text
stringlengths
0
2.93k
வேண்டும் வேண்டும் என்று துள்ளுமே
இது தவித்திடும் நெருப்பா
இல்லை குளிர்ந்திடும் நீரா
இது பனி ஏறி மழையா
இதை அறிந்தோர் யாருமில்லை
உள்ளத்திலே அறை உண்டு வாசல் இல்லை
உள்ளே வந்திடும் நினைவோ திரும்பவில்லை
தூங்கும் போதும் இது துடித்திடுமே
ஏங்கும் போதோ இது வெடிக்கும்
தீண்டும் விரல் என்று தெரிந்த பின்பும்
வேண்டும் என்றே இது நடிக்கும்
இது கடவுளின் பிழையா
இல்லை படைத்தவன் கொடையா
கேள்வி இல்லா விடையா
இதை அறிந்தோர் யாருமில்லை
இதயம் இல்லை என்றால் என்ன நடக்கும்
கண்ணீர் என்னும் வார்த்தையை மொழி இழக்கும்
இதயம் இந்த இதயம்
இன்னும் எதனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
வெண்பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டி தான் வைத்தேனே
அங்கே நீ வந்த பின்னே கோவில் ஆனதே
இதயம் உன்னை தேடுதே உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே
நினைவும் உன்னை தேடுதே நிழலும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே
அடி பெண்ணே இறந்தாலும் உன் மடியில்
கண்மூடத்தானே ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை நீ பார்த்தால் அது போதும்
அப்போதே நானும் மீண்டும் மண்மேல் உயிர்த்தெழுவேன்
வெண்பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டி தான் வைத்தேனே
அங்கே நீ வந்த பின்னே கோவில் ஆனதே
பெண்ணே உன் நெஞ்சுக்குள் சோகங்கள் கூடாது ஓ…
ஆனந்த கண்ணீரில் அழுதாலும் தாங்காது ஓ…
இறைவா ஓர் வரம் கொடு ஓ… இவன் எந்தன் மகனாகவே
தினந்தோறும் அழவிடு ஓ… தாயாகி தாலாட்டவே
எங்கே நீ சென்றாலும் என் கால்கள் எப்போதும்
உன் பின்னே தான் நடக்கும் ஓ…
ஆகாயம் சாய்ந்தாலும் பூலோகம் ஓய்ந்தாலும்
நம் காதல் தான் இருக்கும் ஓ…
வெண்பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில் சாரல் நானடி
கண்ணுக்குள் வீடொன்று கட்டி தான் வைத்தேனே
அங்கே நீ வந்த பின்னே கோவில் ஆனதே
இதயம் உன்னை தேடுதே உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே உயிரின் உயிரே
அடி பெண்ணே இறந்தாலும் உன் மடியில்
கண்மூடத்தானே ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை நீ பார்த்தால் அது போதும்
அப்போதே நானும் மீண்டும் மண்மேல் உயிர்த்தெழுவேன்
பெண்: பழநிமல உச்சியில பாரத்தெல்லாம் எறக்கிவச்சு
சொக்கம்பட்டி காட்டுக்குள்ள கரும்பு வெட்டும் காளைகளா...
கட்டெறும்பு காயப்படாம கணுக்கணுவா பாத்து வெட்டு
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா..
இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா..
(இசை...)
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா..
குழு: நடக்காதுடா..
ஆண்: இங்க எறும்பு கூட யாரையுமே கடிக்காதுடா..
குழு: கடிக்காதுடா..
ஆண்: ஹேய் வெட்டுறவன் வெட்டினா தித்திக்கும்டா கரும்பு
குத்துறவன் குத்துனா ரத்தம் கொட்டும் உடம்பு
வெட்ட வெட்ட வாழையாவோம்
கொட்ட கொட்ட தேனீயாவோம்
கஷ்டமுனு வந்தா கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா நடையக்கட்ட மாட்டோம்
குழு: வெற்றி வேலு முருகன் வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன் எங்க வீரத்தில இருப்பான்
ஆண்: இந்த ஊரில் எப்பவுமே கெட்டதே நடக்காதுடா
குழு: நடக்காதுடா
(இசை...)
ஆண்: பச்சரிசி பொங்கவச்சு பூஜ நடத்தணும்
குழு: நல்ல நாளு.. இந்த நாளு..
ஆண்: ஏ ஏ கட்டுக்கட்டா கரும்பெடுத்து கடிச்சு நொறுக்கணும்
குழு: நல்லா சொன்ன.. வேலு வேலு..
ஆண்: மருதமல முருகனுக்கு அலகு குத்தி வந்தோம்
மதுரைவீரன் சாமிக்குத்தான் அருவா அடிச்சு தந்தோம்
மாரியம்மன் காவலால் நல்லா இருக்கு ஊரு
அண்ணன் தம்பி போலதானே ஒண்ணா இருப்போம் பாரு