category stringclasses 3
values | title stringlengths 1 636 | text stringlengths 1 138k ⌀ |
|---|---|---|
தமிழகம் | திருவிழா | சோழவந்தான்:சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசிதோறும் 17 நாட்கள் விழா நடக்கும். நேற்று முன் தினம் இரவு கொடியேற்றம் நடந்தது. முன்னதாக பக்தர்கள் பின்தொடர பூஜாரி சண்முகம் கொடியுடன் ரத வீதி சுற்றி ஊர்வலம் வந்தார்.முக்கிய நிகழ்வாக ஜூன் 18ல் பால்குடம், அக்னிசட்டி, 19ல் பூக்குழி, 25ல் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை நி... |
தமிழகம் | ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது | கும்மிடிப்பூண்டி:தமிழக ரேஷன் அரிசியை, ஆந்திராவுக்கு கடத்திய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், சிப்காட் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திரா நோக்கி செல்லும் சாலையோரம் இரு பெண்கள், மூட்டைகளுடன் காத்திருந்தனர். போலீசார் நடத்திய சோதனையில், மூட்டைகள... |
தமிழகம் | இடியும் நிலையில் ரேஷன் கடை கட்டடம் | பேரையூர்:பேரையூர் அருகே என்.முத்துலிங்காபுரம் ரேஷன் கடையில் மீனாட்சிபுரம், நல்லமரம், என்.முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்த 800 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம், சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.சிமென்ட் பூச்சுகள் அடிக்கடி உதிர்ந்து விழுகின்றன. இதனால் பொ... |
தமிழகம் | சோதனை ஓட்டத்திற்கு 'சோதனை' | உசிலம்பட்டி:மதுரை- - போடிநாயக்கனுார் இடையே அகலரயில் பாதையாக மாற்ற கடந்த 2010 ல் மீட்டர் கேஜ் ரயில் நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.பல இடங்களில் தரைவழிபாலம் அமைத்து வருகின்றனர். 2019 மார்ச்சிற்குள் உசிலம்பட்டி வரை சோதனை ஓட்டம் நடத்தப்... |
தமிழகம் | 175 கிலோ தங்கம் பறிமுதல் | கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலருடன் எடுத்து செல்லப்பட்ட, 175 கிலோ தங்கத்தை, போலீசார் கைப்பற்றி, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, ஆரம்பாக்கம் சோதனைச்சாவடி அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திராவில் இருந்து சென்னை சென்ற ஜீப் ஒன்றை மடக்கினர். அதில்... |
தமிழகம் | ஸ்ரீபெரும்புதூரில் இன்று சின்னம் பொருத்தும் பணி | காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி, இன்று நடைபெறுகிறது.காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்களின் விபரம், சின்னம் அடங்கிய ஓட்டுச்சீட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி, நேற்று துவங்கியது.காஞ்சிபுரம், உத்திரம... |
தமிழகம் | போலீஸ் செய்திகள்.....;. | வட்டி கேட்டு மிரட்டல்மதுரை: ரயிலார் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற மாநகராட்சி தாய்,சேய் நல அலுவலர் சரோஜா 59. பணியில் இருந்தபோது மகபூப்பாளையம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியும் ஈஸ்வரியிடம் வட்டிக்கு 70 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். இதற்காக 5 புரோ நோட்டுகள், 4 பத்திரங்கள், 3 'பிளாங் செக்' போன்றவற்றை கொடுத்தா... |
தமிழகம் | பாராட்டு விழா | வாடிப்பட்டி:சமயநல்லுார் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமிக்கு பணி ஓய்வு பாராட்டு விழா பங்குதந்தை எட்வர்ட்பிரான்சிஸ் தலைமையில் நடந்தது. முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஜூலி, சண்முகவேலு மற்றும் ஆசிரியர்கள் பேசினர். 2007ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு புரஜக்டர் வழங்கப்பட்டது. முன... |
தமிழகம் | மலையில் தீ | கொட்டாம்பட்டி:கம்பூர் ஊராட்சி தேனக்குடிபட்டி கருங்குட்டு மலையில் நேற்று காலை தீப்பிடித்தது. கிராம மக்கள் 2 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். 2 ஏக்கர் பரப்பளவிலான மூலிகை, பனை மரங்கள் மற்றும் உயிரினங்கள் அழிந்தன. வனத்துறையினர் விசாரிக்கின்றனர். |
தமிழகம் | பணமா... நகையா...? | பறக்கும் படை சோதனையில், தங்கம் மற்றும் வெள்ளி அதிகளவில் சிக்குவதால், இத்தேர்தலில், பணத்துக்கு பதிலாக, தங்கம், வெள்ளி பரிசு பொருட்களாக கிடைக்குமோ என, வாக்காளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகம், புதுவையில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல், 18ல் நடக்கிறது. இதே நாளில், தமிழகம், புதுவையில் காலியாகவுள்ள... |
தமிழகம் | பூத் சிலிப் வழங்கும் பணி மும்முரம் | திருமங்கலம்:திருமங்கலம் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: திருமங்கலம் தொகுதியில் 310 ஓட்டுச்சாவடிகளும், 2 லட்சத்து 66 ஆயிரத்து 831 வாக்காளர்களும் உள்ளனர். இவர்களுக்கு வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏப்., 12 இரவுக்குள் இப்ப... |
தமிழகம் | ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்த ராஜ்நாத் சிங் | தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணியில், துாத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, கோவை, ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., போட்டியிடுகிறது. தலைவர் அந்தஸ்தில் உள்ளவர்களே, வேட்பாளராக போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தங்கள் கட்சிக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் பிரசாரம் செய்ய, 'ஸ்டார்' தல... |
தமிழகம் | பூத் கமிட்டி நியமனம் | திருமங்கலம்:திருமங்கலம் தொகுதியில் தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு ஓட்டு சேகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.ஒவ்வொரு கமிட்டிக்கும் 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 310 பூத் கமிட்டிகள். இவர்கள் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பது, தேர்தல் நாளன்று வாக்காளர்களை அழைத்துச் சென்று ஓட்டளிக்க வைப்பது என பண... |
தமிழகம் | தனித்து களத்தில் ஓட்டு சேகரிப்பு | திருமங்கலம்:விருதுநகர் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., போட்டியிடுகிறது. இத்தொகுதிக்குபட்ட திருமங்கலம் சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க.,வினர் அமைச்சர் உதயகுமாரை நம்பி உள்ளனர். ஆனால் அவர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகனுக்காக பணியாற்றி வருகிறார்.ஓட்டு சேகரிக்க இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே உள்ள... |
தமிழகம் | தேர்தல் முடிந்ததும் விடு, 'ஜூட்' | தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும், அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், ஓட்டுப்பதிவு முடிந்ததும், மருத்துவ சுற்றுலா தலங்களுக்கு செல்ல, ரயில், விமானங்களில், டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.வெயிலின் கடுமைபட்டைய கிளப்பும் வெயிலில், தினமும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரு... |
தமிழகம் | இன்றைய நிகழ்ச்சி....,,..,. | கோயில்சித்திரை பெருவிழா 3ம் நாள் நிகழ்ச்சிகள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நான்கு மாசி வீதிகளில் தங்க சப்பரத்தில் அம்மன் எழுந்தருளல், காலை 7:00 மணி, நான்கு மாசி வீதிகளில் கைலாசபர்வதம், காமதேனு வாகனங்களில் அம்மன் எழுந்தருளல், இரவு 7:00 மணி.மானஸ கிரியா பயிற்சி: பயிற்றுநர்: கலியுக குரு, சீவ சித்தர்கள் குருகுலம், ஆனையூர... |
தமிழகம் | கோயில் நிலத்திற்கு வேலிஉயர்நீதிமன்றம் உத்தரவு | மதுரை:சென்னை ராதாகிருஷ்ணன். இவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு:மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் நிலம் மற்றும் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்டு பாதுகாக்க வேண்டும். கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிக... |
தமிழகம் | கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்களுக்கு எச்சரிக்கை | மதுரை:டிஜிட்டல் சிக்னல் மூலம் ஒளிபரப்பு செய்யாத கேபிள் 'டிவி' ஆப்பரேட்டர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என கலெக்டர் நடராஜன் எச்சரித்தார்.அவர் கூறியுள்ளதாவது: மத்திய அரசின் தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சகம் கேபிள் டெலிவிஷன் நெட்ஒர்க்ஸ் திருத்தப்பட்ட சட்டம் 2011ன்படி நாடு முழுவதும் டிஜிட்டல் ஒளிபரப்பு ம... |
தமிழகம் | தனக்கன்குளம் மின் பகிர்மானங்கள் பிரிப்பு | மதுரை:மதுரை கப்பலுார் மின்அலுவலக உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளதாவது:கப்பலுார் உபகோட்டம் திருப்பரங்குன்றம் பிரிவின் தனக்கன்குளத்தில் அதிக அளவு மின் இணைப்புக்கள் உள்ளதால் அப்பகுதி மூன்று பகிர்மானங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இதன் விவரம்: தனக்கன்குளம், கிருஷ்ணாநகர், அய்யர்காலனி மற்றும் கலைநகர் - 'ஏ' பகுதி. மு... |
தமிழகம் | காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் | மதுரை:மதுரை கலெக்டர் நடராஜன் கூறியதாவது: 2019ம் ஆண்டிற்கு காந்திய வழியில் சிறந்த தொண்டு செய்த நிறுவனங்கள், தனி நபருக்கு காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த நிறுவனங்கள், தனிநபர்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு ஏப்., 15 க்குள் சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், 35, க... |
இந்தியா | ராஜ மரியாதை கிடைக்குமா? அவுரங்காபாதில் கடும் போட்டி | பீஹாரில் உள்ள, 40 தொகுதிகளில், அவுரங்காபாத் தொகுதியில், இரண்டு அரச குடும்பங்களுக்கு இடையே தான், இத்தனை ஆண்டு களாக போட்டி இருந்தது. தற்போது, ஒரு அரச குடும்பம் போட்டியிடவில்லை; மற்றொரு குடும்பம், விட்டேனா பார்... என, களத்தில் இறங்கியுள்ளது.அரச பரம்பரையினரான, ராஜபுத்ரர்கள் அதிகம் உள்ளதால், 'பீஹாரின் சித்துார்கர்க்' என, அழ... |
தமிழகம் | மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க வசதிகள் | பார்வையாளர் தகவல்மதுரை:''மாற்றுத்திறனாளிகள் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க சக்கர நாற்காலிகள், ஓட்டுச்சாவடிகளில் சாய்வு தளம் போன்ற தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன,'' என, மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் பார்வையாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.கலெக்டர் நடராஜன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நுாறு சதவீதம் ஓட்டளிப்பது ... |
தமிழகம் | மார்க்சிஸ்ட் புகார் | மதுரை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மதுரை லோக்சபா தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் நடராஜிடம் கொடுத்த மனு:மதுரை அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு ஆதரவாக ஓட்டுக்கு பணப் பட்டுவாடா செய்ய ஏற்பாடு நடக்கிறது. போலீஸ் உதவி கமிஷனர் (ஐ.எஸ்.,) சிவக்குமார் உதவுவதாக தகவல் கிடைத்துள்ளது... |
தமிழகம் | மயிலாடும்பாறை- - மல்லப்புரம் வழியாக பஸ் வசதி | தங்க தமிழ்செல்வன் உறுதிவருஷநாடு:தேனி லோக்சபா அ.ம.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், ஆண்டிபட்டி வேட்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் கண்டமனுார், கடமலைக்குண்டு, கரட்டுப்பட்டி, மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம், வருஷநாடு, வாலிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தனர். ஒன்றியச் செயலாளர் தர்மராஜ், சிறுபான்மை பிரிவு செயலாளர் சி... |
தமிழகம் | போலீசார் இல்லாத கோர்ட் வளாகம் | கோவை:பிரதமர் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டதால், கோர்ட் வளாகத்தில் போலீசார் நடமாட்டம் தென்படவில்லை.நேற்று கோவை வந்த பிரதமர் மோடி, கொடிசியா அருகே நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். பிரதமர் வருகையை முன்னிட்டு, கோவையில் நேற்று, 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாட்சிகளை அழைத்து வர போலீசார் ... |
தமிழகம் | அப்ப குப்பை லாரி .நல்ல நிர்வாகம் போங்க! கமிஷன் வாங்கி ஏப்பம் விட்டதோடு சரி! | கோவை:ரோட்டில் படியும் மணலை அள்ளி, சுத்தம் செய்வதற்காக, பல கோடி ரூபாய் செலவழித்து, கோவை மாநகராட்சி வாங்கிய மூன்று வாகனங்கள், சும்மா கிடக்கின்றன. மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால், அதிக டீசல் செலவாவதாக சொல்கின்றனர். ஏன்... வாகனங்களை வாங்கும்போது டீசல் செலவாகும் என்பது தெரியாதா என்று, சமூக ஆர்வலர்கள் கேள்வி எ... |
தமிழகம் | எல்லாம் ஒரு விளம்பரம்தான்...! | கோவை:கோவை தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலக சுவர், தனியார் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.செல்வபுரத்தில் உள்ள இந்த அலுவலகத்தில், நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்களின் கீழ், அலுவலக நிர்வாகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குடிசை வீடுகளுக்கு பதிலாக, கான்கிரீட் வீடு கட்டுவோருக்கு, அனைவருக்கு... |
தமிழகம் | ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி | கோவை:ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், சின்னம் பொருத்தும் பணி நேற்று துவங்கியது.கோவை லோக்சபா தேர்தலில், சுயேச்சைகள் மற்றும் அரசியல் கட்சிகள் என்று மொத்தம், 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கோவை வடக்கு, தெற்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லுார், சூலுார், பல்லடம் ஆகிய ஆறு சட்டசபை தொக... |
தமிழகம் | சமரசம் செய்தால் மனவருத்தம் இல்லை | கோவை:நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில், இரு தரப்பினர் சமரச தீர்வு காணும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக, மாவட்ட செஷன்ஸ் கோர்ட் ஹாலில் நடந்தது.மாவட்ட நீதிபதி சக்திவேல், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது: நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்கை, சமரச மையத்துக்கு அனுப்ப, வக்கீல் அல்லது மனுத... |
தமிழகம் | மது விற்றவர்கள் வசமாக சிக்கினர் | கோவை,:தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, சிவகங்கையை சேர்ந்த மணிகண்டன், 24, மதுரையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், 26 ஆகியோரை கைது செய்தனர். 52 மது பாட்டில்கள் மற்றும், 2,700 ரூபாயை பறிமுதல் செய்தனர். |
தமிழகம் | அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் இன்று அக்னி, நாளை பூக்குழி | அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் இன்று அக்னிசட்டி ,நாளை பூக்குழி நடக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.இக்கோயில் பங்குனி பொங்கல் விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள் பால... |
தமிழகம் | குடிநீர் விற்பனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் | அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள நீர்நிலைகளை சுற்றிய தனியார் இடங்களில் போர்வெல் அமைத்து தண்ணீர் எடுத்து அதை விலைக்கு விற்கின்றனர். தினமும் நுாற்றுக்கு மேற்பட்ட டிராக்டர்களில் இரவும், பகலும் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.நிலத்தடிநீர் குறைந்து வீடுகளின் போர்வெல்களில் தண்ணீர் வற்ற... |
தமிழகம் | தடுப்பணை சேதம் | வருஷநாடு:வாய்க்கால்பாறையில் உள்ள யானை கஜம் ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை மூலமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தடுப்பணை கட்டப்பட்டது. மழைக்காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அதுசேதமடைந்து விட்டது. இதனால் தண்ணீரை தேக்க முடியாததால் அருகில் உள்ள குடிநீர் மற்றும் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.தடுப்... |
தமிழகம் | பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறுதி | ராமநாதபுரம்:''மக்கள் தண்ணீருக்காக தவிப்பதை நான் போகும் இடம் எல்லாம் பார்க்கிறேன். தண்ணீருக்காக அவர்கள் இனி கண்ணீர் வடிக்கும் நிலையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். எனது முதல் பணியே மாவட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டு, குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றுவேன்,'' என ராமநாதபுரம் தொகுதி பா.ஜ., வ... |
தமிழகம் | சிக்கல்!பேரூராட்சிகளில் தேர்தல் பணி செய்வதில்....செயல்அலுவலர் பணியிடம் காலியால் பாதிப்பு | சின்னமனுார்:தேனி மாவட்டத்தில் 50 சதவீத பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடம் காலியாக இருப்பதால், தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் 22 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் வீரபாண்டி, ைஹவேவிஸ் உள்ளிட்ட 9 பேரூராட்சி செயல் அலுவலர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்... |
தமிழகம் | ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு 10.95 சதவீதம் போனஸ் | கம்பம்:ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு 2018--19 ம் ஆண்டிற்கான போனஸ் 10.95 சதவீதம் கொடுப்பது என ஏல விவசாய சங்க, தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 10.5 லட்சம் ஏக்கர் பரப்பில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஏலக்காய் தோட்டங்கள் பெரும்பாலும் கம்பம் பகுதி... |
தமிழகம் | தமிழகத்திற்கு 30 பைசா, பீகாருக்கு 4 ரூபாய் | மத்திய அரசு மீது எம்.எல்.ஏ., குற்றச்சாட்டுஉத்தமபாளையம்:''தமிழகத்தில் இருந்து ஒருவர் ஒரு ரூபாய் வரி செலுத்தினால், மத்திய அரசு அதற்கு 30 பைசாவை திருப்பித் தருகிறது. அதே சமயம் பீகார் மாநிலத்திற்கு ரூ. 4 திருப்பித் தருகிறது,'' என , உத்தமபாளையத்தில் காங்., வேட்பாளரை ஆதரித்து பேசிய மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பிடிஆர். திய... |
தமிழகம் | தகதகக்கும் வெயில்: தயங்கும் வேட்பாளர்கள் | விருதுநகர்:விருதுநகர் தொகுதியில் கடும் வெயிலின் காரணமாக தேர்தல் பிரசாரங்கள் மந்தநிலையில் நடைபெறுகிறது.லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்.18 ல் நடக்கும் நிலையில். வெயிலின் சூடு அதிகமாக இருப்பதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்காமல் உள்ளது. வெயில் பூமியான விருதுநகரில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால் வே... |
தமிழகம் | சிவகாசியில் இருவர் தற்கொலை | சிவகாசி:சிவகாசி சாட்சியாபுரம் சுந்தர விநாயகர் காலனியை சேர்ந்தவர் குணசேகரன் 25. இவருக்கும் சாத்துாரை சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும் திருமணமாகி பத்து மாதங்கள் ஆகிறது. தகராறில் கார்த்திகா தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனமுடைந்த குணசேகரன் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மேலும் ஒருவர்: சிவகாசி பராசக்தி காலனி... |
தமிழகம் | தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி | சிவகாசி:சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். அனைவரும் ஓட்டளிக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். ஜெயக்குமார், தமிழரசி, உதவி திட்ட அலுவலர் சதீஸ்குமார் கலந்து கொண்டனர். |
தமிழகம் | விபத்தில் ஆப்பரேட்டர் பலி | ராஜபாளையம்:ராஜபாளையம் பெரிய சுரைக்காய்பட்டி தெருவை சேர்ந்தவர் தேசிய அபிமன்னன் 23. திருமணமாகி மனைவி மகன் உள்ளனர். தனியார் கேபிள் ஆப்பரேட்டராக உள்ளார்.நேற்று முன்தினம் இரவு டூ வீலரில் தென்காசி ரோட்டில் பணி முடிந்து வீட்டிற்கு சென்ற போது,தென்றல் நகரிலிருந்து தனியார் மில்லுக்கு ஆட்களை ஏற்றி வந்த வேன் மோதியதில் இறந்... |
தமிழகம் | அனுமதியின்றி பிரசார வாகனம்: தேர்தல் பிரிவு அதிகாரிகள் 'கவனம்' | கோவை:கோவை லோக்சபா தொகுதியில், அனுமதி வழங்கப்பட்டதற்கும் அதிகமாக, பிரசார வாகனங்களை பயன்படுத்துவதாக, தேர்தல் பிரிவுக்கு புகார் வந்துள்ளது. விதிமீறல் வாகனங்களை சிறைபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர் தேர்தல் பிரிவு அதிகாரிகள்.கோவை தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், பிரசாரம் செய்யும் வாகன... |
தமிழகம் | கோவை - ஈரோடு இடையே இன்று முதல் சிறப்பு ரயில் | கோவை:பாலக்காடு - ஈரோடு இடையேயான பயணிகள் ரத்து செய்யப்பட்டதால், கோவை - ஈரோடு இடையேயான சிறப்பு மெமு பயணிகள் ரயில், இன்று முதல் இயங்கும்.பாலக்காடு - ஈரோடு பயணிகள் ரயில், கடந்த 1ம் தேதி முதல், பராமரிப்பு பணிகள் காரணமாக, தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக, சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்தது. இதனால், கோவை - ஈரோடு இடையே, கூடுத... |
தமிழகம் | சூர்யபாலாவை 'காலி' செய்த ஜாலி ரோவர்ஸ் அணி | கோவை:மாவட்ட அளவிலான முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், ஜாலி ரோவர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2018- 19ம் ஆண்டு, 'லட்சுமி கார்டு குளோத்திங்' முதல் டிவிஷன் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்தது. சூர்யபாலா கிரிக்கெட் க... |
தமிழகம் | கிரிக்கெட் போட்டி விங்ஸ் சி.சி., வெற்றி | கோவை:மாவட்ட அளவிலான இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், விங்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2018-19ம் ஆண்டு, 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேன்சர்ஸ்' கோப்பைக்கான, இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, கோவையின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. ரத்தின... |
தமிழகம் | ஓட்டுப்போட கூட்டிச் செல்லும் 'கூகுள் மேப்!' காலத்துக்கு ஏற்ற 'பூத் சிலிப்' அச்சிட்டு கலக்கல் | கோவை:கோவை மாவட்டத்தில், வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. ஓட்டுச்சாவடி இருக்குமிடத்தை அடையாளம் காண்பிக்க, இம்முறை 'கூகுள் மேப்'புடன் உங்களை தேடி வருகிறது பூத் ஸ்லிப்.கோவை மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மொத்தமுள்ள, 10 சட்ட சபை தொகுதிகளிலும் சேர்த்து,... |
தமிழகம் | ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி | ஆண்டிபட்டி:தேனி லோக்சபா, ஆண்டிபட்டி சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது.தேனி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., காங்., அ.ம.மு.க., வேட்பாளர்கள் உட்பட 30 பேர் போட்டியிடுகின்றனர். இதேபோல் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு... |
தமிழகம் | மாஸ்டர்ஸ் கூடைப்பந்து பிரண்ட்ஸ் கிளப் வெற்றி | கோவை:மாவட்ட அளவில் மாஸ்டர்ஸ் கூடைப்பந்து போட்டியில், பிரண்ட்ஸ் கிளப் வெற்றி பெற்றது.யுனைடெட் கிளப் சார்பில், கோபாலகிருஷ்ணன் நினைவு மாவட்ட அளவில் 40 வயது ஆண்களுக்கான, 40 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ் பிரிவில் போட்டிகள், நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள கூடைப்பந்து கோர்ட்டில் நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவில் 30 அணிகளும், மாஸ்டர்ஸ... |
தமிழகம் | காமராஜ் ஒலிம்பியார்டு போட்டித் தேர்வு | விருதுநகர்:விருதுநகரில் காமராஜ் பொறியியல் கல்லுாரி நடத்தும் ஒலிம்பியார்டு போட்டித் தேர்வு ஏப்., 16 முதல் நடக்க உள்ளது. 2019 ல் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் திறமையின் மூலம் முதலாமாண்டு கல்லுாரி கட்டணத்தை வெல்ல இத்தேர்வு நடக்கிறது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம், இரண்டாம்... |
தமிழகம் | தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஆதரவை பெற வேட்பாளர்கள் தீவிரம் | கம்பம்:மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்களின் ஓட்டுகளை பெறும் முயற்சியில் வேட்பாளர்கள் இறங்கியுள்ளனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அடங்கிய கூட்டுக்குழு சமீபத்தில்நடத்திய போராட்டத்தின் போது, அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது. . இதனால் 'ஜாக்டோ -ஜியோ ' அமைப்... |
தமிழகம் | 'மிஸ்டர் கோயம்புத்துார்' பட்டம் வென்ற தீபன் பிரபு | கோவை:மிஸ்டர் கோயம்புத்துார் என்ற ஜூனியர் பிரிவில் பட்டத்தை வென்றார், கிருஷ்ணா கல்லுாரி மாணவர் தீபன் பிரபு.வீரபாண்டி பிரிவு கோயம்புத்துார் ஜிம் மற்றும் பீட்னஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், மாவட்ட அளவில் ஜூனியர், சீனியர், மாற்றுத்திறனாளி என பிரிவுகளில் போட்டி நடந்தது.50 கிலோ உடல் எடை 55 கிலோ, 60 கிலோ, 65கிலோ, 70 கி... |
தமிழகம் | இன்பாக்ஸ் . 'கடை பாதைகளாக' மாறி விட்ட நடைபாதைகள்! | பணியை முழுசா முடிக்கணும்சங்கனுார் ரோடு ஜீவா வீதியில், சாக்கடை கால்வாய் பணி பாதியில் கைவிடப்பட்டதால், சாக்கடை கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் செல்கிறது.- வேலுமணி, ஜீவா வீதி.நடைபாதை ஆக்கிரமிப்புமருதமலை ரோடு - லாலி ரோடு சந்திப்பில், நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளால், பாதசாரிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.-பரமேஸ்வரன், மருதம... |
தமிழகம் | பிரசாரத்தில் இடம் பிடித்த 'ரீமிக்ஸ் 'எம்.ஜி.ஆர்., பாடல்கள் | கம்பம்:தேனி லோக்சபா தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்துவருகிறது. அ.தி.மு.க., அ.ம.மு.க.,வினர் எம்.ஜி.ஆர்., பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்து பயன்படுத்துகின்றனர்.தேனி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., -காங்., -அ.ம.மு.க., வேட்பாளர்கள்போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தலைவர்கள், சினிமா நடிகர்கள் பிரசாரத்தில் இறங்கியுள்... |
தமிழகம் | மழை வேண்டி விளக்கு பூஜை | கூடலுார்:கூடலுாரில் பாரதியார் தெரு சங்கத்தின் சார்பில் காளியம்மன் கோயில் விழா நடந்தது. இதில் மழை வேண்டி விளக்கு பூஜை நடந்தது. மழைக்காக பிரார்த்தனை நடந்தது. சேவா பாரதியின் தென்மண்டல பொறுப்பாளர் வினோபா, உறுப்பினர்கள் சாந்தினி, சாரதா, மைதிலி ஆகியோர் குத்துவிளக்கு பூஜை நடத்துவதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கினர்.அதிக... |
தமிழகம் | கொலை மிரட்டல் விடுத்தவர் கைது | கணபதி, அத்தனுார் அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 25. இவர் நேற்று முன்தினம், அதேபகுதியை சேர்ந்த தனக்கு தெரிந்த, 17 வயது இளைஞரிடம் பெட்ரோல் அடிக்க பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் பாலகிருஷ்ணன், அந்த வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து பாலகிருஷ்ண... |
தமிழகம் | காட்டுமாடு தாக்கி வாலிபர் படுகாயம் | இரவு முழுவதும் தவித்தார்மூணாறு:மூணாறு அருகே இடமலைகுடியில் காட்டு மாடு தாக்கி இடலிபாறைகுடியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் 36, பலத்த காயமடைந்தார். இரவு முழுவதும் 12:00 மணி நேரம் காட்டிற்குள் கிடந்தவரை நேற்று மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.மூணாறு அருகே இடமலைகுடியில் அடர்ந்த வனத்திற்குள் மலைவாழ் மக்கள் ஏராளமாக வசித்து வருகி... |
தமிழகம் | மதுக்கரையில் புதிய மாஜிஸ்திரேட் கோர்ட்: இடம் தேடுகிறது மாவட்ட நிர்வாகம் | கோவை:மதுக்கரையில் புதிய மாஜிஸ்திரேட் கோர்ட் அமைக்க, ஐகோர்ட் அனுமதியளித்ததை தொடர்ந்து, நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில், கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலுார் ஆகிய இடங்களில், 52 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட தாலுகா பகுதிகளில், மாஜிஸ்திரேட் ... |
தமிழகம் | போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் | போடி:போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்று விழா நேற்று அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமையில் நடந்தது. காலை 7:35 மணியளவில் போடி பெரியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜையுடன் துவங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கொடிமரம் ஊர்வலமாக பரமசிவன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. காலை 10:30 மணியளவி... |
தமிழகம் | 'பண்பு, பணிவு, ஒழுக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றி' | கோவை:அரசு கலை கல்லுாரியின் பட்டமளிப்பு விழா, கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது. பாரதியார் பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.2016ம் ஆண்டு படித்து வெளியேறிய இளநிலை பிரிவில், 785 பேரும், முதுநிலை பிரிவில், 244 பேரும் பட்டங்களை பெற்றனர்.பட்டங்களை வழங்கி, பாரதியா... |
தமிழகம் | குழாய் சேதத்தால் வீணாகிறது குடிநீர் | தேவதானப்பட்டி:பெரியகுளம் ஒன்றியம் அழகர்நாயக்கன்பட்டியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் துாரம் உள்ள மேல்மங்கலம் நெடுங்குளம் கண்மாய் கரை அருகில்'போர்வெல்' அமைத்து கிடைக்கின்ற நீரை சப்ளை செய்கின்றனர்.இந்நிலையில் நெடுங்குளம் கண்மாய் அருகில்உள்ள '... |
தமிழகம் | விருதுநகரில் தேரோட்டம் பக்தர்கள் பரவசம் | விருதுநகர்:விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இக்கோயில் பொங்கல் விழா கடந்த 31 ல் துவங்கி 10 நாட்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச... |
தமிழகம் | 2,045 மின்னணு இயந்திரம் ரெடி! | திருப்பூர்:திருப்பூர் லோக்சபா தொகுதியில், 2,045 ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு, 'பேலட் சீட்' பொருத்தும் முகாம் நேற்று நடந்தது. ஒவ்வொரு இயந்திரத்திலும், மாதிரி ஓட்டுப்பதிவு செய்து, ஓட்டுக்களை எண்ணி சரிபார்க்கப்பட்டது.திருப்பூர் லோக்சபா தொகுதியில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வழங்கப... |
தமிழகம் | வத்தலக்குண்டு - உசிலம்பட்டி ரோடு பணிக்கு ரூ.1.30 கோடி | விபத்துகளை தவிர்க்க ஏற்பாடுவத்தலக்குண்டு:வத்தலக்குண்டு - உசிலம்பட்டி ரோடு ரூ. 1.30 கோடியில் அகலப்படுத்தப்படுகிறது.வத்தலகுண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில் உசிலம்பட்டி ரோட்டில் ஒன்பது, பத்தாவது கி.மீ.,யில் ஆபத்தான வளைவு இருந்தது. அடிக்கடி விபத்து ஏற்படும் வாய்ப்புள்ள இந்த ரோட்டை அகலப்படுத்தவும், தடுப்பு அமைக்கவும் கோரிக்கை... |
தமிழகம் | சதுர்த்தி விழா | கன்னிவாடி:தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோவிலில் சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. கன்னிவாடி பட்டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சதுர்த்தி ஆராதனைகள் நடந்தது. |
தமிழகம் | துப்பாக்கிச்சூட்டில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி | வேடசந்துார்:வேடசந்துார் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு, தமிழக விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி, 1978-ல் போராட்டம் வெடித்தது. வேடசந்துார் ஆத்துமேட்டில் இருந்து திண்டுக்கல் செல்லும் ரோட்டில், 9.4.78 அன்று ஆயிரக்கணக்கான விவசா... |
தமிழகம் | ஒரு போன் போதுமே | அதிகாரிகள் கவனத்துக்குதிருப்பூர் நொய்யல் ஆறு, ஜம்மனை, சங்கிலிப்பள்ளம் ஓடைகளில் இரவு, 11:00 மணிக்கு மேல் சாயக்கழிவுநீர் சர்வசாதாரணமாக திறந்து விடப்படுகிறது. மேற்கண்ட இடங்களை கடக்கும் போது கடும் துர்நாற்றம் வீசுகிறது.- எம்.உதயகுமார், காங்கயம் ரோடு.தெருவிளக்கு எரிவதில்லைதிருப்பூர் கருவம்பாளையத்தை அடுத்த பூசாரித்தோட்டம் பக... |
தமிழகம் | ஏப்.22 வரை தபால் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுமா | ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 2ம் கட்ட பயிற்சி வகுப்பில், தபால் ஓட்டளிக்காதவர்கள் அடுத்த கட்ட பயிற்சி வகுப்பில் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும். திண்டுக்கல்லில் லோக்சபா, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தேர்தல் பணியில் 10 ஆயிரத்து 708 ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள்... |
தமிழகம் | சிக்னல் மாயம்; வாகன ஓட்டிகள் 'தாறுமாறு' | திருப்பூர்:வேலம்பாளையம் - அனுப்பர்பாளையம்புதுார் சந்திப்பில் இருந்த சிக்னல் மாற்றப்பட்டதால், வாகன ஓட்டிகள் தினமும் தாறுமாறாக சென்று திரும்புகின்றனர். இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.திருப்பூர் - அவிநாசி செல்லும் ரோடு அதிகளவில் வாகன ஓட்டிகள் சென்று வரும் ரோடு. அதுவும், 'பீக்ஹவர்ஸ்' ல் இந்த ரோட்டில் ஒதுங்கி நிற்க கூ... |
தமிழகம் | விளைச்சல் பாதிப்பு தக்காளி விலை 'விர்ர்' | பொங்கலுார்:கடும் வெயில் வாட்டி வருவதால், விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்தாண்டு வழக்கத்தை விட வெயில் வாட்டி எடுக்கிறது. அதிக உஷ்ணத்தால் செடியில் பூக்கள் உதிர்ந்து வருகின்றன. நடவு செய்யப்பட்ட செடி வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறைந்துள்ளது.பழங்கள் வெப்பத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அழுகி வருகின்ற... |
தமிழகம் | ஓட்டுப்பதிவு நாளில் தேர்த்திருவிழா | அவிநாசி:ஓட்டுப்பதிவு நாளில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடத்தப்பட உள்ள நிலையில், விழா நடவடிக்கையை தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனிக்க துவங்கியிருக்கிறது.தேர்தல் திருவிழாவோடு, கோவில் விழாவும் இணைந்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் இதை தங்களுக்கு சாதகமாக்கி கொண்டுள்ளனர். தேர்த்திருவிழாவை பயன்படுத்தி, ஆதாயம் தேடு... |
தமிழகம் | இன்று வாசன் தேர்தல் பிரசாரம் | திருப்பூர்:திருப்பூரில், த.மா.கா., தலைவர் வாசன், இன்று பிரசாரம் செய்கிறார்.நேற்று (9ம் தேதி) ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளில், த.மா.கா., தலைவர் வாசன் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், வாசன் பிரசாரம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அக்கட்சியின் மாநகர தலைவர் ரவிக்குமார் கூறுகை... |
தமிழகம் | காங்கிரசார் தேனி பயணம் தி.மு.க., கூட்டணியில் அதிருப்தி | திருப்பூர்:இளங்கோவனுக்கு பிரசாரம் செய்ய, திருப்பூர் காங்கிரசார், தேனிக்கு சென்றுள்ளனர்.தி.மு.க., கூட்டணியில், உள்ள காங்., மாநில தலைவர் அழகிரி, காங்., வேட்பாளர்கள் போட்டியிடும் ஒன்பது தொகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்து வருகிறார். அக்கட்சி வெளியிட்ட இரண்டாவது கட்ட சுற்றுப்பயண அட்டவணையிலும் கோவை, திருப்பூர் தொகுதிகள் பிர... |
தமிழகம் | ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவம் | திண்டுக்கல்:திண்டுக்கல்லில் பதட்டமான 144 ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 2,094 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தேர்தல் அன்று ஒரு ஓட்டுச்சாவடிக்கு தலா ஒரு போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஒரே மையத்தில் இரண்டு ஓட்டுச்சாவடி இருந்தால் ஒரு போலீசாரும், ஒரு போல... |
தமிழகம் | அவிநாசி தேர்த்திருவிழா குதிரை சுமந்து பக்தர் ஊர்வலம் | அவிநாசி:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ராயம்பாளையம் ஊர் மக்கள், குதிரைகளை அலங்கரித்து, ஊர்வலமாக எடுத்து வந்தனர்.கொங்கு மண்டலத்தில், பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. இதையொட்டி, சின்ன கருணைபாளையம் மற்றும் ராயம்பாளையம் கிராம... |
தமிழகம் | ஓட்டளிக்கும் நேரம் காலை 8:00 - மாலை 6:00 மணி வரை | திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஏப்.18 தேர்தல் அன்று காலை 8:00 மணி முதல் வாக்காளர்கள் ஓட்டு அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.திண்டுக்கல்லில் லோக்சபா, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தேர்தல் பணியில் அதிகாரிகளும், பிரசாரத்தில் பிரபல கட்சியினர், சுயேச்சைகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் 10... |
தமிழகம் | ஏப்.,10: பெட்ரோல் ரூ.75.56; டீசல் ரூ.69.80 | சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.56 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.80 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(ஏப்.,10) காலை முதல் அமலுக்கு வந்தது. |
தமிழகம் | விரட்டும் வெறிநாய் :பொதுமக்கள் அச்சம் | திருப்பூர்:திருப்பூரில், வெறிநாய் கடித்து, ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாட அச்சமடைந்துள்ளனர்.திருப்பூர், அவிநாசி ரோடு, ஆஷர் நகரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசிக்கின்றனர். பனியன் நிறுவனங்களும் உள்ளன. இப்பகுதியில் தெருநாய்கள் அதிகமாக வலம் வருகின்றன. சிறுவர், சி... |
தமிழகம் | குட்டை மண்ணில், ரோடு பணி 'மட்டம்': ஒப்பந்ததாரரின் பொக்லைன் பறிமுதல் | பல்லடம்:சித்தம்பலத்தில், குட்டை, மற்றும் ரோட்டோர மண் கொண்டு, மட்டமான முறையில் ரோடு பணி மேற்கொள்வதாக கூறி, ஒப்பந்ததாரரின் பொக்லைன் வாகனம், பொதுமக்களால் பறிமுதல் செய்யப்பட்டது.பல்லடம் ஒன்றியம், சிதம்பலம் - -புள்ளிப்பம்பாளையம் ரோடு புதுப்பிக்கும் பணி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கியது. மட்டமான முறையில் ரோடு பணி ம... |
தமிழகம் | ' தினமலர்' செய்தி எதிரொலி குடிநீர் குழாய் சீரமைப்பு | திருப்பூர்:'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்கும் பணி நேற்று நடந்தது.திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 24 மணி நேரமும் குடிநீர் வீணாகி கொண்டிருந்தது. இது குறித்து, பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.... |
தமிழகம் | இன்று இனிதாக | ஆன்மிகம்சித்திரை தேர்த்திருவிழா அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. கொடியேற்றம் - காலை, 9:00 மணி; ஆன்மிக சொற்பொழிவு - இரவு, 7:00 மணி. பங்கேற்பு: டிவி பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணிபொங்கல் விழாl கோட்டை முனியப்பன்சாமி, கோவில், தொரவலுார், அவிநாசி. காலை, 6:00 மணி முதல்l பிளேக் மாரியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், திருப்பூர... |
தமிழகம் | பாசன வாய்க்காலை பாழ்படுத்தும் குப்பை : ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளுமா? | பல்லடம்:பல்லடம் அருகே, பாசன வாய்க்காலை பாழ்படுத்தி வரும் குப்பையை அகற்றுவதில், ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.உடுமலை திருமூர்த்தி அணை பிரதான கால்வாயில் இருந்து பிரியும், பி.ஏ.பி., வாய்க்கால்கள், திருப்பூர், கோவை மாவட்ட பாசன விவசாயிகளுக்கு பயனளித்து வருகிறது. பாசனத்துக்காக ஒவ்வொருமுறை தண்ணீர் திறந்து விடப்ப... |
தமிழகம் | மாம்பழ சீசன் துவக்கம் நுகர்வோர் மகிழ்ச்சி | பொங்கலுார்:சீசன் துவங்கியுள்ளது மாம்பழ பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாம்பழ சீசன் கோடை காலமான பங்குனியில் துவங்கி சித்திரை, வைகாசியில் களை கட்டும். சேலம், தர்மபுரி உட்பட மாவட்டங்களில் அதிகளவு மாம்பழம் விளைகிறது. ஆனால், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கணிசமான விவசாயிகள் மா சாகுபடி செய்துள்ளனர்.தற்போது... |
தமிழகம் | பஸ்சில் பார்சல் சோதனை: பறக்கும் படைக்கு உத்தரவு | திருப்பூர்:'சந்தேகத்துக்கு இடமாக பஸ்சில் கொண்டு வரப்படும் பார்சல்களை சோதனையிட வேண்டும்,' என, தேர்தல் பறக்கும் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்தல் அறிவித்த நாள் முதல் பறக்கும் படை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, தொடர் வாகன சோதனை நடந்து வருகிறது. உரிய ஆவணமில்லாமல் எடுத்து செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வரு... |
தமிழகம் | தகராறில் வாலிபர் கொலை: 5 பேரிடம் போலீஸ் விசாரணை | திருப்பூர்:திருப்பூரில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, ஐந்து பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.பல்லடம், அவரப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், 28, பனியன் தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த ஒரு வாரம் முன்பு, கிரிக்கெட் விள... |
தமிழகம் | கட்டடம் காலி செய்வதில் தகராறு மாஜி இன்ஸ்., மீது வழக்குப்பதிவு | திருப்பூர்:கட்டடம் காலி செய்வது தொடர்பான தகராறில், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர், காங்கயம் ரோடு, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் விஜயாபுரம் பிரிவில் பிளாஸ்டிக் நிறுவனம் நடத்தி வருகிறார். கட்டட உரிமையாளர் முரளீதரன், காலி செய்யுமாறு நந்... |
தமிழகம் | திருடனை பிடிக்க முயன்ற எஸ்.ஐ.,க்கள் 'மோதலில்' காயம் | வேடசந்துார்:மொபைல் திருடனை பைக்கில் துரத்திச்சென்ற போலீஸ் அதிகாரியை, செக்போஸ்ட்டில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி மறித்ததால் பைக் மோதி இருவரும் படுகாயம் அடைந்தனர்.வேடசந்துார் பகுதியில் இருந்த ஒருவரிடம் மொபைல் போனை பறித்த ஒரு மர்ம நபர், இருசக்கர வாகனத்தில் காசிபாளையம், கல்வார்பட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் செல்வதாக ம... |
தமிழகம் | ஆத்துார் பாணியை கடைபிடித்த மாஜி | வத்தலக்குண்டு:ஆத்துார் தொகுதியில் கடைபிடித்த பாணியை நிலக்கோட்டை தொகுதியிலும் தி.மு.க., மாஜி அமைச்சர் பெரியசாமி அமல்படுத்தி வருகிறார்.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் பெரியசாமி, கடந்த சட்டசபை தேர்தலில் ஆத்துார் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது கிராமம் கிராமமாகச் சென்று சமூக ரீதியாக பேசிபழகி கிராமத்திற்கு தேவையானவற்றை செய்து ... |
தமிழகம் | 4 பெண்கள்மீது வழக்கு | வடமதுரை:சிங்காரக்கோட்டையை சேர்ந்தவர் சிவக்குமார். மனைவி நந்தினியை பிரிந்து வாழ்கிறார். இவர்களது குழந்தை சிவக்குமார் குடும்பத்தாரிடம் உள்ளது. குழந்தையை கேட்டு நந்தினி, உறவினர்கள் அமுதா, முத்துலட்சுமி, நாக ஜோதி அங்கு சென்றனர். தகராறு ஏற்பட்டதால் சிவக்குமாரின் அண்ணன் ஜெகநாதன், நர்மதாதேவி யை தாக்கி, கொலை மிரட்டல் விடுத... |
தமிழகம் | சப்கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி | பழநி:பழநி சிவகிரிப்பட்டி புதுநகரில் அரசு சித்த ஆராய்ச்சி மற்றும் மருத்துவக்கல்லுாரி அமைப்பதற்காக, கடந்த 1988ம் ஆண்டு 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தநில உரிமையாளர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. அதன்பின் நீதிமன்றம் சென்றதால் 50 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.மீதி 50சதவீத நிலுவைத் தொகையை வட்டியுடன் சே... |
தமிழகம் | நகை பறித்தவர் கைது: 15 சவரன் பறிமுதல் | திருப்பூர்:திருப்பூர் அருகே நகை பறிப்பு வழக்கில் தொடர்புடைய, இருவரை போலீசார் கைது செய்தனர்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். டூவீலரில் வந்த, இருவரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.அதில், சிவகாசியை சேர்ந்த அழகர்ராஜா, 22 மற்றும் மதுரையை சேர்ந்த சையது இஸ்மயில், 20 என்ப... |
தமிழகம் | வைகோ நாளை திருப்பூர் வருகை | திருப்பூர்:நாளை (11ம் தேதி) திருப்பூரில் மூன்று இடங்களில் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.நாளை உடுமலையில் இருந்து பல்லடம் வரும் வைகோ, மாலை, 4:00 மணிக்கு, வெட்டுப்பட்டான் குட்டை - தண்ணீர்பந்தல்பாளையத்தில் கோவை மா.கம்யூ., வேட்பாளர் நடராஜனை ஆதரித்து பிரசாரம் செய்க... |
தமிழகம் | பள்ளி அருகில் பாம்பு; வனத்துறையினர் 'லபக்' | திருப்பூர்:தனியார் பள்ளி, குடியிருப்பு பகுதியில் இருந்த, இரண்டு நாக பாம்புகளை வனத்துறையினர் பிடித்தனர்.திருப்பூர், சோளிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் பாம்பு இருப்பதாக திருப்பூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனச்சரக அலுவலர் மகேஷ் தலைமையில், வனவர் முருகானந்தம், சரக பணியாளர் சிவமணி, பள்ளியில் பதுங்கியிருந்த, நான... |
தமிழகம் | போலீஸ் நிழற்குடையில் பிறந்த நாள் கொண்டாட்டம்? | திருப்பூர்:தாராபுரத்தில், போக்கு வரத்து போலீஸ் நிழற்குடையில் நள்ளிரவில், சில வாலிபர்கள் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது.போக்குவரத்து போலீஸ் நிழற்குடையில் நள்ளிரவு நேரத்தில் சில வாலிபர்கள், 'கேக்' வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ, ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அதில், உரையாடும் வாலிபர்கள் சில... |
தமிழகம் | முதல்வர் தேர்தல் பிரசாரம்: அ.தி.மு.க., வினர் உற்சாகம் | திருப்பூர்:திருப்பூர் வேட்பாளரை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்ததால், கோஷ்டி பூசல் மறைந்து, அ.தி.மு.க., வில் உற்சாகம் பிறந்துள்ளது.தமிழக முதல்வர் பழனிசாமி, திருப்பூர் பாண்டியன் நகரில், நேற்று பிரசாரம் செய்தார். அவிநாசியில் பிரசாரத்தை முடித்து வந்த முதல்வருக்கு, பூலுவப்பட்டி ரிங்ரோடு பகுதியில், எம்.எல்.ஏ.,க்க... |
தமிழகம் | இடியும் நிலையில் மடப்பள்ளி: சிவன் கோவில் தெருவில் அவலம் | சாத்துார், ஏப். 10-சாத்துார் சிவன் கோவில் தெருவில் கோவிலை சுற்றிலும் கட்டடக்கழிவுகளும், ரோட்டில் தடைக்கற்கள் போல் பெரிய அளவிலான கற்களும் உள்ளன. கோயில் தெப்பக்குளம் அருகில் பழமையான மடப்பள்ளி கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.தெப்பக்குளம் பராமரிப்பில்லாமல் புற்கள் முளைத்து சுற்றுச்சுவர்களில் அரச மரங்கள் வளர்ந்த... |
தமிழகம் | ஏ.டி.எம்.,களில் பணம் இல்லை: பல்லடத்தில் திடீர் தொல்லை | பல்லடம்:பல்லடம் பகுதி ஏ.டி.எம்.,களில், நேற்று திடீரென பணம் இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.பல்லடம் நகரில், பத்துக்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.,கள் செயல்பட்டு வருகின்றன. மாதத்தின் முதல் நாள், முகூர்த்த நாட்கள், அரசு விடுமுறை, மற்றும் பண்டிகை நாட்களில், பெரும்பாலும் ஏ.டி.எம்.,களில் பணம் இருப்பதில்லை.நேற்று, ஏ.... |
தமிழகம் | மாரியம்மன் கோயிலில் பூக்குழி | ராஜபாளையம்:ராஜபாளையம் முகவூர் தெற்கு தெரு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பூக்குழி விழா நடந்தது.கடந்த 6 ம்தேதி தொடங்கிய இவ்விழாவில் மறுநாள் அதிகாலை 4 :00மணிக்கு பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. 3ம் நாள் மாலை அக்கினி சட்டி, ஆயிரங்கண் பானை, முளைப்பாரி, பூப்பெட்டி வீதி உலா நட... |
தமிழகம் | வீணாகும் காவிரி | வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையத்தில் காவிரி கூட்டு குடிநீர்க் குழாய் உடைப்பு ஏற்பட்டு பலமாதமாக குடிநீர் வீணாகி வருகிறது.தற்போது கோடை காலம் நிலவுவதால், விரைவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் பகுதியில், குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.சம்பந்தப்ப... |
தமிழகம் | மனைவி தூக்கில் தற்கொலை: கணவருக்கு, 13 ஆண்டு சிறை | திருப்பூர்:வரதட்சணை கேட்டு மனைவியைத் துன்புறுத்தி, தற்கொலைக்கு துாண்டிய கணவருக்கு திருப்பூர் கோர்ட்டில், 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூர், 15 வேலம்பாளையத்தை சேர்ந்த அம்மாசைக்குட்டி மகன் சங்கமேஸ்வரன், 39. மில் உரிமையாளர். இவருக்கும் பழங்கரையை சேர்ந்த சின்னசாமி மகள் தாரணிக்கும், 2009ல் திருமணம் நடந்தது.... |
தமிழகம் | கணவன் மீது சந்தேகம் | திருப்பூர்:கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், குன்னத்துார் அருகே மனைவி தற்கொலை செய்து கொண்டார்.குன்னத்துார், ஊத்துக்குளி ரோடு, ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். மளிகை பொருட்களை, வேனில் சென்று விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சு, 28; ஐந்து ஆண்டுகளுக்கு முன், இவர்களுக்கு திருமணம் நடந்த... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.