text
stringlengths
11
513
மற்ற , மற்றை , நடு , பொது , அணு , முழு , புது , திரு , அரை , பாதி ; எட்டு , பத்து ; முன்னர் , பின்னர் ஆகிய இச்சொற்களுக்குப் பின் வரும் வலிமிகும். இந் நூலின் பக்கங்கள் 206-207இல் வந்துள்ள எடுத்துக்காட்டுகளைக் காண்க. 2. ஒரெழுத்து ஒரு மொழிக்குப்பின் வரும் வலி மிகும். பூப்பறித்தாள். தீப்பிடித்தது. பூ + பறித்தாள் தீ + பிடித்தது கை + குழந்தை கைக்குழந்தை. - - களில் அமைந்த 20 தமிழறிஞர்கள் எழுதியுள்ள உரைநடை நூல்களைப் படிக்கும்போது , வல்லெழுத்து மிகும் இடங்களைக் கவனித்துப் படித்து வந்தால் , பிழையின்றி எழுத நன்கு
தெரிந்து கொள்ளலாம். 1.4. மொழிப்பெயர்த்தல் அ ) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்ததல் ஆ ) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்தல் 1. சுருக்கி வரைதல் , 2. பொருள் உணர்திறன் 3. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் 4. கட்டுரை வரைதல் ( பொது ) 5. கடிதம் வரைதல் ( அலுவல் சார்ந்தது ) 6. தமிழ் மொழியறிவு தமிழ் மொழி எத்திசையும் புகழ் மணக்க இருந்துவரும் தமிழ் மொழி தமிழகத்தின் தாய்மொழி ; தமிழ்நாட்டில் வாழும் பெரும்பாலரான கேரளம் , தமிழ் மக்களின் தாய்மொழி. தமிழகம் தவிர ஆந்திரம் , கர்நாடகம் ,
பாண்டிச்சேரி , அந்தமான் தீவு , மகாராஷ்டிரம் , ஓரிசா , வங்காளம் , டெல்லி முதலிய மாநிலங்களிலும் தமிழ் மொழி யைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் குடியேறி இருக்கிறார்கள் அல்லது தங்கி இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள் வாழ்கிறார்கள். மொரீஷியஸ் தீவிலும் தமிழர்கள் இருக்கிறார்கள். மலேஷியாவிலும் சிங்கப்பூரிலும் மியான்மாரிலும் ( பர்மா ) தமிழர் கள் இருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவிலும் , பிரான்ஸிலும் , ஜெர்மனியிலும் , ஆஸ்திரேலியாவிலும் , இங்கிலாந்திலும் , அமெரிக்காவிலும் , கனடாவிலும் தமிழர்கள் குடியேறியிருக் கிறார்கள்.
எல்லா இடங்களிலும் உள்ள தமிழ் மக்களைக் கணக்கெடுத்தால் , அவர்கள் தொகை 7 கோடிக்கு மேல் இருக்கக் கூடும். இப்பெருந்தொகையினரின் தாய்மொழி தமிழே. இவ் வனைவரையும் சமய வேறுபாடின்றியும் கொள்கை மாறுபாடின்றி யும் ஒன்றுபடுத்துவது அமிழ்தினும் இனிய தமிழ் மொழியே. தொன்மொழி ' " உலகில் 6000 மொழிகள் தோன்றின என்றும் அவற்றுள் 2700 மொழிகள் இன்றும் உயிருடன் இருக்கின்றன என்றும் ருஷ்யா நாட்டுப் பிராவ்தா இதழ் கூறுகிறது. இந்த 2700 மொழி களுள் தமிழ் , வடமொழி , கன்னடம் , தெலுங்கு , மலையாளம். மராத்தி , வங்காளம் , உருது , சீனம் , பாரசீகம் ,
ஈப்ரு , இலத்தீன் , 25 பிரெஞ்சு , ஆங்கிலம் , ஜெர்மானியம் போன்றவையே இலக்கிய வளமுள்ள மொழிகளாகும். வடமொழி , கிரேக்கம் , இலத்தீன் , ஈப்ரு , சீனம் ஆகியவை போலவே தமிழ் மொழியும் மிகவும் தொன்மை உள்ள பெரு மொழியாகும் ; உயர்தனிச் செம்மொழியு மாகும். இருக்கிறது ஆகிய எழுத்துகளுக்குத் இந்தியாவில் மட்டும் 179 இலக்கிய வளமொழிகளும் 544 கிளை மொழிகளும் உள்ளன என்று இந்தியநாட்டு மொழி நூலறிஞராய் விளங்கிய காலஞ்சென்ற சுனிதி குமார் சட்டர்ஜி குறிப்பிட்டுள்ளார். இம்மொழிகௗனைத்திலும் தொன்மையானது தமிழ்மொழி சென்னை உயர்நீதி மன்ற நடுவராய்
இருந்தவரும் பேரறிஞருமாகிய காலஞ்சென்ற சதாசிவ ஐயர் அவர்கள் , வடமொழியைப் பார்க்கிலும் தமிழ்மொழி தொன்மையானதாய் இருக்க வேண்டும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழில் ஒரு ககரம் இருக்கிறது. வடமொழியில் இதற்குமேல் மூன்று ககரங்கள் உண்டு. க. ச , தமிழிலிருப்பதைவிட வடமொழியில் மும்மூன்று எழுத்துகள் மிகுதியாய் உண்டு. இவை தவிர வேறு எழுத்துகளும் வட மொழியில் உண்டு. இப்படி வடமொழியில் எழுத்து வளர்ச்சி யுற்றிருப்பதே அம்மொழி , தமிழ் மொழிக்குப் தோன்றியதைக் காட்டுகிறது. குறைவிலிருந்துதானே. வளர்ச்சி தோன்றுவது இயல்பு. இஃது
ஐயரவர்கள் கூறிய காரணம். திரு. வி.க. அவர்கள் தமிழ் மொழியில் மெல்லொலிகள் மிகுந்திருப்பதே அதன் தொன்மைக்குக் காரணம் என்றார். இற்றைக்கு 5,000 ஆண்டுப் பழமையுடையனவாய்க் கருதப்படும் ஹரப்பா , மொகஞ்சொதாரோ புதைபொருள்களில் இருக்கும் உருவ எழுத்துகளைப் படித்த ஈராஸ் பாதிரியார் , அவை தமிழ் எழுத்துகள் என்றும். ஆதலால் , தமிழ்மொழி தொன்மை வாய்ந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தொல்காப்பியம் கி.மு. 4 - ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்பர். இதுதான் தமிழிலக்கணம் தோன்ற வேண்டுமென் றால் இதற்குக் குறைந்தது ஆயிரம் னன்றி ஆண்டுகளுக்கு
முன்பாவது தமிழ்மொழி தோன்றிச் செம்மை வேண்டும். இப்படிப் பார்த்தால் தமிழ்மொழி குறைந்தது இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் தோன்றி வளர்ச்சியடைந்திருத்தல் வேண்டும் என்று கொள்ளலாம். தொன்மை மிக்க சங்க இலக்கியமாகிய புறநானூறு என்னும் நூலில் உள்ள இரண்டாம் முடிநாகராயர். செய்யுளில் முரஞ்சியூர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை " அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பின் 26 பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் " என்று கூறி வாழ்த்தியுள்ளார். அந்நூலுக்கு
உரை எழுதிய பழைய உரையாசிரியர். " அசைத்த தலையாட்டம் அணிந்த குதிரைகளையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்று வரும் பொருது போர்க்களத்தின்கண் படுந்துணையும் பெருஞ் சோறாகிய மிக்க உணவை ருபடைக்கும் வரையாது வழங்கி னோய் " என்று உரை கூறியுள்ளார். இருபடை வீரர்களுக்கும் பெருஞ்சோறு வரை வழங்கியதால் இத்தமிழகச் சேரமான் , பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் எனப் பெயர் பெற்றான். யாது ஈண்டுக் குறிப்பிட்டுள்ள போர் மகாபாரதப் போர் வெள்ளிடைமலையென விளங்கும். இப்பாரதப் போர்
நடந்த காலம் கி.மு. என்பர் வரலாற்றாசிரியர். ஆக இச் சேரவேந்தன் உயிரோடிருந்த காலத்தில் இப்பாடல் பாடியிருத்தல் வேண்டும். அம்மன்னன் இறந்த பின் இதனைப் பாடியிருத்தல் இயலாது. எனவே இப்பாடல் பாடிய காலம் இற்றைக்கு ஏறக் குறைய 3430 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மொழி தோன்றி வளர்ந்து செய்யுள் இயற்றிய நிலையை அடைய 1000 ஆண்டுகளாவது ஏற்பட்டிருத்தல் வேண்டும். எனவே தண்டமிழ் மொழி ஏறத்தாழ 4430 ஆண்டுகள் தொன்மையானது என்பது நன்கு விளங்கும். DECISIS சுப்பிரமணியம் மொழி நூலறிஞரான தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர்
வ.அய். அவர்கள். தமிழ்மொழியைப் பற்றிக் கூறியது பின்வருமாறு : இலக்கியங்க பழக்கம் 6 ஆண வரலாறு உண்டு. " ஏறத்தாழ இலக்கியங்களும் 2500 ' தமிழ் மொழிக்கு எழுத்துருவில் ஏறத்தாழ 2500 பேச்சுருவில் ஏறத்தாழ 5000 ஆண்டு ஆண்டாயினும் பழைய தொல்காப்பிய இலக்கணமும் இன்று படித்தாலும் பொருள் புரிவது கடினமன்று. இது பிற மொழிகளுக்கு இல்லாத சிறப்பாகும். இலத்தீனும் சமஸ்கிருதமும் பழம் பெருமையுடையவை. ஆனால் , அவை ஆய்வாளர்களின் மூலம் , அகரமுதலிகள் ( அகராதிகள் ) மூலம் பொருள் அறியும் நிலையில் இருக்கின்றன. கிரேக்கமும் அவற்றைப் போன்றதுதான்.
இன்றுள்ள கிரேக்க மொழிக்கும் பண்டைய கிரேக்கத்திற்கும் நிறைய வேற்றுமை உண்டு. இன்றைய கிரேக்க மொழி பேசுவோர் பண்டைய கிரேக்கத்தைத் தெரிந்து கொள்வது முடியாது. ஆனால் , பண்டைய தமிழை ஓரளவு கல்வி அறிவுள்ள தமிழ்ச் சிறுவனும் பொருள் தெரிந்து கொள்வது கடினமன்று. " ளாகிய என 1432 ண்டு... சங்க 27 தமிழ் இலக்கியங்களும் பழமையுடையனவே. இது குறித்துத் தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியர் காலஞ் சென்ற திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் , " தெலுங்கு மொழியை எடுத்துக் கொள்வோமாயின். அதற்குரிய ஆதி இலக்கியமாகிய நன்னைய பாரதம் என்னும் நூல் கி.பி.11 -
ஆம் நூற்றாண்டில் தோன்றிய தாகும். கன்னட மொழியை எடுத்துக் கொள்வோமாயின் , அதற் குரிய ஆதி இலக்கியமாகிய கவிராஜ மார்க்கம் என்னும் நூல் கி.பி. 9 - ஆம் நூற்றாண்டில் தோன்றியதாம். மலையாள மொழியை எடுத்துக் கொள்வோமாயின் , அதற்குரிய ஆதி இலக்கியமாகிய இராமசரிதம் என்னும் நூல் 14 - ஆம் நூற்றாண்டில் தோன்றினமை பிரசித்தம். ஆனால் , தமிழ் மொழியின் ஆதி இலக்கியங்களோ இப்போது அறுதியிட்டிருக்கின்றபடி கிறிஸ்துவ சகாப்தத்தின் ஆரம்ப காலத்திலே தோன்றியனவாகும். இங்கே ஆதி இலக்கி யங்கள் என்றது இப்போது ஆகும். இவ்விலக்கியங்களின் திருந்திய
வடிவங்களையும் செய்யுள் அழகுகளையும் முதிர்ந்த பக்குவத்தை யும் நோக்குமிடத்து , கிறிஸ்துவ சகாப்தத்துக்கு மிக மிக முற்பட்ட காலத்தே உருப்பெறத் தொடங்கியிருத்தல் அகப்படுவனவற்றுள் காலத்தால் முற்பட்டனவற்றையே தமிழிலக்கியங்கள் வேண்டுமென்று எளிதில் ஊகித்தல் கூடும். ES இத்தொன்மை பற்றித் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் பெருமை மேற்கொள்ளுதல் இயல்பே. இதனினும் மிக்கதொரு சிறப்பு நமது மொழிக்கு உள்ளது. திராவிட வகுப்பில் பிற மொழிக்கு உரிய ஆதி இலக்கியங்களெல்லாம் வடமொழி நூல்களின் வழிவந்தனவாம். உதாரணமாக , தெலுங்கு நூல்களுள் காலத்தால்
முந்திய நன்னைய பாரதம் என்னும் நூல் வடமொழியிலுள்ள வியாச பாரதத்தைப் பின்பற்றியது. தமிழிலக்கியங்களுள் காலத்தால் முந்திய நூல்கள் இப்பெற்றியன அல்ல " என்று குறிப்பிட்டுள்ளார். திராவிடத் தாய்மொழி தமிழே மயே வெல்லு இந்திய மொழிகளைத் திராவிட இனம் எனவும் , ஆரிய இனம் எனவும் , ஆரியத் திராவிட இனம் எனவும் பிரிப்பர் இக் கால மொழி நூலறிஞர். திராவிட இனத்தைச் சேர்ந்த மொழிகளே தமிழ் , கன்னடம் , தெலுங்கு , மலையாளம் , குடகு , துளு ஆகிய திருந்திய மொழிகளும் , துதம் , கோதம் , கோண்டு , கூ , ஓரியன் , இராசமகால் முதலிய திருந்தாத
மொழிகளுமாகும். இலக்கிய வளமில்லாத திராவிட மொழிகள் வட திராவிட மொழிகள் , திராவிட மொழிகள் , தென் திராவிட மொழிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. பிராகுய் , கூர்க் , மால்ரோ என்பவை வடதிராவிட மொழிகளாகும். கொலமி - நாய்கி , பார்ஜி , கொண்டி கோண்டு , குய் - கூவி என்பன மத்திய 28 மத்திய திராவிட மொழி களாகும். துளு , கூர்க் , துதம் , கோதம் என்பன தென் திராவிட மொழிகளாகும். இவ்வாறு பேராசிரியர் பரோ கூறுவர். வடமொழி ஆரிய இனத்தைச் சேர்ந்தது வட இந்திய மொழிகள் பெரும் பாலன ஆரியத் திராவிட இனத்தைச் சேர்ந்தவை. தமிழைப் பற்றிப் பொதுவாக
இருவகைக் கொள்கைகள் உலவி வருகின்றன. திராவிட மூலமொழி ஒன்று இருந்தது என்றும். அம்மூலத் திராவிடத்திலிருந்தே தமிழ் , கன்னடம் , தெலுங்கு , மலையாளம் , குடகு , துளு முதலிய திருந்திய திராவிட மொழி களும் , துதம் , கோதம் , கோண்டு , கூ. ஓரியன் , இராசமகால் முதலிய திருந்தாத திராவிட மொழிகளும் தோன்றின என்றும் ஒரு சாரார் கூறுவர். மற்றொரு சாரார் , மற்றத் திராவிட மொழிகள் தமிழ் பெற்ற சேய்களே என்பர். இக்கொள்கையை முதன்முதலாகக் குறிப்பிட்டவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆவார். அவர் தமது ஒப்புயர்வற்ற ' மனோன்மணீயம் ' என்னும்
நாடகத்திலுள்ள தமிழ் வாழ்த்தில் , " கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும் " என்று பாடியிருக்கக் காணலாம். இக்கொள்கையினர் திராவிட மூலமொழி என்பது கற்பனை என்றும் , பழந்தமிழே திராவிட மொழிகளின் தாய்மொழி என்றும் , தமிழ் மொழியிலிருந்தே திருந்திய திராவிட மொழிகளும் திருந்தாத திராவிட மொழிகளும் தோன்றியுள்ளன என்றும் , மலையாள மொழி தமிழிலிருந்து கி.பி.10 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கிளைமொழியே என்றும் குறிப்பிடுகின்றனர். இக்கொள்கை இப்பொழுது வலிவுற்று வருகிறது. நடுவு
நிலையினின்று நோக்குவார்க்குத் திராவிட மொழியினத்தின் பழந்தமிழே என்பது நன்கு புலனாகும். பயே தமிழ்மொழி வேறு ; வடமொழி வேறு 199 தமிழ்மொழி , வடமொழியினின்று தோன்றியது என்று ஒரு சிலர் தவறான உணர்ச்சியினால் பல ஆண்டுகளாய் அறியாது கூறி வந்ததுண்டு. இத்தவறுக்குக் காரணம் பல வடசொற்கள் தமிழில் புகுந்திருப்பதேயாகும். வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்த தவஞானச் செல்வரான சிவஞான யோகிகளும். வடமொழியும் தமிழ் மொழியும் நன்குணர்ந்த மொழி நூலறிஞர் டாக்டர் பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியாரும் பிறரும் , ' வடமொழி வேறு ; தமிழ் மொழி வேறு " என்பதை
நன்கு எடுத்துக்காட்டி விளக்கி யுள்ளார்கள். மொழி நூலறிஞர் டாக்டர் கால்டுவெல் , 29 திராவிட மொழிகளையும் வடமொழியையும் நன்கு ஆராய்ந்து , வட மொழியினும் வேறானவை திராவிட மொழிகள் என்பதை நிலை நாட்டியதோடு , சில தமிழ்ச் சொற்கள் வடமொழியிலும் புகுந் திருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார். வடநூற்புலமையும் தமிழ் நூற்புலமையும் பெற்றுத் தமிழ் இலக்கிய நயங்களை மிக நன்றாக எடுத்தியம்புதலில் இணையற்று விளங்கிய பெரும்புலவரான மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் அவர்கள் , " வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள வேறுபாடுகள்
மிகப் பலவாம். வடமொழியில் தமிழில் இருப்பது போலத் திணை பால் உணர்த்தும் வினை விகுதிகள் இல்லை. ' பவதி ' என்னும் வினைமுற்று , இருக்கிறான். இருக்கின்றாள். இருக்கின்றது என ஓர் ஈறே நின்று எழுவாய்க்கு ஏற்றவாறு பொருள் உணர்த்தி நிற்கும். தமிழில் வினைமுற்றுகளின் ஈறோ திணை பால்களை உணர்த்தி நிற்கும். பால் வகுப்பு தமிழில் பொருளைப் பற்றியும் வடமொழியில் சொல்லைப் பற்றியும் உள்ளது. ஆண் மகனைப் பற்றி வருஞ்சொற்கள் எல்லாம் ஆண் பாலாகவும். பெண் மகளைப் பற்றி வருவன எல்லாம் பெண் பாலாகவும் தமிழில் உள்ளன. வடமொழியில் இவ்வரையறை இல்லை.
மனைவியைப் பற்றி வரும் ' பாரியை " என்னும் சொல் பெண்பாலாகவும் ' தாரம் ' என்னும் சொல் ஆண்பாலாகவும். ' களத்திரம் ' என்னும் சொல் நபுஞ்சகப்பாலாகவும் வருதல் காண்க. வடமொழியில் ஒருமை , இருமை , பன்மைச் சொற்கள் உள்ளன. தமிழில் ஒருமை அல்லாதன எல்லாம் பன்மையே. திணைப்பாகு பாடு , குறிப்புவினைமுற்று முதலியன தமிழுக்கே உரியன என்று தமது ' கலைபயில் ‘ கட்டுரை என்னும் நூலில் வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளை எடுத்துக் காட்டியுள்ளார். டாக்டர் பி.எஸ். சாஸ்திரியார் , இன்னும் வட மொழிக்கும் தமிழ்மொழிக்கும் உள்ள பல்
வேறுபாடுகளைத் தமது ' தமிழ் மொழி நூல் ' அகவற்பா , கலிப்பா , வெண்பா , வஞ்சிப்பா ஆதலால் , தமிழ்மொழி வடமொழியினின்று பிறந்தது அன்று என்றும் , வடமொழியிலிருந்து வேறுபட்ட பண்புடையது தண்டமிழ்மொழி என்றும் நன்கறியலாகும். என்பதில் விளக்கியிருக்கிறார். முதலியவை தமிழ் மொழிக்கே உரியவை. தமிழ்மொழியின் சிறப்பு இத்தகைய தன்மை வாய்ந்த தமிழ்மொழியின் அருமை பெருமைகளைத் தமிழ்க் கவிஞர்களும் , அறிஞர்களும் , தமிழ் கற்ற ஐரோப்பிய அறிஞர் பெருமக்களும் நன்கு எடுத்துக் காட்டியிருக் கிறார்கள். மாணிக்கவாசகர் " ஒண் தீந்தமிழ் " என்றும் , “
தண்ணார் தமிழ் " என்றும் பாடியிருக்கிறார். கம்பர் , " என்றுமுள தென்தமிழ் " என்று தமிழைப் பாராட்டியுள்ளார். தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் , 30 " தேருந்தொறும் இனிதாம் தமிழ் " என்றார். திருவிளை யாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் , " மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ ? " என்று பாடினார். வேறொரு கவிஞர் , " தன் நேர் இலாத் தமிழ் " என்று ஞாயிற்றுக்கும் ஞாலம் புகழும் தமிழுக்கும் ஒப்பிட்டுக் கூறினார். வடமொழி , ஆங்கிலம் முதலிய மொழிகளை அறிந்த தேசியக் கவிஞர் பாரதியாரோ , " யாமறிந்த
மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் " என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறினார். இப்படித் தமிழ்க் கவிஞர்கள் தங்களுடைய பாடல்களில் தமிழின் அருமை யினையும் பெருமையினையும் நன்கு எடுத்துக் காட்டியிருப்பதைக் காண்கிறோம். இந்நாட்டின் நிலக்கொடை இயக்கத் தலைவரும் , அரபு மொழி , சமஸ்கிருதம் , மராத்தி , இந்தி , பிரெஞ்சு மொழி. ஜெர்மானிய மொழி முதலிய பதினெட்டு மொழிகளைக் கற்ற வரும். ஏற்றமிகு பேரறிஞரும் , தவஞானச் செல்வருமான காலஞ் சென்ற வினோபா முனிவர் , தமது 1956 - ஆம் ஆண்டு தமிழகச் சுற்றுப்பயணத்தில் ஈரோட்டில் ஆற்றிய
சொற்பொழிவில் , " தமிழக அரசு தமிழ் மொழியை வெற்றியுடன் திறம்பட ஆட்சி மொழியாக மாட்சியுடன் பயன்படுத்தக் கூடும். மொழியின் வளம் அதன் வினைச் சொற்களில் நன்கு அமைந்து கிடக்கிறது. தமிழ் மொழியோ இலத்தீன் மொழியைப் போன்று அளவற்ற வினைச் சொற்களைக் கொண்டு விளங்குகின்றது " என்று தமிழ் மொழியின் சொல் வளம் பற்றிக் குறிப்பிட்டார். மெ பழமையானதும் பண் பட்டதும் தமிழ் மொழியே " என்று M. சீனிவாச ஐயங்கார் தமது ' தமிழ் மொழி ஆராய்ச்சி ' என்னும் " தென்னிந்திய மொழிகளுள் ஐரோப்பிய அறிஞர்களின் கருத்து யே வெ செந்தமிழ் மொழியை நன்கு பயின்ற
ஐரோப்பிய அறிஞர் பெருமக்களும் , மேலை நாட்டு மொழிநூல் வல்லுநர்களும் தமிழின் அரிய தன்மைகளை நடுவு நிலைமையில் நின்று எடுத்துக் காட்டியிருப்பது காண்க. வின்ஸ்லோ என்ற அறிஞர் , " செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியினையும் , இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியினையும் வெல்ல வல்லது தமிழ்மொழி ' என்றார். மேலும் அவரே , " அதன் ( தமிழ் ) பெயரே இனிமை பொருள்படுவதற்கு ஏற்ப , அதனிடத்தில் கேட்டாரைத் தம் வசமாக்கும் இனிமை பொருந்தியிருப்பதற்கு ஐயமில்லை " என்று கூறியுள்ளார். டெய்லர் என்பார் , " அது ( தமிழ் ) நிறைந்து தெளிந்து
ஒழுங்காயுள்ள மொழிகளுள் மிகவும் சிறந்ததொன்றாகும் என்று 31 மொழிந்துள்ளார். டாக்டர் G.U. போப் பாதிரியார். " தமிழ்மொழி எம்மொழிக்கும் இழிந்த மொழி அன்று " என்று கூறியதோடு நில்லாமல் தமிழ்மொழி மேல் அளவற்ற அன்பு பூண்டு தம் கல்லறையின் மேல் " இங்கே தமிழ் மாணவர் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறார் " என்று கல்லில் பொறித்து வைக்குமாறு விருப்பு முறி ( Will ) எழுதி வைத்தார். இவருக்கிருந்த தமிழ்ப்பற்றை என்னென்று பாராட்டுவது ! இந்த அளவு செந்தமிழ் மொழி , அந்தப் போப்பையர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. மொழி நூலறிஞர் டாக்டர் கால்டுவெல்
துரைமகனார் , “ தமிழ் பண்டையது : நலம் சிறந்தது ; உயர்நிலையில் உள்ளது ;... விரும்பினால் வடமொழி உதவியின்றி இயங்கவல்லது " என்றார். கிரியர்சன் என்ற மற்றொரு ஐரோப்பிய அறிஞர் , “ திராவிட மொழிகளுள் தமிழ் மொழியே மிகத்தொன்மை வாய்ந்ததும் பெருவளம் பொருந்தியதுமாகும். மிகவும் சீர்திருந்தியதுமான உயர் தனிச் செம்மொழியுமாகும் ; சொல்வளமும் மிகுந்தது. அளவிடவொண்ணாப் பண்டைக்காலம் முதல் பயின்றும் வருவது " என்றார். சிலேட்டர் என்பார் , " திராவிட மொழிகள் எல்லா வற்றுள்ளும் மக்கள் பேச்சு மொழிக்குரிய தன்மையைப் பெற்றுள்ள மொழி தமிழ்மொழி ;
தர்க்க அமைப்புடையதும் தமிழ் மொழியே " என்றார். விட்னி என்ற ஓர் ஐரோப்பிய அறிஞர் தம்மிடம் , தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழை நன்கு கற்றுத் தமிழரைப் போலவே எழுதவும் பேசவும் வல்லவராய் விளங்கிய அமெரிக்கர் ஒருவர் தமிழ்மொழி எண்ணுவதற்கும் பேசுவதற்கும் எந்த ஐரோப்பிய மொழியையும் விடச் சிறந்தது என்று கூறியதாய் எழுதியிருக்கிறார். ஜான் மர்டாக் என்ற ஐரோப்பிய அறிஞர் , " சீரிய மொழி யாயும் அழகிய இலக்கியங்கள் உடையதாயும் விளங்குவது தமிழ் மொழியே " என்றார். F. W. கெல்லட் என்பார் , " எந்த நாட்டினரும் பெருமை இலக்கியம் " என்று
தமிழைப் பாராட்டியுள்ளார். சார்லஸ் கவர் மெருகு நிலையும் அருந்தமிழ்ப்பா நலமும் ஐரோப்பாவில் மிகுதியாகத் தெரியப்படுத்துதல் வேண்டும் " என்பவர். தெலுங்கு மொழியின் 9 கொள்ளக்கூடிய இலக்கியம் தமிழ் என்றார். ஜெர்மனி நாட்டவரும் ஆங்கில நாட்டின் குடிமகனானவரும் அக்காலத்துத் தலை சிறந்த மொழி நூல் வல்லுநராய் விளங்கியவரும் , இருக்கு வேதத்தைச் சாயனருடைய உரையுடன் பதிப்பித்தவருமாகிய மாக்ஸ் முல்லர் ( Max Mueller ) , " தமிழ் மிகப் பண்பட்ட மொழி. தனக்கே உரிய தாக இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி " என்றார். இன்றைய மொழி
நூலறிஞரான திரு. கமில் சுவலபில் ( Kamil Zovelebil ) *. ' தமிழ் , உலகத்தில் இருக்கும் மிகப் பெரிய பண்பட்ட மொழிகளுள் ஒன்று. இஃது உண்மையிலேயே அச் சொற்றொடருக்கு ஏற்றவாறு உயர் தனிச் செம்மொழியாக 32 ( Classical Language ) இருப்பதோடு கூட இன்றும் பேச்சு மொழி யாகவும் இருக்கிறது " என்று தமது ' தமிழ் இலக்கண நெறி வரலாறு ' ( Historical Grammar of Tamil ) என்னும் நூலில் குறிப்பிட்டிருக் கிறார். இனிப் பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் இருவர் தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றிக் கூறியள்ளதைக் காண்போம். பேராசியர் மேய்ல் ( Meil ) என்பார்
கூறியதாவது : " தமிழர்கள் நல்ல பண்புடையவர்கள். இயற்கையாகவே இந்த நற்பண்பு அவர்களிடத்தில் அமைந்திருக்கிறது. இதற்காக வேனும் நாம் அவர்கள் மொழியாகிய தமிழைக் கற்பது நன்று... அவர்களுடைய மொழியாகிய தமிழ் இலக்கியம் விந்தையும் வியப்பும் தரத்தக்கதாய் த உயர் எண்ணங்களின் ஊற்றாய் தமிழ் மொழி இந்தியாவின் மொழிகளுள் மிகப் பழமையானது. அதுவே முதல் மொழியாயும் இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். அஃது உயர்தனிச் செம்மொழி. அம்மொழியை நெடுங்காலத்திற்கு முன்னரே பிரெஞ்சுக்காரர்கள் கற்றிருத்தல் வேண்டும். அப்படிச் செய்யாது போனது பெருங்குறையே
ஆகும். மேய்ல் கூற்றிற்கு இணங்க அவருக்குச் சிறிது காலத்திற்கு முன்னரே இருந்த பியேர் லொத்தி ( Pierre Loti ) என்ற மற்றொரு பிரெஞ்சு அறிஞர் குறிப்பிட்டிருப்பதையும் பார்ப்போம். அது வருமாறு : " இந்தியாவிற்குப் பிரெஞ்சுக்காரர்கள் வந்ததன் பின் அந்நாட்டின் மொழிகளுள் முதல் முதல் அவர்கள் கற்றுக் கொண்டது தமிழ் மொழியே. அந்த மொழி வாயிலாகவே தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்கள் , சமூக அமைப்புகள் , சமயக் கோட் பாடுகள் முதலியவற்றின் உண்மையான தத்துவங்களை அறிந்து கொள்ள வழி ஏற்பட்டது. ன் பழக்க W " தமிழிலக்கியம் மிகவும் பரந்துபட்டது ;
மிக் * மை தன்மையுடையது ; முதல் தன்மையும் வாய்ந்தது. மற்ற எழுதப்பட்டு வந்தது. எந்த மொழியும் வரிவடிவம் அடைவதற்கு முன்னமே தமிழின் நெடுங்கணக்கு ( Tamil Alphabet ) உடையது. இந்த நெடுங்கணக்கை வெளிப்படுத்துகிறது. இந்த நெடுங்கணக்கில் மிக நுண்ணியதும் , மிக நியதியுள்ளதுமான கண்ணோட்டத்தினை நாம் காண்கிறோம். இந்த நெடுங் கணக்குத் திடீரென்று ஏற்பட்டதன்று. இலக்கணப் புலவர் ஒருவரின் அல்லது புலவர் கூட்டம் ஒன்றின் நெடுங்காலப் பணியின் பயனாய் அமைந்த தாகும். " முறை மிக்க அறிவு சான்ற தரத்தை இப்பிரெஞ்சு நாட்டு அறிஞர்கள் தமிழைப்
பற்றிப் பாராட்டி யுள்ள செய்தியானது. புகழ்பெற்ற பிரெஞ்சு மொழி அறிஞரும் பல தமிழ் நூல்களைப் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்தவருமான ரா. தேசிகப் பிள்ளை அவர்கள் எழுதிய * தமிழகமும் பிரெஞ்சுக் காரரும் ' என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. 33 இத்துணைத் தமிழ்க் கவிஞர்களும் மொழியறிஞர்களும் தமிழ் கற்ற பெருமக்களும் தமிழ் மொழியின் இனிமையையும் தனித்தன்மையையும் , அதன் இலக்கியச் சிறப் பினையும் நலம் மிக்க சொல் வளத்தினையும் அரிய வன்மை யையும் மிகுந்த தொன்மையையும் எடுத்துக் கூறியிருப்பதைக் காணும்போது , தண்டமிழ் மொழியின் உண்மைத்
தன்மையை நன்கு உணரலாம். கூறியவையனைத்தும் உண்மை ; வெறும் புகழ்ச்சியில்லை. தமிழின் தனிப் பண்புகள் ஐரோப்பிய அறிஞர் இத்தகைய தொன்மையும் சிறப்பும் கொண்டதாயினும் தமிழ்மொழி , காலத்துக்கு ஏற்றவாறு மாறி வளரும் தனிச் சிறப்பு முடையது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும் பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குவது தமிழ் மொழிக்குள்ள தனிச்சிறப்பாகும். இன்றியமையாத அயல்மொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுக் கொள்ளவும் நம் முன்னோர்கள் திசைச் சொல் என்று ஒரு பாகுபாடும் வகுத்து வைத்தார்கள். இதுவும் தமிழுக்குள்ளதொரு தனிச் சிறப்பாகும். மொழி
நிலையைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம். தனிநிலை , உட்பிணைப்பு நிலை , ஒட்டு நிலை என்பவை. சொற்கள் = ஒன்றோடு ஒட்டாமல் தனித்தனியே நின்று வாக்கியங்களாக அமைந்து பொருளுணர்த்தும் நிலையுள்ள மொழி தனிநிலை மொழி எனப்படும். சீனமொழி இவ்வாறு இருக்கிறதாம். சயாம் மொழி , பர்மிய மொழி , திபெத்திய மொழி. ஆகியவையும் இவ்வகையைச் சேர்ந்தவையே. ளுணர்த்தும் அடிச்சொல் 5 இரண்டு சேரும்போது இரண்டும் சிதைந்து ஒன்றுபட்டு நிற்கும் நிலையையுடைய மொழியை உட்பிணைப்பு நிலை மொழி என்பர். ஐரோப்பிய மொழிகள் பலவும் சேர்ந்தனவாம். ஆங்கில மொழியில் so like
என்பவை who like என்பவை which என்றும் மாறியிருப்பது உட்பிணைப்பு நிலை மொழிக்கு எடுத்துக் காட்டுகளாகக் கூறுவர். கிரேக்க மொழியில் ஒரு வினைப்பகுதி 268 வகையாகத் திரியுமாம். வடமொழியில் ஒரு வினைப்பகுதி 891 வகையாகத் திரியுமாம். வட மோழியஎன்றும் சயைச் 2 அடிச்சொற்கள் இரண்டும் பலவும் ஒட்டி நிற்கும் நிலை ஒட்டுநிலை என்பது. தமிழ்மொழி இவ்வகையைச் சார்ந்தது , பார் + த் + த் + அன் + அன் என்பவை ஒன்று சேர்ந்து பார்த்தனன் என்றாவதைத் தமிழில் காணலாம். இதனால் , தமிழைப் பகுதி , விகுதி , சாரியை , சந்தி , இடைநிலை , விகாரம் என்பவற்றை
உணர்ந்து தவறின்றி எழுத முடியும். ஆங்கிலத்தைப் போல இறந்த காலத்தைக் காட்டத் தமிழ் வினைச் சொற்களை மாற்றாமல் எழுதலாம். ஆங்கிலத்தில் go என்பதை இறந்த suc ܩܘ ܗܗ அவை 34 காலத்தைக் காட்ட went என்று மாற்ற வேண்டும். அது போன்ற நிலை தமிழுக்கு இல்லை. தமிழில் செய்கிறான் என்பதை செய்தான் என்று கால இடைநிலையை மாற்றியமைத்தால் இறந்த காலம் வந்துவிடும். இது தமிழ் மொழிக்கு இருக்கும் மற்றொரு தனிச் சிறப்பாகும். தமிழிலிருக்கும் தொகைகள் புதுச்சொற்களை ஆக்குவதற் குப் பெரிதும் பயன்படும் ; சொற் சிக்கனத்திற்கும் உதவும். " Beware of Dogs '
என்னும் ஆங்கிலத் தொடருக்கு , " கடிநாய் " என்னும் சிறு வினைத் தொகை நிலைத் தொடரே போதுமானது. " இது நேற்றுக் கடித்த நாய் , இன்று கடிக்கிற நாய் ; நாளைக்கும் கடிக்கும் நாய் ; ஆதலால் , விழி ாய் , இரு " என்னும் ண்ட பொருள் இச்சிறு தொடரில் அமைந்திருத்தலை உணரலாம். தமிழ் அறிவு இருந்தால் நாம் சிக்கனமாகச் சொற்களைப் பயன்படுத்தலாம். சுடுகாடு என்னும் வினைத்தொகை , விரிந்த தத்துவத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். சிந்தனை செய்து பாருங்கள். இதுவும் தமிழுக்குரிய தனிச்சிறப்பு என்று சொல்லத் தேவையில்லை. தமிழ்மொழியின் இலக்கணமே
தனிச்சிறப்புடையது ; நுண்ணிய அறிவை உண்டாக்கவல்லது. முற்கூறிய F. W. கெல்லட் என்பார். ” இதன் ( தமிழ் ) இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது " என்று கூறியிருக்கிறார். விருப்பம் வந்து விட்டால் தமிழ் இலக்கணம் அருமையாக இருக்கும். புணர்ச்சி யிலக்கணம் ஓரளவு அறிந்தால்தான் சில நுட்பங்களை அறிந்து பொருள் தெரிந்து கொள்வது இயலும் , 1 மடு கடுக டயால் அலைகடல் என்னும் சொற்றொடருக்கும் , அலைக்கடல் என்னும் சொற்றொடருக்கும் பொருள் வேறுபாடு உண்டு. முன் தொடருக்கு அலைகின்ற கடல் என்று பொருள் கூறவேண்டும் ; பின்னுள்ள
தொடருக்கு அலையையுடைய கடல் என்று பொருள் கொள்ள வேண்டும். பொருளில் பெரியார் கண்டார். பெரியார்க் கண்டவல் மிகுவதால் கண்டார் ஆகிய இவ் விரண்டு சொற்றொடர்களிலும் மிகுந்த பொருள் வேறுபாடு உண்டு. முன்னுள்ள சொற்றொடரில் பெரியார் மற்றொருவரைக் கண்டார் என்பது பொருள் ; பின்னுள்ள சொற்றொடரில் மற் றொருவர் பெரியாரைக் கண்டார் என்பது பொருள் , இப்பொருள் வேறுபாடு எப்படி உண்டாகிறது ? ஒன்றில் வல்லெழுத்து மிக வில்லை ; மற்றொன்றில் வல்லெழுத்து மிகுந்திருக்கிறது. வல் லெழுத்து மிகுந்ததனால் வேறு பொருள் உண்டாகிறது. அவ்வேறுபாடு தோன்றுகிறது. )
பெண்மையுடைய பெண்கள் நடந்தார்கள் ' என்பது ஒரு வாக்கியம். ' பெண்மையுடையப் பெண்கள் நடந்தார்கள் ' என்பது மற்றொரு வாக்கியம். ஒன்றுக்கு மற்றொன்று எவ்வளவோ மாறு பாடான பொருளைக் கொடுப்பதைக் 35 காணுங்கள். முதல் வாக்கியத் திற்குப் பெண்தன்மை கொண்டுள்ள பெண்கள் அப்பெண்தன்மைக் குரிய முறையில் பண்பாட்டுடன் நடந்து சென்றார்கள் என்பது பொருள். இரண்டாவது வாக்கியத்திற்குப் பெண்தன்மை அற்றுப் போகும்படியாய்ப் பெண்கள் பண்பாடற்ற வகையில் நடந்து சென்றார்கள் என்பது பொருள். மிகுந்ததால் இம்மாறு பாட்டைக் காண்கிறோம். தயிர் எங்குக் கிடைக்கும் ?
தயிர் எங்கும் கிடைக்கும். இவற் றுள் முன்னது வினா ; பின்னதிலுள்ள எங்கு என்னும் சொல்லோடு உம் சேர்ந்து பொருளே மாறிவிட்டது. இந்த நுட்பங்களை அறிவதற்குத் தமிழ்த தேர்ச்சி வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும். மேலும் தமிழ் இலக்கணம் கற்பதால் தமிழர் முன்னோரது தனிமேதைச் சிறப்பு ( Tamil Genius ) நமக்கு நன்கு புலனாகும். எடுத்துக்காட்டாக , இரண்டாம் வேற்றுமைக்குக் கூறிய நோக்கல் பொருள் இருவகைப்படும். 1. நோக்கிய நோக்கம் 2. நோக்கல் நோக்கம் ( நோக்கிய நோக்கம் கண்ணால் நோக்குதல் ; நோக்கல் நோக்கம் மனத்தால் நோக்குதல். ) வேற் "
வான்நோக்கி வாழும் உலகெல்லாம் ; மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. " வான்நோக்கி வாழும் உலகெல்லாம் உயிர்கள் எல்லாம் யை மனத்தால் மன்னவன் மழை கோல்நோக்கி வாழும் குடிமக்கள் மன்னவன் செங்கோல் ஆட்சியைக் கண்ணால் பார்த்து வாழ்வார்கள். தமிழில் மரபுத் தொடர்களும் ( Idioms ) , சொற்றொடர்களும் ( Phrases ) உண்டு. அவற்றைப் பயன்படுத்தித் தமிழை அழகாக எழுதலாம். உவமைகளைப் பயன்படுத்த வசதிகள் தமிழில் மிகமிக உண்டு. எண்ணி வாழும். குடி குடி தமிழில் ஏறக்குறைய இரண்டு லட்சத்து எட்டாயி பல்கலைக் கழக அகர னப் பகை. பத்துக்கு மேற்பட்ட சொற்கள்
உள்ளன. சென்னைப் 2,08,010 தமிழ்ச் சொற்கள் இருக்கக் காணலாம். என்னும் ஒரு சொல்லுக்கு மட்டும் அகராதியில் 109 பொருள்களைக் காண்கிறோம். அந்த 109 பொருள்களும் 50 பொருள்கள் வடமொழிச் சொற்களைத் தழுவியவை ; மற்ற 59 பொருள்கள் அரி என்னும் தமிழ்ச் சொல்லுக்கே உண்டு. இப்படிப் பொருள் வளம் பெற்றுள்ள சிறப்பும் தமிழுக்குண்டு. 59 பொருள் தமிழ்மொழிக்கு வர வேண்டுமென்றால் அது நீண்ட காலமாய் மக்கள் புழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். இது தமிழ்மொழி யின் தொன்மையையும் காட்டும். அகராதியில் ஒன்றன் வெவ்வேறு நிலையை நன்கு காட்டுதற்கும் ,
ஒன்றற்கும் மற்றொன்றிற்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவதற் கும் தமிழ் மொழியில் சொற்கள் உண்டு. 36 அரும்பு. போது , மலர் , அலர் , என்பவை ஒரு பூவின் வெவ்வேறு நிலையைக் காட்டும். அரும்பு என்பது மொட்டு. போது என்பது மலரும் நிலையில் இருப்பது. மலர் என்பது விரிந்த பூ அலர் என்பது நன்றாக மலர்ந்த பூ. நன்றாக மலர்ந்து விழுந்தது வீ இவை ஒரு பூவின் வெவ்வேறு நிலையைக் காட்டுகின்றன. ஈ.தா. கொடு. இவற்றின் வேற்றுமையைப் பாருங்கள். யாசிப்பவன் ஈ எனக் வேண்டும். சமநிலையில் உள்ளவன் தா எனக் கூறவேண்டும். தாழ்நிலையில் இருப்பவனைக் கேட்க
உயர்நிலையில் உள்ளவன் தன்னைவிடத் கேட்கும்போது கொடு எனச் சொல்ல வேண்டும். இப்படியே உண்ணலுக்கும் தின்னலுக்கும் சொற்களைப் பயன்படுத்தும் முறையில் வேறுபாடு உண்டு. பசியடங்க வயிற்றை நிரப்புதலை உண்ணல் ே என்றும் , சிறிய அளவு உட் கொள்ளுதலைத் தின்னல் என்றும் கூறவேண்டும். சோறு உண்டான் என்க. முறுக்குத் தின்றான் என்க. அறிவியல் நூல்கள் எழுதலாம் இவ்வளவு தனிச்சிறப்பும் சொல்வளமும் உள்ள தமிழ் மொழியில் அறிவியல் நூல்களை எழுத இயலாதா ? ஏன் இயலாது ? முயன்றால் இயலும் , அறிவியல் தேர்ச்சியும் மொழித் திறனும் பெற்றுவிட்டால் , எவரும்
அறிவியல் நூலைத் தவறின்றி எழுத இயலும் என்று அஞ்சாமல் கூறலாம். இன்றைய நிலை தமிழகத்தில் இன்றைய நிலை என்ன ? பலர் தங்கள் பெயர் களைக் கூடத் தமிழில் பிழையின்றி எழுத இயலாதவர்களாய் இருக்கிறார்கள். ரங்கநாதன் அல்லது இரங்கநாதன் என்றும் பலர் எழுதுகின்றனர் வேங்கடசாமி என்று எழுத வேண்டிய அரங்கநாதன் என்று எழுத வேண்டுவதை ரெங்கநாதன் என்றும் துகின்றனர். பெயரை எழுத வெங்கடசாமி என்றும் வெங்கிடசாமி என்றும் , வேங்கடராமன் என்று என்று எழுத வேண்டிய பெயரை வெங்கடராமன் என்றும். வெங்கட்ராமன் என்றும். வேங்கடாசலம் வேண்டியதை வெங்கடாசலம்
என்றும் , வெங்கிடாசலம் என்றும் , சீனிவாசன் என்று எழுத வேண்டுவதைச் சீனிவாசகன் என்றும் தவறாக எழுதுவதைப் பார்க்கிறோம். இந்த நிலையில் தமிழனுக் குந் தமிழ்த் தேர்ச்சி வேண்டுமா என்று ஒரு சிலர் வீண்வாதம் புரிகின்றனர். தமிழர்களாய் இருந்தாலும் தமிழில் ஓரளவு தேர்ச்சி பெற்றால்தான் , இவர்கள் பிழையின்றித் தமிழ் எழுத முடியும். பலர் , அரசியல் அறிவும் , ஆங்கில அறிவும் , பொது அறிவும் பெற்றிருந்தாலும் தமிழ்த் தேர்ச்சியின்மையால் , நாளிதழ்களிலும் , வார , மாத ஏடுகளிலும் நல்ல தமிழ் எழுத இயலாதவர்களாய் இருப்பதைக் காண்கிறோம். 37
மொழித் தேர்ச்சியில்லாத எழுத் தாளர்கள் சிறுகதையும் , நெடுங்கதையும் , நாடகமும் தவறான தமிழில் எழுதுகிறார்கள். இவர்கள் சிறிது மொழித் தேர்ச்சி பெற்று விட்டால் , இவற்றை நல்ல தமிழில் எழுதலாம். இவர்கள் எழுது பவையும் இலக்கியங்களாக இலங்கும். இப்பொழுதுள்ள எழுத்தாளர் பலர் நல்ல தமிழில் எழுதுகின்றனர். இனி நல்ல தமிழ் வளரும் , இன்று தமிழ்மொழி அரசியல் மொழியாகிவிட்டது ; அலு வலக மொழியாகிவிட்டது ; ஆட்சி மொழியாகிவிட்டது ; ஓரளவு கல்லூரிப் பாடமொழியாகவும் ஆகிவிட்டது. தமிழ்மொழி தனக் சூரிய இடத்தை ஓரளவு அடைந்துவிட்டது. தமிழன்னை அரியணை
ஏறிவிட்டாள். இன்று தமிழ் வெளியீடுகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. எழுத்தாளர்களுக்கும் அலுவலகங்களில் பணி புரியும் அதிகாரிகளுக்கும் எழுத்தர்களுக்கும் நல்ல தமிழ் எழுத வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுவிட்டது. தமிழ் தெரியாது என்று சொல்லிப் பெருமைப்பட்ட நாள் மலையேறிவிட்டது. நல்ல தமிழ் எழுத இயலவில்லை என்றால் , எவரும் நன்மதிப்படைய முடியாத நிலை இன்று வந்துவிட்டது. ஆதலால் , எல்லாரும் வழுவின்றி நல்ல தமிழ் எழுத எளிதான வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். வழுவின்றி நல்ல தமிழ் எழுத எளிதான வழிகள் உண்டு. நன்னூலையோ தொல்காப்பியத்தையோ
உருப் போட வேண்டும் என்பதில்லை. தன்னம்பிக்கையோடும் யான நோக்கத்தோடும் உண்மை இந்நூலைப் பயின்றால் சில நாள்களில் இல்லாவிட்டால் சில வாரங்களில் எவருக்கும் நல்ல தமிழ் எழுதும் திறமை வழுவின்றி எழுதும் அறிவு எளிதாக உண்டாகும் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. முயற்சி மட்டும் வேண்டும். முயற்சி செய்யுங்கள் ! முயன்று பார்த்தால் முடியாதது மதும் அர மு 1.5. வாக்கியம் எழுத்தும் சொல்லும் வாக்கியத்திற்குக் கருவிகள் குறைகளும் பன்னீராண்டு நிகழ்ந்த பஞ்சத்துக்குப் பின் நாடு மலிய மழை பெய்தது. பெய்த பின்றைப் பாண்டியன் , " இனி நாடு
நாடாயிற்று. ஆகலின். நூல் வல்லாரைக் கொணர்க " என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்கினான். ஏவலர் எழுத்ததிகாரம் வல்லாரையும் சொல்லதிகாரம் வல்லாரையும் தலைப்பட்டுக் கொணர்ந்து , " பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப் பட்டிலேம் " என்று மன்னனிடம் கூறிய போது , அவன் , எழுத்ததி காரமும் சொல்லதிகாரமும் பொருளதிகாரம் அறிவதன் பொருட் டன்றே ! பொருளதிகாரம் பெறேமெனின் இவை பெற்றும் பெற்றி லேம் என்று கவன்றான் " என இறையனார் அகப்பொருள் கூறு கின்றது. அஃது உண்மைதானே ! எழுத்ததிகாரமும் சொல்லதி காரமும் பொருளதிகாரத்தை வாக்கிய வகைகளும் அமைக்கும்
நல் ) உண்டோ ? 38 அறிவதற்குள்ள கருவிகள் , அது போலவே எழுத்துப்பிழை. சொற்பிழை , சந்திப்பிழை , சொற் பிரிப்புப்பிழை முதலியனவெல்லாம் வாக்கியத்தைப் பிழையின்றி எழுதுவதற்காகவே அறிந்து கொள்கிறோம். எழுத்தும் சொல்லும் வாக்கியத்திற்குக் கருவிகள் என்பது கூறாமலே நன்கு விளங்கும். வாக்கியத்தில் ஏற்படும் தவறுகள் எழுதும்போது மாணவர்களும் செய்தியாளர்களும் இதழாசிரியர்களும் எழுத்தாளர் சிலரும் இலக்கணப் பயிற்சி இல்லாமையால் பற்பல தவறுகள் செய்யக் காண்கிறோம். ஒருமை பன்மை வினைமுற்றுப் பிழைகள் நாளிதழ்களில் மலிந்து இருக்கக் காணலாம்.
ஆங்கிலத்தில் இப்பிழையைச் செய்தால் நம்மவர்களே எள்ளி நகைப்பார்கள். ஆனால் , தமிழில் " கட்டுப்பாடுகள் இனிக் கிடையாது என்று எழுதினால் தவறு என்று நாம் கவலைப் படுவதில்லை. " கட்டுப்பாடுகள் இனிக்கிடையா " என்றிருக்க வேண்டும். சிலர் அப்படி எழுதுவதில் உயிரிருப்பதாகவும் கருதி விடுகின்றனர். பேச்சு மொழியில் தவறுகள் செய்கிறோம். கவலை யில்லை. எழுத்து மொழியில் தவறு செய்வது மொழிக்குச் செய்யும் தீமை என்றுதான் கூற வேண்டும். வாக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியவை வாக்கியங்களை நாகரிக வளர்ச்சியின் சின்னம் உரைநடைப் பெருக்கம். செய்யுள்
பண்டை மொழியின் சிறப்பு. இன்றைய மொழியின் சிறப்பு இக் காலத்துக்கு ஏற்றவாறு உரைநடை நூல் பெருகுவதே யாகும். விஞ்ஞான அறிவு பெருகப் பெருக , உரைநடை நூல் களுக்குத் தேவையும் மதிப்பும் பெருகும். விஞ்ஞானம் வளர்ந் திருக்கும் இக் காலத்தில் உரைநடைதான் எழுத முடியுமேயன்றிச் சிறந்த செய்யுள் இயற்றுவது அரிதாகும். இன்று செய்யுளைப் படித்து இன்புறுவதற்குப் பலர் அஞ்சி நடுங்கி அலறுவது காண் கிறோம். பலர் செய்யுளை வெறுப்பதையும் கண்கூடாகப் பார்க் கிறோம். ஒரு சிலரே - செய்யுளின்பத்தில் பழகிய ஒரு சிலரே மனப்பண்பை வளர்ப்பதற்குச் செய்யுளைப்
படிக்கின்றனர். இக்காலத்தில் அறிவு வளர்ச்சிக்குக் செய்யுளின்பத்தில் காரணமான உரைநடையில் அறிஞர்கள் கவனம் செலுத்துவது இயற்கையே. உரைநடையில் கவனம் செலுத்தும் இக்காலத்தில் நாம் உரைநடைக்கு அடிப்படை வாக்கியத்தில் முழுக்கவனம் செலுத்த வேண்டுவது யாக உள்ள இன்றியமையாதது. வாக்கிய வரலாறு தமிழ்மொழியில் கி.பி.8 - ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இறையனார் களவியல் உரையில் வாக்கியங்கள் நல்ல முறையில் அமைந்திருக்கக் காணலாம். 39 அந்த உரை நடை , செய்யுள் நடை போல இருந்தாலும் , வாக்கியங்களின் அமைப்புச் சிறந்திருக்கப் பார்க்கிறோம்.கி.பி. 13
, 14 - ஆம் நூற்றாண்டுகளிலே வாழ்ந்த உரையாசிரியர்களால் வாக்கிய அமைப்பு வளர்ச்சியுற்றது எனலாம். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து , மிகுந்த வளர்ச்சியுற்றுள்ள ஆங்கில மொழியின் கூட்டுறவால் , தமிழில் வாக்கிய அமைப்புப் பண்பட்டு வரத் தொடங்கியது ; நன்னிலையில் வருகிறது. இன்று வளர்ந்துகொண்டு இவ்வளர்ச்சிக்கு ஆங்கில மொழியின் கூட்டுறவே காரணம். வாக்கியம் என்பது வாக்கியத்தைப் பிழையின்றி எழுதுவதற்கு வாக்கியம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் , வாக்கிய வகைகள் இவை என்பதைப் பற்றியும் , வாக்கியங்கள் இன்னவாறு அமைய வேண்டும்
என்பதைப் பற்றியும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வாக்கியம் என்பது வடசொல் என்று கேட்கும்போது வியப் படையலாம். ' வாக்கியத்திற்குத் தமிழில் சொல் இல்லையா ? ' என்று ஒருவர் கேட்கலாம். வாக்கியத்தைத் தமிழில் முற்றுச் சொற்றொடர் எனலாம் , வாக்கியம் என்பதே பெரிதும் வழங்கி வந்திருப்பதால் , நாம் அச்சொல்லை ஏற்றுக் கொள்வதால் தவறு இல்லை. முற்றுச் ச் சொற்றொடர் என்றால் இன்று அது பலருக்கும் புரியாத புதிராக இருக்கும். வாக்கியம் , உரைநடையில் மிக மிக இன்றியமையாத பகுதியாகும். முழுக்கருத்தைத் வாக்கியம் என்பது ஒரே ஒரு
தெரிவிக்கும் சொற்கூட்டமாகும். ஒரு வாக்கியத்தில் இரு வேறு கருத்துகள் இருத்தல் கூடாது. ஒவ்வொரு வாக்கியத்திலும் எழுவாய். பயனிலை , செயப்படுபொருள் ஆகியவை இருக்கும். சில வாக்கியங்களில் எழுவாய் மறைந்து வருதலுமுண்டு. 1. ' நாளை வா ' 2.இளமையிற் கல் " , ய்மையே ருதலுமுண்டு. 3. இரப்பவர்க்கு இட்டு உண்ணுங்கள் ' , இவை வாக்கியங்களே. இவற்றில் எழுவாய்கள் இல்லை. முதலிரண்டு வாக்கியங்களில் நீ என்னும் எழுவாயும் , மூன்றாவது வாக்கியத்தில் நீங்கள் என்னும் எழுவாயும் மறைந்து நிற்கின்றன. எழுவாய் தோன்றாமல் இருந்தால் , அதனைத் தோன்றா
எழுவாம்.. என்பர் , செயப்படுபொருள் சில வாக்கியங்களில் இல்லாமலும் இருக்கும். கண்ணன் ஓடினான் என்னும் வாக்கியத்தில் செயப்படு பொருள் இல்லாமல் இருப்பதைக் காண்க. சில வாக்கியங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படுபொருள்களும் இருக்கும். 40 ஆசிரியர் , மாசிலாமணிக்குத் தமிழும் கணக்கும் கற்பித்தார். ஒன்றுக்கு மேற்பட்ட செயப்படுபொருள்கள் இருத்தலைக் காண்க. எழுவாயைத் தழுவியும் செயப்படுபொருளைத் தழுவியும் பயனிலையைத் அடைமொழிகள் இருப்பதுமுண்டு ; இல்லாமலிருப்பதுமுண்டு. இவ்வடைமொழிகள் வாக்கியத்தின் முழுக்கருத்தை விளக்குவதாகவே இருக்கும்
, பத்துத் திங்கள் சுமந்து ஈன்றெடுத்த தாயும் ஒழுக்கம் கெட்ட மகனை மிகவும் விரும்பமாட்டாள். இந்த வாக்கியத்தில் அடைமொழிகள் வந்திருக் தலைக் காண்க. ' பத்துத் திங்கள் சுமந்து ஈன்றெடுத்த ' என்னும் தொடர் ' தாயும் ' என்னும் எழுவாய்க்குரிய தொடர் ; ' ஒழுக்கம் கெட்ட ' என்னும் தொடர் ' மகன் ' என்னும் செயப்படு பொருளுக் குரியது ; ' மிகவும் ' என்பது ' விரும்பமாட்டாள் ' என்னும் பயனிலைக் குரிய அடைமொழி தெளிவாகக் கருத்தைத் தெரிவிப்பதே வாக்கியத்தின் நோக்கமாக இருத்தல் மறத்தலாகாது. வேண்டும் என்பதை ஒருவரும் பொருள் மயக்கமும்
வாக்கியத்தில் வருதல் கூடாது " இங்குச் செய்யப்படும் பண்டங்கள் நெய்யில் செய்யப்பட்டவை அல்ல " என்று சிற்றுண்டிச்சாலை அறிவிப்பில் பலரும் கண்டு இருக்கலாம். இஃது ஏமாற்றும் வாக்கியம் ; மயக்கும் வாக்கியமு மாகும். ' செய்யப்பட்டவை " என்னும் சொல் வரைக்கும் வேறு நினைக்கின்றோம். " அல்ல " என்னும் சொல்லைப் படித்த பின்னரே உண்மையை உணருகிறோம். இப்படி எழுதுவது வாணிகத் தந்திரம். " எண்ணெயில் " அல்லது " டால்டாவில் " செய்யப் பட்டவை என்றிருந்தால் பொருள் தெளிவாக இருக்கும். " நீங்கள் சொல்லுவது பச்சைப்பொய் " என்று சொல்லாமல்
நாகரிகமாய்க் கூறும் பொருட்டு " நீங்கள் கூறுவது உண்மைக்கு மாறானது " என்று சொல்கிறோம். இவ்வாறு கூறுவது வேறு ; மயக்கும் வாக்கியம் வேறு. -- என் தமிழ்மொழியில் வாக்கியம் பிழையில்லாமல் இருக்கலாம். அதில் கருத்து இப்படிக் கருத்து முடியாமல் மற்றொரு கருத்தைத் தழுவி நிற்கும் ண்டு. ' நானும் வருகிறேன் ' என்பது இந்த வகையான இத்தன்மை உண்டாகிறது. இதனை எச்ச வாக்கியம் எனலாம். இத்தகைய வாக்கியம் தமிழில் மிகமிக அருகி வரும். எச்சக் கருத்துபடிக வருத்தி முமுடியாமல் மே சூதியம் உம்மையால் வாக்கிய வகைகள் முடியாமல் இருப்பதுண்டு. கருத்து
வகை கருத்தைப் பொறுத்து ஒருவகையாகவும் , அமைப்பை ஒட்டி மற்றொரு வகையாகவும் வாக்கியங்களைப் பிரிக்கலாம். கருத் தைக் கொண்டு செய்தி ( Statement ) வாக்கியம் என்றும் , வினா ( Interrogation ) வாக்கியம் என்றும் , விழைவு ( Desire ) வாக்கியம் என்றும் , உணர்ச்சி ( Exclamation ) வாக்கியம் என்றும் பிரிப்பது ஒரு 41 ஒரே எழுவாய் ஒரே இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றினார். இஃது பயனிலையைப் பெற்று வந்த தனி வாக்கியம். இளங்கோ சிலப்பதிகாரத்தையும் , சாத்தனார் மணிமேகலையையும் , திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியையும் இயற்றினார்கள். இது பல
எழுவாய்கள் ஒரே பயனிலையைப் பெற்று வந்த தனி வாக்கியம். முன்னே குறிப்பிட்டவாறு தனி வாக்கியத்தைச் சிறு வாக்கியமாகவும் நெடும் பெருந்தனி வாக்கியமாகவும் எழுதலாம். ஆனால் , வாக்கியம் சிறிதாகவும் அளவாகவும் இருந்தால்தான். கருத்துத் தெளிவும் உணர்ச்சி வேகமும் அமையும். கதைக்கும் கழ்ச்சிக் குறிப்புக்கும் சிறு வாக்கியங்களே பொரு த்தமானவை. 2. தொடர் வாக்கியம் ஆகையால் , ஏனென்றால் காரணக்கிளவிகளாலோ , ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் , அதனால் , இதனால் என்னும் சுட்டு காரணக்கிளவிகளாலோ. என்னும் இருப்பினும் போன்ற சொற்களாலோ
இணைந்துவரினும் , கருத்துத் தொடர்பால் இணைக்கப்பட்டுவரினும். அவ்வாறு வருவதைத் தொடர் வாக்கியம் எனலாம். வேறுவிதமாகக் கூறினால். ஒவ் வொன்றும் தனித்தனியாக இயங்கக் கூடியதாயிருப்பினும் , கருத்துத் தொடர்பால் இணைக்கப்பட்டிருப்பின் , அதனைத் தொடர் வாக்கியம் என்று சொல்லலாம். ஒரே எழுவாய் பல பயனிலை களைக் கொண்டு முடிவதும் தொடர் வாக்கியமாகும். பலர்க்குத் தொடர் வாக்கியம் என்பது இப்படியிருக்கும் என்று விளங்கா திருப்பதால் 34 எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்பட்டுள்ளன. 1. அக்பர் பேரரசர் மட்டுமல்லர் ; ஆட்சித் திறமையும் மிக்க
பேரறிஞர். 2. உண்மைத் துறவி விரும்பினால் ' ஒருவேளை உணவு உண்பார் ; விரும்பாவிட்டால் சில நாள்கள் உண்ணாமலும் விரதம் இருப்பார். எனக்குக் கடுமை யான 2030 முதற் எனினும் , 3. தான் மதுரைக்குப் போனேன் ; போனதும் , பாமலும் காய்ச்சல் கண்டதால் , உடனே சென்னைக்குத் திரும்பி விட்டேன். 4. அம்மாணவன் பாடங்களை ஒழுங்காய்ப் படிப்பதில்லை ; அதனால் , தேர்வில் வெற்றி பெறவில்லை. - 5. வெயில் கடுமையாய் இருந்தது ; எனினும் , நாங்கள் அந்த வெயிலில் வெளியே சென்றோம். 6. உன்னிடம் இரண்டு இலக்கண நூல்கள் உள் ; அவற்றுள் ஒன்றை எனக்குக் கொடு. 7.
கதிரவன் தோன்றியது ; ஆகையால் , பனி மறைந்தது. 43 8. சீடர்கள் குதிரையைக் கண்டு பிடித்தார்கள் ; ஆனால் , அதைக் கண்டு துயருற்றார்கள் ; ஏனென்றால் , அதன் கால் முடமாகி இருந்தது. 9. கண் களவு கொள்ளும் சிறு நோக்கு , காதலுக்குச் செம்பாக மன்றூ : மிகப் பெரிது. 10. அவன் செய்தது எவருக்கும் நன்மை செய்யாது ; தீமையே செய்யும். 11. அரசன் அரியணையில் இருந்தான் ; அவளோடு அரசியும் இருந்தாள். 12. காமராசரது நற்றொண்டை நாடும் மறவாது ; நற்றமிழரும் மறவார். 13. தென்னைக்குக் கிளைகள் கிடையா ; மட்டைகளே உண்டு. 14. பயனிலை வினைமுற்றாக இருக்கலாம் ;
பெயர்ச் சொல்லாக இருக்கலாம் ; வினாவாகவும் இருக்கலாம். 15. இவ்வூரில் நன்செய் நிலமும் உண்டு ; புன்செய் நிலமும் உண்டு. 16. பொறுமைக் குணம் பெண்களுக்கு மட்டும் வேண்டுவ தன்று ; ஆண்களுக்கும் வேண்டுவதுமாகும். 17. இக்குற்றம் கண்டிக்கப்பட வேண்டுவது மட்டுமன்று ; தண்டிக்கபட வேண்டுவதுமாகும். 18. நான் வருவேன் என்றேன் ; வந்துவிட்டேன். 19. எதையும் செய் , ஆனால் , நன்றாகச் செய். 20. நான் ஒன்றை நினைக்கிறேன் ; ஆனால் , மற்றொன்றைச் செய்கிறேன். 21. சிறுவன் நாயின்மேல் கல்லெறிந்தான் ; கல் பட்டிருந்தால் அவனை அது கடித்திருக்கும்.
6-1200 22. அவன் இன்று வருவான் ; இல்லாவிட்டால் நாளைக்கு வருவான். 23. குமரனுக்குப் படிக்க விருப்பமும் இல்லை ; வாழ்வில் சிறந்து விளங்க எண்ணமும் இல்லை. 24. என் உபிறையைக் கண்டுபிடித்துக் கொண்டு ம் கூறினேன் ; அன்பளிப் வந்து என்னிடம் பாக ஐம்பது ரூபாயும் விட்டவனுக்கு நன்றியும் கொடுத்தேன். 25. அவன் ஓட்டப் பந்தயத்தில் ஓடினால் வெற்றிபெற மாட் டான் ; தோற்றுப் போவதைக் குறைவாகவும் கருதமாட்டான். 26. அம்மன்னன் அந்நாட்டின் மீது படையெடுக்கவுமில்லை ; அதனைக் கைப்பற்ற விரும்பவுமில்லை. 3. கலவை வாக்கியம் கலவை வாக்கியம் என்பது பல
வாக்கியங்கள் கலந்து ஒரு வாக்கியமாக அமைவது. இதில் ஒன்று முதன்மை வாக்கியமாக இருக்கும் ; மற்றது சார்பு 44 வாக்கியமாக இருக்கும். சிலவற்றில் ஒன்று முதன்மை வாக்கியமாகவும் மற்றவை சார்பு வாக்கியங்க ளாகவும் இருக்கும். வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது என்றும் , சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்த்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றும் அறிஞர் அறிவுரை கூறுவர். சேவகன் வந்து கள்வர்கள் பொருள்களைத் திருடிச் சென்றார்கள் என்றும் , பிடிப்பதற்குள் அத்திருடர்களைப் பிடிப்பதற்கு விரைந்து வந்து வண்டியில் சென்றேன். அவர்கள் ஓடி
விட்டார்கள் என்றும் கூறியதும் , நான் முதல் வாக்கியத்தில் இருக்கும் " அறிஞர் அறிவுரை கூறுவர் " என்பது முதன்மை வாக்கியம் ; " வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது " என்பதும் , " சிக்கல் ஏற்பட்டால் அதைத் தீர்த்து வாழ்க்கையை நடத்த வேண்டும் " என்பதும் சார்பு வாக்கியங்கள். இரண்டாவது வாக்கியத்தில் உள்ள " நான் அத்திருடர்களைப் பிடிப்பதற்கு விரைந்து வந்து வண்டியில் சென்றேன் " என்பது முதன்மை வாக்கியம் ; மற்றவை சார்பு வாக்கியங்கள். கலவை வாக்கியங்களில் பலவகை உண்டு. 193 4. தொடர் கலவை வாக்கியம் ப இப்போது நான்காவது வகை
வாக்கியம் ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. ' ரீடர்ஸ் டைஜஸ்ட் ' நிறுவனம் வெளியிட்ட ' மிக நன்றாக எழுதுக : மிக நன்றாகப் பேசுக ' ( ' Write Better ; Speak Better ' ) என்னும் ஆங்கிலப் பெருநூல் ஒன்று புதிதாகத் தொடர் கலவை வாக்கியம் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இத்தகைய வாக்கியம் தமிழிலும் எழுதுவதைக் காண்கிறோம். 1. திறனாய்வாளர்கள் நன்கு புகழ்ந்திருக்கிறார்கள் என்று கூறுமளவு வெற்றி பெற்றுள்ள பெரும்பாலனவாகிய பொதுமக்களால் புறக்கணிக்கப்படுகின்றன ; அவற்றுள் பல திரைப்படமாக்க ஹாலிவுட் விற்ற உரிமையை மீட்டுக் கொண்டிருப்பினும் ,
விற்பனை நவீனங்கள் நிறுவனத்துக்கு வகையில் தோல்வியுற்றிருக்கின்றன. 2. அங்கு வந்தவள் என் தங்கை என்றும் , அவளை அங்கிருந்த மாணவன் ' கேலி ' செய்தான் என்றும் அறிந்ததும் , நான் அந்த மாணவனிடம் சென்று , ' நீ அப்பெண்ணை எப்படிக் ' கேலி ' செய்யலாம் ? " என்று கேட்டு வைதேன் ; காவற்கூடத்துக்கு அவனை இழுத்துச் சென்று காவலரிடம் ஒப்படைத்தேன். 3. திருவள்ளுவர் முதல் முதலாக நீதிக்கருத்துகளைக் குறட் பாவில் அமைத்துத் திருக்குறளை இயற்றினார் என்று கருதுவதனால் , அவரை அறிஞர்கள் 45 சுட்டுப்பெயர் எழுவாயாய் வந்துளது. மற்றவற்றிற்கு
எடுத்துக்காட்டுகள் தேவையில்லை ; நீங்கள் அறிந்தவை. 3. பண்புத்தொகை , இருபெயரொட்டுப் பண்புத்தொகை , வேற்றுமைத்தொகை , உருபும் பயனும் உடன் தொக்க தொகை , உவமைத்தொகை , உம்மைத்தொகை , வினைத் தொகை , அன்மொழித்தொகை ஆகியவையும் எழுவாயாக வரும். கருங்குதிரை ஓடிற்று. பண்புத்தொகை எழுவாயாய் வந்துளது. பலாமரம் விழுந்தது. இருபெயரொட்டுப் பண்புத்தொகை எழுவாயாய் வந்துளது. யானைத் தந்தம் கிடைத்தது. 6 - ஆம் வே. தொகை எழுவாயாய் வந்துளது. மலைப்பாம்பு செத்தது.7 - ஆம் வே. உருபும் பயனும் உடன் தொக்க தொகை எழுவாயாய் வந்துளது. மதிமுகம் வியர்த்தது.
உவமைத்தொகை எழுவாயாய் வந்துளது. உவமைத்தொகை எழுவா உயிர்மெய் , 216 எழுத்துகளை உடையது. உம்மைத் தொகை எழுவாயாய் ( உயிர்மெய் - உயிரும் மெய்யும் கூடிய எழுத்து. ) வந்துளது. கொல்யானை நிற்கிறது. வினைத்தொகை எழுவாயாய் வந்துளது. தேன்மொழி பாடினாள். அன்மொழித்தொகை எழுவாயாய் வந்துளது. 4. சில வாக்கியங்களின் எழுவாய் மறைந்திருக்கும். மறைந் திருக்கும் எழுவாயைத் தோன்றா எழுவாய் என்பர். அறஞ்செய விரும்பு. இவ்வாக்கியத்தில் நீ என்பது மறைந்திருக்கிறது. ஒருவரை ' இவர் யார் ? என்று வினவும்போது கேட்கப்பட்டவர் ' நண்பர் ' என்று கூறுகையில் ,
இவர் என்னும் எழுவாய் மறைந்திருக்கிறது. இவ்வாறு தோன்றாமல் இருக்கும் எழுவாயைத் தோன்றா எழுவாய் என்பர். … பயனிலை பற்றி ல்லூ பயனிலைராகவும் வினைமுற்ற வினாவாகவும் இருக்கும் என்று கண்டோம். வினைமுற்றானது தெரிநிலை வினைமுற்றாகவும் இருக்கலாம் ; குறிப்பு வினைமுற்றாகவும் இருக்கலாம். கந்தன் வந்தான் வந்தான் என்னும் தெரிநிலை வினைமுற்று , பயனிலையாய் வந்துளது. பணம் இல்லை இல்லை என்னும் குறிப்பு வினைமுற்று பயனிலையாய் வந்துளது. 48 சில வினா வாக்கியங்கள் வினா எழுத்துகளைக் கொண்டு வினா வடிவத்தோடு தெரிநிலை வினைமுற்றாகவோ குறிப்பு
வினைமுற்றாகவோ வருவதுண்டு. ( 1 ) அது வருமா ? இவை தெரிநிலை வினைமுற்றுகள். ஈற்றில் வினா எழுத்துப் பெற்று முடிந்த வினா வாக்கியங்கள். அவள் பொன்னம்மாளா ? இது வினா எழுத்துச் சேர்ந்து வந்துள்ள பெயர்ப் பயனிலை பெற்று முடிந்த வினா வாக்கியம். ( 2 ) காசு இல்லையா ? உன் பேச்சு இனிதா ? இவை குறிப்பு வினைமுற்றுகள். வினா எழுத்துப் பெற்று முடிந்த வினா வாக்கியங்கள். V றுவ சில வாக்கியங்களில் பயனிலை முன்னும் எழுவாய் பின்னும் மாறி வருவதுமுண்டு. அவன் போனானா ? வந்தான் கந்தன். யார் அவர் ? வாக்கியம் எழுவாயாகவும் செயப்படுபொருளாகவும்
வருதல் 1. சில வாக்கியங்களில் ஒரு வாக்கியமே எழுவாயாக வருவதுண்டு. ' தொண்டுக்கு முந்து ; தலைமைக்குப் பிந்து என்பது ஒரு சிறந்த கருத்து. இதில் ஒரு வாக்கியமே எழுவாயாய் வந்துளது இதனை எழுவாய்க்கு வந்த அடைமொழி என்பர். 2. சில வாக்கியங்களில் செயப்படுபொருளும் ஒரு வாக்கிய மாய் இருப்பதுண்டு. நீ ' செல்லப்பன் நல்லவன் ' என்பதைத் தெரிந்து கொள்க. இதில் ஒரு வாக்கியமே செயப்படுபொருளாய் வந்துளது. தமிழ் இலக்கணம் செயப்படுபொருளுக்கு வந்துள்ள அடைமொழி என்று குறிப்பிடும். தரிந்து இதனைச் ஒன்றன்பால் உடன்பாடு 1. போர் நாட்டைப்
பாழாக்குகிறது. 2. கட்சிச் சண்டை பிளவை உண்டாக்குகிறது. பலவின்பால் உடன்பாடு 1. போர்கள் நாட்டைப் பாழாக்குகின்றன. 2. கட்சிச் சண்டைகள் பிளவை உண்டாக்குகின்றன. 49 ஒன்றன்பால் எதிர்மறை 1. செய்தி வாராது. 2. விடுமுறை இராது. பலவின்பால் எதிர்மறை 1. செய்திகள் வாரா. 2. விடுமுறைகள் இரா. மாற்றும் வழிமுறைகள் வினையாகவும் , தன் வினையைப் பிறவினையாகவும் , உலகில் ஒன்று மற்றொன்றாக மாறுவதுண்டு. ஒன்றை மற்றொன்றாக மாற்றுவதுமுண்டு. மாறுவதும் மாற்றுவதும் எங்கும் காணப்படுவன. எழுத்துலகத்தினும் இச்செயல் இல்லாமல் இல்லை. உடன்பாட்டு வினையை
எதிர்மறை செய்வினையைச் செயப்பாட்டு வினையாகவும் , நேர்க்கூற்றை அயற்கூற்றாகவும் , வாக்கியங்களில் பொருள் கருதி மாற்ற வேண்டுவது ஏற்படும். ஒரே கருத்தை வெவ்வேறு வாக்கியங்களாக மாற்றியும் எழுத நேரிடும். ஆதலால் , இம்மாற்றங்களைப் பற்றிய வழிமுறைகளை அறிந்து கொள்வது நன்று. உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுதல் வினைச் சொல்லில் உடன்பாட்டு வினை என்றும் , எதிர்மறை வினை என்றும் பொதுவாக இரு வகை உண்டு. உடன்படும் அஃதாவது ஒப்புக் கொள்ளும் வினையே உடன்பாட்டு வினை என்பது. எதிர்மறுக்கும் வினையே எதிர்மறை வினையாகும்.
உடன்பாட்டுவினை , தொழிலின் நிகழ்ச்சியை ணர்த்தும். எதிர்மறை வினையோ தொழில் நிகழாமையையும் சிறப்பாக எதிர்மறுத் லையும் அறிவிக்கும். வகுத்துப் பார்த்தாம் எதிர்மா உடன்பாட்டு வினைமுற்று , திர்மறை வினைமுற்று என்றும் , உடன்பாட்டுப் பெயரெச்சம். திர்மறைப் பெயரெச்சம் என்றும் , உடன்பாட்டு வினையெச்சம் , திர்மறை வினையெச்சம் என்றும் பாகுபாடுகள் உள. முதலில் உடன்பாட்டு வினைமுற்றானது எதிர்மறை வினைமுற்றாக மாறும் வழிகளைப் பார்ப்போம். உடன்பாட்டு வினைமுற்று 1. நீ வேலை செய்ய வேண்டும் 2. நான் நாளைக்கு வருவேன். 3. அவன் நேற்று வந்தான்.
எதிர்மறை வினைமுற்று ( Positive Verb ) நீ வேலை செய்ய வேண்டா. நீ வேலை செய்ய வேண்டுவதில்லை. நான் நாளைக்கு வாரேன். நான் நாளைக்கு வரமாட்டேன். அவன் நேற்று வந்திலன். 50 பிறவினை ( Causative Verb ) ' பிறவினை ' என்பது பிற பொருளால் செய்யும் வினை. ஆசிரியர் மாணாக்கனைப் படிப்பிக்கின்றார். தன்வினை ( Verb denoting direct action ) மாணாக்கன் தானாகவே தன்வினையாயிற்று. செய்யும் தொழிலாதலால் , பிறவினை ( Causative Verb ) படித்தலாகிய தொழில் ஆசிரியரால் நடைபெறுகின்ற தால் , அது பிறவினையாயிற்று. பிறவினையில் தொழில் செய்யுங் கருத்தாவும் ,
தொழில் செய்ய ஏவும் கருத்தாவும் ஆக இரண்டு கருத்தா இருக்கும். ஆசிரியர் மாணாக்கனைப் படிப்பிக்கின்றார் ' என்னும் வாக்கியத்தில் படித்தல் தொழில் மாணாக்கனதாகவும் , படிக்க ஏவுந் தொழில் ஆசிரியருடையதாகவும் இருக்கும் நுட்பத்தைக் காண்க. தன்வினையானது பிறவினையாக மாறும் விதங்கள் 1. தன்வினைப் பகுதியோடு. ' வி ' என்னும் விகுதியாவது ' பி ' என்னும் விகுதியாவது சேர்வதால் தன்வினையானது பிறவினையாக மாறும். தன்வினை U செய்தான் உண்டான் பிறவினை போக்கினான். உருட்டினான்.. தாழ்த்தினான். எழுப்பினான். அது பிறவினை செய்வித்தான் உண்பித்தான் 2.
தன்வினைப் பகுதியோடு கு , சு , டு , து , பு , று விகுதிகளுள் ஏதாவது ஒன்று சேர்வதால் தன்வினையானது பிறவினையாகும். தன்வினை ய்மைே போனான். உருண்டான் தாழ்ந்தான். எழுந்தான். ல்லும் 3. தன்வினைப் பகுதியிலுள்ள மெல்லின மெய்யெழுத் தானது வல்லின மெய்யெழுத்தானால் தன்வினையானது பிறவினையாக மாறும். 3.1 முருகப்பன் நல்வழியில் திரும்புகிறான். - தன்வினை. எல்லப்பன் அவனை நல்வழியில் திருப்புகிறான். 3.2 மகன் தகப்பனுக்கு அடங்கினான். - தன்வினை. தகப்பன் மகனை அடக்கினான். பிறவினை. பிறவினை. 52 3.3 அவன் வருந்தினான். தன்வினை. அவன் பிறரை
வருத்தினான். - பிறவினை. 3.4 அவன் நனைந்தான். - தன்வினை. அவன் துணியை நனைத்தான். - பிறவினை. 4. தன்வினைப் பகுதி இரட்டிப்பதால் பிறவினையாக மாறும். 4.1 வெந்நீர் ஆறுகிறது. - தன்வினை. அவள் வெந்நீரை ஆற்றுகிறாள். -பிறவினை. 4.2 மன்னன் தீயவனாய் மாறினான். தன்வினை. மன்னன் தீயவனை நல்லவனாய் மாற்றினான். - பிறவினை. குறிப்பு : சில இடங்களில் தன்வினையானது பிறவினைப் பொருளைத் தரும். ' அரசன் கோயிலைக் கட்டினான் ' என்னும் வாக்கியத்தில் ' கட்டுவித்தான் ' என்பதே பொருள். நடத்தினான். நடப்பித்தான் என்று பிறவினைகள் வருவதுண்டு. நடத்து
விப்பித்தான் என்றும் பிறவினை அருகி வருவதுமுண்டு. செய்வினையைச் செயப்பாட்டுவினையாக மாற்றுதல் செய்த பொருளுக்கு முதன்மை தரும் வினையே செய் வினை ( Active Verb ) எனப்படும். திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் இயற்றினார் என்பது செய்வினை. இவ்வாக்கியத்தில் திருவள்ளுவருக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது. 1. செய்யப்பட்ட பொருளுக்கு முதன்மை கொடுக்கும் வினை ( Passive Verb ) செயப்பாட்டுவினை எனப்படும். திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. ‘ இயற்றப்பட்டது ' என்பது செயப்பாட்டுவினை. தில் தி லும் திருக்குறளுக்கு முதன்மை
கொடுக்கப்பட்டிருப் பதைக் காணலாம். கீழ்வரும் எடுத்துக்காட்டுகளை ஆழ்ந்து படிக்கவும். இராமன் இராவணனைக் கொன்றான். செய்வினை. செய்வினையானது இவ் இராவணன் இராமனால் கொல்லப்பட்டான். செயப்பாட்டுவினை. வாக்கியத்தில் 2. மகளே , வேந்தன் உன்னைக் கட்டினான். - செய்வினை. மகனே , நீ வேந்தனால் கட்டுண்டாய். செயப்பாட்டுவினை. 3. நீங்கள் கட்டளையிடுங்கள். - செய்வினை. உங்களால் கட்டளையிடப்படட்டும். செயப்பாட்டுவினை. செய்வினையோடு படு. உண் என்னும் துணைவினைகள் சேர்ந்தால் செயப்பாட்டுவினையாகும். பாட்டுவினையாக செயப் 53 மாறும்பொழுது இரண்டாம்
வேற்றுமை யிலிருப்பது முதல் வேற்றுமையிலும் , முதல் வேற்றுமையிலிருப்பது மூன்றாம் வேற்றுமையிலும் வரும். குறிப்பு : எழுவாயை மறைக்கவே இக்காலத்தில் பல அறிவிப்புகளில் செயப்பாட்டுவினைகள் ஆங்கில முறையை ஒட்டிப் பயன்படுத்தப் பார்க்கிறோம். கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்று வேண்டப்படுகிறார்கள் " என்றும் " தெருக்களில் மலம் கழித்தலாகாது எனப் பொது மக்கள் கோரப்படுகிறார்கள் " என்றும் இருக்கக் காணலாம். அதிகாரிகள் வேண்டுகிறார்கள் ' என்று குறிப்பிட விரும்பாது , அறிவிப்பை எழுதுகிறவர்கள் இப்படி எழுதுகி ார்கள். "
பிரயாணிகள் கட்டுரையில் செயப்பாட்டுவினையை மிகுதியாகப் பயன் படுத்தினால் தமிழினிமை கெடும் என்றறிக. ஆதலால் , செயப் பாட்டுவினையை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும். நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றுதல் ( Direct Speech into Indirect Speech ) ஒருவர் நேரில் கூறியவாறே எழுதுவது நேர்க்கூற்று. ஒருவர் கூறியதை அவர் கூறியவாறே எழுதாமல் நாம் அக்கருத்தை மேற்கொண்டு கூறுவது அயற்கூற்று. ( கூற்று - சொல் ). அயற்கூற்று. ) நேர்க்கூற்றில் கூறிய சொற்களின் முன்னும் பின்னும் உள்ள மேற்கோள் குறி அயற்கூற்றில் இராது என்பதறிக. நேர்க்கூற்று
அரிச்சந்திரன் முனிவரை நோக்கி , ' நாட்டை இழப்பினும் , என் நன்மகனை இழப்பினும் , இனி வரக்கூடிய நற்கதியை இழப்பினும் நான் உண்மையையே நவில்வது உறுதி ” என்று கூறினான். யே அயற்கூற்று வெ அரிச்சந்திரன் முனிவரை நோக்கித் தான் தன் நாட்டை இழப்பினும் , தன் நன்மகனை இழப்பினும் , தனக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய நற்கதியை இழப்பினும் உண்மையையே நவில்வ தென உறுதி கொண்டதாய்க் கூறினான். சொற்பொழிவுகளைச் சுருக்கமாக வெளியிடுவதற்கு நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றி எழுதும் முறை அறிவது இன்றியமையாதது. நேர்க்கூற்றானது. ' என்று சொன்னார் '.
' என்றார் '. ' எனக் கூறினார் ' என்று முடியும். 54 அயற்கூற்றானது. என்பதாய்க் கூறினார் " , என்றும் ' என்றும் கூறினார் " எனவும் முடியும். நேர்க்கூற்று என் தந்தையார் , " நான் நாளைக் காலை வருவேன் " என்று என்னிடம் நேற்றுக் கூறிவிட்டுச் சென்றார். அயற்கூற்று என் தந்தையார் என்னிடம் தாம் மறுநாள் காலை வருவதாய் முன் நாள் கூறிவிட்டுச் சென்றார். நேர்க்கூற்று சுசீலை தன் கணவராகிய குசேலரை நோக்கி , " நாதா ! வறுமை மிகமிகக் கொடியது. அது தலைவன் தலைவியரிடத்து மனக்கசப்பை உண்டாக்கும். அது சோம்பலைப் புகுத்தும். அது பாவங்கள்
எல்லாவற்றையும் வருவிக்கும். ஆதலால் , நீங்கள் வறுமையைப் போக்க வழி தேடுவீராக " என்றாள். லவற் அயற்கூற்று சுசீலை , தன் கணவராகிய குசேலரிடம் , வறுமை மிகமிகக் கொடியது என்றும் , அது தலைவன் தலைவியரிடத்து மனக் கசப்பை உண்டாக்கும் என்றும் , அது சோம்பலைப் புகுத்துவதோடு பாவங்கள் எல்லாவற்றையும் வருவிக்கும் என்றும் , ஆதலால் , அவர் வறுமையைப் போக்க வழிதேட வேண்டும் என்றும் கூறினாள். நேர்க்கூற்று " இன்று இங்குத் தங்கி நாளைக்கு இராமரிடம் போவேன் " என்று பரதன் குகனிடம் கூறினான். ய்மையே வெல்லு அயற்கூற்று அன்று அங்குத் தங்கி
மறுநாளைக்கு இராமரிடம் செல்வதரய்ப் பரதன் குகனிடம் கூறினான். நேர்க்கூற்று இன்று போய்ப் போர்க்கு நாளை வா " என்று இராமர் இராவணனுக்கு உரைத்தார். 55 அயற்கூற்று அன்று போய் மறு நாளைக்குப் போர்க்கு வருமாறு இராமர் இராவணனுக்கு உரைத்தார். நேர்க்கூற்று நாணன் , " திண்ணா , நான் திரும்பிவரும் வரைக்கும் இங்கே நின்றுகொண்டிரு " என்று சொல்லிச் சென்றான். அயற்கூற்று நாணன் திண்ணனைத் தான் திரும்பி வரும் வரைக்கும் அங்கே நின்று கொண்டிருக்குமாறு வேண்டிக்கொண்டு சென்றான். நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும்பொழுது கீழ்வருமாறு சொற்கள்
மாறுதலடையும். நேர்க்கூற்று இது இவை இன்று இப்பொழுது 5 இங்கு இதனால் முன்நாள் அயற்கூற்று அது அவை அன்று அப்பொழுது அங்கு அதனால் மறுநாள் நாளை நேற்று குறிப்பு : பல வாக்கியங்களைக் கொண்ட நேர்க்கூற்று. தாயிருப்பின் அயற்கூற்றாக மாற்றுங் காலத்தில் ' என்றும் என்கிற இணைப்புச் சொல்லைச் சேர்த்தெழுதுக. ஒரு வாக்கியமாக இருப்பின் ‘ ஆய் ' என்னும் சொல்லை இணைத்து எழுதுக. அயற்கூற்றுக்கு மேற்கோள் குறியிடலாகாது. நீண்ட பேச்சை வெளியிட வேண்டுமென்றால் நேர்க் கூற்றாக எழுதுவதே நன்று. கீழ்வருவதைக் காண்க : சொற்பொழிவாளர் கூறியதாவது “ நாம்
அனைவரும் தொண்டு செய்ய வேண்டும் ; சிற்றூர்கள் முன்னேறப் பாடுபடவேண்டும் ; இந்தியாவிலுள்ள ஐந்து லட்சம் கிராமங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும். " இவ்வாறு முக்கால் புள்ளியோடு கோடிட்டு எழுதும்போது நேர்க்கூற்றின் முடிவில் ' என்றார் ' என்று முடிக்கக் கூடாது ; மேற்கோள் குறியுடன் முடித்துவிட வேண்டும் 56 1.6 உவமை அணி ( Simile ) இரண்டு பொருள்களுக்கு ஒப்புமை விளங்கச்சொல்வது உவமையணியாகும். உவமானம் , உவமேயம். பொதுத் தன்மை , உவம் உருபு ஆகிய நான்கும் இருப்பது விரி உவமை எனப்படும். பால் போலும் இனிய சொல். பால் - உபமானம் ; சொல்
- உபமேயம் ; இனிய என்பது பொதுத்தன்மை ; போலும் உவம் உருபு. உப - அருகில் ; மானம்- அளவு. அருகில் வைத்து அளக்குங் கருவியாயிருப்பது உபமானம் ; அளக்கப்படுவது உபமேயம். உபமானத்தை உவமானம் என்றும் , உபமேயத்தை உவமேயம் என்றும் கூறுவதுண்டு. உவமம் மலை போன்ற தோள். 3 தொகை உவமை என்பது பொதுத்தன்மையும் உருபும் தொக்கி அஃதாவது இல்லாமல் வருவது. சில வேளைகளில் இந்த இரண்டில் ஒன்று மட்டும் மறைந்தும் வரும். பால் போலும் சொல் , புதிய உவமைகள் 1. அப்போது அவளுடைய முகம் , கதிரவன் மறைந்த பிறகு நீலக்கடலில் போது அ தோன்றும் நிறைமதியைப் போலப்