text stringlengths 11 513 |
|---|
கண்டதும் மலைத்து நின்று குரைத்தது. ஓடையின் தென்கரையில் கொஞ்ச தூரம் ஓடியது. வண்டல் மாறி தண்ணீர் தட்டுப்பட்டது. பாய்ந்து நீந்தி வடகரையில் ஏறிக் கிழக்கே வண்டிப் பாதையில் விரட்டி ஓடியது. அதற்குள் முருகேசத் தேவர் கூட்டத்தினர் எட்டிப் போய் விட்டார்கள். வைரவன் கோயில் பொட்டல் ஆலமரம்தான் இவர்களுக்குக் குறி. கெதியாக ஓடினால் ஒன்ன... |
" வேய் ரா..... வேய் ரா.... * களவாணிப் பயலுகளை ஒரு தடவை ஊருக்குள் விட்டுவிட்டால் அப்புறம் ஒண்ணும் மிஞ்சாது. மனுஷன் குடியிருக்க நீதி இல்லாமல் போயிரும். இதுவரைக்கும் அக்கம்பக்கத்திலே , அடுத்த ஊரு மூணாவது ஊருலேதான் களவுபோனது. கவுல்பட்டிக்குக் களவாணிப்பயலுக வந்தது இதுதான் முதல் தடவை. அவிழ்ந்த தலைமயிரைக் கூட அள்ளி முடியாமல் ... |
ஓங்கி நாயின் வாயில் அடித்தார். வேட்டியை விட்டுவிட்டது. போர்வையைக் கவ்வியது. பிடறியில் கிடந்த கிடாயை கீழே போட்டார். செருப்புக்களையும் கீழே போட்டார். போர்வையை உதறி விட்டார். வேல் கம்பு மட்டும் கையில் இருந்தது. நாய் , நெஞ்சில் குதறியது. இடது கையால் நாயின் மூஞ்சியில் அடித்தார் , வேல் கம்பை ஓங்கினார். வலது மணிக்கட்டை கவ்விக... |
குனிந்து வேல் கம்பை எடுப்பதற்குள் நாய் முதுகில் பாய்ந்தது. கீழே சாய்ந்தார். முன்னால் போனவர்கள் வெகு தூரம் போய்விட்டார்கள். பின்னால் ஊர் திரண்டு வந்து கொண்டிருந்தது. " வேய் ரா... வேய் ரா..... நிலா வெளிச்சத்தில் சனம் வருவது தெரிந்தது. நாயைப் புரட்டினார். கால் நகத்தால் உடம்பைப் பிறாண்டியது. நாயோடு முள் வேலியில் புரண்டார்.... |
சத்தத்தோடு நாய் மல்லாக்க சரிந்தது. முத்துத் தேவரின் வாய் , கை , உடம்பெல்லாம் ரத்தம். " வேய் ரா... வேய் ரா... " 396 சனம் நெருங்கிக் கொண்டிருந்தது. முத்துத்தேவர் எழுந்து வேட்டியைத் தார்ப்பாய்ச்சிக் கட்டினார். போர்வையைக் காயங்களின் மேலே போர்த்திக் கொண்டார். கிடாயைத் தூக்கி தோளில் போட்டு , வேல் கம்பு , செருப்புகளை வலது கைய... |
போனவங்க , போகாதவங்க எல்லா ஆம்பளைகளுக்கும் , போலீஸார் கம்பியைக் காய வைத்து துடிக்கத் துடிக்க , கதறக்கதற சூடு போட்டார்கள். கன்னத்திலே , தொடையிலே , கையிலே , கழுத்திலே , வயிற்றிலே , முதுகிலே என்று பலமாதிரி சூடு- அன்றைக்கு இழுத்த சூடுதான் , இருளாண்டித் தேவரின் தொடை இடுக்கில் தழும்பேறிக் கிடந்தது. இருளாண்டித் தேவர் புரண்டு ப... |
முன் ஜென்மத்திலே புண்ணியம் செஞ்சிருக்கணும் மாப்ளேய்... " இருளாண்டித் தேவர் உதட்டோரம் சிரித்தபடி கால்களை ஒடுக்கி மறுபடியும் தலை சாய்த்துக் கொண்டார். ரம்மி ஆட்டத்தில் ஜோக்கர் வெட்டியதில் தகராறு. தாயக் கட்டத்தில் ஒருநாய் வெட்டுப்பட்ட சந்தோஷம். சிரிப்பும் கேலியுமாய்ச் சத்தம். 397 கிழக்கே இருந்து முருகேசத் தேவர் வந்தார். “ ... |
இருளாண்டித் தேவரையும் கந்தையாத் தேவரையும் எழுப்பினார்கள். எல்லோரும் கிளம்பி மூத்தவர் வீட்டுக்கு நடந்தார்கள். சேது , கால் , முகம் கழுவி துடைத்துவிட்டு அப்பாவுடைய போட்டோவுக்கு முன்னால் நின்றான். அய்யாவின் நெற்றியில் குங்குமம் இட்டிருந்தது. உச்சிநத்தம் காசிநாதன்செட்டி வீட்டில் கன்னம் போட்டு களவாடப் போனபோது அந்த ஊர்ச் சனங்... |
கண்கலங்கிப் பார்வையை மறைத்தது. வீட்டு வாசலில் ஆள் அரவாட்டம் தெரிந்ததும் சேது திரும்பி வாசலைப் பார்த்தான். " மருமகனே *.. கூட்டத்துக்கு முன்னால் முருகேசத் தேவர் நின்றார். சேது வாசலுக்கு வந்தான். “ கும்பிடுறேன் மாமா.. கும்பிடுறேன் சின்னய்யா.. கும்பிடுறேன் மச்சான்.. வாங்க எல்லாரும் வாங்க... " கண்டதும் சேது , கையெடுத்துக் க... |
ஒப்புக்கொண்டுட்டீங்களா ? " - நாகுத்தேவரின் கன்னத்தில் தழும்பு கிடந்தது. " நாளைக்குப் போயி ஜாய்ன்ட் பண்றேன் மாமா. " " எங்கே டூட்டி ? ” - குருசாமித் தேவரின் வலது கையில் தழும்பு இருந்தது. " பழனி பக்கத்திலே மடத்தாகுளம் போலீஸ் ஸ்டேசன்லே " " சப் - இன்ஸ்பெக்டருதானே ? " - கந்தையாத் தேவருக்குப் பிடறியில் தழும்பு. “ ஆமாம் , சின்... |
ஆளுஎல்லோருக்கும் பெருமை தாங்கலே. * உங்க அண்ணனை எங்கே காணோம் ? " “ எனக்கு சப் - இன்ஸ்பெக்டர் வேலை கெடைச்சா.. இருளப்ப சாமிக்குக் கிடாவெட்டி பொங்கல் வைக்கணும்னு அம்மா நேர்த்திக் கடன் வச்சதாம். அதுக்கு ஒரு கிடாக் குட்டி வெலைக்கு வாங்க அண்ணன் வெளியே போனாரு. " 399 முருகேசத் தேவர் கன்னத்தில் கிடந்த தழும்பைத் தடவிக்கொண்டே “ என... |
குலதெய்வம் இருளப்பனுக்கு நாளைக் காலையிலே ஒரு கிடாய் இல்லே.. இருபத்தியோரு கிடாய் வெட்டுப்படுது. " என்றவர் திண்ணையில் இருந்த எல்லோரையும் பார்த்து “ ஏய்..ய்... வீட்டு வீட்டுக்கு ஒரு கிடாயைப் பிடிச்சுக் கொண்டு வந்து இங்கே கட்டுங்கடா ” என்று உத்தரவிட்டார். “ எதுக்கு மாமா.. வேண்டாம்... “ சேது மருகி மருகி எல்லோரையும் பார்த்தா... |
சொல்லுங்க ” “ நீங்க சப் - இன்ஸ்பெக்ட்டர் உடுப்பு மாட்டிக்கிட்டு வந்து , கொஞ்ச நேரம் எங்க எல்லாரோடயும் உக்கார்ந்து பேசிக்கிட்டிருக்கணும். " முருகேசத் தேவரின் கைகளைச் சேது பிடித்துக் கொண்டான். " இதோ வர்றேன் மாமா. " வீட்டிற்குள் போனான். எல்லோரும் உள்வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான். சிறிதுநேரத்தில் சேது ப் - இன்ஸ்பெக்டர் ... |
வந்துவிடு " என்று நேற்றே சொல்லியிருந்தார் மிட்டு மாமா. வழக்கம் போல் கண்ஷியாம் மாமாவுக்குப் பணம் கேட்டு உருக்கமாகக் கடிதம் எழுத வேண்டும். மிட்டு மாமா என் பாட்டியின் சகோதரர் , பரம ஏழை. கண்ஷியாம் மாமா மிட்டு மாமாவின் ஷட்டகர் , பெரிய பணக்காரர். பொதுவாக மிட்டு மாமா எழுதும் கடிதங் கள் சுவாரஸ்யமாக இருக்காது. ஆனால் , வயது காரண... |
அவற்றை நான் மட்டுமே கையாள நியமிக்கப் பட்டேன். விளைவாக , மிட்டு மாமாவுக்கும் எனக்கும் இடையே ஒரு கனவானுக்கும் அவனது ஆசைநாயகிக்கும் இடையே ஏற்படக்கூடியதைப் போன்ற சின்னச்சின்ன ரகசியங்கள் இழைந்த ஒரு அந்நியோன் னியம் உருவாகியிருந்தது. நான் சென்ற போது மிட்டு மாமா பெரிய திண்டில் தலை சாய்த்துப் படுத்திருந்தார். கால்கள் பாலித்தீன்... |
ஒட்டிய கன்னங்கள் , அடர்த்தியான புருவம் , நீண்ட மூக்கு , மெலிந்த தேகம் , கதர் முண்டு , கதர் பனியன் , நைந்து போன பூணூல் , மிட்டு மாமாவின் மனைவி ஜமுனா மாமி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கட்டடத்தின் பின்புறம் இருந்த மகன்கள் மற்றும் மருமகள் களோடு அவருக்கு ஒத்துவரவில்லை. தெருவைப் பார்த்த மாதிரி இருந்த இந்த முன் அறைக்கு அவரை... |
சவுக்கார்பேட்டைவாசி மற்றும் தங்களின் ஷட்டகர் மிட்டுவின் வணக்கங் களை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன். இங்கு நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக இருக்கிறோம். அதேபோல் , உங்கள் குடும்பத்தாரும் மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள் என்பது குறித்த சமாச்சாரத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். தற்போது எழுத நேர்ந்த விஷயம் என்ன வ... |
என்றுதான் விரும்புகிறேன். ஆனால் , சாவதும் வாழ்வதும் நம் கையிலா இருக்கிறது ! நான் தற்கொலைகூடச் செய்து கொள்வேன். ஆனால் , தற்கொலை செய்து கொள்வதற்கும் எனக்கு ஓரிரு இடையூறுகள் இருக்கின்றன. முதலாவதாக , என் 73 வயதில் ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டால் யாரும் அவனுக்காக வருத்தப் படப்போவதில்லை. ஒழிந்தது சனியன் என்று இருந்துவிடுவ... |
கொள்ள முடியும் ? மேலும் , சீழும் நீரும் வடியும் நாற்றமடிக்கும் கால்களோடு நான் செத்தால் அது நன்றாக இருக்காது. இதையும் தாங்கள் அறிவீர்கள். எப்படியும் , என் பந்துக்கள் விரும்புவது போல் நான் சாகவே விரும்பு கிறேன். சென்ற மாதம் நீங்கள் தயவு செய்து அனுப்பிய பணத்தால் நான் நேற்று முன்தினம் வரை , ராவண ஐயர் தெருவில் உள்ள குஜராத் ... |
புதிதாக ஒரு டாக்டர் வந்திருந்தான். அவன் பெயர் சனத்குமார் ஜெயின் , மார்வாடி. இவனது தந்தை சுகன்மல் ஜெயினுக்குத் தங்கசாலைத் தெருவில் எவர்சில்வர் ஹோல்சேல் பாத்திர வியாபாரம் உள்ளது. NSC போஸ் ரோட்டின் திருப்பத்தில் நியூ ஆனந்த பவன் ஓட்டல் அருகேதான் இவரது கடை உள்ளது. ஆளைப் பார்த்தால் நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள். உங்க ளுக... |
பரிசோதித்து மருந்து மாற்றிக் கொடுத்திருக்கிறான். பூசிக்கொள்ள ஆயின்மென்ட்டும் , சாப்பிடுவதற்குச் சில மாத்திரைகளும் கொடுத்திருக்கிறான். 402 கட்டுக்கூட ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றினால் போதும் என்று சொல்லி விட்டான். அரிப்பையும் நீர் வடிவதையும் இன்னும் ஆறு மாதத்தில் நிச்சயம் குணப் படுத்திவிட முடியும் என்று கூறியிருக்கிறான்... |
வருவதற்கு இரண்டு ரூபாய் என்று பேசிவைத்திருக்கிறேன். சென்ற வாரத்தோடு பணம் தீர்ந்து விட்டதால் அவன் என்னை இப்போது கடனுக்குத்தான் அழைத்துச் செல்கிறான். அவனுக்கு நான் 6 ரூ. பாக்கி , காத்தவ ராயனின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று காலையில்தான் தகவல் வந்தது. எனவே காத்தவராயன் செங்கல்பட்டுக்குப் போயிருக்கிறான். அவன் எப்போது த... |
எல்லாம் வெறுத்துப் போய்விட்டது. நான் சாவதுதான் எல்லோருக்கும் நல்லது. உங்களுக்கும் மாதாமாதம் பணம் அனுப்பும் சுமையும் குறையும். உங்களுக்குத் தெரியும் , என் மகன்கள் யாரும் சரியில்லை என்பது. பெரியவன் புல்புல்தாரா வாசித்துக் கொண்டும் , தன் மனைவி பின்னால் அலைந்து கொண்டு மிருக்கிறான். அவன் மனைவி - அந்தக் குள்ள ராணி - எப்பேர்ப... |
கொஞ்சம் குறைகிறது. எடுத்து வாஎன்றேன். இது ஒரு தவறா ? முகத்தை லலிதா பவார் பாணியில் ஒரு வெட்டு வெட்டித் திருப்பிக் கொண்டு போய்விட்டாள். வயசுக் காலத்தில் உப்பைக் குறைத்தால் என்ன என்று அவளுக்கு சப்போர்ட்டாகப் பேசவந்து விட்டான் இந்த லாயக்கற்ற நாய் ( என் மூத்த மகன் ). சின்னவன் கதையும் உங்களுக்குத் தெரிந் ததுதான். பாங்க்கில் ... |
இரவுதோறும் கூட்டு பஜனைக்கு ஏற்பாடு செய்து வீட்டையே துவம்சம் பண்ணுகிறான். தபேலாவும் , சப்ளாக் கட்டையும் வைத்துக் கொண்டு அவன் நண்பர்கள் அடிக்கும் லூட்டி கொஞ்சமில்லை. இப்படி பஜனை முடிந்ததும் நள்ளிரவுக்கு மேல் இந்த நாய்கள் எல்லோரும் மகேஸ்வரி பவனில் பூரியும் லஸ்ஸியும் பீடாவும் சாப்பிடக் கிளம்பி விடுவார்கள். மகேஸ்வரி பவனில் ... |
நினைப்பு. 403 கவர்னர் என்றதும் ஞாபகம் வருகிறது. பிரபுதாஸ் பட்வாரி நம் ஸ்ரீநாத்ஜியின் கோவிலுக்கு வந்திருந்தார். என்ன எளிமை ! என்ன எளிமை ! நம் நாத்தியின் முன் தலைகுனிந்து வணக்கம் தெரிவித்துவிட்டுப் போனார். அவர் சொன்னார் : எங்களுக்கு இந்திராகாந்தி மேல் எந்தக் கோபமும் இல்லை. அந்தம் மாவுக்கு எப்பவுமே கொஞ்சம் வீம்பு ஜாஸ்திதா... |
புரியுமே ! " " பேசாமல் நான் சொல்வதை எழுது. அவனுக்கு மனைவி , குழந்தைகளுக்குச் செய்தே மீள முடிவதில்லை. நேற்று முன்தினம் நடந்தது. இதை எழுதும் போது என் கண்களில் கண்ணீர் தளும்புகிறது. " நான் மிட்டு மாமாவின் கண்களைப் பார்த்தேன். “ என்னடா பார்க்கிறாய் ? எழுது. " " வீட்டில் தேங்காய் எண்ணெய் தீர்ந்து விட்டது. இவன் தண்ணீரை விட்ட... |
தலைகுளித்து , எண்ணெய் போடுவதை மாலைவரை ஒத்திப் போட்டு விட்டுச் சமாளித்துவிடுகிறார்கள். எண் ணெய் போடாமல் என் முன்வழுக்கை காய்ந்து தலையே எரிகிற மாதிரி இருக் கிறது. என் கொஞ்சநஞ்ச முடியும் தேங்காய் நார் மாதிரி சிலுப்பிக்கொண்டு நிற்கிறது. முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவே பயமாக இருக்கிறது... " நான் மாமாவின் தலையைப் பார்த்து அவ... |
கோபால் ( செல்லாக்காசு , ஓட்டாண்டி ) தான். உங்கள் சகோதரி , அதாவது என் மனைவி , இறந்தபோது அவளுடைய டாகுர்ஜிக்களின் சேவையைத் தொடர்ந்து செய்ய நான் ஏற்றுக் கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என் இறப்புக்கு முன்பாக , இந்த விக்கிரகங்களை நான் உங்களிடம் தந்துவிட விரும்புகிறேன். இந்த விக்கிரகங்கள் எங்கள் குடும்பத்தில் வழிவழியாக இ... |
குடிப்பாள். அவளுக்குப் பிறகு உங்கள் சகோதரியும் அப்படியே செய்து வந்தாள். உங்கள் சகோதரி போனபின் நான்தான் ஏதோ முடிந்தவரை செய்துவருகிறேன். நான் தினம் குளிக்க முடிவதில்லை என்பதைத் தாங்கள் அறிவீர்கள். கால்கட்டு மாற்றும் அன்றுதான் குளிக்க முடிகிறது. அதனால் ஒருநாள் விட்டு ஒருநாள் தான் பூஜை செய்கிறேன். எனக்கு வருத்தமெல்லாம் , ச... |
வேண்டியுள்ளது. மாலையில் அம்பிஸ் கபேயிலிருந்து வரும் இரண்டு இட்டிலியும் ஒரு வடையும்தான். கடவுள் இதை ஏற்றுக்கொள்வார் என்றுதான் நம்புகிறேன். எல்லாவற்றுற்கும் சிரத்தைதான் முக்கியம். என் மருமகள்களை நம்ப முடியாது. அவர்களுக்கு இவற்றின் அருமை தெரியாது. வீசி எறிந்துவிடுவார்கள். அல்லது குழந்தை களுக்கு விளையாடக் கொடுத்து விடுவார்... |
ஜரிகைக் குல்லாயும் போட்டுப் பொட்டும் இட்டுவிட்டால் சாட்சாத் கிருஷ்ணனே நம் முற்றத்தில் வந்து தவழ்ந்து கொண்டிருப் பது போல் இருக்கும். நான் இறந்து விடுவதற்கு முன் இந்த டாகுர்ஜிக்களை உங்களிடம் ஒப்படைத்து விட விரும்புகிறேன். என் சகோதரியிடம் , அதாவது உங்கள் மனைவியிடம் கூறுங்கள். இது என் கடைசி ஆசையென்று. நம் காலம் முடிந்த பின... |
செய்து விடுங்கள். இதுதவிர என்னிடம் சில தெய்வீகப் புத்தககங்களும் ஒரு குட்டிக் குடத்தில் கொஞ்சம் கங்கா ஜலமும் இருக்கிறது. இதையெல்லாம்கூட நான் உங்களுக்கே கொடுத்துவிட விரும்பு கிறேன். புத்தகங்களில் குறிப்பாக ,ஹனு மான் சாலிசாவும்( ஆஞ்சயே கவசம் ) டோங்கரே மஹ்ராஜின் ஆசிபெற்ற பாக வதமும் நீங்கள் அவசியம் வைத்துக் கொள்ள வேண்டும். ... |
, எங்கிருந்து வரும் என்பதுதான் எனக்குப் புலப்படவில்லை. நாம் வலியப் போய் நின்றாலும் இந்தப் ப்ருத்வியில் நம் பிரயாணம் முடியும் வரை , சாவு நம்மை அரவணைத்துக் கொள்ளாது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். சென்ற வாரம் , பட்டம் விட்டுக் கொண்டிருந்த ஜீவன்லாலின் எட்டு வயது மகன் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டான். அவன் அதிர்... |
ஒரு காயம் இல்லை. இடறி விழுந்ததில் கழுதைக்குத்தான் பாவம் , பின்னங்கால் முறிந்துவிட்டது. ஜீவன்லாலை உங்களுக்குத் தெரியும். மகாக் கஞ்சன். கழுதையின் சிகிச்சைக்கு ஒரு பைசாக்கூடத் தரமாட்டேன என்று கூறிவிட்டான். கழுதையை ரிக்ஷாவில் வைத்து மாட்டாஸ் பத்திரிக்குக் கொண்டு போவதற்கு அவனிட மிருந்து மூன்று ரூபாயை வாங்குவதற்குள் , போதும்... |
நான் சாகத்தான் வேண்டும் என்று. நான் சாவதற்கு நிறையக் காரணங்கள் இருந்தும் , நான் சாகாமல் இருக்கிறேன் என்று நினைத்தால் எனக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்து வருகிறது. என்னோடு படித்த ரஞ்சித் ப்ரோக்கர் பத்து நாட்களுக்கு முன்பு எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் ஒரே மூச்சில் போய்விட்டான். இப்படி எனக்குத் தெரிந்து , இந்த ஒரு மாத... |
சுபத்திராவுக்கும்கூட இந்த இரண்டு வியாதியும் இருக்கிறது. எனக்குத் தான் ஒன்றும் இல்லை. சிரங்கு , வெடிப்பு என்று சில்லறை வியாதிகள் தவிர. சென்ற வாரம் என் பெரிய மருமகள் சொன்னது போல் நான் நிஜமாகவே நொண்டி நாயைப் போல் உணர்கிறேன். இந்த ஏகாம்பரேஸ்வர் அக்ரகாரத்தில் எனக்காக அழப்போகிறவர்கள் இனி யாரும் இல்லை. இந்த அக்ரகாரமே களை இழந்... |
இடித்துவிட்டு மாடிக் கட்டிடம் கட்டி எவர்சில்வர் பாத்திரக் கடைக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டு விட்டார்கள். ராவண ஐயர் தெருவிலுள்ள பள்ளிக்கூட மணிக்கூண்டு இப்போது தெரிவதில்லை. கோவில் பிரகாரத் தூண்களில் மைக்குகளைப் பொருத்தி மெல்லிசை பஜனைகள் செய்கிறார்கள். அப்பழுக்கற்ற குஜராத்திகள் புழங்கிய தெருக்களில் இப்போது பாத்திரக் கடை ... |
மறைந்து விட்டார்கள். அந்த அரச மரம் முன்பு தந்த ஆசுவாசம் இப்போது காணாமல் போய் விட்டது. கிழக்குக் கோடியில் என் தங்கை நாத்தி பெஹ்ன் இருக்கும் கட்டடத்தையும் விலை பேசிவிட்டார்கள் அறுபது லட்சத் துக்கு. இதனால் , முப்பது குடும்பங்கள் தெருவில் நிற்கப்போகின்றன. கூடு கலைத்து விரட்டப்பட்ட பறவைகள்போல அவர்கள் பிரியக் காத்திருக்கிறார... |
இழுத்துக் கொள் , உன் பாசக் கயிற்றுக்கு மோசம் வந்துவிடாதுஎன்று. கடைசியாக , இன்னொரு வேண்டுகோள். நான் இறந்துபோனால் , என் ஆன்ம முக்திக்காக என் வீட்டில் அல்லது உங்கள் வீட்டில் என்றாலும் பரவாயில்லை , பாகவத பாராயணம் அவசியம் செய்துவிடுங்கள். மற்றபடி விசேஷமாகக் குறிப்பிட்டுச் சொல்லும்படி வேறொன்றும் இல்லை. மகிழ்ச்சியும் சந்தோஷமு... |
மிட்டு. " 407 தாள்களை ஒழுங்குபடுத்தி அந்த நீண்ட கடிதத்தை மடித்துக் கொண்டேன். வழக்கம் போல் மிட்டு மாமா தனது பூணூலில் தொங்கிய சின்னச் சாவியைக் கொண்டு தன் தகர கஜானாவைத் திறந்து ஒரு பெரிய உறையையும் தபால் தலைகளையும் கொடுத்தார். முகவரி எழுதி எடுத்துக் கொண்டதும் கூறினார் " சோம்பல்பட்டுக் கடிதத்தைக் கண்ட தபால் பெட்டியில் போட்ட... |
மூன்று நான்கு நாட்கள் கழித்து இரவு எட்டு மணிக்குத் தந்தி மூலம் செய்தி வந்தது. நான் மிட்டு மாமாவுக்குத் தாக்கல் சொல்ல ஓடினேன். மிட்டு மாமா அயர்ந்து தூங்கிக் கொண் டிருந்தார். நான் அவரது தோளை உலுக்கி எழுப்பினேன். " என்னடா விஷயம் ? " " நாம் மோசம் போய்விட்டோம் மாமா. " “ என்ன ஆயிற்று ? " -டுமலைப்பேட்டையிலிருந்து தந்தி வந்திர... |
சிரித்துப் பேசியபடி சாப்பிட்டிருக்கிறார். உங்கள் கடிதத்தைக்கூட இரண்டு மூன்று முறை படித்தாராம். சிறிது தூங்கப்போனவர் பிறகு எழுந்திருக்கவில்லை. தூக்கத்திலேயே உயிர் பிரிந்து விட்டது. ஹார்ட் அட்டாக்தான். " 408 மிட்டு மாமா தன் கால்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு நீண்ட மௌனத்திற்குப் பின் தத்துவார்த்தமாகக் கூறி... |
உறவினர் கள் எல்லோரும் கூடவே மிட்டு மாமாவின் கடிதத்தையும் படித்துவிட்டு வந்திருந் தார்கள். கண்ஷியாம் மாமாவுக்குப் பதிலாக மிட்டு மாமாவே செத்துப்போயிருக்கலாம் என்று வெளிப்படையாகவே அபிப்பிரயாம் தெரிவித்தார்கள். மிட்டு மாமாவின் மகன்களுக்கும் மருமகள்களுக்கும் பெருத்த தலைகுனிவு ஏற்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக , மிட்டு மாமாவ... |
விரும்பினாள் அவள். ஆனால் , அதிர்ஷ்டவசமாக அந்த மாதிரி விபரீதம் ஏதும் நடக்கவில்லை. எப்படியும் , நான் மிட்டு மாமாவுக்குக் கடிதம் எழுதித் தருவதை நிறுத்தும்படி ஆனது. 409 நாயனம் ஆ. மாதவன் இறந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதியமல் ஜிப்பா , வேஷ்டி அணிந்து கொண்டு , நெற்றியில் மூன்று விரல் திருநீற்றுப் பட்டையுடன் , நீட்டி நிமிர்ந்... |
நாழி பழமும் ஊதுவத்தியும் , சிவப்பு அரளிப்பூ , மாலையுமாக ஜோடித்திருக்கிறார்கள். சாவு மணம் ஊதுவத்தியிலிருந்து கமழ்கிறது. " யென்னைப் பெத்த யப்போவ்.. யெனக்கினி ஆரிருக்கா ?... என்று கால்மாட்டில் பெண்அள் கும்பலிலிருந்து நாற்பது வயசுக்காரி கறுப்பி முட்டி முட்டி அழுகிறாள். அவளுக்கு பச்சைக் கண்டாங்கிதான் , பொருந்துகிறது. சாயங்க... |
போகின்றன. தாழைப்புதர் வேலிகளின் நடுவில் வாய்க்கால் கரையிலிருந்து , முற்றிய கமுகு மரத்தை வெட்டிச் சுமந்து கொண்டுவந்து , முற்றத்தில் பாடை ஏணி தயாரிக்கிறார்கள். பிளந்த கமுகுமரம் , வெளிரென்று பொள்ளையாக முற்றத்தில் துண்டாகக் கிடக்கிறது. வாசலில் , இளவுக் கூட்டத்தினரிடையே , செத்தவரின் தடியன்களான ஆண்பிள்ளைகள் இரண்டு அழுக்குத் ... |
துலாக் கட்டையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். உள்ளேயிருந்து வரும் ஒப்பாரி , இப்பொழுது பழக்கமாகிச் சாதாரணமாகி விடுகிறது. இப்படியே இருந்தாப் பொழுதுதான் இருட்டும். இருட்டு வருமுன்னே இதோ அதோன்னு காரியத்தை முடிப்பம் ; என்ன தங்கப்பா ?? " " ஆமாமாம். நாயனக்காரனைத்தான் இன்னம் காணோம். யாரு போயிருக்காங்க அழைச்சார ? " 410 " வடிவேலு... |
இட்டுக்கிட்டு வருவான். வரட்டும். அதுக்குள்ளியும் மத்த வேலைங்களெப் பாக்கறது. " மழைவரும் போல் இருந்தது. அந்தியிருள் குளிர ஆரம்பித்தது. கியாஸ் விளக்கொன்றைச் சுமந்து கொண்டு வயல் வரப்பு வழியாக வாய்க்காலைத் தாண்டி ஒருவன் கரையேறி வந்து கொண்டிருக்கிறான். விளக்கின் ஒளியில் , வாழை மரமும் , பச்சை ஓலைய்ப் பந்தலும் பெரிய பெரிய நிழல... |
ஓய்ந்து போயிருந்தது. குசுகுசுத்த குரலில் பெண்கள் வக்கணை பேசுகிறார்கள். ஊதுவத்தி இன்னும் மணமாக மணத்துக்கொண்டு புகை பரத்துகிறது. விளக்கு வந்துவிட்ட வசதியில் முற்றத்துச் சந்தடி , அங்கிங்காக விலகி நின்றுகொண்டு இருட்டில் , தெரியாத வயல் வரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சலிப்பு- எல்லாரது முகத்திலும் அசட்டுக்களையை விரவிவிட... |
? சரியான தொந்தரவு போ. " யாரோ ஓராள் இருட்டைப் பொத்துக்கொண்டு வெள்ளையாக நடையும் வேகமுமாக ஓடிவந்தான். “ சின்னண்ணனும் , வடிவேலும் தட்றாம்பட்டிக்குச் சைக்கிள்லே போயிருக்கிறாங்க. மேலாத்தூரிலே யாரும் நாயனக்காரங்க ஆப்டலியாம். சேதி சொல்லச் சொன்னாங்க. " வந்தவன் பந்தலையும்- கியாஸ் விளக்கையும் முசுமுசுத்த கும்பலையும் - உள்ளே பெண்க... |
நேரமாகலாம் , கும்பலின் முகம் சுணங்கியது. " இந்தக் காலத்திலே , யாருப்பா நாயனமும் , பல்லக்கும் வச்சிக்கிறாங்க ? ஏதோ அக்கம் அசலுக்கு ஒரு தொந்தரவு இல்லாமெ , காரியத்தை முடிக்கிறதெ விட்டுவிட்டு ? இப்போ பாரு , எத்தினி எபேரு இதுக்கோசரம் காத்துக் கெடக்கிறாங்க ? " " இல்லே , மூத்த பிள்ளைதான் சொல்லிச்சிது. செத்தவரு முன்னாடியே சொல்... |
போய் அங்கியும் ஆம்புடாமே தட்றாம்பட்டி போயிருக்காங்களாம். " " நல்ல ரோதனையாப் போச்சு. செத்தவங்களுக்கென்ன ? அவுங்க போயிட்டாங்க. இருக்கிறவங்க களுத்து அறுபடுது “. மழை வந்தேவிட்டது. ஹோவென்று கூரை மேலும் பச்சைப் பந்தல் மேலும் இரைச்சலிட்டது. சுற்றிலும் கமுகு , தென்னை , தாழைப்புதூர் மேல் எல்லாம் கொட்டியதால் இரைச்சல் பலமாகக் கேட... |
அழத் துவங்கியது. தாய்க்காரி பூச்சாண்டியைக் கூப்பிடுகிறாள். பிய்த்து எறிவேன் என்கிறாள்.சனியனே , உயிரை வாங்காதேஎன்கிறாள். குழந்தை நிறுத்தாமல் அழுகிறது. எல்லோர் முகத்திலும் , சலிப்பும் , விசாரமும் , பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கின்ற்ன. தலை நரைத்த முக்கியஸ்தர்களுக்கு யாரை , என்ன பேசி , நிலைமையை ஒக்கிட்டு வைப்பது என... |
சொட்டுகிறது. முற்றத்தில் தண்ணீர் தேங்கி வழிந்து போகிறது. 412 இதற்குள்ளியும் பாடை தயாராகி , உடம்பு சிவப்புப் பட்டு மூடிக்கொண்டு , நீட்டி நிமிர்ந்து பந்தலில் தயாராகி இருந்தது. நீர்மாலைக்குப் போன புத்திரர்கள் இரண்டு பேரும் , மழையில் குளித்துத் தலைமேல் வெண்கல ஏனத்தைச் சுமந்து கொண்டு , பிணத்தின் தலைமாட்டில் வந்து , முக்காடி... |
குலவையிட்டார்கள். இருட்டில் ஒதுங்கி நின்றவர் ஒன்றிரண்டு பேர் கூடப் பந்தலுக்குள் வந்து திண்ணையில் நுழைந்தார்கள். வாய்க்கரிசி போட இன்னும் , உள்ளே பொம்மனாட்டிக இருந்தா வந்து போடலாம். நேரமிருக்குது " என்றார் தலையார். " அட அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சே. இன்னும் புதுசாத்தான் ஆரம்பிக்கோணும். புறப்படுறதை விட்டுப்பிட்டு அடிய... |
எப்போ பொறப்படபோறமோ ? " எல்லோரது கண்களும் வயல் வரப்பையே பார்த்துக் கொண்டிருந்தன. இப்போது - மரண சம்பவத்தை விட நாயனந்தான் முக்கியப் பிரச்சனையாக அத்தனை பேர் மனத்திலும் பெரிய உருக்கொண்டு நின்றது. " யாரோ வர்ராப்போல இருக்குதுங்களே " என்று ஒரு குரல் தொலைவில் இருட்டுப்பாதையைப் பார்த்துச் சந்தேகப்பட்டது. " ஆமாண்ணோவ் , வர்ராங்க ப... |
வேஷ்டியை முறுக்கிக்கொண்டு , முண்டாசைச் சரி செய்துகொண்டு எல்லாரும் எழுந்து தயாராகி நின்றனர். சில ஆண் பிள்ளைகள் உள்ளே பெண்களிடம் போய் விடை பெற்று வந்தனர். உள்ளே விட்டிருந்த அழுகையங்கப்போஎன்று பின்னும் ஈனமாக எழுந்தது. கியாஸ் விளக்கு வட்டத்தில் , சின்னண்ணனும் வடிவேலுவும் வென்றுவந்த வீரர்கள் போல நின்றனர். அட , மேலாத்தூரிலே ... |
இட்டாந்திராலாம்ன்னு போனா. மனுசன் , சீக்கா படுத்த படுக்கையா கெடக்கிறான். விடா முடியாதுன்னு , சைக்கிளைப் உடிச்சோம். தட்றாம்பட்டுலே , தோ... இவங்களெத் தான் புடிச்சுக் கொண்ணாந்தோம். சமத்திலே ஆள் ஆம்பிட்டதே தம்பிரான் புண்ணியமாப் போச்சு. " #V எல்லோரும் பார்த்தார்கள். காய்ந்துபான மூங்கில் குழாய் போல , சாம்பல் பூத்த நாயனத்தை வை... |
மிஞ்சி எட்டிப் பார்த்தது. தவுல்காரன் , அடுப்படி , தவசிப்பிள்ளை மாதிரி வேர்க்க விறுவிறுக்க ,ஐயோ என்ற பார்வையில் , முன்னால் வரமாட்டேன் என்று பின்னால் நின்றான். * வெட்டியானெக் கூப்பிடுறது. நெருப்பெல்லாம் ரெடி..சங்கை ஊதச்சொல்லு பொறப்படலாமா ? உள்ளே கேட்டுக்கோ. ' தாறுடுத்திக் கொண்டு பாடைப்பக்கம் நாலுபேர் தயாரானார்கள். கருமாத... |
" பொறப்படுங்கப்பா. தூக்கு " என்ற கட்டளை பிறந்ததும் தாறுடுத்த நால்வரும் பாடையின் பக்கம் வந்தார்கள். உள்ளேயிருந்து பெண்கள் , முட்டிக்கொண்டு தலைவிரி கோலமாக ஓடிவந்தார்கள். “ யெங்களெ உட்டுட்டுப் போறீங்களே ? " என்று கதறல் சகதியும் அதுவமாகக் கிடந்ததினால் விழுந்து அழுவதற்கு எல்லாரும் தயங்கினார்கள். பெண் மட்டும்.ங்கப்போ எனக்கின... |
முன்னாடி போங்க. வௌக்குத் தூக்கறவன் கூடவே போங்க. மோளத்தைப் பிடிங்க.. " நாயனக்காரன் முகம் பரிதாபமாக இருந்தது. அழைத்துவந்த வேலண்ணன் அவன் காதருகில் எதோ சொன்னான். நாயனக்காரன் மெல்ல உதட்டில் வைத்து , “ பீ ப்பீ..என்று சுத்தம் பார்த்தான். ஊர்வலம் , சகதி வழுக்கும் வரப்புப்பாதையில் போய்க்க்கொண்டிருந்தது. கியாஸ் விளக்கின் ஒளியில்... |
இருந்தது. தவுல்காரன் சந்தர்ப்பம் தெரியாமல் வீறிட்ட குழந்தைபோல - வாத்தியத்தைத் தொப்புத் தொப்பென்று மொத்தினான். விவஸ்தை கெட்ட மழை. வருதடி வைத்த அலமங்கலும் , கீழே வழுக்கும் வரப்புப் பாதையும் , தாழைப்புதரும் , கௌமுகின் தோப்பின் உச்சியில் தங்கி நின்ற குளிர்ந்த இருட்டும் , மரணமும் , பசியும் , அசதியும் , வெறுப்பும் , துக்கமும... |
வறட்டியின் புகையால் சங்கு ஊதுபவன் செருமினான். அனைவரும் பேச்சற்ற அவல உருவங்களாக நிழல்களை நீளவிட்டு நடந்து கொண்டிருந்தார்கள். பீப்பீ..பீ..பீஎல்லாருக்கும் வயிற்றைப் புரட்டியது. நெஞ்சில் ஏதோ அடைத்துக் கொண்டது போல சிரமமாக வந்தது. தலையைப்பிய்த்தது. 415 பின்னும் , “ பீ..ப்பீ..பி..பீ ! ஊர்வலம் ,சனியனேஎன்ற பாவனையில் அவனையே பார்... |
தூக்கிவிட்டுவிட்டு.நீயெல்லாம் அங்கே எதுக்கோசரம் வரணும் , சனியனே ? " என்று எந்த எரிச்சலையோ அவன் மேல் கோபமாக் கொட்டினார் , ஆற்றங்கரை வரப்பு ஆரம்பமாகியிருந்தது. சிள் வண்டுகளின் இரைச்சல் கேட்டது. அக்கரையில் , கடந்து வஞ்சித்துறையிலிருந்து தவளைகள் ,குறோம் குறோம்என்று எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. குட்டி குட்டிக் க... |
தோன்றியது. இன்னும் , பீ..ப்பீ..பீ..பீ.. நாயனக்காரன் பக்கமாகத் தலை முண்டாசோடு வந்து கொண்டிருந்த தலையாரி முத்தன் , அவனையும் அந்த நாயனத்தையும் ஒரு முறை வெறித்துப் பார்த்தார். கியாஸ் லைட்டின் மஞ்சள் வெளிச்சத்தில் உப்பென்று மூச்சு நிறைந்த கன்னங்களுடன் , நாயனக்காரனின் , அந்தப் பொட்டைக்கண் முகம் , எரிச்சலை இன்னும் வளர்த்தது. ... |
நின்று செவிமடுத்தனர். அவ்வளவுதான் ! 416 தலையாரி , நாயனக்காரன் பிடரியில் இமைக்கும் நேரத்தில் ஒரு மொத்து. ஆற்றில் துணி துவைப்பது மாதிரி ஒரு சத்தம். நாயனத்தை அப்படியே இழுத்துப் பறித்து கால் மூட்டின் மேல் வைத்து , இரண்டு கைகளாஅலும் ,சடக்இரண்டு துண்டு ! புது வெள்ளமாகச் சலசலத்து ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் இருட்டில் நாயனத் துண... |
காரியத்துக்கு உனக்கு தங்கக் காப்பு அடிச்சுப் போட்டாலும் தகும்என்ற திருப்தி பளிச்சிட்டது. “ என்ன நின்னுட்டீங்க ? - போங்கப்பா தோ மயானம் வந்தாச்சே , நல்ல நாயனக்காரனெ கொண்ணாந்தீங்க ". இதைக் கேட்க நாயனக்காரனும் தவுல்காரனும் வரப்பு வெளியில் இல்லை. ஆற்றின் இடப்பக்கம் சந்தின் இருட்டில் இறங்கித் தெற்குப் பார்த்த பாதை வழியாக , இ... |
தக்கையின் மீது நான்கு கண்கள் - சா. கந்தசாமி மாணிக்கம் பெரிய விசிறி வலையைப் பரக்க விரித்துப் போட்டபடி ராமுவைக் கூப்பிட்டார். ஒருமுறைக்கு இன்னொரு முறை அவருடைய குரல் உயர்ந்து கொண்டே இருந்தது. நான்காம் தடவையாக , " எலே ராமு " என்று அவர் குரல் பலமாகக் கேட்டபோது , " இப்பத்தான் வெளியே போனான் " என்று அவர் மனைவி உள்ளேயிருந்து பத... |
கிழித்துக் காயப்படுத்தியதும் மாணிக்கம் ராமுவின் சின்னஞ்சிறிய கையைப் பிடித்து வெற்றிலை இடிக்கக் கற்றுக்கொடுத்தார். அவனோ அவர் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கையை அழுத்திப் பிடித்து வேகமாக வெற்றிலை இடித்தான். அப்படி இடிப்பது அவனுக்கு உற்சாகமாகவும் , மகிழ்ச்சியாகவும் இருந்தது. மூன்றாம் நாள் உலக்கையைக் கையில் பிடி... |
வேத்தலே இடிக்கிறேன். இன்னும் ஒரு கொப்புளம் வரலே ஆனா ஒனக்கு ரெண்டு நாளிலே நாலு கொப்பளம். இதுக்குத்தான் சொல்றதைக் கேக்கனுங்கறது... " ணு என்ற படி வெற்றிலை இடிப்பதில் உள்ள சூட்சுமங்களைத் தாழ்ந்த தொனியில் விவரித்தார். அவன் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் காதில் வாங்கிக் கொண்டான். ஆனால் ஒரு முறையும் அவர் சொல்வதை பின்பற்றுவதி... |
அன்றே அந்த இடத்தைக் கண்டுபிடித்தான். 418 ஒரு பகல் பொழுது முழுவதும் சின்ன தூண்டிலைத் தாத்தா கூடவே போட்டு ஒரு மீனும் கிடைக்காமற்போகவே அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. தாத்தாவை நோக்கித் திரும்பினான். அவர் பார்வை தக்கையின் மீது இருந்தது. " அந்தப் பக்கமா போறேன் , தாத்தா. " என்று தன் அதிர்ஷ்டத்தை தேடிச் சென்றான். ஒற்றையடிப் பாதை... |
மீன்குஞ்சுகள் இரையை அரிக்கின்றன. தக்கை முன்னும் பின்னுமாக அசைந்தது. அவன் தக்கையை ஆழ்ந்து நோக்கினான். திடீரென்று நீரில் ஓர் அசைவு. அலையலையாக நீர் வட்டமிட்டது. ஆனால் தக்கை அசைவற்றுக் கிடந்தது. அவன் தூண்டிலை மேலே இழுத்துப் பார்த்தான். வெறும் முள் மட்டும் வந்தது. இரையைச் சிறிய மீன்கள் நினிவாயால் அரித்துத் தின்றுவிட்டன. தூண... |
தாத்தாவிடம் கிடையாது. ஓரிடத்தில்தான் தூண்டில் போடுவார். மீன் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாகும் சரி ; அவர் இடம் மாறாது. ஆனால் கையை நீட்டித் தூண்டிலைச் சற்றுத் தள்ளி நூலைக் கூட்டிக் குறைப்பார் ; வாயிலிருந்து ஒரு வார்த்தையும் வராது. குளத்தங்கரைக்கு வந்தவுடனே பேச்சு நின்றுவிடும். அமைதியாகவும் , கம்பீரமாகவும் நின்று தூண்ட... |
நூலைத் தாராளமாக விட்டான். சர சரவென்று தக்கை கண்ணுக்குத் தெரியாமல் நீரில் அழுந்தியது. மேலும் மேலும் தண்ணீரில் இறங்கியது.மீன் வேக வேகமாக இரையை விழுங்குகிறது என்பதை உணர்ந்து கொண்டான். இம்மாதிரிச் சந்தர்பங்களில் தாத்தா எப்படி நடந்து கொள்வார் என்பது அவன் நினைவிற்கு வந்தது. 419 மீசையை ஒரு விரலால் தள்ளிவிட்டுக் கொள்வார். முகம... |
தலைக்கு மேலே வந்த மீன் ஆட்டத்தாலும் உலுப்பளாலும் தப்பித்துக்கொண்டு போவதுண்டு. ஒருமுறை தாத்தா தூண்டிலைத் தலைக்கு மேலாக இழுக்கும் பொது , " கொஞ்சம் வெட்டி சொடுக்கி இழுங்க தாத்தா " என்று கத்தி விட்டன. அவர் மெல்லத் திரும்பிப் பார்த்தார். உதட்டில் சிரிப்பு தெரிந்தது. அவன் பின்னுக்கு நகர்ந்து மறைந்தான். மாணிக்கம் தூண்டிலைத் த... |
இழுத்துக் கரைக்குக் கொண்டு வந்து விடுவான். தன் தீர்மானப்படியும் விருப்பப்படியும் தூண்டிலை இழுக்கலாம். கட்டுப்படுத்த யாருமில்லை. ராமு தண்ணீருக்குள்ளேயே தூண்டிலைச் சொடுக்கி வலது பக்கமாக இழுத்தான். ஒரு பெரிய மயிலை துடிதுடித்துக் கரைக்கு வந்தது. தூண்டிலைக் கீழே போட்டுவிட்டு காய்ந்த சருகுகளின் மேல் விழுந்து குதிக்கும் மயிலை... |
கழுத்தைப் பின்பக்கமாகப் பிடித்து மேலே தூக்கினான்.அதைப் பற்றி தாத்தா நிறையச் சொல்லியிருந்தார்.மீனிலே அது ஒரு தினுசு. வீச்சு வீச்சாக முள்ளும் , மீசையும் உண்டு. முள் குத்தினால் கடுக்கும். இரண்டு மூன்று நாட்களுக்கு மீன் பிடிக்கும்போது முதன் முறையாக மயிலை அவனைக் கொட்டியது. வலி தாளாமல் துடிதுடித்துப் போனான். அதிலிருந்து மயில... |
கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை. குனிந்தபடியே தன் வேலையைச் செய்து கொண்டிருந்தான். " பெரிய தூண்டிக்காரனாயிட்டே நீ " மாணிக்கம் அவன் தலை மீது கை வைத்தார். ராமு சற்றே நகர்ந்தான். தாத்தா மீது திடீரென்று அவனுக்குக் கோபம் வந்தது. தன்னை அழிக்கப் பார்க்கிறார் என்ற பயமும் தோன்றியது. அவர் பிடியில் சிக்காமல் ஒதுக்கினான். அன்றையிலி... |
வந்து திண்ணையில் உட்கார்ந்தார். எத்தனை வெற்றிலை போட்டு எவ்வளவு சுண்ணாம்பு வைத்து இடிப்பது என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. வெற்றிலைப் பெட்டியை ஒரு பக்கமாகத் தள்ளி வைத்துவிட்டுத் தெருவுக்கும் வீட்டுக்குமாக நடந்து கொண்டிருந்தார். சற்றைக்கெல்லாம் ராமு அவசர அவசரமாக ஓடிவந்தான். மாணிக்கம் நிதானமாக அவனை ஏறிட்டுப் பார்த்தார். ... |
அந்தப் பெரிய மீனு... " கெக்கெக்கெவென்று பெரும் சிரிப்பு வெளிப்பட்டது. அவன் ஆச்சர்யத்தோடு தாத்தாவைப் பார்த்தான். " அதைப் பிடிக்கப் புறப்பட்டுட்டியோ ? " அவர் குரல் திடீரென்று உயர்ந்தது. " அதை உன்னாலேயும் பிடிக்க முடியாது ; ஒங்கப்பனாலேயும் பிடிக்க முடியாது ". 421 ராமு தற்பெருமை அடிக்கும் தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தான். அ... |
சென்றான். கயிற்றுத் தூண்டிலை வீசிய சற்று நேரத்திற்கெல்லாம் தக்கை சர்ரென்று அழுந்தியது. கீழே சென்ற வாக்கில் மேலே வந்தது. எம்பிக் குதித்தது. ஆடியது. ராமு கயிற்றைப் பிடித்து இழுத்தான். ஏதோ ஒன்று வெடுக்கென்று உள்ளுக்குள் இழுத்தது.பெரிய மீன் இரையைத் தின்ன ஆரம்பித்து விட்டது தெரிந்தது.அவன் விரைந்தோடிச் சென்று தாத்தாவை அழைத்த... |
ஆட்டம் போட்டது. இன்னும் மீன் இரையை விழுங்கவில்லை என்று அவருக்குத் தோன்றியது. கயிற்றைத் தளரவிட்டார். குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்த தக்கை குறுக்காகக் கீழே அமுங்கியது. இரையை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு போய் மீன் விழுங்குகிறது. கை விரைவாகக் கையிற்றை இழுத்துப் பிடித்தது. மீன் ஆத்திரத்தோடு உள்ளுக்குள் வெடுக் வெடுக்கென்று இழ... |
கண்கள் வசதியான இடத்தைத் தேடின. புன்ன மரச் சரிவில் நின்று கையிற்றை விர்விரென்று இழுத்தார். இரண்டு பாகம் தடையின்றி வந்த மீன் உள்ளுக்குல்லிருந்து வாலால் தண்ணீரைப் படாரென்று அடித்தது. மாணிக்கம் கயிற்றைத் தளரவிட்டு முழு பலத்தோடு இழுத்தார். மேலே வந்த மீன் திடீரென்று தாவிக் குதித்தது. தண்ணீரைக் கலக்கியது. கயிறு அறுந்துபோக மாண... |
செத்தப் பொருத்திருந்தா புடுச்சிருக்கலாம் தாத்தா. " மாணிக்கம் முட்டியைத் தடவி விட்டுக்கொண்டே அவனைப் பார்த்தார். அவனுடைய கழுத்தைத் திருகி வீசியெறிய வேண்டும் போல ஓர் உணர்ச்சி ஏற்பட்டது. " எதுக்காக இங்கேயே நிக்கறே ? " என்று உறுமினார். அவர் குரல் திடீரென்று உயர்ந்தது. அவன் சற்று ஒதுங்கி தாத்தாவைக் கடைக் கண்ணால் பார்த்தான். ... |
நிம்மதியான மூச்சு வந்தது அவருக்கு. பெரிய மாடத்திலிருந்து அரிக்கேன் விளக்கை எடுத்துச் சாம்பல் போட்டுப் பளபளக்கத் துலக்கித் துடைத்தார்.நிறைய மண்ணெண்ணையை ஊற்றினார். சாப்பிட்டுவிட்டு ஈட்டியும் , விளக்குமாக குளத்தை நோக்கி நடந்தார் மாணிக்கம். தேய்பிறை நிலவு. நேரம் செல்லச் செல்ல நிலவு ஒளி கூடிக் கொண்டு வந்தது. குளத்தில் ஒரு வ... |
வேட்டையாடி இருப்பார். இப்பொழுது அவர் இலட்சியம் விரால் அல்ல. தண்ணீரை அலங்க மலங்க அடிக்கும் வாளை. ஆற்றிலிருந்து புதிதாகக் குளத்திற்கு வந்திருக்கும் வாளை. அதுதான் குறி. குளத்தில் ஏற்படும் ஒவ்வொரு சலசலப்பையும் உன்னிப்பாகக் கவனித்தபடி குளத்தைச் சுற்றி வந்தார். நாவற்ப்பழங்கள் விழும் சப்தத்தைத் தவிர வேறு வழியே திரும்பிச் சென்... |
கூட்டத்தைச் சாடியது. 423 மாணிக்கம் நின்றார். அவர் பார்வை இறந்த கொண்டைகளை விழுங்கும் வாளை மீது தீர்க்கமாக விழுந்தது. சற்று நேரம் இங்கேயே வாளை இருக்கும். இப்பொழுதுதான் வேட்டையைத் துவக்கியிருக்கிறது. பசியாற வேட்டையை முடித்துக்கொண்டு புறப்படுவதற்கு நேரமாகலாம். அவர் வசதியான இடத்தைத் தேடித் பிடித்தார். விளக்கு பெரிதாகி வெளிச... |
ஒரு பெரிய கொண்டை குறுக்காக எழும்பிப் பாய்ந்தது. ஈட்டி அதன் செதில்களைப் பிய்த்துக்கொண்டு சென்றது. எல்லாம் ஒரு நிமிஷத்தில் வீணாகிவிட்டது. அவர் நினைத்தது மாதிரி ஒன்றும் நடக்கவில்லை. குளத்தில் இறங்கி ஈட்டியைத் தேடி எடுத்துக்கொண்டு கரைக்கு வந்தார். மீன் கலவரமுற்று விட்டது. அதனுடைய ஆர்ப்பாட்டத்தையும் குதூகலம் நிறைந்த விளையாட... |
ஈட்டியுமாகத் தள்ளாடிக் கொண்டே வீட்டிற்க்குச் சென்றார் மாணிக்கம். அடுத்த நாள் வெகு நேரம் வரையில் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பலவீனமுற்றுப் போனார். மனதில் ஏக்கமும் , கவலையும் நிறைந்தது. மீனைப் பற்றி ஆத்திரம் நிறைந்த உணர்ச்சி திடீரென்று தோன்றியது. அந்தக் கணத்திலேயே எழுந்து உட்கார்ந்தார். " ஒண்ணு நான் ; இல்லே அது... ... |
குதித்து விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு ராமு உட்கார்ந்திருந்தான். மாணிக்கத்தின் முதல் பார்வை மீன் மீதும் , அடுத்து ராமு மீதும் விழுந்தது. தலையசைத்து அவனை அருகே அழைத்தார். அப்புறம் தனக்கே கேட்காத குரலில் , “ என்ன பண்ணிக்கிட்டிருக்கே " என்று வினவினார். 424 அவன் மௌனமாக இருந்தான். " உன்னைத்தான் கேக்கறேன் ". காதைப் பிடித்து... |
அவன் அவர் பார்வையிலிருந்து மறைந்த பின்னால் குளத்தில் வாளை எழும்பிக் குதித்தது. தண்ணீர் நாளா பக்கமும் சிதறியது. " எவ்வளவு பெரிய மீன்... ராஜா மாதிரி... " மாணிக்கம் மீசையை தள்ளிவிட்டுக் கொண்டு வடிகால் பக்கமாக நடந்தார். மீன் வடிகால் பக்கமாக சுற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. வெளியில் ஓடிப் போக இடம் தேடுகிறது. மாணிக்கம் அவசர ... |
இங்கேயே இருப்பதால் அநேகமாக இந்தக் கொண்டையிலே பிடித்துவிடலாம். கொண்டையைச் சாய்த்துப் பிடித்து , நான்கைந்து செதில்களை முள்ளாலேயே பெயர்த்துவிட்டு , நடு முதுகில் தூண்டி முள்ளைச் செருகி , தூண்டிலைத் தண்ணீரில் போட்டார். தக்கை குத்திட்டு அசைந்தது. இரை வாளையை எப்படியும் கவர்ந்திழுத்து விடும் என்ற எண்ணம் நேரம் செல்லச் செல்ல வலு... |
மெல்ல தக்கையின் ஆர்பரிப்பு முழுவதும் அடங்கி ஒடுங்கியது. இரை இறந்து விட்டது. மாணிக்கம் மீண்டும் நீர்ல் இறங்கித் தூண்டிலை இழுத்து இரையைத் தண்ணீரில் சுழற்றிச் சுழற்றி அடித்தார். மீன் பஞ்சு பஞ்சாய்ச் சிதறி நாலாபக்கமும் பறந்தது. வெறும் தூண்டிலைச் சுருட்டிக் கொண்டுவந்தது மரத்தடியில் உட்கார்ந்தார். இப்பொழுது ஒவ்வொன்றின் மீதும... |
குளத்தில் வீசினார். 425 தூண்டில் விழுந்ததும் நீர் பெரிதாகச் சுழிந்தது. வாளை மீன் உல்லாசமாக விளையாடியது. மாணிக்கம் மீசையை ஒரு பக்கமாகத் தடவி விட்டுக்கொண்டு புளிய மரத்தில் நன்றாகச் சாய்ந்தார். வழக்கத்திற்கு மாறான சில பழக்கங்கள் அவரிடம் தோன்றின. தனக்குத் தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார். " இவனை எமாத்திப்புட்டு எங்கேயும் போயி... |
மேலே வந்து வாயைத் திறந்து மூச்சுவிட்டது. வேகமாகக் கீழே அமுங்கியது. சரசரவென்று நீர்க்குமிழிகள் தோன்றின. மீன் கிழக்கே சென்றது. தெற்குப் பக்கத்தில் பூவரசு மரத்திலிருந்து ஒரு மீன் குத்திக் குருவி நீரில் குதித்தெழுந்து பறந்தது. கொக்கு ஒன்று பறந்து அல்லி இலையில் அமர்ந்தது. மாணிக்கம் தூண்டில் கயிற்றைச் சற்றே இழுத்துப் பிடித்த... |
பற்ற வைத்தார். சுருட்டு ஒன்றுக்கு இரண்டாய்ப் புகைத்தாயிற்று. ஆனால் குளத்தில் எவ்வித ஆரவாரமும் சுழிப்புமில்லை. நீர் அமைதியோடு இருந்தது. கொக்கு ஒன்று மேலே எழும்பிப் பறந்து சென்றது. 426 மாணிக்கம் சோர்வோடு எழுந்து வீட்டிற்குச் சென்றார். ராமு கண்ணியைச் சரிபார்த்துக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்தவுடன் " எலே எப்ப சொன்ன வேலை. இ... |
உளுவுதா " சின்ன திண்ணைக்குத் தாவி அவன் தலைமயிரைப் பற்றினார். அவன் தலை நிமிர்ந்தான். கண்களில் நீர் தளும்பியது. தாத்தாவின் முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்த வேண்டும் போல ஓர் ஆத்திர உணர்ச்சி தோன்றியது. " நேத்தியிலேருந்து என்ன பண்ணினே ? " தலையை அசைத்து மேலே தூக்கினார். " எதுக்கு அவனைப் போட்டு இப்படி ரெண்டு நாளாக் கொல்ற... |
அன்னைக்கே தெரிஞ்சிச்சே " என்னடி சொன்னே திருடன் மவளே " என்று அவள் கன்னத்தில் அறைந்தார். 427 " நல்லா கொல்லு. எங்க ரெண்டு பேரையும் தின்னுப்புட்டு நடுச்சந்தியிலே நில்லு. " என்று ஒவ்வோர் அடிக்கும் சொல்லி அழுதாள். " வாயை மூடு. " அவள் குரல் உயர்ந்தது , மாணிக்கம் இடுப்பில் போட்டிருந்த பெரிய பெல்டைக் கழற்றினார். " போ உள்ளே. " “... |
" அவர் பெல்ட் மார்பிலும் , கன்னத்திலும் பாய்ந்தது. அவள் துடித்துக் கீழே விழுந்து ஓலமிட்டாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து ஒவ்வொருவராக ஓடிவர ஆரம்பித்தார்கள். மாணிக்கம் பெல்டை ராமு முகத்தில் வீசி எறிந்துவிட்டுத் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்தார். அவளோ ஒவ்வொரு பழைய கதையையும் விஸ்தாரமாகச் சொல்லி அழுது கொண்டிருந்தாள். அவ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.