id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
|---|---|---|---|
5061
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D
|
சியோல்
|
சியோல் (ஆங்கிலம்: Seoul, கொரிய மொழி: 서울 சௌல்) தென்கொரிய நாட்டின் தலைநகராகும். உலகின் மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.10மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வாழ்கின்றனர். சியோல் தென்கொரிய நாட்டின் வடமேற்குப்பகுதியில், தென்கொரிய-வடகொரிய எல்லைக்கருகே ஹான் நதியின் கரையில் அமைந்துள்ளது.சியோல் 2000வருடங்கள் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. கி.மு. 18இல், கொரியாவின் மூன்று இராச்சியங்களில் ஒன்றான பகேஜ் இராச்சியத்தில் சியோல் உருவாக்கப்பட்டது.இது ஜோஸியோன் இராஜவம்சம் மற்றும் கொரியா பேரரசு காலப்பகுதியிலும் கொரியாவின் தலைநகராகத் திகழ்ந்தது.சியோல் பெருநகர் பகுதி,நான்கு யுனெஸ்கோ மரபுரிமைத் தளங்களை கொண்டுள்ளது.சியோல் மலைகளால் சூழப்பட்டுள்ளது.நவீன அடையாளச்சினங்களான N சியோல் கோபுரம்,லோட்டே வேர்லட்(Lotte World),உலகின் இராண்டாவது பெரிய உள்ளக கரும்பொருள் பூங்கா(world's second largest indoor theme park) மற்றும் நிலவொளி வானவில் செயற்கை நீரூற்று,உலகின் மிகப்பெரிய பாலம் செயற்கை நீரூற்று என்பன சியோலில் அமைந்துள்ளது.
இன்று சியோல் உலகின் வளர்ந்துவரும்,முன்னணி பூகோள நகராக காணப்படுகின்றது.துரித பொருளாதார
ஏற்றம் இதற்கு காரணமாகும்.இப் பொருளாதார வளர்ச்சி ஹான் நதியின்அதிசயம் என அறியப்படுகின்றது.கொரியப் போரின் பின்னர்,2012ஆம் ஆண்டில் டோக்கியோ, நியூயார்க், லொஸ் ஏஞ்சலீஸ் நகரங்களுக்கு அடுத்ததாக US$773.9 பில்லியன்(அமெரிக்க டொலர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சியோல் உலகின் நான்காவது பெரிய பொருளாதார பெருநகராக மாறியுள்ளது.சியோல் உலகின் ஒரு முன்னணி தொழிநுட்ப மையமாகும். உலகின் முதல்தர 500 முன்னணி நிறுவனங்களைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆறாவது இடம் சியோலுக்கு கிடைத்துள்ளது.உலகின் பெரிய தொழிநுட்ப நிறுவனமான சேம்சங் மற்றும் எல் ஜீ(LG),எஸ் கே(SK), ஹியுன்டாய்(Hyundai) போன்ற நிறுவனங்கள் அங்கு அமைந்துள்ளது. ஜாங்னோ,மத்திய மாவட்டம் என்பன சியோலின் வரலாற்று முக்கியத்துவமான,கலாசார நிலையமாகும்.பூகோள நகர் சுட்டென்னில் ஆறாவது இடத்தில் உள்ளதுடன்,சர்வதேச விவகராங்களில் பாரியளவில் செல்வாக்குள்ள நகராக விளங்குகின்றது.உலகின் வாழத்தகுந்த பெரும் நகரங்களில் பட்டியலில் முன்நிலையில் உள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் 2012 கணிப்பீட்டின் படி நியூயார்க்,லண்டன் மற்றும் மெல்பேர்ண் நகரங்களை விடவும் வாழக்கைத்தரம் கூடிய நகராக சியோல் காணப்படுகின்றது.
சியோல் ஓர் உயர்ந்த தொழிநுட்ப உட்கட்டமைப்பைக் கொண்ட நகராகும். இது உலகின் உயர்ந்த அகலப்பபட்டை ஒளியிலை(fibre-optic broadband) ஊடுறுவலைக் கொண்டதுடன்,இதனால் 1 Gbps இலும் கூடிய உலகின் வேகமான இணையதள இணைப்பைக் கொண்டுள்ளது. சியோல் புகையிரத நிலையமானது அதிவேக கொரிய ரயில் எக்பிரஸ்(KTX) இன் ஒரு முனையமாவதுடன்,சியோல் புகையிர சுரங்கப் பாதையானது உலகின் மிக நீளமான சுரங்க ரயில் வலையமைப்பாகும். சியோல் நகரம் அரக்ஸ்(AREX) புகையிர இணைப்பின் வழியாக சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.இது ஏழு வருடங்களாக(2005–2012) உலகின் மிகச்சிறந்த வானூர்தி நிலையமாக சர்வதேச வானூர்தி கவுன்ஸிலால் மதிப்பிடப்பட்டது.
சியோல் 1986 ஆசிய விளையாட்டுக்கள்,1988 கோடைகால ஒலிம்பிக்,2012 பீபா உலகக்கிண்ணப் போட்டி,
மற்றும் 2010 ஜீ-20 சியோல் உச்சிமாநாடு என்பவற்றை நடத்தியது.2010இல் உலகின் வடிவமைப்பு தலைநகராக,யுனெஸ்கோவின் ஒரு வடிவைமப்பு நகரான ஸியோல் தெரிவுசெய்யப்பட்டது.
பெயர்
கடந்த காலங்களில் சியோல் நகரம் வர்யே சொங் (Wirye-seong, 위례성; 慰禮城 : பேக்ஜே சகாப்தம்), ஹான்ஐு (Hanju ,한주; 漢州 : சில்லா சகாப்தம்), நம்கியோங் (Namgyeong 남경; 南京 : கொர்யோ சகாப்தம்), ஹான்சொங் (Hanseong ,한성; 漢城 : பேக்ஜே மற்றும் ஜோஸேன் சகாப்தம்), ஹான்யாங் (Hanyang ,한양; 漢陽 : ஜோஸேன் சகாப்தம்), ஜியோங்சொங் (Gyeongseong,경성; 京城: காலனித்துவ சகாப்தம்) போன்ற பல பெயர்களில் அறியப்பட்டது. சியோல் என்ற தற்போதைய பெயர் கொரிய மொழியில் தலைநகரம் என்று பொருள் தரும் சியோராபியோல் அல்லது சியோபியோல் என்ற வார்த்தையில் இருந்து மருவியதாகக் கூறப்படுகிறது.
வரலாறு
சியோல் முதலாவது வய்ரி சியோங் என பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது பேக்ஜே இராச்சியத்தின் தலைநகராவதுடன், கி.மு.18 இல் உருவாக்கப்பட்டது. கொர்யோ காலப்பகுதயில், இது ஹன்சொங் (漢城, "ஹான் ஆற்றால் வலுவூட்டப்பட்ட நகரம்") என அழைக்கப்பட்டது. ஜோஸேன் காலப்பகுதியில்,1394 ஆரம்பத்தில் தலைநகராக ஹங்யாங் (漢陽) என அழைக்கப்பட்டது. இது ஜப்பானிய ஆக்கிரமிப்பில் ஜியோங்சொங் (京城, ஜப்பானிய மொழி: கெய்ஜோ) என்று அழைக்கப்பட்டது. இறுதியாக1945இல் சுதந்திரத்திற்குப் பின்னர் ஸியோல் என அழைக்கப்படுகின்றது. ரஷ்யா-ஜப்பான் யுத்தத்திற்கு (1904-1905) பின்னர் ஜப்பான் பேரரசுடன் கொரிய இணைக்கப்படதுடன், நகரின் பெயர் 'கெய்ஜோ' என மாற்றப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் இறுதயில் நகரம் சுதந்திரம் அடைந்தது.
புவியமைப்பு
சௌல் கொரியாவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சியோல் சரியாக 605.25 கிமீ2 பரப்பளவைக் கொண்டதுடன்,ஏறத்தாள 15 கிலோமீற்றர் (9 மைல்) ஆரையை உடையது. அநேகமாக, ஹான் ஆற்றினால் வடக்கு மற்றும் தெற்குப்பகுதிகளாக இருகூறாக்கப்பட்டுள்ளது.
காலநிலை
சௌல் ஈரப்பதன் உடைய/துணை வெப்பமண்டல இடைநிலை காலநிலையுடன்,இரு சிறப்பியல்புகளை கொண்டது.பொதுவாக கோடை காலத்தில்ஜுன் முதல் ஜனவரி வரை வெப்ப மற்றும் ஈரப்பதன் கூடிய காலநிலை காணப்படும்.சராசரி வெப்பநிலையாக 22.4 - 29.6 °C (72 - 85 °F) காணப்படும்.
நிர்வாக மாவட்டங்கள்
சௌல் 25 குவ்(தென்கொரியா நிர்வாகப் பிரிவு)ஆக பிரிக்கப்பட்டுள்ளது. குவ்வானது மிகவும் பெரிய பரப்பளவையும்( 10 முதல் 47 கிமீ2), சனத்தொகையையும் (140,000 முதல் 630,000 இலும் குறைவான) உடையது.இதில் சோங்பா அதிக சனத்தொகையுடைய,பெரிய நிலப்பரப்பாகும்.
மேற்கோள்கள்
ஆசியத் தலைநகரங்கள்
தென்கொரிய நகரங்கள்
|
5064
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
|
கட்டிட அனுமதி
|
கட்டிட அனுமதி, கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கு உரிய அதிகாரம் பெற்ற நிறுவனங்களால் வழங்கப்படுவதாகும். அனுமதியின்றிக் கட்டிடங்களைக் கட்டுவது சட்டவிரோதமானது என்பதுடன், அவ்வாறு சட்ட விரோதமாகக் கட்டப்படும் கட்டிடங்கள் தொடர்பில் தண்டம் அறவிடப்படலாம் அல்லது கட்டிடங்களே இடித்துத் தள்ளப்படலாம்.
அனுமதி வழங்கும் நிறுவனங்கள்
பொதுவாகக் கட்டிடம் அமையவுள்ள பகுதியை நிர்வகிக்கும் உரிமையுள்ள உள்ளூராட்சிச் சபைகளே இவ்வாறான அதிகாரங்களைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கார்ப்பரேசன்கள், மாநகர சபைகள், நகர சபைகள் போன்றவை கட்டிட அனுமதி வழங்கும் உரிமைகளைக் கொண்டிருக்கின்றன. இவை தவிர சில சந்தர்ப்பங்களில், அப்பகுதிகளின் நகர வளர்ச்சித் திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களோ, துறைமுகப் பகுதிகள், சுதந்திர வர்த்தக வலயங்கள் போன்ற இடங்களில் அவற்றை நிர்வாகம் செய்கின்ற நிறுவனங்களோ இந்த உரிமையைக் கொண்டிருப்பதும் உண்டு.
கட்டிட விதிமுறைகள்
அளவிற் பெரியவையும், கூடிய அதிகாரங்களைக் கொண்டவையுமான நிறுவனங்கள் கட்டிட அனுமதி பெற விண்ணப்பிப்பவர்கள் கட்டிடத்தின் பயன்பாடு, அதன் உயரம், மொத்தத் தளப் பரப்பு, காற்றோட்டம், தீத்தடுப்பு ஒழுங்குகள் போன்ற பல அம்சங்கள் தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதி முறைகளை உருவாக்கி வைத்துள்ளனர். இவை கட்டிட விதிமுறைகள் எனப்படுகின்றன. இவை தவிர அனுமதிக்கு விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் விதிகள் உள்ளன. கட்டிட அனுமதிக்கான இறுதி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படு முன்னர், நகரத் திட்டமிடல் நிறுவனம், மின் விநியோக நிறுவனம், வடிகால் அமைப்பு நிறுவனம், தொலை பேசிச் சேவைகளை வழங்கும் நிறுவனம் போன்றவற்றிடமிருந்து குறித்த கட்டிடம் கட்டுவது தொடர்பான ஆட்சேபனைகள் இல்லை என்பதற்கான சான்றிதழ்களும், அவ்வச் சேவைகள் தொடர்பான வடிவமைப்புக்கான அங்கீகாரமும் பெறப்படவேண்டும்.
நிபுணர்களின் சேவை
பெரும்பாலான பெரிய நகரங்கள் கட்டிடங்களின் வடிவமைப்பு, வரைபடங்கள் தயாரிப்பு, மேற்பார்வைபோன்றவற்றுக்கு உரிய நிபுணர்களின் சேவை பெறப்படவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி உள்ளன. அது மட்டுமன்றி இவ்வாறான உயர்தொழில் நிபுணர்களையும், அத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்களையும் பதிவு செய்தும் வருகின்றன.
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
கட்டிடக்கலை
|
5065
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88
|
மாநகர சபை
|
மாநகர சபைகள் பெரிய நகரங்களை நிவாகம் செய்வதற்காக உருவாக்கப்படும் நிறுவனங்களாகும். மாநகர சபைக்கான வரைவிலக்கணம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. அதுபோலவே அவற்றுக்குரிய அதிகாரங்களும் வேறுபடுகின்றன. குடியாட்சி முறையைக் கைக்கொள்ளும் நாடுகளில் மாநகர சபைகளும் தேர்தல்கள் மூலம், மக்களாலேயே நேரடியாகத் தெரிந்தெடுக்கப் படுகின்றன.
நிர்வாக அலகுகள்
நிர்வாகவியல்
|
5068
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
கட்டிடக்கலைசார் அழகியல்
|
அழகியல் என்பது அழகின் இயல்பு பற்றி ஆராய்கின்ற, தத்துவத்தின் ஒரு பிரிவாகும். அழகியல், ஓவியம், இசை, கட்டிடக்கலை, அரங்கக் கலைகள், இலக்கியம், உணவு பரிமாறல், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளுடனும் சம்பந்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை கட்டிடக்கலைசார் அழகியல் பற்றியதாகும்.
அழகியல்
அழகியல் பற்றிப் பலர் பலவிதமான விளக்கங்களைத் தந்துள்ளனர். அழகியல் அதை அனுபவிப்பவர்களின் புலன் உணர்வுகளைச் சார்ந்துள்ளது என ஒரு சாராரும், அவ்வாறான புலனுணர்வுகளுக்கு வெளியே குறிப்பிட்ட பொருள்களிலேயே அது பொதிந்துள்ளது என இன்னொரு சாராரும் வாதிடுகின்றனர். ஒரு பொருளுக்குரிய அழகியற் பண்பை அதனை உருவாக்கும் கலைஞனே தீர்மானிக்கிறான் என்போரும், அது அப்பொருளின் சூழ்நிலையாலேயே (Context) தீர்மானிக்கப்படுகின்றது எனக் கூறுவோரும் இருக்கின்றனர். எது எப்படியிருப்பினும், ஒரு பொருளின் அழகியற் பண்பு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது என்பதும் எவ்வெவற்றுக்கூடாக வெளிப்படுத்தப்படுகின்றது என்பதும் முக்கியமான விடயங்களாகும்.
கட்டிடக்கலையும் அழகியலும்
கட்டிடக்கலை ஒரு கலையும் அறிவியலுமாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், இதன் கலைப் பண்பே, அதாவது கட்டிடக்கலையின் அழகியற் கூறே வரலாற்று ரீதியில் பெரிதும் ஆராயப்பட்டுள்ளது எனலாம். கட்டிடக்கலை பெருமளவுக்கு அழகியல் சாந்த ஒரு துறையாகவும், பிற அழகியல் துறைகளான ஓவியம், சிற்பம் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பையும் கொண்டிருந்தபோதும், கட்டிடக்கலை தனித்துவமான பல பண்புகளையும் கொண்டுள்ளதெனலாம்.
ஓவியம், சிற்பம் போன்றவற்றை அவற்றை அனுபவிப்பவர்கள் அவற்றுக்கு வெளியிலிருந்து அனுபவிக்கிறார்கள். அவற்றின் கலைத்துவம் அவர்களுக்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது. ஆனால் கட்டிடக்கலையைப் பொறுத்தவரை மனிதர்கள் வெளியிலிருந்து அனுபவிப்பதோடன்றி, உள்ளே சென்றும் வாழுகிறார்கள். அதனால் கட்டிடங்கள் குறிப்பிட்ட சில செயற்பாட்டுத் தேவைகளையும் நிறைவு செய்யவேண்டியிருக்கிறது. அதனால் கட்டிடக்கலை சார்ந்த அழகியலானது கட்டிடங்களின் செயற்பாடுகளோடு இணைந்த அழகியலாக உருவெடுக்கின்றது. கட்டிடங்கள் மனிதருடைய பல்வேறுபட்ட செயல்பாடுகளுக்கு இடம்கொடுக்க வேண்டி இருப்பதனால்தான் கட்டிடக்கலை வடிவமைப்பில் வெளியும் (Space), அதனைக் கையாளுதலும் முக்கியமானவையாக இருக்கின்றன. செயற்பாட்டுத் தேவைகள் எனும்போது செயல்பாடுகளுடன் தொடர்புடைய இடத் தேவை மற்றும் உடலியல், உளவியல் சார்பான தேவைகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இவை கட்டிடங்களின் உள்ளேயும், வெளியேயும் வெளியின் அளவு, வடிவம், அவற்றுக்கிடையிலான தொடர்புகள் என்பவற்றைத் தீர்மானிக்கின்றன. இவ்வெளிகளைச் சூழ்ந்து அவற்றை வரையறுப்பதே சுவர், கூரை, தளங்கள் முதலிய கட்டிடக் கூறுகளின் சிறப்பான பணியாகின்றது. இதன் காரணமாகவே உள்ளே நடைபெறக்கூடிய செயல்பாடுகளைக் கட்டிடங்களின் தோற்றங்கள் வெளிக்காட்டுபவையாக இருக்கின்றன. கட்டிடக்கலையில் "வடிவம் செயல்பாடுகளைப் பின்பற்றியே உருவாகின்றது" என்ற கருத்து இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞரான "மீஸ் வான் டெர் ரோ" என்பவரால் முன்வைக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நுணுக்கமான கைவேலைப்பாடுகள் கட்டிடக்கலையின் அழகியல் அம்சத்தில் சிறப்பிடம் பெற்றிருந்தன. ஆனால் தொழிற்புரட்சியும் அதனோடு இணைந்த பெரும்படித் தயாரிப்பும் கட்டிடக்கலையில் நவீனத்துவத்தின் எழுச்சிக்கு வித்திட்டபோது நுணுக்கமான அலங்காரங்கள் கட்டிடக்கலை வடிவமைப்புக்களில் இருந்து விடை பெற்றுக்கொண்டன. கட்டிடங்களில் அழகியல் புதிய வழிகளில் புகுத்தப்பட்டது.
கட்டிடக்கலையில் அழகியலின் முக்கியத்துவம்
அழகியல் என்பது புலன் உணர்வு சம்பந்தப்பட்டது. மனிதருடைய பல்வேறு விதமான உளவியல் தேவைகளை நிறைவு செய்யும் தன்மை கொண்டது. மனநிறைவையும், மகிழ்வையும் அளிக்கக்கூடியது.
கட்டிடக்கலைசார் அழகியற் கூறுகள்
கட்டிடங்களில் அழகியலைப் பற்றிப் பேசும்போது, அவ்வுணர்வு கட்டிடத்தின் எவ்வெக் கூறுகளினூடாக உணரப்படுகின்றது எனச் சிந்தித்தல் வேண்டும். இவற்றை நான்கு பிரிவுகளில் ஆராயலாம்.
உணர்வுசார் கூறுகள் (Sensory Elements)
வடிவம்சார் கூறுகள் (Formal Elements)
தொழில்நுட்பம்சார் கூறுகள் (Technical Elements)
வெளிப்பாட்டுக் கூறுகள் (Expressive Elements)
உணர்வுசார் கூறுகள்
உணர்வுசார் கூறுகளில், கோடு, வடிவம், மேற்பரப்புத் தன்மை, நிறம், ஒளியும் இருளும், வெளி என்பன அடங்கும்.
வடிவம்சார் கூறுகள்
வடிவம் சார் கூறுகள் வடிவுருக்களின் உருவாக்கம், லயம், சமச்சீர்த்தன்மை, சமநிலை, Contrast, அளவுவிகிதம் (Proportion), Theme, ஒருமைப்பாடு (Unity) என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது.
கட்டிடக்கலை
அழகியல்
|
5069
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
இரவீந்திரநாத் தாகூர்
|
இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும். தாகூரின் படைப்புகள் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன என்ற பாடலை இயற்றியவரும் இவரேயாவார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த வங்காளப் பிராமணரான இவர் ஜெஸ்சூரைச் சேர்ந்த ஜமீந்தார் மரபைச் சேர்ந்தவர் ஆவார். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது கவிதைத் தொகுதியை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனைபெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் இவரது பெயரிலேயே வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவர் தனது போர்க்குணத்தை, போராட்டத்தை ஓவியங்களின் மூலமாகவும், கேலிச் சித்திரங்களின் மூலமாகவும், எழுத்துகள் மற்றும் இரண்டாயிரம் பாடல்களின் மூலமாகவும் வெளிப்படுத்தினார். மேலும் இவர் விசுவபாரதி பல்கலைக்கழகத்தையும் நிறுவினார்..
தாகூர் வங்காளக் கலையில் கடுமையான செந்நெறி வடிவங்களை மறு ஆக்கம் செய்து புதுமைகளைப் புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்றவை அரசியல் மற்றும் மக்களின் வாழ்வியலைத் தழுவியிருந்தன. கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் கற்பனைத்திறன், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் ,சமத்துவத்திற்காகவும் பெரிதும் புகழ் பெற்றன. சில தடை செய்யப்பட்டன. இந்தியாவில் ஜன கண மன மற்றும் வங்காளதேசத்தில் அமர் சோனர் பங்களா ஆகிய இவரின் படைப்புகள் இரண்டு நாடுகளில் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தொடக்க காலம் (1861-1901)
இரவீந்திரநாத் தாகூர், தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு 1861 ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் (1861-05-09) கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பிறந்து உயிரோடு இருந்த பதின்மூன்று குழந்தைகளில் இவர் இளையவர் ஆவார். இவரின் தாய் இவர் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார். இவரின் தந்தையும் வியாபார நோக்கில் அடிக்கடி வெளிநாடு சென்றதால் பெரும்பானமையான நேரங்களில் பணியாளர்களாலேயே வளர்க்கப்பட்டார். வங்காள மறுமலர்ச்சியில் இவரின் குடும்பம் பெரும் பங்காற்றியது. இவரின் குடும்பம் இலக்கிய நாளிதழ் வெளியீட்டு நிறுவனம் மற்றும் திரையரங்கம் போன்றவற்றை நடத்தி வந்தனர். அங்கு தொடர்ச்சியாக வங்காளம் மற்றும் நவீனத்துவ மரபார்ந்த பாடல்கள் பாடப்பட்டன. தாகூரின் தந்தை தொழில்முறை துருபாத் இசைக் கலைஞர்களை தங்களது இல்லத்திற்கு அழைத்து வந்து தங்களது குழந்தைகளுக்கு இந்திய இசைகளை கற்றுத்தந்தார்.
தாகூரின் மூத்த சகோதரர் விஜேந்திரநாத் மெய்யியல் அறிஞர் மற்றும் கவிஞர் ஆவார். மற்றொரு சகோதரர் சத்யேந்திரநாத் முதல் இந்தியக் குடிமைப் பணியாளர் ஆவார். மற்ரொரு சகோதரான ஜோதிரிந்திரநாத் இசையமைப்பாளர், மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.இவரின் சகோதரி சுவர்ணகுமாரி புதின எழுத்தாளர் ஆவார். ஜோதிரிந்திரநாத்தின் மனைவி காதம்பரி தேவி , தாகூரை விட வயதில் சற்று மூத்தவர் ஆவார்.
தாகூர் பள்ளியறைகளில் இருப்பதை விட பிரபுமனைகள் அல்லது தங்கள் குடும்பத்தினர் அதிகம் செல்லக்கூடிய போல்பூர் மற்றும் பானிஹாட்டிக்குச் செல்வதையே விரும்பினார். இவரின் சகோதரர் ஹேமேந்திரநாத் இவருக்கு கங்கை ஆற்றில் நீச்சல் கற்றுத் தருதல் அல்லது மலையேற்றம் , சீருடற்பயிற்சிகள், ஜூடோ , குத்துச்சண்டை ஆகியவற்றை கற்றுக்கொடுத்தார். தாகூர் , வரைதல், உடற்கூறியல், புவியியல், வரலாறு, இலக்கியம், கணிதம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றையும் கற்றார். முறையான கல்வியில் இவருக்கு விருப்பம் இல்லை. இவர் பிரசிடென்சி கல்லூரியில் ஒருநாள் மட்டுமே கல்வி பயின்றார். உண்மையான கற்றல் என்பது சரியான விளக்கங்களை அளிப்பது ஆகாது: அது அறிவார்வத்தை ஏற்படுத்துவது என எண்ணினார்.
இவர் மனம் வங்காள மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் இலயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் இவருக்கு பூணூல் சடங்கு செய்யப்பட்டது. பின்னர், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு இவரது தகப்பனாருடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வானியல், அறிவியல், சமசுகிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார்.
ஷெலைதஹா: 1878-1901
தேபேந்திரநாத் தனது மகன் ஒரு பேரறிஞராக ஆக விரும்பியதால், தாகூர் 1878 இல் இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸில் உள்ள பிரைட்டனில் உள்ள ஒரு பொதுப் பள்ளியில் சேர்த்தார். மதீனா வில்லாஸில் உள்ள பிரைட்டன் மற்றும் ஹோவ் அருகே தாகூர் குடும்பத்திற்கு சொந்தமான ஒரு வீட்டில் அவர் பல மாதங்கள் தங்கியிருந்தார். ; 1877 ஆம் ஆண்டில் அவரது மருமகனும் மருமகளும் - தாகூரின் சகோதரர் சத்யேந்திரநாத்தின் பிள்ளைகளான சுரேன் மற்றும் இந்திரா தேவி, அவர்களுடன் வாழ தாகூரின் மைத்துனரான அவர்களது தாயுடன் சேர்ந்து அனுப்பப்பட்டனர். அவர் லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியில் சட்டத்தைப் பயின்றார். ஆனால் மீண்டும் பள்ளியை விட்டு வெளியேறினார், அதற்கு பதிலாக ஷேக்ஸ்பியரின் நாடகங்களான கோரியலனஸ், மற்றும் ஆண்டனி மற்றும் கிளியோபாட்ரா மற்றும் தாமஸ் பிரவுனின் ரிலிஜியோ மெடிசி ஆகியவற்றைப் பற்றி சுயாதீனமாக ஆய்வு செய்தார் . உயிரோட்டமான ஆங்கிலம், ஐரிஷ் மற்றும் ஸ்காட்டிஷ் நாட்டுப்புற இசைக்குறிப்புகள் ஆகியன தாகூரைக் கவர்ந்தன.1880 ஆம் ஆண்டில் அவர் வங்காளம் திரும்பினார். வங்காளத்திற்குத் திரும்பிய பிறகு, தாகூர் தொடர்ந்து கவிதைகள், கதைகள் மற்றும் புதினங்களை வெளியிட்டார். இவை வங்காளத்தினுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின, ஆனால் தேசிய அளவில் அவை கவனத்தைப் பெறவில்லை. 1883 ஆம் ஆண்டில் டிசம்பர் 9ஆம் தேதி மிருனாலி தேவி என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. ஆனால் இரண்டு குழந்தைகள் வாலிபப் பருவம் அடையும் முன்பே இறந்து விட்டனர். 1890 ஆம் ஆண்டில் தாகூர் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா என்னும் இடத்தில் இருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வாகம் செய்யத் தொடங்கினார். 1898 ஆம் ஆண்டில் இவரது மனைவியும் பிள்ளைகளும் அங்கு சென்று இவருடன் இணைந்து கொண்டனர். 1890 ஆம் ஆண்டில் இவரது பெயர் பெற்ற ஆக்கங்களில் ஒன்றான மானஸ்த் என்னும் கவிதையை வெளியிட்டார். 1895 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் வாழ்க்கையில் பேரும், புகழும், பட்டமும், இன்னலும், இகழ்ச்சியும் ஒரு சேரக் கலந்தன எனலாம். அக்காலத்திலிருந்த பாரத மக்களின் நிலைமையைக் கண்டு பாரத தேவியின் அருந்தவப் புதல்வராகிய இரவீந்திர நாதர் மனம் உளைந்து, தேசத் தொண்டில் இறங்கினார்.
நரேனும்(சுவாமி விவேகானந்தர்) தாகூரும்
ரவீந்திரநாத் தாகூர், தான் இயற்றி மெட்டமைத்த பாடலை பாடும் முறையை நரேந்திரருக்குக் (சுவாமி விவேகானந்தர்) கற்பித்துள்ளார்.
தாகூரின் பாடல்களை பலவற்றை நரேந்திரர் பாடியுள்ளார்.
நரேந்திரர் தமது ’சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களையும் தொகுத்துள்ளார்.
சாந்திநிகேதன்
1901ல் தாகூர் ஷிலைடஹாவிலிருந்து (Shilaidaha) சாந்திநிகேதனுக்குக் குடியேறினார். அங்கு அவர் ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அங்கு அவர் ஒரு பிரார்த்தனைக் கூடம், ஒரு பாடசாலை, நூலகம் ஆகியனவற்றை நிறுவி, மரங்கள் பலவற்றையும் நட்டு ஓர் அழகிய பூஞ்சோலையை உருவாக்கினார். இங்கே தாகூரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இறந்து போயினர். இவரது தந்தையாரும் 1905 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து தந்தையார் மூலமான சொத்துரிமை மூலம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைத்தது. திரிபுராவின் மகாராசாவிடம் இருந்தும் இவருக்கு ஒரு தொகை வருமானமாக வந்தது. அத்துடன், குடும்ப நகைகள், பூரியில் இருந்த கடற்கரையோர மாளிகை என்பவற்றை விற்றதன் மூலமும் இவர் வருமானம் பெற்றார். இது தவிர இவரது ஆக்கங்களுக்கான உரிமமாகவும் 2,000 ரூபாய் கிடைத்தது.
இக் காலத்தில் இவரது ஆக்கங்கள் வங்காளத்திலும் பிற நாடுகளிலும் புகழ் பெற்றன. இவர் தனது நைவேத்ய (1901), கேயா (1906) போன்ற ஆக்கங்களையும் வெளியிட்டார்.
பயணம்
1878 மற்றும் 1932 க்கு இடையில், தாகூர் ஐந்து கண்டங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்தார். 1912 ஆம் ஆண்டில், தனது படைப்புகளுடன் இங்கிலாது சென்றார். அங்கு அவரது படைப்புகள் மதபோதகர் மற்றும் காந்தியின் சீடரான சார்லஸ் எஃப் ஆண்ட்ரூஸ், ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் ஈட்ஸ், எஸ்ரா பவுண்ட், ராபர்ட் பாலங்கள், ஏற்நேச்ட் ரைஸ், தாமஸ் ச்டுர்ஜே மூர், மற்றும் பலரால் பாராட்டினைப் பெற்றது. கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு யீட்ஸ் முன்னுரை எழுதினார்; ஆண்ட்ரூஸ் தாகூருடன் சாந்திநிகேதனில் சேர்ந்தார். நவம்பர் 1912 தாகூர் அவர்கள் அமெரிக்காவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டனர் , மேலும் அவர் அமெரிக்கா மற்றும் இலண்டன் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். மே 1916 முதல் ஏப்ரல் 1917 வரை ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் விரிவுரை செய்தார். அவர் தேசியவாதத்தை கண்டித்தார். "இந்தியாவில் தேசியவாதம்" என்ற அவரது கட்டுரை பாராட்டப்பட்டது; இது ரோமெய்ன் ரோலண்ட் மற்றும் பிற சமாதானவாதிகளால் போற்றப்பட்டது.
அருங்காட்சியகம்
இந்தியாவின் கொல்கத்தாவின் ஜோரசங்கோ தாக்கூர் பாரியில் உள்ள ரவீந்திர பாரதி அருங்காட்சியகம்
தாகூர் நினைவு மியூசியம், மணிக்கு சிலைதஹா குதிபடி, சிலைதஹா, வங்காளம்
ஷசாத்பூர் ரவீந்திர நினைவு அருங்காட்சியகம், வங்காளம்
இந்தியாவின் சாந்திநிகேதனில் உள்ள ரவீந்திர பவன் அருங்காட்சியகம்
இந்தியாவின் கலிம்பொங்கிற்கு அருகிலுள்ள முங்பூவில் ரவீந்திர அருங்காட்சியகம்
பிதாவோ ரவீந்திர நினைவு வளாகம், குல்னா வங்காளம்
ரவீந்திர காம்ப்ளக்ஸ், டக்கின்திஹி கிராமம், குல்னா, வங்காளம்
நோபல் பரிசு
1913 ஆம் ஆண்டில், இவரது கீதாஞ்சலி இலக்கியப் படைப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். இவரது புகழ் பெற்ற கோரா புதினம தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
1915 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு (Knighthood) செவ்வீரர் (சர், knight) பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.
1921 ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
1905 ஆம் ஆண்டில் "வங்காளத்தைப் பிரிப்போம்" என்று அரசாங்கம் தீர்மானிக்க வங்காளம் முழுவதும் கொதித்தெழுந்தது. இரவீந்திர தாகூரும் "அடிமைத்தனம் ஒழிக" என கர்ஜித்து எழுந்தார்; எண்ணிறந்த கூட்டங்களில் இடியென வெகுண்டு பேசினார். இவர் செய்த பிரசாரங்களில் உள்ள வீராவேசமும், தேசாபிமானமும், தன் நாட்டு மக்களிடத்தில் உள்ள தயையும் வேறெந்த மொழியிலும் நான் கண்டதில்லை" என்று இ.ஜே. தாம்சன் என்னும் ஆங்கிலேயர் புகழ்ந்துரைத்தார்.
இக்காலத்தில் தான் இரவீந்திர நாதர், தம் நாட்டு மக்களிடமிருந்த வறுமையையும், அவர்கள் மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப் பட்டிருப்பதையும், அடிமைகள் போல் நடத்தப்படுவதையும் கண்டு மனம் வெகுண்டார். கல்வி அறிவே இல்லாதோர் எண்ணிறந்தவர். மூட நம்பிக்கையும், குறுகிய நோக்கமும், சுயநலமும், சிறு மனமும் எங்கும் திகழ்வதைக் கண்டார். "இந்திய மக்களுக்கு இக்கதியும் வந்ததோ!" என்று துன்பத்தில் ஆழ்ந்தார். தங்களிடமிருந்த இப்பெருங்குறைகளை நீக்கினாலன்றி இவர்களால் அடையத் தக்கது ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்தார். இனி இங்கு இருப்பதில் பயனில்லை என்று தேசிய இயக்கங்கள் யாவற்றிலுமிருந்து திடீரென்று விலகினார்.
1919 ஆம் ஆண்டில் பஞ்சாபிலுள்ள அம்ரித்சரசில் நடந்த கோர சம்பவத்தைக் கேட்டதும் இரவீந்திர நாதர், தமக்கு ஆங்கிலேயர் அளித்த "ஸர்" பட்டத்தைத் துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளி நடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி தைக்கும்படி சுடுசொல் பகர்ந்தார்.
1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எச். ஜி. வெல்ஸ் அவர்களும் தாகூரும் ஜெனீவாவில் சந்தித்தனர். அன்று அவர்கள் பல விஷயங்கள் பற்றி உரையாடினார்கள். ஜூலை 14 1930 அன்று மருத்துவர் மென்டெல் என்னும் நண்பர் மூலம் பிரசித்திபெற்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை அவர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார். இதன் பிறகு ஐன்ஸ்டீன் தாகூருடைய இல்லத்திற்கு வந்து அவருடன் உரையாடினார்.
இரவீந்திரர் தனது 8 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார் அவைகளை பானுஷங்கோ (sun lion) என்ற புனைப்பெயரில் 1877 ஆம் ஆண்டில் வெளியிட்டார். 16வது வயதில் சிறு கதைகளும், நாடகங்களும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 20 ஆவது வயதில் தன்னுடைய முதல் நாடகத்தை, "வால்மீகி பிரபிதா" (The Genius of Valmiki) எழுதினார். அவருடைய 60 வயதில் ஓவியங்களை வரையவும், வண்ணங்களை தீட்டவும் ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தன்னுடைய படைப்புகளை வைத்துப் பொருட்காட்சி நடத்தினார்.
1878 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு முடியும் வரை இரவீந்திரர் ஐந்து கண்டங்களில் முப்பத்தொன்று நாடுகளுக்கு சென்றுவந்தார். எழுத்தாளாராக, அநேக புத்தகங்கள் எழுதியுள்ளார். முதலில் தன் தாய் மொழியான வங்காளத்தில் தான் எழுதினார். அவருடைய கீதாஞ்சலிக்குக் கிடைத்த வரவேற்பை பார்த்ததும், தான் எற்கனவே வங்காளியில் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 2000த்திற்கும் மேலாகப் பாடல்கள் எழுதி சில பாடல்களுக்கு அவர் இசையும் அமைத்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்களில் ஒரு பாடல் இந்தியாவின் தேசீய கீதமாகவும், இன்னொரு பாடல் வங்க தேசத்தின் தேசீய கீதமாகவும், உருவெடுத்தன.
பயணங்கள்
1878 ஆம் ஆண்டு மற்றும் 1932 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாகூர் ஐந்து கண்டங்களில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளார். இவற்றுள் பல பயணங்கள் இவரது ஆக்கங்களை இந்தியர் அல்லாதவர்களுக்கு அறிமுகப் படுத்துவதிலும், இவரது அரசியல் எண்ணங்களைப் பரப்புவதற்கும் முக்கிய பங்காற்றின. 1912 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆக்கங்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்புகளோடு தாகூர் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே இவரது ஆக்கங்கள் சார்லசு எப். ஆன்ட்ரூசு, ஆங்கில-ஐரியக் கவிஞரான வில்லியம் பட்லர் யீட்சு, எசுரா பவுண்ட், ராபர்ட் பிரிட்ஜசு, ஏர்னஸ்ட் ரைசு, தாமசு இசுட்டர்சு மூர் மற்றும் பலரைக் கவர்ந்தன. யீட்சு கீதாஞ்சலியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கான முகவுரையை எழுதினார். ஆன்ட்ரூசு சாந்திநிகேதனில் இணைந்துகொண்டார். 1910 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி தாகூர் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பயணம் மேற்கொண்டார்.
ஐக்கிய இராச்சியத்தில் அவர் இசுட்டபோர்ட்சயரில் உள்ள பட்டர்ட்டன் என்னும் இடத்தில் ஆன்ட்ரூசின் மதபோதகர்களான நண்பர்களுடன் தங்கினார். 1916 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியில் இருந்து 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விரிவுரைகள் வழங்குவதற்காக ஜப்பானிலும் அமெரிக்காவிலும் பயணம் செய்தார்.
இந்தியாவுக்குத் திரும்பிய சில காலத்தின்பின், 63 வயதான தாகூர் பெரு நாட்டு அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றார். அவர் அங்கிருந்து மெக்சிக்கோவுக்கும் சென்றார் இரு நாட்டு அரசுகளும் இவரது வருகையின் நினைவாக சாந்திநிகேதனில் இருந்த பள்ளிக்கு 100,000 அமெரிக்க டாலர்களை வழங்கின.
ஆர்சென்டீனாவில் உள்ள புவனசு அயர்சுக்கு வந்த தாகூர் ஒரு கிழமையின் பின் நோய்வாய்ப்பட்டார். அதனால் அங்கு சில காலம் தங்கிய பின் அவர் சனவரி 1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்குத் திரும்பினார். 1926 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி தாகூர் இத்தாலியில் உள்ள நேப்பிள்சை அடைந்தார். அடுத்த நாள் அவர் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினியைச் சந்தித்தார். 1926 ஆம் ஆண்டு யூலை 20 ஆம் தேதி தாகூர் முசோலினியைக் கண்டித்ததுடன் அவர்களுடைய உறவு முறிந்துபோனது.
1927 ஆம் ஆண்டு யூலை 14 ஆம் தேதி தாகூரும் அவரது தோழர்கள் இருவரும் தென்கிழக்கு ஆசியாவில் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், பாலி, ஜாவா, கோலாலம்பூர், மலாக்கா, பீனாங்கு, சியாம், சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். தாகூரின் இந்தப் பயணங்கள் குறித்த தகவல்களை யாத்ரி என்னும் நூல்-தொகுப்பில் காணலாம்.
இவரது பெயரிடப்பட்ட கல்வி நிறுவனங்கள்
ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம், கொல்கத்தா, இந்தியா.
ரவீந்திர பல்கலைக்கழகம், சஹாஜ்பூர், ஷிராஜ்கஞ்ச், பங்களாதேஷ்.
ரவீந்திரநாத் தாகூர் பல்கலைக்கழகம், ஹோஜாய், அசாம், இந்தியா
ரவீந்திர மைத்ரீ பல்கலைக்கழகம், கோர்ட்பாரா, குஸ்டியா, பங்களாதேஷ்.
பிஷ்வகாபி ரவீந்திரநாத் தாகூர் ஹால், ஜஹாங்கிர்நகர் பல்கலைக்கழகம், பங்களாதேஷ்
ரவீந்திர நஸ்ருல் கலை கட்டிடம், கலை பீடம், இஸ்லாமிய பல்கலைக்கழகம், பங்களாதேஷ்
ரவீந்திர நூலகம் (மத்திய), அசாம் பல்கலைக்கழகம், இந்தியா
ரவீந்திர ஸ்ரீஜோங்கலா பல்கலைக்கழகம், கெரானிகஞ்ச், டாக்கா, பங்களாதேஷ்
இறப்பு
1920 முதல் 1936 வரை ஒரே ஒரு ஆண்டுதான் அவர் சாந்திநிகேதனில் ஓய்வாக இருக்க முடிந்தது. இடைக்காலத்தில் அவர் பாரத நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார். சீனா, சப்பான், இத்தாலி, நார்வே, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவர் உடல் பலவீனம் அடையும் வரை விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவரின் கனவுகள் ஒவ்வொன்றாக பலித்து வந்தன, விசுவபாரதி வளர்ந்து வந்தது.
1940ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் சாந்திநிகேதனுக்கே வந்து அவருக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற விருது வழங்கியது. அவரின் 80வது பிறந்த நாள் விழா 1941ல் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது. அந்த நாட்களில் அவரது உடல் மேலும் பலவீனம் அடைந்திருந்தது. கல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றது. எனினும் சிகிச்சை பலனின்றி 7 ஆம் தேதி ஆகஸ்ட் திங்களில் அவரது உயிர் உடலைப் பிரிந்தது.
வெளி இணைப்புகள்
Works of Rabindranath Tagore
குட்டென்பர்க் திட்டத்தில் ரவீந்திரநாத் தாகூரின் ஆங்கில படைப்புகள்
கூகிள் நிகழ்படத்தில் இரவீந்திரநாத் தாகூர் பற்றிய விவரணப்படம்
இரவீந்திரநாத் தாகூர்
இந்தியக் கல்விச் சூழலுக்காகக் கனவு கண்டவர்
குறிப்புகள்
மேற்கோள்கள்
2. https://www.vikatan.com/news/coverstory/124356-remembrance-of-rabindranath-tagore.html
இந்தியக் கவிஞர்கள்
நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்
1861 பிறப்புகள்
1941 இறப்புகள்
மேற்கு வங்காள நபர்கள்
வங்காள மக்கள்
கொல்கத்தா எழுத்தாளர்கள்
|
5070
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
|
சார்க்கண்டு
|
ஜார்க்கண்டு (, , ) இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 2000ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு சார்க்கண்டுமாநிலம் உருவாக்கப் பட்டது. ராஞ்சி சார்க்கண்டு மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர் (பெரிய நகரம்), பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள். சார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. சார்க்கண்டுகனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்டு என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.
பொருளாதாரம்
சார்க்கண்டு மாநிலத்தின் முக்கிய பொருளாதார ஆதாரங்களாக இரும்பு, நிலக்கரி, அலுமினியம் போன்ற கனிமச் சுரங்கங்கள் அதிகமாக உள்ளது.
நிர்வாகம்
79,716 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சார்க்கண்டு மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பாலமூ கோட்டம், வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம், தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம், கொல்கான் கோட்டம், சாந்தல் பர்கனா கோட்டம் என ஐந்து கோட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாநிலத்தின் இருபத்து நான்கு மாவட்டங்கள் கோட்டங்களின் பகுதியாக இயங்குகிறது.
பலாமூ கோட்டம்
பாலமூ கோட்டத்தில் காட்வா மாவட்டம். பலாமூ மாவட்டம், லாத்தேஹார் மாவட்டம் என மூன்று
மாவட்டங்களை கொண்டது.
வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்
வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டத்தில் சத்ரா மாவட்டம், ஹசாரிபாக் மாவட்டம், கிரீடீஹ் மாவட்டம், கோடர்மா மாவட்டம், தன்பாத் மாவட்டம், போகாரோ மாவட்டம் மற்றும் ராம்கர் மாவட்டம் என ஏழு மாவட்டங்களை கொண்டுள்ளது.
தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம்
தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டத்தில் ராஞ்சி மாவட்டம், லோஹர்தக்கா மாவட்டம், கும்லா மாவட்டம், சிம்டேகா மாவட்டம், மேற்கு சிங்பூம் மாவட்டம்,
மற்றும் குந்தி மாவட்டம் என ஐந்து மாவட்டங்களை கொண்டுள்ளது.
கொல்கான் கோட்டம்
கொல்கான் கோட்டத்தில் மேற்கு சிங்பூம் மாவட்டம், சராய்கேலா கர்சாவான் மாவட்டம் மற்றும் கிழக்கு சிங்பூம் மாவட்டம் என மூன்று மாவட்டங்கள் உள்ளது.
சாந்தல் பர்கனா கோட்டம்
சாந்தல் பர்கனா கோட்டத்தில் தேவ்கர் மாவட்டம், ஜாம்தாடா மாவட்டம், தும்கா மாவட்டம், கோடா மாவட்டம், பாகுட் மாவட்டம், மற்றும் சாகிப்கஞ்சு மாவட்டம் என ஆறு மாவட்டங்கள் உள்ளது.
போக்குவரத்து
தரைவழி போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலை 31,
தேசிய நெடுஞ்சாலை 2,
தேசிய நெடுஞ்சாலை 6, மற்றும் தேசிய நெடுஞ்சாலை எண்கள் 23, 32, 33, 75, 78, 80, 98, 99, 100 மற்றும் 139 ஆகியவைகள் நாட்டின் அனைத்து பகுதிகளுடன் தரைவழியாக இணைக்கிறது.
தொடருந்து
சார்க்கண்டு மாநிலத் தலைநகர் ராஞ்சியிலிருந்து இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இணைக்கும் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.
வானூர்தி நிலையங்கள்
பிர்ச முண்டா பன்னாட்டு விமான நிலையம், ராஞ்சி,
ஜம்செட்பூர் விமான நிலையம், தன்பாத் விமான நிலையம், சகுலியா விமான நிலையம், பொகாரோ விமான நிலையங்கள் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் வான் வழியாக இணைக்கிறது.
மக்கள் வகைப்பாடு
மொத்த மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடி மக்கள் 28% ஆகவும், பட்டியல் சமூக மக்கள் 12% ஆகவும் உள்ளனர்.
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 32,988,134 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 32,988,134 மற்றும் பெண்கள் 16,930,315 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 948 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 414 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 66.41% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு76.8% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.42% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,389,495 ஆக உள்ளது.
சமயம்
பழங்குடி இன மக்கள் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில், இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 22,376,051 (67.83%) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 4,793,994 (14.53%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 1,418,608 (4.30 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 71,422 (0.22%) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 14,974 (0.05 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 8,956 (0.03%) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 4,235,786 ( 12.84%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 68,343 (0.21%) ஆகவும் உள்ளது.
அரசியல்
சட்டமன்ற தொகுதிகள்
எண்பத்து ஒன்று சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட சார்க்கண்டு மாநிலத்தில், மொத்தமுள்ள எண்பத்து ஒன்று சட்டமன்ற தொகுதிகளில், பட்டியல் பழங்குடி மக்களுக்கு-ST 27 தொகுதிளும், பட்டியல் சமூகத்திற்கு 9 தொகுதிகளும், பொதுப்பிரிவினருக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொகுதிகள்
பதின்நான்கு மக்களவை தொகுதிகளில் பட்டியல் பழங்குடி மக்களுக்கு-ST 5 தொகுதிகளும், பட்டியல் சமூகத்திற்கு 1 தொகுதியும், பொதுப்பிரிவினருக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநிலப் பிரச்சனைகள்
சார்க்கண்டு மாநிலம் நக்சலைட்-மாவோயிஸ்ட் போராளிகளின் சிவப்பு தாழ்வாரமாக உள்ளது. 1967ஆம் ஆண்டில் இப்பகுதியில் போராளிகளுக்கும்-மாநில காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 6,000 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
சுற்றுலாத் தலங்கள்
கசாரிபாக் தேசியப் பூங்கா மற்றும் டாட்டா ஸ்டீல் விலங்கு காட்சிச்சாலை ஆகும்.
மாநிலத்தின் புகழ் பெற்றவர்கள்
மகேந்திரசிங் தோனி
கரிய முண்டா
சிபு சோரன்
சுதர்சன் பகத்
சுனில் குமார் சிங்
ஜெயந்த் சின்ஹா
நிசிகாந்த் துபே
பசுபதி நாத் சிங்
பித்யூத் பரன் மத்தோ
மது கோடா
ரகுபர் தாசு
ரவீந்திர குமார் பாண்டே
ரவீந்திர குமார் ராய்
ராம் தகல் சவுத்ரி
லட்சுமண் கிலுவா
விஜய் குமார் ஹன்ஸ்தக்
விஷ்ணு தயாள் ராம்
ஹேமந்த் சோரன்
மேலும் பார்க்க
சார்க்கண்டு அரசு
சார்கண்ட் மாவட்டப் பட்டியல்
சார்கண்டின் வரலாறு
சார்கண்ட் முதலமைச்சர்கள் பட்டியல்
சார்க்கண்டின் சட்டமன்றம்
சார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஜார்க்கண்ட் மாநில அதிகார்பபூர்வ வலைத்தளம்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
|
5071
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
|
சம்மு காசுமீர் மாநிலம்
|
சம்மு காசுமீர் (ஆங்கிலம்: Jammu and Kashmir, டோக்ரி: جموں او کشمیر, ) இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள இயூனியன் பிரதேசம் ஒன்றாகும். லடாக் தவிர்த்த இதன் பெரும்பகுதிகள் இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் மாநிலம் லடாக்கையும் சம்முவையும் காசுமீர் பகுதியையும் உள்ளடக்கிய மாநிலமாக அக்டோபர், 2019 ஆண்டு முடிய விளங்கியது.
சம்மு காசுமீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் சீனாவை எல்லையாகவும், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் பாக்கித்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காசுமீர் மற்றும் வடக்கு நிலங்கள் பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. சம்மு, காசுமீர், லடாக் ஆகியவை இதன் மூன்று பெரும் பிரிவுகள். சம்மு பகுதியில் இந்து மதத்தினரும், காசுமீர் பகுதியில் இசுலாமியரும், பெருபான்மையினராக உள்ளனர். இலடாக்கில் பௌத்தர்களும் இஸ்லாமியரும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் உள்ளனர். இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. முன்பு ஒரே நிலப்பகுதியாக ஆளப்பட்டு வந்த இந்தியா காசுமீர் மாநிலத்தின் சில பகுதிகள் குறித்து பாக்கித்தானுடன் காசுமீர் பிரச்சினை, சியாச்சின் பிணக்கு மற்றும் சீனாவுடன் அக்சாய் சின் பிணக்குகள் கொண்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதி சம்மு காசுமீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைப் பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் ” இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்” என்றே குறிப்பிடுகின்றனர். ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை “இந்தியாவால் நிருவகிக்கப்படும் காசுமீர்” என்று அழைக்கின்றன.
சம்மு காசுமீர் மாநிலத்தைப் புவியியல் அடிப்படையில் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: சம்மு, காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக். கோடைகாலத்தில் சிரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் சம்மு நகர் தலைநகராகவும் செயல்படுகிறது. மிக அழகான மலைப்பாங்கான நில அமைப்பையும், ஏரிகளையும் கொண்ட காசுமீர் பள்ளத்தாக்கு, புவியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. சம்மு பகுதியில் உள்ள எண்ணற்ற கோவில்களும், மசூதிகளும் ஆயிரக்கணக்கான இந்து மற்றும் இசுலாமிய சமய புனிதப் பயணிகளை ஈர்க்கின்றன. லடாக் பகுதி தொலைதூர மலை அழகையும், நீண்ட பெளத்த கலாச்சாரத்தையும் கொண்டு இருப்பதால் "குட்டி திபெத்" என்று அழைக்கப்படுகிறது.
ஆகத்து 2019-இல் கொண்டு வரப்பட்ட 2019 சம்மு காசுமீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் லடாக்கும், சம்முவும் காசுமீரும் தனித்தனி ஒன்றியப் பகுதிகளாக மாற்றப்பட்டன.
வரலாறு
சம்மு மற்றும் காசுமீர் பகுதியை முதன்முறையாக மொகலாய பேரரசர் அக்பர் 1586 ஆம் ஆண்டில், தமது படைத்தலைவர்களான பகவன் தாஸ், முதலாம் இராமசந்திரா ஆகியோரை கொண்டு வென்றார். மொகலாய படை காசுமீர் பகுதியை ஆண்டு வந்த துருக்கிய ஆட்சியாளரான யூசூப் கான் படையை வென்றது. இப்போருக்கு பின், அக்பர் முதலாம் LPஇராமசந்திராவை ஆளுநராக நியமித்தார். முதலாம் இராமசந்திரா, அப்பகுதியில் கோயில் கொண்ட இந்து தேவதையான ஜம்வா மாதாவின் பெயரில் ஜம்மு நகரை நிறுவினார்.
1780 ஆம் ஆண்டு, முதலாம் ராமச்சந்திராவின் வழித்தோன்றலான ரஞ்சித் தியோவின் மறைவுக்கு பின், சம்மு காசுமீர் பகுதி சீக்கியரால், ரஞ்சித் சிங் என்பவரால் பிடிக்கப்பட்டது. அதன்பின் 1846 வரை சீக்கிய ஆதிக்கத்திலிருந்து வந்தது. ரஞ்சித் தியோவின் கிளையில் தோன்றிய குலாப் சிங் சீக்கிய அரசரான ரஞ்சித் சிங்கின் அவையில் முக்கிய பங்காற்றி, பல போர்களில் வெற்றி பெற்றமையை அடுத்து ரஞ்சித் சிங், 1820 இல் குலாப் சிங்கை ஜம்மு பகுதியின் ஆட்சியாளராக அறிவித்தார். மிகத் திறமையான பல படைத்தலைவர்களைக் கொண்ட குலாப் சிங் மிக விரைவாகத் தனது செல்வாக்கை உயர்த்தினார். படைத்தலைவர் சொரோவார் சிங் மூலம் காசுமீருக்கு கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் உள்ள லடாக் பகுதியையும், பால்டிசான் பகுதியையும் கைப்பற்றினார். (இது தற்போது பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு நிலமாகும்)
1845 ஆம் ஆண்டில் முதலாவது ஆங்கிலேய- சீக்கிய போர் வெடித்த போது, போரில் எவ்வித பங்கும் கொள்ளாமல் இருந்த குலாப் சிங், 1846 ஆம் ஆண்டு நடைபெற்ற சொப்ரோன் போருக்குப் பின் இருதரப்புக்கும் அமைதியை கொண்டு வரும் நடுநிலையாளராகவும், ஆங்கிலேய ஆலோசராகவும் மாறினார். இதன் விளைவாக இரண்டு உடன்பாடுகள் ஒப்பு கொள்ளப்பட்டன. முதலாவது ஒப்பந்தத்தின் படி, ஆங்கிலேயர் போரால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு (1.5 கோடி ரூபாய் ) ஈடாக மேற்கு பஞ்சாப் பகுதியைத் தம்வசம் கொண்டனர். இதன் மூலம் பஞ்சாப் பேரரசு தனது பெருமளவு நிலப்பகுதியை இழந்தது. இரண்டாவது ஒப்பந்தத்தின் படி ஜம்மு மன்னர் குலாப் சிங் முன்பு பஞ்சாப் பேரரசைச் சார்ந்த நிலப்பகுதியில் உள்ளடக்கிய காசுமீர் பகுதியை சுமார் 75 இலட்சம் ரூபாய்க்கு பிரித்தானிய இந்தியா அரசிடமிடமிருந்து வாங்கினார். புதிய ஜம்மு காஷ்மீர் இராச்சியம் நிறுவப்பட்டது. 1857 குலாப் சிங்கின் மறைவுக்கு பின் அவரது மைந்தன் ரன்பீர் சிங் மேலும் பல பகுதிகளை வென்று ஜம்மு காஷ்மீர் இராச்சியத்துடன் இணைத்தார்.
ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காசுமீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இசுலாமியர் வாழ்ந்து வந்தனர். ஒப்பந்தத்தை மீறி அக்டோபர் 20, 1947 அன்று பாக்கிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காசுமீரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றனர். ஆரம்பத்தில் பாக்கிஸ்தானை எதிர்த்துப் போராடிய காசுமீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் தலைமை ஆளுனர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காசுமீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது. ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காசுமீருக்குள் நுழைந்தனர். ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது. இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐநா தீர்மானத்தில், பாக்கிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது. பாக்கிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேற மறுத்து விடவே, இந்தியாவும் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த விழையவில்லை.
இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளின் அரசாங்க உறவுகள் பாதிப்படைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே மூன்று போர்கள் காசுமீர் பகுதியில் நடந்துள்ளன. அவையாவன, இந்திய-பாகிஸ்தான் போர், 1965, வங்காளதேச விடுதலைப் போர் மற்றும் கார்கில் போர். முந்தைய காசுமீர் நிலப்பகுதியில் 60 விழுக்காடு பகுதியை இந்தியாவும், ஆசாத் காசுமீர் மற்றும் வடக்கு நிலங்கள் என்று அழைக்கப்படும் 30 விழுக்காடு பகுதியைப் பாக்கிஸ்தானும், 1962 ஆம் ஆண்டுக்குப் பின் 10 விழுக்காடு பகுதியைச் சீனாவும் நிர்வகிக்கின்றன.
இது போன்று கிழக்கு பகுதியும் எல்லைப் பிரச்சனையில் சிக்குண்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இங்கிலாந்து, திபெத், ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே காசுமீர் எல்லைபற்றிய பல உடன்படிக்கைகள் ஏற்பட்டாலும், அவைகளில் எதிலும் சீனா உடன்படாமல் விலகி இருந்தது. பின் 1949 இல் சீன பொதுவுடைமை கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரும் சீனா தம் காசுமீர் எல்லை கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை. 1950 களில் துவக்கத்தில் சீனப் படை லடாக் நிலப்பரப்பின் வட கிழக்கு பகுதியில் தமது ஆக்கிரமிப்பைத் துவக்கியது. 1956–57 ஆண்டுகளுக்குள் அக்சாய் சின் பகுதியில் சிஞ்சியாங்-மேற்கு திபெத் ஆகியவற்றை இணைக்கும் முழுமையான இராணுவ சாலையை அமைத்து விட்டது. இச்சாலை அமைப்பதை பற்றி எவ்வித தகவலையும் அறியாத இந்தியா, பின்னர், அதுபற்றி அறிந்த போது, அப்பகுதி தமது பகுதியாகக் கோரியது. இதுவே இரு நாடுகளுக்கும் இடையே அக்டோபர் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற சீன- இந்திய போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 1962 ஆம் ஆண்டுக்குப் பின் அக்சாய் சின் பகுதி முழுமையான சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், அதனைத் தொடர்ந்த சில காசுமீர் பகுதிகளை (காரகோரம் ஒப்பந்தம்) பாக்கிஸ்தான் சீனாவுக்கு இலவசமாக 1963 ஆண்டு கொடுத்தது.
1957 இல் மாநிலத்தின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டது முதல் புகழ்பெற்ற காசுமீரத் தலைவர் சேக் அப்துல்லா மறைந்த 1982 வரை இடையிடையே அமைதியும், அதிருப்தியும் மாறி வந்த சம்மு காசுமீர் மாநிலத்தில் 1982 ஆம் ஆண்டுக்குப் பின் அமைதியின்மை தலைதூக்கியது. 1987 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடந்த குளறுபடிகளும், பாக்கிஸ்தான் உளவு துறையின் மறைமுக ஆதரவும் மேலும் அமைதியின்மையை உருவாக்கியது. அதன் பின் தொடர்ச்சியாகத் தீவிரவாதிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இருதரப்புமே அதிக அளவில் மனித உரிமை மீறல் குற்றங்களை தொடர்ந்து புரிவதாகக் கூறப்படுகிறது. இக்குற்றங்களில் படுகொலைகள், தடுத்து வைத்தல், கற்பழிப்பு, கொள்ளையிடுதல் ஆகியவையும் அடங்கும்.. இருப்பினும், தீவிரவாதிகளின் ஆதிக்கம் 1996 ஆண்டு முதல் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
புவியியல் மற்றும் காலநிலை
சம்மு காசுமீர் இயற்கை வனப்புமிக்க பல பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளது. அவற்றில் சிறப்புமிக்கவை காசுமீர் பள்ளத்தாக்கு, தாவி பள்ளத்தாக்கு(Tawi), செனாப் பள்ளத்தாக்கு, பூன்ஞ் பள்ளத்தாக்கு, சிந்து பள்ளத்தாக்கு மற்றும் லிடர் பள்ளத்தாக்கு (Lidder ) ஆகியவை. காசுமீர் பள்ளத்தாக்கு சுமார் 100 கிமீ அகலத்துடன் 15520 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இமயமலை காசுமீர் பள்ளத்தாக்கை லடாக் நிலப்பகுதியிலிருந்து பிரிக்கிறது. பீர் பஞ்சால்(Pir Panjal ) மலைத்தொடர் இப்பள்ளத்தாக்குப் பகுதியை மேற்கிலும் தெற்கிலும் சூழ்ந்து வட இந்திய சமவெளியையும் காசுமீர் பள்ளத்தாக்கையும் பிரிக்கிறது. வட கிழக்குப் பகுதியில் இப்பள்ளத்தாக்கு இமயமலை வரை தொடர்கிறது. மக்கள்தொகை அடர்த்தி அதிகமான அழகிய காசுமீர் பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து சுமார் 1850 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்க அதன் அருகில் உள்ள பீர் பஞ்சால் மலைத்தொடர் ஏறத்தாழ 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இமயமலை ஆறுகளில் ஒன்றான ஜீலம் ஆறு மட்டுமே காசுமீர் பள்ளத்தாக்கு வழியே பாயும் பெரிய ஆறாகும். சிந்து ஆறு, தாவி ஆறு, ராவி ஆறு மற்றும் செனாப் ஆறு ஆகிய ஆறுகள் இம்மாநிலத்தில் பாயும் மற்றைய இமயமலை ஆறுகள். சம்மு காசுமீர் பல இமயமலை பனியாறுகளை (Himalayan glaciers) தன்னகத்தே கொண்டுள்ளது. சராசரியாகக் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5753 மீட்டர் உயரத்திலிருக்கும் உலகின் நீளமான இமயமலை பனியாறான சியாச்சென் பனியாறு சுமார் 70 கிலோமீட்டர் நீளம் உடையது.
சம்மு காசுமீர் மாநிலத்தின் காலநிலை அதன் மாறுபட்ட நிலவமைப்புக்கு தகுந்தவாறு இடத்துக்கிடம் மாறுபடுகிறது. உதாரணமாகத் தெற்கில் ஜம்மு பகுதியில் பருவக்காற்றுக் காலநிலை நிலவுகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை மாதம் சராசரியாக 40 முதல்50 மில்லி மீட்டர் வரை மழை பெறுகிறது.வேனிற் காலத்தில் ஜம்மு நகரின் வெப்பம் 40 °C (104 °F) வரையும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சில ஆண்டுகளில் பெருமழையும் பெறுகிறது (650 மில்லி மீட்டர்). செப்டம்பர் மாதத்தில் மழை குறைந்து அக்டோபர் மாதம் கடும் வெப்பத்துடன் வறண்ட வானிலை காணப்படுகிறது. இம்மாதத்தில் வெப்பம் சுமார் 29 °C ஆக இருக்கிறது.
அரபிக் கடலின் அண்மையால் ஆண்டுக்குச் சுமார் 635 மில்லி மீட்டர் மழை பெறும் ஸ்ரீநகர் பகுதி மார்ச் முதல் மே மாதங்களில் மட்டும் சுமார் 85 மில்லிமீட்டர் மழை பொழிவை பெறுகிறது . இமயமலை தொடரால் மழை மேகங்கள் தடுக்கப் படுவதால் லடாக் நிலப்பரப்பில் கடும் குளிரும், வறட்சியும் நிலவுகிறது. வருட மழைப்பொழிவு சொற்பமான 100 மில்லிமீட்டர்க்கும் குறைவாகவும், மிகக் குறைந்த ஈரப்பதமும் காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 3 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் இப்பகுதியில் குளிர்காலம் மிகக் கடுமையானது. இப்பகுதியில் இருக்கும் சான்ஸ்கர் ( Zanskar) வட்டத்தின் சராசரி ஜனவரி வெப்பநிலை சுமார் -20 °C (-4 °F) ஆகும். அதுவே, சில கடும் குளிர் ஆண்டுகளில் -40 °C (-40 °F) வரை குறையக்கூடும். கோடைக் காலத்தில் லடாக் மற்றும் சான்ஸ்கர் பகுதியில் சுமார் 20 °C (68 °F) வெப்பம் நிலவுகிறது. இருப்பினும் இரவு நேரம் குளிர் அதிகமாகவே உணரப் படுகிறது.
பிரிவுகள்
சம்மு காசுமீர் ஜம்மு, காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மேலும் இம்மூன்று பகுதிகள் 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சியாச்சின் பனியாறு, இந்திய இராணுவ கட்டுப்பாட்டில் இருப்பினும் அப்பகுதி சம்மு காசுமீர் மாநில ஆட்சிக்குள் கொண்டு வரப்படவில்லை.
மக்கள் வாழ்க்கைக் கணக்கியல்
இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே இசுலாமியர் பெரும்பான்மையினராக உள்ளனர். மாநிலத்தில் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுவோர் சுமார் 67% சதவிகிதமானோர். லடாக் நிலப்பகுதியில் பௌத்த சமயத்தைச் சார்ந்தோர் 46%. இப்பகுதி மக்கள் இந்தோ-திபெத்திய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஜம்முவின் தெற்கு பகுதியில் உள்ளோர் பெரும்பாலும் இந்தியாவின் மற்றைய அண்டைய மாநிலங்களான ஹரியானா பஞ்சாப், டெல்லி ஆகிய பகுதிகளிலிருந்து குடியேறியவர்கள்.
புகழ்பெற்ற அரசியல் நிபுணர் அலெக்சாண்டர் எவன்ஸ் கணிப்பின் படி, 1990களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களால் தோராயமாக 95% சதவிகித (160,000-170,000 ) காசுமீர் பண்டிட்டுகள் (காசுமீர் பிராமண சமுதாயத்தினர்) காசுமீர் பள்ளத்தாக்கு பகுதியை விட்டு வெளியேறி விட்டனர். அமெரிக்க உளவு அமைப்பான சென்டிரல் இன்டலிஜன்ஸ் ஏஜென்சி (சிஐஏ) அறிக்கையின் படி, சுமார் 300,000 காசுமீர் பிராமணர் இசுலாமியர்களின் குறிவைத்த தாக்குதல்களால் சம்மு காசுமீர் மாநிலத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 12,541,302 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 6,640,662 மற்றும் பெண்கள் 5,900,640 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 889 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 56 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி 67.16 % படிப்பறிவு ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 76.75 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 56.43 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,018,905 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 23.64% ஆக உள்ளது. நகர்புறங்களில் 72.62% மக்களும், கிராமபுறங்களில் 27.38% மக்களும் வாழ்கின்றனர்.
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 3,566,674 (28.44 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 8,567,485 (68.31 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 35,631 (0.28 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 234,848 (1.87 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 2,490 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 112,584 (0.90 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 1,508 (0.01 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
சம்மு காசுமீர் மாநிலத்தின் முதன்மை மொழிகள் : காஷ்மீரி மொழி உருது மொழி, தோக்ரி மொழி, பகாரி மொழி, பால்டி மொழி, லடாக் மொழி, பஞ்சாபி, கோஜ்ரி மொழி மற்றும் தாத்ரி மொழி ஆகியன ஆகும். பாரசீக-அரபி எழுத்துக்களால் எழுதப்படும் உருது மொழி மாநிலத்தின் அலுவல் மொழியாகும். இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டாவது மொழிகளாக உள்ளன.
அரசியலும் அரசும்
2019க்கு முன்புவரை இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்தச் சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது. சம்மு காசுமீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும் சம்மு காசுமீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும் இவை அனைத்தும் ஆகத்து 2019-இல் கொண்டு வரப்பட்ட 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் ரத்து செய்யப்பட்டது.
இராணுவம்
இந்திய இராணுவத்தின் தரைப்படை மற்றும் விமானப்படையின் வடக்கு மண்டலத்தின் தலைமையகம் உதம்பூரில் உள்ளது.
ஆன்மீக, பன்னாட்டுச் சுற்றுலாத் தளங்கள்
தால் ஏரி, சோன்மார்க், பகல்கம் மற்றும் குல்மார்க் பன்னாட்டு சுற்றுலாத் தலங்களாகவும், ரகுநாத் கோயில் சங்கராச்சாரியார் கோயில், வைஷ்ணவ தேவி, அமர்நாத், சிவகோரி குகைக் கோயில்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களாக உள்ளது.
போக்குவரத்து வசதிகள்
வானூர்தி நிலையங்கள்
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் விமான நிலையங்கள் வான் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகள்
தேசிய நெடுஞ்சாலை 1எ காஷ்மீரின் ஊரி நகரத்தையும் ஜலந்தர் நிலையத்தையும் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 1டி காஷ்மீர் நகரத்துடன் லடாக்கின் லே நகரத்தை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 1பி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளை இணைக்கிறது. பீர் பாஞ்சல் மலைத்தொடரில் உள்ள பானிகால் கணவாய் பகுதியில் உதம்பூர் மாவட்டத்தின் பனிஹால் நகரத்தையும், அனந்தநாக் மாவட்டம்|அனந்தநாக் மாவட்டத்தின் காசிகுண்ட் நகரத்தை இணைக்கு ஜவகர் குகை, செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை மற்றும் பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலைகள் உள்ளது.
தொடருந்து
ஜம்மு நகரத்துடன் பாரமுல்லாவை, கற்றா-உதம்பூர்-பனிஹால்-காசிகுண்ட்-அனந்தநாக் மற்றும் ஸ்ரீநகர் வழியாக இணைக்கும் ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை அமைக்கும் பணியில் முடிவடையும் தருவாயில் உள்ளது. தற்போது ஜம்மு - வைஷ்ணதேவி கோயில் மற்றும் பனிஹால் - பாரமுல்லா இடையே தொடருந்துகள் இயக்கப்படுகிறது.
இதனையும் காண்க
ஜம்மு காஷ்மீர் இராச்சியம்
ஜம்மு காஷ்மீர் வரலாறு
ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)
ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை
ஜவகர் குகை
செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை
பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை
பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஜம்மு காஷ்மீர் அதிகாரப்பூர்வ வலைத்தளம்
ஜம்மு காஷ்மீர்
இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
இந்தியாவின் முன்னாள் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள்
|
5073
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
ஜம்சேத்பூர்
|
ஜாம்சேத்பூர் (, ) சார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு முக்கிய நகரமாகும். இங்கு தான் இந்தியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இந்நகரம், டாடா நிறுவனத்தை தொடங்கிய ஜாம்ஷெட்ஜி டாடாவால் நிறுவப்பட்டபோது சாக்சி என்று அழைக்கப்பட்டது. 1919ஆம் ஆண்டு செல்ம்ஸ்போர்டு துரை இந்நகரின் நிறுவுனரின் நினைவாக ஜம்சேத்பூர் என பெயர் சூட்டினார்.
சம்சேத்பூர் சார்க்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தின் தலைநகராகும். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1,337,131 மக்கள் இங்கு வாழ்கின்றனர். சம்செத்பூரின் அண்டை நகரங்களை உள்ளடக்கிய சம்சேத்பூர் மாநகரம் கிழக்கு இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் மூன்றாவது பெரிய நகராகும். கொல்கத்தா, பட்னா மற்ற இரண்டு நகரங்கள். இது இந்தியாவில் 36வது பெரிய நகராகும். சோட்டா நாக்பூர் மேட்டுநிலத்தில் அமைந்துள்ள இந்நகரைச்சுற்றி தால்மா மலை அமைந்துள்ளது. சவர்ணரேகா, கர்கை என்ற ஆறுகள் இதன் வடக்கிலும் மேற்கிலும் பாய்கின்றன.
சம்சேத்பூர் கிழக்கு இந்தியாவிலுள்ள பெரும் தொழில் நகராகும். டாடாவின் டாடா மோட்டார், டிசிஎசு, டாடா பவர், டாடா இரும்பு போன்ற பல நிறுவனங்களும் மற்ற நிறைய நிறுவனங்களும் இங்கு உள்ளன. இந்தியாவின் பெரிய தொழில் பகுதியான அதியபூரில் 1,200க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அதியபூர் சம்சேத்பூர் மாநகரை சேர்ந்த நகர்.
சம்சேத்பூர் 2010இல் இந்தியாவின் 7வது தூய்மையாக நகர் என்று இந்திய அரசின் மதிப்பீடு தெரிவிக்கிறது. இது 2006-2020 காலபகுதியில் உலகின் 84வது வேகமாக வளரும் நகர் என கணிக்கப்பட்டுள்ளது இந்நகரின் பெரும் பகுதி டாடா இரும்பாலை நிருவாகத்தால் நிருவகிக்கப்படுகிறது. சம்சேத்பூர் ஐநாவின் உலக நெருக்கலான நகரங்கள் என்ற முன்னோடி திட்டத்தின் பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தெற்காசியாவில் இந்நகரம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சொற்பிறப்பு
1919 ஆம் ஆண்டில், செம்சுபோர்டு பிரபு அதன் நிறுவனர் ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடாவின் நினைவாக சாக்சி என்று அழைக்கப்பட்ட ஒரு நகரத்தை ஜாம்சேத்பூர் எனப் பெயரிட்டார். அவரது பிறந்த நாளான மார்ச் 3 அன்று நிறுவனர் தினமாக கொண்டாடப்பட்டது. ஜே.என் டாடா தனது மகன் தோராப்ஜி டாடாவுக்கு ஒரு பெரிய நகரத்தைப் பற்றிய தனது பார்வை குறித்து எழுதியிருந்தார். மார்ச் 3 நிறுவனர் தினத்தன்று இது , 225-ஏக்கர் கொண்ட ஜூபிலி பார்க் பகுதி முழுவதும் சுமார் ஒரு வாரம் அற்புதமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
நகரத்திற்கு பல புனைப்பெயர்கள் உள்ளன, அவற்றில் "ஜார்க்கண்டின் தொழில்துறை தலைநகரம்" ; "ஸ்டீல் சிட்டி", "ரயில் நிலையத்தின் பெயருக்குப் பிறகு" டாடாநகர் " என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இது சாக்சி கிராமத்திற்கு அருகிலுள்ள இதனை "காளிமதி" ("கருப்பு மண்ணின் நிலம்" என்று பொருள்படும்) என்றும் அழைக்கப்பட்டது. சாக்சி 1919 இல் ஜாம்சேத்பூர் என மறுபெயரிடப்பட்டது.
நிலவியல்
ஜம்சேத்பூர் சார்க்கண்ட் மாநிலத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது மற்றும் ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் எல்லையாக உள்ளது. நகரின் சராசரி உயரம் 135 மீட்டர் , வரம்பு 129 மீ முதல் 151 மீ வரை. ஜம்சேத்பூரின் மொத்த புவியியல் பகுதி 209 கி.மீ சதுரம் ஆகும். ஜம்சேத்பூர் முதன்மையாக ஒரு மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ளது மற்றும் மேற்கு முதல் கிழக்கு நோக்கி ஓடும் தால்மா மலைகளாலும் மற்றும் அடர்ந்த காடுகளாலும் சூழப்பட்டுள்ளது. நகருக்கு அருகிலுள்ள மற்ற சிறிய மலைத்தொடர்கள் உக்கம் மலை மற்றும் சடுகோடா-முசபானி மலைத்தொடர்கள். இந்த நகரம் பெரிய சோட்டா நாக்பூர் பீடபூமி பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். இந்த பகுதி தார்வாரியன் காலத்தைச் சேர்ந்த வண்டல், உருமாற்ற மற்றும் பற்றவைக்கப்படும் பாறைகளால் உருவாகிறது.
காலநிலை
ஜம்சேத்பூரில் வெப்பமண்டல ஈரமான மற்றும் வறண்ட காலநிலை உள்ளது இது (கோப்பன் காலநிலை). கோடைகாலங்கள் மார்ச் நடுப்பகுதியில் தொடங்கி மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடையும் அந்த சம்யங்களில் இங்கு மிகவும் வெப்பமாக இருக்கும். கோடையில் வெப்பநிலை மாறுபாடு . குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை . ஜம்சேத்பூரின் காலநிலை தென்மேற்கு பருவமழையால் குறிக்கப்படுகிறது. ஜம்சேத்பூரில் ஜூலை முதல் செப்டம்பர் வரை அதிக மழை பெய்யும், சுமார் மழை பெய்யும் . ஆண்டுதோறும் மழை பெய்யும்.
பொருளாதாரம்
இந்தியாவின் முதல் தனியார் இரும்பு மற்றும் எஃகு நிறுவனமாக ஜம்சேத்பூர் உள்ளது. ஜம்சேத்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரும்புத் தாது, நிலக்கரி, மாங்கனீசு பாக்சைட்டு மற்றும் சுண்ணாம்பு உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ளன. இது ஒரு நவீன, தொழில்துறை நகரம்; இரும்பு மற்றும் எஃகு, திறந்த சரக்கு வண்டி உற்பத்தி, டின்ப்ளேட் உற்பத்தி, சிமென்ட் மற்றும் பிற சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் இந்த தயாரிப்புகளைச் சுற்றி வருகின்றன.
மிகப்பெரிய தொழிற்சாலை டாடா ஸ்டீல் (முந்தைய டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் அல்லது டிஸ்கோ), இது நகரின் மையத்தில் அமைந்துள்ளது. டாடா ஸ்டீல் இந்தியாவில் மிகப்பெரிய இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி செய்யும் ஆலையாகும், அதே போல் பழமையானது. டாடா ஸ்டீல் சிறந்த ஒருங்கிணைந்த எஃகு ஆலையாக பன்னிரண்டு முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது; பிரதமரின் கோப்பையை பத்து முறை வென்றது மற்றும் இரண்டு முறை சிறப்பான சான்றிதழைப் பெற்றது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
ஜாமஷெட்பூர் வலைத்தளம்
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
சார்க்கண்டிலுள்ள மாநகரங்கள்
கிழக்கு சிங்பூம் மாவட்டம்
|
5074
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
நியூயார்க்கு நகரம்
|
நியூயார்க்கு நகரம் (ஆங்கிலம்: New York City; இலங்கை வழக்கு: நியூ யோர்க்) ஐக்கிய அமெரிக்காவில் மிகக்கூடுதலான மக்கள் தொகையுடைய நகரமாகும். இங்கு உலகெங்குமிருந்து குடிபெயர்ந்த மக்கள் வாழ்வதால் இந்த நகரத்தின் தாக்கம் வணிகம், நிதி, பண்பாடு, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் உலகளாவிய அளவில் கூடுதலாகும். இங்கு ஐக்கிய நாடுகளின் தலைமையகம் அமைந்திருப்பதால் பன்னாட்டு அரசியலில் சிறப்பு இடத்தை வகிக்கிறது. இதே பெயரிலுள்ள நியூயார்க் மாநிலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக நியூயார்க்கு நகரம் என்று நகரம் என்ற சுட்டுச்சொல்லுடன் அடிக்கடி குறிக்கப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் அட்லாண்டிக் கரையோரம் பெரிய இயற்கை துறைமுகமாக அமைந்துள்ள இந்நகரம் பிரான்க்சு, புருக்ளின், மேன்காட்டன், குயின்சு, ஸ்டேட்டன் தீவு ஆகிய (மாவட்டங்களுக்கு இணையான) ஐந்து பரோக்களால் ஆனது. 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 8.3 மில்லியனுக்கும் கூடுதலாகும். இதன் நிலப்பரப்பு 305 சதுர மைல்களாகும் (790 சதுர கிமீ). நியூயார்க்கு நகரம் ஐக்கிய அமெரிக்காவிலேயே மக்களடர்த்தி மிக்க இடமாகும். 18.8 மில்லியனாக மதிப்பிடப்படும் பெருநகர நியூயார்க்குப் பகுதியின் மக்கள் தொகை நாட்டிலேயே மிகவும் அதிகமானதாகும். பெருநகர நியூயார்க்கின் நிலப்பரப்பு 6,720 சதுர மைல்களாகும் (17,400 சதுர கிமீ).
நியூயார்க்கு டச்சுகாரர்களால் 1624ல் வணிக துறைமுகமாக உருவாக்கப்பட்டது. 1664ல் ஆங்கிலேயர்களின் கைக்கு இக்குடியேற்றம் மாறும் வரை நியு ஆம்ஸ்டர்டாம் என்று அழைக்கப்பட்டு வந்தது. 1785லிருந்து 1790வரை இந்நகரம் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக செயல்பட்டது. 1790லிருந்து இதுவே அமெரிக்காவின் பெரிய நகராக இருந்து வருகிறது.
இந்நகரில் உள்ள பல இடங்கள் உள்ளூர் மக்கள் மற்றும் அன்றி வெளியூர் மக்களாலும் நன்கு அறியப்பட்டதாகும். 19-20ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பல மில்லியன் கணக்கான குடியேற்றவாதிகளை சுதந்திரதேவி சிலை வரவேற்றது. கீழ் மேன்காட்டன் பகுதியில் உள்ள வால் தெரு இரண்டாம் உலகப்போருக்கு பின் ஆதிக்கம் மிகுந்த உலக நிதி மையமாக திகழ்கிறது, இங்கு நியூயார்க் பங்குச் சந்தை அமைந்துள்ளது. உலகின் பல உயரமான கட்டடங்கள் இந்நகரில் உள்ளன. புகழ் பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டடம் இங்குள்ளது, உலக வணிக மைய இரட்டைக்கோபுர கட்டடங்கள் இங்கிருந்தன.
பல்வேறு பண்பாட்டு இயக்கங்களின் தோற்றவாயிலாக இந்நகரம் இருந்துள்ளது. இலக்கியம் மற்றும் கலை சார்ந்த ஷெர்ம் மறுமலர்ச்சி இயக்கம்; ஹிப் ஹாப், பங்க் சல்சா, டிஸ்கோ போன்றவை இங்கு தோன்றியவை.
2005ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி ஏறக்குறைய 170 மொழிகள் இங்கு பேசப்படுகின்றன மற்றும் 36% மக்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியில் பிறந்தவர்கள். தூங்கா நகரம், கோத்தம், பெரிய ஆப்பிள், உலக தலைநகரம் போன்ற பல பட்டப்பெயர்கள் இதற்கு உண்டு.
வரலாறு
1524ஆண்டு ஐரோப்பிய கண்டுபிடிப்புக்கு முன் இப்பகுதியில் 5,000 லெனபி அமெரிக்க பூர்வகுடிகள் வசித்து வந்தனர். பிரெஞ்சு அரசுக்கு கீழ் வேலை பார்த்த இத்தாலிய கடலோடி ஜியோவானி டா வெர்ரராசானோ இப்பகுதியை கண்டவர். 1614ல் டச்சு மக்களின் இரோம வணிக குடியேற்றம் முதல் ஐரோப்பி குடியேற்றமாகும். இவர்கள் மேன்காட்டனின் தென்முனையை நியூ ஆம்ஸ்டர்டாம் என அழைந்தனர். டச்சு குடியேற்றவாத அதிகாரி மின்யூயிட் மேன்காட்டன் தீவை லெனபிக்களிடம் இருந்து 1626ல் 60 கில்டருக்கு வாங்கினார். (2006ல் அதன் மதிப்பு 1000அமெரிக்க டாலராகும்). அக்கூற்று தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்காட்டன் தீவு 24அமெரிக்க டாலர் மதிப்புடைய கண்ணாடி மணிகளுக்கு வாங்கப்பட்டதாக புதிய தகவல் தெரிவிக்கிறது. 1664ல் இந்நகரை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் யார்க் மற்றும் அல்பேனி இளவரசர் நினைவாக இதற்கு நியு யார்க் என் பெயரிட்டனர். இரண்டாம் ஆங்கில-டச்சு போரின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்த படி ஆங்கிலேயர்களின் முழு கட்டுப்பாட்டில் மேன்காட்டன் தீவு வந்தது. டச்சுகாரர் வசம் அப்போது மதிப்பு மிக்க ரன் தீவு சென்றது. (இது இந்தோனேசியாவில் உள்ள தீவு) 1700ல் லென்னபிகளின் தொகை 200ஆக குறைந்துவிட்டது.
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் நியூயார்க்கு நகரம் சிறப்புமிக்க வணிக துறைமுகமாக வளர்ந்தது. 1754ல் கொலம்பியா பல்கலைக்கழகம் பிரித்தானியாவின் மன்னர் இரண்டாம் ஜார்ஜ் துணையோடு கிங் கல்லூரி என்ற பெயரில் கீழ் மேன்காட்டனில் உருவாக்கப்பட்டது. அஞ்சல் முத்திரை சட்டத்திற்கு எதிராக காங்கிரசு இங்கு 1765ல் கூடியது. விடுதலை மக்கள் என்ற பெயரிலான அமைப்பு இந்நகரில் உருவானது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இங்கு நிலைகொண்டிருந்த பிரித்தானிய படைகளுடன் பூசல் கொண்டது.
அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது இங்கு பல தொடர் சமர்கள் நிகழ்ந்தன. 1776ல் மேல் மேன்காட்டனிலுள்ள வாசிங்டன் கோட்டையில் நடந்த சமரையடுத்து இப்பகுதி வடஅமெரிக்காவின் பிரித்தானிய இராணுவத்தின் தளமாகவும் அரசியல் நடவடிக்கைகளின் தளமாகவும் மாறியது. 1783ல் இராணுவ ஆக்கரமிப்பு முடியும் வரை இது பிரித்தானிய ஆதரவு அகதிகளுக்கு உரிய சிறந்த இடமாக திகழ்ந்தது. ஆக்கரமிப்பின் போது ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் நகரின் கால்வாசி அழிந்தது. போருக்கு பின் கூடிய கான்பிடரேட் காங்கிரசு நியூயார்க்கு நகரத்தை நாட்டின் தலைநகராக அறிவித்தது. ஐக்கிய அமெரிக்காவின் அரசிலமைப்புமும் உறுதி செய்யப்பட்டது. 1789ல் நாட்டின் முதல் அதிபர் ஜார்ஜ் வாசிங்டனுக்கு பதவி ஏற்பு செய்விக்கப்பட்டது; 1789லியே ஐக்கிய அமெரிக்காவின் முதல் காங்கிரசு கூட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை கூடின. ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் உரிமை சட்டமும் வரைவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் வால் தெருவிலுள்ள பெடரல் கூடத்தில் நிகழ்ந்தன. 1790ல் நியூயார்க்கு நகரம் ஐக்கிய அமெரிக்காவின் பெரிய நகராக உருவெடுத்தது. அது வரை பிலடெல்பியா பெரிய நகராக இருந்தது.
19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வளர்ச்சிகளாலும் குடியேற்றத்தாலும் இந்நகரம் மாற்றமடைந்தது. 1811ல் ஆணையரின் திட்டம் என்ற வளர்ச்சி கருத்துருவின் படி மேன்காட்டனில் உள்ள அனைத்து தெருக்களும் இணைக்கப்பட்டது. 1819ல் வெட்டப்பட்ட எர்ரி கால்வாய் இந்நகரின் துறைமுகத்தையும் வட அமெரிக்காவின் உள்ளுள்ள விவசாய சந்தைகளுடன் இணைத்தது. உள்ளூர் அரசியல் டம்மன்னி கூடத்தின் எல்லைக்குள வந்தது. நகர அரசியல் அயர்லாந்து குடியேற்றவாசிகளால் ஆதரிக்கப்பட்டது. பொதுநல எண்ணம் கொண்ட சில தலைவர்கள் பொது பூங்கா அமைக்க வேண்டுமென அரசாங்கத்தை தொடர்ந்து கோரினார்கள். அதன் விளைவாக 1857ல் பொது பூங்கா அமைக்கப்பட்டது. குறிப்படித்தக்க அளவில் மேன்காட்டன் பகுதியில் அடிமைகள் அல்லாத கருப்பின மக்கள் வாழ்ந்தார்கள். புருக்ளின் பகுதியிலும் சிலர் வாழ்ந்தனர். 1827வரை நியூயார்க்கு நகரில் அடிமைகள் இருந்தார்கள், 1830வாக்கில் நியூயார்க்கு அடிமை வணிகத்தை எதிர்ப்பவர்களின் மையமாக திகழ்ந்தது. 1840ல் நியூயார்க்கு நகரின் கருப்பின மக்கள் தொகை 16000ஆக இருந்தது. 1860ல் நியூயார்க்கில் 200,000க்கும் அதிகமான அயர்லாந்து மக்கள் வாழ்ந்தனர், இது நகரின் மக்கள் தொகையில் கால் பாகமாகும்.
அமெரிக்க உள்நாட்டு போரின் (1861–1865) போது இராணுவத்திற்கு குடும்பத்திலிருந்து ஒருவர் கட்டாயமாக சேரவேண்டும் என்ற சட்டத்தினால் 1863ல் பெரும் கலவரம் நடந்தது. 1898ல் தனி அதிகாரமிக்க நகரமாக இருந்த புருக்ளின், நியூயார்க்கு கவுண்டி (பிரான்க்சின் சில பகுதிகள் இதில் இருந்தன), ரிச்மாண்ட் கவுண்டி மற்றும் குயின்சு கவுண்டியின் மேற்கு பகுதிகளை இணைத்து புதிய நவீன நியூயார்க்கு நகரம் உருவாக்கப்பட்டது. 1904ல் தொடங்கப்பட்ட சப்வே நியூயார்க்கு நகரின் பல்வேறு பகுதிகளின் இணைப்பிற்கு துணையாக இருந்தது. 20ம் நூற்றாண்டின் முதல் பாதி முழுவதும் இந்நகரம் உலகின் தொழில், வணிகம் மற்றும் தகவல் பரிமாற்ற துறையின் மையமாக விளங்கியது. 1904ல் நீராவி கப்பல் ஜெனரல் சுலோகம் கிழக்கு ஆற்றில் தீ பிடித்து எரிந்ததில் 1021பேர் இறந்தனர். 1911ல் தி டிரையாங்கல் சர்ட்வெய்ஸ்ட் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 146 பேர் இறந்தனர். இவ்விபத்தின் காரணமாக ஆலை பாதுகாப்பு விதிகள் மேம்படுத்தப்பட்டன மேலும் பன்னாட்டு மகளிர் ஆடை தொழிலாளர்கள் சங்கத்தின் வளர்ச்சி துரிதமாகியது.
1920ல் அமெரிக்காவின் தென் பகுதியில் இருந்து வட பகுதி நோக்கி நடந்த பெரும் குடிபெயர்தலில் பெரும்பாலான ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் இலக்காக நியூயார்க்கு நகரம் இருந்தது. மதுவிலக்கு நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் ஹார்லம் மறுமலர்ச்சி இயக்கம் வளர்ச்சியடைந்தது. அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பெரும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக நகரில் பல உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டன. 1920ன் ஆரம்ப காலத்தில் அதிக மக்கள் தொகையுடைய நகர்ப்புற பகுதிகொண்டதாக நியூயார்க்கு நகரம் மாறியது. அதுவரை இலண்டன் அத்தகுதியை கொண்டிருந்தது. 1930ஆண்டுவாக்கில் மனித வரலாற்றில் முதல் முறையாக 10மில்லியன் மக்களுக்கு மேல் வாழும் பகுதியாக நியூயார்க்கு சுற்று வட்டாரம் விளங்கியது. பெரும் பொருளாதார பின்னடைவு காலத்தில் சீர்திருத்தவாதி லகார்டியா நகர தந்தையாக தேர்வு செய்யப்பட்டார் மற்றும் 80ஆண்டுகள் நகர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த டம்மன்னி கூடத்தின் வீழ்ச்சி தொடங்கியது.
இரண்டாம் உலகப்போர் முடிந்து திரும்பிய வீரர்களால் போருக்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி அதிகமாகியது, அவர்களால் கிழக்கு குயின்சு பகுதியில் பல வீட்டுகள் கட்டும் திட்டம் கைகூடியது. உலகப்போரினால் இந்நகருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. போர் முடிந்தவுடன் உலகின் முன்னனி நகராக வலம் வந்தது. வால் தெருவிலுள்ள நிதி நிறுவனங்கள் உலக பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்தியதும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் இங்கு கட்டப்பட்டதும் உலக அரசியலில் இந்நகரின் ஆதிக்கம் அதிகமாகியதும் காரணமாகும்.
1960களில் நியூயார்க் நகரம் பொருளாதார சிக்கல்களை சந்தித்தது, மேலும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1970களில் குற்றங்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. 1980களில் நிதித்துறை நிறுவனங்கள் மேம்பாடு அடைந்தன அதன் காரணமாக நகரின் நிதி நிலைமை முன்னேற்றம் கண்டது. 1990களில் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது, ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்காவிலிருந்து புதிதாக அதிகளவிலான மக்கள் இந்நகரில் குடியேறினார்கள்.
செப்டம்பர் 11, 2001ல் இந்நகரில் அமைந்த இரட்டை கோபுரங்களான உலக வணிக மையத்தில் நடந்த தாக்குதலில் கிட்டதட்ட 3000 மக்கள் பலியாயினர். அந்த இடத்தில் புதிய உலக வணிக மையம் கட்டப்பட்டு வருகிறது. அது 2013ல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவியியல்
நகரமைப்பு
நியூயார்க்கு நகரம் ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் நியூ யார்க் மாநிலத்தின் தென்கிழக்கில் வாசிங்டன் டிசிக்கும் பாஸ்டனுக்கும் நடுவே அமைந்துள்ளது. இந்நகரம் ஹட்சன் ஆற்றின் முகத்துவாரத்திலும் அட்லாண்டிக் கடலிலும் அமைந்திருப்பதாலும் இயற்கை துறைமுகம் கொண்டிருப்பதாலும் வணிக நகராக சிறப்புற்றது. நியூயார்க்கின் பெரும்பகுதியானது மேன்காட்டன், ஸ்டேட்டன் தீவு மற்றும் லாங் தீவு ஆகிய மூன்று தீவுகளில் அமைந்துள்ளது.
ஹட்சன் ஆறு ஹட்சன் பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து நியூயார்க் குடாவில் கலக்கிறது. நியூயார்க்கு நகரத்துக்கும் டிராய் (நியூயார்க்குக்கும் இடைபட்ட ஆறானது கயவாய் ஆகும். ஹட்சன் ஆறானது இந்நகரையும் நியூ செர்சியையும் பிரிக்கும் எல்லையாக உள்ளது. கிழக்கு ஆறானது ஒரு நீரிணையாகும். இது லாங் தீவின் சவுண்ட் என்னுமிடத்தில் இருந்து பாய்கிறது, இது பிரான்க்சு மற்றும் மேன்காட்டன் பகுதிகளை லாங் தீவிலிருந்து பிரிக்கிறது. ஹர்ல்ம் ஆறு மற்றொரு நீரிணையாகும். இது ஹட்சன் ஆற்றுக்கும் கிழக்கு ஆற்றுக்கும் இடையில் ஓடுகிறது. இது மேன்காட்டனையையும் பிரான்க்சையும் பிரிக்கிறது.
நியூயார்க்கு நகரின் மொத்த பரப்பளவு 468.9 சதுர மைல்களாகும் (1,214 ச.கிமீ). 164.1 சதுர மைல்கள் (425 சகிமீ) நீர்ப்பரப்பையும் 304.8 சதுர மைல்கள் (789 சகிமீ) நிலப்பரப்பையும் கொண்டவை.
காலநிலை
நியூயார்க்கு நகரம் ஈரப்பதமுடைய கீழ்வெப்பமண்டல காலநிலையை கொண்டதாகும். கோடைகாலம் வெப்பமாகவும் ஈரப்பதம் மிக்கதாகவும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 79 – 84 °F (26 – 29 °C) ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 63 – 69 °F (17 – 21 °C) ஆகவும் இருக்கும் எனினும் வெப்பமானது 90 °F (32 °C) க்கு அதிகமாக சராசரியாக 16 – 19 நாட்களுக்கும் 4–6 ஆண்டுகளுக்கு ஒரு முறை 100 °F (38 °C) அளவை தாண்டியும் பதிவாகும். குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும். மேலும் ஆர்டிக் பகுதியில் இருந்து வீசும் காற்று அட்லாண்டிக் கடலின் ஆதிக்கத்தை ஓரளவிற்கு குறைத்துவிடும். அமெரிக்காவின் உள் நாட்டு நகரங்களான சிகாகோ, பிட்ஸ்பர்க் போன்றவை நியூ யார்க்கின் நிலநேர்க்கோடுக்கு அருகில் அமைந்திருந்தாலும் அவற்றை விட நியூ யார்க் குளிர்காலத்தில் குளிர் குறைவாக இருக்க காரணம் அட்லாண்டிக் கடலாகும். சனவரி மாதமே நியூயார்க்கு நகரின் அதிக குளிருள்ள மாதமாகும் இதன் சராசரி வெப்பநிலை 32 °F (0 °C). எனினும் சிலவேளைகள் குளிர்கால வெப்பநிலை 10 to 20 °F (−12 to −6 °C) என்று குறைந்தும் சில வேளைகள் 50 or 60 °F (~10–15 °C) என்று அதிபமாகவும் காணப்படும். வசந்தகாலம் மற்றும் இலையுதிர் காலங்களில் வெப்பம் குளிர் மற்றும் இதமான சூடாக இருப்பினும் பொதுவாக குறைந்த ஈரப்பதமுடன் இதமான வெப்பநிலையுடன் காணப்படும்.
நியூயார்க்கு நகரம் ஆண்டுக்கு சராசரியாக 49.7 அங்குலம் (1,260 மிமீ) மழையளவை பெறும். குளிர்கால சராசரி பனிப்பொழிவு 24.4 அங்குலம் (62 செமீ) இருக்கும், இது ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும்.
சுற்றுச்சூழல்
ஐக்கிய அமெரிக்காவில் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் நியூயார்க்கு நகரில் அதிகம். இதனால் 2006ல் சேமிக்கப்பட்ட எரிபொருள் 1.8 பில்லியன் காலன். நகரின் மக்கள்தொகை அடர்த்தி, குறைந்த வாகனங்களின் பயன்பாடு மற்றும் அதிகளவான பொது போக்குவரத்து புழக்கம் ஆகியவற்றால் திறம்பட எரிபொருளை பயன்படுத்தும் நகரங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. நியூயார்க்கு நகரின் பைங்குடில் வளிமம் வெளியேற்றம் ஓர் ஆளுக்கு 7.1 மெட்ரிக் டன்னாகும், தேசிய சராசரி 24.5ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 2.7% இருந்த போதிலும், நாட்டின் பைங்குடில் வளிமம் வெளியேற்றத்தில் நகரின் பங்கு ஒரு விழுக்காடாகும். சராசரியாக இந்நகரிலுள்ள ஊர் மக்கள் பயன்படுத்தும் மின்சாரம் சான் பிரான்சிஸ்கோ மக்களின் பயன்பாட்டை விட பாதியாகவும் டாலஸ் மக்களின் பயன்பாட்டை விட கால்வாசியாகவும் உள்ளது.
சமீப காலமாக சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளில் இந்நகரம் இறங்கியுள்ளது. நியூயார்க்கு நகரில் மக்கள்தொகை அடர்த்தி அதிகம் இருப்பதால் நகர மக்களுக்கு ஈழை நோய் மற்றும் மூச்சு குழல் தொடர்பான நோய்கள் அதிகளவில் வருகின்றன. நகர அரசு எரிபொருள் ஆற்றல் திறன் மிக்க கருவிகளையே நகரின் அலுவலகங்களுக்கு வாங்க வேண்டும் என்பது கட்டாயமாகும். நியூயார்க்கு நகரில் நாட்டிலேயே அதிகளவான டீசல் கலப்பு வண்டிகளும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவளி வண்டிகளும் உள்ளன. நியூயார்க்கு நகரத்துக்கான குடிநீர் பாதுகாக்கப்பட்ட கேட்ஸ்கில் மலையிலிருந்து வருகிறது. அங்கு இயற்கையாக சுத்திகரிக்கப்பட்டு வருவதால் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு செல்லாமலே தூய்மையாக உள்ளது.
கட்டடக்கலை
நியூயார்க்கு நகரம் என்னும் போது நினைவுக்கு வருவது வானளாவிய கட்டடங்களாகும். ஆகஸ்ட் 2008கணக்கின் படி நியூயார்க்கு நகரில் 5,538 உயர்ந்த கட்டடங்களும், 200மீ (656அடி) க்கும் உயரமான 50 வானளாவிய கட்டடங்களும் இருந்தன. இது ஐக்கிய அமெரிக்காவில் அதிகமாகும். உலக அளவில் ஹாங் காங்கிற்கு அடுத்து இரண்டாவதாகும்.
கட்டடக்கலையில் சிறப்புமிக்க பல்வேறு பாணி கட்டடங்கள் இங்குள்ளன. காத்திக் பாணியில் கட்டப்பட்ட வூல்வொர்த் கட்டடம் அதிலொன்றாகும். 1916ல் எடுக்கப்பட்ட கட்டடங்களுக்கான வட்டார அளவிளான முடிவு புதிய கட்டடங்களுக்கு பின்னடைவாக அமைந்தது. புதிய விதிமுறைப்படி ஆர்ட் டேகோ வடிவமைப்பு முறையில் கட்டடப்பட்ட கிரைசலர் கட்டடம் (1930), கட்டப்பட்டது. பல வரலாற்று அறிஞர்களாலும் கட்டடக்கலை நிபுணர்களாலும் இதுவே நியூயார்க்கு நகரின் சிறந்த கட்டடமாக கருதப்படுகிறது. சீகிராம் கட்டடம் (1957) பன்னாட்டு பாணியில் கட்டடப்பட்ட கட்டடமாகும்.
நியூயார்க்கின் குடிமக்கள் வசிக்கும் பகுதியானது பலுப்பு நிற கற்களால் ஆன வரிசை வீடுகளாலும் டவுன்வீடுகளாலும் மற்றும் 1870 to 1930வளர்ச்சி காலங்களில் கட்டப்பட்ட தரம் குறைந்த வீடுகளும் ஆனது, 1835ல் ஏற்பட்ட பெரும் தீவிபத்தினால் நகரின் கட்டுமானப்பொருளாக மரத்திற்கு பதில் கல்லும் செங்கல்லும் மாறின. நியூயார்க்கிற்கு தேவைப்பட்ட கட்டுமான கற்கள் பல்வேறு இடங்களில் இருந்து தருவிக்கப்பட்டன.
பூங்கா
நியூயார்க்கு நகரம் 28,000 ஏக்கர் (110 சதுர கிமீ)க்கும் மேலான நகராட்சி பூங்கா நிலங்களையும் 14 மைல் (23 கிமீ) பொது கடற்கரையையும் கொண்டுள்ளது. ஜமைக்கா குடா வனவிலங்கு காப்பகம் 9,000ஏக்கருக்கும் (36 சதுர கிமீ) மேலான சதுப்பு நிலங்களை உடையது.
மேன்காட்டனின் மைய பூங்காவுக்கு ஆண்டுக்கு 30 மில்லியன் மக்கள் வருகிறார்கள். இதுவே அமெரிக்காவில் அதிக மக்கள் வருகைதரும் பூங்காவாகும். பூங்காவின் பெரும் பகுதி இயற்கையாக அமைந்ததது போல் தோன்றினாலும் இது முழுவதுமாக மனிதர்களால் செப்பனிடப்பட்டது. இதில் பல ஏரிகளும், குளங்களும், நடைபாதைகளும், இரண்டு பனிச்சறுக்கு அரங்குகளும் உள்ளன. இதில் ஒன்று ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நீச்சல் குளமாக மாற்றப்படும்
பரோக்கள்
நியூயார்க்கு நகரம் ஐந்து பரோக்களால் ஆனது. ஒவ்வொரு பரோவும் நியூயார்க்கு மாநிலத்துக்குட்பட்ட கவுண்டிகளாகவும் உள்ளன. ஒவ்வொரு பரோவும் தனி நகரங்களாக இருந்தால் நான்கு பரோக்களான புரூக்ளின், குயின்ஸ், மேன்காட்டன், மற்றும் பிரான்க்சு ஆகியவை அதிக மக்கள்தொகையுடைய பத்து நகரங்களில் ஒன்றாக இருக்கும்.
பிரான்க்சு
பிரான்க்சு (பிரான்க்சு கவுண்டி : மக்கள் தொகை 1,373,659 ) நியூயார்க்கு நகரின் வடக்கு பரோவாகும். நியூயார்க் யாங்கியின் அரங்கம் இங்குள்ளது. மேன்காட்டனின் சிறிய பகுதியான மார்பில் கில் தவிர அமெரிக்க நிலத்துடன் நிலம் வகையில் தொடர்புடைய நியூயார்க்கின் பகுதி பிரான்க்சு ஆகும். 265 ஏக்கர் (1.07 சதுர கிமீ) பரப்புடைய பிரான்க்சு மிருககாட்சி சாலையில் 6,000 விலங்குகள் உள்ளன. இதுவே நகர பகுதியில் அமைந்த பெரிய மிருககாட்சி சாலை ஆகும்.
மேன்காட்டன்
மேன்காட்டன் (நியூயார்க்கு வட்டம் (கவுண்டி) : மக்கள் தொகை 1,620,867) மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பரோவாகும். நகரின் பெரும்பாலான வானுயர கட்டடங்கள் இங்கேயே அமைந்துள்ளன. இது நகரின் நிதி மையமாக திகழ்கிறது. பல பெரிய நிறுவனங்களின் தலைமையகம், ஐக்கிய நாடுகளின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது. பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், பண்பாட்டு மையங்கள், பல அருங்காட்சியகங்கள, பிராட்வா அரங்கு, கிரின்விச் கிராமம் மற்றும் மேடிசன் கார்டன் சதுக்கம் ஆகியவை இங்கு அமைந்துள்ளது. மேன்காட்டனானது கீழ், நடு, மேல் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் மேன்காட்டன் ஆனது மைய பூங்காவினால் கிழக்கு பகுதி மேற்கு பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
புருக்ளின்
புருக்ளின் (கிங்ஸ் கவுண்டி : மக்கள் தொகை 2,528,050) நகரின் அதிக மக்கள் தொகை உடைய பரோவாகும். மேலும் இது 1898வரை தனி நகரமாக இருந்தது. புருக்ளின் பண்பாடு, சமூகம் மற்றும் இன என பன்முகத்தன்மை உடையது. இதன் கட்டடக்கலை தனிச்சிறப்பு மிக்கதாகும்
குயின்சு
குயின்சு (குயின்சு கவுண்டி : மக்கள் தொகை 2,270,338) மிகப்பெரிய பரோவாகும். மேலும் அமெரிக்காவிலுள்ள கவுண்டிகளில் இதுவே அதிகளவில் இன அடிப்படையில் பன்முகத்தன்மை உடையதாகும். இதன் வளர்ச்சியின் காரணமாக விரைவில் புரூக்ளினை விட அதிக மக்கள் தொகையுடையதாக மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சராசரி ஆண்டு வருமானமான $52,000 வெள்ளை அமெரிக்கர்களின் ஆண்டு வருமானத்தை விட அதிகமாகும். சிட்டி பீல்ட் என்பது அமெரிக்க அடிப்பந்தாட்ட அணியான நியூ யார்க் மெட்ஸின் வீடாகும். ஆண்டுதோறும் டென்னிசின் யூ.எஸ். ஓப்பன் போட்டி இங்கு நடத்தப்படுகிறது. நியூயார்க்கு பகுதிக்கான 3 வானூர்தி நிலையங்களில் லகார்டியா வானூர்தி நிலையம் மற்றும் ஜான் எப் கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இரண்டு இங்கு அமைந்துள்ளன.
ஸ்டேட்டன் தீவு
ஸ்டேட்டன் தீவு (ரிச்மாண்ட் கவுண்டி : மக்கள் தொகை 481,613) ஐந்து பரோக்களில் புறநகர் தன்மை வாய்ந்தது. ஸ்டேட்டன் தீவு புருக்ளின் உடன் வெரசானோ-நேரோ பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது மேன்காட்டன் உடன் ஸ்டேட்டன் தீவு படகு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது இலவச படகு சேவையாகும். சுதந்திர தேவி சிலை, எல்லிஸ் தீவு, கீழ் மேன்காட்டன் போன்றவற்றை தெளிவாக பார்க்கலாம் என்பதால் ஸ்டேட்டன் தீவு படகு பயணம் நியூயார்க்கு நகரில் சுற்றுலா பயணிகளை அதிகளவில ஈர்க்கும் இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. மைய ஸ்டேட்டன் தீவில் இருக்கும் 25 சதுர கிமீ கிரின்பெல்ட் பகுதி 35 மைல் (56 கிமீ) நடைபாதை தடங்களை கொண்டுள்ளது.
சுற்றுலா
ஆண்டுக்கு 47 மில்லியன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் நியூயார்க்கு நகருக்கு வருகை தருகிறார்கள். எம்பயர் ஸ்டேட் கட்டடம், எல்லிஸ் தீவு, பிராட்வே அரங்கம், மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகம், மைய பூங்கா, வாசிங்டன் சதுக்க பூங்கா, ராக்கஃவெல்லர் மையம், டைம்ஸ் சதுக்கம், பிரான்க்சு மிருககாட்சி சாலை, நியூயார்க் தாவரவியல் தோட்டம், ஐந்தாவது மற்றும் மாடிசன் நிழற்சாலைகளில் உள்ள கடைகள் சுற்றுலா பயணிகளை இடங்களாகும். சுதந்திர தேவி சிலை மிகப்பெரும்பாலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒன்றாகும்.
விளையாட்டு
நியூயார்க்கு பெருநகரத்திற்கு உட்பட்டு இரண்டு அடிபந்தாட்ட அணிகள் உள்ளன. நகரின் தற்போதய அடிபந்தாட்ட அணிகள் நியூ யார்க் யாங்கி மற்றும் நியூயார்க் மெட்ஸ் ஆகும். நியூயார்க்கு பெருநகரத்திற்கு உட்பட்டு இரண்டு அமெரிக்க காற்பந்தாட்ட அணிகள் உள்ளன, அவை நியூ யார்க் ஜெட்ஸ் மற்றும் நியூ யார்க் ஜெயன்ட்ஸ். இரண்டும் உள்ளூர் போட்டிகளை ஜெயன்ட் விளையாட்ரங்கத்தில் விளையாடுகின்றன. இவ்வரங்கம் அருகிலுள்ள நியூ செர்சியில் உள்ளது. நியூயார்க்கு நகர மாரத்தான் உலகில் அதிக மக்கள் கலந்து கொள்ளும் மாரத்தானாகும். 2006ல் 37866 பேர் ஓட்டத்தை நிறைவு செய்தனர்.
நியூ யார்க் ரேஞ்சர்ஸ் நகரின் பனி வளைதடியாட்ட அணியாகும். பெருநகர எல்லைக்குள் மேலும் இரண்டு பனி வளைதடியாட்ட அணிகள் உள்ளன. நியூ செர்சி டெவில்ஸ் மற்றும் லாங் தீவை சார்ந்த நியூ யார்க் ஐலண்டர்ஸ் என்பவையே அவையாகும். ரெட் புல் நியூ யார்க் என்பது நகரின் கால்பந்தாட்ட அணியாகும்.
நியூ யார்க் நிக்ஸ் என்பது நகரின் ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியாகும். நியூ யார்க் லிபர்ட்டி என்பது பெண்கள் கூடைப்பந்தாட்ட அணியாகும்.
மக்கள் தொகையியல்
அமெரிக்காவில் நியூ யார்க் அதிக மக்கள் தொகை உள்ள நகராகும். 2008ல் இதன் உத்தேச மக்கள்தொகை 8,363,710(1990ல் 7.3 மில்லியன் ஆகும்) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நியூ யார்க் மாநிலத்தின் மக்கள்தொகையில் 40.0% ஆகும். கடந்த பத்தாண்டுகளாக நகரின் மக்கள்தொகை உயர்ந்து வந்துள்ளது. 2030ல் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியனிலிருந்து 9.5 மில்லியன் ஆக இருக்கலாம் என கருதுகிறார்கள்.
நியூ யார்க்கின் மக்கள்தொகையியலின் சிறப்பு அதன் மக்கள் தொகை அடர்த்தியும், பன்முகத்தன்மையும் ஆகும். இது 100,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள அமெரிக்க நகரங்களில் இதுவே மிகுந்த மக்கள் அடர்த்திமிக்கதாகும். நகரின் மக்கள் அடர்த்தி சதுர மைலுக்கு 26,403 (10,194 கிமீ2) ஆகும். மேன்காட்டனின் மக்கள் தொகை அடர்த்தி சதுர மைலுக்கு 66,940 (25,846/சதுர கிமீ) ஆகும். இது நாட்டிலுள்ள கவுண்டிகளிலேயே மிக அதிகமாகும்.
வரலாறு முழுவதும் நியூ யார்க் நகரம் நாட்டிற்கு புதிதாக குடியேறுபவர்களின் நுழைவு வாயிலாக இருந்துள்ளது. தற்போது நகரின் மக்கள் தொகையில் 36.7% வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஆவர். 3.9% மக்கள் புவேர்ட்டோ ரிக்கோ, அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள தீவுகள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு பிறந்தவர்கள் ஆவர். அமெரிக்க நகரங்களில் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் மயாமியில் மட்டுமே நியூ யார்க்கை விட வெளிநாட்டில் பிறந்தவர்கள் அதிகம் உள்ளனர். அவைகளின் குடியேற்றவாசிகள் சில நாடுகளில் இருந்து அதிகஅளவில் உள்ளனர். ஆனால் நியூ யார்க்கில் அவ்வாறு இல்லை. பல நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு உள்ளனர். தனிப்பட்ட நாடு மற்றும் வட்டத்தை சார்ந்தவர்கள் அதிகமில்லை. இங்கு குடியேறியவர்களில் டொமினிக்கன் குடியரசு, சீனா, யமேக்கா, கயானா, மெக்சிகோ, எக்குவடோர், எயிட்டி, திரினிடாட் டொபாகோ, கொலம்பியா, உருசியா நாட்டு மக்கள் அதிகளவில் உள்ளனர். இந்நகரில் 170 மொழிகள் பேசப்படுகின்றன.
இஸ்ரேலுக்கு வெளியே நியூ யார்க் பெருநகரிலேயே யூத மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். டெல் அவீவ் நகரை விட இங்கு வசிக்கும் யூதர் எண்ணிக்கை மிக அதிகம். நியூ யார்க் மக்களில் 12% யூதர் மற்றும் யூத தொடர்பு உள்ளவர்கள். மிக அதிகளவில் இந்திய அமெரிக்கர்கள் இங்கு வசிக்கிறார்கள். நாட்டில் உள்ளவர்களில் கால் பங்கு இங்கு வசிக்கிறார்கள். நாட்டின் எந்த நகரையும் விட இங்கு வசிக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகம். ஆசியா கண்டத்துக்கு வெளியே நியூ யார்க் பெருநகரப்பகுதியிலேயே அதிகளவான சீனர்கள் வசிக்கிறார்கள். 2007 ஆண்டு கணக்கின்படி 619,427 சீனர்கள் வசிக்கிறார்கள்.
2005ல் எடுத்த கணக்கின் படி இங்கு வசிக்கும் ஐந்து பெரிய இனக்குழுக்கள் புவேர்ட்டோ ரிக்கர், இத்தாலியர், கரிபியர், டொமனிக்கர், சீனர்கள் ஆவர். புவேர்ட்டோ ரிக்கோவுக்கு வெளியே நியூயார்க்கு நகரிலேயே அதிக புவேர்ட்டோ ரிக்கர்கள் வசிக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதிகளவில் இத்தாலியர்கள் இந்நகரில் குடியேறினர். ஆறாவது பெரிய இனக்குழுவான அயர்லாந்து மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.
2005–2007ல் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுக்கும் பிரிவு நடத்திய கணிப்பில் நியூ யார்க் நகரில் வெள்ளை அமெரிக்கர்கள் 44.1% இருந்தனர், இதில் 35.1% எசுப்பானிய வெள்ளையற்றவர்கள் ஆவர். கருப்பர்கள் அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 25.2% உள்ளனர், அதில் 23.7% எசுப்பானிய கருப்பர்கள் அல்லாதவர்கள். அமெரிக்க இந்தியர்கள் 0.4% உள்ளார்கள், அதில் 0.2% எசுப்பானியர்யற்றவர். ஆசிய அமெரிக்கர்கள் நகர மக்கள் தொகையில் 11.6% உள்ளனர், அதில் 11.5% எசுப்பானியர்யற்றவர். பசிபிக் தீவுகளை சேர்ந்தவர்கள் நகர மக்கள் தொகையில் 0.1% க்கும் குறைவாகும். மற்ற இனத்தை சார்ந்த தனி நபர்கள் நகரின் மக்கள் தொகையில் 16.8% உள்ளார்கள். அதில் 1.0% எசுப்பானியர்யற்றவர். கலப்பு இனத்தவர்கள் நகர மக்கள் தொகையில் 1.9% ஆவர். அதில் 1.0% எசுப்பானியர்யற்றவர். நியூயார்க்கு நகர மக்கள் தொகையில் எசுப்பானியர்களும், தென் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் 27.4% உள்ளனர்.
இங்கு தனிநபர் வருமானம் அதிக ஏற்றதாழ்வுகளுடன் உள்ளது. 2005ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி வசதியானவர்களின் வீட்டு சராசரி வருமானம் $188,697, வசதியற்றவர்களின் வீட்டு சராசரி வருமானம் $9,320.
பொருளாதாரம்
நியூயார்க்கு நகரம் உலக தொழில் மற்றும் வணிக மையமாக திகழ்கிறது. இது இலண்டன் டோக்கியோ ஆகியவற்றுடன் உலக வணிக கட்டளை மையமாக திகழ்கிறது.
2005 -இல் நியூயார்க்கு பெருநகர பகுதியின் வருமானம் தோராயமாக $1.13 டிரில்லியன் ஆகும். பார்ச்சூன் 500ன் 43 நிறுவனங்கள் உட்பட பல பெரிய நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்கமைந்துள்ளன.
அமெரிக்க நகரங்களிலேயே இங்கு தான் அதிக அளவிலான வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளன. பத்துக்கு ஒன்று என்ற அளவில் தனியார் துறை வேலை வாய்ப்புகள் வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
உலகின் பல விலை உயர்ந்த மனைகள் இங்குள்ளன. ஜூலை 2, 2007ல் 510 மில்லியன் டாலருக்கு 450 பார்க் அவென்யூ என்ற முகவரியில் உள்ள கட்டடம் விற்றது. இது சதுர அடிக்கு 1,589 டாலர் ஆகும். 2001ல் 353.7 மில்லியன் சதுர அடி (32,860,000 சதுர மீ) அலுவலக இடம் மேன்காட்டனில் இருந்தது.
நடு மேன்காட்டன் பகுதியில் அதிகளவு வானளாவிய கட்டடங்கள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற எம்பயர் ஸ்டேட் பில்டிங் இங்கு தான் உள்ளது. கீழ் மேன்காட்டன் பகுதியில் வால் தெரு அமைந்துள்ளது. இங்கு தான் நியூயார்க்கு பங்கு சந்தை உள்ளது. வேலை வாய்ப்பு வருமானத்தில் 35விழுக்காடு நிதி சேவை நிறுவனங்களின் மூலம் கிடைக்கிறது. ஹாலிவுட்டுக்கு அடுத்த படியான பெரிய தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை இங்குள்ளது.
ஊடகம்
தொலைக்காட்சி, விளம்பரம், இசை, செய்திதாள்கள், புத்தக வெளியீட்டு நிறுவனங்களின் மையமாக நியூயார்க்கு விளங்குகிறது. நியுயார்க் வட அமெரிக்காவின் பெரிய ஊடக சந்தையாகும்.
டைம் வார்னர், நியூஸ் கார்ப்பரேசன், ஹெர்ச்ட் கார்ப்பரேசன், வியகாம் போன்ற பெரிய ஊடக நிறுவனங்களின் தலைமையகம் இங்குள்ளது. உலகின் சிறந்த எட்டு விளம்பர முகமையகங்களில் ஏழின் தலைமையகம் இங்குள்ளது. நாட்டின் புகழ்பெற்ற பெரிய இசை வெளியீட்டு நிறுவனங்களில் மூன்று இங்கு அமைந்துள்ளன.
அமெரிக்காவில் தனிப்பட்டவர்கள் தயாரிக்கும் படங்களில் மூன்றில் ஒரு பங்கு நியூயார்க்கிலேயே தயாரிக்கப்படுகின்றன. 200க்கும் மேற்பட்ட நாளிதழ்கள் மற்றம் 350 நுகர்வோர் இதழ்களின் அலுவலகங்கள் இங்குள்ளன. இங்குள்ள புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் 25,000 ஊழியர்களை வேலைக்கமர்த்தியுள்ளன. நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்டீரிட் ஜர்னல் ஆகிய இரண்டு தேசிய செய்தி நாளிதழ்கள் இங்கிருந்து வெளியாகின்றன. பரபரப்பு நாளிதழ்கள் இங்கிருந்து வெளியாகின்றன குறிப்பாக நியூயார்க் போஸ்ட், நியூயார்க்கு டெய்லி நியூஸ் என்பன 1801ல் அலெக்சாண்டர் ஹேமில்டன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டன.
40மொழிகளில் 270க்கும் மேற்பட்ட நாளிதழ்களும் இதழ்களுப் இங்கிருந்து வெளியாகின்றன. ஹர்ல்ம் பகுதியில் இருந்து வெளிவரும் நியூயார்க்கு ஆம்சிட்டர்டாம் நியூசு ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் செய்தியை சிறப்பாக தாங்கிவரும் இதழாகும்.
தொலைக்காட்சி துறை நியூயார்க்கு நகரிலேயே வளர்ந்தது அதன் காரணமாக குறிப்பிடத்தக்க அளவு வேலைவாய்ப்புகளை இந்நகரில் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் நான்கு பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களான ஏபிசி, சிபிஎஸ், ஃவாக்ஸ், என்பிசி ஆகியவற்றின் தலைமையகங்கள் நியூயார்க்கு நகரில் அமைந்துள்ளன.
எம்டிவி, ஃவாக்ஸ் நியுஸ், எச்பிஓ, காமடி சென்ரல் ஆகிய கம்பிவடம் மூலம் மட்டுமே நிகழ்ச்சிகளை தரும் அலைவரிசைகள் இந்நகரை மையமாக கொண்டு இயங்குகின்றன. 2005ல் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நியூயார்க்கு நகரில் படமாக்கப்பட்டன.
அரசாங்கம்
1898ல் ஒருமுகப்படுத்தப்பட்ட பிறகு நியூயார்க்கு நகரம் பெருநகர நகராட்சியாக நகரதந்தை-நகரவை உறுப்பினர் வடிவ அரசாக உருவெடுத்தது. நியூயார்க்கு நகர அரசு பொது கல்வி, சிறைச்சாலை, நூலகம், பொது மக்கள் பாதுகாப்பு, பொழுதுபோக்கு மையங்கள், குடிநீர் வழங்கல், நலத்துறை, கழிவுநீர் வெளியேற்றம் போன்றவற்றிற்கு பொறுப்பாகும். நகரதந்தை மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களின் பதவிகாலம் நான்கு ஆண்டுகளாகும். நியூயார்க்கு நகர்மன்றத்துக்கு 51 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நகரதந்தையும் நகர்மன்ற உறுப்பினர்களும் 3 முறை மட்டுமே தொடர்ச்சியாக பதவி வகிக்கமுடியும். ஒவ்வொரு முறையும் நான்காண்டுகள் கொண்டது. ஆனால் நான்காண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் போட்டியிடலாம்.
தற்போதய நகரதந்தை மைக்கேல் புளூம்பெர்க் முன்பு சனநாயக கட்சியிலும் பின் குடியரசு கட்சியிலும் (2001–2008) இருந்தவர். தற்போது எந்த அரசியல் கட்சி சார்பும் இல்லாமல் உள்ளார். செப்டம்பர் 11, 2001 நியூயார்க்கு நகர தாக்குதலுக்கு பின் பதவிக்கு வந்த இவர் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கல்வி துறையை நகரின் கட்டுப்பாட்டுக்கு இவர் கொண்டுவந்தார். பொருளாதார முன்னேற்றம், சிறந்த நிதி ஆளுமை, தீவிர பொதுமக்கள் நல கொள்கை போன்றவை இவரின் சாதனைகளில் சிலவாகும். 2006ல் பாஸ்டன் நகரதந்தை தாமஸ் மேனினோவுடன் இணைந்து துப்பாக்கிகளுக்கு எதிரான நகரதந்தைகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கினார். இதன் நோக்கம் சட்டவிரோத துப்பாக்கிகளை நகருக்குள் பயன்படுத்துவதை தடுத்து பொது மக்களை காப்பதாகும். 2008ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி நகரில் பதிவுசெய்துள்ள வாக்காளர்களில் 67% சனநாயக கட்சியை சார்ந்தவர்கள் ஆவர். 1924க்கு பிறகு நடந்த மாநில அளவிலான தேர்தலிலும் குடியரசு தலைவர் தேர்தலிலும் குடியரசு கட்சி வேட்பாளர்கள் இந்நகரில் பெரும்பான்மை பெற்றதில்லை.
குற்றம்
1980மற்றும் 1990களின் ஆரம்பத்தில் அதிகளவு குற்றங்கள் நிகழ்ந்தன. அக்கால கட்டத்தில் போதை பொருட்கள் தொடர்பான குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்தன, பல நகர்ப்பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டன. 2002ல் 100,000க்கும் அதிகமான மக்கள்தொகையுடைய 216அமெரிக்க நகரங்களின் குற்றங்களை கணக்கிட்ட போது அதில் நியூயார்க்கு நகரம் 197வது இடத்தில் இருந்தது. இது யூட்டா மாநிலத்தின் 106,000மக்கள்தொகையுடைய பிராவோ நகரின் குற்றங்களின் எண்ணிக்கை விழுக்காடுக்கு சமமாகும். 1993–2005 காலபகுதியில் நியூயார்க்கு நகரில் வன்முறைக் குற்றங்கள் 75% மேல் குறைந்தன, அக்காலப்பகுதியில் தேசிய அளவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. 2005ல் கொலைக்குற்றங்களின் விழுக்காடு 1966க்கு பிறகு மிகக்குறைவாக இருந்தது. 2007ல் நகரில் 500க்கும் குறைவான கொலைக்குற்றங்களே பதிவாகின, 1963லிருந்து குற்ற புள்ளிவிபரங்கள் வெளியிடப்படுவதிலிருந்து இதுவே குறைவாகும்.
சமூகவியலாளர்களும் குற்றவியலாளர்களும் திடும்மென குற்றங்கள் குறைந்ததற்கான காரணத்திற்கான ஒத்த கருத்தை எட்டமுடியவில்லை. நியூயார்க்கு நகர காவல்துறை கடைபிடித்த காம்ஸ்டாட், உடைந்த சாளர தேற்றம் போன்ற சில உத்திகள் காரணமாகும் என சிலர் கருதுகிறார்கள்
நியூயார்க்கு நகரம் கட்டமைப்புள்ள குற்றங்களுடன் தொடர்புபடுத்தி பேசப்படும். இது 1820ல் ஐந்து பாயிண்ட் பகுதியை சார்ந்த நாற்பது திருடர்கள், ரோச் காவலர் குற்ற கும்பல்களுடன் தொடங்குகிறது. 20ம் நூற்றாண்டில் மாபியா எனப்படும் குற்ற குழுக்கள் ஆதிக்கம் செலுத்தின. இவை ஐந்து குடும்பங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. 20ம் நூற்றாண்டின் கடைசி காலகட்டத்தில் பிளாக் ஸ்பேட் போன்ற சில குற்ற கும்பல்களும் வளர்ச்சிகண்டன. தற்போது லட்டினோ கிங், கிரிப்ஸ், பிளட், எம்எஸ்-13 போன்ற குற்ற கும்பல்கள் முதன்மையானவையாக உள்ளன
கல்வி
அமெரிக்காவில் பெரியதான நியூயார்க்கு நகர பொது பள்ளி அமைப்பு நகரின் கல்வித்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் 1200 பொது பள்ளிகளில் 1.1 மில்லியன் மாணவர்கள் பயில்கிறார்கள். மேலும் தனியார் நிர்வாகத்தின் கீழ் மதசார்பில்லாத மற்றும் மதசார்புடைய 900 பள்ளிகள் உள்ளன. இது கல்லூரி நகராக அறியப்படாத போதும் 594,000 பல்கலைக்கழக மாணவர்கள் இந்நகரில் உள்ளனர். இது அமெரிக்க நகரங்களில் அதிகமாகும். 2005ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி மேன்காட்டன் பகுதி நகரவாசிகளில் ஐந்தில் மூவர் கல்லூரி பட்டமும் நான்கில் ஒருவர் மேற்பட்டமும் பெற்றவர்கள். பர்னார்ட் கல்லூரி, கொலம்பியா பல்கலைக்கழகம், கூப்பர் யூனியன், ஃவார்தம் பல்கலைக்கழகம், நியூயார்க்கு பல்கலைக்கழகம், தி நியூ ஸ்கூல், யசிவா பல்கலைக்கழகம் போன்ற பல தனியார் பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன.
நகரில் நடக்கும் பெரும்பாலான அறிவியல் ஆய்வுகள் மருத்துவம் மற்றும் உயிரியல் துறை சார்ந்தவை. அமெரிக்காவில் ஆண்டுக்கு அதிகளவிளான முதுகலை பட்டம் பெறுபவர்கள் இங்கு உள்ளனர். 40,000 உரிமம் பெற்ற மருத்துவர்களும் 127 நோபல் பரிசு பெற்றவர்களும் நகரின் பள்ளி மற்றும் ஆய்வகத்துடன் தொடர்புடையவர்கள்.
நியூயார்க்கு பொது நூலகம் நாட்டிலேயே அதிக அளவிலான புத்தகங்களை கொண்ட பொது நூலகம் ஆகும். மேன்காட்டன், பிரான்க்சு, ஸ்டேட்டன் தீவு ஆகிய பரோக்கள் இதனால் பலன் பெறுகின்றன. குயின்சு பகுதி குயின்சு பரோ பொது நூலகம் மூலம், புருக்ளின் பரோ புருக்களின் பொது நூலகம் மூலமும் பலன் பெறுகின்றன.
போக்குவரத்து
அமெரிக்காவின் மற்ற நகரங்களைப் போல் அல்லாமல் நியூயார்க்கில் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் அதிகம். 2005ல் 54.6% நியூயார்க்கு மக்கள் வேலைக்கு செல்ல பொது போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளார்கள். நாட்டில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களில் மூன்றில் ஒருவர் நியூயார்க்கு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கிறார்கள். நாட்டின் மற்ற பகுதியில் 90% மக்கள் தனிப்பட்ட வாகனங்கள் மூலமே பணியிடங்களுக்கு செல்கிறார்கள்.
ஆம்டிராக் தொடர்வண்டி பென்சில்வேனியா நிலையத்தை பயன்படுத்தி நியூயார்க்கு நகருக்கு சேவை செய்கிறது. இதன் மூலம் வடகிழக்கு தடத்தில் உள்ள பாஸ்டன், பிலடெல்பியா, வாசிங்டன் டி.சி ஆகியவை நியூயார்க்கு நகருடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் நெடுந்தொலைவு வண்டிகள் மூலம் சிகாகோ, மயாமி, நியூ ஓர்லியன்ஸ், ரொறன்ரோ, மொண்ட்ரியால் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. போர்ட் அத்தாரிட்டி பேருந்து முனையம் நகரின் முதன்மையான மற்ற நகரங்களின் பேருந்துகள் வந்து செல்லும் இடமாகும். இங்கு ஓர் நாளைக்கு 7,000 பேருந்துகளும் 200,000 பயணிகளும் வந்து செல்கிறார்கள்.
நியூயார்க்கு நகரின் சப்வே சேவையை பயன்படுத்தும் நிறுத்தங்களின் எண்ணிக்கை 468 ஆகும். நிறுத்தங்களை கணக்கில் கொண்டால் இதுவே உலகின் பெரிய துரித தொடர்வண்டி சேவையாகும். 2006ல் இதில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 1.5 பில்லியன் ஆகும். பயணிப்பவர்களின் எண்ணிக்கையின் படி இது உலகின் மூன்றாவது பெரியதாகும். பெரிய நகரங்களான லண்டன், பாரிஸ்,வாசிங்டன் டிசி, மாட்ரிட், டோக்கியோ போன்றவற்றின் துரித தொடர்வண்டி சேவையானது நள்ளிரவில் மூடப்பட்டிருக்கும் ஆனால் நியூயார்க்கின் சப்வே 24 மணி நேரமும் திறந்திருக்கும். நியூயார்க்கு நகரில் வட அமெரிக்காவிலேயே நீளமான தொங்கு பாலம் அமைந்துள்ளது. உலகின் முதல் எந்திரத்தால் காற்றோட்ட வசதி செய்யப்பட்ட வாகனங்கள் செல்லும் குகை அமைக்கப்பட்டது. 12,000 ம் அதிகமான வாடகை மகிழுந்துகள் உள்ளன. ரூஸ்வெல்ட் தீவையும் மேன்காட்டனையும் இணைக்கும் வான் வழி திராம்வே உள்ளது. மேன்காட்டனை பல்வேறு இடங்களுடன் படகு சேவை இணைக்கிறது. ஸ்டேட்டன் தீவு படகு சேவை புகழ்பெற்றதாகும். 5.2 மைல் (8.4 கிமீ) பயணித்து மேன்காட்டனையும் ஸ்டேட்டன் தீவையும் இணைக்கும் இதில் ஆண்டுக்கு 19 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்கிறார்கள், பாத் (PATH – Port Authority Trans-Hudson) தொடர்வண்டி நியூயார்க்கு நகரம் சப்வேயை வடகிழக்கு நியூ செர்சியுடன் இணைக்கிறது.
ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம், நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம், லா கார்டியா வானூர்தி நிலையம் ஆகிய மூன்றும் நியூயார்க்கு நகருக்கு சேவைபுரியும் வானூர்தி நிலையங்களாகும். இதில் நுயூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள நியூ செர்சியில் அமைந்துள்ளது. 2005ல் 100 மில்லியன் பயணிகள் இந்த மூன்று வானூர்தி நிலையங்களையும் பயன்படுத்தினார்கள். 2004ல் அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களில் கால்வாசி (நான்கில் ஒரு பங்கு) பயணிகள் ஜான் எப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் நவார்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் மூலமாக சென்றார்கள்.
காட்சிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
nycgo.com - official tourism website of New York City
Museum of the City of New York - online collection of 145,000 photographs of New York City
அமெரிக்க நகரங்கள்
நியூ யோர்க் மாநில நகரங்கள்
நியூயார்க் நகரம்
|
5075
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA.%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
ப. சிதம்பரம்
|
பழனியப்பன் சிதம்பரம் (P. Chidambaram, பிறப்பு: செப்டம்பர் 16, 1945) தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சரும் ஆவார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிக்கின்றார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் இந்தியாவின், தமிழ்நாடு, மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், கண்டனூர் கிராமத்தில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமுதாயத்தில் பழனியப்பசெட்டியார், லட்சுமி தம்பதிக்கு செப்டம்பர் 16, 1945 ஆம் நாள் மகனாகப் பிறந்தார். ப. அண்ணாமலை, ப. லட்சுமணன் என்னும் இரு அண்ணன்களும் உமா என்னும் தங்கையும் இவருடன் பிறந்தவர்கள் ஆவர்., வழக்கறிஞராகப் பயிற்சிபெற்ற பொழுது உடன்பயிற்சி பெற்ற நளினி என்பவரைக் காதலித்தார். ஆனால், அக்காதலை சாதிவேறுபாட்டின் காரணமாக இவர் தந்தை பழனியப்பன் ஏற்க மறுத்தார். எனவே, நீதிபதி பி. எஸ். கைலாசம், சௌந்தரா கைலாசம் ஆகியோருக்கு மகளான, நளினியை 1968 திசம்பர் 11ஆம் நாள் பதிவுத்திருமணம் செய்துகொண்டார்; பின்னர் அவர் நண்பர்கள் சாந்தகுமார், சுதர்சனம் ஆகியோரின் முன்முயற்சியால் பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையில் பெரியார் திடலில் அவர்களது திருமணம் அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு கார்த்தி என்ற மகன் உள்ளார்.
கல்வி
சென்னை கிருத்தவக் கல்லூரி பள்ளியில் படிப்பு.
சென்னை லயோலா கல்லூரியில் பி.யூ.சி
சென்னை மாநிலக்கல்லூரியில் பி.எஸ்.சி. (புள்ளியியல்)
சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.
தொழில்
ப.சிதம்பரம் 1967ஆம் ஆண்டில் சுதேசமித்திரன் நாளிதழில் சிறிதுகாலம் பணியாற்றினார்.. சட்டம் பயின்ற இவர், மூத்த வழக்கறிஞர் நம்பியார் என்பவரிடம் இளம்வழக்கறிஞராகச் சேர்ந்து பயிற்சிபெற்றார். பி. எஸ். கைலாசம், கே. கே. வேணுகோபால் ஆகியோருடன் இணைந்து சிறிதுகாலம் தொழில்புரிந்தார். பின்னர் தனித்துத் தொழில்புரிந்து 1984ஆம் ஆண்டில் மூத்த வழக்கறிஞரானார்.
அரசியல் வாழ்க்கை
இந்திய தேசிய காங்கிரசில்
இவர், 1972ஆம் ஆண்டில் இந்திராகாந்தியின் தலைமையிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சி. சுப்பிரமணியத்தின் பரிந்துரையால் உறுப்பினர் ஆனார். 1973ஆம் ஆண்டில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். 1976ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பை வகித்தார். அப்பொழுது பொதுவுடைமைக்கட்சியைச் சேர்ந்த மைதிலி சிவராமன், பின்னாளில் இந்து இதழின் ஆசிரியாராகப் பொறுப்பேற்ற என். ராம் ஆகியோடு இணைந்து ரேடிக்கல் ரிவ்யூ (Radical Review) என்னும் இதழை வெளியிட்டு வந்தனர்.
1976ஆம் ஆண்டில் காமராசர் மறைவிற்குப் பின்னர் சிண்டிகேட் காங்கிரசு என்னும் நிறுவன காங்கிரசு இந்திராகாந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசோடு இணைந்தபொழுது, சி. சுப்பிரமணியன் பரிந்துரையால், அந்நாளைய தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் கோ. கருப்பையா மூப்பனாரால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு . 1976-77ஆம் ஆண்டில் அப்பதவியினை வகித்தார். நெருக்கடிநிலைக் காலத்தில் 1976ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் இராஜசிங்கமங்களத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திராகாந்தியின் சொற்பொழிவை மொழிபெயர்த்து அவரின் அறிமுகத்தைப் பெற்றார்.
1985 ஆம் ஆண்டில் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் (இந்திரா) இணைச் செயலாளர் ஆனார்.
தமிழ் மாநில காங்கிரசு
1996 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் பி. வி. நரசிம்ம ராவ் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க முடிவுசெய்தார். ஆனால் காங்கிரசின் தமிழ்நாட்டு உறுப்பினர்களும் தலைவர்களில் பெரும்பாலானோரும் இதனை எதிர்த்தனர். அவர்கள் கோ. கருப்பையா மூப்பனார் தலைமையில் பிரிந்துசென்று தமிழ் மாநில காங்கிரசு என்ற புதியகட்சியை 1996 மார்ச் 29ஆம் நாள் தொடங்கினர். அக்கட்சியின் நிறுவுநர்களில் ஒருவராகப் ப.சிதம்பரம் விளங்கினார்.
காங்கிரசு சனநாயகப் பேரவைத் தொடக்கம்
2001 ஆம் ஆண்டில் தமிழ்மாநில காங்கிரசு கட்சி, அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபொழுது அதனை எதிர்த்த ப.சிதம்பரம் காங்கிரசு சனநாயகப் பேரவை என்ற கட்சியை உருவாக்கி அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
மீண்டும் இந்திய தேசிய காங்கிரசில்
2004 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் காங்கிரசு சனநாயகப் பேரவையின் சார்பில் இந்திய தேசிய காங்கிரசின் சின்னத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, அமைச்சரானார் ப. சிதம்பரம். அதனைத் தொடர்ந்து 2004 சூன் 5ஆம் நாள் நடைபெற்ற காங்கிரசு சனநாயகப் பேரவையின் பொதுக்குழு, செயற்குழு ஆகியவற்றின் முடிவின்படி அக்கட்சி 2004 நவம்பர் 25ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசோடு இணைந்தது.
தேர்தலில் போட்டி
ப. சிதம்பரம் 1977ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட சி. சுப்பிரமணியம் பரிந்துரைத்தார்; ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாறாக, 1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடித் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதில் தோல்வியடைந்தார். இவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது அந்த ஒரு முறைதான்.
அமைச்சர்
1985 செப்டம்பர் 21ஆம் நாள் வணிக அமைச்சகத்தில் ஒன்றியத் துணை அமைச்சராக (Union Deputy Minister) நியமிக்கப்பட்டார்.
1985 திசம்பர் 26 ஆம் நாள் முதல் 1989 திசம்பர் 02ஆம் நாள் வரை பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதிய அமைச்சகத்தில் ஒன்றிய அரசு அமைச்சராகவும் (Union Minister of State) 1986 முதல் 1989 வரை உள்விவகார அமைச்சரவையில் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான ஒன்றிய அரசு அமைச்சராகவும் பதவிவகித்தார்.
1991 சூன் 21 ஆம் நாள் வணிக அமைச்சகத்தில் தனிப்பொறுப்புடைய ஒன்றிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1991 செப்டம்பரில் இவரும் இவர் மனைவி நளினியும் FFSL(Fair Growth Financial Services Limited) நிறுவனத்தின் 15000 பங்குகளை 1.5. இலட்சம் பங்குகளை வாங்கினர். இந்நிறுவனம் ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழலில் தொடர்புகொண்டிருந்ததால் 1992 சூலை 5 ஆம் நாள் தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.
1995ஆம் ஆண்டில் மீண்டும் வணிக அமைச்சகத்தில் தனிப்பொறுப்புடைய ஒன்றிய அமைச்சராக நியமிக்கப்பட்டு 1996 மே 16ஆம் நாள வரை அப்பதவியை வகித்தார்.
1996 சூன் 1ஆம் நாள் முதல் 21 April 1997 ஏப்ரல் 21 ஆம் வரை ஒரு முறையும்1997 மே 1 முதல் 1998 மார்ச் 19ஆம் நாள் வரை மறுமுறையும் இந்திய ஒன்றிய நிதி அமைச்சராகப் பதவிவகித்தார். 1996 சூன் முதல் சட்டம், நீதி மற்றும் கம்பெனி விவாகரங்கள் அமைச்சரவைக் கூடுதலாகக் கவனித்தார்.
2004 மே 22ஆம் நாள் முதல் 2008 நவம்பர் 30 ஆம் நாள் வரை இந்திய ஒன்றிய நிதி அமைச்சராக்கப் பதவிவகித்தார்.
2008 திசம்பர் 1ஆம் நாள் முதல் 2012 சூலை 31ஆம் நாள் வரை இந்திய ஒன்றிய உள்விவகார அமைச்சராகப் பதவிவகித்தார்.
2012 சூலை 31ஆம் நாள் முதல் 2014 மே 26ஆம் நாள வரை இந்திய ஒன்றிய நிதி அமைச்சராக்கப் பதவிவகித்தார்.
இவர் மத்திய நிதி அமைச்சராக இதுவரை 8 பட்ஜெட்களையும்,1 இடைக்கால பட்ஜெட்டையும் சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய்க்கு அடுத்து அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 1997–98ஆம் ஆண்டு இவர் தாக்கல் செய்த பட்ஜெட், கனவு பட்ஜெட் என்று பத்திரிக்கைளால் போற்றப்பட்டது.
கைது
ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் அந்நிய முதலீட்டை முறைகேடாகப் பெறுவதற்காக ப. சிதம்பரம் உதவினார் என்னும் குற்றச்சாட்டில் 21 ஆகஸ்ட் 2019 அன்று இரவு சிபிஐ மற்றும் அமலாக்கதுறையினர் இவரைக் கைது செய்தனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ப. சிதம்பரத்தின் அரசியல் வரலாறு - காணொளி
லோக் சபா வலைத்தளத்தில் சிதம்பரத்தைப் பற்றி
இந்திய நிதி அமைச்சகத்தின் வலைத்தளம்
சிதம்பரத்தின் 2004-2005 இந்திய பட்ஜெட் பேச்சு
|-
|-
|-
|-
|-
|-
|-
தமிழக அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
சிவகங்கை மாவட்ட நபர்கள்
10வது மக்களவை உறுப்பினர்கள்
11வது மக்களவை உறுப்பினர்கள்
12வது மக்களவை உறுப்பினர்கள்
14வது மக்களவை உறுப்பினர்கள்
15வது மக்களவை உறுப்பினர்கள்
1945 பிறப்புகள்
8வது மக்களவை உறுப்பினர்கள்
9வது மக்களவை உறுப்பினர்கள்
இந்திய நிதியமைச்சர்கள்
இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
ஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள்
மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள்
நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்
|
5078
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%8B
|
லுட்விக் மீஸ் வான் டெர் ரோ
|
லுட்விக் மீஸ் வான் டெர் ரோ (Ludwig Mies van der Rohe) (இயற்பெயர்: மரியா லுட்விக் மைக்கேல் மீஸ்(மார்ச் 27, 1886 – ஆகஸ்ட் 17, 1969) ஒரு கட்டிடக் கலைஞராவார். இவர் ஜெர்மனியில் பிறந்தவர்.
இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கட்டிடக்கலைஞர்களுள் ஒருவராக விளங்கினார். நவீன கட்டிடக்கலையின் முன்னோடிகளுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். கண்ணாடி, உருக்கு ஆகிய கட்டிடப் பொருட்களைப் பயன்படுத்தி எளிமையான வடிவங்களைக்கொண்ட கட்டிடங்களை இவர் வடிவமைத்தார். "குறைவே நிறைவு" (Less is More) என்ற இவரது கூற்று கட்டிடக்கலை உலகில் மிகவும் பிரபலமானது.
ஜெர்மனியில் இவர்
ஜெர்மனியிலுள்ள ஆச்சென் என்னும் ஊரில் பிறந்தார். ஆரம்பத்தில் இவரது குடும்பத் தொழிலான கல் செதுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பின்னர் பெர்லின் நகருக்குச் சென்று அங்கே புரூணோ போல் என்பவருடைய அலுவலகத்தில் பணிபுரிந்தார். 1908 ல் பீட்டர் பெஹ்ரென்ஸ் (Peter Behrens) என்பவருடன் பணிபுரியத் தொடங்கிய மீஸ் 1912 வரை அங்கேயே இருந்தார். ஒரு கல் செதுக்குபவரின் மகனாயிருந்து பெர்லின் நகரத்தின் உயர் குடியில் ஒருவராக உயர்ந்த இவர் இதனை வெளிப்படுத்தும் வகையில் தனது பெயரையும் மாற்றிக் கொண்டார். 1910 களிலும், 1920 களிலும் பெஹ்ரென்ஸ் அவர்களுடைய செல்வாக்கின் கீழ் அவருடைய தனித்துவமான வடிவமைப்பு அணுகுமுறையை வளர்த்து, அதையே தன் நீண்ட வாழ்நாள் முழுதும் கடைப்பிடித்தார். இவருடைய இந்த அணுகுமுறை உயர்நிலை அமைப்புத் தொழில்நுட்பத்தையும், பிரஷ்யச் செந்நெறிப் போக்கையும் (Prussian Classicism) அடிப்படையாகக் கொண்டது.
இவற்றையும் பார்க்கவும்
பார்சிலோனா நாற்காலி
1886 பிறப்புகள்
1969 இறப்புகள்
அமெரிக்கக் கட்டிடக்கலைஞர்கள்
செருமானியக் கட்டிடக் கலைஞர்கள்
|
5080
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE
|
ஜம்சேத்ஜீ டாட்டா
|
ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (Jamshedji Nusserwanji Tata) (மார்ச் 3, 1839 - மே 19, 1904) இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவ்சாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே இவரது பெயர் சூட்டப்பட்டது. உலகின் பெரும் நன்கொடையாளர்கள் பட்டியலில் ஜாம்சேட் ஜி டாடா முதலிடம் பெற்றுள்ளார்.
இளமைக் காலம்
ஜம்சேத்ஜீ நசர்வான்ஜி டாட்டா 1839ஆம் வருடம் மார்ச் மாதம் 3-ஆம் தேதி தெற்கு குஜராதில் உள்ள நவ்சாரி என்ற சிறு நகரத்தில் வாழ்ந்த நசர்வான்ஜி டாடா மற்றும் அவர் மனைவி ஜீவன்பாய் டாடாவிற்கு மகனாகப் பிறந்தார். பார்சி சரத்துஸ்திர புரோகிதர்கள் குடும்பத்தில் டாடாதான் முதல் வணிகராகத் திகழ்ந்தார். குடும்பத்தின் குலத்தொழிலான புரோகிதத்தை நசர்வான்ஜி தேர்ந்தெடுத்திருந்தால் வழக்கமான ஒன்றாக இருந்திருக்கும். ஆனால் துணிவுமிக்க இளைஞனான டாடா பாரம்பரியத்தைத் தகர்த்து தன் குடும்பத்திலேயே வணிகத்தில் நுழைந்த முதல் மனிதனாகத் திகழ்ந்தார். அவர் தன் வியாபாரத்தை அன்றைய பம்பாயாக இருந்த இன்றைய மும்பையில் ஆரம்பித்தார்.
தனது 14-வது வயதில் தன் தந்தையுடன் மும்பைக்கு வந்த ஜம்சேத்ஜீ டாடா எல்பின்ஸ்டோன் கல்லுாரியில் இன்றைய இளங்கலைப் பட்டத்திற்கு இணையான 'க்ரீன் ஸ்காலர்' -ஆக படிப்பை முடித்தார். அவர் மாணவனாக இருக்கும்போதே ஹிராபாய் தாபு என்ற பெண்ணை மணந்தார். 1858-ல் கல்லுாரியிலிருந்து பட்டம் பெற்ற அவர் தனது தந்தை வேலை செய்த வணிக நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அச்சமயம் 1857 -ன் இந்திய புரட்சிக்காரர்களாக கருதப்பட்டு பிரிட்டிசு அரசாங்கத்தால் அடக்கப்பட்ட கொந்தளிப்பான காலகட்டமாக இருந்தது.
இறப்பு
1900-ஆம் ஆண்டு வியாபார விஷயமாக ஜெர்மனிக்குச் சென்றபோது, டாடா நோய்வாய்ப்பட்டார். ஆபத்தான நிலையிலிருந்த அவர் நெளகீமில் 19 மே 1904 ல் காலமானார். இங்கிலாந்தின் வோகிங், புரூக்வுட் மயானத்திலுள்ள, பார்சியினருக்கான இடுகாட்டில் புதைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
டாட்டா குழுமம்
இந்தியத் தொழிலதிபர்கள்
1839 பிறப்புகள்
1904 இறப்புகள்
1880களில் இந்தியா
20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்
|
5081
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
|
சித்தர்
|
சித்தர்கள் என்போர் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளைப் பெற்றவர்கள் ஆவர். "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள்.
வகைப்பாடு
எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்
இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
நியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்
ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
பிராணாயாமம் - பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவை சீா்படுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
பிராத்தியாகாரம் - புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.
தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
தியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
சமாதி - சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.
எண் பெருஞ் சித்திகள் அல்லது அட்டமா சித்திகள்
திருமூலரின் திருமந்திரம், 668வது பாடல்
எண் பெருஞ் சித்திகளின் விளக்கம்
அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்க முடியாமல் பாரமாயிருத்தல்.
பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.
இத்தகைய எண் பெருஞ் சித்திகளை எட்டு வகையான யோகாங்க பயிற்சியினால் சித்தர்கள் பெற்றனர்.
சித்தர்கள் இயல்பு
சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்றும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
சித்தர்கள் இயற்கையைக் கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுதப் பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்லா். "மெய்ப்புலன் காண்பது அறிவு" என்பதிற்கிணங்க, உண்மை அல்லது மெய் நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
"சாதி, சமயச் சடங்குகளைக் கடந்து, சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மத மாத்சரியங்களை மாற்றக் கருதிய சீர்த்திருத்தவாதிகளாகவும்"
சித்தர்கள் வாழ்ந்தனர். "விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி" ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.
சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சந்நியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக் கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும்.
தமிழ் வளர்த்த சித்த நூல்கள்:
சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை படைத்துள்ளனர்.
தமிழ் நாட்டிலே சித்தர்கள் இயற்றினவாக, இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், கைரேகை சாத்திரம், வான சாத்திரம், புவியியல் நூல், தாவரயியல் நூல், சோதிட நூல், கணித நூல் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன.
சொல்லிலக்கணம்
சித்தம் என்பது மனமாகும். தன்னிச்சையாகத் திரியும் மனதினை அடக்கி, இறைவனிடம் செலுத்துகின்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
சித்தர்களின் கொள்கை
பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.
உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்
உருவம் இல்லா உண்மை அவன்.
இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை
தானும் அடைவார் அந்நிலை தன்னை.
பிரிவுகள்
சித்தர்கள் தாங்கள் பின்பற்றிய கொள்கைகளைப் பொறுத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பெறுகின்றனர். அவையாவன,.
சன்மார்க்கச் சித்தர்கள் - திருமூலர், போகர்.
ஞானச் சித்தர்கள் - பட்டினத்தார், பத்திரகிரியார், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகண்ணர், இடைக்காட்டுச் சித்தர்.
காயச் சித்தர்கள் - கோரக்கர், கருவூர்ச் சித்தர், மச்சமுனி, சட்டமுனி, சுந்தரானந்தர், உரோமுனி
சித்த வைத்தியம்
முதன்மைக் கட்டுரை: சித்த மருத்துவம்
சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிடப்பட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் அறிவியல்அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர். அவ்வைத்திய முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர். சித்த வைத்தியர்கள் அல்லது சித்தர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, நோயினை நீக்குவர். மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் தருவர். இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். இதனால் எந்த விதமான பின் விளைவும் இருக்காது. தீராத வியாதிகைளயும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் சித்த வைத்தியம் ஆகும்
மக்கள் அனைவரும், ஒழுக்கம் தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் ஆகியவை உடல் நோயை உண்டாக்கும் என்றும் யோகப் பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.
"உலகில் சாவாமைக்கு வழிகாண முடியும் என்ற உயரிய நோக்கம் கொண்ட மருத்துவ முறை சித்த மருத்துவமே."
சித்தர்களின் இரசவாதம்
இரசவாதம் என்னும் சொல்லுக்கு இரசத்தை வேதித்தல் என பொருள். எளிய உலோகங்களுடன் சிலவகையான தாவர வகைகளைச் சேர்த்து தங்கம் தயார் செய்வது.
இவற்றை சித்தர்கள் செய்தமைக்கு ஆதாரமான பாடல்கள் உண்டு. அதில் ஒன்றான திருமூலர் சொல்லும் செடியின் பெயர் பரிசனவேதி. அந்த பாடல் பின்வருமாறு:
பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தருவான் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலய மெல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே
இப்படி செய்து தங்கம் கிடைக்க வேண்டுமென்றால் தங்கத்தின் மீது ஆசை இருக்க கூடாது. இந்த வகையான முயற்சி கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கிலும் நடந்திருக்கின்றது." இன்றைய வேதியியல் அறிவின் படி இரும்பையோ அல்லது வேறு எந்த ஒரு தனிமத்தையோ பொன்னாக்க முடியாது. எனினும் அப்படிப்பட்ட முயற்சிகளே இன்றைய வேதியல் துறையின் முன்னோடி என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான்.
மருந்துகளில் ரசம் முதன்மையானது. இதன் மூலம் இரசபற்பம், ரசசெந்தூரம், ரசக்கட்டு, முதலிய மருந்துகள் தயாரிக்கப்பட்டன. தீராத பல கொடிய நோய்களுக்கு இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. எனவே ரசவாதம் என்றால் ரசத்தின் மாறுதல்களை அறிவது என்று பொருள்.
சில சித்தர்கள் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி இறைப்பொருளுடன் ஒன்றுவதை ஒருவிதமான ரசவாதமாகப் பயின்றனர். இதையே 'தெய்வீக ரசவாதம்' என்றும் 'பேரின்ப ரசவாதம்', 'இன்ப ரசவாதம்', என்றும் 'ஞான ரசவாதம்' என்றும் சொல்வார்கள்.
போகர் என்ற சித்தர் எழுதிய பாடல்கள் வேதியல் தொடர்பான பாடல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை தமிழில் அமைந்தாலும், அவர் ஒரு சீனர் என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது.
சித்தர்களின் நவீன அறிவியல் ஆராய்ச்சி
சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாசாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கத்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.
காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். இன்றிருப்பதைப்போல பரிசோதனை சாலைகள் அன்று இருக்கவில்லை. எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
சித்தர்களின் ஞானம்
மதவாதிகள், ஆத்திகர்கள் உள்ளிட்டோர் "அவனன்றி ஓரணுவும் அசையாது" என்ற நம்பிக்கை உள்ளவர்கள். மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை. கற்பக மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர் நோயின்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை.
தமிழ்ச் சித்தர்கள்
சித்தர் மரபை நோக்குங்கால், இதுவரை கண்டுள்ள எண்ணிக்கை கட்டுக்கடங்காதது. சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.
தலையாய சித்தர்கள்
முதன்மை சித்தராக சிவன் கருதப்படுகின்றார், மேலும் தமிழ் மரபின்படி 18 தலையாய சித்தர்கள் இருந்தனர், அவர்கள் பின்வருமாறு:
மேற்கோள்கள்
உசாத்துணை நூல்கள்
சித்தர் பாடல்கள் (சித்தர்கள், 2001 திருநாவுக்கரசு புத்தக நிலையம், சென்னை)
பதினெண் சித்தர்கள் இயற்றிய நாடி சாஸ்திரம் (துர்க்காதாஸ் எஸ்.கே., 1999, பூம்புகார் பதிப்பகம், சென்னை)
இந்திய தத்துவக் களஞ்சியம்-அவைதிகத் தத்துவங்கள்-தொகுதி 1 (சோ.ந. கந்தசாமி, 2003, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்).
சித்தர்கள் கலைக் களஞ்சியம் (எஸ்.ஆர். சங்கரலிங்கனார், 1997, சித்தாசிரமம், சென்னை)
டி. என். கணபதி. (2004). தமிழ்ச் சித்தர் மரபு. சென்னை: ரவி பதிப்பகம்.
வெளி இணைப்புகள்
சித்தர்கள் ஒரு பார்வை (டாக்டர் எஸ். ஜெயபாரதி)
சித்தர்களின் சமுதாய சம நோக்கு
சித்தர் பாடல்கள் தொகுப்பு - மதுரைத் திட்டம்
அகத்தியர் அருள் ஞான பீடம்
Siddhars Resources Directory
சித்தமருத்துவ மின்னூல்கள்
சித்தர்கள் என்போர் யார்
சித்தரியல்
சூபியம்
இந்திய தொன்மவியல்
|
5084
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
மகாநதி ஆறு
|
மகாநதி இந்தியாவின் கிழக்குப்பகுதியில் பாயும் ஒரு ஆறாகும். 860 கிமீ நீளம் உடைய இவ்வாறு சாத்புரா மலைத்தொடர்களில் தொடங்கி கிழக்குத்திசையில் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இவ்வாறு சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களின் வழியாகப் பாய்கிறது. சத்தீஸ்கரின் கங்கை என்று அழைக்கப்படும் நதி இது. மகாநதியின் மொத்த நீளம் 851 கிமீ. அதில், 286 கிமீ பாய்வது இம்மாநிலத்தில்தான். சிவநாத், அர்பா, ஜோங்க், ஹஸ்தேவ் போன்றவை மகாநதியின் கிளை நதிகள். மகாநதியும் அதன் கிளை நதிகளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் நீராதாரத்தில் 53.48% பங்கு வகிக்கின்றன.
ஹிராகுட் அணை இவ்வாற்றில் அமைந்துள்ளது.
சொற்பிறப்பு
மகாநதி என்ற சொல் மகா ("பெரிய") மற்றும் நடி ("நதி") என்ற சமஸ்கிருத சொற்களின் கலவையாகும்.
நதிமூலம்
பல பருவ காலம்பருவகால]] இந்திய நதிகளைப் போலவே, மகாநதியும் பல மலை ஓடைகளின் கலவையாகும், எனவே அதன் துல்லியமான நதிமூலத்தைச் சுட்டிக்காட்ட இயலாது. இருப்பினும் அதன் தொலைதூர நீர்நிலைகள் பார்சியா கிராமத்திலிருந்து 6 கிலோமீட்டர்கள் (3.7 mi) சத்தீசுகரின் தம்தாரி மாவட்டத்தில் சிஹாவா நகரின் தெற்கே ) கடல் மட்டத்திலிருந்து மேலே உருவாகிறது. இங்குள்ள மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலையின் விரிவாக்கமாகும், மேலும் பல நீரோடைகளின் மூலமாகவும் இந்நதி உள்ளன, பின்னர் அவை மகாநதியுடன் இணைகின்றன.
முதல் 80 கிலோமீட்டர்கள் (50 mi) அதன் போக்கில், மகாநதி வடகிழக்கு திசையில் பாய்ந்து ராய்ப்பூர் மாவட்டத்தை வடிகாலகிறது மற்றும் ராய்ப்பூர் நகரத்தின் கிழக்கு பகுதிகளைத் தொடுகிறது. இந்த கட்டத்தில் இது மிகவும் குறுகிய நதியாக பாய்கிறது. அதன் பள்ளத்தாக்கின் மொத்த அகலம் 500–600 மீட்டருக்கு மேல் இல்லை.
இடையில்
சியோநாத் உடன் இணைந்த பிறகு, நதி அதன் பயணத்தின் மீதமுள்ள பகுதி வழியாக கிழக்கு திசையில் பாய்கிறது. ஒடிசாவிற்குள் நுழைவதற்கு முன்பு இங்குள்ள ஜொங்க் மற்றும் ஹஸ்த்தியோ ஆறுகள் அதன் மொத்த நீளத்தின் பாதியை உள்ளடக்குகிறது. சம்பல்பூர் நகருக்கு அருகில், இது உலகின் மிகப்பெரிய மண் அணையான ஈராக்குது அணையால் தடுக்கப்படுகிறது. அணையின் கரை, பூமியின் அமைப்பு, கான்கிரிட் சிமிட்டிக் கலவை மற்றும் கட்டுமானம் உட்பட அணையின் நீளம் ஆகும். இடதுபுறத்தில் இலாம்துங்ரி மற்றும் வலதுபுறத்தில் சந்திலி துங்குரி என்ற மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய செயற்கை ஏரியாகவும், 743 சதுர கிலோமீட்டர்கள் (287 sq mi) நீர்த்தேக்கத்தைக் கொண்டுள்ளது முழு கொள்ளளவிலும், அதிகமான கரையுடன் கொண்டுள்ளது.
சத்தீசுகர் மாநிலம் உருவான பிறகு, மகாநதி படுகையின் பெரும்பகுதி இப்போது சத்தீசுகரில் உள்ளது. தற்போது, 154 சதுர கிலோமீட்டர்கள் (59 sq mi) அனுப்பூர் மாவட்டத்தில் அஸ்த்தியோ ஆற்றின் படுகை பகுதி மத்தியப் பிரதேசத்தில் உள்ளது 1953 ஆம் ஆண்டில் அணை கட்டுவதற்கு முன்பு, மகாநதி சம்பல்பூரில் ஒரு மைல் அகலத்தில் இருந்தது, குறிப்பாக மழைக்காலத்தில் அதிக அளவிலான மண்ணைக் கொண்டு சென்றது. இன்று, இது அணை கட்டப்பட்ட பின்னர் மிகவும் மென்மையான நதியாகும். கட்டாக்கில் ஆற்றின் ஓட்டத்தை கட்டுப்படுத்த இங்கு ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
ஈராகுத்து அணை கட்டுவதற்கு முன்பு, மகாநதி அதன் வாயிலிருந்து அராங் வரை சுமார் 190 கிலோமீட்டர்கள் (120 mi) பரவியிருந்ததது. ஈராகுத்து தவிர பல தடுப்புகள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
வர்த்தகம் மற்றும் விவசாயம்
ஒடிசா மாநிலத்தில் மகாநதி ஒரு முக்கியமான நதி. இந்த நதி சுமார் 900 கிலோமீட்டர்கள் (560 mi) மெதுவாக ஓடுகிறது மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள வேறு எந்த நதியையும் விட அதிக மண்ணை வைக்கிறது. கட்டாக் மற்றும் சம்பல்பூர் நகரங்கள் பண்டைய உலகில் முக்கிய வர்த்தக இடங்களாக இருந்தன, மேலும் தோலமியின் படைப்புகளில் நதி மனாடா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று மகாநதி பள்ளத்தாக்கு அதன் வளமான மண் மற்றும் செழிப்பான விவசாயத்திற்கு மிகவும் பிரபலமானது.
குறிப்புகள்
மேலும் படிக்க
The Imperial Gazetteer of India-William Hunter, 1901
The Encyclopædia Britannica-1911 Ed.
The Columbus Encyclopedia
வெளிப்புற இணைப்புகள்
Rivers Network – Mahanadi river watersheds webmap
Odisha Govt. blamed for declining quality of river water
Mahanadi River
Kayaking on River Mahanadi
https://tamil.thehindu.com/opinion/columns/article26909227.ece?utm_source=HP&utm_medium=hp-editorial
ஒடிசாவின் ஆறுகள்
இந்திய ஆறுகள்
|
5085
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
சிங்கம்
|
சிங்கம் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்திற்கு அரிமா என்ற பெயருண்டு. குற்றாலக் குறவஞ்சியில் ஆளி என்ற சொல்லையும் அரிமாக்களைக் குறிக்க ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. சிங்கமானது பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் சிங்கம் 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.
வாழிடமும் இயல்புகளும்
சிங்கம் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க் காடுகளில் வாழ்வதையே விரும்பும். சிங்கங்கள் நல்ல கேட்கும் திறன் கொண்டவை. மேலும் இதன் கர்ஜனை சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) வரை கேட்கும் திறன் கொண்டது. பூனை இனத்தில் உள்ள விலங்குகளில் சிங்கம் கூட்டமாக வாழும் இயல்புடையது. மான், காட்டெருமை, வரிக்குதிரை, பன்றி முதலான விலங்குகளை வேட்டையாடி உண்ணும். பெரும்பாலும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். வேட்டையாடிய விலங்குகளை முழுவதுமாக உண்ணாமல் எலும்பு அதனையொட்டிய சதைப்பகுதிகளை அப்படியே விட்டுவிடும். அதனால் மற்ற விலங்குகள் (ஓநாய், கழுதைப் புலி முதலானவை) எஞ்சியவற்றை உண்டு வாழ்கின்றன.
நன்கு உண்ட சிங்கம் வேட்டைக்குப் பின்னர் பல நாட்களுக்கு வேட்டையாடுவதில்லை. ஆண் சிங்கங்கள் தம் கூட்டத்துக்கு என்று ஒரு எல்லையை உருவாக்கி வைத்துக் கொள்ளும். இதனை தன் வட்டத்தில் மலம், மூத்திரம் கழிப்பதன் மூலமும் கர்ஜிப்பது மூலமும் தன் நகத்தால் மரங்களில் கீரியும், இதுதான் தனது எல்லை என, மற்றைய சிங்கங்களுக்கும் பெரிய வகை ஊனுண்ணிகளுக்கும் தெரிவிக்கிறது. அவ்வாறு இருக்கையில் அருகில் இரை வரினும் பொதுவாக அவற்றைத் தாக்காது. 1990களில் சிங்கங்களின் எண்ணிக்கை 100,000 வாக்கில் இருந்தும் இன்று ஏறத்தாழ 16,000-30,000 வரை தான் உள்ளனவாகக் கணித்துள்ளார்கள்.
சிங்கங்களின் வாழ்நாள் பொதுவாக பத்திலிருந்து பதிநான்கு ஆண்டுகள் வரை இருக்கும். ஆண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 12 வருடங்களும் பெண் சிங்கங்களின் சராசரி ஆயுட்காலம் 16 வருடங்களும் ஆகும். உடற்கூற்றின்படி இரு பாலினங்களும் ஆயுட்காலத்தில் சர்வ வல்லமை படைத்திருந்தாலும், ஒரு கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்த ஆண் சிங்கமே இருக்க வேண்டும் என்பதால் தலைவனான ஆண் சிங்கம் 10 வயது வருவதற்குள்ளாகவே அக்குழுவில் உள்ள மற்ற இளைய சிங்கத்தோடு சண்டையிட்டு இறக்கவோ அதிக காயத்திற்குள்ளதாகவோ ஆக்கப்படுகிறது. மேலும் கூட்டத்தில் இருந்து விரட்டப்படும் போது தன் வயது முதிர்ச்சியாலும், நகங்களும் பற்களும் கூர்மை இழப்பதாலும் வேட்டையாடுவதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனால் அதிக ஊட்டம் அளிக்கக் கூடிய கொம்புடைய உயிரிகளையோ மற்ற பெரிய விலங்குகளையோ வேட்டையாட முடியாமல் போகிறது. இத்தனை வலிமை இழந்த சிங்கம் மிகவும் ஒல்லியாகவும் பலவீனமாகவும் இருப்பதால் வேட்டையாடப்படும் எளிய விலங்குகளாலேயே சில சமயங்கள் கொல்லப்படுகின்றன. ஆனால் பெண் சிங்கம் வயது முதிர்ச்சி அடைந்தாலும் கூட்டத்தில் ஒன்றாகவே இருக்கும். இதன் காரணத்தாலேயே ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை விட சராசரி ஆயுட்காலத்தை குறைவாகக் கொண்டுள்ளது.
கூட்டம்
சிங்கக் கூட்டத்தின் தலைவனோ தலைவியோ கூட்டத்தின் ஓர் அங்கத்தினராகவே இருக்க வேண்டும். ஒரு கூட்டத்தில் பொதுவாக ஐந்து ஆறு வயதுவந்த பெண் சிங்கங்களும், ஒரு வயது வந்த ஆணும் சில குட்டிகளும் இருக்கும். கூட்டத்தின் அமைப்பில் பெண் சிங்கங்களே அதிக முக்கியத்துவத்தை பெறுகின்றன. ஒரு கூட்டத்தில் இருக்கும் பெண் சிங்கங்கள் எல்லாம் நெருங்கிய உறவினர்களாகவே இருக்கும். இந்த அமைப்பில் விதிவிலக்குகள் குறைவாகவே உண்டு.
கலப்பு இனங்கள்
சிங்கப்புலி அல்லது லைகர் (Liger) என்பது ஆண் சிங்கம் (Panthera leo) மற்றும் பெண் புலி (Panthera tigris) இவைகளுக்கிடையே ஒரு கலப்பினச் சேர்க்கை மூலம் உருவாகிய கலப்பு உயிரினமாகும். இவ்வினத்தின் பெற்றோர்கள் பந்தேரா எனும் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவை, ஆனால் அவற்றின் இனங்களோ வேறுபட்டவையாக உள்ளன. அறியப்பட்ட அனைத்து பூனை குடும்பங்களுக்கிடையே உருவத்தில் பெரிதானதாக சிங்கப்புலி உள்ளது. கிட்டத்தட்ட இவற்றைப் போலவே கலப்பினச் சேர்க்கை மூலம் தோன்றிய புலிச்சிங்கம் எனும் விலங்கில் இருந்து சிங்கப்புலி வேறுபட்டுள்ளது. ஆண் புலியும் பெண் சிங்கமும் இணைந்த கலப்பினமே புலிச்சிங்கம் ஆகும். சிங்கப்புலிகள் நீச்சல் புரிவதை விரும்புகின்றன; இது புலியின் ஒரு பண்பு ஆகும், அதே வேளையில் கூடிப் பழகும் இயல்பு மிக்கவையாக உள்ளன; இந்தப்பண்பு சிங்கத்துக்கு உரித்ததாகும். கேர்க்குலிசு எனும் சிங்கப்புலி உலகிலேயே மிகப்பெரிய, வாழும் பூனை என்று கின்னசுச் சாதனை நூலில் இடம் பெற்றுள்ளது.
வழக்காறுகள்
பொதுவாக சிங்கத்தைக் காட்டின் அரசன் எனக் கூறுகின்றனர், எனினும் வரலாற்றில் புலிக்கும் சிங்கத்திற்கும் இடையிலான போர்களில் புலியே பெருமளவில் வெற்றி பெற்றுள்ளது. அண்மையில் அங்கோரா விலங்குப் பூங்காவில் ஒரு புலி ஒரே அடியில் சிங்கத்தைக் கொன்றுவிட்டது. இது 2011 மார்ச்சில் நிகழ்ந்தது. ஆனால் தொன்மங்கள் அனைத்திலும் சிங்கமே அதிகம் வல்லமை உடையதாய் காட்டப்படுகின்றன.
ஊடகங்களில் கூறப்படுவது போல் சிங்கம் தனித்து வேட்டையாடாது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூட்டமாகவே சிங்கம் வேட்டையாடும்.
ஒரு கூட்டத்தின் தலைவனாக இருந்த ஆண் சிங்கம் ஓர் இளைய ஆண் சிங்கத்தால் அடித்து விரட்டப்பட்ட போது மட்டுமே தனியாக இருக்கும் வழக்கத்தைக் கொண்டது. அப்போது அச்சிங்கம் கிழப்பருவத்தை எட்டியதால் அவற்றின் வேட்டையாடும் திறன் குறைந்திருப்பதுடன் வேறு விலங்குகள் வேட்டையாடித் தின்றது போக மீதி இருந்த உணவையே உட்கொள்கிறது.
மேலும் பார்க்க
மலையரிமா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Species portrait Lion; IUCN/SSC Cat Specialist Group
Battle at Kruger: Video of a pack of lions fighting against a crocodile and buffaloes over a kill.
Example of a fund and its projects about the research and conservation of the lion.
Has conducted field research on lions and published peer-reviewed scientific articles.
Description article
பூனைப் பேரினம்
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
சகாரா கீழமை ஆபிரிக்காவின் பாலூட்டிகள்
|
5086
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81
|
சடுகுடு
|
கபடி அல்லது சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் விளையாட்டு தமிழ்குடிகளால் பல காலமாக, விளையாடப்படும் தமிழர் விளையாட்டுகளுக்குள் ஒன்று. சல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்) தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி. இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது.
இவ்விளையாட்டு இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்). இவ்வாட்டம் விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டி செல்லலாகாது. இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.
விளையாட்டு
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு கபடி. பண்டைய தமிழ்நாட்டின் 'முல்லை' புவியியல் பகுதியில் வாழ்ந்த ஆயர் பழங்குடி மக்களிடையே இது பொதுவானது. எதிரணிக்கு செல்லும் வீரர் காளையை போல் கருதப்படுவார். அவ்வீரரை தொடவிடாமல் மடக்கி பிடிப்பது, காளையை முட்ட விடாமல் அடக்குவதற்கு சமமாகும்.
ஒரு அணியில் இருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் "கபடிக் கபடி" (அல்லது "சடுகுடு") என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்கு சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டு எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டி தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து
பிடிக்க வருவர். மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்" என்று சொல்லிக்கொண்டே
எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவரவேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார்.
மூச்சு விடாமல் 'கபடிக் கபடிக்' என்று சொல்வதற்குப் பாடுதல் என்று பெயர்.
தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர்.
ஆண்களுக்கான சடுகுடுவும், பெண்களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.
கபடிப் பாடல்கள்
ஆடுகளம்
ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல், பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும்.
கட்டாந்தரையாக (காங்க்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல. ஆண்கள் ஆடும் களம் 13 மீ x 10 மீ
பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும்.
சடுகுடு உலகக் கோப்பை
சடுகுடு உலகக்கோப்பை முதன்முதலாக 2004ஆம் ஆண்டில் ஆடப்பட்டது. பின்னர் 2007ஆம் ஆண்டிலும் 2010ஆம் ஆண்டிலும் ஆடப்பட்டன. இதுவரை இந்தியாவே வெல்லப்படாத உலகக்கோப்பை வாகையாளராக இருந்து வருகிறது. இருமுறை இரண்டாவதாக வந்து அடுத்த மிகப்பெரும் வெற்றியை ஈரான் பெற்றுள்ளது. 2010ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாக்கித்தான் இரண்டாவதாக வந்தது.
இதுவரை கபடி உலகக்கோப்பை முடிவுகள்:
இதனையும் காண்க
புரோ கபடி கூட்டிணைவு
இந்தியாவில் கபடி
மேற்கோள்கள்
ஊடகங்களில் சடுகுடு
திரைப்படங்களில்
ஒக்கடு (2003)
கபடி கபடி (2003)
கில்லி (2004)
வெண்ணிலா கபடிக் குழு (2009)
பீம்லி கபடி ஜாட்டு (2010)
உசாத்துணை நூல்கள்
கிரியாவின் தற்கால தமிழ் அகராதி: தமிழ் - தமிழ் - ஆங்கிலம். (1992). சென்னை. (. )
விளையாட்டுத் துறையில் கலைச்சொல் அகர்ரதி எஸ். நவரா'ச் செல்லையா, ராஜ் மோகன் பதிப்பகம்., சென்னை, 1984., பக்.1-151.
வெளி இணைப்புகள்
தமிழர் விளையாட்டுகள்-மாத்தளை சோமு
http://www.goindiago.com/sports/Kabaddi/Kabaddi1.htm
http://www.sikhwomen.com/Community/India/kabaddi/
http://www.kabaddi.org
ஆடுபுலி ஆட்டம் - தமிழர் விளையாட்டு
தமிழர் விளையாட்டுகள்
சடுகுடு
|
5087
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
|
யாழ்ப்பாண மக்களின் புலப்பெயர்வு
|
பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக, ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்லுதல் புலப்பெயர்வு ஆகும். யாழ்ப்பாண வரலாற்றில் புலப்பெயர்வு ஒரு பொதுவான தோற்றப்பாடாக இருந்துவருகிறது. யாழ்ப்பாண மக்களின் புலப்பெயர்வு மிகப் பழைய காலம் முதலே நடந்து வருகின்றது ஆயினும் இருபதாம் நூற்றாண்டில் இது அதிகமாக உள்ளது.
யாழ்ப்பாண அரசுக்கு முந்திய காலம்
யாழ்ப்பாண அரசுக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் குடியேற்றப் பரம்பல் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு. தென்னிந்தியத் தமிழ் இலக்கியங்களிலும், இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்திலும் ஆங்காங்கே யாழ்ப்பாணப் பகுதி பற்றிய தகவல்கள் சில கிடைத்தாலும் அவை போதுமானவையல்ல. அக்காலத்தில் யாழ்ப்பாணப் பகுதி பெருமளவு குடித்தொகை கொண்டதாக இருந்திருக்கும் எனச் சொல்லமுடியாது. அப்போது இலங்கைத் தீவிலிருந்த யாழ்ப்பாண மக்களின் முன்னோர்கள் பலர் யாழ்ப்பாணப் பிரதேசத்துக்கு வெளியில் வன்னிப் பகுதிகளிலும், சிங்கள அரசர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இருந்திருக்ககூடிய சாத்தியங்கள் உண்டு. வன்னியில் தற்போதைய மன்னார் மாவட்டத்திலுள்ள மாதோட்டப் பெருந்துறையிலும் அண்டியிருந்த குடியேற்றங்கள் பலவற்றிலும் பெருமளவில் தமிழர் இருந்தனர்.
அனுராதபுரம், பொலநறுவை போன்ற பண்டைய இலங்கைத் தலைநகரங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர் வாழ்ந்துவந்தனர். மாதோட்டத் துறைமுகத்தின் செல்வாக்கு இழப்பும், தென்னிலங்கையின் சிங்கள அரசுகளின் தெற்கு நோக்கிய நகர்வும் அடிக்கடியேற்பட்ட தென்னிந்தியப் படையெடுப்புக்களும் இலங்கைத் தீவில் இன அடிப்படையிலான முனைவாக்கத்தை ஏற்படுத்தின. இவை தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குள் வந்த உள்நோக்கிய புலப்பெயர்வை ஏற்படுத்தியது.
யாழ்ப்பாண அரசுக் காலம்
இந்த முனைவாக்கம் யாழ்ப்பாண அரசுக் காலத்திலும் தொடர்ந்தது. இதனுடன் கூடவே தென்னிந்தியாவிலிருந்தும் மக்கள் யாழ்ப்பாணத்துக்குள் வந்தனர். யாழ்ப்பாண வரலாற்று நூல்களான யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை, வையாபாடல் போன்றவை இது பற்றிக் கூறுகின்றன.
போத்துக்கீசர் காலப் புலப்பெயர்வுகள்
போத்துக்கீசர் காலத்திலும் இரண்டு விதமான புலப்பெயர்வுகள் இடம் பெற்றதாகத் தெரிகின்றது. ஒன்று போர்த்துக்கீசரின் இந்து சமயத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பானது. சமய உணர்வு மிக்க இந்து மக்கள் பலர் தங்கள் ஊர்களை விட்டு மறைவான பகுதிகளுக்குச் சென்றமை பற்றிய வாய் வழித் தகவல்கள் உண்டு. சிலர் இந்தியாவுக்குத் தப்பியோடியதும் உண்டு. என்றாலும் இவ்வாறான புலப்பெயர்வுகள் பெருமளவில் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதைவிட வன்னிக்கு ஊடாகப் போக்குவரத்துச் செய்யும் போத்துக்கீசப் படைகளின் அட்டூழியங்கள் காரணமாக பல ஊர்கள் கைவிடப்பட்டதும் போத்துக்கீசர் குறிப்புக்களில் பதியப்பட்டுள்ளன. இவ்வாறு வெளியேறியோரில் பலரும் யாழ்ப்பாணப் பகுதியில் குடியேறியிருப்பது சாத்தியம்.
மலாயா, சிங்கப்பூருக்கான புலப்பெயர்வு
யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பப் பத்தாண்டுகளில் கல்வி கற்ற மத்தியதர வர்க்கத்தின் எழுச்சி ஏற்பட்டது. அக்காலத்தில் மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட சில வகையான அரச பதவிகள் யாழ்ப்பாண மக்களுக்குப் பொருத்தமாக அமைந்ததால் பெருமளவு யாழ்ப்பாண இளைஞர்கள் இந்த நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். ஆரம்பத்தில் தனியாகவே சென்ற இவர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொண்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்து திருமணம் செய்து தங்கள் மனைவியரையும் அங்கே அழைத்துக்கொண்டார்கள். இது யாழ்ப்பாணத்தவரின் வெளிநோக்கிய புலப்பெயர்வின் ஆரம்ப கட்டம் எனலாம்.
வன்னிக் குடியேற்றங்கள்
ஐரோப்பிய நாடுகளுக்கான புலப்பெயர்வு - ஆரம்பகாலம்
1980 களுக்குப் பிற்பட்ட வெளிநாட்டுப் புலப்பெயர்வுகள்
ஈழப் போர்களும் உள்ளூர் இடப்பெயர்வுகளும்
யாழ்ப்பாணச் சமூகத்தில் புலப்பெயர்வுகள் ஏற்படுத்திய தாக்கங்கள்
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
யாழ்ப்பாணம்
|
5088
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
இலங்கையின் அரசியல்
|
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டம்
இலங்கையின் சனாதிபதி
குடியரசின் சனாதிபதி நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக, 6 வருடப் பதவிக்காலத்துக்கு மக்களால் நேரடியாக தெரிவுசெய்யப்படுகிறார். இவர் ஒரே நேரத்தில் நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும், ஆயுதப்படைகளின் கட்டளை தளபதியாகவும் செயல்படுகிறார். சனாதிபதி அரசியல் யாப்பினதும், ஏனைய சட்டங்களினதும் அமைவாக, தமது கடமைகளை நிறைவேற்றுவதில் நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புடையவராவார். சனாதிபதி, நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புள்ள அமைச்சரவை ஒன்றை நியமித்து, அதற்குத் தலைமை தாங்குவார். குடியரசுத் தலைவர் அடுத்த நிலையிலுள்ளவர் பிரதம மந்திரியாவார்.
சனாதிபதி, நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 2/3 குறையாதோர் நிறைவேற்றிய குற்றப்பிரேரணை, உயர் நீதிமன்றத்தின் முன் சமர்பிக்கபட்டு அங்கீகரிக்கபட்டு, இது மீண்டும் நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 2/3 குறையாதோர் நிறைவேற்றுவதன் மூலம் பதவி நீக்கம் செய்யப்படுவார்.
நாடாளுமன்றம்
இலங்கை நாடாளுமன்றம் 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, பொது வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படும் 225 உறுப்பினர்கள் அடங்கிய ஒற்றைச் சபை கொண்ட (unicameral) ஒரு சட்டவாக்க மன்றமாகும். இதில் 196 உறுப்பினர்கள் மாவட்ட வாரியாகவும், 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும் திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யபடுவர். இந்த திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விசேட பண்புகளாவன, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு மேலதிகமான உறுப்பினர்1 வழங்கபடுவதும், வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு மூன்று வரையான விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்ககூடியமையும் ஆகும்.
நாடாளுமன்ற அமர்வுகளைக் கூட்டவோ, நிறுத்தி வைக்கவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவோ கூடிய அதிகாரமும், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரமும், சனாதிபதிக்கு உண்டு. சட்டங்களையும் ஆக்குகின்ற அதிகாரம் நாடாளுமன்றத்துக்கும், சர்வசன வாக்கெடுப்பொன்றின் மூலம் சனாதிபதிக்கும் உண்டு. இலங்கை, பொதுநலவாய நாடுகளின் உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருகிறது.
உசாதுணை குறிப்புகள்
1.மேலதிக இட ஒதுக்கீட்டின் தாக்கங்கள் பற்றிய விபரமான விவரணத்துக்கு, "Explaining the Two-Party System in Sri Lanka's National Assembly" by John Hickman in Contemporary South Asia, Volume 8, Number 1, March 1999, pp. 29-40. என்ற கட்டுரையைப் பார்க்கவும்
இலங்கை அரசியல்
|
5089
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
|
எசுப்பானியா
|
எசுப்பானியா (Spain, ; , ) என்றழைக்கப்படும் எசுப்பானிய முடியரசு (Kingdom of Spain, ) ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் மாட்ரிட். இந்நாட்டினரின் மொழி எசுப்பானிய மொழி. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய யூரோ நாணயம் பொதுப் பயன்பாட்டில் உள்ளது. பார்சிலோனா இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.
இதன் அமைவிடம் காரணமாக வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் இப்பகுதி பல வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு வந்துள்ளது. அரகானின் அரசர் இரண்டாம் பேர்டினன்டுக்கும், காசுட்டைலின் அரசி முதலாம் இசபெல்லாவுக்கும் இடையே நடந்த திருமணத்தையும், 1492 ஆம் ஆண்டில் ஐபீரியத் தீவக்குறை மீளக் கைப்பற்றப்பட்டதையும் தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியா ஒரு ஒன்றிணைந்த நாடாக உருவானது. நவீன காலத்தில் இது ஒரு உலகப் பேரரசாக உருவாகி உலகின் பல பகுதிகளிலும் தனது செல்வாக்குப் பகுதிகளை உருவாக்கியது. இதனால், உலகில் எசுப்பானிய மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கை இன்று ஏறத்தாழ 500 மில்லியனாக உள்ளது.
எசுப்பானியா, அரசியல்சட்ட முடியாட்சியின் கீழ் அமைந்ததும், நாடாளுமன்ற முறையில் அமைந்ததுமான ஒரு குடியரசு நாடு. வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றான எசுப்பானியா, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவின் அடிப்படையில் உலகின் 12 ஆவது பெரிய நாடாக விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, உலகின் 10 ஆவது கூடிய வாழ்க்கைத் தரக் குறியீட்டு எண்ணைக் கொண்ட இது உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடைய ஒரு நாடு. இது ஐக்கிய நாடுகள் அவை, நேட்டோ, பொருளாதார ஒத்துழைப்புக்கும் வளர்ச்சிக்குமான அமைப்பு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றினது உறுப்பு நாடாகவும் உள்ளது.
பெயர்
எசுப்பானியர் தமது நாட்டை எசுப்பானியா (España) என்று அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் இதை சுபெயின் (Spain) என அழைப்பர். இப்பெயர்களின் தோற்றம் குறித்து வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இதன் நிலப்பகுதியைக் குறிக்கும் ஐபீரியா என்பதற்குப் பழைய உரோமர் வழங்கிய பெயர் இசுப்பானியா (Hispania) என்பது. இது, எசுப்பானியாவைக் குறிக்க வழங்கிய எசுப்பீரியா என்பதன் கவிதை வழக்காக இருக்கலாம் என்கின்றனர். கிரேக்கர்கள், "மேற்கு நிலம்" அல்லது "சூரியன் மறையும் நிலம்" என்ற பொருளில் இத்தாலியை ஹெஸ்ப்பீரியா என்றும் இன்னும் மேற்கில் உள்ள எசுப்பானியாவை எசுப்பீரியா அல்ட்டிமா என்றும் அழைத்தனர்.
புனிக் மொழியில் இசுப்பனிகேட் என்னும் சொல்லுக்கு "முயல்களின் நிலம்" அல்லது "விளிம்பு" என்னும் பொருள் உண்டு. அட்ரியனின் ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் வெளியிடப்பட்ட நாணயங்களில் ஒரு பெண்ணுருவத்தின் காலடியில் முயலின் உருவம் உள்ளது. இதனால் இப்பகுதியை முயலுடன் தொடர்புபடுத்தி "முயல்களின் நிலம்" என்ற பொருளில் அல்லது நடுநிலக் கடலின் விளிம்பில் உள்ளதால் "விளிம்பு" என்னும் பொருளில் வழங்கிய இஸ்பனிஹாட் என்னும் சொல்லிலிருந்து எஸ்ப்பானா என்னும் சொல் உருவாகி இருக்கலாம் என்பது சிலரது கருத்து. "விளிம்பு" அல்லது "எல்லை" எனப் பொருள்படும் பாசுக்கு மொழிச் சொல்லான எஸ்ப்பான்னா என்பதே எஸ்ப்பானா என்பதன் மூலம் என்பாரும் உள்ளனர்.
ஆன்ட்டோனியோ டெ நெப்ரிசா என்பவர் ஹிஸ்பானியா என்பது "மேற்குலகின் நகரம்" என்னும் பொருள் கொண்ட ஐபீரிய மொழிச் சொல்லான ஹிஸ்பாலிஸ் (Hispalis) என்பதில் இருந்து தோன்றியிருக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்துள்ளார்.
வரலாறு
ஐபீரியா அல்லது இபேரியா எனப்படும் மூவலந்தீவின் (தீபகற்பத்தின்) பல்வேறு பழங்குடியினரும் ஐபீரியர் அல்லது இபேரியர்கள் என்று அழைக்கப்பட்டனர். கிமு 8ம் நூற்றாண்டுக்குப் பிறகு செல்டிக் பழங்குடியினரும், அதன் பின் ஃபினீசியர்களும், கிரேக்கர்களும் கார்தாகினியர்களும் நடுத்தரைக் கடற்பகுதிகளில் வெற்றிகரமாக குடிபுகுந்து வணிக மையங்களை உருவாக்கி பல நூற்றாண்டுக்காலம் வாழ்ந்து வந்தனர்.
ரோமானியர்கள் கிமு 2 ம் நூற்றாண்டில் இபேரியன் மூவலந்தீவிற்கு வந்தனர். இரண்டு நூற்றாண்டு காலம் செல்டிக் மற்றும் இபேரிய பழங்குடியினரிடம் போரிட்டு கடற்கரை வியாபார மையங்களை இணைத்து "இசுப்பானியா"வை உருவாக்கினர். ரோமானிய பேரரசிற்கு உணவு,ஆலிவ் எண்ணெய்,ஒயின் மற்றும் மாழைகளை (உலோகங்களை) இசுப்பானியா அளித்து வந்தது. மத்தியகாலத் தொடக்கப் பகுதியில் இது செருமானிக்கு ஆட்சியின் கீழ் வந்தது எனினும் பின்னர் வட ஆப்பிரிக்காவிலிருந்து வந்த இசுலாமியர்கள் இப்பகுதியைக் கைப்பற்றிக்கொண்டனர். காலப்போக்கில் இதன் வடபகுதியில் பல சிறிய கிறித்தவ அரசுகள் தோன்றிப் படிப்படியாக எசுப்பானியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதற்குப் பல நூற்றாண்டுக் காலம் எடுத்தது. கொலம்பசு அமெரிக்காவை அடைந்த அதே ஆண்டில் ஐபீரியத் தீவக்குறையில் இருந்த கடைசி இசுலாமிய அரசும் வீழ்ச்சியுற்றது. தொடர்ந்து எசுப்பானியாவை மையமாகக் கொண்டு உலகம் தழுவிய பேரரசு ஒன்று உருவானது. இதனால் எசுப்பானியா ஐரோப்பாவின் மிகவும் வலிமை பொருந்திய நாடாகவும், ஒன்றரை நூற்றாண்டுக் காலம் உலகின் முதன்மை வல்லரசுகளில் ஒன்றாக இருந்ததுடன் மூன்று நூற்றாண்டுக் காலம் உலகின் மிகப்பெரிய கடல்கடந்த பேரரசு ஆகவும் விளங்கியது.
தொடர்ச்சியான போர்களும், பிற பிரச்சினைகளும் எசுப்பானியாவை ஒரு தாழ்வான நிலைக்கு இட்டுச் சென்றன. எசுப்பானியாவை நெப்போலியன் கைப்பற்றியது பெரும் குழப்பநிலையை ஏற்படுத்திற்று. இது, விடுதலை இயக்கங்களைத் தோற்றுவித்துப் பேரரசைப் பல துண்டுகளாகப் பிரித்ததுடன், நாட்டிலும் அரசியல் உறுதியின்மையை உண்டாக்கியது. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு எசுப்பானியாவில் சர்வாதிகார ஆட்சி ஏற்பட வழிவகுத்தது. இக்காலத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதாயினும் இறுதியில் ஆற்றல் மிக்க பொருளாதார வளர்ச்சியையும் எசுப்பானியா கண்டது. காலப்போக்கில் அரசியல் சட்ட முடியரசின் கீழான நாடாளுமன்ற முறை உருவானதுடன் குடியாட்சி மீள்விக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில் எசுப்பானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துகொண்டது.
முன்வரலாறும், உரோமருக்கு முந்திய மக்களும்
அட்டப்புவேர்க்கா (Atapuerca) என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஐபீரியத் தீவக்குறையில் ஒமினிட்டுகள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. நவீன மனிதர் ஏறத்தாழ 32,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து ஐபீரியத் தீவக்குறையை அடைந்தனர். இத்தகைய மனிதக் குடியிருப்புக்களைச் சார்ந்த தொல்பொருட்களில் வடக்கு ஐபீரியாவின் கான்டபிரியாவில் உள்ள ஆல்ட்டமிரா குகையில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தியகால ஓவியங்கள் புகழ் பெற்றவை. இவ்வோவியங்கள் கிமு 15,000 ஆண்டளவில் குரோ-மக்னன்களால் வரையப்பட்டவை.
எசுப்பானியா நாட்டின் தற்போதைய மொழிகள், மதம், சட்ட அமைப்பு போன்றவை ரோமானிய ஆட்சிக்காலத்திலிருந்து உருவானவை. ரோமானியர்களின் நூற்றாண்டுகள் நீண்ட இடையூறற்ற ஆட்சிக்காலம் இன்னும் எசுப்பானியா நாட்டின் பண்பாட்டில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
புவியியல்
504,782 கிமீ² (194,897 ச. மைல்) பரப்பளவு கொண்ட எசுப்பானியா உலகின் 51 ஆவது பெரிய நாடு. இது பிரான்சு நாட்டிலும் ஏறத்தாழ 47,000 கிமீ² (18,000 ச மைல்) சிறியதும், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலும் 81,000 கிமீ² (31,000 ச மைல்) பெரியதும் ஆகும். எசுப்பானியா அகலக்கோடுகள் 26° - 44° வ, நெடுங்கோடுகள் 19° மே - 5° கி ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது.
எசுப்பானியாவின் மேற்கு எல்லையில் போர்த்துக்கலும்; தெற்கு எல்லையில் பிரித்தானியாவின் கடல் கடந்த ஆட்சிப்பகுதியான சிப்ரால்ட்டர், மொரோக்கோ என்பனவும் உள்ளன. இதன் வடகிழக்கில் பைரனீசு மலைத்தொடர் வழியே பிரான்சுடனும், சிறிய நாடான அன்டோராவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. ஜெரோனா என்னும் இடத்தில் பைரனீசை அண்டி எசுப்பானியாவுக்குச் சொந்தமான லிவியா என்னும் சிறிய நகரம் ஒன்று பிரான்சு நாட்டினால் சூழப்பட்டு உள்ளது.
தீவுகள்
நடுநிலக் கடலில் உள்ள பலேரிக் தீவுகள், அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள கனரித் தீவுகள், சிப்ரால்ட்டர் நீரிணையின் நடுநிலக் கடற் பக்கத்தில் உள்ள பிளாசாசு டி சொபரானியா (இறைமையுள்ள இடங்கள்) என அழைக்கப்படும் மனிதர் வாழாத பல தீவுகள் ஆகியனவும் எசுப்பானியாவின் ஆட்சிப் பகுதிக்குள் வருகின்றன.
மலைகளும் ஆறுகளும்
எசுப்பானியாவின் தலைநிலம் உயர் சமவெளிகளையும், மலைத் தொடர்களையும் கொண்ட மலைப் பகுதியாகும். பைரனீசுக்கு அடுத்ததாக முக்கியமான மலைத்தொடர்கள் கோர்டிலேரா கன்டாபிரிக்கா, சிசுட்டெமா இபேரிக்கோ, சிசுட்டெமா சென்ட்ரல், மொன்டெசு டி தொலேடோ, சியேரா மோரேனா, சிசுட்டெமா பெனிபெட்டிக்கோ என்பன. ஐபீரியத் தீவக்குறையில் உள்ள மிக உயரமான மலைமுகடு சியேரா நெவாடாவில் உள்ள 3,478 மீட்டர் உயரமான முல்காசென் ஆகும். ஆனாலும், எசுப்பானியாவில் உள்ள உயரமான இடம் கனரித் தீவுகளில் காணப்படும் உயிர்ப்புள்ள எரிமலையான தெய்டே ஆகும். இது 3,718 மீட்டர் உயரமானது. மெசெட்டா சென்ட்ரல் என்பது எசுப்பானியாவின் தீவக்குறைப் பகுதியின் நடுவில் அமைந்துள்ள பரந்த சமவெளி.
எசுப்பானியாவில் பல முக்கியமான ஆறுகள் ஓடுகின்றன. இவற்றுள், தகுசு, எப்ரோ, டுவேரோ, குவாடியானா, குவாடல்கிவீர் என்பனவும் அடங்குகின்றன. கடற்கரைப் பகுதிகளை அண்டி வண்டற் சமவெளிகள் காணப்படுகின்றன. இவற்றுள் பெரியது அண்டலூசியாவில் உள்ள குவாடல்கிவீர் ஆற்றின் வண்டற் சமவெளி ஆகும்.
ஆட்சி
எசுப்பானியா சர்வாதிகார ஆட்சியில் இருந்து குடியாட்சிக்கு மாறியதன் விளைவே 1978 ஆம் ஆண்டின் எசுப்பானிய அரசியல் சட்டம் ஆகும். எசுப்பானியாவின் அரசமைப்புச் சட்ட வரலாறு 1812 ஆம் ஆண்டில் தொடங்கியது. குடியாட்சிக்கு மாறுவதற்கான அரசியல் சீர்திருத்தங்கள் மிக மெதுவாக இடம் பெற்றதனால் பொறுமை இழந்த எசுப்பானியாவின் அப்போதைய அரசர் முதலாம் வான் கார்லோஸ் அப்போது பிரதமராக இருந்த கார்லோசு அரியாசு நவாரோ என்பவரை நீக்கிவிட்டு, அடோல்ஃப் சுவாரெசு என்பவரை அப்பதவியில் அமர்த்தினார். தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அரசியல் சட்டவாக்க சபையாகச் செய்ற்பட்டுப் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்கியது. 1978 டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி இடம்பெற்ற தேசிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில், புதிய சட்டம் 88% வாக்குகளைப் பெற்றது.
இந்த அரசியல் சட்டத்தின்படி, எசுப்பானியா 17 தன்னாட்சிச் சமூகங்களையும், 2 தன்னாட்சி நகரங்களையும் உள்ளடக்குகிறது. எசுப்பானியாவில் அரச மதம் என்று எதுவும் கிடையாது. எவரும் தாம் விரும்பும் மதத்தைக் கைக்கொள்ளுவதற்கான உரிமை உண்டு.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
வானிலை முன்னறிவிப்பு
எசுப்பானியா
ஐரோப்பிய நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
|
5093
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88
|
கோவை
|
கோவை என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்:
கோவை தாவரம்
கோவை (நிரலாக்கம்)
கோயம்புத்தூர்
கோவை (தமிழிசை)
கோவை (இலக்கியம்)
கோயம்புத்தூர் மாநகராட்சி
நபர்கள்
கோவை மகேசன்
வேறு
கோவை தொழில்நுட்பக் கல்லூரி
கோவை பிரதர்ஸ், திரைப்படம்
|
5094
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF
|
பங்குனி
|
பங்குனி தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் கடைசி மாதமாகும். சித்திரை தொடக்கம் பங்குனி வரையான தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது சூரியனைப் பூமி சுற்றுவதனால் ஏற்படும் பூமிக்குச் சார்பான சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. சூரியன் இராசிச் சக்கரத்தில் மீன இராசிக்குச் செல்வது பங்குனி மாதப் பிறப்பைக் குறிக்கிறது. இந்த மாதம் முழுதும் சூரியன் மீன இராசியிலேயே சஞ்சரிக்கும். இந்த மாதம் 30 நாட்களைக் கொண்டது. ஆங்கில காலக்கணிப்பின் படி மார்ச்சு மாதம் 15 ஆம் நாளிலிருந்து ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் வரையான காலப்பகுதி தமிழ்ப் பங்குனி மாதத்துடன் பொருந்துகிறது.
வெளியிணைப்புக்கள்
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
தமிழ் மாதங்கள்
|
5095
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
தமிழ் மாதங்கள்
|
தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரண்டு ஆகும். உண்மையில் இவை, இந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவுக்கு வெளியிலும் பல ஆசிய நாடுகளிலும் கூட இன்றும் சமயம் மற்றும் மரபு சார்ந்த தேவைகளுக்காகப் புழக்கத்திலுள்ள இந்துக் காலக் கணிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டதே. இந்துக் காலக் கணிப்பு முறை இன்று புழக்கத்திலுள்ள பகுதிகளிலெல்லாம் ஒரே விதமாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தியாவிலும்கூட வெவ்வேறு பகுதிகள் இம்முறையை வெவ்வேறு வகையில் தான் கடைப்பிடித்து வருகின்றன. இவ்வாறே தமிழர் வாழும் பகுதிகளிலும் பல்வேறு தனித்துவமான கூறுகளுடன் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் மாதப் பகுப்பின் அடிப்படை
பண்டைய தமிழகத்தில் இரண்டு வகையான மாதங்களைக் குறிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஒன்று பூமிக்கு சார்பாக சூரியனின் இயக்கத்தை வைத்தும் மற்றொன்று பூமிக்கு சார்பாக சந்திரனின் இயக்கத்தை வைத்தும் கணக்கிடப்பட்டது.
சூரிய மாதம்
சூரிய மாதங்கள் பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும்போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும் சூரியன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை (degrees) அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேசம் முதல் மீனம் வரை உள்ள 12 சூரிய மாதங்கள் (இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு சூரிய மாதம் ஆகும்.
சந்திர மாதம்
ஒரு சூரிய மாதத்தில் சந்திரன் பூரணை அடையும் நாள் எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்நட்சத்திரத்தின் பெயரே சந்திர மாதப் பெயராகக் கொள்ளப்பட்டது. உதாரணமாக, சூரியன் மேச இராசியில் பயணம் செய்யும்போது சந்திரன் பூரணை அடையும் நாளில் சித்திரை நட்சத்திரம் வரும் என்பதால் சூரிய மாதமான மேட மாதத்திற்கு உரிய சந்திர மாதம் சித்திரையாகும்.
தற்காலத்தில் தமிழகத்தில் சந்திர மாதப்பெயர்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கேரளாவில் சூரிய மாதப் பெயர்களே பயன்படுத்தப்படுகிறது. சூரிய மாதங்களின் பெயர்களும், அந்தந்த சூரிய மாதங்களுக்குரிய சந்திர மாதங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
மாதப் பிறப்பு
சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். சூரியன் மேட இராசியுட் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந் நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.
பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் ஆண்டுகளும், மாதங்களும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும், புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. இந்து முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரியன் இராசி ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழக்கூடும், இவ்வாறு சூரியன் அந்த இராசி ஒன்றுக்குள் புகும் நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். ஆனாலும் திகதி குறிக்கும் வசதிக்காக, மாதப் பிறப்பு சூரிய உதயத்துக்கும், சூரிய அத்தமனத்துக்கும் இடையில் (நாளின் முதற்பாதி) அமைந்தால் அந்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும். மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும்.
மாதங்களின் கால அளவு
பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன. தமிழ் மாதங்களின் கால அளவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
பெயர்க் காரணம்
சூரிய மாதங்களைப் பயன்படுத்தும் சில பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எடுத்துக்காட்டாக கேரளாவில், இராசிகளின் பெயரையே மாதங்களுக்கும் வைத்து அழைக்கிறார்கள். தமிழ் மாதப் பெயர்கள் சந்திரமான முறையில் அமைந்த மாதப் பெயர்கள் போல நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்டவை. சூரியமான முறையின் அடிப்படையில் அமைந்த தமிழ் மாதங்களுக்குச் சந்திரமான முறையோடு இணைந்த நட்சத்திரங்களின் பெயர்கள் இடப்பட்டதன் காரணம் தெளிவாகத் தெரியவில்லை. வரலாற்றுக் காரணங்களினாலேயே இம்முறை புழக்கத்துக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சூரிய உதயமும், மறைவும், நாட்கள் நகர்வதை இலகுவாக உணர்ந்துகொள்ள உதவுவதுபோல் சந்திரன் தேய்வதும் வளர்வதும் மாதங்களின் நகர்வை உணர்வதற்கு வசதியாக உள்ளது. பண்டைத்தமிழ் இலக்கியங்களில் "அடுத்த பூரணைக்குள் திரும்பி வருவதாகத் தங்கள் தலைவிகளுக்குக் கூறிச் செல்லும்" தலைவர்களைப் பற்றி நிறையவே காண முடியும். எனவே பண்டைத் தமிழகத்தில் சாதாரண மக்கள் காலம் குறிப்பதற்கு சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அத்துடன் பூரணை என்பது காலம் குறிப்பதற்கான முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகப் பயன்பட்டது எனவும் அறிய முடிகிறது.
சந்திரமான முறையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வரும் பூரணை எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்திற்கு இடப்பட்டது. இதன்படி சித்திரை மாதத்துப் பூரணை சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசி மாதத்துப் பூரணை விசாக நட்சத்திரத்திலும் வருகின்றன. இவ்வாறே ஏனைய மாதங்களும் அவற்றின் பெயர் கொண்ட நட்சத்திரங்களில் வருவதை அறியலாம். இதனைப் பின்பற்றியே ஒவ்வொரு சந்திரமாதத்துக்கும் அண்மையிலிருக்கும் சூரியமான முறையில் அமைந்த தமிழ் மாதங்களுக்கும் அதே பெயர் இடப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
தமிழ்ப் புத்தாண்டு
கொல்ல ஆண்டு
தமிழ்ப் புத்தாண்டு
அறுபது ஆண்டுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
2013-14 விஜய வருடத்திய சித்திரை மாத நாட்காட்டி
தூய தமிழ் மாதங்கள் பெயர்கள்
இந்துக் காலக் கணிப்பு முறை
|
5097
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
பாறைத் தோட்டம்
|
பாறைத் தோட்டம் என்பது பாறைகள் அல்லது கற்களைப் பெரும்பாலும் பயன்படுத்தி உருவாக்கப்படும் அலங்காரத் தோட்டமாகும். இவை பொதுவாக பாறைச் சூழலில் வளரக்கூடிய தாவரங்களையும் கொண்டிருக்கும்.
பாறைத் தோட்டத் தாவரங்கள் பெரும்பாலும் சிறியவையாகவே இருக்கின்றன. இதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம். ஒன்று இயற்கையாகவே பாறைச்சூழலில் வளரக்கூடிய தாவரங்கள் சிறியவை மற்றது பாறைத் தோட்டங்களில் பாறைகளுக்கே சிறப்பிடம் கொடுக்கப்படுவதால் தாவரங்கள் அவற்றை மறைக்காது இருப்பதற்காகச் சிறிய தாவரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தாவரங்கள் பாறைகளுக்கிடையே நிலத்தில் அல்லது சிறிய பூச்சட்டிகளில் வளர்க்கப்படுகின்றன. பொதுவாக இத்தகைய தாவரங்களுக்கு நன்றாக நீர் வடிந்து ஓடக்கூடிய மண்ணும், குறைந்த அளவு நீரும் தேவைப்படுகின்றன.
வழமையான பாறைத் தோட்டங்கள் சிறியதும் பெரியதுமான பாறைகளை அழகுணர்வு வெளிப்பட ஒழுங்குபடுத்துவதன் மூலம் பெறப்படுகின்றன. இவ்வாறு ஒழுங்குபடுத்தப்படும் பாறைகளுக்கு இடையில் காணும் சிறிய இடைவெளிகளுள் தாவரங்கள் நடப்படுகின்றன. சில பாறைத் தோட்டங்களில் "பொன்சாய்கள்" எனப்படும் செயற்கைமுறையில் வளர்த்தெடுக்கப்படும் குறுக்கப்பட்ட தாவரங்களும் வளர்க்கப்படுவதுண்டு.
சென் தோட்டங்கள் என அழைக்கப்படும் யப்பானிய பாறைத்தோட்டங்கள் தாவரங்களே அற்றவையாக காணப்படுகின்றன.
வெளியிணைப்புகள்
பொதுவான கேள்விகள்
அல்பைன் பாறைத்தோட்டம்
வட அமஎரிக்க பாறைத்தோட்டக் கழகம்
ஸ்கொட்லாந்தின் பாறைத்தோட்டக் கழகம்
தோட்டக்கலை
en:Garden design#Rock garden
|
5108
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
ஈழ இயக்கங்கள்
|
ஈழ இயக்கங்கள் என்பன ஈழ போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயங்கி வந்ததும் வருகின்றதுமான இயக்கங்கள் ஆகும்.
அவ்வியக்கங்களின் பெயர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam (LTTE))
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))
தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE))
தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization (TELO))
தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (Tamil United Liberation Front)
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (Eelam Revolutionary Organization of Students (EROS))
தமிழீழ போராட்டத்துடன் தொடர்புடைய ஈழ விடுதலை இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்
தமிழ் மாணவர் பேரவை
தமிழ் இளைஞர் பேரவை
தமிழ் புதிய புலிகள் (TNT - 1972-1978)
தமிழர் விடுதலை இயக்கம் (TLO - 1974-1978)
இந்திய இலங்கை இணைப்பு இயக்கம் (ICMM - 1971-1980)
தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி (1977 - 1983) (ரி.பி.டி.எப்)
தமிழர் விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப்) அரசியல் கட்சி
தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ)
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)
ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்)
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எஃப் - சுரேஷ் அணி)
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)
பத்மநாபா (பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்) தமிழர் சமூக ஜனநாயக கட்சி (ஸ்.டி.பி.ரி) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
ஈழ தேசிய விடுதலை முன்னணி ரெலோ,ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப்,எல்.ரி.ரி.ஈ (ஈ.என்.எல்.எப்)
தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா)
தமிழீழ இராணுவம் (ரி.ஈ.ஏ)
புரட்சிகர ஈழ விடுதலை இயக்கம் (றெலோ)
தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (என்.எல்.எப்.ரி)
தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி)
தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை (ரி.பி.ஸ்.ஓ / ரி.எம்.பி.பி)
தமிழீழ விடுதலை தீவிரவாதிகள் (ரெலி)
தமிழீழ புரட்சி அமைப்பு (ரி.ஈ.ஆர்.ஓ)
தமிழீழ விடுதலை கெரில்லாக்கள் (TELG)
தமிழீழ செம்படை (ஆர்.எவ்.ரி.ஈ)
தமிழீழ தேசிய இராணுவம் (ரெனா)
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்)
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)
தீப்பொறி
தமிழீழ பாதுகாப்பு படை (ரி.ஈ.டி.எவ்)
ஈழ விடுதலை புலிகள் (ஈ.எல்.ரி)
தமிழீழ மக்கள் கட்சி (TEMP)
தமிழீழ கெரில்லா இராணுவம் (GATE)
தமிழீழ புதிய சனநாயகக் கட்சி (என்.டி.பி.ரி)
தமிழீழ கழுகு முன்னணி (ரி.ஈ.ஈ.எவ்)
இலங்கை விடுதலை தமிழ் இராணுவம் (IFTA)
ஈழ புரட்சி கம்யூனிஸ்ட் கட்சி (ERCP)
தமிழீழ புரட்சிகர மக்கள் விடுதலை இராணுவம் (ரி.ஈ.ஆர்.பி.எல்.ஏ)
கழுகு படை (EM)
தமிழர் பாதுகாப்பு பேரவை
தமிழீழ விடுதலை நாக படை / கோப்ராக்கள் (TELC)
தமிழீழ கொமாண்டோக்கள் (TEC)
ஈழ விடுதலை பாதுகாப்பு முன்னணி (ஈ.எல்.டி.எவ்)
தமிழ் மக்கள் பாதுகாப்பு முன்னணி (ரி.பி.எஸ்.எவ்)
மக்கள் விடுதலை கட்சி (பி.எல்.பி)
சமூக புரட்சி சமூக விடுதலை (எஸ்.ஆர்.எஸ்.எல்)
2000 ஆம் ஆண்டுகளுக்கு பின் உருவாகிய இயக்கங்கள்/அரசியல் கட்சிகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ரி.என்.ஏ) அரசியல் கட்சி
தமிழ் மக்கள் பேரவை
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.வி.பி)
சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீரெலோ)
தமிழ் தேசிய மக்கள் முன்னனி (ரி.என்.பி.எவ்) அரசியல் கட்சி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
http://www.thenee.com
தமிழீழம்
ஈழ இயக்கங்கள்
|
5109
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
நீரூற்றுக்கள்
|
எளிமையான அமைப்பில் நீரூற்றுக்கள் என்பன குழாய் வழியாக கொண்டுவரப்படும் நீர் சிறிய துளை அல்லது துளைகள் வழியாக வெளியேறி தொட்டியொன்றுக்குள் விழும். ஆரம்ப காலத்து நீரூற்றுகளில் இவ்வாறு சேரும் நீர் வெளியேறி வடிகாலுக்குள் செல்லும்.
தற்காலத்தில் ஜெனீவா ஏரியில் உள்ளதுபோல, ஏரிப்பரப்பிலிருந்து மேலெழுந்து செல்லும் பிரம்மாண்டமான நீரூற்றுகள் இருந்தாலும், பல நீரூற்றுகள் சிறிய, செயற்கைக் குளங்களிலும், தொட்டிகளிலும், தோட்டங்களில் காணப்படும் தடாகங்களிலுமே பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் சிலைகள், சிற்பங்களும் அவற்றுடன் இணைந்திருப்பதுண்டு.
அமுக்கத்துடன் குழாய்வழி கொண்டுவரப்படும் நீர், அலங்காரமாக பல்வேறு வடிவங்களில் விசிற விடப்படுதல் இக்காலத்தில் மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் நுட்பமாகும். இதைவிட கற்கள், கொங்கிறீற்று, உலோகம் போன்ற பல்வேறு மேற்பரப்புகளில், நீர் தகடுபோல் வழிந்து செல்லவிடப்படுவதையும் காணலாம்.
வரலாறு
ஆரம்பகால நீரூற்றுகள் புவியீர்ப்பின் கீழான நீரோட்டங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. இயற்கை நீரூற்றுக்கள் அல்லது செயற்கையான நீர்காவி அமைப்புகள் நீரூற்றுக்களுக்குத் தேவையான நீரினது மூலங்களாக இருந்தன.
கிரேக்க மற்றும் ரோமப் பொறியியலாளர்கள் நீரூற்றுகள் அமைப்பதில் நிபுணர்களாக இருந்ததாகக் கூறப்படுகின்றது.
ஏனைய ஆரம்பகால நீரூற்றுக்கள் Geometrically ஒழுங்கமைக்கப்பட்ட நீரூற்றுக்கள் வடிவில் பாரசீகத் தோட்டங்களில் வளர்ச்சி பெற்றிருந்தன. 16 ஆம் நூற்றாண்டில், மத்திய இத்தாலியிலும், முகலாய இந்தியாவிலுமிருந்த தோட்டங்களில், நுணுக்கமான வேலப்பாடுகளைக் கொண்ட நீரூற்றுக்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன.
தற்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நீரூற்று அமைப்புக்களில் பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீரியல், ஒளியமைப்பு, மின்னணுவியல் ஆகிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களை நீரூற்றுக்களை உருவாக்குவதற்கு இன்றைய வடிவமைப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
நீரூற்று வகைகள்
நிலையான நீரூற்றுக்கள்
பொதுவாக நீரூற்றுக்கள் எதுவும் இயக்கமின்றி இருப்பதற்காக வடிவமைக்கப் படுவதில்லை. நீரூற்றுக்களில் நீர் மெதுவாக ஓடிக்கொண்டோ, வழிந்து நீர்வீழ்ச்சிபோல விழுந்துகொண்டோ அல்லது அமுக்கத்தின் கீழ் விசிறப்பட்டுக்கொண்டோ இருக்கும். ஆயினும் அதன் இயக்கம் எவ்வித மாற்றமும் இன்றி ஒரேவிதமாகவே எப்பொழுதும் இருக்குமாயின் அது நிலையான நீரூற்றுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அசைவியக்க நீரூற்றுக்கள்
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நீர் மேலெழும் உயரம், அதன் வடிவம் என்பன மாறிக்கொண்டிருக்கும்படி வடிவமைக்கப்பட்ட நீரூற்றுக்கள் அசைவியக்க நீர்த்தாரைகளாகும். இத்தகைய நீரூற்றுக்களில் ஒளியமைப்பும்கூட அதன் நிறம், ஒளிச்செறிவு என்பன மாறிக்கொண்டிருக்கும் படி அமைக்கப்படலாம்.
இசை நீரூற்றுக்கள்
அசைவியக்க நீரூற்றுக்களை போன்றே இவற்றின், நீர் மேலெழும் உயரம், அதன் வடிவம், ஒளியமைப்பு அம்சங்கள் என்பன மாறிக்கொண்டிருக்கும் ஆயினும், அவற்றைப்போல் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மாறாது, அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள இசைக்கு ஒத்த வகையில் இயங்குகின்றன. இந்த இயக்கம் நீர் நிரல்கள் இசைக்கு ஏற்றாற்போல் நடனமாடுவது போலிருக்கும்.
மிதக்கும் நீரூற்றுக்கள்
இவை நீர்நிலைகளில் மிதப்பதுபோல் அமைந்திருக்கும் நீரூற்றுக்கள் ஆகும். பொதுவாக ஏரிகள் போன்ற பெரிய நீர்நிலைகளிலேயே இவை அமைக்கப்படுகின்றன.
சில புகழ் பெற்ற நீரூற்றுக்கள்
ஈட்டன்ஸ் மையம். இங்கே ஒவ்வொன்றும் 3/8 அங்குல விட்டம் கொண்ட 44 வெளிப்புற ஊற்றுவாய்கள் (nozzles) பாரிய கிண்ணம் போன்ற தொட்டியை நிரப்புகின்றன. இத்தொட்டியிலிருந்து மேலும் 20 ஊற்றுவாய்கள் நீரை மேல்நோக்கி விசிறுகின்றன. மையப்பகுதியிலுள்ள ஊற்றுவாயொன்று, அடுத்தடுத்து மும்முறை நீர் நிரலொன்றை 10 மீட்டர் உயரத்துக்கு உயர்த்துகிறது. இவ்வாறே திரும்பத் திரும்ப நிகழ்கிறது. Along the far side there is zero-depth entry (no barrier, and the plane of the water matches the plane of the floor).
புறூக்லின் நூதனசாலை முன்னுள்ள நீரூற்று (frequent frolicking, நீர்த்தேக்கம் கிடையாது; யாராவது மூழ்கும் அபாயம் இல்லை)
தொழினுட்பம்
கட்டிடக்கலைக் கூறுகள்
நீர்
|
5119
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88
|
சித்திரை
|
தமிழர் காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை ஒன்றாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக கொண்ட சூரியமானத்தின் படி இம்மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.
இராசிச்சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.
சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப்பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொண்டாடுவர்.
இவற்றையும் பார்க்கவும்
சந்திர மாதம்
காலக்கணிப்பு முறைகள்
இந்திய வானியல்
வெளியிணைப்புக்கள்
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
தமிழ் மாதங்கள்
|
5122
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
|
பில்லியன்
|
இருமநுல்லியம் அல்லது பில்லியன் (billion) என்பது மேற்கத்திய எண்முறையில் ஆயிரம் நுல்லியம் / மில்லியனைக் (1000 × 1000 × 1000) குறிக்கும். இந்திய எண்முறைப்படி 100 கோடி ஒரு பில்லியனுக்குச் சமமானது. ஒரு பில்லியன் 1,000,000,000 என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு பில்லியன் 109 என எழுதப்படும்.
பில்லியன் என்பதை ஆயிரம் ஈரடுக்கு ஆயிரம் (1000 × 10002). மில்லியன் என்பது ஆயிரம் ஓரடுக்கு ஆயிரம் (1000 × 10001). டிரில்லியன் என்பது ஆயிரம் மூவடுக்கு ஆயிரம் (1000 × 10003). குவார்ட்டில்லியன் என்பது ஆயிரம் நான்கு அடுக்கு ஆயிரம் (1000 × 10004). இவ்வெண் முறையில் இவ்வாறு அடுக்கப்படுகின்றது.
எண்கள்
அளவை
முழு எண்கள்
|
5123
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
|
தீவு நாடு
|
ஒரு நாடானது ஒரு தீவினிலோ அல்லது ஒரு தீவுக்கூட்டத்திலோ முழுமையாக அடங்கியிருந்தால் அது தீவு தேசம் அல்லது தீவு நாடு எனப்படுகிறது. உலகில் மொத்தமுள்ள நாடுகளில் 47 நாடுகள் தீவு நாடுகள் ஆகும். இவற்றில் பெரும்பாலானவை சிறியவை ஆகும்.
மேலும் பார்க்க
தீவு நாடுகளின் பட்டியல்
நாடுகளின் பட்டியல்
|
5124
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81
|
வேலணைத் தீவு
|
வேலணைத் தீவு (Velanai Island) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் பெரிய தீவு ஆகும். ஒல்லாந்தர் காலத்தில் இதற்கு லைடன் தீவு (Leiden Island) எனப் பெயர் வழங்கியது.
பெயர்க்காரணம்
கி.பி. 1658 முதல் கி.பி. 1796 வரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டியிருந்த தீவுகள் ஏழுக்கும் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களின் பெயர்களை இட்டார்கள். இவற்றில் தெற்கு ஒல்லாந்தில் உள்ள லெய்டன் (யாழ்ப்பாணத்தில் இப்பெயரை லைடன் என்றே உச்சரிப்பது வழக்கம்) நகரத்தின் பெயர் இத் தீவுக்கு வழங்கப்பட்டது.
முக்கிய ஊர்கள்
இங்கு பத்து கிராமங்கள் உண்டு, அவை பின்வருமாறு:
சுருவில்
நாரந்தனை
கரம்பொன்
ஊர்காவற்றுறை (காவலூர்)
பரித்தியடைப்பு
புளியங்கூடல்
சரவணை
வேலணை
அல்லைப்பிட்டி
மண்கும்பான்
இவற்றுள் ஊர்காவற்றுறை (காவலூர்) பிரித்தானியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் வடக்கு இலங்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்த துறை முகங்களில் ஒன்றாகும்.
லைடன் தீவின் கிராமங்களைப் பற்றியொரு பாடல் தொகுதி
ஊர்காவர்றுறை, கரம்பன், சுருவில்
உற்றநற் புளியங்குடல் நாரந்தனை
பேர்மிகு சரவணை, வேலனை மண்கும்பான்
பெருமை சொல் மண்டைத்தாவல் லைப் பிட்டி
சேர்ந்தே லைடன் தீவெனும் நிலமாம்.
(கவிஞர் சக்தி அ. பால. ஐயா)
அமைவிடமும், போக்குவரத்துத் தொடர்புகளும்
வேலணைத்தீவின் நேர் வடக்கே அமைந்துள்ளது காரைநகர் என்று பொதுவாக அழைக்கப்படும் காரைதீவு. தென் மேற்குத் திசையில் புங்குடுதீவும், தென் கிழக்குத் திசையில் மண்டைதீவும் அமைந்துள்ளன. மண்டைதீவு யாழ்ப்பாண நகரத்துக்கும் வேலணைத்தீவுக்கும் இடையில் உள்ளது. வேலணைத்தீவு பண்ணை கடல் வழிச் சாலையினால், மண்டைதீவுக்கு ஊடாக யாழ்ப்பாண நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு, காரைதீவு என்பவற்றை இத் தீவுடன் இணைக்கும் கடல் வழிச் சாலைகளும் உண்டு.
இவற்றையும் பார்க்க
வேலணை பிரதேச செயலாளர் பிரிவு
உசாத்துணைகள்
கா. சிவத்தம்பி, யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம், (2000).
சதாசிவம் சேவியர், சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்,(1997).
செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
சு. சிவநாயகமூர்த்தி, நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா,(2003).
இ. பாலசுந்தரம், இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை,(2002).
வெளி இணைப்புகள்
Amnesty International condemns killings of civilians
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்
சப்த தீவுகள்
இலங்கையின் தீவுகள்
யாழ்ப்பாண மாவட்டம்
|
5142
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
|
பொன்சாய்
|
இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களைத் திறமையான கத்தரிப்பு மூலமும், அவற்றின் தண்டுகளில் கம்பிகளைச் சுற்றிக் கட்டுப்படுத்துவதன் மூலமும், உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி சட்டிகளில் வளர்க்கும் முறை பொன்சாய் எனப்படும். ஜப்பானிய மொழியில் இது "தட்டத் தோட்டம்" (盆栽) எனப் பொருள்படும். சீனக் கலையான "பென்ஜிங்" என்பதும் இது போன்றதே. இதிலிருந்தே பொன்சாய்க் கலை வளர்ந்ததாகக் கூறப்படுகின்றது.
வரலாறு
அழகுக்காக வளர்ப்பது போல் காணப்படும், சட்டிகளில் வளர்க்கப்பட்ட மரங்களின் உருவப் படங்கள், 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்தியச் சமாதிகளில் காணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, நாடோடிகளின் வண்டிகள் விதவிதமான பாத்திரங்களில் மரங்களை ஆசியா முழுதும் காவிச் சென்றதாக அறியப்படுகின்றது. இந்த மரங்கள் மருத்துவத் தேவைகளுக்கு வேண்டிய மூலப்பொருட்களை வழங்கியதாகத் தெரிகிறது.
நவீன பொன்சாய்க் கலை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. இது 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் சீனாவுக்கான அரச தூதுவர்களால் ஜப்பானுக்குக் கொண்டுவரப்பட்டது.
வளர்ப்பு
போன்சாய் பரம்பரையியல் முறையில் குள்ளமான ஒரு தாவரமல்ல. இது முறியாக வளர்ந்துகொண்டிருக்கும் தாவரமொன்றைக் குருத்து மற்றும் வேர்களைக் கத்தரித்தல் போன்ற பல வகைச் செயற்கை முறைகள் மூலம் குள்ளமாக வளரவைக்கப் படுகின்றன. என்னகையான தாவரத்தையும் இவ்வாறு வளர்க்க முடியுமெனினும், குள்ளமாக வளர்ந்து முதிர்ந்த மரங்களின் தோற்றத்தைக் கொடுப்பதற்குச் சிறிய இலைகளைக் கொண்ட தாவரங்களே பொருத்தமானவை. உரிய முறையில் பராமரிக்கப்படும் பொன்சாய்கள் முழு அளவுக்கு வளரும் அவற்றைப் போன்ற தாவரங்களையொத்த ஆயுட்காலத்தைக் கொண்டிருக்க முடியும். எனினும் பொன்சாய்களுக்கு மிகுந்த பராமரிப்புத் தேவை. நன்றாகப் பராமரிக்கப்படாத பொன்சாய்கள் நீண்டகாலம் உயிர்வாழ மாட்டா.
வெளியிணப்புகள்
The Art of Bonsai Project - galleries to show bonsai variations
bonsaiTALK Wiki .
பொன்சாய் தொடக்க நிலையினருக்கு.
இணைய பொன்சாய் கழகம்.
ஜப்பானில் பொன்சாய் - ஒமியா பொன்சாய் கிராமம்
ஐக்கிய அமெரிக்க தேசிய பொன்சாய் பவுண்டேஷன்.
தேசிய பொன்சாய் மற்றும் பென்ஜிங் அரும்பொருள் காட்சியகம் - ஐக்கிய அமெரிக்க தேசிய Arboretum .
தோட்டக்கலை
ஜப்பானியக் கலை
|
5151
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%29
|
விசயன் (இலங்கை அரசன்)
|
விஜயன் அல்லது விஜய என்பன் இலங்கையின் முதலாவது சிங்கள அரசன் என மகாவம்சம் கூறுகிறது. இன்றைய கிழக்கு இந்தியாவின் வங்காளதேசப் பகுதியில் லாலா எனும் நாட்டில் தனது தந்தையினால் துரத்திவிடப்பட்டவன் என்றும் இலங்கையை கி.மு. 445 தொடக்கம் கி.மு. 483 வரை ஆட்சி செய்ததாகவும் மகாவம்சம் கூறுகிறது.
விசயனின் வருகை
மகாவம்சக் கூற்றின் படி காட்டு மிருகமான சிங்கத்திற்கு பிறந்த சிங்கபாகுவின் மூத்த மகன் விசயனாவான். இவன் சிங்கபாகு ஆட்சி செய்த லாலா நாடு இன்றைய மேற்கு வங்காளம் பகுதியில் ஆட்சி செய்த அவர் அன்னாட்டு மக்களுக்கு மிகவும் கொடுமையானவனாகவும், வன்முறைமிக்கவனாகவும் விசயன் இருந்தான்.
இதனால் மக்கள் அவனது தந்தையான சிங்கபாகுவிடம் முறையிட்டனர். தொடர்ந்தும் இவனது தொந்தரவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் கோபப்பட்ட மக்கள் அவனை கொன்றுவிடும் படி முறையிட்டனர். இருப்பினும் தனது தந்தையின் கூற்றுக்கும் அடங்காததனால், கடைசியாக சிங்கபாகு விசயனையும் அவனது 700 நண்பர்களையும் பாதி மொட்டையடித்து ஒரு கப்பலில் ஏற்றி கடலில் விட்டனர். அவர்களது குழந்தைகளையும், மனைவிகளையும் கூட வெவ்வேறு கப்பலில் ஏற்றிக் கடலில் விட்டனர். விசயன் சுப்பராகா எனும் இடத்தில் கரையொதுங்குகிறான். ஆயினும் அங்கேயும் அவனதும் அவனது நண்பர்களதும் தொல்லைகள் அதிகரிக்கவே அங்கிருந்தும் கடத்தப்படுகின்றனர். கடைசியாக (இன்றைய இலங்கையில்) தம்பபண்ணி எனும் இடத்தில் கரையொதுங்குகின்றனர்.
பதினெட்டு வயதை அடைந்த போது, அவனுடைய முறையற்ற நடத்தை காரணமாக, அவனது நண்பர்கள் 700 பேருடன் சேர்த்து வங்க தேசத்தில் லாலா எனும் நாட்டிலிருந்து அவனுடைய தந்தையால் நாடுகடத்தப் பட்டான். அவர்கள் கப்பலில் செல்லும் போது புயல் வீசவே கப்பல் தம்பலகாமத்தில் தரை ஒதுங்கியது. விஜயன், அங்கே இயக்கர் தலைவி குவேனியைக் கண்டு அவளை மணந்து இலங்கையின் மன்னன் ஆனான். இவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தார்கள்.
ஆனால் பின்னர் பட்டம் கட்டுவதற்கு அரசகுமாரி தேவைப்படவே குவேனியை துரத்திவிட்டு பாண்டி நாட்டு மதுராபுரியிலிருந்து அரசகுமாரியை வருவித்து மணந்து முடிசூடிக் கொண்டான்.
சான்றுகள்
குறிப்புகள்
இலங்கை மன்னர்கள்
மகாவம்சம்
|
5152
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF
|
இலங்கை வானொலி
|
இலங்கை வானொலி இலங்கையின் முன்னணி ஒலிபரப்பு நிலையமும் ஆசியாவின் முதல் வானொலி நிலையமுமாகும். இங்கிலாந்தில் பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டுகள் மட்டுமே கடந்த நிலையில் இலங்கையில் ஒலிபரப்பை ஆரம்பித்தது. 1922 இல், தந்தித் திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது.
ஆரம்பம்
1921 ஆம் ஆண்டு தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராக பதவியேற்று இலங்கை வந்த எட்வேர்ட் ஹாப்பர் (Edward Harper) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையைத் தீவிரமாக முன்னெடுத்துச் சென்றவராவார். ஆப்பர் முதலாவது சோதனை அடிப்படையிலான ஒலிபரப்பினை இலங்கை தந்திக் கழகத்தினையும் கொழும்பிலிருந்த பிரித்தானிய மற்றும் இலங்கை வானொலி நேயர்களின் துணை கொண்டு உருவாக்கினார். இன்று எட்வேர்ட் ஹாப்பர் இலங்கை ஒலிபரப்புத் துறையின் தந்தை எனப் பலராலும் போற்றப்படுகிறார்.
கொழும்பின் முதலாவது வானொலிச் சோதனையின் போது, மத்திய தந்தி அலுவலகத்தின் மிகச்சிறிய அறையொன்றிலிருந்து தந்தித் திணைக்களப் பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒலிபரப்பியைப் பயன்படுத்தி கிராமபோன் இசை ஒலிபரப்பப்பட்டது. இந்த ஒலிபரப்பி போரில் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து பெறப்பட்ட வானொலிக் கருவியிலிருந்து உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
சோதனை வெற்றியடையவே, மூன்று ஆண்டுகளின் பின்னர் முறையான ஒலிபரப்புச் சேவை இலங்கையில் இடம்பெறத் தொடங்கியது. இது கொழும்பு வானொலி என அறியப்பட்டது. இது 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி அன்றைய பிரித்தானிய இலங்கை ஆளுனர் சேர் இயூ கிளிஃபர்டு என்பவரால் அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு வெலிக்கடை பகுதியில் ஒரு கிலோ வாற்று வலுக்கொண்ட பரப்பியை கொண்டு மத்திய அலை அலைவரிசையில் தன் ஒலிபரப்பை ஆரம்பித்தது.
மாணவர்களுக்கான கல்விச் சேவை நிகழ்ச்சிகள் 1931 மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டாம் உலக போரின் போது கொழும்புச் சேவை வானொலி நிலையம் நேச நாட்டு படைகளால் பொறுப்பேற்கப்பட்டு தென் கிழக்காசியாவில் இருந்த நேசப படைகளுக்கு செய்திகள் ஒலிபரப்பட்டது. போரின் முடிவில், மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை அரசின் தனித்த திணைக்களம் ஒன்றின் கீழ் வந்த கொழும்பு வானொலியின் பெயர் 1949 ஆம் ஆண்டு இலங்கை வானொலி என மாற்றப்பட்டது.
தென்னிந்தியத் தமிழ் சேவை
இலங்கை வானொலி தென்னிந்திய நேயர்களுக்காக 1953 அக்டோபர் 4 அன்று ஒரு மணி நேர தமிழ் நிகழ்ச்சி ஒன்றை சிற்றலை 41 மீட்டரில் தொடங்கியது. நாடோறும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
1967ம் ஆண்டு ஒலிபரப்பு திணைக்களமாக இருந்துவந்த இந்நிலையம், மேலதிக அதிகாரங்களையும் நெகிழ்வுப்போக்கையும் கொண்ட கூட்டுத்தாபனமாக மாற்றம் கண்டது. 1966 இல் இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 37ம் இலக்க கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இன்றுவரை இந்நிறுவனம், கூட்டுத்தாபனமாகவே இருந்துவருகிறது.
1972 மே 22 ஆம் நாள் இலங்கை, குடியரசாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து இந்நிறுவனம் இன்றுவரை கொண்டிருக்கும் பெயரான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரைப் பெற்றது. இன்று இந்நிறுவனம் இலங்கை அரசின் ஊடக, தகவல் அமைச்சின் கீழ் இயங்குகிறது.
புகழ்பெற்ற ஒலிபரப்பாளர்கள்
இலங்கை வானொலி தெற்காசியாவிலேயே பல சிறப்பான ஒலிபரப்பு வல்லுனர்களை உருவாக்கியுள்ளது எனலாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: லிவி விஜேமான, வேணன் கொரெயா, பேர்ள் ஒண்டாட்ஜி, டிம் ஹோர்ஷிங்டன், கிறெக் ரொஸ்கோவ்ஸ்கி, ஜிம்மி பாருச்சா, மில் சன்சோனி, கிளோட் செல்வரட்னம், அமீன் சயானி, எஸ். பி. மயில்வாகனம், தேவிஸ் குருகே, விஜயா கொரெயா,அப்துல் ஹமீது இன்னும் பலர்.
இலங்கை வானொலியின் வர்த்தக சேவை
1950 செப்டம்பர் 30இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இந்தியத் துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இமயமலையில் உச்சியில் கால் பதித்த ஹிலறியும் ரென்சிங்கும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் கேட்டார்கள். கிளிஃபோர்டு டோட் (Clifford Dodd) எனும் ஆஸ்திரேலியர் இவ்வர்த்தக சேவையின் இயக்குநராக இருந்தார்.
அகில இந்திய வானொலியில் சினிமா பாடல்களுக்கு 1952 இல் இந்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்த பி.வி.கேசகர் (B.V.Kesakar) விதித்திருந்த தடை தமிழ் சினிமாத் துறையினர் தங்கள் திரைப்படம் வெளியாகும் சமயம் இலங்கை வானொலியை விளம்பரத்திற்கு முற்றாகச் சார்ந்திருக்க வைத்தது. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பு ஏற்படுத்திய தாக்கத்தைத் தணிக்க அகில இந்திய வானொலி ’விவித் பாரதி’ வர்த்தக ஒலிபரப்பை 1957 ஆம் வருடம் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பித்தது.
பின்னர் அரசியல் நிலைமையாலும் தகவல் தொடர்பு சாதனங்களில் ஏற்பட்ட உலகளாவிய மாற்றங்களாலும் இலங்கை வானொலி செலுத்திய ஆட்சி இந்திய துணைக்கண்டத்தில் இழந்தது.
இசைத் தட்டுகள்
உலகில் எந்த ஒரு வானொலி நிலையத்திலும் இல்லாத அளவு ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிங்கள, தமிழ், ஆங்கிலப் பாடல்களின் இசைத்தட்டுகள் இலங்கை வானொலி கொண்டுள்ளது. 1920-30 ஆண்டுகளில் வெளிவந்த மிக அரிதான 78RPM இசைத் தட்டுகளும் (அசல்) உள்ளன.
நூல்
இலங்கை வானொலியில் கல்விச் சேவையிலும், தமிழ் நிகழ்ச்சிகள் தயாரிப்பாளராகவும், தமிழ் சேவையின் உதவிப் பணியாளராகவும் என நீண்ட காலம் பணியாற்றிய ஞானம் இரத்தினம் ’கிரீன் லைட்’ என்று தமது அக்கால வானொலி அனுபவ நினைவுகளை நூலாக வெளியிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இலங்கை வானொலியின் 'பிதாமகர்' எஸ்.பி.மயில்வாகனன் அவர்களின் குரல் பதிவு
கே.எஸ்.ராஜாவின் குரல் ஒலிப் பதிவுகளைக் கேட்கவும் தரவிறக்கம் செய்யவும்...
ராஜேஸ்வரி சண்முகம்... குரல் பதிவு
கே.ஜெயகிருஷ்ணா... குரல் பதிவு
நாக பூஷணி... குரல் பதிவு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்- உத்தியோக பூர்வ தளம்
வேர்ணன் கொரெயா இலங்கை வானொலியின் தங்கக் குரல்
இலங்கை வானொலியின் மூத்த தமிழ் அறிவிப்பாளர்கள் பற்றிய கட்டுரைகள்,புகைப் படங்கள், மற்றும் பேட்டிகள்
இலங்கையின் வானொலி நிலையங்கள்
ஈழத் தமிழ் வானொலிகள்
தமிழ் வானொலிகள்
|
5155
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
கிருஷ்ணா ஆறு
|
கிருட்டிணா ஆறு இந்தியாவின் மிக நீளமான ஆறுகளில் ஒன்றாகும். இந்த ஆறு ஏறத்தாழ 1,300 கி.மீ. நீளம் கொண்டது. மகாராட்டிரா, கருநாடகம், மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வழியாக கிருஷ்ணா ஆறு பாய்கிறது. மகாராட்டிரா மாநிலத்தின் சாத்தாரா மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் 1300 மீட்டர் உயரத்தில் உள்ள மகாபலீசுவர் என்ற இடத்தில் உற்பத்தி ஆகும் கிருஷ்ணா ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஏமசலதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கிருட்டிணா ஆற்றின் கரையில் அமைந்த பெரிய நகரம் விசயவாடா ஆகும்.
ஆற்றின் மூலம்
கிருட்டிணா ஆறு மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள மகாராட்டிரா மாநிலம் சதாரா மாவட்டம், மகாபலீசுவர் எனுமிடத்தில் சுமார் 1300 மீட்டர் உயரத்தில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்கிறது.
துணை ஆறுகள்
துங்கபத்திரை, கொய்னா, பீமா, மலபிரபா, கடபிரபா, யெர்லா, முசி, துத்கங்கா, திந்தி ஆகியவை இதன் துணை ஆறுகளாகும்.
அணைகள்
சிரீசைலத்தில் கட்டப்பட்டுள்ள சிரீசைலம் அணை, நாகார்சுன சாகரில் கட்டப்பட்டுள்ள நாகார்சுன சாகர் அணை. நாகார்சுன சாகர் அணை மிகப்பெரியது ஆகும். கருநாடகத்திலிருந்து ஆந்திர பிரதேசத்திற்கு நுழையும் இடத்தில் அலமட்டி அணை கட்டப்பட்டுள்ளது.
இதனையும் காண்க
மஹாபலீஸ்வரில் பீடபூமியில் உற்பத்தியாகும் பிற நான்கு ஆறுகள்:
காயத்ரி ஆறு
கொய்னா ஆறு
சாவித்திரி ஆறு
வெண்ணா ஆறு
மேற்கோள்
இந்திய ஆறுகள்
ஆந்திர ஆறுகள்
மகாராட்டிர ஆறுகள்
சாத்தாரா மாவட்டம்
|
5166
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
|
இந்தியாவின் பொருளாதாரம்
|
இந்தியாவின் பொருளாதாரம் கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் 3.363 டிரிலியன் டாலர் என்ற அளவில் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதமானது 6.2 என்ற அளவில் இருக்கின்றது. எனினும் இந்திய மக்கள்தொகை மிக அதிகமாக இருப்பதால் தனி நபர் வருவாய் 3100 டாலர் என்ற குறைந்த அளவிலேயே இருக்கிறது.
இந்தியப் பொருளாதாரமானது விவசாயம், கைவினைப் பொருட்கள், தொழில் துறை, மற்றும் சேவைத் துறை போன்ற பலவற்றைச் சார்ந்துள்ளது. சேவைத் துறையே இந்தியாவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கானது நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தையே சார்ந்துள்ளது.
வரலாறு
இந்தியாவின் பொருளாதார வரலாறானது மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படலாம். அவையாவன: காலனி ஆதிக்கத்திற்கு முந்தைய காலகட்டம் (இது 17-ஆம் நூற்றாண்டு வரை), காலனி ஆதிக்க காலகட்டம் (17-ஆம் நூற்றாண்டு முதல் 1947 வரை), மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டம் (1947 முதல் தற்போது வரை).
காலனி ஆதிக்க காலகட்டம்
1850 முதல் 1947 வரை ஆண்ட ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் 1880 முதல் 1920 வரை ஆண்டுக்கு 1% என இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. இக்காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட விதிகளினால் வேளாண்மை பிரிவில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. விவசாயத்தை மையமாக கொண்டு வர்த்தகத்தை மேம்படுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வியை சந்தித்தது. இதன் விளைவாக பெரும் பஞ்சத்தை இந்தியா சந்திக்க நேரிட்டது.
அரசாங்கத்தின் பங்கு
திட்டமிடல்
இந்திய அரசு சுதந்திரத்திற்குப்பிறகு பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்காக ஐந்தாண்டு திட்டங்களைத் தீட்டியது. இது திட்டக்குழுவினால் செயல்படுத்தப்படுகிறது. பிரதமரே திட்டக்குழுவின் தலைவராவார். ஐந்தாண்டு திட்டங்கள் 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
நாணய முறை
இந்தியாவில் பயன்படுத்தப்படும் நாணயத்தின் பெயர் ரூபாய் ஆகும். நூறு பைசாக்கள் கொண்டது ஒரு ரூபாய் ஆகும். இந்திய ரூபாய் 5, 10, 20, 50, 100,200, 500 மற்றும் 2000ஆகிய மதிப்புடைய பணதாள்களாகவும், 1, 2, 5, 10 மற்றும் 50 பைசா ஆகிய மதிப்புடைய நாணயங்களாகவும் கிடைக்கின்றன. இந்திய ரூபாயை பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் ரூபாயிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக " " என்பது இந்தியா ரூபாயின் சின்னமாக 2010 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
காரணிகள்
மக்கள் தொகைப் பெருக்கம்
இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடியாகும்(121,01,93422). இது உலகிலேயே இரண்டாவது மக்கள்தொகை மிகுந்த நாடாகும். உலகின் மக்கள்தொகையில் 17.5 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. இன்று இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மூன்று பெயரில் ஒருவர் இளைஞர் ஆவார். 2020 ஆம் ஆண்டிற்குள் தனது மக்கள்தொகையில் 64 சதவீதம் பேர்களை இளைஞர்களாக கொண்டு உலகிலேயே மிகவும் இளமையான நாடாக மாறும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஐக்கிய சபையின் கணிப்புகள், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா சீனாவை மிஞ்சி உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என்று கூறுகிறது. அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், ஜப்பான், வங்காளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கூட்டு மக்கள்தொகையும் இந்தியா என்ற தனி நாட்டின் மக்கள்தொகையும் ஏறத்தாள ஒன்றுதான்.
புவியியலும் இயற்கைவளங்களும்
இந்தியா பலவேறுபட்ட நிலப்பரப்புகளைக்கொண்டுள்ளது. மலைத்தொடர்கள் முதல் பாலைவனம் வரை இந்தியாவில் உள்ளன. வெப்பநிலை மிகக்குளிர் முதல் கடும் வெப்பம் வரை நிலவுகிறது. இந்தியா ஆண்டுக்கு சராசரியாக 1100 மி.மீ. மழையைப் பெறுகிறது. பாசனத்திற்காக 92% நீரானது பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் பலவகையான தாதுக்கள் கிடைக்கின்றன. நிலக்கரி அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. மேலும் இரும்புத்தாது, மைக்கா, மாங்கனீசு, டைட்டானியம், தோரியம், வைரம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் போன்றவையும் கிடைக்கின்றன.
துறைகள்
விவசாயம்
இந்தியா - இந்நாடு மிகப்பெரிய விவசாய நாடு.பால், வாசனைப் பொருட்கள், காய்கனிகள் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
1999- 2000 - ஆம் ஆண்டு கணக்கின் படி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% விவசாயம் மற்றும் அதனுடன் இணைந்த துறைகளான காடு வளர்த்தல், மரம் வெட்டுதல், மீன் பிடித்தல் போன்றவற்றின் மூலமே பெறப்பட்டது. மேலும் வேலைவாய்ப்பில் 57 சதவீதத்தினை இத்துறையே வழங்கியது. பசுமைப்புரட்சியின் விளைவாக கடந்த 50 ஆண்டுகளில் உற்பத்தித்திறன் நன்கு அதிகரித்துள்ளது. எனினும் உலகத்தரத்துடன் ஒப்பிடும்போது இது 30 லிருந்து 50 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது. கல்வியறிவின்மை, சீரற்ற பருவமழை, குறுநிலங்கள், போதிய நீர்ப்பாசன வசதி இல்லாமை போன்றவை இதற்கு காரணங்களாக விளங்குகின்றன.
தொழில்துறை
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய தொழில்துறையின் பங்கு 28.4 சதவீதமாகும். 17 சதவீதம் பேருக்கு இது வேலைவாய்ப்பளிக்கிறது. 1991-ல் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப்பிறகு பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்குகின்றன.
சேவைத்துறை
சேவைத்துறையானது தற்போது வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு 1950-ல் 15%-லிருந்து தற்போது 2000-ல் 48 சதவீதமாக அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்தியா முன்னணி வகிக்கிறது.
மேற்கோள்கள்
இந்தியப் பொருளாதாரம்
மேற்கோள் வழு-Defined multiple times
|
5167
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
|
ராமதுரை
|
சுப்ரமணியம் ராமதுரை, டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் லிமிடெட் (TCS) நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அதிகாரி (CEO) ஆவார்.
இவர் 1970களின் பிற்பகுதி முதல் TCS நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவரது முயற்சியின் காரணமாக TCS நிறுவனம் உலகிலுள்ள மிகப்பெரிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களுள் ஒன்றாக முன்னேற்றமடைந்துள்ளது. மேலும் இந்நிறுவனம் 116, 000 பேர் பணிபுரியும் நிறுவனமாகவும், 53 நாடுகளில் 151 கிளைகளைக் கொண்டதாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. அதன் நிகர வருமானம் US$ 5.7 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
இந்தியத் தொழிலதிபர்கள்
1944 பிறப்புகள்
1945 பிறப்புகள்
வாழும் நபர்கள்
டாட்டா குழும நபர்கள்
|
5169
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%20%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87
|
சிறீ லங்கா தாயே
|
சிறீ லங்கா தாயே (Sri Lanka Matha; ) என்பது இலங்கையின் நாட்டுப்பண் ஆகும். இலங்கையின் இயற்கை வளம், அழகு என்பவற்றை எடுத்துக்கூறும் இப்பாடல், இலங்கையர்களுக்கு இலங்கைத் தாயின் முக்கியத்துவம் பற்றியும் விபரிக்கிறது. நாட்டின் சகல பிரிவினருக்கும் இடையேயான ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தும் இப்பாடல், நாட்டுப்பற்றை ஊட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
வரலாறு
இலங்கைக் கவிஞர் சமரகூன் என்பவர் ரவீந்தநாத் தாகூரின் மாணவர். இவர் இந்தியாவில் தாகூருடன் தங்கிப் பாடம் படித்து 1939 இல் இலங்கை திரும்பி ஒரு கல்லூரியில் அவர் வேலை பார்த்துவந்தார். 1940 இல் இலங்கை தெற்கு பிராந்தியத்தின் பள்ளி அதிகாரி ஜெயசூரியா, ஒரு பாடல் எழுதித் தருமாறு கவிஞரைக் கேட்டார். உடனே சமரகூன் தாகூரை அணுகி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வங்க மொழியில் ஒரு பாடல் எழுதி இசையமைத்துக் கொடுத்தார் தாகூர். சமரகூன் அதை சிங்களத்தில் மொழிபெயர்த்தார். இதை எந்த ஆண்டு எழுதினார் என்ற தகவல் இல்லை. ஆனால், பாடலை இயற்றியவர்கள் தாகூர், சமரகூன்தான். கல்லூரி நிக்ழ்ச்சி ஒன்றில் கூட்டாக இப்பாடல் பாடப்பட்டது.
இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் இறுதிக்காலத்தில், இந்திய விடுதலைப் போராட்டத்தின் செல்வாக்கால், இலங்கையிலும் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. தேசபக்திப் பாடல்கள் பல எழுதப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும் பாடப்பட்டு வந்தன. பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சி முடிவுக்கு வந்து, இலங்கை விடுதலை பெற்றபோது, நாட்டின் இறைமையின் சின்னங்களாகத் தேசியக் கொடி, நாட்டுப் பண் என்பவற்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்றது. ஏற்கனவே புழக்கத்திலிருந்த தேசபக்திப் பாடல்களிலொன்றைத் தெரிவு செய்வதில் சிக்கல்கள் எழுந்தமையால், போட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட கீதங்களிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்வதற்காக நடுவர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
ஆனந்த சமரக்கோன் என்பவர் 1940 ஆம் ஆண்டு எழுதி ஏற்கனவே பரவலாகப் புழக்கத்திலிருந்த நமோ நமோ மாதா என்று தொடங்கும் சிங்களப் பாடலும் தேர்வுக்காக நியமிக்கப்பட்டவற்றுள் அடங்கும். எனினும், பி. பி. இலங்கசிங்க, லயனல் எதிரிசிங்க என்னும் இருவரால் எழுதப்பட்ட ஸ்ரீ லங்கா மாதா பல யச மஹிமா என்று தொடங்கும் பாடல் தெரிவு செய்யப்பட்டு, 1948 பெப்ரவரி 4 ஆம் தேதி இலங்கையின் சுதந்திர நாளன்று வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.
இதன் பாடலாசிரியர் இருவரும், தேசியகீதத் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இருந்ததால். இத்தெரிவு குறித்துச் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் இரண்டாவது, மூன்றாவது சுதந்திர தினங்களில் ஆனந்த சமரக்கோனின் பாடல் உத்தியோகபூர்வமற்ற முறையில் பாடப்பட்டு வந்தன. 1950 இல், அக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் ஆலோசனையை ஏற்று ஆனந்த சமரக்கோனின் நமோ நமோ மாதா என்று தொடங்கும் பாடலைத் தேசியகீதமாக ஏற்க முடிவு செய்யப்பட்டது.
1951 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இதற்கு முறைப்படியான அங்கீகாரமும் கிடைத்தது. இப்பாடலுக்கான இசையும் ஆனந்த சமரக்கோன் அமைத்ததே. தொடர்ந்து வந்த நாட்டின் நான்காவது சுதந்திர தினத்தன்று இப் பாடல் முதல் முதலாக, கொழும்பு, மியூசியஸ் பாடசாலையைச் சேர்ந்த 500 மாணவ மாணவிகளால் பாடப்பட்டு வானொலி மூலம் நாடெங்கும் ஒலிபரப்பப்பட்டது.
1956 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தின் காலத்தில் இப் பாடலின் ஆரம்ப வரிகள் நமோ நமோ என ந என்னும் எழுத்துடன் தொடங்குவது அபசகுனம் என்றும், அது நாட்டுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்றும் ஒரு பகுதியினர் குரல் எழுப்பினர். தொடர்ந்து வந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியின்போது, 1961 இல், செல்வத்தைக் குறிக்கும் ஸ்ரீ என்னும் மங்கல எழுத்துடன் தொடங்கும், ஸ்ரீ லங்கா மாதா என்ற வரி முதல் வரியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இப்பாடலை எழுதிய ஆனந்த சமரக்கோன் இந்த மாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தார் என்றும் இது தொடர்பான விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பல கட்டுரைகளை அவர் எழுதியதாகவும் கூறப்படுகின்றது. எனினும் இம் முயற்சியில் அவர் வெற்றியடையவில்லை.
தமிழ் மொழிபெயர்ப்பு
இப்பாடல் பின்னர் பொருள் மாறுபடாமல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. 1950ம் ஆண்டில் தமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்தார்.
தமிழ் மொழிபெயர்ப்பை உத்தியோக பூர்வமாக நீக்க மகிந்த இராசபக்ச தலைமையிலான அமைச்சரவை கலந்துரையாடல்களை டிசம்பர், 2010 இல் நிகழ்த்தியது. இதற்கு இலங்கை தமிழ் கட்சிகள், தமிழக அரசின் முதல்வர் கருனாநிதி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். ஆயினும் பின்னர் தமிழ் மொழி தேசிய கீதத்தை நீக்கும் உத்தேசம் தமக்கு இல்லை என இலங்கை அரசின் அமைச்சர் செனிவரத்ன ஊடகங்கள் மூலம் அறிவித்தார்.
2015 இல் புதிதாதகப் பதவியேற்ற அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன தமிழில் தேசியப் பண்ணைப் பாடுவதைத் தடை செய்யப்போவதில்லை எனத் தாம் சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடவிருப்பதாக 2015 மார்ச் மாதத்தில் அறிவித்தார். இவ்வறிவிப்பு பொது பல சேனா போன்ற பௌத்த தேசியவாதிகளின் கண்டனத்திற்கு உள்ளானது.
இராஜபக்ச தலமையிலான அரசுக்குப் பின்னர் ஆட்சியேற்ற மைத்திரிபால சிரிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலமையிலான அரசு இலங்கையின் 68ம் சுதந்திரதின விழாக் கொண்டாட்டத்தின் முடிவில் தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை பாட அனுமதி வழங்கினர்..
இலங்கையின் தேசிய மொழிகளில் நாட்டுப்பண்
இவற்றையும் பார்க்கவும்
இலங்கையின் தேசிய சின்னங்கள்
இலங்கையின் தேசியக்கொடி
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இலங்கை தேசிய கீதத்தின் இசைக் கோப்பு - Abacci Atlas
ஆனந்த சமரக்கோனின் வரலாறு சிங்கள ஜூக்ஸ்பொக்ஸ் தளத்திலிருந்து.
தேசிய விழிப்புணர்வு - (Awakening of national consciousness-Sunday Observer)
நாட்டுப்பண்கள்
இலங்கையின் தேசிய சின்னங்கள்
|
5172
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
உபநிடதம்
|
உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்கள் (Upanaishads)(; பண்டைய இந்திய தத்துவ இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேதங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன.
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும் யோகம், தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு–சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.
பொருளும் பெருமையும்
நான்கு வேதங்களுக்கும் வேதசாகைகள் என்று பெயருள்ள பல கிளைகள் உள்ளன. எல்லா சாகைகளும் தற்காலத்தில் காணப்படவில்லை. ஒவ்வொரு வேதசாகை முடிவிலும் ஒரு உபநிஷத்து இருந்திருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது. பற்பல சாகைகள் இன்று இல்லாமல் போனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட உபநிஷத்துக்கள் கிடைத்துள்ளன. வேதங்களிலுள்ள சடங்குகளைப்பற்றிய விபரங்களும், அவற்றில் எங்கும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் தெய்வ அசுர இனத்தாருடைய பரிமாறல்களும் இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்புடையதாக உள்ளதா இல்லையா என்ற ஐயங்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு வேதப்பொருளின் ஆழத்தை அறிய முயலும் யாரும், உபநிஷத்துக்களிலுள்ள தத்துவங்களினால் கவரப்படாமல் இருக்கமுடியாது. அதனாலேயே இந்துசமயத்தின் தத்துவச்செறிவுகள் உபநிஷத்துக்களில்தான் இருப்பதாக மெய்யியலார்கள் எண்ணுகிறார்கள்.
உபநிஷத்துக்களில் சில மிகச் சிறியவை, சில கிறிஸ்தவ மதத்தின் விவிலியம் அளவுக்குப்பெரியவை. சில உரைநடையிலும் சில செய்யுள்நடையிலும் உள்ளன. ஆனால் எல்லாமே ஆன்மிக அனுபவங்களையும், வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகளையும் அலசுபவை. வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? பிறப்பும் இறப்பும் ஏன், எப்படி நிகழ்கின்றன? அடிப்படை உண்மை யாது? அழிவில்லாத மெய்ப்பொருள் ஒன்று உண்டானால் அதன் சுபாவம் என்ன? அதுதான் கடவுளா? இவ்வுலகம் எப்படித் தோன்றியது? ஏன் தோன்றியது? மறுபிறப்பின் தத்துவம் என்ன? நன்மையும் தீமையும் மனிதனைப் பொருத்ததா, அல்லது அவைகளுக்கென்று தனித்துவம் உண்டா? அறிவு என்பதும் மனதின் பல ஓட்டங்களைப்போல் ஒன்றுதானா அல்லது அறிவு நன்மை தீமைகளைத் தாண்டிய ஒரு அடிப்படை உண்மையா? இவைகளையும் இன்னும் இவற்றைப் போலுள்ள பல ஆழமான தலையாய பிரச்சினைகளையும் சலிக்காமல் பட்சபாதமில்லாமல் அலசிப் பார்க்கும் இலக்கியம் தான் உபநிஷத்துக்கள். மேலும் எதையும் ஒரே முடிந்த முடிவாகச் சொல்லிவிடாமல், கேள்விகளை எழுப்புவதும், கேள்விகளிலுள்ள விந்தை பொதியும் மாற்றுத் தத்துவங்களை வெளிக் கொணர்வதும், பிரச்சினையைப் பற்றிப் பல ஆன்மிகவாதிப் பெரியார்கள் சொந்த அனுபவத்தைக்கொண்டு என்ன சொல்கிறார்கள் என்று அவர்கள் வாயாலேயே சொல்ல வைப்பதும், உபநிஷத்துகளின் முத்திரை நடை. இதனால் உலகின் எண்ணச்செறிவுகளிலேயே உபநிஷத்துக்கள் ஒரு உயர்ந்த இடத்தில் வைக்கப்படவேண்டியவை என்பது கற்றோர் யாவரின் முடிவு.
உபநிஷத்3 என்ற வடமொழிச்சொல்லின் பொருள்
இதில் மூன்று வேர்ச்சொற்கள் உள்ளன. 'உப', 'நி' மற்றும் 'ஸத்3'. சொற்கள் புணரும்போது ஸத்3 என்பது ஷத்3 ஆகிறது.
'உப' என்ற சொல்லினால் குருவை பயபக்தியுடன் அண்டி அவர் சொல்லும் உபதேசத்தைக் கேட்பதைக் குறிக்கிறது.
'நி' என்ற சொல்லினால், புத்தியின் மூலம் ஏற்படும் ஐயங்கள் அகலும்படியும், மனதில் காலம் காலமாக ஊறியிருக்கும் பற்பல எண்ண ஓட்டங்களின் பாதிப்பு இல்லாமலும், அவ்வுபதேசத்தை வாங்கிக் கொள்வதைக் குறிக்கிறது.
'ஸத்3' என்ற சொல்லினால் அவ்வுபதேசத்தின் பயனான அஞ்ஞான-அழிவும், பிரம்மத்தின் ஞானம் ஏற்படுவதைக் குறிக்கிறது.
பகுப்பு
வேதப்பொருள், கர்ம காண்டம், உபாசன காண்டம், மற்றும் ஞான காண்டம் என மூன்று வகைப்படும். இவற்றுள் ஞான காண்டம் தான் 'உபநிஷத்' எனப்படுவது. ஆன்மாவைப் பரம் பொருள் அருகே உய்ப்பது ஆகும். அதாவது வேதத்தின் உட் பொருள் எனக் கொள்ளலாம். இவ்விதம் 108 உபநிஷத்துக்கள் இருப்பதாக முக்திகா உபநிடதத்தில் இராமன் அனுமனுக்குச் சொல்கிறார். அவற்றில் பத்து மிக முக்கியமானவை என்பது வழக்கு. மிகப் பழமையானவையும் கூட. காலடி தந்த ஆதிசங்கரர், ஸ்ரீபெரும்புத்தூர் வள்ளல் இராமானுஜர், உடுப்பி மத்வர், நீலகண்ட சிவாசாரியார் ஆகிய நான்கு சமயாசாரியர்களும் முறையே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், சித்தாந்தம் என்னும் கொள்கைகளையொட்டி மேற்கூறிய பத்து முக்கிய உபநிஷத்துக்களுக்கும் விரிவுரை எழுதியுள்ளனர். உபநிடத பிரம்மேந்திரர் (18வது நூற்றாண்டு) என்று பெயருள்ள துறவி 108 உபநிஷத்துக்களுக்கும் உரை எழுதியுள்ளார். பாரதத்தில் தோன்றிய மெய்யியல் பெரியோர் ஒவ்வொருவரும் உபநிஷத்துக்களில் உள்ள கருத்துக்களைப்பற்றி விரிவாக்கம் தரவோ, ஒரு சில உபநிஷத்துக்களுக்காவது உரையோ விளக்கமோ எழுதவோ தவறியதில்லை.
108 உபநிடதங்களும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்படுகின்றன:
10 முக்கிய உபநிடதங்கள். அவையாவன:
ஈசா வாஸ்ய உபநிடதம் (சுக்ல யசூர்வேதம் - வாஜஸனேய சாகை)
கேன உபநிடதம் (சாம வேதம் - தலவகார சாகை)
கடோபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)
பிரச்ன உபநிடதம் (அதர்வண வேதம்)
முண்டக உபநிடதம் (அதர்வண வேதம்)
மாண்டூக்ய உபநிடதம் (அதர்வண வேதம்)
ஐதரேய உபநிடதம் (ரிக் வேதம் - ஐதரேய சாகை)
தைத்திரீய உபநிடதம் (கிருஷ்ணயஜுர் வேதம் - தைத்திரீய சாகை)
பிரகதாரண்யக உபநிடதம் (சுக்லயஜுர் வேதம் - கண்வ சாகை, மாத்யந்தின சாகை)
சாந்தோக்யம் (சாம வேதம் - கௌதம சாகை)
24 சாமானிய வேதாந்த உபநிடதங்கள்
20 யோக உபநிடதங்கள்
17 சன்னியாச உபநிடதங்கள்
14 வைணவ உபநிடதங்கள்
14 சைவ உபநிடதங்கள்
9 சாக்த உபநிடதங்கள்
இவைகளில்,
10 இருக்கு வேதத்தைச் சார்ந்தவை
32 கிருஷ்ண யசுர்வேதத்தைச் சார்ந்தவை
19 சுக்ல யசுர்வேதத்தைச் சார்ந்தவை
16 சாம வேதத்தைச் சார்ந்தவை
31 அதர்வண வேதத்தைச்சார்ந்தவை.
முக்கிய பத்து உபநிடதங்களைத்தவிர, இதர 98 இல்
சுவேதாசுவதர உபநிடதம்
கௌசீதகீயம்
நரசிம்மபூர்வதாபனீயம்
மகோபநிடதம்
கலிசந்தரணம்
கைவல்ய உபநிடதம்
மைத்ராயணீயம்
ஆகியவையும் முன்னிடத்தில் வைக்கப்பட்டுப் பேசப்படுகின்றன.
உபநிடதங்களின் வகைகள்
இந்த உபநிடதங்கள் 112 வரையும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் இவைகளில் அதிகமானவை பிற்காலங்களில் உபநிடதங்களாக உருவாக்கிக் கொள்ளப்பட்டவையாகவே இருக்கின்றன. இருப்பினும் இவற்றில் கீழ்காணும் பதின்மூன்று உபநிடதங்கள் உண்மையானவை என்று கொள்ளலாம். அவற்றின் காலங்களைக் கொண்டு அவைகளை வகைப்படுத்தலாம்.
பழங்கால உபநிடதங்கள்
இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள்
மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள்
நான்காம் காலகட்ட உபநிடதங்கள்
பழங்கால உபநிடதங்கள்
பொ.ஊ.மு. 700 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் பழங்கால உபநிடதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை
ஈசா
சாந்தோக்யம்
பிரகதாரண்யகம்
இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள்
பொ.ஊ.மு. 600–500 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த இரண்டு உபநிடதங்கள் இரண்டாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை
ஐதரேயம்
தைத்திரீயம்
மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள்
பொ.ஊ.மு. 500–400 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த ஐந்து உபநிடதங்கள் மூன்றாம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை
பிரச்னம்
கேனம்
கடம்
முண்டகம்
மாண்டூக்யம்
நான்காம் காலகட்ட உபநிடதங்கள்
பொ.ஊ.மு. 200–100 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இருந்த மூன்று உபநிடதங்கள் நான்காம் காலகட்ட உபநிடதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவை
கவுஷீதகி
மைத்ரீ
சுவேதாசுவதரம்
துணை நூல்கள்
சோ. ந. கந்தசாமி, (2004), இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம்.
துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்
இவற்றையும் பார்க்கவும்
பிரம்ம சூத்திரம்
குறிப்புகள்
சான்றுகள்
மேலும் படிக்கவும்
Müller, Max, translator, , Part I, New York: Dover Publications (1879; Reprinted in 1962),
Müller, Max, translator, , Part II, New York: Dover Publications (1884; Reprinted in 1962),
வெளி இணைப்புகள்
The Upanishads translated into English by Swami Paramananda
Complete set of 108 Upanishads, Manuscripts with the commentary of Brahma-Yogin, Adyar Library
Upanishads, Sanskrit documents in various formats
The Upaniṣads article in the Internet Encyclopedia of Philosophy
The Theory of 'Soul' in the Upanishads, T. W. Rhys Davids (1899)
Spinozistic Substance and Upanishadic Self: A Comparative Study, M. S. Modak (1931)
W. B. Yeats and the Upanishads, A. Davenport (1952)
The Concept of Self in the Upanishads: An Alternative Interpretation, D. C. Mathur (1972)
உத்திர மீமாஞ்சம்
வேதங்கள்
சமசுகிருத நூல்கள்
பண்டைய நூல்கள்
|
5175
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81
|
இந்திய வரலாற்றுக் காலக்கோடு
|
Kimu fhfjygfjyrhkfgkdhodhvnlpddbftjvofjgfk0grblftbhrihdjgr
சிந்துவெளி நாகரிகம்
சிந்துவெளி நாகரிகம் கிமு 3300 – 1700
முந்தைய அரப்பா நாகரீகம் (Early Harappan Culture) கிமு 3300 – 2600
லோத்தல், (குசராத்து) - கிமு 3300 – 2600
பிந்தைய அரப்பா நாகரீகம் (Later Harappan Culture) - கிமு 2600 – 1900
தோலாவிரா, (குசராத்து) - கிமு 2600 – 1900
வேத காலம்
முந்தைய வேதகாலம் கிமு 1750 - கிமு 1100
பிந்தைய வேதகாலம் - கிமு 1100 - கிமு 500
பண்டைய இந்திய இராச்சியங்கள்
பரத கண்ட நாடுகள்
சனபதங்கள் (கிமு 1200 – கிமு 600)
மகாசனபதங்கள் (கிமு 600 – கிமு 300)
மகத நாடு (கிமு 600 – கிமு 184)
மகாவீரர் கிமு 599 – 527
கௌதம புத்தர் கிமு 563 - 483
அரியங்கா வம்சம் (கிமு 550 - கிமு 413)
சிசுநாக வம்சம் (கிமு 413 – கிமு 345)
நந்தப் பேரரசு (கிமு 424 – கிமு 321)
மௌரியப் பேரரசு (கிமு 321 – கிமு 184)
ரோர் வம்சம் - (கி மு 450 – கி பி 489)
பாண்டியர் (கிமு 300 - கிபி 1345)
சோழர் (கிமு 300 – கிபி 1279)
சேரர் (கிமு 300 – கிபி 1102)
மகாமேகவாகன வம்சம் (கிமு 250 – கிபி 400)
பார்த்தியப் பேரரசு (கிமு 247 – கிபி 224)
சாதவாகனர் (கிமு 230 – கிபி 220)
குலிந்த பேரரசு (கிமு 200 – கிபி 300)
இந்தோ சிதியன் பேரரசு (கிமு 200 – கிபி 400)
சுங்கர் (கிமு 185 – கிமு 73)
இந்தோ கிரேக்க நாடு (கிமு 180 – கிமு 10)
கண்வப் பேரரசு (கிமு 75 – கிமு 30)
மேற்கு சத்ரபதிகள் (கிபி 35 – கிபி 405)
குசான் பேரரசு (கிபி 60 – கிபி 240)
பார்சிவா வம்சம் (கிபி 170 – 350)
பத்மாவதி நாகர்கள் (கிபி 210 – 340)
வாகாடகப் பேரரசு (கிபி 250 – 500)
களப்பிரர் (கிபி 250 – 600)
குப்தப் பேரரசு (கிபி 280 – 550)
கதம்பர் வம்சம் (கிபி 345 – 525)
மேலைக் கங்கர் (கிபி 350 – 1000)
பல்லவர் கிபி 300 – 850
காமரூப பேரரசு (கிபி 350 – 1100)
வர்மன் அரசமரபு கிபி 350 - 650
மேலைக் கங்கர் (கிபி 350–1000)
விட்டுணுகுந்தினப் பேரரசு (கிபி 420–624)
மைத்திரகப் பேரரசு (கிபி 475–767)
இராய் வம்சம் (கிபி 489–632)
சாளுக்கியர் (கிபி 543–753)
மௌகரி வம்சம் (கிபி 550–700)
கௌடப் பேரரசு (கிபி 590 - 626)
ஆர்சப் பேரரசு (கிபி 606 – 647)
கீழைச் சாளுக்கியர் (கிபி 624 – 1075)
கார்கோடப் பேரரசு (கிபி 625 - 885)
கூர்சர-பிரதிகாரப் பேரரசு (கிபி 650 – 1036)
மிலேச்சப் பேரரசு (கிபி 650 - 900)
பாலப் பேரரசு (கிபி 750 – 1174)
இராட்டிரகூடர் (கி பி 753 – 982)
பரமாரப் பேரரசு (கிபி 800 – 1327)
உத்பால அரச மரபு (கிபி 855 – 1003)
தேவகிரி யாதவப் பேரரசு (கிபி 85 0– 1334)
காமரூப பால அரசமரபு (கிபி 900 - 1100)
சோலாங்கிப் பேரரசு (கிபி 950 – 1300)
மேலைச் சாளுக்கியர் (கிபி 973 – 1189)
சந்தேலர்கள் (கிபி 954 - 1315)
லெகரா பேரரசு (கிபி 1003 – 1320)
போசளப் பேரரசு (கிபி 1040 – 1346)
சென் பேரரசு (கிபி 1070 – 1230)
கீழைக் கங்கர் (கிபி 1078 – 1434)
காக்கத்தியர் (கிபி 1083 – 1323)
காலச்சூரி பேரரசு (கிபி 1130 – 1184)
தேவா பேரரசு (கிபி 11-12 நூற்றாண்டு)
மத்தியகால இந்தியா (1206 – 1596)
தில்லி சுல்தானகம் (கி பி 1206 – 1526)
மம்லுக் வம்சம் (கி பி 1206 – 1290)
கில்சி வம்சம் (கி பி 1290 – 1320)
துக்ளக் வம்சம் (கி பி 1321 – 1413)
சையிது வம்சம் (கி பி 1414 – 1451)
லௌதி வம்சம் (கி பி 1451 – 1526)
வகேலா அரசு (கி பி 1243 – 1299)
அகோம் பேரரசு (கி பி 1228 – 1826)
ரெட்டிப் பேரரசு (கி பி 1325 – 1448)
விசயநகரப் பேரரசு (கி பி 1336 – 1646)
கசபதி பேரரசு (கி பி 1434 – 1541)
தக்காணத்து சுல்தானகங்கள் (கி பி 1490–1596)
முந்தைய தற்கால வரலாறு (1526 – 1858)
முகலாயப் பேரரசு (கி பி 1526 – 1712)
சூர் பேரரசு (1540 - 1556)
மராட்டியப் பேரரசு (கி பி 1674 – 1818)
துராணிப் பேரரசு (கி பி 1747 – 1823)
சீக்கியப் பேரரசு (கி பி 1799 – 1849)
குடிமைப்பட்ட கால இந்தியா (1757–1947)
போர்த்துகேய இந்தியா (கி. பி 1510 – 1961)
டச்சு இந்தியா (கி. பி 1605 – 1825)
தானிசு இந்தியா (கி. பி 1620 – 1869)
பிரெஞ்சு இந்தியா (கி. பி 1759 – 1954)
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி (கி. பி 1757–1858)
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (கிபி 1858 – 1947)
சுதேச சமசுதான மன்னராட்சிகள் 1818 - 1948
இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் துவக்கம் - 1885
இந்திய விடுதலை இயக்கம் 1905 - 1947
விடுதலை இந்தியா
இந்திய விடுதலை நாள் 15 ஆகத்து 1947
காசுமீர் குறித்து இந்திய-பாக்கித்தான் போர், 1947
மகாத்மா காந்தி சுடப்பட்டு இறத்தல் 30 சனவரி 1948
சுதேச சமசுதானங்களை இந்தியாவுடன் இணைத்தல் 1948 - 1949
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நிறைவேற்றல் 26 சனவரி 1950
இந்தியக் குடியரசு நாள் 26 சனவரி 1950
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951
முதல் இந்தியப் பொதுத் தேர்தல் 1951 - 1952
இந்திய மாநிலங்களை சீரமைத்தல் 1956 - 1957
இந்திய சீனப் போர் 1962
இந்தியாவின் முதல் பிரதமர் சவகர்லால் நேரு இறப்பு - 1964
இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாத்திரி ஆட்சிக் காலம்: 9 சூன் 1964 – 11 சனவரி 1966
காசுமீர் குறித்து இரண்டாம் இந்திய-பாக்கித்தான் போர் - 1965
பிரதமர் இந்திரா காந்தி, ஆட்சிக் காலம் 24 சனவரி 1966 – 24 மார்ச்சு 1977 மற்றும் 14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984
1971 - இந்திராகாந்தியின் உதவியினால் வங்காளதேசம் உருவாதல்
1974 - சிரிக்கும் புத்தர் எனும் பெயரில் முதல் அணுகுண்டு வெடித்துப் பரிசோதனை செய்தல் 18 மே 1974
1975 - நெருக்கடி நிலை அறிவிப்பு
1977 - இந்திய தேசிய காங்கிரசு கட்சியை முதல் முதலாக தோற்கடித்து காங்கிரசு அல்லாத சனதா கட்சி அரசை நிறுவி பிரதமராக மொரார்ச்சி தேசாய் தலைமையில் பதவியேற்றல்
1980 - இந்திராகாந்தி மீண்டும் பிரதமர் ஆதல் 14 சனவரி 1980 – 31 அக்டோபர் 1984
சூன், 1984 - அமிருதசரசு பொற்கோயிலில் பதுங்கியிருந்த காலித்தான் தீவிரவாதிகள் மீது நடவடிக்கைகள்.
1984 - இந்திராகாந்தி கொல்லப்படல்; இராசீவ் காந்தி பிரதமராக பதவியேற்றல்
திசம்பர் 1984 - போபால் விச வாயு கசிவால் 6,500 இறந்தல்
காங்கிரசு கட்சியில் இராசீவ் காந்தியின் போபர்சு ஊழல், குற்றச்சாட்டினை எதிர்த்து காங்கிரசு கட்சி இந்தியாவில் முதல் முதலாக ஊழல் மிக்க ஆட்சி என்று தோல்வி அடைந்து வி. பி. சிங் பிரதமர் ஆனார். அவரது சனதா தளம் கட்சி சார்பில் பல மாநில கட்சிகள் இணைந்து தேசிய முன்னணி என்ற கூட்டணி அமைந்து இந்தியாவில் முதல் கூட்டாட்சி முறையாக அமைந்தது
21 மே 1991 - விடுதலைப் புலி இயக்கத்தின், உலகின் முதல் மனித வெடி குண்டு வெடிப்பால் இராசீவ் காந்தி இறத்தல்.
1991 - 1991 இந்தியப் பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வென்று நரசிம்ம ராவ் பிரதமர் ஆதல்.
6 திசம்பர் 1992 - அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு
12 மார்ச்சு 1993 - மும்பை தொடர் குண்டு வெடிப்புகள், 257 மரணம்
1998 - பாரதிய சனதா கட்சி கூட்டணி அரசின் இந்தியப் பிரதமராக அடல் பிகாரி வாச்பாய் பதவியேற்றல்.
மே, 1998 - இரண்டாவது அணுகுண்டு பரிசோதனை
மே, 1999 - கார்கில் போர், பாக்கித்தான் படைகள் தோல்வியுற்று பின்வாங்கியது.
திசம்பர், 2001 - பாக்கித்தான் தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தை தாக்குதல்
பிப்ரவரி - மார்ச்சு 2002 - குசராத்து இரயில் எரிப்பு மற்றும் அதன் தொடர்பான வன்முறையில் 2,500 பேர் கொல்லப்பட்டனர்.
2004 - 2014 முடிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.
மே, 2014 - நரேந்திர மோடி இந்தியப் பிரதமர் ஆதல்.
மே, 2019 - நரேந்திர மோடி இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமர் ஆதல்
• சூலை, 2019 - இந்தியாவில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டது.
திசம்பர், 2019 – இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019 இந்தியா முழுமைக்கும் நடைமுறைக்கு வந்ததது.
ஆகத்து, 2019 - இந்திய நாடாளுமன்றத்தில் சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 இயற்றப்பட்டது. இதனால் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ நீக்கப்பட்டதுடன் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி) மற்றும் லடாக் ஒன்றியம் என இரண்டு ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்க வழிவகை செய்யப்பட்டது. சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் ஆளுநர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.
திசம்பர் 9 & 10 - இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019 நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக்கப்பட்டது.
மார்ச்சு, 2020 -இந்தியாவில் கொரோனா வைரசு பெருந்தொற்று பரவத் தொடங்கியது.
மே, 2020 – லடாக் பகுதியில் இந்திய-திபெத் ஊடாகச் செல்லும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய-சீன படைவீரர்கள் மோதிக்கொண்டனர்.
செப்டம்பர் 2021 - இந்தியாவில் கொரோனா வைரசு பெருந்தொற்றால் இது வரை 4,44,274 பேர் உயிரிழந்தனர்.
இதனையும் காண்க
பண்டைய இந்தியாவின் குறிப்புகள்
இந்திய வரலாறு
மேற்கோள்கள்
துணை நூல்கள்
மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.
வெளி இணைப்புகள்
India Timeline
Indian History Chronology: Ancient India to Modern India
http://www.kamat.com/kalranga/timeline/timeline.htm
http://www.cosmopolis.ch/english/cosmo40/chola_mandalam_empire.htm
http://www.kamat.com/kalranga/deccan/deckings.htm
இந்தியப் பட்டியல்கள்
இந்திய வரலாறு
ஆசியாவின் முன்னாள் நாடுகள்
இந்தியப் பேரரசுகள்
ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள்
காலக்கோடுகள்
|
5177
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
ஈழத்தமிழர் உதவி அமைப்புகள்
|
சுனாமியின் பாதிப்புக்குள்ளான மக்களுக்கும், நீண்ட போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நேரடியாகவும் பல்வேறு நிறுவன கட்டமைப்புக்கள் மூலமும் புகலிட ஈழத்தமிழர் உதவி வருகின்றார்கள். சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், புனர்வாழ்வு/புனர் நிர்மானம், பொருளாதார மேம்பாடு, ஊடக ஆதரவு, பிரச்சார ஆதாரவு என பல வழிகளில் அவர்கள் உதவி வருகின்றார்கள். பின்வருவன அவர்களின் செயல் திட்டங்களின், நிறுவனங்களின் ஒரு பட்டியல்.
சுகாதாரம்/உடல்நலம்
தமிழர் நலவாழ்வு நிறுவனம் (ஐக்கிய இராச்சியம்) - http://www.tamilshealth.com/
தமிழர் வைத்திய மையம் (கனடா) - http://tamildoctors.org/
நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு - http://www.ntho.no/
தமிழர் நல்வாழ்வு நிறுவனம் (ஐக்கிய அமெரிக்கா) - http://www.thousa.org/
சுகாதார மையம் (ஈழம்) - http://www.centreforhealthcare.org/
தொழில்நுட்பம்
சர்வதேச தமிழ் தொழில்நுட்பவியலாளர் கழகம் - http://www.ittpo.org/
வன்னி தொழில்நுட்பவியல் நிறுவகம் - http://www.vanni.org/
சுரதா - http://www.jaffnalibrary.com/tools/
புனர்வாழ்வு/புனர் நிர்மானம்
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் - http://www.troonline.org/
தமிழீழ விடிவு - http://www.vidivu.org/
அனாதை - http://anathi.org/
ஈழத் தமிழர் கழகம் (அஸ்ரேலியா) - http://www.eta.org.au/
பொருளாதார மேன்பாடு
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகம் - http://www.teedor.org/
மாணவர்/இளைஞவர் அமைப்புகள்
மாணவர் தொண்டர் செயலமைப்பு - http://www.tsvp.ca/
பல்கலைக்கழக-கல்லூரி மாணவர் ஒன்றியம் (கனடா) - http://www.cutsu.org/
போராட்ட ஆதரவு
தமிழர் மனித உரிமைகள் அமைப்பு - http://www.tchr.net/
உலகத்தமிழர் அமைப்பு - http://www.worldtamilmovement.com/
தமிழ் சங்கம் (ஐக்கிய அமெரிக்கா) - http://www.sangam.org/
ஊடகங்கள்
தமிழ்நெற் - இணைய செய்தி நிறுவனம் - http://www.tamilnet.com/
புகலிட ஈழத்தமிழர்
சமூக சேவை
ஈழத்தமிழர் உதவி அமைப்புகள்
|
5179
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D
|
பூலித்தேவன்
|
பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1755 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
என்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.
பூழி நாடு
பூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்.
பெயர்க் காரணம்
பூலித்தேவன், தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ, மேல்வாரம் தன்மையிலோ, வரி என்ற பெயரிலோ, ஒரு மணி நெல்லைக் கூட யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம் நெற்கட்டுஞ்செவ்வல் என்றாகியது.
பட்டியல்
வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழி வந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவராவார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த பாளையக்காரர் போர்களின் முன்னோடி.
பிறப்பு
மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு ஆறு மண்டலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதில் மதுரை, திருவில்லிப்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 18 மறவர் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு முழுமரியாதையும், தனி அதிகாரங்களும் வழங்கப்பட்டன. இத்தகைய பாளையங்களில் ஒன்று நெற்கட்டுஞ்செவ்வல் பாளையம் ஆகும்.
பூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர் சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715இல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், 'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர்.
சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி அளிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப்பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற அனைத்துவகையான வீரவிளையாட்டுகளிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை முடிவுசெய்வது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். செம்ம நாட்டு மறவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர். மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.
வாழ்க்கை
அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர். காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726இல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.
பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய (அக்கா) மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார் . கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவாச்சி , சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர்.
பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.
விடுதலைப்போராட்டத்தில் பங்கு
1750இல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தார். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தார். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றார் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது. பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.
1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட கட்டாயப்படுத்தியபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.
அதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.
1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம் வாசுதேவநல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றார்.
1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார்.
நெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.
அன்னியர் எதிர்ப்பு
பூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.
பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.
ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோர் முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.
இத்தகு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.
பாளையக்காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல் கீரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய் படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.
மாபூஸ்கான், கர்னல் கீரானுக்குச் செய்தி அனுப்பி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.
ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.
இதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த யூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான்.
1755ஆம் ஆண்டு தொடங்கி 1767ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நேர்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.
1761ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடியும் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.
அதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் இரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவர் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.
ஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர். 1767 மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் வாசுதேவ நல்லூர் கோட்டையைத் தாக்கினர். இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும் வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்துக் காத்தனர். ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச்சென்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மறைந்து கொண்டார். 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.
மறைவு
பூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாராயணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும், அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் "பூலிசிவஞானம்" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
மற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை இரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழ்நாட்டு அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.
நினைவு மாளிகை
தமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
பாளையக்காரர்கள்
1715 பிறப்புகள்
|
5184
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%28%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%29
|
விஜய் (நடிகர்)
|
விஜய் (, பிறப்பு: சூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். இவருக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா, சப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர். இவரது படங்கள் ஐந்து கண்டங்கள் மற்றும் எண்பது நாடுகளில் வெளியாகி உள்ளன.
விஜய் தனது 10வது வயதில் வெற்றி (1984) என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார். தனது தந்தை இயக்கிய இது எங்கள் நீதி (1988) திரைப்படம் வரை குழந்தை நடிகராகத் தொடர்ந்து நடித்தார். பின்னர் 18ம் வயதில் தன் தந்தை இயக்கிய நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முதன்முறையாக முதன்மை நடிகராக நடித்தார். ஆனால் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக (1996) திரைப்படம் தான் இவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. இன்று வரை விஜய் கதாநாயகனாக 62 திரைப்படங்களில் நடித்துள்ளார். 3 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 1 காஸ்மோபாலிடன் விருது, 1 இந்தியா டுடே விருது, 1 சிமா விருது, 8 விசய் விருதுகள், 3 எடிசன் விருதுகள், 2 விகடன் விருதுகள் உட்பட 50 விருதுகளை வென்றுள்ளார். ஒரு முறை ஐக்கியப் பேரரரசின் நாட்டு திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஒரு பின்னணிப் பாடகராக பம்பாய் சிட்டி (1994) முதல் பாப்பா பாப்பா (2017) வரை விஜய் 32 பாடல்களைப் பாடியுள்ளார். நடிப்பு மற்றும் பாடல்கள் தவிர இவர் ஒரு சிறந்த ஆடல் கலைஞர். இவரது படங்கள் சீனாவின் ஷாங்காய் பன்னாட்டுத் திரைப்பட விழா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழா மற்றும் தென்கொரியாவின் புச்சியான் பன்னாட்டுத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்
விஜய் 1974-ஆம் ஆண்டு சூன் 22 அன்று மதராசில் (தற்போது சென்னை) பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் விஜய் ஆகும். இவர் கிறிஸ்துவ வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர்.இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தாயார் ஷோபா ஒரு பின்னணிப் பாடகி மற்றும் கருநாடகப் பாடகி ஆவார். விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு தங்கை இருந்தார். அவர் இரண்டாவது அகவையில் இறந்து விட்டார். வித்யாவின் இழப்பு விஜய்யை மிகவும் பாதித்தது. விஜயின் தாயாரின் கூற்றுப்படி விஜய் ஒரு குழந்தையாக இருந்தபொழுது மிகவும் பேசக்கூடியவராகவும், குறும்பு செய்பவராகவும் மற்றும் விளையாட்டுத்தனத்துடனும் இருந்தார். வித்யாவின் இழப்பிற்குப் பிறகு அமைதியாகி விட்டார். இவரது தங்கை வித்யாவின் கதை 2005ம் ஆண்டுப் படமான சுக்ரனில் சொல்லப்பட்டிருக்கும். அப்படத்தில் விஜய் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.
விஜய் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் கழித்தார். விஜய் தொடக்கத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் இணைந்தார். லயோலா கல்லூரியில், காட்சித் தொடர்பியல் (விசுவல் கம்யூனிகேசன்சில்) பட்டம் பெறச் சேர்ந்தார். இறுதியில் நடிப்பைத் தொடர ஆர்வமாக இருந்ததால் பாதியிலேயே படிப்பில் இருந்து வெளியேறினார்.
விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆகத்து 25 அன்று மணந்தார். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறித்தவம் ஆகிய இரு முறைப்படியும் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000ல் லண்டனில் பிறந்த ஜேசன் சஞ்சய் என்ற மகன் மற்றும் 2005ல் சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகள். ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் வேட்டைக்காரன் (2009) படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திவ்யா சாஷா தனது தந்தையின் இளமைக் காலத்திற்கு முந்தைய அகவையுடைய மகளாக தெறி (2016) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
திரைப்படத்துறை
விஜய் குழந்தைக் காலத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் முதன்மை நடிகராக நடிக்கத் தொடங்கினார். முதன்மை நடிகராக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் முதன்மை நடிகராகப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
விஜய்க்காக தளபதி ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். எங்கேயும் எப்போதும் படத்தில் பேருந்து காட்சிகளில், கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிடத் தீர்மானித்து இருக்கிறார்.
1984–1988 குழந்தை நட்சத்திரமாக
பத்து வயதில், வெற்றி (1984) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, குடும்பம் (1984), வசந்த ராகம் (1986), சட்டம் ஓரு விளையாட்டு (1987) மற்றும் இது எங்கள் நீதி (1988) போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985) படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
1992–1996 துவக்கம்
இவரது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாகத் தோன்றிய பிறகு, விஜய் தன் பதினெட்டாம் வயதில் நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். விஜய், விஜயகாந்த்துடன் செந்தூரப் பாண்டி (1993) படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் நல்ல வசூல் செய்தது. 1994 இல், இவர் ரசிகன் படத்தில் தோன்றினார், இதுவும் நல்ல வசூல் செய்தது. இளைய தளபதி என்ற அடைமொழி விஜய்க்கு வழங்கப்பட்ட முதல் படம் இதுதான். இந்த அடைமொழி பிற்காலத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பிரபலமாக விளங்கியது. இவர் தேவா மற்றும் ராஜாவின் பார்வையிலே போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்தார். மேற்குறிப்பிட்ட இரண்டாவது படத்தில் இவர் அஜித் குமாருடன் இணைந்து நடித்தார். பின்னர் விஷ்ணு மற்றும் சந்திரலேகா ஆகிய படங்களில் நடித்தார். 1995 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடித்தார்.
1996–2003 திருப்புமுனை
1996 இல், விக்ரமன் இயக்கிய பூவே உனக்காகவேவில் விஜய் நடித்தார். இது அவரது முதல் வெற்றிகரமான படமாக மாறியது. விஜயின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாகவும் அமைந்தது. இவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரமாகவும் ஆக்கியது. விஜயின் பத்தாவது படம் வசந்த வாசல் ஆகும். அதன்பின் இவர் மாண்புமிகு மாணவன் மற்றும் செல்வா ஆகிய சண்டைப் படங்களிலும், காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற படத்திலும் நடித்தார். 1997 இல், லவ் டுடே மற்றும் ஒன்ஸ் மோர் ஆகிய படங்களில் விஜய் நடித்தார். இதில் ஒன்ஸ் மோர் படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் சிம்ரனுடன் விஜய் இணைந்து நடித்தார். பின்னர் மணிரத்னம் தயாரிக்க வசந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தில் நடித்தார். பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. 1998 இல் விஜய் நினைத்தேன் வந்தாய், பிரியமுடன் மற்றும் நிலாவே வா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 1999 ஆம் ஆண்டில் விஜய், சிம்ரனுடன் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடித்தார். இப்படதிற்கு சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. இதன்பின் விஜய் என்றென்றும் காதல், நெஞ்சினிலே மற்றும் கே. எஸ். ரவிக்குமார் இயக்கிய மின்சாரக் கண்ணா ஆகிய படங்களில் நடித்தார்.
2000மாவது ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து, இவரது போக்கில் ஒரு மாற்றமாக, பொழுதுபோக்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில், இவர் கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே ஆகிய படங்களில் நடித்தார். இவரது 2001 ஆம் ஆண்டு திரைப்படமான ஃப்ரண்ட்ஸ் சித்திக்கால் இயக்கப்பட்டது. இப்படத்தில் விஜய் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். பின்னர் விஜய் பத்ரி என்ற அதிரடித் திரைப்படம் மற்றும் ஷாஜஹான் ஆகிய படங்களில் நடித்தார். இதில் பத்ரி தெலுங்குப் படமான தம்முடுவின் மறு ஆக்கம் ஆகும். 2002 இல், விஜய் தமிழன் படத்தில் நடித்தார். இப்படத்தில் தான் நடிகை பிரியங்கா சோப்ரா அறிமுகம் ஆனார். பின்னர், இவர் யூத் மற்றும் பகவதி ஆகிய படங்களில் நடித்தார். விஜய் 2003ம் ஆண்டை வசீகரா மற்றும் புதிய கீதை ஆகிய படங்களுடன் தொடங்கினார்.
2003–2010 பரவலான வெற்றி
2003 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விஜய் திருமலை என்ற படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தார். இப்படம் கே. பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு அறிமுக இயக்குனர் ரமணாவால் இயக்கப்பட்டது. இப்படம் இவரை வித்தியாசமான கோணத்தில் காட்டியது. விஜயின் வாழ்க்கையில் திருமலை ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. 2002 இல் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட உதயா, தாமதமாகி, 2004 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இறுதியாக வெளியிடப்பட்டது. தெலுங்கு படமான ஒக்கடுவின் மறு ஆக்கமான கில்லி 2004 இல் வெளியானது. தமிழ்நாட்டின் திரையரங்குகளில் 200 நாட்கள் ஓடியது. எஸ். தரணி இயக்கிய இப்படத்தை ஏ. எம். ரத்னம் தயாரித்தார். இப்படத்தில் இவருடன் த்ரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்தனர். தமிழகத்தின் உள்மாநிலத் திரைப்படச் சந்தை வரலாற்றில் 50 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த முதல் திரைப்படம் கில்லி ஆகும்.
இதன்பின்னர் இவர் ரமணா மாதேஷ் இயக்கிய மதுர திரைப்படத்தில் நடித்தார். 2005 ஆம் ஆண்டில், இவர் பேரரசு இயக்கிய திருப்பாச்சியில் நடித்தார். பின் சுக்ரன் படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார். ஜான் மகேந்திரன் இயக்கிய சச்சின் படத்தில் ஜெனிலியா டிசோசாவுடன் நடித்தார். பின்னர் மீண்டும் பேரரசின் இயக்கத்தில் அசினுடன் இணைந்து சிவகாசி படத்தில் நடித்தார். விஜயின் அடுத்த படமான ஆதி இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் தயாரித்து ரமணா இயக்கத்தில் 2006 இல் வெளியானது. 2007 ஆம் ஆண்டின் முற்பகுதியில், விஜய் போக்கிரி படத்தில் நடித்தார். இது தெலுங்குப் படமான போக்கிரியின் மறு ஆக்கம் ஆகும். இப்படத்தை பிரபுதேவா இயக்கினார். இது 2007 ஆம் ஆண்டின் மூன்றாவது மிக அதிகமான வசூல் செய்த தமிழ் திரைப்படமாகும். இந்தப் படத்தில் விஜயின் கதாபாத்திரம், விமர்சகர்களால் நன்றாகப் பாராட்டப்பட்டது.
2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பரதன் இயக்கிய அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய் நடித்தார். இதில் இவர் வில்லன் மற்றும் கதாநாயகன் ஆகிய இரண்டு பாத்திரங்களிலும் நடித்தார். இந்த படம் மிதமான வசூல் செய்தது. 2008 ஆம் ஆண்டு விஜய் டி.வி. விருது விழாவில் மக்களின் விருப்பமான சூப்பர் ஸ்டார் என்ற விருதுடன் விஜய் கௌரவிக்கப்பட்டார். 2008 இல், இவர் மீண்டும் தரணியின் இயக்கத்தில் குருவி படத்தில் நடித்தார். 2009 இல், மீண்டும் பிரபுதேவாவின் இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்தார். அடுத்து இவர் ஏ.வி.எம். தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். 2009 ஆம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். 2010 இல், இவர் சுறா திரைப்படத்தில் நடித்தார்.
2011–2016 சர்வதேச புகழ்
2011 இன் ஆரம்பத்தில் விஜய் மீண்டும் இயக்குனர் சித்திக் உடன் காவலன் படத்தில் இணைந்தார். இது பாடிகார்ட் என்ற மலையாள திரைப்படத்தின் ஒரு தமிழ் மறு ஆக்கம் ஆகும். இது பார்வையாளர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் நேர்மறையான பாராட்டைப் பெற்றது. நல்ல வசூலும் செய்தது. சீனாவில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் காவலன் திரையிடப்பட்டது. அதே வருட தீபாவளியின் போது, எம். ராஜா இயக்கிய இவரது அடுத்த படமான வேலாயுதம் வெளியானது. வேலாயுதம் 2011 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக ஆனது .
விஜயின் அடுத்த படம் நண்பன் ஆகும். இது 3 இடியட்ஸ் என்ற இந்தித் திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். அமீர்கான் இந்தியில் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் நடித்தார். இப்படத்தை எஸ். ஷங்கர் இயக்கினார். இது 2012 பொங்கல் வார இறுதியில் வெளியிடப்பட்டது. வசூலில் பெரிய வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் நண்பன் திரையிடப்பட்டது. படத்தில் விஜயின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. முன்னணி இந்திய நடிகர் கமல்ஹாசன் உட்பட பலரும் பாராட்டினர். நண்பன் 100 நாட்கள் ஓடியது. பின்னர் பிரபுதேவா இயக்க அக்ஷய் குமார் நடித்த 2012 ஆம் ஆண்டு இந்தித் திரைப்படமான ரவுடி ரத்தோர் இல் இவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.
எஸ். தாணுவின் தயாரிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய விஜயின் அடுத்த திரைப்படமான துப்பாக்கி 2012ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. இப்படம் நேர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. சிவாஜி (2007) மற்றும் எந்திரனுக்குப் (2010) பிறகு 100 கோடி வசூல் செய்த மூன்றாவது தமிழ் திரைப்படம் ஆனது. விஜயின் திரை வாழ்க்கையில் மிக அதிக வசூல் செய்த படமாகத் துப்பாக்கி ஆனது. 180 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த விஜயின் முதல் படமும் ஆனது. ஏ. எல். விஜய் இயக்கிய இவரது அடுத்த படம் தலைவா, உலகளாவிய அளவில் 2013 ஆம் ஆண்டு ஆகத்து 9ல் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் தாமதமாக வெளியிடப்பட்டது. காஜல் அகர்வால் மற்றும் மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்த படமான ஜில்லா, ஆர். டி. நீசன் இயக்கத்தில் 2014ல் ஒரு பொங்கல் வார இறுதியில் வெளியிடப்பட்டது. வசூலில் வெற்றி பெற்றது.
விஜய் மீண்டும் கத்தியில் முருகதாஸ் உடன் பணியாற்றினார். சமந்தா ருத் பிரபு மற்றும் நீல் நிதின் முகேஷ் உடன் இணைந்து நடித்தார். இது 2014ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இது 2014ம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாகும். 2015 ஆம் ஆண்டில், புலி படம் வெளியிடப்பட்டது. சமந்தா ருத் பிரபு மற்றும் எமி ஜாக்சனுடன் இணைந்து நடித்து, அட்லீ இயக்க எஸ். தாணுவால் தயாரிக்கப்பட்ட இவரது அடுத்த படமான தெறி ஏப்ரல் 2016ல் வெளியிடப்பட்டது. நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தெறி 2016ம் ஆண்டின் அதிக வசூல் செய்த படம் ஆனது. 172 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த இவரது இரண்டாவது படமும் ஆனது.
2017–தற்போது
இவரது அடுத்த படமான பைரவா பரதனால் இயக்கப்பட்டது. இதில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்தார். இப்படம் ஜனவரி 2017 இல் வெளியிடப்பட்டது. இவரது அடுத்த படம் மெர்சல், அட்லீயால் இயக்கப்பட்டது. சமந்தா ருத் பிரபு, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோருடன் இணைந்து நடித்தார். இப்படம் 2017 ஆம் ஆண்டின் பிற்பாதியில் வெளியிடப்பட்டது. விஜயின் திரை வாழ்க்கையில் மிக அதிக வசூல் செய்த படமாக மெர்சல் ஆனது. இவரது படங்களில் 250 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த முதல் படமானது. மெர்சல் திரைப்பட கதாபாத்திரத்திற்காக விஜய் 2018ல் ஐக்கிய இராச்சிய தேசிய திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். காவலனுக்குப் (2011) பிறகு சீனாவில் வெளியிடப்பட்ட இவரது இரண்டாவது படம் மெர்சல் ஆகும். மெர்சல் தென் கொரியாவின் புச்சியான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவரது அடுத்த படமான சர்கார் ஏ. ஆர். முருகதாஸால் இயக்கப்பட்டது. இது ஒரு அரசியல் சார்ந்த படமாகும். இது 2018 தீபாவளிக்கு வெளியானது.
இந்தித் திரைப்படங்களில்
ரவுடி ரத்தோர் (2012) படத்தில் சிந்தா சிந்தா பாடலில் விஜய் தன் முதல் இந்திப்படக் கௌரவத் தோற்றத்தில் தோன்றினார். இப்படத்தை பிரபுதேவா இயக்க அக்ஷய் குமார் நடித்திருந்தார். விஜயின் கௌரவத் தோற்றம் இந்தி இரசிகர்களால் விரும்பி ரசிக்கப்பட்டது. விஜய் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் உலக அளவில் திரைச் சந்தையில் ஐந்து முறை மோதியுள்ளனர். அஜய் தேவ்கானின் இந்திப் படமான கோல்மால் எகைனில் (2017) ஒரு சண்டைக் காட்சியில் விஜய்க்கு ஒரு மரியாதையாக தெறி பட சுவரொட்டியுடன் விஜய் பாடலான வரலாம் வா பைரவா பின்னணியில் இசைக்கப்படும். இவருடைய தமிழ் படங்களில் பெரும்பாலானவை இந்திக்கு கோல்ட்மைன்ஸ் டெலிஃபிலிம்ஸ் மூலமாக டப்பிங் செய்யப்படுகின்றன. இப்படங்கள் சோனி மேக்ஸ் இந்தி தொலைக்காட்சிச் சேனலில் ஒளிபரப்பப்படுகிறது. விஜயின் திரைப்படமான மெர்சல் அக்டோபர் 2017ல் இந்தித் திரைப்படங்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்தது. சர்வதேச திரைச்சந்தைகளில் கோல்மால் எகைன் மற்றும் சீக்ரெட் சூப்பர்ஸ்டாரை விட அதிகமாக வசூல் செய்தது. ஜூலை 2017ல் டேஞ்சரஸ் கிலாடி 3 (வேட்டைக்காரன்) மற்றும் போலிஸ்வாலா குண்டா 2 (ஜில்லா) பட ஒளிபரப்புகளின்போது ரிஷ்தே சினிபிலக்ஸ் இந்தித் தொலைக்காட்சிச் சேனல் முறையே #1 மற்றும் #3 ஆகிய இந்தித் திரைப்படத் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளித் தரவரிசைகளைப் பிடித்தது. சோனி மேக்ஸ் இந்தித் தொலைக்காட்சிச் சேனல் இந்தித் திரைப்படத் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளியில் #5 இடத்தைத் தெறி இந்தித் திரைப்பட ஒளிபரப்பின்போது பிடித்தது. 2017ம் ஆண்டின் பிற்பகுதியில், கத்தியின் இந்திப் பதிப்பான காக்கி அவுர் கிலாடி வெளியாகி ஜீ சினிமா இந்தி தொலைக்காட்சிச் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
தெலுங்கு அங்கீகாரம் மற்றும் வெற்றி
விஜயின் திரைப்படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. அவைகளில் பெரும்பாலானவை வெற்றியடைந்துள்ளன. உதாரணமாக ஸ்னேஹிதுடு, துப்பாக்கி, ஜில்லா, போலிசோடு, ஏஜெண்ட் பைரவா மற்றும் அதிரிந்தி ஆகிய படங்களைக் குறிப்பிடலாம். நடிகர் சிரஞ்சீவி தெலுங்குத் திரையுலகிற்கு திரும்பிவந்து படம் ஒன்றில் நடிக்க விரும்பினார். அவருக்கு வெற்றி பெற்ற தமிழ் திரைப்படமான கத்தி திரைப்படத்தின் மறு ஆக்க உரிமைகளைப் பெற விஜய் உதவினார். தெலுங்கில் சிரஞ்சீவி கைதி நம்பர் 150 என்ற பெயரில் இதை மறு ஆக்கம் செய்து கதாநாயகனாக நடித்தார். இதற்கு நடிகர் சிரஞ்சீவி விஜய்க்கு நன்றி தெரிவித்தார். நடிகர் ஜூனியர் என். டி. ஆர். விஜயை தனது விருப்பமான நடனமாடுபவராக பாராட்டியுள்ளார். விஜய்யின் நடன அசைவுகள் தனக்குப் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். தனது கன்ட்ரி படத்திற்காக விஜயின் வசந்த முல்லை பாடல் நடன அசைவுகளைப் பின்பற்றியதையும் கூறியுள்ளார். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களைப் பொறுத்த வரையில் விஜயின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திரைப்படத் தொடக்கமாக அதிரிந்தி அமைந்தது. ஒரு பெரிய வெற்றிப்படமாக மாறியது.
ஊடகங்களிலும் மற்றவைகளிலும்
இந்திய பிரபலங்களின் வருவாயை அடிப்படையாகக் கொண்ட ஃபோர்ப்ஸ் செலிபிரிட்டி 100 பட்டியலின் இந்திய பதிப்பில் பல முறை விஜய் இடம்பெற்றுள்ளார். 2012ல் #28, 2013ல் #49, 2014ல் #41, 2016ல் #61 மற்றும் 2017ல் #31 ஆகிய இடங்களைப் பெற்றுள்ளார். 2017ல், தென்னிந்திய பொங்கல் திருவிழாவில், தமிழ் ஆண்மகன்கள் பாரம்பரிய உடை அணிவதை விளக்க நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் மூன்றாம் வகுப்புப் பாடப்புத்தகம் வேட்டி மற்றும் சட்டையுடன் விஜயின் படத்தைக் காட்டியது.
விளம்பர ஒப்புதல்கள்
2002ல், விஜய் கோக கோலா விளம்பரங்களில் தோன்றினார். 2005ல் ஒரு சன்ஃபீஸ்ட் விளம்பரத்தில் தோன்றினார். 2008ல், இந்திய பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சனவரி 2009ல், விஜய் கோக கோலா விளம்பரத்தில் தோன்றினார். ஆகத்து 2010ல், தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கான விளம்பரத் தூதராக ஜோஸ் ஆலுக்காஸ் விஜயை ஒப்பந்தம் செய்தது. டாடா டொகோமோ விளம்பரத்திலும் விஜய் தோன்றியுள்ளார்.
அறப்பணி
விஜய் ஒரு சமூக நல அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார். இது ஜூலை 26, 2009 அன்று புதுக்கோட்டையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இவரது பெரும்பான்மையான அறப்பணிகளுக்கு இவ்வியக்கம்தான் பொறுப்பாக உள்ளது. தானே புயலுக்குப் பிறகு, கடலூரில் உள்ள கம்மியம்பேட்டையில் ஒரு நிவாரண முகாமுக்கு இவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் அரிசி வழங்கினார். அந்நேரத்தில் கடலூர் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. சில உதவிகளை வழங்கியதன் மூலம் மக்களுக்கு விஜய் உதவினார். முகாம் அமைக்கப்பட்ட பகுதி, தங்களது விருப்பத்திற்குரிய நட்சத்திரத்தை ஒரு தடவை பார்ப்பதற்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் காரணமாக சீக்கிரமே ஒரு பண்டிகை தோற்றத்திற்கு மாறியது. மே 2008ல், பள்ளியிலிருந்து படிப்பைப் பாதியிலேயே விட்டு வெளியேறும் குழந்தைகளை தடுக்கும் முயற்சியில் விஜய் ஹீரோவா? ஜீரோவா? என்ற ஒரு சிறிய பொது சேவை வீடியோவில் தோன்றினார். 2012ம் ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் முதலிடங்களைப் பெற்ற மாணவர்களுக்காக விஜய் கல்வி விருதுகள் 2012 ஆனது ஜூலை 8 ஆம் தேதி, 2012 அன்று விஜய் மக்கள் இயக்கத்தால் சென்னை ஜே. எஸ். கல்யாண மண்டபத்தில் நடத்தப்பட்டது. விருதுகளை விஜயே நேரில் வழங்கினார். தன் பிறந்த நாளில், 22 சூன் 2007ல் விஜய் எழும்பூர் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினார். நவம்பர் 2014ல், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற ஒரு தேநீர் கடை உரிமையாளரின் மகளான ஃபாத்திமாவுக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இடம் கிடைக்க விஜய் உதவினார். செப்டம்பர் 2017ல், ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்களால் விஜய் மக்கள் இயக்க அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆண்ட்ராய்ட் செயலி உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்களை ஒன்றிணைக்கத் தொடங்கப்பட்டது. 26 திசம்பர் 2017ல், பொள்ளாச்சியில் உள்ள விஜய் ரசிகர்கள், நோயாளிகளுக்கும் காயமடைந்தவர்களுக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆட்டோ போன்ற இலவச தேவைகளை வழங்கி உதவியளித்தனர். 11 செப்டம்பர் 2017ல், நீட் தேர்வில் மருத்துவ சீட் பெறாமல் தோல்வியடைந்து, தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு விஜய் நிதி உதவி வழங்கினார். 7 சூன் 2018ல், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி காவலர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிதி உதவி வழங்கினார். 22 ஆகத்து 2018ல், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தன் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் உதவியுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 70 லட்சம் மதிப்புள்ள பொருட்களை விஜய் அனுப்பி வைத்தார். நவம்பர் 2018ல் விஜய் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்க தன் ஒவ்வொரு விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைமை நிர்வாகிகளின் வங்கிக் கணக்குகளில் 4.5 இலட்சம் செலுத்தினார்.
சமூக நல நடவடிக்கைகள் மூலம் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்காக சேவை செய்தது மற்றும் திரைத்துறையில் தான் செய்த சாதனைகள் ஆகியவற்றின் காரணமாக 2007ல் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்) இருந்து விஜய் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.
அரசியல்
2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.
2017 ஆண்டு மெர்சல் படத்தின் மூலம் பிழையான GST வரி விபரங்களை கூறியதாக, அரசியல் வட்டாரங்களில் மிகவும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.
திரைப்பட விபரம்
நடித்த திரைப்படங்கள்
பாடிய பாடல்கள்
இவர் சில திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். அவை,
விருதுகள்
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்
காதலுக்கு மரியாதை (1998)- சிறந்த நடிகர் விருது
திருப்பாச்சி (2005)- சிறந்த நடிகர் விருது (சிறப்பு விருது)
விஜய் தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சியால் வழங்கப்பட்ட விருதுகள்
பிற விருதுகள்
கில்லி (2004)- சென்னை கார்பரேட் கிளப் சிறந்த நடிகர் விருது
கில்லி (2004)- தினகரன் சிறந்த நடிகர் விருது
கில்லி (2004)- பிலிம் டுடே சிறந்த நடிகர் விருது
பொதுச்சேவை அறிவிப்பு (2005)-க்கு வெள்ளி விருது
போக்கிரி (2007)- தமிழின் சிறந்த நடிகருக்கான அம்ரிதா மாத்ருபூமி விருது
போக்கிரி (2007)- சிறந்த நடிகருக்கான இசை அருவி தமிழ் இசை விருது
வேட்டைக்காரன்(2009)- சிறந்த நடிகருக்கான இசைஅருவி தமிழ் இசை விருது
துப்பாக்கி, நண்பன்(2012) - விகடன் சிறந்த நடிகர் விருது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
facebook
twitter
தமிழ்த் திரைப்பட நடிகர்கள்
1974 பிறப்புகள்
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்
வாழும் நபர்கள்
தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
சென்னை நடிகர்கள்
சென்னை நபர்கள்
|
5186
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%20%28%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%29
|
அடி (அளவை)
|
அடி (Foot) என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகாகும். ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும். 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு யார் (Yard) ஆகும். அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.
மேற்கோள்கள்
நீள அலகுகள்
பிரித்தானிய அலகுகள்
|
5190
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
இந்தியாவின் புவியியல்
|
இந்தியப் புவியியலானது பல் வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது. இந்தியாவில் பனி மூடிய மலைகள் முதல் பாலைவனம், சமவெளி, பீடபூமி வரை வேறுபட்ட நிலப்பரப்புகள் காணப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி இந்திய நாட்டைச் சேர்ந்தது. மேலும் இது 7000 கி.மீ.க்கும் அதிகமான கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியா ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் மேற்கில் அரபிக் கடலும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வளமிக்க இந்திய கங்கைச் சமவெளியானது இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்திய பகுதிகளில் பரவியுள்ளது. தக்காணப் பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் பரவியுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது. இது மணலும் பாறைகளும் கலந்து காணப்படும் பகுதியாகும். உயர்ந்த இமாலய மலைத்தொடரானது இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் எல்லையாக அமைந்துள்ளது.
இருப்பிடமும் பரவலும்
பரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடான இந்தியா 8°4' வட அட்சம் முதல் 37°6'வட அட்சம் வரையிலும் 68° 7' கிழக்கு தீர்க்கம் முதல் 97° 25'கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.இதன் மொத்த பரப்பளவு 3,287,263 சதுர கி. மீ. களாகும். வடக்கு தெற்காக 3,214 கி.மீ. நீளமும் கிழக்கு மேற்காக 2,933 கி.மீ. நீளமும் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவிலுள்ள அந்தமான் நிகோபார் தீவுகளும் அரபிக் கடலிலுள்ள இலட்சத் தீவுகளும் இந்தியாவின் பகுதிகளாகும்.
தென்மேற்கில் இந்தியா அரபிக் கடலாலும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவினாலும் வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் இமாலய மலைத் தொடரினாலும் சூழப்பட்டுள்ளது. கன்னியாகுமரி இந்திய தீபகற்பத்தின் தென் கோடியாக விளங்குகிறது. இதன் தெற்கில் இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ளது.
அரசியல் புவியமைப்பு
இந்திய நாடு 28 மாநிலங்களாகவும், 8 ஒருங்கிணைந்த பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தில்லி, நாட்டின் தலைநகரப் பிரதேசம் ஆகும்.
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
அருணாச்சல் பிரதேசம்
அஸ்ஸாம்
பிஹார்
சத்தீஸ்கட்
கோவா
குஜராத்
ஹரியானா
இமாசலப் பிரதேசம்
ஜார்க்கண்ட்
கர்நாடகம்
கேரளம்
மத்தியப் பிரதேசம்
மகாராஷ்டிரம்
மணிப்பூர்
மேகாலயா
மிசோரம்
நாகாலாந்து
ஓடிஸா
பஞ்சாப்
ராஜஸ்தான்
சிக்கிம்
தமிழ் நாடு
திரிபுரா
உத்தராஞ்சல்
உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
<li> அந்தமான் நிக்கோபார் தீவுகள்
<li> சண்டீகட்
<li> தாத்ரா நாகர் ஹவேலி
<li> தாமன், தியு
<li> இலட்சத் தீவுகள்
<li> புதுச்சேரி
<li> தில்லி
<li> காஷ்மீர்
<li> லடாக்
புவியியல் மண்டலங்கள்
இந்தியாவானது ஏழு புவியியல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
வடபகுதியிலுள்ள இமாலய மலையை உள்ளடக்கிய மலைகள்
இந்திய கங்கைச்சமவெளி
தார் பாலைவனம்
மத்திய உயர்நிலங்கள் மற்றும் தக்காணப் பீடபூமி
கிழக்குக் கடற்கரை
மேற்குக் கடற்கரை
சுற்றியுள்ள கடல்களும் தீவுகளும்
இந்திய கங்கைச் சமவெளி
சிந்து-கங்கைச் சமவெளி என்பது சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா ஆகிய ஆறுகள் பாய்ந்து உருவாக்கப்பட்டதாகும். இச்சமவெளி மேற்கில் காஷ்மீர் முதல் கிழக்கில் அஸ்ஸாம் வரை பரந்துள்ளது. இச்சமவெளி இமாலய மலைத்தொடருக்கு இணையாகச் செல்கிறது. இச்சமவெளி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது.
தார் பாலைவனம்
பெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் தார் பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலும் பரவியிருக்கும் இப்பாலைவனம் அங்கே சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது.
மலைகள்
இந்தியாவின் மலைப்பகுதிகள் இருபெரும் தொடர்ச்சியைக் கொண்டவை. தீபகற்ப இந்தியாவின் மேற்குப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள். இது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பரவி, மும்பை அருகே முடிவு பெறுகிறது. மேலும் தீபகற்ப இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தொடர்ச்சியான குன்றுகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] என்று அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் இந்தியப் புவியியலில் குறிப்பிடப்படும் முக்கிய மழைத் தொடர்ச்சியாகும். இவை தவிர இளம் மடிப்பு மலைகள் என்று அழைக்கப் படும் இமயமலைப் பகுதிகள் இந்தியாவின் வடக்குப் பகுதியில் கஷ்மீர் மாநிலம் முதல் 7 சகோதரி மாநிலங்கள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள் வரை அமைந்துள்ளன.
மத்திய இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பரவியுள்ள விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் உள்ளது.
உயர்நிலங்கள்
தக்காண பீடபூமி
சோட்டா நாகபுரி மேட்டு நிலம்
கிழக்கு கடலோர சமவெளிள்
கிழக்கு கடலோர சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் வங்காள விரிகுடா இடையே உள்ளது. இது கிழக்கில் உள்ள மேற்கு வங்கம் தெற்கு தமிழ்நாட்டில் நீண்டிருக்கிறது. மகாநதி , கோதாவரி, காவேரி, மற்றும் கிருஷ்ணா நதிகளில் இந்த சமவெளி வாய்க்கால் மற்றும் அவர்களின் கழிமுக பகுதியில் அமைந்துள்ளது. கடலோர பகுதிகளில் வெப்பநிலை பொதுவாக 30 °C மீறுகிறது (86 °F), மற்றும் உயர்ந்த ஈரப்பதம் இணைந்து வருகிறது. இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழை கெண்டது. தென்மேற்கு பருவமழை இரண்டு கிளைகள், வங்காள விரிகுடா கிளை மற்றும் அரபிக்கடல் கிளை ஆகவும் பிரிகிறது. வங்காள கிளை விரிகுடா ஆரம்பம் ஜூன் மாதம் வடகிழக்கு இந்தியாவில் இது கரையை கடக்கும் வடபுறம் நகர்கிறது. அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலைகளின் காற்றுக்கெதிராக வெளியீடுகள் வடபுலம் மற்றத்தால் மழை நகர்கிறது. இந்த பகுதியில் சராசரியாக 1,000 முதல் 3,000 மிமீ (39 மற்றும் 120) வருடாந்திர மழை. சமவெளி அகலம் 100 முதல் 130 கிமீ (62 மற்றும் 81 மைல்) வேறுபடுகிறது. சமவெளி ஆறு பகுதிகளில்- மகாநதி டெல்டா, தெற்கு ஆந்திர பிரதேசம், கிருஷ்ணா-கோதாவரி கழிமுக, கன்னியாகுமாரி கடற்கரை மற்றும் கடலின் முகட்டுப்பகுதியில், மணல் கடற்கரையாக பிரிக்கப்படுகின்றன
மேற்குக் கடற்கரை
மேற்கு கடலோர பகுதி மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அரபிக்கடலுக்கு இடையே உள்ளது. இது மேற்கில் உள்ள குஜராத் கட்ச் வளைகுடா முதல் தெற்கே குமரி முனை வரை நீண்டிருக்கிறது.
தீவுகள்
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அரபுக்கடலில் உள்ள இலட்சத்தீவுகள் ஆகியன இந்தியாவைச் சேர்ந்த தீவுகளாகும்.
ஆறுகள்
கங்கை, யமுனை ஆறு, நர்மதை ஆறு, தப்தி ஆறு, பிரம்மபுத்திரா ஆகியன வட இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளாகும். கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆறு, துங்கபத்திரை ஆறு, காவிரி , பவானி ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவை தென்னிந்தியாவில் பாயும் முக்கிய ஆறுகளாகும். வட இந்தியாவில் ஓடும ஆறுகளில் கங்கையின் துணை ஆறுகளும், இணை ஆறுகளும் மற்றும் கங்கை நதியும் சேர்ந்து கங்கைச் சமவெளிப் பகுதிகளை உருவாக்குகின்றன. வட இந்தியாவின் முக்கிய புவியியல் காரணியாக கங்கை ஆறு அமைந்துள்ளது. இந்தியாவின் தீபகற்ப பகுதியில் பாயும ஆறுகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் கோதாவரி, காவிரி போன்ற ஆறுகள் குறிப்பிடத்தக்கவை.
நீர்நிலைகள்
சதுப்பு நிலங்கள்
மேற்கு வங்காளத்திற்கும் வங்காளதேசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த சதுப்பு நிலங்கள் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள நீர் செறிவுமிக்க பகுதி ஆகும். இது பெரும்பாலும் ஈரப்பதமாகவே இருக்கும்.
தமிழகத்தின் சென்னையில் பள்ளிகரணை, கடலூரில் பிச்சாவரம் ஆகியவை சதுப்பு நிலங்கள் ஆகும்.
தட்ப வெப்ப நிலை
இயற்கைச் சீற்றங்கள்
இந்தியாவும் இலங்கையும் என்றும் பிரிந்திருக்காமல் கடல்மட்ட ஏற்ற தாழ்வுகளைப் பொருத்து சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன. அதன் விவரம்,
சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின்கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன.
இயற்கை வளங்கள்
மேற்கோள்கள்
இந்தியப் புவியியல்
de:Indien#Geographie und Landesnatur
|
5192
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
|
இந்தியாவின் பண்பாடு
|
மனித குலத்தின் மிகப்பழமையான பண்பாடுகளில் இந்தியப் பண்பாடும் ஒன்றாகும். இந்தியப் பண்பாட்டை வடிவமைப்பதற்கு இந்தியச் சமயங்களான இந்து, பௌத்தம், சமணம் மற்றும் சீக்கியச் சமயங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளது.
ஒரு நிலையில் இந்தியா பல பண்பாடுகள் அல்லது கலாச்சாரங்களின் கலவை என்றாலும், சீன, ஐரோப்பிய, ஆப்பிரிக்க, பூர்வீக அமெரிக்க பண்பாடுகள் போன்ற ஒரு தனித்துவமான பொது பண்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்பண்பாடு பல முனைவுகளில் இருந்து பெறப்பட்ட தாக்கங்களை உள்வாங்கி வெளிப்பட்டு நிற்கின்றது.
வட இந்தியா ஆசிய பெரு நிலப்பரப்பை ஆக்ரமித்து இருந்ததால், அது தென் இந்தியாவைக் காட்டிலும் பல்வேறு ஆளுமைகளுக்கு அல்லது தாக்கங்களுக்கு உட்பட்டது எனலாம். சில வரலாற்று அறிஞர்கள் தென் இந்தியா தொடர் வெளி ஆக்கிரமிப்புக்களுக்குள் உள்ளாகாததால், உண்மையான இந்திய பண்பாடு தென் இந்தியாவிலேயே கூடுதலாக வெளிப்பட்டு நிற்கின்றது என்பர். எனினும், தென் இந்தியாவின் தென் கிழக்கு ஆசிய தொடர்புகள், இலங்கையுடான உறவு, பிற கடல் வழி தொடர்புகள் இந்திய பண்பாட்டின் உருவாக்கத்தில், பரவுதலில் முக்கிய கூறுகள்.
மேற்கோள்கள்
|
5193
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
|
திபெத்து
|
திபெத் நடுவண் ஆசியாவில் உள்ள மேட்டுச் சமவெளியில் அமைந்த ஒரு நிலம். அந்நிலம் சார்ந்த மக்களான திபெத்தியர்களின் தாயகம். ஏறத்தாழ 4,900 மீட்டர் (16,000 அடி) ஏற்றம் கொண்ட இந்தப் பகுதி, உலகின் மிக உயரத்தில் அமைந்தது என்பதால் அதை "உலகத்தின் கூரை" என்று பொதுவாக குறிப்பிடுவார்கள். புவியியல்படி, திபெத், நடுவண் ஆசியாவின் ஒரு பகுதி என்று யுனெஸ்கோ, மற்றும் பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கருத, சில கல்விசார் நிறுவனங்கள், கேள்விக்கு உரியதாக, அது தெற்காசியாவின் பகுதியாகக் கருதுகிறார்கள். தற்போது இதன் பெரும்பாலான பகுதிகள் திபெத் தன்னாட்சிப் பகுதி என்ற பெயரில் சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது. சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும் இது அமைந்துள்ளது. இதன் தென் பகுதியும் மேற்கு பகுதியும் மியன்மர், இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. எல்லை கோட்டின் மொத்த நீளம் சுமார் 4000 கிலோமீட்டராகும். முழு நிலபரப்பு 12 இலட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். சீனாவின் மொத்த நிலபரப்பில் இது 12.8 விழுக்காடாகும்.
திபெத் தன்னாட்சி பிரதேசம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. சின்காய் திபெத் பீடபூமியின் முக்கிய பகுதி இதுவாகும். உலகத்தின் கூரை என்று இது போற்றப்படுகின்றது. இதன் மக்கள் தொகை 26 இலட்சமாகும். இதில் திபெத்திய மக்களின் எண்ணிக்கை 25 இலட்சம். மொத்த மக்கள் தொகையில் 96 விழுக்காடாக திபெத்தியர் உள்ளனர். சீனாவில் மிக குறைந்த மக்கள் தொகையுடைய மிக குறைந்த மக்கள் அடர்த்தியுடைய பிரேதேசமாக திபெத் திகழ்கின்றது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 2 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
புவியியல்
சின்காய் திபெத் பீடபூமியின் இயற்கை தனிச்சிறப்புடையது. உலகின் பீடபூமிகளில் இது முக்கிய இடம் வகிக்கின்றது. புவியின் 3வது துருவம் என்று இது புகழப்படுகின்றது. மிக உயரத்தில் அமைந்திருப்பதும், அதனால் நிலவும் குளிரான காலநிலையுமே இதற்குக் காரணம். கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இது அமைந்து, உயரமான மலைகளால் சூழப்பட்டுள்ளது. பீடபூமியிலும் பல உயர் மலைகள் இருக்கின்றன. கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இதன் நடுப்பகுதியில் சராசரி வெப்பநிலை சுழியத்திற்கும் கீழ் இருக்கின்றது. மிகவும் வெப்பமான காலத்திலோ, சராசரி வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளது.
சின்காய் பீடபூமியில், கடல் மட்டத்திற்கு மேல் 6000 மீட்டர் முதல் 8000 மீட்டர் வரை உயரத்தில் பல சிகரங்கள் உள்ளன. உலகில் மிக இளமையான பீடபூமியாகவும், பல ஆசிய ஆறுகளின் பிறப்பிடமாகவும் இது திகழ்கின்றது. 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நேபாளத்தில் பதிவான நில நடுக்கம் இங்கும் அதிர்வை ஏற்படுத்தியது. இதில் 25 பேர் மரணம் அடைந்தார்கள்.
வரலாறு
திபெத்தின் பல பகுதிகளை ஏழாம் நூற்றாண்டில், சாங்ட்சன் கேம்போ (Songtsän Gampo) எனும் அரசர் ஒருங்கு இணைத்தார். 1600 இன் தொடக்க காலத்தில் இருந்து தலாய் லாமாக்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் ஆன்மீக தலைவர்கள், திபெத்திய மைய நிருவாகத்தின் தலைமையை (பெயரளவிலாவது) ஏற்றிருந்தார்கள். இவர்கள், அவலோகிதர் என்ற போதிசத்துவ தருமத்தின் வெளிப்பாடுகளாக நம்பப்படுகிறார்கள்.
1644 முதல் 1912 வரை சீனாவை ஆண்ட மஞ்சூரிய அரசு, 1571 இல், தலாய் லாமாவை திபெத்தின் அரசியல் மற்றும் ஆன்மீக தலைவராக ஏற்படுத்தியது. 17 ஆம் நூற்றாண்டிலிருந்து 1959 வரை, தலாய் லாமாவும் அவரது பிரதிநிதிகளும் வழிவழி தலைநகரான லாசாவை இருப்பிடமாகக் கொண்டு திபெத்தின் பெரும்பகுதியின் அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக, மதம் மற்றும் நிர்வாக பணி செய்து வந்தார்கள்.
19ஆம் நூற்றாண்டில், விக்டோரியா மகாராணியின் பிரித்தானியாவுக்கும் ருசியாவின் சார் மன்னர்களுக்கும் இடையே, நடுவண் ஆசியாவில், நடந்த ஆதிக்கப் போட்டியில், ஃபிரான்சிஸ் யன்ங்ஹஸ்பண்ட் (Francis Younghusband) என்ற கவர்ச்சியான போர்மறவரின் தலைமையில் ஒரு பிரித்தானிய படை இறுதியாக திபெத்தில் உள்புகுந்து, திபெத்தின் படைவீரர்களை மாக்சிம் துப்பாக்கி கொண்டு வீழ்த்தி, 1904 இல் லாசாவை கைப்பற்றியது. இந்த படையெடுப்பு, பிரித்தானியாவுக்கும் திபெத்துக்கும் ஓர் அமைதி உடன்பாடு ஏற்பாட்டுக்கு வழி செய்தது. சில திபெத் வரலாற்றாளர்கள், இந்த தொலைதூர மலைநாடு ஒரு தனிநாடு என்பதற்கு, இந்த உடன்பாட்டை ஆதாரமாக காண்பார்கள். இந்த படையெடுப்பால் சீனப் பேரரசு கொதித்தெழுந்தாலும், அதை நிறுத்த ஒன்றும் செய்ய இயலாமல், திபெத்தின் மேல் தனது கோரிக்கையை காக்கும் வண்ணம், பிரிட்டனுடன் ஓர் அரசுறவுப் (diplomatic) போராட்டம் நடத்தியது.
திபெத் 1911 இல் சீனாவிடம் இருந்து விடுதலை அறிவிப்பு செய்தது. ஆனால், எந்த ஒரு மேற்கத்திய நாடும் அதன் விடுதலைக்கு ஆதரவாக வரவோ அல்லது தூதரக உறவு வைத்துக்கொள்ளவோ ஒருபோதும் முன்வரவில்லை. சீன மக்கள் குடியரசு, வரலாற்று பதிவுகளை சுட்டிக்காட்டியும், திபெத்திய அரசுடன் 1951 இல், பதினேழு அம்ச உடன்பாட்டை கையொப்பம் பெற்றும், திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக கோரிக் கொண்டது.
திபெத்தில் சீனாவின் தளைக்குக் கட்டுப்படாத பல ஆட்சியாளர்கள் இருந்தனர் என்பதற்கு வரலாலற்றுப் பதிவுகள் உள்ளன. ஆனால் சீனர்களோ, அவரது பேரரசின் தூதர்கள் 1727 இல் இருந்தே இருப்பதால், லாசா சீனப்பேரரசுக்கு கட்டுப்படவேண்டும் என்கிறார்கள்[3]. 1914 இல் கூட்டிய சிம்லா மாநாடு, யாங்ட்சி (Yangtze) ஆறும் இமயமும் திபெத்தின் எல்லைகளாக அமைத்தன. ஆனால் சீனா திபெத்தின்மேல் உள்ள தன் ஆதிக்கத்தை கோர ஓயவில்லை. அடுத்த 35 ஆண்டுகளில் அவர்கள் கையாண்ட வித்தைகள், திபெத்தின் தனிநாட்டுக்கு, பன்னாட்டு ஆதரவு கிட்டாமல் போனது.
1949-1950களில், சீன மக்கள் குடியரசு ஏற்படுத்திய உடனேயே, தலைவர் மா சே துங், மக்கள் விடுதலை படை கொண்டு, திபெத்தை விடுவிக்க ஆணை இட்டார். திபெத்தின் பல பிரபுக்களும், பாட்டாளிகளும் சீன அரசுக்கு ஒத்துழைத்தனர். என்றாலும் நில சீர்திருத்தங்களாலும், மற்றும் புத்த மதம் தொடர்பாகவும் சண்டைகள் தோன்றின. 1959 இல் தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் பெற்றார்.
1972 இல் அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மாவோவுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள முடிவெடுக்கும் வரை சி. ஐ. ஏ. உளவு நிறுவனம் மறைமுக கொரில்லா போருக்கு நிதி உதவி செய்து வந்தது. பஞ்சம், மற்றும் கலாச்சார புரட்சிக் காலத்தில் சீனாவின் வன்முறைக்கு, திபெத்தின் எதிர்ப்பு வலுப்பட்டாலும் பயனின்றி போயின.
தற்காலத்தில், உலகின் எல்லா நாடுகளும் திபெத்தின்மேல் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளன. புலம்பெயர்ந்து அமைந்த திபெத்திய அரசின் தலைவரான தலாய் லாமா, திபெத்தில், சீனாவின் இறையாண்மையை மறுக்கவில்லை. "திபெத் தனிநாடு கேட்கவில்லை. தன்னாட்சிதான் கேட்கிறது" என்கிறார். ஆனால், சீனர்களோ, அவரோடு பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை என்று முன்னிலும் திடமாக இருக்கிறார்கள்.
தேசிய இனங்கள்
திபெத்தின மக்கள் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் குழுமி வசிக்கின்றனர். இங்கே வசிக்கும் திபெத்தின மக்கள் தொகை மொத்த திபெத்தின மக்கள் தொகையில் 45 விழுக்காடாகும். திபெத் இனம் தவிர, ஹான், ஹுய், மன்பா, லோபா, நாசி, நூ, துலுங் முதலிய 10க்கு மேற்பட்ட தேசிய இன மக்கள் தலைமுறை தலைமுறையாக இங்கே வசிக்கின்றனர். மன்பா, லோபா, நாசி முதலிய வட்டாரங்கள் இங்கே இருக்கின்றன.
ஆட்சிப் பிரிவுகள்
திபெத் 74 மாவட்டங்களை கொண்டது.
கல்வி
கடந்த பதினைந்து ஆண்டுகளாக திபெத்தில் அனைவருக்கும் இலவசமாக கல்வி கற்பிக்கப்படுகிறது.
இதனையும் காண்க
திபெத்தியப் பேரரசு
யுவான் ஆட்சியில் திபெத்
குயிங் ஆட்சியில் திபெத்
நேபாள திபெத்தியப் போர் – (ஏப்ரல் 1855 - மார்ச் 1856)
திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பு – 1904
லாசா உடன்படிக்கை - 7 செப்டம்பர் 1904
திபெத் மீதான சீனாவின் படையெடுப்பு (1910)
திபெத் (1912–1951)
திபெத்தை சீன மக்கள் குடியரசுடன் இணைத்தல் - 1951
1959 திபெத்தியக் கிளர்ச்சி
திபெத் தன்னாட்சிப் பகுதி - 1965 முதல் சீனாவின் கீழ்
திபெத்தியர்களின் மைய நிர்வாகம்
தலாய் லாமா டென்சின் கியாட்சோ
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
லண்டனில் திபெத்தின் அலுவலக இணையத்தளம்
நாடு கடந்த நிலையில் திபெத்திய அரச இணையத்தளம்
திபெத்திய விடுதலை இயக்கம்
தெற்கு ஆசியா
திபெத்திய வரலாறு
|
5195
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
|
சிறீ ஜெயவர்தனபுர கோட்டை
|
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே (Sri Jayawardenapura Kotte, ) அல்லது கோட்டே இலங்கையின் நிருவாகத் தலைநகராகும். வணிகத் தலைநகரான கொழும்பு மாநகரின் கிழக்கே 6° 54' வடக்கு, 79° 54' கிழக்குமாக இது அமைந்துள்ளது. இலங்கையின் பாராளுமன்றம் புதிய கட்டிடதொகுதி ஏப்ரல் 29 1982 யில் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டதிலிருந்து இங்கேயே இயங்குகின்றது.
அமைவிடம்
கோட்டேயானது 17.04 ச.கி.மீ. விஸ்தீரணமான ஒரு தாழ்ந்த சதுப்பு நிலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது பல பட்டணங்களை உள்ளடக்கிய போதும், அவையனைத்தும் ஒரு மாநகராக ஸ்ரீ ஜயவர்த்தனபுர மாநகரசபையினால் நிர்வாகிக்க படுகிறது. இதன் மேற்கே கொழும்பு மாநகரும், வடக்கே ஹீன் ஓயாவும், கிழக்கே மஹரகமை நகரசபையும், தெற்கே தெஹிவளை-கல்கிசை மாநகர சபையும் உள்ளன.
சனத்தொகை
இலங்கையின் அனைத்தின மக்களும் ஸ்ரீ ஜயவர்த்தனபுரத்தில் வாழ்கின்றனர். 2001 ஆம் ஆண்டில் கடைசியாக மேற்கொள்ளபட்ட தொகைமதிப்பின் படி நகரின் சனத்தொகை 110,000 ஆகும். இதில் 101,331 சிங்களவர், 7,369 தமிழர், 4,031 சோனகர், 1,367 பறங்கியர், மற்றும் 1,109 இதர இனத்தவராக கணக்கிடபட்டுள்ளது.
வரலாறு
கோட்டை இராசதானியின் தலைநகராக 13ம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டு வரை கோட்டே விளங்கியது. இது தியவன்னா நதிக்கரையில் உள்ள சதுப்பு நிலத்தில் அழககோன் என்னும் தமிழ் சிற்றரசனால் ஆரியசக்கரவர்திகளின் படையெடுப்புக்கு எதிரான பெரும் அரணாக அமைக்கபட்டது. பின்னர் இது ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் (அதாவது மகா வெற்றி நகரம்) என பெயர் மாற்றபெற்றுக் கோட்டை இராசதானியின் தலைநகரானது.
1505 ஆண்டு இலங்கைக்கு வந்த போர்த்துக்கீசர் 1565 தில் இந்நகரின் பூரண கட்டுப்பாட்டைப் பெற்றனர். சீதாவாக்கை இராசதானியிலிருந்து (அவிசாவளை) தொடர்ச்சியாக இடம்பெற்ற கடும் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போகவே, போர்த்துக்கீசர் கோட்டே நகரத்தைக் இடித்து தரைமட்டமாக்கிவிட்டு கொழும்பு நகரை தங்கள் தலைநகர் ஆக்கினர்.
புதிய நகராக்கம்
கோட்டேயின் நகராக்கம் (urbanization) 20 ஆம் நூற்றாண்டில் மீண்டும் தொடங்கியது. 1977ல் இலங்கை அரசு கோட்டேயைப் புதிய நிர்வாகத் தலைநகராக அறிவித்த பின்னர், நகரைச் சூழ இருந்த சதுப்பு நிலம் தோண்டப்பட்டுப் பெரிய ஏரியொன்று அமைக்கப்பட்டது. இந்த ஏரிக்கு நடுவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு ஒன்றில் புதிய பாராளுமன்றக் கட்டிடம் அமைக்கப்பட்டது. அரச நிறுவனங்களைக் கொழும்பிலிருந்து இடம் மாற்றும் வேலை தொடர்ந்தும் நடந்து வருகிறது.
இவற்றையும் பார்க்கவும்
இலங்கைப் பாராளுமன்றம்
கோட்டே இராசதானி
கோட்டே சிவன் கோவில்
ஆசியத் தலைநகரங்கள்
கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்
கொழும்பு
|
5198
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
|
இந்துக் காலக் கணிப்பு முறை
|
இந்துக் காலக் கணிப்பு முறை சூரியமானம், சந்திரமானம் என்னும் இரு முறைகளையும் தழுவி அமைந்துள்ளது. சூரிய மானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். சந்திரமானம் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. பண்டைக்கால இந்திய வானியல் அறிவைப் பயன்படுத்தி உருவான இந்துக் காலக் கணிப்பு முறை இந்தியாவில் மட்டுமன்றிப் பல அயல் நாடுகளிலும் புழக்கத்திலிருக்கும் மரபுவழிக் காலக் கணிப்பு முறைகளுக்கு மூலமாக உள்ளது. இந்துக் காலக் கணிப்பு முறை என்ற ஒரே தொடரால் குறிக்கப்பட்டாலும் இது உண்மையில் ஒரே அடிப்படையையும் அவை புழக்கத்திலுள்ள பகுதிகளின் பண்பாடுகளுக்கு ஏற்பத் தனித்துவமான கூறுகளையும் கொண்ட பல முறைகளின் தொகுப்பு ஆகும்.
தோற்றம்
அடிப்படைகள்
இந்தியக் காலக்கணிப்பு முறை சுழல்முறைக் காலக் கருத்துருவை (Concept) அடிப்படையாகக் கொண்டது. சுழல்முறைக் காலம் என்பது மேனாட்டு முறையில் மாதங்கள் ஜனவரியில் தொடங்கி டிசம்பரில் முடிந்து மீண்டும் ஜனவரியில் தொடங்கிச் சுற்றிச் சுற்றி வருவதுபோல எல்லா மட்டங்களிலும் காலம் ஒரிடத்தில் தொடங்கி அதேயிடத்துக்குத் திரும்பிவந்து மீண்டும் அதே சுற்றில் தொடர்வதாகும். தற்காலத்தில் உலகெங்கும் பரவலாகப் புழக்கத்திலுள்ள மேனாட்டு முறையில் நாள், வாரம் மற்றும் மாதங்களாகிய காலப் பிரிவுகள் சுழல் முறையில் அமைந்திருந்தாலும் ஆண்டுகள் தொடக்கம் காலம் நேர்கோட்டு முறையில் அமைந்துள்ளது. அதாவது கால ஓட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியிருந்து இறந்தகாலத் திசையிலும், எதிர்காலத் திசையிலும் காலக் கணக்குத் தொடர் எண் வரிசைப்படி கணக்கிடப்படுகின்றது.
கால அலகுகள்
சாதாரணமாகப் பயன்பாட்டிலுள்ள ஆண்டு, மாதம், வாரம், நாள், மணி, நாடி, விநாடி போன்ற கால அலகுகளுக்குப் (Units) புறம்பாக மிகப் பெரிய கால அளவுகளையும், அதே நேரம் மிக நுண்ணிய கால அளவுகளையும் அளப்பதற்கான கால அலகுகள் பண்டைக்கால இந்திய வானியல் நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.
மேற் சொன்ன கால அலகுகளைக் குறிக்கும் காலக் கணித வாய்ப்பாடு கீழே தரப்பட்டுள்ளது:
வேறுபாடுகள்
முன்னர் கூறியபடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புழக்கத்திலுள்ள காலக்கணிப்பு முறைகளில் சில அம்சங்களில் வேறுபடுகள் காணப்படுகின்றன. பொதுவாகப் பின்வருவன வேறுபாடுகள் காணப்படும் அம்சங்களில் முக்கியமானவை.
அடிப்படை முறை - சூரியமானம்,சந்திரமானம் அல்லது இரண்டும் இணைந்த முறைகள்
புத்தாண்டுத் தொடக்கம்
மாதத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கை
பெயரிடல் மரபுகள்
பயன்படுத்தப்படும் சகாப்தம்
மேற்கண்ட அம்சங்களிற் கண்ட வேறுபாடுகளின் அடிப்படையில் புழக்கத்திலுள்ள மரபு வழி இந்துக் காலக் கணிப்பு முறைகளில் பின்வரும் முக்கியாமான வெவ்வேறு முறைகளை அடையாளம் காண முடியும்.
தெற்கு அமாந்த முறை
மேற்கு அமாந்த முறை
பூர்ணிமாந்த முறை
மலையாள முறை
தமிழ் முறை
வங்காள முறை
ஒரியா முறை
கீழேயுள்ள அட்டவணை காலக்கணிப்பின் அடிப்படைகள், பல்வேறு முறைகள் என்பவற்றுக்கிடையிலான தொடர்புகளையும், அவை பயன்பாட்டிலுள்ல இடங்களையும் காட்டுகிறது.
(1)பீகார், இமாசலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், உத்தராஞ்சல், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி.
இவற்றையும் பார்க்கவும்
தமிழ் மாதங்கள்
பஞ்சாங்கம்
உசாத்துணைகள்
Regulagedda Akshay, Panchanga- Tantra: The Magic of the Indian Calendar System, The National University of Singapore
B. V. Raman, A Manual of Hindu AstrologyUBS Publishers' Distributers Ltd., New Delhi. 1992.
C. Brito, Apendix in The Yalppaana Vaipava Malai, Asian Educational Service, New Delhi. 1999. (First published in Jaffna, 1879)
வெளியிணைப்புகள்
Hindu Concept of Time: One Cosmic Day of Brahma
ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதி வருவித்தல்
தமிழ் நாட்காட்டி
இந்தியக் காலக் கணிப்பு முறைகள்
இந்துக் காலக் கணிப்பு முறை
இந்துத் தத்துவங்கள்
கணித வரலாறு
வழக்கொழிந்த அலகுகள்
de:Kalpa
lt:Kalpa
pl:Kalpa
|
5199
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
மாதம்
|
மாதம் அல்லது மாசம் அல்லது திங்கள் என்பது ஒரு கால அளவாகும். மாதம் என்ற ஒரே சொல்லே பல்வேறு சமுதாயங்களில் புழக்கத்திலுள்ள, இதையொத்த ஆனால் சிறிது வேறுபடுகின்ற கால அளவுகளைக் குறிக்கப் பயன்பட்டுவருகின்றது. வெவ்வேறு பண்பாடுகளில் இக் காலக் கணிப்பிற்குரிய அடிப்படைகள் வெவ்வேறாக அமைந்திருப்பதாலேயே மாறுபட்ட கால அளவுகளைக் கொண்ட மாதங்கள் வழக்கிலுள்ளன. சிறப்பாக இரண்டு வகையான மாதங்களைக் குறிப்பிடலாம்.
சூரியமாதம்
சந்திரமாதம்
சூரியமாதம் என்பது, பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சார்பு இயக்கத்தில், சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வருவதுபோல் தோன்றும் காலம் ஒரு ஆண்டு ஆகும். பூமியை மையமாகக் கொண்டு அதைச் சுற்றிய அண்டவெளி, ஒவ்வொன்றும் 30 பாகைகள் கொண்ட 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு இராசி எனவும், 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே சூரியமாதம் ஆகும். இந்தியாவில் மலையாளிகளும், தமிழரும் சூரியமாத முறையையே பின்பற்றுகிறார்கள்.
சந்திரமாதம் என்பது, சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் கால இடைவெளியாகும். சந்திரமாதத்தைக் கைக்கொள்ளும் சில சமுதாயங்களில் ஒவ்வொரு மாதமும் பூரணையில் தொடங்கி அடுத்த பூரணை வரையிலான காலமாக இருக்க, வேறு சில பண்பாடுகளில் மாதம், ஒரு அமாவாசையில் தொடங்கி அடுத்த அமாவாசைக்கு முன் முடிவடைகிறது. வட இந்தியாவில் பெரும்பாலும் சந்திரமாதமே புழக்கத்தில் உள்ளது. இஸ்லாமியர்களும் இம்முறையையே கடைப்பிடித்து வருகிறார்கள்.
இவற்றைவிட அனைத்துலக அளவில் இன்று புழங்கி வருகின்ற முறையின்படி, மாதம் என்பது நேரடியாகச் சந்திரன் அல்லது சூரியனின் இயக்கத்தை வைத்துக் கணிக்கப்படுவதில்லை.
மேற்கோள்கள்
கால அளவுகள்
நாட்காட்டிகள்
|
5204
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
பொருளாதார அளவுகோல்கள்
|
பொருளாதார அளவுகோல்கள் பல வகைப்படும். நாடு, நிறுவன, தனி மனிதப் பொருளாதார நிலைகளை அளப்பதற்கு வெவ்வேறுபட்ட அளவுகோல்கள் தேவைப்படும். மேலும், வெவ்வேறு அளவுகோல்களை பல முறைகளில் சேர்த்தோ பிரித்தோ பயன்படுத்தலாம். இந்த அளவுகோல்களுக்கு வரையறைகள் உண்டு. இந்த அளவுகோல்களுக்கான புள்ளி விபர தகவல்கள் அதிகாரப்பூர்வ, நம்பகத்தன்மை கொண்ட நிறுவனங்களில் இருந்து பெறுதல் அவசியம்.
மொத்த தேசிய உற்பத்தி (மொ.தே.உ) - Gross National Product (GNP)
மொத்த உள்நாட்டு உற்பத்தி (மொ.உ.உ) - Gross Domestric Product (GDP)
ஆயுள் எதிர்பார்ப்பு - Life Expectancy
குழந்தை இறப்பு வீதம் - Infant Mortality Rate
மக்கள்தொகை - Population
மக்கள்தொகை வளர்ச்சி வீதம் - Population Growth Rate
தனி மனித வருமானம் - Per Capita Income
பணவீக்கம் - Inflation
பொருள் வாங்குதிறன் சமநிலை - Purchasing Power Parity
தொழிற்பலத்தில் பங்குபற்றுவோர் விகிதம் - Labour Force
தொழிலில் உள்ளோர் விகிதம் - Employment Rate
தொழில் அற்றோர் விகிதம் - Unemployment Rate
மனித வளர்ச்சிக் குறியீடு - Human Development Index
நுகர்வோர் விலைக் குறியீடு - Consumer Price Index
வெளி இணைப்புகள்
தொகைமதிப்பு புள்ளிவிபர்த்திணைக்களம் - இலங்கை
Government of Tamil Nadu Department of Economics and Statistics
பொருளாதார அளவீடுகள்
|
5213
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
|
சந்திரமானம்
|
காலக் கணிப்பில் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறை சந்திரமானம் எனப்படும்.
சந்திர மாதம்
சந்திரன் பூமியை முழுமையாகச் சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு சந்திர மாதம் ஆகும். இவ்வாறு சுற்றி வரும் போது பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்குச் சந்திரன் முற்றாகவே தெரியாத ஒரு நிலையிலிருந்து படிப்படியாக வளர்வது போல் தோற்றமளித்து முழு வட்டமாகத் தெரியும் நிலைக்கு வரும். பின்னர் அதன் உருவம் தேய்ந்து மீண்டும் முற்றும் தெரியாத நிலைக்கு வரும். இவ்வாறு முற்றும் தெரியாத நிலையுள்ள நாள் அமாவாசை எனப்படும். முழுமையாகத் தெரியும் நாள் பூரணை என்று அழைக்கப்படும். சந்திரன் பூமியை இவ்வாறு தொடர்ந்து சுற்றி வருவதனால் அமாவாசையும் பூரணையும் மாறி மாறி வருகின்றன. இரண்டு அடுத்தடுத்து வரும் அமாவாசைகளுக்கு இடப்பட்ட காலமும், அவ்வாறான இரண்டு பூரணைகளுக்கு இடைப்பட்ட காலமும் சமனான அளவு கொண்டவை. இந்தக் கால அளவு சந்திரன் பூமியை ஒரு முறை சுற்றிவர எடுக்கும் காலமான 29 நாட்கள் 12 மணி 44 நிமிடங்கள் 03 விநாடிகள் ஆகும். சந்திர மாதத்தைக் பயன்படுத்தும் முறைகளில் மாதத் தொடக்கம் கொள்வதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு முறையில் அமாவாசையை மாதத் தொடக்கமாகக் கொள்ள, மற்ற முறை பூரணையை மாதத்தொடக்கமாகக் கொள்கிறது. முதல் முறை அமாந்த முறை என்றும், இரண்டாவது பூர்ணிமாந்த முறை என்றும் வழங்கப்படுகிறது.
சந்திர மாதத்தின் உட்பிரிவு
சந்திரனின் தேய்வதும், வளர்வதுமான தோற்றப்பாடு சந்திர மாதத்தை இயல்பாகவே இரு பிரிவுகளாக்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்துக்காலக் கணிப்பு முறையில், சந்திர மாதம் இருபிரிவுகளாகக் (பட்சம்) குறிப்பிடப்படுகின்றன. அமாவாசை தொடக்கம் அடுத்த பூரணை வரையிலான வளர்பிறைக் காலம் சுக்கில பட்சம் என்றும், பூரணையிலிருந்து அடுத்த அமாவாசை வரையான தேய்பிறைக்காலம் கிருஷ்ண பட்சம் என்றும் கூறப்படுகின்றது. இந்த ஒவ்வொரு பட்சமும் அமாவாசை, பூரணை நீங்கலாக 14 திதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவையே சந்திர நாட்கள். இவற்றின் பெயர்கள் வருமாறு:
அமாவாசை
பிரதமை
துதியை
திருதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சப்தமி
அட்டமி
நவமி
தசமி
ஏகாதசி
துவாதசி
திரியோதசி
சதுர்த்தசி
பூரணை
ஆண்டுக் கணக்கும், சந்திரமானமும்
இந்திய முறைகளில் சந்திர மாதப் பெயர்கள்
அதிக மாதமும், அழிந்த மாதமும்
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணைகள்
வெளியிணைப்புகள்
காலக்கணிப்பு முறைகள்
இந்துக் காலக் கணிப்பு முறை
|
5214
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF
|
அறிவியல் அறிவு வழி
|
அறிவியல் அறிவு வழி (scientific method) என்பது இவ்வுலகின் இயல்பை, இயக்க முறையை ஒரு சீரான அணுகுமுறையினூடாகக் கண்டறிந்து, நிரூபித்து, பகிர முனைகின்றது. அறிவியல் நோக்கிலான அறிதல் தொன்று தொட்டு நிலவியதெனினும், ஐரோப்பாவின் விழிப்புணர்ச்சிக் காலமே தற்கால அறிவியல் அறிவு மார்க்கத்திற்கு அடித்தளம் இட்டது. அதற்கு முன்பு சீனா, இந்தியா, போன்ற நாடுகளில் ஐரோப்பிய முன்னேற்றங்களை உள்வாங்கி அறிவியல் அறிவு வழி என்ற தனித்துவமான வழிமுறை உருவாகியது.
அறிவியல் அறிவு வழி என்ற சொற் தொடர் அறிவியல் வழிமுறையையே பொதுவாகச் சுட்டி நிற்கின்றது. அறிவியல் வழிமுறையின் ஊடாக பெறப்படுவதே அறிவு. அவ்வறிவை சீரிய அமைப்பு அடிப்படையிலான பயன்பாட்டின் மூலம் பயன்படுத்தும் போது உருவாவதுதான் தொழில்நுட்பம். தொடக்கத்திலேயே, அறிவியல் அறிவு மூலம் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்தது. எனினும், 1900 ஆம் ஆண்டுகளுக்குப் பின்புதான் அவ்வறிவை திட்டமிட்ட முறையில் பொறியியலுக்குப் பயன்படுத்தத் தொடங்கினர்.
மேலோட்டம்
அறிவியல் அறிவு வழி என்பது அறிவியல் செயற்படும் விதமாகும். ஏனெனில் அறிவியல் முன்னைய அறிவிலிருந்து எழுப்பப்படுவதுடன், அது உலகத்திற்கான எமது நம்பகத்தன்மையை வளர்க்கின்றது. அறிவியல் அறிவு வழியானது தானும் அவ்வாறே வளர்ச்சியடைகின்றது. அதாவது இது புதிய அறிவை வளர்ப்பதில் மிகவும் முனைப்புடையதாக உருவாகின்றது. உதாரணத்திற்கு, பொய்மைப்படுத்தல் கொள்கை (1934 ஆம் ஆண்டு முதன்முதலில் முன்மொழியப்பட்டது) உறுதிப்படுத்தல் சார்பை கருதுகோள்களை நிறுவுவதற்குப் பதிலாக பொய் என்று நிரூபிப்பதன் மூலம் ஒழுங்குபடுத்தலைக் குறைக்கின்றது.
அறிவியல் அறிவு வழிப் பிரிவுகள்
அறிவியல் அறிவு வழியை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன
அறிவியல் வழிமுறை
அறிவியல் அறிவு
அறிவியல் அறிவின் பயன்பாடு
அறிவியல் வழியின் அடிப்படை தத்துவம்
அறிவியல் அறிவு மார்க்கத்துக்கு அடிப்படை உலகாயுத தத்துவம். இந்த தத்துவத்தின் பல கூறுகளை சோ. ந. கந்தசாமி "இந்திய தத்துவக் களஞ்சியம்" என்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். "பிரபஞ்சமாகிய இயற்கை பிறருடைய தயவின்றித் தானே என்றும் உள்ளது, தானே இயங்குகின்றது." ”நம்மால் அவ்வியல்புகளை அறிய முடியும்” என்ற அடிப்படை நம்பிக்கையிலேயே அறிவியல் அறிவு வழி செயற்படுகின்றது. கணி, அள, "அளக்கப்பட கூடியதே அறிய பட கூடியது" என்கிற கூற்று சற்று மிகைப்பட்ட கூற்று என்றாலும், அளத்தல் அறிவியல் வழியின் முக்கிய அம்சம் ஆகும். மேலும், உலகில் உண்மை இருக்கின்றது. அதை நாம் சார்பற்ற நிலையில் நோக்கலாம் என்பதும் இந்த வழிமுறையின் ஒரு முக்கிய நிலை ஆகும்.
உணரும் தன்மை
நமது புலன்களின் வழியே இவ்வுலகின் நிகழ்வுகள், பொருட்களின் தன்மைகளை உணர்கின்றோம்.
பரிந்துரை நடைமுறை கோட்பாடு
துல்லியமான அவ்வுணர்வுகளை அடிப்படையாக வைத்து இவ்வுலகின் இயல்பை, இயக்கத்தை நோக்கி நாம் ஒரு புரிதல் அடைந்து, அப்புரிதலின் அடிப்படையில் நாம் ஒரு நடைமுறைக் கோட்பாட்டை பரிந்துரைக்கின்றோம் அல்லது ஒரு கேள்வியை முன்வைக்கின்றோம்.
அறிவியல் அறிவு வழியின் கூறுகள்
அறிவியல் அறிவு வழியின் பிரதான நான்கு கூறுகளாக மறுசெய்கைகள், மறுநிகழ்வுகள், அகவெளிப்பாடு அல்லது ஒழுங்குபடுத்தல் என்பன காணப்படுகின்றன.
ஆய்வுகள்
பரிந்துரைக்கப்படும் எக்கோட்பாடும் எதோ ஒரு வழியில் ஆய்வுக்கு உட்பட்டு நிருப்பிக்கப்பட வேண்டும். அப்படி நிரூப்பிக்கப்பட இயலாத கோட்பாடுகள் அறிவியல் அறிவுமூல கோட்பாடுகள் என கருதப்பட முடியாது. எவ்வாறு ஆய்வுக்கு உட்படுத்துவது? பரிந்துரைக்கப்படும் கோட்பாடு எதாவது சவாலான நிகழ்வை அல்லது இயல்பை ஊகிக்க அல்லது வருவதுரைக்க வேண்டும். ஆய்வு மூலம் அந்நிகழ்வு நிருபிக்கப்படும், அல்லது மறுக்கப்படும். இன்னுமொரு வழியில் சொல்லுவதானால், பரிந்துரைக்கப்படும் நடைமுறை கோட்பாட்டின் "உண்மையான ஆய்வு அந்த கோட்பாட்டை பொய்யென நிரூபிக்கும் முயற்சி, அல்லது தவறு என்று காட்டும் முயற்சியே." எனவே தகுந்த ஆய்வினை வடிவமைத்தல் அறிவியல் அறிவு வழியின் முக்கிய நிலை.
எந்த ஒரு நடைமுறை கோட்பாடும் அதன் வரையறைகளை தெளிவாக குறிப்பிடுதல் வேண்டும். குறிப்பாக ஆய்கருவிக் குறிப்புக்கள், ஆய்வுக் குறைபாடுகள், சூழ்நிலைகளைப் பற்றி தெளிவான விளக்கங்கள் தரப்படுதல் வேண்டும். எந்த ஒரு ஆய்வும் அதன் விளைவுகளும் மீண்டும் பிறர் செய்யக் கூடியதாக இருந்தாலே அது ஏற்றுக்கொள்ளப்படும்.
முடிவுகள்
ஆய்வு முடிவுகள் சவாலான நிகழ்வுகளை அல்லது இயல்பை சரியாக வருவதுரைத்தால் அக்கோட்பாடுகள் முன்பே உள்ள பரந்த நடைமுறை கோட்பாடுகளுடன் இணைக்கப்படும். மாறாக, ஆய்வு முடிவுகள் வருவதுரைக்கத் தவறினால், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைக் கோட்பாடோ அல்லது ஆய்வோ மீள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
பகிர்வு
முக்கியமான பரிந்துரைக்கப்படும் நடைமுறைக் கோட்பாடுகள், ஆய்வு முடிவுகளைப் பிறருடன் பகிர்வது, அறிவியல் அறிவு வழியின் முக்கிய ஒரு படி நிலை. பகிர்வதன் மூலமே பிற ஆய்வுக்கும் கேள்விக்கும் உட்படுத்தப்பட்டு, பரந்த நிருபீக்கப்பட்ட நடைமுறை கோட்பாடுகள் விரிவடைந்து அல்லது செதுக்கப்பட்டு முன்னேற்ற பாதையில் தொடர்ந்து செல்ல உதவுகின்றது.
இறுதியாக, ஒரு நடைமுறை கோட்பாட்டின் திறன் அதன் வருவதுரைக்கும் ஆழத்தில் உள்ளது. இன்றைய அறிவியல் நடைமுறைக் கோட்பாடுகள் உலகின் பல இயல்புகளை விளக்கி நிற்கின்றது. அந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே நமது தொழில்நுட்ப சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. எனினும் பல துறைகளில் ஆய்வுகள் தொடக்கத்திலேதான் இருக்கின்றன. அறிவியல் அறிவு வழியில் (உணரும் தன்மை, நடைமுறைக் கோட்பாடு பரிந்துரைப்பு,ஆய்வு முடிவுகளை அலசுதல், பகிர்வு) பரிணாம வளர்ச்சிப் பாதையில் மனிதனைக் கொண்டு செல்கின்றன.
மேற்கோள்கள்
அறிவியலின் மெய்யியல்
|
5216
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
|
வேலு நாச்சியார்
|
இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.
இளமை
1730-ஆம் ஆண்டு, இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாகப் பிறந்தார் வேலுநாச்சியார். ஆண் வாரிசு போல வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746-இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார்.
ஆங்கிலேயர் படையெடுப்பு
1772-இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலுநாச்சியார் நாட்டை மீட்டெடுக்க காத்திருந்தார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் விருப்பாட்சியில் தங்கி ஐதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் பற்றிப் பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஐதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். 8 காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். மருது சகோதரர்களின் பெரும் முயற்சியினால் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி ஓர் எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. வேலுநாச்சியார் மருது சகோதரர்களே இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.
படை திரட்டல்
1780- ஆண்டு ஜூன் மாதம் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை வைகை ஆற்றின் வழியில் சோழவந்தானையும், பிறகு சிலைமானையும், அதன் தொடர்ச்சியாக திருப்புவனம், முத்தனேந்தல்,நகரங்களை வென்ற பிறகு, கடைசி யுத்தமாக மானாமதுரை நகரத்தில் போர் பயிற்சி பெறாத மக்களின் துணைகொண்டு அந்நிய பரங்கியர்களை வெற்றிக்கொண்டனர்.
அதன் பிறகு இராணியின் தோரணையோடு, இராணி வேலுநாச்சியார் சிவிகையின் மூலம் படைவீரர்கள் புடை சூழ விழாக்கோலம் பூண்ட வேலு நாச்சியார், அதன் பிறகு சிவகங்கை சீமையின் முதல் இராணியாக முடிசூட்டப்பட்டார்.
இறுதி நாட்கள்
1793-இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்குத் துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.
வேலுநாச்சியார் மணிமண்டபம்
சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீர மங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபம் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 18. சூலை 2014 அன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார
அருங்காட்சியகம்
வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள் முதலான பல பொருட்கள் சிவகங்கையில் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.
நினைவு தபால்தலை
ராணி வேலு நாச்சியார் நினைவு தபால் தலை இந்திய அரசால் 31 டிசம்பர் 2008 அன்று வெளியிடப்பட்டது.
சிவகங்கைச் சீமை வாரிசுகள்
1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3. 1780 - 1790 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4. 1790 - 1793 - வெள்ளச்சி நாச்சியார் வேலு நாச்சியார் மகள்
5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையனத் தேவர் வேங்கை பெரிய உடையனத் தேவர் வெள்ளச்சி நாச்சியார் கணவர்
5. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்
6. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்
7. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்
8. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்
9. 1848 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்
10. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
11. 1877 - முத்துவடுகநாதத்தேவர்
12. 1878 - 1883 - துரைசிங்கராஜா
13. 1883 - 1898 - து. உடையணராஜா
1892-ஆம் ஆண்டு ஜமின்தார் முறை ஒழிக்கப்பட்டு பிரிட்டிஷ் கலெக்டர் நியமிக்கப்பட்டார். ஜே.எப். பிரையன்ட் முதல் கலெக்டர் ஆவார்.
1910-ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மதுரை, திருநெல்வேலியின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ராமநாதபுரம் ராமநாடு என அழைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பின் 1985-ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி ராமநாதபுரம் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
பாளையக்காரர்கள்
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்
சிவகங்கை மாவட்ட நபர்கள்
1796 இறப்புகள்
இந்திய அரச குடும்பப் பெண்கள்
இந்தியப் புரட்சியாளர்கள்
1730 பிறப்புகள்
சிவகங்கைச் சீமை
|
5225
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D
|
நாள்
|
நாள் (day) என்பது காலம் அல்லது நேரத்தின் ஓர் அலகாகும். பொது வழக்கில் இது 24 மணி நேர கால இடைவெளியை அல்லது வானியல் நாளை, அதாவது சூரியன் தொடுவானில் அடுத்தடுத்து தோன்றும் தொடர் கால இடைவெளியைக் குறிக்கும். புவி, சூரியனைச் சார்ந்து தன்னைத் தானே ஒரு முறை சுற்றிக் கொள்ளும் கால இடைவெளி சூரிய நாள் எனப்படும். இந்தப் பொதுக் கருத்துப்படிமத்துக்குச் சூழல், தேவை, வசதி என்பவற்றைப் பொறுத்து பல வரையறைகள் பயன்படுகின்றன. 1960 இல் நொடி மீள புவியின் வட்டணை இயக்கத்தை வைத்து வரையறுக்கப்பட்டது. இது காலத்துக்கான பன்னாட்டுச் செந்தர அலகுகள் முறையின் அடிப்படை அலகாகக் கொள்ளப்பட்டது. எனவே அப்போது "நாள்" எனும் கால அலகும் 86,400 (SI) நொடிகளாக வரையறுக்கப்பட்டது. நாளின் குறியீடு d என்பதாகும். ஆனாலும் இது பன்னாட்டுச் செந்தர அலகல்ல; என்றாலும் அம்முறை இதைத் தனது பயன்பாட்டில் மட்டும் ஏற்றுக்கொண்டது. ஒருங்கிணைந்த பொது நேரப்படி, ஒரு பொது நாள் என்பது வழக்கமாக 86,400 நொடிகளோடு ஒரு பாய்ச்சல் அல்லது நெடுநொடியைக் கூட்டி அல்லது கழித்துப் பெறும் கால இடைவெளி ஆகும். சில வேளைகளில், பகலொளி சேமிப்பு நேரம் பயனில் உள்ள இடங்களில், ஒரு மணி நேரம் இத்துடன் கூட்டப்படும் அல்லது கழிக்கப்படும். மேலும் நாள் என்பது வாரத்தின் கிழமைகளில் ஒன்றையும் குறிக்கலாம் அல்லது நாட்காட்டி நாட்களில் ஒன்றையும் குறிக்கலாம். மாந்தர் உட்பட அனைத்து புவிவாழ் உயிரினங்களின் வாழ்க்கைப் பாணிகள் புவியின் சூரிய நாளையும் பகல்-இரவு சுழற்சியையும் சார்ந்தமைகிறது.
அண்மைப் பத்தாண்டுகளாக புவியின் நிரல் (சராசரி) சூரிய நாள் 86,400.002 நொடிகளாகும் நிரல் வெப்ப மண்டல ஆண்டின் நாள் 24.0000006 மணிகள் ஆகவும், ஆண்டு 365.2422 சூரிய நாட்களாகவும் அமைகிறது. வான்பொருள் வட்டணைகள் துல்லியமான சீர் வட்டத்தில் அமையாததால், அவை வட்டணையின் வெவ்வேறு இருப்புகளில் வேறுபட்ட வேகங்களில் செல்கின்றன. எனவே சூரிய நாளும் வட்டணையின் பகுதிகளில் வெவ்வேறான கால இடைவெளியுடன் அமைகின்றன. ஒரு நாள் என்பது புவி தன்னைத் தானே ஒரு முழுச்சுற்று சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவாகப் புரிந்து கொள்ளப்படுகிறது
வான்கோளப் பின்னணியில் அல்லது தொலைவாக அமையும் (நிலையானதாகக் கொள்ளப்படும்) விண்மீன் சார்ந்த ஆண்டு விண்மீன் ஆண்டு எனப்படுகிறது. இதன்படி ஒரு நாளின் கால இடைவெளி 24 மணி நேரத்தில் இருந்து 4 மணித்துளிகள் குறைவாக, அதாவது 23 மணிகளும் 56 மணித்துளிகளும் 4.1 நொடிகளுமாக அமையும். ஒரு வெப்ப மண்டல ஆண்டில் ஏறத்தாழ 366.2422 விண்மீன் நாட்கள் அமையும். இது சூரிய நாட்களின் எண்ணிக்கையை விட ஒரு விண்மீன் நாள் கூடுதலானதாகும். மேலும் ஓத முடுக்க விளைவுகளால், புவியின் சுழற்சிக் காலமும் நிலையாக அமைவதில்லை என்பதால் சூரிய நாட்களும் விண்மீன் நாட்களும் மேலும் வேறுபடுகின்றன. மற்ற கோள்களும் நிலாக்களும் புவியில் இருந்து வேறுபட்ட சூரிய, விண்மீன் நாட்களைக் கொண்டிருக்கும்.
அறிமுகம்
தற்காலத்தில் உலகம் முழுதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நாள் என்பது புவி சூரியனைச் சார்ந்து தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு எடுக்கும் நேரமாகும். நாள் என்பது அனைத்துப் பண்பாடுகளிலும் ஒரே சொல்லால் குறிப்பிடப்பட்டாலும், அப்பண்பாடுகளில் பின்பற்றப்படும் வெவ்வேறு காலக் கணிப்பு முறைகளுக்கு இடையில் இது சில கூறுபாடுகளிலும் அளவிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது.
நாள் கணிப்பதற்கான அடிப்படைகள்,
நாளுக்குரிய கால அளவு,
நாளின் தொடக்கமும் முடிவும்,
நாளுக்கான பகுப்புசார் அலகுகள்
நாட் பெயர்கள்
என்பன, இவ்வாறு வேறுபடுகின்ற கூறுபாடுகளில் குறிப்பிடத்தக்கவை.
நாள் 24 மணி (86 400 நொடி) கால அளவைத் தவிர, புவியின் தன் அச்சில் சுழல்வதைக் கொண்டு வேறு பல கால அளவுகளையும் குறிக்கப் பயன்படுகிறது. இதில் முதன்மையானது சூரிய நாளாகும். சூரிய நாள் என்பது அடுத்தடுத்து வான் உச்சிக்கு வர எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். ஏனெனில், புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதோடு சூரியனையும் நீள்வட்ட வட்டணையில் சுற்றிவருவதால், இந்தக் கால அளவு ஆண்டின் நிரல் நேரமாகிய 24 மணி (86 400 நொடி) நேரத்தை விட 7.9 நொடி கூடுதலாகவோ குறைவாகவோ அமையும்.
பகல் நேரம் இரவு நேரத்தில் இருந்து பிரித்து, பொதுவாக சூரிய ஒளி நேரடியாக தரையை அடைகிற கால இடைவெளியாக வரையறுக்கப்படுகிறது. பகல்நேர நிரல் அளவு 24 மணி நேர அளவில் பாதியினும் கூடுதலாக அமைகிறது. இரு விளைவுகள் பகல் நேரத்தை இரவு நேரத்தை விட கூடுதலாக அமையும்படி மாற்றுகின்றன. சூரியன் ஒரு புள்ளியல்ல; மாற்றாக, அதன் தோற்ற உருவளவு ஏறத்தாழ 32 வட்டவில் துளிகள் ஆகும். மேலும், வளிமண்டலம் சூரிய ஒளியை ஒளிவிலகல் அடையச் செய்கிறது. இதனால் சூரிய ஒளியின் ஒரு பகுதி 34 வட்டவில் துளிகளுக்கு முன்னரே, சூரியன் தொடுவனத்துக்கு அடியில் இருக்கும்போதே, பவித் தரையை வந்தடைகிறது. எனவே முதல் ஒளி சூரிய மையம் தொடுவான அடியில் உள்ளபோதே 50 வட்டவில் துளிகளுக்கு முன்னமே புவித்தரையை அடைகிறது. இந்த நேர வேறுபாடு சூரியன் எழும்/விழும் கோண அலவைச் சார்ந்தமைகிறது. இந்தக் கோணம் புவியின் அகலாங்கைச் சார்ந்த்தாகும். என்றாலும் இந்நேர வேறுபாடு ஏழு மணித்துளிகள் ஆகும்.
பண்டைய வழக்கப்படி, புதிய நாள் களத் தொடுவானில் நிகழும் கதிரெழுச்சியிலோ கதிர்மறைவிலோ தொடங்குவதாகும் (நாள் கதிர்மறைவில் தொடங்கி 24 மணி நேரம் வரை நீடிப்பது இத்தாலிய மரபாகும். இது ஒரு மிகப்பழைய பாணியாகும்). இரு கதிரெழுச்சிகளும் இருகதிர்மறைவுகளும் தோன்றும் கணமும் அவற்ரிடையே அமையும் கால இடைவெளியும் புவிப்பரப்பு இருப்பிடத்தையும் அவ்விடத்தின் நெட்டாங்கையும் அகலாங்கையும் பண்டைய அரைக்கோள சூரியக் கடிகை காடும் ஆண்டினிருப்பு நேரத்தையும் பொறுத்ததாகும்.
மேலும் நிலையான நாளை, சூரியன் கள நெட்டாங்கைக் கடந்து செல்லும் கணத்தைச் சார்ந்து வரையறுக்கலாம். இது கள மதியம் அல்லது மேற்புற உச்சிவேளையாகவோ நள்ளிரவாகவோ (அடிப்புற உச்சிவேளையாகவோ) அமைகிறது. அப்படி சூரியன் கடக்கும் சரியான கணம் புவிப்பரப்பு இருப்பிட்த்தின் நெட்டாங்கையும் ஓரளவுக்கு ஆண்டின் நிகழிருப்பையும் பொறுத்தது. இத்தகைய நாளின் கால இடைவெளி, ஏறக்குறைய 30 நொடிகள் கூட்டிய அல்லது கழித்த 24 மணியாக மாறாமல் நிலையாக அமையும். இது நிகழ்கால சூரியக் கடிகைகள் காட்டும் நேரமே ஆகும்.
மேலும் துல்லியமான வரையறைக்கு, புனைவான நிரல் சூரியன், வான்கோள நடுவரை ஊடாக நிலையான உண்மைச் சூரிய வேகத்தோடு இயங்குவதாகக் கொள்ளப்படுகிறது; இக்கருதுகோளில் சூரியனைச் சுற்றித் தன் வட்டணையில் புவி சுற்றும்போது அதன் விரைவாலும் அச்சு சாய்வாலும் உருவாகும் வேறுபாடுகள் நீக்கப்படுகின்றன.
கால அடைவில், புவி நாள் அளவு நீண்டுகொண்டே வருகிறது. இது புவியை ஒரே முகத்துடன் சுற்றிவரும் நிலாவின் ஓத ஈர்ப்பால் புவியின் சுழற்சி வேகம் குறைவதால் ஏற்படுகிறது. நொடியின் வரையறைப்படி, இன்றைய புவி நாளின் கால இடைவெளி ஏறத்தாழ 86 400.002 நொடிகளாகும்; இது ஒரு நூற்றாண்டுக்கு 1.7 மில்லிநொடிகள் வீதத்தில் கூடிவருகிறது (இம்மதிப்பீடு கடந்த 2 700 ஆண்டுகளின் நிரல் மதிப்பாகும்). (விவரங்களுக்கு காண்க, ஓத முடுக்கம்.) 320 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நாளின் அளவு, மணற்கல்லின் அடுத்தடுத்துவரும் அடுக்குப்படி, ஏறத்தாழ 21.9 மணிகளாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிலாவின் தோற்றத்துக்கு முந்தைய புவி நாளின் அளவு இன்னமும் அறியப்படாததாகவே உள்ளது.
சொற்பிறப்பியல்
௳
௳ என்ற தமிழ்க் குறியீடு நாள் என்பதை குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
ஜார்ஜிய முறையில் நாள்
சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இம்முறையில் எல்லா நாட்களுமே சம அளவுள்ளவையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நாள் மணி, மணித்துளி, நொடி என உட்பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இம்முறை சார்ந்த கால அளவை வாய்ப்பாடு கீழே தரப்பட்டுள்ளது.
1 நாள் = 24 மணிகள்
1 மணி = 60 மணித்துளிகள்
1 மணித்துளி = 60 நொடிகள்
ஜார்ஜியன் முறையில் நாள் நள்ளிரவுக்குப் பின் தொடங்குகிறது. எனவே ஒரு நாள் என்பது நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையான காலமாகும். ஒவ்வொரு நாளும் ஓர் எண்ணாலும், ஒரு பெயராலும் குறிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் அது அடங்கியுள்ள மாதத்தின் எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்க, ஒன்றுக்கும் 31 க்கும் இடையில் அமைந்த ஓர் எண் பயன்படுகிறது. வாரமொன்றில் உள்ள ஏழு நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் மேற்படி வாரக் கிழமைப் பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும்.
இந்துக் கணிய (சோதிட) முறையில் நாள்
நமது பண்டைய இந்துக் (கணிய) முறையில் சூரியன் தொடுவானில் தோன்றியது முதல் மறு நாள் சூரியன் தொடுவானில் தோன்றும் வரையிலான கால இடைவெளி ஒரு நாள் ஆகும். எடுத்துக்காட்டாக, இன்று காலை 6.40க்குச் சூரியன் தொடுவானில் தோன்றினால், அடுத்த நாள் காலை 6.39க்குச் சூரியன் தொடுவானில் தோன்றினால், இந்த இடைப்பட்ட காலம் தான் ஒரு நாள் எனப்படும். அதாவது, அடுத்தடுத்த கதிரெழுச்சிகளுக்கு இடைஅயில் அமைந்த கால நெடுக்கம் நாள் எனப்படுகிறது.
முழுநாளும் (24 மணிநேரமும்) பகலும் குறித்த சொல்வளம்
முழுநாளையும் பகலையும் வேறுபடுத்த, ஆங்கிலத்தில் கிரேக்கச் சொல்லான நிச்தெமெரான் (nychthemeron) முழுநாளைக் குறிக்க பயன்படுகிறது. இச்சொல்லின் பொருள் அல்லும் பகலும் என்பதாகும். ஆனால், மக்கள் வழக்கில் முழுநாள் 24 மணியாலேயே கூறப்படுகிறது. சில மொழிகளில் பகல் எனும் சொல்லே முழுநாளையும் குறிக்கப் பய்ன்படுவதுண்டு. வேறு சில மொழிகளில் முழுநாலைக் குறிக்க தனிச் சொல் வழங்குவதுண்டு; எடுத்துகாட்டாக. பின்னிய மொழியில் vuorokausi எனும்சொல்லும் எசுதோனிய மொழியில் ööpäev எனும் சொல்லும் சுவீடிய மொழியில் dygn எனும் சொல்லும் டேனிய மொழியில் døgn எனும் சொல்லும் நார்வேயர் மொழியில் døgn எனும் சொல்லும் ஐசுலாந்து மொழியில் sólarhringurஎனும் சொல்லும் டச்சு மொழியில் etmaal எனும் சொல்லும் போலிசிய மொழியில் doba எனும் சொல்லும் உருசிய மொழியில் сутки (sutki) எனும் சொல்லும் பேலோருசிய மொழியில் суткі (sutki) எனும் சொல்லும் உக்கிரைனிய மொழியில் доба́ (doba) எனும்சொல்லும் பல்கேரிய மொழியில் денонощие எனும் சொல்லும் எபிரேய மொழியில் יממה எனும் சொல்லும் தாழிக் மொழியில்шабонарӯз எனும் சொல்லும் தமிழில் நாள் எனும் சொல்லும் பயன்பாட்டில் உள்ளன. இத்தாலிய மொழியில், கியோர்னோ (giorno) எனும் சொல் முழுநாளையும் தி (dì) எனும் சொல் பகலையும் குறிக்கப் பயன்படுகிறது. பண்டைய இந்தியாவில் முழுநாளைக் குறிக்க, அகோரத்ரா (Ahoratra) எனும் சொல் பயன்பட்டது.
நள்ளிரவு சூரியன்
சூரியன் உதிக்கும் நேரத்தை வைத்து நாள் கணக்கிடப்படும்போது, நள்ளிரவுச் சூரியன் தெரியும் புவிமுனைசார் இடங்களில், ஒரு நாளின் கால இடைவெளி 24 மணிகளையும் விஞ்சி, பல மாதங்கள் கூட எடுத்துக்கொள்ளும்.
மேலும் காண்க
கிழமை
மாதம்
ஆண்டு
நேர வலயம்
இந்துக் காலக் கணிப்பு முறை
தமிழர் பருவ காலங்கள்
தமிழ் மாதங்கள்
தமிழ் வருடங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
காலம்
கால அளவுகள்
|
5227
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
ஊர் ஒன்றியம்
|
புகலிடத் தமிழர் தாங்கள் வந்த ஊர் அடிப்படையிலும் வாழும் ஊர் அடிப்படையிலும் ஊர் ஒன்றியங்களை உருவாக்கி செயல்படுகின்றார்கள். இவ் அமைப்புக்கள் பழைய உறவுகளை மீள் கட்டமைப்பதிலும், புதிதாக இணைப்புக்களை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தாயகத்தில் இருக்கும் மக்களுடன் தொடர்புகளை பேணுவதிலும், தேவையேற்படின் உதவிகளை பரிமாறி கொள்வதற்கும் இவ் ஒன்றியங்கள் வழிசெய்கின்றன. தேசிய பாரிய அமைப்புக்களிலும் பார்க்க ஊர் ஒன்றியங்களின் செயல்பாடுகள் நேரடியான செயல்பாட்டுக்கு வழி செய்கின்றன. இவ் ஊர் ஒன்றியங்களின் செயல்பாட்டில் ஒரு முக்கிய அம்சம் ஊர் ஒன்றுகூடல்கள் ஆகும்.
தோற்றம்
ஆரம்பத்தில் அனைத்து புகலிடத் தமிழர்களும் தமிழர் என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள். குறிப்பாக தமிழ்ச் சங்கங்கள் தாங்கள் வசிக்கும் பிரதேசத்தில் இருக்கும் தமிழ் மக்களை இணைக்கும் நோக்கில் செயற்பட்டார்கள். நாளடைவில் மக்கள் தொகை பெருகியதால் நெருகிய தொடர்பிலான அமைப்புக்கள் தோன்றின. இவற்றுள் தொழில், ஈடுபாடுகள், அரசியல், ஊர் அடைப்படையிலான அமைப்புகள் அடங்கும்.
தொலைத்தொடர்பு, இணையம், போக்குவரத்து வசதிகள் இவ்வூர் ஒன்றியங்களின் தோற்றத்துக்கும் பேணலுக்கும் முக்கியம். இந் தொழிநுட்பங்கள் வளர்ச்சியடையாத காலகட்டங்களில் ஏற்பட்ட புலப்பெயர்வுகள் ஊர் அடிப்படையிலான ஒன்றியங்களை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர் சார் ஒன்றியங்கள் தமிழ் மக்களுக்கு தனித்துவமானது அல்ல. சீன, யப்பானிய, மற்றும் பிற இன மக்களும் ஊர் அடிப்படையிலான அமைப்புக்களை கொண்டிருக்கின்றார்கள்.
கட்டமைப்பு
ஊர் ஒன்றியம் அவ் ஊர் சார்ந்த குடும்பங்களை, தனி நபர்களை உறுப்பினர்களாக கொண்டடிருக்கின்றன. இவ் உறுப்பினர்களின் பொருளாதார பங்களிப்பின் மூலமே ஒன்றியத்தின் செயல் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவ் ஒன்றியங்கள் ஒரு இலகிய நட்பின் அல்லது உறவின் அடிப்படையிலான கட்டமைப்பையே பேணுகின்றன. எனினும், சில பெரிய ஊர்களின் அல்லது சீரிய செயல்பாட்டு நோக்கங்கள் கொண்டிருக்கும் ஊர் அமைப்புகள் சீரிய அல்லது பலக்கிய கட்டமைப்புக்களை பேணுகின்றன. பொதுவாக, தலைவர், உப தலைவர், செயலாளர், பொருளாளர், தொடர்பாளார்கள், தொண்டர்கள் ஆகியோரை கொண்ட ஒருங்கிணைப்பு மன்றம் ஊர் ஒன்றியத்தின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும்.
செயல்பாடுகள்
ஊர் ஒன்றியங்களின் செயல்பாடுகள் ஆறு முனைகளில் அமைகின்றது எனலாம்:
ஒன்றிய நிர்வாகம்
தாயக உதவி
ஒன்றுகூடல்
தொடர்பாடல்
பொது வாழ்வியல்நீரோட்ட இணைப்பு
பண்பாடு பேணல்
சமூக தாக்கம்
ஊர் ஒன்றியங்கள் வந்த இடத்துக்கும் வாழும் இடத்துக்கும் இருக்கும் இடைவெளியில் இயங்குகின்றன. இவற்றின் செயற்பாடுகள் வந்த இடத்துகான பாலமாக அமைந்தாலும், வாழும் இடத்துடன் இணைப்புக்களை இறுக பேணும் படியாகவும் செயல்படவேண்டும். இவற்றின் தாக்கங்கள் புலம்பெயர்ந்தவர்களையும், ஊர் மக்களையும் சென்றடைகின்றன. பல வழிகளில் புகலிட ஊர் ஒன்றியங்கள் ஊர் மக்களின் நலன்களுக்கு உதவிகளை அளித்தாலும், புலம்பெயர்ந்தவர்களின் ஆவல்கள் ஊர் மக்களின் நேரடி தேவைகளுடன் ஒன்றியமையாமலும் அமைவதுண்டு, குறிப்பாக அரசியல் நிலைப்பாடுகளில்.
பல்லினப்பண்பாட்டு, உலகமய, தேசிய சக்திகளின் மத்தியில் ஊர் ஒன்றியங்கள் கீழே இருந்து மேலே நோக்கும் அமைப்புக்களாக இயங்குகின்றன. இவற்றின் செயல்பாடுகள் பரந்த அமைப்புகளுக்கு கிடைக்ககூடிய வலுவை அல்லது ஆதரவை சிதைக்ககூடிய போக்குக்களையும் கொண்டுள்ளன. அதேவேளை பரந்த அமைப்புக்களுடன் கூட்டாக கூடிய செயல்வலுவுடன் இணைந்து செயலாற்றும் தன்மையையும் கொண்டுள்ளன.
துணை நூல்கள்
வெளி இணைப்புகள்
புகலிட ஈழத்தமிழர்
தமிழர் ஊர் ஒன்றியங்கள்
|
5228
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
|
கொச்சி
|
கொச்சி (Kochi) () இதனை கொச்சின் (Cochin) என்றும் அழைப்பர். ( ), தென்னிந்தியாவின் மலபார் பிரதேசத்தில் அமைந்த கேரளா மாநிலத்தின் மலபார் கடற்கரையில் அமைந்த பெரிய துறைமுக நகரம் ஆகும். எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்த கொச்சி நகரம், கேரளாவின் மக்கள்தொகை அடர்த்தி மிக்க பெருநகரம் ஆகும்.
2011-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 94.88 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கொச்சி மாநகராட்சியின் மக்கள்தொகை 6,77,381 ஆகும். கொச்சி நகரம் பெருநகர கொச்சி வளர்ச்சிப் பகுதியின் ஒரு பகுதியாகும்.
கொச்சி மாநகராட்சி 1967-இல் நிறுவப்பட்டது.
கிபி 14-ஆம் நூற்றாண்டு முதல் அரேபிய, ஐரோப்பிய நாடுகளுக்கு கொச்சி துறைமுகத்திலிருந்து நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதால் கொச்சியை அரபுக் கடலின் இராணி என அழைப்பர்.
கிபி 1503-இல் கொச்சியை போர்த்துகேயர்கள் (1503–1663) கைப்பற்றினர். பின்னர் டச்சுக்காரர்கள் (1663–1795) கொச்சி நகரத்தைக் கைப்பற்றினர். 1795-இல் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியினர், கொச்சி இராச்சியத்தை கைப்பற்றி, தங்களது அதிகாரத்திற்குட்பட்ட சுதேச சமஸ்தானமாக ஆக்கினர்.
கேரளாவின் மிகப்பெரிய பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வானூர்தி முனையமாக கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் விளங்குகிறது. இந்தியாவின் ஆறு சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக கொச்சி விளங்குகிறது. இந்தியாவின் பன்னாட்டுத் துறைமுகங்களில் கொச்சி துறைமுகம் ஒன்றாகும்.
கேரளாவின் பெரும் நிதி மற்றும் வணிக மையமாக கொச்சி நகரம் விளங்குகிறது. and industrial
கேரளா மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கொச்சி நகரம் பெரும் பங்கு வகிக்கிறது.
இந்தியக் கடற்படையின் தென்மண்டலக் கட்டளை மையம் மற்றும் தலைமையிடம் கொச்சியில் உள்ளது.
இந்தியக் கடலோரக் காவல்படையின் தென் மண்டல அலுவலகம் கொச்சியில் இயங்குகிறது.
கொச்சியில் இந்திய பங்குச் சந்தை நிறுவனத்தின் கிளை உள்ளது. கொச்சியில் கொச்சி பங்குச் சந்தை, பன்னாட்டு மிளகு வணிக மையம், தென்னை வளர்ச்சிக் கழகம், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மையம், திருவாங்கூர் உரம் மற்றும் வேதியியல் தொழிற்சாலை, இந்துஸ்தான் இயந்திரக் உபகரணங்கள் (HMT), அப்போல்லா டயர்ஸ், பெட்ரோ-கெமிக்கல் தொழிற்சாலைகள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுனங்கள், கொச்சி கப்பல் கட்டும் தளம், போன்ற பல தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு கொச்சி உயர் நீதிமன்றம் உள்ளதுடன், சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளதுடன், சீர்மிகு நகரம் என்ற தகுதியும் கொச்சி நகரம் பெற்றுள்ளது. மேலும் இந்நகரத்தில் சங்கராச்சாரியார் பல்கலைக்கழகம், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் மற்றும் கொச்சி தேசியச் சட்டப் பள்ளிகள் உள்ளது.
பெயர் வரலாறு
கொச்சி முதன் முதலில் மலபாரில் உள்ள பொன்னானி வட்டடத்தில் உள்ள கிராமத்தினையொட்டி பெரும்படப்பு நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னர் 1341ல் துறைமுகம் உருவானபோது இதன் பெயர் கொச்சி என்றழைக்கப்படலாயிற்று.
கொச்சி யூதர்கள் தங்களது வழிபாட்டுத் தலத்தில் கொச்சியை கொகின் ("Kogin" () என்றே தங்களது முத்திரையில் குறித்துள்ளனர்..
கொச்சி என்ற சொல்லிற்கு மலையாள மொழியில் கொச்சு ஆழி ( kochu azhi) என்பதற்கு சிறிய கடற்காயல் எனப்பொருளாகும். மேலும் மலையாள மொழியில் கச்சி என்பதற்கு துறைமுகம் என்று பொருளாகும்.
15-ஆம் நூற்றாண்டின் இத்தாலிய கடலோடி நிக்கோலோ கோண்டி மற்றும் 17-ஆம் நூற்றாண்டின் பிரா போலின் என்ற கடலோடிகள், ஆற்று நீர் கடற்காயல்களில் கலந்து பின் கடலில் கலப்பதால், இந்நகரத்தை கொச்சி (Kochchi) என்று அழைத்தனர். போர்த்துகேயர்களும், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களும் இந்நகரத்தை கொச்சின் என்று அழைத்தனர். பின்னர் கேரளா அரசினர் 1996-இல் கொச்சின் என்பதை கொச்சி என்று பெயர் மாற்றம் செய்தனர்.
வரலாறு
கிபி 12-ஆம் நூற்றாண்டில் கொச்சி இராச்சியம் நிறுவப்பட்டது. கிபி 1500-இல் போர்த்துகேயர்கள் கொச்சியில் வணிக மையத்தை நிறுவினர்.
போர்த்துகேய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொச்சியில் கோட்டை கட்டிக்கொண்டு, 1503 முதல் 1663 கொச்சியை ஆண்டனர். புலம்பெயர்ந்த கொச்சி யூதர்கள், புனித தாமஸ் கிறித்தவர்கள் மற்றும் சிரியாக் கிறித்துவர்கள் புலம்பெயர்ந்து கொச்சியில் வாழ்ந்தனர். கொச்சியில் வாஸ்கோ ட காமா]வின் கல்லறை கொச்சியில் இருந்தது. பின்னர் 1539-இல் போர்த்துகல்லுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
போர்த்துகேயர்களிடமிருந்து இடச்சுக்காரர்கள் கொச்சி நகரத்தையும், கோட்டையையும் கைப்பற்றி, கோட்டைக்கு இம்மானுவேல் கோட்டை எனப்பெயரிட்டனர். அதே நேரத்தில் கொச்சி இராச்சிய அரச குடும்பத்தினர், தங்களது வசிப்படத்தை திருச்சூருக்கு மாற்றிக் கொண்டனர்.
1664-இல் இடாச்சுக்காரர்கள் கொச்சி நகராட்சி மன்றத்தை நிறுவினர். 1773-இல் மைசூர் இராச்சியத்தின் ஆட்சியாளர் ஐதர் அலி தனது ஆட்சிப் பகுதியை மலபார் பிரதேசம் வரை விரிவுபடுத்தினார். இதனால் கொச்சி இராச்சியத்தினர் ஐதர் அலிக்கு திறை]] செலுத்த வேண்டியதாயிற்று.
1814-இல் ஐக்கிய இராச்சியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, இடாச்சுக்காரர்கள் கொச்சியை பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியிடம ஒப்படைத்தனர். 1883-இல் ஆங்கிலேயர்கள் மீண்டும் கொச்சிக் கோட்டையில் நகராட்சி மன்றத்தை நிறுவினர்.
1870-கொச்சி இராச்சியத்தின் தலைமையிடம் கொச்சி புறநகரத்தில் உள்ள திருப்பூணித்துறைக்கு மாற்றப்பட்டது.
1910-இல் எர்ணாகுளம், கொச்சி இராச்சியத்தின் நிர்வாகத் தலைமையிடமானது.
1925-இல் கொச்சி சட்டமன்றம் நிறுவப்பட்டது. ஆங்கிலேயர்கள் கொச்சியில் பெரும் துறைமுகத்தை நிறுவினர்.
1947-இல் இந்தியா விடுதலையின் போது, கொச்சி இராச்சியம் இந்தியாவுடன் இணைந்தது.
1949-இல் கொச்சி இராச்சியம் மற்றும் திருவிதாங்கூர் இராச்சியப் பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டது. 1949 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னர் திருவிதாங்கூர் - கொச்சி இராச்சியத்திற்கு தலைமை வகித்தார். பின்னர் திருவிதாங்கூர் - கொச்சிப் பகுதிகள் இணைந்து பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாக மலபார் மாவட்டமாக விளங்கியது.
1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி மொழிவாரியாக மாநிலங்களை பிரிவினை செய்த போது, மலையாள மொழி பேசிய மலபார் பிரதேசம், கொச்சி இராச்சியப் பகுதிகள் மற்றும் திருவிதாங்கூர் இராச்சியப் பகுதிகளைக் கொண்டு கேரளா மாநிலம் நிறுவப்பட்டது.
1 நவம்பர் 1967-இல் கொச்சி மாநகராட்சி நிறுவப்பட்டது.
பழைய கொச்சி இராச்சியத்தின் பெரும் பகுதிகளைக் கொண்டு 1 ஏப்ரல் 1958-இல் எர்ணாகுளம் மாவட்டம் நிறுவப்பட்டது.
புவியியல் மற்றும் தட்பவெப்பம்
புவியியல்
இந்தியாவின் தென்மேற்கு மலபார் கடற்கரையில் அமைந்த கொச்சி நகரத்திற்கு மேற்கில் அரபுக் கடல் உள்ளது. கொச்சி நகரம் பாகையில் உள்ளது. கொச்சி மாநகராட்சியின் பரப்பளவு
94.88 km2 (36.63 sq mi) ஆகும்.
தற்போதைய கொச்சி மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் எர்ணாகுளம், கொச்சிக் கோட்டை, எடப்பள்ளி, கலாம்சேரி, திருப்புனித்துறை மற்றும் கக்கநாட்டுப் பகுதிகள் உள்ளது.
கொச்சியின் நீர் ஆதாரங்களாக பெரியாறு மற்றும் மூவாட்டுப்புழா ஆறுகள் உள்ளது.
தட்பவெப்பம்
கோடக் காலத்திய குறைந்த வெப்பம் ஆகவும்; உயர்ந்த வெப்பம் ஆகவும் உள்ளது.
சூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவ மழை பொழிகிறது.
ஆண்டு சராசரி மழைப் பொழிவு ஆகவுள்ளது.
நிர்வாகம்
கொச்சி மாநகராட்சி மன்றம் நகரத்தின் தூய்மைப் பணிகளை மேற்கொள்கிறது.
கொச்சி மாநகராட்சிக்கு 74 வார்டு உறுப்பினர்களும், மேயர் மற்றும் துணை மேயர் உள்ளனர்.
அரசியல்
எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் கொச்சி நகரம் அமைந்துள்ளது.
கொச்சி மாநகராட்சி மற்றும் விரிவாக்கப் பகுதிகளான கொச்சி, எர்ணாகுளம், திருப்புனித்துறை, திருக்காரகாரா மற்றும் கலாம்சேரி சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து கேரளா சட்டமன்றத்திற்கு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
பொருளாதாரம்
கேரளாவில் கொச்சி நகரம், நிதி மற்றும் வணிகத் துறையில் தலைமையிடமாக உள்ளது. இந்தியப் பங்குச் சந்தை மற்றும் செபியின் கிளைகள் கொச்சியில் உள்ளது.
கொச்சி துறைமுகம், பன்னாட்டு வணிக மற்றும் நிதி நிறுவனங்கள், ஆழ்கடல் மீன் பிடித்தொழில் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.கேரள மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கொச்சி 41.74% பங்கு வகிக்கிறது.
எர்ணாகுளம் மாவட்டத்தின் கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறையில் கொச்சி நகரம் 37% பங்கு வகிக்கிறது. மற்றும் மாவட்ட வணிகம், சுற்றுலா மற்றும் தங்கும் விடுதிகள் வளர்ச்சியில் 20% பங்கு வகிக்கிறது.
கொச்சியின் முக்கியப் பெருந்தொழில்கள் கப்பல் கட்டுதல், வீட்டு மனை கட்டுமானத் தொழில், கடல்சார் உணவுகள் பதப்படுத்துதல் மற்றும் நறுமணப் பொருட்களை ஏற்றுமதி செய்தல் ஆகும். மேலும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையில் பெரும்பணம் ஈட்டுகிறது.
வெளிநாட்டு வாழ் மலையாளிகளின் வெளிநாட்டுப் பணம் இம்மாவட்டத்தின் முக்கிய வருவாயின் ஒரு பகுதியாக உள்ளது.
போக்குவரத்து
வானூர்தி நிலையங்கள்
கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்,கொச்சி நகரத்திலிருந்து 28 கிமி தொலைவில் உள்ள நெடும்பச்சேரியில் உள்ளது. இங்கிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வானூர்திகள் இயக்கப்படுகிறது.
சாலைப் போக்குவரத்து
வடக்கு-தெற்கே செல்லும் நெடுஞ்சாலைகள் மற்றும் கிழக்கு-மேற்கே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் கொச்சி நகரத்தினை மாநிலத்தின் பிறநகரங்கள் மற்றும் வெளி மாநில நகரங்களுடன் பேருந்துகள் இணைக்கிறது.
இருப்புப் பாதை
6 நடைமேடைகள் கொண்ட எறணாகுளச் சந்திப்பு வழியாக தொடருந்துகள் மூலம் மாநிலத்தின் பிற நகரங்கள் மற்றும் வெளி மாநில நகரங்களுடன் கொச்சி நகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ இரயில்கள்
அதி விரைவுப் போக்குவரத்திற்கு கொச்சி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுகிறது.
மக்கள் தொகை பரம்பல்
கொச்சி நகத்தில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 7139 பேர் வாழ்கின்றனர். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொச்சி மாநகர மக்கள்தொகை 21,17,990 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1028 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 97.5% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 47%, கிறித்தவர்கள் 35%, இசுலாமியர்கள் 17% உள்ளனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
(Government of Kerala)
(Government of India)
The Story of India: South India, Cochin, BBC
கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
கேரளாவிலுள்ள மாநகரங்கள்
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்
கொச்சி
|
5252
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE
|
கே. வி. சுப்பண்ணா
|
கே.வி.சுப்பண்ணா (K.V.Subbanna) (1932 - 2005) என்று அழைக்கப்படும் சுப்பண்ணாவின் முழுப்பெயர் குண்டகோடு விபூதி சுப்பண்ணா. இவர் ஒரு நாடகாசிரியர், கன்னட மொழியில் மிகவும் மதிக்கப்படும் எழுத்தாளர், பதிப்பாசிரியர். சுப்பண்ணா 1949இல் ஹெக்கோடு கிராமத்தில், துவக்கி வைத்த நீலகண்டேஷவர நாடக சமஸ்தே என்ற நீநாசம், உலகில் மிகவும் புகழ்பெற்ற நாடகப் பள்ளி. கன்னட நாடகக்கலைக்கும் மற்ற பிற நிகழ்த்துக் கலைக்கும் புத்துயிர் அளிக்கும் வண்ணம் செயல்பட்டவர் சுப்பண்ணா. இவருடைய கலைப்பணிக்காக ரேமொன் மக்ஸசே விருது வழங்கப்பட்டது.
ஷேக்ஸ்பியர், மொலியே, ப்ரெஹ்ட் போன்ற புகழ்பெற்ற நாடகாசிரியர்களின் படைப்புகளை கன்னட நாடகங்களாக அரங்கேற்றி மக்களுக்கு உலகின் சிறந்த நாடகங்களை நிகழ்த்திக் காட்டினார். பல கன்னட எழுத்தாளர்களையும் நாடகாசிரியர்களையும் ஊக்குவித்தது நீநாசம். அரசின் உதவியோடும் மற்ற உதவி நிறுவனங்கள் மூலமும் உதவி பெற்று, சிறந்த அரங்கு ஒன்றினை ஹெக்கோட்டில் கட்டினார் சுப்பண்ணா. மக்களின் ஆதரவு இவருக்கு மிக்க அதிகமாகவே இருந்தது. நாடகம் மட்டுமன்றி சிறந்த திரைப்படங்களையும் அரங்கேற்றினார். நீநாசம் மூலம் உலகின் சிறந்த கலைப்படைப்புகளை மக்களுக்கு கொண்டு சென்றதோடில்லாமல் மக்களின் கலையறிவு வளர்க்க பல வகுப்புகளையும் நடத்தினார்.
கன்னடத்தில் சிறந்த நாடக இலக்கிய வளர்ச்சிக்காக, அக்ஷர ப்ரக்ஷனா என்ற புத்தக பதிப்பு நிறுவனம் ஒன்றினையும் நிறுவினார்.
வெளி இணைப்புகள்
சுப்பண்ணாவின் மறைவின் போது வெங்கட் சாமிநாதன் எழுதிய இரங்கல் உரை
சுப்பண்ணா பற்றி நஞ்சுண்டன் காலச்சுவடில் எழுதிய கட்டுரை
தி ஹிந்து நாளிதழில் சுப்பண்ணா பற்றிய கட்டுரை
ரேமொன் மக்ஸசே விருது அமைப்பின் சுப்பண்ணா பற்றிய குறிப்பு
எழுத்தாளர் உமா மஹாதேவன் தாஸ்குப்தா, சுப்பண்ணாவின் மறைவின் போது எழுதிய இரங்கல் கட்டுரை
கன்னட எழுத்தாளர்கள்
நாடகாசிரியர்கள்
1932 பிறப்புகள்
2005 இறப்புகள்
ரமோன் மக்சேசே விருது பெற்றோர்
சிவமொக்கா மாவட்ட நபர்கள்
பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
|
5254
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF
|
நாடி
|
நாடி என்பதும் நாழி, நாழிகை என்பதும் இந்திய துணைக்கண்டத்தில் பழங்காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கால அலகு ஆகும். ஒரு நாள் 60 நாடிகளாகப் (நாழிகைகளாகப்) பகுக்கப்பட்டுள்ளது. நாடி மேலும் 60 உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படும். இந்த ஒவ்வொரு உட்பிரிவும் விநாடி அல்லது நொடி எனப்படும்.
தற்போது எங்கும் வழக்கிலுள்ள கால அளவுக் கணக்கில் ஒரு நாள் 24 மணி நேரம் கொண்டதாகும். இது 1440 (= 24 X 60) நிமிடங்களுக்குச் சமன். எனவே ஒரு நாடி அல்லது நாழிகை என்பது 24 (24 X 60 / 60) நிமிடங்கள் கொண்டதாகும். மேற்கத்திய முறைகள் அறிமுகப் படுத்தப்படும் முன் நாடி, விநாடி அலகுகளே இந்தியாவிலும், இலங்கை போன்ற அண்டை நாடுகளிலும் வழங்கி வந்தன. இன்றும் சோதிடம் முதலிய மரபு சார்ந்த துறைகளில் (திருமணம், குழந்தைப் பிறப்பு, இறந்தார் சடங்கு) நேரத்தைக்குறிக்க இவ்வலகு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
நாடி என்பதற்குப் பொருள்:
"நாடிநாழிகை நரம்பாம்" - "கடிகை நாழிகையே" - சூடாமணி நிகண்டு.
ஆக நாடி என்பதற்கு நரம்பு என்றொரு பொருள் உண்டு.
கால அளவுகள்
|
5256
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
கலைகள்
|
கற்றற்கு உரியவை எல்லாம் கலைகள். இது தமிழில் கலை என்பதற்கு தரப்படும் ஒரு பொது வரையறை. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொற்றாடலிலும் இப்பொருளே வழங்குவதே காணலாம். எனினும் "உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவிய முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும்" என்று தமிழ் அறிஞர் மு. வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய 'கற்றற்கு உரியவை எல்லாம் கலை' என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.
இவற்றையும் பார்க்க
கலை
கலை வரலாறு
கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்
வெளி இணைப்புகள்
– A look at how general economic principles govern the arts.
கலைகள்
கலை தொடர்பான பட்டியல்கள்
பண்பாடு
|
5266
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
|
அடூர் கோபாலகிருஷ்ணன்
|
அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, பிறப்பு: 1942 ஆம் ஆண்டு சூலை மாதம் 3ம் தேதி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த விருதுகளான பத்மஸ்ரீ விருது 1983ஆம் ஆண்டிலும் பத்ம விபூசன் விருது 2006 இலும் இவருக்கு வழங்கப்பட்டன.
படைப்புகள்
திரைப்படங்கள்
நிழல்குத்து (2002)
கதாபுருஷன் (1996)
விதேயன் (1994)
மதிலுகள் (1990)
அனந்தரம் (1987)
முகாமுகம் (1984)
எலிப்பத்தாயம் (1981)
கொடியெட்டம் (1977)
சுயம்வரம் (1972)
ஆவணப் படங்கள் / குறும்படங்கள்
கலாமண்டலம் ராமன்குட்டி நாயர் (2005)
கலாமண்டலம் கோபி (1999)
சோழப் பாரம்பரியம் (1980)
யக்ஷகானம் (1979)
Past in Perspective (1975)
குரு செங்கனூர் (1974)
Towards National STD (1969)
And Man Created (1968)
Danger at Your Doorstep (1968)
The Myth (1967)
A Great Day (1965)
புத்தகங்கள்
சினிமாவின் உலகம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : மீரா கதிரவன். மலையாளத்தில், சினிமாயுடே லோகம் என்று வெளிவந்து 1983ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற புத்தகம்)
நிர்மால்யம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : மீரா கதிரவன்)
எலிபத்தாயம்'' (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : சுந்தர ராமசாமி)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
அடூரின் நிழல்குத்து திரைப்படம் பற்றி காலச்சுவடு இதழில் தியோடர் பாஸ்கரன் எழுதிய கட்டுரை
கெயாஸ்மேக் என்ற திரைப்பட இதழில் அடூர் பற்றிய குறிப்பு
ஐஎம்டிபி தளத்தின் அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றிய செய்திகள்
அடூர் கோபாலகிருஷ்ணன் தாதா சாகேப் பால்கே விருது பெற்றது குறித்த பி.பி.சி. தமிழ் வானொலிக் குறிப்பு
கீற்று இதழில் சிகரங்களைத் தொட்ட அடூர் கோபாலகிருஷ்ணன் - கட்டுரை
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
1942 பிறப்புகள்
தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்
1941 பிறப்புகள்
வாழும் நபர்கள்
கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்
பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
|
5270
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
|
சத்யஜித் ராய்
|
சத்யஜித் ராய் (வங்காளம்: সত্যজিৎ রায়) , (Satyajit Ray, மே 2, 1921 - ஏப்ரல் 23, 1992) இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தில் பிறந்த, ஓர் உலகப் புகழ்பெற்ற திரைப்பட மேதை. இவர் ஒரு திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மையைக் கொண்டவர். திரைப்படம், ஆவணப்படம், குறும்படம் உட்பட மொத்தம் 36 படங்களை இயக்கியுள்ளார். இவர் புனைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், புத்தக பதிப்பாளர், சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர், வரைபட வடிவமைப்பாளர், திரைப்பட விமர்சகர் ஆவார். வணிகம் கலைஞராக கலைத் துறையில் அறிமுகமானாலும், இலண்டனில் பைசைக்கிள் தீவ்சு (1948) என்ற இத்தாலிய படத்தை பார்க்கும் போது பிரெஞ்சு திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான சீன் ரேனோயர் மூலம் வணிக நிறுவனம் மூலம் அல்லாத தனி நபர் திரைப்படத் தயாரிப்புக்கு ஆர்வமானார். இவருடைய பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் ஆகிய மூன்று திரைப்படங்களும் உலகப் புகழ் பெற்றவை.
ஆக்சுபோர்டு பலகலைக்கழகம் இவருக்கு கௌரவ பட்டம் வழங்கி சிறப்பித்தது. தன்னுடைய திரைப்படப் பணிக்காக 1992இல் சிறப்பு ஆஸ்கார் விருது பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்தியரும் இவரே. 1992இல் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்றார்.
இளமைக் காலம்
சத்தியசித் ராயின் 10 தலைமுறையினரை கண்டறிந்துள்ளார்கள்.
ராயின் தந்தை வழி தாத்தா உபேந்திரகிசோர் ராய் சௌத்திரி எழுத்தாளர், பதிப்பாளர், தத்துவவாதி, தொழில் முறையில்லா வானியலாளர், மேலும் 19ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் இருந்த மத சமூக இயக்கமான பிரமோ சமாச்சின் தலைவர். யு. ராய் அண்டு சன்சு என்ற பெயரில் அச்சுக்கூடம் வைத்திருந்தார், இது ராயின் வாழ்க்கைக்கு உதவியது. ராயின் தந்தை சுகுமார் ராய் விமர்சகர், விரிவுரையாளர், வங்காள மொழி எழுத்தாளர், நிறைய சிறுவர் இலக்கியம் படைத்துள்ளார். ராய் கொல்கத்தாவில் சுகுமாருக்கும் சுபத்திராவுக்கும் பிறந்தவர். ராய் மூன்று வயது இருக்கும் போதே சுகுமார் இறந்துவிட்டார், சுபத்திராவின் வருமானத்திலேயே ராயின் குடும்பம் வளர்ந்தது.
ராய் கொல்கத்தாவிலுள்ள பாலிகுனே அரசு உயர் நிலைப்பள்ளியில் படித்தார். கொல்கத்தாவிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இருந்தாலும் அவரின் விருப்பம் கவின் கலைகள் மீதே இருந்தது. 1940 இல் அவரின் தாய் சாந்திநிகேதனில் உள்ள விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில் படிக்க வற்புறுத்தினார். சாந்திநிகேதனில் உள்ள படிப்பு பற்றி ராய்க்கு சிறந்த கருத்து இல்லாமல் இருந்தது. தாயின் வற்புறுத்தலாலும் ராய்க்கு தாகூரின் மேல் இருந்த மதிப்பாலும் அங்கு படிக்க ஒப்புக்கொண்டார். சாந்திநிகேதனில் ராய்க்கு கிழக்காசிய கலை (ஒரியண்டல் கலை) மீது மதிப்பு வந்தது. பின்பு அவர் அங்குள்ள புகழ் பெற்ற ஓவியர்கள் நன்தோதால் போசு, பெர்னான்டோ பெகரி முகர்சி மூலம் நிறைய கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். பிற்காலத்தில் ராய் த இன்னர் ஐ என்ற ஆவணப்படத்தை முகர்ச்சி குறித்து எடுத்தார். அசந்தா, எல்லோரா , எலிபெண்டா குகைகளுக்கும் சென்ற போது இந்திய கலைகள் குறித்து பெருமை அடைந்தார்
பணி
1943 இல் மாதம் எண்பது ரூபாய்களுக்கு பிரித்தானிய விளம்பர நிறுவன டி. சே. கேயமெர் அவர்களிடம் பணியாற்றினார். வரைபடக் கலையில் ஆர்வமிருந்தாலும் அவர் நன்றாகவே நடத்தப்பட்டார், அந்நிறுவனத்தில் இந்திய பணியாளர்களுக்கும் பிரித்தானிய பணியாளர்களுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது, ஏனைனில் இந்தியர்களை விட பிரித்தானியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது, அங்கு வாடிக்கையாளர்களை முட்டாள்கள் என்று ராய் கருதினார். " பின்பு டி கே குப்தா அவர்களின் புதிய பதிப்பகமான சிங்நெட் பிரசில் புத்தகங்களின் அட்டை படத்தை வடிவமைப்பவராக பணிபுரிந்தார். அங்கு பிபூதிபூசன் பண்டோபாத்தியாய் அவர்களின் புகழ்பெற்ற நாவலான பதேர் பாஞ்சாலியின் சிறுவர் பதிப்பான ஆம் அதிர் பீபுக்கு (மாங்கொட்டை விசில்) பணியாற்றினார். இப்புத்தகத்தால் பாதிக்கப்பட்ட ராய் தனது கற்பனை வளத்தால் இதன் கதையை பதேர் பாஞ்சாலி திரைப்படத்தில் சிறப்பாக விளக்கினார், இவரின் முதல் படமான இது பெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தத்து.
1947 இல் சித்தானந்தா தாசுகுப்தாவுடனும் மற்றவர்களுடனும் இணைந்து ராய் கல்கத்தா பிலிம் சொசைட்டியை உருவாக்கினார். அவர்கள் பல வெளிநாட்டு திரைப்படங்களை திரையிட்டனர். அதில் பலவற்றை ராய் பார்த்ததுடன் அதிலிருந்து நிறைய கற்றார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் கொல்கத்தாவில் இருந்த அமெரிக்க படை வீரர்களுடன் நண்பனாக இருந்ததால் அவர்கள் மூலம் நகரில் ஓடும் அமெரிக்கத் திரைப்படங்கள் குறித்து அறிந்தார். பிரித்தானிய வான் படை வீரர் நார்மன் கிளார் இவரைப் போலவே திரைப்படம், சதுரங்கம், மேற்கத்திய பாரம்பரிய இசையில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
1949 இல் ராய்பி உறவினரான சயோ தாசு என்பவரைத் திருமணம் புரிகிறார்.
அவர்களுக்கு சந்திப் என்ற மகன் பிறக்கிறார் இவர் திரைப்பட இயக்குநராக பணிபுரிகிறார். மகன் பிறந்த ஆண்டு பிரெஞ்சு இயக்குநர் ழீன் ரேனோய்ர் கொல்கத்தாவிற்கு த ரிவர் திரைப்படம் எடுக்க வந்த போது அவருக்கு படம் பிடிக்க ஏதுவான இடங்களை சுற்றிக் காண்பிக்கிறார். ராய் அவரிடம் பதேர் பாதஞ்சலியை எடுக்க தான் பல காலமாக திட்டமிட்டு இருப்பதாகக் கூறுகிறார், அதை ழீன் ஆதரித்து ஊக்கப்படுத்தினார். 1950இல் டி சே கெமெர் இலண்டனுக்கு தன் தலைமையகத்தில் பணிபுரிய அனுப்பினார். அங்கிருந்த மூன்று மாதங்களில் ராய் 99 திரைப்படங்களைப் பார்த்தார். இத்தாலிய படமான பைசைக்கிள் தீவ்சு என்பதைப் பார்க்கும் அப்படம் தன்னை அதிகம் பாதிக்கப்பட்டது என்றார். ராய் பின்பு திரைப்படத்துறைக்கு வந்தார்.
அப்பு காலங்கள் (1950–59)
1928 இல் வெளிவந்த பதேர் பாஞ்சாலி என்ற செம்மையான வங்காள இலக்கியத்தை வைத்து முதல் திரைப்படத்தை எடுக்க முடிவெடுத்தார். இந்த இலக்கியம் சிற்றூர் ஒன்றிலுள்ள அப்பு என்ற சிறுவன் வளர்ந்து பெரியன் ஆவதை விவரிக்கிறது. இவரின் பதேர் பாஞ்சாலியில் தொழில்முறையில்லாத நடிகர்களும் தொழிலாளர்களும் இருந்தனர்.
ராய் தொழில்முறை அல்லாத நடிகர்களையும் நுட்ப ஊழியர்களையும் தன் திரைப்படத்தில் பயன்படுத்தினார். இவர்களில் நிழற்படக் கருவியாளர் சுபர்தா மித்ராவும் கலை இயக்குநர் பன்சி சென்குப்தாவும் பிற்காலத்தில் பெரும் புகழை அடைந்தார்கள். திரைப்பட தயாரிப்புக்கு தேவையான பணத்தைப் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் தன் சேமிப்பை கொண்டு 1952 இல் திரைப்படத்தை தொடங்கினார். ஆனால் தேவையான பணத்தைப் பெறமுடியவில்லை. இதனால் இப்படத்தை முடிக்க மூன்று ஆண்டுகள் ஆனது. இவருக்கோ அல்லது இவரின் தயாரிப்பு மேலாளர் அனில் சௌத்திரிக்கோ பணம் கிடைக்கும்போதெல்லாம் படப்பிடப்பு நடந்தது. கதையில் மாற்றம் வேண்டும் என்பவர்களிடமிருந்தும் தயாரிப்பை மேற்பார்வையிட வேண்டும் என்பர்களின் பணத்தை வேண்டாம் என்று கூறிவிட்டார். மேற்கு வங்க அரசு திரைப்படம் எடுத்து முடிக்க பணம் அளித்த போதும் படத்திற்கு மகிழ்ச்சியான முடிவை வைக்குமாறு கோரியதை மறுத்துவிட்டார்.
ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை படத்திற்கு ஏற்ற இடம் இருக்கிறதா எனப் பார்க்க இந்தியா வந்திருந்த அமெரிக்க இயக்குநர் இச்சான் உசுடனுக்கு போட்டு காட்டினார். நியு யார்க் நவீன கலை காட்சியகத்தில் இருந்த மான்றோ வீலர் என்பரிடம் பெரும் திறமை தெரிகிறது என இச்சான் கூறினார். 1955 இல் வெளியிடப்பட்ட படத்தை பல்வேறு தரப்பினர் படத்தைப் பாராட்டினர். படம், பெரும் வெற்றியடைந்தது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட விருதுகளை இப்படம் பெற்றதுடன் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் நீண்ட நாட்கள் ஓடியது. டைம்சு ஆப் இந்தியா நாளிதழ் பதேர் பாஞ்சாலியை மிகவும் பாராட்டியது. பிரித்தானிய விமர்சகர் லின்ட்சே ஆண்டர்சனும் பிரெஞ்சு விமர்சகர் பிரான்கோசிசு டுருபட்டும் வெகுவாக இப்படத்தைப் பாராட்டினர் ஆனால் நியுயார்க் டைம்சு நாளிதழின் விமர்சகர் போசுலே குரோதர் இப்படத்தைக் குறைகூறினார். ஆனாலும் இப்படம் அமெரிக்காவில் எதிர்பார்க்கப்பட்டதை விட வெற்றி பெற்றது.
ராயின் வெளிநாட்டு திரைப்பட வாழ்க்கை அவரது இரண்டாவது படமான அபரசிதோ வெற்றியடைந்த பின் தொடங்கியது. இப்படமானது வளர்ந்த அப்புவுக்கும் அவன் மீது அன்பு வைத்துள்ள அவனது தாய்க்கும் ஆன உறவின் சிக்கல்களை விபரிக்கிறது, மிருனால் சென். ரித்விக் காதக் போன்ற விமர்சகர்கள் இப்படத்தை பதேர் பாஞ்சாலியை விட சிறந்தது என்றார்கள். இப்படம் வெனிசு நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் தங்க சிங்கம் விருதை பெற்றது, இது ராய்க்கு குறிப்பிடத்தகுந்த மதிப்பை திரைப்பட கலைஞர்கள் மத்தியில் உருவாக்கியது. மூன்றாவது அப்பு தொடர் படத்தை தொடங்கும் முன் ராய் வேறு இரண்டு படங்களை வெளியிட்டார் (பரச் பாதர், இச்சசாகர்) .
அபராசிதோ எடுக்கும் போது ராய்க்கு அப்பு தொடரில் மூன்றாவது படம் எடுக்கும் எண்ணம் இல்லை, வெனிசு நகரில் அடுத்த அப்பு படம் குறித்து கேட்டபோதே இவருக்கு அந்த சிந்தனை வந்தது. அபுர் சன்சார் என்ற அப்பு தொடரின் மூன்றாவது படத்தை 1959இல் எடுத்து முடித்தார், அப்பு தொடர்களிலேயே இது தான் சிறந்தது என அபர்ணா சென், ராபின் உட் போன்ற விமர்சகர்கள் புகழ்ந்தனர். ராய் தனது விருப்பமான நடிகர்கள் சர்மிளா தாகூரையும் சௌமித்திரா சாட்டர்சியையும் இப்படத்தில் நடிக்க வைத்தார். அப்புக்கு திருமணமான பின் அவனுடைய திருமண வாழ்க்கையின் சிக்கல்களை இப்படம் பதிவு செய்கிறது. அபுர் சன்சார் படம் வங்காள மொழி விமர்சிகர்களால் கடுமையாக குறைகூறப்பட்டது. தான் எடுத்தது சரி என்று வாதிட்டு ராய் கட்டுரை எழுதுகிறார். விமர்சகர்கள் குறை கூறினால் அரிதாக தான் இவர் அதை மறுத்து தன்னூடை படைப்பை சரி என்று கூறுவார். ராய்க்கு மிகவும் பிடித்த சாருலதா திரைப்படத்துக்கும் இவ்வாறு கட்டுரை எழுதினார். அப்பு தொடர் படங்கள் குறித்து நினைவு நூல் ஒன்றை எழுதினார். ராய்யின் திரைப்பட வெற்றி அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. அவர் தனது கூட்டு குடும்பத்துடன் வாடகை வீட்டில் தான் குடியிருந்தார்.
தேவியிலிருந்து சாருலதா காலம் வரை (1959-64)
இந்த காலகட்டத்தில் ராய் தேவி போன்ற இந்திய பிரித்தானிய அரசின் கால கட்ட படங்களை எடுத்தார். தாகூரைப்பற்றி ஆவணப்படத்தையும் நகைச்சுவைபடத்தையும் (மகாபுருசு) எடுத்தார். அக்கால கட்டத்தில் இவர் எடுத்த பல படங்கள் சமூகத்தில் இந்திய பெண்களின் அவலநிலையை துல்லியமாக காட்டியதாக பல விமர்சகர்கள் கூறினர்.
அபுர் சான்சர் படத்துக்கு பிறகு தேவி என்ற படத்தை எடுத்தார், இது இந்து மத சமூகத்தில் இருந்த மூடநம்பிக்கைகளை பற்றியதாக இருந்தது. இதில் சர்மிளா தாகூர் நடித்தார். இப்படம் தணிக்பை குழுவால் பாதிக்கப்படுமோ என ராய் பயந்தார் ஆனால் இப்படம் எந்த பாதிப்பும் இல்லாமல் வெளிவந்தது. இந்திய பிரதமர் சவகர்லால் நேரு தாகூரின் பிறந்த நூற்றாண்டை முன்னிட்டு அவரைப்பற்றிய ஆவணப்படத்தை எடுத்து தருமாறு ராயிடம் கேட்டார். தாகூரை பற்றிய படச்சுருள்கள் குறைவாக இருந்ததால் மிகவும் கடினப்பட்டு ஆவணப்படத்தை தயாரித்தார். இவ்வாவணப்படத்திற்காக மூன்று திரைப்படங்களுக்கான உழைப்பை கொடுக்க வேண்டியதாக இருந்ததாக பிறகு ராய் கூறினார்.
திரைப்படங்கள்
அகந்துக் (1991)
ஷகா புரொஷகா (1990)
ஞானஷத்ரு (1989)
சுகுமார் ராய் (1987)
காரே பைரே (1984)
பிக்கூர் டைரி (1981) (தொலைக்காட்சிக்காக)
சத்காதி (1981) (தொலைக்காட்சிக்காக)
ஹைரக் ராஜர் தேஷெ (1980) (தொலைக்காட்சிக்காக)
ஜொய் பாபா ஃபெலுநாத் (1978)
ஷத்ரன்ஜ் கெ கிலாடி (1977)
பாலா (1976)
ஜன ஆரான்ய (1976)
சோனார் கெல்லா (1974)
அஷானி சங்கத் (1973)
ப்ரதித்வந்தி (1972)
த இன்னர் ஐ (1972)
சீமபத்தா (1971)
சிக்கிம் (1971)
அரான்யர் டின் ராத்ரி (1970)
கூப்பி கைன் பாகா பைன் (1968)
சிரியாக்கானா (1967)
நாயக் (1966)
காப்புருஷ் (1965)
மஹாபுருஷ் (1965)
இரண்டு (1965) (தொலைக்காட்சிக்காக)
சாருலதா (1964)
மஹாநகர் (1963)
அபிஜன் (1962)
கஞ்சன்யங்கா (1962)
இரவீந்திரநாத் தாகூர் (1961)
தீன் கன்யா (1961)
தேவி (1960)
அபுர் சன்ஸார் (1959)
ஜல்சாகர் (1958)
பரஷ் பதர் (1958)
அபராஜிதோ (1957)
பதேர் பாஞ்சாலி (1955)
புத்தகங்கள்
Bravo Professor Shonku
Phatik Chand
Stories. London, Secker & Warburg
The adventures of Feluda.
The mystery of the elephant god : more adventures of Feluda
Royal Bengal Mystery and Other Feluda Stories
Feluda's last case
House of Death and Other Feluda Stories
The unicorn expedition, and other fantastic tales of India
Mystery of the Pink Pearl
Night of the Indigo
Twenty stories
Ray, Sukumar - Nonsense rhymes (மொழிபெயர்ப்பு)
திரைப்படம் தொடர்பானவை
Speaking of films
Our films, their films
My years with Apu.
Childhood Days - A Memoir
The chess players : and other screenplays
Pather Panchali
The Apu trilogy (ஷம்ப்பா பேனர்ஜி உடன் இணைந்து எழுதிய புத்தகம்)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
சத்யஜித் ராய் பற்றி சுகுமாரன் காலச்சுவடில் எழுதிய கட்டுரை
சத்யஜித் ராயின் இணையத் தளம்
1921 பிறப்புகள்
இந்திய எழுத்தாளர்கள்
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்
ரமோன் மக்சேசே விருது பெற்றோர்
1992 இறப்புகள்
சிறப்பு அகாதமி விருதை பெற்றவர்கள்
அகிரா குரசோவா விருது பெற்றவர்கள்
வங்காள எழுத்தாளர்கள்
பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
|
5271
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D
|
கட்டபொம்மன்
|
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர். பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர். பின்பு முகமதியர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். பாண்டிய நாட்டில் கோவில்கள் இடிக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசின் படைகள் வந்து, அவர்கள் 3 நாடுகளையும் கைப்பற்றினர். பின்பு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னன், வீர பாண்டிய கட்ட பொம்மு முன்னோர்களின் வீரத்தைப் போற்றி பாஞ்சாலங்குறிச்சியைப் பரிசாக வழங்கினார்.
கட்டபொம்மன் பெயர் காரணம்
அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டப்பிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராகப் பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளைத் தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின், ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன் ஆவார்.
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
வாழ்க்கை
சனவரி 3, 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும். வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் சக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
போர்
கர்நாடக பிரதேசத்தின் ஆட்சியாளர்களான ஆற்காடு நவாப்புகள் பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை கும்பினியாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி நெல்லை சீமையில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியாமல் இருந்தார். இதனடிப்படையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்குப் பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையைத் தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டிய கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார். செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.
மரணம்
செப்டம்பர் 9 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை பிப்ரவரி 02, 1801இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார். பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை மார்ச் 30, 1801இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து, மே 24, 1801இல் அதனைக் கைப்பற்றியது. அங்கிருந்து தப்பித்து, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல், பிரான்மலை என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். பாஞ்சாலங்குறிச்சி என்கிற பெயரையே தமிழகத்தின் வரைபடத்திலிருந்து நீக்கினர் வெள்ளையர். கோட்டை முற்றிலும் தகர்க்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.
1974 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி எழுப்புவித்தார். அது இன்றளவும் வீரபாண்டியனின் புகழ்பாடி நிற்கிறது. கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், ஜக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.
தற்போது 35 ஏக்கர் பரப்பிற்கு மேல் உள்ள பழைய கோட்டையின் அடிப்பகுதிக் கட்டிடங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ளன. கட்டபொம்மன் பயன்படுத்திய ஆயுதங்கள், அவர் காலத்து மக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், அணிகலன்கள் நாணயங்கள் போன்றவை தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுச் சென்னையில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தூக்கிலிடப்பட்ட கயிறு மாயம்
ஆங்கிலேயத் தளபதியின் ஆணைப்படி 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிடப் பயன்படுத்தப்பட்ட தூக்குக்கயிறு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு நீதிமன்றத்தின் ஆவணக் காப்பகத்தில் (டார்க் ரூம்) பாதுகாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து, அதே கட்டிடத்தில்தான் திருமங்கலம் தாலுகா அலுவலகமும் செயல்பட்டு வருகின்கிறது. அங்கிருந்த ஆவணக் காப்பகமும் தாலுகா அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இதே காப்பகத்தில் தான் ஆங்கிலேயர் காலத்து முக்கியச் சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களும், கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட கயிறும் இருந்தது. இந்தக் காப்பகத்தைப் பராமரித்து வந்த அலுவலக உதவியாளர், கட்டபொம்மனின் தூக்குக் கயிறு காணாமல்போன செய்தியை முதலில் சொல்ல, அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த உதவியாளரும், பணியிலிருந்து ஓய்வுபெற்று மறைந்து விட்ட நிலையில், கயிறு உண்மையிலேயே காணாமல் போய்விட்டது என 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உறுதி செய்துள்ளனர்.
மணிமண்டபம்
கட்டபொம்மன், மற்றும் ஊமைத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
பாஞ்சாலங்குறிச்சிக்கான பயண தூரம்
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்
ஒட்டப்பிடாரம் - 3 கி.மீ
எட்டயபுரம் - 23 கி.மீ
தூத்துக்குடி - 25 கி.மீ
கயத்தாறு - 40 கி.மீ
கோவில்பட்டி - 38 கி.மீ
திருச்செந்தூர் - 70 கி.மீ
இவற்றையும் காணவும்
வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)
பாஞ்சாலக்குறிச்சி கோட்டை
கலியுகப் பெருங்காவியம்
நூல்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு” - தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியீடு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
வீரபாண்டிய கட்டபொம்மன் கட்டுரை
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடப் படங்கள், தகவல்
வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய சில தகவல்கள்
பாஞ்சாலங்குறிச்சி கோட்டை நுழைவாயில் பட தொகுப்பு
கதை சொல்லும் சித்திரங்கள்
பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை விக்கிமேப்
பாளையக்காரர்கள்
தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
1760 பிறப்புகள்
1799 இறப்புகள்
இந்திய விடுதலைக்கு முன் தூக்கிலிடப்பட்டவர்கள்
திருநெல்வேலி மாவட்ட நபர்கள்
1761 பிறப்புகள்
இந்தியப் புரட்சியாளர்கள்
|
5272
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%202005
|
ஆகஸ்ட் 2005
|
செய்தித் துளிகள்
ஆகஸ்ட் 31, 2005
ஆகஸ்ட் 30, 2005
ஆகஸ்ட் 29, 2005
ஆகஸ்ட் 28, 2005
ஆகஸ்ட் 27, 2005
ஆகஸ்ட் 26, 2005
ஆகஸ்ட் 25, 2005
ஆகஸ்ட் 24, 2005
ஆகஸ்ட் 23, 2005
ஆகஸ்ட் 22, 2005
ஆகஸ்ட் 21, 2005
ஆகஸ்ட் 20, 2005
ஆகஸ்ட் 19, 2005
ஆகஸ்ட் 18, 2005
ஆகஸ்ட் 17, 2005
ஆகஸ்ட் 16, 2005
ஆகஸ்ட் 15, 2005
ஆகஸ்ட் 14, 2005
ஆகஸ்ட் 13, 2005
2005
2005 செய்திகள்
|
5274
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%20%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
|
நியூ ஓர்லென்ஸ்
|
ஐக்கிய அமெரிக்காவின் என்பது தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லூசியானாவில் உள்ள மிகப்பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ் (நியூ ஓர்லியன்ஸ்) ஆகும். இந்நகரம் ஒரு தாழ் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரம் தெற்கே மிஸ்சிசிப்பி (Mississippi) ஆற்றாலும், வடக்கே பொன்சற்ரெயின் (Pontchartrain) உப்பு நீர் ஏரியாலும், கிழக்கே மெக்சிக்கோ வளைகுடாவாலும் (Gulf of Mexico) சூழப்பட்டுள்ளது. இந்நகரின் 2/3 வீத மக்கள் கறுப்பு அல்லது நிற சிறுபான்மையின மக்கள் ஆவர்.
ஆகஸ்ட் 29 இல் கற்றீனா என அழைக்கப்பட்ட சூறாவளியினால், இந்நகரின் அணைகள் உடைந்து நீரில் அமிழ்ந்து போனது. இந்த இயற்கைப் பேரிடர் ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய அழிவுகளில் ஒன்று. இந்த நிகழ்வால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தும், 10 000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளி இணைப்புகள்
Effect of Hurricane Katrina on New Orleans
அமெரிக்க நகரங்கள்
லூசியானா
|
5289
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
அறுபது ஆண்டுகள்
|
அறுபது ஆண்டுகள் (ஆண்டு வட்டம் அல்லது சம்வத்சரம்) பெரும்பாலான இந்திய நாட்காட்டிகளில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை அறுபதுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர்கள் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் நாட்காட்டியிலும் கன்னடர் - தெலுங்கர் பயன்படுத்தும் உகாதி நாட்காட்டியிலும் இது பரவலாகப் பயன்படுகின்றது.
இந்துக் காலக் கணிப்பு முறையில், இரவு-பகல், வாரநாட்கள், மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் அமைந்துள்ளன. இந்த ஆண்டு வட்டம் ஒவ்வொன்றும் 60 ஆண்டுகளைக் கொண்டது. இதிலுள்ள ஒவ்வோர் ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும்.
வரலாறு
இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்) விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காணமுடிகின்றது. எனினும், வராகமிகிரரின் பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 - 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தோடு சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், வியாழன் கோள் இயங்கும் ஒரு காலவட்டம் சோதிட ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன. ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.
தமிழகமும் அறுபது ஆண்டுகளும்
தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை. எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.
தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான "அறுபது வருட வெண்பா" இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு. விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.
2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால்
முன்வைக்கப்பட்டது. எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.
பட்டியல்
இம் முறையிலுள்ள குறைபாடுகள்
வரலாற்று நிகழ்ச்சியொன்றின் காலத்தைக் குறிப்பிடும்போது, ஆண்டின் பெயரைக் குறிப்பிட்டு மாதம், தேதி முதலியவற்றையும் குறிப்பிடுவது இந்துக்களின் வழக்கம். இந்தமுறையில் நீண்ட வரலாற்றுக் காலங்களைக் குறிப்பிடும்போது குழப்பம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு 60 ஆண்டுகளிலும் ஒரே ஆண்டுப் பெயர் திரும்பத் திரும்ப வருவதால் சரியாக எந்த ஆண்டு குறிப்பிடப் பட்டது என்பதை அறிந்து கொள்வது சிக்கலானதே. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறைகளைக் கையாண்டனர். கலியுக ஆண்டு, சாலிவாகன சகாப்தம், விக்கிரம ஆண்டு, கொல்லம் ஆண்டு என்பன இவற்றுட் சிலவாகும்.
இவற்றையும் காண்க
இந்துக் காலக் கணிப்பு முறை
ஆண்டு
ஆண்டு வட்டம் அட்டவணை (1687-2047)
தமிழ் மாதங்கள்
தமிழ் புத்தாண்டு
மேற்கோள்கள்
கால அளவுகள்
ஆண்டுகள்
இந்துக் காலக் கணிப்பு முறை
இந்தியக் காலக் கணிப்பு முறைகள்
|
5292
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
மனித முடிவு சாத்தியக்கூறு காரணிகள்
|
மனிதகுல முடிவுக்கான சாத்தியக்கூறுகள் (Global catastrophic risks) என்பது, உலக அளவில், மனிதகுல இருப்புக்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக் கூற்று நிகழ்வுகளைக் குறிக்கிறது. இவ்வாறான நிகழ்வுகள் நவீன மனித நாகரிகத்தை முற்றாக அழிக்கவோ அல்லது முடக்கிவிடவோ கூடும். மேலும் கடுமையான சூழல்களில் மனிதகுலம் முற்றாகவே அழிந்துவிடலாம். புனைகதைகளில், சமயப் புராணங்களில், விஞ்ஞான வருவதுரைகளில், அரசியலில் என பல தளங்களில் மனிதகுல முடிவுக்கான சாத்திய கூறுகள் அலசப்படுவதுண்டு.
பேரெரிமலை வெடிப்பு, விண்கல் மோதல் போன்றவை போதிய ஆற்றல் கொண்டவையாக அமையும்போது இத்தகைய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. மனித நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய நிகழ்வுகளும், நுண்ணறிவு கொண்ட மனிதகுலத்துக்கு ஆபத்தாக அமையக்கூடியவை. குறிப்பாக புவி சூடாதல், அணு ஆயுதப் போர், உயிரிப் பயங்கரவாதம் போன்றவை இத்தகையவை. மனிதகுல அழிவு ஏற்பட்டால் அது இயற்கைக் காரணிகளால் அல்லாமல் மனிதனால் ஏற்படும் நிகழ்வுகளினாலேயே ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக மனிதகுல எதிர்காலம் நிறுவனம் நம்புகிறது.
காரணிகள்
இவ்வாறான ஒரு சாத்தியக்கூற்றுக்கான காரணிகளாகப் பல நிகழ்வுகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. பின்வருவன அக்கூறுகளின் ஒரு பட்டியல் ஆகும்.
போர்
அணு ஆயுத விபத்து
விண்கல் மோதல்
தொற்று நோய்
பட்டினி
பருவநிலை மாற்றம்
மனித பரிணாம மருவல்
தீவாய்ப்புகளின் வகைப்பாடு
தத்துவவியலாளர் நிக் பொசுட்ரம் தீவாய்ப்புக்களை அவற்றின் செயற்பரப்பு, தீவிரத்தன்மை என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார். உலகம் தழுவிய தீவாய்ப்பாக அமைவதற்கு அவற்றின் செயற்பரப்பு உலகம் தழுவியதாகவும், தீவிரம் நீண்டகாலம் நிலைத்திருப்பதாகவும் இருக்கவேண்டும் என்றும் அவர் கருதுகிறார். செயற்பரப்பில் பல தலைமுறைகளைத் தழுவுவதாகவும், அதிதீவிரத்தன்மை கொண்டதாகவும் உள்ளவற்றை இருத்தலியல் தீவாய்ப்பு என்று அவர் வகைப்படுத்துகிறார். உலகளாவிய பேரழிவுத் தீவாய்ப்பு உலகிலுள்ள மிகப் பெரும்பாலான உயிரினங்களை அழித்துவிடும் என்றாலும், மனிதகுலம் இதிலிருந்து மீளக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. இன்னொரு வகையில் இருத்தலியல் தீவாய்ப்பு மனிதகுலத்தை அழித்துவிடலாம் அல்லது நாகரிகம் மீண்டும் மீளமைக்கப்படுவதைத் தடுத்துவிடலாம். இருத்தலியல் தீவாய்ப்பு மிகவும் முக்கியமானது என்று பொசுட்ரம் கருதுகிறார்.
பொசுட்ரம் நான்கு வகையான இருத்தலியல் தீவாய்ப்புக்களை அடையாளம் கண்டுள்ளார். முதலாவது "திடீர்" நிகழ்வுகள் (Bangs). இவை எதிர்பாராமல் திடீரென நிகழும் பேரழிவுகள். இவை தற்செயலாக நிகழ்பவையாகவோ அல்லது வேண்டுமென்றே செய்யப்படுவனவாகவோ இருக்கலாம். தீய நோக்கத்துடன் பயன்படுத்தப்படும் நானோ தொழில்நுட்பம், அணுவாயுதம் போன்றவை மேற்படி "திடீர்" நிகழ்வுகளுக்குக் காரணமாக அமையக்கூடும் என பொசுட்ரம் எண்ணுகிறார். இரண்டாவது, "நொருங்கல்" நிகழ்வுகள் (Crunches). இந்த நிகழ்வுகளின்போது மனிதகுலம் தப்பிப் பிழைக்கும். ஆனால், நாகரிகம் மீளமுடியாமல் அழிக்கப்படும். இயற்கை வளங்கள் தீர்ந்துபோதல், தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுக்கும் உறுதியான ஒரு உலக அரசு, சராசரி அறிவாற்றலைக் குறைக்கக்கூடிய மரபியலின் உயர்பண்பிழப்பு அழுத்தங்கள் என்பன "நொருங்கல்" நிகழ்வுக்குக் காரணமாக அமையக்கூடும். அடுத்தது "--" (Shrieks). இது விரும்பத்தகாத எதிர்காலத்தைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மூளை கணினியுடன் இணைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டால், அது மனித நாகரிகத்தின்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடும். இது மோசமாக அமையக்கூடும். இவ்வாறான ஒரு நிலை, குறைபாடுள்ள பேரறிவாற்றலை உருவாக்கி ஒரு அடக்குமுறைச் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தலாம். நான்காவது "--" (Wimpers). இவை மனித நாகரிகத்தின் அல்லது நடைமுறை விழுமியங்களின் படிப்படியான வீழ்ச்சி ஆகும். கூர்ப்பினால் மாற்றம் அடையக்கூடிய ஒழுக்கம் சார்ந்த விருப்புக்களும், தொடர்ந்து ஏற்படக்கூடிய, வேற்றுக் கோள்களில் இருந்தான ஆக்கிரமிப்பும் இதற்கான காரணங்களாக அமையலாம் என்பது பொசுட்ரமின் எண்ணம்.
குறிப்புகள்
சமூகம்
பேரழிவுத் தீவாய்ப்புக்கள்
மனிதகுலத்தின் எதிர்காலம்
fr:Fin du monde
|
5293
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D
|
திராவிடர்
|
திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மத்திய இந்தியா, வட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற பகுதிகளிலும் சிறிய அளவில் பாரம்பரியமாக வாழும் திராவிடர் காணப்படுகின்றனர்.
சொல்லின் தோற்றம்
திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் சொல்லாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆழ்வார்கள் பாடிய பாசுரங்கள் 'திராவிட வேதம்' ('தமிழ் வேதம்') என்று அழைக்கப்படுகின்றன. திருவாய்மொழியை 'திராவிட வேத சாகரம்' ('தமிழ் வேதக்கடல்') என்று நாதமுனிகள் சிறப்பித்துள்ளார். திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் என்றும் அச்சொல் திரிபடைந்தே தமிழ் என்ற சொல் உருவானதென்றும் தொடக்கத்தில் ஆய்வாளர்கள் கருதினர். பெரும்பாலும் வெளிநாட்டவரான அக்கால ஆய்வாளர்கள், சமஸ்கிருதப் பின்னணியுடனேயே திராவிட மொழி ஆராய்ச்சியில் இறங்கியவர்கள் ஆதலால், இந்த கருதுகோள் அவர்களுக்கு இயல்பாக இருந்தது. வேறு சில ஆய்வாளர்கள், முக்கியமாகத் தமிழ் நாட்டினர், தமிழ் என்ற சொல் மருவியே திரவிட என்னும் சமஸ்கிருதச் சொல் உருவானதாக வாதிடுவர். இவ் விடயத்தில் ஒத்த கருத்து ஏற்படுவதற்கு ஏதுவாகத் தக்க சான்றுகள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்றும் வெவ்வேறு சாராரைக் குறிப்பன என்றும் கனகசபைப்பிள்ளை போன்றவர்கள் கருதினார்கள். எனினும் இக்கொள்கைக்குப் போதிய ஆதரவு இல்லை.
திராவிட மொழிகள்
திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப்பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்குத் திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. இன்று திராவிட மொழிக் குடும்பத்தில், சுமார் 85 மொழிகள் வரை இருப்பது அறியப்பட்டுள்ளது.
திராவிட இனம் பற்றிய கருத்துரு
19 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவில் வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுக்குப் புறம்பாக அம் மொழிகளுடன் அடிப்படையில் தொடர்புகளற்ற மொழிக்குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்பட்டு வருவதை அறிந்தார்கள். இதனால், பொதுவாகக் கரு நிறத் தோல் கொண்டவர்களான திராவிட மொழி பேசுவோர், பரம்பரையியல் அடிப்படையில் தனியான இனம் எனக் கருதினார்கள். அதற்கு இணங்கத், திராவிடர் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்றும், அவர்கள் ஆரியர் வருகையினால் ஒரு பகுதியினர் தெற்கு நோக்கி இடம் பெயர, ஏனையோர் ஆரிய மொழி பேசுவோருடன் கலந்துவிட்டதாகவும் கருதினர்.
திராவிடம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லான திரவிட என்பதிலிருந்து பெறப்பட்டது. திராவிட மொழிகளைப் பற்றி ஆராய்ந்த ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), எழுதிய திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages)என்னும் ஆங்கில நூல் 1856 இல் வெளியிடப்பட்ட பின்னரே இச் சொல், தற்காலப் பொருளுடன் பரவலான பயன்பாட்டுக்கு வந்தது. மேற்படி நூலே திராவிட மொழிகளை உலகின் முக்கிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக நிலை நிறுத்தியது.
திராவிட இனம் பொதுவாக காகசாய்டு இனத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
திராவிட இனத் தோற்றம்
திராவிட இனத்தின் தோற்றம் பற்றித் தெளிவான முடிவுக்கு வரக்கூடிய சான்றுகள் இல்லாததால், இது தொடர்பான சர்ச்சைகள் முடிவில்லாது தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் பல்வேறு வகையான கருத்துக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். திராவிடரும், வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான கருத்து. இது, பெரும்பாலும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்களுட் சிலர் திராவிடர் மத்தியதரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்கின்றனர். பெரும்பாலும் தமிழ் ஆய்வாளர்கள் சிலரே இக் கருத்தைத் தீவிரமாக ஆதரித்தார்கள். இந்தியாவுக்குத் தெற்கே, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்து அழிந்து போனதாகக் கருதப்படுகின்ற இலெமூரியா எனக் குறிப்பிடப்படும் ஒரு நிலப் பகுதியையும், தமிழ் இலக்கியங்கள் சிலவற்றில் பேசப்படும் குமரிக்கண்டம் என்பதையும் ஒன்றாக்கி, அப்பகுதியே தமிழர் (திராவிடர்) தோன்றிய இடம் என இவர்களில் சிலர் வாதிட்டனர். சிலர், மனித இனமே இங்கேதான் தோன்றியது என்றும், முதல் மனிதன் திராவிடனே என்றும் காட்டமுயன்றனர். தமிழ் நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வுகள் வலுவடைந்திருந்த ஒரு காலத்தில், இவ்வாறான கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன எனினும், இத்தகைய முன்மொழிவுகள் பிற ஆய்வாளர் மத்தியில் போதிய ஆதரவைப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குமுன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
நவீன, ஈரானில் உள்ள ஜாக்ரோஸ் மலைகளில் இருந்து வந்த கற்கால விவசாயிகளுடன் புரோட்டோ-திராவிடர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக மரபணு, மொழியியல் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்றொரு ஆய்வின்படி, கற்கால விவசாயிகளின் வம்சாவளி நவீன தெற்காசியர்களின் முக்கிய வம்சாவளியை உருவாக்குகிறது.
இன வகைப்பாடு
மானிடவியலாளர், இந்தியர்களை, குறிப்பாக, திராவிடர்களை, இன அடிப்படையில் வகைப்படுத்துவது தொடர்பில் நீண்ட விவாதங்களை நடத்தியுள்ளனர். ஒரு வகைப்பாட்டின்படி, திராவிடர்கள், ஆஸ்திரலோயிட் அல்லது வெத்தோயிட் என்னும் இனப்பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டது.எனினும் அநேகர் காக்கசொயிட் இனத்தின் தென்கோடியில் உள்ள பிரதிநிதிகளாகத் திராவிட இனத்தைக் கருதி வருகின்றார்கள் (பரம்பரையியல் ஆய்வுகளின் அடிப்படைகளும் இதனையே சுட்டி நிற்கின்றன).
திராவிட இனம் பொதுவாக காகசாய்டு இனத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
பரம்பரையியல் வகைப்பாடு
மக்களை இனங்களாக வகைப்படுத்துவது தொடர்பான பரம்பரையியல் நோக்குப் பெருமளவு வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலான தற்கால மானிடவியலாளர், பரம்பரையியல் அடிப்படையில் இனங்கள் இருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. ரிச்சர்ட் லெவொண்டின் (Richard Lewontin) என்பவர், ஒவ்வொரு மனித மரபணுவும் இன்னொன்றிலிருந்து வேறுபடுவதை எடுத்துக்காட்டி, இனங்களை வரையறை செய்வதில் பரம்பரையியல் பயன்படாது என்று கூறுகிறார். எனினும் பல ஆய்வாளர்கள், பரம்பரையியல் முறைகளைப் பயன்படுத்தி
இனங்களை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு முயன்றுள்ளனர். கவல்லி-ஸ்ஃபோர்சா (L.L. Cavalli-Sforza) என்பவர், எல்லா இந்தியர்களுமே பரம்பரையியலின் அடிப்படையில் காக்கேசியர்களே (Caucasian) என்றார். லின் பி. ஜோர்டே (Lynn B Jorde), ஸ்டீபன் பி. வூடிங் (Stephen P Wooding) போன்றவர்கள், தென்னிந்தியர்களைப் பரம்பரையியல் அடிப்படையில், ஐரோப்பியர்களுக்கும், கிழக்கு ஆசியர்களுக்கும் இடையில் வைத்தார். அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகள் சில, உயிரியல் ரீதியான திராவிட இனம் என்ற கருத்துரு தொடர்பில் ஐயப்பாடுகளை உண்டாக்குவதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம்,
தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூலக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும் (), அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.
இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில், இது வரலாற்றைத் திருத்தி எழுத உதவும் ஆய்வாகும்.
13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபனு குறியீடுகளை ஆய்வு செய்தோம். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பழங்குடியினர், பல் வகை ஜாதி என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்தத் தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம்.
வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்...
இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.
ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
அதேபோல, அந்தமானில் வசிக்கும் மிகப் பழங்குடியினரான `ஓன்கே' என்று அழைக்கப்படும் பிரிவினர் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்பது இவர்களுடைய ஆய்வின் முடிவு ஆகும்.
இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் ஆதிமனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாகச் சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர்.
அதேபோல 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியர்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளனர். பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் ஒவ்வொரு மனித இனப்பிரிவினரும் அவரவர் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், தமக்கே உரிய கலாசார பழக்க வழங்கங்களை ஏற்படுத்திக் கொண்டதாலும், ஒவ்வொரு பிரிவினரும் மரபியல் மற்றும் கலாசார ரீதியாகத் தனித்தன்மை கொண்டு உள்ளனர்.
இதன் மூலம், பழங்காலத்தில் இருந்தே இந்திய மக்கள் இனம் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து கலப்பின்றி தனித்தன்மையுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்து உள்ளது. இந்தப் பிரிவினைதான் கலாசார பரிமாணங்களின் விளைவாகத் தற்காலத்தில் சாதி பாகுபாடாக உருவெடுத்துள்ளது.
பழங்காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனத்தினரும் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால் ஒவ்வொரு இனத்தவருக்கும் ஏற்படும் வெவ்வேறு மரபியல் மாற்றங்கள் அவரவர் சந்ததிகளின் வழியாக அந்தந்த இனத்தினரிடையே நிலைபெற்று, அதன் விளைவாக மரபியல் ரீதியிலான பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்ற உண்மையையும் எடுத்துரைத்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 70 சதவீத இந்தியர்கள் மரபியல் ரீதியிலான நோய்களைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பார்சி இனத்தவரிடையே மார்பகப் புற்றுநோய் அதிகம் உள்ளது. திருப்பதி, சித்தூர் பகுதிகளில் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் உள்ளன. மத்திய இந்தியாவில் ரத்த சோகை அதிகம் உள்ளது. வட கிழக்கிலும் இதே பிரச்சினை உள்ளது.
ஆப்பிரிக்கர்களின் இடப் பெயர்ச்சி...
1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாலவி ஏரி வற்றிப் போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 95 சதவீதம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் அந்தமான் நிக்கோபார் வழியாகத்தான் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்னிந்தியாவின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்தியர்களின் மூதாதையர்கள் குறித்த இந்த ஆய்வின் புதிய முடிவுகள் வரலாற்றை மாற்றி எழுதக் கூடியவை என்பதால் விஞ்ஞானிகளின் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது
புதிய ஆய்வுகள் இனம் தோல் நிறத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகின்றன. பல்வேறு மரபணு மற்றும் மானுடவியல் ஆய்வுகள் மூன்று மனித மக்கள் குழுக்கள் இருப்பதாக முடிவு செய்தன. "காகசாய்டு" (மேற்கு-யூரேசியன் தொடர்பான) மானுடவியல் குழு கோகோயிட் இனம் என்ற கருத்துடன் ஒத்துப்போகின்ற தனித்துவமான மரபணு பண்புகளைக் கொண்டுள்ளது என்பதை யுவான் 2019 கண்டறிந்துள்ளது. இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் நெருங்கிய தொடர்பு கொண்டவை என்று அவர் முடித்தார். சென் 2020 இந்தியர்கள், அரேபியர்கள், பெர்பர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் இடையே நெருங்கிய உறவுக்கு கூடுதல் ஆதாரங்களைக் கண்டறிந்தது. புதிய மரபணு பொருள் ஒரு எளிய "ஆப்பிரிக்காவிற்கு வெளியே குடியேற்றத்திற்கு" முரணானது என்று அவர் முடிக்கிறார். இந்தியாவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடையிலான பிராந்தியத்தில் உள்ள காகசாய்டு இனத்திற்கு ஒரு வேரை அவர்கள் முன்மொழிகின்றனர்.
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
இஸ்லாத்துக்கு முற்பட்ட சிந்துவெளியின் மக்களும், மொழிகளும்
திராவிடர் - வி.சிவசாமி
இனவியல்: ஆரியர் திராவிடர் தமிழர் -
திராவிடர்
திராவிடப் பிராமணர்
|
5327
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81
|
தாதாசாகெப் பால்கே விருது
|
தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குறிப்பிட்ட ஆண்டுக்கான விருது, அதற்கு அடுத்த ஆண்டு இறுதியில் தேசியத் திரைப்பட விருதுகளுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
விருது பெற்றவர்கள் பட்டியல்
ஆண்டு வாரியாக இந்த விருது பெற்றவர்கள் பட்டியல்:
இவற்றையும் பார்க்கவும்
பரிசுகள், பதக்கங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல்
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா
திரைப்பட வரலாறு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
1969 முதல் 2021 முடிய தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள் பட்டியல்
திரைப்பட விருதுகள்
தாதாசாகெப் பால்கே விருது பெற்றவர்கள்
பரிசுகளும் விருதுகளும்
|
5328
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87
|
தாதாசாகெப் பால்கே
|
தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, ஏப்ரல் 30, 1870 - பிப்ரவரி 16, 1944) இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுகிறார்.
தாதாசாஹெப் பால்கே
தாதாசாஹெப் பால்கே நாசிக்கில் பிறந்தார். 1885ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.
இந்தியத் திரைப்படத்துறை
இந்திய திரைப்படத் துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் தாதா சாகேப் பால்கே. இந்தியாவிற்கு திரைப்படங்களை முதலில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான். தொடக்கத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் வண்ணப்படங்கள் அல்ல. ஒலியும் இல்லாமல் ஊமைப்படங்களாகத்தான் இருந்தன. பால்கே தனது தீவிர முயற்சியினால் ஒரு திரைப்படத்தை எழுதி இயக்கினார். படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே முதல் இந்தியத் திரைப்படம் ஒரு குடும்பப் படமே ஆகும்.
இவருடைய நினைவாக தாதாசாகெப் பால்கே விருது நிறுவப்பட்டது.
திரைப்படங்கள்
ராஜா ஹரிஸ்சந்திரா (1913)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
1870 பிறப்புகள்
1944 இறப்புகள்
|
5330
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
பசுமைக் கட்டிடம்
|
பசுமைக் கட்டிடம் (Green Building) என்பது தற்காலத்தில் கட்டிடத் துறையில் மிகவும் பழக்கமான ஒரு கருத்துரு ஆகும். இதுவே தாங்கும் தன்மை கொண்ட (Sustainable) கட்டிடம் எனவும், உயர் தொழிற்பாட்டுக் கட்டிடங்கள் (High Performance Building) எனவும் குறிப்பிடப் படுகின்றன. இது சூழல் பாதுகாப்பு, மக்கள் நல்வாழ்வு என்பவற்றோடு தொடர்புடையது.
பசுமைக் கட்டிடம் என்பதன் பொருள்
இதற்குப் பலரும் பலவிதமான வரைவிலக்கணங்களைக் கொடுத்து வருகிறார்கள். ஐக்கிய அமெரிக்க பசுமைக் கட்டிடச் செயற்குழு (USGBC)பசுமைக் கட்டிடங்கள் குறித்துப் பின்வருமாறு கூறுகிறது.
சூழல் மீதும், கட்டிடங்களில் குடியிருப்பவர்கள் மீதும் ஏற்படக்கூடிய எதிர் மறையான தாக்கங்களைக் குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும் அல்லது முற்றாகவே இல்லாமல் செய்யும் நோக்குடன், பசுமைக் கட்டிட வடிவமைப்பு, கட்டுமானச் செயல்பாடுகள் என்பன தாங்கும் தன்மை கொண்ட (Sustainable) கட்டிடத்துக்குரிய இடத் (site) திட்டமிடல், நீர்ப் பாதுகாப்பு, நீர்ச் செயற்றிறன் (water efficiency), சக்திச் செயற்றிறன் (energy efficiency), பொருள்களினதும் வளங்களினதும் காப்பு (conservation) மற்றும் உள்ளகச் சூழற் பண்பு (Indoor Environmental Quality) ஆகியவை தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துகின்றன.
நல்லியல்புகள்
சுற்றுசுழல் நன்மைகள்
சுற்றுசூழலுக்கு கட்டிங்களால் ஏற்படும் தீமைகளை குறைக்கும்
அளவுக்கு அதிகமான இயற்கை வளங்களின் பயன்பாட்டை குறைக்க கூடியது
இவை சிறந்த செயற்பாட்டுத் திறன் கொண்டவை.
பொருளாதார நன்மைகள்
கட்டிடங்களின் நீடித்த உழைப்பு, மற்றும் தேவையாயின் குடியிருப்பவர்களின் தேவைக்கேற்ப மாற்றம் செய்யக் கூடிய தன்மை என்பவற்றையும் பெற முடியும்.
சமூக நன்மைகள்
சக்தி மற்றும் நீர்ப் பயன்பாடுகளைப் பொறுத்தவரை அதிகரித்த செயற்றிறன் கிடைக்கிறது.
கட்டிடங்களுக்குள்ளே சுத்தமான காற்று, வசதியான வெப்பச் சூழல், பொருத்தமான ஒளியமைப்பு என்பன தொடர்பிலும் கூடுதலான செயற்திறனைப் பெறலாம்.
சிறப்பான கழிவகற்றல் முகாமைத்துவத்தைக்(waste management) கொண்டனவாக இருக்கும்.
உயர் தொழிற்படு திறனை அடைவதற்குக் கடைப்பிடிக்கப்படும் சில வழிமுறைகள்
கட்டிடத்தின் இடத்தை தேர்வு செய்தல் மிகவும் போக்குவரத்திர்க்கும் மற்ற வசதிகளுக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும்
மறுசுழற்சி செய்யப்பட்ட கட்டுமான பொருட்களை பயன்படுத்த வேண்டும்
கட்டிடத்தின் வடிவமைப்பானது கட்டிடம் அமையக்கூடிய இடத்தின் வெப்பநிலை ,காற்றோட்டம் ,காலநிலை ஆகியவற்றை பொருத்து அமைக்க வேண்டும் .
கழிவு நீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்கு புதுதொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்
சூரிய மின்சக்தியை பயன்படுத்த வேண்டும்
பசுமை கட்டிடங்களின் மதிப்பீடு
GRIHA (கீரின் ரேட்டிங்கு ஃபார் இன்டகிரேடட் ஹபிடேட் அசஸ்மென்ட்) என்பது ஒரு மதிபீட்டு முறையாகும். இதனை TERI என்னும் நிறுவனம், இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் அமைச்சகத்துடன் சேர்ந்து உருவாக்கியுள்ளது. அது பசுமை கட்டிங்களுக்கான வடிவ மதிப்பீட்டு திட்டம் ஆகும். இது நாட்டில் உள்ள அனைத்து பருவநிலைகளிலும் உள்ள கட்டிடங்களுக்கும் பொருந்தக்கூடிய திட்டமாகும்.
எடுத்துக்காட்டுகள்
தமிழகத்தில் உள்ள பசுமை கட்டிடங்கள்
சென்னையில் உள்ள தமிழக சட்டமன்றக் கட்டிடம்,
சென்னையில் உள்ள ஒலிம்பியா கட்டிடம்
உலக அளவில் உள்ள பசுமை கட்டிடங்கள்
கிளிண்டன் பிரசிடென்சி டவர் ,அமெரிக்கா
கவுன்சில் ஹவுஸ் 2 ,ஆஸ்திரேலியா
மார்க்கோபோலா டவர் ,ஜெர்மனி
ஆதம் ஜோசெப்லூயி சென்டர் ,அமெரிக்கா
சாண்டோஸ் பேலஸ் ,ஆஸ்திரேலியா
இவற்றையும் பார்க்கவும்
வெளியிணைப்புகள்
கட்டிடக்கலை
|
5334
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
|
திரைப்பட வரலாறு
|
மிக நீண்ட காலமாகச் சமூகத்தில் நிலைபெற்றிருந்து மக்களையும் மகிழ்வித்து வந்த இலக்கியம், கதை சொல்லல், ஓவியம், பழங்கதைகள், பொம்மலாட்டம், குகை ஓவியங்கள், நாடகம், கூத்து, நடனம், இசை, கிராமியப் பாடல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே தற்காலத் திரைப்படத் தின் வரலாறு அமைந்துள்ளதெனலாம். திரைப்படத் துறைக்கான தொழில் நுட்பங்களும் கூட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து ஏற்பட்ட வளர்ச்சிகளின் தொடர்ச்சியாக உருவானவையே.
ஆரம்பகாலத் தொழில்நுட்ப அடிப்படைகள்
சுமார் கி.மு 500 ஆண்டுக்கு முன்னரேயே சீனத் தத்துவ ஞானி ஒருவர் இருட்டறை ஒன்றுக்குள் அமைந்த சுவரொன்றில் எதிர்ப்பக்கச் சுவரின் சிறு துவாரம் ஒன்றினூடாக அறைக்கு வெளியேயுள்ள காட்சிகள் தலை கீழ் விம்பங்களாகத் தெரிவதை அவதானித்தார். கி.மு 350 அளவில் அரிஸ்ட்டாட்டிலும் இவ்வாறான முறையொன்றின் மூலம் கிரகணம் ஒன்றை அவதானித்ததாகத் தெரிகிறது. கி.பி 1000 ஆவது ஆண்டில் அல்ஹசென் என்பார் மேற்குறிப்பிட்ட ஒளியியல் தோற்றப்பாடு (ஊசித் துளைப் படப்பெட்டி கட்டுரையைப் பார்க்கவும்))பற்றி ஆராய்ந்து எழுதியுள்ளார். 1490 ல் லியொனார்டோ டா வின்சி மேற் குறிப்பிட்ட விளைவைப் பெறுவதற்கான அமைப்பொன்று பற்றி விவரித்துள்ளார். இதே ஒளியியல் கோட்பாட்டைப் பயன்படுத்திக் கிரகணக் காட்சிகளைப் பார்ப்பதற்காகக் கட்டப்பட்ட பெரிய அறையொன்றின் அமைப்புப் பற்றி, 1544 ல் ரீனெரஸ் கெம்மா பிரிசியஸ் (Reinerus Gemma-Frisius) என்னும் ஒல்லாந்து நாட்டு அறிவியலாளர் ஒருவர் விவரித்துள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
தமிழ்த் திரைப்பட வரலாறு
வெளியிணைப்புகள்
திரைப்படங்களின் கண்டுபிடிப்பு- ஒரு முழுமையான வரலாறு (வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 1900 வரை) (ஆங்கிலம்)
அமெரிக்க Cinematographer - ஜனவரி, 1930, அகலத் திரைப்படங்களின் ஆரம்பகால வரலாறு (ஆங்கிலம்)
டெக்னிகலர் (Technicolor) வரலாறு (ஆங்கிலம்)
கமெரா ஒப்ஸ்கியூரா (Camera Obscura) என்பது என்ன? (ஆங்கிலம்)
திரைப்படத்தில் ஒலியின் வரலாறு (ஆங்கிலம்)
ஆரம்பகாலத் திரைப்படங்கள் ஒரு அறிமுகம் (ஆங்கிலம்)
திரைப்படம்
|
5335
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%20%28%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%29
|
ஒடிசி (நடனம்)
|
ஒடிசி என்பது இந்தியாவிலிருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆடப்படும் ஒரு நடனம். இது கோயில்களில் பேணப்பட்டுவந்த ஒரு பாரம்பரிய நடனக் கலையாகும். பதினேழாம் நூற்றாண்டில் 'கோட்டிப்புகழ்' எனப்படும் சிறுவர்கள் இந்நடனத்தைப் பெண்ணுடை தரித்துக் கோயில்களில் ஆடினர்.
வட இந்திய கல்வெட்டுக்கள் மற்றும் சிற்ப சான்றுகளின்படி, பல நூற்றாண்டுகளாக ஒடிசி நடனம் ஆடப்பட்டு வந்திருக்கிறது. ராணி கும்பா குகைகளில் காணப்படும் சிற்பங்களின் ஒடிசி நடனமாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்திலேயே ஆடப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாகும். சில அறிஞர்கள் ஒடிசி நடனமாவது, பரத நாட்டியத்திற்கும் முந்தயது என்று கருதுகிறார்கள்.
ஒடிசி நடனத்திற்கு இசைக்கப்படும் இசையில் கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசை மட்டுமல்லாது ஒரிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசையையும் பார்க்கலாம். பக்கவாத்தியங்கள் மத்தளம், தபலா, புல்லாங்குழல், மிருதங்கம், மஞ்சீரா, சித்தார் மற்றும் தம்பூரா ஆகியவை அடங்கும்.
நடன முறை
ஒடிசி நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஜெகன்னாதருக்கு செய்யும் இறை வணக்கமான 'மங்களசரண்' என்னும் நடனத்துடன் தொடங்கும். பின்னர் குரு வந்தனம் நிகழும். அடுத்தது, தாளக்கட்டிற்கு ஏற்றவாறு 'பல்லவி' நடனமும், கை முத்திரைகளும், முக பாவனைகளும் கூடிய 'அபிநயம்' நடனமும் ஆடப்படுகின்றன. 'மோக்சம்' என்னும் நடனம் இதன்பின் ஆடப்படுகிறது. பின்னர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விளக்கும் 'தசாவதாரம்' மற்றும் சிவபெருமானின் பெருமைகளைப் பேசும் 'பாட் நிருத்யம்' ஆகியவை ஆடப்படுகின்றன.
ஒடிசி நடனத்தின் இன்றைய வளர்ச்சிக்குக் காரணமாக விளங்கியவர் கேளுச்சரண மகோபாத்திரா. உலக அளவில் இந்த நடனம் பேசப்பட இவரும், இவரது மாணவரான சஞ்சுக்தா பாணிகிரகியும் காரணமானவர்கள். மேலும் குரு பங்கஜ் சரண்தாஸ், குரு மாயாதர் ரவுத், குரு தேவபிரசாத் தாசு ஆகியோரும் ஒடிசி இன்று உலக அளவில் பேசப்படக் காரணமானவர்கள்.
மேலும் பார்க்கவும்
இந்தியப் பாரம்பரிய நடனங்கள்
சலங்கை
கோட்டிபுவா
உசாத்துணை
நூல் பட்டியல்
Odissi : What, Why and How… Evolution, Revival and Technique, by Madhumita Raut. Published by B. R. Rhythms, Delhi, 2007. .
Odissi Yaatra: The Journey of Guru Mayadhar Raut, by Aadya Kaktikar (ed. Madhumita Raut). Published by B. R. Rhythms, Delhi, 2010. .
Odissi Dance, by Dhirendranath Patnaik. Published by Odisha Sangeet Natak Akademi, 1971.
Odissi – The Dance Divine, by Ranjana Gauhar and Dushyant Parasher. Published by Niyogi Books, 2007. .
Odissi, Indian Classical Dance Art: Odisi Nritya, by Sunil Kothari, Avinash Pasricha. Marg Publications, 1990. .
Perspectives on Odissi Theatre, by Ramesh Prasad Panigrahi, Odisha Sangeet Natak Akademi. Published by Odisha Sangeet Natak Akademi, 1998.
Abhinaya-chandrika and Odissi dance, by Maheshwar Mahapatra, Alekha Chandra Sarangi, Sushama Kulshreshthaa, Maya Das. Published by Eastern Book Linkers, 2001. .
Rethinking Odissi, by Dinanath Pathy. Published by Harman Pub. House, 2007. .
, Table of Contents
External links
Odissi solo performance: Nitisha Nanda, Arabhi Pallav, New Delhi 2013
Odissi group dance: Megh Pallavi, Vancouver 2014
Maryam Shakiba – Odissi Dance – Manglacharan Ganesh Vandana Pushkar 2014
Odissi links at the Open Directory
Odissi schools, Classical Indian Dance Portal
The annotated Odissi Dance Archive on Pad.ma
History of Odissi and Geeta Govinda JN Dhar, Orissa Review
Bharat Bhavan, a Kerala-based Department of Culture information website.
நடன வகைகள்
ஒரியப் பண்பாடு
ஒடிசாவின் நடனங்கள்
ஒடிசி நடனக் கலைஞர்கள்
|
5337
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
இயலுறு தோற்றப் படம்
|
வரைபுமுறைப் இயலுறு தோற்றப் படம் என்பது, ஒரு தள மேற்பரப்பில் ஒரு காட்சியை ஏறத்தாழக் கண்ணுக்குத் தோற்றமளிக்கும் விதத்தில் காட்டும் ஒரு படமாகும். ஒரு கோள வடிவ மேற்பரப்பிலேயே அச்சொட்டாகக் கண்ணுக்குத் தெரிவதுபோல் காட்ட முடியும். (இயலுறு தோற்ற வீழ்ப்புத் திரிபு (perspective projection distortion) கட்டுரையைப் பார்க்கவும்.)
இந்த அண்ணளவாக்கத்தை (approximation) உள்ளுணர்வின் அடிப்படையில் கை வரைபாகவே (Free Hand Drawing) வரையமுடியும் கணித அடிப்படைகளில் வரைதற் கருவிகளைப் பயன்படுத்தியும் வரையமுடியும். முதல் வழி ஓவியம் சார்ந்தது, இரண்டாவது வழி இயலுறு தோற்ற வீழ்ப்பு(projection) எனவும் அணிப் பெருக்க (matrix multiplication) முறையைப் பயன்படுத்திக் கணனி மூலம் கணிப்புச் செய்யும் போது இயலுறு தோற்ற மாற்றம் (perspective transform) என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இயலுறு தோற்றப் படத்தின் வரலாறு
அரேபியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும், தத்துவஞானியுமாகிய அல்ஹசென் (Alhazen) என்பவர் கி.பி 1000 அளவில் தனது Perspectiva என்னும் நூலில், ஒளி கண்ணுக்குள் கூம்பு வடிவில் வீழ்கிறது (projecting) என்று விளக்கும்வரை தொலைவுக் குறுக்கம் (foreshortening) என்பதற்கான ஒளியியல் அடிப்படை விளங்கிக் கொள்ளப்படாமலே இருந்தது. ஒரு காட்சியை ஒரு தள மேற்பரப்பில் (இம் மேற்பரப்பு படத் தளம்(picture plane)எனப்படும்) வீழ்த்துவதற்கான (projecting) முறை இன்னொரு 300 ஆண்டுகளுக்கு அறியப்படாமலே இருந்தது. ஓவியரான கியோட்டோ டி பொந்தோன் (Giotto di Bondone) என்பவரே கண்ணில் தெரியும் படிமங்கள் திரிபு பட்டவை என்பதை முதன் முதலாக அடையாளம் கண்டு கொண்டவராக இருக்கலாம். இந்தத் திரிபானது (distortion), ஒரு காட்சியில் படத் தளத்துக்குச் சமாந்தரமாக (parellel) உள்ளவை தவிர்ந்த ஏனைய சமாந்தரக் கோடுகள் அனைத்தும் ஒரு புள்ளியில் குவிவது போல் காணப்படுவதாகும். இயலுறு தோற்றப் படத்தின் முதற் பயன்பாடுகளில் ஒன்று கியோட்டோவின் Jesus Before the Caïf ஆகும். 100 ஆண்டுகளுக்கு முன்னரே பிலிப்போ புருனலெஸ்ச்சி (Filippo Brunelleschi) என்பவருடைய இயலுறு தோற்றம் பற்றிய விளக்கங்கள் மறுமலர்ச்சிக் காலத்தில் இயலுறு தோற்றப் படங்களின் பரவலான பயன்பாட்டை ஊக்குவித்தன.
செயற்கை இயலுறு தோற்ற வீழ்ப்பு (Artificial perspective projection) என்பதே இன்று செந்நெறி இயலுறு தோற்ற வீழ்ப்பு (classical perspective projection) என்பதற்கு லியொனார்டோ டா வின்சி கொடுத்த பெயராகும். கண்களில் வீழ்த்தப்படும் படிமத்தையே இயற்கை இயலுறு தோற்ற வீழ்ப்பு என அவர் குறிப்பிட்டார். இரண்டு வகைகளுமே திரிபு பட்டவையே. இயற்கையில் சமாந்தரமான கோடுகள் என்றுமே சந்திப்பதில்லை ஆனால் இயலுறு தோற்றப் படங்களில், படத்தளத்துக்குச் சமாந்தரமானவை தவிர்ந்த எல்லாச் சமாந்தரக் கோடுகளும் எப்பொழுதுமே ஓரு புள்ளியில் குவிகின்றன.
The difference between the images of the same object produced by artificial perspective projection and by natural perspective projection is called perspective distortion.
தற்காலத்தில் இயலுறு தோற்றப்படங்கள்
கையால் வரையப்படும் கட்டிடக்கலை சார்ந்த இயலுறு தோற்றப்படங்கள் பொதுவாக ஒற்றைப் புள்ளி மற்றும் இரட்டைப் புள்ளி இயலுறு தோற்றப் படங்களாகும். மிக அரிதாக மூன்று புள்ளி இயலுறு தோற்றங்களாகவும் அமைவதுண்டு. கணனிகளினால் உருவாக்கப்படும் இயலுறு தோற்றப் படங்கள் இயலுறு தோற்ற மாற்றம் (perspective transform) என்னும் முறையைப் பின்பற்றுகின்றன.
தொடர்பான கட்டுரைகள்
இயலுறு தோற்ற வீழ்ப்புத் திரிபு
Perspective transform
Desargues' theorem
இயலுறு தோற்றம்(காட்சி)
Linear perspective
வீழ்ப்பு வரைபடங்கள்
இயலுறு தோற்றத் திருத்தம் (Perspective correction)
இயலுறு தோற்றம்
தொழில்நுட்ப வரைபடங்கள்
|
5341
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
|
புது தில்லி
|
புது தில்லி (, ) இந்தியாவின் தலைநகரமாகும். இது தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள ஒரு மாவட்டமும், பெருநகரமும் ஆகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் பரப்பளவானது அரியானாவிலுள்ள ஃபரிதாபாத், குர்கான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.
ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் 1911ஆம் ஆண்டு தனது தில்லி தர்பாரின் போது திசம்பர் 15 இல் இம்மாநகருக்கான அடிக்கல்லை நாட்டினார். இதனை இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற பிரித்தானியக் கட்டிடக்கலை வல்லுநர்களான சர் எட்வின் லூட்டியன்சும் சர் எர்பெர்ட்டு பேக்கரும் வடிவமைத்து உருவாக்கினர். புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு "புது தில்லி" என 1927ல் பெயர் சூட்டப்பட்டு 1931 பெப்ரவரி 13 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. புது தில்லியிலுள்ள உமாயூனின் சமாதியும், செங்கோட்டையும், குதுப்பின் வளாகமும் உலகப் பாரம்பரியக் களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.
புது தில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறியுள்ளது. மேலும், 21 மில்லியன் மக்கட்தொகையோடு நாட்டின் அதிக மக்கள் கொண்ட மாநகரப் பட்டியலில் முதன்மையாகவும், நகரமைப்பில், 23 மில்லியன் மக்கள் தொகையோடு, உலக மக்கள்தொகை பட்டியலில் ஏழாவதாகவும் விளங்குகிறது. அமெரிக்க ஆலோசனை நிறுவனமான மெர்சரின் ஆய்வுப்படி, உலகின் விலையுயர்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட 214 நகரங்களில், புது தில்லி 113வது இடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த லாக்பராக் பல்கலைப்பழகம், புது தில்லியை தங்களது தலையாய உலக நகரங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது. 2011 இல் லண்டன் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனமான நைட் ப்ராங்கின் உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் 37வது இடத்தையும் பிடித்துள்ளது.
வரலாறு
புராண காலமான, மஹாபாரதத்தில், விஸ்வகர்மாவால் பாண்டவர்களுக்காக, கடவுள் கிருஷ்ணரின் ஆணைக்கிணங்க, உருவாக்கப்பட்ட நகரம் இந்திரப்ரஸ்தம் (தில்லியின் பழைய பெயர்). இன்றைய தில்லியிலும் ஒரு பகுதி இந்திரப்ரஸ்தம் என்றே வழங்கப்படுகிறது.
தில்லி மாநகரானது முகலாயப் பேரரசரான ஷாஜகானால் நிறுவப்பட்டதாகும். ஏழு புராதான நகரங்களால் உருவாகிய தில்லி, வரலாற்றுச் சிறப்புகளான உமாயூனின் சமாதி, ஜந்தர் மந்தர், லோதித் தோட்டம் ஆகியவைகளைக் கொண்டுள்ளது.
நிறுவியது
இந்திய நாடு, பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்டிருந்தபோது 1911 ஆம் ஆண்டிற்கு முன், கல்கத்தாவே நாட்டின் தலைநகராக விளங்கியது. தில்லி மாநகரானது, 1649 முதல் 1857 வரையிலான ஆண்டுகளில், சுல்தானிய மற்றும் முகலாய பேரரசுகளின் அரசியல் மற்றும் நிதிகளை கையாளும் மையமாக இருந்தது. 1900 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசு தனது தலைமையகத்தை கல்கத்தாவலிருந்து தில்லிக்கு மாற்றியது. கல்கத்தா, இந்தியாவின் கிழக்கில் இருப்பதால் ஏற்பட்ட தகவல் பரிமாற்றத்தின் சிக்கல்களுக்கு தீர்வாக, தனது தலைநகரத்தை இந்தியாவின் வடக்கில் இருக்கும் தில்லிக்கு மாற்றியது.
12 திசம்பர் 1911 இல் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், அரசி மேரி மற்றும் அரசி கன்சார்ட் ஆகியோரைக் கொண்ட புது தில்லிப் பேரவை கூட்டப்பட்டு, பிரித்தானிய இந்தியாவின் புதிய தலைநகராக தில்லியை அறிவித்தனர். மேலும் இராஜப்பிரதிநிதி தங்குவதற்கான மாளிகைக்கு தில்லியிலுள்ள முடிசூட்டுப் பூங்காவில் அடிக்கல் நாட்டினார். புது தில்லியின் பெரும்பகுதியான கட்டுமானங்கள், ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது சீறிய முயர்ச்சியாலும் திரு. சோபா சிங் அவர்களின் பங்களிப்பாலும் சிறப்பாக நடந்தேறியது. கட்டுமானப்பணிகள், 1911 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியிருந்தாலும், அனைத்து வேலைகளும் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தியே ஆரம்பிக்கப்பட்டன. இறுதியில், 13 பெப்ரவரி 1931 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
புவி அமைப்பு
தில்லி பெருநகரப் பகுதியில், 42.7 சதுர கிலோமீட்டரைக் கொண்டு புது தில்லி அமைந்துள்ளது. மேலும் புவியமைப்பை கணக்கிடும் பொழுது புது தில்லி, கங்கைச் சமவெளியில் அமைந்துள்ளது. ஆரவள்ளி மலைத்தொடரின் நடுவே அமைந்திருக்கும் புது தில்லியின் மேற்கே யமுனை ஆறும் பாய்கிறது. ஷாதரா என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமும், யமுனையாற்றின் கிழக்கே அமைந்துள்ளது. புது தில்லியானது, நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதால், இவ்விடம் பூகம்பங்களால் பாதிக்கப்படலாம்
மாவட்ட நிர்வாகம்
புது தில்லி மாவட்டம் சாணக்கியபுரி, தில்லி கண்டோன்மெண்ட் மற்றும் வசந்த விகார் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. புது தில்லி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கன்னாட்டு பிளேசில் உள்ளது.
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 142,004 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் -20.72% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 77,942 ஆண்களும்; 64,062 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 822 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 35 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 4,057 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 88.34% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 92.24% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 83.56% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12,760 ஆக உள்ளது.
சமயம்
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 124,482 (87.66%) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 8,480 (5.97%) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 2,933 (2.07%) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 679 (0.48%) ஆகவும்; கிறித்தவ மக்கள் தொகை 4,852 (3.42%) ஆகவும்; பௌத்த சமய மக்கள் தொகை 312 (0.22%) ஆகவும் உள்ளது.
மொழிகள்
தேசிய தலைநகர் வலயத்தின் ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், பஞ்சாபி, உருது, தமிழ் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
காலநிலை
புது தில்லியின் காலநிலையானது ஈரமான மிதவெப்பப் பருவத்தைக் கொண்டுள்ளது. அதனால் இங்கு, கோடை மற்றும் குளிர் காலங்களில் அதன் உச்சத்தில் இருக்கும். தட்பவெப்பநிலை, கோடைக் காலங்களில் ம், குளிர் காலங்களில் ம் இருக்கும். இத்தகைய காலநிலையைக் கொண்ட நகரங்களிலிருந்து புது தில்லியில் தனித்து காணப்படுகிறது. ஏனென்றால், கோடைக் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், குளிர் காலங்களில் குளிரின்தன்மை அதிகமாகவும் காணப்படும்.
வெளி இணைப்புகள்
புது தில்லியின் புகைப்படங்கள்
புது தில்லி அரசின் அதிகாரப்பூர்வமான இணையதளம்
புது தில்லியின் நகரமைப்பு
புது தில்லியை விவரிக்கும் வரைபடங்கள்
புது தில்லி அரசின் சுற்றுலா துறைக்கான இணையதளம்
புது தில்லியைப் பற்றிய தகவல்கள்
புது தில்லி டைம்ஸ்
குறிப்புகள்
தில்லி
ஆசியத் தலைநகரங்கள்
இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள்
தில்லி மாவட்டங்கள்
தில்லி
இந்தியாவின் மெட்ரோ நகரங்கள்
புது தில்லி
தில்லி சுற்றுப் பகுதிகள்
|
5349
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
தொலைவுக் குறுக்கம்
|
தொலைவுக் குறுக்கம் (Foreshortening) என்பது தொலைவில் உள்ள பொருள் அல்லது நீள அளவு, ஒரு ஒளியியல் மாயத் தோற்றத்தினால், அண்மையிலுள்ள அதே அளவுள்ள பொருள் அல்லது நீளத்திலும் சிறிதாகத் தெரியும் ஒரு தோற்றப்பாடு (Phenomenon) ஆகும்.
இயலுறு தோற்றங்களைக் காட்டும் ஓவியங்களில் தொலைவுக் குறுக்கம் ஒரு சிறப்பான கூறு ஆகும்.
தொலைவுக் குறுக்கம் இயலுறு தோற்றத்துக்கு மிக நெருங்கிய ஒன்றாயினும், தொலைவுக் குறுக்கம் பொதுவாக மனித அல்லது விலங்கு உருவங்கள் போன்ற உருவங்களை வரைவது தொடர்பில், அமைப்பு முறையைக் கையாளாது கண் மதிப்பீட்டைப் கையாளும் போதே பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான வடிவங்களை வரையும் போது தொலைவுக் குறுக்கத்தைச் சரியான முறையில் பெறுவது கடினமானதாகும்.
இவற்றையும் பார்க்கவும்
இயலுறு தோற்றப் படம்
வெளியிணைப்புகள்
அண்ட்றேயா மன்டெக்னாவுடைய (Andrea Mandegna) "இறந்த கிறீஸ்து"
ஒளியியல்
கூட்டமைவு (காண்கலைகள்)
சார்புகளும் கோப்புகளும்
en:Perspective (graphical)#Foreshortening
|
5351
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
|
அந்தாட்டிக்கா
|
அந்தாட்டிக்கா அல்லது அண்டார்ட்டிக்கா (Antarctica) பூமியின் தென்முனையைச் சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுவாகும். புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரியனின் வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்துசேர்கிறது. இதன் காரணமாகக் கண்டம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. ஆண்டில் ஆறு மாதங்கள் சூரியனின் வெளிச்சமே இருக்காது. இது ஆண்டு மழைப் பொழிவு 200 மில்லிமீட்டர் அளவு மட்டுமே பெறக்கூடிய பனிக்கட்டிப் பாலைநிலம் ஆகும். இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது. வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதமானது இங்கேயே உள்ளது. புவி வெப்பமாதலினால் இங்குள்ள பனி உருகிவருகின்றது. இதன் மூலம் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புவி வெப்பமாதலால் உருகும் பனிப்பாறைகள், கடல் நீர்மட்டம் உயர்வதை மேலும் கூட்டுகின்றன என அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிகாவில் உலகின் எழு கொடுமுடிகளில் ஒன்றான வின்சன் மாசிப் அமைந்துள்ளது.
சொற்பிறப்பு
அண்டார்டிக்கா என்ற பெயர் ஒரு கிரேக்க கூட்டுச் சொல் ἀνταρκτική (ஆன்டர்க்டிக்கே), ἀνταρκτικός (antarktikós), ஆகும். இதன் பொருள் "ஆர்க்டிக்கிற்கு எதிரிடையான", "வடக்கிற்கு எதிரிடையாக" என்பது ஆகும்.
அரிசுட்டாட்டில் தனது நூலான மீட்டியரோலாஜியில் அன்டார்டிகா பற்றி கி.மு 350-இல் எழுதியுள்ளார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட உலக வரைபடத்தில் டயர் மரின்ஸ் இந்தப் பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ரோமானிய எழுத்தாளர்களான ஹைஜினஸ் மற்றும் அபூலியஸ் (கி.பி. 1-2 நூற்றாண்டுகள்) தென் துருவத்தை ரோமானிய கிரேக்க பெயரான பொலஸ் அண்டார்டிக்கஸ், என்று குறிப்பிட்டுள்ளனர்.
அந்தாட்டிக்காவும் அமைப்பும்
அந்தாட்டிக்காவில் ஏறத்தாழ 5000 மீட்டர் (16,000 அடி) அளவிற்குத் தரையில் ஆழ்துளையிட்டால் தான் மண்ணைப் பார்க்கமுடியும். ஏனெனில்,
98 விழுக்காடு பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. பலகோடி ஆண்டுகளாக உருகாத பனிப்பாலைவனமாக அண்டார்டிகா விளங்குவதால் எப்பொழுதும் தாங்க முடியாத குளிட்மிகு சீதோஷ்ண நிலையியே இருக்கும். அண்டார்டிகா. நாம் வாழும் பூமிப் பந்தின் தென் துருவத்தில் அமைந்துள்ளது.உலகின் 7-வது கண்டம் எனவும் அழைக்கப்படுகின்றது. 14.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டு, ஐந்தாவது பெரிய கண்டமாகவும் திகழ்கின்றது. உலகில் உள்ள தண்ணீரில் 68 விழுக்காடு அண்டார்டிகாவிலேதான் உள்ளது. ஒரு துளி மழை கூடப் பெய்யாத இடம் எதுவென்ற வினா எழுப்பினால், அண்டார்டிகா என்று உடனே தயக்கம் எதுவுமின்றித் தாராளமாக விடையளிக்கலாம்.. உலகிலேயே கொடுமையான குளிரும் ( 89 டிகிரி ஷெல்சியஸ் ), பனிக்காற்றும் ( 1300 Km/Hr ) நிறைந்து, ஒரு உலக அதிசயமாகத் திகழும் அண்டார்டிகாவில், எந்தவித உயிரினங்களும் நிலையாக வாழ்வதுமில்லை.
அங்கேயும் மிக உயர்ந்த வின்சன் மாஸிப் என்ற உயர்ந்த ( 4892 மீட்டர்கள்) மலைச்சிகரம் உண்டு.ஆனால் அது நமது எவரஸ்ட் சிகரத்தை விட பாதி தான்.அதே போல் அங்கே ரோஸ் ஐலன்ட் எனும் தீவில் மவுண்ட் எருபஸ் என்ற எரிமலையும் உண்டு.அதுமட்டுமல்லாமல் அங்கே 70 அழகிய குடிநீர் ஏரிகளும் இருக்கின்றன.
கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே பனிப்படலமாகக் காட்சியளிக்கும் அண்டார்டிகா, முதலில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியைத் தோற்றுவித்தாலும், தொடர்ந்து தங்கிப் பார்க்கும் நிலையில், விரக்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்திவிடும். அண்டார்டிகாவில் பனிப்புயல் 300 கி.மீ. வேகம் வீசும்.'கட்ஸ்' எனப்படும் சூறாவளி சுழன்று சுழன்று வீசும். மிகவும் இதமான சீதோஷ்ணநிலை போல் தோன்றும் நிலை சுமார் அரைமணி நேரத்திற்குள் உயிருக்குப் போராடும் பனிப்புயலாகவும் மாறிவிடும் அபாயமும் உண்டு.. குளிரால் எற்படும் ஆபத்தை விட பனிப்புயலால் விளையும் ஆபத்தே அதிகம் என்று கூறலாம். பூமியில் அதிர்ச்சி அல்லது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டால், அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாளங்களில் பிளவுகள் உண்டாகும். உடைந்த பகுதி கடற்கரை நோக்கி மெல்ல நகரும். அதுசமயம் குளிரின் தாக்கம் அதிகமானால், நகர்ந்த பாளங்கள் அப்படியே நிற்க, புதிதாக விழும் பனியானது அப்பிளவுகளை இலேசாக மூடிவிடும். இதனை பனிப்பிளவு என்கின்றனர். எச்சரிக்கை உணர்வின்றி, இதன்மீது கால் வைத்துவிட்டால், அந்த நபர் அதலபாளத்தில் விழுந்து உடனடி உறைதல் காரணமாக ( Hypothermia ) உறைந்து போய்விடுவார். பனிப்புயலின் வேகத்தால் உறைபனிப்பாளங்கள் பல்வேறுவிதங்களில் சீவி விடப்படுவதால், பனிப்பாளங்கள் சமதரையாக இல்லாமல் மேடு பள்ளமாகவே இருக்கும். அவற்றின்மீது நடக்க முற்பட்டால், உடைந்துபோன கண்ணாடித் துண்டுகள்போல் கால்களைக் கிழிக்கும்
அன்டார்டிகாவில் வெப்பம்
வெப்ப நிலையானது மிகக் குறைந்தபட்சம் மைனஸ் 80 செல்சியஸ் முதல் மைனஸ் 90 செல்சியஸ் வரை இருக்கும்.அதிகபட்சம் 5 செல்சியஸ் முதல் 15 செல்சியஸ் வரை இருக்கும்.
அண்டார்டிகாவில் கடந்த 1,000 ஆண்டுகளி்ல் இல்லாத அளவுக்கு தற்பொழுது பனிக் கட்டிகள் மிக வேகமாக கரைந்து வருகின்றனவாம்.இதை ஆஸ்திரேலிய மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்துள்ளது.
அண்டார்டிகாவில் கடந்த 600 ஆண்டுகளில் வெப்பத்தின் அளவு 1.6 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த 50 ஆண்டுகளில் தான் வெப்ப அளவு அதிகரிப்பு வேகம் பிடித்துள்ளது.
அன்டார்டிகா அடைந்தவர்கள்
பல நூற்றாண்டுகளாக அங்கே யாரும் பயணம் செய்தது இல்லை.அண்டார்டிகா குறித்து அறிந்திராத நாட்களிலேயே, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகள் உலகின் தென் துருவம் நோக்கிப் பயணிக்க முற்பட்டன.
ரோல்ட் அருன்ட்சன் என்னும் பெயருடைய நார்வே நாட்டைச் சேர்ந்தவர், 14, டிசம்பர், 1911 -இல் பகல் 3 மணியளவில், தென் துருவத்தில் கால் பதித்துத் தன் நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.
அதே சமயம் அவருக்கு இணையாக வேறு ஒரு பாதையில் பயணத்தைத் துவக்கிய, இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஃபட்கான் ஸ்காட் என்பவர், 17, ஜனவரி 1912-இல் தென் துருவத்தை அடைந்தார். அங்கே நார்வே நாட்டு கொடி பறப்பதைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினார். மன விரக்தியில் திரும்பிய ஸ்காட்டும் அவருடன் பயணித்த நால்வரும் பனிப்புயலில் சிக்குண்டு இறந்துபோனார்கள். பின்னாளில் தாங்கள் அமைத்த ஆய்வு தளத்திற்கு அமெரிக்கா,அருன்ட்சன்,ஸ்காட் என்று பெயர் சூட்டி இருவரையுமே கெளரவித்தது.
அன்டார்டிகாவில் மனிதர்கள்
மனிதர்கள் வாழ சாத்தியமேயில்லை என்றாலும்.வருடத்திற்கு ஆயிரம் முதல் ஐயாயிரம் பேர் வரை அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக தங்கி இருக்கிறார்கள்.இந்தியா கூட அங்கே தட்சின் கங்கோத்ரி, மற்றும் மைத்ரி எனும் இரு ஆய்வகங்களை அமைத்துள்ளது. பாரதி என்ற மூன்றாவது ஆய்வகத்தை சுமார் 140 கோடி செலவில் அமைக்க தற்போது முயற்சித்து வருகிறது.
உயிர்ப் பல்வகைமை
இங்கு சிறிதளவான முள்ளந்தண்டுளி வகைகளே உள்ளன. உதாரணமாகப் பென்குயின்கள் மற்றும் நீலத்திமிங்கிலங்களைக் குறிப்பிடலாம்.பனிப் பிரதேச மகாராசாக்கள் பெங்குவின்கள் நிறைய உண்டு.மோசேஸ், சீல் என சில உயிரினங்களும், பனிப் பிரதேச சூழலுக்கு வாழும் தன்மையுள்ள மைக்ரோ மற்றும் பெரிய தாவரங்களும் இங்கு வாழ்கின்றன.
அரசியல்
பல நாடுகள் அந்தார்திகாவின் சில பிராந்தியங்களின் இறையாண்மை உரிமையைக் கோருகின்றன. இந்த நாடுகளில் சில நாடுகள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தங்களின் இறையாண்மையை அங்கிகரித்துள்ளன, ஆனால் இந்த நடவடிக்கைகள் உலகளவில் செல்லுபடியாகும்படி அங்கீகரிக்கப்படவில்லை.
1959 முதல் அண்டார்டிக்கா மீதான புதிய உரிமைகோரல்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன, இருப்பினும் 2015 ஆம் ஆண்டில் ராயல் மாட் லேண்ட் மற்றும் யாரும் உரிமைகோராத நிலப்பகுதி ஆகியவ்வை உள்ள தென்துருவ நிலப்பிரதேசத்தை நோர்வே முறையாக வரையறுத்தது. அண்டார்டிக்காவின் நிலையை 1959 அன்டார்டிக்கா ஒப்பந்தம் மற்றும் பிற தொடர்புடைய ஒப்பந்தங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது, இவை கூட்டாக அண்டார்டிகா உடன்படிக்கை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. அண்டார்க்டிக்கா ஒப்பந்தத்தின்படி 60 ° S க்கு தெற்கே உள்ள அனைத்து நிலப்பரப்பு மற்றும் பனித் தாழ்வாரங்களும் அந்தார்டிக்கா பிரதேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் சோவியத் ஒன்றியம் (பின்னர் உருசியா), ஐக்கிய இராச்சியம், அர்ஜென்டினா, சிலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உட்பட பன்னிரண்டு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி அண்டார்டிகா பிரதேசமானது அறிவியல் பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது, இங்கு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியப்பணிகளுக்கான சுதந்திரம் உறுதிபடுத்தப்பட்டது, அதேசமயம் அன்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளை தடை செய்தது. இது பனிப்போர் காலத்தில் நிறுவப்பட்ட முதலாவது ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையாகும்.
1983 ஆம் ஆண்டில் அன்டார்க்டிக் உடன்படிக்கை நாடுகள் அன்டார்க்டிக்காவில் சுரங்கங்களை ஒழுங்குபடுத்தும் மாநாட்டில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. சர்வதேச அமைப்புகளின் கூட்டமைப்பு இப்பகுதியில் எந்த கனிம அகழ்வுப் பணிகளையும் செய்யாமல் தடுக்க பொது அழுத்த பரப்புரையை முன்னெடுத்தது, பெரும்பாலும் இது கிரீன்பீஸ் சர்வதேச நிறுவனத்தால் நடத்தப்பட்டது, 1987 முதல் 1991 வரை ரோஸ் கடல் பகுதியில் உள்ள அதன் சொந்த அறிவியல் நிலையமான - வேர்ல்டு பார்க் பேஸ்ஸை இயக்கியது. அண்டார்டிக்காவில் மனிதர்களால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் விளைவுகளை ஆவணப்படுத்த வருடாந்திர ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1988 ஆம் ஆண்டில், அண்டார்டிக் கனிம வளங்கள் (CRAMRA) ஒழுங்குமுறை மாநாட்டின் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்துவந்த ஆண்டில், ஆஸ்திரேலியாவும் பிரான்ஸும் மாநாட்டின் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்தன, இதனால் மாநாட்டின் அனைத்து நோக்கங்களுக்கும் முடிவெய்தின. அதற்கு பதிலாக அன்டார்க்டிக்காவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முழுமையான நிர்வாகத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்தனர். அண்டார்டிக் உடன்படிக்கைக்கையான, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய நெறிமுறை பிற நாடுகளின் சட்டப்படி பின்பற்றப்பட்டு, ஜனவரி 14, 1998 அன்று அமலுக்கு வந்தது. இதன்படி அன்டார்க்டிக்காவின் அனைத்து சுரங்கங்களையும் தடைசெய்து, அண்டார்டிக்காவை "சமாதானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இயற்கை இருப்பு" என்று குறிப்பிடுகிறது.
படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தென் துருவத்தைப் பற்றிய தகவல்களுடன் ஸ்... என்ற புத்தகம்
அண்டார்க்டிக்கா பற்றிய கட்டுரை
அண்டார்க்டிக்கா
கண்டங்கள்
|
5352
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
|
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
|
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் (Sarvepalli Radhakrishnan), வீரா. ராதாகிருஷ்ணய்யா ) (; 5 செப்டம்பர் 1888 – 17 ஏப்ரல் 1975) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவார்.
இளமைக் காலம்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். இவர் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவருடைய தந்தை சர்வபள்ளி வீராசாமி ஐயர், மற்றும் தாயார் சீதம்மா ஆகியோர் ஆவர். இவர் தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்கு ஆற்றிய பங்களிப்பு
கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை, சமுகமானது மாதா மற்றும் பிதாவைத் தொடர்ந்து அடுத்த நிலையில் தெய்வத்திற்கு மேலாக கருதும் நிலையினை இன்றும் காண இயலும். இச்சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர்வீரனே. அதில் வெற்றியோ தோல்வியோ என்ற கேள்விக்கு இடமின்றி, அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கு அனைவரும் தலைவணங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
ஆங்கில கல்வியின் ஆதிக்கம் செய்த அக்காலங்களில், ஒரு பிரிவினர் அதனை முழுவதுமாக வெறுத்ததும்; மறுபிரிவினர் அதனை முழுவதும் ஏற்றுக் கொண்டும் சமயச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை அற்றவராகவும் இருந்தார்கள். மூன்றாவது ஆங்கிலக் கல்வியின் நன்மையினைப் பெற்றதோடு அதன் மூலம் எண்ணற்ற நவீன கருத்துகளையும் வழங்குபவராகவும்; மூட நம்பிக்கைகள் மற்றும் அடிமைத்தனத்தை முற்றிலும் எதிர்ப்பராக திகழ்ந்தார்கள். இவர்கள் தாம் கால்பதித்த இடங்களில் புதிய அத்தியாயத்தினைப் படைப்பவராக விளங்கியவர்களுள் மிக முக்கியமானவர்கள் காந்திஜி, அரவிந்தர், தாகூர், விவேகானந்தர், கிருஷ்ணமூர்த்தி, இராதாகிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள் எனலாம்.
கல்வியாளர் என்ற வார்த்தை உச்சரிக்கும்போதெல்லாம் இவரது பெயரை என்றும் உச்சரிக்க மறந்ததில்லை. மேலைநாட்டுக்கல்வி எளிமையான பழக்க வழக்கங்கள், புத்தக விரும்பி ச. இராதாகிருஷ்ணன் ஆவார். இவர் அன்னி பெசண்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பேச்சுவன்மை மிகுந்தவராகவும் தன்பேச்சால் அனைவரையும் தன்பால் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார். தன் முதல் பணியினை சென்னை மாநில கல்லூரியில் துவங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்சுபோர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து நீண்ட காலமாக தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் "சர்" பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு தன்னை முழுமையாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும், மனமார ஆதரித்தவர்களுள் ஒருவராக விளங்கினார்.
வாழ்க்கைப் பற்றிய அவரது கருத்து
இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியக்கல்வி இரண்டிலும் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். மனிதனுடைய வாழ்வு விலங்குகளிடமிருந்து வேறுபட்டுள்ளதை தனது பல்வேறு உரைகளில் எடுத்துரைக்கச் செய்தார்.
மனிதனை கடவுளின் படைப்பின் மகுடம் என்றும் மனம் போனபோக்கில் செல்லாமல். தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுதந்திரமாக தெரிவுச்செய்து செயல்படக் கூடியவனாக விளங்க வேண்டும் என்றார். மேலும் அவர் நாம் அனைவருமே வாழ்க்கையின் பொருள் என்னவென்பதையும், வாழ்வின் நோக்கம் என்னவென்பதையும் அறிய வேண்டியவனாகிறோம் என்றும் ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கான திட்டத்தையும், நோக்கத்தையும் அறிந்து கொள்ளாமல் அமைதி காண இயலாது என்கிறார்.
உங்களது இலட்சியமும் நம்பிக்கையும் ஒரு கோட்பாட்டில் அமையாவிட்டால், உங்கள் நடத்தை சஞ்சலமடைந்து முயற்சி / சக்தி வீணாகிவிடும் என்கிறார். அதிலும் கோட்பாட்டில் நம்பிக்கை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் நடத்தை உருவாகிறது என்பதை திறம்பட உரைக்கிறார்.
ஒவ்வொரு மனிதனும் தனித்த வாழ்க்கையன்றி மற்ற மனிதர்களுக்கிடையில்தான் வாழ்கின்றான். இதன் விளைவாக தோன்றியதுதான் நாகரீகம். ஓவ்வொருவரும் இன்பங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ மற்றவரின் ஒத்துழைப்பும் இணக்கப்பண்பும் அவசியம் என்பதை மேலும் வலியுறுத்துகிறார்.
கோழைத்தனத்தை வெறுத்து தைரியத்தை ஆதரித்ததோடு; தைரியம் இல்லாமல் எந்த நற்பண்பும் வாழ முடியாது என்றும்; எல்லா அம்சங்களையும் கவனமாகக் கணித்து திட்டமிட்டு தைரியமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அவரின் தின்னமான கருத்தாக இருந்தது.
நாம் எப்போதும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றார்.
கல்வியின் நோக்கம்
இயற்கையோடு இயைந்த முறையிலான கல்வியை அவர் என்றும் வரவேற்றார். மனிதனுக்குக் கல்வி பெறும் திறன் இருப்பதுதான் அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றார்.
கல்வியின் நோக்கம் மனித மனத்தில் ஒளி பாய்ச்சி, அவனுக்குள்ளே இருக்கும் குரங்கு தன்மையை நீக்கி, இதயத்தில் அன்பை வளர்த்து, அனைவற்றிற்கும் மேலாக உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்குவதாகும். விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் மட்டும் கற்பிக்கும் கல்வி ஒரு மனிதனை சிறு தொழில் நுட்பாளனாக உருவாக்குமே தவிர நல்ல மனிதனாக ஆக்காது என்பதை வாதிட்டார். விஞ்ஞானம் அவனுக்கு இயற்கையை வெற்றி கொள்ளவும் பூமியைச் சூறையாடவும் உதவியிருக்கிறது. காற்றில் பறக்கவும் கடலுக்கடியில் நீந்தவும் அவனுக்கு சக்தி அளித்துள்ளது. இவையனைத்தும் மனிதனின் உண்மையான இயல்பு அல்ல. மனிதன் தன்னுடனேயே அமைதியான வாழும் திறனைக் கல்வி அவனுக்கு அளிக்கவில்லை என்று சாடினார்.
மனநோய்கள், மனப்பதற்றம் முதலான கேடுகள் எல்லாம் தவறான கல்வியின் விளைவு ஆகும். மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி என்றார். அது சமூக நீதியையும் சுமூகமான மனித உறவுகளை வளர்க்கும் கலையாகும்.
ஒரு கருத்தைக் கூறி அதற்கு ஆதாரமான காரணங்களை ஒருவர் கூறினால், மற்றொருவர் இதை விட சிறப்பான காரணங்களைக் கூறி மறுக்க முடியும். காரண காரிய வாதத்தில் காணும் முடிவுரைகளுக்கு இறுதித்தன்மை கிடையாது என்கிறார்.
பல்கலைக்கழக ஆணையமும், இராதாகிருஷ்ணனும்
பல்கலைக் கழக ஆணையத்தின் தலைவராக இருந்த அவர் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமன்றி பள்ளிக் கல்வியிலும் சிறப்பான கொள்கைகளை வகுத்ததில் முக்கியப் பங்கு அவருக்குண்டு. அவைகள் பின்வருமாறு:
ஆன்மீகப்பயிற்சி அளிக்கவும் சுதந்திரமாக ஆராய்ந்து சமயம் பற்றி தங்களுடைய அணுகுமுறையை தாங்களே உருவாக்கி கொள்ளுதல்.
ஆங்கிலத்திற்கு பதில் விரைவில் இந்திய மொழி ஒன்றை பயிற்று மொழி ஆக்கப்பட வேண்டும். பிராந்திய மொழி ஒன்றை பயன்படுத்தும் வரை ஆங்கில மொழி தொடர்ந்து பயன்படுத்துதல் வேண்டும்.
கல்வி வாய்ப்புகளைத் திறமையின் அடிப்படையிலேயே வழங்குதல்.
இவ்வாணையத்தின் கருத்துகள் கிறித்துவ நாடுகளிலும் பின்பற்றப்பட்டது என்பது சாலச்சிறந்தது
ஆசாரியரும் மொழிப் பெயர்ப்பு நூல்களும்
இவர் "ஆசாரியர்" என்ற நிலைக்கு உயர்ந்ததின் முக்கிய காரணம், அவரால் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள் மற்றும் பகவத் கீதை ஆகும்.
அவருக்கு மிகவும் பிடித்த நூலான பகவத் கீதையைப் பற்றிக் கூறும்போது "உபநிடதங்கள்" என்ற பசுவிலிருந்து கிருஷ்ணர் என்ற தெய்வீக ஆயர், அர்ஜுனனுக்காகக் கறந்த பால் தான் பகவத் கீதை என்றும்; அது பழையதும் அன்று, புதியதும் அன்று, நிரந்தரமானது என்பதை தெளிவுப்படுத்தினார்.மனிதன் ஆசைகளை ஒழுங்குபடுத்தி பகவா னிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும்; நம்பிக்கை என்பது சந்தேகமில்லாத உறுதியான விசுவாசமும் ஈடுபாடும் இணைந்து வாழ்க்கையின் ஒரு நோக்கத்தை அளிப்பதோடு; வாழ்வில் ஏற்படும் இன்னலிலும் இருளிலும் இருந்து மீண்டு வரசெய்யும் நம்பிக்கையை அளிக்கிறது. இன்னல்களிலிருந்து விடுபட சுயகட்டுப்பாடும் புலன்களைக் கட்டுப்படுத்துவதும் அவசியம் என்று வலியுறுத்துகிறார்.
ஒருமுறை "பகவத் கீதையை" ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதனை காந்திஜியிடம் அவர் அளிக்க அவரோ “தான் அர்ஜுனன் என்றும், தாங்கள் கிருஷ்ணன் என்றும், தாங்கள் தவறாக எழுதியிருக்க முடியாது" என்று காந்திஜி கூறியதிலிருந்து அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை வெளிப்பட்டது எனலாம்.
ஆன்மீகமும் ஆசாரியரும் அறிவியலும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளிலும் நாம் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறோம் என்றாலும் அறநெறி மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் முந்தைய தலைமுறைக் காட்டிலும் பின்தங்கியுள்ளோம். நம்முடைய இயல்பானவைகள் இன்று இயந்திரமாகிவிட்டன.
ஒருவருடைய அறிவுக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடு உள்ளது. அறிவு செயல்படுவதுதான் விவேகமாகும். எது நன்மை என்று தெரிந்தும் செய்யாமலிருப்பது, எது தீமை என்று தெரிந்தும் தவிர்க்க முடியாமை, ஆனால் தீமையை நீக்கி நன்மைக் காண நம்மால் இயலும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் மனதில் ஒரு தடத்தை பதித்து, பலமிக்க சக்தியாக மாறி, மென்மேலும் சேர்ந்து செயலுக்கு உரித்தான சக்தியாக விளங்கி அவைகள் அணிவகுத்து பழக்கங்களாக மாறுகின்றன. இத்தகைய பழக்கங்களை உடைப்பது கடினம் என்றாலும் ஏற்படுத்துவது எளிது ஆகும். மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் முந்தைய செயல்களின் சக்தியே வழிகாட்டுதலாக அமைகின்றன. நாம் "பழக்கம்" என்ற விதையை விதைத்துப் "பண்பு" என்ற பயிரை அறுவடை செய்வதாகவும், பண்பு தான் விதியாகும் என்கிறார் அவர்.
சமயம் பற்றிய அவரது கருத்து
சமயம் என்பது ஒரு அனுபவம், நம்பிக்கை, மனிதனின் இயல்பில் ஒருங்கிணைப்பாகும். அது ஒரு முழுமையான ஈடுபாடு ஆகும். ஒருவன் மற்றொருவர் மூலமாக சமயத்தைப் பின்பற்றி நடக்க இயலாது. ஒவ்வொருவரும் தனது சிலுவையைத் தானே சுமந்து அகங்காரத்தை சிலுவையிலறைந்து தன்னிடமுள்ள ஒளியைச் சுடர்விடச் செய்ய வேண்டும். சமயத் தேடல் என்பது ஒரு போராட்டமாகும். அதற்கு வழி நெடுங்கிலும் கடுமையான மன உழைப்பு அவசியமாகிறது.
விஞ்ஞான தொழில்நுட்ப அளவின் குறைபாடுகளைச் சீர்செய்வதற்கு சமயமும் தத்துவமும்தான் சரியான துணை என்பதை எப்பொழுதும் முன்மொழிந்தார்.
நட்பு, அன்பு, கலைப்படைப்பு போன்ற பண்புகளை விஞ்ஞானம் கொண்டு விளக்க முடியாது. புகழ்பெற்ற ஓவியரால் வரையப்பட்ட ஓவியமும் புகழ்பெற்ற இசையெழுப்பவர்கள் உருவாக்கப்பட்ட பாடல்களும் அவரவர் உள்ளுணர்வின் உத்வேகத்தால் ஏற்பட்டவைகளே தவிர விஞ்ஞானத்தால் ஆராய வேண்டியதன்று.
அவருடைய உரை எதுவும் அரசியல், கல்வி, சமயம் பற்றியதாக இருந்தாலும் விருந்து படைப்பதாகவும், சிந்தனை தூண்டும் செயல்களை உள்ளடக்கியதாகவும், இருக்கும். இந்த உரையைப் படிப்பதே ஒரு கல்வியாகும். நீண்ட நினைவாற்றல் கொண்ட இவர், தன்னுடைய எல்லா புத்தகங்களிலும் சிந்தனையைத் தூண்டும் கருத்துகளை ஆங்காங்கே தூவியிருப்பதைக் காணலாம்.
அமெரிக்காவில் பால் ஆர்தர் வெளியிட்ட "வாழும் தத்துவ ஞானிகளின் நூல்கள்" என்ற புத்தக வரிசையில் டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள் பற்றி வெளியாயிருப்பதிலிருந்து அவரது தத்துவங்கள் உலகெங்கும் பரவி உள்ளதற்கானச் சான்று இதுவாகும்.
இராதாகிருஷ்ணனின் தத்துவத்தை "ஆன்மீக மனித நேயம்" என்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த தத்துவ அறிஞரும் ஏராளமாக எழுதியதில்லையாம். அவரது பிறந்த நாளை செப்டம்பர் ஐந்தாம் தேதியை ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட வேண்டுமென்றே ஆசிரியர்களின் தேசிய சம்மேளத்தின் கோரிக்கையை ஏற்று, நேருவின் முயற்சிக்குப்பின் அவ்வாறே முடிவு செய்யப்பட்டு நாமும் கொண்டாடி மகிழ்கின்றோம். உலக சிந்தனையாளர்களுள் ஒருவராக ஜொலிக்கவில்லை என்றாலும் நம் மனதில் என்றென்றும் நீங்காத இடம் பிடித்த கல்வியாளர்களுள் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.
இல்லற வாழ்க்கை
இராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரான
சிவகாமு, என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது இராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.
அரசியல் நிலைபாடுகள்
1938 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராஜாஜி உயர் நிலைப் பள்ளிகளில் இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்த போது, அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். 1965 ஆம் ஆண்டு மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ. வி. அழகேசன் பதவியை ராஜினாமா செய்தார்கள்.இந்தி ஆட்சி மொழிக்கு ஆதரவான பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவ்விரு அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அதனை குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் ஏற்க மறுத்தார்.
ஆசிரியப் பணி
சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயின்றவர்.
இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
எழுதிய நூல்கள்
முதன்மை உபநிடதங்கள்
இந்துக்களின் வாழ்க்கை நோக்கு
இந்தியத் தத்துவம் தொகுதி I & II
கிழகக்திய சமயங்களும் மேற்கத்திய சிந்தனைகளும்
தம்மபதம்
பகவத் கீதை விளக்க உரை
கிழக்கும் மேற்கும்
மகாத்மா காந்தி
கிழக்கு மற்றும் மேற்கின் தத்துவ வரலாறு
பிரம்ம சூத்திரம் விளக்க உரை
இரவீந்திரநாத்தின் தத்துவங்கள்
இந்திய சமயங்களின் சிந்தனை
இந்துஸ்தானின் இதயம்
சமயமும் கலாச்சாரமும்
சமகால இந்திய தத்துவம்
சமயமும் சமுதாயமும்
உண்மையான கல்வி
இந்தியச் சமயங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
"The Legend of Dr. Sarvepalli Radhakrishnan"
"Dr. Sarvepalli Radhakrishnan- The philosopher president", Press Information Bureau, Government of India
"Sarvepalli Radhakrishnan (1888–1975)" by Michael Hawley, Internet Encyclopedia of Philosophy
S. Radhakrishnan materials in the South Asian American Digital Archive (SAADA)
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்
1888 பிறப்புகள்
1975 இறப்புகள்
இந்திய மெய்யியலாளர்கள்
பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
தெலுங்கு மக்கள்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள்
1ஆவது மக்களவை உறுப்பினர்கள்
இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
திருவள்ளூர் மாவட்ட நபர்கள்
இந்து மெய்யியலாளர்கள்
|
5355
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
|
திருப்பதி
|
திருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வைணவத் தலமாகும். திருப்பதி மாநகராட்சி இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ் திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.
சொல் இலக்கணம்
திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு. திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் ஏடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேசனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேசாசலம் என்று பெயர் உள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும். இங்கு கிடைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ் கல்வெட்டுகளாகும் இது பண்டைய தமிழகத்தின் தொண்டை மண்டலத்தின் பகுதியாகும்
காலநிலை
வரலாறு
உலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை பொ.ஊ.மு. 400–100 இல் எழுதப்பட்ட தமிழ் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன. இந்த மலைகளை பண்டைய தமிழகத்தின் வடபுறத்து எல்லையாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல பேரரசுகளால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், விசயநகர மன்னர்களால், இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. இங்கே உள்ள கல்வெட்டுகள் பெரும்பாலும் தமிழ்க் கல்வெட்டுகளாகும்.
விசய நகர பேரரசின் மன்னரான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்தக் கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.
வைணவம் பெரிதாக பின்பற்றப்பட்ட பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி, ஆழ்வார்களால்(வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் ஆன்மீக பூமியில், வெங்கடேஸ்வரர் மீது அவர்கள் இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் போனவர்கள். வைணவ சம்பிரதாயத்தில்திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம். பதினோராம் நூற்றாண்டில் இந்தக் கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.
மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை இசுலாமியர்களால் சூறையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தான். இந்த இசுலாமிய பிரவேசங்களின் பொழுது திருவரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறது. இசுலாமியர்களிடமிருந்து திருமலை கோயில் தப்பியதற்கு சுவாரசியமான வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அந்த முகலாயப்படையினர் மலையின்மேல் என்ன கோயில் இருக்கிறது என்று கேட்டபோது அவர்களின் நோக்கத்தையும் பழக்க வழக்கங்களையும் நன்கறிந்த உள்ளூர் மக்கள் பன்றிக் கடவுளின் கோயில் என்றனராம். மக்கள் குறிப்பிட்டது வராஹப் பெருமாளின் திருக்கோயிலை. இந்தப் பெருமாளை தரிசித்தப்பின்னர்தான் ஏழுமலையானை தரிசிக்கவேண்டும் என்கிற சம்பிரதாயம் இருக்கிறது. பன்றிகளின் மீது முகலாயர்களுக்கு இருக்கும் வெறுப்பால் அவர்கள் திருமலைக்கு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.
பிரம்மோற்சவம்
திருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் 'ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்' (திருப்பள்ளி எழுச்சி) ஒலிபரப்பினாலும், மார்கழி மாதத்தில் மட்டும் தமிழ் திருப்பல்லாண்டு மற்றும் திருப்பாவை பாசுரங்களை ஒலிபரப்புகிறார்கள்.
திருப்பதி லட்டு
இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடு காப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான ஒரு முறையில் தயாரிக்கப்படுகிறது.
1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.
பயணம்
சாலை வழி
தென்னிந்தியா முழுவதும் செல்ல மற்றும் அருகில் இருக்கும் ஊர்களுக்கும் பெரிய நகரங்களுக்கும் செல்ல திருப்பதியில் பேருந்து வசதி இருக்கின்றது. தனியார் நிறுவனத்தினரால் சென்னை, மதுரை, வேலூர், திருவண்ணாமலை,திருக்கோயிலூர், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, ஐதராபாத்து மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொடருந்து வழி
திருப்பதியின் தொடர்வண்டிநிலையம் எல்லா வசதிகளும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. சென்னை மும்பை ரயில் வழியின் மத்தியில் இருக்கும் ரேணிகுண்டா சந்திப்பு திருப்பதி நகரத்தில் இருந்து வெறும் 20 நிமிட தொலைவில் தான் உள்ளது. திருப்பதியில் இருந்து நாட்டின் பல பகுதிகளுக்கு புறப்பட்டு செல்லும் ரயில்கள் பல உள்ளன.
வான் வழி
திருப்பதி விமான நிலையம் உள்நாட்டு விமான நிலையமாகும். இங்கிருந்து ஹைதராபாத், விசாகப்பட்டினம், தில்லி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நேரடி விமானங்கள் உள்ளன. நகரத்தின் மையத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த விமான நிலையம். மிக அருகாமையில் அமைந்திருக்கும் பன்னாட்டு விமான நிலையம் சென்னையில் உள்ளது. இது திருப்பதியில் இருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் உள்ளது. திருப்பதி விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுவதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன
ஸ்ரீ வெங்கடேசுவரா உயிரியல் பூங்கா
ஸ்ரீ வெங்கடேசுவரா உயிரியல் பூங்கா ஆந்திரா பிரதேசத்தின் இரண்டாவது உயிரியல் பூங்காவாகும். இதில் ஏராளமான விலங்குகள் செடிகொடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவில் கிட்டத்தட்ட 10 இலிருந்து 15 வரை புலிகள் உள்ளன.
திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாத பிரம்மோற்சவம், மார்கழி உற்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். ரத சப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது. இந்த சமயத்தில் வெங்கடேஸ்வரரின் திருஉருவச் சிலை வீதி வீதியாக தேரில் எடுத்து செல்லப் படுகிறது.
இங்கு கீழ்த் திருப்பதியில் மட்டும் கங்கம்மா ஜாத்ரா என்னும் திருநாள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. கங்கம்மாவுக்கு பொங்கல் மற்றும் விலங்கு பலிகளை பக்தர்கள் படைக்கின்றனர். கங்கம்மா, கோவிந்தக் கடவுளின் தமக்கையாக கருதப்படுகிறார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
9 Facts About Tirumala You Never Knew Before!
108 திவ்ய தேசங்கள்
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள்
இந்து புனித நகரங்கள்
திருப்பதி மாவட்டம்
|
5358
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D
|
முருகன்
|
முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்துக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்த நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.
இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்குத் தம்பியாகக் கருதப்படுகிறார். மேலும் முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர்.
தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார். பண்டைய காலத்தில் கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்த முருகன் வழிபாடு பின்பு இந்து சமயத்துடன் இணைந்தது.
பெயர்க்காரணம்
"முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். மெல்லின, இடையின, வல்லின மெய்யெழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவற்றைக் குறிக்கும்.
வேறு பெயர்கள்
சேயோன் - சேய் என்றால் குழந்தை அல்லது மகன் என்று பொருளாகும் முருகன் குழந்தையாகக் காட்சி அளிப்பதால் இந்தப் பெயர் காரணம்
அயிலவன் - வேற்படை உடையவன், முருகக் கடவுள்.
ஆறுமுகன் - ஆறு முகங்களை உடையவர்.
முருகன் - அழகுடையவன் அல்லது அனைத்து சக்திகளையும் பெற்ற முழுமுதற் கடவுள் என்பதன் சான்றாக இப்பெயர் அமைந்தது.
குமரன் - குமரப் பருவத்தில் கடவுளாக எழுந்தருளியிருப்பவர்.
குகன் - அன்பர்களின் இதயமாகிய குகையில் எழுந்தருளியிருப்பவர்.
காங்கேயன் - கங்கையால் தாங்கப்பட்டவன் அல்லது கங்கையின் மகன் என்றும் பொருளாகும்
வேலூரவன் - வள்ளியை மணந்ததாலும், அசுரர்களை அழிக்க முதன்முதலில் வேல் கொண்டு தோன்றியதாலும் வேலூரான் எனப் பெயர் பெற்றார் முருகப்பெருமான். அவ்விடம்தான் இன்று தமிழகத்தில் உள்ள வேலூர். வேலூரைச் சுற்றிலும் குன்றுகளும் குமரனின் கோவில்களாகவே காணப்படுகின்றன. வேலூர் - வள்ளிமலை என்ற இடத்தில் தான் வள்ளியை முருகன் மணந்தார்.
சரவணன் - சரவணப்பொய்கையில் (சரவணபவ குளத்தில்) தோன்றியவர்.
சேனாதிபதி - சேனைகளின் தலைவன் அல்லது (சேனை நாயகன்)
வேலன் - வேலினை ஏந்தியவர்.
சுவாமிநாதன் - குருவாக இருந்து தந்தைக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்தவர்.
கந்தன் - சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி பொற்றாமரைக் குளத்தில் உள்ள தாமரை மலரின் நடுவே உள்ள கந்தத்தில் பட்டு முருகன் குழந்தையாகத் தோன்றியதால் கந்தகமூலவன் அல்லது கந்தன் என்று பெயர்
கார்த்திகேயன் - கார்த்திகைப் பெண்களால் பாலூட்டிச் சீராட்டி வளர்க்கப்பட்டவர்.
சண்முகன் - ஆறுமுகங்களை ஒன்றாக அன்னை பராசக்தி சேர்த்து அழகுமுகமாக ஆக்கியதால் சண்முகம் அல்லது திருமுகம் எனப்படுகிறது.
தண்டாயுதபாணி - தண்டாயுதத்தை ஏந்தியவர் அல்லது (பண்டார நாயகர்)
தஞ்சபாணி அல்லது தண்டபாணி - முருகபெருமான் ஞானப்பழத்திற்கு விரும்பி ஏமார்ந்து அந்த வருத்தத்தினால் சினங்கொண்டு ஆண்டிப் பண்டாரமாகத் தமிழ்நாட்டிலே தமிழ்க்கடவுளாகத் தஞ்சமடைந்ததால் தஞ்சபாணி என்ற பெயரே தண்டபாணியாக மாறியது.
கதிர்காமன் - வள்ளியை வேடுவர் குலத்தில் இருந்து காதல் திருமணம் செய்து கொள்ளும்போது அழகிய காமதேவனாகவும் முருகன் பரமசிவன் நெற்றிக்கண்ணில் இருந்து தீக்கதிராகப் பிறந்தவர் அதனால் கதிரும் காமனும் சேர்ந்து கதிர்காமன் என்ற திருப்பெயரில் வள்ளியைக் கந்தர்வ திருமணம் செய்து கொள்வதால் இப்பெயர் ஆனது.இலங்கையில் உள்ள கதிர்காமத்தில் முருகபெருமான் இப்பெயரால் வணங்கப்படுகிறார்.
முத்துவேலன் - எட்டுக்குடியில் தெய்வானை (அஞ்சுகவல்லி) வள்ளி (கோமளவள்ளி) உடனுறைய எட்டுக்குடி முத்துவேலர் சுவாமி எட்டுத் திசையும் காப்பார் என்பதைக் குறிக்கின்றது.
வடிவேலன் - வேலை ஏந்திய அழகிய முருகனை இத்திருப்பெயரால் அழைப்பார்கள்.
சுப்ரமணியன் - மேலான பிரமத்தின் பொருளாக இருப்பவர். அல்லது இனியவன் என்றும் பொருளாகும்.
மயில்வாகனன் - மயிலைத் தனது வாகனமாகக் கொண்டவர்.
ஆறுபடை வீடுடையோன் - முருகனின் சாதனை புரிந்த இடங்களைக் கோவிலாக மருவி அதை ஆறுபடையப்பன் என்ற பெயரும் உள்ளது.
வள்ளற்பெருமாள் - வள்ளியை மணந்ததாலும் அல்லது தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளைக் கொடையாக வாரி வழங்குவதால் இப்பெயர் காரணம்
சோமாசுகந்தன் - சோமன் என்றால் நிலா என்றும் அல்லது (சிவபெருமாள்) மதுரையம்பதி சோமசுந்தர கடவுளின் மகன் என்பதாகும்
முத்தையன் - முத்துக்குமாரசுவாமி, முத்துவேலர்சுவாமி ஆகிய பெயர்களின் சுருக்கமான பெயராகும்.
சேந்தன் - தன்னை வணங்கும் பக்தர்களை இன வேறுபாடின்றி ஒன்றிணைந்து சேர்த்து வைப்பதால் சேந்தன் எனப் பெயர்.
விசாகன் - முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் எனப்பெயர் ஏற்பட்டது.
சுரேசன் - வட மாநிலங்களில் அழகுக்குச் சுரேசன் என்று பொருள் முருகன் அழகுக்கு அதிபதி என்பதாலும் இப்பெயர் ஏற்பட்டது.
செவ்வேல் - சேவல்வேல் என்பதை மருவிக் காலப்போக்கில் செவ்வேல் என மாறியது.
கடம்பன் - சிவகணங்களில் ஒருவனான கடம்பனை முருகன் தனது உதவியாளனாகச் சேர்த்துக் கொண்டதால் இப்பெயர் ஏற்பட்டது.
சிவகுமரன் - சிவபெருமாளின் திருமகன் அல்லது சிவனின் குமரன் என்பதேயாகும்.
வேலாயுதன் - முருகன் தனது கையில் இருக்கும் வேலையே ஆயுதமாகக் கொண்டுள்ளதால் இப்பெயர் ஏற்பட்டது.
ஆண்டியப்பன் - ஞானப்பழம் வேண்டியும் கிடைக்காமல் ஏமார்ந்த நிலையில் கோமண ஆண்டியாக நின்றவன்.
கந்தசாமி - தாமரை மலரின் கந்தகத்தில் இருந்து தோன்றிய கடவுள் என்பதால் கந்தக்கடவுள் அல்லது கந்தசாமி எனப் பெயர் ஏற்பட்டது.
செந்தில்நாதன் - சிந்தனைச்சிற்பி, சிந்தனைநாதன் என்னும் பெயர்களே மருவி, செந்தில்நாதனாக மாறியது அதாவது முருகன் தனது உயர் சிந்தனையால் சூரபத்மனை அழித்ததால் இப்பெயர் ஏற்பட்டது
வேந்தன் - மலை அரசன் , மலை வேந்தன்
போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.
முருகனின் சில பெயர்களுக்கான காரணங்கள்
விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
அக்கினியில் தோன்றியதால் அக்னி புத்திரன்
கங்கை தன் கரங்களால் சிவபெருமாளின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பிழம்பின் கருவில் தோன்றிய குழந்தை முருகனை ஏந்தியதால் காங்கேயன்.
சரவணப் பொய்கையில் பிறந்ததால் சரவணபவன்/சரவணமூர்த்தி.
கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
தாமரை மலரின் கந்தகத்தில் தொன்றியதால் கந்தன்
ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன்
ஆறுமுகங்களையும் ஒன்றாக அன்னை பராசக்தி இணைத்து ஒருவராக மாற்றியதால் சண்முகம் / திருமுகம்
இவ்வாறு தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கும் பின்பு ஓர் அர்த்தம் ஒளிந்துள்ளது.
முருக புராணம்
பிறப்பு
பிரம்மனின் பேத்தியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். ஒருமுறை தட்சன் சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமல் அவமானப்படுத்தினார். இதனால் கோபமடைந்த தாட்சாயிணி அக்னியில் விழுந்து உயிர் துறந்தார். பிறகு சிவபெருமான் தம் அவதாரமான வீரபத்ரனை அனுப்பி யாகசாலையையும் தட்சனையும் அழித்தார். பிறகு சிவபெருமான் தியானத்தி்ல் ஈடுபட ஆரம்பித்தார்.
தாரகன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் சிவபெருமானின் புதல்வனைத் தவிர வேறு எவராலும் தமக்கு அழிவு நேரக் கூடாது என்று வரம் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் சிவபெருமானின் தியானத்தைக் கலைக்க காமதேவனை அனுப்பினர். அப்போது சிவபெருமான் தம் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறி காமதேவனைத் தகனம் செய்தது. பிறகு அந்தத் தீப்பொறி சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இஃது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் அறுவர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். இதனால் அவர் கார்த்திகேயன் என்று பெயர் பெற்றார். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறு முகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார். சிவனைப்போலவே முகத்திற்கு மூன்று கண்கள் என, ஆறுமுகங்களுக்கும் சேர்த்து மொத்தம் பதினெட்டுக் கண்களை உடையவர்.
ஞானப்பழம்
ஒருநாள் நாரதர், சிவன் மற்றும் பார்வதி ஆகியோரிடம் ஞானப்பழத்தைக் கொடுத்தார். அதைப் பெறுவதற்காக உலகை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்று சிவபெருமான் போட்டி வைத்தார். முருகன் தம் மயில் வாகனம் கொண்டு உலகைச் சுற்றப் புறப்பட்டார். ஆனால் விநாயகர் தம் அறிவுக்கூர்மையால் தாய் தந்தையரே உலகம் என்று கருதி அவர்களை மும்முறைை சுற்றி வந்து ஞானப்பழத்தைப் பெற்றார். இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது. மகிழ்ந்த முருகன் தமிழகத்திலேயே தங்கிவிட்டார் இதுவே முருகன் தென்னிந்தியாவில் அதிகம் வழிபடக் காரணமாக அமைந்தது.
பன்னிருகரங்களின் பணிகள்
முருகனின் பன்னிருகரங்களில் இரு கரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. மூன்றாவது கை அங்குசத்தினைச் செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்திருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைச் சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.
தெய்வானையுடன் திருமணம்
முருகப்பெருமானின் அவதாரத்தின் நோக்கமே அசூரன் சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பது. அதன்படி, முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயில் மற்றும் சேவலாக மாற்றி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டு அருளினார். நாரதர் செய்த யாகத்தில் தோன்றிய பிரம்மாண்ட ஆட்டுக்கடாவை அடக்கி வீரச்செயல் புரிந்தமையால் இவருக்கு ஆட்டுக்கடா வாகனமும் அமைந்தது. வையப்பமலை என்ற இத்திருத்தலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.
சூரபத்மனை முருகப்பெருமான் சம்மாரம் செய்ததால் தேவர்கள் துயரம் நீங்கினர். அதனையொட்டி, முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தனது மகளாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். அதன் தொடர்ச்சியாக, முருகப்பெருமான் - தெய்வானை திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
வழிபாட்டு முறை
அசைவ உணவை உட்கொண்டவர்களின் கடவுளாக இருந்த முருகனை வேலன் என்று மக்கள் வழிபட்டதாகவும், ஆட்டு ரத்தத்துடன் கலந்த தினைமாவை அவருக்குப் படைத்ததாகவும், அதன் பின் வந்த சமசுகிருத வழிபாட்டு முறையில் முருகன் வழிபாடு சைவ வழிபாடாக மாறியதாகவும் முனைவர் சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.
விழாக்கள்
கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானின் விசேட தினமாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாத விசாக நட்சத்திர தினம் இவரது சென்ம நட்சத்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் சூரபதுமன் என்னும் அரக்கனை அழித்ததை ஒட்டி, கந்த சத்தி என்னும் திருநாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தைப்பூசம் மிக முக்கியமான விழாவாகும்
நூல்கள்
கந்தபுராணம் என்னும் பாடற்தொகுதி கச்சியப்ப சிவாச்சாரியாரால் இயற்றப்பட்டது. இது முருகப்பெருமானின் வரலாற்றை எடுத்துரைக்கிறது. சங்ககால இலக்கியமான திருமுருகாற்றுப்படை, முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அவனது ஆறுபடை வீடுகளையும் பாடும் காவியமாகும்.
மேலும் சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, குமரவேல் பதிற்றுப்பத்தந்தாதி, சட்டி கவசம், கந்தர் அனுபூதி போன்ற நூல்களும் முருகனின் பெருமை சொல்வன.
முருகன் குறித்த பழமொழிகள்
வேலை வணங்குவதே வேலை.
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
வயலூர் இருக்க அயலூர் தேவையா?
காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
அப்பனைப்பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை;மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
கந்தபுராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை.
கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்
பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?
சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
திருத்தணி முருகன் வழித்துணை வருவான்
வேலனுக்கு ஆனை சாட்சி.
வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
கந்தசட்டி கவசம் ”விந்து விந்து மயிலோன் விந்து, முந்து முந்து முருகவேள் முந்து”
முருகன் ஆலய வழிபாடுகள்
தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள், இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:
காவடி எடுத்தல்
அலகு குத்துதல்
பால்குடம் எடுத்தல்
முடி இறக்குதல் (மொட்டை போட்டுக் கொள்ள நேர்ந்து அதன்படி செய்தல்)
பாத யாத்திரை
முருகனின் அடியவர்கள்
அகத்தியர்
நக்கீரர்
ஔவையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
பாம்பன் சுவாமிகள்
கிருபானந்தவாரியார்
கோவில்கள்
முருகன் கோவில்கள், முருக வழிபாடு தமிழ்நாட்டில் மிகவும் அதிகம் காணப்படுகின்றது. வடபழனி முருகன் கோவில், தேனாம்பேட்டை பாலதண்டாயுதபாணி திருக்கோவில், மயிலை சிங்காரவேலன், பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவில், குமரக்குன்று, கந்தகோட்டம், குன்றத்தூர் எனத் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோவில்கள் பல அமைந்துள்ளன.
அறுபடை வீடுகள்
திருப்பரங்குன்றம் - சூரபத்மனைப் போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று, வெற்றி வாகையைச் சூடிய திருத்தலமிது.
பழநி - மாங்கனிக்காகத் தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி, தகப்பன்சுவாமியாகக் காட்சிதரும் திருத்தலமிது.
திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
பழமுதிர்சோலை - ஔவைக்குப் பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது. வைகைப் பொன்மலை என்கிற செம்மறி கடாவை அடக்கிய தலம் அனுமனுக்கு அருள்புரிந்தது.
மலேசியா
மலேசியா நாட்டில் பத்துக் குகையில் சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது. தைப்பூசம் முதலிய திருவிழாக்கள் இங்கு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.
தமிழ்
தமிழ்மொழி மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கடவுளாக முருகப்பெருமான் குறிப்பிடப்படுகின்றார். "முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்" என்று அருணகிரிநாதர் குறிப்பிடுகின்றார்.
ஒப்பிட்டு உணர்க
முருகன் (அரசன்)
இவற்றையும் பார்க்க
கந்த சஷ்டி கவசம்
கந்தபுராணம்
முருக வழிபாடு
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?-தகவல்கள்
நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை
முருகனின் அறுபடை வீடுகள்
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?-தகவல்கள்
கீற்று இதழில் மாமல்லை அருகில் சங்க கால முருகன் கோவில் கண்டுபிடிப்பு பற்றிய கட்டுரை
கந்தபுராணம் : முருகன் உதித்தனன் உலகம் உய்ய
கந்த சஷ்டி விரதம்
http://www.tamilvu.org/library/l5B10/html/l5B10m02.htm
இந்து தெய்வம் முருகப்பெருமான் (Hindu God Lord Muruga)
முருகன் பெயர்கள் சிலவற்றுக்கான காரணம்
இந்துக் கடவுள்கள்
தமிழ் தொன்மவியல்
கௌமாரம்
சிவக்குமாரர்கள்
|
5363
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE
|
பாரத ரத்னா
|
இந்திய மாமணி அல்லது பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு(2013) மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும், இவ்விருதைப் பெரும் வகையில் நவம்பர், 2011-இல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது பெற்றவர்களுக்குச் சிறப்புப் பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.
இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துகளும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்துக் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.
1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955-ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. அதன் பின் பத்து பேர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும், அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத்தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992-இல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாகத் திரும்பப் பெறப்பட்டது.
விருதுக்கு தேர்வு முறை
பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்படுவது என்பது பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுவதில் இருந்து மாறுபடுகிறது. இதில் பாரத ரத்னா விருதை இன்னாருக்கு வழங்கலாம் என்ற பரிந்துரையை குடியரசு தலைவருக்கு பிரதமர் செய்வார்.
சாதி, தொழில், பதவி அல்லது பாலினம் ஆகிய பாகுபாடின்றி எந்த ஒரு நபரும் இந்த விருதுக்கு தகுதியானவராக கருதப்படுவார். குறிப்பிட்ட ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 3 நபர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம். அதேவேளையில், ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.பாரத ரத்னா விருது பெறுவோர் குறித்த அதிகாரபூர்வ தகவல் இந்திய அரசிதழில் வெளியிடுவதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இந்த விருது சனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தின்போது வழங்கப்படுகிறது.
விருது பயன்பாட்டு விதிகள்
விதி 18 (1)-இன்படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது.
அவசியம் கருதினால் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கான சலுகைகள்
பாரத ரத்னா விருது பெறுவோருக்கு அதற்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும். பணம் ஏதும் வழங்கப்படாது.
விருதை பெற்றவர்களுக்கு அரசு துறைகள் சார்பாக சில வசதிகள் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாரத ரத்னா பெற்றவர்களுக்கு ரயில்வே துறை சார்பில் இலவச பயணத்துக்கான வசதி வழங்கப்படுகிறது. அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். முன்னுரிமை வரிசையில் இவர்களை அரசாங்கம் வைக்கும். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், குடியரசு முன்னாள் தலைவர், துணைப் பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவைத் தலைவர், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்படும்.
இதேபோல், மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு சில சிறப்பு வசதிகளை வழங்கும்.
விருது பெற்றோர் பட்டியல்
விளக்கக் குறிப்புகள்
மறைவுக்குப் பின் பெற்றவர்கள்
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
First-class flights and diplomatic passports: The perks of getting a Bharat Ratna
பரிசுகளும் விருதுகளும்
|
5365
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
|
கண்ணன்
|
கண்ணன் () என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:
கண்ணன் - இந்துக் கடவுள்
நபர்கள்
சி. ஆர். கண்ணன், எழுத்தாளர்
நா. கண்ணன், இணைய எழுத்தாளர்
எம். கண்ணன், ஆய்வாளர்
எஸ்.ஏ. கண்ணன், இயக்குனர்
மதுக்கூர் கண்ணன், இயக்குனர்
கண்ணன் சாத்தனார், புலவர்
பி. கண்ணன், இந்திய ஒளிப்பதிவாளர்
கே. கண்ணன், சிங்கப்பூர் கால்பந்து வீரர்
கண்ணன் (இசையமைப்பாளர்), இந்திய இசையமைப்பாளர்
கண்ணன் பாலகிருஷ்ணன் (பிறப்பு 1964), இந்திய இசைக்கலைஞர்
கண்ணன் ஐயர், இந்திய திரைப்பட எழுத்தாளர், நடிகர்
கண்ணன் சௌந்தரராஜன், இந்திய கணிதவியலாளர்
எம். கண்ணன், இந்திய அரசியல்வாதி
பி. கண்ணன் (அரசியல்வாதி), இந்திய அரசியல்வாதி
ஆர். கண்ணன் (பிறப்பு 1975), இந்திய திரைப்பட இயக்குநர்
எசு. பி. கண்ணன், இந்திய அரசியல்வாதி
சிறீரங்கம் கண்ணன் (born 1952), இந்திய இசைக்கலைஞர்
வேதம் புதிது கண்ணன், இந்திய திரைப்பட இயக்குநர்
யார் கண்ணன், இந்திய திரைப்பட இயக்குனர்
இசைவாணர் கண்ணன் இலங்கை இசையமைப்பாளர்
குடும்பப் பெயர்
பிஜு சி. கண்ணன், இந்திய திரைப்பட இயக்குனர்
பீனா கண்ணன் (பிறப்பு 1960), இந்திய தொழிலதிபர்
பாரதி கண்ணன் (பிறப்பு 1962), இந்திய திரைப்பட இயக்குநர்
எம்பார் கண்ணன் (பிறப்பு 1975), இந்திய இசைக்கலைஞர்
கனல் கண்ணன், இந்திய திரைப்பட சண்டை பயிற்சியாளர்
இரவி கண்ணன் இந்திய புற்றுநோயியல் நிபுணர், பத்மஸ்ரீ விருது பெற்றவர்
ரவி கண்ணன் (பிறப்பு 1953), இந்திய கணிணி அறிவியலாளர்
சித்தார்த் கண்ணன், இந்திய ஒளிபரப்பாளர்
இதழ்கள்
கண்ணன் (இதழ்), சிறுவர் இதழ்
திரைப்படங்கள்
கண்ணன் வருவான்
கண்ணன் என் காதலன்
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்ணன் கருணை
ராதைக்கேற்ற கண்ணன்
கலியுகக் கண்ணன்
வேறு
கண்ணன் இசைக்குழு
கண்ணன் தேவன் மலைக் குன்று கேரளத்தில் உள்ள சிற்றூர்
ஆண் தமிழ்ப் பெயர்கள்
|
5366
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%20%28%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%29
|
முன்னுரிமை வரிசை (இந்தியா)
|
இந்திய முன்னுரிமை வரிசை என்பது இந்திய அரசு அலுவலர்கள் படிநிலைக்கேற்ப அமர்த்தப் பட வேண்டிய பந்தி வரிசை மரபு. இது பதவி ஏற்பதற்கான மரபுவழி உரிமைப் பட்டியல் அல்ல.
மேற்கோள்கள்
இந்திய அரசு
இந்தியா
|
5368
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
|
கிருட்டிணன்
|
கிருட்டினன், கிருட்டிணன், அல்லது கிருஷ்ணன் (Krishna) இந்து சமய கடவுளாவார். இவர் விட்டுணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார். இவர் விட்டுணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். மகாபாரத்திலும் பாகவத புராணத்திலும் இவரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமய பக்தி நெறியில் இவருடைய பக்தர்களே பெரும்பாலானவர்கள். இவரை தமிழர்கள் கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார். வருடந்தோறும் ஆவணி மாதம் அட்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருட்டிண செயந்தியாக கொண்டாடப்படுகிறது.
கிருட்டிணரின் கதைகள் இந்து மதத்தில் பரவலாக காணப்படுகின்றது. அவை அவரை பல்வேறு கோணங்களில் சித்தரிக்கிறது. ஒரு தெய்வ குழந்தையாக, குறும்புக்காரனாக, முன் மாதிரி காதலனாக என பல வகைகளில் குறிப்பிடப்படுகின்றது. இவரை பற்றிய குறிப்புகள் மகாபாரதம், அரி வம்சம், பாகவத புராணம் மற்றும் விட்டுணு புராணம் போன்ற நூல்களில் உள்ளன.
கிருட்டிண வழிபாடு, பாலகிருட்டிணர் அல்லது கோபாலன் என்ற பெயரில் பொ.ஊ.மு. 4வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்ததை அறிய முடிகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணன் (திருமால்) பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் கூறப்பட்டவர். எனினும் பொ.ஊ. 10ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பக்தி இயக்கத்தின் மூலம் கிருட்டிணர் வழிபாடு உச்சத்தை அடைந்தது. ஒரிசாவில் செகன்னாதர், இராசத்தான், மகாராட்டிராவில் உள்ள விட்டலர், கேரளாவில் குருவாயூரப்பன், துவாரகையில், துவாரகாதீசர், இமயத்தில் பத்ரிநாதர் என கிருட்டிணனை பல பெயர்களில், வடிவங்களில் வழிபடுகின்றனர். 1960களில் உருவாக்கப்பட்ட இசுகான் அமைப்பு கிருட்டிண வழிபாட்டை மேற்கத்திய நாடுகளுக்கும் கொண்டு சென்றது. பொ.ஊ. 6-9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களால் திருமால் (கண்ணன்) வழிபடப்பட்டுள்ளார்.
பெயர்கள் மற்றும் புனைபெயர்கள்
கிருட்டிணன் என்ற தமிழ் சொல்லிற்கு கரிய நிறம் பாெருந்தியவன் என்பது பாெருள். கரி (கருமை) + இருள் (இருட்டு) + அணன் (பாெருந்தியவன்) = கரிட்டிணன் > கருட்டிணன் > கிருட்டிணன் (கிருஷ்ணன்) > கிருட்டு > கிட்டு.
கிருட்டிணன் பல்வேறு பெயர்கள், அடைமொழிகள் கொண்டுள்ளார். அவற்றுள் "பெண்களை வசீகரிப்பவர்" என பொருள்படும் மோகன், "பசுக்களை கண்டுபிடிப்பவன்" என பொருள்படும் கோவிந்தன், "பசுக்களை பாதுகாப்பவன்" என பொருள்படும் கோபாலன் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். மேலும் ஆயர்களையும் பசுக்களையும் தொடர்மழையிலிருந்து காக்க, கோவர்தன மலையை குடை போல் தூக்கியதால் கோவர்தனன் என்றும், கோகுலத்தில் வளர்ந்ததால் கோகுலன் என்றும், இராதையின் (நப்பின்னை, கருப்பாயி) உள்ளங்கவர் காதலன் என்பதால் இராதா கிருட்டிணன் (கருப்பாயி-கருப்பன்) என்றும், வசுதேவர் – தேவகி இணையர்க்கு பிறந்ததால் வாசுதேவன் என அடைமொழிகளால் கிருட்டிணரை கொண்டாடுகிறார்கள். பெரியாழ்வாரின் மூலம் கண்ணனின் வரலாறு தெரிந்து கண்ணனையே தன் கணவனாக எண்ணம் கொண்டவர் ஆண்டாள். திருவரங்கத்தில் கண்ணனுடன் வானுலகம் சென்றவர்.ஆண்டாள் தன்னை ஆயர் குலப்பெண்ணாகவே திருப்பாவையில் உருவகித்துக் கொள்கிறாள். ஆழ்வார்கள் கண்ணனை மணிவண்ணன் என்றும் அழைக்கின்றார்கள்.
கிருட்டிணனின் கதை
இளமை
விருட்சிணி குலத்தின் சூரசேனரின் மகன் வசுதேவர் – தேவகி இணையருக்கு எட்டாவது குழந்தையாக மதுராவின் சிறையில் கிருட்டிணன் பிறந்தார். கொடுமைக்கார அரசனான கிருட்டிணரின் தாய்மாமன் கம்சனிடமிருந்து கிருட்டிணரை காக்க, கிருட்டிணர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனை ஆற்றுக்குப் அப்பால் உள்ள கோகுலத்தில் குடியிருந்த யாதவ குலத்தினரான நந்தகோபர் – யசோதை இணையரிடம் ஒப்படைத்தார்.
கோகுலம் வாழ் யாதவர்களின் தலைவர் நந்தகோபர் - யசோதா அவர்களால் வளர்க்கப்பட்டார். பின்னர் கோகுலம் வாழ் யாதவர்கள் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர். குழல் ஊதி, மாடு மேய்த்து, நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம் செய்து காலத்தைக் கழித்த கிருட்டிணன் பிருந்தாவனத்தின் செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால் ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.மேலும் இந்திரன் கோகுலத்தை அழிக்க பெரும் மழையை உண்டாக்கிய போது கோவர்த்தன மலையை குடையாக பிடித்து அவர்களை காப்பாற்றினார் எனவும் மேலும் யமுனை நதிக்கரையில் இருந்த காளிங்கன் என்ற பாம்பையும் அடக்கினார் என்று கூறப்படுகிறது.
அக்ரூரரின் வேண்டுகோளின் படி, பலராமன் மற்றும் கிருட்டிணர் மதுரா சென்று தன் மாமன் கம்சனை அழித்து மதுராபுரியை தனது தாய் வழி தாத்தா உக்கிரசேனரிடம் ஒப்படைத்து விட்டு, கோகுலம் வாழ் யது குல மக்களுடன், சௌராட்டிர தீபகற்பத்தில் உள்ள கடற்கரை அருகே துவாரகை என்னும் புதிய நகரை உருவாக்கி வாழ்ந்தனர். சஙக கால புலவர் கபிலர் துவரை (துவாரகை) பற்றி கூறுகிறார்.
புராண நூல்கள் மற்றும் சோதிட கணிப்புகள் அடிப்படையில் கிருட்டிணனின் பிறந்த தேதி பொ.ஊ.மு. 3228 ஆம் ஆண்டு சூலை 19 ஆகவும் மற்றும் அவரின் மறைவு பொ.ஊ.மு. 3102 ஆகவும் இருக்கும் என கருதப்படுகின்றது.
வாலிபம்
இள வயதில் பிருந்தாவனத்தில் இருந்த பெண்களின் மனதில் இடம் பிடித்தார். இவர்களுள் ஒருவரான ராதையுடன் காதல் புரிந்தார்.
வாலிப வயதை அடைந்தவுடன் பலராமருடன் மதுரா சென்று, கம்சனை வென்று தன் தாத்தாவான உக்கிரசேனரிடம் ராச்சியத்தை ஒப்படைத்தார். தனது அத்தை மகன்களான பாண்டவர்களுடன், குறிப்பாக அருச்சுனனுடன் நட்பு கொண்டார். பின்னர் துவாரகை எனும் புது நகரை நிறுவி, மதுரா மக்களுடன் குடிபெயர்ந்தார்.
குடும்பம்
கிருட்டிணன் மொத்தம் 16,008 மனைவிகளை கொண்டிருந்தார். அவற்றுள் எண்மனையாட்டி என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகள் முதன்மையானவர். அவர்கள் ருக்மணி, சத்தியபாமா, சாம்பவதி,நக்னசித்தி, காளிந்தி, மித்திரவிந்தை, இலக்குமணை, பத்திரை ஆவர். மற்றும் பிற 16, 000 பேர் அவரது சுதேசி மனைவிகள் அவர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நரகாசுரனின் மாளிகையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள். கிருட்டிணர் நரகாசுரனை கொன்ற பிறகு அப்பெண்களை அவர்களின் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அனைவரையும் கிருட்டிணர் ஒரே நாளில் மணந்தார். அவர்களுக்கு புதிய அரண்மனை கட்டி ஒரு மரியாதையான இடத்தில் அவர்களை நிறுத்தினார். எனினும் அவர் தனது எட்டு மனைவிகளை தவிர மற்றவர்களுடன் எந்த வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை.
ருக்மிணிக்கு ஐந்து சகோதரர்கள். அவர்களின் பெயர்கள் ருக்மி, கருக்மன், ருக்மபாகூ, ருக்மகேசன், ருக்மமாலி என்பன.
ருக்மணிக்கும் கிருட்டிணருக்கும் பிறந்த குழந்தை பிரத்தியுமனன். இவருக்கும் ருக்மியின் மகளான ருக்மவதிக்கும் திருமணமானது. பிரத்யும்னன் - ருக்மவதிக்கு பிறந்தவர் அனிருத்தன் ஆவார். இவர் கிருட்டிணனின் பேரனாவார். கிருட்டிணர் - சாம்பவதிக்கும் பிறந்த மகன் சாம்பன் ஆவார்.
மகன்
கண்ணன் உபமன்யு முனிவரிடம் தனக்கு புத்திரபாக்கியம் வேண்டினார். அதற்கு உபமன்யு சிவபக்தியில் மூழ்கிநின்று, சிவபெருமானின் அருளைப் பெறுமாறு அறிவுரை வணங்கினார். கண்ணனும் கடுந்தவத்தினை மேற்கொண்டு சிவபெருமானை மகிழ்வித்தார். கண்ணனின் பாசுபத விரதத்தில் மகிழ்வுற்ற சிவபெருமான் உமையம்மையுடன் காட்சி தந்தார். கண்ணன் சிவபெருமானிடம், அவரின் அம்சமான ஒரு குழந்தை தனக்கு வேண்டுமென விண்ணப்பித்தார். சிவபெருமானும் கண்ணனுக்கு கேட்ட வரத்தினை அளித்தார். கண்ணன் மற்றும் சாம்பவதி தம்பதிகளுக்கு சிவபெருமானின் அம்சத்துடன் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை சாம்பன் என்று அறியப்படுகிறது.
சங்க கால புலவர் கபிலர் இருங்கோவேல் தன் வேண்டுகோளை ஏற்காததால், உன முன்னோரில் ஒருவன் புலவர் கழாத்தலையை இழிவாக பேசியதால் துவரை என்ற மாநகரையும், இரு பெரு ஊர்களும் (துவாரகை, வேட்துவாரகை) அழிவை சந்தித்தன என்கிறார். கிருட்டிணன் வழி வந்தவன் என்றும் இருங்கோவேலை தன் பாடலில் கூறுகிறார். சிந்து வெளி பகுதியிலே குசராத்து (துவாரகை) அமைந்துள்ளதாலும் கண்ணன் ஒரு திராவிடன் (தமிழன்) என்ற கபிலரின் பாடல் மூலமும், பாகவத புராணத்தின் மூலமும் தெரிய வருகிறது. அவ்விரு பாடல்கள்
'நீயே வடபான் முனிவன் றடவினுட் டோன்றி செம்புனைந் தியற்றிய சேனொடும் புரிசை உவரா வீகைத் துவரை யாண்டு நாற்பத் தொன்பது வேளிருள் வேளே.... ஒலியற் கண்ணிப் புலிகடி மால்.
வென்றி நிலைஇய விழுப்புக ழொன்றி இருபாற் பெயரிய வுருகெழு மூதூர் கோடிபல வூடுக்கிய பொருமணு குதவிய நீடுநிலை யரையத்து கேடுங் கேளினி நுந்தை தாய நிறைவுற வெய்திய ஒலியற் கண்ணி புலிகடிமாஅல் நும்போ லறிவி னுமரு ளொருவன் புகழ்ந்த கழாத்தலையை இகழ்ந்ததன் பயனே யியரே ரண்ணல் என்றும் பாடுகிறார்.
இப்பாடல்களின் மூலம் இருங்கோவேளை புலிகடிமால் என்கிறார். மால்-திருமால், திருமால் வழி வந்தவன். துவாரகை நகரை ஆண்டு 49 தலைமுறைகள் தொன்றுதொட்டு வந்த வேளிர் குல வேந்தரில் சிறந்த வேளிர் வேந்தன் நீ என அவனை புகழ்கிறார். ஆனால் உன் முன்னோரில் ஒருவன் கழாத்தலை புலவனை இகழ்ந்ததன் காரணமாகவே அந்நகரங்கள் அழிவை சந்தித்தன என்கிறார். வேளிர்கள் கிருட்டிணனது நாட்டினர் என்றும் அவர்களில் 18 பிரிவினரை அகத்தியர் தமிழகம் அழைத்து வந்தார் என்ற விடயத்தை நச்சினார்கினியார் (14 ஆம் நூற்றாண்டு) கூறுகிறார். இவை கபிலர் பாடல் மூலமும் தெரியவருகிறது. ஆனால் கபிலர் வடபான் முனிவன் என்றே குறிப்பிடுகிறார் மேலும் அம்முனிவன் அகத்தியர் என்று கூறவில்லை.
மகாபாரதத்தில் கிருட்டிணன்
பாண்டவர்களின் தாயான குந்தி, கிருட்டிணரின் சொந்த அத்தை ஆவாள். அருச்சுனனின் சிறந்த நண்பன் கிருட்டிணன். திரௌபதி கிருட்டிணரின் பக்தை ஆவாள். வீமன் மற்றும் அருச்சுனன் ஆகியவர்களைக் கொண்டு செராசந்தனை கொன்றவர். இந்திரப்பிரசுதத்தில், தருமன் நடத்திய ராசசூய வேள்வி மண்டபத்தில், தன்னை அவமதித்த சிசிபாலனை தனது சக்கராயுதத்தால் வென்றவர். துரியோதனின் சூதாட்ட மண்டபத்தில், தருமன் சூதாட்டத்தில் தன் தம்பியர்களையும் தன்னையும் மற்றும் திரௌபதியையும் இழந்து நிற்கையில், திரௌபதியின் துயிலை துச்சாதனன் நீக்கும் போது, கிருட்டிணனை சரணாகதி அடைந்த திரௌபதியின் மானத்தை காத்தவர் கிருட்டிணன். 13 ஆண்டுகால வனவாசம் முடித்த பாண்டவர்களுக்கு, சூதாட்டத்தில் இழந்த இந்திரப்பிரசுதம் நாட்டை மீண்டும் பாண்டவர்களுக்கே திருப்பித்தர வேண்டி கௌரவர்களிடம் கிருட்டிணன் தூதுவனாக அத்தினாபுரம் சென்றவர். குருச்சேத்திரப் போரில் அருச்சுனனுக்கு பார்த்தசாரதியாக அமைந்தவர். கர்ணனின் நாகத்திர கனையிடமிருந்து அருச்சுனனை காத்தவர். இறுதிப் போரில், சைகை காட்டி துரியோதனை கொல்வதற்கு வீமனுக்கு துணை நின்றவர். அசுவத்தாமன் ஏவிய பிரம்மாத்திரத்தினால் கொல்லப்பட்ட உத்தரையின் கருப் பையில் இருந்த குழந்தை பிரிட்சித்திற்கு, கிருட்டிணர் உயிர் கொடுத்ததன் மூலம், பாண்டவர்களின் ஒரே வாரிசை காத்தருளினார்.
கிருட்டிணரின் வேறு பெயர்கள்
மகாபாரதத்தின் உத்தியோகப் பருவத்தில், குரு நாட்டின் மன்னர் திருதராட்டிரன் தனது தேரோட்டியான சஞ்சயனிடத்தில், கிருட்டிணரின் வேறு பெயர்களையும்; அதன் பொருளையும் உரைக்குமாறு கேட்டார். அதற்கு சஞ்சயன் கீழ்கண்டவாறு கிருட்டிணரின் வேறு பெயர்களை, அதற்கான விளக்கத்துடன் திருதராட்டிரரிடம் கூறினார்.
அரி - இயற்கையின் அதிபர்
கேசவன் - அளவிடப்பட முடியாதவன், வாயால் விவரிக்கப்பட முடியாதவன்.
சிரீதரன் – இலக்குமியை மார்பில் கொண்டவன்
வாசுதேவன் - அனைத்து உயிர்களில் வசிப்பவன்.
விட்டுணு - எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்.
மாதவன் - பெரும் தவம் செய்பவன்.
மதுசூதனன் – மது எனும் அசுரனை கொன்றதால் மதுசூதனன் என அழைக்கப்படுகிறான்.
புண்டரீகாட்சன் - தாமரை போன்ற கண்களை உடையவன் (தாமரைக் கண்ணன்)
செனார்தனன் - தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவிப்பதால் ஜனார்த்தனன் என அழைக்கப்படுகிறான்.
சாத்வதன் – சாத்வ குணம் அவனை விட்டு எப்போதும் விலகாததாலும், அவனும் சாத்வ குணத்தை விட்டு விலகாமல் இருப்பதாலும் சாத்வதன் என அழைக்கப்படுகிறான்;
விருபாட்சணன் – "விருசபம்" என்பது "வேதங்களைக்" குறிக்கும், "இச்சணம்" என்பது "கண்ணைக்" குறிக்கும். இவையிரண்டும் இணைந்து, வேதங்களே அவனது கண்கள் என்றோ, வேதங்களே அவனைக் காண்பதற்கான கண்கள் என்றோ குறிக்கின்றன என்பதால், கிருட்டிணணை விருடபாட்சணன் என அழைக்கப்படுகிறான்,
அசா - எந்த உயிரிலிருந்தும் சாதாரண வழியில் தனது பிறப்பை எடுக்காததால் அசா என அழைக்கப்படுகிறான்.
தாமோதரன் - தேவர்களைப் போலல்லாமல் அவனது பிரகாசமும், அவனது சுயமும், படைக்கப்படாததாக இருப்பதாலும், சுயக்கட்டுப்பாடும், பெரும் பிரகாசமும் கொண்டிருப்பதாலும் தாமோதரன் என அழைக்கப்படுகிறான்.
ரிடிகேசன் – "என்றும் மகிழ்ச்சி" என்பதற்கு "அரிடிகா" என்றும் "ஈசா" என்பதற்கு "ஆறு தெய்வீகப் பண்புகள்" என்றும் பொருள். இன்பம், மகிழ்ச்சி, தெய்வீகம் ஆகியவற்றைக் குறிப்பது.
மகாபாகு - தனது இரு கரங்களால் பூமியையும், வானத்தையும் தாங்கிப் பிடிப்பதால் மகாபாகு என அழைக்கப்படுகிறான்.
அதாட்சன் - எப்போதும் கீழே வீழாதவன் என்பதாலும், எக்குறைவின்றியும் இருப்பதனாலும் அதாட்சன் என அழைக்கப்படுகிறான்.
நாராயணன் - மனிதர்கள் அனைவருக்கும் புகலிடமாக இருப்பர்
புருசோத்தமன் - ஆண் மக்களில் (புருசர்களில்) மேன்மையானவன் என்பதால் புருசோத்தமன் என அழைக்கப்படுகிறான்.
சர்வன் - அனைத்துப் பொருட்களின் அறிவையும் கொண்டிருப்பதால் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.
சத்யன் - கிருட்டிணன் எப்போதும் உண்மையில் இருக்கிறான், உண்மையும் எப்போதும் அவனில் இருப்பதால் சத்யன் என அழைக்கப்படுகிறான்.
சிட்டுணு - தனது ஆற்றலுக்கும், வெற்றிக்காகவும் சிட்டுணு என அறியப்படுகிறான்.
அனந்தன் - அழிவில்லாதவனாக இருப்பதால் அனந்தன் என்று அறியப்படுகிறான்.
கோவிந்தன் - கோவிந்தன் என்ற சொல்லுக்கு பசுக்களின் தலைவன், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவன், பூமியை தாங்குபவன் என்று பொருளாகும்.
அச்சுதன் - என்றும் நழுவாதவர்
பத்மநாபன் - தொப்புளில் தாமரை மலரைக் கொண்டவன்
கிருட்டிணன் – ஏற்கனவே இருக்கிறது என்பதைக் குறிக்கும் "கிருட்டி" மற்றும் "நித்திய அமைதி" என்பதைக் குறிக்கும் "ண" ஆகிய இரண்டு சொற்களுக்குள் தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவன் கிருட்டிணன் என்று அழைக்கப்படுகிறான். ( "கிருட்டி" என்றால் கீறுதல் என்று பொருள். "கருட்டி" என்றால் பூமி என்று பொருள், "ண" என்றால் சுகம் என்று பொருள். "கிருட்டிண" என்றால் கலப்பையினால் பூமி கீறப்படுவதால் விளையும் நன்மையைக் குறிப்பதாகும் என்றும் பொருள்).
மாயோன் - மாயோன் என்பவன் தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை நிலத்தெய்வமாவான்
கீதை
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்துவிட்டு தான் ஆயுதம் ஏந்தாமல் அருச்சுனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அருச்சுனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.
முடிவு
கிருட்டிணன் துவாரகையில் மனைவியான ருக்மணி முதலியவர்களுடன் வாழ்ந்து யது குலங்களின் தலைவனாக விளங்கினார். கிருட்டிண அவதார நோக்கம் முடிவடைந்த காரணத்தால், பகவான் சிரீகிருட்டிணரை வைகுண்டத்திற்கு எழுந்தருள வேண்டும் என்ற தேவர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப, கிருட்டிணர் வைகுண்டம் புறப்படும் போது அவரது பக்தரான உத்தவரின் வேண்டுதலுக்காக அவருக்கு ஆத்ம உபதேசம் செய்தார். இதனை உத்தவ கீதை என்பர். கிருட்டிணர் ஒரு முறை பிரபாச பட்டினத்தின் காட்டில் அமர்ந்திருந்த போது, ஒரு வேடனின் அம்பு, கிருட்டிணரின் காலில் தாக்கப்பட்டதால் உடலை பூவுலகில் வைகுந்தம் எழுந்தருளினார். சாம்பனுக்கு முனிவர்களின் சாபத்தின்படி யது குலங்களின் மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தங்களை அழித்துக்கொண்டனர். துவாரகை நகரமும் கடலில் மூழ்கியது.
ஆராய்ச்சிகள்
துவாரகை கடலில் மூழ்கியதை தொல்பொருள் ஆய்வாளர் எசு.ஆர்.ராவ் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து தெரிவித்தார். 1980 இல் துவாரகேசு கோயிலின் முன்மண்டபத்தில் அவர் நிகழ்த்திய ஆய்வில் அக்கோயிலுக்கு கீழே இரண்டு அத்திவாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் அங்கு அரப்பா நாகரீகத்தின் பிந்தைய காலத்தைச் சுட்டும் சிவப்பு நிறப்பானை ஓடுகள் மற்றும் மணிகள் கண்டெடுக்கப்பட்டன. பேட்துவாரகையில் கிடைத்த கூறுகள் எவையும் ஆரிய நாகரிகத்துடன் பொருந்தவில்லையாம். அதாவது ஆரிய சார்பாளராகிய எசு.ஆர்.ராவ் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டவை. ஆனால் அனைத்தும் சிந்து நாகரிகத்துடன் பொருந்தி போயிருந்ததாம்.
சமீபத்திய ஆராய்ச்சி
குசராத்திலுள்ள துவாரகையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆராய்ச்சியில் மூழ்கிய நகரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அது மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கூறப்பட்டுள்ள துவாரகை நகரை ஒத்துள்ளது, மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சங்குகள், நாணயங்கள் போன்றவை மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒத்துள்ளன. இதனால் உண்மையிலேயே கிருட்டிணன் என்ற மன்னன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். துவாரகை பொ.ஊ.மு. 1500 ல் முழுவதும் கடலால் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பொ.ஊ.மு. 1200 ல் இருந்தே ஆரியர்களின் காலம் வந்தாலும், பொ.ஊ.மு. 1100 க்கு பிறகே ஆரியர்கள் ஒரு குழுவாக வாழ ஆரம்பிக்கின்றனர் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்கலப் பண்பாடு பொ.ஊ.மு. 1100க்கு முற்பட்டதல்ல என்று பி.பி.லால், ஆர்.எசு.கௌர், பி.கே.தாபர் போன்றோரால் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு முன்பே கிருஷ்ணன் இறந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. கருமை நிறத்தவனான கிருட்டிணன் பாகவத புராணத்தில் தசா யாதவன் என்றே அழைக்கப்படுகிறான் ஆக தமிழனாக இருந்திருக்கலாம் என ரிக் வேதம் மூலமூம், கபிலர் பாடல் மூலமும் தெரிய வருகிறது.
கிருட்டிணரின் கோயில்கள்
கேசவ தேவ் கோயில், மதுரா
பிருந்தாவனம்
கோகுலம்
கோவர்தன கிரி
துவாரகாதீசர் கோயில்
புரி ஜெகன்நாதர் கோயில்
குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்
பத்ரிநாத் கோயில்
உடுப்பி கிருஷ்ணர் கோயில்
இஸ்கான் கிருஷ்ணர் கோயில்கள்
இதனையும் காண்க
மகாபாரதத்தில் கிருஷ்ணன்
கிருஷ்ண ஜென்மபூமி
கிருஷ்ண ஜெயந்தி
யது குலம்
விருஷ்ணி குலம்
உத்தவ கீதை
பகவத் கீதையின் சாரம்
மேற்கோள்கள்
வெளியிணைப்புக்கள்
கிருட்டிணன்
திருமாலின் அவதாரங்கள்
பாகவத புராண மாந்தர்
மகாபாரதக் கதை மாந்தர்கள்
பாகவத புராணம்
|
5370
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
|
பிள்ளையார்
|
பிள்ளையார் அல்லது விநாயகர் இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாகக் காணப்படுகிறது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.
விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் காணாதிபத்தியம் (சமசுகிருதம்: गाणपत्य; IAST: gāṇapatya) எனப்படுகிறது. இந்தக் காணாதிபத்தியம் பின்பு சைவ சமயத்தோடும், வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது. வைணவர்கள், விநாயகரைத் "தும்பிக்கை ஆழ்வார்" என்று அழைப்பார்கள்.
பெயர்க்காரணம் மற்றும் பிற பெயர்கள்
இவர் கணங்களின் அதிபதி என்பதால் கணபதி என்றும், யானையின் முகத்தினைக் கொண்டுள்ளதால் யானைமுகன் என்றும் அழைக்கப்பெறுகிறார்.
விநாயகரின் வேறு பெயர்கள்
பிள்ளையார்
கணபதி – கணங்களிற்கு அதிபதி. பூதகணங்களிற்கெல்லாம் அதிபதியாதலினால் கணபதி என்றழைக்கப்படுகின்றார்.
ஆனைமுகன் – ஆனை அதாவது யானை முகத்தை உடையவராதலால் ஆனைமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
கஜமுகன் – கஜம் என்றாலும் யானையைக் குறிக்கும். யானைமுகத்தை உடையவராதலினால் கஜமுகன் என்றழைக்கப்படுகின்றார்.
விக்னேஸ்வரன் – விக்கினங்களைத் (தர்மவழியில் நிற்பவர்களின் துன்பங்களைத்) தீர்க்கும் ஈஸ்வரன் அதாவது அறத்தின் வழியில் வாழ்பவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள்
பிள்ளையாரை வணங்கிச் செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை.
காணபத்தியம்
இந்து மதத்தினுள் உள்வாங்கப்பட்ட சமயமான காணாபத்தியம் எனும் பிரிவு விநாயகரை மையப்படுத்திய சமயம்.
இந்துக்களின் புராணங்களில் விநாயகர் மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாகவும் முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் கூறப்படுகிறார். இக்கடவுளின் வாகனம் மூஞ்சூறு.
’கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.
கிருத யுகம்
காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருத யுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.
திரேதாயுகம்
அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப்பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால் மயூரேசர் என்ற திருநாமம்
துவாபரயுகம்
கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.
கலி யுகம்
சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது
பிறப்பு
விநாயகர் பிறப்பு பற்றிப் பல்வேறு கதைகள் இருந்தாலும் சிவமகா புராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. அதன்படி முற்காலத்தில் யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன், சிவபெருமானை நோக்கிப் பல வருடங்களாகக் கடுந்தவம் புரிந்தான். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்து வேண்டிய வரம் கேட்குமாறு கூறுகிறார். அதற்குக் கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப்பெற்றார். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதி தேவி, தன் அண்ணன் விஷ்ணுவிடம் உதவி கோரினார்.
பிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம் சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார். கஜாசுரனும் தான் கொடுத்த வாக்கின்படி சிவபெருமானை விடுவித்தான். அவன் சிவபெருமானை நோக்கி பிரபஞ்சத்தில் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வேண்டும் என்று வேண்டுகிறான். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார். மேலும் அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்தார். பிறகுச் சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார்.
சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்த பார்வதி, அவரை வரவேற்கும் முன்பு தயாராக நினைத்தார். ஆனால் அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை. எனவே பார்வதி தாம் குளிக்கும் முன்பு மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு விக்னங்களைத் தீர்ப்பவன் என்ற பொருளில் விநாயகர் என்ற பெயர் சூட்டினார். மேலும் தான் தயாராகி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார். விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறான். பிறகு கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார். பிறகு நடந்நதை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, பிரபஞ்சத்தையே அழிக்க முடிவெடுத்தார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பிரம்மதேவர் வேண்டிக்கொண்டார். அதற்குப் பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார். அதை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து இறந்த நிலையில் படுத்திருக்குமாறு முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், அவனுக்கு முழுமுதற் கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் பெயரையும் வழங்கினார்.
தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டு வரலாறு
சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர். பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம், அகழ்வாராய்ச்சி ,கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்புகளுடன் விநாயகர் சிலை திண்டிவனத்தருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இரும்பேடு கிராமத்தில், 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகியின் கல் சிற்பம் இந்திய தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
திருவுருவ விளக்கம்
திருவடி
ஆன்மாவைப் பொருந்தி நின்று மல, கன்ம, மாயைகளைத் தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.
பெருவயிறு
ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.
ஐந்துகரங்கள்
பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார்.
தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார்
துதிக்கை அனுக்ரகம் செய்கிறது.
அங்குசம் ஏந்திய கை அழித்தலைக் குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார்
மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்
கொம்புகள்
மகாபாரதத்தை எழுதுவதற்காகத் தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.
தாழ்செவி
விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளைச் சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.
விநாயகர் மூர்த்தங்கள்
பொதுவாக யானைமுகமும், மனித உடலுமாகக் காட்சியளிக்கும் விநாயகர், பல்வேறு வடிவங்களிலும் கோயில்களில் காட்சியளிக்கிறார்.
நரமுக விநாயகர் - மனித முகத்துடன் காட்சியப்பவர். சிதலப்பதி முத்தீசுவரர் கோயிலில் உள்ள விநாயகர் தும்பிக்கையின்றி மனித உருவில் உள்ளார்
நடன கணபதி, நர்ததன கணபதி - நடனமாடும் விநாயகர்.
சித்தி, புத்தி கணபதி - மனைவிகளான சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிப்பவர்.
முப்பத்தியிரண்டு விநாயக மூர்த்தங்கள்
உச்சிட்ட கணபதி
உத்தண்ட கணபதி
ஊர்த்துவ கணபதி
ஏகதந்த கணபதி
ஏகாட்சர கணபதி
ஏரம்ப கணபதி
சக்தி கணபதி
சங்கடஹர கணபதி
சிங்க கணபதி
சித்தி கணபதி
சிருஷ்டி கணபதி
தருண கணபதி
திரயாக்ஷர கணபதி
துண்டி கணபதி
துர்க்கா கணபதி
துவிமுக கணபதி
துவிஜ கணபதி
நிருத்த கணபதி
பக்தி கணபதி
பால கணபதி
மஹா கணபதி
மும்முக கணபதி
யோக கணபதி
ரணமோசன கணபதி
லட்சுமி கணபதி
வர கணபதி
விக்ன கணபதி
விஜய கணபதி
வீர கணபதி
ஹரித்திரா கணபதி
க்ஷிப்ர கணபதி
க்ஷிப்ரபிரசாத கணபதி
விநாயக சதுர்த்தி
ஐந்து கரங்களை உடைய ஆனைமுகனைத் தமிழ் வருடந்தோறும் ஐந்தாவது மாதம் ஆன ஆவணி மாதம் வளர்பிறைச்சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, இக்கடவுளுக்கான விழாக்களுள் முக்கியமானதாகும்.
துர்வா கணபதி விரதம்
துர்வா யுக்மம் எனும் சொல்லானது அருகம்புல்லைக் குறிப்பதாகும். விநாயகருக்கு விரதம் இருந்து அருகம்புல்லால் அர்ச்சனை செய்வதும், மாலையிடுவதும் இந்நாளில் செய்யப்படுகிறது.
விநாயகர் அகவல்
ஔவையார், விநாயகர் மேல் பாடிய அகவல் ’சீதக்களப செந்தாமரை.." எனத் தொடங்கும் விநாயகர் அகவல். விநாயகர் அகவலைத் தினமும் பாராயணம் செய்துவருவோரைத் தீவினை நெருங்காது, நல்லதே நடக்கும் என்பது தொன்நம்பிக்கை
கணேச பஞ்சரத்னம்
கணேச பஞ்சரத்னம் ஆதிசங்கரர் இயற்றிய, விநாயகப்பெருமானை வழிபடும் சுலோகம்.
தமிழ் நாட்டின் சிறப்பு
தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர் வைத்துக் கூரையும் விமானமும் போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி, குளக்கரை, முச்சந்தி, நாற்சந்தி, தெருமுனை என வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார்தான்.
ரூபாய் நோட்டில்
இந்தோனேசியா நாட்டின் ருபியா நோட்டில் விநாயகப் பெருமானின் திருவுருவம் உள்ளது.
விநாயகர் படத்தொகுப்பு
மேலும் பார்க்க
ஓம்
பிள்ளையார் சுழி
கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் ஆலயம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பாலும்,தெளிதேனும்
இந்துக் கடவுள்கள்
கணாபத்தியம்
சிவக்குமாரர்கள்
இந்தியப் பண்பாட்டில் யானைகள்
|
5376
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
சீக்கியம்
|
சீக்கியம் (ਸਿੱਖੀ, Sikhism) அல்லது சீக் (சீக்கியர், என்ற சொலுக்கு "சீடர்", அல்லது "கற்பவர்" என்று பொருள்படும்) என்பது இந்தியத் துணைக் கண்டத்தின் பஞ்சாப் பகுதியில் பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் தோன்றிய தர்ம சமயமாகும். உலகில் உள்ள முதன்மை சமயங்களில் இளைய சமயங்களில் இதுவும் ஒன்றாகும். சீக்கிய சமயத்தின் அடிப்படையான நம்பிக்கைகள், குரு கிரந்த் சாஹிப் நூலில் உள்ளன, மனிதகுலத்தின் ஒற்றுமை, தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவது, அனைவரின் நலனுக்கும் சமூக நீதிக்காக போராடுவது, மற்றும் நேர்மையான நடத்தை ஆகியவற்றை பொதுவாக வலியுறுத்துகிறது. இது ஓரிறைக் கொள்கையை உடைய சமயமாக பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த குரு நானக் அவர்களால் 15ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சமயமாகும். இச்சமயம் குரு நானக்கிற்குப் பிறகு தோன்றிய பத்து சீக்கிய குருக்களாலும் முன்னேற்றப்பட்டது. இது சுமார் 30 மில்லியன் சீக்கியர்களைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக உள்ளது. முதல் நான்கு மதங்களாக முறையே கிறித்தவம், இசுலாம், இந்து, பௌத்தம் போன்ற மதங்கள் இருக்கின்றன.
சீக்கிய சமயம் சிம்ரனை (குரு கிரந்த சாகிப்பின் வார்த்தைகளில் தியானம்) வலியுறுத்துகிறது, இது கீர்த்தனையோ அல்லது உள்மனதில் உச்சாடனை (கடவுளுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லுதல்) செய்வதன் மூலம் கடவுளுடைய பிரசன்னத்தை உணரும் வழிமுறை என்கிறது, மேலும் "ஐந்து திருடர்களான" (காமம், ஆத்திரம், பேராசை, பற்று, அகந்தை) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, மதச்சார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்வோடு கை கோர்த்து பிணைக்கப்பட வேண்டும் என்கிறது. குரு நானக் கற்பித்தவை "செயலில், ஆக்கபூர்வமான, நடைமுறை வாழ்க்கை" அதில் "உண்மை, விசுவாசம், சுய கட்டுப்பாடு தூய்மை" மேலும் சிறந்த மனிதர் என்பவர் "கடவுளோடு ஒன்றிணைந்து, அவருடைய விருப்பத்தை அறிந்து, அதைத் தொடருவார்" என்று கூறுகிறார்.
தத்துவம் மற்றும் போதனைகள்
குரு நானக் தேவ் மற்றும் அவரது வழித்தோன்றல்களின் போதனைகளே சீக்கிய சமயத்தின் மூலமாகும். சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தனது 30ம் வயதில் அறிவு விளக்கம் பெற்ற பிறகு, யாருடைய பாதையை நான் பின்பற்ற வேண்டும் இந்து மதமா அல்லது முஸ்லீமா, நான் கடவுளின் பாதையை பின்பற்ற வேண்டும். கடவுள் இந்து மதமும் அல்ல முஸ்லிம் மதமும் அல்ல, நான் பின்பற்ற வேண்டிய பாதை கடவுளின் பாதையாகும் என்று மக்களிடையே கூறினார். பின் அவர் தன் கருத்துகளை பயணங்கள் செய்து மக்களிடையே கொண்டு சேர்த்தார். இவருக்குப் பின் தோன்றிய சீக்கிய குருக்கள் சீக்கியத்தினை மேம்படுத்தினர்.
சீக்கியம் அனைத்து மனிதர்களும் சமத்துவமானவர்கள் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது. அத்துடன் சாதி, சமயம், பாலினம் போன்ற பாகுபாடுகளை நிராகரித்து இறைவனை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது.
இரு மத இணைப்பு
சீக்கியத்தின் கொள்கையை முதலில் மொழிந்தவரான குரு நானக்கு இந்து நூல்கள், குரான் இரண்டிலுமே உண்மைகள் இருக்கின்றன எனவும் இரண்டையும் சேர்த்தே மக்கள் பின்பற்றலாம் எனவும் கூறினார். இந்துக்களையும் முசுலீம்களையும் ஒற்றுமையாக வாழ வைப்பதே தன் நோக்கம் என கூறினார். இராமன், கிருட்டிணன், நபிகள் போன்றவர்கள் அனைவரும் இறைவனின் தூதர்கள் எனவும் உலக வாழ்க்கையைத் துறந்த துறவியையும் மனையறம் பூண்ட மக்களையும் கடவுள் ஒன்றாகவே பாவிப்பார் எனவும் கூறினார்.
பத்து குருக்கள் மற்றும் சமய அதிகாரம்
குரு என்ற சொல்லானது சமஸ்கிருதத்தின் குரு என்ற சொல்லிருந்து தோன்றியதாகும். இச்சொல்லானது ஆசிரியர், வழிகாட்டுனர் மற்றும் அறிவுரையாளர் என்று பொருள்தருவதாகும். பொ.ஊ. 1469 முதல் 1708 வரையில் சீக்கியத்தின் மரபுகள் மற்றும் தத்துவங்கள் பத்து குருக்களால் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு குருவும் சீக்கிய மதத்தின் கோட்பாடுகளினை வரையரை செய்து அதன் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தனர். சீக்கிய சமயத்தினை தோற்றுவித்த குரு நானக் முதல் குருவாவர். அவருக்குப்பின் ஒன்பது குருக்கள் தோன்றினர். பத்தாவது குருவான கோவிந்த சிங் தனக்குப் பின் குருவாக சீக்கிய குருக்களின் போதனைகளை எழுத்துவடிவமாக தொகுக்கப்பட்ட நூலினை அறிவித்தார். அதனால் குரு கிரந்த் சாகிப் என்று அழைக்கப்படும் அந்நூலானது பதினோராவது குருவாக சீக்கியர்களால் மதிக்கப்படுகிறது. இந்நூல் சீக்கியர்களுக்கான ஆன்மீக வழிகாட்டியாக வேதா வாக்காக, தனித்துவமான குருவின் நேரடி உருவகமாக மாறியது.
குருநானக் முதல் குரு கிரந்த சாகிப் வரையான சீக்கியகுருக்களின் பட்டியல்:
குரு நானக் சாகிப்
குரு அங்கட் சாகிப்
குரு அமர் தாஸ் சாகிப்
குரு ராம் தாஸ் சாகிப்
குரு அர்ஜூன் சாகிப்
குரு அர்கோவிந்த் சாகிப்
குரு ஹர் ராய் சாகிப்
குரு ஹர் கிருஷ்ணன் சாகிப்
குரு தேக் பகதூர் சாகிப்
குரு கோபிந்த் சிங் சாகிப்
குரு கிரந்த சாகிப்
சீக்கிய அடையாளங்கள்
சீக்கிய சமயத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் 1699 -ஆம் ஆண்டில், பைசக்தி நாளில் அமிரித் சன்ஸ்கரில், எல்லா தீட்சைப் பெற்ற சீக்கியர்களும் (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமாக ஐந்து பொருட்களை எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார். இதை “ஐந்து கே” க்கள், அல்லது “பஞ்ச காக்கர்/காக்கி” என்று சொல்கிறார்கள்.
இந்த ஐந்து சின்னங்களாவன
1. கேஷ் (வெட்டப்படாத முடி, இதை பொதுவாக சுருட்டி சீக்கிய தலைப்பாகையான, டாஸ்டர் என்பதன் உள்ளே வைக்கப்படும்.)
2. கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக தலைப்பாகையின் கீழ் அணியப்படும்.)
3. கச்சாஹெரா (இடுப்பிலிருந்து முட்டிவரை இருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது.)
4. கடா (இரும்பாலானா கைவளையம், இது வெண்கல கைவாளாக போரில் பயன்படக்கூடியது, பெரியவை தலைப்பாகையில் அணியப்பட்டு தூக்கியெறியக்கூடிய ஆயுதமாக பயன்படுத்தப்படும்.)
5. கிர்ப்பான் (வளைந்த கத்தி)
முகலாயரும் சீக்கியரும்
முகலாய அரசர்களில் சிலர் சீக்கியர்களோடு நட்புறவு கொண்டும் சிலர் எதிர்த்தும் சீக்கிய குருக்களை கொன்றும் இருக்கின்றனர்.
பாபர் பஞ்சாப்பில் இருக்கும் போது குரு நானக்கை சந்தித்து பரிசுகளை அளித்தார். ஆனால் குரு நானக் அதை வாங்கிக் கொள்ளவில்லை.
சீக்கியர்களின் நான்காவது குருவான இராமதாசுடன் அக்பர் வெகுவாகவே நட்பு பாராட்டினார். அக்பர் இராமதாசுக்கு கொடுத்த நிலத்தில் ஒரு குளம் அமைத்தார் இராமதாசு. அது அமிர்தசரசு என்று தற்போது அழைக்கப்படுகிறது. அதில் ஹர்மந்திர்சாகிப் கருவறை கட்டப்பட்டிருந்தது.
ஐந்தாவது சீக்கிய குருவான அர்சுனரின் காலத்தில் இருந்து முகலாயர்களும் சீக்கியர்களும் பகைமை கொண்டார்கள். அக்காலத்தில் முகலாய மன்னனான சகாங்கீர் அர்சுனரை சிறையில் அடைத்தார்.
ஆறாவது சீக்கிய குருவான அரி கோவிந்தர் சீக்கியர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்ததுடன் முகலாய போர் வீரர்களுடன் சமர்களிலும் ஈடுபட்டார்.
ஒன்பதாம் சீக்கிய குருவான தேகு பகதூர் என்பவரை அவுரங்கசீப் தில்லிக்கு அழைத்து கொலை செய்தார்.
ஒன்பதாம் சீக்கிய குருவான தேகு பகதூரின் மகனும் பத்தாம் சீக்கிய குருவான குரு கோவிந்த் சிங் அவுரங்கசீப்புடன் போரிட்டார் .
சீக்கிய அரசாங்கம்
முகலாயப் பேரரசர்களின் ஆட்சியில் சீக்கியர்கள் பெருமளவு நிலங்களை வைத்திருக்காவிட்டாலும் அவுரங்கசீப் ஆட்சியின் முடிவில் முகலாயப் பேரரசு சரிவுற்றதால் அதிலிருந்து பலம் பெறத் தொடங்கினர். அதன் பிறகு வந்த சில முகமதிய அரசர்களோடு நட்பு பாராட்டினர். அகமது ஷா என்னும் முகமதிய அரசனின் ஆட்சியில் அவனைத் துரத்திவிட்டு பஞ்சாப்பையும் சட்லெஜ் யமுனை ஆற்றாங்கரையோர நாடுகளையும் ஆண்டனர். தங்களது அரசாங்கத்தை 12 பிரிவுகளாக பிரித்துக் கொண்டனர். ஒவ்வொரு பகுதிக்கும் மிச்செல் எனப்பெயரிட்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு சிற்றரசரை நியமித்தனர். நாளடைவில் சுகர்சியா மிச்செலின் சர்தாராய் இருந்த இரஞ்சித் சிங்கு பஞ்சாப்பின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி பேரரசர் ஆனார்.
குருக்களும் கலைகளும்
சீக்கிய இசை என்பது பொ.ஊ. 16ஆம் நூற்றாண்டில் குரு நானக்கால் துவக்கப்பட்ட ஒரு இசை வகை ஆகும். குரு அர்சுனர் நானக்கின் நீதிமொழிகளையும் பிற குருக்களின் நீதி மொழிகளையும் சேர்த்து ஆதி கிரந்தம் என்னும் நூலை வெளியிட்டார். சீக்கியர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தனக்கு காணிக்கை செய்யுமாறு செய்தார். குரு அரி கோவிந்தர் ஊன் உண்பதை அங்கீகரித்தார். சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்தர் சீக்கியர்களை ஏற்றத்தாழ்வின்றி நடத்தினார். சாதியால் தாழ்ந்தவன் உயர்ந்தவன் எனப் பாகுபாடுக்கு உள்ளாக்காமல் எல்லோரையும் சமமாக இருக்குமாறு செய்தார். சீக்கியர் எல்லோரும் தாடி வளர்க்க வேண்டும் குத்துவாளை தரித்திருக்க வேண்டும் என்றும் முகமதியர்களை எதிர்க்க வேண்டும் எனவும் வேண்டினார்.
சீக்கிய மக்கள்
உலகளவில் 25.8 மில்லியன் சீக்கியர்கள் காணப்படுகின்றனர். இது மொத்த உலக மக்கள்தொகையில் 0.39% ஆகும். இந்தியாவைத் தவிர இங்கிலாந்து, கனடா, யு.எஸ், மலேசியா, கிழக்கு ஆப்ரிக்கா போன்ற மற்ற நாடுகளில் அதிக அளவில் சீக்கியர்கள் உள்ளனர். இந்தியாவில் 19 மில்லியன் சீக்கியர்கள் உள்ளனர். இது இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 2% ஆகும். இதில் 75% ஆன சீக்கியர்கள் பஞ்சாப்பில் வாழ்கின்றனர்.
இதனையும் காண்க
சீக்கியர்
சீக்கிய இசை
சீக்கிய சிற்றரசுகள்
சீக்கியப் பேரரசு
ஆங்கிலேய-சீக்கியப் போர்கள்
உசாத்துணை
சீக்கியம்
இந்திய சமயங்கள்
|
5378
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
வேலூர்
|
வேலூர் (Vellore) (அ) இராய வேலூர் (Raya Vellore) (வெல்லூர் என்றும் அழைக்கப்படுகிறது) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும், வேலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக வேலூர்க் கோட்டை விளங்குகிறது. வெவ்வேறு காலங்களில் இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசர்கள், இராட்டிரகூடர்கள், பல்லவர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வேலூரை ஆண்டுள்ளனர்.
இது தமிழகத் தலைநகரான சென்னைக்கு மேற்கே சுமார் 138 கிலோமீட்டர் (86 மைல்) தொலைவிலும், திருவண்ணாமலைக்கு வடக்கில் 82 கிலோமீட்டர் (51 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. தோல் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு சேவைத்துறை நிறுவனங்கள் இந்நகரின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்கின்றன. இந்நகர மக்கள் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர் தொழில்துறைகளில் பணியாற்றுகிறார்கள். மாவட்டத் தலைநகரமாக இருப்பதால் இங்கு வேலூர் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள், அரசின் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் முதலியன அமைந்துள்ளன.
இந்நகரம், 2008-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வேலூர் மாநகராட்சி மூலம் ஆளப்படுகிறது. மாநகராட்சி சட்டத்தின்படி வேலூர் நகரம் 1,054 ஹெக்டேர் (10.54 சதுர கிமீ ) பரப்பளவும், 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 1,77,413 மக்கள் தொகையும் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இடைக்கால மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மொத்த நகர்ப்புறத்தின் மக்கள்தொகை 1,85,895 ஆகும். இந்நகரம் இரயில் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், சாலைப் போக்குவரத்தே முக்கியமான போக்குவரத்து முறையாக இருக்கிறது. சென்னை பன்னாட்டு விமானநிலையம் இந்நகரில் இருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
தமிழில் வேல் என்ற சொல் இந்து மதக் கடவுள் முருகனின் ஆயுதமான ஈட்டி எனவும், ஊர் என்பது முருகக் கடவுள் ஆயுதத்தைப் பயன்படுத்திய இடத்தைக் குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்து மதப் புராணத்தின்படி, தீய சக்திகளை அழிப்பதற்காக வேலுடன் தாமரைக்குளத்தில் தோன்றிய ஒரு பழங்குடியின வேட்டைக்காரனாக முருகக் கடவுள் கருதப்படுகின்றார். எனவே "வேலூர்" என்றால் முருகன் தோன்றிய ஊர் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
மேலும் வேல மரங்களால் சூழப்பட்ட நிலம் என்பதால் இவ்வூர் வேலூர் என்று அழைக்கப்பட்டது என்று மற்றொரு விளக்கம் தருவாரும் உண்டு.
வரலாறு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சோழர் காலக் கல்வெட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் நோக்கும்போது வேலூரின் வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிறகு துவங்குகிறது. அதற்கு முன்னர் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த பல்லவர்களின் ஆட்சி முறை பற்றிக் குறிப்பிடுகின்றன.
850 முதல் 1280 வரையான ஆண்டுக் காலத்தில் வேலூர்ப்பகுதி சோழ மன்னர்களால் ஆளப்பட்டது. சோழ மன்னர்களுக்குப் பிறகு இராட்டிரகூடர்கள், பிற்காலச்சோழர்கள் மற்றும் விசயநகர மன்னர்களால் தொடர்ந்து ஆளப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது காலாண்டில் விசய நகர மன்னர்களின் பிரதிநிதியாக விளங்கிய குச்சி பொம்மு நாயக்கர் என்ற சிற்றரசர் வேலூர்க் கோட்டையைக் கட்டினார்.
17 ஆம் நூற்றாண்டில், வேலூர் ஆற்காடு நவாப்பின் ஆட்சியின் கீழ் வந்தது. முகலாயப் பேரரசின் சரிவுக்குப் பின்னர், நவாப்பால் இந்நகரைக் கட்டுப்படுத்த முடியாமல் போக, 1753க்கு பிறகு குழப்பமும் கலவரமுமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர், வெவ்வேறு இந்து, முஸ்லிம் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர் வந்தது.
17ஆம் நூற்றாண்டின் மத்தியில் பீஜப்பூர் சுல்தான் இக்கோட்டையைக் கைப்பற்றினார். பின்னர் மராட்டியர்களாலும், தில்லி சுல்தானின் தளபதியும், கர்நாடகத்தின் நவாப்புமான தாவூதுகானாலும் கைப்பற்றப்பட்டது. 1760ஆம் ஆண்டு வேலூர்க் கோட்டை ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியினரின் வசம் சென்றது. ஆங்கிலேயர் திப்பு சுல்தானைத் தோற்கடித்த பின்னால் அவருடைய மகன்களை வேலூர்க்கோட்டையில் சிறைவைத்தனர். 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்தியச் சிப்பாய்கள் கலகம் செய்தார்கள். இந்நிகழ்ச்சியை, வேலூர் சிப்பாய் எழுச்சி என்று இந்திய வரலாற்றில் குறிப்பிடுகின்றனர்.
மக்கள் தொகை
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இவ்வூரில் 1,85,895 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள் தொகையில் 91,464 ஆண்கள் மற்றும் 94,431 பெண்கள் ஆவர். இந்நகரின் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 1,032 பெண்களாக உள்ளது. இது தேசிய சராசரியான 1,000 ஆண்களுக்கு 929 பெண்கள் என்பதைவிடக் கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 86.67 சதவீதமாகும். இச்சராசரியில் ஆண் கல்வி 91.68 சதவீதம் மற்றும் பெண் கல்வியறிவு 81.84 சதவீதமாகும். நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 18,363 பேர் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக உள்ளனர்.
2011இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,85,895 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 4,84,690 ஆகவும் உள்ளது.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, வேலூரில் இந்துக்கள்
80.09%, முஸ்லிம்கள் 14.28%, கிறிஸ்தவர்கள் 4.79%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 1.4%, 0.53% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.05% பேர்களும் உள்ளனர்.
இந்தியா அரசின் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரில் 36,728 குடும்பங்கள் இருந்தன. மொத்த மக்கள் தொகையில் 13.96% அதாவது 20,531 பேர் தாழ்த்தப்பட்டோர் வகுப்பையும், 0.22 சதவீத மக்கள் அதாவது 340 பேர் பழங்குடியினர் வகுப்பையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவ்வூரில் உள்ள 57,905 தொழிலாளிகளில் 171 பேர் விவசாயிகளாகவும், 257 பேர் விவசாயத்தொழிலாளர்களாகவும், 6,237 பேர் குடிசைத் தொழில் புரிபவர்களாகவும் மற்றும் 51,240 பேர் மற்ற தொழிலாளர்களாகவும் உள்ளனர். மேலும் இங்குள்ள 2,674 குறுந்தொழிலாளர்களில் 23 பேர் குறு விவசாயிகளாகவும் 60 பேர் குறு விவசாயத்தொழிலாளர்களாகவும், 796 பேர் குடிசைத்தொழிலில் குறுந்தொழில் புரிபவர்களாகவும் எஞ்சியுள்ள 1,795 பேர் பிற குறு தொழிலாளர்களாகவும் உள்ளனர். உள்ளூரில் கிடைத்த வேலைவாய்ப்பு குறைந்ததாலும் வெளியூரில் கிடைக்கும் வேலைவாய்ப்பு எளிதாகவும் கூடுதலாகவும் இருந்ததாலும் மக்கள் இடம்பெயர்ந்ததாலும் 1981–2001 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்தது.
2001 கணக்கெடுப்பின்படி மொத்தமுள்ள நிலப்பகுதியில், 69.88 % வளர்ச்சியடைந்த பகுதியாகவும் 31.12 சதவீத நிலப்பகுதி வளர்ச்சி அடையாத நிலையில் உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வளர்ந்த பகுதியாக காட்டப்பட்டுள்ளதில் 55.76% குடியிருப்பு நோக்கங்களுக்காகவும், 8.34%, வர்த்தக நோக்கிற்காகவும் 1.58% தொழிற் சாலைகளுக்காகவும் 3.3% கல்விக்காகவும் 16.46% பொது நோக்கிற்காகவும் 10.12% போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பிலும் பயன்படுத்தப்படுகிறது. நகரின் சராசரி மக்கள் அடர்த்தி ஹெக்டேருக்கு 241 பேர் ஆகும். மேலும் மக்கள் அடர்த்தி நகர் முழுவதும் ஒரேசீரானதாக இல்லை. அருகந்தம்பூண்டி போன்ற பகுதிகளில் இது அதிகமாகவும் பூந்தோட்டம் போன்ற வெளிப்புறப் பகுதிகளில் குறைந்த அளவிலும் காணப்படுகிறது.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்திற்கு இவ்வூர் சராசரியாக சுமார் 220 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. ஆண்டு முழுவதும் நகரத்தில் அதிக வெப்பமும் குறைவான மழை பொழிவும் கொண்ட ஒரு வறண்ட காலநிலை நிலவுகிறது. இந்நகரம் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் பாலாற்றின் வடிநிலப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூரின் நிலவமைப்பானது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்த சமவெளியாக காணப்படுகிறது. இங்கு குறிப்பிட்டு சொல்லும் வகையிலான எந்தக் கனிம வளமும் காணப்படவில்லை. களிமண் வேலூர் வட்டத்தின் சில பகுதிகளில் காணப்படுகிறது. நகரில் பெரும்பாலும் கல்லும் மண்ணும் சேர்ந்த செம்மண், சரளைமண் முதலிய வகைகள் காணப்படுகின்றன.
வேலூரில் ஆண்டு முழுவதும் சூடான மற்றும் வறண்ட வானிலை நிலவுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 40.5 °C (104.9 °F) ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 18.4 °C (65.1 °F) ஆகவும் ஆண்டுதோறும் பதிவாகிறது.
தமிழகத்தில் நிலவுவது போலவே ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்பமான மாதங்களாகவும் டிசம்பர் முதல் சனவரி வரை குளிரான மாதங்களாகவும் இங்கு இருக்கிறது. வேலூரின் மழை அளவு ஆண்டிற்கு 996.7 மிமீ (39.24) ஆகும். ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும் தென்மேற்குப் பருவமழை, ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை மழை அளவையே கொண்டு வருகிறது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழையால் இந்நகரம் ஓரளவுக்கு மழை பெறுகிறது. வேலுர் நகரின் ஈரப்பதம் குளிர்காலத்தில் 67 முதல் 86 சதவீதமாகவும் கோடைக்காலத்தில் 40 முதல் 63 சதவீதமாகவும் இருக்கிறது.
பொருளாதாரம்
2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, வேலூர் நகர தொழிலாளர் பங்கு விகிதம் 43.64% ஆகும். வேலூர், மாவட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும், சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. தோல்தொழில், விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 83.35 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 13.52 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 43.64 சதவீதமும் பெண்களின் பங்கு 24.39 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை இராயபுரத்திற்கும் வாலாசாபேட்டைக்கும் இடையில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் இரண்டாவது ரயில் பாதையின் வளர்ச்சியோடு வேலூர் மற்றும் அதன் அருகில் இருக்கும் தொழில் நகரங்களும் தொடர்ந்து நிலையாக தொழில்துறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தங்கநாற்கர சாலை கணிசமாக இப்பகுதியில் தொழில்துறை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது
வேலூரைச் சுற்றியுள்ள இராணிப்பேட்டை, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் கொண்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இருந்துதான் நன்கு பதனிடப்பட்ட உயர்ரக தோல்பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த தோல் ஏற்றுமதியில், வேலூர் மாவட்ட தோல் தொடர்பான பொருட்கள் 37 சதவீதம் ஆகும். ஆசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து தயாரிப்பு நிறுவனம், தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை (TEL) காட்பாடியில் அமைந்துள்ளது. இத்தொழிற்சாலை மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட இந்திய அரசாங்கத்தின் வெடிபொருட்கள் நிறுவனம் ஆகும். மற்றும் வேலூர் அருகே உள்ள இறையங்காடு என்ற ஊரில் உலோக மற்றும் வாகன, தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் மருத்துவப் பயன்பாடுகள் கொண்ட பிளாஸ்டிக் ஒருங்கிணைந்த பாகங்கள் உற்பத்தி நிறுவனம் ஒன்றும் இயங்கி வருகிறது. இவ்வூரில் உள்ள ஆபிசர்ஸ் லைன், காந்தி ரோடு, லாங்கு பஜார், மக்கான், சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலை போன்ற பகுதிகள் வியாபார மையங்களாக விளங்குகின்றன.
நகரின் இதயப் பகுதியான ஐடா ஸ்கடர் சாலையில் கிருத்துவ மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இம்மருத்துவமனை வேலூரின் மிகப் பெரிய வணிகத்தொழில் மற்றும் சேவை நிறுவனமாகும். இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து போகுமிடமாக இம்மருத்துவமனை விளங்குகிறது. உறைவிடம், மருத்துவமனைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் முதலியன நகரின் வருவாய்க்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன. தமிழக அரசின் வேலூர் மருத்துவக் கல்லூரி அடுக்கம்பாறை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இவை தவிர நாராயணி மருத்துவ ஆராய்ச்சி மையம், அப்போலோ மருத்துவமனை முதலியன இங்குள்ள மருத்துவ நிறுவனங்களாகும். இங்குள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Vellore Institute of Technology - VIT) அகில இந்திய அளவில் புகழ் பெற்றுள்ளது. விவசாயம் தவிர சிற்றூர்ப்பகுதி மக்கள், நெசவு, பீடி மற்றும் தீக்குச்சி உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டுகின்றனர்.
கல்வி
இந்தியாவின் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சியில் வேலூரின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கு ஓர் அரசுப் பல்கலைக்கழகம், ஒரு தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஓர் அரசு மருத்துவக்கல்லூரி, கிருத்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தவிரப் பல பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனை இரத்தவியல் மற்றும் உயிர் வேதியியல் தொழில் நுட்ப ஆராய்ச்சியில் உலகத்தரம் பெற்றிருந்த காரணத்தால் மத்திய அரசாங்கத்தின் உயிரியல் தொழில்நுட்பத் துறை இம்மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்து நாட்டின் முதல் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையத்தை திசம்பர் 2005 ஆம் ஆண்டு வேலூரில் நிறுவியது. இதன் தொடர்ச்சியாக இக்கல்லூரி முதிர்ந்த எலியிடமிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களை மறு செயலாக்கத் திட்டத்தின்மூலமாக மனித கருவில் காணப்படும் ஸ்டெம் செல்கள் போன்று செயல்பட வைத்து நாட்டின் மருத்துவ மற்றும் அறிவியல் சமூகத்தின் கவனத்தை ஈர்த்து ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டின் வடகிழக்கு மண்டலமான வேலூருக்கு அருகில் உள்ள விரிஞ்சிபுரத்தில் வேளாண் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்த 32 ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றாகும். வேலூரின் மானாவாரிப் பகுதிகளில் இந்திய அரசின் ஆதரவு பெற்ற தேசிய நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் (NWDPRA) அக்டோபர் 1997 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 18 நீர்நிலைகளில் நீர் மற்றும் மண் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதனைகள் நடத்துவது ஆகும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம் முன்பு வேலூர் கோட்டை வளாகத்தில் அமைந்திருந்தது. வேலூரில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் முதலியன திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்திருக்கின்றன. தந்தை பெரியார் தொழில்நுட்பக் கல்லூரி மட்டுமே அரசு நடத்தும் பொறியியல் கல்லூரியாக உள்ளது. இந்தியாவின் சிறந்த தனியார் பொறியியல் பல்கலைக்கழகமாக, வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (VIT) விளங்குகிறது என்று இந்தியா டுடே வார இதழ் மதிப்பீடு செய்துள்ளது.
கிருத்துவ மருத்துவ கல்லூரியும், மருத்துவமனையும்
இந்தியா மற்றும் ஆசியாவிலுள்ள மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று கிருத்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகும். வேலூர் நகரின் இதய பகுதியில் உள்ள இம்மருத்துவமனை நகரைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சுகாதாரம் வழங்கும் நிறுவனமாக விளங்குகிறது.
1954 இல் நிறுவப்பட்ட ஆக்சிலியம் மகளிர் கல்லூரி வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைக்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரி ஆகும். இது தவிர நகரத்தில் சாயிநாதபுரம் அருகே தனபாக்கியம் கிருஷ்ணசுவாமி முதலியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓட்டேரி அருகே முத்துரங்கம் அரசு கலை கல்லூரி, புகழ் பெற்ற சி.எம்.சி கண் மருத்துவமனைக்கு அருகில் ஊரிசுக் கல்லூரி முதலிய கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. 1898 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பழமை வாய்ந்த ஊரிசுக் கல்லூரியில் முன்னாள் குடியரசுத்தலைவர் திரு எஸ். இராதாகிருட்டிணன் கல்வி பயின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அரசு ஒரு நினைவு அஞ்சல்தலையை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளது.
அரசினர் சட்டக்கல்லூரி 2008 ஆம் ஆண்டு வேலூரில் நிறுவப்பட்டது. காட்பாடியில் அமைந்துள்ள இக்கல்லூரியில் ஆண்டுக்கு 80 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மூன்றாண்டு சட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது. இவை தவிர இங்கு அதிகமான அரபிக் கல்லூரிகளும் உள்ளன.
சுற்றுலா
பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய இடமாக வேலூர் கோட்டை விளங்குகிறது. இக்கோட்டையின் உள்ளே இந்துக் கோயில், கிறித்தவ ஆலயம், இஸ்லாமியரின் மசூதி ஆகியவை உள்ளன. இந்த நகரில் பல பழமை வாய்ந்த கோயில்கள் மற்றும் இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றான கிறித்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் உள்ளது. வேலூருக்கு அருகில் இரத்தினகிரி பாலமுருகன் கோயில் உள்ளது.
வேலூரில் பொற்கோயில் ஒரு சுற்றுலா தலமாக உள்ளது, இக்கோயிலில் கூரை முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.
வேலூர் நகரில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா இடம் வேலூர்க்கோட்டை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சியின் போது, திப்பு சுல்தானின் குடும்பத்தினர் மற்றும் இலங்கையின் கடைசி அரசன் விக்கிரம ராசசிங்கா ஆகியோர் அரசாங்கக்கைதிகளாக இக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்தனர். இக்கோட்டையில் ஒரு தேவாலயம், ஒரு மசூதி மற்றும் ஒரு சிவன் கோவில் ஆகியன உள்ளன. சலகண்டீசுவரர் கோவில் என்றழைக்கப்படும் சிவன்கோயில் அதன் சிறப்பான சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற இடமென அறியப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான முதல் புரட்சி 1806 ஆம் ஆண்டில் இந்தக் கோட்டையில்தான் வெடித்தது. கனத்த மதில்களும், அவற்றில் சீரற்ற இடைவெளியில் எழுப்பிய கொத்தளங்களும் வட்டக்கோபுரங்களும் இணைந்து வேலூர் கோட்டையின் முக்கிய பாதுகாப்பு அரணாக விளங்கின. கோட்டையின் தலைமை மதில்கள் பெரிய கருங்கற்களால் (கிரானைட்) கட்டப்பட்டவை. நிலத்துக்கு அடியிலுள்ள குழாய்கள் மூலம் தண்ணீர் பெறும் வகையில் அகன்ற அகழி கோட்டையைச் சுற்றி வெட்டப்பட்டுள்ளது.
வேலூர்க் கோட்டைக்குள் இக்கோட்டையின் வயதொத்த சலகண்டேச்சுரர் கோவில் அமைந்துள்ளது. வேலுர்க் கோட்டையின் அமைப்புமுறை தென்னிந்திய இராணுவக் கட்டுமானத்திற்கு ஒரு குறிப்பிடதகுந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆங்கிலேயருடனான போரின்போது இக்கோட்டைக்குள் இடம்பெற்றுள்ள திப்புமகாலில், திப்புசுல்தான் தன் குடும்பத்தினருடன் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. திப்புவின் மகன்களுடைய கல்லறைகள் வேலூரில் காணப்படுகின்றன. இக்கோட்டை இந்தியத் தொல்லியல் துறையின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மற்றும் இக்கோட்டையானது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாக சிறப்புடன் பாதுகாக்கப்படுகிறது.
அரசு அருங்காட்சியகம் கோட்டையின் உள்ளே அமைந்து இருக்கிறது. இது 1985 ஆம் ஆண்டு பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இங்கு கலை, தொல்லியல், வரலாறு, ஆயுதங்கள், சிற்பங்கள், வெண்கல, மர சிற்பங்கள், கைவினைப் பொருட்கள், நாணயவியல், அஞ்சல், தாவரவியல், மண்ணியல், விலங்கியல் தொடர்புடைய பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்படாத வடஆற்காடு மாவட்ட வரலாற்று நினைவுச் சின்னங்கள் இங்குள்ள கண்காட்சியகத்தில் உள்ளன. சிறப்புக் கண்காட்சியில் இம்மாவட்டத்தின் கி.மு 400 ஆண்டு பழமை வாய்ந்த வெண்கலத்தாலான இரட்டை வாள், பிற்காலப் பல்லவர்கள் முதல் விசயநகர அரசர்கள் காலம் வரையிலான கற்சிற்பங்கள் , கடைசி இலங்கை மன்னன் விக்ரமராசசிங்கா பயன்படுத்திய தந்தத்தினாலான சதுரங்கப் பலகைகள் மற்றும் சதுரங்கக்காய்கள் முதலிய பொருள்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான கலை முகாம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வெட்டுகள் மற்றும் படிமவியல் ஆய்வு முதலியன அருங்காட்சியகத்தில் நடைபெறும் கல்வி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
சலகண்டேச்சுரர் கோயில், இலட்சுமி தங்க கோவில், வாலாசா தன்வந்திரி கோயில் மற்றும் பொன்னை நவக்கிரகக் கோட்டை ஆலயம் ஆகிய கோயில்கள் வேலூரைச் சுற்றியுள்ளன. ஸ்ரீ லட்சுமி கோவில் தற்பொழுது மிகவும் புகழ்பெற்றுப் பொற்கோயில் என அழைக்கப்படுகிறது. வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமலைக்கோடியில் புதிதாக கட்டப்பட்ட இக்கோயில் ஆன்மீகப் பூங்காவாக திகழ்கிறது. சக்தி அம்மா என்பவரின் தலைமையில் உள்ள நாராயணி பீடத்தில் இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கோவில் முழுவதும் கட்டிடக்கலையில் சிறப்புவாய்ந்த நூற்றுக்கணக்கான தங்கக் கைவினைஞர்களால் நுண்ணிய கை வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டுள்ளன. உலகிலேயே இங்குதான் 300 கோடி ரூபாய் செலவில் சுமார் 1500 கிலோ தங்கத்தை பயன்படுத்தி கோவிலின் வெளிப்புறம் தங்கத்தகடுகள் மற்றும் தங்கத்தட்டுகளால் வேயப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் நகருக்கு அருகிலுள்ள இரத்தினகிரியில் பாலமுருகனடிமை சாமிகளால் எழுப்பப்பட்டுள்ள முருகன் கோவில் இங்குள்ள மற்றொரு முக்கியமான இந்து மதமதக் கோவில் ஆகும். வேலூர் கோட்டையின் உள்ளே 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த செயிண்ட் ஜான் தேவாலயம் நகரில் அமைந்துள்ள தேவாலயங்களில் ஒன்றாகும். மேலும், நாட்டின் மிகப்பெரிய அரபிக்கல்லூரியை உள்ளடக்கிய பெரிய மசூதி நகரின் மையப்பகுதியில் உள்ளது.
போக்குவரத்து
பேருந்து சேவைகள்
சுமார் 104.332 கிமீ, அதாவது (64.829 மைல்) நீளமுள்ள சாலைகளை வேலூர் மாநகராட்சி பராமரித்து வருகிறது. இதில் 50.259 கிமீ (31.229 மைல்) நீளமுடைய சிமெண்ட் சாலைகள், 6.243 கிமீ நீளமுள்ள (3.879 மைல்) மண் சாலைகள் மற்றும் 47.88 கி.மீ. (29.75 மைல்) நீளமுடைய நிலக்கரித்தார் சாலைகள் உள்ளன.
பெங்களூர் – சென்னை சாலையில் உள்ள கிருட்டினகிரியையும் வாலாசாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 47 வேலூர் வழியாகச் செல்கிறது. மேலும் மாநில நெடுஞ்சாலை எண் 4 ராணிப்பேட்டை – சென்னை, மாநில நெடுஞ்சாலை 132 ( வேலூர் - ஆரணி) மற்றும் கடலூர் – திருவண்ணாமலை- சித்தூர் சாலைகளை இணைத்துச் செல்கிறது.
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கருநாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன் வேலூர் இணைக்கப்பட்டுள்ளது.
காட்பாடி மார்க்கமாக:
சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, கர்னூல், குடியாத்தம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளுக்கு செல்லும் அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது
ஆற்காடு மார்க்கமாக:
சென்னை, அரக்கோணம், சோளிங்கர், காஞ்சிபுரம், தாம்பரம், அடையாறு, செங்கல்பட்டு, கல்பாக்கம், திருத்தணி, திருவள்ளூர், செய்யாறு, வந்தவாசி, மேல்மருவத்தூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது
ஆரணி மார்க்கமாக:
புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், மேல்மலையனூர், மேல்மருவத்தூர், வந்தவாசி, சிதம்பரம், கடலூர், காட்டுமன்னார்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, மரக்காணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், ஜெயங்கொண்டம், வேளாங்கண்ணி ஆகிய பகுதிகளுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது
கண்ணமங்கலம் மார்க்கமாக :
போளூர், திருவண்ணாமலை, செங்கம், திருச்சி, விழுப்புரம், கடலூர், விருத்தாச்சலம், திட்டக்குடி, தஞ்சாவூர், சிதம்பரம், பண்ருட்டி, கும்பகோணம், திருநெல்வேலி, மதுரை, மார்த்தாண்டம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, ஆகிய பகுதிகளுக்கு அதிகப்படியான பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது
ஆம்பூர் மார்க்கமாக :
பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தர்மபுரி, ஓசூர், மேட்டூர், ஒகேனக்கல், மற்றும் கர்நாடக மாநிலம், கேரள மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள்
தென் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் சென்றுவர வேலூரில் இருந்து பேருந்து சேவை வசதிகள் உண்டு.
சுமார் 30 கிலோமீட்டர் அருகிலுள்ள புறநகரங்களை நகரப்பேருந்து சேவை வேலூருடன் இணைக்கிறது. வேலூர் கோட்டைக்கு எதிரில் நகரப் பேருந்துகளுக்கான பேருந்து நிலையமும் பசுமை வளையத்திற்கு அருகில் மத்திய பேருந்து நிலையமும் அமைந்துள்ளன. இவைதவிர வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செல்லும் சாலையில் சித்தூர் பேருந்து நிலையம் உள்ளது.
தொடருந்து போக்குவரத்து
வேலூர் நகரில் காட்பாடி சந்திப்பு, வேலூர் கண்டோன்மெண்ட் இரயில்நிலையம், வேலூர் டவுன் இரயில் நிலையம் என மூன்று முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வடக்கே 5 கி.மீ தூரத்தில் உள்ள காட்பாடி சந்திப்பு மிகப்பெரிய இரயில்நிலையமாகும்.
சென்னை பெங்களூர் அகன்ற இரயில் பாதையில் அமைந்துள்ள காட்பாடி இரயில் நிலையம் சென்னை, பெங்களூர், திருப்பதி, ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் திருச்சி இரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி 150க்கும் மேற்பட்ட இரயில்கள் இந்நிலையத்தின் வழியாகச் செல்கின்றன.
விஜயவாடா, திருப்பதி, புவனேஸ்வர், நாக்பூர், பெங்களூரு, போபால், மும்பை, மங்களூர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி, பிலாஸ்பூர், கோர்பா, பாட்னா, எர்ணாகுளம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, சீரடி, கான்பூர், கயா, தன்பாத், ஜம்மு தாவி, மதுரை, பிலாய், குவாலியர், சென்னை சென்ட்ரல், ஹவுரா,புது தில்லி, கோயம்புத்தூர், குவஹாத்தி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, ஜெய்ப்பூர் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு காட்பாடியில் இருந்து நேரடி இரயில் இணைப்புகள் உள்ளன.
காட்பாடி சந்திப்பிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள சூரியக்குளம் என்னும் பகுதியில் விழுப்புரம், திருப்பதி அகல ரயில்பாதையில் வேலூர் கண்டோன்மெண்ட் இரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து திருப்பதி மற்றும் சென்னைக்கு பயணிகள் ரயில்கள் புறப்படுகின்றன. மேலும் வேலூரை தென் தமிழகத்துடன் இணைக்கும் விதமாக அகல இரயில்பாதை 150 கி.மீ தூரத்திற்கு ஆரணி, திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இவ்வழியில் சரக்கு இரயில் போக்குவரத்தும் பயணிகள் இரயிலும் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன. வேலூர் கண்டோன்மெண்ட் இரயில் நிலையத்திற்கும் காட்பாடி சந்திப்புக்கும் இடையில் வேலூர் டவுன் இரயில் நிலையம் உள்ளது.
விமானப் போக்குவரத்து
வேலூர் நகரிலுள்ள அப்துல்லாபுரம் என்னும் பகுதியில் ஒரு விமான நிலையம் உள்ளது. 2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்நிலையம் வானூர்தி பயிற்சி திட்டங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்து சுமார் 130 கி.மீ தூரத்தில் சென்னை சர்வதேச விமான நிலையமும் சுமார் 200 கி.மீ தூரத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் உள்ளன. சுமார் 100 கி.மீ தூரத்தில் திருப்பதி உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது.
பயனளிக்கும் சேவைகள்
தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வேலூர் நகருக்குத் தேவையான மின்சாரம் ஒழுங்குமுறைப் படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. வேலூரும் அதன் புறநகர் பகுதிகளும் இணைந்தது வேலூர் மின்வினியோக வட்டமாக செயல்படுகிறது. இவ்வட்டத்திற்கென ஒரு தலைமை விநியோகப் பொறியாளர் பிராந்திய தலைமையகத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். நகருக்குத் தேவையான குடிநீர் வழங்கல் சேவையை மாநகராட்சி அளித்து வருகிறது. பாலாறு நீர் தேக்க பணி மற்றும் கருகம்பத்தூர் நீர் தேக்கப் பணி திட்டங்கள் மூலம் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பத்து மேல்நிலை தொட்டிகளில் பாலாற்று நீரை சேகரித்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நகரிலிருந்த 33,772 குடும்பங்களுக்கு 16,371 இணைப்புகள் இருந்ததாக 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2000–2001 ஆண்டு காலத்தில் சுமார் 7.4 மில்லியன் லிட்டர் குடிதண்ணீரை மாநகராட்சி தினசரி விநியோகித்துள்ளது. இவைதவிர ஓட்டேரி ஏரி, பொன்னை ஆறு, ஆழ்துளைக் கிணறுகள் முதலியன நகருக்கு குடிநீரளிக்கும் பிற நீர் ஆதாரங்களாகும்.
2011 ஆம் ஆண்டுள்ள நகராட்சி தரவுகளின் படி, சுமார் 83 மெட்ரிக் டன் திடக்கழிவு ஒவ்வொரு நாளும் குடியிருப்பு வீடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சியின் சுகாதார துறை மூலமாக 16 வார்டுகளிலும் இத்துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதாள சாக்கடைதிட்ட வசதி இல்லாத காரணத்தால் கழிவு நீரானது சாக்கடைகள், திறந்த வெளிகள் மூலமாக அப்புறப்படுத்தப் படுகின்றன. தற்பொழுது 2011 ஆவது ஆண்டில் திட்டங்கள் துவக்கப்பட்டு சுமார் 145 கிலோமீட்டர் நீளத்திற்கு வசதிகள் உருவாக்கப்படுள்ளன. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 24 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் ஒரு கால்நடை மருத்துவமனையும் நகரமக்களின் சுகாதாரத்தை கவனித்து வந்தன. 5241 தெருவிளக்குகள், 735 சோடியம் விளக்குகள், 73 பாதரசஆவி விளக்குகள் மற்றும் 4432 குழல் விளக்குகள் மூலமாக மாநகராட்சி நகரத்தை ஒளியூட்டுகிறது. இவைதவிர நகராட்சியால் நேதாஜி தினசரி அங்காடி ஒன்றும் பராமரிக்கப்படுகிறது.
அரசியல் மற்றும் நகராட்சி நிர்வாகம்
வேலூர் மாநகராட்சியானது வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த கதிர் ஆனந்த் வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த பி. கார்த்திகேயன் வென்றார்.
1866 ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்த வேலூர் நகரம் 1947 ஆம் ஆண்டில் முதல் நிலை நகராட்சியாக உயர்வடைந்து 1970 ஆம் ஆண்டில் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஆகத்து 2008 ஆம் ஆண்டில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சியில் 60 தொகுதிகள் (வார்டு) உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் உள்ளார். மாநகராட்சி தன் செயல்பாடுகளை பொது நிர்வாகம், பொறியியல், வருவாய், பொது சுகாதாரம், நகரமைப்புத் திட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற ஆறு துறைகளுக்கு பகிர்ந்தளித்துச் செயல்பட்டு வருகிறது. இந்த துறைகள் அனைத்தும் ஆட்சித்துறைத் தலைவரான நகராட்சி ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. மாநகராட்சித் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி உறுப்பினர்கள் 60 பேர் கொண்ட அமைப்பு சட்டமியற்றும் பணியை மேற்கொள்கிறது.
தமிழ்நாடு காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான உட்பிரிவு மூலமாக நகரின் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. நகரத்தில் உள்ள நான்கு காவல் நிலையங்களில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்றும் அடங்கும். மேலும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, மாவட்ட குற்றவியல் பிரிவு மற்றும் குற்றப்பதிவேடுகள் பிரிவு முதலிய சிறப்புப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
வேலூர் நகராட்சி இணையத்தளம்
வேலூர்
வேலூர் மாவட்டம்
தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
வேலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
|
5380
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
திருவாரூர்
|
திருவாரூர் (ஆங்கிலம்:Tiruvarur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் மற்றும் திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் நகராட்சியும் ஆகும்.
இவ்வூர் முற்காலச் சோழர்களின் ஐந்து தலைநகரங்களனுள் ஒன்றாக விளங்கியது. இவ்வூரில் உள்ள பாடல் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும். இவ்வூரில்தான் மனு நீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார்.
பெயர் காரணம்
ஆரூர் = ஆர்+ஊர், ஆர்-ஆத்தி ஆத்திமரங்கள் நிறைந்த ஊராக இருந்ததால் ஆரூர் என்ற பெயர் சூட்டப்பட்டதுபெற்றது. இவ்வூர் தேவார பதிகங்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.பாடல்பெற்ற தலமாதலால் 'திரு' சேர்க்கப்பட்டு திரு+ ஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.
சோழநாட்டில் வழங்கிவரும் வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
வரலாறு
திருவாரூர் முற்கால சோழர்களின் ஐந்து பாரம்பரிய தலைநகரங்களுள்
(ஆரூர்,ஆவூர்,கருவூர், புகார்,உறந்தை) ஒன்றாகவும்,அதன் பின் வந்த மன்னர்கள் முடிசூட்டிக்கொள்ளும் இடமாகவும் விளங்கியது.திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை பிற்கால சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே இந்தக் கல்தேர் அமைந்துள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.38%, முஸ்லிம்கள் 14.13%, கிறிஸ்தவர்கள் 1.39%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.2%, 0.05% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்
திருவாரூர் நகராட்சி தமிழகத்தின் நூற்றாண்டு கண்ட பழமைவாய்ந்த நகராட்சிகளுள் ஒன்று.இது 1914-ல் தோற்றுவிக்கப்பட்டது.பின் 01.04.1978-ல் முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.02.05.2023 முதல் தேர்வுநிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.2014 ம் ஆண்டு இந்நகராட்சி தன் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது.
30 வார்டுகளையும் 2011 மக்கட்தொகை கணக்கின்படி சுமார் 60,000 மக்கட்தொகையையும் கொண்டுள்ளது.
திருவாரூர் நகராட்சியானது திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த ம. செல்வராசு வென்றார்.
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (திமுக) சேர்ந்த பூண்டி கே. கலைவாணன் வென்றார்.
போக்குவரத்து
சாலை போக்குவரத்து
திருவாரூர் நகரின் வழியே தேசிய நெடுஞ்சாலை NH83 செல்கிறது. மாநில நெடுஞ்சாலை 23 மயிலாடுதுறை முதல் திருத்துறைப்பூண்டி வரை, மாநில நெடுஞ்சாலை 65 திருவாரூரிலிருந்து - கும்பகோணம் வரை செல்கிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள் திருவாரூர் வழியாக திருச்சிராப்பள்ளி முதல் வேளாங்கண்ணி வரை இயக்கப்படுகிறது. திருவாரூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. பெங்களூர், திருவனந்தபுரம், சென்னை போன்ற நீண்ட தூர பயணத்திற்கு அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இந்நகரில் புதிய மற்றும் பழைய பேருந்துநிலையம் என இரண்டு பேருந்துநிலையங்கள் அமைந்துள்ளன. பழைய பேருந்துநிலையம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நன்னிலம், நாகூர், லக்ஷ்மாங்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு நகர பேருந்துகள் மற்றும் தனியார் மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருவாரூர் புதிய பேருந்துநிலையம் விளமல் அருகே உள்ள திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தியாகப்பெருமாநல்லூரில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், சிதம்பரம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொடருந்து போக்குவரத்து
திருவாரூர் சந்திப்பு ரயில்நிலையமானது தமிழ்நாட்டின் மிகப்பழமை வாய்ந்த ரயில்நிலையங்களுள் ஒன்றாகும்.1861 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ரயில்நிலையம் சுமார் 160 ஆண்டுகள் பழமையானது. வருவாயின் அடிப்படையில் டெல்டா பகுதியின் ஐந்தாவது பெரிய ரயில்நிலையம் இது. இந்த இரயில் நிலையமானது மேற்கில் தஞ்சாவூர், வடக்கில் மயிலாடுதுறை, கிழக்கில் நாகப்பட்டினம் மற்றும் தெற்கில் திருத்துறைப்பூண்டி ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய இரயில் சந்திப்பாக உள்ளது. திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களுக்கு செல்ல பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. மன்னார்குடியிலிருந்து திருப்பதி வரை மற்றும் வேளாங்கண்ணியிலிருந்து கோவா வரை இரண்டு ரயில்கள் உள்ளன. இது வாரத்தில் மூன்று நாள் திருவாரூர் வழியாக இந்த இரயில்கள் இயக்கப்படுகிறது.
வானூர்தி நிலையம்
இதன் அருகிலுள்ள விமான நிலையம், 116 கி.மீ தொலைவிலுள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.
கலாச்சாரம்
திருவாரூர் தியாகராஜர் கோயில்
திருவாரூர் தியாகராஜர் கோயில், மிகவும் புகழ்பெற்ற பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களில் தலைமை இடமாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகும். சோழ கல்வெட்டுகளில், தியாகராஜாவை விதிவிதாங்கர் என்றும் "தியாகராஜா" என்ற பெயர் பொ.ஊ. 15-16 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர் திருவிழா
திருவாரூர் தேரானது, ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியும், 300 டன் எடையும் ஆகும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் (9.8 அடி) உயரத்தில் இருக்கின்றது.
புகழ்பெற்றவர்கள்
தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி திருவாரூரில் பிறந்தார்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
360 டிகிரி கோணத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயில்
திருவாரூர் தூவாய் நாதர் திருக்கோயில்
திருவாரூர்
முதல் நிலை நகராட்சிகள்
திருவாரூர் மாவட்டம்
இந்து புனித நகரங்கள்
பண்டைய இந்திய நகரங்கள்
|
5385
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B
|
இலக்னோ
|
இலக்னோ அல்லது இலக்னௌ (இந்தி: लखनऊ, உருது: لکھنؤ) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகர். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 123.45 மீ. உயரத்தில் அமைந்துள்ளது. 310.1 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நகரின் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 22,07,340 ஆகும். சராசரிக் கல்வியறிவு 68.63%. இலக்னோ வட இந்தியாவின் கலைநேர்த்திக்கும் பண்பாட்டுக்கும் சிறந்த இடமாக 18-ஆவது, 19-ஆவது நூற்றாண்டுகளில் புகழ் ஈட்டிய நகரம். இன்றும் இது தொடர்ந்து வணிகம், வானூர்திநுட்பம், நிதிநிறுவனங்கள், மருந்தாலைகள், நுட்பத்தொழிலகங்கள், சுற்றுலா, வகுதி (design), பண்பாடு, இசை, இலக்கியம் ஆகிய பல துறைகளுக்கும் முன்னணி நகரமாகத் திகழ்கின்றது. இது உத்திரப் பிரதேசத்திலேயே பெரிய நகரம், வட, நடு இந்தியாவில் தில்லிக்கு அடுத்தாற்போல் பெரிய மாநகரம், இது தவிர இந்தியாவிலேயே 11-ஆவது பெரிய நகரமும் ஆகும்.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள்
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
உத்தரப் பிரதேசத்திலுள்ள மாநகரங்கள்
|
5386
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
|
கும்பகோணம்
|
கும்பகோணம் (Kumbakonam), அல்லது குடந்தை தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டம், கும்பகோணம் மாநகராட்சி மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். 16 அக்டோபர் 2021 அன்று கும்பகோணத்தை மாநகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டார்.
இந்த நகரம் இரண்டு ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. வடக்கே காவேரி ஆறு மற்றும் அரசலாறு ஆகும். காவேரி கரையில் அமைந்துள்ள கும்பகோணம், சென்னைக்கு 270 கி.மீ தெற்கிலும், திருச்சிக்கு 90 கி.மீ. கிழக்கிலும், தஞ்சாவூருக்கு 40 கி.மீ. வடகிழக்கிலும் உள்ளது. சோழர் காலத்தில் குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த கும்பகோணம் ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதாக கூறப்படுகிறது. கும்பகோணத்தில் அதிக எண்ணிக்கையில் சைவம் மற்றும் வைணவம் கோயில்கள் உள்ளன. சந்திரப்பிரப பகவான் ஜினாலயம் உள்ளிட்ட பல சமணக் கோயில்களும் இங்கு உள்ளன. கும்பகோணம் அருகே பௌத்தக்கோயில் இருந்ததற்கான சான்று கும்பேஸ்வரர் கோயிலில் உள்ளது. கும்பகோணம் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் வெற்றிலையும், பாக்கும் விளைகிறது. கும்பகோணம் வெற்றிலை உலகெங்கிலும் மிகவும் பிரபலமானது. கணித மேதையான ஸ்ரீனிவாச ராமானுஜன் கும்பகோணத்தில் வளர்ந்தவராவார்.
கும்பகோணம் சங்க காலத்திற்கு முந்தையது மற்றும் ஆரம்பகால சோழர்கள், பல்லவர்கள், இடைக்காலச் சோழர்கள், சாளுக்கிய சோழர், பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், தஞ்சாவூர் நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் மராத்தியர்கள் ஆட்சி செய்தனர். கி.பி. 7 மற்றும் 9-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இது ஒரு முக்கிய நகரமாக உயர்ந்தது, இது இடைக்காலச் சோழர்களின் தலைநகராகச் செயல்பட்டது. பிரிட்டிஷ் கல்வி மற்றும் இந்து கலாச்சாரத்தின் முக்கிய மையமாக இருந்தபோது, இந்த நகரம் பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் அதன் செழிப்பின் உச்சத்தை அடைந்தது; இது "தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்" என்ற கலாச்சாரப் பெயரைப் பெற்றது. 1866-ஆம் ஆண்டில், கும்பகோணம் அதிகாரப்பூர்வமாக ஒரு நகராட்சியாக அமைக்கப்பட்டது, இது இன்று 48 வார்டுகளை உள்ளடக்கியது, இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இரண்டாவது மாநகராட்சி மற்றும் பெரிய மாநகராட்சியாகவும் உள்ளது.
பெயர்க் காரணம்
"கும்பகோணம்" என்ற பெயர், ஆங்கிலத்தில் "பாட்ஸ் கார்னர்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாகிய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசு நாயனாரும், இத்தலத்தை குடமூக்கு எனவும் திருக்குடந்தை எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் குடந்தை எனவும் பூதத்தாழ்வார் குடமூக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். திருநாவுக்கரசு நாயனார் தலயாத்திரையைப் பற்றித் தாம் கூறியபோது சேக்கிழார் இத்தலத்தைக் குடமூக்கு என அறிமுகப்படுத்துகிறார். திருப்புகழ் பாடியருளிய அருணகிரிநாதர் இத்தலத்துத் திருமுருகன் மீது பாடிய பாட்டில் "மாலைதளி வந்து கும்பகோண நகர் வந்த பெருமாளே" எனப் போற்றியுள்ளார். குடமூக்கு என்னும் சொற்றொடர் கும்பகோணம் என மாறியது இடைக்காலத்தில் எனக் கொள்ளலாம். குடம் என்பதற்குக் கும்பம் என்னும் பெயருண்டு. கோணம் என்னும் சொல்லுக்குரிய பல பொருள்களுள் மூக்கு என்னும் பொருளும் அடங்கும். இவ்வாறு குடமூக்கு என்பதை கும்பகோணம் என ஆக்கிக்கொண்டார்கள். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மிகுதியான கவிதைகளைக் கொண்ட பல நூல்கள் இயற்றிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தாம் எழுதிய திருக்குடந்தைப் புராணத்தின் திருத்தல விசேடப் படலத்திலுள்ள 18ஆவது பாடலில் இத்தலத்தைக் கும்பகோணம் எனக் கொள்கிறார். இதே படலத்தின் 19ஆவது பாடலில் இதனைக் குடமூக்கு எனக் காட்டுகிறார்.
கும்பகோணம் தல புராணங்கள்
கும்பகோணம் தலத்தின் வரலாறுகளை விளக்கி நான்கு தலபுராணங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவை:
கும்பகோணத் தலபுராணம், 1406 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
கும்பகோணப் புராணம், 1118 பாடல்கள் கொண்டது. ஆசிரியர் அகோரதேவர் (17ஆம் நூற்றாண்டு).
கும்பகோணப் புராணம், ஆசிரியர் ஒப்பிலாமணிப் புலவர் (18ஆம் நூற்றாண்டு).
திருக்குடந்தைப் புராணம், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இயற்றியது, 70 படலங்களும் 2384 பாடல்களும் கொண்டது.
1865ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை மற்றும் பல சைவப் பெருமக்கள் வேண்டுகோளுக்கிணங்க மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் தங்கியிருந்து இந்தத் திருக்குடந்தைப் புராணத்தை இயற்றியளித்துள்ளார். 1866 ஆம் ஆண்டு தை மாதம் அச்சிடப்பெற்ற இத்திருக்குடந்தைப் புராணம் இலக்கியச் சிறப்புகள் பல கொண்டதாகும். இத்தலத்தின் சிறப்புகள் முழுவதையும் இப்புராணத்தில் காணலாம்.
கும்பகோணம் கல்வெட்டுக்களில் இவ்வூர் ஸ்ரீகுடந்தை, குடமூக்கு, திருக்குடமூக்கு, வடகரைப் பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வளநாட்டுப் பிரமதேயம் திருக்குடமூக்கு என்றெல்லாம் பலவாறு அழைக்கப்பட்டுள்ளது.
குடந்தை
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 51 பாசுரங்களில், 50 இடங்களில் குடந்தை என்ற பெயர் ஆளப்பெற்றுள்ளது.
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான பெரியாழ்வார் பாடலில் குடந்தை என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
குடமூக்கு
நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்தில் மொத்தம் 51 பாசுரங்களில், பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதி 97ஆம் வெண்பா ஒன்றில் மட்டும் குடமூக்கு என்ற சொல் இடம்பெற்றுள்ளது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் தேவாரத்தில் குடமூக்கு என்ற சொல் இடம்பெற்றுள்ளது.
கும்பகோணம்
கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலின் முன்மண்டபத்துத் தெற்குச் சுவரில் காணப்படும் கல்வெட்டு விஜயநகர வேந்தர் விருப்பண்ண உடையாருக்கு உரியது. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1385 ஐப்பசி மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை ஆகும். இக்கல்வெட்டில்தான் இவ்வூரின் பெயர் கும்பகோணம் என்று முதன்முதலாக வருகின்றது.
பக்தி இலக்கியங்களான தேவாரம், திவ்யப்பிரபந்தம் போன்றவற்றில் குடமூக்கு என்றும் குடந்தை என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது. பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது.
பிரளய காலத்தில் பிரம்மா வேதங்களை காக்க ஒரு குடம் செய்ய முடிவு செய்தார், உலகத்தின் பல்வேறு பகுதியிருந்து மண் எடுத்து செய்ததில் குடங்கள் பிண்டமாகின, இறுதியாக திருச்சேறையில் (சாரஷேக்திரம் ) மண் எடுத்து குடம் செய்து வேதங்களைக் காத்தார்.
குடத்தின் வாசல் குடவாசல் குடத்தின் கோணம் கும்பகோணம் (மத்யமம்) நடுவே சாரக்ஷேத்ரம் என்னும் திருச்சேறை.
வரலாறு
கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சங்க காலத்தை (கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை) சேர்ந்தவை. இன்றைய கும்பகோணம் பண்டைய நகரமான குடவாயிலின் தளம் என்று நம்பப்படுகிறது, அங்கு ஆரம்பகால சோழ மன்னரான, கரிகால் சோழன் தனது நீதிமன்றத்தை நடத்தினார். சில அறிஞர்கள் கும்பகோணத்தை குடவையர்-கோட்டத்தை, சிறைச்சாலையின் இடமாக அடையாளம் காண்கின்றனர், அங்கு சேர மன்னர் கணைக்கால் இரும்பொறையை, ஆரம்பகால சோழ மன்னர் செங்கணானால் சிறையில் அடைக்கப்பட்டார் என்று சொல்கின்றனர். சின்னமனூர் செப்புப் பட்டயத்தின்படி, கும்பகோணம் கி.பி. 859-இல் பல்லவ மன்னர் ஸ்ரீ வல்லபாவிற்கும், அப்போதைய பாண்டிய மன்னருக்கும் இடையிலான போரின் இடமாக இருந்தது.
9-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த இடைக்காலச் சோழர்கள் ஆட்சியின்போது கும்பகோணம் வெளிச்சத்திற்கு வந்தது. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ (5.0 மைல்) தொலைவில் உள்ள பழையாறை நகரம், 9-ஆம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்தது.
சோழ இராச்சியம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, கி.பி. 1290-இல் கும்பகோணம் பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டது. 14-ஆம் நூற்றாண்டில் பாண்டிய இராச்சியம் மறைந்ததைத் தொடர்ந்து, கும்பகோணம் விஜயநகரப் பேரரசால் கைப்பற்றப்பட்டது. விஜயநகர சக்கரவர்த்தியான கிருஷ்ணதேவராயன் (1509–29) கி.பி. 1524-இல் இந்த ஊருக்கு விஜயம் செய்தார், மகாமக பண்டிகையின்போது புகழ்பெற்ற மகாமக தொட்டியில் குளித்ததாக நம்பப்படுகிறது. கும்பகோணம் கி.பி. 1535 முதல் கி.பி. 1673 வரை மதுரை நாயக்கர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள் ஆட்சி செய்தனர். பின்னர் கி.பி. 1674-இல் தஞ்சை நாயக்கர்களிடமிருந்து கைப்பற்றி தஞ்சாவூர் மராத்திய அரசை நிறுவினர்.
இந்து துறவற நிறுவனமான காஞ்சி மடம், 1780-களில் மைசூரைச் சேர்ந்த ஐதர் அலி, காஞ்சிபுரம் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து மடம் தற்காலிகமாக கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது. 1784-இல் திப்பு சுல்தான் தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரை மீது படையெடுத்தபோது, கும்பகோணம் மீதும் படையெடுத்தார், அதன் விளைவுகள் கடுமையாக வீழ்ச்சியடைந்து, பொருளாதாரம் சரிந்தது. கும்பகோணம் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பேரழிவிலிருந்து மீளவில்லை. கும்பகோணம் இறுதியில் 1799-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மராத்தா ஆட்சியாளர், இரண்டாம் சரபோஜியால் (1777 -1832) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்டது, மேலும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அதன் செழிப்பின் உச்சத்தை அடைந்தது. 1869 இல் சூயஸ் கால்வாயின் திறப்பு, ஐக்கிய இராச்சியத்துடன் வர்த்தக தொடர்புகளை வளர்த்தது. 1877-ஆம் ஆண்டில், கும்பகோணத்தை மெட்ராஸ், தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்களுடன் இணைக்கும் தொடருந்து பாதைகள் நிறைவடைந்தன. தஞ்சை மாவட்ட நீதிமன்றம் 1806-ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் நிறுவப்பட்டு, 1806 முதல் 1863 வரை செயல்பட்டது.
இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகும் கும்பகோணம் தொடர்ந்து வளர்ந்து வந்தது, இருப்பினும் அது மக்கள் தொகை மற்றும் நிர்வாக முக்கியத்துவத்தின் அடிப்படையில் அருகிலுள்ள நகரமான தஞ்சாவூருக்குப் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1981க்குப் பிறகு கடுமையாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. இந்த வீழ்ச்சிக்கு மட்டுப்படுத்தப்பட்ட நிலப்பரப்பு மற்றும் தொழில்துறை திறன் இல்லாதது காரணமாகும். எனினும், அடுத்தடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளிலிருந்து கும்பகோணம் மக்கள்தொகையின் புற பகுதிகள் அதிகரித்தன. 1992 மகாமகம் திருவிழாவின்போது, ஒரு பெரிய முத்திரை ஏற்பட்டது, அதில் 48 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 74 பேர் காயமடைந்தனர். 16 சூலை 2004-இல், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 94 குழந்தைகள், தீயில் கருகி இறந்தனர்.
கும்பகோணம் மாநகராட்சி
கும்பகோணம் நகராட்சி 1866 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. பின்னர் இந்நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியிலிருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 48 உறுப்பினர்களை கொண்ட மாநகராட்சி ஆகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் ஆகும். இது "பழைய டெல்டா" என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது, இது தஞ்சாவூர் மாவட்டத்தின் வடமேற்கு தாலுகாக்களை உள்ளடக்கியது, இவை காவேரி மற்றும் அதன் துணை ஆறுகளால் பல நூற்றாண்டுகளாக இயற்கையாகவே பாசனம் செய்யப்படுகின்றன, இவை தெற்கு தாலுகாக்களை உள்ளடக்கிய "புதிய டெல்டா" க்கு மாறாக உள்ளன. 1934 இல் கல்லணை மற்றும் வடவார் கால்வாய் அமைப்பதன் மூலம் நீர்ப்பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இது சராசரியாக 26 மீட்டர் (85 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. இந்த நகரம் இரண்டு நதிகளால் சூழப்பட்டுள்ளது, வடக்கே காவிரி நதி மற்றும் தெற்கில் அரசலார் நதி ஆகும்.
காவிரி டெல்டா பொதுவாக வெப்பமாக இருந்தாலும், கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள பிற நகரங்களின் காலநிலை பொதுவாக ஆரோக்கியமானது மற்றும் மிதமானது. தமிழகத்தின் தலைநகரான சென்னையை விட கும்பகோணம் குளிரானது. கோடையில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 40 ° C (104 ° F), குறைந்தபட்ச வெப்பநிலை 20 ° C (68 ° F) ஆகும். கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் 114.78 செ.மீ (45.19 அங்குலம்) மழை பெய்யும். இப்பகுதியில் வண்டல் அல்லது கறுப்பு மண் காணப்படுகிறது, இது நெல் சாகுபடிக்கு உகந்தது. கும்பகோணத்தில் பயிரிடப்படும் பிற பயிர்களில் முசுக்கொட்டை, தானியங்கள் மற்றும் கரும்பு ஆகியவை அடங்கும்.
கும்பகோணம் நகரம் விரிவான நெல் வயல்களால் சூழப்பட்டுள்ளது. 1934 இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து நீர்ப்பாசன முறைகள் கணிசமாக மேம்படுத்தப்பட்டன. காவிரி டெல்டாவின் விலங்கினங்கள், கால்நடைகள் மற்றும் ஆடுகள் மட்டுமே உள்ளன.
மக்கள்தொகை பரவல்
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 45 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 36,648குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 140,156 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.6% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 12791 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 9,058 மற்றும் 82 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.07%, இசுலாமியர்கள் 9.57% , கிறித்தவர்கள் 3.99% மற்றும் பிறர் 0.36%ஆகவுள்ளனர்.
கும்பகோணத்தில் வலுவாக இந்துக்கள் பெரும்பான்மை உள்ளனர்; கணிசமான முஸ்லீம் மற்றும் கிறித்தவ மக்களும் உள்ளனர். இந்துக்களிடையே, வன்னியர்கள், கள்ளர்கள், பிராமணர்கள் மற்றும் தலித்துகள் எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் பேசும் குழுக்கள் ஆவர். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட கும்பகோணத்தில் பிராமணர்கள் அதிகமாகவும், செல்வந்தர்களாகவும் உள்ளனர். மூப்பனார்கள், கோனார்கள் மற்றும் நாடார்கள் ஆகியோர்களும் இங்கு வாழுகின்றனர். முஸ்லிம்களில், சுன்னி இசுலாமியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இருப்பினும், குறிப்பிடத்தக்க சியா இசுலாமியர்கள் சிறுபான்மையினரும் உள்ளனர். முஸ்லிம்களில் பெரும்பாலோர் மரைக்காயர் அல்லது லப்பை. கும்பகோணத்தில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வர்த்தகம் அல்லது கடல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்பகோணத்தில் உள்ள கத்தோலிக்கர்கள் முக்கியமாக கும்பகோணம் ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர், இது 1899 இல் பாண்டிச்சேரி மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.
கும்பகோணத்தின் மக்கள் தொகை பெரும்பாலும் தமிழ் மொழி பேசுபவர்கள். பொதுவாக பயன்படுத்தப்படும் கிளை மொழிகள் மத்திய தமிழ் பேச்சு வழக்கு ஆகும். தஞ்சாவூர் மராத்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சௌராட்டிர ஆகியவை தங்கள் தாய்மொழியாக பேசும் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் உள்ளனர்.
நகரத்தின் மொத்த பரப்பளவில் 32.09% குடியிருப்பு பகுதிகள் உள்ளன, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை அலகுகள் முறையே 2.75% மற்றும் 1.21% ஆகும். நகரத்தின் நகர்ப்புறமற்ற பகுதி மொத்த பரப்பளவில் 44.72% ஆகும். 49,117 மக்கள் தொகையுடன், கும்பகோணம் மொத்தம் 45 சேரிகளைக் கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கும்பகோணத்தில் 86.07% இந்துக்கள், 9.57% முஸ்லிம்கள், 3.99% கிறித்தவர்கள், 0.% சீக்கியர்கள், 0.% பௌத்தர்கள், 0.23% சைனர்கள், 0.13% பிற மதங்களைப் பின்பற்றுகிறார்கள் மற்றும் 0.% சமயமில்லாதவர்கள் உள்ளனர்.
பொருளாதாரம்
கும்பகோணத்தின் முக்கியமான தயாரிப்புகளில் பித்தளை, வெண்கலம், தாமிரம் மற்றும் பாத்திரங்கள், பட்டு மற்றும் பருத்தி துணி, சர்க்கரை, இண்டிகோ மற்றும் மட்பாண்டங்கள் அடங்கும். கும்பகோணம் தஞ்சாவூர் பிராந்தியத்தின் முக்கிய வணிக மையமாக கருதப்படுகிறது. 1991 ஆம் ஆண்டில், சுமார் 30% மக்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கும்பகோணத்தில் அரிசி உற்பத்தி ஒரு முக்கியமான செயலாகும். கும்பகோணத்தில் உள்ள 194 தொழில்துறை பிரிவுகளில் 57 அரிசி மற்றும் மாவு ஆலைகள். கும்பகோணம் வெற்றிலை மற்றும் பாக்கு தயாரிப்பதில் முன்னணி வகிக்கிறது; கும்பகோணத்தில் தயாரிக்கப்படும் வெற்றிலை இலைகள் தரத்தின் அடிப்படையில் உலகின் மிகச் சிறந்தவையாகும். கும்பகோணம் உலோக வேலைகளுக்கும் பிரபலமானது. வெண்கல கைவினைஞர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக அருகிலுள்ள நகரமான சுவாமிமலையில், தமிழக கைவினைப்பொருள் மேம்பாட்டுக் கழகம் நிறுவப்பட்டது. கும்பகோணம் ஒரு முக்கியமான பட்டு நெசவு மையமாகும், மேலும் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டு நெசவுகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலை செய்கின்றனர். கும்பகோணத்தில் நெசவு செய்யப்பட்ட பட்டு, துணைக் கண்டத்தின் மிகச்சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. திருபுவனம் பட்டு புடவைகள் தயாரிப்பதில் அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. கும்பகோணம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஒரு முக்கியமான உப்பு உற்பத்தி செய்யும் பகுதியாக இருந்தது. இந்த நகரம் அதன் பெயரை கும்பகோணம் டிகிரி காபிக்கு அளிக்கிறது, இது தூய்மையான பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. சமீபத்திய காலங்களில், கும்பகோணம் உரங்களின் முக்கியமான உற்பத்தி இடமாக உருவெடுத்துள்ளது.
இந்த நகரம் தயாரிப்புகளைத் தவிர, சுற்றுலாவும் நகரத்தின் முக்கிய வருமான ஆதாரமாகும். இங்கு பல தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்து கோவில்கள் மற்றும் பழங்கால கட்டடங்கள் அவற்றின் சுற்றுலா திறனுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தாராசுரம் நகரில் உள்ள 12 ஆம் நூற்றாண்டின் ஐராவதேசுவரர் கோயில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். துணி வாங்குபவர்கள் மற்றும் கலை சேகரிப்பாளர்களால் கும்பகோணத்திற்கு அடிக்கடி வருகின்றனர். ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, இந்திய யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, இலட்சுமி விலாசு வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐஎன்ஜி வைசியா வங்கி, கரூர் வைசியா வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, சிண்டிகேட் வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவை கிளைகளை கும்பகோணத்தில் கொண்டுள்ளன. சிட்டி யூனியன் வங்கி 1904 ஆம் ஆண்டில், கும்பகோணத்தில் கும்பகோணம் வங்கி லிமிடெட் என்ற பெயரில் நிறுவப்பட்டது, இது தலைமையிடமாக உள்ளது.
குடந்தை சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம்
சங்ககாலத்தில் சோழர்கள் தம் நாட்டுமக்கள் தந்த வரிப்பணத்தை இந்தக் குடந்தை நகரில் வைத்துப் பாதுகாத்துவந்தனர். இதனைச் சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம் எனலாம். இந்தச் செல்வத்தைச் சோழர் பாதுகாப்பது போலத் தாய் தன் மகளைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறாள் என்று தோழி தலைவனிடம் கூறுவதாக உள்ளது ஒரு பாடல்.
குடந்தை வளவன் தலைநகரம் என்று ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
நகரின் ஆன்மீகப் பெருமை
கீழைத் தமிழகத்தின் கோவில் நகரம் எனப் பெயர்பெரும் வகையில் இந்நகரைச் சுற்றி பல தொன்மைவாய்ந்த கோவில்கள் அமைந்துள்ளன. நகர் பகுதியில் மட்டுமே ஐந்து பாடல் பெற்ற சிவத்தலங்கள் மற்றும் மூன்று திவ்ய தேசத் தலங்களும் உள்ளன. மேலும் 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ளன. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் பாடை கட்டி திருவிழா தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது. 164 மீட்டர் உயரமான சார்ங்கபாணி கோவில் கோபுரம் உலகின் எட்டாவது உயரமான கோபுரம் ஆகும். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இக்கோயிலுள்ள தேர் மூன்றாவது பெரிய தேர் ஆகும்.
இந்நகரில் திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்களுக்குச் சொந்தமான கிளை மடங்களும், காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகள் மடமும், வீரசைவ மடமாகிய பெரிய மடம் என்று வழங்கப்படும் ஸ்ரீசாரங்கதேவர் மடமும், பல அற்புதங்களைச் செய்த மௌனசுவாமிகள் மடமும், வைணவ மடங்களின் கிளை மடங்களும், திருவண்ணாமலை ஆதீன மடமும், மத்தவர்களுக்குரிய வியாசராயர் மடமும் ஆங்காங்கு உள்ளன.
யுனெஸ்கோ உலக மரபுரிமைத் தலங்களில் ஒன்றாக தாராசுரம் கோவிலை அறிவித்திருக்கிறது.
தல வரலாறு
உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார் குடத்தின் வாசல் "குடவாசல்" குடத்தின் கோணம் "கும்பகோணம்"
கும்பகோணததிற்கும் குடவாசலுக்கும் மத்யமம் (நடுவே) "திருச்சேறை".
சிவபெருமான் அம்பினால் அமுதக்குடத்தை உடைத்ததால் அதிலிருந்து வெளிவந்த அமுதம் குடமூக்கில் (கும்பகோணத்தில்) மகாமக குளத்தை ஏற்படுத்தியதோடு மட்டுன்றி அங்கிருந்து ஐந்து குரோசம் தொலைவு வரையில் பரவி, அது பரவிய இடங்களையெல்லாம் செழுமையாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகை வழி அளவுள்ள தூரமாகும். இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். ஒரு மணி நேரம் ஒருவர் நடந்துசெல்லக்கூடிய தூரம் 4.8 கிமீ. ஐந்து மணி நேரம் செல்லக்கூடிய தூரம் 24 கிமீ ஆகும். இவ்வளவு தூரம் அமுதம் பரவியது. திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. சங்கர மடம், மௌனசுவாமி மடம் உள்ளிட்ட மடங்கள் உள்ளன.
மகாமகக் குளம்
கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், கங்கை, யமுனை, சரசுவதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி சரயூ, பொருநை ஆகிய நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம். இந்த மகாமகக் குளம் சுமார் 5 ஏக்கர் பரப்புடையது.
1992-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற மகாமக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட நெரிசலின் போது மகாமகக் குளக்கரையில் அமைந்திருந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காலமானார்கள்.
சப்தஸ்தானம்
சித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.
கும்பகோணம் தல தமிழ் இலக்கியங்கள்
கும்பகோணம் தலம் தொடர்பாக பல தமிழ் இலக்கியங்கள் காணப்படுகின்றன. அவை அந்தாதி, கலம்பகம், குறவஞ்சி, பதிகம், பிள்ளைத்தமிழ், புராணம், மான்மியம், வெண்பாமாலை என்ற நிலைகளில் அமையும்.
பஞ்சகுரோசத்தலங்கள்
சப்தஸ்தானங்களில் ஒன்று என்ற பெருமையுடன் பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்று என்ற பெருமையும் இந்நகருக்கு உண்டு. திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. கும்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. இத்தலங்களைப் போற்றும் பாடல் திருக்குடந்தைப் புராணத்தில் காணலாம்.
“கற்றவர் புகழும் கும்பகோணத்தைக் கலந்து போற்றும்
பெற்றியரைங் குரோச யாத்திரை பேணல் வேண்டும்
உற்றவத் தலமோரைந்துள் ஒவ்வொன்று றொரு நான்மேவிற்
பெற்ற புண்ணியம் பயக்கும் என்மனார் புலமைசான்றோர்“
பள்ளிக்கூட தீ விபத்து
2004-ம் ஆண்டு சூலை 16-ம் தேதி அன்று கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகள் கருகி சாம்பலாகினர். 18-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மிகக் குறுகிய இடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டிருந்ததே இத்தனை பேர் உயிர் பறிபோனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று கூறப்பட்டது. இதில் 8 பேருக்கு ஐந்து ஆண்டுகளும், இரண்டு பேருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. 11 பேர் விடுவிக்கப்பட்டார்கள். இப்பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டது.
போக்குவரத்து வசதிகள்
கும்பகோணம் நகரம் சாலை மற்றும் தொடருந்து மூலம் இந்தியாவின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை - 36, விக்கிரவாண்டி - மானாமதுரையையும் இணைக்கும் சாலை, இந்த நகரம் வழியாக செல்கிறது. கும்பகோணம் நகரில் பேருந்து வசதிக்காக, மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பேருந்து சேவைகள் செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில், புதுச்சேரி, கடலூர் மற்றும் வடலூர் வழியாக கும்பகோணம் செல்ல முடியும். மற்றொரு வழியாக சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி மற்றும் மயிலாடுதுறை வழியாக கும்பகோணம் செல்ல முடியும். கும்பகோணம் நகரத்தில் சுமார் 141 கிமீ (88 மைல்) சாலைகள் உள்ளன, 544 நகராட்சி சாலைகள், 122.29 கிமீ (75.99 மைல்) ஆகும். கும்பகோணம் வழியாக மாநில நெடுஞ்சாலைகளில் சுமார் 18.71 கிமீ (11.63 மைல்) செல்கிறது. சென்னை, வேலூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், சேலம், பெங்களூரு, காஞ்சிபுரம், திண்டிவனம், புதுச்சேரி, சிதம்பரம், மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, கடலூர், திண்டுக்கல் ஆகிய நகரங்களுக்கு தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்(தமிழ்நாடு) (SETC) ஆகியவை பெங்களூரு மற்றும் மைசூரிலிருந்து கும்பகோணம் வரை தினசரி சேவைகளை இயக்குகின்றன. மார்ச் 1, 1972 அன்று, தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, சோழன் போக்குவரத்து கழகம் என்ற பெயரில் தமிழக அரசு, அதன் தலைமையகத்தை கும்பகோணத்தில் நிறுவியது. சூலை 1, 1997 அன்று, இதன் பெயரை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் என மறுபெயரிடப்பட்டது.
கும்பகோணம் நகரில் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது. இங்கிருந்து இராமேஸ்வரம், ஹைதராபாத், கோயம்புத்தூர், மயிலாடுதுறை, திருச்சி, சென்னை, நாகர்கோவில், தாம்பரம், மைசூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பதி, மதுரை, சேலம், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு தொடருந்து சேவைகள் உள்ளது.
கும்பகோணம் தொடருந்து நிலையத்திலிருந்து சென்னை எழும்பூரை நோக்கி ஒற்றை அகல இருப்புப் பாதையானது, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் வழியாக செல்கிறது மற்றும் திருச்சியை நோக்கி ஒற்றை அகல இருப்புப் பாதை பாபநாசம், மற்றும் தஞ்சாவூர் வழியாக செல்கிறது. திருச்சியிலிருந்து மதுரை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களுக்கு தினசரி தொடருந்துகள் இயக்கப்படுகிறது.
பாரம்பரிய போக்குவரத்து முறைகள் காளை வண்டிகள் ஆகும். 1950-களின் பிற்பகுதியில், நில உரிமையாளர்கள் மற்றும் பணக்கார விவசாயிகள், பேருந்துகள் அல்லது மோட்டார் வாகனங்கள் மேற்கொண்ட அரிய நீண்ட பயணங்களைத் தவிர, பெரும்பாலும் காளை வண்டிகளில் பயணித்தார்கள். கும்பகோணம் தற்போது சிறப்பான உள்ளூர் பேருந்து போக்குவரத்து முறையைக் கொண்டுள்ளது. காவிரி ஆற்றை கடந்து, மக்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கு அவ்வப்போது படகுகள் இருந்தன. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை, அரசு கலைக் கல்லூரியின் மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்காக, படகுகள் மூலம் காவிரியை கடக்கிறார்கள். 1944 ஆம் ஆண்டில் ஒரு பாலம் கட்டப்பட்டதிலிருந்து, இது வெகுவாகக் குறைந்துள்ளது.
கும்பகோணத்திலிருந்து 91 கி.மீ (57 மைல்) தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளியில் உள்ள விமான நிலையம், அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் உள்ளது. அருகிலுள்ள துறைமுகம் சுமார் 50 கிமீ (31 மைல்) தொலைவில் உள்ள நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது.
கல்வி
கும்பகோணத்தில் 1542 ஆம் ஆண்டில் கோவிந்த தீட்சிதரால் நிறுவப்பட்ட ராஜ வேத பாடசாலையில், ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம், ஆகமம் மற்றும் சாஸ்திரங்கள் போன்ற சிறப்புத் துறைகளில் சமசுகிருத வேத வசனங்களைக் கற்பிக்கப்பட்டது. கும்பகோணம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஒரு முக்கியமான கல்வி மையமாக உருவெடுத்து "தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்" என்று அழைக்கப்பட்டது. 1867 ஆம் ஆண்டில் கும்பகோணத்தில் நிறுவப்பட்ட அரசு கலைக் கல்லூரி, சென்னை மாகாணத்தில் உள்ள மிகப் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இது 1867 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி ஒரு மாகாணப் பள்ளியாகத் தொடங்கியது, 1867 ஆம் ஆண்டில் அரசு கல்லூரிக்கு மேம்படுத்தப்பட்டது. இது 1877 இல் மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. கல்லூரியின் ஆரம்ப முதல்வர்களில் ஒருவரான வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர், அவர் டி. கோபால் ராவ் உடன் சேர்ந்து, இதை அரசு கல்லூரிக்கு உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்தார். கல்லூரியின் பாராட்டப்பட்ட கல்விக் கொள்கையை உருவாக்கிய பெருமையும் அவருக்கு உண்டு. 1881 ஆம் ஆண்டில், இது ஒரு முழுமையான கல்லூரியாக மாறியது மற்றும் உயர்நிலைப் பள்ளி படிப்புகள் கற்பிக்கப்படுவதை நிறுத்திவிட்டன. இந்திய கணிதவியலாளர் சீனிவாச இராமானுசன் மற்றும் வி. எஸ். சீனிவாச சாஸ்திரி போன்றவர்கள், இக்கல்லூரியில் படித்த குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் ஆவர். மகளிர் அரசு கலைக் கல்லூரி 1963 இல் தொடங்கப்பட்டது. பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரி 1963 இல் தொடங்கப்பட்டது மற்றும் பிப்ரவரி 2006 இல் மொத்தம் 2,597 மாணவர்களைக் கொண்டிருந்தது. இந்த கல்லூரி பல்வேறு இளங்கலை படிப்புகள் மற்றும் ஒரு முதுகலை படிப்பை வழங்குகிறது மற்றும் இது பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள மற்ற கல்லூரிகளில் இதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அன்னை பொறியியல் கல்லூரி, மாஸ் கல்லூரி, சங்கரா கலைக் கல்லூரி, பிரிஸ்ட் பல்கலைக்கழகம் கும்பகோணம் வளாகம், அரசு நுண்கலைக் கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி, கே. எஸ். கே பொறியியல் கல்லூரி ஆகியவைகள் ஆகும்.
1876 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நேட்டிவ் உயர்நிலைப்பள்ளி, மற்றும் நகர மேல்நிலைப்பள்ளி, சென்னை மாகாணத்தில் உள்ள மிகப் பழமையான பள்ளிகளில் சில. தற்போது, கும்பகோணத்தில் மொத்தம் 36 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.
மேலும் காண்க
கும்பகோணம் மாநகராட்சி
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
கும்பகோணம் நகராட்சியின் இணையதளம்
தஞ்சாவூர் மாவட்டம்
தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
இந்து புனித நகரங்கள்
இந்து யாத்திரைத் தலங்கள்
பண்டைய இந்திய நகரங்கள்
|
5388
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
இயற்பியல்
|
இயற்பியல் (பௌதிகம்) () என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும். விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்பட்டும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்.
மிகப்பழமையான கல்வித் துறைகளுள் ஒன்று இயற்பியல் ஆகும்; வானியலையும் உள்ளடக்குவதால் மிகப் பழமையான தென்றே கூறலாம். கடந்த இரு ஆயிரவாண்டுகளாக வேதியியல், கணிதத்தின் சில கூறுகள், மற்றும் உயிரியலுடன் இயல் மெய்யியலின் பகுதியாக இயற்பியலும் உள்ளது. இருப்பினும் 17ஆம் நூற்றாண்டு அறிவியல் புரட்சிக்குப் பின்னர் இயற்கை அறிவியல் தனித்தன்மையுடன் தங்களுக்கே உரித்தான ஆய்வுநெறிகளுடன் வளர்ந்துள்ளது.
இயற்பியல் தேற்றக்கொள்கைகளை உடைய அறிவியல் மட்டுமன்று; ஓர் சோதனைமுறை அறிவியலும் ஆகும். இயற்பியல் அறிமுறை கொள்கைகளை, பிற அறிவியல் கொள்கைகளைப்போன்றே, சோதனைகள் மூலம் சரிபார்க்க இயலும்; அதேபோன்று அறிமுறைக் கொள்கைகளும் பின்னாளில் நடத்தப்படக்கூடிய சோதனைகளின் விளைவுகளை முன்னதாக கணிக்க கூடியன. இயற்பியல் உயிரி இயற்பியல், குவைய வேதியியல் என பல்வேறு துறையிடை ஆய்வுப்பகுதிகளிலும் பங்கேற்பதால் இயற்பியலின் எல்லைகள் இவையென வரையறுப்பது இயலாததாக உள்ளது. இயற்பியலின் பல புதிய கண்டுபிடிப்புகள் பெரும்பாலான நேரங்களில் மற்ற அறிவியல் துறைகளில் அடிப்படை இயக்குவிசைகளை விளக்குவதாகவும் புதிய ஆய்வுப்பகுதிகளைத் திறப்பதாகவும் உள்ளது.
இயற்பியல் அறிமுறைக்கொள்கை முன்னேற்றங்கள் புதிய தொழினுட்பங்கள் உருவாக்கத்திற்கு வழிவகுத்துள்ளன. காட்டாக, மின்காந்தவியல் அல்லது அணுக்கருவியல் குறித்த கண்டுபிடிப்புக்கள் மனித வாழ்வில் நேரடியாக மாற்றம் ஏற்படுத்திய தொலைக்காட்சி, கணினிகள், வீட்டுக் கருவிகள், மற்றும் அணு குண்டுகள் போன்ற கருவிகள் உருவாக்கத்திற்கு காரணமாயின; வெப்ப இயக்கவியல் ஆய்வுகளால் தொழில்மயமானது; விசையியல் முன்னேற்றங்கள் நுண்கணித வளர்ச்சிக்கு வித்தானது.
இயற்கை நிகழ்வுகளை திருத்தமாகவும் உள்ளபடியாகவும் கண்டறிய இயற்பியலில் எடுக்கப்படும் முயற்சிகளால் எண்ணவியலா எல்லைகளை இது எட்டியுள்ளது; தற்போதைய அறிவுப்படி, அணுவினும் மிகச்சிறிய நுண்துகள்களைப் பற்றியும் பேரண்டத்தின் தொலைவிலுள்ள விண்மீன்களின் உருவாக்கம் குறித்தும் எவ்வாறு நமது பேரண்டம் உருவாகியிருக்கலாம் என்றும் இயற்பியல் விவரிக்கிறது. இந்த மாபெரும் கற்கை டெமோக்கிரட்டிசு, எரடோசுதெனீசு, அரிசுட்டாட்டில் போன்ற மெய்யியலாளர்களிடம் துவங்கி கலீலியோ கலிலி, ஐசாக் நியூட்டன், லியோனார்டு ஆய்லர், ஜோசப் லூயி லாக்ராஞ்சி, மைக்கேல் பரடே, ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்சு போர், மேக்ஸ் பிளாங்க், வெர்னர் ஐசன்பர்க், பால் டிராக், ரிச்சர்டு ஃபெயின்மான், ஸ்டீபன் ஹோக்கிங் போன்ற இயற்பியலாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
வரலாறு
பல தொன்மையான நாகரிகங்கள் விண்மீன்களும் வானத்தில் தோன்றும் நிகழ்வுகளும் குறித்து விளக்கம் தேடி வந்துள்ளன. இவற்றில் பல இயல்பானவையாக இல்லாது மெய்யியல் சார்ந்து இருந்தன. இயற்கை மெய்யியல் என்று அறியப்படும் இக்கருதுகோள்கள் கி.மு 650–480 கால கிரேக்கத்தில் பரவி இருந்தன. தேலேஸ் போன்ற சாக்ரடீசுக்கு முந்தைய மெய்யியலாளர்கள் இயற்கை நிகழ்வுகளுக்கு இயற்கைக்கு ஒவ்வாத விளக்கங்களை எதிர்த்து வந்துள்ளனர்;ஒவ்வொரு நிகழ்விற்கும் ஓர் இயற்கையான காரணம் இருக்கும் என வாதிட்டனர். இவர்கள் காரணங்களாலும் உய்த்துணர்வாலும் சரிபார்க்கப்பட்ட கருத்துக்களை முன் வைத்ததுடன் இவர்களது பல கருதுகோள்களும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. இருப்பினும் புவியை மையமாகக் கொண்டு வரையறுக்கப்பட்ட இக்கருதுகோள்கள் சமயங்களின் ஆதரவுடன் அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு கோலோச்சின.
அறிவியலின் இருண்ட காலமாக அறியப்படும் இக்காலம் 1543இல் தற்கால வானியலின் தந்தை என அறியப்படும் நிக்கோலசு கோப்பர்னிக்கசு வெளியிட்ட சூரியனை மையமாகக்கொண்ட ஆய்வுக் கட்டுரையால் முடிவுக்கு வந்தது. கோப்பர்னிக்கசு கோட்பாட்டளவில் முன்மொழிந்தாலும் இதற்கான சோதனைபூர்வ சான்றுகள் இயற்பியலின் தந்தை என அறியப்படும் கலீலியோ கலிலியால் வழங்கப்பட்டது. பைசா பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக இருந்த கலிலி தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ந்தும் சாய்தளங்களில் சோதனைகள் நடத்தியும் கோப்பர்னிக்கசு கோட்பாடுகளுக்கு சான்றுகள் அளித்தார். மேலும் அறிவியல் சோதனைகள் மூலமாக கோட்பாடுகளால் எட்டப்பட்ட தீர்வுகளை சரிபார்க்க இயலும் என்று நிறுவினார். இயற்பியல் முறைமைகள் தொடர்ந்து யோகான்னசு கெப்லர், பிலைசு பாஸ்கல், கிறித்தியான் ஐகன்சு போன்ற அறிஞர்களின் பங்களிப்பால் வலுப்பெற்றன.
நவீன ஐரோப்பியர்களின் துவக்ககாலத்தில் இந்த சோதனை மற்றும் அளவியல் சார்ந்த முறைமைகளைக் கொண்டு தற்போது இயற்பியல் விதிகள் என அறியப்படும் விதிமுறைகளை உருவாக்கினர். இக்காலத்திலிருந்து செவ்வியல் இயற்பியல் என அறியப்பட்டது. யோகான்னசு கெப்லர், கலீலியோ கலிலி மற்றும் குறிப்பாக நியூட்டன் பல்வேறு இயக்கவிதிகளை ஒருங்கிணைத்தனர். தொழிற்புரட்சியின் காலத்தில் ஆற்றல் தேவைகள் கூடியமையால் வெப்ப இயக்கவியல், வேதியியல் மற்றும் மின்காந்தவியல் குறித்த ஆய்வுகள் முன்னுரிமை பெற்றன.
மேக்ஸ் பிளாங்க்கின் குவாண்டம் கோட்பாடுகள் மற்றும் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாடுகளால் தற்கால இயற்பியல் உருவானது; ஐசன்பர்க், எர்வின் சுரோடிங்கர் மற்றும் பால் டிராக் பங்களிப்புகளால் குவாண்டம் விசையியல் தொடர்ந்து முன்னேறியது.
மையக் கோட்பாடுகள்
இயற்கையின் அடிப்படை உண்மையைக் கண்டறிய முற்படும் இயற்பியல், பல பிரிவுகளைக் கொண்டுள்ளபோதும், முதன்மையான ஐந்து கோட்பாடுகளாக இவற்றைக் குறிப்பிடலாம்: பேரியலளவிலான நகர்வுகளைக்குறித்த மரபார்ந்த விசையியல்; ஒளி முதலிய மின்காந்த நிகழ்வுகளை விவரிக்கும் மின்காந்தவியல்; வெளிநேரம் மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு விதிகளை விவரிக்கும் ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாடு; மூலக்கூற்று நிகழ்வுகளையும் வெப்பப் பரிமாற்றத்தையும் விவரிக்கும் வெப்ப இயக்கவியல் மற்றும் அணு உலகின் நடத்தைகளை ஆராயும் குவாண்டம் விசையியல் ஆகும் .
மரபார்ந்த விசையியல்
மரபார்ந்த விசையியல் ஒளியின் வேகதை விட மிகக் குறைவான விரைவோட்டத்துடன் நகரும் பெரிய அளவிலுள்ள பொருட்களை விவரிக்கிறது. விசைகளால் பாதிப்படைவதையும் பொருட்களின் நகர்வுகளையும் குறித்து ஆராய்கிறது. இதனை பொருட்கள் நிலையாக இருக்கும்போது அவற்றின் மீதான விசைகளின் தாக்கம் குறித்த நிலையியல் என்றும் காரணங்களைக் குறித்து இல்லாது நகர்வுகளை மட்டுமே ஆராயும் அசைவு விபரியல் என்றும் நகர்வுகளையும் அவற்றை பாதிக்கும் விசைகள் குறித்தும் ஆராயும் இயக்க விசையியல் உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம். பொருண்ம விசையியல் மற்றும் பாய்ம இயந்திரவியல் எனவும் வகைப்படுத்தலாம். பாய்ம இயந்திரவியலில் பாய்ம நிலையியல், பாய்ம இயக்கவியல், காற்றியக்கவியல், மற்றும் காற்றழுத்தவியல் உட்பிரிவுகளாகும். காற்று அல்லது பிற ஊடகங்களில் உள்ள துகள்களின் அசைவுகளினாலேயே ஒலி கடத்தப்படுவதால் ஒலியைக் குறித்த ஒலியியல் விசையியலின் ஒரு பிரிவாகவே கருதப்படுகிறது. மனிதர்களால் கேட்கவியலாத அதியுயர் அதிர்வெண் உடைய ஒலி அலைகள் மீயொலி எனப்படுகின்றன.
மின்காந்தவியல்
மின் புலத்தினாலும் காந்தப் புலத்தினாலும் செறிவூட்டப்பட்ட துகள்களின் வினையாற்றலை விவரிக்கும் இயற்பியல் பிரிவே மின்காந்தவியல் ஆகும். இது மேலும் நிலையான மின்மங்களின் இடையேயான வினையாற்றலான நிலைமின்னியல், அசைவிலுள்ள மின்மங்களின் இடைவினைகளை ஆராயும் இயக்க மின்னியல் மற்றும் கதிர்வீச்சு என உட்பிரிவுகளாகப்பிரிக்கலாம். மரபார்ந்த மின்காந்தவியல் கோட்பாடுகள் லாரன்சு விசை மற்றும் மாக்சுவெல்லின் சமன்பாடுகளைஅடிப்படையாகக்கொண்டவை.
மின்காந்தவியல் ஒளி போன்ற பல நிகழ் உலக நிகழ்வுகளை விளக்குகிறது. ஒளியானது விரைந்தோடும் மின்னூட்டப்பெற்ற துகள்களிலிருந்து அலைவு மின்காந்தப் புலம் பரப்பப்படுவதாகும். ஈர்ப்பு விசையை அடுத்து நாள்தோறும் நாம் காணும் பெரும்பாலான நிகழ்வுகள் மின்காந்தவியலின் தாக்கத்தாலேயாகும்.
நுண்ணலை, அலைவாங்கிகள், மின்கருவிகள், தகவல் தொடர்பு செயற்கைக்கோள், உயிரிமின்காந்தவியல், பிளாஸ்மா, அணுக்கரு ஆய்வுகள், ஒளியிழை, மின்காந்த குறுக்கீடு மற்றும் ஒவ்வுமை, மின்னியந்திர ஆற்றல் மாற்றுதல், கதிரலைக் கும்பா மூலம் வானிலை மற்றும் சேய்மை கண்காணிப்பு போன்ற பல துறைகளில் மின்காந்தவியலின் தத்துவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மின்மாற்றி, உணாத்திகள், வானொலி / தொலைக்காட்சி, தொலைபேசிகள், மின் இயக்கிகள், அலைச்செலுத்திகள், ஒளியிழை மற்றும் சீரொளி ஆகியன சில மின்காந்தவியலைப் பயன்படுத்தும் கருவிகள் ஆகும்.
சார்புக் கோட்பாடு
20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அறிமுகப்படுத்திய சார்புக் கோட்பாடு இரு ஆய்வுப் பிரிவுகளாக பிரிந்துள்ளது:சிறப்புச் சார்புக் கோட்பாடு மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடு.
சிறப்புச் சார்புக் கோட்பாட்டில், ஐன்ஸ்டைன், என்ட்ரிக் லொரன்சு மற்றும் ஹெர்மான் மின்கோவ்ஸ்கி போன்றோர் வெளி மற்றும் நேரம் குறித்த கருத்துக்களை ஒன்றிணைத்து நான்கு பரிமானங்களைக் கொண்ட வெளிநேரம் என்ற கோட்பாட்டை நிறுவினார். நியூட்டனின் அறுதியிட்ட நேரத்தைப் புறக்கணித்ததுடன் மாற்றவியலா ஒளியின் வேகம், கால விரிவு, நீளக் குறுக்கம் மற்றும் பொருண்மைக்கும் ஆற்றலுக்கும் உள்ள சமானம் ஆகிய புதுக்கருத்துக்களை இக்கோட்பாடு அறிமுகப்படுத்தியது. நியூட்டனின் விதிகள் இக்கோட்பாட்டின் ஒரு சிறப்புநிலைத் தீர்வாக உள்ளது.
மேலும், பொதுச் சார்புக் கோட்பாடு வெளிநேரத்தின் வடிவியல் உருக்குலைவாக நியூட்டனின் ஈர்ப்பு விதியை ஆராய்கிறது. திணிவுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்ட முந்தைய கோட்பாடுகளைப் போலன்றி இந்தக் கோட்பாடு ஆற்றலையும் வெளிநேர வளைவுகள் மூலம் கணக்கில் கொள்கிறது. இதற்கென தனியான கணிதப் பிரிவாக பல்திசையன் நுண்கணிதம் உருவாகியுள்ளது. ஈர்ப்புவிசையால் ஒளி வளைக்கப்படுதல், புதனின் சுற்றுப்பாதையினால் மாற்றம் போன்ற நிகழ்வுகளை இக்கோட்பாட்டால் விளக்க முடிகிறது. பொதுச் சார்புக் கோட்பாட்டினால் வானியற்பியலில் பயன்படும் ஓர் புதிய ஆய்வுத்துறையாக அண்டவியல் உருவாகியுள்ளது.
வெப்ப இயக்கவியல்
வெப்ப இயக்கவியல் எவ்வாறு வெப்பப் பரிமாற்றம் நிகழ்கிறது என்றும் இந்த ஆற்றலைக் கொண்டு எவ்வாறு வேண்டியப் பணியை செய்திட இயலும் என்றும் ஆராய்கிறது. இந்த பிரிவில் பொருட்களின் (திண்மம், நீர்மம், வளிமம் போன்ற) நிலை எவ்வாறு மாற்றமடைகின்றன எனவும் ஆயப்படுகிறது. பேரளவில் காணும்போது, கன அளவு, அழுத்தம், வெப்பநிலை போன்ற மாறிகளின் மாற்றங்களால் எவ்வாறு பொருட்கள் தாக்கமடைகின்றன என்பதையும் விவரிக்கிறது. வெப்ப இயக்கவியல் நான்கு முதன்மை விதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது: வெப்பவியக்கவிசைச்சமநிலை (அல்லது சூன்ய விதி), ஆற்றல் அழிவின்மை கொள்கை (முதல் விதி), சிதறத்தின் தற்காலிக உயர்வு (இரண்டாம் விதி) மற்றும் தனிச்சுழியை எட்டவியலாமை (மூன்றாம் விதி).
வெப்ப இயக்கவியலின் தாக்கத்தால் தற்போது புள்ளிநிலை இயக்கவியல் என அறியப்படுகின்ற புதிய இயற்பியல் பிரிவு உருவானது. இந்தப் பிரிவு வெப்ப இயக்கவியலைப் போன்றே வெப்ப பரிமாற்ற செயல்முறைகளை குறித்ததாக இருப்பினும் பெருநோக்கில் அல்லாது பொருட்களின் மூலக்கூறுகளின் நோக்கில் ஆராய்வதாகும். பொருட்கள் பல்லாயிரக் கணக்கான மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டிருப்பதால் ஒரு மூலக்கூற்றின் தன்மையைக் கொண்டு தீர்வு காண்பது பிழையாக முடியம்; எனவே இவற்றை ஒரு தொகுப்பாக அல்லது குழப்பமான சமவாய்ப்புடைய இயக்கங்களாக புள்ளியியல் மற்றும் விசையியலைக் கருத்தில் கொண்டு பொருட்களின் நடத்தையை விவரிக்கிறது. சுருக்கமாக நுண்ணிய கட்டமைப்பைக் கொண்டு பேரளவு விளைவுகளை விவரிப்பதாக இப்பிரிவு உள்ளது.
வெப்ப இயக்கவியல் விசைப்பொறிகள், நிலை மாறிகள், வேதியியற் தாக்கம், போக்குவரத்து நிகழ்வுகள், கருங்குழி போன்ற பல்வேறு அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. வெப்பவியக்கவியல் தீர்வுகள் மற்ற இயற்பியல் பிரிவுகளிலும் வேதியியல், வேதிப் பொறியியல், வான்வெளிப் பொறியியல், பொருளியல், இயந்திரவியல் பொறியியல், உயிரணு உயிரியல், உயிர்மருத்துவப் பொறியியல், மற்றும் பொருளறிவியல் போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
குவாண்டம் விசையியல்
அணு அமைப்புகள் மற்றும் அணு உட்கூறமைவுகள் குறித்தும் மின்காந்த அலைகளுடன் இவற்றின் இடைவினைகள் குறித்தும் கண்காணிக்கக்கூடிய அளவுகளால் விவரிக்கின்ற இயற்பியலின் பிரிவே குவாண்டம் விசையியல் ஆகும். இது அனைத்து சக்தியும் தனித்தனி துணுக்கங்கள் அல்லது பொதிகள் அல்லது குவாண்டங்களாக வெளிப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டது.
குவாண்டம் கோட்பாட்டின்படி, அலைச்சார்பு மூலமாக அறிந்துகொள்ளக்கூடிய அடிப்படைத் துகள்களின் கவனிக்கப்படும் பண்புகளை குவாண்டம் விசையியல் நிகழ்தகவு அல்லது புள்ளிநிலை கணக்குகள் மூலமே நிரூபிக்கிறது. மரபார்ந்த விசையியலின் மையமாக நியூட்டனின் இயக்க விதிகளும் ஆற்றல் அழிவின்மையும் அமைந்துள்ளதைப் போன்று குவாண்டம் விசையியலில் சுரோடிங்கர் சமன்பாடு மையமாக உள்ளது. ஓர் இயங்கு அமைப்பின் வருங்கால நடத்தையை முன்னறியவும் பகுத்தாய்ந்து நிகழ்வுகளின் அல்லது முடிவுகளின் சரியான நிகழ்தகவுகளை அலை இயக்க சார்புகள் மூலம் தீர்மானிக்கவும் இச்சமன்பாடு உதவுகிறது.
மரபார்ந்த விசையியலில் பொருட்கள் குறிப்பிட்ட தனித்தன்மையான வெளியை நிரப்பியிருப்பதுடன் தொடர்ந்து இயங்குகிறது. ஆனால் குவாண்டம் விசையியலில் ஆற்றல் துணுக்கங்களாக வெளியிடப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் இயங்குகிறது. இந்த சத்திச்சொட்டு சில நேரங்களில் அணு உட்கூற்றுத் துகள்களைப் போன்றே நடந்து கொள்கின்றன. மேலும் சில துகள்கள் நகரும்போது அலைப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன; இவை வெளியிடத்தில் குறிப்பிட்ட இடத்தை எடுத்துக்கொள்ளாது பரவி உள்ளது. குறிப்பிட்ட அதிர்வெண்களில் (அல்லது அலைநீளங்களில்) உள்ள ஒளியை அல்லது பிற கதிர்வீச்சை அணுக்கள் வெளியிடவோ உன்கொள்ளவோ செய்கின்றன; இவற்றை அந்த அணுக்களால் ஆன தனிமத்தின் அலைக்கற்றைக் கோட்டிலிருந்து அறிய முடிகிறது. குவாண்டம் கோட்பாடு இந்த அதிர்வெண்கள் குறிப்பிட்ட ஒளி குவாண்டம்களுக்கு (ஒளியணு) ஒத்திருப்பதாக காட்டுகிறது. இது அணுவிலுள்ள எதிர்மின்னிகள் குறிப்பிட்ட ஆற்றல் மதிப்புக்களையே கொள்ள அனுமதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. ஒர் எதிர்மின்னி தனது ஆற்றல் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மாறும்போது இவ்விரு ஆற்றல் மதிப்புக்களுகிடையே ஆன ஆற்றல் சத்திச்சொட்டாக வெளியிடப்படுகிறது அல்லது உட்கொள்ளப்படுகிறது. இந்த ஒளியலையின் அதிர்வெண் ஆற்றல் வேறுபாட்டிற்கு நேரடித் தொடர்புடன் உள்ளது.
20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கண்டறியப்பட்ட குவாண்டம் விசையியல் இயற்பியலில் ஓர் புரட்சியாக அமைந்தது. தற்கால இயற்பியலின் ஆய்வுகளில் அடிப்படையாக குவாண்டம் விசையியல் அமைந்துள்ளது.
நவீன இயற்பியல்
மரபார்ந்த இயற்பியல் வழமையான அளவுகளில் காணப்படும் பொருட்கள் மற்றும் ஆற்றலின் பண்புகளைக் குறித்து விவரிக்கையில் நவீன இயற்பியல் மிகவும் வழக்கத்திற்கு மாறான அளவுகளில், மிகப்பெரும் அளவுகளில் அல்லது மிகச்சிறிய அளவுகளில் காணப்படும் பொருட்கள் மற்றும் ஆற்றலின் நடத்தையை விவரிக்கிறது. காட்டாக, அணு மற்றும் அணுக்கருவியல் ஆய்வுகள் ஓர் தனிமத்தின் மிக மிகச் சிறிய அளவில் ஆய்கின்றன. அடிப்படைத் துகள்களைக் குறித்த ஆய்வுகளில் இவற்றைவிட சிறிய அளவிலான பொருட்கள் ஆராயப்படுகின்றன. மாபெரும் துகள் முடுக்கிகளில் இத்துகள்களை உருவாக்க மிக மிக உயர்ந்த நிலையில் ஆற்றல் வழங்கப்பட வேண்டி உள்ளதால் இந்த இயற்பியல் பிரிவு மிக உயர் ஆற்றல் இயற்பியல் எனவும் அறியப்படுகிறது. இந்த அளவுகளில் நாம் வழக்கமாக கொள்ளும் வெளியிடம், நேரம், பொருள், ஆற்றல் குறித்த நிலைப்பாடுகள் ஏற்கக் கூடியனவாக இல்லை.
ஆராய்ச்சி
இயற்பியலாளர்கள் இயற்பியல் கோட்பாடுகளை நிறுவ அறிவியல் முறையை பயன்படுத்துகின்றனர். ஒழுங்குபடுத்தப்பட்ட அணுகுமுறையை பயன்படுத்தி கோட்பாட்டின் உள்ளார்ந்த கேள்விக்கு சோதனைகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளையும் சோதனையை அவதானித்ததின் மூலம் பெறப்பட்ட முடிவையும் தொடர்புபடுத்தி விடையை கண்டறிகிறார்கள். சோதனையையும் அதை அவதானிப்பதின் மூலமும் பெறப்படும் முடிவுகளையும் சேகரித்து அவற்றை கோட்பாட்டின் கருதுகோளுடனும் ஊகங்களுடனும் ஒப்பிட்டுவதன் மூலம் கோட்பாட்டின் ஏற்புத்தன்மையை முடிவு செய்கிறார்கள்.
கோட்பாடு சோதனை
இயற்பியலாளர்கள் சோதனைகளால் எதிர்பார்கப்பட்ட பண்புகளை கண்டறியும் கருவிகளையும் புதிய நிகழ்வுகளையும் கண்டறிய முயலும் அதே சமயத்தில் கோட்பாடுகளை விளங்கிக்கொள்ள இயற்பியலாளர்கள் சோதனைகளையும் அவற்றின் எதிர்பார்க்கப்பட்ட பண்புகளையும் கண்டறிய உதவ கோட்பாட்டாளர்கள் கணித மாதிரியை உருவாக்க முயல்கிறார்கள். கோட்பாடும் சோதனையும் தனித்தனியாக உருவானாலும் அவை இரண்டும் ஒன்றுக்கொன்று அதிகளவில் சார்ந்துள்ளன. கோட்பாடுகளை இயற்பியலாளர்கள் நிறுபிக்க முடியாத போதும் புதிய கோட்பாடுகள் இயற்பியலாளர்கள் எதிர்பார்த்த முடிவுகளை தரும் போதும்கூட இயற்பியல் முன்னேற்றம் காண்கிறது.
கோட்பாட்டிலும் சோதனையிலும் ஈடுபடுபவர் கோட்-இயல்பாளர் என்று அழைக்கபடுகிறார். இவர்கள் சிக்கலான நிகழ்வை சோதனையில் அவதானித்து அதை அடிப்படை கோட்பாட்டுடன் நிறுவ முயல்பவர்கள்.
கோட்பாட்டு இயற்பியல் என்பது தத்துவத்தால் ஈர்கப்பட்டது என்பது அதன் வரலாற்றை பார்க்கும் போது தெரிகிறது. மின்காந்தவியல் இதில் ஒன்று. நமது அண்டத்துக்கு அப்பால் இருப்பவற்றை கோட்பாட்டு இயற்பியல் தத்துவார்த்த முறையில் அவ்வாறு இருக்கலாம் என்ற முறையிலேயே கணிக்கிறது. பேரண்டம், இணையண்டம் போன்றவை அப்படிப்பட்டவையே. ஏற்கனவே உள்ள கோட்பாட்டின் சில சிக்கல்களுக்கு விடை காண முடியும் என்ற நம்பிக்கையில் கோட்பாட்டாளர்கள் இத்தகைய எண்ணங்களை உருவாக்குகிறார்கள்.
இயற்பியலின் பிரிவுகள்
இயற்பியலுடன் சார்ந்த அல்லது உட்பிரிவுகள் என கருதப்படும் இயல்கள் பின்வருமாறு:
இயற்பியல் அளவுகளும் பரிமாணங்களும்
நேரடியாகவோ பிற வழிமுறைகளின் மூலமாகவோ அளவிடப்படும் இயற்பியல் அளவுகள் இரு வகைப்படும். ஒரு பொருள் ஒன்றின் நீளம், அகலம், உயரம், நிறை ஆகியவை பொருத்தமான அளக்கும் கருவிகளினால் அளக்கப்படக்கூடியவை. எனவே இவை அடிப்படை அளவுகள் என அழைக்கப்படும். அப்பொருளின் பரப்பளவு, கன அளவு, அடர்த்தி போன்றவற்றை கணித்தல் சமன்பாடுகள் மூலம் பெறக்கூடியவையாகும். இவை வழி அளவுகள் எனவும் அழைக்கப்படும். அடிப்படை அளவுகள் நீளம், காலம், நிறை, மின்னோட்டம், வெப்பநிலை, ஒளிச்செறிவு, பொருளின் அளவு ஆகிய ஏழு ஆகும். வழி அளவுகள் வேகம், முடுக்கம், விசை, வேலை, ஆற்றல், பரப்பளவு மற்றும் பல.
முதன்மை இயற்பியல் அளவுகள்
நீளம்: இதன் அலகு மீட்டர்
நேரம்: இதன் அலகு நொடி
திணிவு (தமிழக வழக்கு: நிறை): இதன் அலகு கிலோ கிராம்
வேகம்: இதன் அலகு நொடிக்கு மீட்டர்,மீ/நொ
முடுக்கம்: இதன் அலகு மீ/நொ2
அதிர்வெண்: இதன் அலகு ஏர்ட்சு
விசை: இதன் அலகு நியூட்டன்
வேலை: இதன் அலகு ஜூல்
ஆற்றல்: இதன் அலகு ஜூல்
வலு: இதன் அலகு வாட்டு
பதார்த்த அளவு: இதன் அலகு மோல்
வெப்பநிலை: இதன் அலகு கெல்வின்
அழுத்தம்: இதன் அலகு பாசுக்கல்
கன அளவு: இதன் அலகு கன மீட்டர்
பரப்பளவு: இதன் அலகு சதுர மீட்டர்
இவற்றையும் பாக்க
இயற்பியல் கலைச்சொற்கள்
இயற்பியல் தலைப்புகள் பட்டியல்
குவாண்டம் இயற்பியல் தலைப்புகள் பட்டியல்
இயற்பியல் கணியங்கள்
இலத்திரனியல் கலைச்சொற்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
பொதுவானவை
இயற்பியல் தகவல்களஞ்சியம் (இணையத்தில்)
பிசிக்சுசென்ட்ரல் – அமெரிக்க இயற்பியல் சமூகத்தினால் இயக்கப்படும் வலைவாசல்
Physics.org – இயற்பியல் கழகத்தினால் இயக்கப்படும் வலைவாசல்
நம்பிக்கை இல்லாதோருக்கான இயற்பியல் வழிகாட்டி
Usenet Physics FAQ – இயற்பியல் மடலாடற்குழுக்களாலும் sci.physics தளத்தாலும் தொகுக்கப்பட்ட அ.கே,கே
இயற்பியலுக்கான நோபல் பரிசு வலைத்தளம்
இயற்பியல் உலகம் ஓர் இணைய தகவற்களஞ்சியம்
நேச்சர்: இயற்பியல்
பிசிக்சுவொர்ல்டு.கொம் – இயற்பியல் பதிப்பகக் கழகத்தின் செய்தி வலைத்தளம்
பிசிக்சு சென்ட்ரல் – வானியல், துகள் இயற்பியல் மற்றும் கணிதம் குறித்த கட்டுரைகளுடன்.
தி வேகா சயின்சு டிரஸ்ட் – இயற்பியல் உட்பட அறிவியல் ஒளிதங்கள்
ஒளிதம்: ஜஸ்டின் மோர்கனுடன் இயற்பியல் குறித்த "மின்னல்வேக" சுற்றுலா
52-part video course: எந்திரமயமான பேரண்டம்...மேலும்
அமைப்புகள்
AIP.org – அமெரிக்க இயற்பியல் கழகத்தின் வலைத்தளம்
APS.org – அமெரிக்க இயற்பியல் சமூகத்தின் வலைத்தளம்
IOP.org – இயற்பியல் கழகத்தின் வலைத்தளம்
PlanetPhysics.org
Royal Society – இயற்பியலுக்கான தனி அமைப்பாக இல்லாவிடினும் இயற்பியல் வரலாற்று சிறப்பு மிக்கது.
SPS National – இயற்பியல் மாணாக்கர்களின் சமூகத்தின் வலைத்தளம்
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
|
5390
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF
|
சரசுவதி
|
சரஸ்வதி அல்லது கலைமகள் அல்லது இயன்மகள் அல்லது சொன்மகள் இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். சரஸ்வதி என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. இருக்கு வேதத்தில் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீர், இந்துக்களின் பார்வையில் வளமை, படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால்தான் சரஸ்வதியும் இத்தகைய கருத்துருக்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளாள்.
'பேச்சுக் கலையின் தேவதை' எனப் பொருள்படும் ‘வாக் தேவி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.
இந்துக்கள், சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரஸ்வதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரஸ்வதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.
சரஸ்வதி எனும் பெயரில் இராகம் ஒன்றும் உள்ளது.
சமயங் கடந்த தெய்வம்
இந்து மதத்தில்
இந்து மதமாக மாற்றம் பெற்ற சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், சௌரம் முதலியவற்றில் கலைமகள் வழிபாடும் பெருமையும் கூறப்படுகிறது.
'அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள்' என்கிறது கந்தபுராணம்.
சமண மதத்தில்
சுருதி தேவி என்றும், வாக்தேவி என்றும் சமணர்கள் சரஸ்வதியை வணங்குகிறார்கள். ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி என்றும் அழைப்பதுண்டு. ஆபுத்திரன் என்பவன் கலைமகளிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற செய்தி பௌத்த புராணமான மணிமேகலையில் உள்ளது.
பௌத்த மதத்தில்
மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து பெயர்களில் சரஸ்வதி பௌத்தர்களால் வணங்கப்படுகிறார்.
எனவே டாக்டர் உ.வே.சாமிநாத அய்யர் அவர்கள் சரஸ்வதியை கலைமகள் சமயங் கடந்த தெய்வம் என குறிப்பிடுகிறார்.
தோற்றமும் குறியீடும்
சரஸ்வதி தேவியின் பிறப்பானது பாகவத புராணத்தில் கிருஷ்ணர் தனது மனைவிகளில் ஒருவரான ராதையிடம் மைய்யல் கொண்ட காரணத்தால் அவள் கண்ணங்கள் வீக்கங்களாக சிவந்தது அதே நேரத்தில் ராதை தன்னைவிட்டு எங்கும் போக கூடாது என்று கிருஷ்ணரிடம் கேட்டு கொண்டால்
ஆனால் அந்த சமயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் பாரத போரில் அர்ஜீனனின் வழிகாட்டியாக செயல்பட்டு வந்தார்.
பின்பு ராதையின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அவளது அறையில் இருந்து ஒரு படத்தில் பாரத போரில் கிருஷ்ணர் இருக்கும் படத்தின் மூலம் நான் தற்போது போர்களத்தில் இருக்கும் நிலையை காட்சியாக தெறியும் என்று கூறி ராதையிடம் கொடுத்து சென்றான்.
அந்த படத்தின் வழியாக ராதை கிருஷ்ணரின் உபதேசத்தால் அர்ஜீனன் தனது கை சண்டையால் போர்களத்தில் உள்ள வீரர்களை அடித்து தும்சம் செய்து கொண்டு இருப்பதை ராதை ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்.
மேலும் அர்ஜீனன் போர்களத்தில் மிகவும் ஆக்ரோசமாக கை சண்டை போட்டு கொண்டு இருக்கும் போது அவன் பலமான கை ஒரு பெரும் மலையவே பெயர்த்ததை கண்டு மிரச்சியுற்ற ராதை அவள் பார்த்து கொண்டிருந்த படத்தின் வழியாக அர்ஜீனனின் இரும்பு கரங்கள் ராதையின் முகத்தில் உள்ள கண்ணனிடம் மைய்யல் கொண்டு சிவந்த கண்ணத்தில் ஓங்கி குத்திவிட்டு சென்றவுடன் ஆஹா என்ற சத்தத்துடன் அலறியபடியே ராதை கீழே விழுந்தபோது அவளது சிவந்து வீங்கிய கண்ணத்தில் இருந்து சரசத்தால் சரஸ்வதி தேவி தோன்றினால் என்றும் கூறப்படுகிறது.
அழகிய தோற்றம் கொண்டவளாகவும், நான்கு கைகளைக் கொண்டவளாகவும், வெள்ளை உடை உடுத்து, வெண் தாமரையில் அமர்ந்திருப்பவளாகவும், நான்கு கைகளில் ஒன்றில் செபமாலையும், மற்றொன்றில் ஏட்டுச் சுவடியும் இருக்க, முன் கைகள் இரண்டிலும் வீணையை வைத்து மீட்டுபவளாகச் சரஸ்வதி உருவகப்படுத்தப்படுகிறாள். செபமாலை ஆன்மீகத்தையும், ஏட்டுச் சுவடி அறிவையும், வீணை கலைகளையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது.
கலைமகளின் கையிலிருக்கும் ஜபமாலைக்கு அட்சமாலை என்று பெயர். இம்மாலை சமஸ்கிருதத்தின் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஐம்பத்தொன்று மணிகளை உடையதாக உள்ளது. மொழி வடிவில் இம்மாலை இருப்பதாக கூறுகிறார்கள்.
கலைமகளின் வாகனமாக அன்னப் பறவை உள்ளது.
சரஸ்வதிக்கென நூல்கள்
சரஸ்வதியைப் பற்றி தமிழில் சரஸ்வதி அந்தாதி எனும் நூலை கம்பரும், சகலகலாவல்லி மாலை என்ற நூலை குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.
வழிபாடு
தமிழ்நாடு கூத்தனூரில் தனி ஆலயம் உள்ளது.
கர்நாடகாவில் சிரிங்கேரி, கடக் எனும் இடங்களில் தனி ஆலயம் உள்ளது.
ஆந்திராவில் பசர எனும் இடத்தில் தனி ஆலயம் உள்ளது.
காஷ்மீரின் தக்த்-இ-சுலைமான் மலையில் 'சர்வஜ்ன பீத' என்றழைக்கப்படும் பழங்காலத்திய ஆலயம் உள்ளது.
திபெத், நேபாளம், இந்தோனேசியா மற்றும் சப்பான் நாடுகளிலும் இந்த தெய்வத்தின் மீதான வழிபாடு நடைமுறையில் உள்ளது. இங்கு 'பென்சய்-டென்' எனும் பெயரில் வழங்கப்படுகிறாள்.
கருவி
வெள்ளைத் தாமரைப் பூவிருப்பாள்! - பருத்தியூர் கே. சந்தானராமன்
இவற்றையும் பார்க்க
சரஸ்வதி ஆறு - வேதகால ஆறு அல்லது ஆற்றுத் தெய்வம்
மேற்கோள்கள்
இந்து பெண் தெய்வங்கள்
சாக்தம்
|
5392
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF
|
பார்வதி
|
பார்வதி அல்லது உமையவள் அல்லது மலைமகள் அல்லது இகன்மகள் என்பவர் இந்து சமயத்தில் கூறப்படும் பெண் தெய்வமும் சிவபெருமானின் துணைவியும் ஆவார். இவர் வளம், அன்பு, பக்தி, பெருவலிமை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார். சக்தியின் பொதுவான வடிவமாக பார்வதியைக் கொள்வதே மரபாகும். இந்தியத் தொன்மங்களில் ஆயிரத்துக்கும் மேலான வடிவங்களும், அம்சங்களும் பெயர்களும் புராணக்கதைகளும் பார்வதிக்கு உண்டு. லட்சுமி, சரசுவதி ஆகியோருடன் முத்தேவியர்களில் ஒருவராகப் பார்வதி இருக்கிறார். மலையரசனான இமவான் மற்றும் மேனை ஆகியோரின் மகளாகப் பார்வதி பிறந்தார். இவர் கங்கைக்கு இளையவர் ஆவார். முருகன், பிள்ளையார் ஆகியோரின் தாயும் இவரே. பார்வதியை விட்டுணுவின் தங்கையாகவும் கருதுவது உண்டு.
ஈசனுடன் இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றான சைவநெறியின் மையத்தெய்வமாக பார்வதி விளங்குகிறார். உயிர்களின் சிவகதிக்கு உதவுகின்ற சுத்தமாயையும், ஈசனின் சக்தியும் அவளே என்பது சைவர்களின் நம்பிக்கை ஆகும். இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசியா, தென்கிழக்காசியா முதலான பல இடங்களிலும் பார்வதியின் சிற்பங்களும், நம்பிக்கைக்களும், நிறையவே காணப்படுகின்றன.
வேர்ப்பெயரியல்
மலையரசன் மகளென்பதால், மலையைக் குறிக்கும் "பர்வதம்" எனும் வடமொழிச் சொல்லிலிருந்து "பார்வதி" எனும் பெயர் வந்தது. இதேபொருள்தரும் "கிரிஜை", "சைலஜை", "மலைமகள்" முதலான பல பெயர்கள் அவளுக்குண்டு. லலிதையின் பேராயிரம் வடமொழிநூல், அவளது ஆயிரம் திருநாமங்களைச் சொல்கின்றது. "உமையவள்" என்பது பார்வதிக்குச் சமனாக, பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. "அம்பிகை"(அன்னைத்தெய்வம்), சக்தி (பேராற்றல்), அம்மன், மகேசுவரி (பேரிறைவி), கொற்றவை (பேரரசி) என்று அவளது பெயர்களின் பட்டியல் நீள்கின்றது. காமாட்சி, அன்னபூரணி ஆகிய பார்வதியின் இருவடிவங்களும் புகழ்பெற்றவை.
வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தில் "கௌரி" என்றும், கருமை நிறத்தில் "காளி" என்றும் போற்றப்படும் உமையின் இருவடிவங்களும் பரவலாகப் போற்றப்படுகின்றன,
வரலாறு
கேன உபநிடதத்தில் (3.12) "உமா ஹைமவதி" எனும் பெயர் காணப்படும் போதும்,, பார்வதி, வேதகாலத்துக்குப் பிந்திய தெய்வம் என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் சாயனரின் அனுவாக உரை, தளவாகார உபநிடதத்திலுள்ள "உமா" எனும் பெயரையும் குறிப்பிடுவதால், "உமா", "அம்பிகா" என்றெல்லாம் சொல்லும் வேதத் தெய்வம் பார்வதியே என்பதில் சந்தேகமில்லை.
இராமாயணம், மகாபாரதம் முதலானவற்றிலிருந்து, இதிகாச காலத்தில் (பொ.ஊ.மு. 400 இலிருந்து பொ.ஊ. 400) பார்வதி இன்றைய சிவசக்தியாக இனங்காணப்படுகிறாள். எனினும் காளிதாசன் (ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டு) மற்றும் புராணங்கள் (பொ.ஊ. 4 முதல் 13-ம் நூற்றாண்டுகள்) இன்றைய பார்வதியை முழுமைபெறச் செய்யும் வரலாறுகளைக் கூறுகின்றனர். ஆரியர் அல்லாத மலைக்குடிகளின் தொல்தெய்வமே பார்வதி என்பது பொதுவான கருத்தாக இருக்கின்றது.
உருத்திரன், அக்னி தேவன், இயமன் முதலான வேதகாலத் தெய்வங்களின கலவையாக, சிவன் பெருவளர்ச்சி கண்டதுபோல், உமா, ஹைமவதி, அம்பிகை, காளி, கௌரி, ராத்திரி, அதிதி முதலான பழந்தெய்வங்கள் பற்றிய நம்பிக்கைகளே "பார்வதி" எனும் பெரும் தெய்வத்தைப் படைத்தன.
தட்கனின் மகளும், ஈசனின் முதல் மனைவியுமான தாட்சாயிணியே மீண்டும், பார்வதியாக அவதரித்ததாக, புராணங்கள் சொல்கின்றன. தாட்சாயணியை இழந்து வருந்திய ஈசன் தியான நிலையில் ஆழ்ந்தார். சிவனை மணக்க பார்வதி தவம் செய்ய முடிவெடுத்தார். அவரின் பெற்றோர் முதலில் அதை மறுத்தனர். பின் அவரது உறுதியைக் கண்டு திகைத்து, அவரது தவத்துக்கு உதவினர். இதற்கிடையிவ் சூரபத்மன் என்னும் அசுரன், பிரம்மதேவரிடம் சிவனின் பிள்ளையைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான். இதனால் கலக்கமடைந்த தேவர்கள் காமதேவனை அனுப்பி ஈசனின் தியானத்தைக் கலைத்து பார்வதியைத் திருமணம் செய்து கொள்ள வைக்க முயல்கின்றனர். அப்போது ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய நெருப்பு பட்டு, காமதேவன் எரிந்து சாம்பலானான். பின்பு ஈசனே மாறுவேடத்தில வந்து, பார்வதியின் மனதைக் கலைக்க முயன்றும் அவர் கலங்காமல் தன் தவத்தைத் தொடர்ந்தார். இதனால் மகிழ்ந்த சிவபெருமான் பார்வதியை மணந்து கொண்டார்.
திருமணத்தின் பின் ஈசனுடன் பார்வதியும் கயிலை சென்று வாழ்ந்து வந்தனர். அங்கு அவர்களுக்கு பிள்ளையார், முருகன் ஆகியோர் பிள்ளைகளாக அவதரிக்கின்றனர்.
மாற்றுக் கதைகள்
ஹரிவம்சத்தின்படி, ஏகபர்ணை, ஏகபாதலை ஆகியோரின் மூத்த சகோதரியே பார்வதி. தேவி பாகவத புராணம், சிவ மகா புராணம் கந்த புராணம் என்பவற்றின் படி, ஆதிசக்தியை, மலையரசனும் மேனையும் வேண்டித் தவமிருந்ததாலேயே அவள் அவர்களுக்கு மகளாகப் பிறக்கிறாள். பார்வதிக்கு "அசோக சுந்தரி" எனும் மகளொருத்தி உண்டு எனம் நம்பிக்கைகளும் உண்டு.
சிற்பவியலும் குறியீட்டியலும்
பொதுவாக பேரழகியாக சித்தரிக்கப்படும் பார்வதி, செந்துகில் உடுத்து, இருகரத்தினளாகக் காட்சி தருவாள். சங்கு, சக்கரம், பாசம், அங்குசம், கண்ணாடி, மணி, கலப்பை, கரும்புவில், மலர்ப்பாணம் முதலீயவற்றை ஏந்தி, நான்கு அல்லது எட்டுக் கரங்களுடனும் அவள் சித்தரிக்கப்படுவதுண்டு.
இருகரத்தினளாக உள்ளபோது, ஒரு கரத்தை கத்யவலம்பித (கடக) முத்திரையலும், மற்றையதை அஞ்சேல் அல்லது மலரேந்திய முத்திரையிலும் அமைப்பதுண்டு. விளைந்த வயல்களைக் குறிக்கும் மஞ்சள் அல்லது பொன்னிறத்தில் அமைந்த "கௌரி"யின் வடிவத்திலும பார்வதி போற்றப்பட்டுகிறாள். காளி முதலான பயங்கரமான உருவங்களும், மீனாட்சி, காமாட்சி போன்ற அழகொழுகும் வடிவங்களும் அவளுக்குரியவை. காமனை நினைவுகூரும் கிளி அவளது கரங்களில் காணப்படுவதும் உண்டு.
சிவ சக்தியரை முறையே சிவலிங்கம் - யோனியாகக் குறிப்பது பொதுவழக்கம். இக்குறியீடு, "தோற்றம், மூலம்" என்பவற்றைக் குறிப்பிடுகின்றன ஆண்மை - பெண்மை இணையும் போது தோன்றும் மீளுருவாக்கம், இனப்பெருக்கம், வளமை முதலானவற்றை இலிங்கமும் யோனியும் குறிப்பிடுக்கின்றன.
பார்வதியின் வடிவங்கள்
பார்வதி எடுத்த அவதாரங்கள் பல.
காளி — காலத்தின் வடிவானவர்
தாரா — ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமானின் உயிரைக் காப்பாற்றியவர்
திரிபுரசுந்தரி — பண்டாசுரனை அழிக்கத் தோன்றியவர்
புவனேஸ்வரி — உலகை ஆளும் தேவி
பைரவி — திரிபுரசுந்தரியின் நிழலில் இருந்து தோன்றியவர்
சின்னமஸ்தா — தன் தலையையே கொய்து அதன் குருதியை அருந்தியவர்
தூமாவதி — ஜேஷ்டா தேவியின் வடிவம்
பகளாமுகி — மதனாசுரனை அழிக்கத் தோன்றியவர்
மாதங்கி — மதங்க முனிவரின் மகளாகத் தோன்றியவர்
கமலாத்மிகா — லட்சுமி தேவியின் வடிவம்
சைலபுத்ரி — இமவானின் மகளாக தோன்றியவர்
பிரம்மாச்சாரிணி
சந்திரகாந்தா
குஷ்மாந்தா
ஸ்கந்தமாதா — கந்தனின் அன்னை
காத்யாயனி
காளராத்திரி
மகாகௌரி
சித்திதாத்ரி
துர்க்கை — மகிஷாசுரனை அழிக்க வந்தவர்
கௌசிகி/மகாசரஸ்வதி — சும்ப நிசும்பர்களை அழிக்க வந்தவர்
சாகம்பரி — தாவரங்களின் அதிபதி; துர்கமாசுரனை அழிக்க தோன்றியவர்
பிரமாரி — அருணாசுரனை அழிக்கத் தோன்றியவர்
விந்தியவாசினி — நந்தகோபர் & யசோதையின் மகளாக தோன்றியவர்
ரக்ததந்திகா — வைப்ரசித்த அரக்கர்களை அழித்தவர்
பீமாதேவி — இமயமலையிலுள்ள முனிவர்களை காக்கவும் அங்குள்ள அசுரர்களை அழிக்கவும் வந்தவர்
மகாகாளி
அர்த்தநாரீஸ்வரர்
ஜகதாத்ரி — தேவர்களின் ஆணவத்தை அடக்க வந்தவர், சிவ புராணத்தின் படி, இவர் உமாதேவி என்றும் அழைக்கப்படுகிறார்
காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, அங்காளம்மன்
விரதங்கள்
பார்வதி தேவியை கவுரி என்ற வடிவில் வழிபடுகின்றனர். இதனால் கௌரி, அனந்தா திரிதியை, ஜெயபார்வதி விரதம், கோகிலா விரதம், வடசாவித்திரி விரதம் போன்ற விரதங்களை கடைபிடிக்கின்றனர்.
ஜெயபார்வதி விரதம்
ஆஷாட மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற திரயோதசி திதி நாளை ஜெயபார்வதி விரதம் இருக்கின்றனர். இந்த நாளில் விரதம் இருந்தால் வெற்றிகளை பார்வதி தருவாள் என்பது நம்பிக்கையாகும்.
கோகிலா விரதம்
கோகிலம் என்ற சொல் கிளியைக் குறிப்பது. கிளியைக் கையில் ஏந்தியிருக்கும் உமையம்மைக்கு இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சாவித்திரி விரதம்
ஆலமரத்திடியில் உள்ள உமா தேவிக்கு இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பார்வதி தேவியை வழிபடுகின்றனர்.
ஆத்ம திரிதியை விரதம்
வளர்பிறை திரிதியையில் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு சக்தியை வழிபடுவது ஆத்ம திரிதியை விரதம் ஆகும்.
உசாவியவை
இந்து பெண் தெய்வங்கள்
சிவபெருமான் மனைவியர்
பார்வதியின் வடிவங்கள்
|
5396
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D
|
கொடைக்கானல்
|
கொடைக்கானல், (), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டம் மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.
இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.
22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி) உயரத்தில் உள்ளது.
சங்ககாலத்தில்
சங்ககாலத்தில் இதன் பெயர் கோடைமலை. இது கொங்குநாட்டின் ஒரு பகுதி ஆகும். அப்போது அதனை ஆண்ட அரசன் கடியநெடுவேட்டுவன் ஆவார்.
பண்ணி என்பவன் இந்த நாட்டைத் தாக்கி வென்று வேள்வி செய்தான்
காலநிலை
கோடை காலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 19.8 டிகிரி சென்டிகிரேடும், குறைந்த பட்ச வெப்ப நிலை 6 டிகிரி சென்டிகிரேடும் இருக்கும்.
வரலாறு
1821இல் லெப்டினன்ட் பி. ச. வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்தார். இந்தியாவில் அரசுப் பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதினார். 1845இல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்துவந்த கோடை வாசத்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,442 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 36,501 ஆகும். அதில் 18,216 ஆண்களும், 18,285 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,004பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3893 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,002 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,250 மற்றும் 102 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 48.84%, இசுலாமியர்கள் 12%, கிறித்தவர்கள் 38.69% மற்றும் பிறர் 0.43% ஆகவுள்ளனர்.
கொடைக்கானல் செல்ல
சென்னை-திருச்சிராப்பள்ளி-மதுரை-திருநெல்வேலி-கன்னியாகுமரி தொடருந்துப் பாதையில், திண்டுக்கல் மற்றும் மதுரைக்கு இடையில் அமைந்துள்ள கொடை ரோடு என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கொடைக்கானலுக்கு மகிழுந்து அல்லது பேருந்து மூலம் செல்ல வேண்டும். திண்டுக்கல், மதுரை, கோவை, பழனி, வத்தலக்குண்டு, திருச்சி, சென்னை, பெங்களூர், நாகர்கோவில், ராமேஸ்வரம், காரைக்குடி, போடி, குமுளி, வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மகிழுந்தில் செல்வோர் கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாகவும், பழனி மலை வழியாகவும், பாச்சலூர், தாண்டிக்குடி வழியாகவும் மலைப்பாதைகள் வழியாக செல்லலாம். இவற்றுள் வத்தலக்குண்டு வழியே செல்லும் பாதையே சிறந்ததாக உள்ளது. தேனியிலிருந்து மகிழுந்தில் கொடைக்கானல் செல்பவர்கள் பெரியகுளம், தேவதானப்பட்டி தாண்டியவுடன் காட்ரோடு என்ற இடத்தில் கொடைக்கானல் செல்லும் சாலை பிரிவதால் அங்கிருந்தே செல்லலாம்.
அருகில் உள்ள வானூர்தி நிலையங்கள்
மதுரை 135 கிலோமீட்டர்
கோயம்புத்தூர் 170 கிலோமீட்டர்
திருச்சி 195 கிலோமீட்டர்
சென்னை 465 கிலோமீட்டர்
தூத்துக்குடி 262 கிலோமீட்டா்
சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
பிரையண்ட் பார்க்
தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
தூண் பாறைகள்
கொடைக்கானல் ஏரி
பேரிஜம் ஏரி
கவர்னர் தூண்
கோக்கர்ஸ் வாக்
அப்பர் லெக்
குணா குகைகள்
தொப்பித் தூக்கிப் பாறைகள்
மதி கெட்டான் சோலை
செண்பகனூர் அருங்காட்சியம்
500 வருட மரம்
டால்பின் னொஸ் பாறை
பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
பியர் சோலா நீர்வீழ்ச்சி
அமைதி பள்ளத்தாக்கு
குறிஞ்சி ஆண்டவர் கோயில்
செட்டியார் பூங்கா
படகுத் துறை
வெள்ளி நீர்வீழ்ச்சி
கால்ஃப் மைதானம்
கொடைக்கானலில் தற்கொலை முனை (Suicide Point) எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கும் சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு.
கொடைக்கானலில் கிராமங்கள் அதிகமாக இருக்கின்றன.
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
கொடைக்கானல் நகராட்சியின் இணையதளம்
கொடைக்கானல் வனப்பகுதி பற்றிய கட்டுரை
காணொளி காட்சி
தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்
சிறப்பு நிலை நகராட்சிகள்
தமிழ்நாட்டிலுள்ள மலை வாழிடங்கள்
கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்
|
5397
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
|
உதகமண்டலம்
|
ஊட்டி என்றும், உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (தோடா மொழி: ஒத்தக்கல்மந்து ) (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.
இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 88,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,082 ஆண்கள், 45,348 பெண்கள் ஆவார்கள். உதகமண்டலத்தில் 1000 ஆண்களுக்கு 1053 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட அதிகமானது.. உதகமண்டலம் மக்களின் சராசரி கல்வியறிவு 90.07% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.53%, பெண்களின் கல்வியறிவு 85.86% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. உதகமண்டலம் மக்கள் தொகையில் 7,781 (8.80%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 987பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு அதிகமானதாக உள்ளது.
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 64.36% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 21.25% இஸ்லாமியர்கள் 13.37% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உதகமண்டலம் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 28.98%, பழங்குடியினர் 0.30% ஆக உள்ளனர். உதகமண்டலத்தில் 23,235 வீடுகள் உள்ளன.
வரலாறு
12-ஆம் நூற்றாண்டில் நீலகிரி மலை போசளர்களின் ஆட்சியில் இருந்தது. பின்னர், திப்பு சுல்தானின், மைசூர் அரசுப் பகுதி ஆன உதகமண்டலம் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் கைக்கு மாறியது.
அப்போது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஆளுனராக இருந்த ஜான் சல்லிவன் என்பவர், இப்பகுதியின் குளுமையான தட்பவெட்ப நிலையை விரும்பி இங்கிருந்த தோடர், இரும்பா, படுகர் முதலிய பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கினார்.
ஆங்கிலேயரின் ஆட்சியில் இம்மலைப் பிரதேசம் நல்ல வளர்ச்சியைக் கண்டது. வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும், நீலகிரி மலை இரயில் பாதையும் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை, ஆங்கிலேயருக்கு கோடைக்காலத் தலைநகரமாக விளங்கியது.
ஒத்தக்கல் மந்து (தமிழ் - ஒற்றைகல் மந்தை) என்பதை ஆங்கிலேயர்கள் உதகமண்ட் என்று அழைத்தனர்.
உதகமண்ட் என்று ஆங்கிலத்திலேயே அழைக்கப்பட்ட இவ்வூரின் பெயரை 1972ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் உதக மண்டலம் என்று தமிழ் படுத்தி ஆணையிட்டார்.
கல்வி நிலையங்கள்
உதகமண்டலத்தில் உள்ள பள்ளிகள்.
பிரீக்ஸ் மெமோரியல் பள்ளி, சாரிங் கிராஸ்
நல்ல மேய்ப்பன் சர்வதேச பள்ளி
ஹெர்பன் பள்ளி, சாரிங் கிராஸ்
லாரன்ஸ் பள்ளி
புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி
செயின்ட் ஹில்டா பள்ளி உதகமண்டலம்
கற்பூர மரம்
உதகைமண்டலத்தில் அமைந்துள்ள கற்பூர மரம் 12 மீட்டர்கள் சுற்றளவு கொண்டதாக உள்ளது. இதனை 12 ஆட்கள் கைகோர்த்தால்தான் கட்டி பிடிக்க முடியும். இம்மரம் பழைய மைசூர் சாலையில் அமைந்துள்ளது.
உதகமண்டல ஒளிக்காட்சி அரங்கு
உதகமண்டல மலைக்காட்சி அரங்கு
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
ஊட்டி நகருக்கான ஆங்கில தளம்
தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்
சிறப்பு நிலை நகராட்சிகள்
நீலகிரி மாவட்டம்
தமிழ்நாட்டிலுள்ள மலை வாழிடங்கள்
உதகமண்டலம்
நீலகிரி மாவட்ட நகராட்சிகள்
நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
|
5398
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
|
மகேஷ் பூபதி
|
மகேஷ் சீனிவாஸ் பூபதி (பிறப்பு - ஜூன் 7, 1974 இந்தியாவைச் சேர்ந்த ஒரு முன்னாள் தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரராவார். இவர் சென்னையில் ல் பிறந்தவர். 1995ம் ஆண்டிலிருந்து தொழில்முறையில் விளையாடினார். தற்போது இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.
2009ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். 2012ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்
இந்திய டென்னிஸ் வீரர்கள்
1974 பிறப்புகள்
வாழும் நபர்கள்
தெலுங்கு மக்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக தங்கம் வென்றவர்கள்
|
5401
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF
|
தரமணி
|
தரமணி, தென் சென்னையில் உள்ள இடமாகும். இங்கு டைடெல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, டைசல் உயிரித் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் பல மத்திய, மாநில அரசுக் கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அமைந்து உள்ளன. எம். ஜி. ஆர் திரைப்பட நகரும் சென்னை திரைப்படக் கல்லூரியும் இங்கு அமைந்துள்ளன. தரமணியில் பறக்கும் மின்சார தொடர் வண்டி நிலையம் உள்ளது. இதன் மூலம் பல கணினி தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு எளிதில் செல்ல முடிகிறது. இதன் அருகில் கந்தன்சாவடி, பெருங்குடி,அமெரிக்கன் பள்ளி, அரசு கனரக வாகன பயிற்சிப் பள்ளி ஆகியன உள்ளன.
இருப்பிடம்
பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் சர்தார் படேல் சாலையின் சந்திப்பில் உள்ள மத்திய கைலாஷ் கோயில் தரமணியின் தொடக்கத்தைக் குறிக்கிறது. தரமணி அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி மற்றும் பெருங்குடி ஆகியவற்றுடன் இணைகிறது. தரமணி சாலை, பெரும்பாலும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தாழ்வாரமாக விவரிக்கப்படுகிறது, இது முன்பு பழைய மகாபலிபுரம் சாலை என்று அழைக்கப்பட்ட ராஜீவ் காந்தி சாலையில் உள்ளது. இப்பகுதியில் உள்ள மற்றொரு முக்கியமான சாலை தரமணி இணைப்பு சாலை, தரமணியை வேளச்சேரியுடன் இணைக்கிறது. இது ராஜீவ் காந்தி சாலையில் உள்ள எஸ்.ஆர்.பி. கருவிகள் (SRP Tools) சந்திப்பிலிருந்து வேளச்சேரியில் உள்ள விஜயநகர் பஸ் முனையம் வரை இயங்குகிறது, அங்கு இது வேளச்சேரி பிரதான சாலையுடன் இணைகிறது. மேலும், இது சைதாபேட்டையில் உள்ள லிட்டில் மவுண்ட் சந்திப்பிலிருந்து மேடவாக்கம் வழியாக தாம்பரம் வரை செல்கிறது. போக்குவரத்தின் அதிகரிப்பு காரணமாக இது ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்தப்படுகிறது.
தொழில்நுட்ப பூங்காக்கள்
நகரத்தின் முதல் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் தென்னிந்தியாவின் முதல் தகவல் தொழில்நுட்ப பூங்காவான டைடல் பார்க் இங்கு அமைந்துள்ளது. இது எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டிக்கு அருகிலுள்ள காலியான நிலத்தில் கட்டப்பட்டது, மேலும் எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டியில் இருந்து வாகன நிறுத்தத்திற்காக (பார்க்கிங்) இடம் எடுக்கப்பட்டது. இப்பகுதி இப்போது அசெண்டாஸ் ஐ.டி பார்க், ராமானுஜம் ஐ.டி. பார்க், எல்நெட் சாப்ட்வேர் சிட்டி மற்றும் டைசெல் பயோடெக் பார்க் உள்ளிட்ட பல ஐடி பூங்காக்களுக்கு பெயர் பெற்றது. உலக வங்கி அதன் வளர்ந்து வரும் நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு சேவைகளை வழங்குவதற்காக தரமணியில் தனது மிகப்பெரிய அலுவலகங்களில் ஒன்றைத் திறந்துள்ளது. 120,000 சதுர அடி (11,000 மீ 2) வசதி அசெண்டாஸ் அருகே 3.5 ஏக்கர் (14,000 மீ 2) நிலத்தில் உள்ளது.
கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்
தரமணி பல ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமானதாக உள்ளது.
அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.:
அமெரிக்க சர்வதேச பள்ளி - சென்னை.
சென்னைத் திரைப்படக் கல்லூரி
ஆசிய இதழியல் கல்லூரி, சென்னை
மைய பல்தொழில் நுட்பப் பயிலகம்
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்
மத்திய மின்னணுவியல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்
சென்னைப் பல்கலைக்கழகம்
கணித அறிவியல் கழகம்
இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
ஜவுளி தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
அச்சு தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
பாலிமர் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
தோல் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்
தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி
டைடல் பூங்கா, சென்னை
நுண்ணலை மின்னணு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி சமூகம், சென்னை.(சமீர்)
சட்டத்தின் சிறப்பான பள்ளி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், சென்னை
இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்கா
ஜப்பானிய பள்ளி கல்வி அறக்கட்டளை சென்னை (チ ェ ン ナ イ 補習 hen 校 சென்னை ஹோஷே ஜுகியா கோ), வார இறுதியில் ஜப்பானிய பள்ளி, சென்னை அமெரிக்க சர்வதேச பள்ளியில் உள்ளது. இது 2003 இல் ஏ.ஐ.எஸ். சென்னைக்கு மாற்றப்பட்டது.
போக்குவரத்து வசதிகள்
தரமணியில் பேருந்து முனையம் உள்ளது. மேலும் இங்கு மெட்ரோ இரயில் வசதிகள் உள்ளது. சென்னை திருவான்மியூரிலிருந்து தரமணிக்கு இரயில் சேவை உள்ளது.
திரைப்பட நகரம்
1996இல், அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதாவால் தரமணியில் "பிலிம் சிட்டி" கட்டப்பட்டது. இது அவரின் முக்கிய திட்டங்களில் ஒன்றாக இருந்தது. சமீபத்தில், இது "அறிவு பூங்காவாக" மாற்றப்படுவதாக செய்திகள் வந்தன.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
சென்னை சுற்றுப் பகுதிகள்
|
5402
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
|
கொலம்பியா
|
கொலம்பியா அல்லது கொலம்பியக் குடியரசு (República de Colombia) என்றழைக்கப்படுவது தென் அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் நடு அமெரிக்காவிலுள்ள ஒரு நாடாகும். வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கரிபியன் கடலும் கிழக்கில் வெனிசுவேலாவும் பிரேசிலும், தெற்கில் எக்குவடோர், மற்றும் பெருவும், மேற்கில் பனாமாவும் பசிபிக் பெருங்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன. தனது கடல் எல்லைகளை கோஸ்ட்டா ரிக்கா, நிக்கராகுவா, ஒண்டுராசு, ஜமேக்கா, டொமினிக்கன் குடியரசு, மற்றும் எயிட்டியுடன் பகிர்ந்து கொள்கின்றது. இது ஒற்றையாட்சி, அரசியலமைப்பைச் சார்ந்த குடியரசாகும் ;முப்பத்திரண்டு மாவட்டங்கள் உள்ளன. தற்போது கொலம்பியா உள்ள பகுதியில் துவக்கத்தில் முயிசுக்கா, குயிம்பயா, தயிரோனா தொல்குடி மக்கள் வாழ்ந்திருந்தனர்.
1499இல் எசுப்பானியர்கள் வந்தடைந்தபிறகு முயிசுக்கா நாகரிகத்தை கைப்பற்றி தங்கள் குடியேற்றப்பக்குதிகளை உருவாக்கினர். பொகோட்டாவைத் தலைநகராகக் கொண்டு புதிய கிரெனடா அரச சார்புநாடு ஏற்படுத்தப்பட்டது. எசுப்பானியாவிடமிருந்து 1819இல் விடுதலை பெற்றபோதும் 1830இல் "கிரான் கொலம்பியா" கூட்டரசு கலைக்கப்பட்டது. தற்போது கொலம்பியாவும் பனாமாவும் உள்ள பகுதி புதிய கிரெனடா குடியரசாக உருவானது. புதிய நாடு கிரெனடியக் கூட்டரசு என 1858இலும் கொலம்பிய ஐக்கிய நாடுகள் என 1863இலும் சோதனைகள் நடத்தியபிறகு1866இல் இறுதியாக கொலம்பியக் குடியரசானது. 1903இல் கொலம்பியாவிலிருந்து பனாமா பிரிந்தது. 1960களிலிருந்து சமச்சீரற்ற தீவிரம் குறைந்த ஆயுதப் போராட்டத்தை எதிர்கொண்டு வந்தது; இது 1990களில் தீவிரமடைந்தது. இருப்பினும் 2005 முதல் இது குறைந்து வருகின்றது. கொலம்பியாவில் பல்லின மக்களும் பன்மொழியினரும் மிகுந்துள்ளதால் உலகின் பண்பாட்டு மரபுவளமிக்க மிகுந்த பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. கொலம்பியாவின் பன்முக நிலவியலும் நிலத்தோற்றமும் வலுவான வட்டார அடையாளங்களைத் தோற்றுவித்துள்ளன. நாட்டின் பெரும்பாலான நகரிய மையங்கள் அந்தீசு மலைத்தொடரின் மேட்டுப்பகுதிகளில் அமைந்துள்ளன.
தவிரவும் கொலம்பியாவின் நிலப்பகுதிகள் அமேசான் மழைக்காடு, அயனமண்டலப்புல்வெளி, கரிபிய மற்றும் அமைதிப் பெருங்கடல் கடலோரப் பகுதிகளை அடக்கியுள்ளன. சூழ்நிலையியல்படி, இது உலகின் 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது; சதுர கிலோமீட்டருக்கு மிகவும் அடர்த்தியான பல்வகைமையை உடைய நாடாகவும் விளங்குகின்றது. இலத்தீன் அமெரிக்காவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக விளங்கும் கொலம்பியா வட்டார செல்வாக்கும் மத்தியதர செல்வாக்குமுள்ள நாடாகவும் உள்ளது. சிவெட்சு (CIVETS) எனக் குறிப்பிடப்படும் ஆறு முன்னணி வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் அணுக்கம் பெற்ற உறுப்பினர் நாடாகவும் உள்ளது. கொலம்பியா பேரியப் பொருளியல் நிலைத்தன்மையும் நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளையும் உடைய பன்முகப்பட்ட பொருளியலைக் கொண்டுள்ளது.
நகரங்கள்
கொலம்பியா நகரங்களில் சில:
கர்த்தெகனா
பொகோட்டா
மெதெயின்
கலி
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
பொதுத் தகவல்
Colombia at பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
Colombia at UCB Libraries GovPubs
Key Development Forecasts for Colombia from International Futures
Official investment portal
Official Colombia Tourism Website
Study Spanish In Colombia
National Administrative Department of Statistics
அரசு
Colombia Online Government web site
பண்பாடு
Ministry of Culture
புவியியல்
National parks of Colombia
தென் அமெரிக்க நாடுகள்
கரிபியன் நாடுகள்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
|
5403
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
|
அமைதிப் பெருங்கடல்
|
அமைதிப் பெருங்கடல் அல்லது பசிபிக் பெருங்கடல் (Pacific Ocean) உலகின் மிகப் பெரிய நீர்த் தொகுதியாகும். இதற்கு போர்த்துகேய நிலந்தேடு ஆய்வாளரான பெர்டினென்ட் மகலன் என்பவரால் "அமைதியான கடல்" என்ற பொருளில் இப்பெயர் வழங்கப்பட்டது.16.52 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இப்பெருங்கடல் உலகப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியைச் சூழ்ந்து கொண்டுள்ளது. இது பூமியின் அனைத்துக் கண்டங்களின் கூட்டு நிலப்பரப்பை விட மிகப் பெரியதாகும்.
ஆர்க்டிக் பகுதியின் பெருங் கடலிலிருந்து, அன்டார்டிகாவின் ராஸ் கடல் வரை ஏறத்தாழ 15,500 கி.மீ வட-தெற்காகவும், இந்தோனேசியா முதல் கொலம்பியக் கடற்கரை மற்றும் பெரு வரை ஏறத்தாழ 19,800 கி.மீ கிழக்கு-மேற்காகவும் பரந்து கிடக்கும் இம்மாகடல் 5° வடக்கு அட்ச ரேகையில் தனது கிழக்கு-மேற்கு உச்சகட்ட தூரத்தை அடைகிறது. மலாக்கா நீரிணைவு இதன் மேற்கத்திய எல்லையாக கருதப்படுகிறது. உலகின் மிக ஆழமான பகுதியான, 10,928 மீ ஆழமுடைய மரியானா அகழியை இக்கடற் பகுதி உட்படுத்துகிறது. இக்கடலின் சராசரி ஆழம் 4,300 மீட்டராகும்.
ஏறத்தாழ 25,000 தீவுகளை இக்கடல் உட்படுத்துகிறது. இது மற்ற அனைத்து பெருங்கடல்களின் தீவுகளின் கூட்டு-எண்ணிக்கையை விட அதிகமாகும். பெரும்பான்மைத் தீவுகள் நிலநடுக்கோட்டின் தெற்கில் அமைந்துள்ளன. அமைதி பெருங்கடல் சுருங்கவும் அட்லாண்டிக் பெருங்கடல் விரிவடையவும் செய்துகொண்டிருக்க வாய்ப்பு உள்ளது என நில தட்டியல் கோட்பாடுகள் கூறுகின்றன. செலிபெஸ் கடல், கோரல் கடல், கிழக்கு சீனக்கடல், பிலிப்பைன் கடல், யப்பான் கடல், தென் சீனக்கடல், சுலு கடல், டாஸ்மான் கடல், மஞ்சள் கடல், ஆகியன அமைதிப் பெருங்கடலின் ஒழுங்கற்ற மேற்கோர எல்லைகளில் காணப்படும் முக்கியக் கடல்களாகும். மலாக்கா நீரிணைவு அமைதிப் பெருங்கடலை இந்தியப் பெருங்கடலுடன் மேற்கிலும், மாகெல்லன் நீரிணைவு இப்பெருங்கடலை அட்லாண்டிக் பெருங்கடலுடன் கிழக்கிலும் இணைக்கின்றன. வடக்கில் பெருங்கடல் இப்பெருங்கடலை ஆர்டிக் பெருங்கடலுடன் இணைக்கிறது.
சுற்றுச்சூழல்
அமைதிப் பெருங்கடலின் நடுவாக, கிழக்கையும் மேற்கையும் முடிவுசெய்யும் ± 180° தீர்க்க ரேகை செல்வதால், இக்கடலின் ஆசியப் பக்கம் கிழக்கு அமைதிப் பெருங்கடல் எனவும் எதிர்புறம் மேற்கு அமைதிப் பெருங்கடல் எனவும் வழங்கப்படுகின்றன. அதாவது எந்த எல்லைக்கோடு முதல் தீர்க்க ரேகைகள் கிழக்கு தீர்க ரேகை ஆகிறதோ அக்கோடு முதல் கிழக்காக உள்ள அமைதிப் பெருங்கடற்பகுதி கிழக்கு அமைதிப் பெருங்கடல் எனவும், எது முதல் அவை மேற்கு தீர்க்க ரேகை ஆகிறதோ அது முதல் மேற்காக உள்ள அமைதிப் பெருங்கடற்பகுதி மேற்கு அமைதிப் பெருங்கடல் எனவும் கருதப்படுகின்றன. சர்வதேச காலக் கோடு தனது வடக்கு-தெற்கு எல்லை வகுப்புக்கு இந்த ± 180° தீர்க்க ரேகையையே பெரும்பாலும் பின்பற்றுகிறது. ஆனால் கிரிபாட்டி பகுதியில் பெருமளவில் கிழக்காகவும், அலியூட்டியன் தீவுகள் பகுதியில் மேற்காகவும் திரும்பிச் செல்கிறது.
மாகெல்லன் நீரிணைவு முதல் பிலிப்பைன்ஸ் வரையிலான பெரும்பாலான மகலனின் கடற்பயணங்களின் போது அமைதிப் பெருங்கடல் அமைதியானதாகவே காணப்பட்டிருக்கிறது. ஆனால் அது எப்போதும் அமைதியான கடற்பகுதியாக இருப்பதில்லை. அட்லாண்டிக் பெருங்கடலில் ஹரிகேன் எனப்படும் சூறாவளி வீசும் போதெல்லாம் அமைதிப் பெருங்கடலின் தீவுகள் கடுமையாக சேதப்படுத்தப்படுகின்றன. அமைதிப் பெருங்கடலின் ஓர நிலப்பரப்புகள் அனைத்தும் எரிமலைகளாக காட்சியளிப்பதோடு அவை அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படுகின்றன. சுனாமி எனப்படும் நீரடி நிலநடுக்கங்களால் ஏற்படும் பெரும் அலைகளினால் நிறைய தீவுகள் சூறையாடப்பட்டதோடு மிகப்பெரிய நகரங்களும் அழிக்கப்பட்டன.
நீர் சிறப்பியல்பு
அமைதிப் பெருங்கடல் நீரின் வெப்பநிலை துருவப்பகுதிகளில் உறைநிலை முதல் நில நடுக்கோடு பகுதிகளில் 29° செல்ஷியஸ் வரை, என வெகுவாக வேறுபடுகிறது. நீரின் உப்புத்தன்மையும் அட்ச ரேகை தோறும் வேறுபடுகிறது. நிலநடுக்கோடு பகுதிகளில் வருடம் முழுவதும் பெருமளவில் ஏற்படும் படிவுகளின் காரணமாக அப்பகுதியின் உப்புத்தன்மை நடு-அட்ச ரேகைப் பகுதிகளின் உப்புத்தன்மையை விட மிகக்குறைவாக இருக்கிறது. துருவப்பகுதியின் குளிரான சூழலில் குறைந்த அளவு நீரே ஆவியாவதால் மிதவெப்ப பகுதி அட்ச ரேகைகளிலிருந்து துருவப்பகுதியை நெருங்குமளவு நீரின் உப்புத்தன்மை குறைந்துகொண்டே போகிறது. பொதுவாக அமைதிப் பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடலை விட வெப்பமானதாக நம்பப்படுகிறது. அமைதிப் பெருங்கடல் நீரின் மேற்பரப்பு சுற்றோட்டம் வட அரைக்கோளத்தில் கடியாரப்பாதையாகவும் (வட அமைதிப் பெருங்கடற்சுற்றோட்டம்) தென் அரைக்கோளத்தில் எதிர்-கடியாரப்பாதையாகவும் இருக்கிறது. தடக் காற்றுகளால் மேற்காக 15° வடக்கு அட்ச ரேகைப் பகுதிக்கு ஓட்டப்படும் வடக்கு நிலநடுநீரோட்டம், பிலிப்பைன்ஸ் பகுதியில் வடக்காக திரும்பி வெப்பமான குரோசியோ நீரோட்டமாக மாறுகிறது.
பின் ஏறக்குறைய 45° வடக்கு அட்ச ரேகையில் அதன் ஒரு பகுதி கிழக்காகத் திரும்பும் குரோசியோ கிளையும் மேலும் சில நீரும் வடக்காக அலியூட்டியன் நீரோட்டம் என பயணிக்கும் வேளையில் மற்ற பகுதி தெற்காக திரும்பி வடக்கு நிலநடுநீரோட்டத்துடன் இணைகிறது. அலியூட்டியன் நீரோட்டம் வட அமேரிக்காவை நெருங்கி, அங்கு பெரிங் கடலில் ஏற்படும் ஒரு எதிர்-கடியாரப்பாதை சுற்றோட்டத்துக்கு அடிப்படையாக அமைகிறது. அதன் தென்னகப் பிரிவு தெற்காக பாயும் குளிர்ந்த மிதவேக, கலிபோர்னியா நீரோட்டமாக மாறுகிறது.
தெற்கு நிலநடுநீரோட்டம் நில நடுக்கோடு வழியாக மேற்காக பயணித்து நியூகினியின் கிழக்குப்பகுதியில் தெற்காகத்திரும்பி, பின் 50° தெற்கு தீர்க்க ரேகைக்கருகில் கிழக்காகத்திரும்பும். பின்னர் உலகைச்சுற்றும் அண்டார்டிக் துருவ-சுழற்சி நீரோட்டத்தை உள்ளடக்கும், தென்னக அமைதிப் பெருங்கடலின் பிரதான மேற்கு சுற்றோட்டத்துடன் இணைகிறது. பின்னர் இது சில்லியியன் கடற்கரையை நெருங்கும்போது தெற்கு நிலநடுநீரோட்டம் இரண்டாக பிரிகிறது; ஒரு பிரிவு ஹான் முனையை சுற்றி பாய்கிறது, மற்றொன்று வடக்காகத்திரும்பி கம்போல்ட் நீரோட்டமாகிறது.
நில ஆராய்ச்சி
ஆன்டிசைட் கோடு பகுதி அமைதிப் பெருங்கடலின் மற்ற நிலப்பகுதிகளிலிருந்து மிகவும் வேறுபட்டதும் மிக முக்கியமான ஒன்றுமாகும். இக்கோடு மத்திய அமைதிப் பெருங்கடற்படுக்கையின் ஆழமான காரத்தன்மையுடைய எரிப்பாறைகளை, பகுதி மூழ்கி இருக்கும் அமிலத்தன்மையான எரிப்பாறைகளிடமிருந்து பிரிக்கிறது. இக்கோடு கலிபோர்னிய தீவுகளின் மேற்கு எல்லைகளைப் பின்பற்றி, அலியூட்டியன் வளைவின் தெற்குப்பகுதி, கம்சாட்கா தீவக்குறையின் கிழக்கு எல்லை, குரில் தீவுகள், ஜப்பான், மெரியானா தீவுகள், சாலமன் தீவுகள் மற்றும் நியுஸிலாந்து ஆகியவை வழியாக பயணிக்கிறது. இந்த வேறுபாடு மேலும் தொடர்ந்து வடகிழக்காக பயணித்து அல்பாட்ராஸ் கார்டிரேல்லாவின் மேற்கு எல்லை, தென் அமேரிக்கா, மெக்ஸிகோ வழியாக சென்று பின்னர் கலிபோர்னியத் தீவுப்பகுதிக்கு திரும்புகிறது. ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கண்டத்துண்டுகளின் நீட்டல்களான, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், நியூகினியா, நியுஸிலாந்து ஆகியன இந்த ஆன்டிசைட் கோட்டின் வெளியில் இருக்கின்றன.
மத்திய அமைதிப் பெருங்கடற்படுக்கையின் சிறப்பியல்புகளாக கருதப்படும் ஆழமான பள்ளங்கள், ஆழ்கடல் எரிமலைகள், கடலோர எரிமலைத் தீவுகள் ஆகிய அனைத்தும் பெரும்பாலும் இந்த ஆன்டிசைட் கோட்டின் மூடப்பட்ட வட்டத்தினுளேயே காணப்படுகின்றன. இப்பகுதிகளில் எரிமலைகளின் வெடிப்புகளிலிருந்து குழம்புகள் மெதுவாகப் பாய்ந்து பெரிய குடை-வடிவ எரிமலைகளைஉருவாகுகின்றன. இவைகளின் அழிக்கப்பட்ட சிகரப்பகுதிகள் அப்பகுதிகளில் வளை தீவுகளாகவும், கூட்டங்கூட்டமாகவும் காணப்படுகின்றன. இவ்வான்டிசைட் கோட்டுக்கு வெளியே வெடித்து சிதறும் வகை எரிமலைகளே காணப்படுகின்றன. இப்பகுதியில் காணப்படும் அமைதிப் பெருங்கடல் எரிமலை வளையமே உலகின் வெடிப்பு எரிமலை மண்டலங்களில் மிகப்பெரியது.
நிலப்பரப்புகள்
முற்றிலும் அமைதிப் பெருங்கடலினால் சூழப்பட்டிருக்கும் மிகப்பெரிய நிலப்பரப்பு நியூகினியா தீவாகும். அமைதிப் பெருங்கடலின் பெரும்பாலான தீவுகள் 30° வடக்குக்கும் 30° தெற்குக்கும், அதாவது தென்கிழக்காசியவிற்கும் ஈஸ்டர் தீவுக்கும் இடையே காணப்படுகிறது. அமைதிப் பெருங்கடற்படுக்கையின் ஏனைய பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் நீரினுள் மூழ்கி கிடக்கிறது.
ஹவாய், ஈஸ்டர் தீவு, மற்றும் நியுஸிலாந்தை இணைக்கும் பாலினேசியாவின் பெரிய முக்கோணம், மார்க்குசாஸ், சமோவா, தோகிலாவு, டோங்கா, துவாமோத்து, துவாலு & வால்லிஸ், மற்றும் புந்தா தீவுகள் ஆகிய வளைதீவுகளையும் தீவுக்கூட்டங்களையும் சூழ்ந்துகொண்டுள்ளது. நில நடுக்கோட்டின் வடக்காகவும் சர்வதேச காலக்கோட்டின் மேற்காகவும் மைக்ரோனேசியத் தீவுகளான, கரோலின் தீவுகள், மார்ஷல் தீவுகள், மெரியானா தீவுகள் என நிறைய சிறிய தீவுகள் உள்ளன.
அமைதிப் பெருங்கடலின் தென்மேற்கு மூலையில் உள்ள மெலனேசியத் தீவுகள் நியூகினியின் ஆதிக்கத்திலுள்ளது. மேலும் பிஸ்மார்க் தீவுக்குழு, பிஜி, நியு காலிடோனியா, சாலமன் தீவுகள் வனுவாட்டு ஆகியன மற்ற முக்கிய மெலனேசியத் தீவுக்கூட்டங்கள்.
அமைதிப் பெருங்கடலின் தீவுகள் நான்கு வகைப்படும்: கண்டத் தீவுகள், உயரத் தீவுகள், ஊருகைத்திட்டு, உயர்த்தப்பட்ட காரல் பரப்புமேடை. கண்டத் தீவுகள் ஆன்டிசைட் கோட்டுக்கு வெளியே கிடக்கின்றன. நியூகினியா, நியுஸிலாந்து தீவுகள், மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய தீவுகள் இவ்வகைப்படுவன. அமைப்பு முறையில் இத்தீவுகள் பக்கத்து கண்டங்களுடன் தொடர்புடையவை. உயர்ந்த தீவுகள் எரிமலைகளால் உருவானவைகள். அவைகளில் நிறைய தீவுகளில் தற்போதும் இயக்க நிலை எரிமலைகள் உள்ளன. அவைகளில் பௌகெயின்வில்லி, ஹவாய், சாலமன் தீவுகள் ஆகியன குறிப்பிடத்தக்கவைகள்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் வகைகள் ஊருகைத்திட்டு கூட்டங்களின் தொகுதியால் உருவானவைகள். பவளப் பாறைகள், எரிமலைப்பாறைகளின் குழம்பு ஓட்டங்களுக்கு மேல் தங்கியிருக்கும் தாழ்ந்த நிலைத் தொகுதிகளாகும். இதற்கு சரியான எடுத்துக்காட்டாக வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் பெரும் கரைவிலகிய முருகைப் பார் (Barrier Reef) திகழ்கிறது. காரலிலிருந்து உண்டாகும் இரண்டாம் வகைத் தீவான, உயர்த்தப்பட்ட காரல் பரப்புமேடை கீழ்நிலை காரல் தீவுகளை விட சற்று பெரியதாக இருக்கும். பனாபா மற்றும் பிரெஞ்சு பாலினேசியாவின் மகாடியா ஆகியவை சிறந்த எடுத்துக்காட்டுகள்.
வரலாறு
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் அமைதிப் பெருங்கடற்பகுதியில் முக்கிய மனித இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. அவைகளில் முக்கியமானதாக, அமைதிப் பெருங்கடலின் ஆசிய ஓரத்திலிருந்து பாலினேசியர்கள் இடம்பெயர்ந்து தாகிட்டிக்கும் பின்னர் ஹவாய்க்கும், நியுஸிலாந்துக்கும் சென்றுள்ளனர்.
பதினாறாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இக்கடற்பகுதி ஐரோப்பியர்களால் பார்வையிடப்பட்டது. முதலில் வாஸ்கோ நியுனெஸ் டி பால்போவாவால் 1513 - லும், பின்னர் கி.பி.1519 முதல் கி.பி.1522 வரையிலான கடற்சுற்றுப்பயணத்தின் போது அமைதிப் பெருங்கடலைக் கடந்த பெர்டினென்ட் மகலன்னும் இப்பார்வையை மேற்கொண்டனர். பின்னர் 1564 ஆம் ஆண்டு, கான்குவிஸ்டேடர்கள் மிகியுல் லோபெஸ் டி லெகஸ்பி இன் தலைமையில் மெக்ஸிகோவிலிருந்து இக்கடலைக்கடந்து பிலிப்பைன்ஸ் மற்றும் மெரியானா திவுப்பகுதிகளுக்கு சென்றனர். அந்நூற்றாண்டின் பிந்திய காலங்களில் ஸ்பெயின் காரர்களின் இக்கடல் பகுதியை அதிகமாக ஆட்கொண்டிருந்தனர். அவர்களது கப்பலகள் அடிக்கடி பிலிப்பைன்ஸ், நியூகினியா மற்றும் சாலமன் தீவுகளுக்கு சென்ற வண்ணமிருந்தன. மணிலாவின் கப்பல்கள் மணிலாவுக்கும் அக்காபுல்கோவுக்கும் சென்றவண்ணமிருந்தன.
பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக் காரர்கள் தெற்கு ஆப்பிரிக்கக் கடற்பகுதி வழியாக பயணித்து நிலப்பரப்புகளை கண்டுபிடிப்பதிலும் வர்த்தகத்திலும் முன்னணிவகித்தனர்; ஏபெல் ஜான்சூன் டாஸ்மான் டாஸ்மானியாவையும் நியுஸிலாந்தையும் கண்டுபிடித்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் அதிக அளவில் நிலப்பரப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அலாஸ்கா மற்றும் அலியூட்டியன் தீவுப்பகுதிகளில் ரஷ்யர்களும், பாலினேசியப் பகுதிகளில் பிரெஞ்சுக் காரார்களும், ஆங்கிலேயர்கள், ஜேம்ஸ் குக்கின் மூன்று கடற்பயணங்கள் (தெற்கு அமைதிப் பெருங்கடல் மற்றும் ஆஸ்திரேலியா, ஹவாய், மற்றும் வட அமேரிக்கா மற்றும் அமைதிப் பெருங்கடல் வடமேற்கு)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வேகமாக வளர்ந்த ஏகாதிபத்தியக் கொள்கையின் காரணமாக ஓசியானியாவின் பெரும்பான்மைப் பகுதிகளை பிரிட்டன், பிரான்சு, மற்றும் அமேரிக்க ஐக்கிய நாடுகள் ஆட்கொண்டன. எச்.எம்.எஸ்.பீகிள், (1830களில்) மற்றும் சார்ல்ஸ் டார்வின்; 1870 களில் எச்.எம்.எஸ். சான்சிலர்; யு.எஸ்.எஸ்.டஸ்கராரோ (1873–76); ஜெர்மானிய கேசெல் (1874–76) ஆகியவர்களால் கடல் ஆராய்ச்சியில் பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 1898 - ல் பிலிப்பைன்சை அமேரிக்கா எடுத்துக்கொண்ட போதும், மேற்கத்திய அமைதிப் பெருங்கடலை 1914இல் சப்பான் கட்டுப்படுத்தியதோடல்லாமல், இரண்டாம் உலகப்போரில் மேலும் பல தீவுகளை அது கைப்பற்றியது. போருக்குப் பிறகு அமேரிக்காவின் அமைதிப் பெருங்கடற்கப்பற்படை கடற்பரப்பின் தலைவன் போல் தோன்றியது.
தற்போது பதினேழு சுதந்திர நாடுகள் அமைதிப் பெருங்கடலில் உள்ளன. அவை, ஆஸ்திரேலியா, பிஜி, ஜப்பான், கிரிபாட்டி, மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நௌரு, நியுசிலாந்து, பலாவு, பப்புவா நியூகினியா, பிலிப்பைன்ஸ், சாமொவா, சாலமன் தீவுகள், சீனக் குடியரசு (தைவான்) டோங்கா, துவாலு, மற்றும் வனுவாட்டு. இவைகளில் பதினொரு நாடுகள் 1960 முதல் முழு சுதந்திரம் அடைந்தன. வடக்கு மெரியானா தீவுகள் சுய ஆட்சி பெற்றுள்ள போதிலும் அதன் வெளியுறவு கட்டுப்பாடு அமேரிக்கா வசமுள்ளது. குக் தீவுகள் மற்றும் நையு ஆகியன இதே வித கட்டுப்பாடில் நியுஸிலாந்து வசமுள்ளது. மேலும் அமைதிப் பெருங்கடலில் ஒரு அமேரிக்க மாநிலமான ஹவாய் மேலும் பல தீவுப் பிரதேசங்களும், ஆஸ்திரேலியா, சிலி, இக்குவேடர், பிரான்சு, ஜப்பான், நியுஸிலாந்து, ஐக்கியப் பேரரசு மற்றும் அமேரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டு பிரதேசங்களும் உள்ளன.
பொருளாதாரம்
இக்கடலின் தாது வளங்கள் இதன் கடும் ஆழமான தன்மையினால் மனித ஆக்கிரமிப்புக்கரியதாக இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் இக்கடலின்கரையோர கண்டப்பாறைகளின் நீர் ஆழமற்ற பகுதிகளிலிருந்து பெட்ரோல் மற்றும் இயற்கை வாயு ஆகியன எடுக்கப்படுகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, ஜப்பான், பப்புவா நியூகினியா, நிக்கராகுவா, பனாமா, மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடற்கரையோரங்களில் முத்து எடுக்கப்படுகின்றன. அமைதிப் பெருங்கடலின் மிகப்பெரிய சொத்து அதன் மீன்களாகும். இதன் கடற்கரையோரங்களில் பல அரிய வகை மீன்கள் கிடைக்கின்றன.
1986 - ல் அணு சக்தி கழிவுகள் இப்பகுதியில் குவிவதை தடுக்க இப்பகுதியை தெற்கு அமைதிப் பெருங்கடல் மன்றத்தின் உறுப்பு நாடுகள் அணுசக்தி பயன்பாட்டுக்கற்ற பகுதியாக அறிவித்தது.
முக்கிய துறைமுகங்கள்
அக்காபுல்கோ, மெக்ஸிகோ
ஆக்லாந்து, நியுஸிலாந்து
பாங்கொக், தாய்லாந்து
பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா
ஹாங் காங், சீன மக்கள் குடியரசு
ஹொனலுலு, ஹவாய், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
மணிலா, பிலிப்பைன்ஸ்
பனாமா நகரம், பனாமா
சான் பிரான்ஸிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
சிங்கப்பூர்
சிட்னி, ஆஸ்திரேலியா
யோக்கஹோமா, ஜப்பான்
இவற்றையும் பார்க்கவும்
பெருங்கடல்
புவியியல்
மேலும் படிக்க
Paine, Lincoln. The Sea and Civilization: A Maritime History of the World (2015).
Samson, Jane. British imperial strategies in the Pacific, 1750-1900 (Ashgate Publishing, 2003).
வரலாறெழுதியல்
Davidson, James Wightman. "Problems of Pacific history." Journal of Pacific History 1#1 (1966): 5-21.
Gulliver, Katrina. "Finding the Pacific world." Journal of World History 22#1 (2011): 83-100. online
Munro, Doug. The Ivory Tower and Beyond: Participant Historians of the Pacific (Cambridge Scholars Publishing, 2009).
Routledge, David. "Pacific history as seen from the Pacific Islands." Pacific Studies 8#2 (1985): 81+ online
Samson, Jane. "Pacific/Oceanic History" in
வெளி இணைப்புகள்
EPIC Pacific Ocean Data Collection Viewable on-line collection of observational data
NOAA In-situ Ocean Data Viewer plot and download ocean observations
NOAA PMEL Argo profiling floats Realtime Pacific Ocean data
NOAA TAO El Niño data Realtime Pacific Ocean El Niño buoy data
NOAA Ocean Surface Current Analyses —Realtime (OSCAR) Near-realtime Pacific Ocean Surface Currents derived from satellite altimeter and scatterometer data
மேற்கோள்கள்
பெருங்கடல்கள்
|
5404
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
|
ஆர்க்டிக் பெருங்கடல்
|
ஆர்க்டிக் பெருங்கடல் அல்லது ஆர்க்டிக் சமுத்திரம் (Arctic Ocean) உலகத்திலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் ஒன்றாகும் . புவியின் வடகோடியிலுள்ள வடமுனையைச் சுற்றி அமைந்துள்ள கடலே ஆர்க்டிக் கடலாகும். ஐம்பெருங்கடல்களில் மிகச் சிறியதும் ஆழமற்றதும் ஆர்க்டிக் பெருங்கடலேயாகும். இக்கடல் ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. சர்வதேச நீர்நிலையியல் நிறுவனம் இக்கடலை ஒரு பெருங்கடல் என ஒப்புக்கொள்கிறது. இருப்பினும் சில கடலியலார் இதை ஆர்க்டிக் மத்தியதரைக் கடல் அல்லது வெறுமனே ஆர்க்டிக் கடல் என அழைக்கின்றனர், மேலும், இதை மத்தியதரை கடல் அல்லது அட்லாண்டிக் பெருங்கடலின் கழிமுகம் என்றும் வகைப்படுத்துகின்றனர் .
ஆர்க்டிக் கடலின் பெரும்பாலான கடற்பகுதி வடக்கு அரைக்கோளத்தின் நடுவில் ஆர்க்டிக் வடதுருவத்தில் அமைந்துள்ளது, இப்பெருங்கடல் கிட்டத்தட்ட முழுமையாகவே யூரேசியா மற்றும் வட அமெரிக்காவால் சூழப்பட்டுள்ளது. ஆர்க்டிக் கடலின் ஒரு பகுதி ஆண்டு முழுவதும் கடற்பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக குளிர் காலத்தில் முற்றிலுமாக பனிக்கட்டியாலேயே இக்கடல் மூடப்பட்டிருக்கும்.
கடற்பனியால் மூடப்பட்டிருந்த இப்பெருங்கடலின் மேற்பரப்பு உருகுதல், உறைதல் போன்ற காலநிலை மாறுபாடுகளால் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மை காலத்திற்குக் காலம் மாற்படுகிறது. ஆறுகள் மற்றும் நீரோடைகளில் இருந்து உள்வரும் அதிக நீர்வரத்து காரணமாகவும் குறைந்த அளவிலான வெளி இணைப்பு மற்றும் ஆவியாதல் காரணமாகவும், அதிக உப்புத்தன்மை கொண்ட கடல் நீரைச் சுற்றிலும் வெளியேற்றி விடுவதாலும் இதன் உப்புத்தன்மை ஐந்து பெருங்கடல்களின் சராசரியிலேயே மிகக் குறைந்த சராசரியைக் கொண்டுள்ளது.
வரலாறு
ஐரோப்பிய வரலாற்றின் பெரும்பகுதியில் வடக்கு துருவ மண்டலங்கள் மற்றும் அவற்றின் பூகோளக் கோட்பாடு பெரும்பாலும் அறியப்படாதவையாக இருந்தன. கிரேக்க ஆராய்ச்சியாளர் பெத்தியாசு என்பார் கி.மு 325 இல் வடதுருவத்தை நோக்கிச் சென்றார். இவரே ஆர்க்டிக் வட்டத்தை தன் பயணத்தில் முதலில் தொட்டுச் சென்றவர் ஆவார். இந்நிலப்பகுதியை இவார் எசுசாட் தலி என்று அழைத்தார். இங்கு சூரியன் ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே மறைகிறது. எனவே தண்ணீராக மாற்றிக் கொள்ளும் பொருளாக இப்பகுதி இருப்பதால் ஒருவரும் நடக்கவோ மிதக்கவோ முடியாது. வளர்ந்து வரும் பனி அல்லது தளர்வான கடல் பனி என்று அவரால் விவரிக்கப்பட்ட இப்பகுதி இன்று நன்னீரைக் கொண்ட பனிமலைகள் என அறியப்படுகின்றன. அவரது கண்டுபிடிப்பான தலி ஒருவேளை நார்வேயாக இருக்கலாம். இருப்பினும் பரோயே தீவுகள் அல்லது செட்லாண்ட் ஆகக்கூட இருக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டுக்காரர்கள் ஆர்க்டிக் பகுதிக்கு முதலில் பயணம் மேற்கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் ஐசுலாந்து, கிரீன்லாந்து ஆகிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை குடியேற்றப் பகுதிகளாக மாற்றினர். 15 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களும் டச்சுக் காரர்களும் இதற்கான கடற்பயணங்களைத் தொடங்கினர்.
பண்டைய நிலப்படமாக்குபவர்கள் வடதுருவத்தைச் சுற்றியுள்ள இப்பகுதியை வரைவதில் குழப்பமடைந்தனர். 1507 ஆம் ஆண்டின் யோகன்னசு ருசிய்ச்சு வரைபடத்தில் அல்லது 1595 ஆம் ஆண்டின் கெரார்டசு மெர்கட்டரின் வரைபடத்தில் இப்பகுதி நிலமாக வரையப்பட்டிருந்தது. 1507 ஆம் ஆண்டின் மார்ட்டின் வால்ட்மெமுல்லரின் உலக வரைபடத்தில் இப்பகுதி நீராக வரையப்பட்டிருந்தது. சீனப்பயணத்தின் மீது தணியாத ஆசை கொண்டிருந்த ஐரோப்பிய வணிகர்கள் தங்கள் வடக்குதிசை நோக்கிய பயணத்தின் இறுதியில் இதை நீர்ப்பகுதி என கண்டறிந்தனர். 1723 இல் யோகான் ஒமான் போன்ற நிலப்படமாக்குபவர்கள் தங்கள் வரைபடத்தில் இதைப் பயன்படுத்தினர்.
சில கடற்பயணிகள் இந்த சகாப்தத்தில் ஆர்க்டிக் வட்டத்திற்கு அப்பாலும் ஊடுருவிச் செல்ல சில சோதனைகள் மேற்கொண்டனர். நோவாயா செம்லியா (11 ஆம் நூற்றாண்டு) மற்றும் சுபிட்ச்பெர்கன் (1596) போன்ற சில சிறிய தீவுகள் மட்டுமே கண்டறியப்பட்டன. இருப்பினும் இவை பெரும்பாலும் அடுக்கடுக்காய் பனிக்கட்டியால் சூழப்பட்டிருந்ததால் வடக்கு எல்லைகள் மிகவும் தெளிவாக இல்லை. கடற்பயண வரைபடத் தயாரிப்பாளர்களைக் காட்டிலும் நிலப்படமாக்குபவர்கள் பழமைவாதிகள் என்பதால் அவர்கள் இப்பகுதியை வெறுமனே விட்டுவிட்டு நன்கு அறியப்பட்ட கரையோரப் பகுதிகளை மட்டுமே தங்கள் வரைபடங்களில் காட்டினார்கள்.
நகரும் பனிமலைகளுக்கு அப்பால் வடக்கில் என்ன அமைந்திருக்கிறது என்பது தொடர்பான அறிவு இல்லாதது பல எண்ணற்ற கருத்துக்களுக்கு வழிவகுத்தது. இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் திறந்த துருவக் கடல் என்ற கட்டுக்கதை தொடர்ந்து இருந்தது. பிரிட்டானிய நிர்வாகத்தின் நீண்டகால இரண்டாம் செயலாளரான யான் பேரோ, 1818 முதல் 1845 வரை இந்தத் தேடலை ஆராய்வதற்கான ஆய்வுகளை ஊக்குவித்தார்.
1850 முதல் 1860 வரையிலான காலத்தில் எலிசா கேணி என்பார் அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் தன் பயணத்தை மேற்கொண்டார். ஆர்க்டிக் ஆராய்ச்சியில் இவரது பயணம் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஐசக் இசுரேல் ஏய்சு என்பாரும் எலிசா கேணியும் ஆர்க்டிக்கில் மழுப்பலாக நீர் இருப்பதாகத் தெரிவித்தனர்.
அந்த நூற்றாண்டின் பிற்பகுதியிலும் கூட மேட் ஃபோண்டெயின் மவுரி என்பவர் அவரது பாடப் புத்தகத்தில் திறந்த துருவக் கடல் பற்றிய விவரிப்பை கூறியிருந்தார். இருப்பினும், துருவத்திற்கு அருகில் நெருங்கி நெருங்கி பயணம் செய்த அனைத்து ஆராய்ச்சியாளர்களும் வடதுருவத்தின் உச்சி பனிக்கட்டியால் ஆனதென்றும் அதன் அடர்த்தி ஆண்டு முழுவதும் நீடிப்பதாகவும் தெரிவித்தனர். 1937 ஆம் ஆண்டில் சோவியத் உருசியர்கள் வடமுனையில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைத்து விரிவாக ஆராயத் தொடங்கினர் .
புவியியல்
ஆர்க்டிக் பெருங்கடல் கிட்டத்தட்ட 14,056,000 கி.மீ2 (5,427,000 sசதுரமைல்) பரப்பைக் கொண்டுள்ளது. இது அண்டார்ட்டிக்காவின் அளவுக்கு சமமானதாகும். சுமார் 55 இலட்சம் சதுரமைல் பரப்பளவு கொண்ட இப்பெருங்கடல் ஆழமற்றது என்றும் உண்மையான கடல் அல்ல என்றும் கருதப்பட்டது. ஆனால் இக்கடலின் ஆழம் சுமார் 18000 அடிகள் வரை உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இப்பெருங்கடல் கடற்கரையின் நீளம் 45390 கிலோமீட்டர்களாகும்
ஆர்க்டிக் சமுத்திரத்தில் பெரும்பகுதி கடற்பனியால் மூடப்பட்டுள்ளது. எனினும் இந்நிலை 1980 முதல் மாற்றமடைந்துள்ளது. 1980 முதல் வருடத்திற்கு 3% வீதம் குளிர்கால கடற்பனியின் பரப்பு குறைவடைந்து வருகின்றது. இதன் சராசரி கடற்பனி பரப்பு 15,600,000 km2 ஆகக் காணப்படுவதுடன் இது கோடை காலத்தில் 7,000,000 km2 (2,702,700 sq mi) வரை குறைவடையும்.
ஆர்க்டிக் பெருங்கடலின் வடிவம் வட்டமாக உள்ளது. கரைகள் தாழ்ந்துள்ளன. பேரண்டசு கடலும், கிரீன்லாந்து கடலும் இதன் துணை ஆறுகளாகும். உலகக் கடல்களில் மிகவும் குறைவாகப் புயல்கள் உண்டாவது இக்கடலில் தான்.
விரிவும் தரவுகளும்
உருசியா, நார்வே, ஐசுலாந்து, கிரீன்லாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆர்க்டிக் பெருங்கடலின் எல்லைகளில் அமைந்துள்ளன. தீவுகளில் மிகப்பெரியது கிரீன்லாந்து தீவு ஆகும்.
ஆர்க்டிக் பெருங்கடலைச் சுற்றிலும் பல துறைமுகங்கள் காணப்படுகின்றன
ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கில் அமெரிக்காவின் அலாசுகாவில் பாரோவ் என்ற துறைமுக நகரம் அமைந்துள்ளது .
தட்பவெப்பநிலை
அண்டார்க்டிக் கண்டத்தைக் காட்டிலும் ஆர்க்டிக் பகுதியில் பனிக்கட்டி குறைவு ஆகும். குளிர்ந்த பகுதிகள் தென் கிழக்குச் சைபீரியாவிலும் கனடவிலும் காணப்படுகின்றன. மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகும் வெர்கோயான்சுக் இப்பகுதியில்தான் உள்ளது. கோடைக்காலம் குறுகியுள்ளது. குளிர்காலம் நீண்டது ஆகும். இருட்டும் குளிரும் இங்கு நிறைந்திருக்கும்.
கனிவளம்
உறைந்து கிடக்கும் ஆர்க்டிக் பகுதியில் 200 ஆண்டுகள் வரை கிடைக்கக் கூடிய நிலக்கரி புதைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. பெட்ரோலியமும் அதிக அளவில் இங்கு புதைந்துள்ளது. செப்பு, அலுமினியம், காரீயம், துத்தநாகம், தங்குதன், யுரேனியம், தங்கம் ஆகிய தனிமங்கள் பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்திருக்கின்றன.
விலங்குகளும் தாவரங்களும்
பொதுவாக ஆர்க்டிக் விலங்குகளின் வகைகள் அதிகமில்லை. ஆழ்கடல் மீன்கள் வகை வகையாக இருக்கின்றன. கடல் நாய்கள், துருவக் கரடிகள் போன்றவை உணவுக்காகப் பயன்படுகின்றன. வால்ரசு மற்றும் திமிங்கலங்கள் போன்றவை அழிந்து வரும் கடல் இனங்களாக மாறியுள்ளன. இப்பகுதி எளிதாக அழிந்துபோகும் சுற்றுச்சூழல் சூழ்நிலை மண்டலமாக உள்ளது, இச்சூழல் மண்டலம் மெதுவாகவே மாற்றமடையும் மற்றும் மெதுவாகவே மீட்சியும் அடையும்.
ஆர்க்டிக் பெருங்கடலில் பைட்டோபிளாங்க்டன் தவிர ஏனைய சிறிய தாவரங்களின் வாழ்வும் காணப்படுகிறது . பைட்டோபிளாங்க்டன்கள் ஆர்க்டிக் பகுதியில் மிகப்பெரிய அளவில் உள்ளன, நதிகளிலிருந்தும் நீரோட்டங்களிலிருந்தும் அவை தங்களுக்கான ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன . கோடை காலத்தில், இவை நீண்ட காலத்திற்கு ஒளிச்சேர்க்கை செய்து விரைவாகவும் இனப்பெருக்கம் செய்கின்றன. இருப்பினும், குளிர்காலத்தில் நிலைமை தலைகீழாகிறது. போதுமான வெளிச்சத்தை பெற இவை போராடுகின்றன.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
The Hidden Ocean Arctic 2005 Daily logs, photos and video from exploration mission.
Oceanography Image of the Day, from the Woods Hole Oceanographic Institution
Arctic Council
The Northern Forum
பெருங்கடல்கள்
|
5407
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
|
தென்முனைப் பெருங்கடல்
|
.
தென்முனைப் பெருங்கடல் (Southern Ocean), அல்லது அண்டார்ட்டிக் பெருங்கடல் (Antarctic Ocean) அல்லது the தென் பெருங்கடல் (Austral Ocean) என்பது உலகப் பெருங்கடல்களுக்கு மிகவும் தெற்காக அமைந்த நீர்நிலையைக் குறிக்கும். இது புவியின் தென்முனையில் அண்டார்ட்டிகாவை 360 பாகைகளும் சூழ்ந்தபடி 60° தெ அகலாங்குக்கும் தெற்கில் அமைந்துள்ளது. இது ஐந்து முதன்மையான பெருங்கடல்களில் நான்காவது பெருங்கடலாகும்.: மேலும் இது அமைதிக்கடல், அத்லாந்திக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றைவிடச் சிறியதாகும். ஆனால், இது ஆர்க்டிக் பெருங்கடலை விட பெரியதாகும். இந்தப் பெருங்கடல் வட்டாரத்தில் தான் வடக்குமுகமாகப் பாயும் அண்டார்ட்டிகாவின் தண் நீரோட்டமும் வெத்துவெதுப்பான உள் அண்டார்ட்டிக் நீரோட்டமும் சந்தித்துக் கலக்கின்றன.
இப்பெருங்கடல் 20,327,000 சதுர கிலோமீட்டர் (7,848,000 mi²) பரப்பளவுடையது. இதன் ஆழம் மிகப்பெரும்பாலான பரப்பில் பொதுவாக 4,000 மீட்டர் முதல் 5,000 மீட்டர் வரையானதாக உள்ளது (13,000-16,000 அடி). தென்முனைப் பெருங்கடலின் மிக ஆழமான பகுதி 60°00'தெ, 024°மே. என்னும் ஆயங்களில் உள்ளது. இவ்விடத்தில் இப்பெருங்கடல் 7,235 மீட்டர் (23, 735 அடி) ஆழம் உடையது.
அண்டார்ட்டிக்கின் கண்டத் திட்டு வழக்கத்திற்கு மாறாக 800 மீட்டர் (2,600 அடி) ஆழம் உடையதாக உள்ளது. உலகின் பிற கண்டத்திட்டுகளின் சராசரி ஆழம் 133 மீட்டர் (436 அடி) ஆகும்.
தனது தென்முனைப் பயணத்தின் வழியாக 1770 களில், ஜேம்சு குக் புவிக்கோள தென் அகலாங்குகளில் நீர்நிலை சூழ்ந்திருப்பதை நிறுவினார். அதில் இருந்தே புவிப்பரப்பியலாளர்கள் தென்முனைப் பெருங்கடலின் வடக்கு வரம்பை ஏன், அந்நீர்நிலையின் நிலவலையே ஏற்கவில்லை. மாறாக, இந்த நீர்ப்பகுதியை இவர்கள் அமைதிக்கடல், அத்லாந்திக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் பகுதியாகவே கருதிவந்தனர். இந்தக் கண்ணோட்டமே பன்னாட்டு நீர்வரைவியல் நிறுவனத்தின் கொள்கையாக இதுவரை நிலவுகிறது. ஏனெனில், 2000 ஆம் ஆண்டின் 60 ஆம் அகலாங்குக்குத் தெற்கே உள்ளதாக தென்முனைப் பெருங்கடலை உள்ளடக்கிய வரையறுப்புகள் வேறு காரணங்களால் இன்னமும் ஏற்கப்படாமலேயே உள்ளது. பிறர் பருவந்தோறும் மாறும் அண்டார்ட்டிகா குவிவையே இயற்கையான வரம்பெல்லையாகக் கொள்கின்றனர்.
வரையறுப்புகளும் பயன்பாடும்
பன்னாட்டு நீர்வரைவியல் குழுமம் (இது பன்னாட்டு நீர்வரைவியல் நிறுவனத்தின் முன்னோடியாகும்) 1919 ஜூலை 24 இல் முதல் பன்னாட்டுக் கருத்தரங்கைக் கூட்டியபோது, பன்னாட்டளவில் கடல்கள், பெருங்கடல்களின் எல்லைகளும் பெயர்களும் ஏற்கப்பட்டன. இவற்றை பநீநி 1928 இல் தனது கடல்கள், பெருங்கடல்களின் வரம்புகள் எனும் முதல்பதிப்பில் வெளியிட்டது. முதல் பதிப்பிற்குப் பிறகு, தென்முனைப் பெருங்கடலின் வரம்புகள் தொடர்ந்து நிலையாக தெற்கு நோக்கியே நகர்ந்து வந்துள்ளது; என்றாலும் 1953 க்குப் பிறகு இக்கடல் பநீநியின் அலுவலகப் பதிப்பில் சேர்க்கப்படவில்லை. அப்பணியைக் கள நீர்வரைவியல் அலுவலகங்களைத் தமே எல்லைவரம்புகளை தீர்மானிக்கவிட்டுள்ளது. பநீநி 2000 ஆம் ஆண்டு திருத்தத்தில் இக்கடலை உள்ளடக்கி, இதை 60°தெ அகலாங்குக்குத் தெற்கே உள்ள நீர்நிலையாக வரையறுத்துள்ளது. ஆனால், இது முறையாக இன்னமும் ஏற்கப்படவில்லை. ஏனெனில், யப்பான் கடல் போன்ற பிற கடல் வரையறை சிக்கலால் நிலுவையில் உள்ளது. என்றாலும், 2000 பநீநி (IHO) வரையறுப்பு, 2002ஆம் ஆண்டு வரைவு பதிப்பில் சுற்றுக்கு விடப்பட்டது. இது பநீநியில் சிலராலும் சில வெளி நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அவை, அமெரிக்க நடுவண் முகமையம், மரியம்-வென்சுட்டர்போன்றனவாகும். ஆசுத்திரேலிய அதிகார அமைப்புகள் தென்முனைப் பெருங்கடல் அசுத்திரேலியாவுக்கு உடனடித் தெற்கில் அமைவதாக கூறுகின்றன. தேசியப் புவிப்பரப்பியல் கழகம் இக்கடலை ஏற்காமல், மற்ற பெருங்கடல்களுக்குரிய எழுத்துகளில் சுட்டாமல், வேறுபட்ட அச்செழுத்துகளில் குறிக்கிறது; ஆனால், இக்கழகம் தன் நிலப்படத்திலும் இணையதளப் படங்களிலும் அண்டார்ட்டிகா வரை அமைதி, அத்லாந்திக், இந்தியப் பெருங்கடல்கள் நீள்வதாகக் காட்டுகிறது. தம் உலக நிலப்படத்தில் தென்முனைப் பெருங்கடலைப் பயன்படுத்தும் நிலப்பட வெளியீட்டாளர்கள் ஏமா நிலப்பட நிறுவனம் (Hema Maps), ஜியோநோவா (GeoNova) நிறுவனம் ஆகியவை ஆகும்.
20 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வரையறைகள்
வாசுகோ நூனெசு டி பால்போவா "தென்முனைப் பெருங்கடல் என அமைதிப் பெருங்கடலுக்கு அல்லது தென் அமைதிப் பெருங்கடலுக்குப் பெயரிட்டது தற்போது அருகிவிட்டது. இவர் தான் அமைதிப் பெருங்கடலை வடக்கில் இருந்து அணுகிக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் ஆவார். "தென்கடல்கள்" என்பதும் குறைவாகவே வழக்கில் உள்ள அதை நிகர்த்த பெயராகும். 1745 ஆண்டின் பிரித்தானிய நாடாளுமன்றச் சட்டம் அமெரிக்காவின் "மேற்கு, தெற்கு கடல்களுக்குச் செல்ல" "வடமேற்கு கடப்பு" வழியைக் கண்டுபிடிப்பவருக்குப் பரிசு ஒன்றை நிறுவியது".
அறியப்படாத தென்முனை வட்டாரங்களைச் சூழ்ந்தமைந்த நீர்நிலையை தென்முனைப் பெருங்கடல் என பெயரிட்டு எழுதிய ஆசிரியர்கள் பல்வேறு வரம்புகளை குறிப்பிட்டனர். ஜேம்சு குக் அவர்களது இரண்டாம் பயண விவரிப்பு அதன் வரம்பில் நியூ கலெடோனியா அமைவதாக புலப்படுத்துகிறது. பீகாக்கின் 1795 ஆம் ஆண்டு புவிப்பரப்பியல் அகரமுதலி இக்கடல் "அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் தெற்கில்" அமைவதாக கூறுகிறது; ஜான் பெய்னே 1796 இல் இக்கடலின் வடக்கு வரம்பாக 40 பாகை அகலாங்கைப் பயன்படுத்தினார்; 1827 ஆம் ஆண்டு எடின்பர்கு அரசிதழ் 50 பாகை அகலாங்கை வக்கு வரம்பாகப் பயன் படுத்தியது. குடும்ப இதழ் (Family Magazine) 1835 இல் "பெருந்தென் பெருங்கடலை" "தென்பெருங்கடல்" எனவும் "அண்டார்ட்டிக் [சிக்] பெருங்கடல்" எனவும் அண்ட்டர்ட்டிக் வட்ட்த்தைச் சூழ்ந்தமைந்த கடலை இரண்டாகப் பிரித்தது. இதன் வடக்கு வரம்பாக, கொம்புமுனையையும் நன்னம்பிக்கை முனையையும் இணைக்கும் கோட்டையும் வான் தியெமன் நிலத்தையும் நியூசிலாந்தின் தெற்குப் பகுதியையும் இணைக்கும்கோட்டையும் குறிப்பிட்ட்து.
குறிப்புகள்
சான்றுகள்
மேற்கோள்கள்
.
மேலும் படிக்க
Gille, Sarah T. 2002. "Warming of the Southern Ocean since the 1950s": abstract, article. Science: vol. 295 (no. 5558), pp. 1275–1277.
Descriptive Regional Oceanography, P. Tchernia, Pergamon Press, 1980.
Matthias Tomczak and J. Stuart Godfrey. 2003. Regional Oceanography: an Introduction. (see the site )
வெளி இணைப்புகள்
Oceanography Image of the Day, from the Woods Hole Oceanographic Institution
The CIA World Factbook's entry on the Southern Ocean
The Fifth Ocean from Geography.About.com
The International Bathymetric Chart of the Southern Ocean (IBCSO) National Geophysical Data Center
U.S. National Oceanic and Atmospheric Administration (NOAA): Limits of Oceans and Seas (2nd Edition), extant 1937 to 1953, with limits of Southern Ocean.
NOAA In-situ Ocean Data Viewer Plot and download ocean observations
NOAA FAQ about the number of oceans
Commission for the Conservation of Antarctic Marine Living Resources
பெருங்கடல்கள்
|
5408
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
|
அத்திலாந்திக்குப் பெருங்கடல்
|
அத்திலாந்திக்குப் பெருங்கடல் (Atlantic Ocean) உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலாகும். இது 106,400,000 சதுர கிலோ மீட்டர் (41,100,000 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும். அத்திலாந்திக்குப் பெருங்கடல் புவிப்பரப்பில் சுமார் 20 சதவீத இடத்தையும், புவியின் நீர்ப்பரப்பில் சுமார் 29 சதவீத இடத்தையும் பிடித்துள்ளது. மேற்கு கண்டம் என்றும் புதிய உலகம் என்றும் அழைக்கப்படும் அமெரிக்கக் கண்டத்தையும் கிழக்குக் கண்டம் என்றும் பழைய உலகம் என்றும் அழைக்கப்படும் மற்றக் கண்டங்களையும் இது இணைக்கிறது.
அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஒரு நீளமான, S- வடிவ வடிநிலத்தைக் கொண்டுள்ளது. கிழக்கில் யூரேசியாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் மேற்கில் அமெரிக்காவுக்குமிடையில் இப்பெருங்கடல் பரந்திருக்கிறது. ஒன்றிணைந்த உலகளாவிய கடற் பரப்பின் ஒரு பகுதியாக வடக்கில் ஆட்டிக்குப் பெருங்கடல், தென்மேற்கில் பசுபிக்குப் பெருங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல், தெற்கில் தென் பெருங்கடல் ஆகிய கடல்களுடன் இது இணைந்துள்ளது. ஆட்டிக்குக் கடலில் இருந்து அந்தாட்டிக்குக் கடல் வரை பரந்து விரிந்ததென அத்திலாந்திக்கைப் பிற வரையறைகள் தெரிவிக்கின்றன. நடுக்கோட்டு நீரோட்டம் இப்பெருங்கடலை 8° வடக்கில் வடக்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் என்றும் தெற்கு அத்திலாந்திக்குப் பெருங்கடல் என்றும் இரண்டாகப் பிரிக்கிறது.
செலஞ்சர் பயணம், செருமனியின் விண்கலப் பயணம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இலாமோன்ட்-டோயெர்டி புவி வானாய்வகம், அமெரிக்காவின் கடல் நீரியல் அலுவலகம் உள்ளிட்டவை அத்திலாந்திக்குப் பெருங்கடலின் அறிவியல் ஆராய்ச்சிகளைக் கொண்டுள்ளன.
பெயர்க் காரணம்
அட்லாண்டிக் பெருங்கடலைப்பற்றிய பழமையான சொற்பயன்பாடு தொடர்பான செய்திகள் கிட்டத்தட்ட கி.பி. ஆறாம் நூற்றாண்டின் மையக் காலத்தில் பாடலாசிரியர் சிடெசிகோரசின் பாடல்களில் காணப்படுகின்றன :. அட்லாண்டிகோய் பெலாகி என்ற சொல் கிரேக்கம்: Ἀτλαντικῷ πελάγει; ஆங்கிலம்: 'the Atlantic sea' என்றும் கி.பி 450 காலத்திய கிரேக்க வரலாற்று அறிஞர் எரோட்டசின் நூலில் அட்லாண்டிசு தலசா என்ற சொல் காணப்படுவதாகக் கூறப்படுகிறது . இதன் பொருள் நிலப்பகுதிகள் யாவற்ரையும் சூழ்ந்துள்ள கடற்பகுதி என்பதாகும் .
ஒருபுறம், கிரேக்க புராணங்களில் டைட்டான் என்ற வானக் கடவுளைக் குறிப்பிட இப்பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக்கடவுள் சொர்க்கத்தை ஆதரித்து பின்னர் மத்திய கால வரைபடத்தில் ஒரு முன்னோடிப் பாத்திரமாக இடம்பெற்றவராவார். மேலும் இவருடைய பெயர் நவீன அட்லசுக்கும் பெயராக வைக்கப்பட்டது . மறுபுறம், ஆரம்பகால கிரேக்க மாலுமிகளுக்கும், இலியட் மற்றும் ஒடிசி போன்ற பண்டைய கிரேக்க புராண இலக்கியங்களிலும், நிலப்பரப்பைச் சூழ்ந்திருந்த இப்பெரு நீர்ப்பரப்பு ஓசனசு என்று அழைக்கப்0பட்டது. இதன் பொருள் உலகத்தைச் ச்ழ்ந்துள்ள மிகப்பெரிய நதி என்பதாகும். கிரேக்கர்களால் நன்கு அறியப்பட்ட மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் போன்ற கடல்களுக்கு மாறாக இது இருந்தது .இதற்கு மாறாக, "அட்லாண்டிக்" என்ற சொல் மொராக்கோவில் உள்ள அட்லசு மலைகள் மற்றும் கிப்ரால்டர் நீரிணை மற்றும் வட ஆப்பிரிக்க கடற்கரை ஆகியவற்றைக் குறிப்பதாக குறிப்பிடப்படுகிறது . கிரேக்க வார்த்தையான தலசா என்ற சொல் ஏறத்தாழ 250 மில்லியன்ஆண்டுகளுக்கு முன்னர் பெருநிலப் பரப்பான மீக்கண்டத்தைச் சூழ்ந்திருந்ததாகக் கருதப்படும் பாந்தலசா என்ற மீக்கடலைக் குறிபிடுவதற்காக விஞ்ஞானிகளால் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
பண்டைய எத்தியோப்பியாவிலிருந்து எத்தியோபியன் பெருங்கடல் என்ற சொல் பெறப்பட்டதாகும். இப்பெயர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்கு அட்லாண்டிக் பகுதிக்கு பயன்படுத்தப்பட்டது .
பொதுவாக, மவுண்ட் அட்லாசு என்னும் மலை அல்லது அட்லாண்டிசு என்னும் தீவு ஆகிய இரண்டின் பெயர்களே அட்லாண்டிக் பெருங்கடல் என்ற பெயர் அமைவதற்கு காரணமாக உள்ளன.
விரிவும் தரவுகளும்
.
சர்வதேச நீரியல் நிறுவனம் 1953 ஆம் ஆண்டில் கடல்கள் மற்றும் பெருகடல்களின் வரம்புகளை வரையறுத்தது , ஆனால் இந்த வரையறைகளில் சில பின்னர் மறுசீரமைக்கப்பட்டன. சில வரையறைகள் பல்வேறு அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளால் பயன்படுத்தப்படவில்லை, உதாரணமாக சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம். இதன்படி, கடல் மற்றும் கடல்களின் அளவு மற்றும் எண்ணிக்கை வேறுபடுகிறது.
அட்லாண்டிக் பெருங்கடல் மேற்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவால் சூழப்பட்டுள்ளது. டென்மார்க் நீரிணை, கிரீன்லாந்து கடல், நார்வேயின் கடல், பேரண்ட்சு கடல் ஆகியவற்ரின் வழியாக ஆர்க்டிக் பெருங்கடலை இணைக்கிறது.
கிழக்கே, இக்கடலின் எல்லையாக ஐரோப்பாவும், கிப்ரால்டர் நீரிணையும் ஆப்பிரிக்காவும் அமைந்துள்ளன. 'கிப்ரால்ட்டர் நீரிணை மத்தியதரைக் கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கிறது. கருங்கடல் மத்தியதரைக் கடலுடன் இணைந்துள்ளது. இவ்விரு கடல்களும் ஆசியாவைத் தொடுகின்றன.
தென்கிழக்கு திசையில் அட்லாண்டிக் பெருங்கடல் இந்திய பெருங்கடலில் இணைகிறது. கேப் அகுலாசிலிருந்து அண்டார்க்டிக்கா வரை தெற்காக ஓடும் 20 ° கிழக்கு நெடுவரை இதன் எல்லையை வரையறுக்கிறது. 1953 ஆம் ஆண்டு வரையறையானது இதன் தெற்கை அண்டார்டிக்கா வரை நீட்டித்தது. அதே சமயம் பிற்கால வரைபடங்களில் இது தெற்குப் பெருங்கடலுடன் 60 ° இணையாகச் சூழப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கடலின் இரு கரைகளிலும் சீர்மையற்ற பல பெரிய உள்நாட்டுக் கடல்களும், வளை குடாக்களும், விரிகுடாக்களும் காணப்படுகின்றன. வடகடல், பால்டிக் கடல், மத்தியதரைக்கடல், கருங்கடல், கரிபியக் கடல், டேவிசு நீரிணை, டென்மார்க் நீரிணை, மெக்சிகோ வளைகுடா, லாப்ரடார் கடல், நார்வேயின் கடல், இசுக்காட்டியக் கடலின் பெரும்பகுதி மற்றும் பிற துணையாறுகள் உள்ளிட்டவை அட்லாண்டிக் கடலுடன் தொடர்புடையவையேயாகும் . இவையனைத்தையும் உள்ளடக்கிய அட்லாண்டிக் கடற்கரை சுமார் 111,866 கிலோமீட்டர் நீலத்தைப் பெற்றுள்ளது. பசிபிக் பெருங்கடலின் கடற்கரைப் பகுதியின் நீளம் 135,663 கிலோமீட்டர்களாகும் .
கரையோரக் கடல்களையும் உள்ளடக்கி அட்லாண்டிக் பெருங்கடல் மொத்தமாக 106,460,000 கி.மீ2 (41,100,000 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது உலகக் கடற்பரப்பின் மொத்தத்தில் 23.5 சதவீதமாகும். இதே போல அட்லாண்டிக் பெருங்கடலின் கன அளவு 310,410,900 கி.மீ3 (74,471,500 கன மைல்) ஆகும். இது உலகக் கடற் கன அளவின் மொத்தத்தில் 23.3% ஆகும். வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் 41,490,000 கி.மீ2 (16,020,000 சதுர மைல்) பரப்பளவும் (11.5%) தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் 40,270,000 கி.மீ2 (15,550,000 சதுரமைல்) (11.1%) பரப்பளவையும் கொண்டுள்ளன. அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம் சராசரியாக 3,646 மீட்டர் (11,962 அடி) ஆகும். அதிகபட்ச ஆழம் பியுவர்டோரிகோ அகழியில் உள்ள மில்வௌக்கி பள்ளம் 8,486 மீட்டர் (27,841 அடி) ஆழத்தைக் கொண்டதாக உள்ளது .
மலைத்தொடர்
மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு நீர்மூழ்கி மலைமுகடு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 87° வடக்கு அல்லது வடதுருவத்திற்குத் தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் அண்டார்டிக்கிலுள்ள 42° தெற்கு பௌவெட் தீவில் செல்கிறது.
மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர்
மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் அட்லாண்டிக் தரைப்பகுதியை இரண்டு பள்ளத்தாக்குகளாகப் பிரிக்கிறது, ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் இரண்டாம் நிலை குறுக்கு வழிகளால் பிரிக்கப்பட்ட தொடர்ச்சியான வடிநிலங்களைக் கொண்டுள்ளன. இம்மலைத்தொடர் 2000 மைல் வரை நீளமாகப் பரவியுள்ளது. ஆனால் நிலநடுக்கோட்டிற்கு அருகில் ரோமான்ச்சு அகழி என்ற இடத்திலும், 53° வடக்கில் கிப்சு பிராக்சர் மண்டலம் என்ற இடத்திலும் இம்மலைத் தொடர் தடைபடுகிறது. மேலும் இம்மலைத்தொடர் கடலடி நீருக்கும் தடையாக உள்ளன. ஆனால் இவ்விரு தடைப் பிரதேசங்களிலும் நீரோட்டமானது ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் செல்கின்றன.
மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் சுற்றியுள்ள கடல் தரைக்கு மேலே 2-3 கிமீ (1.2-1.9 மைல்) அளவுக்கு உயர்ந்துள்ளது. மற்றும் இதன் பிளவு பள்ளத்தாக்கு வடக்கு அட்லாண்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக்கில் உள்ள யுரேசியத் தட்டு இரண்டுக்குமிடையிலும், தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க தட்டுகளுக்கு இடையில் வேறுபட்ட எல்லையாக உள்ளது.
இம்மலைத்தொடரின் உச்சியில் நீரின் ஆழம் பெரும்பாலான இடங்களில் 2,700 மீட்டர் (8900 அடி) அளவுக்கும் குறைவாக உள்ளது, அதே நேரத்தில் இம்மலைத்தொடருக்கு கீழே மூன்று மடங்கு ஆழமும் உள்ளது .
40° வடக்குக்கு அருகே ஓர் இடத்திலும் 16° வடக்குக்கு அருகே ஓர் இடத்திலும் இரண்டு இடங்களில் மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் செங்குத்தாகப் பிரிக்கப்படுகிறது.
1870 களில் மேற்கொள்ளப்பட்ட சாலஞ்சர் கடற்பயணத்தால் மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரின் முதல் பிரிவு கண்டறியப்பட்டது. எஞ்சியுள்ள பகுதிகள் 1920 களில் மேற்கொள்ளப்பட்ட செருமானிய கடற்பயணத்தின் போது கண்டறியப்பட்டன. 1950 களில் மேற்கொள்ளப்பட்ட கடற்பயணங்களில் கடற் தரை விரிவும் புவித்தட்டுகள் தொடர்பான இயக்கங்களும் பற்றிய ஏற்றுக் கொள்ளத்தக்க பொதுமைகள் உருவாகின.
மலைத்தொடரின் பெரும்பகுதி ஆழத்தில் கடல் நீரின் கீழ் செல்கிறது. மேற்பரப்புகளை இது அடையும் போது எரிமலை தீவுகளை உருவாக்கியுள்ளது. இவற்றில் ஒன்பது எரிமலைகள் இவற்றின் புவியியல் மதிப்பிற்காக உலக புராதான சின்னங்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு மலைகள் இவற்றின் கலாச்சார மற்றும் இயற்கை அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு மிகச்சிறந்த பிரபஞ்ச மதிப்புமிக்க சின்னங்களாகக் கருதப்படுகின்றன: எஞ்சியுள்ளவை அமைத்தும் நடுநிலைச் சின்னங்களாகக் கருதப்படுகின்றன .
வழிமாற்று== தண்ணீரின் பண்புகள் ==
நிலநடுக்கோடு அட்லாண்டிக் கடலை வட, தென் அட்லாண்டிக் என இரண்டு கடல்களாகப் பிரிக்கிறது. தென் அட்லாண்டிக் கடல் வட அட்லாண்டிக் கடலைவிட குளிர்ச்சியாக இருக்கிறது. கடலின் அடிப்பகுதியில் இவ்வெப்பநிலை உறைநிலையையும் நெருங்கும். மேர்பரப்பில் வெப்பநிலையானது -2° செல்சியசு வெப்பநிலை முதல் 30° செல்சியசு வரை இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை நிலப்பகுதிக்கு வடக்கே ஏற்படுகிறது, மற்றும் துருவ மண்டலங்களில் குறைந்தபட்ச மதிப்புகள் காணப்படுகின்றன. நடுத்தர நிலப்பரப்புகளில், அதிகபட்ச வெப்பநிலை மாறுபாடு மதிப்புகள் 7-8° செல்சியசு வரையில் மாறுபடுகிறது.
அக்டோபர் முதல் சூன் மாதம் வரை லாப்ரடார் கடல், டென்மார்க் நீரிணை மற்றும் பால்டிக் கடல் பகுதிகளில் நீரின் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும்.
உப்பு
அட்லாண்டிக் பெருங்கடலின் நீர் மிகுந்த உவர்ப்புத் தன்மை மிக்கதாகும். மேற்பரப்பு நீரின் உப்புத்தன்மை அதன் நிறையில் 1000 பகுதிகளுக்கு 33 முதல் 37 பகுதிகளாகும். வாணிபக் காற்று வீசும் பகுதிகளில் உப்பு அதிகமாகும். நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் உப்புத்தன்மை குறைவாகும். மேற்பரப்பிலிருந்து கீழே செல்லச் செல்ல உவர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது. காலநிலைக்கு ஏற்பவும், மழைப்பொழிவு, உயர் ஆவியாதல் போன்ற காரணிகளால் இந்த அளவு வேறுபடுகிறது .
பிற நீரமைப்புகள்
இக்கடலின் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான தீவுகள், பவழத் தீவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக மேற்குப் பகுதியில் அதிக அளவு தீவுகள் உள்ளன.
அதிக அளவிலான ஆறுகள் அட்லாண்டிக் கடலில் கலக்கின்றன. மற்ற பெருங்கடல்களைக் காட்டிலும் இங்கு ஆற்று நீர் அதிகமாகக் கலக்கிறது. புவியின் இரண்டு அரைக் கோளத்திலும் காணப்படும் பெரும் பள்ளத்தாக்குகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கியே சாய்ந்துள்ளன.
நிலநடுக்கோட்டு நீரோட்டம், கல்ப் நீரோட்டம், வட ஆப்பிரிக்க நீரோட்டம் போன்ற நீரோட்டங்கள் அட்லாண்டிக் கடலில் உள்ளன. இவை சுழல் இயக்கத்தின் மூலம் வடமேற்கு ஐரோப்பாவை கதகதப்பாக்குகிறன. லாப்ரடார் நீரோட்டம் ஆர்க்டிக் கடலிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கிழக்குக் கனடா போன்ற நாடுகளை குளிர்விக்கிறது.
மக்னீசியம், நிலக்கரி எண்ணெய் போன்றவை இங்கு அதிகமாகக் கிடைக்கின்றன.
ஆய்வகம்
ஏவுகணை ஆய்வுகளை நடத்துவதற்கான ஆய்வு கூடமாகவும் அத்திலாந்திக்குப் பெருங்கடல் பயன்படுகிறது. வான்வெளிக்குச் சென்ற பல விண்வெளி வீரர்களின் விண்கலங்கள் இப்பெருங்கடலில் தான் இறங்கின.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Atlantic Ocean
"Map of Atlantic Coast of North America from the Chesapeake Bay to Florida" from 1639 via the World Digital Library
பெருங்கடல்கள்
அத்திலாந்திக்குப் பெருங்கடல்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.