text stringlengths 11 513 |
|---|
எனலாம். வரலாறு அல்லது பரிணாமக் கொள்கை இதற்கு முன் ஐந்து முக்கிய கொள்கைகள் பற்றி இப்பாடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் எதுவும் அரசு தோற்றத்தை பற்றி போதுமான விளக்கம் தரவில்லை. ஆனால் வரலாற்று அல்லது பரிணாமக் கொள்கை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருக்கிறது. இக்கொள்கை அரசு இயல்பான ஆனால் சீரான முறையில் பல கால கட்டங்களில்... |
முடியாது. பேராசிரியர் கார்னர் என்பவர் செயற்கை அல்லது இயந்திரத்தனமான முறையில் ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற கருத்தை மறுத்து வரலாறு கூறுவது போல இயற்கையாக ஏற்பட்ட அமைப்பு தான் அரசு என்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசின் தோற்றத்தில் பல மூலக்கூறுகள் இருக்கின்றன. அவற்றில் இனப்பற்று , மதம் , போர் , இடம் பெயர்தல் , பொருளாதார நடவடிக... |
இருக்கிறது. அவர்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் பந்தம் பாசம் என்பவைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் மேற்பட்ட அமைப்புகள் எவ்வளவு பெரியவைகளாக அதிக உறுப்பினர்களை கொண்டதாக மாறினாலும் அவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு மூத்த குடும்பத்தை சேர்ந்த ஆண்மகனை தலைவனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு கட்டுப்பட்டு அவன் கட்டளைப... |
இடையே சகோதரத்துவ பாசத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒருவர் மற்றொருவரை விட்டுக் கொடுக்காமலும் சார்ந்தும் வாழ்கிறார். இத்தகைய அமைப்பு இன அடிப்படையில் பிற்காலத்தில் அரசாக ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். 2. மதம் இனத்தைப் போல மதமும் மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியாக இருக்கிறது. பொதுவாக மக்கள் எப்பகுதிகளில... |
மக்களுக்கு தலைமை ஏற்று அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி தந்திருக்கிறார்கள். பொதுவாக மதம் பற்றிய பயம் மக்களிடையே காணப்பட்டாலும் இன அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு அரசை தோற்றுவித்திருக்கக்கூடும் என்ற கருத்தும் வற்புறுத்தப்படுகிறது. 3. வலிமை வலிமை அல்லது வல்லமை என்பதும் உலகின் பல பகுதிகளில் அரசுகள் மற்றும் பேரரசுகள்... |
தான் ஆகும். 4. உடைமை மற்றும் பாதுகாப்பு இவை இரண்டும் அரசு தோன்றுவதற்கு பழங்காலத்தில் காரணிகளாக இருந்திருக்கின்றன என்று பேராசிரியர் லாஸ்கி போன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். மக்கள் தமக்கென்று பொருள்களையும் இதர உடைமைகளையும் சேர்க்கவும் அவற்றை பாதுகாக்கவும் மற்றும் தங்களை சேர்ந்தவர்களுக்கு அவைகள் கிடைக்க வேண்டுமென்று பல நடவ... |
முக்கியமான காரணியாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிரந்தரமாக வாழ்க்கையை நடத்த முற்பட்ட போது உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட்டன. அதோடு அவர்களுக்கிடையே தனிப்பட்ட முறையில் சமுதாய அமைப்பு முறையில் அமைதி மற்றும் பாதுகாப்பு சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன. இவைகளை தீர்த்து வைக்கவும... |
அமையவில்லை. ஒவ்வொரு காரணியும் ஏதேனும் ஒரு வகையில் தான் அரசு தோன்றுவதற்கும் மக்கள் திருந்தி சிறந்த குடிமக்களாக வாழ்வதற்கும் துணையாக இருந்திருக்கின்றது என்பது தெளிவாகின்றது. இக்கொள்கைகள் எல்லாவற்றிலும் வரலாறு சார்ந்த பரிணாமக் கொள்கை அரசு இயற்கையாக காலப்போக்கில் மெல்ல மெல்ல தடைகள் பலவற்றைக் கடந்து தோன்றியதெனக் குறிப்பிடுக... |
தன்மை பற்றி அறியும் இயல் அரசியல் அறிவியல் என்பதாகும். அரசாங்கத்தின் கட்டுமானம் மற்றும் அதன் இயக்கத்தை படிப்பதும் இதில் உள்ளடங்கியதாகும். அதனடிப்படையில் அரசியல் அறிஞர்கள் கீழ்க்கண்ட சமூக நிறுவனங்களை பற்றி படிக்க முற்படுகின்றனர். 1. கழகங்கள் 2. கூட்டமைப்புகள் 3. தேவாலயம் 4. நிர்வாக அமைப்புகள் ஜான் போதான் ( 1530 1596 ) என... |
அரசியல் அறிவியல் என்பது நேர்மறை எண்ணக் கருத்துகளை முன் நிறுத்துவதிலும் , அரசியலை பகுப்பாய்வு செய்வதிலும் மேலும் கொள்கை உருவாக்கத்திற்கு தேவைப்படும் கருத்துகளை சிபாரிசு செய்வதிலும் முற்படும். பாரம்பரிய அரசியல் அறிவியல் என்பது மனதளவில் உருவாகும் எண்ணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அறிவை வளர்ப்பதாகும். மேலும் அவைகள் ஒழு... |
என்பது புள்ளி விவரங்களோடு சார்ந்த அறிவியல் அடிப்படையிலான கேள்வி ஞானமாகும். அரசியல் அறிவியலின் அறிவியல் தோற்றம் என்பது 1950 - களில் நடைபெற்ற நடத்தை இயக்கத்தால் ஏற்பட்டதாகும். அறிவியல் ரீதியான அரசியல் என்பது 1950 - களில் கண்ட நடத்தை இயல் புரட்சியின் மூலம் நாம் கண்டதாகும். இவ்வியக்கத்தின் பிறகே இவ்வியலின் பல உறுப்பினர்கள்... |
கொண்ட மதிப்பு அடிப்படையில் அல்லாத ஆராய்ச்சி வழிமுறைகளில் , அரசியல் அறிவியல் நடத்தை இயலின் மூலம் நிலைநிறுத்தியது. நடத்தை இயக்கத்தின் பிறகு இவற்றில் சிறிது மாறி இருந்தாலும் நேர்மறை அறிவியல் மாதிரியை இன்றளவும் அரசியல் அறிவியல் பின்பற்றிவருகிறது. இதன் காரணமாய் எண்ண அடிப்படையில் உருவாகும் அரசியல் கோட்பாடுகள் ஓரளவு மங்கத் தொ... |
பணி சார் குழுமங்களின் ஆதரவினால் அரசியல் படிப்பு என்பது தொழில்ரீதியான இயல் என்ற அந்தஸ்தைப் பெற்றது. 1. நாட்டிடை அரசியல் அறிவியல் குழுமம் 2. இந்திய அரசியல் அறிவியல் குழுமம் 3. இந்திய பொது நிர்வாக நிறுவனம் 4. அமெரிக்க அரசியல் அறிவியல் குழுமம் தூய அறிவியல் நிலையை பெறவேண்டும் என்ற இலக்கை நோக்கி நடத்தை இயல் செல்லும் போது , அ... |
எந்தவொரு மாற்றமில்லாமல் தொடர்கின்றது. அரசியலைப் பற்றிய உண்மையான அறிவை பெறவேண்டும் என்றால் அரசியல் அறிவியல் ஒரு அறிவியல் அடிப்படையிலான , தனித்தன்மைபெற்ற இயல் என்றும் , தொழில்ரீதியான ஐக்கியப்படுத்துதல் என்ற நிலையில் இவ்வியல் தன்னைக் காட்டிக் கொள்ளவேண்டும். அறிவியல் அடிப்படையிலான வழிமுறைகளின் மூலம் அரசியல் ஆர்வலர்கள் குறி... |
எண்ணம் அடிப்படையிலான குறிக்கோள்கள் கிடையாது. ஒரு தொழில் ரீதியான பார்வையின் மூலம் அரசியல் ஆர்வலர்கள் புதிய அரசியல் அறிவியலை அறிமுகப்படுத்தினர். அரசு அமைப்புகளில் அரசியல் அறிவுகளைப் புகுத்தினார்கள். பகுத்தறிவு ரீதியான அரசியல் கட்டளைகள் , புதிய அரசியல் சமுதாயத்தை உருவாக்குவதில் சமூக பொறியாளர்களான சார்லஸ் மேரியம் மற்றும் ஹ... |
புதிய அரசியல் அறிஞர்கள் நாட்டம் கொண்டனர். அறிவியல் அடிப்படையிலான அரசியல் சாத்தியமென்றும் அதனடிப்படையில் உருவாகும் அரசியல் அறிவு சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்க்கவல்லது என்ற அடிப்படையில் இயங்கினார்கள். நுட்ப ரீதியாய் உருவாக்கப்பெற்ற அரசியல் அறிவியல் அறிவினை அரசியல் அறிஞர்கள் அரசாங்கப் பணிகளில் தக்க வழி... |
எண்ணங்களை விடுத்து அரசியல் அறிவியல் , அறிவியல் நுட்பங்களையும் , வழிமுறைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை காணத் துடித்தார். மனித நாகரீகத்தை முழுமை படுத்துவதில் எங்ஙனம் அறிவியல் துணை புரிந்ததோ , அதே வகையில் அரசியல் அறிவியல் மனித நாகரீகத்தை காப்பதிலும் , செழுமை படுத்துவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். அறிவின் பர... |
மனித இனத்தை காணமுற்பட்டார். நடத்தை இயல் அறிஞர்களாகிய ஹீனஸ் யூலா ( Heinz Eulau ) மற்றும் டேவிட் ஈஸ்டன் ( David Easton ) நடத்தை இயல் ஆராய்ச்சி முறைகளை கண்டறிந்து , பயன்படுத்தி “ புதிய அரசியல் அறிவியலை ” வளர்க்க முற்பட்டனர். புதிய அரசியல் அறிவியலின் குணாதிசயங்களாய் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம். 1. முன் அறிதல் மற்றும் வி... |
செய்து அரசியல் புதிர்களை விளக்கச் செய்வதாகும். 3. முன்கூட்டி அறிதலை துணைசெய்யும் வகையில் புள்ளியல் விவரங்கள் அளவிடப்படவேண்டும். ஒரு கோட்பாட்டின் மூலம் ஆராய்ச்சிகள் அமைய வேண்டும். மேலும் அவ்வாராய்ச்சிகள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்ற கருத்து முன்படிவத்தினை பெற்றிருக்க வேண்டும். 5. உண்மையான அறிவியல் ஆராய்ச்சி முறைகளை அரசி... |
அறிவியல் ஒரு பல இயல் அறிவாக உருவாகவேண்டும். 4. 8. பல்நோக்கு பகுப்பாய்வு , சர்வே ஆராய்ச்சி , கணக்கு மாதிரிகள் துணைகொண்டு அரசியல் அறிவியல் ஆராய்ச்சி வழிமுறைகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். யூலாவின் கருத்துப்படி பெரு அளவு பகுப்பாய்வு ( Macro level analysis ) என்பது நிறுவனங்களையும் சிறு அளவு பகுப்பாய்வு ( Micro l... |
ஒருமைதன்மை மற்றும் சீரான நெறிகளை வளர்ப்பதில் எண்ணிக்கை அடிப்படையிலான அறிவியல் தன் நோக்கினை செலுத்தும். நிறுவனங்களின் தாக்கம் தனிநபர் நடத்தையிலும் , தனிநபர் தாக்கம் நிறுவனங்களின் மேலும் உள்ளவற்றை நாம் அறிவியல் ரீதியாய் அறியலாம். அரசியல் அறிஞர்கள் புள்ளியியல் விவரங்களையும் , அதன் முடிவுகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும் என ... |
அடிப்படையிலான அரசியல் அறிவியல் என்பது பல அரசியல் கருத்துகளுக்கு ஆதாரமாகவும் , நம்பிக்கை தன்மையை கொடுப்பதிலும் முன் நிற்கும். நடத்தை இயல் மூலம் அறியப்படும் அரசியல் அறிவியல் என்பது பகுத்தறிவாக இருக்கும். 3.2 அரசியல் அதிகாரத்தின் பயன்பாடுகள் அரசியல் அதிகாரம் என்றால் என்ன ? மாக்ஸ் வீபரின் கூற்றுப்படி அரசியல் அதிகாரம் என்பத... |
, அரசியல் அதிகாரத்தினை இன்று குழுக்களின் சமூக அந்தஸ்து , அரசியல் குழாம் , மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவைகள் அரசியல் அதிகாரத்தினை பெற்று விளங்குகின்றன. சமுதாயத்தில் அரசியல் மற்றும் அரசியல் நிறுவனங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கருத்து முன்படிவமாக , அரசியல் என்பது நாம் அன்றாட வாழ்வில் காணும் அதிகார உறவுகளை தெள... |
வாழ்க்கையில் காண்பது சிறு அரசியலாகும். நிறுவன அளவில் உள்ள அதிகார உறவுகள் பெரு அரசியல் எனலாம். அரசியல் சமூகவியல் என்ற பாடம் அரசு மற்றும் சமுதாயத்திற்கிடையே நிலவும் உறவுகளை பற்றிய படிப்புகளாகும். அதிகாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் நாம் அ மற்றும் ஆ க்களுக்கிடையே உள்ள உறவுகளை அறிந்து கொள்ளவேண்டும். ஆ என்ற நப... |
இதனடிப்படையில் அதிகாரம் என்பது ஒரு முக்கியமான முன் கருத்துப்படிவமாகும். மற்றொரு வகையில் நியமன அதிகாரம் என்பது ஆளுமையாகும் ( Authority ). உதாரணமாக , ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தங்கள் மக்கள் மீது அதிகாரம் செலுத்த முற்படுவர். இதன் காரணமாய் நியமன அதிகாரத்தை மக்கள் மீது இத்தலைவர்கள் செலுத்துகின்றனர் என்று மக்களை நம்பச் செய... |
கொண்டதாகும். ஆளுமை என்பது அதிகாரத்தைப் போலத்தான். ஆனால் ஆளுமைக்கு நிறுவனங்களின் துணையுண்டு. ஆளுமையில்லாமல் அதிகாரம் மட்டுமே இருக்குமிடத்தில் அதிகாரத்திற்கு நியாயத்தன்மை தேவைப்படுகிறது. அதிகாரத்திற்கு நம்பிக்கை மற்றும் நியாயத்தன்மையிருக்குமேயானால் அது ஆளுமையாகும். அதிகாரம் ( Power ) மற்றும் ஆளுமை ( Authority ) அரசியல் ச... |
அதிகாரமாகும். ( உதாரணம் : பெற்றோர் மற்றும் குழந்தைகள் அரசாங்கம் மற்றும் வரிகள் ) ஆளுமை என்பது அதனோடு தொடர்புடைய நிறுவனங்களையும் குறிப்பிடுவதாகும். நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கிடையே தான் ஆளுமை வெளிப்பாடு அடையும். உயர் குடியினர் என்பதை பரிட்டோ கீழ்க்கண்ட வகையில் விளக்குகிறார். 1. ஒவ்வொரு சமுதாயத்திலும் சமத்துவமின்மை எப்... |
உயர் குடியினர் ஆவார்கள். இவ்விரு உயர் குடியினர் சமூக சமன்நிலையை செய்கின்றார்கள். உயர் குடியினர் என்ற கருத்து முன்படிவம் , உயர்ந்த தகுதிகள் , திறமை மற்றும் சிறப்பு சலுகைகளை பெற்றவர்களை குறிப்பதாகும். பரிட்டோவின் விளக்கப்படி உயர்குடியை இரண்டு விதமாக பார்க்கலாம். 1. ஒவ்வொரு சமுதாயத்திலும் சலுகைகளையுடைய மக்கள் உள்ளனர். ஆகவ... |
கோட்பாட்டாளர்கள் கூறுவது என்னவென்றால் மக்களாட்சி அமைப்புகளில் ஆட்சி செய்கின்ற ஒரு சில உயர் குடியினரே கொள்கை முடிவினை எடுக்கின்றார்கள். பல குழுக்களுக்கிடையே நடைபெறும் பகிரங்க போட்டியின் விளைவாய் ஏற்படும் கொள்கை முடிவுகள் அல்ல என்பதை நாம் அறியலாம். ராபர்ட் மைக்கேல் கூற்றுப்படி கீழ்க்கண்டவைகள் உயர்குடி வகுப்பினரை விளக்கும... |
கோலோச்சும். பெரும்பான்மையான மக்கள் தங்களை ஆட்சி செய்யமாட்டார்கள். கிடைக்கின்ற வளங்களை தக்க அமைப்பு ரீதியாகவும் , கூட்டு முயற்சியிலும் பெருமளவில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர். உயர்குடி உறுப்பினர்கள் அதிகாரத்தை மையப்படுத்தி ஆட்சி செய்வார்கள். கிடைக்கின்ற அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி உயர்குடி வகுப்பினர் தங்க... |
விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தங்கள் சமுதாயத்தை ஆட்சி செய்ய பல நுட்ப முறைகளை உயர் குடியினர் பின்பற்றுவர். பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல் , காவல் மற்றும் இராணுவத்தை தங்கள் நலன் காக்க பயன்படுத்துதல் , கல்வி முறை மற்றும் மக்கள் தொடர்பு சாதனங்களை தங்களுக்கு சாதகமாக சூழ்ச்சியாக நடத்துதல் , தங்களை எதிர்பவர்களை தனிமைப்படுத்துவத... |
பயன்படுத்தி தங்களின் சுயநலத்தை பேணவும் , தங்களின் அதிகார இடத்தை தக்க வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டுவர். இரண்டு காரணங்களுக்காக மார்கீசிய கோட்பாட்டினை உயர் கோட்பாட்டாளர்கள் மறுக்கின்றனர். சமூக வர்க்க கோட்பாடு என்பது : 1. மார்கீசியம் குறிப்பிடுகின்ற ‘ ஆதிக்க வர்க்கம் ’ என்பது தவறு , ஏனெனில் தற்கால தொழிற்கூட சமுதாயங்களில்... |
உயர்குடியினர் கோட்பாட்டில் உள்ள அடிப்படை முரண்பாடுகள். 1. உயர்குடியினர் கோட்பாடு என்பது ஒவ்வொரு சமுதாயத்திலும் சமத்துவமின்மை இருப்பதை குறிப்பிடுகின்றது. ஆனால் மக்களாட்சி கோட்பாடு சமுதாயத்தில் சமத்தவம் இருப்பதாகக் கூறுகிறது. 2. உயர் குடியினர் கோட்பாடு என்பது ஒரு சில உயர் குடியினரே பெரும்பான்மையான மக்கள் மீது ஆதிக்கம் செ... |
மக்கள் நலம் நாடும் அரசுகளில் அதிகார வர்க்கத்தின் ஆட்சி அதிகாரங்கள் வளர்ந்து வருவதாகக் கூறுகின்றார். 1. இராணுவத்தின் துணைகொண்டு , சிறு குழு தலைவர்கள் அரசியல் ரீதியாக ஆட்சி செய்வது. 2. நுட்ப பணியாளர்களை சார்ந்து ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள்இத்தகைய நுட்ப பணியாளர்கள் சமுதாயத்தின் அன்றாட நடவடிக்கையை கட்டுப்படுத்தி ஆட்சி... |
வர்க்கத்தினர் மீது. காரல் மார்க்ஸின் உயர்குடி வகுப்பினர் அல்லா கோட்பாடு ஒரு சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் எவ்வாறு பிரித்தளிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆரம்ப காலம் முதற்கொண்டே விளக்கியது மார்கீசிய கோட்பாடாகும். மார்க்ஸின் கூற்றுப்படி ஒவ்வொரு நாகரீகமடைந்த சமுதாயத்திலும் அரசியல் அதிகாரம் என்பது அளவில் பகிர்ந்தளிக்கப்படவில்... |
வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் ஆவார்கள். அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க சமூக பொருளாதார காரணிகள் தீர்மானிக்கின்றது. ஆளப்படுவோருக்கும் , ஆள்வோருக்கும் இடையே தொடர்ச்சியாக நடைபெறும் சச்சரவுகள் சமூக முறைமைகளை நிலை நிறுத்துகிறது. இத்தகைய சச்சரவுகள் உற்பத்தி சக்திகளை தீர்மானம் செய்கின்றது. வர்க்கரீதியாக முதலீட்டா... |
தன்மையை தீர்க்கவல்லது மார்க்கீசிய கோட்பாடு. அது வர்க்க போராட்டத்தை தூண்டவல்லது. வன்முறை அடிப்படையில் புரட்சியை ஆதரிப்பது. ஆகவே மற்ற சிந்தனையாளர்கள் மார்க்சீய கோட்பாட்டினை எதிர்க்கின்றார்கள். 3.4 தன்மை மற்றும் மற்றவரை கவருதலின் நன்மைகள் அரசியல் சமூகவியல் என்பது எங்ஙனம் மற்றவரை கவருதல் , அரசியல் அதிகாரம் மற்றும் அதன் பகி... |
தீர்மானிக்கப்படுகிறது. மற்றவரை கவருதல் என்பது ஒரு நபரின் நடத்தையை இயல்பாக கட்டுப்படுத்துவதாகும். இது அவர்கள் விரும்பும் வண்ணமாக இல்லாமல் எதிராகவும் இருக்கலாம். ஹரால்டு லாஸ்வேல் மற்றும் ஆபிரகாம் கப்பலான் மற்றவரை கவருதல் என்ற கருத்தை விளக்க முற்படும் பொழுது “ கவருகின்ற தன்மையின் அடிப்படையில் அரசியல் தன்மைகள் தீர்மானிக்கப... |
தருணத்தில் அதிகாரத்தை வைத்திருப்போர் அதிக கவருகின்ற தன்மையை பெற்றிருக்கவேண்டும். மூர்க்கதனம் கவருதல் என்பதற்கான ஈடு கொடுக்கும் தன்மையில் சிறிது குறையும் பொழுது மூர்க்கத்தனத்தோடு கூடிய அதிகாரத்தை நாம் பயன்படுத்துகின்றோம். இதை நாம் மூர்க்கத்தனமான கவருதல் எனக் கூறுகிறோம். அச்சுறுத்துதல் அல்லது கட்டுப்பாட்டுகளை விதித்தல் எ... |
எனவும் , பாராட்டுகள் நேர்மறையான கட்டுப்பாடுகள் என நாம் எடுத்துக் கொள்ளலாம். மற்றவரை கவரும் தன்மையின் அளவு மற்றவரின் நடத்தையை தாக்கம் செய்கின்ற வகையில் பயன்படுத்தும் எதிர்மறையான அல்லது நேர்மறையான கட்டுப்பாடுகளை நாம் அதிகாரம் என்ற பொருள் விளக்கத்தை அளிக்கின்றோம். தொடர்புடையது அதிகாரம் என்பது தனிநபரின் சொத்து அன்று. அடிப்... |
செலுத்துகின்றவர் , அதிகாரம் செலுத்தப்படுகின்றவர்கள் என்று உறவுகள் அதிகாரத்திற்கு தொடர்புடையவனவாக உள்ளது. நகரம் மற்றும் கிராம சமுதாயங்களில் இத்தகைய அதிகார உறவுகளை நாம் காணலாம். அரசு மற்றும் அதன் நிறுவனங்களின் அரசியல் அதிகாரம் செயலாக்கப்படுகிறது. அரசின் அதிகாரத்தின் மூலம் அரசியல் தீர்மானிக்கப்படுகிறது. சமுதாயத்தின் பல அட... |
அடிப்படையில் , அரசியல் அதிகாரம் தீர்மானம் செய்யப்படுகிறது. சமுதாயம் செயல்படும் விதம் மற்றும் அரசியல் அதிகாரங்கள் மாறும் தன்மைபடைத்தது. |. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க : 1. வருமான வரியை கட்டுப்படுத்துதல் என்பது எதனைக் குறிக்கின்றது ? அ. பாரம்பரிய ஆளுமையை ஆ. பகுத்தறிவு – சட்ட ஆளுமையை இ. சிறப்பியல்புகளை உடைய தலைமை ஆளுமைய... |
அரசியல் பகுப்பாய்வு என்பது 4. ஆளுமையின் வகைப்பாட்டினை கூறியவர். சரியா அல்லது தவறா 5. எண்ண அடிப்படையிலான அரசியல் அறிவியல் என்பது எண்ண மதிப்பீட்டிலிருந்து விடுபட்டது. 6. புதிய அரசியல் அறிவியல் என்பது நடத்தை பகுப்பாய்வாகும். அத்தியாயம் 4 அரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள் ஒரு அரசுக்கு , இறைமை தலையாய பண்பு கூறாகக் கருதப்படுக... |
தன்னில் உள்ளடக்கிய கழகங்கள் மற்றும் குழுக்களைக் காட்டிலும் தலையாய அதிகாரத்தை உடையது. வெளி இறைமை என்பது , ஒரு நாடு பன்னாட்டு அமைப்புக்களான ஐ.நா. சபை மற்றும் பன்னாட்டு நீதிமன்றம் ஆகியவற்றை தவிர மற்ற எந்த நாட்டிற்கும் , அமைப்புக்கும் சட்ட ரீதியாக கட்டுப்பட வேண்டாம். உள் இறைமையை பொறுத்த வரையில் ஒரு அரசுக்கு இறைமை முழுமையாக... |
மதித்து நடத்தலும் , எதிர்க்காமலும் இருக்கும்போது உள் இறைமை என்பது நிலைநாட்டப்படுகிறது. வெளி அல்லது புற இறைமை என்பது இறைமைப்பண்புடைய அரசொன்று இதர அயல்நாடுகளுடனான தொடர்பில் கொள்கையை பின்பற்றும் துணிவையும் ஆற்றலையும் பெற்றிருப்பதென்பதாகும். இன்றைக்கு அடிப்படையிலேயே நாடுகளின் உள் இறைமையும் , வெளி இறைமையும் சவாலுக்கு உள்ளாக... |
போன்றவற்றால் ஏற்படுகின்றது. பல அரசியல் அறிஞர்கள் தேசிய இறைமை கண்ணுக்கு புலப்படுகின்ற மற்றும் புலப்படாத காரணிகளால் பாதிப்புக்கு அல்லது சுருக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கருதுகின்றனர். 4.1 தேசிய இறைமைக்கு ஏற்படும் பாதிப்பு தனிமனிதர்களையும் , அமைப்புகளையும் , அரசாங்கத்தையும் தகவல் தொடர்பு வலைப் பின்னலில் இணைக்கின்... |
கொண்டிருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார சக்திகளின் உந்துதலின் காரணமாய் உலகமயமாக்குதல் என்பது 1990 களிலிருந்து வளர் தொடங்கியது. உண்மையில் G8 நாடுகளின் பொருளாதார இச்சைகளைப் பூர்த்தி செய்வதிலும் , பல தேசிய கழகங்களின் வியாபாரச் சந்தையை விரிவுப்படுத்துவதிலும் தான் உலகமயமாக்குதல் மிக முனைப்பாக செயல்பட்டு வந்... |
எண்ணிக்கையை தொட்டுள்ளது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பின்னும் ஐரோப்பிய யூனியன் ஏற்பட்டதிலிருந்து பல பல்தேசியகழகங்கள் வியத்தகு வளர்ச்சியை பெற்று உலக நாடுகளுக்கிடையே வாணிபத்தை விரிவுபடுத்துயிருக்கின்றன. பொருளாதார அடிப்படையில் நாடுகள் பலவும் இணைக்கப்பட்டது போல அரசு சாரா அமைப்புகளும் மிக அதிக அளவில் தோன்றின. உதாரணம் : சிற... |
தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்தி ஒரு நாட்டின் பொதுக்கொள்கையின் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. வலிமை குன்றிய நாடுகளில் இத்தகைய அரசு சாரா நிறுவனங்களின் பாதிப்பு என்பது அந்த நாட்டின் உள் இறைமையை பாதிப்பதாக உள்ளது. பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் பலநாடுகளைச் சேர்ந்த நிதிநிறுவனங்கள் பலவும் நிபந்தனைகள் மற்றும் இதர பல்வேறு கட... |
முற்றிலும் பொருத்தமற்றது. ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் தேசிய அரசுக்கும் மேலான ( Supra national ) நிறுவன அமைப்புகளை உருவாக்கினர். உதாரணம் : ஐரோப்பிய நீதி மன்றம் ஐரோப்பிய ஆணையம் ஐரோப்பிய அமைச்சர்கள் அவை தேசியத்திற்கு அப்பாற்பட்ட இத்தகைய நிறுவனங்கள் உறுப்பு நாடுகள் இயற்றுகின்ற முடிவுகளை எதிர்க்கலாம். உறுப்பு நாடுகளின் ப... |
ஐரோப்பிய நாடுகளின் நீதிமன்ற சுதந்திரத்தை பாதிக்கச் செய்வதால் , உறுப்பு நாடுகளின் இறைமை பாதிப்படைவதாக உள்ளது. தேசிய இறைமையை உலகமயமாக்குதலோடு தொடர்பு படுத்தப் பார்க்கும் போது பல கருத்துப் படிவமாக தென்படுகின்றது. பொருளாதாரம் மற்றும் கலாச்சார வாழ்வில் ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் ார்ந்து உள்ளது என்பது தெளிவாகும். பொருளாத... |
தஞ்சம் அடைகின்ற நிலை உலகமயமாக்குதல் மூலம் நடைபெறுகின்றது. பொருள் மற்றும் சேவைகள் நாடுகளின் எல்லையிலிருந்து மிக எளிதில் கடந்து செல்ல முடிகின்றது. சிறப்பு தகுதிகளைப் பெற்ற தொழிலாளர்கள் வெளி நாடுகளுக்கு செல்வதற்கு சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. பல மென்பொருள் பணியாளர்கள் அமெரிக்கா சென்று நிரந்தர தொழிலாளர் அல்லது குடிமக்கள் ... |
பொருளாதாரத்தை இணைக்கும் முயற்சியும் , ஒரு நாட்டின் எல்லையை கடந்து மக்கள் இடப்பெயர்வு செய்வதும் தேசிய இறைமையைப் பாதிப்பதாக உள்ளது. தேசிய இறைமை என்பது இன்று தேசிய ராஜ்ஜிய மற்றும் உலகஅளவில் பிளவுப்பட்டுள்ளது. நாடுகளுக்கு அப்பாற்பட்ட நிறுவன அமைப்புகள் மற்றும் நாட்டிடை வணிகச் சட்டமும் தேசிய இறைமையை வலிமை குன்றச் செய்ய வழிவக... |
வியாபார அமைப்பு ( WTO ) ஐரோப்பிய யூனியன் ( EU ) வட அட்லாண்டிக் வியாபார உடன்படிக்கை கூட்டமைப்பு ( NAFTA ). உலக வங்கி ( WB ) மற்றும் பன்னாட்டு நிதிக்கழகம் ( IMF ) ஆகியவைகள் ஒரு நாட்டின் கொள்கையில் இன்று அதிக அளவில் தலையிட்டு இறைமைக்கு ஒரு சவாலாக திகழ்கின்றன. உலகமயமாக்குதல் என்பது அரசின் இறைமைக்கு பலவீனத்தை அளிக்கின்றது. ... |
உலகமயமாக்குதலின் மூலம் நலிவடைந்து பல சவால்களை சந்திக்க நேரிடுகின்றது. தேசிய இறைமை அதிகாரமுடைய அரசு நியாயமான வன்முறையை பயன்படுத்தும் அதிகாரத்தைகூட நலிவடையச் செய்யும் வகையில் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகள் ஒரு சவாலாக திகழ்கின்றன. தனியார் மயமாக்குதல் மற்றும் தாராளமயமாக்குதல் ஆகிய இரண்டும் உலக மயமாக்குதலின் இரண்டு ஆணிவேர்க... |
ஆசிய நாடுகள் இன்று வரம்புக்குட்பட்ட அரசாங்கத்தையும் , தாராள பொருளாதாரத்தையும் ஏற்க முனைகின்றன. தாராளமயமாக்குதல் இந்தியாவில் 1991 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதால் பல பொது நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கம் பொருள்கள் உற்பத்தி மற்றும் சேவைகள் மேல் விதித்திருந்த கட்டுப்பாடுகள் சிலவற்றை தளர்த்தியதால் , சுத... |
நடைபெற தேசிய மற்றும் மாநில அளவில் கொள்கை முடிவுகள் மேற்கொள்வதில் தலையிடுகின்றன. உலகளவில் அரசாங்கம் செய்யவேண்டிய பணிகள் தனியார் வசம் ஆக்கப்படுவதால் தேசிய இறைமை மங்கும் நிலை உள்ளது. உலகமயமாக்குதல் என்ற அடிப்படையில் பெரும் வியாபார மேலாண்மையாளர்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதோர் புதிய கொள்கையை உருவாக்குபவர்கள் போல் உள்ளனர். ... |
ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்தியாவில் 1991 முதல் ‘ லைசென்சு ராஜ் ’ என்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலக உலகமயமாக்குதலின் முதன்மைக் கொள்கையின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தை ஒருங்கிணைப்பதே ஆகும். ஆகவே இது அரசியல் மற்றும் கலாச்சார இணைப்பில் தோல்வியை கண்டது. இதன் காரணமாய் பல கலாச்சார குழுக்களிடம் தத்தம் கலாச்சார உணர்வுக... |
நாகரீகங்களின் ' பிழையான கோடுகள் ’ நாகரீக மோதல்களுக்கு துணை நிற்கும். நாகரீக மோதல்களை கட்டுப்படுத்த உருவாக்கப்படும் தீர்மானங்களினால் தேசிய இறைமைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகின்றது. இத்தகைய சூழ்நிலைகளில் தேசிய எல்லை கோடுகள் திருத்தப்படலாம் மற்றும் தேசிய இறைமைக்கான பொருள் விளக்கம் மாற்றமடையலாம். பல சமூகவியல் அறிஞர்கள் ... |
உலகமயமாக்குதல் மற்றும் அரசு இறைமை எதிர்கொள்ளும் சவால்கள் உலகமயமாக்குதலுக்கும் அரசு இறைமைக்கும் தொடர்புண்டு. திறந்தவெளி , எல்லையில்லா உலக பொருளாதாரத்தை தோற்றுவிக்க காணப்படும் ஒரு நாடுகளிடையே வியாபாரக் கட்டுப்பாடுகளை தவிர்த்து தடையில்லா வாணிபம் நடக்கச் செய்வது என்பதுதான் உலகமயமாக்குதல் என்பதாகும். ஆகவே உலகமயமாக்குதல் என்... |
குருவென்று அழைக்கப்படும் பீட்டர் டிரக்கர் கூறுவது போல் உலகமயமாக்கப்பட்ட பெருளாதாரத்தில் தேசிய எல்லைகள் பொறுத்தமில்லாமல் போய்விடுகின்றன. ஒரு உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஒரு நாட்டின் இறைமை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வாயிலாக பாதுகாக்கப்படலாம். 1. தொழிற்கூட சமுதாயம் முதன்மையாக்கப்படவேண்டும். 2. சரிசம சமுதாயம... |
சாதனங்கள் 8. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் விளைவால் பெறப்பட்ட நன்மைகளை தக்க முறையில் பகிர்ந்தளிக்கும் முறைமைகள். 9. தொழிலாளர்களுக்கு தக்க சமூக பாதுகாப்புகள் 10. அதிகார வர்க்கத்திற்கு வரையறை செய்யப்பட்ட பங்குபணி மற்றும் அரசின் நலன் காக்கும் பணிகளின் விரிவாக்கம். பண்புகள் மேற்கூறிய இல்லாத நாடுகளில் உலகமயமாக்கப்படுதலை ... |
கட்டப்பட்டுள்ளது. வறுமை , கல்வி , அறியாமை , சமத்துவமின்மை என்ற கட்டத்தில் தாராள பொருளாதாராம் என்பது மக்களின் எதிர்ப்பையும் , தொழிலாளர் அமைதியின்மையையும்தான் வளர்க்கும். இதன் விளைவாய் தேசியத்திற்கு அப்பாற்பட்ட அமைப்புகளை பன்னாட்டு நிதிக் கழகம் ( IMF ) மற்றும் உலக வங்கி ( WB ) ஆகிய சக்திகளுக்கு தேசிய இறைமை வழிவிட்டுச் செ... |
சட்டங்களுக்கு ஓரளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. தேசத்திற்கு அப்பாற்பட்ட உலக தேசிய அமைப்புகள் பல நாடுகளின் மனித உரிமைகளை பாதுகாக்க முற்படுவதால் தேசிய இறைமையும் குடிமக்கள் உரிமையும் வெகுவாக வலுவிழந்துள்ளன. வேறு நாட்டிற்கு குடிபெயறும் சட்டங்கள் இன்று மிகவும் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவால் முரண்பாடுடைய சட்டங்கள் தோன்றியுள்ளன... |
செய்து கொண்டன. இருப்பினும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்யும் தங்களின் இறையாண்மை அதிகாரத்தை பலநாடுகள் இன்றும் தொடர்ந்து பின்பற்றுகின்றன. உள்நாட்டு நீதிமன்றங்கள் உலக மனித உரிமை உடன்பாடுகளை கையில் கொண்டு தனிமனித உரிமைகளை பாதுகாக்க முற்படும் செயல்பாடுகள் அரசு இறைமையை வெகுவாக பாதிப்ப... |
வேறுபாடு இல்லாமல் போய்விடும். ஒரு ஆராய்ச்சியாளர் கூறுவது போல தேசிய இறைமையின் வளர்ச்சியை , தேசிய தேவைகள் , முன்னுரிமைகள் என்பதைக் காட்டிலும் சந்தை நிலவரமே தீர்மானம் செய்கின்றது. ஆகவே நாடுகளின் இறைமை செல்லத்தக்கது அல்ல என்ற நிலைமையில் உள்ளது. தேசிய சமூக உடன்படிக்கைகள் முறியடிக்கப்பட்டு இன்று பன்னாட்டு உடன்படிக்கைகள் செய்... |
காட்டிலும் வளர்ச்சி பெற்ற நாடுகளேஅதிக நன்மைகளை பெற்றுள்ளன. வளர்ச்சி குன்றிய மற்றும் வளர்ச்சி பெறுகின்ற நாடுகள் தாராள பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினால் அது தேசிய இறைமையை மிகவும் பாதிக்கச் செய்கின்றது. வளர்ச்சி பெறும் நாடுகளின் இறைமையின் மீது உலகமயமாக்கப்படுதலின் பொதுவான தாக்கங்கள் கீழ்வருவனவாகும். 1. பன்னாட்டுதேசிய அமைப... |
குறைந்த ஊதியத்திற்கு உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் வளங்களைச் சுரண்டுவர். புதிய மற்றும் இதுகாறும் குறைந்த அளவில் சுரண்டப்பட்ட சந்தையைத் தேடுவார்கள். பன்னாட்டு தேசிய கம்பெனிகள் இராஜ்ஜிய குழுக்கள் மற்றும் ஒரு நாட்டின் கொள்கை உருவாக்கத்தில் அதிக அளவில் தலையிடுவர். தனியார் வசமாக்கப்படுதலிலும் , சிறந்த சேவை கொள்கையின் மூலம்... |
பணியாளர்கள் உள்நாட்டு போட்டியாளரைக் காட்டிலும் மிக அதிகமான ஊதியத்தை பெறுவர். இதன் விளைவாய் ஏற்படும் இழப்பு என்பது ஒரு நாட்டின் தேசிய அரசாங்கம் நேரிடையாக தங்கள் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்த இயலாது. ( குறிப்பாக பரந்த பொருளாதார மேலாண்மையை பொறுத்தமட்டில் ) பன்னாட்டு தேசிய அமைப்புகள் வருவதற்கு முன்பிருந்த தொழிற்... |
இன்று புதிய உற்பத்தியும் மற்றும் மாறுதலையும் நாம் கண்டுள்ளோம். புதிய கண்டுபிடிப்புகளான இண்டர்நெட் மூலம் உலகஅளவில் பல செய்திகளை அறிந்து ஒருங்கிணைப்பு செயல்பாடுகளில் மகத்தான வளர்ச்சியடைந்துள்ளோம். உபகரணம் மற்றும் உழைப்பைக் காட்டிலும் இன்றைக்கு அறிவு வாழ்க்கைதரத்தை வகுப்பதில் ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. தொழில்நுட்ப ரீ... |
கோலா , நைகி , மக்டோனால்ட் மற்றும் லிவிஸ் , 10. இந்திய தொழிலதிபர்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு செய்வதில் தோல்வியுற்று , உலகமயமாக்கப்படுதலில் தங்களை இணைத்துக் கொண்டு , பெரிய பல்தேச கழகங்களோடு பங்குதாரராக சேர்ந்து வீழ்ந்து போகின்ற தங்களின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுகின்றனர். உலகமயமாக்கப்படுதலை ஆதரி... |
பகர்கின்றனர். ஆனால் ஒரு விரிவான பகுப்பாய்வில் பார்க்கும் போது கடந்த பல ஆண்டுகளில் வெளிநாட்டின் நேரடி முதலீட்டின் மூலம் புதிய உற்பத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனக் கூற இயலாது. உலகமயமாக்கப்படல் மற்றும் இந்திய கலாச்சாரம் மேற்கு கலாச்சாரம் உன்னிப்பாக கவனிக்க தக்கது என்னவெனில் இந்தியர்கள் பொதுவாக இந்திய கலாச்சாரத்தை பின... |
கலாச்சாரத்தின் அடிப்படை தன்மையை அது விட்டுக் கொடுப்பதில்லை. வெளிநாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் மீது இந்தியாவில் பல எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதன் மூலம் இந்தியர் தம் கலாச்சாரத்தையும் , தனித்தன்மையையும் பாதுகாக்க தவறவில்லை. மேற்கு நாட்டு மேலாண்மை செயல்பாடுகள் நம்நாட்டின் வியாபாரத்தில் , குறிப்பாக கணினி மென்பொருள் தொழிற... |
உடைகளையே பெரிதும் அணிகின்றனர். இதன் காரணமாய் மேற்கு நாட்டின் கம்பெனிகள் இந்திய சந்தையில் ஊடுருவுவதில் பல சங்கடங்களை எதிர் கொள்கின்றன. அமர்த்தியா சென்னின் கருத்துக்கள் அமர்த்தியா சென் கூறுகிறார் , * “ சந்தை பொருளாதாரம் ’ ’ தன்னைத்தானே இயக்கவல்லது அல்ல. புதிய தாராள பொருளாதாரக் கொள்கை நல்ல வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இதை ஆ... |
மற்றும் பொருளதார சுதந்திரத்தை நாம் இழந்து விடக்கூடாது. சந்தைப் பொருளாதாரம் மற்றும் பொதுநலப்பொருளாதாரம் ஆகிய இரண்டுகளுக்குமிடையே ஒரு சமனிலையான அணுகுமுறை தேவைப்படுகிறது. அமர்த்தியா சென் ( பிறப்பு 1933 ) பன்னாட்டு தேசிய கழகங்கள் பிரெட்டன் வுட்ஸ் ( Bretton Woods ) அமைப்புகளோடு ( உலக வங்கி , பன்னாட்டு நிதிக்கழக மானிய நிதி ம... |
தங்கள் வாணிபத்தை விரிவாக்கம் செய்துள்ளன. பன்னாட்டு நிதிக்கழகம் மற்றும் உலக வங்கியின் திட்டங்கள் வரவு - * செலவு திட்டத்தின் அரசு மானியத்தைக் குறைப்பது. விவசாய உற்பத்தி சார்ந்த பொருட்களுக்குரிய அரசு மானியத்தை குறைத்தல். உணவிற்கான அரசு மானியத்தை நீக்குதல். தாராள பொருளாதார கொள்கையைப் பின்பற்றுதல். வெளிநாட்டு முதலீட்டை ஊக்க... |
முறையை நீக்குதல். வளர்ச்சி பெறுகின்ற நாடுகள் தடையில்லா வியாபாரத்தை பின்பற்றுதல். பயன்படு தொழிற்கூடங்களை அமைப்பதில் பன்னாட்டு தேசிய கழகங்களுக்கு எந்தவொரு தடையும் இல்லாதிருத்தல். இறக்குமதி மீதான தடைகளை நீக்குதல். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீதான தடைகளை நீக்குதல். வளர்ச்சி பெறும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் ... |
எந்தவொரு வளர்ச்சியையும் எட்டவில்லை. உற்பத்தி துறையில் முதலீடோ அல்லது தொழில்நுட்பமோ திறந்த பொருளாதாரத்தின் மூலம் இந்தியாவில் பெருமளவு வந்தது எனக் கூற இயலாது. செய்தி உலகம் செய்தி தொடர்புகளில் நாம் கண்ட புரட்சி இன்று அரசுகளை வெறும் சிறிய நகர அரசுகளாக மாற்றியுள்ளது. தொழிற்புரட்சி ஒரு மையப்படுத்தும் சக்தியாக விளங்கியது. ஆனா... |
யூனியனில் இந்தியா ஒரு உறுப்பு நாடாகும். பகுதி ஆ 8. அறிவு சார்ந்தசமுதாயம் என்றால் என்ன ? 9. நாடாகும். சச்சரவை பற்றி விவாதம் செய்கின்றார். செய்தி தொடர்பு தொழில் நுட்பத்தை விளக்குக. பகுதி இ 10. ‘ உலக கிராமம் ’ என்றால் என்ன ? 11. ‘ திறந்த பொருளாதாரம் ’ விளக்குக. பகுதி ஈ 12. உலக மயமாக்கப்படுதலால் இந்தியாவிற்கு ஏற்பட்ட தாக்க... |
நீதித்துறையின் இயல்பு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட அரசு பாராளுமன்றம் மற்றும் பொறுப்புடைய அரசாங்கம் ஓரவை உடைய அரசு மேலவையில் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்கள் கொண்ட அரசு தலைவர்முறை | அரசாங்கம் | நிர்வாக சட்டத்தை சட்ட ஆட்சி பின்பற்றப்படும் அரசுகள் பின்பற்றும் அரசுகள் மேற்கூறப்பட்ட சி.எப். ஸ்டராங்கின் அரசாங்க வ... |
அரசாங்கங்களை ஏற்படுத்தி அவைகளுக்கு அதிகாரங்களை மாற்றி தருகிறது. இது நிர்வாகம் சீராக நடப்பதற்கான ஏற்பாடாகும். இந்த அமைப்புகள் பிரதேச அரசாங்கம் என அழைக்கப்படுகின்றன. ஒற்றை அரசாங்க முறைக்கு இங்கிலாந்து , பிரான்ஸ் , ஜப்பான் , ஸ்ரீலங்கா நாடுகள் உதாரணங்கள் ஆகும். விளக்கம் ஒற்றை அரசாங்கமுறை பற்றிய சில அறிஞர்களுடைய விளக்கங்கள்... |
அதிகாரத்தை செலுத்துவது ” சி.எப்.ஸ்டராங் : இரண்டு முக்கியமான தகுதிகள் பற்றி குறிப்பிடுகிறார். அவை 1. மத்திய அரசாங்கத்தின் உயரிய தன்மை 2. இறைமை அதிகாரம் உடைய இதர அமைப்புகள் எதுவுமில்லாமல் இருப்பது. இறைமை அதிகாரம் இல்லாத இதர அமைப்புகளுடன் மைய அரசாங்கம் உள்ள முறை ஒற்றை அரசாங்க வகையை சேர்ந்தது. மத்திய அரசாங்கம் மற்றும் மாநி... |
வகிப்பவர்களிடையே சச்சரவுகள் இல்லாத தன்மை. 3. முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டு அவை விரைவாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 4. செலவு குறைவான அமைப்பு. 5. அரசியல் சட்டத்தை எளிதில் மாற்றக்கூடிய நிலை. குறைகள் 1. அதிகார குவிப்பு மத்திய அரசாங்கத்தின் சர்வாதிகாரத்திற்கு ஏதுவாகும். 2. மத்திய அரசாங்கம் பல சிக்கலான பிரச்சினைகளை சந்திக்க... |
நாடுகளுக்கு ஒத்து வராது. கூட்டாட்சி அரசாங்கம் ஒப்பந்தம் என்று பொருள்படும் இலத்தீனிய போடஸ் ( Foedus ) என்ற சொல்லிலிருந்து கூட்டாட்சி என்ற சொல் ஏற்பட்டது. இதற்கு கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கிடையேயும் ஒப்பந்தம் இருக்கிறது என்று பொருள். தேசிய ஒற்றுமையோடு மாநில உரிமைகளை பாதுகாத்து தர அமைக்கப்படும் அரசா... |
அரசாங்கங்களுக்கிடையே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு அரசியலமைப்பு ரீதியாக செயல்படக்கூடிய அமைப்பென்று இவ்வமைப்பு ஒற்றையரசு முறைக்கு எதிரானது. இறைமை அதிகாரம் இருவகை அரசாங்கங்களுக்குமே குறிப்பிட்ட சில துறைகளில் இருக்கிறது. இத்தகைய அமைப்பில் மத்திய அரசாங்கம் தேச பாதுகாப்பு இதர நாடுகளுடனான கொள்கை தேசம் முழுவதற்குமான பாதுகாப்ப... |
அரசாங்கத்தின் கூறுகள் : 1. அரசியலமைப்பின் உன்னத நிலைமை. 2. மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகார பங்கீடு 3. அரசியலமைப்பின் இறுகிய தன்மை 4. நீதித்துறை சுதந்திரம் இவற்றின் விளக்கம் வருமாறு 1. அரசியலமைப்பின் உன்னத நிலைமை : அரசியலமைப்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே இருக்க வேண்டிய அதிகாரங்... |
மாநில அரசாங்கத்திற்கென சில இனங்களும் பிரித்து ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட இனங்கள் அல்லது துறைகளில் ஒவ்வொரு வகை அரசாங்கமும் சட்டம் இயற்றவும் அவற்றை நிறைவேற்றவும் அதிகாரம் படைத்தவைகளாக , சுதந்திரம் உடையவைகளாக இருக்கின்றன.. அரசியலமைப்பின் இறுகிய தன்மை : பேராசிரியர் டைசி என்பவர் கருத்துப்படி அரசியலமைப்பில் சொல்... |
விட மேலானது. அதை எளிதில் மாற்றமுடியாது. 4. நீதித்துறை சுதந்திரம் : கூட்டாட்சி அரசாங்க முறையில் மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்குமிடையே அல்லது மாநில அரசாங்கங்கள் மட்டத்தில் அவைகளுக்கு இடையே சச்சரவுகள் ஏற்படும். இந்த சச்சரவுகளை தீர்த்துவைப்பதற்காகவும் அரசியலமைப்பு விதிகளை தேவைப்படும் போது விளக்குவதற்காகவும்... |
முறையில் சட்டமன்றத்திற்கு பாராளுமன்ற செயலாட்சிக்குழு பொறுப்புடையதாக விளங்குகிறது. அவ்வரசு காபினெட் அரசாங்கம் அல்லது பொறுப்புடைய அரசாங்கம் என்றழைக்கப்படுகிறது அரசாங்கம் முக்கிய அம்சங்கள் . சட்டமன்றம் செயலாட்சிக்குழு நீதித்துறை உதாரணம் : இந்தியா , இங்கிலாந்து 1. செயலாட்சிக்குழு இரண்டு வகையான பண்புகளை உடையது. ஒன்று பெயரளவ... |
செயற்குழுவுக்கு இங்கிலாந்தில் அரசர் அல்லது அரசியாரும் இந்தியாவில் குடியரசுத்தலைவரும் உதாரணமாவார்கள். இவர்கள் சட்டப்படி எல்லா அதிகாரங்களும் உடையவர்கள். உண்மையான அல்லது நிகழ்முறை குழுவுக்கு இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் பிரதம அமைச்சர் உதாரணமாவார்கள். இவர்கள் எல்லா அதிகாரங்களையும் பெயரளவிலான செயற்குழு பெயரில் செலுத்துகி... |
இந்தியா மைய அரசாங்கத்தில் திரு.தேவேகௌடா பிரதமராக இருந்த போது ( 1996 ) ஐ.கே.குஜரால் ( 1998 ) ( தொங்கும் பாராளுமன்றம் ) கூட்டணி ஏற்பட்டபொழுது. 3. இம்முறையில் மக்கள் பிரதிநிதித்துவமுடைய மன்றத்தின் பெரும்பான்மை கட்சி தலைவர் அமைச்சரவையின் தலைவராக இருக்கிறார். அவரே பிரதம அமைச்சராகவும் இருக்கிறார். 4. பிரதம அமைச்சரும் இதர காப... |
நடவடிக்கைகளுக்கு அமைச்சர்களும் கூட்டுப்பொறுப்பு கொள்கை அடிப்படையில் பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். எல்லா பாராளுமன்றத்திற்கு நிறைகள் 1. இம்முறை அரசாங்கத்தில் நிர்வாக துறைக்கும் சட்டதுறைக்கும் இடையே ஒற்றுமையும் , ஒத்துழைப்பும் பெருமளவில் காணப்படுகிறது. 2. அவசியப்படும் போது விட்டுக்கொடுத்து நடக்கும் முறை நிலவுகிறது. ந... |
மக்களுடைய விருப்பத்திற்கேற்ப செயல்படுகிறது. குறைகள் 1. இது அதிகாரப் பிரிவினை கோட்பாட்டிற்கு எதிரானது. நிர்வாகத்துறை மற்றும் இடையே ஒற்றுமை அடிப்படையில் அமைச்சர் அதிகாரம் சர்வாதிகாரியாக மாறிவிடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. சட்டத்துறைகளுக்கு பணிகள் நிறைவேற்றப்படுவதால் 2. சட்டமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிட... |
வலிமை குன்றி காணப்படும். மேலோங்கியவராக 3. ஆட்சியிலிருக்கும் கட்சி பதவியிருந்து விலகுகின்ற போதோ அல்லது சட்டமன்றத்தில் தோற்கடிக்கப்படும் போதோ எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் உரிமையை பெறுகிறது. இந்த அரசாங்கம் முன்னால் இருந்த அரசாங்கத்தினுடைய முடிவுகளை ஏற்காமல் போகக்கூடும். இத்தகைய சூழ்நிலையில் பின்பற்றும் கொள்கையில் தொடர்ச்சி... |
சிறப்பு அம்சங்கள் 1. குடியரசு தலைவர் நடைமுறையிலும் அரசியலமைப்பு அடிப்படையிலும் உண்மையான அதிகாரம் உடையவராக இருக்கிறார். 2. அரசாங்கத்தின் பிரிவுகளான சட்டத்துறை , செயல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் அதற்கென சில அதிகாரங்களை பெருகின்றன. இந்த அளவில் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடயதாக இர... |
எந்த ஒரு சூழ்நிலையிலும் எதேச்சதிகாரம் செலுத்த முடியாது. 4. குடியரசு தலைவரது பதவிக்காலம் வரையறை செய்யப்பட்டது. எந்த காரணத்தை கொண்டும் பதவிக் காலத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ அல்லது அவரை பதவியிலிருந்து தேசத் துரோக குற்றச்சாட்டு அடிப்படையில்லாமல் விலக்கமுடியாது. நிறைகள் 1. நிலையான அரசு சாத்தியமாகிறது. 2. குடியரசு தலைவ... |
இப்பொறுப்புகளை ஏற்க நியமிக்கப்படலாம். கூட 3. கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படுவதால் செயலாக்கம் இணக்கமாக இருக்கிறது. 4. தேசிய நெருக்கடிகள் ஏற்படும்போது இத்தகைய அரசாங்கம் சிறந்ததாக இருக்கிறது. 5. அதிகார குவிப்பிற்கு வாய்ப்பு இல்லை. குறைகள் 1. நிர்வாகத்துறை சட்டத்துறைக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பதால் அதன் விருப்பப்படி செயல்ப... |
இடையே சுமூகமாக சூழ்நிலை இல்லாமல் போகும் போது சுதந்திரமான வெளிநாட்டுக்கொள்கையை பின்பற்றுவதற்கு முடியாமல் போகிறது. நிர்வாகத்துறை பின்பற்றும் கொள்கை சட்டத்துறையால் ஏற்கப்படாமலும் போகலாம். 5.5 குழுமுறை அரசாங்கம் குழுமுறை அல்லது பன்மை நிர்வாக அமைப்பு முறையில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் சமதகுதியும் அதிகாரமும் உட... |
சுவிட்ஸர்லாந்து அரசாங்கமாகும். சுவிட்ஸர்லாந்து நாட்டில் கூட்டாட்சி முறையில் குழுவாட்சி முறை பின்பற்றப்படுகின்றன. இங்குள்ள செயற்குழு உறுப்பினர்கள் ஏழுபேர் நான்கு ஆண்டு பதவி காலத்திற்கு கூட்டுக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு அமைச்சரும் ஒருதுறைக்கு பொறுப்பு ஏற்கிறார். இவ்வடிப்படையில் அரசாங்க துறைகள் ஏழாக... |
திரும்ப தேர்ந்தெடுக்கப்படலாம். கூட்டாட்சி கவுன்சில் என்று அழைக்கப்படும் அரசாங்கத்தில் தலைவர் பொறுப்பு , உதவி தலைவர் பொறுப்பு , சுழற்சி முறையில் ஒவ்வொரு கவுன்சிலருக்கிடையே மாறி மாறி ஓராண்டு காலத்திற்கு தரப்படுகிறது. நிறைகள் 1. இந்த நாட்டில் உள்ள கூட்டு செயற்குழு நிலையானதாகவும் பொறுப்புடையதாகவும் இருக்கிறது. 2. தனி அமைச்... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.