text
stringlengths
11
513
எனக்கு. 322 நான் நாச்சியாரம்மாவைக் கல்யாணம் செய்து அடைந்து கொண்டேன் , ஆனால் அவளிடமிருந்து எதையோ பிரித்துவிட்டேன். அவள் இப்பொழுது ரெட்டிப்புக் கலகலப்பாக உண்மையாகவே இருக்கிறாள். என் குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறாள். எங்கள் கல்யாணத்துக்கு முன்பு எனக்கு இருந்த நாச்சியாரம்மாள் ; இப்பொழுது இருக்கும் என் நாச்சியாரம்மாள் ...
சுயநலமி ஆகிவிட்டாள். எங்கோ ஓர் இடத்தில் கோளாறாகிவிட்டது. சந்தேகமே இல்லை. ஓய்வு ஒழிச்சலில்லாமல் முன்னைவிடப் பலமடங்கு அவள் இப்பொழுது உடைக்கிறாள். உழைத்து ஓடாய்த் தேய்ந்து வருகிறாள் என்னவள். ஒருநாளில் அவள் தூங்குகிற நேரம் மிகவும் அற்பம். என்ன பொறுமை , என்ன பொறுமை ! குழந்தைக்கு முலையூட்டிவிட்டு விலகிய மாராப்பைக்கூடச் சரி ச...
உட்காரும்போதோ பார்த்துத்தான் அவர்கள் சோறு வாங்கிப் போக வருகிறார்கள் தினமும் என்று புகார் செய்கிறாள். பிச்சைக்காரர்களுக்குவாய்தாப்போடுகிராள். வேலைக்காரகளின்மேல் எரிந்து விழுகிராள்.அப்பப்பா என்ன தீனி தின்கின்றான்கள் ஒவ்வொருத்தரும்என்று வாய்விட்டே சொல்ல ஆரம்பித்துவிட்டாள். குடுகுடுப்பைக்காரன் இப்பொழுதெல்லாம் அட்டகாசமாக வந...
தேடிக்கொண்டிருக்கிறான். 323 கல்யாணத்துக்கு முன் நாச்சியாரு , நின்ற கண்ணிப்பிள்ளை சேகரித்து மெத்தைகள் , தலையணைகள் தைப்பாள். மெத்தை உறைகளிலும் தலையணை உறைகளிலும் பட்டு நூலால் வேலைப்பாடுகள் செய்வாள். அவள் தனியாக உட்கார்ந்துகொண்டு நிம்மதியாகவும் நிதானமாகவும் யோசித்து யோசித்துச் செய்யும் அந்தப் பின்னல் வேலைகளில் , தன் கன்னிப...
பொருள்பேரிலும் படியாமல்பார்த்தூ ” க்கொண்டே இருப்பாள். அப்புறம் நீண்ட ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் தையலில் மூழ்குவாள். ஒருநாள் நாச்சியாருவின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனக்கு ஒரு புதிய ஏர்வடம் தேவையாக இருந்தது. அவர்களுடைய வீட்டில் அப்பொழுது களத்து ஜோலியாக எல்லாரும் வெளியே போயிருந்தார்கள். அடுப்பங்கூடத்தை ஒட்டி ...
சட்டங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. தொங்கிய கயிறுகளுக்கு மத்தியில் , மண் ஓட்டில் ஓட்டை போட்டுக் கோர்த்திருந்தார்கள். ஏர்வடத்தைக் கத்தரிக்கக் கயிறு வழியாக இறங்கி மண் ஓட்டுக்கு வந்ததும் எலிகள் கீழே விழுந்துவிடும். ஆள் புழக்கம் அங்கு அதிகமிராததால் தேள்கள் நிறைய இருக்கும். பதனமாகப் பார்த்துக் குலுக்கை மேல் ஏறி நின்...
மார்பின்மீது விரித்துக் கவிழ்க்கப்பட்டஅல்லி அரசாணி மாலை ” ப் புத்தகம். பக்கத்தில் வெங்கலப் பல்லாங்குழியின் மீது குவிக்கப்பட்ட சோழிகள். ஜன்னலில் ஒரு செம்பு , பக்கத்தில் ஒரு சினுக்குவலி , இரண்டு பக்கமும் பற்கள் உள்ள ஒரு மரச்சீப்பு , ஒரு ஈருவாங்கி , ஒரு உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடி முதலியன இருந்தன. அவள் அயர்ந்து தூங்கிக...
அடர்ந்த நீண்டு வளைந்த ரெப்பை ரோமங்களைக் கொண்ட மூடிய அவள் கண்கள் அவ்வளவு அழகாய் இருந்தது. மெதுவாக இறங்கிப் போய் அந்த மூடிய கண்களில் புருவத்துக்கும் ரெப்பை ரோமங்களுக்கும் மத்தியில் முத்தமிட வேண்டும்போல் இருந்தது. சொல்லி வைத்ததுபோல் நாச்சியாரு கண்களைத் திறந்தாள். தூக்கத்தினால் சிவந்த விழிகள் இன்னும் பார்க்க நன்றாக இருந்தத...
புஸ்தகத்தைத் தொட்டு வேகமாக இரு கண்களிலும் 324 ஒற்றிக்கொண்டு அதை எடுத்து ஜன்னலில் வைத்தாள். பின்பு லஜ்ஜையோடு சிரித்துத் தலைகவிந்துகொண்டே , நழுவும் மார்பு சேலையை வலதுகையினால் மார்போடு ஒட்ட வைத்துக்கொண்டு மெதுவாக அந்த இடத்தை விட்டு நழுவினாள். முன்பிருந்தே நாங்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். யாரும் அறியாமல் தொல...
அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆச்சரியப்படும்படி அவைகள் செய்து முடிக்கப்பட்டிருக்கும் அப்போது. 8 ******* ஒரு நாள் கோவில்பட்டியிலிருந்து ராத்திரி வந்தேன். அன்று வீட்டிற்கு நிறையச் சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது. காலம் முன்னைமாதிரி இல்லை. ஒரும்பாகிவிட்டது. முன்னெல்லாம் கொஞ்ச ரூபாயில் நிறையச் சாமான்கள் வாங்கிக்கொண்டு வரலாம்...
நாச்சியாருவிடம் கொடுத்துவிட்டு அப்படியே வந்து கட்டிலில் வீழ்ந்தேன். உடம்பெல்லாம் அடித்துப்போட்டதுமாதிரி வலி. கண்கள் ஜிவ்வென்று உஷ்ணத்தைக் கக்கிக்கொண்டிருந்தது. மண்டைப் பொருத்தோடுகளில் ஆக்ரா இறக்கியது போல் தெறி. கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டேன். குழந்தைகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தன. அரிக்கன் லாம்பை சரியாகத் துட...
கூட்டிக்கொண்டும் , மீதிப்பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டுமிருந்தாள். கணக்கில் ஒரு ஐந்து ரூபாய் சொச்சம் உதைத்தது. அந்த ரூபாய்க்கான கணக்கு என்ன என்று என்னிடம் கேட்டாள். 325 எல்லாத்தையும் எடுத்துவை கணக்கு எங்கெயும் போய்விடாது ; காலையில் பாத்துக்கலாம் , எல்லாம். அவள் பிடிவாதமாகக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்....
வெளிவிட்டுக் கொண்டிருந்தேன். நல்ல உயர்ந்த காய்ச்சல். சூழ்நிலையின் பிரக்ஞை வட்டம் சுருங்கிக்கொண்டே வந்தது. சின்ன , மெல்லிய சப்தங்கள்கூடக் கோரமாகக் கேட்டன. கண்களைத் திறந்து நாச்சியாரு என்ன செய்கிறாள் என்று திரும்பிப் பார்த்தேன். அவள் ரூபாய் அணா பைசாவில் மூழ்கியிருந்தாள். குளிர்ந்த காற்றுப்பட்டதால் கண்கள் நீரை நிறைத்தன , ...
சேர்க்கப்படாததால் கற்றைகள் முன்முகத்தில் வந்து விழுந்து கிடந்தன. என்ன ஆனந்தமானசொகம்இந்தக் கண்களை மூடிக்கொண்டே இருப்பதினால் ! கானல் அலைகளைப்போல் என் உடம்பிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் உஷ்ண அலைகள் கண்ணால் பார்க்கமுடியாமலிர்ந்தாலும் தெரிந்தது. நான் எரிந்துக்கொண்டிருக்கும் ஒரு சிதைக்குள் படுத்திருப்பதுபோல் குளிருக்கு அட...
அருமை நாச்சியாரு. நாச்சியாரு , என் பிரியே ! நீ எங்கிருக்கிறாய் ? " 326 கோமதி - கி. ராஜநாராயணன் கோமதிசெட்டியாருக்கு வயசு முப்பது. அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண்குழந்தை என்று நினைத்துத்தான் கோமதி என்று பெயர் வைத்தார்கள். அவனுக்குமுன் பிறந்த ஏழும் அசல் பெண்கள். இவனுக்கு சிறு பிராயத்திலிருந்தே ஜடைபோட்டு பூ வைத்துக் கொள்வத...
பொருத்தமாக இருந்தது. பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக விளையாடப் போவான். ஆண்களோடு விளையாடவேண்டியது ஏற்பட்டுவிட்டால் வீடுகட்டி , கல்யாணம் பண்ணி விளையாடும் விளையாட்டில்தான் பிரியம் அதிகம். அதிலும் மணப்பெண்ணாக தன்னை வைப்பதென்றால்தான் , விளையாட வரச் சம்மதிப்பான். வயசு ஆகஆக அவன் ஆண்களோடு சேர்ந்து பழகுவதையே விட்டுவிட்டான். பெண...
வளைத்துத் தன் மூக்கின்மேல் ஒட்டவைத்துக் கொள்வான். அகலமான கருஞ்சாந்துப் பொட்டை வைத்து வெற்றிலை போட்டுக்கொண்டு கீழ் உதட்டைத் துருத்தியும் , நாக்கை நாக்கை நீட்டியபடியும் சிகப்பாகப் பிடித்திருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொள்வான். தலைமுடியை அள்ளிச் சொருகிகொப்புவைத்து பூவைத்துக்கொள்ளுவான். அவன் அணிந்திருக்கும் பாடி பெண்...
பெண்களைப்போல் கையை ஒய்யாரமாக வீசி நடப்பான். எவ்வன புருஷர்களைக் கண்டுவிட்டால் கோமதிக்கு எங்கோ இல்லாத வெட்கம் வந்துவிடும். பெண்கள் இவனை வித்தியாசமாகவே நினைப்பது இல்லை. நடத்துவதும் இல்லை. இவன் எங்கு சென்றாலும் இவனைப் பிரியமாக வைத்துக்கொள்வார்கள். ஆண் பெண் சம்பந்தமான பால் உணர்ச்சி கதைகளைச் சொல்லி அவர்களை மகிழ்விப்பான். மனச...
போய்விடுவான். 327 இவனுக்கு ஒரே ஒரு கலை அற்புதமாகக் கைவந்திருந்தது. சமையல் பண்ணுவதில் இவனுக்கு நிகர் இவனேதான். விருந்து நாட்களில் கோமதி கோமதி என்று இவனுக்கு ஏகப்பட்ட கிராக்கி , ஒரு தடவை தூரத்து ஊரிலுள்ள தனது பந்துக்கள் வீட்டுக் கல்யாணத்திற்குப் போகும்படி நேர்ந்தது இவனுக்கு. கல்யாணவீட்டுக்கு வந்திருந்த பெண்களில் , பிரசித...
நாயக்கரின் இளையபேத்தி குமாரி சுலோ இவனைக் கண்டதும் , இவனுடைய அங்க அசைவுகளையும் தளுக்கையும் கண்டு தன் வைர வளையல் குலுங்கக் கைகொட்டிக் கலகலவெனச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அடக்கமுடியாமல் கண்களில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். சிரிப்பை அடக்க அவள் அவனோடு பேச்சுக் கொடுத்தாள். ரகுபதி நாயக்கரின் வீட்டுப் பெண்களுக்க...
வியர்வையோடு கலந்த மல்லிகைப் பூவின் சுகந்த நெடியும் கோமதியைக் கிறங்க அடித்தது. பெண்கள் ஒருவருக்கொருவர் காதோடு காதாக பேசிக்கொண்டு சிரிக்கும் ஒலி , வளையல் ஒலியோடு போட்டியிட்டது. கோமதி ஏதோ வாய்திறந்து பேச ஆரம்பித்தபோது சுலோ குனிந்து தன் காதை அவன் வாய் அருகே நீட்டினாள். " யக்கா , இந்தச் சேலை என்ன விலை ? " சுலோ சிரித்தாள். ச...
நாணம் கலந்த சப்தமில்லாத குமிழ்ச் சிரிப்பு வந்து அவளைக் குலுக்கியது. " நீ எங்க வீட்டுக்கு வாரையா ? சமையல் செய்ய ? " சரி , என்ற பாவனையில் தலையை ஆட்டினான் கோமதி. கோமதிக்கு , சுலோ தன் வலதுகை நிறைய அணிந்திருந்த வளையல்கள்மீதுதான் கண்ணாக இருந்தது. அந்த வளையல்கள்தான் அவளுடைய சங்குபோன்ற வெண்ணிறமான கைக்கு எவ்வளவு பொருத்தமாக இருந...
வெண்மையான பற்களுமே ஞாபகத்துக்கு வரும். இப்போது இருக்கும் ரகுபதி நாயக்கரின் பேரனான ரகுபதி நாயக்கர் தன் குடும்பத்திலுள்ள அழகை மேலும் மேலும் வளர்த்துச் செழுமைப்படுத்தினார். தன்னுடைய அழகுமிகுந்த நான்கு புத்திரர்களுக்கும் ஆந்திரதேசத்துக்குச் சென்று தங்க விக்ரகங்களைப்போலுள்ள எட்டு ஸ்திரி ரத்தினங்களைக் கொண்டுவந்து ஆளுக்கு இரண...
என்று அவசியமில்லை. அழகுமிகுந்த பெண்ணையும் கொடுத்து அவனுக்கு வேண்டிய சொத்தையும் எழுதி வைப்பார். எவ்வளவு எடுத்துக் கொடுத்தாலும் குறைவுபடாத சம்பத்து இருந்தது அவர்கள் குடும்பத்திற்கு. இப்பேர்ப்பட்ட ஒரு இடத்துக்குத்தான் கோமதி சமையல் உத்தியோகத்துக்குப் பெட்டி படுக்கையுடன் போய்ச் சேர்ந்தான். பக்கத்து வீட்டிலுள்ள பெண்களெல்லாம்...
நடந்தது. அவன் படைத்த உணவை ருசிபார்த்தபின்தான் பெண்களுக்கு அவன் மீதுள்ள 329 இளப்பம் ஓரளவு நீங்கியது. அவனை பரிவாகவும் இரங்கத்தக்க ஒரு ஜீவனாகவும் , தங்களோடு , தங்கள் இனத்தோடு சேர்ந்த ஒரு ஆத்மாவாகவும் நடத்தினார்கள். சாப்பிட்டு முடித்த ரகுபதி நாயக்கர் , இந்தப் புது சமையல்காரனை பார்க்கவேண்டுமென்று சொல்லி மாடியிலுள்ள தன்பகுதி...
அவருடைய வெண்ணிறமான மீசையோடு பற்களின் ஒளி போட்டியிட்டது. கோமதி உண்மையாகவே பயந்து போனான். அவனுடைய பயத்தைக் கண்டு ரகுபதி நாயக்கர் இன்னும் உரக்கச் சிரித்தார். வீட்டுப்பெண்கள் எல்லாம் சிறிது தள்ளி நின்று இதை வேடிக்கை பார்த்தார்கள். " பலே , பலே ; வா இங்கே. உன் பேர் என்ன ? * * கோமதி " கோமதியா ! பேஷ் பேஷ்... ! " என்று முழங்கால...
கொடுத்தனுப்பினார். வேறு யாராவது இருந்தால் இந்த வெகுமதியைக் கண்டு மகிழ்ந்து போயிருப்பார்கள். ஆனால் கோமதி அந்த வேஷ்டிகளை கடைசிவரையும் உடுத்தவே இல்லை. பதினைந்தாம் சிலர் ஒரு நாள் பகல் உணவுக்குப்பிறகுஅந்தப்புரத்தில் பெண்கள் எல்லோரும் சாவகாசமாக உட்கார்ந்திருந்தார்கள். சிலர் புலியும் , தாயமும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். கோம...
பாடினான். விதவைக்கோலம் பூண்டுவிட்ட ஒரு பெண் சொல்லுவதாக பாவம் : 330 * கருப்பும் சிகப்புமாய் - நான் கலந்துடுத்தும் நாளையிலே சிகப்பும் கருப்புமாய் - நான் சேர்ந்துடுத்தும் நாளையிலே நீலமும் பச்சையுமாய் - நான் நிரந்துடுத்தும் நாளையிலே கைக்களையன் சேலையை - என் கழுத்திலிட்டுப் போனியளே கைக்களையன் சேலை : எந்தன் கழுத்தை அறுக்காதோ ...
நாடோடி பாடல் ஒன்றைப் பாடி அபிநயம் பிடிக்கத் தொடங்கினான். “ சோளம் இடிக்கையிலே சொன்னயடி ஒரு வார்த்தை : - " ஐயோ கையைப் பிடிக்காதிங்கோ - என் கருவளைவி சேதமாகும்....... " கொல்'லென்று பெண்கள் சிரித்தார்கள் ; வடித்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே சிரித்தார்கள். 331 அதிகாலையில் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் கோமதி வேலை செய்துகொண்டு இர...
சுழன்றுகொண்டிருந்தான். அவனுடைய சுதாரிப்புக்கு இன்று ஒரு காரணமுண்டு. சுலோவின் அண்ணன் ரகு பட்டணத்திலிருந்து இன்று மாலை லீவுக்கு வருகிறான். தன் அண்ணனைப் பற்றி சுலோ கோமதியிடம் பல சந்தர்ப்பங்களில் சொல்லக் கேட்டிருக்கிறான்... அவருக்கு என்னென்ன வகைகள் பிடிக்கும் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தான் கோமதி. சமையல் அந்த ம...
இடுக்குவழியே ஒளிந்துகொண்டு பார்த்தான். சுலோ ஓடிச்சென்று காரின் பின்கதவைத் திறந்தாள். ஆணழகனான ரகு ஆஜானுபாகுவாக இறங்கி ஜம் என்று நின்றான். பெண்கள் அவனுக்கு திருஷ்டி சுற்றி கழித்து அவன் உள்ளே வர விலகி நின்றார்கள். ரகுவைப் பார்த்த கோமதிக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை. முதலில் அதிர்ச்சியாயிருந்தது. மலமலவென்று கண்களை மூடித...
சாப்பாட்டின்போது ரகுவுக்கு சுலோவே பரிமாறினாள். கோமதி மறைவில் நின்றுகொண்டு ரகு சுவைத்துச் சாப்பிடுவதையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். “ சாப்பாடெல்லாம் புதுமாதிரி இருக்கிறதே. இப்போது சமையலுக்கு யார் இருக்கிறார்கள் ? ” என்று கேட்டான்.புது ஆள் வந்திருக்கிறதண்ணா என்று சொல்லிக்கொண்டே பின்புறம் பார்த்தாள். கோம...
கூப்பிட்டு , “ அண்ணா உன்னைப் பார்த்தால் மிகவும் சந்தோஷப்படுவான் ; மண்டு ! நீ ஏன் வேண்டாம் என்று சொன்னாய் ? பாலை எடுத்துக்கொண்டு வா " என்று சொல்லிவிட்டு அண்ணாவின் அறைக்குப் போய்விட்டாள். கோமதிக்கு உடம்பெல்லாம் வேர்த்து படபடவென்று வந்தது. தன்னைச் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிலைக்கண்ணாடியின் முன்போய் நின்று தன்னை நன்ற...
ஏறிச் சென்றான். தட்டோடு கை நடுங்கியதால் எங்கே பால் கொட்டி விடுமோ என்று நினைத்து தம்ளரை ஒரு கையால் பிடித்துக்கொண்டே போனான். “ கோமதி... கோமதி.. உள்ளே வாயேன் " என்று சுலோ கூப்பிட்டாள். " யார் கோமதி ? " என்று கேட்டான்ரகு. " அதுதான் ; நான் அப்போ சொல்லவில்லையா ; சமையலுக்கு ஒரு புது ஆள் வந்திருக்கிறதென்று ? ' “ ஓஹோ ; சரிதான் ...
அண்ணா பாலை எடுத்துக்கொள் ” ரகு திரும்பிப் பார்த்தான். முகத்தைச் சுழித்தான். இந்த ரஸவிஹாரத்தை அவன் ஆண்மை நிறைந்த உள்ளத்தால் தாங்கமுடியவில்லை. சுலோவை இதெல்லாம் என்ன என்ற முறையில் கோபத்தோடு பார்த்தான். சுலோ கலகலவென்று சிரித்தாள். கருங்கல் தரையில் கண்ணாடி வளையல்கள் தொடர்ந்து விழுந்து உடைவதுபோல் இருந்தது அவளுடைய சிரிப்பு. இ...
நோக்கி " சீ போ வெளியே " என்று கத்தினான். கோமதி துயரம் தாங்காமல் வெளியே ஓடுவதைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. 333 “ என்ன காரியம் செய்து விட்டாயண்ணா " சுலோவிற்கு மனசு மிகவும் கஷ்டமாகப் போய்விட்டது. தான் விளையாட்டாக நினைத்தது இப்படி அண்ணாவுக்கு எரிச்சலை உண்டுபண்ணிவிடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. கோமதியை நினைத்து மிக...
அவனிடம் சுமுகமாக நடந்துகொள்வதாகக்கூறினான். அன்றிரவு தனக்குச் சாப்பாடே வேண்டாம் என்றுவிட்டு வெறும் தரையில் படுத்துக்கொண்டான் கோமதி. மறுநாள் சுலோ கோமதிக்கு எவ்வளவோ சமாதானம் சொல்ல வேண்டி இருந்தது. என்ன சொல்லியும் கோமதிக்கு மனசு சமாதானப்படவில்லை. ரகு வந்து கோமதியிடம் சிரித்துப் பேசியதும் கோமதிக்கு எல்லாம் சரியாகப் போய்விட்...
" என்றான் ரகு. “ உங்களுக்கு நான் முதுகு தேய்க்கிறேனே..... ! " என்று குழைந்தான் கோமதி. " வேண்டாம் வேண்டாம் ; நானே தேய்த்துக்கொள்வேன் ” என்று சொல்லி , பிடரியைப் பிடித்து தள்ளாத குறையாக கோமதியை வெளியேற்றி கதவைப் பூட்டிகொண்டான் ரகு. அந்தக் கதவுக்குமேல் ஒரு சிறு பாட்டு ஜன்னல் ஒன்றிருந்தது. பக்கத்திலிருந்த பெரிய ஆட்டுரல்மேல்...
அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கண்களில் பிதுங்கும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அப்பால் போய்விட்டாள். சாப்பிடுங்கள் ; இன்னுங்கொஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள் " என்று கோமதி பலமாக உபசரித்துக்கொண்டே ரகுவுக்குப் பரிமாறினான். " வேண்டாம் ; வேண்டாம் போதும் ; போதும் " என்று சொல்லும்வரை திணற அடித்தான். தன் மனதுக்குப் பிடித்தவர்க...
பயலுக்கு நீ ரொம்பவும் இளக்காரம் கொடுக்கிறாய். இவனைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. நான் இவனை வெறுக்கிறேன் " என்று ரகு இங்கிலீஷில் சொன்னான். ஐயோ பாவம் ; அண்ணா , அப்படியெல்லாம் சொல்லாதேஎன்று பதிலுக்குச் சொன்னாள். சொல்லிவிட்டு சுலோ கோமதியின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள். இவர்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டது கோமதிக்கு ...
கோமதி பெண்களின் குளிப்பறைக்குப் பக்கத்தில் தனக்கென்று ஒதுக்கப்பட்ட தன்னுடைய தனித்த அறையில் வெற்றிலைப் பாக்கு , புகையிலைகளைப் போட்டு முழக்கிக்கொண்டிருந்தான். சந்தோஷத்தை அவனால் அடக்க முடியவில்லை. குரலெடுத்துப் பாடவேண்டும்போல் இருந்தது. 335 இரவுச் சாப்பாடு முடிந்தது. வழக்கம்போல் கோமதி ரகுவுக்கு பால் எடுத்துக்கொண்டு போனான்...
பக்கத்தில் வந்து உராய்ந்துகொண்டு “ பாலைச் சாப்பிடுங்கோன்னா ; ஆறிப்போகிறது ” என்று கொஞ்சலாகச் சொன்னான். சொன்னதோடு அவன் நின்றிருந்தாலும் ரகுவிற்கு கோபம் வந்திருக்காது ; நாடியை வேறு தொட்டுத் தாங்கினான். ரகு பேனாவை எறிந்துவிட்டு அப்படியே கோமதியின் செவிட்டில் ஓங்கி ஒரு அறை விட்டான். இதை கோமதி எதிர்பார்க்கவில்லை. கன்னத்தைக் ...
ஆவேசத்தை உண்டு பண்ணியது. தன் வலது காலை உயர்த்தி ஓங்கி அவன் நெஞ்சில் உதைத்துத் தள்ளினான். என்று பயங்கர ஊளையுடன் தடால் என்று தரையில் விழுந்தான் கோமதி. பக்கத்தறையிலிருந்த சுலோ ஓடிவந்து ரகுவை தடுக்காவிட்டால் கோமதி என்னாவாகி இருப்பானோ. அன்று இரவு மூன்று பேர்களும் தூங்கவில்லை. குளிப்பறைக்குப் பக்கத்திலிருந்த அறையிலிருந்து இர...
தன் அறையிலிருந்து வரவே இல்லை. எல்லோரிடமும் சொல்லிக்கொள்ள வந்தபோது ஸ்திரிகள் கூட்டத்தில் கோமதி இல்லாதது கண்டு , “ அவன் எங்கே ; கோமதி " என்று கேட்டான்ரகு. " அவனுக்கு உடம்புக்கு சரியில்லை போலிருக்கிறது. இன்று வெளியிலேயே காணோம் " என்று சொன்னார்கள். சுலோ ஒன்றுமே தெரியாததுபோல் மௌனமாக இருந்தாள். ரகு கையில் ஒரு பொட்டலத்துடன் க...
வைத்துக்கொள் " என்று அந்தப் பொட்டலத்தை கோமதியிடம் கொடுத்தான் ரகு. அதை தலைகுனிந்தவாறே மெளனமாக வாங்கிக்கொண்டான். “ அதில் என்ன இருக்கிறது என்று பார் ! " கோமதி பொட்டலத்தை அவிழ்த்தான். நிறைய செவந்தி பூக்களும் , அருமையான கருவளைகளும் இருந்தன. பெண்களெல்லோரும் சிரித்தார்கள். கோமதியும் சிரித்தான் ; அவன் கண்களில் கண்ணீர் வந்தது. ...
எதையாவது பார்த்துக் கொண்டிருப்பான். மனதை அறுக்கும் பெருமூச்சுக்களை அடிக்கடி விடுவான். உடம்பு மெலிந்துவிட்டது. சுலோ இதையெல்லாம் மௌனமாக கவனித்துக்கொண்டு வந்தாள். ஒருநாள் இரவு இரண்டுமணி இருக்கும். சுலோ தற்செயலாகக் கண்விழித்தாள். கீழே கோமதியின் அறையில் இன்னும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.ஏன் ?என்று பார்க்கவேண்டும்போல் இர...
? அரவமில்லாமல் சுலோ பக்கவசத்திலிருந்த ஜன்னல் வழியாகப் போய்ப் பார்த்தாள். அந்தப் பெண் முழங்காலைக் கட்டிகொண்டு உட்கார்ந்திருந்தாள். கைகள் நிறைய கருவளைகள் போட்டுக் கொண்டிருந்தாள். தலையில் ஜடைநிறைய செவ்வந்திப் பூக்கள். அவள் எதிரே ரகுவின் படம் இருந்தது ! சுலோ முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். அந்த பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீ...
வைரங்களைப் போல் கண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. 337 எதிரேயுள்ள ஜன்னல் வழியாக இப்பொழுது நன்றாகப் பார்க்க முடிந்தது சுலோவால். அடையாளம் கண்டுகொண்டாள். சேலையுடுத்திக்கொண்டிருந்த அது வேறு யாருமில்லை. கோமதிதான் ! சுலோ திடுக்கிட்டுப் போனாள். பீதியால் நிலைகொள்ள முடியவில்லை. திரும்பி மாடிப்படி ஏற காலைத் தூக்கி வைக்க முயன்றாள் -...
அப்பொழுதுதான் தலைநிமிர்ந்து முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியும். அவள் சிரிப்பதைப் பார்க்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட முடியும். ஜங்ஷனுக்கு வந்தான். ஜங்ஷனிலிருந்து புறப்பட்டு வளைய வளையச் சுற்றிவிட்டு வந்தான். அதே ஜங்ஷன்தான். மெயின் ரஸ்தா ஓரத்தில் ஒரு புருஷனும் மனைவியும் ரஸ்தாவைத் த...
நானும் அவளும் நாளை கோயிலுக்குப் போய் வரவேண்டுமென்று நினைக்கிறாள் அவள் என்று எண்ணினான் அவன். குழந்தையின் பிறந்தநாளை எவ்வளவு கோலாகலமாகக் கொண்டாட ஆசைப்படுகிறாள் அவள் ! அன்று மாலை பொன்னம்மை சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவன் ஞாபகத்திற்கு வந்தது. அவளுடைய ஆசையே விசித்திரமானதுதான். தெருவழியாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்து போகி...
கலர்நூல் வைத்துப் பின்ன வேண்டும். அந்தப் பின்னலில் ஒரு ரோஜா - ஒன்றே ஒன்று - அதற்குத் தனி அழகு. நாம் இருவரும் குழந்தையைக் கோயிலுக்கு எடுத்துச் செல்கிறபொழுது தெருவில் சாணி தெளிக்கும் பெண்கள் , கோலம் இழைக்கும் பெண்கள் எல்லோரும் தலைதூக்கித் தலைதூக்கிப் பார்க்க வேண்டும். அவர்கள் தலைதூக்கிப் பார்ப்பதை நான் பார்க்க வேண்டும். ...
இடத்தை மறந்து சிரித்தான். சட்டென்று வாயை மூடிக்கொண்டான். தம்பதிகள் ரஸ்தாவைத் தாண்டிப் போய்விட்டார்கள். 339 ஆனால் பொன்னம்மை போட்ட திட்டமெல்லாம் நிறைவேறுவதற்கு இன்னும் ஐந்து ரூபாய் வேண்டும். ஐம்பது ரூபாய் செலவாகும். ஆனால் பொன்னம்மை அவனிடம் ஐந்து ரூபாய்தான் கேட்டாள். துணிமணி கடனாக வாங்கிக் கொண்டு வந்துவிட்டாள். அதை இரவோடு...
கேட்டாள். ஐந்து ரூபாய்க் காசு. வீட்டில் காலணா கிடையாது. காலணா என்றால் காலணா கிடையாது. அன்று தேதி இருபத்தைந்து. கைத்தடியை பூட்சில் தட்டிக்கொண்டே நின்றான் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு. அவனைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தது. ஒரு தடவை பார்த்தவர்கள் அவன் முகத்தை மறக்க முடியாது. முகத்தில் ஆறாத அம்மைத் தழும்பு அடர்த்தியான...
மாதிரி ஓடிற்று. நீளமாக ஓடிற்று. வட்டம் போட்டது. குறுக்கும் மறுக்கும் பாய்ந்தது. ஒன்றும்அகப்படவில்லை. கழுத்தில் வேர்வை வழிந்தது. முகத்தில் சோர்வு. அங்கமெல்லாம் அசதி. சர்வீஸில் புகுந்த பின்பு இன்றுபோல ஒருநாளும் விடிந்ததில்லை. யார் முகத்தில் விழித்தோமென்று யோசித்தான். கண் விழித்ததும் எதிரே சுவர்க் கண்ணாடியில் தன் முகம் தெ...
மணிக்கு ஆரம்பித்த அலைச்சல் , மணி ஏழு அடித்துவிட்டது. இன்னும் சில நிமிஷங்களில் எட்டு அடித்துவிடும். 340 பொழுது போய்க்கொண்டே இருந்தது.ஒன்றும்அகப்படாமலேயே பொழுது போய்க்கொண்டிருந்தது. அன்று சைக்கிளில் விளக்கில்லாமல் போவாரில்லை. சிறு நீர் கழிப்பதற்குப் பிரசித்தமான சந்துகள் ஒன்று பாக்கியில்லாமல் தாண்டி வந்தாகிவிட்டது. சந்துக...
இருந்தார்கள். இப்பொழுது பிரஜைகளாகி விட்டார்கள். பொறுப்பு உணர்ச்சி கொண்ட பிரஜைகள் நீடுழி வாழ்க ! எழுபத்திமூன்று நாற்பத்தியேழு முகத்தைச் சுளித்துக் கொண்டான். மீண்டும் ஜங்ஷனிலிருந்து கிளம்பி , வடதிசை நோக்கி நடந்தான். நின்று நின்று நடந்தான். சிறிது நடந்துவிட்டு நின்றான். நடந்தான். நின்றான். கோபம் கோபமாக வந்தது. எதிரே வந்த ...
டிரைவர் மட்டும் போகிறான். பேஷ் ! இனிமேல் இந்த தேசத்தில் போலீஸ்காரர்கள் தேவையில்லை. கூலிகள் யாரையாவது அதட்டிப் பார்க்கலாம். ஒருவரையும் காணோம். புது சினிமா ஆரம்பமாகிற நாள். ஒருவரையும் காணோம். எல்லாக் கழுதைகளும் சினிமாவில் காசைக் கரியாக்குகிறார்கள். 341 அந்தி மயங்குகிற சமயம்கூல்டிரிங்கடையில்ஸ்பிரிட்வியாபாரம் ஆரம்பமாகும். ...
பாட்டிக்குக் குழந்தை பிறந்திருக்கும் ! வியாபாரத்தைக் கண்ணுக்குக் கண்ணாகக் கவனிக்க வேண்டாமோ ? சந்திலிருந்து ஒரு குதிரை வண்டி திரும்பி மெயின் ரஸ்தாவில் ஏறிற்று. சாரதி சிறுபயல். மீசை முளைக்காத பயல். அவனும் விளக்கேற்றி வைத்திருக்கிறான் ! வண்டி அருகே வந்தது. “ லேய் , நிறுத்து. " குதிரை நின்றது. " ஒங்கப்பன் எங்கலே ? " " வரலே...
என்று சொல்லிக்கொண்டே பயல் நுகக்காலில் நின்றுகொண்டு வேஷ்டியை நன்றாக உதறிக் கட்டிக்கொண்டான். " மோறையைப் பாரு. ஓடுலெ ஓடு. குதிரை வண்டி வச்சிருக்கான் குதிரை வண்டி. மனுசனாப் பொறந்தவன் இதிலே ஏறுவானாலே. " குதிரை நகர்ந்தது. தபால் ஆபிஸ் பக்கம் வந்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. எதிர்சாரி வெற்றிலைப் பாக்குக் கடை பெஞ்சில் அமர்...
கொண்டான். மேற்கும் கிழக்கும் பார்த்தான். 343 அப்பொழுது தபால் நிலையத்தை நோக்கி ஒரு கனமான உருவம் வருவது தெரிந்தது. எங்கோ பார்த்த முகம் போலிருந்தது. கிருஷ்ணன் கோயில் அர்ச்சகரோ ? கிருஷ்ணன் கோயில் அர்ச்சர் தபால் ஆபிசில் நுழைந்தார். கூர்ந்து கவனித்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. அர்ச்சகர் கையில் ஒரு நீள உறை. எழுந்து பின்ன...
“ வாரும் இங்கே. ” - ஒரு அதட்டல். அர்ச்சகர் தயங்கித் தயங்கி வந்தார். நல்ல கனமான சரீரம். மொழுமொழுவென்று உடம்பு. உடம்பு பூராவும் எண்ணெய் தடவியதுபோல் மினுமினுப்பு. வளைகாப்புக்குக் காணும்படி வயிறு. 344 அர்ச்சகர் முன்னால் வந்து நின்றார். “ அதென்னது கையிலே ? " * கவர். " “ என்ன கவரு ? " " ஒண்ணுமில்லை. சாதாக் கவர்தான். தபால்லே ...
எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகர் முகத்தை வெறிக்கப் பார்த்தான். அர்ச்சகர் முகம் சிவந்தது. இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான். அர்ச்சகர் முகம் மேலும் சிவந்தது. எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு ஒரே சந்தேகம். ஒரே சந்தோஷம். அவனுடைய மகள் அதிருஷ்டசாலிதான் ! 345 “ இந்தக் கவர் உம்ம கையிலே எப்படி சிக்கிச்சு ? " குரலில் ...
ஸ்டேஷனுக்கு. ” ஸ்டேஷனுக்குஎன்ற வார்த்தை காதில் விழுந்ததும் உடம்பை ஒரு உலுக்கு உலுக்கியது அர்ச்சகருக்கு , அர்ச்சகர் முதுகைப்பிடித்து இலேசாகத் தள்ளினான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. அர்ச்சகர் தட்டுத்தடுமாறிப் பேச ஆரம்பித்தார். " நான் சொல்றதெ கொஞ்சம் பெரிய மனஸு பண்ணி தயவாக் கேக்கணும். எனக்குப் போராத காலம். இல்லைன்னா.... ...
" 346 * அட சட் ! விசயத்தை கக்கித் தொலையுமே. இரு இளுன்னு இளுக்கான் மனிசன். " " இதோ இந்த கார்டெ சேக்கப்போனேன். கோவிலுக்குப் பக்கத்திலெ தபால் பெட்டி தொங்கறது. தொங்கற தபால் பெட்டியிலே இந்தக் கார்டெ சேக்கப்போனேன். " போற வளியில இந்தக் கவர் ரோட்டிலே படுத்துக்கிட்டு , அர்ச்சகரே வாரும் வாரும்னு கூவி அளச்சதாக்கும் ! " " நான் சொல...
மறிச்சுண்டிருந்தது. " " ஆமாய்யா ! அப்படி கொண்டாரும் கதெய. * " கதை இல்லை. நெஜத்தெ அப்படியே சொல்றேன். தொங்கற தபால் பெட்டியிலே இந்த நீளக்கவர் வாயெ மறிச்சுண்டு வளஞ்சு கெடந்தது. " " அட... டா... டா ! " " இந்தக் கார்டெ ஆனமட்டும் உள்ளே தள்ளிப் பார்த்தேன். தள்ளித் தள்ளிப் பார்த்தேன். உள்ளே போகமாட்டேன்னு சொல்லிடுத்து , * " சொல்ல...
பண்ணலெ. தப்புத் தண்டாவுக்குப் போறவனில்லே நான். ஊருக்குள்ளெ வந்து விசாரிச்சா தெரியும். நாலு தலமொறயா நதீக்கிருஷ்ணன் கோவில் பூசை எங்களுக்கு. இன்னித் தேதி வரையிலும்.... " “ அட விசயத்தை சுருக்கச் சொல்லித் தொலையுமெ அய்யா. செக்குமாடு கணக்கா சுத்திச் சுத்தி வாரான் மனுசன். " " தொங்கற தபால் பெட்டி வாயிலெ ரெண்டு விரல் மட்டும் விட...
தெரியலெ. திருதிருன்னு விழிக்கறேன். மேலையும் கீழையும் பாக்கறேன். முன்னும் பின்னும் போகலெ எனக்கு. என்னடா சேறதுன்னு யோசிச்சேன். சரி , அந்த நதீக்கிருஷ்ணன் விட்ட வழின்னு மனசெ தேத்திண்டு , பெரிய தபாலாபீஸிலெ கொண்டு வந்து சேத்துப்புடறதுன்னு தீர்மானம் பண்ணிண்டு வறேன். " " அவ்வளவும் கப்ஸா , அண்டப் புளுகு ! " என்றான் எழுபத்திமூன்...
போவோம். " 348 அர்ச்சகர் எழுபத்திமூன்று நாற்பத்தியேழின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். அவர் அடைந்த கலவரம் பேச்சில் தெரிந்தது. ஸ்பரிசத்தில் தெரிந்தது. முகத்தில் பிரேதக்களை தட்டிவிட்டது. " நான் பொய் சொல்லலெ ; நான் ஒரு தப்பும் பண்ணலெ. நான் சொல்றது சத்தியம். நதீக்கிருஷ்ணன் கோவில் மூலவிக்கிரகம் சாட்சியாச் சொல்றேன். நா...
நடக்க ஆரம்பித்தான் அவன். அர்ச்சகர் மெதுவாகக் கையை இழுத்துக்கொண்டு பின் தொடர்ந்தார். அவருக்கு உடம்பெல்லாம் கூசியது. அவமானத்தால் உள்வாங்கி நடந்தார். அவருக்குத் தெரிந்த ஆயிரமாயிரம் பேர்கள் சுற்றிச் சூழ நின்றுகொண்டு வேடிக்கைப் பார்ப்பது போலிருந்தது. எல்லோரும் அதிசயத்தோடு பார்த்துக்கொண்டு நின்றார்கள். பஜாரைத் தாண்டித்தான் ஸ...
அவர்கள் முன்னால் நடந்துபோக வேண்டும். எல்லோரும் கடை வாசலில் நின்று பார்ப்பார்கள். அர்ச்சகருக்குத் தான் ஜெயில் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு நிற்பது மாதிரித் தோன்றிற்று. மனைவியும் குழந்தைகளும் முன்னால் நின்று நெஞ்சிலடித்துக்கொண்டு அழுகிறார்கள். போலீஸ் சேவகன் வந்து தடியால் அவர்களை வெளியே தள்ளுகிறான். எழுபத்திமூன்று நாற்பத்த...
தெரிந்தவர்கள் பத்துபேர் இருக்கத்தானே செய்வார்கள்.இது என்ன அநியாயம்என்று முன்வந்து சொல்ல மாட்டார்களா ? 349 ஆனால் வாயைத் திறந்தாலே முதுகில் அறை விழுமோ என்று பயந்தார். மேலும் அவருக்குத் தொண்டையை அடைத்தது. நிமிஷத்திற்கு நிமிஷம் வயிற்றிலிருந்து கனமான ஏதோ ஒன்று மேலெழும்பி நெஞ்சைக் கடைந்தது. துக்கத்தை விழுங்கி விழுங்கிப் பார்...
துடைத்துக்கொண்டார். சிறிதுதூரம் சென்றதும் நின்றார் அர்ச்சகர். தெரு விளக்கின் ஒளி அவர் முகத்தில் விழுந்தது. எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அவர் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தன. அர்ச்சகர் துண்டால் மூக்கைத் துடைத்துக்கொண்டு சொன்னார் : " நான் ஒரு தப்பும் பண்ணலெ. ஒரு தப்பும் பண்ணலெ. " இதைச் சொல்லும்போது அழுதுவிட்டா...
இன்ஸ்பெக்டருக்கிட்டே விஷயத்தைச் சொல்லும். இன்ஸ்பெக்டரு விட்டா நானா பிடிச்சுக் கட்டப் போறேன் ? " " இன்ஸ்பெக்டர் விட்டுடுவாரோ ? " “ எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும் ? " " இன்ஸ்பெக்டர்வெறொண்ணும் செய்யமாட்டாரே ? " 350 “ என்னது ? ” " இல்லே.... வந்து..... அடிகிடி இந்த மாதிரி... " அதைச் சொல்வதற்கே வெட்கமாயிருந்தது அவருக்கு , இத்த...
சந்தேகம் வந்திடிச்சின்னா எலும்பெ உருவி எடுத்துடுவாங்க. அதிலேயும் இப்ப வந்திருக்கிற இன்ஸ்பெக்டரு எமகாதகன் , நச்சுப்புடுவான் நச்சு. ” “ ஐயோ , எனக்கு என்ன செய்யணும் தெரியலையே " என்று அர்ச்சகர் பிரலாபித்தார். அந்தக் குரல் எழுபத்திமூன்று நாற்பத்தியேழின் மனதைத் தாக்கிற்று. “ உம்மைப் பார்த்தா எனக்கு எரக்கமாகத்தான் இருக்குது. ...
மீண்டும் எழுபத்திமூன்று நாற்பத்தியேழுதான் பேச்சை ஆரம்பித்தான். " ஒண்ணு வேணாச் செய்யலாம் ; அதும் பாவமேணு பாத்துச் செய்யணும். " 351 “ என்னது ? ” " எச்.ஸீ.ட்டெச் சொல்லிக் கேஸை ஒரு மாதிரியா வெளிக்கித் தெரியாமெ ஓச்சுடலாம். ” " அதாரு எச். R ? " " ஹெட் கான்ஸ்டபிள். " “ அப்படின்னாச் சொல்லும். நீர் நன்னா இருப்பேள். நதீக்கிருஷ்ண...
எனக்காகச் சொல்லணும். இல்லைன்னா நான் அவமானப்பட்டு அழிஞ்சி போயுடுவேன். இது பணத்தாலெ காசாலெ நடத்தற ஜீவனமில்லெ. கேஸுகீஸுன்னு வந்துடுத்தா உத்தியோகம் போயுடும். நான் சம்சாரி. அன்னத்துக்கு லாட்டரியடிக்கும்படி ஆயுடும். ஒரு மனுஷன் முகத்திலே முழிக்க முடியாது. நீர் எச். ஸிட்டெ சொல்லும். இந்த ஆயுஸு பூராவும் நதீக்கிருஷ்ணனோட சேத்து உ...
துட்டுப்பிடுங்கி. " “ என்னது ? " " துட்டுப்பிடுங்கி. காணிக்கை வச்சாத்தான் சாமி வரம் தரும். இந்த எளவுக்காகச் சுட்டித்தான் அந்த மனுசங்கிட்டே வள்ளிசா சிபாரிசுக்கு போறதில்லை நான். " 352 " என்ன கொடுக்கணும் ? " “ அஞ்சு பத்து கேப்பான். " " அஞ்சா ? பத்தா ? " " பத்து ரூபாய்க் காசில்லாமெ ஒரு கேஸெ ஓய்ப்பானா ? " " பத்து ரூபாயா ! "...
நாற்பத்தியேழுதான் பேச்சை ஆரம்பித்தான். “ என்ன ? என்ன சொல்லுதீரு ? " “ ஊஹூம். நான் எங்கே போவேன் பத்து ரூபாய்க்கு ? ” கணீரென்ற குரலில் சொன்னார் அர்ச்சகர். எழுபத்திமூன்று நாற்பத்தியேழுக்கு கோபம்தான் வந்தது. 353 " இப்போ யாரு வேய் தரணும்னு களுத்தெப்புடிக்கா ? யாரோ லஞ்சம் புடுங்குதாப்லெ படுதீரே. துரிசமா நடவும். இன்ஸ்பெக்டர் ...
நடவும். " சிறிது நேரம் சென்றதும் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. " இப்பம்தான் ஞாபகம் வருது. அன்னைக்கு டி.எஸ்.பி. ஆபிஸிலேருந்து ஒரு கடிதாசி வந்துச்சு. டி.எஸ்.பி. ஆபிஸிலேருந்து காயிதமெல்லாம் மாயமா மறஞ்சு போகுதாம். காக்கிச் சட்டைக்காரங்க நாந்துக்கிட்டு சாகப்படாதாங்கற தோரணையிலே எழுதியிருந்தாங்க. ...
இருவரும் ஸ்டேஷன் பக்கம் வந்துவிட்டார்கள். எழுபத்திமூன்று நாற்பத்தியேழுதான் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான். " நல்ல மனுசங்களுக்கு இது காலமில்லே. எத்துவாளி பயகளுக்குத்தான் காலம். ஈவு இரக்கம் இருக்கப்படாது. " 354 “ ஏனாம் ? * " பாருமே , மலைமாதிரி குத்தம் பண்ணிப்புட்டு நிக்கேரு. நீரு உடற கெதெயெல்லாம் ஒரு பயவுளும் நம்பப்போவதில்...
கூட்டாளிக்கெல்லாம் பட்டாத்தான் தெரியும். உம்மெச் சொல்லிக் குத்தமில்லெ , காலம் அப்படி. " அர்ச்சகருக்குச் சிரிப்பு வந்தது. " உம்மெ நைஸா கை தூக்கிவிட்டுப் போடணும்னு நெனச்சேன் பாரும். அந்தப் புத்தியெ செருப்பாலே அடிக்கணும் " என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. " நீர் சொல்றது சரி. என்னெக் காப்பாத்தணுங்கற நெனப்பு ரொம்ப இருக...
எடுத்தால்ல தெரியும் அஷ்டதரித்திரம் படறபாடு. ' " பகவான் விட்டது வழி. பதனஞ்சு வருஷமா தினம் தினம் அவனெக் குளுப்பாட்டறேன். விதவிதமா அலங்காரம் பண்ணிப் பாக்கறேன். சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணிப்பண்ணி நெத்தியிலே தழும்பு விழுந்துடுத்து. அந்த நன்னிகெட்ட பயல் அடி வாங்கித் தறதுன்னா தரட்டும். கம்பி எண்ண வச்சான்னா வைக்கட்டும். ” அர்ச்ச...
நடந்தார். 355 “ அப்பம் ஒரு காரியம் செய்வமா ? ” என்று கேட்டான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. " என்ன ? " " நீரும் அப்படியொண்ணும் டாட்டாவுமில்லே பிர்லாவுமில்லே. ஏதோ ஒரு மாதிரியா காலத்தைத் தள்ளிட்டிருக்கீரு. உமக்காகச்சுட்டி ஒண்ணு வேணாச் செய்யலாம். ” “ விஷயத்தைத் தெளிவாச் சொல்லலாமே. ஏன் சுத்திச்சுத்தி வளைக்கணும் ? " என்று க...
இருக்கு. * அர்ச்சகர் முன்பின் யோசிக்கவிடாமல் பணத்தை வாங்கி விட எண்ணினான் அவன். அர்ச்சகர் முன்னைவிடவும் அமைதியாகச் சொன்னார் : " இதென்ன பேச்சு இது ! அஞ்சு ரூபாய் தரலாம்னா பத்தாத் தந்துடப்படாதா ? அம்புட்டுக்கெல்லாம் இருந்தா நான் ஏன் நதீக்கிருஷ்ணனெ குளுப்பாட்டப் போறேன். மேலும் இப்போ நான் என்ன திருடினேனா , கொள்ளையடிச்சேனா ,...
அர்ச்சகரைக் கண்டதுண்டமாக வெட்டிப்போட்டுவிடலாம் போலிருந்தது. * மகா பிசுநாறி ஆசாமியா இருக்கீரே ! " என்றான். 356 “ என்ன சேறது ? அப்படித்தான் என்னெ வச்சிருக்கான் அவன். " " அவன் யாரு அவன் ? " " மேலே இருக்கான் பாரும் , அவன். " இருவரும் ஸ்டேஷன் முன்னால் வந்துவிட்டார்கள். ஸ்டேஷனுக்கு முன்னாலிருந்த வெற்றிலைப் பாக்குக் கடையில் ,...
சளசளவென்று பேச்சை வளர்த்திக்கொண்டிருதான் அவன். அர்ச்சகர் நின்றுகொண்டிருந்த இடத்தை அவன் அசைப்பிலும் திரும்பிப் பார்க்கவில்லை. அவர் போவதானால் போகட்டும் என்ற தோரணையில் நிற்பது போலிருந்தது. ஆனால் அவர் கற்சிலை மாதிரி அங்கேயே நின்றார். அண்ணாச்சிக்குப் பேச்சு சலித்துவிட்டது. எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகர் பக்கம் திரும...
, உடாமெ பிடிக்கீரே. " " என்னப்பா விஷயம் ? ” என்று கேட்டார் அண்ணாச்சி. 357 “ ஒண்ணுமில்லெ. என் கொளந்தெக்குப் பொறந்த நாளு நாளைக்கு. பூசை கீசை பண்ணி கொண்டாடணும்னு சொல்லுது அது. அதுதான் இவரிட்டே கேட்டுக்கிட்டே வாறேன். சாமான் கீமான் வாங்கணுங்காரு. ஆனா பணத்துக்கு எங்கே போகுது ? "அடி சக்கேஎன்று மனதில் சொல்லிக்கொண்டார் அர்ச்சகர...
ஆரம்பித்தான். அர்ச்சகர் பின்னால் ஓடிஓடிச் சென்றார். " இந்தாரும் ஓய் , கொஞ்சம் நில்லும். என்ன இது ? நடுரோட்டிலெ நிக்கவச்சுட்டு நீர் பாட்டுக்குக் கம்பியெ நீட்டறேரே ? " “ அட சரிதான் , போமய்யா. " “ என்னய்யா இது , எனக்கு ஒண்ணும் புரியலையே. " " வீட்டெப் பாத்துப் போமய்யா. போட்டு பிராணனெ வாங்குதீரே. " " என்னன்னமோ சொன்னேர். ஆ ஊ...
முகத்தையே இமைக்காமல் பார்த்தான். 358 அர்ச்சகரும் இமைக்காமல் பார்த்தார். அவருக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ஆனால் அதே சமயத்தில் அடக்க முடியாத சிரிப்பும் வந்தது. இலேசான புன்னகை உதட்டில் நெளிந்தது. அர்ச்சகர் சிரிப்பை அடக்குவதையும் அவர் உதட்டில் சிரிப்பு பீறிட்டு வழிவதையும் கவனித்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. சிரிப்...
அட்டகாசமாகச் சிரித்தார். எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அர்ச்சகரிடம் மிக நெருங்கி நின்றுகொண்டு , அவர் முகத்தைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னான் ; " வீட்டுக்குப் போம். நானும் வீட்டுக்குத்தான் போறேன். " குரல் மிக அமைதியாக இருந்தது. அர்ச்சகர் அவன் முகத்தைப் பார்த்தார். சற்று முன்னால் , அவர் முன் நின்ற ஆள் மாதிரியே இல்லை. " ந...
மிச்சமோ ? ” என்று கேட்டார் அர்ச்சகர். " உண்மைதான் வேய் , நாளைக்குப் பொறந்த நாள். " “ என்ன கொழந்தே ? " " பொம்புளெப் புள்ளே. " " தலைச்சனா ? " 359 “ ஆமா , கலியாணம் முடிஞ்சு பதினொண்ணு வருசமாவுது. ” " ஓஹோ , பேரென்ன ? " * கண்ணம்மா. “ நம்ம ஸ்வாமிக்கு ரொம்ப வேண்டிய பெயர் ” என்றார் அர்ச்சகர். எழுபத்திமூன்று நாற்பத்தியேழு சிரித்...
நாளைக்கப்பறம் ஸ்வாமி கண் திறந்து கையிலெ தந்திருக்கார். அதுக்கு ஒரு குறைவும் வைக்கப்படாது ; வைக்க உமக்கு அதிகாரம் கிடையாது " என்று அடித்துப் பேசினார் அர்ச்சகர். போடுது. " “ அது சரிதாய்யா. யாரு இல்லைன்னு சொல்லுதா ? ஆனா கைச்செலவுக்கில்லா திண்டாட்டம் " போயும் போயும் ராப்பட்னிக்காரன் , ஸ்வாமி குளுப்பாட்டறவனைப் பிடிச்சா என்ன...
இதுகூட தெரிஞ்சுக்காமெ இருக்கேரே " என்றார் அர்ச்சகர். 360 எழுபத்திமூன்று நாற்பத்தியேழு வாய்விட்டுச் சிரித்தான். “ ஒரு பயலும் கையிலெ சிக்கலெ. நாயா அலஞ்சு பார்த்தேன். பிறந்தநாள் அயிட்டம் வேறே மனசிலே உறுத்திட்டு இருந்தது. அர்ச்சகரானா அர்ச்சகர்ணு பாத்தேன். கையெ விரிச்சுட்டீரே ! பொல்லாத கட்டைதாய்யா நீரு. " " நானும் விடிஞ்சு ...
யாருக்கோ பல்லு தந்தி அடிச்சுதே , யாருக்கு ? யாருக்குக் கையும் காலும் கிடுகிடான்னு வெறச்சுதாம் ? ” " மொதல்ல கொஞ்சம் பயந்துதான் போனேன். ஏன் பொய் சொல்லணும். இருந்தாலும் என்ன ட்டு உருட்டிப் புட்டீர் ! " “ என்ன செய்யுது சாமீ ? இந்த சாண் வயத்துக்காகத் தானே இந்த எளவெல்லாம். இல்லாட்டி மூக்கெப் பிடிச்சுக்கிட்டு உக்காந்திரலாமே. ...
அவாளிடம் போய் ஈ ஈன்னு இளிச்சுட்டு நிக்கறேன். உங்களெ விட்டா உண்டா என்கிறேன். ஆழ்வார் நாயன்மார்கள் கெட்டது கேடு என்கிறேன். கடைசியா , போறத்தே ரெண்டணா வைக்கிறானா , நாலணா வைக்கிறானான்னும் கவனிச்சுக்கறேன். அணாவெ தீர்த்தத்தில் அலம்பி இடுப்பிலே சொருகிக்கறேன் " என்றார் அர்ச்சகர். இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். இரண்டு பேரும் ந...
புடிச்சுக்கப் போறான். யார் வீட்டிலெ நோவு எடுத்திருக்கோ ? " என்றார் அர்ச்சகர். கடிதங்களைத் தபாலில் சேர்த்துவிட்டு எதிர் சாரியிலிருந்த வெற்றிலை பாக்குக் கடைக்கு வந்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. மட்டிப்பழக் குலையிலிருந்து நாலைந்து பழங்களைப் பிய்த்தான். “ இந்தாரும் , சாப்பிடும் " என்று அர்ச்சகரை நோக்கி நீட்டினான். அர்...
எழுதிக்கிட்டே இருக்கேன் ” என்றார் கடைக்காரர். " சும்மா எழுதுங்க. ரெண்டுநாள் களியட்டும். செக்கு கிளிச்சுத் தாறேன். " நடந்து , இரண்டு பேர்களும் பரஸ்பரம் பிரியவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டார்கள். * சாமி , அப்பொ எனக்கு விடைகொடுங்க. ஒண்ணும் மனசிலே வச்சுக்கிடாதீங்க " என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு " என்ன நெனக்கிறது. கா...
முகத்திலே போய் முளிக்கவே வெக்கமாயிருக்கு. ஆயிரம் நெனப்பு நெனச்சுக்கிட்டு இருக்கும். சரி , நான் வாறேன் ” என்று சொல்லிவிட்டு நடந்தான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. " ஓய் , இங்கே வாரும் " என்றார் அர்ச்சகர். வந்தான். அர்ச்சகர் அரை வேஷ்டியை இலேசாக அவிழ்த்துவிட்டுக் கொண்டார். இப்பொழுது வயிற்றில் ஒரு துணி பெல்ட் தெரிந்தது. து...
நாற்பத்தியேழு ஒரு நிமிஷம் தயங்கிவிட்டு கையை நீட்டி வாங்கிக் கொண்டான். “ கொழந்தை பிறந்தநாளுக்கு குறை ஏற்படாதுன்னு தறேன் " என்றார் அர்ச்சகர். “ சாமி , ரொம்ப உபகாரம் , ரொம்ப உபகாரம் " என்றான் எழுபத்திமூன்று நாற்பத்தியேழு. அவன் குரல் தழதழத்தது. " ஆனந்த பாஷ்பம் ஒண்ணும் வடிக்க வேண்டாம். ஒண்ணாம் தேதி சம்பளம் வாங்கினதும் திருப...
நம்ம கோயிலுக்கு கூட்டிண்டு வாரும் கொழந்தெயெ. கண்ணம்மா வந்தா ரொம்ப சந்தோஷப்படுவன் நதீக்கிருஷ்ணன். நானே கூடயிருந்து ஜமாய்ச்சுப்புடறேன். " " சரி , அப்படியே கூட்டிட்டு வாறேன். " “ அப்பொ நான் வறேன். முதல் தேதி ஞாபகமிருக்கட்டும் " என்று சொல்லிக்கொண்டே இருட்டில் நடந்தார் அர்ச்சகர். எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அவர் மறைவதைப் ப...