id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
4787
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கிராம்பு
கிராம்பு (இலவங்கம், Syzygium aromaticum) ஒரு மருத்துவ மூலிகை. இது சமையலில் நறுமணப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தோனேசியாவில் தோன்றிய தாவரமாகும். இது இந்தோனேசியாவில் பெரும்பான்மையாகப் பயிரிடப்பட்டாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் பயிரிடப்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருக்கும் சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. இதற்கு அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் என்ற பல பெயர்களும் உண்டு. மருத்துவ குணங்கள் பல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது. வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும். இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன. உணவில் ஏற்படும் அஃபலாக்சின்(:en:Aflatoxin Aflatoxin) என்ற நஞ்சை, கிராம்பிலுள்ள யூகினால் (:en:Eugenol Eugenol) அழிக்கும். antioxident, இரத்தத்தை நீர்த்துப் போகச்செய்யும், இரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும். உடலைப் பருமனடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கும், சூட்டைச் சமப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும். கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும். சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது. கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும். கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும். 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும். தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும். கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது. கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும். சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது. மேலும் படிக்க இந்திய வாசனைத் திரவியங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கிராம்பு விவசாயம் குறித்த செய்தி மூலிகைகள் மெய்யிருவித்திலையிகள்
4788
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
கீழாநெல்லி
கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர். தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ குணங்கள் மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி, பூமியாமலக், பூளியாபாலி என்று பல்வேறு பெயர்களால் மருத்துவர்களால் அழைக்கப்படும் கீழாநெல்லி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானாகவே முளைத்து செழித்து வளர்ந்திருக்கும் கற்ப மூலிகை ஆகும். உட்கொள்ளும் முறை: முழுக் கீழாநெல்லிச் செடியைத் தூயநீரில் கழுவி அரைத்துக் கொள்ளல் வேண்டும்.ஐம்பது கிராம் அளவுள்ள விழுதை 200 மி.லி.எருமைத் தயிருடன் கலந்து, காலை 6 மணியளவில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தவிராமல் உட்கொண்டால் மஞ்சட்காமாலை நோய் குணமடையும்.மருந்துண்ணும் நாட்களில் மோரும்,மோர்ச்சோறும் உட்கொள்வது நல்லது. கீழாநெல்லி இலைகளக் கற்கண்டுடன் சேர்த்து அரைத்து மூன்று கிராம் அளவு காலை மாலை இருவேளையும் நான்கு நாள் தொடர்ந்து உட்கொள்ள சிறுநீர்த் தொடர்பான நோய்கள் தீரும். உசாத்துணை வெளி இணைப்புக்கள் புதிய தென்றல் கட்டுரை கீற்று.com Bhuiaonla (Phyllanthus niruri): A Useful Medicinal Weed Medicinal Uses Tropical Plant Database
4790
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
குடசப்பாலை
குடசப்பாலை (கருப்பாலை, Holarrhena pubescens) மூலிகையானது மருத்துவத்தில் பயன்படும் சிறுமரமாகும். வலுவான கிளைகளைக் கொண்ட இதன் பட்டை தடிப்புடையதாகச் சொரசொரப்பான பொருக்குகளுடன் பழுப்பு நிறமாக இருக்கும். இதன் பட்டை, இலை, விதை ஆகியன மருத்துவப் பயனுடையவை. இது சீதக்கழிச்சல் போக்க உதவும். மேற்கோள்கள் மூலிகைகள்
4791
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF
குப்பைமேனி
குப்பைமேனி அல்லது அரிமஞ்சரி, பூனைவணங்கி, குப்பி, மார்ஜலமோகினி (Acalypha indica) என அழைக்கப்படுவது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும். மேற்கோள்கள் மூலிகைகள் கீரைகள் மூவடுக்கிதழிகள் இந்தியத் தாவரங்கள்
4792
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
கொத்தமல்லி
கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது அபியேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வரலாறு இசுரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன. பயன்கள் உணவு கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. . . சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.கொத்தமல்லி விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர். பயிரிடல் கொத்தமல்லி தட்பவெப்ப நிலை பொருந்திய இடத்தில் எளிதாக வளரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு சுமாராக 12-15 கிலோ விதை தேவைப்படும். நிலத்தினை உழுது , தொழு உரம் இறைத்து, பாத்தி கட்டிய நீர் பாய்ச்சப்பட்ட நிலத்தின், ஈர மண்ணில் கொத்துமல்லி விதைகளை தூவி, நிலத்தினை கீறி விட வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒரு முறை என 40 நாட்களில் 10 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 35ம் நாட்களில் ஒரு கை களை எடுக்க வேண்டும். வாழையில் ஊடுபயிராக கொத்துமல்லியை சொட்டுநீர்ப் பாசன முறையில் சாகுபடி செய்கிறார்கள். மேலும் படிக்க இந்திய வாசனைத் திரவியங்கள் மேற்கோள்கள் சுவைப்பொருட்கள் மூலிகைகள்
4793
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88
கோரை
கோரை (coco-grass, Cyperus rotundus) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 140 செ.மீ (55 அங்குலம்) வளரக்கூடியது. இது தேரிக்காடு போன்ற வறண்ட பகுதிகளிலும் வளரக்கூடியது. மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு குணமாக உதவுகிறது. சீன, இந்திய மருத்துவ முறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் கொட்டைகள் இந்தியத் தாவரங்கள்
4794
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88
கொவ்வை
கோவை அல்லது கொவ்வை (ivy gourd, Coccinia grandis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு. இலக்கியத்தில் கோவை இதன் பழங்கள் ஒரு கவனிக்கத்தக்க செந்நிறத்தில் இருக்கும். இதன் காரணமாக திருநாவுக்கரசர் பின்வரும் தனது பாடலில் சிவனின் வாய்நிறத்திற்கு உவமையாக இதைப் பயன்படுத்துகிறார். குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே. உசாத்துணை மூலிகைகள் - ஓர் அறிமுகம் - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா மேற்கோள்கள் கொடிகள்
4797
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
சந்தனம்
சந்தனம் (Santalum album, Indian sandalwood) என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும் . இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா ஆகும். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும். மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையும் ஆகும். சந்தன மர அமைப்பு மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது. வளரும் இடம் இதன் தாயகம் இந்தியா. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது. கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட சந்தன மரங்கள் அரசுக்கு சொந்தமானவை. மேலும் சந்தன மரத்தை வெட்டுவது வனத்துறையால் செய்யப்படுகிறது. இலங்கையிலும் பன்னெடுங் காலமாகவே சந்தன மரங்கள் காணப்படுகின்றன. இப்போதும் இலங்கையின் மேல், தென், மத்திய, சப்பிரகமுவா, ஊவா ஆகிய மாகாணங்களில் சில காட்டுப் பகுதிகளில் தானாக வளர்ந்த சந்தன மரங்களைக் காணலாம். தற்காலத்தில் சந்தன மரங்கள் வணிகப் பயிர்களாக வளர்க்கப்படும் திட்டங்கள் ஆங்காங்கே செயற்படுத்தப்படுகின்றன. வெள்ளை சந்தனம் வெள்ளை சந்தன மரம் மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சாதாரண சந்தன மரங்களுள் சிறப்பு வாய்ந்த ஒன்று. பல லட்சம் மரங்களுக்கிடையில் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் மட்டுமே வளரும். இம்மரத்தில் செய்யப்படக்கூடிய முருகன், சிவன், வேல் முதலான சிலைகள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. இம்மரத்திற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளதை பண்டைய நூல்களில் சித்தர்கள் குறித்துள்ளனர். வெந்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற் பொற் செந்திருவருளும் பூமிதத்துண் - மெச்சுஞ் சரும வழகுந் தனிமோ கமுமாம் மிருமுநோ யேகும் பறழ்ந்து - பதார்த்த குணபாடம் - பாடல் (209) காட்சியகம் இதனையும் பார்க்க செஞ்சந்தனம் மேற்கோள்கள் மரங்கள் மூலிகைகள் குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்
4799
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%20%28%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%29
பூளை (செடி)
பூளை (Aerva lanata) அல்லது தேங்காய்ப்பூக் கீரை அல்லது சிறுபீளை என்னும் பூவை இக்காலத்தில் பூளாப்பூ என்பர். இதற்கு பொங்கப்பூ, சிறுகண்பீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை என வேறு பெயர்களும் உண்டு. பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் இக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இச்செடி சாப்பிடக்கூடியவை. இதன் இலைகளை ரசம் தயாரிக்கும் பொழுது சேர்க்கின்றனர். பெயர் காரணம் கற்களைக் கரைக்கும் ஆற்றல் உடையதால் கற்பேதி என்றும், கண்களிலிருந்து வெளியாகும் பீளைபோல இதன் பூக்கள் இருப்பதால் கண்பீளை என்றும் பெயர் உருவாயின. விளக்கம் இது சில அடிகள் உயரம்வரை நிமிர்ந்து வளரக்கூடிய சிறுசெடி வகை ஆகும். இதன் இலைகளுக்கு இடையில் சிறுசிறு வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். இலை, தண்டில் வெள்ளை நிற ரோம வளரிகள் காணப்படும். சங்கப்பாடல்களில் பூளை குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் காட்டப்பட்டுள்ள 99 மலர்களில் பூளை மலரும் ஒன்று. இது குருவி அமர்ந்திருப்பது போலப் பூத்திருக்கும். பூளைப்பூ வரகரிசிச் சோறு போல் இருக்கும். காற்றில் உதிராமல் போராடும் பூ (ஒரு மாத காலம் உதிராமல் பூத்திருக்கும் பூ) மதில் போரில் ஈடுபடுவோர் உழிஞைப் பூவோடு பூளைப் பூவையும் சேர்த்துக் கட்டி அணிந்துகொள்வர். மடலூரும் தலைவன் அணிந்துகொள்ளும் மாலையில் பூளை, ஆவிரை, எருக்கு ஆகிய பூக்கள் தொடுக்கப்பட்டிருக்கும். முன்பனிக் காலத்தில் பூக்கும். காட்டுப்பூனைக் குட்டியின் மயிர் பூளைப்பூப் போலப் பூளைப்பூ இருக்கும். வேளை வெண்பூவை மேயும் மான் பூளையை மேயாமல் ஒதுக்கும். கண்ணகி மதுரையை எரியூட்டியபோது நான்கு வருணப் பூதங்களும் வெளியேறின. அவற்றுள் ஒன்றாகிய வேளாண் பூதம் அணிந்திருந்த பூக்களில் ஒன்று பூளை. சிறுபீளையால் அசிர்க்கர நோய்வாதம்,மூத்திர கிரிசம், முத்தோடம்,மூத்திரச்சிக்கல் பித்தவாதம் ஆகிய நோய்கள் குணமாகும். சிறு நெருஞ்சில் (TRIBULUS TERRESTRIS) இது மிகச்சிறந்த சிறு நீர் பெருக்கி ஆகும். கரைக்கப்பட்ட கல்லை வெளியேற்ற தனது சிறுநீர் பெருக்கும் செயலால் இம் மூலிகை முதலிடம் பெறுகிறது. படக்காட்சியகம் பூளாப்பூவைப் போல் காணப்படும் பேப்பூளாப் பூ இவற்றையும் காண்க சங்ககால மலர்கள் அடிக்குறிப்பு வெளி இணைப்புகள் பூளை (பூளாப்பூ) படம் சங்க கால மலர்கள் மூலிகைகள்
4800
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88
சிறுகீரை
சிறுகீரை அல்லது குப்பைக்கீரை (Amaranthus campestris) ஒரு மருத்துவ மூலிகையாகும். சிறுகீரை பருப்பு கூட்டு, பொரியல், புலவு எனப் பலவகைகளிலும் சமைத்து உண்ணப்படுகிறது. மேற்கோள்கள் கீரைகள்
4803
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%20%28%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%29
சீதா (மரம்)
சீதளப்பழம் அல்லது சீதாப்பழம் (Sugar apple,தாவர வகைப்பாடு : Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும். இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும். பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழில் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது. சாகுபடி காலநிலை சீதா மரம் வளர உகந்த காலநிலை 25 °C (77 °F) முதல் 41 °C (106 °F) வரையாகும்.பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும். இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீ(6600 அடி) உயரத்தில் வளரக்கூடியது. பயன்கள் சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது. காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம். சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது. மேற்கோள்கள் பழ மரங்கள்
4804
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
சீரகம்
சீரகம், அசை அல்லது நற்சீரகம் (தாவர வகைப்பாடு : Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது.காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும். சீர்+அகம்=சீரகம் சீர்+அகம்=சீரகம் (Cheerakam) என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. மருத்துவ குணங்கள் இதன் புற்றுநோய் தடுக்கும் வல்லமை சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது. ஒரு ஆய்வில் மிருகங்களில் நடத்திய பரிசோதனைகள் மூலம் ஈரல் மற்றும் வயிற்று பகுதிகளில் கட்டி வருவதை சீரகம் தடுக்கும் என தெரிய வந்து உள்ளது. ஊட்டப்பொருட்கள் ஊட்டப்பொருள் 100 கிராம் சீரகத்தில் உடலுக்கு ஊட்டந்தரும் பல பொருட்கள் அடங்கியுள்ளன. இரும்புச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் ஈ ஆகியனவும் புரதம், நார்ப்பொருள், ஒற்றைபப்டி நிறைவுறு கொழுப்பு முதலியன நல்ல அளவில் உள்ளன. கிருமிநாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது சீரகத்திலிருந்து 56% Hydrocarbons,Terpene,Thymol போன்ற எண்ணெய்ப் பொருட்கள் பிரித்தெடுக்கப் படுகின்றன. இதில் Thymol –[anthelmintic againt HOOK WORM infections, and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும், கிருமி நாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப் படுகிறது. சித்தர் பாடல் எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப்போகுமே விடாவிடில் நான் தேரனும் அல்லவே என சித்தர் பாடல் ஒலிக்கிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சீரகம்பயிரைத் தாக்கும் நோய்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் http://www.whfoods.com/genpage.php?tname=foodspice&dbid=91 சுவைப்பொருட்கள் மூலிகைகள் மெய்யிருவித்திலையிகள்
4805
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
சுண்டை
சுண்டை அல்லது பேயத்தி, மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய் (Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும். பொதுவாக 2 முதல் 3 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. மூச்சுக் குழாய் நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும், வத்தல் குழம்பு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் கசப்புத் தன்மை மிகுந்தளவில் உள்ளது. சுண்டைக்காய் சாப்பிடுவதன் மூலம் குடலில் உள்ள புழுக்கள் இறந்து விடும், சர்க்கரைநோய் போன்றவைக் கட்டுப்படும். மேலும் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. விளக்கம் சுண்டையானது ஓரளவு வளரும் பெருஞ்செடி வகையான முட்கள் கொண்ட தாவரம் ஆகும். இதன் இலைகள் அகன்று விரிந்தும் சிறிய பிளவுகள் தென்படுவதாகவும் இருக்கும். இது வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டதாகவும், கொத்துக் கொத்தாகக் காய்க்கும் காய்களைக் கொண்டதாகவும் இருக்கும். சுண்டை வகைகள் பொதுவாக சுண்டைக்காயில் இருவகை உண்டு. காட்டுச் சுண்டை (ஸொலானம் ப்யூபிஸென்ஸ்) நாட்டுச் சுண்டை (ஸொலானம் டார்வம்) காட்டுச் சுண்டை மலைக்காடுகளில் தானாக வளர்ந்து மிகுதியாகக் காணப்படுவது. நாட்டுச்சுண்டை வீட்டுத் தோட்டங்களிலும், கொல்லைப் புறங்களிலும் வளர்க்கப்படும். காட்டுச்சுண்டை கசப்பாகவும், நாட்டுச் சுண்டை கசப்பு குறைந்தும் இருக்கும். எனினும் இவை இரண்டும் ஒரே தன்மையான மருத்துவப் பயன்களையே தர வல்லன. மருத்துவ குணங்கள் சுண்டையின் இலைகள், வேர், காய் என முழுச்செடியும் மருத்துவ குணம் உடையது. இலைகள் குருதிப்பெருக்குக்கும், காய்கள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கும் மருந்தாகின்றன. சுண்டையில் புரதம், கல்சியம், இரும்புச்சத்து ஆகியவை மிகுதியாக உள்ளன. இவை உடல் வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. வாரம் இருமுறை சாப்பிடுவதன் மூலம் இரத்தம் சுத்தி அடைகின்றது. அத்தோடு மலச்சிக்கல், அஜீரணம் முதலானவற்றையும் போக்கக் கூடியது. சுண்டைக்காயோடு மிளகும் கறிவேப்பிலையும் சேர்த்து வடிசாறு (கஷாயம்) செய்து சிறுகுழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் மூலக்கிருமி, மலத்துவாரத்தில் உள்ள பூச்சிக்கடி முதலானவை நீங்கும். அகத்தியர் பாடல் நெஞ்சின் கபம்போம் நிறைகிருமி நோயும்போம் விஞ்சுவா தத்தின் விளைவும்போம் - வஞ்சியரே வாயைக் கசப்பிக்கும் மாமலையில் உள்ள சுண்டைக் காயைச் சுவைப்பவர்க்குக் காண் என்று சுண்டைக்காயின் பெருமை பற்றி அகத்தியர் குணப்பாட பாடலில் கூறப்பட்டுள்ளது. சுண்டைக்காய் வற்றல் (Dried Turkey berries) பற்றி மற்றொரு வெண்பா பித்தவரோசகம்போம் பேராப்புழுச்சாகும் உற்றகிறாணியும்போம் உட்பசியாம் – சத்தியமாய் பண்டைக்குதவாமம் பற்றுமிங்கியாரையுந்தான் சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல். மேற்கோள்கள் (Source: “Mooligai Marmam” by Sirumanavur Munusami Mudaliar, Published: 1899) கத்தரியினங்கள்
4808
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
தவசி முருங்கை
தவசி முருங்கை (தாவர வகைப்பாடு : Justicia tranquebariensis) மூலிகை மருத்துவத்திலும் உணவுத் தயாரிப்பிலும் பயன்படும் செடியாகும். இது சன்னியாசி முருங்கை எனவும் அழைக்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் இதன் துவர்ப்புச் சுவையுடையதான இலையே பயனுள்ளதாகும். இதன் இலை வறை செய்து உண்ணப்படுகிறது. மிகுந்த சத்துள்ள உணவாகக் கருதப்படும் இது பத்திய உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மருத்துவ குணங்கள் இதன் இலைச் சாற்றை உட்கொண்டால் மூக்கில் நீர் வழிதல், உள் நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும். உசாத்துணை ''மூலிகைகள் - ஓர் அறிமுகம்" - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா, 2003
4811
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF
தாளிசபத்திரி
தாளிசபத்திரி என்பது காட்டுக் கருவாமரம் (Wild cinnamon, Cinnamomum iners) என்பதன் இலை. இம் மரத்தை இலவங்க மரம் என்றும் அழைப்பர். இம்மரத்தின் பகுதிகள் சில மருந்துப் பொருளாகப் பயன்படுகின்றன. இருமல், இரைப்பு, பெரும்பாலான நோய்களுக்கு துணை மருந்தாகப் பயன்படுகிறது.. சான்றுகோள்கள் மூலிகைகள்
4812
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
தான்றி
தான்றி (Terminalia bellerica) ஓர் இன மரமாகும். இது தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. இதன் பட்டையும் பழமும் மூலிகை மருத்துவத்தில் பயன்படுகின்றன. மார்ச் முதல் மே வரையான காலத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் மலரும். பின்னர் உருண்டை வடிவிலான ஐந்து பள்ளங்களைக் கொண்ட காய்கள் தோன்றிப் பின் சாம்பல் நிறப் பழங்களாகும். இப்பழங்கள் கசப்பும் துவர்ப்புமான சுவையுடையன. இப்பழம் மூலத்தைக் குணமாக்கும். சளி, வயிற்றுப்போக்கு என்பவற்றைக் கட்டுப்படுத்தும். மூலிகைகள் மூவடுக்கிதழிகள்
4815
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88
முடிதும்பை
முடிதும்பை என்றழைக்கப்படும் தும்பை (லூகசு அசுபெரா -Leucas aspera) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இச்செடி லேபியேடேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. 50 செ. மீ. வரை உயரமாக வளரும் இதன் இலையும் பூவும் மருத்துவக் குணமுடையன. தும்பைச் செடி மற்ற செடிகளுடன் தோட்டங்களிலும் வயல், வரப்புகளிலும், கிராமப்புறங்களின் சாலையின் இருமருங்குகளிலும், புதர்களின் ஓரங்களிலும் வளரும் தன்மை உடையது. இந்தச் செடி 20 செ.மீட்டர் உயரத்தில் 10 செ.மீ. அகலம் வரை தரையோடு குத்துச்செடி போல வளரும். தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஓர் அரிய மூலிகைத் தாவரமாகும். இது ஒரு அடி முதல் மூன்று அடி உயரம் வரை வளரும். இச்செடியில் நுண் மயிர்கள் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்த தனி இலைகளை உடையது. இயல்பு தும்பைச் செடி அடித் தண்டிலிருந்தே, மூன்று நான்கு கிளைகளுடன் வளரும் தன்மை கொண்டது. கிளைகளில் பல சிறு கிளைகள் தோன்றி, அந்தக் கிளைகளில் பல இலைகள் நீண்ட காம்புகளுடன் அடர்த்தியாகப் பற்றி இருக்கும். ஒவ்வொரு சிறு கிளையின் நுனியிலும் சிறிய பந்து போன்று ஒரு பிரிவு வளர்ந்து அதன் துளைகளிலிருந்து மொக்கு வெளிவந்து அழகான வெண்மைநிற பூக்கள் பூக்கும் விதம் பார்வைக்கு மிக்க அழகாக தோற்றமளிக்கும். இதன் இலை அடி அகன்றும், நுனி குறுகியும் காணப்படும்.சுமார் 4 செ.மீ. நீளத்தில் ஒரு செ.மீ அகலத்திலிருக்கும். இலை சற்று கனமாக இருக்கும். இலையை கசக்கி முகர்ந்து பார்த்தால் ஒரு காரமான வாடை இருக்கும். உவமை தும்பைப்பூ போன்ற வெளுத்த வேட்டி இலக்கியங்களில் தும்பை தொல்காப்பியத்தில் தும்பை ஒரு திணையாகக் கொள்ளப்பட்டு தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணம் கூறுவர் . இதனடிப்படையில் இராவணன் போருக்குப் புறப்பட்ட போது தும்பை மாலை அணிந்ததாகக் கம்பர் காட்டுகிறார். இவனுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்ட இராமன் துளசி மாலை அணிந்து, அதனுடன் தும்பைப்பூ மாலையும் சூட்டிக்கொண்டான் என்கிறார் கம்பர். இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைப்பூச் சூடிப் போருக்குச்சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன . வகைகள் பெருந்தும்பை சிறுதும்பை கருந்தும்பை மலைத்தும்பை கவிழ்தும்பை காசித் தும்பை என்று பல வகைகளுண்டு. பயன்கள் சித்த மருத்துவத்தில் நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதனை துரோன புஸ்பி என்று அழைப்பர். மேற்கோள்கள் வெளியிணைப்புகள் http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=306&Itemid=393 மெய்யிருவித்திலையிகள் குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்
4816
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF
துளசி
துளசி (Ocimum tenuiflorum) மூலிகை செடியாகும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்டி மீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து வணங்கும் வழக்கமும் உண்டு. வேறு பெயர்கள் துழாய் (நீல நிற துளசி), துளவம், மாலலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி. வகைகள் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காட்டுத் துளசி வளரும் தன்மை வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 – 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிகிரி. காட்டுத் துளசி இது மருந்துக்குப் பயன்படும் ஒரு மூலிகை. துளசியைப் போல் மணக்காது. வெறுமனே துளசியைத் உண்பது போல இதனை யாரும் உண்ணுவதில்லை. இதனைப் பேத்துளசி எனவும் கூறுவர். மேற்கோள்கள் செடிகள் குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள் மூலிகைகள் இந்தியத் தாவரங்கள்
4817
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88
தூதுவளை
தூதுவளை (Solanum trilobatum) என்பது மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது இந்தியாவிலும் சில வெப்பமண்டல நாடுகளிலும் காணப்படுகிறது. விளக்கம் இந்தக் கொடி மற்றும் இலை போன்ற அனைத்து பகுதிகளிலும் சிறுசிறு வளைந்த முட்களைக் கொண்டிருக்கும். வேலிகள் அல்லது மற்ற செடியினங்களைப் பற்றிக்கொண்டு படர்ந்து ஏறும் தன்மை கொண்டது. இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் பூக்கும். வெள்ளை நிறத்தில் பூக்கும் அரிதான தூதுவளை வகையும் உண்டு. தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் ஒன்றாகும். இதற்கு தூதுவளை, தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இதில் சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இதனை அரைத்துப் பச்சடியாக உணவில் சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது. மூலிகை தயார் செய்யும் முறை தூதுவளை பறித்து நிழலின் கீழ் இலைகளை உலர்த்தி பின்னர் முள்களை நீக்க வேண்டும். ஏனெனில் முள் உள்ள செடிகளில் சற்று நச்சுத்தன்மையுள்ளதாக கருதப்படுவதால் சமையல் செய்வதற்கு முன்பே இந்த முள்ளை நீக்க வேண்டியது அவசியம். பின்னர் எண்ணெய் அல்லது நெயில் சிறிது வறுக்கவும், பின்னர் அதை அரைத்து சாப்பிடுவதால் சளி, ஆஸ்துமா, நாள்பட்ட சளி, காய்ச்சல் மற்றும் பொதுவான குளிர் சிகிச்சை செய்வதற்குப் பயன்படுகிறது. சேமித்து வைக்கும் முறை இந்த மூலிகை நிழலின் கீழ் இலைகளை உலர்த்தியதன் மூலம் தூள் வடிவத்தில் சேமிக்கப்படலாம். மேற்கோள் மூலிகைகள்
4820
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
நந்தியாவட்டை
நந்தியாவட்டை அல்லது நந்தியார்வட்டை (Ervatamia divaricata, Tabernaemontana divaricata, Crepe jasmine, East Indian Rosebay, Nandivrksah) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இந்தச் செடி சுமார் 1.5 - 2.5 மீட்டர் உயரம் வளரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். வேர், பூ, இலை மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை. பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் வீட்டின் முன்பகுதியில் அதன் மருத்துவ குணம் தெரியாமல் பலரும் இதை வளர்த்து வருகின்றனர். சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 மலர்களில் 'நந்தி' என்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் சுட்டப்பட்டுள்ளது. நந்தியாவட்டை எண்ணெய் நந்தியாவட்டையின் இலைகளை நன்றாக அலசிச் சுத்தமாக்கி, இடித்துச் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வடித்து நந்தியாவட்டை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. கண் எரிச்சல், கண்பார்வை மங்குதல் என்பவற்றுக்கு இது கண்ணில் ஒரு துளி (மூலிகை மருத்துவம் தெரிந்தவரின் மருத்துவ ஆலோசனை பின்பற்றப்பட வேண்டும்) விடப்படுகிறது. சரும நோய்களுக்கும் தடவலாம். இவற்றையும் காண்க சங்ககால மலர்கள் அடிக்குறிப்பு புற இணைப்புகள் இதன் விவரங்கள் பிறமொழிகளில் இதன் பெயர்களையும் காணலாம். மூலிகைகள் குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள் வீட்டுத் தாவரங்கள்
4821
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF
நன்னாரி
நன்னாரி அல்லது கிருஸ்ணவல்லி அல்லது நறு நெட்டி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்பது தென்னாசியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும். இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது. இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டதாக, பச்சை நிற இலைகளில், வெண்ணிறத்தில் வரிகள் கொண்டிருக்கும். மேலும் இதன் இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும். நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனந்தமூலா (Anantmula.). நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் பெயர்கள் நன்னாறிக்கு அங்காரிமூலி, நறுநெட்டி, பாதாளமூலி, பாற்கொடி, வாசனைக் கொடி, சாரிபம், கோபாகு, சுகந்தி, கிருஷ்ணவல்லி, நீருண்டி போன்ற வேறு பெயர்கள் உண்டு. இந்தத் தாவரத்தில் பால் இருக்கும் என்பதால் ‘பாற்கொடி’ என்றும், வாசனையைக் கொடுப்பதால் ‘சுகந்தி’ என்றும் பூமிக்குள் வளரும் இதன் வேர்த்தொகுப்பால் ‘பாதாளமூலி’ என்ற பெயரும் இதற்கு அமைந்தது. இதில் நாட்டு நன்னாரி மற்றும் சீமை நன்னாரி போன்ற வகைகள் உள்ளன. பயன்கள் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Botanical : தற்கால மூலிகை - நன்னாரி நன்னாரி - இந்திய சரசபரில்லா ஹென்றியெட்டா மூலிகைகள் வலைத்தளம் Henriette's Herbal Homepage - நன்னாரி பற்றி RASAYANA: Ayurvedic Herbs for Longevity and Rejuvenation by Dr H. S. Puri (2003), published by Taylor & Francis, London, pages 43–45. மூலிகைகள் மெய்யிருவித்திலையிகள்
4822
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
நாயுருவி
நாயுருவி அல்லது அபமார்க்கி (தாவரவியல் பெயர்; அசய்ரந்தெஸ் அஸ்பெர (Achyranthes aspera) என்பதாகும். ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரம் வரை நிமிர்ந்து வளரும் இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது.இதன் நெற்று விலங்குகளின் மேல் ஒட்டிச் சென்று வேறு இடங்களில் பரவும். பெயர்கள் நாயுருவிக்கு அபமார்க்கி, நாய்க்குருவி, சரமஞ்சரி, சனம், சுவானம், சேகரி, மாமுனி போன்ற வேறு பெயர்கள் உள்ளன. இவற்றின் விதைகள் (அரிசி) கொண்ட சிறு நெற் கதிர் போல காணப்படுவதால் கதிரி என அழைக்கப்படுகிறது. நாட்டினத்தைக் குறிக்க ‘நாய்’ எனும் பெயர் பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் தாவரத்திலிருந்து ‘உருவி’ உடலில் ஒட்டிக்கொள்வதால், ‘நாயுருவி’ என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம். மேலும் இதற்கு கஞ்சரி. சிகிசிரம், கதிரி, கரமஞ்சரி, சிறுகடலாடி, சகரிகம், கொட்டாவி, நாயரஞ்சி போன்ற வேறு பெயர்களும் உள்ளதாக கூறப்படுகிறது. விளக்கம் நாயுருவியானது சிறுசெடி வகையைச் சார்ந்தது. இதன் இலைகளில் மென்மையான ரோம வளரிகளோடு, தலைகீழ் முட்டை வடிவத்தில் காணப்படும். இலைகளும் தண்டும் சிவந்து காணப்படுவது செந்நாயுருவி வகையாகும். இந்தத் தாவரமானது பீட்டா கரோடீன் (Beta-Carotene), வைட்டமின் – சி, கால்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நாயுருவின் வேறு மொழிப்பெயர்கள் தெலுங்கு:உட்டாரெனி(Uttareni) கன்னடம்:உட்டரனீ(Uttaranee) மலையாளம்:கடலாட்(Kadalad) இந்தி:சிர்-சிர்(Chir-Chir) சமஸ்கிருதம்:அபமர்க(Apamarga) ஆங்கிலம்:ரப்சாப்(அ)ப்ரிகிலி ரப்சாப்(Rough Chaff or Prickly Chaff) வாழிடம் இது இந்தியாவில் எங்கும் வளரக்கூடிய பூண்டுச் செடி. இதில் செந்நாயுருவி என்றொரு வகையுள்ளது. நாயுருவின் பண்புகள் சுவை:கைப்பு ,துவர்ப்பு ,கார்ப்பு தன்மை:வெப்பம் பிரிவு:கார்ப்பு குணம் வேரினால் அழகுண்டாகும் இலை, கீழ்வாய்க்குரிதிப்போக்கையும், கழிச்சல், ஐயநோய், வியர்வை, வெள்ளை இவைகளையும் போக்கும். செந்நாயுருவி செந்நாயுருவின் பயன்கள் இது வீக்கம்,பாண்டு,காமாலை இவை நீக்கும். வேர்ப் பொடியுடன் சிறிது மிளகு பொடியும் ,தேனும் சேர்த்துக்கொடுக்க இருமல் நீங்கும் நாயுருவி விதையை அரிசி கழுவிய நீருடன் உட்கொண்டால் மூலம் நீங்கும் மூளை நோய்களை நீக்கும். குறிப்பு இவ்விரு வகைளிலும் செந்நாயுருவி சிறப்புடைது. மேற்கோள்கள் மூலிகைகள் மெய்யிருவித்திலையிகள்
4825
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நிலவேம்பு
{{speciesbox |image = Andrographis paniculata (Kalpa) in Narshapur forest, AP W2 IMG 0867.jpg நிலவேம்பு (Andrographis paniculata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் செடியாகும். கசப்புச் சுவையுடையதான இதன் இலையும் தண்டும் மருத்துவ குணமுடையவையாகும். இச்செடி இரண்டு முதல் மூன்று அடிகள் வரை நிமிர்ந்து வளர்கிறது. இதன் கக்கத்திலிருந்து உருவாகும் பூக்கள் இளஞ் சிவப்பு நிறமுடையவையாகும். கசப்புச் சுவையின் இராசா என இந்த நிலவேம்பு அழைக்கப்படுகிறது. இது இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகம் காணப்படுகிறது. தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. பாரம்பரியமாக இத் தாவரம் சில நோய்களையும் தொற்றுகளையும் குணமாக்கப் பயன்படுகிறது. இதன் முழுச் செடியும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. சொற்தோற்றம் நிலவேம்பு (Andrographis paniculata) என்பது வருடத்தில் ஒருமுறை காய்த்துப்படுஞ்செடி வகையைச் சேர்ந்தது. இதன் அனைத்து பாகங்களும் கசப்பு சுவையைக் கொண்டவை. இந்தியாவின் வட மாநிலங்களில் மகா டிக்டா (Maha-tikta) என அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் கசப்பின் அரசன் என்பதாகும். இத் தாவரம் ஆயுர்வேதத்தில் காலா மேகா (Kalamegha) என்ற அழைக்கப்படுகிறது, இதன் அர்த்தம் கார்மேகம் என்பதாகும். மலேசியாவில் கெம்பெடு பூமி (Hempedu Bumi) என்று அழைக்கப்படுகிறது. இதன் அர்த்தம் பூமியின் பித்தநீர் என்பதாகும். தமிழில் நில வேம்பு என்பதன் அர்த்தம் தரையில் விளையும் வேம்பு என்பதாகும். தாவரத்தின் குணங்கள் இத் தாவரம் ஈரப்பதமும், நிழலும் உள்ள இடங்களில் 30–110 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது. கரும் பச்சை நிறத்துடன் சதுர வடிவிலான தண்டுப் பகுதியுடன் காணப்படுகிறது. 8 செ.மீ நீளமுள்ள கரும் பச்சை நிறம் கொண்ட இலைகளைக் கொண்டுள்ளது. இதன் பூக்கள் இளஞ் சிவப்பு நிறமுடையவையாகும். பழுப்பு-மஞ்சள் நிறமுடைய விதைகளைக் கொண்டுள்ளது. தாவரத்தை விளைவிக்கும் முறை வெப்பம் அதிகமுள்ள இடங்களில் சிறப்பாக விளைகிறது. மே மற்றும் சூன் மாதங்களில் விதைகளைப் பரப்புகிறது. 60 செ.மீ இடைவெளியில் நில வேம்பு விளைவிக்கப்படும் போது, நல்ல விளைச்சலைத் தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவக் குணங்கள் நிலவேம்புக் குடிநீர் உட்கொள்ள சுரம், நீர்க்கோவை, வயிற்றுப் பொருமல், குளிர்காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும். சமீபத்தில் தமிழ்நாட்டில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவியபோது தமிழக அரசால் நிலவேம்புக் குடிநீர் டெங்குவிற்கு எதிரான தடுப்பு மருந்தாக பரிந்துரைக்கப்பட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்பட்டது. நிலவேம்பு புற்று நோயைக் கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் உதவுவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நில வேம்பு சித்த மருத்துவத்திலும், ஆயுர் வேத மருத்துவத்திலும் மிக முக்கியமான மூலிகையாகும். அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் நிலவேம்புக் குடிநீரில், நில வேம்புடன் 12 வகையான முக்கிய மூலிகைகளும் கலந்து வழங்கப்படுகிறது. தாவரத்தின் வேதியியல் ஆன்ட்ரோகிராப்கிளைடு (Andrographolide) என்ற வேதிப்பொருளே, இத் தாவரத்தின் இலைகளைக் கசக்கி பிழியும் போது கிடைக்கிறது. 1911 ல் கார்ட்டர் (Gorter). இத் தாவரத்தின் கசப்புத் தன்மையை தனியாகப் பிரித்தெடுத்தார். இத் தாவரத்தின் வேதிப் பண்புகள் மிகத் தெளிவாகக் கண்டறியப்பட்டன. விளையுமிடங்கள் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில் விளைவிக்கப்படுகிறது. எவ்வகை நிலத்திலும் விளையும் பண்பைப் பெற்றுள்ளது. இந்தியாவின் காட்டுப் பகுதியில் விளையும் முக்கிய மூலிகையாகும். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 2,000–5,000 டன்கள் நிலவேம்பு உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கோள்கள் உசாத்துணை மூலிகைகள் - ஓர் அறிமுகம்" - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா, 2003 மேலும் படிக்க வெளியிணைப்புகள் Andrographis (www.plantnames.unimelb.edu.au) Dr. Duke's Database Contains a detailed monograph on Andrographis paniculatus'' (Bhunimba) as well as a discussion of health benefits and usage in clinical practice. Available online at https://web.archive.org/web/20110519163542/http://www.toddcaldecott.com/index.php/herbs/learning-herbs/390-bhunimba Andrographis paniculata (Burm. f.) Nees Medicinal Plant Images Database (School of Chinese Medicine, Hong Kong Baptist University) 穿心蓮, Common Andrographis Herb, Chuan Xin Lian Chinese Medicine Specimen Database (School of Chinese Medicine, Hong Kong Baptist University) இந்தியத் தாவரங்கள் இலங்கைத் தாவரங்கள்
4827
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
நீர்முள்ளி
நீர்முள்ளி அல்லது நிதகம் அல்லது இக்குரம் அல்லது காகண்டம் (Hydrophila spinosa) மருத்துவ மூலிகையாகப் பயன்படும் செடியாகும். முழுச் செடியும் மருத்துவ குணமுடையதாகும். பெயர் இத்தாவரமானது இக்குரம், காகண்டம், துரகதமூலம், பாண்டுசமனி, முண்டகம், சுவேதமூலி, நிதகம் போன்ற பல்வேறு பெயர்களைக் கொண்டது. இது நீர் ஆதாரம் உள்ள இடங்களில் வளரும் முட்செடி என்பதால் ‘நீர்முள்ளி’ என்ற பெயர் பெற்றது. மேலும் இந்தத் தாவரத்திலிருக்கும் முட்களைக் குறிக்கும் வகையில் ‘முண்டகம்’ எனவும் அழைக்கப்படுகிறது. விளக்கம் இது வயல்கள், குளம், குட்டைகளில் நிமிர்ந்து வளரக்கூடியது. இதன் இலைகள் ஈட்டி வடிவமுடையவை. இதன் கணுக்களில் நீண்ட முட்கள் காணப்படும். இதன் பூ ஊதா நிற இதழ்களைப் பிரித்தது போன்ற வடிவமுடையது. இதன் விதைகள் பழுப்பு நிறத்தவை. மருத்துவ குணங்கள் நீர்முள்ளிக் குடிநீர் உட்கொள்ள சிறுநீர் எரிவு, சிறுநீர்க் கட்டு, கால் வீக்கம் போன்ற நோய்கள் குணமாகும். மேற்கோள்கள் உசாத்துணை மூலிகைகள் - ஓர் அறிமுகம் - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா, 2003 மூலிகைகள்
4829
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
நெருஞ்சி
நெருஞ்சி அல்லது செப்புநெருஞ்சில் (Tribulus terrestris; Caltrop) ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். நிலத்தில் படர்ந்து வளரும் இதன் வேர் நன்கு பரந்து ஆழமாகச் சென்றிருக்கும். இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. நெருஞ்சியின் இலை, பூ, காய், வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்பாடு உடையன. பெயர்கள் இதற்கு நெருஞ்சில், திரிகண்டம், நெருஞ்சிப்புதும், சுவதட்டம், கோகண்டம், காமரசி, கிட்டிரம், சுதம் போன்ற வேறு பெயர்களும் உண்டு. யானையின் பாதங்களைத் துளைத்து, அதைத் தலை வணங்கச் செய்வதால் ‘யானை வணங்கி’ என்ற பெயரும், காமத்தைப் பெருக்கும் தன்மை இருப்பதால், ‘காமரசி’ எனும் பெயரும் இதற்கு உள்ளன. விளக்கம் நெருஞ்சிலானது மண் தரையில் பசுமையாகப் படரும் முட்கள் கொண்ட தரைபடர் செடியாகும். இந்தத் தாவரம் முழுவதிலும் வெண்ணிற ரோம வளரிகள் காணப்படும். மலர்கள் மஞ்சள் நிறத்தில் தோற்றமளிக்கும். மேற்கோள் மூலிகைகள் மூவடுக்கிதழிகள் அவுத்திரேலியத் தாவரங்கள்
4831
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
நொச்சி
வெண்ணொச்சி. கருநொச்சி. நொச்சித்திணை. நொச்சிமாலை (பாட்டியல்). நொச்சிப்பூ மாலை.
4832
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF
பப்பாளி
பப்பாளி அல்லது பப்பாசி (Carica papaya) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. எளிதில் கிடைப்பது விலை மலிவானது எல்லாக் காலங்களிலும் விளைவது போன்ற சிறப்புத்தன்மை பெற்றுள்ளதால் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது. பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும். பப்பாளி மரத்தின் தோற்றம் பப்பாளி மரத்தின் இலைகள் ஆமணக்கு செடியின் இலைகளின் வடிவத்தை ஒத்திருக்கும். நெடு நெடு என்று விரைவாக வளரக் கூடிய மரமாகும். பப்பாளி மரம் இலைகளை உதிா்த்து தழும்புகளை உண்டாக்கி விடுவதால் அடி முதல் நுனி வரை சொரசொரப்பான மேடு பள்ளங்களை கொண்டிருக்கும். இது சுமாா் பத்து மீட்டா் வரை வளரும்.பப்பாளி மரம் இருபது ஆண்டுகள் வரை உயிா் வாழும். பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள் பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. இது மஞ்சள் நிறமான பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த கரோட்டின் என்னும் நிறமச்சத்து நம் உடலில் விட்டமின் ஏவாக மாற்றப்படுகிறது. விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.இது 1094 IU கொண்டிருக்கிறது .இது மட்டுமல்லாது உடல் நலத்துக்கு முக்கியமான விட்டமின் சி யும் இதில் உள்ளது. மேலும் பதினெட்டு வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் இதுவாகும். பப்பாளியின் வகைகள் வாஷிங்டன் பப்பாளி கனி டியு சோலா சன்ரைஸ் சோலா வைமினாலோ கோவை பப்பாளி கூா்க் பப்பாளி பாங்காக் பப்பாளி சிலோன் பப்பாளி பிலிப்பைன்ஸ் பப்பாளி கனி டியு பப்பாளி வகையானது விதைகளற்றதால் மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது. உசாத்துணை வெளி இணைப்புகள் பழ மரங்கள் அமெரிக்காக்களில் தோன்றிய பயிர்கள்
4834
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
பிரண்டை
பிரண்டை அல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு. பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகவும், ரத்த மூலத்துக்கான மருந்தாகவும், வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது. பிரண்டைச் செடி நீர்ப்பற்றான இதன் தண்டு (கொடி) நான்கு பக்க விளிம்பு கொண்டது. பூக்கள் வெள்ளை நிறமானவை; பழம் கறுப்பு நிறமானதாகும். வளரும் தன்மை பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும், காரத்தன்மையும். எரிப்புக் குணமும், மைக்ககும் இயல்பும்உடையது. பிரண்டையின் பயன்பாடு பிரண்டையைக் கொண்டு சட்டினி மற்றும் வடகம் செய்யலாம். இந்துக்களின் மரண நல்லடக்கங்களில் புதைக்குழியின் மேல், " கண்ணிப்பிள்ளைச்செடிகள் சிலவற்றோடு பிரண்டைக்கொடியின் சில துண்டுகளும் " நட்டு வைப்பது மரபாகத் தொடர்ந்து வருகிறது. உசாத்துணை மூலிகைகள் - ஓர் அறிமுகம் - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா கொடிகள் மூலிகைகள் கீரைகள் மெய்யிருவித்திலையிகள் இந்தியத் தாவரங்கள்
4835
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE
புதினா
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மூலிகைகள்
4836
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
பேரரத்தை
பேரரத்தை (Alpinia galanga) மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய ஒரு தாவரமாகும். தென்னாசியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த செடி. மலேசியா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பயிரிடப்படுகிறது. தாய்லாந்து சமையலில் பயன்படுகிறது. மருத்துவ குணங்கள் சளி, இருமல், தொண்டைக்கட்டு, தசைவலி, மூட்டுவலி. இஞ்சிக் குடும்பம் மூலிகைகள்
4837
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88
பொடுதலை
பொடுதலை, பொடுதினை பூஞ்சாதம், பூற்சாதம் (Phyla nodiflora) என்பது ஒரு மூலிகைச் செடியாகும். இது ஈரப்பாங்கான தரையுடன் ஒட்டிப் படர்ந்து வளர்கிறது. இது மருத்துவக் குணங்களுடைய ஒரு மூலிகைச் செடியாகும். பெயர்க் காரணம் இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணையானது பொடுகுத் தொந்தரவைத் தீர்க்கப் பயன்படுவதால் பொடுதலை எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. விளக்கம் பொடுதலையின் தண்டானது சிறிய ரோம வளரிகள் கொண்டதாக இருக்கும். இது சிறிய இலைகளைக் கொண்டது. இலைகளின் விளிம்புகளில் வெட்டுகள் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது. பொடுதலையின் காயானது சிறியதாகவும் திப்பிலிபோன்றும் இருக்கும். தண்டில் உள்ள கணுப்பகுதிகளில்யில் வேர்கள் உருவாகி தரையைப் பற்றிக்கொள்ளும். இதன் மலர்கள் அழகியதாகவும் கருஞ்சிவப்புடன் வெண்ணிறம் கலந்த நிறத்தோடு இருக்கும். இது பலவகையில் சித்த மருத்துவத்திலும், வீட்டுவைத்தியத்திலும் பயன்படுகிறது. "பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி" என்பது பழமொழி. குறிப்புகள் உசாத்துணை வெளி இணைப்புகள் Jepson Manual Treatment USDA Plants Profile: Phyla nodiflora photos Flora Brasiliensis: Lippia reptans மூலிகைகள் மெய்யிருவித்திலையிகள்
4838
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D
மஞ்சள்
மஞ்சள் என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன: மஞ்சள் (நிறம்). மஞ்சள் (மூலிகை).
4840
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
மருதோன்றி
மருதோன்றி (மருதாணி, Lawsonia inermis) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய சிறு மரம் அல்லது புதர் ஆகும். பெயர்கள் இதற்கு அழவணம், மருதாணி, மருதோன்றி ஆகிய பெயர்கள் உண்டு. அழகை வழங்குவதால், ‘ஐ’வணம் (ஐ-அழகு) என்ற பெயரும் இதற்கு உண்டு. குளிர்ச்சியைக் கொடுப்பதாலும் இது, ஐவணம் (ஐ-கபம்) என்று அழைக்கப்பட்டிருக்கலாம். பாதங்களுக்குப் பயன்படுவதால், சரணம் (சரணம்-பாதம்) என்ற பெயரும் உள்ளது. விளக்கம் இத்தாவரம் ஒரு சிறு மர வகையினைச் சார்ந்தது. இருப்பினும், 5,6 அடி உயரம் வரை வளரும் இயல்புடையது. இச்செடியின் இலைகள் புதர்போல அடர்ந்து காணப்படும். இதன் இலைகள், நீளத்தில் ஏறத்தாழ ஒரு அங்குல அளவுக்குள் இருக்கும். அகலத்தில் அரை அங்குல அளவு இருக்கும். இலை அம்பு வடிவமானது. எனவே, இலை நுனிகூராக இருக்கும். இளஇலையின் நிறம், வெளிர்பச்சையாகவும், முதிர் இலை சற்று அடர்பச்சையாகவும் இருக்கும். இதன் மணமுடைய மலர்கள், வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். பயன்கள் இதன் இலைக் கூழ்மம் கடைகளில் கிடைக்கிறது. அதன் மூலம் வேண்டியவாறு வண்ணமிடலாம். பாரம்பரிய முறையில் இதன் இலைகளைக் கெட்டியாக அரைத்து, கைகளில் இடுவர். சித்தமருத்துவப்படி, பித்த உடம்பாக இருப்பவருக்கு கருஞ்சிவப்பு தோன்றும். மற்றவருக்கு செஞ்சிவப்பாகத் தோன்றும். சிவப்பு நிறம் தோன்ற காரணமான வேதிய நிறமிக்கு ஆன்தோசயானின் (Anthocyanin) என்று பெயர். நகசுத்தி எனப்படும் நோய், விரல்களில் வராது தடுக்கும் தன்மையுடையது. இளநரை மாற, கண்கள் குளிர்ச்சி பெற, நல்ல தூக்கம் வர இவ்விலைகளை அரைத்து தலையில் தேய்ப்பர். தவிர பொதுவாகப் பெண்கள் தங்கள் கைகளில் கால்களிலும் மருதோன்றிக் கூழ்மத்தைக் கொண்டு அழகு செய்கின்றனர். காட்சியகம் மேற்கோள்கள் புற இணைப்புகள் Rajasthani mehandi(மருதாணிக்குரிய மாதிரிப்படங்கள்) மின்னூல் மருதாணி டிசைன்ஸ் மூலிகைகள் அழகுப் பொருட்கள் மூவடுக்கிதழிகள்
4841
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88
மல்லிகை
இக்கட்டுரை மல்லிகைத் தாவரம் பற்றியது. இப்பெயரில் வெளிவரும் இதழ் பற்றி அறிய மல்லிகை (சஞ்சிகை) பக்கத்துக்குச் செல்லுங்கள். மல்லிகை (Jasminum sambac) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய தாவரமாகும். இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் தலையில் சூடும் மாலைகளாகவும் கோயில்களில் பூசையிலும் இது பயன்படுகிறது. இது மூலிகை மருத்துவத்தில் பால் சுரப்பு நிற்க, மார்பக வீக்கம் குறைய பயன்படுகிறது. இம்மலர் பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மலராகும். தமிழில் "மல்லி" என்பதன் பொருள் பருத்தது, உருண்டது, தடித்தது ஆகியனவாகும். இதன் காரணமாக, இம்மலர் "மல்லிகை" எனப் பெயர் பெற்றிருக்கலாம். மதுரை மல்லிகை மிகவும் புகழ் பெற்றது. தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டப்படும் இது ஒரு வகை காட்டு மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி, இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது. ஜாஸ்மினம் என்று பண்டைய ஃபிரஞ்சு மொழியிலும் அரபியில் ஜாஸ்மின் என்றும் பாரசீக மொழியில் யாஸ்மின் என, அதாவது "கடவுளின் பரிசு" எனப் பொருள்படுவதாகவும் அழைக்கப்படும் மல்லிகை ஒரு ஆலிவ் குடும்பமான ஒலிசியே என்னும் புதர்கள், கொடிகள் சார்ந்த ஒரு பேரினம். இதில் மொத்தமாக 200-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவை பண்டைய உலகில் (அதாவது அமெரிக்கா என்னும் நாடு கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்னர் ஐரோப்பியர்கள் அறிந்திருந்த உலகப் பகுதிகள்) மிதமானது முதல் அதிகரித்த வெப்ப மண்டலங்களில் வளரும் இனமாகும். இதில் பல இனங்களும் பிற செடிகளின் மீதாகப் பற்றிப் படரும் கொடிகளாகவும் தோட்டங்களில் கம்பிகளின் மீதாகப் படர்ந்தோ அல்லது கதவுகள் அல்லது வேலிகள் மீதான வேலிப்பந்தலாகவோ அல்லது திறந்த வெளிகளில் புதர்களாகவோ உள்ளன. இவற்றின் இலைகள் என்றும் பசுமை மாறாமலோ (அதாவது வருடம் முழுதும் பச்சையாகவே) அல்லது (கூதிர்ப் பருவத்தில் உதிரும்) உதிரிலைகளாகவோ இருக்கலாம். பயிரிடலும் பயன்பாடுகளும் வணிகத்திற்காக பூப்பண்ணைகளிலும், அழகுக்காவும் பணியிடங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுகிறது. திருமண, மதச் சடங்குகளிலும், பெண்கள் தலையில் சூடிக் கொள்ளவும் பல நாடுகளில் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இதனை " குண்டு மல்லி " எனவும், ஆந்திர மாநிலத்தில் "குண்டு மல்லே " எனவும் அழைக்கின்றனர். பிற நாடுகளில் இதனை அரபு மல்லி(Arabian jasmine) என அழைக்கின்றனர். மல்லிகைத் தேநீர் சீனாவில் மல்லிகைத் தேநீரைப் பருகுகின்றனர். அங்கு இதனை மல்லிகைப் பூ தேநீர் (茉莉花茶; பின்யின்: மோ லி ஹுவா ச்சா) என்றழைக்கிறார்கள். இந்திய தாயக மலர்களில் ஒன்றான அரபு மல்லி என்று உலகின் பல இடங்களிலும் அழைக்கப்படும் மல்லிகை இனத்திலிருந்து இத்தேநீர் உருவாக்கப்படுகிறது. மல்லிகை இனிப்புக் கூழ் ஃபிரெஞ்சு நாட்டில் மல்லிகை இனிப்புக்கூழ் புகழ் பெற்றது. பெரும்பாலும், மல்லிகை மலர்ச்சாறிலிருந்தே இதனைச் செய்கிறார்கள். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இந்த ஃபிரெஞ்சு மல்லிகை இனிப்புக்கூழ் சிறுரொட்டி மற்றும் இனிப்பு மிட்டாய்களை உருவாக்கப் பயன்படுகிறது. மல்லிகைச் சார எண்ணெய் மல்லிகைச் சார எண்ணெய் பொதுவான பயன்பாடுகள் கொண்டுள்ளது. தொழிலாளர்கள் மிக அதிகமாகத் தேவைப்படும் உறிஞ்சு முறைமையிலோ அல்லது வேதிப் பிழிவு முறைமையிலோ இதன் மலர்களைப் பிழிகின்றனர். ஒரு சிறு அளவிலான எண்ணெய்க்கும் மிக அதிகமான அளவில் மலர்கள் தேவைப்படுவதால், இது மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. மலர்களை இரவிலேயே கொய்ய வேண்டும். காரணம், மல்லிகையின் வாசம் இருள் கவிந்த பின்னர் மேலும் வலிமை கொள்வதாகும். மலர்களை ஆலிவ் எண்ணெயில் தோய்த்துப் பருத்தி ஆடைகளின் மீது பல நாட்களுக்குக் காய வைத்துப் பிறகு மெய்யான மல்லிகைச் சாறைப் பெறுவதற்குப் பிழிந்தெடுக்கின்றனர். இத்தகைய மல்லிகைச்சார எண்ணெய் தயாரிக்கும் நாடுகளில் சில இந்தியா, எகிப்து, சீனா மற்றும் மொரோக்கோ ஆகியவை. வாசனைத் திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களில் பயன்படும் மல்லிகைத் தனிமானி இதன் வேதியியல் உட்பொருட்கள் மெதில் ஆந்த்ரனிலேட், இன்டோல், பென்ஜில் ஆல்கஹால், லினாலூல் மற்றும் சிகேடோல் ஆகியவற்றை உள்ளடக்கும். மல்லிகையின் பல இனங்கள் ஒரு தனிமானியையும் நல்குகின்றன. இது வாசனைத் திரவியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உருவாக்கப் பயன்படுகிறது. இதனையும் காணவும் மல்லிகை இனங்களின் பட்டியல் மேற்கோள்கள் மூலிகைகள் மூவடுக்கிதழிகள் கூகுள் தமிழாக்கம்-தாவரவியல்
4842
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81
மிளகு
மிளகு (பைப்பர் நிக்ரம் Piper nigrum) என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. 'மிளகு' என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது. மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகுக் கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது. மிளகின் வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம். தென்னிந்திய மொழிகளில் இத்தாவரம் தமிழில் மிளகு எனவும், கன்னடம்:மெனசு (menasu, ಮೆಣಸು) மலையாளம்: குறு மிளகு(Kuru Mulagu) தெலுங்கு: மிரியாலு அல்லது மிரியம் (miriyam, మిరియం) கொங்கணி: மிரியாகொனு (Miriya Konu) எனவும் அழைக்கப்படுகிறது. மிளகுக் கொடி, பொதுவாக வெப்ப மண்டலத்தை சார்ந்த தாவரமாக இருப்பதால், தென்னிந்தியாவின் தட்பவெப்ப நிலை இதன் வளர்ச்சிக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மிளகின் காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் எற்படுவதாகும். பொடியாக்கப்பட்ட மிளகை உலகின் பெரும்பான்மையான நாடுகளில், சமையலறைகளிலும், உணவு உண்ணும் மேசைகளிலும் காணலாம். மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும். வரலாறு இந்தியாவை இயற்கை வாழிடமாகக் கொண்ட மிளகு, வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே இந்தியச் சமையலில் முக்கிய தாளிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிளகு தற்போது சிறந்து விளங்கினாலும், இந்தியாவில் உள்ள கேரளக் கடற்கரைப் பகுதி, நெடுங்காலமாகவே மிளகு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிளகு வாணிகம் மிக லாபகரமானதாக இருப்பதனால், மிளகை 'கருப்புத் தங்கம்' என்று குறிப்பிடுகின்றனர். பண்டைக்காலத்தில் இப்பகுதியில் பணத்திற்கு பதிலாக மிளகை உபயோகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இடைக்காலத்தில் இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விளைந்த மிளகு உலகமெங்கும் சந்தை படுத்தப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் போன்ற தீவுகளிலும், இந்தோனேசியா, மற்றும் பல கிழக்காசிய நாடுகளிலும் குறைந்த அளவில் பயிரிடப்பட்டது. இவ்விடங்களில் விளைந்த மிளகு சீனாவிலும், உள்நாட்டிலுமே விற்கப்பட்டதால், ஐரோப்பாவின் மிளகு வணிகம் இந்தியாவை நம்பியே இருந்தது. இந்தியாவில் பெரிதும் விளைந்த மிளகும், பிற நறுமணப் பொருள்கள் உற்பத்தியும் உலக வரலாற்றை மாற்றி அமைத்ததாகக் கூறினால் அது மிகையாகாது. லண்டனில் டச்சு வணிகர்கள் மிளகிற்கு ஐந்து சில்லிங் விலை ஏற்றம் செய்ததன் காரணத்தால்தான் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற நிறுவனமே துவங்கப்பட்டது. ஐரோப்பியக் குடும்பங்களில் ஒரு பெண் திருமணமாகி வரும்போது சீதனமாக மிளகு கொண்டுவருகிறாள் என்பது அவளது செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில், நறுமணப் பொருள்களின் தேவை மிக அதிகமாக இருந்ததினாலும், அப் பொருள்கள் மிக விலை உயர்ந்ததாக இருந்ததாலும், அவற்றின் இறக்குமதியை அதிகப்படுத்தும் பொருட்டு, இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடிக்க பலர் முயன்றனர். இதன் வாயிலாகவே இந்தியாவிற்கான கடல்வழி கண்டுபிடிக்கப்பட்டது. இம்முயற்சிகளே பின்னர், இந்தியாவை ஐரோப்பியர் கைப்பற்றி அரசாளவும், அமெரிக்கா போன்ற கண்டங்களைக் கண்டுபிடித்துக் குடியேற்றம் செய்யவும் வழிவகை செய்தது. சொல்ச்சேர்க்கை ( சொற்சேர்க்கை ) மிள்கு -> மிளகு = நெடி ; மிள் -> மீள் பண்டைய காலம் மிளகை பண்டைய காலத்தில், இலத்தீன் மொழியில் பைப்பர் என்று குறிப்பிட்டனர்.பழம்பெரும் நாகரிகமான எகிப்து நாகரிகத்தின் எச்சங்களாக விளங்கும், பிரமிடுகளில் பதப்படுத்தப்பட்டுள்ள இறந்த அரசர்களின் மூக்கு துவாரங்களில் மிளகு காணப்பட்டதன் மூலம் பண்டைய எகிப்த்து நாகரிகத்தில் மிளகு சிறந்த மருத்துவப் பொருளாகவும், விலையுயர்ந்த பொருளாகவும் மதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். கி.மு. 1213 ஆம் ஆண்டில், எகிப்த்தின் அரசனான இரண்டாம் ராம்சிஸ் இறப்பின்போது நடத்தப்பட்ட இறுதி சடங்குகளில் மிளகு பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இருப்பினும், மிளகின் பயன்பாடு எந்த அளவில் பண்டைய எகிப்து நாகரிகத்தில் இருந்தது என்பது பற்றியும், எவ்விதம் மிளகு இந்தியாவிலிருந்து எகிப்து வரை கொண்டு செல்லப்பட்டது பற்றியும் அறிய இயலவில்லை. பண்டைய கிரேக்க நாகரிகத்திலும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் மிளகு மிகக்குறைந்த அளவில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மிக விலையுயர்ந்த பொருளாகவும், பெரும் தட்டுப்பாடுடைய பொருளாகவும் இருந்ததால், செல்வந்தர் மட்டுமே மிளகின் சுவையை அறிந்திருந்தனர். வாணிக வழிகள் நிலமார்க்கமாகவோ, அரபிக்கடலின் கடலோரமாக நீர்மார்க்கமாகவோ இருந்ததினால், மிளகு வாணிகம் குறைந்த அளவிலே நடைபெற்றது. கி.மு. 30 இல், எகிப்து ரோமப் பேரரசின் பகுதியானபின், தென் இந்தியாவின் கேரளக் கடற்கரையில் இருந்து அரபிக் கடலின் வழியே ஐரோப்பாவுக்கு முறையான வணிகக் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்பட்டது. ரோமப் பேரரசின் வரலாற்று சான்றுகள் மூலம், ஆண்டுதோறும் சுமார் 120 வாணிகக் கப்பல்கள் இந்தியாவுக்கு பருவக்காற்று காலங்களில் வந்ததாக அறிய முடிகிறது. இக்கப்பல்களில் கொண்டு செல்லப்பட்ட [[நறுமணப் பொருள்களும், முத்து, வைரம் போன்ற கற்களும், மத்திய ஆசியாவில் உள்ள செங்கடல் வரை கொண்டு செல்லப்பட்டு, பின் நிலவழியாகவோ, நைல் ஆற்றின் கால்வாய்கள் வாயிலாகவோ, மத்தியதரைக் கடல் வரை எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் கப்பல் மூலமாக ரோம் நகருக்கு அனுப்பப்பட்டன. இந்தியாவுக்கு நேரடிக் கடல்வழி கண்டுபிடிக்கப்படும் வரை இத்தகைய கடுமையான பாதைகளின் மூலமே ஐரோப்பிய மிளகு வாணிகம் நடைபெற்றது. மிளகுக் கொடி சுமார் நான்கு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மிளகுக் கொடி ஒரு பல்லாண்டுத் தாவரமாகும். படரும் கொடி வகையைச் சார்ந்த இத்தாவரம், அருகில் இருக்கும் மரம், தூண், கயிறு ஆகியவற்றை பற்றி படரும் தன்மையுடையது. இதன் கொடி 10 -12 அடிக்குமேல் கெட்டியான பட்டையுள்ள மரத்தில் பற்றி வளரும். முக்கியமாக முள் முருங்கையில், இக்கொடிகள் மரங்களைப் பின்னிப் பிணைந்து அடர்த்தியாக வளரும். மிளகின் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இத்தாவரத்தின் இலைகள் சுமார் ஐந்து சென்டிமீட்டர் முதல் பத்து சென்டிமீட்டர் நீளத்தில், சுமார் மூன்று சென்டிமீட்டர் முதல் ஆறு சென்டிமீட்டர் அகலத்தில் காணப்படுகின்றன. எப்பொழுதும் பசுமையாகவும், கொடியின் கணுக்கள் சிறிது பெருத்தும் காணப்படும். இதன் சிறிய மலர்கள் சுமார் எட்டு சென்டிமீட்டர் நீளமுள்ள ஊசியைப் போன்ற தோற்றமுடைய மலர்க்காம்பில் பூக்கும். மலர்கள் காய்களாக வளர்ச்சி பெறும்போது, இம்மலர்க் காம்புகள், சுமார் 15 சென்டிமீட்டர் வரை வளர்ச்சி பெறுகிறது. இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். பச்சையாக எடுத்து அதன் நிறம் மாறாமல் பதம் செய்தும் வைப்பார்கள். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் அது கரு மிளகாகச் சுண்டி சிறுத்துவிடும். இதுவே மிளகாகும். பயிரிடுதல் மிளகு விளைச்சலுக்கு நீண்ட மழைபொழிவு, சீராண உயர் வெப்பம் மறும் பகுதி நிழல் ஆகியவை தேவை மிளகு இந்தியாவில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து ஐரோப்பா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா மிளகு பயிரிடும் முறை பரவியது. 16ம் நூற்றாண்டில் ஜாவா, சுமத்திரா, மடகாஸ்கர் மற்றும் மலேசியாவுக்குப் பரவியது. மிளகுக் கொடி மிதமான ஈரப்பதமிக்க, வளமான மண்ணில் நன்கு வளரக்கூடியது. 40 முதல் 50 சென்டிமீட்டர் நீளமுள்ள துண்டங்களாக இக்கொடியின் தண்டுப் பகுதியை, வெட்டி நடுவதின் மூலம் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. பொதுவாக மரங்களின் அருகாமையில் வளர்க்கப்படும் இக்கொடி அம்மரங்களைப் பற்றி வளரும் வண்ணம் மரபட்டைகள் நிறைந்த மரங்களுடன் வளர்க்கப்படுகின்றன. முதல் மூன்று ஆண்டுகள் இத்தாவரம் மிகுந்த கவனிப்புடன் வளர்க்கப்படுகிறது. நான்காம் ஆண்டு முதல் ஏழாம் ஆண்டு வரை இக்கொடி பூத்து காய்க்கிறது. ஒவ்வொரு காம்பிலும் சுமார் 20 முதல் 30 பழங்கள் காணப்படுகின்றன. ஒரு காம்பில் உள்ள சில காய்கள் சிவப்பு நிறமாகிப் பழுத்தவுடன், காம்புகள் அறுவடை செய்யப்படுகின்றன. பின் வெயிலில் காய வைக்கப்பட்டு, காய்ந்தவுடன், காம்புகளில் இருந்து பிரிக்கப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன. சமவெளியில் மிளகு மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய பயிராகக் கருதப்பட்ட மிளகு தற்போது சமவெளி பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது. மலைப்பகுதிகளில் நிலவக்கூடிய உகந்த சூழலை சமவெளிப் பகுதிகளிலும் ஏற்படுத்தினால் மிளகு நன்றாக வளர்ந்து மகசூலைத் தருகிறது. தமிழ்நாட்டில் மிளகு பயிரிடுவது தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் விவசாயிகளுக்கு அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன. வால் மிளகு வால்மிளகு(Piper Cubeba) என்பது, ஒரு வகையான மூலிகைக் கொடியில் காய்ப்பதாகும். மிளகின் ஒரு வகையான இது மிளகைப்போலவே, ஆனால் காம்புடன் இருப்பதால், வால்மிளகு எனப் பெயர். இதன் மணத்திற்காக சமையலில் பயன்படுத்தப் படுகிறது. மேலும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இதன் காரத்தன்மையால், பசியினைத் தூண்டுவது மற்றும் உடல் வெப்பத்தை அதிகரிப்பது ஆகிய குணங்களைக் கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில், பல்வேறு நோய்களைத் தீர்ப்பதற்கு பயன்படுகிறது. பதப்படுத்தும் முறைகள் கருமிளகு பச்சையான பழுக்காத சிறு மிளகு காய்கள் கொடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, சூடான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கப்பட்டு, பின்னர் உலர வைக்கப்படுகின்றன. இக்காய்களின் வெளித்தோல் சூட்டினால் உறிக்கப்படுவதனால், இக்காய்கள் வேகமாக உலருவதோடு, அதன் சதைப்பகுதி விதையுடன் காய்ந்து, சுருங்கி, பூஞ்சைகளின் மூலமாகக் கருநிறத்தைப் பெறுகிறது. இக்காய்களை உலர்த்துவதற்கு இயற்கையான சூரிய ஒளியும், பல இயந்திரங்களும், இடத்திற்கேற்ப பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு உலர்த்தப்பட்ட மிளகு, பின் சரியான பொதிகளில் அடைக்கப்பட்டு சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. வெண்மிளகு பெரும்பான்மையான நாடுகளில் கருமிளகே உபயோகத்தில் இருப்பினும், சில பகுதிகளில், வெண்மிளகும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய வழிமுறைகளைப் போலின்றி, வெண்மிளகு உற்பத்திக்கு பழுத்த மிளகுப் பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இப்பழங்கள் ஏறத்தாழ ஒரு வாரம் நீரில் ஊறவைக்கப்படுகின்றன. இதன் மூலம், பழத்தின் சதைப்பகுதி அழுக வைக்கப்படுகிறது. பின், பழத்தின் சதைப் பகுதி தேய்த்து அகற்றப்பட்டு, விதைகள் உலர்த்தப்படுகின்றன. உலர வைக்கப்பட்ட வெண்நிற விதைகள் வெண்மிளகாக சந்தைப்படுத்தப்படுகிறது. மற்ற சில முறைகளும் உபயோகத்தில் உள்ளன. இவற்றில் சிலவற்றில் பழுக்காத மிளகுக் காய்களும் வெண்மிளகு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பச்சை மிளகு பச்சை மிளகு, கருமிளகைப் போலவே பழுக்காத சிறு மிளகுக் காய்களை உலர வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. காய்களின் பச்சை நிறத்தைத் தக்கவைத்துக் கொள்ள, கந்தக டை ஆக்சைடுடன் கலக்குதல், உறைய வைத்து உலர்த்துதல் ஆகிய சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. வினிகருடன் ஊற வைக்கப்பட்ட பச்சை மிளகுக் காய்களும் பச்சை நிறத்தைக் கொண்டுள்ளன. ஆசிய சமையல் முறைகளில் ஒன்றான, தாய்லாந்து நாட்டுச் சமையல் முறையில், புதிதாக பறிக்கப்பட்ட பச்சை மிளகுப் பழங்கள் பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது. . உலர வைக்கப்படாத அல்லது பாதுகாக்கப்படாத மிளகுக் காய்கள் விரைவில் கெடும் இயல்பு கொண்டவை. சிவப்பு மிளகு வினிகரில் ஊற வைத்து பாதுகாக்கப்பட்ட பழுத்த மிளகு சிறு பழங்கள், இளஞ்சிவப்பு மிளகு என்றும், சிவப்பு மிளகு என்றும் அழைக்கப்படுகிறது. பழுத்த மிளகுப் பழங்களை சில வேதியல் பொருள்களின் துணையுடன் உலர வைப்பதன் மூலமும் சிவப்பு மிளகு தயாரிக்கப்படுகிறது. சமையல் தமிழ்நாட்டுச் சமையலில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டு உணவு வகைகளான பொங்கல், மிளகு ரசம், மிளகுக் கோழி வருவல், முட்டை வருவல், உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றில் சுவைகூட்டும் பொருளாக மிளகு அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற சமையல் முறையான செட்டிநாடு சமையலில் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சமையலில் காரச்சுவை ஊட்டுவதற்காக முற்காலத்தில் மிளகு பயன்பட்டது. தற்போது மற்றொரு காரச்சுவைப் பொருளான மிளகாய், மிளகை விட அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில், மிளகை பெப்பர் என்றும், மிளகாயைச் சில்லி பெப்பர் என்றும் பொதுவாகக் குறிக்கின்றனர். மிளகு வாணிகம் மிளகு ரகங்கள் அவை விளையும் இடங்களின் பெயரிலேயே உலகச் சந்தைகளில் அறியப்படுகின்றன. மிகப் புகழ்பெற்ற இந்திய வகைகளாக அறியப்படுவன : மலபார் மிளகு மற்றும் தாலச்சேரி மிளகு. இதில் தாலச்சேரி மிளகு உயர்தரமாக மதிக்கப்படுகிறது. மலேசியா நாட்டின் சரவாக் மிளகு , போர்ணியோத் தீவிலும், இந்தோனேசியா நாட்டின் லம்பூங் மிளகு சுமத்திராத் தீவுகளிலும் விளைகிறது. 2002 ஆம் ஆண்டில், மிளகு, உலக தாளிப்புப் பொருள் வாணிபத்தில் சுமார் 20 விழுக்காட்டினைப் பெற்றது. மிளகின் விலை உலகச் சந்தையில் உற்பத்திக்கேற்ப வெகுவாக மாறக்கூடியது. சர்வதேச மிளகுச் சந்தை கொச்சி நகரில் அமைந்துள்ளது. தற்காலத்தில், வியட்நாம் நாடு உலக மிளகு ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. வியட்நாமிலிருந்து, 2003 ஆம் ஆண்டில், சுமார் 82,000 டன் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது. வியட்நாமை அடுத்து, இந்தோனேசியா (67,000 டன்), இந்தியா (65,000 டன்), பிரேசில் (35,000 டன்), மலேசியா (22,000 டன்), இலங்கை (12,750 டன்), தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளும் மிளகு ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளன. மருத்துவ குணங்கள் கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது. உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது. இவற்றையும் பார்க்க சுவைப்பொருட்கள் (பலசரக்குகள்) பட்டியல் இந்திய வாசனைத் திரவியங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மிளகு விவசாயம் குறித்த செய்தி மூலிகைகள் சுவைப்பொருட்கள் மூவடுக்கிதழிகள் கொட்டைகள்
4843
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
முடக்கொத்தான்
{{Taxobox | image = Cardiospermum halicacabum 06.jpg | regnum = தாவரம் | unranked_divisio = பூக்குந்தாவரம் | unranked_classis = மெய்யிருவித்திலையி | unranked_ordo = ரோசிதுகள் | ordo = சாபின்டேல்ஸ் | familia = சாபின்டேஸி |subfamilia = சாபின்டாய்டியே | genus = கார்டியோஸ்பெர்மம் |species = ஹெலிகாகபம் |binomial = கார்டியோஸ்பெர்மம் ஹெலிகாகபம் " |binomial_authority = லி. |}} முடக்கொத்தான் அல்லது கொற்றான், முடர்குற்றான், முடக்கற்றான், முடக்கொற்றான், முடக்குத் தீர்த்தான், உழிஞை, முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum'') என்பது ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். உடலில் ஏற்படும் முடக்குகளை வேரறுக்கும் தன்மை இருப்பதால், முடக்கறுத்தான் (முடக்கு+அறுத்தான்) எனப் பெயர் பெற்றது. இது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் ஏராளமாக காணப்படும் உயரப் படரும் ஏறுகொடி ஆகும். இதன் பிளவுபட்ட இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இதன் காய்கள் பலூன் போன்ற அமைப்பை உடையவை, அவற்றை கைகளுக்கு இடையில் வைத்துத் தட்டும்போது பட்டாசு வெடிப்பதைப் போன்ற ஒலி உண்டாக்கும். இதன் காரணமாக சிறுவர்கள் இதன் காய்களை, ‘பட்டாசுக் காய்’ என்றும் ‘டப்பாசுக் காய்’ என்றும் அழைப்பதுண்டு. இக்கொடியின் வேர், இலை, விதை ஆகியன மருத்துவப் பயன்பாடுடையவை. இவை  பெரும்பாலும் சாலையோரங்களிலும், ஆற்றோரங்களிலும் பரவலாக களைபோல வளர்ந்து இருப்பதைக் காணலாம். அது ஆன்டிடிராரிஹோலை மற்றும் ஹோமியோபதி மருத்துவம் ஆகியவற்றில் ஆய்வு செய்கின்றனர். தமிழ்நாட்டில் இதன் இலைகளை அரைத்து தோசை மாவுடன் கலந்து முடக்கத்தான் தோசை என்ற பெயரில் செய்வார்கள். பழங்காலத் தமிழகத்தில் போரின்போது அரண்களை முற்றுகையிடும்போது, அதன் அறிகுறியாக இதன் மலர்களை வீரர்கள் சூடிக்கொள்வார்களாம். உழிஞையின் பெயரில் உழிஞைத் திணை என்ற திணை அமைந்துள்ளது. படங்கள் மேற்கோள்கள் மூலிகைகள் மெய்யிருவித்திலையிகள் கொடிகள்
4847
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
மூக்கிரட்டை
மூக்கிரட்டை (Boerhavia diffusa) ஒரு மருத்துவ மூலிகையாகும். மருத்துவ குணங்கள் ஆஸ்துமா குணமாக, சிறுநீர் நன்கு பிரிய உதவுகிறது. கீரை உடல் தேற்றியாகும், தங்கச்சத்து நிறைந்தது, கணையச் சுரப்பி செயலாற்றி மூல நோய் குணமாக முக்கிரட்டைக் கீரையை சுத்தமாகக் கழுவி எடுத்து மை போல அரைத்து, பெரிய நெல்லிக்காயளவு எடுத்து, கால் ஆழாக்கு கருங்குறுவை அரிசியுடன் சேர்த்து அரைத்து அந்த மாவை ஒரு அடையாகத் தடி வாணலியில் தாராளமாக நெய்விட்டு அதி அடையை வேக வைத்து வேளைக்கு ஒரு அடைவீதம் காலையும் மாலையும் ஏழு நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும் எனப்படுகிறது. இம்மருந்து சாப்பிடும்போது காரம், மீன், கருவாடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
4849
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88
வல்லாரை
வல்லாரை (Centella asiatica) (Asiatic pennywort, Indian pennywort) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத்தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப்பகுதிகள் உணவாகப் பயன்படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும். மேற்கோள்கள் மூலிகைகள் கீரைகள் அவுத்திரேலியத் தாவரங்கள் மலேசியத் தாவரங்கள்
4850
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF
வாதநாராயணி
வாதநாராயணி (Delonix elata) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு மரமாகும். இது இரண்டரை முதல் 15 மீற்றர் உயரம் வளர்கிறது. வளரியல்பு பொதுவாக இது எல்லா இடங்களிலும் வளரும். இது பெரும்பாலும் வறண்ட நிலப்பகுதிகளில் நிறைய காணப்படும். செம்மண் நிலத்தில் இதனை நிறையக் காணலாம். 20 முதல் 30 அடி வரை வளரும். இது பூவரசு, தேக்கு போல வலிமையான மரம் இல்லை. முருங்கைமரம் போல வலிமை இல்லாத மரம். இது விதை மூலமும், கிளை மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் கிளைகளை வெட்டி நட்டாலே வளரக்கூடியது. தண்ணீர் அதிகம் தேவை இல்லை. அதிக நிழல் தராது. இதன் இலை பார்பதற்கு புளியிலைகளைப் போன்று சிறிதாக இருக்கும். வாத நாராயண மரம் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இரு சிறகான சிறு இலைகளையுடைய கூட்டிலை 10-14 ஜதைகளாகவும் உச்சுயில் பகட்டான பெரிய பூக்களையும் தட்டையான காய்களையும் உடைய வெளிர் மஞ்சள் சிவப்பு நிறமுடைய மரம். மே, ஜூன் மாதங்களில் காய்கள் விடும். மரங்கள் மூலிகைகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்
4854
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
வெற்றிலை
வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், தேனி மாவட்டத்தில் சின்னமனூர்,கூடலூர் காவேரிக்கரையில் நாமக்கல் மாவட்டத்தில் பாண்டமங்கலம் வேலுர் மற்றும் பொத்தனுர் பகுதியிலும், கருர் மாவட்டம் புகழுர் பகுதியிலும், திருச்சி மாவட்டத்தில் தொட்டியம் பகுதியிலும் பணப்பயிராகப் பயிரிடப்படுகிறது. மதுரை அருகே சோழவந்தானில் பயிரிடப்படும் வெற்றிலைகளுக்கு நல்ல வரவேற்பு உண்டு. இப்பகுதிகளிலிருந்து வடமாநிலங்களுக்கு வியாபாரத்திற்காக பொதி ஊர்திகளிலும், தொடர் வண்டிகளிலும் அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுவாக வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து மெல்வது ஒரு வழக்கம். கும்பகோணம் வெற்றிலை தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் கும்கோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு ஆகிய ஊர்களிலும் அதிகமாக பயிராகிறது. வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள் வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராகும் கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. வெற்றிலையில் பச்சை வெற்றிலை, வெள்ளை வெற்றிலை, கற்பூரவள்ளி என சில வகைகளை நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. இவற்றுள் கற்பூர வள்ளி வெற்றிலை வடமாநிலங்களுக்கு அதிகளவில் ஏற்பமதியாகின்றன என்பது குறிப்பிடத் தக்கது. மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள் தமிழர்கள் வெற்றிலையை எல்லா மங்கள காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள் பயிரிடலில் அகத்தி தொடர்பு நெல் அறுவடை முடிந்த வயலைப் பக்குவப்படுத்தி, புரட்டாசி மாதத்தில் பட்டம் தயாரித்து அகத்தி விதைகளைப் பயிரிடுவர். கார்த்திகை மாதத்தில் அகத்தி செடிகள் சுமார் இரண்டு அல்லது மூன்று அடிகள் உயரத்தில் வளர்ந்திருக்கும் நிலையில் கொடிகளை நடுவர். சுமார் மூன்று கணுக்கள் உள்ள கொடிகளாக வெற்றிலைக் கொடிகளை வெட்டி வைத்துக்கொண்டு ஒரு கணு மண்ணில் புதையும் வகையில் நடுவர். 40 நாள்களுக்குப் பின்னர் வெற்றிலைக்கொடியை அருகிலுள்ள அகத்திச்செடியுடன் கோரையால் பிணைத்துக் கட்டுவர். வெற்றிலைக்கொடிக்கு அதிக வெயில் கூடாது. நிழல் பாங்கான பகுதி தான் அவசியம். மேலும் இலையுதிர் காலத்திலும் இலை உதிராதது அகத்தி. அதனால்தான் வெற்றிலை சாகுபடிக்கு நம் முன்னோர்கள் அகத்தியைத் தேர்வு செய்திருக்கின்றார்கள். வெற்றிலையில் உள்ள சத்துக்கள் வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44. தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். மேலும் காண்க மைசூர் வெற்றிலை படத்தொகுப்பு மேற்கோள்கள் கொடிகள் கம்போடியப் பண்பாடு இந்தியத் தாவரங்கள் இந்தியப் பண்பாடு வியட்நாம் பண்பாடு
4855
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வேம்பு
வேம்பு அல்லது வேப்பை (Azadirachta indica, Neem) இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் வளரும் மிகவும் பயனுள்ள ஒரு மரம். இதன் மருத்துவ பண்புகள் கருதி, ஒரு மூலிகை என்றும் வகைப்படுத்தலாம். வேப்ப மரம் நன்றாக வளர்ந்து நிழல் தர வல்லது. அதன் இலைகள் கிருமிகளை அழிக்கும் அல்லது அணுகவிடா தன்மை கொண்டவை என்று கருதப்படுகின்றது. வேப்பம் பூவில் இருந்து வேப்பம் பூ வடகம், பச்சடி, ரசம் என்பவை செய்யலாம். வேப்ப எண்ணெய் மருத்துவ ரீதியாக பாவிக்கப்படுகின்றது. காப்புரிமை 1995ல் யுரோப்பிய காப்புரிமைக் கழகம் வேம்பு தொடர்பான காப்புரிமையை அமெரிக்க ஐக்கிய நாடுகள் விவசாயத்துறைக்கு வழங்கியது. பிறகு இந்திய அரசாங்கம் காப்புரிமை வழங்கப்பட்ட இச்செயற்பாடு 2000 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருப்பதாக கூறி இதை எதிர்த்தது. கிபி 2000 ல் இந்தியாவிற்கு சாதகமாக யுரோப்பிய காப்புரிமைக் கழகம் தீர்ப்பளித்தது. வேப்பம் மலர் வேம்பு, வேப்பம் பூவைக் குறிக்கும். பாண்டிய வேந்தரின் குடிப்பூ வேப்பம் பூ மாலை. பாண்டியனுக்குரிய அடையாளப் பூவான வேப்பம் பூவைப் புகழ்வது வேம்பு என்னும் துறை. உசாத்துணை வெளி இணைப்புகள் பயிர் பாதுகாப்பில் வேம்பும் மறுதாவரச் சேர்வைகளும் வேப்பிலை அறுசுவை.காம் Invasiveness information from Pacific Island Ecosystems at Risk (PIER) Neem information from the Hawaiian Ecosystems at Risk project (HEAR) Contains a detailed monograph on Azadirachta indica (Neem; Nimba) as well as a discussion of health benefits and usage in clinical practice. மரங்கள் மூலிகைகள் மூவடுக்கிதழிகள்
4856
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D
மின் விலாங்குமீன்
{{Taxobox | name = மின் விலாங்குமீன் | status = LC | status_system = iucn3.1 | image = Electric-eel.jpg | image_width = 240px | regnum = விலங்கு | phylum = முதுகுநாணி | superclassis = Osteichthyes | classis = அக்டினோட்டெரிகீயை | ordo = ஜிம்னோட்டிபார்மீசு | familia = ஜிம்னோடிடீ | genus = எலக்டிரோபோரஸ் | genus_authority = T. N. Gill, 1864 | species = எ. எலக்டிரிகஸ் | binomial = எலக்டிரோபோரஸ் எலக்டிரிகஸ்' | binomial_authority = (L., 1766) }} மின் விலாங்கு மீன் (Electric eel'') தென் அமெரிக்காவைச் சேர்ந்த மின்னாற்றல் மீனாகும். விலாங்கு என்று பெயர் இருப்பினும் இது விலாங்கு மீன் அல்ல; மாறாக இது ஒரு கத்திமீனாகும். மின் விலாங்கு மீன், எதிரிகளிடம் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் பிற உயிர்களை வேட்டையாடுவாதற்காகவும், 500 வோல்ட்டு மின்னழுத்தம், 1 ஆம்பியர் மின்னோட்டம் (500 வாட்) திறனுள்ள மின் அதிர்வுகளை உற்பத்தி செய்யவல்லது. மின்னழுத்தம் உச்சமாக 650 வோல்ட்டு வரை செல்லக்கூடும். இம்மீன், தென் அமெரிக்க நீர்நிலைப் பகுதிகளில் காணப்படும் முக்கிய கொன்றுண்ணி ஆகும். இது அமேசான் மற்றும் ஓரினோகோ (Orinoco) ஆற்றுப் படுகைகளிலும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. 2.5 மீட்டர் நீளமும் 20 கிலோகிராம் எடையும் கொண்டதாக இவை வளர வல்லவை என்றாலும், 1 மீட்டர் நீளமுள்ள இவ்வகை மீன்களை பொதுவாக காணலாம். வாழ்வியல் முறை வாழ்விடம் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆகிய நன்னீர் ஆற்றுப் படுகைகளில் மின் விலாங்கு மீன்கள் வாழ்கின்றன. மேலும் வெள்ளம், சதுப்பு நிலம், சிற்றோடைகள், சிற்றாறுகள் மற்றும் கடலோர சமவெளி ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் சேற்றின் அடிப்பகுதியில் உள்ள கலக்கமற்ற அல்லது தேங்கிய நீரில் வாழ்கின்றன. உணவு முறை மின் விலாங்கு மீன்கள் முதுகெலும்பற்ற உயிரிகளை உண்டு வாழ்பவையாக இருப்பினும் அவற்றில் வயது முதிர்ந்த விலாங்குகள், சிறு மீன்கள் மற்றும் எலி போன்ற பாலூட்டிகளையும் உண்ணும். இளம் மின் விலாங்குகள் முதுகெலும்பற்ற இறால் மற்றும் நண்டுகள் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. இனப்பெருக்கம் மின் விலாங்கு மீன்கள் வினோதமான இனபெபருக்க முறையைக் கொண்டுள்ளன. வறண்ட பருவத்தில் ஆண் மீன் தன் உமிழ்நீரைக் கொண்டு ஒரு கூடு கட்டும். அதில் பெண் மீன் முட்டையிடும். ஒரு கூட்டில் அதிகபட்சம் 3000 மீன் குஞ்சுகள் வரை பொரிகின்றன. பெண் மீன்களை விட ஆண் மீன்கள் அளவில் பெரியவையாக வளர்கின்றன. மேலும் பார்க்க மீன் வகைகள் பட்டியல் மேற்கோள்கள் மீன்கள்
4879
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%202005
ஏப்ரல் 2005
ஏப்ரல் 22: ஆசியாவில் 1930 மற்றும் 1940களில் ஜப்பான் செய்த இராணுவ கொடூரங்களுக்கு அந்த நாடு மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.(பிபிசி) நேபாளத்தில் 61 அரசியல் கைதிகள் விடுவிப்பு. (பிபிசி) ஏப்ரல் 21: ஸ்பெயினில் ஓரே பாலினத்திருமணங்களுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம். (ராய்ட்டர்ஸ்) ஏப்ரல் 20: ஜப்பானில் 5.9 ரிக்டர் அளவு உள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. (ராய்டர்ஸ்) ஏப்ரல் 19: புதிய போப்பாண்டவராக ஜெர்மனியைச் சேர்ந்த ஜோசப் ரட்ஸிங்கர் தேர்வு செய்யப்பட்டார். (பிபிசி) ஏப்ரல் 18: அண்டார்டிக்காவில் பனிக்கோளங்கள் மோதல் (இஎஸ்ஏ) ஏப்ரல் 17: பழங்கால கிரேக்க மற்றும் ரோமானிய இலக்கியங்கள் கண்டுபிடிப்பு. (தி இண்டிபெண்டன்ட்) ஏப்ரல் 16: நஜிப் மிகடி லெபனானின் புதிய பிரதமராகிறார், (ராய்டர்ஸ்) ஏப்ரல் 15: உணவுக்கு எண்ணெய் திட்டம் ஒழுங்காக நடைபெறுவதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லையயென, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மீது, ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னான் குற்றம் சாட்டினார். (பிபிசி)(கேன்பரா) ஏப்ரல் 14: அங்கோலாவில், மார்பர்க் வைரஸ் தொற்றியதில் 210 பேர் பலி.(ராய்டர்ஸ்) (சி.என்.என்) ஏப்ரல் 13: லெபனான் பிரதமர் ஒமர் கராமி ராஜினாமா(பிபிசி) ஈராக்கில் 9 காவல் துறையினர் குண்டுவெடிப்பில் பலி (பிபிசி) சீனா - ஜப்பான் பதற்ற நிலை அதிகரிப்பு (பிபிசி) வங்காளதேசம் தொழிற்சாலை இடிபாடுகளில் சிக்கி 30 பேர் பலி (தி ஹிண்டு) ஏப்ரல் 12: ஆன்ட்ரஸ் அன்சிப் எஸ்டோனியாவின் அடுத்த பிரதமர் (பிபிசி) ஏப்ரல் 11: மக்கள் சீனக்குடியரசில் ஜப்பான் எதிர்ப்பு நடவடிக்கைகள். (விக்கிநியூஸ்) ஏப்ரல் 10: மக்கள் சீனக்குடியரசின் தலைவர் வென் ஜியாபோ,உயர் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஒத்திழைப்பை வலியுறுத்தினார். (ஏபிசி செய்திகள்) ஏப்ரல் 9: இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்ல்ஸ், கமீலா பார்க்கர் பௌல்சை மணந்தார். (பிபிசி) (பிபிசி) ஏப்ரல் 8: திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இறுதிச்சடங்கு நடைபெற்றது. (பிபிசி) 2005 செய்திகள்
4882
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D
மென்பொருள்
கணிப்பொறி மென்பொருள் அல்லது மென்பொருள் என்பது கணிப்பொறி நிரல்கள் மற்றும் கணிப்பொறிகளால் படிக்கவும் எழுதப்படவும் முடிகின்ற மற்றும் பிற வகைப்பட்ட தகவல் போன்ற எண்ணிம முறையில் சேமிக்கப்படும் தரவு என்று முதன்மையாகப் பயன்படுத்தப்படுகின்ற பொதுவான ஒரு சொல்லாகும். இன்று இந்தச் சொல் திரைப்படச் சுருள், நாடாக்கள் மற்றும் பதிவுப்பொருட்கள் போன்று வழக்கமாக கணிப்பொறியோடு தொடர்புகொண்டிராத தரவையும் உள்ளடக்கியிருக்கிறது.. இந்த சொற்பதம் வன்பொருள் (அதாவது உடலியல் சாதனங்கள்) என்ற பழைய சொல்லுக்கு முரணாக இருக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது; வன்பொருள் என்பதற்கு முரணாக மென்பொருள் என்பது கண்ணுக்குப் புலப்படாதது, அதாவது "தொட இயலாதது" என்பதைக் குறிக்கிறது.. மென்பொருள் என்பதும் சிலசமயங்களில் மிகவும் குறுகலான பொருளிலேயே, அதாவது பயன்பாட்டு மென்பொருட்கள் என்பதாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டுகள்: பயன்பாட்டு மென்பொருள், பயனர்களுக்கு பயன்மிக்க வேலையை செய்துதரும் வேர்ட் பிராசஸர்கள் போன்றவை. தளநிரல், உடனிணைக்கப்பட்ட முக்கியப் பலகைகள் அல்லது மற்ற வகைப்பட்ட ஒருங்கிணைந்த வன்பொருள் கடத்திகளிலான மின்னனுரீதியில் நிரல்படுத்தப்பட்ட நினைவக சாதனங்களுக்கான, மென்பொருள் நிரல்படுத்தப்பட்ட உறைவிடம். மையநிரல், விநியோகிகப்பட்ட அமைப்புக்களைக் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் செய்கிறது. அமைப்பு மென்பொருள் கணக்கீட்டு மூலாதாரங்களைக் மற்றும் பயனர்களுக்கான வசதிவாய்ப்பினை வழங்கும் இயங்கு தளங்களைக் கொண்டிருக்கிறது . மென்பொருள் பரிசோதனை என்பது மேம்படுத்தல் மற்றும் நிரல்படுத்தலின் செயற்களம் சார்ந்தது. மென்பொருள் பரிசோதனை என்பது பரிசோதனைக்கான பல முறைகளையும் உள்ளிட்டிருக்கிறது என்பதுடன் தனிநபராலோ அல்லது குழுவினராலோ பயன்படுத்தப்படுவதற்கு வெளியிடப்படும் முன்னர் மென்பொருள் தயாரிப்பைப் பொருத்தமானது என்று பிரகடனப்படுத்துகிறது. சோதனைநிரல், இது எல்லா பயனீடுகளுக்கும் ஒரு பொதுச் சொல்லாகவோ கொள்கலன் சொல்லாகவோ இருக்கிறது என்பதுடன் மென்பொருள் தொகுதியைச் சோதிப்பதற்கு இணையாகச் செயல்படும் பயன்பாட்டு மென்பொருளாகவும் இருக்கிறது, ஆனால் அவசியம் இவை செயல்பாட்டு நோக்கங்களுக்காக பங்களிக்கும் விருப்பத்தேர்வாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதேபோன்று, சோதனைநிரல் நிலைப்படுத்தப்பட்ட உருவரை அல்ல ஆனால் பயன்பாட்டு மென்பொருள் அல்லது அதனுடைய துணைத்தொகுதிகளுக்கான வேலைச் சூழலாகும். வீடியோ கேம்கள் (வன்பொருள் பகுதியைத் தவிர்த்து) வலைத்தளங்கள் மேலோட்டப் பார்வை மென்பொருள் என்பது இலக்க முறையில் சேமி்க்கப்பட்ட தரவு கொண்டிருக்கக்கூடிய பல்வேறு வடிவங்கள் மற்றும் பாத்திரங்களை உள்ளடக்கியிருக்கிறது என்பதுடன் கணிப்பொறியில் (அல்லது அதேபோன்ற அமைப்பில்) செயல்படுவது, இந்தத் தரவு சிபியூ விற்கான குறியெழுத்தாகவோ அல்லது பிற பொருள் விளக்கியாகவோ பயன்படுத்தப்படுகிறதா அல்லது இது மற்ற வகைப்பட்ட தகவலைக் குறிக்கிறதா என்பது பொருட்டல்ல. இவ்வாறு மென்பொருள் என்பது வழக்கமான நிரலாக்க மொழிகள், உரையாக்க மொழிகள், நுண்குறியெழுத்து அல்லது எஃப்பிஜிஏ போன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி மேம்படுத்தப்படக்கூடிய பரந்த அளவிலான தயாரிப்புகளை உடனிணைத்துக்கொண்டதாக இருக்கிறது. இவ் வகையான மென்பொருள், ஹெச்டிஎம்எல், பிஹெச்பி, பெர்ல், ஜேஎஸ்பி, ஏஎஸ்பி.நெட், எக்ஸ்எம்எல், போன்ற மொழிகள் மற்றும் வடிவமைப்புப் பணிகளில் உருவாக்கப்படும் வலைப் பக்கங்கள் மற்றும் சி, சி++, ஜாவா, சி# அல்லது ஸ்மால்டாக் போன்ற மொழிகளில் உருவாக்கப்பட்ட ஓபன்ஆபீஸ், மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற டெஸ்க்டாப் பயன்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது. பயன்பாட்டு மென்பொருள் வழக்கமாக லினக்ஸ் அல்லது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் போன்ற உள்ளுறையும் இயங்கு தளங்களில் செயல்படுகின்றன. மென்பொருள் (அல்லது தளநிரல்) வீடியோ கேம்களிலும் வாகனங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற நுகர்வோர் மின்னணு சாதனங்களின் லாஜிக் அமைப்புக்களின் உருவரையாக்க பாகங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. கணிப்பொறி மென்பொருள் என்பது மென்பொருளை சேமித்தும் செயல்நிறைவேற்றவும் (அல்லது செயல்படுத்தவும்) தேவைப்படும் உள்ளார்ந்த உள்ளிணைப்புகள் மற்றும் சாதனங்களை உடனிணைந்துக் கொண்டுள்ள கணினி வன்பொருள் (வன்பொருள்) என்பதிலிருந்து வேறுபடுத்திக் காட்டப்படுவதற்கென்றே இவ்வாறு அழைக்கப்படுகிறது. மிகக்குறைந்த அளவில் செயல்நிறைவேற்ற குறியெழுத்து தனிப்பட்ட நிகழ்ப்படுத்திக்கென்றே உள்ள இயந்திர மொழி்க் குறிப்புகளை உள்ளிட்டிருக்கிறது. ஒரு இயந்திர மொழி முன்பிருந்த நிலையிலிருந்து கணிப்பொறியின் நிலையை மாற்றும் நிகழ்படுத்தி அறிவுறுத்தல்களைக் குறிப்பிடும் பைனரி மதிப்புக் குழுக்களை உள்ளிட்டதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொடராக்கத்தில் கணினியின் நிலையை மாற்றுவதற்காக அறிவுறுத்தல்களின் தொடர்வரிசைக்கு நிரலாக்கங்கள் கட்டளையிடுகின்றன. இது வழக்கமாக இயந்திர மொழியைக் காட்டிலும் மனிதர்களுக்கு பயன்படுத்த சுலபமாகவும் மிகுந்த பயன்மிக்கதாகவும் இருக்கும் (இயற்கை மொழிகள் போன்று) உயர் மட்ட நிரலாக்க மொழிகளில் எழுதப்படுகின்றன. உயர்மட்ட மொழிகள் இயந்திர மொழி இலக்கு குறியெழுத்திற்கு தொகுக்கப்படுகின்றன அல்லது பொருள் விளக்கம் செய்யப்படுகின்றன. மென்பொருளானது தொகுப்பு மொழியிலும் எழுதப்படலாம், குறிப்பாக இயற்கை மொழி அகரவரிசையைப் பயன்படுத்தும் இயந்திர மொழியின் நினைவூட்டு வெளிப்பாடு. தொகுப்பு மொழி ஒரு தொகுப்பி வழியாக ஆப்ஜெக்ட் குறியெழுத்தாக தொகுப்பாக்கம் செய்யப்பட வேண்டும். "மென்பொருள்" என்ற சொல் இந்தப் பொருளில் முதன்முறையாக 1958 இல் ஜான் டபிள்யு.டர்க்கி அவர்களால் பயன்படுத்தப்பட்டது. கணினி அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியலில் கணினி மென்பொருள் என்பது எல்லா கணினி நிரல்களுமாகும். மிகவும் நவீன மென்பொருளுக்கு அடிப்படையாக உள்ள கோட்பாடு 1935 ஆம ஆண்டில் ஆலன் டூரிங் அவர்களால், அவருடைய எண்ஸ்டைடங்ஸ்பிராப்ளத்திற்கான (முடிவுசெய்யும் கணிதம்) பயன்பாட்டுடன் கூடிய கணக்கிடக்கூடிய எண்கள் கட்டுரையில் முதல்முறையாக முன்மொழியப்பட்டிருக்கிறது. மென்பொருள் வகைகள் நடைமுறை கணினி அமைப்புகள் மென்பொருள் அமைப்புகளை மூன்று முக்கிய வகைகளாகப் பிரிக்கின்றன: அமைப்பு மென்பொருள், நிரலாக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள், இருப்பினும் இந்த வேறுபாடு விதிகளுக்கு உட்படாது என்பதுடன் தெளிவற்றதாகவே இருந்து வருகிறது. அமைப்பு மென்பொருள் அமைப்பு மென்பொருள் கணிப்பொறி வன்பொருளையும் கணிப்பொறி அமைப்பையும் செயல்படுத்த உதவுகிறது. இது பின்வரும் இணைகளை உள்ளடக்கியிருக்கிறது: சாதன இயக்கிகள் இயங்கு தளம் சர்வர்கள் பயனீடுகள் விண்டோ சிஸ்டம்ஸ் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட கணினியின் விவரங்கள் தொடர்ந்து சிக்கலானதாகவே இருப்பதிலிருந்து பயன்பாடுகள் நிரலாக்குநருக்கான சுமையைக் குறைப்பதே அமைப்பு மென்பொருளின் நோக்கமாகும், இது தகவல்தொடர்பு சாதனங்கள், அச்சிடும் சாதனங்கள், சாதன வாசிப்பான்கள், காட்சியமைப்புகள் மற்றும் விசைப்பலகைகள் போன்ற துணைப்பொருட்களையும், நினைவகம் மற்றும் நிகழ்படுத்தியை பாதுகாப்பான மற்றும் நிலைப்படுத்தப்பட்ட முறையாக கணிப்பொறி மூலாதாரங்களுக்கான பிரிப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கிறது. உதாரணங்கள்- விண்டோஸ் எக்ஸ்பி, லினக்ஸ், மற்றும் மேக் ஓஎஸ் எக்ஸ். நிரலாக்க மென்பொருள் நிரலாக்க மென்பொருள் வழக்கமாக கணிப்பொறி நிரலாக்கங்களை எழுதுவதில் நிரலாக்குனருக்கு உதவுவதற்கென்று கருவிகள் மற்றும் மிகவும் வசதியான முறையில் வேறுபட்ட நிரலாக்க மொழிகளைப் பயன்படுத்தும் மென்பொருளையும் வழங்குகின்றன. இந்தக் கருவிகளில் உள்ளடங்குவன: தொகுப்பிகள் டீபக்கர்கள் இண்டர்பிரட்டர்கள் லின்கர்கள் டெக்ஸ்ட் எடிட்டர்கள் ஒரு ஒருங்கிணைந்த உருவாக்கச் சூழல் என்பது (ஐடிஇ) இந்த செயல்பாடுகள் அனைத்தையும் கையாள்வதற்கு முயற்சிக்கும் ஒற்றைப் பயன்பாடாக இருக்கிறது. பயன்பாட்டு மென்பொருள் பயன்பாட்டு மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட (நேரடியாக கணினி மேம்பாடு தொடர்புடையது) வேலைகளை செய்துமுடிக்க பயனர்களுக்கு உதவுகிறது. வழக்கமான பயன்பாடுகளில் உள்ளவை: தொழில்துறை தானியக்கம் தொழில் மென்பொருள் வீடியோ கேம்ஸ் நுண்ணலகு ரசாயனம் மற்றும் திடநிலை இயற்பியல் மென்பொருள் தகவல்தொடர்புகள் (அதாவது இணையத்தளம் மற்றும் அதில் உள்ளடக்கப்பெறும் அனைத்தும்) தரவுத்தளங்கள் கல்வித்துறை மென்பொருள்( தற்போது இவை இந்தியாவில் பிரபலமடைந்து வருகின்றன ) மருத்துவ மென்பொருள் இராணுவ மென்பொருள் மூலக்கூறு மாதிரியாக்க மென்பொருள் இமேஜ் எடிட்டிங் வீடியோ எடிடிங் ஸ்பிரெட்ஷீட் போலியாக்க மென்பொருள் வேர்ட் பிராசஸிங் முடிவெடுத்தல் மென்பொருள் முப்பரிமான வரைகலை மென்பொருள் கணக்குப் பதிவியல் மென்பொருள் சம்பளப் பட்டியல் மென்பொருள் பரந்துவிரிந்த தலைப்புகளுக்கான பயன்பாட்டு மென்பொருள் இருப்பதுடன் அவற்றில் தாக்கமேற்படுத்தவும் செய்கின்றன. மென்பொருள் தலைப்புகள் கட்டுமானம் நிரலாக்குனர்களைக் காட்டிலும் பயனர்கள் இவற்றைப் வேறுபட்ட விதத்தில் பார்க்கின்றனர். நவீன பொதுப்பயன்பாட்டு கணினிகளை (எம்பட்டட் சிஸ்டம்கள், அனலாக் கணினிகள் மற்றும் சூப்பர் கணினிகளுக்கு எதிரானதாக), தளம், பயன்பாடு மற்றும் பயனர் மென்பொருள் என மூன்று அடுக்குகளிலான மென்பொருள் பல்வேறுவிதமான வேலைகளைச் செய்வதை பயன்படுத்துனர்கள் காண்கின்றனர்: . தளம் மென்பொருள்: தளம் என்பது தளநிரல், சாதன இயக்கிகள், ஒரு இயங்கு தளம் மற்றும் வகைமாதிரியாக ஒரு கிராபிக்கல் பயனர் இடைமுகம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது, இது மொத்தத்தில் கணினி மற்றும் அதனுடைய துணைப்பொருட்களோடு (உடனிணைந்த சாதனம்) ஒருங்கிணைந்த முறையில் பயனர் செயல்படுவதற்கு உதவுகிறது. தளம் மென்பொருள் கணிப்பொறியுடன் இணைந்தே வருகிறது. ஒரு பிசியில் நீங்கள் சாதாரணமாக தளம் மென்பொருளை மாற்றிக்கொள்வதற்கான திறன் உங்களுக்கு இருக்கிறது. பயன்பாட்டு மென்பொருள்: மென்பொருளை பற்றி நினைக்கையில், பெரும்பாலான பயனர்கள் பயன்பாட்டு மென்பொருள் அல்லது பயன்பாடுகளை தான் நினைக்கிறார்கள். ஆஃபீஸ் ஸ்யூட் மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகியவை வகைமாதிரியான உதாரணங்களாகும். பயன்பாட்டு மென்பொருள் எப்பொழுதும் கணிப்பொறி வன்பொருளிலிருந்து தனித்தே வாங்கப்படுகிறது. சிலநேரங்களில் பயன்பாடுகள் கணிப்பொறியுடன் சேர்ந்தே வருகின்றன, ஆனால் அது தனிப்பட்ட பயன்பாடுகளாகத்தான் செயல்படும் என்ற உண்மையை மாற்றிவிடுவதில்லை. பயன்பாடுகள் வழக்கமாக இயங்கு தளத்திலிருந்து தனித்திருக்கும் நிரல்களாகும், இருப்பினும் அவை குறிப்பிட்ட தளங்களுக்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பயனர்கள் இருமமாக்கிகள், தரவுத்தளங்கள் மற்றும் இதர "அமைப்பு மென்பொருள்" ஆகியவற்றை பயன்பாடுகள் என்றே நினைத்துக்கொண்டிருக்கின்றனர். பயனர்-எழுதிய மென்பொருள்: இறுதிப் பயனர் மேம்படுத்துனர், பயனரின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்திசெய்வதற்கு அமைப்புக்களை வடிவமைக்கிறார். பயனர் மென்பொருள் ஸ்பிரெட்ஷீட் டெம்ப்லட்டுகள், வேர்ட் பிராசஸரை உள்ளிட்டிருக்கிறது [தளம் மென்பொருள்: தளம் என்பது தளநிரல், சாதன இயக்கிகள், ஒரு இயங்குதளம் மற்றும் வகைமாதிரியாக கிராபிகல் பயனர் இடைமுகம் ஆகியவற்றை உள்ளிட்டிருக்கிறது, மொத்தத்தில் இது பயனரை கணிப்பொறியோடும் அதனுடைய துணைப்பொருட்களோடும் (உடனிணைந்த சாதனம்) ஒருங்கிணைந்து செயல்பட அனுமதிக்கிறது. தளம் மென்பொருள் கணி்னியுடன் இணைந்தே வருகிறது. ஒரு பிசியில் தள மென்பொருளை மாற்றுதற்கான திறன் உங்களுக்கு வழங்கப்படுகிறது. மின்னஞ்சல் பிரிப்பான்கள்கூட ஒருவகையான பயனர் மென்பொருளாகும். பயனர்கள் இந்த மென்பொருளை தாங்களாகவே உருவாக்கிக்கொள்கின்றனர் என்பதோடு இது எவ்வளவு முக்கிமானது என்பதையும் மேற்பார்வையிடுகின்றனர். தன்னியல்பான பயன்பாட்டு பேக்கேஜ்களில் பயனர் எழுதிய மென்பொருள் எவ்வளவு திறனோடு ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து பல பயனர்களும் அசலான பேக்கேஜ்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களால் சேர்க்கப்பட்டவற்றிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பயனர்கள் தெரிந்துகொண்டிராமல் இருக்கலாம். ஆவணமாக்கல் பெரும்பாலான மென்பொருள்களும் மென்பொருள் ஆவணமாக்கலைக் கொண்டிருப்பதால் ஒரு நிரல் என்ன செய்கிறது மற்றும் அதைப் பயன்படுத்துவது எப்படி என்பதை இறுதிப் பயனர் புரிந்துகொள்கிறார். தெளிவான ஆவணமாக்கம் இல்லாமல் மென்பொருள் பயன்படுத்துவதற்கு கடினமானதாக இருக்கலாம் - குறிப்பாக இது ஃபோட்டோஷாப் அல்லது ஆட்டோகேட் போன்று மிகவும் சிறப்புவாய்ந்த மற்றும் சிக்கலான மென்பொருளாக இருக்கும்போது அவ்வாறு ஏற்படலாம். மேம்படுத்துனர் ஆவணமாக்கலும் இருக்கலாம், குறியெழுத்துக்கள் குறிப்புகளாகவோ மற்றும்/அல்லது தனித்தனி ஆவணங்களாகவோ இருக்கலாம் என்பதோடு இந்த நிரல்கள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதையும் விவரமாக தெரிவிக்கின்றன. நூலகம் ஒரு செயல்நிறைவேற்றக்கூடியது என்பது நேரடி செயல்நிறைவேற்றத்திற்கு எப்போதுமே போதுமான அளவிற்கு முழுமையடையச் செய்வதில்லை. மென்பொருள் நூலகங்கள் பிற பயன்பாடுகளோடு இணைந்திருக்கக்கூடிய செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டின் தொகுப்புக்களை உள்ளிட்டிருக்கின்றன. இயங்கு தளங்கள் உள்ளிட்டிருக்கும் பல நிலைப்படுத்தப்பட்ட மென்பொருள் நூலகங்கள் மற்றும் பயன்பாடுகள் ஆகியவை அவற்றின் சொந்த நூலகங்களுக்குள்ளாகவே விநியோகிக்கப்பட்டவையாக இருக்கின்றன. தரநிலை மென்பொருளானது வெவ்வேறு நிரலாக்க மொழிகள், இயங்கு தளங்கள் மற்றும் செயல்பாட்டு சூழல்களில் வடிவமைக்கப்படுகின்றன என்பதால் மென்பொருள் தரநிலை தேவைப்படுகிறது, இதனால் வெவ்வேறு மென்பொருள்கள் ஒன்றையொன்று புரிந்துகொள்ளவும் தகவலைப் பரிமாறிக்கொள்ளவும் செய்கின்றன. உதாரணத்திற்கு, ஒரு மின்னஞ்சல் மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கிலிருந்து அனுப்பப்படுகிறது என்றால் அது யாஹூ!மெயில் மற்றும் நிலையெதிர் மாறாகவும் படிக்கப்படுவதாக இருக்க வேண்டும். செயல்படுத்துதல் கணிப்பொறி மென்பொருள் "கணிப்பொறியின் சேமிப்பகத்திற்குள்ளாக" (வன் வட்டு, நினைவகம் அல்லது ரேம்) பதிவேற்றம் செய்யப்படுகிறது. மென்பொருள் ஏற்றப்பட்டவுடன் கணிப்பொறியானது மென்பொருளை செயல்படுத்தும் திறனைப் பெறுகிறது. இது பயன்பாட்டு மென்பொருளிலிருந்து அமைப்பு மென்பொருள் ஊடாக அறிவுறுத்தல்களை முடிவில் இயந்திர குறியெழுத்தாக பெறும் வன்பொருளுக்கு எடுத்துச்செல்கிறது. ஒவ்வொரு அறிவுறுத்தலும் ஒரு செயல்பாட்டை கணிப்பொறி மேற்கொள்வதற்கு காரணமாக அமைகிறது - தரவை நகர்த்திச்செல்லல், கணக்கிடுதல் அல்லது அறிவுறுத்தல்களின் கட்டுப்பாட்டு ஓட்டத்தை மாற்றுவது ஆகியன இதில் அடங்கும். தரவு நகர்தல் என்பது நினைவகத்திலுள்ள ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது. சிலநேரங்களில் இது சிபியூவில் தரவு அணுகலை உயர்வேக திறனுள்ளதாக ஆக்குவதற்கு தரவை நினைவகத்திலிருந்து பதிவுகளுக்கு மாற்றுவதோடும் தொடர்புகொண்டிருக்கிறது. தரவை நகர்த்துவது குறிப்பாக பெரும் அளவிற்கானதாக மாற்றுவது செலவு மிகுந்ததாக இருக்கலாம். எனவே, இது சிலநேரங்களில் தரவிற்குப் பதிலாக "பாய்ண்டர்களைப்" பயன்படுத்துவதன் மூலம் தவிர்க்கப்படுகிறது. கணக்கிடுதல்கள் மாறுபடும் தரவுக் கூறுகளின் மதிப்பை அதிகரிக்கச் செய்வது போன்ற எளிய செயல்பாடுகளையும் உள்ளிட்டதாக இருக்கிறது. மிகவும் சிக்கலான கணக்கீடுகள் பல செயல்பாடுகள் மற்றும் தரவுக் கூறுகளோடு ஒன்றிணைந்த நிலையில் தொடர்புகொண்டதாக இருக்கலாம். தரமும் நம்பகத்தன்மையும் மென்பொருளின் தரம் முக்கியமானது, குறிப்பாக மைக்ரோசாஃப்ட் ஆபீஸ், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் போன்ற வர்த்தக மற்றும் அமைப்பு மென்பொருள்களுக்கு. மென்பொருள் பிழையானதாக (பக் கொண்டிருந்தால்) இது ஒருவருடைய வேலையை அழித்தும் சிதைத்தும் விடலாம் என்பதுடன் எதிர்பாராத செயல்களையும் செய்துவிடலாம். தவறுகளும் பிழைகளும் "பக்ஸ்" என்றழைக்கப்படுகின்றன. பல பக்ஸ்களும் மென்பொருள் சோதனையின் வழியாக கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன (டீபக் செய்யப்படுகிறது). இருப்பினும், மென்பொருள் சோதனை எப்போதாவதுதான் -அவ்வாறு இருந்தால்- ஒவ்வொரு பக்கையும் அழிக்கிறது; சில நிரலாக்குனர்கள் "ஒவ்வொரு நிரலாக்கமும் குறைந்தது ஒரு பக்காவது இல்லாமல் இருக்காது"(லூபேர்ஸ்கி விதி) என்று கூறுகின்றனர். எல்லா முக்கியமான நிறுவனங்களும், மைக்ரோசாஃப்ட், நோவல் மற்றும் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் போன்றவை, சோதனையிடுவதற்கு மட்டுமேயான குறிப்பிட்ட இலக்கோடு மென்பொருள் சோதிப்பு துறைகளை வைத்திருக்கின்றன. மென்பொருளானது யூனிட் டெஸ்டிங், ரெக்ரஸன் டெஸ்டிங் மற்றும் இதர வழிமுறைகள் மூலமாக பரிசோதிக்கப்படுகின்றன, சோதிக்கப்படும் குறியாக்கம் அதிகமாக இருக்கலாம் என்பதால் இவை கைமுறையாகவோ அல்லது மிகவும் பொதுவாக தானியங்கி ரீதியாகவோ செய்யப்படுகின்றன. உதாரணத்திற்கு நாசா பல இயங்கு தளங்கள் மற்றும் தகவல்தொடர்பு செயல்பாடுகளுக்கு மிகவும் கடுமையான மென்பொருள் பரிசோதிப்பு நடைமுறைகளை வைத்திருக்கிறது. நாசா அடிப்படையிலான பல செயல்பாடுகள் மென்பொருள் எனப்படும் கட்டளை நிரல்கள் வழியாக ஒன்றோடொன்று செயல்பட்டும் அடையாளம் காண்பபடவும் செய்கின்றன. இது நாஸாவில் பணிபுரியும் பல பயனர்களையும் ஒட்டுமொத்தமாக செயல்பாட்டு அமைப்புக்களை மதிப்பிட அனுமதிக்கிறது. கட்டளை மென்பொருளைக் கொண்டிருக்கும் நிரல்கள் வன்பொருள் பொறியியல் மற்றும் அமைப்புச் செயல்பாடுகளை ஒன்றிணைத்து மிகவும் சுலபமாக செயல்படுத்துவதற்கு உதவுகின்றன. உரிமம் மென்பொருளின் உரிமம் உரிமமளிக்கப்பட்ட சூழலில் அந்த மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பயனருக்கு அளிக்கிறது. சில மென்பொருட்கள் கடையிலிருந்து வாங்கும்போது உரிமத்துடன் வருகிறது அல்லது வன்பொருளுடன் வரும்போது ஓஇஎம் உரிமத்துடன் வருகிறது. பிற மென்பொருள்கள் இலவச மென்பொருள் உரிமத்துடன் வருகின்றன என்பதுடன், பெறுநருக்கு மென்பொருளை மேம்படுத்துவதற்கும் விநியோகிப்பதற்குமான உரிமைகளையும் வழங்குகிறது. மென்பொருளானது இலவசநிரல் அல்லது பகிர்வுநிரல் போன்ற வடிவத்திலும் வருகின்றன. காப்புரிமைகள் மென்பொருள்கள் காப்புரிமை பெற்றவையாக இருக்கலாம்; இருப்பினும், மென்பொருள் காப்புரிமைகள் குறித்து மென்பொருள் துறையில் பல்வேறுவிதமான கண்ணோட்டங்கள் நிலவுவதால் அது முரண்பாடுகள் உள்ளதாக இருக்கிறது. மென்பொருள் காப்புரிமைகள் மீதான முரண்பாடு என்னவெனில் ஒரு மென்பொருள் கொண்டிருக்கும் குறிப்பிட்ட செயல்முறை அல்லது உத்தி மற்றவர்களால் போலிசெய்ய முடியாதது என்பதுடன் அதனுடைய தீவிரத்தன்மையைப் பொறுத்து அறிவுசார் சொத்தாகவும் காப்புரிமை மீறலாகவும் கருதப்படுகிறது. வடிவம் மற்றும் நடைமுறைப்படுத்தல் மென்பொருளை வடிவமைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் மென்பொருளின் சிக்கல்தன்மையைப் பொறுத்து அமைகிறது. உதாரணத்திற்கு, மைக்ரோசாஃப்ட் வேர்ட் மென்பொருளின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் மைக்ரோசாஃப்ட் நோட்பேடைக் காட்டிலும் மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்ளும், ஏனென்றால் இவை ஒவ்வொன்றிலும் உள்ள செயல்பாடுகள் வெவ்வேறு விதமானவை. இந்த நிகழ்முறையையும் நிரலை தொகுக்கச் செய்வதையும் எளிதாக்கக்கூடிய எக்லிப்ஸ், இமேக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஸ்டுடியோ போன்ற ஒருங்கிணைந்த மேம்பாட்டுச் சூழலில் (ஐடிஇ) மென்பொருள் சாதாரணமாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது (குறியாக்கம்/எழுதுதல்/நிரலாக்கம்). பல்வேறு பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளபடி, மென்பொருள் என்பது ஜிடிகே+, ஜாவாபீ்ன்ஸ் அல்லது ஸ்விங் போன்ற உள்ளுறையும் மென்பொருளை வழங்கும் இருந்துவரும் மென்பொருள் மற்றும் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (ஏபிஐ) ஆகியவற்றில் உருவாக்கப்படுவதாகும். நூலகங்கள் (ஏபிஐகள்) வேறுபட்ட நோக்கங்களுக்காக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, ஜாவாபீன்ஸ் நூலகம் நிறுவனப் பயன்பாடுகளை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது, விண்டோஸ் ஃபார்ம்ஸ் நூலகம் மைக்ரோசாஃப்ட் வேர்ட் போன்ற வரைகலை சார்ந்த பயனர் இடைமுகத்தை (ஜியுஐ) வடிவமைக்கப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் விண்டோஸ் கம்யூனிகேஷன் ஃபவுண்டேஷன் வலைத்தள சேவைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. குயிக்சார்ட், ஹாஷ்டேபில், அரே மற்றும் பைனரி ட்ரீ போன்ற உள்ளுறையும் கணி்ப்பொறி நிரலாக்க கருத்தாக்க மென்பொருளை உருவாக்குவதற்கு பயன்மிக்கதாக இருக்கலாம். ஒரு நிரல் வடிவமைக்கப்படும்போது அது ஏபிஐயை நம்பியிருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு பயனர் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் டெஸ்க்டாப் பயன்பாட்டை வடிவமைக்கிறார் என்றால் அவர் அந்த டெஸ்க்டாப் பயன்பாட்டை உருவாக்குவதற்கு .நெட் விண்டோஸ் ஃபார்ம்ஸ் நூலகத்தைப் பயன்படுத்தலாம் என்பதோடு அதை அவர் அதன் ஏபிஐயை பின்வருவது போல் அழைப்பார் form1.Close() மற்றும் form1.Show() இது பயன்பாட்டை திறப்பதற்கும் மூடுவதற்கும் என்பதோடு அது கொண்டிருக்க வேண்டிய கூடுதல் செயல்பாடுகளையும் எழுதுவார். இந்த ஏபிஐகள் இல்லாமல் நிரலாக்குனர் இந்த ஏபிஐகளை தானாகவே எழுதவேண்டியிருக்கும். சன் மைக்ரோசிஸ்டம்ஸ், நோவல் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் அவர்களுடைய சொந்த ஏபிஐகளை வழங்குகின்றன என்பதால் பல பயன்பாடுகளும் தங்களுக்குள் நிறைய ஏபிஐகளைக் கொண்டிருக்கும் சொந்த மென்பொருள் நூலகங்களைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன. சிறப்பு பொருளாதார குணவியல்புகளைப் பெற்றிருக்கும் மென்பொருள் மற்ற சிக்கனமான பொருள்களிலிருந்து வேறுபடும் வடிவம், உருவாக்கம் மற்றும் விநியோகிப்பைக் கொண்டதாக இருக்கிறது. ஒரு மென்பொருளை உருவாக்குபவர், நிரலாக்குனர், மென்பொருள் பொறியாளர், மென்பொருள் மேம்படுத்துனர் அல்லது கோட் மங்கி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுவது அனைத்தும் ஒரே பொருளையே கொண்டிருக்கின்றன. நிறுவனமும் அமைப்புக்களும் மென்பொருளானது மென்பொருள் துறை எனப்படும் தனக்கேயுரிய தொழில்துறையைக் கொண்டிருக்கிறது என்பதுடன் இது மென்பொருளை உருவாக்கும் பல்வேறு நிறுவனங்கள், நபர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டிருப்பதோடு அதன் விளைவாக உலகில் பல மென்பொருள் நிறுவனங்கள் மற்றும் நிரலாக்குனர்களை வழங்கியிருக்கிறது. மென்பொருள் நிதித்துறை, தேடுதல், கணிதம், விண்வெளி ஆராய்ச்சி, விளையாட்டு மற்றும் சுரங்கம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்பதால் இதுபோன்ற மென்பொருள் நிறுவனங்களும் நபர்களும் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கின்றனர். உதாரணத்திற்கு, மின்னணுக் கலைகள் வீடியோ கேம்களையே பிரதானமாக உருவாக்குகின்றன. மென்பொருள் விற்பனை செய்வதும் ஒரு இலாபம் மிகுந்த துறையாக இருக்கிறது. உதாரணத்திற்கு, மைக்ரோசாஃப்டின் நிறுவனரான பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்பொருள் நிரல்களை விற்பனை செய்ததன் மூலமே 2009 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தார். இதே போன்றுதான் லேரி எல்லிஸன் தனது ஆரக்கிள் தரவுத்தளம் மென்பொருள் மூலமாக பணக்காரராக இருக்கிறார். கட்டற்ற மென்பொருள் இயக்கம், குனூ, மொஸிலா ஃபயர் ஃபாக்சு போன்ற இலாப நோக்கமற்ற மென்பொருள் நிறுவனங்களும் இருக்கின்றன. டபிள்யு3சி, ஐஇடிஎஃப் போன்ற மென்பொருள் தரநிலை நிறுவனங்களும் இருக்கின்றன என்பதோடு மற்றவர்கள் எக்ஸ்எம்எல், ஹெச்டிஎம்எல், மீயுரை பரிமாற்ற நெறிமுறை அல்லது கோப்புப் பரிமாற்ற நெறிமுறை போன்ற தரநிலைகளின் மூலமாக பல மென்பொருள்களும் செயல்படுகின்றன மற்றும் ஒன்றோடொன்று ஒத்துழைப்பு அளிப்பதற்கான மென்பொருள் தரநிலைக்கு கொண்டுவர முயற்சிக்கின்றனர். மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள், நோவல், எஸ்ஏபி, சிமண்டெக், அடோப் சிஸ்டம்ஸ் மற்றும் கோரல் ஆகியவை சில பிரபலமான நன்கறியப்பட்ட மென்பொருள் நிறுவனங்களாகும். குறிப்புகள் மென்பொருள் கணினி அறிவியல்
4893
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
லக்சுமன் கதிர்காமர்
லக்சுமன் கதிர்காமர் இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் வெளிநாட்டமைச்சருமாவார். 13 ஆகஸ்ட் 2005 அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையை விடுதலைப் புலிகள் அமைப்பினர் செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது. தொடக்க வாழ்க்கை கதிர்காமர் மானிப்பாயை சொந்த இடமாகக் கொண்ட சாமுவேல் கதிர்காமருக்கும் பரிமளம் கதிர்காமருக்கும் ஆறாவதும் கடைசி பிள்ளையாக கண்டியில் 1932 ஏப்ரல் 12 ஆம் நாள் பிறந்தார். பள்ளிக் கல்வியை கண்டி புனித திரித்துவக் கல்லூரியில் பயின்ற கதிகாமர் கல்லூரி துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் கல்லூரி ரக்பி அணியினதும் அங்கத்தராக இருந்தார். கல்லூரி தடகள விளையாட்டுக்களிலும் பங்குபற்றி வந்தார். 1950 ஆம் ஆண்டின் கல்லூரியின் சிறந்த மாணவருக்கான ரைட் தங்கப்பதக்கத்தை கதிர்காமர் வென்றார். சட்டக் கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துடுப்பாட்ட அணியிலும் இவர் இடம்பிடித்திருந்தார். பட்டப்படிப்பின் பின் இலங்கை நீதவானின் செயலாளராக பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்ற கதிர்காமர் இன்னர் டெம்பள் (Inner Temple) வழையாக சட்டத்தரணியாக பதவியேற்றார். அதே வேலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாலியோல் கல்லூரியிலும் இணைந்துக் கொண்டார். இதன் போதும் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றிருந்த கதிர்காமர் ஆக்சுபோடு பல்கலையின் மாணவர் ஒன்றிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். வாழ்க்கை சுருக்கம் (1955) - சட்டப் படிப்பு பட்டம் - கொழும்பு பல்கலைக்கழகம் (????) - ஆங்கில இலக்கிய பட்டம் - ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (சித்திரை 1994-மார்கழி 2001) - இலங்கை வெளி விவகார அமைச்சர் (சித்திரை 2004-புரட்டாதி 2005) - இலங்கை வெளி விவகார அமைச்சர் (புரட்டாதி 13, 2005) - சுட்டுக் கொலை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கதிர்காமர் படுகொலைபி.பி.சி செய்தி Sri Lankan Foreign Minister Lakshman Kadirgamar - Tamil Net Sri Lanka's Lakshman Kadirgamar Dies at 73 - AP கதிர்காமரின் இராஜதந்திரம் சாதித்தது என்ன? - Eelampage Death of a master diplomat - The Hindu Lakshman Kadirgamar - Effective Sri Lankan Foreign Minister - The Independent சிங்கள தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த லக்ஸ்மன் கதிர்காமர்-தமிழ்நாதம் இலங்கை அரசியல்வாதிகள் 1932 பிறப்புகள் 2005 இறப்புகள் இலங்கையில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள் இலங்கை கிறித்தவர்கள் இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் கண்டி மாவட்ட நபர்கள் யாழ்ப்பாணத்து நபர்கள் இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
4896
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) சுருக்கமாக விடுதலைப் புலிகள் அல்லது த.வி.பு என்பது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆவார். அவரால் இவ்வியக்கம் 1976 இல் உருவாக்கப்பட்டது. இது இலங்கையில் வடக்கு-கிழக்கில் தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன் 1976 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து போராடியது. இதன் மூலம் ஏற்பட்ட ஈழப் போர் இலங்கை ஆயுதப் படைகள் மூலம் 2009 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ராசீவ் காந்தி படுகொலைக்கு மற்றும் பல கொலைச் சம்பவங்களுக்கு இவர்களே காரணம் என நம்பப்படுகிறது. 2001 இல் இருந்து 2005 வரை இலங்கை அரசுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் ஈடுபட்டனர். 2004 இல் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக இருந்த கருணா பிரிந்தார். 2005 இன் இறுதியில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. 2007-இல் இருந்து உக்கிரமடைந்த போரில் புலிகள் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தனர். மே 2009 இல் இலங்கைப் படைத்துறை புலிகளின் பெரும்பான்மை உறுப்பினர்களையும், மூத்த தலைவர்களையும் கொன்றனர். மே 2009-இல் புலிகள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மே 24, 2009 இல் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின் வையகத் தொடர்பாளர் குமரன் பத்மநாதன் புலிகள் வன்முறையைக் கைவிட்டு விட்டதாகவும், இனி மக்களாட்சி வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார். வரலாறு முதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் வரலாறு தோற்றமும் வளர்ச்சியும் விடுதலைப் புலிகள் அமைப்பு மே 5 1976 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் பற்றின்பையுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975 ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய ஈழ இயக்கங்களுடன் இணைந்தே செயற்பட்டு வந்தது. 1984 ஏப்ரல் மாதம் அலுவல் பட்சமாக தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்பன ஒன்றிணைந்த ஈழப் போராட்ட அமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தன. 1986 ஆம் ஆண்டு புலிகள் ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி அப்போது பெரிய ஈழ இயக்கமாக காணப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அதன் தளங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது. அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமையும் சில நூறு போராளிகளும் தேடிக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தமிழீழ விடுதலை இயக்கம் பலமிழந்தது. சில மாதங்களுக்குப் பின் புலிகள் அமைப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி மீதும் தாக்குதல் நடத்தியது இதனால் இவ்வமைப்பு யாழ்குடாநாட்டை விட்டு வெளியேறியது. இதன் பின்னர் புலிகள் அமைப்பு மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் விடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற முன்னணி ஈழ இயக்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 ஏனைய இயக்கங்கள் புலிகள் அமைப்பினுள் உள்வாங்கப்பட்டன. இதன் மூலம் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. புலிகள் தமிழர் சிக்கலுக்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுத் தொடர்பில் நிலையான கொள்கை இல்லாத இயக்கங்கள் செயற்படாமல் இருப்பது போராட்டத்துக்கு நன்மை பயக்கும் எனக் கருதியதாகக் கருதப்படுகிறது. இத்தாக்குதல்களின் விளைவாக புலிகள், ஈழ இயக்கங்களில் முதன்மை அமைப்பாக உருவெடுத்தனர். 1987 ஆம் ஆண்டு புலிகள் பொருளாதார, அரசியல், பட்டாள இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணியை உருவாக்கி இலங்கை பட்டாளத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 பட்டாளத்தினரைக் கொன்றனர். இந்திய படைக் காலம் 1987 ஆம் ஆண்டு இலங்கை பட்டாளம் யாழ் குடாநாட்டைப் புலிகளிடமிருந்து மீட்கும் நோக்குடன் ஆப்பரேசன் லிபரேசன் (operation liberation) என்ற பட்டாள நடவடிக்கையை தொடங்கியிருந்தது. இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ் நாட்டில் பெருகி வந்த ஈழத் தமிழர் ஆதரவினாலும் இந்தியா நோக்கிச் சென்ற ஏதிலிகளாலும் இந்தியா முதன் முறையாக இலங்கை உள்நாட்டுப் போரில் பூமாலை நடவடிக்கையில் இலங்கை வான்பரப்பை மீறி யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்களை இட்டதன் மூலம் தலையிட்டது. பின்னர் ஏற்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கையும் இந்தியாவும் 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதன் படி இலங்கை அரசு தமிழருக்கு கூட்டாட்சி வடிவிலான தீர்வை வழங்கும், அதேவேளை ஈழ இயக்கங்கள் போர்கருவிகளை கீழ் வைக்க வேண்டும். போர்கருவிகளைக் களைவதை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்தியா, இந்திய அமைதி காக்கும் படையை (IPKF- Indian Peace Keeping Force) அனுப்புவதாகவும் ஒப்பந்தத்தில் ஏற்பாடாகியிருந்தது. பல ஈழ இயக்கங்கள் இவ்வொப்பந்தத்தை ஏற்றுக் கொண்டாலும், புலிகள் அமைப்பு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு எதிர்புத் தெரிவித்து ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படை புலிகளிடம் ஆயுதங்களை களைந்துக்கொண்டு இருந்த போது இந்திய ஊளவுத்துறையான RAW பிற போராளிக்குழுக்களுக்கு போர் கருவிகளைத் தந்தது. இதனால் புலிகள் தமது போர்க்கருவிகளை இந்திய அமைதிக்காக்கும் படைகளிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதை இந்திய அமைதிப் படைத் தளபதி அரிகிராத் சிங்க தன்னுடைய Indian Intervention in Sri Lanka என்கிற நூலில் உறுதிப்படுத்துகிறார். முறுகல் நிலை முற்றவே, புலிகள் 1987 அக்டோபர் 5 ஆம் நாள் இந்திய அமைதி காக்கும் படையினரோடு ஒத்துழையாமையை அறிவித்தனர். இதன் விளைவாக புலிகளுக்கும் இந்தியப் பட்டாளத்திற்கும் இடையேயான போர் வெடித்தது. இந்திய அரசு வன்முறை மூலம் புலிகளின் போர்க்கருவிகளை களையத் திட்டமிட்டு பல பட்டாாள நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்குடாநாட்டைக் கைப்பற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட பவான் நடவடிக்கையும் அடங்கும். பவான் நடவடிகையின் கொடுரம் காரணமாகவும் ஏனைய புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் காரணமாகவும் இலங்கைத் தமிழரிடையே இந்திய அமைதிகாக்கும் படை(IPKF)யின் செல்வாக்கு குறைந்தது. பல ஆயிரம் தமிழ் பொதுமக்களைக் கொன்றதாகவும், சில ஆயிரம் தமிழ் பெண்களை வன்புணர்ந்ததாகவும் அதன் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கையின் பெரும்பான்மை சிங்களவரிடையேயும் தனது செல்வாக்கை இழந்திருந்தது. இந்திய அமைதி காக்கும் படையும்(IPKF) புலிகளுடன் 2 ஆண்டுகளாக போரில் ஈடுபட்டு, பாரிய இழப்புகளைச் சந்தித்து வந்தது. 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) இலங்கையில் இருந்து மீளப்பெறப்பட்டது. ஈழப் போர் II புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன. இந்த சமதானப் பேச்சு வார்த்தையிலிருந்து பின்வாங்கிய புலிகள் இயக்கம் 1990 ஜூன் 11 ஆம் நாள் தொடக்கம் பல தொடர் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதன் மூலம் முதல் வாரத்தில் மட்டும் 450 பேர் வரை பலியாகினர். 1990களில் போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது, இக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தால் இரண்டு முக்கிய கொலைகள் செய்யப்பட்டன. முதலாவது 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலைச் செய்யப்பட்டார், இரண்டாவது 1993 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ரணசிங்க பிரேமதாசா ஐக்கிய தேசியக் கட்சியின் மே நாள் ஊர்வலத்தின் போது கொழும்பில் கொலைச் செய்யப்பட்டார். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஈழப் போர் III 1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இலங்கை அதிபராக தெரிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில காலம் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சந்திரிகா அரசுடன் புலிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சந்திரிகா அரசு தீர்க்கமான ஆக்கபூர்வமான தீர்வு நோக்கி செல்லத் தவறியது. இதனால் புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவாதாக அரசுக்கு அறிவித்தனர். இதன்பின்னர், 1995 ஏப்ரல் மாதம் புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரின் இரண்டுக் களங்களை தாக்கியழித்தனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் முதன்மைத்துவம் வாய்ந்த யாழ்ப்பாண நகரையும் குடா நாட்டையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது. மேலும் சில நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் முதன்மை நகரம் கிளிநொச்சியையும் பல சிறிய நகரங்களையும் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் 1998 ஆண்டு முதல் புலிகள் தாக்குதல்களைத் தொடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பிம் பல பகுதிகளை மீள் கைப்பற்றிக் கொண்டனர். தொடர் போர்களின் முடிவில் போரியல் முதன்மைத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆனையிரவுத் தளம் 2000 ஆம் ஆண்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் நகரின் எல்லை வரை முன்னேறிய புலிகள் பின்னர் பின்வாங்கி முகமாலையில் தமது முன்னரங்க நிலைகளை அமைத்துக் கொண்டனர். 2001 போர் நிறுத்தம் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களில் பின்னணியில் புலிகள் இயக்கம் தமது அரசியல் இராணுவ அரசியல் அணுகுமுறையில் மாற்றங்களைச் செய்தனர். தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்க கூடிய தேவைகளை நிறைவு செய்யக்கூடிய கூட்டாட்சி அமைப்பை ஏற்பதை பரிசீலிக்க முன்வந்தனர். இலங்கை அரசு முன்னரே நோர்வேயை பேச்சுகளை ஆரம்பிக்க வருமாறு அழைத்திருந்தாலும் அதுவரை போரை நிறுத்துவதற்கு அவர்களால் முடியாமல் போனது. டிசம்பர் 2001 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று பிரதமரானதைத் தொடர்ந்து இரணுவத்தினரும் புலிகளும் போர் நிறுத்தமொன்றை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசும் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன. இதன் ஒரு அங்கமாக, போர் நிறுத்தத்தை கண்கானிக்க நோர்வே தலைமையில் ஏனைய நோர்டிக் நாடுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டது. வெளிநாடுகளில் நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2003 ஆம் ஆண்டளவில் பேச்சு வார்த்தைகளில் முறுகள் நிலை ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் தெற்கிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இலங்கை பிரதமாரக இருந்த ரணில் விக்ரமசிங்காவையும் அவரது அரசையும் புலிகள் மீது மென்மையான் அணுமுறையை கையாள்கிறார்கள் எனக் குற்றம் சாட்டி ஆட்சியைக் கலைத்தார். எனினும் இக்காலப்பகுதியில் பாரிய போர் நடவடிக்கைகள் நடைபெறவில்லை. ஈழப் போர் IV முதன்மைக் கட்டுரை: நான்காம் ஈழப்போர் 2005 இலங்கை அதிபர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச புலிகள் மீதான கடும் போக்கையும் ரணில் விக்ரமசிங்க பேச்சுக்களை மீளத் தொடங்குவதாக அறிவித்து போட்டியிட்டனர். புலிகள் இத்தேர்தலை புறக்கணிக்குமாறு வட கிழக்குத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். வாக்களிப்பில் இருந்து தடுத்தனர். தேர்தலில் மகிந்த ராஜபக்ச சிறியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரும்பான்மையான தமிழர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்திருப்பார்கள் எனக் கருதப்படுவதால் புலிகள் தேர்தலை புறக்கணித்தமை மகிந்தவின் வெற்றிக்கு வித்திட்டது எனக் கூறப்படுகிறது. புலிகளின் உள் கட்டமைப்பு தொடக்கத்தில் சிறிய கரந்தடி இராணுவக் குழுவாக செயற்பட்டு வந்த விடுதலைப் புலிகள் இன்று வளர்ச்சியடைந்து முழுமையான இராணுவமாக காணப்படுகின்றனர். புலிகள் அமைப்பு இராணுவப் பிரிவு அரசியல் பிரிவு என இரண்டு முக்கியப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவையிரண்டுக்கும் கீழ் பல உட்பிரிவுகளும் காணப்படுகின்றன. இவையனைத்தும் பிரபாகரன் தலைமையிலான மையத் தலைமையகத்தால் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றன. அரசியல்துறை படைத்துறை முதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் படையணிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப் பிரிவானது பின்வரும் தனிப்பட்ட பிரிவுகளைத் கொண்டுள்ளது. இவையனைத்தும் நேரடியாக மத்திய தலைமையகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. தரைப்புலிகள் - புலிகளின் தரைப்படை பல சிறிய படையணிகளாக பிரித்து நிர்வகிக்கப்படுகிறது. பெண்புலிகள் கடற்புலிகள் - கடற்சார் போர் மற்றும் கடல் சார் போரியல் உதவிகளைச் செய்யும் அணி. ஈரூடகப் படையணி - தரையிலும் கடலிலும் போரிடக்கூடிய சிறப்பு அணியாகும். வான்புலிகள் - இது வான்கலங்களைக் கொண்ட அணியாகும் இதில் சில இலகு வகை விமானங்கள் காணப்படுகின்றன. கரும்புலிகள் - சிறப்பு தற்கொலைத் தாக்குதல் அணி. சிறப்புப் படையணிகள் வேவுப்புலிகள் - உளவுத்துறையாகும், இது உலகம் முழுவதும் செயற்பட்டு வருகிறது விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவு படைத்துறை அதிகார படிநிலை விடுதலைப் புலிகள் அமைப்பில் தொடக்கத்தில் படைத்துறை அதிகார படிநிலை காணப்படவில்லை. பொதுவாக வீரச்சாவின் பின்னரே பதவிகள் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் புலிகளின் வளர்ச்சியுடன் படிப்படியாக இந்நிலைமை மாறி இன்று படைதுறை அதிகாரப் படிநிலையொன்று உருவாகியுள்ளது. விடுதலைப் புலிகளிடம் மிக இறுக்கமான படைத்துறை அதிகார படிநிலை இன்னும் ஏற்படவில்லையெனினும் ஏனைய விடுதலை இயக்கங்களோடு ஒப்பி்டும் போது சிறந்த அதிகார படிநிலை காணப்படுகிறது. அமைப்பில் கீழ் மட்டத்தில் இணையும் போராளி ஒருவர் ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது சாத்தியமானதாகும். இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு இதற்கு விதிவிலக்காக கருதப்படுகிறது. மாவீரர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களுடன் இணைந்து போரிட்டு இறந்த எல்லைப்படையினர் மற்றும் ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாவீரர்கள் எனப்படுகின்றனர். தமிழீழ விடுதலைக்காக போரிட்டு இறந்த ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளால் மாவீரர்களாக கருதப்படுவதில்லை. புலிகள் அமைப்பின் முதல் மாவீரர் சங்கர் ஆவார். இவர் சுதுமலையில் படையினரின் சுற்றிவளைப்பில் அகப்பட்டு சயனைட் உண்டு மரணமானார். நவம்பர் 20, 2006 வரையில் 18,742 பேர் மாவீரர்களாகியுள்ளனர். பெண் புலிகள் தமிழீழ விடுதலைப்புலிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல பொறுப்புகளில் இருந்து போராடினர். அவர்களில் 1991 ஆம் ஆண்டு தனது 19 ஆம் வயதில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழினி என்ற வீர மங்கை 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் திகதி தனது கடைசி நாளில் புற்று நோய்க்கு பலியானார். கொள்கைகள் முதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகளின் கொள்கைகள் தன்னாட்சி மரபுவழித் தாயகம் தமிழ்த் தேசியம் இயக்க ஒழுக்கம் சாதிபேதமற்ற சமூகம் சம பெண் உரிமைகள் சமய சார்பின்மை தனித்துவமான சமவுடமை தற்போதையநிலை 16 அக்டோபர் 2014 - ஐக்கிய ஐரோப்பிய கூட்டமைப்பு விடுதலை புலிகளின் மீதான தனது தடையை நீக்கியது புலிகள் நோக்கி விமர்சனங்கள் முதன்மைக் கட்டுரை: விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகள், தலைமை, கட்டமைப்பு, வழிமுறைகள், மற்றும் அவர்களின் நடவடிக்கைகளின் விளைவுகள் தொடர்பாக விமர்சனங்கள் பலதரப்பட்டோரால், பல தளங்களில் இருந்து, பல நோக்கங்களுக்காக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமர்சனங்கள் மெதுவான தன்மையில் இருந்து அதி கடுமையான தன்மையும், அவற்றுடன் சேர்ந்த நடவடிக்கைகளையும் கொண்டிருக்கின்றன. யாரால், எந்த தளத்தில் இருந்து, எந்த மைய நோக்கோடு, எந்தவித வேலைத்திட்டத்தோடு இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை கவனிப்பது புலிகள் நோக்கிய விமர்சனங்களை ஆய்வதில் இன்றியமையாதது. புலிகளிடம் விமர்சனங்களை உள்வாங்க தகுந்த கட்டமைப்பு இல்லை புலிகள் அடிப்படை தனிமனித உரிமைகளைப் பேணுவோம் என்று உறுதி தரவில்லை புலிகள் பேச்சு, ஊடக, வெளிப்பாட்டு சுதந்திரக்கு உறுதி தரவில்லை தம்மக்கள் மீதே உளவழிப் போர் உத்திகளை பயன்படுத்தல் வன்முறையாக சட்டத்தை மீறுதல் ஏக பிரதிநிதித்துவம் நிலைப்பாடு ஜனநாயக விழுமியங்களைப் பேணாமை இறுக்கமான மூடிய கட்டமைப்பு பாசிசப் போக்கு பயங்கரவாத செயற்பாடுகள் சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்தல் கட்டாய ஆள் சேர்ப்பு தமிழ் இனவாதத்தை ஊக்குவித்தல் முஸ்லீம்களின், சிங்களவர்களின் கட்டாய வெளியேற்றம் பண்பாட்டு கட்டுப்பாடுகள் இவ்வாறன விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் புலிகள் தமிழர்களின் ஒரு தேசிய அமைப்பாகவே காணப்படுகின்றனர் மேற்கோள்கள் மேலும் படிக்க Balasingham, Anton. (2004) 'War and Peace - Armed Struggle and Peace Efforts of Liberation Tigers', Fairmax Publishing Ltd, Balasingham, Adele. (2003) The Will to Freedom - An Inside View of Tamil Resistance, Fairmax Publishing Ltd, 2nd ed. Narayan Swamy, M. R. (2002) Tigers of Lanka: from Boys to Guerrillas, Konark Publishers; 3rd ed. Pratap, Anita. (2001) Island of Blood: Frontline Reports From Sri Lanka, Afghanistan and Other South Asian Flashpoints. Penguin Books, de Votta, Neil. (2004) Blowback: Linguistic Nationalism, Institutional Decay, and Ethnic Conflict in Sri Lanka. Stanford University Press, S. J. Tambiah. (1986). Sri Lanka: ethnic fratricide and the dismantling of democracy. Chicago: The University of Chicago Press. K.Arivazhagan. (2008). Tamil National conflicts with Indian Concept. Free Lance Essay explain the Tamil National Concept. மகா.தமிழ்ப் பிரபாகரன். 2013. புலித்தடம் தேடி - ரத்த ஈழத்தில் 25 நாட்கள் (2009 போருக்கு பிந்தைய இலங்கையின் கோரமுகம்) , விகடன் பிரசுரம் வெளி இணைப்புகள் விடுதலைப் புலிகள் ஆதரவு தளங்கள் http://www.verkal.com/ Tamilnet Pro Rebel Website Tamil Eelam News Tamil Eelam news site இலங்கை அரசு ஆதரவுத் தளங்கள் Humanitarian Operation – Factual Analysis, July 2006 – May 2009 A report on strength and impact of LTTE from Sri Lanka Ministry of Defense Humanitarian Operation timeline, 1981–2009 The history of Sri Lankan armed forces operations and area controlled by LTTE Sri Lanka Ministry of Defence LTTE in Brief An overview of LTTE by Sri Lanka Ministry of Defense பன்னாட்டு அமைப்புகள் An analysis of Liberation Tigers of Tamil Eelam organization and operations by Federation of American Scientists Sri Lankan Tamil Diaspora After LTTE Relationship between LTTE and the Tamil diaspora, and consequences of LTTE defeat, by International Crisis Group Background information on the Tamil Tigers by Council on Foreign Relations Overview of Liberation Tigers of Tamil Eelam by Anti-Defamation League Funding the "Final War" A மனித உரிமைகள் கண்காணிப்பகம் report on LTTE's fund raising strategies Trapped and Mistreated Human rights violations of LTTE, a மனித உரிமைகள் கண்காணிப்பகம் report பன்னாட்டு ஊடகங்கள் Sri Lankan Civilians Trapped by Tamil Tigers 'Last Stand' Article appeared on The Christian Science Monitor, 3 May 2009 Guerrilla Tactics – How the Tamil Tigers Were Beaten in an 'Unwinnable' War Article appeared on தி டைம்ஸ், 19 May 2009 Rise and Fall of the LTTE – An Overview A Sri Lanka Guardian article on characteristics of LTTE தீவிரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டவை விடுதலை இயக்கங்கள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புகள்
4898
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D
தமிழீழம்
தமிழீழம் அல்லது தமிழ் ஈழம் (Tamil Eelam, ) எனப்படுவது இலங்கைத் தமிழர் தமது தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களையும் புத்தளம் மாவட்டத்தையும் உள்ளடக்கிய நிலப்பகுதியை குறிப்பதாகும். தமிழீழம் தங்களது தேசியமாக தமிழர்களாலும், அவர்களது அரசியல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. இத்தேசிய கோரிக்கை, இலங்கையின் மக்கட் தொகையில் பெரும்பான்மை இனமாக உள்ள சிங்களவரை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்களால் மேற்கொள்ளப்பட்ட பெருந்தேசியவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஏற்பட்ட உணர்வாகும். தமிழீழக் கோரிக்கை 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நிலைப்பாடாக முன்வைக்கப்பட்டு, அறுதிப்பெரும்பான்மைவாக்கினை பெற்று தமிழ் தேசிய இனத்தின் ஆதரவினை இது பெற்றது. மீண்டும் 2003 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போதும் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மையான ஆதரவினை இது பெற்றுள்ளது. பெயர் தோற்றம் முதலில்‌ “ஈழத்‌ தமிழகம்‌" என்ற சொல்தான்‌ வழக்கில்‌ இருந்தது. ஈழ தேசியப்பண் பாடிய பரமஹம்ச தாசர், "வாழ்க "ஈழத்‌ தமிழகம்‌" வாழ்க இனிது வாழ்கவே!" என்று பாடினார்‌. பிறகு "தமிழிலங்கை" என்ற சொல்‌லும்‌ வழங்கப்பட்டது. 1960ஆம்‌ ஆண்டில்‌ பச்சையப்பன்‌ கல்லூரியில்‌ கவிஞர்‌ காசி ஆனந்தன் படித்தபோது சி. பா. ஆதித்தனார். அவர்களின்‌ தொடர்பு. ஏற்பட்டது. அப்போது அவரைப்‌ பற்றி எழுதிய பாடலில்‌ இச்சொல்லைப்‌ பயன்படுத்தினார்‌. "அலைகடலுக்கு அப்பாலும்‌ "தமிழிலங்கை" மண்ணில்‌ அரசமைக்க வழி சொன்னான்‌ அவனன்றோ தலைவன்‌" 1972ஆம்‌ ஆண்டு, மே மாதம்‌, 19ஆம்‌ நாள்‌ மட்டக்களப்பில்‌ தமிழர்‌ கூட்டணி அமைப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டின்‌ பொறுப்பைக்‌ கவிஞர்‌ காசி ஆனந்தன்‌ ஏற்றிருந்தார்‌. மாநாட்டு மேடையில்‌ கட்டப்பட்டிருந்த பதாகையில், ""தமிழீழம்‌" தமிழர்‌ தாகம்‌" எனப்‌ பெரிதாக எழுதிக்‌ கட்டியிருந்தார்‌, மாநாட்டில்‌ கலந்துகொண்ட தலைவர்களையும்‌ மக்களையும்‌ இச்‌ சொற்றொடர்‌ மிகவும்‌ கவர்ந்தது. மக்களிடையே "தமிழீழம்‌" என்ற சொல்‌ நாளடைவில்‌ பரவி நிலைத்தது. சுயநிர்ணய உரிமைப் போர் தமிழீழத்தின் சுயநிர்ணய உரிமை அல்லது தனிநாட்டுப் பிரிவினையை வேண்டி 30 ஆண்டுகளாக இலங்கையில் உள்நாட்டுப் போராக, ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்றது. அரசியல் ரீதியான கோரிக்கைகளும், சாத்வீகப் போராட்டங்களும் 1956-ஆம் ஆண்டளவிலேயே தொடங்கிவிட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் ஆயுதப் போராட்டம் இந்திய நலன்களுக்கும், மேலாதிக்க சக்திகளுக்கும் சார்பாக இருத்தல் தொடர்பான உட்சந்தேகங்கள், அதிகாரப்போட்டிகள், சகோதரக் கொன்றொழிப்புக்கள் போன்ற நிகழ்வுகளைத்தொடர்ந்து இப்போராட்டத்தை தொடக்கிய, கொண்டு நடத்திய தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல அழித்தொழிக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும் போக, அவற்றுள் வலுவான இயக்கமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே நீண்ட காலத்துக்கு தமிழீழ''' விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை நடத்திவந்தது. மே 2009 வரை தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தனியான காவல் துறை, நீதித்துறை, அரசியல் அமைப்புக்கள், இராணுவம், வைப்பகம், பொருளாதாரக் கட்டுமானங்கள், திட்டமிடல், வரி போன்றவற்றோடு பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத தனித்தேசமாகவே இயங்கிவந்தது. இப்போராளிக்குழுவுடன் தமது முழுமையான உடன்பாட்டினை உறுதிப்படுத்திக்கொண்டு 2003ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல், மற்றும் 2006 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி மிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களது வாக்குகளைப் பெற்றது. சமாதான நடவடிக்கைகளும் இலங்கை அரசின் வெளியேற்றமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசின் உதவியுடன் மாசி 2002இல் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை நடப்பில் வந்தது. பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு சனவரி 2, 2008 அன்று அறிவித்ததுColombo to annul CFA. அரசியல் அமைப்பு தமிழீழம் எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாயகப்பிரதேசமாக கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர் தமிழீழம். தமிழீழம் ஓர் எண்ணக்கரு. தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வந்தார்கள். இந்த அரசாங்கம் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படவில்லை. தமிழீழத்தில் முஸ்லீம்கள் தமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை வாழ் வடக்கு, கிழக்கு முசுலிம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முசுலிம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர். யாழ் மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் 90களில் அவர்களைத் திடீர் கட்டளையின் கீழ் 24 மணி நேரத்தினுள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறுமாறு பணித்தனர். இந்நிகழ்வு தமிழீழப் போராட்ட வரலாற்றிலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்றிலும் அழிக்கமுடியாத ஒரு கறையாகக் கணிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பின்னர் அந்நிகழ்வு மட்டில் முசுலீம்களிடம் வருத்தம் தெரிவித்தார். யாழ்குடா நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 இலட்சம் தமிழர்களுக்கு மீள்குடியேற்றம் வழங்குவதுடன் சிங்கள் அரசு தன் இராணுவத்தையும் இப்பகுதிகளில் இருந்து விலக்கிக் கொண்டால் தான் வெளியேற்றப்பட்ட முசுலீம் மக்களை மீண்டும் அப்பகுதிகளில் குடியேற அனுமதிப்போம் என்றும் கூறியிருந்தார். தமிழீழத்தில் சிங்களவர் ஈழப்போராட்டத்தின் முன்னர் தமிழீழப் பிரதேசங்களில் அங்காங்கே பல சிங்களக் குடும்பங்கள் வசித்து வந்தன. போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் இருந்து பெரும்பாலான சிங்களப் பொதுமக்கள் வெளியேறி விட்டார்கள். தமிழர்களின் தமிழீழத் தாயகக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்குடன் இலங்கை அரசு பல சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர். இவற்றுள் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் மணலாற்றுச் சிங்களக் குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. கிழக்கு மாகாணத்தில் தார்மீக ரீதியாகவும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களினாலும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான சிங்களவர்களே வசிக்கின்றார்கள். குறிப்பாக தமிழீழத்தின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் மூன்றில் ஒரு பங்கு சிங்கள மக்களே வசிக்கின்றார்கள். தமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை இந்தியாவில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருவிக்கப்பட்ட இந்தியத் தமிழ் மக்களை மலையக தமிழர் அல்லது இலங்கையின் இந்தியத் தமிழர் என்று அழைப்பர். இவர்களில் கணிசமானவர்கள் வடக்கு - கிழக்கில் பல்வேறு காலகட்டங்களில் குடியமர்ந்தனர். பொதுவாக, வசதி படைத்த இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் கூலி வேலை செய்வதே இவர்களின் முதன்மைத் தொழில் மார்க்கமாக இருந்தது. இந்நிலை இன்று பெரும்பாலும் மாறி வருகின்றது. சமூக அமைப்பு தமிழீழச் சமூகம் ஒரு சாதிய படிநிலை அடுக்கமைவு கொண்ட சமூகம். வெள்ளாளர் எனப்படும் பெரும்பான்மை வேளாண்மை நில உடமைச் சமூகமே ஆதிக்கமிக்க சாதியாகும். பிராமணர்களிடம் ஆதிக்கமிக்க சாதியாகத் திகழக்கூடிய அளவுக்குக் சனத்தொகை இல்லை. தாழ்த்தப்பட்டோர் சமூகத்தின் தொடர் போராட்டம் காரணமாகவும், ஈழப்போராட்டம் காரணமாகவும் சாதிய அமைப்பு பெரும்பாலும் பலம் இழந்து இருக்கின்றது. எனினும் திருமணத்தின் ஊடாக தொடர்ந்து சாதிய அமைப்புப் பேணப்பட்டே வருகின்றது. தமிழீழ மொழிகள் தமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்) பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. ஆங்கிலம் உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம் பிரதான வெளித் தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்ப்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும்(?) மேலும், புலம்பெயர் தமிழர்கள் பன்மொழித் தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்(?). தமிழீழத்தில் சமயங்கள் தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ இந்துக்கள் ஆவர். முருகன், ஐயனார், சிவன், அம்மன், பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர். தமிழர்களில் கணிசமான தொகையினர் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி, காலனித்துவ அரச சலுகைகள் காரணமாகவோ சமயம் மாறியவர்கள் ஆவர். ஈழப் போராட்டத்துக்கான தமிழ்க் கிறித்தவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் இஸ்லாம் மற்றும் பௌத்தம், முசுலீம் மற்றும் சிங்கள மக்களால் பின்பற்றப்படுகின்றன. கல்வி தமிழீழ மக்கள் கல்விக்கு மிக முக்கியத்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம், மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் பல்கலைக்கழகங்கள் ஆகும். பொருளாதாரம் தமிழீழ மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே பிரதானமாக மேற்கொள்கின்றனர். ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முக்கியமாகின்றது. இங்குப் பொருள் உற்பத்தித் துறை, உயர் தொழிநுட்பத் துறை போன்றவை மந்தமாகவே பங்களிக்கின்றன. உலகமயமாதல் நவீன அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்துவருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை உலகமயமாதல் என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம், புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு உணர்த்தியது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், நிகழும் அரசியல் திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமயமாதலின் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முகப் பண்பாடு, பல் சமய, திறந்த சந்தை உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்திகொள்ளப்போகின்றார்கள் என்பதுவே தமிழீழ மக்களின் சவாலாகும். தமிழீழ மாவட்டங்கள் தமிழீழம் 9 மாவட்டங்களைக் கொண்டது. அவை: யாழ்ப்பாணம் (சப்த தீவுகள் உட்பட) மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா திருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை புத்தளம் தமிழீழ தேசிய சின்னங்கள் இவற்றையும் பார்க்க ஈழப் போர் நாடு கடந்த தமிழீழ அரசு வடக்கு கிழக்கு மாகாண சபை இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் ஈழ இயக்கங்கள் குறிப்புகள் துணை நூல்கள் சி. புஸ்பராஜா. 2003. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம். பதிப்பு: அடையாளம். Balasingham, Anton. 2004. War and Peace – Armed Struggle and Peace Efforts of Liberation Tigers, Fairmax Publishing Ltd, S. J. Tambiah. (1986). Sri Lanka: ethnic fratricide and the dismantling of democracy''. Chicago: The University of Chicago Press. மகா.தமிழ்ப் பிரபாகரன். 2013. | புலித்தடம் தேடி - ரத்த ஈழத்தில் 25 நாட்கள் (2009 போருக்கு பிந்தைய இலங்கையின் கோரமுகம்) , விகடன் பிரசுரம் வெளி இணைப்புக்கள் Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka Tamil Eelam – a De Facto State Battle for Tamil Eelam (5 volumes) தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழ கட்டுமான வலைத்தளங்கள் தமிழீழ தளம் தமிழீழ விளையாட்டுத்துறை பொருண்மிய மதியுரையகம் தமிழீழ வானொலி மற்றும் புலிகளின் குரல் தமிழீழ வரைபடங்கள் ஈழ வரைபடங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்
4905
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
இரசினிகாந்து
சிவாசி ராவ் கெயிக்வாட் (பிறப்பு: திசம்பர் 12, 1950; Shivaji Rao Gaekwad; மராட்டி: रजनीकांत/शिवाजीराव गायकवाड, சிவாசிராவ் காயகவாடு) என்பவர் இரசினிகாந்து (RajiniKanth) என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் தொடக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். இவருடைய நேயர்கள் (இரசிகர்கள்) இவரைத் தலைவர் என்றும் "சூப்பர் சுடார்" என்றும் அழைக்கின்றனர். 2007 ஆம் ஆண்டில் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாசி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். இதன்மூலம் ஆசியாவிலேயே நடிகர் சாக்கி சான்-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார். இரசினிகாந்து ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டுமுறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார்.சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். நடிப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகராக மட்டுமின்றி ஆன்மீகவாதியாகவும், திராவிட அரசியல்களில் ஆளுமையாகவும் இருந்துவருகிறார். 2004 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருதும், 2016 ஆம் ஆண்டு கலைகளில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதத்தில் இவருக்கு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூசண் விருதும் வழங்கி கௌரவப்படுத்தியது. இந்தியத் திரைப்படத்துறையின் சிறந்த ஆளுமைக்கான விருது 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டிற்கான தலைசிறந்த நடிகருக்கான தாதாசாகெப் பால்கே விருது இரசினிகாந்திற்கு வழங்கப்படுவதாக 1 ஏப்ரல் 2021 அன்று அறிவிக்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கை பிறப்பு இரசினிகாந்து திசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு பெங்களூர், மைசூர் (தற்போது கருநாடகம்) இந்தியாவில் பிறந்தார். ராமோசி ராவ் காயக்வாடுக்கும் (கிருட்டிணகிரி அருகே உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்), ரமாபாய்க்கும் (கோவை எல்லையில் பிறந்தவர்) நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் மராத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரின் தந்தை காவலராகப் பணிபுரிந்தவர்.தாய் குடும்பத் தலைவியாக இருந்தார். இவரின் இயற்பெயர் சிவாசி இராவ் கைக்வாடு ஆகும். மராட்டியப் பேரரசர் சிவாசி பேரரசரின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. வீட்டில் மராத்திய மொழியும் வெளியில் கன்னடமும் பேசி வளர்ந்தார். இரசினிகாந்தின் முன்னோர்கள் மகாராட்டிரம் மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள மாவதி கடெபதாரிலும் தமிழ்நாடு, கிருட்டிணகிரி மாவட்டத்திலுள்ள நொச்சிக்குப்பத்திலும் வாழ்ந்தனர். இவருக்கு சத்ய நாராயண ராவ், நாகேசுவர ராவ் எனும் இரு மூத்த சகோதரர்களும், அசுவத் பாலுபாய் எனும் மூத்த சகோதரியும் உள்ளனர். 1956 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பணிநிறைவிற்குப் பின் இவரது குடும்பம் பெங்களூர் சென்று அனுமானந்தா நகரில் வீடு கட்டி குடியேறினர். ஒண்பது வயதாக இருக்கும் போது தனது தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட இரசினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது. நடத்துனராக ஆரம்பகாலத்தில் சிவாசி அலுவலக உதவியாளராகவும், தச்சராகவும் வேலை பார்த்தார். ஓர் இடத்தில் மூட்டை தூக்கும் வேலை பார்த்தார். இதற்கு சம்பளமாக ஒரு மூட்டைக்கு 10 பைசா கொடுக்கப்பட்டது. பின்னர் பெங்களூர் போக்குவரத்து சேவைத் தேர்வு எழுதி நடத்துனருக்கான உரிமம் பெற்றார். 19 மார்ச் 1970 அன்று ஓட்டுநர் ராச பகதூருடன் பணியில் சேர்ந்தார். இவர்களது பணி நேரம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆகும். பணி முடிந்த பிறகு மாலையில் அனுமந்த நகரில் இராச பகதூர் வீட்டிற்கு சிவாசி செல்வார். பெங்களூர் போக்குவரத்து சேவையால் நடத்தப்படும் நாடகங்களுக்கு இருவரும் ஒத்திகை பார்ப்பர். ஒத்திகை சாம்ராசபேட்டை காவல் நிலையத்திற்கு அடுத்துள்ள மண்டபத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 வரை நடக்கும். எப்போதும் திரைப்படங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பர். ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் பார்ப்பர். சிவாசிக்கு சிவாசி கணேசன், இராச்சுகுமார் மற்றும் எம்.சி.ஆர். நடித்த படங்கள் பிடிக்கும். அப்படக் காட்சிகளில் அவர்களைப் போல் சிவாசி நடித்துக் காண்பிப்பார். அப்போது 25க்கும் மேற்பட்ட நாடகங்களில் சிவாசி நடித்து இருந்தார். அப்போது இவருடன் இருந்த நண்பர்கள், நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இவர் ஏன் திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்று கூறினர். சிவாசிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் யாரிடமும் உதவி கேட்பதையும் விரும்பியதில்லை. அவர் உருவத்தில் அழகானவரும் கிடையாது. அவருக்குப் பின்புலமும் எதுவும் கிடையாது. நான் நடத்துனர் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டால் யாராவது வாய்ப்புக் கொடுப்பார்களா என்ற எண்ணம் மனதில் ஓடியது. பகதூரும் சிவாசியின் மற்ற நண்பர்களும் அந்நேரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேருமாறு அவரை அறிவுறுத்தினர். ஒருவேளை திரைப்படத்துறையில் சேர முடியாவிட்டால் தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் அரசாங்க நடத்துனர் பணியை விடுவதற்கு சிவாசிக்கு விருப்பம் இல்லை. எனவே பணியிலிருந்து சாதாரண விடுப்பும் பின்னர் அங்கீகரிக்கப்படாத விடுப்பும் எடுத்தார். கே. பாலசந்தர் தன்னுடைய மேசர் சந்திரகாந்த் படத்தில் ஏ.வி.எம். இராசனின் கதாபாத்திரப் பெயரான இரசினிகாந்தை இவருக்குச் சூட்டினார். இப்பெயருக்கு 'இரவின் நிறம்' என்று பொருள். குடும்பம் 16 பெப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். ஐசுவர்யா, சௌந்தர்யா இரசினிகாந்து ஆகியோர் இரு மகள்கள் ஆவார். இவருடைய மூத்த மகள் ஐசுவர்யா, 2004 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகரான தனுசை மணந்தார். செப்டம்பர் மூன்றாம் தேதி 2010 ஆம் ஆண்டு அன்று சௌந்தர்யா, அசுவின் ராம்குமார் என்ற தொழிலதிபரை மணந்தார். தற்பொழுது இவர்களுக்கு இடையே மணமுறிவு ஏற்பட்டது. பார்வைகள் இரசினிகாந்து ஆன்மீகத்தைப் பின்பற்றுபவர். இவர் தியானமும் செய்யக்கூடியவர். இவர் எப்போதாவது இமயமலைக்கு யாத்திரை செல்கிறார். இவர் இராமகிருட்டிண பரமகம்சா, சுவாமி சச்சிதானந்தா, இராகவேந்திரா சுவாமி, மகாவதார் பாபாச்சி, மற்றும் இரமண மகரிசி ஆகியோரை தன் விருப்பமான ஆன்மீகத் தலைவர்கள் எனக் குறிப்பிடுகிறார். அறப்பணி இரசினிகாந்து: த டெஃபனிட்டிவ் பயோக்ராபி, புத்தகத்தை எழுதிய நாமன் ராமச்சந்திரனின் கூற்றுப்படி ரஜினிகாந்தின் பெரும்பாலான மனிதநேய நடவடிக்கைகள் வெளியிடப்படுவதில்லை. ஏனென்றால் அவர் அதை வெளியிட விரும்புவதில்லை. 1980 களில், மூடநம்பிக்கைகள் பெரும்பான்மையான மக்களை கண்களை நன்கொடை செய்வதிலிருந்து தடுத்தபோது, இரசினிகாந்து தன் கண்களைத் தானம் செய்தார். தொலைக்காட்சி மற்றும் பொது இடப் பேச்சுகளால் கண் தானத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். 2011 இல், காந்தியவாதி அன்னா ஹசாரே தலைமையிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கான அவரது ஆதரவை இரசினிகாந்து அறிவித்தார். சென்னையிலுள்ள அவரது இராகவேந்திரா கல்யாண மண்டபத்தை ஊழலுக்கு எதிரான இந்தியா உறுப்பினர்களுக்கு அவர்கள் உண்ணாவிரதம் இருக்க இலவசமாக வழங்கினார். ரஜினிகாந்தின் ரசிகர்கள் அடிக்கடி இரத்த தானம் மற்றும் கண் தான முகாம்களை நடத்துகின்றனர், மற்றும் அவரது பிறந்த நாளில் அன்னதானம் செய்கின்றனர். திரைப்படத்துறை திரைப்படங்களில் நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த இரஜினிகாந்து, தன் நண்பர் ராச பகதூரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கை (கே). பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை இரசினிகாந்து நிரூபித்தார். இரசினிகாந்து நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது. 1980களில் இரசினிகாந்து நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகிக்கும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் படம் பெரு வெற்றியைப் பெற்றது. இரசினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும். தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 160 திரைப்படங்களில் இரசினிகாந்து நடித்துள்ளார். ரசிகர்களிடம் வரவேற்பு ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர். ஆரம்ப காலங்கள் (1975–1977) இரசினிகாந்து தனது திரைப்பட வாழ்க்கையைத் தமிழ் திரைப்படமான அபூர்வ ராகங்கள் (1975) மூலம் தொடங்கினார். இரசினிகாந்திற்கு ஸ்ரீவித்யாவின் கொடுமைக்கார கணவராக ஒப்பீட்டளவில் சிறிய பாத்திரத்தை கே. பாலச்சந்தர் கொடுத்தார். நாமன் ராமச்சந்திரனின் கூற்றுப்படி, இரசினிகாந்தின் பாண்டியன் கதாபாத்திரம் முற்றிலும் எதிர்மறையாக இல்லை. பாண்டியன் ஒரு வில்லனாக தோன்றவில்லை; உண்மையில், அவர் ஒரு துறவி போல் தோன்றுகிறார். பாண்டியன் எந்த வில்லத்தனத்தையும் செய்யவில்லை. மாறாக, பைரவி (ஸ்ரீவித்யாவின் கதாபாத்திரம்) பிரசன்னாவுடன் (கமல்ஹாசனின் கதாபாத்திரம்) மகிழ்ச்சியாக இருப்பதை தெரிந்துகொள்ளும் போது அவர் தானாகவே பைரவியிடம் இருந்து விலகி இருக்க ஒப்புக்கொள்கிறார். பாண்டியன் இறந்த உடனேயே நடக்கும் மூன்று விஷயங்கள் இந்தத் திரைப்படம் அவரை ஒரு வில்லனாகப் பார்க்கவில்லை என்பதை நிரூபிக்கின்றன. முதலில், பாண்டியன் இறக்கும்போது, பொதுவாக அனுதாபத்தை வெளிப்படுத்தும் ஒரு பாத்திரத்தின் மரணத்திற்கு இசைக்கப்படுவது போன்ற ஒரு வகையான துக்க இசை ஒலிக்கிறது; இரண்டாவது, அவள் கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒரு விதவையைப்போல பைரவி தன் குங்குமத்தைத் துடைக்கிறார்; மற்றும் மூன்றாவது, பாண்டியனின் இறந்த விரல்கள் ஒரு குறிப்பைப் பிடித்திருப்பதாகக் காணப்படுகிறது. அவரது கடைசி ஆசை ராகமும் மற்றும் தாளமும் இணைவதைப் பார்க்க வேண்டும் என்று அதில் உள்ளது. பாடகி பைரவி மற்றும் மிருதங்கம் வாசிக்கும் பிரசன்னா ஆகியோரின் கச்சேரி பற்றிய தெளிவான குறிப்பு. எனவே, இரசினிகாந்து ஒரு வில்லனாக அறிமுகப்படுத்தவில்லை. இப்படம் வெளியானபோது சர்ச்சைக்குள்ளானது. விமர்சனரீதியாகவும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது. இது அதற்கடுத்த வருடம் நடந்த 23வது தேசியத் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது உட்பட மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. தி இந்து பத்திரிகையின் ஒரு விமர்சனம் இவ்வாறு குறிப்பிட்டது: "புதுமுக நடிகர் இரசினிகாந்து கண்ணியமாகவும் மற்றும் ஈர்க்கும் வகையிலும் நடிக்கிறார்". பின் கதா சங்கமா (ஜனவரி 1976) இவர் நடிப்பில் வெளியானது. இது புட்டன்ன கனகல் தயாரித்த ஒரு சோதனை முயற்சி ஆகும். இந்தப் படம் மூன்று சிறுகதைகளின் ஒரு இணைப்பாக இருந்தது. இவரது அடுத்த படம் அந்துலேனி கதா. இது பாலசந்தரால் இயக்கப்பட்ட ஒரு தெலுங்கு திரைப்படம் ஆகும். தனது சொந்தத் தமிழ் திரைப்படமான அவள் ஒரு தொடர் கதையை (1974) பாலசந்தர் மறு ஆக்கம் செய்தார். இரசினிகாந்து தனது திரைப்பட வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். அடுத்தடுத்த படங்களில், இவர் தொடர்ச்சியான எதிர்மறையான பாத்திரங்களை தொடர்ந்தார். 1977ல், இவர் தெலுங்குப் படமான சிலகம்மா செப்பின்டியில் தனது முதல் முன்னணிப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். இரசினிகாந்து எப்பொழுதும் கே. பாலச்சந்தரை தனது வழிகாட்டியாக குறிப்பிடுகின்றபோதிலும், இவரை மெருகேற்றியவர் எஸ். பி. முத்துராமன் ஆவார். முத்துராமன் முதன்முதலில் "புவனா ஒரு கேள்விக்குறியில்" (1977) சோதனை முயற்சியாக இவரை ஒரு நல்லவராக நடிக்க வைத்தார். இப்படத்தில் இரசினிகாந்து முதல் பாதியில் ஒரு தோல்வியடைந்த காதலன் ஆகவும் மற்றும் இரண்டாவது பாதியில் ஒரு கதாநாயகனாகவும் நடித்தார். இந்தத் திரைப்படத்தின் வெற்றி, 1990கள் வரை 24 திரைப்படங்களுக்கு இருவரையும் ஒன்றாக இணைத்தது. அந்த வருடத்தில் பெரும்பாலான படங்களில் இரசினிகாந்து துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். அவற்றுள் சிலவற்றில் "வில்லனாக" நடித்தார். மொத்தத்தில், அந்த ஆண்டில் வெளியிடப்பட்ட 15 படங்களில் இவர் இருந்தார். இது முந்தைய வருடங்களைவிட மிக அதிகம். பரிசோதனை முயற்சி மற்றும் திருப்புமுனை (1978–1989) 1978ல், இரசினிகாந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் 20 வெவ்வேறு படங்களில் நடித்தார். அந்த ஆண்டில் இவரது முதல் படம் பி. மாதவனின் சங்கர் சலீம் சைமன் ஆகும். இதன்பின்னர் முன்னணி கன்னட நடிகரான விஷ்ணுவர்தனுடன் கில்லாடி கிட்டுவில் நடித்தார். இவரது அடுத்த படமான அண்ணாடாமுல சவாலில் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவுடன் இரண்டாவது முன்னணி நடிகராக நடித்தார். இரசினிகாந்து கன்னடப் படமான சகோதரர சவாலில் தான் நடித்த கதாபாத்திரத்திலேயே மீண்டும் இப்படத்தில் நடித்தார். இவர் பின்னர் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். இது ஒரு சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் என்று கூறப்பட்டது. பிறகு, இவர் முக்கிய எதிர்மறைக் கதாபாத்திரத்தில் தன் 25வது படமான மாத்து தப்பாடமகவில் நடித்தார். எம். பாஸ்கர் இயக்கிய பைரவி, அதே ஆண்டில் வெளியிடப்பட்டது. இதுவே இரசினிகாந்து ஒரு முக்கியக் கதாநாயகனாக நடித்த முதல் தமிழ் படமாகும். இந்தப் படத்தில் தான் இவர் சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் பெற்றார். படத்தின் விநியோகஸ்தர்களில் ஒருவரான எஸ். தாணு, இரசினிகாந்திற்கு 35 அடிக்கும் உயரமான ஒரு கட் அவுட்டை வைத்தார். இவரது அடுத்த படம் இளமை ஊஞ்சலாடுகிறது. இது சி. வி. ஸ்ரீதரால் எழுதப்பட்ட ஒரு நாற்கரக் காதல் கதை ஆகும். கமல்ஹாசன் ஏற்று நடித்த நண்பன் கதாப்பாத்திரத்திற்காக தன் காதலைத் தியாகம் செய்யும் கதாபாத்திரத்தில் இரசினிகாந்து நடித்தார். இந்தத் திரைப்படத்தின் வெற்றி தெலுங்கில் ஸ்ரீதர் இப்படத்தை மறு ஆக்கம் செய்யும்படி தூண்டியது. அப்படம் வயசு பிலிச்சண்டி என்ற பெயரில் வெளியானது. தமிழ்ப் படத்தில் நடித்தவர்களே தெலுங்கிலும் அப்படியே நடித்தனர். இவரது அடுத்த படம் வணக்கத்திற்குரிய காதலியே ஆகும். முதன்முதலில் படத்தில் இவர் தோன்றுவதைக் குறிக்க அறிமுக பாடல் இப்படத்தில் இருந்துதான் ஆரம்பமானது. விரைவில் இவரது அடுத்த படங்களிலும் இந்த ஒரு பாணி பின்பற்றப்பட்டது. அதே காலகட்டத்தில் வெளியான முள்ளும் மலரும் விமர்சன ரீதியாகப் பலரது பாராட்டைப் பெற்றது. ஜெ. மகேந்திரன் இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் திரைக்கதை கல்கி பத்திரிக்கையில் வெளியான முள்ளும் மலரும் நாவலில் இருந்து உருவானது. இது இறுதியாகச் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருதினை வென்றது. தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகளில் இரசினிகாந்துதிற்கு சிறந்த நடிகருக்கான ஒரு சிறப்பு பரிசை வென்றது. இதைத் தொடர்ந்து, மலையாளச் சினிமாவில் கற்பனைத் திரைப்படமான அலாவுதீனும் அற்புத விளக்கும் மூலம் களமிறங்கினார். இது புகழ்பெற்ற அரேபிய இரவுகள் கதையை அடிப்படையாகக் கொண்டதாகும். அதே வருடத்தில், இவர் தர்மயுத்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் இவர் தன் பெற்றோரின் மரணத்திற்கு பழிவாங்கும் ஒரு மனநோயாளியாக நடித்தார். பின்னர் இவர் என். டி. ராமராவுடன் டைகர் படத்தில் நடித்தார். டைகர் முடிந்தபொழுது நான்கு ஆண்டுகளில், நான்கு மொழிகளில் 50 படங்களில் இரசினிகாந்து நடித்திருந்தார். இளமையான பொழுதுபோக்கான நினைத்தாலே இனிக்கும், தமிழ் கன்னட இருமொழிப்படமான ப்ரியா, தெலுங்குப் படமான அம்மா எவருக்கீனா அம்மா மற்றும் உணர்ச்சிமயமான ஆறிலிருந்து அறுபது வரை ஆகியவை இந்தக் காலத்தில் வெளியான வேறு சில பிரபலமான படங்கள் ஆகும். சுஜாதா ரங்கராஜனின் துப்பறியும் நாவலை அடிப்படையாகக் கொண்ட ப்ரியா இந்தியாவுக்கு வெளியே பெரும்பாலும் எடுக்கப்பட்ட இரசினிகாந்தின் முதல் படம் என்ற சிறப்பைப் பெற்றது. இப்படம் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவில் எடுக்கப்பட்டது. இரசினிகாந்து அமிதாப் பச்சன் நடித்த இந்திப் படங்களின் தமிழ் மறு ஆக்கங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பிடத்த மறு ஆக்கங்கள் பில்லா (1980), தீ (1981) மற்றும் மிஸ்டர் பாரத் (1986) ஆகியவை ஆகும். தன் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில், இரசினிகாந்து திடீரென்று நடிப்பதை விட்டு விலக முடிவெடுத்தார், ஆனால் மற்றவர்களின் வற்புறுத்தலின் பேரில் முடிவை மாற்றிக்கொண்டார். பில்லாவில் இரசினிகாந்து இரட்டை வேடத்தில் நடித்தார். இப்படம் வணிக நோக்கில் இரசினிகாந்தின் முதல் வெற்றிப் படமானது. ஸ்ரீதேவியுடன் இவர் இணைந்து நடிப்பது ஜானியிலும் தொடர்ந்தது. ஜானியில் இரசினிகாந்து மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்தார். பின்னர் வணிக ரீதியாக வெற்றிப் படமான முரட்டுக் காளையில் நடித்தார். பில்லாவின் வெற்றி இரசினிகாந்தின் திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இரசினிகாந்து அவ்வளவுதான் முடிந்து விட்டார் என்று கூறிய எதிர்ப்பாளர்களுக்கு பதில் தெரிவிக்கும் வகையில் அமைந்தது. இப்படத்திற்குப் பிறகு இரசினிகாந்து ஒரு முழுமையான ஹீரோவாகப் பார்க்கப்பட்டார். 1981ல், இவர் கன்னடம் மற்றும் மலையாளத்தில் படம்பிடிக்கப்பட்ட கர்ஜனை படத்தில் நடித்தார். இதுவே அந்த இருமொழிகளிலும் இவர் நடித்தக் கடைசிப் படமாகும். இவரது முதல் முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் தில்லு முல்லு ஆகும். இது பாலச்சந்தரால் இயக்கப்பட்டது. அந்த நேரத்தில் இரசினிகாந்து பிரபலமாகிக் கொண்டிருந்த சண்டைப்பட கதாநாயகன் என்ற அச்சை உடைக்க இவர் வணிக ரீதியான பாத்திரங்கள் தவிர மற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டுமென பாலசந்தர் வலுவாகப் பரிந்துரை செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இப்படத்தில் நடிக்க இரசினிகாந்து ஒத்துக்கொண்டார். 1981ல் இவர் தீ படத்திலும் நடித்தார். இது அமிதாப்பச்சன் நடித்த இந்திப்படமான தீவார் (1975) படத்தின் மறு ஆக்கம் ஆகும். இதில் இரசினிகாந்து அமிதாப்பச்சனின் கதாப்பாத்திரத்தில் நடித்தார். 1982ல், இவர் போக்கிரி ராஜா, மூன்று முகம், தனிக்காட்டு ராஜா, புதுக்கவிதை மற்றும் எங்கேயோ கேட்ட குரல் ஆகிய படங்களில் நடித்தார். மூன்று முகம் படத்தில் இரசினிகாந்து முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்தார். 1983 வாக்கில், தெலுங்கு மற்றும் கன்னடம் உட்பட தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் ஆனார். 1983ல், இரசினிகாந்து தன் முதல் இந்திப்படமான அந்தா கனூனில் நடித்தார். இப்படத்தில் இவர் அமிதாப்பச்சன் மற்றும் ஹேம மாலினியுடன் நடித்தார். அந்த நேரத்தில் மிக அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்றாகும். இது தமிழில் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறையின் மறு ஆக்கம் ஆகும். இவரது 1984ம் ஆண்டுப் படமான நான் மகான் அல்ல பாலச்சந்தர் தயாரிக்க முத்துராமனால் இயக்கப்பட்டது. இவர் தன் முதல் கௌரவத் தோற்றத்தில் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்தார். நல்லவனுக்கு நல்லவன் படத்தில் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது. இவர் தன் 100வது படமான ஸ்ரீ ராகவேந்திராவில் இந்துத் துறவி இராகவேந்திர சுவாமிகளாக நடித்தார். 1980களின் பிற்பாதியில், இரசினிகாந்து வணிக ரீதியான வெற்றிப் படங்களான நான் சிகப்பு மனிதன் (1985), படிக்காதவன் (1985), மிஸ்டர் பாரத் (1986), வேலைக்காரன் (1987), குரு சிஷ்யன் (1988) மற்றும் தர்மத்தின் தலைவன் (1988) ஆகியவற்றில் நடித்தார். 1988ல், இவர் தனது ஒரே அமெரிக்கத் திரைப்படமான பிளட்ஸ்டோனில் நடித்தார். இப்படத்தை டுவைட் லிட்டில் இயக்கினார். இப்படத்தில் ஆங்கிலம் பேசும் இந்திய டாக்சி ஓட்டுனராக இரசினிகாந்து நடித்தார். இரசினிகாந்து அந்த தசாப்தத்தின் முடிவில் ராஜாதி ராஜா, சிவா, ராஜா சின்ன ரோஜா மற்றும் மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்தார். இதில் ராஜா சின்ன ரோஜா திரைப்படமானது இயல்பான திரைப்படக் காட்சிகள் மற்றும் அனிமேஷன் காட்சிகளைக் கொண்ட முதல் இந்தியத் திரைப்படம் ஆகும். வணிகரீதியான நட்சத்திர அந்தஸ்து (1990–2001) 1990 வாக்கில், இரசினிகாந்து தன்னை ஒரு வணிகரீதியான நட்சத்திரமாக நிறுவினார். இந்த காலகட்டத்தில் வெளியான அனைத்து படங்களும் வணிகரீதியாக அதிக வெற்றி பெற்றன. இவர் அந்தத் தசாப்தத்தை பணக்காரன் (1990) என்ற ஒரு வெற்றிப்படத்துடன் தொடங்கினார். இது அமிதாப்பச்சனின் லாவரிஸ் (1981) என்ற இந்திப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். இவரது அடுத்த இரு படங்கள் கற்பனை நகைச்சுவைப் படமான அதிசயப் பிறவி (1990) (சிரஞ்சீவியின் யமுடிகி மொகுடு (1988) படத்தின் மறு ஆக்கம்) மற்றும் குடும்ப ட்ராமா படமான தர்மதுரை (1991) ஆகியவை ஆகும். 1991ல், இவர் மணிரத்தினத்தின் தளபதி படத்தில் நடித்தார். இது மகாபாரதத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஆகும். இதில் இவர் மம்மூட்டி உடன் இணைந்து நடித்தார். இரண்டு அறியப்படாத கதாபாத்திரங்களுக்கிடையிலான நட்பைக் இத்திரைப்படம் கையாண்டது. அக்கதாபாத்திரங்கள் இரண்டும் கர்ணன் மற்றும் துரியோதனனை அடிப்படையாகக் கொண்டவையாகும். இப்படம் வெளியிடப்பட்ட போது விமர்சனரீதியான பாராட்டு மற்றும் வெற்றி ஆகிய இரண்டையுமே பெற்றது. அண்ணாமலை (1992) நட்பை மையமாகக் கொண்ட மற்றொரு திரைப்படம் ஆகும். பி. வாசுவால் இயக்கப்பட்ட மன்னன் (1992) கன்னட நடிகர் ராஜ்குமாரின் அனுரக அரலிது (1986) படத்தின் மறு ஆக்கம் ஆகும். இரசினிகாந்து தன் முதல் திரைக்கதையை வள்ளி (1993) படத்திற்காக எழுதினார். இப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்திலும் இவர் நடித்தார். இரசினிகாந்து வானவராயன் என்ற ஊர்த்தலைவர் கதாபாத்திரத்தில் எஜமான் படத்தில் நடித்தார். பின்னர் வெளியான இவரது வீரா (1994) அந்த ஆண்டின் அதிகமான இலாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக அமைந்தது. இவர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் பாட்ஷா (1995) படத்தில் நடித்தார். இப்படம் திரைப்படத்துறையில் வசூல் சாதனை செய்தது. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகிய இருசாராராலும் ஒரு வெற்றிப்படமாகக் கருதப்படுகிறது. இந்தப் படம் அவரை மற்றொரு பிரபல நடிகர் என்ற நிலையிலிருந்து கிட்டத்தட்ட கடவுளின் அவதாரம் என்ற நிலைக்கு வெகுஜனங்களிடையே உயர்த்தியது. தன் நண்பர் மோகன் பாபுவுக்காக பெத்தராயுடு படத்தில் ஒரு கௌரவத் தோற்றத்தில் இரசினிகாந்து நடித்தார். அப்படத்தின் மறு ஆக்க உரிமைகளைப் பெறவும் அவருக்கு உதவினார். அதே ஆண்டில் இவர் இந்திப்படமான அதங்க் ஹி அதங்கில் அமீர் கானுடன் இணைந்து நடித்தார். இதுவே இன்றுவரை முக்கியமான கதாப்பாத்திரத்தில் இந்தியில் இரசினிகாந்து நடித்த கடைசித் திரைப்படம் ஆகும். இவர் பின் பாலசந்தர் தயாரிக்க கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முத்து (1995) திரைப்படத்தில் நடித்தார். இது வணிகரீதியாக வெற்றி பெற்ற மற்றொரு திரைப்படம் ஆகும். இது மோகன்லாலின் வெற்றிபெற்ற மலையாளப் படமான தேன்மாவின் கொம்பதின் மறு ஆக்கம் ஆகும். சப்பானிய மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம் இதுவாகும். இது சப்பானில் முத்து: ஒடோரு மகாராஜா (நடனமாடும் மகாராஜா) என்ற பெயரில் வெளியானது. 1998 ஆம் ஆண்டு சப்பானில் இப்படம் சாதனை அளவாக $1.6 மில்லியன் வசூல் செய்தது. இரசினிகாந்துக்கு பெரிய அளவில் சப்பானிய ரசிகர்கள் இத்திரைப்படத்திற்குப் பின்னர் உருவாயினர். சப்பானில் முத்து திரைப்படம் பெற்ற வெற்றிக்குப் பின் அமெரிக்கச் செய்திப் பத்திரிகையான நியூஸ்வீக் ஒரு 1999ம் ஆண்டு கட்டுரையில் இவ்வாறு எழுதியது "லியோனார்டோ டிகாப்ரியோவை ஜப்பானின் மிகச்சிறந்த இதயத் துடிப்பு என்ற இடத்திலிருந்து இரசினிகாந்து நீக்கிவிட்டார்". 2006ல் சப்பானுக்கு விஜயம் மேற்கொண்டபோது, அப்போதைய இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் இரு நாடுகளுக்கும் இடையேயான நேர்மறை உறவை நியாயப்படுத்தும் வகையில் ஒரு உரையில் சப்பானில்முத்து பெற்ற வெற்றியைப் பற்றிப் பேசினார். இரசினிகாந்து பாக்ய தேபடா என்ற திரைப்படம் மூலம் வங்காள சினிமாவிலும் நுழைந்தார். இத்திரைப்படம் 1995ம் ஆண்டின் இறுதியில் வெளியானது. 1997ன் அருணாச்சலம் மற்றொரு வணிகரீதியான வெற்றிப்படமாக இருந்தது. அந்த ஆயிரம் ஆண்டுகளில் தன் இறுதித் திரைப்படமான படையப்பாவில் (1999) இரசினிகாந்து நடித்தார். இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படக் கதாபாத்திரம் தான் நடிகர் சிவாஜி கணேசன் கடைசியாக நடித்த முக்கியக் கதாபாத்திரமாகும். போராட்டங்கள், எழுச்சி மற்றும் பாராட்டுக்கள் (2002–2010) சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2002ல் பாபா படத்தில் இரசினிகாந்து நடித்தார். இவர் அத்திரைப்படத்திற்குத் திரைக்கதையும் எழுதியிருந்தார். இப்படத்தின் திரைக்கதை ஒரு ரவுடி திருந்துவதைப்போல் அமைக்கப்பட்டிருந்தது. அவர் பின்னர் இந்துத் துறவி மகாவதார் பாபாசியின் மறுபிறப்பு என்று தெரியவருகிறது. அவர் அரசியல் ஊழலுக்கு எதிராகச் சண்டையிடுகிறார். இப்படத்தால் சந்தை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. விநியோகஸ்தர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இரசினிகாந்தே விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களை திருப்பிக் கொடுத்தார். இந்தப் படம் "ரோஜா தன் வாசத்தை இழந்து விட்டது" மற்றும் "தங்கம் இனிமேல் மின்னப்போவதில்லை" ஆகிய கருத்துக்களைப் பெற்றது. இரண்டு ஆண்டுகள் கழித்து, இரசினிகாந்து பி. வாசுவின் சந்திரமுகியில் (2005) நடித்தார். இப்படம் மிக வெற்றிகரமாக ஓடியது. 2007 இல் இது மிக நீண்ட நாட்கள் ஓடிய தமிழ் படம் என்ற சாதனையைப் பதிவு செய்தது. சந்திரமுகி துருக்கிய மொழியிலும் மற்றும் டெர் கெயிஸ்டெர்ஜகெர் என்ற பெயரில் செர்மானிய மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அந்தந்த நாடுகளில் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டு படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிறகு சிவாஜி (2007) திரைப்படம் அந்த ஆண்டின் கோடைகாலத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டபோது இது ஐக்கிய இராச்சியம் மற்றும் தென்னாப்பிரிக்காவில் வெளியான பத்து சிறந்த திரைப்படங்களில் ஒரு திரைப்படமாக ஆனது. இரசினிகாந்து இப்படத்தில் தனது பங்கிற்கு 26 கோடி சம்பளம் பெற்றார். அது ஜாக்கி சானுக்குப் பிறகு ஆசியாவில் இரண்டாவது அதிக சம்பளம் பெற்ற நடிகராக இவரை ஆக்கியது. இவர் மீண்டும் பி. வாசு இயக்கத்தில் குசேலன் படத்தில் நடித்தார். இது மலையாளப் படமான கத பறயும் போலின் மறு ஆக்கம் ஆகும். இது தெலுங்கிலும் ஒரே நேரத்தில் கதாநாயகடு என்ற பெயரில் படமாக்கப்பட்டது. இதில் இவர் இரசினிகாந்தாகவே, ஒரு இந்திய சினிமா நட்சத்திரமாக மற்றும் படத்தின் கதாநாயகனுக்கு ஒரு சிறந்த நண்பராக ஒரு நீட்டிக்கப்பட்ட கௌரவத் தோற்றத்தில் நடித்தார். இரசினிகாந்தின் கூற்றுப்படி, இப்படம் சற்றே இவரது ஆரம்ப வாழ்க்கையை விவரித்தது. எனினும் இந்தப் படம் வணிகரீதியாகச் சரியாகப் போகவில்லை. குசேலன் பட இழப்பைச் சரிசெய்ய இரசினிகாந்தும் தான் பிரமிட் சாய்மீரா பட நிறுவனத்துடன் மீண்டும் பணியாற்றுவேன் என்று கூறினார். இரசினிகாந்து மீண்டும் இயக்குனர் ஷங்கருடன் அறிவியல் புனைகதைத் திரைப்படமான எந்திரனில் பணியாற்றினார். இந்தப் படம் அதுவரை தயாரிக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் தயாரான இந்தியத் திரைப்படம் என்ற சிறப்புடன் 2010ல் உலகளவில் வெளியிடப்பட்டது. இறுதியில் அந்நேரத்தில் இந்தியாவின் இரண்டாவது மிக அதிக வசூல் செய்த படமானது. இந்தப் படத்திற்காக இரசினிகாந்து 45 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். இப்படத்தின் வெற்றி காரணமாக, இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத், சினிமாவின் வியாபாரத்தையும் மற்றும் அதன் வெற்றிக் கதையையும் பகுப்பாய்வு செய்வதற்காக ஒரு வழக்குப் படிப்பாக தற்காலத் திரைப்படத் தொழில்: ஒரு வியாபார முன்னோக்கு என்று அழைக்கப்படும் முதுகலைப் பட்டதாரி தேர்வு மேலாண்மை படிப்பில் இத்திரைப்படத்தைப் பயன்படுத்தியது. இப்படிப்பு முத்து படத்தையும் ஆய்வு செய்யும். உடல்நலக்குறைவு மற்றும் திரும்புதல் (2011–தற்போது) ஜனவரி 2011ல் இரசினிகாந்து ரானா படத்தில் நடிப்பதாக இருந்தது. இப்படம் சவுந்தர்யா ரஜினிகாந்தால் தயாரிக்கப்பட்டு கே.எஸ். ரவிக்குமாரால் இயக்கப்படுவதாக இருந்தது. 29 ஏப்ரல் 2011 அன்று படத்தின் பிரதான புகைப்படம் எடுக்கும்போது, இவர் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு லேசான உணவுவழி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார். இது வாந்தி, நீரிழப்பு மற்றும் சோர்வுக்கு வழிவகுத்தது. இவர் ஒரு நாள் புனித இசபெல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பினார். ஐந்து நாட்கள் கழித்து, மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவருக்கு மூச்சுக்குழல் அழற்சி ஏற்பட்டது கண்டறியப்பட்டது. ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஒரு சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும் இருந்தார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய தேதி குறித்தும் மற்றும் இரசினிகாந்தின் உடல்நலம் சீர்குலைந்து விட்டதாகவும் பல முரண்பட்ட அறிக்கைகள் வெளியாயின. அவரது கடைசி வெளியேற்றத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து, இரசினிகாந்து 16 மே 2011 அன்று ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடர் சுவாச மற்றும் இரைப்பை சிக்கல்களுக்காக அனுமதிக்கப்பட்டார். இரசினிகாந்து நிலையான நிலையில் இருந்தார் மற்றும் சிகிச்சைக்கு நேர்மறையான பதிலை காட்டினார் என்று மருத்துவமனை கூறியது. இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது என்று பரவலாக தகவல்கள் வெளியாயின. இது பின்னர் தனுஷால் மறுக்கப்பட்டது. 21 மே 2011 அன்று, ஐஸ்வர்யா, தான் மற்றும் இரசினிகாந்து மருத்துவமனை வார்டில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். மருத்துவமனை அங்கீகரிக்கப்படாத பார்வையாளர்களைக் கட்டுப்படுத்தியது. இரசினிகாந்தின் சகோதரர், சத்யநாராயண ராவ் கெய்க்வாட், திடீர் உடல்நலக்குறைவானது விரைவான எடை இழப்பு, உணவு மாற்றங்கள், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தலை நிறுத்தியது ஆகியவற்றால் ஏற்பட்ட அழுத்தத்தால் ஏற்பட்டதாகக் கூறினார். ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு 4 நிமிட எண்ணிமப் பதிவு செய்த குரல் செய்தியில் நேயர்களுக்கு உரையாற்றிய பின்னர், இரசினிகாந்து, அமிதாபு பச்சனின் ஆலோசனையின் படி, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு தனது குடும்பத்துடன் 21 மே 2011 அன்று பயணித்தார். அங்கு மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நெப்ரோபதிக்கு மேலும் சிகிச்சை பெறச் சென்றார். மருத்துவமனையில் இரண்டு வாரங்கள் சிகிச்சை பெற்ற பிறகு, இறுதியாக ஜூன் 15, 2011 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிங்கப்பூரில் மீண்டும் தொடர்ந்து இருந்தார். 13 ஜூலை 2011 அன்று சென்னை திரும்பினார். இவர் திரும்பிய பிறகுரானா படத்தை மீண்டும் தொடங்குவதற்கு பல முயற்சிகள் தோல்வியடைந்த போதிலும், இரசினிகாந்து தனது எந்திரன் பாத்திரமான, சிட்டியாக, பாலிவுட் அறிவியல் புனைகதை படமான ரா ஒன்னில் (2011) கௌரவத் தோற்றத்தில் தோன்றினார். நவம்பர் 2011 இல், ரானா கைவிடப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக கோச்சடையன் என்கிற புதிய படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. கோச்சடையன் 2014ல் வெளியானது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. கோச்சடையன், மற்றும் 2012ல் சிவாஜியின் முப்பரிமாண வெளியீடு, ஆகியவை இரசினிகாந்தை உலக சினிமாவின் நான்கு வெவ்வேறு வடிவங்களில் தோன்றிய முதல் இந்திய நடிகராக்கியது. அவ்வடிவங்கள் கருப்பு வெள்ளை, வண்ணம், முப்பரிமாணம் மற்றும் மோஷன் கேப்சர். கோச்சடையன் முடிந்த பிறகு, இரசினிகாந்து கே.எஸ்.ரவிக்குமாருடன் அடுத்த படமான லிங்காவிற்குத் தயாரானார். இவரது பிறந்தநாளான டிசம்பர் 12, 2014 அன்று இந்த படம் வெளியிடப்பட்டது. இருவிதமான விமர்சனங்களையும் பெற்றது. இரசினிகாந்தின் அடுத்த படம் இயக்குனர் பா. ரஞ்சித்தின் கபாலி. இது எஸ். தாணு தயாரிப்பில் ஜூலை 2016ல் வெளியானது. பா. ரஞ்சித்தின் மற்றொரு படமான காலா 2018 ஜூன் 7 ஆம் தேதி தனுஷ் தயாரிப்பில் வெளியானது. எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0 நவம்பர் 29, 2018ல் வெளியாக இருக்கிறது. பாபா பட சர்ச்சை 2002 ஆம் ஆண்டில் வெளியான பாபா படத்தில் இரசினிகாந்து புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றது. இதனால் கொந்தளித்த பாமகவினர் பாபா படம் வெளியான அன்று திரையரங்குகளை அடித்து நொறுக்கினர் மற்றும் படச்சுருளையும் எரித்தனர், இதனால் பாமகவினருக்கும் இரசினிகாந்து ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இரசினிகாந்து ரசிகர்கள் தாக்கப்பட்டனர். இதை மனதில் கொண்டு 2004- ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமகவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்தக் கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளில் தனது ரசிகர்களை அந்த கட்சிக்கு எதிராக வேலை செய்ய உத்தரவிட்டார் இரசினிகாந்து. ஆனால் அந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிலிருந்து இரசினிகாந்து அரசியலில் இருந்து சற்று தள்ளியே இருந்தார். அரசியல் தொடர்பு 1990களில் இரசினிகாந்து நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது முதல்வராக இருந்த ஜெ. ஜெயலலிதாவிற்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றத்தன் காரணங்களுள் ஒன்றாக பரவலாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த தேர்தல்களில், இரசினிகாந்து எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ச.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், இரசினிகாந்து அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார். இரசினிகாந்து 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார். லிங்கா பட இசை வெளியீட்டின் போது "அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால் வருவேன்" எனக் கூறினார். சோ. இராமசாமி போன்ற அரசியல் விமர்சகர்கள் இரசினிகாந்து அவரது புகழ் மற்றும் ரசிகர் தளம் ஆகியவற்றை மட்டுமே வைத்து இந்திய அரசியலில் வெற்றிகரமாக வர சாத்தியம் உள்ளதாகக் கூறினர். 1996 தேர்தலில் இரசினிகாந்தின் தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள இவரது பல ரசிகர்கள் அரசியலில் நுழைவதற்கு, குறிப்பாக மாநில முதல்வர் பதவிக்குப் போட்டியிட அழைப்பு விடுத்தனர். இரசினிகாந்து டிசம்பர் 31, 2017 அன்று தன் அரசியல் வருகையை அறிவித்தார். தான் ஆரம்பிக்கப்போகும் அரசியல் கட்சி 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் தன் கட்சி விலகும் என்றும் கூறினார்.இரசினிகாந்து 2017 திசம்பர் 31 அன்று, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் காலம் குறைவாக இருப்பதால் அதில் போட்டியிடவில்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒரு முடிவெடுத்து சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று அவர் கூறினார். இரசினிகாந்து 2021 சனவரியில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாகவும், இது குறித்து 2020 திசம்பர் 31 ஆம் நாள் அறிவிப்பு வரும் என்று தெரிவித்துள்ளார். புத்தகங்கள் ரஜினி சகாப்தமா? என்ற தலைப்பில் ரஜினியின் அரசியல் வாழ்க்கை குறித்து ஜெ. ராம்கி எழுதிய புத்தகம் 2005ல் வெளியானது ரஜினியின் பஞ்ச் தந்திரம் என்ற தலைப்பில் இவரது படங்களில் உள்ள 30 முத்திரை வசனங்கள் மூலம் மேலாண்மை தத்துவங்களை எடுத்துக்கூறும் புத்தகம். இப்புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. பாட்சாவும் நானும் என்னும் நூலில் இரசினியை சந்தித்தது முதல் இரசினியுடனான சம்பவங்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எழுதியுள்ளார். இரசினி இதில் அபூர்வராகங்கள் முதல் எந்திரன் வரையான இரசினியின் திரைப்பட விமர்சனங்கள் பைம்பொழில் மீரான் என்பவரால் எழுதப்பெற்றுள்ளன. நடித்த திரைப்படங்கள் விருதுகள் இந்திய நடுவண் அரசின் விருதுகள் பத்ம பூஷன் விருது, 2000 பத்ம விபூசன் விருது, 2016 தாதாசாகெப் பால்கே விருது, 2019 தமிழக அரசின் விருதுகள் 1984 ஆம் ஆண்டு கலைமாமணி விருது 1989 ஆம் ஆண்டு எம்.சி. ஆர் விருது பிலிம்பேர் விருதுகள் ஆனந்த விகடன் விருது 2017 ஆம் ஆண்டு கபாலி பட நடிப்புக்காக 'சிறந்த நடிகர்' விருது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Rajinikanth at Bollywood Hungama தமிழ்த் திரைப்பட நடிகர்கள் கலைமாமணி விருது பெற்றவர்கள் வாழும் நபர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் பத்ம விபூசண் விருது பெற்றவர்கள் பத்ம பூசண் விருது பெற்றவர்கள் 1950 பிறப்புகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்
4906
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
கமல்ஹாசன்
கமல்ஹாசன் (Kamal Haasan, பிறப்பு:07 நவம்பர் 1954) ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார். நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பணிக்காக பத்ம பூசண், பத்மசிறீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனிற்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 2019 இல் 60 ஆண்டுகளை திரைத்துறையில் நிறைவுசெய்த இந்திய நடிகர்கள் மிகச்சிலரில் ஒருவரானார். இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக ஜனாதிபதி விருது பெற்றார். இவர் அடிக்கடி வாரணம் விஜய் எனும் இயக்குநரைச் சந்திப்பார். அவர் கமல்ஹாசனின் நடிப்பில் சில திருத்தங்களைச் செய்வார். குழந்தை நட்சத்திரமாக 6 திரைபடங்களில் நடித்துள்ளார். துணை நடண ஆசிரியராக தங்கப்பன் அவர்களிடம் சில திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1973 ஆம் ஆண்டில் கைலாசம் பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படம் இவர் நடித்த முதல் வாலிப வயது திரைப்படம். கன்னியாகுமரி எனும் மலையாள படமே முதன் முதலாக கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படமாகும், இத்திரைப்படதிற்காக முதல் பிலிம்பேர் விருது பெற்றார். தனது 25வது படமான அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து தமிழுக்கான முதல் பிலிம்பேர் விருது வென்றார். 1983 ஆம் ஆண்டில் இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது கிடைத்தது. 1987 இல் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் திரைப்படத்திலும், 1996 இல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 1996 திரைப்படத்திலும் நடித்தார். இந்தத் திரைப்படத்திற்காக இவருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது இந்திய தேசிய விருது கிடைத்தது. இந்த இரு படங்களிலும் இவரின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றுத் தந்தது. 1992 ஆண்டு சிறந்த மாநில மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை தேவர் மகன் படம் பெற்றது, தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசன் தேசிய விருது பெற்றார். இதுவரை 220 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்திருந்தார். 1979 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது. 1990 இல் இந்திய அரசு பத்மசிறீ விருதும், 2014 இல் பத்ம பூசண் விருதும் வழங்கியது. 2016 இல் செவாலியே விருது பெற்றார். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். வாழ்க்கைக் குறிப்பு கமல்ஹாசன் இராமநாதபுரம், பரமக்குடியில் சிறீவைணவ ஐயங்கார் தமிழ்ப் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். தந்தை டி. சீனிவாசன் ஒரு வழக்கறிஞர். தாயார் ராஜலட்சுமி. கமல் குடும்பத்தில் இளையவர். இவரது தமையன்மார்கள் சாருஹாசன் (பி: 1930), சந்திரஹாசன் (பி: 1936) இருவரும் வழக்கறிஞர்கள். சாருகாசன் 1980களில் திரைப்படங்களில் நடித்து வந்தார். சகோதரி நளினி (பி: 1946) ஒரு பரதநாட்டியக் கலைஞர். பரமக்குடியில் ஆரம்பக் கல்வி கற்றார். சகோதரர்களின் உயர் கல்வியைக் கருத்தில் கொண்டு இவர்கள் சென்னைக்கு குடும்பத்துடன் குடியேறினர். கமல்ஹாசன் சென்னை சாந்தோமில் கல்வி கற்றார். தந்தையின் விருப்பப்படி, கமல்ஹாசன் திரைப்படத் துறையிலும், நடனத்துறையிலும் ஈடுபாடு கொண்டார். தாயாரின் மருத்துவர் ஒருவர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியாரின் மனைவிக்கு மருத்துவம் பார்ப்பதற்காக அவரிடம் சென்ற போது கமலையும் தன்னுடன் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தினார். ஏ. வி. மெய்யப்பனின் மகன் எம். சரவணனின் சிபாரிசில் ஏவிஎம் தயாரிப்பான களத்தூர் கண்ணம்மா (1960) திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அரசியல் பிரவேசம் கமல், தான் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தார். அதன்படி, பெப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிவித்தார். அதே கூட்டத்தில் கட்சிக்கான கொடியையும் வெளிட்டு அதனை ஏற்றி வைத்தார். அந்தக் கொடியில் ஆறு கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது போலவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்தது. கொடியின் நடுவில் கருப்பு வண்ணத்தைப் பின்புலமாகக் கொண்டு நடுவில் வெள்ளை நட்சத்திரம் இருக்கும். அதில் மக்கள் நீதி மய்யம் என எழுதியிருக்கும். 13 டிசம்பர் 2020 அன்று, 2021 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான மநீமயின் தேர்தல் பிரச்சாரத்தை கமல் தொடங்கினார், 142 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார் மற்றும் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார்.மநீம தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை, கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் இவர் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். திரைப்படக் குறிப்பு இவர் 2019 ஆம் ஆண்டுவரை 220 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 1960 - தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம் 1962 - மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம் 1976 - தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம் 1977 - வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம் 1977 - கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம் 1981 - இந்தித் திரைப்படங்களில் அறிமுகம் நடித்த திரைப்படங்கள் வெளிவராத படம் தயாரித்த திரைப்படங்கள் குறிப்பு:கமல்ஹாசன் அவர்களின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மூலம் கமல் தயாரித்த மற்றும் தயாரிக்காத பல படங்கள் விநியோகமும் செய்துள்ளது. வெளியாகாத அல்லது பாதியில் கைவிடப்பட்ட திரைப்படங்கள் லேடீஸ் ஒன்லி (இந்தி) (1997) மருதநாயகம் (1997) சபாஷ் நாயுடு (2017) எழுதிய திரைக்கதைகள் 1980 – குரு 1981 – ராஜ பார்வை (திரைக்கதை) 1986 – விக்ரம் (திரைக்கதை) 1989 – இந்திரன் சந்திரன் (தெலுங்கு) 1989 – அபூர்வ சகோதரர்கள் 1990 – மைக்கேல் மதன காமராஜன் 1992 – தேவர் மகன் 1994 – மகாநதி 1994 – மகளிர் மட்டும் 1995 – குருதிப்புனல் (திரைக்கதை) 1999 – பீவி நெ.1 (இந்தி) 1997 – விராசாத் (இந்தி) 1998 – காதலா! காதலா! 2000 – ஹே ராம் 2001 – ஆளவந்தான் 2002 – பஞ்சதந்திரம் 2003 – அன்பே சிவம் 2003 – நள தமயந்தி 2004 – விருமாண்டி 2005 – மும்பை எக்ஸ்பிரஸ் 2005 – ராம்ஜி லண்டன்வாலே (இந்தி) 2008 – தசாவதாரம் 2009 – உன்னைப்போல் ஒருவன் (திரைக்கதை) 2009 – ஈநாடு (தெலுங்கு) (திரைக்கதை) 2010 – மன்மதன் அம்பு 2013 – விஸ்வரூபம் 2015 – உத்தம வில்லன் 2015 – தூங்காவனம் (திரைக்கதை) 2018 – விஸ்வரூபம் - 2 இயக்கிய திரைப்படங்கள் 1998 – சாச்சி 420 2000 – ஹே ராம் 2004 – விருமாண்டி 2013 – விஸ்வரூபம் 2018 – விஸ்வரூபம் - 2 1: 1997 – மருதநாயகம் (திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது) 2: 2017 – சபாஷ் நாயுடு (திரைப்படம் பாதியில் கைவிடப்பட்டது) மேலும் பங்காற்றிய திரைத் துறைகள் 2010 – நீல வானம் – மன்மதன் அம்பு (பின்னணிப் பாடகர்) ( பாடலாசிரியர்) 2006 – புதுப்பேட்டை (பின்னணிப் பாடகர்) 2004 – மும்பை எக்ஸ்பிரஸ் (பின்னணிப் பாடகர்) 2004 – வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் (பின்னணிப் பாடகர்) 2003 – அன்பே சிவம் (பின்னணிப் பாடகர்) 2003 – நள தமயந்தி (பின்னணிப் பாடகர்) 2000 – ஹே ராம் (சிகையலங்காரம்) 1999 – சிப்பிக்குள்ளே முத்தை – தி பிளாச்ட் இசைக் கொத்து - (பின்னணிக் குரல்) 1998 – சாச்சி 420 (பின்னணிப் பாடகர்: "ஜாகொ கோரி") (கமலாகவே நடித்துள்ளார்) 1996 – உல்லாசம் (பின்னணிப் பாடகர்) 1996 – அவ்வை சண்முகி (பின்னணிப் பாடகர்) 1995 – சதி லீலாவதி (பின்னணிப் பாடகர்) 1992 – தேவர் மகன் (பின்னணிப் பாடகர்) 1987 – நாயகன் (பின்னணிப் பாடகர்) 1985 – ஒக்க ராதா இடரு கிருஷ்னுலு (பின்னணிப் பாடகர்) 1978 - சிகப்பு ரோஜாக்கள்(பின்னணிப் பாடகர்) 1975 – அந்தரங்கம் (பின்னணிப் பாடகர்) 1974 – ஆய்னா (நடனங்கள்) 1985 – ஓ மானே மானே (பின்னணிப் பாடகர்) இதர பங்களிப்புகள் {| class="wikitable sortable" |-  style="background:#ccc; text-align:center;" ! ஆண்டு !! திரைப்படம் !! மொழி !! பங்காற்றியது |- | 1971 || நூற்றுக்கு நூறு|| தமிழ் || உதவி இயக்குநர், துணை நடன இயக்குநர் |- | 1971 || சவாலே சமாளி|| தமிழ் || துணை நடன இயக்குநர் |- | 1971 || சிறீமந்துடு || தெலுங்கு || துணை நடன இயக்குநர் |- | 1971 || அன்னை வேளாங்கண்ணி || தமிழ் || உதவி இயக்குநர், துணை நடன இயக்குநர் |- | 1972 || சங்கே முழங்கு || தமிழ் || துணை நடன இயக்குநர் |- | 1972 || நான் ஏன் பிறந்தேன் || தமிழ் || துணை நடன இயக்குநர் |- | 1972 || நிருதசாலா  || மலையாளம் || துணை நடன இயக்குநர் |- | 1973 || காசி யாத்திரை || தமிழ் || துணை நடன இயக்குநர் |- | 1973 || சூரியகாந்தி || தமிழ் || துணை நடன இயக்குநர் |- | 1974 || வெள்ளிக்கிழமை விரதம் || தமிழ் || துணை நடன இயக்குநர் |- | 1976 || உணர்ச்சிகள் || தமிழ் || உதவி இயக்குநர் |- | 1977 || அவர்கள் || தமிழ் || நடன ஆசிரியர் |- | 1977 || அய்னா  || இந்தி || உதவி இயக்குநர், நடன ஆசிரியர் |- | 1982 || சிம்லா ஸ்பெஷல் || தமிழ் || நடன ஆசிரியர் |- | 1983 || உருவங்கள் மாறலாம் || தமிழ் || நடன ஆசிரியர் |- | 1983 || சணம் டெரி கேசாம் (பாடகன்) || இந்தி || நடன ஆசிரியர் |- | 1988 || ராம்போ 3 || ஆங்கிலம் || உதவி ஒப்பனை |- | 1996 || ஸ்டார் ரெக், பர்ஸ்ட் கான்டாக்ட்  || ஆங்கிலம் || உதவி ஒப்பனை |- | 2000 || ஹேராம் || தமிழ் || நடன ஆசிரியர் |- | 2004 || விருமாண்டி || தமிழ் || நடன ஆசிரியர் |- | 2013 || விஸ்வரூபம் || தமிழ் || நடன ஆசிரியர் |- | 2015 || உத்தம வில்லன் || தமிழ் || நடன ஆசிரியர் |- |2015 || தூங்காவனம் || தமிழ் || ஒப்பனை |} வெளியாகாத திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விருதுகள் மூன்று முறை, இந்திய அரசின் நடிப்புக்கான தேசிய விருதுகள். (திரைப்படங்கள் - மூன்றாம்பிறை, நாயகன், இந்தியன்) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான இந்திய தேசிய விருது. (திரைப்படம் - களத்தூர் கண்ணம்மா) சிறந்த மாநில மொழி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர் மகன் திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் என்ற முறையில் கமல்ஹாசனுக்கு ஒரு இந்திய தேசிய விருது. 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள். மூன்று முறை, ஆந்திரா அரசின் நடிப்புக்கான நந்தி விருதுகள். (திரைப்படங்கள் - சாகர சங்கமம், சுவாதி முத்யம், இந்திருடு சந்திருடு'') 19 பிலிம்பேர் விருதுகள். 50 வருடம் திரைத்துறையில் பணியாற்றியமைக்காக கேரளா அரசின் சிறப்பு விருது. பத்மசிறீ விருது (1990) சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம். (2005) பத்ம பூசன் விருது (2014) தென் இந்திய நடிகர்களிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் பெருமையை பெற்றுள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கமல்ஹாசன் 64 சொல்லித் தீராத சுவாரஸ்யங்கள்! கமல் ஸ்பெஷல்! -விகடன் கமல்ஹாசன் புகைப்படங்கள் தினமலர் கமல்ஹாசன் ரசிகர்கள் இணையத்தளம் His classical odyssey ‘You can feel the fear in the song’ ‘He taught me to sing with abandon’ And more on the Ilaiyaraaja connection Kamal and the art of screenplay writing Kamal discovers Kuchipudi Three teachers, one student! Cinema, Kamal’s fulcrum 1954 பிறப்புகள் வாழும் நபர்கள் பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள் தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் இராமநாதபுரம் மாவட்ட நபர்கள் செவாலியே விருது பெற்றவர்கள் தமிழ் இறைமறுப்பாளர்கள் பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள் கலைமாமணி விருது பெற்றவர்கள் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் இந்திய இறைமறுப்பாளர்கள் தமிழக அரசியல்வாதிகள் மக்கள் நீதி மய்யம் அரசியல்வாதிகள் சென்னை நடிகர்கள் சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள் தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள் பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர் பிக் பாஸ் தமிழ்
4911
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
வானூர்தி
விமானம் அல்லது வானூர்தி என்பது புவியின் வளிமண்டலத்தின் உதவியுடன் பறக்கக்கூடிய ஓர் உந்துப்பொறியாகும். இது காற்றை உந்தியும் பின் தள்ளியும் பறக்கிறது. புவியீர்ப்பு விசையை மீறி வானில் பறக்க காற்றிதழின் நிலை ஏற்றத்தையோ இயக்க ஏற்றத்தையோ பயன்படுத்துகிறது; அல்லது தாரைப் பொறியிலிருந்து பெறப்படும் கீழ்நோக்கு உந்துவிசையையும் பயன்படுத்துகிறது. வானூர்திகள் அவை பெறும் ஏற்றம், உந்துகை,பயன்பாடு மற்றும் பிற காரணிகளால் வகைப்படுத்தப்படுகின்றன. வானூர்திகள் போர்ப்படையில் ஒருவர் மட்டுமே செல்லக்கூடியதில் இருந்து குடிசார் வணிக வான்போக்குவரத்தில் 300-500 மக்களை ஏற்றிச்செல்லும் அளவுகளில் பல்வேறு கொள்திறனுடன் தயாரிக்கப்படுகின்றன. சரக்கு வானூர்திகள் பல்வேறு பொருட்களையும் உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வான் வழியாக விரைவாக எடுத்துச்செல்லப் பயனாகின்றன. 9000 மீட்டர் உயரத்தில் பறக்கும் உந்துவிசிறிகள் கொண்ட வானூர்தியிலிருந்து 14000 மீட்டர் உயரத்தில் பறக்கக்கூடிய தாரைப்பொறி வானூர்திகள் வரை பலவகைக்கடும். வானூர்திகளைச் சூழ்ந்த மனிதர் செயல்பாடுகள் பறப்பியல் எனப்படுகின்றன. வானூர்திக்குள்ளிருந்து இயக்குபவர்கள் வானோடிகள் எனப்படுகின்றனர். ஆளில்லாத வானூர்திகள் நிலத்திலிருந்து தொலைவிடக் கட்டுப்பாட்டாலோ அல்லது வானூர்திக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள கணினியின் கட்டுப்பாட்டாலோ இயக்கப்படுகின்றன. வரலாறு சிறுவடிவ வானூர்திகளையும் மனிதர் பயணிக்கத்தக்க வானூர்திகளையும் தயாரிக்க முற்பட்ட வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது. இருப்பினும் பாதுகாப்பான முதல் மனித ஏற்றமும் இறக்கமும் 18ஆம் நூற்றாண்டில் வெப்பக் காற்று வளிக்கூடுகளால் இயன்றது. சுமார் 1890களில் தொடங்கி 1903 ஆம் ஆண்டு ஆர்வில் ரைட், வில்பர் ரைட் என்னும் இரு உடன்பிறந்தார்கள் முதன் முதல் பறக்கும் ஒரு இயந்திரத்தைப் படைத்தார்கள். அமெரிக்காவில் உள்ள வட கேரோலைனா என்னும் மாநிலத்தில் உள்ள கிட்டி ஃஆக் என்னும் இடத்தில் இப்புரட்சிகரமான நிகழ்வு நடந்தது. இரண்டு உலகப்போர்களும் வானூர்திகளின் மேம்பாட்டிற்கு பெரிதும் உதவின. வானூர்திகளின் வரலாற்றை ஐந்து காலகட்டங்களாகப் பிரிக்கலாம்: பறத்தலின் முன்னோடிகளின் துவக்கக்கால சோதனைகள் 1913. முதல் உலகப்போரில் பறப்பியல், 1914 - 1918. பறத்தலின் பொற்காலம், 1919 - 1938. இரண்டாம் உலகப்போரில் வானூர்திச் சண்டைகள், 1939 - 1945. போருக்குப் பிந்தைய காலம் அல்லது தாரைப்பொறி காலம் 1946 முதல் இன்றுவரை. வானுர்தி பறப்பது எப்படி நான்கு விசைகள் வானுர்தியை பறக்க வைக்கிறது அவை, ஏற்றம் எடை உந்துவிசை எதிர்விசை வானூர்தியில் முன்னோக்கிய உந்துவிசையால் இதன் இறக்கைகள் காற்றைக் கிழிக்கின்றன இதன் இறக்கைகளின் மேல்பக்க முனை சற்று வளைந்தும் கிழ்பக்கம் நேராகவும் இருக்கும். இந்த அமைப்பால், காற்றை கிழித்து நகரும்போது வானுர்தியின் இறக்கைகள் மற்றும் வான்கட்டகத்தின் மேலாக காற்று நகரும் போது இறக்கையின் மேல்புறம் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. இதனால் இறக்கையின் கீழ்புறம் மேல்நோக்கி உயர்க் காற்றழுத்தம் உருவாகிறது. இந்த உயர் காற்றழுத்த மாறுபாடு இறக்கைக்கு மேல் நோக்கு விசையை அளிக்கிறது. இதனால் விமானம் மேல் எழும்புகிறது. இறக்கையின் வடிவமைப்பு காரணமாகவே உயர் மற்றும் குறைந்த காற்றழுத்தம் உருவகிறது. எடை, வானூர்தியை, பூமியை நோக்கி இழுக்கிறது.வானுர்தியின் எடை சீராக இருக்குமாறு வடிவமைக்கப்படுகிறது. இது வானூர்தியை சமநிலையில் வைத்திருக்கிறது. எடை அதிகமாகும் போது வானூர்தியின் செயல்பாடு தடைபடுகிறது. உந்துவிசை, வானூர்தியை முன்னோக்கி செலுத்துகிறது. உந்துவிசை அதிகமாகும் பொழுது ஏற்றமும் அதிகமாகிறது.உந்துவிசையை உண்டாக்க பொறி பயன்படுத்தப்படுகிறது. இந்த பொறிகள் காற்றை எரித்து அதனால் உண்டாகும் விசையை கொண்டு விமானத்தை முன் தள்ளுகிறது. எதிர்விசை, வானூர்தியின் வேகத்தை கட்டுப்படுத்துகிறது. பலமான காற்று வீசும் பொழுது அதனை எதிர்த்து நடந்தால் காற்றின் எதிர்விசையை உணரலாம். காற்று வானூர்தியை தாண்டிச்செல்லுமாறும் அதனால் உண்டாகும் எதிர்விசை குறைவாக இருக்குமாறும் வானூர்தி வடிவமைக்கப்படுகிறது. இந்த வடிவமைப்பை காற்றொத்த வடிவமைப்பு என்பர். இந்நான்கு விசைகளும் ஒன்றினைந்து செயல்படும் பொழுது வானூர்தி பறக்கிறது. ஏற்ற முறைகள் காற்றைவிட எடைகுறைவானவை – காற்றுமிதவைகள் காற்றுமிதவைகள் மிதப்பைப் பயன்படுத்தி நீரில் கப்பல்கள் மிதப்பது போலவே காற்றில் மிதக்கின்றன. இவற்றின் குறிப்பிடத்தக்க கூறாக சூழ்ந்துள்ள காற்றை விட குறைந்த எடையுடன் இருக்குமாறு அடர்த்தி குறைந்த வளிமங்களான ஈலியம், நீரியம் அல்லது வெப்பமேற்றிய காற்றால் பெரிய வளிக்கூடுகளில் நிரப்பப்பட்டு இருக்கும். இதன் எடையும் வான்கல கட்டமைப்பின் எடையும் இணைந்து இவற்றால் இடம்பெயர்க்கப்படும் காற்றின் எடைக்கு இணையாக இருக்கும். சிறிய வெப்பக்காற்று ஊதுபைகளாலான பறக்கும் விளக்கு கிமு மூன்றாம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன; இதற்கும் முன்னதாக வான்வெளியில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. காற்றைவிட எடைமிகுந்தவை – காற்றியங்கிகள் நிலைத்த இறக்கை வானூர்தி போன்ற காற்றைவிட எடை மிகுந்த வானூர்திகள் ஏதேனும் ஒருவகையில் காற்று அல்லது வளிமத்தை கீழ்நோக்கி உந்த வேண்டும்; நியூட்டனின் இயக்கவிதிகளின்படி எதிர்வினையாக வானூர்தி மேலெழும்பும். காற்றினூடே நிகழும் இந்த இயங்குவிசையே காற்றியங்கல் எனப்படுகிறது. இயங்கு மேல்நோக்கு உந்துதலை இரண்டு விதமாகச் செய்யலாம்: காற்றியக்கவியல் ஏற்றம், மற்றும் பொறி உந்தின் மூலமான விசையூட்டு ஏற்றம். இறக்கைகளால் ஏற்படும் காற்றியக்கவியல் ஏற்றமே மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நிலைத்த இறக்கை வானூர்திகளில் இறக்கைகளின் முன்னோக்கிய இயக்கத்தாலும் சுற்றகவூர்திகளில் சுழல்இறக்கைகளாலும் காற்றில் நிலைநிறுத்தப்படுகின்றன. இறக்கை என்பது காற்றிதழைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள தட்டையான, கிடைநிலை பரப்பாகும். பறப்பதற்கு இந்த இறக்கைப் பரப்பின் மேலே காற்று ஓடினால் தூக்குவிசை கிடைக்கும். விசையூட்டு ஏற்றத்தில், வானூர்தியின் விசைப்பொறி நிலைக்குத்தாக கீழ்நோக்கிய உந்துதலை வழங்குகிறது. எப்-35B போன்ற இவ்வகை வானூர்திகள் நிலைக்குத்தாக எழவும் இறங்கவும் இயல்கிறது. மேலெழுந்தவுடன் இயக்கவியல் ஏற்றத்திற்கு மாறி இயங்குகிறது. ஒரு உண்மையான ஏவூர்தி காற்றியங்கியாக கருதப்படுவதில்லை; இது காற்றை தனது தூக்குவிசைக்குப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் பல காற்றியக்கவியல் ஏற்ற வான்கலங்கள் ஏவூர்தி பொறிகளின் துணைகொண்டு இயங்குகின்றன. மீமிகு விரைவில் செல்கையில் தங்கள் மேலான காற்றோடையின் காற்றியக்க ஏற்றத்தைப் பயன்படுத்தும் ஏவூர்திவிசையால் இயங்கும் ஏவுகணைகள் இத்தகையப் பயன்பாட்டின் எல்லைகளாகும். நிலைத்த-இறக்கை உந்துகை முறையைத் தவிர நிலைத்த இறக்கை வானூர்திகள் பரவலாக இறக்கைகளின் அமைப்பு வடிவாக்கத்தைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகின்றன: இறக்கைகளின் எண்ணிக்கை – ஒற்றைத்தள வானூர்தி, இரட்டைத்தள வானூர்தி, போன்றவை. இறக்கைக்கான ஆதரவு – குறுக்குச்சட்டங்கள் அல்லது தொங்கு இறக்கை, நிலைத்த, அல்லது நெகிழ்ச்சியான. இறக்கை அமைப்பு – கூறு விகிதம், வீச்சுக் கோணம், மற்றும் பிற வேறுபாடுகள் ( முக்கோண இறக்கைகள்). கிடைமட்ட நிலைநிறுத்துகை நிறுவப்பட்டிருந்தால் அதன் அமைவிடம் இருமுகக்கோணம் (Dihedral) – நேர்மறை, சூன்யம், அல்லது எதிர்மறை (கீழ்நோக்கி). சுற்றகவூர்தி சுற்றகவூர்தி, அல்லது சுழல்-இறக்கை வானூர்தி, காற்றிதழ் குறுக்குவெட்டுக் கொண்ட மென்தகடுகளுடனான சுழலும் சுற்றகத்தைப் ( சுழல் இறக்கை) பயன்படுத்தி தூக்குவிசையைப் பெறுகிறது. உலங்கு வானூர்திகள், ஆட்டோகைரோக்கள் போன்றவை இவ்வகையில் அடங்கும். உந்துப்பொறியின் சுழல்தண்டு மூலம் உலங்கு வானூர்திகளில் சுற்றகம் சுழல வைக்கப்படுகிறது. சுற்றகம் காற்றை கீழேத் தள்ள எதிர்வினையால் மேல்நோக்கிய ஏற்றம் கிடைக்கிறது.சுற்றகத்தை சற்றே முன்னால் சாய்க்க கீழ்நோக்கிய காற்றோட்டம் இப்போது பின்னோக்கி நகர ஊர்தி முன்னோக்கி செல்கிறது. சில உலங்கு வானூர்திகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிலவற்றில் சுற்றகம் வளிமத் தாரை கொண்டும் இயக்கப்படுகின்றன. மற்ற ஏற்ற முறைகள் ஏற்றவுடல் அமைப்பு முறையில் வானூர்தியின் உடல் கட்டமைப்பே ஏற்றவிசையை ஏற்படுத்த உதவுகிறது. இவற்றின் இறக்கைகள் வானூர்தியைப் பறக்க வைத்தலுக்குத் தேவையான ஏற்றத்தை உருவாக்க வல்லவை அல்ல; அவை அளவில் குறைவானவை. ஆனால், இவ்வகை வானூர்திகள் செயல்திறம் மிக்கவை அல்ல; அதிவேகத்தில் பறப்பதன் மூலமாக மட்டுமே இவை தேவையான ஏற்றத்தை உருவாக்க இயலும். மார்டின்-மரைட்டா எக்சு-24 சோதனை வானூர்தி (விண்கலங்களுக்கு முன்னோடி, ஆனால் விண்கலங்கள் ஏற்றவுடல் முறையில் வடிவமைக்கப்படவில்லை) இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். மேலும், சில மீயொலவேக ஏவுகணைகள் பறத்தலின் போது அவற்றின் குழாய்வடிவ உடலமைப்பில் ஏற்றவிசையை உருவாக்குகின்றன. திறனூட்டப்பட்ட ஏற்றம்: இவ்வகையில் தாரை எந்திரங்களின் உந்துகைத் திறனானது, வானூர்தியின் ஆரம்பப் பறத்தல் மற்றும் தரையிறங்குதலின் போது செங்குத்தாக கீழ்நோக்கி செயல்படும் வகையில் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட உயரம் சென்றபின்னர், வழமையான தாரை எந்திரங்கள் போன்று இவை செயல்படும். மேலும், சில உந்துச்சுழலி வகை வானூர்திகளும் கிளம்பும்போது அவற்றின் உந்துச்சுழலிகள் உலங்கு வானூர்திகள் போல செங்குத்தான ஏற்றவிசையை முதலில் கொடுத்துப் புறப்படுகின்றன. உந்துகை உந்துகையற்ற வானூர்தி உந்துகைகொண்ட வானூர்தி உந்துச்சுழலி வானூர்தி தாரைப் பொறி வானூர்தி சுற்றகவூர்தி மற்றவகை உந்துகைகொண்ட வானூர்திகள் வகைகள் இவ்வகை ஊர்திகளில் பன்னூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. செங்குத்தாக எழுந்து பறக்க வல்ல உலங்கு வானூர்திகள் (helicopters). பயணிகளை சுமந்து செல்லும் வானூர்திகள். ஒலியின் வேகத்தையும் கடந்து செல்லும் வல்லமை படைத்த வானூர்தி. மீயொலி விரைவானூர்திகள் பல்வகை திறம்படைத்த போர் வானூர்திகள். மேற்சான்றுகள் வெளி இணைப்புகள் வரலாறு History of Aviation in Australia – State Library of NSW Prehistory of Powered Flight The Channel Crossing The Evolution of Modern Aircraft (NASA) Virtual Museum Smithsonian Air and Space Museum – Online collection with a particular focus on history of aircraft and spacecraft New Scientist's History of Aviation Amazing Early Flying Machines slideshow by Life magazine Aircraft Types தகவல் Airliners.net Aviation Dictionary Free aviation terms, phrases and jargons New Scientist's Aviation page Aircraft Components Technology வானூர்திகள்
4912
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE
வெனிசுவேலா
வெனிசுவேலா (Venezuela, எசுப்பானியம்: beneˈswela), தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கூட்டாட்சி குடியரசு ஆகும். அதிகாரபூர்வமாக இது "வெனிசுவேலா பொலிவாரியன் குடியரசு" (Bolivarian Republic of Venezuela) என அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் தலைநகர் கராகஸ். பேசப்படுவது எசுப்பானிய மொழி ஆகும். இதன் வடக்கில் அட்லான்டிக் பெருங்கடலும், கிழக்கில் கயானாவும், தெற்கில் பிரேசிலும், மேற்கில் கொலம்பியாவும் உள்ளன. வெனிசூலா (353,841 சதுர மைல்) பரப்பளவில் 31 மில்லியன் (31,775,371) மக்களைக் கொண்டுள்ளது. நாடு மிகக் கூடுதலான பல்லுயிர் வளம் கொண்டதாக (உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான உயில் இனங்கள் கொண்டு, பட்டியலில் உலகிலேயே 7 வது இடத்தில் உள்ளது), மேற்கில் அந்தீசு மலைத்தொடரிலிருந்து தெற்கில் அமேசான் படுகை மழை காடு வரை உள்ளதுடன், மையத்தில் விரிந்த இல்லானோஸ் சமவெளிகள் மற்றும் கரீபியன் கடற்கரை மற்றும் கிழக்கில் ஒரினோகோ ஆற்று வடிநிலப் பகுதியில் பரவியுள்ளது. இந்நாட்டில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கிறது. 14 ஆண்டுகள் இந்நாட்டின் தலைவராக ஊகோ சாவெசு இருந்தார் அவர் மறைந்ததை அடுத்து துணை அதிபர் நிக்கோலசு மதுரோ அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2013 ஏப்ரல் 14ல் நடந்த தேர்தலில் இவர் வெற்றிபெற்றதால் அதிபர் பதவியை தொடர உள்ளார். வெனிசுலா என அழைக்கப்படும் இப்பகுதியில் பூர்வகுடி மக்களின் எதிர்புக்கு இடையில் ஸ்பெயினில் இருந்து 1522 ஆம் ஆண்டில் மக்கள் குடியேறி ஸ்பெயினின் குடியேற்ற நாடாக ஆனது. 1811 ஆம் ஆண்டில், தனது சுதந்திரத்தை அறிவித்த முதல் ஸ்பானிய அமெரிக்க காலனிகளில் இதுவும் ஒன்றாகும், என்றாலும்  அதன்பிறகு வெனிசுலா கொலம்பியாவின் கூட்டாட்சி குடியரசின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1830 ஆம் ஆண்டு ஒரு தனி நாடாக முழு சுதந்திரம் பெற்றது. 19 ம் நூற்றாண்டில், வெனிசுலா அரசியல் கொந்தளிப்பு மற்றும் சர்வாதிகாரத்தை அனுபவித்தது, 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி வரை பிராந்திய படைத்தளபதிகளான செடில்லோஸ் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. 1958 முதல், நாடு ஒரு தொடர்ச்சியான ஜனநாயக அரசாங்கங்களைக் கொண்டுள்ளது. 1980 கள் மற்றும் 1990 களில் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சி பல அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது, 1989 இன் கொடிய கராகசோ கலவரங்கள் உட்பட நிகழ்வுகள் நடந்தன. 1998 இல் ஊகோ சாவெசு வெனிசுலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிறகு உலக மயமாக்கலுக்கு எதிரான இடது சாரி ஆட்சியாக உருவானது இது பொலிவியப் புரட்சி என அழைக்கப்படுகிறது. இவர்காலத்தில் வெனிசுலாவின் ஒரு புதிய அரசியலமைப்பை எழுதுவதற்கு 1999 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட மன்றம் துவக்கப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பானது நாட்டின் பெயரை அதிகாரப்பூர்வமாக, புதிய பெயராக ரிப்பலிகா பொலிவியா டி வெனிசுலா (வெனிசுலாவின் பொலிவாரியன் குடியரசு) என மாற்றியது. வெனிசுலா ஒரு கூட்டாட்சி குடியரசு குடியரசு ஆகும், இதில் 23 மாநிலங்கள், தலைநகர் மாவட்டம் (தலைநகர ஆட்சிப்பகுதி) மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகள் (வெனிசுலாவைச் சேர்ந்த கடல் தீவுகளை உள்ளடக்கியது). வெனிசுலாவானது இஸகிபோ ஆற்றின் மேற்குப் பகுதியில் 159,500-சதுர கிலோமீட்டர் (61,583 சதுர மைல்) பரப்பளவிலான எல்லா கயானா பிரதேசங்களையும் உரிமை கோருகிறது. லத்தீன் அமெரிக்காவில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுலா உள்ளது;  வெனிசுலாவின் பெரும்பான்மையானவர்கள் வடக்கே உள்ள நகரங்களில் வசிக்கிறார்கள், குறிப்பாக வெனிசுலாவிலுள்ள மிகப்பெரிய நகரமாக இருக்கும் தலைநகரான கரகஸ் நகரில். வெனிசுலாவில் எண்ணெய் வளமானது 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டிருக்கிறது மேலும் உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒருவராக உள்ளது. முன்பு காபி மற்றும் கோகோ போன்ற விவசாயப் பொருட்களே நாட்டின் ஏற்றுமதியில் முதன்மை பங்கு வகித்தன, அதன்பிறகான காலகட்டத்தில் எண்ணெய் ஏற்றுமதியே அரசாங்க வருவாய்களில் ஆதிக்கம் செலுத்தியது. 1980 களில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியானது நாட்டின் வெளிப்புற கடன் நெருக்கடிக்கு வழிவகுத்தது, நீண்டகால பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது, இதில் பணவீக்கம் 1996 ல் 100% உயர்ந்து, 1995 இல் வறுமை விகிதம் 66% ஆக உயர்ந்தது (1998 க்குளான காலம்) தனிநபர் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1963 இல் இருந்த நிலைக்கு சரிந்தது,  இது அதன் 1978 உச்சகட்ட காலத்தில் இருந்ததில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். 2000 களின் முற்பகுதியில் எண்ணெய் விலை மீட்பு அடைந்தபோதும் 1980 களில் இருந்து வெனிசூலா எண்ணெய் வருவாய் அளவை அடையவில்லை. வெனிசுலா அரசாங்கம் பின்னர் வெனிசுலாவின் பொருளாதாரத்தை வளர்த்தது, சமூக செலவினங்களை அதிகரித்து, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் வறுமை ஆகியவற்றை கணிசமாக குறைத்தது. இருப்பினும், அத்தகைய கொள்கைகள் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை நிலையில்லா தன்மைக்கு உட்படுத்தியதால் சர்ச்சைக்குரியதாக ஆனது, இதன் விளைவாக அதிகப்படியான பணவீக்கம், பொருளாதார மந்தநிலை மற்றும் வறுமை நிலை கடுமையாக அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டன. பெயராய்வு மிகவும் பிரபலமான மற்றும் ஏற்கப்பட்ட பதிப்பின் படி, 1499 ஆம் ஆண்டில், அலோன்சோ டி ஓஜாடா தலைமையிலான ஒரு குழு பயணித்து வெனிசூலா கடற்கரையை அடைந்தது. அப்பிரதேசத்துக்கு அமெரிகோ வெஸ்புச்சி வந்தபோது மரக்காபோவின் ஏரிப் பகுதியில் இருந்த கால் வீடுகளைக் கண்டு, அவை வெனிஸ் நகரை அவருக்கு நினைவூட்டியது, அதனால் அவர் வெனிசுலா பகுதிக்கு "பிஸ்கோலா வெனிசியா" என்று பெயரிட்டார். ஸ்பானிய மொழியின் செல்வாக்கின் விளைவாக, அதன் தற்போதைய உச்சரிப்புக்கு திரிந்தது. இப்பகுதியின் பெயர் துவக்கக்காலத்தில் "சிறிய வெனிஸ்" என்று அழைக்கப்பட்டிருக்கும் என்ற கருத்து இருக்கிறது. ஜேர்மன் மொழியில் இப்பகுதியை 16 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், க்ளீன்-வெனெடிக், அதாவது சிறிய வெனிஸ் என்று அழைக்கப்பட்டுள்ளது. எனினும், வெஸ்புச்சி மற்றும் ஓஜெடா குழு உறுப்பினர்களில் ஒருவரான மார்டின் பெர்னாண்டஸ் டி என்சிசோ என்பவர் அவரது படைப்பான சும்மா டி ஜிக்ராஃபியாவில் வேறு ஒரு தகவலைக் கொடுத்தார். அதில் வெனிசுவேலா என்று அழைக்கப்படும் உள்நாட்டு மக்களை அவர்கள் கண்டுபிடித்ததாக கூறுகிறார். இதனால், "வெனிசுலா" என்ற பெயர் அம்மக்களைக் குறிப்பிட்டச் சொல்லில் இருந்து உருவாகியிருக்கலாம். புவியியல் வெனிசுலா தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள நாடாகும். இது உலகின் 33 வது பெரிய நாடாகும், மொத்தப் பகுதி 916.445 சதுர கிமீ (353,841 சதுர மைல்), நிலப் பகுதி 882.050 சதுர கிலோமீட்டர் ( 340,560 சதுர மைல்) ஆகும். ஒரு முக்கோண வடிவில் உள்ள இந்நாட்டின் வடக்கே கடற்கரை 2,800 கிமீ ( 1,700 மைல்) நீளம் கொண்டது ஆகும். பைக்கோ பொலிவார், 4.979 மீ ( 16,335 அடி) உயரத்தில் நாட்டின் மிக உயரமான மலை ஆகும், இந்தப் பகுதியில் அமைந்துள்ளது. வெனிசுலா மேற்கே கொலம்பியா, தெற்கே பிரேசில், கிழக்கே கயானாவை எல்லைகளாக கொண்டுள்ளது. டிரினிடாட் மற்றும் டொபாகோ, கிரெனடா, குறக்ககோ, அருபா, மற்றும் லீவார்ட் அண்டிலிசு போன்ற கரீபியன் தீவுகள் வெனிசுலா வட கடற்கரையின் அருகில் அமைந்திருக்கிறது. வெனிசுலா கயானாவுடனும்(முன்னர் ஐக்கிய ராஜ்யம்) எஸ்கிபோ என்ற இடத்தில் நிலப்பகுதி மோதல்களை கொண்டுள்ளது. வெனிசுலா கொலம்பியாவுடன் வெனிசுலா வளைகுடா குறித்த மோதல்களை கொண்டுள்ளது. வெனிசுலா நாட்டின் மிக முக்கியமான இயற்கை வளங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, இரும்புத் தாது, தங்கம், மற்றும் பிற கனிமங்கள் உள்ளன.உலகில் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் வெனிசுலாவில் உள்ளது. குழப்பம் வெனிசூலாவில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் அந்நாட்டின் சனாதிபதி நிக்கோலசு மதுரோவால் பொருளாதாரம் சீர்குலைந்து காணப்படுகிறது. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்நாட்டின் மீது அதிகாரத்தைக்காட்ட முனைகின்றன. எதிர்கட்சிகள் அதிபரை பதவிலகும்படி கோரிக்கை வைக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் இந்நாட்டின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதமாக இருக்கும் என அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்நாட்டிலிருந்து அதிக அளவு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியாவின் மீது உலக நாடுகள் தடைகள் விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கோள்கள் தென் அமெரிக்க நாடுகள் கரிபியன் நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
4921
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE
சீனா
சீனா (China) என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும். ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். 130,63,13,812 மக்கள் வாழும் சீனா, உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் இயலுமையையும் தொன்மையையும் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் சாங்காய் உள்ளது. உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. இந்நாடு நாலாயிரம் ஆண்டுகளாக, சியா வம்சம் (Xia) தொடக்கம் சிங் வம்சம் (Qing) வரையான அரச வம்சங்களால் ஆளப்பட்டு வந்தது. இது 1911-ஆம் ஆண்டில் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதுடன் முடிவடைந்தது. 20-ஆம் நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியில், ஒற்றுமை இன்மையும், உள்நாட்டுப் போர்களும், சீனாவை இரண்டு முக்கியமான அரசியல் குழுக்களாகப் பிரித்தன. ஒரு குழு, தேசியவாதிகளான குவோமிந்தாங், மற்றது சீனப் பொதுவுடமைக் கட்சி. 1949-ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றிபெற்று சீனத் தலை நிலத்தில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதுடன், முக்கியமான பிணக்குகள் முடிவடைந்தன. தேசியவாதிகளின் சீனக் குடியரசின் அரசு தாய்வான் தீவுக்குள் அடங்கிக் கொண்டது. இவ்விரு பிரிவினருக்கும் இடையிலான, பிணக்குகள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. இவை முக்கியமாக இறைமை, தாய்வானின் அரசியல் அங்கீகாரம் என்பன தொடர்பானவையாகும். இன்று மக்கள் சீனக் குடியரசு உலகின் மிகமுக்கியமான நாடும், வளர்ந்துவரும் வல்லரசும் ஆகும். சீனா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிலையான உறுப்புரிமையைக் கொண்டுள்ளதுடன், உலக வணிக நிறுவனம், ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம், கிழக்காசிய உச்சிமாநாடு, சாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம், ஆகியவற்றிலும் உறுப்பினராக உள்ளது. இது ஒரு அணுவாயுத நாடாக இருப்பதுடன், உலகின் மிகப்பெரிய, நிலையான பாதுகாப்புப் படையையும் கொண்டுள்ளது. பாதுகாப்புக்கான செலவினத்தைப் பொறுத்தவரை சீனா உலகில் நான்காவது இடத்தை வகிக்கின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் சீனாவும் ஒன்று. பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் சீனா உலகில் நான்காவது இடத்திலும், வாங்கு திறன் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. அத்துடன் ஏற்றுமதி அளவில் உலகின் இரண்டாவது இடத்திலும், இறக்குமதியில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு உள்ளது. 1978-ஆம் ஆண்டில் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் 53% ஆக இருந்த வறுமை வீதம் (poverty rate) 2001-ஆம் ஆண்டில் 8% ஆகக் குறைந்துள்ளது. எனினும் சீனா வேறு பல பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளது. மக்கள்தொகையில் வேகமாக அதிகரித்து வரும் வயதானவர்களின் வீதம், நகர்ப்புறங்களுக்கும், நாட்டுப்புறங்களுக்குமிடையில் விரிவடைந்துவரும் வருமான இடைவெளி, சூழல் தரங்குறைதல் என்பன இத்தகைய பிரச்சினைகளுள் சிலவாகும். வரலாறு ஐரோப்பியா நாடுகளில் நாகரிகம் தோன்று முன்பே சீனாவில் சிறந்த நாகரிகம் ஒன்று காணப்பட்டது. இங்கு உண் குச்சிகள் மூலம் உணவு உட்கொள்ளும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாவில் உள்நாட்டுப் போர் நடந்தது. பொதுவுடமைவாதிகள் வெற்றிபெற்றுப் போர் முடிவுக்கு வந்து, தேசியவாதிகள் தாய்வானுக்குப் பின்வாங்கியதும், சீன மக்கள் குடியரசின் அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாகத் தலைவர் மா சே துங் 1949-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளன்று தியென் ஆன் மென் வாயிற்கோபுரத்தில் அறிவித்தார். முன்நோக்கிய பெரும் பாய்ச்சல் (Great Leap Forward) எனப்பட்ட திட்டத்தின் காரணமாகத் தொடர்ச்சியான பல பொருளாதாரத் தோல்விகள் ஏற்பட்டமையால், மாவோ சே துங் தனது தலைமைப் பதவியிலிருந்து இறங்கினார். லியூ ஷாவோக்கி அவரைத் தொடர்ந்து பதவியேற்றார். மாவோவுக்குத் தொடர்ந்தும் கட்சியில் பெருஞ் செல்வாக்கு இருந்துவந்தாலும் அவர் பொருளாதார அலுவல்களின் அன்றாட மேலாண்மை தொடர்பான விடயங்களிலிருந்து விலகியே இருந்தார். இவ்விடயங்கள், லியூ சாவோக்கி, டெங் சியாவோபிங் ஆகியோரின் பொறுப்பில் இருந்தது. 1966-ஆம் ஆண்டில், மாவோவும் அவரது கூட்டாளிகளும் கலாச்சாரப் புரட்சியைத் தொடக்கி வைத்தனர் இது பத்தாண்டுகள் கழித்து மாவோ இறக்கும்வரை தொடர்ந்தது. கட்சிக்குள் நிலவிய பதவிப் போட்டியினாலும், சோவியத் ஒன்றியத்தின் மீது ஏற்பட்ட பயத்தினாலும் ஊக்குவிக்கப்பட்ட இக் கலாச்சாரப் புரட்சி சமுதாயத்தில் குழப்பநிலையை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. 1972-ஆம் ஆண்டில், சீனாவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான பிளவு அதன் உச்சத்தை எட்டியபோது, மாவோவும், பிரதமர் சூ என்லாயும் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனை பெய்ஜிங்கில் சந்தித்து அந்நாட்டுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதே ஆண்டில், தாய்வானில் இயங்கிவந்த சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டிருந்த சீனாவுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்புரிமையும், அதன் பாதுகாப்புச் சபைக்கான நிலையான உறுப்புரிமையும், மக்கள் சீனக் குடியரசுக்கு வழங்கப்பட்டது. 1976-ஆம் ஆண்டில் மாவோ காலமானதும், கலாச்சாரப் புரட்சியின்போது இடம்பெற்ற அட்டூழியங்களுக்காகக் குற்றம் சுமத்தி நால்வர் குழு (Gang of Four) என அழைக்கப்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டதுடன், மாவோவின் வாரிசு எனக் கருதப்பட்ட ஹுவா குவோபெங்கிடமிருந்து டெங் சியாவோபெங் பதவியைக் கைப்பற்றினார். டென் சியாவோ பெங் தான் நேரடியாகக் கட்சித் தலைவர் பதவியையோ அல்லது நாட்டின் தலைவர் பதவியையோ வகிக்காவிட்டாலும், கட்சிக்குள் அவருக்கிருந்த செல்வாக்கினால், குறிப்பிடத்தக்க அளவிலான பொருளாதாரச் சீர்திருத்தங்களை நோக்கி நாட்டை வழிநடத்தினார். தொடர்ந்து பொதுவுடமைக் கட்சி, தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் அரசாங்கம் கொண்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதுடன், கம்யூன்களையும் கலைத்துவிட்டது. பல குடியானவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிலங்களையும் பெற்றார்கள். இவ்வாறான மேம்பட்ட ஊக்குவிப்புகளினால், வேளாண்மை உற்பத்திகள் பெருமளவு அதிகரித்தன. இந்த நிலைமைகள், சீனா திட்டமிட்ட பொருளாதார முறையிலிருந்து, கலப்புப் பொருளாதார முறைக்கு மாறும் சூழ்நிலையைக் குறித்தன. புவியியல் சீனா ஆசிய கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடாகும். சீனாவின் கிழக்கில் வட கொரியாவும் வடக்கில் மங்கோலியாவும் உள்ளன. வடகிழக்கில் ரஷ்யா, வட மேற்கில் கசக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. மேற்கிலும் தென் மேற்கிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளும் தெற்கில் மியன்மர், லாவோஸ், வியட்நாம் ஆகிய நாடுகளும் உள்ளன. கடலுக்கப்பால் கிழக்கிலும் தென்கிழக்கிலும் தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், புருனை, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன. சீனாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மலைப்பாங்கான நிலமாகும். உலகின் மிகவுயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் சீனா உரிமைக்கோரும் திபெத் மற்றும் நேபாள எல்லையில் அமைந்துள்ளது. இமய மலைத்தொடர், சீன-இந்திய எல்லையில் உள்ளது. இதுதவிர குன்லன், தியென் சான், தாங்குலா, சின்லின், பெரும் சிங் ஆன் லின், தைய்ஹான், சிலியென், ஹென்துவான் என்பவை சீனாவின் முக்கிய மலைகளாகும். சீனாவில் 1500க்கும் அதிகமான ஆறுகள் பாய்கின்றன. இவற்றுள் யாங்சி ஆறு அசியாவில் மிக நீளமானதும், உலகில் மூன்றாவது நீளமான நதியுமாகும். மஞ்சள் ஆறுயும் ஒரு முக்கிய நதியாகும். யாங்சி, மஞ்சள், ஹெலுங், முத்து, லியௌ, ஹைய் எனற நதிகள் சினாவின் கிழக்கு நோக்கிப் பாய்ந்து பசிப்பிக் சமுத்திரத்தில் கலக்கின்றன. இந்தியாவில் பிரம்மபுத்ரா என்று அழைக்கப்படும் 'யாலு சாங்பு நதி' இந்து சமுத்திரத்தில் உள்ள வங்காள விரிகுடாவில் கலக்கின்றது. அர்சிஸ் ஆறு வடக்கு நோக்கிப் பாய்ந்து ஆர்டிக் சமுத்திரத்தில் கலக்கிறது. அரசியல் மக்கள் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் சீனாவில் 56 வகை இன மக்கள் உள்ளனர், இவர்களுள் 93% ஹன் இனத்தவர். பௌத்தம், டாவோயிசம், இஸ்லாம், கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபை ஆகிய மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் மக்கள் சீனாவில் உள்ளனர். சீன நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகப் பல குடும்ப நலத்திட்டங்களை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. இவற்றில் முக்கியமானது ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை திட்டம். முதல் குழந்தை பெண் குழந்தையாக வாய்த்தாலோ, தம்பதியினர் கிராமப்புறத்தில் வசித்தாலோ இரண்டாவது குழந்தையைப் பெறலாம். உண்மையில் இத்திட்டம் மக்கள் தொகை வளர்ச்சியை நன்கு கட்டுப்படுத்தினாலும், 117 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற பால் விகித நிலை ஏற்பட்டுள்ளது. சீன மொழி இந்நாட்டில் பேசப்படும் மொழியும் அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். இம்மொழியை அடிப்படையாகக் கொண்ட பல வட்டார மொழிகள் சீனாவில் பேசப்படுகிறது. இதில் ஒன்றான மாண்டரின் சீன மொழி, உலகில் அதிக மக்கள் பேசும் மொழி என்ற சிறப்பைக் கொண்டுள்ளது. பொருளாதாரம் 1949 முதல் சீனா பொதுவுடமைத் தத்துவத்தைக் கடைபிடித்து வரும் நாடாகும். 1980 ஆம் ஆண்டு முதல் சீர்த்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், சீனாவின் பொருளாதாரம் ஆண்டுக்குச் சராசரியாக 9% வேகத்துடன் வளர்ந்து வருகின்றது. சீனா உலகில் பாறை எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாகும் சுற்றுலாத்துறை சுற்றுலாவுக்கு புகழ்பெற்றிராத சீனா அத்துறையில் வளர்ச்சி கண்டுவருகிறது. இதற்கு அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் பொருளாதார சீர்த்திருத்தங்களே முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. மார்ச் – ஏப்ரல் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் வரையுமான மாதங்கள் சீனச் சுற்றுலாவிற்கு சிறந்தது. பகல் பொழுதில் 20 முதல் 30 பாகை செல்சியஸ் இருக்கும் அதேவேலை இரவு நேரங்களில் வெப்பநிலை குறைவாகக் காணப்படும். சீன புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளைத் தவிர்ப்பது நல்லது. இந்தச் சமயங்களில் தங்கும் அறை கிடைப்பதும் பயணம் செய்வதும் கடினம். முக்கிய விழாக்கள் சீன புத்தாண்டு – இவ்விழா பெரும்பாலும் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும். அதிகாரபூர்வமாக மூன்று நாட்கள் நீடிக்கும், ஆனால் பெரும்பாலோர் ஒரு வாரம் வரை இவ்விழாவை கொண்டாடுவர். பட்டாசு (வெடி) சப்தங்களும், வாண வேடிக்கைகளும் காணப்படும். இலாந்தர் பண்டிகை இது வர்ணமயமான விழாவாகும். வருடத்தின் முதல் பௌர்ணமியிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும் நாளில் கொண்டாடப்படும் இவ்விழா புத்தாண்டு கொண்டாட்டங்களின் முடிவைக் குறிக்கிறது. சீனாவின் பிரபலமான சிங்க நடனம் இந்தக் காலங்களில் நடைபெறும். சீனாவில் இத்தினம் ஒரு பொது விடுமுறையல்ல. சிங் மிங் ஏப்ரலில் நடக்கும், சீனக் குடும்பங்கள் மறைந்த தங்கள் உறவினர்களின் கல்லறையைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி. டிராகன் படகு திருவிழா ஜூன் மாதத்தில் ஹாங்காங்கில் நடப்பது. 'வுட் யுவான்' என்ற கவிஞரைக் கௌரவிக்கும் முகமாக இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. குழுக்களாகப் படகு செலுத்தும் போட்டி இவ்விழாவின் ஒரு அங்கமாக நடைபெறுவது வழக்கமாகும். படகு குழுவைச் சேர்ந்த அனைவரும் ஒரே சமயத்தில் துடுப்பை வீசிப் படகைச் செலுத்தும் காட்சி கண்ணைப்பறிக்கும். பல வெளிநாட்டுக் குழுக்களும் இப்போட்டியில் பங்குபற்றுவது வழக்கமாகும். Footnotes உசாத்துணை வெளி இணைப்புகள் Overviews China at a Glance from பீப்புள்ஸ் டெய்லி BBC News – China Profile China, People's Republic of from UCB Libraries GovPubs China's பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் entry "Rethinking 'Capitalist Restoration' in China" by Yiching Wu Key Development Forecasts for China from International Futures "China on the Rise". PBS Online NewsHour. ஒக்டோபர் 2005. ChinaToday.com Government The Central People's Government of People's Republic of China China Internet Information Center —Authorized government portal site to China Studies "Assertive Pragmatism: China's Economic Rise and Its Impact on Chinese Foreign Policy". Minxin Pei (2006). IFRI Proliferation Papers. No. 15. Travel China National Tourist Office (CNTO) Maps Google Maps—China ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
4923
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B
தொராண்டோ
தொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) கனடாவில் மக்கள் திரளாக வாழும் புகழ் பெற்ற ஒரு நகரம். இது கனடாவின் பொருளியல், வணிக, பண்பாட்டு, கல்வி மையமாகும். இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில், ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. கனடாவின் 2004 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, இங்கே 5,203,686 மக்கள் வாழ்கின்றனர். இம் மக்கள் பன்னாடுகளில் இருந்து வந்த பல இன, மொழி, சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத் அளவிற்கு பல்வகை இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மன பண்போடு, ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான். இவ் வகையில் தொராண்டோ உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. புவியியல் தொராண்டோ நகரம் சுமார் 630 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. வடக்குத் தெற்காக இதன் அதிகபட்சத் தூரம் 21 கிலோமீட்டர்களும் கிழக்கு மேற்காக அதிக பட்சத் தூரம் 43 கிலோமீட்டர்களுமாகும். இது ஒண்டாரியோ ஏரியின் வடமேற்குக் கரையில் 46 கிலோமீட்டர் நீர்முகத்தைக் கொண்டுள்ளது. தொராண்டோ நகரினூடாக ஹம்பர் ஆறு, டொன் ஆறு மற்றும் றோக் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் பாய்கின்றன. அரசு தொராண்டோ ஒன்ராறியோ மாகணத்தின் தலைநகரம் ஆகும். மத்திய தொராண்டோவில் தான் ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றம் (மாநிலமன்றம்) அமைந்துள்ளது. தொராண்டோ மக்களுக்காக 22 உறுப்பினர்கள் ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத்திலும் (மாநிலமன்றத்திலும்), மற்றுமொரு 22 உறுப்பினர்கள் மத்திய அரசின் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாக இருந்து பணி புரிகிறார்கள். தொராண்டோ நகராட்சி மக்களால் தேர்வு செய்யப்பட்ட 44 நகர மன்ற உறுப்பினர்களையும், தொராண்டோ நகர பிதாவையும் கொண்ட நகர மன்றத்தினால் நிர்வாகிக்கப்படுகின்றது. நகர மன்றத்து தேர்தல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. நகராட்சி போக்குவரத்து, கழிவுப்பொருள் அகற்றல், சமூக சேவைகள், பூங்கா பராமரிப்பு, சுற்றுச் சூழல், சுற்றுலாத்துறை போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது. பொருளாதாரம் தொராண்டோ, உலக வர்த்தக மற்றும் நிதியியல் மையங்களிலொன்றாக விளங்குகின்றது. தொராண்டோ பங்குச் சந்தையானது சந்தை முதலீட்டின் அடிப்படையில் உலகின் ஏழாவது பெரிய பங்குச்சந்தையாக விளங்குகின்றது. இந்நகரம் ஊடகம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத்துறைகளின் முக்கிய நிலையமாகத் திகழ்கின்றது. கல்வி இந்நகரத்தில் மூன்று பல்கலைக்கழகங்களும், நான்கு தொழிற் கல்லூரிகளும், ஒரு பெரிய ஓவியக் கல்லூரியும், பல தனியார் கல்வி நிறுவனங்களும், ஆய்வு கூடங்களும் மற்றும் பல சிறந்த நூலகங்களும் அமைந்துள்ளன. தொராண்டோ பல்கலைக்கழகம் கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமும், உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றும் ஆகும். இதன் மூன்று வளாகங்களிலும் 70,000 மாணவர்கள் கற்கின்றார்கள். யோர்க் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ இரு மொழி பல்கலைக்கழகமாகும். றயர்சன் பல்கலைக்கழகம் நல்ல பொறியியல், பத்திரிகை துறைகளை கொண்டுள்ளது. தொராண்டோவின் சிறப்பு இடங்கள் சிஎன் கோபுரம் – (CN Tower) ஒன்ராறியோ அறிவியல் நடுவம் – (Ontario Science Centre ) தொராண்டோ விலங்குக் காட்சிச்சாலை – (Toronto Zoo) றோயல் ஒன்ராறியோ அருங்காட்சியகம் – (Royal Ontario Museum) ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம் – (Art Gallery of Ontario) ரோயல் இசைப் பயிலகம் – (Royal Conservatory of Music) கனடாவின் தேசிய பலே Bata Shoe Museum டொராண்டோ குறிப்புதவி நூலகம் – (Toronto Reference Library) ஒன்ராறியோ பிளேசு – (Ontario Place) தொராண்டோ நகர மண்டபம் (Toronto City Hall) மாகாண நாடாளுமன்றம் – (Queens Park – Ontario Parliament) டன்டாசு சதுக்கம் – (Dundas Square) ஈட்டன்சு பேரங்காடி – (Eatons Shopping Center) Hockey Hall of Fame ரோயேர்சு மையம் – (Rogers Center/Skydome) கனடா வியனுலகம் – (Canada's Wonderland) ஏர் கனடா சென்டர் (Air Canada Centre) தொராண்டோ தீவுகள் – (Toronto Islands – Centreville Amusement Park) :பகுப்பு:ரொறன்ரோ பூங்காக்கள் தொராண்டோ தமிழர்கள் தொராண்டோவில் 200 000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக பொதுவாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் 1983க்குப் பின்னர் இலங்கை இனக்கலவரங்கள் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள். பலர் தொராண்டோ சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்க்கையை ஆரம்பித்தாலும், தொராண்டோ தரும் கல்வி, தொழில் வசதிகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள். தொராண்டோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் தமிழிலும் கிடைக்கிறது. வழிபாட்டு இடங்கள் சிரீ மீனாட்சி அம்மன் கோவில் நகரத்தோற்றம் சகோதர நகரங்கள் இரட்டை நகரங்கள் சொங்கிங், சீனா (1986) சிக்காகோ, ஐக்கிய அமெரிக்கா (1991) பிராங்க்ஃபுர்ட், ஜேர்மனி (1989) மிலான், இத்தாலி (2002) நட்பு நகரங்கள் ஹோ சி மின் நகரம், வியட்னாம் (2006) கீவ், உக்ரைன் (1991) குயிட்டோ, ஈக்குவடோர் (2006) சகமிஹாரா, ஜப்பான் (1991) வார்சா, போலந்து (1990) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தொராண்டோ நகர உத்தியோகப் பூர்வ இணையத்தளம். Toronto.com A complete guide to restaurants, events, hotels, entertainment and every business in Toronto and its suburbs சிபிசி தொராண்டோ Toronto – Wikivoyage ல் பயணக்கையேடு
4924
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%28%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%29
பொங்கல் (உணவு)
பொங்கல் என்பது தென்னிந்தியாவில் அரிசி கொண்டு செய்யப்படும் உணவு வகையாகும். பொங்கல் உணவு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், மிளகுப் பொங்கல் எனப் பல வகைப்படும். மிளகுப் பொங்கல் காலை உணவாகவும், சர்க்கரைப் பொங்கல் இனிப்பாகவும் உண்ணப்படுகிறது. வெண் பொங்கல், பொங்கல் பண்டிகையின் போது பால், புது அரிசியைக் கொண்டு பொங்கப்படுகிறது. இது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று ஆகும். இதில் பல்வேறு சத்துகள் அடங்கி இருக்கின்றன. பொங்கல் பண்டிகையின் போது வழமையாக எல்லா உழவர் இல்லங்களிலும் அறுவடையில் வந்த புது அரிசியைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் பொங்கப்படுகிறது. உலையில் உள்ள நீரைப் பொங்கவிட்டுப் பொங்கல் செய்யப்படுவதால், பொங்கல் என்பதை ஆகு பெயராகவும் கருதலாம். வெளி இணைப்புகள் வெண் பொங்கல் செய்ய வழிகாட்டி சர்க்கரைப் பொங்கல் செய்ய வழிகாட்டி Pongal Recipe Jan. 2006 தமிழ் பொங்கல் உணவுகள் தமிழர் சமையல்
4929
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சப்த தீவுகள்
சப்த தீவுகள் என்பது இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். "சப்த" என்னும் சொல் சமசுக்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. எனவே ஏழு தீவுகளுக்கு இப்பெயர் வழங்கிவருகின்றது. அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு: லைடன் தீவு (வேலணைத்தீவு) புங்குடுதீவு நயினாதீவு (மணிபல்லவம்/ மணிபல்லவத் தீவு) காரைநகர் நெடுந்தீவு அனலைதீவு எழுவைதீவு யாழ் தீவுகள் இவற்றுள் லைடன் தீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை கடல்வழிச் சாலைகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன. ஏனைய நான்கு தீவுகளான எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு. இவை தவிர யாழ் குடாநாட்டை அண்டியுள்ள சில மனிதர் வாழாத தீவுகளும், கச்சதீவும் இதற்குள் அடங்குவதில்லை. முன்னர் ஏழாக இருந்து பின்னர் பல தனித் தீவுகளாகப் பிரிந்து பல தீவுகள் காணப்படுகின்றன. அவ்வாறு பிரிந்த தீவுகளாக மண்டைதீவு உட்பட, 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தப்படி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு வரை சிறிய தீவுகள் யாழ் தீபகற்பத்தில் அமைந்துள்ளன. ஆகவே ஏழு தீவுகள் என்ற பெயரில் கருத்தியல் சிக்கலை உருவாக்குகின்றன. யாழ் குடாவில் காணப்படும் பிற தீவுகள் பின்வருமாறு: சிறு தீவு குருசடித்தீவு  கண்ணன் தீவு காரைதீவு (வேலணை) குறிகாட்டுவான் நடுத்துருட்டி பாலை தீவு பாறை தீவு புளியந்தீவு தொரட்டப்பிட்டி காக்காரத்தீவு சப்த தீவுகளின் பெயர் விபரங்கள் சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும், ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு: வரலாறு தீவுகளில் மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை, ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இடப் பெயர்களை வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென் இந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில் படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது. மேலும் ஊர்காவற்துறை போன்ற துறைகளும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. மேலும், தீவு மக்களின் உணவு, மொழி போன்ற சில அம்சங்கள் கேரள மக்களுடன் ஒப்பிடத்தக்கவை. போர்த்துகேயர் (1505–1658), ஒல்லாந்தர் (1656–1796) ஆகியோரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ குருமார்கள் வந்து போதித்து பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். சமூகம் யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலை அடுக்கமைவே இங்கும் நிலவியது. குறிப்பாக "குடிமைகள்" என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்டோர், வயல்களிலிலும், மேற் சாதி வீடுகளிலும் கூலி வேலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு சுரண்டப்பட்டனர். மேலும், சம ஆசனம், சம போசனம் மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர, மீனவ சமூகமும் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகவே வாழ்ந்தனர். தற்போது, இச் சாதி கட்டமைப்பு தீவு பகுதிகளில் மிதமாக இடம்பெற்ற கிறீஸ்தவ மத மாற்றம், பின்னர் ஏற்பட்ட புலப் பெயர்வு காரணமாக மிகவும் வலுவற்று இருக்கின்றது. யாழ் சமூகத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. யாழ் குடாநாடு போலின்றி தீவுகளில் கல்வி வசதி குறைவு, அதன் காரணமாக பலர் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இக் கூற்றை கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை என்ற நூல் பின்வருமாறு விபரிக்கின்றது: "வியாபாரத்தை பொறுத்தமட்டில், (இத்தகைய) கல்வி வசதிகள் பெருமளவில் கிடையாத தீவுப்பகுதியினரே பெரும்பாலும் வெளிப் பிரதேசங்களில் கடைகள் நிறுவினர். இன்றும் இந்நிலைமை ஓரளவு தொடர்ந்து நிலவுவதைக் காணலாம். காரைநகர், புங்குடு தீவு முதலிய தீவுகளை சேர்ந்தவர்கள் இத்துறையில் முன்னோடிகளாக விளங்கினார்". இலங்கையின் வட மாகாணத்துக்கு உள்ளேயும் கிளிநொச்சி மற்றும் வன்னிப் பகுதிகளில் விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது அங்கே இடம்பெயர்ந்து குடியேறியோரில் பெரும்பகுதியினர் தீவுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே. "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதற்கமைய ஈழப் போர் காலத்தில் தீவுப் பகுதி மக்கள் பெரும்பாலனவர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள். ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இருந்த வியாபார வெளி தொடர்புகள் இப் புலம் பெயர்வை உந்துவித்திருக்கலாம். பொரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் சிதறி வாழுகின்றார்கள். பொருளாதாரம் விவசாயம், மீன்பிடி, வியாபாரம் ஆகிய மூன்று துறைகளுமே தீவுகளின் பொருளாதார அடிப்படை. நில வளம், நீர் வளம் விவசாயத்துக்கு அவ்வளவு ஒத்துழைக்காவிடினும் நெல், தோட்ட செய்கை, மற்றும் வியாபாரப் பயிரான புகையிலை செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. இத் தீவுகளின் புவியியல் சூழல் மீன்பிடித்தலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது. தீவக மக்கள் கொழும்பு, தென் இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாபாரத் தொடர்புகளை பேணியும், வியாபார தாபனங்களை உருவாக்கியும் பொருள் ஈட்டுவதில் ஈடுபட்டு வந்தனர், வருகின்றனர். இங்கும், யாழிலும் உற்பத்தியாகும் பல பொருட்களை இவ் வியாபரிகளே பல பிரதேசங்களிலும் சந்தைப்படுத்துகின்றார்கள். தீவக பொருளாதார கட்டமைப்பை யாழ்ப்பாண அரச உத்தியோக, உயர் கல்வி, தொழில் ரீதியிலான பொருளாதார கட்டமைப்போடு ஒப்பிட்டு வேறுபாடு சுட்டலாம். புலம்பெயர்ந்தோர் ஊர் ஒன்றியங்கள் இத் தீவுகளில் இருந்து இடம் பெயர்ந்தோர் அத்தீவுகளின் சார்பாகவோ, அல்லது அத்தீவுகளில் உள்ள கிராமங்களின் சார்பாகவோ ஊர் ஒன்றியங்கள் அமைத்து அத் தீவுகளில் சமூக சேவை செய்து வருகின்றார்கள். ஆபத்து உதவிகள், வைத்திய உதவிகள், பாடசாலைகள் மீள் கட்டமைப்பு, சனசமூக நிலையங்கள் பராமரிப்பு, தொழில் வள உதவிகள், பொருள் சந்தைப்படுத்தல், ஏற்றுமதி உதவிகள், போக்குவரத்து மேம்படுத்தல், மின்சத்தி வழங்குதல், கணணி கல்வி ஊக்குவிப்பு, தொலை தொடர்பு மேம்படுத்தல், குழந்தைகள்-முதியோர்-நோய்வாய்பட்டோர் பராமரிப்பு, கோயில்கள் பராமரிப்பு மற்றும் விழா எடுத்தல் போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு அங்கிருக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர். யாழ் தீவகப்பகுதிகளின் அட்டவணை துணை நூல்கள் கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம். சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம். செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம். சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா. இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை. உசாத்துணை வெளி இணைப்புகள் A trip into the once inaccessible areas of Jaffna தொகைமதிப்பு புள்ளிவிபர்த்திணைக்களம் - இலங்கை Ports in ancient Sri Lanka Kayts, a different world -My Police Memories – Sunday Times Plus Jan 2 2000 தேசவரை படங்கள் Jaffana District – Admiminstative Map – www.humanitarianinfo.org இலங்கையின் தீவுகள்
4931
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88
வேலணை
வேலணை (Velanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். பெயர் வரலாறு வேலணை என அழைக்கப்பட என்ன காரணம் என்று தெளிவான பதிவுகள் இல்லாவிடினும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது. வேல் + அணை = வேலணை; "வேல் அணைந்த இடம்" என்றும் முருக வழிபாடு இந்தத் கிராம மக்களிடம் முதன்மை பெற்றிருந்தனால் “வேலன் இணைந்த இடம்” என்றும் பின்னாட்களில் மருவி வேலணை எனவும், பண்டை நாளில் வேலன் என்ற தலைவனின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தமையினால் வேலணை எனப் பெயர் பெற்றது என்றும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது.. மேலும் கடம்பன் என்ற கடற்கொள்ளையனை அடக்குவதற்காக வேலன் என்ற சங்ககால தென்னாட்டு இளவரசன் வந்து தரையிறங்கிய இடம் வேலணை என்றும் “வெண்ணிலவுப் பெண்ணரசி” என்ற நாவலில் மீ.ப.சோமு குறிப்பிட்டுள்ளார். புவியியல் அமைவிடம் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குத் தென்மேற்காக உள்ள வேலணைத்தீவில் வடக்கில் சரவணைக்கும் கிழக்கில் மண்கும்பானுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 15சதுரகிமீ பரப்பளவு கொண்ட ஒரு பகுதியே வேலணைக் கிராமம். வானிலையும் காலநிலையும் வானிலையும் காலநிலையும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலைகளுடன் ஒத்துக் காணப்படினும் இங்கு வெப்பநிலை சற்று உயர்வாகவும் சோளக வாடைக்காற்றின் தாக்கம் அதிகமாகவும் மழைவீழ்ச்சி, பனித்தாக்கம் சற்றுக் குறைவாகவும் உள்ளது. சராசரி வெப்பநிலை 31OC யாகவும் மார்கழி-தை மாதங்களில் 29-30OC யாகவும் இருக்கும். மேலும் இங்கு கடலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் இரவு வெப்பநிலை வேறுபாடு மிகவும் குறைவாக இருக்கின்றது. புரட்டாதி பிற்பகுதியிலிருந்து மார்கழி வரை கூடிய மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. சராசரி மழைவீழ்ச்சி 35-50மிமி இடைப்பட்டதாகும். வரலாற்றுக் குறிப்புக்கள் வரலாற்று ரீதியாக வேலணைக் கிராமத்தின் குடிசன வளர்ச்சியினை நோக்கின் இந்தக் கிராமம் யாழ்ப்பாண இராச்சிய காலத்திலேயே முக்கியம் பெற்று விளங்கியது. போர்த்துக்கேயர் காலத்தில் இக்கிராமத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த ஊர்காவற்றுறை, கரம்பொன், நாரந்தனை போன்ற கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பலர் கத்தோலிக்க மதத்தினைத் தழுவ, வேலணை மக்கள் சைவ சமயத்தவர்களாக விளங்கினர். பின்னர் வந்த ஒல்லாந்தர் காலத்தில் இந்தக் கிராமத்தில் மாற்றங்கள் நிகழ்ந்ததாக வரலாறு இல்லை. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1860-1875 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டை தாக்கிய வாந்திபேதி நோயினால் வேலணைக் கிராமத்தில் பலரும் பாதிக்கப்பட்டு இருந்தனர். மேலும் தமிழர்கள் வழிபட்டுவரும் கோவில்களிலே மிகப் புராதனமானவற்றில் வேலணை கிழக்கில் உள்ள வேலணை, பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவிலும் ஒன்று எனக் கருதப்படுகிறது. ஒல்லாந்தர் காலத்துப் பழமையான பத்திரங்களிலிருந்து தொகுக்கப்பட்டு ஆங்கிலேயரினால் சேமித்துவைத்திருக்கும் அரசாங்கக் கச்சேரிப் பதிவேடுகளிலே இந்தக் கோவில் பற்றிய குறிப்புக்கள் உள்ளது. மேலும் பண்டுதொட்டு இந்தக் கோவிலிலே மிருகபலி இடப்பட்டு வழிபடும் வழக்கம் இருந்தாக அரசாங்கக் கச்சேரிப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. பொருளாதாரம் வேலணைக் கிராமத்தின் பொருளாதாரத்தில் விவசாயம், மீன்பிடி, பனைசார் தொழில் மற்றும் கைவினைத் தொழில்கள் பல நூற்றாண்டுகால முக்கியத்துவம் பெறுகின்றது. பலதுறைப் பொருளாதாரம் இருந்தும் இங்கு விவசாயம் முக்கியம் பெறுகின்றது. அண்மைய தசாப்தங்களில் புகையிலைப் பயிர்ச்செய்கை வேலணைக் கிராமத்தின் மொத்த உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. வேலணையில் புகழ் பூத்தவர்கள் சேர் வைத்திலிங்கம் துரைசாமி - முன்னாள் சட்டசபை உறுப்பினர் (1920-1930), அரசசபை முன்னாள் சபாநாயகர் (1936-1947) வே. அ. கந்தையா பண்டிதர் கா. பொ. இரத்தினம் தில்லைச் சிவன் வேலணையூர் சுரேஷ் கோயில்கள்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள் அவற்றுள் சில: வங்களாவடி முருகன் கோவில் சிற்பனை முருகன் ஆலயம் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோயில் வேலணை துறையூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆலயம்புலம் கந்தபுராண மரம் தோபுரத்தடி ஞானவைரவர் கோவில் செம்மணத்தி நாச்சியார் ஆலயம் அம்பிகை நகர் ஸ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம் தெம்பக்குளம் நால்வர் மடம் தனித்திரு அன்னம் வேலணை மேற்கு பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் (முடிப்பிள்ளையார்) ஆலயம் வேலணை இலந்தைவனம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் பள்ளம்புலம் முருகமூர்த்தி திருக்கோவில் வேலணை துறையூர் இலந்தைவன ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலயம் மயிலைப்புலம் ஐயனார் ஆலயம் செட்டிப்புலம் காளவாய்த்துரை ஐயனார் ஆலயம் வேலணை கிழக்கு தவிடுதின்னிப் பிள்ளையார் கோவில் வேலணை கிழக்கு அரசபுர பெரும்படை ஐயனார் கோவில் வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம் நடராசப் பெருமான் கோவில் சாட்டி சித்தாத்திரை மாதா கோவில் வேலணை வங்களாவடி அமெரிக்க மிஷன் தேவாலயம் துணை நூல்கள் கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம். சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம். செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமேகலை பிரசுரம். சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். டொரண்டோ, கனடா. இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் www.velanaieast.com - வேலணை கிழக்கு மகா வித்தியாலயம் www.velanaieast.com - வேலணை கிழக்கு மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் www.velanai.com - வேலணை மக்கள் ஒன்றியம் www.velanaieast.com - வேலனை பெருங்குளம் முத்துகுமாரி அம்மன் ஆலயம் வேலனை www.velanaicentralcollege.com -வேலணை மத்திய மகா வித்தியாலயம் www.velanaimahakanapathi.com -வேலணை மகாகணபதிப்பிள்ளையார் இலங்கையின் தீவுகள் யாழ்ப்பாண மாவட்டம்
4932
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D
கரம்பொன்
கரம்பொன் (Karampon) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். கரம்பொனைச் சேர்ந்தவர்கள் தனிநாயகம் அடிகள், தமிழறிஞர் அல்பிரட் தம்பிஐயா, தொழிலதிபர், அரசியல்வாதி பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை, முன்னாள் யாழ்ப்பாண ஆயர் வி. நவரத்தினம், அரசியல்வாதி எஸ். புண்ணியமூர்த்தி, வானொலி அறிவிப்பாளர் நீ. வ. அந்தோனி, அண்ணாவியார் மேற்கோள் நூல்கள் கா. சிவத்தம்பி, யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை, குமரன் புத்தக நிலையம்,கொழும்பு,(2000). சதாசிவம் சேவியர், சப்த தீவு, ஏசியன் அச்சகம், சென்னை, (1997). செந்தி செல்லையா (தொகுப்பு.), பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம், மணிமோகலை பிரசுரம்,சென்னை, (2001). சு. சிவநாயகமூர்த்தி, நெடுந்தீவு மக்களும் வரலாறும், ரொறன்ரோ, கனடா (2003). இ. பாலசுந்தரம், இடப்பெயர் ஆய்வு, யாழ்ப்பாண மாவட்டம் தமிழர் செந்தாமரை, ரொறன்ரோ: (2002). வெளி இணைப்புகள் World:Sri Lanka:North Eastern Province:Karampan வேலணைத் தீவு யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும் யாழ்ப்பாண மாவட்டம்
4936
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE
ஓ கனடா
"ஓ கனடா" கனடாவின் தேசிய கீதம் ஆகும். இந்த கீதத்தின் முதல் ஆக்கம் பிரெஞ்சு மொழியில் சர் அடொல்ப் பேஸில் ரூத்தீயே (Sir Adolphe Basile Routhier) என்பவரால் எழுதப்பட்டது. தற்போதைய ஆங்கில மொழியாக்கம் ரொபேற் ஸ்ரான்லி வியர் ( Robert Stanley Weir) என்பவரால் 1908ம் ஆண்டு எழுதப்பட்டது. தமிழ் மொழி ஆக்கம் கவிஞர் கந்தவனம் என்பவரால் எழுதப்பட்டது. தமிழ் மொழியாக்கம் ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ! உந்தன் மைந்தர்கள் உண்மை தேச பக்தர்கள்! நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய் நீ எழல் கண்டு (உ)வப்போம்! எங்கும் உள்ள நாம், ஓ கனடா நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! எம்நிலப் புகழை, சுதந்திரத்தை என்றும் இறைவன் காத்திடுக! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! ஆங்கில மொழியாக்கம் O Canada! Our home and native land! True patriot love in all thy sons command. With glowing hearts we see thee rise, The True North strong and free! From far and wide, O Canada, We stand on guard for thee. God keep our land glorious and free! O Canada, we stand on guard for thee. O Canada, we stand on guard for thee. பிரெஞ்சு மொழியாக்கம் இனுக்ரிருற் மொழி ஆக்கம் Uu Kanata! nangmini nunavut! Piqujatii nalattiaqpavut. Angiglivalliajuti, Sanngijulutillu. Nangiqpugu, Uu Kanata, Mianiripluti. Uu Kanata! nunatsia! Nangiqpugu mianiripluti, Uu Kanata, salagijauquna! மேற்கோள்கள் கனடாவில் இசை நாட்டுப்பண்கள்
4937
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D
செல்லப்பன் ராமநாதன்
எஸ். ஆர். நாதன் என்று அழைக்கப்படும் செல்லப்பன் ராமநாதன் (ஆங்கிலம்: Sellapan Ramanathan அல்லது S. R. Nathan; மலாய்: S. R. Nathan; சீனம்: 塞拉潘·拉馬·纳丹); என்பவர் சிங்கப்பூரின் ஆறாவது அதிபர். இவர் 1999 செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, 2005 ஆகஸ்டு 18-ஆம் தேதி வரை சிங்கப்பூர் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர். பின்னர் 2005 ஆகஸ்டு 18-ஆம் தேதி மறுபடியும் தேர்வு செய்யப்பட்டார். இவரின் அதிபர் பதவிக் காலம் 2011 ஆகஸ்டு 31-ஆம் தேதி முடிவடைந்தது. இவர் சிங்கப்பூரில் நீண்ட காலம் சேவை செய்த அதிபர் எனும் பெருமையையும் பெறுகிறார். 31 ஜூலை 2016-இல் இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (Singapore General Hospital's Intensive Care Unit) அனுமதிக்கப்பட்டார். 2016 ஆகஸ்டு 22-ஆம் தேதி, அவரின் 92 வயதில் உயிர் துறந்தார். வாழ்க்கை வரலாறு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாதன், 1924-ஆம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி சிங்கப்பூரில் பிறந்தார். தந்தையார் பெயர் வி. செல்லப்பன். தாயாரின் பெயர் அபிராமி. குழந்தைப் பருவத்தில் தன் மூத்த சகோதரர்களுடன் ஜொகூர், மூவார் நகரின் கடல்கரைப் பகுதியில் வாழ்ந்தார். அவரின் மூன்று மூத்தச் சகோதரர்கள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர். அவரின் தந்தையார் மலாயா ரப்பர் தோட்டங்களுக்கு சேவை செய்யும் ஒரு வழக்கறிஞர் நிறுவனத்தில் ஓர் எழுத்தராக வேலை செய்து வந்தார். குடும்பத்தில் வறுமை 1930-களில் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் மலாயாவின் ரப்பர் விலைச் சரிவுகளின் காரணமாகக் குடும்பத்தில் வறுமை. நாதனின் தந்தையார் கடன் சுமைகளைச் சுமந்து குடும்ப வாழ்க்கையில் போராடினார். இருப்பினும் நாதனுக்கு எட்டு வயதாக இருக்கும் போது அவரின் தந்தையார் தற்கொலை செய்து கொண்டார். தாயாருடன் தகராறு சிங்கப்பூர் திரும்பிய நாதன், தன் ஆரம்பக் கல்வியை ஆங்கிலோ-சீனப் பள்ளியிலும் (Anglo-Chinese School) ரங்கூன் சாலை காலைப் பள்ளியிலும் (Rangoon Road Morning School) பெற்றார். விக்டோரியா பள்ளியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றார். இவர் இரண்டு முறை பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் தாயாருடன் தகராறு செய்து கொண்டு, 16 வயதில் வீட்டை விட்டு ஓடிவிட்டார். ஜப்பானிய ஆக்கிரமிப்பு சிங்கப்பூரில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது, நாதன் அவர்கள், ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொண்டார். பின்னர் ஜப்பானியப் பொதுக் காவல்துறையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வேலை செய்து கொண்டே, இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் வோல்சி கல்வி நிலையத்தில் (Wolsey Hall, Oxford) அஞ்சல் படிப்பின் மூலம் தன் இடைநிலைக் கல்வியை முடித்தார். அதோடு அப்போது சிங்கப்பூரில் இருந்த மலாயா பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் படிக்கும் போது, பல்கலைக்கழக சோசலிஸ்டு மன்றத்தின் (University Socialist Club) செயலாளராக ஆனார். 1954-ஆம் ஆண்டில் சமூக ஆய்வுகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்று பட்டயம் பெற்றார். சிங்கப்பூர் பொதுச் சேவை 1955-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பொதுச் சேவையில் சேர்ந்தார். 1962 - 1966 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தேசிய தொழிற்சங்கச் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இருந்தார். பின்னர் வெளியுறவு அமைச்சகத்திலும்; மற்றும் உள்துறை அமைச்சகத்திலும் பணியாற்றினார். 1974-இல் லாஜு கடத்தல் (Laju Incident அல்லது Laju Ferry Hijacking) எனும் நிகழ்ச்சி நடந்தபோது, அவர் சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் (Security and Intelligence Division of the Ministry of Defence) பணிபுரிந்து வந்தார். 1979 முதல் 1982 வரை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் முதன்மை நிரந்தரச் செயலாளராகவும் (First Permanent Secretary of the Foreign Ministry) பணியாற்றினார். அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் 1982-இல் சிங்கப்பூர் பொதுச் சேவையை விட்டு வெளியேறி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் (Straits Times Press) நிர்வாகத் தலைவராகப் பொறுப்பு ஏற்றார். 1988 மற்றும் 1996-க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதராகவும், அமெரிக்காவுக்கான தூதராகவும் பணியாற்றினார். 1999 முதல் 2011 வரை சிங்கப்பூரின் அதிபராக 12 ஆண்டுகள் பதவி வகித்தார். 1974 ஜனவரி 31-ஆம் தேதி, லாஜு கடத்தல் (Laju Incident) நிகழ்ச்சி நடைபெற்றது. பயங்கரவாத ஜப்பானிய செம்படை (Japanese Red Army); மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கான முன்னணி (Popular Front for the Liberation of Palestine) படை உறுப்பினர்கள்; சிங்கப்பூர் புலாவ் புகோம் தீவில் (Pulau Bukom) இருந்த சிங்கப்பூர் பெட்ரோலியக் கொள்கலன்கள் மீது வெடிகுண்டுகளை வீசினர். சிறப்புச் சேவைப் பதக்கம் அந்தக் கட்டத்தில் ஜப்பானிய செம்படைக்குப் பிணைக் கைதிகளாக இருக்க முன்வந்த அரசாங்க அதிகாரிகளின் குழுவில் நாதன் அவர்களும் ஒருவராக இருந்தார். மேலும் பணயக் கைதிகளை விடுவிக்கவும்; பயங்கரவாதிகளின் பாதுகாப்பான வழியை உறுதிப்படுத்தவும்; நாதன் அவர்கள் குவைத் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். அந்தப் பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைத்தார். அவரின் துணிச்சலுக்காக, ஆகஸ்ட் 1974-இல் அவருக்கு பிங்காட் ஜசா கெமிலாங் எனும் சிறப்புச் சேவைப் பதக்கம் (Meritorious Service Medal) வழங்கப்பட்டது. மூன்றாவது முறையாக அதிபர் பதவி 2011 ஜூலை 1-ஆம் தேதி, மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்கப் போவது இல்லை என்று நாதன் அறிவித்தார். அவர் தன் வயதை ஒரு காரணமாகக் காட்டினார். தன்னுடைய 87-ஆவது வயதில் அதிபர் பதவியின் கனமான பொறுப்புகளச் சுமக்க இயலாது என்று அதிபர் பதவியை மறுத்து விட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி அவர் அதிபர் பதவியை விட்டு வெளியேறினார். புதிய அதிபராக டோனி டான் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். தனிப்பட்ட தகவல் 15 டிசம்பர் 1958-இல், ஊர்மிளா நந்தி (Urmila Nandey) (பிறப்பு 1929); என்பவரை அதிபர் நாதன் மணந்தார். அவருக்கு ஒரு மகன்; பெயர் ஒசித் (Osith). மற்றும் ஒரு மகள்; பெயர் ஜோதிகா (Juthika). மூன்று பேரக் குழந்தைகள். அரச மரியாதை அதிபர் நாதனுக்கு 31 ஜூலை 2016 காலை நேரத்தில் இதயப் பக்கவாதம் ஏற்பட்டது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். 22 ஆகஸ்ட் 2016 இரவு 9:48 மணிக்கு, அவரின் 92 வயதில் மருத்துவமனையில் உயிர் துறந்தார். நாதன் அவர்கள் சிங்கப்பூருக்கு ஆற்றிய சேவைகளுக்கு வழங்கப்படும் மரியாதையின் அடையாளமாக, 2016 ஆகஸ்டு 23-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை, நான்கு நாட்களுக்கு, சிங்கப்பூரின் அனைத்து அரசுக் கட்டிடங்களிலும் சிங்கப்பூர் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் அரசாங்கம் உத்தரவிட்டது. பொதுமக்களின் பார்வைக்காகவும்; மரியாதையைச் செலுத்துவதற்காகவும்; நாதனின் உடல் 2016 ஆகஸ்டு 25-ஆம் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இறுதி ஊர்வலத்தில் தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடல் 2016 ஆகஸ்டு 26-ஆம் தேதி, அதிபர் நாதனைக் கௌரவிக்கும் வகையில் அரசு இறுதிச் சடங்கு நடைபெற்றது. அவரின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. அரசு இறுதி ஊர்வலத்தில் அவரின் உடல், அவரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைச் கடந்து சென்றது. சிங்கப்பூரின் பல்லினப் பாரம்பரியத்தை உருவகமாகக் கருதிய நாதனுக்கு மிகவும் பிடித்தமான பாடலான "தஞ்சாவூர் மண்ணு எடுத்து" எனும் பாடல் அவரின் இறுதி ஊர்வாத்தில் இசைக்கப்பட்டது. பொற்காலம் எனும் தமிழ்த் திரைப்படத்தின் பாடல். அரசு இறுதிச் சடங்குகளைத் தொடர்ந்து, அவரின் உடல் மண்டாய் மயானத்தில் (Mandai Crematorium) தகனம் செய்யப்பட்டது. விருதுகள் சிறந்த சேவைப் பதக்கம் - Pingat Jasa Gemilang; (Meritorious Service Medal) 1975 பொதுச் சேவை நட்சத்திர விருது - Bintang Bakti Masyarakat (Public Service Star) 1964 பொது நிர்வாக விருது (பேராக்) - Pingat Pentadbiran Awam (Perak) (Public Administration Medal, Silver) 1967. துமாசிக் விருது - Darjah Utama Temasek (Order of Temasek) (First Class) 2013 ஐக்கிய இராச்சிய வீர விருது - Order of the Bath 2006 பிரவாசி பாரதீய சம்மான் - Pravasi Bharatiya Samman 2012 ஆசிய-பசிபிக் பிராந்திய சிறப்புமிக்க சாரணர் விருது - Asia-Pacific Regional Distinguished Scout Award - 2005 புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருது - Eminent Alumni Award - National University of Singapore - 2014 சிறப்புமிக்க சேவை விருது (தங்கம்) - Distinguished Service Award (Gold) - 2010 அல்-கலிஃபா ஆர்டர் பஹரைன் - Al-Khalifa Order Bahrain - 2010 Doctor of Civil Law University of Mauritius - 2011 Doctor of Letters (D.Litt.) National University of Singapore - 2014 Distinguished Arts and Social Sciences Alumni Award, National University of Singapore - 2015 மேற்கோள்கள் மேலும் காண்க சிங்கப்பூர் அதிபர் இணையத்தளம் சிங்கப்பூர் ராமநாதன்! தினமலர் . . நாதன் எழுதிய நூல்கள் . . . . . . . வெளி இணைப்புகள் Official website of The Istana and the President of the Republic of Singapore Official website of the President's Challenge சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் சிங்கப்பூரின் குடியரசுத் தலைவர்கள் சிங்கப்பூர் அரசு சிங்கப்பூர் தமிழர் 1924 பிறப்புகள் 2016 இறப்புகள் பிரவாசி பாரதீய சம்மான் விருது பெற்றவர்கள் சிங்கப்பூர் தமிழ் அரசியல்வாதிகள்
4940
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88
வீணை
வீணை (veena) ஒரு நரம்பு இசைக் கருவி. மிக அழகிய இசைக்கருவியான இது மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்திய இசையின் பல நுட்பங்களையும், தத்துவங்களையும் இந்தக் கருவியின் மூலம் தெளிவாக வெளிப்படுத்தலாம். வரலாறு பண்டைக்காலம் தொட்டு வீணை வாசிக்கப்பட்டு வந்தாலும், கி.பி. 17-நூற்றாண்டில்தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில் இது நிகழ்ந்தது. வீணையின் பாகங்கள் குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகியவை வீணையின் பாகங்களாகும். வீணையின் அமைப்பு வீணை மீட்டு கருவிகளின் வகையைச் சேர்ந்தது. வீணையில் 3-1/2 ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. பலா மரத்தினால் வீணை செய்யப்படுகின்றது. தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பருத்தும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறுத்தும் இருக்கும். தண்டியின் இரு பக்கங்களிலும் மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினாற் செய்யப்பட்டிருக்கும். யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும். நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படும். வளையங்களி நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் சுருதி அதிகரிக்கும். யாளியின் பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும். மேலும், பிரடைகளை யாளி முகப்பக்கம் தள்ளினால் சுருதி குறைவடையும். தஞ்சாவூர் வீணையில் குடத்தின் வெளிப்புறத்தில் 24 நாபுக்கள் கீறப்பட்டிருக்கும். ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்பட்டுள்ள வீணைக்கு ஏகாந்த வீணை''' என்று பெயர். வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் போடப்படிருக்கும். வாசிப்புத் தந்திகள் சாரணி (ச) பஞ்சமம் (ப) மந்தரம் (ச) அநுமந்தரம் (ப) தாள-சுருதித் தந்திகள் பக்கசாரணி (ச) பக்கபஞ்சமம் (ப) ஹெச்சு சாரணி (ச்) வாசிக்கும் முறை வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள-சுருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல்களில் நெளி அல்லது மீட்டி'' எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ் தண்டிலுள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார். தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும். வீணை வகைகள் பலவகையான வீணைகள் உள்ளன. அவற்றுட் சில: சரசுவதி வீணை உருத்திர வீணை விசித்திர வீணை மகாநாடக வீணை வீணைக்கு உகந்த பக்கவாத்தியங்கள் தம்புரா தவில் புகழ் பெற்ற வீணை இசைக் கலைஞர்கள் காரைக்குடி சாம்பசிவ ஐயர் வீணை சிட்டிபாபு எஸ். பாலச்சந்தர் வீணை தனம்மாள் வீணை காயத்ரி ஆர். பிச்சுமணி ஐயர் ஈமணி சங்கர சாஸ்திரி மேலும் காண்க கிதார் சிதார் மின் கிதார் பிளமேன்கோ கிதார் சந்தூர் செம்மிசை கிதார் சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் வெளி இணைப்புகள் நல்லதோர் வீணை செய்தே Mastering the king of instruments - உருத்திர வீணை குறித்த சில தகவல்கள் ஆய கலைகள் அறுபத்து நான்கு கம்பி இசைக்கருவிகள் தமிழர் இசைக்கருவிகள் ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்
4942
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
தவில்
தவில் என்பது நாதஸ்வரத்திற்குத் துணையாக வாசிக்கப்படும் தாள இசைக்கருவியாகும். கர்நாடக இசைக்கும் கிராமிய இசைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இது தோம்பு உருவத்தில் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். விழாக்காலங்களிலும்,திருமணம், குழந்தைக்குக் காது குத்தல் போன்ற நன்நிகழ்ச்சிகளிலும் இதன் பயன்பாடு அதிகம். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்படிருக்கும் இந்தக் கருவியில் ஒரு பக்கம் மறு பக்கத்தைவிடச் சற்று பெரியதாக இருக்கும். தவில் வாசிப்பவர் ஒரு தோல் கயிற்றால் தனது தோளின் மீது தவில் கருவியை மாட்டி முழக்குவார். சிறிய பக்கத்தில் மரத்தால் செய்யப்பட்ட குச்சியினாலும் பெரிய பக்கத்தை விரல்களாலும் முழக்குவர். விரல்களில் அரிசிக் கூழால் செய்யப்பட்டு உலர்த்தப்பட்ட கவசங்கள் அணிந்திருப்பார்கள். பெரும்பாலான தவில் கலைஞர்கள் சிறிய பக்கத்தை வலது கையால் குச்சி கொண்டும் பெரிய பக்கத்தை இடது கையால் கவசம் அணிந்த விரல்களைக் கொண்டும் முழக்குவர். எனினும், இடது கையால் குச்சியையும் வலது கையால் விரல்களையும் பயன்படுத்தும் கலைஞர்களும் இருக்கிறார்கள். தவில் பாகங்கள் தவிலின் உருளை வடிவிலான பகுதி பலா மரத்தினால் செய்யப்படுகிறது .இதன் சிறிய பக்கத்தில் இருக்கும் தோல் வளந்தலை என்று கூறப்படும். இது எருமைக்கன்றின் தோலால் செய்யப்படுகிறது .இதன் பெரிய பக்கத்தில் உள்ள தோல் தொப்பி என்று வழங்கப்படுகிறது. இது ஆட்டின் தோலினால் செய்யப்படுகிறது. இந்த தோலை தாங்கிப் பிடிக்கும் வளையங்கள் இரு பக்கமும் உண்டு. அவை மூங்கிலால் செய்யப்பட்டது. .அந்த வளையங்கள் விரைவாக உடைவதால் இப்பொது உருக்கு உலோகத்தால் செய்யப்படுகிறது .தோல் கயிறு கொண்டு கட்டப்பட்ட பகுதிகள் இப்பொது உருக்கு உலோகத்தால் செய்யப்படும் ஆணிகள் கொண்டு முடுக்கி விடப்படுகிறது .தவிலின் உருளை வடிவின் வெளிப்புறத்தில் உருக்கு உலோகத்தால் செய்யப்பட்ட வளையங்கள் இரண்டு பொருத்தப்படுகிறது. அவற்றில் 22 துளைகள் உள்ளன ஒவ்வொன்றிலும் 11 துளைகள் இருக்கும். ஒன்று சிறிய பக்க தோலைத் தாங்கி பிடித்து இருக்கும் மற்றொன்று பெரிய பக்கத் தோலைப் பிடித்து இருக்கும் .இதனால் அவற்றில் எதாவது ஒரு பக்கம் கிழிந்து விட்டால் எளிதில் மாற்ற முடியும். முற் காலங்களில் இரண்டு பக்கமும் தோல் கயிற்றால் இணைக்கப்பட்டதால் ஒரு பக்கம் கிழிந்தாலும் இரண்டு பக்கத்தையும் கழற்றி பின் சரி செய்யும் முறை இருந்தது. தவில் இசை தவில் வாசிப்பதற்கு அடிப்படை இசையாவன: தா தி தொம் நம் ஜம் தா தி தொம் நம் கி ட ஜம் வரலாறு தவில் வாத்தியம் எப்போது உருவானது, எப்போது பாவனைக்கு வந்தது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் 15-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் 12 இடங்களில் தவில் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புராணங்கள், இதிகாசங்களில் டின்டிமம் என்னும் ஒரு தாள வாத்தியம் பற்றி கூறப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் குச்சியாலும் மறுபக்கம் கையாலும் முழக்கப்படும் பறை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல்நிலையத்தில் உள்ள நூல்களில் எழுதப்பட்டுள்ளது. தவிலின் தனிச்சிறப்பு கருநாடக இசைக் கச்சேரிகளில் பிரதான பாடகர் தான் முதலில் தொடங்குவார். பக்கவாத்தியம் பின்தொடரும். வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களின் தனிக் கச்சேரியிலும் அந்தந்த வாத்தியங்கள் தான் தொடங்கும். நாதசுவரக் கச்சேரிகளில் நாதசுவரம் தான் பிரதான வாத்தியம்; தவில் பக்கவாத்தியம். ஆனால் நாதசுவரக் கச்சேரி தொடங்கும்போது தவில் வாசிப்போடு தான் தொடங்கும். இது தவில் வாத்தியத்தின் தனிச் சிறப்பு. புகழ் பெற்ற தவில் கலைஞர்கள் நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மலைக்கோட்டை பஞ்சாபகேச பிள்ளை திருமுல்லைவாயில் முத்துவீரு பிள்ளை கும்பகோணம் தங்கவேல் பிள்ளை திருநகரி நடேச பிள்ளை நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை வலங்கைமான் ஏ. சண்முகசுந்தரம் பிள்ளை நீடாமங்கலம் சண்முகவடிவேல் பிள்ளை யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம் அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல் திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி அம்மாப்பேட்டை பக்கிரிப்பிள்ளை அம்மா சத்திரம் கண்ணுசாமி பிள்ளை திருக்கடையூர் சின்னையா பிள்ளை திருவாளப்புத்தூர் பசுபதிப் பிள்ளை திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி தஞ்சை கோவிந்தராசன் வேதாரண்யம் பாலு திருவிழா ஜெய்சங்கர் இதனையும் காண்க மங்கல இசை தவில் கலைஞர்களின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மல்லாரிகளின்-கம்பீரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் "நாதனும், நாதமும்" வீடியோ குறுந்தகடு வெளியீடு! மறைந்து வரும் மங்கல இசை:சிறப்புத் தொடர் முதல் பகுதி தாள இசைக்கருவிகள் தவில் தோற் கருவிகள் தமிழர் இசைக்கருவிகள்
4944
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
மத்தளம்
இந்தியாவின் மத்தள இசைக்கருவிகளில் புகழ் பெற்றது தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பருமனாகவும் விளிம்பில் சிறியதாகவும் இருக்கும் உருளை வடிவத் தோற்றம் கொண்டது இந்த மத்தளம் ஆகும். பலகையால் செய்யப்பட்ட தோலக்கில் இருக்கும் இரண்டு வளையங்கள் மேலும் தோல் இழுத்து கட்டப்பட்டிருக்கும். மத்தளத்தின் சுருதியை மாற்ற இரண்டு மத்தளத் தலைகளை (drumheads) இணைக்கும் கயிறை மாற்றி அமைக்க வேண்டும். இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது. • இனிமையாதல் மதங்கம் எனும் சொல் "மிருதங்கம்' என வடமொழியில் மாறி அமைந்தது. மத்தளம் பற்றிய இசைத் துறைச் சொற்கள் டேக்கா, பரண், மீட்டுச் சொல், நடை, திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீரணம், கதி, அறுதி, தீர்மானம், முத்தாய்ப்பு கோவை, மோரா • இது மென்மை ஒலியது. "தாழ் குரல் தண்ணுமை' என்கிறது சிலப்பதிகாரம். மத்தளத்தின் காலம் அடியார்க்கு நல்லாரின் காலம் 1137-க்கு பிற்பட்டது. • தமிழிலக்கிய வரலாறு 12-ம் நூற்றாண்டு, நல்லாரின் காலத்துக்கு முந்தியே, மத்தளம் வழங்கியது. • "சீர்மிகு மத்தளம்', "உத்தம மத்தளம்' என்றெல்லாம் முன்னவர் பாராட்டுப் பெற்றுச் சிறந்தது. • மத்தளமே மிருதங்கம். மத்தளத்திற்கு வேறொரு பெயர் மதங்கம், மதுங்குதல் என்பதாகும். மேற்கோள்கள் இவற்றையும் காணவும் சைவத் திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள் தாள இசைக்கருவிகள் தோற் கருவிகள் இந்திய இசைக்கருவிகள்
4945
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
ஆகு பெயர்
ஆகு பெயர் எனப்படுவது, ஒரு சொல் அதன் பொருளைக் குறிக்காமல் அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளைக் குறிப்பது. ஒன்றினது இயற்பெயர் அதனோடு தொடர்புடைய வேறொன்றுக்கு ஆகி வருவது. பெயர்ச்சொல்லின் ஒரு இயல்பாக வருவது. ஆகுபெயர் எல்லாமே பெயர்ச்சொல். ஆனால், பெயர்ச்சொல் எல்லாம் ஆகுபெயராகாது. எடுத்துக்காட்டுகள் நெல் அறுத்தான் - உண்மையில் அறுக்கப்பட்டது கதிர். நெல் என்பது இங்கு ஆகுபெயர் ஆனது. வெற்றிலை நட்டான் - நடப்பட்டது வெற்றிலைக் கொடி. இங்கு வெற்றிலைக் கொடிக்காக வெற்றிலை ஆகுபெயர் ஆனது. கண் என்னும் சொல் ஆகுபெயராய்க் கண்ணின் பார்வையை உணர்த்தும். பெண் இயலார் எல்லாம் கண்ணின் பொது உண்பர் நண்ணேன் பரத்த நின் மார்பு இந்தத் திருக்குறளில் கண்ணால் உண்பர் என்பது கண் பார்வையால் உண்ணுதலை உணர்த்தி நிற்கும் ஆகுபெயர். வகைகள் ஆகுபெயர்கள் பத்தொன்பது வகைப்படும். அவையாவன: பொருளாகு பெயர் சினையாகு பெயர் காலவாகு பெயர் இடவாகு பெயர் பண்பாகு பெயர் தொழிலாகு பெயர் எண்ணலளவையாகு பெயர் எடுத்தலளவையாகு பெயர் முகத்தலளவையாகு பெயர் நீட்டலளவையாகு பெயர் சொல்லாகு பெயர் காரியவாகு பெயர் கருத்தாவாகு பெயர் உவமையாகு பெயர் அடை அடுத்த ஆகுபெயர் தானியாகுபெயர் இருபடியாகு பெயர் மும்மடியாகு பெயர் கருவியாகு பெயர் பொருளாகுபெயர் முதல் பொருளின் பெயர், அதனோடு தொடர்புடைய இன்னொரு பொருளுக்கு ஆகி வருதல். எடுத்துக்காட்டு: மல்லிகை போன்ற வெண்மை. இங்கு மல்லிகைப் பூவுக்காக மரம் வந்தது. (இது சினைக்காகப் பொருள் ஆகியது. சினையாகு பெயர் ஒரு சினைப் பொருளின் பெயர் அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும். (எ.கா) தலைக்குப் பத்து ரூபாய் கொடு. இதில் தலை என்னும் சினைப் பொருளின் பெயர், பத்து ரூபாய் கொடு என்னும் குறிப்பால் அந்தத் தலையை உடைய மனிதனுக்கு ஆகி வந்துள்ளது. காலவாகு பெயர் எடுத்துக்காட்டு: மாரி பொழிந்தது. - மழை பொழிந்தது. சித்திரை வந்தாள். - சித்திரையில் பிறந்தவள் வந்தாள். மார்கழி சூடினாள் இடவாகு பெயர் இடத்தின் பெயர் இன்னொன்றுக்காய் ஆகி வருவது. எடுத்துக்காட்டு: இங்கிலாந்து வென்றது.: இங்கு இங்கிலாந்து என்பது இங்கிலாந்தைக் குறிக்காமல், இங்கிலாந்துக்காக விளையாடும் இங்கிலாந்து அணியைக் குறித்தது. (அணிக்கு ஆகி வந்தது) இது இடவாகுபெயர். உலகம் வியந்தது: இதில் உலகம் என்பது மண்ணுலகத்தைக் குறிக்காமல், அதில் வாழும் மக்களைக் குறித்தது. (மக்களுக்கு ஆகி வந்தது). இது இடவாகு பெயர். பண்பாகு பெயர் எடுத்துக்காட்டு: வீட்டிற்கு வெள்ளை அடித்தான்.: 'வெள்ளை' என்னும் நிறத்தின் பெயர், அந்நிறத்தையுடைய சுண்ணாம்புக்கு ஆகி வந்தது. இங்கு 'வெள்ளை' என்பது ஆகு பெயர். இதனை பண்பாகுபெயர் என்பர். தொழிலாகு பெயர் புழுங்கல் காய்ந்தது - காய்ந்தது அரிசி புழுக்கியதால்(தொழில்) புழுங்கல் என ஆகியுள்ளத. https://ta.wikipedia.org/ . சொல்லாகு பெயர் ஏதோ ஒன்றுக்காக சொல் கருவி ஆகி வருவது. எடுத்துக்காட்டு இந்தப் பாட்டு என் சிந்தனையைத் தூண்டியது. இங்கே பாட்டின் பொருள்தான் சிந்தனையைத் தூண்டியது. பொருளுக்காக பாட்டு என்ற சொல் கருவி ஆகி வந்தது. காரியவாகு பெயர் எடுத்துக்காட்டு எழுத்தாளர் தரமான இலக்கியம் படைக்க வேண்டும். இலக்கியம் என்பது காரியம். இங்கு இலக்கியம் என்பது தரமான சிறுகதைக்கு காரியமாக ஆகி வருகிறது. கருத்தாவாகு பெயர் கருத்தா - படைத்தவர் கருத்தா. வைரமுத்துவை வாசி. இங்கு வைரமுத்து எழுதிய கவிதைக்காக வைரமுத்து என்கின்ற கருத்தா ஆகி வருகிறது. உவமையாகு பெயர் உவமேயத்துக்காக உவமானம் ஆகி வருவது. எடுத்துக்காட்டு மயில் வந்தாள். இங்கே உண்மையில் வந்தது ஒரு பெண். பெண் என்ற உவமேயத்துக்காக மயில் என்ற உவமானம் ஆகி வருகிறது. தானியாகு பெயர் தானி என்றால் இடம். இடம் என்பது இங்கே ஒரு பொருள் இருக்கின்ற இடத்தைக் குறிக்கின்றது. எடுத்துக்காட்டு விளக்கு முறிந்தது. விளக்கு என்பது காரணப்பெயர். விளக்கம் தரும் சுடரினால்தான் விளக்கு. சுடர் முறியாது. விளக்கம் தருகின்ற தண்டு முறிந்து விட்டது. விளக்குக்காக அந்த இடம் ஆகி வருகிறது. பாலை இறக்கு. இதில் பாலின் பெயர், பாலைக் குறிக்காமல் பாத்திரத்தைக் குறிக்கிறது. ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளின் பெயர் (தானி), அது சார்ந்திருக்கும் இடத்திற்குப் (தானத்திற்கு) பெயராகி வருவது தானியாகு பெயர் ஆகும் இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் மேற்கோள்கள் சொல்லிலக்கணம்
4951
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
ஆண்டு
ஆண்டு (Year) என்பது ஒரு கால அளவாகும். இது வழக்கமாக, புவி சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். புவியின் அச்சு சாய்வால், வானிலை, பகல் நேரம், மண்வளம், நிலைத்திணை மாற்றங்களை ஏற்படுத்தும் பருவங்களுக்கு புவி ஆட்படுகிறது. புவிக்கோளத்தின் மிதவெப்ப மண்டலத்திலும் புவிமுனையண்மை மண்டலத்திலும் நான்கு பருவங்கள் உணரப்பட்டுள்ளன: இவை இளவேனில், கோடை, இலையுதிர்காலம், குளிர்காலம் என்பனவாகும். வெப்ப மண்டலத்திலும் துணைவெப்ப மண்டலத்திலும் பல புவிபரப்புப் பகுதிகளில் தெளிவான பருவ மாற்றங்கள் வரையறுக்கப்படவில்லை; என்றாலும் கோடை உலர்பருவமும் மழை ஈரப் பருவமும் தெளிவாக உணரப்படுகின்றன. புவியின் இயல்பு ஆண்டு 365 நாட்களையும், நெட்டாண்டு 366 நாட்களையும் கொண்டமைகிறது. நாட்காட்டி ஆண்டு என்பது புவியின் வட்டணைச் சுழற்சி நேரத்தை நாட்காட்டியில் தோராயமாக குறிக்கும் நாட்களின் எண்ணிக்கையாகும். இது கிரிகொரிய, ஜூலிய நாட்காட்டிகளில் இயல்பாண்டு 365 நாட்களையும் நெட்டாண்டு 366 நாட்களையும் கொண்டுள்ளது: கீழே காண்க. கிரிகொரிய நாட்காட்டியில் 400 ஆண்டு நெடுஞ்சுழற்சியில் கணித்த நிரல் ஆண்டு கால இடைவெளி 365.2425 நாட்கள் ஆகும். வானியலில், ஜூலிய ஆண்டு கால அலகாக பயன்படுகிறது; ஜூலிய வானியல் ஆண்டு, 365.25 நாட்கள் அல்லது சரியாக நொடிகள் (அனைத்துலக முறை அலகுகள் (SI)) அல்லது கருக்காக நொடிகள் ஆக வரையறுக்கப்படுகிறது. ஆண்டு எனும் சொல் நாட்காட்டி, வானியல் பயன்பாட்டைத் தவிர பருவ ஆண்டு, நிதி ஆண்டு, கல்வி ஆண்டு ஆகிய நடைமுறை ஆண்டுகளைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதேபோல இது கோள்களின் வட்டணைச் சுழற்சிக் காலத்தை குறிக்கப் பயன்படுகிறது]: எடுத்துக்காட்டாக, செவ்வாய் ஆண்டு, வெள்ளி ஆண்டு ஆகியவற்றைக் கூறலாம். இச்சொல் மிகப் பெரிய கால இடைவெளிகளாகிய பால்வெளி ஆண்டு, பேராண்டு (வான்கோள ஆண்டு) போன்றவற்றைக் குறிக்கவும் பயன்படுகிறது. குறியீடு ஆண்டு என்ற அலகினைக் குறிக்க, உலக முழுவதும் ஒப்புதல் பெற்ற ஒரு குறியீடு இன்னும் உருவாக்கப்படவில்லை. அனைத்துலக முறை அலகுகள் அமைப்பும் எவ்வித குறியீட்டையும் முன்மொழியவில்லை என்றாலும் பன்னாட்டுச் செந்தர நிறுவனம் தன் ISO 80000-3 இன் பின்னிணைப்பு-சி இல் இலத்தீனிய சொல்லான annus என்பதிலிருந்து a என்ற எழுத்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது. (NIST SP811 , ISO 80000-3:2006) இந்த a என்பது நில அளவைக் குறிக்கும் எக்டேர் என்ற அலகையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில் y அல்லது yr என்பது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. y அல்லது yr என்ற குறியீடுகள் விண்வெளி அறிவியலிலும், தொல்லுயிரியலிலும், நிலவியலிலும் வேறுபட்டு பயன்படுத்தப்படுவதால், கணக்கீடுகளில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. (எ.கா) 10 இலட்சம் ஆண்டுகள் என்பதனைக் குறிக்க myr என்றும், Ma என்றும் குறிப்பிடுகின்றனர். பெருக்கல் அலகுகள் SI அலகுகளோடு இவை பெருக்கலின் மூலம் அறியப்படுகிறது. Ma Ma (for megaannum), என்ற கால அலகு பத்து இலட்சம் ஆண்டுகளைக் குறிக்கிறது. (106=10,00,000=10 இலட்சம்) . நீண்ட காலத்தைக் குறிக்க பயனாகிறது. (எ.கா)கறையான், புதைப்படிவ காலம்: 228 - 0 Ma என்றால் 22,80,00,000 ஆண்டுகள் என்பதனைக் குறிக்கும். Ma என்பதனை, mya என்றும் குறிப்பிடுவர். சுருக்கங்கள் yr, ya வானியலிலும் புவியியலிலும் தொல்லுயிரியலிலும் yr ஆண்டுகள் கால இடைவெளிக்கும் ya ஆண்டுகள் முன்பு என்பதற்கும் சில வேளைகளில் உரிய ஆயிரம், மில்லியன், பில்லியன் முன்னொட்டுகளுடன் பயன்படுத்தப்படுகிறது. இவை பசெ அலகுகள் அல்ல; ஈரொட்டான பன்னாட்டுப் பரிந்துரைகளின் பேரில் பயன்படுகின்றன. இவை ஆங்கில முதல் எழுத்தையோ அவற்றுக்குரிய முன்னொட்டுகளையோ பயன்படுத்துகின்றன. இம்முன்னொட்டுகள் (t, m, b) அல்லது பதின்ம முன்னொட்டுகள் (k, M, and G) அல்லது (k, m, g) எனும் மாற்றுப் பதின்ம முன்னோட்டுகளையோ பின்வருமாறு பயன்படுத்துகின்றன: பொது ஆண்டு எந்த வானியல் ஆண்டும் முழு எண் நாட்களையோ முழு எண் நிலா மதங்களையோ கொண்டமைவதில்லை. எனவே அவற்றில் நெட்டாண்டுகள் போன்ற சில விதிவிலக்கான இடைவெளிக் கணக்கீடுகள் உண்டு. நிதி, அறிவியல் கணக்கீடுகள் எப்போதும் 365 நாள் நாட்காட்டியையே பின்பற்றுகின்றன. பன்னாட்டு நாட்காட்டிகள் கிமு, கிபி ஆண்டுகள் சார்ந்த கணிப்புகளில் பொதுவாக வானியல் ஆண்டு எண்வரிசை பின்பற்றப்படுகிறது. இதில்கிமு 1 என்பது 0 ஆகவும் கிமு 2 என்பது -1 ஆகவும் கொண்டு குறிக்கப்படுகிறது. பல்வேறு பன்பாடுகளிலும் சமயங்களிலும் அறிவியல் சூழ்நிலைகளிலும் வேற் பிற காலக் கணிப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன. பாரசீக நாட்காட்டி பாரசீக நாட்காட்டி அல்லது ஈரானிய நாட்காட்டி ஆப்கானித்தானிலும் இர்ரானிலும் பயன்படுகிறது. இதில் வடக்குச் சம பகலிரவு நாளுக்கு அருகிலான நள்ளிரவில் ஆண்டு தொடங்குகிறது. இது தெகுரான் நேர வலயத்தைச் சார்ந்த் கணிக்கப்படுகிறது. இது நெட்டாண்டு நெறி முறையைப் பின்பற்றுவதில்லை. நிதி ஆண்டு கல்வி ஆண்டு வானியல் ஆண்டுகள் ஜூலிய ஆண்டு விண்மீன், வெப்ப மண்டல, பிறழ்நிலை ஆண்டுகள் ஒளிமறைப்பு ஆண்டு முழு நிலாச் சுழற்சி நிலா ஆண்டு அலைவாட்ட ஆண்டு விண்மீன் எழுச்சி ஆண்டு சீரசு எழுச்சி ஆண்டு காசு ஈர்ப்பாண்டு பெசலிய ஆண்டு ஆண்டு, நாள் கால அளவு வேறுபாடுகள் ஆண்டு வேறுபாட்டு எண்மதிப்பு இப்பிரிவின் நிரல் ஆண்டுக் கால அளவு 2000 ஆண்டுக் காலகட்டத்துக்கு கணக்கிடப்பட்டதாகும். 2000 நிலைமையோடு ஒப்பிட்டு ஆண்டுக் கால அளவு வேறுபாடுகள் கடந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் தரப்பட்டுள்ளன. அட்டவணையில் ஒரு நாள் 86,400 பசெ (SI) நொடிகள் கால அளவு கொண்டதாகும். தொகுசுருக்கம் (கிரிகொரிய நிரல் ஆண்டு 365.2425 நாள்கள் அல்லது 52.1775 வாரங்கள் அல்லது 8765.82 மணிகள் அல்லது 525949.2 மணித்துளிகள் அல்லது நொடிகள் கொண்டதுவாகும்). இந்த நாட்காட்டிக்கு பொது ஆண்டு, 365 நாட்கள் அல்லது ( மணிகள் அல்லது மணித்துளிகள் அல்லது நொடிகள்) கொண்டுள்ளது; நெட்டாண்டு, 366 நாட்கள் அல்லது ( மணிகள் அல்லது மணித்துளிகள் அல்லது நொடிகள்) கொண்டுள்ளது. கிரிகொரிய நாட்காட்டியின் 400 ஆண்டு சுழற்சி, நாட்களைப் பெற்றதாகும். எனவே சரியாக வாரங்களைக் கொண்டதாகும். "பேரளவு" வானியல் ஆண்டுகள் பேராண்டு பேராண்டு வான்கோள நடுவரையைச் சுற்றிவரும் புவிசார் சம இரவுபகல் நாள் சுழற்சி ஆகும். பேராண்டின் கால அளவு ஏறத்தாழ 25,700 ஆண்டுகளாகும். இதன் துல்லியமான மதிப்பை இன்னமும் கண்டறிய முடியவில்லை. வான்கோள தலையாட்ட வேகம் பல காரணிகளைச் சார்ந்துள்ளதால் இம்மதிப்பீடு அரியதாகிறது. பால்வெளி ஆண்டு பால்வெளி மையத்தைப் புவியின் சூரியக் குடும்பம் ஒருமுறை சுற்றி வலம்வரும் கால அளவே பால்வெளி ஆண்டாகும். இதன் கால அளவு 230 மில்லியன் புவியாண்டுகளாகும். பருவ ஆண்டு பருவ ஆண்டு என்பது குறிப்பிட்ட பருவ நிகழ்வு அடுத்தடுத்து நிகழும் கால இடவெளியாகும். இந்நிகழ்வுகள் ஒவ்வோராண்டும் ஒரு மாத வேறுபாட்டளவுக்குக் கூட பெரிதும் மாறுவனவாகும். இத்தகைய பருவ நிகழ்வுகள் ஆற்று வெள்லப் பெருக்கு, பரவைகளின் வலசைபோதல், மரஞ்செடிகொடைகளின் பூத்தல், முதல் பனி உறைவு போன்றனவாக அமையலாம். மேலும் காண்க கிழமை மாதம் நேர வலயம் இந்துக் காலக் கணிப்பு முறை தமிழர் பருவ காலங்கள் தமிழ் மாதங்கள் தமிழ் வருடங்கள் ஆண்டுகளின் பட்டியல் மேற்கோள்கள் குறிப்புகள் மேலும் படிக்க வெளி இணைப்புகள்
4955
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
வெப்பநிலை
வெப்பநிலை (temperature) என்பது ஒரு பதார்த்தம் அல்லது வெளியின் ஒரு பகுதியின் இயற்பியல் இயல்பு ஆகும். அயலிலுள்ள ஒரு பதார்த்தம் அல்லது வெளியின் ஒரு பகுதியிலிருந்து, எடுத்துக்கொள்ளப்பட்ட பதார்த்தம் அல்லது வெளியின் ஒரு பகுதிக்கு, வெப்பம் உள்செல்லுமா அல்லது அதிலிருந்து வெளியேறுமா என்பதைத் தீர்மானிப்பது இந்த இயல்பாகும். இவ்வாறு வெப்ப ஓட்டம் நிகழாவிட்டால் அப் பதார்த்தம் அல்லது வெளியின் ஒரு பகுதி, அந்த வெப்பநிலையில் , வெப்பச் சமநிலையில் உள்ளது எனப்படும். வெப்ப ஓட்டம் நிகழுமானால் அது வெப்பநிலை கூடிய இடத்திலிருந்து வெப்பநிலை குறைந்த இடம் நோக்கிய திசையில் இருக்கும். வெப்பநிலை ஒரு பதார்த்தத்தின் இயக்க சக்தியை அளக்கும் ஒரு கணியமாகவும் உள்ளது. வெப்பநிலை அதிகரித்தால் ஒரு பதார்த்தத்தின் இயக்க சக்தியும் அதிகரிக்கும். உதாரணமாக பனிக்கட்டி ஒன்றில் நீர் மூலக்கூறுகள் அதிர்வடைதல்/ அசைதல் மிகவும் குறைவாகும். திண்ம நிலையில் (பனிக்கட்டி) நீர் மூலக்கூறுகள் தாம் இருக்கும் இடத்தில் அதிர்வடைய மாத்திரமே முடியும். வெப்பத்தை வழங்கி வெப்பநிலையை அதிகரிக்கும் போது பனிக்கட்டியில் உள்ள நீர் மூலக்கூறுகள் அதிர்வடைய ஆரம்பிக்கின்றன. வெப்பநிலை 273.15 K ஐத் தாண்டும் போது பனிக்கட்டி நீராக மாறி விடும். திரவ நிலையில் நீர் மூலக்கூறுகள் கட்டுப்பாடின்றி அசையலாம்: அதாவது வெப்பநிலை அதிகரித்ததால் நீரின் இயக்க சக்தி அதிகரித்துள்ளது. நீரினை அதன் கொதிநிலைக்கு (373.15 K) வெப்பமாக்கினால் நீர் நீராவியாக மாறும். நீராவி நிலையில் நீரின் இயக்க சக்தி மேலும் அதிகமாகும். இது போல திண்ம நிலைக்குள்ளும் வெப்பநிலைக்கேற்றபடி இயக்க சக்தி வேறுபாடு உள்ளது. அதிக வெப்பநிலையில் திணமப் பொருட்களிலுள்ள மூலக்கூறுகள் அதிகளவில் அதிர்வடையும். குறைந்த வெப்பநிலையில் இயக்க சக்தி குறைவென்பதால் மூலக்கூறுகள்/ அணுக்கள் குறைவாக அதிர்வடையும். அறிவியலாளர்கள் 0 K (-273.15 °C) எனும் வெப்பநிலையையே எட்டக்கூடிய மிகக்குறைந்த வெப்பநிலையென எதிர்வுகூறியுள்ளனர். இவ்வெப்பநிலையில் அணுக்கள் அதிர்வடைதலை நிறுத்தி, இயக்கசக்தி பூச்சியமாகுமெனவும் எதிர்வுகூறியுள்ளனர். எனினும் இது தொடர்பான ஆராய்ச்சிகளில் இவ்வெப்பநிலைக்கு அருகே செல்ல முடியுமெனினும் இதுவரை (2014) இவ்வெப்பநிலையை அடைய முடியவில்லை. இவ்வெப்பநிலையிலிருந்தே சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கெல்வின் வெப்பநிலை அளவீட்டு முறை ஆரம்பமாகின்றது. எனினும் இன்றளவும் செல்சியஸ் (°C) மற்றும் பரனைற்று (°F) வெப்பநிலை அலகுகளே மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. கெல்வின் அலகு அறிவியலாளர்களால் மாத்திரம் பயன்படுத்தப்படும் ஒன்றாகவே உள்ளது. அறிவியல் பயன்பாடு வெப்பநிலையானது பதார்த்தங்களைப் பாதிக்கும் காரணிகளாகிய பதார்த்தநிலை (திண்மம், திரவம், வாயு, ப்ளாஸ்மா), அடர்த்தி, கரையும் தன்மை, மற்றும் மின்சாரக் கடத்துதிறண் ஆகியவற்றில் தாக்கத்தைச் செலுத்தும். இரசாயனத்தாக்க வீத்தத்தைக் கட்டுப்படுத்தும் காரணியாகவும் வெப்பநிலை உள்ளது. இதன் காரணமாகவே மனித உடல் வெப்பநிலையை 36.9 °C ஆகப் பேணவேண்டி உள்ளது. வெப்பநிலை செல்வாக்கு செலுத்தும் காரணிகள் ஒரு தொகுதியின் பௌதீக நிலை கனவளவு மின்தடை வேதியியற் தாக்க வீதம் வெப்பநிலை அதிகரிக்கும் போது இயக்க சக்தி அதிகரிப்பதால் தாக்கிகள் ஒன்றுடனொன்று மோதிக்கொள்ளும் வேகமும் அதிகரிக்கும். இதனால் தாக்கவீதமும் வெப்பநிலை அதிகரிப்போடு அதிகரிக்கின்றது. ஒரு தொகுதியிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பக்கதிர்ப்பின் அளவு ஒலியின் வேகம் வெப்பக்கொள்ளளவு ஒரு பொருளை வெப்பமேற்றும் போது குறிப்பிட்ட அளவு மாத்திரமே இயக்கசக்தியாக மாற்றப்படுகின்றது. மற்றைய சக்தி வேறு விதங்களில் பயன்படுத்தப்படும். உதாரணமாக 1 kg நீரை வெப்பமாக்கும் போது ஒவ்வொரு 1 K / 1 °C வெப்பநிலை அதிகரிப்புக்கும் 4200 J வெப்பசக்தி நீரால் உறிஞ்சப்படுகின்றது. இதுவே 1 kg இரும்பெனில் 1 K ஆல் வெப்பநிலையை உயர்த்துவதற்கு 450 J சக்தியே தேவைப்படும். நீரில் உறிஞ்சப்படும் வெப்பசக்தி அதிலுள்ள ஐதரசன் பிணைப்புக்களை உடைக்க விரையமாவதே அதன் உயர் பெறுமானத்துக்குக் காரணமாகும். ஒரு தொகுதிக்கு வழங்கப்பட்ட வெப்பத்தை (Q), அத்தொகுதியில் ஏற்பட்ட வெப்பநிலை மாற்றத்தால் (ΔT) பிரிப்பதன் மூலம் அத்தொகுதியின் வெப்பக்கொள்ளளவைக் (C) கணக்கிட முடியும். வெப்பநிலை அளவீடு வெப்பநிலையை அளவிடும் உபகரணம் வெப்பமானி என அழைக்கப்படும். பொதுவாக அனைத்து வெப்பமானிகளும் வெப்பநிலை பொருட்களில் காட்டும் விளைவைக் கொண்டு வெப்பநிலையை அளவிடுகின்றன. இரச வெப்பமானி வெப்பநிலையால் இரச நிரலில் ஏற்படும் கனவளவு மாற்றத்தைக் கொண்டு வெப்பநிலையைக் கணிக்கின்றது. எந்தவொரு வெப்பமானியும் வெப்பநிலையை நேரடியாக அளவிடுவதில்லை. உலகில் அதிகமாக வெப்பநிலையை அளக்க செல்சியஸ்(°C) அளவீடே பயன்படுகின்றது. எனினும் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீடாக விளங்குவது கெல்வின் அளவீடு(K) ஆகும். (0 °C = 273.15K). ஐக்கிய அமெரிக்கா, லைபீரியா, மியன்மார் போன்ற தேசங்களில் மாத்திரம் பரனைற்று அலகு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. செல்சியஸ் அலகு நீரின் உருகு நிலை மற்றும் கொதி நிலையை அடிப்படையாகக் கொண்டது. செல்சியஸ் அலகில் குறிப்பிடப்பட்ட வெப்பநிலையின் பருமனோடு 273.15 ஐக் கூட்டுவதால் கெல்வின் அலகில் வெப்பநிலை பெறப்படும். அலகு மாற்றங்கள்: சில வெப்பநிலை உதாரணங்கள் மேற்கோள்கள் வெப்பவியல் SI அடிப்படைக் கணியங்கள் வெப்ப இயக்கவியல் காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் இயற்பியல் கோட்பாடுகள்
4957
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88
பாண்டியர் காலக் கட்டிடக்கலை
12 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ் நாட்டில் பலம் பெற்றிருந்த பிற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணி பாண்டியர் காலக் கட்டிடக்கலை என்று குறிப்பிடப்படுகிறது. சோழர் காலத்தைப் போல பாண்டியர் காலம் கட்டிடக்கலைத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்ததாகச் சொல்ல முடியாது. எனினும் திராவிடக் கட்டிடக்கலையில் ஏற்பட்ட சில புதிய மாற்றங்களுக்கான அடிப்படைகளை இக்காலக் கட்டிடங்களிற் காண முடியும். பாண்டியர் காலத்துக்கு முற்பட்ட வட இந்தியக் கோயில்களிலும், தென்னிந்தியாவில் பல்லவர், சோழர் காலக் கோயில்களிலும் சிற்பிகளின் அடிப்படைக் கவனம் கோயிலின் கருவறைக்கு மேல் அமைந்த விமானம் அல்லது சிகரம் என்று அழைக்கப்பட்ட அமைப்பின் மீதே இருந்தது. இதுவே கோயில்களின் மிக உயரமான அமைப்பாகவும் இருந்தது. சோழர் காலத்தில் தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் முதலியவை மிகப்பெரிய விமானங்களை உடையவையாக அமைக்கப்பட்டன. பாண்டியர் காலத்தில் இம் முறையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சிகரம் அதன் கட்டிடக்கலை முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது. பழைய கோவில்களைச் சுற்றிப் புதிய வளர்ச்சிகள் ஏற்படத் தொடங்கின. கோயில்களைச் சுற்றி உயர்ந்த சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுக் கோபுரங்களுடன் கூடிய நுழைவாயில்களும் அமைக்கப்பட்டன. படிப்படியாக இக் கோபுரங்கள் கோயில்களின் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புக்களாக ஆயின. கட்டிடக்கலை இந்துக் கோயில் கட்டிடக்கலை
4968
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
ஆசியா
ஆசியா () ( or ) உலகின் மிகப்பெரியதும், அதிக மக்கள்தொகை கொண்டதுமான ஒரு கண்டம். பெரும்பாலும் கிழக்கு, வடக்கு ஆகிய அரைக்கோளப் பகுதிகளில் அமைந்துள்ள இது, யுரேசியா நிலப்பரப்பின் ஒரு பகுதியாகும். புவி மேற்பரப்பின் 8.7% பரப்பளவு ஆசியாக் கண்டத்தில் உள்ளது. உலக நிலப்பரப்பில் இது 30% ஆகும். 3.9 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட ஆசியாவில், உலகின் மக்களில் ஏறத்தாழ 60 சதவீதம் பேர் வாழ்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் ஆசியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ நான்கு மடங்காகியது. பொதுவாக ஆசியா, யுரேசியாவின் கிழக்கில் ஐந்தில் நான்கு பகுதியைக் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது. இது சூயெசுக் கால்வாய்க்கும் ஊரல் மலைகளுக்கும் கிழக்கிலும்; காக்கேசிய மலைகள், கசுப்பியன் கடல், கருங்கடல் என்பவற்றுக்குத் தெற்கிலும் அமைந்துள்ளது. கிழக்கில் பசிபிக் பெருங்கடலும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும், வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன. ஆசியா என்னும் இடப்பெயர் மிகப் பழமையானது. இதன் அளவு, பல்வகைமைத் தன்மை என்பவற்றை நோக்கும்போது, இது பல்வேறுபட்ட பகுதிகளையும், மக்களையும் உள்ளடக்கிய ஒரு பண்பாட்டுக் கருத்துருவேயன்றி, ஒருதன்மைத்தான இயற்பியப் பொருள் அல்ல. ஆசியாவில் பல்வேறு பகுதிகளும் மக்களும், இனக்குழுக்கள், பண்பாடு, சூழல், பொருளாதாரம், வரலாற்றுப் பிணைப்பு, அரசியல் முறைமை போன்ற விடயங்களில் தமக்குள் பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகின்றனர். வரைவிலக்கணமும் எல்லைகளும் கிரேக்கரின் மூன்று கண்ட முறை ஆசியாவையும், ஐரோப்பாவையும் முதலில் வேறுபடுத்தி அறிந்தவர்கள் பண்டைக் கிரேக்கர்கள் ஆவர். அவர்கள், ஏஜியக் கடல், டார்டனெல்சு, மர்மாராக் கடல், பொசுப்போரசு, கருங்கடல், கெர்ச் நீரிணை, அசாவ் கடல் ஆகியவற்றை ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான எல்லையாகக் கொண்டனர். நைல் ஆறு ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாகக் கொள்ளப்பட்டது. எனினும், சில கிரேக்கப் புவியியலாளர்கள், செங்கடல் பொருத்தமான எல்லையாக இருக்கும் எனக் கருதினர். நைல் ஆற்றுக்கும், செங்கடலுக்கும் இடையில் இருந்த டேரியசுக் கால்வாய், பெரும்பாலான கருத்து வேறுபாடுகளுக்குக் காரணம் ஆகியது. கருங்கடலுட் கலக்கும் டொன் ஆறு ஆசியாவின் மேற்கு எல்லையாக அமைந்தது. 15 ஆம் நூற்றாண்டில் நைல் ஆற்றுக்குப் பதிலாகச் செங்கடலே ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக நிலைபெற்றது. தொடக்கத்தில் ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லை ஆர்க்டிக் பெருங்கடல் வரை எட்டவில்லை. ஆனால், நாடுகாண் பயணங்கள் வளர்ச்சியடைந்த பின்னர் இவ்வெல்லையை மீள்வரையறை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆசியா-ஐரோப்பா எல்லை சாரக உருசியாவின் மன்னனான பேரரசர் பீட்டர், சுவீடனும் ஓட்டோமான் பேரரசும் கிழக்குப் பகுதி நிலங்களுக்கு உரிமை கொண்டாடியதை முறியடித்ததுடன், சைபீரியப் பழங்குடியினரின் ஆயுத எதிர்ப்புக்களையும் முறியடித்து 1721ல் உருசியப் பேரரசை உருவாக்கினான். இப் பேரரசு யூரல் மலைகளை எட்டி அதற்கு அப்பாலும் பரந்திருந்தது. இதனால், டான் ஆறு ஆசியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான எல்லையாக இருந்தது வட ஐரோப்பியர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. அக்காலத்தில் உருசியப் பேரரசின் முக்கியமான புவியியல் கோட்பாட்டாளராக இருந்தவர் வொன் இசுட்ராலென்பேர்க். போல்ட்டாவா சண்டையில் பிடிபட்ட ஒரு சுவீடியப் போர்க்கைதி. இவருக்குப் பீட்டரின் சைபீரிய அலுவலரான வசிலி டாட்டிசுச்சேவ் என்பவரின் தொடர்பு கிடைத்தது. அவர்மூலம் எதிர்கால நூல் ஒன்றுக்காகப் புவியியல், மானிடவியல் ஆகியவை தொடர்பிலான ஆய்வுகளைச் செய்வதற்குச் சுதந்திரம் கிடைத்தது. 1730ல், பீட்டர் இறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், சுவீடனுக்குத் திரும்பிய வொன் இசுட்ராலென்பேர்க் ஆசியாவின் எல்லையாக ஊரல் மலைகளைக் குறித்துப் புதிய நிலப்படத் தொகுதி ஒன்றை வெளியிட்டார். புவியியல் அடிப்படையிலும், பிற பண்பாட்டுப் பாரம்பரிய அடிப்படையிலும் தமது ஐரோப்பிய அடையாளத்தை வைத்திருப்பதனால், இக்கருத்துரு குறித்து உருசியர்கள் அதிக உற்சாகம் காட்டினர். இந்தக் கருத்தைத் தானே வொன் இசுட்ராலென்பேர்க்குக் கூறியதாக டாட்டிசுச்சேவ் அறிவித்தார். எம்பா ஆறே கீழ் எல்லையாக இருக்க வேண்டும் என வொன் இசுட்ராலென்பேர்க் ஆலோசனை கூறினார். அடுத்த நூற்றாண்டு முழுவதும் பல்வேறு முன்மொழிவுகள் வெளியாயின. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஊரல் ஆறே எல்லை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எல்லை கருங்கடலிலிருந்து, கசுப்பியன் கடலுக்கு நகர்த்தப்பட்டது. அக்காலத்து நிலப்படங்களில் டிரான்சுகாக்கேசியா ஆசியாக் கண்டத்துள் இருந்தது. அப்பகுதியின் பெரும்பகுதி பின்னர் சோவியத் ஒன்றியத்தினுள் சேர்த்துக்கொள்ளப்பட்டதால், எல்லையைத் தெற்கே நகர்த்த வேண்டும் என்னும் கருத்து எழுந்தது. ஆசியா-ஓசானியா எல்லை ஆசியாவுக்கும் ஓசானியாவுக்கும் இடையிலான எல்லை மலாயத் தீவுக்கூட்டங்களில் ஓரிடத்தில் வைக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட "தென்கிழக்கு ஆசியாவும் ஓசானியாவும்" என்னும் தொடர், அது உருவான காலத்தில் இருந்தே பல்வேறுபட்ட புவியியல் பொருள்களை உடையதாக இருந்தது. எவ்வாறான வரைவிலக்கணங்களைக் கொடுத்தபோதிலும் ஓசானியா என்றும் ஆசியாவாக இருந்ததில்லை. மலாயத் தீவுக்கூட்டங்களில் எந்தத் தீவு ஆசியாவுக்குள் அமையும் என்பது, இத் தீவுகள்மீது பல்வேறு பேரரசுகள் கொண்டிருந்த குடியேற்றவாத உரிமைகளில் தங்கியிருந்தது. தென்கிழக்கு ஆசியாவின் எல்லை தற்போதைய நிலைக்குக் குறுகியது படிப்படியாக ஏற்பட்டது ஆகும். புவியியலும் காலநிலையும் உலகில் உள்ள கண்டங்களில் மிகப்பெரிய கண்டமே ஆசியா ஆகும். ஆசியா உலகின் 8.8% மொத்தமேற்பரப்புப் பரப்பளவு அதாவது பெருமளவு நிலப்பகுதியைக் கொண்டுள்ளதோடு மட்டுமன்றி பெரிய கடற்கரைப் பிரதேசத்தையும் ஆசியாவே கொண்டுள்ளது, அதன் நீளம் 62,800 கிலோமீற்றர்கள் ஆகும். சுயஸ் கால்வாயும், உரால் மலைகளும் கிழக்குத் திசையிலும், காகசஸ் மலைத்தொடரும், கஸ்பியன் கடலும், கருங்கடலும் தெற்குத் திசையிலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன. இது கிழக்கில் அமைதிப் பெருங்கடல் ஆலும் தெற்கில் இந்தியப் பெருங்கடல் ஆலும் வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல் ஆலும் சூழப்பட்டுள்ளது. ஆசியா 48 நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கண்டம், அவற்றில் இரண்டு (உருசியா மற்றும் துருக்கி) ஒரு பகுதியை ஐரோப்பியாக் கண்டத்தில் கொண்டுள்ளன. ஆசிய பல்வேறுபட்ட காலநிலைகளையும் புவியியல் தோற்றங்களையும் கொண்டது. தினசரி உலகின் அதிக வெப்பநிலை ஆசியாவின் மேற்குப் பக்கங்களிலேயே காணப்படுகின்றது. ஆசியாவின் தென்மேற்குப் பகுதி வெப்பமான காலநிலையைக் கொண்டுள்ளது. அதிகமாகப் புயல் அடிக்கக் கூடிய வாய்ப்புக்களைக் கொண்ட இடங்களான பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு ஜப்பான் ஆசியாவில் அமைந்துள்ள இடங்கள். மங்கோலியாவின் கோபி பாலைவனம் மற்றும் அரபியன் பாலைவனம் ஆகியன மத்திய கிழக்கு வரை பரந்துள்ளன. நோபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் இமயமலை, இந்த உலகத்தின் மிகப்பெரிய மலைத்தொடர் ஆகும். காலநிலை மாற்றம் 2010 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராட்சி மூலம் ஆசியாவின் 16 நாடுகள் காலநிலை மாற்றத்தால் பெரும் இடர்களைச் சந்திகின்றன எனக் கண்டறியப்பட்டது. ஆசிய நாடுகளான வங்காளதேசம், இந்தியா, வியட்நாம், தாய்லாந்து, பாக்கித்தான் மற்றும் இலங்கை ஆகியன அந்தப் பதினாறு நாடுகளில் அதிக சிக்கல்களை எதிர்கொள்ளும் நாடுகள் ஆகும். மக்கள்தொகைப் புள்ளியியல் உலகில், மனித வளர்ச்சிச் சுட்டெண் மிகக் கூடுதலாக வளர்ந்திருப்பது கிழக்காசியாவிலேயே ஆகும். முன்னேற்றம் நலவியல், கல்வி, வருமானம் என்பவை தொடர்பிலான பகுப்பாய்வுகளின் அடிப்படையில், கடந்த 40 ஆண்டுகளில் சராசரி மனித வளர்ச்சிச் சுட்டெண் இரண்டு மடங்காகியுள்ளது. 1970ல் இருந்து மனித வளர்ச்சிச் சுட்டெண் மேம்பாட்டின் அடிப்படையில் உலகில் இரண்டாவது நிலையில் இருக்கும் சீனாவே, கல்வி, நலவியல் ஆகியவற்றில் அல்லாது வருமான அடிப்படையில் மட்டும் முதல் பத்துக்குள் அடங்கிய ஒரே நாடு ஆகும். சீனாவின் தனி நபர் வருமானம் கடந்த நான்கு பத்தாண்டுகளில் 21 மடங்கு ஆகியுள்ளதுடன், இக்காலப் பகுதியில் பல நூறு மில்லியன் மக்களை வறுமை நிலையிலிருந்து உயர்த்தியுள்ளது. இருந்தாலும், பள்ளிச் சேர்க்கை, வாழ்நாள் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் சீனா இப்பகுதியின் சிறப்பான வளர்ச்சி பெற்ற நாடுகளுள் அடங்கவில்லை. 1970 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பாக நலவியல், கல்வி ஆகியவற்றின் மேம்பாட்டின் அடிப்படையில் விரைவாக வளரும் நாடாகத் தென்னாசிய நாடான நேப்பாளம் விளங்குகிறது. இதன் தற்போதைய வாழ்நாள் எதிர்பார்ப்பு 1970 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 25 ஆண்டுகள் கூடுதலானது. நேப்பாளத்தில் பள்ளிக்குச் செல்லும் வயதுள்ள ஐந்து சிறுவர்களில் நான்குக்கும் கூடுதலானவர்கள் இப்போது தொடக்கப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர் இது ஐந்து பேருக்கு ஒருவராகவே இருந்தது. மனித வளர்ச்சிச் சுட்டெண் அடிப்படையிலான உலகத் தரவரிசையில் சப்பானும், தென்கொரியாவும் முறையே 11, 12 ஆவது இடங்களில் உள்ளன. இவை மிக உயர்ந்த மனித வளர்ச்சி வகைக்குள் அடங்குகின்றன. இவற்றைத் தொடர்ந்து, ஆங்காங் 21 ஆவது இடத்திலும், சிங்கப்பூர் 27 ஆவது இடத்திலும் உள்ளன. ஆப்கானித்தான் மதிப்பிடப்பட்ட 169 நாடுகளுள் 155 ஆவது இடத்தைப் பெற்று, ஆசிய நாடுகளுள் மிகக் கீழான நிலையில் உள்ளது. பொருளாதாரம் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐரோப்பியக் கண்டத்தை அடுத்து ஆசியக் கண்டமே இரண்டாம் இடத்தில் உள்ளது. எனினும் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் ஒப்பிடும்போது இதுவே முதலிடம் வகிக்கின்றது. 2011 ஆம் ஆண்டில், ஆசியாவின் பாரிய பொருளாதார நாடுகளாக சீனா, சப்பான், இந்தியா, தென்கொரியா மற்றும் இந்தோனேசியா போன்றவை உள்ளன. ஆசியா கண்டத்திலுள்ள நாடுகளும் துணை மண்டலங்களும் மொழிகள் ஆசியாவில் பல மொழிக் குடும்பங்களும், தனித்த மொழிகளும் உள்ளன. பெரும்பாலான ஆசிய நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தாயக மொழிகள் பேசப்படுகின்றன. "எத்னாலாக்" தரும் தகவல்களின்படி, இந்தியாவில் 800க்கு மேற்பட்ட மொழிகளும், இந்தோனீசியாவில் 600க்கு மேற்பட்ட மொழிகளும், பிலிப்பைன்சில் 100க்கு மேற்பட்ட மொழிகளும் பேசப்படுகின்றன. சீனாவில் அதன் பல்வேறு மாகாணங்களிலும் பல மொழிகளும், கிளை மொழிகளும் பேசப்படுகின்றன. மதங்கள் ஆசியத் தொன்மவியல் சிக்கலானதும் பல்வகைப்பட்டதும் ஆகும். பெரு வெள்ளம் குறித்து கிறித்தவர்களின் பழைய ஏற்பாட்டில் வரும் கதை, மெசொப்பொத்தேமியத் தொன்மமான கில்கமேசு இதிகாசத்தில் முதன்முதலாகக் காணப்படுகிறது. இந்துப் புராணங்கள் கூறும் விட்டுணுவின் மீன் அவதாரம், மனுவுக்குப் பெரு வெள்ளம் குறித்து எச்சரிக்கை செய்கிறது. ஏறத்தாழ எல்லா ஆசிய மதங்களும் மெய்யியல் தன்மை கொண்டவை. அத்துடன், ஆசியாவின் மெய்யியல் மரபுகள் பல வகைத்தான மெய்யியல் சிந்தனைகளையும், எழுத்துக்களையும் உள்ளடக்குகின்றன. இந்திய மெய்யியல், இந்து மெய்யியல், பௌத்த மெய்யியல் என்பவற்றையும் உள்ளடக்குகிறது. இவை, பொருள்சாரா கூறுகளைத் தம்முள் கொண்டவை. அதேவேளை இந்தியாவில், பொருள் இன்பத்தை முன்னிலைப்படுத்தும் சார்வகம் போன்ற மதங்களும் உள்ளன. ஆசியாவின் ஒரு பகுதியான மையக்கிழக்கில் தோன்றிய இசுலாம் பல ஆசிய நாடுகளில் முதன்மை மதமாக உள்ளதுடன் ஏறத்தாழ எல்லா ஆசிய நாடுகளிலும் இசுலாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். குடியேற்றவாதக் காலத்துக்குப் பின்னர், பல ஆசிய நாடுகளில் கிறித்தவமும் பரவியுள்ளது. ஆபிரகாமிய சமயங்கள் யூதம், கிறித்தவம், இசுலாம் மற்றும் பகாய் சமயம் போன்ற ஆபிரகாமிய சமயங்கள் மேற்கு ஆசியாவிலேயே தோற்றம் பெற்றன. யூதம் எனும் மதம்தான் ஆபிரகாமிய சமயங்களிலேயே மிகப் பழமையானது ஆகும். இது அதிகமாக இசுரேல்லில் பின்பற்றப்படுகிறது (இது யூத மக்களின் தாய்நாடு மற்றும் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இந்த நாட்டில் ஐரோப்பியாவில் பரந்து இருந்து இங்கு வந்த யூத மக்களும் ஆசியா மற்றும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த அங்கு முதலே இருந்த மக்களும் வாழ்கின்றனர்). கிறிஸ்தவ மதமும் ஆசியாவில் பரந்த அளவில் காணப்படுகின்ற மதமாகும். பிலிப்பீன்சு மற்றும் கிழக்குத் திமோர் போன்ற நாடுகளில் உரோமன் கத்தோலிக்கம் ஒரு முக்கிய மதமாகும்;இது முறையே இசுபானியர்களாலும் போர்த்துக்கேயராலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆர்மீனியா, சைப்பிரஸ், சியார்சியா மற்றும் வடக்கு ஆசியா ஆகிய இடங்களில் கிழக்கு மரபுவழி திருச்சபை ஒரு முக்கிய மதமாக உள்ளது. சவூதி அரேபியாவில் உருவான இசுலாம் மதம் தான் பெரிய, மிகவும் அதிக அளவில் ஆசியாவில் பரந்து காணப்படும் மதமாகும். 12.7% அளவில் இருக்கின்ற உலக முஸ்லிம் சனத்தொகையில் தற்போது உலகில் அதிக அளவில் முஸ்லிம் மதம் பின்பற்றப்படும் நாடு இந்தோனேசியா. மேலும் முஸ்லிம் முக்கிய மதமாகப் பின்பற்றப்படுகின்ற ஆசிய நாடுகளாகப் பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம், ஈரான் மற்றும் துருக்கி. உலகில் முஸ்லிம்களின் புனித இடங்களாக, மக்கா, மதீனா மற்றும் சிறிய அளவில் எருசலேம் ஆகிய நகரங்கள் முஸ்லிம்களின் புனித இடங்களாகக் கருத்தப்படுகின்றன. ஆசியாவில் உருவான பகாய் சமயம் ஆனது ஈரானிலிருந்து உதுமானியப் பேரரசு, நடு ஆசியா, இந்தியா, மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்குப் பக உல்லா (ஆங்கிலம்: Bahá'u'lláh) வாழ்ந்து கொண்டிருக்கையில் பரவியது. 20ம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து இந்த மதப் பரம்பல் மிக மெதுவாகவே ஆசியாவில் இடம்பெற்றது. ஏனென்றால் பல முஸ்லிம் நாடுகளில் பாகாவின் மதப்பரப்பல் செயற்பாடுகள் அடக்கி ஒடுக்கப்பட்டன. இந்தியாவிலுள்ள மதங்கள் மற்றும் கிழக்காசிய மதங்கள் சாதனையை நிலைநாட்டிய ஆலயம்.]] அதிகமாக அனைத்து ஆசிய மதங்களும் தத்துவ தன்மையைக் கொண்டமைந்தவை. மேலும் ஆசிய மதங்கள் ஒரு மிகப்பெரிய தத்துவக்கருத்துகள் கொண்ட கருத்துக்களையும் இலக்கியங்களையும் கொண்ட மிகப்பெரிய வட்டத்துள் அடங்குபவை. இந்திய மெய்யியல், இந்து மெய்யியல் ஐயும் பௌத்த மெய்யியலையும் தன்னகத்தே கொண்டது. இந்து சமயம், பௌத்தம், ஜைனம் மற்றும் சீக்கியம் ஆகிய மதங்கள் ஆசியாவில் குறிப்பாகத் தெற்காசியாவின் நாடான இந்தியாவில் தோற்றம் பெற்றன. கிழக்காசியாவில் குறிப்பாகச் சீனாவிலும் சப்பானிலும், கன்பூசியம், தாவோயியம் மற்றும் சென் புத்தமதம் ஆகியன தோற்றம் பெற்றன. 2012 ஆண்டு தகவல்களின் படி, இந்துமதம் சுமார் 1.1 பில்லியன் மக்களால் பின்பற்றப்படுகிறது. ஆசிய மொத்த சனத்தொகையில் 25% அளவுடைய மக்கள் இந்த மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். இந்து மதம் ஆசியாவில் காணப்படுகின்ற மதங்களில் அதிக மக்களால் பின்பற்றப்படும் இரண்டாவது மிகப்பெரிய மதமாகத் திகழ்கின்றது. எப்படிஎன்றாலும் இது தெற்கு ஆசியாவில் மிகவும் அதிக அளவில் பின்பற்றப்படுகின்ற மதமாகும். 80% சதவிகத்திற்கும் அதிகமான இந்திய மற்றும் நேபாளியம் போன்ற நாடுகளைச்சேர்ந்த மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். அத்தோடு குறிப்பிடத்தக்க அளவில் வங்காளதேசம், பாக்கித்தான், பூட்டான், இலங்கை மற்றும் பாலி ஆகிய இடங்களிலும் மக்களால் இந்துமதம் பின்பற்றப்படுகிறது. இந்தியப்பிரைஜைகள் வாழும் நாடுகளான மியான்மர், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இடங்களிலும் மக்களால் இந்துமதம் பின்பற்றப்படுகிறது. பௌத்தமதம் மிகப்பெரிய அளவில் தென்கிழக்காசியாவிலும் கிழக்காசியாவிலும் மக்களால் பின்பற்றப்படுகிறது. இந்த இடங்களில் பலநாடுகளில் சனத்தொகை அடிப்படையில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாகவும் இது திகழ்கிறது. அந்த வகையில் சனத்தொகை அளவில் அதிக மக்களால் பௌத்த மதம் பின்பற்றப்படும் நாடுகளாக: கம்போடியா (96%), தாய்லாந்து (95%), மியான்மர் (80%-89%), சப்பான் (36%–96%), பூட்டான் (75%-84%), இலங்கை (70%), லாவோஸ் (60%-67%) and மங்கோலியா (53%-93%). அதிக அளவில் பௌத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் சிங்கப்பூர் (33%-51%), சீனக் குடியரசு (35%–93%), தென் கொரியா (23%-50%), மலேசியா (19%-21%), நேபாளம் (9%-11%), வியட்நாம் (10%–75%), சீனா (20%–50%), வடகொரியா (1.5%–14%), ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். மேலும் சிறிய அளவில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளிலும் பௌத்த மக்கள் காணப்படுகின்றனர். ஜைன மதம் அதிகமாகவும் முக்கியமாகவும் இந்தியாவிலேயே பின்பற்றப்படுகிறது. அத்துடன் சிறிய அளவில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளான அமேரிக்கா மற்றும் மலேசியாவிலும் பின்பற்றப்படுகிறது. சீக்கிய மதம் வடஇந்தியாவிலும், அதிக இந்தியர்கள் வாழும் ஏனைய ஆசியாவின் பகுதிகளிலும் முக்கியமாகத் தெற்காசியாவிலும் காணப்படுகின்றது. கன்பூசியம் அதிக அளவில் சீனா, தாய்வான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளிலும் சீனமக்கள் புலம்பெயர்ந்து வாழும் இடங்களிலும் அதிகமாகப் பின்பற்றப்படுகிறது. தாவோயியம், சீனா, தாய்வான், மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. நவீன பிரச்சினைகள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான ஆசியாவில் ஏற்பட்ட முக்கிய வெளியுறவுப் பிரச்சினைகள் கொரியப் போர் வியட்நாம் போர் இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு இந்திய சீனப் போர் வங்காளதேச விடுதலைப் போர் இந்திய பாக்கித்தான் போர், 1971 யோம் கிப்பூர்ப் போர் ஈரானியப் புரட்சி ஆப்கான் சோவியத் போர் ஈரான் – ஈராக் போர் ஈழப் போர் 1991 வளைகுடாப் போர் ஈராக் மீதான படையெடுப்பு, 2003 2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் சிரிய உள்நாட்டுப் போர் இசுலாமிய தேசப் போர் ஆசிய நாடுகள் இவற்றையும் பார்க்கவும் கிழக்காசியா தென்கிழக்காசியா தெற்கு ஆசியா நடு ஆசியா மத்திய கிழக்கு நாடுகள் ஆசிய நாடுகளின் பட்டியல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் குறிப்புகள் மற்றும் மேற்கோள்கள் புற இணைப்புகள் ஆசியா கண்டங்கள்
4969
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
ஆப்பிரிக்கா
ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம் ஆகும். இக்கண்டத்தின் 54 நாடுகளில் மொத்தம் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளின் பட்டியல் சூடான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடும் சிஷெல்ஸ் மிகச்சிறிய நாடும் ஆகும். கிழக்கு ஆப்பிரிக்கா புருண்டி கென்யா ருவாண்டா மொசாம்பிக் தான்சானியா உகாண்டா ... மேற்கு ஆப்பிரிக்கா நைகர் செனகல் நைஜீரியா காம்பியா கானா ... வடக்கு ஆப்பிரிக்கா அல்ஜீரியா எகிப்து லிபியா மொராக்கோ சூடான் துனிசியா மேற்கு சகாரா ... மத்திய ஆப்பிரிக்கா அங்கோலா கேமரூன் மத்திய ஆப்பிரிக்க குடியரசு காங்கோ ... தெற்கு ஆப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வே ஜாம்பியா நமீபியா அங்கோலா மொசாம்பிக் .... ஆதாரங்கள் இவற்றையும் பார்க்கவும் ஆபிரிக்க ஒன்றியம் கண்டங்கள்
4970
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
விண்மீன் வலையமைப்பு
விண்மீன் வலையமைப்பு (star network) இன்று கணினி வலையமைப்பில் மிகவும் பரவலாகப் பாவிக்கப்பட்டு வரும் வலையமைப்பாகும். இது ஈதர்நெற் தொழில் நுட்பத்தில் பாவிக்கக்கூடியது. இவ்வகை வலையமைப்பில் ஒவ்வொரு கணினியும் நிலைமாற்றி (switch) அல்லது கூடுமையத்துடன் (ஹப், hub) இணைக்கப்பட்டிருக்கும். இதனால் ஏதாவது ஒரு மின்கம்பி (cable) அறுந்தாலும் மீதி வலையமைப்புத் தொடர்பு அறாமல் இருக்கும். வளைய வலையமைப்பும் (Ring network) உண்மையில் விண்மீன் வலையமப்பு போன்றே இணைக்கப்படும், பின்னர் மென்பொருள் ஊடாக வளைய வலையமைப்பு நடைமுறைப்படுத்தப்படும். விண்மீன் வலையமைப்பில் எல்லா வலையைப்பில் உள்ளனவும் நடு நிலையத்தில் இணைக்கபடுவதால் இவ்வகை இணைப்புக்கள் பழுதடைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும். பெருநகர் பரப்பு வலையமைப்புகள் விண்மீன் வலையமைப்பு முறையிலேயே இணைக்கப்படுகின்றது. நன்மைகள் சிறந்த வினைத்திறன்: இவ்வகையான வலையமைப்பு இணைப்பில் 3 கருவிகளும் 2 இணைப்பும் மாத்திரமே இணைக்கப்படுவதாலும் இதன் நடுப்பகுதியில் கூடுதல் வேலை இருந்தாலும் கூட அவை கையாளக்கூடியவையே. ஒருபகுதியில் உள்ள மிக அதிகமான வலையமைப்புப் பயன்பாடு வலையமைப்பில் உள்ள ஏனைய கருவிகளைப் பாதிக்காது. கருவிகளைப் பிரித்தல்: ஒவ்வொரு கருவியும் வலையமைப்பில் தனியே நிலைமாற்றியுடனோ அல்லது கூடுமையத்துடனோ (ஹப் உடனோ) இணைக்கப்படுவதால் தனித்தனியாக தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே. எல்லா கருவிகளுமே கூடுமையத்துடன் (ஹப் அல்லது சுவிச்சுடன்) இணைக்கப்படுவதால் கூடுமையத்தை மேம்படுத்துவதன் மூலம் வலையமைப்பை மேம்படுத்தலாம். இலகுத்தன்மை: இத்தொழில்நுட்பமானது இலகுவாக விளங்கக்கூடியதாக இருப்பதால் இதை உருவாக்கி பராமரிப்பது இலகுவாகும். பழுது ஏற்பட்டாலும் இலகுவாக பிழையை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். தீமைகள் வலையமைப்பில் உள்ள எல்லா கருவிகளுமே கூடுமையத்துடன் இணைக்கப்படுவதாலகூடுமையம் பழுதடைந்தால் முழு வலையமைப்பும் பயன்படுத்த முடியாததாகிவிடும். கணினிப் பிணையமாக்கம் de:Topologie (Rechnernetz)#Stern-Topologie
4973
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
அமெரிக்கா
அமெரிக்கா என்னும் பெயரில் உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகள்: அமெரிக்காக்கள், கண்டம் வட அமெரிக்கா துணைக் கண்டம் தென் அமெரிக்கா துணைக் கண்டம் நடு அமெரிக்கா மெசோ-அமெரிக்கா, இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி ஐக்கிய அமெரிக்கா, நாடு இலத்தீன் அமெரிக்கா, அமெரிக்க கண்டங்களில் உள்ள ரோமானிய மொழிகள் வழக்கத்தில் இருக்கும் பகுதிகளை குறிப்பதாகும்
4974
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
வட அமெரிக்கா
வட அமெரிக்கா ஒரு கண்டமாகும். கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுள் சில. இக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரிபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும். இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 454,225,000. மக்கள் பொருளாதாரம் நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள் கீழே வட அமெரிக்க நாடுகள் மற்றும் பிரதேசங்களைக் கொண்ட ஒரு அட்டவணை மூன்று அடிப்படைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் குறிப்புகள் கண்டங்கள்
4976
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
தென் அமெரிக்கா
தென் அமெரிக்கா ஒரு மேற்கு அரைக்கோளத்தில் பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள கண்டம். இக்கண்டத்தின் சிறுபகுதி வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இது அமெரிக்காக்களின் துணைக்கண்டம் என்றும் கருதப்படுகிறது. மேற்கில் பசிபிக் மாக்கடலும், தெற்கில் அன்டார்ட்டிகா பனிகண்டமும், கிழக்கில் அத்லாந்திக் மாக்கடலும் , வடக்கில் வட அமெரிக்கக் கண்டமும் உள்ளன. ஆஸ்திரேலியாவும், அன்டார்டிகா பனிக்கண்டமும், இவ்வாறு தெற்கு அரைக்கோளத்தில் அமைந்த பிற பெரு நிலப்பகுதிகள் ஆகும். தென் அமெரிக்கா 17.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென் வடலாக (தெற்கு-வடக்காக) சுமார் 7,600 கி.மீ தொலைவும், கிழக்கு-மேற்காக (கீழ் மேலாக) ஏறத்தாழ 5,300 கி.மீ. அகலமும் உடையது இக்கண்டம். மேற்குலகிலேயே யாவற்றினும் மிக மிக உயரமான அக்கோன்காகுவா மெருமலை இக்கண்டத்தின் அர்ஜென்டினா நாட்டில் உள்ளது. இமய மலைக்கு அடுத்தாற்போல் மிக உயர்ந்த இம்மலை 6,960 மீ. உயரம் உடையது. இந்தக் கண்டத்தில் இறைமையுள்ள 12 நாடுகளும் – அர்கெந்தீனா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலொம்பியா, எக்குவடோர், கயானா, பரகுவை, பெரு, சுரிநாம், உருகுவை, மற்றும் வெனிசுவேலா – இரண்டு இறைமையற்ற பகுதிகளும் – பிரெஞ்சு கயானா, பிரான்சின் கடல்கடந்த ஆள்புலம், போக்லாந்து தீவுகள், பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலம் – உள்ளன. இவற்றைத் தவிர, டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் நெதர்லாந்தின் ஏபிசி தீவுகளும் தென் அமெரிக்காவின் அங்கமாகக் கருதப்படுகின்றன. இக்கண்டத்தில் உள்ள 12 தனிநாடுகளில் சுமார் 371,090,000 மக்கள் வசிக்கிறார்கள் (2005 கணக்கெடுப்பின்படி). பரப்பளவில் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவை அடுத்து உலகின் நான்காவது பெரிய கண்டமாகவும் மக்கள்தொகைப்படி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா கண்டங்களை அடுத்து உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகவும் விளங்குகிறது. பெரும்பாலான மக்கள் மேற்கு அல்லது கிழக்கு கடற்கரையோரங்களில் வசிக்கின்றனர்; உட்பகுதிகளிலும் தென்கோடியிலும் மிகக் குறைவான மக்களே வாழ்கின்றனர். தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் பெரும்பகுதியிலும் அந்தீசு மலைத்தொடர் அமைந்துள்ளது; இதற்கு எதிராக, கிழக்குப் பகுதி மேட்டுப்பகுதிகளுடன் பரந்த ஆற்றுப் படுகைகளையும் கொண்டுள்ளது. இங்கு பாயும் முதன்மையான ஆறுகளாக அமேசான், பரனா மற்றும் ஓரினோகோ உள்ளன. கண்டத்தின் பெரும்பகுதி வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது. இந்தக் கண்டத்தில் பலதரப்பட்ட பண்பாட்டு, இனக் குழு மக்கள் வாழ்கின்றனர்; தென்னமெரிக்காவின் முதற்குடிகளைத் தவிர ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மக்கள் இங்கு வாழ்கின்றனர். ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்ற அரசுகளின் தாக்கத்தால் பெரும்பாலான தென் அமெரிக்கர்கள் இலத்தீன் மொழிவழி தோன்றிய போர்த்துகேயம் அல்லது எசுப்பானியம் பேசுகின்றனர். இதனால், தென் அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா என்றும் அழைக்கப்படுகின்றது. தென் அமெரிக்க சமூகங்களும் நாடுகளும் மேற்கத்திய பண்பாட்டுக் கூறுகளை பின்பற்றுகின்றனர். வரலாறு ஒருநிலக் கொள்கை காலத்தில் தென் அமெரிக்கா ஆப்பிரிக்காவுடன் இணைந்திருந்து பின்னர் 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது. எனவே தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் ஒரேபோன்ற தொல்லுயிர் புதைப்படிவுகளையும் பாறை அடுக்குகளையும் காணலாம். தென் அமெரிக்காவில் 15000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய உருசியாவிலிருந்து பெரிங் பனிப்பாலம் (தற்போது பெரிங் நீரிணை) மூலமாகவோ அமைதிப் பெருங்கடலின் தென்பகுதி மூலமாகவோ நாடோடிகள் குடியேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர்கள் வட அமெரிக்கா வழியாக இங்கு வந்தடைந்திருக்கலாம். சில தொல்லியல் ஆதாரங்கள் இந்த கொள்கையுடன் மாறுபடுகின்றன. மனித வாழ்விற்கான முதல் ஆதாரங்கள் ஏறத்தாழ கிமு 9000 ஆண்டுடையனவாக கிடைத்துள்ளன; அமேசான் படுகையில் உணவுக்காக பரங்கிக்காய்கள், பச்சை மிளகாய்கள், பீன் அவரைகள் பயரிடப்பட்டன. மேலும் மண்குட சான்றுகள் கிமு 2000இல் மரவள்ளி பயிரிடப்பட்டதையும் அறிவிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் அந்தீசு மலைத்தொடர் முழுமையும் வேளாண் மக்கள் குடியேறியிருந்தனர். கடலோரத்தில் மீன் பிடித்தல் முதன்மைத் தொழிலாகவும் உணவாகவும் இருந்தது. இக்காலத்தில் பாசன அமைப்புகளும் உருவாக்கப்பட்டன. தென் அமெரிக்க பண்பாட்டில் கி.மு 3500இல் இருந்தே இலாமாக்கள், விக்குன்யாக்கள், குவானக்கோக்கள், அற்பாக்காக்கள் வீட்டுப்பணிகளுக்கு பழக்கப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றின் இரைச்சிக்காகவும் கம்பளிக்காகவும் மட்டுமன்றி பொருள் போக்குவரத்திற்கும் அவை பயன்பட்டன. கொலம்பசுக்கு முந்தைய நாகரிகங்கள் பெருவின் கடலோரப்பகுதியின் மையத்தில் அமைந்திருந்த நார்டெ சிக்கோ நாகரிகமே மிகத் தொன்மையாக அறியப்படும் தென்னமெரிக்க நாகரிகமாகும். இதன் கட்டிடங்கள் பண்டைய எகிப்தின் பிரமிடுகளின் காலத்தை ஒத்தனவாக உள்ளன. இதனை அடுத்து கி.மு 900களில் சவின் நாகரிகம் துவங்கியது. தற்கால பெருவில் 3,177 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சவின் டெ யுவண்டர் என்ற இடத்தில் இந்த நாகரிகத்தின் எச்சங்களை காண முடிகிறது. சவின் நாகரிகம் கி.மு 900இலிருந்து கி.மு 300 வரை தழைத்திருந்தது. கி.பி முதலாம் ஆயிரமாண்டு துவக்கத்தில், மொச்சே (கி.மு 100 – கி.பி 700, பெருவின் வட கடலோரத்தில்), பரகாசு, நாசுகா (கி.மு 400 – கி.பி 800, பெரு) பண்பாடுகள் தழைத்தோங்கின; மையப்படுத்திய அரசுகள், நிரந்தர இராணுவம், நீர்ப்பாசனத்தால் மேம்படுத்தப்பட்ட வேளாண்மை, அழகிய மண் வேலைப்பாடுகள் இக்காலத்திற்குரியன. 7வது நூற்றாண்டு வாக்கில் டியாயுயானாக்கோ அரசும் வாரி அரசும் அந்தீசு மண்டலம் முழுமையும் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தின வாரிகள் நகரமயமாக்கலையும் டியாயுயனாக்கோவினர் சமய உருவ வழிபடலையும் நிறுவினர். தற்கால கொலம்பியாவில் மியூசுகா என்ற பழங்குடி நாகரிகம் வளர்ந்தது. பல இனக்குழுக்களாக இருந்த இவர்கள் தங்களுக்குள் வணிக அமைப்பைக் கொண்டிருந்தனர். தங்கக் கொல்லர்களும் விவசாயிகளும் பெரும்பான்மையினராக இருந்தனர். தென்மத்திய ஈக்குவேடரில் கனாரிகளும் பெருவின் வடக்கில் இருந்த சிமு பேரரசும் பொலிவியாவில் சாச்சபோயாக்களும் தென் பெருவில் ஐமறன் பேரரசும் குறிப்பிடத்தக்க பிற பண்பாடுகளாகும். குசுக்கோவைத் தலைநகரமாகக் கொண்டியங்கிய இன்கா நாகரிகம் 1438 முதல் 1533 வரை ஆந்தீசு மலைப்பகுதியில் ஆதிக்கம் செய்தது. கெச்வா மொழியில் டவாண்டின் சுயு என்றழைக்கப்பட்ட ("நான்கு மண்டலங்களின் பரப்பு") என்று அறியப்பட்ட இப்பகுதியில் இன்கா நாகரிகம் வளர்தோங்கியது. நூற்றுக்கணக்கான மொழி மற்றும் இனக்குழுக்களை ஆண்ட இதன் ஆட்சியில் 9 -14 மில்லியன் மக்கள் வாழந்திருந்தனர். 25000 கிமீ தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மத்திய சிலியின் மபூச்சே அரசு ஐரோப்பிய, சிலி குடியேற்றங்களை எதிர்த்து 300 ஆண்டுகளுக்கு மேலாக அராவுகோ போர் புரிந்தனர். ஐரோப்பிய குடிமைப்படுத்தல் போர்த்துக்கல்லும் எசுப்பானியாவும் திருத்தந்தையின் ஒப்புதலுடன் 1494இல் ஓர் உடன்பாடு, டோர்டிசில்லாசு உடன்படிக்கை, கண்டனர்; இதன்படி ஐரோப்பாவிற்கு வெளியே புதிய நிலப்பரப்புகளைக் கண்டறியும் போது தங்களுக்குள் ஒருவருக்கொருவர் போட்டியில்லாத இரட்டையர் முற்றுரிமை பெற முயன்றனர். கேப் வர்டிக்கு மேற்கில் 370 பாகையில் (கிட்டத்தட்ட 46° 37' W) வடக்கு-தெற்காக இடப்பட்ட ஓர் கற்பனைக் கோட்டின் மேற்கிலுள்ள பகுதிகள் எசுப்பானியாவிற்கும் கிழக்கிலுள்ள நிலப்பகுதிகள் போர்த்துக்கல்லிற்குமாக பிரித்துக்கொள்ளப் பட்டன. அக்காலத்தில் நிலநிரைக்கோடு அளவீடுகள் துல்லியமாக இல்லாத காரணத்தால் இந்தக் கோட்டை முற்றிலுமாக கடைபிடிக்க முடியாது போர்த்துக்கல் பிரேசிலை இக்கோட்டிற்கு வெளியேயும் விரிவுபடுத்த முடிந்தது. 1530களில் இந்த இரு நாடுகளிலிருந்தும் வந்த பல தொழில் முனைவோர் தென்னமெரிக்க இயற்கை வளங்களை சுரண்ட குடியேறினர்; இவர்கள் நிலங்களையும் வளங்களையும் கையகப்படுத்தி குடிமைப்பட்ட பகுதிகளை நிறுவினர். எசுப்பானிய ஆதிக்கத்தில் இருந்த தென்னமெரிக்கக் குடிகள் ஐரோப்பிய தொற்றுநோய்களான பெரியம்மை, இன்ஃபுளுவென்சா, தட்டம்மை, டைஃபஸ் போன்றவற்றிற்கு எதிர்ப்பாற்றல் இல்லாமையால் மடிந்தனர்; மேலும் சுரங்கங்கள், தொழிற்சாலைகளில் கட்டாயப்படுத்தப்பட்ட வேலைகளும் அடிமைத்தனமும் அவர்களை அழியச்செய்தன. இவர்களுக்கு மாற்றாக இந்த நோய்களுக்கு எதிர்ப்பாற்றல் பெற்றிருந்த ஆப்பிரிக்க அடிமைகள் கொண்டு வரப்பட்டனர். எசுப்பானியர்கள் கிறித்தவ சமயத்திற்கு முதற்குடிகளை மாற்ற முயல்கையில் உண்ணாட்டு பண்பாடுகளை சிதைத்தனர். பல கலைப்பொருட்கள் கடவுளரின் உருவம் எனக் கருதி அழித்தனர். பல தங்க, வெள்ளி சிலைகள் உருக்கப்பட்டு எசுப்பானியாவிற்கும் போர்த்துக்கல்லிற்கும் கொண்டு செல்லப்பட்டன. இருப்பினும் உண்ணாட்டு மக்கள் கிறித்தவத்துடன் உருவ வழிபாடும் பல கடவுட் கொள்கையும் உடைய தங்கள் பண்பாட்டையும் இணைத்து வழிபட்டனர். இதேபோல எசுப்பானியத்தை மட்டுமே வளர்த்து உள்ளூர் மொழிகளை சிதைக்க முயன்றதும் கத்தோலிக்க திருச்சபையின் நற்செய்திகள் கெச்வா, ஐமர, குவாரனி மொழிகளில் பரப்பப்பட்டதால் இந்த மொழிகள் இன்றும், வாய்வழியாக மட்டும், பிழைத்துள்ளன. மெதுவாக முதற்குடி மக்களும் எசுப்பானியர்களும் ஒருவருக்கொருவர் உறவு கொள்ளத் துவங்கினர்; இவர்களுக்குப் பிறந்தவர்கள் மெஸ்டிசோ எனப்பட்டனர். எசுப்பானியரும் போர்த்துக்கேயரும் மேற்கு ஐரோப்பிய கட்டிடக் கலையை கொண்டு வந்தனர். பாலங்கள், சாலைகள், கழிவுச் சாக்கடைகள் போன்ற கட்டமைப்புக்களை உருவாக்கினர். வணிக மற்றும் பொருளாதார இணைப்புக்களை ஏற்படுத்தினர். பொதுவான மொழியாக போர்த்துக்கேயமும் எசுப்பானியமும் ஆனதால் பிளவுபட்டிருந்த பல்வேறு பண்பாடுகள் ஒருங்கிணைந்து இலத்தீன் அமெரிக்கா என்ற பொது அடையாளத்தைப் பெற்றன. கயானா போர்த்திகேய குடிமைப்பகுதியாகவும் பின்னர் டச்சுப் பகுதியாகவும் இறுதியில் பிரித்தானிய குடிமைப்பகுதியாகவும் மாறியது. பிரித்தானியா இப்பகுதிகளை முழுமையாக கையகப்படுத்தும் வரை இது ஒரு நேரத்தில் மூன்று பிரிவுகளாக, ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டின் ஆதிக்கத்தில், இருந்தது. போர்த்துக்கல்/எசுப்பானியாவிலிருந்து விடுதலை 1807–1814 காலகட்டத்தில் நெப்போலியப் போர்கள், எசுப்பானிய, போர்த்துக்கேய குடிமைப்பகுதிகளில் பெரும் அரசியல் மாற்றத்தை உண்டாக்கின. நெப்போலியனின் போர்த்துக்கல் படையெடுப்பின்போது போர்த்துக்கல் அரச குடும்பத்தினர் பிரேசிலுக்கு தப்பி ஓடினர். எசுப்பானிய அரசர் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நெப்போலியன் தனது இளவலை எசுப்பானிய அரசராக அறிவித்தார். ஆனால் அரசருக்கு விசுவாசமான எசுப்பானிய குறுமன்னர்கள் இதனை ஏற்காது தாங்களே தங்கள் பகுதியில் அரசாட்சி செய்யத் துவங்கினர். எசுப்பானிய குடிமைப்பகுதிகளிலும் இதேபோல அங்குள்ள தலைவர்கள் தாங்களே ஆட்சி புரியத் தொடங்கினர். இதனால் அரச விசுவாசிகளுக்கும் விடுதலை விரும்பிய நாட்டுப் பற்றாளர்களுக்கும் இடையே போர்கள் மூண்டன. ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் பெர்டினாண்டு இழந்த சிம்மாசனத்தைப் பிடித்தார். அவரது தலைமையின் கீழ் விசுவாசப் படைகள் வலுப்பெறத் தொடங்கின. தென்னமெரிக்காவின் விடுதலையில் சிமோன் பொலிவார் (வெனிசுவேலா), ஜோஸ் டெ சான் மார்ட்டின் (அர்கெந்தீனா), ஆகிய இருவரும் முக்கியப் பங்காற்றினர். பொலிவார் வடக்கில் பெரும் கிளர்ச்சியே முன்னின்று நடத்தினார். பின்னர் தனது படைகளை தெற்கிலுள்ள பெருவின் தலைநகர் லிமா நோக்கி வழிநடத்தினார். சான் மார்ட்டின் ஆந்தீசு மலைத்தொடர் வழியாக சிலியைக் கைப்பற்றினார். மார்ட்டின் கடல் வழியாக பெருவை அடைய கப்பல்படையைத் தயார் செய்தார். பெருவின் அரசப் பிரதிநிதிக்கு எதிராக இராணுவ உதவியை பல்வேறு எதிரிகளிடமிருந்து சேகரித்தார். இவர்கள் இருவரது படைகளும் எக்குவடோர் நாட்டில் குவாயாக்கில் என்ற இடத்தில் சந்தித்தன; இரு படைகளும் ஒன்றிணைந்து அரசப் படைகளை தோற்கடித்து சரணடைய வைத்தனர். பிரேசிலுக்குத் தப்பியோடிய போர்த்துக்கல் அரசர், பிரேசிலை தனி இராச்சியமாக 1822இல் அறிவித்தார். பிரேசில் படைகளின் அரச விசுவாச மிக்கவர்களாக இருந்தபோதும் போர்த்துக்கல் மன்னர் பிரேசிலுக்கு பெரும் நட்ட ஈட்டைப் பெற்றுக்கொண்டு தன்னாட்சி வழங்கினார். புதியதாக உருவான தன்னாட்சி பெற்ற நாடுகள் பல உள்நாட்டுமற்றும் பன்னாட்டுப் போர்களை எதிர்கொண்டனர். பராகுவே, உருகுவே போன்று பிரிந்த பெரிய மாநிலங்கள் தனிநாடாக உருப்பெற்று இன்று வரை தனிநாடாக விளங்குகின்றன; மற்றவை மீண்டும் கையகப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு தங்கள் முந்தைய நாடுகளின் அங்கங்களாக இணைந்தன. நாடுகள் தென் அமெரிக்காவில் உள்ள நாடுகள்: மேற்சான்றுகள் கண்டங்கள்
4980
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D
சிக்கிம்
சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலம். தனி நாடாக விளங்கிய சிக்கிம், பாதுகாப்பு காரணங்களால் 1975ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி. இந்து மதமும், வஜ்ராயன புத்த மதமும் இம்மாநில மக்களால் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இந்திய மாநிலங்களிலேயே கோவா மாநிலம் மட்டும் தான் சிக்கிமை விட சிறிய மாநிலம். சிக்கிமின் மேற்கில் நேபாளமும், வடக்கில் சீனாவும், கிழக்கில் பூட்டானும், தெற்கில் மேற்கு வங்காளம் உள்ளன. உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரமான கஞ்சன்சங்கா சிக்கிமில் உள்ளது. இந்தியாவுடன் இணைப்பு 1947ல் இந்தியா விடுதலையடைந்த போது, சிக்கிமும் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று முடியாட்சியாக தொடர்ந்தது. அதன் விடுதலைக்கு இந்தியா பாதுகாப்பு கொடுத்தது. இந்தியாவுடன் இணைவதற்கான வாக்கு வெற்றி பெறாததால் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு சிக்கிமிற்கு சிறப்பு அந்தஸ்து (SPECIAL PROTECTORATE STATUS) கொடுத்தார். சிக்கிம் இந்தியாவின் மேலாண்மையை ஏற்ற நாடாக விளங்கியது. அதன்படி சிக்கிமின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு போன்றவை இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன; மற்ற அனைத்து துறைகளிலும் தன்னாட்சி பெற்றிருந்தது. நேப்பாளிகளின் ஊடுருவல் அதிகமாகத் தொடங்கவே, 1975-ல் சிக்கிமின் பிரதமராகப் பொறுப்பேற்ற காஜி என்பவர் சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே இணைத்துக் கொள்ள இந்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி எடுக்கப்பட்ட பொது வாக்கெடுப்பில் 97.5% சிக்கிம் மக்கள் இந்தியாவுடன் இணைவதை ஆதரிக்க, 16.05.1975-ல் சிக்கிம் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக இணைந்தது. வித்தியாசமான மாநிலம் சிக்கிம், 7096 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். தெற்கு வடக்காக 115 கிலோமீட்டரும், கிழக்கு மேற்காக 65 கிலோமீட்டரும் விஸ்தீரணம் கொண்டுள்ளது. நான்கே மாவட்டங்கள். கிழக்கு சிக்கிம் மாவட்டம் (தலைநகரம் காங்டாக்), மேற்கு சிக்கிம் மாவட்டம் (தலைநகரம் கெய்சிங்), வடக்கு சிக்கிம் மாவட்டம் (தலைநகரம் மங்கன்), தெற்கு சிக்கிம் மாவட்டம் (தலைநகரம் நாம்ச்சி) என்பவை தான் மாவட்டங்களின் பெயர்கள். சிக்கிம் மாநிலத்தின் தலைநகரம் காங்டாக். இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் எவ்வளவோ அரசியல் குழப்பங்கள், தீவிரவாத துர்நிகழ்வுகள், போதைப் பொருள் புழக்கங்கள், சமூக பொருளாதாரக் கோணங்களில் பின்தங்கிய நிலை என்று இருந்தாலும் இயற்கை அன்னையின் பூரண அரவணைப்பு இருக்கிறது. வடகிழக்கின் ஏழு மாநிலங்களில் அடிதடிப் பிரச்னை, அரசியல் குழப்பம், தீவிரவாத நடவடிக்கைகள் என்று ஏதும் ஒரு சிறிதும் இல்லாத அமைதியான ஒரே மாநிலம் சிக்கிம். அரசியல் என்று பார்த்தால் சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட்(குடியரசுத் தோழன்) என்கிற ஒரே கட்சி தான் பிரதானம். எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. 2009 மே மாதம் பாராளுமன்றத்துடன் சேர்ந்து நடந்த மாநில சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 23 தொகுதிகளையும் பாராளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றி இருக்கிறது சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட். சுற்றுச்சூழல் பராமரிப்பிலும், பொது சுகாதாரம், தூய்மை ஆகியவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் தந்து நிர்வகிக்கப்படும் பகுதியாகத் திகழ்கிறது இந்தச் சிறிய மாநிலம். ஒட்டுமொத்த சிக்கிமிலும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை உள்ளது. கடைகளில் துணிப்பையில் தான் பொருட்கள் தருகிறார்கள். பயண வழியெங்கும், குறிப்பாக மலைப்பகுதிகளில் அவ்வளவு பயணிகள் வந்து செல்லும் இடத்திலும் பிளாஸ்டிக் குப்பைகள் கண்களில் படுவதில்லை. ஏழெட்டு மாதங்கள் சுற்றுலாப் பயணிகளின் வரவு நிறைய பணப்புழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. டாக்சி வாடகையாகட்டும், அறைகளின் வாடகையாகட்டும், உணவுப் பொருட்களின் விலையாகட்டும் எல்லாமே மாநிலம் இருக்கும் உயரத்துக்குப் பொருத்தமாகவே. மூவாயிரம் அடியிலிருந்து 28208 அடி உயரம் (உலகின் மூன்றாவது உயரமான சிகரம் கஞ்சன் ஜங்கா இந்த மாநிலத்தின் தான் உள்ளது) வரை மாநிலத்தின் உயரம் வேறுபடுகிறது. மொத்த மாநிலத்திலும் எங்கும் தொடர்ந்து ஐந்நூறடி தூரம் ஏற்ற இறக்கம் இல்லாமல் இல்லை. அதனாலேயே ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறிப்பாக காவலர்க்கும் தொப்பை என்பது அரிதாகவே உள்ளது. போக்குவரத்து மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பக்தோக்ரா விமான நிலையம் 114 கிலோமீட்டர் தூரத்திலும், NJP என்று சொல்லப்படும் நியூ ஜல்பாய்குரி (இதுவும் மேற்கு வங்காளமே) என்கிற ஊரின் புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் 125 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சாலை வழியாக டார்ஜிலிங் 94 கிலோமீட்டர் தொலைவிலும், சிலிகுரி என்கிற ஊர் 114 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சிலிகுரி இருந்து கேங்டாக்கு அடிக்கடி பேருந்துகள், டாக்ஸிகள் சேவை இருக்கின்றன. சிக்கிம் மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன. சுற்றுலா டாக்ஸி மற்றும் ஜீப் சேவைகள் சிக்கிம் முழுவதும் இயங்குகின்றன. சிக்கிமில் புகைவண்டித் தடம் கிடையாது. சிக்கிம் உள்ள ஒரே விமானம் நிலையம் பாக்யாங் விமான நிலையம். இது கேங்டாக்கிருந்து 27 கி.மீ ஆகும். இங்கிருந்து இருந்து கொல்காத்தாவிற்கு நாளொன்றுக்கு ஒரே ஒரு விமானம் இயங்கிறது. சிக்கிம் ஹெலிகாப்டர் சேவையால் இயக்கப்படும் தினசரி ஹெலிகாப்டர் சேவை கேங்டாக்கை பாக்டோகிராவுடன் இணைக்கிறது. ஹெலிகாப்டர் பயணம் முப்பது நிமிடங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே இயங்குகிறது. மேலும் நான்கு பேரைக் கொண்டு செல்ல முடியும். கேங்டோக் ஹெலிபேட் மாநிலத்தில் உள்ள ஒரே சிவிலியன் ஹெலிபேட் ஆகும். நிர்வாகம் சிக்கிம் மாநிலம் நான்கு மாவட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள் : கிழக்கு சிக்கிம், மேற்கு சிக்கிம், வடக்கு சிக்கிம் மற்றும் தெற்கு சிக்கிம் ஆகும். இம்மாநிலத்தின் பெரிய முக்கிய நகரங்கள் கேங்டாக், கெய்சிங், மங்கன் மற்றும் நாம்ச்சி ஆகும். மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சிக்கிம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 610,577 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 74.85% மக்களும், நகரப்புறங்களில் 25.15% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.89% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 323,070 ஆண்களும் மற்றும் 287,507 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 890 பெண்கள் வீதம் உள்ளனர். 7,096 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 86 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 81.42 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 86.55 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.61 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 64,111 ஆக உள்ளது. சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 352,662 (57.76 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 9,867 (1.62 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 60,522 (9.91 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,868 (0.31 %) ஆகவும் சமண சமய மக்கள் தொகை 314 (0.05 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 167,216 (27.39 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 16,300 (2.67 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,828 (0.30 %) ஆகவும் உள்ளது. மொழிகள் இம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ அலுவலக மொழிகள் (Official languages) ஆங்கிலம், நேபாள மொழி , சிக்கிமீஸ் (Bhutia)மற்றும் லெப்சா(Lepcha)ஆகியவை ஆகும். மேலும் மாநிலம் முழுவதும் பரவலாக பேசப்படும் சுமார் 8 வட்டார மொழிகளும் கூடுதல் அலுவலக மொழிகளாக உள்ளது. அரசியல் இம்மாநிலத்தில் முப்பத்து இரண்டு சட்டமன்ற தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற மக்களவை தொகுதியும், ஒரு நாடாளுமன்ற இராச்சிய சபை தொகுதியும் உள்ளது. இந்திய இராணுவம் நாதூ லா கணவாய் இந்திய-சீன எல்லைப் பகுதியான நாதூ லா கணவாய்க்குச் செல்ல முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். வாகன சோதனை முதலான பல சோதனைகளுக்குப் பின்னரே இப்பகுதிக்குச் செல்ல முடியும். எல்லைக்கு அப்பால் சீன இராணுவ வீரர்கள் நடமாடுவதையும் இங்கிருந்து பார்க்க முடியும். சுமார் 14400 அடி உயரத்தில் உள்ள இப்பகுதி கடுங்குளிர் கொண்டது. பாபா மந்திர் சிக்கிமில் உள்ள பாபா மந்திர் புகழ் பெற்றது. பஞ்சாப் ரெஜிமெண்டைச் சேர்ந்த கேப்டன் ஹர்பஜன் சிங் எனும் இராணுவ அதிகாரியின் நினைவக ஏற்படுத்தப்பட்ட பாபா மந்திர் வித்தியாசமானது. ஆச்சர்யமான விதத்தில் இந்திய ராணுவம் அவர் தனது பணியைத் தொடர்வதாகக் கருதுகிறது. அங்கு பணிபுரியும் இந்திய இராணுவ வீரர்களுக்கு உற்சாகமூட்டி அவர்கள் மனவலிமையை அவர் திடப்படுத்துவதாக நம்பப்படுகின்றது. வருட விடுமுறையில் அவரது பெயரில் பஞ்சாபில் உள்ள அவரது வீட்டிற்கு அவர் செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. அவரது இராணுவ சீருடையுடன் ஓர் ராணுவ வீரர் பயணம் செய்து ஹர்பஜன்சிங் வீட்டில் அவரது சீருடையை சேர்த்து விட்டு திரும்புகிறார். சுற்றுலா சுற்றுலாத் துறை இம்மாநிலத்தின் ஒரு முக்கியமான வருவாய் ஈட்டும் துறை ஆகும். இம்மாநிலம் முழுவதும் மலைப்பாங்கான பகுதியில் இருப்பதால் சுற்றுலாவுக்கு ஏற்றதாக உள்ளது. மேலும் பௌத்தர்களுக்கு ஒரு முக்கியமான சமய மையமாகவும் அமைந்துள்ளது. இங்கு சாங்கு ஏரி, குருதோங்மார் ஏரி, யும்தாங் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களும் ரும்டெக் மடம் போன்ற பௌத்தத் தலங்களும், நாதுலா எனும் இந்திய சீன எல்லைப் பகுதியும் குறிப்பிடத்தக்க இடங்களாகும். கேங்டாக் அண்மைக் காலத்தில் கேங்டாக் நகரம் இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ருஸ்தம்ஜி பூங்கா ருஸ்தம்ஜி பூங்கா தலைநகர் கேங்டாக்கில் அரசுத் தலைமைத் செயலகத்திற்கு அருகிலுள்ளது. அரிய வகை மான்களும் சிவப்பு பாண்டாக் கரடிகளும் இங்கு வாழ்கின்றன. கஞ்சன் ஜங்கா மலை கஞ்சன் ஜங்கா மலை மலையேற்ற வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் சிறந்த சுற்றுலா இடமாக விளங்குகிறது. மின் உற்பத்தி இந்தியாவில், தன் மாநிலத்தின் தேவைக்கதிகமான மின் உற்பத்தி உள்ள மாநிலங்களில் முதலாவதாக சிக்கிம் உள்ளது. மேற்கோள்கள் 3.https://www.sikkimtourism.gov.in/Public/ExperienceSikkim/history இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும் ஆசியாவின் முன்னாள் நாடுகள் வடகிழக்கு இந்தியா
4981
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
பஞ்சாப் (இந்தியா)
பஞ்சாப் (Punjab) இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டிகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். கோதுமை பஞ்சாபில் அதிகமாக விளையும் பயிராகும். பஞ்சாபில் ராவி, பியாஸ், சத்லஜ் ஆகிய மூன்று ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. ஜீலம், செனாப் ஆகியவை பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாய்கின்றன. பண்டைய காலத்தில், பஞ்சாப் பகுதி என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு, இன்றைய இந்திய பஞ்சாப் மாநிலம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம், அரியானா மாநிலம், இமாச்சல பிரதேசம், டெல்லி, ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இன்றைய பஞ்சாப் மாநிலம் 1966-ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாநிலத்தை பிரித்து உருவாக்கப்பட்டது. பஞ்சாபின் அண்டை மாநிலங்களான அரியானா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இப்பிரிவின் மூலம் உருவாக்கப்பட்டவையே. வேளாண்மை பஞ்சாப் மாநிலத்தின் முதன்மை தொழிலாக இருந்துவருகிறது. பஞ்சாப், இந்தியாவின் மிகச் சிறந்த அடிப்படை கட்டமைப்பை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. பஞ்சாபில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் எண்ணிக்கை மற்ற இந்திய மாநிலங்களைவிட மிகக்குறைவாக இருந்துவருகிறது. 1999–2000 கணக்கெடுப்பின்படி, சுமார் 6.16 விழுக்காடு மக்கள் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். வேளாண்மை பஞ்சாபின் மிகப்பெரும் தொழிலாக விளங்குகின்றது. அறிவியல் கருவிகள், வேளாண்மைக்கான கருவிகள், மின்னியல் கருவிகள் தயாரிப்பும் நிதிச் சேவைகள், பொறிக்கருவிகள், துணி, தையல் இயந்திரம், விளையாட்டுப் பொருட்கள், மாப்பொருள், சுற்றுலா, உரம், மிதிவண்டி, உடை தொழிலகங்களும் பைன் எண்ணெய் மற்றும் சீனி பதன்செய் தொழில்களும் மற்ற முதன்மையான தொழில்களாக உள்ளன. இந்தியாவிலுள்ள எஃகு உருட்டாலைகளில் பெரும்பான்மை பஞ்சாபில் உள்ளன; இவை பதேகாட் சாகிபு மாவட்டத்தில் "எஃகு நகரம்" எனப்படும் மண்டி கோபிந்த்கரில் அமைந்துள்ளன. சொற்தோற்றம் "பஞ்சாப்" என்ற பாரசீக மொழி சொல், 'பஞ்' (پنج) = 'ஐந்து', 'ஆப்' (آب) = நீர், என்று பிரிக்கப்பட்டு ஐந்து ஆறுகள் பாயும் பகுதி என்று பொருள் தரும். இவ்வைந்து ஆறுகளாவன: ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சத்லஜ் புவியியல் பஞ்சாப் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது. இதன் பரப்பளவு ஆகும். நிலநேர்க்கோடுகள் 29.30° வடக்கிலிருந்து 32.32° வடக்கு வரையும் நிலநிரைக்கோடுகள் 73.55° கிழக்கு முதல் 76.50° கிழக்கு வரையும் பரவியுள்ளது. மேற்கில் பாக்கித்தானும் வடக்கில் சம்மு காசுமீரும், வடகிழக்கில் இமாச்சலப் பிரதேசமும் தெற்கில் அரியானாவும் இராசத்தானும் அமைந்துள்ளன. பல ஆறுகள் பாய்வதால், பஞ்சாபின் பெரும்பகுதி வளமிக்க வண்டல் மண் கொண்டுள்ளது. சிறப்பான நீர்ப்பாசன கால்வாய்கள் அமைப்பையும் கொண்டுள்ளது. பொதுவாக வரண்ட வானிலையை கொண்டிருப்பினும், மிகச் சிறந்த நீர்பாசன கட்டமைப்பினை கொண்டிருப்பதாலும், வளமிக்க மூன்று ஆறுகள் பாய்வதாலும், வேளாண்மையில் சிறந்து விளங்குகிறது. வடகிழக்கு பகுதியில் இமய மலையின் அடிவாரத்தில் ஏற்றயிறக்கமான மலைக்குன்றுகள் உள்ளன. இதன் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து ஆகும்; தென்மேற்கில் இது ஆகவும் வடகிழக்கில் க்கும் கூடுதலாகவும் உள்ளது. தென்மேற்குப் பகுதி பகுதிவறள் வட்டாரமாகும்; இறுதியில் தார்ப் பாலைவனத்துடன் இணைகிறது. வடகிழக்கு பகுதியில் சிவாலிக் மலை பரவியுள்ளது. பஞ்சாபின் வெவ்வேறு பகுதிகளில் மண்வளம் அங்குள்ள நிலவியல், தாவரங்கள், பாறையமைப்பைப் பொறுத்து மாறுகின்றது. பஞ்சாப் பகுதியின் தட்பவெட்பம், பருவ நிலைக்கு தக்கவாறு, -5 °C இருந்து 47 °C வரை நிலவுகிறது. வட்டார வானிலை வேறுபாடுகளால் இவ்வாறான மண்ணின் பண்புகள் மிகவும் வேறுபடுகின்றன. பஞ்சாபை மூன்று வேறுபட்ட வட்டாரங்களாக, மண்வளத்தைக் கொண்டு, பிரிக்கலாம்: தென்மேற்கு, நடுவம், கிழக்கு பஞ்சாப் நிலநடுக்க அபாய மண்டலங்கள் II, III, IV கீழ் வருகின்றது. மண்டலம் II குறைந்த தீவாய்ப்புள்ள மண்டலமாகும்; மண்டலம் III மிதமான தீவாய்ப்புள்ள மண்டலமாகவும் மண்டலம் IV உயர்ந்த தீவாய்ப்புள்ள மண்டலமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. வானிலை பஞ்சாபின் புவியியலாலும் அயன அயல் மண்டல அமைவிடத்தாலும் இங்கு மாதத்திற்கு மாதம் வேறுபடும் வானிலை நிலவுகின்றது. குளிர்காலத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே வெப்பநிலை க்கு கீழே சென்றபோதும் நிலமட்ட பனிப்புகை பஞ்சாபின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகின்றது. வெப்பநிலை உயரும்போது ஈரப்பதமும் உயர்கின்றது. இருப்பினும் மேகமூட்டம் இல்லாத காலங்களில் ஈரப்பதம் குறைந்துள்ளபோது வெப்பநிலை மிகவிரைவாக மேலேறுகின்றது. மே மாத நடுவிலிருந்து சூன் வரை மிக உயரிய வெப்பநிலை நிலவுகின்றது. வெப்பநிலை க்கும் கூடுதலாக உள்ளது. லூதியானாவில் மிக உயர்ந்த வெப்பநிலையாக உம் பட்டியாலா, அமிருதசரசில் மிக உயர்ந்த வெப்பநிலையாக உம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சனவரியில் மிகக் குறைந்த வெப்பநிலை காணப்படுகின்றது. சூரியரேகைகள் மிகச் சாய்ந்திருப்பதால் குளிர்காற்று வெப்பநிலையை கட்டுப்படுத்துகின்றது. திசம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர்காலம் நிலவுகின்றது. மிகக் குறைந்த வெப்பநிலையாக அமிருதசரசில் ()உம் லூதியானாவில் உம் பதிவு செய்யப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் இரண்டு மாதங்களுக்கு குறைந்த வெப்பநிலை கீழுள்ளது. சனவரி, பெப்ரவரியின் மிக உயரிய வெப்பநிலை சூன் மாதத்தின் மிகக் குறைந்த வெப்பநிலையை விடக் குறைவாகும். பஞ்சாபின் ஆண்டு சராசரி வெப்பநிலை ஏறத்தாழ ஆகும். வரலாறு பண்டைய வரலாறு இந்துமத காப்பியம் மகாபாரதம் எழுதப்பட்ட பொ.ஊ.மு. 800–400 காலகட்டத்தில் பஞ்சாப் திரிகர்த்த நாடு என அறியப்படது; இதனை கடோச் அரசர்கள் ஆண்டு வந்தனர். சிந்துவெளி நாகரிகம் பஞ்சாப் பகுதியின் பல பகுதிகளில் பரவியிருந்தது; இவற்றின் தொல்லியல் எச்சங்களை ரூப்நகர் போன்ற நகரங்களில் காணலாம். சரசுவதி ஆறு பாய்ந்த பஞ்சாப் உட்பட பெரும்பாலான வட இந்தியா வேத காலத்தில் குறிப்பிடப்படுகின்றது. செழுமையான பஞ்சாப் பகுதி பல பண்டைய பேரரசுகளால் ஆளப்பட்டு வந்துள்ளது; இதனை காந்தார அரசர்கள், நந்தர்கள், மௌரியர்கள், சுங்கர், குசான்கள், குப்தர்கள், பாலர்கள், கூர்ஜரர்கள், காபூல் சாகிகள் ஆண்டுள்ளனர். அலெக்சாந்தரின் கிழக்கத்திய தேடுதல் சிந்து ஆற்றுக்கரைவரை நீண்டுள்ளது. வேளாண்மை வளர்ச்சியடைந்து ஜலந்தர், சங்குரூர், லூதியானா போன்ற வணிகமாற்று நகரங்கள் செல்வச் செழிப்படைந்தன. இதன் புவியியல் அமைப்பின் காரணமாக, பஞ்சாப் பகுதி மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் தொடர்ந்த தாக்குதல்களை சந்தித்த வண்ணம் இருந்துள்ளது. அகாமனிசியர்கள், கிரேக்கர்கள், சிதியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஆப்கானியர்கள் பஞ்சாபை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் நூற்றாண்டுகளாக இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. இவற்றின் தாக்கங்களால் பஞ்சாபியப் பண்பாடு இந்து, புத்தம், இசுலாம், சீக்கியம், பிரித்தானியக் கூறுகளை உள்ளடக்கி உள்ளது. பஞ்சாபில் சீக்கியர்கள் பாபர் வட இந்தியாவை வென்ற நேரத்தில் சீக்கியமும் வேர் விட்டது. அவரது பெயரர், அக்பர், சமய விடுதலையை ஆதரித்தார். குரு அமர்தாசின் லங்கர் எனும் சமுதாய உணவகத்தைக் கண்டு சீக்கியத்தின் மீது மதிப்பு கொண்டிருந்தார். லங்கருக்கு நிலம் கொடையளித்ததுடன் சீக்கிய குருக்களுடன் 1605-இல் தமது மரணம் வரை இனிய உறவு கொண்டிருந்தார். ஆனால் அடுத்துவந்த ஜஹாங்கீர், சீக்கியர்களை அரசியல் அச்சுறுத்தலாகக் கருதினார். குஸ்ரூ மிர்சாவிற்கு ஆதரவளித்ததால் குரு அர்ஜன் தேவை கைது செய்து சித்திரவதைக்குட்படுத்தி கொல்ல ஆணையிட்டார். அர்ஜன் தேவின் உயிர்க்கொடை ஆறாவது குரு, குரு அர்கோவிந்த் சீக்கிய இறைமையை அறிவிக்கச் செய்தது; அகால் தக்த்தை உருவாக்கி அமிருதசரசை காக்க கோட்டையும் கட்டினார். குரு அர்கோவிந்தை குவாலியரில் கைது செய்த சகாங்கீர் பின்னர் விடுவித்தார். குரு தன்னுடன் கைது செய்யப்பட்டிருந்த மற்ற இந்து இளவரசர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என கோரியதால் அவர்களையும் விடுவித்தார். 1627-இல் சகாங்கீர் இறக்கும் வரை சீக்கியர்களுக்கு முகலாயர்களிடமிருந்து எவ்வித பிரச்சினையும் இல்லாதிருந்தது. அடுத்த மொகலாயப் பேரரசர் ஷாஜகான் சீக்கிய இறையாண்மையை "எதிர்த்து" சீக்கியர்களுடன் போரிட்டு அவர்களை சிவாலிக் மலைக்குப் பின்வாங்கச் செய்தார். அடுத்து சீக்கிய குருவான குரு ஹர் ராய் சிவாலிக் மலையில் தமது நிலையை உறுதிபடுத்திக் கொண்டார். ஔரங்கசீப்பிற்கும் தாரா சிக்கோவிற்கும் இடையே நடந்த அதிகாரப் போட்டியில் நடுநிலை வகித்தார். ஒன்பதாவது குரு, குரு தேக் பகதூர், சீக்கிய சமூகத்தை அனந்த்பூருக்கு கொண்டு சென்றார். பரவலாக பயணம் செய்துமொகலாயரின் தடையை எதிர்த்து சீக்கியக் கொள்கைகளை பரப்பினார். காஷ்மீர பண்டிதர்கள் இசுலாமிற்கு மாறுவதைத் தடுக்க தாமே கைதானார்; சமயம் மாற மறுத்ததால் சிறையிலேயே உயிர் நீத்தார். 1675இல் பொறுப்பேற்ற குரு கோவிந்த் சிங் பவன்டாவிற்கு தமது குருமடத்தை மாற்றினார். அங்கு பெரிய கோட்டையைக் கட்டினார். சீக்கியர்களின் படை வலிமை சிவாலிக் இராசாக்களுக்கு அச்சமூட்ட அவர்கள் சீக்கியர்களுடன் போரிட்டனர்; ஆனால் இதில் குருவின் படைகள் வென்றனர். குரு அனந்த்பூருக்கு மாறி அங்கு மார்ச் 30, 1699-இல் கால்சாவை நிறுவினார். 1701-இல் மொகலாயப் பேரரசும் சிவாலிக் இராசாக்களும் இணைந்து வாசிர் கான் தலைமையில் அனந்த்பூரைத் தாக்கினர். முக்த்சர் சண்டையில் கால்சாவிடம் தோற்றனர். சிசு-சத்துலுச்சு நாடுகள் தற்கால பஞ்சாப், அரியானாவில் சத்துலச்சு ஆற்றை வடக்கிலும் இமய மலையை கிழக்கிலும் யமுனா ஆறு, தில்லியைத் தெற்கிலும் சிர்சா மாவட்டத்தை மேற்கிலும் எல்லைகளாகக் கொண்ட நாடுகளின் குழு சிசு-சத்துலுச்சு எனப்படுகின்றது. இந்த நாடுகளை மராட்டியப் பேரரசின் சிந்தியா வம்சத்தினர் ஆண்டு வந்தனர். 1803-1805இல் இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் வரை இப்பகுதியின் சிற்றரசர்களும் அரசர்களும் மராத்தியர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். சிசு-சத்துலுசு நாடுகள் கைத்தல், பட்டியாலா, ஜிந்து, தானேசர், மாலேர் கோட்லா, பரீத்கோட் ஆகும். சீக்கியப் பேரரசு 1801–1849 காலகட்டத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த கால்சா கட்டைமைப்பினைப் பயன்படுத்தி, சீக்கிய சிற்றரசுகளை ஒன்றிணைத்து மகாராசா இரஞ்சித் சிங் சீக்கியப் பேரரசை நிறுவினார். இந்தப் பேரரசு மேற்கில் கைபர் கணவாய், வடக்கில் காசுமீர், தெற்கில் சிந்து மாகாணம், கிழக்கில் திபெத்து வரைப் பரவியிருந்தது. இப்பேரரசின் முதன்மையான புவியியல் அடித்தளமாக பஞ்சாப் பகுதி அமைந்திருந்தது. இந்தப் பேரரசின் மக்கள்தொகையில் 70% முசுலிம்களும் 17% சீக்கியர்களும் 13% இந்துக்களும் இருந்தனர். தமது படைகளை நவீனப்படுத்தினார்; ஐரோப்பிய படைத்துறை அதிகாரிகளை நியமித்து நவீனப் போர்முறைகளில் பயிற்றுவித்தார். துப்பாக்கி, பீரங்கிகளைக் கொண்டு முதன்மையான படையாக மாற்றினார். ஆனால் 1839இல் இரஞ்சித் சிங்கின் மறைவிற்குப் பிறகு உள்நாட்டுக் குழப்பங்களால் பேரரசு பலமிழந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பிரித்தானியப் பேரரசு ஆங்கிலேய-சீக்கியப் போரைத் தொடுத்தனர். படைத்துறையின் தலைமையால் ஏமாற்றப்பட்டு சீக்கியப் பேர்ரசு பிரித்தானியர்களிடம் தோல்வியைத் தழுவியது. 1849இல் மீண்டும் நடந்த இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போரில் தோற்கடிக்கப்பட்டு தனித்தனி மன்னராட்சிகள் நிறுவப்பட்டன; பிரித்தானிய மாகாணமாக பஞ்சாப் நிறுவப்பட்டது. பிரித்தானிய அரசியின் நேரடி சார்பாளராக ஆளுநர் இலாகூரில் நியமிக்கப்பட்டார். பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா) சிசு-சத்துலச்சு அரசுகள் மராத்தியப் பேரரசின் சிந்தியா மரபுவழியினரால் ஆளப்பட்டு வந்தன. இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் மராத்தியர்கள் தோல்வியடைய இந்தப் பகுதி பிரித்தானியர்களின் கைவசம் வந்தது. 1809இல் இரஞ்சித் சிங்குடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்த சிற்றரசுகள் முறையான பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் வந்தன. இரஞ்சித் சிங்கின் மறைவிற்குப் பிறகு நிகழ்ந்த முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போரில் சீக்கியர்கள் தோல்வியுற்றனர். போருக்கான நட்டயீடாக சத்துலச்சு ஆற்றிற்கும் பியாஸ் ஆற்றுக்கும் இடையேயான பகுதியும் காசுமீரும் பிரித்தானிய கம்பெனி ஆட்சிக்கு வழங்கப்பட்டன; இதில் காசுமீரை சம்முவை பிரித்தானியரின் கைப்பொம்மையாக ஆண்டுவந்த குலாப் சிங் விலைக்கு வாங்கிக் கொண்டு சம்மு & காசுமீர் அரசராக முடிசூட்டிக் கொண்டார். மீண்டும் சீக்கியர் தங்களை மீளமைத்துக் கொண்டு போரிட்ட இரண்டாம் ஆங்கில-சீக்கியப் போரில் மீண்டும் தோல்வியுற 1849 இலாகூர் உடன்பாட்டின்படி சீக்கிய அரசர் துலீப் சிங்கிற்கு ஓய்வூதியம் தந்து பஞ்சாபை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் எடுத்துக் கொண்டது. பஞ்சாப் பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாயிற்று; பட்டியாலா, கபூர்தலா, பரீத்கோட், நாபா, ஜிந்த் போன்ற சிறிய அரசுகள் lபிரித்தானியருடன் துணைப்படைத் திட்டத்தின் கீழ் உள்நாட்டில் இறைமையைக் கொண்டு அதேநேரம் பிரித்தானிய பாதுகாப்பை ஏற்றனர். 1919இல் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்தது. 1930இல் இந்திய தேசிய காங்கிரசு இலாகூரில் விடுதலையை அறிவித்தது. மார்ச் 1940இல் அகில இந்திய முசுலிம் லீக் பாக்கித்தான் முன்மொழிவை முன்வைத்து முசுலிம் பெரும்பான்மையான பகுதிகளை பிரித்து தனி நாடாக அறிவிக்கக் கோரிக்கை எழுப்பியது. பஞ்சாபில் வன்முறைப் போராட்டங்கள் நடந்து வந்தன. 1946இல் பெரும் சமயஞ்சார்ந்த வன்முறை வெடித்தது; பஞ்சாபின் பெரும்பான்மை முசுலிம்களுக்கும் இந்து, சீக்கியர்களுக்கும் இடையே கலகம் மூண்டது. காங்கிரசும் முசுலிம் லீக்கும் பஞ்சாபை சமய அடிப்படையில் பிரிக்க உடன்பட்டனர். விடுதலைக்குப் பின்னர் 1947இல் பஞ்சாப் மாகாணம் சமய அடிப்படையில் மேற்கு பஞ்சாப், கிழக்கு பஞ்சாப் என பிரிக்கப்பட்டது. பெருந்தொகையான மக்கள் இடம் பெயர்ந்தனர்; செல்லும் வழியிலும் சமயச் சண்டைகள் நடந்தவண்ணம் இருந்தது. சிறிய பஞ்சாபி சிற்றரசுகள், பட்டியாலா அரசரின் வழிகாட்டுதலில், இந்திய ஒன்றியத்துடன் இணைந்தன. இவற்றை அடக்கிய புதிய மாநிலமாக பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் உருவானது. 1956இல் இது கிழக்கு பஞ்சாபுடன் இணைக்கப்பட்டு புதிய விரிவான பஞ்சாப் மாநிலம் உருவானது. 1950இல் இந்திய அரசியலமைப்பு இரு மாநிலங்களை அங்கீகரித்தது: முந்தைய பிரித்தானிய பஞ்சாப் மாகாணத்தின் இந்தியப் பகுதி கிழக்கு பஞ்சாப், முன்னாள் மன்னராட்சி அரசுகள் இணைந்த பட்டியாலா, கிழக்கு பஞ்சாபு அரசுகளின் ஒன்றியம் (PEPSU). மலைநாட்டில் இருந்த பல மன்னராட்சிகளை ஒருங்கிணைத்து இமாச்சலப் பிரதேசம் உருவாக்கப்பட்டது. தற்போதைய பஞ்சாப் உருவாக்கம் பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரமான இலாகூர் பாக்கித்தானுக்குக் கொடுக்கப்பட்டு விட்டதால் இந்திய பஞ்சாபிற்கு புதிய தலைநகரமாக சண்டிகர் கட்டமைக்கப்பட்டது. இந்த நகரம் கட்டி முடிக்கப்படும்வரை, 1960, சிம்லா தற்காலிகத் தலைநகரமாக இருந்தது. 1956இல் பெப்சு மாநிலம் பஞ்சாபில் இணைக்கப்பட்டு கிழக்கு பஞ்சாப் என்ற பெயரிலிருந்து பஞ்சாப் எனப் பெயர் மாற்றம் பெற்றது. அகாலி தளமும் பிற சீக்கிய அமைப்புக்களும் பல்லாண்டுகளாக போராடி 1966இல் மொழிவாரியாக கிழக்கு பஞ்சாப் பிரிக்கப்பட்டது. இந்தி பேசிய தெற்கு பஞ்சாப் தனி மாநிலமாக, அரியானா எனவும் வடக்கிலிருந்து பகாரி எனப்படும் மலைநாட்டு மொழி பேசிய மலைப்பகுதிகள் இமாச்சலப் பிரதேசம் எனவும் உருவாயின. சண்டிகர் பஞ்சாபிற்கும் அரியானாவிற்கும் எல்லையாக, தனி ஒன்றியப் பகுதியானது. பஞ்சாபிற்கும் அரியானாவிற்கும் பொதுத் தலைநகரமாக சண்டிகர் விளங்கியது. 1970களில், பசுமைப் புரட்சி பஞ்சாபிற்கு பொருளியல் வளமையைக் கொணர்ந்தது. மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 27,743,338 ஆக உள்ளது. நகர்புறங்களில் 62.52% மக்களும், கிராமப்புறங்களில் 37.48% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 13.89% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 14,639,465 ஆண்களும் மற்றும் 13,103,873 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 895 பெண்கள் வீதம் உள்ளனர். 50,362 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 551 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 75.84 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.44 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.73 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,076,219 ஆக உள்ளது. பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் பஞ்சாப் மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினர் இல்லாத இரண்டு இந்திய மாநிலங்களில் பஞ்சாப் மாநிலமும் ஒன்று. மற்றொன்று அரியானா மாநிலம் ஆகும். பட்டியல் சாதியினர் இந்திய மாநிலங்களில், பஞ்சாப் மாநிலத்தில் தான் அதிக விழுக்காட்டுடன் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாழ்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையான 2.77 கோடியில், இந்து மற்றும் சீக்கிய சமயம் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் மக்கள் தொகை 88.60 இலட்சமாக ஆக உள்ளது. இது பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 31.91% விழுக்காடாகும். சமூக வாரியான மக்கள் தொகை பஞ்சாபில் முன்னேறிய வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்களின் மக்கள தொகை விவரம்: சமயம் இம்மாநிலத்தில் சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 16,004,754 (57.69 %)ஆகவும், இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 10,678,138 (38.49 %) இசுலாமிய சமய மக்கள் தொகை 535,489 (1.93 %)ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 348,230 (1.26 %)ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை ஆகவும், சமண சமய மக்கள் தொகை 45,040 (0.16 %)ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 33,237 (0.12 %)ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 10,886 (0.04 %)ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 87,564 (0.32 %) ஆகவும் உள்ளது. மொழிகள் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான குர்முகி முறையில் எழுதப்படும் பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மொழிகள் பேசப்படுகிறது. சீக்கியம் சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோவில், பஞ்சாப்பில் உள்ள அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. சீக்கியம் பஞ்சாபின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளமையால், சீக்கிய குருத்துவாராக்களை பஞ்சாப்பில் எங்கும் காணலாம். பண்டைய பஞ்சாப்பில், மதபேதமின்றி அனைவரும் தலைப்பாகை அணிந்து வந்திருந்தாலும், காலப்போக்கில், இவ்வழக்கம் மறைந்து, தற்காலத்தில், சீக்கியர்கள் மட்டுமே தலைப்பாகை அணிகின்றனர். அமிருதசரசு நகரில் சீக்கியர்களின் வழிபாட்டிடங்களில் மிகவும் புனிதமான சிறீ அர்மந்திர் சாகிபு (அல்லது பொற்கோயில்) கோயிலும் சீக்கியர்களின் மிக உயர்ந்த சமய அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழுவும் உள்ளன. பொற்கோயிலின் வளாகத்தினுள் இருக்கும் அகால் தக்த், சீக்கியர்களின் மீயுயர் உலகியல் இருக்கையாகும். சீக்கியத்தின் ஐந்து உலகியல் இருக்கைகளில் (தக்த்) மூன்று பஞ்சாபில் உள்ளன. அவை சிறீ அகால் தக்த் சாகிபு, தம்தமா சாகிபு மற்றும் அனந்த்பூர் சாஹிப் ஆகும். வைசாக்கி, ஒலா மொகல்லா, குருபர்ப், தீபாவளி போன்ற விடுமுறை நாட்களில் தங்கள் நகரம், ஊர், சிற்றூர்களில் அனைவரும் இணைந்து பேரணியாகச் செல்கின்றனர். மாநிலத்தின் ஒவ்வொரு சிற்றூரிலும் ஒரு குருத்துவாராவது இருக்கும். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பஞ்சாப் மாநிலத்திலுள்ள மக்கள்தொகையில் 57.69% விழுக்காடு சீக்கியர்களாகும். உட்பிரிவுகள் பஞ்சாபின் நிலப்பகுதியை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்: மாஜ்ஹா - இந்தியப் பஞ்சாபின் தற்போதைய மாவட்டங்களான அமிருதசரசு, பட்டான்கோட், குர்தாஸ்பூர், தரண் தரண் உள்ளடக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதி. இது ராவி, பியாசு, சத்லஜ் ஆறுகளுக்கிடையேயான நிலப்பரப்பாகும். இதுவே பஞ்சாபின் இதயப் பகுதியாகவும் சீக்கியத்தின் தொட்டில் எனவும் கொண்டாடப்படுகின்றது. தோவாப் - இது இந்தியப் பஞ்சாபில் பியாசு ஆற்றுக்கும் சத்லஜ் ஆற்றுக்கும் இடைப்பட்டப் பகுதியாகும். "தோவாப்" என்பதன் பொருள் "இரண்டாறுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு" என்பதாகும். உலகின் மிகவும் செழுமையான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு மையமாகத் திகழ்ந்தவிடமாகும். இன்றுவரை உலகில் பெரும் தனிநபர் கோதுமை உற்பத்தியைக் கொண்டுள்ளது. இப்பகுதியில் ஜலந்தர், ஹோஷியார்பூர், சாகித் பகத் சிங் நகர் மாவட்டம், கபுர்த்தலா மற்றும் பக்வாரா அமைந்துள்ளன. மால்வா - இந்தியப் பஞ்சாபின் சத்லஜ் ஆற்றுக்கு தெற்கத்திய சீமையாகும். மால்வா பகுதியில் பஞ்சாபின் பெரும்பகுதி அமைந்துள்ளது; 11 மாவட்டங்கள் இப்பகுதியில் உள்ளன. லூதியானா, பட்டியாலா, மொகாலி, பட்டிண்டா, பர்னாலா, சங்குரூர், மோகா, ரூப்நகர், ஃபிரோஸ்பூர், பசில்கா, மான்சா நகரங்கள் இங்கு அமைந்துள்ளன. மால்வா பகுதி பருத்தி வேளாண்மைக்குப் புகழ் பெற்றது. பஞ்சாப் மாவட்டங்கள் பஞ்சாப் மாநிலத்தில் 22 மாவட்டங்களும் 22 பெரு நகரங்களும், 157 நகரங்களும் உள்ளன. ஹோசியார்பூர் மாவட்டம் ஜலந்தர் மாவட்டம் அமிர்தசரஸ் மாவட்டம் பர்னாலா மாவட்டம் பட்டிண்டா மாவட்டம் பரித்கோட் மாவட்டம் பதேகாட் சாகிப் மாவட்டம் ஃபாசில்கா மாவட்டம் பெரோஸ்பூர் மாவட்டம் குர்தாஸ்பூர் மாவட்டம் லூதியானா மாவட்டம் கபூர்தலா மாவட்டம் மான்சா மாவட்டம் மொகா மாவட்டம் சாகிப்ஜாதா அஜித்சிங் நகர் மாவட்டம் ரூப்நகர் மாவட்டம் முக்த்சர் சாகிப் மாவட்டம் சாகித் பகத் சிங் நகர் மாவட்டம் சங்கரூர் மாவட்டம் பட்டியாலா மாவட்டம் பதான்கோட் மாவட்டம் தரண் தரண் மாவட்டம் பாசில்கா மாவட்டமும் பதான்கோட் மாவட்டமும் 2013இல் உருவாக்கப்பட்டன. தற்போதைய மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 22 ஆகும். கோட்டங்கள்: பஞ்சாபில் ஐந்து கோட்டங்கள் உள்ளன. இவை பட்டியாலா, ரூப்நகர், ஜலந்தர், பரித்கோட், ஃபிரோஸ்பூர் ஆகும். வட்டங்கள் : 82 (2015இல்) உள்வட்டங்கள் : 87 மவுர் என்பது கடைசியில் உருவான வட்டமாகும்; இது பட்டிண்டா மாவட்டத்தில் உள்ளது. சிராக்பூர் கடைசியாக உருவான உள்வட்டமாகும்; இது மொகாலி மாவட்டத்தில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமாக இந்திய ஒன்றியப் பகுதியான சண்டிகர் உள்ளது. இதனை அரியானா மாநிலத்துடன் பங்கிட்டுக் கொண்டுள்ளது. சண்டிகர் அரியானாவின் தலைநகரமுமாகும். பஞ்சாபில் 22 நகரங்களும் 157 ஊர்களும் உள்ளன. முதன்மை நகரங்களாக லூதியானா, அமிருதசரசு, ஜலந்தர், பட்டியாலா, பட்டிண்டா, எஸ்ஏஎஸ் நகர் (மொகாலி) உள்ளன. கல்வி துவக்கக் கல்வியும் இடைநிலைக் கல்வியும் பஞ்சாப் பள்ளிக்கல்வி வாரியத்தால் ஒன்றிணைக்கப்படுகின்றது. உயர் கல்விக்கு 32 பல்கலைகழகங்கள் கலை, மாந்தவியல், அறிவியல், பொறியியல், சட்டம், மருந்தியல், கால்நடை மருத்துவம், வணிக மேலாண்மை ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிபுக்களை வழங்கி வருகின்றன. இவற்றில் 11 அரசு பல்கலைக்கழகங்களாகும். பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் உலக புகழ் பெற்றது. அதுவே, 1960–1970 களில் நடந்த பஞ்சாப்பின் பசுமை புரட்சிக்கு பெரும் பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்களில் முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், உயிர்வேதியியலில் நோபல் பரிசு பெற்ற முனைவர். ஹர் கோவிந்த் கொரானா ஆகியோர் உள்ளனர். 1894இல் நிறுவப்பட்ட கிருத்தவ மருத்துவக் கல்லூரி, லூதியானா நாட்டின் தொன்மையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக உள்ளது. கல்வியில் பாலின இடைவெளி உள்ளது; ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் பத்து இலட்சம் முப்பதாயிரம் மாணவர்களில் 44% மடுமே பெண்களாவர். பண்பாடு பஞ்சாபிப் பண்பாட்டில் பல கூறுகள் உள்ளன: பாங்கரா போன்ற இசை, விரிவான சமய மற்றும் சமயசார்பற்ற நடன மரபுகள், பஞ்சாபி மொழியில் நீண்ட இலக்கிய வரலாறு, பிரிவினைக்கு முன்பிருந்தே குறிப்பிடத்தக்க அளவிலான பஞ்சாபித் திரைப்படத்துறை, வெளிநாடுகள் வரை புகழ்பெற்றுள்ள பல்வகைப்பட்ட உணவுகள், மற்றும் உலோகிரி, வசந்தப் பட்டத் திருவிழா, வைசாக்கி, தீயான் (ஊஞ்சல்), போன்ற பல பருவஞ்சார் அறுவடை திருவிழாக்கள் என்பனவாகும். கிஸ்ஸா எனப்படும் பஞ்சாபி மொழி வாய்வழி கதைகள் அராபியத் தீபகற்பத்தில் தொடங்கி ஈரான், ஆப்கானித்தான் வழியே வந்தவையாகும். பஞ்சாபி திருமணச் சடங்குகளும் மரபுகளும் பஞ்சாபிப் பண்பாட்டை பிரதிபலிக்கின்றன; திருமணங்களில் சடங்குகள், பாட்டுக்கள், நடனங்கள், உணவு, உடை, என நூற்றாண்டுகளாக பரிணமித்த பண்பாட்டின் எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன. வணிகம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு பஞ்சாப் இந்தியாவின் மிகச்சிறந்த அடிப்படை கட்டமைப்பினை கொண்ட மாநிலங்களில் ஒன்று. இந்திய தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழு தனது தரவரிசையில் இந்தியாவின் சிறந்த அடிப்படை கட்டமைப்பை கொண்ட மாநிலமாக பஞ்சாப் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளது. நாட்டில் தனிநபர் மின்சார உற்பத்தியில் மற்ற இந்திய மாநிலங்களை விட சுமார் 2.5 மடங்கு அதிகம்பெற்று பஞ்சாப் முதன்மை வகிக்கிறது. இதன் காரணமாக, பஞ்சாப்பின் எல்லா முக்கிய நகரங்களிலும், மின் கட்டணம் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சாலைகளின் மொத்த நீளம் 47,605 கிலோமீட்டர். அனைத்து நகரங்களும் தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலை நீளம்: 1000 கிலோமீட்டர். மாநிலம் நெடுஞ்சாலை நீளம்: 2166 கிலோமீட்டர் முக்கிய மாவட்ட சாலைகள்: 1799 கிலோமீட்டர். ஏனைய மாவட்டம் சாலைகள்: 3340 கிலோமீட்டர். இணைப்பு சாலைகள்: 31657 கிலோமீட்டர் சுற்றுலா பஞ்சாப்பின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்று. பஞ்சாப்பின் சுற்றுலாத்துறை அம்மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, பழம்பெருமை, வரலாறு ஆகியவற்றை பறைசாற்றும் சின்னங்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது. எடுத்துக்காட்டாக சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள, பட்டிண்டாவின் பழமையான கோட்டை, கபுர்த்தலா, பட்டியாலாவின் சீக்கியக் கட்டிடக்கலைச் சிறப்பு, லெ கொபூசியே வடிவமைத்த தற்காலத் தலைநகரம் சண்டிகர் ஆகியன. அமிருதசரசிலுள்ள பொற்கோயில் ஓர் முதன்மையான சுற்றுலா இடமாகும். இந்தியாவிற்கு தாஜ் மகால் காண வருவோரை விட இங்கு வரவோரின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. லோன்லி பிளானட் 2008ஆம் ஆண்டு பொற்கோயிலை உலகின் மிகச்சிறந்த ஆன்மீக இடங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது. அமிருதசரசில் பன்னாட்டு தங்குவிடுதிகள் பல விரைவாக கட்டமைக்கப்பட்டு வருகின்றன. மற்றுமொரு ஆன்மீக, வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா இடமாக அனந்த்பூர் சாஹிப் உள்ளது; இங்குள்ள விரசத்-இ-கால்சா (கால்சா பாரம்பரிய நினைவக வளாகம்) காணவும் ஹோலா மொகல்லா கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். லூதியானா அருகில் ராய்பூர் கோட்டையில் நடைபெறும் கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழாவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.பட்டான்கோட்டில் சாபூர் கண்டி கோட்டை, ரஞ்சித் சாகர் ஏரி, முக்த்சர் கோயில் என்பன சுற்றுலா இடங்களாக உள்ளன. இந்திய - பாகிஸ்தான் எல்லைப்புற பாதுகாப்பு காவல் சாவடியான வாகாவில் அன்றாடம் நடைபெறும் இருநாட்டு கொடிகளை இராணுவ வீரர்கள் கம்பத்திலிருந்து இறக்கும் காட்சி விழா மிகவும் சிறப்பான ஒன்றாகும். போக்குவரத்து பஞ்சாப் சிறந்த போக்குவரத்துக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. பேருந்து, தொடருந்து, முச்சக்கரவண்டிகள் என்பன பிரதான போக்குவரத்து வாகனங்களாகக் காணப்படுகின்றன. பஞ்சாப் மாநிலத்தில் ஆறு பொதுப்போக்குவரத்து வானூர்தி நிலையங்கள் உள்ளன. வானூர்தி நிலையங்கள் அமிர்தசரஸில் உள்ள ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மொகாலியிலுள்ள சண்டிகர் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்பன இம்மாநிலத்திலுள்ள பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் ஆகும். பட்டிண்டா வானூர்தி நிலையம், பட்டான்கோட் வானூர்தி நிலையம், பட்டியாலா வானூர்தி நிலையம் மற்றும் சானேவல் வானூர்தி நிலையம் ஆகியவை ஏனைய வானூர்தி நிலையங்கள் ஆகும். தொடருந்து ஏறத்தாழ அனைத்துப் பெரிய மற்றும் சிறிய நகரங்களும் தொடருந்துப் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பஞ்சாபில் அதிக தொடருந்துகள் கடந்து செல்லும் வழியாக அமிர்தசரஸ் சந்திப்பு விளங்குகிறது. சதாப்தி விரைவுவண்டி அமிர்தசரசை தில்லியுடன் இணைக்கிறது. சாலைப் போக்குவரத்து மாநிலத்தின் அனைத்து நகரங்களும் நான்கு வழிச் சாலைகளான தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவை பெசாவருடன் இணைக்கும் பெரும் தலைநெடுஞ்சாலை பஞ்சாபின் ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸ் ஊடாகச் செல்கின்றது. விளையாட்டுக்கள் ஊரக பஞ்சாபில் தனது ஆரம்பத்தைக் கொண்ட கபடி (வட்டப் பாணி) அணி விளையாட்டு மாநில விளையாட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் புகழ்பெற்ற மற்றுமொரு விளையாட்டு வளைதடிப் பந்தாட்டம் ஆகும். ஊரக ஒலிம்பிக்சு என பரவலாக அறியப்படும் கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா லூதியானா அருகிலுள்ள ராய்பூர் கோட்டையில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது. முதன்மையான பஞ்சாபி ஊரக விளையாட்டுக்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன; வண்டிப் பந்தயங்கள், கயிறு இழுத்தல் போன்றவை இதில் இடம் பெறுகின்றன. பஞ்சாப் மாநில அரசு உலக கபடி கூட்டிணைவை நடத்துகின்றது. தவிரவும் பஞ்சாப் விளையாட்டுக்கள், வட்டப்பாணி கபடிக்கான உலகக்கோப்பை போன்றவற்றையும் மாநில அரசு நடத்துகின்றது. 2014ம் ஆண்டு கபடிக் கோப்பை போட்டிகளில் அர்கெந்தீனா, கனடா, டென்மார்க், இங்கிலாந்து, இந்தியா, ஈரான், கென்யா, பாக்கித்தான், இசுக்கொட்லாந்து, சியேரா லியோனி, எசுப்பானியா, அமெரிக்க ஐக்கிய நாடு நாடுகளிலிருந்து அணிகள் பங்கேற்றன. பஞ்சாபில் பல சிறப்பான விளையாட்டரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், குரு கோவிந்த்சிங் விளையாட்டரங்கம், குரு நானக் விளையாட்டரங்கம், பன்னாட்டு வளைத்தடிப் பந்தாட்ட அரங்கம், காந்தி விளையாட்டு வளாக திடல், சுர்சித்து வளைதடிப் பந்தாட்ட அரங்கம் அவற்றில் சிலவாம். இவற்றையும் பார்க்க பஞ்சாப் படைப்பிரிவு சீக்கியப் படைப்பிரிவு பஞ்சாபிப் பண்பாடு பஞ்சாப் (பாக்கிஸ்தான்) இந்திய வரலாறு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பஞ்சாப் மாநில அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
4982
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
மிசோரம்
மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. அய்சால் இம்மாநிலத்தின் தலைநகர். மீசோ பழங்குடி இன மக்கள் இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மீசோ மொழி அதிகாரப்பூர்வ மொழி. இம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள். மிசோரம் மாநில மக்களின் கல்வியறிவு விகிதம் 91.33%. கேரளத்துக்கு அடுத்தபடியாக அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் இது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 1,097,206 . இந்த மாநிலத்தை திரிபுரா, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சூழ்ந்துள்ளன. இந்த மாநிலம் வங்காளதேசம், மியான்மர் ஆகிய நாடுகளுடன் சுமார் 722 கி.மீ நீளத்துக்கு எல்லையை கொண்டுள்ளது. நாட்டின் 2 வது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும். மிசோரம் சுமார் 21,081 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மாநிலத்தில் சுமார் 91% காடுகள் உள்ளன. அரசியல் மிசோரத்தில் 40 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியும் கொண்டது. மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மிசோரம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,097,206 ஆக உள்ளது. அதில் பட்டியல் பழங்குடி மக்களின் மக்கள் தொகை 1,036,115 (95%) ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 47.89% மக்களும், நகரப்புறங்களில் 52.11% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 23.48% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 555,339 ஆண்களும் மற்றும் 541,867 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 976 பெண்கள் வீதம் உள்ளனர். 21,081 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 52 வீதம் மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர்களின் எண்ணிக்கை 848,175 ஆக உள்ளது. சராசரி படிப்பறிவு 91.33 % ஆகவும், அதில் ஆண்களின் படிப்பறிவு 93.35 % ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 89.27 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 168,531 ஆக உள்ளது. சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 30,136 (2.75 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 14,832 (1.35 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 956,331 (87.16 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 376 (0.03 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 93,411 (8.51 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை ஆகவும் 286 (0.03 %) பிற சமயத்து மக்கள் தொகை 808 (0.07 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,026 (0.09 %) ஆகவும் உள்ளது. மொழிகள் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன், இந்தி மொழி, மற்றும் மிசோ மொழி போன்ற வட்டார பழங்குடி இன மொழிகளும் பேசப்படுகிறது. திருவிழாக்கள் அந்தூரியம் திருவிழா சப்சார் குட் திருவிழா பயணம் மிசோரம் உள் நுழைவதற்கு ILP(Inner line Permit) எனும் அனுமதியை இம்மாநில அரசு வழங்குகிறது. ILP பெறாமல் அடுத்த மாநிலத்தவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. தரைவழி பயணிப்பவர்கள் கவுகாத்தியில் உள்ள மிசோரம் ஹவுஸிலும் (Miozram House), விமானம் வழியாக பயணிப்பவர்கள் லெங்க்புய் விமான நிலையத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு அரசு வழங்கியுள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் ஒரு புகைபடம் போதும். லெங்புய் விமான நிலையம் மிசோரம் மாநில தலைநகரான ஐசோலிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து கல்கத்தா, டெல்லி, குவஹாத்தி மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு தினமும் விமான சேவை அளிக்கப்படுகிறது. மேலும் சம்பாய்,சைஹா மற்றும் கமலா நகர் ஆகிய மாவட்டங்களுக்கு ஹெலிகாப்டர் சேவையும் அளிக்கப் படுகிறது. தரைவழியாக பயணிக்க விரும்புகிறவர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தி வரை ரயிலில் பயணம் செய்து அதற்கு பின் பேருந்து அல்லது சுமோ மூலமாக பயணத்தை தொடரலாம். ஆட்சிப் பிரிவுகள் 11 மாவட்டங்களுடன் கூடிய மிசோரம் மாநிலத்தின் பழங்குடி மக்களின் வளர்ச்சிக்காக சக்மா, லாய் மற்றும் மாரா என மூன்று தன்னாட்சி மாவட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கல்வி இம்மாநிலத்தில் கிறிஸ்துவ சமய நிறுவனங்கள் இயக்கும் துவக்கப் பள்ளிகள் 1898 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. 1961-ஆம் ஆண்டில் இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 51% விழுக்காடாக இருந்தது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கேரளா மாநிலத்திற்கு அடுத்து 92% விழுக்காட்டுடன், படிப்பறிவில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் 3,894 பள்ளிகள் உள்ளது. அதில் 42% பள்ளிகள் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுகிறது. 21% தனியார் பள்ளிகள் அரசு நிதியுதவி பெறுகிறது. அரசு நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகள் 28% ஆக உள்ளது. பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதம் துவக்கப்பள்ளிகளில் 1:20 ஆகவும், நடுநிலைப் பள்ளிகளில் 1:9 ஆகவும்; உயர்நிலைப் பள்ளிகளில் 1:13 ஆகவும், மேனிலைப் பள்ளிகளில் 1:15 ஆகவும் உள்ளது. மிசோரம் பல்கலைக்கழகம் 35 வகையான துறைகளுடன் இயங்கிவருகிறது. இரண்டு தொழில் நுட்ப கல்லூரிகள் மிசோரம் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது. மிசோரம் அரசு 22 கல்லூரிகளை கொண்டுள்ளது. முக்கிய கல்வி நிறுவனங்கள் மிசோரம் தேசிய தொழில் நுட்ப கழகம், அய்சால், செலிக், மிசோரம் பகுதிகளில் மூன்று கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புக் கல்லூரிகளும், அய்சாலில் ஒரு மண்டல செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் பயிற்சி நிறுவனமும் உள்ளது. தட்பவெப்ப நிலை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மிசோரம் மாநில அரசின் வலைத்தளம் இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும் வடகிழக்கு இந்தியா
4983
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
காலக்கோடுகளின் பட்டியல்
இலங்கை இனப்பிரச்சினை காலக்கோடு தொழில்நுட்ப வரலாறு காலக் கோடு இந்து சமய கருத்துரு பரிமாண காலக் கோடு உலக வரலாற்றுக் காலக்கோடு இலங்கை வரலாற்றுக் காலக்கோடு இந்திய வரலாற்று காலக் கோடு சீன வரலாற்றுக் காலக்கோடு ஆபிரிக்க வரலாற்றுக் காலக்கோடு கனடா வரலாற்றுக் காலக்கோடு எருசலேம் - முக்கிய வரலாற்று நிகழ்வுகள் காலக்கோடுகள்
4985
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
நாராயண் கார்த்திகேயன்
நாராயண் காரத்திகேயன் (பிறப்பு: ஜனவரி 14, 1977, சில சமயங்களில் தவறாக நரேன் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார்) ஒரு கார் பந்தய வீரராவார். சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேரந்தவருமான இவர், உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே இந்தியர் ஆவார் . இவர் தற்போதைய வருடத்திய எஃப் 1 போட்டிகளில் ஜோர்டான் அணியின் சார்பாக பங்கு கொண்டு வருகிறார். 2010-ஆம் ஆண்டில் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது விளையாட்டு பிரிவில் வழங்கப்பட்டது. ஆரம்ப நாட்கள் நாராயண் கார்த்திகேயனின் தந்தை ஜி. கார்த்திகேயனும் ஒரு கார் பந்தய வீரராவார். தன் தந்தையின் பாதிப்பில் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆவல் இளமையிலேயே பெறப்பட்ட நாராயண், இந்திய ராலி பந்தயங்களில் பங்கு கொள்ளத் தொடங்கினார். ஸ்ரீபெரும்புதூரில் நடந்த முதல் போட்டியிலேயே முதல் மூன்று வீரர்களுள் ஒருவராக வெற்றி பெற்றார். அதன் பிறகு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்கிருந்த எல்ஃப் வின்பீல்ட் பந்தயப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். 1992இல் அங்கு நடந்த பார்முலா ரெனால்ட் கார்களுக்கான பைலட் எல்ப் போட்டிகளில் அரை இறுதிச் சுற்று வரை வந்தார். பின்னர் 1993ல் இந்தியாவில் பார்முலா மாருதி பந்தயங்களிலும், பிரிட்டனில் பார்முலா வாக்ஸ்ஹால் இளைஞர் பந்தயங்களிலும் கலந்து கொண்டார். 1994ல் பார்முலா ஜீடெக் பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓட்டினார். அதன் பிறகு பிரிட்டிஷ் பார்முலா போர்டு குளிர்கால பந்தயங்களில் கலந்து கொண்டு ஐரோப்பாவில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 1995ல் பார்முலா ஆசியா பந்தயங்களில் கலந்து கொண்ட நாராயண் கார்த்திகேயன், மலேசியாவில் நடந்த போட்டியில் இரண்டாமிடத்தில் முடித்தார். 1996ல் பார்முலா ஆசியா பந்தயங்களிலேயே முதல் வீரராக வந்து இப் பந்தயங்களிலேயே முதலில் வந்த முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார். 1997இல் பிரிட்டிஷ் பார்முலா ஓபல் பந்தயங்களில் கலந்து கொண்டு ஆறாம் இடத்தில் முடித்தார். பார்முலா 3 பந்தயங்களில் 1998ல் பிரிட்டிஷ் பார்முலா 3 பந்தயங்களில் கார்லின் அணியின் சார்பாக கலந்து கொண்டார். இப்பந்தயங்களில் இரண்டு முறை மூன்றாம் இடத்தில் முடித்தார். 1999லும் இப்பந்தயங்களில் கலந்து கொண்டு, இரண்டு போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தார். 2000 வருடத்திலும் இப்பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓட்டினார். எஃப் 1 பரிசோதனை ஒட்டம் 2001ல் பார்முலா நிப்பான் F3000 பந்தயங்களில் கலந்து கொண்ட நாராயண் கார்த்திகேயன், முதல் பத்து வீரர்களுள் ஒருவராக முடித்தார். அதே வருடத்தில் ஜாகுவார் ரேஸிங் காரை பரிசோதனை ஒட்டம் செய்த அவர் எஃப் 1 கார் ஓட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதன் பிறகு ஜோர்டான் ஹோண்டா எஃப் 1 காரையும் பரிசோதித்தார். 2002ல் டாடா RC அணியின் சார்பாக டெலிஃபோனிகா பந்தயங்களிலும், 2003ல் நிஸ்ஸான் பந்தயங்களிலும் கலந்து கொண்டார். அவ்வருடம் இரண்டு போட்டிகளில் முதலிடம் வகித்து பந்தயங்களில் நான்காம் இடத்தைப் பிடித்தார். அவ்வருடம் மினார்டி எஃப் 1 அணிக்கு பரிசோதனை ஓட்டமும் நடத்தினார். 2004ல் எஃப் 1 பந்தயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் போதுமான விளம்பரதாரர்கள் இல்லாத காரணத்தால் அவரால் அவ்வருடம் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவ்வருடம் நிஸ்ஸான் பந்தயங்களில் கலந்து கொண்டு ஸ்பெயினிலும் பிரான்சிலும் வெற்றி பெற்றார். 2005 எஃப் 1 பந்தயங்களில் 1 பிப்ரவரி 2005 அன்று ஜோர்டான் அணியின் சார்பாக அவ்வருட பார்முலா 1 பந்தயங்களில் கலந்து கொள்ளப் போவதாக நாராயண் கார்த்திகேயன் அறிவித்தார். இவ்வருட போட்டிகளில் கலந்து கொண்டு வரும் அவர், இதுவரை ஐந்து புள்ளிகள் பெற்றுள்ளார். இவ்வருட போட்டிகளில் அவர் பெற்ற இடங்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. மார்ச் 6 2005 - ஆஸ்திரேலியா - 15வது மார்ச் 20 2005 - மலேசியா - 11வது ஏப்ரல் 3 2005 - பஹ்ரைன் - முடிக்கவில்லை ஏப்ரல் 24 2005 - சான் மரினோ(இத்தாலி) - 12வது மே 8 2005 - ஸ்பெயின் - 13வது மே 22 2005 - மொனாகோ (பிரான்ஸ்)- முடிக்கவில்லை மே 29 2005 - ஐரோப்பா (ஜெர்மனி) - 16வது ஜூன் 12 2005 - கனடா - முடிக்கவில்லை ஜூன் 19 2005 - அமெரிக்கா - 4வது+ ஜூலை 3 2005 - பிரான்ஸ் - 15வது ஜூலை 10 2005 - பிரிட்டன் - முடிக்கவில்லை ஜூலை 24 2005 - ஜெர்மனி - 16வது ஜூலை 31 2005 - ஹங்கேரி - 12வது ஆகஸ்ட் 21 2005 - துருக்கி - 14வது இன்னும் ஆறு போட்டிகள் மீதம் உள்ளன. + டயர் சர்ச்சை காரணமாக அமெரிக்கப் போட்டியில் ஜோர்டான் உட்பட மூன்று அணிகள் (அதாவது ஆறு வீரர்கள்) மட்டுமே கலந்து கொண்டனர் வெளி இணைப்புகள் நாராயண் கார்த்திகேயனின் வலைத்தளம் பார்முலா 1 வலைத்தளம் மேற்கோள்கள் தமிழக விளையாட்டு வீரர்கள் பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள் 1977 பிறப்புகள் கோவை மக்கள் பார்முலா 1 ஓட்டுனர்கள் வாழும் நபர்கள்
5015
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
சோதிடம்
சோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆகும். உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் இதனை நம்புகின்றார்கள். சோதிடத்துக்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும். சொல்லிலக்கணம் சோதிடம் என்ற வார்த்தையான ἀστρολογία என்ற கிரேக்கப் பெயர்ச் சொல்லிருந்து பிறந்ததாகும். இதற்குக் கிரேக்க மொழியில் நட்சத்திரங்களின் கணக்கு என்று பொருளாகும். இச்சொல்லானது நட்சத்திரக் கணிப்பு என்றாக மாற்றமடைந்தது. மேற்கத்திய சோதிடம் மேற்கத்திய சோதிடம் தாலமி கோட்பாடுகளின் அடிப்படையிலும், ஹெலினிஸ்டிக் மற்றும் பாபிலோனிய மரபுகளின் அடிப்படையிலும் உருவானவையாகும். இதில் பன்னிரு ராசிகளும், நட்சத்திரங்களும் அடங்கிய ராசிச்சக்கரம் சோதிடக் கணிப்புமுறைக்குப் பயன்படுகிறது. ஆசிய சோதிடம் இந்திய சோதிடம் ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் ( jyótis ) என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய சோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் அறியப்பெறுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினைக் கொண்டு அந்நேரத்தில் நவக்கிரகங்களின் நிலையைக் கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவக்கிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன. இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணை கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும். ஜோதிடம், வேதத்தின் ஐந்தாம் வேதாங்கமாகக் கருதப்படுகிறது. இது வேதங்களின் கண்களாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதைக் கணிக்கவும் எப்போது, எவ்வாறு வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நெறிமுறைகள் உள்ளது. மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிக்கக் கணிதம் தெரிந்து வைத்திருப்பது கட்டாயாமாகும். கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. சித்தாந்த ஸ்கந்தம், சம்ஹித ஸ்கந்தம். ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம், வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது. இந்து சமயத்தின் இதிகாசமான மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் காலக்கணிப்பு முறையில் சிறந்தவர். இவர் குறித்துத் தந்த நாளில் குருச்சேத்திரப் போரைத் தொடங்கினால் வெல்ல இயலும் என எதிரான கௌரவர்களே இவரிடம் நாள் குறித்துச் சென்றதாக மகாபாரதம் கூறுகிறது. கிழக்காசிய சோதிடம் சீன ஜோதிடம் பாரம்பரிய வானியல் மற்றும் நாள்காட்டி அடிப்படையாகக் கொண்டது. சீன ஜோதிடம் சீன தத்துவத்துடன் (மூன்று நல்லிணக்கம்: சொர்க்கம், பூமி, நீர் கோட்பாடு) நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவ மரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதைக் கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்குப் பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது. சோதிடமும் வான்குறியியலும் (astrology) கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தைக் காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாறு: சூரியன் (ஞாயிறு Sun) சந்திரன் (திங்கள் Moon) செவ்வாய் (Mars) புதன் (அறிவன் Mercury) குரு (வியாழன் Jupiter) சுக்கிரன் (வெள்ளி Venus) சனி (காரி Saturn) இராகு (நிழற்கோள்) கேது (நிழற்கோள்) கோள்களின் நிலைகளையும் நகர்வுகளையும் குறிப்பதற்கு, சோதிட நூல் புவியை மையமாகக் கொண்ட முறைமை ஒன்றையே பயன்படுத்துகின்றது. இது இராசிச் சக்கரம் (zodiac) எனப்படும். இது பூமிக்குச் சார்பாக அதனைச் சுற்றியுள்ளதாகக் காணப்படும் ஞாயிற்றின் தோற்றுப்பாதைக்கு (ecliptic) இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியாகும். இது கண்ணுக்குப் புலப்படாத ஒரு கற்பனையான வடிவமாகும். இந்த இராசிச் சக்கரம் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள் பின்வருமாறு: மேடம் (மேஷம்) இடபம் (ரிஷபம்) மிதுனம் கர்க்கடகம் (கடகம்) சிங்கம் (சிம்மம்) கன்னி துலாம் விருச்சிகம் தனு (தனுசு) மகரம் கும்பம் மீனம் சோதிடத்தில் விண்மீன் குழுக்கள் ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 13 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூறு செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூறாகும், 'ரேவதி' கடைக்கூறாகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதைக் கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 3 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூறாகும், 'மீனம்' கடைக்கூறாகும். இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்துப் பட்டியலிடலாம்: சோதிட முறைகள் குறி கூறுதல் எண் சோதிடம் பெயர் சோதிடம் கிளி சோதிடம் ராஜநாடி சோதிடம் நாடி சோதிடம் கைரேகை சோதிடம் இவற்றையும் பார்க்கவும் சாதகக் குறிப்பு சோதிடக் கருத்துருக்கள் பஞ்சாங்கம் குரு பகவான் சோதிடம் நோக்கிய விமர்சனங்கள் எந்த ஓர் அறிவியலும் அது எந்த அளவு விளக்கி வரவுரைக்குமென்பதைப் பொறுத்துத்தான் அதன் தரம் கணிக்கப்பட வேண்டும். ஒரு விடயம் பரிசோதனைக்கு உட்பட்டு நிறுவப்பட வேண்டும். சோதிடம் அறிவியல் அணுகுமுறைப்படி நிறுவப்பட முடியாது. காரணம் அதற்கு அறிவியல் அடிப்படை கிடையாது. எனவே சோதிடத்தை நம்புவது ஒரு வகை மூடநம்பிக்கைதான் என்பது ஒரு சாராரது கருத்து. சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களைக் குறிப்பிடும் சோதிடம் யுரேனஸ், நெப்டியூன் பற்றிக் குறிப்பிடாதது. பூமியின் துணைக்கோளான சந்திரனைக் கோளாகக் குறிப்பிடுதல் போன்றவை வானியலுக்கு எதிரானதாகவும், ராகு, கேது போன்றவை கோள்களாகச் சோதிடத்தில் குறிப்பிடப்பட்டாலும், இவை சூரியக் குடும்பத்தில் இல்லாத கற்பனைக் கோள்களாகும். உசாத்துணைகள் வே. தங்கவேலு. (2008). சோதிடப் புரட்டு. கனடா. பெங்களூரு வெங்கடராமன் (1973). Astrology for Beginners 16th Edition, Raman Publications. மேலும் காண்க கோள்கள் ஆதாரம் வெளி இணைப்புகள் காகபுஜண்டர் நாடி ஜோதிடம் - காஞ்சிபுரம் இலவச ஜாதக ஆராய்ச்சித் தளம் தமிழ் ஜோதிடம் விமர்சன இணைப்புகள் சோதிட விஞ்ஞானியின் அஞ்ஞான ஆராய்ச்சி ஆய கலைகள் அறுபத்து நான்கு
5018
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
ஆடு புலி ஆட்டம்
ஆடு புலி ஆட்டம் அல்லது குழை எடு ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இவ்வாட்டம் விளையாடப்படுகிறது. இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது. இது மிகவும் எளிய விளையாட்டு. ஒரு வட்டத்தினுள்ளே குழை இருக்கும். வட்டம் ஏறைக்குறைய 50 யாட் விட்டம் கொண்டது. வட்டத்திற்கு அப்பால் எல்லை கோடுகள் உண்டு. படத்தை பார்க்கவும். யாரவது ஒருவர் வட்டத்துக்குள் இருக்கும் குழையை எடுத்துக்கொண்டு தன் பக்கம் மற்றவர் தொட முதல் ஓடி விட வேண்டும். மாட்டிக் கொண்டால் அவர் ஆட்டமிழப்பார். ஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப்படுகிறது. ஆடுபுலி ஆட்டத்தை வெட்டும்புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு. சங்கப்பாடல் இதனை ‘வங்கா வரிப்பாறை’ என்று குறிப்பிடுகிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் விளையாடப்படும் இவ்வாட்டம் வெவேறு பெயர்களால் வழங்கப்படுகிறது. இது சிறுபாடு விளையாட்டு என்பது தமிழர் கொள்கை. விவரம் பாறை அல்லது திண்ணையில் கோடு போட்ட அரங்கம். முக்கோணக் கூம்புக் கோடு. கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும் மேலும் இரண்டு கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும். ஆடுகள் என்னும் பெயரில் 15 சிறு காய்கற்கள். புலி என்னும் பெயரில் 3 சற்றே பெரிய காய்கற்கள். கோடுகள் ஆடும் புலியும் ஓடும் வழிகள். கோடுகள் கூடும் சந்திகள் காய்கள் வைக்குமிடம். புலிக்காய்கள் உச்சியில் ஒன்றும் அடுத்த சந்திகளில் இரண்டுமாக முதலில் வைக்கப்பட்டிருக்கும். ஆடுகள் ஒவ்வொன்றாகச் சந்திகளில் இறங்கும். ஒரு ஆடு இறங்கியதும் புலி அடுத்த சந்திக்கு நாலாப்பக்கமும் நகரும். நகரும்போது அடுத்த சந்தியில் ஆடு இருந்து அடுத்த நேர்த்திசைச் சந்தி காலியாக இருந்தால் புலியை வெட்டிவிட்டுத் தாவும். இவ்வாறு புலி தாவ இடம் இல்லாமல் ஆடு புலியைக் கட்டவேண்டும். எல்லா ஆடுகளும் இறங்கிய பின்னர் ஆடும், புலியும் மாறி மாறி நகர்த்தப்படும். புலி நகரமுடியாமல் ஆடுகள் புலியைக் கட்டிவிட்டால் ஆட்டுக்கு வெற்றி. எல்லா ஆடுகளையும் வெட்டிவிட்டால் புலிக்கு வெற்றி. இதுதான் ஆட்டம். காட்சியகம் அடிக்குறிப்பு வெளியிணைப்புகள் ஆடுபுலி ஆட்டம் - இணையத்தில் விளையாடும் செயலி Kuzhai Edukkirathu தமிழர் விளையாட்டுகள் இந்திய விளையாட்டுக்கள்
5022
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கிளித்தட்டு
கிளித்தட்டு அல்லது தாச்சி இலங்கையில் தமிழீழத்திலும், ஈழத்தமிழர்கள் வாழும் பல்வேறு உலக நாடுகளிலும், இந்தியாவில் கேரளாவிலும் பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகும். இது உடலுக்கு நல்ல பயன் தரும் விளையாட்டாகும். தோற்றம் வயல் நிலங்களில் விளையும் பயிரைக் கொத்திச் செல்ல வரும் கிளிகளை கூட்டமாய் நின்று உழவர் துரத்தும் வழமையினின்று கிளித்தட்டு தோன்றியது என்கிறார் தேவநேயப் பாவாணர். போட்டி விதிமுறைகள் மைதானத்தை முதலில் ஒரு போக்கு பெட்டிகளாக பிரித்து, பின்னர் நடுவே ஒரு கோடு போட்டு கொள்ளப்படும். படத்தை பார்க்கவும். எத்தனை ஒரு போக்கு பெட்டிகள் என்noபது விளையாட்டு குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. குறைந்தது ஒரு குழுவுக்கு 3 உறுப்பினர்களாவது வேண்டும். யார் நாணய சுண்டலில் தோற்கின்றார்களோ அவர்கள் மறிப்பார்கள், மற்ற குழு புகுவார்கள். மறிக்கும் அணியினர் முதலாம் கோட்டையும், கடைசி கோட்டையும் தவிர மற்றக் கோடுகளில் நிற்பார்கள். மிகுதியான மறிக்கும் அணியை சேர்ந்தவர் கிளி என்று அழைக்கப்பட்டு, எந்த கோடுகளாலும் செல்ல வல்லவர். கிளியால் தொடப்பட்டால் புகும் குழு உறுப்பினர் ஆட்டமிழப்பார். முதலில் கிளி ஒரு தொங்கலிலும், புகுபவர்கள் ஒரு தொங்கலும் நிற்பார்கள். கிளி கூவிக்கொண்டு முன்னோக்கி வருவார். கிளி கூவியவுடன் புகுபவர்கள் உச்சி, தெண்டி அடுத்த எல்லைக்கு செல்ல முயல வேண்டும். தாண்டும் பொழுது மறிப்பவரால் தொடப்பட்டால் தாண்டுபவர் ஆட்டமிழப்பார். தாண்டும்போது மட்டுமே மறுப்பவர் தட்ட முடியும், சும்மா அருகில் நிற்கும் பொழுதோ, உச்சும் பொழுதோ தட்ட முடியாது. ஆனால், கிளி எங்கும் சென்று யாரையும் எப்பொழுதும் தட்டலாம். அதாவது, எட்டியும் தட்டலாம். உச்சி, தப்பி எல்லைக்கு சென்றவர்கள் பழம் என்று கருதப்படுவர். வந்து கொண்டிப்பவர்கள் காய்கள். பழமானவர், மீண்டும் புகுந்த எல்லைக்கே சென்றால் தான் அந்த அணியினருக்கு ஒரு புள்ளி கிடைக்கும். ஆனால், மீண்டும் வரும் பொழுது, பழம் காய் உள்ள ஒரு பெட்டிக்கு போகவது அவ்வளவு நல்லதல்ல, காரணம், இருவருக்கும் உச்சுவதற்கு குறுகிய இடமே கிடைக்கும். மேலும், கிளி பூட்டு போட்டு தட்ட முயல்வார். எந்த அணி கூடிய புள்ளிகளைப் பெறுகின்றதோ அவர்களுக்கே வெற்றி. பலருடன் சேர்ந்து விளையாடும் பொழுது, இந்த விளையாட்டு மிகவும் வேகமாகவும், விறு விறுப்பாகவும் அமையும். வேறு பெயர்கள் கிளித்தட்டு குறிஞ்சி நிலத்தில் தட்டு என்பது பாத்தி. பாத்தியில் விளைந்த கதிர்களைத் தின்ன வரும் கிளிகளைத் தட்டி ஓட்டுவது போன்றதால் இதனைக் கிளித்தட்டு என்றர். தண்ணீர் புரி வயல்களில் தண்ணீர் பாய்ச்சுவது போல இருப்பதால் இதனை மருதநில மக்கள் தண்ணீர் புரி என்பர் உப்பு விளையாட்டு கடல்நீர் உப்புப் பாத்தியில் பாய்வது போல இருப்பதால் நெய்தல்-நில மக்கள் இதனை உப்பு-விளையாட்டு என்பர் மேலும் பார்க்க தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Thaychi கிளித்தட்டு தமிழர் விளையாட்டுகள்
5027
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
நாடுகளின் பொதுநலவாயம்
நாடுகளின் பொதுநலவாயம் (Commonwealth of Nations) அல்லது பரவலாக பொதுநலவாயம் (காமன்வெல்த்), எனப்படுவது பெரும்பாலும் முன்னாள் பிரித்தானியப் பேரரசின் ஆட்பகுதிகளாக இருந்த, 56 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட பன்னாட்டிடை அமைப்பாகும். இருபதாம் நூற்றாண்டின் நடுவில், இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானியாவின் பல குடியேற்ற நாடுகளுக்கு பல நாடுகளுக்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. இந்நாடுகள் அனைவற்றையும் தன் பிணைப்பில் வைத்திருக்க பிரித்தானியா விரும்பியது. இத்தேவையை நிறைவு செய்ய பொதுநலவாயம் எனும் அமைப்பை உருவாக்கியது. 1949இல் வெளியிடப்பட்ட இலண்டன் பிரகடனத்தின்படி உறுப்பினர் நாடுகள் "கட்டற்றவை மற்றும் சமமானவை" என்று நிறுவப்பட்டது. இந்த கட்டற்ற சங்கத்தின் சின்னமாக அரசர் பொதுநலவாயத்தின் தலைவராக ஆக்கப்பட்டார். பொதுநலவாய இராச்சியம் என அறியப்படும் 15 உறுப்பினர் நாடுகளில் சார்லசு III நாட்டுத் தலைவர் தகுதியில் அரசர் ஆவார். 36 உறுப்பினர் நாடுகள் குடியரசுகளாகும். ஐந்து நாடுகளில் வேறொரு அரசரைத் தலைவராகக் கொண்ட முடியாட்சி உள்ளது. பொதுநலவாய அரசுகளிடையேயான கருத்திணக்கத்துடன் பொதுநலவாயம் தனது செயலகம் மூலமும் அரசு சார்பற்ற அமைப்புகள் மூலமும், பொதுநலவாய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்டும் செயல்படுகிறது.. உறுப்பினர் நாடுகளுக்கிடையே சட்டபூர்வ கடமை ஏதும் இல்லை. மொழி, பண்பாடு,வரலாறு ஆகியவற்றாலும் மக்களாட்சி, மனித உரிமைகள்,மற்றும் சட்ட ஆட்சி குறித்த ஒத்தக் கருத்துக்களாலும் இவை ஒன்று கூடியுள்ளன. இவை பொதுநலவாய பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதே கருத்துக்களால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை பொதுநலவாய விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. அக்டோபர் 3, 2013இல், 48 ஆண்டுகள் உறுப்பினராகவிருந்த, காம்பியா பொதுநலவாய நாடுகள் அமைப்பிலிருந்து மிக அண்மையில் விலகிய நாடாகும். பொதுநலவாய நாடுகள் அனைத்துக் கண்டங்களிலும் பரவிய க்கும் கூடுதலான நிலப்பரப்பை, உலக நிலப் பரப்பில் நான்கில் ஒரு பாகத்தை, கொண்டுள்ளன. இந்த நாடுகளின் மொத்த மக்கள்தொகை 2.328 பில்லியனாக மதிப்பிடப்படுகிறது; இது உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகமாகும். 2012இல் பொதுநலவாயத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) $10.450 டிரில்லியனாக இருந்தது; இது கொள்வனவு ஆற்றல் சமநிலை (PPP) கொண்டு மதிப்பிட்டால் மொத்த உலக உற்பத்தியில் 17% ஆகும். இந்த அமைப்பு நடத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான போடியை தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடத்தயுள்ளதாக நியூசிலாந்தில் உள்ள ஆக்கிலாந்து நகரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் தென் ஆப்பிரிக்காவிலேயே காமல்வெல்த் போட்டியை நடத்தும் முதல் நகரமாக டர்பன் விளங்குகிறது. வரலாறு தொடக்கம் 1959 ஆம் ஆண்டில் டொமினிய நாளில் கனடாவில் உரையாற்றிய ராணி எலிசபெத் II, 1867 ஜூலை 1 ம் தேதி கனடாவின் கூட்டமைப்பு "பிரிட்டிஷ் பேரரசுக்குள்ளான முதல் சுதந்திர நாடு" என்று அவர் அறிவித்தார்: "எனவே, இது சுதந்திர நாடுகளின் சங்கத்தின் ஆரம்பத்தை குறிக்கிறது. இப்போது இது பொதுநலவாய நாடுகள் என அழைக்கப்படுகிறது. " லார்ட் ரோஸ்பேரி, நீண்ட காலத்திற்குப் பிறகு 1884 ஆம் ஆண்டில், தனது ஆஸ்திரேலியா வருகை தரும் போது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மாறிக்கொன்டு வருவதாகவும் - அதன் சில காலனிகளில் அதிக சுதந்திரம் பெற்றுள்ளது- மேலும் பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு "நாடுகளின் பொதுநலவாயம்மாக" மாற்றம் பெற்றுவருவதாக கூறினார். பிரிட்டிஷ் மற்றும் காலனித்துவ பிரதம மந்திரிகளின் மாநாடுகள் முதன்முதலாக 1887 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது, இது 1911 ஆம் ஆண்டில் ஏகாதிபத்திய மாநாடுகள் உருவாக்க வழிவகுத்தது. பொதுநலவாயம் ஏகாதிபத்திய மாநாட்டில் இருந்து உருவாக்கப்பட்டது. ஜான் ஸ்முட்ஸ் 1917 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் "பாரிஸ் அமைதி மாநாட்டில்" "பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகள் மற்றும் எதிர்கால அரசியலமைப்பு உறவுகள் மற்றும் சார்பற்ற மாற்றங்களை" பற்றிய தனது தொலைநோக்கு திட்டங்களை முன்மொழிர்தார். 1921 ஆம் ஆண்டின் ஆங்கிலோ-ஐரிஷ் உடன்படிக்கை இல் முதன்முதலாக, ஏகாதிபத்திய சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றது, மேலும் முதன் முதலாக ஐரிஷ் சுதந்திர அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களால் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டபோது பிரிட்டிஷ் இராச்சியம் என்ற வார்த்தைக்கு பதிலாக பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகள் என்பது பயன்படுத்தப்பட்டது. ஆட்சிப்பகுதிகள் 1926 ஆம் ஆண்டில் ஏகாதிபத்தியநாடுகள் மாநாட்டில், பால்ஃபோர் பிரகடனத்தில், பிரிட்டன் மற்றும் அதன் தலைவர்கள் இவ்வாறு முடிவெடுக்க ஒப்புக்கொண்டனர், அனைத்து உருப்பு நாடுகளையும் "சமமான நிலையிலும், உள்நாட்டு அல்லது வெளி விவகாரங்களில் எந்தவொரு அம்சத்திலும் தலையடுவதில்லை என்று பிரகடனபடுத்தப்பட்டது. மேலும் பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர்கள் சுதந்திரமாக இணைந்திருந்தாலும், அரசியலமைப்பின் பொதுவான விசுவாசத்தாலும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என்றது." உறவு தொடர்பான இந்த அம்சங்கள் 1931 ஆண்டில் வெஸ்ட்மின்ஸ்டர் விதி சட்டத்தின் மூலம்,கனடாவின் ஒப்புதல் இல்லாமல், முறையானவை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மற்றும் நியூஃபவுண்ட்லேண்ட் நடைமுறைக்கு அமர்த்த வேண்டும். நியூஃபவுண்ட்லேண்ட் 16 பெப்ரவரி 16, 1967 இல், அதன் நாடாளுமன்ற ஒப்புதலுடன், நியூஃபவுண்ட்லேண்ட் அரசாங்கத்தை களைத்து தானாக லண்டன் நேரடி கட்டுப்பாட்டிற்கு திரும்பியது. பின்னர் நியூஃபவுண்ட்லேண்ட் 1949 இல் கனடாவின் 10வது மாகாணம்மாக இனைந்தது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, 1942 இல் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டதத்தெடுப்பு விதியின் படியும் மற்றும் 1949 இல் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டதத்தெடுப்பு விதியின் படியும் முறையாக ஒப்புதல் வழ்ங்கியது. தென் ஆபிரிக்க ஒன்றியம் வெஸ்ட்மினிஸ்டரின் சட்டத்தை நடைமுறைக்கு எடுக்க வேண்டிய தேவையில்லை என்றாலும், தெற்கு ஆப்பிரிக்காவின் நிலையை ஒரு இறையாண்மை மாநிலமாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக 1934 ஆம் ஆண்டில் இரண்டு சட்டங்கள் - யூனியன் சட்டத்தின் நிலை, மற்றும் ராயல் எக்ஸிகியூட்டிவ் செயல்பாடுகள் மற்றும் சீல்ஸ் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டன. காலனியாதிக்கம் குறைப்பு இரண்டாம் உலக போர் முடிவடைந்த பிறகு, பிரிட்டிஷ் பேரரசு படிப்படியாக அழிக்கப்பட்டது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான நாடுகள், பொதுநலவாய பகுதிகள் அல்லது குடியரசுகள், மற்றும் பொதுநலவாய உறுப்பினர்கள் என்று சுதந்திரமான நாடுகளாகிவிட்டன. ஐக்கிய இராச்சியத்தால் நடத்தப்பட்ட 14 பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பிரதேசங்கள் உள்ளன. ஏப்ரல் 1949 இல், லண்டன் பிரகடனத்தின் பின்னர், "பிரிட்டிஷ்" என்ற வார்த்தையானது பொதுநலவாயம் என்ற தலைப்பில் மாற்றப்பட்டது. பர்மா (1948 இல் மியான்மர் என்று அழைக்கப்பட்டது) மற்றும் ஏடன் (1947) ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் போரின் போது பிரிட்டிஷ் காலனிகளாகவும் மேலும் பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினரில்லாமலும் இருந்தனர். பொறுப்புகள் குறைப்பு குடியரசுகள் புதிய பொதுநலவாயம் மேற்கோள்கள்
5030
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி
1796 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி ஆரம்பமானது. 1796 ஆம் ஆண்டிலிருந்து 1948 ல் யாழ்ப்பாணத்தையும் இலங்கையின் ஒரு பகுதியாக விட்டுச் செல்லும் வரை இவ்வாட்சி நீடித்தது. இலங்கைத் தீவில் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பம் 1782 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கும், ஒல்லாந்து நாட்டுக்கும் இடையில் போர் மூண்டது. இதனத் தொடர்ந்து சென்னையை நிர்வகித்துவந்த பிரித்தானியத் தேசாதிபதி இலங்கைத் தீவில் உள்ள ஒல்லாந்தர் பகுதிகளைக் கைப்பற்றப் படைகளை அனுப்பினான். அப்படை திருகோணமலையில் இறங்கி அதனைக் கைப்பற்றியது எனினும், அடுத்த ஆண்டில் இங்கிலாந்தும், ஒல்லாந்தும் சமாதானம் செய்து கொண்டமையால் திருகோணமலையைத் திருப்பிக் கொடுக்கவேண்டியதாயிற்று. 1795 ல் மீண்டும் இரு நாடுகளுக்குமிடையே போர் வெடிக்கவே, சென்னையிலிருந்து சென்ற பிரித்தானியப் படைகள் மீண்டும் திருகோணமலையைக் கைப்பற்றியதுடன், பருத்தித்துறையில் இறங்கி எவ்வித எதிர்ப்புமின்றி யாழ்ப்பாணக் கோட்டையையும் கைப்பற்றிக் கொண்டன. இவ்வாறே நீர்கொழும்பு, கொழும்பு, காலி என ஒவ்வொரு நகரமாய் வீழ்ச்சியடைய இலங்கையிலிருந்த ஒல்லாந்தரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் அனைத்தும் 1776 பெப்ரவரியளவில் பிரித்தானியர் வசமாயின. ஆரம்பத்தில் இப்பகுதிகளை நேரடியாக இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டதாயினும், பல காரணங்களை முன்னிட்டு சென்னையுடன் சேர்த்து ஆட்சிசெய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த ஒழுங்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1798 ல் இலங்கையிலிருந்த பிரித்தானியர் ஆட்சிப் பகுதிகள் இங்கிலாந்து அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இங்கிலாந்து அரசின் பிரதிநிதியாக தேசாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் கொழும்பில் இருந்து நிர்வாகம் நடத்தினார். யாழ்ப்பாண நிர்வாகம் தேசாதிபதிகளே யாழ்ப்பாணத்தின் நிர்வாகத்துக்கும் பொறுப்பாக இருந்துவந்தனர். இவர்கள் இலங்கையை 5 மாகாணங்களாகப் பிரித்து ஒவ்வொரு மாகாணத்தையும் ஒரு அரசப் பிரதிநிதியின் (Government Agent) நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவந்தார்கள். ஆரம்ப காலங்களில் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்புகள் பலமாக இருக்கவில்லையாதலால் சில அரசப் பிரதிநிதிகள் ஒரு அரசனைப் போலவே நிர்வாகம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாண வரலாறு
5031
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி
யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி 1658 தொடக்கம் 1796இல் பிரித்தானியரிடம் பறிகொடுக்கும் வரை நடைபெற்றுவந்தது. 1658 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பகுதியை ஆண்டுவந்த போத்துக்கீசரிடமிருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். யாழ்ப்பாணம் 138 ஆண்டு காலம் ஒல்லாந்தரிடம் இருந்தது. இப்பொழுது சிதைந்த நிலையிலுள்ள யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தரால் கட்டப்பட்டதாகும். போர்த்துக்கேயரின் சதுர வடிவக் கோட்டையை இடித்துவிட்டு ஐங்கோண வடிவில் யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்தர் கட்டினர். பின்னணி 16 ஆம் நூற்றாண்டில் இந்துப் பெருங்கடற் பகுதியில் ஐரோப்பியரான போர்த்துக்கேயரின் செல்வாக்கு வளர்ச்சி பெற்றிருந்தது. வணிக நோக்கங்களுக்காக இப்பகுதிக்கு வந்த அவர்கள் இப்பகுதியில் இருந்த பல நாடுகளின் நிலப்பகுதிகளைக் கைப்பற்றி போர்த்துக்கேய மன்னரின் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். யாழ்ப்பாண அரசு உட்பட்ட இலங்கையின் கரையோரப் பகுதிகளும் இவ்வாறு போர்த்துக்கேயரின் ஆட்சியின்கீழ் இருந்தன. அக்காலத்தில், பிறநாடுகளில் ஆதிக்கம் செலுத்திய கடல் வல்லரசுகளாக போர்த்துக்கலும், எசுப்பானியாவும் விளங்கின. பாப்பாண்டவரின் உதவியுடன் உருவான ஒப்பந்தமொன்றின்படி கத்தோலிக்க நாடுகளான போர்த்துக்கலும், எசுப்பானியாவும் உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் உரிமையைத் தமக்குள் பங்குபோட்டிருந்தன. இதனால் எசுப்பானியாவின் தலையீடு இன்றி இந்துப் பெருங்கடற் பகுதியில் போர்த்துக்கேயரால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. 17 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஒல்லாந்து, பிரான்சு ஆகிய நாடுகள் வல்லரசுகளாக எழுச்சிபெற்றுவந்தன. இந்நாடுகள் கிறித்தவத்தின் கத்தோலிக்கப் பிரிவுக்கு எதிரான புரொட்டசுத்தாந்தப் பிரிவை ஆதரித்தமையால் பாப்பாண்டவரின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. தொலைதூர வணிகத்துக்கான நிறுவனங்களை உருவாக்கிய இந்நாடுகள், இந்துப் பெருங்கடற் பகுதியிலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தப் போட்டியிட்டன. இங்கிலாந்தும், ஒல்லாந்தும் இப்போட்டியில் பெருமளவு வெற்றிகண்டன. பத்தேவியா போன்ற இடங்களிலிருந்து போர்த்துக்கேயரை வெளியேற்றிய ஒல்லாந்தர். இலங்கையிலிருந்தும் போர்த்துக்கேயரை விரட்டிவிட்டுத் தமது ஆட்சியை ஏற்படுத்தினர். யாழ்ப்பாணம் 1658ல் ஒல்லாந்தர் வசமானது. நிர்வாகம் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் அதைத் தனியான அலகாகவே நிர்வாகம் செய்தது போலவே, ஒல்லாந்தரும் யாழ்ப்பாண அரசுக்கு உட்பட்டிருந்த பகுதிகளைத் தனியாகவே நிர்வாகம் செய்தனர். இலங்கைத் தீவில் அமைந்திருந்த ஒல்லாந்தரின் ஆட்சிப் பகுதிகள் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் என மூன்று பகுதிகளாக இருந்தன. இலங்கையிலிருந்த எல்லா ஒல்லாந்த ஆட்சிப் பகுதிகளும், பத்தேவியாவில் இருந்து செயற்பட்ட ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் அதிகார பீடத்தினால் நியமிக்கப்பட்டு அதன் கீழ் இயங்கிய ஒரு தேசாதிபதியையும், மூத்த அலுவலர்களையும் உள்ளடக்கிய ஒரு சபையினால் நிர்வகிக்கப்பட்டது. இதன் தலைமையிடம் கொழும்பில் இருந்தது. யாழ்ப்பாணத்தின் படைத்துறை மற்றும் நிர்வாக அலுவல்களுக்குப் பொறுப்பாக ஒரு தளபதி நியமிக்கப்பட்டிருந்தார். இத் தளபதியின் கீழ் நிர்வாக அலுவல்களுக்குப் பொறுப்பாக திசாவை எனப்படும் அலுவலர்களும் அவர்களுக்குக் கீழ் துணைத் திசாவைகளும் இருந்தனர். இவர்கள் தவிர மேலும் பல உயர் அலுவலர்கள் தளபதியின் கீழ் பணியாற்றினர். திசாவை போன்ற உயர் பதவிகள் ஐரோப்பியருக்கே வழங்கப்பட்டன எனினும், முதலியார், விதானை போன்ற குடிசார் நிர்வாகப் பதவிகள் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்பட்டன. தொடக்கத்தில், போர்த்துக்கேயரின் கீழ் பணியாற்றியவர்களும் பணிகளில் தொடர அனுமதிக்கப்பட்டனர். மேற்கோள்கள் உசாத்துணைகள் குணசிங்கம், முருகர்., இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு (கிமு 300 - கிபி 2000), எம். வி. வெளியீடு, தென்னாசியவியல் மையம், சிட்னி, 2008. இவற்றையும் பார்க்கவும் யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு யாழ்ப்பாண வரலாறு நெதர்லாந்து
5032
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி
1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாண அரசு போத்துக்கீசரிடம் வீழ்ச்சியடைந்தபோது யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி உருவானது. இவ்வாண்டிலேயே போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தின் ஆட்சியைத் தங்கள் நேரடி ஆட்சிக்குள் கொண்டுவந்தபோதும், 1590 ஆம் ஆண்டிலிருந்தே போத்துக்கீசர் செல்வாக்குக்கு உட்பட்டே யாழ்ப்பாண அரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். இவர்கள் யாழ்ப்பாண அரசின் தலைநகரை நல்லூரிலிருந்து இன்றைய யாழ்ப்பாண நகருக்கு மாற்றினர். யாழ்ப்பாணத்தில் ஒரு கோட்டையையும் கட்டி அதற்கு வெளியே இன்று பறங்கித் தெரு என அழைக்கப்படும் பகுதியில் ஒரு நகரத்தையும் அமைத்தார்கள். யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசரின் ஆரம்பகால ஈடுபாடுகள் போத்துக்கீசர் முதன்முதலாக இலங்கைக்கு வந்தது, 1505 ஆம் ஆண்டிலாகும். டொன் லொரென்சே டே அல்மெய்தா என்பவன் தலைமையிலான குழுவொன்று, கடற் கொந்தளிப்புக் காரணமாகக் காலிப் பகுதியில் தரை தட்டியபோது இது நிகழ்ந்தது. இதன் பின்னர் 1518 ஆம் ஆண்டில் இலங்கையின் கோட்டே இரச்சியத்தை ஆண்ட பராக்கிரமவாகுவின் அனுமதி பெற்று, மேற்குக் கடற்கரைப் பகுதியில் வர்த்தக சாலை ஒன்றைப் போத்துக்கீசர் கட்டினர். சில காலத்தின்பின் கோட்டேயைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அரசனிடம் திறையும் பெற்று வந்தனர். அதே சமயம், கத்தோலிக்க சமயப் பிரசாரத்தையும் மேற்கொண்டு, பலரைக் கத்தோலிக்க சமயத்துக்கு மாற்றியும் வந்தனர். அக்காலத்தில் தென்னிந்தியாவிலும் சில கரையோரப் பகுதிகளில் போத்துக்கீசப் பாதிரிமார்கள் சமயப் பிரசாரம் செய்து வந்தனர். மன்னாரில் மதப் பிரசாரம் யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் இவ்வாறு அரசியல் மற்றும் சமயச் செல்வாக்கு விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்த போத்துக்கீசரின் கண் யாழ்ப்பாண அரசிலும் விழ ஆரம்பித்தது. இலங்கையின் தென்பகுதிகளைப்போல், யாழ்ப்பாணத்தில் வணிகம் தொடர்பான கவர்ச்சி போத்துக்கீசருக்கு அதிகம் இருக்கவில்லை. எனினும், கத்தோலிக்க மத விரிவாக்க முயற்சிகளுக்கு இது தடையாகவும் இருக்கவில்லை. தென்னிந்தியாவில் மதம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த பிரான்சிஸ் சேவியர் என்னும் பாதிரியார், கத்தோலிக்கப் பாதிரியார் ஒருவரை யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்த மன்னாருக்கு அனுப்பி 600க்கு மேற்பட்ட மக்களைக் கத்தோலிக்கர் ஆக்கினார். யாழ்ப்பாண அரசனின் எதிர் நடவடிக்கை இதனைக் கேள்வியுற்ற யாழ்ப்பாண அரசன் சங்கிலி, மன்னாருக்குச் சென்று மதம் மாறிய அனைவருக்கும் மரணதண்டனை விதித்தான். 1544 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இச் சம்பவத்தில் 600 பேர் உயிரிழந்தனர். இதனால் போத்துக்கீசப் பாதிரிமார் சங்கிலி அரசன்மீது கடுமையான பகைமை உணர்வு கொண்டிருந்தனர். சங்கிலியைத் தண்டிக்கும்படி அவர்கள், அக்காலத்தில் கோவாவில் இருந்த போத்துக்கீசப் பிரதிநிதிக்கும், போத்துக்கல் நாட்டு மன்னனுக்கும், நெருக்கடி கொடுத்துவந்தனர்.. யாழ்ப்பாணத்தின் மீதான படையெடுப்புகள் இதனைத் தொடர்ந்து சங்கிலியைத் தண்டிப்பதற்கென வந்த போத்துக்கீசத் தளபதி ஒருவன் சங்கிலி அரசனிடம் பணம் வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டான். 1561 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக யாழ்ப்பாணத்தைத் தாக்கிய போத்துக்கீசர், யாழ்ப்பாண அரசின் தலைநகரான நல்லூரைக் கைப்பற்றிய போதும், அரசனை பிடிக்கமுடியவில்லை. சங்கிலி தந்திரத்தின் மூலம் ஆட்சியை மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டான். எனினும், நாட்டின் ஒரு பகுதியான மன்னாரைப் போத்துக்கீசர் கைப்பற்றிக் கொண்டனர். 1591ல் அந்தரே பூர்த்தாடோ (Andre Furtado) என்பவன் தலைமையில், போத்துக்கீசப் படைகள் மீண்டும் யாழ்ப்பாணத்தைத் தாக்கின. நல்லூரைக் கைப்பற்றி அரசனைக் கொன்ற போத்துக்கீசர், எதிர்மன்னசிங்கம் என்னும் இளவரசன் ஒருவனை அரசனாக்கி அவனிடம் திறை பெறவும் ஒப்பந்தம் செய்துகொண்டு திரும்பினர். இதன் பின்னர் யாழ்ப்பாணத்து நடவடிக்கைகளில் போத்துக்கீசர் பெருமளவு செல்வாக்குச் செலுத்தியதுடன், மதப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடையேதும் அற்ற வாய்ப்பைப் பெற்றார்கள். இந்த வாய்ப்பைத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்ட போத்துக்கீசப் பாதிரிமார்கள், வசதியான இடங்களைத் தம்வசப்படுத்திக்கொண்டு., தேவாலயங்களை அமைத்ததோடு, போர்க் காலங்களில் பயன்படக்கூடிய வகையில் அவற்றை உறுதியாகவும், உரிய வசதிகளுடனும் அமைத்திருந்தனர். யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்து அரசில் பதவிப் போட்டிகள் உருவாகின. பராயமடையாதிருந்த பட்டத்து இளவரசன் ஒருவனுக்காகப், பகர ஆளுனராக முறையற்ற வகையில் சங்கிலி குமாரன் என்பவன் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தான். மக்கள் இவனுக்கெதிராகக் கலகத்தில் ஈடுபட்டார்கள். இதனை அடக்குவதற்காக சங்கிலி குமாரன் தஞ்சாவூர் அரசனிடம் படையுதவி பெற்றான். இதனை விரும்பாத போத்துக்கீசர், பல குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டு, 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை மீண்டும் தாக்கினார்கள். ஒலிவேரா என்பவன் தலைமையில் வந்த படை யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது. சங்கிலி குமாரனும் பிடிபட்டான். இம்முறை யாழ்ப்பாணத்தைப் போத்துக்கீசர் தங்களுடைய நேரடி ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தனர். குறிப்புகள் இவற்றையும் பார்க்கவும் யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி யாழ்ப்பாண வரலாறு
5033
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
பருத்தித்துறை
பருத்தித்துறை (Point Pedro, ) இலங்கையின் வடபகுதி அந்தலையில் உள்ள ஒரு நகரமாகும். இது யாழ்ப்பாணத்தின் வடமராட்சி வலயத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டு மையமாகும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகத்தையும் இது கொண்டுள்ளது. 1995 இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து இந்த நகரம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. பருத்தித்துறை தமிழர்கள் வாழும் நகரமாகும். ஈழப்போர்க் காலத்தில் உயர் பாதுகாப்பு வலயத்துள் அமைந்திருந்த நகரின் பெரும்பகுதிகள் 2009 இல் போர் நிறைவடைந்ததை அடுத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. 2004 இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இந்த நகரமும் பாதிக்கப்பட்டது. இலங்கையில் புகழ் பெற்ற ஹாட்லிக் கல்லூரி இங்கு அமைந்துள்ளது நகரின் சிறப்புக்குச் சான்று. பருத்தித்துறையானது அதிகளவு பாடசாலைகளையும் கோவில்களையும் நீதிமன்றத்தையும் மின்சாரசபையும் அரச தனியார் போக்குவரத்து சபையையும் ஆதார வைத்தியசாலையையும் ,நகரசபையையும் பிரதேச செயலகத்தையும் பிரதேச சபையையும் வலயக்கல்வி அலுவலகத்தையும் சுற்றுலா மற்றும் மீன்பிடி கடற்கரையையும் வெளிச்சவீட்டையும்,உள்ளூர்,வெளிமாவட்ட போக்குவரத்து வசதியையும் வங்கிகளையும் சினிமா தியேட்டரையும் கொண்டதோடு ஐந்து பிரதான நகரங்களுக்கு செல்லும் வீதிகள் (காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொடிகாமம், சாவகச்சேரி, மருதங்கேணி) சந்திக்கும் இடமாகவும் விளங்குகிறது. வரலாறு ஆரம்ப காலங்களில் பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக தொழிற்பட்டது. இதனால் பருத்தித்துறை என பெயர் பெற்றது. இதே வேளை ஒல்லாந்த மாலுமியான பெட்ரே இலங்கையின் கரையோரப் பிரதேசம் ஊடாகப் பயணிக்கும் போது இலங்கையின் வட முனையாக இந்த நகரம் இருப்பதைப் புரிந்துகொண்டார். இதன் பின்னர் இந்த நகரத்துக்கு பொயின்ட் பெட்ரோ (Point Pedro) எனப் பெயரிட்டார். இந்தப் பெயரே இன்று ஆங்கிலத்தில் புழங்கி வருகின்றது. காலம் காலமாக இவ்வூரில் உள்ள பிரபலமான பாடசாலையான ஹாட்லிக் கல்லூரி பல மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வருகின்றது. ஆரம்ப காலங்களில் தென்னிலங்கையில் இருந்து சிங்கள மாணவர்கள் இந்தக் கல்லூரியில் படிப்பதற்காக இந்த நகரிற்கு வந்தனர். ஆயினும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக இந்தப் பாடசாலை தனது செல்வாக்கை இழந்தது. ஆயினும் தொடர்ந்தும் இந்தப் பாடசாலையின் மாணவர்கள் கணிதத் துறையில் அகில இலங்கை ரீதியில் சாதனை புரிந்து வருகின்றனர். துறைமுகம் ஆதி காலத்தில் தென்னிந்திய நகரங்களுக்கு பருத்தி ஏற்றுமதி செய்யும் துறைமுகமாக விளங்கிய பருத்தித்துறை துறைமுகம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் யாழ் குடாநாடு இருந்த போது யாழ் குடாநாட்டிற்கான கடல்வழிப் போக்குவரத்து இந்த துறைமுகம் ஊடாக நடந்தது. திருகோணமலையில் இருந்து பருத்தித்துறைக்கு பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 1995இல் இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து பருத்தித்துறை நகரைக் கைப்பற்றியபோது இந்த துறைமுகமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. தற்போது யுத்தம் முடிவடைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் பொது மக்களை, இந்த துறைமுகத்தைப் பாவிக்க இராணுவம் அனுமதித்து வருகின்றது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த துறைமுகம் பரபரப்பான ஒரு துறைமுகமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கலைப் பங்களிப்பு பருத்தித்துறையில் உள்ள மாதனைப் பகுதியில் பிரசித்திபெற்ற கொட்டகைக்கூத்து, இசைநாடகக் கலைஞர்கள் இருந்தார்கள். காத்தவராயர் என்னும் கூத்து தற்போதும் நடைபெற்று வருகின்றது. ஆலயங்கள் இங்குள்ள ஆலயங்களில் சில: சுப்பர்மடம் முனீஸ்வரர் கோயில் புலோலி பசுபதீசுவரர் ஆலயம் அவ்வோலைப் பிள்ளையார் கோயில் ஆத்தியடிப் பிள்ளையார் கோயில் கோட்டு வாசல் அம்மன் கோவில் சிவன் கோயில் பருத்தித்துறை தம்புருவளை ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானம் திருநாவலூர் ஸ்ரீமகாமாரி அம்மன் கோயில் தூய தேவமாதா ஆலயம் தூய லூர்து அன்னை திருத்தலம் தும்பளை நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோயில் பண்டாரியம்மன் கோயில் பருத்தித்துறை பத்திரகாளி கோவில் பெரிய பிள்ளையார் கோவில் புலோலியூர் தொப்பளாவத்தை நரசிங்க வைரவர் கோவில் புனித அந்தோனியார் தேவாலயம் புனித தோமையார் தேவாலயம் மந்திகை அம்மன் கோயில் மருதடி குருமணல் கந்தசுவாமி கோயில் தம்பசிட்டி மாயக்கைப் பிள்ளையார் கோயில் முத்துமாரியம்மன் கோயில் முதலி பேத்தி அம்மன் கோயில் வல்லிபுர ஆழ்வார் கோவில் மாதனை ஸ்ரீ காளிஅம்மன் கோவில் மாதனை கண்ணகை அம்மன் கோவில் பருத்தித்துறை பழவத்தை காளி அம்பாள் தேவஸ்தானம் வியாபாரிமூலை இன்பசிட்டி சித்திவிநாயகர் ஆலயம் பாடசாலைகள் ஹாட்லிக் கல்லூரி வேலாயுதம் மகா வித்தியாலயம் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரி சுவையான தகவல்கள் பருத்தித்துறை நகர் தட்டை வடையைச் செய்வதில் சிறப்புப் பெற்றதால் இந்த வடைக்கு "பருத்தித்துறை வடை" என்று ஒரு காரணப் பெயர் உண்டு. குத்து விளக்கு என்ற ஈழத்துத் திரைப்படத்தின் படப்படிப்பு இங்குதான் பெரும்பகுதி நடைபெற்றது. எஸ். பொன்னுத்துரையின் "சடங்கு" நாவலின் கதைக்களமும் பருத்தித்துறைதான். இங்கு பிறந்த புகழ் பூத்தவர்கள் நா. கதிரைவேற்பிள்ளை, தமிழறிஞர் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி, அரசியல்வாதி சச்சி ஸ்ரீகாந்தா, பேராசிரியர், அரசியல் கட்டுரையாளர் க. நா. கணபதிப்பிள்ளை, வில்லிசைக் கலைஞர் ஸ்ரீசங்கர், மேடை, திரைப்பட நடிகர் பருத்தித்துறை படிமக் காட்சி இவற்றையும் பார்க்க பருத்தித்துறை தேர்தல் தொகுதி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பருத்தித்துறையின் சுவையான உணவுகள் யாழ்களத்தில் பருத்தித்துறை உணவுகள் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும் யாழ்ப்பாண மாவட்டம்
5034
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF
காலி
காலி இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஒரு நகரம். இலங்கையின் பெரிய நகரங்களுள் ஒன்று. இலங்கையின் எட்டு மாகாணங்களுள் ஒன்றான தென் மாகாணத்தின் தலைநகரமும் இதுவே. இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. 2004 ல் ஏற்பட்ட சுனாமியினால் இந்த நகரம் கடுமையாகப்பாதிக்கப்பட்டது. சர்வதேச துடுப்பாட்ட திடல் ஒன்றையும் இந்த நகரம் கொண்டுள்ளது. 2004 ஆழிப்பேரலை தாக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த திடல் புணரமைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. காலநிலை இதன் காலநிலை வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையை ஒத்ததாக உள்ளது. இங்கு வரட்சி என தனிக் காலம் இல்லாவிடிலும் சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சற்று வரட்சி தென்படும். மக்கள் காலியின் மக்கள் தொகை 91 000 ஆகும். அதிகமாக சிங்களவர்களே வசிக்கின்றனர். மேலும் தமிழர் முஸ்லிம்களும் வசிக்கின்றனர். காலியில் உள்ள வெளிச்சவீடு இங்குள்ள வெளிச்சவீடு பழமை வாய்ந்தது. இது 1934 ஆம் ஆண்டில் தீயினால் அழிந்ததை அடுத்து 1939 இல் புதிதாகக் கட்டப்பட்டது. இதன் உயரம் 26.5 மீற்றர், வட்ட இரும்புக்கோபுரமாகவும், மேற்பக்கம் தட்டை உருவம் உடையதாகவும் உள்ளது. கோபுரம் முழுவதும் வெள்ளை நிறத்தாலும் அடிப்பகுதி சிவப்பு நிறத்தாலும் நிறம் தீட்டப்பட்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் காலி மீள் கட்டுமானம் (2005) காலி இலங்கை மாவட்ட தலைநகரங்கள்
5035
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF
யமுனா ஏரி
யமுனா ஏரி யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்த நல்லூரிலுள்ள பகர வடிவிலமைந்த ஒரு கேணி ஆகும். இது யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பு வளவில் உள்ளது. யாழ்ப்பாண வைபவமாலையின்படி இது சிங்கையாரியச்சக்கரவர்த்தி காலத்தில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலை, நல்லூர் நகரம் உருவாக்கப்பட்டது பற்றிக் கூறும்போது: ....நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுத்து, மாட மாளிகையும், கூட கோபுரங்களையும், பூங்காவையும், பூங்காவன நடுவிலே ஸ்நான மண்டபமும் முப்புடைக் கூபமும் உண்டாக்கி அக்கூபத்திலே, யமுனாநதி தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்துவிட்டு, ........ என்னும் வர்ணனையைக் காணலாம். இதன்படி, முப்புடைக் கூபம் எனக் குறிப்பிடப்பட்டது பகர வடிவில் அமைந்த கேணியையே ஆகும். யமுனா நதியின் நீர் கலக்கப்பட்டதால் இது பின்னர் யமுனா ஏரி எனப்பட்டது. ஒல்லாந்தர் காலத்திலும், இக் கேணியானது, பூங்காவின் மத்தியிலே குளிப்பதற்கு உரிய குளமாகவோ அல்லது அழகூட்டும் நோக்குடனோ பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை அக்காலத்து வரைபடங்களில் காண முடிகின்றது. படக் காட்சியகம் இவற்றையும் பார்க்கவும் மந்திரிமனை (நல்லூர்) சங்கிலித்தோப்பு உசாத்துணை வெளி இணைப்புகள் History of Ceylon (Eelam) Tamils – Part 19 யாழ்ப்பாண அரசு இலங்கையின் தொல்லியற்களங்கள் யாழ்ப்பாணத்திலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்
5037
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
சுருவில்
சுருவில் (Suruvil) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது கடல்வளமும், நல் மண்வளமும் கொண்டது. இக்கிராமமானது தமிழீழம் யாழ்ப்பாணத்திற்கு மூவைந்து கிலோமீற்றர் தொலைவிலே உள்ளது. இங்கு ஏறக்குறைய 2500 – 3000 குடிமக்கள் உள்ளனர். புவியியல் அமைவிடம் அகலாங்கு 9.6500 நெட்டாங்கு 79.8667 குத்துயரம் (மீ) 05 கால வலயம் (கிழக்கு) ஒசேநே=6மணி மக்கள்தொகை (தோராயமானது) 7 கி,மீ ஆரத்தில்: 24507புள்ளியில் இருந்து பெயரின் தோற்றம் வளைந்த கிராமம் என்ற படியால் சுரி + வில் = சுருவில் என வந்தது என்பர். " முன்னொரு காலத்தில் பல செல்வந்த வியாபாரிகளின் தாயகமாக செழிப்புற்று இருந்தமையினால், "குட்டி அமெரிக்கா" என்ற குறிப்பெயரும் கொண்டிருந்தது. வரலாறு சுருவில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலப்பகுதியில் மிகப் பிரபல்லியமானதொன்றாக விளங்கியது. சுருவில் பதியின் அருகாமையில் கடற்கரைப் பிரதேசம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் அயற் தீவுகளான் புங்குடுதீவு, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு, காரைதீவு, மண்டைதீவு போன்ற இடங்களுக்கு முற்காலத்தில் இலகுவாகப் போக்குவரத்துச் செய்வதற்கு இப்பகுதியில் அமைந்துள்ள கப்பல் துறைமுகமே பெரிதும் உதவியாக இருந்தது. பொருளாதாரம் சுருவில் கடல்வளம் நிறைந்ததொன்றாக விளங்கியமையால் கடற்கரைப் பிரதேசத்தை அண்டி நூற்றுக்கதிகமான மீனவர்கள் வசிக்கின்றார்கள். அவர்களில் பலர் கப்பல் ஓட்டிகள். இவர்கள் இந்தியா, மாலைதீவு போன்ற இடங்களில் இருந்து உணவு இறக்குமதியிலும், மக்கள் போக்குவரத்துக்கு உதவியாகவும் முற் காலங்களில் செயற்பட்டார்கள். தற்போதைய நிலவரம் தெரியவில்லை. சுருவில் மண்வளம் கமச்செய்கைக்கு (Paddy cultivation) மிகவும் உகந்தது. நெல் பரவலாகப் பயிரிடப்படுகின்றது. கிராமத்தை சுற்றிக் கற்பகதருச் (பனைமரச்) சோலைகளும், தென்னஞ்சோலைகளும், மாஞ்சோலைகளும் நிறைந்திருக்கின்றன. தோட்டங்களில் புகையிலை, வெங்காயம், மிளகாய், மரக்கறிகள் பயிரப்படுகின்றன. கற்பகத்தருவின் மூலப்பொருட்களான ஓலை, மட்டை, நார், பனம்பழம், பனாட்டு, புழுக்கொடியல், ஒடியல் போன்றவற்றைகொண்டு சிறு கைத்தொழில்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கிருந்த மக்களின் மற்றுமொரு முக்கிய பொருளாதார மார்க்கம் வியாபாரம் ஆகும். கொழும்பிலும் பிற இடங்களிலும் கடைகள், உற்பத்தி தாபனங்கள் வைத்து பொருள் ஈட்டினர். எனினும், போர் சூழலுக்கு பின்னர் பல வர்த்தகர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர். சமூகம் யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலமை அடுக்கமைவின் கூறுகள் இங்கு உண்டு. குறிப்பாக மீனவ, விவசாய-வியாபார சமூகங்களுக்கிடையே ஒரு இடைவெளி இருக்கின்றது. இருவரும் ஒருவரை ஒருவர் தங்கி வாழ்ந்தாலும், ஒரு இடைவெளி இருக்கின்றது. எனினும், ஒரு அடித்தளமான சமத்துவ அல்லது சமநிலை உணர்வு இங்கு மேலோங்கி இருக்கின்றது எனலாம். சமயம் இங்குள்ள பெரும்பான்மை மக்கள் ஐயனார், அம்மன் ஆகிய குல தெய்வங்களை வழிபடும் இந்துக்கள். இங்கிருக்கும் ஐயப்பன் கோயில், நாக பூசணி அம்மன் கோயில், வைரவ கோயில் ஆகியவை இம் மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றுள், ஐயனார் கோயில் 250 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட, விசாலமான கோயிலாகும். யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போர்த்துகேயர் காலனித்துவ ஆட்சியின்]] கீழ் கணிசமான மக்கள் கத்தோலிக்க கிறீஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டனர். இங்குள்ள அன்னை மேரி ஆலயம் கத்தோலிக்கரும், இந்துக்களும் வழிபடும் ஒரு தலம் ஆகும். இங்கு வாழும் மக்கள் அனேகர் பரம்பரை உறவினர், சினேகர். ஆகையால், இந்து கிறீஸ்தவ வேற்றுமை அல்லது பிரிவினை இல்லை. அதாவது, மதம் காரணமாக பிரச்சினையோ, அல்லது குமுகாய உணர்வில் பாதிப்போ இல்லை. கல்வி, அரச சேவைகள் சுருவிலில் ஒரு ஆரம்ப பாடசாலை, 5 ம் வகுப்புவரை கொண்ட அன்னைமேரி பாடசாலை ஆகியவை கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. மேற்கல்விக்கு எல்லை கிராமங்களுக்கோ அல்லது வெளி கிராமங்களுக்கோ செல்ல வேண்டும். கிராம அபிவிருத்தி சபை, தையல் நிலையம், பப்பட தொழிற்சாலை ஆகியவை முன்னர் இயங்கி வந்தன. ஈழப் போரின் காரணமாக அவற்றின் தற்போதைய நிலை பற்றி தெளிவான விபரங்கள் இல்லை. மேலும், மக்கள் வசதிக்காக கூட்டுறவுக்கடையும், உபதபாற்கந்தோரும் உண்டு. ஈழப் போரும் புலர்ப்பெயர்வும் எதிர் காலம் மேலும் படிக்க கா. சிவத்தம்பி, யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை, குமரன் புத்தக நிலையம்,கொழும்பு,(2000). சதாசிவம் சேவியர், சப்த தீவு, ஏசியன் அச்சகம், சென்னை, (1997). செந்தி செல்லையா (தொகுப்பு.), பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம், மணிமோகலை பிரசுரம்,சென்னை, (2001). சு. சிவநாயகமூர்த்தி, நெடுந்தீவு மக்களும் வரலாறும், ரொறன்ரோ, கனடா (2003). இ. பாலசுந்தரம், இடப்பெயர் ஆய்வு, யாழ்ப்பாண மாவட்டம் தமிழர் செந்தாமரை, ரொறன்ரோ: (2002). மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வேலணைத் தீவு
5044
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D
நைஜர்
நைஜர் அல்லது நைசர் (, சில வேளைகளில் அல்லது என்றும் அழைக்கப்படுகிறது) என்னும் நைஜர் குடியரசு, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நிலம் சூழ் நாடு ஆகும். நைஜர் ஆற்றின் பெயரையொட்டி இப்பெயர் வந்தது. இந்நாட்டின் தலைநகரம் நியாமி ஆகும். நைஜருக்குத் தெற்கே நைஜீரியாவும் பெனினும், மேற்கே புர்க்கினா பாசோவும் மாலியும், வடக்கே அல்சீரியாவும் லிபியாவும், கிழக்கே சாடும் உள்ளன. ஏறத்தாழ 1,270,000 km2 பரப்பளவுடைய நைஜர், மேற்கு ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடு ஆகும். இதில் 80 விழுக்காடு நிலம் சகாரா பாலைவனத்தில் உள்ளது. 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையில் பெருமளவினர் இசுலாமியர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் நாட்டின் தெற்கு, மேற்கு மூலைகளில் வாழ்கிறார்கள். வளர்ந்து வரும் நாடான நைஜர், ஐக்கிய நாடுகளின் மனித வளர்ச்சிச் சுட்டெண்களில் தொடர்ந்து கீழ் நிலையில் இடம்பெற்று வருகிறது. 2011 அளவீட்டின் படி, 187 நாடுகளில் 186ஆவது இடத்தையே பெற்றது. நாட்டின் பாலைவனமல்லா பகுதிகள் பலவும் விட்டு விட்டு வரும் வறட்சியாலும் பாலைவனமாதலாலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. நைஜரின் பொருளாதாரம் வாயுக்கும் வயிற்றுக்குமான வேளாண்மையையும் சிறிதளவு ஏற்றுமதி வேளாண்மையையும் யுரேனியம் உள்ளிட்ட இயற்கை வளங்களின் ஏற்றுமதியையும் நம்பியே உள்ளது. சுற்றி நிலம் சூழ்ந்துள்ள நிலை, பாலை நிலம், மோசமான கல்வி, ஏழ்மை, உள்கட்டமைப்பு வசதியின்மை, மோசமான நலத் திட்டங்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு முதலியவற்றால் நைஜர் முடங்கி உள்ளது. வரலாறு முன்னர் பிரான்சின் பேரரசுவாத ஆட்சியின் கீழ் இருந்து 1970ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அன்று முதல் நைஜீரியர்கள் ஐந்து அரசியல் அமைப்புகளின் கீழும் மூன்று இராணுவ ஆட்சிகளின் கீழும் வாழ்ந்துள்ளனர். 2010ல் நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து, தற்போது நைஜர் ஒரு பல கட்சி குடியரசாகத் திகழ்கிறது. புவியியல் புவி அமைப்பு மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாடானது, அதன் எல்லைகள் நிலத்தால் சூழப்பட்டு, சகாரா மற்றும் துணை சகாரா பாலைவனப் பகுதிகளின் இடையே அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவான ல், நீர்ப்பரப்பளவு மட்டும் சுமார் ஆகும். நைஜர் தனது எல்லையாக 7 நாட்டைக் கொண்டுள்ளது. நாட்டின் நீளமான எல்லையாக () அளவைக் கொண்ட நாட்டின் தென்பகுதியான நைஜீரியாவாகும். அதற்கடுத்தாற்போல் கிழக்கு எல்லையாக சாட்(நீளம்: ), வடமேற்கு எல்லையாக அல்ஜிரியா () மற்றும் மாலி (), தென்மேற்கு எல்லையாக பர்கினா () மறறும் பெனின் () மற்றும் வடகிழக்கு எல்லையாக லிபியா (). நாட்டின் உயர்வான பகுதியாக இதுகல்-ந-தாகேஸ் () மற்றும் மிகவும் தாழ்வான பகுதியாக நைஜிரியா ஆறும் () உள்ளது. காலநிலை நைஜர் நாடு ஒரு வெப்பமண்டலமாதலால், காலநிலையானது பாலைவன பகுதிகளில் மிகவும் சூடாகவும் உலர்வாகவும் இருக்கும். தெற்கிலுள்ள நைஜர் ஆற்றுப்படுகைகளில் வெப்பமண்டலமாகவே இருக்கும். நிலப்பரப்பின் பெரும்பங்கு பாலைவனமாக இருந்தாலும், தெற்கில் பசுமையான நிலப்பரப்பும், வடக்கில் மலைக்குன்றுகளும் அதிகம் காணப்படும். சமயம் நைஜர் அரசியலமைப்பின்படி, நாட்டு மக்கள் யாவருக்கும் மத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் மற்றும் இந்நாட்டு மக்கள் அனைவரும், சமூக அமைதி மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றை பேணிகாத்து மதிக்கின்றனர். அமெரிக்க அரசாங்கத்தின்படி 2007 ஆம் ஆண்டு, மத நம்பிக்கை அல்லது நடைமுறையில் அடிப்படையில் சமுதாய மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை. இசுலாம் இசுலாமியத்தின் 95 விழுக்காடு மக்கள், சன்னி இன வகுப்பைச் சார்ந்தவராகவும், இதர 5 விழுக்காடு மக்கள், சியா இனத்தவராகவும் உள்ளனர். 15ம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் இங்குள்ள பகுதிகளில் இசுலாமிய மதம் தழைத்தோங்கத் தெடங்கியது. 17ம் நூற்றாண்டில் அசுர வளர்ச்சி பெற்றது, இசுலாமியச் சமயம். மேலும், 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் புலா லெத், சுபி மற்றும் சொகொடா கலிபாத்தே (தற்போதைய நைஜிரியா) ஆகிய பகுதிகளில் நன்கு பரவிற்று. சமய விழுக்காடுகள் இசுலாம்/முஸ்லிம் - 93% இதர சமயங்கள் - 7% (mostly animist) பஹாய் (Bahá'í) நம்பிக்கை துணை சாகாரா பாலைவனத்தில் மக்கள் தொகை பெருகிய போதுதான் பஹாய் நம்பிக்கை உருவாயிற்று . நாட்டின் முதல் பஹாயின் வருகையானது, 1966ல் நடந்தேறியது 1975ம் ஆண்டு, தேசிய ஆன்மீக சபையின் தேர்தலை நடத்தும் அளவிற்கு அதன் வளர்ச்சி இருமடங்காக பெருகியது. பின்னர், 1970 மற்றும் 1980களில் சில தவறான காரியங்கள் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டதால், 1992ல் மீண்டும் தேர்தல் நடந்தது. நைஜரின் தென்மேற்கு பகுதிகளில் 5600க்கும் (நாட்டின் மக்கள் தொகையில் 0.4 விழுக்காடு மக்கள்) மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர். சான்றுகள் வெளி இணைப்புகள் Food Crisis நைஜர் உணவுப் பற்றாக்குறை குறித்த செய்தி நைஜர் நாட்டின் நாடோடிகள், படக்காட்சிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் நைஜர் நிலம்சூழ் நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
5046
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81
நயினாதீவு
நயினாதீவு (Nainativu) யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சப்த தீவுகள் என அழைக்கப்படும் ஏழு தீவுகளில் ஒன்று ஆகும். இது நாகதீபம் (சிங்கள மொழியில், நாகதீப) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த கோயில் "நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில்" என்றே பெயர் பெற்றதாகும். இந்த கோயிலின் அண்மையில் ஒரு சிறிய பௌத்த விகாரை உள்ளது. இதனை நாகவிகாரை என்று அழைப்பர். இலங்கையிலுள்ள பௌத்த சமயத்தவர் கௌதம புத்தர் இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகிறார்கள். இந்த விகாரையில் சில பௌத்த பிக்குகள் உள்ளனர். இவர்களைத் தவிர இந்த தீவில் வரலாற்று ரீதியாக வசிக்கும் மக்கள் அனைவரும் தமிழர்களாகும். 1976 இல் நயினாதீவில் மக்கள்தொகை சுமார் 4,750 பேர் அளவில் இருந்தது. ஆயினும், 2,500 பேர் அளவிலேயே இன்றைய மக்கள்தொகை உள்ளது. அமைவிடம் இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்குத் திசையில் புங்குடுதீவும், நேர் வடக்கில் அனலைதீவும் அமைந்துள்ளன. போக்குவரத்து நயினா தீவிற்குத் தரை வழியாகப் பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினா தீவு செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவு தீவிற்கு செல்ல முடியும். நயினா தீவிக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது. நயினாதீவு வரலாறு - வரலாற்றுக்கு முன்பிருந்து கிபி 1000 வரை இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதே பிணக்கு/யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது. இங்கே பௌத்த கோவில் ஒன்று இருந்ததாகவும், இந் நூலில் குறிப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது. குல. சபாநாதன் "இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன. வல்லிபுரக் கோயிற் பொற்சாசனம் நாகதீப, மணிபல்லவம் ஆகிய பௌத்த சமயச் சார்புடைய பெயர்களை, குறிப்பாக நயினாதீவுடன் தொடர்புபடுத்தும் தொல்பொருட் சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், நாகதீவு (நகதிவ) எனும் பெயர் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதையும் குறிப்பதாக வழங்கப்பட்டதற்கு அசைக்க முடியாத சான்றாக வசப அரசனின் காலத்தில் (கி.பி.66-111) பொறிக்கப்பட்ட வல்லிபுரக் கோயிற் பொற்சாசனம் விளங்குகின்றது. ஆகவே, "நாகதீப" அல்லது "நாகதீபம்" என்ற பெயரால் நயினாதீவை அழைக்கும் வழக்கம் மிகச் சமீப காலத்தில் - இங்குள்ள புத்தர் கோவில் அமைக்கப்பட்ட 1940 களின் முற்பகுதியில் - தோன்றியது என்பதே சரியாக அமையும். நம்பொத்த நாகதிவயின என்ற சிங்களப் பெயர், நயினாதீவைக் குறிப்பதாக கி.பி. 15ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நம்பொத்த என்ற சிங்கள நூலில் காணப்படுகின்றது. இது நயினார்தீவு அல்லது நாகநயினார்தீவு அல்லது நாகதீவு என்ற தமிழ்ப் பெயரின் சிங்கள வடிவமே என்பதற்கு நம்பொத்த குறிப்பிடும் ஏனைய தீவுகளுக்கான சிங்களப் பெயர்களே சான்றாகும். அவை வருமாறு: தண்ணீர்த்தீவு (வேலணைத்தீவு)- தன்னிதிவயின புங்குடுதீவு - புவங்குதிவயின காரைதீவு - காறதிவயின அனலைதீவு - அக்னிதிவயின ‘நம்பொத்த’ நூலாசிரியர் தமிழ் ஊர்ப் பெயர்களை சில இடங்களில் சிதைத்து சிங்களத்தில் மொழிமாற்றம் செய்ய முயன்றுள்ளார். வேறு சில இடங்களில் அவர் தமிழ்ப் பெயரில் உள்ள சொல்லுக்குச் சமமான சிங்களச் சொல்லைப் பதிலிட்டு மொழிமாற்றம் செய்துள்ளார் என்பதை மேலே கண்டோம். ‘அனல்’ என்ற தமிழ்ச் சொல் ‘அக்னி’யைக் குறிப்பது என்பதை அறிந்து இருந்த ‘நம்பொத்த’ ஆசிரியர், ’நயினார்’, ‘நாகநயினார்’ என்பன நாகதேவனைக் குறிக்கும் பெயர்கள் என்பதையும் அறிந்து இருந்திருக்கலாம். ஆகவே, பதினைந்தாம் நூற்றாண்டில், நயினாதீவுக்கு வழங்கிய தமிழ்ப் பெயர் நாகதீவு, நயினார்தீவு, நாகநயினார் தீவு - இவற்றில் எதுவாகவும் இருந்திருக்கலாம் என்பதே ‘நம்பொத்த’ மூலம் நமக்குத் தெரியவருகின்றது. "மணிபல்லவம்" என்ற பெயரும் "நாகதீபம்" என்ற பெயரைப் போன்று முழு யாழ்ப்பாணக் குடாநாட்டையுமே குறிப்பதாக வழங்கப்பட்டது என்பது நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் சி. இராசநாயகம் ஆகிய அறிஞர் பெருமக்களது கருத்தாகும். போல் பீரிஸ், பரணவிதான போன்ற சிங்கள தொல்பொருளியல் அறிஞர்களும் இதே கருத்தையே வெளியிட்டுள்ளனர். நாகதீபமும் மணிபல்லவமும் இலங்கை வரலாற்று நூலான தீபவம்சம், மகாவம்சம் மற்றும் தமிழ் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை போன்ற நூல்கள் நாக மன்னர்களுக்கு இடையே நடந்த போர் பற்றி விளக்குகிறது. அவையாவன, நாகராசன் என்னும் மன்னன் விசயன் என்றவனுக்கு முன்பே நாக நாடான இலங்கை நயினாதீவு கோநகராக்கி ஆழ்கிறான். இவனுக்கு ஒரு மகளும் மகோதரன் என்ற மகனும் இருந்தனர். தன் மகளை மலையராட்டிர நாகராசன் என்ற வேறொரு நாக மன்னனுக்கு மணமுடித்து அவளுக்கு சீதனமாக தன் மணியாசனத்தையும் கொடுத்தனுப்பினான். அவர்களுக்கு குலோதரன் என்னும் மகன் பிறக்கிறான். நயினாதீவு நாகராசன் தான் இறக்கும் முன்பு தன் மகனான மகோதரனுக்கு பட்டம் கட்டிவிட்டு இறக்கிறான். அப்போது மகோதரன் மலையராட்டிர நாகராசனான் குலோதரன் மீது மணியாசனத்தை பெரும் பெயரில் போர் தொடுக்கிறான். இரு படைகளுக்கும் போர் நடக்கும் போது அவர்களின் நடுவில் புத்தர் தோன்றி பேரிருளை உண்டாக்கியதால் நாகர்கள் அஞ்சினர். மீண்டும் புத்தர் அங்கு வெளிச்சத்தை உருவாக்கியவுடன் நாகர்கள் புத்தரை வணங்கி போருக்குக் காரணமான மணியாசத்தில் புத்தரையே அமரச்செய்தனர். இதே கதையை மணிமேகலையும் கூறுகிறது. (மணிமேகலை- பீடிகை கண்டு பிறப்புணர்த்திய காதை 58-61) இந்த யுத்தம் நடந்த இடம் ‘நாகதீபம்’ என்று மகாவம்சம் கூறுகின்றது. இதே யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று மணிமேகலைக் காப்பியம் கூறுகின்றது. ஆகவே, ‘மணிபல்லவமும் நாகதீபமும் ஒன்றே; யாழ்.குடாநாடுதான் நாகதீபம் என்றால், அதுவே மணிபல்லவமுமாகும்’ என்று மேற்கூறிய அறிஞர் பெருமக்கள் முடிவுகட்டியுள்ளதுபோன்று தோற்றுகின்றது. மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடும் ‘மணிபல்லவம்’ நயினாதீவாக இருக்கக்கூடும் என்ற கருத இடமுண்டு, ஆனால் ‘நாகதீபம்’ என்ற பெயர் பண்டைய நாட்களில் நாகர் அரசாட்சிக்குட்பட்ட ஒரு தேசத்தை அல்லது இராச்சியத்தைக் குறிக்க வழங்கப்பட்டதே அல்லாது, எமது ஊரைப் போன்ற ஒரு சிறிய ஊரைக் குறிக்க வழங்கப்படவில்லை. இது குறைந்த பட்சம் யாழ். குடாநாட்டையும் அயல் தீவுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. இன்றைய வடமாகாணம் முழுவதையும் மேற்குக் கரையில் கல்யாணி (களனி) ஆறு வரையான பகுதிகளையும்கூட ‘நாகதீபம்’ உள்ளடக்கியிருந்தது என்ற கருத்தும் உண்டு. ஆகவே, ‘நாகதீபம்’ என்பது ஒரு இராச்சியத்தின் பெயர் நயினாதீவைப் போன்ற ஒரு சிறிய தீவை அல்லது ஊரைக் குறித்த பெயரல்ல. ஆனால், மணிபல்லவம் ஒரு சிறிய தீவு. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தெற்கே முப்பது ‘யோசனை’ தூரத்தில் அமைந்திருந்தது என்று ‘மணிமேகலைக் காப்பியம் கூறும் விவரங்கள் நயினாதீவுக்குப் பொருந்துவனவாக உள்ளன. ‘புத்தர் இங்கு வந்தார். போரை நிறுத்திச் சமாதானம் செய்து மணியாசனத்தில் அமர்ந்து பஞ்சசீலத்தைப் போதித்தார்’ என்பது உண்மையோ பொய்யோ என்பது வேறு விடயம். அதுபற்றி சிங்கள வரலாற்றுத் துறை அறிஞர்களிடையேகூடக் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்த தமிழ் நாகர்கள் பௌத்த சமயத்தைத் தழுவியிருந்தனர். இந்தத் தீவு ஒரு பௌத்த வழிபாட்டுத் தலமாக அக்காலத்திலும் திகழ்ந்திருந்தது. ஆகவே, ‘மணிமேகலை’க் காப்பியம் எழுந்த சங்கமருவிய காலத்தில் - அதாவது கி.பி.மூன்றாம் நூற்றாண்டு அளவில் - நயினார்தீவு, ‘மணிபல்லவம்’ என்றும் அழைக்கப்பட்டது என்றும், இது நாக அரசர்களால் ஆட்சிசெய்யப்பட்ட நாகதீவு (நாகதீபம்) என்ற இராச்சியத்துக்கு உட்பட்டிருந்தது என்றும் கொள்வது தவறன்று. சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்த மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்தி காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுனர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினை பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி, தவத்தில் ஆழ்ந்தாள். ஆபுத்திரனும் அமுதசுரபியும் மாரிக் காலத்து நள்ளிருளில் யாம வேளையில் வழிப்போக்கர் சிலர் ஆபுத்திரனிடம் வயிறுகாய் பெரும்பசி வாட்டுகிறது என்றனர். பிச்சை வாங்கிய உணவை, முடியாதவர்களுக்குத் தந்தபின் எஞ்சிய உணவை உண்டுவந்த அவன், செய்வது அறியாமல் மனம் நொந்துகொண்டிருந்தான். அப்போது அவன் தங்கியிருந்த கோயிலின் தெய்வம் சிந்தாதேவி அவன்முன் தோன்றித் தன் கையிலிருந்த பாத்திரம் ஒன்றை அவன் கையில் கொடுத்த்து. அதில் உள்ள உணவு அள்ள அள்ள வளர்ந்துகொண்டே இருக்கும். அதனை அவன் தேவியைத் தொழுது வாங்கிக்கொண்டான். வழிப்போக்கர்களின் பசியைப் போக்கினான். பின்னர் வந்தவர்களுக்கெல்லாம் வழங்கி பசியைப் போக்கிக்கொண்டிருந்தான். வானவர் தலைவன் இந்திரன் கொடையாளி. ஆபுத்திரன் கொடையால் இந்திரனின் பாண்டுகம்பளம் (அரியணை) ஆட்டம் கண்டது. ஆபுத்திரனை ஒடுக்க எண்ணினான். அந்தணன் உருவில் ஆபுத்திரனிடம் வந்து வரம் தருவதாகச் சொன்னான். ஆபுத்திரன் தன்னிடம் உள்ள கடிஞை போதும் என்றான். வஞ்சக இந்திரன் அந்தக் கடிஞை பயன்ற்றுப் போகும்படி நாடும் மக்களும் 12 ஆண்டுகள் பசியின்றி வளத்துடன் வாழத் தானே வரம் தந்துவிட்டுச் சென்றான். ஆபுத்திரனிடம் உணவு பெறுபவர் யாரும் இல்லாததால் கடிஞை செயலற்றுப் போயிற்று. ஆபுத்திரன் ஊர் ஊராகச் சென்றான். அப்போது வங்கக்கப்பலிலிருந்து இறங்கிய சிலர் சாவகத் தீவு மக்கள் பசியால் வாடுவதாக்க் கூறினர். சாவகத் தீவுக்கு வங்கத்தில் சென்னறான். இடையில் புயல். பாய்மரப் பாய் கிழிந்துவிட்டது. நாய்கர் (மாலுமிகள்) மணிபல்லவத் தீவில் இறங்கிச் சரிசெய்துகொண்டிருந்தனர். ஆபுத்திரன் அங்கு இறங்கி பசித்தோரைத் தேடிக்கொண்டிருந்தான். ஆபுத்திரன் வங்கத்தில் இருப்பதாக எண்ணிய நாய்கன் வங்கத்தை ஓட்டிச்சென்றுவிட்டான். கடவுள் கடிஞையைக் கொண்டு தன் பசியை மட்டும் நீக்கிக்கொண்டு உயிர்வாழ ஆபுத்திரன் விரும்பவில்லை. ‘ஆண்டுக்கு ஒருமுறை புத்தன் பிறந்த நாளில் தோன்றி வழங்குவோர் கையில் சேர்க’ என்று கூறி, அத்தீவிலிருந்த கோமுகி (ஆ முகம், பசு முகம் தோற்றம் கொண்ட பொய்கை) என்னும் பொய்கையில் எறிந்துவிட்டு உண்ணாதிருந்து உயிர்விட்டான். இந்த அமுதசுரபி பின்னர் மணிமேகலை கைக்கு வந்தது. அவள் பசிப்பிணியைப் போக்கிவந்தாள். பாம்பு-கருடன் போராட்டத்தின் விளைவாகவே தமிழகத்து மாநாய்கன் வணிகர் ஒருவரால் நயினைக் கோயில் அமைக்கப்பட்டது காவிரிப்பட்டிணத்தில் வாழ்ந்து வந்த மாநாய்கன் என்னும் வணிகன் என்பது செவிவழிக் கதை. பாம்பு சுற்றிக் கல்லையும், கருடன் கல்லையும் கோவிலையும் இன்று அடியார்கள் தரிசிக்கின்றனர். வரலாற்றுத்துறை அறிஞர்கள் தமது ஆய்வுகளின் அடிப்படையில் ‘புத்தர் இலங்கைக்கு வந்தார் என்பது வெறும் கட்டுக்கதை’ என்ற கூறியிருப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. கலாநிதி ஜீ.சீ.மெண்டிஸ் போன்ற சிங்கள அறிஞர்கள் உட்பட்ட பல வரலாற்றுத்துறை அறிஞர்கள், ‘புத்தர் இலங்கைக்கு வந்தார்’ என்பது ‘இயேசுக் கிறீஸ்து லண்டனுக்கு போனார்’ என்பது போன்றதொரு கட்டுக்கதை என்று கருத்து வெளியிட்டுள்ளமையும் இங்கு மனங்கொள்ளத்தக்கது. நயினார்பட்டர் இச்சிறுதீவின் தற்காலப் பெயரான ‘நயினாதீவு’ என்ற பெயர் இத்தீவுக்கு இடப்பட்ட காரணம் இங்கு நயினார்பட்டர் என்ற பிராமணர் குடியேறியதே என்று சிலர் கூறுவது பொருத்தமற்ற கூற்று என்பதை நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்: “நாகதீவு, நயினாதீவு எனப் பெயர் மாறியது நயினாபட்டர் என்னும் பிராமணர் ஒருவர் அங்கு குடியேறிக் கிலமாய்க் கிடந்த நாகதம்பிரான் கோயிலைப் புதுக்கியபின் என்ப. ஆயின், “நாகநயினார் தீவு” என வையாபாடலில் வருகின்றது. நாகதம்பிரான், நாகநயினார் எனவும் அழைக்கப்பட்டதேயோ?” திரு.குல.சபாநாதன் அவர்களும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் மேற்குறித்த கருத்தை வழிமொழியும் வகையில் தனது நூலில் பின்வருமாறு குறித்துள்ளார்: “நாகர் தாம் வழிபட்ட நாகத்தை, நாகநயினார், நாகதம்பிரான் எனப் போற்றியிருத்தல் கூடுமாதலின், அத்தெய்வம் கோவில் கொண்டெழுந்தருளிய தலம் நாகநயினார்தீவு, நயினார்தீவு எனப் பெயர்பெற்றதாகவும் கூற இடமுண்டு.” “நயினார்தீவு” எனும் பெயருக்கான காரணம் தொடர்பாக இக்கட்டுரையாளர் வெளியிட்ட “நயினாதீவு நாகம்மாள்” என்ற நூலின் 102 ஆம் பக்கத்திலும், கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவிலின் திருக்குட முழுக்குப் பெருவிழா மலரில் இக்கட்டுரையாளர் வரைந்த “நயினாதீவு சிறி நாகபூசணி அம்மன் கோவில்” என்ற தலைப்பிலான கட்டுரையிலும் மேலதிக தகவல்களைக் காணலாம். இச்சிறுதீவு, நாகதீவு (சிங்களத்தில் ‘நாகதிவயின’), நயினாதீவு (அல்லது நயினார் தீவு) என்ற பெயர்களாலும், டச்சுக்காரர்களின் ஆட்சியின்போது (Haorlem) ‘ஹார்லெம்’ எனவும் அழைக்கப்பட்டதென்பது ஆதாரபூர்வமாக அறியக்கிடக்கின்றது. ‘ஹார்லெம்’ என்பது ஒல்லாந்தில் தலைநகர் ‘அம்ஸ்ரடாமு’க்கு அருகில் உள்ள சிறிய நகரின் பெயர். ஒல்லாந்தர் அமெரிக்காவில் குடியேறியபோது, தற்போதைய நியயோர்க் நகருக்கு அண்மையில் ஒரு குடியிருப்பை நிறுவி, அதற்கும் ‘ஹார்லெம்’ என்றே பெயரிட்டனர். நயினாதீவு தற்போது ‘ஹார்லெம்’ என்று அழைக்கப்படுவதில்லை. நாகர்களது குடியிருப்பு விசயனின் வருகைக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடும் அயலிலுள்ள தீவுகளும், திருமலை, வன்னி, மன்னார், மற்றும் கிழக்கு மேற்குக் கரையோரப் பட்டினங்களும் நாகர்களது குடியிருப்புக்களாக இருந்தன. யாழ்ப்பாணக் குடாநாடும் அயல்தீவுகளும் ‘நாகதீபம்” என்ற பெயருக்கேற்றவாறு, கதிரமலையில் தனது தலைநகரைக் கொண்ட, ஒரு நாகர் அரசின் கீழ் இருந்தன. முதலியார் திரு.செ.இராசநாயகம், தமது “யாழ்ப்பாணச் சரித்திரம்” (1933) என்னும் நூலில் இதனை அறுதியிட்டுக் கூறியுள்ளார். “இத்தீவுகளிலும், இலங்கையின் மேற்பாகத்திலும், சரித்திர காலத்துக்கு முந்தியே நாகர் எனும் ஒரு சாதியார் குடியேறியிருந்தனர். இத்தீவுகளுக்கு இப்போது கந்தரோடை என்று அழைக்கப்படும் கதிரமலையே இராசதானியாகவிருந்தது.” நயினார்தீவும், ஏனைய யாழ்ப்பாணத் தீவுகளையும் யாழ் குடாநாட்டையும் போன்று, சரித்திர காலத்துக்கு முன்னர் - அதாவது விசயன் வரவுக்கு முன்னர் - நாகர்களது ஒரு குடியிருப்பாக இருந்திருக்கலாம். அல்லது, சில நூற்றாண்டுகள் கழித்து, நாகர்கள் நாகதீபத்தில் (யாழ்.குடாநாட்டில்) இருந்தோ அல்லது அயல் தீவுகளில் இருந்தோ நயினாதீவில் குடியேறியிருக்கலாம். எங்கிருந்து அவர்கள் வந்தனர், எப்போது வந்தனர் என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியாவிடினும். முதன் முதலாக நயினாதீவில் குடியேறிய மக்கள் நாகர்கள் என்பது சந்தேகமறப் புலப்படுகின்றது. நயினார்தீவு, நாகதீவு, நாகதிவயின, நாகநயினார்தீவு, ஆகிய நயினாதீவுக்கு வழங்கப்பட்ட தொன்மைவாய்ந்த பெயர்களும் இவ்வுண்மையை மேலும் உறுதிசெய்கின்றன. நயினாதீவு வரலாறு - பகுதி 2 : கிபி 1001 முதல் இன்று வரை சோழர்கள், மற்றும் சேது நாட்டுமக்கள் பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் வடபாகம் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாயிற்று. கி.பி.1012 இல் முழு இலங்கையும் சோழமண்டலத்துக்குச் சேர்ந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த சிங்கை நகர் (வல்லிபுரம்) அரசர்கள் சோழப் பிரதானிகளாயினர். சோழர்கள் எண்ணிறந்த சைவக் கோவில்களைப் புதிதாக அமைத்ததுடன், பழைய சைவாலயங்களையும் புதுப்பித்தனர். நூற்றிருபத்தாறு நீண்ட ஆண்டுகள் தொடர்ச்சியாகச் சோழராட்சி இலங்கையில் நிலவிய காலத்தில் நயினாதீவில் இருந்த பழம்பெருமை வாய்ந்த நயினார்கோவிலும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கலாம். அவ்வேளை இங்கு வந்து திருப்பணி வேலைகளைச் செய்த சோழதேசத்துச் சிற்பிகளும் பிராமணக் குடிகளும் மற்றும் கோவில் பணிக்கு அவசியப்பட்ட ஊழியர்களும் தமது குடும்பங்களுடன் இங்கு நிரந்தரமாகவே தங்கிவிட்டிருக்கலாம். இவ்வாறு தமிழகத்து மக்கள் வந்து தங்கும் முறை தொடர்ந்ததாலோ என்னவோ இவ்வாறு பிறநாட்டவர் வந்து தாம் இறங்கும் துறைமுகங்களுக்கு அண்மையில் வசிக்க விழைவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், பிற நாட்டார் (பரதேசிகள்) “ஊராத்துறையில் வந்து இருக்க வேணுமென்றும்..” “புதுத் துறைகளில் வந்தாலித் துறையிலே சந்திக்க வேணுமென்றும்…” முதலாம் பராக்கிரமபாகு அரசனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி.1153-1186) நயினாதீவில் நிறுவப்பட்ட தமிழ்க் கல்வெட்டின் மூலம் அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வணிகக் கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாக நயினாதீவு இருந்தமையால் தமிழகத்தவர் அல்லாத பிறநாட்டவர் சிலரும் தனிப்பட்ட காரணங்களின் பொருட்டு இத்தீவில் நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்திருத்தலும் நிகழ்ந்திருக்கக்கூடும். சோழ, பாண்டிய அரசர்களும், அவர்களுக்குப் பின்பு சேது நாட்டு (இராமநாதபுரம்) அரசர்களும், பின் யாழ்ப்பாண அரசர்களும் முத்துக்குளித்தல், சங்கு குளித்தல் போன்ற தொழில்களை ஊக்குவித்து வந்தனர். வரலாற்றுக்கெட்டாத காலம் தொடக்கம் நயினாதீவுக் கடலில் சங்கு குளித்தல் இடம்பெற்றது. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரிட்டிசுக்காரரும்கூட சங்கு குளித்தலுக்கு ஊக்குவிப்பு அளித்தனர். சங்குகுளித்தல் நயினாதீவுக் கடலில் மும்முரமாக இடம்பெற்றதால் அத்தொழில் செய்யும் மக்கள் ஈழத்தின் பிறபகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் கிழக்குக் கரைப் பட்டினங்களில் இருந்தும் வந்து நயினாதீவில் குடியேறலாயினர். இவர்களில் இஸ்லாம் மதத்தவரான தமிழர்களும் அடங்குவர். இஸ்லாமியரின் வழிபாட்டுக்கென பள்ளிவாசல் ஒன்றும் தீவின் தென்கிழக்குக் கரையில் அமைக்கப்பட்டு இன்றும் வழிபாடு அங்கு நிகழ்கின்றது. முதலில் நாகர்களும், பின்பு இங்குள்ள நயினார் கோவிலைச் சீரமைப்பதற்கும், வழிபாடுகளைக் குறைவற நடத்துவதற்கும் ஆயிரம் ஆண்டுகளின் முன்பு நயினாதீவுக்கு வெளியிலிருந்து குறிப்பாக சோழநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிற்பிகள், பிராமணர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தவர், உறவினர், வேலையாட்களும், தொடர்ந்து வந்து சங்கு குளித்தலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களும் ஆகிய இவர்களுள் இங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்கள் என இத்தீவின் குடித்தொகை மெல்ல மெல்ல வளர்ந்து வந்தது. போர்த்துக்கேயர் ஆட்சிக்காலம் 1619 இல் யாழ்ப்பாணத் தமிழரசு போர்த்துக்கீசரிடம் வீழ்ந்தது. “கி.பி. 1620 இல் தொடங்கிய போர்த்துக்கீச தனியரசாட்சியில், முதற் தேசாதிபதியான பிலிப் தே ஒலிவேறா நல்லூரை வதிவிடமாக்கியவுடன் முன்கூறியபடி நல்லூர்க் கந்தசாமி கோயிலை இடித்து, அக்கோயிற் கற்களைக் கொண்டு கோட்டையும் வீடுகளும் கட்டினான். யாழ்ப்பாணத்தில் இருந்த சைவ, வைணவ ஆலயங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக இடிப்பித்தான். இதையறிந்த கோவிலதிகாரிகளும், அர்ச்சகர்களும் தத்தம் கோவில் விக்கிரகங்களைக் கிணறுகளிலும், குளங்களிலும் போட்டு மறைத்தார்கள். யாழ்ப்பாணத்திலன்றித் தமக்கெட்டிய மற்றும் பிற இடங்களில் எல்லாம் உள்ள புத்த, சைவ ஆலயங்கள் எல்லாவற்றையும் சமையம் வாய்த்துழி வாய்த்துழி பறங்கிகள் இடித்து நாசமாக்கிவிட்டனர்,” என்பது முதலியார் செ.இராசநாயகம் அவர்களது கூற்று. இக்காலத்தில் (கி.பி. 1620–1624 அளவில்) நயினாதீவுக் கோவில் அழிக்கப்பட்டது. நயினாதீவில் இருந்த கோவில் அழிக்கப்பட்ட பின்பு, போர்த்துக்கீசரும், அவர்களின் பின்வந்த டச்சுக்காரரும் அதனை மீள நிறுவுவதற்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும் டச்சுக்கார ஆட்சியின் இறுதிக்காலத்தே (கி.பி.1788 அளவில்) கோவில் இருந்த இடத்தில் சிறிய அளவில் வழிபாடு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது. ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் போர்த்துக்கீசர் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியம் எங்குமே பெயரளவுக்காகுதல் கத்தோலிக்க சமயம் பரவியது. இக்காலம் நயினாதீவில் எத்தகைய சமய மாற்றம் ஏற்பட்டது என்பது திட்டவட்டமாகத் தெரியவரவில்லை. ஆயினும் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில ஊரவர்கள் சிலர் அச்சமயம் ஏற்பட்ட சமய நெருக்கடியைத் தவிர்க்க முடியாதவராக விரும்பியோ விரும்பாமலோ மதம் மாறியுள்ளனர். கி.பி. 1788 இல் நாகம்மாள் வழிபாட்டை சிறிய அளவில் மீள ஆரம்பித்து வைத்தவர் என நம்பப்படும் திரு.இராமலிங்கர் இராமச்சந்திரரின் மகன் திரு.கதிரித்தம்பி, கிறீஸ்தவராக மதம் மாறித் தனது பெயரையும் ‘பிரான்சீஸ்க்கு கதிரித்தம்பி’ என்று மாற்றிக்கொண்டார். இவரது விசுவாசத்தை மெச்சி, ஒல்லாந்த அரசினர் இவருக்கு ‘நொத்தாரிஸ்’ உத்தியோகமும், கிராம வரி அறவிடும் அதிகாரமும் கொடுத்தனர். இவர் நயினாதீவில் மேரி மாதா கோவில் ஒன்றையும் அமைத்தாரென்றும், அக்கோவிலுக்கு வேண்டிய மணியையும், உதவியாள் ஒருவரையும் ஒல்லாந்த அதிகாரிகள் வழங்கியதாகவும் ஐதீகம். இவர் நொத்தாரிசாக பணியாற்றியபோது, ‘பிரான்சீக்கு கதிரித்தம்பி’ என்று தனது ஒப்பத்தை இட்ட காணி உறுதிகள் யாழ்ப்பாணம் காணிக் கந்தோரில் உள்ளன என்று திரு.க.சண்முகநாதபிள்ளை தனது நூலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும் திரு.சண்முகநாதபிள்ளை "பிரான்சீஸ்கு என்பது அவருடைய பெயர் அல்ல, அவருக்கு வழங்கப்பட்ட பட்டம்” என்று கூறியிருப்பது விந்தையாகவுள்ளது. திரு.இராமலிங்கர் இராமச்சந்திரரையும் அவரது மகன் திரு.கதிரித்தம்பியையும் மேல் உயர்த்திக் காட்டும் ஆர்வக் கோளாறினால் அன்பர் திரு.சண்முகநாதபிள்ளை தனது நூலின் 41, 42, 43 ஆம் பக்கங்களில் குறித்துள்ள பின்வரும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டுமேயானால், திரு.இராமலிங்கர் இராமச்சந்திரர் 165 ஆண்டுகளுக்கு மேல் (குறைந்தபட்சமாக கி.பி.1624 தொடக்கம் கி.பி. 1788 வரை) உயிர் வாழ்ந்த ஒருவராயிருந்திருக்க வேண்டும்: “கி.பி.1620க்கும் 1624க்கும் இடைப்பட்ட காலத்தில் முன்னர் கூறிய வீராசாமிச் செட்டியாரினால் கட்டப்பட்ட கோயில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பொருட்கள் சூறையாடப்பட்டன. கி.பி.1645ல் நயினாதீவிலுள்ள நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்குத் தோம்பேடுகள் எழுதப்பட்டன. இக்காலத்தில் பட்டர் மரபில் தோன்றிய இராமலிங்கர் இராமச்சந்திரரே ஏக எஜமானாகப் பணியாற்றினார்.” “போர்த்துக்கேயர் அழித்த கோயிலை இவருடைய (திரு.கதிரித்தம்பியுடைய) தந்தையார் இராமலிங்கர் இராமச்சந்திரரே சிறிய அளவில் கட்டுவித்தார். இவரே போர்த்துக்கேயர் கோவிலை இடித்தபோது அம்பாளை வல்லிக்காடு மேற்கு ஆலம்பொந்தில் ஒளித்துவைத்து சலியன் ஐயரைக் காவலுமாக வைத்தார். புதிய ஆலயம் கட்டும்வரை அம்பாளுக்கான பூசைகள் அனைத்தையும் நயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயத்தில் செய்வித்தார். கட்டுவித்த காலம் கி.பி.1788 ஆகும்.” மேலும், நாகம்மாள் கோவிலை அழிக்கவந்த ஒல்லாந்தர் “இது மாதா கோவில்” என்று திரு.கதிரித்தம்பி எடுத்துக் கூறியதும் அவரது வாக்கை வேத வாக்காக எடுத்துக்கொண்டு, (கோவிலுக்குள்ளேபோய் அங்கு வழிபடு பொருளாக எந்தக் கடவுள் இருக்கிறார் என்பதைக் கூட பார்த்து உறுதிசெய்துகொள்ளாமல்) திரும்பிப்போய்விட்டார்கள் என்று திரு.சண்முகநாதபிள்ளை கூறுவதை நம்புவதற்குச் சங்கடமாக உள்ளது. ஆகவே, திரு.இராமச்சந்திரர் கதிரித்தம்பி ஒல்லாந்தர் காலத்தில் நொத்தாரிஸ், மற்றும் கிராம வரிவசூலிப்பவர் ஆகிய பதவிகளைப் பெறுவதற்காக கிறீஸ்தவராக மதமாற்றம் பெற்று இருக்கலாமென்றும், ஒரு மேரிமாதா கோவிலையும்கூட அவர் நிறுவி நிருவகித்து இருக்கலாமெனவும் கருதுவதற்கு ஆதாரங்களுண்டு. ஒல்லாந்தர் தமது சமயத்தை யாழ்ப்பாண இராச்சியத்தில் வசித்த சாதாரண பொது சனங்கள் மத்தியிலேகூட வலுக்கட்டாயமாகத் திணித்தார்கள் என்று முதலியார் திரு.செ.இராசநாயகம் கூறுகிறார். “தொடக்கத்தில் சமய விருத்தியைப்பற்றிக் கடுமையாக வற்புறுத்தாத ஒல்லாந்தர், காலம் செல்லச் செல்ல அதன் விருத்தியில் நாட்டம் வைத்தவராய் சனங்கள் சைவசமய ஆசாரங்களை முற்றாக நீக்கி கிறிஸ்தவ ஆலயங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் போகவேண்டுமென்றும், பிள்ளைகள் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களுக்குப் போய் கிறீஸ்தவ சமய பாடங்கள் கற்க வேண்டுமென்றும் கட்டளை இட்டனர்” என்பது முதலியார் கூற்று. சாதாரண பொது சனங்களையே இவ்விதம் நெருக்கிக் கிறீஸ்தவராகத் தூண்டிய ஒல்லாந்தர், நொத்தாரிஸ் மற்றும் கிராம வரி வசூலிப்பவர் பதவிகளை ஒரு சைவ சமயத்தவருக்குக் கொடுத்திருப்பார்கள் என்பது நம்பக்கூடியதன்று. நயினாதீவில் ஒரு கிறீஸ்தவ வழிபாட்டுத் தலம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. ஆங்கில மொழிக் கல்வியையும் கிறீஸ்தவ சமயப் பிரசாரகர்களே முதன்முதலில் நயினாதீவில் தொடக்கிவைத்தனர். தீவுப்பகுதி மக்களின் குடியமர்வு அயல்தீவுகளில் வசித்த மக்களில் சிலரும் நயினாதீவில் திருமணத் தொடர்பு காரணமாக குடிவந்துள்ளார்கள். அதிகமான திருமணத் தொடர்புகள் பக்கத்தேயுள்ள புங்குடுதீவு மக்களுடன் ஏற்பட்டதைத் தொடர்ந்து கணிசமான தொகையினரான புங்குடுதீவு மக்கள் நயினாதீவுக்கு வந்து குடியமர்ந்துள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புங்குடுதீவில் வசித்த மாதுங்கர் என்பவரின் மகன் சரவணமுத்து நயினாதீவில் உடையாராக நியமிக்கப்பட்டார். இவர் நயினாதீவில் திருமணம்செய்து அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கியதன் பின்பு அவரது உறவினர் பலரும் நயினாதீவில் திருமணஞ்செய்து அங்கு சென்று குடியேறி வாழத் தலைப்பட்டனர். இவ்வாறே நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு மற்றும் தீவக மக்களும் திருமணத் தொடர்பு காரணமாக குடிவந்துள்ளனர். நயினை நாகம்மாள் தேவியின்மீது தீவுப்பகுதி மக்கள் கொண்ட பற்றும், பக்தியும் நயினாதீவு மக்களுடனான இத் திருமணத் தொடர்புகளை ஊக்குவித்த மற்றொரு காரணியாகலாம். நயினாதீவில் பௌத்தம் 1939 இல், நயினாதீவில் சிங்கள புத்த பிக்கு ஒருவர் வந்து, தெருவெங்கும் சுற்றித் திரிந்தார். மர நிழலில் படுத்து உறங்குவார். ‘ஒரு நாளுக்கு ஒரு வீட்டில்’ என்று முறை வைத்துப் போய் உணவு பெற்று உண்பார். சில ஆண்டுகள் செல்ல, நயினை திரு.இளையவர் கந்தர் என்பவர் திரு.நல்லதம்பி என்பவருக்கு ஈடுவைத்து நீண்டகாலமாக மீட்காமல் விட்டிருந்த சிறு துண்டுக்காணி ஒன்றை நல்ல விலை தந்து தான் வாங்கிக்கொள்வதாக காணி உரிமையாளரிடம் (திரு.இளையவர் கந்தர்) ஒரு ரூபாவை முற்பணமாகக் கொடுத்துவிட்டு திடீரென்று ஒருநாள் அந்த பிக்கு வெளியூர் புறப்பட்டுப் போனார். சில நாட்களில் அவர் திரும்பிவந்து, கணிசமான விலைக்கு அக்காணித் துண்டை வாங்கி, சில வருடங்களில் புத்த தாதுகோபம் ஒன்றை 1944 இல் நயினாதீவில் அமைத்தார். சிங்கள யாத்திரீகர் வருகை இந்தக் காலகட்டத்திலேயே முதன்முதலாக நயினாதீவில் இடம்பெற ஆரம்பித்தது. இதற்கு முன்னர் நயினாதீவில் தமிழ்ப் புத்தர் கோவில் ஒன்று இருந்திருக்கலாம். அல்லாமலும் இருக்கலாம். நயினாதீவு அல்ல - யாழ்ப்பாணக் குடாநாடுதான் ‘மணிபல்லவம்’ எனவும் ‘நாகதீபம்’ எனவும் அழைக்கப்பட்டது என்பது நிறுவப்பட்டுள்ள நிலையில், இதனை எவரும் திட்டவட்டமாகக் கூறுவதற்கு முடியாது. ஆனால், இங்கே சிங்களவர்களது புத்த விகாரை இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. கிறீஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. ஆறாம் றூற்றாண்டு வரை பௌத்தம் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் தழைத்திருந்த காலத்து, நாகதீபத்தில் - அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டில் - வாழ்ந்த தமிழ் நாகர்களும் அவர் பின்னோரும் பௌத்தர்களாக மதம் மாறி வாழ்ந்த காலத்தில், நயினாதீவிலும் பௌத்தமதம் காலூன்றி இருந்திருக்கலாம். மாமன்னர் முதலாம் இராஜஇராஜ சோழ தேவரும், அவரது புதல்வர் முதலாம் இராசேந்திர சோழ தேவரும் தமது நண்பரான சிறீவிசயத்து அரசரின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க நாகபட்டினத்தில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில்கூட மாபெரும் புத்தர் கோவில் ஒன்றை அமைத்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. சில நூற்றாண்டுக்கு முன்னர் பெருமளவுக்கு பௌத்தராக வாழ்ந்தோரின் சந்ததியாரே இன்றுள்ள தமிழர்கள் ஆவர். ஆகவே, 1939 இல் நயினாதீவுக்கு வந்த புத்தபிக்குவால் 1944 அளவில் இங்கு ஒரு புத்த விகாரமும் தாதுகோபமும் அமைக்கப்பட்டதற்கு முன்பு, நயினாதீவில் புத்தர்கோவில் ஏதாவது எக்காலத்திலாவது இருந்திருக்குமாயின் பௌத்தர்களாயிருந்த நயினையில் வாழ்ந்த தமிழ் நாகர்கள் சைவர்களாக மதமாற்றம் பெற்றமையாலும், அதன்பின் பௌத்தர்கள் யாரும் இங்கு குடியேறாமையாலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அக்கோவிலும், நயினார் (அல்லது நாகம்மாள்) கோவிலைப் போன்று கி.பி.1620 அளவில் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டது என்று கருத இடமுண்டு. அப்படியான புத்தர்கோவில் இங்கே இருந்திருக்குமாயின், அந்தத் தமிழ்ப் பௌத்தர் கோவில் நயினாதீவில் எந்த இடத்தில் அமைந்திருந்தது என்பது இதுவரை ஆதாரபூர்வமாக அறியப்படவில்லை. வட இலங்கையில் வாழ்ந்த நாகர்கள் முதலில் நாகவழிபாட்டுடன் சங்கமித்த பௌத்தத்தை ஏற்றுக்கொண்டு பௌத்தர்கள் ஆகினர். பின், கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் சைவம் தழைக்க அவர்களும் சைவசமயத்தைச் சார்ந்தனர். ஆயினும், எக்காலத்தும் நாகவழிபாட்டை மறந்தாரல்லர். நயினாதீவிலுள்ள நாகம்மாள் கோவில் கருவறைக்குள் இன்றும் நிலைத்திருக்கும் ஐந்தலை நாகத்தின் தொன்மை வாய்ந்த சிலா வடிவம் இதனை நிருபிப்பதாக உள்ளது. தொடர்ச்சியும் தொன்மையும் கொண்டதாக நயினாதீவில் நிலைத்திருக்கும் ஒரே வழிபாடு நாகவழிபாடு மட்டுமே. பௌத்த சமய வழிபாடோ, இந்து சமய வழிபாடோ அல்ல. பேரினவாத நெருக்கடி பிரித்தானியர் ஆட்சி முடிவடைந்ததை அடுத்து, தமிழ் ஈழத்தின் ஏனைய சிற்றூர்களை விடவும் அதிக அளவில் சிங்களப் பேரினவாதப்பிடி நயினாதீவை இறுக்கத்தொடங்கிற்று. 1958ஆம் ஆண்டில் அது உச்சக் கட்டத்தை அடைந்தது. தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட தமிழர்களின் சாத்வீகமான போராட்டத்தை அடக்க இனக்கலவரத்தை ஏவிவிட்டனர் சிங்கள ஆட்சியாளர்கள். இந்த இனக்கலவரத்தின் காரணமாக தமிழ் இனத்திற்கு நேர்ந்த உயிரழிவுகளும் சொத்தழிவுகளும் எழுதப்புறப்பட்டால் முடிவின்றி நீளும். கொழும்பிலும் ஏனைய தென்பகுதி நகரங்களிலும் தாக்கப்பட்டும், உடைமைகளை இழந்தும் அகதிகளாகி தமது உற்றார் உறவினர்கள் தமிழ் ஈழப் பகுதிகளுக்குத் திரும்பி வந்ததாலும், பலர் கொல்லப்பட்டதாலும் தமிழர்கள் தமிழ்ப் பகுதிகளில் ஆங்காங்கே சிங்களவர்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆயினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிங்களவர் எவருமே கொல்லப்படவில்லை. இந்த வேளையில், நயினாதீவில் இருந்த புத்தபிக்கு 1958.05.29இல் காரைநகர் கடற்படைமுகாமில் சென்று தஞ்சமடைந்ததன்பின்பு, நயினாதீவிலுள்ள பௌத்த விகாரை 1958 யூன் மாத முற்பகுதியில் தாக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து யூன் 10 ஆம் நாள் பகல் ஒரு மணி அளவில் பொலிசாரும் கடற்படையினரும் நயினாதீவுக்கு வந்திறங்கி, ஏழு ஊரவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றதுடன் பல வீடுகளையும், கடைகளையும் எரித்து அழித்தனர். அத்துடன் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலையும் அவர்கள் எரித்துச் சேதப்படுத்தினர். கோவிலைச் சூழவிருந்த மடங்கள் யாவும் எரித்து முற்றாக அழிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் ஏழுபேரும் காரைநகர் கடற்படை முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மாலை சுமார் 7.30 மணிவரை அங்கு வைத்து பொலிசாராலும், கடற்படையினராலும் அடித்து நொருக்கப்பட்டனர். பின்னர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, மீண்டும் அங்கும் பொலிசாராலும், கடற்படையினராலும் நடுச்சாமம் வரை அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். மறுநாள் - அதாவது 11. சூன் 1958 அன்று - காலை இந்த ஏழுபேரும் கடற்படைப் படகு ஒன்றில் மீண்டும் நயினாதீவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்தப் படகில் பொலிசாரும், கடற்படையினரும், ஊர்காவற்றுறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, துணை ஆய்வாளர் சிட்னி ஐவர் பளிப்பான Sub-Inspector Sydney Ivor Palipane) என்பவரும் சென்றனர். நயினாதீவில் அன்றைய தினம் மேலும் பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நயினாதீவுப் பால முகப்பில் ‘சிங்களவரே திரும்பிப் போங்கள்’ (Sinhalese Go Boack) என்று ஆங்கிலத்தில் தார் கொண்டு எழுதப்பட்டு இருந்த வாசகங்களை நாக்கால் நக்கும்படி படையினர் சில கைது செய்யப்பட்ட ஊர்மக்களைப் பலவந்தப்படுத்தி செய்வித்தார்கள். அன்று மாலை சுமார் 6.30 மணிவரை நயினாதீவில் படையினரின் அட்டகாசங்கள் தொடர்ந்தன. மாலை 6.30 மணிக்கு நயினாதீவில் இருந்து புறப்பட்ட படகு காரைநகர் கடற்படை முகாமுக்கு சென்றடைந்ததும் கைது செய்யப்பட்ட நயினை மக்கள் அனைவரும் வேறு ஒரு படகுக்குள் மாற்றப்பட்டு அதனுள் வைத்துத் தாக்கப்பட்டனர். இரவு 9.15 மணி அளவில் கைது செய்யப்பட்டோர் யாவரும் ஊர்காவற்றுறை பொலிசு நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு, இரவு முழுவதும் அடித்தும், வேறு அநாகரிகமான விதத்திலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். மறுநாள் 12. சூன் 1958 பகல் 12.00 மணிவரை இவர்கள் பொலிசு நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட பின்பு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிவான் திரு.பி.ஜி.எஸ்.டேவிட் முன்னிலையில் அன்றைய நாள் முன்னிலைப்படுத்தப்பட்டு, அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். ஒரு வாரத்தின் பின்பு, விளக்க மறியலில் இருந்தவர்களில் மூவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஏனையோரில் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடைசி நபர் 3. சூலை 1958 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்டு, அடித்துத் துன்புறுத்தப்பட்ட எந்த ஒருவருக்கும் எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் பொலிசாரால் நீதிமன்றத்தில தாக்கல் செய்யப்படவில்லை. தம்மை அடித்துக் கொடுமைப்படுத்தியோரை அடையாளம் காட்ட முடியுமென்று தாக்கப்பட்டவர்கள் கூறியும் அரசாங்கம் அவர்களைத் தாக்கிய பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த விதமாக அப்பாவி நயினை மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டமையும், அது தொடர்பாக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமையும் பிற்காலத்தில் புத்த விகாரை நிருவாகத்தின் எந்தச் செயலையும் கண்மூடிப்பார்த்திருக்கும் போக்கை நயினாதீவில் வளர்த்துவிட்டன எனலாம். பிக்குவும் தனது தேவைகளுக்கு உதவுவதற்கும், தனக்கு ஊரவர்பற்றி தகவல் தருவதற்கும் நயினாதீவைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு குடும்பத்தவர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார். 1979 மே மாதத்தில் இந்த புத்தபிக்கு புத்த விகாரைக்கு வழிபாட்டுக்காக வரும் யாத்திரீகர்கள் தங்குவதற்கான மடம் அமைப்பதற்கென அரசிடமிருந்து தான் பெற்ற அரச காணிக்குள் கடைகளைக் கட்டி வியாபார நோக்கத்துக்காக பயன்படுத்த முற்பட்டபோது இந்தக் கட்டுரையாளர் அதனை எதிர்த்து துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு, பொதுசன அபிப்பிராயத்தை பிக்குவின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக திரட்ட முயன்றவேளை, 18. மே 1979 இல் பிக்குவின் தூண்டுதலின் பேரில் கொழும்பில் வைத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு சில மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். எனினும் நீதிமன்றில் பொலிசாரால் குற்றச்சாட்டுப் பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படாததால் பின்பு விடுதலை செய்யப்பட்டார். புத்தபிக்கு அமைத்த கடைகளுள் ஒன்று மேலே குறிப்பிடப்பட்ட குடும்பத்தினருக்குக் கொடுக்கப்பட்டது. பிக்குவின் பணத்தை ஊருக்குள் வட்டிக்குக் கொடுப்பதையும் இவர்களே கவனித்து வட்டியிலும் பங்கு பெற்றுக்கொண்டனர். ஐம்பது ஆண்டுகளாக தானும் தனக்கு முன் தனது குடும்பமும் நயினாதீவிலுள்ள பிக்குவுக்கு உணவு வழங்கி வருவதாக இக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்ததாக 2001 யூன் மாதத்தில் வெளிவந்த The Sri Lanka Reporter என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பேரினவாதிகளின் மற்றொரு படைத் தாக்குதல் நயினாதீவின் மீது 3. மார்ச் 1986 அன்று நிகழ்ந்தது. இது தொடர்பாக 5. மார்ச் 1986 இல் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகை பின்வருமாறு விவரிக்கின்றது: “ஆலயத்தின் பெரிய கதவு 65 வீதம் எரிந்திருக்கக் காணப்பட்டது. அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள், பட்டாடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.” “நயினை அம்மன் கண்ணீர் விடுகிறாள்! ஆலயத்தின் நட்டம் 20 இலட்சம்!” “நால்வர் பலி!(உண்மையில் ஐவர் அன்று கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு சடலம், இச்செய்தி வெளியான பின்பு கண்டு எடுக்கப்பட்டது.) வீடுகள் தீக்கிரை!”, “நாகபூசணி அம்மனின் இரண்டு தேர்கள், மஞ்சம் தீக்கிரையாகின!”, “நகைகளைக் கொள்ளையடித்த பின்பு வீட்டுக்காரரைச் சுட்டுக்கொன்றனர்”, “படகுகள் எரிப்பு!, போக்குவரத்து பாதிப்பு!” அனைத்துலக மன்னிப்புச் சபையின் (Amnesty International) வெளியீடான “Sri Lanka: Disappearances” (D இணைப்பு – பக்கம் 24) என்ற பிரசுரத்தில் அன்று கடற்படையினர் நயினாதீவில் நடத்திய தாக்குதல் குறித்து முழு விவரங்களும் பிரசுரிக்கப்பட்டன. பின்னர், 1990 யூலையில் ஒரு நயினைவாசி படையினரால் கைக்குண்டு வீசிக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராசா அவர்கள் நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்தார். இங்குள்ள கடற்படை முகாம் 24. சூலை 1983 அன்று நிறுவப்பட்டு, தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. இதன் விளைவாக, தற்போது நடுத்தர வயதிலும் இளைஞர்களாகவும் உள்ள தலைமுறைகளைச் சேர்ந்தோர் வாழ்நாள் முற்றிலும் உளத் தாக்கங்களுக்குட்பட்டு வாழ்கின்ற நிலை உள்ளது. அத்துடன், பல தனியார் வீடுகள், காணிகள், கிராம முன்னேற்றச் சங்கத்தின் அலுவலகம், வழித்துணை வைரவ சுவாமி கோயில், பொது வீதிகள் முதலியன கடற்படையினரால் அழிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. 1993ம் ஆண்டு தமிழர்களின் உரிமைப்போர் நடைபெற்ற வரலாற்று காலப்பகுதியிலே பொத்த துறவிக்கு உதவி வந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் போயில் நிர்வாக சபையிலும் இடம்பெற்று ஆலைய பரிபாலனம் செய்து கொண்டிருந்தனர். எல்லா ஆலையங்களும் தமது திருப்பணி பணத்தில் சிறுபகுதியை தமிழர் உரிமை போராட்டத்திற்கு வழங்கிய போதும் நிதிபொறுப்பாளராயிருந்த குறிப்பிட்ட நபர் தமிழர்களுக்கு பணம் கொடுக்க முன்வரவில்லை. பண்ணைப்பாலம் உடைக்கப்பட்டு போக்கு வரத்து தடைசெய்யப்பட்டிருந்த போது நயினாதீவு உணவுத்தேவைக்களுக்காக மிகுந்த நெருக்கடியை எதிர் நோக்கியது குறிப்பிட்ட நபர் குடும்பத்திற்கு இராணுவத்தினர் உணவு ஏற்பாடுகளை அளித்து வந்தனர். ஆசிரியரான அவருக்கு அதிபர் வேலையும் பின்னர் அரசாங்கத்தின் சமாதான நீதவான் பதவியும் கிடைத்தது. மக்கள் சிலர் கடல் வழியாக திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்தனர். 2011ம் ஆண்டு இங்குள்ள வென். நவன்டாகல பெத்த கித்தி திஸ்ஸ நாயக்க தேரோ என்ற பௌத்த துறவி ஒரு அதி நவீன படகை வாங்கி சேவையில் ஈடுபடுத்தினார். இதில் ஒரு தடவை பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் ஏனய படகுகளில் ஆறு தடவை ஏற்ற வேண்டிய பயணிகளின் எண்ணிக்கையும் சமமானது. இதனால் உள்ழூர் படகு சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த படகு சேவையாளர்கள் துறவியின் படகின் இயந்திரத்திற்குள் இரவேடிரவாக மண்ணை கொட்டி இயந்திரத்தை பழுதடைய வைக்கனர். வழிபாட்டுத் தலங்கள் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் நயினாதீவு செம்மணத்தம்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் நயினாதீவு தம்பகைப்பதி ஸ்ரீ வீரபத்திரசுவாமி ஆலயம் நயினாதீவு காட்டுக் கந்தசுவாமி கோயில் இரட்டங்காலி முருகன் ஆலயம் வேள்விநாயன் கோயில் நயினாதீவு தில்லைவெளி பிடாரி அம்பாள் ஆலயம் நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் நயினாதீவு பிரண்டையம்பதி ஶ்ரீ காளி அம்மன் ஆலயம் முத்துக்குமாரசாமி கோவில் (சுவாமிகளின் சமாதி ஆலயம்) நயினாதீவு வல்லிக்காடு ஸ்ரீ ஆலடி அம்மன் ஆலயம் ஐயனார் கோயில் நயினாதீவு மலையடி ஸ்ரீ சபரி ஐயப்பன் ஆலயம் நயினாதீவு வங்களாவடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் நயினாதீவு விநாயகர் வீதி சிவஞான வைரவர் கோவில் நயினாதீவு படகுத்துறை ஆலடி அருள்ஞான வைரவர் ஆலயம் நாகதீப ராஜ மகா விகாரை நயினாதீவு புனித அந்தோனியார் ஆலயம் நயினாதீவு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் துணை நூல்கள் தேர்த் திருப்பணிச் சபை மலர்(1957)- முதலியார் குல.சபாநாதன் யாழ்ப்பாண வைபவ விமர்சனம்(1928)- நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் நயினாதீவு நாகம்மாள்(2003)- நாகேசு சிவராச சிங்கம் குடமுழுக்குவிழா மலர்(2005)- கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவில் யாழ்ப்பாண சரித்திரம்(1933)- முதலியார் செ.இராசநாயகம் Sketches of Ceylon History (1906)- Sir Pon Arunachalam Ancient Jaffna (1926)- Mudaliyar C. Rasanayagam ஈழநாடு, யாழ்ப்பாணம் - 5. மார்ச் 1986 அன்று வெளியான இதழ் Sri Lanka: Disappearances- Amnesty International Publication-AI Index: ASA37/08/86- நயினை நாகபூசணி – ஆலய வரலாறும் அருட் பாமாலையும்(1981)- நா.க.சண்முகநாதபிள்ளை, B. Sc. நயினார்தீவின் வரலாறு: (2006) நாகேசு சிவராச சிங்கம் கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம். சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம். செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம். சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா. இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை. மேற்கோள்கள் வெளியிணைப்புகள் நயினாதீவு இணையம் - Nainativu.Org இணையத்தில் நயினாதீவு - Nainathivu.com www.nainativu.net www.nainativu.com Nainativu, Srilanka நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் உத்தியோகபூர்வ இணையத்தளம் சப்த தீவுகள் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும் தமிழர் இடையே பௌத்தம் இலங்கையின் தீவுகள் யாழ்ப்பாண மாவட்டம்
5047
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
பெர்லின்
பெர்லின் இடாய்ச்சுலாந்து நாட்டின் தலைநகராகும். மேலும் இது இடாய்ச்சுலாந்தின் மிகப்பெரிய நகரமுமாகும். இந்நகரத்தில் மொத்தம் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இருந்து இந்நகரம் உள்ளது. இது கிழக்கு இடாய்ச்சுலாந்தில் போலந்து எல்லையிலிருந்து 110 கிலோமீட்டர் மேற்காக அமைந்துள்ளது.இது ஸ்ப்ரீ நதிக் கரையில் அமைந்துள்ளது.இந்த நகரத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு காடுகளாலும் பூங்காவினாலும் தோட்டங்களாகவும் ஆறுகள் மற்றும் ஏரிகளாகாவும் அமைந்துள்ளது. பெர்லின் நகரம் மருத்துவத்திலும் மருத்துவத் தொழில்நுட்பத்திலும் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ஒரு நகரம் ஆகும். மருத்துவத்துறையில் பெர்லின் நகர மருத்துவ நிபுணர்கள் பாரிய ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக செல்லுலார் நோயியலின் தந்தை என ருடொள்வ் விர்ச்சொவ் அழைக்கப்பட்டார். அதேவேளை ராபர்ட் கொக் ஆந்த்ராக்ஸ், வாந்திபேதி, காச நோய் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்தார். வரலாறு 12 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை பெர்லின் நகரத்தில் மக்கள் வசித்ததற்கான மிகப்பழைய ஆதாரங்களாக ஏறத்தாழ 1192ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படும் மரத்தாலான கூரை வளை ஒன்றும் 1174ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படும் மரத்தாலான வீட்டின் பாகங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்றைய பெர்லின் பகுதியில் நகரங்கள் இருந்தமை குறித்த மிகப்பழைய குறிப்புகள் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.மேலும் பெர்லினின் மைய பகுதியில் அமைந்நுள்ள ஃபிஷெரின்சல்( Fischerinsel ), காலின்( Cölln ) எனும் இரண்டு பகுதிகளை பற்றி 1237ம் ஆன்டிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. 17 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை முப்பதாண்டு போரின்(1618-1648) முடிவில் பெர்லின் பேரழிவிற்கு உள்ளானது. அதிலிருந்த மூன்றில் ஒரு பகுதி வீடுகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன். மேலும் நகரம் அதன் மொத்த மக்கள் தொகையில் பாதியை இழந்தது. அதன் பின் பெருமளவு குடியேற்றங்கள் நடந்தது. அதன்பின் 19 ஆம் நூற்றாண்டின் போது தொழிற்புரட்சியின் போது பெர்லின் மாற்றம் அடைந்தது. இதனால் நகரின் பொருளாதாரம் மற்றும் மக்கள் அதிகரித்து, பெர்லின் இடாய்ச்சுலாந்தின முக்கிய ரயில், பொருளாதார மையமாக ஆனது. 20 ஆம் நூற்றாண்டு முதல் உலகப்போருக்குப் பின் 1920 ஆம் ஆண்டு கிரேட்டர் பெர்லின் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி பெர்லினை சுற்றியுள்ள புறநகர் நகரங்கள், கிராமங்கள், மற்றும் தோட்டங்களில் இணைக்கப்பட்டு பெர்லின் விரிவாக்கப்பட்டது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு, பெர்லின் 4 மில்லியன் மக்கள் தொகை கொண்டதாக மாறியது. 1945ல் இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெர்லின் இரண்டாக பிரிக்கப்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு பெர்லின் எனப்பட்டது. பின்னர் 1990 இல் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. புவியியல் பெர்லின் இடாய்ச்சுலாந்து நாட்டின் தலைநகராகும். மேலும் இது இடாய்ச்சுலாந்தின் மிகப்பெரிய நகரமுமாகும். இந்நகரத்தில் மொத்தம் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இருந்து இந்நகரம் உள்ளது. இது கிழக்கு இடாய்ச்சுலாந்தில் போலந்து எல்லையிலிருந்து 110 கிலோமீட்டர் மேற்காக அமைந்துள்ளது. சுகாதார வசதிகள் பெர்லின் நகரம் மருத்துவத்திலும் மருத்துவதொழில்நுட்பத்திலும் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ஒரு நகரம் ஆகும். மருத்துவத்துறையில் பெர்லின் நகர மருத்துவநிபுணர்கள் பாரிய ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக செல்லுலார் நோயியலின் தந்தை என ருடொள்வ் விர்ச்சொவ் அழைக்கப்பட்டார். அதேவேளை ராபர்ட் கொக் ஆந்த்ராக்ஸ், வாந்திபேதி, காச நோய் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி கண்டுபிடித்தார். காலநிலை கோடைகாலம் சூடானதும் ஈரப்பதன் அதிகமுடையதுமாகக் காணப்படுகின்றது. கோடைகாலத்தில் சராசரி உயர் வெப்பநிலை 22-25 பாகை செல்சியஸ் ஆகக் காணப்படுகின்றது. மேலும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-25 பாகை செல்சியஸ் ஆகும். சராசரி மழையளவு 22 அங்குலமாக(568 மிமீ) உள்ளது. அவற்றில் ஐந்தில் நான்கு பங்கு பனிப்பொழிவாக விழுகிறது. பொருளாதாரம் 2009 ஆம் ஆண்டில், பெர்லின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7% வளர்ச்சி பெற்றது. (ஒட்டுமொத்த இடாய்ச்சுலாந்து -3,5%) மேலும் மொத்த உற்பத்தி € 90 பில்லியன் யூரோ ஆக இருந்தது ($117 பில்லியன்). பெர்லினின் பொருளாதாரத்தில் 80% சேவைத்துறை மூலம் வருகின்றது. அதன் வேலையின்மை விகிதம் செப்டம்பர் 2011 இல் 15 ஆண்டுகளில் குறைந்தபட்ச அளவான 12.7% ஐ (இடாய்ச்சுலாந்து சராசரி: 6.6%) அடைந்து நிலையாக இருக்கிறது. நிறுவனங்கள் சீமென்ஸ், பார்ச்சூன் குளோபல், 500 தனியார் மற்றும் 30 இடாய்ச்சுலாந்து DAX நிறுவனங்கள் பெர்லினைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றது. அரசுக்குச் சொந்தமான ரயில்வே பேர்லின் தலைமையிடமாக, டச்ஷி பான்( Deutsche Bahn) நிறுவனங்களின் தலைமையகம் பெர்லினில் உள்ளது. மேலும் நகரில் பல இடாய்ச்சுலாந்து மற்றும் சர்வதேச நிறுவனங்களின் வர்த்தக அல்லது சேவை மையங்கள் உள்ளன. பெர்லின் டைம்லர் கார்கள் உற்பத்தி மற்றும் பி.எம்.டபில்யு (BMW) பேர்லினில் மோட்டார் சைக்கிள்கள் தொழிற்சாலைகளின் தலைமையிடமாக உள்ளது. தலைமையிடமாக முக்கிய மருந்து நிறுவனங்கள் உள்ளன, இடாய்ச்சுலாந்தின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிறுவனமான "ஏர் பெர்லின்"-ன் தலைமையிடமாக உள்ளது. போக்குவரத்து பெர்லினின் போக்குவரத்து உள்கட்டமைப்பு மிகவும் சிக்கலான பலவிதமான போக்குவரத்து முறைகளை உடையது. நீர் வழிப்பாதை 979 பாலங்களுடன் உடைய நகர நீர்வழிதடங்களின் மொத்த நீளம் 197 கிலோமீட்டர். சாலைகள் பெர்லினின் வழியாக செல்லும் சாலைகளின் நீளம் 5.334 கிலோமீட்டர் (3,314 மைல்கள்) ஆகும். 2006 ஆம் ஆண்டில், 1,416 மில்லியன் மோட்டார் வாகனங்கள் நகரம் பதிவு செய்யப்பட்டன. 2008ம் ஆண்டு பேர்லின் 1000 குடியிருப்பாளர்களுக்கு 358 கார் என்ற விகிதத்தில் இடாய்ச்சுலாந்து மற்றும் முக்கிய ஐரோப்பிய நகரங்களின் குறைந்த தனிநபர் கார்கள் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. ரயில் பாதைகள் நீண்டதூர ரயில் பாதைகள் பெர்லினை இடாய்ச்சுலாந்தின் முக்கிய நகரங்களுடனும் மற்ற அனைத்து அண்டை ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல நகரங்களுடனும் இணைக்கின்றது. விமான நிலையங்கள் பெர்லினில் இரண்டு வர்த்தக விமான நிலையங்கள் உள்ளன.இதில் தெகல்(Tegel) விமான நிலையம் நகர எல்லைக்குள் உள்ளது, மற்றும் ஷ்கானிஃப்ல்டு(Schönefeld) விமான நிலையம் பெர்லினின் தென்கிழக்கு எல்லைக்கு வெளியே பிராண்டன்பேர்க் மாநிலத்தில் அமைந்துள்ளது. மிதிவண்டி பாதை பெர்லின் அதன் மேம்பட்ட சைக்கிள் பாதையின் அமைப்புக்காக பிரபலமானது. பெர்லினில் 1000 குடியிருப்பாளர்களுக்கு 710 மிதிவண்டிகள் உள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நகரில் சுற்றி தினசரி 500,000 மிதிவண்டிகள் ஓடுகின்றது. 2009 ல் இது மொத்த போக்குவரத்தில் 13% ஆகும். சகோதர நகரங்கள் பெர்லின் 17 நகரங்களுடன் அதிகாரப்பூர்வ கூட்டுறவு வைத்துள்ளது. பெர்லின் முதன்முதலில் லாஸ் ஏஞ்சல்ஸ் உடன் 1967 ஆம் ஆண்டு சகோதர நகரங்களுக்கான உடன்படிக்கையிட்டது.அதன் பின்னர் படிப்படியாக இது விரிவுபடுத்தப்பட்டது.அவை இணைப்புகள், மேற்கோள்கள் Berlin – britannica.com Berlin.de —Official Website Exberliner - Monthly English-language magazine for Berlin செருமானிய நகரங்கள் ஐரோப்பியத் தலைநகரங்கள் உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்
5048
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
ஏதென்ஸ்
ஏதென்ஸ் கிரேக்க நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். இது கிரேக்க புராணத்தில் வரும் பெண்கடவுளான ஏதீனா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், சுமார் 3400 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1896 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றன. வரலாறு ஏதென்ஸ் நகரம், குறைந்தது 7000 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக மனிதர் வாழும் இடமாக விளங்குகின்றது. கி.மு.1400 அளவில் மைசீனிய நாகரிகத்தின் முக்கிய பிரதேசமாக ஏதென்ஸ் கோட்டை (Acropolis) விளங்கியது. இரும்புக் கால புதையல்களிலிருந்து கி.மு.900 முதல் இப்பிரதேசத்தில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் முதன்மைபெற்ற நகரமாக விளங்கியமை புலப்படுகின்றது. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக எழுச்சிகளின் விளைவாகக் கி.மு.508 இல் கிளீஸ்தீன்[sனால் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் பயனாகச் சனநாயக முறைமை ஏதென்சில் தோற்றம்பெற்றது. புவியியல் அட்டிகாவின் மத்திய சமவெளியில் நான்கு மலைகளின் நடுவே ஏதென்ஸ் அமைந்துள்ளது. இவற்றுள் மிக உயரமான பர்ணிதா மலை வடக்கேயும், இரண்டாவது உயரமான பென்டெலி மலை வடகிழக்கிலும், ஹைமெட்டஸ் மலை கிழக்கிலும், ஏகலியோ மலை மேற்கிலும் அமைந்துள்ளன. பர்ணிதா மலை தேசிய பூங்காவாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது 1413 மீட்டர் (4,636 அடி) உயரமானது. ஏதென்ஸ் நகரம் பல குன்றுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் மிகப்பெரியது லைக்காவிற்றஸ் ஆகும். காலநிலை மாறிமாறி வரும் நீண்ட உலர் கோடைகாலமும் மிதமான குளிர்காலமும் ஏதென்ஸின் காலநிலையின் சிறப்பம்சமாகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி அக்டோபர் முதல் ஏப்ரல் வரை கிடைக்கின்றது. சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 414.1 மில்லிமீட்டர் ஆகும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் வரண்ட மாதங்கள் ஆகும். இக்காலத்தில் அரிதாக இடியுடன் கூடிய மழை பெய்கின்றது. குளிர்காலத்தில் அதிக மழைவீழ்ச்சி காணப்படுகின்றது. சனவரி மாத சராசரி வெப்பநிலை 8.9 °C ஆகும். ஏதென்ஸின் வடக்கு நகர்ப்புறங்களில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு காணப்படுகின்றது. அரசு ஏதென்ஸ், 1834இல் கிரேக்கத்தின் தலைநகரானது. ஏதென்ஸ் மாநகராட்சி அட்டிகா பிரதேசத்தின் தலைநகரமும் ஆகும். அட்டிகா பிரதேசம் 3,808 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய அட்டிகா பிரதேசத்தினுள் அடங்கும் ஏதென்ஸ் மாநகர்ப்பகுதி 2,928.71 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. அட்டிகா பிரதேசமானது 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏதென்ஸ் மாநகரப்பகுதி 39 சதுர கி.மீ. பரப்பளவுடைய இம்மாநகர்த்தின் மக்கட்டொகை, 2001இல் 664,046 ஆகும். இம்மாநகராட்சியின் தற்போதைய மேயர் கியொர்கோஸ் கமினிஸ் ஆவார். இது நிர்வாக நோக்கத்திற்காக 7 மாநகர மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மக்கட் பரம்பல் 2001இல் ஏதென்ஸ் மாநகரத்தின் உத்தியோகபூர்வ மக்கட்டொகை 664,046 ஆகும். மேலும் நான்கு பிரதேசப்பகுதிகளை உள்ளடக்கியதான ஏதென்ஸ் பெரும்பகுதியின் மக்கட்டொகை 2,640,701 ஆகும். கல்வி பனெபிஸ்டிமியோ சாலையிலுள்ள ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தின் பழைய வளாகம், தேசிய நூலகம் மற்றும் ஏதென்ஸ் கல்வியகம் என்பன 19ம் நூற்றாண்டில் முக்கிய மூன்று கல்விக்கூடங்கள். பற்றின்சன் சாலையிலுள்ள ஏதென்ஸ் பல்தொழில்நுட்ப பாடசாலை, நகரத்தின் இரண்டாவது உயர் கல்வி நிறுவனம் ஆகும். சுற்றுலாத்துறை மிக நீண்ட காலமாகவே சுற்றுலாத்தலமாக விளங்கும் ஏதென்ஸ், 2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளையொட்டி உட்கட்டமைப்பு மற்றும் சமூக வசதிகள் என்பவற்றில் பெரிதும் மேம்பாடடைந்துள்ளது. இங்கு பல அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. போக்குவரத்து சிறந்த புகைவண்டி மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் ஏதென்ஸின் மிகப்பெரிய பேருந்து சேவை நிறுவனமாக 'ஏதெல்' விளங்குகின்றது. ஏதென்ஸ் பெருநகரப் புகைவண்டி சேவை மின்சார புகைவண்டிகளை உள்ளடக்கியதான சிறந்த போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. ஏதென்ஸ் பன்னாட்டு விமான நிலையம் ஏதென்ஸ் நகருக்குக் கிழக்கே சுமார் 35 கி.மீ. தூரத்திலுள்ளது. பூங்காக்கள் பர்ணிதா தேசிய பூங்கா பாதைகள், நீரூற்றுக்கள், குகைகள் என்பவற்றால் வரையறுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக விளங்குகின்றது. சுமார் 15.5 ஹெக்டேயரில் அமைந்துள்ள ஏதென்ஸ் தேசிய பூந்தோட்டம் நகர மத்தியில் 1840இல் உருவாக்கப்பட்டது. ஏதென்ஸின் மிகப்பெரிய மிருகக்காட்சி சாலையான அட்டிகா மிருகக்காட்சி சாலை 20 ஹெக்டேயர் பரப்பளவுடையது. இங்கு 400 இனங்களைச் சேர்ந்த சுமார் 2000 விலங்குகள் காணப்படுகின்றன. விளையாட்டு தொன்மையான விளையாட்டுப் பாரம்பரியம் கொண்ட ஏதென்ஸில் 1896 மற்றும் 2004இல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. 2004 கோடை கால ஒலிம்பிக் போட்டியின் பொழுது ஏதென்ஸ் ஒலிம்பிக் மைதானம் புனரமைக்கபட வேண்டிய சுழல் ஏற்பட்டது, பின் புனரமைக்கப்பட்ட மைதானம் உலகின் மிக அழகான மைதானம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நாட்டின் மிகப் பெரிய மைதானமான இது 1994 மற்றும் 2007 ஆம் ஆண்டில் ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்தியது. ஒலிம்பிக் போட்டிகள் 1896 ஒலிம்பிக் போட்டிகள் பிரென்ச் நாட்டுகாரனார பிர்ரெ டி கூபெர்டின் மூலம் 1896இல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் தோற்றுவிக்கப்பட்டது. அவரது முயற்சிகளால் ஏதென்ஸ் நகரம் முதல் நவீன ஒலிப்பிக் போட்டியை நடத்தும் அரிய வாய்ப்பைப் பெற்றது. 1896யில் 123,000ஆக இருந்த நகரின் மக்கள் தொகை, இந்நிகழ்வு நகரின் சர்வதேச அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள உதவியது. சகோதர நகரங்கள் மேற்கோள்கள் ஐரோப்பியத் தலைநகரங்கள் கிரேக்க நகரங்கள் பண்டைய நகரங்கள் நகர அரசுகள் ஏதென்சு
5049
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
தோக்கியோ
தோக்கியோ (Tokyo, டோக்கியோ, சப்பானியம்: 東京, "கிழக்குத் தலைநகரம்"), அலுவல்முறையாக , சப்பான் நாட்டின் 47 மாநிலங்களில் ஒன்றும் அதன் தலைநகரமுமாகும். மேலும் இது மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரமாகும். தோக்கியோ, ஜப்பானிய அரசு மற்றும் அரசரின் தலைமையிடமாகும். இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12 மில்லியன் ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 10% பேர் இங்கு வாழ்கின்றனர். தோக்கியோ சப்பானின் நான்கு முக்கியத் தீவுகளில் பெரிய தீவான ஹொன்ஷூ தீவின் தென்கிழக்குப் பகுதியில் கன்டோ மண்டலத்தில் அமைந்துள்ளது. தோக்கியோ பெருநகரம் 1943ஆம் ஆண்டு முந்தைய தோக்கியோ மாநிலத்தையும் தோக்கியோ நகரத்தையும் ஒன்றிணைத்து உருவானது. தோக்கியோ ஒரு நகரமாகக் கருதப்பட்டாலும் இதனை பெருநகர மாநிலம் என்றே குறிப்பிடுகின்றனர். பெருநகர மாநிலமாக தோக்கியோ நகரத்தை ஒன்றிணைப்பதற்கு முன்பிருந்த 23 நகராட்சி வார்டுகளும் சிறப்பு வார்டுகளாக அரசாளப்படுகின்றன. ஒவ்வொன்றும் தனி நகரமாகவே ஆளப்படுகிறது. இவற்றைத் தவிர பெருநகர மாநிலத்தில் 39 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் 30 மாநிலத்தின் மேற்கிலும் 8 இசூ தீவிலும் ஒன்று ஓகசவரா தீவிலும் உள்ளன. சப்பானில் உள்ள நான்கு நபர்களில் ஒருவர் தோக்கியோவில் வாழ்கின்றார். 100 க்கு மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்கு அமைந்துள்ளது. கல்விக்காகவும் வேலை வாய்ப்புக்களுக்காகவும் பெருமளவு சப்பானியர்கள் இந்த நகரிற்கு குடி பெயருகின்றனர். பெரும்பாலான சப்பானிய நிறுவனங்கள் தமது தலைமை அலுவலகத்தை இங்கேயே அமைத்துள்ளனர். அமெரிக்க $1.479 டிரில்லியன் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படுத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட தோக்கியோ உலகின் மிகப்பெரும் பொருளியல் சமூகத்தைக் கொண்ட நகரங்களில் முதலாவதாக விளங்குகிறது. உலகின் எந்த நகரத்திற்கும் இல்லாத பெருமையாக உலகளாவிய பார்ச்சூன் 500 நிறுவனங்களில் 51 நிறுவனங்கள் இந்த நகரிலிருந்து இயங்குகின்றன. உலகப் பொருளாதாரத்தின் மூன்று கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்றாக நியூயார்க் நகரம் மற்றும் இலண்டன் நகரங்களுடன் அறியப்படுகிறது. இந்த நகரம் ஓர் உலகளாவிய நகரமாக கருதப்படுகிறது. பல்வேறு உலக மக்கள் வாழும் நகரங்களில் நான்காவதாக மற்றொரு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 2012இல் தோக்கியோ வெளிநாட்டினருக்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக வாழும் செலவினங்களை கணிக்கும் மெர்சர் அறிக்கை குறிப்பிடுகின்றது. மேலும் 2009இல் மிகவும் வாழத்தக்க நகரமாகவும் மோனோக்கிள் என்ற வாழ்நிலை இதழ் அறிவித்துள்ளது. உணவகங்களுக்கும் தங்கும் விடுதிகளுக்கும் நட்சத்திரங்கள் வழங்கும் மிச்லின் வழிகாட்டியில் தோக்கியோவிற்கு உலகின் வேறெந்த நகரையும் விட கூடுதலான நட்சத்திரங்கள் கிடைத்துள்ளன. தோக்கியோவில் 1964 கோடைக்கால ஒலிம்பிக்ப் போட்டிகள் நடந்துள்ளன. தற்போது 2020ஆம் ஆண்டிற்கான கோடைக்கால ஒலிம்பிக்கை நடத்த விண்ணப்பித்துள்ளது. பெயர்க்காரணம் தோக்கியோ துவக்கத்தில் கழிமுகம் எனப் பொருள்படும் எடோ என்ற சிற்றூராக இருந்தது. இராச்சியத்தின் தலைநகரமாக 1868இல் தேர்வானபோது இதன் பெயர் தோக்கியோ (தோக்யோ: தோ (கிழக்கு) + க்யோ (தலைநகர்)) என கிழக்காசிய மரபுப்படி மாற்றப்பட்டது. போக்குவரத்து தோக்கியோவின் தெருக்கள் குறுகிய தெருக்களாகவே உள்ளது. இங்கு மோட்டார் வண்டி, பேருந்து, மேட்டார் சைக்கிள், சைக்கிள் இருந்த போதும் சுரங்க இரயில்களே மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். வேகமான இரயில்கள் (புல்லட் இரயில்) ஓசாகா மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன. சப்பானில் ஓடும் அனைத்துவகையான ரயில்களும் காலந்தவறாமைக்கு புகழ் பெற்றவை. புல்லெட் ட்ரெயின் என்று அழைக்கப்படும் மிக அதி வேக ரயில்கள் சராசரியாக வருடத்திற்கு 0.6 நிமிடங்களே தாமதமாக செல்கின்றது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தோக்கியோ நகரத்தில் போக்குவரத்துக்குக்காக மிதிவண்டி உபயோகிப்போரின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது.பேரங்காடிகளில் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மிதிவண்டி நிறுத்துவதற்கு பிரத்தியேகமான அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தோக்கியோ மக்கள் வாடகைக் கார்களை (டாக்ஸி) போக்குவரத்திற்காக உபயோகிக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளனர் . சேரும் இடமோ புறப்படும் இடமோ ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் இல்லாமல் இருந்தால் மக்கள் வாடகைக்காரை தேர்வு செய்யும் பழக்கம் உள்ளது. குழுக்களாக சிறு தூரங்கள் பயணிக்கும் பொழுதும் மக்கள் வாடகைக்கர்களை தேர்ந்தெடுக்கின்றனர் . இரவு நேரங்களில் ரயில் மற்றும் பேருந்து சேவை இல்லாத நேரங்களில் வாடகைக்கார்கள் பயன்பாடு அதிகமாக உள்ளது. ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில் வாடகைக்கார் நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன . வாடகைக்கார் ஓட்டுனர்கள் வரிசை முறைப்படி தங்களது வாகனங்களை நிறுத்தி வாடிகையாளர்களை ஏற்றி செல்கின்றனர். காரின் உட்புறம் கட்டணம் அளவைக்கருவி உள்ளது. கருவி காண்பிக்கும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.வாடகைக்கார் கட்டணம் ரயில் கட்டணத்தை ஒப்பிடுகையில் மிக அதிகமாகவே உள்ளது. பருவ நிலைகள் நிலநடுக்க மற்றும் தீ அநர்த்தங்கள் தோக்கியோ மிக மோசமான புவி நடுக்க மற்றும் தீ விபத்துக்களை சந்தித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விபத்து 1923 ல் ஏற்பட்டது. இதில் சுமார் 100,000 மக்கள் இறந்தனர். இதன் காரணமாக இங்கு வானுயர்ந்த கட்டடங்களை காண முடியாது. உலக யுத்தம் II ன் பின்னர் இரண்டாம் உலகப் போரின் பின்னர் தோக்கியோவின் பெரும் பகுதி நேச படைகளின் (Allied bombing) தாக்குதலால் அழிவடைந்தது. இதன் பின்பு சுமார் ஏழு வருடங்கள் (1945-1952) அமெரிக்கப் படைகள் தோக்கியோவில் இருந்தன. 1964 ல் கோடைகால ஓலிம்பிக் போட்டிகளை நடத்தியது. இன்று தோக்கியோ தோக்கியோ உலகின் முன்னேறிய நகரமாயினும், அதிகரிக்கும் மக்கள்தொகை பெரும் பிரச்சனையாக உள்ளது. அத்துடன் சூழல் மாசடைதலும் மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது. யப்பான் அரசு மக்களை நகரின் புறநகர் பகுதிகளில் வசிக்கும்படி ஊக்கம் அளிக்கின்றது. இரட்டை நகரங்களும் சகோதர நகரங்களும் தோக்கியோ கீழ்காணும் நகரங்களுடனும் மாநிலங்களுடனும் இரட்டையாக அறிவிக்கப்பட்டுள்ளது: நியூயார்க் நகரம், அமெரிக்க ஐக்கிய நாடு ( 1960 முதல்) பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு (1979 முதல்) பாரிஸ், பிரான்சு (1982 முதல்) நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலியா (1984 முதல்) சியோல், தென் கொரியா (1988 முதல்) ஜகார்த்தா, இந்தோனேசியா (1989 முதல்) சாவோ பாவுலோ மாநிலம், பிரேசில் (1990 முதல்) கெய்ரோ, எகிப்து (1990 முதல்) மாஸ்கோ, உருசியா (1991 முதல்) பெர்லின், செருமனி (1994 முதல்) உரோமை நகரம், இத்தாலி (1996 முதல்) மேற்கோள்கள் மேலும் படிக்க வழிகாட்டிகள் Bender, Andrew, and Timothy N. Hornyak. Tokyo (City Travel Guide) (2010) excerpt and text search Mansfield, Stephen. Dk Eyewitness Top 10 Travel Guide: Tokyo (2013)excerpt and text search Waley, Paul. Tokyo Now and Then: An Explorer's Guide. (1984). 592 pp Yanagihara, Wendy. Lonely Planet Tokyo Encounter (2012) excerpt and text search தற்போதையவை Allinson, Gary D. Suburban Tokyo: A Comparative Study in Politics and Social Change. (1979). 258 pp. Bestor, Theodore. Neighborhood Tokyo (1989). online edition Bestor, Theodore. Tsukiji: The Fish Market at the Center of the World, (2004) online edition Fowler, Edward. San’ya Blues: Laboring Life in Contemporary Tokyo. ( 1996) . Friedman, Mildred, ed. Tokyo, Form and Spirit. (1986). 256 pp. Jinnai, Hidenobu. Tokyo: A Spatial Anthropology. (1995). 236 pp. Reynolds, Jonathan M. "Japan's Imperial Diet Building: Debate over Construction of a National Identity." Art Journal. 55#3 (1996) pp 38+. online edition Sassen, Saskia. The Global City: New York, London, Tokyo.(1991). 397 pp. Sorensen, A. Land Readjustment and Metropolitan Growth: An Examination of Suburban Land Development and Urban Sprawl in the Tokyo Metropolitan Area (2000) excerpt and text search Waley, Paul. "Tokyo-as-world-city: Reassessing the Role of Capital and the State in Urban Restructuring." Urban Studies 2007 44(8): 1465-1490. Issn: 0042-0980 Fulltext: Ebsco வெளி இணைப்புகள் ஆசியத் தலைநகரங்கள் ஜப்பானிய நகரங்கள்
5050
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
தாய்லாந்து
தாய்லாந்து (ஆங்கிலம்: Thailand அல்லது Kingdom of Thailand; தாய்: ประเทศไทย), அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து இராச்சியம் (Kingdom of Thailand), முன்னர் சயாம் (ஆங்கிலம்: Siam, தாய்: สยาม) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்த நாட்டின் வடக்கில் மியான்மர், லாவோஸ்; கிழக்கில் லாவோஸ், கம்போடியா; தெற்கில் தாய்லாந்து வளைகுடா, மலேசியா; மேற்கில் அந்தமான் கடல் எல்லைகளாக அமைந்துள்ளன. தாய்லாந்தின் கடல் எல்லைகளாக தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடா; வியட்நாம், தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளும் உள்ளன. மன்னர் ஒன்பதாம் இராமாவின் தலைமையில் அரசியல்சட்ட முடியாட்சி ஆட்சியமைப்பு இங்கு நிலவுகிறது. 1946 இல் முடிசூடிய சக்கிரி வம்சத்தைச் சேர்ந்த ஒன்பதாம் இராமா மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத் தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார். பொது தாய்லாந்து மன்னரே அந்நாட்டின் அரசுத் தலைவரும், இராணுவப் படைகளின் தலைவரும், பௌத்த மதத்தை மேனிலைப்படுத்துபவரும், அனைத்து நம்பிக்கைகளுக்கும் பாதுகாவலரும் ஆவார். மொத்தப் பரப்பளவின் அடிப்படையில் தாய்லாந்து 51ஆவது நாடு ஆகும். இதன் பரப்பளவு ஆகும். 64 மில்லியன் மக்களுடன் மக்கள்தொகை அடிப்படையில் இது 20வதும் ஆகும். பேங்காக் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இதுவே தாய்லாந்தின் அரசியல், வணிக, தொழிற்துறை மற்றும் கலாசார மையமாகவும் விளங்குகிறது. மக்கள்தொகையின் 75% தாய் இனத்தவரும், 14% சீனரும் 3% மலாய் இனத்தவரும் ஆவர்; மலைவாழ் இனங்கள் ஏனையோர் மொன், கெமர், மற்றும் பல்வேறு மலைவாழ் இனங்களும் சிறுபான்மையினமாக உள்ளனர். நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி தாய் மொழியாகும். மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 95% மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். 1985 முதல் 1996 வரை தாய்லாந்தின் பொருளாதாரத்தில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. தற்போது இந்நாடு முக்கிய தொழில்வள நாடாகவும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. தாய் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தாய்லாந்தில் 2.2 மில்லியன் சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத இடம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர். சொற்பிறப்பு 1939 சூன் 23 வரை தாய்லாந்தின் அதிகாரபூர்வ பெயர் சயாம் ஆகும். பின்னர் இது தாய்லாந்து எனப்பட்டது. மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என அழைக்கப்பட்டு, மீண்டும் தாய்லாந்துக்கு மாற்றப்பட்டது. சியெம், சியாம் அல்லது சியாமா என்றவாறும் எழுதப்பட்டது, இது சமக்கிருதத்தில் சியாமா ("இருண்ட" அல்லது "பழுப்பு" எனப் பொருள்). சியாம் என்பதன் மூலம் சியாமா என்ற சமக்கிருத சொல்லில் இருந்து தோன்றவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. தாய் (Thai)(ไทย) என்ற சொல் பொதுவாக எண்ணப்படுவது போல், தாய் Tai (ไท) என்ற சொல்லில் இருந்து பெறப்படவில்லை. தாய் மொழியில் இதற்கு விடுதலை என்று பொருள், இது மத்திய சமவெளியில் இருந்த இனக்குழுவின் பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது புகழ்பெற்ற தாய் (Thai) அறிஞர் தாய் Tai (ไท)என்பது மக்கள் என்ற பொருளை குறிக்கும் சொல் என்கிறார். தாய்லாந்தின் ஊரகப்பகுதியில் தாய் (Thai) சொல்லான கோன் "kon" (คน) என்பதற்கு பதில் மக்களை குறிக்க தாய் (Tai) என்பதை மக்கள் என்று பயன்படுத்துவதை தன் சான்றாக குறிப்படுகிறார். வரலாறு இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தில் மனித நாகரிகம் பரவியிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தென்கிழக்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போன்றே, தாய்லாந்திலும் பொஊ 1ம் நூற்றாண்டின் பூனான் இராச்சியம் தொடக்கம் கிபி 13-ஆம் நூற்றாண்டின் கெமர் பேரரசு வரையில் இந்தியாவின் கலாசாரம் மற்றும் மத வாரியான தாக்கம் பெருமளவு இருந்து வந்துள்ளது. கெமர் பேரரசின் வீழ்ச்சி 13-ஆம் நூற்றாண்டில் கெமர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், டாய், மொன், கெமர், மலாய் என வெவ்வேறு பிரிவுகளைக் கொண்ட அரசுகள் உருவாகின. ஆனாலும், 12-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் முதலாவது தாய் அல்லது சயாமிய நாடு 1238-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சுகோத்தாய் எனப்படும் பௌத்த நாடு எனக் கருதப்படுகிறது. 13-ஆம்-14-ஆம் நூற்றாண்டுகளில் கெமர் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னர், பௌத்த தாய் இராச்சியங்களான சுகோத்தாய், லான்னா இராச்சியம், லான் காங் (இன்றைய லாவோஸ்) என்பன எழுச்சி அடைந்து வந்தன. ஆனாலும், 14-ஆம் நூற்றாண்டின் மத்தியில் சாவோ பிரயா ஆறு பிராந்தியத்தில் புதிதாக நிறுவப்பட்ட அயுத்தயா இராச்சியம் ஒரு நூற்றாண்டின் பின்னர் சுகோத்தாயின் பலத்தை மறைக்க ஆரம்பித்தது. பாரம்பரிய வணிகத் தொழில் அயுத்தயா படையினர் அங்கோர் நகரை ஊடுருவியதை அடுத்து, 1431-ஆம் ஆண்டில் கெமர் ஆட்சியாளர் அந்நகரைக் கைவிட்டனர். தாய்லாந்து தனது அயல் நாடுகளில், சீனா முதல் இந்தியா வரை, ஈரான் முதல் அரபு நாடுகள் வரை தமது பாரம்பரிய வணிகத் தொழிலை விரிவுபடுத்தி வந்தது. ஆசியாவிலேயே அயுத்தயா இராச்சியம் ஒரு முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்தது. ஐரோப்பிய வணிகர்களின் வருகை இங்கு 16-ஆம் நூற்றாண்டில் ஆரம்பமானது, முதலில் போர்த்துக்கீசரும் , பின்னர் பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயரும் வரத் தொடங்கினர். 1767-இல் அயுத்தயா இராச்சியம் பர்மியர்களிடம் வீழ்ச்சியடைந்த பின்னர், மன்னர் தக்சின் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு தாய்லாந்தின் தலைநகரை தோன்புரிக்கு மாற்றினார். தற்போதைய தாய்லாந்தின் இரத்தனகோசின் காலம் 1782-ஆம் ஆண்டில் ஆரம்பமானது. அப்போது சக்கிரி வம்சத்தின் முதலாம் இராமாவின் ஆட்சியில் பேங்காக் தலைநகரானது. ஐரோப்பியர்களின் செல்வாக்கு ஐரோப்பியர்களின் செல்வாக்கு இங்கு இருந்திருந்தாலும், தாய்லாந்து ஒன்றே தென்கிழக்காசியாவில் ஐரோப்பியக் குடியேற்றம் இடம்பெறாத நாடாகும். பிரெஞ்சு இந்தோசீனாவுக்கும் பிரித்தானியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்று வந்த போட்டி மற்றும் பதற்றத்தை தாய்லாந்தின் நான்கு நூற்றாண்டு கால ஆட்சியாளர்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தி ஆட்சி நடத்தி வந்துள்ளார்கள். இதன் விளைவாக, பெரிய பிரித்தானியா, மற்றும் [[[பிரான்சு]] ஆகிய இரண்டு குடியேற்றவாத நாடுகளின் ஆதிக்கத்திலிருந்த தென்கிழக்காசியாவின் நாடுகளுக்கிடையே தாய்லாந்து ஓர் இடைத்தாங்கு நாடாக விளங்கி வந்தது. ஆனாலும், மேற்கத்தைய செல்வாக்கு 19-ஆம் நூற்றாண்டில் இங்கும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக மேக்கொங்கின் கிழக்கில் பல பகுதிகளை பிரான்சுக்கும், மலாய் தீபகற்பத்தைப் படிப்படியாக பிரித்தானியாவுக்கு இழக்கவும் வழிவகுத்தது. முதலாவது அரசியலமைப்பு ஆரம்ப இழப்புகள் பினாங்கை மட்டும் உள்ளடக்கியிருந்தாலும், பின்னர் மலாய் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தெற்கு மாகாணங்கள் நான்கையும் தாய்லாந்து இழந்தது. இவை பின்னர் 1909 ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கையின் படி, மலேசியாவின் வடக்கு மாநிலங்களாயின. 1932-இல், இராணுவ மற்றும் குடிமக்களின் பங்களிப்புடன் கானா ரட்சடோன் என்ற குழுவினரின் இரத்தம் சிந்தாப் புரட்சி ஆட்சி மாற்றத்திற்கு உதவியது. மன்னர் பிரஜாதீபக் சயாம் மக்களுக்கு முதலாவது அரசியலமைப்பை அறிவித்தார். அதன் மூலம் வரையறையற்ற முடியாட்சி முடிவுக்கு வந்தது. இரகசிய இராணுவ ஒப்பந்தம் இரண்டாம் உலகப் போரின் போது, மலாயா மற்றும் தென்கிழக்காசியா நாடுகளைக் கைப்பற்றும் நோக்கத்தில், ஜப்பானியப் பேரரசு, தனது இராணுவப் படைகளைத் தாய்லாந்தின் வழியாக அனுப்புவதற்காக தாய்லாந்து கடற்கரைகளில் 1941 டிசம்பர் 8-ஆம் தேதி முற்றுகையிட்டது. தாய்லாந்து இராணுவத்தினருக்கும் ஜப்பானிய இராணுவத்தினருக்கும் இடையே ஆறு முதல் எட்டு மணி நேரம் சண்டை நடந்தது. அதை அடுத்து தாய்லாந்து சமரசத்திற்கு வந்தது. அமெரிக்கா மீது போர்ப் பிரகடனம் தாய்லாந்து வழியாகச் செல்வதற்கு ஜப்பானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 1941 டிசம்பர் 21-ஆம் தேதி, ஜப்பானுடன் இரகசியமாக ஓர் இராணுவ ஒப்பந்தத்தை தாய்லாந்து செய்து கொண்டது. அதன் மூலம் பிரித்தானியா, பிரான்சு நாடுகளிடம் தாய்லாந்து இழந்த பகுதிகளை மீட்டுத் தரவும் ஜப்பான் உடன்பட்டது. இதனை அடுத்து தாய்லாந்து அரசாங்கம் அமெரிக்கா; ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் மீதும் 1942 சனவரி 25-ஆம் தேதி போர்ப் பிரகடனத்தை அறிவித்தது. சயாம் மரண இரயில்பாதை கூட்டுப் படைகளுடனான சப்பானின் போருக்கு தாய்லாந்து உதவியது. இதே வேளையில், தாய் விடுதலைக்கான இயக்கம் சப்பானிய ஆதிக்கத்திற்கு எதிராக அமெரிக்கக் கூட்டுப் படைகளுடன் சேர்ந்து போராடி வந்தது. அண்ணளவாக 200,000 ஆசியக் கட்டாயத் தொழிலாளர்கள் மற்றும் 60,000 கூட்டுப் படைப் போர்க் கைதிகள் தாய்லாந்து-பர்மிய சயாம் மரண இரயில்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் முடிவில், தாய்லாந்து அமெரிக்காவின் கூட்டணியில் இணைந்தது. அரசியல் தாய்லாந்தின் தற்போதைய அரசியல் அரசியல்சட்ட முடியாட்சியின் அடிப்படையில் இடம்பெற்று வருகிறது. அரசுத்தலைவராக பிரதமரும், நாட்டுத் தலைவராக மரபுவழி அரசரும் உள்ளனர். 1932 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் மாற்றத்தை அடுத்து முழுமையான மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அன்று முதல் தாய்லாந்து 17 அரசியலமைப்புச் சட்டங்களைக் கண்டுள்ளது. இக்காலகட்டத்தில் இராணுவ ஆட்சிகளும், சனநாயக ஆட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், அனைத்து அரசுகளும் மரபுவழி அரசர்களைத் தமது நாட்டுத் தலைவராக ஏற்றுக் கொண்டன. சுகோத்தாய் இராச்சியம் 1932 ஆம் ஆண்டுக்கு முன்னர், சயாம் இராச்சியம் ஒரு அரசியலமைப்பைக் கொண்டிருக்கவில்லை. அனைத்து அரசியல் அதிகாரங்களும் மன்னரிடத்திலேயே இருந்தன. கிபி 12ம் நூற்றாண்டில் சுகோத்தாய் இராச்சியம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து தாய்லாந்து மன்னர் "தர்ம வழி கொண்டு ஆட்சி நடத்துபவர்" அல்லது "தர்மராசா" என அழைக்கப்பட்டார். 1932 சூன் 24 ஆம் நாள் மக்கள் கட்சி (கானா ரத்சோதான்) என அழைக்கப்பட்ட பொதுமக்களையும் இராணுவத்தினரையும் கொண்ட குழு ஒன்று இரத்தம் சிந்தாப் புரட்சி ஒன்றை நடத்தி வெற்றி கண்டனர். இதனை அடுத்து 150 ஆண்டு காலம் பதவியில் இருந்த 'சக்கிரி' வம்சம் முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக அரசியல்சட்ட முடியாட்சி முறை கொண்டுவரப்பட்டது. புதிய அரசியலமைப்பில் திருத்தங்கள் 1932 ஆம் ஆண்டில் அரசியல்சட்ட வரைபு பிரஜாதீபக் மன்னரால் கையெழுத்திடப்பட்டது. இது தாய்லாந்தின் முதலாவது அரசியலமைப்பாகும். இதன் மூலம் மக்கள் பேரவை அமைக்கப்பட்டு அதன் உறுப்பினர்களாக 70 பேர் நியமிக்கப்பட்டனர். இதன் முதலாவது அமர்வு 1932 சூன் 28 இல் இடம்பெற்றது. அதே ஆண்டு டிசம்பரில் முழுமையான அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து 1933 நவம்பர் 15 இல் தேர்தல்கள் நடைபெற நாள் குறிக்கப்பட்டது. மக்கள் பேரவைக்கு 78 பேர் மக்களால் நேரடியாகவும், மேலும் 78 பேர் மக்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்படவும் புதிய அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இராணுவ ஆட்சி 1932 முதல் 1973 வரையான காலப்பகுதியின் பெரும்பாலானவற்றில் இராணுவமே ஆட்சியில் இருந்து வந்தது. முக்கியமான இராணுவ ஆட்சியாளராக பீபன் என அழைக்கப்பட்ட பிளைக் பிபுல்சொங்கிரம் (1938-1944, 1948-1957) என்பவரைக் குறிப்பிடலாம். இவர் இரண்டாம் உலகப் போரின் போது சப்பானுடன் கூட்டிணைந்தார். இரண்டாம் உலகப்போரின் இறுதியில் சிறிது காலம் அரசியல்வாதி பிரிதி பனோம்யொங் பிரதமராக இருந்தார். இவரே பேங்காக்கில் அமைந்துள்ள தம்மசத் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர். இவருக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டில் பீபன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். தானொம் கிட்டிகாசோர்ன் இவருக்குப் பின்னர் சரித் தனராஜட்ட, தானொம் கிட்டிகாசோர்ன் போன்ற இராணுவ ஆட்சியாளர்களின் ஆட்சியில் ஆதிக்கவாதத்துடன் அமெரிக்காவின் செல்வாக்குடன் நவீனமயமாக்கல், மேலைமயமாதல் போன்றனவும் நடைபெற்றன. அக்டோபர் 1973 இல் தம்மசத் பல்கலைக்கழக மாணவர்களின் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களின் போது இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து தானொம் கிட்டிகாசோர்ன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 1973 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் மக்களாட்சி பலமுறை ஆட்டம் கண்டது. 1976 ஆம் ஆண்டு புரட்சியை அடுத்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. 1980களின் பெரும்பாலான காலப்பகுதியில் பிரேம் தின்சுலாநந்தா பிரதமராகப் பதவியில் இருந்தார். இவர் நாடாளுமன்ற ஆட்சியை மீள அமுல் படுத்தி மக்களாட்சியைப் படிப்படியாகக் கொண்டு வந்தார். அதன் பின்னர் 1991-1992 காலப்பகுதியில் சிறிது காலம் இராணுவ ஆட்சியில் இருந்த தாய்லாந்து பெரும்பாலும் நாடாளுமன்ற ஆட்சியைப் பின்பற்றி வந்தது. பிரபலமான தாய் ராக் தாய் கட்சியின் தலைவர் தக்சின் சினவாத்ரா பிரதமராக இருந்து 2001 முதல் 2006 வரை ஆட்சி நடத்தினார். 2006 செப்டம்பர் 19 இல் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம் அரசியலமைப்பை இடைநிறுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து இராணுவ ஆட்சியை அமைத்தது. தாய்லாந்து காட்சியகம் துணைநூற்கள் தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?, க.ப. அறவாணன், தாயறம் பதிப்பகம், திருச்சி - 17. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தாய்லாந்தில் ஆட்சிக்கவிழ்ப்பு ராணுவம் அறிவிப்பு தாய்லாந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் இராச்சியங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் தாய்லாந்து தொடர்பான வார்ப்புருக்கள்
5053
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
பௌத்தம்
பௌத்தம் அல்லது பௌத்த சமயம் (Buddhism, பாளி/சமசுகிருதம்: बौद्ध धर्म புத்த தர்மம்) என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். பௌத்த மரபின் படி, புத்தர் பொ.ஊ.மு. 4-ஆம், பொ.ஊ.மு. 6-ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர் ஆவார். பௌத்த சமயம் இந்து மதத்துடன் நெருக்கமாக தொடர்புடையது மற்றும் தர்ம மதங்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: தேரவாத பௌத்தம் ("முதியோர் பள்ளி"), மற்றும் மகாயான பௌத்தம் ("பெரும் வாகனம்"). தேரவாதம் இலங்கை, மற்றும் தென்கிழக்காசியாவில் (கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. மகாயானம் சீனா, கொரியா, சப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டை விட திபெத்து, மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும் வச்சிரயான பௌத்தம் மூன்றாவது வகையாகக் குறிக்கப்படுகிறது. பௌத்த சமயம் முக்கியமாக ஆசியாவிலேயே பின்பற்றப்பட்டாலும், உலகெங்கும் இந்த இரண்டு பிரிவுகளும் உலகெங்கும் காணப்படுகிறது. உலகெங்கும் தற்போது 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. (350–550 மில்லியன் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கை). அத்துடன் உலகில் மிக வேகமாகப் பரவி வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்றாகும். உலகின் தோற்றம் பற்றி பௌத்தம் உலகின் தோற்றம் பற்றிப் பல சமயங்களில் உறுதியுடன் தகவல்கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக, பிற சமயங்கள் உலகைத் தோற்றுவித்த ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கின்றன. பௌத்தம் இக்கேள்வியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதி, விடையை நோக்கிக் கற்பனைக் கதைகளைத் தர மறுக்கின்றது. உலகம் இருக்கின்றது, அதுவே பெளத்தத்தின் முடிவு. தேவையேற்படின், இவ்வுலகம் முந்தி இருந்த உலகத்தில் இருந்து கர்ம விதிகளுக்கமைய வந்தது எனக் கொள்ளலாம். எப்படி ஒரு மரம் விதையில் இருந்து வந்ததோ, எப்படி விதை மரத்தில் இருந்து வந்ததோ அப்படியே. சார்பிற்தோற்றக் கொள்கை கடவுள் அல்லது ஒரு ஒருமிய சக்தி உலகைத் தோற்றுவிக்கவில்லை என்பது பெளத்தத்தில், புத்தர் போதனைகளில் முக்கிய ஒரு கொள்கை. இக்கொள்கையைத் தமிழில் சார்பிற்றோற்றக் கொள்கை என்றும் சமஸ்கிருதத்தில் பிரதித்தியசமுப்பாதம் என்றும் ஆங்கிலத்தில் Dependent Origination என்றும் கூறுவர். இக்கொள்கையை சோ.ந.கந்தசாமி பின்வருமாறு விளக்குகின்றார்: "எப்பொருளும் தோன்றச் சார்புகள் (=நிதானங்கள்) காரணமாக உள்ளன. ஆதலின், ஒருபொருளை உண்டென்றோ இல்லையென்றோ உரைப்பது பிழை. எப்பொருளும் சார்பினால் தோன்றி மறைந்து தோன்றி மறைந்து தொடர்தலின் நிலைபேறான தன்மை இல்லை. தோன்றி மறைதல் என்பது இடையறவு படாமல் விளக்குச்சுடர் போலவும் ஓடும் நீர்போலவும் நிகழ்தலின் தோன்றுதல் மறைதல் என்ற இரண்டிற்கும் இடையே நிறுத்தம் என்பது இல்லை. ஆதலின், புத்தரின் சார்பிற்றோற்றக் கொள்கை, முதற் காரணத்தை உடன்பட்ட கடவுட் கொள்கையினைப் புறக்கணித்து, ஒன்று தோன்ற ஒன்று சார்பாக உள்ளது என்ற சார்புக் காரணத்தைக் கொண்டது." கடவுட் கோட்பாடு பெளத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பௌத்தம் மறுக்கின்றது. அப்படி இருந்தால் எந்த ஒரு பொருளுக்குமான இருப்பை நோக்கிய பெளத்தத்தின் அடிப்படை மூன்று விதிகளான நிலையாமை (அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பது - Anicca), ஆன்மா இன்மை (அழியாத ஒன்றாகக் கருதப்படும் ஆன்மா என்பது கிடையாது - Anatta), துக்கம் இருக்கிறது (துயரம், துன்பம், மகிழ்வற்ற நிலை - Dukkha) மீறியே கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும், அது பெளத்தத்தின் உலகப் பார்வைக்கு ஒவ்வாது. அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களைக் கொண்ட ஒருமிய சக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். எனினும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள் அல்லது அனுபவங்களைப் பெற அல்லது அனுபவிக்கக் கூடியவர்கள், ஆனால் அவர்களும் கர்ம விதிகளுக்குக் கட்டுபட்டவர்களே. புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள். புத்தர் கண்ட நான்கு உண்மைகள் துன்பம் ("துக்கம்"): மனிதர்களால் துன்பத்தைத் தவிர்க்க முடியாது. பிறப்பு, நோய், முதுமை, இறப்பு ஆகியவை மனிதருக்குத் துன்பத்தைத் தருபவை. பசி, பகை, கொலை, வெகுளி, இழப்பு, மயக்கம் போன்றவையும் துன்பம் தருபவையே. ஆசை/பற்று: துன்பத்துக்கான காரணம் ஆசை அல்லது பற்று. துன்பம் நீக்கல்: ஆசையை விட்டுவிடுவதுவே துன்பத்தை நீக்கும் முறைமை. எட்டு நெறிகள்: எட்டு நெறிகளும் துக்கத்தைப் போக்க உதவும் வழிமுறைகள் ஆகும். எட்டு நெறிமுறைகள் நற்காட்சி - Right View நல்லெண்ணம் - Right Thought நன்மொழி - Right Speech நற்செய்கை - Right Conduct நல்வாழ்க்கை - Right Livelihood நன்முயற்சி - Right Effort நற்கடைப்பிடி - Right Mindfulness நற்தியானம் - Right Meditation பிறவிச் சுழற்சியின் பன்னிரு சார்பு நிலைகள் பெளத்த எண்ணக்கருக்கள் அகிம்சை கர்மம் துயரம் (சம்சாரம்) ஆத்மன் தர்மம் நிர்வாணம் புத்தத்தன்மை மீள்பிறவி தமிழில் பௌத்தம் நோக்கிய ஆக்கங்கள் மணிமேகலை: பெளத்த பிரபஞ்சவியல், தருக்கவியல், தத்துவவியல் குண்டலகேசி வீரசோழியம் தற்கால உலகில் பௌத்தம் பௌத்தர்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகள், பெளத்தர்கள் 230 மில்லியனுக்கும் 500 மில்லியனுக்கும் இடையில் இருப்பதாகக் காட்டுகின்றன. அதிகமாகக் குறிப்பிடப்படுவது ஏறத்தாழ 350 மில்லியன் ஆகும். மகாயானமே தாய்லாந்து, சீனா, ஜப்பான், கொரியா, கம்போடியா, லாவோஸ் வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பொதுவாகப் பின்பற்றப்படும் பௌத்தமாக உள்ளது. தென்கிழக்கு ஆசியாவுக்கு இடம்பெயர்ந்த சீனர் மகாயான பௌத்தத்தை மலேசியா, இந்தோனேசியா, புருணை ஆகிய நாடுகளுக்குக் கொண்டுவந்தனர். தேரவாதமே மியன்மார், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசியாவின் பெரும் பகுதியிலும், இலங்கையிலும் முதன்மையாகக் பின்பற்றப் படுகின்றது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இதற்கு அங்கீகாரம் உண்டு. வஜ்ரயானம் திபெத், நேபாளம், பூடான், மங்கோலியா ஆகியவற்றிலும், ரஷ்யாவின் , சைபீரியா பகுதிகள், இந்தியா ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் பின்பற்றப்பட்டு வருகின்றது. இரசியக் கூட்டமைப்பில் கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள கால்மீக்கியா, பண்பாட்டு அடிப்படையில் மங்கோலியாவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதால், அதன் பௌத்தம் மேல் நாட்டுப் பௌத்தத்தைவிட ஆசியப் பௌத்தத்துடனேயே சேர்த்துக் கணிக்கப்படுகிறது. பெளத்தமும் அறிவியலும் பிற சமயங்கள் போலன்று பௌத்தம் அறிவியலின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதில்லை. ரிபற்ரன் தலாய் லாமாவின் பின்வரும் கூற்று இதை தெளிவுறுத்துகின்றது. "பொளத்ததில் மெய்ப்பொருள் புரிதலை நோக்கிய தேடல் சீரிய ஆராய்ச்சியனால் (critical investigation) மேற்கொள்ளப்படுகின்றது. அறிவியலின் முடிவானது பெளத்தத்தின் கூற்றுக்களில் ஏதாவதொன்றை பிழை என்று நிரூபிக்குமானால், அறிவியலை ஏற்று அந்தக் கூற்றை பெளத்ததில் இருந்து விலக்கிவிடவேண்டும்." ஆனால், தற்கால அறிவியலின் வழிமுறைகளுக்கு எல்லைகள் உண்டென்றும், மெய்ப்பொருளை அறிவதில் அறிவியலுக்கு உட்படாத வழிமுறைகளும் தேவை என்றும் பௌத்தம் கருதுகின்றது. அதாவது, சிலர் அனைத்தும் அறிவியலுக்கு உட்பட்டது என்கிறார்கள். இக்கருத்தைப் பௌத்தம் ஏற்கவில்லை, மேலும் இக்கருத்து அறிவியல் தன்மையற்றது என்பதையும் சுட்டுகின்றது. பெளத்தமும் தலித் மக்களும் தமிழகத்தில் அயோத்திதாச பண்டிதர் அவர்களால் பறையர்கள் பூர்வகுடி பவுத்தர்கள் என்று முன்மொழியப்பட்டது.இவர் டாக்டர் அம்பேத்கருக்கு முன்னோடியாக தலித் மக்களிடையே பவுத்த எழுச்சியை ஏற்படுத்தினார் இந்து சமயச் சாதிய சமூகக் கட்டமைப்புக்குள் இருந்து விடுபடப் பௌத்தம் ஒரு மாற்று வழியாகத் தலித் மக்களின் முக்கிய தலைவர்களின் ஒருவரான அம்பேத்கரினால் பரிந்துரைக்கப்பட்டது. இப்பரிந்துரை அரசியல் சமூக காரணங்களுக்கான ஒரு மேலோட்டமான பரிந்துரை அல்ல. அம்பேத்கர் இளவயதில் இருந்தே பெளத்தத்தை ஆராய்ந்து, அதன் மீது நம்பிக்கை கொண்டு முன்மொழிந்த ஒரு பரிந்துரையே. தலித்துக்கள் மன ரீதியாகத் தம்மை விடுதலை செய்யச் சமய மாற்றம் அவசியம் என்பதை அம்பேத்கர் உணர்ந்து விளக்கினார். அவரின் வழிநடத்தலில் பலர் இந்து சமயத்தைத் துறந்து பெளத்தத்தை ஏற்றனர். இன்றும் அவ்வப்பொழுது பல தலித் சமூக மக்கள் தனியாகவோ, குழுவாகவோ பெளத்தத்தை ஏற்பது தொடர்கின்றது. இவற்றையும் பார்க்கவும் பௌத்த யாத்திரை தலங்கள் பௌத்த தொல்லியற்களங்கள் பௌத்த வரலாறு ஈனயான பௌத்தம் மகாயான பௌத்தம்‎ தேரவாத பௌத்தம்‎ வஜ்ரயான பௌத்தம்‎ திபெத்திய பௌத்தம் மேற்கோள்கள் ஆதாரங்கள் சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். சி.என். குமாரசாமி. (2001). அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும். சென்னை: தமிழ் புத்தகாலயம். ராஜ் கொளதமன். (2004). க. அயோத்திதாசர் ஆய்வுகள். சென்னை: காலச்சுவடு பதிப்பகம். தமிழரும் பெளத்தமும் சோழர் காலத்தில் தமிழும் பெளத்தமும் - பீட்டர் சல்க் The Role of Buddhist and Jain Schools in Tamil Educational System Imagining a Place for Buddhism: Literary Culture and Religious Community in Tamil-Speaking South India Bodhi's Tamil Afterglow by S.Anand – B. Jambulingam, in his doctoral thesis Buddhism in the Chola Country (சோழ நாட்டில் பௌத்தம்), Tamil University, Thanjavur,1999, listed 60 granite images of the Buddha in Perambalur, Tiruchi, Thanjavur, Thiruvarur and Pudukkottai districts, adding at least 16 to the earlier recorded Buddhas Buddhism in the Cola Country, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 2002 Buddha spotting in Chola country fills his weekends, The Times of India, Chennai இந்திய சமயங்கள் கௌதம புத்தர்
5055
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF
இரமண மகரிசி
இரமண மகரிசி (Ramana Maharshi) (ஒலிப்பு:இரமண மஹரிஷி) (டிசம்பர் 30, 1879 - ஏப்ரல் 14, 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியைப் போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ஸ்ரீ ரமண ஆசிரமம் உலகப் புகழ் பெற்றதாகும். இளமைக்காலம் இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு நாகசுவாமி என்கிற மூத்த சகோதர் உண்டு. இவரது இயற்பெயர் வேங்கடராமன் ஆகும். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். ஆன்மீக நாட்டம் ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 16ஆம் அகவையில் மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார். இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறி 1896ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் அங்கிருந்த பாதாள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். அங்குச் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளிலிருந்து சேஷாத்ரி சுவாமிகள் அன்பர்களின் மூலம் காத்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், மாமரக் குகை, குருமூர்த்தம் எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”இரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அதுவரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர். கையில் ஏற்பட்ட கொடிய சார்கோமா புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார். 1950இல் தேகவியோகமானார். உபதேசங்கள் ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும். ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார். ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழித்து நாமே இருமையை உருவாக்குகிறோம். இரமண ஆசிரமம் பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிசி, 1922 இல் அவரது தாயின் தேகமறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் தாயார் சமாதி வைக்கப்பட்ட இடத்திற்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கலானார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆசிரமமாகும். இதன் பின்னர் மகரிசி சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. தமிழ்ப் படைப்புகள் பட்டியல் உபதேச உந்தியார் உள்ளது நாற்பது உள்ளது நாற்பது அனுபந்தம் ஏகான்ம பஞ்சகம் ஆன்ம வித்தை உபதேசத் தனிப்பாக்கள் ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை ஸ்ரீ அருணாசல அஷ்டகம் ஸ்ரீ அருணாசல நவமணிமாலை ஸ்ரீ அருணாசல பதிகம் நான் யார்? விவேகசூடாமணி அவதாரிகை பகவத் கீதா ஸாரம் குரு வாசகக் கோவை ஸ்ரீ ரமண நூற்றிரட்டு ஆதிசங்கர பகவத் பாதரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம், குரு ஸ்துதி, அத்தாமலக தோத்திரம், ஆன்மபோதம் ஆகியவற்றின் தமிழாக்கம் ரமண மகரிசியைப் பின்பற்றியவர்கள் விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Bibliography of the Tamil Writings of Sri Ramana தமிழில் ஆத்ம போதம் Shastra Nethralaya - Ramana Maharishi இரமண ஆச்சிரம இணையத்தளம் 1879 பிறப்புகள் 1950 இறப்புகள் இந்து சமயப் பெரியார்கள் சைவ சமயம் அத்வைத வேதாந்த ஆசிரியர்கள் சமயத் தலைவர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்கள் சைவ சமய சித்தர்கள் விருதுநகர் மாவட்ட நபர்கள் தமிழ் மெய்யியலாளர்கள்
5056
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88
திருவண்ணாமலை
திருவண்ணாமலை (Tiruvannamalai) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். இந்நகருக்கு, திருவருணை மற்றும் திருஅண்ணாமலை எனும் பெயர்களும் உண்டு. புனித நகரமாகக் கருதப்படும் இந்நகரில், புகழ்பெற்ற (நினைத்தாலே முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான) அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது. இந்நகரம், புதுச்சேரி - பெங்களூரு நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 66 ம், விழுப்புரம் - வேலூர் - மங்களூரு நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 234 ம் மற்றும் சேலம் - திருவண்ணாமலை - ஆரணி - சென்னை நகரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண் 39 ம், இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை நகரம் உருவாக்கம் திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். திருவண்ணாமலை நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால், திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2 ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக விளங்கியது. திருவண்ணாமலை 1866 இல் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பெற்றது. 1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு, 1971 இல் முதல் நிலை நகராட்சியாக உருவானது. 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக, 2007 இல் சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. மக்கள் வகைப்பாடு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,45,278 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 72,406 ஆண்கள், 72,872 பெண்கள் ஆவார்கள். இந்நகரம் பாலின விகிதம் 1,006 மற்றும் குழந்தையின் பாலின விகிதம் 958 ஆகும். மக்களின் சராசரி கல்வியறிவு 87.75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.98%, பெண்களின் கல்வியறிவு 82.59% ஆகும். 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, திருவண்ணாமலையில் இந்துக்கள் 82.57%, முஸ்லிம்கள் 14.07%, கிறிஸ்தவர்கள் 2.79%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.4%, 0.13% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர். சிவாலயமும் சித்தர்களும் திருவண்ணாமலை கோயில் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் அமைந்துள்ளது. இச்சிவாலயம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். பிரம்மாவும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் ? என்று சண்டையிட்டுக் கொண்டபோது, சிவபெருமான் அக்னி தூணாக நின்றார். அவருடைய அடியைத் தேடி, திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா, சிவபெருமானின் முடியைத் தேடி, அன்ன வாகனத்தில் பறந்து சென்றார். இவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடிமுடியைக் காண முடியவில்லை என்பது இத்தலத்தின் தலப் புராணமாகும். திருவண்ணாமலை சிவாலயத்தில் ஆண்டுக்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இவற்றுள் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற பிரம்மோற்சவம் சிறப்பானதாகும். இந்தப் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் பத்தாம் நாள் கார்த்திகை தீபத் திருநாளாகும். இச்சிவாலயத்தில் கார்த்திகை தீப நாளான்று மகா தீபம் ஏற்றப்படுகிறது. அந்நாளில் சிவாலயத்திற்கு வந்து, திருவண்ணாமலையை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். மலையின் உச்சியில் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது. இதனை மகா தீபம் என்று அழைக்கின்றனர். சைவ சமயத்தில் நினைத்தாலே முக்தி தரக் கூடியத் தலமாக திருவண்ணாமலை உள்ளது. கிரிவலம் கார்த்திகை தீபத் திருநாளன்றும், முழுநிலவு நாட்களிலும் சிவ பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருகிறார்கள். இதனை மலைவலம் என்று அழைக்கின்றனர். பக்தர்கள் வலம் வருகின்ற கிரிவலப் பாதைகள் இரண்டு உள்ளன. சித்தர்கள் திருவண்ணாமலையில் மலைவலம் வருகின்ற பாதையில், எண்ணற்ற சித்தர்களின் ஜீவசமாதிகள் அமைந்துள்ளன. இடைக்காடர், குகை நமச்சிவாயர், இரமண மகரிஷி ஆசிரமம், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம், விசிறி சாமியார் ஆசிரமம், மூக்குப் பொடி சித்தர் போன்றவை உள்ளன. தக்காண பீடபூமி உருவாக்கம் திருவண்ணாமலை மலை ஓர் இறந்த எரிமலையாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன் இது வெடித்து, இதன் தீக்குழம்பு, நீரில் தோய்ந்து உருவானதுதான் தக்காணம் என்றும் சிலர் கூறுவார். புவியியல் இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது. அமைவிடம் திருவண்ணாமலை நகரம் புதுச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் மாநில நெடுஞ்சாலை ஆரணி - திருவண்ணாமலை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்குமிடத்தில் அமைந்துள்ளது. வேலூரிலிருந்து சுமார் 82 கி.மீ. தொலைவிலும், சந்தன நகரான திருப்பத்தூரிலிருந்து சுமார் 84 கி.மீ. தொலைவிலும், பட்டு நகரான ஆரணியிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 123 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து சுமார் 63 கி.மீ. தொலைவிலும், தர்மபுரியிலிருந்து சுமார் 117 கி.மீ. தொலைவிலும், கிருஷ்ணகிரியிலிருந்து சுமார் 114 கி.மீ. தொலைவிலும், கள்ளக்குறிச்சியிலிருந்து சுமார் 68 கி.மீ. தொலைவிலும், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து சுமார் 196 கி.மீ. தொலைவிலும், சேலத்திலிருந்து சுமார் 148 கி.மீ. தொலைவிலும் திருச்சியிலிருந்து சுமார் 183 கி.மீ. தொலைவிலும் அண்டை மாநிலமான கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலிருந்து சுமார் 203 கி.மீ. தொலைவிலும் மற்றும் புதுச்சேரியிலிருந்து சுமார் 106 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இந்த ஆன்மீக நகரம். நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் திருவண்ணாமலை நகராட்சியானது திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த சி. என். அண்ணாத்துரை வென்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த எ. வா. வேலு வென்றார். சிறப்புகள் அண்ணாமலையார் ஆலயம் மிகவும் புகழ்வாய்ந்தது. இறைவன் பெயர் - அண்ணாமலையார் (அருணாசலேச்சுவரர்) இறைவி பெயர் - உண்ணாமுலை அம்மன் (அபீதகுஜலாம்பாள்) புகழ் பெற்ற விழா - திருகார்த்திகை தீபம் விழா காலம் - கார்த்திகை மாதம் இரமண மகரிசி ஆசிரமம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இதைச் சுற்றிப் பார்க்க கட்டணம் இல்லை. இங்கு தங்கும் வசதி உண்டு. இங்கு பல வெளிநாட்டவர் வந்து தங்குகின்றனர். போக்குவரத்து திருவண்ணாமலை தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து திருவண்ணாமலை, இரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். வேலூர், ஆரணி, புதுச்சேரி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் போன்ற நகரங்களுக்கு திருவண்ணாமலையில் இருந்து செல்ல அடிக்கடி பேருந்து சேவைகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, போன்ற முக்கிய நகரங்கள், நெடுஞ்சாலைகள் வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் (அதிக பேருந்து சேவைகள் மூலம்) இணைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் இருந்து மூன்று நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன, அவை: தேசிய நெடுஞ்சாலை 234 – மங்களூர் - பாண்டிச்சேரி சாலை (மங்களூர் - பேலூர் - ஹுளியார் - குரிபிட்டனூர் - சிக்கு பல்லாபூர் - வேங்கடகிரிகொட்டா - பேர்ணாம்பட்டு - குடியாத்தம் - வேலூர் நகரம் - கண்ணமங்கலம் - போளூர் - கலசப்பாக்கம் - திருவண்ணாமலை நகரம் - வேட்டவலம் - விழுப்புரம் - வில்லியனூர் - புதுவை). தேசிய நெடுஞ்சாலை 234 A (அ) எஸ்.எச்.9 சித்தூர் - கடலூர் சாலை (சித்தூர் - வேலூர் காட்பாடி - வேலூர் நகரம் - கண்ணமங்கலம் - போளூர் - கலசப்பாக்கம் - தி.மலை ஆட்சியரகம் - திருவண்ணாமலை நகரம் - தி.மலை சாரோன் - வெறையூர் - திருக்கோவிலூர் - மடப்பட்டு - பண்ருட்டி - நெல்லிக்குப்பம் - கடலூர்). தேசிய நெடுஞ்சாலை 66 - (பெங்களூரு - ஓசூர் - கிருட்டிணகிரி - ஊத்தங்கரை - செங்கம் - திருவண்ணாமலை நகரம் - தி.மலை நாவக்கரை - கீழ்பெண்ணாத்தூர் -செஞ்சி - திண்டிவனம் - பாண்டிச்சேரி). தேசிய நெடுஞ்சாலை 38 - திருவண்ணாமலை நகரம் - கலசப்பாக்கம் - போளூர் நகரம் - களம்பூர் - ஆரணி நகரம் - திமிரி - ஆற்காடு நகரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை 6A - திருவண்ணாமலை மாநகரம் - தண்டராம்பட்டு - சாத்தனூர் அணை - தீர்த்தமலை - அரூர் நகரம் - பாப்பிரெட்டிப்பட்டி - சேலம் மாநகரம் தேசிய நெடுஞ்சாலை 503 - திருவண்ணாமலை மாநகரம் - திருவண்ணாமலை கிரிவலப்பாதை - காஞ்சி மாநில நெடுஞ்சாலை 133A - திருவண்ணாமலை மாநகரம் - அவலூர்பேட்டை - சேத்துப்பட்டு நகரம் தேசிய நெடுஞ்சாலை 269- மாநில நெடுஞ்சாலை 6- (திருவண்ணாமலை நகரம்- திருவண்ணாமலை தேனி மலை - சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி - திருச்சி). பேருந்து சேவைகள் திருவண்ணாமலையில் மத்திய பேருந்து நிலையம் ஒன்று உள்ளது. இங்கிருந்து பெரு நகரங்களுக்கு, பேருந்து சேவைகள் நன்றாக உள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தினசரி பேருந்து சேவைகளை வழங்குகிறது. இங்கிருந்து சென்னை செல்வதற்கு, இரண்டு பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளன, ஒன்று செஞ்சி, திண்டிவனம், தாம்பரம், சென்னை வழித்தடம் ; மற்றொன்று போளூர், ஆரணி, ஆற்காடு, பூவிருந்தவல்லி, சென்னை வழித்தடம். உள்ளூர் பேருந்து சேவைகளை, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. போளூர் மார்க்கமாக :வேலூர், ஆரணி, திருப்பதி, காஞ்சிபுரம், சென்னை, செய்யாறு, திருத்தணி, காளஹஸ்தி, ஆற்காடு, இராணிப்பேட்டை, குடியாத்தம், பேரணாம்பட்டு, சித்தூர், கண்ணமங்கலம், சமுனாமரத்தூர் என அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. செங்கம் மார்க்கமாக: கிருஷ்ணகிரி, பெங்களூரு, ஓசூர், திருப்பத்தூர், தர்மபுரி, ஒகேனக்கல், மேட்டூர், எடப்பாடி, சேலம், பவானி, பெருந்துறை, சங்ககிரி, ஈரோடு, ஊட்டி, மேட்டுப்பாளையம், திருப்பூர், கோயம்புத்தூர், பழனி, திண்டுக்கல், நாமக்கல், கரூர் மற்றும் கர்நாடக மாநிலம் ஷிமோகா (Shimoga), சிக்கமகளூர், உடுப்பி, சாகர் அவலூர்பேட்டை மார்க்கமாக: சேத்துப்பட்டு, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, காஞ்சிபுரம், சென்னை ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. செஞ்சி மார்க்கமாக: சென்னை, திண்டிவனம், புதுச்சேரி, மேல்மருவத்தூர், தாம்பரம், அடையாறு ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. வேட்டவலம் மார்க்கமாக: விழுப்புரம், புதுச்சேரி, திருச்சி, கடலூர், காரைக்குடி ஆகிய பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. திருக்கோவிலூர் மார்க்கமாக: உளுந்தூர்பேட்டை, கடலூர், பெரம்பலூர், விருத்தாச்சலம், திட்டக்குடி, ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மணப்பாறை, அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, செங்கோட்டை, மார்த்தாண்டம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. ரிஷிவந்தியம் மார்க்கமாக: கள்ளக்குறிச்சி, தியாகதுர்கம், திருச்சி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சங்கராபுரம் மார்க்கமாக: சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், துறையூர், தம்மம்பட்டி, முசிறி ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. தானிப்பாடி மார்க்கமாக: தண்டராம்பட்டு, அரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. காஞ்சி மார்க்கமாக: நகரப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், வேலூர், காஞ்சிபுரம், சென்னை, புதுச்சேரி, தாம்பரம், திருச்சி, சேலம், பெங்களூரு, ஆரணி, கோயம்புத்தூர், திருப்பூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சிதம்பரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களுக்கு 100க்கும் அதிகமான பேருந்து வசதிகள் உள்ளன. தொடருந்துப் போக்குவரத்து திருவண்ணாமலையில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த இரயில் நிலையம் தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர்,காட்பாடி, வேலூர், ஆரணி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம் இரயில் பாதையில் திருவண்ணாமலை உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1867 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை ரயில் பாதை மின்மயமாக்கப்பட்ட இரயில் பாதையாகும். திருவண்ணாமலை வழியாக பிற நகரங்களுக்கு செல்லும் ரயில்கள்: பெங்களூர் - எஸ்வந்த்பூர் கொல்கத்தா - ஹௌரா திருப்பதி கடலூர் பாண்டிச்சேரி மன்னார்குடி மாயவரம் கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் மதுரை ஆகிய ஊர்களுக்கும் இரயில் சேவைகள் உள்ளன. 6 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் மற்றும் திருவண்ணாமலை - காட்பாடி - சென்ட்ரல் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. மேலும்: காட்பாடி - விழுப்புரம் பயணிகள் இரயில் காட்பாடி - திருவண்ணாமலை பயணிகள் இரயில் கடலூர் - ஆரணி பயணிகள் இரயில் தினம்தோறும் இயக்கப்படுகின்றன. இரயில் அட்டவணை வானூர்தி நிலையம் திருவண்ணாமலையில் வானூர்தி நிலையம் ஏதும் இல்லை. எனினும், பௌர்ணமிக்கு வரும் பக்தர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அரசு இன்னும் 5 வருடத்தில் வானூர்தி நிலையம் அமைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு திண்டிவனம் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து பெங்களூர் மற்றும் சென்னைக்குச் சேவைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திருவண்ணாமலை நகராட்சியின் இணையதளம் திருவண்ணாமலை தலவரலாறு,சிறப்புக்கள் திருவண்ணாமலை தலபுராணம் திருவண்ணாமலை மாவட்டம் சிறப்பு நிலை நகராட்சிகள் திருவண்ணாமலை நகர விரிவாக்கப் பகுதிகள் இந்து புனித நகரங்கள்
5057
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
தென் கொரியா
தென்கொரியா என்றழைக்கப்படும் கொரியக்குடியரசு கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். இது கொரியத்தீபகற்பத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. தென்கொரியாவின் தலைநகரம் சியோல். கொரிய மொழி இங்குப் பேசப்படும் மொழியாகும். பௌத்த மதமும் கிறித்தவ மதமும் இங்குப் பின்பற்றப்படும் இரு முக்கிய மதங்களாகும். இங்கு பேசப்படும் தென்கொரியா மொழியை ஹங்குல் என்று அழைக்கின்றனர். ஹங்குல் மொழி கிங் செஜோங் என்ற அரசர் காலத்தில் உருவாக்கப்பட்டது. வரலாற்றிலே மிகச்சிறந்த அரசராக போற்றப்படுபவர் கிங் செஜோங். நிர்வாகப் பிரிவுகள் <noinclude> வரலாறு பிரிவுக்கு முன் கொரிய புராணங்களின் படி, கி.மு 2333 ல் இருந்து கொரியா வரலாறு தொடங்குகிறது. அதாவது 'Joseon' 'Dangun' ஆல் உருவாக்கப்பட்ட காலகட்டதில் இருந்து தொடங்குகிறது. (மற்றொரு வம்சத்தின் குழப்பத்தைத் தடுக்க "Gojoseon" எனவும் அழைக்கப்படுகிறது. Go என்றால் 'முன் அல்லது பழைய' என்று பொருள்). வட கொரிய தீபகற்பம் மற்றும் சில மஞ்சூரியா பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட வரை Gojoseon விரிவடைந்தது. கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் Gija Joseon நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது மற்றும் அதன் இருப்பு மற்றும் பங்கு நவீன சகாப்தத்தில் சர்ச்சைக்குரிய ஒன்றாகும். 2 வது நூற்றாண்டின் இறுதியில், Wiman Joseon, ஹான் சீனாவிடம் வீழ்ச்சி கண்டது. பின்னர் கி.மு. 108ல் ஹான் வம்சம், Wiman Joseon ஐ தோற்கடிது, ஹான் நான்கு Commanderies ஐ அமைத்தார். அங்கு அடுத்த நூற்றாண்டில் கொரிய தீபகற்பத்தின் வடக்கு பகுதிகளில் குறிப்பிடத்தக்க பகுதிகள், ஹான் சீனாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. Lelang படைத் தலைமையகம், Goguryeo வால் கைப்பற்றப்படும் வரை சுமார் 400 ஆண்டுகள் அது தொடர்ந்தன. சீனாவின் ஹானுடனான பல மோதல்களுக்கு பிறகு, Gojoseon மூன்று கொரிய ராஜ்ஜியங்களாக (Proto–Three Kingdoms of Korea period) சிதைந்தது. கி.பி. இன் ஆரம்ப நூற்றாண்டுகளில், Buyeo, Oko, Dongye, மற்றும் Samhan ஆகியவைகளின் கூட்டமைப்பு வளைகுடா மற்றும் தெற்கு மஞ்சூரியா பகுதிகளை ஆக்கிரமித்தது. பல்வேறு மாநிலங்களில், Goguryeo, Baekje, மற்றும் சில்லா மாநிலங்கள் வளைகுடா பகுதிகளை கட்டுப்படுத்தும் அளவுக்கு வளர்ந்தது. இவைகளே மூன்று கொரிய ராஜ்ஜியங்கள் என்று அழைக்கப்பட்டன. 676 இல் சில்லா மூலம் மூன்று ராஜ்ஜியங்கள் ஒருங்கிணைந்தது, இது வட தென் அரசுகளின் காலகட்டத்திற்கு வழிவகுத்தது, அதே சமயத்தில் Balhae, Goguryeo வின் மேற்குப் பகுதிகளில் கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொண்டது. ஒன்றுபட்ட சில்லா வில், கவிதை மற்றும் கலைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது. புத்த கலாச்சாரம் செழித்தோங்கியது. கொரியா மற்றும் சீனா இடையேயான உறவு இந்த நேரத்தில் ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்தது. எனினும், ஒருங்கிணைந்த சில்லா உள்நாட்டு கலவரத்தால் பலவீனமடைந்து. பின் 935 இல் தனது வட பகுதி அண்டை நாடாடன Balhae விடம் சரணடைந்தனர் . Goguryeo ஒரு வாரிசு மாநிலமாக உருவாக்கப்பட்டது. Balhae இன் மிக உயர்வான காலகட்டதில், மஞ்சூரியா மற்றும் ரஷியன் தூர கிழக்கு பகுதிகளில் பெரும்பாலானவை இதன் கட்டுப்பாட்டில் இருந்தது. Sunjong, பேரரசர் யுங் ஹுய் தான் Joseon வம்சம் மற்றும் கொரிய பேரரசின் கடைசி பேரரசர் ஆவார். 936 இல் வளைகுடாபகுதிகளை Goryeo வின் அரசர் Taejo ஒருங்கிணைத்தார். சில்லா போலவே Goryeo வும் மிகவும் கலாச்சாரம் மிக்க அரசாக இருந்தது மற்றும் உலகின் பழமையான அசையும் உலோக வகை அச்சகம் பயன்படுத்தி, 1377 ல் Jikji உருவாக்கப்பட்டது. பிறகு 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலிய படையெடுப்புகள் Goryeo வை பெரிதும் வலுவிழக்கச்செய்தது. போர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. போருக்குப்பின் Goryeo வின் ஆட்சி தொடர்ந்தது என்றாலும், மங்கோலியர்களுக்கு கப்பம் கட்டும் அரசாகவே இருந்தது. மங்கோலியன் பேரரசு சரிந்த பின், கடுமையான அரசியல் பூசல் மற்றும் General Yi Seong-gye இன் கிளர்ச்சியினாலும், Goryeo வம்சத்தின் ஆட்சியை 1392 ல் Joseon வம்சம் கைப்பற்றியது. அரசர் Taejo, Gojoseon ஐ குறிக்கும் வகையில் "Joseon" ஐ கொரியாவின் புதிய பெயராக அறிவித்தார், மற்றும் Hanseong ஐ (Seoul இன் பழைய பெயர்) தலைநகராக அறிவித்தார். Joseon வம்சத்தின் ஆட்சியில் முதல் 200 ஆண்டுகள் அமைதி நிலவியது. 15 ஆம் நூற்றாண்டில், சிறந்த அரசர் Sejong, Hangul ஐ தோற்றுவிதார். மேலும் அக்காலகட்டதில், நாட்டில் மெய்விளக்கியத்தின் (Confucianism) செல்வாக்கு எழுச்சி கண்டது. 1592 மற்றும் 1598 க்கு இடையில், ஜப்பான் கொரியா மீது படையெடுத்தது. தலைவன் Toyotomi Hideyoshi ஜப்பானிய படைகளை வழிநடத்தினார், ஆனால் அவரது படைகள், கொரிய படைகளால்(மிகவும் குறிப்பாக Joseon கடற்படையால்) தடுத்து நிறுத்தப்பட்டன. அப்படைகள், கொரிய பொதுமக்கள் மற்றும் சீன மிங் வம்சம் உருவாக்கிய மிகச் சரியான இராணுவம் ஆகும்.தொடர் வெற்றிகரமான போர்களின் மூலம், ஜப்பானிய படைகள் இறுதியில் திரும்பப்பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது, மற்றும் அனைத்து கட்சிகள் இடையேயான தொடர்புகள் சீரானது. இந்த போர் கடற் படை தளபதி Yi Sun-sin மற்றும் அவரது புகழ்பெற்ற "ஆமை கப்பல் (turtle ship)" எழுச்சியைக் கண்டது. 1620s மற்றும் 1630s இல், Joseon, Manchu வின் படையெடுத்துகலளால் அவதிப்பட்டது. பல தொடர் மஞ்சூரியா வுக்கு எதிரான போர்களுக்குப் பிறகு, Joseon இல் கிட்டத்தட்ட 200 ஆண்டு காலம் அமைதி நிலவியது. குறிப்பாக Joseon வம்சத்தின் அரசர் Yeongjo மற்றும் அரசர் Jeongjo வின் ஆட்சி காலம், ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்பட வழிவகுத்தது. எனினும், Joseon வம்சம் பிந்தைய ஆண்டுகளில், வெளி உலகில் இருந்து தனிமை படுத்திக்கொண்டது. 19 ம் நூற்றாண்டில், கொரியாவின் தனிமைவாதிகள் கொள்கை, "துறவி இராச்சியம்(Hermit Kingdom)" ஏன்று பெயர் பெற்றது. Joseon வம்சம் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திலிருந்து தன்னை பாதுகாக்க முயற்சி செய்தது, ஆனால் இறுதியில் வர்த்தகத்தை திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. முதல் சீன-ஜப்பனீஸ் போர் மற்றும் ரஷ்ய-ஜப்பனீஸ் போருக்குப் பின்னர், கொரியாவை ஜப்பான் (1910-45) ஆக்கிரமித்தது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில், ஜப்பான் முறையே சோவியத் மற்றும் அமெரிக்க படைகளிடம் சரணடைந்து, பிறகு, கொரியாவின் வடக்கு பகுதியை சோவியத் மற்றும் தெற்கு பகுதியை அமெரிக்க படைகளும் ஆக்கிரமித்துக்கொண்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1943 இல் Cairo பிரகடனத்தில் ஓர் ஒன்றுபட்ட கொரியா அமைவதற்கான ஆரம்ப திட்டம் இருந்தாலும், சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்கா இடையேயான பனிப்போர் காரணமாக, இறுதியில் 1948 ல் கொரியா இரண்டு தனி அரசாங்கங்களாக உருவாயின. அவைகள் வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகும். தென் கொரியாவில், இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக, அமெரிக்காவின் ஆதரவுடன், கம்யூனிச எதிர்ப்பாளரான Syngman Rhee, புதிதாக அறிவிக்கப்பட்ட குடியரசின் முதல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார். வட கொரியாவில், முன்னாள் ஜப்பனீஸ் கொரில்லா எதிர்ப்பாளுரும் மற்றும் கம்யூனிச ஆர்வலருமான, Kim Il-sung, செப்டம்பர் மாதத்தில், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு பிரதமராக நியமிக்கப்பட்டார். அக்டோபர் மாதம், Kim Il-sung இன் அரசு தான் இரண்டு பாகங்கள் மீதும் அதிகாரம் உள்ள அரசு என்று சோவியத் ஒன்றியம் அறிவித்தது. Syngman Rhee இன் அரசை, சட்டப்பூர்வமான அரசாங்கம் என்று ஐ.நா அறிவித்தது. இரு தலைவர்களும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொரியாவை ஒருங்கிணைக்க முற்பட்டனர். தென் கொரியாவின் இராணுவ ஆதரவு கோரிக்கையை, அமெரிக்கா மறுத்தது. அதே சமயத்தில், வட கொரியாவின் இராணுவத்தை சோவியத் ஒன்றியம் வலுப்படுத்தியது. ஜூன் 25, 1950-ல் வட கொரியா, தென் கொரியா மீது படையெடுத்தது. அந்த கொரிய போர் தான் முதல் பெரிய மோதல். அப்போர், 1953 வரை தொடர்ந்தது. அச்சமயத்தில், சோவியத் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) கூட்டத்தை புறக்கணித்தது. அது ஐ.நா ஒரு உள்நாட்டுப் போரில் தலையீடு செய்ய அனுமதித்தது.வட கொரியாவின் சக்தி வாய்ந்த படைகள், கொரியாவை ஒன்றுபடுத்தி விடுவார்கள் என்பது தெரிந்ததும், ஐ.நா ஒரு உள்நாட்டுப் போரில் தலையீடு செய்தது. சோவியத் யூனியன் மற்றும் சீனா வட கொரியாவை ஆதரித்தது. வடக்கு மற்றும் தெற்கு இரண்டிலும் கொரிய பொதுமக்கள் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டனர். போர் இறுதியில் இக்கட்டான நிலையை அடைந்து. 1953 ல் போர் நிறுத்த ஒப்பந்ததில் ஒருபோதும் தென் கொரியா கையெழுத்திட்டதில்லை. அதன் பிறகு , அசல் எல்லைக்கோடடின் அருகே படைகளகற்றிய பகுதியில் இருந்து வளைகுடாநாடு பிரிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்படாததால், தொழில்நுட்பரீதியாக அங்கு இன்னும் போர் நிறுத்தம் அமலில் இல்லை. கொரியப் போரின் போது, சுமார் 12 இலட்ச கொரிய மக்கள் இறந்தனர். Syngman Rhee இன் சர்வாதிகார மற்றும் ஊழல் ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து, 1960 ஆம் ஆண்டில், ஒரு மாணவர் எழுச்சி ("ஏப்ரல் 19 புரட்சி") போராட்டம் நடத்தியது. அது அவரை ராஜினாமா செய்ய செய்தது. Park Chung-hee அரசியலில் ஒரு ஸ்திரமற்ற பலவீனமான நிலைமை நிலவிய நேரத்தில், மே 16 இல் ஆட்சியை கவிழ்திவிட்டு, ஜனாதிபதியாக பொறுப்பெற்றுக்கொண்டார். அவர் 1979 இல் படுகொலை செய்யப்படும் வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார். Park Chung-hee ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விரைவான பொருளாதார வளர்ச்சியை அரசியல் அடக்குமுறையை செயல்படுத்தி, பொருளாதாரத்தை ஏற்றதில் கொண்டு சென்றார். ஒரு இரக்கமற்ற இராணுவ சர்வாதிகாரி என Park விமர்சிக்கப்பட்டார். அவர் 1972 ல், அவரின் ஆட்சி காலத்தை நீட்டிக்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்கினார். அது அவருக்கு விரிவான அதிகாரங்களை கொண்ட மற்றும் வரம்பற்ற ஆறாண்டு (கிட்டத்தட்ட சர்வாதிகார) ஜனாதிபதி பதவியை தக்க வைத்து கொள்ள வழிவகுத்தது. எனினும், கொரிய பொருளாதாரம் Park காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றது மற்றும் அரசின் நாடு தழுவிய அதிவேக அமைப்பு, சியோல் சுரங்கப்பாதை அமைப்பு உருவாக்கப்பட்டது, மற்றும் அவருடைய 17 வருட ஆட்சிக்காலம் தென் கொரியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. உணவுமுறை கொரிய உணவுமுறையானது அரிசி, னூடுல்ஸ், மாமிசம், மீன், காய்கறிகள் முதலியவற்றை அடிப்படையாக கொண்டது. கொரிய பாரம்பரிய உணவில் அரிசிச் சதாத்துடன் எத்தனை வகையான பக்க உணவுகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது. ஒவ்வொறு உணவு முறையின் போதும் வெவ்வேறு விதமான பக்க உணவுகள் இடம்பெறும். கிம்சி (kimchi), இது முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை காரம் சேர்த்து சில நாட்கள் நொதிக்க வைத்து பரிமாறப்படும் ஒரு பாரம்பரிய உணவு. கொரிய உணவுகளில் வழக்கமாக சுவையூட்ட எள் எண்ணெய், நெரிகட்டிய சோயா பேஸ்ட், சோயா சாஸ், உப்பு, பூண்டு, இஞ்சி, மற்றும் ஒரு மிளகாய் பேஸ்ட் பயன்படுத்தபடுகிறது. மேற்கோள்கள் கொரியா ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
5058
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
புவனேசுவரம்
{{Infobox settlement | name = புவனேசுவரம் | native_name = புவனேசுவர் (ஒடியா:,ஆங்கிலம்:Bhubaneswar) ஒடிசா மாநிலத்தின் தலைநகராகும். இது பண்டைய கலிங்க நாட்டின் தலைநகராகவும் விளங்கியது. இங்கு கோவில்கள் மிகுந்திருப்பதால் இந்தியாவின் கோவில் நகரம் என்றும் வழங்கப்படுகிறது. 1948-ஆம் ஆண்டு புவனேசுவர் இன்றைய ஒடிசாவின் தலைநகரமாக ஆக்கப்பட்டது. இதனுடைய மக்கள் தொகை 10 இலட்சத்திற்கும் கூடுதலாகும். போக்குவரத்து சாலை ஒடிசா போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகம் இங்குள்ளது. புவனேசுவர் பேருந்து நிலையம் நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பர்முண்டா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இதன் அண்டை மாநிலங்களான ஆந்திரா, மேற்கு வங்காளம், சார்க்கண்டு ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. தொடர்வண்டி கிழக்குக் கடற்கரை இரயில்வேயின் தலைமையகம் புவனேசுவரில் உள்ளது. புவனேசுவர் இரயில் நிலையம் நாட்டின் முதன்மையான நிலையங்களுள் ஒன்று. இங்கிருந்து புது தில்லி, மும்பை, சென்னை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு முதலிய பெருநகரங்களுக்கு தொடர்வண்டி வசதி உள்ளது. நகர் எல்லைக்குள் மொத்தம் ஐந்து இரயில் நிலையங்கள் உள்ளன. வான்வழிப் போக்குவரத்து புவனேசுவர் விமானநிலையம் என்றறியப்படும் பிசூ பட்நாயக் விமான நிலையமே ஒடிசாவில் உள்ள ஒரே பெரிய வானூர்தி நிலையமாகும். இங்கிருந்து நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி உள்ளது. ஆட்சிப் பிரிவுகள் இந்த நகரத்தை புவனேசுவர நகராட்சி நிர்வகிக்கிறது. இந்த நகரத்தில் 67 நகர்மன்றங்கள் உள்ளன. ஒவ்வொரு நகர்மன்றத்திலும் வசிக்கும் மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, நகராட்சி மன்ற உறுப்பினர் ஆவார். இவருக்கு ஐந்தாண்டு கால பதவி வரம்பு இருக்கும். இவர்கள் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதையும், பள்ளி, மருத்துவமனை போன்றவற்றை ஏற்படுத்துவதையும் நிர்வகிப்பதையும் செய்ய வேண்டும். ஒடிசா அரசின் தலைமையகம் இங்குள்ளது. இங்கு ஒடிசா சட்டமன்றம் இயங்கும். இங்கு மாவட்ட நீதிமன்றமும், கீழமை நீதிமன்றமும் உள்ளன. தட்பவெப்ப நிலை சான்றுகள் இணைப்புகள் புவனேசுவர் நகராட்சி புவனேசுவர் நகராட்சிக் குழுமம் புவனேசுவரில் சுற்றுலாத் தளங்கள் இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் ஒரிசா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் ஒரிசாவிலுள்ள மாநகரங்கள் கோர்த்தா மாவட்டம் புவனேஸ்வர் பண்டைய இந்திய நகரங்கள்
5059
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE
அரியானா
ஹரியாணா (இந்தி : हरियाणा, பஞ்சாபி: ਹਰਿਆਣਾ, ) ஒரு வட இந்திய மாநிலம். அரியாணா என்ற சொல் (ஹரி – இந்து கடவுள்) “கடவுளின் வசிப்பிடம்” என்று பொருள்படும். அரியாணா 1966-ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. தனது எல்லைகளாக வடக்கில் பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களையும், மேற்கிலும், தெற்கிலும், ராஜஸ்தான் மாநிலத்தையும், கிழக்கில் உத்திரப் பிரதேசம் மாநிலத்தையும் கொண்டுள்ளது. அரியாணா மாநிலம், டெல்லி நகரை வடக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் சூழ்ந்துள்ளமையால், அரியாணாவின் சில பகுதிகள், நாட்டுத் தலைநகர் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அரியாணாவின் தலைநகர் சண்டிகர் நகரம் ஆகும். அதுவே, பஞ்சாப் மாநில தலைநகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அரியாணாவில் தனிநபர் வருமானம் ரூ 29,887 என்ற அளவில் தரவரிசை பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அரியாணா ஒரு தொழில்வளம் மிக்க மாநிலமாக வளர்ந்து வருகிறது. குர்காவன் நகரம் தகவல் தொழில்நுட்பம் வண்டி உற்பத்தியிலும் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வண்டி தயாரிப்பாளரான மாருதி உத்யோக் நிறுவனம், குர்காவன் நகரத்தை தனது தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர மோட்டார் வண்டி தயாரிப்பாளரான ஹீரோ ஹோண்டா நிறுவனமும் குர்காவன் நகரத்தை தனது தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பானிபட், பஞ்சகுலா, பரிதாபாத் ஆகியனவும் முக்கிய தொழில்துறை வளர்ச்சியுற்ற நகரங்கள். பானிபட் நகரத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பாலை தெற்கு ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிது என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டங்கள் மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக அரியானா மாநிலத்தை 4 கோட்டங்களாகவும், 22 மாவட்டங்களாகவும் பிரித்துள்ளனர். அரியானா மாநில கோட்டங்கள், மாவட்டங்கள் விவரம்; புவியியல் 44,212 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்ட அரியானா நான்கு திசைகளிலும் நிலத்தால் சூழப்பட்ட வட இந்திய மாநிலம். இது அட்சரேகை 27°37' இருந்து 30°35' வரை வடக்கிலும், தீர்க்க ரேகை 74°28' இருந்து 77°36' வரை கிழக்கிலும் அமைந்துள்ளது. அரியானா கடல் மட்டத்தில் இருந்து 700 அடியிலிருந்து 3600 அடிவரை உயரத்தில் அமைந்துள்ளது. காடுகள் சுமார் 1,553 சதுர கிலோமீட்டர்களை கொண்டுள்ளன. அரியானாவின் நான்கு முக்கிய புவியியல் அம்சங்களாவன: யமுனை -காகர் சமவெளி. வடகிழக்கில் அமைந்துள்ள சிவாலிக் மலை தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தார் பாலைவனம். தெற்கே ஆரவல்லி மலைத்தொடர். அரியானாவின் ஆறுகள் : யமுனை ஆறு அரியானாவின் கிழக்கு எல்லையில் பாய்கிறது. பண்டைய இதிகாசஙகளில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி ஆறு அரியானாவின் ஊடே பாய்ந்ததாக நம்பப்படுகிறது. அரியானாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான காகர் ஆறு, பருவகால ஆறு. இது, இமய மலையில் தோன்றி, யமுனை மற்றும் சட்லஜ் ஆறுகளுகிடையான சமவெளியில் பாய்ந்து, அரியானாவின், பஞ்சகுலா என்ற இடத்தில் நுழைந்து, அம்பாலா, ஹிசார் போன்ற பகுதிகளை வளப்படுத்தி, பய்கன்னர் என்னும் இடத்தில், ராஜஸ்தான் பாலைவனத்தில் நுழைகிறது. அரியானாவின் மற்ற முக்கிய ஆறுகளாக கருதப்படுபவன: மார்கண்டா, தன்கரி, மற்றும் ஸாகிபி. காலநிலை அரியானாவின் காலநிலை மற்ற வட இந்திய மாநிலங்களின் காலநிலையை ஒத்துள்ளது. காலநிலை, கோடைகாலத்தில், மிக வெப்பமாகவும் (கூடியபட்சம் 50 டிகிரி செல்சியஸ் வரை), குளிர் காலத்தில் மிகக் குளிர்ச்சியாகவும் (குறைந்தபட்சம் 1 டிகிரி செல்சியஸ் வரை) காணப்டுகிறது. மே மற்றும் சூன் மாதங்கள் வெப்பமானதாகவும், டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிரான பதிவு செய்ய பட்டுள்ளன. பொதுவாக மழைகாலங்களை கணிக்க இயலாவிடினும், 80 விழுக்காடு மழை காலமழையின் (சூலை –செப்டம்பர்) மூலமே பெறப்படுகிறது. அரியானாவின் தாவர மற்றும் விலங்கு வளங்கள் முள்செறிந்த , வரண்ட, முட்புதர்கள் மாநிலம் எங்கும் காண்ப்படுகின்றன. பருவ மழைகாலங்களில், புல்வெளிகள் உருவாகின்றன. மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகள், காலமழையை சார்ந்து இருப்பன. மல்பெரி, யூக்காலிப்டஸ், தேவதாரு, பாபுல் போன்ற மரங்களை பொதுவாக எங்கும் காணலாம். அரியானா மாநிலத்தில் காணப்படும் விலங்கினகளாவன: கலைமான், சிறுத்தை, நரி, மங்கூஸ், ஓநாய் மற்றும் காட்டுநாய். பொருளாதாரம் கிராமபுர பொருளாதாரம் வேளாண்மை சார்ந்ததாகவே இருந்து வருகிறது. குர்கான் நகரத்தில் தொழிற்சாலைகள் பெருகியதால் உண்டான பொருளாதர வளர்ச்சியினால், பல மாநிலங்களிலிருந்து மக்கள் அரியானாவுக்கு குடிபெயர்ந்து வருதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பீகார் , மேற்கு வங்கம் , நேபாளம் ஆகியன இதில் முதன்மை பெறுகின்றன. மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அரியானா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 25,351,462 ஆக உள்ளது. நகர்புறங்களில் 34.88% மக்களும், கிராமப்புறங்களில் 65.12% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.90% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் மற்றும் பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 879 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 573 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 75.55% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 84.06% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 65.94% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,380,721 ஆக உள்ளது. சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 22,171,128 (87.46%) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 1,781,342 (7.03%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 50,353 (0.20%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,243,752 (4.91%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 52,613 (0.21%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 7,514 (0.03%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 2,548 (0.01%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 42,212 (0.17%) ஆகவும் உள்ளது. மொழி இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், அரியானாவின் வட்டார பேச்சு மொழியான அரியான்வி மற்றும் பஞ்சாபி, உருது பேசப்படுகிறது. ஆனால் இதற்கு அரசாங்க அங்கிகாரம் இல்லை. இது இந்தியின் வட்டார பேச்சு மொழியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் பெரும்பாலான சொற்கள் ராஜஸ்தானி மொழியின் ஒரு கிளை மொழியான பாக்ரி மொழியை ஒத்து உள்ளது. அரியானாவாதியின் சில சொற்கள் இந்தியின் அதிகாரபூர்வமான கிளைமொழியான கரிபோலியை ஒத்து இருந்தாலும் பெரும்பாலானாவை வேறுபட்டவை. முதலில் தமிழுக்கு இரண்டாம் மொழி தகுதி வழங்கப்பட்டது. ஆனால் 2010இல் பஞ்சாபிக்கு இரண்டாம் மொழி தகுதி வழங்கப்பட்டது. பண்பாடு ஹரியானாவின் பண்பாடு், நீடிய வரலாற்றை கொண்டது. கிராமிய கலைகள் இன்றும் பெரிதும் போற்றப்படுகின்றன. இம்மாநில நடனம் கோமர் எனப்படும் நடனமாகும். இந்தி மொழியும், அரியான்வி மொழியும் பெரும்பாலும் பேசப்படுகினறன. சில வட்டாரப் பேச்சு மொழிகளும் வழக்கில் உள்ளன. சமஸ்கிருதம் பல பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. நகரங்களில் ஆங்கிலம் கலந்த இந்தி பேசப்படுகிறது. அரசாங்கம் மற்றும் அரசியல் மற்ற இந்திய மாநிலங்களை போன்றே, முதல் மந்திரி பதவி, ஆளுநர் பதவியைவிட அதிக அதிகாரங்களை பெற்றது. அரியானாவின் சட்டசபை 90 உறுப்பினர்களைக் கொண்டது. அரியானாவுக்கு மாநிலங்களவையில் 5 இடங்களும், மக்களவையில் 10 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது . அரியானாவின் அரசியல் களத்தில் இருக்கும் மூன்று முக்கிய கட்சிகளாவன : இந்திய லோக் தளம், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ். தற்போதய அரசு பூபின்தர் சிங் கூடா தலைமையின் கீழ் நிலையான ஆட்சி நடத்திவருகிறது. பொருளாதாரம் அரியானா நிலையான பொருளாதார முன்னேற்றம் அடைந்து வரும் மாநிலம். கடந்த 2006-2007ம் ஆண்டுகளில், நிதி பற்றாக்குறை 0.6 விழுக்காடாக இருந்தது. அரியானா கடந்த 2007 ம் ஆண்டு, தனிநபர் முதலிட்டில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்கியது. கடந்த ஆண்டில் மட்டும் ரூ 1,86,045 கோடி அரியானாவில் முதலிடு செய்யப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் 2006-07 ஆண்டில் மட்டும் ரூ 11,000 கோடி நேரடி அன்னிய முதலிட்டை ஈர்த்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன்ங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழும நிறுவனம், அரியானாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சுமார் ரூ 40,000 கோடி செலவில், தனது தொழிலகங்களை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இம்மாநிலம் 4500 வங்கி கிளைகளுடன், வங்கிதுறையில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. தொழில்துறை தயாரிப்பு மற்றும் சேவை துறைகளில் முன்னேற்றம் கண்ட குர்கான், பஞ்சகுலா, பரிதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் சுமார் $ 40.4 பில்லியன் முதலிட்டில் ஆயிரத்துகுமதிகமான மத்திய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களுள், இந்துஸ்தான் கண்ணாடிகள் நிறுவனம், மாருதி உத்யோக் நிறுவனம், எச்காட் நிறுவனம், ஹேரோ ஹோண்டா, அல்கேடல், சோனி, வீர்பூல், பாரதி தொலைதொடர்பு ஆகியவை குறிப்பிடதக்கவை. இது தவிர சுமார் 80,000 சிறு தொழிலகங்கள் இயங்கி வருகின்றன. யமுனாநகர் மாவட்டம் BILT காகித தொழில்சாலை செயல்பட்டு வருகிறது. பரிதாபாத் நகரம், அரியானாவின் மற்றுமொரு பெரிய தொழில்துறை நகராகும். இங்கு புகழ்பெற்ற நிறுவனங்களான ஓரியன் காற்றாடிகள் (பிர்லா குழுமம்), JCB இந்தியா, யமகா விசைப்பொறி இந்தியா Pvt. Ltd., வீர்பூல் , குட் ஈயர் உருளிப்பட்டை நிறுவனம் ஆகியன செயல்பட்டு வருகின்றன. பானிபட் நகரம் ஆடை தயாரிப்புக்கும், கம்பள தயாரிப்புக்கும் பெயர் பெற்றது. இங்கு தயாராகும் கைத்தறி ஆடைகள், உலகப் புகழ் பெற்றவை. மேலும், பானிபட் நகரில் இந்திய எண்ணெய் கழகத்திற்கு சொந்தமான ஒரு கல்நெய் சுத்திகரிப்பாலை செயல்பட்டு வருகிறது. சேவை துறை குர்கான் நகரம்,கடந்த சில வருடங்களில் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப மையமாக உருவெடுத்து வந்துள்ளது. கணிணித்துறையில் புகழ்பெற்று விளங்கும் பல நிறுவனங்கள் தங்கள் கிளை அலுவலகங்களை குர்கான் நகரில் அமைத்துள்ளனர். பொருளாதார போக்கு கீழ்காணும் வரைபடம் இம்மாநிலத்தின் மொத்த உற்பத்தியினை சந்தை விலையில் குறிக்கிறது. எண்கள் ரூபாய் கோடிகளில். வேளாண்மை தற்காலத்தில் அரியானா தொழில்துறையில் முன்னேற்றம் கண்டிருப்பினும், அரியானா மக்களின் முக்கிய தொழில் வேளாண்மையே. சுமார் 70% மக்கள் விவசாய தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். கோதுமையும் அரிசியும் முக்கிய விளைபொருள்கள். இவை தவிர, கரும்பு, பருத்தி, எண்ணெய் வித்துக்கள் , பருப்பு, பார்லி , சோளம், தினை ஆகியனவும் விளைகின்றன. சுமார் 86 விழுக்காடு நிலப்பரப்பு விவசாயத்திற்குகந்த நிலமாகவும், அதில் 96 விழுக்காடு விவசாய நிலமாகவும் பயன்படுத்தபடுகிறது. சுமார் 75% விவசாய நிலங்கள் ஆழ்குழாய் நீர்பாசனத்தையும் கால்வாய் நீர்பாசனத்தையும் நம்பியுள்ளவை. வேளாண்மை துறைக்கு பெரும் பங்காற்றியுள்ள சவுத்திரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம் இம்மாநிலத்திலுள்ள கீசார் நகரில் அமைந்துள்ளது. பார்க்க வேண்டிய இடங்கள் பிஞ்சூர் தோட்டம், அபூப்சாகர் விலங்குகள் சரணாலயம், பிரம்மசரோவர், குருச்சேத்திரம், கிருஷ்ணா அருங்காட்சியகம் பாறைச் சிற்பத் தோட்டம் மற்றும் ரோசாத் தோட்டம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அரசு அலுவல் தளம் அரியானா பற்றிய தகவல் தளம் இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்