text stringlengths 11 513 |
|---|
மக்களுடைய கருத்துக்களை பிரதிபலிப்பதாகவும் இச்செயற்குழு பணியாற்றுகிறது. 5. இத்தகைய செயற்குழு கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துதல் தொடர்ச்சி இருக்கவும் மரபுகள் பின்பற்றப்படவும் உதவுகிறது. குறைகள் 1. கூட்டாட்சி மன்றத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் உறுப்பினராக இருப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. 2. ... |
அரசாங்கம் விரைந்து செயல்படுகிறது. 4. பன்மை கொள்கை அடிப்படையில் கூட்டுக்குழு உறுப்பினர்கள் பல கட்சிகளிலிருந்து நியமிக்கப்படுவதால் அவர்களிடையே ஒற்றுமை மற்றும் சுதந்திரம் இருப்பதில்லை. 5.6 இக்கால சர்வாதிகார அரசுகள் சர்வாதிகாரி என்னும் சொல் பழங்கால உரோமாபுரி அரசு முறையிலிருந்து பெறப்பட்டதாகும். இம்முறை அரசாங்கம் மக்களாட்சி... |
தாங்களே எடுத்துக்கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஆட்சி செய்யக்கூடிய அமைப்பு சர்வாதிகார அரசு என்று கூறுகிறார். தற்கால சர்வாதிகார அரசுகள் மக்களாட்சிக்கு எதிராக பின்வரும் காரணங்களால் ஏற்பட்டன என்று சொல்லலாம். 1. 1914-1918 முதலாம் உலகப்போரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாடுகள் போரில் தோற்ற ஜெர்மனி போன்ற நாடுகளை மத... |
முஸோலினி தலைமையிலான இத்தாலி இணைத்துக்கொண்ட போதும் , கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சோவியத் ரஷ்யா தாக்கியபோதும் , மஞ்சூரியாவை சீனாவிடமிருந்து ஜப்பான் கைப்பற்றிய போதும் இவற்றிக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லர் இதர நாடுகள் மேல் படையெடுத்து அவைகளை தாக்கியபோதும் மக்களாட்சி முறையை காப்பாற்ற சர்வதேச சங்கம் நடவ... |
தனிமனித சுதந்திரம் கிடையாது. 4. பயம் மற்றும் பீதி காரணமாக சர்வாதிகாரிக்கும் மக்களுக்குமிடையே உள்ள இடைவெளி. நிறைகள் 1. சர்வாதிகாரிகள் மனஉறுதியுடன் எந்த காரியத்தையும் முடிக்கிறார்கள். அதுபற்றி விரைவில் முடிவெடுக்கிறார்கள். 2. நிர்வாகச் செலவு குறைவாக இருக்கிறது. 3. ஒரே கட்சி , ஒரு தலைவர் , ஒரே மாதிரியான திட்டமிடுதல் நடைமு... |
பயம் சர்வாதிகாரத்தின் ஆதாரமாகும். 2. மக்களுக்கு உரிமைகள் ஏதும் தரப்படுவதில்லை. 3. சர்வாதிகாரிகள் தங்களுடைய சுயநலம் சார்ந்த குறிக்கோள்களை அடைவதற்கு அவர்களுடைய சக்தியை செலவிடுகிறார்கள். 4. சர்வாதிகாரிகள் புரட்சி அடிப்படையில் மாறுதல்களை தோற்றுவிக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் சர்வாதிகாரிகள் சட்டமன்றம் காஸ்ட்ரோ மாஸே துங... |
சர்வாதிகாரத்தில் தனிமனித விருப்பம் மற்றும் வாழ்க்கை மதிக்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சுதந்திர கருத்துக்கள் தோன்றாமல் தடை செய்யப்படுகின்றன. 5.7 ஓரவை மற்றும் ஈரவை முறை சட்டமன்ற விளக்கம் சட்டத்துறை அரசாங்கத்தின் முதலாவது பிரிவாகும் இத்துறை சட்டங்களை இயற்றுகிறது. சட்டங்கள் இயற்றப்பட்டு ந... |
பிரதிபலிப்பவைகளாக இருக்கின்றன. சட்டமன்றங்கள் இருவகைப்படும். ஹிட்லர் , ( 1889–1945 ) 1. ஓரவை முறை 2. ஈரவை முறை ஓரவை முறை : ஒரே ஒரு சட்டமன்றமிருக்கும் முறைக்கு ஓரவை முறை என்று பெயர். எடுத்துக்காட்டு சீனாவில் உள்ள தேசிய மக்கள் மாநாடு. 14. பாராளுமன்றம் 15. தலைவர்முறை 16. குழுமுறை 17. பலகட்சி முறை 18. ஒரு கட்சி முறை 19. ஒற்... |
23. இக்கால சர்வாதிகார ஆட்சியின் பண்புகள் யாவை ? 24. குழு ஆட்சி முறையை விளக்குக. 25. ஓரவை மற்றும் ஈரவை முறையிலுள்ள வேறுபாடுகளை எழுதுக. 26. அரசு மற்றும் அரசாங்கம் செயற்குழு உறுப்பினர்கள் பற்றி குறிப்பெழுதுக. 27. குழு முறை அரசாங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பற்றி குறிப்பெழுதுக. பகுதி ஈ 28. பாராளுமன்ற அரசு முறையின் சிறப... |
பற்றி உமக்கு தெரிந்தவற்றை விவரிக்க. Page ³ of 204 அத்தியாயம் 6 நீதித்துறை முன்னுரை நீதி பரிபாலனம் இக்காலம் என்றில்லாமல் எல்லா காலங்களிலும் முக்கியமானதாக இருக்கிறது. அரசாங்கத்தின் வளர்ச்சியிலும் அதன் செயல்முறைகளிலும் எங்கு எப்போது எவ்வாறு நீதிப்பணிகள் ஏற்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன என்பது தெளிவாக அறுதியிட்டு கூறயி... |
முடியாட்சி முதல் உயர்குடியாட்சி , சிறுகுழு ஆட்சி மற்றும் கொடுங்கோல் ஆட்சி என பலவகைப்பட்ட அரசாங்க அமைப்புகள் பல்வேறு காலங்களில் பல நாடுகளில் இயங்கி வந்திருக்கின்றன. இவை எதிலுமே அந்த மூன்று துறைகளின் பணிகள் வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு துறையும் அதற்கென தரப்பட்ட பணிகளை செய்து வரவில்லை. பெரும்பாலான சமயங்களில் செயல்துறை இதர துற... |
நாடுகளிலும் நடைமுறையில் இருந்திருக்கிறது. கால மாறுபாடுகளாலும் மக்கள் சிந்தனைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களாலும் , அரசாங்க அமைப்புகளிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் குடியாட்சி முறை பெரும்பாலான நாடுகளில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. குடியாட்சி முறையில் முக்கிய அடிப்படை... |
சட்ட அடிப்படையிலான தீர்ப்புகள் தரப்பட வேண்டுமென்பதும் முக்கியமான அம்சமாகும். நீதித்துறையை போலவே நிர்வாகத்துறை ( செயல்துறை ) மற்றும் சட்டத்துறை தனித்து ஒவ்வொன்றும் அதன் பணிகளை மற்றதோடு சார்ந்திராமல் செய்ய வேண்டுமென்பதும் இன்னொரு அம்சமாகும். இவ்வாறு நிர்வாகத்துறை , சட்டத்துறை மற்றும் நீதித்துறை தனித்தனியாக செயல்பட வேண்டு... |
அவருடைய நூலில் விவரித்திருக்கின்றார். இக்கொள்கை அமெரிக்க அரசியலமைப்பை எழுதியவர்களால் ஏற்றுகொள்ளப்பட்டது. அதன் பிறகு இதர ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் அவற்றினுடைய அரசியலமைப்பில் இக்கொள்கை அடிப்படையில் அரசாங்கம் செயல்படுவதற்கான விதிகளை எல்லாம் சேர்த்து அதன்படி அவைகளின் அரசாங்கங்கள் நடைபெறுகின்றன. நீதித்துறையின் தேவையும் ... |
அடிப்படையில் தான் எழுதப்பட்ட அரசியல் சட்டத்தின் பாதுகாவலனாக நீதித்துறை கருதப்படுகிறது. எவ்வளவு விரைவாக வழக்குகள் முடிவுக்கு வந்து தீர்ப்புகள் தரப்படுகின்றனவோ அவ்வளவு விரைவாக வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மக்களுடைய உரிமைகளும் , உடைமைகளும் பாதுகாக்கப்படும். இத்தகைய நிலை அவர்களுடைய சுதந்... |
செய்கிறது. நாகரீக முறைகளை ஏற்று அவற்றை தொடர்ந்து பின்பற்றும் மக்களை கொண்ட நாடுகளில் நீதித்துறை தனித்து சுதந்திரமாக இயங்குவது ஏதேச்சதிகாரத்தை ஒழித்து மக்களுடைய சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு துணையாக இருக்கின்றது என்று இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பென்தாம் என்ற சமூக சீர்திருத்த அறிஞர் அவருடைய நூல்களில் வலியுறுத்தியிருக்கி... |
அமைகிறது என்ற கருத்து தற்காலத்தில் எல்லா நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். எனவே நீதிபதிகள் உயர்ந்த நோக்கம் உடையவர்களாக ஞானம் உடையவர்களாக , சட்டக்கல்வியில் தேர்ந்தவர்களாக , இயற்றப்பட்ட சட்டங்களின் நோக்கங்களை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இவை அல்லாமல் குறிப்பிட்ட வேறு சில தகுதிகளும் இருப்பது அவசிய... |
நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை பற்றி குறிப்பிடவில்லை. அதில் காணப்படுவதெல்லாம் நீதிபதிகள் ‘ “ நன்நடத்தை ” எதுவும் உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். இதன் காரணமாக மரபு அடிப்படையில் அமெரிக்க குடியரசு தலைவரால் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உயர்மட்ட நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த நி... |
பெற்றுள்ள தகுதிகள். ( ஆ ) அரசியல் கோட்பாடு குறிப்பாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் பின்பற்றும் கொள்கையில் ஈடுபாடும் அதை பின்பற்றி நடத்தலும் அதாவது , அவ்வப்போது பதவியிலிருக்கும் குடியாட்சி தலைவர்கள் எந்த கட்சியை சார்ந்து எத்தகைய கொள்கையை குறிக்கோள்களாக கொண்டிருக்கிறார்களோ அவற்றை பின்பற்றுவது. உதாரணமாக பழமைவாத அல்லது மிதவாத ... |
நியமிக்க படுவோர்களில் பெரும்பாலானவர்கள் கட்சி சார்பு உடையவர்களாகவும் குடியரசு தலைவர் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த தலைவர்களை பின்பற்றி நடப்பவர்களாகவும் இருக்கின்றனர். ( ஈ ) அண்மைக்காலம் வரையிலும் இனம் மற்றும் ஆண் , பெண் என்ற பாலின அடிப்படையிலும் கூட்டாட்சி நீதிபதிகள் ஆண்களாகவே இருந்தனர். பெண்கள் எவரும் நியமிக்கப்பட்டதி... |
மற்றும் இலத்தீன் இனத்தை சேர்ந்த அமெரிக்கர்களும் பெரும் அளவில் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள். FF. பெரும்பாலான தற்கால அரசாங்கங்கள் கீழே தரப்பட்டுள்ள சில பொதுவான கொள்கைகள் நீதிபதியாக நியமிக்கப்படுவர்களுக்கு இருக்க வேண்டுமென வற்புறுத்துகின்றன. அ. குடிமை மற்றும் தேசியம் ஆ. வயது வரம்பு ஏதாவது ஒரு பாடத்தில் பட்ட படிப்பு ... |
கொள்கை அரசியலுக்கு நீதிமறு ஆய்வு அமெரிக்காவின் சிறந்த பங்களிப்பாகும். இயற்றப்பட்ட சட்டமொன்றை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்றோ அல்லது அதற்கு அப்பாற்பட்டது என்றோ அறிவிக்கும் நீதித்துறைக்கு உள்ள அதிகாரம் நீதி மறு ஆய்வு ( புனராய்வு ) என்று அழைக்கப்படுகிறது. இம்முறை அமெரிக்கா , கனடா , ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற... |
பின்பற்றபடவில்லை. இந்தியாவில் மாநிலங்களில் ( States ) உள்ள உயர் நீதிமன்றங்களும் இந்தியா முழுவதற்குமான நீதித்துறை பொறுப்பு வகிக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதி மறு ஆய்வு அதிகாரம் கீழே தரப்பட்டுள்ள இனங்களில் வழங்கப்பட்டிருக்கிறது. அ. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே ஏற்படும் சச்சரவுகள். ஆ. அரசியல் அமைப்பில் உள்ள வி... |
இயற்றப்படும் அரசியல் அமைப்பிற்கு எதிரான சட்டங்கள். நிறைகள். 1. ஞானம் மற்றும் அனுபவ அடிப்படையில் நீதிபதிகள் நீதிமறு ஆய்வு செய்ய தகுதியுடையவர்கள். வகைசெய்கிறது. 3. சட்டமன்றங்கள் போலல்லாமல் நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படவும் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளாமலும் இருக்க உதவுகிறது. 4. மக்களுடைய குறிப்பாக சிறுபான்மையினருடைய உர... |
பாதுகாவலனாக , கூட்டாட்சி நீதிமன்றம் செயல்பட குறைகள் 1. அதிகாரப்பிரிவினைக் கொள்கைக்கு எதிரானதாக இருக்கக்கூடும். சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு தேவையான கொள்கைகளையும் , திட்டங்களையும் இக்கொள்கை பாதிக்க கூடும். பெரும்பாலான வழக்குகள் மற்றும் பிரச்சினைகள் அரசியல் , சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் சம்மந்தப்பட்டவைகளாகவே... |
பெரும்பான்மை அடிப்படையில் முடிவுகள் செய்யப்படுகின்றன. இது நீதிபதிகளுக்கு இடையே உள்ள கருத்து வேற்றுமையை எடுத்துக்காட்டுவதோடு வழக்குகளின் தரங்களையும் பாதிக்கின்றது. 6. நீதிபதிகள் சில சமயங்களில் காலத்திற்கு தகுந்தாற்போலவும் , மாறுபட்ட சூழ்நிலைக்கு ஏற்பவும் நடந்து கொள்ளாமல் பழமைவாதிகளாக இருக்கின்றனர். நீதிபதிகள் சில சமயங்க... |
பல நிறைகளையும் குறைகளையும் உடையதாக இருக்கின்றது. இதனால் சில சமயங்களில் சில தடைகள் ஏற்படுகின்றன. முன்னேற்றங்கள் ஏற்படாமல் போகின்றன. தவறுகளும் நடைபெறுகின்றன. இருப்பினும் இதனுடைய நிறைகள் குறைகளைவிட மிகுந்து காணப்படுவதால் இக்கொள்கை நீதித்துறையில் பின்பற்றப்படுவது அவசியமென எல்லோரும் அறிந்துள்ளனர். 6.4 நீதித்துறை செயல் வேகம்... |
நாடாளுமன்ற குடியாட்சி முறையில் அதன் பல்வேறு அமைப்புகளும் சரியான முறையில் பணியாற்றுவதற்கு நீதிசார்ந்த அமைப்புகள் பல வகைகளில் துணைநிற்கின்றன. பொது மக்கள் விருப்பம் மற்றும் அவர்கள் தூண்டுதல் காரணமாக நீதிமன்றங்கள் இப்போது நீதிவழங்குவதிலும் பொதுமக்கள் சம்பந்தமான வழக்குகளை தீர்ப்பதிலும் புதுப்புது யுக்திகள் மற்றும் நடைமுறைகள... |
அழைக்கப்படும் செய்தி மற்றும் விளம்பரத்துறை நடவடிக்கைகளை ஒட்டியும் குடிமக்களின் விருப்பத்திற்கு இணங்கவும் ஏற்பட்டது எனலாம். நீதித்துறையில் உள்ளவர்கள் இதர துறைகளில் உள்ளவர்கள் போலவே கல்வி மற்றும் இதர நடவடிக்கைகள் உடையவர்களாக இருக்கிறார்கள். இவர்களும் தவறுகள் செய்ய கூடியவர்கள் என்பதை மறுக்க இயலாது. எனவே விழிப்புணர்வு கொண்... |
பின்பற்றப்படுகின்ற நாடுகளில் நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அதன் காரணமாக நீதி மறுக்கப்படும் போது அந்த நீதி மடிந்துவிடுகிறது. எனவே நீதி விரைவாக வழங்கப்படவும் அந்நீதி நியாயமானதாக இருக்கவும் நீதித்துறைக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே நீதித்துறை பொது மக்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ஆனால் அதே சமயத்தில் அர... |
நீதிமுறையிலும் நீதித்துறையிலும் அவைசார்ந்த அமைப்புகளிலும் உதாரணமாக நீதிபதிகள் , தரகர்கள் நடுநிலையற்றவர்கள் , சார்புடைய அரசு வழக்கறிஞர்கள் போன்றவர்களிடையே லஞ்சம் போன்ற சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் பல வழக்கங்கள் இருக்கின்றன. இவைகளும் மாற்றப்படுவதோடு காலப்போக்கில் ஒழிக்கப்படுவது மிக இன்றியமையாதது ஆகும். இவை எல்லாவற்றையு... |
கடமைகளைச் செய்கின்றார்களோ அப்போது நீதித்துறை சுறுசுறுப்பு மக்களால் வரவேற்கப்படும். சட்ட அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு மக்களிடத்தில் நம்பிக்கை ஏற்படும். 6.5 நீதித்துறை சுதந்திரம் நீதி தெய்வீகத்தன்மை உடையதென மக்கள் கருதுகிறார்கள். நீதிபதிகள் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் எவர் பக்கமும் சாராமல் சமநிலையில் இருந்து நீதிவழங்க... |
அளவில் நீதிமன்றங்களுக்கு கொண்டுவரப்படும். இத்தகைய சூழ்நிலைகளில் நீதிபதிகள் தங்களுடைய சுதந்திரத்தை நிலை நிறுத்துகின்ற முறையில் பச்சாதாபம் இல்லாமல் தீர்ப்பு சொல்வது அவசியமாகும். பின்வரும் காரணிகள் நீதித்துறை சுதந்திரத்தை நிலைநாட்டுகின்றன. 1. நீதிபதிகள் நியமன முறை முன்னேற்றமடைந்த நாடுகளில் மூன்று முறைகளில் நீதிபதிகள் நியம... |
விளக்கம் கீழே தரப்படுகிறது. அ. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறை : இம்முறை பிரான்ஸ் நாட்டில் பின்பற்றப்பட்டது.அதன் அமெரிக்கா , சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் சில மகாணங்கள் இந்த முறையை பின்பற்றுகின்றன. லாஸ்கி மக்களால் தேர்ந்தெடுக்கும் முறை மோசமானது. எனவே அவர்கள் வழங்கும் தீர்ப்புகளும் நியாயமானவைகளாக , உண்மையானவைகளாக இர... |
அரசியல் சார்புடையவர்களாக , சட்டத்தை அடிப்படையாக கொள்ளாமல் நீதிவழங்க காரணமாகிறது என்று விளக்குகிறார். ஆ. சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் முறை : இம்முறை சுவிட்ஸர்லாந்தில் உள்ள கான்டன்கள் ( Cantons ) என்று அழைக்கப்படும் மாகாணங்களில் பின்பற்றப்படுகிறது. இது ஒரு சிறந்த முறையாகாது. அதிகாரப் பிரிவு கோட்பாட்டிற்கு மாறானது.... |
இழப்பார்கள். இ நிர்வாகத்தால் நியமிக்கப்படும் முறை : இம்முறை இங்கிலாந்து , அமெரிக்கா , கனடா , ஆஸ்திரேலியா , ஜப்பான் , தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகிறது. உலகின் இதர பல நாடுகளும் இம்முறையையே பெரும்பாலும் பின்பற்றுகின்றன. இந்த முறையில் நியமிக்கப்படும் நீதிபதிகள் தேர்வுகள் எழுதுவதன் மூலமாகவ... |
எல்லாம் பார்த்து அந்த அடிப்படையில் அவர்கள் நீதித்துறை தொடர்புடைய அமைச்சகத்தால் பரிந்துரை செய்யப்பட்டு நிர்வாகத்திற்குக் தலைமையாக இருப்பவரால் நியமிக்கப்படுவதால் அவர்கள் சுயமாகவும் , நேர்மையாகவும் , சிறப்பாகவும் பணியாற்ற முடியும். இம்முறையை லாஸ்கி போன்ற அறிஞர்கள் சிறந்தது என்று கூறியிருக்கின்றார்கள். 2. நீண்ட பதவிக்காலம்... |
லஞ்சம் போன்ற குறைகள் இருக்காது என்று கருதப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில் உயர்மட்ட நீதித்துறையை சேர்ந்த நீதிபதிகளின் பதவிக்காலம் 60,65,70 வயது என்பதாக இருக்கிறது. ஹமில்டன் போன்ற அறிஞர்கள் நீண்ட பதவி காலத்திற்கு நியமிக்கப்படும் நீதிபதிகள் யோக்கியமானவர்களாகவும் சிறந்த அறிவுடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதோடு அரசாங்கத்த... |
அதாவது அவர்கள் பதவியிலிருந்து எளிதில் விலக்கப்படாமல் இருக்க வேண்டும். இங்கிலாந்து , அமெரிக்கா மற்றும் பெரும்பாலான தற்கால அரசாங்கங்கள் இத்தகைய பணி விதிகளை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இவைகள் எளிதில் மாற்ற முடியாதவாறு அரசியலமைப்பு சட்டத்திலேயே சேர்த்து நீதித்துறை சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கு நல்ல ஏற்பாடுகள் செய்திருக்கின... |
அவர்களுக்கு இருக்க கூடிய அந்தஸ்து போன்றவைகளை கருத்தில் கொண்டும் , தகாத வழிகளில் பொருளீட்ட முற்படாமல் இருக்கவும் போதிய ஊதியம் தரவேண்டும். அப்போது தான் நீதிபதி பதவிக்கு தகுந்தவர்களும் , சிறந்தவர்களும் வருவார்கள். மேலும் நீதிபதிகள் பதவியில் இருக்கும் போது எக்காரணம் கொண்டும் அவர்களுடைய ஊதியம் மற்றும் இதரபடிகள் மேலும் உத்தி... |
இவைகளையெல்லாம் உறுதி செய்யும் வகையில் நீதித்துறைக்கான நிதிகள் தேசிய அரசாங்கத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிதி ஆதாரங்களிலிருந்து வழங்கப்படுகிறது. 5. உயர் தகுதி நீதி , சுதந்திரம் , அதன் முக்கியத்துவம் , நீதிபதிகளின் சிறப்பு , அவர்கள் சரியான முடிவுகளை வழங்குதல் , சுதந்திரமாக கருத்துக்கள் சொல்லுதல் ஆகியவை நீதிபதிகளுக்கு இருக்க ... |
நீதித்துறை நிர்வாகத்துறையினின்றும் பிரிக்கப்பட்டு தனியாகவும் சுதந்திரமாகவும் செயல்படுமாறு செய்யப்பட்டிருக்கிறது. எனவே நீதித்துறையை கட்டுப்படுத்துவது அதன் சுதந்திரத்திற்கு கேடு விளைவிப்பது போன்ற செயல்களில் நிர்வாகத்துறை தலையிட முடியாது. எனவே நீதிபதிகள் பயம் இல்லாமல் சுதந்திரமாக தீர்ப்புகள் வழங்கலாம். 7. ஓய்வு காலத்தில் ... |
இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டின் இறைமை சமச்சமுதாயம் , சமயசார்பின்மை மற்றும் மக்களாட்சி முறை கொண்ட ஒரு குடியரசாக நிறுவ பவித்தரமான முடிவெடுத்து , அதன் குடிமக்கள் அனைவருக்கும் 1. சமுதாய , பொருளாதார , அரசியல் நீதி 2. எண்ணம் , சொல் , நம்பிக்கை 3. சமய நம்பிக்கை மற்றும் வழிபாடு இவற்றில் சுதந்திரம் சமுதாயப்படிநிலை , வாய்ப... |
வளர்க்கவும் உள்ளார்ந்த உறுதியுடையவராய் , நம்முடைய அரசியலமைப்புப் பேரவையில் 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளாகிய இன்று ஈங்கிதனால் இந்த அரசியலமைப்பினை ஏற்று , இயற்றி , நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம். சமதர்ம , சமயச்சார்பின்மை , ஒருமைப்பாடு ஆகியன முகப்புரையில் 1976 ஆம் ஆண்டு 42 - வது அரசியல் சட்டத்திருத்தத்தின் மூலம் சேர்க்க... |
இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்ட ஒன்று. இந்திய அரசியலமைப்பு 1950 , ஜனவரி 26 ல் நடைமுறைக்கு வந்தது. இது மிக விரிவாக எழுதப்பட்ட ஆவணமாகும். பிரிட்டன் , அயர்லாந்து , கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசியலமைப்புகளே இந்திய அரசியலமைப்புக்கு மூலதாரமாக இருந்தன. இந்தியாவின் தேவையையும் , சூழ்நிலையையும் மனதில் கொண்டு , அரசி... |
அரசியலமைப்பின் விதிமுறைகளைச் சாதாரணச் சட்டங்களைத் திருத்தும் வழிமுறையைப் பயன்படுத்தித் திருத்தமுடியாது. அரசியலமைப்பு சட்டம் என்பது அரசியலமைப்பில் அடங்கியுள்ள வகையங்களைக் குறிக்கும். சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் சாதாரண சட்டங்கள் எனப்படும். அரசியலைப்புச் சட்டம் சாதாரண சட்டத்தினின்றும் வேறுபட்டது. இந்திய அரசியலமை... |
எளிதாக திருத்தம் செய்யப்பட இயலாது என்றும் அறியலாம். ஆகவே நம்முடைய அரசியலமைப்பு நெகிழும் இயல்பும் , நெகிழா இயல்பும் கொண்டுள்ளது என்று நாம் அறிகிறோம். மதசார்பற்ற அரசு கூட்டாட்சி முறை ( FEDERAL SYSTEM ) கூட்டாட்சி முறை என்பது , மத்திய அரசாங்கம் , மாநில அரசாங்கங்கள் என இருவகையான அரசாங்கங்களைப் பெற்று அவற்றின் அதிகார வரம்பு... |
நீதித்துறை நமது அரசியலமைப்பு மதசார்பற்ற அரசை நிறுவியுள்ளது. மதம் அரசு தலையீட்டிலிருந்து விடுபட்டது. அரசு எந்த குறிப்பிட்ட மதத்தையும் சாராதது. குடிமக்கள் அனைவருக்கும் சுதந்திரமான தெய்வ நம்பிக்கை , கடவுள் வழிபாடு மற்றும் அவரவர் மனசாட்சியை பின்பற்ற முழுசுதந்திரம் அளிக்கப்படுகிறது. மதசார்பற்ற தன்மைக்கு அடிப்படையானது ஒழுக்க... |
வழங்குகிறது. அது நாடாளுமன்றத்திற்கு பொறுப்புடைய அரசாங்கம் என்றும் , “ காபினெட் ” அரசாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. அரசாங்கமுறையில் செயலாட்சிக்குழு நாடாளுமன்ற சட்டமன்றத்துக்கு பொறுப்புடையதாகும். இந்திய செயலாட்சிக்குழு இரு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று பெயரளவிலானது. மற்றொன்று உண்மைத்தன்மை வாய்ந்தது. இந்தியாவில் பெயரளவு செ... |
அமைச்சரையும் மற்றும் அவரது அமைச்சர்களையும் கொண்டதாகும். நாடாளுமன்ற அரசாங்க முறையில் அமைச்சரவை உறுப்பினர்கள் தனிப்பொறுப்பும் , கூட்டுப்பொறுப்பும் உடையவர்கள். ஏனைய இந்திய அரசியலமைப்பு இரு அவை கொண்ட நாடாளுமன்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று மக்கள் அவை மற்றொன்று மாநிலங்கள் அவை. மக்கள் அவை உறுப்பினர்கள் , வயது வந்தோர் வாக்குர... |
) இந்திய அரசியலமைப்பின் மூன்றாம்பகுதியில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. ( அங்கங்கள் 12 முதல் 35 வரை ) இவை தனி மனித முழு வளர்ச்சிக்கு அ. சமத்துவ உரிமை ( Right to Equality ) ஆ. சுதந்திரத்திற்கான உரிமை ( Right to Freedom ) சுரண்டலைத் தடுப்பதற்கான உரிமை , ( Right Against Exploitation ) ஈஈ. சமயச் சுதந்திரத்திற்கான உரிம... |
அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் ( DIRECTIVE PRINCIPLES OF STATE POLICY ) இந்திய அரசியலமைப்பின் நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. ( அங்கங்கள் 36 முதல் 51 வரை ) நாட்டை ஆட்சி செய்வதற்கு இவை அடித்தளமாக இருக்கின்றன. அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடு... |
கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகளை கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம். 1. சமத்துவக் கொள்கைகள் ( SOCIALIST PRINCIPLES ) II. காந்தியக் கொள்கைகள் ( GANDHIAN PRINCIPLES ) III. பன்னாட்டுக் கொள்கைகள் ( INTERNATIONAL PRINCIPLES ) IV. இன்னபிற கொள்கைகள் ( MISCELLANEOUS PRINCIPLES ) I. சமத்துவக் கொள்கைகள் அ. குடிமக்களாகிய ஆண்களும் ,... |
தன்னாட்சி அமைப்புக் கூறுகளாக அவை இயங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். ஊரகப் பகுதிகளில் தனிமனித அல்லது கூட்டுறவு , அடிப்படையில் குடிசைத் தொழில்களை வளர்ப்பதற்கு முயலுதல். 3. பட்டியலில் கண்ட சாதியினர் , பட்டியலில் கண்ட பழங்குடியினர் , பிற நலிந்த பிரிவினர் ஆகியோரின் கல்வி , பொருளாதார நலன்களை வளர்த்தல். 4. சத்தான உணவி... |
சட்டத்திருத்தம் மூலம் பகுதி IV - A ல் ( அங்கம் 51A ) சேர்க்கப்பட்டன. பின்வருவன இந்தியாவின் குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமைகள் ஆகும். அ. அரசியலமைப்பிற்குக் கீழ்ப்படிந்து அதன் குறிக்கோள்கள் , அமைப்புகள் , நாட்டுக்கொடி , நாட்டுப்பண் இவற்றை மதித்து நடத்தல். இ ஆ. நமது நாட்டு விடுதலைப் போரட்டத்திற்கு உணர்வூட்டிய உயர்குறிக்கோள்க... |
வட்டாரம் அல்லது வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து , இந்திய மக்கள் அனைவரிடையேயும் நல்லிணக்கத்தையும் , பொது உடன் பிறப்புணர்வையும் பேணி வளர்த்தல் , மகளிர் தம் மாண்பிற்கு இழுக்காகும் பழக்கங்களை எ. விட்டொழித்தல். ஊ. நமது கூட்டு பண்பாட்டின் வளமார்ந்த மரபுச் செல்வத்தை மதித்துப் பாதுகாத்தல். காடுகள் , ஏரிகள் , ஆறுகள் , வனவிலங்குகள்... |
ஐ. பொதுச் சொத்தைப் பாதுகாத்து , வன்முறையை விலக்குதல். ஓ. தனிமனிதனுடைய செயல் , கூட்டுறவு செயல் ஆகியவற்றை சிறப்பான முறையில் முடிக்கும் வகையில் செயலாற்றுதல் முதலியன தேவை. இதனால் நாடு எப்பொழுதும் ஆற்றலிலும் சாதனைகளிலும் மேம்பாட்டை தொடர்ந்து அடைய முடியும். நீதிப்புனராய்வு ( JUDICIAL REVIEW ) நமது அரசியலமைப்பு சுதந்திரமான நீ... |
தீர்ப்பு வழங்கத்தக்க அதிகாரத்திற்கே நீதிப்புனராய்வு என்று பெயர். அரசியலமைப்பின் காவலனாக நீதித்துறை விளங்குகிறது. இந்திய குடிமக்களின் உரிமைகளையும் , சுதந்திரங்களையும் , நீதித்துறை இதன் மூலம் பாதுகாக்கிறது. வயது வந்தோர் வாக்குரிமை ( UNIVERSAL ADULT FRANCHISE ) இந்திய அரசியலமைப்பு வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்... |
பிரதிநிதித்துவ அடிப்படையில் , ஒற்றை மாற்று வாக்கின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இரகசிய வாக்களிப்பு முறை கையாளப்படுகிறது. இந்தியக் குடியரசுத் தலைவர் ஐந்தாண்டுக் காலத்திற்குப் பதவி வகிப்பார். மீண்டும் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பெறுவதற்குத் தகுதியுடையவர் ஆவார். பதவி நீக்க... |
மற்ற அவையால் விசாரணை செய்யப்படும். ஒரு அவை குடியரசுத் தலைவரை குற்ற விசாரணை ( Impeachment ) செய்யவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வர விரும்பினால் பதினான்கு நாட்களாவது முன்னறிவிப்புக் கொடுக்கப்பட்ட பின்னரே அத்தீர்மானத்தைத் தாக்கல் செய்யமுடியும். இம்முன்னறிவிப்பில் அவையின் மொத்த உறுப்பினருள் நான்கில் ஒருபகுதியினராவது கையொப... |
ஆய்வு செய்தல் வேண்டும். அவ் அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாத பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட வேண்டும். அத்தீர்மானம் நிறைவேற்றப்படும் தேதியிலிருந்து குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார். இந்திய குடியரசுத்தலைவரின் அதிகாரங்கள் ( POWERS OF THE PRESIDENT OF INDIA ) 1. நிருவாக அத... |
நிர்வாக அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது பணியில் அவருக்கு துணைபுரியவும் , ஆலோசனை கூறவும் அமைச்சரவை உண்டு. மத்திய அரசாங்கத்தின் அனைத்து நிருவாக அதிகாரங்களும் அவர் பெயரிலேயே செயல்படுத்தப்படுகின்றன. பிரதமர் , குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பிரதமரின் ஆலோசனையின் பேரில் மத்திய அரசின் மற்ற ... |
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி , மற்ற நீதிபதிகள் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் , பிற நீதிபதிகள் , மாநில ஆளுநர்கள் , துணை நிலை ஆளுநர்கள் , மத்திய அரசுப்பணி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் , தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆகியோர்களை நியமிக்கின்றார். குடியரசுத்தலைவர் பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதியாக விளங்கு... |
செய்வார். இலக்கியம் , அறிவியல் , கலை மற்றும் சமூக ஆகிய துறைகளிலிருந்து இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவார்கள். ஆங்கிலோ – இந்திய சமூகத்தினருக்குப் போதுமான பிரதிநிதித்துவம் மக்களவையில் கிடைக்கப்பெறவில்லை என்று குடியரசுத் தலைவர் கருதினால் , அச்சமூகத்திலிருந்து இரண்டு அங்கத்தினர்களை மக்கள் அவைக்கு நியமனம் செய்வா... |
அவைகளையும் ஒன்றாகக் கூட்டி சர்ச்சையைத் தீர்த்து வைக்க முயல்வார். குடியரசுத் தலைவரின் அங்கீகாரமும் , கையொப்பமும் இல்லாமல் எந்த மசோதாவும் சட்டமாகாது. நாடாளுமன்றம் கூடாத காலங்களில் அவசரச் சட்டம் ( Ordinance ) பிறப்பிக்கக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. 3. நிதித்தொடர்பான அதிகாரங்கள் ( Financial Powers ) குடியரசுத் த... |
ஒப்புதலை எதிர்நோக்கி அவசரமாக ஏற்படும் செலவினங்களுக்கு இத்தொகுப்பிலிருந்து முன்பணம் வழங்குவார். குடியரசுத் தலைவர் நிதி ஆணையத்தை ( Finance Commission ) நியமிக்கும் அதிகாரத்தையும் பெற்றுள்ளார். 4. நீதி தொடர்பான அதிகாரங்கள் ( Judicial Powers ) குற்றவாளிகளை மன்னிக்கவோ , தண்டனையை நிறுத்திவைக்கவோ , குறைக்கவோ குடியரசுத் தலைலவர... |
அதிகாரங்கள் ( Emergency Powers ) நெருக்கடி நிலை தொடர்பான அதிகாரங்கள் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர் கீழ்காணும் நேரங்களில் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம். அ. போர் அல்லது அயல்நாட்டு ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதம் தாங்கியோரின் கிளர்ச்சி ஆகிய நேரங்களில் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம். ( அங்கம் : 352 ) ஆ. மாநிலங்... |
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் தமது பதவியின் வழியாக மாநிலங்கள் அவையின் தலைவராகப் பொறுப்பேற்பார். குடியரசுத் தலைவர் பதவி , அவரது மரணத்தாலோ , பதவி விலகலாலோ , பதவியிலிருந்து நீக்கப்பட்டதாலோ காலியிடமாகுமானால் துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்று புதிய குடியரசுத் தல... |
மீண்டும் கடமைகளை மேற்கொள்ளும் வரை அப்பொறுப்புகளை ஏற்பார். தேர்தல் 1. அவர் இந்தியாவின் குடிமகனாக இருத்தல் வேண்டும். 2. அவர் 35 வயது முடிந்தவராக இருத்தல்வேண்டும். 3. மாநிலங்கள் அவையின் உறுப்பினருக்குரிய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். 4. அரசாங்கத்தில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தலாகாது. துணைக்குடியரசுத் தலைவர் நாடாளுமன... |
தேர்ந்தெடுக்க இரகசிய வாக்களிப்புமுறை பின்பற்றப்படுகிறது. பதவிக்காலம் துணைக்குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலத்திற்குப் பதவி வகிப்பார். மீண்டும் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார். துணைக்குடியரசுத் தலைவர் ஐந்தாண்டுக் காலத்திற்குள் தம் பதவியை விட்டு விலகிக் கொள்ளலாம். துணைக் குடியரசுத் தலைவர் , ம... |
ஆனால் பதினான்கு நாட்களுக்குக் குறையாமல் முன்னறிவிப்புக் கொடுத்தல் வேண்டும். 7.2.2. பிரதம அமைச்சர் ( PRIME MINISTER ) பிரதம அமைச்சர்தான் அரசாங்கத்தின் தலைவர். அவர்தான் நிருவாகத் துறையின் தலைவருமாவார். அவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார். குடியரசுத் தலைவர் மக்கள் அவையில் பெரும்பான்மையான கட்சியின் தலைவரை அழைத்த... |
தலைவருக்கும் , அமைச்சரவைக்கும் இணைப்பு பாலமாகத் திகழ்பவர். 5. குடியரசுத் தலைவருக்கும் , நாடாளுமன்றத்திற்கும் இணைப்புப் பாலமாகத் திகழ்பவர். 6. நாட்டின் முதன்மையான பிரதிநிதியாக திகழ்பவர். 7. நாட்டின் நிர்வாகத்தை நடத்தி கொடுக்கும் பொறுப்புடையவர். 8. பன்னாட்டு உறவை நடத்துவதில் பொறுப்பு உடையவர். பிரதம அமைச்சர் “ அமைச்சக வளை... |
குறிப்பிடுகிறார். “ பிரதமர் ஒரு ஞாயிறு போன்றவர் என்றும் அஞ்ஞாயிறை மற்ற கிரகங்கள் எங்ஙனம் சுற்றி வருகின்றனவோ அங்ஙனமே ஏனைய அமைச்சர்கள் அனைவரும் பிரதமரைச் சுற்றி சுழல்கின்றனர் ” என்று சர் ஐவர் ஜென்னிங்ஸ் என்ற அரசியல் அறிஞர் குறிப்பிடுகிறார். காபினெட்டின் அம்சங்கள் நாடாளுமன்ற அரசாங்க முறையில் காபினெட் என்பது நாடாளுமன்றக் க... |
பேஜாட் என்பவர் குறிப்பிடுகிறார். காபினெட்டின் அம்சங்கள் பின்வருமாறு : 1. காபினெட்தான் உண்மையான செயலாட்சிக்குழு. 2. உண்மையான செயலாட்சிக்குழு நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 3. உண்மையான செயலாட்சிக்குழுவையும் சட்டமன்றத்தையும் இணைக்கின்றது. 4. பிரதம அமைச்சர் காபினெட்டிற்கு தலைமை தாங்குகிறார். 5. அரசியலில் ஒத்த தன... |
பொறுப்புடையவர்கள். 10. எதிர்க்கட்சி செயல்படுகின்றது. 11. காபினெட் இரகசியம் காக்கப்படுகின்றது. காபினெட்டின் பணிகள் : 1. கொள்கை முடிவெடுக்கும் பணிகள் காபினெட் விவாதங்களில் ஈடுபட்டு கொள்கைகளை வகுக்க ஒரு குழுவாகும். நாட்டை எதிர்நோக்கும் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டுப் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து முடிவெடுக்கும். 2. மி... |
நிறுவனமாக காபினெட் காபினெட் பல அமைச்சர்களையும் அல்லது அரசாங்க இலாகாக்களையும் , அவற்றின் பணிகளையும் ஒருமுகப்படுத்தி வழி நடத்திச் செல்லும். 4. நிதியின் மீது கட்டுப்பாடு நாட்டின் எல்லாவகையான செலவினங்களுக்கும் வருவாய் ஈட்டு , செலவிட காபினெட் பொறுப்புடையது. 5. பதவிகளில் அமர்த்துதல் பொறுப்பு பொதுவாக பதவியில் அமர்த்தும் பணி க... |
7.2.3 அமைச்சரவை ( Council of Ministers ) பிரதம அமைச்சரது தலைமையிலான ஒரு அமைச்சரவைக்கு இந்திய அரசியலமைப்பு வகை செய்கிறது. அது குடியரசுத் தலைவருக்கு அவருடைய பணியை ஆற்றுவதில் துணை புரிந்து ஆலோசனையைக் கூறும். அமைச்சர்கள் , மக்கள் அவைக்கு தனித்தனியாகவும் , கூட்டாகவும் பொறுப்புடையவர்கள். சாதாரணமாக , அமைச்சர்கள் இரண்டு வகையாக... |
அமைச்சர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்படும். அமைச்சரவையில் ஒரு “ உட்குழு ” வாகச் செயல்படுகின்றது. காபினெட் அமைச்சர்கள் காபினெட் கூட்டங்களில் கலந்து கொண்டு முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பார்கள். மாநில அமைச்சர்கள் அடுத்த நிலை வகிப்பார்கள். மாநில அமைச்சர்களில் சிலர் சில துறைகளில் தனித்துப் பொறுப்பு வகிக்கிறார்கள். பொதுவாக , அ... |
அமைச்சரின் அலுவலகம் பிரதம அமைச்சரின் அலுவலகம் ஒரு தலைமை செயலாளரின் கீழ் இயங்குகிறது. இவ்வலுவலகம் பிரதம அமைச்சரருக்கு அலுவலக தொடர்புடைய பணிகள் சம்பந்தமான பணிகளை மேற்கொண்டு பிரதமருக்கு உதவியாக இருக்கின்றது. இவ்வலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு பிரிவு மற்றும் பொதுமக்கள் குறைகள் தீர்க்கும் பிரிவு ஆகியவையும் செயல்படுகின்றன. பிரதம அ... |
காபினெட் ) அமைச்சர் ஒருவரின் மேற்பார்வையிலுள்ள பொருள் பற்றியதா என்பதை பொருத்திருக்கிறது. அதாவது பிரதம அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய பொருள்கள் பற்றிய பதிவேடுகள் யார் மேற்பார்வையின் கீழ் இருந்தாலும் அவற்றை பிரதம அமைச்சரின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. பெரும்பாலான அலுவல்கள் அமைச்சக அந்தஸ்து உடைய அமைச்சராலோ... |
செல்லப்பட்டு அதை பற்றி அவர் முடிவு எடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் மேற்கொள்கிறது. இதர அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைசார்ந்த பொருள்கள் பற்றிய முடிவுகளுக்கு பதிவேடுகள் பிரதம அமைச்சருக்கு அனுப்பப்படுகின்றன. உதாரணமாக பிரதம அமைச்சர் வழக்காறு அடிப்படையில் வான் வெளி , அணுசக்தி , அரசு அலுவலர் , பொது மக்கள்... |
சம்பந்தப்பட்ட பதிவேடுகள் அவருடைய முடிவுக்கு அனுப்பப்படுகின்றன. மேற்கூறப்பட்டவை அல்லாமல் இதர பல அலுவல்களையும் பிரதமர் கவனிக்க வேண்டி இருக்கிறது. அவை பின் வருமாறு , அ. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகள். ஈ. ஆ. முக்கியமான விஷயங்களில் எடுக்கப்பட வேண்டிய கொள்கை முடிவுகள். அமைச்சக செயலரின் சம்பந்தப்பட்ட ... |
அமைச்சகங்களோடு தொடர்புடைய குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம். நிர்வாக சீர்திருத்தம் மற்றும் சீரியல் பணிகள் தொடர்புடைய கொள்கைகளை முடிவு செய்தல். 7.2.4 மக்களவை மற்றும் மாநிலங்களவை – தலைவர் , துணைத்தலைவர் இந்திய அரசியலமைப்பின்படி , மக்களவைக்கு அந்த அவையின் உறுப்பினர்கள் இருவரை முறையே அதன் தலைவராகவும் , துணைத்தலைவராகவும் ... |
மாநிலங்களவைத் தலைவராக இருப்பார். மாநிலங்களவை , அந்த அவையின் உறுப்பினர் ஒருவரை அதன் துணைத்தலைவராக தேர்ந்தெடுத்தல் வேண்டும். இந்தியாவின் மக்களவைத் தலைவர் பதவி கிட்டத்தட்ட காமன்ஸ் அவை ( House of commons ) தலைவர் போன்றது. மக்கள் அவைத்தலைவர் பதவி அதிகாரமும் கௌரவமும் உடைய ஒன்றாகும். மக்களவையின் தலைவர் வாக்கெடுப்பின் முடிவில்... |
கூடும்போது , மக்களவைத்தலைவர் தலைமை தாங்குவார். மக்களவைத் தலைவர் , துணைத்தலைவர் ஆகியோர் பதவி வகிக்கும் உறுப்பினர் மக்களவையின் உறுப்பினராக இருப்பது அற்றுப்போய்விடின் , அவர் தம் பதவியை விட்டகலுதல் வேண்டும். அந்த உறுப்பினர் அவைத் தலைவராக இருப்பின் , துணைத்தலைவருக்கும் , அந்த உறுப்பினர் துணைத்தலைவராக இருப்பின் அவைத்தலைவருக்... |
முன்மொழியவிருக்கும் கருத்தினைத் தெரிவித்துப் பதினான்கு நாட்களுக்குக் குறையாமல் முன்னறிவிப்புக் கொடுத்திருத்தல் வேண்டும். மக்களவையின் அவையில் மக்களவை கலைக்கப்பட்ட பின்பு , அடுத்த மக்களவையின் முதல் கூட்டம் தொடங்கும் வரையில் , அவைத்தலைவர் தம் பதவியை விட்டு அகல வேண்டியதில்லை. 7.2.5. நாடாளுமன்றம் ( PARLIAMENT ) மாநிலங்கள் அ... |
இதில் பன்னிருவரை ( 12 ) , இலக்கியம் , அறிவியல் , கலை மற்றும் சமூக சேவை இவற்றில் சிறந்த அறிவும் அல்லது அனுபவமும் கொண்டவர்களை குடியரசுத் தலைவர் உறுப்பினர்களாக நியமிப்பார். மீதமுள்ள 238 உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் யூனியன் பிரதேசங்கள் உள்பட அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்... |
பிரதிநிதித்துவ முறையைப் பின்பற்றி ஒற்றை மாற்று வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். யூனியன் பிரதேசங்கள் சார்பாக உறுப்பினர்கள் நாடாளுமன்றம் அவ்வப்போது விதிக்கும் விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநிலங்கள் அவை கலைப்பிற்கு உள்ளாவதில்லை. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை விலக , கால... |
அவையின் தலைவராகப் பொறுப்பேற்பார். மேலும் ஒரு துணைத்தலைவர் அந்த அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். துணைக்குடியரசு தலைவர் இல்லாத காலங்களில் துணைத்தலைவர் மாநிலங்கள் அவைக்கு தலைமை தாங்குவார். 7.2.6 மக்கள் அவை ( LOK SABHA ) மக்கள் அவை 552 க்கு மிகாத உறுப்பினர்களைக் கொண்டது. 530 உறுப்பினர்கள் மாநிலங்களிலிருந்தும் , ... |
தலைவர் கருதுவாராயின் அவர் அச்சமூகத்தினரில் இருவரை உறுப்பினர்களாக நியமிப்பார். மாநிலங்களின் மக்கள் தொகைக்கு இணங்க உறுப்பினர்கள் கணக்கிடப்பட்டு தேர்ந்தெடுக்கப் படுவார்கள். தற்போது மக்கள் அவை 545 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இடையில் கலைக்கப்படவில்லையெனில் , மக்கள் அவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டு காலம் ஆகும். இருப்பினும் ,... |
சட்டத்தினால் நீட்டிக்கலாம். மக்கள் அவையின் தலைவர் ( Speaker ) நாடாளுமன்ற முதல் கூட்டத்தில் அவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்றும் அவை , ஒரு துணைத்தலைவரையும் ( Deputy Speaker ) தேர்ந்தெடுக்கும். தலைவர் இல்லாத காலங்களில் அவைத் தலைவராகப் பொறுப்பேற்றுத் துணைத்தலைவர் அவையை நடத்திக் கொடுப்பார். நாடாளுமன்ற உறுப்ப... |
வேண்டும். கூடுதல் தகுதிகள் அவ்வப்போது நாடாளுமன்றத்தினால் சட்டத்தின் மூலம் அறிவிக்கப்படும். மக்கள் அவைக்குரிய உறுப்பினர் நாட்டின் எந்தத் தொகுதியிலிருந்தும் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படலாம். மாநிலங்கள் அவையின் அங்கத்தினராவதற்கு ஒருவர் எந்த மாநிலத்திற்கு தேர்ந்தெடுக்கப் படுகிறாரோ அந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்க... |
இடையில் ஆறு மாதங்களுக்கு மிகாமல் இடைவெளி இருக்கும் வகையில் குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட ஆணையிடுவார். நடைமுறையில் நாடாளுமன்றம் ஆண்டிற்கு மூன்று முறை கூட்டப்படுகிறது. 1. வரவு - செலவு அறிக்கை கூட்டத்தொடர் - பொதுவாக பிப்ரவரி மாதத்தில் கூடும். 2. பருவகாலக் கூட்டத்தொடர் - பொதுவாக ஜூலை மாதத்தில் கூடும். 3. க... |
தலைவர் உரை Page og of 204 நிகழ்த்துவார். இந்த கூட்டத் தொடரிலேயே , இரயில்வே வரவு - செலவு மற்றும் பொது வரவு – செலவு மீது விவாதம் நடத்தி அவை ஏற்றுக் கொள்ளப்படும். நாடாளுமன்றத்தின் பணிகள் ( FUNCTIONS OF PARLIAMENT ) நாடாளுமன்றம் பலதரப்பட்ட பணிகள் புரிந்துவருகிறது. 1. சட்டம் இயற்றுதல். 2. நிருவாக மேற்பார்வை. 3. வரவு – செலவு... |
பிரிவினை அடிப்படையில் சட்டங்கள் இயற்றுவதில் நாடாளுமன்றத்திற்கே அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சில சூழ்நிலைகளில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்திலும் நாடாளுமன்றம் சட்டம் இயற்றக்கூடும். குடியரசுத் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கும் , உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளையும் , உயர்நீதிமன்ற நீதிபதிக... |
பதவி நீக்கம் செய்யவும் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்படுள்ளது. and Auditor - சட்டமியற்ற நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். இருப்பினும் , நிதி மசோதாவைப் பொறுத்தவரை மக்கள் அவையின் ஒப்புதலே முடிவானது. நிதி மசோதாக்கள் , மாநில அவையினால் 14 நாட்கள் மட்டுமே தாமதப்படுத்தப்படலாம். தரப்பெறும் சட்டம் செய்யும் உ... |
செயலாட்சிக்குழுவின் மீது கேள்விகள் , துணைக்கேள்விகள் கேட்பதன் மூலமாகவும் , ஒத்திவைப்புத் தீர்மானம் மூலமாகவும் , தீர்மானங்ளை விவாதித்து அவற்றை நிறைவேற்றுவதன் மூலமாகவும் , கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமாகவும் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதன் மூலமாகவும் கட்டுப்பாட்டினை செலுத்தலாம். நாடாளுமன்றத்தின்... |
செலுத்த முடிவதில்லை. எனவே மசோதாக்கள் பரிசீலனைக்காக நாடாளுமன்ற குழுக்களுக்கு அனுப்படுகின்றன. மக்களவை , மாநிலங்கள் அவை - வேறுபாடு : 1. மக்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்கள் மூலம் ( வயதுவந்தோர் வாக்குரிமை ) தேர்ந்தெடுக்கப்பட மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ( விகிதாரசப... |
இருக்கிறது. நிதி மசோதாக்கள் அவையில் தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் நிருவாகத்தை மக்கள் நடத்துவதற்கு தேவையான நிதியை மக்கள் அவை தான் வழங்குகிறது. 4. யூனியன் அரசாங்கங்களுக்கும் மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்று அல்லது அதற்கு ஒரே அனைத்திந்திய பணிகளை உருவாக்குவது நாட்டின் நலனுக்குத் தேவையானது அல்லது உகந்தது என மாநில... |
இருபத்தைந்து நீதிபதிகளையும் கொண்டிருக்கும். தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள். நீதிபதிகளை நியமிக்கும்போது குடியரசுத் தலைவர் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார். அரசியலமைப்பின்படி உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பின்வரும் தகுதிகள் அவசியமென 3. கருதப்படுக... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.