text
stringlengths
0
2.93k
காணவில்லையே என் தோழியே
வலைகையைப் பிடித்து வலைகையில் விழுந்தேன்
வலக்கரம் பிடித்து வளம் வர நினைத்தேன்
உறவெனும் கவிதை உயிரினில் வரந்தேன்
எழுதிய கவிதை ஏன் முதல்வரி முதல் முழுவதும் பிழை
விழிகளின் வழி விழுந்து மழை எல்லாம் உன்னால்தான்
இதுவா உந்தன் நியாயங்கள்? எனக்கேன் இந்த காயங்கள்?
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ
முருகன் முகம் ஆறுதான்
மனிதன் முகம் நூறுதான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ
என் நண்பனே என்னை எய்த்தாய்
காதல் வெல்லுமா காதல் தோற்குமா?
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே...
காதல் ஓவியம் கிழிந்துபோனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்
அடிக்கடி என்னை நீ அணைத்ததை அறிவேன்
அன்பென்னும் விளக்கை அணைத்ததை அறியேன்
புயல் வந்து சாய்த்த மரமொரு விறகு
உனக்கென்ன தெரியும்!
என் இதயத்தில் வந்து விழுந்தது இடி
இள மனம் எங்கும் எழுந்தது வலி
யம்மா யம்மா
உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை..... ஓ
எதுவும் அங்கு மாயம்தான் எல்லாம் வர்ணஜாலம்தான்
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே
காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக்கொள்ளடி என் தோழியே....
உண்மை காதலை நான் தேடிப்பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே....
உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
சூடான பேரும் அதுதான் சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும்
சூரியனை நீயும் நினைத்தால் அது இல்லையே
ஜில்லென்ற பேரும் அதுதான் கேட்டவுடன் நெஞ்சம் குளிரும்
நதியென்று நீயும் நினைத்தால் அது இல்லையே
சிலிர்க்கவைக்கும் தெய்வமில்லை
மிளரவைக்கும் மிருகமில்லை
ஒளிவட்டம் தெரிந்தாலும் அது பட்டப்பேரில்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..
பெரிதான பேரும் அதுதான் சொல்ல சொல்ல மூச்சே வாங்கும்
எத்தனை எழுத்துக்கள் என்றால் விடையில்லையே
சிறிதான பேரும் அதுதான்
சட்டென்று முடிந்தேபோகும் எப்படி சொல்வேன் நானும்
மொழி இல்லையே
சொல்லிவிட்டால் உதடு ஒட்டும்
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்
அது சுத்த தமிழ் பெயர்தான்
அயல் வார்த்தை அதில் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..
உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
தள்ளிப் போகாதே..
தங்கமே உன்னத்தான்
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு
ஏன் இங்கு வந்தான் பேசாதே என்றான்...
வாடா பின் லேடா
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
பாடல் : வாடா பின் லேடா
படம்: மங்காத்தா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: க்ரீஷ், சுசித்ரா
(((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))
வாடா பின் லேடா ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா
நூடாலை நிக்காத இடுப்பு ஓ
நீதான் என் தோதான உடுப்பு ஓ
என்னை தொடாமலே செம்ம சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்
வாடா பின் லேடா ஒளியாதே அச்சோடா
என்னை ட்வின் டவர் என்று இடிடா
ஜப்பானின் ஹைக்கூவா ரஷ்யாவின் வொட்காவா
நீ என்னுள் என்னை கண்டுப்பிடிடா