text
stringlengths
11
513
கைப்பற்றினர். அனைத்து ரஷ்ய சோவியத்துக்ககளின் பேரவை அன்றே கூடி அனைத்து அரசியல் அதிகாரங்களையும் தம் வசம் எடுத்துக் கொண்டது. 1917 அக்டோபர் 25 ஆம் நாள் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. எனவே இதனை அக்டோபர் புரட்சி என்று கூறினர். பொது அவை பன்னாட்டுக் கழகத்தின் உச்ச அதிகாரம் படைத்த பொது அவையில் அதன் உறுப்பு நாடுகள் அங்கம் வகித்தன. ஒரு...
தொடக்கத்தில் நான்கு நிரந்தர உறுப்பினர்களும் , பொது அவையால் தேர்ந்தெடுக்கப் பட்ட வேறு நான்கு உறுப்பினர்களும் நிர்வாக சபையில் இடம் பெற்றிருந்தனர். 1926 ல் ஜெர்மனியும் இதில் நிரந்தர உறுப்பினராகியது. நிரந்தரமல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து அதிகபட்சம் பதினொன்றாகியது. இவ்விரண்டு உறுப்புகளில் பொது அ...
பொது செயலர் , நிர்வாக சபையின் ஆலோசனையின்பேரில் செயலகத்தின் இதர பணியாளர்களை நியமித்தார். செயலகத்தின் செலவுக்கான நிதியை உறுப்பு நாடுகள் வழங்கின. பன்னாட்டு கழகத்தின் அமைப்பு பன்னாட்டு நீதிமன்றம் விளக்கங்களையும் முக்கிய தீர்ப்புகளையும் இந்த நீதிமன்றம் வழங்கியது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஒன்பது ஆண்டுப் பதவிக்காலத்திற்...
பாதுகாப்பது ஆகும். இதன் நிர்வாகச் சபையில் முக்கிய உறுப்பினர்கள் அரசாங்கம் , தொழிலதிபர்கள் , தொழிலாளர்கள் ஆகியோர் ஆவர். மேன்டேட் முறை இந்த முறையை பன்னாட்டுக் கழகம் ஏற்படுத்தியது. ஜெர்மனி போன்ற ஒப்பந்த நாடுகள் மற்றும் துருக்கியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகள் திரும்பவும் அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக , ...
இடையில் உள்ளன. முன்னர் ஆலந்து தீவுகள் ஸ்வீடனின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆலந்து தீவுகள் யாருக்கு உரிமையானது என்பது குறித்த சர்ச்சை ஸ்வீடனுக்கும் பின்லாந்துக்கும் இடையே 1920 ல் தோன்றியது. பன்னாட்டுக் கழகத்தின் சார்பில் ஒரு சிறப்புக்குழு ஆய்வு செய்து , ஆலந்து தீவுகளை பின்லாந்திடம் ஒப்படைத்தது. மொசூல் எல்லைச்சிக்கல் கிரேட...
என்று இரண்டு தரப்பும் கூறின. இருதரப்பு எல்லை குறித்து எந்தவொரு உடன்பாட்டுக்கும் வரவில்லை. எனவே , பன்னாட்டுகழகம் தனது இறுதி முடிவை அறிவித்தது. ஈராக் , துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையில் பிரஸ்ஸல்ஸ் எல்லைக்கோடு நிரந்தர எல்லையாக முடிவு செய்யப்பட்டது. பின்னர் 1926 ஜூனில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கைப்படி கிரேட் பிரிட்டன் துரு...
1920 மற்றும் 1921 ஆம் ஆண்டுகளில் யூபென் , மால்மடி பகுதிகள் பெல்ஜியத்திற்கு வழங்கப்பட்டன. இதனை எதிர்த்து ஜெர்மனி பன்னாட்டு சங்கத்திடம் முறையிட்டது. 1920 செப்டம்பரில் கழகத்தின் நிர்வாக சபை இது குறித்து விவாதித்தது. யூபென் , மால்மடி பகுதிகளை பெல்ஜியத்திற்கு வழங்கியது இறுதியான முடிவு என்று ஜெர்மனி அரசுக்கு தகவல் அனுப்பியது...
இத்தாலியின் கோரிக்கையை கிரேக்கம் மறுத்தது. எனவே , செர்பு தீவை இத்தாலி ஆக்ரமித்துக் கொண்டது. இந்த பிரச்சினையில் இங்கிலாந்தும் பிரான்சும் தலையிட்டு இத்தாலி கிரேக்க நாடுகளுக்கிடையே சமரசத்தை ஏற்படுத்தியது. கிரீஸ் மற்றும் பல்கேரியா இடையிலான பிரச்சனை கிரிஸ் பல்கேரியா நாடுகளுக்கிடையே எல்லைத்தகராறு இருந்து வந்தது. 1925 ல் ஒரு ...
கேட்டுக்கொண்டது. கிரேக்கப்படைகள் திருப்பியழைக்கப்பட்டன. பல்கேரியாவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. கிரேட் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையிலான பிரச்னை டியூனிஸ் மற்றும் மொராக்கோ தேசியம் குறித்து கிரேட் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் பிரச்னை தோன்றியது. பன்னாட்டு நீதிமன்றத்தின்முன்பு இந்த பிரச்சினை எடுத்து செல்லப்...
ஆற்றியுள்ளது. 1925 ல் ஜெனீவா நகரில் அடிமை முறை குறித்த மாநாடு நடைபெற்றது. 1932 ல் ஒரு நிரந்தர அடிமைமுறை ஆணையம் நிறுவப்பட்டது. பன்னாட்டுக் கழகத்தின் நிதி ஆணையம் ஆஸ்திரியா , ஹங்கேரி , கிரீஸ் போன்ற நாடுகளுக்கு கடனுதவி வழங்கியது. 1923 ல் பன்னாட்டுக் கழகம் ஒரு சுகாதார அமைப்பை ஏற்படுத்தியது. மலேரியா , அம்மை , நாய்க்கடி , வெற...
கூட்டியது. போதைப் பொருள்தடுப்பு. குடியானவர் முன்னேற்றம் போன்றவற்றில் பன்னாட்டுக் கழகம் பெரும்பணிகளை ஆற்றியுள்ளது. பன்னாட்டுக் கழகத்தின் தோல்விக்கான காரணங்கள் உலக அமைதியை ஏற்படுத்தும் தலையாய் கடமையில் பன்னாட்டுக் கழகம் தோல்வி கண்டது. இருபதாண்டுகள் பன்னாட்டுக் கழகம் அமைதிக்கான முயற்சிகளை எடுத்தபோதிலும் , 1939 ல் மீண்டும்...
பன்னாட்டுக் கழகத்தின் சட்ட ஆவணம் அமைதி ஏற்பாட்டின் ஒரு பகுதியாகவே இருந்தது மிகவும் துரதிர்ஷ்டமானதாகும். அவையிரண்டும் தனித்தனியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வெர்சேல்ஸ் உடன்படிக்கையை பல நாடுகள் பழிவாங்கும் உடன்படிக்கை என்று கருதி அதனை ஏற்க மறுத்தன. உடன்படிக்கையை ஏற்காததால் பன்னாட்டுக் கழகத்தில் உறுப்பினராக ம...
நாடுகள் குறிப்பாக இங்கிலாந்து , பிரான்சு ஆகியவை கழகத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக உலக நாடுகளிடையே பரவலான கருத்து இருந்தது. எனவே , பன்னாட்டுக் கழகத்தின் செயல்பாடுகளை அந்த நாடுகள் சந்தேகத்துடன் நோக்கின. ஜெர்மனி போன்ற நாடுகளை வெற்றிபெற்ற நாடுகள் அவமானப் படுத்தின. பொருளாதார சீர்குலைவில் சிக்கித்தவித்த தருணத்தில் ஜெர்மனி போர்...
எழுச்சி பெற்றன. தூரகிழக்குப்பகுதியில் ஜப்பான் மஞ்சூரியாவைக் கைப்பற்றியது. ஜப்பானின் இந்த நடவடிக்கையை கண்டிக்கும் நிலையில் பன்னாட்டுக் கழகம் இல்லை. கண்டித்தால் கழகத்தைவிட்டு வெளியேறவும் ஜப்பான் தயாராக இருந்தது. இத்தாலியிலும் பாசிச சர்வாதிகாரம் தோன்றியது. குறுகிய தேசிய உணர்வை மக்களிடம் பரப்பியது. இத்தாலி அபிசீனியாவைக் கை...
பெற்றது. போலியானதொரு தேசப்பற்றை ஹிட்லர் போதித்தார். பிற இனங்களைவிட ஜெர்மானிய இனம் உயர்ந்தது என்றும் அவர் கூறினார். ஆஸ்திரியா , போலந்து ஆகியவற்றின்மீது ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று கூறி அவற்றை ஹிட்லர் கைப்பற்றினார். இந்த செயலைத் தட்டிக் கேட்டதால் , ஜெர்மனி பன்னாட்டுக் கழகத்திலிருந்து வெளியேறியது. பன்னாட்டுக் க...
சிக்கலில் இருந்த ஜெர்மனியை போர் இழப்பீட்டைத் தருமாறு பிரான்ஸ் வற்புறுத்தியதால். அந்நாட்டு அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது. வெய்மார் குடியரசு வீழ்ச்சியடைந்தது. இதனால் , ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்தைக் கைப்பற்றினார். பன்னாட்டுக் கழகத்தின் தோல்விக்கு அவரது நடவடிக்கைகள் காரணமாயின. முதல் உலகப்போரின் முடிவில் பன்னாட்டுக...
சிதைவுக்குப்பிறகு ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்டது. பாடம் – 30 பாசிச , நாசிச கொள்கைகளின் எழுச்சி கற்றல் நோக்கங்கள் இந்த பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்தி 1. இத்தாலியில் பாசிசத்தின் எழுச்சியும் அதற்கான காரணங்களும். 2. முசோலினியின் அயல்நாட்டுக் கொள்கை 3. ஜெர்மனியில் நாசிசத்தின் எழுச்சியும் அதற்கான காரணங்களும் 4. ஹிட்ல...
1915 ஆம் ஆண்டு நேச நாடுகளுடன் இத்தாலி ரகசியமாக செய்து கொண்ட லண்டன் உடன்படிக்கை அதற்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்தது. பாரிஸ் மாநாட்டில் , இத்தாலிய அமைச்சர் ஆர்லாண்டோ தமது கோரிக்கைகளை முன்வைத்தார். ஆனால் , அமெரிக்க அதிபர் உட்ரோவில்சன் லண்டன் உடன்படிக்கையை நிராகரித்துவிட்டார். ஏட்ரியாடிக் கடல்பகுதியிலிருந்த தீவுகள் , சில து...
பயனும் கிட்டவில்லை. “ இத்தாலி போரில் வென்றது : ஆனால் அமைதியை இழந்தது. ” பொருளாதார நிலை முசோலினி முதல் உலகப்போரின்போது இத்தாலி தனது தேசிய வருமானத்தைவிட அதிகமாகவே பெருந்தொகையை செலவிட்டது. இதனால் அதன் பொருளாதாரம் சீர்குலைந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. இத்தாலிய அரசாங்கமே இதற்கு காரணம் என்று மக்கள் நம்பினார்கள...
, போன்ற காரணங்களால் சோஷலிச கருத்துக்கள் இத்தாலிய மக்களிடையே வேகமாகப் பரவியது. மார்க்சீய கோட்பாட்டாளர்கள் ‘ இத்தாலிய சோஷியல் டெமாகிரட் ’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வந்தனர். 1919 ஆம் ஆண்டு தேர்தலில் இக்கட்சி மொத்தமிருந்த 574 இடங்களில் 156 இடங்களில் வெற்றி பெற்றனர். இக்கட்சி இத்தாலியில் பாசிசம் வளர பேருதவியாக இரு...
முதலே சோஷலிச சித்தாந்தத்தில் அவர் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் பள்ளி ஆசிரியராகவும் , தொழிற்சங்கவாதியாகவும் பின்னர் பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். புரட்சி கருத்துக்களை பரப்பியதற்காக முசோலினி 1908 இல் சிறைப்படுத்தப்பட்டார். 1912 ல் சோஷலிச பத்திரிகையான அவந்தி என்ற ஏட்டின் பதிப்பாளரானார். முதல் உலகப்போர் தொடங்கியப...
தண்டிக்கப்பட்டார். பின்னர் , நேச நாடுகளுக்கு ஆதரவாக இத்தாலி போரில் இறங்க வேண்டியதாயிற்று. இதனால் , முசோலினியின் புகழ் அதிகரித்தது. ஒரு வீரனாக முசோலினியும் போரில் கலந்துக்கொண்டார். 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் போல்ஷ்விக் புரட்சி நடைபெற்றது. ரஷ்ய புரட்சி இத்தாலிய மக்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இத்தாலிய கம்யூனிஸ்ட்களும் ஒரு ...
தலைமையில் பாசிச கட்சி தொடங்கப்பட்டது. அதன் உறுப்பினர்கள் கருஞ்சட்டை அணிந்ததோடு கையில் ஆயுதமும் ஏந்தினர். கட்சிக்கொடியும் உருவாக்கப்பட்டது. அக்கட்சியின் உறுப்பினர்கள் கட்டுப்பாடு மிகுந்தவர்களாக இருந்ததோடு முசோலினியை தங்களது தலைவராக ஏற்றுக்கொண்டனர். மிலானில் நடைபெற்ற பாசிச கட்சியின் முதலாவது மாநாட்டில் முசோலினி கட்சியின்...
திருச்சபை சொத்துக்களை பறிமுதல் செய்தல் தொழிற்சாலைகளில் எட்டு மணி நேர வேலை ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குதல். பாசிச கட்சியின் இந்த கோரிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை வேகமாகப் பெருகியது. 1919 ல் , 17000 பேர் மட்டுமே பாசிச கட்சியில் உறுப்பினர்களாயிருந்தனர். 1922 ல் அது மூன்று ல...
கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமைச்சரவையில் பாசிச கட்சி உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ளவேண்டும் ; சட்டமன்றங்களுக்கு புதிதாக தேர்தல் நடத்தவேண்டும் ; தீவிர அயலுறவுக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்பதே இந்த கோரிக்கைப்பட்டியலின் முக்கிய அம்சங்கள். இதனை இத்தாலிய அரசாங்கம் ஏற்க மறுத்தது. எனவே , முசோலினியின...
அரசாங்கம் கேட்டுக் கொண்டது. இறுதியில் ஆட்சியமைக்குமாறு முசோலினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இத்தாலிய பிரதமராக முசோலினி முசோலினி செயல்திறம் படைத்த பிரதமராகத் திகழ்ந்தார். ஆட்சியை சீரமைக்க பல நடவடிக்கைகளை அவர் எடுத்தார் ; நேபிள்ஸ் , சிசிலி போன்ற பகுதிகளிலிருந்த கொள்ளையர்கள் நசுக்கப்பட்டனர். தொழிலாளர்களின் சமூக , பொருளாத...
நியமிக்கப்பட்டனர். திருத்தப்பட்ட புதிய சட்டங்களின்படி தேர்தல்கள் நடத்தப்பட்டன. தேசிய நாடாளுமன்றத்தில் பாசிச கட்சி அருதிப் பெரும்பான்மை பெற்றது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு எதிரிகளை ஒடுக்க முசோலினி சில நடவடிக்கைகளை எடுத்தார். உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் முடக்கப்பட்டன. பாசிச வழக்குரைஞர்கள் மட்டுமே வழக்குகளில் வாதாட அனு...
வழங்கப்பட்டது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறைப்படுத்தப்பட்டனர். சர்வாதிகாரியாக முசோலினி ஒரே கட்சி , ஒரே தலைவர் என்பது பாசிச கட்சியின் அடிப்படைக் கொள்கையாகும். முசோலினிக்கு மக்களாட்சி முறையிலோ , பெரும்பான்மை ஆட்சியிலோ நம்பிக்கையில்லை. அரசின் எதேச்சாதிகாரத்தையே அவர் பெரிதும் நம்பினார். தனிமனித உரிமை என்பது ஏதும் இல்லை. ம...
மற்றும் பிற முறியடிக்கப்பட்ட நாடுகள்மீது அமைதி உடன்படிக்கைகள் திணிக்கப்பட்டன. இதன் விளைவாக ஜெர்மனியில் தீவிர தேசியம் பொங்கியெழுந்தது. பொருளாதார சீர்குலைவும் அதைத்தொடர்ந்து எழுந்த சோஷலிச சக்திகளும் ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கும் நாசிச கொள்கைகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தன. இத்தாலியிலும் , ஜப்பானிலும்கூட அதே நிலைமைக...
ஜெர்மனி முதல் உலகப்போரின் இறுதிக்கட்டத்தல் ஜெர்மானிய அரசர் வில்லியம் தனது பதவியைத் துறந்தார். ஜெர்மனி ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. சோஷலிச டெமாகிரடிக் கட்சியின் தலைவரான எல்பர்ட் ஒரு தற்காலிக அரசை அங்கு அமைத்தார். பின்னர் அரசியலமைப்பு குழுவிற்கான தேர்தல் நடைபெற்றது. வெய்மார் நகரில் அரசியலமைப்புக்குழு கூட்டம் நடைபெற்றத...
விதத்திலும் அமைந்திருந்தது. ஜெர்மனி தனது நிலப்பகுதியில் பலவற்றை இழந்தது. ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. போர் இழப்பீட்டுத்தொகை பலமடங்கு நிர்ணயிக்கப்பட்டது. உலகப் போருக்கு ஜெர்மனியே காரணம் என்றும் கூறப்பட்டது. இதனால் , ஜெர்மானியரின் உணர்வுகள் பெரிதும் புண்பட்டன. வெர்சேல்ஸ் உடன்படிக்கையில் கையெழுத்திடுவத...
அரச ஆதரவாளர்கள் குடியரசு அரசாங்கத்திடம் சரணடைந்தனர். பின்னர் , லுடன்டார்ப் என்பவரது தலைமையில் இரண்டாவது கிளர்ச்சி நடைபெற்றது. இவருக்கு ஹிட்லர் பக்கபலமாக இருந்தார். லூடன்டாப் , ஹிட்லர் இருவருமே கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனைக்குட்படுத்தப்பட்டனர். இந்த சிறை வாசத்தின் போதுதான் ஹிட்லர் தனது புகழ்பெற்ற ‘ மெய்ன் ...
நிதிநெருக்கடிக்கு ஆளாகியது. போர் இழப்பீட்டை செலுத்துவதற்காக அரசாங்கம் பெருந்தொகை கடன் வாங்க வேண்டியிருந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வணிகம் முடங்கிப்போயிற்று. வரிச்சுமை அதிகரித்தது. நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு அரசாங்கம் காகிதப் பணத்தை மேலும் அச்சிட வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இதனால் , பணவீக்கம் ஏற்பட்டு பணத்தின் ...
வேண்டியிருந்தது. போர் இழப்பீட்டுத் தொகை 660 மில்லியன் பவுண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு ஜெர்மனியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. முதல் உலகப்போருக்கு ஜெர்மனி காரணம் இல்லை என்றும் போர் இழப்பீடாக இவ்வளவு பெரிய தொகையை ஜெர்மனி செலுத்த வேண்டியதில்லை என்றும் எதிர்பாளர்கள் வாதாடினர். டாஸ் திட்டம் ஜெர்மனியில் நிலவிய நிதி ...
கொண்ட ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழு வெர்சேல்ஸ் உடன்படிக்கையின் பிரிவுகளின் ஒருசில திருத்தங்களை செய்தது. ஜெர்மனியின் நிதிச்சுமை ஓரளவுக்கு குறைக்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டு மீண்டும் போர் இழப்பீட்டுப் பிரச்சினை தோன்றியபோது யங் குழு அறிவித்த திட்டத்தின்படி அதற்கு தீர்வு காணப்பட்டது. ஹிட்லரும் நாசிச ஜெர்மனியும் அடால்ப் ...
அவரது தந்தை விரும்பினார். ஆனால் , ஹிட்லர் சிறுவயது முதலே கலையில் ஆர்வம் காட்டினார். தனது 18 வது வயதில் ஓவியம் மற்றும் கட்டிடக்கலை பயில்வதற்காக வியன்னா நகருக்கு சென்றார். வியன்னாவில் அவர் இருந்தபோது அங்கு வாழ்ந்த யூதர்களின் பழக்கவழக்கங்களை பார்க்க நேர்ந்தது. தனிப்பட்ட ஆளுமை , தேசியம் , இனவாதம் போன்றவற்றுக்கு யூதர்கள் தா...
ஹிட்லர் ஜெர்மானிய இனத்தின் மேன்மையில் அசையாத நம்பிக்கை கொண்டார். முதல் உலகப்போரின்போது , ஹிட்லர் ராணுவத்தல் சேர்ந்து போரில் பங்குபெற்றார். போரில் ஆற்றிய வீரச் செயல்களுக்காக ‘ இரும்புச் சிலுவை ’ என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. யூதர்களும் , கம்யூனிஸ்டுகளுமே ஜெர்மனியின் தோல்விக்கு காரணம் என ஹிட்லர் நம்பினார். தோல்விக்...
ஸ்வஸ்திகா 1932 ஆம் ஆண்டு வாக்கில் நாசிச கட்சியின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது. தனது கட்சியில் இளைஞர்களை கவர்ந்திழுப்பதற்கு ‘ ஹிட்லர் இளைஞர் கழகம் ’ என்ற அமைப்பையும் ஹிட்லர் தோற்றுவித்தார். இரண்டு ராணுவ அமைப்புகளையும் அவர் ஏற்படுத்தினார். பழுப்பு நிற சட்டை அணிந்த ஒரு அமைப்பினர் கைப்பட்டையில் சிகப்பு நிறத்தல் ஸ்வஸ்தி...
போட்டியிட்டார். ஆனால் ஹிண்டன்பர்க் என்பவருக்கு எதிராக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.அதே ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது கட்சி நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக வெற்றி பெற்றது. பெரும்பான்மை கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் , அரசியலமைப்பு விதிகளின்படி ஹிட்லர் ஜெர்மனியின் சான்சலரா...
செய்யப்பட்டனர். மக்களின் சிவில் உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. வெய்மார் குடியரசு முடிவுக்கு வந்தது. ஹிட்லர் மூன்றாவது ‘ ரெய்ச் ’ அமைக்கப்பட்டதாக அறிவித்தார். நாசிச கட்சியின் கொடியே தேசியக் கொடியாயிற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அதன் அதிகாரங்கள் ஹிட்லருக்கு மாற்றப்பட்டன. யூதர்களுக்கு எதிரான கொள்கை தங்களது செல்வ வளத்தால...
யூதருக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டன. ஜெர்மானிய குடியுரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. யூதர்களை பொருளாதார மற்றும் பண்பாட்டு ரீதியில் புறக்கணிப்பதற்காக அவர் கடுமையான ஒடுக்குமுறைகளை பின்பற்றினார். ராணுவ சீர்திருத்தங்கள் ஜெர்மானிய தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிட்லர் ராணுவத்தை சீரமைத்தார். ஜெர்மானிய இனத்தவர் மட்டுமே ...
ஹிட்லர் , வெர்சேல்ஸ் உடன்படிக்கையை ஏற்க மறுத்தார். அது ஒரு திணிக்கப்பட்ட உடன்படிக்கை என்பதால் அவமானச் சின்னமாகக் கருதினார். ஹிட்லரது இக்கருத்தை ஜெர்மானிய மக்களும் ஆதரித்து , அவரையே தங்களது தலைவராக ஏற்றனர். அவரது அயலுறவுக் கொள்னையின் முக்கிய அம்சங்களாவன. பன்னாட்டுக் கழகத்தைவிட்டு வெளியேறுதல் 1932 பிப்ரவரி 3 ஆம் நாள் பன்...
பெருக்குதல் 1935 மார்ச் 16 ஆம் நாள் ஜெர்மானியர்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவித்தார். இங்கிலாந்து மற்றும் பிரான்சுக்கு இணையானதொரு விமானப் படையை ஜெர்மனி பெறவேண்டும் என்று அவர் கருதினார். சுய பாதுகாப்புக்காகவே ராணுவ வலிமையை பெருக்குவதாக அவர் கூறிக்கொண்டார். ரைன்லாந்துப் பகுதியை ராணுவ மயமாக...
ராணுவக் கட்டுமானங்களையும் ஏற்படுத்த தொடங்கினார். ஜெர்மனியின் இந்த நடவடிக்கையை பிரான்சு எதிர்த்தது. ஆனால் , இங்கிலாந்து அமைதியுடன் ஹிட்லரின் நடிவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்தது. இதனால் , பிரான்சும் இங்கிலாந்தும் இணைந்து ஹிட்லரின் ஆக்ரமிப்பு நடவடிக்கைக்கு முடிவு கட்டுவதற்கான வாய்ப்பை நழுவ விட்டன. ஸ்பானிய உள்நாட்டுப்போ...
இத்தாலியும் பிராங்கோவை ஆதரித்தன. குடியரசை ரஷ்யா ஆதரித்தது. குடியரசு வீழ்த்தப்பட்டு பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டது. ஸ்பானிய உள்நாட்டுப் போரின் விளைவாக ஜெர்மனிக்கும் இத்தாலிக்கும் இடையே நட்புறவு மேலும் நெருக்கமடைந்து உடன்படிக்கைக்கும் இட்டுச் சென்றது ரோம் – பெர்லின் டோக்கியோ அச்சு 1936 அக்டோபரில் இவ்விரு நாட...
வெறுத்தார். எனவே , ரஷ்யாவின் எதிரியான ஜப்பானுடன் 1936 நவம்பரில் கம்யூனிச எதிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். 1937 நவம்பரில் இத்தாலியும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டது. இந்த மூவர் கூட்டிணைவே ரோம் பெர்லின் டோக்கியோ அச்சு என அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து , பிரான்சு , ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிராக இந்த அச்சு அமை...
அணிந்தனர். 1. ஹிட்லரின் ஆக்ரமிப்பான அயலுறவுக்கொள்கை இரண்டாம் உலகப் போருக்கு வழி வகுத்தது. ‘ மெய்ன் கேம்ப் ’ என்ற நூலை ஹிட்லர் எழுதினார். டாக்டர் காப் என்பவரது தலைமையில் ஸ்பானிய உள்நாட்டுப்போர் தொடங்கியது. சிறு குறிப்பு வரைக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) பாசிசம் நாசிசம் ரோம் - பெர்லின் டோக்கியோ அச்சு சுருக்கமான விடை த...
நோக்கங்கள் இந்தப் பாடத்திலிருந்து மாணவர் அறிந்து கொள்வது பாடம் – 31 இரண்டாம் உலகப்போர் ( 1939-1945 ) 1. இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள் 2. சர்வாதிகாரத்தின் எழுச்சியும் போருக்கான பிற காரணங்களும். 3. இரண்டாம் உலகப் போரின் போக்கு 4. இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் பாரிஸ் ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டன. 1918 ஆம் ஆண்டு முத...
குறிப்பிடத்தக்கது. போரின் லாபத்தை பகிர்ந்து கொள்ளும் பொருட்டு வெற்றி பெற்ற நாடுகள் கூட்டிய கூட்டமாகவே இம்மாநாடு திகழ்ந்தது. தோல்வியடைந்த நாடுகள் மிக மோசமாக நடத்தப்பட்டன. உலகில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவது குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனின் முயற்சியால் உலக நாடுகளுக்கிடையே எழும் ப...
அரசுகள் தோன்றின. ரோம் , பெர்லின் , டோக்கியோ அச்சு உருவாகி இரண்டாம் உலகப்போருக்கு வழிவகுத்தது. இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள் முதல் உலகப் போரில் ஜெர்மனி தோல்வியடைந்தது. பாரிஸ் அமைதி மாநாட்டுக்கு அது அழைக்கப்படவில்லை. கடுமையான மற்றும் அவமானகரமான உடன்படிக்கையில் கையெழுத்திடும்படி அது வற்புறுத்தப்பட்டது. ஜெர்மானிய நிலப...
போருக்குப்பின் செய்யப்பட்டன. தோன்றிய பிரச்சினைகள் எதையும் சமாளிக்க இயலாமல் தடுமாறியது. ஜெர்மனிக்கு நேர்ந்த அவமானத்தை துடைத்தெறிய அதன் மக்கள் துடித்தனர். எனவே , இரண்டாம் உலகப்போரை பழிவாங்குவதற்கான ஊன்றப்பட்டிருந்தன. போர் கூறலாம். இரண்டாம் உலகப் விதைகள் வெர்சேல்ஸ் என்றும் போருக்கான உடன்படிக்கையில் வெர்சேல்ஸ் உடன்படிக்கை ...
மற்றும் ஆசியாவில் ஜப்பான் ஆகிய நாடுகளில் சர்வாதிகாரம் வேரூன்றியது. ஜெர்மனியில் வெய்மார் குடியரசு பலவீனமாகவே காணப்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நாசிசக்கட்சியின் தலைவரான ஹிட்லர் அரசாங்கத்தை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தார். ஆக்கிரமிப்பு கொள்கையைப் பின்பற்றிய அவர் ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லோவேகியா...
இத்தாலி கருதியது. முசோலினி தனது பாசிச கட்சியை அங்கு தொடங்கி 1922 ல் ஆட்சியைக் கைப்பற்றி தனது சர்வாதிகார ஆட்சியை நிறுவினார். அவரும் ஆக்கிரமிப்பான அயலுறவுக் கொள்கையையே பின்பற்றினார். ஸ்பெயின் மற்றும் ஜப்பானிலும் சர்வாதிகார உணர்வு தலையெடுத்தது. ஸ்பெயினில் தளபதி பிராங்கோ அங்கிருந்த குடியரசு ஆட்சியை கவிழ்த்துவிட்டு தனது சர்...
முசோலினிக்கும் நண்பனாயிற்று. இந்த உடன்படிக்கை உலக அமைதிக்கு கேடு விளைவித்து இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கும் காரணமாயிற்று. ராணுவ மயமாக்கல் முதலாம் உலகப் போருக்குப்பிறகு ஆயுதக் குறைப்புக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்காததால் புதிய போர் மூண்டது. பாரிஸ் அமைதி மாநாட்டில் ஜெர்மனியின் படைபலம் வெகுவாகக் குறைக்கப்பட்...
பெருக்கினார். ஆயுதங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டதாலும் , ராணுவ மயமாக்கத்தாலும் இரண்டாம் உலகப்போர் தவிர்க்க முடியாததாகிவிட்டது. பேரரசுக் கொள்கை இரண்டாம் உலகப்போருக்கு பேரரசுக் கொள்கையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. முதல் உலகப் போரில் காணப்பட்ட பேரரசு ஆதிக்க உணர்வே இப்போதும் காணப்பட்டது. நேச நாடுகளைவிட பேரரசு ஆ...
செயல்பட்டன. ரைன்லாந்து , ஆஸ்திரியா , மெமல் , செக்கோஸ்லோவேகியா போன்ற பகுதிகளை ஹிட்லர் ஜெர்மனியுடன் இணைத்துக் கொண்டார். ஜப்பான் மஞ்சூரியாவைத்தாக்கி அதனை சீனாவிடமிருந்து அபகரித்துக் விரிவுபடுத்துவதையே கொண்டது. அபிசீனியாவைக் கைப்பற்றிய முசோலினி தொடர்ந்து ஆக்ரமிப்பு நடவடிக்கைகளையே பின்பற்றினார். குடியேற்றக் கொள்கை ஐரோப்பிய ...
உலகப் போருக்குப் பின்பும்கூட இந்தப்போக்கு நீடித்தது. பாரிஸ் அமைதி மாநாட்டில் ஜெர்மனியின் குடியேற்றங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. நேச நாடுகளின் இந்த நடவடிக்கையை இத்தாலியும் விரும்பவில்லை. ஆசியாவில் வலிமைமிகுந்த நாடாக விளங்கிய ஜப்பானும் தனது வளங்களைப் பெருக்க முனைந்தது. இத்தகைய சூழ்நிலையில் ஜெர்மனி , இத்தாலி , ஜப்பான் மூ...
போருக்குப் பிறகு உலக அமைதியைக்காக்கவும் , நாடுகளுக்கிடையே எழும் சிக்கல்களை சுமூகமாகத் தீர்க்கவும் பன்னாட்டுக் கழகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் , கழகத்தின் உறுப்பு நாடுகளே அதன் கோட்பாடுகளை மதித்து நடக்கவில்லை. கழகத்தின் விதிகளை மீறிய நாடுகள் , எவ்வித தண்டனையுமின்றி கழகத்தைவிட்டு வெளியேறவும் செய்தன. எடுத்துக்காட்டாக , மஞ்ச...
நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாடுகளைத் தட்டிக்கேட்க முடியாத பன்னாட்டு கழகத்தின் தோல்வியே இரண்டாம் உலகப் போருக்கு முக்கிய காரணமாயிற்று. தேசிய சிறுபான்மையினரின் மனக்குறை நேச நாடுகள் தங்களை சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் பாதுகாவலர்களாகக் கூறிக்கொண்ட போதிலும் , அவற்றை அந்த நாடுகள் மதித்து நடக்கவில்லை. மத்திய ஐரோப்பாவின் ஒரு சில ...
ஆஸ்திரியா , சுடட்டன்லான்ந்து நாடுகளை இணைத்துக் கொண்டதோடு , பின்னர் போலந்தின்மீதும் தாக்குதல் நடத்தியது. தேச நாடுகளுக்கிடையிலான வேறுபாடுகள் நேச நாடுகளுக்கிடையேயும் கூட்டுறவு நிலவவில்லை. ஜெர்மனியை சமாதானப் படுத்துவதையே இங்கிலாந்து நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. ஜெர்மனி குறித்த பிரான்சு கொண்டிருந்த அச்சத்தை இங்கிலாந்து ஏற...
முடியாமல் போயிற்று. போரின் போக்கு பாரிஸ் அமைதி மாநாட்டு முடிவுகளின்படி போலந்து சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. கிழக்கு பிரஷ்யா ஜெர்மனியிடமிருந்து பிரிக்கப்பட்டது. ஆனால் ஹிட்லர் கிழக்கு பிரஷ்யாவை மீண்டும் ஜெர்மனியுடன் இணைக்க விரும்பினார். இதனால் , 1939 செப்டம்பர் 1 - ஆம் நாள் ஹிட்லர் போலந்துமீது தாக்குதல் தொடுத்தார். ச...
பிரான்ஸ் ) ஸ்பெயின் | டென்மார்க் ஜர்மனி போலந்து சோவியத் சமதர்ம குடியரசு செக்கஸ்லோவாக்கியா ஆஸ்திரியர் அங்கேரி ரூமேனியா யூக்கோசலேவியா. மைய நிலக்கடல் PMG கரியங் கருங்கடல் ஜெர்மனி நடுநிலை நாடுகள் ஜெர்மனியின் சார்பு நாடுகள் அச்சு நாடுகளால் கைப் 21111 பற்றப்பட்ட இடங்கள் ஜெர்மனியின் எதிர்ரப்பு நாடுகள் 1940 ஏப்ரலில் ஜெர்மனி டெ...
பிரிட்டிஷ் துருப்புக்களை எதிர்கொண்டது. ஜெர்மனியின் உதவியுடன் முசோலினி கிரீஸ் நாட்டைத் தாக்கி கைப்பற்றிக் கொண்டார். யுகோஸ்லேவியா மற்றும் கிரீட் ஜெர்மானியரால் கைப்பற்றப்பட்டது. பிரான்ஸ் வீழ்ச்சியடைந்தபின் பிரிட்டன் தனித்து விடப்பட்டது. ஜெர்மனி பிரிட்டன்மீது தொடர்ந்து குண்டுமழை பொழிந்தது. ஆனால் வின்ஸ்டன் சர்ச்சிலின் சீரிய...
மாபெரும் தவறிழைத்தது. ஸ்டாலின் கிராட் நகரில் நடைபெற்ற போர் மிகமுக்கியமானது. ஐந்து மாதங்கள் அப்போர் நீடித்தது. இரண்டு மில்லியன் மக்கள் , 2000 ராணுவ டாங்குகள் , 2000 போர் விமானங்கள் இதில் ஈடுபட்டன. இருப்பினும் ஜெர்மனியின் படைகள் விரட்டப்பட்டன. 1943 பிப்ரவரியில் சுமார் 90,000 ஜெர்மானிய வீரரர்கள் சரணடைந்தனர். இது போரின் மு...
ஜெனரல் மெக் ஆர்தர் தென்கிழக்கு ஆசியப் பகுதியின் நியமிக்கப்பட்டார். தளபதியான மவுண்ட்பேட்டன் பிரபு ஜப்பானியப் படைகளை பர்மாவை விட்டு விரட்டியடித்தார். பெர்ல் துறைமுகம் ஆப்ரிக்க முனையில் , அமெரிக்கா அபிசீனியாவைக் கைப்பற்றியது. இத்தாலிக்கு மான்ட்கோமரி சொந்தமான சோமாலியாலாந்தும் கைப்பற்றப்பட்டது. பிரிட்டிஷ் படைத்தளபதி ஜெனரல் ...
கைப்பற்றின. வட ஆப்ரிக்காவிலிருந்து ஜெர்மானிய இத்தாலியப் படைகள் விரட்டப்பட்டன. பின்னர் இத்தாலி மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதற்குள் இத்தாலியில் கலகம் வெடித்தது. முசோலினி கைது செய்யப்பட்டார். ஆனால் ஜெர்மனியரின் உதவியுடன் அவர் தப்பினார். 1943 செப்டம்பரில் இத்தாலி நிபந்தனை ஏதுமின்றி சரணடைந்தது. 1945 ஏப்ரலில் முசோலினி...
நாடுகளின் படைகள் தாக்கின. கிழக்கிலிருந்து ரஷ்யா ஜெர்மனிமீது தாக்குதல் தொடுத்தது. 1945 மே இரண்டாம் நாள் ரஷ்யப் படைகள் பெர்லின் நகருக்குள் நுழைந்தன. ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார். ஜெர்மனி சரணடைந்தது.ஜெர்மனி சரணடைந்தபிறகும் கூட ஜப்பான் போரைத் தொடர்ந்து நடத்தியது. 1945 ஆகஸ்டு ஆறாம் நாள் ஹிரோஷிமாவிலும் , ஒன்பதாம் நாள் நாகச...
கொல்லப்பட்டனர். 17 மில்லியன் சிவிலியன்கள் இறந்தனர். பெரும் நகரங்கள் அழிக்கப்பட்டன. வேளாண்மை சீர்குலைந்தது. உலகமே பல்வேறு நேரடி அல்லது மறைமுகமான துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் இரண்டாம் உலகப் போரின் முக்கிய விளைவு குடிறயேற்றங்கள் விடுதலையாகும். ஆசியா மற்றும் ஆப்ரிக்காவிலிருந்த ஐரோப்பிய ...
கெடுபிடிப்போர் என்ற கோட்பாடுப் போர் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையே தொடங்கியது. பாடம் – 32 ஆசிய நாடுகளின் வளர்ச்சி : சீனாவும் ஜப்பானும் கற்றல் நோக்கங்கள் இந்தப் பாடத்திலிருந்து மாணவர் பெறும் செய்திகள் 1. நவீன சீனாவின் எழுச்சி. 2. சீன மக்கள் குடியரசின் தோற்றம் 3. நவீன ஜப்பானின் எழுச்சி 4. பெரும் பொருளாதார வலிமை ...
அமைந்துள்ளன. 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள மிகப் பெரிய நாடு. உலகில் நான்காவது பெரிய நாடாகவும் இது விளங்குகிறது. ஆசியாவிலுள்ள 14 நாடுகள் இதன் எல்லை நாடுகளாக அமைந்துள்ளன. உலகின் மிகப் பழைய நாகரீகங்களில் ஒன்றாக சீனா திகழ்ந்தது. சீனாவை பல்வேறு அம்சங்கள் ஆட்சிபுரிந்தன. 19 மற்றும் 20 ஆம...
அது மெல்ல மாறியது. சீனா ஐரோப்பியர்களை ‘ சிகப்பு காட்டுமிராண்டிகள் ’ என அழைத்தது. ஐரோப்பிய வணிகர்கள்மீது சீனா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஐரோப்பிய வணிகத்தை கட்டுப்படுத்திய சீன வணிகர்கள் கோஹாங் என்று அழைக்கப்பட்டனர். இதனை ஆங்கிலேய மற்றும் பிரஞ்சு வணிகர்கள் விரும்பவில்லை. எனவே , சீன வணிகர்களிடையே அபினிப்பழக்கத்தை மெ...
எடுத்தது. அபினி வர்த்தகம் தடை செய்யப்பட்டது. சீன அதிகாரி லின்சேசு என்பவரது கடும் நடிவடிக்கைகளால் முதல் அபினிப்போர் ( 1839 1842 ) ஏற்பட்டது. இதில் இங்கிலாந்து சீனாவை முறியடித்தது. இப்போர் நான்கிங் உடன்படிக்கைப்படி முடிவுக்கு வந்தது. 1856 ல் இரண்டாம் அபினிப்போர் நடைபெற்றது. இப்போரில் , இங்கிலாந்து , பிரான்ஸ் , அமெரிக்கா ...
ஏற்படுத்தின. சீனாவின் பகுதிகள் மேற்கத்திய நாடுகளால் பல பொருளாதார மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டன. இதனையே “ சீன முலாம்பழம் துண்டுகளாக்கப்பட்டதாகக் ” கூறுவர். மஞ்சு வம்சத்தின் தோல்வி சீனாவின் தைப்பிங் கலகம் ( 1851 - 1864 ) ஏற்படுவதற்கு காரணமாயிற்று. இதற்குத் தலைமையேற்றவர் சியூ சுவான். ஆனால் , கலகம் ஒடுக்கப்பட்டது. 1860 முதல...
இடையே போர் மூண்டது. இது முதல் சீன - ஜப்பானியப் போர் எனப்படுகிறது. கொரியாவை யார் கட்டுப்படுத்துவது என்பதற்காக இப்போர் நடந்தது. இப்போரில் சீனா தோல்வியைத் தழுவியது. இதனால் பாக்சர் கலகம் தோன்றியது. சீனாவில் அந்நியர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து இக்கலகம் நடைபெற்றது. மேலை நாடுகளின் உதவியுடன் இக்கலகமும் நசுக்கப்பட்டது. இத்தருணத்...
சீனப் புரட்சிக்கு வழிவகுத்தார். இப்புரட்சியின் விளைவாக , சீனாவில் மஞ்சுவம்ச ஆட்சி முடிவுக்கு வந்தது. புதிய கொடி , புதிய நாட்காட்டி நடைமுறைக்கு வந்தன. முதன்முறையாக சீனா ஒரு குடியரசாகியது. யுவான் ஷிகாய் என்பவர் சீனக்குடியரசின் அதிபராகப் பதவியேற்றார். டாக்டர் சன்யாட்சென் முதல் உலகப் போரின்போது , சீனாவிடமிருந்து ஷான்டுங் ம...
ஜப்பானுக்கே கொடுத்தது. இதன் விளைவாக சீனாவில் ‘ மே நான்காம் நாள் இயக்கம் ’ தொடங்கியது. மீண்டும் டாக்டர் சன் யாட்சென் சீனாவை தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். கோமிண்டாங் கட்சியை அவர் தொடங்கினார். ரஷ்யாவின் உதவியுடன் சீனாவில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர விரும்பினார். இந்த காலக்கட்டத்தில்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி தோ...
ஷேக் ஏற்றார். தொடக்கத்தில் கோமின்டாங் கட்சிக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் நல்லுறவு இருந்தது. ஆனால் , விரைவில் இருவரும் எதிரிகளாயினர். சியாங் கே ஷேக் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சியை ஒழிக்க விரும்பினார். மாவோ வட சீனாவிற்கு நெடும் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அங்கு கம்யூனிஸ்ட்கள் தங்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்தினார். 1945 ல்...
தேசிய சீனா என்று அழைக்கப்பட்டது. கெடுபிடிப்போர் காலத்தில் அமெரிக்கா தேசிய சீனாவை ஆதரித்தது. எனவே , தேசிய சீனா 1971 ஆம் ஆண்டுவரை ஐ.நா. சபையில் உறுப்பினராக இருந்தது. 1971 ல் தான் சீனா மக்கள் குடியரசு ஐ.நா.வில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டது. XG மாசேதுங் மாசே துங் சீனாவில் பெரும் பொருளாதார சீர்திருத்தத்தை அறிமுகப்பட...
சிறைப்படுத்தப்பட்டனர். 1976 ல் மாவோ இறந்த பிறகு , நால்வர் குழுவினர் சிறைப்படுத்தப்பட்டனர். டெங் சியோபிங் , மாவோவின் பின் தோன்றலான ஹுவா குவோபெங் என்பவரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றினார். டெங் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து சீனப் பொருளாதாரத்தில் காணப்பட்ட அரசுக் கட்டுப்பாடுகளை தளர்த்தினார். திட்டமிட்...
எழுச்சி ஐரோப்பியார்களால் குடியேற்றங்கள் அமைக்கப்படாத நாடு ஆசியாவில் ஜப்பான் மட்டுமே. புவியியல் ரீதியாக , ஜப்பான் சிறிய நாடாக இருந்தபோதிலும் , அது வலிமை மிக்க நாடாக உருவாகியது. மேற்கத்திய நாடுகளைப் போலவே , ஜப்பான் ஆசியாவில் பேரரசுக் கொள்கையைப் பின்பற்றியது. ராணுவ பலமும் அதனிடம் இருந்தது. இன்றைய ஜப்பான் ஒரு பொருளாதார வலி...
உடைத்தெறிந்தார். அவரது தூதுக்குழு ஜப்பான் மேலை நாடுகளுடன் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வழிவகுத்தது. இந்த தருணத்தில் ஜப்பானை தோகுகவா ஷோகன்கள் கட்டுப்படுத்தி வந்தனர். பெர்ரியின் வருகையால் ஜப்பானிய அரசரிடம் மீண்டும் முழு அதிகாரம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. இதுவே மெய்ஜி முன்னிலை மீட்சி எனப்படுகிறது. மெய்ஜி முன்னிலை ம...
முடியாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மெய்ஜி அரசியலமைப்பு இதற்கு வழிவகுத்தது. இவ்வாறு ஜப்பான் முழுவதுமாக நவீனமயமாக்கப்பட்டது. பின்னர் ஜப்பான் தனது வலிமையைப் பெருக்கியதோடு பேராதிக்ககொள்கையையும் கடைப்பிடிக்கத் தொடங்கியது. 1894-95 போரில் ஜப்பான் சீனாவை முறியடித்தது. பின்னர் 1904-05 ஆண்டு நடைபெற்ற போரில் ஐரோப்பாவின் மிகப...
கோரிக்கைகளையும் ஜப்பான் திணித்தது. இவ்வாறு , முதல் உலகப் போரின் முடிவில் ஜப்பான் ஒரு ராணுவ வலிமைமிக்க நாடாக எழுச்சி பெற்றது. எனவே , ஜப்பானின் கடலாதிக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 1921-22ல் வாஷிங்டன் கடற்படை மாநாடு கூட்டப்பட்டது. ஆனால் இது ஒரு தற்காலிகத் தீர்வாகவே அமைந்தது. ராணுவ 1933 ல் ஜப்பான் மஞ்சூரியாவைத் தாக...
செய்து கொண்டது. 1941 ல் ஜப்பான் அமெரிக்கக் கப்பற்படை தளமான ‘ பெர்ல் ஹார்பர் ’ துறைமுகத்தை தாக்கியது. இதனால் , பிரிட்டன் , பிரான்ஸ் , ரஷ்யா போன்ற நேச நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இரண்டாம் உலகப்போரில் இறங்க வேண்டியதாயிற்று. 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அமெரிக்கா ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ம...
விடப்பட்டது. 1947 மே மூன்றாம் நாள் அங்கு புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1951 செப்டம்பரில் அமெரிக்கா மற்றம் 45 நேச நாடுகள் சான் பிரான்சிஸ்கோ அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இவ்வுடன்படிக்கைப்படி , ஜப்பான் மீண்டும் சுதந்திர நாடாகியது. 1950 முதல் 1980 வரையிலான ஜப்பானிய வரலாறு அங்கு ஏற்பட்ட பொருளாதார வளர்...
ஆகியவற்றின் உற்பத்தி போன்ற பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார வலிமைபெற்ற நாடுகளில் மெக் ஆர்தர் ஒன்றாக ஜப்பான் எழுச்சி பெற்றது. பொருள் உற்பத்தியாளர்கள் , வினியோகிப்பவர்கள் மற்றும் ‘ கெய்ரட்சு ’ எனப்பட்ட வங்கியாளர்கள் ஆகியோருக்கிடையே நிலவிய கூட்டுறவே ஜப்பானிய பொருளாதாரத்தின் தனிச் சிறப்...
டெமாகிரடிக் கட்சி மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக அக்கட்சியே வெற்றிபெற்று ஆட்சியமைக்கிறது. 1989 ல் பேரரசர் ஹிரோஹிட்டோ இறந்தபிறகு , அவரது மகன் அகிஹிட்டோ அரசனாகப் பதவியேற்றார். 21 ஆம் நூற்றாண்டிலும் ஜப்பான் ஒரு பொருளாதார வலிமைமிக்க நாடாகவே திகழ்கிறது. வளர்ச்சி பெற்ற நாடுகளின் குழுவான G8 ல் ...
அமைப்பு 3. 4. ஐ.நா.வின் சாதனைகள் 5. ஐ.நா.வின் அரசியல் சார்பற்ற நடவடிக்கைகள் முதல் உலகப் போரைவிட இரண்டாம் உலகப் போர் மனித குலத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தியது. முதன் முறையாக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அத்தகைய போர்கள் எதிர்காலத்தில் நிகழுமானால் உலகம் என்ன ஆகும் என்ற அச்சம் உலக மக்கள் மனதில் எழுந்தது. சச்சரவுகளில்...
ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தோல்வியில் முடிந்தபோதிலும் , மீண்டும் அத்தகைய அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்த நாடுகள் தீவிரமாக இறங்கின. இம்முயற்சியின் பயனால் விளைந்ததே ‘ ஐக்கிய நாடுகள் அவை ’ யாகும். ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்படுதல் ஐ.நா. அவை நிறுவப்படுவதற்கு முன்பே அட்லாண்டிக் சாசனம் , யால்டா மாநாடு மற்றும் 1944 ல் அமெரிக...
நகரில் 51 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஐ.நா. சாசனத்தில் கையெழுத்திட்டனர். நீண்ட விவாதங்களுக்குப்பிறகே , இந்த சாசனம் 51 நாடுகளின் பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1945 அக்டோபர் 24 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் அவை நிறுவப்பட்டது. ஐ.நா. வின் தலைமையகம் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ளது. ஐ.நா.வின் நோக்கங்கள்...
நாடுகளுக்கும் சமஉரிமைகளையும் , சுய நிர்ணய உரிமைகளையும் வழங்குதல். 4. பன்னாட்டு ஒத்துழைப்புடன் பொருளாதார , சமூக , பன்னாட்டு மற்றும் மனிதகுல பிரச்சினைகளை தீர்ப்பது. ஆங்கிலம் , பிரஞ்சு , ஸ்பானிஷ் , ரஷ்யா , சீன மற்றும் அராபிய மொழிகள் உள்ளன. ஆண்டு அளவில் ஐ.நா.வில் 192 உறுப்பு நாடுகள் உள்ளன. பாதுகாப்பு சபை 2006 ஆம் ஐ.நா.வின்...
உள்ளன. இந்த நாடுகளுக்கு சிறப்பு ரத்து அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உலகில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதே பாதுகாப்பு சபையின் முக்கிய பணியாகும். ஐ.நா. சட்ட திட்டங்களை மீறுபவர்கள்மீது பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையை பாதுகாப்பு சபை மேற்கொள்ள முடியும். பொருளாதார , சமூக சபை இந்த சபையில் 18 உறுப்பின...
அமைந்துள்ளது. மனித உரிமைகளுக்கு அனைத்துலக அங்கீகாரத்தை ஏற்படுத்துவதும் , உலக சமூகத்தில் உயரிய பண்பாட்டை உருவாக்குவதும் இந்த சபையின் அடிப்படை நோக்கங்களாகும். மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தி அதன்வழி அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதும் இச்சபையின் குறிக்கோளாகும். மக்களின் வாழ்க்கை தரத்தையும் பொருளாதார நிலையையும்...
வருகிறது. யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி , அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் , ஐ. நா. உதவி மற்றும் புனர்வாழ்வு ஆணையம் , உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் , பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு , உலக வங்கி , உலக சுகாதார நிறுவனம் போன்றவை பொருளாதார , சமூக சபைக்கு உரிய ஒத்துழைப்பை அளிக்கின்றன. 1945 ஆம் ஆண்டிலிருந்தே இந்த சப...
நிர்வகித்து வரும் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரும் இதன் உறுப்பினர்களாவர். தனது கட்டுப்பாட்டில் விடப்பட்டுள்ள பகுதிகளின் நலன்களை பாதுகாப்பதே தர்மகர்த்தா சபையின் முக்கிய பணியாகும். ஐ.நா.வின் கட்டுப்பாட்டிலுள்ள நாடுகளை நன்கு நிர்வகிக்கவும் பொது அவைக்கு தர்மகர்த்தா சபை ஒத்துழைப்பு அளி...
உறுப்பு நாடுகளுக்கிடையே எழும் சட்டரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே இதன் முக்கிய பணியாகும். ஐ.நா.வின் பணியாளர்களை உள்ளடக்கியதே அதன் செயலகமாகும். இதன் தலைவராக பொதுச் செயலாளர் செயல்படுகிறார். பாதுகாப்பு சபையின் பரிந்துரையின் பேரில் ஐ.நா. பொது அவையால் இவர் நியமிக்கப்படுகிறார். ஐ.நா.வின் அனைத்து உறுப்புகளும் சரிவர இயங...
முடித்து வைக்க பாடுபட்டுவருகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபை இதற்காக பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் , பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்கள் தங்களிடமுள்ள ரத்து அதிகாரத்தை தாராளமாக பயன்படுத்துவதால் இத்தகைய முயற்சிகளுக்கு அவ்வப்போது தடங்கல்கள் ஏற்படுகின்றன. 1946 - 47 ஆம் ஆண்டுகளில் மட்டும் சோவியத் ரஷ்யா தனது ரத்து...
குடியேற்ற நாடுகளின் விடுதலை செயலகம் ஆசியா , ஆப்ரிக்கா , லத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளிலிருந்த குடியேற்ற நாடுகள் விடுதலை பெறுவதற்கு ஐ.நா. உதவிக்கரம் நீட்டியது குறிப்பிடத்தக்கது. குடியேற்றங்களின் விடுதலை ஐ.நா. அவை அமைக்கப்பட்ட பிறகு வேகமாக நடைபெற்றது. அமைதியை நிலைநாட்டுதல் உலக அமைதியை பராமரித்தலே ஐ.நா. அவையின் முக்கிய ...
ஈரானியப்பகுதியில் ரஷ்யா தனது துருப்புக்களை நிறுத்திவைத்திருந்ததே அக்குற்றச்சாட்டாகும். ஐ.நா. அவையின் கடுமையான எச்சரிக்கையை அடுத்து ரஷ்யா நீண்டகாலமாக ஈரானியப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த துருப்புக்களை விலக்கிக்கொண்டது. ஐ.நா. அவையின் முதலாவது பெரும்சாதனை என்று இதனைக் கூறலாம். சிரியா மற்றும் லெபனான் இதேபோன்ற குற்றச்சாட்...
நாடுகள் முறையிட்டன. பாதுகாப்பு சபையின் தீவிர முயற்சிகளால் , பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு துருப்புகள் ஆக்ரமிப்பு பகுதிகளிலிருந்து பின்வாங்கின. இந்தோனேசியா இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்தோனேசியாவின் தேசியவாதிகள் அங்கு ஒரு குடியரசை நிறுவினார். ஆனால் , ஜாவா மற்றும் சுமத்ரா பகுதியில் வாழ்ந்து வந்த டச்சுக்காரர்கள் தேசியவா...