text
stringlengths
0
2.93k
முறியாத சோம்பலை
உடைத்தெறிந்து விட்டு
விண்ணை எட்டும்
நம்பிக்கை பலமேற்றி
சாதிக்கும் முயற்சியை
பார்வையில் நிறுத்தி
உலகை வலம் வரும்
அன்பார்ந்த உறவுகளுக்கு இந்நாள்
இனிய நாளாக வாழ்த்துக்கள்
நாம் பிறருக்கு
செய்வதையே
நாமும் அடைவோம்
அன்பை கொடுத்தால்
அன்பு
வம்பை கொடுத்தால்
வம்பு
வான்வெளியில்
மாயம் நிகழ்ந்தது
மழை பெய்தது
மண் மலர்ந்தது
கார்மேகம் கண்ட
மயில் போல
என் மனம் மகிழ்ந்தது
(மழை)
புகழ்ந்தாலும்
இகழ்ந்தாலும்
புன்னகையோடு
கடந்து செல்பவரே
சரித்திரம் படைக்கிறார்
சொல்வதற்கு
ஒன்றுமில்லாத இடங்களில்
வணக்கத்துடன்
புன்னகை மட்டுமே
உதிர்த்து விட்டு
செல்லுங்கள்
உங்கள் மீதான
மதிப்பு உயரும்
நட்புக்களின்
எண்ணிக்கை எப்போதும்
மகிழ்ச்சியை தருவதில்லை
நல்ல எண்ணங்கள் கொண்ட
நட்புக்களே வாழ்வில்
நிலையான மகிழ்ச்சியை
அள்ளித் தர முடியும்
சிறப்பான நண்பர்களை
தேர்ந்தெடுங்கள்
சிறப்பான நண்பர்களாக
மற்றவர்களுக்கு திகழுங்கள்
நீ
எங்கு சென்றாலும்
உன்னை பற்றி
குறை கூறவே
சிலர் காத்துக்
கொண்டிருக்கும்
உலகம் இது
உன்னைப் பற்றி
குறை கூற அவர்கள்
உத்தமர்களும் இல்லை
அவர்கள் கூறியதை
எண்ணி கவலைப்பட
நீ கோழையும் இல்லை
தவமிருந்தாலும்
கிடைக்காத வரம்
பெற்ற அன்னையை
குழந்தையின்
வடிவில் பார்ப்பது
பல முறை ரசிக்கவைத்த காட்சி
நிம்மதி வேண்டுமென்று
தேடுகிறார்களே தவிர
ஆசைகளை கைவிட
யாரும் நினைப்பதில்லை
ஆசைகளை துறந்து பாருங்கள்
நிம்மதி என்றும்
உங்கள் வசப்படும்
எத்தனை பேர்
என்ன சொன்னாலும்
நமக்கு பிடித்தது போல்
நாம் வாழ்வதிலே
இருக்கிறது நமக்கென்ற
ஒரு அடையாளம்
இந்த உலகம்
வதந்திகளை நம்பும் அளவிற்கு
நிஜம்
தன்னுடைய உண்மைத்தன்மையை
இழந்து விடுகிறது
முகமூடிகளையே
ரசித்து
பழகி விட்டீர்கள்