text stringlengths 0 2.93k |
|---|
இருந்தாலும் அவர்களிடம் |
நாம் கற்றுக்கொள்ள ஏதாவது |
ஒரு நல்ல பழக்கம் |
கண்டிப்பாக இருக்கும் |
எதை தொலைத்தாலும் |
தேடி கண்டுபிடித்து விடலாம் |
ஆனால் |
தொலைத்த வாழ்நாளை |
மீட்டெடுக்கவே முடியாது |
செய்த தவற்றை |
சரி செய்யவோ |
ஒப்புக்கொள்ளவோ |
தைரியம் இல்லாதவர்கள் |
அதன் பழியை அடுத்தவர் |
மேல் போட்டு |
நிரந்தர கோழைகளாகி |
விடுகின்றனர் |
பிறரை குறைத்து பேசி |
உன் மதிப்பைக்கூட்ட |
நினைக்காதே |
அப்படி செய்வதால் கூடுவது |
உன் தலைக்கணமே தவிர |
மதிப்பல்ல |
உணர்ந்தவன் உயர்வான் |
நம்மை |
ஒருவர் மதிக்கவில்லை |
என்று நினைப்பது |
முட்டாள்தனம் |
அவங்களுக்கு |
நம் மதிப்பு தெரியவில்லை |
என்பதே உண்மை |
அதற்கு நாம் பொறுப்பல்ல |
ஒருத்தவங்கள பிடிக்கலன்னா |
அவங்களப்பத்தி யாரென்ன |
தப்பா சொன்னாலும் |
நம்பத்தோணுதுல்ல |
அதுக்கு பேர்தான் |
(வன்மம்) |
அதிகமான நண்பர்களை |
கொண்டிருப்பது |
முக்கியமானது அல்ல |
உண்மையான நண்பர்களை |
கொண்டிருப்பதே முக்கியமானது |
உன் முன்னால் |
புகழப்படும் பொன்னான |
வார்த்தைகளைவிட |
உன் பின்னால் |
புகழப்படும் சாதாரண |
வார்த்தைகள் தான் |
உனக்கான மதிப்புமிக்க |
சான்று ஆகும் |
அவசரமாய் வாழ்வது |
வாழ்க்கை அல்ல |
அனுபவித்து வாழ்வது |
தான் வாழ்க்கை |
(அவசர உலகம்) |
வாழ்க்கையும் |
கிரிக்கெட் தான் |
எதுவும் நடக்கலாம் |
எதையும் ஏற்றுக்கொள்ளும் |
மனவலிமை வேண்டும் |
பல சந்தர்ப்பங்களில் |
பல பெரிய தவறுகளை |
செய்து தப்பித்த ஒருவன் |
ஒரு சிறு தவறுக்கு |
மாட்டிக்கொள்கிறான் |
(அலட்சியம்) |
வெளிச்சம் இல்லையென்றால் |
நிழல் கூட உங்களை |
மதித்து பின்னால் வராது |
முடிந்தவரை முடியாதவர்களுக்கு |
வெளிச்சமாய் இருப்போம் |
சாதிப்பவர்கள் யாரும் |
பெருமை பேசுவதில்லை |
பெருமை பேசுபவர்கள் |
யாரும் சாதிப்பதில்லை |
வெற்றியின் கனியை |
பறித்தவர்களே விடாமுயற்சியின் |
பயனை முழுவதும் |
உணர்ந்தவர்கள் எனலாம் |
அது ஒரு அழகிய |
காலம் என்று |
சொல்லுமளவு ஏதேனும் |
ஒரு நிகழ்வு |
எல்லோர் வாழ்விலும் |
இருக்கத்தான் செய்கிறது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.