text stringlengths 11 513 |
|---|
இறங்குகையில் நிலா வெளிச்சத்தில் கோடாக மினுங்குகிற குளிர்ந்த தண்டவாளம் , லாந்தல் சத்திரம் , மினுக்கட்டாம் பூச்சிகள் எல்லாம் ஒவ்வொரு பூவிலும் தெரிந்துகொண்டிருந்த போதுதான் -தனு ! இந்த வழியாப் போயிரலாமாடி ?என்ற சத்தம். கைலியை இறக்கிவிட்டுக்கொண்டு , நோக்காலில் இருந்து இறங்கினான். இறுகிக் கட்டின போச்சக்கயிறு கீச்சென்று முனகி... |
காலைத் தவ்வலாகப் போட்டுக் குனிந்து உட்பக்கம் வந்துவிட , ஒரே ஒரு வினாடி அவள் விசாலமான தனிமையில் நின்றாள். பின்னால் பொருத்தமற்ற பின்னணியாய்ப் பாலையான மணல்விரிப்பும் , உடைமரங்களும் , உடைமரம் பூத்ததுபோல மெல்லிசான மணமாக இவள் , தனு. ஞானப்பன் ஒரு ராஜவாயிலைத் திறப்பதுபோல மென்மையாக மூங்கிலை உருவி , அவளை வரவிட்டு ஒதுங்கினான். உள... |
போகப்போக நேர்கோடாக ஆரம்பிக்கும் ஆர்பனேஜின் முன்பக்கத்து இரண்டு ஓரச்செடிகளின் சினியா மலர்களின் சோகைச் சிவப்புக்கும் கேந்தியின் மஞ்சளுக்கும் முதல் முதலாக உயிர் வந்தன. அழகாகப் பட்டன. எதிரே டெய்ஸி வாத்திச்சி வந்துகொண்டிருந்தாள். கன்னங்களில் பருவில்லாமல் இருந்ததால் அவளுக்கு இந்த மதமதப்பு இருக்காது. கல்யாணம் ஆகாததால் மீறி நி... |
சிலருக்கும் அவளுடைய திரேகத்தின் முறுக்கம் ரசித்தது. ஞானப்பனுக்கு தனுவின் நினைவு மாத்திரம் ஒரு நீர்ப்பூவைப் போல அலம்பி அலம்பி அவள் முகம் நிற்க மற்றவையெல்லாம் நீரோட்டத்தோடு விரைந்து ஒதுங்கின. டெய்ஸி வாத்திச்சி நதியில் மிதந்த செம்பருத்திப் பூவாய் , அள்ளுகிற குடத்தில் புகுந்துவிட , விரலை முட்டி முட்டி விலகிக் கொண்டிருக்கிற... |
துணிச்சலாக ஒவ்வொரு பல்லாக அழுத்திக் கொண்டிருந்தான். இடம் ஆரம்பித்து வலம். கண்டமத்தியில் ஆரம்பித்த இடம். இதற்குள் துருத்தியை அமுக்குகிற விரல் மறந்திருக்கும்.ங்ர்ர் என்று பெட்டி கம்மும்போது ஒரு சிரிப்பு. ஞானப்பன் போய் நின்றான். பையன்கள் விலகினார்கள். ஞானப்பன் சிரித்தான். அவன் கைப்பழக்கமாக வாசிப்பான். சினிமா பாட்டுவரை.படி... |
பார்க்கலாம் ? " “ எனக்குத் தெரியும் ” " நாஞ் சொல்லுதேன் ஸார் " " இந்த நல் உணவை ” - பாட்டு ஸார் ” ஞானப்பனுக்கு கடைசிப் பையன் சொன்னதைக் கேட்டதும் திக்கென்றது. " இந்த நல்உணவைத் தந்த நம் இறைவனை வணங்குவோம் ” என்று காலையில் அலுமினியத் தட்டும் தம்ளருமாக உட்கார்ந்து கொண்டு , கோதுமை உப்புமாவுக்கும் மக்காச்சோளக் கஞ்சிக்கும் எதிர... |
பார்த்துக்கொண்டே இருந்தான். 461 ஞானப்பனுக்கு வேறு எந்த கிறிஸ்தவ கீதங்களும் நினைவுக்கு வரவில்லை. எல்லா கிறிஸ்தவ கீதங்களும் ஒரே ராக வடிவுதான் என்ற நினைப்பை அவனுக்கு உண்டாக்கின. “ எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே " பாடலின் முதலிரு வரிகளின் தடத்தையே மீண்டும் மீண்டும் வாசித்தான். பையன்கள் அடுத்த வரிகளைப் பாடினபோது அவனுக்குச... |
மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்டவேலை செய்கிறவர்கள் பாடுவதுபோல - வாரத்துக்கு ஒரு நாள் வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து , முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுதுகொண்டிருக்கிற பையனின் சோகம்போல - எந்தச் சத்துக்குறைவாலோஒட்டுவாரொட்டி'யாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுணிச் சிரங்கிற்கான பிரார்த்தன... |
பள்ளிக்கூடத்துக் கிணற்றில் விழுந்துவிட , அசுரத்தனமாகத் தண்ணீரை இறைத்து இறைத்து ஏமாந்து கொண்டிருந்த சிறுவர்களின் பம்பரக்கனவுகள் போல.... ஞானப்பன் மேலே வாசிக்க ஓடாமல் நிமிர்ந்தபோது , டெய்ஸி வாத்திச்சி வாசலில் நின்று கொண்டிருந்தாள். பையன்கள் கலைந்து நகர்ந்தார்கள். இவனின் வாசிப்பைப் பாராட்டினாள். வாசலில் கையூன்றிச் சிரித்தா... |
சகித்துக் கொள்ள வேண்டியதிருந்தது. அவளை அநேகமாக லீவு நாட்களில் காலையிலேயே இரண்டு தடவை பார்த்துவிடலாம். முதல் ஷிப்டு வேலைக்காகக் கையில் தூக்குச் சட்டியைக் கோத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் போகிற ஜனங்கள். பதநீர் குடிக்கிறவர்கள். முதல் சங்கு ஊதின பிறகு அவசரம் அவசரமாக வடையை ஊறுகாய்த் தடையை வாங்கிக்கொண்டு போகிறவர்கள். இராத்த... |
சர்ச்சுக்குப் போகும். அப்பா , அம்மா எல்லாருமே ஒவ்வொரு சைக்கிளில். ஒரு பள்ளிக்கூடப் பெண்ணின் அமைப்புஅலை மீறின அவளுடைய பாரமான உடம்பும் பெருந்தொடையும் பிதுங்க அவள் செல்லும் போதெல்லாம் , அவன் அநாவசியமான ஒரு அருவருப்பையடைய நேர்ந்திருக்கிறது. கொஞ்ச நேரத்தில் இதையெல்லாம் கழுவி விடுவதுபோல் தனு வருவாள். அந்த தனுவை இனிமேல் ஜாஸ்த... |
முடியாது. இதற்கு மத்தியில் எதைப் படிக்க ? ஒரு தகர டின்னில் , வரிசையாக நிற்கிற வேப்பமரங்களின் பழம் உதிர உதிரப் பொறுக்குகிற பையன்களைக் கூப்பிட்டால் பேசப்போவதில்லை. அவர்களுக்கு ஃபுட்பால் கோல்போஸ்டின் அடையாளமாக நிறுத்தியிருக்கிற பனங்கட்டையில் இருந்துகொண்டு காகங்கள் இரண்டு மூன்றான கொத்தாக இட்ட வேப்பங்கொட்டை எச்சத்தைச் சேகரி... |
மையவாடிக்கு மத்தியில் காடாக வளர்ந்த எருக்கலஞ்செடிகளில் போய் வண்ணத்துப்பூச்சியின் முட்டையும் புழுவும் எடுத்துக்கொண்டிருக்கிற இவர்களிடையில் , தனுவும் விலகினபின் , எந்த அமைதியில் படிக்க ? மற்ற பையன்களுடன் சேர்ந்து உட்கார்வதுகூட முடியவில்லை. குப்பைக் குழிகளுக்கும்ஐயாக்களுக்குமான கக்கூஸ்களை ஒட்டிய பகுதிகளிலேயே க்ரா , க்ரா எ... |
தோன்றியது. அவன் வகுப்பில் , கல்லூரியில் இதேபோல வெள்ளை முழுக்கைச் சட்டை , வேஷ்டியுடன் இங்கேயிருந்து படிக்கிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அனாதைகள் தானா ? தனுக்குள் எதிர்ப்படாமல் இருந்த பொழுதைவிடத் தான் இப்போது அனாதையா ? ஞானப்பனுக்கு மனதுள் குமைந்து வந்தது. ஊருக்குப் போக வேண்டும் போலத் தோன்றியது. வயலும் வரப்புமாக விழு... |
பாட்டத் தொலைச்சஎன்று அலுத்துக் கொள்வதும் முகம் முகமாகத் தெரிந்தது. எல்லா முகத்திலும் மிஞ்சித் தனி முகமாகி.. தனு முகமாகி... உருண்டு வந்து கால் பக்கம் விழுந்த பந்தை எடுப்பதற்கு வந்த பையனைத் தடுத்து , பந்தோடு மைதான விளிம்புக்கு வந்து உதைத்தபோது , அது தூரமில்லாமல் உயரமாக எவ்வி , நீலத்தை அண்ணாந்து பார்க்க வைத்துக் கீழிறங்கி... |
நீலம் கறுத்த பூவொன்று வழியில் கிடக்க , ஞானப்பன் எந்தவிதத் தடயமும் இன்றி அது அவள் உதிர்த்த பூ என மனதில் உறுதி செய்து வைத்திருக்கிறான். அவனுக்கே தெரியும் , அந்தப் பூ ஆர்பனேஜ் எல்லைக்குள் ஒதுக்கமாய் முன்பு இருந்து இப்போது இடிந்து தகர்ந்துபோன சர்ச்சின் பின்னால் வளர்ந்திருக்கிற கொடியின் பூ. ஆனாலும் தனு உதிர்த்த பூ. இடிந்த ச... |
சிந்தியிருக்கும். இவன் பார்வையில் இவனுடன் படிக்கிறவர்கள்கூட அதில் புதிதாக எழுதிய கரிப்படங்களும் வரிகளும் உண்டு. டெய்ஸி வாத்திச்சிகூட அப்படியொரு வரிகளில் ஒன்றாக , வேண்டுமென்றே செய்யப்பட்ட எழுத்துப்பிழைகளுடன் சுவரில் அறையப்பட்டிருக்கிறாள். 464 புத்தகத்துக்கிடையில் நீலப்பூவைத் தகடாக மலர்த்திப் பார்த்தபடி மூடினான். படிக்க ... |
அவனுக்குச் சத்தம் தேவையாக இருந்தது. பெரிய ஐயாவுடைய தாராக்கோழிகளின் கேவல் விட்டு விட்டு மங்கியது. மைதானத்துப் பிள்ளைகளின் இரைச்சல் தூரத்துக்குப் போனது. ஒட்டுச்சார்ப்பில் எந்தப் பக்கத்தில் இருந்தோ ஒரு புறா குதுகுதுத்துக் கொண்டிருந்தது. காலனியில் புதிதாக வந்திருக்கிற பிள்ளையார் கோவில் மணி அமுங்கிக் கேட்டது. பக்கத்து ஸ்பின... |
ஹாஸ்டலில் விளக்கெரியும். அடைந்து கொண்டிருக்க முடியாமல் ஞானப்பன் வெளியே அப்போதுதான் வந்திருப்பான். மழை விழுந்தது. திரும்ப முடியாமல் வலுத்து அறைந்தது. மண்ணும் சூடுமாக ஒரு நிமிஷம் வாசனை நெஞ்சையடைத்தது. பனைமரங்கள் ஒரு பக்கமாக நனைந்து கன்னங்கருப்பாயின. பன்றிகள் மசமசவென்று அலைந்தன. அவுரிச்செடி சந்தனத்தெளிப்பாகப் பூத்து மினுங... |
எட்டு , உள்ளே ஏறின பிறகு தெரிந்தது. டெய்ஸி வாத்திச்சியும் நின்று கொண்டிருந்தாள். புடவைத்தலைப்பை முக்காடாக இழுத்து ஓரத்தைப் பல்லிடுக்கில் கவ்வினபடி , நனைவதற்கு முன்பு வந்திருக்க வேண்டும். ஒரு வெள்ளாட்டுக்குட்டி சுவரோரமாக ஒண்டி , ரஸ்தாப் பக்கமாய்த் தலைதிருப்பி நின்றது. கீழே புழுக்கை , காவல்கார வயசாளி குப்பைவாளியைப் பக்கத... |
வெளியே பெய்கிற கனத்த மழை அவளை அவளின் சுபாவங்களிலிருந்து விலக்கிக் கட்டிப் போட்டிருந்தது. டெய்ஸி வாத்திச்சி , மெல்லிய திரைக்கு அப்புறம் தெரிகிறதுபோல துல்லியமான ஒரு புதிய வடிவில் இருந்தாள். 465 ரஸ்தாவில் ஓடத்தைப் போல தண்ணீரைச் சுருட்டி எறிந்தபடி பஸ் வந்து நின்றது. சார்ப்புகள் போட்டு மூடின பஸ் டாப்பின் பக்கவாட்டு ஓடைகளிலி... |
நின்று செல்ல முடியுமா ? - ஞானப்பனுக்கு யோசனை. சிறு குரலில் ஆட்டுக் குட்டி கத்திய படி , சுவரில் ஏறி நின்றது. தனுவின் கல்லூரியில் இருந்து புறப்படுகிற காலேஜ் டூ காலேஜ் பஸ் வர நேரம் உண்டு. மழையினால் பிந்தி வரலாம். காலனியில் இருந்து இரண்டு மூன்று அம்மாக்கள் அலுமினியப் பெட்டி சுமந்து இறங்குகிற குழந்தைகளைக் கூட்டிப் போகக் குட... |
காலனிப் பக்கம் சீறின. உள்ளே இருக்கிற குழந்தைகள் கையை அசைக்க ஞானப்பன் சிரித்துப் பதிலுக்கு அசைத்து , காலேஜின் இரண்டாவது வாசலுக்கு நடந்தான். ஹாஸ்டலின் வாசலில் தையல்காரன் மெஷினோடு நிற்பது தெரிந்தது. மில் ஓடுகிறது மாத்திரம் நன்றாகக் கேட்டது. புஸ்தகத்துக்குள் அமிழ்ந்து மௌனமாக வாசிக்கும்போது , மௌனம் இளகி ஓடி அலையலையாகி , மத்... |
சிரித்தாள்.குடையை வச்சுட்டுப் போய்ட்டேஎன்செருப்பைக் கழற்றிப் போட்டபடி சொன்னாள். செருப்பில் விரல்கள் வழுவழுவென ஆழமாகப் பதிந்திருந்தன. பூட்டைத் திறந்து , வாசலுக்கு இடதுபுறம் இருக்கிற ஜன்னலில் கைக்குட்டைக்கு பாரம் வைத்ததுபோல் பூட்டும் சாவியும் இருக்க உட்சென்றாள். கையில் குடையோடு ஞானப்பனை பார்த்துக் கேட்டாள். “ நாற்காலி வே... |
எடுத்து மூக்கை ஸ்விட்சைக் காட்டிச் சுளித்தாள். கால் செருப்பைத் தேடி நுழைத்துக் கொண்டிருந்தது. " இல்லை. வேண்டாம் " - ஞானப்பன் புஸ்தகத்தை நீவினபடி அவளைப் பார்த்தான். " தனலெட்சுமிதான் வேணுமாக்கும் ” - ஒரு அடி முன்னால் வந்து , சடக்கென்று இழுத்துச் சாத்தியதுபோல் ஞானப்பனை அணைத்து இறுக்கிவிட்டு இறங்கி நடந்தாள். இருட்டும் வெளி... |
ஏறிக்கொள்வாள். 467 ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான். என்ன விசித்திரமான சொப்பனம். வனாந்திரமான இடம். பாம்புப் புற்று போல் ஓங்கி வளர்ந்திருந்த மண்மேடிட்ட பெரிய குக... |
வருமோ என்ற பயம் அவனை வேகமாக நடக்கத் தூண்டியது. குகைகளில் பாம்பு இல்லை. திடீரென்று அவற்றிலிருந்து கூட்டம் கூட்டமாக ஜனங்கள் வெளியே வந்தார்கள். அனைவரும் முடவர்கள் ! அப்பா , அம்மா குழந்தைகள் என்று குடும்பம் குடும்பமாக முடவர்கள் ! அவர்கள் வரிசை வரிசையாக நின்றுகொண்டு அவனைப் பார்க்கிறார்கள். அவர்களுடைய பார்வையின் வேகத்தில் அவ... |
சிரிக்கிறார்கள்.ஓஎன்ற அவர்கள் சிரிப்பு , அந்த அகன்ற பிரதேசத்தில் எதிரொலிக்கிறது. உடம்பைத் துண்டினால் துடைத்துவிட்ட பிறகு , ராஜப்பா தன் கைகளை உற்றுப் பார்த்தான். அவற்றுக்கு ஓர் ஆபத்தும் ஏற்படவில்லை. பத்திரமாக இருந்தன. எதற்காக ? அதுதான் அவனுக்கும் புரியவில்லை. இந்தக் கைகளினால் உழைத்து அவன் சம்பாதித்தது கிடையாது. வயிறுதான... |
இருக்கிறார்கள். போன வாரம் மேலத்தெரு பாமா பாட்டிக்குப் பிராயச்சித்தம் நடக்கிறது என்று கேள்விப்பட்டவுடன் , அவன் அவசரம் அவசரமாக அங்கு ஓடினான். உதட்டைப் பிதுக்கிக்கொண்டு வெளியே வந்த டாக்டரைப் பார்த்ததும் அவனுக்கு நம்பிக்கையாக இருந்தது. பாட்டிக்குத் தொண்ணூறு வயசு என்றார்கள். மேல் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தது. கல்யாணச் சாவுத... |
கண்களைத் திறந்து மிரள மிரளப் பார்த்தாள். அவ்வளவுதான் , வந்த யமன் பயந்துபோய் ஓடி விட்டான். பிராயச்சித்தத்துக்குக் கிடைத்த பணம் வெற்றிலை சீவல் வாங்கத்தான் சரியாக இருந்தது. ராஜப்பா திண்ணையிலிருந்து கீழே இறங்கினான். திண்ணை ஓரத்தில் படுத்துக்கொண்டிருந்த ஆராமுது எழுந்து கோயில் காரியத்தைக் கவனிக்கப் போய்விட்டான். ஆராமுதைப் பா... |
எந்தப் பெண் இவனைப் பார்த்துக் கல்யாணம் செய்து கொள்ள முன் வருவாள் ? ராஜா மாதிரி இருக்கிறான் என்பதற்காக அவனுக்கு ராஜப்பா என்று பேர் வைத்தார்கள். சின்ன வயசில் ராஜா மாதிரிதான் இருந்தான். சாப்பிடுவதற்குச் சம்பாதிக்கவேண்டுமென்ற விவரமே அவனுக்கு அப்போது தெரியாது. பள்ளிக்கூடத்தில் ஒழுங்காகப் படித்திருந்தால் , எமனை நம்பி வாழ்க்க... |
நாச்சியார்கோயில் பையன் சொன்னான். பிராமணணாய்ப் பிறந்துவிட்டு , மந்திரமும் தெரியாது. வேறு எந்தத் தொழிலுக்கும் லாயக்கில்லை என்றால் தன்னைப் போல் வயிற்றை மூலதனமாகக் கொண்டு வாழ்வதைத் தவிர , வேறு வழி என்ன இருக்கிறது. அவன் தம்பி படித்துவிட்டு உள்ளூரிலேயே எல்.ஐ.சி.யில் இருக்கிறான். அவனுக்கு நான்கு பெண்கள். இரண்டு வருஷங்கள் முந்... |
என்கிறது கட்டுப்படியாகாது. இடைக்கட்டு ரூமை நீ வச்சுக்கோ ! ஒரு ரூம் போறுமான்னு கணக்குப் பாக்க ஆரம்பிச்சா , உனக்கே தெரியும் , ஏதோ அம்மா இருந்தா , உன் சக்கரம் ஓடியாச்சுன்னு. எத்தனை நாளைக்குத்தான் நீ பொறுப்பு இல்லாம இருக்க முடியும் ? உன் மூணு பொண்ணையும் ஆம்படையாளையும் நீதான் இனிமே காப்பாத்தியாகணும். சொல்றேன்னு கோவிச்சுக்கா... |
பிரச்னைதான். 469 இது இப்பொழுதையப் பிரச்னையல்ல. இப்பொழுதையப் பிரச்னை அவன் காப்பி குடித்தாக வேண்டும். நேற்றே அவன் மனைவி சொல்லிவிட்டாள் :காப்பிப் பொடி கிடையாது. காசு கொண்டு வந்தா காப்பி. இல்லாட்டா தீர்த்தத்தைக் குடிச்சுட்டு சும்மா கிடங்கோ. நான் வீடு வீடா போய்க் கடன் வாங்கத் தயாரா இல்லே. ' ராஜப்பா வீட்டுக்குள் நுழைந்தான். ... |
உற்றுப் பார்த்தான். காலையில் எழுந்ததும் காப்பி குடிக்காமல் அண்ணன் எவ்வளவு கஷ்டப்படுவான் என்பது அவனுக்குத் தெரியாத விஷயமல்ல. அவன் என்ன நினைத்துக் கொண்டானோ , திடீரென்று எழுந்து உள்ளே சென்றான். ஒரு வேளை மனைவியிடம் இது பற்றி மன்றாடச் சென்றிருக்கலாம். வெகு நேரம் வெளியில் வராமல் இருந்துவிட்டானானால் , அவன் சிபாரிசு பலனளிக்காம... |
சற்று ஓங்கிய குரலில் ,டீ , ராஜப்பாவுக்குக் காப்பி கொண்டா !என்று சொல்லுவான். அவன் சொல்கிறபடி மனைவி கேட்கிறாளாம். ராஜப்பா சிறிது நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்தான். உள்ளே போன தம்பி , போனவன் போனவன்தான் ! தனக்குக் காப்பி கிடைக்காது என்று அவனுக்கு உறுதியாகத் தெரிந்தது. அவன் கொல்லைக்கட்டை நோக்கிச் சென்றான். அவன் மனைவி முள்வே... |
மாமியாத்திலே ராஜராஜேஸ்வரி பூஜை பண்றாளாம். கன்னிப் பொண்ணுக்குப் புடவை வாங்கித்தரப் போறாளாம். அனுப்பிச்சேன் ' 470அபிராமி ஆத்திலேயே ? ஸ்மார்த்தப் பொண்ணுக்குன்னா கொடுப்பா ? ' நான்தான் அபிராமி மாமி கால்லே விழாத குறையா கெஞ்சிக் கேட்டுண்டேன். பதினெட்டு வயசாச்சு , மைதிலிக்குக் கட்டிக்க ஒரு நல்ல புடவை கிடையாது. எல்லாம் கிழிசல்.... |
அவள் வைக்கோலறையை நோக்கிச் சென்றாள். அவன் காதிலிருந்து பூணூலை எடுத்துக்கொண்டே திரும்பி வந்தபோது அவள் வைக்கோலறையில் உட்கார்ந்திருந்தாள். அதற்குப் பேர்தான் வைக்கோல் அறை. ஒரு காலத்தில் அவனுடைய தாத்தாமிராசுஎன்று கொழித்த காலத்தில் வீட்டில் மாடுகள் இருந்தன. வைக்கோலுமிருந்தது. வைக்கோற்போரை அந்த அறையில்தான் அடுக்கி வைப்பது வழக்... |
வீடு மிஞ்சியிருக்கிறது. அவன் வைக்கோலறையைத் தாண்டி உள்ளே செல்ல முற்பட்ட போது ,அப்படியே கிணத்தடியிலே குளிச்சிட்டுப் போங்கோ !என்ற குரல் கேட்டது. மனைவியின் உத்தரவு. எதுக்காக ? ’ எதுக்காகவா ? அதான் சொன்னேனே , ருக்கு ஒண்டிமா... வைதேகி எங்கே ? " 471குழந்தைதானே ,நானும் போறேம்மான்னா. காய்கறி திருத்திக் கொடுத்தா , அபிராமி மாமி ச... |
போயிருந்தது. நேத்திக்கி சாயங்காலம் அப்படியே துண்டு துண்டா போயிடுத்து. அதோ பாருங்கோ. மிஞ்சியிருக்கிறது ஒரு சாண்தான். அதுவும் சமயத்துக்கு வேண்டியிருக்குமேன்னு வச்சிருக்கேன். ' " யாருக்கு வேண்டியிருக்கும் ? எனக்கா ? ' உங்களுக்கு எதுக்கு வேண்டியிருக்கும் ? எனக்குத்தான். இந்த மாதிரி குடும்பம் நடத்தறதை என்னை என்ன பண்ணச் சொல்... |
வரையிலும் வேலை செய்யாம உட்கார்ந்திட்டு ,இப்போ வேலை தா !ன்னா எவன் தருவான் ? நம்ம அதிர்ஷ்டம் யாராத்திலேயும் ஒரு மாசத்துக்கு சிரார்த்தம் கிடையாது. 472விசாரிச்சுட்டியா ? ' ஆமாம். வீடு வீடா போய் “ உங்காத்திலே எப்போ சிரார்த்தம்'னு விசாரிச்சேன். கேக்கறதைப் பாரு. அன்னிக்குக் குப்பு வாத்தியார் வந்தார் , சொன்னார். " சர். அது கிட... |
அப்பொழுது அவனுடைய தம்பியின் மனைவி , கயிற்றைத் துவைக்கிற கல்லின் மீதுதொப்'பென்று கொண்டு போட்டு விட்டு உள்ளே போனாள். பார்த்தேளோன்னோ , எப்படி கொண்டு போடுறான்னு ? நீங்க இங்கே குளிக்கவேணாம். குளத்துக்கே போய்.. ' வெக்கம் மானம் பாத்தா நம்மாலே இருக்க முடியுமோடி ? எல்லாத்தையும் எப்பவோ துடைச்சு எறிஞ்சாச்சுஎன்று சொல்லிக்கொண்டே கய... |
எதிர்பார்த்திருப்பாரா ? அல்லது அவனுடைய அப்பாதான் இதை நினைத்துப் பார்த்திருப்பாரா ? பார்க்கப் போனால் அவனுடைய இப்பொழுதையஉத்தியோகம் அவனுக்கே ஆச்சரியத்தைத் தருகிற விஷயம். அம்மா போனபிறகு வயிற்றுப் பிரச்னை எழுந்தபோது குப்பு வாத்தியார்தான் , அவனை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தினார். இதற்காக அவன்வேஷம்தரிக்க வேண்டியது அவசியமானது. கி... |
பயந்து பேசாமலிருந்துவிட்டான். ராஜப்பா ஸ்நானம் செய்துவிட்டு உள்ளே போனபோது , ருக்கு சமைத்துக்கொண்டிருந்தாள். 473என்ன தளிகை ?என்று கேட்டான் ராஜப்பா. சாதம் ஆயிடுத்து. நேத்தி சாத்தமது இருக்கு. அப்பளம் காய்ச்சப் போறேன். * காப்பிக்கு வழி உண்டா ? ' ருக்கு காப்பி டப்பாவைக் கவிழ்த்துக் காட்டினாள். நான் அப்பளாம் காய்ச்சறேன். நீ ப... |
வாங்கிண்டு வரணும். அதுக்கு நீங்களே போய் யாராத்துலயாவது காப்பி குடிச்சுக்குங்கோ. நீங்க அப்பளம் காய்ச்ச வேணாம். நானே காய்ச்சிடறேன். ' ராஜப்பாவுக்கு ஒரே எரிச்சலாக இருந்தது. யார் மீது கோபித்துக் கொள்ள முடியும் ? காப்பி குடிக்க வேண்டுமென்ற ஆவேசம் அவனுள் எழுந்தது. வெளியே போனால் யாராவது அகப்பட மாட்டார்களா ? அபிராமி மாமி வீட்ட... |
போகலாமென்றால் , அவர் பெண்ணுடன் சீராட கும்பகோணம் போயிருக்கிறார். காலத்தை அனுசரித்துக் கோயிலில் பெருமாளுக்குக் காலையில் காப்பி நைவேத்தியம் பண்ணக்கூடாதா ? ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ரொட்டி தருகிறார்கள். இந்த 474 ஊர்ப் பெருமாளுக்கு காப்பி குடிக்கும் ஒரு நாச்சியார் இருந்திருந்தால் , எவ்வளவு நன்றாக இருக்கும் ? கோயிலில் தின... |
இரு திசைகளிலும் நோக்கினான். காப்பிக்கு வழி உண்டா என்பதுதான் அவனுடைய மகத்தான பிரச்னை. பஸ் ஸ்டாண்டுக்குப் போனால் யாராவது தென்படக்கூடும். பஸ் ஸ்டாண்டில் நல்ல கூட்டம். கல்யாண நாளில்லை. இத்தனை பேர் எங்கு வருகிறார்கள். எங்கு போகிறார்கள் என்று தோன்றியது ராஜப்பாவுக்கு. மாணிக்கத்தின் பழக்கடையில் கணவன் , மனைவியுமாக இரண்டு பேர் ந... |
வடக்கேயிருந்து வந்திருப்பவன் போல் பட்டது. அவன் மனைவிக்கு நாற்பது வயசிருக்கலாம். பட்டுப் புடைவை. ஒடிசலாக இருந்தாள். கையில் பை , அவளும் கண்ணாடி அணிந்திருந்தாள். ராஜப்பா அவர்களை நோக்கிச் சென்றான். ரூபாய்க்கு எட்டுப் பழம் கொடுப்பா !என்று கணவன் , மாணிக்கத்திடம் பேரம் பேசிக்கொண்டிருந்தான். கட்டுப்படியாகாதுங்க. ஏழு படம்னு எடு... |
செய்தான் ராஜப்பா. வாய்யா. நீ எப்போய்யா காசு கொடுத்துப் பளம் வாங்கிச் சாப்பிட்டிருக்கே ? பெரிய நியாயமில்ல பேச வந்துட்டாருஎன்றான் மாணிக்கம். ஜரிகை வேட்டிக்காரன் ராஜப்பாவை சிறிது நேரம் உற்றுப் பார்த்தான். எதற்காக அவன் தன்னை அப்படிப் பார்க்கிறான் என்று ராஜப்பாவுக்குப் புரியவில்லை. கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது. உங்க பேரு ?... |
" ராஜப்பா நினைவைத் துழாவினான். ஒன்றும் பொறிதட்டவில்லை. ஆச்சாபுரம் அனந்துன்னு சொன்னா போறுமா ?என்று கேட்டுக் கொண்டே அவன் ராஜப்பாவின் தோளில் கையை வைத்தான். அனந்துவா ? நீங்க , எங்கேயோ வடக்கே... ' 476கரெக்ட். டில்லியிலே இருக்கேன். இவதான் என் ஆம்படையா , சரோஜா. அது கிடக்கட்டும் , என்னடாநீங்கபோட்டுப் பேசறே ? வருஷம் போனாலும் சி... |
ஊர்தான். மேலத் தெருவில் இருந்தார். இப்பொழுது அவர் காலம் ஆகி , பிள்ளைகளும் ஆளுக்கொரு திசையாகப் போய்விட்டார்கள். அப்பொழுதெல்லாம் அனந்து , விடுமுறைக்கு இங்கு வந்துவிடுவான். அனந்துவுக்கு சினிமா என்றால் ஒரே பைத்தியம். சினிமாவில் சேர்ந்துவிடப் போவதாகச் சொன்னான். இப்பொழுது என்ன செய்கிறான் ? பாத்துக்கோ சரோஜா , இவன்தான் சின்ன வ... |
வேத வித்தா , நெருப்பா நிக்கறான். உலகத்திலே என்னென்ன அதிசயமெல்லாம் நடக்கிறது பாரு !என்று அனந்து தன்மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான். .......... நீ என்ன செய்யறே இப்போ ?என்று கேட்டான் ராஜப்பா. என்ன செய்யறேன் , வயத்துப் பொழப்புக்கு ஒரு கம்பெனியிலே இருக்கேன். நாலு காசு சம்பாதிக்க என்னென்ன அக்கிரமமெல்லாம் பண்ணணுமோ , அதெல்லா... |
உன் வேஷம் சொல்றதே ! மஞ்ச சூர்ணம் , முகத்தில் தேஜஸ்.. ' நன்னாயிருக்கு நீங்க இப்படித் தெருவிலே நின்னுண்டு பேசறது. ரூமுக்குப் போய்ப் பேசிக்கலாம் , வாங்கோ !என்றாள் சரோஜா. ரூமுக்கா ?என்று கேட்டான் ராஜப்பா. ஆமாம். அதோ தெரியறது பாரு லாட்ஜ். அங்கேதான் இருக்கேன். நீ இங்கே இருக்கிறது எனக்குத் தெரியாம போச்சேடா. இல்லாட்டா , “ ஜாம்... |
அறைக்குச் சென்றதும் ராஜப்பா கேட்டான் :நீ எப்படி இந்த ஊர்ப் பக்கம் வந்தே ? சொன்னா நம்பமாட்டே. நான் சவுத்துக்கு வந்து பத்து வருஷமாறது. என் ஆம்படையா டில்லியிலேயே பொறந்து வளர்ந்தவ. வேட்டாமும் டில்லியாயிடுத்து. எனக்கும் இங்கே யாருமில்லே , இந்தப் பக்கம் வர அவசியமே இல்லாமப் போயிடுத்து. அப்படி வந்தாலும் , மெட்ராசுக்கு வந்து தி... |
யாருக்குத் தெரியும் ? உன்னை இங்கே பாக்கப் போறோம்னு நான் சத்தியமா நினைச்சுக்கூடப் பார்க்கலேடா. அதுவும் இந்தக் கோலத்திலே...கோலம்'னு தப்பா சொல்லலே. உன்னைப் பார்த்தா பெருமையா இருக்கு. அது கிடக்கட்டும் , உனக்குக் கல்யாணம் எங்கே , யாரு பொண்ணு , உனக்கு எத்தனை குழந்தைகள் ? ' என் ஆம்படையாளுக்கு வடுவூட். குழந்தைகளுக்கு குறைச்சலி... |
அமெரிக்காவிலே டாக்டரா இருக்கான். ஒரு பொண்ணு இருந்தா நன்னாத்தான் இருந்திருக்கும். ஆனா இந்த விஷயத்திலே பகவான் எனக்கு அனுக்கிரகம் பண்ணலே ’ என்ன நீங்க பேசிண்டே இருக்கேளே , அவரை ஒண்ணும் சாப்பிடச் சொல்லாம ? காப்பி குடிக்கிறேளா ?என்று கேட்டாள் சரோஜா. அடச் சீ ! டில்லிக்காரின்னு காமிச்சுட்டியா.... வேதவித்தா நிக்கறான். கண்ட கண்ட... |
பலகீனமாய் ஒலித்தது. 478பாத்தியாடி ? பால்கூடக் குடிக்க மாட்டேங்கிறான். அந்தக் காலத்து ராஜப்பாவான்னு இருக்கு. வேதம் படிச்சா என்ன கட்டுப்பாடு வந்துடறது பாத்தியா ? ராஜப்பா , உன் மாதிரி அத்தியயானம் பண்ணவாளைப் பாத்தா , கால்லே விழுந்து சேவிக்கணும் போலிருக்குடா. நிஜமாச் சொல்றேன். சமஸ்கிருத மந்திரத்தைப் படிச்சவா சொல்லிக் கேக்கண... |
சொல்லி , புருஷ சூக்தம் சொல்லச் சொல்வேன். ஒரு தடவைக்குப் பத்து ரூபா தட்சிணை , சாப்பாடு. அவருக்குக் கனகாபிஷேகம் செய்யலாம் , நியாயமா பாக்கப் போனா. ஆனா என்னாலே முடிஞ்சது இவ்வளவுதான். தொழிலுக்காக நாம எவ்வளவோ தப்புகாரியம் பண்றோம். அதுவும் நாம எவ்வளவோ தப்புகாரியம் பண்றோம். அதுவும் என் மாதிரி தொழில்லே இருந்தா கேக்க வேணாம். இது... |
சரோஜா , ஆமாமாம். பேச ஆரம்பிச்சேன்னா ஓய மாட்டேன். என் தொழில் அப்படி. நீ கொஞ்சம் சாம வேதம் சொல்லேன் , கேக்கணும்னு ஆசையா இருக்கு , ' என்னை டில்லிக்காரின்னு சொல்லிட்டு நீங்க இப்போ இப்படி அவரைப் போய்க் கேக்கறது நன்னாயிருக்கா ? வேதம் சொல்ல வேளை , இடமெல்லாம் கிடையாதா ?என்றாள் சரோஜா. எனக்கிருக்கிற ஆதங்கத்திலே பேத்திண்டே போறேன்... |
சாப்பிடு. காப்பியோ பாலோ வேற எதுவும் தொடமாட்டேங்கிறே. ' திடுதிப்னு உங்காத்திலே சாப்பிட வரோம்னா என்ன அர்த்தம் ? பாவம் அவரோட ஆம்படையா என்ன செய்வா ? ஆத்திலே என்ன சௌகரியமோ , ஒண்ணும் தெரியாம இப்படிப் பேசினா...என்றாள் சரோஜா. 479இது டில்லியில்லேடி , தெரிஞ்சுக்கோ ! டில்லியிலேதான் ஒத்தருக்கு சாப்பாடுன்னாலும் அரை வயத்துச் சாப்பாட... |
சின்ன வயசிலே , இவாத்திலே எத்தனை தடவை சாப்பிட்டிருக்கேன் தெரியுமா ? இவனோட அம்மா ஒரு ஊறுகா போடுவா , அதுக்குப் பேர் என்னடா ராஜப்பா ? எஸ். மாகாளிக்கிழங்கு. மூட்டைப் பூச்சி வாசனையா இருக்குமே. வாயிலே போட்டா என்ன ருசியா இருக்கும் தெரியுமா ? உங்கப்பா பெரிய சாப்பாட்டுப் பிரியர். பக்தர்னு சொல்லணும் , அப்படித்தானே ? ' அப்பா சாப்ப... |
ஊரைப் பற்றிய அவனுடைய முப்பத்தைந்து வருடத்திய ஆதாரமான நினைவுக்குப் பங்கம் வரக்கூடாது என்ற பிடிவாதத்துடன் , ஆவேசம் வந்தவன் போல் பேசுகிறான். அவனுடைய இளமைப் பருவ உலகத்தைக் காட்டுவதற்காக மனைவியையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான். தன் வீட்டு நிலைமையைப் பற்றித் தெரிந்தால் இவனுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும் ! தனக்கு இப்பொ... |
பூதம் போல் ஆகிவிட்டதே ! இவனிடமிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது ? புருஷ சூக்தமாம் , சாம வேதமாம். யாருக்குத் தெரியுமாம் இவையெல்லாம் ? அது கிடக்கட்டும். படிப்பு எதற்காக ? பணமுள்ளவனிடம் விலையாவதற்காகவா ? இவன் சம்பாதிப்பதற்காகத் தப்புத்தண்டா செய்வானாம். பிராயச்சித்தம் செய்ய ஒரு பிராம்மணன் , வேதமந்திரம் எல்லாம் ! அநியாயத்த... |
போய் பாத்துட்டு வருவோம். வேணும்னா , காப்பி குடிச்சிட்டு.... அனந்து இடைமறித்தான்.என்னை கரெக்ட் பண்ணிட்டு என்னடி நீயே சொல்றே , வேதவித்து அவாத்திலே காப்பி குடிப்பாளா ? ' ராஜப்பாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உண்மையை அவர்கள் சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தோ பாரு , அனந்து ! நான் வேதவித்துமில்லே , ஒரு மண்ணாங்கட்டிய... |
வேணும் ? ' ஒரு கப் காப்பி. ' 481 ஓடிய கால்கள் - ஜி. நாகராஜன் அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன் , வெப்பத்தை விரட்டுவதுபோல உடலை அசைக்கவும் தலையைத் திருப்பவும் முயன்றான். தலையைத் திருப்புவதில் அவ்வளவு கடினம் இல்லை. கழுத்து நன்றாகத்தான் இயங்கிற்று. உடல... |
கொள்வதுபோல. உடல் சிறிது நேரம் அசைவற்றுக் கிடந்தது. இருபது ஆண்டுகளாவது புழுதியிலும் பாறையிலும் , இரண்டு கைகளுக்கு ஆதரவாக மனிதனின் மிகப் பூர்வகாலக் கருவிகளின்றி வேறெதையும் கொள்ளாமல் இயற்கையோடு முட்டி மோதி , வேறெந்தப் பலனையும் காணாமல் ஒரு வைரத்தின் உறுதியைப் பெற்றுவிட்ட உடல். கறுத்து மென்மையை இழந்துவிட்டு , அதற்குப் பதிலா... |
தடிப்புகள். மாணிக்கம்போல் உறைந்துவிட்ட கீற்றுகள். ஆங்காங்கே கறுப்பு வரிக்கோடுகள் சில இடங்களில் , குறிப்பாக மார்பில் நாலு ஐந்து சென்டிமீட்டர் அகலத்தில் தடயங்கள் இடுப்புக்குக் கீழே அழுக்கடைந்த வேட்டி. உங்களுக்குச் சற்றுக் கூரிய பார்வை இருந்தால் , உடலின் முழங்கால்கள் சற்றுப் பருத்து இருப்பதுபோல் வேட்டிக்கு மேலேயும் தெரியு... |
தாமிரத் தகடுபோல் தகித்தது. உடல் கழுத்தை அசைத்தது ; கண்களை விழித்தது. ஒரு பெருமூச்சு உடலைக் குலுக்கிற்று. நா வறண்டது.தண்ணீர் ! உடல் கத்திவிட்டது. உடல் அவனாயிற்று. " உம்... ண்ணி " அவன் செவிகளுக்குள் ஒலி புகுந்தது. திரும்பிப் பார்த்தான். லாக்கப்பின் கம்பிகளுக்கு அப்பால் ஒரு போலீஸ்காரர் நின்றுகொண்டிருந்தார். “ அய்யா , கொஞ்... |
நாற்காலியில். " அய்யா , கொஞ்சம் தண்ணி தாங்கைய்யா. தவிச்சு சாகணும்னு நெனைச்சிருக்கீங்களா ? " " த... யெழி " தடியைச் சுழற்றிக்கொண்டு போலீஸ்காரர் , பீடியைத் தூக்கி எறிந்துவிட்டு , நாற்காலியிலிருந்து குதித்து எழுந்தார். " மூணு பேர் சீட்டுக் கிளிஞ்சிருக்குமே இன்னிக்கு. அரைமணி நேரம் போயிருந்தா உன்னை எவன் போய் எப்படிக் கண்டுபி... |
போதுமான சுதந்திரம் இல்லாமல் அதன் விளைவு இது. நா வறட்சி மறந்துவிட்டது. நினைவு வேலை செய்தது. காலை ஒன்பது மணியிலிருந்து பத்து மணிக்குள் நடந்த விபரீதம். இரவிலேயே அவனை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்று , டாக்டர் சர்ட்டிபிகேட் எடுத்து லாக்கப்புக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். காலை எட்டு எட்டரைக்குத்தான் எழுந்திருப்பான். சுமார்... |
ஏழெட்டு போலீஸ்காரர்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். அவர்களில் இருப்பவர் வெளியே போவதும் , வெளியிலிருந்து புதுப் போலீஸ்காரர்கள் வருவதும் , உடைகள் மாற்றிக்கொள்வதும் , பீடி சிகரெட் பிடிப்பதும் , சமயங்களில் கலகலப்பாகவும் , சமயங்களில் ஏதாவது ஒன்றைக் கடிந்தும் , பொதுவாக உரக்கப் பேசியவர்களாகவும் சிரித்தவர்களாகவும் இருந்தனர். அவன் த... |
இருந்த பெரிய தொட்டி நிறைய தண்ணீர் இருந்ததாலும் , அதில் தொடர்ந்து தண்ணீர் பைப்புகளின் வழியே கொட்டிக்கொண்டிருந்தாலும் , கைதிகளும் போலீஸ்காரரும் சற்றுச் சிறுக விலகி நின்று பல் விளக்குவதும் , கழுவுவதும் , பலகாரங்கள் உண்டுவிட்டு வாய் கழுவிக்கொள்வதுமாய் இருந்தனர். அவனுக்கு அவர்கள் மீது சற்றுப் பொறாமை ஏற்பட்டது. ஆனால் அது இன்... |
சுவரோரம் சுருண்டு கிடந்த அவன் எழுந்து உட்கார்ந்ததும் விருட்டென்று எழுந்து தாழ்வாரத்தையும் , போலீஸ் ஸ்டேஷனையும் பிரிக்கும் நிலைக்கு வந்து நின்றான். வெளியே கலகலப்பான நகரம் , கலகலப்பாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் நிலையைக் கடந்து 483 ஸ்டேஷனுக்குள் காலெடுத்து வைத்தான். காலி கிளாஸ் டம்ளர்களைக் கொண்ட தேநீர் ஏந்தலோடு ஒரு சிறுவன் ... |
தப்பி விட்டான். சிறுவயதில் கள்ளத்தனமாகக் கருதைக் கசக்கி மடியில் போட்டுக்கொண்டு , ஏதாவது சிறு ஓசை கேட்டாலும் , அந்தப்புறம் இந்தப்புறம் திரும்பாது காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் அம்பு போல ஓட்டம் என்று சொல்ல முடியாதபடி வேகமாக நடப்பானே அப்படியே நடந்தான். பிறகு... ? ஒரு கை அவன் தோளைப் பற்றியது , அவன் ஓடியது , ஒரு லாரியி... |
பிடிபட்டிருக்காவிட்டால் இழந்திருக்கக்கூடிய இரண்டு போலீஸ்காரர்கள் மல்லாந்து கிடந்த அவனை முழங்கால்களில் லத்திகளால் தாக்கியது. அத்தனையும் அவனது நினைவு எல்லைக்கு வெளியேயே நின்றுகொண்டு உள்ளே வர இடம் இல்லாததுபோல் தவித்தது. வேலை அவனுக்குப் பேச வேண்டும்போல் மட்டும் இருந்தது. “ அய்யா , தண்ணி தாங்கய்யா ” என்று மீண்டும் தனது கோரி... |
சென்று ஒரு வாளி தண்ணீரைக் கொண்டுவந்து அவன் முகத்திலும் உடலிலும் வாரியிறைத்தார். ஒரு சில இடங்களில் சற்று எரிந்தாலும் , தண்ணீர் வரவேற்கத் தக்கதாகவே இருந்தது அவனுக்கு. “ என்ன ஏட்டையா , யாருக்குக் குளியல் ? " என்று கேட்டுக்கொண்டே போலீஸ்காரன் வந்தான். " காலேலே எஸ்கேப் ஆனாரு இல்லே. அவருக்குத்தான். ” ஒரு வாலிப “ இந்தத் தா... ... |
சந்தானம். பயலெ நல்லா நெறுக்கிப் போட்டாங்க. சாவக் கெடக்கறான். தண்ணி தண்ணீனு அலர்றான். " " தா.. மூணு குடும்பத்தோரை நடுத்தெருவிலே நிறுத்தி இருப்பான். நீங்க கதவெத் தெறங்க ஏட்டையா " ஏட்டையா சாவியைக் கொடுத்தார். கைதி அப்படி இப்படி அசையாமல் இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். முகம் மட்டும் திறந்த கதவின் பக்கம் திரும்பிய... |
முழங்கால்களில் அப்படி ஒரு திடீர் வலி. இரண்டு கைகளையும் தூக்கவோ திருப்பவோ முடியவில்லை. அடி பெறாத மணிக்கட்டு இருந்த இடது கையை வேண்டுமானால் சிறிது அசைக்கலாம். முகத்திலும் , கழுத்திலும் , தோள்பட்டைகளிலும் மாறி மாறி அடிகள் விழுந்தன. முகத்தில் எச்சில் விழுந்தது. எதற்கும் அவன் அசையவில்லை. இறுதியில் முழங்கால்களில் ஒரு முரட்டுத... |
வர வேண்டியிருந்தது கைதிக்குத் தெரியாது. வேலை இழந்திருக்கக்கூடிய மூவரில் இருவர்தான் அவனைப் பார்த்துவிட்டுப் போயிருக்கின்றனர். மூன்றாமவன் நாற்பது வயதாகியிருந்தடூ நாட் சிக்ஸ்அதிகம் வம்பு தும்புகளுக்குச் செல்லமாட்டார். அவரிடம் ஒரு எலக்ட்ரிஷன் சர்ட்டிபிகேட் ஏ கிரேடோ , பி கிரேடோ தெரியாது. இருந்தததால் மேல் வரும்படியை நியாயமான... |
பிறரைப் பற்றி வாயைத் திறக்கமாட்டார். ஒரு பிளாக் மார்க் இல்லாது இருபது வருஷ போலீஸ் சர்வீசை முடித்துவிட்டார். இன்றுதான் இந்தச் சோதனை. அடி , உதை , அவமானம். இன்னும் குறையாத போதை. இத்தனைக்கும் கீழே ஒரு வகையான விகாரமற்ற அமைதி. இத்தனையையும் பொறுத்துக் கொண்டு விட்டோமே என்ற உள்ளார்ந்த எக்களிப்பு. இவற்றின் விளைவால் உறங்கிக்கொண்ட... |
அவன் முகவாயை உற்றுக் குனிந்து இரண்டு கைகளாலும் பற்றி இழுத்தார்டூ நாட் சிக்ஸ் '. உடல் 485 பக்கவாட்டில் சலனமின்றி நேராக நகர்ந்தது.டூ நாட் சிக்ஸ் " அந்த உடல் கிடக்கும் நிலையும் , திசையும் ஏதோ முக்கியத்துவம் பெற்றிருப்பதுபோல பார்த்தார். அமைதியாக அவர் , உடலை ஒருமுறை சுற்றி வந்தவண்ணமே தன்னுடைய கூர்மையான பார்வையால் அதன் பல பா... |
முடியவில்லை. விரைவில் , உடல் வெருண்டு இறுகியது. அது தனித்தனிப் பகுதிகளாகத் துடித்தது. உடலின் ஒவ்வொரு மூலையிடுக்கிலும் அப்படி ஒரு தாக்குதல் ; நரம்புகளைச் சுண்டி இழுத்து தன் இச்சைப்படி செயல்படாதவாறு முடக்கிவிடும். சொடுக்கு சதைகளைக் கவ்விக்கொள்ளும். நட்டுவாய்க்காலியின் பிடி இருதயத்தைப் பந்துபோல் துள்ள வைக்கும் திகைப்பு. க... |
சிக்ஸ்அதையெல்லாம் முகம் திரும்பிப் பார்க்கவில்லை. சுவிட்ச்சை மட்டும் ஆஃப் செய்தார். தனக்கு போலீஸ் டியூட்டி இல்லாத நேரங்களில் மிகவும் கௌரவமான முறையில் மேல் வருமானம் வாங்கிக் கொடுத்த அவருடைய எலக்ட்ரிக் ஞானம் , அவ்வப்போது போலீஸ் ஸ்டேஷன்களில் மின்சாரச் சிக்கல்கள் ஏற்பட்டால் அதை உடனே கவனிக்கும் ஆற்றலால் அவருக்கு ஸ்டேஷனில் ம... |
சிக்ஸுக்கு உண்மையிலேயே மிகவும் உள்ளடங்கிய மகிழ்ச்சி. 486 ராஜன் மகள் - பா. வெங்கடேசன் அது இன்று தன் ஜென்மதினத்தைப் பெரும் விழாவாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்தப் புதிய நகரம் உண்மையில் வரலாறென்றும் கதையென்றும் ஆக இரண்டு முகங்களைக் கொண்டது. நாயக்கர் பெருமாள் கடலையொத்த விஸ்தீரணம் கொண்ட மிகப் பெரும் ஏரியை இங்கே கட்டுவித்த... |
அரண்மனைகளும் நந்தவனங்களும் கம்பீரமாக உயர்ந்து நின்றிருக்கும் இடங்களில் முன்பு இருந்து இப்போது மறைந்துபோன மாபெரும் விருட்சங்களோடும் விலங்குகளோடும் சேர்த்து நகரத்திற்கு வெளியே துரத்தப் பட்டுவிட்டது. இந்நகரத்தின் வரலாற்றுக்கு முன்பிருந்த அந்த அடவியும் அதற்கு முன்பு இங்கே எழுப்பப்பட்டிருந்த சுயநலமிக்க வேறொரு சமஸ்தானத்தின் ... |
நினைவுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் சாவற்ற கதைசொல்லிகளுக்குத் தெரியும். விருட்சங்களால் விழுங்கப்பட்ட அந்தப் பழைய நகரமுங்கூட கதைகளுக்கும் முன்பு அங்கே வளர்ந்து செழித்திருந்த வேறொரு கானகத்தை அழித்தே நிர்மாணிக்கப்பட்டதாக இருந்தது. காலம் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தைத் தட்டையான பாதையில் நகர்த்துவதில் ஆர்வம் கொண்டதில்லை. நி... |
ஓய்வதே இல்லை. சொல்லப்போனால் இந்த ஓயாத துவந்தம்தான் கதைகளே. எந்த ஒன்று பிறிதொன்றை வீழ்த்தும் போதும் வீழ்த்தியதன் ஆகிருதி வரலாறாக எழுதப் படும்போது வீழ்த்தப்பட்டதன் மிச்சம் வரலாற்றினடியில் கதையாக மறைந்து நின்று முற்றான அழிவிலிருந்து தன்னைத் தப்புவித்துக்கொண்டுவிடுகிறது. வரலாற்றுக்கும் கதைகளுக்குமான தொடர்ந்த போர்தானல்லவோ ந... |
செழித்திருந்த காடு விழுங்கிச் செரித்த பழைய நகரம் அழிவுற்றதைப் பற்றின கதைகள் பல புதிய நகரத்தை விட்டுத் தொலைவில் மௌனமாகக் காத்திருக்கும் மரங்களுக்குள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு வாழும் பூர்வ குடிகளிடையே வழங்கிவந்தன. வீண்பழிக்கு ஆளாகி அனாதையாக்கப்பட்ட அரண்மனைச் சேடிப் பெண்ணொருத்தியின் சாபம்தான் அந்நகரத்தை விழுங்கிய ப... |
ஆடை நெகிழ உறங்குவதைப் பார்த்த இருபது வேடர்களின் மரண ஓலம்தான் அதன் விழுதுகள் என்றது மற்றொரு கதை. துர்சகுனங்களை ராஜ்ஜியத்திற்குள் கொண்டு வந்தவன் ஸ்தம்பித்துப்போய் 487 என்று பிற்காலத்தில் ஏசப்பட்ட என் முதிமுப்பாட்டனார்தான் ஆழ்ந்து அகண்ட அக்கானகத்தின் மூச்சும் இருளும் என்றது ஒரு கதை. சிதறிக் கிடந்த கதைகளை ஒன்று சேர்த்து அழ... |
முதிர்முப்பாட்டனாரின் காலத்தில் அதன் இருபத்துமூன்றாவது தலைமுறை நடந்து கொண்டிருந்தது. இந்தத் தலைமுறைக்கு மற்ற இருபத்திரண்டு தலைமுறைகளிலும் இல்லாத ஒரு விசேஷம் வாய்த்திருந்தது. அதை அதிர்ஷ்டமென்று கணிப்பதா அல்லது துரதிர்ஷ்டமென்று கணிப்பதா என்பது பற்றிப் பிற்காலத்திலும் அரண்மனையின் சோதிட சாஸ்திர வல்லுனர்கள் யாராலும் ஒரு முட... |
பிரத்யேகமாக வாய்த்திருந்த சில தனிப்பட்ட திறமைகளாலேயும் சக்தியாலேயும் தங்கள் வம்சத்தை செழிக்கச் செய்துகொண்டிருந்தனர். ஒரு தலைமுறையிடம் காணப்படும் குறிப்பிட்ட ஏதாவதொரு விசேஷத்தன்மை இன்னொரு தலைமுறையிடம் காணப்படுவது அரிதாகத்தான் இருந்தது. ஆனால் அதை ஈடுகட்டும் விதத்தில் பின்னதற்கென்று ஏதாவது ஒரு தனித்தன்மையும் கடவுளின் ஆசிர... |
சகஜமாக நடமாடும் சுதந்திரம் பெற்றிருந்தன. அதேபோல் நாட்டுக்குள்ளிருந்தும் மக்களும் கால்நடைகளும் பயமின்றி எந்த வேளையிலும் காட்டுக்குள் சென்று வரவும் காலம் கனிந்திருந்ததென்று சொல்லுவார்கள். முயலும் புலியும் ஒரே சுனையில் அருகருகே நீரருந்துமென்பது பன்னிரெண்டாம் தலைமுறை ராஜ வம்சத்து நாட்களில் ஒரு வழக்குச் சொல். போர்க்காலங்களி... |
சென்று போரிட்டு அவர்களின் வாளுக்கு இரையாகி மடிந்ததையும் சொல்லும் மெய்சிலிர்க்கும் கட்டங்கள் எங்கள் வம்சாவளிக் கதைகளில் நிறைய உண்டு ( அவற்றில் புலிகளுக்குச் சிறப்பான இடமும் இருந்ததுண்டு ). மாறாக அதையடுத்த பதின்மூன்றாவது ஆட்சிக்காலத்திலோ வீதிகளில் காட்டு மிருகங்களின் நடமாட்டம் சாத்தியப்படாத ஒன்றாக ஆகிவிட்டிருந்ததென்கிறார... |
பதின்மூன்றாம் தலைமுறைக் காலத்தில் வனவேட்டை மிகப் பிரசித்தமான விளையாட்டாகவும் ஆகிவிட்டது. பழைய சம்ஸ்தானத்தின் கொடிமேல் பறந்துகொண்டிருக்கும் பெருமை படைத்த கரும்பட்டைகள் கலக்காத தங்கநிறப் புலிகள் அருகிப்போக ஆரம்பித்த காலம் பதின்மூன்றாம் தலைமுறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதானென்று என் பழைய பாட்டனார்கள் சொல்லி அறியச் செய்தன... |
வளர்ந்து ஓங்கியிருந்த முதிர்ந்த கடம்ப விருட்சமொன்றை அழித்து அதன் உச்சிக் கிளையில் பிறந்ததிலிருந்து வசித்துக் கொண்டிருந்த புலியை விரட்டிவிட்டு அந்த இடத்தின் மேல் கட்டப்பட்டதுதான் என்பார்கள். வனவேட்டையின்போது போர்க்கள வியூகத்தையும் போர்க்களத்தில் வன வேட்டையின் தந்திரத்தையும் பயன்படுத்தி வெல்லத் தெரிந்த மதியூகிகள் நிறைந்த... |
தலைமுறையில் மூன்றடுக்கு அரண்மனையில் மேல்மாடியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான படுக்கையறையில் மிகச் சுவாதீனமாக பல தலைமுறைக் காலம் நடமாடி வந்த கிழட்டுப் புலி அந்த நம்பிக்கையை அசைத்துவிட்டுப் போனது ). கிடைத்துவிடவுமில்லை. இருபத்து மூன்றாம் தலைமுறை ராஜனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த என் முதிர்முப்பாட்டனாரின் குலத் தொழில் ந... |
பழைய நகரத்தின் இருபத்துமூன்றாம் தலைமுறை வரை நாவிதம் என்பது சதையை வெட்டிவிடாமல் முடியை மட்டும் கவனமாக மழித்தெடுக்கத் தெரிந்த ஒரு ஜதை நடுங்காத கைகளுக்கு மேல் சிறப்பான தகுதிகள் எதுவும் தேவைப்படாத ஒரு தொழில் என்றே மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். பழைய நகரத்தில் நாவிதம் கடைநிலைத் தொழிலாக மதிக்கப்படவில்லை. ஆனாலும் முடிமழிப்பதை... |
முதிர்முப்பாட்டனார் பிற மனிதர்களின் தூக்கத்தினுள் ஊடுருவி அவர்களுடைய கனவுகளைப் பார்க்கும் கலையைப் பயிலும் பொருட்டு தனது பதின்பருவம் துவங்கும் முன்பே நாட்டைவிட்டு வெளியேறி மேற்குப் பக்கம் மலைகளுக்கு அப்பாலிருக்கும் மாந்திரீகக் கலைகளுகுப் பேர்போன மலையாள தேசமெங்கும் சுற்றித் திரிந்துவிட்டுத் தன் காளைப்பருவத்தில் ஊரு திரும... |
நாவிதம் என்பது வைத்தியம் மாந்திரீகம் வர்மம் சம்போகம் முதலிய அதியற்புதமான பிற சாஸ்திரங்களோடு பிரிக்க முடியாத தொடர்பு கொண்டது எனும் உண்மையை உலகம் புரிந்துகொண்டது. மனித உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளில் அவரவர்கலுடைய உடலமைப்புக்குத் தக்க ரோமக் கற்றைகளைக் குறைத்தும் முழுவதும் மழித்தும் அவ்விடங்களில் வேர்வைக் கண்களைத் திறந்த... |
489 என் முதிர்முப்பாட்டனார் பிரகடனப்படுத்தினார். மேலும் நாவிதனுக்குள் அங்க சாஸ்திரத்தையும் மனித உடலின் சீதோஷ்ணத்தையும் பற்றின ஞானம் இயல்பாகவே படிந்து கிடக்கிறது. ரோமம் என்பது உடலுக்கு வெளியே ஓடும் நரம்பு என்பதை அறிவு அறிந்துகொள்ளும் முன்பே சவரம் புரியும் கைகள் அறிந்துகொண்டிருக்கின்றன என்றும் சிரைத்துக் கொள்பவரின் உடல் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.