text
stringlengths
11
513
பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மிக முக்கியமான முறைகளாக வழக்கத்தில் இருப்பவைகள் முறையான சுருக்கு முறை ( Conventional Synoptic ) மற்றும் எண் வானிலை முன்னறிவிப்பு முறை ( Numerical weather prediction ) ஆகியவைகளாகும். முதலில் உள்ளவை மனித எண்ணத்திற்கு ( அகவயம் ) ( Subjective ) உட்பட்டவை. ஆனால் , எண் வானிலை முன்னறிவிப்புகள்...
முன்கூட்டியே கூறும் திறன்களை வளர்த்துக் கொள்ளலாம். முறையான சுருக்கு முறை இந்த அகவய ( Subjective ) முறையில் போக்கு , நிலையானத் தன்மை , காலநிலை மற்றும் வானிலைத் தொகுதியின் தன்மை ஆகியவற்றை அறிய வழிவழியாக செய்வது போல முன்னறிவிப்புகள் செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் வானிலை எவ்வாறு இருக்கும் என்பதைத் தீர்மானிக்கவும் இயலும்....
அடிப்டையிலேயே அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதால் எந்த முறையும் சரியானதாகத் தோன்றவில்லை. இதற்கு மனிதர்கள் வளிமண்டலக் கூறுகளின் செயல்களை நன்றாகப் புரிந்து கொள்ள முடியாததே ஒரு முக்கிய காரணமாக உள்ளது. எண் வானிலை முன்னறிவிப்பு முறை வானிலையினை முன்கூட்டியே அறிவதற்கு , அதிகவேகமாக இயங்கும் கணிணி இம்முறையில் பயன்படுத்தப்படுகின்றத...
இந்த மாதிரிகளைப் பொதுவாக புவி சுழற்சி மாதிரிகள் ( Global Circulation Models ) என்று அழைக்கின்றனர். ஜி.சி.எம்.ஐ. முன் கூடடியே கணிணியில் இணைக்க மாதிரிச் சமன்பாட்டினை செய்து கணிணியில பொருத்த வேண்டும். மாதிரிச் சமன்பாடுகள் செய்ய தற்போதிய அல்லது ஆரம்ப வளிமண்டலத்தின் நிலையை சரியாக அறிந்திருக்க வேண்டும். இந்த வேலையை சிறப்பாக ...
முன்னறிவிப்பாளர்கள் இந்த வரைபடங்களை விவரணம் செய்து வானிலையின் தன்மையினை முன்னறிவிப்பு செய்கின்றனர். தேசிய நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்பு மையம் ( The National Centre for Medium Range Weather Forecasting - NCMRWF ) இந்தியாவில் அறிவியல் மற்றும் நுட்பத் துறையில் என்.சி.எம்.ஆர். டபிள்யூ எஃப் ( NCMRWF ) துறை நிறுவப்பட்டுள்...
படிக்கத் தேவையான அடிப்படைக் கொள்கைகளை அறிகின்றனர். மேலும் , அவர்கள் குறியீடுகளை புரிந்து கொள்ளும் திறனையும் வளர்க்கின்றனர். வானிலை வரைபடங்களை விவரணம் செய்யவும் மற்றும் எவ்வாறு வானிலை முன்னறிவிப்பு செய்யப்படுகிறது என்பதையும் அறிகின்றனர். மழைப்பொழிவு அழுத்தத் தொகுதிகள் வானிலை முன்னறிவிப்பு முறை வெப்பம் சிக்கலான கணிதச் சம...
கொள்கைகள் யாவை ? வானிலை என்றால் என்ன ? வானிலை மற்றும் காலநிலையைச் சார்ந்துள்ள காரணிகள் யாவை ? வானிலை நிலவரைபடம் என்றால் என்ன ? 14. 15. 16. 17. நிலவரைப்பட குறியீடுகள் என்றால் என்ன ? 18. அதிக அழுத்தம் , தாழ்வு அழுத்தம் என்றால் என்ன ? 19. வேறுபாட்டுப் பகுப்பாய்வு என்றால் என்ன ? 20. என்.சி.எம்.ஆர். டபள்யூ.எப் என்றால் என்ன ...
வரைக. 23. புவியின் சுழற்சியால் காற்றில் ஏற்படும் மாறுதல்கள் யாவை ? 24. “ முறையான சுருக்கு வானிலை முன்னறிவிப்பு ” – குறிப்பு வரைக. 25. வானிலை முன்னறிவிப்பில் எண் வானிலை முன்னறிவிப்பு முறையை விவரி. VI. விரிவான விடையளி 26. “ நிலவரைபடத்தை விவரணம் செய்யப் பயன்படுத்தப்படும் மூன்று முக்கிய அடிப்டை கொள்கைகள் ” ஒரு கட்டுரை வரைக...
தலவரைபடத்தைப் பயன்படுத்தி , நிலவரைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள நிலப் பயன்பாட்டினை விவரிக்கவும். 30. வானிலை நிலவரைபடத்தில் உள்ள வானிலைக் கூறுகளை விவரிக்கவும். அலகு 5 நிலவரைப்பட விவரணம் மற்றும் அளவை செய்தல் பாடம் 12 அளவை செய்தல் கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் அளவை செய்யும் முறைகளைக் கற்றுக்கொள்ளுதல் ; அளவை செய்ய உதவும் கருவ...
பொருள்படும். அளவை செய்யக் கூடிய ஒரு பொருளின் நிலைமை அல்லது சூழ்நிலையினை ஆய்வு செய்து மதிப்பிட்டு தீர்மானிப்பதற்கும் , மேலும் அதன் மதிப்பை அறிந்து கொள்வதற்கும் அளவை செய்யப்படுகின்றது. அளவை செய்யப்படும் பொருள் ஒரு சிறிய நிலப்பகுதி , சாலை அல்லது ஒருவருக்குச் சொந்தமான நிலமாகக் கூட இருக்கலாம். அளவை என்பது நம்முடைய பொருளில் ...
எதிர்காலத் தேவைக்காக அளவையானது நில அமைவிடத்தைப் படத்தின் மூலம் சித்தரித்துக் காட்டுகின்றது. அளவையின் பயன்கள் மற்றும் முக்கியத்துவம் அளவைகள் பல வகைகளில் நமக்கு பயன்படுகின்றன , குறிப்பாக : இயற்கை வளங்களின் அமைவிடத்தை அறிய மற்றும் அவற்றின் பரவல்களை நிலவரைப்படங்களில் காண்பிக்கப் பயன்படுகின்றது. பொறியியல் துறையில் , கட்டிடங...
அமைவிடங்களுக்கு இது இயல்பாகவே கட்டுப்பாட்டை அளிக்கின்றது. அளவை செய்தலின் வகைகள் மற்றும் முறைகள் அளவையில் பல வகைகளும் மற்றும் முறைகளும் உள்ளன. அளவை செய்யும் வகைகளில் சில சிக்கலானதாகவும் , கடினமானதாகவும் இருப்பதால் அனைத்து வகை அளவையினையும் பற்றிக் கூறுவது பொருத்தமானதாக இல்லை. எனவே , சில குறிப்பிட்ட வகை அளவைகளை மட்டும் கீ...
Photogrammetric Surveying ) கட்டுமான அளவை ( Construction Surveying ) பாதை அளவை ( Route Surveying ) நீர் வரைக் கோட்டு அளவை ( Hydrographic Surveying ) பட்டகத் திசைக் காட்டி ( Prismatic Compass ) நில அளவைக்குப் பயன்படுத்தப்படும் கருவியில் ஒன்று பட்டக திசைக்காட்டி. இது அளவை நுட்பங்களிலேயே மிக எளிதான ஒன்றாகும். திசைக்காட்டி...
மட்டும் அளவை செய்ய பயன்படுத்தப் படுகின்றன. திசைக்காட்டிகளை ஆதிக்கம் செலுத்தும் காரணிகள் திசைக்காட்டியைப் பயன்படுத்துபவர் மற்றும் அளக்கப்பட வேண்டிய இடம் ( புள்ளி ) ஆகியவையினை பார்க்கும் போது இரண்டும் ஒரே கோட்டில் இருக்க வேண்டும். அதிகபட்சமாக சரியாக இருக்க வேண்டுமானால் , ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட பொருளாக அது இருக்க வேண...
திசைக்காட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. வழிப்போக்கு அளவை ( Traversing ) C படம் 12.1 : பட்டகத் திசைக்காட்டி Page 183 of 204 திசைக்காட்டி ( படம் 12.1 ) ஒரு கருவி. இது முழுவட்ட திசை அளவினை காந்த தீர்க்கக் கோட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடம் வரை காட்டுகின்றது. திசைக்காட்டும் முள் மற்றும் காந்தத் தன்மையுள்ள சக்கரம் அல்லது பட...
திசைக்காட்டியினை கையில் பிடித்து பயன்படுத்தும் பொழுது சரியான மையத்தை காண முடிவதில்லை. மேலும் , அது நிலையற்ற மேடையாகவும் இருக்கின்றது. காந்த தீர்க்கக் கோட்டுடன் சேர்த்து இதனை வைக்கும் பொழுதும் , புது விதமான வேறு கருவியுடன் சேர்த்து வைக்கும் பொழுதும் தூரத்திலிருந்து பார்த்தால் இதன் தாக்கம் குறைவாகவே உள்ளது. எனவே மற்ற கரு...
காணப்படும் சில இரும்புப் பொருட்கள் திசைக் காட்டியில் உள்ள ஊசியினை ஈர்த்து விடும். எனவே , இது ஒரு சரியான காந்தத் திசை அளவுக்கு மாறாகக் காணப்படும். இதனையே “ தல ஈர்ப்பு ” என்பர். புவி காந்த வயலில் மாற்றம் ஏற்படக் காரணம் அளவை செய்யும் இடத்தில் உள்ள அதிகமான இரும்பு , மின் கம்பிகள் , வாகனங்கள் போன்றவைகள் திசைக்காட்டியில் உள்...
பொருட்களும் காந்த முரண்பாட்டை அளவை செய்பவர்களுக்கு ஏற்படுத்தும் ஆனால் இது புவியில் உள்ள தாதுப் பொருத்களைக் கண்டறிய ஒரு சிறந்த நுட்பமாகவும் அமைகின்றது. எந்தப் பகுதியில் வழிப்போக்கு அளவையில் திசை அளவு மற்றும் தூரம் அளவிடப்பட்டதோ அங்கு தல ஈர்ப்பினால் ஏற்படும் கோண விலக்கத்தைக் கண்டுபிடித்து ( angular misclosure ) பிழையினை ...
விலக்கத்தைக் கணக்கிடல் ( கோணவிலக்கம் = 180 ° ( n - 2 ) -s கோணம் ) இ ) ஒவ்வொரு கோணத்திற்கும் சிலபாகைகளைக் கூட்டி , ஒவ்வொரு கோணத்தையும் சரி செய்தல். ஈ ) சரி செய்யப்பட்ட கோணத்திலிருந்து மீண்டும் திசை அளவைக் கணக்கிடுதல். ஓரிடத்தில் தல ஈர்ப்பு உள்ளதா , இல்லையா என்பதை முன்னோக்கு திசையளவிற்கும் , பின்னோக்கு திசையளவிற்கும் உள்...
உள்ள கோண அளவை அளந்து விட்டு பின்பு “ ஆ ” விலிருந்து “ அ ” வரை உள்ள கோண அளவை அளப்பேன். அவ்வாறு அளக்கும் பொழுது 180 ° வித்தியாசம் இருந்தால் , தல ஈர்ப்பு விசை எதுவும் அங்கு இல்லை என்பதையும் , மாறாக வேறுபாடு காணப்பட்டால் , தல ஈர்ப்பு விசையினால் உண்டான பிழை என்பதையும் அறிவேன். எனவே வழிப்போக்கு அளவையினைப் பயன்படுத்தும் பொழுத...
கூர்முனைக் கொம்புகள் –4 ( Ranging poles ) 3. பொறியியலாளரின் சங்கிலி −1 ( 100 அடி அல்லது 30 மீட்டர் ) 4. சிறிய குத்தூசிகள் - 10 5. கள அளவை குறிப்புப் புத்தகம் −1 6. பென்சில் 7. அழிப்பான் 8. முக்காலி ( Tripod ) 9. அளவை நாடா ( Tape - 50 மீட்டர் ) 10. தூக்குக் குண்டு ( Plumb line ) 11. பார்வைச் சதுரம் ( Optical Square ) 12...
பொழுது பிழைகள் தொடர்ந்து கொண்டே வரும் ) 3. 4. அளவை செய்யும் இடத்தின் தற்போதைய காந்த விலகல் எவ்வளவு என்பதை அறிந்திருத்தல் வேண்டும் குறிப்பாக காடுகளின் எல்லைப் பகுதியில் அளவை செய்யும் பொழுது முன்னோக்கு மற்றும் பின்னோக்கு திசையளவோடு கூட்ட வேண்டி இருக்கும். இது காந்த வேறுபாடு அல்லது அந்தப் பகுதியின் அல்லது இடத்தின் விலகல் ...
ஒன்று அளவை செய்கின்ற பகுதியில் உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ளுதல் வேண்டும். முதலிலேயே ஒரு தூணை மையமாகக் கொண்டு அளவை செய்வோமானால் , முக்காலியை தூணுக்கு மேல் வைத்து தூக்கு குண்டை முக்காலியிலிருந்து கீழேவிடும் பொழுது குண்டு செங்குத்தாக தூணின் மையப் பகுதியினைத் தொட வேண்டும். தூக்குக் குண்டு ( கூர்மையான ஈயம் கட்டப்பட்ட க...
சரியாக தூணுக்கு செங்குத்தாக பொருத்தப்பட்டிருக்கின்றது என்பதைக் குறிக்கும். அடுத்ததாக , திசைக்காட்டியை முக்காலியில் பொருத்த வேண்டும். இதனைப் பொருத்தும் பொழுது ரசமட்டட்தை கொண்டு கிடைமட்டமாக பொருத்துதல் வேண்டும். பின்பு , திசைக்காட்டி காண்பிக்கும் திசையில் கூர்முனைக் கொம்பினை கண்ணுக்கு எட்டும் தூரத்தில் நிலப்பரப்பில் சொரு...
( monopod ) பயன்படுத்தலாம். முதலில் , திசைக் காட்டியினை பார்ப்பவரின் மார்பு அளவிற்கு கம்பினை வெட்டி , மேல்பகுதியினை தட்டையாக திசைக்காட்டியின் அடிதளப் பருமனுக்கு ஏற்றவாறு வெட்டிவிட வேண்டும். கீழ்ப் பகுதியினை கூர்மையாக்கி தூணுக்கு அல்லது எல்லைக் கல்லுக்கு பின்னால் மண்ணில் சொருகி விட்டு தட்டையாக்கப்பட்ட மேல் பகுதியில் திச...
அளக்கும் பொழுது தூணிலிருந்து கூர்முனைக் கொம்பு வரை அளக்க வேண்டும். முக்காலி அல்லது கம்பினை கூர்முனைக் கொம்பு இருக்கும் இடத்திற்கு மாற்றி மேற்கண்டவாறு அங்கிருந்து மற்றொரு கூர்முனைக் கொம்பினைச் சொருகி தொடர்ந்து அளவையை மேற்கொள்ளலாம். அவ்வாறு மேற்கொள்ளும் பொழுது திசைக்காட்டி கூர்முனைக் கொம்பு செங்குத்தாக உள்ளதா என்பதைப் பா...
திசைக்காட்டியில் உள்ள ஊசியினை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. திசைக்காட்டியில் உள்ள ஊசியானது எப்போதும் புவியின் வடக்கு துருவத்தை நோக்கியே ஈர்க்கப்பட்டிருக்கும். எனவே , இதனைக் காந்த வடக்கு என்றே கூறலாம். புவியின் எந்தப் பகுதியில் திசைக்காட்டியினை வைத்து பார்த்தாலும் புவியின் வட துருவத்தை நோக்கியே காந்த வடக்கு அமைந்திரு...
அளவை செய்ய இயலாது. உண்மைய மயான வடக்கு ( True North ) புவியின் பூகோள அச்சின் வடதுருவமே உண்மையான வடக்கு ஆகும். கொடுக்கப்பட்ட அனைத்துக் கோடுகளுமே சரியான வடக்கு திசையளவை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவைகள் ஆகும். படம் 12.2 காந்த வடக்கு உண்மையான வடக்கு , உண்மையான தெற்கு மற்றும் காந்தத் தெற்கு ஆகியவற்றை காட்டுகின்றது. திசைய...
உண்மையான வடக்கு ஆகியவைக்கு ஏற்ப திசையினை காட்டுகின்றது. இது “ 0 ” இல் ஆரம்பித்து , ( வடக்கு ) “ 900 ” கிழக்காகச் சென்று. “ 180 ° ” தெற்குத் திசையை அடைந்து பின்பு “ 270 ° ” மேற்கே சென்று , “ 360௦ ” வடக்கை அடைகின்றது. முன்னோக்கு மற்றும் பின்னோக்கு திசையளவைகள் திசைக்காட்டியில் உள்ள ஊசியானது ஆரம்பப் புள்ளியில் இருந்து கடைச...
முன்னோக்கு திசையளவிற்கும் , பின்னோக்கு திசையளவிற்கும் , உள்ள வேறுபாடு எப்போதும் சரியாக 180 ° இருந்தால் இரண்டு புள்ளிகளிலும் அல்லது இரண்டு இடங்களிலிலும் எந்த விதமான தல ஈர்ப்பும் இல்லை என்று பொருள்படும். எடுத்துக்காட்டாக , ஆ , ஆ , மற்றும் இ என்னும் மூன்று அளவை நிலையங்கள் உள்ளன. முன்னோக்கு திசையளவு அ விலிருந்து ஆ வரை 95 °...
ஈர்ப்பு அல்லது காந்தக் குழப்பம் எதுவும் இல்லை என்பது உறுதி ஆகின்றது. மாறாக ‘ ஆ ’ என்ற நிலையத்திலிருந்து ‘ இ ’ என்ற நிலையம் 240 ° திசையளவில் அமைந்துள்ளது. மேலும் , ‘ இ ’ என்ற நிலையத்திலிருந்து ‘ ஆ ’ என்ற நிலையம் வரை உள்ள பின்னோக்கு திசையளவு 61 ° ஆகும். இப்போது இதன் வேறுபாடு ( 240 ° -61 ° = 179 ° ) 179 ° ஆக இருக்கின்றது....
கணித்துப் பார்த்தால் வேறுபாடு 180 ° ஆக இருக்காது. பட்டகத் திசைக்காட்டியினை பயன்படுத்தி அளவை செய்யும் முறை 1. ஒரு பட்டகத் திசைக்காட்டி , ஒரு கூர்முனைக் கொம்பு மற்றும் அதிகமான வளையம் இல்லாத சங்கிலி ஒன்று ஆகியவைகளை சேகரித்துக் கொள்ளவும். 3. 2. திசைக் காட்டியிலிருந்து எடுத்துக் குறிக்கப்படும் திசையளவு நேராக உள்ள பாதையின் த...
மனதில் வைக்கவும். 4. அளவையினை ஆரம்பிக்க முதலில் ஆரம்பப் புள்ளியினை ( நிலையம் 1 ) அடையாளம் கண்டு முக்காலியில் பட்டகத் திசைக் காட்டியைப் பொருத்த வேண்டும். பின்பு கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கூர்முனைக் கொம்பினை உனது கூட்டாளியிடம் கொடுத்து , நேராக மண்ணில் குத்தவும் ( நிலையம் 2 ). இவ்விரண்டு நிலையங்களுக்கு இடைப்பட்ட கோண அளவ...
சரியாக உள்ளதா என்பதை கண்டறியவும் , முன்னோக்குக் கோண அளவு 180 ° -க்கும் அதிகமாக இருந்தால் , நீ 180 ° -யை இந்தக் கோண அளவிலிருந்து கழித்து விட்டால் , மீதி உள்ளவை பின்னோக்கு கோண அளவை ஆகும். ஆனால் 180 ° க்கும் குறைவாக முன்னோக்குக் கோண அளவு இருந்தால் , 180 ° -யை நீ அத்துடன் சேர்த்துக் கூட்டிக் கொண்டால் அது பின்னோக்குக் கோண அ...
2 - க்கும் இடைப்பட்ட தூரத்தை அளக்க சங்கிலி அல்லது நாடாவினைப் ( Tape ) பயன்படுத்தி , அடி ( Foot ) கணக்கில் எழுதி வைக்க மறக்கக் கூடாது. சங்கிலி அல்லது நாடா இல்லாத பொழுது நடந்து எத்தனைக் காலடிகள் ஆனதோ அதனை மூன்றால் பெருக்க மொத்த அடிகள் நமக்குக் கிடைக்கும். ஒரு காலடிக்கு கிட்டத்தட்ட மூன்று அடிகள் அல்லது ஒரு கெஜம் ( yard ) ...
நடந்து கடந்து கணக்கிடலாம். 7. நிலையம் 1 மற்றும் நிலையம் 2 ஆகியவைகளுக்கு இடையில் உள்ள பாதையில் நடந்து வேறு ஏதேனும் சில பகுதிகள் அளக்க வேண்டியது உள்ளதா என்பதை ஆராய்ந்து , முதலில் குறித்துக்கொண்ட பக்கத்திலேயே பதிவு செய்து கொள்ளவும். தேவைப்பட்டால் அளக்கப்படும் கூறுகளின் படத்தையும் வரையலாம். 8. இப்பொழுது நீங்கள் இரண்டாவது ந...
ஏதாவது சில பகுதிகளின் கோணத்தை அளக்க வேண்டி உள்ளதா என்பதைச் சோதித்துப் பார்க்கவும். இதே போல் தொடர்ந்து அனைத்து நிலையங்களின் கோண அளவுகளை அளந்து உங்களுடைய குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யவும். 9. இந்த கோண அளவைகள் மற்றும் அனைத்து குறிப்புகளைக் கொண்டு களத்தில் அளந்த நிலத்தின் வடிவத்தை பின்னர் படமாக வரையலாம். களப் புள்ளிவ...
கோடுகள் வரையப்பட்டுள்ளன. இவை பக்கத்தின் மையப்பகுதி வழியாகச் செல்கின்றன. பொதுவாகவே , அளவீடுகள் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் கீழிலிருந்து மேலாக பதிவு செய்யப்படுகின்றன. நிலையங்கள் முக்கோணங்களால் குறிக்கப்பட்டு வரிசையான எண்கள் அல்லது எழுத்துகள் அடையாளங்களாகக் கொடுக்கப்படுகின்றன. ‘ அ ’ என்ற நிலையத்திலிருந்து ‘ ஆ ’ என்ற ந...
நிலையங்களுக்கு இடைப்பட்ட தூரத்தை ‘ ஆ ’ நிலையத்தில் வரையப்பட்ட முக்கோணத்தின் கீழ் எழுதப்பட்டு ‘ ஆ ’ நிலையத்தில் வட்டம் ஒன்று வரையப்படுகின்றது. காந்த விலக்கம் எந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ளது என்பது வலது பக்கத்தின் கீழ் பகுதியில் பதிவு செய்யப்படுகின்றது. அங்கேயே அளவை எந்த தேதியில் எடுக்கப்பட்டது என்பதும் மற்றும் அளவை செய்த...
இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள தூரம் மற்றும் ‘ அ ’ வின் தொடுகோட்டுக் கோணம் தெரிந்து இருந்தால் போதும். ‘ ஆ ’ விலிருந்து ' இ ' வரை உள்ள ஒரு பொருளின் உயரத்தைத் தீர்மானிக்கலாம். தொடுகோட்டுக் கோண அளவை , தொடுகோட்டு அட்டவணையில் ( log book ) பார்த்து தெரிந்து கொள்ளலாம். சூத்திரம் : அஆ x ‘ அ ’ வின் தொடுகோண அளவு = x எடுத்துட்கா...
வரை உள்ள உயரத்தைக் கூட்டவேண்டும். வன பாதுகாப்பாளர் தன் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி மரத்தை அளக்கும் முறை ( எடுத்துக்காட்டு ) நாம் பொருள்களை வாங்கும் பொழுது விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவது போல , எவ்வளவு மரங்கள் வனத்தில் உள்ளன என்பதையும் மரங்களைப் பார்த்து ஒப்பிட்டுக் கணிக்கலாம். உன்னுடைய துண்டு நிலத்திலுள்ள சில ...
என்பதாகப் பொருள்படும். உயிரியல் படிப்பில் அதிகமாக பழக்கத்தில் உள்ள அணுகுமுறை : மரங்களை மதிப்பிடுவது என்பது ஒரு தீர்மானிக்கப்பட்ட துண்டு நிலத்தினைக் குறிக்கும். இந்த துண்டு நிலப்பகுதி எந்த வடிவத்திலும் காணப்படலாம். ஆனால் , அங்குள்ள அனைத்துத் துண்டு நிலங்களும் ஒரே வடிவத்திலும் அளவிலும் இருக்க வேண்டும். மரத்தின் கன பரிமாண...
மதிப்பிட மரத்தை வெட்டாமல். மரத்தின் உயரம் மற்றும் குறுக்களவு ஆகியவையினை அளந்து கணக்கிடுவர். உயரத்தை அளக்க திரிகோணமிதியை பயன்படுத்தலாம். உங்களுக்கும் , மரத்திற்கும் உள்ள கிடைமட்ட தூரம் மற்றும் மரத்தின் மேல் பாகத்திலிருந்து கீழ்பாகம் வரை உள்ள கோணம் ஆகியவற்றை அளந்து மரத்தின் உயரத்தை அறியலாம். இவ்வாறு உயரத்தை அறிய உதவும் க...
திசையளவுகள் என்றால் என்ன ? அளவை எவ்வாறு அளக்கப்படுகின்றது ? 14. இந்தியச் சாய்வுமானியைப் பயன்படுத்தி உயரத்தை எவ்வாறு அளக்கலாம் ? III. விரிவான விடையளி 18 15. பட்டகத் திசைக்காட்டி அளவையின் படிநிலைகளை எழுதுக. 16. களப் புள்ளிவிவரங்களை எவ்வாறு பதிவு செய்வாய் ? 17. வனப் பாதுகாப்பாளர்கள் எவ்வாறு மரத்தின் கன பரிமாணத்தை அளவிடுகி...
பயன்படுத்தப்படும் கருவிகளைப் பற்றி கேட்டறிக. 19. அளவை செய்பவர் அல்லது அளவை செய்யும் முறையினை அறிந்துள்ள பொறியியலாளரை வகுப்புக்கு அழைத்து மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்யவும் புவித்தகவல் தொகுதிகள் பாடம் 13 விவரப் பேழை மேலாண்மைத் தொகுதிகள் மற்றும் புவித்தகவல் தொகுதிகள் கற்றல் நோக்கங்கள் மாணவர் விவரப் பேழை மேலாண்மை ( Data...
வருடங்களில் , புவித்தகவல் தொகுதிகள் புவியியலின் புதுப் புனைவுகளில் முதன்மை வாய்ந்தவையாகத் திகழ்ந்தன. புவித்தகவல் தொகுதிகள் , கணிப்பொறிகளின் உதவியுடன் பரப்புப் பகுப்பாய்வினை , குறிப்பாக நிலவரைபடம் வரைதலை , நடைமுறைக்குக் கொண்டு வந்தன. பல நாடுகளில் இப்புவித்தகவல் தொகுதிகளின் சிறப்பு பற்றி நாம் விழிப்புணர்வு கொண்டிருக்கவில...
கழகங்களிலும் புவித்தகவல் தொகுதிகள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. அவற்றினை ஆய்வுக்கு அடிப்படை அணுகுமுறையாகக் கொண்டு , பல நல்ல திட்டங்கள் தொடங்கப் பெற்றுள்ளன. அவ்வாறே , புவித்தகவல் தொகுதிகளை எளிமையாகவும் சுலபமாகக் கையாளும் வண்ணமாக மாற்று முயற்சிகளும் , வழக்கில் இருக்கும் பயன்பாட்டினை மேன்மை செய்யும் வகையிலும் , நடவ...
ஒன்று தேவை. புவியியலாரும் பயன்பாட்டாளர் மற்றும் மாணவர்களும் தமது பயனுக்கும் பயன்பாட்டிற்கும் உரித்தான எளிய , நல்ல அழகான , வடிவங்களில் நிலத்தோற்றங்களை வரைகின்ற திறமைகள் கொண்டுள்ளனர். பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வரும் நிலவரைபடங்கள் ( maps ) தற்பொழுது சிறப்புக் கருவிகளால் அதே எளிமையுடனும் , அழகுடனும் வடிவமைக்...
தொகுப்புகள் வழக்கில் உள்ளன. அவைகள் பொதுவாக ' புவித்தகவல் தொகுதிகள் ' என அழைக்கப்படுகின்றன. அவை பல்வேறான மேடைகளில் ( Platforms ) நடைமுறைக்கு வந்துள்ளன. கணிப்பொறிகள் பொருத்த வரை , இன்று பல இயக்கத் தொகுதிகள் ( Operating systems ) உள்ளன. இவற்றுள் ஒன்று “ தகடு இயக்கத் தொகுதி ” ( Disk Operating systems ) எனப்படும். சன்னல்கள்...
புள்ளி விவரப் பேழை மேலாண்மைத் தொகுதிகள் ( Database Management Systems ) புள்ளி விவரப் பேழைகள் ( Databases ) 7. புள்ளிவிவரமாற்றம் 9. புள்ளிவிவர சேகரிப்பு மென் கட்டளைத் தொகுப்பு என்பது ஒரு கட்டளை நிரல் ( Program ) இவை கணிப்பொறிகளில் சில பணிகளை ஆற்றுவதற்காகப் பயன்படுகின்றன. புவித் தகவல் தொகுதிகள் போன்ற மென்கட்டளைத் தொகுப்...
கணிப்பொறி கொண்டு இவைகளை வைத்தே நிலவரைபடங்கள் வரையப்படுகின்றன. பரப்புசார் புள்ளி விவரப் பேழைகள் ( Spatial Databases ) நமக்கு ஒரு மக்களடர்த்தி காட்டும் நிலவரைபடம் தேவை என எடுத்துக்கொள்வோம். நிலவரைபடத்தினை வரைய , மூன்று அடிப்படைக் கூறுகள் பயன்படும் எனக் கற்றறிகிறோம். 1. நிலவரைபடத்தின் பரப்பும் எல்லைகளும் , ( area , bounda...
வேண்டிய நிலவரைபடம் , முதலில் கணிப்பொறி புள்ளி விவரப் பேழையாக மாற்றப் படவேண்டும். இப்புள்ளிவிவரப் பேழையில் , எல்லைகள் மிக முக்கியமானவை. இவ்வெல்லைகள் புள்ளி விவரப் பேழையில் கோடுகளாக அல்லது வளைவுகளாக மற்றும் பலபக்க வடிவங்களாக ( lines , arcs , polygons ) நிரப்பப் படவேண்டும். எண் வடிவப்புள்ளி விவரங்கள் ( digital data ) - ( ...
நிலவரைபடங்கள் மாவட்ட எல்லைகள் , வட்ட எல்லைகள் , வட்டங்களின் பெயர்கள் போன்ற அடிப்படைப் புள்ளி விவரங்களைக் கொண்டுள்ளன. இவ்வாறானப் புள்ளி விவரங்களைக் கொண்டு புள்ளிவிவரப் பேழைகளை நிரப்புவோமானால் , நாம் பரப்பு சார் புள்ளிவிவரப் பேழை ஒன்றை வடிவமைக்கின்றோம். எண் வடிவமேடை இவ்வாறு உருவாக்கப் பெற்ற புள்ளிவிவரப் பேழை பரப்புசார் ப...
என்பவற்றிலிருந்து , கருவி கொண்டு உருவாக்கப்பெறும் எண்வடிவப் புள்ளிவிவரப் பேழை. இதுவரை பார்த்ததிலிருந்து , புவித்தகவல் தொகுதிகள் மிகவும் சக்தி வாய்ந்த மென் கட்டளைத் தொகுப்புகளைச் சாரும். அவைகளுக்கு இன்னொரு ஆற்றலும் உண்டு. இவை தொலை நுண்ணுணர்வு மூலம் பெறப்பட்ட பிரதிமங்களில் கிடைக்கும் தகவல்களையும் ஆராயும் தன்மை கொண்டவை. ந...
மற்றும் நிலவரைபடம் வரைதல் என்ற இருபணிகளுக்காகப் பயன்படுத்தப்பெறும் - சிறப்பாக அடுக்குகளாக நிலவரைபடங்களை ஒன்றன் மீது ஒன்றாகப் பதித்து நிலவரைபடம் ஒன்றினைப் படைக்கின்ற ( overlay ) முறையையும் உள்ளடக்கிய -புவித்தகவல் தொகுதிகளே ஒருங்கிணைக்கப் பெற்ற புவித்தகவல் தொகுதிகள் எனப்படும். புவித்தகவல் தொகுதிகளின் பயன்பாடுகள் புவித்தக...
கணிப்பொறிகளில் அதிகமாகப் பொருத்தப்பெற்றுள்ளன. எண்வடிவ மற்றும் உரைவடிவப் புள்ளிவிவரங்களும் இத்தொகுதிகளால் பயன்படுத்தப்படுகின்றன ( படம்.13.4 ). வள மதிப்பீடு , வளத்திட்டமிடல் , சூழல் மதிப்பீடுகள் , பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் மேலாண்மைத் திட்டங்களில் புவித்தகவல் தொகுதிகள் பயன்பாடு சிறப்புடைத்து. வளர்ந்து வரும் நாடுகளில்...
தொடர்புகளுடையவையாய் உள்ளன. பல பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ச்சி , மேம்பாடு , நலவாழ்வு மற்றும் அவற்றின் இடையிலான ஒருங்கிணைப்பு போன்றவற்றில் அக்கறை கொண்டு , உலகளாவிய , வட்டார அளவு மற்றும் தல அளவிலான மேம்பாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளன. இவ்வெல்லாப் பன்னாட்டு நிறுவனங்களும் இன்று புவித்தகவல் தொகுதிகளைப் பயன்படுத்தி உலக மேம்ப...
தொகுதிகளின் உதவியுடன் ஒரு பயிர் எங்கே பயிரிடப்படலாம் என்பதையும் , அவ்வாறே அப்பயிருக்கு ஏற்றவாறான மண்வளங்கள் எங்குள்ளன என்பதையும் மதிப்பிடமுடியும். இவ்வகை மதிப்பீட்டில் , அவர் மண் வகைகள் , நிலத் தோற்றங்கள் , மழை வீழ்ச்சி மற்றும் இன்னும் பல விவரங்களைக் கொண்டு அப்பயிரினை விளைவிக்கும் வாய்ப்புகள் பற்றி நிலவரைபடம் வரையலாம்....
நிலவரைபடங்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி ஏற்புடைத்தான பரப்புகளைக் கண்டறியவும் செய்யலாம். அவ்வாறே , பொருளாதார நடவடிக்கைகளின் சூழல் மீதானத் தாக்கங்களை , அவற்றின் விளைவுகளை மற்றும் அவ்வாறானத் தாக்கத்தினால் எழும் வீரியத்தினை வைத்து எங்கெல்லாம் தேய்தலும் / குறைதலும் நிகழ்கின்றன என்பதை நிலவரைபடம் கொண்டு காட்டலாம். தேய்தல் / ...
அறிவியல்களிலும் நுட்பத்துறைகளிலும் பயன்படுத்தப்படுவதே. புவித்தகவல் தொகுதிகள் இவ்வாறு பலவாறான அறிவியல் ஆய்வுகளில் பயன்படுகின்றன என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியையும் , மாணவர்க்கும் மற்ற பயன் பாட்டாளர்களுக் கெல்லாம் சிறப்பினையும் தருகின்ற ஒன்று என்பதில் ஐயமில்லை. கற்றல் அடைவுகள் I. மாணவமணிகள் தகவல் , புள்ளிவிவரப் பேழை மேலா...
சிறப்பையும் தெரிந்து தெளிவடைந்தனர். 1. சுருக்கமாக விடையளி கணிப்பொறிகளைப் பயன்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கான இரண்டு சிறப்பு அணுகு முறைகள் யாவை ? எவ்விரண்டு முறைகளைப் பின்பற்றி பரப்புசார் புள்ளிவிவரப் பேழைகளை உருவாக்க முடியும் ? 3. தொடர்புப் புள்ளி விவரப் பேழைகளின் பயன்பாடுகளை விவரி. 4. புவித் தகவல் தொகுதிகள் என்றால் என்...
காணும் தொகுதிகளது பிரிவுகள் உலக அமைவிடங்கள் காணும் தொகுதிகளைச் சார்ந்து மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன. அவையாவன : 1. பரப்புப் பிரிவு ( Space segment ) : உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதிகளின் பரப்புப் பிரிவு செயற்கைக் கோள்களைக்கொண்டுள்ளது. இந்த அண்டவெளி வாகனங்கள் ( Space vehicles ) அண்டவெளியிலிருந்து ரேடியோ சங்கேதங்களை ...
உள்ளடக்கியது. இவைகளுள் முக்கியமான தலைமைப் பின்தொடர் வசதி ( Receiving centre ) ரீசிவர் விமானப் படைத்தளத்தில் ( Airforce station ) கொலராடோ மாநிலத்தில் உள்ளது. இவை அண்டவெளி வாகனங்களிரிருந்து வெளிவரும் சங்கேதங்களை பின் தொடர்கின்றன ; இந்நடவடிக்கை அவ்வாகனங்களின் செயற்கைக் கோள் சார்ந்த வலப்பாதை மாதிரிகளின் தன்மையைப்பொருத்துள்...
கணக்கிடுகின்றன. தலைமைக் கட்டுப்பாட்டுத் தளம் வலப்பாதைப் புள்ளி விவரங்களையும் அண்டவெளி வாகனங்கள் இவைகளை ரேடியோ சங்கேதங்களையும் உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதிகளின் பெறுவான்களுக்கு அனுப்பி வைக்கின்றன. 3. பயன்படுத்துபவர் பிரிவு ( User segment ) : உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதியின் பயன்படுத்துபவர் பிரிவு அதன் பெறுவான்...
மற்றும் காலம் என்பவற்றை கணக்கிட குறைந்தது நான்கு செயற்கைக் கோள்களாவது தேவைப்படும். ( x , y , z என்பவை தீர்க்கத்தினையும் , அட்சத்தினையும் , ஒரு இடத்தின் கூற்றின் மதிப்பினையும் குறிக்கும் ). உலக அமைவிடம் கண்டறியும் தொகுதிப் பெறுவான்கள் வாகனங்களை வழிநடத்தவும் ( navigation ) அமைவிடங்கள் கண்டறியவும் , காலம் பரவல் மற்றும் பல...
பயன்பாட்டிற்கும் உற்பத்தி செய்யப்படுகின்றன. துல்லிய அமைவிடங்கள் ( Micro locations ) கண்டறிவதில் பெறுவான்கள் பெரும் பங்கு வகிக்கின்றன ; அத்துடன் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள பெறுவான்கள் தொலை தூரத்திலிலுள்ள பெறுவான்களுக்குத் தேவையானத் திருத்தங்கள் மற்றும் ஒப்பு அமைவிடங்கள் சார்ந்த புள்ளி விவரங்களையும் தருகின்றன. நில அளவை ...
பொருத்தப்பட்டிருக்கும் துல்லிய கடிகாரங்களைப் பொருத்து எல்லா நிலையங்களுக்கும் அனுப்பப்படுவது இன்னொரு பயன்பாடாகும். அவ்வாறே வானவியல் கண்டுபிடிப்புகள் , தொலைத்தொடர்பு வசதிகள் , சோதனைக் கூட தரங்கள் போன்றவைகளும் துல்லிய கால சங்கேதங்கள் பொருத்து அமைக்கப்பட பெறுவான்கள் வழிவகுக்கின்றன. ஆய்வுத்திட்டங்கள் பெறுவான்களிலிருந்து கிட...
சப்தம் ( noise ) ஒருதலைப் பட்சங்கள் ( biases ) மற்றும் பெரும் தவறுகள் ( blunders ) என்பவற்றின் கலப்புகளால் உருவாகலாம். தவறுகள் எந்த ஒரு அளவீடுகளிலும் எழுவதற்கு பல கூறுகள் காரணமாகலாம். சப்தம் , ஒரு தலைப்பட்சங்கள் மற்றும் பெருந்தவறுகள் சப்தம் சார்புடைய தவறுகள் பிரதி எடுப்பானில் எழும் சப்த சங்கேதங்கள் ( ஏறக்குறைய 1 மீட்டர...
மற்ற கூறுகளும் இத்தவறுகளுக்குக் காரணமாகலாம். கட்டுப்பாட்டுப் பிரிவினால் திருத்தப்படாத அண்டவெளி வாகனக் கடிகாரங்களின் தவறுகள் 1 மீட்டர் வரையிலான தவறுகளுக்கு இடமளிக்கலாம். வளிமண்டலத்தின் கீழடுக்கு - புவித்தரையிலிருந்து 8-13 கி.மீ வரையில் பரவியுள்ளது. வெப்பம் , அழுத்தம் , ஈரப்பதம் சம்பந்தப்பட்ட மாற்றங்களைக் கொண்டுள்ளது. கீ...
கட்டுப்பாட்டுப் பிரிவால் ஏற்படும் தவறுகள் கணிப்பொறி அல்லது மனிதத் தவறுகளாக அமைந்து 1 மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டர்கள் வரையிலானத் தவறுகளுக்கு ஏதுவாகலாம். பயன்படுத்துபவர்களால் ஏற்படும் தவறானத் தெரிவுகள் ஒன்றிலிருந்து நூறு மீட்டர்களுக்கு மேலான தவறில் முடியலாம். மென்கட்டளைத் தொகுப்புகள் அல்லது எந்திரக் கோளாறுகள் காரணமாக...
இருக்கலாம். தானியங்கி வாகன அமைவிடம் ; ஒரு பின்தொடர் நுட்ப எடுத்துக்காட்டு தானியங்கி வாகன அமைவிடம் என்பது வாகனங்கள் , கப்பல்கள் மற்றும் டிரெயிலர் , பெட்டகங்கள் ( Containers ) மற்றும் கருவிகள் போன்ற நகரும் சொத்துக்களைப் பின் தொடரப் பயன்படும் ஒரு நுட்பம். ஒவ்வொரு நகரும் வாகனமும் அமைவிடம் கண்டறியும் தொகுதி பொருத்தப்பட்டு அ...
தொடர்புகொள்ளவும் , அமைவிடத்தினைக் கணக்கிடவும் அமைவிடம் கண்டறியும் தொகுதியின் பெறுவான்கள் பொருத்தப்படவேண்டும். உண்மையில் நகரும் பெறுவான்கள் இதைவிட வேறு பலசெயல்களையும் ஆற்றுகின்றன. அவையாவன : அமைவிடம் கண்டறியும் தொகுதியின் செயற்கைக் கோள்களிலிருந்து சங்கேதங்களைப் பெருகின்றன. அமைவிடம் , வேகம் , திசை மற்றும் உயரங்களைக்கணக்கி...
கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொள்கின்றன. தன்னுள்ளிருக்கும் நுண்ணறிவு எந்திரம் வழியே எப்போது அறிக்கை தரவேண்டும் என்பது பற்றி தீர்வு செய்கின்றன. தன்னுள்ளிருக்கும் புள்ளிவிவரங்களைக் கணிப்பொறியில் சேமித்து வைக்கின்றன. துல்லிய நேரத்தினை பெற்றுக் கொள்கின்றன. செயற்கைக் கோள்கள் அணு கடிகாரங்களைப் பயன்படுத்துகின்றன. தொடர்ப...
என்பதால் நிலையம் வாகனங்களின் நிலையையும் அதே சமயத்தில் நுண்ணறிவு எந்திரத்திற்குத் தேவையானபுதுக்கட்டளைகளையும் அனுப்புகின்ற வகையில் அமைந்துள்ளன. கட்டுப்பாட்டு நிலைய மென்கட்டளைத் தொகுப்பு கட்டுப்பாட்டு நிலையம் அமைவிட அறிக்கைகளைக் கையாளவும் தொடர்புகளை ஏற்கவும் ஒரு கணிப்பொறித் தொகுதியையும் அதன் மென்கட்டளைத் தொகுப்பையும் தேவை...
time ) நிலவரைபடம் மூலம் காட்டுகின்றது. புள்ளிவிவரங்களை பின்னர் திரும்பவும் பார்த்து , ஆய்வு செய்யும் வகையாகச் சேமித்து வைக்கின்றது. வாகனங்களுக்குக் கட்டளைகளை நுண்ணறிவு எந்திரத்தின் நிமித்தம் அனுப்புகின்றது. விரிவாக்கப் பணிகளுக்காக மூன்றாம் மென் கட்டளை தொகுப்புகளுடன் இணைப்புகளை வரவேற்கின்றது. கற்றல் அடைவுகள் மாணவர்கள் உ...
விடையளி 1. உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி என்றால் என்ன மற்றும் அதன் நோக்கம் என்ன ? பயிற்சிகள் 2. அமைவிடங்கள் கண்டறியும் தொகுதிகளின் பிரிவுகளைச் சொல்லி அவை ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமாக எழுதுக. நகரும் அமைவிடங்கள் கண்டறியும் கருவியின் பயன் என்ன ? 3. 4. கட்டுப்பாட்டு நிலைய மென்கட்டளைத் தொகுப்பு என்று நாம் கூறுவதன் அ...
வாகன அமைவிடம் பற்றி கூறி அதன் நுட்பம் பற்றி விவரி. 7. அமைவிடம் மற்றும் காலம் கண்டறிவதில் நாம் அமைவிடங்கள் கண்டறியும் தொகுதியை எவ்வாறு பயன்படுத்துகின்றோம். 8. அமைவிடங்கள் கண்டறியும் தொகுதியின் பயன்பாடு ஒன்றினை விளக்கமாக எழுதவும். 9. எந்த வழியில் அமைவிடங்கள் கண்டறியும் தொகுதிகள் பணியாற்ற இயலும் ? 10. அமைவிடங்கள் கண்டறியு...
பிரபஞ்சம் என்றால் என்ன பொது அறிவியல் இயற்பியல் Chapter 1 பிரபஞ்சம் கிரகங்கள் , நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் , விண்மீன் இடைவெளி மற்றும் அனைத்து பொருள் மற்றும் ஆற்றல் உட்பட மொத்தமாக பிரபஞ்சம் என வரையறுக்கப்படுகிறது. வரையறைகள் மற்றும் பயன்பாடு மாறுபடும் , அண்டம் , உலகம் மற்றும் இயற்கை ஆகியவை ஒத்த சொற்களில் அடங...
எல்லையற்ற வெப்பமாகவும் , விரிவடையும் போது குளிர்ச்சியடைகிறது. இன்றைய பிரபஞ்சத்தின் சராசரி வெப்பநிலை 2.725 கெல்வின் ஆகும். வெகு தொலைவில் உள்ள விண்மீன் திரள்களைப் கவனித்தால் , பிரபஞ்சம் ஒரு வேகத்தில் விரிவடைவதைக் காட்டுகிறது , பிரபஞ்சம் குளிர்ச்சியடைகிறது 3 ஊரி என்பதைக் காட்டும் தரவு , நமது பிரபஞ்சத்திற்கு மிகவும் சாத்தி...
மில்லியன் ஒளியாண்டுகளுக்கு மேல் சராசரியாக இருக்கும் போது , இந்த பருப்பொருள் பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஒரு படித்தாக ) பரவுகிறது. இருப்பினும் , சிறிய நீள அளவுகளில் , பருப்பொருள் உருவாக்குவதைக் காணலாம் அதாவது , படிநிலைகளில் கொத்துகள் ; பல அணுக்கள் நட்சத்திரங்களாகவும் , பெரும்பாலான நட்சத்திரங்கள் விண்மீன் திரள்களாகவும் , பெர...
கவனிக்கப்பட்ட பருப்பொருளும் உற்றுநோக்கும் போது எந்த திசையும் சமவெளியில் பரவியுள்ளது , அதாவது வேறுபட்டதாகத் மற்றவற்றிலிருந்து தெரியவில்லை ; வானத்தின் ஒவ்வொரு பகுதியும் தோராயமாக ஒரே அமைப்பைக் கொண்டுள்ளது. நுண்ணலை CMBR பிரபஞ்சம் முக்கியமாக விண்மீன்கள் , நட்சத்திரங்கள் , சூரிய குடும்பம் , வால் 10 நட்சத்திரங்கள் , விண்கற்கள...
உருவாக்குகின்றன. நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள விண்மீன் மண்டலத்தில் வாயு மற்றும் தூசி காணப்படுகிறது. இது விண்மீன் வாயு என்று அழைக்கப்படுகிறது , ஹைட்ரஜன் அணு வடிவத்தில் ( H ) மற்றும் மூலக்கூறு வடிவத்தில் ( H2 ) முக்கியமாகள்ளது விண்மீன் மண்டலத்தில் உள்ள வாயு நடுநிலையாக மற்றும் அயனியாக உள்ளது. நடுநிலையாக ஹைட்ரஜன் வாயு முக...
தூசி சிறிய அல்லது பெரிய துகள்களாக இருக்கலாம். நட்சத்திரங்கள் விண்மீன் திரள்களின் மூன்றாவது மற்றும் இறுதி பகுதி ஒரு விண்மீன் மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை 10 மில்லியன் முதல் ஒரு டிரில்லியன் வரை இருக்கும் ஓ நட்சத்திரம் / விண்மீன்கள் EE நட்சத்திரம் என்பது ஒரு பெரிய , ஒளிரும் பந்து , இது ஒளி மற்றும் பிற அதிக ...
நட்சத்திரங்கள் நமது சூரியனைப் போன்றது. சில நிறை , அளவு , ஒளிரும் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றில் வேறுபடுகின்றன பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் சூரியன் — சென்டாரி. இது தொலைவில் கிட்டத்தட்ட 150000000 கிலோமீட்டர் அருகிலுள்ள நட்சத்திரம் ஆல்பா 40000000000000 கிமீ தொலைவில் உள்ளது. அடையாளம் காணக்கூடிய இது பூமியில் இருந்து...
பெரிய டிப்பர் , பெரிய கரடி அல்லது சப்தர்ஷி என்றும் அழைக்கப்படுகிறது. நன்கு அறியப்பட்ட மற்றொரு விண்மீன் கூட்டம் , ஓரியன் குளிர்காலத்தின் பிற்பகுதியில் மாலை நேரங்களில் காணலாம். இது வேட்டைக்காரன் என்றும் அழைக்கப்படுகிறது. காசியோபியா என்பது வடக்கு வானத்தில் உள்ள மற்றொரு முக்கிய விண்மீன் கூட்டமாகும். குளிர்காலத்தில் இரவின் ...
நட்சத்திரங்கள் நியூட்ரான் நட்சத்திரங்கள் , சுமார் 6 மைல்கள் ( 10 கிலோமீட்டர் ) ஆரம் கொண்டவை. சுமார் 75 சதவிகித நட்சத்திரங்கள் பைனரி அமைப்பின் உறுப்பினர்கள் , ஒரு ஜோடி நெருங்கிய இடைவெளி கொண்ட நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றுகின்றன. சூரியன் பைனரியின் பகுதி அல்ல. இருப்பினும் , அதன் அருகிலுள்ள அறியப்பட்ட நட்சத்திர அண்டம் ...
விண்மீன் திரள்கள் எனப்படும் பெரிய கட்டமைப்புகளில் நட்சத்திரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. தொலைநோக்கிகள் பிரபஞ்சம் முழுவதும் 12 பில்லியன் முதல் 16 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள விண்மீன் திரள்களை வெளிப்படுத்தியுள்ளன. நமது சூரியன் 100 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்களைக் கொண்ட பால்வெளி எனப்படும் விண்மீன் மண்டலத்தில்...
சுழற்சிகள் உண்டு. அவை பிறந்து , பல கட்டங்களைக் கடந்து , இறுதியாக இறக்கிறார்கள். சூரியன் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது , மேலும் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு அப்படியே இருக்கும். பின்னர் அது சிவப்பு ராட்சதமாக வளரும். சூரியனின் வாழ்நாளின் பிற்பகுதியில் , அது அதன் வெளிப்புற அடுக்குகளை தூக்கி எறிந்துவிடும். எ...
நிலை வழியாக செல்லாமல் மாறாக , அவை குளிர்ச்சியடைந்து வெள்ளை குள்ளர்களாகவும் , பின்னர் கருப்பு குள்ளர்களாகவும் மாறும். சூப்பர்நோவா எனப்படும் கண்கவர் வெடிப்புகளில் சில சதவீத நட்சத்திரங்கள் இறந்துவிடும். பூமியிலிருந்து பார்க்கும் நட்சத்திரத்தின் பிரகாசம் இரண்டு காரணிகளைப் பொறுத்தது : நட்சத்திரம் வெளியிடும் ஒளி ஆற்றலின் அளவ...
பொறுத்தது. கொடுக்கப்பட்ட அளவிலான நட்சத்திரம் ஆற்றலை உருவாக்கும் விகிதத்தை நிறை மேற்பரப்பு வெப்பநிலையை பாதிக்கிறது. மேற்பரப்பு வெப்பநிலை ஒரு நட்சத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலையானது மையத்தில் உள்ள ஆற்றல் உற்பத்தி விகிதம் மற்றும் நட்சத்திரத்தின் ஆரம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது , பெரும்பாலும் அதன் வண்ணக் குறியீட்ட...
பரப்புகிறது. ஒரு நட்சத்திரத்தின் மையப் பகுதியில் வெப்பநிலை பல மில்லியன் கெல்வின்கள். நட்சத்திர வெப்பநிலையானது வெவ்வேறு தனிமங்களின் ஆற்றல் அல்லது அயனியாக்கம் விகிதத்தை தீர்மானிக்கிறது , இதன் விளைவாக ஸ்பெக்ட்ரமில் உள்ள சிறப்பியல்பு உறிஞ்சு கோடுகள். ஒரு நட்சத்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலை , முழுமையான அளவு மற்றும் உறிஞ்சு...
ஆயிரம் K மேற்பரப்பு வெப்பநிலையைக் கொண்டுள்ளன. சிவப்பு ராட்சத நட்சத்திரங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 3,600 K , ஆனால் மேற்பரப்பு பெரியதாக இருப்பதால் அதிக ஒளிர்வைக் யுமையே வெ ய்மையேளில் கொண்டுள்ளன ஏன் நட்சத்திரங்கள் வெவ்வேறு நிறங்களில் உள்ளன ? வெளிப்புற ஒன்றோடொன்று ஒரு நட்சத்திரத்தின் நிறம் என்பத...
நிறமாலையின் நீலப் பகுதியை நோக்கி அதிக ஒளியை வெளிப்படுத்தினால் நீல நிறத்தில் தோன்றும். நமது சூரியன் காணக்கூடிய நிறமாலையின் அனைத்து அலைநீளங்களிலும் சமமாக ஒளியை வெளியிடுகிறது. அதனால் தான் நமது சூரியன் நமக்கு வெண்மையாகத் தெரிகிறது. நட்சத்திரத்தின் நிறம் அதன் மேற்பரப்பு வெப்பநிலையைப் பொறுத்தது 13 சிறுகோள்கள் சிறுகோள்கள் செவ...
சுற்றுப்பாதைகளுக்கு இடையில் உள்ளன , சில சனியின் சுற்றுப்பாதைக்கு அப்பால் க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் நன்கு கண்டறியப்பட்டன , இவை 2000 சுற்றுப்பாதைகளைப் அவை அவற்றை உள் மற்றும் பட்டியலிடப்பட்ட சுற்றுப்பாதைகளுடன் பின்பற்றுகின்றன , மண்டலத்திற்கு இட்டுச் செல்கின்றன. பூமி தாக்கப்பட்டுள்ளது. விண்கற்கள் என்றால் என்ன ? உள்ளன. 10...
நட்சத்திரங்கள் அல்லது விழும் நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பிரகாசமான விண்கற்கள் சில நேரங்களில் தீபந்துகள் என்றும் அழைக்கப்படுகின்றன. விண்கல் எனப்படும் உலோகம் அல்லது பாறைப் பொருளின் துகள் விண்வெளியில் இருந்து பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது ஒரு விண்கல் தோன்றுகிறது. காற்று உராய்வு விண்கற்களை வெப்பப்படுத்த...
வளிமண்டலத்தின் வழியாக விண்கற்கள் செல்லும் போது வெப்பமடைகின்றன. பெரும்பாலான விண்கற்கள் ஒரு நொடியே ஒளிரும். பெரும்பாலான விண்கற்கள் பூமியை அடையும் முன்பே சிதைந்து விடுகின்றன. ஆனால் சில பல நிமிடங்கள் நீடிக்கும் பாதையை விட்டு பூமியை அடையும் விண்கற்கள் விண்வீழ்கற்கள் எனப்படும். வால் நட்சத்திரங்கள் வால் நட்சத்திரங்கள் அதிக நீ...
சூரியனை நெருங்கும் போது வால் நீளம் வளரும். வால் 14 நட்சத்திரத்தின் வால் எப்பொழுதும் சூரியனை விட்டு விலகி இருக்கும். பல வால் நட்சத்திரங்கள் அவ்வப்போது தோன்றும். அத்தகைய ஒரு வால் நட்சத்திரம் ஹாலியின் வால் விண்மீன் ஆகும் , இது கிட்டத்தட்ட 86 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும். சூரிய குடும்பம் சூரியனும் அதைச் சுற்றி வரும் வான்ப...
இடையே உள்ள ஈர்ப்பு விசை அவற்றைச் சுற்றி வர வைக்கிறது. பூமி ஒரு கிரகம் மற்றும் சூரிய குடும்பத்தின் ஏழு கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனிலிருந்து தொலைவில் உள்ள கின்றன. எட்டு கிரகங்கள் புதன் , வெள்ளி , பூமி , செவ்வாய் , வியாழன் , சனி , யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும். 2006 வரை சூரிய குடும்பத்தில் ஒன்பது கோள்க...
வரையறைக்கு புளூட்டோ பொருந்தவில்லை ஆகவே S சூரியனைச் சுற்றி ஒரு திட்ட வட்டமான பாதையைக் ஒரு கோள் கொண்டுள்ளது. இந்த பாதை சுற்றுப்பாதை என்று அழைக்கப்படுகிறது. இந்த பா புதன் ' வாரு கலும் குடும்பத்தின் மிகச்சிறிய கோளாகும். புதனுக்கு துணைக்கோள்கள் இல்லை. வெள்ளி சூரிய வெள்ளி பூமியின் அருகில் உள்ள கோள். இது இரவு வானில் மிகவும் ப...
வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. வெள்ளிக்கு சந்திரனோ அல்லது துணைக்கோளோ இல்லை. இது கிழக்கிலிருந்து மேற்காகச் சுழலும் போது பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழலும். 15 பூமி சூரிய குடும்பத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே கோள் பூமி. சில சிறப்பு சுற்றுச்சூழல் பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ காரணமாகின்றன. பூமியின் மேற்பர...