text stringlengths 11 513 |
|---|
காலமானதும் மனமொடிந்து போனார். அந்த மணமுறிவின் விளைவாகவே மனைவியோடு சண்டை போடுவதும் நின்றது. துக்கம் பெருகப் பெருகக் கோபம் நீற்றுச் சாம்பலாகியது. ஆனால் இன்றைக்குத் தான் ரொம்ப தூரம் சென்று விட்டதாக எண்ணினார். சண்டையை ஆரம்பித்திருக்க வேண்டாம் என்று தோன்றியது. 428 மகளைப் பற்றிக் கவி புனைந்து அரற்றிக் கொண்டிருந்தாள் அவர் மனை... |
அருகில் சென்று பார்த்தார். தக்கை மட்டுமே குதி போட்டுக் கொண்டிருந்தது. தன்னுடைய பழக்கத்திற்கு மாறாகத் தூண்டிலை எடுத்துக் கொண்டு போய் கிழக்கே வீசினார். அது ராமு இடம். அங்கதான் அவன் தூண்டில் போடுவான். அவன் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்ப்பது மாதிரித் தூண்டிலை வீசிவிட்டுக் கரையேறினார். குளம் சலிப்பு தரும் விதத்தில் அமைதியா... |
சற்றைக்கெல்லாம் ஆழ்ந்த குறட்டையொலி கேட்டது. கண் விழித்தபோது மணி பத்துக்கு மேலாகிவிட்டது. சந்திரவொளி குளத்தில் மெல்லப் பரவிக் கொண்டிருந்தது. மாணிக்கம் வேகமாக சென்று தூண்டிலைப் பார்த்தார். குதித்தாடும் தக்கையைக் காணோம். கோரையைப் பிடித்துக் குளத்தில் இறங்கித் தூண்டிலை இழுத்தார்.கயிறு தடையின்றி லேசாக வந்தது. சிறு கயிறு. பா... |
எதுவானாலும் சரி , இன்னொரு தூண்டில் சென்று விட்டது. ஒருபொழுதும் நடக்காதவையெல்லாம் நடக்கின்றன. சாப்பிட்டுவிட்டு இரண்டு உருண்டை நூலை எடுத்து ஒன்றோடொன்றைச் சேர்த்து முறுக்கேற்றினார். முறுக்கேற , ஏற நூல் தடித்தது. ஆனாலும் திருப்தி ஏற்படவில்லை. அந்த மீனைப் பிடிக்க அந்த நூல் கயிறு தாங்காது. கொஞ்சம் பலமாக இழுத்தால் தெறித்து அற... |
சுற்றிக்கொண்டு ஒரு வெட்டு வெட்டி இழுத்தார். கயிறு பட்டென்று தெறித்தது. சைஎன்று எரிச்சலோடு விளக்கை ஊதி அணைத்துவிட்டுப் படுத்தார். 429 முன்னிரவு. தூண்டிலை வீசியதும் வாளை மாட்டிக் கொள்கிறது. கயிற்றை பரபர என்று இழுக்கிறார். தடங்கலின்றி மீன் வந்து கொண்டிருந்தது. ஒரே ஆனந்தம். கரைக்கு வந்து மீன் தண்ணீருக்குள் தாவிக் குதிக்கிற... |
உண்டாகிறது. அப்புறம் படுக்க முடியவில்லை. தலையணையைச் சுவரில் சார்த்தி , அதில் சாய்ந்துகொண்டு சுருட்டி புகைத்தார். கோழிகள் கூவின. " வாங்க , அந்த வாண்டு என்ன கொண்டாந்திருக்கான்னு வந்து பாருங்க " என்று அவரின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொல்லைக்கு அழைத்துக்கொண்டு ஓடினாள் அவருடைய மனைவி. கிணற்றடியில் சேரும் நீரும் சொட்டச் சொ... |
கழுத்தில் உராய்ந்து காதிற்குச் சென்றது. " ஆத்தா " என்று அலறிக்கொண்டு ஓடிப் பாட்டியின் பின்னே மறைந்தான். 430 ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி எனக்கு சில்க் சட்டை இருக்கே ! உனக்கு இருக்கா ! என்று கெட்டிக்காரத் தனமாகக் கேட்டான் ராமசாமி. செல்லையா பதில் சொல்லத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் ; தம்பையா ஆகாயத்தைப் ப... |
சொல்லப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் மற்றப் பிள்ளைகள். அன்று பள்ளிக்கூடத்திலிருக்கும்போது ராமசாமிக்கும் செல்லையாவுக்கும் இடையே ஒரு போட்டி நடந்தது. ராமசாமி தன்ஐந்தாம் வகுப்பிற்குரிய இந்திய தேச சரித்திரப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டான். செல்லையா அந்த வருடம் இந்திய தேச சரித்திரம் வாங்கவி... |
படம் இருக்கும் பக்கத்தைச் செல்லையாவுக்குக் காட்டி , " இதோ , இந்தப் படத்துக்குப் பதில் படம் காட்டு " என்பான். செல்லையா தன் புத்தகத்தைத் திறந்து அதில் உள்ள ஒரு படத்தைக் காட்டுவான் ; பிறகு , இருவருமே புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டுவார்கள். யாராவது ஒருவருடைய புத்தகத்தில் அடுத்த படியாகப் படம் வரும் ; உடனே , அந்தப் படத... |
விடுவான் ; மற்றவன் தோற்றுப் போவான். உடனே ஜெயித்தவன் , " உனக்குப் படம் காட்ட முடியல்லே ! தோத்துப் போயிட்டியே ! " என்று பரிகாசம் செய்வான். இந்த மாதிரியான படப் போட்டிதான் அன்றும் நடந்து கொண்டிருந்தது. போட்டி பாதியில் நிற்கிறது. அந்தச் சமயத்தில் ஐந்தாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் வந்துவிட்டார். அந்த கணக்கு வாத்தியார் மிகவ... |
நடத்துவது எப்படி ? 431 வாத்தியார் வந்ததும் இவருடைய போட்டியும் நின்றுவிட்டது. கடைசியில் , சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்த பிறகு , ஒரு வேப்பமரத்தின் அடியில் நின்று இருவரும் அந்தப் போட்டியை நடத்தினார்கள். ராமசாமியின் சரித்திரப் புத்தகத்தில் பாதிதான் தாண்டியிருக்கும் ; ஆனால் செல்லையாவின் சிவிக்ஸ் புத்தகம் முடிந்... |
அந்த இடத்தை விட்டு எல்லோரும் வீட்டுக்குப் போகப் புறப்பட்டார்கள். நடந்து செல்லும்போதே , படப் போட்டி வேறொரு அவதாரம் எடுக்கத் தொடங்கியது.எங்கள் வீட்டில் அது இருக்கே , உங்கள் வீட்டில் இருக்கா ?என்று இருவரும் ஒருவரிடம் ஒருவர் கேட்க ஆரம்பித்தனர். இந்தப் புதுப் போட்டியின் கடைசிப் பகுதியில் தான் ராமசாமி , " எனக்கு சில்க் சட்டை... |
சொல்லவில்லை. ஆனால் , மங்கம்மாள் திடீரென்று எல்லோரையும் இடித்துத் தள்ளிக்கொண்டு , ராமசாமியின் முன்னாள் வந்து நின்றாள் குழந்தைகள் எல்லோரும் மங்கம்மாவையே கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவள் , ரேகை சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு , " ஐயோ ! சில்க் சட்டை எதுக்காம் ? ஹூம் , லேசாச் சருகு மாதிரி இருக்கும். சீக... |
பக்கத்தில் வந்து நின்றாள். ராமசாமி திகைத்து நின்றுவிட்டான். முதல் வகுப்பில் படிக்கும் மங்கம்மாள் , ஐந்தாம் வகுப்பில் படிக்கும் தன்னை இப்படித் தோற்கடித்து விட்டாளே என்று சங்கடப்பட்டான். பிள்ளைகள் ராமசாமியைப் பார்த்து , " தோத்துப் போயிட்டியா ! " என்று ஏளனம் பண்ணினார்கள். 432 மங்கம்மாள் செல்லையாவின் சட்டையைப் பிடித்துக்கொ... |
வீட்டிலே இருக்கா ? " இதற்குச் செல்லையா பதில் சொல்லவில்லை ; மங்கம்மாளும் பதில் சொல்லவில்லை. தம்பையா , " இவுஹதான் பணக்காரராம் ! அதுதான் ரொம்பப் பெருமை ஹூம் ! பெருமை பீத்திக்கலாம்... ! " என்று சொல்லி நிலைமையைச் சமாளிக்க முயன்றான். அது முடியவில்லை. அந்தச் சமயத்தில் செல்லையா , " அது சரி , எங்க வீட்டிலே ஒன்பது கோழி இருக்கு ,... |
கோழி இல்லே " என்றான். " அதெல்லாம் சும்மா. ஒன்பது கோழி இருக்கா , இல்லையா ? " என்று ஒரே பிடிவாதமாகக் கேட்டான் செல்லையா , ராமசாமிக்கு பதில் சொல்ல முடியவில்லையே என்று கூட வருத்தமில்லை. மற்றப் பிள்ளைகள் எல்லோரும் ஒன்று கூடிக் கொண்டு அவனைப் பரிகாசம் செய்வதை அவனால் தாங்கமுடியவில்லை.அழுகை வரும் போல இருந்தது. அதனால் எல்லோரையும்... |
வீட்டுக்கு நேராக வந்த மாத்திரத்தில் கூட்டத்திலிருந்து விலகி வீட்டுக்குப் போய் விட்டார்கள். கூட்டம் குறையக் குறைய ராமசாமியின் அவமானமும் குறைந்துகொண்டு வந்தது. மேலத் தெருவுக்குள் நுழையும் போது , ராமசாமியும் அவனுடைய எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூவரும்தான் மிஞ்சினார்கள். ஏனென்றால் , அந்தக் குக்கிராமத்துப் பள்ளிப் பிள்ளைகளில் ... |
தோத்தோ நாயே ! " என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டும் , கையால் சொடுக்குப் போட்டுக்கொண்டும் நின்றார்கள். அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு மீசைக்காரன் தலைப்பாக் கட்டுடன் வெளியே வந்தான். அவன் ராமசாமியின் வீட்டு வேலைக்காரர்களில் ஒருவன். குழந்தைகள் மூவரும் கிழிந்துபோன அழுக்குத் துணியுடனும் , பரட்டைத் தலையுடனும் தெருவி... |
போன பிறகு , " பிச்சைக்காரக் கழுதை ! தோத்தோ !... நாயே !.. கழுதை ! என்று தனக்குத் தானே ஏகத்தாளமாச் சொல்லிக் கொண்டு , தன வேலையைக் கவனிக்கப் போனான். செல்லையா , தம்பையா , மங்கம்மாள் மூன்று பேரும் நெஞ்சோடு புத்தகக் கட்டுக்களை அணைத்துக்கொண்டு வீடு சேரும் போது , அவர்களுடைய தாயார் தாயம்மாள் வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் க... |
என்று முகத்தைச் சுளித்துக் கொண்டு அழுவது போலச் சிரித்தாள் ! அம்மாஅழுவ'தைக் கண்டு மங்கம்மாளுக்கு அடக்க முடியாதபடி சிரிப்பு வந்தது. " ஐயா வந்துட்டாரா அம்மா ? " என்று தம்பையா கேட்டான். அப்பாவைத் தான் ஐயா என்று அந்த கிராமத்துப் பிள்ளைகள் குறிப்பிடிவார்கள். " வரலையே ! " என்று பொய் சொல்லிவிட்டு , பொய்ச் சிரிப்பும் சிரித்தாள்... |
கையிலிருந்து புத்தகக்கட்டை இடது கையில் இடுக்கிக் கொண்டாள். வலது கையின் ஆள்காட்டி விரலை மூக்கின் மேலும் , புருவங்களுக்கு மத்தியிலும் வைத்துக்கொண்டு , முகத்தையும் ஒரு பக்கமாகத் திருப்பிக்கொண்டு , " அம்மா !... எனக்குத் தெரிஞ்சு போச்சு !... நீ பொய் சொல்றே !... ஐயா வந்துட்டாரு ! " என்று நீட்டி நீட்டிச் சொன்னாள். தாயம்மாளுக்... |
கேட்டான். அவன் குரலில் சோகம் ததும்பி , ஏமாற்றம் இழையோடியிருந்தது. தாயம்மாள் வீட்டிற்குள் நுழைந்தாள். மூளையிலிருந்த ஒரு ஜாதிக்காய்ப் பொட்டியைச் சுட்டிக்காட்டி , “ அந்தப் பெட்டியைத் திறந்து பாரு மங்கம்மா " என்றாள். மூவருமே ஓடிப்போய்ப் பெட்டியைத் திறந்தனர். பெட்டிக்குள்ளே இருந்த ஜவுளிப் பொட்டணத்தை வெளியே எடுத்து அவிழ்த்து... |
பார்த்துக் கொண்டிருந்தனர். பொட்டணத்தில் இரண்டு மல் பனியன்களும் , இரண்டு கால் சட்டைகளும் , ஒரு பாவாடையும் , ஒரு பச்சை நிறமான சட்டையும் , ஒரு நான்கு முழ ஈரிழைச் சிட்டைத் துண்டும் இருந்தன. 435 துண்டைத் தவிர மற்ற உருப்படிகள் இன்னின்னாருக்குத்தான் என்று குழந்தைகளே பங்கு போட்டுவிட்டார்கள். துண்டுயாரைச் சேருவது என்று தெரியவில... |
சீலை இருக்கே இன்னும் எதுக்கு ? எல்லோரும் புதுத்துணி எடுக்க நாம் என்ன பணக்காரரா ? " " ஐயாவுக்கு மட்டும் பிறகு புதுத்துண்டு எதுக்காம் ? " என்றாள் மங்கம்மா. " வாயாடி ! வாயாடி ! ஐயாவுக்கு ஒரு துண்டுகூட இல்லே. துண்டு இல்லாமே எத்தனை நாளைக்குப் பழைய வேட்டியை உடம்பிலே போட்டுக்கிட்டு அலையறது ? " என்று சொல்லிவிட்டு , மங்கம்மாளைத... |
மாதமானதால் அநேகமாக நாள் தவறாமல் மழை பெய்திருந்தது. பூமி குளிர்ந்து ஜில்லிட்டு விட்டது. காற்றும் ஈரக்காற்று. இதனால் வெந்நீரில் குளித்துவிட்டு வந்த குழந்தைகளை ஈரவாடை அதிக வேகத்துடன் தாக்கியது. எல்லோரும் குடுகுடு என்று முற்றத்திலிருந்து வீட்டுக்குள்ளே ஓடி வந்து விட்டார்கள். குழந்தைகள் சாப்பிடும்போதுதான் , அவர்களுடைய அப்பா... |
கொண்டாடி விடவேண்டும் என்று அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் என்றும் தாய் தெரிவித்தாள். 436 சாப்பாடு முடிந்தது. ராப் பாடம் படிக்க மாடக்குழியில் இருந்த அகல் விளக்கைத் தூண்டிவிட்டுக் கொண்டு அதன் முன்னால் மூன்று பெரும் உட்கார்ந்தார்கள். தாயம்மாள் சாப்பிட்டுவிட்டு , எச்சில் கும்பாக்களைக் கழுவ முற்றத்துக்கு வந்தாள். முற்றத... |
முந்தானையை விரித்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு , குழந்தைகள் உரக்கச் சத்தம்போட்டுப் பாடம் படிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். சிறிது நேரத்தில் , “ தரை என்னமாக் குளுருது ! ராத்திரி எப்படிப் படுத்துக்கிடுறது ? " என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். அவளுடைய உடம்பு அவளுடைய ஸ்பரிசத்துக்கேஜில்லெ... |
இந்தச் சிறுவர்களின் கண்ணிலும் முருங்கை மரத்தடியில் இருந்த கருப்பு உருவம் தென்பட்டது. அதைப் பார்த்து பயந்து போகாமல் இவர்கள் தைரியமாக நின்றதற்குக் காரணம் , ராமசாமியின் வீட்டை நோக்கிப் போகும் இரண்டு பேர் இரண்டுபெட்ரோமாக்ஸ்விளக்குகளைக் கையில் எடுத்துக் கொண்டு போனதுதான். ஆள் நடமாட்டமும் விளக்கு வெளிச்சமும் சேர்ந்து தைரியம் ... |
முருங்கை மரத்துக்குக் கீழாகப்போய் நின்று கொண்டு , அந்தச் சிறுவனுடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு வயது எட்டு அல்லது ஒன்பது இருக்கும். அவன் உடம்பில் அழுக்கடைந்த கௌபீனம் ஒன்றைத் தவிர , வேறு உடைகள் கிடையாது , தரையில் உட்கார்ந்தால் குளிரும் என்று , பாதங்கள் மட்டும் தரையில் படும் படியாக அவன் குந்திக் க... |
அந்த எச்சில் இலைகளை எடுத்துக் கொண்டு வந்து , அவற்றில் ஒட்டிக் கொண்டிருந்த பருக்கைகளையும் கரி வகைகளையும் எடுத்து வாயில் போட்டுக் கொண்டிருந்தான். செல்லையாவோ தம்பையாவோ ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கொண்டே நின்றார்கள். ஏற்கனவே யாரோ கடித்துச் சுவைத்துத் துப்பிய முருங்கைக் காய்ச் சக்கைகளில் ஒன்றை இலையிலிருந்து எடுத்தான் சிறுவன... |
செல்லையாவுக்குத் திடீரென்று ஏதோ உதயமானது போல் , " டேய் ! ஏண்டா எங்க வீட்டு வாசலிலே வந்து உட்கார்ந்திருக்கே ? போடா... " என்று அதட்டினான். சிறுவன் போகாவிட்டாலும் பயந்துவிட்டான் ; அதனால் டது கையால் தலையைச் சொறிந்துகொண்டு , அதிவேகமாக இலையை வழித்தான். " உங்க வீட்டுக்குப் போயேன் " என்றான் தம்பையா , மழை பலமாகப் பிடித்து விடும... |
சிறுவன் எழுந்திருக்கும் வழியைக் காணோம். அவனைக் காலால் மிதிக்க வேண்டுமென்று தம்பையா தீர்மானித்தான். 438 மழைசட சட வென்று பெய்ய ஆரம்பித்துவிட்டது. வெளியே போன குழந்தைகள் மழையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற திகைப்புடன் தாயம்மாள் ஓடிவந்து ,செல்லையா. !... " என்று கூப்பிட்டாள். " ம்ம் " என்று பதில் வந்தது. " இருட்டிலே... |
ஓடிவந்தாள். சிறுவன் விளக்கு வெளிச்சத்தில் வந்து நின்றான். அவனுடைய உடம்பெல்லாம் ஒரே சிரங்கு. தலையில் பொடுகு வெடித்துப் பாம்புச் சட்டை மாதிரி தோல் பெயர்ந்திருந்தது. பக்கத்தில் வந்து நின்றால் , ஒரு மாதிரி துர்வாடை. இந்தக் கோலத்தில் நின்றான் சிறுவன். " இது யாரம்மா ? " என்று மங்கம்மாள் திகைப்போடு கேட்டாள். " யாரோ ? யார் பெத... |
என்று பயமுறுத்தினான். செல்லையா ,போஎன்று அவனைப் பிடித்துத் தள்ளினான். இவர்கள் இருவரையும் பார்த்து மங்கம்மாளும் அர்த்தமில்லாமல் " போயேன்என்று சிணுங்கிக்கொண்டே சொன்னாள். அவ்வளவுதான் , திடீரென்று மடை திறந்த மாதிரிகோவென்று அழுது விட்டான். விஷயம் என்னவென்று தெரியாமல் பதைபதைப்புடன் ஓடி வந்தாள் தாயம்மாள். 439 " ஏண்டா அழுகிறே ?... |
சொல்லக்கூடாது ! நீ சும்மா இரு அழாதேப்பா " என்று சொல்லிச் சிறுவனைத் தேற்றினாள். சிறுவன் அழுகையை அப்படியே நிறுத்திவிட்டான். ஆனால் , பெருமூச்சு விடுவதை மட்டும் அவனால் நிறுத்த முடியவில்லை. " சும்மா இரு தம்பி !... அழாதே ! " என்று இரண்டாவது தடவையும் தாயம்மாள் சொன்னாள். பழைய துணியைக் கொண்டு செல்லையாவும் தம்பையாவும் உடம்பைத் த... |
" அவன் எச்சியைச் சாப்பிடுறான் , அம்மா. ராமசாமி வீட்டிலிருந்து எச்சிலையை எடுத்துவந்து சாப்பிடுறான். அசிங்கம் ! " என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு சொன்னான் தம்பையா. குழந்தைகள் எல்லோரும் சிரித்தார்கள். " இந்தா தம்பையா ! இனிமே அப்படிச் சொல்லாதே ! " என்று அதட்டிவிட்டு , " நீ யாரப்பா ? உனக்கு எந்த ஊரு ? " என்று தாயம்மாள் சிற... |
, தம்பி ? " " போன வருஷம் அம்மா செத்துப் போயிட்டா. ஐயா , நான் சின்னப்பிள்ளையாயிருக்கும் போதே செத்துப் போயிட்டாராம். " " உனக்கு அண்ணா தம்பி ஒருத்தரும் இல்லையா ? " " இல்லை " உடனே தம்பையா கேட்டான் ; " தங்கச்சியும் இல்லையா ? " " இல்லை " " பாவம் " என்று சொல்லிவிட்டுத் தம்பையா நிறுத்திக் கொண்டான். " இங்கே எதுக்கு வந்தே ? " என... |
வரையிலும் வந்திருந்தான். இந்த இருபது மெயில் பிரயாணத்துக்கு நான்கு நாட்களாகிவிட்டன. நான்காவது தினத்தில் தான் இந்தக் கிராமத்தில் வந்து தங்க நேர்ந்தது. அதுவும் பொழுது இருட்டி விட்டதனாலும் பசியும் இருந்ததனாலும் தான் மறுநாள் விடிந்த பிறகு , எட்டு மெயில் தூரம் நடந்து கழுகுமலைக்குப் போனால் , அவனுடைய அத்தை தன் வீட்டில் அவனை வை... |
நம்பிக்கொண்டு அந்தச் சிறுவன் விளாத்திக் குளத்திலிருந்து கால்நடையாகவே நடந்து வந்திருக்கிறான். மேற்கண்ட விவரங்களை எல்லாம் சிறுவனுடைய வாய் மொழி மூலமாகவே தாயம்மாள் அறிந்து கொண்டாள். " உன் பேரு என்ன ? " என்று கடைசியாகக் கேட்டாள் தாயம்மாள். " ராஜா " என்றான் சிறுவன். அப்புறம் அவனுக்குச் சாப்பாடு போட்டார்கள். அவன் சாப்பிட்ட பி... |
கோணிப் பைகளை எடுத்து உதறி விரித்து , அதன் மேல் வீட்டிலிருந்த இரண்டு ஓலைப் பைகளையும் பக்கம் பக்கமாக விரித்தாள். ராஜா தெற்குக் கோடியில் படுத்துக் கொண்டான். அவனுக்குப் பக்கமாகச் செல்லையாவும் அப்புறம் தம்பையாவும் படுத்துக் கொண்டார்கள். தம்பையாவின் உடம்பு இரண்டு பாய்களிலுமே பாதிப்பாதி படிந்திருந்தது. வடகோடியில் தாயம்மாளும் ... |
ஆரம்பித்துவிட்டான். வேட்டுச் சத்தம் கேட்டதும் , " எனக்கு மத்தாப்பு. " என்றாள் மங்கம்மாள். " எனக்கும்.... " என்றான் தம்பையா. " நம்ம கிட்ட அதுக்கெல்லாம் பணம் ஏது மங்கம்மா ? ராமசாமி பணக்காரன். அவனுக்குச் சரி , எவ்வளவு வேட்டுன்னாலும் போடுவான். " " ஊஹும் எனக்கு மத்தாப்பு... " என்று முரண்டு பண்ணினாள் மங்கம்மாள். " வம்பு பண்ண... |
சிணுங்க ஆரம்பித்தாள். செல்லையா தூங்க ஆரம்பித்தான். அப்போது தெருவில் ஆட்கள் நடந்து செல்லும் சந்தடி கேட்டது. " சமீன் வந்து இறங்குறதுன்னா லேசா ? " என்று தாயம்மாள் தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு ,மங்கம்மா ! நீ நல்ல பிள்ளை ! பிடிவாதம் பண்ணாதே. அடுத்த வருஷம் நிறைய மத்தாப்பு வாங்குவோம். இந்த வருஷம் நாம் எவ்வளவு சங்கடப் பட்டோம்ன... |
உயிருக்கு உயிராகப் பேணி வளர்த்த ஒரு கிழவியிடத்திலோ , தான் வருஷக் கணக்கில் அனுபவித்த துயரங்களைக் கண்ணீரும் கம்பலையுமாகச் சொல்லுவது 443 போலவே பேசினாள். ஒரு நீண்ட பெருமூச்சுடன் , " மங்கம்மாள் !... நீ கூட ஒரு நாள் சாப்பாடு இல்லாமெ பள்ளிக்கூடம் போனியே கண்ணு. உன் வயித்துக்குக் கூட அன்னிக்கு ஒருவாய்க் கூ u கெடைக்கல்லையே ! ( அ... |
மத்தாப்பாவது வாங்கித் தா " என்றாள் மங்கம்மாள். அழுகையுடனும் துயரச் சிரிப்புடனும் தாயம்மாள் சொன்னாள் : " நீ தானே இப்படிப் பிடிவாதம் பண்றே ? அந்தப் பையனைப் பாரு அவன் மத்தாப்பு கேக்கிறானா... சோறு கிடைக்காமே , எச்சிலைக்கூட எடுத்துத் திங்கறான்... அவன் சோறு வேணும்ன்னு கூட அழல்லே ; நீ மத்தாப்பு வேனும்னு அழறே மங்கம்மா... " மங்... |
போலக் கடுமையாகச் சொன்னாள். " அவனுக்குத் தாய் தகப்பன் இருந்தா அப்படி இருப்பானா ? தாயில்லாப் பிள்ளைன்னா யாரு கவனிப்பா ? அவனோட அம்மா , முன்னாலே , அவனுக்குத் தீபாவளிக்குப் புதுவேட்டி , புதுச்சட்டை எல்லாம் வாங்கிக் குடுத்திருப்பா ! மத்தாப்பும் வாங்கிக் கொடுத்திருப்பா. இப்போ , அவன் அதை எல்லாம் நினைச்சுக் கேக்கிறானா பாரு. " "... |
கிள்ளினாள். தாயம்மாளுக்குத் திகைப்பாக இருந்தது. " எதை மூடிக்கிறது ? ஊம் ? என்று ஒரு கணம் யோசித்தால் , அப்புறம் , " என் பிள்ளைகளை விடவா அந்தப் பீத்தல் பெரிசு ? " என்று சொல்லிக் கொண்டே எழுந்து போய் , மறு நாள் கட்டிக்கொள்வதற்காக துவைத்து உலர்த்தி மடித்து வைத்திருந்த உண்மையில்பீத்தல்இல்லாத நாட்டுச் சேலையை எடுத்துக்கொண்டு வ... |
மூன்றாவது தடவையாகவும் சீனவெடியின் சப்தம் கேட்டது. தாயம்மாள் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள் : " இன்னிக்கு அங்கே யாரும் தூங்கமாட்டாக போலிருக்கிறது ! ஊம் , அரண்மனைக் காரியம் ! ஆளு போறதும் வாரதுமா இருக்கும். ராமசாமியும் தூங்காம வேட்டுப் போடுறான் ! " ராமசாமியின் அக்காளைக் கல்யாணம் பண்ணிக் கொண்டவன் ஒரு ஜமீன்தாரின் மகன். அந்த... |
அழைத்து வந்து தீபாவளி நடந்த அநேக தினங்களாகவே அவர் வீட்டில் ஏற்பாடுகள் நடந்து வந்தன. தீபாவளிக்கு முதல் நாள்தான் மாப்பிள்ளை வந்து இறங்கினான். அதற்க்கு முன் பத்துப் பதினைந்து நாட்களாக ஒரு நிமிஷத்திற்கு ஒன்பது தடவை , " ராஜா வர்றார் , சிறப்பாகச் செய்யணும் " என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார். உண்மையில் வெகு சிறப்பாகத்தான் ... |
விட்டாள். அப்போது மணி நாலு ஆகவில்லை. நல்ல வேளையாக மழை அப்போதுதான் நின்றிருந்தது சிறு தூவானம் மட்டும் ஒலைக் கூரையில் விழுவது , ஒரே நிதானத்துடன் சோளம் பொரிவது போலக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தத் தெருவில் வேறு சில வீடுகளில் ஏற்கனவே எழுந்து தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடத் தொடங்கி விட்டதற்கு அடையாளமாக வேட்டுச் சப்தமும் , வ... |
குழந்தைகளை எழுப்பி , விறுவிறு என்று குளிப்பாட்டிவிட்டு , மற்ற வேலைகளை கவனிக்கலாம் என்று திட்டம் செய்தாள். குழந்தைகளுக்குப் படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லை. கடைசியில் முனகிக் கொண்டும் , புரண்டு படுத்துக்கொண்டும் ஒருவழியாக எழுந்து விட்டார்கள். அவள் ஒவ்வொரு குழந்தையாக எண்ணெய் தேய்த்து விட்டாள். ஆனால் ராஜா மட்டும் எ... |
ஏறவில்லை. " அரப்புக் காந்தும் ; நான் மாட்டேன். " என்று பிடிவாதமாகச் சொன்னான் ராஜா. " அரப்புப் போடல்லே ; சீயக்காய் போட்டுக் குளிப்பாட்டுறேன். குளிர்ச்சியாயிருக்கும் " " ஊஹும். " " தம்பி , சொன்னாக் கேளுடா. என்னை உன் அம்மான்னு நெனைச்சுக்கோ , உனக்குக் காந்தும் படியாக நன் தேய்ப்பனா ? - வா , எண்ணெய் தேய்ச்சிக் குளி. இந்தத் த... |
தான் நல்ல பிள்ளைக்கு அடையாளம். ஒரு பிள்ளைக்குத் தேச்சி , ஒரு பிள்ளைக்கு தேக்காமல் விடலாமா ? என் பிள்ளை குட்டியும் நல்லா இருக்கனுமில்லப்பா !... " என்று மற்றவர்களுக்குச் சொல்லுவது போலத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டே எண்ணெய் தேய்த்தாள்.தாயில்லாக் குழந்தைன்னா இந்தக் கோலம் தான். நான் மூணாம் வருஷம் காய்ச்சலோட படுத்திருன்தேனே ... |
ஆனால் , தாயம்மாள் பயபத்திரமாகச் சீயக்காய்த் தூளைப் போட்டுத் தேய்த்த போதிலும் , ராஜா பல தடவைகள்ஐயோ , ஐயோ என்று அழுதுவிட்டான். அவன் அழும்போதெல்லாம் அவள் " இன்னிக்கோட உன் சிரங்கு குணமாயிரும்என்று மட்டும் மாறி மாறிச் சொல்லிக்கொண்டே இருந்தாள். 446யாரோ எவரோ ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா ... |
குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான். " அவள் தோசை சுட்டுக் கொடுத்தாள். அவளுடைய குழந்தைகள் புதுத் துணி உடுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆவலினால் அவசர அவசரமாகச் சாப்பிட்டார்கள். தம்பையா கடைசித் தோசையைப் பாதியிலேயே வைத்து விட்டு எழுந்துவிட்டான். அவனால் மேற்கொண்டும் இரண்டு தோசைகள் சாப்பிட முடியும். இருந்தாலும் அவசரம். தெருவில... |
செல்லையாவும் உடுத்துக் கொண்டான் ; தம்பையாவும் உடுத்துக் கொண்டான். மங்கம்மாளும் பாவாடையும் சட்டையும் போட்டுக் கொண்டாள். அவன் கௌபீனத்தோடு நின்றான். தாயம்மாளுக்குப்பகீர்என்றது. இத்தனையும் செய்தும் புண்ணியமில்லாமல் போய்விட்டதே என்று கலங்கினாள். இந்த மாதிரியான ஒரு கட்டத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. சிட்டைத் துண்டை எடுத்துக... |
ஒரு துண்டு வாங்க வழியில்லையே ! " என்று கணவன் துயரத்துடன் வாய்விட்டுப் புலம்பியதையும் நினைத்துப் பார்த்தாள். இந்தத் துயரத்தின் எதிர்புறத்தில் , ஒன்றும் சொல்லாமல் , ஒன்றும் செய்யாமல் , மௌனமாக நின்று கொண்டிருந்தான் ராஜா. தாயம்மாளுக்குத் திக்குத் திசை தெரியவில்லை ; ராஜாவின் முகத்தை எதற்கோ ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தாள். ராஜ... |
அவளுக்கும் மனக் கசப்புக்கும் வெகுதூரம். மனதுக்குள் ஏற்பட்ட சிக்கல்களை விடுவிக்கவே இப்படிப்பட்ட ஒரு வாசகத்தை அவள் தூக்கிப் போட்டாளே ஒழிய அவள் சொற்களில் மனக்கசப்பின் நிழல் கூடப் படியவில்லை. அப்போது மங்கம்மாள் எழுந்துவந்து அம்மாவின் கன்னங்களில் தன் உள்ளங்கைகளை வைத்து , தன் முகத்துக்கு நேராக அவளுடைய முகத்தைத் திருப்பினாள் ... |
திடீரென்று தாயம்மாளின் முகம் கோரமாக மாறியது. முந்தானையால் முகத்தை மூடிக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். அவளுடைய பெருமூச்சும் விம்மலும் வீட்டை அடைத்துக் கொண்டு கேட்டன. குழந்தைக்கு விஷயம் விளங்கவில்லை. மங்கம்மாள் , தான் அப்படிச் சொன்னதர்க்காகத் தான் அம்மா அழுகிறாள் என்று பயந்துவிட்டாள். தாய் , தன் பலத்தை எல்லாம் பிரயோகித்து... |
" தம்பையா ! " " என்னம்மா ! " 448 " ஹூம் , ராஜாவுக்கு அந்தத் துண்டை எடுத்துக்குடு. " வீட்டு முற்றத்தில் காலைவெயில் அடித்துக் கொண்டிருந்தது. அந்தப் பொன்னொளியில் மஞ்சள் பூசிய முகத்துடன் புத்தாடை தரித்துக்கொண்டு நிற்கும் மங்கம்மாள் , அப்போது எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள். ஈரம் காய்வதற்கா இருக்கமில்லாதத்தொள தொளஎன்று சடை ப... |
கூச்சமும் தாங்க முடியாமல் சிரித்துக் கொண்டே இமைகளைக் குவித்தாள் மங்கம்மாள். வெகு நேரமாக , தாயம்மாள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தர்ப்பவசமாக , அவளுக்கு நேராக மங்கம்மாள் முகத்தைத் திருப்பினாள். " என் ராஜாத்தி மகாலக்ஷ்மி மாதிரி இருக்கா ! " என்று தன்னை மறந்து இன்பத்துடன் சொல்லிவிட்டாள் தாய். அவ்வளவுதான். குழந்தையி... |
ஓடிவிட்டாள். ராமசாமியின் வீட்டுப் பக்கம் எச்சில் இலைகள் ஏராளமாகக் கிடந்தன. அங்கே நாலைந்து பேர் நின்று பேசிக் கொண்டும் , வெற்றிலை பாக்குப் போட்டுத் துப்பிக் கொண்டும் இருந்தார்கள். ராமசாமி நீலநிறமான கால்சட்டையும் , அந்த ஊருக்கே புதிய புஷ்கோட்டும் போட்டுக் கொண்டு நின்றான். மங்கம்மாளைப் பார்த்ததும் அவன் பக்கத்தில் ஓடிவந்தா... |
" ஊர்க்காரர்களைப் போல அவனும் தன் அக்காள் புருஷனை ராஜா என்று சொன்னான். ஆனால் அவன் சொன்னதற்குக் காரணம் சந்தோஷம்தானே ஒழிய மங்கம்மாளைப் போட்டிக்கு அழைப்பதற்கு அல்ல. ஆனால் , அவளோ வேறுவிதமாக நினைத்து விட்டாள். முதல் நாள் பள்ளிக் கூடத்திலிருந்து வந்தபோது நடந்த போட்டிதான் அவள் ஞாபகத்தில் இருந்தது. அவன் 449 சொன்னதற்குப் பதில் ச... |
சாஸ்திரியிடம் காட்டுவது போலக் கையை வைத்துக் கொண்டு , மிக மிக ஏளனமாகச் சொன்னாள். " ஐயோ ! உங்க வீட்டுக்குத்தானா ராஜா வந்திருக்கார் ? எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கார். வேணும்னா வந்து பாரு. " 450 நிலை - வண்ணதாசன் தேர் எங்கே ஆச்சி வருது ? ' வீட்டைப் பார்த்துக்கோ.என்று சொல்லிவிட்டு எல்லோரும் புறப்பட்டு போகும்போது கோ... |
அவர்களைப் பார்த்துக் கொண்டு உள்ளேயே நின்றாள். கம்பிக் கதவிற்கு வெளியே ஒவ்வொருவராக நகர்ந்து நகர்ந்து , தெருப்பக்கமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். முடுக்கு வழியாக , இங்கிருந்து தெருவைப் பார்க்க முடியாது. தெருவைப் பார்க்கவே இன்றைக்கு ரொம்ப நன்றாக இருக்கும். நிறைய ஆட்கள் இந்தத் தெரு வழியாகப் போவார்கள். பெரிய தெரு , மேலத்தெரு... |
மிட்டாய்க்காரன் வருவான். விறகுக்கடையில் வண்டியை நிறுத்திவிட்டு அப்பாகூட இந்தத் தெரு வழியாக ஒருவேளை போகலாம். வருமானம் இல்லாத சிலநாட்களில் கோமு இருக்காளா ?என்று வீட்டு வாசலில் வந்து ஓரமாக நின்று கேட்பது மாதிரி , இன்றைக்கும் வந்தால் நன்றாக இருக்கும். கோமுவுக்கு ஒரு பன்னிரண்டு வயசுப் பிள்ளை சாப்பிடுவதற்கும் கூடுதலாகவே இங்க... |
வந்தால் சந்தோஷமாக இருக்கும். வாசல் அமைதியாக இருந்தது. எதிர்த்த வீடு இரண்டிலும் கூடத் தேர்ப் பார்க்கப் போயிருந்தார்கள். எதிர்த்த வீட்டுத் தார்சாவில் ஒரே வெட்டுத்துணியாகக் கிடந்தது. தையற்காரர் கைமிஷினில் தைத்துக் கொடுத்துவிட்டுப் போயிருந்தார். தையற்காரர் உட்கார விரித்த சமுக்காளம்கூட அப்படியே வெள்ளையும் பச்சையுமாக வெட்டுத... |
கொடுத்த கிழிந்த உள்பாவாடையையும் தைக்க வேண்டும். இந்த டெய்லர் கிழிசலைத் தைப்பாரோ என்னவோ ? 451 அழிக்கதவைத் திறந்து அந்தப் பச்சை வெட்டுத்துணியை எடுத்து வரலாம். பச்சை என்றால் திக்குப் பச்சையில்லை ; லேஸ் பச்சை. புல் முளைத்த மாதிரி. வேப்பங்காய் மாதிரி. ஈர விறகுக்குத் தொலி உரித்த மாதிரி. கதவைத் திறந்து கொண்டு போகலாம் என்றால்ம... |
பெரிய தொந்தரவாகப் போகும். பேச்சு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.தண்ணி எடுத்துட்டியா ? கொடியில் கிடந்த துணியை உள்ளே எடுத்துப் போட்டியா ? இன்றைக்கு விளக்குப்பூசைக்குப் பூக்காரன் சரம் கொண்டு வந்து வைத்தானா ? அம்மாகுட்டி சாணி தட்ட வரக்காணுமே , ஏன் ? தோசைக்கு எவ்வளவு அரைக்கப் போட்டிருக்கிறது ? பௌர்ணமி என்ன தேதியில் வருகி... |
எல்லாக் கேள்விகளுக்கும் எப்படிப் பதில் சொல்லத் தெரியும் ? கோமு அழிக்கதவைத் திறக்கவில்லை. அவளுக்கு ஒரு கோட்டை வேலை கிடக்கிறது. ஆற்றுத் தண்ணீர் பிடிக்க வேண்டும். அதற்கு முன் தொழுவில் நிற்கிற கன்றுக்குட்டியைப் பிடித்துக் கட்ட வேண்டும். கோமு தொழுவத்துக்குப் போகிற நடையில் வந்து உட்கார்ந்து கொண்டு பார்த்தாள். முன்னால் வேலை ப... |
தோட்டத்துக் கல்நடை மற்ற எல்லாவற்றையும் விடக்குழி குழியாக இருக்கிறது. கழுவி விட்டால் இடம் உடனே காயாது. இந்தச் சின்னச் சின்ன அம்மி கொத்தினதுமாதிரிக் குழிகளுக்குள் கொஞ்ச நேரம் ஈரம் இருக்கும். குளிர்ந்து கிடக்கும். கோமுவுக்கு வீட்டை விடவும் இந்தத் தோட்டம் பிடித்திருந்தது. ஒடுக்கமான இந்த இடத்துக்குள்ளேயே சின்னச் சின்னதாக ஒர... |
வந்தபோது , கோமுவும் வந்திருந்த சிறு பிள்ளைகளும் தங்கரளிப் பூவையும் கருவேப்பிலைப் பழத்தையும் கொண்டுதான் வீடு வைத்து விளையாடினார்கள். 452 கோமு இங்கே வேலைக்கு வரும்போது கன்றுக்குட்டி ரொம்பச் சிறுசாக இருந்தது. பால் குடித்து விட்டு அது ஆளில்லாத தோட்டத்தில் காலை உதறி உதறித் துள்ளிகொண்டு ஓடுவதையும் , மறுபடியும் அம்மா ஞாபகம் வ... |
ஜாடை , குணம் எல்லாம் இப்போது மாறிவிட்டது. நிறையக் கள்ளத்தனமும் வந்து விட்டது. ஆள் வருகிற சத்தம் கேட்டால் பசுவுக்கு அந்தப்புறம்போய் அழிப்பக்கம் நின்றுகொள்கிறது. இழுத்துக் கட்ட முடியவில்லை. செக்கு மாதிரி அசையாமல் நிற்கிறது. என்றைக்கு அது கயிறை அத்துக் கொண்டு போய்ப் பாலைக் குடித்து , கோமுவுக்கு ஏச்சு வாங்கிக் கொடுக்கப் போ... |
வந்து முழங்கைப் பக்கம் நக்கிக் கொடுக்க ஆரம்பித்தது. கருநீலமான அந்த வழுவழுப்பான நாக்கு படப்படக் கோமுவின் கையில் கூச்சமெடுத்தது. அது இன்றைக்கு அவளிடம் ரொம்பப் பிரியமாக நடந்து கொண்டது போல் இருந்தது. கொம்பு முளைக்கப் போவது போல் புடைத்த தலையைச் சொறிந்தபடி , இன்னொரு கையைக் கழுத்தில் போட்டுலட்சுமீய்என்று அவளே செல்லமாக ஒரு பெய... |
வந்திருந்தால்தான் இப்படி உஸ்ஸென்று சீறிக்கொண்டு வேட்டு வெடிப்பது கூடக் கேட்கும். எங்கேயிருந்து பார்த்தாலும் , இப்படி வேட்டு வானத்தில் புகைந்து கொண்டு போய் வெடிப்பது தெரியும். ஏரோப்ளேன் பார்க்க ஓடி வருகிற மாதிரி , இதையும் வீட்டுக்குள்ளேயிருந்து ஓடிவந்து எல்லோரும் அண்ணாந்து பார்க்கலாம். கோமு ஓட்டுச்சாய்ப்புக்கு வெளியே வந... |
நோட்டீஸ் , பொருட்காட்சி நோட்டீஸ் எல்லாம் இன்றைக்குப் பறக்கும். மேலே வீசப்படுகிற அந்தப் பச்சை சிவப்பு மஞ்சள் நோட்டீஸ்கள் மடங்கி மடங்கிக் கோலாட்டு அடிப்பதுமாதிரி எவ்வளவு அழகாகக் கீழே வரும். கோமு அந்த நோட்டீஸைப் பொறுக்க எவ்வளவு பிரயாசைப் பட்டிருக்கிறாள். புத்தம் புதிய நோட்டீஸின் ஒரு பாகம் மாத்திரம் காலில் மிதிபட்டு மணலும்... |
குளம் பெருகினது மாதிரி , 453.00 தேரோட்டத்திற்காகத் தண்ணீர் திறந்து விட்டிருக்கிறானோ என்னவோ ! இன்றைக்குக் குழாயில் எடுக்க எடுக்கத் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. கொப்பரை , தொட்டி , மண்பானை , எவர்சில்வர் குடம் எல்லாவற்றிலும் தண்ணீர் எடுத்து ஊற்றின பிறகு கூடக் குடம் நிரம்பிச் சரசரவென்று பெருகிக் கொண்டிருந்தது. என்ன செய்... |
இருக்க , தேர்ப் பாக்கப் போகலையா ?என்று யாரோ கேட்டார்கள். சத்தம் மேலே இருந்து வந்தது. மேலே பாரு இங்க இங்க !பின்னால் இந்த வீட்டுச் சுவரை ஒட்டி இருக்கிற இன்னொரு வீட்டு மச்சில் இருந்து அந்த வீட்டு அக்கா சத்தம் கொடுத்தாள். அந்த அக்காவும் இன்னும் ரெண்டு மூணு பேரும் மச்சுத் தட்டோட்டியில் நின்று தேர் பார்த்துக் கொண்டிருக்கிறார... |
பார்த்திருக்கிறாள். அவள் பார்த்த சமயத்தில் அந்த மச்சில் இருந்து தேர் முழுவதும் தெரியவில்லை. இருக்கிற ஆட்கள் தெரியவில்லை. வடம் கண்ணில் தட்டுப் படவில்லை. தேரின் மேலே உள்ள தட்டு அலங்காரமும் , உச்சியிலுள்ள கும்பமும் , சிவப்புக் கொடியும் , முக்குத் திரும்பும்போது தேரின் விலாவும் வாழைமரமும் தெரிந்தது. அதுவும் நன்றாகத்தான் இர... |
இதுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டு தலையை மாத்திரம் தூக்கிப் பார்ப்பது போலத் தேர் வருவதும் நன்றாகத் தான் இருக்கும். இந்த வீட்டு மச்சில் போய்ப் பார்க்கலாம் என்றுகூடத் தோன்றியது. அந்த வீட்டிற்கு வழி இந்தப் பக்கம் இல்லை. தெருவைச் சுற்றி முன்பக்கமாகப் போக வேண்டும். வீட்டைப் போட்டுவிட்டு அப்படிப் போக முடியாது. குடம் , வாளி எல்... |
வந்தது என்றே தெரியவில்லை. தேரோட்டமும் இன்றைக்குத்தான். பௌர்ணமியும் இன்றைக்குத்தான். நல்லவேளை , இரண்டும் ஒரே நாளில் வந்தது. இல்லாவிட்டால் இரண்டு நாளுக்கு முந்தின ராத்திரியும் வீடு மெழுக வேண்டும். அடுப்படி கழுவ வேண்டும். எல்லார் சாப்பாடும் முடிந்து அடுப்படி கழுவுவதற்குள் , தூக்கம் தூக்கமாய் வரும். குழாயில் தண்ணீர் வரவில்... |
இருந்தது. நிலாவெளிச்சம் இருக்கிறது என்றாலும் இப்படி யார் ஒத்தையில் இருக்க முடியும் ? இவள் உட்கார்ந்திருந்த நடையை ஒட்டி இவள் ஆவிச் சேர்த்துக் கட்டுவதற்குக் கஷ்டப்படுகிற மாதிரி வழுவழு என்று ரெண்டு மரத்தூண் இருந்தன. அந்த ரெண்டின் நிழலும் வாசல் பக்கம் ரெண்டு பள்ளம் தோண்டிக் கோமுவை நடுவில் உட்கார்த்தினது போல விழுந்திருந்தன.... |
வருவது மாதிரி நிற்கிறதாகப் பட்டது. அந்த இடத்தைவிட்டுக் கொஞ்சம் அசைந்தால்கூட எல்லாம் சேர்ந்து ஒரே கவ்வாகக் கவ்வி அவளைப் பிடித்துக் கொள்ளும் என்று தோன்றியது. உள்ளே கட்டிலில் சீக்காகப் படுத்திருக்கிற பெரிய ஆச்சியுடன் பேசுவது ஒன்றுதான் வழி. கூப்பிட்டேளா ஆச்சி ?கோமுவைக் கூப்பிடாவிட்டாலும் , ஆச்சி படுத்திருக்கிற கட்டில் பக்க... |
எழுந்திருந்து உட்கார்ந்தாள். வாசலில் இருந்த பயம் இப்பொழுது முழுசாகக் குறைந்துபோய் , கோமு பெரிய ஆச்சியுடன் பேச ஆரம்பித்தாள். எல்லோரும் வெளியே தேர்ப் பார்க்கப் போயிருக்கிற விபரத்தைச் சொன்னாள். அப்போதே போய்விட்டார்கள் என்றும் இது வருகிற நேரமென்றும் சொன்னாள். * கூட்டம் ஜாஸ்தியா ?என்று ஆச்சி கேட்டதற்கு ,எக்கச்சக்கம் கூட்டம்... |
போகணும்என்றும் “ ஜோலி இதுவரை சரியாக இருந்ததுஎன்றும் சொன்னாள்.ஐயோ பாவம். நீயும் பச்சைப் பிள்ளைதானே. போகணும் வரணும்னு தோணத்தானே செய்யும். போயிட்டு வா , போய்ப் பார்த்துட்டுவா , அவங்க வரட்டும்என்று சொல்லிவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டாள். 455 கோமுவுக்கு ஆச்சியின் வார்த்தைகள் மேற்கொண்டும் சந்தோஷம் கொடுத்தன.ஆச்சி , குடிக்... |
திரும்பத் திரும்பச் சொன்னது கோமுவுக்குப் புல்லரித்தது. ஆச்சிபேச்சு கொடுக்காமல் படுத்துக் கொண்டது கோமுவுக்குச் சங்கடமாக இருந்தது. கோமு மெலிந்து நீண்டிருக்கிற பெரிய ஆச்சியின் கால்களை மெதுவாக ஒத்தடம் கொடுக்கிறது மாதிரிப் பிடித்துவிட ஆரம்பித்தாள். வாசலில் கிருகிரு மிட்டாய்க்காரன் சத்தம் கேட்டது. இன்றைக்கும் கூட அவன் அதே நே... |
விற்றுக் கொண்டு போவதைப் பார்க்கிறாள். இந்தத் தெருவில் சரியாக வெளிச்சம் கூடக் கிடையாது. இந்த வெளிச்சம் குறைவிற்குள் அவன் வெறுமனே கிருகிருவென்று கையில் உள்ளதைச் சுற்றிக் கொண்டு , இன்னொரு கயிற்றில் கையிலிருந்து தராசு மாதிரித் தொங்குகிற வட்டச் சுளவுத் தட்டில் கத்தரிக்காய் மிட்டாய் , சீனிக்குச்சி , தேங்காய்ப்பூ , சம்மாளிக்க... |
கோமுவின் அப்பா மாதிரித்தான் இவனும் பார்ப்பதற்கு இருக்கிறான். இரண்டு பேரும் வேட்டிதான் கட்டியிருப்பார்கள். சட்டை கிடையாது. தலைப்பாகை உண்டு. அதற்குப் பதிலாக யாரும் கூப்பிடாமலே வீடு வீடாக உள்ளே வந்து , ஒவ்வொரு வளவிலும் கொஞ்சநேரம் நின்று கிருகிருவெனச் சுற்றுவான். யாராவது வாங்கினால் உண்டு. இந்த வீட்டு வாசலில் முடுக்குப் பக்... |
கால்கள் தூக்கிப் பயம் காட்ட , தாயக்கட்டத்தில் மலை ஏறின காய் மாதிரி அவன் மிட்டாய்த்தட்டும் விளக்கு வெளிச்சமுமாக நின்றான். கோமுவுக்கு ரோஸ் ரோஸான கம்மாளிக்கொட்டை வாங்கலாமா என்றிருந்தது. அவளுக்கு நாலணா திருவிழாத்துட்டுக் கொடுத்திருக்கிறார்கள். " செலவழிச்சிராதே , அவ்வளவுத்தையும் !என்று எச்சரிக்கை பண்ணியே கொடுத்திருக்கிறார்க... |
இல்லாமல் எடுத்துக் கொண்டு வந்தபோது அவனை வாசலில் காணோம். முடுக்கு வழியே சத்தம் மாத்திரம் கிருகிருவென்று தெருவைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தது. போனதுகூட நல்லதுக்குத்தான். இல்லாவிட்டால் எல்லாம் செலவழிந்திருக்கும். சில்லரை மாற்றிவிட்டால் கையில் துட்டுத் தங்காது. 456 எல்லோரும் ரொம்பச் சந்தோஷமாக வந்தார்கள். கூட்டத்துக்குள்... |
ஒருத்தருக்கு ஒருத்தர் துணை என்று சேர்ந்து வந்தார்கள். எல்லோர் வீட்டிலும் ஒரே சமயத்தில் லைட் போட்டுக் கொண்டதால் வாசலே வெளிச்சமாகி விட்டது. பலூன் மொரமொரப்பு , ஊதல் சத்தம் எல்லாம் கோமுவைத் தாண்டிப் போயின. தேர் ஒரே நாளில் இந்த வருசம் நிலைக்கு ( நிலையத்துக்கு ) வந்துவிட்டதாம். இப்படித் தேர் ஒரே நாளில் ஓடி நிலைக்கு நின்று ஒன... |
டாக்கீஸ் முக்கு வரை தேர் பச்சைப்பிள்ளை மாதிரி குடுகுடுவென்று ஒரே ஓட்டமாக ஓடியதாம். தெப்பக் குளத்தெரு அம்பி மாமா வீட்டுத்தட்டோட்டியில் நின்று பார்த்தார்களாம். தேர் அசைந்து வர்ர மாதிரி என்கிறது சரியாகத் தான் இருக்கிறதாம். அவ்வளவு அழகாம் அது. கோமு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே நின்றாள். வீட்டுக்குள் நுழைவதற்கு முன் தேர் ... |
நேரம் , ஆற்றுத் தண்ணீர் பிடிச்சு வச்சியா இல்லையா ?என்று தெய்வு ஆச்சி கேட்டாள். பிடிச்சாச்சுஎன்று கோமு சொன்னதைக் கேட்காமலேயே எல்லோரும் உள்ளே போனார்கள். கோமு மறுபடியும் வாசலிலேயே உட்கார்ந்தாள். துவையலுக்குப் பொரிகடலை வேணும் , தேங்காய் கூடக் காணாது. பிள்ளையைக் கொடுத்துட்டுக் கடைக்குப் போயிட்டு வா- உள்ளேயிருந்து சத்தம் வந்... |
ஒவ்வொன்றும் நீளம் நீளமாக அம்மன் சன்னதி வரைக்கும் பாம்பு மாதிரி வளைந்து வளைந்து கிடந்தது. தேர் சகல அலங்காரங்களுடனும் தோரணங்களுடனும் வாழைமரத்துடனும் நிலவுவெளிச்சத்தில் மௌனமாகப் பேசாமல் நின்றது. கோமுவோடு கோபித்துக் கொண்டு சண்டை போட்டது போல் தோன்றியது. தேருக்குக் கீழே காஸ்லைட் வைத்துக்கொண்டு , இரண்டு மூன்று போலீஸ்காரர்கள் ... |
தேர்ப்பக்கத்தில் போய்ப் பார்க்கவும் பயமாக இருந்தது. தேர்ப்பக்கத்தில் போக வேண்டும். ஒரு மாதிரி எண்ணெய் மக்கு அடிக்கும் தேரில். அது நன்றாக இருக்கும். போலீஸ்காரர்கள் பிடித்துக் கொண்டால் என்ன பண்ண ? கோமு மறுபடியும் பையைத் தொங்கப் போட்டுக் கொண்டு தள்ளிப்போய்ப் பார்த்தாள். புதிதாக கலர் அடித்த நாலு குதிரையும் பாய்கிற மாதிரிக்... |
தள்ளித் தள்ளிப் பின்னால் போய்க்கொண்டிருந்தாள். தென்னை ஓலையைத் தரையில் தடவித் துழாவுகிற குட்டியானை தும்பிக்கை மாதிரி வடம் கிடக்கிற இடத்துக்கு வந்ததும் கோமுவுக்குத் தேர் இழுக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. தோளில் பையை நன்றாகக் கக்கத்துக்குள் கொருத்துப் போட்டுக்கொண்டு , குனிந்து சவுரி சவுரியாக நுனியில் பிய்த்திருந்த வட... |
தனு போகிறாள். வண்ணதாசன் பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை , முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந... |
ஏறிக்கொள்வாள் , இறங்கிக்கொள்வாள். ஒரு வகையில் மகிழ்ச்சி. தன்னுடைய பலகீனமான காலை இழுத்து இழுத்து , ஒரு அழகான சோகமாக அவள் இத்தனை தூரமும் நடந்து வர வேண்டும். முன்புபோல் இவனுடைய காலேஜ் வாசலோடு நின்று போகிற டவுன் பஸ்ஸிற்காக , அவளுடைய குறையின் தாழ்வுடன் எல்லோருடனும் காத்திருக்க வேண்டாம். இனிமேல் நேருக்கு நேர் பார்க்க முடியாத... |
பார்த்தாலும் முள். விசுக் விசுக்கென்றுசில்லாட்டான்ஓடும். அல்லது பருத்து வளர்ந்து ஓணான் ஆகத் தலையாட்டும். ஆளற்ற தனிமையில் அஸ்தமவானம் கீழிறங்கிச் சிவக்கும். லட்சக்கணக்கான மனிதர்கள் புதையுண்டதுபோல் கைவைத்த இடமெல்லாம் எலும்பு முள்ளும் முண்டுமாக அகப்படும். கருக்கு மட்டையை வேலியாக நட்டு , உள்ளே போட்டிருக்கிற குடிசையிலிருந்து... |
பேச்சுக் கொடுத்தபிறகு சிரிக்கிறதற்கு மட்டும் தழைந்திருந்த ஒருத்தியின் கருத்த கொலுசுக் கால்கள் மண்ணை அரக்கி அரக்கி நடக்கும். நடக்க முடியாமல் நடக்கிற தனுவுக்கு ஆர்பனேஜின் வழியாகக் குறுக்காகச் சென்றால் பஸ் நிற்கிற காலேஜ் வாசலுக்குப் போய்விடலாம் என்பது தாமதமாகத்தான் தெரிந்திருக்கும். அவள் பெயர் தெரிந்தது அன்றுதான்.தனு ! இந... |
படித்து முடித்துவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்புகிற வேளையில் பீடி தேவையாக இருந்தது. கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தான். சின்ன வேப்பங்கன்றுக்குக் கீழே டயர் போட்ட மொட்டைவண்டியின் நோக்காலில் உட்கார்ந்து , பள்ளிக்கூடக்கட்டிடத்திற்கு முன்னால் உள்ள கொடிக்கம்பத்தைப் பார்ப்பது போல் பார்வை. வட்டமாகக் குறுக்குச் செங்கல் பதித்து உள்ள... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.