text
stringlengths
11
513
எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் உஜ்ஜயின் குறியீடு கொண்ட செப்புக் காசு ஆகியவை அகழாய்வுக் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. கி.மு. 300 முதல் கி.பி. 1300 வரை இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தனர் என்பது தொல்லியல் சான்றுகளால் அறியப்படுகின்றது. 16. மாங்குடி மாங்குடி கிராமம். திருநெல்வேலி மாவட்டம் , சங்கரன்கோவில் வட்டத்தி...
இப்பகுதியின் வரலாற்றை வெளிப்படுத்தும் நோக்கில் 2002 ஆம் ஆண்டில் அகழாய்வினை மேற்கொண்டது. நாயக்கர்புஞ்சை என்ற பகுதியில் பத்துக் குழிகள் போடப்பட்டு , நுண்கற்காலம் மற்றும் வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன. " குருமங்கள * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ’ அதன் இ யான...
காலத்தில் காஞ்சிப் பேரூர் என்று அழைக்கப்பட்ட இவ்வூர் , கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு முக்கிய மையப் பகுதியில் அமைந்துள்ளது. சாந்தலிங்க இராமசாமி அடிகளார் கல்லூரி வளாகத்திலுள்ள கள்ளிமேடு பகுதியிலும் , திருநீற்றுமேடு பகுதியிலும் 2002 ஆம் ஆண்டு அகழாய்வு நடத்தப்பட்டது. முக்கிய தொல்பொருட்களாக , சுடுமண் முத்திரை ஒன்றில் வில் ...
சுடுமண் உருவத்தை ஒத்த சுடுமண் உருவத்தின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டு ஆகும். அகழாய்வில் சங்கு வளையல் துண்டுகளும் , வண்ண மணிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 18. தரங்கம்பாடி • நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறு வட்டத்தில் கிழக்கு கடற்கரையில் EDU துறைமுகப்பட்டினமாக தரங்கம்பாடி திகழ்ந்துள...
செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 1620 - ல் டேனிஷ் கப்பல் படைத்தலைவர் ஒவ் ஜெட்டி என்ால் கடற்கரை அருகில் கட்டப்பட்டது. தங்கத்தினால் செய்யப்பட்ட ஏட்டில் எழுதப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் தரங்கம்பாடி கோட்டையை கட்டுவதற்கும் , வரி வசூல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இப்பெருமை வாய்ந்த டேனிஷ் கோட்டையினை 2008 மார்ச் மாத...
அகழாய்வு செய்யப்பட்டது. அகழியின் வெளிப்பக்கம் பெரிய மதில் சுவர் மற்றும் அகழியை கடந்து செல்வதற்கு மூன்று செங்கல் மேடைகளும் , நுழைவாயிலை ஒட்டி செங்கல்லால் ஆன நடைபாதையும் , அகழியில் உள்ள னை ணப்பதற்கு மூடி திறக்கும் வகையில் மரப்பாலமும் இருந்தமை அகழாய்வில் கண்டறியப்பட்டன. அகழியின் அகலம் சுமார் 24 மீட்டர் ஆகும். இவ்வகழாய்வில...
ராஜாக்கள்மங்கலம் திருநெல்வேலி மாவட்டம் , வள்ளியூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இங்கு 2009-2010 ஆம் ஆண்டு அகழாய்வு நடைபெற்றது. ராஜாக்கள் மங்கலத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் நம்பியாற்றின் வடகரைகயில் அகழாய்விற்கான குழிகள் அமைக்கப்பட்டன. முற்கால பாண்டியரின் கட்டுமான கோயிலின் தடயங்கள் இவ்வகழாய்வில் வெளிப்...
கட்டுமானப் பொருட்களுடன் கிடைத்தன. இங்கு கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ந 20. தலைச்சங்காடு நாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைச்சங்காடு கிராமம் அமைந்துள்ளது. இவ்வூர் பண்டைய காலத்தில் பூம்புகாரின் ஒரு பகுதியாக விளங்கியது. இவ்விடத்தின் பாரம்பரியத்தை அறியும் நோக்கில் தமிழக...
பண்பாட்டு காலங்கள் அகழாய்வின் மூலம் வெளிப்பட்டன. சில்லுகள் , சுடுமண் விளக்கு , செங்கற்கள் , கெண்டிகள் , கூரை ஓடுகள் , அலங்காரம் செய்யப்பட்ட பானை ஓடுகள் மற்றும் சுடுமண் உறை கிணறு ஆகியவை இவ்வகழாய்விப்பட்டன. கோயில் பராந்தக சோழன் காலத்து தடயங்கள் இவ்வகழாய்வில் வெளிப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுதை சிற்பங்கள் மற்றும் கல்வெட்...
பண்டைய நாட்களில் டைக்கழி நாட்டுக்குட்பட்டதாக விளங்கியிருக்கிறது. பழங்காலத்தில் துறைமுகப்பட்டினமாக விளங்கிய மரக்காணம் இவ்வூருக்கு அருகில் உள்ளது. ஆலம்பறையில் கி.பி. 17-18 ஆம் நூற்றாண்டில் இருந்து வந்த சமூக பண்பாட்டை அறியும் நோக்கில் இங்குள்ள கோட்டைக்குட்பட்ட பகுதியில் அகழாய்வு நடைபெற்றது. மூன்று அகழாய்வுக்குழிகள் அமைக்க...
கண்டெடுக்கப்பட்டன. கருங்கல்லினால் ஆன பீரங்கி குண்டுகள் , ஃபோர்சிலைன் வகை ஓடுகள் , தக்களி , சுடுமண் விளக்குகள் , புகைப்பான் மற்றும் நாணயங்கள் செய்யும் சுடுமண்ணாலான அச்சுகளும் இவ்வகழாய்வில் கிடைத்தன. ஆலம்பரையில் கி.பி.17-18 - ம் நூற்றாண்டில் நடைபெற்ற வணிகம் குறித்த தடயங்களும் , இங்கு வாழ்ந்த மக்களின் சமூக - கலாச்சார அம்ச...
2013-2014 , 2014-2015 ஆகிய இரு ஆண்டுகளில் அகழாய்வு நடைபெற்றது. · இக்கோயில் 108 வைணவத்திருத்தலங்களில்ஒன்றாகவிளங்குகிறது. சோழர் , பாண்டியர் , விஜயநகர மற்றும் நாயக்கர் காலம் என பல்வேறு கால கட்டங்களில் இக்கோயிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளன. இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் அதிட்டானத்தில் அமைந்திருந்த புடைப்புச் சிற்பங...
நிலையில் உள்ள சிற்பத்தொகுதி வெளிப்படுத்தப்பட்டது. யானையை அடக்கும் நிலையில் இக்காட்சி அமைந்துள்ளது. மேலும் , அதிட்டானத்தின் கண்டப்பகுதியில் அரசியர் உட்பட பல்வேறு சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. உள்ள 2014-2015 ஆம் ஆண்டில் ஆயிரங்கால் மண்டபத்தின் மையப்பகுதியில் நம்பெருமாள் மண்டபத்தின் அகழாய்வு நடைபெற்றது. இம்மண்டபத்தின்அ...
பண்பாட்டு அகழாய்வு நடைபெற்றது. சிமெண்ட் பகுதிகளை முழுவதுமாக நீக்கிய நிலையில் சக்கரத்தின் முழுப்பகுதியும் , குதிரைச் சிற்பத்தின் அழகிய முழு உருவமும் வெளிக்கொணரப்பட்டன. 13 தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் தமிழர் சமுதாய வரலாறு அறிமுகம் பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழ்ப் ...
வந்துபோயினர். வெளிநாட்டினருடன் ஏற்பட்ட பண்பாட்டுத் தொடர்புகளும் , வணிக நடவடிக்கைகளும் , தமிழகத்தன் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் வாழ்க்கைமுறைகளும் இணைந்து தமிழ்நாட்டில் முதல் நகரமய மாதல் உருவானது. தலைநகரங்களும் துறைமுகப்பட்டினங்களும் தோன்றின. நாணயங்களும் பணமும் புழக்கத்திற்கு வந்தன. = ‘ தமிழ் பிராமி ' என்ற வரிவடிவத்த...
தொடக்கம் வரையிலான தமிழகத்தின் பண்பாட்டு வளர்ச்சிகள் குறித்து அறிந்தோம். இந்தப் பாடத்தில் சங்க காலம் என்று அறியப்படுகின்ற வரலாற்றுக காலத்தின் தொடக்கத்தில் தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சி குறித்து அறிவோம். தொடக்க காலத் தமிழ்ச் சமூகம் குறித்து அறிந்து கொள்வதற்கான சான்றுகள் தொன்மைக்கால தமிழர்களின் வரலாற்றை அறிவியல்பூர்வமாக மீ...
அல்லாத மற்றும் அயல்நாட்டினரின் இலக்கியக் குறிப்புகள் பதினெண்கீழ்க்கணக்கு • வாழ்வியல் அறநெறிகளை எடுத்து இயம்புகின்ற பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள். 1330 குறட்பாக்களைக் கொண்ட திருக்குறள் அறம் , பொருள் , இன்பம் என்று மூன்று பால்களாகப் ...
அவை 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவகசிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசி தமிழ் பிராமி கல் வெட்டு காணப்படும் குகைவாழிடத்தில் மழைநீர் வடிவதற்காக செதுக்கிய பள்ளம் ந கல்வெட்டுச் சான்றுகள் = கல்வெட்டுகளைக் குறித்து படிப்பது ' கல்வெட்டியல் ' ஆகும். கல்வெட்டுகள் போலவே செப்பேடுகள் , நாணயங்கள் , மோதிர்கள் போன்றவற்றிலும் தகவல...
முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட மொழியின் வரிவடிவத்திற்குத் தமிழ் பிராமி என்று பெயர். = கற்பாறைகளிலும் , குகை வாழிடங்களிலும் , சுடுமண் காலங்களிலும் , நாணயங்கள் , முத்திரைகள் , மோதிரங்கள் போன்ற அணிகலன்களிலும் தமிழ் பராமி எழுத்துகள் காணப்படுகின்றன. அரச்சலூரில் உள்ள தமிழ் பிராமி கல் வெட்டு அரச்சலூர் தமிழ் பிராமி கல்வெட்டின்...
சமணத் துறவிகள் இக்குகைகளைப் பெரும்பலும் தமது வாழிடங்களாகக் கொண்டிருந்தனர். இயற்கையாக அமைந்த மலைக்குகைகளின் விளிம்பில் , மழைநீர் வழிந்து வெளியேறுவதற்காகச் சிறிய பகுதியை வெட்டி கொடுங்கை அல்லது வாரி போன்று செதுக்கியிருந்தனர். அதற்குக் கீழேதான் பெரும்பாலான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. • குகைகளின் உட்புறத்தில் வழுவழுப்பான ப...
தமிழ்நாட்டில் மாங்குளம் , முத்துப்பட்டி , புகலூர் , அர்ச்சலூர் , கொங்கர் புளியங்குளம் , ஜம்பை , மதுரை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள குகை வாழிடங்களில் தமிழ் பிராமி கல்வெட்டுகளை இன்றும் காணலாம் பெரும்பாலான குகைவாழிடங்கள் பண்டைக்கால வணக வழிகளில் அமைந்துள்ளன. சங்ககாலம் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சம...
இரண்டு மற்றும் பதிமூன்றாம் பேராணைக் கல்வெட்டுக்கள். மேலும் மாங்குளம் , அழகர் | மலை , கீழவளவு ஆகிய ஊர்களிலுள்ள ( இவ்வூர்கள் அனைத்தும் மதுரைக்கு அருகேயுள்ளன ) கல்வெட்டுக்கள். வேள்விக்குடி மற்றும் சின்னமனூர் செப்பேடுகள். சங்க காலத்தைச் சேர்ந்த சேர , சோழ , பாண்டிய அரசர்களாலும் , குறுநில மன்னர்களாலும் வெளியிடப்பட்ட நாணயங்கள...
சான்றுகள் அயல்நாட்டவர் குறிப்புகள் கால அளவு தமிழகத்தின் புவியியல் பரப்பு காலம் பண்பாடு அரசுமுறை ஆட்சிபுரிந்த அரச | வம்சங்கள் தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் தொல்காப்பியம் , எட்டுத்தொகை , பத்துப்பாட்டு , பதினெண்கீழ்க்கணக்கு , மதுரைக்காஞ்சி ஆகியவை. சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய காப்பியங்கள...
மகாவம்சம் , தீபவம்சம் ஆகியன. கி.மு. ( பொ.ஆ.மு ) 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. ( பொ.ஆ ) 3 ஆம் நூற்றாண்டு வரை. வடக்கே வேங்கடம் ( திருப்பதி முதல் தெற்கே கன்னியாகுமரி வரை. கிழக்கிலும் , மேற்கிலும் கடல்களை எல்லைகளாகக் கொண்டிருந்தது. இரும்புக்காலம் பெருங்கற்காலப் பண்பாடு முடியாட்சி சேரர் , சோழர் , பாண்டியர். சேரர் = சங்க கால...
மற்றும் வடக்குத் திருவிதாங்கூர் , கொச்சி , தெற்கு , மலபார் , கொங்கு மண்டலம் ஆகியவற்ற ஆண்டனர். * பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றன. சேர அரசன் செங்குட்டுவன் வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார். சிலப்பதிகாரக் காவியப் பாத்திரமான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையிலிருந்து கற்களைக் கொண...
அரசன் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார். சில சேர நாணயங்களில் அவர்களின் சின்னமான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன. சோழர் = சங்க காலத்தில் சோழ அரசு வேங்கட மலைகள் வரை விரிந்திருந்தது. காவிரி கழிமுகப்பகுதி சோழ நாட்டின் மையப் பகுதியாக விளங்கியது. இப்பகுதி பின்னர் சோழ மண்டலம் என அறியப்பட்டது. சோழ அரசர்களில் மிகவும் புகழ...
பல சுதந்திரமான , நெஞ்சுரம் மிக்க சிறிய குறுநில மன்னர்களும் இருந்தனர் , ஆய் என்னும் பெயர் பழந்தமிழ்ச் சொல்லான ஆயர் ( பொருள் : ஆநிரை மேய்ப்போர் என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். சங்க காலத்து ஆய் மன்னர்களின் முக்கியமானவர்களின் பெயர்கள் அந்திரன் , திதியன் , நன்னர் ஆகியனவாகும். வேளிர்கள் வேளாளர் பண்டைய காலத் தமிழக்தில்...
தாராளமாக ஆதரித்தமைக்காகப் புகழப்பட்டவர்கள் ஆவர். கிழார் என்பவர் கிராமத் தலைவர் ஆவார். சங்க கால ஆட்சியமைப்பு அரசுரிமை நா ஈடு = அரசுரிமை பரம்பரையானது. அரசர் ‘ கோ ' என அழைக்கப்பட்டார். அது கோன் எனும் சொல்லின் சுருக்கமாகும். வேந்தன் , கோன் , மன்னன் , கொற்றவன் , இறைவன் எனும் வேறு பெயர்களாலும் அரசர் அழைக்கப்பட்டார். பொதுவாக ...
இளையோர் இளங்கோ , இளஞ்செழியன் , இளஞ்சேரல் எனவும் அழைக்கப்பட்டனர். அரசர் தினந்தேறும் அரசவையைக் ( நாளவை ) கூட்டினார். அங்கு அவர் விவாதங்களைச் செவிமடுத்து அனைத்து வழக்குகளையும் தீர்த்து வைத்தார். அரசின் வருமானம் வரிகள் மூலம் பெறப்பட்டன. நிலவரியே வருவான் முக்கிய ஆதாரமாகும். அது ‘ இறை ’ என அழைக்கப்பட்டது. மையே வெ • இதைத்தவிர...
ஒற்றர்கள் நாட்டுக்குள் நடப்பனவற்றவை மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் நடப்பனவற்றையும் தெரிந்துகொள்ளப் பயன்படுத்தப்பட்டனர். = புறமுதுகில் காயமடைவது அவமானமாகக் கருதப்பட்டது. போரின்போது புறமுதுகில் காயம்பட்டதற்காக அரசர்கள் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிரை மாயத்துக் கொண்ட நிகழ்வுகளும் நடந்தன. சபை அரசருடைய சபை அரசவை என அழைக்கப்ப...
மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் = அரசர்கள் ஐந்து விதக் கடமைகளைச் செய்தனர். கல்விகற்பதை ஊக்குவிப்பது , சடங்குகளை நடத்துவது , பரிசுகள் வழங்குவது , மக்களைப் பாதுகாப்பது , குற்றவாளிகளைத் தண்டிப்பது ஆகியன அவ்வைந்து கடமைகளாகும். தூதுவர்கள் அரசரால் பணியில் அமர்த்தப்பட்டனர். தூதுவர்கள் முக்கியமான பங்கு வகித்தனர். அர...
பிரிக்கப்பட்டிருந்தனர். படை அரசருடைய படை என்று அழைக்கப்பட்ட இராணுவம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்தது. அவை காலாட்படை , குதிரைப்படை , யானைப்படை , தேர்ப்படை என்பனவாகும். படைத்தலைவர் ' தானைத் தலைவன் ' என அழைக்கப்பட்டார். அக்காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட முக்கியமான ஆயுதங்கள் வாள் , கேடயம் , தோமாரம் ( எறியீட்டி ) ஈட்டி , ...
கோட்டைகள் அரண்களாலும் ஆழமான அகழிகளாலும் பாதுகாக்கப்பட்டன. போர்முரசம் கடவுளாகவே கருதி வணங்கப்பட்டது. சட்டமும் நீதியும் = அரசரே சல இறுதியான மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆவார். தலைநகரில் நீதிமன்றம் ‘ அவை ’ என்றழைக்கப்பட்டது. கிராமங்களில் ' மன்றங்கள் என்பவை தீர்ப்பு வழங்கப்படும் இடங்களாயிருந்தன. உரிமையியல் வழக்குகளில் பின்பற்...
தீண்டவில்லை எனில் அவர் குற்றமற்றவர் எனக் கருதப்பட்டு விடுவிக்கப்படுவார். தண்டனைகள் எப்போதும் கடுமையாகவே இருந்தன. திருட்டு வழக்குகளில் மரணதண்டனை வழங்கப்பட்டது. = தலையைச் சீவுதல் , உடல் உறுப்புக்களைத் துண்டித்தல் , சித்திரவதை செய்வது , சிறையில் அடைப்பது , அபதாரம் விதிப்பது ஆகியவை குற்றங்களுக்காக வழங்கப்பட்ட தண்டனைகளாகும்...
ஆகும். அவை பேரூர் ( பெரிய கிராமம் ) , சிற்றூர் ( சிறிய கிராமம் ) , மூதூர் ( பழமையான கிராமம் ) என அழைக்கப்பட்டன. கடற்கரையோர நகரங்களுக்கப் பட்டினம் எனப் பெயர் ‘ புகார் ’ என்பது துறைமுகங்களைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும். 8 தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் வட பகுதிகளில் வளர்ந்திருந்ததைப் ப...
பெரும்மரியாதை கொண்டிருந்தனர். போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக நடுகற்கள் நடப்பட்டன. உடை மற்றும் அணிகலன்கள் = பொருளாதார வசதிமிக்க மக்கள் மஸ்லின் , பட்டு மற்றும் நேர்த்தியான பருத்தியிழைத் துணிகளிலால் ஆன ஆடைகளை அணிந்தனர். சாதாரண மக்கள் பருத்தியினாலான இரு துண்டுகளான ஆடைகளை அணிந்தனர். சங்க இலக்கியங்கள் பாம்பி...
அவை தங்கம் , வெள்ளி , முத்துக்கள் , நவரத்தினக் கற்கள் , சங்கு , பாசிமணிகள் ஆகியவற்றால் செய்யப்பட்டிருந்தன. கலைகள் 55 • பலவிதமான இசைக் கருவிகளான முரசு , புல்லாங்குழல் , யாழ் போன்றவை பற்றிய பல குறிப்புகள் உள்ளன. கரிகாலன் இசையின் ஏழு ஸ்வரங்கள் குறித்து பெரும்புலமை பெற்றிருந்தான் ( ஏழிசை வல்லான் ) பாடல்கள் பாடும் புலவர்கள்...
எனும் கோட்பாட்டை உருவாக்கினர் ( இயல் , மையே இசை , நாடகம் ). தொழில்கள் = மக்களின் மிக முக்கியமான தொழில்கள் வேளாண்மை , ஆநிரை மேய்த்தல் , மீன்பிடித்தல் , வேட்டையாடுல் ஆகியவையாகும். மேலும் கைவினைத் தொழில் செய்வோரான தச்சர் கொல்லர் , பொற்கொல்லர் , மண்பாண்டம் செய்வோரும் இருந்தனர். நெசவு செய்வது விவசாயம் செய்வோரின் மிகப் பொவான...
கார்த்திகை தீப விழா ஆகியன அவற்றில் சிலவாகும். இந்திராவிழா தலைநகரில் கொண்டாடப்பட்டது. பல வேடிக்கை நிகழ்ச்சிகளும் விளையாட்டுக்களும் நடைபெற்றன. நடனமாடுதல் , எருதுச் சண்டை , 10 வணிகம் = வணிகம் உள்ளூர் , உள்நாட்டில் , கடல் கடந்து வெளிநாட்டில் என மூன்று நிலைகளில் நடைபெற்றது. இக்காலப் பகுதியில் தமிழகம் மேற்கொண்ட விரிவான மற்று...
துறைமுகங்களில் ' கலங்கரை இலங்குசுடர் ’ எனும் ஒளிவிளக்குக் கோபுரங்கள் இருந்தன. வணிகர்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பல இடங்களுக்கு எருதுகள் பூட்டிய கூண்டு வண்டிகளில் எடுத்துச் சென்றனர். பண்டமாற்று முறை பரவலாக வழக்கத்தில் இருந்தது. புகார் , மதுரை போன்ற முக்கியமான நகரங்களில் இரண்டு வகையான சந்தைகள் இருந்தன. மதுரையில் ‘ நாள...
வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் சேவல் சண்டை , தாயமாடுதல் , வேட்டைாதல் , மல்யுத்தம் செய்தல் , ஊஞ்சலாடுதல் ஆகியன அவற்றில் முக்கியமானவை ஆகும். குழந்தைகள் பொம்மை வண்டிகளோட்டியும் , மணல்வீடு கட்டியும் விளையாடினர். மலபார் கருமிளகு • எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸின் பதப்படுத்தப்பட்ட உடல் திறக்கப்பட்டபோது ...
). முக்கியத் துறைமுகங்கள் : முசிறி , தொண்டி , கொற்கை து முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் : உப்பு , மிளகு , முத்துக்கள் , தந்தம் , பட்டு , நறுமணப் பொருட்கள் , வைரம் , குங்குமப்பூ , விலைமதிப்பு மிக்க கற்கள் , மஸ்லின் , சந்தனக்கட்டை = முக்கிய இறக்குமதிப் பொருட்கள் : புஷ்பராகம் , ஈயம் , திராட்சைமது , கண்ணாடி , குதிரைகள் கடல்கட...
மெய்ப்பித்துள்ளன. முசீறி முதல் பேரங்காடி ரோம் நாட்டை சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு எனும் நூலில் முசிறியை ‘ இந்தியாவின் முதல் பேரங்காடி ' எனக் குறிப்பிட்டுள்ளார். ரோமானியரின் குடியிருப்பு இருந்த முசிறியில் அகஸ்டஸ் கடவுளுக்காகக் கோவிலொன்று கட்டப்பட்டிருந்தது. களப்பிரர்கள் கி.பி ( பொ.ஆ ) மூன்றாம் நூற்றாண்டின...
கிடைத்து உள்ளன. அவர்கள் விட்டுச் சென்ற நினைவுச் சின்னங்கள் , தொல்கலைப் பொருட்கள் என எதுவுமில்லை. ஆனால் அவர்களின் ஆட்சி குறித்து இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் கி.மு. ( பொ.ஆ.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் இலையில் எழுதப்பட்ட ஒரு ஒப்பந்தப் பத்த...
* இலக்கியச் சான்றுகள் , தமிழ் நாவலர் சரிதை , யாப்பெருங்கலம் , பெரியபுராணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சீவக சிந்தாமணி , குண்டலகேசி ஆகிய இரண்டும் இக்காலத்தில் எழுதப்பட்டவைகளாகும். தமிழகத்தில் பௌத்தமும் , சமணமும் முக்கியத்துவம் பெற்ற காலம் அது சமஸ்கிருதம் , பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் வட்டெழுத்து என்னும் புதி...
போன்று இருண்ட தமிழ் திணைப் பகுதிகளில் சமூக அக்காலத்தில் சமூக உருவாக்கத்தை நாம்புரிந்துக் கொள்ளச் சங்க இலக்கியங்கள் பெரிதும் துணை புரிகின்றன. திணைக் கோட்பாட்டின் பின்புலத்தில் தமிழகம் குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை எனும் ஐந்து முக்கிய நிலப்பரப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் தெய்வம் , மக்கள் , ச...
மருதம் காடும் காடு சார்ந்த இடமுமான இங்கு , கால்நடை மேய்ப்பதும் , அத்துடன் மாற்றிட வேளாண்மை செய்வதும் தொழிலாக இருந்தது. வயலும் வயல் சார்ந்த இடமுமான இங்கு நீர்பாசனத்தின் மூலம் கலப்பைகளைப் | பயன்படுத்தி வேளாண்மை செய்வது தொழிலாகும். நெய்தல் பாலை தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் கடலும் கடல் ...
கொள்ளையடிப்பதையும் தொழிலாகக் கொண்டனர். பொருளாதாரம் = திணைக் கோட்பாடு விளக்குவது போலவே சங்க காலப் பொருளாதாரம் பல வகைப்பட்டதாக இருந்தது. வேளாண்மை , கால்நடை வளர்ப்பு , வணிகம் , பணப்பரிமாற்றம் , வேட்டையாடுதல் , மீன் பிடித்தல் என்று மக்கள் வாழ்ந்த நிலங்களுக்கு ஏற்றவாறு தொழில்களும் , அவை சார்ந்து பொருளாதாரமும் இருந்தன. வணிகம...
பயிரிடப்பட்டன. நன்செய் நிலத்திலும் புன்செய் நிலத்திலும் பயிர்த்தொழில் நடைபெற்றது. ஆற்றுவடிநீர்ப் பயிர்த் தொழில் நடைபெற்றது. ஆற்றுவடிநீர்ப் பாசன வசதி பெற்ற பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டது. செந்நெல் , வெண்ணெல் , ஐவனநெல் எனப் பலவகையான நெல்கள் குறித்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆதிச்ச நல்லூரிலும் , பொருந்தல் என்ற இடத...
உள்ளிட்ட மாடுகள் , வெள்ளாடு , செம்மறி ஆடுகளை வளர்த்தல் மூலம் மக்ள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கினர். கைவினை மற்றும் தொழிற் கூடங்கள் = கைவினைத் தயாரிப்புகளும் , மிக நுண்ணிய வேலைபாடைய தொல்பொருள்களும் நகரவாழ்வின் முக்கியமான அடையாளங்களாகும். சங்க காலத்தில் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் இ...
மட்கலங்கள் தேவையாக இருந்தன. கரியநிறத்தவை , செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை , கருப்பு - சிவப்பு நிறத்தவை என்று பலவிதமான மட்கலங்கள் தயாரிக்கப்பட்டன. 13 இரும்பு உருக்குத் தொழில் இரும்பைக் கொண்டு கருவிகள் செய்வதும் முக்கியமான தொழிலாக இருந்திருக்கிறது பல்வேறு இடங்களில் , கொல்லுலைகள் , உருக்கு உலைகள் ஆகியன...
கருவிகள் செய்தோர் குறித்து சங்க இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன. உழுகருவிகளும் , வாள் , ஈட்டி , கத்தி போன்ற படைக்கருவிகளும் தயாரிக்கப்பட்டன. கல்லில் செய்த அணிகலன்கள் சங்க காலத்து மக்கள் பலவிதமான அணிகலன்களை அணிந்து தங்களை அழகுபடுத்திக் கொண்டனர். எளி மக்கள் பூக்களையும் இலை தழைகளையும் சூடிக்கொண்டதுடன் , சுட்ட களிமண் , உலோ...
போன்றவற்றில் இருந்தும் அழகிய வேலைப்பாடுடைய அணிகலன்கள் செய்யப்பட்டன. துளையிடும் கருவிகளில் வைரத்தைப் பயன்படுத்தித் துளையிட்டு , மணிக்கற்களை அழகுறக் கோத்து மாலைகளாக அணிந்தனர். பெருங்கற்கால நினைவுச் சின்னங்களில் பொறிப்பு வேலைகள் நிரம்பிய செம்மணிகளும் காணப்படுகின்றன. தங்க ஆபரணங்கள் • தங்கத்தாலான அணிகலன்களைச் சங்க கால மகளிர...
அகழாய்வுக் களங்களான சுத்துக்கேணி , ஆதிச்சநல்லூர் , கொடுமணல் ஆகி இடங்களிலும் , அரிக்கமேடு , கீழடி , பட்டணம் ஆகிய பழங்கால நகரங்களிலும் தங்க அணிகலன்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி மணிகள் = கண்ணாடி மணிகளைச் செய்யும் முறையைஅக்கால மக்கள் அறிந்திருந்தனர். சிலிக்கா மற்றும் பிற பொருள்களை உலையிலிட்டு உருக்கி நீண்ட சிறிய குழல்களாக்கிப்...
செய்யும் தொழிலகங்கள் இருந்துள்ளன. விலை உயர்ந்த நவமணிக் கற்களை வாங்க இயலாதவர்கள் கண்ணாடி மணிகளை அணிந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 14 தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் முத்துக் குளித்தலும் சங்கு வளையல்களும் கீழடி அகழாய்வின்போது ஒரு முத்து கிடைத்துள்ளாமை குறிப்பிடத்தக்கது. சங்குகளை அரிந்து வ...
சங்குகளும் , உடைந்த வளையல்களும் பல தொல்லியல் இடங்களிலும் கிடைத்துள்ளன. பெண்கள் சங்கு இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. துணி நெசவு = துணி நெசவு இன்னொரு முக்கியத் தொழிலாகும். நூல் நூற்கும் கதிர்களும் துண்டுத் துணிகளும் கொடுமணலில் கிடைத்திருக்கின்றன. கலிங்கம் மற்றும் பிற வகைத் துணிவகைகள் குறித்து இலக்கியங்களில் க...
பண்டமாற்றம் , வணிகம் , வணிகர்கள் , வணிகப் பெருவழிகள் = நெல் முதலான தானியங்கள் , கால்நடை வளர்ப்பு , கைவினைப் பொருள் தயாரிப்பு போன்றவை குறித்து அறிந்தோம். ஆனால் மக்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் எல்லாப் பொருள்களையும் தயாரிக்க இயலாது. ஓரிடத்தில் கிடைக்கின்ற மூலப்பொருள்களும் , வளமும் , தொழில் நுட்பக் கலைஞர்களும் மற்ற இடங்கள...
இடங்களில் உள்ளவர்கள் தம்மிடம் உள்ள பொருள்களைக் கொடுத்து மாற்றிக் கொள்வார்கள். இதற்குப் பண்டமாற்று என்று பெயர். = இவ்வாறாத்தான் வணிகம் தோன்றியது. வணிகர்கள் குழுவாகச் சென்றும் வணிகம் செய்தனர். இவ்வணிகத்தின் வழியாக பலவிதமான பொருள்களை மக்கள் பயன்படுத்த முடிந்தது. வணிகர்கள் * தமழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகன் , நிகமா ஆகிய ச...
குடும்பத்தாடு மாட்டு வண்டியில் சென்று வணிகம் செய்தனர். போக்குவரத்து முறைகள் * மாட்டுவண்டிகளும் விலங்குகளும் சரக்குப் போக்குவரத்திற்கும் பயன்பட்டன. தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களும் வணிக வழிகளால் இணைக்கப்பட்டன. கடற்பயணம் மேற்கொள்ள 15 தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் உதவிய கலம் , பரி , ஓடம...
பெருமளவில் பரிமாற்றம் நடைபெற்றது. அரிசியைக் கொடுத்து மீனைப் பெற்றனர். உப்பு விதை மதிப்புடையதாகக் கருதப்பட்டது. எனவே ஒரு குறிப்பிட்ட அளவு உப்புக்கு அதே அளவு அரிசி பரிமாறிக் கொள்ளப்பட்டது. சங்க கால சேர , சோழ , பாண்டிய மற்றும் மலையமான் ஆகிய அரசர்களின் நாணயங்கள் பெருமளவு கிடைத்திருப்பதைக் கொண்டு , அை | பரவலாகப் புழகத்தில் ...
சமயத்தில் மேலைக்கடலான அரபிக்கடலைக் கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன. மிளகு போன்ற நறுமணப் பொருள்ளும் , யானைத் தந்தம் , நவமணிகள் உள்ளிட்ட அரிய பொருள்களும் தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆயின. தங்கம் , வெள்ளி , செம்பு உள்ளிட்ட உலோகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. = கிரோக்க , ரோமானிய , மேற்கு ஆகிய மக்கள் உள்ளிட்ட மேற்கத்தி...
ஏழரை கிலோ மிளகு இருந்த இந்தியப் பானையும் , தேக்கு மரப்பலகைத் துண்டுகளும் , தமிழ் ஓடு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டன. மையே வெலி எழுத்துகள் பொறித்த ( தமிழக ) பானை செங்கல் கடற்கரையில் பெர்னிகே துறைமுகத்திற்கு வடபகுதியில் உள்ள இன்னொரு துறைமுகம் குசேர் அல் காதிம் எழுத்துகள் கொண்ட மூன்று சுடுமண் பாண்டத் துண்டுகள் கண்டறியப்பட்டன. ...
கிடைத்துள்ளது. இக்கல் , பெரும்பத்தன் என்பவரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் அவர் ஒரு பொற்கொல்லராக இருக்க வேண்டும். அந்தக கல் , தங்கத்தின் தரத்தை அய உதவும் உரைகல் ஆகும். தென்கிழக்க ஆசியாவைத் தமிழ் இலக்கியங்கள் சுவர்ணபூமி என்று குறிப்பிடுகின்றன. நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் தோற்றம் = சங்க காலத்தில்தான் தமிழ்நாட்...
இயக்கங்கள் கட்டப்பட்டன. வீடுகளுக்குக் கூரையாக ஓடுகள் வேயப்பட்டன. உறைகிணறுகளும் , சேமிப்புக் கிடங்குகளும் இருந்தன. சில நகரங்கள் துறைமுகப்பட்டினங்களாகவும் , கைவினைத் தொழில் மையங்களாகவும் இருந்த. கிழக்குக் கடற்கரையில் அமைந்த அரிக்கமேடு , காவிரிப்பூம்பட்டினம் , அழகன்குளம் , கொற்கை என்ற நகரும் துறைமுகங்களாகவும் விளங்கியவை. ...
பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இந்த நகரங்கள் அளவில் பெரியவை. நகரங்களைத் தவிர எண்ணற்ற சிற்றூர்களிலும் மக்கள் வாழ்ந்திருந்னர். வெண்கலப் பொருள்கள் , மணிகள் , சங்கு வளையல்கள் , கண்ணாடி மணிகள் , தமிழ் பிராமி எழுத்துகளில் மக்களின் பெயர் பொறித்த மட்கலங்கள் போன்றவை இந்த இடங்களில் கிடைத்...
மூதாதையார் வழிபாடு , வீரர்கள் வழிபாடு , சிறுதெய்வ வழிபாடு போன்றவை சங்க காலத்தில் இருந்தன. ய் குகைகளில் காணப்படும் தமிழ் பிராமி கல்வெட்டுகள்வல்ல = ஐந்திணைகளுக்கும் உரிய வழிபாட்டு கடவுள்களைத் தொல்காப்பியம் சுட்டுகிறது. குறிஞ்சிக்கு முருகன் , முல்லைக்கு திருமால் , மருதத்திற்கு இந்திரன் , நெய்தலுக்கு வருணன் , பாலைக்குக் கொ...
இலக்கியம் குறிப்பிடுகிறது. சமண சமயம் வழக்கில் இருந்தமை தெரிகிறது. வேள்விகள் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. சில இடங்களில் புத்த சமயமும் இருந்தது. வெவ்வேறு குழுக்கள் வேறுவேறான வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர். நுண்கலைகள் சங்க காலத்தில் பலவகையான கலைகளும் செழித்திருந்தன. சமய சடங்குகளின் போது நிகழ்த்தப்படும் ஆட்டங...
கூறப்பட்டுள்ளது. மகளிர் தம் கண்களுக்கு மைதீட்டுவதற்குச் செம்பினால் ஆன மெல்லிய குச்சிகளைப் பயன்படுத்தியுள்ளனர். = இக்குச்சிகள் பல அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால் தங்கள் தோற்றப் பொலிவிலும் அவர்கள் அக்கறை கொண்டிருந்தனர் எனத் தெரிகிறது. 17 தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் தமிழர் இல...
இலக்கியங்கள் ' என வகைமை செய்யப்பட்டுள்ளன. அவற்றின் வகைமையும் தொகைமையும் பற்றி இவண் காண்போம். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமான பதினெட்டு நூல்களும் பதினெண் மேற்கணக்கு என அழைக்கப்படுகின்றன. பத்துப்பாட்டு என்பது , பத்து நெடிய ஆசிரியப் பாக்களால் ஆன பாடல் களின் தொகுப்பு. எட்டுத் தொகை என்பது , எட்டு தொகுப்பு நுல்களின் தொகுதி....
என்ற இருவகை வாழ்வியற் பிரிவுகளாகக் கலந்து தொகுக்கப்பட்டுள்ளன. பத்துப்பாட்டு : எனுலும் புறவகை இலக்கியங்கள். வறுமை இத்தொகுப்பில் சரிபாதி நூல்கள் ' ஆற்றுப் படை ' யில் உழலும் புலவர் அல்லது கலைஞர் ஒருவரை வள்ளல்களிடமோ , தெய்வத்திடமோ வழிப்படுத்துவது ( ஆற்றுப்படுத்துவது ) ஆறு வழி , இவ்வகை மரபாகும். பத்துப்பாட்டில் மிகப் பெரும்...
அகநானூறு , கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் சார்ந்தவை. பதிற்றுப்பத்தும் புறநானூறும் புறம் பேசுவன. பரிபாடல் அகம்புறம் இரண்டும் இணைந்து இலங்குவது. எட்டுத்தொகையின் மொத்த பாடல்கள் 2381. பாடிய புலவர்கள் 473 பேர்கள் , கீழ்க்காணும் பட்டியல் , பத்துப்பாட்டின் எட்டுத்தொகையின் தரவுகளை மாணவர்கள் விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும். தமிழ்...
நூல்கள் எனப்படும். அவைகள் : 12 : 5 : 1 என்ற விகிதத்தில் முறையே அறம் : அகம் : புறம் பற்றிப் பேசுவன. இவ்வரிசையில் முதலிடம் பெறும் நூல் திருக்குறள். பிற , நாலடியார் , நான்மணிக்கடிகை , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , ஏலாதி , திரிகடுகம் , சிறுபஞ்சமூலம் , பழமொழி , ஆசாரக் கோவை , முதுமொழி வெண்பா மற்றும் இன்னிலை , இவையனைத்தும்...
சேரமான் கனைக்கால்இரும்பொறை கோச்செங்கணான் இடையே நடைபெற்ற போர் பற்றிப் பேசுகிறது. பெரும்பாலான நூல் கள் சமண முனிவராலும் சைவம புலவராலும் பாடப்பட்டவை. இறையனார் களவியல் : இறையனார் என்ற புலவரால் இயற்றப்பட் அகப்பொருள் நூல் இது. நக்கீரர் எழுதிய உரையுடன் இறையனார் அகப்பொருளுரையாக நமக்குக் கிடைக்கிறது. முச்சங்கம் பற்றிய அறிவிப்பைச...
மேல் படையெடுத்தலைப் பற்றிப் முத்தொள்ளாயிரம் : மையே பேசுகிறது. அகமும் புறமுமாகப் பேசும் இந்நூலின் 109 பாக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கற்பனை நயமும் காதலும் , வீரமும் எனச் சேரன் , சோழன் , பாண்டியன் என மூவேந்தர் புகழ்பாடும் நூல் இது , ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இரட்டைக்காப்பியங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிலப்பதிகாரம் , ...
தலைமை ஏற்கின்றனர். முதல்காப்பியமான சிலப்பதிகாரம் , சேரன்செங்குட்டுவனின் இளவல் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது. மூன்று உயரிய நெறிகளான அரசியல் , கற்பு , ஊடல் பற்றிப் பேசும் இக்காப்பியம் , கோவலன் - கண்ணகியின வாழ்வு பற்றிப் பேசுகிறது. கோவலன் - மாதவியின் தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் மகள் மண...
உடை. உறையுள் என மூன்றன் தேவையை உலகுக்கு உணர்த்திய பெருங்காப்பியம் இது. “ மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத் தோரே ” என்பது இக்காப்பிய அறநெறி காலத்தால் , கதைத்தொடர்பால் கதைமாந்தரின் கருதிக்கலப்பால் , பாவகையால் இவையிரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஆனால் சிலப்பு , சமயப் பொ...
இந்நூலில் காணலாம். முதலாவது சமயச்சார்பற்றது ; இரண்டாவது சமயம் சார்ந்தது. 2.மெ பக்தி இயக்கம் - சமய நூல்கள் - கி.பி. 600 - 900 தமிழகத்தில் 400 ஆண்டு காலமாகச் செல்வாக்கு பெற்ற சமண - பௌத்த சமயங்களின் ஆதிக்கத்திற்கெதிராகச் சைவமும் வைணவமும் எழுந்த காலகட்டம் இது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் காரைககாலம்மையாரின் வருகையுடன் தொடங்கு...
இயற்றப்பட்ட 3000 பாடல்களின் தொகுப்பு இந்நூல். ஞானம் , யோகம் , தவம் , மருத்துவம் எனப்பவு பேசும் இந்நூல் ' அன்பே சிவம் ’ என்றும் ‘ ஆசை அறுமின்கள் ' என்றும் உலகியல் பேசுகிறது. காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி , இரட்டை மணிமாலை , மூத்த திருப்பதிகம் ஆகியன சிவனைச் செழுமைபடப் பாடுகின்றன. அம் முதலாழ்வார்களின் திருவந்தாத...
முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தராலும் , 4 , 5 , 6 ஆம் திருமுறைகள் அப்பராலும் , 7 ஆம் திருமுறை சுந்தரராலும் பாடப்பட்டன. மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாகும் எட்டாம் திருமுறை. திருமாளிகைத் தேவர் , கருவூரார் முதலிய ஒன்பதின்மர் பாடிய திருவிசைப்பா ஒன்பதும் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசிய...
நாலாயிரத் திவ்விய பிரபந்தம் பன்னிரண்டு ஆழவார்கள் பாடிய இந்நூல் நாதமுனிகளால் தொகுக்கப்பட்டது. முதல் ஆழ்வார்கள் மூவர் தவிர மற்றையோர் 7 , 8 , 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள். பெரியாழ்வார் கண்ணன் குழந்தையாக்கித் தாலாட்ட அவர்கள் ஆண்டாள் ஆரங்கனைக் காதலனாக வரித்து நாச்சியார் திருமொழயும் திருப்பாவையும் பாடுகிறார். வேதம் தம...
போற்றுகிறார். திருமுறை. திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாக , காரைக்காலம்மையார் , பட்டினத்தடிகள் போன்றோரின் பாடல்கள் பதினோராம் திருமுறையார் உள்ளன. பக்தி இலக்கிய விளைவுகள் கடவுள்முன் எல்லோரும் சமம். கடவுளே அனைவர்க்கும் தலைவர். தமிழ் இறைவனுக்கான மொழியானது. அரண்மனை வாசலில் நின்ற மக்கள் கோயிலை நாடினர். அரண்மைைனயே ...
மறைந்தது. பலவகை நூல்கள் கி.பி.700-1300 நந்திக் கலம்பகம் பரணி 8 பெயர் அறியாப் புலவர் இயற்றிய இந்நூல் , கலம்பக நூல்களின் முதன்மையானது. தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் மேல் பாடப்பட்ட சுவை மிகுந்த நூல் இது. 19 ஆம் நூற்றாண்டில் , பூண்டி அரங்கநாதர் இயற் ' கச்சிக் கலம்பக் ' காஞ்சியின் பெருமை பேசியது. பாண்டிக் கோவை கி.பி....
தூது தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் மீது படையெடுத்த நிகழ்வைப் பாடும் போர் நூல் இது. சோழனின் தளபதி யார் விளங்கும் கருணாகரத் தொண்டைமானின் வெற்றியைப் புகழ்ந்து ஜெயய்கொண்டார் பாடிய நூல் , கலிங்கத்தப்பரண சந்தநயமும் காதலின் வீரமுமாகக் கலந்த பாடப்பட்ட நூல் சேரமான் பெருமான் நாயனார் இயற்றிய தி...
சமயச் சான்றோர் இயற்றிய ' நெஞ்சு விடு தூது ' சொக்கநாதரின் அழகர்கிள்ளை விடு தூது. பெயர் அறியாப் புலவர் இயற்றிய தமிழ்விடு தூது என்பன மிகச் சிறந்த தூது நூல்கள். காப்பிய காலம் - கி.பி.500- l200 தமிழில் பெருந்தேவனார் பாடிய பாரதம் ஒன்று இருந்துள்ளது. பெருங்கதை , ஸ்ரீபுராண் , சீவகசிந்தாமணி , சூடாமணி , வளையாபதி , குண்டலகேசி , ந...
வால்மீகியின்இராமாயணம் , தமிழில்கம்பரால் இராமாதாரம் என்றபெயரில் உருவெடுத்தது. ஆறு காண்டங்கள் , 10600 பாடல்களில் இராமகாதையைச் சொற் சிறப்புடனும் பொருட் சிறப்புடனும் நயம்படக் கம்பன் நகர்த்திச் சொல்லும் முறை வியக்கத்தக்கது. பிறன்மனை நோக்காமை , உலக சகோதரத்துவம் பற்றி விரிவாகப் பேசுவது கம்பராமாயணம். அவ்வையார் தமிழர்களுக்கு ஔவ...
காலத்தவராகக் காட்டப்படும் ஔவையாப் பிறிது ஒருவர். சோழர் காலத்தில் வாழ்ந்து ஆத்திசூடி , கொன்றை வேந்தன் , மூதுரை , நல்வழி பாடிய இன்னொரு ஒவையார். இலக்கண நூல்கள் நிகண்டுகள் வரிசையில் சூடாமணி , பிங்கலந்த , திவாகரம் , காயாதசம் என்பன அகராதிகளாக உள்ளன. தொல்காப்பிய வழிநூலான நன்னூல் சமணர் பவணந்தியாரால் இயற்றப்பட்டது. உவமை - உருவக...
யாப்பருங்கலக் காரிகை என்பன பாட்டிலக்கண நூல்கள் , நன்னூலைத் தொடர்ந்து நேமிநாதம் , வீரசோழியம் , வச்சணந்தி மாலை என்பன இலக்கண் பனுவல் கள். சமய நூல்கள் ( கி.பி. II00-1700 ) பிற்கால நாயக்கர்கள் ஆட்சிக்காலம் , அதன் பிற்பாடு என அக்காலகட்டத்தில் எண்ணற்ற தமிழ் நூல்கள் தோன்ன சந்த நயம் மிக்க ' திருப்புகழ் ' அருணகிரிநாதரால் பாடப்பட...
திருமூலர் ஆதி சித்தராக அறியப்பட , அக்திஸ்தியர் , குதம்பைச் சித்தர் , பாம்பாட்டிச் சித்தர் , அழுணிச்சித்தர் , போகர் , கடுவெளிச் சித்தர் என்போர் புகழ்மிக்கவர். சமயம் , தவம் , ஞானம் , யோகம் , இறை , பக்தி பற்றி இவர்கள் பாடின பொருட்சிறப்பு மிக்கன. சைவ சித்தாந்தம் தேவாரப் பாடல்கள் தோத்திரப் பாடல்களாக விளங்க , கி.பி.12 , 13 ,...
மொழியாரால் இயற்றப்பட்ட அகப்பொருள் நூல் இது. இளம்பூரணர் பேராசிரியர் வாய்மை மணவார் சேனாவரையார் அடியார்க்கு நல்லார் மணக்குடவர் பரிமேலழகர் தேவநாயனார் மெய்கண்டார் நக்கீரனின் இறையனார் களவியில் உரை அகப்பொருள் துறைகளை அலசுகிறது. தொல்காப்பியம் முழுமைக்கும் அருள்நந்தி சிவம் உமாபதி , தொல். எழுத்ததிகாரம் , திருக்கோவையார் தொல். சொல...
சமூக - அரசியல் இயக்கங்கள் நன்னூல் சீவக சிந்தாமணி நாலாயிரத் திவ்விய பிரபந்தம் உமாபதிசிவம் பரஞ்சோதி அதிவீரராம பாண்டியர் சிதம்பர புராணம் திருமலை நாதர் கி.பி.16 ஆம் நூற்றாண்டில் , புகழேந்திப் புலவர் , நளதமயந்தி கதையை ' நளவெண்பா ' எனப் பாடினார். ஈசான தேசிகர் என்கிற சாமிநாத தேசிகர் ' இலக்கணக் கொத்து ' என்ற நூலை இயற்றினார். த...
' திருக்குற்றாலக் குறவஞ்சி ’ புகழ்மிக்க நாடக இலக்கியம் 9 முக்கூடற் பள்ளு - என்னயினாப் புலவர் தேம்பாவணி - வீரமாமுனிவர் P இராம நாடகம் - அருணாசலக் கவிராயர் தமிழிசை மூவர் - அருணாசலக் கவிராயர் , முத்துத் த முதல் தமிழ் அச்சு நூல் - விவிலீயம் மயேண்டவர் மாரிமுத்துப் பிள்ள சுதேசிமித்திரன் ( நாளிதழ் ) - 1880 சமரச சுத்த சன்மார்க்...
எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை முதல் தமிழ்ப் புதினம் - பிரதாப் முதலியார் சரித்திரம் / மாயூரம் வேதநாயகம் பிள்ளை இருபதாம் நூற்றாண்டு காஞ்சிபுராணம் , திலகர் மாண்மியம் வள்ளலார் சரித்திரம் - அமலாம்பிகை அம்மையார் மலைக்கள்ளன் , அவனும் அவளும் ( நாவல்கள் ) - நாமக்கல் கவிஞர் 11 தமிழ் வேர்ச்சொல். அகராதி - ஞா. தேவநேயப் பாவணார் சிறுகதை ம...
வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் சிவகாமியின் செல்வன். டாக்டர் மு.வ. 18 நாவல்கள் - கள்லோ காவியமோ , கசித்துகி நெஞ்சில் தெமுள். டாக்டர் அல்லி ( நாடகம் ) ஆனந்த விகடன் நகைச்சுவை வார இதழ் , உ.வே.சா.வின் சுயசரிதை ' என் சரிதம் ’ கொத்த மங்களம் சுப்புவின் தில்லபாடி மோகனாம்பாள் தொடர்களாக வெளிவந்த இதழ். தமிழிசை இய...
- பம்மல் சம்பந்தனார். நான் கண்ட பாரதம் - அம்புஜத்தம்மாள் 1978 இல் , பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது. மகாகவி பாரதி - கண்ணன் பாட்டு , குயில்பாட்டு , பாஞ்சாலி சபதம் பாரதிதாசன் - குடும்ப விளக்கு , இருண்ட வீடு , கண்ணகி புரட்சிக் காப்பியம் , அழகின் சிரிப்பு கண்ணதாசன் - ஏசு காவியம் , சேரமான...
புதுக்கவிதையின் முன்னோடி - நா.பிச்சமூர்த்தி எழுத்து - கவிதையிதழ் - சி.சு. செல்லப்பா சைவத்தின் கொள்கை - அன்பே சிவம் வெல்லும் வைணவத்தின் கொள்கை - சரணாகதி தமிழ் நூல்களை முதலில் அச்சுக்குக் கொண்டு வந்தவர் சீகன் பால்கு. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - ராபர்ட் கால்டுவேல் உ.வே.சா.வின் தமிழ்ப்பணியைப் பாராட்டியவர் - ஜீலியன் வி...
நூல் ஆமுக்தமால்யதா தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவி : ஞர் - நாமக்கல் கவிஞர் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு - பாளையங்கோட்டை கடவுள் வாழ்த்து * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ’ திருக்குறள் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுடு விளக்கம் : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் ...
தொழாமல் இருப்பாரானால் , அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன ? மலர்மிசை ஏகினான் மாணடி 5. நிலமிசை நீடுவாழ் வார்வெல்சேர்ந்தார் ப்யல் விளக்கம் : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் , இன்ப உலகில் நிலைத்து வாழ்வார். வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்...
உடற்றும் பசி விளக்கம் : மழை பெய்யாமல் பொய்த்திடுமானால் , கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் , பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். விளக்கம் : மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால் ,...
மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும். நீத்தார் பெருமை விளக்கம் : பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல் , உலகத்தில் இதுவரை பிறந்து , இறந்தவர்களை கணக்கிடுவதைப் போன்றது. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. விளக்கம் : செய்வதற்கு அருமைய...
என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம் சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. அரன் வலியுறுத்தல் * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உ யிர்க்கு. விளக்கம் : அறம் சிறப்பைய...