெளிவந்த "மனம்போல மாங்கல்யம்' படத்தில் முதன்முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். "வஞ்சிக் கோட்டை வாலிபன்' திரைப்படத்தில் அவர் ஒரு சாகச நாயகனாக நடித்தார். "நான் அவனில்லை' படத்தில் ஒன்பது தோற்றங்களில் ஜெமினி நடித்துள்ளார்.
"முகராசி" என்ற படத்தில் மட்டுமே எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். பத்மினியுடன் அவர் நடித்த முதல் படம் "ஆஷாதீப'" என்கிற மலையாள படம். தமிழில் "ஆசைமகன்' என்ற பெயரில் வெளிவந்தது. தொடர்ந்து நடித்த கணவனே கண்கண்ட தெய்வம், மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன.
இயக்குநர்
ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் "இதய மலர்' மட்டுமே. தாமரை மணாளன் இப்படத்தை இணைந்து இயக்கியிருந்தார்.
பாடகர்
"இதயமலர்' திரைப்படத்தில் "லவ் ஆல்' என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இதுதான்.
தயாரிப்பாளர்
சொந்தமாக ஜெமினி தயாரித்த ஒரே படம் "நான் அவனில்லை' மட்டுமே. இது வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார்.
தொலைக்காட்சியில் தொகுப்பாளர்
ஜெமினிக்கு இந்தி மொழி மிக நன்றாகத தெரியும். 1980-ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான "ஹம்லோக்' சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் ஜெமினி தமிழில் முன் கதைச்சுருக்கம் தொகுத்தளித்தார்.
சிறப்பு
ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன் எந்த ஒரு கட்டுக்குள்ளும் சிக்காதபோதிலும், தனக்கென்று ஒரு ரசிகர் குழாமை அவர் வைத்திருந்ததுதான். இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், இயக்குனர்களின் நடிகனாக விளங்கினார். எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது. இத்தகைய இயக்குனர்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குனர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய "கற்பகம்", "சித்தி", "பணமா பாசமா", "சின்னஞ்சிறு உலகம்" ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும்.
புதுமை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர் ஒரு இயக்குனராக அறிமுகமான கல்யாணப் பரிசு திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குனரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், "மீண்ட சொர்க்கம்", "சுமை தாங்கி" போன்ற பல படங்களை இயக்கினார்.
கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். "தாமரை நெஞ்சம்", "பூவா தலையா", "இரு கோடுகள்", "வெள்ளி விழா", "புன்னகை", "கண்ணா நலமா", "நான் அவனில்லை" எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. "நான் அவனில்லை" திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார்.
பிற நட்சத்திரங்களுடன் இணைந்த படங்கள்
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஜெமினி தயங்கியவர் அல்லர். நடிகர் திலகம் என இறவாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய பெருமை ஜெமினி கணேசனுக்கு உண்டு. "பாசமலர்", "பாவமன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களே இதற்கு சான்று. இவற்றில், ஜெமினியின் நடிப்பும் ஜொலித்தது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது.
தமக்குப் பின்னர் திரைக்கு வந்த ஜெய்சங்கர், ஏ. வி. எம். ராஜன், முத்துராமன் ஆகியோருடனும் ஜெமினி கணேசன் பல படங்களில் இணைந்து நடித்தார்.
திரை நாயகியர்
எந்த ஒரு நட்சத்திர நடிகையுடனும் இயல்பாகப் பொருந்தி விடும் திறன் கொண்டமையாலேயே காதல் மன்னன் என்றும் அவர் அறியப்பட்டார். அவருடன் மிக அதிகமான படங்களில் நடித்தவர்களில் சாவித்ரி, பத்மினி, அஞ்சலிதேவி, சரோஜாதேவி மற்றும் ஜெயந்தி ஆகியோரைக் குறிப்பிடலாம்.
சாவித்ரியுடன் அவர் நடித்த முதல் படம் "மனம்போல மாங்கல்யம்". இதன் படப்பிடிப்பு நடைபெறும் வேளையில்தான் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இதன் பிறகும், இருவரும் இணைந்து "பாசமலர்", "பாதகாணிக்கை", "ஆயிரம் ரூபாய்", "யார் பையன்" போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். இவற்றிற்கு முந்தைய படமான "மிஸ்ஸியம்மா"வும் மிகப் பெரும் புகழ் பெற்ற படமாகும்.
பத்மினியுடன் அவர் நடித்த முதல் படம் "ஆஷாதீபம்" என்கிற மலையாள படம். தமிழில் "ஆசைமகன்" என்ற பெயரில் வெளிவந்தது. அதற்கு பிறகு இவர்கள் "ஆசை" , "மல்லிகா" , "வஞ்சிக்கோட்டை வாலிபன்", "பொன்னு விளையும் பூமி" , "வீரபாண்டிய கட்டபொம்மன்" , "மீண்ட சொர்கம்" ஆகிய படங்களில் வெற்றி கொடி நாட்டினர்.
சரோஜாதேவி முதன் முறையாக முழுநீளக் கதாநாயகியாக அறிமுகமானது, ஜெமினியை நாயகனாகக் கொண்ட "கல்யாணப்பரிசு". இதன் பின்னரும் இந்த ஜோடி, "ஆடிப்பெருக்கு", "கைராசி", "பனித்திரை" "பணமா பாசமா" போன்ற பல திரைப்படங்களில் வெற்றிக் கொடி நாட்டியது.
அஞ்சலிதேவி ஜெமினி கணேசனுடன் இணைந்த பல படங்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்த மாய மந்திர அடிப்படையிலானவை. "மணாளனே மங்கையின் பாக்கியம்", "கணவனே கண் கண்ட தெய்வம்" ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
பின்னணிப் பாடகர்கள்
பின்னணிப் பாடகர்களில் மிகப் பெரும் பெயர் பெற்று விளங்கிய டி.எம். சௌந்தரராஜன் ஜெமினி கணேசனுக்காகச் சில பாடல்கள் பாடியதுண்டு. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" படத்தின் "என்னருமைக் காதலிக்கு", "சதாரம்" படத்தின் "நினைந்து நினைந்து நெஞ்சம்" மற்றும் "ராமு'வில் "கண்ணன் வந்தான்" போன்று அவை புகழ் பெற்றதும் உண்டு. ஆயினும், அவரது திரைக்குரலாகவே அறியப்பட்டவர்கள் இருவர்: முதலாமவர், அவரது ஆரம்பகாலப் படங்களில் பின்னணி அளித்த ஏ. எம். ராஜா. இரண்டாமவர், பன்மொழி வித்தகரான பி. பி. ஸ்ரீநிவாஸ். இயல்பாகவே மென்மையான குரல் கொண்டிருந்த ஜெமினி கணேசனுக்கு இவர்கள் இருவரது குரலும் மிக அற்புதமாகப் பொருந்துவதானது. மனம்போல மாங்கல்யம் திரைப்படத்தில் "மாப்பிள்ளை டோய்" துவங்கிப் பல படங்களில் ஏ.எம். ராஜா அவருக்குப் பின்னணி பாடினார். "கல்யாணப் பரிசு" திரைப்படத்தில்தான் அவர் முதன் முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இதன் பிறகு, "ஆடிப்பெருக்கு" போன்ற சில படங்களில் அவருக்கு இசையமைத்துப் பாடியுள்ளார்.
அறுபதுகளின் இறுதியில் வெளிவரத்துவங்கிய ஜெமினி கணேசனின் படங்களில், பி.பி.ஸ்ரீனிவாஸ் அவரது பாடற்குரலானார். சுமைதாங்கி போன்ற படங்களில் ஜெமினிக்காக அவர் பாடிய பாடல்கள் இறவா வரம் பெற்றவை.
1970ஆம் வருடங்களின் இறுதியில், "சாந்தி நிலையம்" போன்ற சில படங்களில் அப்போது பெயர் பெறத் துவங்கியிருந்த எஸ்.பி.பி. என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜெமினிக்குப் பின்னணி பாடியுள்ளார்.
குணச்சித்திர வேடங்கள்
ஸ்ரீதரின் "அவளுக்கென்று ஓர் மனம்" மற்றும் "சாந்தி நிலையம்" ஆகிய படங்கள் வெளியாகும் கால கட்டத்தில் ஒரு நாயகனாக ஜெமினிக்குச் சற்று இறங்கு முகம்தான். அவர் நாயகனாக நடித்த கடைசிப்படம் சுஜாதாவுடன் நடித்து 1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளிவந்த "லலிதா".
சில வருடங்களுக்குப் பிறகு குணசித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிக்கலானார். அவற்றில் மிகச் சிறப்பாக அமைந்த இரண்டு படங்களுமே கமல்ஹாசன் நாயகனாக நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சிரஞ்சீவியின் தந்தையாக அவர் நடித்த ருத்ரவீணா தமிழில் உன்னால் முடியும் தம்பி என மறுவாக்கம் செய்யப்பட்டபோது, அதில் கமல்ஹாசனின் பிடிவாதம் மிக்க தந்தையாக, கருநாடக இசைத் தூய்மையில் விடாப்பிடி கொண்டவராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மற்றொன்று அவரது கடைசிப் படமான அவ்வை சண்முகி.
நடித்த திரைப்படங்களின் பட்டியல்
ஜெமினி கணேசன் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படங்கள்
தமிழில் மட்டுமே 97 படங்களில் நடித்துள்ளார். இவரின் முதல் படம் "மிஸ் மாலினி' (1947). 1950களில் தொடங்கி 60-வரை அதிகபட்சமாக 41 திரைப்படங்களிலும், 60-களில் 30 படங்களிலும் நடித்துள்ளார். அவர் கடைசியாக தமிழில் நடித்த படம் "அவ்வை சண்முகி'(1996).
விரிவான தரவுகளுக்கு -
பிற மொழிப் படங்கள்
தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நாயகனாகவும், இரண்டாம் நாயகனாகவும் பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார்.
அவரது கல்யாணப்பரிசு இந்தி மொழியில் நஸ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் நாயகனாக நடிக்க மறுவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழில் நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் அவர் நடித்தார். இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் "மிஸ் மேரி" (தமிழில் மிஸ்ஸியம்மா) போன்றவற்றிலும், அஞ்சலி தேவியுடன் அவர் நடித்த சில படங்களின் இந்தி மறுவாக்கத்திலும் கதாநாயகனாகவே நடித்தார். தமிழ் நடிகைகள் வெற்றிக் கொடி நாட்டிய பாலிவுட் தமிழ் நடிகர்களை வெகு காலத்திற்கு வரவேற்றதில்லை. ஜெமினி கணேசனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதர மொழிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியில் அவரது பங்களிப்பு மிகக் குறைவே.
அஞ்சல் தலை வெளியீடு
தமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை 2006ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.
துணுக்குகள்
ஆரம்பகாலப் படங்களில் ஜெமினி கணேசனின் பெயர் ஆர்.கணேஷ் என்றே இடம் பெற்றது. பராசக்தி (திரைப்படம்) மூலமாக தமிழ்த்திரையுலகில் ஒரு புயலாக உருவெடுத்த சிவாஜி கணேசனும் அப்போது கணேசன் என்றே பெயர் கொண்டிருந்தமையால், மாறுபடுத்துவதற்காக, இவர் தனது பெயருடன் தனது தாய் நிறுவனத்தின் பெயரை இணைத்து ஜெமினி கணேசன் ஆனார்.
ஜெமினி கணேசன் தயாரித்த ஒரே படம் நான் அவனில்லை. இது விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றாலும், வசூலில் அவ்வளவாக வெற்றியடையவில்லை. ஆயினும், இதற்காக ஜெமினி கணேசன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்தப்படம் தமிழிலேயே ஜீவன் நடிப்பில், செல்வா இயக்கத்தில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றி கண்டது.
ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே படம் இதய மலர். கமல்ஹாசன் மற்றும் சுஜாதாவுடன் இதில் அவரும் நடித்திருந்தார். ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த தாமரை மணாளன் இணைந்து இயக்கியிருந்தார்.
தாய் உள்ளம் படத்திற்குப் பிறகு ஜெமினி கணேசன் வில்லனாக நடித்த (அநேகமாக) ஒரே படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "வல்லவனுக்கு வல்லவன்". இதில் ஜெமினி கணேசன் எதிர்பாராத விதமாக இறுதியில் வில்லனாக வெளிப்படுகிறார் என்பதும், வில்லனாக அறியப்பட்டிருந்த அசோகன் இதன் கதாநாயகன் என்பதும், துவக்கத்தி்ல் வில்லன் போலக் காணப்படும் மனோகர் காவல்துறை அதிகாரியாக வெளிப்படுகிறார் என்பதும் சுவையானவை. இத்திரைப்படத்தில் ஒரே ஒரு பாடற்காட்சியில் சாவித்ரி கௌரவ நடிகையாகத் தோன்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெமினி கணேசன் சொந்தக் குரலிலும் அற்புதமாகப் பாடக் கூடியவர் என்றும், அந்நாளைய இந்திப் பாடகர் சைகால் பாடல்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடுவது அவர் வழக்கம் என்றும் அவரது பல பாடல்களைப் பாடிய பிரபல பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தாம் இயக்கிய "இதயமலர்" திரைப்படத்தில் "லவ் ஆல்" என்று துவங்கும் ஒரு பாடலை ஜெமினி பாடியிருந்தார். அவர் சொந்தக் குரலில் பாடிய ஒரே பாடல் இதுதான்.
ஜெமினி கணேசன் இந்தி மொழியை மிக நன்றாக அறிந்திருந்தமையால், 1980ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தொலைக்காட்சித் தொடரான ஹம்லோக் சென்னை தொலைக்காட்சி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டபோது, அவற்றில் சில நிகழ்வுகளில் அவர் தமிழில் முன் கதைச்சுருக்கம் அளித்தார்.
இந்திப் படவுலகில் நுழைந்து 1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் முன்னணி நடிகையாக முன்னேறிக் கொண்டிருந்த ரேகா தாம் ஜெமினி கணேசன் - புஷ்பவல்லியின் மகள் என அறிவித்தார். ஜெமினி இதை ஒப்புக் கொண்டார்.
ரேகாவைத் தவிர ஜெமினி கணேசனின் வாரிசுகள் யாரும் திரையுலகில் புகழ் பெறவில்லை. அவரது மகள் ஜீஜி ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக்கின் ஜோடியாக நினைவெல்லாம் நித்யா என்னும் திரைப்படத்தில் நடித்தார். இதுவே அவரது முதலும் கடைசியுமான திரைப்படம். பின்னர் மருத்துவக் கல்வி பெற்று எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு உருவாக்குவதில் அவர் பெரும்பங்கு அளித்துள்ளார்.
ஜெமினி கணேசனின் மகளான கமலா செல்வராஜ் செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவச் சிகிச்சை முறைமையின் முன்னோடிகளில் ஒருவராக பெரும் ஆராய்ச்சிகளும், பங்களிப்பும் அளித்துள்ளார்.
மறைவு
சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு காலமானார். இவரது பூதவுடல் அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது.
விருதும் பட்டங்களும்
அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் "காதல் மன்னன்" என்றே அழைத்தனர். அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
ஜெமினியைப் பற்றி அவரது மகள் ஜெயா ஸ்ரீதர்
இந்து நாளிதழில் ஜெமினியைப் பற்றி
1920 பிறப்புகள்
தமிழ்த் திரைப்பட நடிகர்கள்
2005 இறப்புகள்
பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்
தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்
இந்தித் திரைப்பட நடிகர்கள்
தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
புதுக்கோட்டை மாவட்ட நபர்கள்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
|
4278
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D
|
ஹாலிவுட்
|
ஹாலிவுட் எனப்படும் இடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடத்தில் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும் பல திரைக்கூடங்கள் (studio) அமைந்துள்ளதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை பொதுவாக ஹாலிவுட் என்றழைக்கப்படுகிறது.
'ஹாலிவுட்' எப்படி உருவானது
1853 ஆம் ஆண்டில், ஒரு அடோப் குடிசை நோபலேரா (நோபல் புலத்தில்) இருந்தது, அந்த இடம் பாரம்பரி யமான மெக்சிகன் நோபல் கற்றாழைக்காக பெயர் பெற்றது 1870 வாக்கில், ஒரு விவசாய சமூகம் செழித்தோங்கியது. இப்பகுதி வட மேற்கில் சாண்டா மோனிகா மலைகளில் கடந்து வந்த பிறகு, காகெங்கா பள்ளத்தாக்கு என்று அறியப்பட்டது."ஹாலிவுட்டின் தந்தை" என அழைக்கப்படும் ஹெச். ஜே. விட்லிடைரி பத்திரிகையின் படி, 1886 ஆம் ஆண்டில் அவரது தேனிலவுக்கு சென்ற பொழுது மலைகளின் உச்சியில் இயற்கை காட்சியை ரசித்துக்கொண்டிருந்தார் . அப்போது ஒரு சீன மனிதன் வண்டியில் மரம் ஏற்றிக்கொண்டு வந்தான். அந்த மனிதன் வண்டியை விட்டு இரங்கி அவரை வணங்கினான்.
அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று வினவினார் , "நான் ஹோலி-வூட்," அதாவது 'மரத்தை ஏற்றிசெல்கிறேன் என்று கூறினார் .அப்போதே அவர் அந்த புதிய இடத்திற்கு ,அல்லது நகருக்கு ஹாலிவுட் என்ற பெயரை வைக்க , முடிவு செய்தார் .விட்லி ஏற்கனவே மேற்கு அமெரிக்காவில் உள்ள 100 நகரங்களில் இப்படியாக பெயர் வைத்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது
ஹார்ட் பண்ணையில் விட்லி 500 ஏக்கர் (200 ஹெக்டர்) ஈ.கே. நிலம் வாங்குவதற்கு ஒரு தொகை குறிப்பிட்டார் .அவர்களும் ஒப்புக்கொண்டனர் பின்னாடி இதை சில வருடம் கழித்து விற்பனை செய்யலாம் என்று மனக்கணக்கு போட்டிருந்தார் .வில்லிலே ஹாலிவுடில் நிலம் வாங்கு முன் , புதிய நகரத்திற்கான திட்டங்கள் பற்றி ஹர்ட்ஸின் க்ரே ஓடிஸ், ஹர்ட்ஸின் மனைவி, கிழக்கு அருகில் உள்ள பண்ணையில் இணை உரிமையாளர் டெயிடா வில்காக்ஸ் மற்றும் மற்றவர்களுக்கும் பரவியது.
க்ளென்-ஹோலி ஹோட்டல், ஹாலிவுட்டில் முதல் ஹோட்டல், இப்போது யூக்கா தெரு எனப்படும் மூலையில். அது 1890 களில் கட்டப்பட்டது.டெய்டா வில்காக்ஸ் விட்லேயின் ஒரு முக்கிய முதலீட்டா ளரும் நண்பருமான அலெக்ஸ் பெஸ்ட்டின் மூலமாக ஹாலிவுட் நிலம் பற்றி அறிந்திருந்தார் . ஆகஸ்ட் 1887 இல், வில்காக்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ரெக்கார்டர் அலுவலகத்தில் அவர் "ஹாலிவுட், கலிஃபோர்னியா" என்ற பெயரில் விற்கப்பட்ட சொத்தின் விபரம் மற்றும் வரைபடத்துடன் தாக்கல் செய்தார். வில்காக்ஸ் தான் முதலில் பதிவு செய்தார் . அதே வருடம் ஆரம்பகால ரியல் எஸ்டேட் வியாபாரம் சூடு பிடிக்கவே ஹாலிவுட் அதன் மெதுவான வளர்ச்சியைத் தொடங்கியது.
1900 வாக்கில், இப்பகுதியில் ஒரு தபால் அலுவலகம், செய்தித்தாள், ஹோட்டல் மற்றும் இரண்டு சந்தைகள் இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ், மக்கள் தொகை 102,479 மக்கள் தொகை 10 மைல் (16 கிமீ).கிழக்கில் திராட்சை தோட்டங்கள், பார்லி துறைகள், மற்றும் எலுமிச்சை ,ஆரஞ்சுகள் பயிரிடப்பட்டன .
ஒரு ஒற்றைப் பாதையில் தெருத்தெரு கோடு ப்ராஸ்பெக்ட் அவென்யூவின் நடுவில் இருந்து ஓடியது, ஆனால் சேவையானது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அளவில் இருந்தது . பழைய சிட்ரஸ் பழ பேக்கிங் ஹவுஸ் ஹாலிவுட் குடியிருப்பாளர்களுக்கான மாறியதை தொடர்ந்து போக்கு வரத்து மேம்பட்டது . 1902 ஆம் ஆண்டில் ஹாலிவுட் ஹோட்டல் திறக்கப்பட்டது.உரிமையாளர் ஹெச். ஜே. விட்லி
1908 ஆம் ஆண்டின் ஹாலிவுட் நில விற்பனைக்கான செய்தித்தாள் விளம்பரம் செய்யப்பட்டது .லாஸ் பசிபிக் பவுல்வர்டு மற்றும் டெவெலபர் கம்பனியின் தலைவர் ஆனார் ஹெச். ஜே. விட்லி விட்லே நிறுவனத்தின் ஆரம்ப குடியிருப்பு குடியிரு ப்புகளில் ஒன்றான ஓசியன் வியூ டிராக்ட் ஒன்றை உருவாக்கி விற்பனை செய்தது. [12] விட்லி இப்பகுதியை மேம்படுத்துவதற்கு நிறைய செய்தார். மின்சாரம் கொண்டு, ஒரு வங்கியை கட்டியெழுப்பவும், கியூஹெனாபா பாஸிற்கு ஒரு பாதையையும் சேர்த்து, மின் விளக்குகளுக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை அவர் வழங்கினார்.இப்பகுதியை மேம்படுத்துவதற்கு நிறைய பாடுபட்டார்
லைட்டிங் ப்ராஸ்பெக்ட் அவென்யூவில் பல தொகுதிகள் இயங்கின. விட்லேவின் நிலம் ஹைலேண்ட் அவென்யூவில் மையமாக இருந்தது.அவரது 1918 இல் ஒரு அவென்யூ - Whitley Heights, என்ற பெயராலேயே அழைக்கப்பட்டது
திரைப்படம்
|
4284
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
மாமல்லபுரம்
|
மாமல்லபுரம் (Mamallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
7-ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் (ஆங்கிலம்:Mahabalipuram) என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
அமைவிடம்
மாமல்லபுரம், சென்னைக்கு தெற்கே 62 கிமீ தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து 67 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 31 கிமீ தொலைவில் உள்ள செங்கல்பட்டு ஆகும்.
பேரூராட்சியின் அமைப்பு
12.6 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 128 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருப்போரூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,590 வீடுகளும், 15,172 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 85.52% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 888 பெண்கள் வீதம் உள்ளனர்.
கட்டடங்களின் வகைகள்
மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன.
மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச் சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-இல் யுனெஸ்கோ அறிவித்தது. உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.
பெயர்க் காரணம்
மாமல்லபுரம் என்பதற்குப் பெயர் காரணம், ஒருமுறை நரசிம்மராகிய மாமல்லர் தனது தந்தையுடன் உலா சென்றபோது ஒரு பாறையின் மீது யானையின் படம் வரைந்தார். அதைப் பார்த்த பிறகு தான் அவர் தந்தைக்குப் பாறைகளில் அழியாக் கோவில்கள் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அவர் பெயரையே அந்த நகருக்கு இட்டார்.
மண்டபங்கள்
பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். இவற்றின் பின்புறச் சுவரில் கருவறைகளும் அதற்கு முன்பாக அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் இருக்கும். கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறைகள் அல்லது ஐந்து கருவறைகள் கூட இருக்கலாம். எல்லாக் கோயில்களிலும் கருவறைக்கு முன் அர்த்தமண்டபம் இருக்கும். சிலவற்றில் மட்டுமே முகமண்டபம் என்ற அர்த்தமண்டபத்துக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட இடம் இருக்கும்.
கருவறைகள் சிவன், திருமால், பிரம்மன், துர்க்கை, சுப்ரமணியன் ஆகிய தெய்வங்களுக்கானவை. இந்தத் தெய்வங்கள் சில கருவறைகளில் சிலைகளாகப் பின் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாக் கருவறைகளிலும் அப்படி இல்லை. மரத்தில் செதுக்கப்பட்டோ அல்லது துணியில் வரையப்பட்டு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டோ உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். சிவனுக்குரிய கருவறைகளில் லிங்கத்தை நட்டு வைப்பதற்கான குழி காணப்படுகிறது. சில கருவறைகளில் லிங்கமும் உள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்பாளர்கள் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வம் (துர்க்கை) எனில், வாயில்காப்பாளர்களும் பெண்களாக இருப்பார்கள்.
மாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள் பின்வருமாறு:
வராக அவதாரம்|வராக மண்டபம்
மகிடாசுரமர்த்தினி மண்டபம்
இராமானுச மண்டபம்
மும்மூர்த்திகள் மண்டபம்
கோடிக்கல் மண்டபம்
கோனேரி மண்டபம்
அதிரணசண்ட மண்டபம்
ஆரம்பிக்கப்பட்டு, பாதியிலேயே கைவிடப்பட்ட சில மண்டபங்கள்
இரதங்கள்
இயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில், தேர் போலக் காட்சியளிப்பதால் இரதம் என்று அழைக்கப்படுகிறது. இவைதான் பிற்காலக் கோயில்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன. இவற்றின் மேல்பகுதி விமானம் என்று அழைக்கப்படும். மாமல்லபுரச் சிற்பிகள் பல்வேறு விதமான விமானங்களைச் சோதனை செய்து. ஒவ்வொரு இரதக் கோயிலிலும் ஒரு கருவறை உண்டு. கருவறைக்கு இருபுறமும் வாயில்காப்போரும் உண்டு.
மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்:
பஞ்சபாண்டவ இரதம் எனப்படும் ஐந்து இரதங்கள்
வலையன்குட்டை இரதம்
பிடாரி இரதங்கள் எனப்படும் இரு இரதங்கள்
கணேச இரதம்
ஐந்து இரதங்கள்
தர்மராஜ ரதம்
பீம ரதம்
அருச்சுன ரதம்
திரௌபதை ரதம்
நகுல சகாதேவ இரதம்
முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (பொ.ஊ. 630 – 668) அரிய படைப்பான பஞ்சபாண்டவ இரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்குச் சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காகச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.
இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தை (திராவிட விமானம்) உடைய தர்மராச இரதம் மற்றும் அருச்சுன இரதம், சாலை (கூண்டு வண்டி) வடிவிலான சிகரத்தை உடைய பீம இரதம், சதுரமான குடிசை போன்ற சிகரத்தை உடைய திரௌபதி இரதம் மற்றும் கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) போன்ற சிகரத்தை உடைய சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம்.
தர்மராச இரதம்
மாமல்லபுரத்தின் ரதங்களிலேயே மிகவும் பெரியதும், மிகவும் அழகு வாய்ந்ததும் தர்மராச இரதம் ஆகும். இந்த ரதத்தில் மூன்று தளங்கள் உள்ளன. மேலே உள்ள இரண்டு தளங்களும் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளன. தரைத்தளம் முழுவதுமாகச் செதுக்கப்படவில்லை. மேல் இரு தளங்களிலும் ஒவ்வொரு கருவறை உள்ளது. அதனுள் சோமாஸ்கந்தர் சிற்பங்கள் உள்ளன. அவைதவிர இரு தளங்களின் சுற்றுகளிலும் மிக அற்புதமான சிற்பங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் மேலே உள்ள தளங்களுக்குச் செல்லப் படிகள் கிடையாது. பொதுமக்களுக்கு இந்த இடத்துக்குச் சென்று பார்க்கும் அனுமதியும் கிடையாது. இந்த இடத்தை நிர்வகிக்கும் தொல்லியல் துறையின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இங்கே சென்று பார்க்க முடியும்.
தரைத்தளத்தில் கருவறை குடையப்படவில்லை. ஆனால் அதன் எட்டு மூலைகளிலும் எட்டு அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை: அர்த்தநாரீஸ்வரர் (சிவனும் பார்வதியும் இணைந்த சிற்பம்), ஹரிஹரன் (சிவனும் திருமாலும் இணைந்த சிற்பம்), சுப்பிரமணியன், பைரவன் வடிவில் சிவன், மேலும் இரு வேறு சிவன், பிரமன் மற்றும் நரசிம்மவர்மப் பல்லவன். நரசிம்மவர்மனின் விருதுப் பெயர்கள் பல்லவ கிரந்த எழுத்துகளில் தரைத்தளம் முழுவதிலும் பொறிக்கப்பட்டுள்ளன. அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பல்லவர் சிற்பக்கலைத்திறனுக்கு ஓர் ஒப்பற்ற சான்றாகும்.
முதல் தளத்தில் மொத்தம் 40 சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் 14 சிவன் வடிவங்கள். இதில் கங்காள மூர்த்தி, வீணை ஏந்திய வீணாதார சிவன், தண்டு முனிவருக்கு நடனம் கற்பிக்கும் சிவன், சண்டிகேசனுக்கு அருளும் சிவன், கங்காதரனாகக் கங்கையைச் சடைமுடியில் ஏந்தும் சிவன், காலாரிமுர்த்தியாகக் காலன் என்ற அசுரனை வதம் செய்யும் சிவன், ரிஷபாந்திகனாகக் காளை மாட்டின்மீது சாய்ந்திருக்கும் சிவன், அந்தகாசுரனை வதம் செய்யும் சிவன், நந்திக்கு அருள் வழங்கும் சிவன் போன்றவை அடங்கும். இவை தவிர, சூரியன், சந்திரன், திருமால், பிரமன், சுப்பிரமணியன் ஆகியோர் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. பொதுவாக இதுபோன்ற சிற்பங்களே எல்லாக் கோயில்களிலும் காணக்கிடைக்கும் என்றாலும், மிக வித்தியாசமாக இந்தத் தளத்தில் சாதாரணக் கோயில் பணியாளர்களான கையில் ஓலைக்குடலையில் பூவுடன் ஓர் அர்ச்சகர், ஒரு பணியாளர், ஒரு சமையல்காரர், ஓர் ஓதுவார் ஆகியோரும் மிகத் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளனர். பூசைக்கு நீர் எடுத்துச் செல்லும் ஒரு பெண்ணின் அழகான சிற்பமும் இந்தத் தளத்தில் வடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தளத்தில் சூரியன், சந்திரன் ஆகியோரைத் தவிரக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சிற்பம், தட்சிணாமூர்த்தி வடிவில் உள்ள சிவன்.
பல்லவ சிற்பக் கலையின் உன்னதத்துக்கு ஒரு சான்றாகத் தர்மராச இரதத்தைச் சொல்லலாம்.
கட்டுமானக் கோயில்கள்
ஒரு பெரும் பாறை அல்லது குன்றைக் குடைந்து அல்லது மேலிருந்து செதுக்கிச் செய்யாமல், பல்வேறு கற்களை வெட்டி எடுத்து, ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிச் செய்யப்பட்டவையே கட்டுமானக் கோயில்கள். பிற்காலத்தில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோயில்களுக்கு மாதிரியாகவும் முன்னோடியாகவும் மாமல்லபுரத்தின் இந்தக் கோயில்களைக் கருதலாம். மாமல்லபுரத்தில் மொத்தம் மூன்று பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்கள் உள்ளன:
முகுந்த நாயனார் கோயில் (தரையில் கட்டப்பட்டது)
உழக்கெண்ணெய் ஈசுவரர் கோயில் (மலைமீது கட்டப்பட்டது)
கடற்கரைக் கோயில்கள் (கடலோரத்தில் கட்டப்பட்டவை)
கடற்கரைக் கோயில்கள்
மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக்கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்திருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது. சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர்.
புடைப்புச் சிற்பத் தொகுதிகள்
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை:
அருச்சுனன் தபசு
கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல் (பிற்காலத்தில் இந்தச் சிற்பத் தொகுதிமீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது)
முற்றுப்பெறாத அருச்சுனன் தபசு
விலங்குகள் தொகுதி
இவை தவிர, வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது.
அருச்சுனன் தபசு
சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அருச்சுனன் தபசு என்றழைக்கப்படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன், பூதகணங்கள் சூழ நின்று, வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அருச்சுனன் பாசுபத ஆஸ்திரத்தை வேண்டிச் சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சிதான் இங்கே செதுக்கப்பட்டுள்ளது என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். ஒருசிலர், பகீரதன் கங்கையை வரவைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சி இது என்று கூறுகிறார்கள். ஓர் அறிஞர், இந்தச் சிற்பமே ஒரு சிலேடை என்றும் இரு காட்சிகளையும் ஒரே சிற்பத்தில் காட்டும் முயற்சி என்றும் சொல்கிறார். சமீபத்தில் ஓர் அறிஞர், இங்கே தவம் செய்வது பாசுபத அஸ்திரம் வேண்டி நிற்கும் அருச்சுனன்தான் என்றும் ஆனால் இந்தச் சிற்பம், மகாபாரதத்தில் வனபர்வத்தின் இமய மலையைச் சித்திரிக்கும் காட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாமல்லபுரத்தின் அதிசயம் என்றே இந்தச் சிற்பத் தொகுதியைக் குறிப்பிடவேண்டும். இந்த ஒரு திறந்தவெளிப் பாறையில் சிற்பிகள் 150-க்கும் மேற்பட்ட சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். இவற்றைப் பொதுவாகக் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்:
அருச்சுனன் சிவனிடம் பாசுபத அஸ்திரம் வேண்டிச் செய்யும் தவம்: இதில் உடல் ஒட்டி, எலும்பும் நரம்பும் வெளியே தெரியக்கூடிய தவக்கோலத்தில் ஒற்றைக் காலில் நின்று இரு கைகளையும் பூட்டி சூரிய வணக்கம் செய்யும் அருச்சுனன், கையில் பாசுபத ஆயுதத்தை வைத்து நிற்கும் சிவன், சுற்றி பூதகணங்கள்.
இரு பாறைப் பிளவுகளுக்கு இடையே கங்கை ஆறு ஓடிவருமாறு அழகாகச் செய்யப்பட்டிருக்கும் பாதை. அதில் காணப்படும் நாகர்கள். மழை பொழியும்போது இந்தப் பாதை வழியாக ஆறுபோலவே ஓடும் காட்சியைக் காணலாம்.
கங்கை ஆற்றின் இருபுறமும் ஆற்றை நோக்கி வரும் சூரியன், சந்திரன், தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், கின்னரர்கள் (கீழுடல் பறவை, மேலுடல் மனிதர்).
வதரியாசிரமம் (பத்ரிநாத்) எனப்படும் ஒரு திருமால் கோயில், அதன்முன் அமர்ந்திருக்கும் சில முனிவர்கள் (இவர்களின் தலை துண்டாகியுள்ளது), கங்கை ஆற்றில் குளித்துச் சடங்குகள் செய்யும் பக்தர்கள்.
வேடர்கள். இவர்கள் வேட்டையாடிய பொருள்களைக் கையில் எடுத்து வருமாறு அமைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறுவிதமான விலங்குகள், பறவைகள்: மாபெரும் யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு போன்றவை.
பொய்த்தவப் பூனை. தின்று கொழுத்த ஒரு பூனை தவம் செய்துகொண்டிருக்க, அருகே பல எலிகள், பூனை திருந்திவிட்டது என்று எண்ணித் தாமும் அதனுடன் சேர்ந்து கரம் கூப்பித் தொழும் காட்சி. இந்தக் கதை மகாபாரதத்தின் வனபர்வத்தில் துரியோதனன் சொல்வதாக வருகிறது. பின்னர் பல்வேறு இந்தியப் பாரம்பரியக் கதைகளிலும் இந்தக் கதை வருகிறது.
குரங்குகள் அமர்ந்திருக்கும் விதம், மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்துகொள்ளும் விதம், யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இணையாக இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்கும் பாறைச் சிற்பங்களைக் காண்பது அரிது.
கோவர்த்தன சிற்பத் தொகுதி
அருச்சுனன் தபசு பாறைச் சிற்பத்துக்கு அருகில் கிருஷ்ண மண்டபம் என்ற மண்டபம் உள்ளது. இதற்கு உள்ளாகத்தான் கோவர்த்தன சிற்பத் தொகுதி உள்ளது. பல்லவர் காலத்தில் செதுக்கப்படும்போது இந்தச் சிற்பமும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பமாகத்தான் இருந்தது. பிற்காலத்தில் விஜயநகர ஆட்சியின்போது இதன்மீது மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்திரனுக்கு விழா எடுப்பதை கண்ணன் தடுத்து நிறுத்தியதால் கோபம் கொண்ட இந்திரன் மழையை ஏவ, கோகுலமே மழை, புயல், வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள, ஆயர்களையும் மாடு கன்றுகளையும் காப்பாற்ற கோவர்த்தனக் குன்றைக் குடையாக எடுத்தான் கண்ணன் என்பது புராணம். இந்தக் கதை தமிழ்ப் பாடல்களில் மிகவும் புகழப்பட்ட ஒன்று. இதனை அப்படியே சிலையாக வடித்துள்ளனர் பல்லவ சிற்பிகள்.
சிற்பத்தின் நடுவே ஒரு கையால் மலையைத் தூக்கியபடி கண்ணன் நிற்க, அருகே பலராமன், பயந்து நடுங்கும் ஓர் ஆயனை அணைத்து ஆறுதல் தருகிறார். இனி பயமில்லை என்பதால், மாடுகள், கன்றுகள், ஆயர்கள், ஆய்ச்சியர் ஆகியோர் தத்தம் வேலையை மகிழ்ச்சியுடன் செய்கின்றனர். ஒருவர் புல்லாங்குழல் வாசிக்கிறான். இருவர் ஜோடியாக நடனம் ஆடுகின்றனர். ஒருவர் மாட்டிடமிருந்து பால் கறக்கிறார். மாடு வாஞ்சையுடன் தன் கன்றை நாவால் நக்குகிறது. ஒரு ஆய்ச்சி தலையில் சுருட்டிய பாய், ஒரு கையில் உறியில் கட்டி வைத்திருக்கும் பால், தயிர் சட்டிகளுடன் நிற்கிறாள். ஒருவர் தோளில் ஒரு சிறு குழந்தை உட்கார்ந்துள்ளது. சற்றே பெரிய குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் கையில் பிடித்துள்ளனர். எங்கு திரும்பினாலும் மாடுகள் நம்மைப் பார்க்கின்றன. முல்லை நிலக் காட்சியை அப்படியே அற்புதமாகச் செதுக்கியுள்ளனர் சிற்பிகள்.
அனந்தசயன சிற்பத் தொகுதி
கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான், திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி.
மகிஷாசுரமர்த்தினி மண்டபத் சிற்பத் தொகுதிகள்
மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, ஆதிசக்தியின் ஒரு வடிவான துர்க்கை, சிங்க வாகனத்தில் ஏறி, மகிசாசூரன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல கணங்களும் காணப்படுகிறார்கள்.
வராகச் சிற்பத் தொகுதி
வராக மண்டபத்தில் இருக்கும் நான்கு சிற்பத் தொகுதிகளில் ஒன்று திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமிதேவியைக் காப்பாற்றி மேலே எடுத்துவருவது. பூமியை இரணியாட்சன் எனும் அரக்கன் எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் ஒளித்துவைக்க, திருமால் வராக அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று அரக்கனுடன் போரிட்டு, அவனைக் கொன்று, பூமிதேவியை மீட்டெடுத்து மேலே கொண்டுவரும் காட்சியே இங்கே காட்டப்பட்டுள்ளது. வராகம் தன் காலை நாக அரசன்மீது வைத்திருக்கிறார். அவரது தொடையில், சற்றே வெட்கத்துடன், பூமிதேவி அமர்ந்திருக்கிறாள். அருகே ஒரு முனிவரும் ஒரு பெண்ணும் கைகூப்பி வணங்குகிறார்கள். பிரமன் ஒரு பக்கம் இருக்கிறார். அவர் அருகே ஒரு முனிவர் நிற்கிறார். சூரியனும் சந்திரனும் இரு பக்கங்களில் இருக்கிறார்கள். கீழிருந்து மேல்வரை வராகம் எடுத்திருக்கும் விசுவரூபம் சிற்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
திரிவிக்கிரம சிற்பத் தொகுதி
வராக மண்டபத்தில் காணப்படும் மற்றொரு சிற்பத் தொகுதி, திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுப்பது ஆகும். மகாபலி ஒரு யாகம் செய்து அதன்மூலம் பெரும்பலம் பெறப் பார்க்கிறான். அதனால் பயந்த தேவர்கள் திருமாலை அணுக, அவர் வாமன அவதாரம் எடுத்துச் சிறு பையனாக வருகிறார். மகாபலியிடம் அவர் மூன்றடி மண் கேட்க அவன் கொடுப்பதாக வாக்களிக்கிறான். அந்தக் கணம் வாமனம் விசுவரூபம் எடுத்து மண்ணையும் வானையும் ஆக்கிரமிக்கிறார். அந்தக் கணத்தை அப்படியே பிடித்துச் சிற்பமாக்கியுள்ளனர் பல்லவ சிற்பிகள். திரிவிக்கிரமனின் ஒரு கால் வானை நோக்கிச் செல்கிறது. அந்தக் காலுக்குப் பூசை செய்கிறார் பிரமன். மறுபக்கம் சிவன் தெரிகிறார். தரையில் மகாபலியும் பிற அரக்கர்களும் திகைத்துப்போய் அமர்ந்திருக்கின்றனர். சூரியனும் சந்திரனும் இரு பக்கங்களிலும் காணப்படுகின்றனர்.
பிற சிற்பங்கள்
சாளுவன்குப்பம் புலிக்குடைவரை
கடற்கரைக் கோயில்கள் பகுதியில் உள்ள பல சிறு சிறு கட்டுமானங்கள்
பிற்காலக் கோயில்கள்
பல்லவர் காலத்துக்குப் பிறகு, விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு திருமால் கோயிலும் (ஸ்தலசயனப் பெருமாள் கோயில்) மாமல்லபுரத்தில் உள்ளது. ஒரு மொட்டை கோபுரத்தையும் காணலாம். கோவர்த்தன சிற்பத் தொகுதியின்மீது அமைக்கப்பட்ட கிருஷ்ண மண்டபமும் இக்காலத்தில்தான் கட்டப்பட்டது.
படக்காட்சிகள்
போக்குவரத்து வசதிகள்
சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ, செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. சென்னையின் பல இடங்களிலிருந்து மாமல்லபுரத்திற்கு பேருந்துகள் உள்ளன. சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையங்கள் உள்ளன. திசம்பர்- சனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது.
கலையாக்கங்களில் மாமல்லபுரம்
இங்குச் சில கற்சிலைக் கலைக்கூடங்கள் உள்ளன. இங்குக் கற்சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கல்கியின் வரலாற்றுப் புதினம் - சிவகாமியின் சபதம் - கதை நாயகி சிவகாமி மாமல்லப்புரத்துச் சிற்பி ஆயனரின் மகளாகவும் மாமல்லனின் காதலியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
ஏ. பி. நாகராஜனின் வா ராஜா வா திரைப்படம்.
இவற்றையும் பார்க்கவும்
மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்
கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Mahabalipuram
தமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்
தமிழகத்துக் குடைவரைகள்
தமிழக தொல்லியற்களங்கள்
இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்
இந்தியத் தொல்லியற்களங்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்
செங்கல்பட்டு மாவட்ட ஊர்களும் நகரங்களும்
இந்துக் கோயில் கட்டிடக்கலை
பல்லவர் கட்டிடக்கலை
|
4290
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
இந்தி
|
இந்தி (Hindi, , நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று. இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும். பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.
பரவல்
இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், அரியானா, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது. பிற இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.
பேச்சு இந்தி
எண்கள்
- ஏக் (एक) = ஒன்று
- 'தோ (दो) = இரண்டு
- தீன் (तीन) = மூன்று
- சார் (चार) = நான்கு
- பாஞ்ச் (पांच) = ஐந்து
- சே (छः) = ஆறு
- சாத் (सात) = ஏழு
- ஆட் (आठ) = எட்டு
- நௌ (नौ) = ஒன்பது
- தஸ் (दस) = பத்து
100 - சௌ (सौ) = நூறு
1000 - ஹசார் (हजार) = ஆயிரம்
பொதுவானவை
நமஸ்தே = வணக்கம்
கித்னா = எத்தனை ?
ஊப்பர் = மேலே - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது ஊப்பர் சீட் - மேற்படுக்கை).
நீச்சே = கீழ் - பொதுவாக தொடருந்தில் பயணிக்கும் போது நீச்சே சீட் - கீழ்ப்படுக்கை).
ஜாயேகா? = போகுதா? போகுமா?- எ.கா பூபசண்டா 'சாயேகா? - பூபசண்டாரா போகுதா?)
ச்சாயேகா ? = வேண்டுமா ? எ.கா ச்சா சாயேகா ? - தேநீர் வேண்டுமா ?
கிஸ் தரஃப் - எந்தப் பக்கம்? எ.கா கிஸ் தரஃப் ஜாயேகா - எந்தப் பக்கம் போகும் ?
கத்தம் ஹோகயா = முடிவடைந்து விட்டது.
கல் - நேற்று (அல்லது) நாளை
ஆப்கா நாம் க்யா ஹை = உங்கள் பெயர் என்ன?
மேரா நாம் ராம் ஹை = என் பெயர் ராம்.
மே தும்ஸே ப்யார் கர்தா/கர்தீ ஹூ = நான் உன்னை காதலிக்கிறேன்.
டீக் ஹை = சரி
தன்யவாத் = நன்றி
எழுத்துக்கள்
இந்தி மொழி தேவநாகரி (देवनागरी लिपि தேவநாகரி லிபி) எழுத்துக்களில் எழுதப்படுகிறது. தேவநாகரி உயிரொலிகளையும், 33 மெய்யொலிகளையும் கொண்டுள்ளது. இது இடது பக்கத்தில் இருந்து வலமாக எழுதப்படுகிறது.
இந்தி சொற்களும் அவற்றின் தமிழ் கருத்துக்களும்
ஆதாரங்கள்
வெளியிணைப்புகள்
பொது
The Union: Official Language
Official Unicode Chart for Devanagari (PDF)
Web Hindi Resources
Hindi-Hindi-Tamil-English Dictionary (Googe Book ; By R Rangarajan)
தமிழ், இந்தி, தெலுங்கு: எந்த மொழி பழமையானது, இவற்றின் வேர்கள் எங்கே உள்ளன?
இந்திய-ஆரிய மொழிகள்
இந்தி
|
4291
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
துடுப்பாட்டம்
|
துடுப்பாட்டம் (ஆங்கிலம்: Cricket) என்பது மட்டையும் பந்தும் கொண்டு ஆடப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இருவேறு அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. தற்போது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா, பாக்கித்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டாக உள்ளது. தேர்வு, ஒருநாள் மற்றும் இருபது20 ஆகிய மூன்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட துடுப்பாட்ட வகைகள் ஆகும்.
துடுப்பாட்டத்தின் தோற்றம் குறித்து உறுதியான வரலாற்றுச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்கிழக்கு இங்கிலாந்தில் விளையாடப்பட்டது என்பதே துடுப்பாட்டத்தின் முதல் வரலாற்றுச் சான்றாக உள்ளது. பிரித்தானியப் பேரரசின் விரிவாக்கம் மூலம் துடுப்பாட்ட விளையாட்டு உலகளவில் பரவியது. இதனால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் துடுப்பாட்டம் பன்னாட்டு அடிப்படையில் விளையாடப்படத் தொடங்கியது. தற்போது துடுப்பாட்டத்தின் உயரிய கட்டுப்பாட்டு அமைப்பான பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையில் 100க்கும் மேற்பட்ட நாட்டு அணிகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் 12 உறுப்பினர்கள் தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதிபெற்றுள்ளன.
விதிகள் மற்றும் ஆட்ட முறைகள்
ஆட்டம்
முதலில் மட்டைவீசும் அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் வீசுகளத்தின் இரு முனைகளிலும் உள்ள எல்லைக்கோடுகளில் நின்று கொள்வர். பந்துவீசும் அணியைச் சேர்ந்த ஒரு பந்து வீச்சாளர் மட்டையாடுபவரின் எதிர்முனையில் இருந்து பந்து வீசுவார். அவர் இலக்கை நோக்கிக் குறிவைத்து பந்து வீசி மட்டையாடுபவரை வீழ்த்த முயற்சி செய்வார். இலக்கின் முன் நிற்கும் மட்டையாடுபவர் அந்த பந்தை இலக்கின் மீது படாமல் மட்டையைக் கொண்டு தடுக்க வேண்டும். அத்துடன் பந்தை மட்டையால் அடித்துவிட்டு வீசுகளத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஓடிச்சென்று அங்கு இலக்குக்கு முன்பு உள்ள எல்லைக்கோட்டைத் தன் மட்டையால் தொடலாம். அவருடன் எதிர்முனையில் காத்திருப்பவரும் முனைமாற வேண்டும். இதன்மூலம் மட்டையாடுபவருக்கு ஓர் ஓட்டம் மதிப்பெண்ணாகக் கிடைக்கும். இவ்வாறு அவர் எத்தனை முறை முனைமாறிச் சென்று எல்லைக்கோடுகளைத் தொடுகிறாரோ அத்தனை ஓட்டங்கள் கிடைக்கும். மேலும், மட்டையாடுவர் அடித்த பந்து ஆடுகளத்தின் எல்லையைத் தாண்டிவிட்டால் அவருக்கு 4 அல்லது 6 ஓட்டங்கள் வழங்கப்படும். அப்போது முனைமாற்றத்தில் எடுத்த ஓட்டங்கள் கணக்கில் சேராது. பந்து இலக்கின் மீது பட்டுவிட்டாலோ அடித்த பந்து நிலத்தில் படாமல் பந்துவீசும் அணியினருள் ஒருவரின் கைகளில் பிடிபட்டு விட்டாலோ மட்டையாளர் ஆட்டமிழப்பார். அதன்பிறகு மட்டையாடும் அணியின் மற்றொரு வீரர் வந்து தனது அணியின் ஆட்டத்தைத் தொடர்வார். இவ்வாறு பத்து மட்டையாளர்களை பந்து வீசும் அணியினர் வீழ்த்திவிட்டால் மட்டையாடும் அணியின் ஆட்டம் முடிவுக்கு வரும். மட்டையாளரை வீழ்த்துவதற்கு முற்கூறியவற்றைத் தவிர மேலும் சில வழிமுறைகளும் உள்ளன.
ஆட்டத்தின் முதல் பகுதியில் பந்து வீசிய அணி இரண்டாம் பகுதியில் மட்டைவீசும். இறுதியில் எதிரணியை விட அதிக ஓட்டங்கள் பெற்றுள்ள அணி வெற்றி பெறும்.
ஆடுகளம்
நீள் வட்டம் அல்லது வட்ட வடிவில் அமைந்த துடுப்பாட்ட மைதானத்தின் நடுவில் சுமார் மீட்டர் நீள அகலத்தில் வீசுகளம் (pitch) எனப்படும் பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இப்பகுதியின் நிலம் பதப்படுத்தப்பட்டும் புற்கள் வெட்டப்பட்டும் இருக்கும்.
இலக்கு மற்றும் வரைகோடு
வீசுகளத்தின் இரு முனைகளிலும் 20 மீட்டர் தூரத்தில் இலக்கு அமைக்கப்பட்டிருக்கும். இலக்கு என்பது ஒன்றுக்கொன்று ஒத்திருக்கும் மூன்று மரத் தண்டுகளையும் அதன் மேல் இரண்டு சிறிய மரக் கட்டைகளையும் கொண்டு அமைக்கப்படும் கருவியாகும். அதன் மொத்த உயரம் 72 செண்டிமீட்டர் (28 அங்குலம்). மேலும் மூன்று தண்டுகளின் ஒருங்கிணைந்த அகலம், அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் 23 செண்டிமீட்டர் (9 அங்குலம்) இருக்கும்.
வீசுகளத்தில் இரண்டு ஆடும் வரைகோடுகள் மற்றும் இரண்டு திரும்பு வரைகோடுகள் என்று மொத்தம் நான்கு வரைகோடுகள் இருக்கும்.
மட்டை மற்றும் பந்து
வில்லோ எனும் மரத்திலிருந்து மட்டை தயாரிக்கப்படுகிறது. இதன் நீளம், அகலம் போன்றவை முறையே 96.5 செ.மீ, 11.4 செ.மீ. இதன் எடை 2 பவுண்டுகள் ஆகும். இதை சோன்பால் என்பவர் முதன் முதலில் வடிவமைத்தார்.
அநேகமாக வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களிலேயே பந்து காணப்படுகிறது. இதன் சுற்றளவுகள் 20.79 செ.மீ முதல் 22.8 செ.மீ வரை காணப்படுகிறன. இதன் எடை அண்ணளவாக 5.75 அவுன்சு ஆகும்.
நடுவர்
ஆடுகளத்தில் நடைபெறும் துடுப்பாட்ட விளையாட்டு இரண்டு கள நடுவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு ஆட்ட நடுவர் பந்து வீச்சாளரின் இழப்புக்குப் பின்புறம் நிற்பார். மற்றொரு நடுவர் துடுப்பாட்டகாரின் இலக்கிலிருந்து 15–20 மீட்டர் தொலைவில் "square leg" எனப்படும் பகுதியில் நிற்பார்.
நடுவர்களின் முதன்மையான பணி சரியான தீர்ப்பளிப்பதாகும். அதாவது வீசுகளத்தில் ஒரு பந்து சரியான அளவில்தான் வீசப்பட்டதா, அது அகல வீச்சா? (wide) அல்லது பிழை வீச்சா? (no ball)? மேலும் இழப்பு தாக்கப்படும் முன்பு மட்டையாளர் எல்லைக்கோட்டிற்குள் தனது மட்டையை வைத்திருந்தாரா? இதுமட்டுமல்லாமல் களத்தில் உள்ள பந்து பிடிக்கும் வீரர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து கள நடுவர்கள் தீர்ப்பளிக்க வேண்டும்.
இதுதவிர கள நடுவர்கள் பணி, எப்பொழுது ஆட்டம் தொடங்குவது, இடைவெளி எப்பொழுது விடுவது, வீசுகளத்தின் தன்மை, விளையாடுவதற்கு உகந்த வானிலை உள்ளதா? எப்பொழுது ஆட்டத்தை முடிப்பது அல்லது கைவிடுவது? இதுபோன்ற முடிவுகளும் கள நடுவர்களால் தீர்மானிக்கப்படும்.
மூன்றாவது நடுவர்
பெரும்பாலும் மூன்றாவது நடுவர் என்பவர் களத்திற்கு வெளியே இருப்பார். தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும் போட்டிகளில் மூன்றாவது ஆட்ட நடுவரின் பங்கு இருக்கும். இவரது பணி, கள நடுவர்களால் ஒரு தீர்பபை வழங்க இயலாத போதும் அல்லது ஒரு சர்ச்சையான முடிவை கள நடுவர்கள் எடுக்கும்போது அதை மறுபரிசீலனை செய்வதும் (தொலைக்காட்சியில் பதிவான் காட்சிகள் மூலம் ஆராய்ந்து சரியான முடிவை வழங்குவது) ஆகும்.
ஐசிசியில் முழுமையான உறுப்பினர்கள் இடையே விளையாடப்படும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் மற்றும் வரையிட்ட நிறைவுகள் கொண்ட பன்னாட்டுப் போட்டிகள் ஆகிய அனைத்திலும் மூன்றாவது நடுவர் கட்டாயமாக இடம்பெறவேண்டும் என்பது ஐசிசி விதியாகும்.
அண்மைக்காலப் போட்டிகளில் துடுப்பாட்ட சட்டங்கள் மற்றும் விளையாட்டில் பற்று ஆகியவற்றைப் பின்பற்றி வீரர்கள் விளையாடுவதை உறுதிப்படுத்துவதற்கு, கள மற்றும் மூன்றாவது நடுவர்களைத் தவிர, ஆட்ட நடுவர் (match referee) என்ற ஒருவரும் இருக்கிறார். அவர் ஆடுகளதில் விளையாடும் வீரர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து ஒழுங்கீனமாக செயல்படும் வீரர்களுக்கு அபராதம் மற்றும் தவறு செய்யும் வீரர்களுக்கு போட்டிகளில் விளையாட தடை போன்ற தீர்ப்புகளை வழங்குவார்.
விளையாடும் அணியின் அமைப்பு
ஒரு அணி என்பது பதினொரு வீரர்களைக் கொண்டுள்ளது. விளையாடும் வீரரின் முதன்மை திறன்களைப் பொறுத்து, ஒரு வீரரை மட்டையாளர் அல்லது பந்து வீச்சாளர் என்று வகைப்படுத்தலாம். நன்கு சமநிலையான அணியில் பொதுவாக ஐந்து அல்லது ஆறு சிறப்பு மட்டையாளர்கள் மற்றும் நான்கு அல்லது ஐந்து சிறப்பு பந்துவீச்சாளர்கள் இருப்பர். இவர்களுள், தனித்துவமான இலக்கு கவனிப்பாளர் ஒருவர் எப்போதும் அணியில் இருப்பார். ஒவ்வொரு அணியும் ஒரு அணித்தலைவரின் தலைமையில் வழிநடத்ப்படுகிறது, அவர் பந்துவீச்சு வரிசையை தீர்மானித்தல்,
களத்தடுப்பு வீரர்களுக்கான இடம் மற்றும் பந்து வீச்சாளர்களின் சுழற்சியை தீர்மானித்தல் போன்ற திறமையான முடிவுகளை எடுப்பதற்கு பொறுப்பானவர்.
மட்டையாட்டம் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்கும் ஒரு வீரர் பன்முக வீரர் (All Rounder) என்று அழைக்கப்படுகிறார். ஒரு இலக்குக் கவனிப்பாளர் என்பவர் மட்டையாளராகவும் உள்ளதால் சில நேரங்களில் அவரும் ஒரு பன்முக ஆட்டக்காரர் என்று கருதப்படுகிறார். பெரும்பாலான வீரர்கள் மட்டைவீசுவது அல்லது பந்துவீசுவது ஆகிய திறமைகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்துவதால் பன்முக வீரர் என்பவர் ஒரு அணியில் மிகவும் அரிதானவராகவும் முக்கியமானவராகவும் உள்ளார்.
ஆட்ட வகைகள்
தேர்வுத் துடுப்பாட்டம்
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளே துடுப்பாட்டத்தின் பாரம்பரிய போட்டியாகும். ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு அணியும் தலா இரு ஆட்டப் பகுதிகள் விளையாட வேண்டும். அந்த இரண்டையும் சேர்த்து அதிக ஓட்டங்கள் எடுத்துள்ள அணி வென்றதாக கருதப்படும். உலகில் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி 15 மார்ச்சு 1787 நாளன்று இலண்டன் இலாட்சு மைதானத்தில் இங்கிலாந்து-ஆத்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்றது.
வரையிட்ட நிறைவுகள் துடுப்பாட்டம்
ஒநாப
ஒருநாள் பன்னாட்டுப் போட்டி வகை 1970களில் அறிமுகப் படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் ஐம்பது நிறைவுளுக்கு மிகாமல் ஒரு ஆட்டப் பகுதியை ஆட வேண்டும். அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வெற்றி பெறும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்த ஆட்ட வகையே கடைபிடிக்கப்படுகிறது. முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டி சனவரி 5, 1971 நாளன்று ஆத்திரேலியாவில் மெல்போன் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இ20ப
பன்னாட்டு இருபது20 போட்டி வகை, இங்கிலாந்து மற்றும் வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கவுண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் ஒவ்வொரு ஆட்டப் பகுதிகளைக் கொண்டிருப்பதோடு மட்டைவீசும் அணிக்கு உச்ச வரம்பாக 20 நிறைவுகள் வரை வழங்கப்படுகின்றது.
பன்னாட்டுக் கட்டமைப்பு
உறுப்பினர்கள்
முழு உறுப்பினர்கள் பின்வருமாறு:
இணை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுப்பினர்கள்
இணை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணிகள். இவை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 தகுதிகளைக் கொண்டுள்ளன:
உலகக்கிண்ணம் வென்ற அணிகள்
குறிப்பு: - உலகக் கோப்பை வென்ற அணி
துடுப்பாட்டத்தின் சமூக தாக்கங்கள்
துடுப்பாட்டம் ஐக்கிய இராச்சிய மேல்வர்க்கத்தில் தோன்றிய ஒரு பொழுது போக்கு விளையாட்டு. இவ்விளையாட்டை அங்கு கனவான்களின் ஆட்டம் (Gentlemen's game) என்று அழைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. துடுப்பாட்டம் இந்தியா, இலங்கை போன்ற நாடுகள் ஐக்கிய இராச்சியத்தின் காலனிகளாக இருந்த போது அங்கே பரவியது. துடுப்பாட்டம் பிரபலமான பின்பு பல மரபு வழி விளையாட்டுக்கள் மறைந்து போக வழிக்கோலியது.
மேலும் காண்க
காற்பந்தாட்டம்
டென்னிஸ்
அடிப்பந்தாட்டம்
கேயளிக்குக் காற்பந்தாட்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
கிரிக்கெட் பற்றிய செய்திகள் தினமலர்
பிபிசியில் துடுப்பாட்டத்தின் கதை (தமிழ்)
விளையாட்டுகள்
|
4298
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
|
சர்
|
சர் (சேர் - ஈழ வழக்கு, Sir) என்பது மரியாதையுடன் விளிப்பதற்கான ஒரு சொல்லாகும். உயர் தரத்திலுள்ளோர், கல்வி கற்பிப்போர் போன்றவர்களை இச்சொல் கொண்டு மற்றோர் விளிப்பர். சர் என்பதற்கான பெண்பாற் சொல் மெடம் (Madam) என்பதாகும்.
முற்காலத்தில் படைத் தளபதிகளுக்கு (Knights, Baronets) இக்கௌரவப்பட்டம் வழங்கப்பட்டது.
"சர்" பட்டம் - நைட்ஹுட் எனப்படும் சர் பட்டம் பிரித்தானிய அரசாங்கத்தின் உயரிய சிவில் விருதாகக் கருதப்படுகின்றது.
சாதாரணப் பயன்பாடு
சாதாரணமாக ஆங்கில மொழி உரையாடலின் போது அல்லது முன்னறிமுகம் இல்லாத ஒருவரை விழித்துப் பேசும் போது குறிப்பிட்ட நபரின் பெயர் தெரியாத விடத்து “சேர்” (Sir) என்று அழைக்கலாம். அவ்வாறே பெண்களை மெடம் (Madam) என்றழைக்கலாம்.
இதன் அடிப்படையிலேயே இன்று வர்த்தக நிலையங்களில், வீதியோர கடைத்தெருக்களில் வாடிக்கையாளர்களை அழைப்பதற்கு இந்த "சேர் மெடம்" சொற்கள் பரவலாகப் பயன்படுவதை அவதானிக்கலாம். இன்று மின்னஞ்சல் வழியாக வரும் முன்னறிமுகம் இல்லாத மின்னஞ்சல் தகவல்களும் அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றது.
பெயர் தெரிந்தி்ருப்பினும்
இதைத் தவிர (பெயர் தெரிந்திருந்தாலும்) உயர் நிலை அதிகாரிகளாக இருப்போரை விழித்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் “சேர், மெடம்” பயன்படுகின்றது.
வாடிக்கையாளர்களுக்கான கொடுக்கல் வாங்கல் தபால் கடிதங்களிலும் ஒரு நபரின் பெயர் தெரிந்து இருப்பினும் சேர் மெடம் போன்ற சொற்கள் பயன்படுவதனை காணலாம்.
மேற்கோள்கள்
கௌரவ பட்டங்கள்
|
4300
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BF
|
கைலி
|
கைலி (இலுங்கி அல்லது சாரம்) தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் யெமன், ஓமான் போன்ற அரபு நாடுகளிலும் சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளிலுமுள்ள ஆண்கள் இடுப்பில் அணிந்து கொள்ளும் ஆடை ஆகும். சில இடங்களில் பெண்களும் அணிவதுண்டு. எத்தியோப்பியா நாட்டில் அபார் எனும் பகுதியை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் இவ்வகை ஆடைகளை அணிகிறார்கள். இது வண்ணமயமான ஆடையாகும். வெப்பமான நிலப்பகுதிகளில் காற்சட்டையை விட கைலி இதமானதாக உணரப்படுகிறது.
இந்திய உடைகள்
|
4303
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
|
இசுடீபன் சுவார்ட்சு
|
இசுடீபன் சுவார்ட்சு (Stephen Schwartz) (பி. மார்ச் 6, 1948) அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். நியூயோர்க்கில் பிறந்த இவர் 1968 இல் கார்னஜி மெலன் பல்கலைக்கழகத்தில் நாடகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். கிராமி விருதும், அக்கடமி விருதும் பெற்றவர். குழந்தைகளுக்கான நூலொன்றும் எழுதியுள்ளார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
உத்தியோகபூர்வ வலைத்தளம்
1948 பிறப்புகள்
வாழும் நபர்கள்
கிராமி விருது வென்றவர்கள்
|
4305
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE
|
கல்பனா சாவ்லா
|
கல்பனா சாவ்லா (Kalpana Chawla, 17 மார்ச் 1962 - 1 பெப்ரவரி 2003) ஓர் இந்திய அமெரிக்க விண்ணோடி ஆவார்.
குழந்தைப் பருவம்
இந்தியாவில் உள்ள அரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.
இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும், தொழில் அதிபருமான ஜெ. ஆர். டி. டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது.
கல்வி
கல்பனா சாவ்லா தனது கல்வியைக் கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் ( Tagore Baal Niketan Senior Secondary School) தொடங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கொலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார்.
பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் (NASA Ames Research Center) ஒசெர்செட் மேதொட்ஸ், இன்க். ( Overset Methods, Inc.) இல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா, செங்குத்தாகக் குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றி [[CFD கம்ப்யுடேசினல் புலூயிட் டயினமிக்ஸ் (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை (gliders) ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார்.
கல்பனாவும் நாசாவும்
கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். இதற்காகவே அவர் விண்வெளியில் 372 மணித்தியாலங்கள் இருந்துள்ளார்
STS-87 இன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த ஸ்பார்டன் எனும் செயல் குறைபாடிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத கால முழுமையான விசாரணைகள் மற்றும் சோதனைக்குப் பின்பு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது.
STS-87க்குப் பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதையும் வழங்கிக் கௌரவித்தனர்.
2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் ( flow liners) பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் பாரிய அனர்த்தத்துக்குள்ளான STS-107 விண்வெளிக்குத் திரும்பியது. இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
1991-1992 இல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாக அமைந்தது.
விருதுகள்
மறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள்:
அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor)
நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம்
(NASA Space Flight Medal)
நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal)
கல்பனாவின் நினைவில்
கல்பனா சாவ்லாவின் நினைவாக எண்ணற்ற இடங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் உதவித் தொகையும் அவர் பெயரில் தரப்படுகிறது.
உதவித் தொகை
பாராட்டுக்குரிய பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு எல் பாசோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த இந்திய மாணவர்கள் சங்கம் (ISA) நினைவு உதவி ஊதியம் ஒன்றைக் கல்பனா சாவ்லா மெமோரியல் ஸ்காலர்ஷிப் ' என்று நிறுவியுள்ளது.
கிரகத்தின் பெயர்
சூலை 19, 2001 ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணைக் கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலை 159k ஆகும், இதன் சராசரி வேகம் வினாடிக்கு 16.5 கிலோமீட்டர்.
தெருக்களின் பெயர்
மேரிலாண்டில் உள்ள நேவல் ஏர் ஸ்டேஷன், பாடுக்சென்ட் ரிவெரில் உள்ள தனது இராணுவ வீட்டு வசதி வாரியத்திற்குக் கொலம்பியா காலனி என்று பெயரிட்டுள்ளது. அங்கு சாவ்லா வே (Chawla way) எனும் தெருவும் உள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க், குவீன்ஸ் என்ற இடத்தில் ஜாக்சன் ஹயிட்ஸ் எனும் பகுதியில் உள்ள 74 ஆம் தெருவிற்கு கல்பனா சாவ்லா வே என்று மாற்று பெயர் அளிக்கப்பட்டுள்ளது
கோளரங்கம்
குருச்சேத்திரத்தில் உள்ள ஜ்யோடிசர் எனும் இடத்தில் கட்டியுள்ள கோளரங்கத்திற்கு ஹரியானா அரசாங்கம் கல்பனா சாவ்லா கோளரங்கம் என்று பெயரிட்டுள்ளது.
கணினி
நாசா கல்பனாவின் நினைவாக ஓர் அதி நவீனக் கணினியை அர்ப்பணித்துள்ளது.
கல்பனா விருது
இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கருநாடக அரசாங்கம் 2004 இல் கல்பனா சாவ்லா விருது தருகிறது.
இதழ் மற்றும் புதினத்தில்
ஆஸ்டீரோயிட் 51826 கல்பனா சாவ்லா - கொலம்பிய விண்வெளிக் குழுவின் பெயரில் அளித்த ஏழு பாராட்டு இதழ்களில் ஒன்று.
நாவலாசிரியர் பீட்டர் டேவிட் அவரது ஸ்டார் டிரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேசன் : பிபோர் டிசோனர் எனும் புதினத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு சாவ்லா என்று பெயரை வைத்ததுடன், அந்த கதாபாத்திரத்தின் பெயரான சாவ்லாவை அந்த புதினத்தில் வரும் விண்கலத்திற்கும் வைத்துள்ளார்.
கட்டிடங்களின் பெயர்களாக
ஆர்லிங்க்டனில் இருக்கும் டெஷஸ் பல்கலைக்கழகம் கல்பனா சாவ்லா ஹால் (Kalpana Chawla Hall) என்ற விடுதியை 2004 ஆம் ஆண்டு துவக்கியுள்ளது. இதே பல்கலைக்கழகத்தில் தான் கல்பனா தனது முதல் முதுகலைப்பட்டத்தைப் பெற்றார்.
பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் கல்பனா சாவ்லாவின் பெயரில் ஒரு பெண்கள் விடுதியை ஆரம்பித்ததுடன், அவர் படித்த வான ஊர்தி பொறியியல் துறையில் தலைச்சிறந்த மாணவருக்கு இந்திய ரூபாய் இருபத்தைந்தாயிரமும், ஒரு பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழையும் வழங்குகிறது.
புளோரிடாவில் உள்ள தொழில் நுட்ப நிறுவனம் கொலம்பிய வில்லெஜு சுஈட்ஸ் என்ற அடுக்கு மாடிக் கட்டிடங்களைத் தனது மாணவர்கள் தங்குவதற்குக் கட்டித் தந்துள்ளது. அதில் உள்ள கூடங்களுக்குக் கொலம்பியக் குழுவில் சென்ற வீரர்களின் பெயர்களைச் சூட்டி உள்ளனர். அதில் சாவ்லா கூடமும் உண்டு.
குன்றின் பெயர்
நாசா மார்ஸ் எக்ச்பிலோரேசன் ரொவ் மிசன் (The NASA Mars Exploration Rover mission) தனது கட்டுப்பாட்டில் உள்ள மலைச் சிகரங்களுக்குக் கொலம்பியக் குன்றுகள் என்று பெயரிட்டதுடன், ஒவ்வொரு சிகரத்திற்கும் மறைந்த விண்வெளி வீரர்களின் பெயரைச் சூட்டியுள்ளது. கல்பனா பெயரிலும் ஒரு குன்று உள்ளது.
விண்வெளி தொழில் நுட்பத்தில்
கரக்பூர் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (Indian Institute Of Technology) கல்பனா சாவ்லா ஸ்பேஸ் டெக்னாலஜி செல் நிறுவியுள்ள்து.
2003-இல் இஸ்ரோ செலுத்திய விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் வைத்துள்ளது.
செப்டம்பர் 2020-இல் வணிக நோக்கில் நாசா செலுத்திய விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயரைச் சூட்டியுள்ளது.
பிற
டீப் பர்பில் என்ற குழுவை சேர்ந்த ஸ்டீவ் மோர்ஸ் கொலம்பிய விபத்தைப் பற்றி 'காண்டாக்ட் லோஸ்ட' என்ற பாடலை பாடியுள்ளார். இதனை பநானாஸ் என்ற இசைக்கோர்வையில் நாம் கேட்கலாம்.
சகோதரர் கருத்து
கல்பனாவின் சகோதரர் சஞ்சய் சாவ்லா "எனது சகோதரி இறக்கவில்லை. அவர் அழிவில்லாதவர். அது தானே ஒரு நட்சத்திரத்திற்கு அடையாளம், ஆகவே அவர் வானத்தில் இருக்கும் நிரந்தரமான ஒரு நட்சத்திரம். அவர் என்றும் அவருக்குரிய விண்வெளியில் நீங்கா இடம் பிடித்திருப்பார்"'' என்றார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
நாசா இணையத்தளத்தில் கல்பனா பற்றிய வாழ்க்கைக் குறிப்பு
கல்பனா சாவ்லா (தமிழ் மொழியில்)'''
திண்ணை இணைய இதழில் கல்பனா சாவ்லா பற்றிய திரு.ஜெயபாரதன் அவர்களின் கட்டுரை
மறைந்த உடல், மறையாத புகழ், கல்பனா சாவ்லா at yezhuththu
ஐக்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள்
இந்திய அமெரிக்கர்கள்
1962 பிறப்புகள்
2003 இறப்புகள்
அமெரிக்க வான்-விண்வெளிப் பொறியியலாளர்கள்
இந்திய விண்வெளி வீரர்கள்
இந்தியப் பெண் அறிவியலாளர்கள்
அமெரிக்க இந்தியப் பெண் அறிவியலாளர்கள்
பஞ்சாப் பெண் அறிவியலாளர்கள்
|
4307
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
கண்டம்
|
கண்டம் () (Continent) எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். புவி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களால் அன்றி மரபுசார்ந்தே அடையாளப்படுத்தப்படுகின்றன. மிகப் பெரியதிலிருந்து சிறியதாக இவை: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகும்.
நிலவியல் படிப்பில் கண்டங்கள் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகள் மூலமாக விவரிக்கப்படுகின்றன. முன்னதாகக் கண்டப்பெயர்ச்சி என அறியப்பட்ட கண்டங்களின் நகர்வுகளையும் மோதல்களையும் பிரிகைகளையும் ஆய்வுறும் துறையே தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கல்வியாகும்.
வரையறைகளும் செயல்பாடுகளும்
மரபுப்படி, "கண்டங்கள் பெரும் நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட, பெரிய, தொடர்ச்சியான, தனித்த நிலத்தொகுதிகளாகும்." பொதுவாக மரபுப்படி அறியப்படும் ஏழு கண்டங்கள் அனைத்துமே நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட தனித்த நிலப்பரப்புகள் அல்ல. "பெரிய" என்ற அளவுகோள் தன்னிச்சையான வகைப்பாடாகும்: புறப்பரப்பளவுள்ள கிறீன்லாந்து உலகின் மிகப்பெரும் தீவாகக் கருதப்படுகிறது; ஆனால் புவிப்பரப்பளவுள்ள ஆத்திரேலியா ஒரு கண்டமாகக் கருதப்படுகிறது. அதே போல, தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அளவுகோலும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு கண்டத் திட்டுகளும் பெருங்கடல் தீவுகளும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன; வடக்கு, தெற்கு அமெரிக்க கண்டங்களும் இக்கோட்பாட்டிற்கு முரணாக அமைந்துள்ளன. ஐரோவாசியாவும் ஆபிரிக்காவும் எந்தவொரு இயற்கையான நீர்ப்பரப்பாலும் பிரிக்கப்படாதபோதும் இரண்டு கண்டங்களாகக் கருதப்படுகின்றன. தொடர்ச்சியான நிலப்பகுதியான ஐரோப்பாவும் ஆசியாவும் இரு கண்டங்களாகப் பிரிக்கப்படும்போது இந்த முரண் இன்னும் தெளிவாகிறது. புவியின் நிலப்பகுதிகள் ஒரே தொடர்ச்சியான உலகப் பெருங்கடலால் சூழப்பட்டிருக்க இதுவம் பல பெருங்கடல்களாகக் கண்டங்களாலும் பிற புவியியல் அளவீடுகளாலும் பிரிக்கப்பட்டுள்ளது. கண்டங்கள் சிலநேரங்களில் முதன்மை நிலப்பரப்புகளிலிருந்தும் விரிவுபடுத்தப்பட்டு உலகின் அனைத்து நிலப்பகுதிகளும் ஏதேனும் ஒரு கண்டத்தின் அங்கமாகக் கொள்ளப்படுகிறது.
கண்டங்களின் பரப்புக்கள்
கண்டம் என்பதன் குறுகிய பொருளாகத் தொடர்ச்சியான நிலப்பரப்பாக அல்லது பெருநிலப்பகுதியாக கொள்ளலாம்; கண்டத்தின் எல்லைகளாகக் கடற்கரைகளும் நில எல்லைகளும் அமைந்தன. இந்தக் கோட்பாட்டின்படி ஐரோப்பிய கண்டம் (சிலநேரங்களில் "தி கான்டினெட்") என்பது ஐரோப்பிய பெருநிலப் பகுதியைக் குறிப்பிடுவதாக அமைந்தது; இதில் தீவுகளான பெரிய பிரித்தானியா, அயர்லாந்து, ஐசுலாந்து போன்றவை நீக்கப்பட்டன. அதேபோல ஆத்திரேலியக் கண்டம் என்ற சொல் ஆத்திரேலியப் பெருநிலப் பகுதியை மட்டுமே குறிக்க தாசுமேனியா , நியூ கினி போன்ற தீவுகள் விலக்கப்பட்டன. இக்கோட்பாட்டின் தொடர்ச்சியாக, ஐக்கிய அமெரிக்கக் கண்டம் என்ற சொல்லாட்சி வட அமெரிக்காவின் மத்தியில் தொடர்ச்சியாக உள்ள 48 மாநிலங்களையும் (கனடாவால் பிரிக்கப்பட்டுள்ள) வடமேற்கிலுள்ள அலாஸ்காவையும் மட்டுமே உள்ளடக்கி அமைதிப் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவை விலக்கி வரையறுக்கிறது.
நிலவியல் அல்லது புவியியல் அணுகுமுறையில், கண்டம் தொடர்ச்சியான நிலப்பகுதியைத் தவிர ஆழமற்ற நீரில் மூழ்கிய அண்மைப்பகுதிகளையும் (கண்டத் திட்டு) அப்பரப்பிலுள்ள தீவுகளையும் (கண்டத் தீவுகள்), உள்ளடக்குகிறது;இவையும் கண்டத்தின் கட்டமைப்பின் அங்கமாக விளங்குகின்றன. இதன்படி கடற்கரைகள் கடலின் ஏற்றத் தாழ்வுகளால் மாறிவருவதால், கடலோர கண்டப்படுகையே உண்மையான எல்லையாகும். இந்த அணுகுமுறைப்படி பெரிய பிரித்தானியாவின் தீவுகளும் அயர்லாந்தும் ஐரோப்பாவின் அங்கமே; ஆத்திரேலியாவும் நியூ கினியும் இணைந்து ஒரே கண்டமே.
பண்பாட்டுக் கூறுகளின்படி, கண்டத்தின் எல்லை கண்டப்படுகைகளையும் கடந்து தீவுகளையும் கண்டத் துண்டுகளையும் உள்ளடக்குகிறது. இதன்படி, ஐசுலாந்து ஐரோப்பாவின் அங்கமாகவும் மடகாசுகர் ஆபிரிக்காவின் அங்கமாகவும் கருதப்படுகிறது. இக்கோட்பாட்டையே மேலும் விரிவுபடுத்தி, சில புவியியலாளர்கள் ஆஸ்திரேலேசிய புவிப்பொறையுடன் அமைதிப் பெருங்கடலில் உள்ள தீவுகளையும் ஒன்றிணைத்து ஓசியானியா எனக் குறிப்பிடலாயினர். இது புவியின் அனைத்துப்பரப்பையும் கண்டங்களாகவும் கண்டம் போன்ற நிலத்தொகுதிகளாகவும் பிரிக்க வழி செய்கிறது.
கண்டங்கள் பிரிப்பு
ஒவ்வொரு கண்டமும் தனித்த நிலப்பகுதியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டிலிருந்து பொதுவாகத் தன்னிச்சையான, வரலாற்று மரபுகளால் விலக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஏழு கண்டங்களில் ஆத்திரேலியாவும் அன்டார்க்டிக்காவும் மட்டுமே மற்ற கண்டங்களிலிருந்து தனித்து உள்ளன.
பல கண்டங்கள் முற்றிலும் தனித்த பகுதிகளாக வரையறுக்கப்படவில்லை; " ஏறக்குறைய தனித்த நிலப்பரப்புகளாக"பிரிக்கப்பட்டுள்ளன. ஆசியாவும் ஆபிரிக்காவும் சூயஸ் குறுநிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன; வடக்கு, தெற்கு அமெரிக்காக்கள் பனாமா குறுநிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு குறுநிலங்களுமே (isthmus) அவை இணைக்கும் பெருநிலப்பகுதிகளை விட மிகக் குறுகியவை. இவற்றின் குறுக்காகச் செயற்கையான நீர்வழிகள் ( முறையே சூயஸ் , பனாமா கால்வாய்கள்) இந்த நிலப்பரப்புகளைப் பிரிக்கின்றன.
எந்தவொரு கடலும் பிரிக்காத ஐரோவாசியாவை ஆசியா என்றும் ஐரோப்பா என்றும் பிரிப்பது பிறழ்வு ஆகும். ஐரோவாசியாவை ஒரே கண்டமாக ஏற்றுக்கொண்டால் உலகில் ஆறு கண்டங்களாகப் பிரிக்கலாம். இந்த அணுகுமுறை நிலவியலிலும் புவியியலிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஐரோவாசியாவை ஐரோப்பா என்றும் ஆசியா என்றும் பிரிப்பது ஐரோப்பிய மையவாதத்தின் எச்சமாகக் கருதப்படுகிறது: "நிலப்பரப்பு, பண்பாடு மற்றும் வரலாற்று பன்முகத்தில், சீன மக்கள் குடியரசும் இந்தியாவும் முழுமையான ஐரோப்பிய நிலப்பரப்பிற்கு ஒத்தது; எந்தவொரு தனி ஐரோப்பிய நாட்டிற்கும் அல்ல. ஒரு சிறந்த மாற்றாக (அப்போதுகூட முழுமையற்ற) பிரான்சை, முழுமையான இந்தியாவுடன் அல்லாது, உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு இந்திய மாநிலத்துடன் ஒப்பிடுவதே சரியானதாகும்." இருப்பினும், வரலாற்று, பண்பாட்டுக் காரணங்களுக்காக, ஐரோப்பாவை தனி கண்டமாகப் பல வகைப்படுத்தல்களிலும் கருதப்படுகிறது.
ஏழு கண்டங்கள் கோட்பாட்டில் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் தனி கண்டங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் அவற்றை ஒரே கண்டமாக, அமெரிக்காவாகவும் பார்க்கலாம். இந்தப் பார்வை இரண்டாம் உலகப் போர் வரை ஐக்கிய அமெரிக்காவில் நிலவியது; சில ஆசிய ஆறு கண்ட கோட்பாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது. மேலும் எசுப்பானியா, போர்த்துக்கல் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இவை ஒரே கண்டமாகக் கருதப்படுகின்றன. இந்தப் பயன்பாட்டை அமெரிக்க நாடுகளின் அமைப்பு போன்ற பெயர்களில் காணலாம். 19வது நூற்றாண்டிலிருந்து சிலர் "அமெரிக்காக்கள்" என்ற சொல்லாக்கத்தை பயன்படுத்துகின்றனர்.
கண்டங்களைத் தனித்த நிலப்பகுதிகளாக வரையறுத்து அனைத்து தொடர்ச்சியான நிலப்பகுதிகளையும் ஒன்றிணைத்தால், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா அடங்கிய ஒற்றை நிலப்பகுதி ஆப்பிரிக்க-யூரேசியா என்றழைக்கப்படுகிறது. இதன்படி நான்கு கண்டங்கள் உள்ளன: ஆப்பிரிக்க-யூரேசியா, அமெரிக்கா, அன்டார்ட்டிகா மற்றும் ஆத்திரேலியா.
பனி யுகத்தில், கடல்மட்டம் தாழ்ந்திருந்தபோது பல கண்டப்படுகைகள் உலர்நிலமாக, நிலப்பாலங்களாக வெளிப்பட்டன; அக்காலத்தில் ஆத்திரேலியா (கண்டம்) ஒரே தொடர்ச்சியான நிலப்பகுதியாக இருந்தது. அதேபோல அமெரிக்காக்களும் ஆபிரிக்க-யூரேசியாவும் பெரிங் பாலத்தால் இணைக்கப்பட்டிருந்தன. பெரிய பிரித்தானியா போன்ற பிற தீவுகளும் தங்கள் கண்டத்தின் பெருநிலப்பகுதிகளுடன் இணைந்திருந்தன. அக்காலத்தில் மூன்று கண்டங்களே இருந்தன: ஆபிரிக்க-யூரேசிய-அமெரிக்கா, அன்டார்ட்டிகா, ஆத்திரேலியா-நியூ கினியா.
கண்டங்களின் எண்ணிக்கை
பலவேறு முறைகளில் கண்டங்கள் பிரிக்கப்படுகின்றன:
<center>
{| class="wikitable" style="margin:auto;"
|-
! colspan="9" | மாடல்கள்
|-
| style="background:#fff;" colspan="9"|<center>வண்ணக்குறியிடப்பட்ட கண்டங்களின் வரைபடம். இணைக்கக்கூடிய அல்லது பிரிக்கக்கூடிய நிலப்பகுதிகள் ஒரேபோல வண்ணச்சாயை கொடுக்கப்பட்டுள்ளன.
|-
|4 கண்டங்கள்
|colspan="3" |<center><small> <span
style="background: #c10000;"> </span> </small> ஆப்பிரிக்க-யூரேசியா
|colspan="2" |<center> அமெரிக்கா
||<center> அன்டார்க்டிக்கா
||<center> ஆஸ்திரேலியா
|-
|5 கண்டங்கள்
||<center> ஆப்பிரிக்கா
|colspan="2" |<center> ஐரோவாசியா
|colspan="2" |<center> அமெரிக்கா
||<center> அன்டார்க்டிக்கா
||<center> ஆஸ்திரேலியா
|-
|6 கண்டங்கள்
||<center> ஆபிரிக்கா
||<center> ஐரோப்பா
||<center> ஆசியா
|colspan="2" |<center> அமெரிக்கா
||<center> அன்டார்க்டிக்கா
||<center> ஆஸ்திரேலியா
|-
|6 கண்டங்கள்
||<center> ஆபிரிக்கா
|colspan="2" |<center> யூரேசியா
||<center> வட அமெரிக்கா
||<center> தென் அமெரிக்கா
||<center> அன்டார்க்டிக்கா
||<center> ஆஸ்திரேலியா
|-
|7 கண்டங்கள்
||<center> ஆபிரிக்கா
||<center> ஐரோப்பா
||<center> ஆசியா
||<center> வட அமெரிக்கா
||<center> தென் அமெரிக்கா
||<center> அன்டார்க்டிக்கா
||
ஆஸ்திரேலியா |}
ஏழு கண்டங்களக்ச் சீன மக்கள் குடியரசு, இந்தியா, மேற்கு ஐரோப்பாவின் சிலபகுதிகள் மற்றும் பெரும்பாலான ஆங்கிலமொழி பேசும் நாடுகளில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
அமெரிக்காவை ஒரே கண்டமாகக் கொண்ட ஆறு கண்டங்கள் வடிவம் எசுப்பானிய மொழி பேசும் நாடுகளிலும் கிரீசு போன்ற சில ஐரோப்பிய நாடுகளிலும் (சிலவற்றில் மனித நடமாட்டம் இல்லாத அன்டார்க்டிக்காவை தவிர்த்து ஐந்தாகவும்) கற்றுக் கொடுக்கப்படுகிறது.
மனித நடமாட்டம் இல்லாத அன்டார்க்டிக்காவைத் தவிர்த்த ஐந்து கண்ட வடிவத்தைப் பன்னாட்டு ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் சின்னங்கள்#ஒலிம்பிக் சின்னத்தில் ஐந்து வளையங்களைக் கொண்டுள்ளது.
ஆத்திரேலியாவையும் அடுத்துள்ள பசிபிக் மற்றும் அமைதிப் பெருங்கடல் தீவுகளையும் குறிக்க சிலநேரங்களில் ஓசியானியா அல்லது ஆஸ்திரேலியா என்ற சொற்பயன்பாட்டையும் காணலாம். இப்பயன்பாட்டை கனடா இத்தாலி, கிரேக்கம் (நாடு) மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள், போர்த்துக்கல், எசுப்பானியா நாட்டு பாடப்புத்தகங்களில் காணலாம்.
பரப்பளவும் மக்கட்தொகையும்
கீழ்வரும் அட்டவணையில் ஒவ்வொரு கண்டத்தின் பரப்பளவும் மக்கள் தொகையும் தொகுக்கப்பட்டுள்ளது.
எல்லாக் கண்டங்களும் சேர்த்து மொத்தப் பரப்பளவு 148,647,000 ச.கி.மீ. இது உலகின் பரப்பில் ஏறத்தாழ 29.1 சதவிகிதம் ஆகும்.
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
மேற்கோள் வழு-Defined multiple times
|
4310
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
ஈரோடு மாவட்டம்
|
ஈரோடு மாவட்டம் (Erode district), இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஈரோடு ஆகும். இது தமிழ்நாட்டின், மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் 5,722 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
இதன் வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திருப்பூர் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டங்கள், கிழக்கில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன. காவிரி, பவானி, மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகள் ஈரோடு மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன. 1996-ஆம் ஆண்டுவரை, இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது.
பெயர்க் காரணம்
பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இங்குள்ள கடவுளுக்கு, கபாலீசுவரர் என்ற பெயர். அதனை ஒட்டி ஈர ஓடு என்னும் பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஈரோடு என்று மாறியதாகவும் கூறுவர்.
வரலாறு
இலக்கியப் புகழும், வரலாற்று பெருமையும், தொல்பொருள் சிறப்பும் மிக்க ஈரோடு மாவட்டம், தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. அப்போதைய கோயமுத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஈரோடு நகரம், 3000 வீடுகளைக்கொண்டு முக்கிய வணிக ஊராகத்திகழ்ந்தது. பல அன்னியப்படைகள் தாக்கி அழித்தன, அனைத்து செல்வங்களும் கொள்ளையடித்து கொண்டு போகப்பட்டன. அதனால் 1792 ஆம் ஆண்டில் ஈரோடு நகரம் வெறும் 400 இடிந்த வீடுகளையும் 3000 மக்களையும் மட்டுமே கொண்டிருந்தது.
பின்பு 4-3-1799இல் திப்பு சுல்தான் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தப்பகுதி முழுவதும் கும்பினியர் வசமானது. அப்பொழுது நொய்யல் ஆற்றை மையமாக வைத்து நொய்யல் வடக்கு மாவட்டம் மற்றும் நொய்யல் தெற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு முறையே பவானியும், தாராபுரமும் தலைநகரங்களாயின. நொய்யல் வடக்கு மாவட்டத்தில் கோயமுத்தூர், ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளும், நொய்யல் தெற்கு மாவட்டத்தில் கரூர், பொள்ளாச்சி, தாராபுரம் போன்ற பகுதிகளும் அடங்கியிருந்தன.
பின்னர் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தால், 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூரை தலைநகராகக்கொண்டு மாவட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. அப்போது அதில் இருந்த ஈரோடு தாலுகாவை, பெருந்துறை தாலுகாவுடன் இணைத்து ஈரோட்டை துணை தாலுகாவாக மாற்றினர். அதேபோல், காங்கேயம் தாலுகாவை, தாராபுரத்துடன் இணைத்தனர், மேலும் சத்தியமங்கலம் தாலுகா தலைமையகத்தை கோபிசெட்டிபாளையத்துக்கு மாற்றினர்.
பின்னர் 1868 ஆம் ஆண்டில் ஈரோடு மீண்டும் தாலுக்கா அந்தஸ்த்து பெற்றபோது தனி தாலுகாவாக இருந்த பெருந்துறை, ஈரோடு தாலுகாவுடன் இணைக்கப்பட்டது.
அதன்பின், 24-9-1979-இல் மாநில நிர்வாக சீர்திருத்தக்குழுவின் பரிந்துரைப்படி ஈரோடு நகரைத் தலைமையிடமாகக்கொண்டு தனி மாவட்டம் உருவாக்கவும், மேலும் தாராபுரம் தாலுகாவைப் பிரித்து காங்கேயம் தாலுகாவும், ஈரோடு தாலுகாவைப் பிரித்து பெருந்துறை தாலுகாவும் மற்றும் கோபிச்செட்டிபாளையத்தை தலைமையிடமாகக்கொண்டிருந்த சத்தியமங்கலம் தாலுகாவை பிரித்து கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம் என இரண்டாகப் பிரித்தும் மொத்தம் மூன்று புதிய தாலுகாகளை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டது. அதன்படி கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்த ஈரோடு, பெருந்துறை, பவானி, காங்கேயம், கோபிச்செட்டிபாளையம் தாலுகாக்களையும், சேலம் மாவட்டத்திலிருந்த சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு தாலுகாக்களையும் இணைத்து ஈரோடு மாவட்டம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சியாளர்கள், திருச்செங்கோட்டையும், சங்ககிரியையும் ஈரோட்டுடன் இணைத்தால் சேலம் மாவட்டத்தின் வருவாய் கடுமையாக பாதிக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி தாலுகாக்களைத் தவிர்த்து அதற்கு மாற்றாக சத்தியமங்கலம் மற்றும் தாராபுரத்தை சேர்த்து, ஏனைய ஐந்து தாலுகாகளையும் உள்ளடக்கி மொத்தம் ஏழு தாலுகாகளுடன் புதிய மாவட்டம் உருவானது. 1997ஆம் ஆண்டு வரை பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மாவட்டத் தலைநகரான ஈரோடு நகரின் பெயராலேயே ஈரோடு மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
2008 ஆம் ஆண்டில், திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, ஈரோடு மாவட்டத்திலிருந்த தாராபுரம் மற்றும் காங்கேயம் தாலுகாக்கள் முழுமையாகவும், பெருந்துறை தாலுகாவிலிருந்த ஒரு பகுதியும் (ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூர் ஒன்றியப்பகுதிகள்) பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.
வரலாற்றுச் சிறப்பு
பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக ஈரோடு மாவட்டம் விளங்குகிறது. கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களையும், கரூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும், திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கி இருப்பதே கொங்கு நாடு ஆகும். இப்பகுதிகளை கொங்கர் ஆண்டு வந்தனர். இங்குள்ள தாராபுரத்தில் உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. உரோம பேரரசுக்கும் இம்மாவட்ட வணிகர்களுக்கும் வணிகம் நடந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பு.
இதுபோலவே நொய்யல் ஆற்றின் கரையில் சென்னிமலைக்கு அருகே உள்ள 'கொடுமணல் நாகரிகம்' 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல வண்ண மணிகள், ஓடுகள் கிடைத்துள்ளன. சங்க காலத்திற்கு பின்னர் கங்கர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்களை சோழர்கள் 9 ஆம் நூற்றாண்டில் முறியடித்து கொங்கு மண்டலத்தை ஆளத் தலைப்பட்டனர். சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் 'அதிராசராச மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. இக்காலத்தில் கொங்குவேளிர் பெருங்கதையையும்; பவணந்தி நன்னூலையும்; அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரையையும் எழுதியுள்ளனர்.
சோழர்களுக்குப் பிறகு பாண்டியர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள், திப்பு சுல்தான் முதலியோர் இப்பகுதியை ஆண்டிருக்கின்றனர். இக்காலங்களில் பட்டக்காரர் வசம் வரிவசூலிப்பு இருந்திருக்கிறது.
மாவட்ட வருவாய் நிர்வாகம்
ஈரோடு மாவட்டமானது, ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், பத்து வருவாய் வட்டங்களும் (தாலுகாக்கள்), 35 உள்வட்டங்களும், 375 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.
ஈரோடு வருவாய் கோட்டம்
ஈரோடு வட்டம்
மொடக்குறிச்சி வட்டம்
பவானி வட்டம்
பெருந்துறை வட்டம்
கொடுமுடி வட்டம்
கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டம்
கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்
சத்தியமங்கலம் வட்டம்
அந்தியூர் வட்டம்
நம்பியூர் வட்டம்
தாளவாடி வட்டம்
உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்
இம்மாவட்டம் ஒரு மாநகராட்சியும், 4 நகராட்சியும், 42 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகள்
ஈரோடு மாநகராட்சி
கோபிச்செட்டிப்பாளையம் தேர்வு நிலை நகராட்சி
சத்தியமங்கலம் முதல் நிலை நகராட்சி
பவானி இரண்டாம் நிலை நகராட்சி
புன்செய்ப்புளியம்பட்டி இரண்டாம் நிலை நகராட்சி
பேரூராட்சிகள்
அம்மாப்பேட்டை
அந்தியூர்
ஆப்பக்கூடல்
அரச்சலூர்
அரியப்பம்பாளையம்
அத்தாணி
அவல்பூந்துறை
பவானிசாகர்
சென்னசமுத்திரம்
சென்னிமலை
சித்தோடு
எலத்தூர்
ஜம்பை
காஞ்சிக்கோயில்
கருமாண்டி செல்லிபாளையம்
காசிபாளையம்
கெம்பநாயக்கன்பாளையம்
கீழம்பாடி
கொடுமுடி
கொளப்பலூர்
கொல்லன்கோயில்
கூகலூர்
லக்கம்பட்டி
மொடக்குறிச்சி
நல்லாம்பட்டி
நம்பியூர்
நசியனூர்
நெருஞ்சிப்பேட்டை
ஒலகடம்
பி. மேட்டுப்பாளையம்
பள்ளபாளையம்
பாசூர்
பெரியகொடிவேரி
பெருந்துறை
பெத்தம்பாளையம்
சலங்கப்பாளையம்
சிவகிரி
ஊஞ்சலூர்
வடுகப்பட்டி
வாணிப்புத்தூர்
வெள்ளோட்டம்பரப்பு
வேங்கம்புதூர்
ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள்
இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 225 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.
ஊராட்சி ஒன்றியங்கள்
அம்மாபேட்டை
அந்தியூர்
பவானி
கோபிச்செட்டிப்பாளையம்
பெருந்துறை
சத்தியமங்கலம்
சென்னிமலை
ஈரோடு
கொடுமுடி
பவானிசாகர்
நம்பியூர்
மொடக்குறிச்சி
தாளவாடி
தூக்கநாயக்கன்பாளையம்
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,251,744 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இம்மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 72.58% ஆகும்.
சமயம்
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 2,115,455 (93.95 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 76,098 (3.38 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 55,899 (2.48 %) ஆகவும், சீக்கிய மக்கள்தொகை 435 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள்தொகை 148 (0.01 %) ஆகவும், சைன சமய மக்கள்தொகை 639 (0.03 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 157 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 2,913 (0.13 %) ஆகவும் உள்ளது.
அரசியல்
சட்டமன்றம்
இம்மாவட்டம் 8 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.
மக்களவை
இம்மாவட்டம் ஒரு மக்களவைத் தொகுதியை கொண்டுள்ளது.
மாவட்டக் காவல்துறை அமைப்பு
தமிழ்நாடு காவல்துறையின் மாவட்டக் காவல் அமைப்பான, ஈரோடு மாவட்டக் காவல் பிரிவில் உள்ளடங்கியது. ஈரோடு மாநகரில், 8 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், ஒரு குற்றப் பிரிவு காவல் நிலையமும் இரண்டு போக்குவரத்துக் காவல் நிலையங்களும் உள்ளன.
பொருளாதாரம்
ஈரோட்டில் வேளாண்மைக் கருவிகள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில், தமிழ்நாடு சிறுதொழில் துறையினரால் நடத்தப்படுகிறது. இவை தவிர எண்ணெய், தோல், பருத்தி ஆலைத் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது. இதன் அருகில் முட்டையைப் பொடியாக்கி பொதி செய்யும் தொழில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பாத்திரத் தொழிலும் நடந்து வருகிறது. ஈரோடு துணி மார்க்கெட் இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது. சிறு சேமிப்பு திட்டத்தில் 33.65 கோடி ரூபாயில் இம்மக்கள் முதலீடு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மஞ்சள், சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களுக்கான முக்கிய சந்தையாகும். மஞ்சளானது துணிகளுக்கு சாயமாகவும் பயன்படுத்தப் படுகிறது. மஞ்சளானது ஈரோடு மற்றும் கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து வருகிறது. ஊத்துக்குளி வெண்ணெய் புகழ் பெற்றது.
விவசாயம்
மொத்த விவசாய பரப்பு 9 இலட்சம் ஏக்கர்; முக்கிய விளை பொருட்கள்: நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, சோளம், பருத்தி, புகையிலை, எள். விவசாயத் தொழிலாளர்கள்: 10,78,256 பேர்கள். மஞ்சள் சந்தை தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் சென்ற ஆண்டு ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றது. தேங்காய் மற்றும் வாழை உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது ஈரோடு மாவட்டம்.
தொழில்கள்
பெருந்தொழில் நிறுவனங்கள் - 2; சிறு தொழிற்சாலைகள் 7,249. மற்றும் 1301 குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன.
உணவுபொருள்-தமிழகத்தில் உணவு பொருள் தயாரிப்பில் ஈரோடு முன்னிலை வகிக்கிறது. ஈரோட்டை தொடர்ந்து கோவை,திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் அதிக அளவு உணவு பொருள் தயாரிப்பு மேற்கொள்ள படுகிறது
கைத்தறி - நெசவுத் தொழில் பெருந்துறை, தாராபுரம், ஈரோடு, பவானி ஆகிய இடங்களில் நடக்கிறது. அந்தியூரில் மட்டும் 3000 விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் 5000 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு டையிங் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. சென்னிமலையில் ஜமக்காளம் மற்றும் போர்வைகள், பவானியில் பவானி கைத்தறி ஜமக்காளம், படுக்கை விரிப்புகளுக்கு புகழ்பெற்றது. ஈரோடு மாவட்டம் இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி துணிகளுக்கு பெயர்பெற்றது. இங்கு பருத்திப் புடவைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கி, வேட்டிகள் ஆகியன தயாரிக்கப் படுகின்றன.
பட்டு - கோபிச்செட்டிப்பாளையம், தாளவாடி, சத்தியமங்கலத்தில் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் முதல் தானியங்கி பட்டு நூற்கும் இயந்திரம் கோபிசெட்டிப்பாளையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
சர்க்கரை - சத்திநகர், சித்தோடு, பெருந்துறை, கவுந்தப்பாடி முதலிய இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
மரம் அறுப்பு - சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையத்தில் மரம் அறுக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மீன்பிடிப்பு - ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடிப்பே நடந்து வருகிறது. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளில் அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. தாலக்குளத்தில் மீன் குஞ்சுகள் விற்கப்படுகின்றன. பவானிசாகர் அணையிலும், உப்பாறு அணையிலும் மீன்பிடிப்பு சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு பிடிக்கப்படும் மீனுக்கு 'பவானிகெண்டை' என்றே பெயர் உள்ளது. ஏரி மீன்பிடிப்பில் ஓடத்துறை ஏரி, தலைக்குளம் ஏரியில் மீன்பிடிப்பு நடக்கிறது. இங்கு இறால் மீன் பக்குவப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது. செம்படவ பாளையத்தில் கையினால் மீன்வலை பின்னும் நிலையம் ஒன்று உள்ளது.
எண்ணெய் - எண்ணெய் சந்தையைப் பொறுத்த அளவில் கேரளாவில் உள்ள கொச்சிக்கு அடுத்த படியாக, இங்குள்ள காங்கேயம் தான் பெரிய சந்தையாக திகழ்கிறது.
கால்நடை வளர்ப்பு - ஈரோடு மாவட்டத்தில் பாரம்பரியமாகவே கால்நடை வளர்ப்பு சிறந்த முறையில் நடந்து வருகிறது. தமிழக மாடு வகையில் 'காங்கேயம்' உலகப் புகழ்பெற்றது. இது போலவே பர்கூர் இனக் காளைகளும் தற்போது அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தாளவாடி, பர்கூர், அந்தியூர் பகுதிகளில் குறும்பை ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன. கண்ணபுரத்தில் பெரிய மாட்டுச் சந்தையும்; அந்தியூரில் குதிரைச் சந்தையும் ஆண்டுதோறும் கூடுகின்றன.
எல்லைகள்
ஈரோடு மாவட்டத்தின் இயற்கை எல்லைகளாக வடக்கில் மேற்குத்தொடர்ச்சி மலைகளும், கிழக்கில் காவிரி ஆறும், தெற்கில் நொய்யல் ஆறும் அமைந்திருக்கின்றன.
தெற்கில் திருப்பூர் மாவட்டமும், கிழக்கில் சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடக மாநிலமும், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களும், ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல்
மழைப்பொழிவு
பொதுவாக இம்மாவட்டம், குறைந்த மழைப்பொழிவுயும், வறண்ட காலநிலையினையும் கொண்ட மாவட்டம் ஆகும். அதிக மழைப்பொழிவு கோபிசெட்டிபாளையத்திலும், பவானி வட்டங்களிலும் நிலவுகிறது. கோயமுத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாலக்காடு கணவாய் வழியாக கிடைக்கும், குளிர்ந்த காலநிலை, இம்மாவட்டத்தில் நிலவும் வறண்ட காலநிலையினை குறைப்பதற்கு கிடைப்பதில்லை. பாலகாடு கணவாய் வழியாக, வரும் குளிர்ந்த காற்று, ஈரோடு மாவட்டத்தினை அடையும் போது பெரும்பாலும் வறண்டே வரப்பெறுகிறது. அதனால் கோயமுத்தூர் மாவட்டத்தில் நிலவும் காலநிலைக் குளிர்ச்சியும், இதமும், ஈரோடு மாவட்டத்தினருக்குக் கிடைப்பதில்லை. பருவமழைக் காலத்தில் மட்டுமே, ஈரோடு மாவட்டப் பகுதிகளில் குளிர்ந்த காலநிலை காணப்படுகின்றன. பொதுவாக சனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும், காலநிலை குளிர்ந்தும், இதமாகவும் இருக்கும். மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை கோடை வெயில் மிகவும் அதிகமாகக் காணப்படும். அவ்வப்போது இக்கோடைக்காலத்தில் பெய்யும் மழையால், இம்மாவட்டத்தின் கடுமையான சூடுத் தணிவதில்லை. சூன் தொடங்கி ஆகத்து வரையுள்ள பருவமழைக் காலத்திற்கு முன்னர் மாதங்களில் வெயிலின் வெப்பம், சற்று குறைவாகக் காணப்படுகிறது. செப்படம்பர் மாதத்தில், வானம் மேகமூட்டமாக இருந்தாலும், மழைபொழிவு குறைவாகவே காணப்படும். வடகிழக்குப் பருவகாலங்களான அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரையுள்ள மாதங்களில் அதிகமாகப் மழைப் பொழிவு காணப்படுகிறது. இப்பருவத்தில் மட்டுமே கோவை மாவட்ட சூழ்நிலை இதம், இம்மாவட்டத்தில் நிலவுகிறது.
ஆறுகள்
பவானி, காவேரி, பாலாறு, உப்பாறு, நொய்யல், மோயாறு ஆகியன ஈரோடு மாவட்டத்தில் பாயும் முக்கியமான ஆறுகளாகும். வடக்கில், பாலாறு ஈரோடு மாவட்டத்திற்கும் கருநாடக மாநிலத்திற்கும்எல்லையாக அமைந்துள்ளது. மேற்கூறிய ஆறுகளும், பவானிசாகர் அணையில் இருந்து வரும், கீழ்பவானித் திட்ட முக்கிய கால்வாய்களும் இம்மாவட்டத்தில், முறையான பாசனத்திற்கு பாசனத்திற்கு பயன்படுகின்றன. பவானி ஆறு, கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதி, அமைதிப் பள்ளத்தாக்கு என்னுமிடத்தில் உற்பத்தியாகி, சிறுவாணி என்ற ஓடை, குந்தா ஆறு ஆகியவற்றுடன் இணைந்து, இந்த் மாவட்டத்தின் சத்தியமங்கலம் வட்டத்தினை அடைகிறது. பவானி ஆறு வற்றாத ஆறாகவும், தென் மேற்கு பருவமழைக் காலத்தில் அதிக அளவு மழைநீரையும், வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஓரளவு மழைநீரையும் பெறும் ஆறாகவும் உள்ளது. இந்த ஆறு சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய வட்டங்களில் நுறு கி.மீட்டர்கள் பாய்ந்து வளப்படுத்துகின்றன. பவானிசாகர் என்ற அணைக்கு நீரை வழங்கும் முக்கிய ஆறாக, இந்த பவானி ஆறு உள்ளது.இந்த ஆற்றின் கிழக்கு நோக்கி சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி வட்டங்களில் ஓடி, காவேரி ஆற்றில் கலக்கிறது. காவேரி ஆறு மேற்கு தொடார்ச்சி மலைகளில் அமைந்துள்ள, கர்நாடக மாநிலத்தில் உள்ள தலைக்காவிரி, குடகு என்ற இடத்தில் தோன்றுகிறது. கபினியும், வேறு பல சிறிய ஆறுகள் காவேரியுடன் கலந்து கிழக்கு திசையில் கார்நாடகத்தில் பாய்ந்து வளப்படுத்துகிறது. ஹெகேனக்கல் என்ற இடத்தில் தென்திசை நோக்கி திரும்பி பாய்கிறது. இந்த இடத்தில் இருந்து தென் கிழக்கு திசையில் பாய்ந்து ஈரோடு மாவட்த்தில் உள்ள பவானி வட்டத்திற்கும், திருச்செங்கோடு வட்டத்திற்கும் எல்லைகளாக அமைந்து இந்த ஆறு ஓடுகிறது. காவேரியாற்றுடன், பவானி ஆறும் இணைந்த பின்னர், காவிரி ஆறு தொடர்ந்து, தென்கிழக்கு திசையில் ஓடி, ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு வட்டத்திற்கும், நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு வட்டத்திற்கும் எல்லையாகப் அமைகிறது. நொய்யல் ஆற்றில் தீடீர் என்று வெள்ளம் ஏற்படும் தொடர்ந்து ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். தென்மேற்கு பருவ மழைக் காலங்களில், இந்த வெள்ளப் பெருக்கு ஏற்படுவது இயற்கையாகும். இந்த ஆற்றின் நீரால், கோவை மாவட்டத்தின் பல்லடம், திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் வட்டங்களில் குறிப்பிடத்தகுந்த அளவு வேளாண் நிலங்கள் பாசனவசதிப் பெறுகிறது.
அணைக்கட்டுகள்
பவானி சாகர், வறட்டுப்பள்ளம், கொடிவேரி, ஒரத்துப்பாளையம், காளிங்கராயன் அணை. குண்டேரிப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை,
பாசன வாய்க்கால்
இம்மாவட்டமானது இரண்டு வாய்க்கால்களால் பயன்பெறுகிறது. காளிங்கராயன் வாய்க்கால், 90 கிமீ நீளமுடைய இதன் மூலம் 15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கீழ் பவானி திட்ட கால்வாய் இதன் மூலம் 2 இலட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
மலைவளம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைகள்: தாளவாடி மலை, திம்பம் மலை, தலமலை, தவளகிரி மலை, பவள மலை, பச்சை மலை,பெருமாள் மலை, பருவாச்சி மலை, பூனாச்சி மலை, அந்தியூர் மலை,வட்டமலை, சென்னிமலை,மலைப்பாளையம்மன் மலை, எழுமாத்துர் மலை, எட்டிமலை, அருள்மலை, சிவகிரி மலை, அறச்சலுர் நாக மலை, அரசனா மலை, திண்டல்மலை, விசயகிரி மலை, ஊராட்சி கோட்டை மலை ஆகியவையாகும்.
இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதி கர்நாடக பீடபூமியின் தொடர்ச்சியாயுள்ளது. இங்கு 900 மீ. முதல் 1700 மீ. உயரம் உள்ள மலைகள் காணப்படுகின்றன. இங்கு வரட்டுப்பள்ளம், வழுக்குப் பாறைப் பள்ளம், தென்வாரிப் பள்ளம், கோரைப் பள்ளம் போன்ற பல பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
காட்டுவளம்
இம்மாவட்டத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றன. காட்டின் மொத்தப் பரப்பளவு 2,42,953.28 ஹெக்டேர்களாகும். தமிழ்நாட்டிலுள்ள வனக் கோட்டங்களில் ஈரோடு மாவட்ட வனக் கோட்டமே மிகப் பெரியது. இவற்றை 4 ஆக பிரித்துள்ளனர். அவை: சத்தியமங்கலம் சரகம், தலமலை சரகம், பர்கூர் சரகம், அந்தியூர் சரகம் ஆகியவையாகும். தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரோடு மாவட்டத்திலிருந்து கிடைக்கிறது. சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் சந்தன மரக்கிடங்கு ஒன்று உள்ளது. மேட்டூர் சந்தன எண்ணெய்த் தொழிற்சாலைக்கு இங்கிருந்தே மரங்கள் செல்கின்றன. அந்தியூர், பர்கூர் மலைப் பகுதிகளில் தேக்கு மரங்களும், சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையம், அந்தியூர்ப் பகுதிகளில் மூங்கில் மரமும் அதிகமாக வளர்கின்றன. இவை காகிதத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இம்மாவட்டத்திலுள்ள காடுகளில் வேங்கை (மரம்), கருங்காலி. ஈட்டி, மருது போன்ற பல்வேறு மரங்களும் காணப்படுகின்றன.
விலங்குகள்
பவானிசாகர் அணை, தெங்குமரஹாடா, மோயாறு, பண்ணாரி ,ஆசனுர் காட்டுப் பகுதிகளில் யானைகள் அதிகமாக வாழ்கின்றன. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கூறுகின்றனர். தலமலைப் பகுதிகளில் புலிகள் வசிக்கின்றன. இப்பகுதியில் காட்டெருமை, முள்ளம் பன்றி, மான்கள் அதிகமாக உள்ளன.
காடுபடு பொருள்கள்
குங்கிலியம், மட்டிப்பால், சிகைக்காய், தேன், கொம்பரக்கு, பட்டை வகைகளும், கடுக்காய், புங்கம் விதை, ஆவாரம்பட்டை, கொன்னைப் பட்டை ஆகியவையும், எருமை, மான் கொம்புகளும், யானைத் தந்தங்களும் சேகரிக்கப்படுகின்றன.
கனிம வளம்
ஈரோடு மாவட்டத்தில், மற்ற மாவட்டங்களை விட கனிமங்கள் குறைவாகவே உள்ளன. இருப்பினும் இம்மாவடத்தின் சில வகை கனிமங்கள் உள்ளன. ஈரோடு வட்டத்தில், ஒளிபுகா மற்றும் கசியும் தண்மை கொண்ட பெல்ட்ஸ்பார் வகை கனிங்கள் உள்ளன. மைக்கா பவானி வட்டத்தில் உள்ள வைரமங்கலம் என்ற இடத்திலும், ஏரப்ப நாயக்கன் பாளையத்திலும், சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டியில் “மஸ்குாவைட்” வகை கனிங்களும் கிடைக்கின்றன. அஸ்பெஸ்டாஸ் கனிங்கள், பவானி, பெருந்துறை வட்டங்களில் சில இடங்களிலும், பருகூரிலும் கிடைக்கின்றன. இரும்பு அதிகம் உள்ள இரும்புத் தாது வகை, தொட்டன்கோம்பை வனப்பகுதியிலும், கீழ்பவானி அணை, தொப்பம்பாளையம், கரிதொட்டம் பாளையம், பங்களாபுதுர் பகுதியின் வடக்கு மலைப்பகுதியில் கிடைக்கிறது பகுதிகளிலும் கிடைக்கின்றன. தங்கம் இருப்பதற்கான சுவடுகள் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் சில இடங்களிலும், எக்காத்துர், ஊதியூர், எழுமாத்தூர் ஊர்களிலும் காணப்படுகின்றன. கருங்கற்கள் - பவானி பாலமலைப் பகுதி. இவை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜிப்சம் - தாராபுரம். படியூரில் பெரில்ஸ் என்னும் கடல்நிற வைரக்கற்களும், சிவன்மலை, சலங்கிப் பாளையம், சின்ன தாராபுரம் பகுதியில் உயர்தரக் கற்கள் கிடைக்கின்றன. குவார்ட்ஸ் எனப்படும் வெள்ளைக் கல்லும், பெல்ஸ்பர் என்ற சிவப்புக் கல்லும் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.
போக்குவரத்து
ஈரோடு போக்குவரத்து
ஈரோடு மாவட்டத்தின் தொழில் முயற்சிகளுக்குப் பெரிதும் துணையாக இருப்பது போக்குவரத்து; ஈரோட்டிலிருந்து தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலைநகர்களுக்கும், சென்னைக்கும் சாலை போக்குவரத்து உள்ளது. நேர்விரைவுப் பேருந்து சென்று வருகிறது. இம்மாவட்டத்தின் மொத்த சாலைகளின் நீளம் 9194 கி.மீ. உள்ளதாம்.
இருப்புப் பாதை
முக்கிய தொடர்வண்டி நிலையங்கள்: ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம் , பெருந்துறை தொடருந்து நிலையம், ஊஞ்சலுர் தொடருந்து நிலையம், கொடுமுடி தொடருந்து நிலையம், பாசூர் தொடருந்து நிலையம், ஈங்கூர் தொடருந்து நிலையம். இம்மாவட்டத்தில் உள்ள தொடருந்து பாதை அகன்ற இருப்புப் பாதையாகும். ஈரோடு-கோவை இருப்புப்பாதை ஓர் இரட்டைப் பாதையாகும்.
நீர்வழி
காவிரியாற்றின் போக்கை ஒட்டி சிறிய அளவிலான படகுப் போக்குவரத்து இங்கு நடைபெறுகிறது.
வழிபாட்டு தலங்கள்
பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோயில், ஒத்தகுதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில்,காட்டு பண்ணாரி , பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில், சென்னிமலை முருகன் திருக்கோயில், கோபி பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கொடுமுடி வீரநாராயணப் பெருமாள் கோவில்,அருள்மிகு பொன்மலை ஆன்டவர் திருக்கோயில் கொன்டையம்பாளையம், சிவன்மலை முருகன் திருக்கோயில்,கந்தசாமிபாளையம் அருள்மிகு சடையப்பசாமி திருக்கோயில் ஈரோடு பெரிய மாரியம்மன் திருக்கோயில், திண்டல்மலை முருகன் கோவில் முதலியன.
விழாக்கள்
பாரியூர் கொண்டத்துகாளியம்மன் குண்டம் மற்றும் தேர் திருவிழா, ஒத்தகுதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா,கொன்டையம்பாளையம் தைபுச தேர் திருவிழா, ஈரோடு மாரியம்மன் பண்டிகை, பண்ணாரி மாரியம்மன் பண்டிகை, புஞ்சைபுளியம்பட்டி அம்புசேர்வை திருவிழா, அந்தியூர் குருநாதசாமி தேர்த்திருவிழா, சென்னிமலை தைபூசத் திருவிழா, சிவன்மலை தேரோட்டம், பவானி கூடுதுறை ஆடிப் பெருக்கு.
தொல்லியற் களம்
கொடுமணல் தொல்லியற் களம்
கல்வி
பள்ளிகள்
தொடக்கப்பள்ளிகள் - 455
நடுநிலைப்பள்ளிகள் - 185
உயர்நிலைப்பள்ளிகள் - 77
மேல்நிலைப்பள்ளிகள் - 52
கல்லூரிகள் - 8
தொழிற்கல்வி நிறுவனங்கள் - 9
தொழிற்பயிற்சி நிறுவனங்கள் - 1
சுற்றுலாத் தலங்கள்
பவானி சாகர் அணைக்கட்டு, கூடுதுறை, குண்டேரிபள்ளம் அணை,
பெரும்பள்ளம் அணை, கொடிவேரி அணைக்கட்டு, தாளவாடி மலை. வரலாற்று சுற்றுலா தலங்கள்: அரச்சலுர் - கல்வெட்டுகள்; பெருந்துறை- விஜயமங்கலம்; கொடுமணல் தொல்லிற்களம் புதைபொருள் ஆய்வு இடம்.
சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் மற்றும் புலிகள் காப்பகம்
15.3.2013 ஆம் ஆண்டிலிருந்து சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாளவாடி மலை இம்மாவட்டத்தின் மலைப் பிரதேசமாகும். இயற்கை எழில் போலவே வனவிலங்குகளும் இங்கு நிறைந்துள்ளன. யானை, கரடி, செந்நாய், மான், கருங்குரங்கு, சிறுத்தை போன்றவை இங்கு உண்டு.
கொடிவேரி மற்றும் பவானிசாகர் அணை மற்றும் குண்டேரிப்பள்ளம் அணை
குண்டேரிப்பள்ளம் அணை ஆனது கோபிச்செட்டிபாளையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இயற்கை எழில் மிகுந்த இந்த அணைக்கு மலைகளில் இருந்து வரும் நீர் நிலைகள் மட்டும் தேங்குவதால் இங்கே மீன்கள் அதிக சுவை உடையவை, மாலை நேரங்களில் யானைகள் மான்கள் காட்டு எருமைகளை காணலாம்.
கொடிவேரி அணை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பெரியகொடிவேரி எனும் ஊரில் அமைந்துள்ளது. பவானி ஆறு மேல் உள்ள பவானிசாகர் அணை மற்றொரு முக்கிய அணை ஆகும். இது கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 35 கி.மீ. மற்றும் சத்தியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளதாகும்.
பாரியூர் அம்மன் கோவில்
இங்கு உள்ள பல முக்கிய கோவில்களில் சிறப்பானது, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் ஆகும். கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் சவண்டப்பூர் மற்றும் கூகலூர் வழியாக அந்தியூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மேலும் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அமரபணீஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஆதி நாராயண பெருமாள் திருக்கோயில் விசேஷம் வாய்ந்தவை. மேலும் இது பாரி வள்ளலால் போற்ற பெற்ற தலமாகும். அம்மன் தங்க தேரில் தினமும் உலா வந்து காட்சி அளிப்பார். இங்கு மார்கழி மாதத்தில் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். மூன்று வாரங்கள் நடைபெறும் இந்த திரு விழாவில் கலந்து கொள்ள லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம்.
பச்சைமலை மற்றும் பவளமலை
முருகப்பெருமான் கோவில்களான பச்சைமலை மற்றும் பவளமலை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை மற்றும் சாலை வசதிகளும் உண்டு. தைப்பூசத் திருவிழா மற்றும் பங்குனி உத்திரம் இங்கு நடைபெறும் பெரிய திருவிழாக்கள் ஆகும். பச்சைமலையில் தங்க தேர் மற்றும் பெரிய முருகர் சிலை ஆகியவை கவனத்தை ஈர்க்க கூடியவை.
பண்ணாரி
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். கொத்த மங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் துண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தின் அடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது.
பவானி முக்கூடல்
காவிரியும், பவானியும் கலக்கும் இடத்திற்கு தட்சிண பிரயாகை (தென்னாட்டு பிரயாகை) என்று பெயர். வடநாட்டில், கங்கையும் யமுனையும் பிரயாகை என்ற இடத்தில் கூடும்போது சரஸ்வதி அடியில் வந்து கலப்பது போல, இங்கு அமுதநதி அடியில் வந்து கலப்பதாக ஐதீகம். இரண்டு நதிகளும் கூடும் இடத்தில் சங்கமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் ஈரோட்டிலிருந்து 12 கி.மீ. துரத்தில் இருக்கிறது. தேவார காலத்தில் இவ்வூரை திருநணா என்றுஅழைக்கப்பட்டிருப்பதை சம்பந்தர் தேவாரத்தால் அறியலாம்.இக்கோவிலுக்கு இரண்டு வாயில்கள். வடக்கு நோக்கிய முக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் சிறிய பிள்ளையார் கோயில் உள்ளது. கிழக்கு வாயிலுக்கு எதிரேதான் கொடிமரம், பலிபீடம்,விளக்கேற்றும் கற்துண் ஆகியவையெல்லாம் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக கூடுதுறைக்குச் செல்லலாம். நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் அமைந்துள்ளன. கூடுதுறையிலே ஒரு தீர்த்தக்
கட்டம் உள்ளது. இதனை 'காயத்திரிமடு' என்றும் கூறுகின்றனர். இதன் கரையில் காயத்திரி லிங்கம், அமுதலிங்கம் என்று இருக்கின்றன. திருக்கோவிலைச் சுற்றி அந்நாளில் கோட்டை இருந்திருக்கிறது.தற்போது இடிந்த சிதைந்த சில பகுதிகளைக் காணலாம். இக்கோவில் தற்போது புதிய திருப்பணியைக் கண்டுள்ளது. இங்கு மகாமண்டபம், இப்பகுதிகளை ஆண்ட இம்மடி கெட்டி முதலியார் என்பவர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள இரு பெண்களின் சிற்பம் பார்க்கத்தக்கது.இக்கோவிலுள்ளே பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உண்டு.
சென்னிமலைக் கோவில்
சென்னிமலைக்கு போவதற்கு ஈரோட்டிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னிமலையின் அடிவாரத்தில் ஊர் உள்ளது. ஊரின் பெயரும் சென்னிமலைதான். சென்னிமலை அடுக்கடுக்காக உயர்ந்து செல்கிறது. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை உண்டு. அடிவாரத்தில் காவல் தெய்வமாக இடும்பன் காட்சி யளிக்கின்றார். இம்மலைத் தலத்தில் சில தீர்த்தங்கள் உள்ளன. மலையின் தென்மேற்குச் சரிவில் மாமங்க தீர்த்தம் உள்ளது. மற்றும் காணாச்சுனை என்னும் தீர்த்தமும், சுப்பிரமணிய தீர்த்தமும் உள்ளன. மலையின் வடபக்கத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. சுப்பிரமணிய தீர்த்தத்திலிருந்து குழாய்கள் மூலம் மலையுச்சி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலை கடல் மட்டத்திலிருந்து 1279 அடி உயரத்தில் உள்ளது. எனவே களைப்பாறிச் செல்ல மண்டபங்கள் இருக்கின்றன. திருக்கோபுரவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. முருகக் கடவுளின் பெயர்: சென்னிமலை நாதர்; மூலவருக்கருகிலேயே மார்க்கண்டேசுவரரும், இமயவல்லியும் உள்ளனர். அருகிலேயே வள்ளி, தெய்வானைக்குத் தனிக்கோவில் உள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தை 'அகத்தியர்' என்கின்றனர். இக்கோவிலின் மகாமண்டபத் தூண்களில் 7ஆம் நுற்றாண்டில் திருப்பணி செய்த முத்துவசவய்யன் மற்றும் மைசூர்மன்னர் தேவராச உடையார், மனைவி ஆகியோர் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. இங்கிருந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் சென்றால் ஒரு குகை காணப்படுகிறது. அதன் அருகில் சமாதி ஒன்றும் காணப்படுகிறது. இக்குகையை 'சன்னியாசி குகை' என்று மக்கள் அழைக்கின்றனர்.
சிவன் மலைக் கோவில்
காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் சிவன்மலை அமைந்துள்ளது. இம்மலையைப் பொதுமக்கள் வலம் வருவது உண்டு. பாதி வழியில் பரமேஸ்வரன் கோவிலும் உண்டு. இங்கு அனுமார் சந்நிதியும் உண்டு. மலையில் படிக்கட்டுகள் உண்டு. இளைப்பாறும் மண்டபமும் காணப்படுகிறது. மலைமீது குமரனுக்கும் தனிக் கோவில் காணப்படுகிறது. தொட்டில் மரம் அருகே நஞ்சுண்டேசுவரரும், பர்வதவர்த்தியும் காட்சி தருகின்றனர். திருச்சந்நிதியில் முருகப்பெருமான், வள்ளி நாச்சியாரோடு காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் 3 அடி உயரத்தில் அமைந்துள்ளார். தைப்பூசத் திருவிழா - இங்கு நடைபெறும் பெரிய திருவிழா ஆகும்.
இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 04-07-2014 அன்று நடைபெற்றது. இதற்கு ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன.
தொண்டீசுவரக் கோவில்
ஈரோடு நகரத்திலே உள்ளது. மூலவர் திருநாமம் ஈரோடையப்பர். இறைவி: வாரணியம்மை. 12-ஆம் நுற்றாண்டில் கொங்குச் சோழன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம். சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூவர் நாயன் மார்களுக்கும் மண்டபம் அமைந்துள்ளது. 63க்கும் சிலைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருடைய குலம், நட்சத்திரம், காலம், ஊர், பெயர் விவரங்களில் தனித்தனியே எழுதப்பட்டுள்ளன. தட்சிணா மூர்த்தி சிலை காணத்தக்கது. பஞ்சபூத தலங்களின் சித்திரங்கள் அழகு மிளிர வரையப் பெற்றுள்ளன. இதில் தெய்வயானையுடன் முருகப் பெருமான் காட்சி தருகிறார். கருவறையிலுள்ள சிவலிங்கத்தை, கதிரவன் மாசி மாதத்தில் 25,26,27 நாட்களில் தன் ஒளிக்கரத்தால் திருமேனியைத் தொட்டுப் பார்க்கிறான். வன்னிமரத்தின் அடியில் வாரணியம்மையின் பழைய உரு காணப்படுகிறது. வைகாசி விசாகத்தில் இறைவனுக்கு பத்து நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோவில் திருமுறை விழா, திருவாசக விழாவும் நடைபெறுகின்றன.
மகிமாலீசுவரர் கோவில்
பல்லவர் காலக் கோவில். மகிமாலீசுவரர் கோவில். இது நகரின் நடுவேயுள்ள பழைய மருத்துவமனையையொட்டி உள்ளது. ஆறடி விட்டமுள்ள ஆவுடையாரில் மூன்றடி உயரமுள்ள சிவலிங்கம் பெரிய அளவில் காட்சியளிக்கிறது. வாயிற்காப்போர் சிலையும், கோபுரமும் பல்லவர் காலத்தவையேயாகும். துண் ஒன்றில் சுந்தரர் தாடியுடன் பரவை, சங்கிலியாருடன் காட்சியளிக்கிறார். இவருக்குச் சேரமான் கவரி வீசுகிறார். அருகில் மெய்க்காவலர் வில்லேந்தி நிற்கிறான்.
கஸ்தூரி ரங்கப் பெருமாள் கோவில்
ஈரோட்டிலே கஸ்தூரி ரங்கப்பெருமாள் கோவில் உள்ளது. கோபுரம் இல்லை. திருமாலின் பள்ளி கொண்ட கோலத்தை சிற்ப உருவில் வடித்துள்ளனர். இங்கு திருவேங்கடமுடையான் திருச்சந்நிதி உள்ளது. இச்சந்நிதி நிலைப்படியில் தயாகு சாத்தன் சேவித்த நினைவு எனப் பொறிக்கப்பட்டுள்ளது. தாயாரின் திருநாமமே கமலவல்லி நாச்சியார். மூலவரும், உச்சவரும் அருகருகே உள்ளனர். இந்த திருக்கோலத்தில் நாற்கரங்களுடன் உள்ளது. பிரகாரத்தில் விஸ்வத்சேனர் திருப்பாதம் உள்ளது. ஆழ்வார்கள் மண்டபம் காணப்படுகிறது. அனுமார் சந்நிதி உள்ளது. 4 அடி குங்கிலியத்தால் அழகு செய்யப்பட்டுள்ளது. மூலவர் 14 அடி இருப்பார். பள்ளி கொண்ட நாதர்தான் கஸ்தூரி ரங்கப் பெருமாள். வைகாசி விசாகத்தையொட்டி பிரம்மோச்சவமும், தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. இக்கோவில் மண்டபங்களை 150 ஆண்டுக்கு முன்பு திருப்பணி செய்தோர்: கொண்டமல்லி சங்கய்யா நாயக்கர் மகன் சின்ன முராரி நாயக்கர், லக்காபுரம் முத்துக் குமரக் கவுண்டர். இக்கோவிலில் இன்னொரு சிறு திருப்பணியை செய்தவர்: பெரியார் ஈ.வே.ரா.வின் தாயார். வெளிப்பிரகாரத்தில் உள்ள குத்துக்கல் தெரிவிக்கும் செய்தி: "ஈ வேங்கடாசல நாயக்கர் மனைவியார் சின்னத்தாயம்மாள் தன் சிறுவாட்டுப் பணத்தால் கடப்பைக் கல் பாவிய" என்ற செய்தி வெட்டப்பட்டுள்ளது.
பெரும்பள்ளம்
பெரும்பள்ளம் அணை, தூக்கநாயக்கன்பாளையத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே எழிலுடன் அமைந்துள்ளது.
புகழ் பெற்றவர்கள்
கணித மேதை சீனிவாச இராமானுஜன்
சீர்திருத்தவாதி பெரியார் ஈ. வே. ராமசாமி
தியாகி கொடிகாத்த குமரன்
தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
கல்விதந்தை, சுதந்திர போராட்ட தியாகி எஸ். மீனாட்சிசுந்தர முதலியார்
தியாகி கோபி லட்சுமண அய்யர்
புலவர் செ. இராசு
கைத்தறி நெசவாளர்கள் காவலர் பத்மஸ்ரீ எம். பி. நாச்சிமுத்து
பாக்யராஜ் நடிகர் மற்றும் இயக்குனர்
தமிழ்கவிஞர் ஈரோடு தமிழன்பன்
கே. ஏ. செங்கோட்டையன் தமிழக முன்னாள் அமைச்சர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஈரோடு மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம்
தமிழ்நாடு மாவட்டங்கள்
|
4313
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81
|
இயேசு
|
இயேசு (Jesus; சுமார் கி.மு. 4சுமார் கி.பி. 30-33, மேலும் நசரேத்தூர் இயேசு அல்லது இயேசு கிறிஸ்து எனவும் வேறு பெயர்களாலும் தலைப்புக்களாலும் அறியப்படுகிறார்) என்பவர் முதல் நூற்றாண்டு யூதப் போதகரும் சமயத் தலைவரும் ஆவார். அவர் உலகின் மிகப்பெரிய சமயமான கிறிஸ்தவத்தின் மைய நபரும் ஆவார். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அவர் கடவுளின் மகனாக அவதரித்தார் என்றும், எபிரேய வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்ட மெசியா (கிறிஸ்து) என்றும் நம்புகிறார்கள்.
இயேசு, கலிலேய நாட்டில் வாழ்ந்த ஒரு யூதர். இவர் திருமுழுக்கு யோவான் என்பவரிடம் திருமுழுக்கு பெற்றார். அதைத்தொடர்ந்து நற்செய்தி அறிவிக்கும் ஊழியத்தைத் தொடங்கினார். அவர் தன் செய்தியை வாய்வழியாக அறிவித்து வந்தார். ஆகவே அவர் பெரும்பாலும் ரபி (போதகர்) என்று அழைக்கப்பட்டார். கடவுளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று இயேசு தன் சக யூதர்களுடன் விவாதித்தார். மேலும் நோயாளிகளைக் குணப்படுத்தினார்; உவமைகள் மூலம் போதித்தார். அவரின் சிந்தனைகள் நல் வழிப்படுத்துவதாக இருந்தது, இதனால் பல மக்கள் இயேசுவை பின்பற்றத் தொடங்கினர். இவர் தன்னை கடவுள் என கூறி கடவுள் மட்டும் செய்யக்கூடிய பாவ மன்னிப்பை பிறருக்கு வழங்கியது போன்ற விடயங்கள் மூலம் யூத அதிகாரிகளினால் இயேசு கோபத்திற்கு உள்ளானார், இதனால் யூதர்களால் கைது செய்யப்பட்ட இயேசு, உரோம அரசின் முன் நிறுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து உரோம ஆளுநர் பொந்தியு பிலாத்து என்பவரின் கட்டளைப்படி இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இயேசு இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக பார்த்து நம்பி அவரது சீடர்கள் இணைந்து தோற்றுவித்த சமுதாயம் பிறகு தொடக்கக்கால கிறித்தவமாக வளர்ந்தது.
இயேசுவின் பிறப்பு வருடந்தோறும் டிசம்பர் 25-ஆம் நாளன்று கிறிஸ்துமஸ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அவர் சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக போற்றப்படுகிறது. மேலும் அவர் உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் உயிர்ப்புப் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
தூய ஆவியின் மூலம் கன்னி மரியா கருவற்று இயேசுவை ஈன்றெடுத்தார். இயேசு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். மக்களின் பாவங்களைப் போக்க சிலுவையில் தன்னை பலியாகக் கொடுத்தார், இறந்த நாளில் இருந்து அடுத்த மூன்றாம் நாள் சாவினின்று உயிர்த்தெழுந்து விண்ணேற்றம் அடைந்தார் மேலும் பூமிக்கு மீண்டும் வருவார் முதலிய நம்பிக்கைகள் கிறிஸ்தவ கோட்பாட்டில் அடங்கும்.
கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். இசுலாமிய சமயத்தில் இயேசு முக்கியமான இறைத்தூதர்களில் ஒருவராகவும் மெசியாவாகவும் கருதப்படுகிறார். இசுலாமிய மதத்தவர் இயேசுவைக் கடவுள் அனுப்பிய முக்கியமான இறைத்தூதர் என்றும் கன்னி மரியாளிடம் பிறந்தவர் என்றும் ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்று ஏற்பதில்லை. மெசியா குறித்த இறைவாக்குகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதால் இயேசு மெசியா இல்லை என்று யூத மதத்தினர் வாதிடுகின்றனர்.
பெயர்களின் சொல்லிலக்கணம்
இயேசு என்னும் சொல் Iesus என்று அமைந்த இலத்தீன் வடிவத்திலிருந்தும், அதற்கு மூலமான () என்னும் கிரேக்க வடிவத்திலிருந்தும் பிறக்கிறது. இந்த வடிவங்களுக்கு அடிப்படையாக இருப்பது எபிரேயப் பெயர். அது எபிரேய மொழியில் (Yĕhōšuă‘, Joshua) எனவும், எபிரேய-அரமேய மொழியில் (Yēšûă‘) எனவும் அமைந்ததாகும். கடவுள் (யாவே) விடுதலை (மீட்பு) அளிக்கிறார் என்பதே இயேசு என்னும் சொல்லின் பொருள்.
கிறிஸ்து என்னும் சொல் திருப்பொழிவு பெற்றவர் (அபிடேகம் செய்யப்பட்டவர்) என்னும் பொருளுடையது. அதன் மூலம்
() என்னும் கிரேக்கச் சொல். அது எபிரேய மொழியில் மெசியா מָשִׁיחַ (Messiah) என்று வழங்கப்படும் சொல்லின் மொழிபெயர்ப்பாகும்.
எபிரேய வழக்கப்படி, அரசர் மற்றும் இறைவாக்கினர் மக்களை வழிநடத்துகின்ற தலைமைப் பணியை ஏற்கும்போது அவர்கள் தலையில் எண்ணெய் வார்த்து, அவர்களிடம் அப்பணிப்பொறுப்பு ஒப்படைக்கப்படும். இயேசு கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, கடவுளின் வல்லமையால் மனித குலத்தை மீட்டு அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பைப் பெற்றார் என்னும் அடிப்படையில் கிறிஸ்து (மெசியா, திருப்பொழிவு பெற்றவர்) என அழைக்கப்படுகிறார். அவரை மெசியா என ஏற்று வணங்குவோர் அவர் பெயரால் கிறிஸ்தவர் (கிறித்தவர்) என அறியப்பெறுகின்றனர் (திருத்தூதர் பணிகள் 11:26).
நற்செய்திகளின்படி வாழ்க்கைச் சுருக்கம்
பரிசுத்த வேதாகமம் தரும் ஆதாரம்
இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. அதன்படி இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூத இனத்தில் பிறந்தார் என்றும், மக்களுக்குக் கடவுள் பெயரால் போதனை வழங்கினார் என்றும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார் என்றும், அவரது இறப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கையில் அவர்தம் சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்று பின்பற்றினார்கள் என்றும் அறிய முடிகிறது.
இயேசுவின் வரலாறு பற்றிய செய்திகள் விவிலியத்திற்கு வெளியேயும் உள்ளன. அங்கே நற்செய்தி நூல்களில் வருகின்ற இயேசு, திருமுழுக்கு யோவான், யாக்கோபு, உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்து, பெரிய குரு அன்னா போன்றோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வரலாற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன.
தற்போது வழக்கிலுள்ள கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு கி.மு., கி.பி. என்று, அதாவது, கிறிஸ்துவுக்கு முன், கிறிஸ்துவுக்குப் பின் என்றுள்ளது. ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவாக்கியவர் சிரியாவில் 5-6ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தியோனிசியசு அடியார் (Dionysius Exiguus) என்னும் துறவி ஆவார். இவர் கணக்கிட்ட முறையில் ஒரு தவறு நிகழ்ந்ததால் இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள் முன்தள்ளிப் போட்டுவிட்டார்.
இன்றும்கூட, கிறிஸ்து பிறந்த ஆண்டும் நாளும் யாதெனத் துல்லியமாக அறிய இயலவில்லை. இயேசுவின் வாழ்க்கையையும் அவர் வழங்கிய போதனைகளையும் விரிவாகத் தருகின்ற புதிய ஏற்பாட்டு நூல்களிலிருந்தும் இத்தகவலைத் துல்லியமாகப் பெற முடியவில்லை. ஆனால் அந்நூல்கள் மட்டுமே இயேசுவின் பிறப்புப் பற்றி தகவல்களைத் தருகின்றன. இந்நால்வரில் மத்தேயுவும் லூக்காவும் இயேசுவின் பிறப்புப் பற்றிய விவரங்களை அளிக்கின்றனர்.
மத்தேயு நற்செய்திப்படி, "ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்" (மத்தேயு 2:1). வரலாற்று அடிப்படையில், பெரிய ஏரோது என்று அழைக்கப்படும் அரசன் கி.மு. 4ஆம் ஆண்டில் இறந்தான். இயேசு பிறந்த செய்தியைக் கேட்டதும் ஏரோது தன் ஆட்சியைக் கவிழ்க்க ஒருவர் பிறந்துவிட்டார் என்று கலக்கமுற்று, "பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்" என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது (காண்க: மத்தேயு 2:16). எனவே, மத்தேயு தருகின்ற மேலிரு தகவல்களையும் கவனத்தில் கொண்டால், ஏரோது இறப்பதற்கு முன்னால் இயேசுவுக்கு சுமார் 2 வயது ஆகியிருக்கும் என கணிக்கலாம். ஆக, இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.
லூக்கா நற்செய்திப்படி, "சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்ட" காலகட்டத்தில் இயேசு பிறந்தார் (காண்க: லூக்கா 2:1-7). குரேனியு மக்கள்தொகை கணக்கிட்டது கி.மு. 6ஆம் ஆண்டு என்று வரலாற்று ஏடுகளிலிருந்து தெரிகின்றது. எனவே லூக்கா கணிப்புப்படியும் இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம்.
மத்தேயுவும் லூக்காவும் இயேசு ஏரோது அரசன் காலத்தில் பிறந்தார் என்று கூறுவதால் ஏரோது இறந்த ஆண்டாகிய கி.மு. 4ஆம் ஆண்டில், அல்லது அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு பிறந்தார் என்பது பொருந்தும் என்பது வரலாற்றாசிரியர் கருத்து.
நான்கு நற்செய்திகளின் படி இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம்:
இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது (மத்தேயு, மாற்கு)
மரியா என்னும் கன்னிப் பெண்ணிடமிருந்து இயேசு பிறந்தார். மரியாவின் கணவர் யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார். இயேசு யூத குலத்தில் பிறந்தார். "இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்" என்னும் செய்தி இடையர்களுக்கு வழங்கப்பட்டது (லூக்கா 2:11).
சிறுவயதிலேயே இயேசு ஞானம் மிகுந்தவராகக் காணப்பட்டார். அவர் தம் பெற்றோருக்குப் பணிந்திருந்தார் (லூக்கா 2:39-40).
முப்பது வயதில் இயேசு யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்கு (ஞானஸ்நானம்) பெற்றார். பின் பாலைநிலம் சென்று 40 நாள் நோன்பிருந்தார். இதன் போது அலகை (சாத்தான்) அவரை சோதித்தது. இயேசு அலகையின் சோதனைகளை முறியடித்து வெற்றிகொண்டார்.
பின்னர் இயேசு மக்களுக்குப் போதிக்க தொடங்கினார். "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று இயேசு போதித்தார் (மாற்கு 1:14-15). இயேசு உவமைகள் மூலம் பேசினார். பல புதுமைகளையும் அரும்செயல்களையும் செய்தார்.
ஓய்வுநாள், தூய்மைச் சடங்குகள் ஆகிய யூத சமயப் பழக்கங்களையும், யூதமதத் தலைவர்களையும் இயேசு கடுமையாக விமர்சித்தார். தாம் கடவுள் பெயரால் பேசுவதாகவும், கடவுளே தம் தந்தை என்றும், அவரிடமிருந்தே தாம் வந்ததாகவும் இயேசு கூறினார். இயேசுவின் போதனையை ஏற்க மறுத்த யூத சமயத் தலைவர்கள் அவரைக் கொலை செய்ய வகை தேடினர். பல சூழ்ச்சிகளைச் செய்து தோல்விகண்டனர். மக்கள் இயேசுவோடு இருந்தபடியால் அவரைக் கைது செய்யப் பயந்தனர்.
இயேசுவின் 12 திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்) ஒருவரான யூதாசு இஸ்காரியோத்து யூத மதத் தலைவர்களின் சூழ்ச்சிப் பிடியில் சிக்கி இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்குக் காட்டிக் கொடுக்க முன்வருகின்றார்.
இயேசு கடைசி இரவு உணவைத் தம் திருத்தூதர்கள் பன்னிருவரோடு (யூதாசு உட்பட) உண்கிறார். தம் சீடரின் காலடிகளைக் கழுவுகின்றார். "ஆண்டவரும் போதருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்" என்று தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் (யோவான் 13:14).
பின்னிரவில் ஒலிவ மலை என்று அழைக்கப்படும் கெத்சமனித் தோட்டத்தில் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கும் போது யூதாசு யூத மதத் தலைவர்களுடனும் கோவில் காவல் தலைவர்களுடனும் வந்து இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கிறார்.
யூதர் அப்போது உரோமைப் பேரரசின் பெயரால் ஆளுநராகவிருந்த பொந்தியு பிலாத்து முன்னால் இயேசுவைக் கொண்டு சென்றார்கள். பிலாத்து, இயேசு குற்றமற்றவர் எனக் கண்டு அவரை விடுவிக்க முயன்றாலும், யூதருக்கும் அரசுக்கும் பயந்து இயேசுவைச் சிலுவையில் அறையக் கட்டளையிடுகிறார்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரம் சிலுவையில் தொங்கி வேதனைப்பட்ட இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" (யோவான் 19:30) என்று கூறித் தலைசாய்த்து உயிர்விட்டார்.
கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மூன்று நாள்கள் கழித்து சாவை வென்று உயிர்பெற்றெழுந்தார். சீடர்களுக்குப் பன்முறை தோன்றினார்.
இறுதியில், சீடர்களை அணுகி, "விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:18-20) என்று கூறி, விண்ணேறிச் சென்றார்.
இயேசுவின் வரலாற்றையும் போதனையையும் எடுத்துக் கூறுகின்ற நற்செய்தி நூல்கள் எதற்காக எழுதப்பட்டன என்பதை யோவான் நற்செய்தியாளர் தம் நூலின் இறுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன" (யோவான் 20:31).
குல மரபும் உறவுகளும்
இயேசுவின் தாயாரான மரியாவின் கணவர் யோசேப்பு என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார் (காண்க: மத்தேயு 1:1-16; லூக்கா 3:23-38). மத்தேயுவும் லூக்காவும் தருகின்ற பட்டியல்படி, இயேசு ஆபிரகாம் மற்றும் தாவீது அரசன் வழி வருபராவார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கு பின்னர் குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. இயேசு பகிரங்க வாழ்க்கையை, அதாவது போதிக்கும் பணியை ஆரம்பிக்கும் முன்னரே யோசேப்பு இறந்திருக்க கூடும் என ஊகிக்கப்படுகிறது. இது இயேசு சிலுவையில் தொங்கும் போது தம் தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு அவர்தம் அன்புச்சீடருக்குப் பணித்ததிலிருந்து தெளிவாகிறது (யோவான் 19:25-27).
விவிலியத்தில், யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் சகோதரர் என குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் (காண்க: மத்தேயு 13:55-56; மாற்கு 6:3), அவர்கள் யோசேப்புக்கும் மரியாவுக்கும் பிறந்தவர்களா அல்லது சகோதரர்கள் முறை கொண்டவர்களா என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் முதலாம் நூற்றாண்டின் யூத வரலாற்று ஆசிரியரான யோசேஃபசு என்பவரும் யாக்கோபை இயேசுவின் சகோதரர் என குறிப்பிடுகிறார். அவருடைய கூற்று நற்செய்தி நூல்கள் தரும் செய்தியோடு ஒத்திருக்கின்றன.
புனித பவுலும் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் "ஆண்டவரின் சகோதரரான யாக்கோபு" (கலாத்தியர் 1:19) என குறிப்பிடுகிறார். மேற்கூறிய இடங்களில் எல்லாம் adelphos என்னும் கிரேக்க மூலச் சொல்லே சகோதரர் என்று பெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு தாய் வழிவராச் சகோதரரையும் குறிக்கலாம்; பெற்றோரின் சகோதரர்களுக்குப் பிறந்தோரையும் குறிக்கலாம். மேலும், அக்காலத்தில் ஒரே நம்பிக்கைக்குள் ஒன்றுபட்டு இருந்தவர்களையும் "சகோதரர்கள்" என்று அழைப்பது வழமையாயிருந்தது. இன்னொரு கருத்துப்படி, மரியாவின் கணவரான யோசேப்பு ஏற்கனவே மணமாகி, தம் மனைவி இறந்தபின்னர் மரியாவை மணந்துகொண்டார் எனவும், முந்திய மணத்திலிருந்து அவருக்குப் பிறந்த குழந்தைகளே இயேசுவின் சகோதரர் என்று குறிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
ஆகவே நற்செய்தி நூல்களில் இயேசுவின் சகோதரர் என்று குறிப்பிடப்படுவோர் மரியாவுக்கு பிறந்தவர்கள் இல்லை; மரியா கணவனின் துணையின்றி இயேசுவைக் கருத்தரித்தார் என்றும், எப்போதும் கன்னியாகவே வாழ்ந்தார் என்றும் கத்தோலிக்கர் உட்பட பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்று நம்புகின்றன; இதுவே அச்சபைகளின் போதனையும் ஆகும்.
புதிய ஏற்பாட்டில் யோவானின் தாயாகிய எலிசபெத்து மரியாவின் உறவினர் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கிடையே நிலவிய உறவு முறை யாதென்று குறிப்பிடப்படவில்லை.
இயேசுவின் பிறப்பு
மத்தேயு லூக்கா நற்செய்திகளில் கூறியுள்ளபடி இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேமில் கன்னிமரியாவிடமிருந்து கடவுளின் வல்லமையாகிய தூய ஆவியினால் பிறந்தார். லூக்கா நற்செய்தியின்படி கபிரியேல் வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" (லூக்கா 1:28) என்று வாழ்த்துக் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அச்சமுற்றுக் கலங்கிய மரியாவைப் பார்த்து, கபிரியேல் வானதூதர், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" லூக்கா 1:26-31) என்றுரைத்தார். இந்நிகழ்வு கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு அல்லது மங்கள வார்த்தையுரைப்பு (Annunciation) என நினைவு கூரப்பட்டு மார்ச்சு மாதம் 25ஆம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இயேசு மரியாவின் வயிற்றில் கருவானார் என்று கணக்கிட்டு ஒன்பது மாதங்கள் கழிந்து, டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கிறித்தவர் கொண்டாடுகின்றனர்.
இயேசு பிறந்த நிகழ்ச்சியை விவரிக்கும் நற்செய்தி நூல்கள் யோசேப்பும் மரியாவும் அப்போது யூதேயாவை ஆண்ட அகுஸ்து சீசர் என்னும் அரசன் இட்ட கட்டளைக்கு ஏற்ப, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தங்களைப் பதிவு செய்யச் சென்றார்கள் என்று கூறுகின்றன (காண்க: லூக்கா 2:1-5). யோசேப்பு தமக்கு மண ஒப்பந்தமான மரியாவைக் கூட்டிக்கொண்டு நாசரேத்திலிருந்து தம் சொந்த ஊரான பெத்லகேமுக்குப் பெயர் பதிவுசெய்யச் சென்றார். அப்போது மரியாவுக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவரும் தம் குழந்தையாகிய இயேசுவை ஒரு மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்து, குழந்தையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார் (காண்க: லூக்கா 2:1-7).
இயேசுவின் பிறப்பு முதலாவதாக இடையர்களுக்கு வானதூதரால் அறிவிக்கப்பட்டு அவர்கள் வந்து இயேசுவைப் பணிந்தார்கள். மேலும், மத்தேயு நற்செய்திப்படி, இயேசுவின் பிறப்பின் போது ஒரு அதிசய விண்மீன் தோன்றியது. இதனைப் பார்த்த ஞானிகள் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என்று அறிந்து பெத்லகேம் வந்து இயேசுவைக் கண்டு பணிந்தார்கள். பொன், தூபம், வெள்ளைப்போளம் ஆகிய பரிசுப் பொருள்களையும் அவர்கள் இயேசுவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தனர். மேலும் அப்போது யூதாவை ஆண்டுவந்த ஏரோது மன்னன் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என அறிந்து அப்பிரதேசத்திலிருந்த இரண்டுவயதுக்குக் குறைவான சகல ஆண்குழந்தைகளையும் கொலை செய்வித்தான். எனினும் முன்னரே தேவதூதரால் எச்சரிக்கப்பட்ட யோசேப்பு மரியாவையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பிச் சென்றார். ஏரோது இறந்த பின்னர் யோசேப்பு, மரியா, இயேசு ஆகியோரை உள்ளடக்கிய "திருக்குடும்பம்" யூதா நாட்டுக்குத் திரும்பி நாசரேத்து என்னும் ஊரில் குடியேறியது (காண்க: மத்தேயு 2:1-23).
இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்குமிடையே இயேசு 12 வயதில் எருசலேம் கோவிலுக்குச் சென்ற நிகழ்வுமட்டுமே விவிலியத்தில் (லூக்கா நற்செய்தியில்) குறிப்பிடப்பட்டுள்ளது (காண்க: லூக்கா 2:41-52). இடைப்பட்ட காலத்தில் இயேசு என்ன செய்தார் என்பது விவிலியத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படாத சில நற்செய்திகளில் கற்பனைக் கதைபோல் மட்டுமே கூறப்பட்டுள்ளது (காண்க: இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு)
திருமுழுக்கும் சோதனையும்
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றார் என்னும் செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் உள்ளது.
யோவான் நற்செய்தி இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடவில்லை.
மாற்கு நற்செய்தியின்படி, இயேசு யோர்தான் ஆற்றருகே வந்து, அங்கே திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோவானிடம் தாமும் திருமுழுக்குப் பெற்றார். ஆற்றிலிருந்து இயேசு கரையேறியபோது தூய ஆவி அவர்மீது புறா வடிவில் வந்திறங்கினார். மேலும் "என் அன்பார்ந்த மகன் நீயே. உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" (மாற்கு 1:10–11) என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
லூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்க தொடங்கியது திபேரியு (Tiberius) சீசரின் 15வது ஆண்டு என்னும் குறிப்பு உள்ளது (காண்க: லூக்கா 3:1). இது கி.பி. 28/29ஆம் ஆண்டு ஆகும். இயேசு பிறந்தது கி.மு. சுமார் 4ஆம் ஆண்டு என்று கொண்டால், அவர் திருமுழுக்குப் பெற்றபோது சுமார் 32 வயதினராக இருந்திருப்பார்.
இயேசு திருமுழுக்குப் பெற வந்ததைக் கண்ட யோவான் இயேசுவைத் தடுத்து, "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?" என்று கூறியதாக மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது. ஆனால் இயேசு அவரைப் பார்த்து, "இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை" (மத்தேயு 3:13-15) என்று பதிலளித்தார்; பின்னர் யோவானின் கைகளால் திருமுழுக்குப் பெற்றார்.
திருமுழுக்குப் பெற்ற பின்னர் இயேசு பாலைநிலத்துக்குச் சென்று 40 நாள்கள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரை மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் இயேசு பாலைநிலத்தை விட்டகன்று, மக்களுக்கு "இறையரசு" பற்றிய நற்செய்தியை அறிவிக்கலானார். தம்மோடு இருக்கவும் மக்களுக்கு இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு தமக்கென சீடர்களைத் தெரிந்துகொண்டார் (காண்க: மத்தேயு 4:12-22; மாற்கு 1:14-20; லூக்கா 4:14-5:11).
பொது வாழ்க்கை அல்லது இறையரசுப் பணி
இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார். அப்பணியைக் கடவுளே தம்மிடம் ஒப்படைத்ததையும் அறிந்தார். இயேசு உண்மையிலேயே கடவுளின் மகன் என்னும் உண்மையும் அவர் பெற்ற திருமுழுக்கின்போது வெளிப்படுத்தப்பட்டது.
ஆக, கடவுள் தம்மை ஒரு சிறப்புப் பணி ஆற்றிட அனுப்பியுள்ளார் என்பதை உளமார உணர்ந்த இயேசு "கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கின்றது" என்னும் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார். கடவுளின் ஆட்சியில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்றால் அவர்கள் தம் பழைய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, புதியதொரு வாழ்க்கை முறையைத் தழுவ வேண்டும் என்று இயேசு போதிக்கலானார்.
இயேசு தம் பொதுப் பணியை நாசரேத்து தொழுகைக் கூடத்தில் தொடங்கினார் என்று லூக்கா நற்செய்தி கூறுகிறது (காண்க: லூக்கா 4:16-21). நாசரேத்து ஊரில் யூதர்களுக்கு ஒரு தொழுகைக் கூடம் இருந்தது. அங்கு இயேசு சென்று, பண்டைக்கால இறைவாக்கினருள் ஒருவராகிய எசாயா இறைவாக்கினரின் ஏட்டுச் சுருளிலிருந்து ஒரு பகுதியை மக்கள் முன்னிலையில் வாசித்து அறிக்கையிட்டார்.
எசாயா இறைவாக்கினரின் நூலிலிருந்து இயேசு வாசித்த பகுதி இதோ:
"ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவும்...என்னை அனுப்பியுள்ளார்." (எசாயா 61:1-3)
எசாயா நூலில் வருகின்ற "ஒடுக்கப்பட்டோர்", "உள்ளம் உடைந்தோர்", "சிறைப்பட்டோர்", "கட்டுண்டோர்" ஆகிய அனைவருமே "ஏழைகள்."
அவர்களுக்கும், எல்லாவித அடக்குமுறைகளால் துன்புறும் அனைவருக்கும் விடுதலையும் விடியலும் வழங்குபவர் இறைவன். அதுவே கடவுளடமிருந்து வருகின்ற "நற்செய்தி" (நல்ல + செய்தி). இப்பின்னணியில் இயேசுவின் போதனைப் பணி புரிந்துகொள்ளப்பட வேண்டும். மக்களுக்கு வி்டுதலை வழங்க இயேசு கையாண்ட ஒரு வழியே அவரது போதனைப் பணி.
"செய்தி" என்னும் சொல்லுக்கு "நடந்த நிகழ்ச்சி" என்பது பொதுவாகத் தரப்படும் பொருள். ஆகவே கடந்த காலம் பற்றிய குறிப்பு அதிலே உண்டு. அதே நேரத்தில், அண்மையில் நடந்த நிகழ்ச்சி, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி "செய்தியாக" கொள்ளப்படுகிறது. இயேசு வழங்கிய போதனை நம்பிக்கை, உற்சாகம், ஊக்கம், எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொணர்ந்த செய்தியாக அமைந்ததால் அது உண்மையிலேயே "நற்செய்தி" ஆயிற்று.
புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவை மெசியா, மானிட மகன், ஆண்டவர், இறைவாக்கினர், இறைமகன் என்னும் பல பெயர்களால் அழைக்கின்றன. இயேசு தம்மைப் பற்றிப் பேசும்போது மானிட மகன் என்னும் பெயரையே கையாளுகின்றார்.
இறையாட்சி (விண்ணரசு) அறிவிப்பு
நற்செய்தி நூல்கள்படி, இயேசு மக்களுக்கு அறிவித்த மையச் செய்தி இறையாட்சி அல்லது விண்ணரசு என்பதாகும். நற்செய்தி நூல்களில் எந்த ஓர் இடத்திலும் இயேசு இறையாட்சி என்றால் இதுதான் என்று வரையறுத்துக் கூறவில்லை. ஆனால், இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது என்பதை அவர் பல சிறு கதைகள் அல்லது உவமைகள் வழியாக எடுத்துக் கூறினார். இறையாட்சியில் பங்கேற்க விரும்புவோர் எவ்வழியில் நடக்க வேண்டும் என்பதைக் கற்பித்தார். கண்பார்வை இழந்தோருக்குப் பார்வை அளித்தும், முடக்குவாதமுற்றவருக்கு நடக்கும் திறமளித்தும், தொழுநோயாளருக்கும் தீய ஆவியால் அவதியுற்றோருக்கும் நலமளித்தும் இயேசு பல புதுமைகள் மற்றும் அரும்செயல்களைப் புரிந்தார். இவ்வாறு மக்களுக்கு நலமளித்த இயேசு அவர்களின் பசியைப் போக்க அற்புதமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தி நான்கு நற்செய்தி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது (காண்க: மத்தேயு 14:13-21; மாற்கு 6:30-44; லூக்கா 9:10-17; யோவான் 6:1-14).
இயேசு இறந்தோருக்கு மீண்டும் உயிரளித்த நிகழ்ச்சிகளும் நற்செய்தி நூல்களில் உள்ளன (காண்க: மத்தேயு 9:18-26; மாற்கு 5:21-43; லூக்கா 8:40-56; யோவான் 11:1-44). இயேசு தாமே ஒருநாள் சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுவார் என்பதற்கு இந்நிகழ்ச்சிகள் முன்னோடிபோல் அமைந்தன.
இறையாட்சி என்பது கடவுளின் ஆளுகை இவ்வுலகில் வருவதைக் குறிக்கும். பழைய ஏற்பாட்டில் இசுரயேல் மக்கள் நடுவே கடவுளை அரசராகக் காணும் வழக்கம் நிலவியது. தாவீது, சாலமோன் போன்ற அரசர்கள் இசுரயேல் மக்கள்மீது ஆட்சி செலுத்திய காலத்தில் கூட, அம்மக்கள் கடவுளைத் தங்கள் அரசராக ஏற்று வழிபட்டனர். இயேசு கடவுளின் ஆட்சி இவ்வுலக மக்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்துக்கு ஏற்ப நடப்பதில் அடங்கியிருக்கிறது என்று விளக்கம் தந்தார். கடவுள் எந்த மதிப்பீடுகளை உயர்ந்தனவாகக் கருதுகிறாரோ அம்மதிப்பீடுகளை மனிதர் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும்போது அங்கே கடவுளின் ஆட்சி நிலவுகிறது எனலாம். இந்த ஆட்சி இயேசுவின் வழியாக இவ்வுலகில் செயல்படலாயிற்று என்று நற்செய்தி நூல்கள் விளக்குகின்றன. இயேசு அறிவித்த இறையாட்சி என்னும் கருத்து வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்கருத்து கிறித்தவ சமய வரலாற்றிலும் பிற சமய மரபுகளிலும் அறிஞர் சிந்தனையிலும் வெவ்வேறு அழுத்தங்களை ஏற்றது.
இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது, அதன் பண்புகள் என்ன என்பதையெல்லாம் இயேசு தம் போதனை வழியாகவும் செயல் வழியாகவும் காட்டினார். நல்ல சமாரியர் என்னும் கதை வழியாக உண்மையான அன்பு எதில் அடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார் (காண்க: லூக்கா 10:25-37). கள்வர் கையில் அகப்பட்டு, குற்றுயிராய்க் கிடந்த மனிதருக்கு இரக்கம் காட்டி, அவர் நலம் பெறுவதற்கு அனைத்தையும் செய்துகொடுத்தார் அந்த சமாரியர். யூதர் பார்வையில் சமாரியர் என்றால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்; மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். ஆனால் அந்த தாழ்ந்த மனிதரே கடவுளின் பார்வையில் உயர்ந்தவரானார். அவர் உண்மையிலேயே இறையாட்சியின் மதிப்பீட்டைத் தம் வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார். அதற்கு நேர்மாறாக, யூத சமயத் தலைவர்கள் அன்பும் இரக்கமும் காட்ட முன்வரவில்லை; தங்கள் சமயச் சடங்குகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள். இத்தகைய போக்கை இயேசு பல இடங்களில் கண்டித்துரைத்தார் (காண்க: மத்தேயு 23:1-36; மாற்கு 12:38-40; லூக் 11:37-52).
இயேசுவின் பொதுப்பணிக் காலத்தில் அவர் மூன்று முறை எருசலேம் நகருக்குச் சென்று பாஸ்கா விழாவில் பங்கேற்றதாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இதிலிருந்து இயேசுவின் பணி வாழ்வு மூன்று ஆண்டுகள் நீடித்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகள் இயேசு தம் பணிக்காலத்தில் ஒருமுறை மட்டுமே எருசலேமுக்குச் சென்றதாகக் காட்டுகின்றன. இந்த முரண்பாடான செய்திகளை எவ்வாறு இணைப்பது என்று அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை.
இயேசு பொதுமக்களுக்கு போதித்தார் எனினும் தம்மோடு நெருங்கிய உறவுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் திருத்தூதர்களுக்கும் தம் போதனையின் உள்கிடக்கையை விளக்கிக் கூறினார் (காண்க: விதைப்பவர் உவமை - மத்தேயு 13:1-9; அந்த உவமைக்கு இயேசு விளக்கம் தருதல் - மத்தேயு 13:18-24) இயேசு கூடுதலாகப் போதனை செய்த இடங்கள் கலிலேயா (இன்றைய வட இசுரேல்) மற்றும் பெரேயா (இன்றைய மேற்கு யோர்தான்) என்பனவாகும்.
மலைப்பொழிவு: மத்தேயு, லூக்கா
இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசுவின் இப்போதனை தம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.
இயேசு வழங்கிய மலைப்பொழிவு மத்தேயு நற்செய்தியில் உள்ளது (காண்க: மத்தேயு - அதிகாரங்கள் 5 முதல் 7 முடிய). இப்பொழிவைப் பெரிதும் ஒத்த இன்னொரு பொழிவு சமவெளிப் பொழிவு என்று அழைக்கப்படுகிறது. அது லூக்கா நற்செய்தியில் உள்ளது (காண்க: லூக்கா 6:20-49).
இயேசு வழங்கிய மலைப்பொழிவின் தொடக்கப்பகுதி கீழே தரப்படுகிறது:
மத்தேயு 5:1-12
"1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர்.
2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
3 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.
4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.
6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.
7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.
10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!
12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்."
உவமைகள்
இயேசு மக்களுக்குப் பெரும்பாலும் சிறு கதைகள் அல்லது உவமைகள் வழி போதித்தார். அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒரு சில உவமைகள் இதோ:
ஊதாரி மைந்தன் உவமை (லூக்கா 15:11-32)
நல்ல சமாரியன் உவமை (லூக்கா 10:25-37)
பரிசேயனும் பாவியும் உவமை (லூக்கா 18:9-14)
தாலந்துகள் உவமை(மத்தேயு 25:14-30)
பத்து கன்னியர் உவமை(மத்தேயு 25:1-13)
காணாமல் போன ஆடு உவமை(லூக்கா 15:1-7)
இயேசு பல உவமைகள் வழியாக இறையாட்சி பற்றிய உண்மைகளை மக்களுக்கு அறிவித்தார்; இறையாட்சியில் பங்குபெற மக்கள் முன்வருமாறு அழைப்பு விடுத்தார்; இறையாட்சியின் பண்புகளை விளக்கினார். குறிப்பாக, எல்லா மக்களும் கடவுள்மீது நம்பிக்கைகொண்டு, கடவுளையும் மனிதரையும் அன்புசெய்து வாழ்ந்திட வேண்டும் என்று இயேசு போதித்தார். பகைவரையும் மன்னிக்க வேண்டும் என்பது அவர் வழங்கிய முக்கிய போதனைகளில் ஒன்று. தம்மைத் துன்புறுத்தி, சிலுவையில் அறைந்த பகைவரை அவரே மனதார மன்னித்தார்.
போதனை மொழிகள்
"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28).
"நல்ல ஆயன் நானே...என் ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்" (யோவான் 10:14-15).
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" (யோவான் 14:6).
"உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" (மத்தேயு 5:44).
"பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (மத்தேயு 7:12).
"மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்" (மத்தேயு 12:33).
"உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" (மத்தேயு 22:39).
"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34).
எதிராளிகளோடு மோதல்
இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் தங்கள் பாவ வழிகளிலிருந்து விலகி மன மாற்றமடைந்து இறையாட்சியை நம்பி ஏற்க வேண்டும் என்று விடுத்த அழைப்பைப் பொதுமக்கள் விருப்போடு ஏற்றனர். ஆனால் யூத சமயத் தலைவர்கள் பலர் இயேசு வழங்கிய செய்தியை ஏற்க முன்வரவில்லை. அச்சமயத் தலைவர்கள் பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், தீவிரவாதிகள் என்னும் பல பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.
இயேசு பரிசேயரின் வெளிவேடத்தைக் கடிந்துகொண்டார். மறைநூல் அறிஞரையும் கண்டித்தார் (காண்க: லூக்கா 11:37-53). ஆயினும் எல்லாப் பரிசேயர்களோடும் மறைநூல் அறிஞர்களோடும் இயேசு மோதினார் என்பது சரியல்ல. இயேசு பல முறை பரிசேயரின் வீட்டில் விருந்து அருந்தச் சென்றார் (காண்க: லூக்கா 7:36; 11:37-38; 14:1). நிக்கதேம் என்னும் பரிசேயர் இயேசுவை அணுகிச் சென்று அவரது போதனையைக் கேட்டார் (காண்க: யோவான் 3:10-21); இயேசுவுக்கு ஆதரவாகப் பேசினார் (காண்க: யோவான் 7:45-51); இறந்த இயேசுவின் உடலை நல்லடக்கம் செய்ய முன்வந்தார் (காண்க: யோவான் 19:39-42).
இறந்தோர் மீண்டும் உயிர்பெற்றெழுவர் என்னும் கொள்கையைப் பரிசேயரும் ஏற்றனர். ஆனால் சதுசேயர் அக்கொள்கையை ஏற்கவில்லை (காண்க: மத்தேயு 22:23-32).
ஏழைகளோடும் பாவிகளோடும் உணவருந்தல்
அக்கால யூத சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு நிலவியது. சமயச் சடங்குகளில் யார் பங்கேற்கலாம், யாரோடு உணவு அருந்தலாம், யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து தீட்டு பற்றிய சட்டங்கள் பல இருந்தன. அச்சட்டங்களை இயேசு வேண்டுமென்றே மீறினார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் வருகிறது. அவரைப் பொறுத்தமட்டில் மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. எல்லா மனிதரும் ஒரே கடவுளின் பிள்ளைகளே. எனவேதான் அன்றைய சமுதாயம் பாவிகள் என்றும் ஒதுக்கப்பட்டவர் என்றும் தீட்டுப்பட்டவர் என்றும் கருதிய மக்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டார். அன்றைய தூய்மைச் சட்டங்களை மீறினார். இதைக் கண்ட இயேசுவின் எதிரிகள் அவர் "வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" (மத்தேயு 11:19) என்று இழித்துரைத்தார்கள்.
ஏழைகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் இயேசு நெருங்கிப் பழகியது அம்மக்களது வாழ்க்கையில் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. ஆனால் இயேசுவின் எதிரிகள் அவரிடம் குற்றம் கண்டனர். தாழ்ந்த தொழிலாகக் கருதப்பட்ட வரிதண்டும் தொழிலைச் செய்தவர் மத்தேயு. அவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்ட இயேசு அவரைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு மத்தேயு வீட்டில் இயேசு விருந்து அருந்தினார். பரிசேயர்கள் இதைக் கண்டனர். உடனே அவர்கள் இயேசுவின் சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" (மத்தேயு 9:11) என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு இயேசு அளித்த பதில் அவர் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இயேசு கூறியது: "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார் (மத்தேயு 9:12-13).
துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறையுண்டு இறத்தல்
நற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் (காண்க: மத்தேயு 21:1-11; யோவான் 12:12-19). அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் (காண்க: மத்தேயு 21:12-17).
ஆனால், யூத சமயத் தலைவர்கள் இயேசுவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவுசெய்திருந்தனர். இதிலிருந்து இயேசுவின் பாடுகள் (துன்பங்கள்) தொடங்குகின்றன.
நற்செய்தி நூல்கள் நான்கும் இயேசுவின் துன்பங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன (காண்க: மத்தேயு 26-27; மாற்கு 14-15; லூக்கா 22-23; யோவான் 12-13).
நான்கு நற்செய்தி நூல்களிலும் இயேசுவின் துன்பங்கள் பற்றிய வரலாறு மிகவும் ஒத்திருக்கின்றது. எனினும், சில வேறுபாடுகளும் உள்ளன. இயேசு துன்பம் அனுபவித்ததைக் கீழ்வரும் கட்டங்களாக விளக்கலாம்:
1) யூதர்களின் பாஸ்கா விழா வருவதற்கும் சில நாள்களுக்கு முன் ஒரு பெண் நறுமணத் தைலத்தால் இயேசுவின் தலையில் பூசுகிறார்.
2) எருசலேமில் இயேசு தம் சீடர்களோடு பந்தியமர்ந்து இறுதி இரா உணவை அருந்துகிறார். அப்போது தம் சீடர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்; தம்மைச் சீடர்களில் ஒருவர் காட்டிக்கொடுப்பார் என்று முன் கூறுகிறார்; தம் உடலையும் இரத்தத்தையும் உலக மக்களின் மீட்புக்காகக் கையளிப்பதாகக் கூறுகிறார். அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து, சீடர்களுக்குக் கொடுத்து அது தம் உடலும் இரத்தமும் ஆகும் எனவும் தாம் செய்ததைச் சீடரும் தம் நினைவாகச் செய்யவேண்டும் என்கிறார். சீடர்களின் காலடிகளைக் கழுவி, தம் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றி ஒருவர் மற்றவருக்குப் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்துகிறார்.
3) உணவு அருந்திய பின் கெத்சமனித் தோட்டத்திற்குச் செல்லும் வழியில், தம் சீடர்கள் தம்மைக் கைவிடுவார்கள் என இயேசு கூறுகிறார். பேதுரு, "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய்விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்" (மத்தேயு 26:33) என்று துணிச்சலோடு கூறுகிறார். மனித இதயங்களை அறிந்த இயேசு அதற்குப் பதில்மொழியாக, "இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" (மத்தேயு 26:34) என்றுரைக்கிறார்.
4)இரவு: கெத்சமனித் தோட்டத்தில் இயேசு "துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்" (மத்தேயு 26:37). தம் தந்தையாம் கடவுளை நோக்கி வேண்டல் செய்கிறார்: "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்" (மத்தேயு 26:39). இதற்கிடையே, இயேசுவே தேர்ந்தெடுத்திருந்த பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகிய யூதாசு இஸ்காரியோத்து வாளும் தடியும் தாங்கிய பெருங்கூட்டத்தோடு அங்கே வருகிறார்."ரபி வாழ்க" என்று கூறி இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறார் (காண்க: மத்தேயு 26:49; லூக்கா 22:52; யோவான் 18:3). இயேசுவைக் கைது செய்கிறார்கள். சீடர்களோ தங்கள் உயிருக்கு அஞ்சி, தம் குருவைக் கைவிட்டுவிட்டு ஓடிப்போகிறார்கள்.
5) இரவு: இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்செல்கிறார்கள். அங்கே, யூத தலைமைச் சங்க உறுப்பினராகிய மறைநூல் அறிஞரும் மூப்பர்களும் கூடி வந்து இயேசுவுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடுகின்றனர். மன்ற விசாரணை நடக்கும்போது காவலர் ஒருவர் இயேசுவைக் கன்னத்தில் அறைகிறார் (காண்க: யோவான் 18:22). இயேசுவுக்கு மரண தண்டனை விதித்து மன்றம் தீர்ப்பளிக்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, "பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, 'இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார் என்று சொல்' என்று கேட்டனர்" (மத்தேயு 26:67-68). பின்னர் "இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்"(மத்தேயு 27:2). இந்த பொந்தியு பிலாத்து (Pontius Pilate) யூதேயா நாட்டில் உரோமை ஆட்சியாளர்களின் பதிலாளாக இருந்து கொடிய விதத்தில் செயல்பட்டதாக வரலாறு.
6) அதே இரவு: தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து, இயேசுவுக்கு என்ன நேரிடும் என்பதை அறிய பேதுரு உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருக்கிறார். அப்போது காவலர்கள் பேதுருவை அடையாளம் கண்டுகொண்டு, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே" என்று கேட்கின்றனர். அதற்கு பேதுரு, "இம்மனிதனை எனக்குத் தெரியாது" என்று மும்முறை அடித்துக் கூறி மறுதலித்துவிட்டார் (காண்க: மத்தேயு 26:69-75). உடனே சேவல் கூவிற்று. "அப்பொழுது, 'சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்" (மத்தேயு 26:75).
7) மறுநாள் காலை: உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்துவின் மாளிகை. பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, "இவனிடத்தில் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" லூக்கா 23:4) என்று கூறுகிறான். ஆனால் யூத சமயத் தலைவர்களும் கும்பலும் சேர்ந்துகொண்டு "அவனைச் சிலுவையில் அறையும்" என்று உரக்கக் கத்துகிறார்கள் (காண்க: மாற்கு 15:14). கலகக்காரர்களோடு பிடிபட்ட குற்றவாளியாகிய பரபா என்பவனையோ இயேசுவையோ விடுதலை செய்ய பிலாத்து முன்வருகிறான். ஆனால் கும்பல் பரபாவை விடுவித்து இயேசுவைச் சிலுவையில் அறையும்படி கேட்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் இருந்து இயேசுவைக் கட்டிக்கொடுக்க கூலியாகப் பெற்றிருந்த முப்பது வெள்ளிக்காசுகளையும் திருப்பிக்கொடுக்க முயல்கின்றான்; அவர்களோ அதை வாங்க மறுக்கிறார்கள். காசுகளைக் கோவிலில் எறிந்துவிட்டு "புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக்கொண்டான்"(மத்தேயு 27:3-8).
8) யோவான் நற்செய்திப்படி, பிலாத்து இயேசுவோடு உரையாடலில் ஈடுபட்டு, "நீ அரசனா?" என்று கேட்டான். "அதற்கு இயேசு, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' என்றார். பிலாத்து அவரிடம், 'உண்மையா? அது என்ன?' என்று கேட்டான்"(யோவான் 18:37-38). பிலாத்தின் ஆணைப்படி இயேசு சாட்டையால் அடிக்கப்பட்டார். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி இயேசுவின் தலையில் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் தான் குற்றம் ஏதும் காணவில்லை என்று பிலாத்து கூறி, இயேசுவை அவர்களுக்குக் காட்டி, "இதோ! மனிதன்" (யோவான் 19:5) என்றான். மத்தேயு நற்செய்திப்படி, பிலாத்து, இயேசுவின் இரத்தப்பழியில் தனக்குப் பங்கில்லை என்று கூறி "தன் கைகளைக் கழுவினான்" (மத்தேயு 27:24).
9) யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற மூன்று நற்செய்திகளும் (ஒத்தமை நற்செய்திகள்), இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயிபாவிடம் விசாரணைக்குக் கொண்டுசென்றதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியின்படி, இயேசுவைக் கயிபாவின் மாமனார் அன்னாவும் விசாரித்தார். "இந்தக் கயபாதான், 'மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்"(யோவான் 18:14).
10) சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்தினர். மரண தண்டனை விதிக்கப்பட்ட பிற குற்றவாளிகளைப் போல "இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்" (யோவான் 19:17). இயேசு சிலுவையைச் சுமக்க சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் கட்டாயப்படுத்தப்பட்டார் (காண்க: லூக்கா 23:26). இயேசுவின் துன்பத்தைக் கண்டு பெண்கள் மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்தார்கள்; அவர் பின்னே சென்றார்கள்; அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:27-31).
11) அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர் (காண்க: யோவான் 19:17-22). காலை ஒன்பது மணிக்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்கிறார் மாற்கு (காண்க: மாற்கு 15:25). அது காலை 9 தொடங்கி 3 மணி நேர இடைவெளியை (அதாவது நண்பகல்வரை) குறிக்கும். யோவான் கூற்றுப்படி, இயேசு சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டது பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள் "ஏறக்குறைய நண்பகல் வேளை" (யோவான் 19:14). அந்த நண்பகல் வேளையில்தான் யூத குருக்கள் பாஸ்கா ஆட்டுகுட்டியைக் கோவிலில் பலியிடத் தொடங்குவார்கள். ஆக, இயேசுவே பாஸ்கா ஆட்டிக்குட்டி போல பலியாக்கப்பட்டார் என்னும் கருத்து தொக்கிநிற்பதைக் காணலாம் (காண்க: யோவான் 1:29 – "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!").
12) இயேசுவோடு வேறு இரண்டு குற்றவாளிகளும் (கள்வர்களும்) சிலுவையில் அறையப்பட்டிருந்தனர். அவர்கள் இருவ்ரு இயேசுவை இகழ்ந்ததாக லூக்கா தவிர மற்ற மூன்று நற்செய்தியாளரும் கூறுகின்றனர். லூக்கா மட்டும் அந்த, இரு கள்வரில் ஒருவன் இயேசுவின்மீது பரிவு காட்டியதாகக் குறிப்பிடுகிறார் (காண்க: லூக்கா 23:39-43).
13) சிலுவையில் மூன்று மணி நேரம் தொங்கி இயேசு இறந்தார். அவர் சிலுவையில் தொங்கியபோது உரைத்த சொற்களை நற்செய்தியாளர்கள் வெவ்வேறு விதமாகப் பதிவு செய்துள்ளார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிசைமுறை கீழ்வருமாறு:
"தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(லூக்கா 23:34).
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"(லூக்கா 23:43).
"அம்மா, இவரே உம் மகன்"(யோவான் 19:25-27).
"எலோயி, எலோயி, லெமா சபக்தானி?" ((அரமேயம்). ("என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?")
"தாகமாய் இருக்கிறது" (யோவான் 19:28).
"எல்லாம் நிறைவேறிற்று"(யோவான் 19:30).
"தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்"(லூக்கா 23:46).
இயேசு சிலுவையில் தொங்கியபோது கூறியதாக நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ள மேற்காட்டிய கூற்றுக்களை விரித்துரைத்து அவற்றின் ஆழ்பொருளை எடுத்து விளக்கும் செயல் கிறித்தவ வரலாற்றில் சிறப்பான ஒன்று.
14) இயேசு சிலுவையில் இறந்த சரியான நேரம் குறித்து வேறுபட்ட கருத்துகள் உள்ளன. பெரும்பான்மையோர் இயேசு பிற்பகல் 3 அளவில் இறந்தார் என்பர். யூதர்களின் நிசான் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது யூதர் பாஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு முந்திய நாள் இயேசு இறந்தார் என்பது பொதுவான கருத்து. இது பற்றி மாற்றுக்கருத்தும் உள்ளது.
கல்லறையில் அடக்கம் செய்யப்படல்
சிலுவையில் தொங்கிய இயேசு இறந்ததும், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் பிலாத்துவை அணுகி, இயேசுவின் உடலைக் கேட்டார் என்றும், சிலுவையினின்று இறக்கிய உடலை மெல்லிய துணியால் சுற்றிப் பொதிந்து, அதற்கு முன்பு யாரையும் அடக்கம் செய்திராத ஒரு புதிய கல்லறையில் அந்த உடலை வைத்தார்கள் என்றும் லூக்கா நற்செய்தி கூறுகிறது (காண்க: லூக்கா 23:50-53). அவ்வாறே மாற்குவும் கூறுகிறார் (காண்க: மாற்கு 15:42-46). அக்கல்லறையை அரிமத்தியா யோசேப்பு தமக்கென வைத்திருந்தார் என்று மத்தேயு நற்செய்தி கூறுகிறது (காண்க: மத்தேயு 27:60). இயேசுவை அடக்கம் செய்ததில் நிக்கதேம் என்பவரும் பங்கேற்றதை யோவான் குறிப்பிடுகிறார்: "முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்"(யோவான் 19:39).
இயேசு இறந்த நாள் பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாக இருந்ததாலும் அக்கல்லறை அருகின் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள் (காண்க: யோவான் 19:42). கல்லறையின் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனதாக மத்தேயு கூடுதல் தகவல் தருகிறார் (காண்க: மத்தேயு 27:60). இயேசுவின் அடக்கம் ஆழ்ந்த இறையியல் பொருள் கொண்டதாக தூய பவுல் விளக்குவார்.
உயிர்பெற்றெழுந்து விண்ணேற்றம் அடைதல்
விவிலியத்தின் படி, இயேசு சிலுவையில் அறையுண்ட மூன்றாவது நாள் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார். இச்செய்தியை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்கள் தவிர, தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும் கூட காண்கின்றோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய பகுதிகள் கீழ்வருவன:
மத்தேயு 28:5-10
மாற்கு 16:9
லூக்கா 24:2-16
யோவான் 20:10-17
திருத்தூதர் பணிகள் 2:24 (முதலியன)
1 கொரிந்தியர் 6:14, சிறப்பாக 15:1-3
இறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு சாவை வென்று, உயிர்பெற்றெழுந்தார் என்னும் செய்தியை நான்கு நற்செய்திகளும் குறிப்பிட்டாலும், அவை தருகின்ற தகவல்களில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. ஒத்த கருத்தாக உள்ளவை இவை:
1) "வாரத்தின் முதல் நாள்" பெண்கள் கல்லறைக்குச் சென்று, அது வெறுமையாயிருக்கக் கண்டார்கள்.
2) உயிர்பெற்றெழுந்த இயேசு முதன்முதலில் பெண்களுக்கு (ஒரு பெண்ணுக்கு) காட்சியளித்து, அவர்கள் (அவர்) பேதுரு மற்றும் பிற சீடர்களைச் சந்தித்து, அந்த அதிசயச் செய்தியைப் பறைசாற்றும்படி கட்டளையிட்டார்.
3) இந்நிகழ்வில் மகதலா மரியா முதன்மையிடம் பெறுகிறார்.
4) இயேசுவின் கல்லறையை ஒரு கல் மூடியிருந்தது என்னும் செய்தி.
நற்செய்திகள் வேறுபடும் இடங்கள் இவை:
சரியாக எந்த நேரத்தில் பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள், எத்தனை பெண்கள் போனார்கள், யார்யார் அப்பெண்கள், எதற்காகப் போனார்கள், வெறுமையாகவிருந்த கல்லறை அருகே தோன்றியது "ஆண்டவரின் தூதரா" அல்லது "இளைஞரா", அவர்கள் பெண்களுக்குக் கூறிய செய்தி என்ன, பெண்கள் அதற்கு என்ன பதில் அளித்தார்கள் - என்பவை.
இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பிறகு இயேசுவின் விண்ணேற்றம் நிகழ்ந்தது.
உயிர்பெற்றெழுந்த பின் சீடர்களுக்குத் தோன்றுதல்
இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையாய் இருந்ததும், இயேசு உயிர்பெற்றெழுந்ததும் அவர் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். இயேசு தம் சீடருக்குப் பல முறை காட்சியளித்ததாக நற்செய்தி நூல்களும் திருத்தூதர் பணிகள் நூலும் தெரிவிக்கின்றன.
உயிர்பெற்றெழுந்த இயேசு மேல்மாடியில் கூடியிருந்த தம் சீடர்களுக்குத் தோன்றினார்; அப்போது சீடர் தோமா அங்கே இல்லை. உயிர்பெற்றெழுந்த இயேசுவைத் தம் கைகளால் தொட்டுப்பார்த்தாலொழிய நம்பப்போவதில்லை என்று கூறிவிட்டார். எட்டு நாள்களுக்குப் பின் இயேசு மீண்டும் தோன்றியபோது தோமாவும் கூட இருந்தார். இயேசு சீடர்களை நோக்கி வழக்கம்போல, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!" என்று வாழ்த்திய பிறகு, தோமாவை நோக்கி, "இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்" என்றார். இயேசுவைத் தம் கையால் தொடுவதற்குத் தோமாவுக்குத் துணிவு வரவில்லை. மாறாக, தோமா இயேசுவைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்று கூறிப் பணிந்தார். இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார் (காண்க: யோவான் 20:24-29).
எம்மாவு என்னும் ஊருக்குச் சென்றுகொண்டிருந்த சீடர்களுக்கு இயேசு தோன்றிய செய்தியை லூக்கா குறித்துள்ளார் (காண்க: லூக்கா 24:13-32).
திபேரியக் கடல் (கலிலேயாக் கடல்/ஏரி) அருகே சீமோன் பேதுருவும் பிற சீடரும் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இயேசு அவர்களுக்குத் தோன்றி அவர்களை உறுதிப்படுத்தினார் (காண்க: யோவான் 21:1-23).
இயேசு இறுதி முறையாகத் தோன்றியது அவர் உயிர்பெற்றெழுந்த நாற்பதாம் நாள் எனவும் அப்போது அவர் விண்ணேகினார் எனவும் லூக்கா குறித்துள்ளார் (காண்க: லூக்கா 24:44-49).
கிறித்தவர்களைத் துன்புறுத்திய சவுல் என்பவருக்கு இயேசு தோன்றியதும், சவுல் மனமாற்றம் அடைந்து, பவுல் என்னும் புதிய பெயரோடு இயேசுவின் தீவிர சீடராக மாறியதும் திருத்தூதர் பணிகள் நூலிலும் பவுல் எழுதிய மடல்களிலும் குறிக்கப்பட்டுள்ளன.
இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைக் கிறித்தவர்கள் தம் சமய நம்பிக்கையின் மையமாகக் கருதுகிறார்கள். கடவுள் பெயரால் இவ்வுலகிற்கு வந்து, மக்களுக்கு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்கள் விண்ணக வாழ்வில் பங்கேற்க எத்தகைய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இயேசு தம் சொல்லாலும் செயலாலும் காட்டினார். சாவின்மீது தாம் வெற்றிகொண்டதுபோலவே தம்மை நம்பி ஏற்போர் அனைவரும் அவ்வெற்றியில் பங்கேற்பர் என இயேசு அறிவுறுத்தினார். புத்துயிர் பெற்ற இயேசு மனித வரலாற்றில் கடவுளின் வல்லமையாக இருந்து அவ்வரலாற்றை வழிநடத்துகிறார் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். இயேசுவை மீட்பராக ஏற்போர் கடவுளின் அன்பிலும் அரவணைப்பிலும் எந்நாளும் வாழ்வர் என்பது கிறித்தவ நம்பிக்கை.
வரலாற்றுப் பார்வை
வரலாற்று ஆதாரம்
1) பிளாவியுசு யோசேஃபசு (Flavius Josephus): இவர் கி.பி. சுமார் 37ஆம் ஆண்டில் பிறந்தார்; கி.பி. சுமார் 101இல் இறந்தார். இவர் யூத சமயத்தைச் சார்ந்த ஒரு குரு; வரலாற்று ஆசிரியர். யூத மக்கள் தங்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய உரோமைப் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த காலத்தில் (கி.பி. 66) இவர் வாழ்ந்தார். அக்கிளர்ச்சியின்போது உரோமையர் இவரைப் பிடித்துச் சிறையில் வைத்தனர். விடுதலை இவர் எழுதிய யூத மரபு வரலாறு (Jewish Antiquities) என்னும் நூல் சிறப்பு வாய்ந்தது. அதில் இயேசுவுக்குத் திருமுழுக்கு வழங்கிய யோவான் பற்றிய குறிப்பு உள்ளது. அந்நூலின் பகுதி 18, அதிகாரம் 5, பத்தி 2இல் யோசேஃபசு கீழ்வருமாறு குறித்துள்ளார்:
"திருமுழுக்கு அளிப்பவர் என்னும் பெயர்கொண்ட யோவான் ஒரு நல்ல மனிதர். அவர் யூத மக்களுக்குப் போதித்தார். தூய்மை பெற்ற உள்ளத்தினராக மக்கள் அவரை அணுகி வந்தால் அவர்களுக்கு அவர் தண்ணீரினால் குளிப்பாட்டு அளிக்க முன்வந்தார். இதனால் அவர்கள் பாவங்கள் மட்டும் கழுவப்படும் என்றில்லாமல் அவர்களது உடலும் தூய்மையடையும். மக்கள் நற்பண்புடையவராக, ஒருவர் மற்றவர் மட்டில் நேர்மையோடும், கடவுளுக்கு அஞ்சியும் வாழ்ந்திட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இத்தகைய ஒரு நல்ல மனிதரை ஏரோது மன்னன் கொன்றுபோட்டதால் கடவுள் எரோதின் படை அழிந்துபோகச் செய்து, அவனைத் தண்டித்தார்; அது நியாயமானதே".
2) பிளாவியுசு யோசேஃபசு இயேசு பற்றிய தகவலும் தருகின்றார். ஆதாரம்: யூத மரபு வரலாறு (Jewish Antiquities), பகுதி 18, அதிகாரம் 3, பத்தி 3. இப்பகுதியில் யூதராகிய யோசேஃபசு இயேசுவை பெரிய அளவு புகழ்ந்து எழுதியிருப்பாரா என்றும், ஒருவேளை சில வரிகள் கிறித்தவரின் இடைச்செருகலாக இருக்கலாமோ என்றும் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் ஐயம் எழுப்புகின்றனர். ஐயத்திற்கு உரிய பகுதிகள் கீழ்வரும் மேற்கோளில் சதுர அடைப்புக்குறிகளுக்குள் இடப்படுகின்றன. யோசேஃபசு கூறுகின்றார்:
"ஏறக்குறைய அச்சமயத்தில் "இயேசு" என்னும் பெயர்கொண்ட ஞானியாகிய ஒரு மனிதர் இருந்தார் [அவரை மனிதர் என்று அழைக்க எனக்குத் தயக்கமாகவே உள்ளது]. அவர் அதிசய செயல்களை நிகழ்த்தினார்; உண்மையை உள மகிழ்வோடு தேடிய மக்களுக்கு அவர் ஆசிரியராக இருந்தார். யூதர், கிரேக்கர் உட்பட பலரும் அவரைப் பின்பற்றினார்கள். [அவரே திருப்பொழிவுபெற்ற மெசியாவாக இருந்தார்]. நம் நடுவே மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் அவர்மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, பிலாத்து அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுமாறு தண்டனை விதித்தான். அப்படியிருந்தும் தொடக்கத்திலேயே அவர்மீது மதிப்புக் கொண்டிருந்தவர்கள் அவர்மீது தொடர்ந்து அன்பும் பாசமும் காட்டுவதை விட்டுவிடவில்லை. [மூன்றாம் நாளில் உயிர்பெற்றெழுந்து அவர் அவர்களுக்குக் காட்சியளித்தார். இது நிகழுமென்றும் இதுபோன்று அவர் குறித்த வேறு எண்ணிறந்த அதிசயங்கள் நிகழுமென்றும் இறைவாக்கினர் ஏற்கனவே முன்னுரைத்திருந்தனர்.] அவருடைய பெயரைக் கொண்டு கிறித்தவர் என்று அழைக்கப்படுகின்ற குழுவினர் இன்றுவரை நீடித்து வாழ்ந்துவருகின்றனர்".
3)பிளாவியுசு யோசேஃபசு நூலின் அரபி மொழிபெயர்ப்பு: யோசேஃபசு எழுதிய யூத மரபு வரலாறு நூலின் அரபி மொழிபெயர்ப்பு ஒன்றுளது. அது கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அந்த மொழிபெயர்ப்பில் மேலே காட்டிய பகுதி கீழ்வருமாறு உள்ளது:
"அச்சமயம் இயேசு என்னும் பெயருடைய ஞானி ஒருவர் இருந்தார். அவர் நன்னடத்தையும் நற்பண்பும் கொண்ட மனிதர். யூதர்களும் பிற நாடுகளைச் சார்ந்தவர்களுமான பல மக்கள் அவருடைய சீடர்களாக மாறினர். சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும்படி பிலாத்து அவருக்குத் தீர்ப்பு வழங்கினான். அவருடைய சீடர்களாக மாறியிருந்தவர்கள் அவரைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிடவில்லை. சிலுவையில் அறையுண்டு இறந்தபின் அவர் மீண்டும் உயிர்பெற்றவராக அவர்களுக்குக் காட்சியளித்ததாக அவர்கள் கூறினார்கள். எனவே, அவரே ஒருவேளை இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட அதிசயம் வாய்ந்த மெசியாவாக இருக்கலாம்."
குறிப்பு
மேலே தரப்பட்ட பகுதியிலும் அதன் அரபி மொழிபெயர்ப்பிலும் ஒரு சில கிறித்தவ இடைச்செருகல்கள் இருக்கலாம் என்றே வைத்துக்கொண்டாலும் இயேசு என்னும் பெயருடைய ஒருவர் வரலாற்றில் வாழ்ந்தார் என்றும், அவர் மக்களுக்குப் போதனை வழங்கி அதிசய செயல்கள் புரிந்தார் என்றும், அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்றும், நூல் எழுந்த முதல் நூற்றாண்டில் இயேசுவைப் பின்பற்றிய மக்கள் குழுக்கள் இருந்தன என்றும் யாதொரு ஐயத்திற்கு இடமின்றி வரலாற்று உண்மையாக நாம் ஏற்றுக்கொள்ளலாம். இது விவிலியத்திற்கு வெளியே இருந்து வருகின்ற உறுதிப்பாடு என்பது கருதத்தக்கது.
4)பிளாவியுசு யோசேஃபசு இயேசுவின் சகோதரரான யாக்கோபு (James) பற்றிய தகவலும் தருகிறார். ஆதாரம்: யூத மரபு வரலாறு (Jewish Antiquities), பகுதி 20, அதிகாரம் 9. இப்பகுதியை எழுதியவர் யோசேஃபசு தான் என்பது வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்த கருத்து.
மேற்கோள்: "பெசுதுசு (Festus) இறந்துவிட்டார் என்று கேட்டதும் சீசர் அல்பீனுசு (Albinus) என்பவரை யூதேயாவுக்கு ஆளுநராக அனுப்பினார்....ஃபெசுதுசு இறந்தாயிற்று, அல்பீனிசு பயணமாகப் போகிறார் என்ற நிலையில், அவர் [அனானுசு Ananus] நீதித்தலைவர்கள் அடங்கிய மூப்பர் சங்கத்தை (Sanhedrin) கூட்டினார். அவர்கள் முன்னிலையில் யாக்கோபையும் அவர்தம் கூட்டாளிகளையும் கொண்டுவந்தார். கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட இயேசுவின் சகோதரர்தான் யாக்கோபு. அவர்கள் சட்டத்தை மீறினார்கள் என்னும் குற்றச்சாட்டு அவர்கள்மீது சுமத்தப்பட்டது; அவர்கள் கல்லால் எறியப்படவேண்டும் என்று தீர்ப்பிடப்பட்டது. சட்டத்தை மீறியது தவறுதான் என்றாலும் அதற்கென்று அளிக்கப்பட்ட தண்டனை நீதியாக இருக்கவில்லை என்று நீதிநேர்மை கொண்ட குடிமக்கள் நினைத்ததுபோலத்தான் தெரிகிறது."
5) தாசித்துசு (Tacitus) (கி.பி. 56-117) வழங்கும் சான்று: தாசித்துசு தலைசிறந்த உரோமை வரலாற்றாசிரியர். மிகவும் நம்பத்தக்கவராகக் கருதப்படுபவர். கி.பி. 116ஆம் ஆண்டளவில் அவர் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் (Annals) என்னும் நூல் இவருடைய தலைசிறந்த படைப்பு ஆகும். நீரோ மன்னன் கி.பி. 64ஆம் ஆண்டு உரோமை நகருக்குத் தீ வைத்தார் என்னும் தகவலையும், அத்தீ ஆறு நாள்கள் எரிந்து ஓய்ந்தது என்னும் தகவலையும், தீ வைத்தவர்கள் கிறித்தவர்களே என்று குற்றம் சாட்டி அவர்களை நீரோ கொன்ற தகவலையும் தாசித்துசு தருகிறார். தாசித்துசு தாம் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் (Annals) என்னும் நூலில் 15ஆம் பிரிவின் 44ஆம் பகுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்:
"தானே உரோமைக்குத் தீ வைத்ததாக உலவிய செய்தியை மறைப்பதற்காக நீரோ இழிந்தவர்களாக மக்களால் கருதப்பட்ட ஒரு குழுவினர்மீது பழியைப் போட்டார். அவர்களை மிகக் கொடுமையான வதைகளுக்கு ஆளாக்கினார். அவர்கள்தாம் கிறெஸ்தவர்கள் (Chrestians = கிறிஸ்தவர்கள் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்து என்பவரின் பெயரிலிருந்து அவர்களுக்கு இப்பெயர் வந்தது. அந்தக் கிறிஸ்து திபேரியு (Tiberius) ஆட்சிக்காலத்தில் நம் ஆளுநர்களில் ஒருவராகிய பொந்தியு பிலாத்து என்பவரின் ஆளுகையின் கீழ் மிகக் கொடிய விதத்தில் தண்டிக்கப்பட்டார். அப்போது எழுந்த கேடுநிறைந்த மூடநம்பிக்கை [= கிறித்தவ சமயம்] சிறிது காலம் அடக்கிவைக்கப்பட்டது; ஆனால் மீண்டும் யூதேயாவில் பரவ ஆரம்பித்தது. அத்தீங்குக்குத் தோற்றிடமான அங்கிருந்து உரோமையிலும் பரவியது. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் பிறக்கின்ற வெறுக்கத்தக்க, வெட்கக்கேடான எல்லாமே உரோமையில் குடிகொண்டு பரவுவது வழக்கம்தானே".
குறிப்பு
மேலே காட்டிய பகுதியில் தாசித்துசு Chrestianos என்று இலத்தீனில் குறிப்பிட்டது கருதத்தக்கது. வழக்கமாக, கிறிஸ்தவர்கள் என்பது இலத்தீனில் Christiani, Christianos என்றுதான் வரும்.
பெரும்பான்மையான அறிஞர்கள் மேற்காட்டிய பகுதி தாசித்திசு என்னும் பண்டைக்கால உரோமை வரலாற்றாசிரியரால் எழுதப்பட்டதே என ஏற்கின்றனர். ஒருசிலர் ஐயப்படுகின்றனர். ஆனால், கிறித்தவ சமயத்தை கேடுநிறைந்த மூடநம்பிக்கை என்றும், தீங்கு, வெறுக்கத்தக்கது, வெட்கக்கேடானது என்றெல்லாம் இழிவாக இப்பகுதி காட்டுவதால் இது கிறித்தவர்களால் புகுத்தப்பட்ட இடைச்செருகல் அல்ல என்று மிகப்பெரும்பான்மை அறிஞர் உறுதியாகக் கூறுகின்றனர்
6) மேலே காட்டியவை தவிர, இளைய பிளினி (Pliny the Younger) என்னும் உரோமை அறிஞர் இயேசு கிறிஸ்து மற்றும் தொடக்ககாலக் கிறித்தவர் பற்றித் தருகின்ற குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர் வாழ்ந்த காலம் கி.பி. 61-112. இவர் உரோமைப் பேரரசில் கிறித்தவர்கள் எத்தகைய வழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதைக் குறித்து உரோமைப் பேரரசனான திரேயன் (Trajan) என்பவருக்கு எழுதிய கடிதமும் அதற்கு அரசன் கொடுத்த பதிலும் குறிப்பிடத்தக்கவை
7) லூசியன் (Lucian) என்னும் பண்டைய அசீரிய எழுத்தாளர் (கி.பி. சுமார் 125 - கி.பி. சுமார் 180) இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றும், அவருடைய சீடர்கள் அவரைக் கடவுள் என்று வழிபடுகிறார்கள் என்றும், இயேசு எல்லா மனிதரும் சகோதரர்களே என்று போதித்தார் என்றும், கிறித்தவர்கள் பொதுவுடைமை முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்றும் தகவல் தருகிறார்.
இயேசு பற்றிய பிற விளக்கங்கள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலக வரலாற்றில் பெரும் தாக்கம் கொணர்ந்தவர் இயேசு. எனவே, அவருடைய வாழ்க்கை, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் பற்றி, நற்செய்தி நூல்கள் தருகின்ற செய்திகளைத் தவிர வேறு தகவல்கள் உளவா என்ற கேள்விக்குப் பதில் தரும் விதத்தில் பல நூல்கள் தோன்றியதில் வியப்பில்லை. குறிப்பாக, இயேசு தம் 12 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தார் என்ற மர்மத்தை விளக்கும் வகையிலும், அவர் உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா என்பதைத் தெரிந்துகொள்ளவும் நடந்த முயற்சிகள் விவிலிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
மேலும், இயேசு வரலாற்று மனிதரா என்னும் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையிலும் இயேசுவின் போதனை எத்தகையது என்பதை விளக்கும் வகையிலும் சில சிந்தனையாளர்கள் விமர்சித்துள்ளார்கள். இயேசு வாழ்ந்த காலத்தில் யூத சமயப் பிரிவினரான பரிசேயர், சதுசேயர் போன்றவர்கள் இயேசுவின் போதனையில் குறைகண்டார்கள். அதன் பிறகு, கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த செல்சுஸ் (Celsus), 3ஆம் நூற்றாண்டவரான போர்ஃபிரி (Porphyry) போன்றோர் இயேசு பற்றி விமர்சித்தார்கள். பகுத்தறிவுவாதக் கொள்கை அடிப்படையில் பிரீட்ரிக் நீட்சே, பெர்ட்ரண்டு ரசல் முதலியோர் இயேசுவையும் அவருடைய போதனைகளையும் விமர்சித்துள்ளனர். "இயேசு பற்றிய விமர்சனம்" ஒருபக்கம் தொடரவே, அதற்குப் பதில் வழங்கும் முயற்சியும் நடந்துவருகிறது. இம்முயற்சி கிறித்தவ தன்விளக்கம் என்று அழைக்கப்படுகிறது.
சமயக் கருத்துக்கள்
தன்னைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சீடர்கள் தவிர்த்து, பொதுவாக அக்கால யூதர்களால் இயேசு மீட்பர் (மெசியா) அல்ல என நிராகரிக்கப்பட்டார். அதுவே இன்றும் பெரும் அளவிலான யூதர்களால் பின்பற்றப்படுகிறது. கிறித்தவ இறையியலாளர்கள், கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள், சீர்திருத்தவாதிகள் மற்றும் பிறரால் பல நூற்றாண்டுகளாக இயேசுவைப்பற்றி பரவலாய் எழுதப்பட்டுள்ளது. கிறித்தவப் பிரிவுகளும் உட்பிரிவுகளும் இயேசு பற்றிய தங்களின் விபரங்களை வரையறுத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில், மனாக்கியர், ஞானக் கொள்கையினர், இசுலாமியர், பகாய் மற்றும் ஏனையோர் தங்கள் சமயத்தில் இயேசுவுக்கு முக்கிய இடத்தினை வழங்கியுள்ளனர்.
யூதப் பார்வை
யூதம் இயேசு கடவுளாக இருப்பதை, கடவுளிடம் மத்தியஸ்தம் செய்பவர் அல்லது திருத்துவத்தின் பகுதி என்பதை மறுக்கிறது. இது இயேசு மெசியா அல்ல என்னும் கருத்தைக் கொண்டு, அவர் மீட்பரின் இறைவாக்குகளை நிறைவேற்றவோ அல்லது மீட்பருக்குரிய ஆளுமை தகமைகளைக் கொண்டிருக்கவோ இல்லை என வாதிடுகிறது. யூத பாரம்பரியத்தின்படி, மலாக்கியாவிற்குப் பின் எந்த இறைவாக்கினரும் இல்லை. மலாக்கியா கி.மு. 5ம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்தார். மெசியா நம்பிக்கை யூதம் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் இயேசுவை மெசியாவாகக் கருதினாலும், இப்பிரிவு யூதப் பிரிவின் அங்கம் என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இசுலாமியப் பார்வை
இசுலாமில், இஞ்சில் வேதத்தின்படி இசுரேலிய மக்களை வழிநடத்த அனுப்பப்பட்ட கடவுளின் தூதராக, மீட்பராக ஈசா (இயேசு) கருதப்படுகிறார். முசுலிம்கள் புதிய ஏற்பாடு உண்மையல்ல எனவும், இயேசுவின் உண்மையான செய்தி தொலைந்துவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது எனவும் அதனை முகம்மது பின்னர் மீள்வித்தார் எனவும் நம்புகின்றனர். இயேசுவில் நம்பிக்கை வைப்பது (மற்றும் கடவுள் அனுப்பிய ஏனைய இறைதூதர்களிடமும் நம்பிக்கை வைப்பது) ஒரு முசுலிமாக இருக்கத் தேவையானது. குரான் முகம்மதுவைவிட அதிகமாக இயேசுவை 25 தடவைகள் குறிப்பிடுகிறது. மேலும் இயேசு ஏனைய இறை தூதர்களைப் போல மனிதன் எனவும், கடவுளின் செய்தியை பரப்ப தெரிவு செய்யப்பட்டார் எனவும் வலியுறுத்துகிறது. இசுலாம் இயேசு கடவுளின் அவதாரமோ, கடவுளின் மகனோ இல்லை எனக் கருதுகிறது. இசுலாமிய நூல்கள் ஒரே கடவுட் கொள்கையை வலியுறுத்தி, கடவுளுக்கு இணையாக இருப்பதையும் உருவ வழிபாடாகக் கருதுகின்றது. குரான் இயேசு தன்னை திரித்துவத்தின் ஒருவராக அறிவிக்கவில்லை எனவும் இறுதி தீர்வின்போது இயேசு அவ்வாறான ஒன்றை மறுதலிப்பார் எனவும் எதிர்வு கூறுகின்றது (குரான் 5:116). ஏனைய இறை தூதர்கள் போல் இயேசுவும் ஓர் முசுலிமாக கருதப்படுகிறார்.
இவற்றையும் பார்க்க
கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்
இயேசுவின் வரலாற்றுத்தன்மை
இயேசு பேசிய மொழி
கிறிஸ்தியல்
கிறித்தவத்தில் இயேசு
குறிப்புகள்
உசாத்துணைகள்
மேற்கோள்கள்
துணைநூல் பட்டியல்
வெளி இணைப்புகள்
Complete Sayings of Jesus Christ in parallel Latin and English
கிறிஸ்தவம்
புதிய ஏற்பாட்டு நபர்கள்
சமயங்களைத் தோற்றுவித்தோர்
முதலாம் நூற்றாண்டு இறப்புகள்
யூதேய நபர்கள்
யூதர்கள்
|
4330
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
|
சம்பந்தர்
|
சம்பந்தர் என அழைக்கப்படுவோர்:
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
மறைஞான சம்பந்தர்
திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தர்
வேறு நபர்கள்
இரா. சம்பந்தன், ஈழத்து அரசியல்வாதி
வீ. தி. சம்பந்தன், மலேசிய அரசியல்வாதி
என். சம்பந்தன், இயக்குனர்
அ. ச. ஞானசம்பந்தன், தமிழறிஞர்
சம்பந்தன், ஈழத்து சிறுகதை எழுத்தாளர்
பி. கே. சம்பந்தன், தெருக்கூத்துக் கலைஞர்
சீர்காழி எஸ். திருஞானசம்பந்தன், இறையருட் பாடகர்
|
4332
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
|
ரூபாய்
|
இந்தக் கட்டுரை ஆசியாவில் பல நாடுகளிலும் புழக்கத்தில் உள்ள நாணயத்தைக் குறித்ததாகும்.
உருபாய் அல்லது ரூபாய் (Rupee) (சுருக்கமாக ரூ.(Re. அல்லது Rs.)) என்பது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மொரீசியஸ் சீசெல்சு, மாலைத்தீவுகள் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு மதிப்புடைய நாணயங்களின் பொதுப்பெயராகும். முன்னதாக மியான்மர், ஆப்கானித்தான் நாணயங்களும் ரூபாய் என்றே அழைக்கப்பட்டு வந்தன. இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் நாணயம் ருபியா என்றும், மாலத்தீவில் பயன்படுத்தப்படும் நாணயம் ருஃபியா என்றும் அழைக்கப்படுகிறது.
வரலாற்றுப்படி வட இந்தியாவில் சூர் பேரரசை நிறுவிய சேர் சா சூரி தான் முதன்முதலாக ரூபாய் என்ற நாணயத்தை 16ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தியதாக அறியப்படுகிறது. இது வெள்ளிக் காசு எனப்பொருள்படும் ரூப்யா, என்ற சமசுகிருதச் சொல்லிலிருந்து அல்லது செங்கிருத ரூபா, அழகு,வடிவம் என்றச் சொல்லிலிருந்து உருவானது.
இந்தியாவிலும் பாக்கித்தானிலும் நூறு புதிய பைசாக்கள் ஓர் இந்திய உரூபாய்க்கு (ரூபாய்க்கு)ச் சமமாகும். மொரீசியசின் ரூபாயும் இலங்கை ரூபாயும் நூறு சென்ட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் ரூபாய் நூறு பைசாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோகார்களாகவும் நான்கு சுக்காக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
ஆப்கானித்தானில் 1925 வரை ரூபாய் என்றே அழைக்கப்பட்டு வந்தது; ஒவ்வொரு ஆப்கானித்தானிய ரூபாயும் 60 பைசாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. 1891இல் ஆப்கன் ரூபாய் அறிமுகமாவதற்கு முன்னதாக அங்குள்ள சட்டபூர்வ நாணயம் காபூலி ரூபாய் எனப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் நடுவம் வரை திபெத்தின் அலுவல்முறை நாணயமும் திபெத்திய ரூபாய் என்றே அழைக்கப்பட்டது. 1959 வரை துபையிலும் கத்தாரிலும் இந்திய ரூபாயே அலுவல்முறை நாணயமாக இருந்தது. 1959இல் தங்கக் கடத்தலைத் தடுப்பதற்காக இந்தியா வளைகுடா ரூபாய் என்ற புதிய நாணயத்தை (வெளிநாட்டு ரூபாய் எனவும் அறியப்பட்டது) வெளியிட்டது. 1966 வரை புழக்கத்தில் இருந்த வளைகுடா ரூபாய் இந்திய ரூபாயின் மதிப்பிழப்பிற்குப் பின்னர் கைவிடப்பட்டு, புதிய கத்தாரி ரியால் நாணயம் உருவானது.
பெயர்க்காரணம்
'வெள்ளி' எனப் பொருள் தரும் சமசுகிருத சொல்லான ருப்யா-விலிரிருந்து ரூபாய் என்ற சொல் பிறந்தது. இன்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் "டாலர்" என்ற ஆங்கில நாணயப் பெயருக்கு இணையாக வெள்ளி என்ற தமிழ் சொல்லே சிங்கப்பூர்த் தமிழரகளால் பயன்படுத்தப்படுகிறது.
1540 முதல் 1545 வரை ஆட்சியில் இருந்த ஷேர் ஷா சூரி அறிமுகப்படுத்திய நாணயத்தின் பெயர் ருபியா ஆகும். அந்த வெள்ளி நாணயம் 178 கிராம் எடை உடையதாய் இருந்தது. அன்று முதல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலம் வரை அந்த நாணயம் பயன்பாட்டில் இருந்தது. முன்னர், ஒரு ரூபாய் 16 அணாக்களாகவும், ஒரு அணா நான்கு பைசாக்கள் அல்லது 12 காசுகளாகவும் அல்லது பைகளாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூபாய்க்கு குறைந்த நாணய மதிப்பை பதின்ம முறையில் நூற்றிலொரு பங்காக ஆக்கும் முறை இலங்கையில் 1869லும், இந்தியாவில் 1957லும் பாகித்தானில் 1961லும் நடைமுறைக்கு வந்தது.
ரூபாயின் பல்வேறு பெயர்களும் உச்சரிப்புக்களும்
"ரூபாய்" ஆங்கிலக் குறிகளில் Re. (ஒருமை), Rs. (பன்மை) என்றும் வழங்கப்பட்டு வருகிறது. 2012இல் இந்திய ரூபாய்க்கு தேவநாகரி எழுத்தான र (ர)வையும் உரோமானிய தலையெழுத்தான R-ஐயும் இணைத்து ₹ (இந்திய ரூபாய்க் குறியீடு) ஏற்படுத்தப்பட்டது.
வெவ்வேறு மொழிகளும் 'ரூபாயை' பல்வேறாக வெளிப்படுத்துகின்றன:
சிங்களம்: රුපියල් ரூபியால்
அசாமிய மொழி: টকা டாக்கா
வங்காள மொழி: টাকা டாக்கா
மைதிலி மொழி: টকা டாக்கா
திவெயி மொழி: ރުފިޔާ ரூஃபியா
பாரசீக மொழி: روپیه
குஜராத்தி: રૂપિયો ரூபியோ
இந்துசுத்தானி மொழி: रुपया روپیہ ரூப்யா
கன்னடம்: ರೂಪಾಯಿ ரூபாயி
மலையாளம்: രൂപ ரூபா
மராத்தி: रुपया ருப்பய்யா
நேபாளி மொழி: रुपैया ருபைய்யா
ஒடியா மொழி: ଟଙ୍କା டம்கா
பஷ்தூ மொழி: روپۍ ருபெய்
பஞ்சாபி: ਰੁਪਈਆ ரூபியா
சமசுகிருதம்: रूप्यकम् ரூப்யகம்
தமிழ்: ரூபாய் rūbāy உருப்பு உருப்பு என்பதிலிருந்து
தெலுங்கு: రూపాయి ரூபாயி
மதிப்பு
சேர் சா சூரியால் அறிமுகப்படுத்தப்பட்ட ரூபாய் வெள்ளியால் ஆனதாக இருந்தது. 178 கழஞ்சுகள் அல்லது 11.534 கி எடை உள்ளதாக இருந்தது. இந்த நாணயம் பிரித்தானிய இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிரித்தானியர்கள் ரூபாயின் மதிப்பை 11.66 கிராம் 0.917 தூய்மையான வெள்ளியாக வரையறுத்தனர். இது டிராய் அவுன்சில் 0.3437ஆக இருந்தது.
நாணயத்திலுள்ள வெள்ளியின் மதிப்பைக்கொண்டு நாணயமாற்றுக்களைக் கணக்கிடுவது 19வது நூற்றாண்டில் மிகுந்த சிக்கல்களை உருவாக்கின. உலகின் பலநாடுகளும் தங்கமாற்று சீர்தரத்தைப் பின்பற்றத் தொடங்கியிருந்தன. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பிய குடியேற்றங்களிலும் மிகுந்த வெள்ளி இருப்புக்கள் கண்டறியப்பட்ட நிலையில் தங்கத்திற்கு நிகராக வெள்ளியின் மதிப்பு வீழலாயிற்று. இதனால் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் இந்திய வெள்ளி ரூபாயின் மதிப்பு தங்கமாற்று சீர்தரத்துடன் இணைக்கப்பட்டு பிரித்தானிய நாணயமாற்றில் ஒரு ரூபாய் ஒரு சில்லிங்கும் நான்கு பென்சுக்கும் (அல்லது 1 ₤= 15 ரூபாய்கள்) சமமாக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
இந்திய ரூபாய்
இலங்கை ரூபாய்
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
ஷேர் ஷா சூரி முதன்முதலில் அறிமுகப்படுத்திய ரூபாயின் படங்கள்
பாக்கித்தானி நாணயம் - மிலன் ஜி
புதிய இந்திய ரூபாயின் குறியீடு பொருளாதார வலிமையை எதிரொளிக்கிறது
நாணய முறை
ஆசிய நாணயங்கள்
|
4335
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
தமிழ்நாட்டின் மாவட்டங்கள்
|
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழ்நாட்டின் தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.
மாவட்டங்களை பிரித்தல் 2019-2020
நவம்பர் 2019-இல் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசி மாவட்டம் (33), விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் (34), வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் (35) மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் (36), காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் (37), என 5 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டன. இப்புதிய மாவட்டங்களுக்கு 2019 நவம்பர் 16 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் 2020 மார்ச் 24 அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் (38) உருவாக்கப்பட்டது.
வரலாறு
1947 ஆகத்து மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது, சென்னை மாநிலம் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக, தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு, தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1966: சேலம் மாவட்டத்தைப் பிரித்து தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1974: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1979: கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1985: மதுரை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து, புதிதாக சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1985: மதுரை மாவட்டத்தைப் பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1986: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1989: வட ஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1991: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1993: தென் ஆற்காடு மாவட்டம், புதிதாக விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
1995: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1996: மதுரை மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1997: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1997: முந்தைய செங்கல்பட்டு மாவட்டமானது, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
2004: தர்மபுரி மாவட்டத்திலிருந்து புதிதாக கிருட்டிணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2007: பெரம்பலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2009: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2019: விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், (2019, சனவரி 8 ஆம் நாள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழ்நாட்டின் 33 வது மாவட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது); மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக செங்கல்பட்டு மாவட்டமும் (2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது); மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து, புதிதாக தென்காசி மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தைப் பிரித்து, புதியதாக திருப்பத்தூர் மாவட்டமும் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டமும் 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி உருவாக்கப்பட்டன.
2020: நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் ஆனது மார்ச் 24, 2020 அன்று உருவாக்கப்பட்டது.
மாவட்டம் பிரிப்பு கோரிக்கை
அதிகரிக்கும் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டும் மற்றும் நிர்வாக வசதிகளுக்காகவும் மாவட்டம் பிரிப்பு கோரிக்கைகள் அதிகரித்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆரணி, போளூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, செய்யார், வெம்பாக்கம், சமுனாமரத்தூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கி ஆரணி தலைமையில் விரைவில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார். ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என எடப்பாடி க. பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து பழனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைப் பிரித்து பொள்ளாச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும்; அதேபோல் ஈரோடு மாவட்டத்தைப் பிரித்து கோபிச்செட்டிப்பாளையம் நகரைத் தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன..
கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களை உள்ளடக்கி, புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்; தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் (மத்திய பிராந்தியத்தில் மூன்றாவது பெரிய நகரமாகவும், 150 ஆண்டுகள் பழமையான நகராட்சியில் ஒரு தலைமை நீதித்துறை நீதிமன்றம் மற்றும் முக்கிய அரசாங்க அலுவலுகங்களும் உள்ளன) என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்;
வடக்கு சென்னை மக்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னையை இரண்டாகப் பிரித்து, வடசென்னையை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தைப் பிரித்து, பொன்னேரியைத் தலைநகராகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து பட்டுக்கோட்டை தலைமையில் புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் கோரிக்கை வைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தைப் பிரித்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி மன்னார்குடி தலைமையில் புதிய மாவட்டம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவிலைத் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி கோரிக்கை வைத்துள்ளார். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைப் பிரித்து சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கோவில்பட்டியைத் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோரிக்கை வைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை பிரித்து கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தை பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, முஷ்ணம் ஆகிய வருவாய் வட்டங்களுடன், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள சில வருவாய் கிராமங்களை பிரித்து புதிதாக நெய்வேலி வட்டத்தையும் உருவாக்கி, 5 வட்டங்கள், 1 கோட்டம் அடங்கிய விருத்தாசலம் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை வைத்துள்ளார். சேலம் மாவட்டத்தை பிரித்து ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மண்டல வாரியாக மாவட்ட கோரிக்கை
இந்த மாவட்டங்களின் மண்டல வகைப்பாடு பொதுவாக மக்கள், ஊடகங்கள், தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.
வடக்கு (தொண்டை மண்டலம்)
ஆரணி
விருத்தாச்சலம்
ஓசூர்
பொன்னேரி
மத்திய (சோழ மண்டலம்)
கும்பகோணம்
மணப்பாறை
மன்னார்குடி
மேற்கு (கொங்கு மண்டலம்)
பொள்ளாச்சி
பழனி
ஆத்தூர் or எடப்பாடி
தெற்கு (பாண்டிய மண்டலம்)
கமுதி
மேலூர்
திருச்செந்தூர் or கோவில்பட்டி
சங்கரன்கோவில்
மாவட்டங்கள் பட்டியல்
மண்டல வாரியாக மாவட்டங்களின் பட்டியல்
மக்கள் தொகை
தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் மக்கட் தொகை 2011 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 46,81,087 பேர் வசித்து வருகின்றனர். இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 26,903 ஆக இருக்கிறது. இதன்படி மாநிலத்தில் அதிக மக்கள் அடர்த்தி பெற்ற மாவட்டமாக சென்னை உள்ளது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள மாவட்டம், நீலகிரி மாவட்டம் ஆகும். நீலகிரி மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி ஒரு ச.கி.மீ.க்கு 288 பேர். கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் முதன்மையாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் 92.14% பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். கல்வியறிவில் 64.71% பெற்று, தருமபுரி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது.
அட்டவணை
கீழே உள்ள அட்டவணையில், அனைத்து 38 மாவட்டங்களுக்கான புவியியல் மற்றும் மக்கட்தொகை அளவுருக்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
முந்தைய மாவட்டங்கள்
இதனையும் காண்க
தமிழக வருவாய் வட்டங்கள்
தமிழக மாநகராட்சிகள்
தமிழக நகராட்சிகள்
தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
தமிழகப் பேரூராட்சிகள்
மேற்கோள்கள்
தமிழக வருவாய்ப் பிரிவுகள்
|
4336
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE
|
கனடா
|
கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே அமெரிக்க ஒன்றியமும் மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன.
கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.
வரலாறு
ஆதிக்குடிகள்
கனடிய ஆதிக்குடிமக்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்: கனடிய செவ்விந்தியர்கள் ("Red Indians"), இனுவிட் (Inuit), மெயிரி (Metis). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களைக் கொண்டிருந்தாலும், இன, மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் கோணங்களில் கனடிய ஆதிக்குடிமக்கள் பலவகைப்படுவார்கள்.
செவ்விந்தியர் அல்லது இண்டியன்ஸ் என்ற சொல்லை இழிவானதாகக் கனடிய ஆதிக்குடிகள் கருதியதால், அவர்கள் தங்களை முதற் குடிகள் (First Nations) என்று அழைத்தார்கள். இம்மக்களின் வாழ்வியல், அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. வாழ்ந்த நிலப்பகுதிகளைக் கொண்டு முதற் குடிகளை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு:
சமவெளி மக்கள் – Plains
இறொக்குவா குடிகள் – Iroquoian Nations
வட வேட்டுவர் – Northern Hunters
வட மேற்கு மக்கள் – Northwest Cost
அல்கோன்க்கிய குடிகள் – Algonkian Nations
பீடபூமி மக்கள் – Plateau
கனடாவின் மிகக் குளிரான மேற்பகுதிகளில் வாழ்பவர்களே இனுவிட் ஆவார்கள். இவர்களை அழைக்க எஸ்கிமோ என்று தற்போது இழிவாகக் கருதப்படும் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கனடா என்றவுடன் விலங்குத்தோல் உடுப்புடன் பனிக்கட்டியினால் கட்டப்பட்ட அல்லது சூழப்பட்ட இருப்பிடங்களுக்கு பக்கத்தில் நிற்கும் இனுவிட் மக்களைச் சுட்டுவது ஒரு ஊடக மரபு. ஆதிக்குடிமக்கள் ஐரோப்பியர் கலந்த மரபினர் மெயிரி எனப்பட்டனர்.
ஐரோப்பியர் வரவு
பிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் ரோயல் துறைமுகம் என்ற பகுதியிலும், அதனைத் தொடர்ந்து 1608ம் ஆண்டு கியூபெக்கிலும் முதன்முதலில் குடியமர்ந்தனர். ஆங்கிலக் குடியேறிகள் நியூ பவுண்ட்லாந்தில் 1610 ஆம் ஆண்டு குடியமர்ந்தனர். ஐரோப்பியரின் வருகை, வட அமெரிக்காவுக்கு புது நோய்களைக் கொண்டுவந்தது. இதனால், அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத்திறனற்ற முதற்குடிமக்கள் பெரும்பான்மையானோர் இரையானார்கள்.
கனேடியக் கூட்டரசு உருவாக்கம்
பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் 1867 ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.
பல்நாட்டவர் வருகை
பிரெஞ்சு, ஆங்கிலேய குடிவரவாளர்களாலும் ஆதிக்குடிகளாலும் கனடா உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் ஒரு தொடருந்துப் பாதை கட்டவேண்டிய தேவை இருந்தது. இதற்காக 1880களில் சீனர்கள் தொடருந்துப் பாதை கட்டமைப்பில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். 1885 ஆம் ஆண்டு தொடருந்துப் பாதை கட்டிமுடிந்த பின்பு சீனர்கள் வரவு கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக "Chinese Exclusion Act" 1923 ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது.
கறுப்பின மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவில் குடியேறினார்கள். தொடக்கத்திலேயே அவர்கள் அடிமைகளாகப் பிரெஞ்சு மக்களுடன் கனடாவுக்கு வந்தனர். எனினும் 1793 ஆம் ஆண்டில், மேல் கனடாவில் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பல கறுப்பின மக்கள் கனடாவுக்கு விடுதலை தேடிவந்தனர். இவர்கள் வந்த பாதை நிலத்தடி இருப்புப்பாதை (Underground railroad) என்று அழைக்கப்பட்டது.
1920 ஆண்டளவில், கனடா இன அடிப்படியிலான குடிவரவுக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. இதன் காரணமாக ஐரோப்பியர் தவிர்ந்த ஏனைய இன மக்கள் கனடாவுக்குள் வருவது கடினமாக்கப்பட்டது. இக்கொள்கை 1967 இல் நீக்கப்பட்டது. எனினும், இதற்கமையவே இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பல்வேறு ஐரோப்பிய குடிவரவாளர்களை கனடா உள்வாங்கியது. வியட்நாம் போரின்போது அமெரிக்க draft dogers பலரையும் உள்வாங்கியது.
1971 ஆம் ஆண்டு, உலக நாடுகளிலேயே முதலாவதாக, கனடா பல்லினப் பண்பாட்டுக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆபிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில் கணிசமான தொகையாக இருந்தனர்.
புவியியல்
இட அமைவு
கனடா வட அமெரிக்காவின் தெற்கு 41% வீதத்தைத் தன்னகத்தே கொண்ட உலகின் இரண்டாவது பெரிய பரந்த நாடு ஆகும். வடக்கே வட முனையும், கிழக்கே அட்லாந்திக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும் மற்றும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. கிறீன்லாந்து கனடாவின் வட கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. கனடாவின் பரப்பளவு 9,984,670 கிமீ ஆகும். இதில் தரை 9,093,507 கிமீ, நீர் 991,163 கிமி ஆகும். கனடாவின் பரந்த பரப்பளவு காரணமாக அது பல்வேறு விதமான இயற்கையமைப்புகளையும் காலநிலைகளையும் கொண்டது.
இயற்கையமைப்பு
கனடாவில் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு தாவர வகைகள் வளர்கின்றன. மேற்குப் பகுதி மலையும் மலை சார்ந்த ஒரு நிலப்பகுதி ஆகும். இங்கு மழைக்காடு போன்ற காலநிலையும் அதே போன்று அடர்த்தியான காடுகளும் காணப்படுகின்றன. பிரெய்ரி தாழ்நிலப்பகுதியில் புல் வெளிகள் உண்டு. அதற்கு மேலே ஊசியிலைக் காட்டுத்தாவரங்களும், அதற்கு மேலே மிகக் குளிர் நிலப்பகுதியில் thundra (low grasses, shurbs, mosses, lichens) வும் காணப்படுகின்றன. தென் ஒன்ராறியோவிலும் கிழக்குப் பகுதிகளிலும் தூந்திரத் தாவரங்கள் (deciduous trees) உண்டு.
காலநிலை
கனடா மத்திய கோட்டுக்கு மிக மேலே இருப்பதால் பெரும்பாலும் கடும் குளிரான காலநிலையை கொண்டது. இடத்துக்கு இடம் சராசரி காலநிலை மாறியமையும். மேற்கு கனடாவில் குளிர்காலத்தில் -15 செல்சியஸ் சராசரி வெப்பநிலையைக் கொண்டிருக்கும்; இது, -40 வரை தாழக்கூடியது. வடக்குப் பகுதிகளில் குளிர் மிக அதிகமாகவும், குளிர்காலம் 11 மாதங்கள் வரை நீடிக்கவல்லதாகவும் இருக்கும். தெற்குப் பகுதிகளில் ஏழு மாத காலம் வரை குளிர்காலம் இருக்கும். குளிர்காலத்தில் பனிமழை விழுவதும், இடங்கள் எல்லாம் விறைத்துக் காணப்படுவதும் இங்கு வழமை.
கோடை காலத்தில் கிழக்கிலும் மேற்கிலும் 20 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையையும், இடைப்பட்ட பகுதிகளில் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையையும் கொண்டிருக்கும். விதிவிலக்காக, பசிபிக் பெருங்கடல் கடற்கரை கொண்டிருக்கும் பிரிற்ரிஸ் கொலம்பியா மிதவெப்பக் (temperate) காலநிலையுடன், மழை பெறும் நிலப்பகுதியாகவும் இருக்கின்றது.
கனடா மாகாணங்களும் ஆட்சி நிலப்பகுதிகளும்
பொருளாதாரம்
கனடா ஒரு வளர்ச்சியடைந்த நாடு ஆகும். பொதுவாக ஒரு நடுநிலை பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. திறந்த சந்தை பொருளாதாரத்தை ஏற்றும் அதே வேளை பொருளாதாரத்தை வளப்படுத்துவதில், சமூக நீதியை பேணுவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதும் கனடாவின் அணுகுமுறையாக இருக்கின்றது. திறந்த சந்தையால் வழங்க முடியாத சேவைகளை வழங்குதல், பொதுநலனை பாதுகாத்தல், சமவாய்ப்புச் சூழலைப் பேணல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் போன்ற செயல்பாடுகளில் அரசு முக்கியப் பங்கு வகிக்கின்றது.
இயற்கை வளம்
நிலம், நீர், காடு, மீன், எண்ணெய், கனிமங்கள் ஆகிய இயற்கை வளங்கள் கனடாவில் மிக்க உண்டு. பிரிட்டிஷ் கொலம்பியாவில் மரங்கள் பேண்தகுமுறையில் வெட்டப்பட்டு அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1950 களில், அல்பேர்டாவில் எண்ணெய் கண்டறியப்பட்டது. அல்பேர்டா, இன்று செல்வம் மிக்க ஒரு மாகாணமாக வளர எண்ணெய் உற்பத்தி ஏதுவாக்கிற்று. கனடாவே அமெரிக்காவுக்கு அதிக விழுக்காடு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு என்பது குறிப்படத்தக்கது. அட்லாண்டிக் மாகாணங்கள் மீன்பிடி வளம் மிக்கப் பகுதிகளாகும். எனினும் முந்தைய பேண்தகுமுறையற்ற மீன்பிடிப்பால் பல மீன்வளங்கள் அருகிப்போய்விட்டன. தற்சமயம் இந்த மாகாணங்களை அண்டிய கடற்பகுதியிலும் எண்ணெய் வளம் இருப்பது தெரியவந்து, அதை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்தப்படுகின்றது. வட ஒன்ரோறியோவில் தங்கம், நிக்கல், யுரேனியம், காரீயம் ஆகிய கனிமச் சுரங்கங்கள் உண்டு. இவற்றின் உலக உற்பத்தி அளவில் கனடாவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. கனடா இயற்கைவளம் மிக்க நாடு என்றாலும் கனடாவின் மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) 6% மட்டுமே இத்துறையில் இருந்து வருகின்றது; 4% மக்களே இதில் பணியாற்றுகிறார்கள்.
வேளாண்மை
வேளாண்மையும் அதனை சார்ந்த தொழிற்துறைகளும் மொத்த தேசிய உற்பத்தியில் 8.3 விழுக்காட்டை கொண்டு கனடிய பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றது (2003 கணிப்பீடு).
உள்கட்டுமானம்
கனடாவின் உள்கட்டுமானக் கூறுகளான போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் ஆகியவை உறுதியாகக் கட்டமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, தேவைக்கேற்ப விரிவாக்கப்பட்டு வருகின்றன. வளர்ச்சி பெற்ற மனிதவளமும், இணக்கமான வினைத்திறன் மிக்க அரசியல் சூழலும் இதை ஏதுவாக்கின்றன.
போக்குவரத்து
முதன்மைக் கட்டுரை: கனடாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு
கனடாவின் விரிந்த நிலப்பரப்பு காரணமாக எல்லைக்கு எல்லை அதனை இணைக்கும் ஒரு சிறந்த போக்குவரத்து வழி அதன் இருப்பிற்கு முக்கியமாக அமைகின்றது. மனிதர்களையும் பொருட்களையும் ஏற்றி இறக்கும் வழிமுறைகள் சிறப்பாக அமைவது பொருளாதரத்திற்கு அவசியமாகவும், இதன் காரணமாக, அரசியலில் முக்கிய அம்சமாகவும் கனடாவில் இருக்கின்றது. ஆகையால், சாலைகள், தொடருந்துப் பாதைகள், வான்வழி, கடல்வழி மற்றும் குழாய்வழி போக்குவரத்துக்கள் விரிவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன.
பொருள் உற்பத்தி
தென் ஒன்ராறியோவில் வளர்ச்சி அடைந்த உற்பத்தித்துறை உண்டு. கூடிய அளவு கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கியூபெக் மாகாணம் உலகின் ஆறாவது பெரிய விமான உற்பத்தி இடமாகும். இவற்றைத் தவிர பலதரப்பட்ட பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
சேவைத் துறை
கனடாவின் பொருளாதாரத்தில் பெரிய துறை சேவைத்துறையாகும். இத்துறை சில்லறை வணிகம், நிலம்/மனை வணிகம், நிதி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம், கேளிக்கை மற்றும் சுற்றுலாத் துறைகளை உளளடக்கியது. இத்துறையிலேயே 75 விழுக்காடு மக்கள் வேலை செய்கின்றார்கள்.
அறிவியலும் தொழில்நுட்பமும்
கனடா, ஓர் உயர்ந்த, தொழில்மயமாக்கப்பட்ட, அறிவு அடிப்படை பொருளாதரக் கட்டமைப்பை உருவாக்கிப் பேண முயல்கின்றது. அதற்கு தேவையான தகவல், தொடர்பாடல் உள்கட்டமைப்பை ஏற்படுத்தி, கனடாவின் ஆராய்ச்சி வடிவமைப்புக் கட்டமைப்பையும் முனைப்புடன் வழிநடத்தி வருகின்றது. இயல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் (Natural Sciences and Engineering Research Council) இப்பணியை மேற்கொண்டு வருகின்றது. CANDU reactor, Canada Arm, Maple (software) ஆகியவை கனடாவின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் சிறப்புக்குச் சில எடுத்துகாட்டுக்கள் ஆகும்.
ஏற்றுமதி / இறக்குமதி
கனடாவின் ஏற்றுமதி / இறக்குமதியில் அமெரிக்கா முதன்மைப் பங்கு வகிக்கிறது. கனடாவின் 81% ஏற்றுமதியும் 67% இறக்குமதியும் அமெரிக்காவுடனே அமைந்திருக்கிறது. இது அமெரிக்காவின் 23% ஏற்றுமதியையும் 17% இறக்குமதியையும் சுட்டுகின்றது.
அரசமைப்பு
கனடா அடிப்படையில் ஒரு மக்களாட்சிக் கூட்டரசு ஆகும். அத்தோடு, அரசியலைமைப்புச்சட்ட முடியாட்சியும் ஆகும். பெயரளவில், எலிசெபெத் II கனடாவின் அரசி ஆவார். நடைமுறையில் நாடாளுமன்ற மக்களாட்சியும் மரபுமே முக்கியத்துவம் பெறுகின்றன.
கனடாவின் மிகு உயர் சட்ட அமைப்பு கனடா அரசியலமைப்பு சட்டம் ஆகும். இது அரசாளும் முறைகளையும் மக்களின் உரிமைகளையும் விபரிக்கின்றது. இது உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனத்தை (Canadian Charter of Rights and Freedoms) உள்ளடக்கியது. இந்தச் சாசனத்தின் பகுதி 12 கனடாவின் பல்லினப்பண்பாடுக் கொள்கையை அதன் அரசியலமைப்புச் சட்டத்திலேயே உறுதி செய்கின்றது.
உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனத்தில் விவரிக்கப்பட்ட மனித உரிமைகள் பிற அரச சட்டங்களினால் மறுதலிக்கவோ முரண்படவோ முடியாதவையாகும். எனினும், கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தில் தரப்பட்ட "notwithstanding clause", கொண்டு மத்திய அரசோ, மாகாண சட்டசபையோ இடைக்காலமாக ஐந்து வருடங்களுக்குக் கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தின் சில அம்சங்களை மீறி ஆணை செய்யலாம். நடைமுறையில் "notwithstanding clause" மிக அரிதாக, கவனமாக, கடைசி வழிமுறையாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
கனடா மூன்று நிலை அரசுகளைக் கொண்டது. அவை நடுவண் அரசு, மாகாண/ஆட்சிப் நிலப்பரப்பு அரசுகள், நகராட்சி/ஊர் அரசுகள் ஆகும். கனடாவின் நடுவண் அரசே கனடாவை நாடு என்ற வகையில் முன்னிறுத்துகின்றது. குறிப்பாகக் கூட்டரசு நிர்வாகம், பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை நடுவண் அரசு கவனிக்கின்றது.
கனடாவின் மத்திய பாராளுமன்றம் ஆளுனர், மக்களவை, செனற் ஆகியவற்றால் ஆனது. கனாடவின் முடிக்குரியவரின் சார்பாக, மரபு ரீதியான சில முக்கிய கடமைகளை ஆளுனர் ஆற்றுவார். கனடா பிரதமரின் பரிந்துரைக்கமைய கனடாவின் முடியுரிமைக்குரியவரால் ஆளுனர் நியமிக்கப்படுகின்றார்.
மக்களால் தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் 308 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையே கனடாப் பாராளுமன்றத்தின் முக்கிய பிரிவு ஆகும். ஒவ்வொரு உறுப்பினரும் கனடாவின் ஒரு தேர்தல் தொகுதிக்கும், அத்தொகுதியின் மக்களுக்கும் சார்பாகச் செயல்படுகின்றார். தேர்தல் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும்.
செனட், 112 சார்பாளர்கள் வரை கொண்டிருக்கலாம். செனட் பிரதிநிதித்துவம் நிலப்பகுதி அடிப்படையில் அமைகின்றது. செனற் உறுப்பினர்கள் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு ஆளுனரால் நியமிக்கப்படுகின்றார்கள்.
கனடா அரசின் தலைவராகப் பிரதமர் விளங்குகின்றார். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியின் தலைவர் பிரதமர் ஆகும் தகுதி பெறுகின்றார். பிரதமரையும் அவர் தெரிவு செய்யும் அமைச்சரவையையும் அதிகாரப்பூர்வமாக ஆளுனர் நியமிக்கின்றார். மரபுரீதியாக, அமைச்சரவை, பிரதமரின் கட்சியிலிருந்து பிரதமரால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களால் ஆனது. அரச செயல் அதிகாரம் பிரதமராலும் அமைச்சரவையாலும் வெளிப்படுத்தப்படுகின்றது.
அரசியல் கட்சிகள்
முக்கிய நடுவண் அரசியல் கட்சிகள்:
கனடா பழமைவாதக் கட்சி
கனடா நடுநிலைமைக் கட்சி
க்குயூபெக்கா கட்சி
கனடா புதிய ஜனநாயகக் கட்சி
கனடா பசுமைக் கட்சி
சட்டம்
கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் அதன் நடுவண், மாகாண அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்து, சட்ட உருவாக்க வழிமுறைகளையும் விபரிக்கின்றது. மாகாண அரசுகள் உள்ளூர் அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்கின்றன. அரசுகள் தகுந்த வழிமுறைகளுக்கமைய சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துகின்றன.
கனடாவின் நீதியமைப்பு சட்டங்களைப் புரிந்து நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் சட்டங்களைச் செல்லுபடியாகாமல் செய்யும் அதிகாரம் நீதியமைப்புக்கு உண்டு. கனடாவின் உச்ச நீதி மன்றமே நீதிக் கட்டமைப்பின் அதி உயர் அதிகாரம் கொண்டது.
நிர்வாகம்
கனடாவின் ஆட்சி நிர்வாகத் துறை அரசை நிர்வகித்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மக்களுக்குச் சேவைகள் வழங்கல் என பல வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. அரசியல் இடையூறுகளை மட்டுப்படுத்தி, ஊழலற்ற, வெளிப்படையான திறன் வாய்ந்த நிர்வாகத்தைத் தருவது வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அவசியமாகின்றது. ஒப்பீட்டளவில் கனடாவின் நிர்வாகத்துறை சிறப்பாகச் செயல்படுகின்றது.
மருத்துவ சேவை
1960களில் கனடிய மக்கள் மருத்துவத் தேவைகளை ஒரு சமூகப் பொறுப்பாக உணர்ந்தார்கள். இந்தத் தேவையை, உணர்வை 1964 மருத்துவச் சேவைகளுக்கான அரச ஆணைய முடிவுகள் வெளிப்படுத்தியது. இந்த ஆணையம் செய்த பரிந்துரைகளுக்கு ஏற்ப மருத்துவக் கவனிப்புச் சட்டம் 1966ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய தனிமனித மருத்துவச் செலவுகள் சமூகத்தால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மருத்துவச் சேவைகள் அரசினால் வழங்கப்படலாயிற்று. அனைவருக்கும் ஒரே தரம் உள்ள சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் இச் சட்டம் மிகவும் அவதானமான உறுதியான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாகப் பணம் படைத்தோர் காத்திருப்பு வரிசை தாண்டிச் சேவைகளைப் பெறுவற்கு இச்சட்டம் இடம்கொடுக்கவில்லை.
இன்று, அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளும், முதுமையடையும் சமூகத்தின் அதிகரிக்கும் மருத்துவ தேவைகளும், கனேடிய மத்திய மாகாண அரசுகளை இறுகிய நிலைக்கு இட்டுசென்றுள்ளன. தனியார் சேவைகள், பணம் உடையோர் தனியார் சேவைகள் பெறுவதற்கு அனுமதி, தனியார் அரச கூட்டு சேவையமைப்பு போன்ற கொள்கைகள் இன்று சிலரால் முன்னிறுத்தப்படுகின்றனர். எனினும் பெரும்பான்மையான கனடிய மக்கள் மருத்துவ சேவைகள் சமூகத்தின் பொறுபே என்றும் பிரதானமாக அரசே வளங்கவேண்டும் என்ற கருத்துடையவர்கள்.
கல்வி
கனடாவில் எழுதப் படிக்கத் தெரிந்தோர் 95%க்கும் கூடுதலாக உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இங்கு 42.5% மக்கள் மேல்நிலைக் கல்வியை (some form of post secondary education) பெற்றுள்ளார்கள்.
கனடாவில் கல்வியை
அடிப்படைக் கல்வி (elementary (Kindergarden – Grade 8)),
உயர்கல்வி (secondary (Grade 9-12)),
மேல்நிலைக்கல்வி (post secondary: undergraduate, trade, post graduates)
என்று பிரிக்கலாம்.
அடிப்படைக்கல்வியும் உயர்கல்வியும் அரச, தனியார் துறைகளால் வழங்கப்படலாம். ஆனால், மேல்நிலைப் பல்கலைக்கழக படிப்புக்களை அரசே வடிவமைத்துச் செயல்படுத்துகின்றது. அடிப்படைக் கல்வியும் உயர் கல்வியும் அனைவருக்கும் பொது அரச பாடசாலைகளில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. பெரும்பான்மையான மாணவர்கள் அரச பாடசாலைகளுக்கே செல்கின்றார்கள், தரமும் நன்றாக அமைகின்றது. உயர் பொருளாதார வசதி படைத்தோரும், சமய சார்பினர் சிலரும் தனியார் பாடசாலைகளை நடத்துக்கின்றார்கள். மேல்நிலைக் கல்வி அரசே நடத்தினாலும் மாணவர்களும் குறிப்பிடத்தக்க செலவைக் கல்விப் பயிற்சிக் கட்டணமாகப் பங்களிக்கவேண்டும். இவை தவிர நடுவண் அரசின் நேரடி நிர்வாகத்தில் பாதுகாப்பு துறைக்கென முற்றிலும் இலவசமான மேல்நிலைக் கல்விக்கூடங்கள் உண்டு. அரசு கல்வியை சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கும் நீதிக்கும் சமத்துவத்துக்கும் முக்கியமான ஒரு கருவியாகக் கருதி வழங்கி வருகின்றது.
வெளியுறவுக் கொள்கைகள்
கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் அதன் அண்டை நாடான அமெரிக்காவுடனான உறவே அதிமுக்கியத்துவம் பெறுகின்றது. கனடாவும் அமெரிக்காவும் உலகின் நீண்ட மதில்கள் அற்ற எல்லையைக் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் பெரிய அளவில் வணிக உறவு உள்ளவையாக இருக்கின்றன. மேலும், வடஅமெரிக்க திறந்த வணிக வலய ஒப்பந்தம் ஊடாகக் கனடா அமெரிக்கா மெச்சிக்கோ ஆகிய நாடுகளுடன் ஒரு நெருக்கமான நட்பான தொடர்பைப் பேணி வருகின்றது.
கனடா தென் அமெரிக்காவுடன் மேலும் வலுவான உறவை விரும்புகின்றது. அமெரிக்க கொள்கைகளில் இருந்து விலகி கியூபாவுடன் கனடா நட்புறவு வைத்திருக்கின்றது. மேலும், அமெரிக்க நாடுகள் அமைப்பில் (Organization of American States – OAS) 1990ஆம் ஆண்டு கனடா இணைந்தது. ஜூன் 2000ல் விண்ட்சரில் அமெரிக்க நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தை நடத்தியது.
கனடாவுக்கும் பிரட்டன் பிரான்ஸ் நாடுகளுக்குமிடையான வரலாற்றுப் பிணைப்பு இன்றும் வலுவாக நீடித்து வருகின்றது. கனடா, பொதுநலவாய நாடுகள் மற்றும் பிரான்கோபோனி உறுப்பு நாடாகும். மேலும், கனடாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையான தொடர்பு NATO, G8 ஊடாக வலுவானது.
கனடாவின் மேற்கு எல்லை பசிபிக் பெருங்கடல் ஆகும். அதனால் கனேடிய பசிபிக் நாடுகளுடான தொடர்பும் நீண்ட வரலாற்றைக் கொண்டது. கனடா ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒரு உறுப்பு நாடாகும். கனடாவுக்கும் சீனாவுக்குமிடையான வணிகமும் அதிகரித்து வருகின்றது.
இன்று, கனடாவின் பல்நாட்டு குடிவரவாளர்களின் உதவியுடன் தெற்கு ஆசிய, மத்திய ஆசிய, மேற்கு ஆசிய, ஆபிரிக்க நாடுகளுடான தொடர்பை மேம்படுத்த முனைகின்றது. ஆழிப் பேரலைக்கு உதவிய நாடுகளிலும், ஆபிரிக்காவுக்கும் உதவும் நாடுகளிலும் கனடா முன்னிற்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புக் கட்டமைப்பு
கனடாவின் பாதுகாப்புப் படை தரை, கடல், வான், சிறப்புப் படையணிகளை கொண்டுள்ளது. இவையனைத்தும் ஒரு கூட்டுக் கட்டமைப்புக்குள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. படைகளின் அதி உயர் இராணுவ அதிகாரி பாதுகாப்புப் பணியாளர்களின் தளபதி ஆவார். இவர் பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரதம அமைச்சருக்கும் கட்டுப்பட்டவர்.
கனடா கூட்டமைப்பு பின்பு பொர் யுத்தம், முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், கொரியப் போர், குவைத் போர் ஆகியவற்றில் பங்கெடுத்தது. 1960 களின் பின்பு கனேடியப் படைகள் பெரும்பாலும் அமைதிப் படைகளாகப் பல நாடுகளுடன் கூட்டமைப்புகளிலோ அல்லது ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடாகவோ பணியாற்றி வருகின்றன. தற்போது கனேடிய படையணிகள் கொசாவிலும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் 35 கனேடிய வீரர்களுக்கு மேல் இதுவரை இறந்துள்ளார்கள்.
கனடா இரண்டாம் உலகப்போர் முடிவில் உலகின் வலு மிக்க படைகளின் ஒன்றாக இருந்தது. இன்று ஒப்பீட்டளவில் கனடாவின் பாதுகாப்புப் படை மிகவும் சிறியது. கனடா, அமெரிக்காவின் நட்புறவு நாடாக அதற்கு அருகாமையில் இருப்பதாலும், NATO NORAD ஆகியவற்றின் உறுப்பினராக இருப்பதாலும் அதன் பாதுகாப்புப் படை பெரிதாக இருக்கவேண்டிய தேவை இல்லை எனலாம். இன்று, கனடா பொதுவாகப் பல்நாட்டு கூட்டமைப்பின் அங்கமாகவே போரில் ஈடுபடும் கொள்கையைப் பெரும்பாலும் கொண்டிருக்கின்றது. எனினும் வியட்நாம் போரிலும் இராக் போரிலும் அமெரிக்க படைக் கூட்டமைப்பில் சேர மறுத்தது குறிப்பிடத்தக்கது.
சமூகம்
மக்கள் வகைப்பாடு
கனடா இரண்டாவது பெரிய நாடாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் சிறிய மக்கள் தொகையையே கொண்டது. கனடா புள்ளிவிபரத்திணைக்கள 2006 மக்கள் தொகைமதிப்பு அறிக்கையின் படி 31,612,897 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இத்தொகை 2001 கணிப்பீட்டில் இருந்து 5.4 வீதம் மக்கள் தொகை உயர்வைக் காட்டுகின்றது. மக்கள் தொகை எண்ணிக்கை குடிவரவாளர்களாலேயே கூடுகின்றது.
சமூக அமைப்பு
கனேடிய சமூக அமைப்பின் கட்டமைப்பை நோக்கினால், ஆங்கிலேயர்களே (ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வந்தவர்கள்) பணவசதி, அரசியல் அதிகாரம், சமூக முன்னுரிமை கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். அவர்களுக்கு அடுத்து, பிற ஐரோப்பியர்களும், யூதமக்களும் விளங்குகின்றார்கள்.
கனடாவிற்கு குடியேறிய ஆங்கிலேயர்களில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர், அமெரிக்கர்களைப் போலன்றி இங்கிலாந்துக்குச் சார்பானவர்கள் (Loyalists) என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், இங்கிலாந்துச் சமூக கட்டமைப்பின் மேல்வர்க்கம் எனலாம். மேலும், அமெரிக்கப் புரட்சியின் போது இங்கிலாந்துக்கு சார்பானோர் இங்கு வந்து குடியேறினர்.
தனியார் கல்விக்கூடங்கள், அரசு, வணிகங்கள் மற்றும் ஊடகங்களைத் தங்கள் ஆளுகைக்குள் உட்படுத்துவதன் மூலம் அதிகார வர்க்கத்தினர் தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றார்கள். மிகச் சிறிய எண்ணிக்கையான குடும்பங்களே கனடாவின் பெரும்பான்மையான செல்வத்தைக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், கனடிய சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு அமெரிக்காவில் இருக்கும் ஏற்றத்தாழ்வை விடப் பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, கனடாவிற்கு புதிதாகக் குடிவரும் சமூகம் அடிமட்ட பொருளாதார அடுக்கமைவில் இடம் வகிக்கும். நாளடைவில் பெரும்பாலானோர் பொது நீரோட்டத்தில் இணைவதற்கு வாய்ப்புகள் பல உண்டு. எனினும் சில சமூகங்கள் இதற்கு விதிவிலக்காக அமைவதும் உண்டு.
கனேடிய தொல்குடிகள் மிகவும் பின் தங்கிய சமூகக் குழுக்களில் ஒன்று. தொல்குடிகள், ஐரோப்பியர் வருகையால் மிகவும் பாதிக்கப்பட்டு சுரண்டப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்குத் தற்போது பல சிறப்புச் சலுகைகள், உரிமைகள் இருந்தாலும் இவர்கள் இன்னும் ஒரு பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றார்கள்.
இனப் பாகுபாடு
கனடாவின் 80% மேற்பட்ட மக்கள் ஐரோப்பிய வெள்ளை இன மக்கள் ஆவார்கள். எனினும் இவர்களுக்குள் பல இனங்கள் உண்டு. ஆங்கிலேயர், பிரெஞ்சு, ஸ்கோற்ரிஸ், ஐரிஸ், ஜெர்மன், இத்தாலியன், உக்கிரேனியன் என பல இனங்களாக இவர்கள் தங்களை தனித்துவப்படுத்துவர். கனடாவில் 13.4 வீதத்தினர் அடையாளம் காணக்கூடிய சிறுபான்மையினர் (visible minorities) என்றும், 3.4 வீதத்தினர் முதல் குடியினர் என்றும் மக்கள்தொகை கணிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சீனர்கள், கறுப்பர்கள், தெற்காசிய சமூகத்தினர் ஆகியோர் அடையாளம் காணக்கூடிய சிறுபான்மையினர் என்ற வகைக்குள் அடங்குவர்.
கனடாவில் தமிழர்கள்
ஏறக்குறைய 250 000 தமிழர்கள் கனடாவில் வசிப்பதாகப் பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன, எனினும் தெளிவான ஒரு புள்ளி விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை. பெரும்பாலான தமிழர்கள் ரொறன்ரோ நகரத்திலேயே வசிக்கின்றார்கள். பிறரும் மொன்றியால், வன்கூவர், கால்கரி போன்ற பெரும் நகரங்களிலேயே வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 80 களின் பின்பு ஈழப் போராட்டம் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள்.
சமயப் பிரிவுகள்
கனடாவில் பல சமயத்தவர்கள் வாழ்கின்றார்கள். இவர்களில் 77.1 % கிறித்தவ சமயத்தவர்கள் ஆவார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் 17% சமய சார்பு அற்றவர்கள். எஞ்சிய 6.3% மக்கள் வேறு சமயங்களைப் பின்பற்றுகின்றார்கள்.
மொழிகள்
[[படிமம்:Bilinguisme au Canada-fr.svg|thumb|alt=map of Canada with English speakers and French speakers at a percentage|Approximately 98% of Canadians can speak English and/or French.']]
ஆங்கிலம், பிரெஞ்சு இரண்டும் ஆட்சி மொழிகளாகும். பிரெஞ்சு மக்களின் மொழிப் போரின் பின்னரே ஜூலை 7, 1969 அலுவல் மொழிச் சட்டம் ஊடாகக் கனடா முழுவதும் ஆட்சி மொழியானது. இதன் பின்னரே கனடா இருமொழி நாடாக அறியப்படலாயிற்று.
நூனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழி ஆட்சி மொழியாகும். இனுக்டிடூட் இனுவிற் முதற் குடிமக்களின் மொழியாகும். அம்மொழியை பேசும் மக்கள் 20 000 வரையில் இருந்தாலும், அவர்களுக்கும் அந்த மொழிக்கும் தரப்படும் மதிப்பும் அக்கறையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆங்கிலத்தை 59.7% மக்களும், பிரெஞ்சை 23.2% மக்களும் தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள். கனடா ஒரு பல்பண்பாடு நாடாக இருந்தாலும் நாட்டின் ஒவ்வொரு குடிமையும் ஒரு ஆட்சி மொழியையாவது அறிந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால், 98.5% மக்களுக்கு ஏதாவது ஒரு ஆட்சி மொழியிலாவது பேச முடியும்.
ஆட்சி மொழி அல்லாத மொழிகளுக்கும் தகுந்த முக்கியத்துவம், மதிப்பு, சுதந்திரம் வழங்கப்படுகின்றது. ஆட்சி மொழியற்ற ஒரு மொழியை 5,202,245 மக்கள் தங்கள் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட மக்கள் செறிந்து வாழும் ஒரு இடத்தில் அந்த மொழியில் சமூக சேவைகள் பெற, அந்த மொழியைக் கற்க, பாதுகாக்க உதவ அரசு முற்படுகின்றது. சீன, இத்தாலியன், ஜெர்மன், பஞ்சாபி மொழிகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது.
பண்பாடும் வாழ்வியலும்
அடிப்படையில் கனடாவின் பண்பாடு மேற்கத்தைய பண்பாடே. குறிப்பாக ஆங்கில, பிரெஞ்சு, ஐரிஸ், ஸ்கொரிஸ் ஆகிய ஐரோப்பிய பண்பாட்டுக் கூறுகளால் ஆனது. இது தவிர முதற்குடிமக்களின் சில பண்பாட்டு கூறுகளையும் உள்வாங்கியது. 1960ன் பின்பு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் குடிவரவாளர்காளால் ம் ஆண்டு கனடா ஒரு பல்பண்பாட்டு நாடாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பல்பண்பாட்டுக் கூறுகளை ஏற்று உள்வாங்கினாலும் popculture அமெரிக்க பண்பாட்டையே ஒத்து இருக்கின்றது. தொலைக்காட்சி, திரைப்படம், இலக்கியம், இசை, உணவு, விளையாட்டு என பொது வாழ்வியல் அம்சங்கள் அனைத்தும் அமெரிக்காவை ஒத்தே இருக்கின்றது. இது கனேடிய மக்களும், கனேடிய அரசின் பண்பாட்டு அமைச்சகமும் அடிக்கடி அலசும் ஒரு விடயம். இங்கு கனேடிய கலைஞர்கள் இசை, நகைச்சுவை போன்ற துறைகளில் அமெரிக்காவில் அதிகளவில் செல்வாக்கு செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
கனேடிய பண்பாடு அமெரிக்காவை பலவழிகளில் ஒத்து இருந்தாலும் முக்கிய வழிகளில் வேறுபடுகின்றது. கனடாவின் குளிர் சூழல் மற்றும் பரந்த இயற்கையமைப்பு ஒரு வித தனித்துவமான பண்பாடு உருவாவதற்கு ஏதுவாகின்றது. கடும் குளிர், மக்கள் ஒவ்வொருவரும் மற்றவரில் தங்கியிருப்பதை உணர்த்தி ஒத்து போகும் போக்கை உருவாக்குகின்றது. மேலும், குளிர்கால விளையாட்டுக்களான பனி ஹாக்கி, பனிச் சறுக்கு (skiing) ஆகியவை கனேடிய வாழ்வியல் அடையாளத்தின் முக்கிய அம்சங்கள்.
அமெரிக்காவில் கணிசமானோர் தீவிர கிறிஸ்தவ சமய போக்கைப் பின்பற்றுகின்றார்கள். மாறாக, கனடாவில் சமயம் பொது வாழ்வியலில் முக்கியத்துவம் பெறுவதில்லை. புள்ளி விபரப்படி 17% கனேடியர்கள் சமய சார்பு அற்றவர்கள். கனடா பண்பாடு பெரும்பாலும் சமயச்சார்பற்ற தன்மையுடையது. மேலும், இங்கு ஒரே பால் திருமணங்கள் சட்ட ஏற்புடையவை; ஒரே பால் இணைகளுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு.
விளையாட்டு
கனடாவில் விளையாட்டுக்களை மூன்று வகைப்படுத்தலாம். அவை குளிர்கால விளையாட்டுக்கள், கோடை கால விளையாட்டுக்கள், உள்ளக விளையாட்டுக்கள். குளிர்காலத்தில் விளையாடப்படும் பனி ஹாக்கி கனடாவின் குளிர்கால தேசிய விளையாட்டு ஆகும். வேறு எந்த விளையாட்டையும் விட இதுவே கனடிய அடையாளத்துடன் பண்பாட்டுடன் பின்னியிணைந்தது. இந்த விளையாட்டில் கனடியர்கள் உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களாகத் திகழ்கின்றார்கள். கனடியர்கள் யார் என்பதை வரையறை செய்வதில் இந்த விளையாட்டு ஒரு முக்கிய களமாக இருக்கின்றது. இவை தவிர குளிர்கால விளையாட்டுக்களான skating, skiing, skate boarding போன்றவையும் பலரறி குளிர்கால விளையாட்டுக்களாகும்.
கோடைகாலத்தில் லக்ரோஸ் (எறிபந்து?), கனடிய கால்பந்து (Canadian football), baseball, கால்பந்து, துடுப்பாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. லக்ரோஸ் கனடாவின் கோடைகால தேசிய விளையாட்டு ஆகும். கனடாவின் முதற்குடிமக்களின் விளையாட்டுக்களில் ஒன்று மிகவும் பிரபலமாகி வருகின்றது. கால்பந்து பரவலாக விளையாடப்படுகின்றது, ஆனால் மட்டைப்பந்து விளையாடப்படுவது வெகுகுறைவு.
கூடைப்பந்து, curling உட்பட பலதரப்பட்ட வேறு விளையாட்டுக்களும் விளையாடப்படுகின்றன. கூடைப்பந்து கனடியர் ஒருவரால் உருவாக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது. கனடாவிலுள்ள ஒரு என். பி. ஏ. கூடைப்பந்து அணி, டொராண்டோ ராப்டர்ஸ், அமைந்துள்ளது. Curlingம் அடிப்படையிலேயே கனடிய விளையாட்டு ஆகும்.
பொதுவாக, கோடைகால ஒலிம்பிக் போட்டிகளைக் காட்டிலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கனடா கூடிய பதக்கங்களை வெல்லும்.
ஊடகத்துறை
கனடா வளர்ச்சி பெற்ற ஊடத்துறையை கொண்டுள்ளது. ஆரோக்கியமான அரச ஓளி/ஒலி பரப்பு நிறுவனங்களையும், தனியார் துறையையும் கொண்டுள்ளது. கனடாவில் பல தொலைக்காட்சி, திரைப்படத் தயாரிப்புகள் நடை பெறுகின்றது. ஆனால் அவை பெரும்பாலும் அமெரிக்க பொது நுகர்வோருக்காகவே எடுக்கப்படுகின்றன. The Globe and Mail, National Post என்ற இரு தேசிய இதழ்கள் உண்டு; எனினும் The Toronto Star அதிக வாசகர்களைக் கொண்டது.
நாட்டின் குறியீடுகள்
கொடி – மேப்பிள் இலைக் கொடி
விலங்கு – நீரெலி
பறவை – கோமன் லூன்
மரம் – மேப்பிள்
குளிர்கால விளையாட்டு – பனி ஹாக்கி
கோடைகால விளையாட்டு – லக்ரோஸ்
அரசியல், சமூக, பொருளாதார, சூழலியல் பிரச்சினைகள்
கனடா வளர்ச்சியடைந்த ஒரு நாடாக இருந்தாலும், அந்த நிலையைத் தக்க வைக்கவும் மேலும் வளரவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றது. கனடாவில் முதற்குடிமக்களும் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள்.
கனடா தேசிய கீதம் (தமிழில்)
ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ உந்தன் மைந்தர்கள் உண்மை தேசபக்தர்கள். நேரிய வடக்காய் வலுவாய் இயல்பாய் நீ எழல் கண்டு உவப்போம் எங்கும் உள்ள நாம்.
ஓ கனடா! நின்னைப் போற்றி அணிவகுத்தோம். எம் நிலப் புகழை, சுதந்திரத்தை என்றும் இறைவன் காத்திடுக!
ஓ கனடா! நாம் நின்னை போற்றி அணிவகுத்தோம். ஓ கனடா! நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்.
இதர தகவல்கள்
செல்பேசி அலைவரிசை:
செல்பேசி நுட்பம்:
அளவை முறை: எஸ்.ஐ (SI)
கனடிய அஞ்சல் குறியீட்டெண்: ANA NAN
விடுமுறை மற்றும் கொண்டாட்ட நாட்கள்
புத்தாண்டு விடுமுறை (ஜனவரி 1)
காதலர் நாள் (வேலன்டைன் நாள் (பெப்ரவரி 14)
புனித வெள்ளி – Good Friday (ஏப்ரல் 9)
ஈஸ்டர் திங்கள் (ஏப்ரல் 12)
அம்மாவின் நாள் (மே 9) (அரச விடுமுறை அல்ல)
விக்டோரியா நாள் (மே 24)
அப்பாவின் நாள் (ஜூன் 20) (அரச விடுமுறை அல்ல)
கனடா நாள் (ஜூலை 1)
Civic (ஆகஸ்ட் 2)
பேரன்பேத்திகள் நாள் (செப்டம்பர் 12) (அரச விடுமுறை அல்ல)
நன்றி தெரிவித்தல் நாள் – (அக்டோபர் 11)
ஹேலோவீன் – Halloween (அக்டோபர் 31)
நினைவு நாள் – Remembrance Day (நவம்பர் 11)
நத்தார் பண்டிகை (டிசம்பர் 25)
Boxing Day (டிசம்பர் 26)
பன்னாட்டு பல் நிறுவன மதிப்பீடுகள்
1980 க்கும் 2004 இடைப்பட்ட காலத்தில், மனித வளர்ச்சி சுட்டெண் அடிப்படையில், உலகில் வசிப்பதற்கு கனடா மிகச்சிறந்த நாடாக, ஐக்கிய நாடுகள் அவையால் 10 முறை அறிவிக்கப்பட்டது. மனித மேம்பாட்டுச் சுட்டெண்
ஆதாரங்கள்
மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.
Ronald C. Kirbyson and others. (1983). Discovering Canada: Shaping an identity. Scarborough: Prentice-Hall Canada Inc.
Kenneth Norrie and Douglas Owram. (1996). A History of the Canadian Economy. Toronto: Harcourt Bruce.
Richard Pomfret. (1993). The Economic Development of Canada. Scarborough: Nelson Canada.
W. Trimble. (1983). Understanding the Canadian Economy. Toronto: Copp Clark Pitman Ltd.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Overviews
Canada from UCB Libraries GovPubs
Canada from BBC News
Canada from நடுவண் ஒற்று முகமை World Factbook''
Canada profile from the OECD
Canadiana: The National Bibliography of Canada from Library and Archives Canada
Key Development Forecasts for Canada from International Futures
Government
Official website of the Government of Canada
Official website of the Governor General of Canada
Official website of the Prime Ministers of Canada
Travel'
Canada's official website for travel and tourism
Official website of Destination Canada
Studies
A Guide to the Sources from International Council for Canadian Studies
முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்
வட அமெரிக்க நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
பொதுநலவாய நாடுகள்
|
4355
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
|
இலங்கை ரூபாய்
|
இலங்கை ரூபாய் (Sri Lankan Rupee) இலங்கையின் உத்தியோகபூர்வ நாணய அலகு ஆகும். இலங்கை மத்திய வங்கி அனேக நாடுகளிலுள்ளதை போன்றே நாணயங்களை வெளியிடும் ஏகபோக உரிமையை கொண்டது. இலங்கை ரூபாய் பொதுவாக ரூ எனறே குறிக்கப்படுவதுடன், இதன் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனக் குறியீடு (ஐ.எசு.ஓ 4217) LKR ஆகும்.
மேலோட்டம்
இலங்கை ரூபாய் ஒன்று, 100 சதம் எனும் அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புழக்கத்துக்கு நாணயங்களை விடும்போது அவை, ரூபாய் 10க்கு கூடிய பெறுமானம் கொண்டவையாயின் தாள் நாணயங்களாகவும், ரூபாய் 10க்கு குறைந்த பெறுமானம் கொண்டவையாயின் உலோக நாணயங்களாகவும், ரூபாய் 10 பெறுமானம் கொண்டவையாயின், இரு விதமாகவும் தயாரித்து பாவனைக்காக விடப்படுகின்றன.
உலோக நாணயங்கள் ஐக்கிய இராச்சிய நாணய வார்ப்பகத்தில் வார்க்கப்படுகின்றன. தாள் நாணயங்கள் வரையறுக்கப்பட்ட தோமஸ் டீ லா ரு கம்பனியால் அச்சிடப்படுகின்றன. தொடக்கத்தில் அளவில் பெரியதாக இருந்தாலும், இப்பொழுது அளவில் சிறியதாகவே அவை தயாரிக்கப்படுகின்றன. நாணய தயாரிப்பில் ஏற்படும் செலவை குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. ரூபாய் 500க்கு கூடிய பெறுமானம் கொண்ட தாள் நாணயங்கள் 1970 - 77 காலப்பகுதியில் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருந்தது.
வரலாறு
1825 ஆம் ஆண்டில் இலங்கையின் அதிகாரபூர்வ பணம் ரிக்சுடாலரில் இருந்து பிரித்தானிய பவுண்டுக்கு மாற்றப்பட்டது. £1Stg = ரிக்சுடாலர் என்ற விகிதமாக மாற்ற்றப்பட்டது. அத்துடன் பிரித்தானிய வெள்ளி நாணயம் சட்டப்பூர்வமானது. பவுண்டுகளில் மதிப்பிடப்பட்ட கருவூலத் தாள்கள் 1827 இல் முந்தைய ரிக்ஸ்டாலர் தாள்களுக்குப் பதிலாக வழங்கப்பட்டன. ரிக்சுடாலர் தாள்கள் 1831 சூன் முதல் செல்லாததாக்கப்பட்டன.
1836 செப்டம்பர் 26 அன்று இந்திய ரூபாய் இலங்கையின் நிலையான நாணயமாக மாற்றப்பட்டது, மேலும் இலங்கை இந்திய நாணயப் பகுதிக்கு திரும்பியது. பிரித்தானியப் பவுண்டு மதிப்புள்ள கருவூலத் தாள்கள் 1836 இற்குப் பிறகும், ரூபாயுடன் புழக்கத்தில் இருந்தன. சட்ட நாணயம் பிரித்தானிய வெள்ளியாக இருந்தது, கணக்கு வழக்குகள் பவுண்டு, வெள்ளி (சில்லிங்கு) மற்றும் பென்சு ஆகியவற்றில் வைக்கப்பட்டன. இருப்பினும், பணம் ரூபாயிலும் அணாவிலும் ஒரு ரூபாய்க்கு 2 ஷில்லிங் (அதாவது £1Stg = ₨ 10) என்ற கணக்கில் செலுத்தப்பட்டது.
இலங்கை வங்கியே முதன் முதலாக இலங்கையில் வங்கித் தாள்களை வழங்கிய முதலாவது தனியார் வங்கி ஆகும் (1844), கருவூலத் தாள்கள் (treasury notes) 1856 இல் திரும்பப் பெறப்பட்டன.
1869 சூன் 18 இல் இந்திய ரூபாய் வரம்பற்ற சட்டமுறைச் செலவாணிப் பணம் ஆக்கப்பட்டது. 1871 ஆகத்து 23 இல் ரூபாய் தசம முறைக்கு மாறியது. இதனால், 100 சதம் ஒரு ரூபாய் ஆக இலங்கையின் பணமாக ஆனது. 1872 சனவரி 1 முதல் இது நடைமுறைக்கு வந்தது. ₨ 1 = 2s.3d.
உள்ளடக்கம்
உலோக நாணயங்களின் தலைப்பாகத்தில் நாட்டின் பெயர், அது வெளியிடப்பட்ட ஆண்டு, நாணயத்தின் பெறுமதி என்பனவும், பூப்பாகத்தில் இலங்கையின் தேசியச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன.
தாள் நாணயங்களின் மேற்படி விபரங்களுக்கு மேலதிகமாக இயற்கை அழகு, பண்பாடு, வரலாறு போன்றவற்றைக் குறிக்கும் சித்திரங்கள் இரு பாகத்திலும் காணப்படுவதுடன், பூப்பாகத்தில் மத்திய வங்கியின் பெயர், கொடுப்பனவு விபரம், நிதி அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோரின் கையொப்பங்களும் காணப்படுகின்றன.
இவற்றில் எண் குறியீடுகள் தவிர்ந்த ஏனையவை இலங்கையின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றிலும், ஆங்கில மொழியிலும் இடம் பெற்றுள்ளன. புதிதாக வெளியிடப்படும் நாணயங்களில் கண்பார்வையற்றோரின் நன்மை கருதி பிரேல் முறையிலும் பெறுமானம் பொறிக்கப்பட்டுள்ளது.
நாணயங்கள்
உலோக நாணயங்கள்
இலங்கையில் உலோக நாணயங்கள் தற்போழுது 1, 2, 5, 10, 25, 50 ஆகிய பெறுமானம் கொண்ட சதங்களாகவும் 1, 2, 5, 10 ஆகிய பெறுமானம் கொண்ட ரூபாய்களாகவும் வார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இலங்கையின் 50வது விடுதலை நாளை நினைவு கூறும் வகையில் 1998-ம் ஆண்டில் 1000 ரூபாய் பெறுமானம் கொண்ட வெள்ளி நாணயங்களும், 5000 ரூபாய் பெறுமானம் கொண்ட தங்க நாணயங்களும் வெளியிடப்பட்டன.
தற்காலத்தில் 1 சதம், 2 சதம், 5 சதம், 10 சதம், 25 சதம் ஆகியன மிக மிக அரிதாகவே புழக்கத்தில் உள்ளன.
நாணய வடிவங்கள்
இலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள உலோக நாணயங்களில் 2 சதம், 10 சதம் ஆகியவை அலை போன்ற விளிம்புடன் கூடிய வட்ட வடிவானவை. 5 சதம் வளைந்த விளிம்புடைய சதுர வடிவானது. மற்றைய சதங்களனைத்தும் வட்ட வடிவானவை. 1 ரூபாய், 2 ரூபாய், 10 ரூபாய் ஆகியவை வட்ட வடிவானவை. 5 ரூபாயும் வட்ட வடிவானபோதும், சில சமயங்களில் மட்டும் ஐங்கோண வடிவமுடையது.
வார்க்கும் உலோகங்கள்
இலங்கை உலோக நாணயங்கள் தங்கம், வெள்ளி, நிக்கல், செம்பு, நிக்கல்-செம்பு, பித்தளை, நிக்கல்-பித்தளை, அலுமினியம், வெண்கலம், அலுமினிய-வெண்கலம் ஆகிய பல்வேறு உலோகங்களில் வார்க்கப்பட்டன. முன்னர் கால், அரை மற்றும் ஒரு சதம் போன்ற பெறுமதி குறைவான நாணயங்கள் செப்பு உலோகத்தில் வார்க்கப்பட்டன. 10 மற்றும் 20 சத பெறுமானம் கொணட நாணயங்கள் 1920களின் இறுதிவரையிலும், 50 சத நாணயங்கள் 1942 வரையும் வெள்ளியில் வார்க்கப்பட்டன. ஆனால் தற்பொழுது 5 ரூபாய், 10 ரூபாய் தவிர்ந்த அனைத்து நாணயங்களும் பெறுமதி குறைந்த அலுமினிய உலோகத்திலேயே வார்க்கப்படுகின்றன. 5 ரூபாய் செம்பிலும், 10 ரூபாய் செம்பு-வெண்கலத்திலும் வார்க்கப்படுகின்றன.
தாள் நாணயங்கள்
இலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள தாள் நாணயங்கள் 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000 ஆகிய பெறுமானங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.
இலங்கையில் வெளியிடப்படும் அனைத்து தாள் நாணயங்களும்(200 ரூபாய் தவிர்ந்த) விசேடமாக பண்படுத்தப்பட்டு இரும்பு நூல் கோர்த்த காதிதத்திலேயே அச்சிடப்பட்டுகின்றன. 200 ரூபாய் நாணயம் மட்டும் விசேட பிளாஸ்டிக் தாளில் அச்சிடப்பட்டுகின்றது. இந்த பிளாஸ்டிக் நாணயம் பல பாதுகாப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இலங்கை தாள் நாணயங்கள் பல வர்ணங்களிலும், தலைப்பாகம் அகலவாக்கிலும் அச்சிடப்படுவது தனித்துவமான விடயங்களாகும்.
தற்போதைய நாணயமாற்று விகிதம்
அவுஸ்திரேலிய டொலர் - AUD
கனேடிய டொலர் - CAD -
யூரோ - EUR
ஐக்கிய இராச்சிய பவுண்டு - GBP
இந்திய ரூபாய் - INR
நியுசிலாந்து டொலர் - NZD
அமெரிக்க டொலர் - USD
மேலும் காண்க
இலங்கையில் புழக்கத்திலுள்ள நாணயத்தாள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
இலங்கை மத்திய வங்கி
இலங்கை நாணயங்கள் பற்றிய தகவல்
இலங்கையின் உலோக நாணயங்கள்
இலங்கையின் தாள் நாணயங்கள்
பலதரப்பட்ட நாணயமாற்று விகிதங்கள்
மேற்கோள்கள்
ரூபாய், இலங்கை
இலங்கை நாணயங்கள்
ரூபாய்
இலங்கை பொருளாதாரம்
|
4361
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88
|
பித்தளை
|
பித்தளை () என்பதுச் செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம்.
வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. அல்பா பித்தளை எனப்படும் 40% க்குக் குறைவான துத்தநாகத்தைக் கொண்டுள்ள பித்தளை இளக்கத்தன்மை (malleable) காரணமாகக் குளிர் நிலையிலேயே வேலை செய்யக்கூடியதாக உள்ளது. கூடுதலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட பீட்டா பித்தளையைச் சூடாக்கி மட்டுமே வேலை செய்ய முடியும் எனினும் அது கடுமையானதும், உறுதியானதும் ஆகும். 45% க்கும் மேலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட வெண்பித்தளை இலகுவில் நொருங்கக் கூடியது என்பதால் பொதுவான பயன்பாட்டுக்கு உதவாது. அவற்றின் இயல்புகளை மேம்படுத்துவதற்காக சிலவகைப் பித்தளைகளில் வேறு உலோகங்களும் சேர்க்கப்படுவது உண்டு.
பித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது. இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இவ்வுலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இளக்கத்தன்மை மற்றும் அதன் ஒலியியல் இயல்புகள் காரணமாகப் பித்தளை பல்வேறு இசைக்கருவிகள் செய்வதற்கும் பயன் படுகின்றது. இந்தியாவிலும் பாத்திரங்கள், விளக்குகள், மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பித்தளையில் செய்யப்படுகின்றன.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பித்தளையை மனிதன் அறிந்திருந்தான். உண்மையில் துத்தநாகம் பற்றி அறிவதற்கு முன்னமே பித்தளை பற்றிய அறிவு மனிதனுக்கு இருந்தது. செப்பையும், கலமைன் எனப்படும் துத்தநாகத்தின் தாதுப்பொருளையும் சேர்த்து உருக்கிப் பித்தளை செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
கலப்புலோகங்களின் பட்டியல்
உலோகவியல்
செப்புக் கலப்புலோகங்கள்
துத்தநாகக் கலப்புலோகங்கள்
உலோகவியல்
|
4362
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
கலப்புலோகம்
|
கலப்புலோகம் () (Alloy) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஓர் உலோகக் கலவையாகும். உலோகப் பிணைப்பைக் கொண்டு கலப்புலோகங்களை விவரிக்கலாம் . ஓர் உலோகக் கலவையானது அதிலுள்ள உலோகத் தனிமங்களின் திண்மக் கரைசலாக இருக்கலாம் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கரைசல்களின் கலவையாக இருக்கலாம். உலோகங்களிடை சேர்மங்களும் கலப்புலோகங்களாகும். நன்கு வரையறுக்கப்பட்ட விகிதவியல் அளவுகளில் உலோகங்கள் இதில் சேர்ந்திருக்கும். படிகக் கட்டமைப்பிலும் இவை உருவாகியிருக்கும். சிண்டில் கட்டத்தில் உள்ள தனிமங்களும் சில சமயங்களில் அவற்றிலுள்ள பிணைப்பு வகையை வைத்து உலோகக் கலவையாகக் கருதப்படுகின்றன.
உலோகக்கலவைகள் பலவகையான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. சில நிகழ்வுகளில் உலோகங்கள் இணைவதால் ஒரு பொருளின் முக்கியமான பண்புகளைப் பாதுகாப்பதற்கான ஒட்டுமொத்த செலவும் குறைகிறது. சில நிகழ்வுகளில் உலோகங்களின் இணைப்பு அதிலுள்ள தனிமங்களுக்கு ஒருங்கியலுந்தன்மையை அளிக்கின்றன. எஃகு, பற்றாசு, வெண்கலம், டியூரலுமினியம், பித்தளை மற்றும் இரசக்கலவை போன்றவை உலோகக் கலவைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
உலோகக் கலவைகளின் பகுதிப்பொருட்கள் நடைமுறை பயன்பாடுகளுக்காக பொதுவாக நிறை சதவீதத்தில் அளக்கப்படுகின்றன. அடிப்படை அறிவியல் ஆய்வுகளுக்கு அணு பகுதிகளாக அளக்கப்படுகின்றன. அணுக்கள் அடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் அடிப்படையில் உலோகக் கலவைகள் வழக்கமாக பதிலீட்டு உலோகக் கலவை அல்லது சிற்றிடைவெளி உலோகக் கலவை என்று வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றை மேலும் ஒருபடித்தான உலோகக் கலவை, பலபடித்தான உலோகக் கலவை, உலோகமிடை உலோகக் கலவை என்று மேலும் வகைப்படுத்தப்படுகிறார்கள். ஒருபடித்தான வகையில் ஒரே தனிமம் கலந்திருக்கும். பலபடித்தான கலவையில் ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் கலந்திருக்கும்.
அறிமுகம்
வேதித் தனிமங்களின் கலவை ஒர் உலோகக் கலவை ஆகிறது. இதில் உலோகம் ஒன்று உலோகத்தின் பண்புகளைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு தூய்மையற்ற பொருளை கலவையாக உருவாக்குகிறது. ஓர் உலோகக் கலவை என்பது ஒரு தூய்மையற்ற உலோகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது ஆகும். உலோகக் கலவையை உருவாக்க அதனுடன் சேர்க்கப்படும் தனிமங்கள் விரும்பத்தக்க பண்புகளைத் தயாரிக்க நன்கு கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் தயாரிக்கப்படும் தேனிரும்பு போன்ற தூய்மையற்ற உலோகங்கள் குறைவாக கட்டுப்படுத்தப்படுகின்றன, ஆனால் பெரும்பாலும் அவை பயனுள்ளதாக இருக்கும்.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களை இணைத்து உலோகக் கலவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று கண்டிப்பாக உலோகமாக இருக்க வேண்டும். இந்த உலோகம் அந்த உலோகக் கலவையின் அடிப்படை உலோகமாகும். அந்த உலோகத்தின் பெயரே தயாரிக்கப்படும் உலோகக் கலவைக்கும் பெயராக அமையும். மற்ற பகுதிக் கூறுகள் உலோகம் அல்லது உலோகமல்லாமல் இருக்கலாம். உருகிய அடிப்படை உலோகத்துடன் கலந்தவுடன் அவை கலவையுடன் கரையக்கூடியதாகி கரைந்து விடும். கலப்புலோகங்களின் இயக்கக் குணங்கள் பெரும்பாலும் அதன் தனித்தனி அங்கத்தினர்களிடமிருந்து வேறுபடுகின்றன. மிகவும் மென்மையாக இருக்கும் அலுமினியம் போன்ற உலோகம் தாமிரத்துடன் கலக்கப்பட்டு அதிக வலிமையுடைய கலப்புலோகமாக மாறுகிறது. சேர்க்கப்படும் இரண்டு தனிமங்களும் மென்மையாகவும் நீளக்கூடியதாகவும் இருந்தாலும் கூட உருவாகும் அலுமினியம் கலப்புலோகம் அதிக வலிமையுடன் உருவாகிறது. அலோகமான கார்பனை சிறிய அளவில் இரும்புடன் கலப்பதால் அதிக நீட்சியடையும் தன்மையை இரும்பின் கலப்புலோகமான எஃகு பெறுகிறது. மிக அதிகமான வலிமை காரணமாக சூடுபடுத்தப்படுவதால் இதனுடைய வலிமையைக் குறைத்து தேவையான நீட்சிக்கு மாற்றிக் கொள்ள இயலும். நவீனகாலப் பயன்பாட்டில் எஃகு ஒரு முக்கியமான பயன்பாட்டுப் பொருளாக விளங்குகிறது. குரோமியத்தை எஃகுடன் சேர்ப்பதால் எஃகின் அரிப்புக்கு எதிரான தடை அதிகரிக்கிறது . துருவேறாத எஃகு உருவாகிறது. சிலிக்கன் சேர்க்கப்பட்டால் எஃகின் மின் கடத்தும் பண்புகள் மாற்றப்படுகின்றன. சிலிக்கன் எஃகு உருவாகிறது.
உருகிய உலோகம் மற்றொரு தனிமத்துடன் எப்போதும் தண்ணீரும் எண்ணெயும் போலத்தான் கலந்திருக்கும். தூய இரும்பு எப்போதும் தாமிரத்துடன் கரைவதில்லை. ஒருவேளை பகுதிப்பொருட்கள் இரண்டும் கரையக்கூடியதாக இருந்தால் , வழக்கமாக ஒவ்வொன்றும் தனித்தனியாக செறிவுப்புள்ளியைக் கொண்டிருக்கும். அச்செறிவுப்புள்ளியைத் தாண்டி அக்கலப்புலோகத்துடன் பகுதிப்பொருள் எதையும் கூடுதலாகச் சேர்க்க இயலாது. உதாரணமாக இரும்புடன் அதிகபட்சமாக 6.67% கார்பனை மட்டுமே சேர்க்கமுடியும். கலப்புலோகத்தில் உள்ள தனிமங்கள் வழக்கமாக நீர்ம நிலையில் கண்டிப்பாகக் கரைய வேண்டும். ஆனால் திண்ம நிலையில் அவை எப்போதும் கரையவேண்டும் என்பது அவசியமில்லை. ஒருவேளை உலோகங்கள் திண்ம நிலையில் கரைகிறது என்றால் அக்கலப்பு உலோகம் திண்மக் கரைசலாக உருவாகிறது. சமபடிகங்களால் ஆன ஒருபடித்தான கட்டமைப்பாக உருவாகிறது. இதை ஒரு கட்டம் என்கிறார்கள். கலவை குளிர்ச்சி அடைந்தால் பகுதிப்பொருட்கள் கரையாத தன்மையை அடைகின்றன. அவை தனித்தனியாகப் பிரிந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகையான படிகங்களாக உருவாகின்றன. வெவ்வேறு கட்டங்கள் கொண்ட பல்லின நுண்கட்டமைப்பை உருவாக்குகின்றன. இருப்பினும் சில கலப்புலோகங்களில் கரையாத தனிமங்கள் படிகமாகல் தோன்றும் வரை பிரியாமல் இருக்கின்றன. ஒருவேளை விரைவாக குளிர்விக்கப்பட்டால் அவை முதலில் ஒருபடித்தான கட்டமாக படிகமாகின்றன. ஆனால் அவை இரண்டாம் நிலை பகுதிப்பொருளால் மீச்செறிவு அடைகின்றன. காலப்போக்கில் இந்த மீச்செறிவடைந்த கலப்புலோகங்கள் படிக அணிக்கோவையில் இருந்து தனியாகப் பிரிகின்றன. அதிக நிலைப்புத்தன்மையை பெற்று இடைவெளியில் உள்ள படிகங்களை வலுப்படுத்தும் இரண்டாவது கட்டத்தை உருவாக்குகின்றன. எலக்ட்ரம் போன்ற சில உலோகக் கலவைகள் இயற்கையில் தோன்றுகின்றன, வெள்ளி மற்றும் தங்கம் சேர்ந்த ஒரு கலப்புலோகம் எலக்ட்ரம் ஆகும்.
சில கலப்புலோகங்கள்
பித்தளை
வெண்கலம்
பியூட்டர்
துருவேறா உருக்கு
உருக்கு
இவற்றையும் பார்க்கவும்
கலப்புலோகங்களின் பட்டியல்
உலோகவியல்
மேற்கோள்கள்
உலோகவியல்
வேதியியல்
|
4363
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
|
உருகுநிலை
|
திண்மமொன்றின் உருகுநிலை (Melting Point) என்பது அப்பொருள் திண்ம நிலையிலிருந்து நீர்ம (திரவ) நிலைக்கு மாறும் போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும். உருகுநிலையில் திண்ம, நீர்ம நிலைகள் சமநிலையில் காணப்படும். ஒரு பொருளின் உருகுநிலையானது அங்கிருக்கும் அழுத்தத்தில் (pressure) தங்கியிருக்கும். எனவே உருகுநிலையானது ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் வரையறுக்கப்படும். வெப்பம் ஏற்றப்படும் போது பொருளின் வெப்பநிலை உயர்ந்து கொண்டு செல்லும், எனினும் பொருள் உருகத் தொடங்கியதும் வெப்பநிலை மாற்றம் எதுவும் இல்லாது வெப்பம் உறிஞ்சப்படும். இது உருகல் மறைவெப்பம் எனப்படும். சில பொருட்கள் நீர்மநிலைக்கு (திரவநிலைக்கு) வராமலே வளிம (வாயு) நிலையை அடைவதுண்டு. இது பதங்கமாதல் என அழைக்கப்படுகின்றது.
எதிர்மாறாக, நீர்மநிலையில் இருந்து திண்மநிலைக்கு மாறும்போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும்போது இது உறைநிலை (Freezing Point) எனப்படும். பல பொருட்களுக்கு உருகுநிலையும், உறைநிலையும் ஒன்றாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக தனிமங்களில் ஒன்றான பாதரசத்தின் உருகுநிலை, உறைநிலை இரண்டுமே 234.32 கெல்வின் (−38.83 °C or −37.89 °F). ஆனாலும் சில பதார்த்தங்களுக்கு திண்ம-நீர்ம நிலைமாற்ற வெப்பநிலைகள் வேறுபடும். எடுத்துக்காட்டாக அகார் 85 °C (185 °F) யில் உருகும் ஆயினும், திண்மமாகும் வெப்பநிலை 31 °C - 40 °C (89.6 °F - 104 °F) ஆக இருக்கும்.
சில பொருட்கள் மீக்குளிர்வுக்கு உட்படுவதனால், உறைநிலையானது ஒரு தனிச் சிறப்புள்ள இயல்பாகக் கருதப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக பனிக்கட்டியின் உருகுநிலையானது 1 வளிமண்டல அழுத்தத்தில் 0 °C (32 °F, 273.15 K) ஆகும். நீரின் உறைநிலையும் அதுவேயாகும். ஆனாலும், உறைநிலைக்கு போகாமலே நீரானது சிலசமயம் மீக்குளிர்வுக்கு உட்பட்டு −42 °C (−43.6 °F, 231 K) ஐ அடையும்.
கொதிநிலையைப் போல உருகுநிலை அமுக்க மாற்றத்தால் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படுவதில்லை. வளியமுக்க நிலையில் அறியப்பட்ட பொருட்களுள் மிகக்கூடிய உருகுநிலையைக் கொண்டது கரிமத்தின் ஒரு வடிவமான கிராபைட் ஆகும். இதன் உருகுநிலை 3948 கெல்வின்கள் ஆகும்.
மேற்கோள்கள்
இயற்பியல் இயல்புகள்
இயற்பியல் கோட்பாடுகள்
|
4368
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%201
|
பார்முலா 1
|
பார்முலா 1 (Formula 1 or F1) ஆண்டு தோறும் நடைபெறும் தானுந்து பந்தயத் தொடராகும். இப்பந்தயங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக நடைபெற்றாலும் தற்போது உலகின் மற்ற பகுதிகளிலும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. FIA (Fédération Internationale de l'Automobile) (அகில உலக தானுந்து கூட்டமைப்பு) எனப்படும் அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது. வருடந்தோரும் சுமார் 11 அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியின் சார்பாகவும் இரண்டு ஓட்டுனர்கள் பங்கு கொள்வர். ஒவ்வொரு போட்டியிலும் ஒட்டுனர் பெறும் இடத்தைப் பொறுத்து அவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். தொடர் இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் ஓட்டுனருக்கு ஓட்டுனர் சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படும். 2021ஆம் ஆண்டின் ஓட்டுனர் பட்டத்தை ஜெர்மனியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் கைப்பற்றினார். அணிக்கான வெற்றிப் பட்டத்தை ரெட் புல் (Red Bull Racing) அணி வென்றது.
பார்முலா-1 தானுந்துகள் 360 கிமீ/மணி வேகத்தை அதிகபட்சமாக எட்டும். மேலும் அதன் எஞ்சின்கள் 18000 சுழற்சிகள்/நிமிடம் (அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சுழல் வேகம்) சுழல்வேகத்தை எட்டக்கூடியவை. போட்டியில் பங்குபெறும் தானுந்துகள் 5g அளவுக்கு பக்கவாட்டு முடுக்கத்தை எட்டக் கூடியவை. தானுந்துகளின் செயல்திறன் அவற்றின் காற்றியக்கவியல் அமைப்புகள், மின்னணுவியல், வட்டகை ஆகியவற்றைப் பொருத்ததாகும்.
பார்முலா-1 தானுந்து போட்டிகள் உலக அளவில் 600 மில்லியன் தொலைக்காடசி பார்வையாளர்களால் பார்க்கப்படுகின்றன. இப்போட்டிகளில் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகின்றன. இதன் வருடாந்திர செலவுப் பட்டியலும் நடத்தும் அமைப்பினுக்கான அரசியலும் ஊடகங்களால் பெருமளவு கவனிக்கப்படுகின்றன. இத்தகைய கவனிப்பும் இதன் புகழும் இப்போட்டிகளுக்கு முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கின்றன.
வரலாறு
1920,1930-களில் நடைபெற்ற ஐரோப்பிய தானுந்து போட்டிகளே பார்முலா-1 போட்டிகளின் முன்னோடிகளாகும். இரண்டாம் உலகப் போரின் போது தானுந்து போட்டிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னர் சில வருடங்கள் கிராண்ட் பிரி அல்லாத போட்டிகள் நடத்தப்பட்டன. உலக தானுந்து அமைப்பால் விதிமுறைகள் வகுக்கப்பட்டு 1950-இல் பார்முலா-1 போட்டிகள் முதல் முறையாக இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சுற்றில் நடைபெற்றது. தானுந்தின் அமைப்பு விதிமுறைகள் வடிவமைப்பு விதிமுறைகள் பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பான விதிமுறைகள் ஆகியவற்றை உலக தானுந்து அமைப்பு ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது.
இந்த போட்டிகள் உலகத்திலேயே தானுந்துகளுக்காக நடத்தப்படும் போட்டிகளில் சிறப்பு வாய்ந்தவை என்பதால் பார்முலா-1 என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தானுந்து போட்டிகளின் மீள்வரவு
1950-ல் முதல் பார்முலா 1 போட்டித் தொடரை இத்தாலியின் ஜிசப் பரின வென்றார். அவர் ஆல்பா ரோமியோ தானுந்தினை ஓட்டினார். முதல் தொடரில் அர்ஜெண்டினாவின் ஜுவான் மானுவேல் பேஞ்சியோ-வை வென்று கோப்பையைக் கைப்பற்றினார். எனினும் ஜுவான் மானுவேல் பேஞ்சியோ 1951, 1954, 1955, 1956 & 1957 ஆண்டுகளில் பார்முலா 1 வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றினார். (இவரது 5 பார்முலா 1 தொடர் வெற்றிகள் 45 ஆண்டுகள் சாதனையாக இருந்தது. இச்சாதனை 2003-ஆம் ஆண்டு மைக்கேல் சூமாக்கர் தனது 6-வது தொடர் வெற்றியின் மூலம் உடைத்தார்.) 1952, 1953-ஆம் ஆண்டுகளில் பெராரியின் ஆல்பர்டோ அஸ்காரி பார்முலா 1 தொடர் வெற்றியாளர் ஆனார். இக்காலகட்டத்தில் ஐக்கிய ராச்சியத்தின் ஸ்டிர்லிங் மோஸ் ஒவ்வொரு ஆண்டும் வெற்றியாளர்களுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். ஆனால் ஒருமுறையும் தொடர் வெற்றியாளரை ஆனதில்லை. ஆகவே, தொடர் வெற்றியாளர் ஆகாத மிகச் சிறந்த ஓட்டுனராக அவர் கருதப்படுகிறார். பேஞ்சியோ போட்டித் தொடர்களின் தொடக்க காலகட்டத்தில் மிகச் சிறந்தவராக விளங்கினார். பலரால், பார்முலா 1 "மகா அதிபதி" என கருதப்படுகிறார்.
தானுந்து விவரங்கள்
தொடக்க காலத்தில் பெருமளவு தானுந்து தயாரிப்பாளர்கள் பார்முலா 1-ல் பங்கேற்றனர். குறிப்பிடத்தக்கோர்- பெராரி, ஆல்பா ரோமியோ, மெர்சிடஸ் பென்ஸ், மாசராட்டி- இவர்கள் அனைவரும் உலகப் போருக்கு முன்னரும் இவ்வகைப் போட்டிகளில் பங்கேற்றோர் ஆவர். தொடக்க கால போட்டிகளில் உலகப் போருக்கு முந்தைய தானுந்து வடிவமைப்புகளே பயன்படுத்தப்பட்டன. எ-கா: ஆல்பா ரோமியோவின் 158. முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட எஞ்சினும் குறுகிய வட்டயங்களும் (டயர்கள்) பயன்படுத்தப்பட்டன. எஞ்சின்கள் மட்டின்றி அழுத்த மிகுதிப்படுத்தும் 1.5 லிட்டர் வடிவாகவோ, இயற்கையான காற்றை உறிஞ்சியிழுக்கும் 4.5 லிட்டர் வடிவாகவோ இருந்தன. 1952, 1953-ஆம் ஆண்டுகளில் பார்முலா 2 வகை தானுந்துகளே பயன்படுத்தப்பட்டன. ஏனெனில் அப்போது பார்முலா 1 தானுந்துகள் குறைவாகவே இருந்தன. அவை பார்முலா 1 தானுந்துகளை விட சிறியனவாகவும் ஆற்றலில் குறைந்தனவாகவும் இருந்தன. 1954-ஆம் ஆண்டு பார்முலா 1 விதிமுறைகளில் 2.5 லிட்டர் எஞ்சின் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அப்போது மெர்சிடஸ் பென்ஸ் தனது மிகவும் மேம்பட்ட வடிவமைப்பான W196 என்ஜினை வெளியிட்டது. இந்த எஞ்சின் நேரடியான எரிபொருள் உள்ளீடு, டேச்மொட்ராமிக் ஊடிதழ் (desmodromic valve) மற்றும் மூடப்பட்ட சீரிசையோட்ட உடல் வடிவமைப்பு போன்றவற்றைக் கொண்டிருந்தது. மெர்சிடஸ் ஓட்டுனர்கள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றினர். ஆனால் 1955-ஆம் ஆண்டிறுதியில் அனைத்து வகைத் தானுந்து போட்டிகளிலிருந்தும் மெர்சிடஸ் வெளியேறியது. 1955-ஆம் ஆண்டு நிகழ்ந்த லே மான்ஸ் பேரிடர் இதன் காரணமாக கூறப்படுகிறது.
தானுந்து தொழில்நுட்பங்ள்
இதுவரை தானுந்தில் பயன்படுத்தப்படும் பொறி (எஞ்சின்) 2.4 லிட்டருக்கு மிகாமல் இருக்கவேண்டும் என இருந்தது.
2014-ஆம் ஆண்டு முதல் அதிகபட்சமாக 1.6 லிட்டர் அதிரடி வேக சுழற்றி பொருத்தப்பட்ட பொறியாக இருக்கவேண்டும். இந்த தானுந்துகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் பெரும்பாலும் சாதாரண மகிழுந்துகளில் பயன்படுத்தக்கூடிய எரிபொருளை சார்ந்தே இருக்கும்.
அதிகபட்ச நேர்கோட்டு வேகமான மணிக்கு 372.6 கி.மி. 2005-ஆம் ஆண்டு மெக்லேரன் மெர்சிடஸ் தானுந்து பயன்படுத்தி ஜுவான் பப்லோ மோன்டோயா இத்தாலிய கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டியிலு நிகழ்த்தியுள்ளார்
இந்தியாவில் பார்முலா 1
இந்தியாவில் பார்முலா 1 2011-ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 2011 முதல் 2013 வரை நடந்த மூன்று போட்டிகளிலும் ரெட் புல் அணியை சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றுள்ளார்.
2014-ஆம் ஆண்டு மட்டும் இடைவெளி விட்டு மீண்டும் 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் போட்டிகள் நடைபெறுமென அகில உலக தானுந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு போட்டி அட்டவணை
பெரும் வளர்ச்சி
மைய-எந்திர தானுந்து வடிவமைப்பை கூப்பர் நிறுவனம் மறு-அறிமுகம் செய்தது. இந்த வடிவமைப்பு 1950-களில் பார்முலா-3 தொடரில் வெற்றிகரமாக அந்நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டதாகும். இத்திட்டம் மிகப் பெரிய அளவில் வெற்றியை ஈட்டித் தந்தது. ஆத்திரேலியரான ஜாக் பிரபாம் 1959, 1960 & 1966 ஆகிய ஆண்டுகளில் ஓட்டுனர் வெற்றிக் கோப்பையை வென்று, அவ்வித வடிவமைப்பின் தொழில்நுட்ப மேம்பாட்டை உறுதிப்படுத்தினார். ஆகையால் 1961 ஆண்டு வாக்கில் அனைத்து அணிகளும் மைய-எந்திர வடிவமைப்பில் தானுந்துகளை வடிவமைத்தன.
1958-ஆம் ஆண்டு பெராரி அணியின் ஓட்டுநராயிருந்த மைக் ஃகாத்தார்ன் முதல் பிரிட்டிசு சாம்பியன் (வாகையாளர்) ஆனார். காலின் சாப்மேன் தானுந்து அடிச்சட்ட வடிவமைப்பாளராக பார்முலா 1-ல் நுழைந்ததும் பின்னர் லோட்டசு அணியை தோற்றுவித்ததும் பிரிட்டிசு ஓட்டுநர்களும் அணிகளும் பெருமளவில் வெற்றிபெற்றன. 1962-க்கும் 1973-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 12 உலக ஓட்டுநர் வாகைப்பட்டங்களை பிரிட்டிசு மற்றும் காமன்வெல்த் நாட்டு ஓட்டுநர்கள் கைப்பற்றினர்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
பார்முலா 1 இன் அதிகாரபூர்வ இணையதளம்
பார்முலா 1
|
4370
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
|
மைக்கேல் சூமாக்கர்
|
மைக்கேல் சூமாக்கர் (Michael Schumacher பி. ஜனவரி 3, 1969) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த பார்முலா 1 ஓட்டுனராவார். இவர் ஏழு முறை (1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004 ஆகிய வருடங்கள்) உலக வாகையர் பட்டத்தை வென்றுள்ளார். எக்காலத்தும் மிகச் சிறந்த F1 ஓட்டுநராகக் கருதப்படுகிறார். பெராரி அணிக்காக போட்டியிடும் இவர், 84 பந்தயங்களை வென்று சாதனை படைத்தவர். பார்முலா 1 பந்தயங்களில் மிக கூடுதலான போட்டிகளில் வென்றமை, மிக விரைவான சுற்றுக்கள், மிகக் கூடுதலான முன்னணி நிலைகள், ஒரே பருவத்தில் பல போட்டிகளில் வென்றமை (2004ஆம் ஆண்டில் 13 போட்டிகளில் வென்றார்) என பல சாதனைகளுக்கு உரிமையாளர். 2002ஆம் ஆண்டில் அப்பருவத்தின் ஒவ்வொருப் போட்டியிலும் முதல் மூவர்களில் ஒருவராகத் திகழ்ந்தது பார்முலா 1 வரலாற்றிலேயே இதுவரை யாரும் நிகழ்த்தாததாகும். அடுத்தடுத்து வாகை சூடிய வகையிலும் சாதனை புரிந்துள்ளார். பார்முலா 1 வலைத்தளத்தின்படி இந்த விளையாட்டில் புள்ளிவிவரப்படி கண்ட மிகச் சிறந்த ஓட்டுநர் இவரேயாம்.
2013 பனிச்சறுக்கு விபத்து
திசம்பர் 29, 2013 அன்று சூமாக்கர் தமது மகனுடன் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலைச்சரிவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விழுந்து கல்லில் தலை மோதியது. அப்போது அவர் பாதுகாப்பாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இல்லாது அதற்கு வெளியே இருந்தார். விபத்து நடந்த பதினைந்து நிமிடங்களுக்கு உள்ளாகவே இரு பனிச்சறுக்கு கண்காணிப்பாளர்களால் கவனிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வான்வழியே கொண்டுசெல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிரனோபிள் நகரில் மூளைக் காயங்களுக்கு சிறப்பு வைத்தியம் வழங்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சூமாக்கர் புறவழி மூளைக் காயத்தினால் மருந்துகளால் தூண்டப்பட்ட ஆழ்மயக்கத்தில் இருப்பதாகவும் பெருமூளை நசுங்கி இருப்பதை மருத்துவ வரைவிகள் காட்டியதால் மூளை அழுத்தத்தை குறைக்க அவசர மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதழாளர் சந்திப்பில் அவரது மருத்துவர்கள் அவர் தலைகவசம் அணிந்திருந்தமையாலேயே உயிர்தப்பினார் எனக் கூறினர். அறுவை சிகிச்சைக்குப் பின்னதான வரைவுகள் "பரவலான குருதிக்கசிவு கோளாறுகள்" மூளையின் இருபக்கத்திலும் காணப்படுவதாகக் கூறிய மருத்துவர்களுக்கு அதன் விளைவுகளை கூற இயலவில்லை. அவரது நெருங்கிய நண்பரும் மூளை மற்றும் தண்டுவட காய நிபுணருமான மருத்துவர் கெரார்டு சையாந்த் சிகிச்சை அளித்து வருகிறார். 1999இல் பிரித்தானிய கிராண்டு பிரீயில் சூமாக்கர் விபத்திற்குட்பட்டு கால் முறிவு பட்டபோது இவர்தான் சிகிச்சை அளித்துள்ளார்.
மேற்சான்றுகள்
1969 பிறப்புகள்
பார்முலா 1 ஓட்டுனர்கள்
செருமானிய விளையாட்டு வீரர்கள்
வாழும் நபர்கள்
|
4378
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
|
கணினி வலையமைப்பு
|
கணினி வலையமைப்பு (Computer network) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து தகவல் அல்லது தரவுகளைப் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் ஒரு வலை அமைப்பு ஆகும். கணினி வலையமைப்பை கம்பி வலையமைப்பு (Wired Network) அல்லது கம்பியற்ற(மின்காந்த அலை) வலையமைப்பு(Wireless Network) என்று மேலோட்டமாக இரு வகையாகப் பிரிக்கலாம். வலையமைப்புகளை பல பிரிவுகளில் வகைப் படுத்தலாம். கீழே அந்த பிரிவுகளைக் காணலாம்.
வலையமைப்பின் வரலாறு
கணிணி வலையமைப்பு தன்னிறைவு பெறுவதற்கு முன் தகவல்களை கணினி அல்லது கணக்கீடு எந்திரங்களின் இடையே பரிமாற்ற மனிதப் பயனர்களின் உதவி தேவையாய் இருந்தது. இன்று தகவல்களை கணினி அமைப்பின் இடையே பரிமாற்றம் செய்ய வலையமைப்பு பயன்படுத்தப்படுகின்றது.
வலையமைப்பு வகைகள் - Palakkottai
வலையமைப்பு அமைந்திருக்கும் பரப்பின் படி
தனி நபர் வலையமைப்புகள் (Personal Area Networks or PAN) (எ.க. புளூடூத்)
குறும்பரப்பு வலையமைப்புகள் (Local Area Network or LAN) (எ.க.ஈதர்நெட்)
பெரும்பரப்பு வலையமைப்புகள் (Wide Area Network or WAN) (எ.க.இணையம்)
பெருநகர் பரப்பு வலையமைப்புகள் (Metropolitan Area Network or MAN)
வலையமைப்பின் செயல்தன்மைப் படி. Mutty
வாடிக்கையாளர் தொண்டகம் (Client-Server)
பல அடுக்குக் கட்டமைப்பு (Multitier architecture)
ஒத்த கணினிகளுக்கிடையே தொடர்பு(internetpeer-to-peer)
வலையமைப்பு இணைப்பு முறைப் படி
சொரட்டை வலையமைப்பு
பாட்டை வலையமைப்பு (Bus Network)
விண்மீன் வலையமைப்பு (Star Network)
வளைய வலையமைப்பு (Ring Network)
கண்ணி வலையமைப்பு (Mesh Network)
விண்மீன்-பாட்டை வலையமைப்பு (Star-bus Network)
வலையமைப்பின் சிறப்புத் தன்மையின் படி
தேக்கக வலையமைப்பு (Storage Network)
தொண்டாகப் பண்ணைகள் (Server Farms)
செயல் கட்டுப்பாட்டு வலையமைப்பு (Process Control Network)
மதிப்புக் கூட்டும் வலையமைப்பு(Value Added Network)
சிறு மற்றும் வீட்டில் இயங்கும் அலுவலக வலையமைப்பு (SOHO Network)
கம்பியில்லா குமூக வலையமைப்பு (Wireless Community Network)
இணைப்பு நெறிமுறை அடுக்குகள்
கணினி வலையமைப்புக்களை செயல்படுத்த பலவகை நெறிமுறை அடுக்கு (Protocol Stack) கட்டமைப்புகளும், ஊடகங்களும் (Media) நடப்பில் உள்ளன. ஒரு கணினி வலையமைப்பை ஒன்று அல்லது பல ஊடகங்களையும், நெறிமுறை அடுக்குகளையும் இணைந்து செயல் படச் செய்து வடிவமைக்கலாம். உதாரணத்திற்குச் சில:
ஆர்க்நெட் (ARCnet)
டெக்நெட் (DECnet)
ஈதர்நெட் (Ethernet)
இணைய நெறிமுறை (Internet Protocol or IP)
போக்குவரத்து கட்டுப்பாட்டு நெறிமுறை (Transport Control Protocol or TCP)
பயனர் Datagram நெறிமுறை (User Datagram Protocol or UDP)
திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம் (OSI Model)
பலவகை இயக்க மென்பொருள் அமைப்புகளும் (Operating Systems), வலையமைப்பிற்கான வன்பொருள் அமைப்புகளும் (Networking Hardware), நெறிமுறை அடுக்குகளும் பல்கிப் பெருகி விட்ட கணினி உலகில், கணினிகள் மற்றும் அவற்றில் இயங்கும் மென்பொருட்களை வடிவமைப்போர் சக கணினியுடன் இணைப்பு பெறும் முறை, அக் கணினியின் வன்பொருள் அமைப்பு, அதன் இயக்க மென்பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தனித்தன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தேவையில்லாமல் மென்பொருட்களை வடிவமைக்க வகை செய்யவே இந்தப் படிமம் வடிவமைக்கப்பட்டது.
இந்தப் படிமத்தின் முக்கிய நோக்கங்கள்:
ஒரு கணினி சக கணினியுடன் தொடர்பு கொள்ளத் தேவையான அனைத்துச் செயல்பாடுகளையும் (எந்த ஒரு குறிப்பிட்ட வன்பொருளையோ அல்லது மென்பொருளையோ சாராமல்) கண்டறிவது
அவற்றை ஏழு தேர்ந்தெடுத்த கட்டங்களில் வகைப் படுத்தித் தொகுப்பது
ஏழு கட்டங்களில் எந்த ஒரு கட்டச் செயல்பாடுகளும் சக கணினியிலுள்ள அதற்கு இணையான கட்டத்துடன் தொடர்பு கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு நெறிமுறைப் படி தரவுப் பறிமாற்றம் செய்ய அதன் கீழுள்ள கட்டத்தில் சேவைகள், செயல்பாடுகளை அமைப்பது. அவற்றிற்கு திறந்த நியமங்களுடன் இடைமுகங்கள் அமைப்பது
இந்தப் படிமத்திலுள்ள ஏழு கட்டங்களாவன:
பயன்முறைக் அடுக்கு (Application Layer 7)
தரவுக் குறிப்பீட்டுக் அடுக்கு (Presentation Layer 6)
அமர்வுக் அடுக்கு (Session Layer 5)
போக்குவரத்துக் அடுக்கு (Transport Layer 4)
பயனர் டேட்டாகிராம் நெறிமுறை (User Datagram Protocol)
பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை (Transmission Control Protocol)
வலையமைப்புக் அடுக்கு (Network Layer 3)
திசைவித்தல் (Routing)
தரவு இணைப்புக் அடுக்கு (Data Link Layer 2)
மடைமாற்றிடல் (Switching)
பருநிலைக் அடுக்கு (Physical Layer 1)
மேற்கோள்கள்
ஆண்ட்ரூ எஸ் டானென்பாம், "Computer Networks" ().
List of important publications in computer science#Computer networks| Important publications in computer networksSuperscript text
புறச் சுட்டிகள்
கணிப்பொறிப் பிணையங்கள் (Computer Networks) - பாடங்கள்
Networking and Microcomputers
Network - eLook Computing Reference - defines what a network is and provides leading links
Networking: K-12
Networking dictionary
Prof. Rahul Banerjee's free e-book on Internetworking Technolgies deals with the foundations of major internetworking architectures. (chapters 4-9)
கணினிப் பிணையமாக்கம்
கணினி வலையமைப்பு
|
4381
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
யப்பான்
|
யப்பான் (ஜப்பான்; Japan; 日本) அல்லது சப்பான் என்பது ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக்குப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. தோக்கியோ இதன் தலைநகராகும். சப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. ஒக்கைடோ, ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகியன சப்பானின் முக்கியமான, மற்றும் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும்.மேலும் இது 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 11 வது இடத்தை பிடித்துள்ளது.
மேலும் இது உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குவதுமடுமல்லாமல் உலகின் அதிகபட்ச சராசரி வாழ்நாளை கொண்ட நாடாகவும் விளங்குகின்றது.மேலும் உலகத்தின் 5 வது அதிகபட்ச இராணுவ செலவை கொண்டுள்ளதெனினும் இது தன் தற்காப்புகென்றே பயன்படுத்துகின்றது.
நாட்டுப் பெயர்
யப்பானிய மொழியில் அந்நாட்டின் பெயர் (日本国), "நிகோன் கொகு அல்லது "நிப்பொன் கொகு" என உச்சரிக்கப் பட்டது. இது சூரியன் எழும் நாடு என்ற பொருளாக சீனாவுக்கு கிழக்கே இருக்கிற நாடு என்றும், சூரியன் இருக்கிற மாதிரி வாழ்கின்ற நாடு என்றும் குறிப்பிடுகிறது. கி. பி. 645ஆம் ஆண்டு நிகோன் (日本) என்ற பெயர் முதலில் யப்பானின் பெயராக பயன்பட்டது. 734 ஆண்டு சட்டப்படி இது யப்பானின் பெயராக நிறுவப்பட்டது.
யப்பானிய சட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஆங்கிலப் பெயர் ஜப்பான் (Japan) என்பாதாகும். இருப்பினும் அண்மைக்காலமாக நிப்பொன் என்ற பெயரும் அஞ்சல் தலைகளிலும், நாணயங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.
சப்பான் என்ற ஆங்கில பெயரும், வேறு மொழியின் பொன் (பிரெஞ்சு மொழி), யாபன் ; (இடாய்ச்சு மொழி), ஜப்போனெ ; இத்தாலிய மொழி), ஹபொன் (Japón ; எசுப்பானிய மொழி), இபோனிய (Япония ; உருசிய மொழி), ஈபுன் (ญี๋ปุ่น ; தாய் மொழி) முதலிய பெயர்களும், முன்காலத்தில் சீனாவில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்துக்களான "日本国" ஆனது "ஜிபங்கு" அல்லது "ஜபங்கு" என்று உச்சரித்த வழக்கத்திலிருந்து தோன்றின என்பது பொதுவான கருத்தாகும். (சப்பானில் இராகனா, கட்டாகானா, காஞ்சி ஆகிய மூன்று எழுத்துருக்களை பயன்படுத்துகின்றனர்) இப்பொழுதும் சில நாடுகளில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்தை அவ்வவ் நாடுகளின் மொழி வழக்கிற்கேற்ப உச்சரிக்கப்படுகிறது. உதாரணமாக, ரீபென் (日本 ; சீன மொழி), இள்பொன் (일본 ; கொரிய மொழி), நியத்பான் (Nhật Bản ; வியட்னாம் மொழி) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன . இரண்டு மொழிகளும் ஒரே மாதிரி இலக்கண கட்டமைப்புகளை கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.
யமதொ (大和 ; やまと ), "அசிஅரனோ நகட்சு குனி" (葦原中国 ; あしはらのなかつくに ),சின்சூ (神州 ; しんしゅう),ஒன்ச்சோ(本朝 ; ほんちょう) என்ற பெயர்கள் யப்பானிய மொழியில் யப்பான் நாட்டை குறிக்கும் வெவ்வேறு சொற்களாகும். 1889 தொடக்கம் 1946 ஆம் ஆண்டு வரை "தைநிஹொன் தேகொகு" (大日本帝國 ; だいにほんていこく ; மா யப்பான் பேரரசு) என்ற பெயர் யப்பான் நாட்டின் சட்டப்படியான பெயராக இருந்தது.
வரலாறு
வரலாற்றுக்கு முந்திய காலமும் பழங்காலமும்
கி.மு. 30000 காலப்பகுதியில் காணப்பட்ட பழங்கற்காலப் பண்பாடு ஜப்பானின் அறியப்பட்ட முதலாவது குடியிருப்பைக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏறத்தாழ கிமு 14,000 ஆண்டுக் காலப் பகுதியில் இருந்து இடைக் கற்காலமும் பின்னர் வேடர்-உணவு சேகரிப்போர் பண்பாட்டைக் கொண்ட புதிய கற்காலமும் காணப்பட்டது. இப் பண்பாட்டினரில் தற்கால அய்னு மக்களினதும், யமாட்டோ மக்களதும் முன்னோர்களும் உள்ளடங்கி இருந்தனர். குழி வாழிடங்களும், திருத்தமற்ற வேளாண்மையும் இக்காலப் பண்பாட்டின் பண்புகள். இக்காலத்தைச் சேர்ந்த அலங்கரிக்கப்பட்ட மட்பாண்டங்களிற் சில உலகில் இன்று கிடைக்கும் மிகப் பழைய மட்பாண்டங்களுக்கு எடுத்துக் காட்டுகளாக உள்ளன. கிமு 300 ஆம் ஆண்டளவில் யயோய் மக்கள் யப்பானியத் தீவுகளுக்குள் வரத் தொடங்கி யோமொன் மக்களுடன் கலந்து வாழ்ந்தனர். கிமு 500 அளவில் தொடங்கிய யயோய் காலத்தில், ஈர-நெல் வேளாண்மை, ஒரு புதிய வகை மட்பாண்டம் என்பன அறிமுகமானதுடன், சீனாவிலிருந்தும் கொரியாவில் இருந்தும் உலோகவியலும் அறிமுகமானது.
முதலாவது நிரந்தர தலைநகரம் நாராவில் கி.பி. 710ல் அமைக்கப்பட்டது.
அரசும் அரசியலும்
யப்பான் அதன் பேரரசருக்கு மிகவும் குறைவான அதிகாரங்களே வழங்கும் அரசியற்சட்ட முடியாட்சி ஆகும். சடங்குசார் தலைவர் என்ற அளவில், பேரரசர் என்பவர் "நாட்டினதும், மக்களுடைய ஒருமைப்பாட்டினதும் குறியீடு" என யப்பானின் அரசியல் சட்டம் வரைவிலக்கணம் கூறுகிறது. அதிகாரம் முக்கியமாகப் பிரதம அமைச்சரிடமும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடமும் உள்ளது. அதேவேளை இறைமை மக்களிடம் உள்ளது. தற்போதைய பேரரசர் அக்கிகிட்டோ ஆவார். இவருக்கு அடுத்த நிலையில், முடிக்குரிய இளவரசராக நாருகிட்டோ உள்ளார்.
யப்பானின் சட்டவாக்க அமைப்பு, தேசிய டயெட் எனப்படும் இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றம் ஆகும். இது, 480 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையையும், 242 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலர் அவையையும் உள்ளடக்கியது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவையும், கவுன்சிலர் அவை உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை உண்டு.
பிரதம அமைச்சரே அரசின் தலைவர் ஆவார். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிலிருந்து நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படும் ஒருவரைப் பிரதம அமைச்சராகப் பேரரசர் நியமிப்பார். பிரதம அமைச்சர் நாட்டின் அமைச்சர்களைத் தெரிவு செய்வதற்கும், பதவியில் இருந்து நீக்குவதற்குமான அதிகாரம் உடையவர்.
மாவட்டங்கள்
சப்பானின் மாவட்டங்கள் "டொ" "டோ" "ஃகூ" "கென்" என்ற நான்கு விதத்தின் பேரால் அழைக்கப்பட்டுள்ளன. "டொ" எனப்படுகிறது தோக்கியோடொ மட்டும், "டோ" எனப்படுகிறது ஒக்கைடோ மட்டும், "ஃகூ" எனப்படுகிறது ஓசகாகூவும் கியோத்தோகூவும், "கென்"எனப்படுகிறது மற்ற 43 மாவட்டங்கள் ஆகும். முக்கியமான தீவுகளும், அங்குள்ளே அல்லது அங்கு பக்கத்திலே இருக்கிற மாவட்டங்களும், கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி
மாவட்டங்களுடைய இருப்பிடங்கள், பெயரின் முன்னே இருக்கிற எண்ணால் காட்டப்பட்டுள்ளன.
புவியியல்
யப்பான், பசிபிக் கடற்கரையில் இருந்து கிழக்காசியா வரை பரந்துள்ள 6,852 தீவுகளைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாத் தீவுகளும் உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் அகலக்கோடுகள் 24° - 46°வ, நெடுங்கோடு 122° - 146°கி என்பவற்றுக்கு இடையே அமைந்துள்ளது. வடக்கில் இருந்து தெற்காக யப்பானின் முக்கியமான தீவுகள் ஒக்கைடோ, ஒன்சூ, சிக்கோக்கு, கியூசூ என்பன. ஒக்கினாவா தீவை உள்ளடக்கிய ரியூகியூ தீவுகள் கியூசூ தீவுக்குத் தெற்கே சங்கிலித் தொடராக அமைந்துள்ளன. இவை ஒருங்கே யப்பானியத் தீவுக்கூட்டங்கள் எனப் பெயர் பெறுகின்றன.
ஏறத்தாழ யப்பானின் 73% நிலப்பகுதி காடாக அல்லது மலைப் பகுதிகளாக இருப்பதுடன், வேளாண்மை, தொழில் துறை, குடியிருப்பு ஆகிய தேவைகளுக்கு உதவாததாக உள்ளது. இதனால், மக்கள் வாழக்கூடிய கரையோரப் பகுதிகளின் மக்கள் தொகை அடர்த்தி மிகவும் கூடுதலாக உள்ளது. யப்பான், உலகின் மிகக் கூடிய மக்கள் அடர்த்தி கொண்ட நாடுகளில் ஒன்று.
யப்பானியத் தீவுகள் பசிபிக் தீ வளையத்தில் உள்ள எரிமலை வலயத்தில் அமைந்துள்ளன. இத் தீவுகள் பெரும்பாலும், நடுச் சிலூரியக் காலம் முதல் பிளீசுட்டோசீன் காலம் வரையிலான பல நூறு மில்லியன் ஆண்டுகளாக இடம் பெற்ற பெரிய பெருங்கடல் நகர்வுகளின் விளைவாக உருவானவை. இந்நகர்வு, தெற்கே பிலிப்பைன் கடல் தட்டு அமூரியக் கண்டத்தட்டு, ஒக்கினாவாக் கண்டத்தட்டு ஆகியவற்றுக்குக் கீழ் நகர்ந்ததனாலும், வடக்கே பசிபிக் தட்டு ஒக்கோட்சுக்கு தட்டுக்குக் கீழ் நகர்ந்ததினாலும் ஏற்பட்டது. முன்னர் யப்பான் யூரேசியக் கண்டத்தின் கிழக்குக் கரையுடன் ஒட்டியிருந்தது. முற்கூறிய தட்டுக்களின் கீழ் நகர்வு, 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய யப்பான் நிலப் பகுதிகளைக் கிழக்குப் புறமாக இழுத்து இடையே யப்பான் கடலை உருவாக்கியது.
யப்பானில் 108 செயற்படும் எரிமலைகள் உள்ளன. பெரும்பாலும் சுனாமியை உருவாக்கும் பேரழிவைத் தருகின்ற நிலநடுக்கங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல தடவைகள் ஏற்படுகின்றன. 1923 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தோக்கியோ நிலநடுக்கத்தினால் 140,000 பேர் இறந்தனர். 1995 பெரும் ஆன்சின் நில நடுக்கமும், 2011 மார்ச்சு 11 ஆம் தேதி ஏற்பட்ட 9.0 அளவிலான 2011 தோகோக்கு நிலநடுக்கமும் அண்மைக் காலத்தில் இடம்பெற்றவை. 2011 ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தில் போது பெரிய சுனாமியும் உருவானது. 2012 மே 24 ஆம் தேதியும் 6.1 அளவிலான நிலநடுக்கம் வடகிழக்கு யப்பானின் கரையோரத்தைத் தாக்கியது. எனினும், இதோடு சுனாமி எதுவும் ஏற்படவில்லை.
உள்கட்டமைப்பும் பொருளாதாரமும்
2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சப்பானின் பாதி ஆற்றல் தேவை பெட்ரோலியத்தின் மூலமும் ஐந்தில் ஒரு பகுதி நிலக்கரி மூலமும் 14% இயற்கைவளி மூலமும் பெறப்படுகிறது. அணு மின்சாரம் நாட்டின் கால் பங்கு மின்தேவையை ஈடுசெய்கிறது.
சப்பானில் சாலைப்போக்குவரத்து நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. 1.2 மில்லியன் தொலைவிற்கான நல்ல சாலைகள் இடப்பட்டுள்ளன. சுங்கச்சாலைகளும் பயன்பாட்டில் உள்ளன. 12-க்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிறுவனங்கள் உள்ளூர், வெளியூர் தொடர்வண்டி வசதிகளை அளிக்கின்றன. பெருநகரங்களை சின்கான்சென் (=புல்லட் ரயில்) ரயில்கள் இணைக்கின்றன. சப்பானிய ரயில்கள் நேரந்தவறாமைக்குப் பெயர்பெற்றவை.
சப்பானில் 173 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நகரிடைப் போக்குவரத்திற்கு வானூர்தி விரும்பப்படுகிறது. ஆசியாவின் சந்தடி மிக்க வானூர்தி நிலையமான அனீதா நிலையம் சப்பானிலேயே உள்ளது. யோக்கோகாமா, நகோயா துறைமுகங்கள் ஆகியன பெரிய துறைமுகங்கள் ஆகும்.
பண்பாடு
ஹனாமி (花見 ) என்றழைக்கப்படும் "பூப் பார்த்தல் " வழக்கத்தை சப்பானியர்கள் மிகவும் முக்கியமானதாக கருதுகிறார்கள். இளவேனிற்காலத்தின் ஆரம்பத்தில் செர்ரி என்ற ஒரு வகையான பூ சப்பானில் பூத்துக் குலுங்கும் . சப்பானின் பகுதிக்கு ஏற்றவாறு பூப் பூக்கும் காலம் மார்ச் கடைசி வாரத்தில் இருந்து மே முதல் வாரம் வரை மாறுபடும். ஊடகங்கள் பூப்பூக்கும் காலநிலையை கணித்துக் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் பூத்துக் குலுங்கும் இடம் பற்றிய விவரங்களையும் வெளியிடுகின்றனர்.இந்த பூக்கள் பூக்கும் பூங்கா பூத்திருக்கும் நேரங்களில் விடுமுறை நாட்களில் விழாக்கோலம் பூண்டிருப்பதால் பூங்காவில் அமர்வதற்கு இடம் கிடைக்க கடினம். ஆதலால் முந்திய நாள் இரவே சென்று நல்ல இடம் பார்த்து அமரும் விரிப்புகளை விரித்து போட்டு எல்லைக்கையிறு கட்டி விட்டு வருவர். நல்ல அமரும் இடம் கண்டுபிடித்து அடையாளக்குறியிட்டு வருவது குழுவில் உள்ள இளையோரின் பொறுப்பே ஆகும்.சப்பானியர்கள் நண்பர்களுடன் அல்லது உடன் வேலை பார்ப்பவர்களுடன் அல்லது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக சென்று கண்டு கழிப்பர் . பூத்திருக்கும் மரங்களின் அடியில் கூட்டமாக அமர்ந்து கதை பேசி , இசை இசைத்து பாட்டுப் பாடி , நடனம் ஆடி , மது அருந்தி உணவு உண்டு பொழுது போக்குவர். பொதுவாக இது ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இரவு நேரங்களிலும் கொண்டாடும் வழக்கமும் உள்ளது. இரவு நேரங்களிலும் கொண்டாடுவதற்கு ஏற்றவாறு பூங்கா முழுவதும் மின் விளக்குகள் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். பூங்காவில் பூப்பூத்திருக்கும் வேளைகளில் தின்பண்டங்கள் விற்கும் தற்காலிய கடைகள் நிறைய விரிக்கப்பட்டிருக்கும்.
ஆங்கில வருடத்தின் முதல் நாளன்று கோவிலுக்கு செல்லும் வழக்கம் பெரிதும் பின்பற்றப்படுகிறது . ஹத்சுமொடே ( 初詣 ) என்று இந்த வழக்கம் அழைக்கப்படுகிறது.
மதங்கள்
சின்த்தோவும், பௌத்த மதமும் சப்பானின் முக்கிய மதங்களாகும். கிறித்துவ மதமும் சிறுபான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது.
விளையாட்டு
பாரம்பரிய விளையாட்டான சுமோ சப்பானின் தேசிய விளையாட்டாக மதிக்கப்படுகிறது. தற்காப்புக் கலைகளாக சூடோ, கராத்தே போன்றவையும் வழமையில் உள்ளன. கோல்ப் விளையாட்டும் ஒரு புகழ்பெற்ற விளையாட்டாகும்.சப்பானிய மக்கள் கால்பந்து விளையாட்டை பெரிதும் ஈடுபாட்டுடன் விளையாடுகிறார்கள் .
குறிப்புகள்
மேலும் பார்க்க
கிமி ஙா யொ
சாமுராய்
வெளியிணைப்புகள்
அரசாங்கம்
Kantei.go.jp, official site of the Prime Minister of Japan and His Cabinet
Kunaicho.go.jp, official site of the Imperial House
National Diet Library
Public Relations Office
Japan National Tourist Organization
பொதுத் தகவல்கள்
Japan from UCB Libraries GovPubs
Japan பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் entry
Japan profile from BBC News
Japan from the OECD
Key Development Forecasts for Japan from International Futures
ஆசிய நாடுகள்
கிழக்கு ஆசிய நாடுகள்
தீவு நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
|
4397
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
|
மன்மோகன் சிங்
|
மன்மோகன் சிங் (Manmohan Singh, , பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் 14 ஆவது, பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இவர், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார்.
1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.
மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 மற்றும் 2007ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
மன்மோகன் சிங் கா, பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் 26 செப்டம்பர் 1932 அன்று குர்முக் சிங் மற்றும் அம்ரித் கவுர் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் மிக இளம் வயதிலேயே தனது தாயை இழந்தார்.
இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் அம்ரித்சர், இந்தியாவில் குடிப்பெயர்ந்தனர். இவர் அங்குள்ள இந்துக் கல்லூரியில் பயின்றார். இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர்.
பணி அனுபவம்
பொருளாதாரத்தில் First Class Honours பட்டம் , கேம்பிரிச் பல்கலைக்கழகம், (1957)
பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர், இந்தியா
மூத்த விரிவுரையாளர், பொருளாதாரம் (1957-1959)
வாசிப்பாளர் (1959-1963)
பேராசிரியர் (1963-1965)
பொருளாதாரத்தில் D.Phil பட்டம், Nuffield கல்லூரி at ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், (1962)
தில்லி பொருளாதார பள்ளி, தில்லி பல்கலைக்கழகம்
பேராசிரியர் (அனைத்துலக வர்த்தகம்) (1969-1971)
கௌரவப் பேராசிரியர் (1996)
பொருளாதார ஆலோசகர், வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம், இந்தியா (1971-1972)
இந்திய அரசின் முதன்மைப் பொருளியல் ஆய்வுரைஞர் (1972-1976)
கௌரவப் பேராசிரியர் , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி (1976)
இயக்குனர், இந்திய ரிசர்வ் வங்கி (1976-1980)
இயக்குனர், இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி (1976-1980)
செயலர், நிதி அமைச்சகம் (பொருளாதார அலுவல் பிரிவு), இந்திய அரசு, (1977-1980)
ஆளுனர், இந்திய ரிசர்வ் வங்கி (1982-1985)
துணைத் தலைவர், இந்தியத் திட்டப்பணி ஆணையம், (1985-1987)
பொருளாதார விவகாரங்களில் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் அன்றைய காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் (1990-1991)
இந்திய நிதி அமைச்சர், காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் (ஜூன் 21, 1991 - மே 15, 1996)
எதிர்க்கட்சித் தலைவர், இந்திய நாடாளுமன்ற மேலவை
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியப் பிரதமர் (மே 22,2004 - மே 26, 2014 )
|-
|-
|-
|-
|-
|-
|-
அரசியல்
இவர் 1982 முதலே இந்திய ரிசர்வ் வங்கி மேலாளராக பொறுப்பில் இருந்த போதே அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவியும், இந்திய பிரதமருமான இந்திரா காந்தி காலகட்டத்திலே காங்கிரஸ் கட்சியில் திட்ட ஆலோசகராகவும், காங்கிரஸ் கட்சியின் முன்னேற்றத்திற்கு சிறந்த வழிகாட்டியாகவும் செயல்பட்டதை தொடர்ந்து மன்மோகன் சிங் பிரதமர் இந்திரா காந்தியின் அபிமானம் பெற்ற நம்பிக்கையான நபராக உருவானார்.
பிரதமர் இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு அவரது மகன் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் கட்சியின் நம்பிக்கை பெற்ற சகாக்களில் ஒருவரானார்.
மேலும் காங்கிரஸ் கட்சியில் (1982–1991) வரை காலகட்டத்தில் ராஜ்ய சபா உறுப்பினராகவே தொடர்ந்தார்.
மேலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சந்திரசேகர், நரசிம்ம ராவ் போன்ற பிரதமர் மந்திரிகளின் அமைச்சரவையில் பல ஆலோசனை வழங்கும் திட்டக்குழு தலைவராகவும் செயல்பட்டார்.
மேலும் 1991ல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி மரணத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் இந்திய பொருளாதார பெரும் பின்னடைவில் இருந்த போது இந்தியாவில் அதுவரை இல்லாத விலையேற்றம் போன்ற சிக்கல்களில் இருந்து மீட்டெடுத்ததே அன்றைய இந்திய நிதித்துறை அமைச்சரவையில் இருந்த திரு. மன்மோகன் சிங் தான் என்பதை யாராலும் மறக்க முடியாது.
மேலும் அப்போது பிரதமர் நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதித்துறை அமைச்சராக யாரை நியமிக்கலாம் என்று அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்களிடம் கலந்து ஆலோசனை கேட்ட போது கூட்டணி கட்சிகளில் ஒன்றான தமிழகத்தை சேர்ந்த அன்றைய அதிமுக கட்சியின் தலைவியும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் மன்மோகன் சிங் என்ற பெயரை பரிந்துரை செய்தார்.
மேலும் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இல்லாத போதிலும் சிறந்த எதிர்கட்சி தலைவராகவே செயல்பட்டு உள்ளார்.
பின்பு காங்கிரஸ் கட்சியின் (1991-1996) ஆட்சி காலத்தில் பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிகவும் பக்கபலமாக இருந்து இந்திய பொருளாதார சிக்கலை மேம்படுத்தியதில் மன்மோகன் சிங்க்கு பெரும் பங்கு உண்டு. இதனாலே அக்காலகட்டத்தில் நரசிம்ம ராவ்வின் நம்பிக்கை பெற்றவரில் ஒருவராக திகழ்ந்தார்.
பிறகு 2004, 2009 ஆகிய இரண்டு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற போதிலும் பிரதமராக திகழ்ந்த மன்மோகன் சிங் அவர்கள் தனது ஆளுமையை நேரடியாக செலுத்த முடியாமல் போனதற்கு காரணமே அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியாலே முறியடிக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்கவும்
இந்தியப் பிரதமர்கள்
பிரபல இந்தியர்களின் பட்டியல்
வெளி இணைப்புகள்
இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
இந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்
இந்தியப் பிரதமர்
மன்மோகன் சிங்
இந்திய அரசியல்வாதிகள்
இந்தியப் பிரதமர்கள்
இந்திய நிதியமைச்சர்கள்
1932 பிறப்புகள்
இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள்
வாழும் நபர்கள்
இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்
இந்தியப் பொருளியலாளர்கள்
இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்கள்
இந்திய பஞ்சாப் அரசியல்வாதிகள்
|
4398
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
|
எலன் கெல்லர்
|
ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். இள வயதிலேயே இவர் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவராவார். இவரின் தந்தை அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது ராணுவத்தில் வேலை பார்த்தவர். பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடுத்தர குடும்பம் இவர்களுடையது. ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன் கெல்லருக்கு பதினெட்டு மாதச் சிறுமியாக இருந்த பொழுது மூளைக் காய்ச்சல் வந்தது.
வாழ்க்கைக் குறிப்பு
ஹெலன் கெல்லர், அமெரிக்காவின் அலபாமா மாநகரத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் பிறந்தார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.
1887ஆம் ஆண்டு, ஹெலன் கெல்லரின் பெற்றோர், அலெக்சாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தனர். அலெக்சாண்டர், அவர்களைப் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். கிரகாம்பெல் ஆன் சல்லிவன் என்ற ஆசிரியை ஹெலன் கெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அடுத்த 49 ஆண்டுகளைக் கெல்லரும் சல்லிவனும் ஒன்றாகவே கழித்தனர்.
பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள் மூலம் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ளும் கலையைக் கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டுத் தொட்டு உணர்ந்து கற்றார் ஹெலன் கெல்லர். பிறகு சிறிது சிறிதாக எழுதக் கற்றுக்கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கான பிரெயில் எழுத்து முறையைக் கற்றுக் கொண்டார். எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமை கெல்லருக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார்.
1888 இல் ஹெலன் கெல்லர் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார். 1904 ஆம் வருடம், கெல்லர், சல்லிவனுடன் நியூயார்க் சென்று அங்கேயிருந்த காது கேளாதோருக்கான ரைட்-ஹுமாஸன் பள்ளியில் சேர்ந்தார். அங்கு கெல்லருக்கு பேசக் கற்றுத்தர சாராஃபுல்லர் என்ற ஆசிரியை உதவினார். தனது ஆசிரியை சாராஃபுல்லர் பேசும்போது அவரது வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளைத் தொட்டு தொட்டு உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பேசக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். தட்டுத் தடுமாறி பேசத் தொடங்கிய அவர் பல ஆண்டுகள் பயிற்சி செய்தார். கடைசி வரை அவரால் தெளிவாகப் பேச முடியவில்லை ஆனால் ஹெலன் கெல்லர் ஒருமுறைகூட மனம் தளரவில்லை. மகளிருக்கான கேம்பிரிட்சு பள்ளியில் இணைந்தார். தனியாகப் பாடங்களைக் கற்றுக்கொண்ட கெல்லர் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல விரும்பினார். 1900 இல் ராட்கிளிஃப் பல்கலைக்கழகம் மிகுந்த தயக்கத்துடன் கெல்லரை சேர்த்துக்கொண்டது. ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார்.
எழுத்தாளராக
ஆஸ்திரிய தத்துவவியலாளரான வில்லம் ஜெருசலம் என்பவர் ஹெலன் கெல்லருடைய எழுத்தார்வத்தை வெளிக்கொணர உதவினார்.
தனது கல்லூரி நாட்களிலேயே 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். கல்லூரி நாட்களில் வெளிப்பட்ட ஹெலனின் எழுத்தார்வம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அவரைத் தொடர்ந்திருந்தது. 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற அவருடைய படைப்பு பெண்கள் இதழொன்றில் தொடராக வெளிவந்து பின் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. மராத்தி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஹெலனின் படைப்புகளில் இன்றும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது.
தன்னம்பிக்கை - ஒரு கட்டுரை, நான் வாழும் உலகம், கற்சுவரின் கீதம், இருளிலிருந்து, என் மதம், மாலைக்காலத்து அமைதி, ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நம்பிக்கை கொள்வோம், ஆன் சல்லிவன் மேஸி - என் ஆசிரியை, திறந்த கதவு போன்றவை அவருடைய பிரசுரமான படைப்புகள் சில. இவைதவிர காது கேளாமை, பார்வையின்மை, சமூகவியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணுரிமை போன்றவை தொடர்பாகப் பல கட்டுரைகளையும், ஆக்கங்களையும் நாளிதழ்களுக்கும், வாராந்திர, மாதாந்திரப் பத்திரிகைகளுக்கும் பங்களித்தவண்ணமிருந்தார்.
அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்குச் சற்றும் சளைக்காதவரான கெல்லர், சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உருவெடுத்தார். இவர் உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச தத்துவத்தையும் ஆதரித்துப் பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார். தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஹெலன் தன் வாழ்நாளைக் கண்ணிழந்தோர் மற்றும் காதுகேளாதோர்க்காகச் செலவிட்டார். அதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்தார். அவர்களுக்கென பள்ளிகள் திறக்கச் செய்யும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹெலன் கெல்லர், ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஹெலன் கெல்லர் நிதி என்ற பெயரில் நிதி ஒன்றினைத் தொடங்கி, அதில் சேர்ந்த தொகையான ரூபாய் ஒன்றரை கோடியைப் பள்ளிகளுக்கு வழங்கினார். பார்வையற்றோர்க்கென தேசிய நூலகம் ஒன்றனை உருவாக்கி, உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். தன்னைப்போல அவர்களும் மீட்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் எண்பத்தெட்டு வயது வரை அயராது உழைத்தார்.
உதவியாளர்கள்
ஆன் சல்லிவன் ஹெலன் கெல்லருக்கு ஆசிரியராகச் சேர்ந்தது முதல் நீண்ட நாள் அவருடனே தங்கினார். 1905 இல் அவர் ஜான் மேக்கி என்பவரை மணந்தார். ஆனால் 1914 இல் இருந்து சல்லிவனின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. எனவே பாலி தாம்சன் என்ற ஸ்காட்லாந்துநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஹெலன் கெல்லருக்கு உதவியாளராகவும் மொழிபெயர்பாளராகவும் வந்து சேர்ந்தார். இவருக்குக் காது கேளாதோர் மற்றும் கண்பார்வையற்றோரை பராமரிப்பதற்கான முன்னனுபவம் ஏதும் இல்லாதவராவார். ஆனால் நாளடைவில் இவர் ஹெலன் கெல்லருடைய காரியதரிசியாகவும் ஒரு நல்ல கூட்டாளியாகவும் இறுதிவரை உடனிருந்து பணிபுரிந்தார். கெல்லர் குவீன்சிலுள்ள ஃபாரஸ்ட் ஹில் என்ற இடத்திற்கு ஜான், சல்லிவன் மற்றும் பாலி தாம்சனுடன் குடிபெயர்ந்தார். அங்கு தனது இல்லத்தைக் கண்பார்வையற்றோருக்கான அமெரிக்க நிறுவனமாக மாற்றினார். ஹெலன் கெல்லர் வாஷிங்டன் நகரின் புகழ்பெற்ற பெண்மணியாகத் திகழ்ந்தார். 1936 ஆம் ஆண்டு நினைவு மீளா நிலையில் ஹெலன் கெல்லரின் கையைப் பிடித்தபடி ஆன் சல்லிவன் உயிர் துறந்தார். கெல்லர் தனது மொழிபெயர்ப்பாளர் பாலி தாம்சன் என்பவரின் உதவியுடன் வாழ்ந்துவரலானார்; இவர்கள் பின்னர் கன்னக்டிகட் நகருக்குக் குடிபெயர்ந்தனர். இருவரும் இணைந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுலா மேற்கொண்டு பார்வையற்றோருக்கான நிதி திரட்டினர். 1957 இல் பாலி தாம்சன் பக்கவாத நோயால் தாக்கப்பட்டார். ஆனால் இறுதிவரை அவர் மீள இயலவில்லை. 1960 இல் தாம்சனும் இறந்தார். அதன் பிறகு 1957 இல் பாலி தாம்சனுக்கு உதவிகள் புரிய வந்த வின்னி கார்பல்லி என்ற செவிலியர் ஹெலன் கெல்லரின் இறுதி வரை உடனிருந்தார்.
அரசியல்
கெல்லர் ஒரு உலகப் புகழ் பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திடழ்ந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு வழக்குரைஞராகவும் திகழ்ந்தார். அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததில் ஹெலன் கெல்லரின் பங்களிப்புகள் அதிகமானது. உட்ரோ வில்சனின் எதிர்பாளராகவும் ஒரு சோசலிச வாதியாகவும் விளங்கினார். அமெரிக்க பிறப்புக் கட்டுப்பாடு சங்கத்தின் ஆதரவாளராகத் தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1915 ஆம் ஆண்டு அவர் ஜார்ஜ் கெஸ்லர் இன்பவருடன் இணைந்து 'ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு'(HKI) ஒன்றைத் தொடங்கினார். இந்நிறுவனம் பார்வை, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த ஆய்வுகளுக்காக நிறுவப்பட்டது 1920 ஆம் ஆண்டு அவர் அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான ஒன்றியம் (ACLU) ஒன்றைத் தொடங்கினார். 40 நாடுகளுக்கு ஆன் சல்லிவனுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கெல்லர் அடிக்கடி ஜப்பான் சென்று வந்ததால் ஜப்பான் மக்களின் மனங்கவர்ந்த பெண்மனியாக ஆனார். கெல்லர் குரோவர் கிளீவ்லேண்ட், லிண்டன் பி ஜான்சன் உள்ளிட்ட பல அமெரிக்க அதிபர்களைச் சந்தித்தார். புகழ்பெற்ற நபர்களான அலெக்சாண்டர் கிரகாம் பெல், சார்லி சாப்ளின், மார்க் டுவெயின் போன்றோருடன் தொடர்பில் இருந்தார். கெல்லர் மற்றும் ட்வைன் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கெல்லர் மற்றும் மார்க் டுவெயின் ஆகியோருடைய கருத்துகளால் இருவரும் தீவிரவாதிகளாகக் கருதப்பட்டனர். ஆனால் இருவருடைய மக்களுக்கான பொதுநலப் பணிகளே மேலோங்கியதால் இவர்களுடைய அரசியல் கருத்துகள் மறக்கப்பட்டன. கெல்லர் அமெரிக்க சோசலிசக் கட்சியின் உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இருந்தார்.
இறுதிக் காலம்
ஹெலன் கெல்லர் 1961 இல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தனது இறுதி நாட்களில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று. 1964, செப்டம்பர் 14 இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் லின்டண் பி. தாம்சன் அதிபருக்கான சுதந்திரப் பதக்கத்தை ஹெலன் கெல்லருக்கு வழங்கினார். இது அமெரிக்கக் குடியரசின் மிக உயர்ந்த இரு பதக்கங்களுள் ஒன்றாகும். 1965 இல் கெல்லர் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாட்டின் மிகச்சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னும் ஒரு வாரத்தில் தனது 88 ஆவது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் 1968, ஜூன் 1 ஆம் நாள் தூக்கத்திலேயே உயிர் துறந்தார். இவரது சேவையைக் கருதி இவரது உடல் வாஷிங்டன் டி. சியில் ஆன் சல்லிவன், பாலி தாம்சன் ஆகியோர்ரது உடலருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஊடகங்களில்
ஹெலன் கெல்லருடைய வாழ்க்கை பலமுறை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. 1919 இல் டெலிவரன்சு என்ற வசனமில்லாப்படமாக எடுக்கப்பட்டது. காத்ரின் கோர்னெல் என்பரால் ஹெலன் கெல்லரின் கதை என்ற பெயரில் குறும்படமாக எடுக்கப்பட்டது. மேலும் ஹார்ஸ்ட் கார்பொரேசன் என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் ஹெலனின் வாழ்க்கையை தொடராகவும் வெளியிட்டது. ஹெலன் கெல்லர் எழுதிய சுய வரலாற்று நூலான எனது கதை நாடகமாகவும் எடுக்கப்பட்டது. இது பின்னர் 1962 இல் திரைப்படமாக்கப்பட்டு ஆஸ்கார் விருது பெற்றது. 1979 மற்ரும் 2000 த்தில் மீண்டும் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது. 1984 இல் கெல்லருடைய வாழ்க்கை தொலைக்காட்சித் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது இப்படம் ஹெலன் கெல்லருடைய கல்லூரி மற்றும் அரசியல் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவதாக இருந்தது. 2005 இல் கெல்லரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'பிளாக்' என்ற பாலிவுட் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதே ஆண்டுல் சுவேடன்பர்க் நிறுவனத்தால் கெல்லரைப் பற்றிய குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது. இதில் கெல்லர் பார்வை, காது, வாய் என்ற முப்புலனும் பாதிக்கப்பட்ட கெல்லரின் நம்பிக்கை மற்ரும் மனவுறுதியின் காரணமாகப் பெற்ற வெற்றிகள் எடுத்துச் சொல்லப்பட்டன.
மார்ச் 6, 2008 இல் நியூ இங்கிலாந்து வரலாற்றுக் கழகம் ஹெலன் கெல்லர் தனது ஆசியரான ஆன்சல்லிவனுடன் இருக்கும் படங்களையும் கெல்லர் தனது பொம்மையுடன் இருக்கும் படங்களையும் மறுபடியும் வெளியிட்டு உலகெங்கும் கவனத்தை ஈர்த்தது.
இந்நிறுவனம் மேலும் ஹெலன் கெல்லர் குரலசைவு மூலம் கற்றுக்கொண்ட ஒளிப்படங்களையும் வெளியிட்டது.
சிறப்புகள்
1999களில் கெல்லர் இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறப்புமிக்கப் பெண்மணியாக அறியப்பட்டார். 2003 இல் அலபாமா மாநிலம் அம்மாநிலத்தின் சிறப்புமிக்கக் குடிமகளாக அறிவித்தது.
மேலும் அலபாமாவில் உள்ள செப்பீல்டு மருத்துவமனை ஹெலன் கெல்லர் மருத்துவமனையாக அர்ப்பணிக்கப்பட்டது.
ஸ்பெயின், கடாபி, லாடு, இஸ்ரேல், போர்சுகல்,லிபெயின், பிரான்சு ஆகிய நாடுகளில் தெருக்களுக்கு ஹெலன் கெல்லருடைய பெயர் சூட்டப்பட்டது.
இந்தியாவின் மைசூர் மாகாணத்தில் கே.கே. சீனிவாசன் என்பவரால் நிறுவப்பட்ட வாய்பேசாதோர் மற்ரும் காதுகேளாதோருக்கான முன்பருவப் பள்ளிக்கு ஹெலன் கெல்லருடைய பெயரால் மாற்றப்பட்டது.
2009, அக்டோபர் 7 இல் அலபாமா மாநிலத்தில் ஹெலன் கெல்லருடைய வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. மேலும் ஹெலன்கெல்லர் முதன் முதலாக ஏழு வயதான போது ஆன் சல்லிவனுடன் தண்ணீரைத் தொட்டுணர்ந்து தண்ணீர் என்பதற்கான பொருளை ஊணர்ந்த அக்காட்சி சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அங்கு பிரெய்லி எழுத்துகளில் "உலகிலேயே எங்கும் காணமுடியாத தொட முடியாத இதயத்தால் உணரப்பட்ட அழகிய பொருள்." என்று பொறிக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் மாற்றுத் திறனாளிக்கு அதுவும் குழந்தைப் பருவத்தில் தலைநகரில் சிலை வைக்கப்பட்டது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
மேற்கோள்கள்
மேலதிக வாசிப்பிற்கு
Keller, Helen with Anne Sullivan and John A. Macy (1903) The Story of My Life. New York, NY: Doubleday, Page & Co.
Lash, Joseph P. (1980) Helen and Teacher: The Story of Helen Keller and Anne Sullivan Macy . New York, NY: Delacorte Press.
Herrmann, Dorothy (1998) Helen Keller: A Life. New York, NY: Knopf.
வெளியிணைப்புகள்
ஹெலன் கெல்லரின் தன்வரலாறு -- குட்டென்பர்க் திட்டத்தில் இலவச e-text
ஹெலன் கெல்லரின் முதல் ஒளிப்படம். பொம்மையுடன் அவர் சிறுமியாக இருந்தபொழுது எடுத்த படம்.
The Story of My Life with introduction to the text
Booknotes interview with Dorothy Herrmann on Helen Keller: A Life October 25, 1998.
"Who Stole Helen Keller?" by Ruth Shagoury in the Huffington Post, June 22, 2012.
Papers of Helen Adams Keller, 1898–2003 Schlesinger Library, Radcliffe Institute, Harvard University.
Poems by Florence Earle Coates: "To Helen Keller", "Helen Keller with a Rose", "Against the Gate of Life"
புகழ்பெற்ற எழுத்தாளர் ஹெலன் கெல்லர் பிறந்த தின சிறப்பு பகிர்வு
ஆங்கில எழுத்தாளர்கள்
பெண் எழுத்தாளர்கள்
வரலாற்றில் பெண்கள்
1880 பிறப்புகள்
1968 இறப்புகள்
இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்
|
4407
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
|
தக்காளி பேரினம்
|
தக்காளி பேரினம் பல்வேறுபட்ட ஆண்டு, பல்லாண்டு நிலைத்திணை இனங்களைக் கொண்ட ஒரு பேரினம் ஆகும். இப்பேரினத்தைச் சேர்ந்த நிலைத்திணைகள் பூஞ்செடிகளாகவோ, கொடிகளாகவோ, பற்றைகளாகவோ, சிறிய மரங்களாகவோ காணப்படுகின்றன. கூடுதல் இனங்களில் கவர்ர்சிமிகு பழங்களும் பூக்களும் காணப்படுகின்றன. முன்னர் தனிப் பேரினங்களாக கணிக்கப்பட்ட சில பேரினங்களும் இங்கு இணைக்கப்பட்டமையால் இன்று இப்பேரினத்தில் 1500 தொடக்கம் 2000 இனங்கள் உள்ளன.
இப்பேரினத்தின் கூடுதலான நிலைத்திணைகளின் பச்சை நிறப்பகுதிகளும்,, காய்களும் மாந்தருக்கு நச்சுத்தணைமையைக் கொண்டன. எனினும் சில நிலைத்திணைகளின் காய்கள், இலைகள், பழங்கள், கிழங்கள் மாந்தரின் உணவிற்கு ஏற்றதாக உள்ளது. உலகின் முக்கிய உணவுகள் இப்பேரினத்திலில் அடங்குகின்றன அவையாவன
தக்காளி (S. lycopersicum)
உருளைக் கிழங்கு (S. tuberosum)
கத்தரிக்காய் (S. melongena)
என்பனவாகும்.
செடிகள்
|
4408
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
|
அசாம்
|
அசாம் மாநிலம் வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளது, 28 மாநிலங்களுள் ஒன்றாகும். இதன் தலைநகர் திஸ்பூர். குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் வங்காள மொழி ஆகியன அசாமின் அலுவல்முறை மொழிகளாகும்.
அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்குப் பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகளின் பாயும் பள்ளத்தாக்கையும், அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் பரப்பளவு சுமார் 78,438 சதுர கிலோமீட்டர்கள். அசாம் மாநிலத்தை ஒட்டியுள்ள 6 மாநிலங்களையும், அசாம் மாநிலத்தையும் , ஏழு சகோதரிகள் என்று அழைப்பர். அவையாவன: அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா.
இவ்வேழு மாநிலங்களும் மற்ற இந்திய மாநிலங்களோடு மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஒரு சிறிய பகுதியின் மூலமாகவே நிலவழியாக இணைக்கப்படுகின்றன. இப்பாதையை சிலிகுரி பாதை என்றும், கோழி கழுத்துப் பாதை என்றும் அழைக்கப்படுகிறது . அசாம் மாநிலம் பூட்டான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளுடன் சர்வதேச எல்லைகளையும் கொண்டுள்ளது.
அசாம் மாநிலம், 1826 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் யாண்டபோ உடன்படிக்கையால் இந்தியாவின் அங்கமானது.
தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் அசாம் மாநிலம், பெட்ரோலியம், பட்டு ஆகியவற்றின் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. உலகில் வேறெங்கிலும் காண கிடைக்காத பல அரிய விலங்கினங்களும், தாவர வகைகளும் அசாம் காடுகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை ஆகிய அரியவகை விலங்குகள் இம்மாநிலக் காடுகளில் வாழுகின்றன. இதன் காரணமாக, இவ்விலங்கினங்களைக் காண உலகமெங்கிலும் இருந்து இயற்கை ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் அசாம் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர். குறிப்பாக, காசிரங்கா பகுதியும், மணாஸ் பகுதியும் உலக பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. முன்காலத்தில் அசாம் மாநிலம் அதன் காட்டு வளத்திற்கும், காட்டில் இருந்து கிடைக்கும் பொருள்களுக்கும் புகழ்பெற்றிருந்தது. தொடர்ச்சியான காட்டழிப்பால் இம்மாநிலத்தின் காடுகளின் நிலை பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது. உலகின் அதிக மழைபெய்யும் இடங்களில் ஒன்றான அசாம் மாநிலம், மாபெரும் ஆறான பிரம்மபுத்திரா ஆற்றினால் வளம் பெறுகிறது
பெயர்க்காரணம்
அசாம் மகாபாரதத்தில் பிரகியோதிசா என்ற பெயரிலும், காமரூபா அரசு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. அசாம் என்ற பெயர் இப்பகுதியை 1228 முதல் 1826 வரை ஆண்ட அகோம் அரசின் பெயரால் சூட்டப்பட்டதாகத் தெரிகிறது. ஆங்கிலேய ஆதிக்கத்தின்கீழ் 1838 ஆம் ஆண்டு வந்த அசாம் நிலப்பகுதி, அதே பெயரிலேயே அழைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 27ஆம் தியதி இன்றைய அசாம் அரசு மாநிலத்தின் பெயரை அசோம் என மாற்றியமைத்தது. இம்மாற்றம் மக்களிடையே பரவலான எதிர்ப்பை உருவாக்கியது.
புவியியல்
பல புவியியல் ஆய்வுகளின் முடிவில் அசாம் மாநிலத்தின் வற்றாஆறான பிரம்மபுத்திரா ஆறு, இமயமலை தோன்றுவதற்கு முன்னரே தோன்றியதாகக் கண்டறிந்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மிகவேகமாக பாயும் பிரம்மபுத்திரா ஆறானது அசாம் மாநிலத்தில் வேகம் குறைந்து, பல கிளை ஆறுகளாக பிரிந்து, சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் அகலமும், 1000 கிமீ நிளமும் கொண்ட பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கை வளம் செய்கிறது.
அசாம் மாநிலத்தின் நிர்வாகக் கோட்டங்கள்
கீழ் அசாம் கோட்டம்
நடு அசாம் கோட்டம்
மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம்
மேல் அசாம் கோட்டம்
வடக்கு அசாம் கோட்டம்
மாவட்டங்கள்
அசாம் மாநிலத்தில் 33 மாவட்டங்கள் உள்ளன, அவை பின்வருமாறு,
பார்பேட்டா மாவட்டம்
போங்கைகாவொன் மாவட்டம்
கசார்
தர்ரங் மாவட்டம்
தேமாஜி மாவட்டம்
துப்ரி மாவட்டம்
திப்ருகார் மாவட்டம்
கோல்பாரா மாவட்டம்
கோலாகட் மாவட்டம்
ஹைலாகண்டி மாவட்டம்
ஜோர்ஹாட் மாவட்டம்
கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்
கரீம்கஞ்சு மாவட்டம்
கோகராஜார் மாவட்டம்
லக்கீம்பூர் மாவட்டம்
மரிகாவன் மாவட்டம்
|நகாமோ மாவட்டம்
நல்பாரி மாவட்டம்
திமா ஹசாவ் மாவட்டம்
சிவசாகர் மாவட்டம்
சோணித்பூர் மாவட்டம்
தின்சுகியா மாவட்டம்
காமரூப் மாவட்டம்
கம்ருப் பெருநகர் மாவட்டம்
பாக்சா மாவட்டம்
உதல்குரி மாவட்டம்
சிராங் மாவட்டம்
கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம்
மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்
சராய்தியோ மாவட்டம்
தெற்கு சல்மாரா மாவட்டம்
ஹொஜாய் மாவட்டம்
பிஸ்வநாத் மாவட்டம்
பஜாலி மாவட்டம்
மாஜுலி
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 31,205,576 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 85.90% மக்களும்; நகர்புறங்களில் 4.10% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.07% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 15,939,443 ஆண்களும் மற்றும் 15,266,133 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 958 வீதம் உள்ளனர். 78,438 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 398 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 72.19 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.85 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 66.27 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4,638,130 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 19,180,759 (61.47 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 10,679,345 (34.22 %) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 20,672 (0.07 %), சமண சமய மக்கள் தொகை 25,949 (0.08 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,165,867 (3.74 %) ஆகவும், , பௌத்த சமய மக்கள் தொகை 54,993 (0.18 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 27,118 (0.09 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 50,873 (0.16 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான அசாமிய மொழியுடன் போடோ மொழி, இந்தி, வங்காளம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.
போக்குவரத்து
தொடருந்து
கௌஹாத்தி தொடருந்து நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இருப்புப் பாதை மூலம் தொடருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள்
1126 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை 31 வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாக உள்ளது.
வானூர்தி நிலையம்
கௌஹாத்தி லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம்
நாட்டின் மற்றும் உலகின் பல நகரங்களுடன் இணைக்கிறது.
வரலாறு
முன் வரலாறு
கற்காலத்தில் அசாம் பகுதி ஒருகிணைந்த பகுதியாக இருந்து உள்ளது. இதணை அப்பொழுது வாழ்ந்த மக்களின் பரிமாற்ற பொருட்கள் விளக்குகிறது.ஆனால் இரும்பு மற்றும் வெண்கல காலத்தில் வணிகத்திற்கான காலச் சான்று எதுவும் இல்லை.
புராண கதை
முன்பு அசாம் பகுதியை தானவர்கள் அரச மரபை சேர்ந்த மஹிரங்க தானவரால் ஆட்சி செய்யப்பட்டது. இவர் ஆட்சியை நரகாசூரனால் அழிக்கப்பட்டது. நரகாசூரன் கிருஷ்ணரால் கொல்லபட்டார். பிறகு நரகாசூரனின் மகன் பகதத்தன் அரசனானார்.
பண்டைய காலம்
சமுத்திரகுப்தரின் 4வது நூற்றாண்டு கல்வெட்டுகள் காமரூபம் (மேற்கு அசாம்) மற்றும் தேவாகம் (மத்திய அசாம்) பகுதினை குப்த பேரரசின் எல்லைகளாக குறிப்பிடுகின்றன.
காமரூப பேரரசு
காமரூப பேரரசின் பிராக்ஜோதிஷ்புரம் மற்றும் திஸ்பூர் தலைநகரங்களாகக் கொன்டு பொ.ஊ. 350 முதல் 1140 முடிய ஆட்சி செய்தனர்.
அகோம் பேரரசு
அகோம் பேரரசினர் அசாம் பகுதியை பொ.ஊ. 1228 முதல் 1826 முடிய ஆண்டனர்.
இவற்றையும் பார்க்கவும்
அசாம் ஒப்பந்தம்
போடோலாந்து
போடோ மக்கள்
அசாம் துடுப்பாட்ட அணி
அசாம் முதலமைச்சர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
வடகிழக்கு இந்தியா
|
4410
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
|
குசராத்து
|
குசராத்து (, Gujarat) இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளன. இது இந்தியாவில் மகாராட்டிரத்திற்கு அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும். இதன் வடமேற்கில் பாக்கித்தானும் வடக்கில் இராசத்தானும் , மேற்கில் மத்திய பிரதேசம் மற்றும் தெற்கில் மகாராட்டிர எல்லைகளாக அமைந்துள்ளன.
காந்தி நகர் இதன் தலைநகராகும். இது மாநிலத்தின் முன்னாள் தலைநகரும் பொருளாதாரத் தலைநகருமான அகமதாபாத்தின் அருகில் அமைந்துள்ளது.
மகாத்மா காந்தி, சர்தார் வல்லப்பாய் படேல், கே. எம். முன்சி, மொரார்சி தேசாய், யு. என். தேபர் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாவர்.
வரலாறு
குஜராத் (குஜராத்து) என்னும் பெயர் மத்திய ஆசியாவில் இருந்து இன்றைய குஜராத்துக்கு குடிபெயர்ந்த குர்ஜ் இன மக்களிடம் இருந்து தோன்றியதாக வரலாறு. குர்ஜ் இன மக்கள் இன்றைய ஜார்ஜியா (பண்டைய காலத்தில் குர்ஜிஸ்தான் என்று அழைக்கப்பட்டது) நாட்டிலிருந்து பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டு வாக்கில் குடிபெயர்ந்தனர். பொ.ஊ. 35 முதல் 405 வரை ஈரானிய சாகஸ் இன மக்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. பின்னர், சில காலம் இந்திய-கிரேக்க அரசாட்சியின் கீழ் இருந்தது. குஜராத்தின் துறைமுகங்கள் குப்த பேரரசாலும், மௌரிய பேரரசாலும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. ஆறாம் நூற்றாண்டு வாக்கில், குப்தர்களின் வீழ்சசிக்குபின், குசராத்து தன்னாட்சி பெற்ற இந்து அரசாக விளங்கியது. குப்த பேரரசின் சேனாதிபதியான மைதிரேகாவின் குலவழிகள், ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வல்லாபியை தலைநகராக கொண்டு குஜராத்தை அரசாண்டனர். பொ.ஊ. 770 களில் அரேபிய படையெடுப்பாளர்களின் முயற்சியால் வல்லாபி குல ஆட்சி முடிவுக்கு வந்தது. பொ.ஊ. 775ல், பார்சி இன மக்கள் ஈரானிலிருந்து, குஜராத்தில் குடியேறத் துவங்கினர். பின்னர், எட்டாம் நூற்றாண்டில் பிரத்திகா குல அரசர்களாலும், ஒன்பதாம் நூற்றாண்டில் சோலன்கி குல அரசர்களாலும் அரசாளப்பட்டது. பல இஸ்லாமிய படையெடுப்புகளையும் தாண்டி சோலன்கி ஆட்சி 13ம் நூற்றாண்டின் கடைசி வரை தொடர்ந்தது.
பொ.ஊ. 1024–1850
பொ.ஊ. 1024–1025இல் கஜினி முகமது, சோமநாதபுரம் மீது படையெடுத்து, கோயில் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றார். பொ.ஊ. 1297–1298 ல் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி அன்கில்வாரா நகரை அழித்து குஜராத்தை தில்லி சுல்தானகத்துடன் இணைத்தார். 14ம் நூற்றாண்டின் கடைசியில், தில்லி சுல்தானியம் பலவீனம் அடைந்த நிலையில், தில்லி சுல்தானியத்தின் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த ஜபர்கான் முசாப்பர் தன்னை குசராத்தின் முழு ஆட்சியாளராக அறிவித்துகொண்டார். அவனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவனது மகன் அகமது ஷா, அகமதாபாத் நகரத்தை நிறுவி, அந்நகரை தன் தலைநகராய் கொண்டு பொ.ஊ. 1411 முதல் 1442 வரை ஆட்சி செய்தார். குசராத்து சுல்தானிகம் பொ.ஊ. 1576 ஆம் ஆண்டில் பேரரசர் அக்பரின் படையெடுப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. மொகலாயர்களுக்கு பின் மராத்திய மன்னர்களாலும், குறுநில மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது.
பிரித்தானிய இந்தியா அரசின் கீழ் குஜராத்தில் பரோடா அரசு, பவநகர் அரசு, கட்ச் இராச்சியம், ஜாம்நகர் அரசு, ஜூனாகாத் அரசு, பாலன்பூர் அரசு, படான் அரசு, போர்பந்தர் அரசு, ராஜ்பிபாலா அரசு உள்ளிட்ட 49 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன.
பொ.ஊ. 1614–1947
போர்த்துகீசர்கள் தமது ஏகாதிபத்தியத்தை குசராத்தின் துறைமுக நகர்களான தாமன், தியு ஆகிய இடங்களிலும் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி ஆகிய இடங்களிலும் நிறுவினர். பிரித்தானியாவின் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், 1614ல், தனது முதல் தொழில்சாலையை சூரத்து நகரில் நிறுவியது. மராட்டிய அரசுகளுடன் நடந்த இரண்டாம் ஆங்கிலேய மராட்டிய போரின் முலம் பெரும்பான்மையான பகுதிகளை ஆங்கிலேயர் கைப்பற்றினர். குறுநில ஆட்சியாளர்களிடம் பல அமைதி ஓப்பந்தங்களை உருவாக்கி, அவர்களுக்கு குறைந்த சுயாட்சி வழங்கி, அனைத்து பகுதிகளையும் தம் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தனர்.
இந்திய விடுதலை போராட்டம்
இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களான மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல், கே. எம். முன்ஷி மொரார்ஜி தேசாய், மற்றும் பாகிஸ்தானின் முதல் கவர்னர் செனரலான முகமது அலி ஜின்னா போன்றவர்கள் குசராத்தைச் சேர்ந்தவர்கள்.
விடுதலைக்குப் பின்
இந்திய விடுதலைக்குப்பின், 49 சுதேச சமஸ்தானங்களைக் கொண்டிருந்த குசராத்தை பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1 மே 1960 அன்று, பம்பாய் மாகாணத்தை மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு மகாராட்டிரம் மற்றும் குசராத்து மாநிலங்கள் உருவானது. குசராத்து மாநிலத்தின் தலைநகராக அகமதாபாத் நகர் தேர்வு செய்யப்ப்ட்டது. பின், 1970ல் காந்திநகருக்கு மாற்றப்பட்டது.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி குஜராத் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 60,439,692 ஆக உள்ளது. நகர்புறங்களில் 42.60% மக்களும், கிராமப்புறங்களில் 57.40% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.28% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 31,491,260 ஆண்களும் மற்றும் 28,948,432 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 308 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 78.03% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.75% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 69.68% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,777,262 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் பில் பழங்குடி மக்கள் தொகை 34,41,945 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 53,533,988 (88.57%) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 5,846,761 (9.67%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 316,178 (0.52%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 58,246 (0.10%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 579,654 (0.96%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 30,483 (0.05%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 16,480 (0.03%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 57,902 (0.10%) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான குஜராத்தி, உடன் இந்தி, மராத்தி, உருது மொழிகள் பேசப்படுகின்றன.
பொருளாதாரம்
மாநிலத்தின் முக்கிய வேளாண் பயிர்கள் பருத்தி, நிலக்கடலை, பருப்பு வகைகள், நவதாணியங்கள் மற்றும் பேரீச்சம் பழம் ஆகும். பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. சிமெண்ட், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள், வைரங்களை பட்டை தீட்டும் தொழிற்கூடங்கள், துணி மற்றும் ஆடை உற்பத்தி ஆலைகள் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு துணையாக உள்ளது.
சூரிய மின்சக்தி கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பிற மாநிலங்களுக்கு விற்பதன் மூலம் நிதி ஆதாரங்கள் பெருகி வருகின்றன. இம்மாநிலத்தின் கண்ட்லா துறைமுகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம் வருவாய் ஈட்டுகிறது.
போக்குவரத்து வசதிகள்
தொடருந்துகள்
அகமதாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம் குஜராத் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களுடன் இணைக்கும் தொடருந்துகள் இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது.
வானூர்திகள்
சர்தார் வல்லபாய்படேல் பன்னாட்டு விமான நிலையம் வான் வழியாக இந்தியா மற்றும் பன்னாட்டு நகரங்களை இணைக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகள்
குஜராத் மாநிலம் வழியாக செல்லும் பதினோறு தேசிய நெடுஞ்சாலைகள், குஜராத்தை நாட்டின் பிற பகுதிகளை தரை வழியாக இணைக்கிறது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள்; தேசிய நெடுஞ்சாலை 6, தேசிய நெடுஞ்சாலை 8.
மாவட்டங்கள்
2001 குசராத்து நிலநடுக்கம்
2001 ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் காலை 08:46 மணிக்கு நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கதிற்கு சுமார் 12,000 பேர் பலியாயினர். சுமார் 55,000 பேர் படுகாயமுற்றனர்.
குசராத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டமும் வேளாண்மை வளர்ச்சியும்
குசராத்தில் குறிப்பாக மழை வளம் மிகக் குறைவாக உள்ள கத்தியவார் தீபகற்பத்தில், குடிநீர் பற்றாக்குறை நீக்க்வும் மற்றும் வேளாண்மை வளர்ச்சி மேம்படுத்தவும் பசுமை புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றியும் அடைந்துள்ளது. ‡
சரணாலயங்கள்
குசராத் மாநிலத்தில் ஆசிய சிங்கங்களுக்கு பெயர்பெற்ற கிர் தேசியப் பூங்கா மற்றும் பிற விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான சரணாலயங்கள் உள்ளது.#
புனித தலங்கள்
சோமநாதபுரம் சிவன் கோயில்
துவாரகை கண்ணன் கோயில்
நாகேஸ்வரர் கோயில்
பாலிதான சமணர் கோயில்கள்
தரங்கா சமணர் கோயில்கள்
கிர்நார் மலை சமணர் கோயில்கள்
தொல்லியற் களங்கள்
தோலாவிரா
லோத்தல்
சூரியன் குளம்
ராணியின் கிணறு
2002 குசராத்து வன்முறை
கோத்ரா இரயில் நிலயத்தில், சபர்மதி விரைவு வண்டியில் பயணித்த பயணிகளுடன் இரயில் பெட்டியை எரித்த காரணத்தினால் அப்பாவி இந்து பயணிகள் 59 க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குற்றச் செயலுக்கான தீர்ப்பு 21.11.2011ல் குசராத் உயர்நீதிமன்றம் வெளியிட்டது↑. பிப்ரவரி 2002 ம் ஆண்டு இவ்வுணர்வு மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதில், 790 முஸ்லிம்களும், 254 இந்துகளும் கொல்லப்பட்டனர். சுமார் 2500 பேர் காயம் அடைந்தனர். இவ்வன்முறை தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளை மனித உரிமைகள் கழகம் கடுமையாக கண்டித்துள்ளது.
படக்காட்சியகம்
குஜராத் மாநிலத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்;
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
குசராத்து மாநிலத்தில் உள்ள பறவைகள் விலங்குகள் சரணாலயங்கள்
↑கோத்ர இரயில் பெட்டியை பயணிகளுடன் எரித்த வழக்கில் தீர்ப்பு
‡ குசராத்து மாநிலத்தில் வேளாண்மைப் புரட்சி
குஜராத் அரசின் தகவல் வலைத்தளம்
↑ குஜராத் வரலாறு
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
|
4412
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%88
|
ஈரப்பசை
|
ஈரப்பசை (Moisture) என்பது நுண்ணளவில் நீர் இருத்தலைக் குறிக்கும். இவ்வாறான ஈரப்பசை பல்வேறு பொருள்களில் பல்வேறு உருக்களில் இருக்கலாம். ஈரப்பசையின் விளைவாக மரத்தினால் ஆன பொருள்களிலும் பிற உயிர்சார் பொருள்களிலும் அழுகல் வினை (rot) ஏற்படலாம். தவிர உலோகங்களில் அரிப்பு ஏற்படவும் மின் இணைப்புகளில் பழுது ஏற்படவும் இது காரணமாகலாம்.
பிற மரங்களின் மீது வாழும் வாண்டா போன்ற எபிபைட்டுகள் காற்றில் உள்ள ஈரப்பசையை உட்கொண்டு வாழ்கின்றன.
இவற்றையும் பார்க்கவும்
ஈரப்பதம் (Humidity)
நீரியல்
|
4421
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF
|
வாரணாசி
|
காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி (Varanasi, (), இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று. இந்நகரம் பொ.ஊ.மு. 1800 ஆண்டுகளுக்கு மேல், மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாகும்.
இங்குள்ள காசி விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி. இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானவை. வாரணாசி பனாரசு இந்து பல்கலைக்கழகம் இந்தியாவில் புகழ்பெற்ற கல்வி மற்றும் தொழிற்கல்வி நிலையமாகும்.
பெயர்க் காரணம் அல்லது சொற்பிறப்பு
வாரணாசி என்ற பெயர் இந்நகருக்கு சூட்ட காரணமாக வருணா ஆறும் மற்று அசி ஆறும் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் பாய்ந்து பின் இந்நகரில் கங்கை ஆற்றில் ஒன்று கூடுவதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது.
ரிக் வேதத்தில் இந்நகரை அறிவு தரத்தக்க, ஒளி பொருந்திய நகரம் என்ற பொருளில் காசி என குறிப்பிட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில், மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது என சிவபெருமான் காசியின் பெருமையை கூறுகிறார்.
சமசுகிருத மொழியில் காசி எனில் ஒளி பொருந்திய நகர் என மொழிபெயர்ப்பு செய்யலாம்.
வரலாறு
கங்கைச் சமவெளியில் அமைந்த வாரணாசி நகரம் இந்துக்களின் வேதங்கள் மற்றும் வேதாந்தம் ஆகியவற்றுக்கு 11-வது நூற்றாண்டு முதல் இருப்பிடமாக அமைந்துள்ளது. வாரணாசி நகரில் மக்கள் வேதகாலத்திலிருந்து தொடர்ந்து பல்லாண்டுகளாக வசித்து வருகின்றனர் என்பதை வாரணாசிக்கு அருகில் உள்ள அக்தா (Aktha) மற்றும் ராம்நகரை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் இந்நகரில் மக்கள் பொ.ஊ.மு. 1800-ஆம் ஆண்டிலிருந்தே வாழ்ந்து வந்ததை உறுதிப்படுத்துகின்றனர்.
சமண சமயத்தவர்களுக்கும் வாரணாசி நகரம் புனித இடமாகும். பொ.ஊ.மு. எட்டாம் நூற்றாண்டில் பிறந்த சமண சமய 23-வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதர் பிறந்த ஊர் வாரணாசியாகும்.
மஸ்லின் பருத்தி துணிகள், பட்டுத் துணிகள், வாசனை திரவியங்கள், யாணையின் தந்த சிற்பங்கள், சிற்பக்கலை ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற நகராகும் வாரணாசி.
காசி நாட்டின் தலைநகராக விளங்கிய வாரணாசியில் கௌதம புத்தர் பல ஆண்டுகள் கடும் தவமியற்றி, பின் ஞானம் அடைந்த பின், வாரணாசிக்கு அருகில் உள்ள சாரநாத்தில் தன் சீடர்களுக்கு தர்மத்தை போதித்தார்.
பொ.ஊ.மு. 635-இல் வாரணாசி வந்த சீன யாத்திரிகரும் வரலாற்று அறிஞருமான யுவான் சுவாங், கங்கைக் கரையில் 5 கி.மீ. நீளத்தில் இருந்த வாரணாசியில் செழித்திருந்த சமயம் மற்றும் கலைநயங்கள் குறித்து பெருமையுடன் தனது பயண நூலில் குறித்துள்ளார்.
எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் வாரணாசியில் சிவவழிபாட்டை நிலைநாட்டினார்.
மகதப் பேரரசு காலத்தில் வாரணாசி நகரம் தட்சசீலம் மற்றும் பாடலிபுத்திர நகருக்கும் சாலை வழி போக்குவரத்து இருந்தது.
1194ஆம் ஆண்டில் துருக்கிய இசுலாமிய ஆட்சியாளர், வாரணாசி நகரத்திலிருந்த ஆயிரக்கணக்கான கோயில்களை இடிக்க ஆணையிட்டார்.
இசுலாமியர் ஆட்சிக் காலத்தில் வாரணாசி நகரம் மூன்று நூற்றாண்டுகளாக பொழிவிழந்து காணப்பட்டது. இந்தியாவை ஆப்கானியர்கள் ஊடுருவிய காலத்தில் வாரணாசியில் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் எழுப்பப்பட்டது.
1376-இல் பெரோஸ் ஷா என்ற இசுலாமிய மன்னர் வாரணாசியில் உள்ள கோயில்களை மீண்டும் இடிக்க ஆணையிட்டார். 1496-இல் ஆப்கானிய ஆட்சியாளர் சிக்கந்தர் லோடி வாரணாசியில் உள்ள இந்துக்களை ஒடுக்கவும், கோயில்களை இடிக்கவும் ஆணையிட்டார். இருப்பினும் வாரணாசி தொடர்ந்து இந்துக்களின் ஆன்மிகம் மற்றும் கலைகளின் தாயகமாகவே விளங்கியது.
கபீர்தாசர்மற்றும் 15-ஆம் நூற்றாண்டின் கவிஞர், சமூக சீர்திருத்தவாதி சாது ரவி தாஸ் வாரணாசியில் பிறந்து வளர்ந்தவர்கள். சீக்கிய மத நிறுவனர் குருநானக் 1507-இல் வாரணாசியில் சிவராத்திரி விழாவினை காண வந்தார். துளசிதாசர் இங்கு வாழ்ந்தவர்.
மொகலாய மன்னர் அக்பர், வாரணாசியில் சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு இரண்டு கோயில்களை எழுப்பினார். புனே மன்னர் அன்னபூரணி கோயிலையும், அக்பரி பாலத்தையும் கட்டித்தந்தார். இந்நகருக்கு யாத்திரீகர்களின் வருகை 16-ஆம் நூற்றாண்டு வாக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1656-ஆம் ஆண்டில் அவுரங்கசீப் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பல கோயில்களையும் இடிக்க உத்தரவிட்டார். ஔரங்கசீப், இந்துக்கள் காசி நகரில் நுழைவதற்கும் கங்கையில் நீராடுவதற்கும் ஜிஸியா என்ற வரி விதித்தார். ஒளரங்கசீப் மகன் மூரத் பட்டத்திற்கு வந்தபின் பணத்தேவைக்காக ’ஜிஸியா’ வரியை அதிகமாகப் பெறுவதற்காக, கங்கையில் நீராடும் ஒவ்வொரு முறையும் ’ஜிஸியா’ வரி கட்ட வேண்டும் என்று ஆணையிட்டார்.
ஔரங்கசீப் மறைவிற்குப்பின், வாரணாசியில் மராத்திய மன்னர்கள், 18-ஆம் நூற்றாண்டில் மீண்டும் புதிய கோயில்களை கட்டினர். மொகலாயர்கள் 1737 முதல் காசி நாட்டை அலுவலக முறையில் அங்கீகாரம் அளித்தனர். பிரித்தானிய இந்திய அரசும் அவ்வங்கீகாரத்தை தொடர்ந்து ஏற்றுக் கொண்டது.
நகர வளர்ச்சியின் பொருட்டு 1867-இல் வாரணாசி நகராட்சி மன்றம் துவங்கியது.
காசி விஸ்வநாதர் கோயில்
தச அஷ்வமேத படித்துறை அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிவலிங்கத்திற்கு கங்கை நீரால் அபிசேகம் செய்வது மிகவும் சிறப்பாகும். இக்கோயிலில் உள்ள அன்னபூரணி சன்னிதானம் சிறப்பு பெற்றது. இக்கோயில் 1785-இல் இந்தோர் இராச்சியத்தின் ராணி அகல்யாபாயினால் புதிதாக கட்டப்பட்டது. இக்கோயிலின் உயரம் 51 அடியாகும்.1835-ஆம் ஆண்டில் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் கோவில் கோபுரத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்த 1000 கிலோ தங்கத்தினை அளித்திருக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் புகழ் பெற்றது. சிவலிங்கத்திற்கு காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் அபிசேகத்துடன் பூசைகள் நடத்தப்பெறுகின்றன.
காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறம் அன்னபூர்ணா கோயில் அமைந்துள்ளது.
சப்த மோட்ச புரிகளில் வாரணாசி
மோட்சம் தரும் எழு புனித நகரங்களில் வாரணாசியும் ஒன்று. மற்ற மோட்ச புரிகள் அயோத்தி, மதுரா, அரித்வார், காஞ்சி, உச்சையினி(அவந்தி), துவாரகை --- என கருட புராணம் XVI 1 இல் கூறப்பட்டுள்ளது.
காசியின் புகழுக்குக் காரணம்
சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். ஆனால் முனிவரின் கோபப்பார்வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள்.
கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பின் பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும்.
கங்கா ஆர்த்தி
காசியின் கங்கைக்கரையில், தினமும் சூரியன் மறைவுக்குப்பின் கங்கைக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்பெறுவது கண்கொள்ளாக்காட்சியாகும். இந்நிகழ்வை கங்கா ஆரத்தி என்கின்றனர்.
படித்துறைகள்
வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றில் 87க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருந்த போதும், பார்க்க வேண்டிய முக்கிய மூன்று படித்துறைகள்;
மணிகர்ணிகா படித்துறை
தச அஷ்வமேத படித்துறை
அரிச்சந்திரன் படித்துறை
பார்க்க வேண்டிய இடங்கள்
காசி விஸ்வநாதர் கோயில்
காசி விசாலாட்சி கோயில்
காசி காலபைரவர் கோயில்
அனுமார் கோயில்
துர்கை கோயில்
சோழியம்மன் கோயில்
துளசி மானஸ மந்திர் (SANKATMOCHAN TEMPLE)
சாரநாத்
பனாரசு இந்து பல்கலைக்கழகம்
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள புது விஸ்வநாதர் கோயில்
மகாத்மா காந்தி காசி வித்யாபீடம்
காசி மன்னரின் அரண்மனை
ஜந்தர் மந்தர்
பாரத மாதா கோயில்
கங்கா ஆரத்தி
ராம்நகர் கோட்டை
புது காசி விஸ்வநாதர் கோயில்
போக்குவரத்து வசதிகள்
தொடர் வண்டி
இரயில்கள் பல முக்கிய இந்திய நகரங்களை வாரணாசி நகரம் இணைக்கிறது. சென்னையிலிருந்து ஆறு இரயில்கள் வாரணாசிக்கு செல்கிறது. வாரணாசியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள முக்கிய இரயில் நிலையமான முகல்சராய் வழியாக வாரணாசிக்கு கூடுதலான இரயில்கள் செல்கிறது.
விமான சேவை
வாரணாசியிலிருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள பாபத்பூர் (Babatpur) விமான நிலையம் , இந்தியாவின் முக்கிய நகரங்களான தில்லி, சென்னை, பெங்களூரு, கொச்சி, கோவா, கோழிக்கோடு, கோயம்புத்தூர், லக்னோ, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், புனே, இந்தூர், ஜெய்ப்பூர், நாக்பூர், ஜம்மு,கௌஹாத்தியை வான் வழியாக இணைக்கிறது.
தரைவழிப் போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலை எண் 7, மற்றும் எண் 56 மற்றும் 29 கன்னியாகுமரி, லக்னோ மற்றும் கோரக்பூர் நகரங்களுடன் இணைக்கிறது.
உள்ளூர் போக்குவரத்து வசதிகள்
வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பேரூந்துகள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வாடகை கார்கள், ஆட்டோ ரிக்சா மற்றும் கைரிக்ஷாக்கள் உள்ளூர் போக்குவரத்திற்கு எளிதாக கிடைக்கிறது.
அரசியல் & நிர்வாகம்
வாரணாசி நகர நிர்வாகம் வாரணாசி மாநகராட்சி மற்றும் வாரணாசி வளர்ச்சி ஆணையத்தின் கீழ் உள்ளது. வாரணாசி நாடாளுமன்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வானிலை
வாரணாசியில் கோடைக் காலத்தில் கடுமையான் வெப்பமும், குளிர்காலத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வாரணாசி மக்கள் தொகை 1,435,113 ஆகும். அதில் ஆண்கள் 761,060 மற்றும் பெண்கள் 674,053 ஆகும். 1000 ஆண்களுக்கு 883 பெண்கள் என்ற அளவில் பாலினவிகிதம் உள்ளது. எழுத்தறிவு விகிதம் 77%ஆக உள்ளது. வாரணாசியில் இந்துக்கள், இசுலாமியர்கள், சமணர்கள் அதிகம் வாழ்கின்றனர்.
படக்காட்சியகம்
இதனையும் காண்க
ஞானவாபி பள்ளிவாசல்
காசி விஸ்வநாதர் கோயில்
தச அஷ்வமேத படித்துறை
சாரநாத்
ஞானவாபி பள்ளிவாசல் வழக்கு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
வாரணாசி நகர அதிகாரப்பூர்வ வலைத்தளம்
வாரணாசி மாவட்டம் இணையதளம்
உத்திரப்பிரதேச அரசு சுற்றுலாத்துறையின் இணையதளம்
வாரணாசி சுற்றுலா
காசி விஸ்வநாதர் கோயில் வரலாறு
வாரணாசி - (காசி விஸ்வநாதர் ஆலயம்)
காணொளிக் காட்சி கடவுள்களின் வாரணாசி நகரம் - சிறப்பு பதிப்பு
தசாஸ்வமேத் படித்துறை, வாரணாசி
ராணி லக்ஷ்மி பாய்
வாரணாசியில் இணைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் குரங்குகள்
வாரணாசியில் கைவிடப்பட்ட 5 ஆயிரம் விதவைகளின் மறுவாழ்வுக்கு உதவ ஐ.நா. அனுமதி பெற்ற தொண்டு நிறுவனம் திட்டம்
ஆதார நூற்பட்டியல்
மேலும் படிக்க
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
உத்தரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள்
சிவன் கோயில்கள்
பண்டைய நகரங்கள்
இந்து புனித நகரங்கள்
இந்து யாத்திரைத் தலங்கள்
புண்ணிய தீர்த்தங்கள்
வாரணாசி மாவட்டம்
பண்டைய இந்திய நகரங்கள்
இந்து புனிதத் தலங்கள்
|
4422
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88
|
புடவை
|
புடைவை, புடவை, அல்லது சேலை (அ) "'சீலை'" (saree)என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளிலும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறையே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது. சேலை கட்டும்போது இடை ஆடைகளாக பாவாடையும், ரவிக்கையும் அணியப்படுகிறது.
பொதுவாக இதன் நீளம் 4 - 5 யார் வரை இருக்கும். சில புடவைகள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகையான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொண்ட தைக்கப்படாத உடையாகும்.மடிப்புகளுடன் உடலை சுற்றியவாறு கிரேக்க பாணியில் உடுத்தப்படுகிறது.பருத்தி நூல், பட்டு நூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி அழகூட்டப்படுகிறது.
வரலாறு
உடலைச் சுற்றிக் கட்டுகின்ற தைக்கப்படாத ஆடைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தியாவில் இவற்றின் தொடக்கம் பற்றி முடிவு செய்யக்கூடிய சான்றுகள் இல்லை. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பண்டைக்கால நாகரிகம் நிலவிய பல இடங்களிலும் இத்தகைய ஆடைகள் இருந்திருக்கின்றன. இவ்வகையைச் சேர்ந்த புடவையின் தோற்றம் பற்றியும் இதே நிலைதான். இது பண்டைக் கிரேக்கத்திலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள். ஆனால் இது இந்தியாவிலேயே உருவானதென்பது வேறு சிலரின் கருத்து. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களிலேயே புடவைகள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. மகாபாரதத்தில் வரும் திரௌபதியின் புடவை களையும் நிகழ்வு குறிப்பிடத்தக்கது. கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் கருதப்படும், உடலைச் சுற்றி இறுக்கமாக கற்சட்டைபோல் புடவை உடுத்திய களிமண் உருவ பொம்மையொன்று வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிற்காலங்களைச் சேர்ந்த பலவிதமாகப் புடவை கட்டிய பெண்களின் உருவச் சிலைகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன.
கிட்டத்தட்ட கி.பி 3000ம் ஆண்டளவில் சிந்துசமவெளி நாகரிக காலப்பகுதியில் முதன் முதலில் சேலை ஒரு ஆடையாகப் பயன்படுத்தப்பட்டது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சேலைகளைப் பட்டு நூலால் தயாரிக்கும் பாரம்பரியம் தென்னிந்தியாவிலேயே தோற்றம் பெற்றது என்று நம்பப்படுகின்றது. இந்தியாவிலே பட்டின் இராசதானிகளாக கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களுரும் மைசூரும் விளங்குகின்றன. பருத்தி கலக்கப்படாத துய்மையான சாறி என்ற பட்டுநூல் சூரத்தில் மட்டுமே கிடைக்கின்றது. இந்தப் பெயரே ஆங்கிலத்தில் சேலைக்கு சாறி என்ற பெயர் வரக் காரணமாயிற்று. சேலையைப் போல உடல் முழுவதையும் சுற்றி அணியும் ஆடை பற்றிய முதல் குறிப்புகளை கிமு 100 அளவில் காணமுடிகிறது. சுங்க ஆட்சிக் காலத்திற்குரிய (கிமு 200-50) ஒரு வட இந்திய சுடு மண்கலத்தில் ஒரு பெண் கச்சா பாணியில் உடல் முழுவதும் சேலையை இறுக்கமாகச் சுற்றியுள்ள காட்சி காணப்படுகிறது. இந்திய காந்தார நாகரிகத்தில் (கிமு50-கிபி300) பல்வேறுபட்ட வகைகளில் சேலை சுற்றி அணியப்படும் முறை காணப்பட்டது. கிபி 5ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த மேற்கு மகாராஷ்ரத்தில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களில் பெண் தெய்வங்களும் அசுரப் பெண்களும் உடல் முழுவதையும் சுற்றி சேலை அணிந்துள்ளதைக் காணலாம்.
ஊசிகளால் துளைக்கப்பட்ட ஆடைகள், அதாவது தைக்கப்பட்ட ஆடைகள் தூய்மை அற்றவை எனப் பண்டைக்கால இந்துக்கள் கருதினர் இதனால் சேலைகளே அக்காலத்தில் புனிதமான ஆடைகளாகக் கருதப்பட்டிருக்கக்கூடும். முஸ்லிம்களின் வருகையுடனேயே இந்தியாவில் தைக்கப்பட்ட ஆடைகளின் செல்வாக்கு ஏற்பட்டது. மேலும், தற்காலத்தில் புடவையுடன் அணியப்படுகின்ற உள்பாவாடை மற்றும் ரவிக்கை போன்ற தனிப்பட்டவருக்கு ஏற்றவாறு தைக்கப்படும் ஆடைகள் பிரித்தானியரின் வருகைக்குப் பின்னரே பெருமளவில் புழக்கத்துக்கு வந்ததாகக் கூறப்படுகின்றது.
இலங்கை
சேலை பண்பாட்டு ரீதியாக பல்வேறு மாநிலங்களில் வாழும் இந்தியப் பெண்களையும் இலங்கைப் பெண்களையும் இணைக்கிறது. அணியும் முறைகள் மாறுபட்ட போதும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாழும் பெண்களும் இலங்கைத் தமிழ், சிங்களப் பெண்களும் பொதுவாகச் சேலையே அணிந்து வருகின்றனர். பணக்காரராயினும், ஏழையாயினும், கட்டையானவராயினும், நீண்டவராயினும், மெலிந்தவராயினும், மொத்தமானவராயினும் சேலை என்பது அணிபவர்களுக்கு ஒரே மாதிரியான அனுபவத்தை அளிக்கிறது. இந்திய இலங்கைப் பெண்கள் உலகம் பூராவும் பரந்து வாழ்வதால் இன்று உலகம் முழுவதும் சேலை அணியும் பெண்களைக் காண முடிகிறது.யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பெண்கள் தினமும் சேலையையே வீட்டிலும் வெளiயிலும் அணிந்து வந்தனர்.
புடவை கட்டும் முறைகள்
இது பழக்கத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், இது ஒரே உடையாகவே கருதப்பட்டு வந்தாலும்,இதை கட்டும் முறைகளில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன.
பொதுவான முறை
பொதுவாக சேலை 5 1/2 மீட்டர் நீளமுடையதாக இருக்கும். சேலை கட்டும்போது முந்தானைக்கு நேரெதிர் முனையில் ஒரு முடிச்சு போட்டு இடுப்பில் வலதுபுறம் சொருகிக் கொள்ள வேண்டும். பின்னர் இடதுபுறத்திலிருந்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றி, நான்கு விரலையும் சற்று விரித்து வைத்துக்கொண்டு 4 அல்லது 5 மடிப்புகள் மடித்து இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும். இந்த மடிப்புகள் `முன்கொசுவம்’ என்று அழைக்கபடும். பின்பு மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுற்று சுற்றி பெரிய மடிப்பாக 3 அல்லது 4 மடிப்புகள் மடித்து இடது தோளில் போட்டுக் கொள்ள வேண்டும். இது `முந்தி’ அல்லது `முந்தானை’ என்று அழைக்கபடும். இதுவே நிவி பாணி (nivi) என்று அழைக்கப்படுகிறது.
பாரம்பரிய முறைகள்
எனினும், இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் புடவை அணியும் முறைகளில் பல பிரிவுகளும், துணைப் பிரிவுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பண்பாட்டு மானிடவியலாளரும், புடவை ஆய்வாளருமாகிய சந்தல் பொலங்கெர் (Chantal Boulanger) என்பார் புடவைகளை அவை கட்டப்படும் முறைகளையொட்டிப் பின்வரும் பாணிகளாகப் பிரித்துள்ளார்.
வட இந்திய / குஜராத்தி பாணி
மகாரஷ்டிரா / கச் பாணி
திராவிடப் பாணி
குடகு பாணி
கோண்டு பாணி
இரு துண்டுப் புடவை
இனக்குழுப் பாணிகள் (Tribal Styles)
நவீன முறை
இந்தியர்கள் பலர் பல நாடுகளுக்கு குடி பெயர்வதால் புடவையை நவீன முறைகளில் பெண்கள் உடுத்துகின்றனர்.தற்போதைய உலகமயமாக்குதல் காரணமாக புடவை அடக்கத்தை பிரதிபலிக்கும் உடையிலிருந்து பாலுணர்வை தூண்டும் கவர்ச்சி உடையாக மாறியுள்ளது. இவ்வகை புடவை முறை பாலிவுட் மற்றும் தமிழ் சினிமா நடிகைகளால் பிரபலப்படுத்தப்பட்டது.
இவ்வகை புடவை முறைகளை வசதிபடைத்த செல்வந்தர் குடும்பம் மற்றும் உயர்நிலை வகுப்பை சேர்ந்த பெண்கள் உடுத்துகின்றனர்.
லோ ஹிப் புடவை
லோ ஹிப் (low-hip) எனப்படும் தொப்புளுக்கு கீழ் உடுத்தும் முறை மிக பிரபலமாகியுள்ளது. இம்முறையில் உடுத்தும்போது தொப்புளும் இடையும் வெளிக்காட்டி இருக்கும். தொப்புளுக்கு கீழ் கட்டும்போது எப்பொழுதும் தொப்புள் வெளிகாட்டபடுவதில்லை. தொப்புளுக்கு கீழ் கட்டியபின் முந்தானையால் தொப்புளை மறைத்தும் லோ ஹிப் புடவைகள் உடுத்தப்படுகிறது. அலுவலகம் செல்லும் பெண்கள் தொப்புளை வெளிகாட்டாமல் புடவை கட்டவேண்டும் என்று சில அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன.
ஒளிபுகு புடவை
புடவையை நவீனப்படுத்தும் நோக்கில் உருவானது தான் ஒளிபுகு புடவை (Transparent Sari). ஒளிபுகு பொருட்களான மென்பட்டு(chiffon), வலை (net) போன்றவற்றை பயன்படுத்தி நெய்யப்படும் புடவையே ஒளிபுகு புடவை எனப்படும். பெண்கள் தங்களது உடல் அழகையும் உருவத்தையும் வெளிக்காட்டும் நோக்கில் இவ்வகை புடவைகளை உடுத்துகின்றனர். ஒளிபுகு புடவைகளில் தொப்புள் மட்டுமின்றி முழு இடையும் முந்தானை வழியாக வெளிக்காட்டப்படும். புடவைகளுக்கு ஏற்றாற்போல் நகைகள் அணிந்து ஒரு கவர்ச்சி தோற்றத்தை அடையவே ஒளிபுகு புடவை பயன்படுகிறது.
குறையும் செல்வாக்கு
கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தொடர்ந்து சேலையையே அணிந்து வருகின்றனர். ஆயினும் நகரங்களில் இந்நிலை பெரிதும் மாறி வருகிறது. அங்கு வாழும் பெண்கள் பல்வேறு துறைகளில் படித்து வேலை செய்வதுடன் பல வெளி வேலைகளையும் கையாளும் வல்லமை பெற்று வருகின்றனர். இதனால் வீட்டிலிருக்கும் பெண்கள் போல சேலை அணிவது சிறிது சிரமமான காரியமாய் இருக்கிறது. இதனால் முஸ்லிம்களின் செல்வாக்கால் காஷ்மீர், பஞ்சாப் மாநிலப் பெண்களின் மரபுரீதியான ஆடையாக மாறிய சல்வார்-கமீஸ், சுரிதார் குர்த்தா (churidar-kurta) என்பன தமிழ்ப் பெண்கள் மத்தியிலும் இன்று பெரும் செல்வாக்குப் பெற்று வருகின்றது. ஆயினும் வேலைக்குச் சேலை அணிந்து செல்லும் பெண்களுக்கும் குறைவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் (பாகிஸ்தான், வங்காளதேசம்) இன்றும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு சேலையே அணிந்து செல்கின்றனர். புலம்பெயர்ந்த பின்னர் பெரும்பான்மையான இந்திய, இலங்கைப் பெண்கள் சேலையணிவதை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கென்று ஒதுக்கி வைத்துள்ளனர்.
இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது.நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் அநாகரிகமானவராகினர்.சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை, பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சயுக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர்.இளம் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சல்வார்-கமீஸ், சுரிதார்-குர்த்தா போன்றவற்றையும் ராஜஸ்தான் குஜராத் மாநிலப் பெண்களின் மரபார்ந்த ஆடையான காக்ரா-சோளியையும் (ghagra-choli) அணிந்தும் சாதாரண நேரங்களில் மேற்கத்தைய ஆடைகளையும் அணிந்து வருகின்றனர். விலை மலிவானது; ஏறத்தாழ்வு காட்டாதது; விரவாக நடக்கக் கூடியது; இளமையாகக் காட்டுவது; இடையக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதில்லை எனப் பல காரணங்களே தென்நாட்டு சேலை பின்னடைய, வடநாட்டு சுரிதார் உடை நவீனமாக்கியது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
புடவையின் வரலாறு
புடவை உடுத்தும் முறைகள்
பாரம்பரிய இந்திய புடவை உடுத்தும் முறைகள்
சேலை கட்டும் பெண்ணுக்கு... திண்ணை
இந்திய உடைகள்
உடைகள்
|
4425
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
|
உத்தரப் பிரதேசம்
|
உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh) இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. லக்னோ இம்மாநிலத்தின் தலைநகராகும். அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி, உருது ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள். இந்தியாவின் ஆறு பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், வி. பி. சிங், சந்திரசேகர் இம்மாநிலத்தில் பிறந்தவர்கள்.
புவியமைப்பு
இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலமான உத்தரப் பிரதேசம், இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் உத்தராகண்டம், இமாசலப் பிரதேசம், அரியானா, தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் பீகார் ஆகியவை. உத்திரப் பிரதேசத்தின் வடக்கில் நேபாள நாடு அமைந்துள்ளது. கங்கை, யமுனை, கோமதி ஆறு ஆகிய பெரு நதிகள் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடுவதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது.
2000ஆம் ஆண்டு உத்தராகண்டம் மாநிலம், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது. மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் புந்தேலி மொழி பேசும் வறண்ட வானிலை கொண்ட புந்தேல்கண்ட் மேட்டு நிலங்கள் அமைந்துள்ளது.
வேத காலத்தில் உத்தரப் பிரதேசம் குரு நாடு, பாஞ்சாலம் மற்றும் கோசல நாடு என மூன்று பகுதிகளாக இருந்தது.
வரலாற்றுக் காலத்தில் உத்தரப் பிரதேசம் புந்தேல்கண்ட், அவத், ரோகில்கண்ட், பூர்வாஞ்சல் மேல், நடு மற்றும் கீழ் தோப் பகுதிகள் என ஐந்து பகுதிகளாக உள்ளது.
வரலாறு
பண்டைய வேத காலத்தில் உத்தரப் பிரதேசப் பகுதிகளை குருக்கள்,
பாஞ்சாலர்கள் மற்றும் கோசலர்கள் என மூன்று அரச குலங்கள் ஆண்டனர்.
வரலாற்றுக் காலத்தில் இம்மாநிலத்தின் வளமான அவத், தோவாப், பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட் மற்றும் ரோகில்கண்ட் பகுதிகளை தில்லி சுல்தானகம் மற்றும் மொகலாயர்களாலும்; பின்னர் பாரசீக சியா இசுலாமிய நவாப்புகள் மற்றும் ஆப்கானிய பஷ்தூன் அரச குலம் 1719 முதல் 1858 முடிய தனியுரிமையுடனும்; பின்னர் சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 1858 முதல் 1947 முடிய ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் கப்பம் செலுத்தி சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆட்சி செய்தனர். பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-ஆம் ஆண்டில் அவத் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அவத் பகுதிகளில் சமசுகிருதம் - பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது.
அரசியல்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 199,812,341 ஆக உள்ளது. நகர்புறங்களில் 22.27% மக்களும், கிராமப்புறங்களில் 77.73% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.23% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 104,480,510 ஆண்களும் மற்றும் 95,331,831 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 912 வீதம் உள்ளனர். 240,928 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 829 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 67.68% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.28% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.18% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30,791,331 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 159,312,654 (79.73 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 38,483,967 (19.26%) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 643,500 (0.32%) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 356,448 (0.18%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 213,267 (0.11%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 206,285 (0.10%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 13,598 (0.01%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 582,622 (0.29%) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது, பஞ்சாபி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
மாவட்டங்கள்
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பதினெட்டு நிர்வாகக் கோட்டங்களின் கீழ், எழுபது வருவாய் மாவட்டங்கள் அமைந்துள்ளன. அவைகள் பின்வருமாறு;
ஆக்ரா
அலகாபாத்
அலிகர்
அம்பேத்கார் நகர்
ஔரையா
ஆசம்கர்
பாராபங்கி
பதாவுன்
பகராயிச்
பிஜ்னோர்
பலியா
சம்பல் (பீம்நகர்)
பாந்தா
பலராம்பூர்
பரேலி
பஸ்தி
புலந்சகர்
சந்தௌலி
சித்திரகூடம்
தியோரியா
ஏட்டா
இட்டாவா
பெரோசாபாத்
பரூகாபாத்
பதேபூர்
பைசாபாத்
கௌதம புத்தர் நகர்
கோண்டா
காசிப்பூர்
கோரக்பூர்
காசியாபாத்
அமீர்பூர்
ஹர்தோய்
மகாமாயா நகர்
ஜான்சி
அம்ரோகா
ஜவுன்பூர்
இராமாபாய் நகர்
கன்னோஜ்
கான்பூர்
கன்ஷிராம் நகர்
கௌசாம்பி
குசிநகர்
லலித்பூர்
லக்கிம்பூர் கேரி
லக்னோ
மவூ
மகாராஜ்கஞ்ச்
மகோபா
மிர்சாபூர்
மொராதாபாத்
மைன்புரி
மதுரா
முசாபர்நகர்
பிலிபித்
பிரதாப்கர்
ராம்பூர்
ரேபரேலி
சகாரன்பூர்
சீதாப்பூர்
ஷாஜகான்பூர்
சாம்லி
சித்தார்த் நகர்
சோன்பத்ரா
சந்த் ரவிதாஸ் நகர்
சுல்தான்பூர்
சிராவஸ்தி
உன்னாவ்
வாரணாசி
ஹப்பூர்
சுற்றுலா
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களும், ஆன்மிக வழிபாட்டுத் தலங்களும்;
தாஜ்மகால், பத்தேப்பூர் சிக்ரி , ஆக்ரா, பிரயாகை, வாரணாசி, அயோத்தி, ராம ஜென்மபூமி, மதுரா, பிருந்தாவனம், கிருஷ்ண ஜென்மபூமி, கயை, புத்தகயா, சாரநாத் மற்றும் குசிநகர் ஆகும்.
முக்கிய கல்வி நிலையங்கள்
இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர், பனாரசு இந்து பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், இந்திய மேலாண்மை கழகம் லக்னோ, இராஜிவ் காந்தி பெட்ரேலிய தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் மோதிலால் நேரு தேசிய தொழில் நுட்பக் கழகம் ஆகும்.
பொருளாதாரம்
மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழிலையே சார்ந்து உள்ளது. முக்கிய விளைபொருட்கள் கோதுமை, நெல், கரும்பு ஆகும். புதிய நொய்டா பெருநகர் ஆசியாவில் மிக விரைவாக வளர்ந்துவரும் தொழில் நகரங்களில் ஒன்றாக உள்ளது.
முக்கிய விழாக்கள்
கும்பமேளா
கிருஷ்ண ஜெயந்தி
இராம நவமி
மகா சிவராத்திரி
தீபாவளி
ரம்ஜான்
கங்கா ஆரத்தி
படங்கள்
இதனையும் காண்க
பூர்வாஞ்சல்
புந்தேல்கண்ட்
பகேல்கண்ட்
தோவாப்
அவத்
ரோகில்கண்ட்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
உத்தரப் பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ வளைத்தளம்
பிரதேச மாநில சுற்றுலா இணயதளம்
உத்தப் பிரதேசத்தின் இரயில்வே வரைபடம்
உத்தரப் பிரதேசம்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
|
4427
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE
|
ஆக்ரா
|
ஆக்ரா என்பது இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு நகராகும். இது யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது முகலாய ஆட்சியின் போது சிறப்புப் பெற்றிருந்தது (1526-1658). அக்கால கட்டத்தில் பல சிறப்பு மிக்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. இங்கு அக்பரால் கட்டப்பட்ட கோட்டையும் அதனுள் ஷாஜகானால் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் முத்து மசூதி ஆகியனவும் அமைந்துள்ளன.
தாஜ் மஹால் ஆக்ரா நகரின் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது. இது ஷாஜஹானால் தனது மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும். இது யுனெசுகோவால் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
ஆக்ரா பற்றிய வளைத்தளம்
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
உத்தரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள்
ஆக்ரா மாவட்டம்
ஆக்ரா
|
4428
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
யமுனை ஆறு
|
யமுனை ஆறு (Yamuna River) வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.
யமுனை சிலநேரங்களில் ஜமுனா அல்லது ஜம்னா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நீளமான நதி ஆகும். இது கங்கை நதியின் இரண்டாவது பொிய கிளை நதியாகும். இக் கிளை நதியானது யமுனோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. இந்நதி இந்தியாவில் உத்ரகாண்ட் மாநிலத்தில் கீழ் இமாச்சல மலைப் பகுதியில் உள்ள தென்மேற்கு சாிவில் உள்ள பாந்தர்பூஞ்ச் சிகரத்தில் இருந்து 6387 மீட்டர் உயரத்திலிருந்து உருவாகிறது. இந்த நதியின் மொத்தப் பயணத் தொலைவு 1,376 கிலோ மீட்டர் ஆகும். கங்கை ஆற்றுப் படுகையில் 40.02% நிலப்பகுதியில் இந்நதி பாய்கிறது. இது கங்கை ஆற்றுடன் அலகாபாத்தில் திாிவேணி என்ற இடத்தில் கலப்பதற்கு முன்னதாக கங்கையும் யமுனையும் கலக்கும் இடமான திாிவேணி சங்கமத்தில் 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நதிதான் இந்தியாவிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்படுகிறது. ஆனால் இது நோிடையாக கடலில் கலப்பதில்லை.
இது உத்ரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ஹாியானா மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களைக் கடந்து செல்கிறது. முதலில் உத்ரகாண்ட் அதன் பிறகு டெல்லியைக் கடந்து, அதன் பொிய கிளை நதியான டானுடன் கலக்கிறது. சாம்பல் நதி யமுனையின் மிக நீளமான கிளை நதியாகும். இந்நதி சிந்து, பெட்வா, கென் போன்ற ஆற்றுப் படுகையைக் கொண்டிருக்கிறது. கங்கை - யமுனை சமவெளிப் பகுதிக்கும், இந்திய - கங்கைச் சமவெளிப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்நதி மிக செழிப்பான, வளமான பகுதியை உருவாக்குகிறது. 57 மில்லியன் மக்கள் யமுனை நதியால் பயன்பெறுகிறார்கள். இந்த நதி வருடத்திற்கு 10000 கன சதுர இலக்கங்கோடி மீட்டர் தூரம் பயணம் செய்கிறது. இந்த நதி பாசனத்திற்காக 96% பயன்படுத்தப்படுகிறது. டெல்லியின் 70% தண்ணீர்த் தேவை யமுனை நதி நீரால் தீர்க்கப்படுகிறது. இந்து மதத்தில் கங்கையைப் போலவே யமுனை நதியும் போற்றி வணங்கப்படுகிறது. இந்து புராணக் கதைகளின்படி யமுனை நதி சூாிய கடவுளின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுள் யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறது. புராணக் கதைகளின்படி யமுனை யாமினாட் எனவும் கருதப்படுகிறது. யமுனை நதியில் நீராடினால் ஒருவர் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
இமாச்சலத்திலிருந்து டெல்லியில் உள்ள விசிராபாத் என்ற இடம் வரை யமுனையின் நீரானது சுத்தமாகவுள்ளது. விசிராபாத் அணைக்கட்டிற்கும் ஓக்லா அணைக்கட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் 15 இடங்களில் வடிகால் வாயிலாக கழிவு நீ்ர் ஆற்றில் கலந்து ஆற்றை அசுத்தமாக்குகின்றன. வீட்டுக் கழிவுகள், நகராட்சி கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகிய மூன்று முக்கியக் கழிவுகளால் யமுனை நதி அசுத்தப்படுத்தப்படுகிறது.
மூலம் (தொகு)
யமுனை நதியின் மூலமானது யமுனோத்திரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. அரித்துவார்ன் வடக்கில் உத்ரகாண்ட் மாநிலத்தில், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள இமாலயத்தின் தென்கிழக்குச் சாிவில் பாந்தர் பூஞ்ச் சிகரத்திலிருந்து 6387 மீ உயரத்திலிருந்து இது உருவாகிறது. யமுனை நதி கடவுளாகக் கருதப்படுவதால் யமுனைக்கு அர்ப்பணிப்பதற்காக யமுனோத்ரி கோயில் கட்டப்பட்டது. இந்து மதத்தில் யமுனோத்ரி கோயில், புனிதத் தளமாக கருதப்படுகிறது. இக்கோயிலை ஒட்டி 13 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை உள்ளது. இப்பாதை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள "மார்க்கண்டேய" தீர்த்தத்துக்கு செல்கிறது. இங்குதான் முனிவர் மார்க்கண்டேயர், மார்க்கண்டேய புராணத்தை எழுதினார்.
இவ்விடத்தில் இருந்து யமுனை தெற்கில் பாய்கிறது. கீழ் இமாச்சலம் மற்றும் சிவாலிக் மலைத் தொடர் வழியாக 200 கி.மீ. தூரத்திற்கு தெற்கு நோக்கிப் பாய்கிறது. இந்த ஆற்றுப் படுகையில் மண்ணியல் அமைப்புகளான செங்குத்தான பாறைகளில், பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் ஓடைகள் அமைந்துள்ளன. இந்நதியின் நீர் பாயும் மொத்தப் பரப்பளவு 2320 சதுர கி.மீ. ஆகும். இப்பகுதி இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. யமுனையின் முக்கியக் கிளை நதிகளான டான்ஸ், ஹாி-கி-துன் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகிறது. இது டேராடூனில் கால்சி நதியுடன் இணைந்த பிறகு இதன் கொள்ளளவு யமுனை நதியை விட அதிகமாகும். இந்நதியின் வடிகால் பகுதிகள் இமாச்சலத்தில் உள்ள கிாி-சட்லெஜ் நீ்ர்ப்பிடிப்புப் பகுதிகளும், கார்வாலில் உள்ள யமுனை - பிலிங்னா நீர்ப்பிடிப்புப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. சிம்லாவின் தெற்குப் பகுதியும் இந்நதி நீர் பாயும் பகுதியில் அடங்கும். யமுனை நதிப் பள்ளத்தாக்கில் மிக உயரமான பகுதி காலாநாக், இது 6387 மீட்டர் உயரமுடையது.
யமுனையின் மற்ற கிளை நதிகளான கிாி, ரிஷிகங்கா, ஹனுமன் கங்கா மற்றும் பாட்டா ஆகியவை யமுனை நதி பள்ளத்தாக்கின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதியில் பாய்கின்றன. இங்கிருந்து யமனை நதி டேராடூனின் அருகில் உள்ள டாக் பாதாில் உள்ள டூன் பள்ளத்தாக்குப் பகுதியில் கீழ்நோக்கிப் பாய்கிறது. டாக் பாதர் அணைக்கட்டிலிருந்து நீர், மின்சாரம் எடுப்பதற்காக கால்வாய்க்கு பிாித்து விடப்படுகிறது.
சீக்கிய புனித யாத்திரை நகரான போயன்டா சாகிப்பை கடந்து சென்ற பிறகு, ஹாியானாவில் உள்ள யமுனா மாவட்டத்தில் உள்ள தேஜ்வாலாவை அடைகிறது. இங்கு 1873-ல் ஓர் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து இரண்டு முக்கிய கால்வாய்களான மேற்கு யமுனைக் கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய் உருவாகின்றன. உத்திரபிரதேசம் மற்றும் ஹாியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு் இக்கால்வாய் யமுனா நகர், கார்னல் மற்று பானிபட் ஆகிய நகரங்களைக் கடந்து கைதர்பூர் சுத்திகாிப்பு ஆலையை அடைகிறது. இங்கிருந்து டெல்லிக்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. யமுனா நகர் மற்றும் பானிபட் ஆகிய நகரங்களில் இருந்து கழிவு நீர் இக்கால்வாயில் கலக்கிறது. 224 கிலோ மீட்டர் கடந்து பல்லா கிராமத்தை அடைந்தபிறகு யமுனை நதியில் சிறு ஓடைகளில் அவ்வப்போது வருகின்ற நீர் கலக்கிறது. வறட்சிக் காலங்களில் இந்த நதி தேஷ்வா முதல் டெல்லி வரை வறண்டு இருக்கும்.
யமுனை நதி இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்ட் மற்றும் அாியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகியமாநிலங்களுக்கு இடையே எல்லையாக உள்ளது. இந்நதி கங்கை நதிக்கு இணையாக இந்து - கங்கைச் சமவெளி வரை பாய்கிறது. உலகிலேயே மிகப் பொிய வளமான பகுதியான இந்து - கங்கை சமவெளிப் பகுதிக்குப் பிறகு இரு நதிகளும் இணையாகப் பாய்கின்றன. கங்கை - யமுனை சமவெளிப்பகுதி 69,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்தச் சமவெளிப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயத்திற்கு பெயர் பெற்றது.
துணை ஆறுகள்
பேட்வா ஆறு
பேட்வா ஆறு, மத்தியப் பிரதேச மாநிலம் ஓசங்காபாதுக்கு வடக்கில் உருவாகி, வட கிழக்காகப் பாய்ந்து, மால்வா பீடபூமி வழியாக உத்தரப்பிரதேச மாநிலம் அமீர்பூர் அருகில் யமுனையில் கலக்கிறது.
கென் ஆறு
கென் ஆறு, மத்தியப் பிரதேசம், ஜபல்பூர் அருகில் உருவாகி உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் அருகில் யமுனையில் கலக்கிறது.
மேற்கோள்கள்
இந்திய ஆறுகள்
இந்து தொன்மவியல் ஆறுகள்
கங்கையின் துணை ஆறுகள்
|
4429
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
கங்கை ஆறு
|
கங்கை () ( ), () என்பது இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும். இது இந்தியாவின் முக்கிய ஆறு . கங்கை இந்தியாவின் தேசிய நதி ஆகும். இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.
பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கங்கை ஆறு மொத்தம் 2525 கி.மீ ஓடுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.
வங்கதேசத்தில் கங்கை ஆறு பத்மா ஆறு என அழைக்கப்படுகிறது.
கங்கை இந்துகளின் புனித நதியாக திகழ்கிறது. இது இந்து மதக் கடவுள் கங்காதேவி எனவும் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. மில்லியன் கணக்கான இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த ஆற்றைச் சார்ந்து வாழ்கின்றனர். இந்த நதியினை சார்ந்து மனிதர்கள் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன. இதன் வடிநிலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராச்சியங்கள் அல்லது பேரரசுகளின் தலைநகர்கள் ( கன்னோசி, காம்பில்யா, கரா, பிரயாகை அல்லத் அலகாபாத், காசி, பாடலிபுத்திரம் அல்லது பாட்னா, ஹாஜிப்பூர், முன்கிர், பாகல்பூர், முர்சிதாபாத், பாரம்பூர், நபதிவீப், சப்தகிராம், கொல்கத்தா, தாக்கா போன்ற ) போன்றவை அமைந்துள்ளன. இந்தியாவின் பெருமைமிகு புனித நதிகளில் ஒன்றான கங்கை ஆறும், அதன் பிறப்பிடமான இமயமலையின் பனிமுகடும் உயிருள்ள நபர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கங்கை ஆறு 2007 ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது மிக மாசுபடுத்தப்பட்ட நதி என மதிப்பிடப்பட்டது. இந்த மாசுபாடானது மனிதர்களை மட்டுமல்லாமல், 140 க்கும் மேற்பட்ட மீன் வகைகள், 90 நிலநீர் வாழி வகைகள், கங்கை டால்பின்கள் ஆகியவற்றையும் அச்சுறுத்துகிறது. வாரணாசி அருகில் கங்கை ஆற்று நீரில் கலக்கும் மனித கழிவுகளிலின் மாசின் அளவானது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரம்பைவிட 100 பங்கு அதிகமாகும். கங்கை ஆற்றைத் தூய்மைப் படுத்த வகுக்கப்பட்ட சுற்றுச்சூழல் முயற்சியான கங்கை செயல் திட்டம் என்ற திட்டமானது, ஊழல், தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாதது,{{efn|name=sheth|1= மோசமான சுற்றுச்சூழல் திட்டமிடல், மற்றும் சமயத் தலைவர்களின் ஆதரவு இல்லாதது போன்ற காரணங்களினால் இதுவரை பெரிய தோல்வியிலேயே முடிந்தது.{{{efn|name=gardner|1=
ஆற்றோட்டம்
கங்கையின் முதன்மை நீரோட்டமானது, உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியிலுள்ள தேவ்பிரயாக் நகரில் பாகீரதி ஆறு மற்றும் அலக்நந்தா ஆறுகளின் சங்கமத்தில் துவங்குகிறது. இந்து பண்பாடு மற்றும் புராணங்களில் பாகீரதி ஆதாரமாகக் கருதப்படுகிறது, இருப்பினும் அலக்நந்தா ஆறு, என நீரியல் ஆதாரம் கூறுகிறது. அலக்நத்தா ஆற்றின் நீராதாரமானது நந்தா தேவி, திரிசுல் மற்றும் கமேட் போன்ற சிகரங்களிலின் பனிமுகடுகளில் இருந்து உருவாகின்றது. பாகீரதியானது 3,892 மீ (12,769 அடி) உயரத்தில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறைகளின் அடியில் உள்ள கோமுகியில் இருந்து தோற்றம்பெறுகிறது.
குறுகிய இமயமலை பள்ளத்தாக்கு வழியாக 250 கிமீ (160 மைல்) பாய்ந்த பிறகு, கங்கை ரிஷிகேஷில் உள்ள மலைகளிலிருந்து வெளிவருகிறது, பின்னர் புனித யாதிதிரைத் தலமானஅரித்துவாரில் கங்கை சமவெளிக்குள் முதல் முறையாக நுழைகிறது. அரித்வாரில் ஒரு அணையானது, கங்கையில் இருந்து கொஞ்ச நீரை கால்வாய் வழியாக திசைதிருப்பி, உத்திரபிரதேச மாநிலத்தின் டூப் பிராந்தியத்தில் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது, ஆற்றின் வடகிழக்கு சமவெளிகளில் தென்கிழக்குப்பகுதிக்கு இப்போது தெற்கே ஓடும் ஆற்றின் குறுக்கே நதி இருக்கிறது. இந்த கட்டம் வரை தெற்கே பாயக்கூடிய ஆறு, இதற்கு்கு மேல் தென் கிழக்கு நோக்கி திரும்பி வட இந்திய சமவெளிகளை வளமாக்குகிறது.
கங்கை 800 கிமீ (500 மைல்) தொலைவுக்கு கன்னோசி, ஃபருகஹாபாத், கான்பூர் ஆகிய நகரங்களை கடந்து பாய்கிறது. வழியில் இதனுடன் ராம்கங்கா இணைந்து, சுமார் . சராசரியான வருட ஓட்டத்தை அளிக்கிறது. இந்து மதத்தில் புனித சங்கமமான அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கையுடன் யமுனை ஆறு இணைக்கிறது. இந்த சங்கமத்தில் யமுனை கங்கை விட பெரியதாக, , 2,950 m3 / s (104,000 cu ft / s), அல்லது ஒருங்கிணைந்த ஓட்டத்தில் 58.5% பங்களிப்பை யமுனை அளிக்கிறது.
இப்போது கிழக்கே ஓடுகிம் ஆற்றோடு, தமசா ஆறு இணைந்து, கெய்மீர் மலைத்தொடரிலிருந்து வடக்கே பாய்கிறது மேலும் சுமார் சராசரியான நீரோட்டத்தை அளிக்கிறது. தாம்சவுக்கு பிறகு கோமதி ஆறு இணைகிறது, இதன் பிறகு இமயமலையிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. கோமதி சராசரியாக வருடாந்த நீரோட்டமாக அளிக்கிறது. நேபாளத்தின் இமயமலைகளிலிருந்து தெற்கே பாயும் காக்ரா ஆறு (கர்னலி நதி) கங்கையுடன் இணைகிறது. காக்ரா ஆறு (கர்னலி), சுமார் சராசரி வருடாந்த நீரோட்டம் உடைய, கங்கையின் மிகப் பெரிய கிளை ஆறு ஆகும். காக்ராவுடன் (கர்னலி) சங்கமித்த பிறகு கங்கை தெற்கில் சோன் ஆற்றுடன் இணைகிறது, இது நீரை வழங்குகிறது. நேபாளிலிருந்து வடகிழக்கு பாயும் கண்டகி ஆறு பிறகு கோசி ஆறு ஆகியவை முறையே மற்றும் நீரை அளிக்கின்றன. காக்ரா ஆறு (கர்னலி) மற்றும் யமுனைக்கு அடுத்து கங்கையின் மூன்றாவது பெரிய துணை ஆறாக கோசி ஆறு உள்ளது.
கங்கையாறு அலகாபாத் மற்றும் மால்காவிற்கும் இடையே பாய்ந்து, மேற்குவங்கத்தை நோக்கிச் செல்லும்போது கங்கை சுனார், மிர்சாபூர், வாரணாசி, காசிபூர், பாட்னா, [[ஹாஜீபூர், சப்ரா, பாகல்பூர், பிலியா, பக்ஸார், சிமரியா, சுல்தங்கான்ஜ் மற்றும் சைட்புர் ஆகிய நகரங்களை கடந்து செல்கிறது. பாகல்பூரில், ஆறானது தெற்கு-தென்கிழக்கு திசையை நோக்கி திரும்பி பாகூரில் ஓடுகிறது. இதன்பிறகு ஆறானது அதன் ஓட்டத்தில் முதன் முதலில் கிளை ஆறாக ஊக்லி ஆறு பிரிகிறது, வங்காளதேச எல்லைக்கு அருகில் கங்கையின் குறுக்கே ஃபராக்கா அணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சில வாய்கால்கள் வழியான ஹகிஹ்லி ஆறு இணைக்கப்பட்டுள்ளது. ஹகிஹ்லி ஆறானது பக்கிரிதி நதி மற்றும் ஜலாங்கி ஆறு ஆகியவற்றின் சங்கமத்தினால் உருவானது, மேலும் ஹூக்ளி பல துணை ஆறுகளைக் கொண்டுள்ளது. 541 கிமீ (336 மைல்) நீளமுடைய தாமோதர் ஆறு, வடிகாலைக் கொண்டது. ஹூக்ளி ஆறு சாகர் தீவுக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நுழைகிறது. மால்டா மற்றும் வங்காள விரிகுடாவிற்கு இடையே, ஹூக்ளி ஆற்றானது முர்ஷிதாபாத், நாட்ப்விப், கொல்கத்தா ஹௌரா பொன்ற ஊர்களையும் நகரங்களையும் கடந்து செல்கின்றது.
வங்கதேசத்தில் நுழைந்த பிறகு, கங்கையின் முதன்மைக் கிளை பத்மா என்று அழைக்கப்படுகிறது. பிரம்மபுத்திராவின் மிகப்பெரிய கிளை ஆறான ஜமுனா ஆறு பத்மாவுடன் இணைகிறது. மேலும் கீழே, பத்மா பிரம்மபுத்திராவின் இரண்டாவது மிகப்பெரிய கிளை ஆறான மேகனா ஆற்றுடன் சேர்ந்து, அது மேகானா என்ற பெயரைப் பெற்று, வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் பாயும் பெரிய, வண்டல் நிறைந்த கங்கை வடிநிலம் உலகின் மிகப்பெரிய வடிநிலமாகும், இது சுமார் பரப்பளவு கொண்டது ஆகும். இது வங்காள விரிகுடாவில் நீண்டு செல்கிறது.
சிவபெருமான் சடாமுடியில் கங்கை
சூரிய குலத்துத் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் பகீரதன். தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை வசிட்டர் வாயிலாகக் கேட்டு, அவர்கள் நற்கதி அடையப் பிரம்மனை நோக்கி 10,000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மனோ நீ கங்கையையும் சிவனையும் நோக்கித் தவம் செய்து கங்கையைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று கூற அவ்வாறே செய்தான். கங்கை சிவன் முன் தோன்றி, நான் வருவதற்குத் தடையொன்றும் இல்லை, என் வேகத்தைத் தாங்கிக் கொள்வார் உண்டாயின் என்றாள். பிரம்மன் கட்டளைப்படி சிவனாரை நோக்கித் தவம் புரிந்தான். சிவனாரும் கங்கையின் வேகத்தைத் தாங்கிக் கொள்வதாகக் கூற, பின் சிவன் வேண்டுகோளின்படி கங்கை வானுலகினின்று பூலோகம் வருகையில் சிவனாரால் கங்கை தாங்கப் பெற்றுப் பூமி பொறுக்கும் அளவுக்குப் பூமியில் விடப்பட்டாள். கங்கையை இறந்தோர் சாம்பலில் பாய வைத்து நற்கதி பெறச் செய்தவன். இவனால் கங்கை கௌரவம் பெற்றதால் கங்கைக்குப் பாகீரதி எனப் பெயர் வந்தது. இதனால் சிவபெருமான் கங்காதரன் என்று அழைக்கப்படுகிறார்.
கங்கா ஆரத்தி
வாரணாசியில் கங்கைக்கரையில் தினமும் கங்கை ஆற்றுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை கங்கா ஆர்த்தி என்கின்றனர்.
துணை ஆறுகள்
கங்கை ஆற்றின் துணை ஆறுகள்:
யமுனை ஆறு
கோசி ஆறு
கோமதி ஆறு
காக்ரா ஆறு
கண்டகி ஆறு
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Cleaning the Ganga, step by step
Set up panel to monitor clearances, environmentalists urge Modi
ஜ.பாக்கியவதி, அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை, தினமணி, 7.12.2014
இந்திய ஆறுகள்
இந்து தொன்மவியல் ஆறுகள்
புண்ணிய தீர்த்தங்கள்
|
4430
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
|
கங்கை
|
கங்கை () (கங்கா) என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:
கங்கை ஆறு
கங்கா தேவி
மேலைக் கங்கர்
கீழைக் கங்கர்
திரைப்படம்
கங்கை (2012 திரைப்படம்) (பாடிகார்டு என பெயர் மாற்றம் பெற்ற தெலுங்குத் திரைப்படம்)
நபர்
கங்கை அமரன்
|
4432
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
|
மேற்கு வங்காளம்
|
மேற்கு வங்காளம் (West Bengal) என்பது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இது மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் 4வது பெரிய மாநிலமாகும். இது கிழக்கில் வங்காளதேசத்தையும் மேற்கில் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளையும் தன் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் 7வது பெரிய நகரமான கொல்கத்தா, இம்மாநிலத்தின் தலைநகராக உள்ளது. வங்காள மொழியே இங்கு பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி. சுந்தரவனக் காடுகள் மற்றும் வங்காளப் புலிகள், இரும்பு மற்றும் நிலக்கரி சுரங்கங்களுக்கு பெயர் பெற்ற மாநிலம்.
வரலாறு
1947ஆம் வருடம் அன்றைய வங்காளம், இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பகுதி மேற்கு வங்காளம் என்றும், இஸ்லாமியரின் பகுதி கிழக்கு வங்காளம் என்றும் பிரிக்கப்பட்டது. இன்றைய வங்கதேசமே அந்த கிழக்கு வங்காளமாகும்.
புவியியல்
88,752 சதுர கிலோ மீட்டர் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தின் அண்டைய பகுதிகள் பின்வருவன
வடமேற்கில் நேபாளம், சிக்கிம்
வடக்கில் பூட்டான்
வடகிழக்கில் அசாம்
கிழக்கில் வங்கதேசம்
தெற்கில் வங்காள விரிகுடா
தென்மேற்கில் ஒரிஸா
மேற்கில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட்
மேற்கு வங்காள மாநிலம் 20 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
அரசியல்
1948 முதல் 1977 வரை மேற்கு வங்காளத்தை இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ச்சியாக இருபத்து ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தது.
1977ஆம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் மேற்கு வங்காளம் இடது சாரி கட்சிகளால் ஆளப்பட்டு வந்தது. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதை அடுத்து மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார்.
சட்டமன்ற-மக்களவை தொகுதிகள்
மேற்கு வங்காளம் 294 சட்டமன்ற தொகுதிகளும், 42 மக்களவை தொகுதிகளையும் கொண்டது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 91,276,115 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 46,809,027 மற்றும் பெண்கள் 44,467,088 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 950 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,028 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 76.26 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.69 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.54 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,581,466 ஆக உள்ளது. பத்தாண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 13.84% ஆக உள்ளது.
நகர்புற மக்கள் தொகை 38.13% ஆகவும், கிராமப்புற மக்கள் தொகை 31.87% ஆகவும் உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 64,385,546 (70.54 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 24,654,825 (27.01 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை (658,618) (0.72 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 63,523 (0.07 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 60,141 (0.07 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 282,898 (0.31 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 942,297 (1.03 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 228,267 (0.25 %) ஆகவும் உள்ளது.
கோட்டங்களும் மாவட்டங்களும்
இருபது மாவட்டங்களைக் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக இராஜதானி கோட்டம், வர்தமான் கோட்டம் மற்றும் ஜல்பைகுரி கோட்டம் என மூன்று கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று கோட்டங்களில் 23 மாவட்டங்கள் கொண்டுள்ளது.
இராஜதானி கோட்டம்
இராஜதானி கோட்டத்தில் கொல்கத்தா மாவட்டம், ஹவுரா மாவட்டம், முர்சிதாபாத் மாவட்டம், நதியா மாவட்டம் வடக்கு 24 பர்கனா மாவட்டம், தெற்கு 24 பர்கனா மாவட்டம் மற்றும் ஜார்கிராம் மாவட்டம் என 7 மாவட்டங்களை கொண்டுள்ளது.
வர்தமான் கோட்டம்
வர்தமான் கோட்டத்தில் பாங்குரா மாவட்டம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு மிட்னாபூர் மாவட்டம், பிர்பூம் மாவட்டம், கிழக்கு வர்த்தமான் மாவட்டம், மேற்கு வர்த்தமான் மாவட்டம், ஹூக்லி மாவட்டம் மற்றும் புருலியா மாவட்டம் என 8 மாவட்டங்களை கொண்டுள்ளது.
ஜல்பைகுரி கோட்டம்
ஜல்பைகுரி கோட்டத்தில் ஜல்பாய்குரி மாவட்டம், டார்ஜிலிங் மாவட்டம், அலிப்பூர்துவார் மாவட்டம், கூச் பெகர் மாவட்டம், தெற்கு தினஜ்பூர் மாவட்டம், மால்டா மாவட்டம், உத்தர தினஜ்பூர் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டம் என 8 மாவட்டங்கள் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
{| class="wikitable" cellspacing="1" style="float:right; width:260px; margin:0 0 1em 1em; background:#f4f5f6; border:#c6c7c8 solid; font-size:90%;"
| colspan="2" style="background:#c2d6e5; text-align:center;"|நிகர மாநில உற்பத்தி (2004–05)|-
! ஆண்டு ||ரூபாய்
|-
| 2004–2005 || 190,073
|-
| 2005–2006 || 209,642
|-
| 2006–2007 || 238,625
|-
| 2007–2008|| 272,166
|-
| 2008–2009 || 309,799
|-
| 2009–2010 || 366,318
|}
துர்காபூர் மற்றும் ஆசான்சோல் இரும்பு, நிலக்கரி மற்றும் அலுமினிய சுரங்கங்கள் மூலம் எஃகு, இரும்பாலைகள், மின்சார மற்றும் மின்னனு கருவிகள், மின் கம்பிகள், தோல், துணி நெசவு, நகையணிகள், மோட்டார் கார் உதிரிபாகங்கள், தொடருந்து பயனிகள் பெட்டிகள், தொடருந்து சரக்கு பெட்டிகள், தொடருந்து என்ஜின்கள், தேயிலை, சர்க்கரை, வேதியல் மூலப் பொருட்கள், சணல் மற்றும் சணலால் ஆன பொருட்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஆதாரமாக உள்ளது. டையமண்ட் துறைமுகம், மாநில பொருளாதரத்திற்கு உறுதுணையாக உள்ளது.
வேளாண்மை
வேளாண்மைத் தொழில் மேற்கு வங்காளத்தின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரம் ஆகும். நெல் முதன்மை வேளாண்மை பயிராகும். அரிசி, உருளைக்கிழங்கு, சணல், கரும்பு, தேயிலை மற்றும் கோதுமை முக்கிய விளைபொருட்கள் ஆகும்.
போக்குவரத்து
தரைவழி போக்குவரத்து
2011-ஆம் ஆண்டு முடிய மேற்கு வங்காளத்தில் மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் கொண்டது. மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் கொண்டது.
மாநில அரசின் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் மக்களின் தரை வழி போக்குவரத்திற்கு உதவுகிறது.
தொடருந்து
மேற்கு வங்காளத்தில் தொடருந்து இருப்புப் பாதைகளின் நீளம் 4481 கிலோ மீட்டர் ஆகும். தென்கிழக்கு இரயில்வே, கிழக்கு இரயில்வே மற்றும் கொல்கத்தா மெட்ரோ இயில்வேயின் மண்டலத் தலைமையகங்கள் கொல்கத்தாவில் அமைந்துள்ளது.
வானூர்தி நிலையங்கள்
நேதாஜி சுபாசு சந்திர போசு பன்னாட்டு வானூர்தி நிலையம் மாநிலத்தின் பெரிய வானூர்தி நிலையம் ஆகும்.
நீர் வழி போக்குவரத்து
கிழக்கு இந்தியாவில் உள்ளூர் ஆற்று நீர் வழிப் போக்குவரத்தில் கொல்கத்தா ஆற்றுத் துறைமுகம் சிறப்பிடம் வகிக்கிறது. கொல்கத்தா மற்றும் ஹால்டியா துறைமுகங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளுக்கு சிறப்பிடமாக உள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு கொல்கத்தாவிலிருந்து பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் செல்கிறது.
சுந்தரவனக் காடுகளில் பயணிக்க பெரிய இயந்திரப் படகுகள் உதவுகிறது.
பெயர் மாற்றம்
இம்மாநிலத்தின் பெயரை பஸ்ச்சிம் பங்கா' என மாற்ற அம்மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் மேற்கு வங்காளம் பஸ்ச்சிம் பங்கா'' என அழைக்கப்படுவது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும்.
புகழ் பெற்ற மனிதர்கள்
இராசாராம் மோகன் ராய்
இரவீந்திரநாத் தாகூர்
பங்கிம் சந்திர சட்டர்ஜி
சுபாஷ் சந்திர போஸ்
ஜகதீஷ் சந்திரபோஸ்
சுவாமி விவேகானந்தர்
ராமகிருஷ்ணர்
சாரதா தேவி
ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
சரத்சந்திர சட்டோபாத்யாயா
சத்யஜித் ராய்
மதுசூதன சரஸ்வதி
பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா
பிபின் சந்திர பால்
சித்தரஞ்சன் தாஸ்
குதிராம் போஸ்
சத்தியேந்திர நாத் போசு
ராஷ் பிஹாரி போஸ்
தாராசங்கர் பந்தோபாத்தியாய்
காஜி நஸ்ருல் இஸ்லாம்
அரவிந்தர்
ஜோதிபாசு
அமார்த்ய சென்
பிரணாப் முகர்ஜி
மம்தா பானர்ஜி
சோம்நாத் சாட்டர்ஜி
ஆகியோர் இம்மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற மனிதர்களாவர்.
இதையும் பார்க்கவும்
வங்காளப் பிரிவினை
மேற்கு வங்காள வரலாறு
மேற்கு வங்காள அரசு
மேற்கு வங்காள மாவட்டங்களின் பட்டியல்
மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்
மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
மேற்கு வங்காள அரசின் அதிகாரப்பூர்வ வளைத்தளம்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
வங்காளம்
|
4433
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
|
நேபாளம்
|
நேபாளம் () இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாள-இந்தியா எல்லையில் உள்ளது.
வரலாறு
காத்மாண்டு சமவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நியோலிதிக் காலப்பகுதியை சேர்ந்த ஆயுதங்களின் மூலம் 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகள் இருந்ததை காட்டுகிறது. திபேத்திய-மியான்மார் இன மக்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வசித்ததாக கருதப்படுகிறது.
இந்தோ-ஆரிய மக்கள் சுமார் பொ.ஊ.மு. 1500 அளவில் இங்கு வந்தனர், மேலும் சுமார் பொ.ஊ.மு. 1000 அளவில் பல சிற்றரசுகள் தோன்றின. இவ்வாறான ஒரு சிற்றசான சாக்கியர் இளவரசனான கௌத்தம் சித்தார்த்தன் (பொ.ஊ.மு. 563-483) என்பவர் தமது அரசை துறந்து மெய்ஞானம் பெற்று பின்னர் புத்தர் என அழைக்கப்பட்டார்.
பொ.ஊ.மு. 250 அளவில் இப்பிரதேசம் வட இந்தியாவின் மௌரியப் பேரரசுடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டது, பின்னர் பொ.ஊ. 4ஆவது நூற்றாண்டளவின் குப்த பேரரசுடைய ஆட்சியின் கீழான அரசாக செயற்பட்டது. பொ.ஊ. 5வது நூற்றாண்டுக்குப் பின்னர் லிச்சாவி இனமக்கள் காத்மாண்டு சமவெளியை ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சி பொ.ஊ. 5ஆவது நூற்றாண்டின் பிற்காலம் வரை நீடித்தது.
லிச்சாவி அரசவம்சத்துக்கு பின்னர் நேவாரிகள் காலம் தொடங்கிற்று 879 தொடக்கம் இவ்வரசவம்சம் நேபாளத்தை ஆண்டது எனினும் அவர்களில் ஆட்சியின் எல்லைகள குறித்த தகவல்கள் இல்லை. பொ.ஊ. 11வது நூற்றாண்டில், தெற்கு நேபாளம் தென்னிந்தியாவின் சாளுக்கிய பேரரசின் ஆட்சிகுட்பட்டது. இவ்வாட்சியின் கீழ் நேபாளத்தின் மத கட்டமைப்புகள் மாற்றம் பெற்றது அரசர் இந்து சமயத்தை ஆதரித்த காரணத்தால் அங்கு ஏற்கனவே நிலவிய பௌத்த மதம் இந்து சமயத்தால் பிரதீயீடு செய்யப்பட்டது.
மல்ல வம்சத்தவர்கள் காத்மாண்டு சமவெளியில் பதான் நகரப் பரப்பை மேலும் விரிவு படுத்தினர். மல்ல வம்ச மன்னர் வீரதேவன் என்பவர் லலித்பூர் எனும் பதான் நகரத்தை நிறுவினார். மல்லர்கள் காத்மாண்டு சமவெளியை பொ.ஊ. 1201 முதல் 1768 முடிய ஆண்டனர்.
14வது நூற்றாண்டில் நாடு, காட்மாண்டூ, பதான், பக்தபூர் என மூன்றாக பிளவுபட்டது. இவை பல நூற்றாண்டுகளுக்கு பகைமை பாராட்டி வந்தன.
1768-இல் ஷா வம்சத்தின் கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா என்பவர் கீர்த்திப்பூர் போர், காட்மாண்டுப் போர் மற்றும் பக்தபூர் போர்களில் காத்மாண்டு சமவெளியின் மூன்று நகரங்களைக் கைபப்ற்றி, ஒன்றினைத்த நேபாள இராச்சியத்தை நிறுவினார்.
ஷா வம்ச மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாக இருந்தவர்களான
ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா என்பவர் 1846ல் நேபாள இராச்சியத்தின் ஷா வம்ச மன்னர்களின் ஆட்சி அதிகாராங்களை கைப்பற்றி, பெயரளவில் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவை மன்னர்களாக வைத்துக் கொண்டு, அவரும், அவரது பரம்பரையினரும் 1951 முடிய ஆட்சி செலுத்தினார். 1951ல் மீண்டும் ஷா வம்ச மன்னர்கள் நேபாளத்தை 1951 முதல் 2008 முடிய ஆண்டனர்.
1815-1816ல நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில், ஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தினர் கைப்பற்றியிருந்த, கார்வால், சிர்மூர், குமாவுன், சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனியினருக்கு வழங்கப்பட்டது.
1846இல் ஆதிகாரம் செலுத்திவந்த ஜங் பகதூர் ராணா என்ற தளபதியை பதவி கவிழ்க்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன் போது அரசருக்கு சார்பானவர்களுக்கும் பகதூருக்கு சார்பானவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் பகதூர் வெற்றி பெற்று தன்னை பரம்பரை தலைமை பிரதமராக்கிக் கொண்டு அரசரின் அதிகாரங்களை தன்கையில் எடுத்துக் கொண்டார். மேலும் இவர் ராணா வம்சத்திற்கு வித்திட்டார்.
ராணா வம்சத்தார் பிரித்தானிய ஆதரவு கொள்கையை கடைப்பிடித்தனர். 1923 இல் ஐக்கிய இராச்சியத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது, இதன் மூலம் ஐக்கிய இராச்சியம் நேபாளத்தை சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டது.
1940களின் இறுதியில் சனநாயக இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் ராணா வம்ச அதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதேவேலை 1950இல் சீனா திபேத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது, இதன் காரணமாக நேபாளத்தின் அரசியலில் இந்தியா ஆர்வம் கொண்டது. இதன் போது இந்தியாவில் தங்கியிருந்த ஷா வம்ச மன்னர் திரிபுவன் வீர விக்ரம் ஷா என்பவரை நேபாளாத்தின் அரசரானார். பல வருடங்களாக அரசுக்கும் அரசருக்கும் ஏற்பட்ட அதிகார பிரச்சினைகளின் பிறகு, 1959 இல் அமைச்சரவையை பதவி விலக்கினார்.
கட்சியற்ற பஞ்சாயத்து ஆட்சி முறையொன்று ஏற்படுத்தப்பட்டது. 1989 இல் ஏற்பட்ட மக்கள் போராட்டங்கள் காரணமாக அரசர், 1991 மேயில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி பல கட்சி முறைய ஏற்படுத்தினார். முதலாவது சனநாயக தேர்தலில் நேபாள காங்கிரசு வெற்றி பெற்று கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரதமராக பதவியேற்றார்.
அண்மைய நிகழ்வுகள்
2001 ஜூன் 1 இல் முடிக்குரிய இளவரசன் திபெந்திரா அரண்மனையில் தனது பெற்றோருடன் தனது மணப்பெண் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கொலைவெறியாடியதில் அவரது பெற்றோர் கொல்லப்பட்டனர். மேலும், மூன்று நாட்களில் அவரும் இறந்தார். பின்னர் பிரேந்திராவின் சகோதரனான ஞானேந்திரா மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையற்ற அரசுகளை பயன்படுத்திக் கொண்ட மாவோயிசவாதிகள் 2004 ஆகஸ்டில் காட்மாண்டூ பள்ளத்தாக்கை கைப்பற்றினார்கள், இதனால் மக்களிடையே மன்னராட்சி மீதான நல்லெண்ணம் குன்றியது.
2005 பிப்ரவரி 1 இல் மாவோயிச போராளிகளை அடக்குதல் என்ற பெயரால், கயனேந்திரா மன்னர் அரசை பதவி விலக்கிவிட்டு, முழு ஆட்சி அதிகாரத்தையும் தன் கையில் எடுத்தார். செப்டம்பர் 2005 இல் மாவோயிச போராளிகள் மூன்று மாத ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தமொன்றை அறிவித்த போதும் அரசு போர் மூலமாக போராளிகளை அடக்குவதாக பிடிவாதமாக இருந்தது. சில வாரங்களில் 2007 இல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரசு அறிவித்தது.
அதற்குப்பிறகு மாவோயிசவாதிகளின் ஆதரவுடன் ஏழு நாடாளுமன்ற கட்சிகள் அரசரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் பாரிய எதிர்ப்பார்பாட்டங்களை நடத்தின. எவ்வாறாயினும் இவ்வார்ப்பாட்டங்களை பல பொய் காரணங்களை காட்டி மன்னர் அடக்கினார். வேலையின்மை பாதுகாப்பின்மை போன்றவற்றால் வெறுப்படைந்த மக்கள் மென்மேலும் இவ்வார்ப்பாட்டங்களில் இணைந்தனர். ஆனால், அரசரோ மேலும் மூர்க்கத்தனமாக இவ்வார்ப்பாட்டங்களை அடக்கினார். உணவு பற்றாக்குறையும் நாட்டில் ஏற்படத்தொடங்கியது இதனால் மக்கள் அரண்மனையைச் சூழ்ந்து ஆர்பாட்டம் செய்ய திட்டமிட்டனர். இதன் போது பாதுகாப்புப் படைகள் மேலும் கொடூரமாக செயல் பட தொடங்கினார்கள். விளைவாக 21 பேர் இறந்ததோடு மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயப்பட்டனர்.
அதிகரித்துவந்த வெளிநாட்டு அழுத்தங்களின் முன்னிலையில் கயனேந்திரா மன்னர் ஏப்ரல் 21 2006 இல் தான் தனது அதிகாரங்களை கைவிடுவதாகவும் அது மக்களுக்கே மீண்டும் வழங்கப்படுவதாகவும் அறிவித்தார். மன்னர் 7 கட்சி கூட்டணியிடம் ஒரு தற்காலிக பிரதமரை நியமிக்குமாறும் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். இருப்பினும் பலர் தொடர்ந்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு மன்னராட்சி முற்றாக இல்லாதொழிக்கப் படவேண்டும் எனக் கோரினார்கள். கடைசியாக 19 நாள் ஆர்பாட்டங்களுக்குப் பிறகு ஏப்ரல் 24 மத்திய இரவில் ஏப்ரல் 28 ஆம் நாள் நாடாளுமன்றத்தை கூடும் படி கேட்டுக் கொண்டார்.
இதன்படி ஒன்றுகூடிய நாடாளுமன்றம் அரசரின் இராணுவம் மீதான அதிகாரங்களை அகற்றி மன்னர் இந்து கடவுளின் வாரிசு என்ற பட்டத்தையும் நீக்கியது மேலும் மன்னர் வரிச் செலுத்தவேண்டும் எனவும் கேட்கப்பட்டது. பல அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. "மேதகு மன்னரின் அரசு" என்ற பெயர் நீக்கப்பட்டு நேபாள ஜனநாயக அரசு என அரசின் பெயர் மாற்றப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையொன்றுக்கான தேர்தல்கள் விரைவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
மேலோட்டம்
நாட்டின் மக்கள் தொகையின் 80% இந்து மதத்தை பின்பற்றுபவர்களாவார்கள். தெற்கே வெப்பமான தெராய்யும் வடக்கே குளிரான இமாலயம் கொண்ட நேபாளத்தின் புவியமைப்பு பெரிய வேறுபாடுகளை காட்டுகிறது. சிறிய தூரத்துக்குள் சமவெளியில் இருந்து உலகிலேயே மிக உயரமான இமயம் வரை நிலம் மிக விரைவாக உயர்வடைகிறது. சினாவுடனான எல்லையில் உள்ள எவரெஸ்ட் உட்பட, உலகில் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபளத்தில் காணப்படுகிறது. நேபாளத்தின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாக காட்மாண்டூ விளங்குகிறது. நேபாளத்தின் பெயரின் ஆரம்பம் குறித்த தெளிவான கருத்துக்கள் இல்லாத போதும் "நே" (புனித) "பாள்" (குகை) என்பது பொதுவான கருத்தாகும்.
பல்வேறு அரசர்களின் கீழ், நீண்ட பசுமையான வரலாற்றை கொண்டிருந்த நேபாளம் 1990இல் அரசியலமைப்பு சட்ட முடியாட்சியாக மாறியது. எவ்வாறெனினும் மன்னர் முக்கியமான மற்றும் நன்கு வரையறுக்கப்படாத அதிகாரங்களை தம் வசம் வைத்துக் கொண்டார். இது ஆட்சி நிலையின்மைக்கும் மேலும் 1996 முதல் மாவோயிசவாதிகளால் போரட்டம் ஒன்றை ஆரம்பிக்கவும் வித்திட்டது. முதல் நிலை அரசியல் கட்சிகளால் தனிமைப்படுத்தப்பட்ட மாவோயிசவாதிகள் தலைமறைவாகி அரசுக்கெதிராகவும் அரசருக்கு எதிராகவும் கரில்லா யுத்தம் ஒன்றை ஆரம்பித்தார்கள். இவர்கள் அரசரையும் அரசையும் கவிழ்த்துவிட்டு குடியரசு ஒன்றை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளார்கள். இதன் காரணமாக ஏற்பட்டுள்ள நேபாள உள்நாட்டு யுத்தத்தினால் இது வரை சுமார் 13,000 பேர் வரையில் இறந்திருப்பதாக கருதப்படுகிறது. நாட்டின் 60%த்தை ஆட்சி செய்யும் மாவோயிசவாதிகளை அடக்குவதாக கூறி 2002இல் மன்னர் தேர்தல் மூலம் தெரிவான பிரதமரை பதவிநீக்கி அவர் அவரது அரசையும் கலைத்தார். 2005 இல் தன்னிச்சையாக அவசரகால சட்டத்தை பிறப்பித்தார். அரசருக்கெதிராக தொடர்ந்து நடைபெற்ற பேரணிகள் எதிர்பார்பாட்டங்கள் காரணமாக மன்னர் 2006 ஏப்ரல் 24ஆம் நாள் முன்பு தன்னால் கலைக்கப் பட்ட நாடாளுமன்றத்துக்கு மீண்டும் ஆட்சியை கையளிக்க ஒப்புக் கொண்டார். புதிதாகக் கூடிய நாடாளுமன்றம் அரசரின் அதிகாரங்களை அகற்றுவதற்கான சட்டமூலத்தை ஏக மனதாக நிறைவேற்றியது. மேலும் நேபாளம் மதசார்பற்ற, ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது.
புதிய அரசியலமைப்புச் சட்டம், 2015
நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015, 20 செப்டம்பர் 2015 அன்று முதல் நடைமுறைக்கு வந்ததது. புதிய அரசியல் சாசனம் 20 செப்டம்பர் 2015 அன்று நடைமுறைக்கு வருவதை குறிக்கும் வகையில், நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் புதிய அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டார். நேபாள அரசியலமைப்புச் சட்டம், 8 பகுதிகளாகவும், 305 தொகுப்புகளாகவும், 9 பட்டியல்களாகவும் இயற்றப்பட்டுள்ளது. நேபாளத்தை சமயசார்பற்ற, ஜனநாயகக் கூட்டாட்சி குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டது. நேபாளத்தை ஏழு மாநிலங்களாகவும், 75 மாவட்டங்களாகவும் பிரித்தது.
நிர்வாகப் பகுதிகள்
20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக வரையறுக்கப்பட்ட நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எண் 4-இன் படி, கூட்டாட்சியை அடிப்படையாக் கொண்டு, 77 மாவட்டங்களைக் கொண்டு, 7 மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
நேபாள நாடாளுமன்றம், 2018
ஈரவை முறைமையுடன் 334 உறுப்பினர்களுடன் கூடிய நேபாள நாடாளுமன்றம், 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபை எனும் கீழவையும் மற்றும் 59 உறுப்பினர்கள் கொண்ட தேசிய சட்டமன்றம் எனும் மேலவையும் கொண்டதாக இருக்கும். மாநிலங்களின் சட்டமன்றங்கள் ஓரவையுடனும் செயல்படும்.
பிரதிநிதிகள் சபை
275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள பிரதிநிதிகள் சபையின் 165 உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாகவும், 110 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில், அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு சதவீதத்தின் படி மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேசிய சபை
59 உறுப்பினர்கள் கொண்ட நேபாள தேசிய சபையின் 56 உறுப்பினர்களை நேபாள சட்டமன்றங்களின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களால் தேர்தெடுக்கப்படுவர். மீதமுள்ள 3 உறுப்பினர்களை நேபாளக் குடியரசுத் தலைவர் நியமிப்பர்.
உள்ளாட்சி நிர்வாக அமைப்புகள்
நேபாள உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு ஆனையத்தின் அறிக்கையின் படி, மார்ச் 2017ல், நகர்புறப் பகுதிகளை 6 மாநகராட்சிகளாகவும்; 11 துணை-மாநகராட்சிகளாகவும்; 246 நகர்புற நகராட்சிகளாகவும், 481 கிராமிய நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகையியல்
2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை 2,64,94,504 (இரண்டு கோடியே அறுபத்தி நான்கு இலட்சத்து தொன்னூற்றி நாலாயிரத்தி ஐந்நூற்றி நான்கு) அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய வளர்ச்சி பிராந்தியத்தின் மக்கட்தொகை 9,656,985 ஆகவும், 2,552,517 அளவில் குறைந்த மக்கட்தொகை கொண்ட பிராந்தியமாக தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம் உள்ளது. நேபாளத்தின் மலைப் பகுதிகளில் மக்கட்தொகை 6.73% ஆகவும், குன்றுப் பகுதிகளில்: 43.00% ஆகவும், சமவெளிகளில் 50.27% ஆகவும் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி 3,343,081 உயர்ந்து, சராசரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.35% ஆக உள்ளது.
சமயம்
நேபாள மக்களில் இந்துக்கள் 81.3% ஆகவும், பௌத்தர்கள் 9% ஆகவும், இசுலாமியர்கள் 4.4% ஆகவும், கிராந்தி மக்கள் 3% ஆகவும், கிறித்தவர்கள் 1.4% ஆகவும், 1% மக்கள் இதர சமயங்களையும் மற்றும் சமயம் அற்றவர்களாகவும் உள்ளனர்.
மொழிகள்
நேபாளத்தில் பெரும்பான்மையின மக்கள் இந்திய-ஆரிய மொழிகளான நேபாளி மொழி, நேவார் மொழி, மைதிலி மொழி, அவதி மொழி, போஜ்புரி மொழி, தாரு மொழி, நேபால் பாசாவும், திபெத்திய-பர்மிய மொழிகளான தாமாங் மொழி மற்றும் குரூங் மொழிகளையும் மற்றும் உள்ளூர் மொழிகளான தன்வர், குரூங் மற்றும் கிராதி மொழிகள் பேசுகின்றனர்.
புவியியல்
நேபாளம் 650 கிமீ நீளமும் 200 கிமீ அகலமும் கொண்ட அண்ணளவான ஒரு செவ்வக வடிவையுடைய நாடாகும். நேபாளம் பொதுவாக மூன்று தரைத்தோற்ற பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகிறது: மலைப்பிரதேசம், குன்றுப் பிரதேசம் மற்றும் தராய் பிரதேசம். இவ்வலயங்கள் கிழக்கு மேற்காக நீண்டு காணப்படுகின்றன. இவை நேபாளத்தின் ஆற்றுத்தொகுதியால் ஊடறுத்து செல்லப்படுகிறது.
இந்திய எல்லையில் காணப்படும் தராய் சமவெளிகள் இந்திய-கங்கை சமவெளியின் வட பகுதியாகும். இப்பிரதேசம் மூன்று முதன்மையான ஆறுகளால் வளமாக்கப்படுகின்றது அவையாவன: கோசி, நாராயனி, கர்னாலி என்பனவாகும். இப்பிரதேசம் வெப்பமான ஈரப்பதன் கூடிய காலநிலையைக் கொண்டுள்ளது.
குன்றுப் பிரதேசத்தில் 1000 தொடக்கம் 4000 மீட்டர் வரையான நிலப்பகுதி அடங்கும். இங்கு, சிவாலிக், மகாபாரத் லெக் என்ற இரண்டு தாழ் மலைத்தொடர்கள் முக்கியமாக காணப்படுகின்றது. இப்பிரதேசம் நாட்டின் வளமான மற்றும் கூடுதலாக நகரமயமாக்கப்பட்ட காட்மாண்டூ பள்ளத்தாக்கையும் உள்ளடக்குகிறது. இப்பிரதேசம் புவியியல் தன்மைக்காரணமாக தனிமைப் படுத்தப்பட்டிருந்தாலும் நாட்டின் பொருளாதார அரசியல் மையமாக விளங்கி வந்துள்ளது. இங்கு 2500 மீட்டருக்கு மேற்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகள் அரிதாகவே காணப்படுகின்றது.
மலைப் பிரதேசமானது உலகிலேயே உயரமான மலைகளைக் கொண்டுள்ளது. உலகில் உயரமான மலையான எவரெஸ்ட் திபெத்துடனான எல்லையில் காணப்படுகிறது. மேலும் உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபாளத்தில் அமைந்துள்ளது. உலகில் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்சுங்கா மலை கிழக்கு சிக்கிமுடனான எல்லையில் அமைந்துள்ளது. காடழிப்பு இப்பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினையாகும்.
நேபாளம் ஐந்து காலநிலை வலயங்களைக் கொண்டுள்ளது. 1200 மீட்டருக்கு கீழான பகுதிகளில் வெப்ப வலய காலநிலையும் 1200 தொடக்கம் 2400 மீட்டர் வரையான பிரதேசம் மிதமான காலநிலையையும் 2400 தொடக்கம் 3600 மீட்டர் வரையான பிரதேசம் குளிர் வலய காலநிலையையும் 3600 தொடக்கம் 4400 மீட்டர் வரையான பிதேசம் உப ஆர்டிக் காலநிலையையும் 4400 மீட்டருக்கு மேலான பிரதேசம் ஆர்டிக் காலநிலையையும் கொண்டுள்ளது. மேலும் நேபாளத்தில், கோடை, பருவக்காற்றுகள், இலையுதிர்காலம், கோடை, இளவேனில் என ஐந்து பருவங்கள் காணப்படுகின்றன. இமாலயம் பருவக்காற்றுகள் செல்லும் வட எல்லையையாகவும் கோடையில் மத்திய ஆசியாவில் இருந்துவரும் குளிர்காற்றுகள் செல்லும் தெற்கு எல்லையாகவும் செயற்படுகின்றது.
நேபாளமும் வங்காளதேசமும் சுமார் 21 கிமீ மட்டுமே அகலமான இந்தியாவுக்குச் சொந்தமான சிலிகுரி பாதை நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசம் சிலிகுரி பாதை என அழைக்கப்படுகிறது.
நிலநடுக்கங்கள்
நேபாளம் நிலநடுக்க மையத்தில் அமைந்துள்ள பகுதிகளில் ஒன்றாகும். 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் 7,250 மக்கள் பலியானார்கள். இதன் அதிர்வு ரிக்டர் அளவில் 7.9 பதிவாகியுள்ளது.
பொருளாதாரம்
நேபாளம் உலகில் மிக ஏழையானதும் அபிவிருத்தி குன்றியதுமான நாடுகளில் ஒன்றாகும். மக்கள் தொகையில் 38 சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். அதன் மூலதனச் சந்தை ஆரம்ப நிலையில் காணப்படுகிறது. மேலும் மிக அண்மையிலேயே பங்குச் சந்தை தகவல்கள் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன வேளாண்மை மற்றும் சுற்றுலாத் துறையே நேபாளத்தின் முக்கிய வருவாயாக உள்ளது.
உலகப் பாரம்பரியக் களங்கள்
நேபாளத்தில் எட்டு கலாச்சார பண்பாட்டு உலகப்பாரம்பரியக் களங்களும், இரண்டு இயற்கை உலகப்பராம்பரியக் களங்களும் அமைந்துள்ளது..
அனுமன் தோகா நகர சதுக்கம்
பக்தபூர் நகர சதுக்கம்
பதான் தர்பார் சதுக்கம்
பசுபதிநாத் கோவில்
சங்கு நாராயணன் கோயில்
பௌத்தநாத்து
சுயம்புநாதர் கோயில்
லும்பினி
சித்வான் தேசியப் பூங்கா
சாகர்மாதா தேசியப் பூங்கா
சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்
ஆன்மிகத் தலங்கள்
இந்துக்களின் ஆன்மிகத் தலமாக புகழ் பெற்ற பசுபதிநாத் கோவில், சங்கு நாராயணன் கோயில் மற்றும் முக்திநாத் விளங்குகிறது. பௌத்தர்களின் புனித தலங்களாக லும்பினி, பௌத்தநாத்து மற்றும் கபிலவஸ்து உள்ளது.
சுற்றுலாத் தலங்கள்
எவரெஸ்ட் சிகரம், கஞ்சன்சுங்கா மலை, அன்னபூர்ணா மற்றும் தவளகிரி மலைகள் மற்றும் மலையேற்ற வீரர்களையும், சித்வான் தேசியப் பூங்கா, சாகர்மாதா தேசியப் பூங்கா சுற்றுலாப் பயணிகளையும் மிகவும் ஈர்க்கும் இடங்கள் ஆகும்.
நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017
2017 நவம்பர் - டிசம்பர் மாதங்களில நடைபெற்ற நேபாள நாடாளுமன்றத் தேர்தல்களில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. நேபாளி காங்கிரஸ் தலைமையிலான வலதுசாரி கூட்டணி இரண்டாம் இடம் பெற்றது. சனவரி, 2018க்குள் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும்.
நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017
நேபாள நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில், மாநில எண் 2 தவிர, பிற ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மற்றும் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.
இதனையும் காண்க
நேபாள மாநிலங்கள்
நேபாளத்தின் மாவட்டங்கள்
நேபாள நகரங்கள்
நேபாள காலக் கோடுகள்
கிராத இராச்சியம்
லிச்சாவி நாடு
மல்லர் வம்சம்
ஷா வம்சம்
கோர்கா அரசு
பிரிதிவி நாராயணன் ஷா
நேபாள இராச்சியம்
நேபாளத்தின் வரலாறு
நேபாள மன்னர்கள்
நேபாள பிரதம அமைச்சர்கள்
நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017
ஆதாரங்கள்
வெளியிணைப்புகள்
Nepal Region – Eco Region – Districts- Rural and Urban wise 2011 Population census
தெற்காசிய நாடுகள்
நிலம்சூழ் நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
சார்க் உறுப்பினர்கள்
ஆசிய நாடுகள்
|
4434
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
|
பீகார்
|
பிகார் அல்லது பீகார் (Bihar) இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.
2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது.
வரலாறு
பிகார் முற்காலத்தில் அதாவது பொ.ஊ.மு. 600ல் துவங்கி மகத நாடு என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் தற்போது பாட்னா என்றழைக்கப்படுகிறது.
புத்த மதமும் சமண மதமும் இங்குதான் தோன்றின.
கல்வி
பண்டைய பிகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது நாளந்தா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 94,163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.71% மக்களும், நகரப்புறங்களில் 11.29% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.42% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 54,278,157 ஆண்களும் மற்றும் 49,821,295 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,106 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 61.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.20% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 51.50% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19,133,964 ஆக உள்ளது.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 86,078,686 (82.69 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 17,557,809 (16.87 % ) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 129,247 (0.12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 23,779 (0.02 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 18,914 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 25,453 (0.02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 13,437 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 252,127 (0.24 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தியுடன், போஜ்புரி, உருது, மைதிலி மற்றும் பல வட்டார மொழிகளும் பேசப்படுகின்றன.
பொருளாதாரம்
கங்கை ஆறும் மற்றும் அதன் துணை ஆறுகளும் பாயும் கங்கைச் சமவெளியில் பிகார் அமைந்துள்ளதால் வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது. கோதுமை, நெல் மற்றும் கரும்பு முக்கிய விளைபயிர்களாகும்.
மாவட்டங்கள்
பிகார் மாநிலம் நிர்வாக வசதிக்காக ஒன்பது கோட்டங்களாகவும், முப்பத்து எட்டு வருவாய் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் விவரம்;
அரரியா மாவட்டம்
அர்வல் மாவட்டம்
அவுரங்காபாத் மாவட்டம்
ககரியா மாவட்டம்
கட்டிஹார் மாவட்டம்
கயா மாவட்டம்
கிசன்கஞ்சு மாவட்டம்
கிழக்கு சம்பாரண் மாவட்டம்
கைமுர் மாவட்டம்
சமஸ்திபூர் மாவட்டம்
சஹர்சா மாவட்டம்
சிவஹர் மாவட்டம்
சீதாமரி மாவட்டம்
சீவான் மாவட்டம்
சுபவுல் மாவட்டம்
ஜகானாபாத் மாவட்டம்
தர்பங்கா மாவட்டம்
நவாதா மாவட்டம்
பக்சர் மாவட்டம்
பட்னா மாவட்டம்
பாகல்பூர் மாவட்டம்
பாங்கா மாவட்டம்
பூர்ணியா மாவட்டம்
பேகூசராய் மாவட்டம்
போஜ்பூர் மாவட்டம்
மதுபனி மாவட்டம்
மதேபுரா மாவட்டம்
முங்கேர் மாவட்டம்
முசாபர்பூர் மாவட்டம்
மேற்கு சம்பாரண் மாவட்டம்
ரோத்தாஸ் மாவட்டம்
லக்கிசராய் மாவட்டம்
வைசாலி மாவட்டம்
ஷேக்புரா மாவட்டம்
ஜமூய் மாவட்டம்
நாலந்தா மாவட்டம்
சரண் மாவட்டம்
கோபால்கஞ்ச் மாவட்டம்
ஆன்மிகத் தலங்கள்
கயை, நாலந்தா பல்கலைக்கழகம், புத்தகயா, மகாபோதி கோயில், கேசரியா, ராஜகிரகம் மற்றும் வைசாலி ஆகும்.
போக்குவரத்து
தொடருந்து
கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் வடக்கு இந்தியாவை இணைக்கும் இருப்புப்பாதைகள் அனைத்தும் பட்னா சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது.
வானூர்தி நிலையம்
பாட்னாவில் உள்ள லோகநாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பன்னாட்டு விமான நிலையம்
இந்தியாவின் நகரங்களுடனும் மற்றும் பன்னாட்டு நகரங்களுடனும் இணைக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகள்
புதுதில்லி - கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 2 பாட்னா வழியாக செல்கிறது.
மேலும் பார்க்க
பீகார் அரசு
பீகார் அரசு சின்னம்
பீகார் வரலாறு
பீகார் முதலமைச்சர்களின் பட்டியல்
பீகார் துணைமுதலமைச்சர்களின் பட்டியல்
பீகாரின் சட்டமன்றம்
பீகார் ஆளுநர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
பீகார்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
|
4435
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE
|
வங்காள விரிகுடா
|
வங்காள விரிகுடா (Bay of Bengal) இந்தியப் பெருங்கடலில் அடங்கிய கடலாகும். முக்கோண வடிவில் உள்ள இக்கடலின் கிழக்கில் மலேய தீபகற்பமும், வடக்கில் மேற்கு வங்காளம், மற்றும் வங்கதேசமும், மேற்கில் இந்திய துணைக்கண்டமும் அமைந்துள்ளன. இலங்கை, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை இக்கடலில் உள்ள தீவுகளாகும். இக்கடலை சோழமண்டல கடல் என அழைக்க சிகாக்கோ பேராசிரியர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
கங்கை, பிரம்மபுத்ரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, மெக்னா, ஐராவதி ஆகியவை வங்காள விரிகுடாவில் கலக்கும் முக்கிய நதிகளாகும். இக்கடலின் கரையில் அமைந்துள்ள சில முக்கிய நகரங்கள் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, பாண்டிச்சேரி ஆகியவை.
வங்காள விரிகுடாவில் ஆழிப்பேரலை
திசம்பர் 26, 2004ம் ஆண்டில் காலை 6.29 மணிக்கு இந்தோனேசியாவின், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் ஆழிப்பேரலையாக உருவெடுத்து பல்வேறு பகுதிகளை அழித்தது.
தமிழ்நாடு, அந்தமான், நிகோபார் தீவுகள் மற்றும் இலங்கை, இந்தோனேசியா நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாயின. உலகின் 11 நாடுகளில் பாதிப்பை உண்டாக்கிய இந்த பயங்கர நில நடுக்கம், ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது.
இந்தியாவில் 9571, இந்தோனேசியாவில் 94,100, இலங்கையில் 30,196, தாய்லாந்தில் 5,187, மியான்மரில் 90 பேரும், மாலத்தீவில் 75 பேரும், மலேசியாவில் 68 பேரும், சோமாலியாவில் 176 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும் ஆழிப் பேரலைக்கு பலியாயினர்.
மேற்கோள்கள்
விரிகுடாக்கள்
இந்தியப் பெருங்கடல்
ஆசியப் புவியியல்
|
4439
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D
|
பி. வி. நரசிம்ம ராவ்
|
பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.இந்திய அரசியலமைப்பில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்க பாடுபட்டவர்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார்.
1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது.
மறைவு
டிசம்பர் 2004 இல், தனது 83 ஆம் வயதில் ராவ் மாரடைப்பால் காலமானார்.
இவற்றையும் பார்க்கவும்
இந்தியப் பிரதமர்கள்
பிரபல இந்தியர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பி. வி. நரசிம்ம ராவ்
இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
இந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்
இந்தியப் பிரதமர்
நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி
இந்திய அரசியல்வாதிகள்
இந்தியப் பிரதமர்கள்
1921 பிறப்புகள்
2004 இறப்புகள்
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்
இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்
11வது மக்களவை உறுப்பினர்கள்
8வது மக்களவை உறுப்பினர்கள்
9வது மக்களவை உறுப்பினர்கள்
இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
10வது மக்களவை உறுப்பினர்கள்
20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள்
6வது மக்களவை உறுப்பினர்கள்
7வது மக்களவை உறுப்பினர்கள்
|
4441
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
|
அடல் பிகாரி வாச்பாய்
|
அடல் பிகாரி வாஜ்பாய் (Atal Bihari Vajpayee, டிசம்பர் 25, 1924 - ஆகஸ்டு 16, 2018) 1996ம் ஆண்டு 13 நாட்களும், பின்னர் 1998 முதல் 1999 வரையிலான 13 மாதங்களுக்கும், அதைத் தொடர்ந்து 1999 முதல் 2004 வரையிலான முழு கால அளவுக்கும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் கிருஷ்ணபிஹாரி வாஜ்பாய்–கிருஷ்ணவேணிதேவி தம்பதியருக்கு திசம்பர் 25, 1924 அன்று மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரில் பிறந்தார். இவருக்கு பிரேம்நாத் வாஜ்பாய் என்ற ஒரு இளைய சகோதரர் உள்ளார். இவருக்கு பெற்றோர்கள் தனது குல கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வாசுதேவன் என்கிற பெயரை வாசு+நன்றி மறவாதவன்/தேவன்(ஆண்மகன்)+பாய் ஆங்கிலோ இந்திய பெயராக மாற்றி வாசுபாய் என்று பெயரிட்டனர். இவரது தாத்தா பண்டிட் ஷியாம் லால் வாஜ்பாய், உத்தரப்பிரதேசத்தின் பாதேஷ்வர் என்ற அவரது பூர்வீக கிராமத்திலிருந்து குவாலியருக்கு குடியேறினார். அவரது தந்தை, கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயி, தனது சொந்த ஊரில் ஒரு கவிஞரும் பள்ளிக்கூட ஆசிரியருமாவார். வாஜ்பாயி சரஸ்வதி ஷிஷு மந்திர், கோர்கி, பரா, குவாலியரில் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார். வாஜ்பாய் குவாலியரின் விக்டோரியா கல்லூரியில் (தற்போது லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். மேலும் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார்.
ஆர்வ சமாஜின் இளைஞர் பிரிவான ஆர்யா குமாரின் ஆர்யா குமார் சபாவுடன் 1944ல் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1939ல் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஒரு ஸ்வேயெம்சேவாவில் இணைந்தார். பாபா சாஹேப் ஆப்டி அவர்கள் மீதான ஈடுபாடு காரணமாக 1940-44ல் ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகளின் பயிற்சி முகாமுக்குச் சென்று 1947 ஆம் ஆண்டில் ஒரு முழுநேர ஊழியர் ஆனார். பிரிவினை கலவரம் காரணமாக சட்ட படிப்பினை அவரால் தொடர இயலவில்லை. உத்தரபிரதேசத்திற்கு ஒரு விஸ்டாராக (probationary pracharak) அனுப்பப்பட்டார். விரைவில் டீன்யல் உபாடியாயா, ராஷ்டிரதர்மம் (இந்தி மாதத்தில்), பஞ்சஜானியா (ஒரு இந்தி வார இதழ்) மற்றும் நாவல்கள் ஸ்வாதேஷ் மற்றும் வீர் அர்ஜூன் ஆகியோரின் பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கினார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை, இவருடைய முழு வாழ்வும் இந்த இந்திய தேசத்திற்கு அர்ப்பணித்தார்.
அரசியலில் ஈடுபாடு
இவர் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நாடு பல கோணங்களில் முன்னேறியது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகள் போன்றவையாகும்.
விருது
இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருதினை, 27 மார்ச் 2015 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரும் மற்றும் இந்தியப் பிரதமரும், வாஜ்பாயின் இல்லம் சென்று வழங்கி கௌரவித்தனர்.
மறைவு
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமான 16 ஆகஸ்டு 2018ல் மறைந்தார் அடல் பிகாரி வாஜ்பாய். அவரது பூத உடலுக்கு, இந்திய அரசு இராணுவ மரியாதையுடன், ராஜ்காட் அருகே உள்ள தேசிய நினைவிடத்தில் (இராஷ்டிரிய ஸ்மிரதி ஸ்தல்) வைத்து, அவரது வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சாரியா கொள்ளி வைத்தார்.
இவற்றையும் பார்க்கவும்
இந்தியப் பிரதமர்கள்
பிரபல இந்தியர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
இந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்
இந்தியப் பிரதமர்
இந்திய அரசியல்வாதிகள்
இந்தியப் பிரதமர்கள்
1924 பிறப்புகள்
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்
பாரதிய ஜனதா கட்சித் தேசியத் தலைவர்கள்
இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள்
பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
10வது மக்களவை உறுப்பினர்கள்
11வது மக்களவை உறுப்பினர்கள்
12வது மக்களவை உறுப்பினர்கள்
13வது மக்களவை உறுப்பினர்கள்
14வது மக்களவை உறுப்பினர்கள்
2ஆவது மக்களவை உறுப்பினர்கள்
4வது மக்களவை உறுப்பினர்கள்
5வது மக்களவை உறுப்பினர்கள்
6வது மக்களவை உறுப்பினர்கள்
7வது மக்களவை உறுப்பினர்கள்
பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
இந்தி எழுத்தாளர்கள்
இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
2018 இறப்புகள்
|
4444
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B
|
மொகெஞ்சதாரோ
|
மொகெஞ்சதாரோ (Mohenjo-daro, மொஹெஞ்சதாரோ) என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிந்துவெளியில் அமைந்திருந்த நகரங்களில் மிகவும் பெரியது எனப்படும் இந்நகரம், அக்காலத்தில் தெற்காசியாவின் முக்கியமான நகரமாகவும் விளங்கியது.
இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந்நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது.
எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்றது.
இது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை (conservation) நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்பு வேலைகள், நிதிப் பற்றாக்குறையினால், 1997 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 1997 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் ஆதரவில், மொஹெஞ்சதாரோ அழிபாடுகளை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இரண்டு பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ நிறுவனம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.
வரலாறு
மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் ஜான் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், அஹ்மத் ஹசன் தானி (Ahmad Hasan Dani) என்பவரும் மோர்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர்.
இவற்றையும் பார்க்கவும்
ஹரப்பா
லோத்தல்
தோலாவிரா
மெஹெர்கர்
இராக்கிகர்கி
காளிபங்கான்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Discovering Mohenjo-daro
Ancient Indus Civilization Slideshows
இந்திய வரலாறு
சிந்துவெளி நாகரிகம்
இந்தியத் தொல்லியற்களங்கள்
பாக்கித்தானில் உள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்
பாகிசுத்தானில் உள்ள தொல்லியல் களங்கள்
சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்
|
4469
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
கோயம்புத்தூர்
|
கோயம்புத்தூர் (Coimbatore, சுருக்கமாக கோவை) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில், சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமும் தென்னிந்தியாவின் சென்னை, ஹைதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகரமும் ஆகும். இது இந்திய மாநகரங்களின் பட்டியலில் தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு மாநகரம் ஆகும். இது இந்தியாவின் பதினாறாவது பெரிய மாநகரம் ஆகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது, தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்கு நாடு பகுதியைச் சேர்ந்த இந்நகரம், இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால், தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரத்திலும், புறநகர்ப்பகுதிகளும் 3.1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். 1804-ஆம் ஆண்டு ஆங்கிலேயே ஆட்சியில் தான் நவம்பர் மாதம் 24-ஆம் தேதி கோவைக்கு மாவட்ட அந்தஸ்து கிடைத்தது. இதனால் நவம்பர் 24 கோயம்புத்தூர் பிறந்தநாளாக அனைவரும் கொண்டாடுவது வழக்கம். தமிழ்நாட்டின் முதல் திரையரங்கம் துவங்கப்பட்ட மாநகரமும் இதுவாகும். தற்போதைய வெரைட்டி ஹால் ரோட்டில் டிலைட் திரையரங்கம் என அறியப்படும் இங்குதான் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக 1914-ஆம் ஆண்டு திரையரங்கம் துவங்கப்பட்டது. இந்த நகரத்தை கொங்கு நாட்டின் தலைநகரம் எனவும் கூறுவர்.
பெயர்க்காரணம்
இப்பகுதி சங்க காலத்தில் கோசர் குலத்தவர்கள் தங்கி உருவாக்கியதால், கோசர்புத்தூர் -> கோசம்புத்தூர் -> கோயமுத்தூர் என பெயர் வந்ததிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கோவை, வடவள்ளிக்கு மேற்கே இருந்த 'கோனன்' என்ற வேட்டுவர் தலைவனுக்கு இரண்டு மகள்கள் இருந்ததாகவும், ஒருவர் பெயர் கோணி, இன்னொருவர் பெயர் முத்தா என்று இருந்ததாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதியை 'கோணி முத்து ஊர் -> கோணமுத்தூர் -> கோயமுத்தூர்' என மருவி இருக்கலாம். அவர்கள் நிறுவியதே கோனியம்மன் கோவில். "கோவன்" எனும் இருளர் தலைவன் இருந்ததாகவும், அவன் பெயரிலே உண்டான ஊரே கோவன்புத்தூர் -> கோனியம்மன் புத்தூர் -> கோணம்புத்தூர் -> கோயமுத்தூர் என மாறிருக்கலாம் என செவி வழி செய்திகள் கூறுகின்றன.
வரலாறு
"கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் ஆன தமிழ வேள்" என்று வருகிறது. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றிவித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது, இப்பொழுது கோயன்புத்தூரென அழைக்கப்படும் மாநகரம் ஆகும்.
பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டின் இடையில் எழுந்த பிற்கால சோழர் ஆட்சி கோயம்புத்தூரைத் தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியைப் பழங்குடி மக்கள், குறிப்பாக கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூரென மருவியது. கோவன் என்பவன் இங்கு வசித்ததால் இதன் பெயரான கோவன் புதூர் என்பது மருவிக் கோயம்புத்தூர் என்றானது. கொங்கு மண்டலத்தின் முதன்மை நகரமாக விளங்கியது கோயம்புத்தூர்.
உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர். இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ஆந்திர, கர்நாடக மக்கள் குடிபெயர்ந்தனர். 1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள், கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும், மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டைகள் நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார். அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதைத் தடுத்தார். இதனை அவர்தம் வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801 ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848 ஆம் ஆண்டு நகராட்சித் தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
1981 ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.
பொது விபரங்கள்
எல்லைகள்
கோவை மாவட்டத்தின் வடக்கில் கர்நாடக மாநிலமும், தெற்கில் கேரள மாநிலமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கில் நீலகிரி மாவட்டமும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையும், நீலமலையும் ஒரு மதில்போல் இம்மாவட்டத்தை வளைத்துள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள காடுகளின் பரப்பு - 1,69,720 ஹெக்டேர். சாலைகளின் நீளம் - 7434.8 கி.மீ. பதிவு பெற்ற வாகனங்கள் 2,57,042, வங்கிகள் 328, காவல்நிலையங்கள் - 60, காவலர்கள் 5910, தந்தி அலுவலகங்கள் 260, தந்தி அஞ்சலகங்கள் 172, பொதுத் தொலைபேசிகள் - 1134. கோவை மாவட்டத்தின் தலைநகரம் கோயம்புத்தூர் ஆகும். இதன் பரப்பு 6623.97 ச.கி.மீ. மக்கள் தொகை 35,08.374 பேர். இதில் ஆண்கள் 17,97,189, பெண்கள் 17,11,185 பேர். எழுத்தறிவு உள்ளோர் 20,75,023 பேர், மக்கள் நெருக்கம், ஒரு ச.கி.மீ.க்கு 473 பேர்.
நாடாளுமன்ற தொகுதிகள்
கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி
புவியியல்
கோயம்புத்தூர் தமிழகத்தின் மேற்கு ஓரத்தில் கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனைச் சுற்றி மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும், வடக்கில் நீலகிரி பல்லுயிர் வலயமும் பாதுகாக்கப்பட்டக் காடுகளும் உள்ளன. கிழக்குப் பகுதி வறண்ட நிலமாக உள்ளது. மேற்கில் உள்ள பாலக்காட்டு கணவாய் கேரளத்தின் வாயிலாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையினை அடுத்து உள்ளதால் இம்மாவட்டத்தில் பல விலங்கு வகைகள் காணக்கிடைக்கின்றன.
ஏரிகளும் குளங்களும்
பல ஏரிகளும் குளங்களும் அந்நாட்களில் வெட்டப்பட்டிருக்கின்றன. கோவை நகரில் ஒன்பது ஏரிகள் உள்ளன. சில: சிங்காநல்லூர் (குளம்) ஏரி, குறிச்சி (குளம்) ஏரி, வாலாங்குளம் (குளம்) ஏரி, கிருஷ்ணாம்பதி (குளம்) ஏரி, முத்தண்ணன் (குளம்) ஏரி, செல்வசிந்தாமணி (குளம்) ஏரி, பெரியகுளம் (இது உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது). இந்த நீர்நிலைகள் நொய்யல் ஆற்றிலிருந்து நீர் பெறுகின்றன.
பறவைகள், விலங்குகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், மீன்கள் எனப் பல்லுயிர் ஓம்பலுக்கு, நகரமைப்பின் ஆதாரமாக இந்த நீரிடங்கள் அமைகின்றன. கோவையின் இந்த நீர்நிலைகள் 125 வகையான பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. நாடோடிப் பறவைகள் மிகவும் கூடுதலாக ஆகத்து–அக்டோபர் மாதங்களில் வருகின்றன. கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, நீலவண்ண தாழைக்கோழி, நாமக்கோழி முதலிய பறவைகளை இந்த ஏரிகளில் காணலாம்.
தவிர, காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், சிறுத்தைகள், புலிகள், எருமைகள், பலவகை மான்கள் போன்ற விலங்குகளைக் காணலாம். சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தேக்கு, சந்தனமரம், ரோசுவுட் மரம், மூங்கில்கள் முதலியன வளர்கின்றன.
பூங்காக்கள்
நகரில் பல பூங்காக்கள் உள்ளன. வ. உ. சி. பூங்கா இவற்றில் முதன்மையான ஒன்றாகும். குறிப்பிடத்தக்க பிற பூங்காக்கள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தாவரவியல் பூங்கா, பந்தய சாலை பூங்கா, பாரதி பூங்கா, காந்தி பூங்கா, இராமாயணப் பூங்கா, விவேகானந்தர் பூங்கா ஆகியவைகள் ஆகும்.
மக்கள்தொகை பரம்பல்
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 148 மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களையும், 282,839 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 1,050,721 ஆகும். அதில் 526,163 ஆண்களும், 524,558 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.3% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 997 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 102069 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 107,949 முறையே மற்றும் 683ஆகவுள்ளனர்.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கோவையில் இந்துக்கள் 83.31%, முஸ்லிம்கள் 8.63%, கிறிஸ்தவர்கள் 7.53%, சீக்கியர்கள் 0.05%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.28%, 0.01% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.17% பேர்களும் உள்ளனர்.
2011 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின், மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 105,0721 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 2,136,916 ஆகவும் உள்ளது.
நிர்வாகம்
கோவை ஒரு மாநகராட்சியும், மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். மாநகராட்சிக்கு 'மேயர்' எனப்படும் மாநகரத்தந்தை தலைமை ஏற்கிறார். இவருக்குத் துணையாக மாநகர்மன்ற உறுப்பினர்களும், துணை மாநகரத்தந்தையும் உள்ளனர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தவிர அரசுப்பணி சேவையைச் சேர்ந்த மாநகராட்சி ஆணையர் வழக்கமான ஆட்சிப்பணியை மாநகராட்சிமன்ற அவையின் வழிகாட்டுதலின்படி நடத்துகிறார். மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்கிறார். மாவட்ட நீதிமன்றம் கோயம்புத்தூரின் நீதி நிருவாகத்தை மேற்பார்வையிடுகிறது. மாநிலத்திலேயே மிகக் கூடுதலான வருவாயை ஈட்டிக் கொடுத்தாலும் நகரத்தின் கட்டுமானத் தேவைகளுக்கான நிதி மாநில அரசிடமிருந்து போதுமான அளவு கிடைப்பதில்லை என்ற குறை உள்ளது.
சட்டம் ஒழுங்கு
அமைதியான தொழில் வணிக நகரான கோவையில் 1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலையை அடுத்து பெருமளவு கடையுடைப்புகளும் கொள்ளைகளும் நிகழ்ந்தன. ஒற்றுமையாக வாழ்ந்த இந்துக்களுக்கும், இசுலாமியருக்கும் இடையே 1980களில் புகையத் தொடங்கிய பகை 1990களில் கோயம்புத்தூரின் மேற்குப்பகுதியில் பெரும் கலவரமாக வெடித்தது. 1998 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகள் இப்பகையை மேலும் வளர்த்தன. ஆயினும் தமிழக காவல்துறையின் தீவிர கண்காணிப்பை அடுத்து, தற்போது குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.
அரசியல்
நகரத்தில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன :
கோயம்புத்தூர் கிழக்கு,
கோயம்புத்தூர் மேற்கு,
சிங்காநல்லூர்,
பேரூர் (தொகுதி சீரமைப்பின்படி பேரூர் தொகுதி தற்போது நீக்கப்பட்டு தொண்டாமுத்தூர் தொகுதியாக மாறிவிட்டது),
கவுண்டன்பாளையம்.
நகரத்தின் வடக்கே 20% பகுதி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. கோவை மேற்கு, கோவை கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கியது கோவை நாடாளுமன்றத் தொகுதி ஆகும். 10% நகரப்பகுதி பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ளது.
ஊடகங்களில் கோவை
அச்சு ஊடகம்
கோயம்புத்தூர் பதிப்புகளைக் கொண்ட தமிழ் செய்தித்தாள்களில் தினமலர், தினத்தந்தி, தினமணி, தினகரன், தி இந்து (தமிழ்), (அனைத்து காலை செய்தித்தாள்களும்) மற்றும் தமிழ் முரசு மற்றும் மாலை மலர் (இரண்டும் மாலை செய்தித்தாள்கள்) ஆகியவை அடங்கும்.
மலையாள மனோரமா மற்றும் மாத்ருபூமி ஆகிய இரண்டு மலையாள செய்தித்தாள்களும் நகரத்தில் கணிசமான புழக்கத்தில் உள்ளன. நான்கு முக்கிய ஆங்கில செய்தித்தாள்கள், தி இந்து, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, டெக்கான் க்ரோனிகல் மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகியவை நகரத்திலிருந்து பதிப்புகளை வெளியிட்டன. வணிக செய்தித்தாள்கள் பிசினஸ் லைன், பிசினஸ் ஸ்டாண்டர்டு மற்றும் தி ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆகியவை கோயம்புத்தூர் பதிப்பை வெளியிட்டன. மேலும் தி பெல்லமெடு டைம்ஸ் மற்றும் தி ரெட்ஃபீல்ட்ஸ் டைம்ஸ் ஆகியவைகளும் குறிப்பிட்ட இடங்களைப் பூர்த்தி செய்கின்றன.
வானொலி தொடர்பு
ஒரு நடுத்தர அலை வானொலி நிலையம் அகில இந்திய வானொலியால் இயக்கப்படுகிறது, பெரும்பாலான நிகழ்ச்சிகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உள்ளன. கோயம்புத்தூரிலிருந்து ஐந்து எஃப்எம் வானொலி நிலையங்கள் இயங்குகின்றன - அகில இந்திய வானொலியில் இருந்து ரெயின்போ எஃப்எம், சன் நெட்வொர்க்கிலிருந்து சூர்யன் எஃப்எம், ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி மற்றும் ஹலோ எஃப்எம். இந்த தனியார் வானொலி நிலையங்கள் அனைத்தும் திரைப்பட இசை உட்பட தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்புகின்றன. இந்த நிலையங்களின் வரம்பு கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களை தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பாலக்காடு மற்றும் வயநாடு மாவட்டங்களை உள்ளடக்கியது. தொலைக்காட்சி ரீல் 1985 இல் டெல்லி தூர்தர்ஷனிலிருந்து தொடங்கியது. 1986 ஆம் ஆண்டில், கொடைக்கானலில் ஒரு ரிப்பீட்டர் கோபுரம் தொடங்கப்பட்ட பின்னர், மெட்ராஸ் தூர்தர்ஷனிலிருந்து ஒளிபரப்பு தொடங்கியது. கோயம்புத்தூர் மக்கள் 1980 ஒலிம்பிக் மற்றும் 1983 கிரிக்கெட் உலகக் கோப்பையை வ.ஊ.சி பூங்காவில் ஒரு மாபெரும் திரையில் கண்டனர், அப்போது நகரத்தைச் சேர்ந்த யுஎம்எஸ் செயற்கைக்கோள் சமிக்ஞை வரவேற்புக்காக ஒரு டிஷ் ஆண்டெனாவை உருவாக்கியது. தற்போது தொலைக்காட்சி வரவேற்பு டி.டி.எச் மூலமாகவோ அல்லது கேபிள் மூலமாகவோ உள்ளது, அதே நேரத்தில் தூர்தர்ஷன் வரவேற்பு வெளிப்புற ஆண்டெனாவைப் பயன்படுத்தி கிடைக்கிறது. 2005 ஆம் ஆண்டில், தூர்தர்ஷன் கோயம்புத்தூரில் தனது ஸ்டுடியோவைத் திறந்தது.
திரைத்துறையில் கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மிகப் பழமையான சில திரைப்பட ஸ்டுடியோக்களைக் கொண்டுள்ளது. திரைப்பட கண்காட்சியாளரான சுவாமிகண்ணு வின்சென்ட் நகரில் முதல் திரைப்பட ஸ்டுடியோக்களை அமைத்தார். ரங்கசாமி நாயுடு 1935 இல் சென்ட்ரல் ஸ்டுடியோவை நிறுவினார், எஸ்.எம். ஸ்ரீராமுலு நாயுடு 1945 இல் பக்ஷிராஜா ஸ்டுடியோவை அமைத்தார்.
கலாச்சாரம்
"தென்னிந்தியாவின் மான்செசுட்டர்" என்று பிரபலமாக அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரத்தின் கலாச்சாரம் இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களிடமிருந்து வேறுபடுகின்றது. ஒரு காசுமோபாலிட்டன் நகரமாக இருப்பதால், நகரத்தின் கலாச்சாரம் அதன் மாறுபட்ட மக்களை பிரதிபலிக்கிறது. பொதுவாக ஒரு பாரம்பரிய நகரமாக கருதப்பட்டாலுங்கூட தமிழ்நாட்டிலுள்ள மற்ற நகரங்களைவிட வேறுபட்டிருக்கிறது. பாரம்பரிய இசை, நடனம் மற்றும் தமிழ்நாட்டின் எல்லா கலை வடிவங்களும் நகரத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன. பண்டைய கோவில் கட்டிடக்கலையிலிருந்து நவீன உயர் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய இசை, நடனம், பாரம்பரிய உணவிலிருந்து துரித உணவுகள், இரவில் தூங்கா நகரமாக உள்ளது பாேன்ற ஒரு தனித்துவமான கலவையை இந்நகரத்தில் காணலாம். கோயம்புத்தூரும் அதன் மக்களும் தொழில்முயற்சிக்காக புகழ் பெற்றுள்ளனர்.
பொருளாதாரம்
நகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும், நெசவும் ஆகும். தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக வருவாய் ஈட்டும் மாவட்டமாகக் கோவை உள்ளது. சுற்றுப்புற பருத்தி வேளாண்மையை ஒட்டி இங்கு அமைந்துள்ள நெசவாலைகளின் கூடுதலான எண்ணிக்கை இதற்குத் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சுட்டுப்பெயரினைப் பெற்றுத் தந்திருக்கிறது. இம்மாவட்டத்தில் பல பின்னலாடைத் தறிகளும், கோழிப்பண்ணைகளும் கூடுதலாக உள்ளன. பெரும்பாலான தொழிற்சாலைகளைக் குடும்ப நிதி அல்லது சமூக ஒருங்கிணைப்பு உதவியுடன் சிறு தொழில்முனைவோர் நடத்துகின்றனர். 1920களில் துவங்கிய தொழில் துறை, இந்திய விடுதலைக்குப் பின்னர் வளர்ச்சி கண்டு அரசு அரவணைப்போ பெரும் வணிகக் குழாம்களின் வரவோ இன்றி தன்னிறைவுடன் ஏற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களின் பட்டியலில் பெரும்பான்மையான முதலிடங்களை கோவைத் தொழில்முனைவோர் பிடித்துள்ளனர். தற்போது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிறநாட்டு உள்ளலுவலகப் பணிகளை மேலாண்மையிடும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
துவக்க காலத் தொழில் வளர்ச்சி
பிரித்தானியர் கோயம்புத்தூரை ஆண்டபோது இதனை மலபார் கரையிலிருந்தத் துறைமுகங்களுடன் இணைத்தனர். பின்னர் பிரித்தானியர் 1862 ஆம் ஆண்டு தொடர்வண்டி இணைப்புகள் ஏற்படுத்தியபோது போத்தனூர் வழியாகக் கொச்சிக்கு இருப்புப் பாதைப் போடப்பட்டது. இது இங்கிலாந்திற்கு கச்சாப்பொருள்களைக் கொண்டுசெல்ல அவர்களுக்கு உதவியது.
1888 ஆம் ஆண்டு, சர் ராபர்ட் ஸ்டேன்ஸ், இன்று 'ஸ்டேன்ஸ் மில்' என்று பரவலாக அறியப்படும் கோயம்புத்தூர் நூற்றல் மற்றும் நெய்தல் ஆலையை நகரின் வடக்குப் பகுதியில் துவக்கினார். கூடவே ஒரு குளம்பி சீராக்கப் பட்டறையையும் (coffee curing factory) திருச்சி சாலையில் நிறுவினார். இதுவே கோவையில் பெருமளவு நெசவாலைகள் வருவதற்கு அடிக்கோளிட்டது. மேலும் பலர் தங்கள் நிறுவனங்களை நிறுவிட சர் ராபர்ட் மிகவும் உதவி புரிந்தார். கோவைக்கு இவராற்றிய இந்தச் சேவைகளுக்காக கைசர்-இ-இந்த் தங்கப்பதக்கத்தையும், பின்னர் 1920ஆம் ஆண்டு 'சர்' பட்டத்தையும் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டார். 1910 ஆம் ஆண்டு காளீசுவரா மில்லும், சோமசுந்தரா மில்லும் நிறுவப்பட்டன. பாப்பநாயக்கன்பாளையத்தில் 1911 ஆம் ஆண்டு இலட்சுமி மில் இயங்கத் தொடங்கியது. 1930களில் பைக்காரா மின்னாக்கத் திட்டத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் மின்சக்தி கிடைத்ததையொட்டி, மேலும் பல துணியாலைகள் நிறுவப்பட்டன.
1900 ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற இரயில்வே பொறியாளர் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (தற்போது டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கத்தைக் கட்டினார் அவரது மகன் பால் வின்சென்ட் பேசும் திரைப்படங்களைத் தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தார். 1922 ஆம் ஆண்டு நாராயணசாமி நாயுடு கரும்பு நசுக்கும் மற்றும் பருத்தி சுத்தப்படுத்தும் பொறிகளை நிறுவினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தண்டாயுதபாணி தொழிற்சாலையை நிறுவினார். அதே காலகட்டத்தில் ஜி.டி.நாயுடு அவரது தன்னிகரில்லா பேருந்து சேவையைத் துவக்கினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்னோடிக்கான பெருமையும் அவருக்குடையது. 1931 ஆம் ஆண்டு பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் துவக்கிய பேருந்து சேவையும் பலதுறைகளில் விரிந்து இன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ள குழுமமாக வளர்ந்துள்ளது. 1940களில் ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த டி. பாலசுந்தரம் நாயுடு செஃப்பீல்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்து நெசவுத் தொழில்நுட்பக் கருவிகளைத் தாமே வடிவமைத்துத் தயாரிக்கும் விதமாக டெக்ஸ்டூல் நிறுவனத்தைத் துவக்கினார்.
கோவை 1930களிலும் 1940களிலும் திரைப்படத் தயாரிப்பிலும் முதன்மை பெற்றிருந்தது; இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர்.
தொழில்துறை இன்று
கோவையின் தொழில்வளர்ச்சிக்கு கோவை மாவட்ட சிறுதொழிலதிபர்கள் சங்கம் (Coimbatore District Small Industries Association - CODISSIA) முக்கியப் பங்காற்றி வருகிறது. இச்சங்கத்தின் தொழிற்கண்காட்சிக்கூடம் கொடிசியா வளாகம் பல பன்னாட்டு வணிகக் கண்காட்சிகளை நடத்த வழிவகுத்துக் கோவையின் சிறு தொழிலதிபர்களுக்குப் பன்னாட்டு வணிகம் நடத்த உதவி புரிந்து வருகிறது. இதனை நாட்டின் தூண்கள் இல்லாத மிகப்பெரும் காட்சிக்கூடமாக லிம்கா சாதனைகள் புத்தகம் குறிப்பிடுகிறது.
துணித்துறை
கோவையில் சிறிதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றின் மேம்பாட்டினை வழிநடத்த மத்திய பருத்தி ஆய்வு மையம் மற்றும் தென்னிந்திய துணித்துறை தொழில்முனைவோர் சங்க ஆய்வகம் (SITRA) போன்றவை உள்ளன. அண்மை நகரான திருப்பூர் ஆண்டுக்கு ரூ.50,000 மில்லியன் மதிப்பளவு ஏற்றுமதியுடன் ஆசியாவிலேயே மிகப்பரந்த பின்னலாடை ஏற்றுமதி மையமாகப் விளங்குகிறது.
தகவல் தொழில்நுட்பம்
தமிழ்நாட்டில் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை உள்ளது. கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்று கோவை மருத்துவக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ளது. கோவை வணிகச் செயலாக்க அயலாக்கமையமாகவும் வளர்ந்து வருகிறது. உலகளவில் அயலாக்க நகரங்களில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கனரக தயாரிப்பு
பூ.சா.கோ. தொழிலகங்கள், சக்தி குழுமம் ஆகியன கோவையின் தயாரிப்புத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தற்போது மூடப்பட்டுள்ள சௌத் இந்தியா விசுகோசு வேலை வாய்ப்புகளைக் கூடுதலாக்குவதில் பங்கு வகித்தது. லார்சன் டூப்ரோ நிறுவனத்திற்கு 300 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகம் கோவையின் அடுத்துள்ள மலுமிச்சம்பட்டியில் உள்ளது. இங்கு அந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வார்ப்படம் தயாரிக்கும் அமைப்பை இயக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இலட்சுமி மெசின் வொர்க்ஸ், பிரீமியர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (PRICOL),எல்.ஜி. எக்யுப்மென்ட்ஸ், சாந்தி கியர்ஸ், ரூட்ஸ் ஆகியன இங்கு இயங்கும் மேலும் சில தொழிலகங்கள்.
தானி பாகங்கள்
'டெக்ஸ்டூல்', இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் இராணுவத்திற்கு, துப்பாக்கிகளின் முன்வடிவை அளித்திருந்தது. அவர்கள் 1960களில் உள்நாட்டிலேயே வடிவமைத்த, முதல் தானுந்தியை தயாரித்தாலும் அப்போது நிலவிய அரசுக் கட்டுப்பாடுகளால் வெளிக்கொணர முடியாது போயிற்று. 1990 வரை பல முன்வரைவுகளை மேம்படுத்தினர். 1972 ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டுத் தயாரிப்பாகத் தானுந்து தீசல் இயந்திரத்தினை வடிவமைத்தனர். 1982 ஆம் ஆண்டு தங்களுக்கான எண்ணிம கட்டுப்பாட்டு இயந்திரங்களையும், லேத்துகளையும் தாங்களே தயாரித்துக் கொண்டனர். அவர்களிடமிருந்து பிரிந்த ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் இன்று மகிந்திரா, டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆகிய தானுந்து தொழிலகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகளைக் கொடுத்து வருகிறது.
மாருதி சுசூக்கி மற்றும் டாட்டா மோட்டார்ஸ், கோவையிலிருந்தே அவர்களின் தேவைகளில் 30% தானுந்து பாகங்களைப் பெறுகின்றன. நகரத்தில் பல நகை ஏற்றுமதியில் ஈடுபடும் நகை தயாரிப்பாளர்களும் உள்ளனர். காற்றாலை மின் உற்பத்தியில் பெயர்பெற்ற சுசுலான் நிறுவனம் இங்கு தனது வார்ப்பாலை மற்றும் பட்டறையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கூடவே, காற்றாலைகளுக்கான பற்சக்கர மாற்றியைத் தயாரிக்கும் பெல்ஜிய நிறுவனம் 'ஹான்சென் டிரான்ஸ்மிசன்' ரூ.940 கோடி திட்டச் செலவில் தனது தயாரிப்பு வசதியைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.
ஈரமாவு அரவைப்பொறிகள்
கோவை நகரில் 700 ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பாளர்கள் மாதமொன்றிற்கு (மார்ச்,2005 படி) 75,000 பொறிகளைத் தயாரித்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு கோவையிலும், அடுத்துள்ள ஈரோட்டிலும் தயாராகும் அரவைப்பொறிகளுக்கு கோயம்புத்தூர் ஈரரவைப்பொறி என்ற புவியியல் அடையாளம் வழங்கப்பட்டது. இங்கு அரவைப்பொறி தயாரிப்பாளர்களுக்கான பொது கட்டமைப்பும் உள்ளது.
நீரேற்றிகள் தயாரிப்பு
இந்தியாவில் தயாரிக்கப்படும் 60 சதவீத நீரேற்றிகள், கோவை பகுதியிலேயே தயாரிக்கப்படுகின்றன. நகரத்தில் ஏராளமான சிறுதொழில் முனைவோர் முனைப்பில் நீரேற்றிகள் தயாரிக்கப்படுகின்றன. ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பில் கிட்டத்தட்ட முழுநிறை உரிமை கொண்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வேளாண்மை மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது வணிகம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும், பலரைக் கவர்கிறது. கோவை நகரின் முதன்மை நீரேற்றி தயாரிப்பாளர்கள் சிலர் :
ஷார்ப் தொழிலகங்கள்,
சி. ஆர். ஐ. பம்ப்ஸ்,
டெக்ஸ்மோ தொழிலகங்கள்,
டெக்கான் பம்ப்ஸ்,
கே. எஸ். பி. பம்ப்ஸ்.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கோவையில் நான்கு இணைக்கப்பட்ட தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு உள்ளது. 1990 கள் வரை அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) நகரத்தின் ஒரே தொலைதொடர்பு சேவை வழங்குநராக இருந்தது. 1990களில், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் சேவைகளை வழங்கத் தொடங்கின. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிஎஸ்என்எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பாரதி ஏர்டெல், டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஆக்ட் ஆகியவை பிராட்பேண்ட் சேவை மற்றும் நிலையான வரி சேவைகளை வழங்குகின்றன. எம்.டி.எஸ் மொபைல் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குகிறது. செல்லுலார் தொலைபேசி முதன்முதலில் 1997 இல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் மொபைல் தொலைபேசி சேவைகள் கிடைக்கின்றன. செல்லுலார் சேவை வழங்குநர்களின் தமிழகத்தின் தலைமையகமே கோயம்புத்தூர் ஆகும்.
போக்குவரத்து
சாலை
நகரில் ஆறு பிரதான சாலைகளும், மூன்று தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளன:
தேசிய நெடுஞ்சாலை - 47 (சேலம் – கன்னியாகுமரி),
தேசிய நெடுஞ்சாலை - 67 (குண்டுலுபேட்டை – நாகப்பட்டிணம்) மற்றும்
தேசிய நெடுஞ்சாலை - 209 (பெங்களூரு – திண்டுக்கல்) லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால், 1998 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புதிய புறவழிச்சாலை நகரில் போக்குவரத்தை சீர்செய்யப் பெரிதும் உதவியுள்ளது.
கோவை மாநகரில் ஒன்பது பேருந்து நிலையங்கள் உள்ளது. அவைகள் :-
காந்திபுரம் பேருந்து நிலையம் : (மேட்டூர் அணை, ஈரோடு, கரூர், வெள்ளக்கோயில், பொங்கலூர், பல்லடம், சூலூர், அவிநாசி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, அன்னூர், சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை, பெரியநாயக்கன்பாளையம், பெருந்துறை, ஈரோடு, ஊத்துக்குளி, கருமத்தம்பட்டி, சங்ககிரி, கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர், நாமக்கல், காமநாயக்கன் பாளையம்,காங்கேயம், தாராபுரம், மேட்டுப்பாளையம், ஊட்டி, சேலம், பெங்களூரு, சென்னை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பதி, வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருச்செங்கோடு, கொடுமுடி, முத்தூர் திருவண்ணாமலை, ஆரணி மற்றும் பிற தொலைதூர இடங்கள் செல்லும் பேருந்துகள்)
சிங்காநல்லூர் பேருந்து நிலையம் : ( திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மார்த்தாண்டம், சிவகங்கை, கம்பம், தேனி, நாகப்பட்டினம்,திருவாரூர், தஞ்சாவூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி, காங்கேயம், வெள்ளக்கோயில், மாயனூர், குளித்தலை, கும்பகோணம், வத்தலக்குண்டு, போடி, குமுளி, விருதுநகர், இராஜபாளையம், கோவில்பட்டி, இராமநாதபுரம், இராமேஸ்வரம், கமுதி, புதுக்கோட்டை, ஆலங்குடி, திண்டுக்கல், செட்டிபாளையம் மன்னார்குடி, பல்லடம், திருப்பூர், சூலூர், பொங்கலூர் பிற அண்மைய ஊர்கள் செல்லும் பேருந்துகள்)
காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையம் : (மாநகர் போக்குவரத்துக் கழகம் - கோவை, METRO TRANSPORT CORPORATION - COIMBATORE)
திருவள்ளுவர் பேருந்து நிலையம் (அ) விரைவுப் போக்குவரத்து கழக பேருந்து நிலையம் : (மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (KARTC) , கேரள மாநில போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் (KSRTC) மற்றும் பாண்டிச்சேரி மாநிலப் பேருந்துகள் (PRTC) , ஆந்திரப்பிரதேசம் மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் (APSRTC) ஆகிய மாநில பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகிறது.
உக்கடம் பேருந்து நிலையம்: (பாலக்காடு, பொள்ளாச்சி, - பனப்பட்டி, பெரிய நெகமம், செஞ்சேரிமலை, வேலப்பநாயக்கன் பாளையம், செட்டிபாளையம், கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை, மடத்துக்குளம், மதுரை, சிவகங்கை, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் பிற அண்மை இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள்)
ஓம்னி பேருந்து நிலையம் : சத்தியமங்கலம் சாலை, காந்திபுரம் (பெங்களூரு, சென்னை, சேலம் தமிழகம் மற்றும் கேரளாவின் ஓரிரவில் பயணிக்கத்தக்க ஊர்களுக்குச் செல்லும் குளிர்வசதி/ஆடம்பர பேருந்துகள்)
மேட்டுப்பாளையம் சாலை பேருந்துநிலையம் (அ) புதிய பேருந்து நிலையம் : மேட்டுப்பாளையம், ஊட்டி, குன்னூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான நிலையம் இதுவாகும். மேலும் கருநாட மாநிலத்தில் பல்வேறு நகரங்களுக்கு இங்கிருந்து நேரடி பேருந்து சேவை உள்ளது.
வடவள்ளி பேருந்து நிலையம் : இந்த பேருந்து நிலையம் கோவையின் "மாநகர் போக்குவரத்து கழகம் - கோவை" மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மாநகரப் பகுதிகளில் செல்லும் பேருந்துகள் ஆகும்.
வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் : இந்த பேருந்து நிலையம் தமிழ்நாட்டில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தைவிட இரு மடங்கு பெரிதாகும். இங்கிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகர் என அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுல் முதன்மையானவை ஆகும்.
மருதமலை பேருந்து நிலையம் : மருதமலை பேருந்து நிலையம் என்பது கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 17 - ல் அமைந்துள்ளது. இங்கிருந்து காந்திபுரம் செல்லவும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லவும் கோவை மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றை தவிர மேலும் கணபதி, போத்தனூரில் பேருந்து நிலையங்கள் கட்ட அரசு பரிசீலனை செய்து வருகிறது.
நகரில் மக்கள்தொகைக்கும் வாகனத்தொகைக்கும் உள்ள வீதம் மிகக் கூடுதலானது. 1921 ஆம் ஆண்டு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரின் பெரும்பான்மையான இடங்களுக்கும் புறநகரில் உள்ள கிராமங்களுக்கும் இச்சேவைகள் மிகுந்த பயனளிக்கின்றன. மாநிலப் போக்குவரத்தின் கோவை கோட்டத்தின் உள்ளூர்ப் பேருந்துகள் 500 பேருந்துகளைக் கொண்டு 119 வழித்தடங்களில் சேவை வழங்குகின்றன. 800 நகரப்பேருந்துகள் 228 வழித்தடங்களில் சேவை புரிகின்றன.
கோவை நகரில் மூன்று சக்கர தானிக்கள் சேவை புரிகின்றன. புதிதாக இயக்கப்படும் விளி வாடகையுந்துகள் இதனால் பரவலாக விரும்பப்படுகின்றன.
சத்தியமங்கலம், திருச்சிராப்பள்ளி, மேட்டுப்பாளையம் சாலைகளை இணைக்கும் அரைவட்ட சாலை அமைக்கப்படும் என்றும், வண்டிகளுக்காகப் பல்லடுக்கு நிறுத்தும் வசதியைக் காந்திபுரம், டவுன் ஹால் அடங்களான மூன்று இடங்களில் 80 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என்றும், "ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்" வெள்ளளூரில் 125 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுமென, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் கோவை மாநகராட்சியில் மொத்தம் 12 பேருந்து நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் வண்டி
கோயம்புத்தூருக்குத் தொடர்வண்டி சேவை 1872 ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது போத்தனூர் – சென்னை இருப்புப் பாதை போடப்பட்டது. அகலப்பாதை தொடர்வண்டிகள் கோவையைத் தமிழ்நாட்டின் பல நகரங்கள் மற்றும் இந்தியாவின் முதன்மை நகரங்களுடன் இணைக்கிறது. போத்தனூருக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே இருந்த மீட்டர்பாதை இருப்புப் பாதை, மே 2009 முதல் மூடப்பட்டு, பாட்டை மாற்றப்படுகிறது. தென்னக இரயில்வேயின் மிகக் கூடுதலான வருவாய் ஈட்டும் தொடர்வண்டி நிலையமாகக் கோயம்புத்தூர் சந்திப்பு உள்ளது. சேலம் கோட்டத்தின் வருவாயில் 42.17% இந்த நிலையம் பங்களிக்கிறது. கோவை வடக்கு சந்திப்பு மற்றும் இருகூர், பிற முக்கிய தொடர்வண்டிச் சந்திப்புகளாகும்.
வான்வழி
கோயம்புத்தூர் நகரத்திற்கு இரு வானூர்தி நிலையங்கள் உள்ளன: நகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் பீளமேட்டில் உள்ள கோவை பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்திய வான்படையின் சூலூர் வான்தளம். கோவை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து இந்தியாவின் முதன்மையான நகரங்களுக்கு உள்நாட்டு சேவைகளும் சார்ஜா, சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு வெளிநாட்டுச் சேவைகளும் இயக்கப்படுகின்றன. கோவை வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதன் நீளம் 747 SP, A 330, 747-300B, 747-300 ER, 747-400 மற்றும் 747-200 போன்ற "வயிறு அகல" பெரிய ஜெட் இரக விமானங்களை இயக்க வசதி அளிக்கும்.
கல்வி
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் கோவையின் பங்கு முக்கியமானது. 1867 ஆம் ஆண்டு நடந்த முதல் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில் (SSLC) கோவை மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இங்குள்ள அரசு கலைக்கல்லூரி மிகப் பழமையான (1875–76) கல்லூரிகளில் ஒன்றாகும். இன்று கோயம்புத்தூரில் 24க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள், இரு மருத்துவக் கல்லூரிகள், வான்படை நிர்வாகக் கல்லூரி, 75க்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஆறு பல்கலைக்கழகங்கள் 41,000க்கும் கூடுதலான மாணவர்களைக் கொண்டியங்குகின்றன.
மிகப் பழமையான பள்ளிகளாகத் தென்னிந்தியத் திருச்சபை (C.S.I.) ஆண்கள் உயர்நிலைப்பள்ளி (1831), ஸ்டேன்ஸ் உயர்நிலைப்பள்ளி (1862), புனித பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி (1880), பீளமேடு சர்வஜன உயர்நிலைப்பள்ளி (1910), சபர்பன் உயர்நிலைப்பள்ளி (1917) ஆகியவை உள்ளன.
வேளாண் துறையில் நாட்டில் அமைந்த முதல் ஒருசில கல்விக்கூடங்களில் கோவை வேளாண் கல்லூரி ஒன்று. அதன் வளர்ச்சி இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமாகப் பரிணமித்துள்ளது. உடன் கரும்பு (Sugarcane Breeding Institute) மற்றும் பருத்தி (Central Institute of Cotton Research) ஆராய்ச்சி நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
பொறியியல் கல்வியிலும் 1945 ஆம் ஆண்டு ஜி. டி. நாயுடு முதல் பொறியியல் கல்வி வழங்கும் ஹோப் கல்லூரியைத் துவக்கினார். இதுவே பின்னாளில் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரியாக உருவெடுத்தது. 1950களில் நிறுவப்பட்ட பூ.சா.கோ. தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோவை தொழிற்நுட்பக் கழகம் (C.I.T) முன்னோடிகளாக அமைந்து இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் தமிழக/இந்திய தொழில் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக உள்ளன. 1986 ஆம் ஆண்டு காருண்யா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.
தி.சு.அவிநாசிலிங்கம் மற்றும் இராசம்மாள் தேவதாஸ் கூட்டணியில் மகளிர் மேற்கல்விக்கு கல்லூரி நிறுவப்பட்டு இன்று நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக வளர்ந்துள்ளது. மனையியல் பாடம் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகால வெகுசில கல்லூரிகளில் இதுவும் ஒன்று.
1978 ஆம் ஆண்டு அரசினர் சட்டக் கல்லூரி நிறுவப்பட்டு, சுற்றுவட்டாரத்தின் சட்டக்கல்வித் தேவைகளை நிறைவு செய்தது. மருத்துவக்கல்வி வழங்கக் கோவை மருத்துவக்கல்லூரி 1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1987 ஆம் ஆண்டு தனியார் துறையில் பூ.சா.கோ. மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழகம் நிறுவப்பட்டது.
கோவையில் பல புகழ் பெற்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சில பட்டியலிடப்பட்டுள்ளன:
பள்ளிகள்
ஜி. ஆர். ஜி. பள்ளி
எஸ். பி. ஒ. ஏ. பள்ளி
கார்மல் கார்டன் பள்ளி
தியாகி என். ஜி. ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி
அவிலா பள்ளி
லிஸ்யூ மேனிலைப்பள்ளி
பாரதி மேனிலைப்பள்ளி
பாரதீய வித்தியா பவன் பள்ளி
ஆஸ்ரம் மேனிலைப்பள்ளி
ஸ்ரீ நாராயண மிஷன் மேனிலைப்பள்ளி
சிந்தி வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளி
வித்யா நிகேதன் பதின்ம மேனிலைப்பள்ளி.
வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளி.
பி. எஸ். ஜி. பப்ளிக் பள்ளி.
விமானப்படை பள்ளி
ஸ்டேன்ஸ் பள்ளி
கேம்ஃபோர்டு பன்னாட்டுப் பள்ளி
டிரினிட்டி பதின்ம மேனிலைப்பள்ளி
தேசிய மாதிரிப் பள்ளி
கதிரி ஆலை மேல்நிலைப்பள்ளி
இராசலக்குமி உயர்நிலைப்பள்ளி
தூய காணிக்கையன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி
ஆர். கே. ஸ்ரீரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி
சி. எஸ். ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி
கௌமாரம் சுசீலா பன்னாட்டு உறைவிடப் பள்ளி
கல்லூரிகள்
அண்ணா பல்கலைக்கழகம்
கோவை தொழில்நுட்பக் கல்லூரி
கோயம்புத்தூர் மெரைன் கல்லூரி
கிருஷ்ணா கல்லூரி
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி
குமரகுரு பொறியியல் கல்லூரி
சி. பி. எம். கல்லூரி
கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
அரசு கலை கல்லூரி
கலைஞர் கருணாநிதி இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கே. எஸ். ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி / கற்பகம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி / கற்பகம் மருத்துவக்கல்லூரி
பூ. சா. கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு
தானுந்து விளையாட்டுக்கள் நகரத்தின் முதன்மை இடம்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது. கோவையை "இந்தியாவின் தானுந்து விளையாட்டுப்போட்டித் தலைநகரம்" என்றும் "இந்திய தானுந்துவிளையாட்டு புறக்கடை" என்றும் விளிப்பர். கோவையின் தொழிலதிபர்கள் சிலர், கரிவரதன் போன்றோர், தங்கள் தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப் பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை நாட்டின் தானுந்துப் பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் பார்முலா 3 பகுப்பைச் சேர்ந்த பந்தயச்சாலையும் மூன்று கோகார்ட் பந்தயச் சாலைகளும் உள்ளன. பார்முலா பந்தயம், விசையுந்துப் பந்தயம், கார்ட்டு பந்தயம் ஆகியவற்றிற்கு தேசிய சாதனைப் பந்தயங்கள், இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைப் பந்தயங்களிலும், கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன. பார்முலா ஒன்று பந்தயத்தில் 2005 ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நாராயண் கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர். தொன்மையான தானுந்துகளைச் சேகரிப்பதும் கோவை தொழிலதிபர்களின் பொழுதுபோக்காகும்.
நேரு விளையாட்டரங்கம் கால்பந்து போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட போதும் இங்கு தடகள விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. தற்போது செயற்கை தடங்களுடன் நடுவில் கொரிய புல்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர பல விளையாட்டு மன்றங்களும் உள்ளன. புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் கோவையைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் குழிப்பந்தாட்ட மன்றம் 18 குழிகள் கொண்ட மைதானத்தைக் கொண்டுள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயம்புத்தூர் காஸ்மாபாலிட்டன் மன்றம், இந்தியர்களுக்கு மட்டுமே உறுப்பினராக உரிமை வழங்கியது.
முக்கிய இடங்கள்
கோவைக் குற்றாலம்: கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், சிறுவாணி ஆற்றில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.
வ. உ. சி. பூங்கா: வ. உ. சிதம்பரனார் நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா. சிறு மிருகக்காட்சி சாலை, சிறுவர் ரயில், சிறுவர் விளையாட்டுக் கருவிகள் ஆகியவை உள்ளன. அருகில் உள்ள விளையாட்டரங்கில் நடக்கும் கால்பந்து போட்டிகளும் அரசியல் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் கோவையின் உயிரோட்டமாக விளங்குகின்றன.
கோவில்கள்
பேரூர் பட்டீசுவரர் கோயில்
மருதமலை முருகன் கோயில்
ஈச்சனாரி விநாயகர் கோவில்
கோனியம்மன் கோயில்
லோக நாயக சனீசுவரன் கோயில்
ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில்
அனுபாவி முருகன் கோவில்
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
ஊட்டி – (90 கி.மீ. வடமேற்கு): மிகப் புகழ்பெற்ற மலை வாழிடம் ஆகும்.
குன்னூர்: ஊட்டி செல்லும் வழியில் உள்ள மலை வாழிடம். இங்குள்ள சிம்ஸ் பூங்கா புகழ்பெற்றது.
முதுமலை வனவிலங்கு காப்பகம்: ஊட்டி வழியாகத் தமிழக எல்லையில் உள்ள பெரிய சரணாலயம் இதுவாகும்.
மலம்புழா அணை: பாலக்காடு அருகில் உள்ளது.
ஆனைமலை: பொள்ளாச்சி சாலையில் 63 கி.மீ தொலைவில் உள்ளது.
பழனி – (100 கி.மீ., தெற்கு): குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
அமராவதி அணை: முதலைப் பண்ணை
திருமூர்த்தி அணை:பஞ்சலிங்கம் அருவி
ஆழியாறு அணை: குரங்கு அருவி
டாப் ஸ்லிப் (இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்)
வால்பாறை நல்ல மலை வாழிடம்
கோவைக் குற்றாலம் - கோவையிலிருந்து, சிறுவாணி செல்லும் வழியில் உள்ள ஓர் அருவி ஆகும்.
வானிலை
கோயம்புத்தூரின் வானிலை மிகவும் புகழ் பெற்றது. உடலுக்கு இதமான, குளிர்ச்சியான, பிற தென்னிந்திய நகரங்களைப் போன்று கூடுதல் வெப்பமில்லாத வானிலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் கடல்மட்டத்திற்கு 398 மீட்டர் உயரத்தில் உள்ளது. வேனிற்காலத்திலும், குளிர்காலத்திலும் வெப்பநிலை 35 °C முதல் 18°வரை உள்ளது. மிகக் கூடுதலாகப் பதியப்பட்ட வெப்பநிலை 41 °C மற்றும் மிகக்குறைந்த அளவு வெப்பம் 12 °C.
பாலக்காட்டுக் கணவாயின் பயனாக மாவட்டத்தின் பெரும்பகுதி சூன் முதல் ஆகத்து வரை தென்மேற்குப் பருவ மழையைப் பெறுகிறது. சற்றே வெப்பமான செப்டம்பரை அடுத்து அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை துவங்குகிறது. இதனால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இம்மாவட்டம் மழை பெறுகிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ 700 மி.மீ. மழை பெறுகிறது. நகரின் ஆண்டுமுழுவதற்குமான நீர்த்தேவைகளை எதிர்கொள்ள இந்த மழையளவு போதுமானதாக இல்லாதிருப்பினும், சிறுவாணி, அத்திக்கடவு போன்ற குடிநீர்த் திட்டங்கள் நகரின் குடிநீத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
பெரும்பாலும் இம்மாவட்டத்தின் பெரும்பகுதி கரிசல் மண்ணாக இருப்பதால் பருத்தி விளைச்சலுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. கோவை 1900 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 6.0 கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் நிலநடுக்க வகைப்படுத்தலில் III/IV வகுப்பில் உள்ளது. கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கையியல் மையம் அமைந்துள்ளது.
இதனையும் காண்க
கோவை மாவட்டம்
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி
கொங்கு நாடு
கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள்
வெளி இணைப்புகள்
அதிகாரப்பூர்வ இணயத்தளம்
கோயம்புத்தூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொலைக்காட்சி
தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
|
4471
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D
|
சுபாஷ் சந்திர போஸ்
|
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.
இளமை
பிறப்பு
இந்தியாவில் ஒரிசா (இன்றைய ஒடிசா) மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில், 1897 ஆம் ஆண்டு சனவரி 23 ஆம் நாள், வங்காள, இந்துக் குடும்பத்தில், சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். இவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுவழியை உடையது. இவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர். 8 ஆண் பிள்ளைகளையும், 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில், ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால், சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.
கல்வி
ஐந்து வயதான போது, கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிசன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ், ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர், தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ், 1913 தேர்வில் கல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார். இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிகப் பெரியோர்களின்பால் ஈடுபாடுடையவராயும், அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின்பால் ஈடுபாடு கொண்டார்; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன், தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ், தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.
அப்போது, வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு, சுபாசின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும். இந்த சந்திப்பு குறித்து, பின்னாளில் தனது நண்பரான திலீப்குமார் ராயிடம், யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ, அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது; எனக்கும் அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது; அதனால் தான், என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, அதன் பலனைப் பெற விரும்புகிறேன்; இன்னொன்றும் சொல்லி விடுகிறேன்: அதே ராக்கால் மகராஜ் (பிரம்மானந்தர்), வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்," என்று குறிப்பிட்டுள்ளார். தன் மானசீக ஆசானாக, விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்.
துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ், ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால், தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எஃப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில், பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, சுபாஸ் சந்திர போசும் அவரது நண்பர்களும், கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்.
இதனால், தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன், 1917 ஆம் ஆண்டு, இசுக்காட்டிய சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு, இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன், மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.
மக்கள் சேவைப் பணி
அக்காலத்தில், நாட்டுச் சூழ்நிலை பற்றி, அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட சுபாசைப் பார்த்த அவரது தந்தையார், இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது, லண்டனுக்கு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் படிக்க அனுப்பி வைத்தார். தன் படிப்பைத் தொடர்ந்த போஸ், 1920 இல் (லண்டனில் நடந்த) இந்திய மக்கள் சேவைப் படிப்புக்கான ("இந்தியக் குடிமைப் பணி" எனப்படும் ஐ.சி.எஸ்.) நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர், இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார்.
சுதந்திரப் போரில் ஈடுபாடு
வழக்குரைஞரான சி. ஆர். தாஸ், தன் தொழிலை விட்டுவிட்டு, ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ், கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம், தான் தாய் நாடு திரும்பியதும், இந்திய விடுதலைப் போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார். அதை ஏற்று, சுபாஷ் சந்திர போஸ் வருவதாயிருந்தால், தான் ஏற்றுக் கொள்வதாகவும், பதவி துறந்ததைப் பாராட்டியும், சி. ஆர். தாசும் மறுகடிதம் அனுப்பினார்.
இக்காலகட்டத்தில் தான், தென்னாப்பிரிக்காவிலிருந்து, இந்தியா திரும்பியிருந்த மகாத்மா காந்தியும், இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும், காங்கிரசின் தலைமையின் கீழ் விடுதலை எழுச்சி பெற்றிருந்தனர். 1921 இல், மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ், மும்பையில் அப்போது தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து, சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார். போஸ், சித்தரஞ்சன்தாசின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார். போசை ஏற்றுக் கொண்ட சி.ஆர்.தாசும், அவரின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன், திறமைமிக்க அவரது குடும்பப் பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ், தான் நிறுவிய தேசியக் கல்லூரியின் தலைவராக, 25 வயதே நிரம்பிய போசை நியமித்திருந்தார். லண்டனில் கேம்பிரிட்சில் படிக்கும் போது, மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ், தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம், சொற்பொழிவு ஆற்றியதுடன், பாடமும் கற்பித்தார்.
அரசியல் நுழைவு
1922 இல், வேல்ஸ் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப, பிரித்தானிய அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும், வேல்சு இளவரசரை வரவேற்க, நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். ஆனால், சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த பிரித்தானிய இளவரசரின் வருகையை, இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். மும்பை துறைமுகத்தை வேல்சு இளவரசர் வந்தடையும் போது, நாடு முழுதும் எதிர்க்க, காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கிலேய அரசாங்கம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது.
இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும், வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு வருகை தரும் போது, அங்கு மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்தது. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோசை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு, போசின் தலைமையிலான தொண்டர் படையை, சட்ட விரோதமானது என அறிவித்து, போசையும், சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் சவகர்லால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் கைதானதால், மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும், கொல்கத்தாவில் மறியல் சிறப்புற மக்களால் நடத்தப்பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ், 1922 ஆம் ஆண்டு அக்டோபரில் விடுதலையானபோது, காந்தியும் ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம் ஆகியவற்றை விரிவுபடுத்தியிருந்தார்.
காங்கிரசில் பிளவு
இடையில் சில காரணங்களுக்காகப் போராட்டத்தை நிறுத்தியதால், காந்திக்கு எதிராக, பல கண்டனங்கள் எழுந்தன. 1922 ஆம் ஆண்டில் சிறையிலிருந்து வெளியான சித்தரஞ்சன் தாஸ், கயையில் கூடிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கினார். சட்டசபைத் தேர்தல்களில், இந்தியர்கள் போட்டியிட்டு, சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் தான் இந்திய விடுதலையை \விரைவில் பெறமுடியும் என சி.ஆர்.தாசும் மோதிலால் நேருவும் கருதினர். ஆனால், இதை காந்தி ஆதரவாளர்கள் எதிர்த்தனர். தாசுக்கும் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரசில் இருந்தபடி சுயாட்சிக் கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர, "சுயராஜ்யா" என்னும் பத்திரிகையை ஆரம்பித்து, ஆசிரியர் பொறுப்பை போசிடம் ஒப்படைத்தார்.
ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய, ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ், காந்திக்கும் போசுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது.
1928 இல் கொல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கொல்கத்தா மாகாணத் தலைவரான போஸ் எழுந்து, காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போசின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து, காங்கிரசில் இருந்தபடி, 'விடுதலைச் சங்கம்' என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால், காங்கிரசு காரியக் குழுவில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல், சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சீனிவாச ஐயரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், "காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை" எனக் கட்சியிலிருந்து விலகி, சீனிவாச ஐயரைத் தலைவராகக் கொண்டு 'காங்கிரஸ் சனநாயக கட்சி'யைத் தொடங்கினார்.
1939 இல் சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போசின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், ஜவஹர்லால் நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். போஸ் 1,580 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். சீதாராமையாவின் தோல்வி, தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாகவே காந்தி தெரிவித்து, உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த போஸ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1939 இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியைத் தொடங்கினார், அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும், தமிழக தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உம் பதவியேற்று கொண்டனர்.
அரசியல் பணி
காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். இதைத் தொடர்ந்து, தேர்தல்களில் மத்திய மாகாணசபைக்கும், கல்கத்தா மாநகராட்சிக்கும் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது. 1924-ல் மாகாண சபைக்கு மேயராக சி.ஆர்.தாசும், மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக போசும் தெரிந்தெடுக்கப்பட்டனர். கொல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டதுடன் மக்கள் ஆதரவையும் பெற்றனர்.
இதனைக் கண்ட அரசு, நேதாஜியை ஓர் அவசரச்சட்டத்தின் மூலம் 1924 அக்டோபர் 25 ஆம் நாள், கைது செய்து, கொல்கத்தா மத்திய சிறையில் அடைத்தது. மேலும் வங்கத்தில் பிரித்தானிய ஆட்சியைக் கவிழ்க்க சதிகார இயக்கம் ஒன்று தோன்றி இருப்பதையும், அதில் சிலரையே கைது செய்திருப்பதாயும் போலி அறிக்கையை வெளியிட்டது. நேதாஜிக்கு ஆதரவாய், மக்களும் பல தலைவர்களும் நாடு முழுதும் முழங்கினர். கொல்கத்தா விரைந்த காந்தி உட்படப் பல தலைவர்களும், நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர். இச்சமயத்தில் தான், சுயராஜ்ஜியக் கட்சி, சட்டசபைகளில் வெற்றி பெற்று, ஆற்றி வந்த சீர்திருத்தங்களையும், பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி, 'சட்டசபை வெளியேற்றம்' எனும் கொள்கையைக் கைவிட்டு, 'சுயராஜ்ஜியக் கட்சியின் கொள்கையே, காங்கிரசின் கொள்கை' எனக் கூறி, இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார்.
போசிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரித்தானிய அரசும், அவரைக் கடல் கடந்து, மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு, காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால், அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது. நோயின் தீவிரம் அதிகரித்ததால், சுபாசும் படுத்த படுக்கையானார். ஆனால், அரசு மருத்துவ பரிசோதனைக்குக் கூட அவரை அனுமதிக்கவில்லை. இதனால், காங்கிரசு, அவரை வெளிக்கொணர ஒரே வழி, 1926 தேர்தலில், நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது. நேதாஜியும், தன் சேவையைக் கருதி அதற்கு உடன்பட்டார். இதனால், சிறையிலிருந்தவாறே, வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ஆனால், அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், நேதாஜி வெற்றி பெற்றார். துளியும் அசைந்து கொடுக்காத அரசோ, நேதாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, "கொல்கத்தா வராமல், சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று விடவேண்டும்; 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்" என்றும், "இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்யத் தயார்" என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்பாத நேதாஜி, இதற்கு முற்றிலும் மறுத்துவிட்டார்.
இதனால், சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து, நேதாஜியைப் படுக்கையில் தள்ளியது. இச்செய்தி வெளியில் பரவி, "சுபாஷ் பிழைப்பதே அரிது" என்றும், "அவர் சிறையிலேயே மரணித்து விட்டார்" என்றும் வதந்திகள் பரவின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம், அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து, மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது. ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி, அவர் இனிப் பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம், அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும், படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி, ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும், 1930-ல் சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு முசோலினி போன்றோரைச் சந்தித்தார். 1938-ல் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரித்தானிய இந்தியாவிடமிருந்து தப்பிச் செல்லுதல்
இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரித்தானிய அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக, 1940 சூலையில், நேதாஜியை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.
உலகப்போரின் ஆரம்பத்தில், பிரித்தானியப் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரித்தானியாவின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதைப் பிரித்தானிய அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி இரகசியக் காவலர்கள் சாதாரண உடையில், 24 மணி நேரமும் கண்காணித்தபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.
தலைமறைவு
1941 சனவரி 26 அன்று இரவிலிருந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய அறையில் காணப்படவில்லை என்றும், இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது.
1941 சனவரி 15 ஆம் நாள், நேதாஜி ஒரு முசுலிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார், கொல்கத்தாவிலிருந்து தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். பெசாவர் நகரை (தற்போதைய பாக்கித்தானில்) அடைந்து, இந்தியாவின் எல்லையைக் கடந்தார். பின்னர் ஆப்கானித்தான் சென்றார். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டு இத்தாலிக்குச் செல்ல அனுமதி வாங்கினார். உருசியா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக, செருமனிக்கு வருமாறு இட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, தொடர்வண்டி மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து செருமனியத் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் செருமனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி செருமனிப் பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற செய்தி பிரித்தானிய அரசுக்குத் தெரிந்தது. செருமனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இட்லரை நேதாஜி சந்தித்துப் பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக இட்லர் உறுதி அளித்தார்.
சுதந்திர இந்திய இராணுவம்
1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
1943 அக்டோபர் 21 இல், சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில், போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். திசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை சப்பான், இத்தாலி, செருமனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி, தேசியப் படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல், இப்படை தவித்தது. மனம் தளராமல், இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை, கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது.C.A. Bayly & T. Harper Forgotten Armies. The Fall of British Asia 1941-5 (London) 2004 p325 அது மட்டுமல்ல; சப்பான், இரண்டாம் உலக போரில் சரணடைந்தது. எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார்.
கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருமாறு:
சட்டமறுப்பு இயக்கம் நேரடியாகவே இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. காந்தியின் பிரச்சாரங்கள்...இந்தியா சுதந்திரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்கு முன்பே நீர்த்துப்போய்விட்டது...முதலாம் உலகப்போரின்போது, ஆயுதக் கிளர்ச்சிகளின் மூலம், நாட்டை விடுதலை செய்வதற்கு போர்த்தளவாடங்கள் வடிவத்தில், செருமனியர்களின் அனுகூலத்தை, இந்தியப் புரட்சியாளர்கள் கோரினர். ஆனால், இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது, சுபாஷ் போஸ், இதே முறையைப் பின்பற்றி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அற்புதமான திட்டமிடல் மற்றும் துவக்கநிலை வெற்றிகள் இருந்தபோதிலும் சுபாஷ் போஸின் வன்முறைப் பிரச்சாரம் தோற்றுப்போனது...இந்திய விடுதலைக்கான போர், ஐரோப்பாவில் இட்லராலும், ஆசியாவில் சப்பானும் மறைமுகவாகவேனும் பிரித்தானியாவிற்கு எதிராக போர்புரிவதாக இருந்தது. இவை எதுவும் நேரடியாக வெற்றிபெறவில்லை, ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மற்ற மூன்றின் ஒட்டுமொத்த விளைவுதான் இது, என்பதை ஒருசிலர் மறுக்கின்றனர். குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை; அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது, ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரித்தானியரின், 'வெளியேறுவது' என்ற திட்டத்தை உருவாக்கியது; இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு, சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேலும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் 'இந்தியாவை விட்டு வெளியேறுவது' என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும்.
திருமணம்
1933 பிப்ரவரி 13 இல், உடல் நிலை சரியில்லை என வியன்னா சென்றவர், அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளான செக்கோசிலோவாக்கியா, போலந்து, அங்கேரி, இத்தாலி, செருமனி எனப் பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து, நாட்டின் விடுதலையைப் பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரைத் தனது உதவியாளராக்கிக் கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27 இல் எமிலியை, போஸ் இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 1942 நவம்பர் 29 இல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் வியன்னாவில் பிறந்தார்.http://www.netaji.org/images/oracle_pdf/oracle_2014.pdf ; பக்கம் 13
கொள்கை
போஸ், 'இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முழுவிடுதலை வேண்டும்' என்ற உறுதியுடன், அதற்கான பரப்புரையைச் செய்தார். அதே நேரத்தில், இந்திய காங்கிரஸ் சபை, 'படிப்படியாக விடுதலை பெறுவதை' ஆதரித்தது. மேலும் முழு விடுதலைக்குப் பதில், பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக, இந்தியா இருக்க விரும்பியது. லாகூரில் நடைபெற்ற காங்கிரசு கருத்தரங்கில் முழுவிடுதலை பெறுவதைத் தன் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது.
போசு, இரு முறை தொடர்ச்சியாகக் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக, தலைவர் பதவியில் இருந்து விலகினார். விலகியதும், கட்டுப்பாடுகள் தகர்ந்ததால், காங்கிரசின் வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகள் தவறானவை எனக் கண்டித்தார். 'காந்தியின் அறவழிப் போராட்டத்தால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தரமுடியாது' என்றும், 'பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுவதே விடுதலைக்கான வழி' என்றும் கருதினார். இவர் ஃபார்வர்ட் பிளாக் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். 'இரத்தத்தைத் தாருங்கள்; உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிறேன்' என்பதே இவரின் புகழ்பெற்ற சூளுரையாக இருந்தது.
இரண்டாம் உலகப்போரின் போதும், இவர் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது பிரித்தானியாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து சோவியத் ஒன்றியம், நாட்சி ஜெர்மனி, சப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, இந்தியாவில் பிரித்தானியரைத் தோற்கடிக்க உதவி வேண்டினார். நிப்பானியர்களின் துணையுடன் தென்கிழக்காசியாவில் இருந்த இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டும், நிப்பான் பிடித்து வைத்திருந்த பிரித்தானியப் படையில் இருந்த இந்திய போர்க்கைதிகளைக் கொண்டும், இந்திய தேசிய இராணுவத்தை மறுசீரமைத்து வழிநடத்தினார்.
அரசியல் தத்துவம்
சுபாஷ் சந்திர போஸ், பிரித்தானியாவிற்கெதிரான போராட்டத்திற்கான பெரும் தூண்டுதல் மூலமாக பகவத் கீதையைக் கருதினார். அவரது சொந்த சாமான்கள் கொண்ட சிறு பையொன்றில் மிகச்சிறிய பகவத் கீதை புத்தகத்தையும், துளசி மாலையையும் மூக்குக் கண்ணாடியையும் மட்டுமே வைத்திருந்தார்.
சுவாமி விவேகானந்தரின் சர்வமயவாதம் பற்றிய கற்பித்தலும், தேசியவாத, சமூக சிந்தனையும், சீரமைப்பு எண்ணங்களும், சிறு வயதிலேயே இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்து சமய ஆன்மீக் கருத்துக்களே இவரின் பின்னாளைய அரசியல், சமூக எண்ணங்களுக்கு வித்திட்டதாக பல அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்து ஆன்மீகத்தின் தாக்கம் இருந்தாலும், இவரிடம் மதவெறியோ, பழைமைவாதமோ இருக்கவில்லை.. சுபாஷ் தன்னை சமதர்மவாதி என அழைத்துக்கொண்டார். இந்தியாவில் சமதர்மக் கொள்கையின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் என நம்பினார்.
பெண்ணுரிமை
இவர் தன் இந்திய தேசிய ராணுவத்தில், பெண்களுக்கென தனிப் பிரிவான 'ஜான்சி ராணி படை'யைத் தொடங்கியவர். ஒரு முறை, ஜான்சி ராணி படை கூடாரப் பகுதிக்குள் இவர் நுழைந்ததை, வேறு யாரோ என்று எண்ணி, கோவிந்தம்மாள் என்னும் பெண் அதிகாரி, அவரைத் தடுத்து நிறுத்தினார். அதைப் பொருட்படுத்தாமல், அவருடைய பாதுகாப்பு சேவையைப் பாராட்டி, அவருக்கே அப்படையின் உயரிய விருதான லாண்ட்சு நாயக் விருதை வழங்கிக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது..
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணத்திலுள்ள மர்மம்
இரண்டாம் உலகப்போரில், செர்மனி, இத்தாலி தோற்கடிக்கப்பட்டு, அச்சு நாடுகள் சார்பில் நிப்பான் மட்டுமே போரில் இருந்தது. நிப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மஞ்சூரியா மேல் ருசியா படையெடுத்து, அதை ஆகத்து 9-20, 1945 வரை நடந்த போரில் முழுமையாக கைப்பற்றிக்கொண்டது. பாங்காக்கில் இருந்த நிப்பானிய தொடர்பு அதிகாரி, நேதாஜி, பாங்காக்கில் இருந்து டோக்கியோ வழியாக மஞ்சூரியாவை அடைந்து, அங்கிருந்து இருசியாவை அடைய ஒத்துக்கொண்டார். நேதாஜியின் கடைசி புகைப்படம் சைகோன் (தற்போதைய கோ சு மிங் ஆகத்து 17, 1945) நகரில் எடுக்கப்பட்டதாகும் . ஆகத்து 23, 1945 அன்று நிப்பானிய செய்தி நிறுவனம், ஆகத்து 18, 1945 அன்று தாய்பெயில் வானூர்தி தளத்தில் நடந்த விபத்தில், போஸ் இறந்ததாக அறிவித்தது . ஆனால் தைவான் நாடு, அப்படி ஒரு வானூர்தி விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது.
இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. 'நேதாஜி இறந்துவிட்டார்' என்பதைப் பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலாக மற்றும் பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர். சிலர், அவர் துறவி வேடத்தில் இந்தியாவில் வசிப்பதாகவும், சிலர் அவர் சோவியத் ஒன்றியத்துக்குத் தப்பி சென்று விட்டதாகவும் நம்புகின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956 ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை கொடுத்தனர்.James, L (1997) Raj, the Making and Unmaking of British India, Abacus, London P575 மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்), இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். அதன்படி 1970-ம் ஆண்டு ஜுலை மாதம், முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது, ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை ஆணையம்” அமைக்கப்பட்டது. அவர் நிப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை தந்தார். 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , 'முகர்ஜி ஆணையம்', என மூன்று ஆணையங்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில், நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும், சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.
இரகசியத் துறவி
உத்திரப் பிரதேசத்தில், 1985 வரை வாழ்ந்த இந்துத் துறவி பகவான்ஜி, அல்லது 'கும்னமி பாபா' என்பது சுபாஷ் சந்திர போஸ் என சிலர் நம்புகின்றனர். நான்கு சம்பவங்கள், அத்துறவி, போஸ்தான் என நம்பக் காரணமாகின. அத்துறவியின் மரணத்தின் பின், அவரது உடமைகள் நீதிமன்ற உத்தரவின்படி உடமையாக்கப்பட்டன. இவை, பின்பு முகர்ஜி ஆணையத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. துறவி மரணமானதும், முகம் அமிலம் மூலம் சிதைக்கப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவம் ஐயப்பாட்டிற்குக் காரணமாகியது. கையெழுத்தியல் நிபுணர் பி. லால் வாக்குமூலத்தில் பகவான்ஜி மற்றும் போஸின் கையெழுத்துக்கள் ஒத்துப் போயின என்றார்."Ayodhya sadhu's writing matches Netaji's" Lucknow-Cities The Times of India ஆயினும், முகர்ஜி ஆணையம், மேலதிக சான்று வேண்டுமென அதனை நிராகரித்த அதே வேளை, இந்திய அரசின், 'போஸின் இறப்பு 1945ம் ஆண்டில் நடைபெற்றது' என்ற பார்வையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, பகவான்ஜிதான் போஸ் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பட்டது.
இறுதி உரை
இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா,
பாரத ரத்னா விருது
1992-இல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான, "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால், சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை. எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.
இரகசிய ஆவணங்கள்
சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான இரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள அரசு 17 செப்டம்பர் 2015 அன்று வெளியிட்டது.
போஸ் பற்றிய சித்தரிப்புக்கள்
திரைப்படங்கள்
2010: கன்னடத் திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் உள்ள "சுப்பர்".
2008: தெலுங்கு மொழித் திரைப்படம் "சுபாஷ் சந்திர போஸ்"
2005: இந்தி மொழித்திரைப்படம் "நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட கதாநாயகன்"
2002: இந்தி மொழித்திரைப்படமான "பகத் சிங்கின் கதை" இல் போஸ் பற்றிய காட்சிகள்
1966: வங்காளி மொழித்திரைப்படம் "சுபாஷ் சந்திரா"
1950: இந்தி மொழித்திரைப்படமான "சமாடி" இல் போஸின் சிறு பாத்திரம்
ஆவணப்படங்கள்
இட்லருக்கும் காந்திக்குமிடையே - சுபாஷ் சந்திர போஸ்: மறக்கப்பட்ட சுதந்திரப் போராளி
நூல்கள்
1986: "பெரும் இந்தியப் புதினம்" (த கிரேட் இன்டியன் நோவல்) என்ற புதினத்தில் போஸ் பற்றிய கதாபாத்திரம்
2012: கே.எஸ்.சிறிவஸ்டவா எழுதிய சுபாஷ் சந்திர போஸ்மேலும் சில
ஷா நவாஸ் கான், ஜெனரல்
ஆபித் ஹசன் சப்ரானி
படக் காட்சியகம்
குறிப்புகளும் மேற்கோள்களும்
உசாத்துணை
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை வரலாறு
Indian Pilgrim: an unfinished autobiography Subhas Chandra Bose; edited by Sisir Kumar Bose and Sugata Bose, Oxford University Press, Calcutta, 1997
The Indian Struggle, 1920–1942 Subhas Chandra Bose; edited by Sisir Kumar Bose and Sugata Bose, Oxford University Press, Calcutta, 1997
Brothers Against the Raj—A biography of Indian Nationalists Sarat and Subhas Chandra Bose Leonard A. Gordon, Princeton University Press, 1990
Lost hero: a biography of Subhas Bose Mihir Bose, Quartet Books, London; 1982
Jungle alliance, Japan and the Indian National Army Joyce C. Lebra, Singapore, Donald Moore for Asia Pacific Press,1971
The Forgotten Army: India's Armed Struggle for Independence, 1942–1945, Peter W. Fay, University of Michigan Press, 1993, /
Democracy Indian style: Subhas Chandra Bose and the creation of India's political culture Anton Pelinka; translated by Renée Schell, New Brunswick, New Jersey : Transaction Publishers (Rutgers University Press), 2003
Subhas Chandra Bose: a biography Marshall J. Getz, Jefferson, N.C. : McFarland & Co., USA, 2002
The Springing Tiger: Subhash Chandra Bose Hugh Toye : Cassell, London, 1959
Netaji and India's freedom: proceedings of the International Netaji Seminar, 1973 / edited by Sisir K. Bose. International Netaji Seminar (1973: Calcutta, India), Netaji Research Bureau, Calcutta, India, 1973
Correspondence and Selected Documents, 1930–1942 / Subhas Chandra Bose; edited by Ravindra Kumar, Inter-India, New Delhi, 1992.
Letters to Emilie Schenkl, 1934–1942 / Subhash Chandra Bose; edited by Sisir Kumar Bose and Sugata Bose, Permanent Black : New Delhi, 2004
Japanese-trained armies in Southeast Asia: independence and volunteer forces in World War II Joyce C. Lebra, New York : Columbia University Press, 1977
Burma: The Forgotten War'' Jon Latimer, London: John Murray, 2004
வெளி இணைப்புகள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய வலைத்தளம்
சபாஷ் சந்திர போஸின் விரிவான வாழ்க்கை வரலாறு
சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த மர்மம்
நேதாஜி பற்றி சுவையான சிறு குறிப்புகள்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி தமிழருவி மணியனின் சொற்பொழிவு
http://www.thevarthalam.com/thevar/?p=265
The Tribune of India: New look at Netaji
Subhashchandra.com
The True Story of Bose
India's Holy Grail: Back from Dead by Anuj Dhar, Asia Times Book Review
Netajibosemysteryrevealed.org
நேதாஜியைக் கொன்றது ரஷ்யாவின் ஸ்டாலின்தான்: சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு
நேதாஜியின் மரணத்திற்கு காரணம் ஜவஹர்லால் நேரு: இது சாமியின் 2வது குண்டு
நேதாஜி கோப்புகள்: " ஆவணங்கள் தேசத்தின் சொத்து, அரசின் சொத்து அல்ல"
சர்தானந்தா முனிவராக வாரணாசி குகையில் 1952-ம் ஆண்டில் வாழ்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்: புதிய தகவல்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
இந்திய அரசியல்வாதிகள்
1897 பிறப்புகள்
1945 இறப்புகள்
இந்திய தேசிய ராணுவம்
இந்தியாவில் காணாமல் போனவர்கள்
வங்காள மக்கள்
மேற்கு வங்காளத்தின் வரலாறு
இந்தியப் புரட்சியாளர்கள்
கொல்கத்தா நபர்கள்
காணாது போனவர்கள்
|
4500
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF
|
தீபாவளி
|
தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் 17ஆம் நாளிலிருந்து நவம்பர் 15ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.
இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிசி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
தோற்ற மரபு
இந்து சமயத்தில் தீபாவளி
தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
புராணக் கதைகளின் படி, திருமால் வராக அவதாரம் (காட்டு பன்றி) எடுத்திருந்தபோது அவரது இரு மனைவியருள் ஒருவரான, நிலமகளான (பூமாதேவிக்கு) பிறந்த மகன் பவுமன் என்ற பெயரில் பிறந்தான். (பவுமன் என்றால் அதிக பலம் பொருந்தியவன் அல்லது பலமானவன் என்று அர்த்தம்). பின்பு அவன் இன்றைய அசாம் மாகாணத்தில் உள்ள பிராக்சோதிசா என்னும் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தான். பின்பு தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாதென்று பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்தான்.
அப்போது அவன் முன் காட்சியளித்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது எனக்கு எந்த நிலையிலும் மரணம் ஏற்படக்கூடாதென்று வரம் கேட்டான், அப்போது பிரம்மன் இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள் யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன். பின்பு நரகாசுரன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான்.
பின்பு மனிதன் ஆக இருந்து ஓர் அசுரன் ஆக மாறியதால், அவனுக்கு நரகாசுரன் என்ற பெயர் ஏற்பட்டது. (நர+மனிதன் சூரன்+அசுரன்) என்பதன் சுருக்கமே நரகாசுரன் ஆகும்.
இவன் கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான். அப்போது கிருட்டிணர் அவதாரத்திற்கு முன்பே திருமால் வராக அவதாரம் எடுத்திருந்தார்.
அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருட்டிணர் தனது மனைவியரில் ஒருவரான சத்யபாமா (பூமாதேவியின்) அவதாரமாவார்.
அவருடன் சென்று நரகாசுரனை அழிக்க பல வகையில் முயற்சித்த கிருட்டிணர் தனது மனைவி சத்யபாமாவை நரகாசுரன் முன்பு ஒரு பேரழகியாக அலங்கரித்து ஒரு நாட்டிய நடனம் நடத்தினார்.
அதில் அழகிய மாறுவேடத்தில் பாரதகிருட்டிணர்–சத்யபாமாவை சாட்டையால் அடித்து ஓர் அடிமை நாட்டியம் ஆட வைக்கின்றார்.
இந்த நடனத்தின் முடிவில், நரகாசுரன் தனது இறப்பு நெருங்கியது கண்டு அச்சமுற்றாலும், நரகாசுரன் ஓர் அம்பை, கிருட்டிணரை பார்த்து விட்ட போதிலும் அந்த அம்பை தனது கணவன் மீது படாமல் நாட்டியம் ஆடும் அழகியான சத்யபாமா தன் நெஞ்சில் வாங்கிக் கொள்கிறாள்.
அந்த அம்பு நெஞ்சில் விழுந்த வலியைக் கூட பொருட்படுத்தாமல் தன் நெஞ்சில் இருந்து எடுத்து நரகாசுரனை சத்யபாமா கையால் அழிக்க வைத்தார் கிருட்டிணர் என்றும் கிருட்டிணர் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.
இந்த நரகாசுரனின் வதத்தை மகாபாரத்தில் சிவந்தமண்களம். அதாவது {சிவந்த+(இரத்தம்)+மண்(பூமி)+களம்(போர்புரியும்இடம்)} என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் கிருட்டிணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருட்டிண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார்.
அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
இராமாயண இதிகாசத்தில் இராமர்- இராவணனை அழித்து விட்டு தனது வனவாசத்தையும் முடித்து விட்டு மனைவி சீதையுடனும் தம்பி இலட்சுமணனுடனும், அயோத்திக்கு திரும்பிய நாளை அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீசுவரர்' உருவமெடுத்தார்.
தமிழகத்தில் முதன்முதலாக கி.பி.15ஆம் நூற்றாண்டு விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆட்சி காலத்தில் கோயில்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் தஞ்சை மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரால் தேர்திருவிழாவின் போது வான வேடிக்கையுடன் தீபாவளி கொண்டாடியதாக அங்குள்ள சுவரோவியங்கள் மூலம் அறியலாம் .
சீக்கியர்களின் தீபாவளி
1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.
சமணர்களின் தீபாவளி
முதன்மைக் கட்டுரை: தீபாவளி (சைனம்)
மகாவீரர் வீடுபேறு அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.
பௌதத்தில் தீபாவளி
பௌத்தத்தில், தீபாவளியை 'தீபதான உற்சவம்' என்றும் அழைப்பர்.
கதைப்படி, புத்தர் போதிகயாவில் மெய்ஞானம் பெற்ற பிறகு, அவரது தந்தை அரசர் சுத்தோதனர் மகனின் வருகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர், அவனைப் பார்க்க விரும்பினார்.
இதற்காக, புத்தர் இராசகிரக மகாநகருக்கு அருகிலுள்ள மங்களகிரி என்ற மலையிடத்தில் இருந்தபோது, புத்தரை மன்னரின் தலைநகரான கபிலவத்துவுக்குத் திரும்பி வரும்படி சுத்தோதனர் ஒரு தூதரை அனுப்பினார்.
ஆனால் தூதுவர் புத்தரைச் சந்தித்த பிறகு அவருடைய சீடரானார்.
முந்தைய தூதர் வராததால், சுத்தோதனர் மற்றொரு தூதரை அனுப்பினார், அவரும் புத்தரின் கீழ் துறந்தவரானார், மேலும் புத்தரை மீண்டும் அழைத்து வரும் இராச கட்டளையை துறந்த தூதுவர் ஏற்கவில்லை. அவ்வாறே பல தூதர்களை ஒவ்வொருவராக அனுப்பினார், அவர்கள் பெருமானின் கீழ் உண்மையை உணர்ந்து துறவிகள் ஆனார்கள். புத்தருடன் மங்களகிரியிலிருந்து யாரும் திரும்பவில்லை.
கடைசியாக, சுத்தோதனர் தனது விசுவாசமான மந்திரி காலோதயனை அனுப்பினார், அவர் பின்வாங்க மாட்டார், இராச கட்டளையை நிராகரிக்க மாட்டார் என்று மன்னர் நம்பினார். காலோதயன், அரச தேரோட்டியான சந்தகனுடன் மங்களகிரியை நோக்கிச் சென்றான். புத்தரின் உபதேசத்தைக் கேட்ட காலோதயன் பெருமானின் பாமர மாணவனாக மாறினாலும், புத்தரை மீண்டும் கபிலவத்துவிற்கு வரச் செய்தான். புத்தரும் அவரது துறவிகணங்களும் கபிலவத்துவுக்குச் செல்ல அறுபது நாட்கள் ஆனது.
பெருமானும் அவருடைய மாணவர்களும் கபிலவத்துவிற்கு விசயம் செய்த நாளன்று, நகர மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விளக்குகளை வரிசையாக வைத்திருந்தார்கள். புத்தபெருமானின் புனித வருகையைக் கொண்டாடும் வகையில் தீபங்களைத் வாங்க முடியாத அனைத்து ஏழைகளுக்கும் வறியர்களுக்கும் மக்கள் தீபம் அளித்தனர். இந்த நாள் தான் ஐப்பசி மாத அமாவாசை.
புத்தரின் திருவிசயத்தை வழிபடுவதற்காக கபிலவத்துவின் மக்கள் தீபங்களை தானமாக அளித்து, ஊர் முழுவதும் அவற்றைத் தொடராக அமைத்து, சோதிப்பிரகாசத்தால் பூமியை தூயமாக்கியதால் அன்றைய தினம் 'தீபதான உற்சவம்' என்றும் 'தீபாவளி' என்றும் அழைக்கப்பட்டது.
மகாராசா அசோகர் மகாத்தவிரர் மௌகளிப்புத்திரர் மற்றும் இந்திரகுப்தர் ஆகியோரின் மேற்பார்வையில் மௌரியத்தலைநகர் பாடலிபுத்திரத்தின் 'அசோகாராமம்' என்ற தனது மடாலயத்தில் தீபதான உற்சவத்தை கொண்டாடினார்.
இந்நிகழ்வு 'சிதவிரகாதை' என்னும் திருநூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
கொண்டாடும் முறை
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். மக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை ஆகும்.
பிற நாடுகளில் தீபாவளி
மேற்குநாடுகளில் தீபாவளி
மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்ற பல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.
மேலும் காண்க
கார்த்திகை விளக்கீடு
தலை தீபாவளி
தீபாவளி (சைனம்)
மேற்கோள்கள்
தமிழ்நாட்டு விழாக்கள்
இந்து சமய விழாக்கள்
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
இந்தியாவின் அறுவடை விழாக்கள்
|
4506
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
|
இனுக்ரிருற் மொழி
|
கனடாவின் நுனுவற் (Nunavut-"எங்கள் தேசம்") பிரதேசம், 1999 ஆம் ஆண்டு தனி அலகாக்கப்பட்டது. இப்பகுதியில் வாழும் கனடாவின் மூத்த குடிமக்களாகிய இனுவிற் (Inuit) மக்களின் மொழியே இனுக்ரிருற் (Inuktitut). நுனுவற்றில் வாழும் 20,000 மக்களால் இம்மொழி பேசப்படுகின்றது. கிறீன்லாந்திலும் (Greenland) 40,000 மக்களால் பாவிக்கப்படுகின்றது, ஆனால் எழுத்து முறை வேறு.
இனுக்ரிருற் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு மொழி. பல விதமான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளால் வாட்டப்படும் மூத்த குடிமக்களின் மொழி. 1894-இல் தான் இம்மொழியின் எழுத்துருவம் உருவாக்கப்பட்டது. அதிலும் மாயன் தழுவிய முறை, ரோமன் எழுத்து தழுவிய முறை என்று தரப்படுத்தல் சிக்கல் கொண்ட மொழி; இன்னும் தரமான அகராதி கொண்டிராத ஒரு மொழி. இப்படி பல தடைகள் தாண்டியும், அம்மக்கள் தங்களை மொழி ரீதியாக தக்கவைத்து கொள்ள பல வகையிலும் முயன்று வருகின்றனர்.
1999 ஆம் ஆண்டு அம்மொழி நுனுவிற்றின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. புது வேகத்துடன் இனுக்ரிருற் கணணியை, இணையத்தை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றது. அண்மையில்தான் கணனிக்கான எழுத்துரு உருவாக்கப்பட்டது. இணையத்தில் இனுக்ரிருற் அகராதி உருவாகி வருகின்றது.
இனுக்ரிருற் இதழ் இம்மொழியின் முக்கிய இதழ் ஆகும். இனுக்ரிருற் (இரு எழுத்து முறைகளிலும்), ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளிவருகின்றது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
http://north.cbc.ca/north/archive/language/
http://www.nunavut.com/nunavut99/english/our.html
http://www.halfmoon.org/inuit.html
இனுக்ரிருற் அகராதி
அமெரிக்கப் பழங்குடி மொழிகள்
கனடிய மொழிகள்
|
4509
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%29
|
பொங்கல் (கேரளம்)
|
பொங்கல் (Pongala) என்பது கேரளா மற்றும் தமிழகத்தின் அறுவடைத் திருநாளாகும். 'பொங்கலா' என்ற பெயர் 'கொதிப்பது' என்று பொருள்படும் மற்றும் அரிசி, இனிப்பு பழுப்பு வெல்லம், தேங்காய் துருவல், கொட்டைகள் மற்றும் திராட்சை ஆகியவற்றால் செய்யப்பட்ட கஞ்சியை சடங்கு பிரசாதமாகக் குறிக்கிறது. பொதுவாக பெண் பக்தர்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர். தமிழ் மக்கள் பொங்கலாக கொண்டாடுகிறார்கள்.
வரலாறு
பொங்கல் பண்டிகையின் தோற்றம் 1000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். இடைக்கால சோழப் பேரரசு காலத்தில் புதியஈடு கொண்டாடப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. புதியஈடு ஆண்டின் முதல் அறுவடையைக் குறிக்கும் என நம்பப்படுகிறது.
ஆற்றுக்கால் பகவதி கோவில்
பொங்கல் திருவிழாவில் மிகவும் பிரபலமானது மற்றும் முக்கியமானது கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி கோயிலில் சுமார் 3.5 மில்லியன் மக்கள் பங்கேற்கும் நிகழ்வாகும். ஆற்றுக்காலில் நடைபெறும் திருவிழா, நகரத்தின் மக்களால், அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, நகரத்தின் மிகப்பெரிய திருவிழாவாகக் கருதப்படுகிறது.
அரிசி, தேங்காய், வெல்லம் ஆகியவை பெண் பக்தர்களால் சமைப்பதற்கு உருண்டையான மண் பானைகளுடன் கொண்டு வரப்படுகின்றன. பொங்கலில் பங்கேற்கும் பெண்கள், கோவிலை சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சாலைகள், பைலான்கள், நடைபாதைகள் மற்றும் கடைகளின் முன்பகுதிகளில் செங்கல் மற்றும் விறகுகளை பயன்படுத்தி தற்காலிக அடுப்புகளை அமைக்கின்றனர். தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக அம்மனுக்கு வழங்கப்படும் அரிசி, வெல்லம் மற்றும் தேங்காய் கலவையை மண் பானைகளில் சமைக்க அவர்கள் தங்கள் அடுப்புகளுக்குப் பக்கத்தில் உட்கார்கிறார்கள். கோவிலின் பிரதான பூசாரி கருவறைக்குள் உள்ள தெய்வீக நெருப்பிலிருந்து பிரதான அடுப்பை ஒளிரச் செய்கிறார். இந்த நெருப்பு ஒரு அடுப்பில் இருந்து அடுத்த அடுப்புக்கு அனுப்பப்படுகிறது.
தேவி அடிப்படையில் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பண்டைய மக்களின் தாய் தெய்வம். இந்தியாவின் இந்தப் பகுதியில், இந்தக் கருத்து ' அயிரமலை ' உச்சியில் வணங்கப்படும் ' கொட்டாவே ' தெய்வத்திலிருந்து உருவானது. பண்டைய காலங்களில், அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த மலையில் கூடி, பல நாட்கள் நீடிக்கும் முழு விழாக்களிலும் அங்கேயே தங்கியிருந்தனர். இக்காலத்தில் பெண்களால் புனிதமானதாகவும், தெய்வத்திற்குப் பிடித்தமானதாகவும் கருதப்படும் சமூகச் சமையலும் நடைபெற்று வந்தது. இத்தகைய சமூக சமையல் இயற்கையாகவே இந்த கிராமங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தியது. இந்த வழக்கம் இன்றும் பொங்கல் பிரசாதமாக தொடர்கிறது. இது தேவியின் குணத்தின் ஒரு பக்கம். அவள் போர்களில் வெற்றியைத் தரும் தெய்வம், எனவே சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளபடி அம்மனுக்கு இரத்த பலி கொடுக்கப்படுகிறது. இதற்குப் பயன்படுத்தப்படும் சொல் 'குருதி'. கொல்லுதல் என்பது இதன் பொருள். சேவல்களைக் கொன்று தெய்வத்திற்கு 'குருதி' கொடுப்பதற்காக இந்த வழக்கம் பின்னர் மாற்றியமைக்கப்பட்டது, இருப்பினும் இது இப்போது நடைமுறையில் இல்லை.
முக்கியமாக ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா பெரிய அளவில் கொண்டாடப்பட்டாலும், பொங்கல சமர்ப்பணம் நடைபெறும் மற்ற கோயில்கள் வெள்ளையணி தேவி கோயில், மாங்குளம் பராசக்தி தேவி கோயில், கோவில்வில பகவதி கோயில், கரிக்காகோம் தேவி கோயில், புதியகாவு பகவதி கோவில், கனகத்தூர் ஸ்ரீ குரும்பக்காவு கோவில், புல்பள்ளி சீதா தேவி கோவில், பாலகுன்னு பகவதி கோவில், முள்ளுத்தர தேவி கோவில், சக்குளத்துகாவு கோவில், அணைக்கட்டிலம்மசேத்திரம் மற்றும் கேரளாவில் தாழூர் பகவதி சேத்திரம் ஆகியவை ஆகும்.
ஆற்றுக்கால் பகவதி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் திருவிழா, உலகிலேயே மிகப்பெரிய பெண்கள் கூட்டம் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. திருவிழாவானது மார்ச் மாதத்தில் ஒரே நாளில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் பொங்கலைச் சடங்கு செய்வதற்கு ஈர்க்கிறது, மேலும் இந்தப் பருவத்தில் திருவனந்தபுரத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக இருந்து வருகிறது.
மேற்கோள்கள்
கேரள இந்து திருவிழாக்கள்
இந்து சமய விழாக்கள்
|
4513
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
உத்தராகண்டம்
|
உத்தராகண்டம் (Uttarakhand, இந்தி: उत्तराखण्ड) இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலம் 9 நவம்பர் 2000-இல் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாக உருவானது . 2000 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ஏராளமான இந்து கோயில்களும் புனிதத்தலங்களும் காணப்படுவதால் பெரும்பாலும் மக்கள் இம்மாநிலத்தை தேவபூமி என்றும் கடவுள்களின் நிலம் என்றும் கருதுகிறார்கள் . இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமயமலையில் அமைந்துள்ளது.
வடக்கில் சீனாவின் திபெத்தும். கிழக்கில் நேபாளமும், தெற்கில் உத்தரப்பிரதேச மாநிலமும், மேற்கிலும் வடமேற்கிலும் இமயமலையும் இம்மாநிலத்திற்கு எல்லைகளாக உள்ளன. கார்வால் கோட்டம். குமாவுன் கோட்டம் என்ற இரண்டு கோட்டங்களாக உத்தராகண்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இக்கோட்டங்களில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளன. தேராதூன் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரில் உள்ளது.
வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்தே இப்பகுதியில் மனிதர்கள் இருந்துள்ளார்கள் என்பதற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளன. பண்டைய இந்தியாவின் வேத யுகத்தில் இப்பகுதி உத்தரகுரு இராச்சியத்தின் ஒரு பகுதியாக உருவாகியிருந்த்து. குமாவோன் பேரரசின் முதல் பெரிய வம்சங்களில் கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குனிந்தர்கள் இருந்தனர். அவர்கள் சைவ மதத்தின் ஆரம்ப வடிவத்தை கடைப்பிடித்தனர். கல்சியில் உள்ள அசோகரின் கட்டளைகள் இந்த பிராந்தியத்தில் புத்தமதத்தின் ஆரம்பகால இருப்பைக் காட்டுகின்றன. இடைக்காலத்தில் குமாவோன் இராச்சியம் மற்றும் கார்வால் இராச்சியத்தின் கீழ் இப்பகுதி ஒருங்கிணைக்கப்பட்டது. 1816 ஆம் ஆண்டில், நவீன உத்தராகண்டின் பெரும்பகுதி சுகாலி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கார்வால் மற்றும் குமாவோனின் முந்தைய மலை இராச்சியங்கள் பாரம்பரிய போட்டியாளர்களாக இருந்தபோதிலும், வெவ்வேறு அண்டை இனக்குழுக்களின் அருகாமையும் அவற்றின் புவியியல், பொருளாதாரம், கலாச்சாரம், மொழி மற்றும் மரபுகளின் பிரிக்கமுடியாத நிரப்பு தன்மை ஆகியன இரு பிராந்தியங்களுக்கிடையில் வலுவான பிணைப்புகளை உருவாக்கியது.1990 களில் மாநிலத்தில் நிகழ்ந்த உத்தரகண்ட இயக்கங்கள் இப்பிணைப்பை மேலும் வலிமையாக்கின.
இம்மாநிலத்தின் பூர்வீகவாசிகள் பொதுவாக உத்தரகாண்டி என்று அழைக்கப்படுகிறார்கள், அல்லது இன்னும் குறிப்பாக கார்வாலி அல்லது குமாவோனி என்று அழைக்கப்படுகிறார்கள். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் மக்கள் தொகை 10,086,292 ஆகும், இது இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 20 வது மாநிலமாக திகழ்கிறது . முசோரி, அல்மோரா, ராணிக்கெட், ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமயத் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன.
பெயர்க்காரணம்
உத்தராகண்டம் என்ற பெயர் வடக்கு என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான உத்தரா (उत्तर) என்பதன் அர்த்தம் 'வடக்கு', மற்றும் நிலம் என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான கண்டம் என்பதிலிருந்து ஒட்டுமொத்தமாக 'வடக்கு நிலம் என்று பொருளில் வருவிக்கப்பட்டுள்ளது. .ஆரம்பகால இந்து வேதங்களில் "கேதர்கண்ட்" (இன்றைய கார்வால்) மற்றும் "மனாசுகண்ட்" (இன்றைய குமாவோன்) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தராகண்டம் என்பது இந்திய இமயமலையின் மைய நீட்சிக்கான பண்டைய புராணச் சொல்லாகும் . இருப்பினும், 1998 ஆம் ஆண்டில் ஒரு புதிய சுற்று மாநில மறுசீரமைப்பைத் தொடங்கியபோது பாரதீய சனதா தலைமையிலான ஒருங்கிணைந்த அரசாங்கமும் உத்தராகண்ட மாநில அரசும் இப்பிரதேசத்திற்கு உத்தராஞ்சல் என்ற பெயரைக் கொடுத்தன. இப்பெயர் மாற்றம் பல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அலுவல்பூர்வமாக உத்தராஞ்சல் என்ற பெயர் புழக்கத்திலிருந்தாலும் மக்கள் மத்தியில் உத்தாகண்டம் என்ற பெயரே பயன்பாட்டில் உலாவியது.
ஆகத்து மாதம் 2006 இல், உத்தராஞ்சல் மாநிலத்தை உத்தராகண்டம் என மறுபெயரிட முன்வைக்கப்பட்ட உத்தராகண்ட மாநில சட்டமன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் உத்தராகண்ட மாநில இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்தது. அதற்கான சட்டம் 2006 ஆம் ஆண்டு அக்டோபரில் உத்தரஞ்சல் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது, மத்திய அமைச்சரவை இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் கொண்டு வந்தது. இந்த மசோதா பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு 2006 டிசம்பரில் அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களால் கையெழுத்திடப்பட்டது, மேலும் சனவரி 1, 2007 முதல் இந்த மாநிலம் உத்தராகண்டம் என்று அறியப்படுகிறது.
ஆட்சிப் பிரிவுகள்
53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உத்தராகண்டம் மாநிலம், 13 மாவட்டங்களாகவும், கார்வால் கோட்டம் மற்றும் குமாவுன் கோட்டம் என இரண்டு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்வால் கோட்டம் ஏழு மாவட்டங்களையும்; குமாவுன் கோட்டம் ஆறு மாவட்டங்களையும் கொண்டுள்ளன. அவைகள்;
அரித்துவார்
உத்தரகாசி
சமோலி
ருத்ரபிரயாக்
டெக்ரி கர்வால்
டேராடூன்
பௌரி கர்வால்
பித்தோரகர்
பாகேஸ்வர்
அல்மோரா
சம்பாவத்
நைனித்தால்
உதம்சிங் நகர்
இந்த மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை ஐந்து நகரங்கள் மட்டுமே. இந்த மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 10,086,292 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,137,773 மற்றும் பெண்கள் 4,948,519 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 963 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 189 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 78.82% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.40% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.01% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,355,814 ஆக உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் பத்தாண்டுகளில் 18.81% ஆக உள்ளது.
சமயம்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாநிலத்தில் இந்து சமயத்தவர் 8,368,636 பேரும், இசுலாமியர் 1,406,825 பேரும், கிறித்தவர் 37,781 பேரும், சீக்கியர் 236,340 பேரும், பௌத்த சமயத்தவர் 14,926 பேரும், சமண சமயத்தவர் 9,183 பேரும், சமயம் குறிப்பிடாதவர்கள் 11,608 பேரும், பிற சமயத்தவர் 993 பேரும் உள்ளனர்.
இந்து ஆன்மீகத் தலங்கள்
பத்ரிநாத் கோயில்
கேதார்நாத் கோயில்
கங்கோத்திரி கோயில்
யமுனோத்திரி கோயில்
அரித்துவார்
ரிஷிகேஷ்
ஜோஷி மடம்
தேசியப் பூங்கா & காட்டுயிர் காப்பகம்
கங்கோத்ரி தேசியப் பூங்கா
கோவிந்த் பாசு விகார் காட்டுயிர் காப்பகம்
மலை வாழிடங்கள்
டேராடூன்
நைனிடால்
முசோரி
அல்மோரா
2013ஆம் ஆண்டு பெருமழை வெள்ள அழிவுகள்
சூன் மாதம், 2013ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் பெய்த தொடர் பெருமழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியதால், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக், பத்ரிநாத் மற்றும் கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களில் பலரும் இறந்தனர். மேலும் கேதார்நாத் கோயில் முக்கிய கோயில் தவிர அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் நிலச்சரிவுகளால் முற்றிலும் சேதமடைந்தன. கேதார்நாத் சிவபெருமான் கோயில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு, மே 2014-இல் திறக்கப்பட்டது..
நிவாரணப் பணிகள்
இந்திய அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பேலூர் மடத்தை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டது. தலைமை மடத்தின் வழிகாட்டுதலுடன் ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமம், கங்கல் (ஹரித்வார்) பரந்த நிவாரணப் பணிகளை ஜூன் 21 லிருந்து, ஆகஸ்டு 4 வரை மேற்கொண்டது.
இதனையும் காண்க
உத்தராகண்டு அரசு
உத்தராகண்டம் மாவட்டங்களின் பட்டியல்
உத்திராகண்ட வரலாறு
உத்தராகண்ட் முதலமைச்சர்களின் பட்டியல்
உத்தராகண்ட் ஆளுநர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
உத்தராஞ்சல் மாநில அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
உத்தர்காண்ட் மாநில வெள்ளம் மீட்புப் பணிகள்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
|
4514
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
சிந்து ஆறு
|
சிந்து ஆறு (; இந்தி:सिंधु; ) என்பது தெற்காசியாவில் தெற்கே பாய்ந்து செல்லும் ஒரு பெரிய ஆறு, இது சிந்து அல்லது அபாசியின் என்றும் அழைக்கப்படுகிறது. பாரதியின் சிந்து நதி மீதினிலே என்ற பாடலால் சிந்து நதி என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 3,610 கிமீ (1,988 மைல்) ஆகும், இது ஆசியாவின் நீண்ட ஆறுகளில் ஒன்றாகவும், பாகிஸ்தானில் பாயும் முக்கியமான ஆறாகவும் உள்ளது. இவ்வாறு இமய மலைத் தொடரில் கயிலை மலையில் மானசரோவர் அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் தோன்றும் இந்த ஆறு, லடாக் வழியாக பாய்ந்து, காஷ்மீர், மற்றும் பாகிஸ்தானின் வடக்கு நிலங்கள், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் வழியாகவும் பின் பஞ்சாப்பில் பாய்ந்து சென்று இறுதியில் சிந்து பகுதியின் தட்டா நகரத்திற்கு அருகில் அரபிக் கடலில் கலக்கிறது. இது பாக்கிஸ்தானின் மிக நீண்ட ஆறு மற்றும் தேசிய நதி ஆகும்.
இந்த ஆற்றின் மொத்த நீர் வடிகால் பகுதி ஆகும். இதன் மதிப்பிடப்பட்ட வருடாந்தர வெள்ள ஓட்டம் சுமார் , இது நைல் நதியின் ஆண்டு வெள்ளத்தில் இருமடங்காகவும், டைகிரிஸ் மற்றும் யூபிரிடிஸ் ஆறுகள் ஆகியவற்றின் நீரில் மூன்று பங்கு கூடுதலாகவும் உள்ளது. இதில் ஆண்டுதோறும் பாயும் நீரின் அளவில் உலகில் இருபத்தோராவது பெரிய ஆறாக உள்ளது. ஜாதகர் என்பது லடாக்கில் அதன் இடது கிளை ஆறு ஆகும். சமவெளிப்பகுதிகளில், அதன் இடது கிளைதான் செனாப் ஆறு ஆகும், அவற்றில் நான்கு முக்கிய துணை நதிகள் உள்ளன அவை, ஜீலம், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகும். சிந்து ஆற்றின் வலது துணை ஆறுகளில் முதன்மையானவை ஷிக் ஆறு, கில்கிட் ஆறு, காபூல் ஆறு, கோமல் ஆறு, குராம் ஆறு ஆகியவை ஆகும். இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் ஆறுகள் கொண்ட மலையுச்சியிலிருந்து துவங்கி, இந்த ஆறு காடுகள், சமவெளிகள், வறண்ட கிராமப்புறங்களில் சூழல் மண்டலத்தை வளப்படுத்துகிறது.
சப்த சிந்து என்று ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்ட இன்றைய பாகிஸ்தானின் சிந்து வடிநிலத்தை சிந்து ஆறு உருவாக்குகிறது மற்றும் ஈரானின் செயிண்ட் அவெத்தா ஹிப்தா சிந்து (இரண்டு சொற்களின் பொருளும் "ஏழு ஆறுகள்") என அழைத்தது. சிந்து சமவெளி நாகரிகம் இவ்வாற்றுப் படுக்கையிலே தோன்றி வளர்ந்த பழம் பண்பாடு. சிந்து ஆற்றின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாற்றின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும் பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே இன்றைய இந்தியாவின் பெயர்க் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்)
சொற்பிறப்பு மற்றும் பெயர்கள்
இந்த ஆறு பண்டைய ஈரானியர்களுக்கு அவெஸ்தாவில் குறிப்பிடப்பட்டுள்ளது, சமஸ்கிருதத்தில் சிந்து என்றும், அசிரியர்கள் (கி.மு.7 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்) சிந்தா என்றும், பாரசீகர்கள் அப்-இ-சிந்த்
என்றும், கிரேக்கர்கள் இந்தோஸ் எனவும், ரோமானியர்கள் சிந்து என்றும், பஷ்தூன் அபாசிந்த் எனவும், அரேபியர்கள் அல்-சிந்து என்றும், சீனர்கள் சின்டோவை என்றும், ஜாவா மக்கள் சாத்ரி என்றும், பாளியில், சிந்து என்றால் "ஆறு, ஓடை" எனவும் குறிப்பாக சிந்து ஆற்றையும் குறிக்கிறது.
சிந்து ஆற்றைக் குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தும் சொல்லான இண்டஸ் (Indus) என்ற சொல் பண்டைய கிரேக்க ச்சொல்லான "Indós" (Ἰνδός) என்ற சொல்லின் உரோமானியமயமாக்களின் வடிவமாகும், இது பழைய பாரசீக வார்த்தையான "ஹிந்துஷ்" என்பதிலிருந்து கடன் பெறப்பட்டது, இது சமஸ்கிருத வார்த்தையான "சிந்து" விலிருந்து கடன் வாங்கப்பட்டது.
மெகஸ்தினேசின் நூலான இண்டிகா என்ற பெயர், "Indós" (Ἰνδός) என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது, மேலும் இதில் அலெக்சாந்தரின் படைகள் பெருவெள்ளம் கொண்ட இந்த ஆற்றை எவ்வாறு கடந்து சென்றது என்பது குறித்த சமகால வரலாற்றை விவரிக்கிறது. பண்டைய கிரேக்கர்கள் இந்தியர்களை (இன்றைய வடமேற்கு இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் மக்கள்) "Indói" (Ἰνδοί), என குறிப்பிட்டனர் இதற்கு "சிந்து மக்கள்" என்று பொருள். இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் சிந்து மாகாணமும் தங்கள் பெயரை இந்த ஆற்றின் பெயரிலிருந்தே பெற்றன.
ரிக்வேதமும் சிந்துவும்
ரிக்வேதம் பல புராண ஆறுகளை விவரிக்கிறது, அதில் ஒன்று "சிந்து". ரிக்வேதத்தில் குறிப்பிப்பட்டுள்ள "சிந்து" என்பது இன்றைய சிந்து ஆறு என்று கருதப்படுகிறது, மேலும் அந்த நூலில் 176 முறை குறிப்பிடப்பட்டுள்ளது-பன்மையில் 95 முறை பன்மடங்கான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. ரிக்வேதத்தில், குறிப்பிடத்தக்க பாடல்களில், நாடிஸ்டு சுக்மாவின் பாடலில் உள்ள ஆறுகளின் பட்டியலில், சிந்து ஆறு குறிப்பிடப்படுகிறது. ரிக்வேத பாடல்களில் குறிப்பிடப்பட்ட அனைத்து நதிகளுக்கும் பெண் பாலில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் "சிந்து" ஆற்றை ஆண்பாலாக குறிக்கிறது. சிந்து ஆறு ஒரு வலுவான வீரனாக கருதப்பட்டு மற்ற ஆறுகள் தேவதைகளாக பார்க்கப்பட்டும் பால், வெண்ணெய் ஆகியவற்றை விளைவிக்கும் பசுக்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
பிற பெயர்கள்
இப்பகுதியில் உள்ள பிற மொழிகளில் இந்த ஆறானது, सिन्धु नद (சிந்த் நதி) என இந்தி மற்றும் நேபாளி மொழிகளிலும், سنڌو (சிந்து) சிந்தி மொழியிலும், سندھ (சிந்து) சாமுகி பஞ்சாபி, ਸਿੰਧ ਨਦੀ (சிந்த் நதி) குர்முகி பஞ்சாபி, اباسين (அபசின் லிட்டர் "ஆறுகளின் தந்தை") பஷ்தூ மொழியில், نهر السند (நஹார் அல்-சிந்து) அரபு மொழியில், སེང་གེ་གཙང་པོ། (சீங் ஜி கிட்சங் போ லிட். இதன் பொருள் "சிங்க ஆறு") திபெத்திய மொழி, 印度 (யிங்டு) சீன மொழியில், நிலாப் (Nilab) துருக்கிய மொழியில் என பல்வேறு மொழிகளில் அழைக்கப்படுகிறது.
விளக்கம்
சிந்து ஆறு பாக்கிஸ்தானின் பொருளாதாரத்துக்கு முதன்மையான நீர் ஆதாரங்களை வழங்குகிறது - குறிப்பாக நாட்டின் உணவுக் களஞ்சியமான பஞ்சாப் மாகாணத்தின் பெரும்பாலான விவசாய உற்பத்தியானது சிந்து ஆற்றை நம்பியுள்ளது. பஞ்சாப் என்ற சொல்லின் பொருள் "ஐந்து ஆறுகள் நிலம்" என்பதாகும், அந்த ஐந்து ஆறுகள் ஜீலம், செனாப், ராவி, பியாஸ், சத்லஜ் என்றும் அழைக்கப்படுகின்றன, இவை அனைத்தும் சிந்துவுடன் சேறுகின்றன. சிந்து ஆறானது பல கனரக தொழிற்சாலைகளுக்கு உதவியாக உள்ளது மற்றும் பாக்கிஸ்தானின் முதன்மை குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
சிந்துவின் முதன்மையான நீர் ஆதாரம் திபெத்தில் உள்ளது; திபெத்தில் தோன்றிய சிந்து ஆறு, பின்னர் லடாக் மற்றும் பால்டிஸ்த் வழியாக வடமேற்குப் பகுதியில் காரகோரம் மலைக்கு தெற்கே கில்கித் நோக்கி செல்கிறது. ஷியோக், ஷிகார், கில்கிட் ஆகிய ஆறுகள் ஆறுகள் பனி ஆறுகளோடு முதன்மை ஆற்றில் வந்து சேர்கின்றன. பின்னர் இது பெஷாவர் மற்றும் ராவல்பிண்டிக்கு இடையே உள்ள மலைகளில் இருந்து தெற்கே வளைந்து செல்கிறது. நங்க பர்வதத்துக்கு அருகே ஆழமான பள்ளத்தாக்குகளை சிந்து ஆறு 4,500-5,200 மீட்டர் (15,000-17,000 அடி) ஆழத்தில் கடந்து செல்கிறது. இது ஹசாரா முழுவதும் விரைவாக ஓடுகிறது, மற்றும் டார்பெலா அணையால் இதன் நீர் கட்டுப்படுத்தப்படுகிறது. காபுல் ஆறு அட்டாக் அருகே இதனுடன் இணைகிறது. கடலுக்கு செல்லும் மீதமுள்ள பாதையில் எஞ்சியுள்ள பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில், நதியின் ஓட்டம் மெதுவாகவும், பல கால்வாய்களாக பிரிந்ததாகவும் இருக்கும். இது மித்தன்கோட் பகுதியில் பஞ்ச்நாத் ஆறு இணைகிறது. இச்சங்கமத்துக்கு அப்பால், இந்த ஆறு காபூல் நதி, சிந்து நதி, பஞ்சாப் ஆறுகள் ஆகியவற்றின் நீரை எடுத்துச் செல்வதால், சத்நாத் நதி (சாத்தி = "ஏழு", நடி = "நதி") என்ற பெரைப் பெறுகிறது. ஜாம்ஷோராவாலைக் கடந்து, இது தட்டாவுக்கு அருகில் கடலில் சேர்கிறது.
உலகின் சில நதிகளில் மட்டுமே காணப்படும் ஒன்றான கழிமுக அலைஏற்றம் சிந்து ஆற்றில் காணப்படுகிறது. இதன் நீராதாரமானது திபெத், இந்திய ஆளுகைக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் மற்றும் பாக்கிஸ்தானின் வடக்கு நிலங்கள் ஆகியபகுதிகளிலும், இமயமலை காரகோரம், இந்து குஷ் ஆகிய மலைகளில் உள்ள பனிக்கட்டி மற்றும் பனிப்பாறைகளால் இருந்து கிடைக்கிறது. ஆற்றின் நீர்பெருக்கானது பருவ காலத்துக்கு ஏற்ப மாறுபடுகிறது - குளிர்காலத்தில் நீர் பெரிதும் குறைந்து காணப்படும், சூலை முதல் செப்டம்பர் வரையிலான பருவ மழைக்காலத்தில் வெள்ளம் மிகுந்து காணப்படும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்து ஆற்றின் போக்கில் நிலையான மாற்றங்கள் ஏற்பட்டதற்கான சான்றுகள் உள்ளன - கட்ச் பாலைவனம் மற்றும் பன்னி புல்வெளிகளுக்கு அருகில் இருந்து மேற்கு நோக்கி திசைதிரும்பியது.
இதனையும் காண்க
பியாஸ் ஆறு
ராவி ஆறு
சத்லஜ் ஆறு
ஜீலம் ஆறு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Blankonthemap The Northern Kashmir Website
Bibliography on Water Resources and International Law Peace Palace Library
Northern Areas Development Gateway
The Mountain Areas Conservancy Project
Indus River watershed map (World Resources Institute)
Indus Treaty
Baglihar Dam issue
Indus
First raft and kayak descents of the Indus headwaters in Tibet
Pulitzer Center on Crisis Reporting's project on water issues in South Asia
ஆசிய ஆறுகள்
ஜம்மு காஷ்மீர் ஆறுகள்
சிந்துவெளி நாகரிகம்
தொன்மவியல் ஆறுகள்
இந்து தொன்மவியல் ஆறுகள்
பாக்கித்தான் ஆறுகள்
|
4515
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88
|
கோனார் தமிழ் உரை
|
கோனார் தமிழ் உரை என்பது தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம் வெளியிடும் தமிழ் பாட நூல்களைப் புரிந்து கொள்ள உதவும் வகையில், தனியார் நிறுவனம் ஒன்று வெளியிடும் வழிகாட்டிக் கையேடு ஆகும். வேறு பல நிறுவனங்கள் வெளியிடும் கையேடுகளும் புழக்கத்தில் இருந்தாலும், அதிகமானவர்கள் அறிந்த வழிகாட்டி உரை நூலாக கோனார் தமிழ் உரை விளங்குகிறது. இதனால் சிலர், எந்த ஒரு தமிழ் உரை நூலையும் கோனார் உரை என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவதுண்டு.
ஐயம்பெருமாள் கோனார்
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஐயம்பெருமாள் கோனார் பள்ளிப் பாடநூல்களில் தமிழ்ப் பாடநூல்களுக்கான கையேடுகளை உருவாக்கி வெளியிட்டு வந்தார். இந்த கையேடுகளைக் கோனார் தமிழ் உரை என்ற பெயரில் சென்னை, பழனியப்பா பிரதர்ஸ் நூல் வெளியீட்டு நிறுவனம் இன்றும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு இன்றும் "கோனார் மாளிகை" என்றுதான் பெயர்.
தமிழ் உரை நூல்கள்
|
4516
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88
|
கத்தோலிக்க திருச்சபை
|
கத்தோலிக்கத் திருச்சபை அல்லது உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை (Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும். டிசம்பர் 31, 2008 ஆம் ஆண்டு கணக்கின் படி 1,166,000,000 (ஒரு பில்லியன், 166 மில்லியன்) இறைமக்களை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயப்பிரிவாகும். ஏனைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் இயேசுவை தங்களது கடவுளாகவும், தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகவும் ஏற்றுக்கொள்கின்றார்கள். திருத்தந்தை கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார்.
கத்தோலிக்கத் திருச்சபையின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க திருச்சபை எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான பேதுருவின் வழிவருபவரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக திருத்தந்தை ஏற்றுக் கொள்ளப்படுகிறார். தற்போது பிரான்சிஸ் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 266 ஆவது திருத்தந்தையாவார்.
இத்திருச்சபை ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க) சபையாக உள்ளது என்பது (திருச்சபையின் நான்கு அடையாளங்கள்) கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு ஆகும்.
பெயர் விளக்கம்
கத்தோலிக்க (καθολικός, katholikos) என்ற பதம் கிரேக்க மொழியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல்லின் மூலப்பொருள் உலகளாவிய அல்லது அனைவருக்கும் பொதுவான என்பதாகும். இதன்படி கத்தோலிக்க திருச்சபை என்பது, இயேசு கிறிஸ்துவால் உலகம் முழுவதற்கும் நிறுவப்பட்ட திருச்சபை என்ற கருத்தைத் தருகிறது. இப்பெயர் திருச்சபையால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது. திருத்தூதர் யோவானின் சீடரான அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்பவரே, கிறிஸ்தவ சமூகத்தை முதன்முதலில் கத்தோலிக்க திருச்சபை என்று அழைத்தார். புனித பேதுருவின் வழிவருகின்ற திருத்தந்தைக்கு உலகளாவிய திருச்சபை மீது ஆட்சி அதிகாரம் உண்டு என்று ஏற்கும் கிறிஸ்தவ இறைமக்கள் சமூகமே, "கத்தோலிக்க திருச்சபை" என்று வரலாற்றில் அறியப்படுகிறது.
ஆயினும், மரபுவழி கிறித்தவ சபைகளில் சிலவும், புரடஸ்தாந்து சபைகளில் சிலவும் "கத்தோலிக்க" என்னும் அடைமொழியால் தம்மை அடையாளப்படுத்துகின்றன. "கத்தோலிக்க" என்னும் அடைமொழிக்கு எல்லாக் கிறித்தவ சபைகளும் ஒரே பொருள் கொடுப்பதில்லை. பல கிறித்தவ சபைகள் அந்த அடைமொழியைப் பயன்படுத்தி தம்மை பழமையான அல்லது உலகளாவிய திருச்சபையாக அடையாளம் காட்ட விரும்புகின்றன.
தோற்றமும் வரலாறும்
கத்தோலிக்க திருச்சபை இயேசு மற்றும் அவரது பன்னிரண்டு சீடர் வழிவருவதாகும். இதில் முதன்மைச் சீடர் இராயப்பர் முக்கிய இடம் பெறுகிறார். இயேசுவால் தனக்கு பின்னர் தனது விசிவாசிகளை வழிநடத்தும்படி இராயப்பர் பணிக்கப்பட்டார். இயேசுவின் பின்னர்,புனித விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, வேறுபட்ட போதனைகளுககு தமது விசுவாசத்தை விட்டுக்கொடுக்காது இராயப்பரதும் அவர் வழிவந்த பாப்பரசர்களதும் போதனைபடி வாழ்ந்த உண்மையான இயேசுவின் விசுவாசிகளே காத்தோலிக்க திருச்சபையின் மூல விசுவாசிகளாவார்கள். 'கத்தோலிக்க திருச்சபை' என்ற பெயர் ஆன்டியொக்கின் ஆயர் இக்னேசிய அவர்களால் எழுதப்பட்ட மடலொன்றில் முதன்முறையாக பாவிக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகிறர்கள்.
ஆரம்பத்தில் திருச்சபை பல நெருக்கடிகளுக்கு உள்ளானது. கி.பி. 4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் உரோமையில் சட்டபூர்வமாக்கப்பட்டது. கி.பி. 313 ஆம் ஆண்டு ரோமப் பேரரசன் கான்ஸ்டாண்டைன் வெளியிட்ட மிலான் ஏற்புகள் மூலம் உரோமை அரசு சமயங்கள் தொடர்பில் நடுவுநிலைமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அத்தோடு உரோமையில் கிறிஸ்தவர் அனுபவித்த அடக்குமுறைகள் முடிவுக்கு வந்தன. மேலும் கொண்ஸ்டன்டைன் நைசியா மன்றத்தைக் கூட்டி(Council of Nicea) அப்போது திருசசபயில் தோன்றியிருந்த ஆரியவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இக்கூட்டத்தில் பின்னர் வெளியிடப்பட்ட 'நைசின் விசுவாச அறிக்கை' (Nicene Creed) இன்றும் கத்தோலிக்க, கீழ் மரபு வழாத திருச்சபைகளால் ஏற்றுகொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. கான்ஸ்டாண்டைன்குப் பின்னர், தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு, கி.பி. 380 ஆம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்தவம் உரோமையின் அரச சமயமாக உயர்ந்தது.
11 ஆம் நூற்றாண்டில் திருச்சபை பெரும் கருத்து முரண்பாட்டை (Great Schism) எதிர்நோக்கியது. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல தாசப்த்தங்களாக காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும். இதன் போது கத்தோலிக்க திருச்சபைக்கும் கீழ் மரபு வழாத திருச்சபைக்குமிடயே சபை முகாமை,சமயபோதனைகள் (liturgical), சமய கோட்பாடுகள் (doctrine) தொடர்பில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது. முக்கியமாக பாப்பரசரின் தலைமை மற்றும் இயேசு மற்றும் பரிசுத்த ஆவி தொடர்பான சமய போதனை வேறுபாடு முக்கிய இடம் வகித்தது. இறுதியில் இவ்விரு திருச்சபைக்களும் பிரிந்தன. இரண்டாம் இலியோன்ஸ் மன்றம், 1274 மற்றும் பசெல் மன்றம், 1439 இவ்விரு திருச்சபைகளையும் இணைக்க முயன்றது எனினும் இன்று வரை இத்திருச்சபைககள் பிரிந்தே செயற்படுகின்றன. இவ்விரு திருச்சபைகளும் நைசின் விசுவாச அறிக்கையில் கூறப்பட்ட ஓரே,புனித,கத்தோலிக்க,அப்போஸ்தலிக திருச்சபை தாமே என உரிமை கோறிவருகின்றன. அது முதல் சில கீழ் மரபு வழாத திருச்சபைகள் பாப்பரசரின் தலைமையை எற்று கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்துள்ளன.
திருச்சபையின் இரண்டாவது பெரிய பிரிவினை சமய சீர்த்திருத்தவாதத்தால் ஏற்பட்டது. இதில் பாப்பரின் தலைமை, திருச்சபையின் சமய கோட்பாடுகள், மேலும் சபையில் அப்போதிருந்த நடைமுறைகள் என்பவற்றை பிழையென கருதிய பல குழுக்கள் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றன. இது கத்தோலிக்க திருச்சபைக்குள் சீர் திருத்தத்துக்கு வழிகோலியது. இந்நோக்கத்துக்காக டெரன்ட் மன்றம் 1545, கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபையின் பல கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சீர்த்திருத்தியது.
டெரன்ட் மன்றத்துக்குப் பிறகான மூன்று நூற்றாண்டுகள் இம்மன்றத்தின் சீர்த்திருத்தங்களை அமுல்படுத்துவதிலும் கிறிஸ்தவ கல்வியிலும் மற்றும் மறைப்பரப்பு பயணங்களிலும் திருச்சபை முக்கிய கவனமெடுத்துக்கொண்டது. இப்பணிகளில் 'இயேசு சபை' குருக்களும் 'பிரன்சிஸ்கன்' குருக்களும் முன்னின்று செயற்பட்டனர். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சமய சீர்த்திருத்தவாதிகளால் மட்டுமல்லாது விஞ்ஞான வளர்ச்சி, கைத்தொழில் புரட்சி போன்ற வற்றாலும் திருச்சபை பல சவால்களை எதிர்நோக்கியது.
முதலாம் வத்திக்கான் சங்கம் (1869–1870), இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962–1965) போன்ற மன்றங்கள் அவ்வப்போதிருந்த பாப்பரசர்களால் கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபை காலத்துகேற்றவாரு புதுப்பிக்கப்பட்டது.
இரண்டாம் வத்திக்கான் சங்கம்
இரண்டாம் வத்திக்கான் சங்கம் ரோம் நகரில் 1962 முதல் 1965 வரை ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தில் நடைபெற்றது. பாப்பரசர் அருளப்பர் XXIII முதலாவது ஆண்டில் தலைமை வகித்தார். பின்னர் பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் கூட்டங்களை தொடர்ந்து நிறைவு செய்தார். கத்தோலிக்க திருச்சபையை புதுப்பித்தலும் கிறிஸ்தவ மறுஒன்றிப்புமே இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோள்கள். இச்சங்கம் உருவாக்கிய இரண்டு முக்கிய ஏடுகள் - சமய சுதந்திரம் (Dignitatis Humanae) மற்றும் நவீன உலகில் திருச்சபையின் மேய்ப்புப்பணி அமைப்பு (Gaudium et Spes) ஆகியனவாகும்.
சங்கத்தின் பரிந்துரைப்படி கத்தோலிக்க சபை வழிபாடுகள் பெருமளவில் மாற்றப்பட்டன. லத்தீன் மொழி பலிப்பூசை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, புதிய பலிப்பூசை அவரவர் சொந்த மொழியில் நிறைவேற்ற ஆவன செய்யப்பட்டது. இதைத் தவிர வழிபாடுகளில் குரு (Priest) விரும்பினால் உள்ளூர் கலாச்சாரப்படி சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் பரப்பப் பட்டது. இதனை 'இரண்டாம் வத்திக்கான் சங்க ஒளி' யில் செய்வதாக அவ்வாறு செய்பவர்கள் கூறிக்கொள்கின்றனர். (சங்க 'ஒளி' எனப்படுவது சங்க ஏடுகளில் எழுதி பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கைகள் அல்ல. மாறாக, அவற்றில் இருந்து தர்க்க ரீதியாக பெறப்பட்டதாக சொல்லப்படும் சார்பு கொள்கைகள். ஆனால், கத்தோலிக்க குருமாரிடையே இவை பற்றிய ஒருமித்த கருத்து இன்றளவும் இல்லை). எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையும் இச்சங்க 'ஒளி' யில் காணப்படுவதாக சிலர் கூறுகின்றனர். லத்தீன் மொழி பலிப்பூசையை பல விசுவாசிகள் விரும்பியதால் தற்போதய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், இறை மக்கள் விரும்பினால் லத்தீன் மொழி பலிப்பூசையை வழங்கலாம் என்று அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.
இச்சங்க கோட்பாடுகளைப் விரும்பாதவர்கள், பல்வேறு புராதன கத்தோலிக்க சபைகளை உருவாக்கியுள்ளனர். பேராயர் லெபபர் (Archbishop Marcel) உருவாக்கிய பத்தாம் பத்திநாதர் சபை இவற்றில் முக்கியமானது. இன்னும் சில கத்தோலிக்க பொதுமக்கள் கத்தோலிக்க வழிபாடுகளில் பக்தி குறைந்து விட்டது என்று பெந்தெகோஸ்தே சபைகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டனர்.
செபங்களும் கோட்பாடுகளும்
கிறிஸ்து கற்பித்த செபம்
விசுவாச அறிக்கை
பத்துக் கட்டளைகள்
திருமறைச்சுவடி
திருமறைச் சுவடி என்பது கத்தோலிக்க கிறித்தவ சபையினர் நம்பி ஏற்கின்ற கொள்கைத் தொகுப்பின் சுருக்கம் ஆகும். ஆங்கிலத்தில் Catechism என்று அழைக்கப்படுகின்ற இத்தொகுப்பு சின்னக் குறிப்பிடம் என்றும் அறியப்பட்டது. கடந்த 450 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வழங்கப்பட்ட இச்சிறு நூல் திருத்திய பதிப்பாக 2007ஆம் ஆண்டு திருமறைச் சுவடி (புதிய குறிப்பிடம்) என்னும் பெயரில் வெளிவந்தது. இது வினா-விடை வடிவில் அமைந்தது. இந்நூலுக்கு முன்னோடியாக 1578இல் அச்சேறிய முதல் தமிழ் நூலாகிய தம்பிரான் வணக்கம் என்னும் ஏட்டையும், தத்துவபோதகர் எனும் சிறப்புப் பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி (தமிழகத்தில்: 1606–1656) எழுதியதாகக் கருதப்படும் சின்னக் குறிப்பிடம் ஏட்டையும் கருதலாம்.
சிலுவை அடையாளம்
தந்தை/மகன்/தூய ஆவியின் பெயராலே ஆமென்
இயேசு கற்பித்த செபம்
விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக!
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல,
மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை
இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை
நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்,
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். / ஆமென்
மங்கள வார்த்தை செபம்
அருள் நிறைந்த மரியே வாழ்க!ஆண்டவர் உம்முடனே.பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.உம்முடைய திருவயிற்றின் கனியாகியஇயேசுவும் ஆசி பெற்றவரே.தூய மரியே,இறைவனின் தாயே,பாவிகளாய் இருக்கிற எங்களுக்காகஇப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும்வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
திரித்துவப் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக./ தொடக்கத்தில் இருந்தது போல/ இப்போதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்
கத்தோலிக்க திருச்சபையின் ஒழுங்குமுறைகள்
ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காணல்
வருடத்திற்கு ஒருமுறையாவது, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தல்
தவக்காலத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்து தேவநற்கருணை உட்கொள்ளல்
மாமிச தவிர்ப்பு நாட்கள், ஒருசந்தி நாட்களை கடைப்பிடித்தல்
சிறுவர் மற்றும் விகினஉறவுமுறைத் திருமணம் செய்யாமை
ஆட்சியாளருக்கு நல்லுதவி செய்தல்
மூவேளை செபம்
ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார். தூய ஆவியால் அவள் கருத்தாங்கினாள். - அருள் நிறை...
இதோ ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு ஆகட்டும். - அருள் நிறை...
வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார். - அருள் நிறை...
கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
செபிப்போமாக
இறைவா/ உம் திருமகன் மனிதனானதை / உம்முடைய வானதூதை வழியாக அறிந்து இருக்கின்றோம்.
அவருடைய பாடுகளினாலும் மரணத்தினாலும் நாங்கள் உயிர்ப்ப்பின் மகிமை பெற உமது அருளைப் பொழிவீராக.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.- ஆமென்.
சுருக்கமான மனத்துயர் செபம்
என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர். எனவே எல்லாவற்றிற்கும் மேலாக /
உம்மை நான் அன்பு செய்கின்றேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக/ மனம் வருந்துகிறேன்.
உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்று உறுதிகூறுகிறேன். -
விசுவாச முயற்சி
என் இறைவா, உமது திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்க உண்மைகளை எல்லாம் / நீரே அறிவித்திருப்பதால், அவைகளை எல்லாம் / நான்
உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன்.
நம்பிக்கை முயற்சி
என் இறைவா/ நீர் தந்த வாக்குறுதிகளை / நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் ஆண்டவர் இயேசுவைன் இரத்தத்தால் என் பாவங்களைப் பொறுத்து எனக்கு உமதி அருளையும்
வானக வாழ்வையும் அளிப்பீர் என்று உறுதியாக நம்புகிறேன். ஆமென்.
அன்பு முயற்சி
என் இறைவா! நீர் அளவில்லாத அன்புக்கு உரியவர் என்பதால் அனைத்திற்கும் மேலாக, உம்மை நான் முழுமனதோடு அன்பு செய்கின்றேன்.அவ்வாறே என்னை நான் நேசிப்பது போல் எல்லோரையும் நேசிக்கிறேன்.
தேவதாயை நோக்கி பெர்னார்டின் செபம்
இரக்கம் மிகுந்த தாயே/ உன் அடைக்கலம் நாடி உதவியைத் தேடி தமக்காய் பரிந்து பேச மன்றாடி வந்த எவரும் ஏமாந்தார் என
உலகில் என்றுமே கேட்டதில்லை. அம்மா இதனை நினைத்தருள்வாயே. கன்னியருள் உயர் கன்னியே/ தாயே /
இப்பெரும் நம்பிக்கையால் உந்தப்பட்ட நான் உன்னிடம் ஓடிவருகிறேன். பாவி நான். உன் தாள் விழுகிறேன்.
வார்த்தையின் தாயே/ தள்ளிவிடாதே/ என் மன்றாடைத் தயவாய் கேட்டருளும்.
இதனையும் பார்க்க
கத்தோலிக்கம்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
அதிகாரபூர்வ இணையதளம்
அதிகாரபூர்வ யூடியூப் தளம்
திருமறைச் சுவடி
கத்தோலிக்கம்
|
4522
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
|
சித்தார்
|
சித்தார் (sitar) நரம்பு இசைக்கருவிகளுள் ஒன்று. இந்துஸ்தானி இசையைச் சிறப்பாக இசைப்பதற்கு இக்கருவி ஏற்றது. குடம் என்ற இதன் பகுதியை மரம் அல்லது சுரைக்காயினால் செய்வர். வீணைக்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. வீணையில் மெட்டுகள் மெழுகின் மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள்.
பிரபல சித்தார் இசைக்கலைஞர்கள்
ரவிசங்கர்
இந்திய இசைக்கருவிகள்
கம்பி இசைக்கருவிகள்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.